Saturday, May 08, 2021

All Roads to E-Road.....!!

 நண்பர்களே,

வணக்கம். சிரிக்கிறேன்...... கெக்கே பிக்கேவெனச் சிரிக்கிறேன்....! புதுசாய் என்ன கழன்று போச்சோ.....? என்ற பயமேயின்றிச் சிரிக்கிறேன்! பின்னே என்னங்க- ‘இடுக்கண் வருங்கால் நகுக‘ என்று தெய்வப் புலவரே சொல்லிப் போயிருக்கும் போது நாம் மகிழ்ந்திடாது இருந்தால் எப்படி? இதற்கு மேலொரு பிரளயம் காத்திருக்கக்கூடுமா? என்று உலகமே மலைக்கும் பரிமாணத்தில் நமக்கான இடுக்கண்கள் பிரவாகமெடுக்கும் போது – வேறென்ன செய்வதென்றே தெரியலை – பைத்தியக்காரனாட்டம் சிரிக்க மட்டுமே தோன்றுகிறது !

And கடந்த சில நாட்களில் மெய்யாலுமே நகைக்கவும் ஒன்றல்ல – இரண்டல்ல – மூன்றல்ல… நான்கு சந்தர்ப்பங்கள் அகஸ்மாத்தாய் வாய்த்தன தான் ! So இந்த வாரயிறுதியின் பதிவிற்கு அவற்றையே  ஆதாரமாக்கிடலாமா ? 

மே இதழ்களை முன்கூட்டியே உங்களிடம் ஒப்படைத்த கையோடு ஜுன் பணிகளுக்குள் தலைநுழைத்தாச்சு ! கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகளில் புது அரசும் (எதிர்பார்த்த) லாக்டவுணை அறிவித்திட, ஒரு மாதிரியாய் இதற்குத் தயாராகியிருந்த நமக்கு போனவாட்டி போல பெரும் ஷாக்கெல்லாம் இராதென்றே தோன்றுகிறது ! எது எப்படியோ, இந்தப் 14 நாள் விடுமுறைகளை படுத்துறங்கிக் கழிக்கும் மூடில்லை இம்முறை !  என்னவாகயிருந்தாலுமே நமது சக்கரங்களை ஓய்ந்திடச் செய்ய வேண்டாமே என்றுபட்டது ! "லீவுடோய் ; லாக்டௌன் டோய் !" என்று போன மார்ச்சில் மல்லாந்து படுத்துப் பழகிய பின்னே முந்தைய சுறுசுறுப்பை மீட்டெடுப்பது இன்று வரைக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது ! திரும்பவும் ஒருமுறை சோம்பலை துணையாக்கிடின், ரொம்பவே சிக்கலாக்கிடுமென்ற பயம் தான் ! So பேனாவும் கையுமாய் காலையில் மேஜையில் அமர்ந்த போது, காத்திருந்தது “ஒரு தோழனின் கதை” கிராபிக் நாவல் தான் ! பொதுவாய் பிரெஞ்சிலிருந்தான ஆங்கில மொழிபெயர்ப்பின் ஸ்கிரிப்ட்கள் பீம்பாய்கள் போல செம ஆகிருதியாய் இருப்பது வழக்கம் ! குறைந்த பட்சம் 45 A4 பேப்பர்கள் ; பல சமயங்களில் இன்னமும் ஜாஸ்தி என்றேயிருக்கும்! ஆனால் இம்முறையோ surprise… surprise… சுமார் 82 பக்கங்கள் கொண்ட கதைக்கான பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்டானது வெறும் 16 பக்கங்களில் மட்டுமே இருந்தது ! செம ஜாலியாய் பக்கங்களை புரட்டினால் – போன வருஷமே என்னை இனம்புரியா வகையில் வசியம் செய்த அந்த ஜாலியான சித்திரபாணியில் பக்கங்கள் சொற்பமான வசனங்களோடே ஓட்டமெடுப்பதைக் கவனிக்க முடிந்தது ! “ஜுப்பருடா… ஜுப்பர்… ஜுப்பர்” என்றபடிக்கே வேலையைத் துவக்கிட – முதல் 10 பக்கங்களை முடித்த போது சந்திரமுகியில் பேஸ்தடித்து நிற்கும் வடிவேல் போலாகியிருந்தேன் ! கி.நா.க்களில் பணியாற்றி சின்னதொரு இடைவெளி விழுந்திருந்தது மாத்திரமன்றி, இந்தக் கதையின் ஓட்டமும் ஒரு புதிராகவே காட்சி தந்தது தான் எனது 'வடிவேல் வதன' காரணமாகியிருந்தது ! எங்கே ஆரம்பிக்குது ? எங்கே இட்டுச் செல்கிறது ? என்ன மாதிரியான கதையிது ? என்று எதுவுமே கிரகிக்க முடிந்திருக்கவில்லை ! போன வருஷம் இதைத் தேர்வு செய்த போது நான் எடுத்திருந்த சிறு குறிப்புகளைத் தேடிப்பிடித்து மறுக்கா ‘செக்‘ பண்ணிய போது – அதிலிருந்த கதைச் சுருக்கத்தையும், எனது முதற்பத்துப் பக்க மொழிபெயர்ப்பு அனுபவத்தையும் முடிச்சுப் போடவே முடியலை ! “ரைட்டு… கொரோனா லாக்டவுண் மாசமிது !! ஆகையாலே கி.நா.வை ஒத்திப் போடறோம் மகாசனங்களே!” என்று சொல்லிப்புடலாமா? என்ற யோசனை மெதுமெதுவாய் எட்டிப் பார்க்கத் தொடங்கிருந்தது ! ஆனால் அந்தச் சித்திரங்களும் சரி, கதையின் மையப்புள்ளியான ஒரு 50 வயசு ஆணின் கதாப்பாத்திரமும் சரி, ஏதோ ஒரு விதத்தில் என்னுள்ளே ஸ்னேகத்தை உருவாக்கிட, எப்படியாச்சும் கரைசேர்க்க முயற்சிக்கணுமே என்ற வேகம் எழுந்தது ! 

ஏற்கனவே நான் சொன்ன விஷயம் தான் – எப்போதுமே பேனா பிடிக்கும் போது கதையை நான் முழுசுமாய்ப் படித்திடுவதே கிடையாது தான் ! சஸ்பென்ஸோடே நானுமே பயணிப்பது தான் எனது சோம்பேறிமாடன் பாணி ! ஆனால் இந்தவாட்டி அந்த ஆங்கில ஸ்க்ரிப்டை முழுசாய்ப் படிச்சிடலாம்; வெறும் 16 பக்கங்கள் தானே?! என்றபடிக்குப் புரட்ட ஆரம்பித்தேன்! 20 நிமிஷங்கள் தாண்டியிராது – ஸ்க்ரிப்டைக் கீழே வைத்து விட்டு சிரித்தேன்… ரசிச்சு, ரசிச்சு சிரிச்சேன்!

நான் சிரிச்சதற்குக் காரணங்கள் 3 ! முதலாவதும், பிரதானமானதும் – கதைக்கோசரம்! In fact இதைக் "கதை" என்பதோ; இப்படியொரு சமாச்சாரத்தை கற்பனையில் உருவகப்படுத்தியவரை "கதாசிரியர்" என்றோ வெறுமனே விளிப்பது தப்பு என்பேன்! ஒரு அசாத்தியக் கற்பனையுடன் திருமணமான 50s ஆண்களின் வாழ்க்கையினை இத்தனை ரசனையாய்ப் பகடி செய்துள்ளவரை இன்னும் ஏதாவதொரு சிறப்பான அடையாளத்தால் சிலாகிப்பதே முறையாகயிருக்கும் ! வீட்டில் பிடுங்கல்… தொழிலில் மந்தம்… பொதுவான சிடுசிடுப்பு – என நம்மில் ஒருவராய்த் திரியும் அதன் மையக் கதை மனிதனிடம் திருமணமான ஆண்களெல்லாமே ஒன்றிப் போக ஏதாவதொரு சமாச்சாரம் இல்லாது போகாது என்றுபட்டது! சொல்ல வந்த விஷயம் அழகான one-liner தான் ! ஆனால் சொன்ன விதமானது, இந்த மண்டை காயச் செய்யும் நாட்களிலும் நகைக்கும் விதமிருந்தது செம ஸ்பெஷல் !

சிரிப்பின் காரணம் # 2 நீங்கள் ! இந்த ஆல்பத்தை ஜுன் மாதம் படித்த பிற்பாடு சித்தே நேரத்துக்கு நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் மலங்க மலங்க முழிக்கப் போகிறீர்கள்.....? கொஞ்ச நேரமான பிற்பாடு – சுதாரிச்சபடியே என்னை, வெளுத்தெடுக்க எங்கெல்லாம் துடைப்பங்களைத் தேடப் போகிறீர்கள் ? என்பதை கற்பனைகளில் உருவகப்படுத்திப் பார்க்க முயன்றேன் – பீரிட்ட சிரிப்பை அடக்க முடியவில்லை ! Of course – ரக ரகமான துடைப்பங்களும், பேட்டா தயாரிப்புகளும் சிவகாசி நோக்கிப் படையெடுக்கும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை ! FB-யிலும் சரி; உங்களது க்ரூப்களிலும் சரி, கூடுதல் உத்வேகத்தோடு துவைத்தெடுக்கப் போகிறீர்கள் என்பதுமே ஸ்பஷ்டமாகப் புரிகிறது ! ஆனால் வண்ணான்துறையில் காணாமல் போகும் ஜாக்கி ஜட்டிகளுக்குக் கூட சாத்து வாங்கிப் பழக்கப்பட்டவன் – இது மாதிரியானதொரு வித்தியாசமான படைப்பின் பொருட்டு சாத்து வாங்கிடத் தயக்கம் காட்டுவேனா – என்ன?

சிரிப்பின் காரணம் # 3 என்னை நினைத்தே...; எனது பிரசவ கால வைராக்கியங்களை நினைத்தே ! இதோ- 2 நாட்களுக்கு முன்பு வரை “இந்தப் பிரளயக் காலங்களில் no more விஷப்பரீட்சைகள்! எல்லாமே பத்திரமான, உத்தரவாத ஹிட் களங்களை மட்டுமே இனி தேர்வு செய்யணும்” என்று எனக்கு நானே சொல்லியிருந்தேன்! ஆனால் – ஆனால் – இதோ ஒரு உச்சக்கட்ட கோக்குமாக்கு ஆல்பத்தோடு பயணித்த களிப்பில் “கி.நா. காட்டுக்குள்ளாற வண்டியை விடுடா சம்முவம்”! என்று கூவத் தோன்றுகிறதே – அந்த முரணை நினைத்தேன் ; சிரிச்சேன்!

