Monday, July 16, 2018

ஒரு காமிக்ஸ் ஜனநாயகக் கடமை !!

நண்பர்களே,

வணக்கம். "சிரிக்க வைப்போரில் யாருக்கு நம் வோட்டு ?" என்று சிந்திக்கக் கோரி போன பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன் ! அது ஒரு ஆர்ப்பரிக்கும் அலசலாய் அரங்கேறி வருவது நான் சிறிதும் எதிர்பார்த்திரா போனஸ் !எக்கச்சக்க நாட்களுக்குப் பின்பாய் ஒரு சுவாரஸ்ய விவாத மேடையைப் பார்த்த உணர்வு மாத்திரமின்றி, இந்தப் பதிவின் புண்ணியத்தில் 2019 கார்ட்டூன் அட்டவணையில் - "யார் உள்ளே ? யார் வெளியே ?" என்ற கேள்விக்கான விடையும் கிட்டி வருகிறது என்பேன் ! So இது வரையிலும் தங்கள் வோட்டைப் பதிவு செய்திரா நண்பர்களும், தங்களது காமிக்ஸ் ஜனநாயகக் கடமையை ஆற்றும்படி அன்போடு கோருகிறேன் !! NOTA-வுக்குப் போட்டாலும் no problem.தான் ; உங்கள் மௌனங்களைக் கரைக்க இயன்றதையுமே ஒரு positive ஆக எடுத்துக் கொள்வோம் ! 

நடைபெறும் விவாதங்களின் பலனாய் ஒரு முக்கிய கேள்வியும் முன்னிறுத்தப்பட்டுள்ளதில் எனக்கு கூடுதல் திருப்தி ! "யார் நமது target audience ? இந்தப் பயணத்தில் நாம் பங்கேற்க எதிர்பார்ப்பது எந்த அகவையினரை ?" என்ற கேள்வியை இதுநாள் வரைக்கும் பெரிதாய் நாம் ஆராய்ந்துள்ளதாய் எனக்கு நினைவில்லை ! இது பொதுவெளியில் பேசப்படவில்லை என்றாலுமே - என்னளவுக்கு நமது core audience நடுத்தர வயதினர் மட்டுமே என்பதில் ஐயமிருக்கவில்லை ! Of course - நமது அகில் போன்ற ஜுனியர்களும் இங்கே பங்கெடுக்காதில்லை தான் ; ஆனால் பெரும்பான்மை என்று பார்த்திடும் போது - Under 18 / 16-களின் எண்ணிக்கை சொற்பமே ! இதை பற்றி லேசாய் மனதில் அசை போடும் தருணத்தில் சின்னதாயொரு curiosity தலைதூக்கியது : 

Maybe Under 12 அல்லது Under 8 குட்டீஸ்களுக்கான ஒரு சில கார்ட்டூன் கதைகளை நமது சந்தாவில் ஒரு இக்ளியூண்டு அங்கமாக்கினால் - அவை நம்மில் எத்தனை பேருக்கு பயன் தரக்கூடுமோ ? அவற்றை தத்தம் வீட்டில் உள்ள சுட்டீஸ்களுக்குக் கதை சொல்லவோ ; படிக்கத் தரவோ - வாகான சூழல் கொண்ட நண்பர்கள் எத்தனை பேர் இருக்கலாமிங்கே ? தற்சமயம் நாம் target செய்வது நமது ரெகுலராக வாசக வட்டத்தையே ! மாறாக - "இவை உங்க வீட்டு நண்டு-சிண்டுகளுக்கு மட்டுமே ஓய் ! சுகப்படுமா ?" என்ற கேள்வியை முன்வைத்தால் உங்களின் பதில்கள் என்னவாக இருக்குமோ என்றறிய ஆவல் ! 

Please note : இது சும்மா ஒரு உரத்த சிந்தனை மாத்திரமே ! நம்மிடம் இதற்கான கதைகள் காத்துள்ளன என்றோ ; உறுதியாய் இப்போதோ-அப்போதோ களமிறக்கப் போகிறேன் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாமே ! அதே போல - "இல்லை ; இப்படியொரு முயற்சியை நீங்கள் செய்வதாக இருப்பின், என்னளவுக்கு அதற்கு ஆதரவு நஹி !என்று சொல்வதாயினும் ; என் இல்லத்தில் குட்டியும் நானே ; சுட்டியும் நானே என்பது தான் நிலவரம் ! என்று சொல்வதாயினும், தாராளமாய் பதிவு செய்யலாம் ! நிச்சயமாய் நானோ, கார்ட்டூன் காதல அணியோ விசனம் கொள்ளப் போவதில்லை ! இது சமீப நாட்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடமிருந்தே பதில் தேட முயற்சிக்கும் ஒரு mini exercise மாத்தரமே !! 
அட...கார்டூனுக்கே இந்த அலசல் என்றால், கி.நா. சந்தா சார்ந்த கேள்விகளுக்கு என்ன காத்துள்ளதோ ? என்ற ரோசனையோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் ! Fingers crossed !!!

மீண்டும் சந்திப்போம் all !! Bye for now !!
கோவை புத்தக விழா இன்று (20th.July'18) CODISSIA அரங்கில் துவங்கி விட்டது !!

ஸ்டால் நம்பர் 123-ல் உங்களுக்காகக் காத்திருக்கிறோம் !! Please do visit !!

247 comments:

  1. மியாவ் மியாவ் பூனைக்குட்டி
    புத்தகம் படிக்கும் பூனைக்குட்டி
    கண்ணை உருட்டும் பூனைக்குட்டி
    வாலை ஆட்டும் பூனைக்குட்டி
    இது யாரு வீட்டு பூனைக்குட்டி
    நம்ம ஈ.வி.வீட்டு பூனைக்குட்டி!!

    ReplyDelete
    Replies
    1. @ திரு. ATR

      ஈ.வி வீட்ல பூனைக்குட்டி இல்லை சார். அதுக்குப் பதிலாத்தான் என்னை சோறு போட்டு (அதுவும் பழைய சோறுதான்) வளர்த்தறாங்க!

      Delete
    2. பழைய சோறு போட்டு வளர்க்கும்போதே என்ன கெத்து பாருங்க!
      என்ன ஸ்டைல்!!! படிக்கும்போது அவ்வப்போது விடும் லுக்கு சும்மா அதிருதில்லே....!!
      இன்னும் பாலும் சோறும்,மீனும் போட்டு வளர்த்தால்....?

      Delete
  2. டெக்ஸ் சிறுகதைகள் தொகுப்பு எப்போது விற்பனைக்கு கிடைக்கும் சார்?

    ReplyDelete
    Replies
    1. வெகு சீக்கிரமே சார் ! அட்டைப்படம் மட்டும் இதர ராப்பர்களோடு சேர்ந்து அச்சாக வேண்டியுள்ளது !

      Delete
  3. Dear Vijayan sir,
    வீட்டிலுள்ள சுட்டிகளுக்கான காமிக்ஸ் என்றால், சந்தா வில் வேண்டாமே. வேற ஸ்பெசல் வெளியீடாக(புக் ஃபேர், மற்றும் ஏப்ரல் விடுமுறைமலர்,...) தனியாக வெளியிட்டால், முழு சந்தா கட்டும் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். இங்குள்ள 500 பேரில்(சந்தாதாரர்கள்) வீட்டிலுள்ளவர்களுக்காக காமிக்ஸ் வாங்குபவர்கள் ஒரு 10% இருப்பார்கள் என்பது என் எண்ணம். அவர்களுக்கு இது சுமையாவே தெரியும்.

    அத்துடன், புக்ஃபேரிலும், விடுமுறை நாட்களிலுமே சுட்டிஸ்களுக்கு அதிகமான புத்தக தேவை இருக்கிறது. புக்ஃபேரில் சந்தாதாரர்களுக்கு ஸ்பெசல் வெளியீடு இருப்பது போல், சுட்டிகளுக்கும் ஒரு ஸ்பெசல் வெளியீடு வருடத்தில் இருமுறை செய்யலாம். நல்லதொரு விளம்பரமாகவும் இருக்கும்...

