Powered By Blogger

Saturday, June 01, 2024

The ஆயிரம் !!!

 நண்பர்களே,

(உஷாரய்யா உஷாரு...பதிவு நீளம் உஷாரு !! கார்த்திக் ; அய்யம்பாளையம் வெங்கடேசன் : ஒரு முக்கால்வாசிப் பதிவுக்குப் பின்பாக வாசிக்க ஆரம்பித்தாலும் சமாச்சாரம் புரிந்திடும் !)

வணக்கம். நம்ம சேலம் குமார் ஞாபகப்படுத்தாமலே இது நமது பதிவு # 1000 என்பது ஸ்பஷ்டமாக புத்திக்குத் தெரிகிறது! மூன்றிலக்க மொத்த எண்ணிக்கையிலிருந்து நான்கு இலக்கத்துக்குள் கால் பதிக்கும் இந்தப் பொழுதில் நம்ம பங்குக்கும் கொஞ்சம் ‘ரமணா‘ புள்ளி விவரங்களைப் போட்டுத்தாக்கா விட்டால் எப்படி?

-ஆயிரமெனும் பதிவு எண்ணிக்கையைத் தொட நமக்கு 4544 நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றன!

- 649 வாரங்களின் பயணமிது!

- 12 வருஷங்களும், 5 மாதங்களுமாய் தொடர்ந்துள்ள மொக்கை இது!

- On an average, கிட்டத்தட்ட நாலரை நாட்களுக்கு ஒரு தபா - குட்டியோ; பெருசோ ஒரு புதுப் பதிவோடு கதவைத் தட்டி வந்திருக்கிறேன்!

சரி, ரைட்டு.... இந்த நொடியில் உலகத்துக்கே ஏதாச்சும் சேதி சொல்லணும் போல் உள்ளாற தோணுமே...? மார்ட்டின் லூதர் கிங்கின் "I have a Dream" ரேஞ்சுக்கு ஒரு உரையை ஆற்றோ - ஆற்றென்று ஆற்றணும் போல நமைச்சல்லாம் எடுக்குமே ? - என்று நீங்கள் நினைத்திருந்தால் - ஊஹும்! ஒரு பெரிய குக்கர் விடுவதைப் போல 'Phewwwww' என்று பெருமூச்சிட மட்டுமே தோன்றுகிறது ! பெருமூச்சோடு பேந்தப் பேந்த முழித்து வரும் இந்த நொடியில் - என்ன எழுதுவது? எதைப் பற்றி எழுதுவது ? எங்கிருந்து ஆரம்பிப்பது? என்ற கேள்விகள் கபாலத்துக்குள் 'சர்ர் சர்ர்'ரென்று ஸாகோர் வீசும் கோடரிகள் போலப் பாய்ந்து வருகின்றன! அதற்கொரு விடை சொல்வது போலாய் எனக்குள் ஒரு flashback!

2019-ன் நடுவாக்கில் ஒரு பொழுது....! எங்களது பள்ளியில் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் ஒவ்வொரு வருஷத்து batch-லிருந்தும் இருவரைத் தேர்வு செய்து, விழாவின் விருந்தினராக்கி, அவர்களை ஸ்கூல் பற்றி நினைவு கூர்ந்திடச் செய்யும் திட்டம் அமலில் இருந்தது! நான் எங்கள் ஸ்கூலின் இரண்டாவது batch ! அந்த வருஷம் எங்கள் செட்டிற்கான male பிரதிநிதியாக நானும், பெண்களின் பிரதிநிதியாக ஒரு செம smart வகுப்புத் தோழியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம் ! விழாவில் எங்களது டீச்சர்கள் அத்தனை பேரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, குறைந்த பட்சமாய் 200 ஜுனியர்ஸும், எனது செட் பசங்களும், பொண்ணுங்களும் ஆஜராகியிருப்பார்கள் என்பது தெரியும் எனக்கு ! So லைட்டாக சொதப்பிடும் பட்சத்தில் கூட  சிரிப்பாய் சிரித்துப் போய்விடும் என்ற பயத்தோடே விழாவை எதிர்நோக்கியிருந்தேன் ! என்ன பேசலாம் என்பதை மண்டைக்குள் ஒரு மாதிரி ரெடி பண்ணிவிட்டு மேடையேறினால், எனக்கு முன்பாகப் பேச ஆரம்பித்திருந்த தோழி அட்சர சுத்தமாய் நான் பேச நினைத்ததையே பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார் !! பேஸ்தடித்துப் போச்சு எனக்கு ! 

அடுத்ததாக நம்ம அண்ணாத்தே பேச வரார்... வரார்” என்று ஜுனியர் பசங்கள் பில்டப் கொடுக்க, மைக் முன்னே நின்ற நொடியில் தான் பளீரென்று எனக்குள் ஏதோ உதயமானது! ஸ்கூல் life பற்றி; ஸ்கூல் கற்பிக்கும் ஒழுக்கம் பற்றியெல்லாம் மாவு அரைக்காமல், நான் நின்று கொண்டிருந்த அந்த - ஸ்டேஜைப் பற்றியே ; பள்ளிநாட்களில் இதே ஸ்டேஜ் எங்களுக்குத் தந்திருந்த அனுபவங்கள் பற்றியெல்லாம் பேசினாலென்ன? என்று தோன்றியது! மெது மெதுவாய் ஆரம்பித்தேன் - இதே ஸ்டேஜில் அந்த நாட்களில் நடந்த பேச்சுப் போட்டிகளைப் பற்றி, நடித்த ட்ராமாக்களைப் பற்றி.... ஏதோ சேட்டை செய்த சமயத்தில் வகுப்புப் பசங்கள் மொத்தமாய் இங்கு பெற்ற punishment பற்றி... பள்ளிக்குத் தடுப்பூசிகள் போட முனிசிபாலிட்டியிலிருந்து சுகாதாரத் துறையினர் இதே ஸ்டேஜில் காத்திருந்த போது ஆளாளுக்குத் தெறித்து ஓடி ஒளிஞ்சது பற்றி!! பேசிக் கொண்டே போக, முன்வரிசைகளில் அமர்ந்திருந்த எங்களது டீச்சர்களெல்லாம் ‘கெக்கே பெக்கே! என்று சிரிப்பு உருட்டத் தொடங்கியது தெரிந்தது! அதிலும் கம்பர் - ஒட்டக்கூத்தர் தமிழ் ட்ராமாவில் நான் ஒட்டக்கூத்தராய் நடித்தது பற்றியும், ஒரு flow-ல் கெத்தாக வசனம் பேசிவிட்டு உரக்கச் சிரிக்கும் கணத்தில், இடுப்பில் செருகியிருந்த வேஷ்டி முடிச்சு அவிழ்ந்து போனது பற்றியும், ட்ராமா முடியும் நிமிஷம் வரை நான் வேஷ்டியைப் பற்றியபடியே திகிலோடு வஜனங்கள் பேசியது பற்றியும் விவரித்த நொடியில், கண்களில் நீர் வராத குறையாகச் சிரித்துக் கொண்டிருந்தனர்! 

And இந்த நொடியில் எனக்கு மிகச் சரியாக அன்றைய நிகழ்வு தான் நினைவுக்கு வருகிறது - simply becos ”ஆயிரமாவது பதிவு” என்ற மேடையில் நிற்கும் வேளையில் ”ஆனை... பூனை..." என்று எதை எதையோ பற்றிப் பேசும் முன்பாக இந்தப் பதிவுப் பக்கத்தைப் பற்றிய சில பகிரப்படாத நினைவுகளைப் பிரதானமாக்கினால் என்ன ? என்றுபட்டது ! 

”ஆங்.... புடலங்காய் சாதனை ! ஆயிரம் புக்ஸ் என்பதைக் கொண்டாடுவதிலாச்சும் அர்த்தம் இருக்கும் ; இதெல்லாம் சும்மா டைம்-பாஸ் தானே?” என்று ஒரு கணத்திற்கு  தோன்றிடலாம் தான்! Well,”ஆயிரம் புக்ஸ்” என்ற நம்பரையுமே கொஞ்ச காலம் முன்னே கடந்திருக்கும் அனுபவத்தில், இரண்டையும் on their merits பரிசீலிக்க நமக்கு சன்னமாகவாச்சும் தகுதி இருப்பதாகப் படுகிறது! Without a doubt - ”ஆயிரம்வாலா புக்ஸ்” என்பது பணிகளின் அளவுகோல்களில், தாக்கத்தின் அளவுகோலில், ஆயுட்காலத்தின் அளவுகோலில், ராட்சஸ முயற்சியே ! குட்டியோ - பெருசோ; ஒரு புக்கை நாமே தயார் செய்வதெனும் போது வண்டி வண்டியாய் பணிகள் அவசியமாவதில் இரகசியங்களில்லை! நம்மிடம் அச்சகம் இருப்பது வசதி தான், but still ஒவ்வொரு முறையும் புதுசு புதுசாய் ஏதாச்சும் பாடம் படிக்க நாம் தவறுவதே இல்லை! And ஒவ்வொரு புக்கின் பின்னேயும் எண்ணற்றோரின் உழைப்பு உள்ளது ! பகுமானமாய் நான் முன்னே வந்து டான்ஸ் ஆடித் திரிந்தாலுமே, கணக்கு வழக்குகளைப் பார்த்து வரும் பெண்களிலிருந்து, பண்டல் போட்டு அனுப்பும் packing staff வரைக்கும் சகலருமே நமக்கு முக்கியம்! So அங்கே ஒளிவட்டத்தை நான் மாத்திரமே ஆட்டையைப் போடுவதென்பது மெய்யாலுமே நெருடிடும் சமாச்சாரம்!

ஆனால் இந்தப் பதிவுப் பக்கமோ - முழுக்க முழுக்க முழியாங்கண்ணனின் பேட்டை ஆச்சே ! மிஞ்சிப் போனால் இந்த ஆயிரத்தில் ஒரு இருநூறு பதிவுகளை டைப் பண்ணித் தந்திருந்த நமது DTP நண்பரின் பங்களிப்பு இங்கு சன்னமாய் இருந்திருக்கலாம்! அது நீங்கலாய் கதை - வஜனம் - பாடல்கள் - நடனம் - முட்டு / மூத்திரச் சந்து விஜயங்கள் - என சகலமுமே நம்மள் கி கைவண்ணமே! So ”ஆயிரம்வாலா தராசில்” - "ஆயிரம் புக்ஸ்" சர்வ நிச்சயமாய் பன்மடங்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருப்பினும், for sheer entertainment value, இந்தப் பக்கமானதும்  சளைத்தது அல்ல என்று நினைக்கத் தோன்றுகிறது !  And அது மட்டுமன்றி, இந்த ஆயிரத்தை நான் தூக்கிப் பிடிக்க இன்னொரு vital காரணமுமே உள்ளது! 'அது என்னடாப்பா ?' என்று கேட்கிறீர்களா ? சொல்லுறேன் !!

Oh yes, டிசம்பர் 24, 2011ல் ”அலோ... ஆராச்சும் இங்கே இருக்கீங்களா?” என்று நாலு வரிகளில் இங்கிலீஷல் ஒரு பதிவைப் போட்டுப்புட்டு முழிச்சிக்கினு நின்ன சமயத்தில் கணிசமான பரிகாசம் ரவுண்ட் விட்டதைப் பார்க்க முடிந்தது! And பன்னிரெண்டரை ஆண்டுகளுக்கு முன்பான ஆந்தையனுக்கே இந்தக் காமிக்ஸ் புனர்ஜென்மமெல்லாம் எத்தனை காலத்துக்கு நீடிக்குமென்று சத்தியமாய்த் தெரிந்திருக்கவில்லை! இதை எழுதுவதே நான் தான் என்பதை முதலில் உறுதிப்படுத்தவே கணிசமான கால அவகாசம் தேவைப்பட்டதெனில் - இந்த இரண்டாவது இன்னிங்ஸில் முன்நாட்களைப் போல அறிவிக்கப்படா ப்ரேக்குகள் இருந்திடாது; பொஸ்தவங்கள் ‘பிம்பிலிக்கி பிலாக்கி‘ காட்டிடாது ரெகுலராக வெளிவந்திடும் என்பதை நிலைநாட்ட வருடங்கள் அவசியப்பட்டன! Of course இதில் யாரையும் நொந்து பயனில்லை என்பது அன்றைக்கே புரிந்தது - simply becos அது வரையிலான நமது track record அத்தனை பாடாவதியாக இருந்திருந்தது! இந்தவாட்டி சொதப்பினால் அது சங்கு ஊதியதாகி விடும் என்று புரிந்த போது, முன்நாட்களை விடவும் சீரியஸ்னஸ் கணிசமாகவே கூடிப் போனது! ஆனால் இந்தப் பதிவுப் பக்கம் ஒரு communication கருவியாக அமைந்தது மட்டுமன்றி, காமிக்ஸ் மீதும், நம் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நேசத்தை ஒலிபரப்பும் ஒரு களமென்பது எனக்குப் புரிந்த நாளில் எனக்குள்ளே நிகழ்ந்த மாற்றங்கள் எக்கச்சக்கம்! 

‘மாதம் ஒரு புக்‘ என்பதே மாதா கோவிலில் மணியடித்து வந்தால் மட்டுமே சாத்தியம் என்றிருந்த நிலை மாறி - “மாதம் இரண்டு“ என்ற அடுத்த கியரைப் போட்டுப் பார்த்தோம்! உற்சாக விசில்களுக்குப் பெட்ரோலை விடவும் வீரியம் ஜாஸ்தி என்பது புரிந்த நொடியில் “மாதம் மூன்று”; அப்பாலிக்கா “மாதம் நான்கு” என்று 'ஜம்ப்' ஜம்புலிங்கமாகினோம்! எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உங்கள் நிழல்கள் பின்தொடர, இந்தப் பயணத்தை அடுத்த லெவலுக்கு உந்தித் தள்ளிய பெருமை உங்களுக்கும்,இந்தப் பதிவுப் பக்கத்தின் உற்சாகங்களுக்கும்  கணிசமாய்ச் சேரும்!

- க்ளாஸிக் மறுபதிப்புகளா? தாரை, தப்பட்டைகள் கிழிய வரவேற்றீர்கள்!

- புது நாயக / நாயகியரின் வரவுகளா? விசிலடித்தே வரவேற்றீர்கள்!

- கார்ட்டூன்களா? கிராபிக் நாவல்களா? ‘கொண்டு வார்ரே... பார்த்துக்கலாம்!‘ என்று தோளில் கை போட்டீர்கள்!

- நூறு ரூபாய்க்கு ஒரு புக்கை அறிவித்து விட்டு, ஆயிரம் வாட்டி முழி பிதுங்கி நின்றவனுக்கு ஆயிரம் ரூபாயிலேயே புக்கைத் தயாரிக்கும் சிறகுகளைத் தந்தீர்கள்!

- ”ஆயிரமென்ன ஆயிரம்? – we want more எமோஷன்ஸ்” என்ற நொடியில் இரண்டாயிரத்து சொச்சத்துக்கு இரத்தப் படலத்தை இறக்கி விட ஒன்றல்ல – இரண்டு வாய்ப்புகள் தந்தீர்கள்!

- கொரோனா என்னும் அசுரன் உலகையே முடக்கிப் போட்ட நாட்களிலும் இங்கே பன்மடங்கு தூக்கலான உற்சாகத்தோடு நாட்கள் நகர்ந்தோடின! ஒரு கட்டத்தில் ”நெதம் ஒரு பதிவு” என்று அடித்த கூத்துகளெல்லாம் எனது ஆயுட்கால நினைவுகளுள் சேர்த்தி !

- இந்தியாவுக்குள் எந்தவொரு மொழியிலும், எந்தவொரு பதிப்பகமும், எந்தவொரு எடிட்டரும் விரல்நுனிகளால் கூடத் தொடத் துணிந்திடா கதைகளை ; தொடர்களை ; ஆல்பங்களைக் களமிறக்கிடும் தைரியத்தையும் எனக்குத் தந்தீர்கள் - இந்தப் பக்கத்தின் வாயிலாக !! (Oh yes - அதை நினைத்து நீங்கள் சுவற்றில் முட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் இல்லாதிராது தான் !!) 😆😆

ஆக ”ஆயிரம்” என்ற total வெளியீட்டு நம்பரை இத்தனை சடுதியில் எட்டிப் பிடித்ததற்கு முழு முதற்காரணமே இந்தப் பதிவின் வாயிலாக நீங்கள் ஒவ்வொருவருமே தந்து வரும் பூஸ்ட் தான் என்பேன் ! Let me amplify that further with numbers :

நமது Comeback ஸ்பெஷல் வெளியான ஜனவரி 2012-ல் அதுவரையிலான வெளியீட்டு நம்பர்கள் இந்த மாதிரி இருந்தன:

- முத்து காமிக்ஸ்: 311

- லயன் காமிக்ஸ்: 209

-திகில் : 61

-ஜூனியர் லயன்  : 38

-மினி லயன் : 8

இன்றைக்கோ – ஒரு மகாமகக் காலகட்டத்தின் பிற்பாடு நமது நம்பர்கள்:

- முத்து காமிக்ஸ்: 493

- லயன் காமிக்ஸ்: 449

- லயன் லைப்ரரி: 38

- V காமிக்ஸ்: 18

- சன்ஷைன் லைப்ரரி:  Around 25 ??