சிரிச்சு முடிச்ச சமயம் புத்துணர்வோடு பேனாவை மறுக்கா பிடிச்சவன் – அடுத்த இரண்டரை மணி நேரங்களில் 82 பக்கங்களையும் போட்டுத் தள்ளியிருந்தேன்! The last time ஒரு கதையை ஒரே நாளில் எழுதியது – க்ளிப்டனின் “7 நாட்களில் எமலோகம்” வெளியான போது தான்! அதற்கு பின்பு இது தான் ஒரே நாள் சலவை என்று நினைக்கிறேன்! இந்தக் கதையில் தூவலாய் 'அடல்ட்ஸ் ஒன்லி' சமாச்சாரங்கள் உள்ளன! ஆனால் கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள் என்பதால் விரசமே தெரியலை ! தவிர, கதையின் நாயகன் ஒரு 50 வயதினன் எனும் போது அவனை விடலைப்பருவத்துக் கூச்ச நாச்சங்களோடு உலவச் செய்தால் ரொம்பவே பிசிறடிக்குமென்றுபட்டது! ஆகையால் no censors ! And முன்னட்டையிலேயே Recommended for 18+ என்று அச்சிட்டும்  விட்டோம்! So “முழியாங்கண்ணனும், கலாச்சாரச் சீரழிவும் : குற்றம்ம்ம்ம்ம் !! நடந்தது என்ன ?” என்று கட்டுரை படைக்கத் துடிக்கும் புரவலர்கள் மன்னிச்சூ! இது கத்திரி போட சுகப்படா ஆல்பம் என்பதை நீங்களும் புரிந்திடுவீர்கள் ! In any case, இதழ் கைக்கு வந்த பிற்பாடு,என்னைச் சாத்தியெடுக்க உங்களுக்குக் கணிசமான இதர சமாச்சாரங்கள் இல்லாது போகாதென்பதால் “Bashing the Baldy” ஆட்டத்தை வேறு ஏதாச்சும் காரணத்தை கையிலெடுத்து, வழமை போல ஜாலியாய் ஆடிடலாம் தான் ! And இதோ - செம மாறுபட்ட பாணியிலான புக் வடிவமைப்பும் ; சித்திர பாணியும் ; கலரிங் ஸ்டைலும் கொண்ட உட்பக்கங்களின் பிரிவியூ !! அட்டைப்படத்தை புக் வெளியாகும் நாளில் பார்த்துக் கொள்வோமே guys !


Moving on, நான் சிரிக்கக் கிட்டிய முகாந்திரம் # 2 ஜுலையில் வரவுள்ள நமது லக்கி லூக் டபுள் ஆல்பம் தந்த அனுபவத்தின் பலன் தான்! அதனில் முதல் கதையான “வால் முளைத்த வாரிசு” இங்கிலீஷில் ரொம்ப ரொம்ப சமீபத்தில் வெளியான கதை ! மேம்போக்காய் மட்டும் அதனைப் புரட்டியிருந்தவன் வியாழன்று நம் கையிலுள்ள Cinebook ஸ்டாக்கிலிருந்து இதை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தேன் ! “ஒரு தோழனின் கதை” எதிர்பார்த்ததை விட செம சுளுவாய் பணி முடிந்திருக்க, லக்கியை எழுத ஆரம்பிக்கலாமென்று பிள்ளையார் சுழி போட்டேன் ! இரண்டோ-மூன்றோ பக்கங்களைப் புரட்டிய நொடியே அத்தனையையும் தூர வீசிவிட்டு, லக்கியோடும், ரின்டின் கேனோடும், டால்டன்களோடும் அந்த 46 பக்கப் பயணத்தில் ஐக்கியமானேன் ! ஆத்தாடியோவ்... லக்கியின் Golden Age கூட்டணியாக Goscinny + Morris கைவண்ணத்தில் 1973-ல் வெளியான ஆல்பம் என்பதால் கதையோட்டத்திலும் சரி, கதையோடே இழையோடும் நகைச்சுவைகளிலும் சரி- இரு ஜாம்பவான் படைப்பாளிகளும் அதகளம் செய்திருக்கின்றனர்! பக்கத்துக்குப் பக்கம் ரின்டின் கேன் அடிக்கும் லூட்டிகளும், ஆவ்ரெல் டால்டனின் அம்மாஞ்சி அதகளங்களும், கதை நெடுகே பயணிக்கும் சீனர்களும் அடிக்கும் சிரிப்பு சிக்ஸர்கள் ஒவ்வொன்றும் தெறி ரகம் ! பக்கங்களைப் புரட்டப் புரட்ட, என் விரல்களில் நமைச்சல் எடுக்காத குறை தான் – மொழிபெயர்ப்பில் ஸ்கோர் செய்திட எண்ணிலடங்கா வாய்ப்புகள் காத்திருப்பதைக் கண்டு ! நான் என்றைக்குமே கார்ட்டூன் காதலர் கட்சி தான்; ஆனால் இதோ இந்த லக்கியின் அதகளத்தை (சு)வாசித்த பிற்பாடு சொல்கிறேன் – கார்ட்டூன்களை பின்சீட் பயணிகளாய்க் கருதும் நண்பர்கள் சத்தியமாய் வாழ்வின் ஒரு அற்புத வசந்தத்தை சுவாசிக்க மிஸ் பண்ணுகிறார்கள்! Guys  – you are missing out on some serious fun !! எது எப்படியோ -  ஜுலை மாசமே – நீ வாராய்... விரைந்து வாராய்!!

சிரிப்பின் காரணம் # 3 - இதோ கீழேயுள்ள பக்கங்களைப் பார்த்ததன் பலனாகவே! பொறுமையாய் 2 பக்கங்களையும் கவனியுங்களேன் – ரொம்பவே பரிச்சயமான 2 பாணிகள் இடம் மாறிக் கிடப்பது புரியும் ! விஷயம் இது தான் : ப்ரெஞ்சில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த Pilote எனும் காமிக்ஸ் வாரயிதழில் லக்கி லூக்கின் ஓவிய ஜாம்பவான் மோரிஸும் பணியாற்றி வந்தார் ; கேப்டன் டைகரின் அசாத்தியரான ஜிரௌவும் பணியாற்றி வந்தார் ! லக்கி லூக் தொடரும் பின்னியெடுத்து வந்தது  ; கேப்டன் டைகர் (Lt. Blueberry) கதைகளும் உச்ச வரவேற்பைப் பெற்று வந்தன! Pilote இதழின் எடிட்டர் – 2 ஓவியர்களையும் அழைத்து – டைகர் சித்திர பாணியில் லக்கி லூக்கையும்; லக்கி லூக் பாணியில் டைகரையும் வரைந்து தருமாறு கேட்டிருக்கிறார் ! அந்தக் குசும்பின் பலனே இரு ஜாம்பவான்களின் இந்த அட்டகாசங்கள் !!

சிரிப்பின் நான்காம் முகாந்திரம் சற்றே வில்லங்கமானது ; சுஜாதா அவர்களின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல ! அதைப் பற்றி விலாவரியாக நான் விவரித்தால், "மு.க.கலா.சீ. பார்ட் 2" எழுத நினைப்போருக்கு நானே வாகாக points எடுத்துத் தந்தது போலிருக்கும் ! அதற்கோசரமாய் you’ll owe me one ஆர்வலர்கள்ஸ்  ! But இந்தப் பதிவு நீண்டு கொண்டே போவதால் – அதைப் பற்றி இன்னொரு தருணத்தில் !

ரைட்டு... சுற்றியும் பேரழிவும், பிரளயமும் உலுக்கியெடுக்கும் வேளைதனில் நான் பல்லைக் காட்டிய கதைகளை நீட்டித்துப் போக மனசில்லை ! So நடையைக் கட்டலாமென்றுபடுகிறது ! While on the topic of பேரழிவு & பிரளயம் – இந்தத் தலைப்புகள் பற்பல காமிக்ஸ் படைப்பாளிகளின் ஆதர்ஷக் களங்களாக இருப்பது நினைவுக்கு வருகிறது ! ஏதோவொரு காரணத்தின் பொருட்டு பேரழிவு காணும் பூமியில் எஞ்சியிருப்போரின் சவால்கள் தான் ஜெரெமியாவில் துவங்கி ; தற்போதைய “Alone” தொடர் வரையிலும் பின்புலங்கள் ! 

நம்மிடமும் கொஞ்ச காலமாகவே துயில் பயின்று வரும் ஒரு ஆல்பமானது இந்த பாணியிலானது தான் ! In fact அது உங்களுக்குப் புதிதே அல்ல ! 

ரொம்ப காலம் முன்னே (late ‘80s ? early 90’s ??) தினமலர் சிறுவர் மலரில் தொடராக “உயிரைத் தேடி” என்ற பெயரில் ஓடிய நெடும் சாகஸமே அது! ஒரு பிரளய உலகினில் எஞ்சியிருக்கும் அணியினரின் அசாத்திய அனுபவங்களை அந்நாட்களில் வாய் பிளந்து படித்தோரில் நானுமே ஒருவன் தான் ; என்ன - இப்போது ரொம்ப சொற்பமே நினைவில் தங்கியுள்ளது ! இது ஒரு classic பிரிட்டிஷ் தயாரிப்பென்பதால் மூக்கைச் சிந்தி, கண்ணீர் விட்டு அழச் செய்யும் முடிவுகளெல்லாம் இராது என்பது மட்டும் ஞாபகத்தில் உள்ளது ! Maybe... just maybe உங்களில் பலரது பால்யங்களது நினைவுகளின் ஒரு அங்கமான இந்தக் கதையை ஒரு 192 பக்க முழுநீள ஆல்பமாக வெளியிட்டால் ரசிக்குமென்று நினைத்தேன் ! So Jose Ortiz அவர்களின் அசாத்தியச் சித்திரங்களுடன் இந்த black & white ஆல்பம் நமது “E-Road ஆன்லைன் புத்தக விழாவின் சிறப்பிதழ் # 1” ஆக ஆகஸ்டின் நடுவினில் வாகானதொரு பொழுதில் வெளிவந்திடும் ! (E-Road பெயர் உபயம்: நண்பர் காமிக்ஸ் லவர்) And இந்த சாகஸத்தின் ஒரிஜினல் கதாசிரியரையே நமக்காக ஒரு சின்ன முகவுரை எழுதக் கோரியுள்ளேன் & அவரும் சம்மதித்துள்ளார் !  So ஒரு முழுநீளக் கதையாய் இந்த இதழ் அழகாய் அசத்திடும் என்று நம்பலாம்  ! 

