Sunday, May 09, 2021

ஒரு கேள்வி + ஒரு முன்மொழிவு

 நண்பர்களே,

வணக்கம். பொதுவாய் முச்சந்தியில் வைத்து அழுக்குத் துணிகளைச் சலவை செய்வதில் எனக்குப் பிடித்தம் கிடையாது ; ஆனால் இன்றைக்கு அதனில் இழுக்கப்பட்டிருப்பது நானுமே எனும் போது இந்த பதில் அவசியமென்று நினைக்கிறேன் ! "உயிரைத் தேடி"  (at least அந்தப் பெயரென்றே தீர்மானித்திடும் பட்சத்தில் !) ஆகஸ்ட்டில் வருகிறதென்று நான் அறிவித்ததைத் தொடர்ந்து வேடிக்கையொன்று  அரங்கேறியுள்ளது  ! And  நான் பயணிக்கா FB பக்கங்களில் இது பதிவாகியிருக்க, நண்பர்கள்  எனக்கு அனுப்பித் தந்துள்ளனர் ! 

விஷயம் இது தான்  : நண்பர் கலீல் இலங்கையிலிருந்து வெளிவரும் புது காமிக்ஸ் பதிப்பகம் இந்த "உயிரைத் தேடி" கதையினைச் சிங்களத்தில் வெளியிட ஏற்கனவே உரிமைகளை வாங்கியுள்ளதாகவும், நான் இதற்கான தமிழ் உரிமைகளை வைத்திருப்பதால் அவர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அவர்களது ஏகப்பட்ட முயற்சிகள் கானல் நீராகி விரயமாகி விட்டதாகவும், எழுதியுள்ளார் ! தினமலரில் ஏற்கனவே இது தொடர்பாய்ப் பேசி விட்டதாகவும், நான் குறுக்கிட்டுள்ளதால் தான் புதியவர்களின் கனவு இதழானது பாழாகி விட்டதாகவும் வாசித்தேன் ! தவிர, நான் இந்த மாதிரி இந்தஇந்தக் கதைகளுக்கெல்லாம் உரிமைகள் வாங்கியிருக்கேன் என்று கோடிட்டுக் காட்டாததுமே எனது பிழையாகப் பார்க்கப்படுகிறது ! அட, நான் ஏற்கனவே ஒரு கதைக்கோ, தொடருக்கோ உரிமைகளை வாங்கிவிட்டுள்ளேன் எனும் பட்சத்தில் அதை நான் தண்டோரா போடும் அவசியம் தான் என்ன இருக்க முடியும் சார் - முறைப்படி நீங்கள் படைப்பாளிகளை அணுகும் வேளையில் அவர்களே சொல்லி விடுவார்களே ? 

இதன் பின்னணியில் கடந்த 10 தினங்களில் நண்பர் கலீலுடனும் ; இலங்கையைச் சார்ந்த (??) பதிப்பகத்துடனும்  பகிர்ந்த விஷயங்களை இங்கே நான் பகிர்ந்திடுவது தொழில்முறை நாகரீகம் ஆகாது என்பதால் விலாவரியாக அதனுள் போக நான் விரும்பவில்லை ! ஆனால் சிம்பிளாக ஒரேயொரு கேள்வி  + ஒரேயொரு முன்மொழிவை இங்கே நான் முன்வைக்கிறேனே ?

எனது கேள்வி : சிங்கள உரிமைகளை அவர்கள் வாங்கியிருப்பின் - நாம் தமிழில் அதே கதையை வெளியிடுவதனால் அதற்கென்ன சேதாரம் நிகழக் கூடுமோ ? சத்தியமாய்ப் புரியவில்லை ! அவர்கள் தடத்தில் அவர்கள் பயணிக்கப் போகிறார்கள் ; நமது தடத்தில் நாம் !

எனது முன்மொழிவு : ரைட்டு...ஏதோவொரு கோணத்தில் தமிழில் நாம் வெளியிடுவதால் இது சிங்களத்தில் விற்றிடாது என்றே வைத்துக் கொள்வோமே - இப்படிச் செய்தாலென்ன ? 

மெய்யாலுமே அவர்களிடம் இந்த SURVIVAL கதைக்கான உரிமைகள் - சிங்களத்துக்கோ  ; தமிழுக்கோ ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், 

(அல்லது )

ஏற்கனவே வெளியிட்டிருக்கும் அந்த முதல் இதழுக்காவது உங்களிடம் உரிமைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை ஊர்ஜிதம் செய்து படைப்பாளிகள் ஒரேயொரு மின்னஞ்சலை மட்டும் எனக்கு அனுப்பட்டுமே - அடுத்த நொடியில் நாம் தமிழில் "உயிரைத் தேடி" வெளியிடுவதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் ! 