So முதல் 28 ஆண்டுகளில் வெளியிட சாத்தியமானதைக் காட்டிலும் அடுத்த 12 ஆண்டுகளில் கூடுதலாய் புக்ஸ் வெளியிட முடிந்துள்ளதன் மாயாஜாலம் என்னவென்று எனக்கு ஐயமறத் தெரிகிறது ! தலைமைப் பொறுப்பில் இருந்தவனோ அதே சோம்பேறி மாடன் தான்; ஆனால் தட்டிக் கொடுக்கவும், தட்டி வைக்கவும் தெரிந்திருந்த மேய்ப்பர்களின் கைவண்ணத்தில் இந்த மாடு இந்த வயசிலும் ஆடுகிறது – பாடுகிறது ; "கவிதை" என்ற பெயரில் குடல்களையும் உருவுகிறது! So ”பொஸ்தக ஆயிரம்வாலா” சாத்தியமானதே இந்த ”டைம்பாஸ்” ஆயிரம்வாலாவின் உத்வேகங்களால் தான் என்பதை மறுக்க முடியாதே ? 

இந்தப் பதிவுடனான பயணத்தில் எண்ணற்ற ஞாபகங்கள் என்னுள் இறைந்து கிடக்கின்றன! பதிவுகள்காண்டி நோட்டும், பேனாவுமாய் நான் தேவுடு காத்திராத இரயில்வே ஸ்டேஷனே தமிழகத்தில் பாக்கியிராது! பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டு பெல்ஜியத்திலும், மிலானிலும் குந்திக் கிடந்த நாட்களிலும், இந்தப் பதிவுப் பக்கமே எனது தஞ்சமாகி இருந்தது! அதை விடவும் மறக்க இயலா நினைவென்றால் அது 2019 அக்டோபரில் ஆயிரம் பின்னூட்டங்களிட்டு நீங்கள் செய்த அலம்பல்களின் இரவைத் தான் ! எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில், கனடாவில் பனிப் புயலில் நான் சிக்கிய அனுபவத்தின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட்டிருந்தேன். அதன் நீட்சியாக அடுத்த அத்தியாயத்தினை நான் பதிவிடுவதாக வாக்குத் தந்திருந்த விடுமுறை நாளில் என்னால் ஆஜராக முடியாது போக, நீங்களோ ரா முழுக்க அடிச்ச ரகளைகள் வேற லெவல் ! இதோ - அந்த 1028 பின்னூட்டங்கள் கண்ட தெறி பதிவின் லிங்க் : https://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_7.html

But ஆயிரம் பின்னூட்டங்ககளை நீங்கள் போட்டு தூள் கிளப்பிக் கொண்டிருந்த வேளையில் எனது நிலவரமோ சற்றே கலவரமாகயிருந்தது என்பது தான் நிஜம்! ”பின்னொரு நாளில் இந்தப் பதிவுகளின் பின்னணி பற்றிச் சொல்கிறேன்” என்று பின்னூட்டக் குவியல்களுக்கு நான் மத்தியில் எழுதியிருந்தது கூட நினைவில் உள்ளது! Maybe மொக்கையோடு மொக்கையாய் அதைப் பற்றியும் இன்றைக்கே பேசி விடலாமோ ? 

எல்லாம் ஆரம்பித்தது (2019) அக்டோபர் முதல் தேதியன்று! முந்தைய இரவு வரைக்கும் நான் பாட்டுக்கு சுற்றித் திரிந்து விட்டு, எப்போதும் போல் தூங்கி எழுந்த போது, காலையில் வலது கால் முட்டியை அசைக்க முடியவில்லை! நல்ல செட்டிநாட்டு பணியாரம் போல உப்பிப் போயிருந்தது ! காலை ஊன்றவும் முடியலை; மடக்கவும் முடியலை! மூச்சா போய் வரவே உலகத்தில் உள்ள அத்தனை சர்க்கஸ் வித்தைகளையும் அவிழ்த்து விட வேண்டியிருக்க, மிரண்டே போனேன். 'நீர் கோர்த்துள்ளனது; இதை வறுத்து ஒத்தடம் தரலாம்; காலை உசக்கே ஏற்றி வைக்கலாம் ; ஐஸ் கட்டி ஒத்தடம் தரலாம் ; புளிய மரத்தடியில் படுத்தா சரியாகிடும்' என்று ரகவாரியாக யோசனைகள் முன்வைக்கப்பட, சகலத்தையும் முயற்சித்துப் பார்த்தேன்! ஊஹும், பணியாரம் காரவடையாக மறுத்தது! மறுநாள் காந்தி ஜெயந்தி விடுமுறையாக இருக்க, எனது ஆஸ்தான டாக்டரோ குடும்பத்தோடு out of country ! சிவகாசியிலோ பெரியளவிற்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்டுகள் கிடையாது & அருகாமையிலுள்ள பெரிய நகரமென்றால் மதுரை தான்! அப்போது தான் என் தங்கையின் கணவர் சமீபமாய் கோவையில் ஏதோ ஒரு ஆர்த்தோ நோவுக்கென ஆபரேஷன் செய்து தேறியிருந்தது நினைவுக்கு வந்தது. திருச்சி ரோடில் இருந்த அந்த புத்தம்புது ஹாஸ்பிடலில் பிரமாதமாக சிகிச்சைகள் சாத்தியமென்று அவர் சொன்னது நினைவுக்கு வர, மூன்றாம் தேதி பகலில் கோவைக்குப் பயணமானேன் – மனைவி + ஜுனியர் எடிட்டர் சகிதம்! பொதுவாய் எங்கே புறப்பட்டாலும் அண்ட்ராயரையும், ஆதாரையும் எடுத்து வைக்கும் முன்பாகவே, லேப்டாப்பை பெட்டிக்குள் திணித்து விடுவது வாடிக்கை – பதிவுகளை டைப் செய்வதன் பொருட்டு ! ஆனால் நானிருந்த நிலைமையில் லேப்டாப் மறந்தே போய்விட்டது! தவிர அது ஒரு புதன்கிழமை தான்! வியாழன் காலையில் (அக்டோபர் 4) அப்பாயிண்ட்மென்ட் ! ஏதாச்சும் மாத்திரை, மருந்துகளை தருவார்கள் – வாங்கிப்புட்டு வூட்டைப் பார்த்துக் கிளம்பி விடலாம் என்ற நம்பிக்கை உள்ளுக்குள் இருந்தது! So மிஞ்சிப் போனால் வெள்ளி இரவு வீடு திரும்பி விட்டாலும், சனி, ஞாயிறில் பதிவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பியிருந்தேன்!

முட்டிங்காலை மடக்கவே முடியாததொரு சூழலில் காரின் பின்சீட்டில் ஏறுவது கூட என்னவொரு பிரம்மப் பிரயத்தனம் என்பதை கோவைக்குக் கிளம்பும் சமயம் தான் உணர்ந்தேன்! சரி... தக்கி முக்கி ஏறியாச்சு; ஐந்து மணி நேர சாலைப் பயணத்தின் போது, இயற்கையின் உபாதையைக் கழிக்கத் தேவையானால் என்ன செய்வது? என்ற கேள்விக்கான விடை மெய்யாலுமே மிரட்டியது! To cut a long story short – கோவை சென்று சேர்ந்தோம் ஒரு வழியாய் !! மறுநாள் காலையில் மினுமினுத்துக் கொண்டிருந்த ஹாஸ்பிடலுக்குள் நுழைந்த மறுகணமே ஒரு வீல்சேரைக் கொணர்ந்து என்னை அதில் அமர்த்தித் தள்ளிச் சென்றார் ஒரு அட்டெண்டர்! நேராக ஒரு கவுண்ட்டரின் முன்னே சென்று பதிவு செய்த சற்றைக்கெல்லாம் ஒரு நம்பர் தந்து அதை கையில் வளையம் போல மாட்டி விட்டார்கள்! ‘பேஷண்ட் நம்பர் 6‘ என்பது எனது அடையாளமானது! டாக்டரைப் பார்க்கக் காத்திருந்த வேளையில் ஒரே தத்துவங்களாய் தலைக்குள் படையெடுத்தன ! ஞான் எடிட்டராக்கும்; 17 வயசு முதல் தொழிலதிபராக்கும் – என்ற ரேஞ்சுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்வரைக்கும் உள்ளாற குடியிருந்த இறுமாப்புகளெல்லாம் போன இடம் தெரியக் காணோம் ! இதோ – வெறும் நம்பராகி, தடதடக்கும் இதயத்தோடு, அடுத்து என்ன? என்று கூடத் தெரியாமல் வீல்சேரில் அமர்ந்திருந்த வேளையில் ,பேஸ்தடித்த ஒரு முழி தான் சாத்தியமானது !

சற்றைக்கெல்லாம் என்னை examine செய்தார் ஒரு சீனியர் டாக்டர்! கூடவே ஒரு மலையாளக் கலவையில் பரைஞ்ச அடுத்த நிலையிலான டாக்டரும், மூட்டை இப்டிக்கா – அப்டிக்கா ஆட்டி கியர் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். மூட்டின் அசைவுகளுக்கு உதவிடும் வகையில் உடம்பில் இயல்பாக, தேவைக்கு மட்டுமே சுரந்திடும் Sinovial fluid எதனாலோ மொத்தமாய்ச் சுரந்து தேங்கி நிற்கிறதென்றும், சில ப்ளட் டெஸ்ட்களை எடுத்துப் பார்த்தால் தான் காரணம் புரிபடக்கூடும் என்றார்கள்! பூம்-பூம் மாடு போல மண்டையை ஆட்டியபடியே ‘ஜம்‘மென்று வீல்சேரிலேயே போய் பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்தேன்! அங்கிருந்து நேராக Day Procedure என்ற ரூமுக்கு தள்ளிக் கொண்டு போய் படுக்கப் போட்ட போது தான், ”சுனா-பானா...ஏதோ சம்பவம் காத்திருக்குடா!” என்பது உரைத்தது! Again to cut a painful story short, அந்த மலையாள டாக்டர் வந்தார். பேசிக் கொண்டே காஷுவலாக பச்சக்-பச்சக்கென்று பணியாரத்தினை இயல்பாக்கும் பணியில் மும்முரமானார்! தடுப்புக்கு மறுபுறமிருந்து டேபிளிலோ வேறு ஏதோவொரு சிகிச்சை உள்ளூர்க்காரர் ஒருவருக்கும் அரங்கேறிக் கொண்டிருந்தது ! தொடர்ந்த கொஞ்ச நேரத்துக்கு எனக்கும் அந்த மனுஷனுக்கும் மத்தியில் – யாரோட எசப்பாட்டுக்கு சுதி சுத்தம் ? என்ற போட்டி நடக்காத குறை தான்! கோவை ஸ்லாங்கில் தெரிந்த கடவுளரையெல்லாம் அவர் அழைக்க, ”மருதக்காரனுங்கன்னா நாங்க இளப்பமா?” என்றபடிக்கே நானும் அவருக்கு tough கொடுத்துக் கொண்டிருந்தேன் ! ஒரு கால் மணி நேரத்திற்குப் பின்பாய் அந்த ரூமிலிருந்து Day Care அறைக்கு என்னை இட்டுப் போக, அங்கே டெய்லர் போல ஒருவர் வந்து வலது காலை முழுசாய் அளவெடுத்தார். இந்நேரத்திற்கு என்ன நடக்கிறதென்று கேள்விகளெல்லாம் கேட்கும் நிலையிலேயே நான் இல்லை; ஆளை விட்டாக்கா 'போற வழியிலே கொஞ்சூண்டு சுண்ணாம்ப வாங்கித் தடவிட்டு ஓடிப் போயிடுறேனே!' என்று நம்ம கவுண்டர் பாணியில் முனகாத குறை தான் ! இடுப்பு முதல் பாதம் வரைக்கும் ‘சபக்‘ என்று பிடித்துக் கொள்ளும் strap போல ஒரு வஸ்துவை டெய்லர் போலான நபர் கொணர்ந்திட, அதை எனது வலது காலில் மாட்டி வெல்க்ரோ ஸ்ட்ராப்களையும் பொருத்தி விட்டு, அடுத்த 10 நாட்களுக்கு இதைத் தவறாது அணிந்திருக்க வேண்டுமென்றும், காலை மடக்கப்படாது என்றும் டாக்டர் சொன்னார்! 

எனக்கோ ஊருக்குத் திரும்பி விடும் நமைச்சல்! ஆனால் தசரா விடுமுறைகள் நடுவே வருவதால் இரத்தப் பரிசோதனைகளின் முடிவுகள் கைக்கு வர 4 நாட்களாகி விடும் ! அது வரைக்கும் கோவையிலேயே இருந்து விட்டால் நல்லது என்றபடிக்கே பிஸியோதெரபி பிரிவுக்கு இட்டுப் போனார்கள்! அங்கேயோ ஒரு சிவகாசிக்காரரே இருக்க, மெதுமெதுவாய் நான் செய்திட வேண்டிய எக்ஸர்சைஸ் பற்றி விளக்கினார்! அத்தனையையும் கேட்டுக் கொண்டு அபார்ட்மெண்டுக்குத் திரும்பிய போது  – நம்ம சட்டித் தலையன் ஆர்ச்சி போல விறைப்பாக மட்டும் எட்டு வைக்க முடிந்தது! ஓய்வாய் பொழுதுகளைக் கழிக்கலாம் என்று கட்டையைக் கிடத்தினால், மறுபடியும் எழுந்திருக்க ஒத்தாசையின்றி முடியாதென்ற நிலை! So, தூக்கம் அசத்துற வரைக்கும் உட்கார்ந்தே இருக்கலாம் என்ற நொடியில் தான் நமது பதிவு பற்றிய ஞாபகம் வந்தது! ”நாசமாய்ப் போச்சு... லேப்டாப் இல்லியே! பதிவை எழுதி, ஊருக்கு அனுப்பி, டைப் செய்து வாங்கினாலும், அதைப் பதிவேற்றம் செய்ய சிஸ்டம் லேது எனும் போது, ஃபோனிலேயே கூத்தடிக்கணுமே!” என்ற கவலை மேலோங்கியது. எப்போதுமே டைப்பாகி வரும் பதிவுகளில் கணிசமான திருத்தங்கள் அவசியமாகிடும் என்பது எனது அனுபவம். So அவற்றை ஃபோனிலேயே செய்வதெல்லாமே நாக்குத் தொங்கச் செய்யும் பணி – at least எனக்காவது !

'சரி... ரைட்டு... எதைப் பற்றி எழுதலாம்?' என்ற மகாசிந்தனையோடு அமர்ந்த போது தான், காலைத் தூக்கி, நாலு எட்டு எடுத்து வைக்கவே, பச்சைப் புள்ளையாட்டம் வாக்கரோடு தடுமாறி வரும் இந்த நேரத்தில், காடு – மேடு – மலை – கனடா - பனி என்று எருமைக்கடாவாட்டம் ரவுண்ட் அடித்த பயண அனுபவத்தைப் பற்றி எழுதினால் செம காமெடியாக இருக்கும் என்றுபட்டது! சப்பாணியாய் முடங்கிக் கிடக்கும் நொடியில் தானே ஆண்டவன் தந்திருந்த சிறகுகளின் முழு மகிமை தெரிகிறது?! So அந்தக் கோவை மாலையில் துவங்கி, மழை இரவின் நிசப்தத்தில் பத்தி பத்தியாய் – பக்கம் பக்கமாய் வண்டி வண்டியாய், எழுதிய பதிவு தான் ”பணியும்... பனியும்” ! எழுத எழுத நீண்டு கொண்டே போன பதிவை சுருக்கமாய் முடிக்கவும் மனசு வரலை ; எதையுமே நறுக்கென்று சொல்லிப் பழக்கமும் கிடையாதென்பதால், crisp ஆக்கிடத் தெரியவுமில்லை !! எழுதினேன், எழுதினேன், ராவின் முக்கால்வாசிக்கு எழுதினேன் ! ஒரே நிலையில் குந்தியிருந்தால் வலி பின்னியெடுக்க, அவ்வப்போது டான்ஸ் ஆடிக் கொண்டே எழுத வேண்டியிருந்தது ! "இதெல்லாம் இப்போ தேவையா ?" என்ற கேள்வி முகம் முழுக்க விரவியிருக்க, "ஆனா இது சொன்னா கேக்கவா போகுது ?? என்ற புரிதலில் ஆத்துக்காரி தூங்கிப் போய்விட, பெய்து கொண்டிருந்த மழையின் தாளம் மட்டுமே துணைக்கு இருந்தது !

காலை புலர்ந்த போது நாலு நாலு பக்கங்களாய் ஃபோட்டோ எடுத்து ஊருக்கு அனுப்பி, மைதீனிடம் அவற்றை DTP செய்து வாங்கி அனுப்பச் சொல்லிக் கோரினேன் ! ஆஞ்சநேயர் வால் நீளத்தினாலான பதிவு என்பதால் பொறுமையாக டைப் செய்து சனிக்கிழமை நள்ளிரவுக்கு ஒட்டிய வேளையில் தான் அனுப்பி வைத்தார்கள் ! அப்போவும் நம்ம தலைக்குள் குடியிருந்த குறளியானது – வந்ததை அப்படியே upload செய்திடவும் சம்மதிக்கவில்லை; திருத்தங்கள் போடச் சொல்லி ஜிங்கு ஜிங்கென்று ஆட்டிப்படைக்க, அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு ஃபோனில் போட்ட மொக்கை சொல்லி மாளாது! ஒருவழியாய் இரவு மூன்று மணி சுமாருக்கு பதிவு ரெடியாகிட, upload செய்து விட்டு உறங்கப் போனேன் ! 