இங்கே "E-Road" என்ற பெயர் சூட்டலோடு இன்னொரு பெயர் உபயமும் கோரிட உள்ளேன் – உங்கள் அனைவரிடமும் !! “உயிரைத் தேடி” என்ற பெயரில் உங்களுக்கெல்லாம் பரிச்சயமான அந்தக் கதைக்கு நாம் என்ன பெயர் வைக்கலாம் ? Left to me, நான் பாட்டுக்கு "முடிவில் ஒரு ஆரம்பம்..!" என்றோ “காலனோடு கண்ணாமூச்சி” என்றோ ; “ஜீவிக்க விரும்பு” என்றோ ஏதாச்சும் பெயரை வைத்து விடுவேன் ! ஆனால் நெடும் தொடராய் ஓடி, உங்கள் மனங்களில் பதிந்திருக்கக் கூடிய பெயரினை சிதைச்ச பாவத்தையும்; சாபத்தையும் சம்பாதிக்க வேண்டாமே என்று பார்த்தேன்! So "பெயரிடும் படலம்"  (if needed) உங்கள் பாடு சாமீஸ் ! What'd be your suggestion(s) ? மேற்படி மூன்றினில் ஏதோவொன்று ஓ.கே.வா ?

Here you go - ஆல்பத்தின் உட்பக்க preview : 


And "இதைக் கலரிலே போடலாமே??!! என்ற கொடி பிடித்திட வேண்டாமே ப்ளீஸ்? Simply becos ஓவியர் Jose Ortiz-ன் dark shades நிறைந்த சித்திரங்களுக்கு வண்ணமூட்டுவது சுலபமே அல்ல ! And பக்கத்துக்குப் பக்கம் படைப்பாளிகளிடம் காட்டி, அவர்கள் சொல்லக்கூடிய அத்தனை திருத்தங்களையும் செய்து approval வாங்கிய பிற்பாடே அச்சிட முடியும் ! 188 பக்கங்கள் கொண்ட இந்தக் கதைக்கு நாம் அந்த மெனக்கெடல்களுக்கு தயாராகிட்டாலுமே, ஒரு நெடும் லாக்டௌன் முடிந்து இப்போது தான் மெது மெதுவாய் இயல்புப் பணிகளுக்குத் திரும்பிவரும் படைப்பாளிகள் இந்த வேளையில் அதற்குத் தயாரில்லை ! So ஒரிஜினல்படியே black & white-ல் வெளியிடுவதே படைப்பாளிகளின் பரிந்துரை ! தவிர, இருநூறு ரூபாய்க்கோ ; இருநூற்றி இருபத்திஐந்து ரூபாய்க்கோ முடிய வேண்டியதை 'வண்ணத்தில் போடுகிறேன் பேர்வழி'' என்று ரூ.400 பட்ஜெட்டுக்கு கொண்டு நிறுத்தி வேக்காடு வைக்கவும் இந்த வேளைதனில் மனசு ஒப்பவில்லை ! ஆகையால் Color கோரிக்கை வேணாமே ப்ளீஸ் ? 

E-ROAD ஆன்லைன் விழாவினில் நமது "இரத்தப் படலம்" தொகுப்பின் எத்தனையாவதோ ரிலீஸுமே இருந்திடும் ! தற்போதைய முன்பதிவு நம்பர் நிற்பது 247-ல் ! Steady progress !! 

And அந்த ஆன்லைன் விழாவின் ஏதேனும் ஒரு தருணத்தில் ZOOM மீட்டிங் ஒன்று போட்டு ஒரு கலந்துரையாடலையும் நடத்திட எண்ணுகிறேன் ! காத்திருக்கும் 2022-க்கும் ; முத்து காமிக்சின் 50-வது ஆண்டு விழாவிற்குமென உங்களின் suggestions எனக்கு நிரம்பவே தேவைப்படும் ! So E-Road நோக்கி இப்போதே சிந்தனைகள் ஓட்டமெடுக்கின்றன ! And சந்தர்ப்பம் வாய்த்தால் ஒரு ஜாலியான புத்தக விழா ஸ்பெஷல் # 2 ஆஜராகிடவும் கூடும் ! Fingers crossed !! 

Before I sign out - சின்னதொரு கொசுறு அறிவிப்புமே

அடுத்த 14 நாட்களுக்கு நமது அலுவலகங்கள் லாக்டௌனில் இருந்திடுமென்றாலும் - இம்முறை பெருசாய் நெருடலில்லை ! கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை மாதங்களாகவே வீட்டிலிருந்தபடியே பணிசெய்து பழகிப் போய்விட்டதால் என்மட்டுக்கு will be work as usual ! அதே போல நமது DTP அணியினர் ஒவ்வொருவருக்கும் வீட்டுக்கே லேப்டாப்களைத் தந்தனுப்பி ரெகுலராய் பணியாற்றச் சொல்லியுள்ளோம் ! God Willing - 24 மே அன்று நிலவரங்கள் சற்றே நலம் கண்டு, அடைப்பு விலக்கப்படும் பட்சத்தில் - உடனே அச்சுக்குக் கிளம்பிடுவோம் - ஜுனின் சகல வெளியீடுகளோடும் !! இப்போதே கிட்டத்தட்ட 70 சதவிகிதப் பணிகள் over !

இடைப்பட்ட இந்த 15 நாட்களிலும் போன வருஷம் போல மொக்கை மொக்கைப் பதிவுகளையாய்ப் போட்டுத் தாக்காது - தினமும் குட்டிக் குட்டியாய் ஒரு update செய்திட எண்ணியுள்ளேன் ! நமது 2 பாசிட்டிவ் ஜாம்பவான்களான லக்கி லூக் & டெக்ஸ் வில்லர் மட்டுமே இந்த UPDATE 15-ன் நாயகர்களாக இருப்பார்கள் ! இந்தச் சிரம நாட்களில் நாம் தொடர்ந்து தொடர்பிலிருப்பதற்கும் ; நமது ஆதர்ஷ நாயகர்களின் உபயத்தில் சற்றே ரிலாக்ஸ் செய்வதற்கும் இது உதவிட்டால் சூப்பர் !!

And here's UPDATE # 1 :

இரவுக்கழுகாரின் கதைகளின் பின்னணியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவிற்கான creators இருப்பது நாம் தெரிந்த விஷயமே ! எக்கச்சக்க டீம்கள் ஒரே நேரத்தில் டெக்சின் புதுக் கதைகளை உருவாக்கிக் கொண்டேயிருப்பர் ! சில நேரங்களில் - "ஒரே ஹீரோவை இத்தினி பேர் கற்பனைகளில் கையாண்டால் சொதப்பிடாதா ? ஆளாளுக்கு ஒரு விதமாய் நாயகரை இட்டுச் சென்றது போலாகிடாதா ?" என்ற நினைப்பு எழுவதுண்டு தான் ! ஆனால் அதற்கொரு செம பாசிட்டிவ் முகமும் உண்டென்பதை வெகு சமீபமாய் உணர முடிந்தது ! இதோ - கீழுள்ள 2 ராப்பர்களும் டெக்சின் வெகு சமீபப் படைப்புகளின் அட்டைப்படங்கள் ! மாமூலான வன்மேற்கின் சமாச்சாரங்களுக்கொரு மாற்றமாய் இருக்கட்டுமென்று - ஒரு ஜாக்கி சான் பாணியிலான சீனக் கதாப்பாத்திரத்தை Antonio Zamberletti எனும் புதுக் கதாசிரியர் சிருஷ்டித்துள்ளார் பாருங்களேன் ! 



இவர் போனெல்லியின் இன்னொரு ஹீரோவான ZAGOR-க்கு கதை எழுதுபவர் ; வெகு சொற்பமாகவே டெக்ஸுக்குப் பேனா பிடித்துள்ளார் ! ஆனால் ஆரம்பங்களே புது ரூட்டில் என்பது போல், ஒரு ஷாவோலின் துறவியை கொண்டு இந்த சாகசத்தை உருவாக்கியுள்ளார் ! அதன் பலனாய் நம்மவரும் குங் பூ போட நேருமோ - என்னவோ ? கார்சனை கொஞ்சமாய் கற்பனை செய்து தான் பாருங்களேன் - drunken monkey ஸ்டைலில் நிற்பது போல !! இந்தக் கதையினை வரவழைத்துப் பரிசீலிக்க எண்ணியுள்ளேன் ; புதுமை கதையிலும் தொடர்ந்தால் 2022-ல் இந்த சீனப் பார்ட்டியும் இடம் பிடித்திருப்பார் ! பார்ப்போமே !!

ரொம்ப நாள் கழித்தான ஒரு L.I.C. பதிவை இந்தப் புள்ளியில் நிறைவு செய்த கையோடு, லக்கி லூக் ஆல்பத்தினுள் தாவப் புறப்படுகிறேன் folks! ரின் டின் கேன் வெயிட்டிங் !!

 Have a Safe Weekend all! See you around! Bye for now !

260 comments:

  1. நானே நானா ? யாரோ தானா ?

    ReplyDelete
    Replies
    1. கள்ளாட்டை சார் இது😜😜😜

      Delete
    2. உள்ள நீங்க.. வெளிய நாங்க..
      வெளிய நாங்க.. உள்ள நீங்க..
      நீங்க நீங்கதான்.. நாங்க நாங்கதான்..
      ஆனா.. யாரு நீங்க.!?

      Delete
    3. புத்தகங்கள் 24 ந்தேதிக்கு வருமென்பதே கடந்த 5 நாட்களில் நான் கேட்ட நல்ல சேதி

      Delete
  2. Hi Sir, hello sir. Yes you are the 1st. But, ,இது போங்கு ஆட்டம் சார்!