புதிதாய் ஒரு முயற்சியின் மீது வெந்நீர் ஊற்றிய பாவம் நமக்கெதுக்கு ? பீரோவுக்குள் துயில் பயிலும் ஒரு வண்டிக்கதைகளோடு இதுவும் இணைந்து கொண்டு, maybe ரெண்டு வருஷங்களுக்குப் பின்பாய் வெளிவந்துவிட்டுப் போகட்டுமே ?

டீலுங்களா ? 

இந்தக் குறும்பதிவுக்குப் பதிலாய் FB ; வாட்சப் க்ரூப்களில் எனது யோக்கியதாம்சங்கள் ; எனது லாயக்குகள் மிக அழகாய் அலசப்படுமென்பதில் எனக்கு ஐயமேயில்லை ! அட, நான் அயோக்கியனென்றே இருந்து விட்டுப் போகட்டுமே சார்ஸ் - உங்களிடம் நான் செருப்படி வாங்குவதென்ன புதிதா ; முன்னாட்களில் நான் செய்திருந்த பிழைகளுக்கான just desserts என்றே அவற்றைப் பார்த்திடுகிறேன் !  ஆனால் புதிய முயற்சியின் உன்னதங்களை நிரூபிக்க அழகாய் நானேயொரு வாய்ப்பை உங்களுக்கு லட்டு போல வழங்கியுள்ளேன் எனும் போது - அதனை பயன்படுத்திக் கொள்ளல் தானே இந்த நொடியில்  பிரதானமாகிட வேண்டும் ? அதை விடுத்து  என் தலையை ஆங்காங்கே உருட்டத் துவங்கிடும் நொடியிலேயே உங்கள் தரப்பின் சாயம் வெளுத்திடாதா ?  

புதியவர்களின் வருகையினைத் தடுப்பதோ, தடை போடுவதோ எனது நோக்கமே அல்ல ; ஏற்கனவே முழங்கால்களை சிராய்த்து வரும் இந்தத் தொழிலில் முறையாக இன்னொருத்தர் துணைக்கு இருந்தால் என் திக்கில் வீசப்படும் துடைப்பங்களாவது கொஞ்சம் வேகம் குன்றிடுமே என்று சந்தோஷமே படுவேன் ! அதனால் தான் இந்த விஷயத்தில் நிலவரத்தையும், நிஜத்தையும் பொதுவெளிக்குக் கொணர கடந்த 2 வாரங்களில் நான் முனையவேயில்லை ! ஆனால் சில மௌனங்களுக்கு எப்போதுமே மாற்று அர்த்தங்கள் கற்பிக்கப்படும் போது இந்தப் பொதுவெளிப் பகிர்தல் தவிர்க்க இயலாது போகிறது ! இந்த விஷயத்தில் நான் பொதுவில் பகிர்ந்திடும் முதலும், இறுதியும் இந்தப் பதிவாக மட்டுமே இருந்திடும் ; so please bear with me just this once folks !!

Thanks ....அவசியமே இல்லா ஒரு பதிவை வாசித்ததற்கு   ! 

103 comments:

  1. சார் உரிமை வாங்கிய பின் தயக்கமென்ன....அவர்கள் சிங்களத்தில் வாங்கியிருந்தா சிங்களத்தில் விடட்டும்

    ReplyDelete
  2. ஹம்ம்ம்ம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை சார் 😤🤐🤔

    ReplyDelete
  3. /அட, நான் அயோக்கியனென்றே இருந்து விட்டுப் போகட்டுமே சார்ஸ் - உங்களிடம் நான் செருப்படி வாங்குவதென்ன புதிதா ; முன்னாட்களில் நான் செய்திருந்த பிழைகளுக்கான just desserts என்றே அவற்றைப் பார்த்திடுகிறேன் !/ சார் ஒவ்வொருவரின் யோக்கியதாம்சங்களை சீர் தூக்கிப் பார்த்தால் அல்லவா பின்புலம் தெரியும்... விட்டுத் தள்ளுங்கள் சார்...

    ReplyDelete
  4. ஏடி ஜி,

    உங்களது வசன நடையில் எங்களுக்கு உயிரைத் தேடி வேண்டும், உங்களால் மட்டுமே ஒரு குறைவான விலையில் எங்களுக்கு தரமான புத்தகத்தை வழங்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ; நிச்சயமாக ஆகஸ்டில் !

      Delete
  5. எந்த ஒரு தடையோ விமர்சனமோ வந்தாலும் உயிரைத் தேடி வெளி வருவதை தாமதப்படுத்தியோ தள்ளி வைத்த விடாதீர்கள் edi ஜி

    ஆசை
    வேறு காட்டிவிட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. கவலையே வேணாம் நண்பர்களே ; மாற்றங்கள் ஏதும் சர்வ நிச்சயமாய் இராது !

