Monday, May 10, 2021

அதிகாரி UPDATE # 2 !

 நண்பர்களே,

வணக்கம். லாக்டௌனின் முதல் நாள் & நமது UPDATE சகிதம் இதோ ஞான் ஆஜர் ! And இதுவுமே "அதிகாரி update தான் !"

போன வருஷம் சந்தா D என்று ரூ.40 விலையில் black & white ஆல்பங்களை பெரிய சைசில் முயற்சித்தது நினைவிருக்கலாம் ! And அவற்றிற்கான ஒரிஜினல் அட்டவணையின்படி 4 இளம் டெக்ஸ் சாகசங்கள் தனித்தனி ஆல்பங்களாய் வெளியாகியிருக்க வேண்டும் !  அந்த 4 பாகங்களை சிங்கிளாய் ; தொடர்களாய் வெளியிடத் தயங்கி, அப்புறமாய் நமது ரெகுலர் சைசில் - ஒற்றை தொகுப்பாய் "எதிரிகள் ஓராயிரம்" என்று வெளியிட்டது  நினைவிருக்கலாம் ! சரி, அதற்கென்ன ? என்கிறீர்களா ? விஷயம் இது தான் :

டெக்ஸ் எடிட்டர் மௌரோ போசெல்லி அவர்களின் மேற்பார்வையில் இளம் டெக்ஸ் கதைகளுக்கென ஒரு தனித்தடம் 2 வருடங்களுக்கு முன்னே இத்தாலியில் உருவாக்கப்பட்டு - அதுவுமே இன்றைக்கு தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது - மெயின் TEX தொடருக்குச் சற்றும் சளைக்கா வரவேற்புடன் ! 64 பக்கங்கள் கொண்ட சிங்கிள் ஆல்பங்கள் ; பொதுவாய் நான்கு இதழ்களில் ஒரு கதையை / சாகசத்தை நிறைவு செய்கின்றன ! Sometimes it takes 5 books to complete a story ; sometimes 3 ...! துவக்கம் முதலே சாகசங்களை தவணை முறையில் ரசித்துப் பழகி விட்ட இத்தாலிய வாசகர்களுக்கு இந்த மினி ஆல்பங்கள் ; இளம் டெக்சின் புதுக் களங்கள் - ரசிக்கச் செய்யும் சுலப வாசிப்புகளாய் அமைந்துள்ளன போலும் ! இன்றைக்கு ஆல்பம் # 30 வரை இந்த இளம் புயலின் தடம் நீண்டுள்ளது ! நாம் நடப்பாண்டில் விளம்பரப்படுத்தியுள்ள "திக்கெட்டும் பகைவர்கள்" வெளியாகும் போது தொடரில் # 8-ஐப் பூர்த்தி செய்திருப்போம் ! So 2022-ல் அடுத்த வாய்ப்பை நாம் அமைத்துக் கொள்வதற்குள் "இளம் டெக்ஸ் எக்ஸ்பிரஸ்" மேற்கொண்டு முன்னேறியிருக்கும் ! 

எனது இன்றைய குப்புறப்படுத்தபடிக்கே ஆன கேள்வி இது தான் :

காத்திருக்கும் 2022-ல் ஒரு தனி track-ல் ; ரெகுலர் சைசில் ; இதே போல 64 பக்க ஆல்பங்களாய் இளம் டெக்ஸ் கதைகளை முயற்சிப்போமா ? என்பதே ! இதன் சாதக பாதகங்களை இக்கட லிஸ்ட் பண்ணுகிறேனே :

பாதகம்ஸ் first :

1 .Of course 4 மாத புக்ஸ் இணைந்த பின்னேயே ஒரு முழுநீள சாகசத்தை ருசித்தது போலிருக்கும் தான் ! 

2 ஒரு கதை செம விறுவிறுப்பாய் பயணிக்கும் போது "தொடரும்" என்று போடும் வேளைகளில் எனது சில்லுமூக்கை நலம் விசாரிக்கும் அவா உங்களுக்குப் பிரவாகமெடுக்கக் கூடும் தான் !

3 .நடுவாக்கில் ஒரு இதழை மிஸ் செய்து விட்டால் - இதர மூன்று இதழ்களுமே அர்த்தமின்றிக் கிடக்கும் !

And now the சாதகம்ஸ் :

1. ஒவ்வொரு இதழுக்கும் போனெல்லி பட்டையைக் கிளப்பும் புது அட்டைப்படங்கள் நமக்கும் சாத்தியமாகிடும் !

2. 64 பக்கங்களே எனும் போது - அதிகாரி ஸ்லீப்பர் செல்கள் கூட அயர்வின்றி வாசித்திட இயன்றிடும் !

3."வாசிக்க நேரமில்லை" - என்பதே இன்றைக்கு ஒரு பிரதான சிக்கல் நம்மில் பெரும்பான்மைக்கு ! So இத்தகைய நீண்டு செல்லா புக்ஸ் அந்த இடர்க்கொரு மருந்தாகிடக்கூடும் !

4. நம்மிடம்  புக்ஸ் ஓராண்டுக்கெனும்  குறைந்த பட்சமாய் ஸ்டாக்கில் இருந்திடுமெனும் போது - விடுபட்டுப் போகக்கூடிய இதழ்களை சிரமங்களின்றித் தருவித்துக் கொள்ளலாம் !

5. ரெகுலர் தடத்தில் தான் 725-ல் நிற்கும் போனெல்லியை நாம் எட்டிப் பிடிக்கும் சாத்தியங்களே அறவே கிடையாது ; at least இந்த இளம் புயலின் தடத்திலாவது முயற்சிக்க முடியும் ! 

6. முழுக்க, முழுக்க மௌரோ போசெல்லியின் படைப்புகளே !!!!!

உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ guys ?

Of course - ரெகுலர் டெக்ஸ் கதைகள் எப்போதும் போலவே அந்த 224 பக்க முழுநீள டபுள் ஆல்பங்களாய்த் தொடரவே செய்திடும் தான் ! If at all it happens - இந்த இளம் அதிகாரியின் சவாரி இணைத்தடமாகவே இருந்திடும் ! 

சொல்லுங்கோ - எவ்விதம் திட்டமிடலாமோ ? 

A ) வழக்கமான மாதிரியே, வழக்கமான ஆணிகளையே பிடுங்கினால் போதுமா ?

or

B ) புது அணிகளையும் நம்பி, நெம்பித் தான் பார்ப்போமா ?

Bye all ....have a peaceful & safe day !






215 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. // இன்றைக்கு ஆல்பம் # 30 வரை இந்த இளம் புயலின் தடம் நீண்டுள்ளது ! //

    வாவ் செம,செம....

    ReplyDelete
  3. பெரியவங்களா பார்த்து என்ன முடிவெடுத்தாலும் இந்த சின்னக்குழந்தை அப்படியே பின்பற்றிக் கொள்ளும்....

    ReplyDelete
  4. *எதிரிகள் ஓராயிரம்*

    போல ஒரே புக்குக்கு என் ஓட்டு

    ReplyDelete
  5. தனித்தனி இதழ்கள் ஆக மொத்தம் நான்கு இதழ்கள் ஒரே மாதத்தில் ஒரு சேர வெளியிட்டு விடலாம்..