    இது எனது எண்ணங்கள் மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. புக்ஃபேர் ஸ்பெஷல் கிட்டங்கியை நேசிக்கும் ரகமாய் இருந்து வருகிறது சார் !

      ரெகுலர் இதழாய் ; ரெகுலர் சந்தாவில் இடம்பிடிக்கா இதழ்கள் "இரத்தப் படலம்" ; "மின்னும் மரணம்" போன்ற starpower கொண்டிருந்தால் மட்டுமே தலைதப்பிக்கின்றன ! So வேறெந்த ஸ்லாட்டிலும் இது போன்ற பரிசோதனை முயற்சிகளை உட்புகுத்தத் திட்டமிடுவது சரி வராது சார் !

      Delete
    2. இரத்தப்படலம் எனும் சுகமான சுமைகளை இறக்கி வைத்தவுடன்,நல்லதொரு starpower கொண்ட ஒரு கதம்ப குண்டு ஸ்பெஷலை வருஷா வருஷம் வெளியிடுவிங்கன்னு நம்பறோம் சார்,அதிகம் வேணாம் ரூ.1000/- க்கு போதும் சார்,அது கலரா,கருப்பு & வெள்ளையிலா,இல்லை இரண்டும் சேர்த்ததா???
      முடிவு உங்கள் கையில்,நீங்க ஸ்பெஷலை போட்டா மட்டும் போதும் சார்,
      இந்த நேரத்தில் இது சரியான கோரிக்கையான்னு தெரியல,ஆனா கேட்காமல் இருக்க முடியல,முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணலாம்னுதான் ஹி,ஹி.

      Delete
  4. I like
    1 Chick bill
    2 Luke
    3 Cliffton
    4 Ran tan plan
    5 Smurfs
    I dislike
    1 Leonardo
    2 Blue coats

    ReplyDelete
  5. என்னுடைய அலுவலகத்திலேயே எட்டு வயது குழந்தைகளுக்கு காமிக்ஸ் இருக்கிறதா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
    தயவுசெய்து ஏதாவது ஓரு வழியில் வெளியிடவும்.

    லாபம் என்பதைவிட எதிராகாலத்திற்கான ஒருவித முதலிடாக இதை பார்க்கலாம்.

    மேலும் சந்தா கட்டும் அன்பர்களுக்கு ஏதாவது ஓரு மாதம் இலவச இனைப்பாக கொடுக்கலாம்.
    வயதான நாம் மட்டும் வாய்விட்டு சிரித்தால் போதுமா??
    மழலைகள் மனம் குளிர ஏதாவது செய்ய வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. "காமிக்ஸ் உலகு" என்றாகி விட்டாலே, நாமே அவ்வப்போது மழலைகளாய் மாறிப் போய் விடுவதாலோ, என்னமோ exclusively for மழலைs என்று எதையும் யோசிக்கத் தோன்றவில்லை ! 2019 -க்கு உடனடியாய் இயலாவிடினும் maybe அதைத் தொடரும் ஆண்டுக்கு ஏதாவது முயற்சிப்போம் சார் !

      Delete
  6. ///என் இல்லத்தில் குட்டியும் நானே ; சுட்டியும் நானே என்பது தான் நிலவரம் ! என்று சொல்வதாயினும், தாராளமாய் பதிவு செய்யலாம் ! நிச்சயமாய் நானோ, கார்ட்டூன் காதல அணியோ விசனம் கொள்ளப் போவதில்லை !///

    Yes sir

    ReplyDelete
  7. ///அட...கார்டூனுக்கே இந்த அலசல் என்றால், கி.நா. சந்தா சார்ந்த கேள்விகளுக்கு என்ன காத்துள்ளதோ ? என்ற ரோசனையோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் !///

    கடந்த பதிவிலே நடந்த களேபரத்துக்கும் நடுவிலே நி.நி. கிநா விமா்சனமும் நண்பா் ஒருவா் பதிவிட்டிருந்தாரே, பாத்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பிரபுவின் பின்னூட்டம் தானே ? பார்த்தேன் சார் !

      Delete
  8. செனா ஜி,

    பென்னி, லியனார்டோவோடு "ஸ்மா்ப்ஸ்"ஐ சோ்த்தது தான் இத்தனை விவாதத்திற்கு காரணம் என்பதை கவனிக்கவில்லையான்னேன்!

    ReplyDelete
  9. குட்டிக்களுக்கு மட்டும்?நஹி நஹி ..நோ ..நெவெர் ..வேண்டாம் ..பேட சாமி

    ReplyDelete
  10. லக்கி, சிக்பில், மதியில்லா மந்திரி இம்மூன்று கதைகளின் களம் மற்றும் நுணுக்கங்கள் எனக்கு சிறு வயதிலிருந்தே பரிச்சயமானதால் இன்றும் இலகுவாக உள்ளது. மற்ற எந்த கார்ட்டூன் கதையும் எனக்கு சுமையாகவே தோன்றி வந்துள்ளன. காரணம், வாசிப்புக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் புதிய கதா பாத்திரங்களும், களமும் மனதில் நிற்க இயலாமல் போகிறது.

    ஃபில்லர் பேஜ் சிறு கதைகள் எனக்கு எப்போதுமே செட் ஆகிறது. அபூர்வமாக ஒரு 15 - 30 நிமிட ஓய்வு கிடைக்கும்போது முழுநீள கதைகளுள் நுழைவதை விட 3-4 ஃபில்லர் பேஜ் கதைகளை வாசிப்பது சாத்தியப்படும்.

    என்னுடைய குழந்தை வாசிக்கும் வயதை எட்டும்போது வெரைட்டியான ஓரிரு பக்க சிறுகதைகள் மூலம் காமிக்ஸை அறிமுகப்படுத்திவிடலாம் என்று நம்புகிறேன். முழுநீளக்கதையில் ஆரம்பித்தால் சீக்கிரத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற ஐயமும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான பார்வை ; ஆனால் நிறையவே லாஜிக்குடன் !

      இன்றைய பிரதான சிக்கலே நேரமின்மை தான் சார் ! அது அப்பட்டமாய் புரிகிறது !

      Delete
  11. //"இவை உங்க வீட்டு நண்டு-சிண்டுகளுக்கு மட்டுமே ஓய் ! சுகப்படுமா ?//
    +1

    ReplyDelete
  12. Hi all☺
    I like cartoons.my choice is lucky luke.
    Yet to try other charecters

    ReplyDelete
    Replies
    1. சிக் பில் & கோ.வை முயற்சித்துப் பாருங்கள் !

      Delete
  13. போன பதிவுல பாருங்களேன்.

    இது அப்பிடி
    அது இப்பிடி.....

    ஆனா விஷப் பரிட்ச்சை வேணாமே....
    எப்பயும் போல....
    வழக்கம் போல....
    அரைச்ச மாவையே அரப்போம் ன்னவரு...


    இப்ப கொயந்த புள்ளங்களுக்கு எடுத்து வுட்டு தாக்கப் போறாராம்....


    என்னமோ ஒரு ஏரோப்பிளேன் கத போட்டு. போட்டு......முடியல....

    பொறவு..
    கைதிங்க கேம்ப்புல கொடலு மொதக்கொண்டு.... ஈரக்கொல வரைக்கும் உருவுனாரு....

    போடுங்க...
    போடுங்க...

    பக்கத்து பில்டிங்க வாங்கி கொடவுன பெரிஸ்ஸ்ஸ்ஸாக்கிட்டப்டியோ...


    இப்ப மட்டும் விஷப்பரிட்ச்சை ஞாபகம் வரலையாக்கும்....

    காமிக்ஸூக்கு வாக்கப்பட்டா எல்லாத்தையும் சொமக்கணுமோ...
    நல்லாருங்க சாமி...

    ஜெயிக்கிற குதிர எங்கன இருக்குது?