    ReplyDelete
  3. இனி யாஹீ...ஹீ...ஹீ..க்கு பதிலாக ஊ..ஆ..ஊ...ஈய்யா...வா...!!!(உபயம்: ஜாக்கி"டெக்ஸ்")

    ReplyDelete
  4. பதினொண்ணாவதுங்

    ReplyDelete
    Replies
    1. பதிவு சூப்பர் சார். நான் விரும்புவது உயிரைத் தேடி என்கிற தலைப்பே.. அது எனது சிறுபிராயத்தின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த தலைப்பு.. அப்படியே தலைப்பைக் கையாள்வது இயலாத காரியமென்றால் மாற்றி விடலாம்.. Pls consider. டெக்ஸ் வித் சைனீஸ்.. மிரட்டல்..

      Delete
  5. ///நான் என்றைக்குமே கார்ட்டூன் காதலர் கட்சி தான்; ஆனால் இதோ இந்த லக்கியின் அதகளத்தை (சு)வாசித்த பிற்பாடு சொல்கிறேன் – கார்ட்டூன்களை பின்சீட் பயணிகளாய்க் கருதும் நண்பர்கள் சத்தியமாய் வாழ்வின் ஒரு அற்புத வசந்தத்தை சுவாசிக்க மிஸ் பண்ணுகிறார்கள்!///

    வணக்கம்! வளர்க கார்ட்டூன்!!

    ReplyDelete
  6. Replies
    1. ஒங்க வசதிக்கோசரம் தான் தலீவரே !

      Delete
  7. உயிரைத் தேடி” என்ற பெயரில் உங்களுக்கெல்லாம் பரிச்சயமான அந்தக் கதைக்கு நாம் என்ன பெயர் வைக்கலாம் ?


    *******


    உயிரைத் தேடி....

    ReplyDelete
    Replies
    1. "த லயன் 250"---போல கொஸ்டியனையே ஆன்ஸராக போட்டு மற்றொரு க்ளிக்கா தலீவரே... செம..!!!

      பஞ்சாயத்து ஓவர்...

      """" உயிரைத்தேடி""""

      Delete
    2. பஞ்சாயத்து நீண்டுச்சுன்னா அப்புறம் நடுச்சாமம் ஏழு மணிக்கும் கூட ஜமுக்காளத்தை சுருட்ட முடியாதில்லையா ? அதான் சட்டுப்புட்டுன்னு தீர்ப்பை சொல்லிட்டாரு நாட்டாமைக்காரு !

      Delete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. கண்டுபிடிச்சிட்டேன்இது கார்ட்டூனும்அல் ல
    ஸயன்ஸ்பிக்ஷனும் அல்ல. அயல்நாட்டவர்களின் (பாக்யராஜ் டைப்) குடும்பக்கதை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி சார் ! ஆனாப் பாருங்க - புக் வந்த பிறகு உங்க கண்டுபிடிப்பு தெர்மோகோல் ட்ரீட்மெண்ட் கதையாகிடப் போகுது !

      Delete
  10. இரும்புக்கை மாயாவி கொரில்லா சாம்ராஜ்யம்.....

    செம்ம தரம். புத்தக சைஸும் சரி ஆர்ட் பேப்பரும் சரி, வண்ணங்களும் சரி, அச்சு தரமும் சரி சூப்பர் !!!

    இனி இரும்புக்கை மாயாவி கதை B&W ல் வருங்காலத்தில் வந்தால் படிக்க முடியுமா தெரியவில்லை

    அட்டை பட ஒவியம் மட்டும் திருஷ்டி!

    ReplyDelete
    Replies
    1. U.K-ல் படைப்பாளிகளின் பாராட்டை ஈட்டிய அட்டைப்படம் சார் இது ! சரியாக மூன்றே நிமிடங்களில் ஒரு ஸ்மைலியுடன் ஒப்புதல் தந்திருந்தார்கள் - துளி திருத்தம் கூடக் கோரிடாமல் !

      Delete
  11. போன வருடம் இது போல வந்த கிராஃபிக் நாவல் கண்ணான கண்ணே தான் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது அது போல இந்த முறை இந்த கிராஃபிக் நாவலும் சூப்பர் ஹிட் தான். வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. லக்கி எப்போதுமே எனது ஆதர்ஷ நாயகர்களில் ஒருவர். ஜூலை ஆண்டு மலர் எப்போதும் போல இந்த வருடமும் சூப்பர் ஹிட் ஆக அமையும் என்று உங்கள் முன்னோட்டம் சொல்லிவிட்டது.

    ReplyDelete
  14. சார்..உயிரைத் தேடி என்னும் டைட்டில் வைப்பதில் ஏதும் சிக்கல் இல்லை எனில் அதையே வைக்கலாம். அறிமுகமான தலைப்பாச்சே?

    ReplyDelete
    Replies
    1. No சிக்கல்ஸ் சார் !

      பெரும்பான்மைக்கு இது பிடிக்கிறதோ - அதையே வச்சிடலாம் !

      Delete
  15. ERoad புத்தக விழா தகவல் மகிழ்ச்சி. உங்களை, நண்பர்களை zoom மீட்டிங்கில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. Looking forward to that.

    ReplyDelete
  16. டெக்ஸ் update சூப்பர் சார். அடுத்த வருடம் இந்த கதைக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  17. சார்..உயிரைத் தேடி என்னும் டைட்டில் வைப்பதில் ஏதும் சிக்கல் இல்லை எனில் அதையே வைக்கலாம். அறிமுகமான தலைப்பாச்சே?

    --- வழிமொழிகிறேன்

    ReplyDelete
  18. அதே களம் அதே காலகட்டம் அதேநாயகர் என்ன வித்தியாசம் காட்டமுடியும். இதோ போனெல்லி டீம் தெறிக்கவிடறாங்க பாருங்க. புத்தகம் எப்பவரும்ங்கற எதிர்பார்ப்பு இப்பவேஆரம்பிச்சுருச்சு டெக்ஸ் ஒன்லி டெக்ஸ. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  19. நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீளப் பதிவுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  20. ///“உயிரைத் தேடி” என்ற பெயரில் உங்களுக்கெல்லாம் பரிச்சயமான அந்தக் கதைக்கு நாம் என்ன பெயர் வைக்கலாம் ?///

    உயிரைத் தேடி..

    ReplyDelete
    Replies
    1. ஆழமான அலசல் !!

      Delete
    2. ஆம் சார்...வெகு ஆழமான ....அலசல்...:-)

      Delete
  21. உயிரைத்தேடி வருவது மிகவும் மகிழ்ச்சி சார் அதற்கு காலனோடு ஒரு கண்ணாமூச்சி டைட்டிலே நல்லாயிருக்கு! பல பேருடைய ஆவல் ஆகஸ்டிற்கு வெயிட்டிங்

    ReplyDelete
    Replies
    1. தொட்டு விடும் தொலைவு தானே சார் ஆகஸ்ட் !

      Delete
  22. /// ! So Jose Ortiz அவர்களின் அசாத்தியச் சித்திரங்களுடன் இந்த black & white ஆல்பம் நமது “E-Road ஆன்லைன் புத்தக விழாவின் சிறப்பிதழ் # 1” ஆக ஆகஸ்டின் நடுவினில் வாகானதொரு பொழுதில் வெளிவந்திடும் !///

    முழுவண்ணத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் சார்.!
    வாய்ப்பில்லை.. கருப்பு வெள்ளைதான் என்றாலும் ஓ.கேதான்.!

    ReplyDelete
    Replies
    1. முழுவண்ணத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் சார்.! //
      +1000

      Delete
    2. அது வந்துங்கண்ணா ....அந்த பதிவை இன்னொருக்கா படிங்களேண்ணா !

      Delete
    3. வாய்ப்பே இல்லைன்னு தெரிஞ்சாலும் சைட் அடிக்கிறதில்லையா.. அதேமாதிரிதான் சார் இதுவும்.! சும்மா கேட்டுப் பாக்குறதுதான்.!

      (உண்மையை சொல்லணும்னா பதிவை முழுசா படிக்கலை.. சாரி சார்! )

      Delete
    4. எப்பவுமே இந்த கிட் அங்கிள் முழுப்பதிவையும் படிப்பதில்லை போல...

      பதிவு இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கனுமா கிட் அங்கிள்...

      சின்னத்தம்பி படத்துல நம்ம பெல் அங்கிள் சொல்ற மாதிரி 'சாயந்திரத்துக்கு மேல ஒரு கோடி ருபாய் கொடுத்தாலும்...' மாதிரி இருக்குமோ...



      Delete
    5. பல்லி மாதிரி செவத்தோரம் ஒட்டிட்டிருப்பாரு அவ்வளவு தானே.

      Delete
  23. "உயிரைத் தேடி" இந்த தலைப்பே அருமை சார்... அப்படி எதுவும் கூடாது... Rights issue என்றால்...

    வாழ்வை நாடி...

    வெளிச்சத்தை தேடி...

    பாதை எங்கே...

    வாழ்வின் பயணம்...

    விடியல் எங்கே...

    வானம் வெளுக்கட்டும்...

    அகலுமா இருள்...

    இவ்ளோதான் இப்போதைக்கு...

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக சினிமா தலைப்புகள் போல கதையின் பெயரையும் பதிவு செய்திருந்தால் மட்டுமே rights issue எழும் சார் ; ஆனால் அதுவுமே கூட இது போன்ற தருணங்களில் பொருந்திடாது - ஏனெனில் மொழிபெயர்ப்பினில் துவங்கி ,அட்டைப்படம், தலைப்பு என சகலமுமே படைப்பாளிகளின் உடைமைகள் தான் ! பேனா பிடிப்பதோ, தூரிகை பிடிப்பதோ நாமாக இருந்தாலுமே அவற்றின் ultimate உரிமையாளர்கள் creators தான் !


      ஆனா உங்க தலைப்புகளும் சூப்பர் சார் !