    எங்களுக்கும் நான்கு அட்டைப்படங்கள் கிடைத்த மாதிரி ஆகும்..

    ReplyDelete
    Replies
    1. இது புது அகுடியா இருக்கே சிவா...

      Delete
    2. அண்ணா..பரீட்சை பேப்பரில் இப்டி ஒரு பதில் சாய்ஸ் நஹி !

      Delete
    3. எப்படீல்லாம் யோசிக்கிறாங்கப்பா

      Delete
    4. இது நல்லாயிருக்கு

      Delete
  6. B ) புது அணிகளையும் நம்பி, நெம்பித் தான் பார்ப்போமா ?

    நெம்பித்தான் பார்ப்போமே....

    கடப்பாறையோடு நான் ஆஜர்🤜🤛

    ReplyDelete
    Replies
    1. நெம்பி பார்ப்போம் சார். ஆனால் மாதம் ஒரு யங் டெக்ஸ் தவறாமல் வரும் என்றால் தாராளமாக முயற்சிக்கலாம்.

      Delete
    2. தனி ட்ராக் மாதம் ஒரு யங் டெக்ஸ்

      Delete
  7. // காத்திருக்கும் 2022-ல் ஒரு தனி track-ல் ; ரெகுலர் சைசில் ; இதே போல 64 பக்க ஆல்பங்களாய் இளம் டெக்ஸ் கதைகளை முயற்சிப்போமா ? //
    தாராளமாக முயற்சிக்கலாம் சார்,என்ன பொறுமைதான் வேண்டும்...
    மாற்று யோசனைகள் ஏதேனும் இருப்பின் டெக்ஸின் தனித்தடத்திலேயே 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை 4 அல்லது 5 கதைகள் என தொகுப்புகளாக முயற்சிக்கலாம் சார்...
    இல்லையேல் இளம் டெக்ஸ் தனித்தடத்தில் தொகுப்புகளாக முன்பு சொன்ன முறையில் முயற்சிக்கலாம் சார்,இடையில் வேறு டெக்ஸ் சாகஸங்களை நுழைக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் நுழைக்கலாமே சார்....
    ரொம்ப குழப்பிட்டேன்னு நினைக்கிறேன்...!!!

    ReplyDelete
    Replies
    1. ஹி ..ஹி ...கொஞ்சம் ரொம்பவே தான் சார் !

      Delete
  8. சார்...

    புது அணிகளையும், ஆணிகளையும், நம்பி, நெம்பும் கட்சிக்கே என் வோட்டு...

    ReplyDelete
  9. இளம் டெக்ஸ் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,அதே நேரத்தில் தொகுப்பாய் வெளிவருவது ஹிட் அடிக்கும் வாய்ப்பை இன்னும் கூடுதலாக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை...

    ReplyDelete
  10. காத்திருந்து படிப்பதிலும் ஒரு சுகம் இல்லாமலில்லை தான்..! ஆனால் காத்திருக்கும் வேளையில் கதை மறந்துவிடும் வாய்ப்புள்ளது என்பதாலும், குண்டு புத்தகங்களே எப்போதும் தடவிட/படித்திட வசீகரமானவை என்பதாலும் - என்னுடைய தேர்வு..

    ஆப்ஷன்-A

    ReplyDelete
    Replies
    1. '70s kids இங்கு உண்டென்பதை மறந்துப்புட்டேனோ ?

      Delete
    2. ///'70s kids இங்கு உண்டென்பதை மறந்துப்புட்டேனோ ?///

      --- பங்கம்!!!😆😆😆

      Delete
  11. // So 2022-ல் அடுத்த வாய்ப்பை நாம் அமைத்துக் கொள்வதற்குள் "இளம் டெக்ஸ் எக்ஸ்பிரஸ்" மேற்கொண்டு முன்னேறியிருக்கும் ! //
    ஜல்தியா விரட்டிக்கிட்டு போவோம் சார்.....

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு நாம நொங்கு வண்டி ஓட்டிட்டு இருக்கோம் சார் ; அவர்கள் பென்ஸ் காரை !

      Delete
  12. இளம் டெக்ஸ் கதைத்தொடர் multiple இதழ்களாக வருவதில் எனக்கு மகிழ்ச்சியே...
    படிக்க நேரம் குறைவு என்ற ஒரு காரணம் + suspense factor.

    ReplyDelete
  13. தனித்தனி பாகங்களாக வெளியாவதிலுள்ள மற்றொரு பிரச்சினை.. ஏதேனும் ஒன்று காலியாகிவிட்டாலும் மற்ற பாகங்கள் புத்தகத் திருவிழாக்களில் போனியாகாமல் தேங்கிவிட வாய்ப்புகள் அதிகம்!

    ReplyDelete
    Replies
    1. எஸ்...எனவே ஒரே தொகுப்பு ஒரே குண்டு....

      Delete
    2. அதுலாம் ஒரு பிரச்சனை ஆகாது ; வெறும் 64 பக்க black & white இதழினை இரண்டே நாட்களில் மறுபதிப்புச் செய்து விடலாம் !

      Delete
  14. அதே விலையில் கருப்பு வெள்ளை மட்டுமே தானா சார்? கலரில் விலை ஏற்றத்துடன் சாத்தியமா சார்???

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ....அடுத்த 2 ஆண்டுகளுக்காவது இதழ்களில் இயன்றமட்டுக்கு சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டி வரலாம் !

      Delete
  15. இந்த மாத இதழ்களின் அட்டைபடம் ஒன்று ஒரு மாபாதக கொலைகளுக்கு சாட்சியாக இடம் பெற்றுள்ளது..
    அப்பாவி பழங்குடியன ஆண்கள் தங்கள் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு விறகுகளையும் புற்களையும் வெட்டி சேகரிக்க தங்களது ஒரே கருவியான கோடாரிகளோடு வந்த பொழுது மஞ்சள் சட்டை அணிந்த ஒரு கொடூர மனம் படைத்த ஒரு அதிகாரி துப்பாக்கியால் சுடப்பட்டு வீழும் காட்சியானது நெஞ்சை பிசைகிறது..

    ReplyDelete
    Replies
    1. யெஸ்! அதுவும் அந்த அதிகாரி குறிவைத்துச் சுட்டது அந்தப் பழகுடியினரின் நெஞ்சை அல்ல என்பது துப்பாக்கி நீண்டப்பட்டிருக்கும் திசையைக் கொண்டே துள்ளியமாக அறிந்திட முடிகிறது!

      Delete
    2. மனித உரிமை கமிஷனிடம் புகார் சொல்ல பாயச பதார்த்தக் கட்சி ஆரவாரமான ஊர்வலம் ! அனைவரும் அலைகடலென அணிதிரண்டு வாரீர் !

      Delete
  16. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  17. Option A is my choice.

    Want to read complete story...