    ReplyDelete
    Replies
    1. Hi sir
      I am bit confused.whether you are appreciating or criticizing😓

      Sorry

      Delete
    2. எல்லா கொழந்தயையும் கிள்ளிட்டு அப்பொறமாட்டி
      ஜெயிக்கிற தொட்டில மட்டுந்தாலாட்டபோறாரு ன்னு சொல்ல வந்தேன்.

      Delete
    3. மிஸ்ஸிஸ் ராம்.
      ஃப்யூர் கிரிட்டிசிஸம்.

      Delete
    4. மிஸஸ் ராம், நீங்கள் தளத்துக்குப் புதிதல்லவா - இந்த மாதிரியான சந்தேகங்கள் எழுவது இயல்பே ! நாளாசரியாய் between the lines புரிந்து கொள்ளும் திறன் தானாய் உங்களிடம் ஒட்டிக் கொள்ளும் ! அதுவரையிலும் relaxed ஆக உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து வாருங்கள் ப்ளீஸ் !

      Delete
    5. மிஸஸ் ராம்!

      ///I am bit confused.whether you are appreciating or criticizing😓///

      நண்பர் J யின் கமெண்ட்டுகளைப் பல மாசமா படிச்சுட்டுவர்ற எங்களுக்கே அவர் காமெடி பண்றாரா... இல்லை சீரியஸா குறை பேசறாரான்னு சரியாப் புரிஞ்சுக்க முடியாதபோது, தளத்துக்குப் புதியவரான உங்களுக்கு இப்படியொரு குழப்பம் ஏற்பட்டது சாதாரணம் தான்! :D

      பி.கு : நீங்கள் ரஜினி நடித்த படையப்பா பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதன் கதாசிரியர் - உங்களைக் குழப்பிய - நண்பர் J தான்!

      Delete
    6. ///நீங்கள் ரஜினி நடித்த படையப்பா பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.///

      படையப்பான்னா நம்ம ரம்யா கிருஷ்ணன் செம்ம க்யூட்டா ஃபாரின் கார் மேல சாஞ்சிக்கிட்டு நிப்பாங்களே ...அந்தப்படம்தானே ..??

      அதுல ரஜினியும் இருக்காரா என்ன???

      Delete
    7. க்ளைமாக்ஸ் சீன்ல சண்டைய கழட்டிட்டு மஸ்ல்ஸ் காட்டிட்டு சண்டை போடற எங்க தலீவரோட தலய கிண்டல் பண்ற உங்களுக்கு ஆகஸ்ட்ல ஈரோட்ல இருக்கு.

      Delete
    8. என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கான காரணம் மிக எளிதானது. சந்தாதாரர்களுக்கு அல்லது ரெகுலர் வாசகர்களுக்கு எந்த கார்டடூன் ஹீரோ மெயினா பிடிக்குதுன்னு தெரிஞ்சுக்கனும். அதுக்கு பதில் கிடைச்சா அவங்களை திருப்திபடுத்தாத கதைகளை அல்லது கதநாயகர்களை தேவைப்படுமெனில் ஓரங்கட்டலாம். இது சந்தா எண்ணிக்கை குறையாமல் இருக்க உதவும்.

      புதுசா வருவது பற்றிய தேடல்கள் குறிப்பாக ஜம்போ சந்தாவுக்காகவோ இருக்கலாம்.

      பதிலை சொல்லி பாரத்தை ஆசிரியர்மேல போட்டுட்டு நாம எஸ்கேப்ஆயிடலாம்

      Delete
    9. மிஸ்ஸிஸ் / மிஸஸ்... எதுசரி?

      Delete
    10. மிஸ்ஸிஸ் அமேரிக்கன் அக்ஸெண்ட்
      மிஸஸ் பிரிட்டன் அக்ஸெண்ட்.

      Delete
    11. ஈ வி
      ஆடி ஆத்தா கூழு கேக்குறா.
      நம்ப சாரு கேளு கேளுன்னு கேக்குறாரு.

      Delete
    12. /// எங்க தலீவரோட தலய கிண்டல் பண்ற உங்களுக்கு ஆகஸ்ட்ல ஈரோட்ல இருக்கு.///

      ஹைய்யா ..!!!

      😃😃😃😃😃😃😃

      Delete
    13. //பி.கு : நீங்கள் ரஜினி நடித்த படையப்பா பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதன் கதாசிரியர் - உங்களைக் குழப்பிய - நண்பர் J தான்! //

      இந்த விஷயம் K. S. Ravikumar அவர்களுக்கு தெரியுமா?

      ;P

      Delete
  14. புக் பார்சல் வந்ததும் முதல்ல படிக்கிறதே கார்ட்டூன் தான்.அதாலே கார்ட்டூனுக்கு ஜே.

    ReplyDelete
    Replies
    1. நானும் அவ்விதமே!!

      Delete
    2. அப்படி போடு! அடி தூள்!

      காா்ட்டூன் விஷ்வரூபம் எடுக்க போகுது!

      Delete
    3. கார்ட்டூன் சூழ் உலகு ..!!

      Delete
  15. ///- "இவை உங்க வீட்டு நண்டு-சிண்டுகளுக்கு மட்டுமே ஓய் ! சுகப்படுமா ?" ///

    எங்க வீட்டு நண்டு(மகள்) இதுவரை படிச்சது இரவே இருளே கொல்லாதே மற்றும் கனவின் கதையிது போன்றவற்றையே ...!(தற்போது Sslc என்பதால் அதற்க்கும் வாய்ப்பில்லை)

    எங்க வீட்டு சிண்டு (மகன்) விரும்பி படிப்பது ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை மட்டுமே., அதுவும் கலரில்தான் வேண்டுமாம்! அவருடைய தற்போது விருப்பத்தோடு காத்திருது இரத்தப்படலம் கலர் இதழுக்காக ..!

    என் வீட்டு நிலை இப்படியிருக்கையில் ..நீங்கள் வெளியிடப்போகும் சிறாருக்கான இதழைப் படிக்கப்போகும் மழலை நானாக மட்டுமே இருப்பேன் சார்..!! ;-)

    ReplyDelete
  16. எனக்கு டெக்ஸ் கூட சின்னப்பிள்ளைத் தனமாகத்தான் தோன்றுகின்றது. ரத்தப்படலம், லார்கோ, ஷெல்டன் அளவுக்கு சுகப்படுவதில்லை. இதில் சிறு பிள்ளைகளுக்குக் கார்ட்டூன் என்று தனியாகப் போட்டால் வாசிக்கும் போது கொட்டாவி தான் வரும் :(

    ReplyDelete
    Replies
    1. \\எனக்கு டெக்ஸ் கூட சின்னபுள்ளதனமா தோனுது\\
      லொகத்துல என்னனமோ நடக்குது.

      Delete
  17. Dedicated under 10 cartoon in regular santha? NOTA x NOTA

    ReplyDelete
  18. எங்க வீட்டு நண்டுக்கு ஸ்மர்ப் தவித்து எல்லாமே படிச்சுக் காட்டுகிறேன். ஸ்மர்ப தவிர்கக முயல்வேன். காரணம் பொடி பாஷையால் அவருக்கு தெரிந்த கொஞ்ச தமிழையும் குழப்பி விட வேண்டாம்என்பதே. அப்படியே படித்தாலும அதை சாதாரண தமிழாகவே படித்து காட்டி விடுகிறேன்.

    நண்டுக்கு மிகவும் பிடித்தது லக்கி. ஆங்கில லக்கி கதைகளை அனைத்தையும் அவரே படித்து விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. // தெரிந்த கொஞ்ச தமிழையும் குழப்பி விட வேண்டாம்என்பதே. அப்படியே படித்தாலும அதை சாதாரண தமிழாகவே படித்து காட்டி விடுகிறேன் //

      ஹா ஹா. பொடி பாசையை விடுவதில்லை நாங்கள்.

      Delete
    2. @ MP

      வாவ்! சூப்பர்!!

