Powered By Blogger

Friday, May 03, 2024

மே = மேளா !!

நண்பர்களே,

வணக்கம்! ஆன்லைன் மேளா!! கொரோனா லாக்டௌன்களின் வேளையில் கொஞ்சமேனும் மூச்சு விட்டுக் கொள்ளும் பொருட்டு துளிர்விட்ட மகா சிந்தனை இது! ஆனால் மெள்ள மெள்ள நமது அட்டவணையினில் ஒரு நிரந்தரமான, முக்கியமான இடத்தை இது பிடித்துக் கொண்டிருப்பது கண்கூடு! In fact, இப்போதெல்லாம் ஆண்டின் அட்டவணையினைத் திட்டமிடும் சமயமே, உத்தேசமாய் ஆன்லைன் விழா சார்ந்த புக்ஸ் பற்றியும் மண்டைக்குள் வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கத் தவறுவதில்லை! And இதோ – 2024-ல் அதற்கான தருணமும் நெருங்கி விட்டது!

நிஜத்தைச் சொல்வதானால் – கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னமே MAY 4 & MAY 5-ல் தான் நடப்பாண்டின் மொட்டை மாடி மேளாவை அரங்கேற்றிட வேண்டுமெனத் தீர்மானித்திருந்தேன்! அதற்கு உருப்படியானதொரு முகாந்திரம் இருப்பதை அப்போதே உணர்ந்திருந்தேன்! ஆனால் இப்போதெல்லாம் எட்டு மாதங்களென்பது எட்டு யுகங்களுக்கான மாற்றங்களையும் கண்ணில் காட்ட வல்லதெனும் போது – ‘தேமே‘வென்று வாய்க்கு ஒரு லோட் பெவிகாலை பூசிக் கொண்டேன்! இதோ – ஒரு வழியாக மே 4-க்கு ஒற்றை தினமே பாக்கியிருக்க இனி ஓட்டைவாய் உலகநாதனாகிடத் தடையில்லை என்று பட்டது!

சுமார் 8 மாதங்களுக்கு முன்னே ஏதோவொரு தேடலின் போது கண்ணில் பட்ட தகவல் இது! உலக காமிக்ஸின் முதன்மை மார்க்கெட்டான அமெரிக்காவில் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும், பெரும்பான்மையான காமிக்ஸ் பதிப்பகங்களும், காமிக்ஸ் விற்பனை செய்திடும் கடைகளும் வருகை தரும் வாசகர்களுக்கு – விலையின்றி, தேர்வு செய்யப்பட்ட காமிக்ஸ்களை வழங்கி வருகின்றனர்! அந்த ஒற்றை நாளின் சலுகையானது – புதுசாய் வாசகர்களை உருவாக்கவும், குடும்பங்களை காமிக்ஸ் நோக்கிப் பயணிக்க ஊக்குவிக்கவும் உதவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை! காமிக்ஸ் கலாச்சாரம் ஆலமரமாய் வேரூன்றி நிற்கும் அமெரிக்காவின் ஒவ்வொரு பட்டி-தொட்டியிலும் கூட காமிக்ஸ்கள் மட்டுமே பிரத்தியேகமாய் விற்றிடும் கடைகள் உண்டென்பதால், இங்கோ இதுவொரு திருவிழா போலவே களை கட்டுகிறது! இதோ – இந்த YouTube வீடியோவைப் பாருங்களேன் : https://www.youtube.com/watch?v=XfM1vlSUdcY

இதைப் பார்க்க வாய்த்த நொடியிலேயே மண்டைக்குள் குறுகுறுத்தது – “அடங்கொன்னியா.... புலியைப் பார்த்து பெருச்சாளி சூடு போட்டுக்கின மாதிரித் தெரிஞ்சாலும் தப்பில்லே ; நம்ம சத்துக்கேற்ப இதை ஒருவாட்டியாச்சும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே...” என்று! மிகச் சரியாக மே துவக்கத்தின் வாரயிறுதியில் தான் நாம் ஆன்லைன் மேளாக்களை நடத்தி வந்துள்ளோம் என்ற போது, இந்த உடலுக்கு, அந்தத் தலையைப் பொருத்திடும் அவா எழுந்தது! So – தி கிரேட் கிரிகாலனின் மேஜிக் ஷோவுக்குப் போட்டியாக -

“The Great ஆன்லைன் காமிக்ஸ் மேளா‘24”

&

Free காமிக்ஸ் புக் டே

மே 4 & மே 5 தேதிகளில் அரங்கேறிடவுள்ளன!

ரைட்டு... இதை எவ்விதம் செயல்படுத்திட எண்ணியுள்ளோம் என்பதைப் பதிவின் வால்ப்பகுதியில் தெளிவாகத் தந்திடலாம் என்பதால் – இந்த மேளாவின் highlight ஆன ஸ்பெஷல் புக்ஸ் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்பிடலாம் folks! 

  • ஏற்கனவே சொன்னதைப் போல 4 பெரிய புக்ஸ் – சகலமும் கலரில்!
  • And 4 சின்ன புக்ஸ் – அதில் இரண்டு கலரில்!