    ReplyDelete
  18. சார் ஒரே இதழா வரட்டும்...இணைதடத்தில்....டெக்ஸ் கதைகள் கூட சேர்த்துக்கலாம்...இளம் டெக்ஸ் தொகுப்பா வரட்டும்....இளம் டெக்ஸ் லேபிள் தாங்கி...அட்டைகள் மட்டும் கலர்ல ஒவ்வோர் கதை முகப்புல விடலாம்...இல்லாட்டி நான்கு இதழ்கள் ஒரே நாளில் விடலாம்...அப்பமும் நான்கட்டைகள் கிடைக்கட்டும்...தொடரும் போட்டா இன்றைய காலகட்டத்தில் சுவாரஸ்யம் போய்விடுமே...

    ReplyDelete
  19. இளம் தலயின் எல்லா அட்டைப் படங்களுமே அருமை! குறிப்பாக அந்த 3வது அட்டைப்படம் - அசத்துகிறது!

    ReplyDelete
    Replies
    1. கதைகளுமே செமையாய்த் தெரிகின்றன !

      Delete
  20. Replies
    1. அரை புக்காலாம் பிரிண்ட் பண்ண வழி லேது ஸ்டீல் !

      Delete
  21. தனி தனி இதழாக பார்க்க ஆசைதான்
    தொடர்ந்து அதே மாதத்தில் ஒரு சேர வெளியிடலாம்.
    அல்லது எல்லா அட்டை படத்துடன் ஒரே பைண்ட்.
    அல்லது உங்கள் விருப்ப படி சார்.

    ReplyDelete
  22. 30ம் ஒரே புக்கா போட்டு தாக்குங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. சிலபஸிலேயே இல்லீங்களே இந்த பதில் !

      Delete
  23. // ரெகுலர் தடத்தில் தான் 725-ல் நிற்கும் போனெல்லியை நாம் எட்டிப் பிடிக்கும் சாத்தியங்களே அறவே கிடையாது ; at least இந்த இளம் புயலின் தடத்திலாவது முயற்சிக்க முடியும் ! //

    செய்யலாம் சார்.

    ReplyDelete
  24. சூப்பரான செய்தி சார் 👍🏼

    சந்தாதாரர்களுக்கு இலவச இணைப்பாக வந்த கலர் டெக்ஸ் புத்தகங்கள்
    மூன்று சேர்த்து ஒரே பைண்டிங்காக
    சந்தாவில் இல்லாதவர்கள் வாங்கிக்கொள்ளும்படி வந்த முறையில்
    தொகுப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்குமென்பது

    எனது தாழ்மையான கருத்து சாரே 🙏🏼🙏🏼🙏🏼

    எல்லா அட்டைப்படமும் கிடைக்கும் 😍
    கதையும் முழுசாக கிடைக்கும்😇
    குண்டு புக்காகவும் கிடைக்கும்💪🏼
    .

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளைத் தொகுப்புக்குள் வண்ணத்தில் ராப்பர்களை நுழைப்பது எவ்விதமாம் சார் ?

      Delete
  25. எல்லா அட்டை படங்களும் வடிவமைப்பும் வேற லெவல்.

    ReplyDelete
  26. 30ம் ஒரே குண்டு புத்தகமாக வெளியிடுங்கள்

    ReplyDelete
  27. சேர்ந்த இருப்பது தான் நல்லதுன்னு நம்ம முன்னோர்கள் சொல்லிருக்காங்க...
    பிறிச்சு வைக்கிறது ரொம்ப பாவம். சாமி கண்ண குத்திடும்.

    ReplyDelete
  28. சார் ஒரு வேண்டுகோள்.
    ரெகுலர் டெக்ஸ் மற்றும் இளம் டெக்ஸ் இரண்டையும் தனி தடத்தில் தனி சந்தாவில் கிடைக்குமா சார்.

    ReplyDelete
  29. சார் எவ்வளவு சாதகம் ,பாதகம் வந்தாலும் இளம் டெக்ஸ் எப்பொழுதும் முழு தொகுப்பாகவே கொண்டு வாருங்கள்...

    நோ நியூ ஆணி ...

    ReplyDelete
  30. தனி தனியாய் விரும்பும் நண்பர்கள் கூட அதே மாதத்தில் மொத்தமாக வருவதையே விரும்புகிறார்கள்

    எனவே தொகுப்பே சிறப்பு சார்..

    ReplyDelete
  31. தனி தனி ஆல்பங்கள் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

    ஒரே தொகுப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

    மற்றவர்களுடைய கருத்துக்களையும் ஆவண செய்தபின் ,எட்டப்படும் முடிவுக்கு உடன்படலாம்.

    டெக்ஸ் வில்லர் கதைகளின் வெளியீடுகள் அதிகரித்து கொண்டே போவது போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சாவகாசமானதொரு பொழுதில் 2020 & 2021- ன் அட்டவணைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் நண்பரே... டெக்ஸ் கதைகளை ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள் ; ஒட்டு மொத்தத்தில் இவற்றின் சதவிகிதம் எத்தனை என்பதை பார்த்த பின்னே இங்கே பகிர்ந்திடுங்களேன் ? தோற்றத்தின் பின்னுள்ள நிஜத்தை சேர்ந்ததே அலசிடுவோமே ?

      Delete
    2. இதுவரையிலான பெரும்பான்மையான கோரிக்கைகள் தொகுப்பு இதழிற்கே...

      Delete
    3. என்னுடைய கலக்சனில் 80% டெக்ஸ்.என் மகளும் விரும்பி படிப்பது டெக்ஸ் மட்டும் தான்.

      Delete
    4. விற்பனையிலும் டெக்ஸ் வில்லர் சாதிப்பது ,புத்தக விழாக்களில் கண்கூடாக கண்ட உண்மை.

      தனித்தடத்தில் ஆண்டுக்கு பதினைந்து இதழ்களை கூட அறிவிக்கலாம்.

      இந்த ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு சரியாக நினைவில் இல்லை.
      தீபாவளி சிறப்பிதழுக்கு டெக்ஸ் வில்லருக்கு (குண்டு புக்) வாக்களித்த மை இன்னும் காணவில்லை.அதற்குள் இன்னொரு டெக்ஸ் கதையா? என்ற உணர்வு சட்டென எழுந்ததால் பதிவிட்டது.

      டெக்ஸ் வில்லர் கதைகள் தனிப்பட்ட விதத்தில் எனக்கு நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தவில்லை.

      ஆனால் பலருடைய தேர்வும் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவே அமையும். விற்பனையிலும் தொடர்ந்து சாதிக்கும் வலிமை தலைக்கு இருக்கிறது.

      Delete
  32. நாலு அட்டைப்படங்களையும் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் போட்டு ஒரே புத்தகமா போடுங்க சார்.!

    டெக்ஸ் கதைகளில் பாதி படிச்சிட்டு காத்திருக்கிற சமாச்சாரமே ஆகாதுன்னேன்..!

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சே எழு.. ஒரு ரெண்டுபக்கம் படிச்சிட்டு தூங்கலாம்னு கையில எடுத்துட்டு.. ரெண்டுமணி நேரம் கொட்டகொட்ட முழிச்சி படிச்சிட்டுதான் தூங்கினேன்..!

      என்னா விறுவிறுப்பு.. ப்ப்ப்பா.!!