      Delete
  19. - அனைத்திலும் 6 என்று 24 புக்குகளும் (எ , பி , சி , டி ) (ரெகுலர் சந்தா)
    - அனைத்திலும் ஆறு கொண்ட நான்கு குண்டுகளும் (1 * 6 - எ , 1 * 6 - பி , 1 * 6 சி , 1 * 6 டி - ஒரே கதைவரிசை like barracuda / லக்கி லுக் / சிக் பில் / tex special - limited edition - Jan , July , August , Diwali)
    - அழுதே தீருவேன் என்பவருக்கு கிராபிக் நாவல்களும்
    - ADHOC வரிசை ஜம்போவிலும்

    ReplyDelete
    Replies
    1. போனெல்லி தவிர்த்து வேறு எதிலும் கூட்டணிகள் not possible ! ஆகையால் "அனைத்திலும் 6 கொண்ட 4 குண்டு புக்ஸ்" சாத்தியமாகாது சார் !

      அதே போல ஒரே இதழினில் 6 லுக்கி கதைகளோ / சிக் பில் கதைகளோ எனில் சலிப்பாகிப் போகக் கூடுமே !

      Delete
  20. Dear Editor,

    Is color tex ready for orders? Waiting eagerly.

    ReplyDelete
    Replies
    1. Waiting for the cover to be printed along with the others...! Will be done pretty soon !

      Delete
  21. கார்ட்டூன் கதைகள் வேண்டும். உங்கள் தேர்வுகள் இது வரை என்னை ஏமாற்றவில்லை. அதனால் நீங்கள் எந்த கதையை வெளியிட்டாலும் வாங்குவேன் படிப்பேன். ஒரே கோரிக்கை அனைத்தும் வண்ணத்தில் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ///கார்ட்டூன் கதைகள் வேண்டும். உங்கள் தேர்வுகள் இது வரை ///// என்னை ஏமாற்றவில்லை. அதனால் நீங்கள் எந்த கதையை வெளியிட்டாலும் வாங்குவேன் படிப்பேன்.//

      நானும்

      Delete
  22. தங்களுக்கு தெரியாத சட்டமில்லை அதில் எந்த சட்டம் நல்ல சட்டம் என நீங்களே தேர்ந்தெடுத்து தீர்பெழுதிவிடுங்கள் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதுதான் உண்மை!!!

      Delete
  23. நாம் விரும்புவது!

    லக்கி, டக்புல், மந்திரி, பென்னி, விச்சு&கிச்சு.

    ReplyDelete
    Replies
    1. Blue coats - கவுண்டமணி செந்திலாக பளுகோட் நாயர்களை நினைத்து படியுங்கள் கண்டிப்பாக சிரிக்கலாம்/ரசிக்கலாம் அதே நேரம் யுத்த களங்களின் சோகத்தையும் உணர முடியும்

      Delete
  24. Replies
    1. கவுண்டமணி செந்திலாக பளுகோட் நாயர்களை நினைத்து படியுங்கள் கண்டிப்பாக சிரிக்கலாம்/ரசிக்கலாம் அதே நேரம் யுத்த களங்களின் சோகத்தையும் உணர முடியும்.

      Delete
  25. கார்ட்டூன் கதைகள் கண்டிப்பாக வேண்டும். உங்கள் தேர்வுகள் இது வரை என்னை ஏமாற்றவில்லை. அதனால் நீங்கள் எந்த கதையை வெளியிட்டாலும் வாங்குவேன் படிப்பேன் / படிப்போம்.

    ReplyDelete
  26. Am a reader from 1994, but not a subscriber. First introduction to Lion was Luckyluke.

    When I compare the recent cartoons with 90's, they are not much hilarious.
    One reason is, we have transferred from amateur to matured, with age;

    Another reason- we are watching lots of comedy scenes/episodes/series/Memes through TV (Aditya, Sirippoli, Comedy champions, Madras central etc.,).
    So the result is, the cartoons seems to be casual read.

    Only the core Patient readers will be able to laugh at cartoons.
    Even am a big fan of LuckyLuke cartoons, but still, very rarely some dialogues make me laugh.

    And also like a viewer pointed out "Edi is following some Cinematic dialogues in cartoons".
    There can't be any better translation for the Cartoons like Edi. So, we have to accept whatever is the current Sales point (or fan numbers).
    My personal opinion - I don't seem any improvement can be made in Cartoons; they are for Breezy read only.
    Like Graphic novels, these are also for Selective readers.

    I think this is Evolution and nobody can be blamed.
    Sorry if I have hurt anyone.

    ReplyDelete
    Replies
    1. வெளிப்படையான, நடுநிலையான கருத்து!

      Delete
  27. விஜயன் சார், இன்றைய சூழலில் குழந்தைகளுடன் செலவழிக்க சிறந்த கருவியாக நமது காமிக்ஸ் உள்ளது.

    கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு மொபைல் கொடுப்பதில்லை. ஆனால் தினமும் கதை சொல்ல வேண்டும், அவர்கள் கதை கேட்க விரும்புகிறார்கள். இதனை நான் இழக்க விரும்பவில்லை.

    அதே போல் அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. இது போன்று காமிக்ஸுடன் பொழுது போக்குவது பின் நாட்களில் அவர்களே தமிழ் எழுத படிக்க ஆரம்பிக்கும் போது அது எளிதாகும் என்பது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல, வரவேற்கத்தகுந்த முயற்சி! வாழ்த்துகள்!! உங்களைப்போல தெருவுக்கு ஒருவர் இருந்தால் கூட காமிக்ஸ் மீண்டும் வளம்பெறும்!

      Delete
    2. அருமை ..!வாழ்த்துகள் பரணி.!

      Delete
    3. ///மொபைல் கொடுப்பதில்லை///....மிகவும் நல்ல செயல் பரணி.

      10ப்பு போகும் நம்ம சிண்டு , மோபைல்ல்ல கேம் ஆட மட்டுமே விரும்புறான். அதிலிருந்து அவனை நகர்த்தி பாடங்களை படிக்க வைப்பதற்குள்...ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடினு ஆகிடுது...!

      Delete
    4. // 10ப்பு போகும் நம்ம சிண்டு , மோபைல்ல்ல கேம் ஆட மட்டுமே விரும்புறான். //

      :-( இது நமது தவறு!

      Delete
    5. ////தெருவுக்கு ஒருவர் இருந்தால் கூட காமிக்ஸ் மீண்டும் வளம்பெறும்////

      தெருவுக்கு ஒருத்தா் என்றால் கோபி வட்டாரத்தில் மட்டுமே ஒரு லட்சம் வாசகா்கள் உண்டாகிவிடுவாா்கள்!

      அப்புறம் நம்ம ஆசிாியா் புதிய உபகரணங்கள் வாங்க வேண்டிய நெருக்கடி உண்டாகிவிடும் என்பதால்...😂😂😂

      Delete
    6. // தெருவுக்கு ஒருத்தா் என்றால் கோபி வட்டாரத்தில் மட்டுமே ஒரு லட்சம் வாசகா்கள் உண்டாகிவிடுவாா்கள்! //

      கனவு மெய்பட வேண்டும் பராசக்தி!

      Delete
    7. // கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு மொபைல் கொடுப்பதில்லை. ஆனால் தினமும் கதை சொல்ல வேண்டும், அவர்கள் கதை கேட்க விரும்புகிறார்கள். இதனை நான் இழக்க விரும்பவில்லை.//
      அருமை,வாழ்த்துகள் பரணி நல்லதொரு முடிவு,மகிழ்ச்சி.

      Delete
    8. தொடர்க கதை தொடர்கள்

      Delete
    9. ///கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு மொபைல் கொடுப்பதில்லை. ////

      பாவம் அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்!! இப்படியொரு கொடுமையை இழைக்க உங்களுக்கு எப்படித்தான் மன்சு வந்ததோ!!

      Delete
    10. கதை கேட்பது பிள்ளைகளுக்கொரு addiction ஆகிப் போகுமெனில், அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்தக் "கதை சொல்லும் அனுபவத்துக்கு" நாமும் addict ஆகிடுவோம் சார் !! அசத்துங்கள் !!