Here we go with the details : 

 புக் #1 : டெக்ஸ் க்ளாஸிக்ஸ் – 6 :

ஓநாய் வேட்டை”! Truth to tell – ஒரு வருஷத்துக்கும் மேலாச்சு இதன் ராப்பர் அச்சாகி! 2023-ல் ஈரோட்டுப் புத்தக விழாவின் போது இதை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தோம் ! ஆனால் கடைசி நொடியில் ”கார்சனின் கடந்த காலம்” மெகா சைஸில் உட்புகுந்து பட்டாசாய்ப் பொரிந்து விட்டது! So அந்த க்ளாஸிக் டெக்ஸ் சாகஸம் – கலரில் ஹார்ட்கவரில் இப்போது பட்டையைக் கிளப்பிட வருகிறது! Of course இது மறுபதிப்பே & நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, என் வேலைப்பளுவை மட்டுப்படுத்திக் கொள்ளவும், விற்பனைகளுக்கு உரமேற்றிக் கொள்ளவும், மறுபதிப்புகளுக்கு ஸ்லாட்களை மறுக்க வழியில்லை! இது டெக்ஸின் க்ளாஸிக் கலர் மறுபதிப்பு வரிசையில் ஆறாவது ஆல்பம் & ஏற்கனவே 4 விற்றுக் காலியாகி விட்டன! So ‘இதன் இடத்தில் வேறு புக் போட்டிருக்கலாமே?!‘ என்ற விசனங்களை ஓரம் கட்டிடுவோமா folks? ‘நச்‘சென்ற கலரில், ஹார்ட் கவருடன், ரூ.300/- விலையில் வந்திடவுள்ள ஆல்பமிது!

புக் # 2: தண்டர் in ஆப்பிரிக்கா:

பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், க்ரோவேஷியா, ஸ்பெயின், ஹாலந்து, இங்கிலாந்து என ஐரோப்பாவில் எங்கெங்கோ எட்டிப் பார்த்து, அவர்களது நாயக / நாயகியரை தமிழ் பேசச் செய்துள்ளோம்! And அந்த வரிசையில் புதுசாய் ஒரு நாட்டையும் இனி இணைத்துக் கொள்ளலாம் – அது தான் டென்மார்க்! டின்டினுக்கு ஒன்றுவிட்ட சித்தாப்பாரு பையனாட்டம் தோற்றம் தரும் Kurt Dunder டேனிஷ் மொழியில், பிரபலமான நாயகர்! அவரை அண்டா-டண்டா – என்ற பெயருடன் அல்லாது க்ரே தண்டராக்கி, தமிழுக்கு இட்டு வந்துள்ளோம் – ஜாலியாக சாகஸம் செய்திட! டின்டின் நாயக பாணியை மட்டுமன்றி, சித்திர பாணியையுமே அந்த பெல்ஜிய ஜாம்பவானின் ஸ்டைலிலேயே அழகாக அமைத்துள்ளார்கள்! And டின்டினைப் போலவே இவரும் கார்ட்டூன் பார்ட்டியெல்லாம் கிடையாது ; ஜாலியானதொரு சாகஸ வீரரே! ”தண்டர் in ஆப்பிரிக்கா” – 48 பக்கங்களில் செம க்ரிஸ்பானதொரு சாகசத்துடன் அட்டகாசமான கலரில் வெளிவரக் காத்துள்ளது !


புக் # 3: ஸாகோரின் பனிமலைப் பலிகள்:

”டார்க்வுட் நாவல்கள்” என்றதொரு 6 இதழ் கொண்ட சுற்றில் – இருள்வனத்தின் மாயாத்மாவை crisp சாகஸங்களில் போனெலி களமிறக்கியிருந்தனர்! நம்ம V காமிக்ஸிலும் அதனை முயற்சித்திருந்தோம் – with mixed results! ஐநூறு – அறுநூறு சாகஸங்களுக்குப் பின்பாய் ஸாகோரை அந்த மினி சாகஸங்களில் இத்தாலியில் பார்த்திருக்கும் போது, அவை ரசித்திருக்கலாமோ – என்னவோ; but மிகச் சமீப வரவான நாயகரை இந்த மினி அவதாரில் ரசிப்பது நமக்குச் சிரமமாகவே இருந்தது! So அந்த மினி பாணிக்கு டாட்டா சொல்லி விட்டு, முழுநீள சாகஸ பாணிக்கே திரும்பியுள்ளோம் – “பனிமலைப் பலிகள்” வாயிலாக! 128 பக்கங்களில் இதுவொரு செம breezy ஆக்ஷன் த்ரில்லர்!

ஸாகோரின் இந்த இரண்டாம் அவதாரை ரசித்திட, ஒரு துவக்கப் புள்ளியாய் – டெக்ஸ் வில்லரோடு ஒப்பிடாது இவரையொரு தனித்துவமான ஹீரோவாகப் பார்க்க ஆரம்பிப்போமே folks! இருவருமே ஒரு குழுமத்தின் பிள்ளைகள் என்பதைத் தாண்டி பெருசாய் இருவருக்குமிடையே ஒற்றுமைகள் கிடையாது! And ஸாகோர் கதைகளின் பின்னணியே கொஞ்சம் மாந்த்ரீகம்; கொஞ்சம் அமானுஷ்யம் எனும் போது, நூல் பிடிச்சாற் போல லாஜிக்கை இங்கே தேடிடுவது சிரமம்! So டெக்ஸின் மெபிஸ்டோ; யமா கதைகளை ஏற்றுக் கொள்ளும் அதே mindset சகிதம் இங்கே புகுந்திட்டால் ஸாகோர் நிச்சயம் சோபிப்பார்! நடப்பாண்டிலேயே இன்னும் 2 முழுநீள ஆக்ஷன் த்ரில்லர்கள் நம்ம V காமிக்ஸில் காத்துள்ளன! So அந்த ‘மினிக்கள்‘ பதித்திருக்கக்கூடிய மேலோட்டோமான முத்திரையினை உதறிவிட்டு, வீறுகொண்டு ஜம்ப்பிங் மாயாத்மா எழுந்திட இந்தக் கலர் ஆல்பம் ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திடுமென்ற நம்பிக்கை எனக்குண்டு! Fingers crossed!