      Delete
  24. மனசே சரியில்லை சார்...நெஞ்சே எழு படிச்சிட்டிருக்கேன்....சான்சே இல்ல...நண்பர்கள் டெக்ச ஆரவாரமாய் தேடும் காரணத்த உணர்கிறேன்

    ReplyDelete
  25. //இடைப்பட்ட இந்த 15 நாட்களிலும் போன வருஷம் போல மொக்கை மொக்கைப் பதிவுகளையாய்ப் போட்டுத் தாக்காது - தினமும் குட்டிக் குட்டியாய் ஒரு update செய்திட எண்ணியுள்ளேன் ! நமது 2 பாசிட்டிவ் ஜாம்பவான்களான லக்கி லூக் & டெக்ஸ் வில்லர் மட்டுமே இந்த UPDATE 15-ன் நாயகர்களாக இருப்பார்கள் ! இந்தச் சிரம நாட்களில் நாம் தொடர்ந்து தொடர்பிலிருப்பதற்கும் ; நமது ஆதர்ஷ நாயகர்களின் உபயத்தில் சற்றே ரிலாக்ஸ் செய்வதற்கும் இது உதவிட்டால் சூப்பர் !!//
    Super sir.

    ReplyDelete
  26. முத்து 50
    ————
    😍😍😍😍

    ReplyDelete
  27. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

    ReplyDelete
  28. அருமை சார்...டெக்க சிலாகித்தபடியே இப்பதிவ படிச்சா இங்கேயும் அதே ஓடுது...அந்த விஞ்ஞானத் கதை 50 வயதுகள் நல்லாருக்காதோ ..விடமாட்டாரோ.சந்தோசமா..அடடா ராயல்டி என மாறி மாறி அலைக்கழிக்க..வருத்தமா...நல்லவேள புக்கு வருது...
    உயிரைக் தேடி பத்து பக்கமாவது படித்திருப்பேன் என நினைக்கிறேன் தொடரில்....அருமையான வரவு அட்டகாசம்....பத்து ஸ்பைடர் உள்ளே வந்த உணர்வு....லக்கியும் எதிர்பார்ப்பில்...அருமையான உற்சாகப்பதிவு மீண்டு ஒருமுறை...மீண்டுமோர் முறை

    ReplyDelete
  29. அன்பைத் தேடி...
    வாழ்வின் ஏக்கம்..
    உயிரானது அன்பு...
    யாராவது இருக்கீங்களா...
    உயிரின் மூச்சு...
    உயிரே இருக்கிறாயா...
    உயிராய் உலகு...
    உலகத்தின் மூச்சு...
    உயிரின் ஓசை...
    உயிரே நலமா...
    உயிரே...விடியலே

    ReplyDelete
    Replies
    1. பின்றீங்களே கவிஞரே !! அதும் மனசு சரி இல்லாதப்போவே !! மனசு குஜாலா இருந்தாக்கா ?

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அட...பால்யத்து சமாச்சாரங்கள் என்றாலே ஸ்பெஷல் தானோ ?

      Delete
    2. ஆமாம் சார்.நிச்சயமாக

      Delete
  31. "உயிரைத் தேடி” வாவ்வ்வ்வ்வ்வ்வ்..... superrrrrrrrrrr.... வரவேற்கிறோம் 1000 சதவீதம்..நீங்கள் தான் அதனை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம்.... எப்படி அதை உங்களிடம் கோரி வெளியிட கேட்பது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் உள்ளது, சார். இன்று இந்த வருஷத்தின் கொண்டாடப்படவேண்டிய சூப்பர் அறிவிப்பு சார் இது... கொரோனா காலத்தில் பொருத்தமான வெளியீடாக இருக்கும்...

    மகிழ்ச்சி மெத்த மகிழ்ச்சி.

    முடிந்தால் முழுவண்ணத்தில் வெளியிட முடியுமா என்று பாருங்கள், சார். முழுவண்ணமாக்க ஏதேனும் பணியில் உதவி தேவைப்பட்டாலும் கொஞ்சம் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டால் இந்த காவிய இதழிற்காக நான் செய்ய தயாராக உள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. பதிவை மறுக்கா படியுங்கள் நண்பரே !

      Delete
  32. இருளின் பிடியில்...
    இரூளே கொல்லாதே...
    உயிரில்லா உலகு...
    நிழலும் அச்சுறுத்தும்...
    உயிரின்றி அமையுமா உலஙகு

    ReplyDelete
    Replies
    1. நைட்டே உபபதிவு ரெடி பண்ணிடுறேன் கவிஞரே !

      Delete
    2. // நைட்டே உபபதிவு ரெடி பண்ணிடுறேன் கவிஞரே ! // ஹாஹாஹா

      Delete
  33. உயிரின் பாசை உயிரே...
    உயிரின் மூச்சு கேட்கட்டுமே...
    உயிரே...சங்கீதமே...சந்தோசமே

    ReplyDelete
  34. ஏதோ என்னால் முடிந்த தலைப்பு ஐடியா
    1.முடிவல்ல தொடக்கம்
    2.விடியல் வீழ்வதில்லை
    3.இனியொரு விதி செய்வோம்

    ReplyDelete
  35. Replies
    1. ☺️☺️☺️☺️☺️😊😊😊😊😊😊💐

      Delete
  36. //இதைக் கலரிலே போடலாமே??!! என்ற கொடி பிடித்திட வேண்டாமே ப்ளீஸ்? Simply becos ஓவியர் Jose Ortiz-ன் dark shades நிறைந்த சித்திரங்களுக்கு வண்ணமூட்டுவது சுலபமே அல்ல ! And பக்கத்துக்குப் பக்கம் படைப்பாளிகளிடம் காட்டி, அவர்கள் சொல்லக்கூடிய அத்தனை திருத்தங்களையும் செய்து approval வாங்கிய பிற்பாடே அச்சிட முடியும் ! 188 பக்கங்கள் கொண்ட இந்தக் கதைக்கு நாம் அந்த மெனக்கெடல்களுக்கு தயாராகிட்டாலுமே, ஒரு நெடும் லாக்டௌன் முடிந்து இப்போது தான் மெது மெதுவாய் இயல்புப் பணிகளுக்குத் திரும்பிவரும் படைப்பாளிகள் இந்த வேளையில் அதற்குத் தயாரில்லை ! So ஒரிஜினல்படியே black & white-ல் வெளியிடுவதே படைப்பாளிகளின் பரிந்துரை ! //

    புரிகிறது சார்... கருப்பை வெள்ளையிலே okay தான் சார்.
    முதல் பதிப்பு பெறும் வெற்றியை பொறுத்து, 2வது வண்ணப்பதிப்பை கொஞ்சம் consider செய்யுங்கள் சார்.

    ReplyDelete
  37. உயிரைத் தேடி” என்ற பெயரில் உங்களுக்கெல்லாம் பரிச்சயமான அந்தக் கதைக்கு நாம் என்ன பெயர் வைக்கலாம் ?
    தனலட்சுமியை தேடி... ஏன்னா அந்த கதை படிக்கிற காலத்திலே நம்ம க்ரஷ் பேரு அது தான்..

    ReplyDelete
    Replies
    1. ஏன் உயிர் மேலே ஆசையில்லையா?

      Delete
    2. ஷெரீஃப் செம்மசெம்ம ROFL

      Delete
  38. கவிஞர் வேற லெவல். பின்றாரு. முறையான பயிற்சி இருந்தால் கலக்கிடுவாரு வாழ்த்துக்கள் கவிஞரே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  39. சார்..இந்த பதினைந்து நாள் பதிவுகளில் ஒன்றை முத்து 50 பற்றிய ஆன்லைன் மீட்டிங்கு ஒதுக்குங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. Too early in the day & too hazy a day for now sir ! கொஞ்சமாய் இருள்மேகங்கள் விலகட்டும் !

      Delete
  40. ஓசையில்லா உலகில் இசை
    உயிரானது உயர்வாகுது
    என்னை விரட்டும் தனிமை
    கொலை செய்ய ஆளுண்டா
    கடவுளா கொலையாளியா
    இசைக்க மரிக்குமா காற்று
    நேற்று வரை தேடலில்லை
    தேடலில் ஜனிக்குமா உயிர்
    தேடு..ஓடு...விடாது...
    இருளின் உயிரே


    ReplyDelete
    Replies
    1. உயிர் கேட்ட ஒற்றைக் கவி
      கொலைகார கோவைக் கவி
      பலி கேட்ட பழைய இரும்பு

      Delete
    2. //உயிர் கேட்ட ஒற்றைக் கவி
      கொலைகார கோவைக் கவி
      பலி கேட்ட பழைய இரும்பு//

      :-)))))))) ROFL

      Delete
  41. தனிமையை விரட்டினேன்
    உயிரே பிரியாதே
    உன்னை தேடும் கண்
    உயிரோடு உறவாடு
    உயிரில்லையேல் ஜகமில்லே
    நீயா நானா தனிமையே

    ReplyDelete
  42. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  43. வாருங்கள் தேடிக் கொண்டிருக்கிறேன்
    நீங்களில்லாமல் நானா
    தேடினேன் கிடைக்குமா
    காலனைக் தேடி
    காலனின் சிரிப்பில் உலகம்

    ReplyDelete
  44. எல்லாருக்கும் சலாம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க...

    ReplyDelete
  45. சார்..நம்ம கோவை கார அண்ணனின் தலைப்பை படிக்க படிக்க வந்த தூக்கம் கூட போய்விட்டது ...எனவே.

    டக்கென்று பெரும்பான்மை வாக்கு பெற்ற "உயிரைத் தேடி " தலைப்பை இன்று இரவே சொல்லி விடுங்களேன்...:-)

    ReplyDelete
    Replies
    1. அஸ்கு புஸ்கு ..

      Delete
    2. அப்படின்னா அதே டைட்டில்தான்!
      தேங்க்ஸ் சார்😀😀😀.

      Delete
    3. தலீவரின் கோவைக்கார தம்பி என்னோட வேண்டுதலும் அதே தாங் சார்.

      Delete
  46. "உயிரைத்தேடி" நாலணா,நாலணாவாகக் கொடுத்து வாடகை நூலகத்தில் படித்திருக்கின்றேன் சார்.மீண்டும் தங்களது மொழிபெயர்ப்பில் நமது இலயனில் வருவது மிகச் சிறப்பு."உயிரைத்தேடி" தலைப்பில் வருவது என்னைப் (எங்களைப்) போன்ற 90'களின் குழந்தைகளுக்கு
    NOSTALGIA FEELING ஆகவும் இருக்குமல்லவா சார்! நன்றிகள் சார் இக்கதையைப் புத்தகமாக வெளியிடுவதற்கு!