      Delete
  28. // Maybe Under 12 அல்லது Under 8 குட்டீஸ்களுக்கான ஒரு சில கார்ட்டூன் கதைகளை நமது சந்தாவில் ஒரு இக்ளியூண்டு அங்கமாக்கினால் - அவை நம்மில் எத்தனை பேருக்கு பயன் தரக்கூடுமோ ? //

    +1

    மற்றும் குறைந்த டயலாக் உடன். இது புக் ஃபேர் நேரத்தில் குழந்தைகளை சென்றடைய உதவும்.

    வருடத்திற்கு இரண்டு தனி சந்தாவாக அல்லது சிறப்பு வெளியீடாக

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு வெளியீடாக என்பதற்கே என்னுடைய வாக்கும்....!!!

      Delete
  29. குழந்தைகளுக்கென்று சிறப்பாக சந்தாவில் சேராமல் ஒரு தனி புத்தகம் ஒருமுறை வெளியிட்டு முயற்சி செய்து பார்க்கலாம்.என்னுடைய தனிப்பட்ட ரசனை அதுவும் கூட தேவையற்றது என்பதே.

    ReplyDelete
    Replies
    1. மீ டூ....!!!!

      ஏற்கெனவே குழப்பத்தில் இருக்கும் சந்தாவில் இதை சேர்க்க வேணாம் சார்.

      Delete
    2. குழப்பத்தில் சந்தாவோ ; அட்டவணையோ நஹி சார் ! இறுதியான உள்ளே-வெளியே borderline தீர்மானங்கள் மாத்திரமே தற்சமயம் !

      Delete
    3. ////குழப்பத்தில் சந்தாவோ ; அட்டவணையோ நஹி சார் !///----சூப்பர் சார். நிம்மதியாகிறது மனம்.

      வழக்கமான 9இதழ்கள் தானா? ஏதேனும் மாற்றம் உண்டாங் சார்?


      ///இறுதியான உள்ளே-வெளியே borderline தீர்மானங்கள் மாத்திரமே தற்சமயம்////---இதுவும் இன்டரஸ்டிங்கான ஆட்டம் தான்...!

      ஸ்மர்ஃப் மேலே 50ரூபா உள்ளே பெட்!

      Delete
    4. யங் டைகர் மேலே வெளியே 100!

      Delete
  30. bookfair சமயத்தில் 4,5 புத்தகங்கள் சிறுவர்கள் வாங்ககூடிய விலையில் வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. முத்து மினி காமிக்ஸ்...20 ரூபாய்....ஆறு வெளியீடுகள்....குட்டியூண்டு பிரிண்ட்ரன்...புத்தக விழா....கிட்டங்கிவாசம்....கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்...!

      நம்ம ஸ்டீல் பாணியில் பதில் சொல்ல முனைந்தேன் சார் !

      Delete
  31. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். கார்ட்டூன்களின் நிலையை நிறையவே பேசி விட்டோம். நல்ல, புதிய கார்ட்டூன் தொடர்களைக் கொண்டு வாருங்கள். வெளிப்படையாகப் பேசினால், பிடிக்கும் பிடிக்காதென்பதைத் தாண்டி நம்முடைய சந்தாவிலிருக்கும் நண்பர்களனைவரும் அத்தனை புத்தகங்களையும் மொத்தமாக வாங்கக் கூடியவர்களே. காரணம், காமிக்ஸின் மீது நமக்கிருக்கும் காதல் மற்றும் இந்தப் புத்தகங்களையெல்லாம் கலெக்ட் செய்கிற ஆர்வம். எனவே நம் மக்களின் மீது நம்பிக்கை வைத்து, விருப்பங்களை மீறித் திணிக்கிறோம் என்றெல்லாம் எண்ணாமல், புதிய திசைகளில் எங்களை நீங்கள் அலைத்துச் செல்ல வேண்டும் என்பதே என் (பெரும்பாலான எங்களின்) விருப்பமாக இருக்கும். இந்தக் கடைசி வரி.. //கி.நா. சந்தா சார்ந்த கேள்விகளுக்கு என்ன காத்துள்ளதோ ?// சீக்கிரமாகக் கச்சேரியைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு சிப்பாயின் சுவடுகளில், பிரளயத்தின் பிள்ளைகள், தேவரகசியம் தேடலுக்கல்ல, இரவே இருளே கொல்லாதே, மெல்லத் திறந்தது கதவு, பௌன்சர், ஜேசன் பிரைஸ், என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம், நிஜங்களின் நிசப்தம் போன்ற இதழ்களின் வழியே நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் மிகப்பெரிது. நிறைய இதுபோன்ற இதழ்கள் நம் காமிக்ஸில் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    பிரியமுடன்,
    கா.பா

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு சிப்பாயின் சுவடுகளில், பிரளயத்தின் பிள்ளைகள், தேவரகசியம் தேடலுக்கல்ல, இரவே இருளே கொல்லாதே, மெல்லத் திறந்தது கதவு, பௌன்சர், ஜேசன் பிரைஸ், என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம், நிஜங்களின் நிசப்தம் போன்ற இதழ்களின் வழியே நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் மிகப்பெரிது.////

      அரும & உண்ம!

      மேற்கூறிய தலைப்புகளைப் படிக்கும்போதே அவை நம்முள் தற்போதோ, சிலகாலம் முன்போ ஏற்படுத்திய தாக்கங்கள் பசுமையாய் நினைவில் எழுகிறதே?!!

      கி.நா'க்களின் மகிமையே மகிமை!!

      எடிட்டர் சார்,
      சீக்கிரமே கி.நா'களை (லிமிட்டெட் எடிஷனாகவாவது) கண்ணுல காட்டுங்க... இல்லேன்னா கி.நா'க்கள் சல்லீசா கிடைக்கிற நாடு எதுன்னு சொல்லுங்க. நான் அங்கேயே போயிடுறேன்!

      Delete
    2. கா.பா.@
      ///.......போன்ற இதழ்களின் வழியே நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் மிகப்பெரிது. நிறைய இதுபோன்ற இதழ்கள் நம் காமிக்ஸில் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.////...அத்துனை கி.நா. ரசிகர்களின் உள்ளக்கிடக்கையை சொல்லி விட்டீர்கள் நண்பரே..அருமை👏👏👏👏👏

      ஆசிரியர் சார்@
      நல்ல பிளேயர் ஃபார்மல இருக்கும் போது கேப்டன் அல்லது கோச் உடனான உரசல் காரணமாக சப்ஸ்டிடியூட் பெஞ்சில் உட்கார வைக்கப் படுவார். அந்த பிளேயரும் நொந்து போவார். அணிக்கும் அவரது பங்களிப்பு கிடைக்காது போயிடும்.

      நல்லதொரு இடத்தை பிடித்து இம்ப்ரூவ் ஆகி வந்த கி.நா. இன்று ஒன் இயர் பிரேக்கினால் அந்த பிளேயர் மாதிரியே தத்தளிக்குது. எதிர்காலத்தில் இம்மாதிரி நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் சார்.

      எல்லாவித சந்தாக்களுக்கும் முதலிலேயே இடம் ஒதுக்கி விடுங்கள்.

      9இதழ்கள் சந்தா A,B & Dக்கு என வைத்து கொண்டு, கார்டூன்- சந்தாC 6 + கி.நா.6 என்ற எண்ணிக்கையில் ஒதுக்குங்கள்.

      அட்லீஸ்ட் இப்போ இருக்கும் 5வித ஜானரும் மிஸ் ஆகாமல் இருக்கும்.

      (ஜம்போ, ஸ்டார்களின் ஸ்பெசல் & சுட்டி இதழ்கள் உங்கள் வசதிக்கேற்ப...)