புக் # 4: துணைக்கு வந்த மாயாவி:

“கமர்ஷியல் கிராபிக் நாவல்” என்ற அடைமொழியோடு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த ஒன்-ஷாட் ஆல்பம் நினைவுள்ளதா folks? 'இது வேணுமா? அல்லது நாகரீக வெட்டியான் ஸ்டெர்னின் அடுத்த ஆல்பம் வேணுமா?' என்ற கேள்வியோடு ஒரு வோட்டிங் கூட நடத்தியிருந்தோம்! And எனது ஞாபகம் சொதப்பாதிருக்கும் பட்சத்தில் – 40% வாக்குகள் பெற்றிருந்தது இந்த கமர்ஷியல் கி.நா.! ஸ்டெர்ன் ரெகுலர் அட்டவணைக்குள் புகுந்திருக்க, இதோ – ஆன்லைன் மேளாவின் ஸ்லாட்டை அந்த ஆல்பத்துக்கு ஒதுக்கியுள்ளோம்!

வழக்கமான வன்மேற்குக் களம்; வழக்கமான கௌபாய்கள்... ஆனால் அந்த மாமூலான டமால் – டுமீல் மாவுகளை அரைக்காது, இங்கே கதை முற்றிலும் புதிதாயொரு ரூட்டில் பயணமாகிறது! And இங்கே சித்திர பாணியில் அமரர் வில்லியம் வான்ஸுக்குப் போட்டி தரும் உத்தேசமெல்லாம் யாருக்குமே இருக்கவில்லை! தலைகாட்டும் அத்தினி ஆசாமிகளுக்கும் மூக்குக்குக் கீழே ஆலமரமாட்டம் மீசைகள் மட்டும் தவறாது இடம்பிடித்திட, இயற்கையின் வனப்புகளை வரைவதிலும், வர்ணமூட்டுவதிலும் பின்னிப் பெடல் எடுத்துள்ளனர்! ‘வள வள‘வென்று பேசும் கி.நா.க்களின் மத்தியில் இது மணிரத்னம் பாணியில் சுருக்கமாகப் பேசிடும் பாணியில் travel செய்கிறது!

உள்ளதைச் சொல்வதானால் – இந்த ஸ்லாட்டில் “கதிரவன் கண்டிரா கனவாய்” தான் வருவதாகயிருந்தது! ஆனால் அதன் மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்த போது, கணிசமாய் பட்டி-டிங்கரிங் பார்த்திடத் தேவையிருப்பது புரிந்தது! 156 பக்கங்களுக்கு செப்பனிடும் பணிகளைச் செய்யும் நேரத்துக்கு 78 பக்கங்களுக்குப் புதிதாய் பேனா பிடித்து விடலாமென்று ஆரம்பித்துள்ளேன்! தேவுடா!!!

இனி மினிஸ் !!   

புக் # 5: லேடி ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெஷல்-1

தொடர்ந்திடும் 4 மினி புக்ஸும் பிரதானமாய் புத்தகவிழாவுக்கு வருகை தரும் மாணாக்கரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை! எல்லாமே சின்ன விலைகளில்! அவற்றுள் நாமுமே ரசிக்கும் விதமான முதல் புக் – ஜேன் பாண்ட் என்ற பெண் உளவாளியை அறிமுகம் செய்திடும் 32 பக்க இதழ்! Fleetway-ன் பிரபலமான இந்தக் காரிகையை நாம் ஏற்கனவே நமது அணிவகுப்பில் பார்த்திருக்கிறோமா ? – நினைவில்லை எனக்கு! But இங்கிலாந்தில் JANE BOND Special என வெகு சமீபமாய் அட்டகாசமாய் வெளியிட்டுள்ளதைப் பார்த்த போது, அம்மணியை இட்டாந்திட ஏற்பாடுகளை செய்தோம்! லக்கி லூக் போலான பெரிய சைஸில், ஒரிஜினல் பக்க அமைப்புகளுடன், black & white-ல் 32 பக்கங்களுடன், ரூ.35/- விலையில் வரவிருக்கிறது! சிறுத்தை மனிதனைப் போல ஜேன் பாண்டும் புக் # 1; புக் @ 2; புக் # 3 என்று தொடர்ந்திடுவார்!

புக் # 6 : சிறுத்தையின் சீக்ரெட்:

ஸ்கூல் பசங்களிடையே இந்த சிறுத்தை மனிதன் தொடரானது நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது புத்தக விழாக்களின் விற்பனைகளில் பிரதிபலிப்பது தெரிகிறது! பெருநகர விழாக்களில் பெருசாய் impact இருப்பதில்லை தான்! ஆனால் அடுத்த லெவல் நகர்களில் அரங்கேறிடும் விழாக்களில் படையெடுக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கு இந்த compact size; சின்ன விலைகள்; அந்தப் புதிரூட்டும் ஹீரோ ரொம்பவே ரசிக்கிறது! So தொடரின் புக் # 3 நமது ஆன்லைன் மேளாவில் இடம்பிடித்திடுகிறது!

சின்னதொரு ப்ரேக்குக்குப் பின்பாக, ஜுலை முதலாகத் துவங்கிவிருக்கும் புத்தகவிழாக்களின் circuit குறைந்தது அடுத்த 8 மாதங்களுக்காவது ஊர் ஊராய் நம்மை இட்டுச் செல்லும். So அங்கே வருகை தரக்கூடிய இளைய தலைமுறைக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் variety வளர்த்திட முனைந்து வருகிறோம்! Wish us luck please !!