தொடர்ந்த அந்த ஞாயிறு நமது வலைப்பூவே திருவிழாக் கோலமானது! So ஜாலியான அந்தத் தருணத்தில் போய் ”இன்ன மெரி... இன்ன மெரி... பணியாரமுங்கோ... இன்ன மெரி... இன்ன மெரி ப்ரொசிஜர் பண்ணி... இன்ன மெரி... இன்ன மெரி கோவையிலே தடுமாறிக்கிட்டுக் கீறேனுங்கோ” என்று சொல்லி அந்த உற்சாகங்களுக்கு அணை போட எனக்கு மனம் ஒப்பவே இல்லை! என்ன – முதல் அத்தியாயத்திற்குப் பின்பாக இரண்டாவது பாகத்தை உரிய நேரத்தில் எழுதி உங்களிடம் ப்ராமிஸ் செய்தது போலாகவே அடுத்த சில நாட்களில் upload செய்திருக்க வேண்டும் ! ஆனால் பண்டிகை விடுமுறை ; ஊரில் டைப்படிக்க ஆளில்லை  ; அடுத்தடுத்து ஹாஸ்பிடல் செக்கப்ஸ் - என்ற சுழலின் மத்தியில் கோவையில் இருந்தவரைக்கும் Part 2 சாத்தியமாகிடவில்லை !  ஒருவழியாக ஊருக்குத் திரும்பிய பிற்பாடே இரண்டாம் பாகத்தை டைப் செய்து வாங்க இயன்றது ! அதற்குள் நீங்கள் அடிச்சு துவம்சம் செய்து விட்டீர்கள் ஆயிரத்துச் சொச்ச பின்னூட்டங்களை ! 😍😍😍

சாவகாசமான பின்னாள் ஒன்றினில், அந்தப் பதிவினை எழுதிய சூழலை அசைபோட்ட போதும் சரி, அந்தப் பதிவில் நான் எழுதியிருந்த கனடா சமாச்சாரங்களை மறுக்கா வாசித்த போதும் சரி, இரண்டுமே மறக்க இயலா அனுபவங்கள் என்பது உறைத்தது ! So by far – இந்த ஆயிரத்துள் எனது ஆதர்ஷப் பதிவுகள் இந்த இரண்டு என்பேன்!!

https://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_34.html

https://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_13.html

இவை தவிரவும் எண்ணற்ற memorable moments இந்த அண்டாவாயனின் ஆயிரம் பதிவு மேளாவினுள் புதைந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை : 

-சுட்டி லக்கி இதழ் வெளியான சமயத்து பின்னூட்ட லூட்டிகள்!

- புது மொழிபெயர்ப்புடன் "தங்கக்கல்லறை" வெளியான நாட்களில், டிரம்மில் ஊறப் போட்டு, தெளியத் தெளிய மொத்திய நாடக்ள்!

- LMS இதழுக்கு முன்பான வாரங்களில், அதன் கதைகள் ஒவ்வொன்றும் preview கண்ட பொழுதுகள்!

- முத்துவின் NBS ரிலீஸைத் தொடர்ந்தான மேளா!

- இரத்தப் படலம் கலர் தொகுப்பின் சமயத்து இரத்தக் களரியான ரகளைகள்!

- “நிஜங்களின் நிசப்தம்“ கி.நா.வின் அலசல்கள் !!

- கொரோனா லாக்டௌனின் போது நெதம் ஒரு பதிவு என்று செய்த குசும்புகள்!

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்! In fact பழைய பதிவுகளுக்குள் தலை நுழைத்து மேலோட்டமாய் மேய்ந்தாலே, அந்தந்த காலகட்டங்களுக்கு transport ஆகிட முடிகிறது! அப்போதைய சந்தோஷங்கள்; சண்டைகளில் கிழிந்த சட்டைகள்; தொட்ட உயரங்கள்; வாங்கிய குட்டுக்கள்; - என சகலத்தையுமே உணர முடிகிறது! So in many ways, இந்த வலைப்பக்கத்துக்கென ஒரு ஜீவன் இருப்பது ஸ்பஷ்டமாய் புரிகிறது! ஆரவாரமாய் பலரும், ஆக்ரோஷமாய் சிலரும், அமைதியாய் நிறையப் பேரும், அலம்பலாய் கொஞ்சப் பேரும் - இந்தப் பதிவின் பயணத்துக்குத் தத்தம் பங்களிப்புகளைத் தந்திருப்பது புரிகிறது! 

More than anything else, ”ஒரு சும்மானாச்சும் முயற்சியாய்” ஜுனியர் எடிட்டரின் அனற்றலின் பெயரில் ஆரம்பித்த இந்த வலைப்பக்கம் எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டிருப்பது தான் என்னையே மலைக்கச் செய்யும் சமாச்சாரம்! ஆரவாரமாய் இங்கே ஜாக்கி சான்களாக, ப்ரூஸ் லீக்களாக, ஜெட் லீக்களாக, நாமெல்லாம் உருமாறி கட்டிப் புரண்ட நாட்களிலெல்லாம் – “இது தேவை தானா? உனக்கு இது தேவை தானா??” என்று உள்ளுக்குள் தோன்றியதை மறுக்க மாட்டேன்”! In fact டேபிள்,நாற்காலிகளை எல்லாம் நாம் யு-டர்ன் போட்டு நொறுக்கிய அந்த நாட்களில், ஒட்டு மொத்தமாய் இங்கே பின்னூட்டங்களிடும் வாய்ப்பை க்ளோஸ் பண்ணி விட்டு, வெறுமனே நான் மாத்திரம் எழுதிடும் ஒரு தகவல் பலகையாய் மாற்றிடலாமா? என்ற நினைப்பெல்லாம்  தோன்றியிருக்கிறது! ஆனால் surprise... மறு நாளே கிழிஞ்ச சொக்காய்களை ஒட்டுப் போட்ட கையோடு அம்புட்டுப் பேரும், மறுக்கா ஜாலியாய் கும்மியடித்த நாட்களே தொடர்ந்தன! So in many ways பொதுவெளி சார்ந்த வாழ்க்கைப் பாடமாக இந்தப் பக்கம் எனக்கு அமைந்துள்ளதெனில் அது மிகையாகாது! And சனிக்கிழமைகளாகி விட்டாலே எவ்வளவு பணிகள் தொங்கலில் நின்றாலும், அவற்றை எல்லாம் ஓரம்கட்டி விட்டு எதையாச்சும் கிறுக்கிய கையோடு உங்கள் முன்னே ஆஜராவது part of life என்றாகிப் போச்சு! 

எனது மாளா வியப்பெல்லாமே – இத்தினி காலமாகியும் எனது அந்த ஒற்றைப் பரிமாண எழுத்துக்களில் சலிப்பு ஏற்படாது தொடர்வது எப்படி? என்பதும் – (நமது) காமிக்ஸ் தவிர்த்த வேறு எதன் மீதும் கருத்து கந்தசாமியாகி அபிப்பிராயங்கள் சொல்வதை அறவே தவிர்த்து வரும் சூழலிலுமே இத்தனை பதிவுகளுக்கான சரக்கு எவ்விதம் தேறியதோ ? என்பது குறித்தும் தான்! Anyways முதல் நாள் முதலாகவே இந்தப் பக்கத்தில் காமிக்ஸ் தவிர்த்த வேறு எதைப் பற்றியும் எழுதுவதில்லை என்றான முடிவை, ஆயிரம் பதிவுகளின் ஓட்டத்தோடும் கெட்டியாய் பிடித்துக் கொள்ள முடிந்திருப்பதில் அண்ணாச்சி ஹேப்பி! ரைட்டு... ஆச்சு ஆயிரம் ! சென்டிமெண்டுகளை ஜுஸ் போட்டது போதுமென்றால் கடா வெட்டு பக்கமாய் போகலாமா? 

To start with – கொஞ்சம் சுமாரான சேதி : நடப்பாண்டினில் அந்த Make Your Own Mini சந்தா (MYOMS) பெருசாய் take off ஆகுமென்ற நம்பிக்கை எனக்குக் குறைந்து கொண்டே செல்கிறது! ”மூன்று மாத புக்கிங் அவகாசம்” என்பதில் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஓடியாச்சு – yet முன்பதிவு நம்பர் தத்தா–புத்தாவென்று இப்போது தான் 160-ஐ எட்டியுள்ளது! ”400" என்ற இலக்கு தூரத்தில் – ரொம்ப ரொம்ப தூரத்தில் இருப்பது போல் தென்படுகிறது! நம்மாட்களும் மாங்கு - மாங்கென்று தினப்படி ஃபோனில் இதற்கான நினைவூட்டல்களைத் தந்து வருகின்றனர் தான்; ஆனால் சொல்லிக் கொள்ளும் விதமாய் புக்கிங் நஹி! இதில் தெளிவாகத் தெரியும் / புரியும் ஒரே சமாச்சாரம் – முன்பதிவுகள் / தனித்தடம் என்பனவுமே Star Power இருந்தால் மட்டுமே வேகம் எடுத்திடும் என்பது ! நல்ல கதைகள் தான்; ஆனால் உலகைத் தூக்கி நிப்பாட்டப் போகும் நாயகர்களில்லை‘ என்ற சூழல் எழும் பட்சத்தில், வண்டி தத்தித் தத்தித் தான் ஓடும் போலும்! So தொட்டதுக்கெல்லாம் ”முன்பதிவுத் தனித்தடம்” என்ற திட்டமிடலை முதலில் மூட்டை கட்டியாகணும் என்பது முக்கிய பாடம் ! 

இந்த நொடியில் எனக்குத் தோன்றுவது இதுவே :

- MYOMS சந்தாவுக்கென நாம் உத்தேசித்திருந்த 90 days அவகாசத்தில், எஞ்சி இருக்கும் 30 நாட்களுக்குக் காத்திருப்பது ஒரு பக்கமென்றால், அது பூர்த்தி காண்கிறதா - இல்லையா ? என்ற கேள்விக்கு விடை தெரியாத வரைக்கும், அடுத்த அறிவிப்பினை செய்திடல் சிரமமாக உள்ளது ! தற்போதைய தத்தித் தவழும் துரிதமே தொடர்ந்திடும் பட்சத்தில், முன்பதிவுகள் 225 என்ற எண்ணிக்கையைத் தொட்டாலே பெரிய சமாச்சாரம் என்பதாகவே கணிக்க இயல்கிறது ! அது நடைமுறைக்கு சாத்தியமே தந்திடாத ஒரு நம்பராக இருக்கும் என்பதால், மீசையில் ஒட்டக் கூடிய  மண்ணை தட்டி விட்டுக் கொண்டே, MYOMS முயற்சி பரணுக்கு பார்சலாகிறது என்று அறிவிக்கலாம் தான் ! 

அதற்காக MYOMS-ல் விளம்பரப்படுத்தப்பட்ட ஆல்பங்களை கண்ணை மூடிக்கொண்டு கடாசிடாது, தொடரக்கூடிய 2025 ரெகுலர் அட்டவணையில் பாதியையும், ஆன்லைன் மேளா போலான சந்தர்ப்பங்களில் மீதியையும் - புக்கிங் ; இத்யாதி என எதுவுமின்றி ‘பச்சக்‘கென வெளியிட வேண்டியது ! இவற்றை வாங்கிடப் பிரியப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் !

- And தற்சமயமாய் ரூ.930/ சந்தா செலுத்தியுள்ள 160 நண்பர்களுக்கும் இரண்டு options முன்வைக்கலாம்!

1. Option # 1 : சுலபமானது – முன்பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வது.

2. Option # 2 : இந்தத் தொகையை காத்திருக்கும் அடுத்த தனித்தடத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்!

'அக்காங்... அது என்ன புதுத் தனித்தடம்னு' கேட்கறீங்களா? இருக்குதே... Smashing ‘70s; Supreme ‘60s நிறைவுற்ற பிற்பாடு அடுத்த சீஸன் கொஞ்சம் மாற்றங்களோடு வருமென்று சொல்லியிருந்தது ஞாபகமிருக்குங்களா ? So தீபாவளி 2024 முதலாய் துவங்கிடவுள்ளது –

The ELECTRIC ‘80s!!

எண்பதுகளில் நாம் ரசித்து மகிழ்ந்த எக்கச்சக்க நாயக – நாயகியர் இதோ – இந்த மின்சாரமூட்டும் தனித்தடத்தில் ரகளை செய்திடக் காத்துள்ளனர்!

சில பதிவுகளுக்கு முன்பாய் – நம்மத் தானைத் தலைவர் ஸ்பைடர் டைஜெஸ்ட் போடாங்காட்டி, தாரமங்கலத் தலீவரைக் கொண்டு டீக்குடிக்கும் போராட்டத்தில் குதிப்போமென்ற குரல்கள் ஒலித்தன அல்லவா? அவற்றைக் கேட்ட பின்பும் ‘தேமே‘ என்று அமைதி காக்க முடியுமா – என்ன? So இந்த ELECTRIC ‘80s தனித்தடத்தில் ஆட்டத்தைத் தொடங்கப் போகிறவரே நமது கூர்மண்டையர் தான்! ”The சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்” – இங்கு அவ்வப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் "பாட்டில் பூதம்" கதையினைப் பிரதானமாகக் கொண்டிருக்கும்! 1990-களில் வெளியாகி, இன்று வரை பல "ஆர்வலர்களுக்கும்" கல்லா கட்ட உதவி வரும் இந்த iconic சாகஸம் மெகா சைஸில் வெளிவந்திடவுள்ளது! அதனோடே “சிகப்புத் தளபதி” & ”வீனஸ் கல் மர்மம்” சிறுகதைகளில் நம்மவர் லூட்டி செய்திடவுள்ளார்! So தீபாவளிக்கு மேற்கொண்டும் மெருகூட்ட உதவியது போலாகவும், நமது லயனின் 40-வது ஆண்டினில் அழுத்தமாகத் தனது இருப்பைப் பதிவு செய்திடும் விதமாகவும் ஸ்பைடரார் மெகா சைஸில் வந்திடவுள்ளார்!

கூர்மண்டையனுக்கு இடம் தந்து விட்டு சட்டித்தலையனுக்கு இடம் மறுக்கவாவது முடியுமா – இந்த லயனின் மைல்கல் ஆண்டினில்? So வால்பிடித்தபடியே இந்தாண்டின் கடைசி மாதத்தில் காத்துள்ளது – The அதிரடி ஆர்ச்சி ஸ்பெஷல் ! நமது லயனின் இஸ்திரி; ஜியாக்ரபி; பயாலஜி; சகலத்திலும் விற்பனை எனும் அளவுகோல்களில் இயன்றளவிற்கும் முதலிடம் பிடித்து நிற்கும் ”புரட்சித் தலைவன் ஆர்ச்சி” தான் இந்த ஸ்பெஷல் இதழின் highlight. அது ஒரிஜினலாய் வெளியான பிப்ரவரி 1987ல் விற்றது 31,000 பிரதிகள்! So ஒரு மறக்கவியலா சாகஸத்தோடு, இன்னொரு காலப்பயண சாகஸமும் இணைந்து ஆர்ச்சி ஸ்பெஷல் வரவிருக்கிறது! Again மெகா சைசில் !

ELECTRIC ‘80s-ன் ஆல்பம் # 3-ல் முற்றிலும் புதுக்கதைகளுடன் ஆஜராகவிருப்பது யாராக இருக்கக் கூடுமென்று தான் guess பண்ணிப் பாருங்களேன்? ஹி! ஹி! ஹி! நமது துவக்கப்புள்ளியை மறந்துப்புட்டு ரங்கோலி, மாக்கோலம் என்றெல்லாம் போட்டுத் திரிந்தால் அது நியாயமாகுமா? So நமது இளவரசி புத்தம் புது இரு அதிரடிகளுடன் கலக்கிடவிருக்கிறார்! இது குறித்து மேச்சேரிகளிலும், டெக்சாஸிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்கள் வெளிப்படையாக களைகட்டுமென்ற நம்பிக்கை உள்ளதோ இல்லையோ – அந்த ஸ்லீப்பர் செல்கள் சத்தமில்லாமல் சந்தோஷப்பட்டுக் கொள்வர் என்று நம்பலாம்! So welcome to The ப்ளைசி ஸ்பெஷல் ! Of course - மெகா சைஸிலேயே தான் !! ஹேப்பியா ராஜசேகரன் சார் ? 

So லயனின் 3 துவக்க நாட்களது ஸ்டார்கள் ELECTRIC ‘80s தடத்தினில் பாதி இடத்தை ஆக்கிரமித்திருக்க – மீத 3 ஸ்லாட்கள் முத்து காமிக்ஸில் க்ளாஸிக் கிங்ஸ்களுக்கே !!

வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, காரிகன், டிடெக்டிவ் சார்லி மற்றும் விங்-கமாண்டர் ஜார்ஜ் – என 6 ஜாம்பவான்கள் இதற்கு முன்பான Smashing ‘70s & Supreme ‘60s தடங்களில் தனித்தனித் தொகுப்புகளாய் ஆஜராகியிருந்தனர்! So இது வரையிலான மெகா இதழ்களில் கிட்டத்தட்ட 19 வேதாளர் கதைகள்; 20 காரிகன் கதைகள் ; 19 ரிப் கிர்பி கதைகள் – என்ற ரேஞ்சுக்கு திகட்டத் திகட்ட  வெளிவந்திருந்தன ! ஐயமேயின்றி இதே பாணியில் தொடர்ந்திட சாத்தியமில்லை என்பதால் – ஆறு நாயகர்களையும் ஒரே தொகுப்புக்குள் குடியேற்றி, கீழ்க்கண்ட விகிதங்களில் சீட்கள் தருவதாக உள்ளோம்!

So காத்திருக்கும் ஒவ்வொரு தொகுப்பிலும் ::

வேதாளர் புதுசு : 2 கதைகள் (Sy Barry ஆர்ட்ஒர்க்)

ரிப் கிர்பி புதுசு : 2 கதைகள்

மாண்ட்ரேக் புதுசு : 2 கதைகள்

சார்லி : 1 கதை

காரிகன் புதுசு  : 1 கதை

விங்-கமாண்டர் ஜார்ஜ் புதுசு  : 1 கதை

ஆக மொத்தம் : 9 கதைகள் (ஒற்றை ஆல்பத்தில்)

இவர்கள் அனைவருமே காமிக்ஸ் ”கிங்ஸ்” என்பது மட்டுமல்லாது – அமெரிக்க King Features-ன் பிள்ளைகள் என்பதால் – The King’s ஸ்பெஷல்ஸ் 1 ; 2 ; 3 என்று மூன்று ஆல்பங்களில் வலம் வந்திடுவார்கள்!

- 3 தொகுப்புகள் :

- ஒவ்வொன்றிலும் 372 பக்கங்கள்!

- ஹார்ட்கவர்

- விலை (தலா) ரூ.450/- (3 x Rs.450 = Rs.1350)

So எந்த நாயகரின் சாகஸமும் overkill ஆக இனி இருந்திடாது என்று நம்பலாம்! And ஒவ்வொரு ஆல்பமும் கதம்பக் கூட்டணியாக இருக்குமெனும் போது, நிச்சயமாய் variety கிட்டிடுமென்றும் எதிர்பார்க்கலாம்! So இதுவே ELECTRIC ‘80s தனித்தடத் திட்டமிடல்!

MYOMS சந்தாவினை நாம் பரணுக்கு அனுப்புவதாயின்  - அதற்கென நீங்கள் செலுத்தியுள்ள தொகைகளை இந்த ELECTRIC ‘80s சந்தாவினில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்! தமிழகத்தினுள் என்றால் மேற்கொண்டு ரூ.1000 செலுத்தினால் மதி !இல்லேப்பா ராசா... பழைய பார்ட்டிங்க சங்காத்தமே நமக்குத் தோதுப்படாதென்று” நினைத்தால் – சிம்பிளாக GPay-ல் தொகைளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்! தீர்மானம் எதுவாகயிருப்பினும் நமக்கு ஓ.கே. தான்!

ரைட்டு... வழக்கம் போல பழசைக் கண்டு குதூகலிப்போர் ஒருபுறமிருக்க, முகம் சுளிப்போர் மறுபுறமிருப்பது தெரிந்த விஷயமே! But இந்த ELECTRIC ‘80s தனித்தடத்தில் உங்களை ஆறுதல்படுத்தக் கூடிய விஷயமொன்று இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் : இங்கே சகலமும் மறுபதிப்புகளல்ல!!

- ஸ்பைடர் & ஆர்ச்சி ஆல்பங்கள் நீங்கலாய் பாக்கி நான்கு ஆல்பங்களிலுமே அத்தனையும் புதுக்கதைகளே இடம்பிடித்திடவுள்ளன!

And இயன்றமட்டுக்கு மொக்கையாக அல்லாத கதைகளையும், புராதனம் சொட்டாத களங்களையுமே தேர்வு செய்திட முனைந்து வருகிறோம்! In fact, மாடஸ்டியில் காத்துள்ள கதைகளெல்லாமே தொடரின் கட்டக்கடைசியில் உருவான சாகசங்கள் தான் ! So க்ளாஸிக் சாகஸங்கள் என்றாலும் உங்களை உறக்கம் கிடத்தும் சமாச்சாரங்கள் இராதென்று தகிரியமாய் நம்பலாம்! Ditto with வேதாளர் too : 1980-களில் உருவாக்கப்பட்ட கதைகளுக்குள்ளும் டைவ் அடித்திடவிருக்கிறோம் ! End of the day, க்ளாஸிக் நாயகர்களே கிட்டங்கியைச் சடுதியாய் காலி செய்யும் மனசும், திறனும் கொண்டவர்களாய் இருப்பதால், அவர்களைத் தவிர்ப்பதென்பது இயலாக் காரியமாகிறது! So ஸ்டார் ஹோட்டலின் மெனுவில் கூட தோசைகளும், பொங்கல்களும் இடம் பிடித்திடுவதைப் போல க்ளாஸிக் ஸ்டார்களையும் ஏற்றுக் கொள்வோமே! 

Moving on – இரு ”ஆயிரம்வாலா” தருணங்களுக்குமான ஸ்பெஷல் இதழ்களும் நிலுவையில் நிற்பது நினைவில் உள்ளது :

ஆந்தையன் பொறுப்பேற்ற பிற்பாடு 1000+ இதழ்களை உருவாக்கும் பணியில் பங்கேற்றிருந்ததைக் கொண்டாடும் விதமாய் ஒரு MAGIC MOMENTS ஸ்பெஷல் ! (MMS)

அப்புறம் - இதோ இப்போது 1000 பதிவுகளைத் தொட்டு நிற்பதை ஜாலியாய் நினைவு கூர்ந்திட ஒரு ஸ்பெஷல் !! இந்த 1000 பதிவு ஸ்பெஷலுக்கு நீங்களே ஏதாச்சுமொரு பெயரை முன்மொழிந்தால் சிறப்பாக இருக்குமென்பேன் ! இதன் வெற்றிக்கு முழுமுதற்காரணங்களே நீங்கள் தானெனும் போது, அதற்கொரு பெயரைச் சூட்டுவதும் நீங்களாக இருப்பது தானே பொருத்தமாகிடும் ? வழக்கமான, மாமூலான பாணிகளிலிருந்து விலகி நிற்குமொரு பெயராக இருக்கட்டுமே guys ? (பெயர் எதுவாக இருந்தாலும் அந்த "THE" முக்கியம்னும் மறந்துப்புடாதீங்க !)

And இந்த 2 ஆயிரம்வாலா பட்டாசுகளும் நமக்கு சந்தோஷமான தலைவலிகளை முன்வைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை !! ஏற்கனவே "ஆன்லைன் மேளா" என ஒரு கத்தை இதழ்கள் சந்தாவிற்கு அப்பாற்பட்டு வெளி வந்துள்ளன & இதோ - ELECTRIC '80s தனித்தடம் சார்ந்த அறிவிப்பும் இதோ - இப்போது செய்தாச்சு ! போதாக்குறைக்கு V காமிக்ஸ் தடத்தின் ஜூலை to டிசம்பர் 2024-க்கான ஆறு மாச சந்தா அறிவிப்பும் பெண்டிங் உள்ளது !! இதோ - அதற்கான announcement !!   

ஏற்கனவே உங்கள் பர்ஸ்களுக்கு கண்ணி வெடிகளை கணிசமாய் இறைத்துள்ள நிலையில், ஆயிரம்வாலாக்களின் பெயரைச் சொல்லி மேற்கொண்டும் டைம்பாம் விதைக்க பயமாகவுள்ளது ! 'ஆங்....அது தான் ஆகஸ்டில் ஈரோடு விழா வருதில்லே...அதுக்கு ரெடி பண்ணிடலாமே ?' என்ற கேள்வி எழலாம் ! ஆகஸ்ட் 2 to 13 தேதிகளுக்கு  ஈரோட்டு புத்தக விழா அரங்கேறிடவுள்ளது ! So நடுவே இருக்கும் இந்த இரண்டே மாத அவகாசத்துக்குள் ஜூலை & ஆகஸ்ட் ரெகுலர் தடத்து 8 இதழ்களை தயாரித்த கையோடு - இந்த ஆயிரம்வாலா ஸ்பெஷல்ஸ்களையுமே ரெடி செய்வதென்பதெல்லாம் நடைமுறை சாத்தியமே அல்லாதவை !! ஒருக்கால் அந்த ஸ்பெஷல்ஸ் "கார்சனின் கடந்த காலம்" போலான மறுபதிப்புகளாய் அமைந்திட்டால் வேலை சுலபம் தான் - ஆனால் நடப்பாண்டுக்கு இதுக்கும் மேலாய் மறுபதிப்புகள் வேணாமே என்பதில் தீர்மானமாய் உள்ளேன் !  

அதே போல இந்தவாட்டி வாசக சந்திப்பை சேலத்துக்கு இடமாற்றம் செய்திடலாமே என்ற கோரிக்கைகளும் ரவுண்டில் உள்ள சூழலில், அதற்கும் செவி தரும் அவசியமுள்ளது ! இரண்டே ஆண்டுகளில் சேலம் புத்தக விழாவானது ஒரு அட்டகாசமான விற்பனைக்களமாக மாற்றம் கண்டிருப்பது நண்பர்களின் கோரிக்கைக்கு பின்னணியாக இருப்பது புரிகிறது ! So சொல்லுங்கண்ணே :

ஆகஸ்டில் ஈரோடா ? நவம்பரில் சேலமா ? 

- எது வசதிப்படுமென்று சொல்லுங்களேன் ? இதோ - அதற்கான ஓட்டிடும் தளம் : https://strawpoll.com/2ayLQJ4wMn4

ரைட்டு....இப்போ முக்கியமான மேட்டருக்கு வருவோமா ? எங்கே - எப்போது ? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க - இந்த ஸ்பெஷல்களில் இடம்பிடித்திடப் போவது என்னவென்ற கேள்வி தானே பிரதானம் ?! இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டால், இன்னொன்றைத் தேர்வு செய்யும் வேலையினை நீங்கள் சிறப்பாய் செய்ய மாட்டீர்களா - என்ன ? So MAGIC MOMENTS Special இதழுக்கான தேர்வினை ஞான் செய்யும் - அது ரெம்போவே சுலபமான பணி என்பதால் !! 

**இது வரையிலான இந்தப் பயணத்தில் ; நான் பொறுப்பேற்றுத் தயாரித்திருக்கும் ஆயிரத்து சொச்சத்தில் - யாரது சாகசங்கள் maximum இடங்களைக் கைப்பற்றியுள்ளன ? என்று பார்த்தேன் !! 

**இது வரைக்குமான அனுபவத்தினில் - யாருக்கு maximum ஸ்பெஷல் இதழ்கள் போட்டிருக்கிறோம் ? என்றும் பார்த்தேன் !

**இது வரைக்குமான விற்பனைகளில் யாருக்கு maximum ஹிட்ஸ் அமைந்துள்ளன ? என்றும் ஆராய்ந்தேன் ! 

போக்கிரி பட வசன பாணியில் தான் பதில் கிட்டியது : 'யாரு அடிச்சா பொறி கலங்கி, பூமி அதிருதோ, அவன் தான் டெக்ஸ் !' Oh yes - 1985 முதலாய் நம்முடனான பயணத்தைத் துவக்கி, 39 ஆண்டுகளுக்குப் பின்னேயும் கோலோச்சும் அசாத்தியராய்த் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஆளாளுக்கு ஒரு ஸ்லாட் ; ரெண்டு ஸ்லாட்டுக்கென சட்டையைக் கிழித்துக் கொண்டிருக்கும் வேளையில் கெத்தாய் - கொத்தாய் 12 ஸ்லாட்களை வாரிக் கொள்ளும் நிகரற்ற இரவுக்கழுகாரைத் தாண்டி வேறு யாரையும் இந்த MAGIC MOMENTS ஸ்பெஷலுக்குப் பரிந்துரைக்க எனக்குத் தோணலை ! So TEX it will be !!

Of course - 'அவுகளையும், இவுகளையும், அப்புச்சியையும், அத்தாச்சியையும்  கோர்த்து NBS மெரி ஒரு கதம்ப குண்டு போடுவேன்னு எதிர்பார்த்தேன்' - என்ற விசனக்குரல்கள் ஒலிக்காது போகாதென்பது தெரியும் தான் - but இந்தக் கூட்டணிகள் சமாச்சாரமானது - King Features & Fleetway க்ளாஸிக் நாயகப்பெருமக்களைத் தாண்டிய வேறு யாருக்குமே இனி சாத்தியமாகிடாது என்பதே bottomline ! மிஞ்சிப் போனால் லக்கி லூக்கையும், ரின்டின் கேனையும் ஒரே இதழில் போட அனுமதிப்பார்களே தவிர, வேறு ஆரும், இனிமேற்கொண்டு ஆரோடும் கூட்டணி போட வாய்ப்புகளெல்லாம் பூஜ்யமே ! போனெல்லி நிறுவனத்திலேயே - அவர்களது நாயகர்களை தனித்தனி தடங்களில் பார்த்திடவே விரும்புகின்றனர் ! So 'இதிலே கொஞ்சம், அதிலே கொஞ்சம்' என்ற மெட்றாஸ் மிக்சர் படலம்ஸ் இனியும் சாத்தியமில்லை folks - so அது குறித்த கோரிக்கைகள் இனி எப்போதுமே வேணாமே ப்ளீஸ் ? கதம்ப இதழ்களை ரசித்தே தீர வேண்டுமெனில் இனி மாயாவி மாமாவையும், ஸ்பைடர் சித்தப்புவையும், ஆர்ச்சி அண்ணாச்சியையும், ஜேன் பாண்ட் அத்தாச்சியையும் - ஒரே இதழில் போட்டுத் தாக்கி மகிழ்வதைத் தாண்டிய options லேது ! 

ரைட்டு...டெக்ஸ் சாகசம் என்பது தீர்மானமாச்சு ; கதை எதுவோ ? என்ற கேள்விக்கு இனி விடை காண்போமா ? பொதுவாய் நம்ம லக்கி லூக் ; சிக் பில் & ரிப்போர்ட்டர் ஜானி கதைகளில் தான் 80+ கதைகள் இருப்பது உண்டு ; so அவற்றுள்ளான தேர்வுகளுக்கு மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் வியர்வை சிந்திட அவசியப்படும் ! ஆனால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு கால் மணி நேரத்  தேடலில் ஏதேனுமொரு ஆல்பத்தை pick செய்திட இயன்றிடும் ! ஆனால் நம்ம இரவுக்கழுகாரின் கதையே வேறு !! ஒரு சமுத்திரமே காத்திருக்க, அதனுள் குதித்து புதையல் தேடுவதென்பது நாக்குத் தொங்கச் செய்யும் சமாச்சாரம் !! And வண்டி வண்டியாய் தோண்டித், துருவி, தேடி கதைகளைத் தேர்வு செய்தாலுமே கொஞ்சம் பிம்பிலிக்கி-பிலாக்கிக்கள் ஆகிப் போவதை மறுக்க இயலாது தான் ! என்னிடம் டெக்ஸ் கதைக்குறிப்புகள் கொண்டதொரு தனி டயரியே இருக்கும் போதிலும், இந்த MAGIC MOMENTS ஸ்பெஷலுக்கென டெக்ஸ் சாகஸத்தினை shortlist செய்வதற்குள் கிறுகிறுத்து விட்டது !! முதற்காரியமாய் நான் செய்தது - பட்ஜெட் என்னவென்று முடிவு செய்ததைத் தான் ! Year # 40 ; ரூ.400 என்ற விலையே ceiling என்று நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப தேட ஆரம்பித்தேன் ! And இந்த விலை நிர்ணயத்துக்கு ஒரு காரணம் உள்ளது ; அதை அடுத்த பத்தியில் சொல்லுகிறேன் !

*இருப்பதிலேயே மிக நீளமான டெக்ஸ் சாகசம் - 586 பக்கங்கள் கொண்டது ! அதையோ-அதைப் போலானதொரு மெகா சாகசத்தையோ கலரில் போடுவதாயின் எண்ணூறு-தொள்ளாயிரம் என்று பட்ஜெட் தெறித்து விடும் ! So திடு திடுப்பென அது போலான பட்ஜெட் ரெடி செய்திடல் அசாத்தியம் என்பது உறைத்தது ! அதையே Black & white-ல் போட்டால் ரூ.400 பட்ஜெட்டுக்குள் அடங்கிடும் தான் ; but ஏற்கனவே நவம்பருக்கென 4 பாக, 440 பக்க black & white சாகசம் டெக்ஸ் தீபாவளி மலராக வரவிருக்கும் தருணத்தில், இன்னொரு black & white மெகா இதழ் அத்தனை சோபிக்காதென்று நினைத்தேன் ! தவிர, 440 பக்கங்களின் தீபாவளி special பணி + 586 பக்க Magic Moments பணி = 1026 பக்கங்கள் and அதுவும்  கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் என்றால் - அநேகமாய் வீட்டில் தண்ணி தெளிச்சு டாட்டா காட்டி விடுவார்கள் என்பதும் உதைத்தது ! So கலரே ஜெயம் என்று fix ஆகினேன் !  