    ReplyDelete
  47. உயிரைத் தேடி - உண்மையில் நாங்கள் தொலைத்து மீண்டும் கண்டடையவே முடியாதென நினைத்த உயிரை தேடிக் கண்டுபிடித்துள்ளீர்கள் Sir,

    இன்று Comics வாசிக்கும் 40 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான நண்பர்கள் சிறுவர்களாக இருக்கும் போது தேடித்தேடி வாசித்த தொடர் இது,

    நீண்ட காலமாக எனக்கு மட்டுமே பிடித்த கதை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், சமூக வலைதளங்களில் இணைந்த பின்புதான் தெரிந்தது இது பல நூறு காமிக்ஸ் வாசகர்களின் தேடல் என்பது, ஆனால் இது புத்தகமாக வராமல் தொடராக வந்த காரணத்தால் யாரிடமும் முழுமையான புத்தகமாக கிடைக்கவில்லை.

    சிறு வயதில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சிறுவர் மலர் படிக்க அலைந்தது ஞாபகம் வருகிறது.கொரனா ஊழித்தாண்டவமாடும் இக்காலத்தில் வெளியிட பொருத்தமான கதைதான் இது.

    இத்தகைய அரிய பொக்கிஷங்களை தேடியெடுத்து வாசகர்களின் விருப்பமறிந்து வெளியிடும் தங்களுக்கு கோடி நன்றிகள் Sir,

    இது மிகச்சிறந்த வெற்றியடையும், இரத்தப்படலம் போல் பல்வேறு மறுபதிப்புகள் காணும் இதழாக அமைய Advance வாழ்த்துக்கள் Sir,

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு ஒரே பதிப்பு விற்றுத் தீர்ந்தாலே ஹேப்பி சார் !

      Delete
  48. 'உயிரைத் தேடி' நமது காமிக்ஸில் வருவது 40+ வாசகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு. பள்ளி நாட்களில் வெள்ளிக்கிழமை எப்போதடா வரும் என எதிர்பார்க்க வைத்த தொடர். அந்த கதையில் ஒரு ஏலியன் வருவான். அவன் பிங்கியை காப்பாற்றுவான் என்று நினைக்கையில் விண்கலம் சிதைந்து போகும். இன்னும் கூட அந்த ஏமாற்றத்தை என்னால் உணர முடிகிறது. அற்புதமான கதை தான்; கதையை தொடர நிறைய வாய்ப்புகள் இருந்தும் சடாரென்று
    முடித்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கதாசிரியரே முன்னுரை எழுதவிருக்கிறார் ; பார்ப்போமே அவர் என்ன சொல்கிறாரென ?

      Delete
  49. உயிரை தேடி .. நான் படித்ததில்லை ஆனால் நண்பர்கள் சிலாகித்து கேட்டிருக்கிறேன் பார்த்திருக்கிறேன். ஆகையால் முதல் சாய்ஸ் பெயர் உயிரை தேடி தான்.

    ReplyDelete
  50. உயிரைத்தேடி படித்தது இல்லை கேள்வி பட்டதும்.இப்போதுதான் முதல் முறையாக கேள்வி படுகிறேன். வந்தால் படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

    ReplyDelete
  51. "உயிரைத்தேடி" தலைப்பே நன்றாகவும் எளிதில் மனதில் படியும் படியாகவும் உள்ளது.அதையே தேர்வு செய்யலாம்

    ReplyDelete
  52. டெக்ஸ் கதையை ஆரம்பித்து உள்ளேன் ஆரம்பம் அமர்க்களமாக உள்ளது. நாளை இந்த கதையை முடித்துவிட்டு ட்யூரங்கோ கதையை நிதானமாக படிக்க வேண்டும்.

    ReplyDelete
  53. உயிரைத் தேடி அருமையான அறிவிப்பு. நானும் இதுவரை படித்ததில்லை.

    உயிரைத் தேடி தலைப்பை மாற்றியே தீருவேன் என்று தாங்கள் அடம்பிடித்தால், "தேடி உயிரை" என்று வேண்டுமானால் மாற்றிக்கொள்ளுங்கள். ஒரே ஒரு கண்டிஷந்தான். எப்படி மாற்றினாலும் உயிர், தேடி வார்த்தைகள் கண்டிப்பாக இருந்தாகவேண்டும். டாட். :-))

    ReplyDelete
  54. சார் சிம்ப்பிளா சொல்றேன்..

    'உயிரைத் தேடி'ன்னே தலைப்பு வச்சா 100 புத்தகங்களாவது சேர்த்தி விற்கும்! ஏன்னா அந்தத் தலைப்பும், அந்தக் கதையும் தமிழ்நாட்டில் அம்புட்டு பிரபலம்!

    ReplyDelete
  55. உயிரை தேடி அல்லது காலனோடு கண்ணாமூச்சி

    ReplyDelete
  56. “ வால் முளைத்த வாரிசு” இற்கு சிவப்பு கம்பளம். டின் டின் கேன், டால்டன்கள் என்றால் சிரிப்பிற்கு பஞ்சமில்லை. அட்டை படமும் சூப்பர்.
    “தல” இற்கு புது எதிரியாக ஜாக்கிசான் பாணியான சீன கதாப்பாத்திரம் இன் அட்டை படங்கள் நன்றாக உள்ளது சார். இவரையும் உங்கள் ராடாரில் போட்டு வையுங்கள் சார்.

    ReplyDelete
  57. உயிரைத்தேடி அருமையான கதை சார். கண்டிப்பாக வெளியிடுங்கள்.


    உயிரைத் தேடியை பட்டி பார்த்து டிங்கரிங் பண்ண மாதிரியான கதை தான் Cinebook "Alone". இதைக்கூட முயற்சிக்கலாமே சார்..

    ReplyDelete
  58. பிந்திய பதிவுதான்
    தீபாவளி with Tex ல் வெளிவந்த இரு கதைகளும் அருமை. அதிலும் பனிவனப் படலத்தில் கார்சனின் ஹார்சியங்கள் சூப்பர். யுத்த பூமியில் Tex ல் கார்சனின் இடத்தை மொட்ட பாஸ் டிக் முழுதாக நிரப்புகின்றார்.

    ReplyDelete
  59. E-ROAD ஆன்லைன் விழாவினில் நமது "இரத்தப் படலம்" தொகுப்பின் எத்தனையாவதோ ரிலீஸுமே இருந்திடும் !//

    ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புதான் சார்....

    ReplyDelete
  60. Super and good news. Erode spl book. One of my favorite uyirai thedi and zoom meeting a good idea. Why dont we keep every month sir

    ReplyDelete
  61. Super and good news. Erode spl book. One of my favorite uyirai thedi and zoom meeting a good idea. Why dont we keep every month sir

    ReplyDelete
  62. உயிரை தேடி ....ஏ நல்ல இருக்கு...

    ReplyDelete
  63. சிறுவயதில் ஒவ்வொரு புதனுக்கும் வெயிட்டிங்.... அலைந்து திரிந்து பார்த்த தொலைக்காட்சி தொடர் மர்மதேசம் விடாது கருப்பு.. அதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெயிட்டிங் உயிரைத் தேடி படிக்க.... அதே பெயரில் மீண்டும் புத்தகம் வருமானால் பல பழைய வாசகர்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது...
    உயிரைத் தேடி என்ற பெயரில் வருவதே மிகச்சிறப்பு என்பதே எனது எண்ணம்..
    இந்த புத்தகத்தை வெளியிட தீர்மானம் செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  64. டெக்ஸ் கதை தேடல்களை பார்க்கும்போது.... அவரது நாற்காலி அவருக்கு மட்டுமே என்றுதான் தோன்றுகிறது... ஒவ்வொரு டெக்ஸ் வாசகர்களையும் சந்தோசப் படுத்துவதற்காக கதா ஆசிரியர்கள் மெனக்கெடும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது..
    கதையை பற்றிய கலக்கம் வேண்டாம் இதை 2022 இல் நுழைத்து விடுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  65. நண்பர்கள் யாருமே 2022-ல் வரும் முத்துவின் ஐம்பதாவது ஆண்டு மலரை பற்றி ஒன்றுமே குறிப்பிட வில்லையே...
    சரி நாமே ஆரம்பிப்போமே... என் ஆசை கனவுகள் முத்து 50வது ஆண்டு சிறப்பு மலர்...
    1. பக்கம் 1000. முழுவதும் கலர். டெக்ஸ் புக் சைஸ்...( 2000 பக்கம் கேட்க ஆசைதான். பட்ஜெட் என்று ஆசிரியர் கூறுவார் என்று அடக்கி வாசிக்கிறேன் 😝😝😝).
    2. டெக்ஸ்ன் 200 பக்க கதை ( முத்துவில் தலை காட்டியதே இல்லையே நம்ம தல. இந்த சிறப்பு மலரில் இவர் இல்லாமல் எப்படி???).
    3. கேப்டன் டைகரின் புதிய இரண்டு பாக சாகசக் கதை. (100 பக்கம் ).
    4. முத்து காமிக்ஸின் தலைமகன் இரும்புக்கை மாயாவியின் இதுவரை வெளியிடாத மறுபதிப்பு சாகசம் ஒன்று (100 பக்கம் ). புதிய கதை ஏதேனும் இருந்தால் வெளியிடலாம்.
    5. லக்கிலுக் -50 பக்கம் ( இவருமே முத்துவில் வந்ததே இல்லையே )...
    450 பக்கத்திற்கு என்னால் முயன்ற சிறு முயற்சி.... மீதியை ஆசிரியர் அவர்களே நீங்களே போட்டு முடித்துக் கொள்ளுங்கள் 😂😂😂😂😂( மாட்டி விட்டுட்டேன் உங்களை )

    ReplyDelete
  66. எனக்கு பெட்ரோமாக் லைட்டே தான் வேண்டும்.
    "உயிரைத் தேடி ".
    இந்தத் தலைப்பே வசீகரமாக இருந்தது.
    இப்போதும் வசீகரிக்கிறது.இதையே வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  67. அடடே.. கிட்டத்தட்ட மொத்த பேருமே உயிரைத் தேடியை மீட்டெடுக்க ரெடியாகி விட்டோம் போலிருக்கிறதே. வாழ்த்துக்கள்.. ப்ரூப் ரீடிங் மட்டும் கொஞ்சம் கவனமாக செய்து மகிழ்ச்சிக்குள்ளாக்க வேண்டுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே. கிளம்பிவிட்டோம் அனைவரும் உயிரைத் தேடி... நீங்கள் சொன்னது போல் proof-reading மட்டும் சிறப்பாக அமைந்து விட்டால் பட்டையை கிளப்பப் போகும் சிறப்பிதழ் இது.