புக் # 7: சக்கரத்துடன் ஒரு சாத்தான் (டைலன் டாக் மினி த்ரில்லர்)

Again ஒரு மினி புக்! ஆனால் இது பெரும்பாலும் நமக்கானது! அமானுஷ்யங்களை ஆராயும் நமது டைலன் இம்முறை வித்தியாசமானதொரு சக்தியை எதிர்கொள்கிறார்! டெக்ஸ் சைஸில்; கலரில் 32 பக்கங்கள் & again மினி விலையில்!!

புக் # 8 : The சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 1 :

ஹி! ஹி! ஹி! இந்த இதழைப் பார்க்கும் போது ஆங்காங்கே முகங்களில் LED பல்புகள் பளிச்சிடப் போவதும், ஆங்காங்கே பற்கள் நறநறக்கப்படுவதும் நிகழும் என்பதை யூகிக்க முடிகிறது! "ஒற்றைக் க்ளாஸிக் சூப்பர் ஹீரோவைச் சமாளிப்பதே இப்போதெல்லாம் பெரும் பிரயத்தனமா கீது... இந்த அழகிலே ரண்டு பேரு; அதுவும் ஒரே ஜாகஜத்திலா?? ஆத்தாடி!!" என்று நறநறப்போர் சங்கம் சொல்லிடும் தான்! ஆனால் நமது காமிக்ஸ் வாசிப்புகளுக்கு உரமிட்ட ஜாம்பவான்களை ஒருசேர ரசித்திடும் விதமாய், சில புதுக்கதைகளை இங்கிலாந்தில் வெகு சமீபமாய் உருவாக்கியிருப்பதைப் பார்த்த நொடியில் நம்மள் கீ ஆர்வங்ஸ்கி அடக்க முடியலைங்கி! சட்டித் தலையனும், வலை மன்னனும், பற்றாக்குறைக்கு பதிமூன்றாம் மாடிக் கம்ப்யூட்டரும் சேர்ந்து கொள்ளும் போது அங்கேயிருப்பது கதையோ - கேரட் கொத்சோ ; அதுபற்றியெல்லாம் கவலையின்றி உள்ளே பாய்ந்து விடாட்டி நானென்ன எடிட்டர்? So – ஜாம்பவான்களை தரிசிக்கிறோம் – முழு வண்ணத்தில்; லக்கி லூக் சைஸில்; ரூ.80/- விலையில்!! And....and....க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் பெசல்களுமே தொடர வாய்ப்புகள் பிரகாசம் !! 😁😁😁

Thus end the ஸ்பெஷல் புக்ஸ்! இவை டின்டினுக்கோ; மின்னும் மரணத்துக்கோ சவால் விடப் போகும் படைப்புகளாக இருக்கப் போவதில்லை தான் – ஆனால் ஒவ்வொன்றுமே உட்புகுந்தால் காந்தமாய் உங்களை ஈர்த்து முழுசையும் வாசிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை! And பிரதானமாய் – no அழுகாச்சீஸ்; no சவ-சவ & no ஜவ்வு மிட்டாய்ஸ்! So டப்பி உடைக்காது, புக்ஸை பரணிலேற்றும் நம்ம ப்ளேட்பெடியா கார்த்திக் கூட இவற்றுள் ஒன்றோ – இரண்டையோ புரட்டும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன்!

And இம்முறை எட்டில் ஆறு கலர் இதழ்கள் எனும் போது புக்ஸுமே பிரமாதமாய் டாலடிக்கவுள்ளன!

ஜேன் பாண்ட் தவிர்த்த பாக்கியெல்லாமே ஒரிஜினல் அட்டைப்படங்கள்! இந்த லேடி J.B.க்கான கவர் நமது புது அமெரிக்க ஓவியையின் கைவண்ணம்!

ரைட்டு... இனி இந்த FCBD (Free Comic Book Day) & நமது மேளா செயல்படவிருக்கும் விதம் பற்றி சொல்லிடட்டுமா?

- நம் கையிருப்பில் உள்ள புக்ஸ் :

10% discount

20% discount

30% discount

50% discount

என்ற ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்  இங்கே pdf ஆக கொஞ்ச நேரத்தில் upload செய்திடப்படும் ! 

- நமது ஆபீஸ் நம்பர்களான 9842319755 or 7373719755 என்ற நம்பருக்கு “Stock List“ என்று வாட்சப் சேதி அனுப்பினாலும் இந்த pdf அனுப்பி விடுவார்கள். 

- அப்புறம்... அப்புறம்... இன்னொரு பிரிவில் 40 முந்தைய இதழ்களை லிஸ்ட் செய்திருக்கிறோம்! இவை தான் முற்றிலும் விலையில்லா இதழ்கள்!



- கைவசமுள்ள முந்தைய வெளியீடுகளிலிருந்து நீங்கள் டிஸ்கவுண்ட் கழித்து ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன் – அதே ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான Free புக்ஸ்களை மேலேயுள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்து விலையின்றிப் பெற்றுக் கொள்ளலாம்! தமிழகம் எனில் கூரியருக்கு ரூ.100/- மட்டும் extra செலுத்திட வேண்டியிருக்கும்! வெளி மாநிலம் எனில் ரூ.160/-.for the couriers.

- கையிருப்பு back issues இதழ்களின் லிஸ்டிலேயே, ஒவ்வொரு புக்குக்கும் நேராக உள்ள பாக்சில் டிக் அடித்து உங்களின் ஆர்டர்களை பதிவு செய்திடலாம். நம்மாட்கள் கணக்கிட்டு, நீங்கள் அனுப்ப வேண்டிய தொகையினை வரிசைக்கிரமமாகத் தெரிவிப்பார்கள் ! பணம் அனுப்பிய கையோடு நீங்கள் அந்த Free Comics லிஸ்டிலிருந்து, உங்கள் ஆர்டர்களின் மதிப்புக்கு ஈடான தொகைக்கு புக்ஸ் தேர்வு செய்து அந்த லிஸ்டினை அனுப்பிட வேண்டும் ! 