*அதன் பின்பாய் தேடினேன் - உருட்டினேன் - துளாவினேன் - அந்த னேன் ; இந்த னேன் ; நடுவாக்கிலே நிறைய நொந்தேன் - but இறுதியில் 2 கதைகளுக்குள் மட்டுமே போட்டி என்று shortlist செய்தேன் ! இரண்டுமே 256 பக்க சாகசங்கள் ; கலரில் ; ஹார்ட்கவரில் ; நம்ம விலைக்குள் அழகாய் set ஆகிடும் என்பதும் புரிந்தது ! 

*இல்லாத கேசத்தை நிறைய பிய்த்தான பின்னே இதோ - இந்த சாகஸத்தினில் zoom in ஆகினேன் - முக்கியமானதொரு காரணத்தினால் !! இந்த ஆல்பத்தில் தான் நமது ரேஞ்சர்களின் முழு டீமும் களமிறங்கிடுகிறது ! So டெக்ஸ் ; கார்சன் ; கிட் & டைகர் ஜாக் கரம் கோர்க்கும் இந்த ஆக்ஷன்   மேளாவே நமது MAGIC MOMENTS Special ஆக இருந்திடவுள்ளது !! நம்மவரை இங்கே பந்தாடுகிறார்கள் ; சவுக்கால் வெளுக்கிறார்கள் ; மரண தண்டனை விதித்து firing squad முன்னே நிறுத்துகிறார்கள் - கிராதகர்கள் ! இறுதியில் வட்டியும், முதலுமாய் தாண்டவமாடுகிறார் 'தல' !! சில ஸ்லீப்பர் செல்களுக்கும் இந்த சாகசம் செம்மையாய் ரசிக்கும் என்பதை இப்போதே உணர முடிகிறது !


*முழு வண்ணத்தில், ஹார்ட் கவர் சகிதம் ; ஒரு 32 பக்க கலர் டெக்ஸ் மினி சாகஸத்தினையும் இணைத்து, ஆக மொத்தம் 288 பக்கங்களுடன் இந்த இதழினை - ரூ.400 விலைக்குள் தந்திடலாம் என்பது திட்டமிடல் !

ரைட்டுங்களா ? கதையைத் தீர்மானித்த பிற்பாடு, எங்கே, எப்போ உங்கள் கண்களில் இதனைக் காட்டுவது ? என்ற கேள்வியோடு மறுக்கா மண்டையை உருட்டினேன் ! "இதை 2025 அட்டவணையில் வைச்சுக்கலாம்" என்று சொல்லும் சபலம் தலைதூக்கியது தான் - ஆனால் குரல்வளையை கடிச்சுப்புடுவீர்களென்ற டர்ரும் தலை தூக்கிட, நடப்பாண்டில் காத்துள்ள பாக்கி ரெகுலர் தடத்து இதழ்களில் பார்வையை படர விட்டேன் ! 

*மேற்கே போ மாவீரா - ரூ.250 விலையில்

&

*எல்லையோர ஓநாய்கள் (TEX) - ரூ.160 விலையில் 

டிசம்பருக்கென ஸ்லாட் ஆகியிருப்பது தென்பட்டது ! அவை இரண்டையும் 2025-க்கு நகற்றி விடும் பட்சத்தில், இந்த MAGIC MOMENTS ஸ்பெஷல் அந்த இடத்தில் சுலபமாய் நுழைந்து விடக்கூடும் ! So தனியாக இன்னொரு முன்பதிவு, இத்யாதி...இத்யாதி என்று உண்டியல் குலுக்கும் அவசியங்களின்றி, இதழை அழகாய் உங்களிடம் ஒப்படைத்து விடலாம் ! What say folks ?

Moving on - இன்னமும் பெயரிடப்பட்டிருக்கா "ஆயிரம் பதிவு ஸ்பெஷல்" க்கென உங்கள் முன்னே 3 choices தந்திட விழைகிறேன் !! மூன்றுமே ஈரோ / ஈரோயினி என்று யாரையும் முன்நிறுத்திடாத படைப்புகள் !! ஒவ்வொன்றுமே அதனதன் பாணியில் மிரட்டும் அதகளங்கள் ! And மூன்றுமே நம் வசமுள்ளன ! இதோ லிஸ்ட் :

1 ."பயணம்" !!! 

கொஞ்ச வருடங்களுக்கு முன்பாய் "நிஜங்களின் நிசப்தம்" என்றொரு கி.நா. வெளியானது மறந்திராதென்று நினைக்கிறேன் ! அசாத்தியமான சித்திரங்களுடன் வந்த அந்த ஆல்பம் நம் மத்தியில் ஏகமான அலசல்களை ஈட்டியிருந்தது ! அந்தப் படைப்பின் ஓவியரான Manu Larcenet - 2 மாதங்களுக்கு முன்பாக இன்னொரு பிரமிக்கச் செய்யும் படைப்பை LA ROUTE என்ற பெயரில் உருவாக்கியுள்ளார் ! பிரெஞ்சில் வெளியாகி அதற்குள்ளாக 140,000 பிரதிகள் விற்பனை கண்டுள்ளது & அதற்குள்ளாக 15 உலக மொழிகளில் வெளியிட முஸ்தீபுகள் ஜரூராய் அரங்கேறி வருகின்றன ! அந்த லிஸ்ட்டில் நாம் # 16 என்பது கொசுறுத் தகவல் !  

Cormac McCarthy என்ற அமெரிக்க நாவலாசிரியர் 2006-ல் THE ROAD என்ற பெயரில் உருவாக்கிய புதினம் உலகளவில் செம வரவேற்பினைப் பெற்றிருந்தது ! அமெரிக்க இலக்கிய உலகின் மிக உயர்ந்த கௌரவமான PULITZER Prize - இந்த நாவலுக்காக 2007-ல் அவருக்கு வழங்கப்பட்டது ! And 2009-ல் இதுவொரு திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது ! இந்த நாவலாசிரியரின் ஸ்பெஷாலிட்டியே ஒரு சர்வ நிர்மூலத்துக்கு அப்புறமான apocalyptic உலகினை ஆராய்வதே ! And இந்த நாவலும் அதற்கொரு விதிவிலக்கல்ல : 



பேரழிவிற்குப் பின்பான உலகினில் பறக்கப் பறவைகள் கிடையாது ; சுவாசித்திடும் ஒற்றை மரம் பாக்கி கிடையாது & சர்வமும் தீக்கிரையாகி, திரும்பிய திக்கெல்லாம் சாம்பல் மேடுகளே எஞ்சியுள்ளன ! துளியும் நம்பிக்கை தரா அந்த நிலப்பரப்பில், கொஞ்சமாய் பொருட்களோடு ஒரு வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்லும் தந்தையும் மகனுமே இந்தப் படைப்பின் மையப்புள்ளிகள் ! உண்ண உணவைத் தேடி, படுக்க ஒரு மூலையைத் தேடி இலக்கின்றிப் பயணம் பண்ணுகிறார்கள் - வெறி கொண்டு பசியோடு அலையும் எஞ்சியிருக்கும் மனித குலத்திடம்  சிக்கிடக்கூடாதென்ற நோக்கத்துடன் ! வெயில்..புயல்..மழை...பனி....என சகலத்தையும் கடந்து செல்லும் இந்தத் தந்தை-தனயன் ஜோடியின் பயணம் வெற்றி கண்டதா ? இது தான் இந்த ஆல்பம் !! இதனை வாசித்துள்ளோரும் சரி, அலசியுள்ளோரும் சரி, கண்களில் நீரின்றி பேசிடவே காணோம் எனும் போதே இந்தக் களத்தின் கணம் புரிகிறது ! ஒரு நாவலை அதிஅற்புதமாய் சித்திரங்களில் கொணர்ந்திருப்பதாக அனைவருமே சிலாகித்துள்ளனர் !! இதோ பாருங்களேன் ஓவியரின் அசாத்தியங்களை : 





இந்த ஆல்பம் உருவாகும் சேதி போன வருடத்தின் ஏதோவொரு வேளையில் அகஸ்மாத்தாய் என் கண்ணில் பட்டது & அப்போதே என்னுள் ஒரு இனம்புரியா ஈர்ப்பு எழுந்தது !! நிச்சயமாய் இது ஒரு dark படைப்பாகத் தானிருக்கும் என்பது புரிந்தது ! நிச்சயமாய் வெகுஜன ரசனைக்கு இது ஒத்துப் போகாதென்பதும் புரிந்தது ! But வெறும் 10 பிரதிகள் விற்றால் கூட பரவாயில்லை - இதனை தமிழுக்குக் கொணர்ந்தே தீரணும் என்ற ரேஞ்சுக்கு மண்டைக்குள் ஒரு குறுகுறுப்பு !! காத்திருந்தேன் - படைப்பு பூர்த்தி காணும் வரையிலும் ! ஜனவரியில் படைப்பின் Work in Progress என்றொரு கோப்பை அனுப்பிய போதே சித்திர மாயாஜாலங்களில் மிரண்டே போனேன் ! To cut a long story short - இதற்கான உரிமைகளை வாங்கியாச்சு - எங்கே, எப்போது,எவ்விதம் வெளியிடுவது ? இதனை நம் வட்டம் கட்டையைக் கொண்டு சாத்துமா ? என்று எதுவுமே தெரியாத நிலையில் ! கி.நா.வே ஆகாதென்ற சூழலில் ; இத்தனை டார்க்கான படைப்பை போணி பண்ணவாச்சும் முடியுமா ? என்ற கேள்வியை போர்வையைக் கொண்டு மூடி விட்டு, ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் இந்தப் படகில் எறியாச்சு !! 152 பக்கங்கள் ; லக்கி லூக் வெளியாகும் சைசில் ; செம premium edition ஆக இதனை வெளியிட்டதாக வேணும் - ரூ.400 விலையில் !! 

இது Option # 1 

2.ROUTE 66 :

ரொம்ப காலமாய் நிலுவையில் உள்ள க்ரைம் த்ரில்லர் ! 1950-களின் அமெரிக்காவில், அரங்கேறும் ஒரு ஆடு-புலியாட்டம் ; அட்டகாசமாய் 5 அத்தியாயங்களில் தடதடக்கின்றது ! அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணமாய் தொடரும் வேட்டை - Cold War நாட்களின் திரைமறைவிலான ரகளைகளை 232 பக்கங்களில் சொல்ல முனைகிறது ! Absolute த்ரில்லர் - ரூ.600 விலை இங்கு அவசியமாகிடும் !!


Option # 3 :

இது நமக்கு நிரம்பப் பரிச்சயமானதொரு வன்மேற்கு !! வருஷமோ 1900 !! ஒரு அழகான யுவதி ரயிலில் சிறு நகரம் ஒன்றில் வந்து இறங்குகிறாள் - கல்யாணம் கட்டிப்பதாய் வாக்குத் தந்தவனைத் தேடி ! இறந்து போன தனது தாயைப் போல உடலை விற்றுப் பிழைக்கும் விதியிலிருந்து தப்புவதே அவளது லட்சியம் ! ஆனால் புது ஊரிலோ வாக்குத் தந்த மணாளனைக் காணோம் & வாழ்க்கைச் சுழல் இளம் அழகியை ஏதேதோ விதங்களில் இழுத்துச் செல்லும் தருணத்தில் செனட்டர் தேர்தலில் போட்டியிடும் அந்த மாகாணத்தின் கவர்னர் அங்கு வருகை தருகிறார் ! அது தற்செயலா ? தொடர்ந்திடும் அதகளங்களுமே தற்செயல் தானா ? அல்லது வன்மேற்கின் பழி தீர்க்கும் அத்தியாயங்களில் இன்னமும் ஒரு புது அத்தியாயத்தினை எழுதும் வேளை புலர்ந்துள்ளதா ? 5 அத்தியாயங்களில் தொடர்ந்திடும் இந்த கௌபாய் / கௌகேர்ள் த்ரில்லருக்கு மொத்தம் 288 பக்கங்கள் ! ஒரிஜினலாக வந்தது போலவே 5 தனித்தனி புக்ஸ்களாய் இவற்றை வெளியிட்டு ஒரு சன்னமான box set-ல் போட்டுத் தந்தால் ரூ.750 ஆகிடும் !! இல்லாங்காட்டி - மாதமொரு அத்தியாயம் என 5 இதழ்களாகவே வெளியிடவும் செய்யலாம் !!  இந்தத் தொடரின் பிரெஞ்சுப் பெயர் "விஷம் !!" 



Phewwwwwww !!! சட்டையைக் கிழித்துக் கொள்ளும் வேலையை ஒரு மாறுதலுக்கு உங்கள் பக்கமாய் தள்ளி விட்ட திருப்தியில், இதோ - வோட்டு போடும் லிங்கை ஜாலியாய் ஒப்படைக்கிறேன் : https://strawpoll.com/NPgxeqP9PZ2

அப்புறம் சொல்ல மறந்துப்புட்டேனே - சனியன்று ஜூன் புக்ஸ் கூரியரில் கிளம்பியாச்சு ! And ஆன்லைன் மேளாவில் விடுபட்டிருந்த "தண்டர் in ஆப்ரிக்கா" இதழும் அதனுடன் பயணிக்கிறது !! அந்த இதழின் கலரிங்கைப் பார்த்து பிரமிக்காதோர் இருப்பின் அவர்கள் Zen துறவிகளுக்கு tough தர வல்லவர் எனலாம் !! Simply awesome !! அப்புறம் இம்மாத V காமிக்சில் மிஸ்டர் நோ சாகசமும் சூப்பர் ரகம் !! இதோ அவரது ரொம்பவே வித்தியாசமான சாகஸத்தின் அட்டைப்படம் & உட்பக்க preview !! 




இதுக்கு மேலும் பதிவை நீட்டித்தால், டைப்படிக்கும் டீம் தெறித்து ஓடி விடுவார்கள் என்பதால், நாலு பதிவுக்கான சமாச்சாரத்தை ஒற்றைப் பதிவுக்குள் திணித்திருக்கும் உணர்வோடு கிளம்பும் வழியைப் பார்க்கிறேன் folks !! விளையாட்டாய் துவங்கியதொரு வலைப்பூவிற்கு இத்தனை நேசமும், ஆதரவும் தந்து இத்தனை தூரம் இட்டு வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த ஒரு கோடி நன்றிகள் !! விரல்கள் ஓய்ந்து போயிருக்காவிடின், உங்களை சிலாகித்திட இன்னமும் கணிசமாய் எழுதியிருப்பேன் ! But  கபிஷின் வாலைப் போல பதிவு நீண்ட பிற்பாடும் நான் நடையைக் கட்டாதிருப்பது சுகப்படாதென்பதால் ஞான் கிளம்புகிறது ! 

Bye all .....see you around !! Have a wonderful weekend !!! And thanks a million again !! 

P.S : இந்தப் பதிவை 'ஏக் தம்'மில் வாசித்தோர் - எவ்வளவு நேரமாச்சு ? என்று சொல்வீர்களா ? Just curious !!!

416 comments:

  1. 1000 மாவது பதிவில் அன்புடன் ஆஜர் நன்பர்களே 💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் ஆவது பதிவில் முதலிடம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்...

      Delete
    2. சூப்பர் சகோ, வாழ்த்துகள்

      Delete
    3. வாழ்த்துகள் டெக்ஸ் அணி வேகப்பத்து வீச்சாளரே
      💐💐💐

      Delete
    4. Hearty congratulations Sir 👌👌👌💐💐💐❤️🤝🤝🤝👏👏👏

      Delete
    5. வாவ்!! வாழ்த்துகள் நண்பரே!!

      Delete
    6. லேட்டா வந்து முதல் கமெண்ட்டுக்கு கீழே கமெண்ட் போட்டு வெச்சதுக்கெல்லாம் ஸ்பான்ஞ் கேக் கிடையாதாம்..!

      Delete
    7. வாழ்த்துக்கள் மாதேஸ் சார்.

      Delete
  2. ஸ்பாஞ்ச் பன் எனக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் சாப்ட போறது எங்க அண்ணன் தான்.

      Delete
  3. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  4. உள்ளேன் அய்யா

    ReplyDelete


  5. ஆயிரமாவது பதிவிற்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள், ஆசிரியரே❤❤❤❤❤

    ReplyDelete
  6. டியர் விஜயன் சார்,

    மனதுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கைத் தாம் செய்யும் தொழிலாக அமைத்துக் கொண்டு, தமிழில் காமிக்ஸ் வெளியிடும் பணியை பாரம்பரியமாகத் தொடர்ந்து, லயன் துவக்கிய நாள் தொட்டு இன்று வரை, சில இலட்சம் பேர்களின் வாசிப்பு வேளைகளை ஒரு முறையாவது இனிமை ஆக்கி இருப்பீர்கள்!

    ஹாட்லைன் / கடிதங்கள் வழியே வாசகர்களுடன் பேசத் துவங்கி, பின்னர் வலைப்பூ வாயிலாக காமிக்ஸ் சார்ந்த அறிவிப்புகள், தகவல்கள், முன்னோட்டங்கள், நினைவுகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து, பல்லாயிரத்தவரின் காமிக்ஸ் ஆர்வம் மற்றும் நாஸ்டால்ஜியாவை ஒரு முறையேனும் கிளறி இருப்பீர்கள்!