      Delete
  68. ஆஹா... சிறுவயதில் தொடராய் வாசித்து மகிழ்ந்த உயிரைத்தேடி தற்போது நமது லயனில் வரப்போவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.
    மிக்க நன்றிங்க விஜயன் sir.
    அதே தலைப்புதான் பொறுத்ததமாக இருக்கும் அதே தலைப்பை வைக்க வேண்டுகிறேன்.

    இன்னும் ஒரு அன்பு வேண்டுகோள் விஜயன் sir..
    அசோக் காமிக்சில் வந்த அங்கிள் டெர்ரியையும் எங்களுக்காக வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  69. உயிரைத் தேடி... தேடிப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

    ReplyDelete
  70. Replies
    1. கோவைக் கவியின் கொலை
      முடிந்தால் தப்பிப் பிழை

      Delete
  71. காலனோடு கண்ணாமூச்சி
    காலன் கை கொடுத்தான்
    காலன் வைத்த நெருப்பு
    காலனே நீ எங்கு இருக்கிறாய்

    ReplyDelete
  72. எடி ஜி,

    உயிரைத் தேடி, மனதில் நீங்கா இடம் பிடித்த முதல் காமிக்ஸ், ஒரு டீ கடைக்காரர் உபயத்தில் அந்த காலத்தில் படித்து வந்தது.
    இப்போது உங்கள் உபயத்தில் முழுவதுமாக படிக்கப் போகிறோம் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
    உயிரைத் தேடி என்ற பெயரில் வெளியிட முடியாத ஜி, ஏனென்றால் மனதில் இடம் பிடித்த பெயர் அதுவே.
    நன்றி நன்றி

    ReplyDelete
  73. காலனை விரட்டு
    காலா ஏனிந்த வெறி
    காதலனின் தப்பாட்டம்
    காலன் போட்ட கணக்கு

    ReplyDelete
    Replies
    1. மூணாவது டைட்டில் காமிக்ஸ்க்கு வெச்சமாதிரி தெரியலையே ஸ்டீல்.!?

      Delete
    2. ///காலன் என திருத்திக்கோங்க///

      வாவ்!! இந்த டைட்டில் சூப்பர்!!

      Delete
  74. உயிரைத்தேடி


    காலனும்...சிறுவனும்...

    ReplyDelete
  75. சார் டெக்சின் கதைகள் நம்மையும் கதைக்குள் இழுத்து அயோக்கியர்களை புடைக்கச் செய்ய வல்லவை.இக்கதையும் விதி விலக்கல்ல.துவக்கத்தில் தூக்காளி தப்பிப்பதை பார்த்து விட்டு மூடி விடலாம் எனும் எண்ணத்தில்தான் துவங்கினேன்...ஆனா அதே பாதி தாண்ட கதையின் பரபரப்பில் பக்கங்கள் தானாய் நகர...மூச்சிரைக்க படித்தேன்...விளைவு படிக்காத டெக்ச எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன்.அருமை சார்...

    ReplyDelete
  76. காலனுக்கும் வெறி பிடிக்கும்
    தறிகெட்டோடும் காலன்
    காலனின் கொடிய கரங்களில்
    காலா ஏனிந்த தாமதமோ
    மரணதண்டனை
    மீண்டோரும் இருப்பாரா

    ReplyDelete
    Replies
    1. தறிகெட்டோடும் ஸ்டீல்

      Delete
    2. காலனுக்கு வெறி பிடித்ததோ இல்லையோ உங்களுக்கு வெறி பிடித்து விட்டது ஸ்டீல். பொறுமை பொறுமை

      Delete
  77. Replies
    1. ///காலா உன்னைக் கட்டுவேன்///

      காலாவை காலோடு சேர்த்துக் கட்டிடுங்க ஸ்டீல்!

      Delete
    2. காலன் என் காதலன், காலனுக்கு தலை வணங்கு, காலனின் மறுபக்கம், காலனை காலால் எட்டி உதை, (மூச்சுக்) கா)ற்றோடு போன காலன், மூச்சா்போன காலன்னு ஸ்டீல் அருவியாக் கொட்டறதுக்கு முன்னாடி தீர்ப்பை சொல்லுங்க தெய்வமே

      Delete
    3. இஞ்சின்னா காட்டம்...
      உயிர் பிழைக்க ஓட்டம் !

      பூரி இருக்கு மசாலில்லை !

      அஞ்சரைக்குள்ளே வண்டி..!
      காலன் வாரான் விரட்டி ..!

      கவிஞரே : இதுவும் உங்க மைண்ட்வாய்ஸ் பிரவாகங்கள் தான் ! இங்க வரைக்கும் கேட்டுச்சு !

      Delete
    4. இது இரும்புக்கவியோட மைண்ட்வாய்ஸ் மாதிரி தெரியலையே..🏃🏃🏃

      Delete
  78. சென்ற (2020) லாக்டவுனின் போது முகநூல் காமிக்ஸ் க்ரூப்பில் எடிட்டர் அவர்கள் மனது வைத்தால் உயிரைத்தேடியை நல்ல தரமான புத்தக வடிவில் காணலாம் என்று ஒரு வரி எழுதியிருந்தேன். (Prediction என்றும் கொள்ளலாம். ��) அது தற்போது அப்படியே நடந்துள்ளது குறித்து மகிழ்ச்சி.
    லிங்க் கீழே.


    https://www.facebook.com/groups/398196934339983/permalink/671916120301395/

    ReplyDelete
    Replies
    1. //நினைவில் உள்ளது நண்பரே...நீங்கதானா அது//

      இம்மாம் பெரிய பேரை எங்க எழுதிறது ஸ்டீல் ?

      Delete
  79. இந்த தலைப்புகளையே தனிப்புத்தகமா போடணும் போலயே..!?:-)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வண்ணத்தில்.

      Delete
    2. கண்ணா, ஷெரீஃப் ஹிஹிஹி

      Delete
  80. Replies
    1. காலனின் கடைக்கண்
      காலன் உடைத்த கபாலம்
      கானலாய் போன காலன்
      காலா முக்காலா
      காலே அரைக்காலா
      கோணக் கால் கொடியவன்
      ஆனக் கால் அரக்கன்
      காலனுக்கு எத்தனை கால்கள்
      கடாயில் வெந்த கால்கள்


      Delete
  81. இது சென்றாண்டு முகநூல் க்ரூப்பில் எழுதிய கதைச் சுருக்கம். எனக்கு அவ்வளவு கோர்வையாக, மற்றும் நேர்த்தியாக எழுத வராது. ஆகையால் வாசிக்கும் நண்பர்கள் பொறுத்துக் கொண்டு வாசிக்க வேண்டுகிறேன்.


    #சர்வைவல்! #உயிரைத்தேடி

    பிரிட்டனின் ஆளரவமற்ற M25 நெடுஞ்சாலையில் கார்கள் ஒன்றோடொன்று மோதி பெரும் புகையோடு எரிந்து கொண்டிருப்பதில் இருந்து ஆரம்பமாகிறது கதை.

    தொடர்ந்த பக்கங்களில் மனிதர்கள் சற்றே உருமாறி உருகுலைந்து ஒவ்வொருவராக இறந்து போகின்றனர். காரணம் ஒரு கொடிய வைரஸ்.. ஒரே ஒரு சிறுவன் மட்டும் எவ்வித ஆரோக்ய குறைபாடும் இன்றி தப்பித்து கொள்கிறான். அவன் பெயர் மார்க் டேவிஸ், அரிய ரத்த வகையை கொண்டவன் ஆதலால் அவனை வைரஸ் தாக்கவில்லை.

    மனிதரற்ற அந்த நகர வனாந்திரத்தில் தம்மைப்போல் எவரும் தப்பி பிழைத்துள்ளனரா என்று தவிப்போடு தேடிப்போகிறான் டேவிஸ்.. அவன் செல்லும் வழியில் துணைக்கு யானை நண்பன் ஒருவன் கிடைகிறான். தொடர்ந்து பயணித்து மிலிட்டரி தளத்தை அடையும் அவன் அங்கிருந்த ரேடியோவில் "எவரேனும் இன்னும் உயிருடன் இருகிறீர்களா?" என்று கேட்கிறான்.. அதை தொடர்ந்து ஒரு விமானம் அங்கு வந்து தாறுமாறாக தரையிறங்குகிறது. மரண காயம்பட்டு வெளியே விழுகிறான் விமானத்தை ஒட்டி வந்தவன். அவனைக் கண்டு டேவிஸிர்க்கு நம்பிக்கை பிறக்கிறது இன்னும் பலரும் எங்கோ தப்பி பிழைத்திருக்க கூடும் என்று.

    மாதங்கள் பல ஓடுகிறது மனிதர் எவருமே தட்டுப்படவில்லை. செல்லும் வழியெங்கும் மனித பிணங்கள். உயிருடன் ஒரு மனிதன் கூட இல்லை. ஒரு முடி திருத்தகத்தில் இவனைப் போல் தப்பிப்பிழைத்து உயிர் வாழும் ஒருவனின் தகவல் உள்ளது, துரதிர்ஷ்டவசமாக முன்பு விமானத்தில் வந்து விழுந்தவனின் செய்தி அது. தொடர்ந்து பயணிக்கிறான் தன் யானை நண்பனுடன் டேவிஸ். (தொடர்ச்சி..Replyயில்)

    ReplyDelete
    Replies


    1. தொடர்ந்து ஒரு பொருட்காட்சியை அடையும் டேவிஸ் அங்கு ஒரு கோர ஜந்துவின் தாக்குதலுக்கு உள்ளாகிறான். அது அவனை மூர்க்கமாக வேட்டையாடுகிறது.. பெரும் போராட்டத்திற்கு பிறகு, நீர்நிலையில் முதலைகளிடம் மாட்டி அந்த ஜந்து இறந்து போகிறது.. அந்த ஜந்துவிடமிருந்து தப்பித்து ஓடும் நிலையில் பொருட்காட்சியில் விட்டு வந்த தன் யானை நண்பனை இங்கு பிரிந்து வெகு தொலைவு வந்து விடுகிறான். அதை தொடர்ந்து தொலைவில் ஜன்னலில் வெளிச்சத்தோடு ஒரு வீடு தென்படுகிறது, அங்கு இவனை போலவே தப்பி பிழைத்து உயிர் வாழும் பையன் ஒருவனை காண்கிறான். அவன் பெயர் கார்ல்.