      ஒரே ஒரு குறை.. தலைப்பு வைக்குறதுக்கு முன்னாடி நம்ம கோவைக்கவிக்கோ ஸ்டீல் க்ளாவை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.! :-)



      (ஒரு எஸ்வீ சேகர் ட்ராமாவுல க்ளைமாக்ஸ்ல ஒரு வசனம் வரும்..

      "இதுவரைக்கும் காட்டுல மழைன்னு நினைச்சசேன்.. இல்ல..இனிமேதான் காட்டுல மழை."

      "இப்ப எதுக்கு நீ சம்மந்தமில்லாம காட்டுல மழைன்னு சொல்றே.? "

      " ட்ராமாவுக்கு காட்டுல மழைன்னு பேரு வெச்சிட்டோம்யா.. அதை எங்கியாவது சொல்லணுமில்ல." ) :-)

      Delete
    2. ரொம்ப விறுவிறுப்புன்னா போர்வையை போர்த்திட்டு படிக்கலாமே பெரியவரே..

      Delete
    3. சும்மா தமாசுக்கு ஸ்டீல்..!

      நம்ம எடிட்டரை கிண்டல் பண்ணினா பெரியாளு ஆயிடலாம்னு ஜனங்க பேசிக்கிட்டாங்க.. அதான் யார்யாரோ கும்மும்போது, நம்ம எடிட்டர்கிட்ட நமக்கில்லாத உரிமையான்னு நானும் பெரியாளு ஆகுறதுன்னு முடிவுபண்ணிட்டேன்.! :-)

      Delete
  33. மல்லாக்க படுத்துகிட்டு ஒரு ரோசனை (1) ....

    இத்தாலில ஒரு வருசத்துக்கு இளம் டெக்ஸ் ஒரு பண்ணெண்டு புக்கு வருமா..?? அல்லாத்தையும் சேர்த்து மேக்ஸி இல்ல லக்கி லூக் புக் ஸைஸுல கலர்ல ஒரே குண்டு புக்கா போட்டா எப்படி இருக்கும்.. 😍😍😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. பேசாம நீங்க குப்புறவே படுத்துருங்க சரவணரே.

      Delete
    2. ஒருக்களிச்சு படிச்சு யோசிக்க ஸ்டீலைக் கூப்பிடறேன்.

      Delete
    3. @சரவணர்ர்ர்ர் : மல்லாக்க படுத்திட்டு யோசனை 1 மட்டுமே பகிர்ந்திருக்கீங்களே ? மிச்சம் சொச்சம் ப்ளீஸ் ?

      Delete
    4. அருமையான ஐடியா...இன்னும் வேற புக் இருக்கான்னு அவியலுவள வெரட்டிப்புடலாம் வெரட்டி

      Delete
  34. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. ஒரே மாதத்தில் 4/5 தனித்தனி இதழ்கள்!
      ஒரே பாக்ஸ் செட்டாக...

      இல்லையென்றால் ஒரே தொகுப்பு புத்தகம், அத்தியாயங்களுக்கு இடையே தனித்தனி அட்டைப் படங்களை பிரிண்ட் செய்து விடலாம்.

      Delete
    2. Sir...பட்ஜட்...பட்ஜட்..பட்ஜட்..!

      Delete
    3. பேசாம முத்து 50 வது ஆண்டுமலர் ஸ்பெஷலா புல் கலெக்‌ஷனை போட்டுத் தாக்குங்க சார்...
      30 இல் 8 போக மீதம் 22 இதழ்கள்,
      22*40=880/-
      ஹார்ட் பைண்டிங் போட்டால் எப்படியும் ₹.1000/- க்குள்ள கொண்டு வந்துட முடியாதா என்ன ???!!!
      ஹி,ஹி,ஹி ஒரு ரோசனைதானுங்க சார்...

      Delete
    4. இதுவும் வரணும்...முத்துவுக்கு முத்தின் நாயகர்கள் தான் வரனும்...அல்லது புதுசா

      Delete
  35. வழக்கமான ஆணியே சிறப்பாக இருக்கும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.

    ReplyDelete
  36. எதிரிகள் ஓராயிரம் போல ஒரே புக்குக்கு என் ஓட்டு!

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. ஒரே புக்குக்குத்தான் என் ஓட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கூடவே பாக்ஸ் செட்டா ரிலீஸ் பண்ணினா தனித்தனி அட்டைப்படமும் கிடைக்க வாய்ப்புண்டு. வருடத்தில் 2 அல்லது மூனு தடவை ரிலீஸ் பண்ணினா இளம் டெக்ஸின் 30 கதைகளை அடைஞ்சிட முடியாது?

      Delete
    2. சிக்கனமே இக்கணத்தின் தேவைங்கோ !

      Delete
    3. சிக்கனம் பிடிக்க வேண்டிய இடத்துலே பிடிச்சா போதுமுங்கோ...கஞ்சத்தனம் கூடவே கூடாதுங்கோ

      Delete
    4. ஒரு பாட்டா பாடிப்புடாதீங்க தெய்வமே !

      Delete
  39. நெஞ்சே எழு: - Posting the review again :-)
    லோகன் சகோதரர்களின் ஒருவருக்கு பிரச்சினை என்ன பிரச்சினை அவனை காப்பாற்றினார்களா ? அவர்கள் என்னவானார்கள் டெக்ஸ் & கோ அவர்களை என்ன செய்தார்கள் என்ற கேள்விகளை மனதில் வைத்து படியுங்கள் ஒரு ராக்கெட் வேக பயணம் உத்திரவாதம்.

    என்ன கதை என்ன கதை எத்தனை சுவாரசியமான சம்பவங்கள் எத்தனை தந்திரங்கள் எதிரிகளும் சளைத்தவர்கள் இல்லை என்பது நகரில் லோகனின் சகோதரனை காப்பாற்ற திட்டமிட்டு செயல்படும் இடம் டெக்ஸே ஏதிர்பாராதது.

    சிங்கத்தின் குகையில் டெக்ஸ் அன்கோ நுழைய போட்ட திட்டம் செம கிளாஸ். எதிரிகள் எத்தனை பேர் என உணர்த்தும் சிக்கனல் செம சிந்தனை.

    இறுதியில் நடக்கும் சண்டை மிகவும் சரியான முடிவு. கிளைமாக்ஸ் சட் என்று முடிந்து விட்டதாக தோன்றினாலும் டெக்ஸ் எடுக்கும் முடிவு செம எதிர்பாராதது. அந்த நேருக்கு நேர் மோதல் அதிலும் போங்கு ஆட்டம் ஆட நினைக்கும் எதிரி சூப்பர். நேருக்கு நேர் நின்று நெஞ்சை நிமிர்த்தி போடும் கதைக்கு சரியான தலைப்பு.

    ஷெரிப் டாம் மற்றும் அவரது திறமையான உதவியாளர்கள் மனதில் நிலைத்து விட்டார்கள். டப்பி வயதானவர் என்றாலும் மனதில் இளமையானவரே.

    கார்சனின் பங்களிப்பு வழக்கத்தை விட இந்த முறை அதிகம்.

    சித்திரங்கள் செம. வசனங்கள் மாஸ்.