- கூரியர் கட்டணங்களும் சரி, பேக்கிங் பொருட்களும் சரி, கணிசமாய், ரொம்பக் கணிசமாய் உயர்ந்திருப்பதாலும், டிஸ்கவுண்டுகளில் பாதாளங்களைத் தொட நாம் தயராகி விட்டதாலும், இம்முறை ரூ.3000/-க்கு மேலான ஆர்டர்களுக்கு மட்டுமே கூரியர் கட்டணங்கள் இராது. மூவாயிரத்துக்குக் குறைவான ஆர்டர் தொகைகளுக்கு கூரியர்கள் கட்டணமிருக்கும்; So இது குறித்து நம்மவர்களிடம் லடாய் வேணாமே ப்ளீஸ்!

- And புது புக்ஸிற்கு (ஏப்ரல் & மே ’24) ; ஆன்லைன் மேளா ஸ்பெஷல் இதழ்களுக்கு இந்த Free Comics சலுகைகள்  இராது !! அவை பிரத்யேகமாய் back issues வாங்குவோருக்கு மட்டுமே !! 

- "FCBD-யில் (Free Comics Book Day) தேர்வு செய்திடும் விலையில்லா இதழ்களை கொண்டு நேக்கு பெருசா எதுவும் பிரயோஜனம் இல்லேடா தம்பி ; அவற்றை உறவினர்களுக்கோ, பள்ளி / கல்லூரி / அலுவலக நூலகங்களுக்கோ அனுப்பிட நினைக்கிறேன் ! இன்னான்கிறே அதுக்கு ?" - என்கிறீர்களா ? பேஷாய் அதனைச் செய்திடவும் இயலும். தெளிவாக முகவரிகள் + ரூ.100/- or ரூ.160/- கூரியர் கட்டணங்கள் தந்தால் போதும்!

- இந்தத் திட்டங்கள், Free Comics என்பனவெல்லாம் May 4 & 5 தேதிகளுக்கு மட்டுமே! இது குறித்தும் நம்மவர்களோடு விவாதங்களைத் தவிர்த்திடுவதற்கு முன்கூட்டிய நன்றிகள்! செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே அவர்களிடம் இருக்கும் என்பதால், எனது தீர்மானங்களின் plus / minus சார்ந்த குட்டுக்களை அவர்களது தலைகளில் இறக்கிட வேண்டாமே ப்ளீஸ்!

- FCBD – விலையில்லா இதழ்களில் உங்களது தேர்வுகளைத் தெரிவிக்க அந்த Free Comics லிஸ்டையும் வாட்சப்பில் பெற்றுக் கொள்ளலாம். தயைகூர்ந்து அந்த லிஸ்டில், ஒவ்வொரு புக்குக்கும் நேராக உள்ள பாக்சில் டிக் செய்து, அதனை வாட்சப்பில் மட்டுமே எங்களுக்கு அனுப்பிடுங்கள்! அவற்றை போனில் ஒப்பித்து, நம்மாட்கள் குறித்துக் கொள்வது என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமே ஆகாது! இங்கும் உங்களது புரிதலுக்கு நன்றிகள்!

- அதே போல, "இது யாரு கதை ? இவரு சிரிப்பு காட்டுவாரா ? சண்டை போடுவாரா ?" என்ற ரீதியிலான விலாவரி வினவல்களையும் தவிர்த்திட்டால் நலம் - ப்ளீஸ் !! அடுத்தடுத்து கால்கள் வந்து கொண்டிருக்கும் போது, நம்மாட்கள் வரிசையாய் அவர்களிடம் திட்டு வாங்க நேரிடுகிறது ! So நமது சமீப புக்ஸ் பாணியில், crisp calls ப்ளீஸ் ! 

- In a nutshell:

- வாட்சப்பில் கையிருப்பில் உள்ள இதழ்களின் முந்தைய ஸ்டாக் லிஸ்ட் பெற்றுக் கொள்ளலாம். Numbers : 98423 19755 or 73737 19755.

- வாட்சப்பில் விலையில்லா 40 இதழ்களின் லிஸ்டையும் பெற்றுக் கொள்ளலாம்.

முந்தைய இதழ்களில் நீங்கள் ஆர்டர் செய்திடப் போகும் (டிஸ்கவுண்ட் கழித்தகிரயத்துக்கு ஈடாக Free Comics லிஸ்டிலிருந்து புக்ஸ் தேர்வு செய்து விலையின்றிப் பெற்றுக் கொள்ளலாம் !

- இரண்டு லிஸ்ட்களையும் பூர்த்தி செய்து, பணம் அனுப்பியுள்ள விவரத்தோடு, உங்கள் அட்ரஸ் சகிதம் நமக்கு வாட்சப் அனுப்பினால் போதும்.

இரு தினங்களும் பணிநேரம் : காலை 10 to மாலை 6 வரை!

- And நமது GPay நம்பரில் (90039 64584) போன் அடிக்க வேண்டாமே - ப்ளீஸ் ! அதனை attend செய்திட யாரும் இருக்க மாட்டார்கள் ! 

PLEASE NOTE : ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் புக்ஸில் 5 ரெடி !! இன்னும் 3 தயாராகிட வேண்டியுள்ளன! So புது புக்ஸ்  எல்லாமே மே 15 முதலே டெஸ்பாட்ச் ஆகிடும்ஆகையால் புது புக்ஸ் ஆர்டர் செய்திடுவோர் - சற்றே பொறுமை ப்ளீஸ் !!