      Delete
    2. அப்புறம் பெயரும் "உயிரைத் தேடி !" என்றே இருந்திடும் ஸ்டீல் !

      Delete
    3. கரண்டி ஆம்லெட்டை விட்டுப்புட்டீங்களே ஸ்டீல் ?

      Delete
    4. அப்டியொன்னு இருக்கா...அடுத்தவாட்டி செஞ்சிபுடுவம்....செஞ்சிபுடுவம்

      Delete
  6. எனது கேள்வி : சிங்கள உரிமைகளை அவர்கள் வாங்கியிருப்பின் - நாம் தமிழில் அதே கதையை வெளியிடுவதனால் அதற்கென்ன சேதாரம் நிகழக் கூடுமோ ? சத்தியமாய்ப் புரியவில்லை ! அவர்கள் தடத்தில் அவர்கள் பயணிக்கப் போகிறார்கள் ; நமது தடத்தில் நாம் !

    ReplyDelete
  7. தமிழில் உரிமை உங்களிடம் உள்ளதெனில் நீங்கள் இதிலிருந்து பின்வாங்கலாகாது அவ்வாறு செய்தால் மட்டுமே உங்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகள் பொய்யானவை என்பது நிரூபனமாகும். நீங்கள் இந்த இதழை மிகச் சிறப்பாக வெளியிட வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  8. ஞாயிறு மதிய வணக்கம் நண்பர்களே🙏

    ReplyDelete
  9. ஹைய்யா மறுக்கா புதிய பதிவு...

    ReplyDelete
  10. சார் தமிழில் தங்களிடம் முறையான பதிப்பக உரிமை இருக்கும் பொழுது.. எதற்காக நமது "உயிரைத் தேடி" பெட்டிக்குள் துயில வேண்டும்...!?

    அவர்கள் சிங்களத்தில் உரிமை பெற்றிருப்பின் அதை அவர்கள் வெளியிட்டுக் கொள்ளட்டும்... தமிழில் நீங்கள் வெளியிட என்ன தடை...!? நீங்கள் சிங்களத்தில் வெளியிட்டால்தானே அவர்களுக்கு பிரச்சனை...!? அப்படியில்லாதபோது... தயவு செய்து தயங்காமல் வெளியிடுங்கள்..

    இதழ் மாபெரும் வெற்றியடைய என் advance வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
    Replies
    1. துளித் தயக்கமும் லேது சார் ! ஆகஸ்ட் 2021 மத்தியில் அல்லது மூன்றாம் வாரத்தில் "உயிரைத் தேடி" நமது E ROAD ஆன்லைன் விழாவின் ஸ்பெஷல் # 1 ஆக வரவுள்ளது !

      Delete
    2. அருமையான அறிவிப்பு சார் அப்படியே Eroad online விழா வின் ஸ்பெஷல் #2 பற்றிய அறிவிப்பு எப்போது வரும் சார்???

      Delete
    3. ///Eroad online விழா வின் ஸ்பெஷல் #2 பற்றிய அறிவிப்பு எப்போது வரும் சார்???///

      ---- டெக்ஸ் தாங்க... டெக்ஸ் இல்லாத விழாவா.... என்னங்க போங்க!!! ( பாலாஜி மாடலேசன்ல வாசிக்கவும்)

      Delete
    4. அப்போ பழிக்கு பழி

      Delete
  11. நேற்றைய பதிவை முழுமையாக படிக்கவில்லை...

    அதனால் முகநூலில் ராஜ்குமாரிடம் இலங்கை பதிப்பகம் வெளியிடுவதாக வினவியிருந்தேன்..

    இப்பொழுது இந்த பதிவும் & நேற்றைய பதிவையும் வாசித்த போதுதான் விஷயம் புரிகிறது..

    இனிமேல் தான் முகநூல் பக்கம் எட்டி பார்க்கனும்...

    ஆக மொத்தத்தில் "உயிரை தேடி" வெளிவந்தால் சரிதான்..

    ReplyDelete
  12. கோவை கவிஞரின் கொலை வெறி தலைப்புகள் இன்றும் தொடருமா ??

    பீதியுடன் காமிக்ஸ் வாசகர்கள்.😉😁

    ReplyDelete
    Replies
    1. பயப்படாதீங்க சிவா ; தலைப்பு "உயிரைத் தேடி " என்றே இருந்திடும் !

      Delete
    2. இருந்தாலும் காட்டற்றுக்கு அணை போட முடியாதே...!!!!