    குறை என நினைப்பது சில இடங்களில் டெக்ஸ் மற்றும் கிட் வில்லரை பின்னால் இருந்து பார்க்கும் போது வித்தியாசம் காண முடியவில்லை.

    கதையை பல முறை இடைவேளை விட்டு இரண்டு நாட்களில் படித்தாலும் கதையின் தாக்கம் என்னுள் குறையவில்லை. நிறைய எழுதலாம் இந்த பக்கா ஆக்ஷன் கதையை பற்றி.

    நெஞ்சே எழு - நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரஸ்யமான விறுவிறுப்பான டெக்ஸ் கதை.

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையே..ஒரு long shot இல் கார்சன் உடன் வருவது டெக்ஸ் மாதிரியே உள்ளது..

      Delete
    2. //கார்சனின் பங்களிப்பு வழக்கத்தை விட இந்த முறை அதிகம்.//

      இந்த சாகஸத்தின் மாஸ் பார்ட்டி கார்சன் தான் என்பேன் !

      Delete
    3. சர்ச்சில் நடைபெறும் அந்த சண்டை காட்சி அமைப்பு செம, ஓவியர் கதாசிரியரின் கற்பனையை ஓவியமாக கொண்டு வந்ததை மிகவும் ரசித்தேன்! அதுவும் அந்த காட்சியில் டெக்ஸ் மற்றும் கார்ஸன் கடைபிடிக்கும் உத்தி ஒருவகையில் ஆகா என நினைத்தால் சிரிகுவா செவ்விந்தியர்களின் உத்தி அதைவிட செம! அதிதிலும் கற்களை வண்டியில் ஏற்றி வந்து சர்ச்சை தகர்ப்பது எதிர்பாராதது!

      Delete
    4. எதிரிகள் குழுவினரின் உத்தி மற்றும் வியூகங்கள் வலுவாக இருப்பது இக்கதையின் ப்ளஸ்,அதிலும் அந்த டெட்மேன் பள்ளத்தாக்கு ட்விஸ்ட் செம...

      Delete
    5. // அந்த டெட்மேன் பள்ளத்தாக்கு ட்விஸ்ட் செம //

      ture.

      Delete
    6. எனக்கு என்னமோ டைகர் கதையை படித்து ஃபீலிங் 😁

      Delete
    7. எனக்கு என்னமோ டைகர் கதையை படித்த ஃபீலிங் 😁

      Delete
    8. டைகர் பீலிங் சரி ஆனால் ஒவ்வொரு சீனும் டெக்ஸ் & கோவுக்கு என்று செமயாக யோசித்து உள்ளார் கதாசிரியர் என்பது பெரிய ப்ளஸ்.

      Delete
    9. சூப்பர் விமர்சனம் PFB..!!

      Delete
    10. // அந்த டெட்மேன் பள்ளத்தாக்கு ட்விஸ்ட் செம //

      அந்த சீன் படிக்கும் போது டெக்ஸ் மற்றும் கார்ஸன் இதை எப்படி கையாளுவார்கள் என கேள்வியை தலையில் வைத்து கொண்டே படித்தேன், உனக்கும் தாத்தாடா நான் என டெக்ஸ் துப்பாக்கியுடன் அவர்களை வரவேற்றது கைதட்ட செய்தது! பின்னாலேயே கார்ஸன் தனது குதிரையுடன் அவர்கள் வந்த வெளியே வெளிவருவது மிகவும் யதார்த்தமாக காட்சி அமைப்பாக ரசிக்கும் படி இருந்தது!

      Delete
  40. வணக்கம் ஆசிரியரே டெக்சின் இதழ்களை மொத்தமாகவே வெளியிடுங்கள் ஐயா.

    ReplyDelete
  41. இன்னொரு விதத்தில் பார்க்கும் பொழுது தனி தடம் இல்லாத போது நமக்கு செட் ஆகாது அல்லது கதையம்சம் நன்றாக இல்லை என்ற புத்தகங்களை தவிர்க்க முடியும். நன்றாக இருப்பதை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை குண்டாக போட்டுவிடலாம் கண்டிப்பாக அந்த குண்டு புக் தனிதடத்தில் தான். தனியாக வரும்போது பின்னொரு காலத்தில் மொத்தமாக ஒரு புக் போடுங்கள் சார் என்ற வேண்டுகோள் வரும் வாய்ப்பும் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரியவில்லை ...தொகுப்பு என்பது புரிகின்றது ; மீதம் புரியலை !

      Delete
    2. தனி ரூட் :

      இப்படி வந்தால் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இழப்போம்

      வரும்காலங்களில் மீண்டும் ஒன்றாக சேர்த்து போடும் படியான கோரிக்கைகள் வரும்

      எனது விருப்பம் :

      ஆகையால் மொத்தமாக வந்த பின்பு கதை நன்றாக இருந்தால் மொத்தமாக குண்டாக வெளியிடலாம்.

      அப்படி வெளியிடும் குண்டு புத்தகங்களுக்கு தனி சந்தா ரூட் வைத்துக்கொள்ளலாம்.

      Delete
  42. டெக்ஸ்ஸை பொறுத்தவரை ஒரே கதையாக என்றால் அவ்வப்போது ரசிக்கவும் மட்டுமல்ல பாதுகாக்கவும் வசதியாக இருக்கும். நான்கு அட்டைகளையும் வண்ணத்தில் முன் பின் அட்டைகளிலேயே (பக்1&2 + 223&224) போட்டுவிடலாமே சார்

    தனித்தனியாக இருப்பதில் உள்ள பிரச்சினை ஒரு கதை வாங்க முடியாது மிஸ் ஆனால் மட்டுமல்ல தொலைந்து விட்டால் கூட பேரிழப்பாக இருக்கும் . என் கார்சனின் கடந்தகாலம் பாகம்1 & 10 ரூபா இதழ்கள் சிலவற்றுக்கு இக்கதி நேர்ந்துள்ளது. :(

    ReplyDelete
    Replies
    1. இதே போன்றதொரு அனுபவம் எனக்கும் நேர்ந்துள்ளது.

      கருப்பு-வெள்ளையில் வெளியான இரத்தக்கோட்டை வெளியீடுகளில் நேர்ந்தது.


      இரவலாக ஐந்து பாக கதைகளையும் பெற்று சென்ற நண்பர் ஒருவர்,ஒரு பாக கதையை தவறவிட்டு விட்டார்.

      பொக்கிஷமாக பாதுகாத்த அந்த இதழ்களில்,ஒரு பாக கதையை இழந்தது மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது(அன்றைய காலகட்டத்தில்).

      ஒரே கதைத் தொடர் என்றால் ,ஒரே தொகுப்பாக வெளியிடுவது சிறந்த முடிவாக இருக்கும்.

      Delete
  43. Option A மட்டுமே sir .. மு பாபு Gangavalli

    ReplyDelete
  44. ஒரே தொகுப்பாக மட்டுமே சார்...3-4 மாசமெல்லாம் பொறுமையிழந்து காத்திருக்க முடியாது சார்... எக்ஸ்பிரஸ் ரயில பேசஞ்சர் ரயிலா மாத்த வேணாம் சார்....