    வாசகர்களுடன் விடிய விடிய அரட்டைகள் மற்றும் கும்மிகள் அடித்தும், கமெண்டுகளில் கதகளி ஆடியும், அவ்வப்போது லேசான அடிதடிகளில் இறங்கியும், இந்தப் பதினொன்றரை ஆண்டுகளில், சில ஆயிரம் பேருடன் ஒரு தடவையாவது உரையாடி இருப்பீர்கள்!

    பொதுவாகவே படிக்கும் ஆர்வம் குன்றிப் போன இன்றைய காலத்தில், காமிக்ஸ் படிப்பவர்கள், அதிலும் தமிழில் படிப்பவர்கள் அரிதிலும் அரிது என்றாகி விட்டது! இப்படி ஒரு தொய்வான சூழ்நிலையிலும், தளராமல் காமிக்ஸ் வெளியிடுவது, விற்பனையைப் பற்றிக் கவலைப்படாமல் பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவது, விமர்சனங்கள் கண்டு வீழாமல் இருப்பது இவை எல்லாம் லேசுப்பட்ட காரியங்கள் அல்ல!

    திரைப்படங்கள், இசை, இணையம், தொலைக்காட்சி என்று அயற்சிக்கு வடிகாலாக இருக்கும் பொழுதுபோக்குப் பட்டியலில், குறைந்தது ஐநூறு பேர்களாவது தமிழ் காமிக்ஸையும் சேர்த்துக் கொள்ளக் காரணமாக இருக்கிறீர்கள்!

    பல நூறு பேர்களின் எழுதும் ஆர்வத்தை (மீண்டும்) தூண்டி இருப்பீர்கள், அவர்களில் பலர் சொந்தமாக வலைப்பூ தொடங்குவதற்கு காரணமாக இருந்திருப்பீர்கள் - அவர்களில் நானும் ஒருவன்!

    சில நூறு அதி தீவிர வாசகர்களையும், தமிழ் காமிக்ஸ் உடனான பாலம் அறுபடாமல் இருக்க உங்கள் வலைப்பூவை இறுக்கப் பற்றிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களையும் உங்கள் பதிவுகளின் மூலம் வாரம் தவறாமல் மகிழ்வித்து வருகிறீர்கள்! 

    உங்களைப் பார்த்து ஒரு ஐம்பது பேராவது, நாமும் என்றாவது ஒருநாள் தமிழில் காமிக்ஸ் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருப்பார்கள், அந்த ஆசை அவர்களின் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் இன்னும் கனன்று கொண்டிருக்கும் (நான் உள்பட)! 

    உங்களால் கவரப்பட்டு / தூண்டப்பட்டு ஒரு ஆறேழு பேராவது, தமிழில் காமிக்ஸ் வெளியிட்டு இருப்பார்கள், இருக்கிறார்கள்!

    உங்கள் மீதும், உங்கள் வெளியீடுகள் மீதும் பல பேருக்கு பல விதமான மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் கூடும்! ஆனால், நீங்கள் இதுவரை இத்துறையில் சாதித்தவற்றைக் கணக்கில் கொண்டால் அந்த விமர்சனங்கள் யாவும் அடிபட்டுப் போய் விடுகின்றன!

    மொத்தத்தில் உங்களுடைய தமிழ் காமிக்ஸ் பணியும், பங்களிப்பும், இந்த 1000 பதிவுகளும், வேறு எந்த ஒரு பொழுதுபோக்குக் கலைஞர் அல்லது வெகுஜன எழுத்தாளரின் பங்காற்றலுக்கும் குறைந்ததல்ல!

    மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் சார்!

    ReplyDelete
    Replies
    1. //பதினொன்றரை ஆண்டுகளில்//
      பனிரெண்டரை ஆண்டுகளில்

      Delete
    2. @KS ji..😍😘😃

      Semma..💐💐💐

      Delete
    3. அட்டகாசம் கார்த்திக்!💐💐

      Delete
    4. ஆஹா..என்ன ஒரு உண்மையான . .அட்டகாசமான மறக்கமுடியாத பதிவு . . . .
      மனம் நிறைந்த வாழ்த்துக்
      கள் கார்த்திக் .சகோ . நன்றி .நான் சொல்ல
      வந்ததும் இதுவே..விஜயன்
      சாருக்கு . .வாழ்த்துக்களும்
      . .நன்றிகளும் . . .

      Delete
    5. பொருத்தமான அருமையான வாழ்த்துப் பதிவு ...

      எடிட்டருக்கு எனது நன்றிகளும்

      Delete
  7. Congratulations sir 💐🔥👏👏👏👏👏😀

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் ஸார் 👌👌👌😍😍😍

      Delete
    2. பதிவை படிக்க கிட்டத்தட்ட 20 நிமிடங்கள்,
      சிலது புரியாத பட்சத்தில் மீண்டும் படிக்க மொத்தமாக 30 நிமிடங்கள்.

      Delete
  8. ஆயிரம் பதிவுக்கு ஆயிரம் வாழ்த்துகள் சார்
    💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  9. ஆயிரமாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !!

    தங்களின் அபரிதமான காமிக்ஸ் காதலுக்கு தலைவணங்குகிறேன் !!

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  11. Replies
    1. 13 நிமிடங்கள் ஆயிற்று சார்..!

      Delete
  12. கலக்கல் சார் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. 1000வது பதிவுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள் எடிட்டர் சார்!! உங்களுக்கு எப்படியோ - எங்களைப் பொறுத்தவரையில் இதுவொரு மிகப் பெரிய சாதனையே!
    சாதனைகள் தொடரட்டும்!

    ReplyDelete
  14. ஆயிரமாவது பதிவுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள் சார்..!

    ReplyDelete
  15. Rendu moonu Peru more than 2pathivu athunala naanum 25kulla cake koduthudanum

    ReplyDelete
  16. அய்யோ சொக்கா பன்னு
    போச்சே

    ReplyDelete
  17. வரலாற்று பதிவு வந்துருச்சு 👀😅

    ReplyDelete
  18. ஆயிரமாவது பதிவிற்கு ஆயிரம் தொப்பி தூக்கல்கள் சார்..💐💐💐

    ReplyDelete
  19. வணக்கம் உறவுகளே.. ❤️❤️❤️

    ReplyDelete
  20. நடுச்சாம பதிவு என வரும் என நினைத்து அசால்டாக இருந்து வடை ( கேக் ) போய் விட்டதே....:-(


    சரி பதிவே பெர்ர்ர்ய இனிப்பாக இருக்கும் போல்..படித்து விட்டு ....வர்லாம்..:-)

    ReplyDelete
  21. ஆயிரமாவது பதிவில் நானுமே ஆஜர்.. 😍😍

    ReplyDelete
  22. ஆயிரமாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள்... உங்கள் பதிவினை படிக்காமல் வாரயிறுதி நிறைவுறாது.

    பல்லாயிரம் பதிவுகள் காண ஆவல்...

    நல்வாழ்த்துகளும் நன்றிகளும்

    ReplyDelete
  23. 1000 write ups is some achivement sir - congratulations really !

    ReplyDelete
  24. Here for Post #1000, with the same excitement and enthusiasm since day #1

    ReplyDelete
  25. Now Indian 2, songs. நாளை காலை புத்துணர்வுடன் முழுப்பதிவையும் படிக்க வேண்டும். எவ்வளவு பெரிய பதிவு. வாழ்த்துக்கள் சார். திங்கள் கிழமை பார்சல் வந்து விடும். இந்த வாரமே கொண்டாட்டம் தன்

    ReplyDelete
  26. பதிவில் எனக்கு ஃபர்ஸ்ட் பிடித்தது பதிவின் நீளம் தான்...😍

    இப்போதைக்கு அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமாக படித்து விட்டு,
    காலையில் ஃப்ரெஷ் ஆக ஃபுல்லா படிக்க வேண்டியது தான்😊

    ReplyDelete
  27. டன் கணக்கிலான எதிர்பார்ப்பையும் மீறி இவ்வளவு அசத்தலாக 1000 ஆவது பதிவை அமைத்து கலக்கிய எடிட்டர் சாருக்கு நன்றி நிறைந்த வாழ்த்துக்கள் ஆயிரம் சார்🥰💐💐💐👏👏👏👌👌👌🤝🤝🤝💥💥💥🔥🔥🔥✨✨✨♥️♥️♥️🧀🧀🧀
    (1000 ஆவது பதிவுக்கு 1000 நன்றிகள் 🤩)

    ReplyDelete
  28. ///கெத்தாய் - கொத்தாய் 12 ஸ்லாட்களை வாரிக் கொள்ளும் நிகரற்ற இரவுக்கழுகாரைத் தாண்டி வேறு யாரையும் இந்த MAGIC MOMENTS ஸ்பெஷலுக்குப் பரிந்துரைக்க எனக்குத் தோணலை ! So TEX it will be !!///

    டெக்ஸ் சூப்பர் ஷ்பெசலுக்கு விசில் போடு..👯👯👯

    ReplyDelete
    Replies
    1. Magic Moment Special (MMS) க்கு ஏற்ற Magician ' தல ' டெக்ஸ் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை 💪🎩🏇

      Delete
  29. ஆயிரம் பதிவுகள்..
    மிகப்பெரிய சாதனை...
    மேலும் பல ஆயிரம் பதிவுகள் தொடர வாழ்த்துகள் சார்...

    ReplyDelete

  30. முழுசா அரைமணி நேரம் பிடித்தது... படிக்க.

    ReplyDelete
  31. ///இந்தப் பதிவை 'ஏக் தம்'மில் வாசித்தோர் - எவ்வளவு நேரமாச்சு ? என்று சொல்வீர்களா ? Just curious !!! ///

    ரொம்ப நேரமாச்சு..!

    ReplyDelete
  32. செம்ம பதிவு வாத்யாரே...
    ஸ்பைடர், ஆர்ச்சி, இளவரசி, சார்லி, மாண்ட்ரேக், காரிகன், வேதாளர் ஆகா.. ஆகா.. ஆகா..

    ஆயிரமாவது பதிவிற்கு தகுதியான அட்டகாசப் பதிவு.. 🔥🔥🔥🔥🔥👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  33. இன்னும் முழுசா படிக்கலங்க ஆசிரியரே
    M@gic Moment Special அறிவிப்பு வரைக்கும், அதற்கே 30 நிமிடம் ஆயிற்று
    படிச்சுட்டு வரேங்க

    ReplyDelete
  34. எலக்ட்ரிக் 80' தனித்தடம் என்றால் பிரதி மாதம் ஒரு இதழா சார்?!

    ReplyDelete
  35. சார்...முதலில் ஆயிரம் பதிவிற்கு மனமார்ந்த ஆயிரம்ஆயிரம் வாழ்த்துக்கள்...


    ReplyDelete
  36. ///யாரு அடிச்சா பொறி கலங்கி, பூமி அதிருதோ, அவன் தான் டெக்ஸ் !'///

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  37. படித்து முடிக்க மொத்தமாய் 25 நிமிடங்கள் .. சத்தமே இல்லாமல் கிட்டத்தட்ட அட்டவணைப் படலத்தை ஒத்த பதிவு சார் இது.. இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகளோடு பயணிக்க புனித மானிடோ அருளட்டும்..

    ReplyDelete
    Replies
    1. // சத்தமே இல்லாமல் கிட்டத்தட்ட அட்டவணைப் படலத்தை ஒத்த பதிவு சார் இது.. // கண்டிப்பாக

      Delete
  38. புத்தகத்தையே பிரித்து பிரித்து படிக்காத எனக்கு தங்கள் பதிவை பிரித்து பிரித்து படிக்க முடியுமா சார்..ஒன்லி ஏக் தம்..டீகே..

    ReplyDelete
  39. ///யாரு அடிச்சா பொறி கலங்கி, பூமி அதிருதோ, அவன் தான் டெக்ஸ் !'//


    இந்த வரிகளை படித்ததும் அவ்வளவு சந்தோசம் சார்..மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  40. பழைய சூப்பர் ஸ்டார்களை கொண்டு இப்படி சிறப்பிதழ்(கள்) ஸ்பெஷல் வரும் என எதிர்பார்க்கவே இல்லை சார்..செம அட்டகாசமான அறிவிப்புகள்...

    ReplyDelete
    Replies
    1. பரணி ப்ரோ.. கலக்கலான அறிவிப்பு..
      மறக்கவியலா பதிப்பு.. ❤️❤️❤️❤️

      Delete
    2. உண்மை நண்பரே...

      Delete
  41. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள் விஜயன் சார்.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் விஜயன் சார்!!

    ReplyDelete
  43. நான் கிராபிக் நாவலின் தீவிர ரசிகன். அதுவும் கருப்பு வெள்ளை நாவல்களுக்கு.. இருந்தும் நமது இந்த நீண்ட பயணத்தின் மைல்கல்லுக்கு கொஞ்சம் ஜாலியா புத்தகம் இருக்கட்டும் என்பதால் பயணத்திற்கு இருக்கவே இருக்கிறது ஆன்லைன் மேளா.

    Route 66 நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒரு புத்தகம்..

    இருந்தாலும் சார் அந்த விஷம் இன்னொரு பிஸ்டலுக்கு பிரியாவிடையாக இருக்குமோ என பட்சி சொல்லுவதால் எனது ஓட்டு மேற்கே ஒரு விஷத்திற்கு..

    ரெண்டு ஸ்பெஷலும் குதிரையில் வந்தால் தான் மரியாதை :)

    ReplyDelete
  44. பரணுக்கு அனுப்பும் அந்த சந்தா வரிசையில் நான் எதிர்பார்த்த அந்த ஒரு இதழ் ஜான்மாஸ்டரின் இதழ் மட்டுமே சார்...அவரின் இரண்டு சாகஸத்தையும் வரும் கிங் ஸ்பெஷல் இதழ்களில் வெளிவருமாயின் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் சார்..ஆவண செய்யுங்கள்..

    ReplyDelete
  45. இந்த blogspotக்கு முன்னரே நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருந்தது நினைவருக்கலாம் சார். 2008ல் முதலில் தேடிய போது எனக்கு கிடைத்தது அதுவே. பிறகு 2012ன் Comeback ஸ்பெஷல்க்கு முந்தைய ஒரு பொழுதில் உங்களின் இந்த பிளாக்கை பார்க்க நேர்ந்தது.
     
    12.5 ஓடியதே தெரியாமல் - சந்தோஷம் துக்கம் பெருமை தனிமை என்ற வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் இந்த காமிக்ஸ் blog has been a companion across times and emotions sir. Thanks for keeping at it !

    இந்த பிளாக் மூலம் பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் - சிலர் இன்று மிக நெருக்கமானவர்கள் - ஒரு மொழி மாற்ற காமிக்ஸ் காதல் இவ்வாறான நெருங்கிய நண்பர்களைக் கொடுக்கும் என்றால் அதற்கு முழுமையான காரணம் இந்த பிளாக் தான் சார் !

    லயன் காமிக்ஸ் எடிட்டர் உடன் பிளாகில், நேரில் .. உரையாடுவோம் என்பது ஒரு childhood dream come true sir !

    ReplyDelete
  46. மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான பதிவு சார்... சந்தோசம்...

    ReplyDelete
  47. டெக்ஸ் நிறைய எதிர் பார்த்தேன்.
    Young டெக்ஸ் எதுவுமே இல்லை.
    V காமிக்ஸ் தவிர்த்து.
    பதிவு படித்து முடிக்க 67 நிமிடங்கள்.

    ReplyDelete
  48. @Edi Sir..😍😘

    அசத்தலான ஆயிரமாவது பதிவு..😍😘💐💐

    ஆயிரமாவது பதிவுகண்ட எங்கள் அபூர்வ சிகாமணி @Edi Sir 😍😘க்கு "10000# மாவது பதிவு காண ஏதுவாக நீண்ட ஆயுளையும், நிறைச்செல்வத்தையும், குன்றாத ஆரோக்கியத்தையும் தந்திட எல்லாம் வல்ல இறையை வேண்டிக் கொள்கிறேன்..🙏💐💐

    ReplyDelete
  49. 12.5 ஆண்டுகள்..35 நிமிடங்களில்...

    ReplyDelete
  50. ப்ளீஸ்.. நானும் உள்ளே வந்து கொள்கிறேன்..
    தங்களது 1000 - மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  51. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  52. ஆயிரமாவது பதிவு நல்வாழ்த்துக்கள் sir

    ReplyDelete
  53. 52 நிமிடங்கள் ஆயிற்று முழுவதும் படிக்க எனக்கு...

    ReplyDelete
  54. எனக்கு 39 நிமிடங்கள் ஆனது. அப்பப்பா என்ன ஒரு பதிவு.

    ReplyDelete
    Replies
    1. கண்ணாடி போட்டா...கண்ணாடி போடாமலா

      Delete
  55. ஆயிரமாவது பதிவு என்பது சாதாரண சாதனை அல்ல அதையும் தாண்டி பிரமாண்டமானது வாழ்த்துக்கள் ஆசிரியரே

    ReplyDelete
  56. Myoms க்கு வந்த 160 புக்கிங் கில் இரட்டை வேட்டையர்கள் & ஜான் மாஸ்டர் இவர்களுக்காகவே 120 புக்கிங் வந்திருக்கும் இவர்களை மட்டும் களமிறக்க முடியுமா ஆசிரியரே

    ReplyDelete
  57. பொறுமையா படிக்கனும்.. - நானும் பழைய நினைவுகளோடு - சின்ன Nokia - செல்லில் படித்ததிலிருந்து - அப்றம் Android - போன் வாங்கி பின்னூட்டங்கள் படித்தது - g.g bad. யில் - தமிழில் பின்னூட்டமிட பழகியது. என்று..
    வாழ்வோடு ஒன்றிப் போன விசயம் சார். தங்களது வலைத்தளம்..
    எங்களது நன்றியையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.. சார்...