      Delete
    3. அது எற்கனவே கலக்கி ; ஆம்லெட்ன்னு வேற ரூட்டிலே தாக்கிட்டு இருக்கு !

      Delete
    4. அது எற்கனவே கலக்கி //

      ஆமாங் சார். படிச்சு கலக்கி கலங்கிப் போனதென்னவோ நிஜம் தானுங் சார்.

      Delete
    5. ஆம்லேட்டில் ஒரு வகை. தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் சிவகாசி வட்டத்தில் கலக்கி என முழுமையாக வேகாமல் சில மசால் சேர்த்து கொடுப்பார்கள் நண்பர்களே.

      Delete
    6. ஹி..ஹி...காமிக்ஸ் தெரியுதோ இல்லியோ சாப்பிடற ஐட்டங்கள் நல்லாத் தெரியும் பரணி

      Delete
    7. இந்த ஊர் பக்கம் வாங்க உங்களை எல்லா வகையான சாப்பாடு வகைகளை சுவைக்க செய்கிறேன்.

      காமிக்ஸ் தமிழில் நமது காமிக்ஸ் மட்டும் கொஞ்சம் தெரியும் :-)

      Delete
  13. அட போங்க சார் நாம பார்க்காத முட்டுச்சந்தா. இது போன்ற சம்பவங்கள் நம்மை மேலும் மெருகேற்றி இன்னும் சிறப்பாக செயல்பட செய்யும் சார். கவலை படாமல் லக்கி ரின் டின் கேன் மொழிபெயர்ப்பை தொடருங்கள்.

    ReplyDelete
  14. // துளித் தயக்கமும் லேது சார் ! //

    இத இதைத்தான் எதிர்பார்த்தேன். I liked it.

    ReplyDelete
  15. சார். பின்வாங்கவேண்டாம் உங்களுக்குப்பின்னே நாங்கள் இருக்கிறோம். இந்த ஒரு முறை பின்வாங்கினோமென்றால்2021 நமது அட்டவணையிலுல்ல அனைத்து இதழ்களுக்குமே நாங்கள் வேறு மொழியில் உரிமை வைத்துள்ளோம் தமிழில் நீங்கள் வெளியிடக்கூடாது என்று மற்றும் யாரோ ஒரு பதிப்பகத்தார் வரலாம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நாம் பின்வாங்க அவசியங்களே இல்லை சார் !

      Delete
  16. சிங்களத்தில் உரிமை வாங்கப்பட்ட ஒரு கதையை சிங்களமல்லாத வேறொரு மொழியில்; அதாவது, தமிழில் வெளியிட முயற்சிப்பதே ஒரு குற்றமாயிற்றே?!

    இதெல்லாம் தெரியாமல் செய்திடும் பிழைகளில்லை!!

    இந்த லட்சணத்தில் முறைப்படி தமிழில் உரிமம் வாங்கியிருப்பவர் மீது பழி பாவம் வேறு!

    நல்லா வருவீங்கப்பா!!

    @ எடிட்டர் சார்
    அடுத்தவர் மானம் கப்பலேறிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் அடக்கி வாசிப்பதை நிறுத்தாதவரை உங்கள் மீது புழுதிவாரித் தூற்றும் செயல்களுக்கும் குறைவே இருக்காது!

    நீங்களும் திருந்தமாட்டீங்க சார்! புழுதிவாரும் கும்பலில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அடுத்த கேப்ஷன் போட்டிக்கு நடுவராக்கி கெளரவப்படுத்துங்க - பார்த்து ரசிக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் சார் ; பொதுவெளியில் நான் ஒருநூறு பகடிகளுக்கு ஆளானால் கூட முச்சந்திச் சலவைகளை செய்ய முற்படுவதில்லை ! அதனால் தான் இன்றைக்கு "பெருந்தன்மை" பற்றிய பாடங்கள் நடத்துகிறார்கள் எனக்கு !

      எனக்கு நிச்சயம் தேவை தான் !

      Delete
  17. இனான்யமொழியின் உரிமை எங்களிடம் உள்ளது ஆகவே தாங்கள் இதை தமிழில் வெளியிடுதல் தவறு கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  18. நான் "உயிரைத் தேடி" கதையை பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை.
    Slot கிடைக்காமல் வெளியிட நிறைய கதைகள் வரிசை கட்டி இருக்க ஆசிரியர்
    அவர்கள் இக்கதையை தேர்வு செய்தது சற்று ஆச்சர்யமே. தக்க காரணம் இல்லாமல் தாங்கள் எதையும் தீர்மானிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை மலையளவு இருப்பினும், பழைய பிரிட்டிஷ் ஆக்கம் எனும் போது சற்று நெருடலாக உள்ளது. Action special & சமீபத்திய பழைய பிரிட்டிஷ் நாயகர்களின் கதைகள் ஏற்படுத்திய ஒரு வித பீதியே காரணம். வெகுஜனங்களை கவரக்கூடிய வல்லமை அக்கதைக்கு உண்டு எனும் பட்சத்தில் வருவதில் மிக்க மகிழ்ச்சி. என் கூற்றில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும் சார் ; பயப்படாதீர்கள் !