என் மண்டைக்குள் உருவகமான திட்டமிடல் என்பதால் பஞ்சாயத்துக்கு வரும் சுனா-பானா வடிவேலைப் போல எனக்குள் எல்லாமே தெளிவாகவுள்ளது ! ஆனால் பஞ்சாயத்து பண்ண வரும் சங்கிலி முருகனாட்டம் நம்மில் எம்புட்டு பேர் குழப்பத்தில் கிறுகிறுக்கக் காத்துள்ளார்களோ - தெய்வமே !!! அவர்களையும், 2 நாள் மேளாவைக் கையாளப் போகும் நம்மவர்களையும் காத்தருளும் கையோடு, இந்த 2 நாள் திருவிழாவை அதகள வெற்றியாக்கி, கிட்டங்கியும், நாமும் சற்றே பெருமூச்சிட்டுக் கொள்ள பெரும் தேவன் மனிடோ வரம் தந்திடுவாராக !!  Bye all! See you around! Have a great weekend! 

And ரெகுலர் தடத்தின் இதழ்கள் டெஸ்பாட்ச் செய்தாச்சு !! வெள்ளியன்று உங்களைத் தேடி வந்திடுமென்று எதிர்பார்த்திடலாம் folks !! ஆன்லைன் லிஸ்டிங்குமே ரெடி : https://lion-muthucomics.com/latest-releases/1199-2024-may-pack.html

Happy Reading !! இதழ்களின் முதல் பார்வை பற்றிய ரேட்டிங் செய்ய மறந்திட வேணாமே - ப்ளீஸ் ?

Wednesday, May 01, 2024

ஜெய் பாகுபலி !!

 நண்பர்களே,

வணக்கம். சில IPL மேட்ச்களில் ஆறு ஓவர்கள் வீசி பவர் பிளே முடிக்கும் போதே தெரிந்திருக்கும் - இன்னிக்கி பிரியாணியாகப் போவது யாரென்று ! Of course - "சுபம் போடும் வரைக்கும் எதுவும் உறுதி கிடையாது ; கடைசி நிமிஷத்தில் கூட ஏதாச்சும் அதிரடியா மாறலாம் !" என்று வாங்கும் சம்பளத்துக்கோசரம் கமெண்டேட்டர்ஸ் தேய்ந்த ரெக்கார்டுகளாய் ஒலிப்பதுண்டு தான் ! நமக்கோ, கடைசியில் வெற்றியின் margin என்னவாக இருக்கும் என்பதில் மாத்திரமே சுவாரஸ்யமிருக்கும் ! இதோ - நடந்து முடியப் போகும் நம்ம காமிக்ஸ் தேர்தலிலும் அதே கதை தான் !! வோட்டிங் துவங்கிய அரை நாளிலேயே தெரிந்து போச்சு - போட்டி வெள்ளிக் கோப்பைக்கு மாத்திரமே ; தங்கக் கோப்பையில் பெயரெல்லாம் பொறித்து, போட்டோவுக்கு அந்த வின்னர் போஸ் கொடுக்கவும் செய்தாயிற்று என்று !!  

டெக்ஸ் வில்லர் !!! 

சிவாஜி பட பன்ச் டயலாக் யாருக்குப் பொருந்துதோ, இல்லியோ - நம்ம இரவுக் கழுகாருக்கு சாலப் பொருந்தும் !! பெயரைக் கேட்டாலே சும்மா அதிருது தான் !! நிஜத்தைச் சொல்வதானால், இந்தத் தேர்தல் மெய்யாலுமே செம tough ஆக இருந்திடும் என்றே நான் எண்ணியிருந்தேன் ! 'தல' clear favorite என்று எனக்குப் பட்டாலும், எதிர்த்து நிற்கும் 6 நாயகர்களுமே செம ஜாம்பவான்ஸ் - in their own rights !! So - "வந்தார்...கண்டார்...வென்றார்...சென்றார்...!" என்பதெல்லாம் இந்தக் களத்தில் டெக்ஸுக்கு சாத்தியமாகாது என்றே மனசுக்குப்பட்டது ! ஆனால்....ஆனால்...தேர்தலும் வந்தது ; அத்தினி பெரும் பிரச்சாரங்களும் செய்தனர் ; ஆனால் வாக்கெடுப்பினில் அம்புட்டு பேரையும் வாரிச் சுருட்டி கம்மங்கூட்டுக்குள் செருகிக் கொண்டே "நான் ரொம்ப பிசி !!!" என்றபடிக்கே கிளம்பியிருப்பது யாரென்று பார்த்தால் - அது TEX தான் !!  


342 பேர் வோட்டுப் போட்டுள்ளனர் and அது மெய்யாலுமே நல்லதொரு எண்ணிக்கை தான் ! அதில் 143 வாக்குக்களைப் பெற்று 'ஜிலோ'வென்று வாகை சூடியுள்ளார் 'தல' !! இம்முறை யார்-யார், யாருக்கு வோட்டளித்துள்ளனர் ? ; எந்த நாட்டிலிருந்து வாக்குகள் பதிவாகியுள்ளன ? என்பதையும் பார்த்திட முடிந்துள்ளது !! And இந்தப் பதிவை நான் எழுதும் ஏப்ரல் 30 இரவின் நிலவரப்படி - உள்நாடு மாத்திரமன்றி, வெளிநாட்டிலிருந்தும் 'தல' அலை தொடர்ந்துள்ளது ! TEX பெற்றுள்ளது 41.81% வாக்குகளை !! சிலாகிப்புகளைத் தொடரும் முன்பாக, அடுத்தடுத்த இடங்களில் உள்ளோர் யாரென்பதையும் சொல்லிப்புடுகிறேனே !!