    ReplyDelete
  45. வருடத்திற்கு இரண்டு இளம் டெக்ஸ் கதை தொகுப்புகள் கொடுக்க முடியுமா!

    ReplyDelete
    Replies
    1. பெரியவரை கம்மி செய்தால் அவரிடத்தில் சின்னவர் !

      Delete
    2. சின்னவருக்கு தனித்தடம் - வருடத்திற்கு இரண்டு தொகுப்புகள்!

      Delete
    3. சின்னவருக்கு தனித்தடம் - வருடத்திற்கு இரண்டு தொகுப்புகள்//

      அதே அதே...

      Delete
    4. ரெண்டு தொகுப்புக்கு தனி தடமென்ற பெயர் எதற்கு சார் ?

      Delete
    5. கிராபிக் நாவல் கார்ட்டூன் ஸ்பெஷல் போன்று முடித்த அளவு கதைகளை பட்ஜெட்க்கு ஏற்றார் போல் புத்தக எண்ணிக்கைகளை வெளி இடவே! அதே நேரம் தனித்தடம் எனும் போது மற்ற நாயகர்கள் கதை எண்ணிக்கையில் கைவைப்பதை தவிர்க்கலாமே:-)

      அப்புறம் தனி தடத்தில் வருடம் 3-4 தொகுப்புகள் நீங்கள் வெளி இட்டாலும் சந்தோசமாக வாங்கி படிப்போம் :-)

      Delete
    6. //பெரியவரை கம்மி செய்தால் அவரிடத்தில் சின்னவர்//

      சார் இருவரும் இணைந்து வரட்டும் சார்.
      பெரியவர் சின்னவர் இருவரும் வேண்டும் சார்.

      Delete
    7. சார் வாயில அடிங்க பெரியவர் கவுண்ட் குறைகிறீர்களா .. பெரிய தெய்வ குத்தம் ஆகிவிடும். இளையவருக்கு இரண்டு புக் ஆனாலும் தனி டிராக் கொண்டு வந்துருங்க. வேண்டும் என்பவர்கள் வாங்கிக்கொள்ளட்டும்

      Delete
  46. இந்த ஆண்டே இளம் டெக்ஸ் ஒரே தொகுப்பாக கிடைத்தால்(ஆசானே உங்களுக்கு மாத்திரம் ஒரு ரகசியம் சைலன்டா இந்த வருட ஏதாவது ஒரு புக்கை ஓரமா வைத்து விட்டு அந்த இடத்தில் இளம் டெக்ஸ் வரவிடுங்க) இந்த வருடமே இளம் டெக்ஸ்சை பார்த்து விடுவோம்😊😊😊

    ReplyDelete
    Replies
    1. "திக்கெட்டும் பகைவர்கள் " நடப்பாண்டின் இளம் டெக்ஸ் தொகுப்பே நண்பரே ! எற்கனவே அட்டவணையில் உள்ளது !

      Delete
  47. புக்கா பாத்தா என்னம்மோ 30 சார் ஆனா கதைணு பாத்தா 5-6 கதைதான்.. ஏற்கெனவே ஒன்று போட்டாச்சு 4 பாகம் ஓவர். இந்த வருடம் ஒருகதை இன்னொரு 4 பாகம் ஓவர்..நாம மீதி இருக்கற 3-4 கதைகளை (22பாகங்கள்) போட்டு முடிச்சிட்டு நாம அவங்களவிட லீடிங்கல இருப்போம் சார்..

    ReplyDelete
    Replies
    1. 22 பாகங்கள் எப்டி 3 அல்லது 4 பாகங்களாகும் பழனி ?

      Delete
    2. //நாம மீதி இருக்கற 3-4 கதைகளை (22பாகங்கள்)//

      3-4 கதைகள் சார்...

      Delete
    3. அதிலும் அந்த
      பிங்கர்டன் லேடி
      இளம் மெபிஸ்டோ கலக்கும் சாகசங்கள் செம சார்...

      Delete
    4. Sorry, 22 பாகங்கள் எப்டி 3 அல்லது 4 கதைகளாகும் பழனி ? குறைந்தபட்சம் 6 தேறும் !

      Delete
    5. நாம ஒன்னு போட்டாச்சு இன்னும் ஒன்னு இந்த வருடம் வரும்...மீதி உள்ள 6 கதைகளுக்கு ஒரு சூப்பர் 6 சந்தாவோ அல்லது 3 மாதங்களுக்கு ஒருகதை என 2022க்குள்ள சைடு போட்டர்னும் சார் அவிங்கள...!!!

      Delete
    6. ///6 கதைகளுக்கு ஒரு சூப்பர் 6//
      💞💞💞💞🙌🙌🙌 சூப்பர் ஐடியா பழனி! எடிட்டர் சார்@ ப்ளீஸ் நோட் திஸ் சார்.

      Delete
  48. ஒரே தொகுப்பாக குண்டு புக்காவே கொடுங்க சார். கருப்பு வெள்ளை என்றாலும் உள்பக்க அட்டைகள் மட்டும் கலரில் வந்தால் செமையா இருக்கும். ஆஹா நினைக்க்கும்போதே சூப்பரா இருக்கே.

    ReplyDelete
  49. ஒரே புத்தகத்திற்கேஎனது ஓட்டும் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  50. option A

    எடிட்டர் சார்,
    "எதிரிகள் ஓராயிரம்" கதையை விட்டு விட்டு படித்தால், நினைக்கவே முடியவில்லை!
    முதல் பக்கத்தில் எடுத்த ஓட்டம் கடைசிப் பக்கத்தில்தான் முடிந்தது. One of BEST stories of TEX !

    ReplyDelete
  51. இந்த தடத்திலாவது இளம் மெபிஸ்டோ வர புனிதமானிடோ அருள் பாலிக்கவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இளம் டெக்ஸ் ஒரிஜினல் வரிசைப்படியே நாமும் தொடர்வோம் பழனி !

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை எங்களுக்கு எது நல்லது என உங்களுக்கு தெரியும். ஆசான் எவ்வழியோ மாணவர்கள் அவ்வழியே...சார்..

      Delete
  52. எது எப்படியோ டெக்ஸ் என்றால் ஒரே புக்குதான் எங்க விருப்பம்.. அட்டைப்படத்த வேணா கார்டு மாதிரி அடித்து இணைப்பாக கொடுத்துவிடுங்கள்...

    ReplyDelete
  53. எது எப்படியோ டெக்ஸ் என்றால் ஒரே புக்குதான் எங்க விருப்பம்.. அட்டைப்படத்த வேணா கார்டு மாதிரி அடித்து இணைப்பாக கொடுத்துவிடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆங் ...இது நல்ல ஐடியா !

      Delete
    2. //அட்டைப்படத்த வேணா கார்டு மாதிரி அடித்து இணைப்பாக கொடுத்துவிடுங்கள்//

      ஆனால் அந்த கார்டுகளை பாதுகாப்பது ரொம்பவே சிரமம் சார்... காணாமல் போய் விடுகிறது...

      Delete
    3. உள்ளே வைச்சு தைச்சிட்டா முடிஞ்சுது. ஒரு புக்குல நாலு கவரும் வந்துடும்.

