Wednesday, June 22, 2022

The உப-க்கு உப !!

 நண்பர்களே,

தி வணக்கங்கள் ! ஆல்பா புள்ளையாண்டானுக்குப் பேனா பிடிக்கும் பிசியில் ஒன்றரை நாட்கள் இங்கு எட்டிப் பார்க்க இயலாது போக, பணிகளை முடித்த சூட்டோடு இன்று காலை ஆஜரானால், உங்களின் தி ரவசுகள் தெறிக்க விட்டுக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது ! இதுக்கு மேலேயும் பெயர் சூட்டும் விழாவினைத் தொடர்ந்தால் பூமி தாங்காது என்பதால் இன்றைக்கே, ரொம்பச் சீக்கிரமே இதற்கொரு தீர்ப்பினைச் சொல்லி விடலாமென நினைக்கிறேன் ! இரட்டைத் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவைக் கூட்டி, இந்தத் தேர்வினைச் செய்யச் சொல்லுவோமென்று பார்த்தால் - பலகட்ட இக்கட்டுக்கள் அதற்கிருப்பதை உணர முடிகிறது ! So முன்கூட்டியே தி மூ.ச.வுக்குள் போய் நிலைகொண்டுவிட்டு, தீர்ப்பை சொல்லும் வேலையை நானே செய்வதென்று தீர்மானித்திருக்கிறேன் ! இன்று பின்மதியத்துக்குள் நாட்டாமை முத்துவிசயனாரின் முத்தான தீர்ப்பைக் கண்டவுடன்  மூ.ச முன்னே லைனாக நின்று உங்களின் அன்புகளை பிரகடனப்படுத்திடலாம் !! (ஏய்...ஏய்...டபுள் குட்டுக்கு இப்போவே ரெடியாகிட்டு இருக்கது யாரு  ??)

மதியமாய், கைத்தாங்கலாய் இங்கே கூட்டியார மைதீனுக்குச் சொல்லிவிட்டு வர்றேன்னுங்க ! Bye for now ...! அப்புறம் இதுக்கு மேலே பொங்க வேணாமுங்க...இது வரையிலும் நீங்கள் முன்மொழிந்துள்ள பெயர்களைக் கொண்டு டெக்சின் கொள்ளுப் பேரப்பிள்ளையின் சஷ்டியப்தபூர்த்தி ஸ்பெஷல் வரைக்கும் தலைப்பு வைக்கலாம் ! ஆகையால் தி போதும் ப்ளீஸ் ! See you around !

48 comments:

  1. நாட்டாமை அய்யா தீர்ப்ப கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா

    ReplyDelete
  2. Replies
    1. தி போதும்...ஹஹ்ஹஹ்ஹ்ஹா...


      எங்ககிட்டயேவா தி எடிட்டர் ஐயா

      Delete
  3. சார் இப்படி திடீர்னு எல்லாத்தையும் நிப்பாட்டச் சொன்னா எப்படிங்க சார்? நாலு நாளா தலைப்பு வச்சு வச்சே பழகிட்டோம். இப்ப நாங்க எதுக்காவது தலைப்பு வைக்கலேன்னா மண்டையே வெடிக்கற மாதிரி ஆகிடுமே?!!
    பழைய மாடஸ்டி, ஜேம்சுபாண்டு, டேஞ்சர் டயபாலிக் கதைகள் ஏதாவது இருந்தாக்கூடச் சொல்லுங்க சார்.. நல்லதா டைட்டில் வச்சு அசத்திப்புடறோம்!

    ReplyDelete
    Replies
    1. ஈவி@ ஹா...ஹா... ஆமா எதுக்காவது பெயர் வெச்சாகணுமே....!!!

      இந்த ஈரோட்டு ஸ்பெஷல், கோவை ஸ்பெசல் க்கெளாம் பெயர் வேணாங்களா ஆபீஸர்???

      Delete
  4. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  5. ///தி ரவசுகள் தெறிக்க விட்டுக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது ! இதுக்கு மேலேயும் பெயர் சூட்டும் விழாவினைத் தொடர்ந்தால் பூமி தாங்காது///

    ---- ஹா...ஹா... அந்த பயம் இருக்கட்டும் சார்....!!

    ReplyDelete
  6. ///இரட்டைத் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவைக் கூட்டி, இந்தத் தேர்வினைச் செய்யச் சொல்லுவோமென்று பார்த்தால் - பலகட்ட இக்கட்டுக்கள் அதற்கிருப்பதை உணர முடிகிறது ! //

    ---அட எஸ்கேப் ஆகிட்டாங்களே நடுவர்ஸ்....😉

    ReplyDelete
    Replies
    1. // அட எஸ்கேப் ஆகிட்டாங்களே நடுவர்ஸ் //

      YES.

      Delete
  7. ////இன்று பின்மதியத்துக்குள் நாட்டாமை முத்துவிசயனாரின் முத்தான தீர்ப்பைக் கண்டவுடன்//

    ----சபாஷ் அருமையான தீர்ப்பு...!!
    வெற்றியாளருக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்...🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  8. // See you around ! //

    இது தி See you around என்று வர வேண்டுமே :-)

    ReplyDelete
  9. // தி மூ.ச.வுக்குள் போய் நிலைகொண்டுவிட்டு, தீர்ப்பை சொல்லும் வேலையை நானே செய்வதென்று தீர்மானித்திருக்கிறேன் //

    ஆண்டவர் நம்மை காப்பாற்றி விட்டார் VR & விஜய் :-)
    நம்ப வேண்டுதல் படி தலைவரை கோவிலில் வைத்து வேண்டுதலை சிறப்பாக செய்து விடலாம் :-)

    ReplyDelete
    Replies
    1. ///ஆண்டவர் நம்மை காப்பாற்றி விட்டார் VR & விஜய் :-)///

      ---ஜஸ்ட் மிஸ்ஸூ....!!!!

      Delete
  10. // தி மூ.ச.வுக்குள் போய் நிலைகொண்டுவிட்டு, தீர்ப்பை சொல்லும் வேலையை நானே செய்வதென்று தீர்மானித்திருக்கிறேன் //

    அப்படி வாங்க வழிக்கு :-)

    ReplyDelete
  11. // ஏய்...ஏய்...டபுள் குட்டுக்கு இப்போவே ரெடியாகிட்டு இருக்கது யாரு //

    அது எல்லாம் அந்த காலம்! இப்போது எல்லாம் கலகலப்பு-2 படத்தில் யோகி பாபு வில்லனுக்கு கொடுக்கும் 5 அடிகள் தான் பேமஸ் :-) அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது :-)

    ReplyDelete
  12. // இன்று பின்மதியத்துக்குள் நாட்டாமை முத்துவிசயனாரின் முத்தான தீர்ப்பைக் கண்டவுடன் //

    சிறப்பு! தயாராகி விடுகிறோம் :-)

    ReplyDelete
  13. நடுவருக்கு நாலு தேன்மிட்டாய் ,ரெண்டு கமர்கட் கொடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா ஆசிரியரே நடுவர் ஆயிட்டாரே ...என்ன பன்றது...:-(

    ReplyDelete
    Replies
    1. தலைவர் இன்னும் மற்றவர்களை குழந்தையாகவே பார்க்கிறார் :-) ஐயோ ஐயோ :-)

      Delete
    2. நானே குழந்தை தானே...

      Delete
  14. @PFB தலைவரே இன்னும் குழந்தை என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா..! பேரக்குழந்தைக்கு முந்தாநேத்துதான் +2 ரிசல்ட் பாத்தாரு.!

      Delete
    2. // பேரக்குழந்தைக்கு முந்தாநேத்துதான் +2 ரிசல்ட் பாத்தாரு.! //

      LOL

      Delete
    3. @ Kid ஆர்டின் Kannan
      தலைவர் இன்னும் மனதளவில் குழந்தை. அதனால்தான் தேன்மிட்டாய் கமர்கட் தாண்டி அவர் மேலே வர மாட்டேன் என்கிறார்.

      Delete
    4. ///தலைவர் இன்னும் மனதளவில் குழந்தை. அதனால்தான் தேன்மிட்டாய் கமர்கட் தாண்டி அவர் மேலே வர மாட்டேன் என்கிறார்.///

      அதெல்லாம் சும்மா அள்ளிவிடுறதுதான் சார்.. ஏமாந்துடாதிங்க.! உங்களை மாதிரி நம்புறவங்க இருந்நா
      போனவாரம்தான் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கிட்டேன்னுகூட புளுகுவாரு.!
      நீங்க ரொம்ப நல்லவரா தெரியிறிங்க சதாசிவம் சார்.. உசார்.!

      Delete
    5. சதாசிவம் சார்..நீங்கள் தான் உண்மையை புரிந்த உத்தமர்


      இந்த பெரியவர் ரவிக்கண்ணர் பொறாமைல ஏதாவது சொல்லிட்டு இருப்பாரு கண்டுக்காதீங்க

      Delete
  15. @ ஆசிரியர் ஐயா
    நான் போட்டியில் இல்லை.
    நல்ல டைட்டிலாக பார்த்து செலக்ட் பண்ணுங்க சார்.
    (ஏனோ நம்ம மைண்ட் முச பக்கமே போகுதே)

    ReplyDelete
  16. //மதியமாய், கைத்தாங்கலாய் இங்கே கூட்டியார மைதீனுக்குச் சொல்லிவிட்டு வர்றேன்னுங்க !//

    (தோழா படத்துல கார்த்திக் சொல்லுற வசனம் தான் ஞாபகம் வருது, அந்த ஓவியம் வரைய)

    அடுத்த சிறப்பிதழுக்கு இன்னும் பெயர் வைக்க சொல்லுற வரைக்கும் ஓயமாட்டோம் நாங்க எல்லாம்... யாராலும் தடுக்க முடியாது... 😂🤣😁😃😂

    ReplyDelete
  17. சட்டுபுட்டுன்னு பஞ்சாயத்தை முடிச்சிவுடுங்க நாட்டாமை ஐயா.!

    ReplyDelete
  18. Edi Sir..
    Happy the மதியானம்..

    ReplyDelete
  19. ஆசரியரின் புதிய "தீர்ப்பு " ரெடி நண்பர்களே..

    ReplyDelete