    ReplyDelete
  58. அட்டகாசமான பதிவு எடிட்டர் சார்!! எங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த பதிவுன்னும் சொல்லலாம்!!
    பதிவில் குறிப்பாய் அந்த கோவை ஆஸ்பத்திரி அனுபவங்கள் அன்றைய உங்களது வலியின் துளியூண்டையாவது இன்று எங்களுக்குப் புரியவைத்தது! அத்தனை வலிகளுக்கு நடுவிலும் நடுச்சாமம் தாண்டி பதிவுக்கென மெனக்கெட்ட உங்களை நெகிழ்ச்சியோடு பார்த்திடத் தோன்றுகிறது!

    உங்களால் எங்களுக்குக் காமிக்ஸ் கிடைப்பது - தவம்!
    நீங்கள் எங்களுக்கு எடிட்டராய் கிடைத்திருப்பது - வரம்!

    இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!!💐💐💐💐

    ReplyDelete
  59. Replies
    1. பாவம் பயபுள்ளைக்கு செல்ல படிச்சிட்டே ஊட்டி விட ஒரு மணி நேரத்துக்கு மேலாயிருக்கும்

      Delete
  60. அந்த வலியோட எங்க உற்சாகத்த கூட்ட அந்த நிலையில் பட்ட கஷ்டங்களை ....என்ன சொல்ல

    ReplyDelete
  61. மின்னலாய் 80 கள் செம சார்.....ஸ்பைடர் ஆர்ச்சி மாடஸ்டிய பெரிய சைசுல கார்சன் கடந்த காலம் போல ஹார்டு பௌண்ட்ல ...தீபாவளி எப்ப சார்

    ReplyDelete
  62. @Edi Sir..😍😘

    1)1000-மாவது பதிவுக்கு "The 1000 வாலா ஸ்பெஷல்" என நாமகரணம் சூட்டுகிறேன் சாரே. 👍✊👌
    (மறக்காம The போட்டிருக்கேன்)😃

    "The 1000வாலா ஸ்பெஷலில்" வருவதற்கு
    "The Road"க்கு ஓட்டு போட்டாச்சு..👍💐

    "Route 66" எப்படியும் வந்திடும்..👍

    "விஷத்தை" மெதுவா சாப்பிட்டுக்கலாம்..😃

    (ஆனா விஷத்தை எப்ப கொடுத்தாலும் ஏக்தம்ல ஒண்ணாவே கொடுத்துடுங்க சாரே😃😍
    மாசாமாசம் தவணையில சாப்பிட்டா விஷம் ஏறவே ஏறாது..😃😃😃)


    2)எனக்கு பதிவை ரசிச்சு படிக்க 45 நிமிசத்தும் மேல ஆயிடுச்சு சாரே..😃😍😘


    3)The Electric'80க்கு MYOMS க்கு நான் கட்டியுள்ள தொகையை அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் சாரே..😃🙏❤💛
    (மீதித்தொகை ரூ.1000-னை Gpay பண்ணிட்டேன்)

    The Electric '80 ❤💛 பயபுள்ளைக அத்தனைபேரையுமே பாக்கிறப்ப இந்த ஆர்ச்சி பயகிட்ட சொல்லி இப்பவே கால யந்திரத்துல ஏறிப்போய் படிச்சிட முடியாதான்னு ஏங்க வைக்குது சாரே..😍😘💜💚

    4)"V" comics 2nd half year சந்தா ரூ.750 - Gpay பண்ணிட்டேன் சாரே..🙏🙏💛💙💚❤💜

    5)1000-மாவது மாபெரும் பதிவை நாளைக்கு மறுபடியும் மறுபடியும் அசை போடணும் சாரே..😃
    அதனால இப்போதைக்கு Goodnight & Sweet dreams..😍😘😘😘

    வர்ர்ர்ர்ர்ட்டா....😃😃😃😃

    ReplyDelete
  63. Really great memories sir. Forgot the Canada story. Will visit again and see. Coimbatore story is sad and funny

    ReplyDelete
  64. மற்ற இதழ்களின் அறிவிப்புகளை விட (எலெக்ட்ரிக் 80s & MMS டெக்ஸ்), ஏனோ LA ROUTE-இன் சித்திரங்களும், கதைக்களமும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன! ஆயிரமாவது பதிவுக்கு தகுதி வாய்ந்த இதழ் தான்!

    இந்த வலைப்பூ என்னும் இரத்த பூமியில், நீங்கள் கடந்து வந்த கரடுமுரடான "பயங்கரப் பாதை" என்று சிம்பாலிக் ஆகவும் வைத்துக் கொள்ளலாம்! :-D 

    ஆகவே, நீங்கள் வைத்திருக்கும் "பயணம்" என்ற ஒற்றைச் சொல் தலைப்பு பொருத்தமாகத் தோன்றவில்லை! வழக்கமான தமிழ் காமிக்ஸ் தலைப்புகளின் பாணியிலும், உங்கள் வலைப்பூ பயணத்தை நினைவுறுத்தும் வகையிலும், "பயங்கரப் பாதை" என்றே வைத்துக் கொள்ளலாமே?! :-)

    //இந்த 1000 பதிவு ஸ்பெஷலுக்கு ... பெயர் எதுவாக இருந்தாலும் அந்த "THE" முக்கியம்னும் மறந்துப்புடாதீங்க !//

    அதே மேரி, Special என்று முடிவதும் அவசியம் அல்லவா? அதாகப்பட்டது, ஒரு ஆங்கிலப் பெயராக எதிர்பார்க்கிறீர்கள், இதோ பிடியுங்கள்:

    "The Thousandth Blog Special (TTBS)"

    ReplyDelete
  65. // ! தொடர்ந்த கொஞ்ச நேரத்துக்கு எனக்கும் அந்த மனுஷனுக்கும் மத்தியில் – யாரோட எசப்பாட்டுக்கு சுதி சுத்தம் ? என்ற போட்டி நடக்காத குறை தான்! கோவை ஸ்லாங்கில் தெரிந்த கடவுளரையெல்லாம் அவர் அழைக்க, ”மருதக்காரனுங்கன்னா நாங்க இளப்பமா?” என்றபடிக்கே நானும் அவருக்கு tough கொடுத்துக் கொண்டிருந்தேன்//

    தாங்க முடியாத வலியை இவ்வளவு நகைச்சுவையாக வேறு யாராலும் சொல்ல முடியாது ஆசிரியரே

    ReplyDelete
  66. வாழ்த்துக்கள் சார். எனினும் ஆயிரமாவது மில்லேனியும் இதழ் தான் நமக்கு பிரதானம் என்று சொல்லி கொள்கிறேன்.அதற்கு ஸ்பைடர் ஆர்ச்சி இருவர் ஸ்பெசல் ஒன்றிணைத்து வெளியிட முயற்சி செய்யலாமே சார். நன்றி.

    ReplyDelete
  67. ஆயிரம் பதிவிற்கு நல்வாழ்த்துக்கள் sir

    ReplyDelete
  68. வணக்கம் நண்பர்களே!!

    வாழ்த்துகள் ஆசிரியரே!!

    ReplyDelete
  69. அற்புத பதிவுங்க Sir . .அரை மணி
    நேரம் ஆயிற்று . .முழுசா படிக்க
    நிஜங்களின் நிசப்தம் படித்த போதே ஓவியர் சாதாரண ஆளில்லை என்பதை உணர்ந்தேன் Sir..ஆப்சனே
    வேண்டாங்க . .3 ஐயுமே எப்படியாவது குடுங்க Sir. .கால்
    வீக்கம் . . .நானும் அனுபவித்துள்ளேன் . .பயங்கரம்
    Sir . .மனம் விட்டு சொல்றேன்ங்
    Sir . . அட்டகாசமாக எழுதுகிறீர்கள் . .நிறைய படிக்கிறீர்கள் . . . .So
    எழுத்தில் மெருகேறி ஜொலிக்கிறது . .அற்புத பதிவு ..
    சாதனகளுக்கு மனம் நிறைந்த
    வாழ்த்துக்கள் Sir . .நன்றி .

    ReplyDelete
  70. பிறகு ஸ்பைடர் ஆர்ச்சி புக் சென்னையில் simple (ஏதேனும் நம்பர் 1001 இதழ் ஆக வெளியிடு போன்று) ஆக ரிலீஸ் செய்ய முயற்சி எடுத்திட் முடியுமா சார்... சென்னை நண்பர்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள்.

    ReplyDelete
  71. 47 நிமிடங்கள் சார்

    ReplyDelete
  72. @Edi Sir..😍😘

    MYOMS -ல வர வேண்டிய

    1)மாஸ்கோவில் மாஸ்டர் (ஜான் மாஸ்டர்) 😍

    2)ஆப்பிரிக்க சதி (இரட்டை வேட்டையர்)😘

    இந்த இரண்டு புக்ஸையும் தனித்தனியாவோ/ஒண்ணா சேர்த்தோ

    ஆகஸ்டு EBF💋 ல கொண்டுவர முடியுங்களா Sir 🙏🙏🙏..

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. அன்பின் ஆசிரியருக்கு இந்த மைல் கல் தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதே போல் ஒரு லட்சத்து பதிவுக்கு தாங்கள் எழுத வேண்டும் அதை நான் படிக்க வேண்டும் என்பதே என் பேராசை. இந்த பதிவைப் படிக்க எனக்கு ஒரு மணி நேரம் ஆயிற்று ரசித்து ருசித்து படிக்க வேண்டும் அல்லவா? கிளாசிக் நாயகர்களின் கதைகள் எண்ணிக்கை குறைவது சற்று வருத்தம் தான் குறைவாகவாவது வருகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். அப்படியே கிளாசிக் ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கும் ஒரு டைஜஸ்ட் போடுங்கள் சார்.

    ReplyDelete
  75. அப்பாடீ... மிக நீளமான இந்த சிறப்புமிக்க பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார். சரியாக 15 நிமிடங்கள் ஆனது முழுசா படிக்க.ஒரு புத்தகக் குழுமத்தின் ஆசிரியர்,எடிட்டர் என்பதெல்லாம் தாண்டி முதலில் நீங்கள் ஒரு ஆத்மார்த்தமான காமிக்ஸ் ரசிகர் ..அதனால்தான் இத்தனை ஆண்டுகளில் ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் பதிவுகள் என உழைப்பை கொட்டியிருக்கிறீர்கள்.இதற்கு நாங்கள் கடவுளுக்கு நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். உங்களுக்கும் தான். இந்த பதிவில் அறிவித்துள்ள ட்ரெய்லர்கள் உண்மையில் மகிழ்ச்சியை வரவைக்கின்றன.அதுவும் எங்கள் 80's ஹீரோக்கள் அனைவரும் 'ராஜாக்களாக' ஒரே புத்தகத்தில் கதம்பமாக வருவது நிச்சயமாக விசிலடிக்க வைக்கிறது.ஸ்பைடர், ஆர்ச்சி மற்றும் என் மனங்கவர்ந்த மாடஸ்டி என அனைவரும் திரும்ப வருவதில் ஜாலியோ ஜாலிதான்.Magic moments
    இதழாக தாங்கள் தேர்வு செய்துள்ள டெக்ஸும் ஓக்கேதான்.(தங்கக்ல்லறை கதையை மேக்ஸி சைஸில் சேர்த்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.ஏனென்றால் குறைந்த அளவில் வந்தாலும் டெக்ஸுக்கு ஈக்குவல் ஆக நிற்க தகுதியான ஒரே ஹீரோ டைகர் மட்டுமே.கொஞ்சம் மனது வைத்து இருவரின் கதைகளையும் சேர்த்து கொடுத்தால் உண்மையிலேயே MEGA MOMENTS ஆக இருக்கும்)அதேசமயம் நீங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நன்றாக ஓய்வெடுங்கள் சார்.ஏனென்றால் உடல்நிலையை பேணுவதும் அவசியம்.மற்றபடி மீண்டுமொரு முறை நன்றியையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  76. பாட்டில் பூதம் புரட்சி தலைவன் ஆர்ச்சி வருவதில் மட்டட்ற மகிழ்ச்சி

    ReplyDelete
  77. Dear Editor
    Congratulations on a mega achievement,Many readers of the blog will agree that they have anxiety when not seeing your post on Sunday morning atleast.I love all the specials you have announced in this 1000 th ost except may be the graphic novel.I will support everything published by you.Please publish other Spider classics not recently published whenever possible.
    Regards
    Arvind

    ReplyDelete
  78. இது பதிவு எண் 1000 ன்னு நினைக்கும் போதே, மலைப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது. அசாதாரணமான விஷயம். ஒவ்வொரு பதிவிற்கான உங்களுடைய உழைப்பும், அதற்கான செலவிட்ட நேரங்களும், மெனக்கெடலும் சும்மா வார்த்தைகளில் அடக்கி விட முடியாது சார். Hats off.

    ReplyDelete
  79. இளவரசி புத்தம் புது இரு அதிரடி சாகசங்களுடன் . "the இளவரசி ஸ்பெசல்"வரவேற்கிறோம்.நன்றிகள் சார் .இதைவிட மகிழ்ச்சியான அறிவிப்பு வேறு என்ன இருந்து விடும்.

    ReplyDelete
  80. கொண்டாட்டமான இந்தநேரத்தில் நமது முதல் நாயகி இளவரசிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்க்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  81. அன்புள்ள எடிட்டருக்கு,

    எங்களது சிறுவயது முதல் தொடரும் இந்தக் காமிக்ஸ் ஆர்வத்தை இன்று வரை முன்செலுத்தும் தங்களது உழைப்புக்கும், இடைவிடாப் பேரார்வத்துக்கும் மிக்க நன்றி.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  82. 1000 பதிவுக்கு ஆயிரம்மாயிரம் வாழ்த்துக்கள் ஆசானே..


    பதிவை படிக்க 22 நிமிடம் ஆச்சு ஆசானே..

    ReplyDelete
  83. சார் நண்பர் உதய் கேட்டது போல் ஆர்ச்சி யாரயும் ஸ்பைடராரயும் ஒரே புக்கா போட்டா நல்லா குண்டா 70 கள தூள் கிளப்பியது போலவும்...கார்சன் கடந்த காலம் போலவும் குண்டா கெத்தா இருக்குமே

    ReplyDelete
  84. த 1000 பெரிய எழுத்துல....நீலமோ.சிவப்போ வண்ணத்ல அட்டை முகப்புப் மேலாப்ல மிதக்கும் தலைப்பா...இந்த பதிவின் தலைப்பு போலவே

    ReplyDelete
  85. கொஞசம் கொஞ்சமா பதிவை படிச்சு முடிச்சிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. நாலரை நாட்களுக்கு ஒரு புதிய பதிவு!! சூப்பர் சார்!!

      Delete
  86. உங்க கிட்டருந்து சர்ப்ரைஸ்...சர்ப்ரைஸ்....மியாம்ஸ் முன்பதிவு பட்னா முன்னூரை தொட்டது....நானூறை பிடிப்பது பெரிய காரியமல்லன்னு சர்ப்ரைஸ் பதிவு வரும்னு தவறுனா சர்ப்ரைஸ் தான்....நண்பர்களை ஆல்ஃபாவும்...சிறைல இருக்கும் சிஸ்கோவை கை கொடுத்து காக்கவும்...இரட்டை வேட்டையர் ஜான் மாஸ்டர் மீக்கவும் தாவுவோம்

    ReplyDelete
  87. The ஆயிரம் சூப்பர்

    ReplyDelete
  88. ஆ : பூங்காற்று தொடருதே
    என் பதிவ விரும்புதே
    பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட
    எனக்கொரு ஆயிர மடி
    கெடைச்சதே
    பூங்காற்று தொடருதே
    என் பதிவ விரும்புதே

    வா : ராசாவே வருதய்யா

    ராசாவே வருதய்யா
    ஆகாயம் விரியுதே
    பிரிக்காதே
    அத ஒலகம் தாங்காதே
    ஸ்பைடரா தனியா
    ஆர்ச்சியா



    ஆ : என்ன சொல்லுவேன்
    என்கிட்டங்கி தாங்கல
    காமிக்ச வாங்கினேன்
    விற்பனய வாங்கல

    வா : இந்த வேதனை
    இனிமேலுந்தா இல்ல
    ஒன்ன மீறவே ஊருக்குள்
    ஆளில்ல


    ஆ : ஏதோ என்பதிவ
    நான் பகடி யாடி
    சொல்லாத சோகத்த
    சொன்னேனுங்க

    வா : வரும் காலம்
    சொகம் தானே
    சோக காலம் தீரும் தானே

    ஆ : யாரது வாங்றது

    வா : மியாம போடலாம்
    தன் பலம் காட்டுமா


    ஆ : பூங்காற்று தொடருதே
    என் பதிவ விரும்புதே
    பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட
    எனக்கொரு ஆயிர மடி
    கெடைச்சதே




    ஆ : காலால அழுதுட்டேன்
    பதிவால சிரிச்சுட்டேன்
    நல்ல வேஷம்தான்
    வலிய தாங்கிட்டேன்

    வா : இந்த காலம்தான்
    கொஞ்சம் மாறனும்
    எங்க சாமிக்கு மகுடம்
    ஏறனும்


    ஆ : ரூட்டே என் னாயிரத்துக்கு
    பலந் தந்த கதயே
    முன்னே உன் பார்வைக்கு
    வாவா கண்ணே

    வா : எசப் பாட்டு
    படிச்சேன் நானே
    எசப் பாட்டு
    படிச்சேன் நானே

    ஆ : பூங்குயில் யாரது

    வா : கொஞ்சம் பாருங்க
    சந்தா பயல் தானுங்க


    ஆ : அட நீதானா அந்த பயல்
    நம் வீட்டு சொந்த மயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே
    கிட்டங்கி மறந்ததே

    வா : நான்தானே
    அந்த பயல்
    தேனாக வந்தக் மயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததா கிட்டங்கிதான்
    மறந்ததா

    ReplyDelete
    Replies
    1. அருவியா கொட்டுதே

      Delete
    2. பின்றீங்க இரும்புப் புலவரே!!😃😃😃😃

      Delete
    3. போட்டு தாக்குல மக்கா 😄

      Delete
  89. எவ்வளவு பெரிய பதிவு. பல பொக்கிஷ கதைகளுடன்.