      Delete
  54. எனது ஓட்டு ஒரு கதை ஒரு புத்தகத்திற்கே...

    இரண்டு மூன்று அட்டைகள் ஒரே புத்தகத்திற்கு இருக்கக்கூடாதா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஒரு புத்தகம் நான்கு வெவ்வேறு அட்டைகளுடன்... இது நல்லாதான் இருக்கு!

      ஆனால் எல்லா அட்டைப்படமும் வேணும்னா 4 புக்கும் வாங்கனும்.

      இல்லை முன்/பின் அட்டைன்னு கணக்கு வச்சா 2 புக் வாங்கனும்.

      Delete
  55. இந்த ஆண்டில் இளம் டெக்ஸ்,சூப்பர் சாரே,அது என்னமோ என்ன மாயமோ தெரில மாத மாதம் டெக்ஸ் வரலன என்னமோ மாதிரியா இருக்கு இந்த மாதம் நெஞ்சே எழு படிக்க எடுத்தே எப்போ கதை முடிந்தது தெரில அவ்வளவு வேகம்,அடுத்த மாதம் ஈ தா ஓட்டனும், இளம் டெக்ஸ் புக்க குண்டு குண்டா போடுங்க ஆசானே, வாழ்க இளம் டெக்ஸ் ரசிகர்கள்👍🌷🌷🌷🌷

    ReplyDelete
  56. எல்லாருக்கும் வணக்கம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க...

    ReplyDelete
  57. தனி ரூட் :

    இப்படி வந்தால் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இழப்போம்

    வரும்காலங்களில் மீண்டும் ஒன்றாக சேர்த்து போடும் படியான கோரிக்கைகள் வரும்

    எனது விருப்பம் :

    ஆகையால் மொத்தமாக வந்த பின்பு கதை நன்றாக இருந்தால் மொத்தமாக குண்டாக வெளியிடலாம்.

    அப்படி வெளியிடும் குண்டு புத்தகங்களுக்கு தனி சந்தா ரூட் வைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  58. //Abisheg10 May 2021 at 17:49:00 GMT+5:30
    டெக்ஸ்ஸை பொறுத்தவரை ஒரே கதையாக என்றால் அவ்வப்போது ரசிக்கவும் மட்டுமல்ல பாதுகாக்கவும் வசதியாக இருக்கும். நான்கு அட்டைகளையும் வண்ணத்தில் முன் பின் அட்டைகளிலேயே (பக்1&2 + 223&224) போட்டுவிடலாமே சார்

    தனித்தனியாக இருப்பதில் உள்ள பிரச்சினை ஒரு கதை வாங்க முடியாது மிஸ் ஆனால் மட்டுமல்ல தொலைந்து விட்டால் கூட பேரிழப்பாக இருக்கும் . என் கார்சனின் கடந்தகாலம் பாகம்1 & 10 ரூபா இதழ்கள் சிலவற்றுக்கு இக்கதி நேர்ந்துள்ளது. :(

    Reply
    Replies

    Lion Comics10 May 2021 at 18:41:00 GMT+5:30
    Point taken sir...//

    ReplyDelete
  59. ஒரே தொகுப்பிற்கே என் வாக்கு.மீதி அட்டைகளை உள்பக்கங்களில் இணைத்துத் தந்துவிடுங்கள் ஆசானே.

    ReplyDelete
  60. ஆசிரியர்க்கு...
    டெக்ஸ் பிரித்துப் போடுதல் வேண்டாம் ஐயா. தனியே ஒரு வேங்கை கொடூர வனத்தில் டெக்ஸ் துரோகி முகம். இந்தத் தொடரில் கொடூர வனத்தில் டெக்ஸ் தொலைத்துவிட்டு அது கிடைக்காமல் நான் பட்ட பாடு அப்பப்பா.
    அதன்பின் வந்த ஒவ்வொரு தொகுப்பிலும் 2 செட்டுகள் வாங்கி வைத்து விடுவேன்.
    ஒவ்வொரு மாதமும் படித்துவிட்டு அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று மண்டையை கசக்கிய நாட்கள் பயங்கரம்.
    அந்த நிலை இனிமேல் வேண்டாம் ஐயா..
    ஆதலால் ஒரே தொகுப்பாகவே கொடுத்துவிடுங்கள் அட்டையை உங்கள் மனம்போல் இலவசமாக அளித்து கொடுங்கள்.
    எனக்குத் தெரிந்து இது போன்ற நிலையில்..
    தலைக்கு என்று தனி சந்தா அமைத்து விடுங்கள். அந்த சந்தாவில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இளம் டெக்ஸின் கதைத் தொகுப்பை (4 அல்லது 5 கதைகளை ஒன்றாக சேர்த்து ) வெளியிட்டால்... மூன்று வருடங்களில் அவர்களுடன் கை கோர்த்து விடலாம் என்றே நினைக்கிறேன்...
    அது போல் வருடத்திற்கு இரண்டு முறையாவது டெக்ஸின் புது கதையை கலரில் வெளியிடவேண்டும் இதுவே எமது வேண்டுதல்... நன்றி வணக்கம்

    ReplyDelete
  61. ஹா ஹா ஹா

    பசும் பாலை மொத்தமாக சட்டியில் வைக்கவா அல்லது சின்ன சின்ன கிண்ணங்களில் ஒரு ஒரு நாளாக ஊற்றி வைக்கவா என்று பூனையிடமே ஆலோசனை கேட்டிருக்கிறீர்கள்

    Option A

    மொத்தமாக தான் வேண்டும் yummy yummy ...

    ReplyDelete
  62. வழக்கமான ரெகுலர் சைசில் ரெகுலராக வருவதே போதும் டியர் எடி .. நான்கு மாதங்களுக்கு நான் புத்தகங்களை அறவே வெறுக்கிறேன் .. (ஏறகனவே காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் என்கிற தடத்தில் பட்ட சூடே போதும்)

    மாதம் ஒரு முறை என்பதை விட நான்கு மாதங்களுக்கொரு ஒரு இளம் டெக்ஸ் வந்தால் அதை மிகவும் வரவேற்கிறேன் ( 4 விதமான முன் / பின் 2 என்கிற வகையில் அட்டைகளுடன் வெளியிட்டாலும் ஹேப்பீ )

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. அதிலும் தனித்தனியாகத்தான் போடுவேன் என்றீர்களானால் அதை பாக்ஸ் செட்டாக கொடுத்தாலும் இன்னும் இன்னும் ஹேப்பி .. இதுவரை டெக்ஸ் பாக்ஸ் செட்டாக வந்ததில்லை .. இதில் அக்குறையை தீர்த்துவைத்தால் நலமே .. பாக்ஸ் என்பது தடினமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ..

    ReplyDelete
  65. ஒரே தொகுப்புதான். இல்லன்னா ஸ்டீலை சிவகாசிக்கு அனுப்பி டிடிஸ் எபக்ட்ல தினம் பாட்டாவோ கவிதையாவோ படிக்க சொல்லிடுவேன்.