      Delete
  19. நிம்ட்டா....
    ஆபூஸ்கா...
    இஸ்ட தூம்மே..
    மின்கா..

    விளக்கம்:- காளகேய தேசத்தின் உரிமை நாங்க வாங்கியிருப்பதால் நீங்க வெளியிடப்படாது.....!!!

    ReplyDelete
  20. துளித் தயக்கமும் லேது சார் ! ஆகஸ்ட் 2021 மத்தியில் அல்லது மூன்றாம் வாரத்தில் "உயிரைத் தேடி" நமது E ROAD ஆன்லைன் விழாவின் ஸ்பெஷல் # 1 ஆக வரவுள்ளது !


    ######

    வாவ்...சூப்பர் சார்..

    ReplyDelete
  21. பயப்படாதீங்க சிவா ; தலைப்பு "உயிரைத் தேடி " என்றே இருந்திடும் !

    #####

    அப்பாடா .....ரொம்ப ரொம்ப நன்றி சார்...காட்டாற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியதற்கு.....!

    ReplyDelete
  22. ஏற்கனவே வெளியிட்டிருக்கும் அந்த முதல் இதழுக்காவது உங்களிடம் உரிமைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை ஊர்ஜிதம் செய்து படைப்பாளிகள் ஒரேயொரு மின்னஞ்சலை மட்டும் எனக்கு அனுப்பட்டுமே - அடுத்த நொடியில் நாம் தமிழில் "உயிரைத் தேடி" வெளியிடுவதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் !

    ######

    ஙே....இது வேறய்யா....:-(

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார் கேள்வியை பார்த்துட்டு எனக்கும் அதிர்ச்சியாகிட்டது தலீவரே!!!

      உரிமம் இல்லாமலே வெளியிட்டு இருப்பாங்க போலயே.. ஆண்டவா!!!

      Delete
  23. ///மெய்யாலுமே அவர்களிடம் இந்த SURVIVAL கதைக்கான உரிமைகள் - சிங்களத்துக்கோ ; தமிழுக்கோ ஏற்கனவே இருக்கும் பட்சத்தில்,

    (அல்லது )

    ஏற்கனவே வெளியிட்டிருக்கும் அந்த முதல் இதழுக்காவது உங்களிடம் உரிமைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை ஊர்ஜிதம் செய்து படைப்பாளிகள் ஒரேயொரு மின்னஞ்சலை மட்டும் எனக்கு அனுப்பட்டுமே - அடுத்த நொடியில் நாம் தமிழில் "உயிரைத் தேடி" வெளியிடுவதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் ! ////

    ---இதில் , ///ஏற்கனவே வெளியிட்டிருக்கும் அந்த முதல் இதழுக்காவது உங்களிடம் உரிமைகள் இருக்கும் பட்சத்தில்////

    --- எனத் தாங்கள் கேட்டிருப்பது உணர்த்துவது, முதல் புக்கும் இல்லீகல் வெளியீடாங் சார்.????

    கடவுளே!!!! யாரைத்தான் நம்புவதோ????

    இல்லீகளாக வெளியிட்டு விட்டு அத்தனை ஓப்பனாக போட்டு உள்ளார்களே!!! இதில் நம்ம ரசிகர் ஒருவர் வேறு முகவராக உள்ளாரே சார்!!????

    ReplyDelete
    Replies
    1. சார் ...எனது ஜோலியல்ல அது ; அதனால் தான் நான் இதுவரையிலும் வாய் திறக்கவே இல்லை ! ஆனால் ஒதுங்கிப் போகிறவனை பைத்தியக்காரனாக்க முயற்சிப்பதே தொடர்கதையாகும் போது அலுப்பாக உள்ளது !

      Delete
    2. ///இல்லை நமது நண்பர் ஏமாந்திருக்கலாம்///

      --- ஆம் க்ளா, அப்படித்தான் இருக்க வேண்டும்.. ரொம்ப உசாரானவர்தான் இதில் உள்ள நம்ம நண்பர். அவரையே நம்பும்படி தகவல்களை சொல்லி உள்ளார்கள் போல...!!

      Delete
    3. டாக்டர் சுந்தர் இங்கே போட்டிருந்த பதிவு திடீரென்று காணாமல் போனது சற்றே வருத்தமளிக்கிறது!