RUNNER UP : கேப்டன் டைகர் !! கிட்டத்தட்ட டீம் டெக்சின் வாக்கினில் பாதி பெற்று இரண்டாமிடத்தில் குந்திக்கிறார் நமது ட்ஸி-நா-பா ! 'சிரிகாகுவா சில்க்கை உதவி ஜனாதிபதியாக்குவேன்' என்ற வாக்குறுதி கூட மனுஷனுக்கு 77 வாக்குகளுக்கு மேல் ஈட்டித் தந்திருக்கவில்லை எனும் போது - முதலிடம் பெற்றுள்ள டெக்சின் கோட்டை L&T சிமெண்டை விடவும் உறுதியான கலவையில் கட்டப்பட்டிருப்பது புரிகிறது !! டைகரின் வாக்கு சதவிகிதம் : 22.58%

வேங்கை வாங்கியுள்ள வாக்குகளில் சரி பாதியை வாங்கி, மூன்றாமிடத்தில் வீற்றிருக்கிறார் நமது evergreen இரும்புக்கை மாயாவியார் - 38 வாக்குகளுடன் ! Oh yes - அந்த க்ளாஸிக் யுக காதலர்களின் பெரும்பான்மை, நமது வாசிப்பு வட்டத்தினில் இன்றைக்கு இருக்க வாய்ப்புகள் குறைவென்பதை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும் ! அவ்விதம் இருக்கக்கூடியோரிலுமே  பெரும் பகுதியினர் இந்த blog ; சமூக ஊடகங்கள் இத்யாதி...இத்யாதிகளில் கலந்து கொள்ளாதிருக்கலாம் தான் ! So எஞ்சியுள்ளோரின் வாக்குகளோடு மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பதே பெரிய சமாச்சாரம் தான் ! 11.14% - மாயாவியாரின் vote share !!

4th PLACE - நம்ம ஒல்லியார் லக்கி லூக்குக்கு !! வெறும் 28 ஓட்டுக்கள் பெற்று, 8.2% மக்களின் ஆதரவை மட்டுமே ஈட்டியுள்ளார் - இந்த கார்ட்டூன் தலைமகன் ! In many ways - நம் வட்டத்தில் கார்ட்டூன்கள் பெருசாய் எடுபடாது போகும் நெருடலை இந்தப் புள்ளிவிபரம் நெற்றியடியாய் சொல்கிறது ! நம்மிடையே 39 ஆண்டுகளாய் கோலோச்சும் ஒரு ஜாம்பவானே, கார்ட்டூன் ஜானரின் கொடியைப் பிடித்தால் கூட, சுயேச்சை வேட்பாளருக்குக் கூடும் கூட்டம் கூடத் தேறாது  என்பது அப்பட்டமாகிறது !! Phew !!!! 

PLACE 5 - நம்ம சிரசாசன SMS புகழ் ஸ்பைடர் !!! 26 ஓட்டுக்கள் வாங்கி, 7.62% வாக்குவிகிதத்துடன் மலைக்கவே வைக்கிறார், becos இவர் பின்னுக்குத் தள்ளியிருப்பதோ - 2 சமகால ஜாம்பவான்களை !! So இவரது வாக்கு எண்ணிக்கையை விட, வாங்கியுள்ள இடம் வீரியமானதென்பேன் ! 

PLACE 6 - லார்கோ வின்ச் with 18 votes & 5.28% vote share !!

LAST PLACE - XIII - தனது பெயரிலுள்ள நம்பரைக் கூட தொட்டிடாது, 12 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் !! என்னைப் பொறுத்தவரையிலும் இந்தத் தேர்தலின் biggest shock இதுவே !! விற்பனையில் வேறு யாருமே கண்டிரா உச்சங்களை ஈட்டியுள்ளதொரு நாயகர் குச்சி ஐஸ் சாப்பிடும் நிலையினை எவ்விதம் அர்த்தமாக்கிக் கொள்வதோ - புரியலை !! 

Here are the results ! அங்கே வோட்டிங் தளத்திலுமே, இதனை நீங்கள் பார்த்திட இயலும் !!


டெக்ஸ் வில்லர்
41.81(143 votes)
கேப்டன் டைகர்
22.51(77 votes)
இரும்புக்கை மாயாவி
11.11(38 votes)
லக்கி லூக்
8.19(28 votes)
ஸ்பைடர்
7.6(26 votes)
லார்கோ வின்ச்
5.26(18 votes)
XIII
3.51(12 votes)
Total votes: 342
அப்புறம் எந்த தேசத்திலிருந்து யாருக்கு - எவ்வளவு ஓட்டுகள் என்ற புள்ளி விபரமும் இதோ ! அது ஆரானோ - இஸ்ரேலில் நம்ம வாசகர் ? கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளலாமேஜி ? அல்லது அது ஏதேனும் உல்டா லொகேஷன் ஷேரிங்கா ? And அமெரிக்காவில் உள்ள 'தல' ஸ்லீப்பர் செல் கச்சிதமாய் பணியாற்றியிருப்பதும் அப்பட்டம் !! 😁😁

Anyways, கிஞ்சித்தும் குழப்படியின்றி தேர்தலின் முடிவுகள் ஸ்பஷ்டமாகப் பதிவாகி இருப்பதால், தல - 'தல' தான் - என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ! 1985 முதலாய் நம்மோடு உலவி வரும் இந்த அசாத்தியர், படையப்பாவில் நீலாம்பரியின் வரிகளையே நினைவூட்டுகிறார் : வயசானாலும், அந்த அழகும், ஸ்டைலும் இம்மி கூடக் குறையவில்லை ! Maybe இன்னுமொரு பத்தாண்டுகள் கழித்து, இதே தேர்தலை டின்டின் ; இன்ன பிற புது நாயக / நாயகியரோடும் நடத்தும் போதாவது 'தல'யின் கிரீடத்துக்கு ஏதேனும் ஜெர்க் இருக்குமா ? என்று சொல்லத் தெரியலை !! இந்த நொடிக்கு - இவரொரு காமிக்ஸ் பாகுபலி !! Hail The King !! 

