Saturday, July 21, 2018

தொடரும் "உள்ளே-வெளியே" படலம் !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு Disclaimer : துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே - இதுவொரு உரத்த சிந்தனையின் தொகுப்பென்பதை !!  "தேமேன்னு போய்க்கினு இருந்த என்னைப் பாத்து நீ ஜிலோன்னு கருத்துக் கேட்டே ; நானும் படா ரோசனைலாம் பண்ணி மெனெக்கெட்டு சொன்னேன் ; ஆனாக்கா நீ அதை நடைமுறைப்படுத்தலை  ; இது முறையா நைனா ?!" என்ற விசனப் படலங்கள் எழக்கூடாதல்லவா ? உங்கள் அபிப்பிராயங்களே எனது தீர்மானங்களின் அஸ்திவாரம் என்பதில் துளியும் ஐயம் கிடையாது  ; so நிச்சயமாய் ஒவ்வொரு புள்ளியிலும் உங்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பேன் ! ஆனால் ரசனைகளின் மாற்றங்களுக்கேற்ப, நீங்கள் முன்வைக்கும் சிந்தனைச் சிதறல்களும் வேறுபடுவது இயல்பே ! அந்தச் சூழலில் அனைவரது அவாக்களையும் ஒருசேர நிறைவேற்றிடுவது நட்வாக் காரியம் என்பதால் இந்த முன்ஜாக்கிரதை ! தவிர, சில நேரங்களில் இங்குள்ள நம் பொதுவான கருத்துக்களும், விற்பனைகளின் பின்னணிகளை முரண்படுவதுண்டு ! For instance - இங்கே நமது நீலப் பொடியர்கள் மித வரவேற்பு கொண்டிருப்பின், புத்தக விழாக்களில் 'ரொம்பவே தேவலாம்' என்பது மாதிரியான response பெற்றிருக்கிறார்கள் ! So எனது தீர்மானங்கள் - உங்கள் அவாக்களுக்கும், விற்பனைகளின் புள்ளிவிபரங்களுக்கும் மத்தியில் ஒரு பொதுவான சமதளத்தை நாடிடும் அவசியம் கொண்டிருக்கும் ! இவையெல்லாமே நீங்கள் அறியா சமாச்சாரங்கள் இல்லையென்றாலும் - இதற்கு முந்தைய ஆண்டுகளில், தேர்வுகள் சார்ந்த அலசல்களில் சிற்சிறு  நெருடல்கள் தலைதூக்கியது நினைவுள்ளது ! So முன்கூட்டியே உங்கள் புரிதலுக்குக் கைகூப்புகிறேன் !! ஜெய் முன்ஜாக்கிரதை முன்சாமி ! So here goes !

வருடாந்திர ‘உள்ளே-வெளியே‘ விளையாட்டை கார்ட்டூன் ஜானரோடு கனகச்சிதமாய்த் துவக்கி விட்டுள்ள நிலையில் – பார்வைகளை இனி மையமான ”ஆக்ஷன் ஜானர்” பக்கமாய்த் திருப்புவது தானே முறையாகிடும் ?! As always – காத்திருக்கும் ஆண்டுமே ஆக்ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் நிறையவே தந்திடும் தான் ! And – இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நடப்பைப் போலவே இங்கேயும்  முக்கால்வாசி இடங்களை கேள்விகளின்றி தமதாக்கிக் கொள்கிறார்கள் - நாயகர்கள் சிலர் ! So எஞ்சியிருக்கும் இடங்களுக்கான விளிம்புநிலை ஆட்டக்காரர்களின் தலையெழுத்தை (நம்மளவில்) நிர்ணயம் செய்திடும் பொறுப்பு மட்டும் தேர்வாளர்களான நம்  கைகளில் இருந்திடும்!

ஆரம்பமே ஒரு “இல்லை ஐயா !” தான் – நமது கோடீஸ்வரர் லார்கோவின் புண்ணியத்தில் ! 2012-ல் (or 2013ல்??) ஜாலியாய் அமர்ந்தபடிக்குப் புன்னகையோடு – “என் பெயர் லார்கோ” என்றபடிக்கே சுய அறிமுகம் செய்து கொண்ட இந்த நாயகர் தொடர்ந்துள்ள ஒவ்வொரு ஆண்டுமே, நமது ஆக்ஷன் அட்டவணையின் முதுகெலும்பாய் இருந்து வந்துள்ளார் ! ஆனால் இவரில்லாததொரு புத்தாண்டே நமக்குக் காத்துள்ளது – simply becos இவரது தொடரின் சகல ஆல்பங்களையும் நாம் வெளியிட்டு முடித்து விட்டோம் ! புதியதொரு 2 பாக ஆல்பத்தின் முதல் அத்தியாயம் பிரெஞ்சில் அக்டோபர் 2017-ல் வெளி வந்திருக்க, அதன் க்ளைமேக்ஸ் இந்தாண்டின் இறுதியில் வெளிவந்திடலாம் ! So அது தயாராகாத வரையிலுமே நமக்கு சரக்கு லேது – புதுசாய் லார்கோ தோசைகள் வார்த்திட ! இந்த not so happy சேதியோடு இதர நாயகர்கள் பக்கமாய் கவனத்தைத் திருப்புவோமா?

ஆரம்பத்தில் மெதுமெதுவாய் response இருப்பினும், போகப் போக கதைகளின் ஆழங்களால் நம்மைக் கட்டுண்டு போகச் செய்த மனுஷன் – ஆரிசியாவின் ஆத்துக்காரர் தோர்கல் ! "Fantasy-யா ?? இது குழந்தைப்புள்ளைகளுக்குத் தான் சுகப்படுமோ ?" என்று நம்மிடையே ஒரு லேசான தயக்கம் துவக்கத்தில் நிலவியதென்னவோ நிஜம் தான் ; ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் வெளியீடுகள் சகலமும் டாப் கியரைத் தொட்டிருக்க – இந்த ஆணழகர் இன்றைக்கு நமது ஆட்டோமேட்டிக் தேர்வுகளுள் ஒன்றாகிறார் ! அதிலும் நடப்பாண்டின் துவக்க ஆல்பமான “கடவுளரின் தேசம்” ஒரு மறக்க இயலா saga என்பதில் ஐயமில்லை என்பதால் – இவரைக் கொண்டு மறுக்கா ‘உள்ளே வெளியே‘ கூத்தடிக்க அவசியமில்லை என்ற நம்பிக்கை பலமாயுள்ளது  ! So என் சார்பாய் ; உங்கள் சார்பாய் - வைக்கிங் சார்வாளுக்கு ஒரு ‘டிக்‘ போட்டு விடலாமா ?

அதே வேகத்தோடு நமது நரைமுடி நாயகர் பக்கமாய்த் திருப்பினால் – அவரது தொடரில் ஒரேயொரு ஆல்பம் எஞ்சி நிற்பது தெரிகிறது! வேய்ன் ஷெல்டன் தொடரிலுமே பரபரவென புதுக்கதைகள் உருவாகிடா பட்சத்தில் –சமீப வருடங்களில்  நமது அட்டவணைகளில் ஒரு permanent fixture ஆக இடம்பிடித்து வரும் இந்த சாகஸக்காரர், தொடரும் காலங்களில் missing ஆகிடக் கூடும் ! லார்கோ அளவிற்கு இவரது ஆல்பங்களில் ஆழம் நஹி என்பது எனது அபிப்பிராயம். அதே சமயம், இது நிச்சயமாய் ஒரு மாமூல் தொடருமல்ல என்பதும் உறுதியே ! விற்பனைக் கோணங்களில் மனுஷன் பெரிதாய் வூடு கட்டி அடிக்காது போனாலும், ‘முதலுக்கு மோசமில்லை‘ என்ற ரீதியில் safe ஆனதொரு ஹீரோவே ! And இதுவரையிலான இவரது ஆல்பங்களுள் எதுவுமே ‘செம மொக்கை‘ என்ற மாதிரியான அர்ச்சனைகளைப் பெற்றிருக்கவில்லை எனும் போது – எஞ்சி நிற்கும் ஒற்றை (புது) சாகஸத்தையும் களமிறக்குவதில் நிச்சயமாய் நமக்கு ஆட்சேபனைகள் இராதென்று நான் எடுத்துக் கொள்ளலாமா ?

Moving on, ‘ஒற்றை ஸ்லாட்டுக்கு மோசமில்லை!‘ என்ற உத்தரவாதமளிக்கும் இன்னொரு மனுஷர் தனது டிரேட் மார்க் புன்னகையோடு எதிர்கொண்டு நிற்பது தெரிகிறது! அறிமுகமான 1986 முதலாய் இதுவரையிலும், நாம் இவரை அசாத்தியமாய் சிலாகித்ததுமில்லை ; சாத்தியெடுத்ததுமில்லை தான் ! 'பரபர'வென துவங்கும் கதையை கடைசி 2 பக்கங்கள் வரையிலும் கொதிநிலையிலேயே பயணிக்கச் செய்து, அந்த க்ளைமேக்ஸ் பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிரையும் ‘பொடேரென‘ முடிச்சவிழ்க்கும் லாவகம் ‘ரிப்போர்ட்டர் ஜானி‘யின் படைப்பாளிகளுக்கே உரித்தான கெத்து ! அந்தப் பரபரப்பை வண்ணத்தில் ஆண்டுக்கொரு முறை ரசிப்பதை இதுவரையிலும் ஒரு மாறா வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் – நமது மறுவருகையினில்! So அந்த routine-ஐ இம்முறையும் தொடரலாம் தானே folks ?! அதே போல ஜானியின் புது பாணி பிரெஞ்சில் வேகமெடுத்து வருகிறது – மூன்றாவது ஆல்பமும் வெற்றி கண்டுள்ள நிலையில்! ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா ? பழசா ? உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்குமோ ?

Next in line.....“ஆண்டுக்கு ஒரு முறையே” என்ற ஃபார்முலா இவருக்குமே பொருந்தும் தான் - சின்னதொரு வித்தியாசத்தோடு ! ஆண்டுக்கு ஒரு முறையே தலைகாட்டினார் என்றாலும், மூன்றோ-நான்கோ கதைகளோடு பட்டாசு வெடிக்கும் மௌனப் புயல் இவர் ! 2017-ல் அறிமுகமாகி – 2018-ல் தொடர்கதையாகி நம்மோடு உலவி வரும் ட்யுராங்கோவுமே ஒரு சந்தேகமிலாத் தேர்வென நாம் கருதிடலாமா நண்பர்களே ? “சத்தமின்றி யுத்தம் செய்” பெற்றது 95 மார்க்குகளெனில், நடப்பாண்டின் “மௌனமாயொரு இடிமுழக்கம்” அந்த உச்சத்தைத் தொட்டிருக்கவில்லை என்பது வார்னிஷ் அடிக்காத யதார்த்தம் ! ஆனால் ‘ஆனை படுத்தாலும் குதிரையை விட உசத்தியே‘ என்ற கணக்காக லேசாய் கோட்டைவிட்ட ட்யுராங்கோ – இதர தத்தா புத்தா நாயகர்களை விடவும் better choice தான் என்று நீங்களும் சொல்வீர்களென்ற நம்பிக்கையுண்டு எனக்கு ! So ஒற்றை ஸ்லாட் ; கற்றைக் கதைகள் - என்ற பாணிக்குப் பச்சைக் கொடி possible ?

ஒரு மாதிரியாய் சுலபமான கேள்விகளை எதிர்கொண்டான பிற்பாடு தொடர்வன சற்றே complex வினாக்கள் ! And எப்போதும் போலவே இங்கே அபிப்பிராய பேதங்கள் இருக்குமென்பது நிச்சயம் !

கேள்வி # 1: கமான்சேவின் வனவாசம் தொடர்வது சரி தானா ? அல்லது ஹெர்மனின் இந்தப் பரட்டைத்தலைக் கௌபாய்க்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தால் மோசமில்லை என்பீர்களா ? விற்பனைகளில் மனுஷன் பெரிதாய் கம்பு சுழற்றிடவில்லை என்பதால் எனக்குமே இவருக்கென பெரிதாய் வாதாடத் தோன்ற மாட்டேன்கிறது தான் ; ஆனாலும் ஒரு தொடர் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் அம்போவென நிற்கிறதே என்ற வருத்தமும் இல்லாதில்லை ! “பிள்ளையைக் கிள்ளி விட்றான், தொட்டில் ஆட்டி விட்றான்” என்ற விமர்சனத்துக்கு இது இடம் தருமென்று  புரியாதில்லை ; ஆனால் ஹெர்மனின் படைப்புகளில் கேப்டன் பிரின்ஸ் தவிர்த்து வேறு யாருமே நம்மிடையே பெருசாய் சோபிக்கவில்லையே என்ற ஆதங்கமே என்னை வாய் திறக்கச் செய்கிறது !

கேள்வி # 2 : LADY S!!! ஆண்டுக்கொரு ஸ்லாட் என்ற ஃபார்முலா இவருக்கு ஓ.கே. தானா - என்று உங்கள் பார்வைக்கோணங்களிலிருந்து  ரோசிக்க முயன்று வருகிறேன் ! ? வான் ஹாமின் கதைக்களம்; மிரட்டலான சித்திரங்கள்; வசியம் செய்யும் கலரிங் என்று மிளிரும் இந்த நாயகி மீது எனக்கு தனிப்பட்ட முறையில்  நிறையவே அபிமானம் உண்டு ! ஆனால் சமீப 2 ஆல்பங்களிலும் “ஆக்ஷன் குறைச்சல்” என்ற புகார்கள் முகாரி ராகமாய் ஒலிப்பதையும் மறக்க இயலவில்லை எனும் போது – பந்து சிந்தனைகள் வலுப்பெறுகின்றன ! மகளிரணி ரொம்பவே பலவீனமாய்க் காட்சி தரும் நிலையில், இந்த மதிமுக ஷானியாவை 2019-ல் தொடரச் செய்வது ஓ.கே.வாக இருக்குமா ? நாம் எதிர்பார்க்கும் “அக்மார்க் ஹீரோ / ஹீரோயின் இலக்கணத்துக்கு” Lady S முழு நியாயம் செய்திடாது போயிருக்கலாம் ; ஆனால் for that matter, இந்த ஆக்ஷன் ஜானரில் புராதனம் சொட்டாத சமகாலத்துப் படைப்புகள் அத்தனை நிறைய இல்லை என்பதையும் நினைவில் இருத்திட வேண்டியுள்ளது ! அதற்குமீறி ‘பளிச்‘சென்ற ஆக்ஷன் தொடர்கள் கண்ணில் பட்டாலும், அவை பெரும்பாலும் கௌபாய்க் களங்களாக உள்ளன ; அல்லது நான்கோ – ஆறோ ஆல்பங்களில் முற்றுப்பெறும் ஒரு நெடுந்தொடராக இருக்கின்றன ! அவற்றை இது போன்ற சிங்கிள் ஆல்பங்களாய் வெளியிட இயலாதெனும் போது சிக்கல் எழுகிறது ! So சிந்தனைக் குல்லாவைத் தேடித் திரிகிறேன் தற்சமயம் ! Your thoughts please ?

மகளிரணியின் மறு மகாராணியார் பற்றிப் பேசாது போனால் பிழையாகிப் போகுமென்பதால் படாரென மாடஸ்டி பிளைஸி பக்கமாய் ரேடாரைத் திருப்பிடுவோம்!  இவருக்குமே “ஆண்டுக்கொரு ஸ்லாட்” என்ற ரீதியில் வாய்ப்பளித்து வருகிறோம் – with mixed results ! துவக்க காலம் முதலாய் இளவரசியை ஆராதித்து வரும் நண்பர்களுக்கு இவரொரு இன்றியமையா ஹீரோயினாகத் தோன்றினாலும்; சமீப வாசகர்களுக்கு லைட்டாகப் பேஸ்தடிப்பதும் நிஜமே ! மாடஸ்டி கதைகள் உருவான காலகட்டத்தில் உலகின் அரசியல் வரைபடமே வித்தியாசமானதொன்றாகக் காட்சி தந்து வந்தது! அன்றைக்கு ரஷ்யாவும்; கம்யூனிச தேசங்களும் ஒரு அணியாகவும்; மேற்கத்திய சக்திகள் இன்னொரு அணியாகவும் முறைப்புக் காட்டிக் கொண்டு திரிந்தன! பெர்லின் மதில் வீழ்ந்திருக்கவில்லை; சர்வதேச அரங்கில் தேசங்களுக்கு மத்தியில் ஒரு அரூபமான திரையிருந்து வந்தது! Those were the days of the Cold War !! ஜேம்ஸ் பாண்ட் பாணிகளுக்கும் ; அதனைத் தழுவிய மாடஸ்டியின் பாணிகளுக்கும் அந்தக் காலங்களில் பரபரப்பான acceptance இருந்ததில் வியப்பில்லை! ஆனால் இன்றைக்கோ உலக அரசியல் அரங்கே ஏகமாய் மாறியிருக்க – மாடஸ்டியின் கதைக்களங்கள் நண்பர்களில் ஒரு அணிக்கு அத்தனை ரம்யம் தருவதில்லை என்பது புரிகிறது ! பெர்சனலாக மாடஸ்டி-கார்வின் கதாப்பாத்திரங்களுக்கு நானும் ரசிகனே ! ஆனால் உங்களின் ரசனை மீட்டர்களும் அதே திசையில் பயணித்தாலன்றி – இளவரசியை உங்கள் மீது திணித்த கதையாகிப் போகும் ! அக்குவேறு ஆணி வேறாய் அலச வேண்டுமென்றில்லாது – ஒரு ஸ்லாட்டுக்கு இவர் ஓ.கே.வா ? என்று மட்டும் சொல்லிடுங்களேன் folks ?

அடுத்ததாய் தலைகாட்டுபவர் நமது ஜில்லார்! இவரது சித்திர பாணி கார்ட்டூன்களை நினைவுபடுத்தும் விதமாய் இருப்பதாலும், இவரது அல்லக்கை அசிஸ்டெண்ட் மொக்கை ஜோக்குகளாய் அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதாலும், ஜில் ஜோர்டன் கதைகளை கார்ட்டூன்களாய்ப் பார்த்திட நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை தான் ! Maybe அந்த சிறு தடுமாற்றம் இந்தக் கதைகளோடு ஒன்றிடுவதற்குத் ‘தடா‘ போடுகிறதாவென்று தெரியவில்லை! எது எப்படியோ – ஜில்லாருக்கு இன்னொரு வாய்ப்பு பற்றி உங்களது அபிப்பிராயம் ப்ளீஸ் ?

புதுவரவு ட்ரெண்ட் பலரிடம் ”ஆஹா” என்ற சிலாகிப்பையும் ; சிலரிடம் ‘ஐயோ‘ என்ற அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பது புரிகிறது! இதுவொரு slam-bang ரகக் கதையே அல்ல ; மாறாக, நாம் இதுவரையிலும் பார்த்திரா ஒரு புதுப் பிரதேசம் சார்ந்த கதைக்களம் - என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது நினைவிருக்கலாம் ! So “ஆக்ஷன் கம்மி” என்ற புகார் அத்தனை பொருத்தமென்று சொல்ல மாட்டேன்! அதே போல ஒற்றை சாகஸத்தோடு ஓரம்கட்டுமளவிற்கு இவர் சொதப்பிடும் ரகமுமல்ல என்பதால் – ‘உள்ளே; வெளியே‘ ஆட்டத்துக்கான முகாந்திரமே இந்த நொடியில் இவருக்கு இருப்பதாய் நான் நினைக்கவில்லை !

ஆக்ஷன் நாயகர்களைப் பற்றிப் பேசும் போது தளபதியைப் பற்றிப் பேசாது போனால் முட்டுச் சந்தில் போட்டுக் குமுறி விடுவார்களென்பதால் “டைகர்” என்ற பெயரை பவ்யமாய் உச்சரிக்க முனைகிறேன் ! பெரியவரின் கதைகள்; மார்ஷல் அவதாரின் கதைகள் என்று சகலமும் காலி என்பதால் – இளையவரின் சாகஸங்கள் மட்டுமே பாக்கி ! இந்த அமர கதாப்பாத்திரத்தை உருவாக்கிய பிதாமகர்கள் இன்று நம்மோடு இல்லை என்ற நெருடல் இந்தத் தொடரில் புதுசு புதுசாய்ப் பணியாற்றும் கதாசிரியர்களையும், ஓவியர்களையும் பார்க்கும் போது எழாதில்லை ! எத்தனை ஆற்றல்மிக்க சமகாலத்துப் படைப்பாளிகள் களமிறங்கினாலுமே – தலைமுறைக்கொருமுறை தலையெடுக்கும் ஜாம்பவான்களின் காலணிகளை இட்டு நிரப்புவது சுலபமல்ல தானே ? 'சார்லியே – ஜிரௌ' என்ற அந்த அசாத்தியக் கூட்டணியை மனதில் இருத்திக் கொண்டு – புதியவர்களின் உழைப்புகளை எடைபோட முனைவது முறையாகாது என்பது புரிந்தாலும் – ஆழ்மனசு சேட்டைகளைக் கைவிட மறுக்கிறது ! Again – சிந்தனைக் குல்லாவுக்கு ‘ஜே‘ போட்டு வருகிறேன்!

இவர்கள் நீங்கலாய் – விளிம்பு நிலை நாயகர்களாய் சாகஸ வீரர் ரோஜர்; டிடெக்டிவ் ஜெரோம் என்றெல்லாம் நிற்கிறார்கள் – வாய்ப்புகள் கோரி ! மறுக்கா ஒரு நாசூக்கான சாரியை இவர்களிடம் சொல்லத் தான் வேணுமோ ? உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ?

That just about sums up the majority of the action heroes from recent years....! இவர்கள் தவிர்த்து - புழக்கத்திலிருக்கும் (color) நாயகர்கள் யாரையேனும் கவனத்திற்கு கொண்டு வர மறந்திருந்தேன் என்றால் - உங்கள் நினைவூட்டல்கள் உதவிடும் folks !! போனெல்லியின் b & w நாயக / நாயகியரைப் பற்றி அடுத்த வாரப் பதிவில் பார்த்திடலாம் !

அப்புறம் "இரத்தப் படலம்" வெளியீட்டு விழா பற்றிய updates :

😃ஈரோடு புத்தக விழா நடைபெறும் VOC பூங்காவின் வாயிலில் உள்ள ஹோட்டல் LE JARDIN-ன் தரைதளத்திலுள்ள ORCHID ஹாலில் ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் சந்திக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் guys ! 10 மணி முதல் மதியம் 2 வரை அரங்கில் அரட்டை ; இரத்தப் படல ரிலீஸ் என்றான பிற்பாடு அங்கேயே சைவ உணவும் மதியத்துக்கு ! உங்களின் லேட்டஸ்ட் கனாவும், இதுவரையிலான costliest கனாவுமான"இ.ப."வெளியாகும் தருணத்தில், உங்கள் அனைவரின் அண்மை நமக்கு   அத்தியாவசியத் தேவை என்பேன் ! So உங்களது அட்டவணைகளில் ஆகஸ்ட் 4-ம் தேதியினை நமக்கோசரம் ஒதுக்கிடக்  கோருகிறேன் !! Would love to see you all !!

😃அதே போல கூரியர்களில் அல்லாது, ஈரோட்டில் "இ.ப." பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தயை கூர்ந்து ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடணும் - ப்ளீஸ் ! இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில்  உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் ! உங்கள் புக்கிங் நம்பர் ; அல்லது பெயர் & முகவரி அவசியமாகிடும் folks !! 

Before I sign off - சில updates :

☎கோவையில் தற்போது நடைபெற்று வரும் புத்தக விழாவின் முதல் 2 நாட்களும் சுவாரஸ்யம் தரும் விற்பனை என்று சொல்லலாம் ! சென்னைக்குப் போட்டியாகவோ  ; ஈரோட்டுக்குப் போட்டியாகவோ - கோவையின் விற்பனைகள் அமைந்திடும் வாய்ப்புகள் குறைவே என்றாலும், கிட்டங்கி நிறைய இதழ்களை ரொப்பி வைத்துக் கொண்டு விழிபிதுங்கி நிற்கும் நமக்கு எந்தவொரு சிறு கிளையுமே உதவிடும் தான் ! தொடரும் நாட்களில் விற்பனை கூடுதல் வேகமெடுக்க, நம் சார்பில் வேண்டிக் கொள்ளுங்களேன் guys ! 

☎அப்புறம் சின்னதொரு இதழ் மாற்றமுமே : நடப்பாண்டின் அட்டவணையில் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்ற பெயரில் மாடஸ்டி பிளைசி + டிடெக்டிவ் ராபின் கதைகள் இணைந்து வருவதாய் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் தற்சமயம் ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்ல கைவசமுள்ள இதழ்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாய் இருப்பதால் - மாடஸ்டியை தனி இதழாகவும் ; ராபினை தனி இதழாகவும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம் ! 

☎நமது இத்தாலிய டெக்ஸ் வில்லர் ரசிக / ஓவியர் இன்னமுமொரு அட்டைப்படப் பெயின்டிங் போட்டுத் தரச் சம்மதித்துள்ளார் - அவகாசம் கிட்டும் போது ! So இந்தாண்டினில் இன்னும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் ராப்பரைப் பார்க்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! 

மீண்டும் சந்திப்போம் !! Have a lovely weekend !! Bye now all !!

332 comments:

  1. ராபின் அட்டைப்படம் பழைய முத்து காமிக்ஸ் ஐ நியாபகப்படுத்துகிறது.. அருமை. முழுக்க படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. சார்,

    ஒற்றை நொடியில் ஒன்பது தோட்டா என ஒரு விளம்பரம் வந்ததாக ஞாபகம். அது ஆக்‌ஷன் ஜானர்க்கு சரியாக வருமா எனப் பார்க்கலாமே!!
    மற்றபடி கமான்ச்சே வேண்டாம். லேடி எஸ் , ஜில் ஜோர்டான், மாடஸ்டி ஒரு ஸ்லாட் ஓகே! டைகர் ஆஹா பேஷ்பேஷ்...

    ஒரு 1250 பக்க முழுதீள கதை பற்றி ஓரு பதிவில் சொல்லியிருந்தீர்களே?? அதை வரும் வருட குண்டு புத்தக ஸ்பெஷலுக்கு சாத்தியம் உண்டா எனப் பாருங்கள்!

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு!

    ReplyDelete
  4. ஜஆனஇ ,ஜில், ஜெரோம், டைகர், ஜூலியா, ரெட்ட 2020க்கு ஒதுக்கிட்டு புதிய நாயகர்கள பட்டியலிட்டீங்களே கடல் கதைகள் போல அத அடுத்த வருடம் பரபரப்பா விடலாமே,,,ட்யூராங்கோ, அண்டர்டேக்கர் போல அதிரடி கிட்டுமல்லவா சார்,,,

    ReplyDelete
    Replies
    1. ///// ஜஆனஇ ,ஜில், ஜெரோம், டைகர், ஜூலியா, ரெட்ட 2020க்கு ஒதுக்கிட்டு புதிய நாயகர்கள பட்டியலிட்டீங்களே கடல் கதைகள் போல அத அடுத்த வருடம் பரபரப்பா விடலாமே,,,ட்யூராங்கோ, அண்டர்டேக்கர் போல அதிரடி கிட்டுமல்லவா சார்,,, /////

      வழக்கம் போல ஒண்ணுமே புரியலை உங்க பதிவிலே !! கொஞ்சம் தெளிவா டைப்புங்களேன் ப்ரோ ... 😉

      Delete
    2. சம்பத் @ அவரு சொல்லுறத நீங்கள் புரிஞ்சுக்கிட்டா நீங்களும் ஒரு ஸ்டீல் ஆகிடுவீங்க.அஸ்க்கு புஸ்க்கு. :-)

      Delete
    3. நீங்கள் கூறுவதை வரவேற்க்கிறேன் steel.

      நடப்பு நயகர்கள் வெளியிடு அனைத்தையும் 2020 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்துவிட்டு.

      புதிய நாயகர்கள் , புதிய கதைகளம் வெளியிட சொல்கிறார்.

      ஒவ்வொரு நாயகராக வெளியிட்டு அவை வெற்றி பெருமா பெறாத என்பதை சோதிக்க வருட கணக்கில் ஆகும்.

      வருடம் 12 ம் புது நாயகள் புது கதைகளம் என்று மாதம் தேறும் வரும் பட்சத்தில் அவற்றில் மூன்று அல்லது நான்கு கண்டிப்பாக வெற்றி பெறும்.

      அதை 2020 பிறகு விடுபட்ட நாயகர்கள் இடத்தை நிரப்பலாம்.

      Delete
  5. Sir, Lady S double ok. But roger ellam vendam sir.

    ReplyDelete
  6. டியர் எடிட்டர்

    Durango - எனக்கு முதல் ஆல்பத்தை விட இரண்டாம் ஆல்பம் (இடி முழக்கம்) பிடித்திருந்தது. ஒரு 10 நாட்களுக்கு முன்னர் தான் வாசித்து முடித்தேன் என்பதால் பசுமையாக நினைவுள்ளது. Durango can continue.

    So too with Thorgal.

    CID ராபின் தனியே வருவது சிறப்பு.

    ஈரோடு விழா சிறக்க வாழ்த்துக்கள் - என் போன்ற XIII வாங்காமல் விட்டவர்களுக்காக Tex dynamite ஸ்பெஷல் அல்லது ஜம்போவின் ஒரு இதழ் வெளியிட்டிருக்கலாம் ஆகஸ்டில். செப்டெம்பர் வரை வெயிட் செய்ய வேண்டும் இப்போ. DC பக்கம் ஆகஸ்ட் படிப்புக்களை ஓட விடுகிறேன் !!

    அந்த வண்ண tex இதழ் எப்போது வரும்? வாங்கிட ஆவலாய் உள்ளேன்.

    Regarding 2019:

    Jill Jordan - Yes
    Ric Hochet - Old OK
    Durango - Yes
    Thorgal - Yes
    CID Robin - Yes
    Martin - Yes
    Julia - Yes
    Trent - One more chance
    Shelton - Yes

    Modesty - No
    Lady S - No
    Comanche - No

    கார்ட்டூன் (தலா இரண்டு இதழ்கள்)

    லக்கி லூக்
    சிக் பில்
    மதியில்லா மந்திரி

    ReplyDelete
  7. ராபின் ஜன்னலோரம் ஒரு சடலம் நினைவு வருகிறது.அட்டைபடம் அம்சமாக உள்ளது.

    ReplyDelete
  8. லேடி எஸ் நோ!
    ஜானி எஸ்!
    காமன்சே சே! நோ!
    மாடஸ்டி கதம்ப ஸ்பெஷலில் மட்டும்! எஸ்!

    ReplyDelete
  9. உள்ளேன் ஐயா..!!


    ///ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா ? பழசா ? உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்குமோ ?///


    அதுல ஒண்ணு ..
    இதுல ஒண்ணு ...

    கூடவே ரீப்ரிண்ட்ல ஓண்ணு....

    ம்ம்ம்ம்.....ஆசையாத்தான் இருக்கு ..!!

    ReplyDelete
    Replies
    1. // அதுல ஒண்ணு ..
      இதுல ஒண்ணு ...

      கூடவே ரீப்ரிண்ட்ல ஓண்ணு....//
      கேட்க நல்லாத்தான் இருக்கு,எங்க கண்ணன் ஜானி ரீபிரிண்ட் வர முயற்சிக்கும் போதெல்லாம் இந்த பரட்டை பிரின்ஸ் வந்து குறுக்கால விழுந்துடறாரே.

      Delete

  10. //☎நமது இத்தாலிய டெக்ஸ் வில்லர் ரசிக / ஓவியர் இன்னமுமொரு அட்டைப்படப் பெயின்டிங் போட்டுத் தரச் சம்மதித்துள்ளார் - அவகாசம் கிட்டும் போது ! So இந்தாண்டினில் இன்னும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் ராப்பரைப் பார்க்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் //
    ஆவலுடன் எதிர் நோக்கி!

    ReplyDelete
  11. வந்திட்டேன் சார் _/|\_

    ReplyDelete
  12. //ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா ? பழசா ? உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்குமோ ?//

    புது பானி முயற்சித்து பார்க்கலாம் சார்.

    ReplyDelete
  13. டைகர் கருப்பு வெள்ளை யில் ம்.தொடரலாம்!

    ReplyDelete
  14. இனிய இரவு வணக்கம். கொர்......கொர்.....

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. கமான்சே வந்தால் தொகுப்பாக வரட்டும்.
    லேடி எஸ் வேண்டாம் என்று சொல்லவில்லை.

    ReplyDelete
  17. ///கமான்சேவின் வனவாசம் தொடர்வது சரி தானா ? அல்லது ஹெர்மனின் இந்தப் பரட்டைத்தலைக் கௌபாய்க்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தால் மோசமில்லை என்பீர்களா ? விற்பனைகளில் மனுஷன் பெரிதாய் கம்பு சுழற்றிடவில்லை என்பதால் எனக்குமே இவருக்கென பெரிதாய் வாதாடத் தோன்ற மாட்டேன்கிறது தான் ; ஆனாலும் ஒரு தொடர் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் அம்போவென நிற்கிறதே என்ற வருத்தமும் இல்லாதில்லை !///


    கமான்சே ...யதார்த்தமானதொரு கௌபாய் தொடர்.! விற்பனையில் சுணங்கியது வருத்தமான சங்கதிதான் சார்.!

    முதலுக்கு மோசமில்லை என்றால் தாண்டிய முக்கால் கிணற்றை முழுதாக்கி விடுங்கள்.! கையைக் கடிக்கிறது என்றால் தயங்காமல் மூடுவிழா நடத்திவிடுங்கள்.!

    ReplyDelete
  18. டைகர், தோர்கல், வேய்ன் ஷெல்டன் - டிக் டிக் டிக்.

    ரிப்போர்ட்டர் ஜானி - பழசு ரூ புதுசு இரண்டும்...

    ஷானியா - வேண்டும் வேண்டும்.

    மாடஸ்டி பிளைஸி, சாகஸ வீரர் ரோஜர், டிடெக்டிவ் ஜெரோம் - கதைத் தேர்வு முக்கியம் அமைச்சரே.

    கமான்சே & ஜில் ஜோர்டன் - சொல்லத் தெரியவில்லை. இந்த ஆண்டு வந்த ஜில்லார் உண்மையிலேயே ஜில்லாக இருந்தார்.

    புதுவரவு ட்ரெண்ட் - இந்த மாத இதழ்களை இன்னும் படிக்கவில்லை.

    நன்றி.

    ReplyDelete
  19. ///அதற்குமீறி ‘பளிச்‘சென்ற ஆக்ஷன் தொடர்கள் கண்ணில் பட்டாலும், அவை பெரும்பாலும் கௌபாய்க் களங்களாக உள்ளன ; அல்லது நான்கோ – ஆறோ ஆல்பங்களில் முற்றுப்பெறும் ஒரு நெடுந்தொடராக இருக்கின்றன ! அவற்றை இது போன்ற சிங்கிள் ஆல்பங்களாய் வெளியிட இயலாதெனும் போது சிக்கல் எழுகிறது ! ///

    வாவ் ...சூப்பர் சூப்பர்.!
    இதுபோன்ற நான்கைந்தோ ஐந்தாறோ ஆல்பங்களோடு முற்றுப்பெறும் தொடர்களைத்தான் ரொம்ப நாட்களாக எதிர்பார்க்கிறோம் சார்.!
    ஒரே வருடத்திலேயே இரண்டிரண்டாகவோ மும்மூன்றாவோ போட்டு சோலிய முடிச்சிட்டு., அடுத்தாண்டுக்கு புதுக்கதையைத் தேடிப் பயணிப்போமே ..!

    சார். ..! தயவுசெய்து ஒருமுறையாவது இதுபோன்ற குறுந்தொடர் கதைகளை ஓராண்டுக்கு முயற்சி செய்து பாருங்களேன்.!
    காமிக்ஸ் கூறும் நல்லுலகம் வாழ்த்தி வணங்கும்..!!

    ReplyDelete
    Replies
    1. // சார். ..! தயவுசெய்து ஒருமுறையாவது இதுபோன்ற குறுந்தொடர் கதைகளை ஓராண்டுக்கு முயற்சி செய்து பாருங்களேன்.!
      காமிக்ஸ் கூறும் நல்லுலகம் வாழ்த்தி வணங்கும்..!! //

      +1😎👍👏👏🤝

      Delete
  20. லேடி S வருடம் ஒரு கதை வருவதில் எவ்வித நெருடலுமில்லை சார்.!

    அந்த ஓவியங்களுக்காகவே லேடி Sஐ கண்ணசைத்து வரவேற்கிறேன்.!!

    அப்புறம்.. ..அந்த .. மாடஸ்டி யக்காவப் பத்தி ... ஒண்ணும் சொல்றதுக்கில்லை ...பெரியவங்க என்ன முடிவெடுத்தாலும் இளைஞர்கள் கட்டுப்படுகிறோம்.!

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி அக்காவா??!!

      மாடஸ்டி ஆன்ட்டினு சொல்லுங்க!!??
      ஹிஹிஹி!!

      Delete
    2. அப்ப ஆன்ட்டி ஹீரோயின்னு சொல்லலாமா ?

      Delete
    3. @ கிட் ஆர்டின் கண்ணரே..

      மாடஸ்டி அக்காவா.. ஈரோட்டு கெடா வெட்டு கேன்சல்..

      Delete
  21. இரவு வணக்கம் நண்பர்களே!!!!

    ReplyDelete
  22. ///ஜில்லாருக்கு இன்னொரு வாய்ப்பு பற்றி உங்களது அபிப்பிராயம் ப்ளீஸ் ///

    டெபனட்லீ ..டெபனட்லீ ..!!

    ///புதுவரவு ட்ரெண்ட் பலரிடம் ”ஆஹா” என்ற சிலாகிப்பையும் ; சிலரிடம் ‘ஐயோ‘ என்ற அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பது புரிகிறது ///

    ட்ரெண்ட் ..ஒரு யதார்த்த நாயகர்.!

    ஹீரோ பத்துமைலுக்கு அங்கிட்டு வந்துட்டு இருக்காப்லன்னு கேள்விட்டதும் வில்லனும் குதிரையும் சேர்ந்தே உச்சா போயிடுற மாதிரி கதைகளே நம்மிடையே வெற்றி பெறுகின்றன என்றாலும் கூட, அவ்வபோது ஆண்டுக்கொருமுறையாவது இப்படியொரு ஆர்ப்பாட்டமில்லாத அழகான கௌபாயை தரிசிக்க எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.!

    அதுவும் முதல் கதையிலேயே.,

    ரொம்ப கஷ்டப்பட்டு கவலைப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு ஒருவழியா வில்லனை துப்பாக்கி முனையில நிறுத்திடுறாரு ட்ரெண்ட் ..!
    ஆஹா ..அவ்ளோதாண்டா ..இனி வில்லனுக்கு மூஞ்சி மொகரையெல்லாம் இடம் மாறப்போகுதுடோய்னு நினச்சிட்டுப் படிச்சா....ஹிஹி ..வில்லன் டீ குண்டான்லயே நம்மாள மொத்து மொத்துன்னு மொத்தி செம்ம மாத்து மாத்திட்டு எஸ் ஆயிடுறான் ..! அப்புறமா அந்த புள்ள வந்து சுடுதண்ணி வெச்சி ஒத்தடம் குடுத்து திரும்பவும் போய் அடிவாங்கியாரச்சொல்லி ட்ரெண்டை அனுப்பி வைக்குது.!

    எதுக்கு சொல்றேன்னா ...
    இதுதான் யதார்த்தம் ..!கற்பனையை ரசிக்கும் அதே நேரத்தில் ட்ரெண்ட் மாதிரியான ஒரு அழகான அமைதியான நிஜத்துக்கு நெருக்கமான நாயகரையும் கொஞ்சம் ரசிப்போமே.!
    வெல்கம் டூ அவர் டென் ட்ரெண்ட் ..!!!

    ReplyDelete
    Replies
    1. அனேகமா டீ குண்டான்ல மொத்து வாங்கறதுன்னால அவரை உங்களுக்கு பிடிச்சுருக்கு. சேம் பிளட்டுங்கறதாலயா?

      Delete
    2. // யதார்த்தம் ..!கற்பனையை ரசிக்கும் அதே நேரத்தில் ட்ரெண்ட் மாதிரியான ஒரு அழகான அமைதியான நிஜத்துக்கு நெருக்கமான நாயகரையும் கொஞ்சம் ரசிப்போமே.!
      வெல்கம் டூ அவர் டென் ட்ரெண்ட் ..!!! //

      👌👍👏👏👏👏👏👏👏

      Delete
    3. // வெல்கம் டூ அவர் டென் ட்ரெண்ட் ..!!! //
      +11111

      Delete
  23. ///
    இவர்கள் நீங்கலாய் – விளிம்பு நிலை நாயகர்களாய் சாகஸ வீரர் ரோஜர்......///


    எனிக்கி உறக்கம் வருன்னு .....
    மதுர சொப்பனங்கள்...!!

    ReplyDelete
    Replies
    1. மதுர சொப்பனத்தில் ரோஜர் தன்னுடைய மர்மகத்தியால் உங்களை தாக்குவார் என உறுதியாக நம்புகிறேன்...

      ஜில்ஜோர்டன் காமெடியாகவும் லேது. சீரியஸாகவும் லேது.
      ஜில்லுக்கு ரோஜர் எவ்வளவோ பெட்டர் என்பது என் கருத்து....

      Delete
    2. ரோஜர் வாழ்க....

      அவர் பேர்ல ரத்த தான முகாம் ஒன்னு போட்டா போச்சு....

      Delete
  24. 2 or 3 ஆல்பங்கள் சேர்ந்து வந்தால் தான் கமன்சோ இல்லை லேடி எஸ் ஸோ நன்றுக இருக்கும் என்று தோன்றுகிறது...

    ReplyDelete
  25. Regarding 2019:

    Jill Jordan - வேண்டவே வேண்டாம்
    Ric Hochet - Old OK
    Durango - Yes இவர் தொடரட்டும்
    Thorgal - Yes
    CID Robin - Yes
    Martin - Yes
    Julia - முடியல எடி சார் .. வேண்டாமே இந்த விபரீத பரிட்சை (குடோன் காலியாக இருந்தால் இதை வரை முறை படுத்துங்கள்)
    Trent - One more chance +123
    Shelton - Yes

    Modesty - இரண்டு ஆல்பங்களாவது வேண்டும்
    Lady S - No டெபனட்லி நோ நோ நோ...
    Comanche - தொடரினை ஒரே ஆல்பமாக போட்டு முடித்து விடலாம்

    கார்ட்டூன் (தலா இரண்டு இதழ்கள்) +1

    லக்கி லூக்
    சிக் பில்
    மதியில்லா மந்திரி
    பெண்ணி பயல்

    (ராகவன் ஜி உங்க கமண்ட்டை யூஸ் பண்ணிக்கிட்டேன் நன்றிகள்)

    ReplyDelete
  26. 1. Comanche - Always "YES" for Hermann. Any future chance of his new western, DUKE series ?
    2. LADY S - "OK"
    3. Modesty Blaise - "NO" for colored version or joining with Bonelli collections book.
    "Yes" for releasing couple of stories in a single book for every year or two years.

    4. Gil Jourdan - "Yes" (This is close to TinTin for me)
    5. Blueberry aka Tiger - "Yes"
    6. Detective Jerome - "Yes" for Color. "NO" for B/W
    7. Roger (Bob Morane) - "Yes"
    8. Rep Johny - "Yes" for the classic

    ReplyDelete
  27. blueberry இளைய அவதாரத்திற்கு yes! மற்றவை தங்கள் முடிவை மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம்.

    ReplyDelete
  28. // தோர்கல் - உங்கள் சார்பாய் - வைக்கிங் சார்வாளுக்கு ஒரு ‘டிக்‘ போட்டு விடலாமா ?
    //


    தாரளமாக. டபூள் டிக். இவருக்கு எல்லாம் கேள்வியே தேவையில்லை. இவர் எப்போதும் உள்ளே.

    ReplyDelete
    Replies

    1. ///தாரளமாக. டபூள் டிக். இவருக்கு எல்லாம் கேள்வியே தேவையில்லை. இவர் எப்போதும் உள்ளே///

      டிக்.. டிக்..டிக்.. (அதாவது டிரிபுள் டிக்) .

      Delete
    2. டக் டக் டக் , அதாவது மின்னல் வேக டிக் டிக் டிக்

      Delete
  29. வேய்ன் ஷெல்டன் - உள்ளே
    ட்ரெண்ட் - உள்ளே

    டிடெக்டிவ் ஜெரோம் - மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.

    லார்கோ - வெளியே
    லேடி S - வேண்டாம் ஆளை விடுங்க. வெளியே.
    சாகஸ வீரர் ரோஜர் - பழைய ஹிட் கதைகளை மறுபதிப்பு செய்யலாம். மற்றபடி ரோஜர் வெளியே

    இளம் டைகர் - விறுவிறுப்பாக இருந்தால் மட்டும் வெளியீடவும். மார்சல் டைகர் சுமார். அதேநேரம் என் பெயர் டைகர் மிகவும் மெதுவாக நகர்ந்து. எனக்கு டைகரின் மற்ற கதைகள் போல் என் பெயர் டைகர் கவரவில்லை.

    ஜானி - உள்ளே. ஒரு மாற்றத்திற்கு ஜானியின் புதிய மற்றும் பழைய பாணி கதை இரண்டையும் இணைத்து 2019 தரலாமே? 🤔

    ReplyDelete
  30. // மாடஸ்டி பிளைஸி பக்கமாய் ரேடாரைத் திருப்பிடுவோம்! இவருக்குமே “ஆண்டுக்கொரு ஸ்லாட்” என்ற ரீதியில் வாய்ப்பளித்து வருகிறோம் //

    வரட்டும் வரட்டும்.

    // ட்யுராங்கோவுமே ஒரு சந்தேகமிலாத் தேர்வென நாம் கருதிடலாமா நண்பர்களே ? //
    மௌனமாய் இவருக்கு ஓகே. அதுவும் இவருக்கு ஒற்றை புத்தகம். கற்றையாக வேண்டும்.

    கமான்சே - வேண்டும். எனக்கு மிகவும் பிடித்தவர். அமைதியான நாயகன் யதார்த்தமான மனிதர்கள் விறுவிறுப்பான கதை. முடிந்தால் இரண்டு கதைகள் இணைத்து இவரை ஒரு முறை முயற்சிக்களாமே?

    ReplyDelete
  31. // மாடஸ்டியை தனி இதழாகவும் ; ராபினை தனி இதழாகவும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம் ! //

    நல்ல விஷயம். வரவேற்கிறேன்.

    ReplyDelete
  32. // ஆகஸ்ட் 4-ம் தேதியினை நமக்கோசரம் ஒதுக்கிடக் கோருகிறேன் !! Would love to see you all ! //

    அனைவரையும் குடும்பத்துடன் காண ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பராக இருக்கும் தான் !

      Delete
  33. Selection பாக்ஸ் வச்சா கொஞ்சம் சுலபமா ஒட்டு போட்டுடலாம்.

    எல்லாருக்கும் தேர்வனோர் பட்டியலும் புரியும்.

    ReplyDelete
  34. மாடெஸ்டி வேண்டும் கண்டிப்பாக.

    Mr. ஜில் வெளியே நில்
    மிஸ் சாணி கிளம்பு நீ

    ஹி ஹி..

    ReplyDelete
    Replies
    1. இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

      Delete
  35. விஜயன் சார்,
    2019 ல் மங்கா ஏதாவது முயற்சிக்கலாம்... நமது காமிக்ஸ் எப்போது மாணவர்கள் படிக்கிறார்கர்களோ அப்போது தான் இன்னும் வளரும்... இப்போ மங்கா தான் ட்ரெண்ட்...
    என்னுடைய விருப்பமும் அதுவே...
    1. My Hero Academia
    2. One Punch Man
    இந்த 2 தொடர்களை பரிசீலனை செய்து பாருங்கள்...
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மொத்தத் தமிழகமுமே மங்கா படிப்பது போலொரு பிரமை தோன்றுகிறது நண்பரே - உங்களின் அவ்வப்போதைய குரல்களைக் கொண்டு பார்க்கும் போது ! அப்படியே படிப்போரின் பெரும்பான்மை மாணவர்கள் என்பது போலவும் தோன்றல் எழுகிறது !! கொஞ்சமே கொஞ்சமாய் நேரமெடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் வரும் அந்த மங்காக்களை வாங்குவோர் எவ்வளவு பேர் ? ; ஆன்லைனில் படிப்போர் எவ்வளவு பேர் ? என்றும் அறிந்து கொள்ள முடிகிறதாவென்று பாருங்களேன் - ப்ளீஸ் ? அப்புறமும் மங்காக்கள் தான் நமக்கு முன்செல்லும் பாதை என்ற நம்பிக்கை தொடர்கிறதாவென்று பரிசீலிப்போமே ?

      Delete
  36. Hello Mr.Vijayan
    Can please let me know your bank account to transfer money from Singapore

    ReplyDelete
    Replies
    1. A mail with your address & your requirements would be better..

      Delete
  37. I wonder why people say no to Modesty . What do Modesty stories lack?

    ReplyDelete
    Replies
    1. ரசனைகள் மாறிக் கொண்டே போகும் யுகமிது சார் !

      Delete
  38. மாடஸ்டி ஒக்கே.சானியா வேண்டும்.அப்புறம் இந்த டைகருக்கு ஒரு கும்பிடு ..வேண்டவே வேண்டாம்.ரோஜர் ஒரு ஸ்லாட் சரிதான்.

    ReplyDelete
  39. டியுராங்கோ & தோர்கல் வழக்கம் போல மூன்று கதைகளாகவே போட்டு முடியுங்கள் சார்! ஜில் ஜோர்டானுக்கு பதில் டிடெக்டிவ் ஜெரோம்க்கு ஒரு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம். கமான்சே கதைகள் இன்னும் கதைகள் இன்னும் ஆறு கதைகள் மட்டுமே மிச்சமிருக்கு அதை மூன்று கதைகளை இரண்டு ஆல்பங்களாக ஜம்போ காமிக்ஸில் கூட போட்டு முடிக்க பார்க்கலாம். ரிப்போர்ட்டர் ஜானி.மார்ட்டீன்.ராபின் கதைகளுக்கு வருடத்திற்கு இரண்டு ஸ்லாட் ஒதுக்கலாம். மாடஸ்டி, ஷானியாவுக்கு ஓய்வு கொடுத்திட்டு ஜூலியாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம். சாகஸ வீரர் ரோஜர் கதையான El emper ador macao கதையை முயற்சித்து பார்க்கலாம். தவளை மனிதனின் முத்திரையை போன்ற கதைக்களம் மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. // கமான்சே கதைகள் இன்னும் கதைகள் இன்னும் ஆறு கதைகள் மட்டுமே மிச்சமிருக்கு அதை மூன்று கதைகளை இரண்டு ஆல்பங்களாக ஜம்போ காமிக்ஸில் கூட போட்டு முடிக்க பார்க்கலாம். //

      +1

      Delete
    2. சித்திரங்களைக் கண்டு மயங்கி, அப்புறமாய் பேஸ்தடித்துப் போய் நின்ற அனுபவங்கள் ரோஜரின் சமாச்சாரத்தில் நிறையவே இருக்கு சார் நமக்கு ! கதைகளை வாங்கி, மொழிபெயர்த்து ; டைப்செட்டிங்கும் செய்து அப்புறமாய் பேய் முழி முழித்தபடிக்கே அவற்றை உள்ளே போட்டுப் பூட்டி வைத்த அனுபவங்கள் 2 முறை நிகழ்ந்துள்ளன ! கைவசம் 2 ரோஜர் கதைகள் ரெடி-யா-க உள்ளன ; 3 ஆண்டுகளாய் !!

      Delete
  40. டியர் சார்

    இந்த ஆண்டு அட்டவனையில் அறித்தபடி டெக்ஸ் சாகசம் “காலனின கானகம்” ஆண்டின் இறுதிக்குள் வருவதற்கான வாய்ப்புண்டா சார். இதழ்கள் குறைவாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வெளியிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. அது ட்ராப் ஆகல நண்பரே. அதையும் சேர்த்து தான் 11இதழ் சந்தாவில் பாக்கி. இந்த ஆண்டே உரிய மாதத்தில் வரும் என்றே அறிவித்து உள்ளார்.

      அநேகமாக டிசம்பரில் வர வாய்ப்பு அதிகம். வெளியீடு எண் கூட 322னு நினைக்கிறேன்.

      Delete
    2. கதையும் ரெடி ; ராப்பரும் அச்சிட்டு விட்டோம் - வெளியீடு நம்பர் 322 என்று ! கதைக்களம் ரொம்பவே சுமார் என்பதால் ஓரம் கட்டியுள்ளேன் ! But அதற்கு மாற்றாய் வேறொரு TEX single இதழ் டிசம்பரில் வரும் சார் !

      Delete
  41. // So இந்தாண்டினில் இன்னும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் ராப்பரைப் பார்க்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! //
    டைனமைட் ஸ்பெஷலுக்கா சார்,ம் கலக்கலா இருக்கும்.

    ReplyDelete
  42. லார்கோ இப்போதைக்கு இல்லையா அடடே வருத்தமான செய்தி,
    இப்போதைக்கு டபுள் ஓகே சொல்ற மாதிரி இருப்பது,
    தோர்கல்,
    ரிப்போர்ட்டர் ஜானி,
    ட்யுராங்கோ,
    வெய்ன் ஷெல்டன்.
    அடுத்து ஓகே ரகத்தில் இருப்பவர்கள்.
    லேடி எஸ்,
    ஜில் ஜோர்டான்,
    ட்ரெண்ட்.
    கமான்சே ஓகேதான் எனினும் விற்பனையில் சுணக்கம் இருப்பதால் சிறிது காலம் அவர் ஓய்வெடுக்கலாம் தவறில்லை.
    அடுத்து இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்பது,
    மாடஸ்டி,
    சாகச வீரர் ரோஜர்,
    டிடெக்டிவ் ஜெரோம்.
    தளபதி டைகரை பொறுத்த மட்டில் இருக்கும் கிட்டங்கியில் இருக்கும் இதழ்கள் குறைந்தவுடன் களமிறக்கலாம் என்பது என் எண்ணம்,அல்லது வேறு ஸ்லாட்கள் குறைந்தால் அதற்கு மாற்றாக டைகர் இருப்பார் எனில் களமிறக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவான அலசல் சார் !

      Delete
  43. வணக்கம் சார்!!
    எனக்கு இந்த 'உள்ளே வெளியே/ விளையாட்டே பிடிக்காது. கதை நாயகரின் தொடர் முடிந்து விட்டது வேறு
    கதை இல்லை எனில் அந்த இடத்தில் வேறு நாயகரை அறிமுகம் செய்யுங்கள் ( உ.ம்) லார்க் கோ
    ஒவ்வொரு தொடரும் தேவையானதே
    வேறு வேறு காரணங்களுக்காக.
    (உ. ம்) ஜில் ஜோர்டன் கதை களம் பழமையாத் தெரிந்தாலும் அந்த ஓவிய அழகும் நேர்கோட்டுக்கதையும் சிறுவர்கள் படிப்பதற்கு சி பாரிசு செய்ய பொறுத்தமானதே.
    கடந்த பதிவில் சிறுவர்களுக்கு காமிக்ஸ் வேண்டும் என்று கோரிக்கை பலமாக எழுந்ததே
    புது நாயகர் ட்ரெண்ட் கதைகளம் நமக்கு சுமார் எனினும் ஒரு பனிபிரதேசத்தில் இளம் பெண்ணுணுடன் பயணம் செய்தாலும் கண்ணியத்துடனும் கனவில் கூட திருமணம் செய்வவது போல் கனவு காணும் ஆங்கிலேய ஹீரோ.வின்
    நேர்மையும் சிறுவர்கள் படிக்கும் போது மனதில் ஆழ பதியும் விசயங்கள் தானே
    எனவே வாங்குவது மட்டுமே எங்களது
    (நமது) கடமை
    மாடஸ்டிடி கதை 60 பக்கக் கதைகளாக இருப்பதால் சில நேரம் சுமார் கதையமைப்பாக இருந்து விட்டால் மொத் து வாங்கி விடுகிறார். எனவே CID ராபினுடன் இ ணைந்து வருவதை மிகவும் விரும்மனேன் பிரித்து விட்டீர்களே.
    இப்படி இரண்டு ஹீரோக்கள் சே ர்ந்து வரும் போது விற்பனை வரவேற்ப்பை வைத்து ஜூலியா விற்கும் வாய்ப்பை உருவாக்கலாம் என்று நம்பி இருந்தேனே
    (ஜூலியாவை இழக்க வேண்டி வந்து விடுமோ பயமாக உள்ள தே)

    ReplyDelete
    Replies
    1. // ஜில் ஜோர்டன் கதை களம் பழமையாத் தெரிந்தாலும் அந்த ஓவிய அழகும் நேர்கோட்டுக்கதையும் சிறுவர்கள் படிப்பதற்கு சி பாரிசு செய்ய பொறுத்தமானதே.
      கடந்த பதிவில் சிறுவர்களுக்கு காமிக்ஸ் வேண்டும் என்று கோரிக்கை பலமாக எழுந்ததே
      புது நாயகர் ட்ரெண்ட் கதைகளம் நமக்கு சுமார் எனினும் ஒரு பனிபிரதேசத்தில் இளம் பெண்ணுணுடன் பயணம் செய்தாலும் கண்ணியத்துடனும் கனவில் கூட திருமணம் செய்வவது போல் கனவு காணும் ஆங்கிலேய ஹீரோ.வின்
      நேர்மையும் சிறுவர்கள் படிக்கும் போது மனதில் ஆழ பதியும் விசயங்கள் தானே //

      உண்மை இளங்கோ. அருமையான தெளிவான சிந்தனை. இதற்கு எனது ஆதரவு.

      Delete
  44. மறந்து போன நாயகர் வரிசையில் உள்ள ஜெஸ்லாங், ப்ரூனோ பிரேசில். டயபாலிக் போன்றோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்க்கலாமே சார்? அதே போல் இரத்தப்படலம் Spin off கதைகளில் வெளிவராத கதைகள் பல உள்ளது அதில் ஏதாவது ஒன்றை தேர்வூ செய்து வெளியிட முயற்சிக்கலாம். சென்ற வருடம் வெளிவந்த கிராபிக் நாவல் கதைகளில் நிஜங்களின் நிசப்தத்தை தவிர மற்ற ஐந்து கதைகளுமே சிறப்பாக இருந்தது. அதே போன்று கதைகளாக இரண்டு மூன்று கதைகளை தேர்வு செய்து வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. ஜெஸ் லாங் : சாத்தியமில்லை சார் ; அதன் உரிமைகள் அதன் படைப்பாளிகளின் வாரிசுகள் நியமனத்தில் ஏதோவொரு சட்டக் குழுமத்தின் கைகளில் உள்ளனவாம் ! No chance !

      ப்ரூனோ பிரேசில் : (நமக்கு) எஞ்சியிருப்பது ஒரு புதுக் கதை ; ஆனால் எழுபதுகளின் புராதனம் தெறிக்கும் அதனை முயற்சிக்கப் பயமாகவுள்ளது - "சாக மறந்த சுறா" வாங்கிய சாத்துக்களின் உபயத்தில் !

      டயபாலிக் : நான் சொல்லவும் வேண்டுமா - என்ன ? இதுவரையிலும் நாம் முயற்சித்துள்ள எத்தனையோ நாயகர்களில் இவரளவிற்கு நெகடிவாய் அபிப்பிராயங்களை ஈட்டியிருப்போர் வேறு யாரும் இருக்க முடியாது ! போட்டுத் தாக்கித் தள்ளி விட்டார்களே நண்பர்கள் !!

      Delete
    2. //மறந்து போன நாயகர் வரிசையில் உள்ள ஜெஸ்லாங், ப்ரூனோ பிரேசில். டயபாலிக் போன்றோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்க்கலாமே சார்?//
      +1

      Delete
  45. அம்சமான கதைக்களம், அழகிய சித்திரங்களுடன் நல்ல சுவாரசியமான கதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு ok..OK..நாயகர்கள் யாராயிருந்தால்என்ன..புதியவர்களுக்கு நிறைய ஸ்லாட்களை ஒதுக்குங்கள்..மற்றபடி உங்களது விருப்பமே எங்கள் விருப்பமும்..

    ReplyDelete
  46. நல்லா தூங்கிட்டு இருந்தேன்...
    அதிகாலை 7:50....விர்ர்ர்ர்னு கட்டில் ஆடியது. பூகம்பம் என உரைக்க, அடுத்த நொடி வாசலுக்கு ஓடி வந்துட்டு,பார்த்தா அக்கம் பக்கம் எல்லோருமே அலறிட்டு வர்றாங்க.

    லைட்டா ஒரு ஜெர்க்குக்கே இப்படி; ஹூம். ஆனாலும் இன்னும் பட படனு நெஞ்சு துடிக்குது. இயற்கையின் சக்தி மிரள வைத்து விட்டது.

    மேட்டூர் அணை நிரம்பும் போதெல்லாம் இப்படி ட்ரமர் வருமாம்...!!!

    ரிலாக்ஸ் ஆன பிறகே பதிவை பார்த்தேன்.

    Auto choices:-

    1.தோர்கல்-4பாகங்கள்(ஒற்றை ஒற்றையாக அல்லது 2,3மினி பக்கங்களில் தொடராக வெளியான கதைகள் பொறுத்து)

    2.ஷெல்டன்-கிட்டத்தட்ட நம்ம வயசு;சோ நாமே செய்யும் சாகசமாத்தான் தோணுது. பிக் எஸ்...!

    3.ரிப்போட்டர் ஜாணி- பழைய பாணில ஒன்று;புதுசு பழகி பார்த்துட்டு பேசிக்கலாம்.

    4.டியூராங்கோ-ஆர்ப்பாட்டம் தொடரட்டும். அசால்ட்டாக அடிச்சு தள்ளும் பாணி 3அல்லது 4பாகங்கள் எப்போதும் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. // மேட்டூர் அணை நிரம்பும் போதெல்லாம் இப்படி ட்ரமர் வருமாம் //

      அப்படியா. புதிய தகவல் இது எனக்கு.

      Delete
    2. நேற்றைக்கு பகலில் அரியலூர், பெரம்பலூர் பகுதிகளிலும், நேற்றிரவு நெல்லை மாவட்டத்திலும், தென்காசி. செங்கோட்டை பக்கங்களிலும் மிகச் சொற்பமான வினாடிகளுக்கு பூமி குலுங்கியுள்ளதை உணர்ந்துள்ளனர் சார் ! So மேட்டூர் அணையின் புண்ணியம் என்பதைவிட, பூமித்தாயின் கைங்கர்யம் என்று சொல்லலாம் !

      Delete
    3. சனிக்கிழமை இரவுகளில் தலையே கிறுகிறுன்னு சுத்தும் போது பூமி அதிா்வெல்லாம் தொியவா போகுது??!! 🍾🍾🍻🍹🍻🍸

      Delete
    4. ரிக்டரில் 3.3சாமி....

      இன்னும் கொஞ்சம் சேர்த்து குலுக்கியிருந்தா ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊதான்...!!!

      பதிவை படிக்காமலே பறந்துட்டு இருந்து இருப்பேன். டெக்ஸ் டைனமைட் இதழ் பார்த்த பிறகு பவரை காட்டு பூமாத்தா...அதுவரை கொஞ்சம் உட்டுபுடி...!!!

      Delete
    5. விஜயராகவன் @ நீங்கள் படிக்க வேண்டிய தமிழ் காமிக்ஸ் நிறைய உள்ளது. அதனால் அவ்வளவு சீக்கிரம் நீங்கள் எங்கும் போக முடியாது.

      Delete
    6. தேங்யூ பரணி தேங்யூ...!!!
      தமிழ் காமிக்ஸ் மகிமையே மகிமை!

      கண்ணு பொகை தள்ளிய(நன்றி: மிதுன்) காலத்தில் கூட பேரனையோ பேத்தியையோ படிக்கச் சொல்லியாச்சும் கேட்போம்ல...!!!

      Delete
  47. சும்மா அப்படி இப்படின்னின்னு மனசப் போட்டு குழப்பிக்காம, எது விற்பனைக்கு உகந்ததோ, அவற்றை மாசத்துக்கு இரண்டுமுறை கிடைக்குமாறு புதுசு பழசு எல்லாத்தையும் போட்டு தாக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடர் புது கதைகள் இருந்தால் போட்டு உங்க ஜென்ம பலனை கூட்டி கோங்க.

      ஆயுள் விருத்தி உண்டாகும்

      Delete
    2. கரூர் சரவணன் : உங்க அப்ரோச் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு சார் !

      Delete
    3. சுரேஷ் : அடடா....ஆளாளுக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லி, தத்தம் தேர்வுகளை முன்மொழிய - ஸ்பைடரை கொணர நீங்க புடிச்சிருக்கும் ரூட்டே தனி தான் !!

      Delete
  48. சிக்கல் சிங்காரங்கள்:-

    1.கமான்சே...

    *கெளபாய் தொடர் எனும் போது பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கிறேன். தாராளமாக தொடரலாம்.

    2.லேடிS...

    *மச்சக்கன்னி ஷானியாவின் கவர்ச்சி புன்னைகை ஆண்டுக்கு ஒருமுறை மலரட்டும். கலரிங்கும் நச்; சைசும் பெரிசு (புத்தக அளவு சாமீஸ்...) எனும்போது கிவ் ச ஸ்லாட் சார்.

    3.மாடஸ்தி...

    *இது வயசான பார்டிகளுக்கு, என்னை போன்ற யூத்ஸ்களுக்கு நோ அபிப்ராயம்.

    4.ஜில் ஜோர்டன்...

    *சாரி, மூட்டை கட்டுங்க சார்.

    5.ட்ரெண்ட்...

    *நம்மாள்பா இவரு. நாம வீட்டம்மா கிட்ட சாத்துவாங்குனாலும், சிங்கம்டானு சீன் போடுவம்ல...! அந்த அசால்டான நேச்சுரல் பாணிக்கு நிச்சயமாக மொத்த ஓட்டும் உண்டு.

    6.டைகர்...

    *யங் டைகரை அம்போனு வுடாம ஜம்போவுலயாச்சும் ஒரு ஸ்லாட் ஒதுக்குங்க யுவர் ஆனர்.

    7.ரோஜர் ரெஸ்ட் எடுக்கட்டும்; ஜெரோம்க்கு இன்னொரு ஒரு வாய்ப்பு தந்து பாருங்க. சாதிக்கலனா இருக்கவே இருக்கு பரணு.

    8.கதவு சாத்தப்பட்ட டயபாலிக்கரு,மேசிக் விண்டாரு இவுங்களாம் பத்திரமாக அங்கனயே இருக்கட்டும். ஒரு பூட்டும் கதவுக்கு போட்டு விடுங்க சாமி....!!!

    ReplyDelete
  49. வணக்கம் சார்!!
    எனக்கு இந்த 'உள்ளே வெளியே/ விளையாட்டே பிடிக்காது. கதை நாயகரின் தொடர் முடிந்து விட்டது வேறு
    கதை இல்லை எனில் அந்த இடத்தில் வேறு நாயகரை அறிமுகம் செய்யுங்கள் ( உ.ம்) லார்க் கோ
    ஒவ்வொரு தொடரும் தேவையானதே
    வேறு வேறு காரணங்களுக்காக.
    (உ. ம்) ஜில் ஜோர்டன் கதை களம் பழமையாத் தெரிந்தாலும் அந்த ஓவிய அழகும் நேர்கோட்டுக்கதையும் சிறுவர்கள் படிப்பதற்கு சி பாரிசு செய்ய பொறுத்தமானதே.
    கடந்த பதிவில் சிறுவர்களுக்கு காமிக்ஸ் வேண்டும் என்று கோரிக்கை பலமாக எழுந்ததே
    புது நாயகர் ட்ரெண்ட் கதைகளம் நமக்கு சுமார் எனினும் ஒரு பனிபிரதேசத்தில் இளம் பெண்ணுணுடன் பயணம் செய்தாலும் கண்ணியத்துடனும் கனவில் கூட திருமணம் செய்வவது போல் கனவு காணும் ஆங்கிலேய ஹீரோ.வின்
    நேர்மையும் சிறுவர்கள் படிக்கும் போது மனதில் ஆழ பதியும் விசயங்கள் தானே
    எனவே வாங்குவது மட்டுமே எங்களது
    (நமது) கடமை
    மாடஸ்டிடி கதை 60 பக்கக் கதைகளாக இருப்பதால் சில நேரம் சுமார் கதையமைப்பாக இருந்து விட்டால் மொத் து வாங்கி விடுகிறார். எனவே CID ராபினுடன் இ ணைந்து வருவதை மிகவும் விரும்மனேன் பிரித்து விட்டீர்களே.
    இப்படி இரண்டு ஹீரோக்கள் சே ர்ந்து வரும் போது விற்பனை வரவேற்ப்பை வைத்து ஜூலியா விற்கும் வாய்ப்பை உருவாக்கலாம் என்று நம்பி இருந்தேனே
    (ஜூலியாவை இழக்க வேண்டி வந்து விடுமோ பயமாக உள்ள தே)

    ReplyDelete
    Replies
    1. //ஒவ்வொரு தொடரும் தேவையானதே வேறு வேறு காரணங்களுக்காக.//

      அழகாகச் சொன்னீர்கள் சார் !

      Delete
  50. டைகர் வேண்டாம். டைகரின் மி.மி மற்றும் இரத்தகோட்டை போன்றவை புகழ் மற்ற எந்த ஒரு நாயகர்களும் நெருங்க (டெக்ஸ் உட்பட) முடியாது.
    டைகர் கதை படிக்க வேண்டும் படிக்க படிக்க புத்துனர்வு கொடுக்கும் மி.மி மற்றும் இரத்த கோட்டை போன்றவற்றை மீள்வாசிப்பு செய்து கொள்கிறோம்.

    டைகரின் கதை மற்றும் படைப்பு கமிக்ஸ் உலகின் உச்சத்தை தொட்ட காவியம்.

    அவர ஒரு ஸ்லாட் கெஞ்ச விடுவதே எனக்கு கஷ்டமாக உள்ளது.

    அதனால் டைகர் வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு.

    ReplyDelete
  51. அவசியம் வேண்டும் வரிசையில்
    லார்கோ
    மாடஸ்டி
    தோர்கல்
    ஜானி
    ஜில் ஜோர்டான்
    ராபின்
    வெய்ன் செல்டன்
    டைகர்
    டூராங்கோ
    ஜெரோம்
    லேடிஎஸ்
    ட்ரெண்ட்
    வேண்டவே வேண்டாம் வரிசையில்
    கமான்சே மற்றும் ரோஜர்

    ReplyDelete
    Replies
    1. அட....ஜெரோமுக்கும் "அவசியப் பட்டியலில் இடமா - பரவாயில்லையே !!

      Delete
  52. லேடி S and ஜூலியா இரண்டும் என்னைப் பொறுத்த வரையில் சொதப்பல்ஸ். Sorry. ஒன்றுக்கு மேல் வாய்ப்பளித்தும் 4-5பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை பலமுறை முயற்சித்தும். இவர்களை தவிர்த்துவிட்டு புதிய நாயகர்களுக்கு, புதிய கதைக்களங்களுக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம்.

    ராபின் அட்டைப்படம் மிக அருமை. பார்த்தவுடன் நம் பழைய முத்துக்காமிக்சை ஞாபகப் படுத்தியது.


    ReplyDelete
    Replies
    1. ராபினுக்கு போனெல்லியின் ஒரிஜினல் அட்டைப்படத்தையே பயன்படுத்தியுள்ளோம் சார் ; அது தான் வித்தியாசம் தெரிகிறது !!

      Delete
  53. இந்த முறை ஈரோடு புத்தக திருவழாவிற்க்கு வருவேன்.

    ஆனால் லி ஜோர்டானுக்குள் வரப்போவது இல்லை.

    அங்கு காமிக்ஸ் விற்பனையை நீர்னயம் செய்யும் 45+ வயது முதிர்ந்த மற்றும் மதிக்கபட வேண்டிய மனிதர்கள் டெக்ஸில் இந்த டெக்ஸ் வேண்டும் அந்த டெக்ஸ் வேண்டும் என்ற விவாதமே இருக்கும் மூன்று மணி நேரத்தில் இரண்டு மணி ஜம்பது நிமிடம் போகும்.

    கிலோ கணக்கில் அல்வா இருக்கிற தட்டில் இருக்கும் ஒரே ஒரு சிக்கன் பிஸ் மாதிரி நான் முழிச்சுகிட்டு இருக்கனும்.

    இதற்கு பதில் நான் காலையில் மற்ற புத்தக ஸ்டால்கலை பார்வையிட்டு ஐயாயிரம் ஆறாயிரத்துக்கு தேவையான புத்தகங்களை வாங்கிவிட்டு.

    நமது ஸ்டாலில் கொஞ்ச நேரம் ஆசிரியரிடம் பேசிவிட்டு வருவதே எனக்கு நன்றாக படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹோட்டலுக்கோ ; ஸ்டாலுக்கோ - welcome சார் !

      Delete
  54. மாயாவிக்கே டாட்டாவா ? அட !!

    ReplyDelete
  55. தானைத்தலைவி இளவரசி "மாடஸ்டி பிளைசி " இல்லாத சந்தா பற்றி யோசிக்க முடியவில்லை ....

    தல டெக்ஸ் வில்லர் ,
    லேடி எஸ் ,
    டியூராங்கோ,
    கமான்சே ,
    சி.ஐ.டி.ராபின்,
    ரிப்போர்ட்டர் ஜானி,
    இளம் புயல் டைகர்,
    தோர்கல் ,
    வெய்ன் ஷெல்டன்,
    ட்ரெண்ட்,
    இவர்கள் இல்லாத காமிக்ஸ் கூட்டணி எனக்கு பிடிக்காது.
    இவர்கள் இல்லையெனில் காமிக்ஸ் விட்டு வெளியேற வேண்டியது தான் அதிலும் இளவரசி இல்லையெனில் போராட்டம் கடுமையாக நடைபெறும் என்பதை அன்போடு தெரிவித்து வெளியேற்றுவோம் .....


    ReplyDelete
  56. Flash news :

    தாரமங்கலத்தில் நில நடுக்கம்.மக்கள் பதற்றதுடன் வீட்டை விட்டு வெளியேறினர்..


    அடுத்த நிலநடுக்கம் வர்றதுகுள்ள மெகா ட்ரீம் ஸ்பெஷல் போல ஒரு லாங்சைஸ் குண்டு புக்கு போடுங்க சார் ஒரே நாட்டு படைப்புகளாக இருந்தாலும் பரவாயில்லை...

    ReplyDelete
  57. லேடி எஸ் சிஸ்டர் வந்தாலும் சரி வரலைனாலும் சரி ..ஜூலியா அக்கா வந்தாலும் சரி வரலைனாலும் சரி எங்க " இளவரசி " கண்டிப்பா வரணும் சார்..

    ReplyDelete
  58. On a scale of 1-5 5 being definite Yes and 1 being definite No.
    Largo - Going to miss him a lot.
    Thorgal - 5.
    Sheldon - 4.
    Reporter - 3.
    Durango - 5
    Commanche - 4
    Lady S - 4
    Modesty - 2
    Jordan - 3
    Trent - 4
    Tiger - 4

    ReplyDelete
  59. ரிப்போர்ட்டர் ஜானி

    பழசுக்கு ப்ளஸ்...


    ஷெல்டன் ஓகே


    கமான்சே எனக்கு ஓகே அதே சமயம் இவரை இருபாகமாகவோ மூன்று பாகமாகவோ இனைந்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம் சார்..

    ரோஜர் ஜெரோம் ....எனக்கு ஓகே சார்..

    ட்ரெண்ட் ....ஓகே சார்..


    டைகர்....இளம் டைகரை பொறுத்தவரை அதை வெளியிட்டு டைகரின் புகழை நாமே குறைய வைக்க வேண்டாம் சார்..




    இறுதியாக


    ராபின் அட்டைப்படம் செம கலக்கல் சார்...-)

    ReplyDelete
  60. yazhisai selva22 July 2018 at 10:58:00 GMT+5:30
    தானைத்தலைவி இளவரசி "மாடஸ்டி பிளைசி " இல்லாத சந்தா பற்றி யோசிக்க முடியவில்லை ....

    தல டெக்ஸ் வில்லர் ,
    லேடி எஸ் ,
    டியூராங்கோ,
    கமான்சே ,
    சி.ஐ.டி.ராபின்,
    ரிப்போர்ட்டர் ஜானி,
    இளம் புயல் டைகர்,
    தோர்கல் ,
    வெய்ன் ஷெல்டன்,
    ட்ரெண்ட்,
    இவர்கள் இல்லாத காமிக்ஸ் கூட்டணி எனக்கு பிடிக்காது.
    இவர்கள் இல்லையெனில் காமிக்ஸ் விட்டு வெளியேற வேண்டியது தான் அதிலும் இளவரசி இல்லையெனில் போராட்டம் கடுமையாக நடைபெறும் என்பதை அன்போடு தெரிவித்து வெளியேறுவோம் ..

    ReplyDelete
  61. As far as my opinion is concerned I wish instead of releasing singles herowise you can release big ones with multiple stories in parts

    ReplyDelete
  62. சென்ற பதிவில் திரு.கார்த்திகை பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டிருந்த நமது ஸ்டாலில் பணியாற்றுவதை தனது கடமைபோல கருதி செயல்படும் ரம்யா அவர்களுக்கு நன்றிகள் பல.
    எப்படியும் திரு.ஸ்டீலும் இன்று நமது ஸ்டாலில் பங்கு பெற்று களப்பணியாற்றுவார் என்ற நம்பிக்கையுள்ளதால் அவருக்கு முன்கூட்டிய நன்றிகள்.

    ReplyDelete
  63. விஜயன் சார், 2019ல் இருந்து மும்மூர்த்திகளின் மறுபதிப்புக் காணாத கதைகளை மட்டும் வெளியிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. மறுபதிப்பு மோகம் விற்பனைகளிலுமே almost gone சார் ! இப்போதெல்லாம் "மாயாவிலே 5 ; ஜானி நீரோல்லே 3 ; ஆங்...லாரன்ஸ்-டேவிட்டிலே 3 " என்ற ரீதியில் விற்பனையாளர்களின்கோரிக்கைகள் இருப்பதில்லை !! மாறாக - "டெக்ஸ் வில்லர்லே 2 ; லக்கி லூக்லே 2 ; அப்புறம் "மின்னும் மரணம் 2 " என்ற ரீதியில் தான் கேட்டு வருகிறார்கள் ! காலங்கள் மாறி வருகின்றன ; ரொம்பவே வேகமாய் !! இந்த ஜனவரியில் முடிந்த சென்னைப் புத்தக விழாவிலுமே - அந்த மாமூலான "மாயாவி buzz " சுத்தமாய் பார்த்திட முடியவில்லை என்பது தான் எனக்கும் ஆச்சர்யம் !

      Delete
    2. அதனால் தான் இந்த விண்ணப்பம். மறுபதிப்பு ஆரம்பித்த நாட்களில் இதே கோரிக்கையை வைத்த போது எல்லாம் கதைகளையும் போடுவோம் என்று ஏற்கனவே பலமுறை மறுபதிப்பு கண்ட கதைகளையே கண்ணில் காண்பித்தீர்கள்.

      மும்மூர்த்திகளின் மறுபதிப்புகளுக்கு முழுவதும் மங்களம் பாடுவதற்கு முன் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் சார்.

      Delete
    3. அட்லீஸ்ட் அவ்வப்போது இதுவரையில் எந்தரூபத்திலும் மறுபதிப்பாகத கதைகளுக்கு மாத்திரம் சந்தாDல் வாய்ப்பு தாருங்கள் சார்.

      இதுவரை கண்ணிலே காணாத கதைகளில் ஒருவித நாட்டம் இருக்கத்தான் செய்யுது....!!!

      (மறுபதிப்புகளில் அத்தகைய கண்ணிலே படாதவற்றை மட்டுமே அந்தந்த மாதமே படித்து விடுகிறேன்...)

      Delete
  64. YES

    Comanche
    Lady s
    Jill Jordon
    Trent

    OPTIONAL

    Tiger
    Modesty

    NO

    Roger
    Jerome



    ReplyDelete
  65. ஏற்கனவே உள்ள நாயகர்களில் யார் உள்ளே? யார் வெளியே? என்ற ஆட்டத்தில் ஆசிரியரும் நண்பர்களும் அலசி ஆராய்ந்து சிறப்பானதை முடிவு செய்வர் என்பதில் நம்பிக்கை உள்ளதால் அதில் என் விருப்பத்தை கூறவில்லை.
    ஆனால் விண்வெளி,கடல் பயணம், எதிர்காலம் சார்ந்த கதைகள், திகில் கதைகள், இன்டியானா ஜோன்ஸ் மாதிரியான கதைகளை நாம் ரொம்ப மிஸ் பண்ணுகிறோமோ என்று தோன்றுகிறது.அம்மாதிரியான இன்றைக்கு வெற்றிகரமாக உலாவரும் கதைகளை தனித்தடத்தில் வெளியிட்டால் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  66. விஜயன் சார், வருடத்திற்கு ஒருமுறை இத்தாலி ஸ்பெஷல் என்று இத்தாலிய நாயகர்கள் மற்றும் ஜூலியா கதையை இணைந்து வெளியிடலாமே? ஜூலியா கதைக்களம் அருமை, நின்று போன நிமிடங்கள், பௌர்ணமியில் காலன் வருவான் போன்ற சிறந்த கதைகளை மட்டும் தேர்தெதேர்ந்தெ இது போன்ற கதைகளை வெளியிடலாமே.

    குண்டு புத்தக விரும்பிகளுக்கு குண்டு புத்தகம் கொடுத்து போன்று இருக்கும் என் போன்ற ஜூலியா கதை விரும்பிகளுக்கு வருடம் ஒரு கதை கொடுத்தது போலவும் இருக்கும்.

    சார் ரூம் எல்லாம் போட்டு யோசித்த போது தோன்றிய ஐடியா. அதனால பாரத்து செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு குறிப்பிட்ட கூட்டணியில் நாயக / நாயகியரை இணைப்பதென்பது முதன் முறை சுவாரஸ்யம் தரக்கூடும் - LMS போல ! ஆனால் அதே cast ; அதே கூட்டணி மறுக்கா-மறுக்கா எனும் பட்சத்தில் அதே உற்சாகத்தைக் கொணர்வது சிரமம் சார் !

      Delete
    2. அடிக்கடி நடந்தால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை என்பது உற்சாகம் தரும் சங்கதியே. ப்ளீஸ்.

      Delete
  67. விஜயன் சார்,

    //அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 400000 -ஐ தொட்டு இருந்தது ! பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம்//

    பெங்களூர் காமிக் கானின் நமது விற்பனை சாதனையை வேறு ஏதாவது புத்தகத் திருவிழாவில் முறியடித்து இருக்கிறோமா?

    எங்களிடம் அன்று இந்த விற்பனை எண்ணை பகிர்ந்த உங்களின் பெருந்தன்மை இன்றும் மனதில் பசுமையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. @ PfB

      அது நான்கு லட்சமல்ல; நாற்பதாயிரம் என்பது என் அறிவுக்கு எட்டிய கணிப்பு!

      ஓவர் டூ எடிட்டர் சார்!

      Delete
    2. மீந்துப்போன பழைய 10ரூவா இதழ்களும், நாலைஞ்சு இரத்தப்படலம் இதழ்களும் 4லட்சத்துக்கு எப்படி விற்று இருக்க முடியும்??? அதுவும் பெங்களூரு வந்தது சொற்ப கூட்டம் என்பதையும் கணக்கில் கொள்ள வேணும்.

      அது ரூபாய் நாற்பதாயிரம் ஆகத்தான் இருக்க முடியும்...!

      Delete
    3. 2012கம்பேக் சென்னை புத்தக விழாவில் விற்காமல்.....(என முதல் வரியை படிக்கவும்)

      Delete
    4. நானும் இது நாள் வரை அப்படியே நினைத்தேன். ஆனால் பின்னூட்டத்தில் சில நண்பர்கள் இந்த எண்ணை எழுதியதால் என்பதால் எழுந்த குழப்பம்.

      http://lion-muthucomics.blogspot.com/2012/09/blog-post_13.html?m=0

      Delete
    5. 400000 என்ற மந்திர விற்பனை எண்ணை இந்த முறை ஈரோட்டில் சாதிக்க வேண்டும். கனவு மெய்பட வேண்டும்.

      Delete
    6. ///கனவு மெய்ப்பட வேண்டும்///+123456789.

      Delete
    7. அந்தப் பதிவின் பின்னூட்டங்களிலேயே ஒரு "முட்டை" ஜாஸ்தியாகிப் போனதை எழுதியிருந்ததும் ஞாபகம் உள்ளது ! அந்த 2 நாட்களின் Comic Con விற்பனைத் தொகை ரூ.91,000 !

      And இதுவரையிலும் ஒரே நாளில் peak என்று சொல்வதாயின் "மின்னும் மரணம்" அறிவிக்கப்பட்ட ஈரோடு புத்தக விழாவின் முதல் தினத்து வசூல் தான் ! முதல் நாளே சுமார் 100+ முன்பதிவுகள் என்பது மாதிரி நினைவுள்ளது !

      Delete
    8. // "முட்டை" ஜாஸ்தியாகிப் போனதை எழுதியிருந்ததும் ஞாபகம் உள்ளது //

      ஞாபகம் வருகிறது சார்.

      Delete
    9. // And இதுவரையிலும் ஒரே நாளில் peak என்று சொல்வதாயின் "மின்னும் மரணம்" அறிவிக்கப்பட்ட ஈரோடு புத்தக விழாவின் முதல் தினத்து வசூல் தான் ! முதல் நாளே சுமார் 100+ முன்பதிவுகள் என்பது மாதிரி நினைவுள்ளது ! //
      இதனால் தெரியும் விஷயங்கள் இரண்டு,
      1.ஈரோடு புத்தக திருவிழாவில் ஸ்பெஷல் புக்கிங் ஆரம்பிச்சா நிறைய புக்கிங் உடனே நடக்கும்,
      2.நல்ல வசூல் கிடைக்கும்.
      சுத்தி வளைச்சி நான் என்ன சொல்ல வரேன்னா,ஹி,ஹி,உங்களுக்கே புரிஞ்சிருக்குமே சார்.

      Delete
  68. இளவரசி தனியாக வலம்வரப்போகிறார் என்பது சந்தோசமான செய்தி.! அட்டைப்பட அசத்தலாக கண்ணுல ஒத்திகிற மாதிரி இருக்கணும் சாரே.! முக்கியமா கண்களில் ஆயிரம் சேதி சொல்லறமாதிரி அம்சமா இருக்கணும் சொல்லிப்போட்டேன் ஆமா....!!!

    அப்படியே எழத்துக்களும் கொஞ்சம் பெரிசா இருக்கட்டும் சாரே.!இளவரசிய கண்ணாடி உபகரணம் இல்லாம நேச்சுரலாக படித்து இளவரசியின் அதகளத்தை(சாகசத்தை) கூடவே இருந்து கனவுலகில் சஞ்சாரித்தி மகிழ உதவி செய்யுங்கள் சாரே, உங்களுக்கு புண்ணியமா போகும்.!!!

    ReplyDelete
    Replies
    1. கண்கள் சொல்லும் கதைகள் கிடக்கட்டும் சார் ; அதற்கு முன்பாக பக்கங்கள் சொல்லப்ப்போகும் கதை சுகப்பட்டால் சந்தோஷம் என்பேன் !

      இளவரசி ஏப்பமிட்டால் கூட" வாவ் டா !!" என்று சிலாகிக்க நம் போன்ற ரசிகர்கள் இருக்கலாம் தான் ; ஆனால் கதை சோபிக்கவில்லையெனில் surf excel போட்டுத் துவைக்க ஒரு நூறு பேர் லைனாகக் காத்திருக்கிறார்கள் !

      Delete
  69. மச்சக் கன்னி ஷானியா 👍👍👍

    ReplyDelete
  70. எத்துனை எத்துனை கால சூழல்கள் மாறினாலும்..எத்துனை எத்துனை மகளிர் அணிகள் படை எடுத்தாலும் சிங்கத்தை குத்து விளக்கேற்றி நாட்டிற்குள் ,வீட்டிற்குள் உலவ வைத்தவர் எங்கள் இளவரசி என்பதை ஆணித்தரமாக சொல்லிகொண்டு...

    ReplyDelete
  71. எங்கே எங்கள் வக்கீல் மாடஸ்தி சார்..???

    ReplyDelete
  72. அவசியம் வேண்டும், வரிசையாக.

    TEX கண்டிப்பாக 12 months
    டைகர்
    லேடி S
    ட்ரெண்ட் Double album if possible
    டூராங்கோ 3 album together
    வெய்ன் செல்டன்
    தோர்கல் 3 album together
    ஜில் ஜோர்டான்
    ஜானி
    ராபின்

    ReplyDelete
  73. ///த்ரில்லர் ஸ்பெஷல்" என்ற பெயரில் மாடஸ்டி பிளைசி + டிடெக்டிவ் ராபின் கதைகள் இணைந்து வருவதாய் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் தற்சமயம் ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்ல கைவசமுள்ள இதழ்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாய் இருப்பதால் - மாடஸ்டியை தனி இதழாகவும் ; ராபினை தனி இதழாகவும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம் !///----

    அடப்பாவமே.!
    ஏன்?
    ஏன்
    ஏன்
    சார் பாவம்!
    ஏதோ லயன் 300புண்ணியத்தில் 2017ல்தலைதப்பிச்சது.

    டடெக்டிவ் ஸ்பெசல் னு ஏதோ சொல்லி ராபினோட சேர்ந்து கரையேற இருந்த வாய்ப்பையும் தட்டி பறிச்சுட்டீங்களே????

    சோனமுத்தா போச்சா....!!!!


    ReplyDelete
    Replies
    1. வருஷத்தின் அடுத்த 4 மாதங்களை ஓட்ட இதழ்கள் வேண்டுமல்லவா ? அதனால்தான் வேறு வழியின்றி இந்தத் திட்டம் !

      Delete
  74. Jill- no
    Modesty-no
    Lady s-nooooo
    Shelton-no
    Rojer-no
    Reporter-no
    Julia-nooo

    ReplyDelete
    Replies
    1. அதாகப்பட்டது மகா ஜனங்களே......

      ரெண்டு புள்ளைகளும் வீட்டுக்கு அனுப்பிடுங்க....சானியா ஜூலியா.....


      மாடெஸ்டி கோலோச்சட்டும்...


      ரோஜர் ஆண்டுக்கு ஒன்னு..

      டேஞ்சர் ஆண்டுக்கு ஒன்னு

      அதான் இந்தா புள்ள செல்லி வீட்டுக்கு போகுத்துள்ள....

      Delete
  75. 2019-ல் மாதம் நான்கு புத்தகங்கள் வந்தால் எமக்கு மிக்க சந்தோசமாக இருக்கும்(சிறப்பு வெளியீடுகள் தனி)

    ReplyDelete
  76. டெக்ஸ் வில்லர்¸
    டியூராங்கோ¸
    சி.ஐ.டி.ராபின்¸
    ரிப்போர்ட்டர் ஜானி¸
    டைகர்¸
    தோர்கல்¸
    வெய்ன் ஷெல்டன்¸
    இளவரசி¸
    ரோஜர்¸
    லார்கோ(இருந்தால்) மற்றும்
    மார்ட்டின்.

    இதைத்தவிர நிகழ்காலத்தில் / எதிர்காலத்தில் நடைபெறும் கதைகளை புதிதாக பரிசோதிக்கலாம்.

    மனமிருந்தால் பழைய முத்துவில் வந்த கதைகளை தேர்நதெடுத்து மறுபதிப்பு செய்யலாம்.

    ReplyDelete
  77. 'தெய்வம் நின்று கொல்லும்' அட்டைப்படம் அருமை!

    ஆனால், அந்தப் படத்தில் பிழையிருப்பதாகத் தோன்றுகிறது. சுடச்சுட சுடப்பட்ட ஒருவரின் உடல் நீச்சல் குளத்தில் அப்படி நெடுஞ்சான் கிடையாக மிதக்க வாய்ப்பில்லை! உடம்பில் ஏதாவது ஒருபகுதி மட்டுமே நீருக்கு வெளியே தெரிய வாய்ப்புள்ளது.
    படத்தில் காட்டப்பட்டதுபோல மிதக்கவேண்டுமெனில் அந்த உடல்
    1. தண்ணீரில் விழுந்து குறைந்தபட்சம் ஒருநாளாவது ஆகியிருக்க வேண்டும்
    அல்லது
    2. நீச்சல் குளத்தின் ஆழம் மொத்தமே அரையடி தான் இருக்கவேண்டும்!

    தளத்தின் வல்லுனர்கள் உறுதிப்படுத்துங்களேன்?

    ReplyDelete
    Replies
    1. பயப்படும் மனமே நீாில் மூழ்க காரணம்!

      நீச்சல் தொியாதவனது பயமும், பதட்டமுமே நீரில் மூழ்க காரணம்!

      நன்றாக நீச்சல் தொிந்தால் மல்லாக்கப் படுத்துக் கொண்டு பேப்பா் கூட படிக்கலாம். 😂😂

      மாறாக பயப்படும் போது நீாின் இயல்புக்கு எதிராக செயல்பட வேண்டிய நிலைக்கு மனம் நம்மை குழப்பிவிடும்!

      ஒன்றை கவனித்திருக்கிறீரா நண்பரே!
      உலகில் ஏறத்தாழ அனைத்து விலங்குகளுமே இயல்பாவே நீந்தத் தொியும்! காரணம் அவற்றுக்கு மனம் என்ற சங்கதியே நகி!!

      எனவே மனிதனுக்கு பயத்தை மனதில் இருந்து துரத்திவிட்டால் நீச்சல் தானாவே நிகழ்ந்துவிடும்!!

      அட என்னப்பா, பொனத்தைப் பத்தி கேட்டா மனச பத்தி சொல்ரனேனு நெனைக்கரீங்களா?

      மனுஷ உயிரோட இருந்தாத்தானே மனசு, மட்டை எல்லாம்! பின்ன இறந்த பிறகு முழுசாவே மிதக்கத் தானே செய்வான்னேன்!!

      கொசுருச் செய்தி : நமக்கு தண்ணீ, நீச்சல்னாலே கொஞ்சம் பயம் அதிகம்!! ஹிஹிஹி!

      Delete
    2. அட...சுடச் சுட சுடப்பட்ட அந்த கணத்தின் சித்திரம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ! மனுஷன் மூழ்கத் துவங்கும் முன்பாய் ஓவியர் அந்த நொடியை capture செய்துவிட்டாரோ - என்னவோ ?!

      Delete
    3. ///தளத்தின் வல்லுனர்கள் உறுதிப்படுத்துங்களேன்///

      நல்லவேளை தளத்தின் வல்லூறுகள்னு நெனைச்சுட்டேன்!!

      Delete
    4. ஈ.விஜய் @ எல்லாம் மதியச் சாப்பாடு செய்யும் மாயம் :-)

      Delete
  78. விண்வெளி¸கடல் பயணம்¸ எதிர்காலம் சார்ந்த கதைகள் இவைகளை எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. கடந்த காலத்தினை விட்டு நிகழ்காலத்திற்கு வர இயலாதா?

      Delete
    2. எதிர்காலத்தை எண்ணி ஏக்கம் தெரிவிக்கும் கையோடு அறுபதுகளின் சூப்பர் ஹீரோக்களை இன்னமும் கோரிடுவது நீங்கள் தானே சார் ?

      Delete
    3. அறுபதுகளின் சூப்பர் ஹீரோக்களை இன்னமும் கோருவது ஒரு குற்றமா?

      Delete
    4. தனியொருவன் சார்
      நம்மை போன்ற ஒரு சிலரே மும்மூர்த்திகளை கேட்டுக் கொண்டிருப்பவர்கள்.அந்த ஒரு சிலருக்காக ஆசிரியர் மெனக்கெடுவது சாத்தியமில்லை சார்.
      காமிக்ஸே படிக்காதவர்கள் என்னை பார்க்கும் போது இன்னுமா காமிக்ஸ் படிக்கிறாய் என்கிறார்கள்.
      காமிக்ஸ் படிப்பவர்கள் கொஞ்சம் மாற்றி கேட்கிறார்கள். எவ்வளவோ புதுசு புதுசா நாயகர்கள் வந்து விட்டார்கள்.இன்னும் மும்மூர்த்தியை விட மாட்டாயா என்கிறார்கள்!
      மும்மூர்த்திகளை வாசித்தும், சுவாசித்தும்,வாழ்ந்த அந்த கடந்தகால நினைவுகளை தற்போதைக்கு அசை போட்டுக் கொள்வதை தவிர வேறு மார்க்கமில்லை சார். அதுவும் எடிட்டர் அவர்களை போனியாகாத லிஸ்டில் சேர்த்த பிறகு வேறு வழியில்லை.

      Delete
    5. மெனக்கெட கூறவில்லை ஆதங்கத்தினை வெளிப்படுத்தினேன் அவ்வளவே. பழைய புத்தகங்கள் என்னிடம் உள்ளது அதனை மீள வாசித்து திருப்திபட்டுக் கொள்வேன். இருந்தாலும் எனது எண்ணத்தினை இத்தளத்தில் தானே வெளிப்படுத்த வேண்டும்.

      Delete
  79. //நமது இத்தாலிய டெக்ஸ் வில்லர் ரசிக / ஓவியர் இன்னமுமொரு அட்டைப்படப் பெயின்டிங் போட்டுத் தரச் சம்மதித்துள்ளார் - அவகாசம் கிட்டும் போது !// இதற்கு முதல் அவர் வரைந்திட்ட டெக்ஸ் ராப்பர் எது சார்?

    ReplyDelete
    Replies
    1. Color Tex தொகுப்பு - விரட்டும் விதி !

      Delete
  80. Please alot slots for XIII additional books and some trusure hunting stories.

    ReplyDelete
  81. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஹீரோ பிடிக்கும். ஒருவருக்கு பிடிக்கும் ஹீரோ மற்றவருக்கு பிடிக்காது.எனவே யார் சொல்வதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்,எந்த ஹீரோவின் புக் நன்றாக விற்பனையாகிறதோ அவர்கள் மட்டும் உள்ளே இருக்கட்டும்.முடிவு நீங்கள் மட்டும் எடுங்கள் சார்.நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் ஆதரவு தர நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

    ReplyDelete
  82. சாா்,
    இ.ப. கூாியாில் பெறுவதாய் இருந்தால் எப்போ கைக்கு கிடைக்கும் சாா்!

    ஒருநாள் முன்னமே கிடைக்குமா?

    ஆகத்து 3க்கு!

    ReplyDelete
    Replies
    1. சான்ஸே இல்லை சார் ; outer டப்பாக்கள் தயாராகுவதில் தாமதமாகி வருவதால் வெள்ளிக்கிழமை சாயந்திரமாய் அவற்றை அள்ளிப்போட்டுக் கொண்டு சனியன்று ஈரோட்டுக்கு கொண்டு வரத் தான் நேரம் இருக்கும் போலும் ! So கூரியர்கள் despatch சனிக்கிழமை பகலில் தான் இருக்கும் !

      Delete
  83. 1.தோர்கல் .. OK SIR
    2.வேய்ன் ஷெல்டன் ..OK ..
    3.//ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா ? பழசா ? உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்குமோ ?//
    நியூ லுக் ஜானி ட்ரை பண்ணலாம் சார் ..
    4.ட்யுராங்கோ .. OK SIR ..
    5.கமான்சே ..ஒரு ஸ்லாட் ஒதுக்கலாம் சார் ..
    6. LADY S..ஒரு ஸ்லாட் ஒதுக்கலாம் சார்..
    7.“டைகர்”.. AT LEAST ஒரு ஸ்லாட் ஒதுக்கலாம் சார் .. தளபதி இல்லாமல் இருந்தால் நல்லா இருக்காது சார் ..
    8.மாடஸ்டி-கார்வின், ஜில் ஜோர்டன் .. UR WISH SIR ...

    ReplyDelete
    Replies
    1. Any chance for diabolik , Magic wind , Dylan dog sir ..

      Delete
    2. //டைகர்”.. AT LEAST ஒரு ஸ்லாட் ஒதுக்கலாம் சார் .//

      ஒற்றை முடிச்சில் பயணிக்கும் கதை எனும் போது சிங்கிள் ஆல்பமாய் வெளியிடும் சமயம், கதைகள் வீரியம் குன்றித் தெரிகின்றன சார் ! பிரச்சனையே அது தான் !

      Delete
    3. வாய்ப்பிருந்தால் இரண்டு அல்லது மூன்று டைகர் கதைகளை இணைத்து வெளியிடலாமே சார் ..

      Delete
  84. டியர் எடிட்,

    ஆக்ஷன் கதாநாயர்கள் பட்டியலில் நிச்சயமாக இடம் பிடிக்க வேண்டியவர்களும், ஓட்டுக்கு நிற்பது பார்ப்பது காலகொடுமை, தவிர வேறு என்ன... இருந்தாலும் என்னுடைய ஓட்டுகளை பதிந்துவிடுகிறேன்.

    டாப்:
    1. லார்கோ: நமது மறுவரவிற்கு பின்பான அழுத்தமான ஆக்ஷன் சாகஸ வீரர் இவரே. ஆங்கிலத்தில் படித்த முதல் தமிழுக்கு இவர் வண்ணத்தில் வருவது நடக்குமா என்ற கேள்விக்கு கம்பேக் மூலம் ஆச்சயர்மான அறிவிப்பாக ஒரு இனிப்பான ஆச்சர்யம். ஒரு இரு ஆல்பங்கள் தமிழில் படித்தவரை, மிக சிறந்த முயற்சியாக பிரதிபலித்தது. இன்னும் ஒரே ஆல்பம் தான் கைவசம், என்பது ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும், சமீபத்திய ஆல்பத்தில் புதிய கூட்டணி சொதப்பி இருப்பதிலிருந்து, அதிக எதிர்பார்ப்பு இல்லை. எஞ்சியதை அது முழுமையானதுடன் போட்டு விட்டு முடிப்போம்.

    2. தோர்கல்: இவருடைய கதைகளுக்கு நான் என்றுமே ஒரு ரசிகன். ஒரு வகை என்றில்லாமல் எல்லா ஜானர்களையும் கலந்தடித்து கதாசிரியரும், அவருக்கு இணையாக ஓவியரும் பின்னி பெடலடுத்திருப்பார்கள். தமிழில் இவரை நீங்கள் அறிமுகபடுத்தியவுடன் சந்தோஷபட்ட நான், ஆரம்ப ஆல்பங்களை நமது நண்பர்கள் ரசிக்காததை பார்த்து எங்கே மூட்டை கட்டி விடுவீர்களோ என்று எண்ணினேன். ஆனால் தொடர்ந்து கதைகளை வெளியிட்டு அவற்றை நண்பர்கள் மத்தியில் நிரந்த இடம் பிடிக்க வைத்தமைக்கு உங்களுக்கு ஒரு சபாஷ். தொடரட்டும் தோர்கல் மற்றும் அவரின் மைந்தனின் சாகஸங்கள், தமிழில்.

    3. ரிப்போர்டர் ஜானி: மெலிந்து போன நமது டிடெக்டிவ் அணிக்கு இருவரில் ஒருவராக இன்றும் சாதிக்கும் தொடர். வண்ணத்தில் இவரின் பரிமாணம், நமது புதிய பாணிக்கு சிறப்பான மணிமகுடம். என்றும் தொடர ஆல்பங்கள் பல இருக்கையில், இடத்திற்கு சந்தேகமே இல்லாமல் ஆஜர் ஆகிடுவார்.

    4. டிடெக்டிவ் ராபின்: நிக் ரைடர் என்ற அருமையான பெயரை தமிழில் சாமான்யபடுத்தியதில் உங்கள் மீது ஒரு கோபம் இருந்தாலும், துப்பறிவாளர் அணிக்கு இன்னெருவராக களம் இறங்கும் இவரை, என்றும் கைவிடாதீர். அவரின் ஆர்பாட்டம் இல்லாத கதைபாணிக்கு நானும் ஒரு ரசிகன்.

    5. ட்யூராங்கோ: கவ்பாய் தொடர்களின் மீதான காதல் தொடருவதற்கு இன்னொரு காரணம். டெக்ஸ் ஒரு ரகம், ப்ளுபெர்ரி ஒரு ரகம், என்றால், வன்மேற்கின் இன்னொரு முகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் இந்த கதை தொடர், தற்போதைய பாணியில் ஒவ்வொரு வருடமும் கத்தையாக தொடர்வது தொடர வேண்டும். முதல் ஆல்பம் போல இல்லை என்றாலும், இரண்டாவது தொகுப்பு அவ்வளவு மோசம் இல்லை, என்பதே எனது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. உறுதியான ஸ்லாட் நாயகர்கள் o.k. ; விளிம்பில் நிற்போரில் உங்கள் தேர்வுகள் பற்றியும் சொல்ல முயற்சிக்கலாமே சார் ?

      Delete
  85. Vijayan sir,

    In :-
    flash gordon & the Phantom & The Batman :- we used to see them in the past. They were wonderful stories. if we can see them again, that will be magic.!!
    Wing commander Johnny - i think he is good too.
    Reporter Johnny - talkative & narrative , but the way the end is unfolded - it always brings pleasure.
    Thorgal :- its evident he's here too stay. his latest albums were visually stunning and stories too!!
    Jeremiah :- i liked those Hermain's albums. can we see him again?
    Durango :- a junior Tex Willer!! we can give him a run in 2019
    Modesty Blaise & Carvin :- both's acts are legenderies. if we get good stories, then why dont we see them again.
    Wayne shelton :- Grey Action hero, we like to see him again
    CID Robin :- Robins stories always take us to the golden 80's hollywood detective days. lets try him with good stories, if any
    How about Bouncer?? - is there any new album?


    Out :-
    largo winch - Van Hamme is out of the series. we are still searching for the story in his last album!! - give him a break
    Roger - Art/Drawings/colors are always awesome. but, stories are out dated and like kaadhula poo !!
    Trent - Honestly, its like GN story theme in his last outing. he may not give us the action that we want. hmmm!!!
    Gil Jourdan - i liked it perosnally. but, it always a catchy whether his are - action or cartoons!!
    Lady S - Lady S may not match our own Modesty!!. Give her a break.

    and these are my personal feedback. all decisions will be yours. please be advised that, what ever the issues are I will be there as a subscriber. becaz, you are among the few who takes us to an another comics world and keep us unbinded for a time from our present earth day's routines!!!

    ReplyDelete
    Replies
    1. //Jeremiah :- i liked those Hermain's albums. can we see him again?//

      Of course - ஜம்போ காமிக்சில்..!

      Delete
    2. ஃப்ளாஷ் கார்டன் நமது இதழ்களில் தலைகாட்டிதில்iலையே?

      Delete
  86. Modesty Blaise: Should get atleast 2 slot.
    Rik Hochet: One old format and one modern atleast.
    Gil Jourdan : One slot minimum.
    Trent, Lady S: Sorry
    Durango & Jenermiah : Superb. Keep them coming.
    Cid Robin: Once in a while B&W ok.
    Largo & Wayne Shelton : Not good as before. Good that series ended.
    Comanche : Wild west overdose. Can be in B&W. Definitely not in color though.
    Lt Blueberry : Definitely in digest format or single album either way good.
    Roger, gerome etc: Continue their Long vacation.
    Thorgal: Personally not my favorite.

    ReplyDelete
    Replies
    1. லார்கோ தொடர் முடிவுறவில்லை சார் ; கதாசிரியர் மட்டுமே மாறியுள்ளார் ! And புதுக் கதையின் இரண்டாம் பாகத்துக்காக waiting !

      Delete
  87. எப்படி சுத்தி வந்தாலும் நிகழ்காலத்தை ஒட்டிய கதைகளுக்கு வரவேற்பு குறைவு என்பதுதான் உண்மை.காரணம் அது சார்ந்த மீடியாக்கள் ஏராளம் ex Angelina Jolie, Cameron Diaz,நம்மூர் பில்லா போன்ற hero heroine களுக்கா சார் பஞ்சம்?இதைஎல்லாம் பார்த்து சலித்துப் போய் காமிக்ஸ் பக்கம் கொஞ்சம் ஒதுங்கினால் இங்கே lady s, Julia, Shelton,largo etc. நான் அல்லது நாங்கள் காமிக்ஸில் தேடுவது இவர்களை இல்லை.கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றைத்தான்.அது எதுவாக இருந்தாலும் சரிதான் சார்.

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. காமிக்ஸ் வாசிக்க ஆரம்பிக்கும்போது உங்கள் மொபைல்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுங்கள் நண்பர்களே. எல்லாக் கதைகளுமே பிடிக்கும்!

    ReplyDelete