    ReplyDelete
  90. இருப்பதிலேயே மிக நீளமான டெக்ஸ் சாகசம் - 586 பக்கங்கள் கொண்டது ! அதையோ-அதைப் போலானதொரு மெகா சாகசத்தையோ கலரில் போடுவதாயின் எண்ணூறு-தொள்ளாயிரம் என்று பட்ஜெட் தெறித்து விடும் ! So திடு திடுப்பென அது போலான பட்ஜெட் ரெடி செய்திடல் அசாத்தியம் என்பது உறைத்தது ! அதையே Black & white-ல் போட்டால் ரூ.400 பட்ஜெட்டுக்குள் அடங்கிடும் தான் ; but ஏற்கனவே நவம்பருக்கென 4 பாக, 440 பக்க black & white சாகசம் டெக்ஸ் தீபாவளி மலராக வரவிருக்கும் தருணத்தில், இன்னொரு black & white மெகா இதழ் அத்தனை சோபிக்காதென்று நினைத்தேன் ! தவிர, 440 பக்கங்களின் தீபாவளி special பணி + 586 பக்க Magic Moments பணி = 1026 பக்கங்கள் and அதுவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் என்றால் - அநேகமாய் வீட்டில் தண்ணி தெளிச்சு டாட்டா காட்டி விடுவார்கள் என்பதும் உதைத்தது ! So கலரே ஜெயம் என்று fix ஆகினேன் .....




    சார் வண்ணத்ல சிறப்பாருந்தா இன்னும் ரெண்டு கதய குறைக்கலாமே

    ReplyDelete
  91. ஸ்பைடர் படை நடுவே பாய்றதயும் ....ஆர்ச்சி பறப்பதையும் பாக்கைல 80 களுக்குள்ள கோட்டைல காலப்பயணம் போனதா ஃபீலிங்ஸ்

    ReplyDelete
  92. ஹைய்யா புதிய பதிவு.....

    ReplyDelete
  93. ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணி விஜயனாருக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  94. அறிவிக்கப்பட்ட அனைத்து கதைகளும் அமர்க்களம். அதிலும் ஸ்பைடர் , ஆர்ச்சி ஸ்பெஷல்களெல்லாம் சும்மா கொளுத்திப் போடுவோமே என்று கேட்டுவைப்பதைத் தவிர சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. இருவரின் கதைகளனைத்தும் கைவசம் இருந்தாலும் நியூஸ் பிரிண்டில் பார்த்த படங்களை தற்போது கிளாசிக் கதைகளுக்கு உபயோகிக்கப்படும் தாளில் பார்க்க ஆவலாக உள்ளது. புரட்சித்தலைவன் ஆர்ச்சி ஒரு பக்கத்தில் அதிக ஃபிரேம்களுடன் வந்த காரணத்தால் பெரிய சைசில் பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  95. My wishes for 1K post.🌹🌹🌹🌹🌹
    Excellent content.

    Please publish. Route 66 and La Venin Graphic novels in one time


    It make us happy

    ReplyDelete
  96. THE THOUSANDTH BLOG'S 'ELECTRIC 80's SPECIAL !

    ReplyDelete
  97. விஜயன் சார், ஆயிரம் பதிவு என்பது மிகவும் பெரிய சாதனை. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சார். இந்த டிஜிட்டல் உலகில் எங்களுக்காக தொடர்ந்து வாராவாரம் எழுதிவரும் உங்களுக்கு எங்கள் பல கோடி நன்றிகள்.

    நமது காமிக்ஸ் எங்காவது கிடைக்குமா என கூகுளில் தேடும் போது நமது இந்த வலைப்பூ பற்றி தெரிந்து கொண்டேன். இங்கு எட்டி பார்த்த போது பல நண்பர்கள் ரகளையாக எழுதி வந்தார்கள்; எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் இது போன்ற புதிய சூழலில் கொஞ்ச நாள் மவுன பார்வையாளனாக இருந்தேன். பின்னர் ஒரு சில comment சில வரிகளில் போட்ட ஆரம்பித்தேன்; அதற்கு ஆசிரியர் ஏதாவது பதில் சொல்லி இருந்தால் அன்று முழுவதும் வானத்தில் சிறகு இல்லாமல் பறந்து கொண்டிருந்தேன் :-) அவரை பெங்களூரில் முதல் முறையாக பார்த்த பிறகு வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு VVIP உடன் பேசி கை குழுக்கி விட்டோம் என்ற உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இன்றும் எனக்கு தெரிந்த பழக்கம் உள்ள ஒரே VVIP நீங்கள் தான் சார்.

    பள்ளியில் படித்த பிறகு தமிழில் எழுத வாய்ப்புகள் குறைந்து, அவ்வப்போது பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் நண்பர்களுக்கு தமிழில் எழுதுவேன்; பிறகு பெங்களூர் வந்த பிறகு தாய் தந்தையருக்கு, நண்பர்களுக்கு மற்றும் தூத்துக்குடியில் நான் வசித்து வந்த ஏரியாவில் இருந்த எனது உடன்பிறவா அக்காவிற்கு என தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து கடிதம் எழுதினேன்.

    நமது தளத்தில் ஆசிரியர் ஒரு முறை தமிழில் பின்னூட்டம் போடுங்க என சொன்னதை அடுத்து தமிழில் type செய்வது எப்படி என தெரிந்து கொண்டு பின்னூட்டம் இட ஆரம்பித்தேன். மீண்டும் என்னை தமிழில் எழுத வைத்தது நமது தளமே. இன்றும் தமிழில் எழுத மற்றும் வாசிக்க வைப்பது இந்த தளம் மட்டுமே. இது நமது பல நண்பர்களுக்கு பொருந்தும் என நினைக்கிறேன்.

    எனது சுத்த தமிழை கண்டு நண்பர்கள் என்னை கலாய்த்து ஜாலியா நாட்கள் அவை.

    இந்த தளம் எங்களை உயிர்ப்புடன் வைத்து கொள்ள உதவுகிறது மற்றும் எங்கள் வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. எனது பின்னூட்டத்திற்கு நண்பர்கள் யாராவது ஆதரவாக எழுதி இருந்ததால் அதில் கிடைத்த ஆனந்தத்தை மறக்க முடியாது.

      Delete
    2. ஆத்மார்த்தமா எழுதியிருக்கீங்க PfB! நீங்க சொல்லியிருப்பதில் பலவும் - எனக்கும் பொருந்தும்!

      Delete
    3. இவ்வளவு நீளத்துக்கு நீங்க எழுதுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன், கலக்குங்க பரணி! :-)

      Delete
    4. தளத்தில் உங்கள் கலாய்ப்ப எனக்கு மிகவும் பிடிக்கும் கார்த்திக் :-)

      Delete
    5. அடுத்தவர் மனதை புண்படாத படி எழுதுவது எப்படி என்று உங்களிடம் கற்றுக்கொண்டேன் விஜய் :-)

      Delete
    6. மிக அருமையான பின்னூட்டம்பரணி சார். அத்தனையும் உண்மை.

      Delete
    7. நன்றிகள் PfB! எப்பவும் first aid kitஐ பக்கத்திலேயே வச்சுக்கிட்டுத் தான் எழுதுவேனாக்கும்! :)

      Delete
    8. // எப்பவும் first aid kitஐ பக்கத்திலேயே வச்சுக்கிட்டுத் தான் எழுதுவேனாக்கும்! :) //

      உங்கள் துணைவியார் தானே :-)

      Delete
    9. உண்மை பரணி சார்..இணையத்தை பொறுத்த வரை உங்கள் அனுபவமே எனக்குமே...நானுமே இந்த தளத்தில் தமிழில் பதிவிடவேண்டுமே என்பதற்காகவே கற்றுக்கொண்டேன்..

      Delete
    10. ///
      உங்கள் துணைவியார் தானே ///

      சேச்சே! அவங்கல்லாம் 'tools kit'! :)

      Delete
  98. கஷ்டப் பூக்களையும் நகைச்சுவைத் தோரணங்களாக்கும் நீங்கள் இன்னொரு பாக்யராஜ் சார்
    என்று சொல்வேன்

    ReplyDelete
  99. Congratulations for reaching the unique milestone

    ReplyDelete
  100. ஒரு வேளை 1000 பதிவு ஸ்பெஷலுக்கு பயணம் தேர்வானால், The Long Journey Special பெயரை முன்மொழிகிறேன்.

    ReplyDelete
  101. Electric 80's - 80's kidsஐ வசீகரிக்கும் எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது! நமது நண்பர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுத்தந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டுக்கு வழிவகுக்கும் என்பதை உணரமுடிகிறது!

    ReplyDelete
  102. THE Thundering Typhoons Thousand Special (4T spl)

    ReplyDelete
  103. ஆயிரம் பதிவுகள் கண்ட ஆசிரியரை வாழ்த்த வயதில்லை. வணங்கி மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  104. வாழ்த்துக்கள் சாரே 🤗🎉🔥💫. சில பல சமயங்களில் வேலை பளுவை முன்னிட்டு புக்ஸ் எடுத்து படிக்க/பார்க்க இயலா நிலையிலும் இந்த மனுஷர் என்ன தான் எழுதி/புலம்பி (மன்னிச்சு) இருப்பார் என்று பார்க்க தவறியதே இல்லை சார்... பதிவின் பத்திகளை சில பல சமயங்களில் skip செய்த நிலையிலும் 😁 பின்னர் ஓய்வாக அவற்றை வரிக்கு வரி விடாது மீள் வாசிப்பு செய்வதும் புன்முறுவல் பூப்பதும் நித்தம் நடக்கும் நிகழ்வே. நன்றி சாரே 🤗

    ReplyDelete
  105. வாழ்த்துக்கள் எடிட்டர் சார்

    ReplyDelete
  106. டியர் எடிட்டர்,

    நேத்து முழுக்க பயணம் ( வந்து இறங்கிய நாளிலிருந்தே பயணந்தான்). பதிவை ஏக்தம்மில் வாசித்த பிறகு ஓட்டைப் போட்டு விட்டு 27 நிமிடம் என்று சொல்லிவிட்டு மிச்சம் மீதி இருந்த ஆபிஸ் வேலையையும் முடித்து விட்டு அயற்சியில் தூங்கி விட்டேன்.

    எழுந்த பிறகு இரண்டாம் முறை பதிவை வாசித்த பிறகு எழுந்த உணர்வுகளை எண்ண அலைகளை ஒழுங்குபடுத்தி வார்த்தைகளாக எழுத இன்னும் நேரமாகும்.

    84 ஜூலை மாதம் ஒய்யாரமாய் இடுப்பை வளைத்து கத்தியை தவிர்க்கும் மாடஸ்டியின் மேல் ஏற்பட்ட மையலில் புத்தகத்தை வாங்கியதும் அந்தக் கதை தனி உலகிற்கு இட்டு சென்றதும் அன்று துவங்கிய பந்தம் இன்று வரை தொடர்கிறது. இனியும் தொடரும்…

    அப்போது யாரோ விஜயன் என்பவரே கதை எழுதி ஓவியம் வரைகிறார் என்ற அளவு தான் எனக்கு விவரம் இருந்தது. அதனால் அப்போது அந்த எடிட்டரின் மீது இருந்த பிரமிப்பும் பிரேமையும் விவரிக்க வார்த்தைகள் லேது.

    இந்த புத்தகங்கள் என்னை அழைத்து சென்ற உலகுகளும் மறக்க செய்த துயரங்களும் பல. வாழ்நாளில் உறவுகளையும் நட்பையும் தவிர்த்து என் வாழ்வை இனிமையாக்கியவை நமது காமிக்ஸ்களும் ராஜாவின் இசையும் தான்.

    விவரம் தெரிந்த பிறகும் எடிட்டர் விஜயரின் மேலிருந்த பிரமிப்புக்கும் பிரேமைக்கும் அளவில் குறைச்சலே இல்லை. காரணம் இந்தத் துறையின் சவால்கள் புரிந்த பிறகு லயனின் மேலிருந்த காதலும் பிரமிப்பும் லயனை முன்னை விட துடிப்பாக கொண்டு வந்த விஜயரின் மேலும் இருந்ததில் ஆச்சர்யமில்லை.

    இடையில் 2001 வது வருடத்தில் தற்காலிகமாக இருந்த ப்ளாக் காலத்திலே ஆக்டிவாக இருந்த ஞாபகமும் உண்டு. அப்போது சாத்தான் வேட்டையை டெக்ஸ் கதையே அல்ல; வேறு யாரோ கதையை போட்டு ஏமாற்றி விட்டதாக மூத்திர சந்துகளுக்கு அழைத்து சென்ற போது அமெரிக்கரின் கை வண்ணத்தில் வந்த அந்த கதை என்னுடைய முதல் அமெரிக்க பயணத்தின் போது என்னுடனே வந்தது.

    பிறகு ஆக்டிவாக புத்தகங்கள் வெளி வராத போதும் குத்து மதிப்பாக தொகையை கட்டி விட்டு வருட வருடம் வரும் போது ஊருக்கு எடுத்து சென்று விடுவேன். போன் போட்டு நலம் விசாரிக்கும் போதெல்லாம் அப்பா அல்லது அம்மாவிடம் சிவகாசியிலிருந்து புக்கு வந்துச்சா போன் வந்துச்சா ( பேலன்ஸ் தீரும் போது போஸ்ட் கார்டோ அல்லது அண்ணாச்சியிடமிருந்து போனோ வரும்) என்று கேட்பதும் வாடிக்கையாகிப் போனது.

    2014 மே மாதம் கோவை வந்த போது கிடைத்த புத்தகக்குவியல் ஒரு ஆனந்த அதிர்ச்சி. உடனே அண்ணாச்சிக்கு போன் போட்டு விசாரித்து விடுபட்ட புத்தகங்களையும் சந்தாவையும் கட்டி முடித்த பிறகு தான் ப்ளாக் பக்கம் வந்தேன்.

    அதன் பிறகு வார வாரம் உரையாட எடிட்டர்/பப்ளிசர் தாண்டி நண்பர் விஜயன் கிடைத்தார் என்பதே உண்மை. நகைச்சுவையாகவும் ஆர்வமூட்டும் வகையில் சொல்ல பதிவுகளில் அலங்காரங்கள் இருந்தாலும் அதையும் மீறி எடிட்டரிடமிருந்த யதார்த்தமும் நட்பும் இங்கிருந்த யதார்த்தமான நண்பர்களுக்கு இடையேயும் ஒரு நல்ல நட்பை உருவாக்கியது என்பது ஆயிரம் பதிவுகளை எட்டும் பல காலம் முன்பே இந்த ப்ளாக் செய்த சாதனை.

    செப்டம்பரில் எனக்கு 50 வயது ஆகி விடும். அதில் கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலத்தை இனிமையாக்கியுள்ளது லயன். இன்னும் என்னுடன் தொடர்பிலிருக்கும் என்னுடைய childhood friend லயன் தான். அந்த சிரிக்கும் சிங்கத்தை பாத்தாலே ஏற்படும் பரவசம் அன்று கடையில் தொங்கிய போதும் இன்று வீடு தேடி வரும் போதும அப்படியே இருக்கிறது. கண்ணீரை துடைக்க, துயரங்களை மறக்க, சோதனைகளை கடக்க, தன்னம்பிக்கையோடு சிக்கல்களை எதிர் கொள்ள, தோல்விகளை சகித்து அதன் பாடங்களை கற்றுக் கொள்ள, வாழ்க்கையை ரசிக்க என இந்த நண்பன் சொல்லிக்குடுத்தது ஏராளம். இந்த நண்பனுடனும் நண்பனை உருவாக்கிய நண்பருடனும் உள்ள நட்பு பல்லாயிரம் இதழ்களாகவும் பதிவுகளாகவும் உருப்பெற மனமார்ந்த வாழ்த்துகள். ஆசைகள் அன்புகள் மற்றும் நன்றிகள்.

    ReplyDelete
  107. இதழுக்கான தலைப்புக்கான எனது தலைப்பு..


    தி தவுண்சன்ட் வாலா ஸபெஷல்..

    THE THOUSAND WALA SPESIAL

    (TTS)

    ReplyDelete