      தவறு செய்தவர்கள் இம்மியளவும் தன் தவறை உணராமல் நெஞ்சை நிமிர்த்தி உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, ஊரே அறிந்த அந்தத் தவறு செய்தவர்களின் உள்நோக்கத்தை அடையாளப் படுத்துவது கூட இங்கே கூனிக்குறுகச் செய்திடும் விளைவுகளையே அளிப்பது வேதனையே!

      மாலைகளும், மரியாதைகளும் வல்லவராயனுக்கே வாய்க்கட்டும்!

      Delete
  24. Thanks ....அவசியமே இல்லா ஒரு பதிவை வாசித்ததற்கு

    ₹#####₹


    இது தான் மிக அவசியமான பதிவு சார்...:-)

    ReplyDelete
  25. பிறகு சார்....


    இதுவரை நீங்கள் எந்தெந்த மொழி பதிப்பகத்தில் இருந்து ,எந்தெந்த கதைகளை உரிமைகளை பெற்று உள்ளீர்கள் ..கருப்பு வெள்ளையில் ,வண்ணத்தில் என எதில் வெளியிட போகிறீர்கள் என்பதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்களுக்கு தெரிவித்து விடவும்...


    ReplyDelete
    Replies
    1. ஹா....ஹா... செம தலீவரே!!!

      ஆமா சார், எந்த கடையில் புரோட்டா வாங்குவீங்க, எந்தகடையில் மட்டன் வாங்குவீங்க என்பதையும் தெரியப்படுத்தவும்...!!

      "ரவுண்ட் பன்" எங்கே வாங்குவீங்கனு முன்பே தாங்கள் தெரிவித்து விட்டதால் அதுபற்றிய தகவல் வேணாம்.😜😜😜

      Delete
  26. சார்,
    ஈரோடு விஜய் எழுதிய கருத்தை எழுத்துக்கு எழுத்து நான் ஆமோதிக்கிறேன்.இவற்றை எல்லாம் தாண்டி
    உங்கள் கடமையை செய்யுங்கள்.இவ்வளவு மலிவாக காமிக்ஸ் வழங்க எங்களுக்கு வேறு யாரும் கிடையாது.வழியில் கிடக்கும் சிறு கல் லை தாண்டுவது போல் மேலே முன்னேறுங்கள்

    ReplyDelete
  27. marketing@dynamite.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் தட்டினால் யாரிடம் உரிமம் உள்ளது என்று உறுதி செய்து விடுவார்கள். காப்புரிமை வாங்காமலே 100 பக்க புத்தகத்தை 400 என்று கொள்ளை அடித்தார்களா?

    ReplyDelete
  28. சார் சிங்கள மொழியில் வெளியிட அவர்கள் உரிமை வாங்கியிருந்தால், நாம் தமிழ் மொழியில் வெளியிடுவதால் என்ன தப்பு வந்துவிடும் என்பது சத்தியமாக புரியவில்லை. தயவுசெய்து எக்காரணத்தை கொண்டும் நிறுத்தி விடாதீர்கள்!!! இது படைப்பாளிகளின் தலையிடி! இந்த சலசலப்பை எல்லாம் உங்கள் தலையில் போடவேண்டாம் சார்.

    ReplyDelete
  29. Thanks ....அவசியமே இல்லா ஒரு பதிவை வாசித்ததற்கு !//

    அவசியமான பதிவுங்க சார். நிறய விசயங்களை தெளிவுபடுத்திடுச்சு.

    ReplyDelete

  30. த்சோ...

    ப்ளாக்கை ஓபன் பண்ணா...ச்சும்மா நச்'சு..நச்'சுன்றாங்க...
    ஏதோ ஒரு காமிக்ஸை சிங்களத்துல ரைட்ஸ் வாங்கிட்டாங்கலாம்..அதனால நான் தமிழ்ல விடக்கூடாதாம்.அட இது கூட பரவால்லை..சரினு விட்டிடலாம்.
    நான் எந்தெந்த கதைக்கு காப்பிரைட் வாங்கியிருக்கேங்கன்ற லிஸ்டை கேக்கிறாங்கப்பா.. நான் என்ன கூகுளா?..விக்கிபீடியாவா?

    த்சொ..

    ஒரே குஷ்டமப்பா...ச்சீ..கஷ்டமப்பா..!