Bye guys....ஆன்லைன் ஸ்பெஷலின் ஒரு இதழுக்கு அவசரமாய் பேனா பிடிக்கக் கிளம்புகிறேன் ! வெள்ளி மாலை புதிய பதிவோடு ஆஜராவேன் ! And புது புக்ஸ் நாளை டெஸ்பாட்ச் ஆகிடும் !! See you around ; have a cool day !! மே தின நல்வாழ்த்துக்கள் !! 

P.S : பன் போட்டி காலையில் !!

COUNTRYVOTERSVOTES PER OPTION
India310 (90.64%)
  • டெக்ஸ் வில்லர்
    : 129
    (41.61%)
  • கேப்டன் டைகர்
    : 71
    (22.90%)
  • இரும்புக்கை மாயாவி
    : 34
    (10.97%)
  • ஸ்பைடர்
    : 25
    (8.06%)
  • லக்கி லூக்
    : 24
    (7.74%)
  • XIII
    : 10
    (3.23%)
  • லார்கோ வின்ச்
    : 17
    (5.48%)
Sri Lanka7 (2.05%)
  • டெக்ஸ் வில்லர்
    : 3
    (42.86%)
  • கேப்டன் டைகர்
    : 2
    (28.57%)
  • இரும்புக்கை மாயாவி
    : 0
    (0.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 1
    (14.29%)
  • லார்கோ வின்ச்
    : 1
    (14.29%)
United States of America6 (1.75%)
  • டெக்ஸ் வில்லர்
    : 4
    (66.67%)
  • கேப்டன் டைகர்
    : 0
    (0.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 1
    (16.67%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 1
    (16.67%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
France4 (1.17%)
  • டெக்ஸ் வில்லர்
    : 3
    (75.00%)
  • கேப்டன் டைகர்
    : 0
    (0.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 0
    (0.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 1
    (25.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
Germany3 (0.88%)
  • டெக்ஸ் வில்லர்
    : 0
    (0.00%)
  • கேப்டன் டைகர்
    : 2
    (66.67%)
  • இரும்புக்கை மாயாவி
    : 1
    (33.33%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
United Arab Emirates3 (0.88%)
  • டெக்ஸ் வில்லர்
    : 1
    (33.33%)
  • கேப்டன் டைகர்
    : 1
    (33.33%)
  • இரும்புக்கை மாயாவி
    : 0
    (0.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 1
    (33.33%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
Kuweit2 (0.58%)
  • டெக்ஸ் வில்லர்
    : 0
    (0.00%)
  • கேப்டன் டைகர்
    : 0
    (0.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 1
    (50.00%)
  • ஸ்பைடர்
    : 1
    (50.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
United Kingdom2 (0.58%)
  • டெக்ஸ் வில்லர்
    : 0
    (0.00%)
  • கேப்டன் டைகர்
    : 0
    (0.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 0
    (0.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 2
    (100.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
Singapore2 (0.58%)
  • டெக்ஸ் வில்லர்
    : 1
    (50.00%)
  • கேப்டன் டைகர்
    : 0
    (0.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 1
    (50.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
Oman1 (0.29%)
  • டெக்ஸ் வில்லர்
    : 1
    (100.00%)
  • கேப்டன் டைகர்
    : 0
    (0.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 0
    (0.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
Israel1 (0.29%)
  • டெக்ஸ் வில்லர்
    : 1
    (100.00%)
  • கேப்டன் டைகர்
    : 0
    (0.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 0
    (0.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)
Malaysia1 (0.29%)
  • டெக்ஸ் வில்லர்
    : 0
    (0.00%)
  • கேப்டன் டைகர்
    : 1
    (100.00%)
  • இரும்புக்கை மாயாவி
    : 0
    (0.00%)
  • ஸ்பைடர்
    : 0
    (0.00%)
  • லக்கி லூக்
    : 0
    (0.00%)
  • XIII
    : 0
    (0.00%)
  • லார்கோ வின்ச்
    : 0
    (0.00%)


தோனி ஆராமாய் இருக்க, ருதுராஜ் கிட்டே தலைவர் பொறுப்பை CSK குடுத்தா மாதிரி நம்ம டெக்ஸ் ஜாலியாய் ஓய்வெடுத்துக் கொண்டு, தனது இடத்தில் லக்கி லூக்கை நுழைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - அந்த டீம் என்ன செப்பும் ? மனசுக்குள் & வெளியே ? 


A - டைகர் ஜாக் & B - லக்கி : மனசுக்குள் !!

C - கிட் & D - கார்சன் : உரக்க !!

இந்தப் படத்துக்கேற்ப ஜாலியான கேப்ஷன் எழுதி வென்றிடும் நண்பருக்கு நமது ஆன்லைன் மேளா ஸ்பெஷல் புக்ஸ் செட் நமது அன்புடன் !! ப்ளஸ் அரை டஜன் ரவுண்டு பன்களுமே !! Best caption எதுவென்று தேர்வு செய்திட நம்ம பேரவையின் மகளிர் அணித் தலைவி கடல்யாழ் ரம்யாவை நியமிக்கிறேன் ! 

போட்டுத் தாக்குங்கோ !!