      தொடர்ந்து இருவரும் வைரஸ் தாக்குதலுக்கு தப்பி பிழைத்து உயிர் வாழும் மனிதர்களை தேடி பயணிக்கின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு ஆளான மனிதர் அனைவரும் இறந்து போயிருந்தாலும் சிலர் கோர உருவை அடைந்து ஸோம்பிகள் ஆகியிருந்தனர். அதை தொடர்ந்து பிரான்ஸ் செல்லும் அவர்கள் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பயந்து ராட்சத பலூனின் உள்ளே வாழும் சில சிறுவர்களை காண்கின்றனர், அவர்களோ இவர்கள் வைரஸ் பீடித்தவர்கள் என்று தாக்குகின்றனர், அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது ஒரு ஸோம்பி மனிதனை காப்பாற்றி அவனது நட்பை பெறுகின்றனர். இம்மூவரின் பயணம் தொடர்கிறது.. ஓரிடத்தில் புகை வருவதை கண்டு அவ்விடம் நோக்கி ஆவலுடன் ஓடுகிறார்கள். அங்கு சில மனிதரை காண்கின்றனர். அவர்களுடன் இம்மூவரும் சேர்ந்து ஒரு சிறு குழுவாக ஆகின்றனர்.

      இப்போது வைரஸ் தாக்குதலுக்கு தப்பி பிழைத்தவர் ஆங்காங்கே இருந்தாலும், அவர்களிடையே உணவு பிரச்சினை.. உயிருடன் மனிதர் எவரும் உள்ளனரா என மனிதரை தேடி அலைந்தவர்களுக்கு இப்போது அவர்களே இடையூறாக தெரிகிறார்கள். அங்கு வேறொரு குழுவினர் டேவிஸின் குழுவினரை பிடித்து கொல்ல பார்க்கின்றனர்.. எதிரி மனிதரிடையே சிக்கியுள்ள தன் நண்பர்களை ஸோம்பி நண்பனுடன் சேர்ந்து காப்பாற்றுகிறான் டேவிஸ். பின்னர் தொடர்ந்து டேவிஸ் குழுவினர் பயணித்து ஒரு ஆராய்ச்சி மையத்தை அடையும்போது தான் புரிகிறது, அந்த உயிர் கொல்லி வைரஸை அங்குள்ள விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியதன் விளைவே மனித குலத்தின் அழிவிற்கு காரணம் என்று.

      அவர்களின் பயணம் தொடர்கிறது... ஒரு கானகத்தை கடக்கும்போது வானிலிருந்து பிரகாசமாக ஒரு ஸ்பேஸ் ஷட்டில் வந்து இறங்குகிறது, அதிலிருந்து நல்ல உயரத்துடன் கூடிய மனிதன் வந்து இறங்கி, தான் வருங்காலத்தில் இருந்து வருவதாக கூறுகிறான். தன் விமான கோளாறினால் இங்கு இறங்கி உள்ளதாகவும் கூறுகிறான், தங்களை அவனுடைய காலத்திற்கு அழைத்து செல்லுமாறு கேட்கின்றனர் குழுவினர்.. அவனோ அப்படி செய்ய இயலாது என்று கூறி தன்னால் அவர்களுக்கு உதவ முடியாது என்றும் கூறுகிறான், சரி.. அமெரிக்காவில் தங்களை இறக்கி விட்டு விடும்படி அவனிடம் கூறுகின்றனர்.. அந்த உதவிக்கு அவனும் சம்மதிக்க.. தொடர்ந்து அமெரிக்கா நோக்கி செல்லுபோது அந்த விமானம் மீண்டும் கோளாறு ஏற்பட்டு வானிலேயே விபத்துக்குள்ளாகிறது, அதில் இவர்களை மட்டும் தப்ப வைத்து விட்டு அந்த எதிர்கால மனிதன் அந்த விமானத்தோடு வெடித்து சிதறுகிறான்.

      அவர்கள் தரையிறங்கிய இடத்தில் சில ஆபத்துகளை எதிர்கொள்ள நேர்கிறது. அவ்விடத்தில் ஒரு குட்டி ரோபோட் வந்து சேர்கிறது.. அது அந்த எதிர்கால மனிதனுடன் அந்த விமானத்தில் இருந்தது. அடுத்து குழுவினருக்கு உதவியாக இருக்கிறது அந்த ரோபோட். உதவி செய்யும் அந்த ரோபோட்டே பின்னர் உபத்திரவமாகிறது. பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் வைரஸின் தாக்குதலில் எஞ்சி தப்பி பிழைத்த டேவிஸின் நண்பர்கள் வாழ்வதோடு கதை முடிகிறது.

      ********************************************

      இந்த சர்வைவல் கதை இந்த கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியுள்ள இது போன்ற தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. வைரஸோ இன்னும் பிற இயற்கை இடர்பாடுகளோ நம்மை அழிக்குமுன்.. ஒவ்வொரு நாடும் சேர்த்து வைத்துள்ள அணு ஆயுதங்கள் பூமியின் மொத்த உயிர்க்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாடுகளிடையே போர் மூளுமானால் உயிர்கள் அனைத்தும் நிர்மூலமாகும்... அதன் பிறகு தப்பி பிழைக்கும் மனிதர் எவரும் இருப்பின் கதையில் வருவது போல் உணவுக்காக அடித்துக்கொள்வதும் நடக்கும். இது போன்ற கதைகள் நமக்கு எதிர்காலத்தை கற்பனையில் புனைந்து சுட்டுகிறது.

      கிட்டத்தட்ட 185 பக்க கதையிது... வேகமாக சொல்ல வேண்டுமென்று விவரித்தேன்.. கதை கூரலில் பிழைகளோ கோர்வையற்றோ இருப்பின் அது என் பிழையே.. கதை சிறிதும் சுவாரஸ்யம் குறையாதது என்று கூறிகொள்கிறேன்.

      இன்றிலிருந்து 33 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது.. 1987 மார்ச் 7ம் தேதி அப்போது பிரிட்டனில் வெளியான #Eagle வார இதழில் இந்த கதை வெளியானது. இதன் கதாசிரியர் D.HORTON, ஓவியரோ நமக்கு முன்பே திகிலில் வந்த கம்ப்யூட்டர் மேக்ஸ் மற்றும் டெக்ஸ் கதைகளில் பரிச்சயமான ஜோஸ் ஓர்டிஸ் அவர்கள்.

      Delete
  82. கோவைக்கவிக்கோவிற்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு மேலும் சில டலைப்புகள்..


    காலனின் கால் சூப்பு..
    கிழக்கே ஒரு கோழிக்குழம்பு..
    போட்டி வறுவலுக்கு போட்டியா..
    தேங்காய்த்துருவலும் ரத்தப்பொறியலும்..
    அவசரமாய் போட்ட ஆம்லேட்..
    காலன் கொத்திய பரோட்டா..
    காலனும் கால்கிலோ சிக்கனும்..
    கோழி கூவுது குழம்பு கொதிக்குது..


    மிச்சத்தை சாப்பிட்டுட்டு வந்து சொல்றேன்.!

    (உப பதிவு வந்தாலும் உட்றதா இல்லே.. கமான் ஸ்டீல்.) :-)


    ReplyDelete
  83. // So Jose Ortiz அவர்களின் அசாத்தியச் சித்திரங்களுடன் இந்த black & white ஆல்பம் நமது “E-Road ஆன்லைன் புத்தக விழாவின் சிறப்பிதழ் # 1” ஆக ஆகஸ்டின் நடுவினில் வாகானதொரு பொழுதில் வெளிவந்திடும் ! //

    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார்...

    ReplyDelete
  84. // “காலனோடு கண்ணாமூச்சி” //
    இந்த டைட்டிலே நல்லா இருக்கு சார்...

    ReplyDelete
  85. // So ஒரிஜினல்படியே black & white-ல் வெளியிடுவதே படைப்பாளிகளின் பரிந்துரை ! //
    வந்தா மட்டும் போதும் சார்...

    ReplyDelete
  86. // காத்திருக்கும் 2022-க்கும் ; முத்து காமிக்சின் 50-வது ஆண்டு விழாவிற்குமென உங்களின் suggestions எனக்கு நிரம்பவே தேவைப்படும் ! //

    முத்து காமிக்ஸ் 50 ஆம் ஆண்டு விழா மலருக்கு எனது எதிர்பார்ப்பில் குறைந்த பட்ச தகுதிகளாக எதிர்பார்ப்பவை,
    1.விலை 1000/- வது இருக்க வேண்டும்,
    2.கண்டிப்பாக ஹார்ட் பைண்டிங் வேண்டும்,
    3.முழுவதும் வண்ணத்தில் இருந்தால் நலம்,இல்லேயேல் பட்ஜெட் உதைக்குமாயின் வண்ணம் மற்றும் க & வெ என கலந்து கட்டி அடிக்கலாம்,
    4.பக்கங்கள் அதிகம் கொண்டதாக இராட்சஸ ஸ்பெஷலாக இருக்க வேண்டும்,
    5.முந்தைய இதழ்களான LMS,NBS போன்றவை போல கதம்ப கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழ்களாக இருக்க வேண்டும்,
    6.என்றும் நினைவு கூறத் தக்க வகையில் இந்த இதழ் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  87. // இந்தக் கதையினை வரவழைத்துப் பரிசீலிக்க எண்ணியுள்ளேன் ; புதுமை கதையிலும் தொடர்ந்தால் 2022-ல் இந்த சீனப் பார்ட்டியும் இடம் பிடித்திருப்பார் ! பார்ப்போமே !! //
    ஹை சூப்பர் சார்,டெக்ஸ் உலகம் சுற்றும் வாலிபனாய் மாறிட்டார் போல...
    அப்படியே ஜப்பானிலும் ஏதேனும் சாகஸம் செய்திருந்தால் 2023 ற்கு எடுத்து வைங்க சார்...!!!

    ReplyDelete
  88. // ஒரு ஜாக்கி சான் பாணியிலான சீனக் கதாப்பாத்திரத்தை Antonio Zamberletti எனும் புதுக் கதாசிரியர் சிருஷ்டித்துள்ளார் பாருங்களேன் ! //
    ஆவலை கிளப்புது சார்...

    ReplyDelete