    ReplyDelete
  31. ரொம்ப நாளாக..இல்லையில்லை ரொம்ப வருசமாக மனதில் மௌனமாக எதிர்பார்த்த கதை உயிரைத்தேடி.இதையெல்லாம் புத்தகமாகப் பார்க்க முடியுமா என்ற எண்ணம் அறவே இல்லாமல் இருந்தது.அந்த எண்ணம் இன்று உயிர் பெற்றது.கூடவே பழைய பெயரிலேயே வருவது இன்னும் சிறப்பு.ஆகஸ்ட் வெளீயீடாக அறிவித்தது மேலும் சிறப்பு.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சே எழு: லோகன் சகோதரர்களின் ஒருவருக்கு பிரச்சினை என்ன பிரச்சினை அவனை காப்பாற்றினார்களா ? அவர்கள் என்னவானார்கள் டெக்ஸ் அன்கோ அவர்களை என்ன செய்தார்கள் என்ற கேள்விகளை மனதில் வைத்து படியுங்கள் ஒரு ராக்கெட் வேக பயணம் உத்திரவாதம்.

      என்ன கதை என்ன கதை எத்தனை சுவாரசியமான சம்பவங்கள் எத்தனை தந்திரங்கள் எதிரிகளும் சளைத்தவர்கள் இல்லை என்பது நகரில் லோகனின் சகோதரனை காப்பாற்ற திட்டமிட்டு செயல்படும் இடம் டெக்ஸே ஏதிர்பாராதது.

      சிங்கத்தின் குகையில் டெக்ஸ் அன்கோ நுழைய போட்ட திட்டம் செம கிளாஸ். எதிரிகள் எத்தனை பேர் என உணர்த்தும் சிக்கனல் செம சிந்தனை.

      இறுதியில் நடக்கும் சண்டை மிகவும் சரியான முடிவு. கிளைமாக்ஸ் சட் என்று முடிந்து விட்டதாக தோன்றினாலும் டெக்ஸ் எடுக்கும் முடிவு செம எதிர்பாராதது. அந்த நேருக்கு நேர் மோதல் அதிலும் போங்கு ஆட்டம் ஆட நினைக்கும் எதிரி சூப்பர். நேருக்கு நேர் நின்று நெஞ்சை நிமிர்த்தி போடும் கதைக்கு சரியான தலைப்பு.

      ஷெரிப் டாம் மற்றும் அவரது உதவியாளர்கள் திறமையான மனதில் நிலைத்து விட்டார்கள். டப்பி வயதானவர் என்றாலும் மனதில் இளமையானவரே.

      கார்சனின் பங்களிப்பு வழக்கத்தை விட இந்த முறை அதிகம்.

      சித்திரங்கள் செம. வசனங்கள் மாஸ்.

      குறை என நினைப்பது சில இடங்களில் டெக்ஸ் மற்றும் கிட் வில்லரை பின்னால் இருந்து பார்க்கும் போது வித்தியாசம் காண முடியவில்லை.

      கதையை பல முறை இடைவேளை விட்டு இரண்டு நாட்களில் படித்தாலும் கதையின் தாக்கம் என்னுள் குறையவில்லை. நிறைய எழுதலாம் இந்த பக்கா ஆக்ஷன் கதையை பற்றி.

      நெஞ்சே எழு - நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரஸ்யமான விறுவிறுப்பான டெக்ஸ் கதை.

      Delete
  33. உயிரைத் தேடி.. தினமலரில் வந்தபோது டீக்கடைக்கு தாத்தா கையைப் பிடித்து நடைபழகிக் கொண்டே தொடர்ந்ததொரு தொடர்.. ஆதலால் ஆர்வமும் ஆவலும் கொஞ்சமாய் எழுத்துப் பிழைகளைக் குறித்த பதட்டங்களும் சேர்ந்ததொரு உணர்ச்சிப் பிரவாகத்துடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனையே இல்லை சார் ... எழுத்துப் பிழைதிருத்தப் பொறுப்பை உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன் ; எனது பாடு கொஞ்சம் சுலபமாகிடும் !

      Delete
    2. வாவ்வ்... எனக்கே எனக்கா... சூப்பர் சார்.. தேங்க்யூ வெரிமச்.. என் பால்ய வயதுகள் தாய்தந்தையர் தொலைதூரத்திலிருக்க தாத்தாபாட்டியுடனான தினங்களாய் கடந்தபோதெல்லாம் சிறுசிறு சுவாரஸ்யங்களை சித்திரக்கதைகளே வாழ்க்கையில் கொண்டு வந்து பெற்றோர் அருகிலில்லாக் குறையை கொஞ்சம் போக்கின. அதிலும் இந்த உயிரைத் தேடி... கண்டிப்பாக மறக்கவே முடியாத பரிசு சார். நன்றிகள்..

      Delete
  34. வரட்டும் ...சார் நமது லயனில்
    உயிரை தேடி.....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வரும் மந்திரியாரே !