      Delete
    3. // நல்லதொரு இடத்தை பிடித்து இம்ப்ரூவ் ஆகி வந்த கி.நா. இன்று ஒன் இயர் பிரேக்கினால் அந்த பிளேயர் மாதிரியே தத்தளிக்குது. எதிர்காலத்தில் இம்மாதிரி நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் சார். //

      +1

      // காமிக்ஸின் மீது நமக்கிருக்கும் காதல் மற்றும் இந்தப் புத்தகங்களையெல்லாம் கலெக்ட் செய்கிற ஆர்வம். எனவே நம் மக்களின் மீது நம்பிக்கை வைத்து, விருப்பங்களை மீறித் திணிக்கிறோம் என்றெல்லாம் எண்ணாமல், புதிய திசைகளில் எங்களை நீங்கள் அலைத்துச் செல்ல வேண்டும் என்பதே என் (பெரும்பாலான எங்களின்) விருப்பமாக இருக்கும். //

      +1

      Delete
    4. ////நல்லதொரு இடத்தை பிடித்து இம்ப்ரூவ் ஆகி வந்த கி.நா. இன்று ஒன் இயர் பிரேக்கினால் அந்த பிளேயர் மாதிரியே தத்தளிக்குது. எதிர்காலத்தில் இம்மாதிரி நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் சார். ////

      எனக்கேன்னவோ இந்த வருடத்திற்கான கிநா பணியை "நிஜங்களின் நிசப்தம்" ஒற்றை இதழே இட்டு நிரப்பிவிட்டதான மன நிறைவு உள்ளது!

      கடந்த ஆண்டு சந்தாவில் இருந்தாலும் வெளியானது இந்த வருடம் தானே!

      அப்புறம் கடந்த ஆண்டிற்கான கிநா சேவையை "அண்டா்டேக்கா்" செவ்வனே செய்து விட்டாா் என்பதையும் தாழ்மையோடு தொிவித்துக் கொள்கிறேன்!

      5, 6 என்ற எண்ணிக்கைகளை காட்டிலும் ஒன்று வந்தாலும், மேலே நண்பா் காா்த்திகைபாண்டியன் சுட்டிக்காட்டியது போல அற்புதமானவையாக (நி.நி போல 😁) வந்தால் தேவலாம் என்பது எண்ணம்!!

      Delete
    5. ///9இதழ்கள் சந்தா A,B & Dக்கு என வைத்து கொண்டு, கார்டூன்- சந்தாC 6 + கி.நா.6 என்ற எண்ணிக்கையில் ஒதுக்குங்கள். ///

      காா்ட்டூனை குறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை!

      Delete
    6. // காா்ட்டூனை குறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை! //

      +1

      Delete
    7. ///எனக்கேன்னவோ இந்த வருடத்திற்கான கிநா பணியை "நிஜங்களின் நிசப்தம்" ஒற்றை இதழே இட்டு நிரப்பிவிட்டதான மன நிறைவு உள்ளது!///---

      நம்மை போன்ற டை-ஹார்டு பேன்ஸ்க்கு ஓகே தான். ஆனா, நிறைய நண்பர்களுக்கு இதன் மெதுவான நகர்தல் பிடிக்கல போல.
      போன மாசம்தான் இதனை மறுவாசிப்பு செய்தேன். ஆண்டெரர் உடன் அழுததே நானுமே...!!!

      அண்டர்டேக்கர் ஓகே. இதன் க்ளைமாக்ஸில் நீங்கள் அழப்போவது உறுதி மிதுனரே. பாகம்3&4 ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி வாசித்தேன். மற்றொரு பிரளய மாதம் 2019ல் உண்டு.

      Delete
    8. ///காா்ட்டூனை குறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை!///--- எனக்கும் தான். மேற்கண்ட கமெண்ட்டை போடும்முன் இரு முகங்கள் ஒரு நொடி வந்து போனது.

      ஆனா, சென்ற பதிவிலும், இந்த பதிவிலும் கார்டூன் லிஸ்ட் தந்துள்ள நண்பர்கள் பெரும்பாலும் 6தான் பிடித்துள்ளது என சொல்லியுள்ளார்கள். 7,8&9 இன்னும் கொஞ்சம் கவரும் படியான நாயகர்கள் வேணும் என்பதை மறுக்க முடியாதே.

      பர்சனலாக ரின்டின்கேன், ஸ்மர்ஃப் பிடிக்கும் தான். இவைகள் வெளிவரும் மாதங்களில் எழும் குரல்கள் கவனிக்கப்பட வேண்டியவையே.

      Delete
    9. நடப்பாண்டுக்கான கி.நா.கோட்டா சுவாஹா ஆனதன் காரணம் "இரத்தப் படலம்" மெகா பட்ஜெட்டே ! அது இல்லாத பட்சம் F & F சந்தா 9 இதழ்களுடன் களம் கண்டிருக்கும் ! ஆனால் நமது XIII மோகம் முந்திக் கொண்டதால், மற்றவை பின்சீட்டுக்குச் செல்லும் அவசியம் நேர்ந்தது !

      "அது சரி, ஜம்போ எதற்காம் - நடுவாக்கில் ?" என்ற கேள்வி கேட்க நண்பர்களுள் சிலர் தயாராக இருக்கக்கூடும் என்பது புரிகிறது ! அவர்களுக்கு அந்தச் சிரமத்தை வைப்பானேன் ? - இதோ பதில் : நடப்பாண்டில் ரெகுலர் சந்தாவில் மொத்தமே 36 இதழ்கள் & நாம் ஒரு வேகத்தில் முதல் 7 மாதங்களிலேயே 25 இதழ்களைப் போட்டுத் தாக்கிவிட்டோம் ! தொடரும் 5 மாதங்களை எஞ்சியிருக்கும் 11 இதழ்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப இயலாது என்பதால் - ஜனரஞ்சகக் கதைத் தேர்வுகளுடனான ஜம்போவை களமிறக்கினேன் ! கி.நா.க்கள் இன்னமுமே சகல தரப்புகளின் வோட்டை வாங்கிடவில்லை என்பதால் F & F - in place of JUMBO சாத்தியமென்று தோன்றவில்லை எனக்கு !

      2019 -ல் கி.நா.படலம் தொடரும்...for sure !!

      Delete
    10. ////2019 -ல் கி.நா.படலம் தொடரும்...for sure !!///----

      Wow...wow..wow...👌👌👌👌👌👌👌
      குட் நியூஸ் சார்...!

      Delete
    11. //2019 -ல் கி.நா.படலம் தொடரும்...for sure !!///

      Good news sir.

      Delete
  32. 1. Chick bill
    2. Luke
    3. Manthri
    4. Clifton
    5. Rin tin
    6. Chutti Bayilvan

    Dislikes
    Smurfs
    Leonardo
    Blue coats

    ReplyDelete
    Replies
    1. Blue coats - கவுண்டமணி செந்திலாக பளுகோட் நாயர்களை நினைத்து படியுங்கள் கண்டிப்பாக சிரிக்கலாம்/ரசிக்கலாம் அதே நேரம் யுத்த களங்களின் சோகத்தையும் உணர முடியும்

      Delete
  33. Dear sir,
    If there is going to be too many cartoons in 2019, some people like me will consider switch to online selective shopping mode from subscription.

    Hardcore Lucky fan like me need to shy away from cartoons.. why?

    1. May be the translation..
    என் போன்ற வட மாவட்ட ரசிகர்களுக்கு தமிழ் சினிமா பாணி தென்மாவட்ட வட்டார வழக்கு மொழி காமடி click ஆகலையோ?
    அந்த காலத்தில் neutral language பயன்படுத்தி இருப்பீர்கள்..
    2. May be tastes have changed..
    3. May be ஆழ்ந்து ரசிக்க நேரமில்லையோ

    தெரியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. வட மாவட்டத்துக்கு ஒரு ரசனை ; தென்மாவட்டத்துக்கு இன்னொரு ரசனை என்பதெல்லாம் பிரமைகள் நண்பரே !