    ReplyDelete
  66. A ) வழக்கமான மாதிரியே, வழக்கமான ஆணிகளையே பிடுங்கினால் போதுமா

    ReplyDelete
  67. A ) வழக்கமான மாதிரியே, வழக்கமான ஆணிகளையே பிடுங்கினால் போதும்

    ReplyDelete
  68. A ) வழக்கமான மாதிரியே, வழக்கமான ஆணிகளையே பிடுங்கினால் போதும்

    ReplyDelete
  69. வன்மேற்கில் சாட்சிகளும் வாக்குமூலங்களும் போலியாகவே இருக்கும்(உதாரணம்.ஜெஸ்ஸீஜேம்ஸ்
    . லக்கிலூக் கோர்ட்ஸீன்)விலை போகும், தைரியமில்லாதஜுரிக்கள்நீதிபதிகள் இவர்களைநம்பாது தனது உள்ளுனர்வின் மூலம் குற்றவாளிகளைஅடையாளம் கண்டு தண்டிப்பதே அதிகாரியின் பாணி. அவரது உள்ளுணர்வு இதுவரை தவறானதே இல்லை என்பது போலவே டெக்ஸ் கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாயசக்காரர்கூறுவது போல அப்பாவிகளுக்கு எதிராக ஒருபோதும்அதிகாரியின் துப்பாக்கிமுழங்கியதில்லை. குற்றவாளிகள் என்று தெளிவாகத்தெரிந்தாலே நடவடிக்கை எடுப்பார் அதிகாரி. சந்தர்ப்ப சூழ்நிழைகளால் துப்பாக்கி ஏந்திய, தவறிழைத்த பலரையும்தனது உள்ளுணர்வின் மூலம்கண்டறிந்துமன்னித்துநல்வழிப் படுத்தியுள்ளார்அதிகாரி. அந்தசகோதரர்கள்குற்றவாளிகள்என்பதைஉறுதிப் படுத்திக்கொண்டே அவர்களைதண்டித்துள்ளார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  70. ///64 பக்கங்களே எனும் போது - அதிகாரி ஸ்லீப்பர் செல்கள் கூட அயர்வின்றி வாசித்திட இயன்றிடும் !///

    இளம் டெக்ஸ்!!
    தனித்தனி இதழ்களுக்கு ஜே!!!

    ReplyDelete
  71. அன்புள்ள ஆசான் அவர்களுக்கு
    2021 டெக்ஸ் தனி சந்தா அறிவித்து அதில் இளம் டெக்ஸ்க்கு 3 புக் ஒதுக்கினால் 3x4 = 12 கதைகள் வந்துட்டுப் போகுது. (அட்டைப்படத்துக்கு வேணா தனியா கார்டு போட்டு அந்தந்த புக்கோட குடுத்துருங்க..) மீதம் 9 புக் ரெகுலர் டெக்ஸ்க்கு குடுத்துடுங்க. பிராப்ளம் சால்வ்டு....

    ReplyDelete
  72. ஒரே டெம்ப்ளேட் என்று சொல்லி அதிகாரியைவிட்டுவிலகிச்செல்லும்வாசகர்களையும் இப்பொழுதுஅறிவிக்கப்பட்டிருக்கும்புதுஆல்பங்கள்ஈர்க்கும் என்றேநினைக்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  73. இளம் டெக்ஸ் ஒரு பார்வை

    இளம் டெக்ஸ் கதைவரிசை
    கதை # 1-
    1-4 எதிரிகள் ஓராயிரம் (4 பாகங்கள்)
    கதை # 2-
    5-9 திக்கெட்டும் பகைவர்கள் (5 பாகங்கள்)
    கதை # 3-
    10-13 பிங்கெர்டன் லேடி (4 பாகங்கள்)
    கதை # 4-
    14-15 பாரடைஸ் வேல்லி (2 பாகங்கள்)
    கதை # 5
    16-17 (2 பாகங்கள்)
    கதை # 6
    18-23 (6 பாகங்கள்)
    கதை # 7
    24-28 (5 பாகங்கள்)
    கதை # 8
    29 முதல் தொடர்கிறது அனேகமாக 32ல் ஜூலை 2021ல்முடியலாம்.

    ஆக இரண்டு இளம் டெக்ஸ் போக இன்னும் 6 கதைகள் கைவசம் உள்ளது முடிந்தால் 2022 ல் ஒரு சூப்பர் 6 அறிவிக்கலாம் சார்...

    ReplyDelete
    Replies
    1. தெய்வமே ; எங்களுக்கு போனெல்லியிலிருந்து அனுப்பப்படும் data file-ல் பார்த்து இதை நொடியில் சொல்லியிருப்பேனே - ஆபிஸ் திறந்த பிற்பாடு ?! இதுக்கு வீட்டம்மா data-வை ஆட்டையைப் போடுவானேன் ? :-)

      Delete
    2. இன்னும் 12நாள் ஆகுமே சார்...ஒரு ஆர்வம்தான் சார்...

      Delete
  74. ஒருமணிநேரம் 1.5Gb data அவுட்.. வீட்டம்மா மொபைல்ல நைசா data வ உருவியாச்சு..பாவம் இன்னைக்கு அவங்க நாடகம் பாக்க முடியாது...

    ReplyDelete
    Replies
    1. இது வெறும் 50 டூ 100 mb ல பார்க்க கூடிய டீட்டெய்ல்... இதற்கு போய் சகோதரியின் எண்டெர்டெயின்மெண்ட்ல கை வெச்சிட்டீங்களே... ஞாயமா???

      நாடகம்லாம் ஒரு நாள் பார்க்கமுடியலனா தொடர்ச்சி விட்டு போய்....ஹூம்...

      இரத்தப்படலம்ல பாகம் 11ஐ உருவிட்டு மீதி தொகுப்பை வாசிக்க சொன்னா எப்படி இருக்கும் உங்களுக்கு????

      Delete
  75. தளத்தில் பெருமதிப்பிற்குரிய மிஸ்டர் கலீல் மற்றும் ரபீக் எனும் நண்பரின் முகநூல் பதிவில் நான் மற்றும் செயலர் அவர்கள் எல்லோரும் எச்சை களாம்..நேருக்கு நேராய் பேச தைரியம் இல்லாதவர்களாம் என்று ஒரு பூட்டிய வீட்டில் கத்தி கொண்டு இருக்கறார்கள் ..நீங்க எல்லாம் ஆம்பளைகளான்னு எனக்கு தெரியாது ஆனா நான் ஆம்பளை தான் அதான் பதிலை இங்கேயே சொல்லலாம்னு பாத்தேன்..ஆனால் ஆனால் ஆசிரியர் தளத்தில் உங்களுக்கு எல்லாம் பதில் சொல்வது எனக்கு அவமானம் ..மேலும் முக புத்தகத்தில் கண்டபடி வாசகர்களையும் ,ஆசரியரையும் கேவலப்படுத்துவதும் பின் இங்கே வந்து சார்..சார்..
    என்று கொஞ்சும் நபர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்றும் ஒன்று போல் இருக்கும் எங்கள் பதவிகள் தூக்கப்படுவதும் வழக்கம் என்பதால் உங்களுக்கான பதில் காமக்ஸ் எனும் கனவுலகம் எனும் முகபுத்தக முகவரிக்கு வரவும்.

    ReplyDelete