      Delete
  35. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
    ஒரு பதிப்பக உரிமையாளர் என்ற முறையில் தங்கள் விளக்கத்தைப் பகிர்ந்து கொண்ட பெருந்தன்மை என்னை வியக்க வைக்கிறது.உயிரைத் தேடி உறுதியாக வரும் என்று உறுதி தந்ததற்கும் என் நன்றிகள்.என்றென்றும் நாங்கள் உங்களோடு துணை நிற்போம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.நன்றி ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சரவணர்ர்ர்ர் சார் !

      Delete
  36. டியர் எடி,

    ஒரிஜினல் கருப்பு வெள்ளை ஓவியங்களுடன் என் பால்ய கால அபிமான தொடரான உயிரை தேடி லயனில் வருவது கனவு மெய்ப்படும் தருணம்.

    இலங்கை நிறுவனம் உரிமை வைத்திருந்தால் அவர்களும் வெளியிடட்டும் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒ யெஸ் ....உரிமைகளை வைத்திருக்கும் பட்சத்தில் ரைட் ராயலாகப் போடட்டுமே !!

      Delete
  37. உயிரைத்தேடுவோம் சார்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பழனி ! உங்க ஆள் நியாபகங்களைத் தேடவுள்ள அதே ஆகஸ்ட்டில் உயிரையும் தேடுவோம் !

      Delete
    2. உயிரை தேடி,ரொம்ப வருடங்களுக்கு முன்பு படித்த கதை போல் உள்ளது சார்,மீண்டும் மறு பதிப்பு காணவுள்ளன,அதே பெயரில்,வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும்,சார்,

      Delete
    3. ஆகஸ்ட்க்கும் தேடலுக்கும் மிக பொருத்தமே சார்..

      Delete
  38. இதை மாற்றி யோசிக்கலாம் சார். அவர்கள் பதிப்பரிமையை முதலில் வாங்கி விட்டார்களே ...அதை அறிவிக்கவில்லையே என் கனவை சிதைத்து விட்டார்களே என்று நீங்கள் புலம்பியிருந்தால் நாங்கள் ஏற்போமா?.

    ReplyDelete
    Replies
    1. நான் புலம்புவதாயின் இந்தக் கடின காலங்களில் ஒரு நூறு சாரமுள்ள சமாச்சாரங்கள் உள்ளன சார் ! ஊரெங்கிலும் நோய்த்தாண்டவம் ; மரண ஓலங்கள் ; தடுப்பூசி இல்லை ; தவிர்க்க இயலா கடையடைப்பும் அதன் பலனாய் நசியவுள்ள தொழிலும் ; மூன்றாவது அலை என்ற ஆரூடங்கள் - என இத்தனை இருக்கும் போது எனது புலம்பலின் தேர்வு இதனுள் ஏதோவொன்றாகவே இருந்திடும் !

      Delete
  39. உங்க தரப்பு நியாயம் கரெக்ட் சார். நீங்க உயிரை தேடி புக் ரிலீஸ் பண்ணுங்க சார். காப்பி ரைட் ஒருத்தர் கிட்ட மட்டும் தான் இருக்கணும்னு இல்லையே. அதுவும் இலங்கை வேற நாடு தான். திட்டம் போட்டபடி ரிலீஸ் பண்ணுங்க சார்.

    #ISupporteditorSir

    ReplyDelete
  40. இந்த கொரோனா காலத்தில்,நம் உயிர்களை காக்க நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு இந்த உயிரை மீண்டும் தேடுவோம்,மாற்றம் செய்ய வேண்டாம் அதே ஆகஸ்டில்

    ReplyDelete
  41. நீங்க நடத்துங்க ஆசான்....


    உங்களுக்காக உயிர் கொடுக்க காத்திருக்கும் கோரோணா positive அணியினர்......

    😊😊😊😊😊😊😊😊
    😊😊😊😊😊😊😊😊

    ReplyDelete
  42. சார் மான்ஸ்டர் அறிவிப்பையும் ஈரோடு2 ன்னி அறிவிச்சா அந்த இதழுக்கும் நாம் கட்ன ராயல்டி செல்லுமான்னு அறிய வரலாம்.....ஏற்கனவே விளம்பரபடுத்தியாச்சு.... ஆங்கிள் டெர்ரிக்காக நீண்ட நெடுங்காலமாக காத்திருக்கும் அப்பாவி கும்பலில் வேறொருவன்

    ReplyDelete
  43. Dear sir,
    Please daily special post ( Tex willer)..

    ReplyDelete
  44. XIII நினைவோ ஒரு பறவை எப்போ பறக்கவிடப்போறிங்க சார்....???

    ReplyDelete
  45. எடிட்டரின் புதிய மினி பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete