Wednesday, June 22, 2022

தி நாட்டாமையின் தி தீர்ப்பு !

நண்பர்களே,

வணக்கம். அந்த வளைஞ்ச நாட்டாமை செருப்பை தேடிப் புடிச்சி  வாங்கிக்கலாம் போலும் ; 'புளிச்' என்று வெற்றிலைச் சாறைத் துப்பி வைக்க ஒரு அடைப்பப் பொட்டியையும் தேற்றிவிடலாம் போலும் ; உள்ளாற நீளமா ஒரு பட்டாப்பெட்டியைப் போட்டுக்கினு, இஸ்டராங்கா ராம்ராஜ் வேஷ்டிய கூட இடுப்பிலே செருகிக்கலாம் போலும் - ஆனால் ரண்டு சமாச்சாரங்கள் மட்டும் செம கஷ்டம் போலும் - நாட்டாமை வேஷம் கட்ட ! முதலாவது மேட்டர் - குடுமி போடும் நீளத்துக்கான அந்தக் கேசம் !! புதுசா கூடு கட்டப் பழகி வரும் குருவியோட மொத தயாரிப்பு சைசுக்கு இங்கன இருக்கிற கூந்தலைக் கொண்டு குடுமி ஒண்ணு தான் குறைச்சல் !! ரெண்டாவது மேட்டர் - தீர்ப்புச் சொல்றது !

அதுவும்,  தி டிரவுசரை தீர்மானமாய் கழற்றியே தீருவதென்ற முனைப்பில் பொங்கித் தள்ளும் நண்பர்களின் பிரவாகங்களின் மத்தியினில் தீர்ப்பெழுதுவது என்பது - ஆத்தாடியோவ் ரகப்பணி ! Anyways - ஏதேதோ பணிகளுக்கு மத்தியில், ஜாலியாய் இதற்கென நேரம் தந்த அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் !! You've made the last 2 days an absolute riot all !!! 😁😁பொறுமையாய் உங்களின் பொங்கல்ஸை 'ஏக் தம்மில்' பரிசீலனை செய்த போது கவனத்தை ஈர்த்த பெயர்கள் இவை :

  • Sankar C - TEX DIAMOND ஸ்பெஷல்
  • STV - The TEX 75 
  • ஈரோடு விஜய் - THE THALA 75 SUPER SPECIAL 
  • The Legend’s ஸ்பெஷல் -மகேந்திரன் பரமசிவம்.
  • The Magnificent Tex ஸ்பெஷல் - P கார்த்திகேயன் 
  •  Tex Diamond Jubilee ஸ்பெஷல் - ராகவன் 
  • The Terrific Tex 75 - Giridharasudarsan
  • TEX 75- THE SUPREMO SPECIAL - MKS .Ramm
  • The TEX Seventy Five Sensational Special (SSS) - Thirunavukkarasu Vazzukkupparai

முதலிரண்டு பெயர்கள் short & sweet ! 'நறுக்'கென சொல்ல வேண்டிய சமாச்சாரத்தைப் பறைசாற்றுகின்றன தான் ! Ditto with Tex Diamond Jubilee ஸ்பெஷல் - by ராகவன்ஜி ! வாழ்த்துக்கள் நண்பர் Sankar C & STV & Raghavan சார் ! ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்ட் - ஒரு படத்தை அறிவித்த கையோடு 'தளபதி 65 " ; 'தல 70 " என்ற ரீதியினில் working title என்று அறிவித்து விட்டு பூஜையையும் போட்டு விட்டு, ஷூட்டிங்குக்கு கிளம்பிவிடுகிறார்கள் ! சாவகாசமாய் வேறொரு பெயர் சிக்கும் போது அந்த working title-ஐ காலி பண்ணிவிட்டு புதுசான பெயரைச் சூட்டிவிடுகின்றனர் ! TEX 75 என்பதும், DIAMOND SPECIAL / DIAMOND JUBILEE SPECIAL என்பதும் கிட்டத்தட்ட அந்த working title போலிருப்பதால் சற்றே அவை பின்தங்குகின்றன ! Sorry sirs !

தி பூனையை DP-யிலும், குசும்பை வரிகளிலும் கொண்டிருக்கும் ஆயிரம் பன் கண்ட அபூர்வ சிகாமணியின்  "தல 75 சூப்பர் ஸ்பெஷல்" செம மாஸ் தான் ! ஆனால் for obvious reasons அதனைத் தேர்வு செய்திடத் தயக்கம் மேலோங்குகிறது ! தமிழ் பேசும் நல்லுலகத்தின் முக்காலே மூன்றுவீசத்தினருக்கு 'தல' என்றாலே மனதுக்கு வருவது வேறொரு ஜாம்பவான் தானே ? So  சற்றே சிந்தனைகளோடே பரிசு லாரியை ஈரோட்டிலிருந்து திசைதிருப்பத் தீர்மானித்தேன் ! Sorry-ங்கோ ; புண்பட்ட மனதை, பண்பட்ட ஒரு டஜன் பன்னால் அடுத்தவாட்டி ஆற்றிடலாம் ! 

சரி, ரைட்டு...டெக்சஸ் தலைமகனின் சிறப்பிதழுக்கு LEGEND'S SPECIAL என்று பெயரிட்ட டெக்சஸ்காரவுகளுக்கே பரிசு வண்டியை அனுப்பிடலாமென்று நினைக்கும் தருணத்தில் இன்னொரு சமீபத்தைய (திரை) LEGEND கண்முன்னே வந்து வந்து போகிறார் ! 'ஆஹா....ஆஹாஹாஹா...நம்மாட்கள் மீம்ஸ் போட்டே ஒரு வழியாக்கிப்புடுவார்களே !!' என்ற பயத்தில் லாரியை ஜகா வாங்கிடத் தீர்மானித்தேன் ! Sorry again sir !

ஆக, 9 பெயர்கள் கொண்ட தேர்வினில் எஞ்சியிருப்பன 4 titles :

  • The Terrific Tex 75 - Giridharasudarsan
  • The Magnificent Tex ஸ்பெஷல் - P கார்த்திகேயன் 
  • TEX 75- THE SUPREMO SPECIAL - MKS .Ramm
  • The TEX Seventy Five Sensational Special (SSS) - Thirunavukkarasu Vazzukkupparai
நான்குமே அதனதன் விதங்களில் powerful ஆகத் தென்பட, இந்த நாலுக்குள் ஒன்றைத் தேர்வு செய்யுங்களேன் என்று பந்தை உங்கள் திக்கில் திருப்பிவிட நினைத்தேன் ! ஆனால் இன்னொருக்க 'தி பொங்கலோ-பொங்கல்' ஆரம்பித்தால், முக்கால்வாசிப் பேர் தி ஓட்டமோ-ஓட்டம் பிடித்துவிடுவார்கள் என்பதால் shortlist செய்திடும் பணியைத் தொடர்ந்தேன் !

நண்பர் கார்த்திகேயனின் THE MAGNIFICENT TEX ஸ்பெஷல் என்ற தலைப்பு சிறப்பென்றாலும், டெக்சின் 75-வது ஆண்டினைக் குறிப்பிட எதுவுமில்லை என்பதால் sorry சார் ! 

நண்பர் வழுக்குப்பாறை திருநாவுக்கரசு முன்மொழிந்துள்ள பெயரும் (TEX Seventy Five Sensational Special) நயமாய் இருப்பினும் - டெக்ஸ் சைசிலான புக்கில் இத்தனை நீளமான பெயரை எழுதுவதென்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் ! So அதனையும் பின்தங்க அனுமதிக்க நினைத்தேன் ! Sorry நண்பரே !

ஆக finals - நண்பர் கிரிதரசுதனின் The Terrific TEX 75-க்கும்  நண்பர் MKS. ராமின் TEX 75 - THE SUPREMO SPECIAL-க்கும் மத்தியினில் தான் என்றாகிறது ! த்ரிஷாவா ? நயன் தாராவா ? என்றெல்லாம் இன்னமும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் விக்னேஷ் சிவன் விளக்குமாற்றால் சாத்துவார் என்பதால், சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தேன் - ரொம்பவே simple ஆனதொரு காரணத்தின்  பெயரைச் சொல்லி :

"Terrific Tex" - உச்சரிக்க, எழுத, வாசிக்க ரொம்பவே எளிதான பெயரே ! ஆனால் கொஞ்சம் plain ஆனதொரு பெயராக இருக்கக்கூடுமோ என்று லைட்டாக  நெருடியது  !! இங்கே பிரவாகமெடுத்திருந்த வேகங்களுக்கு ஈடு தரும் விதமாய் ; இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷான பெயராய் இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைத்தேன் ! 

அதற்கு 'நச்' என்று பொருந்தியதாய் நண்பர் MKS ராமின் "TEX 75 - THE SUPREMO SPECIAL" அமைந்தது போல்பட்டது ! கொஞ்ச வருடங்களுக்கு முன்பாய் வெளிவந்த "சர்வமும் நானே" இதழில் டெக்ஸ் & கோ.வுக்கு tough தந்த எதிராளிக்கு ஒரிஜினலில் "EL SUPREMO" என்று தான் பெயர் ! "சர்வ வல்லமை படைத்த தலைவன்" - என்ற பொருள்தரும் பெயரானது - நமது இரவுக்கழுகாருக்கு கனகச்சிதமாய்ப் பொருந்துவதாய் மனசில் தோன்றியது ! So - 2023-ல் காத்திருக்கும் 'தல 75 ' இதழுக்கு  :

TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல் !! என்ற பெயரினைச் சூட்டிடுவோமே folks ? 

வாழ்த்துக்கள் நண்பர் ராம் !! Sorry நண்பர் கிரி !

Phewwwwww !! ஒரு வழியாய் எனது பணியினைப் பூர்த்தி செய்தாச்சு ; இனி www.மூ.ச.com என்ற முகவரியில் என்னைத் தேடிப்பிடித்து தி மாலை மருவாதிகளைச் சிறப்பாகச் செய்திடலாம் guys !! I am waitingggggggg !! Bye for nowwwwwwwwww !! (வைகைப் புயலின் அவ்வ்வ்வ்வ்...மாடுலேஷனில் !!)


216 comments:

  1. இந்த வாரம் இது மூன்றாவது பதிவு......
    !!!!!

    ReplyDelete
  2. அருமையான தேர்வு. வாழ்த்துக்கள் நண்பர் ராம் அவர்களுக்கு

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. ”TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல்”

    வாழ்த்துக்கள் நண்பர் MKS ராம் !

    // நண்பர் கார்த்திகேயனின் THE MAGNIFICENT TEX ஸ்பெஷல் என்ற தலைப்பு சிறப்பென்றாலும், டெக்சின் 75-வது ஆண்டினைக் குறிப்பிட எதுவுமில்லை என்பதால் sorry சார் //

    பரிசீலனை லிஸ்ட்டில் வந்ததே பரிசு வாங்கிய பெருமைதான் எனக்கு சார் !! நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. // பரிசீலனை லிஸ்ட்டில் வந்ததே பரிசு வாங்கிய பெருமைதான் எனக்கு சார் !! நன்றி சார். // உண்மை தான்சார்

      Delete
    2. ஆமா கார்த்திகேயன் சார்.. மிக மிக ஜாலியாக தோணும் அதேஅளவுக்கு மிக மிக கடினமான ஒன்று...

      நம்ம பழைய காமிக்ஸ் கழக செட்ல இருந்து நாம ஃபைனல்ஸ் வந்ததே பெறுமையான விசயந்தான்...!!!
      சும்மா காலரைத்தூக்கி விட்டு கெத்து நடை போடலாம்...💃💃

      Delete
  5. வாழ்த்துக்கள் நண்பர் MKS ராம் 💐🥗🥙🤝🤝

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. (23ம் புலிகேசி பாணியில்)

    நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் தோற்று விட்டனவே
    இன்னும் பயிற்சி தேவையோ 😇😂😃🤣

    ReplyDelete
    Replies
    1. இப்போதானே முதல் போட்டி லிங்கம்.... போகப்போக தெளிவாக நெளிவு சுளிவுலாம் தெப்பட்டுடும்.... நீங்களும் கலக்கும் நாள் விரைவில் வரும்... குட்ட்ரை

      Delete
    2. நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் தோற்று விட்டனவே
      இன்னும் பயிற்சி தேவையோ 😇😂😃🤣

      ####

      :-)))

      Delete
    3. இது நகைச்சுவைக்காக சொன்னது STV அவர்களே.

      ஆசிரியர் தேர்வு அருமை 👌👏👏

      Delete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தம்பி ஶ்ரீராம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்தியாரே ..

      Delete
  10. வாவ்! வாழ்த்துகள் MKS.RAM!!!
    இயல்பைப் போலவே தளத்திலும் அமைதியாக இருந்துவிட்டு, மீம்ஸ்களிலும் போட்டிகளிலும் தன் திறமையை நிருபித்துவரும் நண்பருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!
    'Supremo' என்பது 'சர்வ வல்லமை படைத்த தலைவன்' என்பதைக் குறிக்குமானால் இதைவிடப் பொருத்தமான தலைப்பு தல'யின் சிறப்பிதழுக்கு அமைந்துவிட முடியாதுதான்! the excellent தேர்வு!

    இழந்துவிட இனி எதுஙும் இல்லாததாலோ என்னவோ மண்டையைப் பிய்த்துக்கொள்ளாமல் மிகச் சாதுர்யமாக நடுவர் பணியாற்றி நல்ல டைட்டிலை தேர்வு செய்த எடிட்டர் சமுகத்திற்கு - the well done!!

    ReplyDelete
    Replies
    1. நீரின்றி அமையாது உலகு !

      "The" இன்றி அமையாது தலைப்பு !

      உலகுக்கு இந்த உன்னதத் தாத்பர்யத்தை உரக்கச் சொன்ன உத்தமருக்கு ரெண்டு பன் பார்சல் !

      Delete
    2. ஹிஹி நன்றிகள் எடிட்டர் சார்! ஏற்கனவே நீங்கள் எனக்குத் தரவேண்டிய பழைய பாக்கி 73 பன்னுகளுடன் இந்த இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 75 பன்னுகள்! அடடே 'The special பன் -75'!!!

      Delete
    3. அந்தப் 'பழைய பாக்கிக்கான பன்னெல்லாம் லைட்டா பச்சையா கீது...பரால்லியா ? சேர்த்தே அனுப்பிப்புடலாமா ?

      Delete
    4. ///இயல்பைப் போலவே தளத்திலும் அமைதியாக இருந்துவிட்டு, மீம்ஸ்களிலும் போட்டிகளிலும் தன் திறமையை நிருபித்துவரும் நண்பருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!///

      சூப்பர் ஈவி... அருமையான வாழ்த்து...

      Delete
    5. ///'Supremo' என்பது 'சர்வ வல்லமை படைத்த தலைவன்' என்பதைக் குறிக்குமானால் இதைவிடப் பொருத்தமான தலைப்பு தல'யின் சிறப்பிதழுக்கு அமைந்துவிட முடியாதுதான்! the excellent தேர்வு!///

      ---அருமையான தேர்வுங் ஆசிரியர் சார்

      Delete
    6. நன்றி ஈ.வி தல ..

      Delete
    7. // இழந்துவிட இனி எதுஙும் இல்லாததாலோ என்னவோ மண்டையைப் பிய்த்துக்கொள்ளாமல் //

      :-) ROFL

      Delete
    8. எனக்கு இங்கிலீஷ்பீஸ்ல இதுக்கு அர்த்தம் இதுதான்னு தெரில செயலரே இல்லீன்னா பட்டையை கிளப்பி இருப்பேன் ஆனா இந்தி ,ஒரிஸ்ஸா குஜராத்தில தெரிஞ்சாலும் "தி " க்கு என்னன்னு தெரியாம போச்சு

      ஜஸ்ட் மிஸ்ஸு

      Delete
  11. தலைப்புக்காக கடைசி வரை களத்தில் நின்று போராடிய தலீவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல் !!

    வாவ்...எக்ஸலண்ட் , டைட்டில் டக்கரா இருக்குது சார் !

    ReplyDelete
  13. ”TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல்”

    வாழ்த்துக்கள் "மீம்ஸ் புகழ்" சேலம் MKS ராம் !💐💐💐💐💐💐


    ReplyDelete
  14. // MKS ராமின் "TEX 75 - THE SUPREMO SPECIAL" //

    வாழ்த்துக்கள் MKS ராம் !

    ReplyDelete
  15. அஹா just miss...
    வாழ்த்துக்கள் MKS Ram...
    Awaiting TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் நண்பர்களே....ராம் ஸ்பெசல் வாழ்த்துக்கள் நண்பரே....டெக்சுக்கான சரியான தலைப்பு

    ReplyDelete
  17. Thanks to editor sir for selecting my title .. Congrats to all friends who participated .. Thanks to all friends for their wishes ..

    ReplyDelete
    Replies
    1. கல்வெட்டில் உங்கள் பெயர் பொருச்சாச்சு 🥳🥳🥳

      Delete
    2. Ungaldum terrific a than Ji irundichi .. Just miss u ..

      Delete
  18. வாழ்த்துக்கள் ராம் .. 💐💐

    ReplyDelete
  19. MKS Ram ji..பட்டைய கிளப்பிட்டேள் போங்க..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. வாவ்...வாழ்த்துக்கள் ஸ்ரீராம் நண்பரே.. அழகான தலைப்பு அருமையான தேர்வு ஆசிரியர் சார்..

    மனமார்ந்த வாழத்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. // அழகான தலைப்பு அருமையான தேர்வு ஆசிரியர் சார்.. //
      +1 True!

      Delete
    2. ////அழகான தலைப்பு அருமையான தேர்வு ஆசிரியர் சார்..///

      யெஸ் தலீவரே!!!

      லயன் பொற்கால இதழ்கள்---

      *லயன் சூப்பர் ஸ்பெஷல்*

      *லயன் ஹாலிடே சூப்பர் ஸ்பெசல்*

      *லயன் சென்சுரி ஸ்பெசல்*

      *லயன் டாப்10 ஸ்பெசல்*

      *லயன் கெளபாய் ஸ்பெசல்*

      *லயன் மெகாட்ரீம் ஸ்பெசல்*

      *லயன் ஜாலி ஸ்பெஷல்*

      *லயன் மில்லேனியம் ஸ்பெசல்*

      *லயன் மேக்னம் ஸ்பெசல்*

      ---வரிசையில் இந்த

      """ டெக்ஸ்75- லயன் Supremo ஸ்பெஷல் """"

      ---ம் சரித்திரத்தில் இடம்பெறும் புகழ்பெறட்டும்💞

      Delete
    3. நன்றி தலைவரே ...

      Delete
  21. 👌👌👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் ராம் ஜி

    ReplyDelete
  23. வாழ்த்துகள் நண்பர்களே..!

    💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  24. MKS Ram and Giri T
    💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  25. /'Supremo' என்பது 'சர்வ வல்லமை படைத்த தலைவன்' என்பதைக் குறிக்குமானால் இதைவிடப் பொருத்தமான தலைப்பு தல'யின் சிறப்பிதழுக்கு அமைந்துவிட முடியாதுதான்! the excellent தேர்வு!///

    உண்மை...

    ReplyDelete
  26. ஆசிரியர் டாப் 10 லிஸ்ட் கொடுத்ததால என் பேரு வரலை டாப் 11 கொடுத்திருந்தா என் பெயரும் இடம் பெற்று இருக்கும் என்பதால் என்னை நானே வாழ்த்தி கொள்வதிலும் பெருமை அடைகிறேன்.

    அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  27. வணக்கம் நண்பர்களே...!

    வாழ்த்துகள் நண்பரே...
    கலக்கிட்டீங்க...
    MKS.RAMM!

    குட் செலக்சன் எடிட்டர் சார்!

    ReplyDelete
  28. நாட்டாமை தீர்ப்பு சொல்லி விட்டதால், இனி ஸ்டீலார் ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
  29. load more வரைக்கும் தெறிக்கவிடுங்க.

    ReplyDelete
  30. கலந்து கொண்ட அணைத்து நண்பர்களுக்கும் நன்றி 🙏 தலைப்பில் வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள் 🎉💥🎉💥🎉 ( போட்டியில் நான் எப்போது ஜெய்ப்பது பரிசை எப்போது வாங்குவது)( mind voice)

    ReplyDelete
  31. எடிட்டர் சார்..

    உங்க வூர்ல யாருக்காவது குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், செல்லப் பிராணிகளுக்கு பெயர் வைத்தல், பிடித்தவர்களுக்கு செல்லப் பெயர் வைத்தல், பிடிக்காதவர்களுக்கு கெட்ட வார்த்தையில் பெயர் வைத்தல், பழைய பெயரை மாற்றி புதிய வசீகரமான பெயர் வைத்தல், புதிய கட்டிடங்களுக்கு/கடைகளுக்குப் பெயர் வைத்தல் - போன்ற நிகழ்வுகளில் எங்களுடைய சேவை தேவையானால் உடன் தெரியப்படுத்துங்கள்!

    கஷ்டமர் திருப்தியடையும் வரை தொடர்ந்து ஏழு நாட்கள் வரை கூட புதிய பெயர்கள் இரவு பகலாக பரிந்துரைக்கப்படும்! மூன்றுவேளை சாப்பாட்டுக்கு மட்டும் ஏற்பாடு செய்துவிட்டால் இந்தச் சேவை முற்றிலும் இலவசமே!

    இத்தகவலை 3 குரூப்களில் 3 நிமிடங்களுக்குள் நீங்கள் ஷேர் செய்யாவிட்டால் நள்ளிரவுக்குள் உங்கள் பெயர் பரணீதரன், மகேந்திரன், செல்வம், ராகவன், பொன்ராசு, குமாரு, பாலு ஃப்ரம் பெங்களூரு, கிட் கண்ணன் போன்ற 'சப்ப்ப்பை'யான பெயர்களுள் ஒன்றாக மாறிவிட்டிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ரசிகராக இருந்தா ஷேர் பண்ணவும் ஐ சேர்த்துக்கோங்க ஈவி😉

      Delete
    2. வரவேற்கிறோம் நல்ல அகுடியா 👌👌👏👏

      செயலர்னா சும்மாவா 👌👏🤣🤣😃

      Delete
  32. @ MKS RAM
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  33. "TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல் !! என்ற பெயரினைச் சூட்டிடுவோமே folks ?"

    பொருத்தமான, அருமையான தீர்ப்பு சார். நண்பர் ராமிற்கு வாழ்த்துகள். நாமினேசனில் என் தலைப்பும் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  34. 'குமுதம்' ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் அவர்கள் சற்றுமுன் காலமாகி விட்டார். Heart attack !!அன்பான மனிதர் ; அதிர்ந்து பேசா பண்பாளர் ; இறை பக்தி நிறைந்தவர் ; தீரா காமிக்ஸ் காதலர் ! ஈடு செய்ய இயலா இழப்பு இது !

    அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள் !! RIP Sir...
    :-(

    ReplyDelete
    Replies
    1. எந்தவொரு குமுதம் இதழிலும் நமது இதழ்கள் சார்ந்த தகவல் புத்தக மதிப்பீட்டுப் பகுதியிலோ ; கேள்வி -பதில் பகுதியினிலோ இடம் பிடித்தால் அந்த இதழ் அச்சுக்குச் செல்லும் முன்பாகவே வாட்சப்பில் நமக்குத் தகவல் சொல்லி விடுவார் ! ஒரு ஜானர் விடாது சகலத்தையும் வாசித்தவர்..நேசித்தவர் !!

      Gone too soon !!

      Delete
    2. RIP - எதிர் பாராத துயர செய்தி

      Delete
    3. வருத்தமான செய்தி! ஆழ்ந்த இரங்கல்கள்! RIP!

      Delete
    4. ஆழ்ந்த அனுதாபங்கள்

      Delete
    5. ஆழ்ந்த இரங்கல்கள் சார்.

      Delete
    6. ஆழ்ந்த இரங்கல்கள்..😔

      Delete
  35. இந்த பெயர் வைக்கும் உற்சவத்தினால நான் கல்லூரி படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வந்தது .

    "அப்போ ஆர்கானிக் வகுப்பு போய்கிட்டு இருந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும் ஒரே கடியா இருந்தது.

    அதற்கு முந்தைய நாளில் தீடிரென்று எனக்கு தோன்றிய ஒரு கண்டுபிடிப்பை பற்றி என் பெஞ்ச்ல உட்கார்ந்து இருக்கும் நண்பர்களிடம் சொன்னேன்

    அது என்னனா என் பெயர்ல ஒரு ட்ரிக் இருக்குடா நீங்க யாரவது கவனிச்சு இருக்கீங்களானு கேட்டேன் யாரும் எங்களுக்கு தெரியல நீயே சொல்லுடான்னு சொன்னாங்க

    நானும் பெயரை “சிவலிங்கம்” னு தமிழ்ல எழுதி அதை படிக்க சொன்னேன்
    அப்புறம் அதுல வர்ற வலி ன்ற எழுத்தை மட்டும் அடித்து விட்டு

    சிவலிங்கம் — சிங்கம்

    இப்போ படிச்சா என்ன வருதோ அதாண்டா நானுன்னு சொன்னதும் எல்லாரும் குபீர்ன்னு சிரிச்சுட்டாங்க

    அதை பார்த்த எங்க பேராசிரியர் சிரிச்ச எல்லாரையும் விட்டுட்டு என்கிட்டே வந்து நீ தான் ஏதோ பண்ணி இருக்கன்னு உன்னை தவிர எல்லாரும் சிரிக்கிறானுங்கனு சொல்லிட்டு, உன்னை மட்டும் வகுப்பை விட்டு வெளியே அனுப்பினால் எல்லாரும் ஒழுங்கா கிளாஸ் கவனிப்பாங்கன்னு சொன்னாரு பாருங்க...

    அப்பவே ஒரு விஞ்ஞானி உருவாகறத முட்டு கட்டை போட்டுட்டாங்க

    பழுத்த மரம் தான் கல்லடி படும்னு சும்மாவா சொன்னாங்க

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா! அருமையான மலரும் நினைவுகள்!!

      ///அப்பவே ஒரு விஞ்ஞானி உருவாகறத முட்டு கட்டை போட்டுட்டாங்க///

      :)))))

      Delete
    2. நீங்க ஏற்கனவே சிம்மயும் வெளிப்படுத்தாம போய்ட்டீங்க.....கொஞ்சம் ஆசிரியர் தாமதிச்சிருந்தா அதுல பாருங்க முதலயும் கடசியயும் காட்டி சிம்ம அப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்க....
      இந்திய விஞ்ஞானி சிவலிங்கம் எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டாரே......அதான் நண்பரே செந்தூரான் அருள்....விஞ்ஞானத்த பறிச்சி கலகலப்ப தந்துட்டார்...என்ஜாய்

      Delete
    3. //அப்பவே ஒரு விஞ்ஞானி உருவாகறத முட்டு கட்டை போட்டுட்டாங்க//

      ஆகா ஆகா. இதுவேறயா😂

      Delete
    4. அட ஒரு இளம் விஞ்ஞானியை தடுத்துட்டாங்களே...😉🤣

      Delete
  36. வாழ்த்துகள் ராம் அவர்களே...

    ReplyDelete
  37. அப்போ
    அதிகாரி ஸ்பெஷல்
    நேர்கோட்டு நாயகன்
    எல்லாம் கிடையாதா???

    ReplyDelete
  38. தி. Mks. Rammஅவர்களுக்கு தி. வாழ்த்துக்கள். இதற்கு நீங்களே ஒரு மீம்ஸ் போடுங்களேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  39. வாழ்த்துகள் நண்பரே MKS.Raam :)

    ReplyDelete
  40. இதையுமா அய்யா?

    பீன்ஸ் கொடியில் ஜாக்

    ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி பயின்றதால் இன்றைய தலைமுறை வாசகர்கள் , மாணவர்களுக்கு "டேக்கன் ஃபார் கிராண்டட் " என்று இருக்கும் கிளாஸிக் கதைகளின் பெயர்கள் கூட பெரும்பாலும் எனது குழந்தைகள் மூலம் அறிமுகமானவையே.

    JACK AND THE BEANSTALK கதையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    ஒரு வருடம் முன்பு பார்த்த jack the giant slayer 2013( மிகப் பெரும் தோல்விப்படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது) பீன்ஸ் கொடியில் ஜாக்கின் அடல்ட் வெர்ஷன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.

    மூலக்கதை சிறார்களுக்கு சொல்லப்படுமாயின் தவறான செய்தி அவர்களை போய்ச் சேருமோ என்ற ஐயம் எழுகிறது.

    வறுமையில் வாடினால் திருடவும் ஏன் கொலை செய்யவும் செய்யலாம் என்பதான தகவலை இக்கதை சொல்லி செல்கிறதா?

    இதன் மாரலைட் வெர்ஷன் ( moralised version ) குழந்தைகளுக்கு உகந்ததாக
    இருக்கும் என எண்ணம் தோன்றுகிறது.( அரக்கன் ஜாக்கின் தந்தையை கொன்றுவிட்டு , பொற்காசுகள், தங்க முட்டையிடும் கோழி, யாழ் போன்றவற்றை கவர்ந்து கொண்டான் . அப்பிராந்தியத்தில் உள்ள குழந்தைகளை தின்பவன் என அரக்கன் மேல் கொடூரமானவன் என்ற பிம்பம். ஜாக் தன் குடும்பத்துக்கு சொந்தமான பொருள்களையே அரக்கனிடமிருந்து எடுத்துக் கொண்டான் என மூலக் கதைக்கு மேற்பூச்சு moralised version - ல் சொல்லப்பட்டிருக்கிறது).

    மற்றபடி புஸ்தக வடிவமைப்பு பிற உள்ளடக்கங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மூலக்கதை லிங் தனி செய்தியில் பகிருங்கள் பொருளர் ஜி... வாசித்து பார்ப்போம்...

      Delete
    2. STV

      நம் கைகளில் தவழ்வது மூலக் கதையின் தழுவல்தான் டெக்ஸ்!

      இது ஒரு செவி வழிக்கதை ..1734-ல்
      முதன்முதலில் அச்சில் வந்தாலும் இது அதற்கு பல நூறு ஆண்டுகளாக முன்பாகவே உலவி வந்திருக்கிறது.

      நம் கைகளில் உள்ள கதைப்படி ஜாக்தான் வில்லன். திருடுகிறான்.பொய் சொல்கிறான்
      விரும்பியோ, விரும்பாமலோ கொலையும் செய்கிறான்.

      Original story என போட்டிருந்தாலும் உங்களுக்கு தனிச்செய்தியில் நான் அனுப்பியிருப்பது moralised version தான்.

      இதில் ஜாக்கின் செயல்கள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும்

      Delete
    3. ஆமா ஜி. நம்ம புக்கில் ஜாக்தான் தவறாகப்போறான்.... தங்க காசு பெட்டியை,தங்க முட்டை வாத்தை லவட்டுறான், யாழை அபேஸ் பண்ணும்போது மாட்டி கொலையும் செய்கிறான்....
      இதில் ஜாக்தான் வில்லனாக வாசிப்போருக்கு தெரியும் போலயே... குழந்தைகளுக்கு எப்படி கதை சொல்வது??? கதை சொல்லும் எல்லோரும் மாரலைஸ்ட்டு வெர்சனை அறிந்திருப்பார்களா?? என்றால் ஐயம்தான்.... அவரவர் கற்பனையில் கதை சொல்ல வேண்டியதுதான் போலயே...!!

      அதே குழந்தை, தானே இதை வாசிக்கும் நாளில் நம் கற்பனையை நினைவூட்டி கைகொட்டி சிரிக்குமே....

      Delete
    4. ///ஒரு வருடம் முன்பு பார்த்த jack the giant slayer 2013( மிகப் பெரும் தோல்விப்படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது) ///

      ---பொருளர் ஜி தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த படத்திற்கு நம்ம நண்பர் கிருஷ், அவரது தளத்தில் சிறப்பான விமர்சனம் செய்துள்ளார்... நேரம் இருக்கும் நண்பர்கள் விமர்சனத்தை வாசித்து படத்தை பார்ப்பது பற்றி முடிவு பண்ணலாம்...
      விமர்சன லிங்:-
      https://www.krishtalkstamil.in/2013/03/jack-giant-slayer-movie-review.html

      Delete
    5. // ஆமா ஜி. நம்ம புக்கில் ஜாக்தான் தவறாகப்போறான்.... தங்க காசு பெட்டியை,தங்க முட்டை வாத்தை லவட்டுறான், யாழை அபேஸ் பண்ணும்போது மாட்டி கொலையும் செய்கிறான் //

      Agreed. இதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

      Delete
    6. //வறுமையில் வாடினால் திருடவும் ஏன் கொலை செய்யவும் செய்யலாம் என்பதான தகவலை இக்கதை சொல்லி செல்கிறதா?//

      //இதில் ஜாக்கின் செயல்கள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும்//

      Good Analysis bro. Editor need to consider all these fact too.
      So far the Jack story is quite fantasy and attracting, Just like fairy tale.

      Delete
    7. செல்வம் அபிராமி & விஜய் & விஜயராகவன் - நீங்கள் சொல்லிய கோணத்தில் இங்கு தளத்தில் நண்பர்கள் பதிவிட்ட பின்னர் தான் யோசிக்க ஆரம்பித்தேன்; படிக்கும் போது நீங்கள் சொல்லிய கோணத்தில் யோசிக்கவே இல்லை நண்பர்களே.

      Delete
  41. **** பீன்ஸ் கொடியில் ஜாக் ****

    நேற்றிரவுதான் புத்தகத்தை கைப்பற்ற முடிஞ்சது! இன்னிக்கு காலையில் படிச்சுட்டேன்!

    ஏற்கனவே இங்கு செனா அனாவும், STVRம் டிஸ்கஸ் செய்ததைப்போல, இதுவொரு moralised version ஆக இருந்துருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

    மேகங்களுக்கு மேலே குடித்தனம் பண்ணிக்கிட்டிருந்த ராட்சசன்(பார்க்க கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும்) பன்றிகளையும், ஆடுகளையும் வேட்டையாடிக் கொண்டுவந்து சமையல்காரியோடு சரிசமமாக ஒரே டைனிங் டேபிளில் உணவைப் பகிர்ந்துகொள்ளும் உத்தமனாகவே கண்ணுக்குத் தெரிகிறான்! கூடவே, தங்க யாழை மீட்டி அதில் எழும் இசை மூலம் அங்கிருந்த எலிகளையும் கூட சொக்கிப்போக வைத்திடும் திறமைச்சாலி எனும்போது அவன்மீதான மதிப்பும் கூடிப்போகிறது!!

    ஆனால், சிறுவன் என்ற போர்வையில் நம்மிடம் அறிமுகமாகுபவனே உண்மையான வில்லன் என்பது என் கருத்து! அரக்கனின் வீட்டினுள் நுழைந்து தங்கக் காசுகளையும், பொன் முட்டையிடும் கோழியையும், தங்க யாழையும் திருடுகிறான். அப்பாவி அரக்கனை கொலையும் செய்கிறான். திருடிக் கிடைத்த தங்கக் காசுகளைக் கொண்டு ஜாக்கும், அவன் மம்மியும் சுகபோகமாக வாழ்வதாக வேறு காட்டுகிறார்கள்! உழைத்துச் சம்பாதிக்காமல் இப்படித் திருடிச் சம்பாதித்து பகட்டான வாழ்க்கை நடத்தும் ஜாக்கும் அவன் மம்மியும் இக்கதையைப் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு மோசமான உதாரணாமகவே தோன்றிவிடும் வாய்ப்புள்ளது என்பதுதான் வேதனை!

    இந்தக் கதையை நான் என் குழந்தைகள் படிக்கக் கொடுக்கப்போவதில்லை! குழந்தைகளுக்கான கதையில் ஒரு நீதியோ, ஒரு செய்தியோவாவது இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அடுத்த கதையாவது அப்படி வந்தால் மகிழ்ச்சியே!

    7/10

    ReplyDelete
  42. //சிறுவன் என்ற போர்வையில் நம்மிடம் அறிமுகமாகுபவனே உண்மையான வில்லன் என்பது என் கருத்து!// உங்கள் கருத்து ok தான். எனது பதிலை தவறாக எடுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
    ரொம்பவும் யோசிக்க வேண்டாமே சகோ... பசிக்காக பசுவை விற்கும் ஒரு சிறுவனை ஒரு பீன்ஸ் விதையை கொடுத்து அவனையும் அவன் அம்மாவையும் பட்டினி போட்ட ஒரு ஜித்தனை நினைக்கும் போது ஜாக் பசி தீர ஒரு அரக்கனின் தேட்டையை தேட்டை போடுவது நியாயம் தானே.
    அதே அரக்கன் குழந்தைகளை உண்ணும் ஒரு cannibal என்னும்போது நமது ஜாக் தன்னை காக்கும்பொருட்டு அவனை வீழ்த்திய ஹீரோதானே. குட்டீஸ்களுக்கு நல்ல விதமாக இந்த கதையை சொல்ல முடியும் என்று தான் நினைக்கிறேன்.
    ஒரு fairy tale பொருட்டு இந்த விவாதம் முதல்முதலாக
    ஆச்சரியப்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///குட்டீஸ்களுக்கு நல்ல விதமாக இந்த கதையை சொல்ல முடியும் என்று தான் நினைக்கிறேன்.////-- இந்த கருத்தோடு ஒப்புமை உள்ள போதும், குழந்தைகளுக்கு கதை சொல்லவும் கி.நா. பாணியில் யோசித்து தானே சொல்ல வேண்டியுள்ளது சகோ!

      மேலும் நம்ம சுட்டீஸ் தாங்களாகவே வாசித்து அறியவேணும் என்பதே முதல் இலக்கு எனும்போது, அவர்கள் வாசிக்கும்போது தவறான புரிதலே ஏற்படும்..

      ஆசிரியர் சார் கதையையே மாரலைஸ்டு ஸ்டோரியாக, ஜாக்கின் தந்தையை அரக்கன் கொன்றான், அவனை பலிவாங்க மந்திர பீன்ஸ் உதவியுடன் ஆகாயம் சென்று தங்ககாசு, தங்க முட்டை வாத்து அனைத்தும் மீட்டுவர்றான்னு அமைத்து இருந்தார் எனில் அருமையான ஹிட் அடித்து இருக்கும்...

      இப்போது ஈவி சொன்னதுபோல பல தந்தையர்களும் இதை குழந்தைகளிடம் தரவே தயங்குவர்...!!

      நிழல் எது? நிஜம் எது?-ல வர்ற கண்ணாடி உலக மாண்ட்ரேக் மாறி ஆகிப்போச்சே "பீன்ஸ்கொடியில் ஜாக்"!!!!!!!

      Delete
    2. ///பசிக்காக பசுவை விற்கும் ஒரு சிறுவனை ஒரு பீன்ஸ் விதையை கொடுத்து அவனையும் அவன் அம்மாவையும் பட்டினி போட்ட ஒரு ஜித்தனை நினைக்கும் போது///

      ஆனால் சகோ, அந்த ஜித்தன் ஜாக்கை ஏமாற்றவில்லையே! உண்மையாகவே மந்திர சக்தி கொண்ட பீன்ஸ் விதையைத்தானே கொடுத்திருக்கிறான்! குழந்தைகளைச் சாப்பிடுபவனாக அந்த அரக்கன் சித்தரிக்கப்பட்டிருந்தாலும்கூட அவன் வேட்டையாடிக் கொண்டுவருதாகக் காட்டப்படுவதெல்லாம் ஆடு, பன்றிகளைத்தானே?!

      ஜாக் அப்படியல்லவே! பலமுறை திருடுகிறான். முதல் இரண்டுமுறை பசிக்காக/வறுமைக்காக திருடுவதைக்கூட நியாயப்படுத்திவிடலாம் என்றே வைத்துக்கொள்வோமே.. ஆனால் மூன்றாம் முறை அந்தத் தங்க-யாழைத் திருடுவது வறுமையால் அல்லவே! மாறாக, பொழுதுபோக்கிற்காகத்தானே!! இது இன்னும் மிகப்பெரிய தவறில்லையா?!! ஆகவேதான் இதை குழந்தைகளுக்கான நல்ல கருத்துள்ள கதையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறேன்!

      ஆனாலும் நீங்கள் சொல்லியதைப்போல ஒரு fairy taleக்கு இத்தனை ஆராய்ச்சிகள் அவசியமில்லைதான்! :)

      Delete
    3. சிறு திருத்தம்

      Cannibal என்பது தன் இனம் தின்னி. ( an organism who eats the meat of it's own species)
      அரக்கன் ஒரு carnivore.ஊன் உண்ணி.

      /பசிக்காக பசுவை விற்கும் ஒரு சிறுவனை ஒரு பீன்ஸ் விதையை கொடுத்து அவனையும் அவன் அம்மாவையும் பட்டினி போட்ட ஒரு ஜித்தனை நினைக்கும் போது ஜாக் பசி தீர ஒரு அரக்கனின் தேட்டையை தேட்டை போடுவது நியாயம் தானே./

      வாதம் என எடுத்துக் கொண்டாலும் A - யை B ஏமாற்றினால் A C யை ஏமாற்றுவது சரியா?

      Delete
    4. // ஒரு ஜித்தனை நினைக்கும் போது ஜாக் பசி தீர ஒரு அரக்கனின் தேட்டையை தேட்டை போடுவது நியாயம் தானே //

      தவறு தவறுதான்! இது அரசியல்வாதி பேசுவது போல் உள்ளது :-)

      Delete
    5. //அரக்கன்// மாயாஜால கதைகளில் வரும் அரக்கன் போலல்லாது இங்கே உள்ள அரக்கன் மனிதர்களை விட கொஞ்சம் உயரமாக (8 -10 அடி) உள்ளான்... ஆக இவனும் நரமாமிசம் உண்ணும் மனிதவம்சம் போன்றே சித்தரிக்கப்பட்டுள்ளான்.

      Delete
    6. //அரசியல்வாதி பேசுவது போல் உள்ளது//
      ஒரே வட்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் மாற்றி பார்த்தால் எவருக்கும் நான் நடுநிலைவாதி என்று தெரியும்... :)

      Delete
  43. எனது குழந்தைகளிடம் கதை சொல்லி முடிக்கும் போது ஜாக்குக்கு உண்மையான மகிழ்ச்சி என்பது உழைத்து சாப்பிட ஆரம்பித்த பின்னர் தான் கிடைத்தது, திருடி அல்லது உழைக்காமல் கிடைக்கும் பொருள் நிலைக்காது அது நமக்கு மகிழ்ச்சியை தராது என சொன்னேன்! ஜாக் போல் இருக்காதீர்கள் என சொல்லி முடித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ப்ரோ

      Delete
    2. சபாஷ் PfB!! என்னாவொரு புத்திச்சாலித்தனம்!!

      கூடவே உங்கள் குழந்தைகளிடம் அந்த அரக்கனைப்போல பகிர்ந்துண்டு வாழவேண்டுமென்று சொல்லுங்கள். தன்னிடம் வேலை செய்பவரிடம் பாகுபாடு காட்டாமல் நல்லதொரு அரக்கத்தன்மையோடு இருக்கவேண்டுமென்றும் சொல்லுங்கள்! அந்த அரக்கன் இசையால் எலிகளையும் வசமாக்கியதைப்போல மற்றவர் இன்புற்றிருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லுங்கள்! :)

      Delete
    3. இப்ப குழந்தைக படிக்கலாமா வேண்டாமா ன்னு கரீட்டா முடிவா சொன்னா நான் படிக்க ஆரம்பிச்சுருவேன் செயலரே...

      Delete
    4. தலீவரே.. உங்களைவிட பச்சிளம் குழந்தையான நானே படிச்சிட்டபோது பேரிளம் குழந்தையான நீங்கள் படிப்பதற்கென்ன!!

      படிக்கும்போது அந்த அரக்கன் தான் ஹீரோன்றதை மனசுல வச்சுட்டுப் படீங்க!

      Delete
    5. சூப்பர் பரணி...அருமையாக கதை சொல்லி உள்ளீர்கள்...

      Delete
  44. //ஆசிரியர் சார் கதையையே மாரலைஸ்டு ஸ்டோரியாக, ஜாக்கின் தந்தையை அரக்கன் கொன்றான், அவனை பலிவாங்க மந்திர பீன்ஸ் உதவியுடன் ஆகாயம் சென்று தங்ககாசு, தங்க முட்டை வாத்து அனைத்தும் மீட்டுவர்றான்னு அமைத்து இருந்தார் எனில் அருமையான ஹிட் அடித்து இருக்கும்...//
    அருமை... உண்மை தான் விஜய ராகவன் ப்ரோ... ஆசிரியர் குட்டீஸ்கள் பொருட்டு சில முன்னுரை பின்னுரை போட்டு moral வருமாறு சொல்லியிருக்கலாம் தான். வழக்கமாக அவர் மொழிபெயர்ப்பில் சுமாரான கதைகளும் ஜொலிக்கவே செய்யும் எனும் போது இன்னமும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இருக்கலாம் தான்.

    ReplyDelete
  45. //ஒரு fairy taleக்கு இத்தனை ஆராய்ச்சிகள் அவசியமில்லைதான்! :)//
    புரிதலுக்கு நன்றி விஜய் சகோ... உங்களுக்கு சொல்லிட நிறைய பதில் தோன்றினாலும்... அடிப்படையில் நானும் உங்கள் கருத்துடையவன் என்பதால் இப்படியே நிறுத்திவிடுவது தான் சரியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நான் 3 வகுப்பு படிக்கும்போது கொழுத்த மாங்காய் ஒன்று கல்லால் அடித்து ஆட்டைய போட்டேன்... இது போல ஒன்றிரண்டு திருட்டு எனது அந்நாளைய crime. அதற்குப் பிறகு நைசாக அப்பாவின் பாக்கெட்டில் துழாவி சில்லறை எடுத்து காமிக்ஸ் வாங்குவேன்.
      மேலும் சில நண்பர்களுக்கு குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் கதைகள் பிடிக்காது என்று அறிவேன். நானோ 5ம் வகுப்பு முதல் ஸ்பைடர் பிரியன். ஆனால் ஸ்பைடர் கதை ஒருபோதும் என்னை திருடிட தூண்டியதில்லை. எனது காமிக்ஸ் போதை என்னை தங்கமுட்டையிடும் ஒரு பழைய புத்தக கடையில் ஒரு குட்டி காமிக்சிற்கு ஆசைப்பட்டு முழு புதையலையும் கோட்டை விட்ட திருடனாக்கியது... அது யார் கதை என்று விஜயராகவன் ப்ரோவிடம் கூட வாட்சப்பில் உரையாடியுள்ளேன்.

      Delete
    2. பல பல உண்மைகள் வெளிவரும் போல தெரிகிறது:-)

      Delete
    3. @Parani Sago
      ஹா ஹா... உண்மையை சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே தான் சகோ. விலையேறப்பெற்ற பாடம் அல்லவா அது? எனது அந்த தேட்டை அனுபவம் நீண்ட கமெண்ட் அகி விடும் என்பதால் அதன் லிங்கை மட்டும் இங்கே பகிர்கின்றேன்.

      https://comicsrave.blogspot.com/2021/09/lion-muthu-comics.html

      Delete
  46. இன்று பிறந்த நாள் காணும் காமிக்ஸ்ற்காக ரத்தம் சிந்தும் அன்பு தோழர் திரு சுசீந்தர் எனும் கொம்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. 💐💐💐💐💐💐💐 பழகுவதில் பாசம் உபசரிப்பில் நேசம் வதனத்தில் தவழும் புன்னகையில் மன்னன், செல்ல *பேபி எ சுசி* க்கு இனிய இனிப்பான பிறந்தாள் நல்வாழ்த்துகள்🎂🎂🎂🎂🎂🎂🎂

      Delete
    2. இனிய நண்பர் சுசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

      Delete
  47. சார் நம்ம தர்மபுரியில் புத்தக விழா தொடங்கி விட்டது. எனவே அந்த புத்தக விழா சிறப்பு வெளியீடு பற்றிய அறிவிப்பு?????

    ReplyDelete
  48. நண்பர்களே@@@

    இன்று பிறந்தநாள் காணும் நம்ம நண்பர் சேலம் சுசீந்திரகுமார் எ பேபி- யுடனானா நமது நட்பு நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு இனிய நிகழ்வு. சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய அன்பின் KOK மாமாவுடனான பாசமான நட்பும் அதுபோலவே.... இந்த கம்பேக் எனும் 2வது இன்னிங்ஸ்ல துளிர்த்த இந்த நட்புகள் & ஆசிரியர் சார் உடனான நம் பயணம் எல்லாமே யுகம் யுகமாக தொடரும் ஒரு பந்தம் என ஆழ்மனதில் பதிந்துள்ளது.

    குறுகிய காலம் நின்று போய் 2012ல் கம்பேக் ஆகி லயன் காமிக்ஸ் மீண்டும் வண்ணத்தில் வசீகரிக்க ஆரம்பித்து ஓராண்டு ஆகி இருந்தது. மாசம் ஒரு புக்கு தான் வந்த சமயம் அது. ஒரே நாளில் படித்துவிடுவோமே!
    யானைப்பசிக்கு சோளப்பொறி போதுமா?

    தினமும் வீட்டில் இருந்த பழங்காமிஸ் கொண்டு வந்து நான் வேலை செய்யும் சேலம் உருக்காலை விற்பனை முனையில் படித்து பழங்காலத்தில் பயணம் செய்து வருவேன்.

    இரத்தப்படலம் எப்போதும் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகம். அப்போது 200ரூ விலைல வந்திருந்த இரத்தப்படலம்-ஜம்போ கருப்பு வெள்ளை பலமுறை படித்து இருந்தாலும் இன்னொரு முறை படிப்போம்னு வாசித்துக் கொண்டு இருந்தேன்.

    இடையில் வாடிக்கையாளர் வரும்போது புக்கை விரித்த வண்ணமே டேபிள்ல கைவைக்கும் இடத்தில் வைத்து விட்டு விற்பனையை கவனிப்பேன். வாடிக்கையாளர் டேபிள் சைடுல பார்த்தா காமிக்ஸ் தெரியும்.

    அப்படித்தான் ஒருநாள் நம்ம வயசு வாடிக்கையாளர் ஒருவர் சேலம் ஸ்டீல்ல செய்த சாப்பாட்டு தட்டு 4 வாங்கினார். நல்ல தரத்தில் வாங்கனும்னு உங்க கடைக்கு வந்தேன் சார் என தெரிவித்தார்.
    பில் போடும் போது காமிக்ஸ்ஸை அவரது கண்கள் கவனித்து விட்டது போல.

    (காமிக்ஸ் ரசிகர்களுக்கு காமிக்ஸ் எங்கிருந்தாலும் கண்ணில் படும்)

    "என்னா சார் இவ்ளோ பெரிய காமிக்ஸ் படிக்கீறீங்க! இது இப்பவும் வருதா??"---எனக்கேட்டார்.

    அவரது கண்ணில் தெரிந்த காமிக்ஸ் காதலை புரிந்து கொள முடிந்தது.

    இரத்தப்படலம் ஜம்போவை வாங்கிப்புரட்டி பார்த்தார்!

    மீண்டும் காமிக்ஸ் ஓராண்டாக வருவதை பற்றி சொல்லவும் ரொம்பவே மகிழ்ந்து போனார்....

    ReplyDelete
    Replies
    1. அப்போது என் கையில் இருந்த இரு 50ரூ புத்தகங்களை படிக்க கொடுத்த போது ஆசையுடன் அள்ளிக்கொண்டார்.

      மற்றொரு காமிக்ஸ் விற்பனையாள நண்பர் கர்ணனிடம் அப்பவே போனில் பேசி இவருக்காக அதுவரை வந்திருந்த புக்ஸ் ஆர்டர் பண்ணினோம்.

      அந்த புத்தகங்கள் வாங்க ரூ2000 பணத்தை என் கையில் திணித்துவிட்டு , நான் திகைத்து நிற்க- சிரித்த முகத்தோடு விடைபெற்று சென்றார்.

      யார் என்னானு என்னை பற்றி துளிக்கூட தெரியாமலே ரூ2000ஐ தந்துட்டு போனவர்தான்,
      இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடும் பர்த்டே "பேபி" சுசீ!

      தொடர்ந்து 2014 ஈரோடு விழா சென்றோம்; கர்ணன், நான் ,சுசீ&சேலத்தை சேர்ந்த மற்றொரு நண்பர்! அப்போது என் சேலம் செட்டு இந்த நால்வர் தான். எடிட்டர் சாருக்கு மொத முறை பார்ப்பதால் அன்பு பரிசு ஒன்றும் தந்துட்டு லயன் மேக்னம் ஸ்பெசலை வாங்கி வந்தோம்.

      என் கடையில் இருந்து ஒரு முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பேபியின் கடையில் வாரம் இரு நாட்கள் இரவு 9மணிக்கு மேல் காமிக்ஸ் பேசி மகிழ்வோம்.

      2014 சேலம் விழாவில் தொடங்கி எல்லா காமிக்ஸ் விழாக்களிலும் ஒன்றாக சென்று ஒரு நிமிடம் கூட பிரியாம விழாக்களில் என்சாய் பண்ணிட்டு வருவோம். ஒவ்வொரு நண்பராக செட்டுல சேர சேர கொண்டாட்டத்தின் உற்சாகம் எகிறக்கொண்டே இருக்கும்.

      எந்த விசயமாக இருந்தாலும் ஒரு கனீர் சிரிப்புதான் பேபியிடம் இருந்துவரும். அந்த சிரிப்புக்காவே "பேபி" என அன்போடு அழைக்கப்படுபவர். பெயர்
      உபயம் கிட் அங்கிள்!

      செல்லமாக என்னை கடிந்து கொள்வார். யாராக இருந்தாலும் தயங்காமல் இதான் இப்படி தான் செய்யனும் என சொல்லிடுவார். மறுபேச்சே இவரிடம் கிடையாது. என்னை மிகவும் கவர்ந்த குணம் அது.

      ஒரு தீபாவளிக்கு பேபி வீட்டுக்கு என் குடும்பத்தாரோடு சென்றிருந்தேன். தீபாவளிக்கு அவுங்க வீட்டில் வாங்கி இருந்த அத்தனை சுவீட்களிலும் ஒவ்வொன்று சாப்பிட்ட பின்புதான் கிளம்பவே விட்டார்.

      என்னை போலவே அசைவ உணவுப்பிரியர். அவர் ரசித்து சாப்பிடும் பாங்கே தனி!
      2015 ஈரோடு விழா போகும் போது நான், பேபி& ரவி மூவரும் சங்ககரியில் உள்ள பேமஸ் உணவு விடுதியில் சாப்பிட்டது என்னிக்கும் மறக்காது.

      Delete
    2. எல்லா விழாவும் செல்ல பேபியும் நானும் இணைந்து தான் ஏற்பாடுகளை செய்வோம். எல்லாவற்றையும் ஆர்வத்தோடு எனக்கு முன்பே முடித்து வைத்து இருப்பார். அவர் கடைக்கு போகும் போதே எல்லா டீடெய்ல் ஆக ரெடியாக சொல்லிடுவார்.

      2016 ஈரோடு விழாவில் சிறப்பு விருந்தினர் திரு சொக்கன் சார், நம்ம எடிட்டர் சாரோடு வந்து
      மேடையில் அமர்ந்துட்டார். விழா தொடங்கும் சில நிமிடங்கள் முன்பு அன்றைய ஸ்பெசல் ரிலீஸ் புக்குகளை கொண்ட மிகப்பெரிய பெட்டிகள் 2ஐ எடிட்டர் சாரின் டிரைவர் காரில் இருந்து கொண்டு வந்து வைத்தார்.

      அந்த பார்சலை உடைத்து புக்குகளை எடுக்க நான் சின்ன கத்தியோடு போனபோது, குறிக்கிட்ட சுசீ கத்தியை என் கையில் இருந்து வாங்கிட்டு, "யோவ் போய் வர்றவங்களை வரவேற்று உட்காரவையா"-என சொன்னார். எப்பவும் ஈரோடு விழாவில் வரும் நண்பர்களை வரவேற்கும் ஈவி, அன்னிக்கு உடல்நல குறைவால் தாமதமாக வருவதாக இருந்தது. எனவே அந்த ஆண்டு மட்டும் அந்த பணியை ஈவிக்கு பதில் நான் செய்தேன்!

      சரக்குனு பாக்ஸை வெட்டிய கத்தி , சசீயின் கையை பதம் பார்த்தது. இரத்தம் சர்ருனு கொட்டுது. ரவியும், நானும் பதறிட்டோம். அப்பக்கூட அதே சிரித்த முகத்தோடு இருந்தார். கர்சீப்பை நானும், ரவியும் காயத்தில் சுற்றிவிட, வலியை பொருட்படுத்தாமல் 2வது போட்டியையும் திறந்து எல்லா பார்சல்களையும் எடுத்து தந்தார், சுசி; குழந்தை முகத்தின் பின் உள்ள திடமான மனிதர்.

      "காமிக்ஸ்க்காக இரத்தம் சிந்திய சுசீ" என அப்போது
      எடிட்டர் சாரும் புக் தரும்போது அறிமுகம் செய்துவிட்டு, தொடர்ந்து அவ்வோறே அழைக்க ஆரம்பித்து விட்டார்.

      அன்னிக்கு நான் சிந்தவேண்டிய ரத்தம். எனக்காக பேபி வலியை தாங்கிக்கொண்டார். எங்க செட்டில முன்னணியில் நானும், KOK ம் தான் தெரிவோம். ஆனா பின்னணியில் பலமான முதுகெலும்பாக எல்லாவற்றையும் தாங்குவதில் சுசியும் ஒருவர்.

      இன்றைய நாளில் "பேபி" சுசீயை நண்பர்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் மிகவும் நிறைவாக உணர்கிறேன்.

      💐💐💐💐💐💐💐💐💐💐💐
      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
      பேபி (எ) Suseendra kumar
      🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
      🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

      Delete
    3. புகைப்படத் தொகுப்பை இந்த லிங்கில் காணலாம்...
      https://m.facebook.com/groups/2563733947186727/permalink/3608935439333234/

      Delete
    4. உங்கள் நட்பு ஏற்பட்ட விதம் அது தொடரும் விதம் அது இன்றும் என்றும் தொடர வாழ்த்துக்கள். எழுதிய விதம் அருமை.

      Delete
    5. ஆப்பீ பர்த்டே பேபிகுட்டி..😍

      சூப்பரா எழுதியிருக்கே மாம்ஸ்..! அந்த நாட்களுக்கே போனமாதிரி இருத்ததுச்சி..!

      Delete
    6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி சுசி ஜி 💐🥙🥗🎂🤝

      Delete
  49. நட்பும் அது ஏற்பட்ட விதம் அழகாக விரிவாக கூறியுள்ளீர்கள் பாராட்டுக்கள் stv

    ReplyDelete
  50. ஈரோடு சந்திப்பு உள்ளதா இல்லையா நாளை தெரியுமா விடை

    ReplyDelete
  51. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பர் சுசி ஜி அவர்களுக்கு.

    ReplyDelete
  52. நாளை பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  53. நண்பர் ராம் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  54. Replies
    1. பிறந்த நாளன்று வாழ்த்தி ஆசீர்வதித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.!

      😍🙏😍🙏😍

      பழைய நாட்களுக்கே அழைத்துச்சென்ற மாம்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்..!

      😍🙏😍🙏😍
      By...
      Suseendrakumar Salem

      (ஆரூயிர் நண்பர் சுசியால் நமது தளத்தில் பதிவிட முடியவில்லையாம்.. பதிவிட்டு பப்ளிஷ் கொடுத்தால் வெளியே போய்விடுகிறதாம்.. எனவே அவரது சார்பாக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே..🙏🙏🙏🙏🙏..!)

      Delete
    2. Try "chrome browser" வேற பிரௌசர் உபயோகம் பண்ணா கமென்ட் பப்ளிச் ஆகாம கமெண்ட் போட்டவங்களுக்கு பெப்பே காட்டுது.

      நிம்பிள் மாஸில்லா ஃபயர் பாக்சு யூசு பண்ணி காதிலே புகை கசிஞ்சுதே, எப்டி எல்லாம் கஷ்டம் படறது 😤😤😭😭

      Delete
    3. பாத்து பங்கம் ஆகாமே பக்குவமா கமண்ட் போடுங்கோ அல்லாரும் 😇😇

      Delete
  55. சின்னப்புள்ளைங்க சமாச்சாரத்தை (பீ.கொ.ஜாக்) இப்படி மறுக்காவும் பேசவேண்டியிருப்பதை நினைச்சா எனக்கே வெட்க வெட்கமாத்தான் வருது! ஆனாலும் ஓரிரு கருத்துகளை மட்டும் சொல்லி என் சிற்றுரையை நிறைவு செய்யலாம்னு இருக்கேன். (சரி சரி டென்ஷனாகாதீங்க உதய் ப்ரோ!)

    ஜாக்கிடமிருந்து பசுமாட்டை வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக மந்திர பீன்ஸைக் கொடுக்கும் அந்த வாலிபன் உண்மையில் ஜாக்கிற்கு ஒரு அருமையான பிசினஸ் ஆஃபரை முன்வைக்கிறான். ராட்சத பீன்ஸ் கொடியில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதன் மூலம் குழந்தை ஒன்றுக்கு தலா ஒரு தங்கக் காசை அவரவர் பெற்றோரிடமிருந்து கட்டணமாக வசூலிப்பதுதான் அந்த பிசினஸ்!! MGM dizzee world, black thunder போன்ற தீம் பார்க்கிற்கு இணையாகக் கொண்டுவந்திருக்க வேண்டிய பீன்ஸ் கொடியை, திருடுவதற்கு ஏணியாகப் பயன்படுத்தும்போதே ஜாக் நல்ல குணங்களைக் கொண்டதொரு சிறுவனல்ல என்பது தெளிவாகிவிடுகிறது. தங்கக்காசுகளை யாரிடமிருந்தோ திருடிக்கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்தும் அதைத் தட்டிக் கேட்காத அவன் அம்மாவும் தவறான புத்தி கொண்டவளே!

    மாடு ஒருநாள் பால்கறக்கவில்லை என்ற காரணத்தால் (அட புல்லு மேய விட்டா நாளைக்கு பால் கறந்துட்டுப் போகுது) அதை சந்தையில் விற்க முடிவெடுத்தபோதே ஜாக்கின் அம்மாவுக்கும் மேல்மாடி காலி என்பது புரிந்துவிடுகிறது! ஜாக்கின் அப்பா பற்றிய தகவல் இல்லை (புத்திசாலி! நிச்சயம் எங்காவது ஓடிப்போயிருப்பான்)

    அரக்கனின் வீட்டிலிருந்து திருடிவந்த தங்கமுட்டையிடும் கோழியம்மா & தங்க யாழ் ஆகியவற்றின் நிலை குறித்தும் க்ளைமாக்ஸில் எந்தத் தகவலுமில்லை!

    கதாசிரியர் துளியூண்டு மெனக்கெட்டிருந்தால் இன்னும் அழகான கதையை உருவாக்கியிருக்க முடியும்! ஹூம்!!

    ReplyDelete
    Replies
    1. ஜாக்கின் குணநலன்களை பிடிச்சிட்டீங்க ஈவி.... அதற்கு முந்தைய இரவில் பீன்ஸ்வியாபாரியையும் சந்தேகித்து தானே படுக்க செல்கிறான்..... அந்த பீன்ஸ் மேலயே நம்பிக்கை இல்லையே, அவன் எங்கே அதை உரிய பிஸினஸ் ஆக கொண்டு போவான்....

      Delete
    2. //கதாசிரியர் துளியூண்டு மெனக்கெட்டிருந்தால் இன்னும் அழகான கதையை உருவாக்கியிருக்க முடியும்! ஹூம்!!//
      விஜய் சகோ, இது உங்கள் கருத்து.... ஆனாக்கா இதையே நான் மர்ம தேசம் கென்யாவிற்கும் நினைத்தேன்... நான் போடும் நெகட்டிவ் கமெண்ட் ஒரு எண்ணிக்கை விற்பனைக்கும் பங்கம் வரக்கூடாது என்பதாலேயே இங்கும் எங்கும் ஒரு கமெண்ட் கூட அதனை பற்றி நான் பதிவிடவில்லை...

      Delete
    3. ////நான் போடும் நெகட்டிவ் கமெண்ட் ஒரு எண்ணிக்கை விற்பனைக்கும் பங்கம் வரக்கூடாது என்பதாலேயே இங்கும் எங்கும் ஒரு கமெண்ட் கூட அதனை பற்றி நான் பதிவிடவில்லை...////

      உங்கள் நல்ல எண்ணம் வாழ்க ப்ரோ! உங்களைப்போலவே நானும் இருக்க முயற்சி செய்கிறேன்!

      Delete
    4. உதய் ஆதி@ Uday athi @ ஒரு புஸ்தகம் பற்றிய உங்கள் பார்வையை கண்ணியமான வார்த்தைகளால் சொல்வது தவறல்ல

      Delete
    5. ஆமோதிக்கிறேன் ப்ரோ

      Delete
    6. விஜய் ப்ரோ, எந்த கருத்தானாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உங்கள் நகைச்சுவை பதிவுகளுக்கு என்னாச்சு...? நீண்ட நாளாக அவை காணோமே? Waiting for you stress buster posts.

      Delete
    7. அன்புக்கு நன்றிகள் உதய் ப்ரோ!! கடந்த 7 மாதங்களாக இதுவரையிலான என் வாழ்க்கையின் கடினமான பாகங்களைச் சந்தித்து வருகிறேன். அவற்றில் பெரும்பாலானவை என் குடும்ப உறுப்பினர்கள்/நெருங்கிய சொந்தங்களின் ஆரோக்யம் தொடர்பானவை! கடந்த வாரத்திலிருந்து கிட்டத்தட்ட இன்றுவரை நான் போட்டிருக்கும் கமெண்ட்ஸ் கூட ஒரு வாழ்வா-சாவா போராட்டகளத்தின் நடுவேயிருந்து வெளிப்பட்டவைதான்! இறுக்கமான சூழலின் நடுவே என் நகைச்சுவை உணர்வும் இயல்பாகவே மட்டுப்பட்டிருக்கும் என்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருப்பது மிகச் சரியே! :

      சீக்கிரமே மீண்டு விடுவேன் (அல்லது பழகிவிடும்) என்று நம்புகிறேன் ப்ரோ!

      மீண்டும் நன்றிகள்!

      Delete
  56. Edi Sir..
    பீ.கொ.ஜா.. வை
    வீட்டுல இருக்கற கொழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க சொன்னா..

    அதை உட்டு போட்டு, இவங்களே படிச்சு கமெண்டு போட்டு, நிலவரத்தை கலவரமாக்கி பீன்ஸை பொறியல் பண்றாங்களே.. இது நியாயமா?. 😆😍

    ReplyDelete
    Replies
    1. செம்ம செம்ம, கலக்கல் வாத்தியாரே

      Delete
    2. அதானே..... ஏம்பா இப்படி பண்றீங்க.....😉 கென்யாவுக்கு பதிவு பண்ணாம, பீன்ஸ் பொறியல் பண்ணிகிட்டு...!!!

      Delete
    3. ஹிஹி! பீன்ஸ் வறுவல்னா எனக்கு ரெம்பப் பிடிக்கும்! :)

      Delete
    4. shribabu

      பீன்ஸ் கொடியில் ஜாக்கின் பிரம்மாண்டத்தை நீங்கள் உணரவில்லை எனத் தோன்றுகிறது.

      கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே செவி வழியாக சொல்லப்பட்ட கதை.

      அரக்கனுடைய ஒரு cataphrase - ஜாக்கை வாசனை பிடிக்கும்போதெல்லாம் சொல்வது-
      ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடக வசனம்.
      Child Roland to the dark tower came,
      His word was still,// Fie, foh, and fum,
      I smell the blood of a British man."//

      Fie,fa, fum I smell the blood of a Englishman ..இது உலகெங்கும் ஆங்கில பதிப்பில் பிரபலமானது.


      பிரிட்டிஷ்காரர்களின் ஒரு கலாச்சாரமாக மாறிவிட்ட கதை ( அவர்களின் காலனி ஆதிக்க, நாடு கவரும் மனோபாவத்தின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது)

      பீன்ஸ் கொடியில் ஜாக்கை நீங்கள் படித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறேன்.

      ஈவி அரக்கன் நல்லவன் மாதிரி தெரிகிறான் எனச் சொன்னபோது எனக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.

      ஆனால் JACK AND THE BEANSTALK : ORIGINAL STORY என்ற 2001 அமெரிக்க மினி சீரிஸ் ஈவியின் இக்கற்பனையையை அப்படியே பிரதிபலிக்கிறது.

      ஜாக்கின் பரம்பரையில் வந்த மற்றொரு ஜாக் தனது மூதாதையர் செய்த தவறுக்கு பரிகாரம் செய்கிறான்.

      ( இக்கதையில் வரும் சம்பவங்களின் சுருக்கத்தினை தமிழில் நீங்கள் விரும்பினால் பின்னர் தருகிறேன்)

      பொதுவாக கிளாஸிக் கதைகளை குழந்தைகளுடன் பெற்றவர்களும் உடனிருந்து படிப்பது குழந்தைகளின் கதையைப் பற்றிய பார்வையை அறிய உதவும். நமக்குமே அதுவரை அறியாத விஷயங்கள் புலப்பட வாய்ப்புண்டு.

      Delete
    5. ///ஜாக்கின் பரம்பரையில் வந்த மற்றொரு ஜாக் தனது மூதாதையர் செய்த தவறுக்கு பரிகாரம் செய்கிறான்///

      'பீ.கொ.ஜா' கதைக்கு ஏகப்பட்ட ஸ்பின்-ஆப் இருக்கும் போலிருக்கே?!!
      அரக்கனுக்கு அடுத்தபடியா கதையில் எனக்குப் பிடித்த கேரக்டர் தங்கமுட்டை போடும் அந்தக் கோழி (இந்தாப்பா இன்னிக்கு கோட்டா ஓவர்'னு சொல்லி அது முட்டைபோடும் அழகே அழகு!). அந்தக் கோழிக்கும் ஏதாவது கிளைக்கதை இருக்கான்னு கொஞ்சம் தேடிப்பாருங்க செனா அனா!

      Delete
    6. ////ஜாக்கின் பரம்பரையில் வந்த மற்றொரு ஜாக் தனது மூதாதையர் செய்த தவறுக்கு பரிகாரம் செய்கிறான்.

      ( இக்கதையில் வரும் சம்பவங்களின் சுருக்கத்தினை தமிழில் நீங்கள் விரும்பினால் பின்னர் தருகிறேன்)///

      காத்திருக்கிறோம் பொருளர் ஜி. தங்களின் எழுத்துக்களில் கதைப்படிப்பது ரொம்பவும் அலாதியானுது...💕💞


      Delete
    7. ஈவி@ விட்டா பீன்ஸ் கொடியில் ஜாக், மேற்கே இது மெய்யடாவை தட்டிடுமோ😉

      Delete
    8. @STVR

      சேச்சே!! அதை பெரியவங்களுக்கான விவாத மேடைன்னு வச்சிக்கிட்டோம்னா , இந்த பீ.கொ.ஜா எல்லாம் என்னைய மாதிரி சின்னபசங்க ச்சும்மாக்காண்டி அடிச்சுக்கிட்டு விளையாடற இடம்!

      Delete
    9. ஈவி@///என்னைய மாதிரி சின்னபசங்க ச்சும்மாக்காண்டி அடிச்சுக்கிட்டு விளையாடற இடம்////

      போன வாரம்லாம் கென்யாவுக்கு ஸ்டேண்ட் ஆக தொப்பையை யூஸ் பண்ணியது நீங்களும் உங்க சிஷ்யரும் தானே! இந்த வாரம் சின்னபசங்கனு சொன்னா நாங்க நம்பிடுவோமா????😉
      இல்ல நம்பத்தான் இயலுமா!!!!

      Delete
  57. நாளைய பதிவு ஈரோட்டுச் சிறப்பிதழ் பற்றிய பதிவாக இருந்தால் சும்மா தெறி மாஸாக இருக்கும். ஆசிரியர் மனம் வைப்பாரா ?!

    ReplyDelete
    Replies
    1. அதற்கு முன்பு கோவை விழா உள்ளதே சகோ!

      Delete
    2. அதற்கும் முன்னால் ஓசூர் மற்றும் தர்மபுரி உள்ளதே

      Delete
    3. ///அதற்கும் முன்னால் ஓசூர் மற்றும் தர்மபுரி உள்ளதே///

      Yes...

      இன்றைய பதிவில் அனைத்திற்குமான விடை கிடைக்க கூடுமோ??????

      Delete
  58. RIP Special:

    முதல் 3 கதைகள் படித்து முடித்து விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு, அருமையான, மென்மையான டிடெக்டிவ் கதைகள் படித்த உணர்வு...

    டாங்கா துரோகம், டாக்டர் டேட்டா மற்றும் தவிப்பில் ஒரு தாத்தா மூன்றுமே வேறு வேறு வேறு சூழல்களில் அமைக்கப்பபட்டுள்ள கதைகள்...

    தவிப்பில் ஒரு தாத்தாவில் சிற்சில சந்தேகங்களை வைத்தே எதிரி யார் என்று கணிப்பதும், ஆதாரத்துடன் அதனை தாத்தாவிற்கு உணர்த்துவதும் சிறப்பு...


    ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக பெண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சின்னஞ்சிறு தீவில் நடக்கும் கதை டாங்கா துரோகம். ஆணழகர் ரிப் கிர்பி வலையில் சிக்காத மீன் இங்கே!

    டாக்டர் டேட்டா: முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்ட கதை இது. ரிப் கிர்பியையே வில்லன் திணறடிப்பதும், அந்த டாக்டரின் வழியிலேயே அதை கிர்பி முறியடிப்பதும் ரசிக்க வைக்கிறது...

    பணி சுமையால் மற்ற கதைகளை இனிமேல் தான் படிக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  59. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு பதிவில் பீ.கொ.ஜா பணியின் போது எதிர்கொண்ட சவால்களைப் பற்றி எடிட்டர் டீட்டெய்லா எழுதுவார்னு நினைக்கிறேன்! ஹிஹி!

      Delete
  60. பீன்ஸ் கொ.ஜா கதையை விலாவரியாக இங்கு அலசுவதைப் பார்த்தால் கதை பலருக்கு (பல வளர்ந்த குழந்தைகளுக்கு) பல வித தாக்கத்தை ஏற்படுத்தியது உறுதியாகிறது. அப்படியே இது விற்பனையையும் சுறுசுறுப்பாக்கினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  61. எப்போது release sir?

    ReplyDelete
  62. பீன்ஸ் கொடியில் ஜாக்....

    சிறார்களுக்கான தனித்த இதழ் வெளியிடும் லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் அவர்களின் முயற்சியில் வெளியாகியுள்ள முதல் இதழ் *பீன்ஸ் கொடியில் ஜாக்*

    அவ்வப்போது சிறார்களைக் கவரும் ஒரு பக்க கதைகள், புதிர்கள், வரைவது எப்படி? என ஒரு சில பக்கங்கள் வந்திருந்தின.

    ரின்டின் கேன், ஸ்மர்ஃஸ், பொடியன் பென்னி, சுட்டி லக்கி, மியாவி.....போன்ற சில படைப்புகள்--- சிறார்களுக்கு கதை சொல்லவும்; அவர்கள் காமிக்ஸ் இதழ்களில் கால்பதிக்க வைக்க உதவும் திறவு கோலாகவும் அமையும் என வெளியாகியிருந்தன. சுட்டி லக்கி தவிர மற்றவை அத்தனை ஷோபிக்கவில்லை...

    இந்த குறையைப் போக்கவும், சிறார்களை தமிழ் சித்திரக்கதை பக்கம் ஈர்க்கவும் முழுவண்ணத்தில்& பெரிய அளிவில் வெளியாகி உள்ளது பீன்ஸ் கொடியில் ஜாக்!

    *கதை சொல்லும் காமிக்ஸ்* என திட்டமிடப்பட்டுள்ள சிறார் இதழ் வரிசையின் முதல் இதழ் இது!

    சிறார்களைக் கவரும் பிங் நிற பின்னணியில் பச்சை நிற ராட்சத பீன்ஸ் கொடியில் சிறுவன் ஜாக் ஏறும் காட்சி அசத்தலாக முன்பின் அட்டைப்படங்களில் ஜொலிக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. முதல் ஓவியமே பிரமாண்டமாக கதையை ஆரம்பித்து வைக்கிறது...

      சிறுவன் ஜாக்கின் சிறிய வீடு, பால் வற்றிப்போன பசுவில் பால்சுரக்க வைக்க முயலும் ஜாக்கின் தாய், காய்ந்து கருகிகிப்போன காய்கறித்தோட்டம், மீன் கடிக்காத தூண்டில் என ஏழ்மை நிலையில் உள்ள ஜாக் சித்தரிக்கப்பட்டுள்ளான்.

      தங்களது பசியைப்போக்க பால்கறக்கா பசுவை விற்க செல்லும் ஜாக் மந்திரபீன்ஸ் விதையை மாற்றாக வாங்கித் திரும்புகிறான்.

      ஏமாந்துபோனதாக எண்ணி அந்த பீன்ஸ்விதையை வீசிட்டு பசியோடு துயல்கிறார்கள்...
      விடிந்தால் அதிர்ச்சி, நிஜமாகவே விண்ணை முட்டி வளர்ந்து நிற்கிறது ராட்சத பீன்ஸ் கொடி!

      அந்த மந்திர கொடியில் ஏறிச்செல்லும் ஜாக் மேகங்களின் மேல் உள்ள கோட்டையை அடைகிறான்..

      அதுவோ குட்டிப்பையன்களை லபக்கென விழுங்கிடும் பொல்லாத ராட்சசன் வீடு. அங்கே அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் தங்கக்காசு பெட்டகம் அவனது வாழ்வில் வளமையை கொணர்கிறது....

      Delete
    2. தங்கக் காசுகள் விரைவில் தீர்ந்துபோக, மீண்டும் மந்திரபீன்ஸ் கொடியில் ஏறி ராட்சசன் வீட்டை அடையும் ஜாக், இம்முறை தினம் ஒரு தங்க முட்டையிடும் வாத்தோடு திரும்புகிறான்.

      தங்க முட்டைகள் ஜாக்கை செல்வகுவியலுக்கு உள்ளாக்கினாலும், திருப்தியடையாத ஜாக் மீண்டும் மந்திரக்கொடியேறிப் போகிறான்...

      அங்கே தங்க யாழை காண்கிறான்; அதை அடைய வழக்கம்போல ஜாக் முயல, ராட்சதன் பார்த்து விடுகிறான்.

      அவனிடம் இருந்து தப்பி வரும் ஜாக்கை மந்திர கொடியில் துரத்திவருகிறான் ராட்சதன்!

      ராட்சதனிடமிருந்து ஜாக் தப்பினானா?
      மந்திரக்கொடி என்னவானது?
      ஜாக் விரும்பிய வாழ்வை அடைந்தானா? என விடையறிய காணுங்கள் இம்மாத லயன் வெளியீடு பீன்ஸ் கொடியில் ஜாக்!

      Delete
    3. சிறார்களைக் கவரும் வகையில் நிறைய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது இந்த இதழ்! கண்ணைக்கவரும் முழு பக்க ஓவியங்கள்! பளீரிடும் தங்க யாழ்!

      பிற்சேர்க்கையாக தரப்பட்டுள்ள பயிற்சி ஓவியங்கள் ஜாக்கை வரைவதையும், ராட்சதனை வரைவதையும் கற்றுத்தரும் நம் வீட்டு சுட்டிகளுக்கு!

      முழுக்கதையையும் 4பக்கங்களில் விவரித்து உள்ளார் ஆசிரியர்! தொடர்ச்சியாக வாசிக்கும் சிறுவர்கள், தமிழ் மொழியைக் கற்க இந்த பக்கங்கள் உதவும்! அவர்களுக்குப் பிடித்த வண்ணக்கதை வாயிலாக இம்முயற்சி என்பதால் நிச்சயமாக பலன் இருக்கும்.

      இத்தோடு இலவச இணைப்பாக வழக்கப்பட்டுள்ள நேம் ஸ்டிக்கர்கள் சிறுவர்களைக் கவரும்!

      இந்த ஒட்டுமொத்த தொகுப்பை உங்கள் வீட்டு சிறார்களுக்கு மட்டுமல்லாமல் அண்டைவீட்டுச் சிறார்களுக்கும் அன்புபரிசாக அளிக்கலாம் நண்பர்களே! மொபைல் போனில் கேம் விளையாடும் சிறுவர்களுக்கு இது ஒரு மாற்று விளையாட்டுச் சாதனமாக இருக்கும்!

      Delete
  63. நல்ல விளம்பரம் விஜயராகவன் ப்ரோ, நேரமிருந்தால்.இது போன்று தொடருங்கள்.

    ReplyDelete
  64. Tex Terror Special என்று வைத்திருக்கலாமோ ? :P

    ReplyDelete
  65. Edi Sir..
    இன்று புது பதிவுக்கு வாய்ப்பு உண்டுங்களா ..

    ReplyDelete
  66. லக்கி லூக் டபுள் ஆல்பம் முடிஞ்சு ; ஆல்பா ஆல்பமும் ஆச்சு ; டெக்ஸ் தான் பாதிக் கிணறு தாண்டிய நிலையினில் நிற்கின்றார் !

    So இன்றைக்கு சிவராத்திரியே எனக்கு ; பதிவோடு பகலில் ஆஜராகின்றேன் folks !

    ReplyDelete