      என் புள்ளைக்கே பல தருணங்களில் என் எழுத்துக்கள் ரசிப்பதில்லை / புரிவதில்லை ! ஒற்றை கூரையினடியில் வசிப்போருக்கே இந்தக் இக்கட்டு எனும் போது பரவலாய் இதன் பரிமாணம் இன்னும் அதிகமாக இருப்பதில் வியப்பில்லை தானே ? எல்லா ரசனைகளையும் ஒற்றைப் புள்ளியில் சங்கமிக்கச் செய்யும் ஆற்றல் சுஜாதா போன்ற அசகாயர்களுக்கு மட்டுமே சாத்தியம் சார் ! நாமெல்லாம் வெறும் pretenders தான் !

      Delete
    2. ///என் புள்ளைக்கே பல தருணங்களில் என் எழுத்துக்கள் ரசிப்பதில்லை / புரிவதில்லை ! ////

      இந்தக் காலத்து இளைஞர்கள் எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்! :P

      Delete
  34. 'Times of India' கட்டுரையின் ஒரு பகுதி: (நெட்டில் சுட்டது)

    ////Very few children today are seen buying comic books. Nor are the book store owners stock them anymore. "We don't keep them any more as people rarely look for these comics nowadays. The problem arises when a customer come to us asking for these comics books", said Manoj, a book store owner in the city. Not just Hindi but even the English comics are not in demand any more. Manish, a book shop owner said, "Earlier there was a craze for Tintin and Asterix comics. Now people only read Archies. That's why we also stock Archies." Children today say they do not like reading comics as they prefer to watch cartoons on TV rather than reading them. "I like watching Ben 10 and Pokemon, where the cartoons actually move, instead of reading them" said 10-year-old Ashu. Another reason for people's lack of interest in comics is the modern video games and play stations. As fourteen-year-old Manjeet, said: "I spend my time playing with my play station II instead of reading comics which is very boring and not at all adventurous." The parents of these kids say they loved reading comics but, as always, the kids are influenced by their peers. So they prefer to watch cartoons and discuss about them instead of exchanging comics unlike kids of the past generation. Animesh Raj, father of a 12-year-old, said, "We used to collect comics like treasure and trade them for other comics. Nowadays kids exchange video game cassettes instead of comics." ///

    ஹூம்... என்னத்தைச் சொல்ல?!!

    ReplyDelete
    Replies
    1. True. When I give Tex, Tiger cowboy comics to my teens, they show me "Red Dead Redemption" on Play Station !! (Can't blame them, these games are uber realistic visuals, music and hyper engaging.. :-(

      Delete
    2. In fact, when reading comics, our brain works a lot to create connection between the drawings and words to create a movie with action and sound. We thoroughly enjoy it.

      But the new generation has been fed with the movie + sound and get them involved in the action and story rather than watching it. One step ahead of us..

      Delete
    3. ///In fact, when reading comics, our brain works a lot to create connection between the drawings and words to create a movie with action and sound. We thoroughly enjoy it.///

      வாவ்!! அருமையாச் சொன்னீங்க!!

      இரண்டு சித்திரங்களிடையேயான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நம் மூளை இன்னும் அதிகமாக மெனக்கெடுவது - கி.நா'க்களில்!!
      அந்தத் தொடர்பு மூளையால் கண்டறியப்பட்டுவிடும்போது நம்மையறியாமல் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்வதும், தொடர்பு சரிவரக் கிடைக்காத நிலையில் "சை! எனக்கு கி.நா'வே வேணா"என்று கடுப்பாவதும் நிகழ்கிறது!!

      Delete
    4. ////But the new generation has been fed with the movie + sound and get them involved in the action and story rather than watching it. One step ahead of us..////

      உண்மை! உண்மை!! உண்மை!!! அருமையாவும் சொல்லிட்டீங்க நண்பரே!!

      இப்படியாப்பட்ட நிலையில் நம் குழந்தைகளின் கையில் புக்கைத் திணித்து "படி" என்றால் அவர்கள் நம்மை பழமைவாதிகள்' என்று எண்ணிவிடவும் வாய்ப்புள்ளது!

      கொடுப்பதைக் கொடுப்போம்... பிடித்தால் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்!

      Delete
    5. இத சொன்னதுக்குத்தான் என்ன " "குழப்பிய J "ன்னீங்களாக்கும்.

      குழப்புறது சிவகாசிகாரவுக.

      அக்காங்....

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. என்ன கமெண்ட்டுன்னா என்னங்க மிதுன்,ஜெகாங் சார்ஸ்
      தப்பா நெனக்க மாட்டேன்....

      Delete
    9. @ Prabhu & friends : ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் நிகழ வேண்டிய மாற்றங்கள் இப்போதெல்லாம் ஒவ்வொரு 5 ஆண்டுகளிலுமே நிகழத் துவங்கிவிட்டன சார் ! இன்றைய தலைமுறை gadgets தலைமுறை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை ; ஆனால் உரிய ஊக்கம் கிட்டும் தருணங்களில் வளரும் பிள்ளைகளின் கவனங்களை புத்தகங்களின்பால் channelise செய்யவுமே சாத்தியப்படலாம் என்பதை அனுபவத்தில் உணர்ந்து வருகிறேன் ! இந்தப் பதிவில் நான் கேட்ட கேள்வியுமே அந்த அனுபவத்தின் பலன் என்று வைத்துக் கொள்ளலாம் !

      நம் தீவிர வாசகர் அவர் ; வெகு சமீபமாய் ஒரு பெருநகரின் பிரசித்தமான பள்ளியின் முக்கிய நிர்வாகப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார் ! வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாய் நமது கார்ட்டூன் இதழ்களின் மொத்தத்திலும் 2 பிரதிகள் தருவித்துள்ளார் ! நமது CINEBOOK ஸ்டாக்கிலிருந்துமே - நான் பரிந்துரைத்தவற்றில் ஒவ்வொரு பிரதி வீதம் வாங்கி ஸ்கூல் லைப்ரரியில் அடுக்கியுள்ளார் ! Early days yet - ஆனால் பிள்ளைகள் செம ஆர்வமாய் அவற்றைப் புரட்டத் துவங்கியுள்ளனராம் ! தொடரும் காலங்களில், குழந்தைகள் தினம் போல் ஏதேனும் ஒரு வாகான தருணத்தின் போது - ஸ்கூல் வளாகத்தில் பிரத்யேகமாய் ஒரு comics ஸ்டால் அமைத்து - பிள்ளைகள்-பெற்றோர் கவனத்தை காமிக்ஸ் பக்கமாய் ஈர்க்க இயலுமா என்றும் முயற்சிக்கக் கேட்டிருக்கிறார் !

      அந்தப் பள்ளியின் strength சுமார் 3000 + ! அந்த எண்ணிக்கையிலிருந்து வெறும் 5 சதவிகிதம் வாசிப்பெனும் சுவையை ரசிக்கத் துவங்கினாலுமே ஆண்டொன்றுக்கு உருவாகக் கூடிய புது வாசகர்கள் ஆயுட்கால வாசகர்கள் தானன்றோ ? காமிக்ஸை ஊக்குவிக்க ஒற்றை மனிதர் இத்தனை தெளிவான முயற்சிகளை எடுக்கத் தயாராக இருக்கும் போது, நம் பங்குக்கு ஒரு சிறு துரும்பையாவது தெளிவோடு கிள்ளிப் போட்டாலென்ன என்று தோன்றியதன் வெளிப்பாடே எனது உரத்த சிந்தனை !

      Of course - one swallow doesn't make a summer ! ஒற்றை நிகழ்வே இதே போன்ற தொடர் நிகழ்வுகளுக்குப் பிள்ளையார் சுழியாகிடாது என்பது புரிகிறது ! But எல்லா முயற்சிகளுக்கும் ஏதோ ஒரு சிறு பொறி தானே துவக்கப் புள்ளி ? என்றைக்கோ நமக்கு சாத்தியமாகிடக்கூடியதொரு முயற்சிக்கான துவக்கப் புள்ளியாக இன்றைய தினம் இருந்தாலென்னவென்று ஆசைப்பட்டேன் ! அவ்வளவே !

      Delete
    10. பள்ளியின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் அந்த நண்பரின் முயற்சிக்கும், செயலுக்கும் நம் வாழ்த்துகளும், வணக்கங்களும்!!

      இதுபோன்ற ஒரு பள்ளியில் நம் சார்பில் ஒரு ஓவியப்போட்டி நடத்தி, மாணவர்களுக்கு காமிக்ஸ் புத்தகங்கள் பரிசளித்தால் செமயாக இருக்கும்!

      Delete
    11. மதுரையில் செய்திருக்கிறோம் - 3 ஆண்டுகளுக்கு முன்பாய் !

      Delete
    12. அதையும் செஞ்சுட்டீங்களா?!!! சூப்பர் சார்!!

      Delete
    13. ///பள்ளியின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் அந்த நண்பரின் முயற்சிக்கும், செயலுக்கும் நம் வாழ்த்துகளும், வணக்கங்களும்!! ///

      என்னுடைய வணக்கங்களும் உரித்தாகட்டும் ..!

      நம்முடைய வாசக வட்டத்தில் புதிய தலைமுறையினர் இணைவதுதான் நம் அனைவருக்குமே மிக சந்தோசம் தரக்கூடிய செய்தியாக இருக்கமுடியும்.!

      Delete
    14. பள்ளியின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் அந்த நண்பரின் முயற்சிக்கும், செயலுக்கும் நம் வாழ்த்துகளும், வணக்கங்களும்!!

      Delete
    15. முயற்சி திருவினையாக்கும்.

      Delete
  35. எல்லோரும் அவரவர் குழந்தைகளுக்கு காமிக்ஸின் சுவையை அறிமுகப் படுத்துவோம்... (குழந்தைகள் படிப்பதற்கு உகந்த ) காமிக்ஸுகளை அவர்கள் கண்ணில் படும்படி வைத்திருப்போம்... குழந்தைகளின் கண்ணெதிரே நாம் காமிக்ஸ் படித்துச் சிரித்திடுவோம் ( "டாடி இப்படி கெக்கபிக்கேன்னு சிரிக்கறாங்களே... அப்படி என்னதான் இருக்கு அந்த காமிக்ஸுல?")

    நண்பர் PfBயைப் போல,MPயைப் போல கதை சொல்லி ஆர்வத்தைத் தூண்டுவோம்!

    ஒரு நல்ல பெற்றோராக - ஒரு நல்ல காமிக்ஸ் ரசிகனாக - நாம் செய்யக் கூடியது இவை மட்டும்!!

    மேற்கொண்டு அவர்கள் காமிக்ஸ் வாசிப்பை விரும்பிச் செய்வார்களா என்பது நம் கையில் இல்லை!!

    ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, இந்தியாவில் திடீரென்று ஒரு காமிக்ஸ் புரட்சி ஏற்பட்டால் தவிர, வேகமாகக் குறைந்துவரும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை தவிர்க்க இயலாது!

    'சர்வம் டிஜிடல் மயம்' என்பதன் பக்கவிளைவு!

    ReplyDelete
    Replies
    1. கவலையே படாதீங்க ஈவி!

      டிஜிட்டல் உலகில்,

      சிக்கிரம் எல்லோருக்கும் கண் பொகை தள்ளீரும்!

      ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும்னு நம்ம பக்கம் வா்றாங்களா? இல்லையா பாருங்க!!

      Delete
    2. இப்பயே கண்ணு பூத்து போயி தான் குனிஞ்ச தல நிமிராம திரியிறாங்க

      Delete
    3. ஈ வி
      "டாடி நல்லா தா இருந்தாரு.
      அந்த பொம்ம புக்க பொரட்டனாரு.
      என்ன ஆச்சுன்னே புர்யல...
      தனியா உக்காந்து சிரிச்சிகிட்டிருக்காரு...."

      இப்பிடி குழந்தைங்க நெனச்சிட்டா என்ன பண்றது....

      இது ஒரு பக்கம்...

      அவங்க WhatsApp பாத்துட்டு நைட் 11.30 மணிக்கு இருட்டுல செல் போன் வெளிச்சத்துல பயமுறுத்துற மாதிரி சிரிக்கிறது தனி....

      இது மறுபக்கம்.

      இன்னொரு டெர்ரர் பக்கம் இருக்கு...

      சகதர்மிணி தோசைய 360 டிகிரி சதுரமா ஊஊஊத்தி தள்றது( சாப்பாட்டுத் தட்ட நம்ம பக்கம் ).

      உபயம்..ஸ்மார்ட் போனு...

      என்னமோ போங்க...

      இதுக்கு நடுவுல நம்ப சிவகாசி " மய்யம்"
      Big boss கணக்கா இன்னும் சின்ன புக்கா போடலாமான்னு கேக்குறார்.
      Elimination roundல இருக்கோம் சாமியோவ்.

      Big boss முடிவு பண்ணி காமிக்ஸ் ரூமுக்குள்ள போட்டு அடச்சா சரி...

      Delete
    4. ///அவங்க WhatsApp பாத்துட்டு நைட் 11.30 மணிக்கு இருட்டுல செல் போன் வெளிச்சத்துல பயமுறுத்துற மாதிரி சிரிக்கிறது தனி.///

      ஹிஹி! இதோ இப்பக்கூட அதானே நடக்குது!! :)

      /// சகதர்மிணி ///

      இது நல்லாருக்கே!! வீட்டம்மாவை சகதர்மிணி'னு சொன்னா, நம்மை 'சக தர்மவான்'னு சொல்லிக்கிடலாமா?

      ஜொல்லுங்க ஜே ஜார் ஜொல்லுங்க!

      Delete
    5. நாம தான் சக தர்ம சங்கடவான் களாச்சே.

      Delete
    6. ஜொள்ளு ஜொள்ளுனு ஜொள்ளிட்டோம்ல ஈ வி

      Delete
  36. நிச்சயம் ஆதரவு உண்டு சார். தயவு செய்து தனி சந்தாவில் அல்லது ரெகுலர் சந்தா வாசகர்களுக்கு சற்று சலுகையுடன் வெளியிடுங்கள். எனக்கு ஒரு வயதில் மழலை உண்டு. அவளுக்கு படிக்கும் ஆர்வம் கொண்டு வர தமிழில் ஒரு காமிக்ஸ் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.

    - சங்கர்

    ReplyDelete
    Replies
    1. ஒரு வயதுப் பிள்ளைக்காக இப்போவே திட்டமிடலா ? சூப்பர் !!

      Delete
    2. நிச்சயமாக சார்.. அப்போ தான வாங்கின புத்தகங்களை பாதுகாக்க ஒரு வாரிசு இருக்கும்.. :)

      Delete
  37. EBF என்னாச்சுங்க சாா்!!

    Any details??

    ReplyDelete
    Replies
    1. நல்லா கேளுங்க சார்.

      யாருமே கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க.

      Delete
    2. சர்ப்ரைஸா என்னமோ நடக்குது GP

      Delete
    3. ஞாயிறு பதிவில் எழுத நினைத்திருந்தேன் !

      ஆகஸ்ட் 4 க்கு (சனிக்கிழமை) வழக்கம் போல் LE JARDIN ஹோட்டலின் பேஸ்மெண்ட் அரங்கில் சந்திக்கிறோம் சார் ; காலை 10 முதல் மதியம் 2 வரை !

      மதிய (சைவ) உணவும் அங்கேயே....! லெக் பீஸ் நாடி ஜூனியர் குப்பண்ணாவில் துண்டை விரித்து வைக்க உத்தேசித்திருக்கும் சகலருக்கும் "சூ.ஹீ.சூ.ஸ்பெ.-வின்" ஒரு காப்பியைப் படிக்கக் கொடுத்து ஹாலிலேயே மடக்கி வைப்பதாகவும் உத்தேசம் !

      Delete
    4. ஹை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிடுச்சு!! இனி திருவிழா களைகட்டும்!!

      Delete
    5. அப்பாடா !!

      ஒருவழியா அறிவிப்பு வந்தாச்சி.

      Delete
    6. /// லெக் பீஸ் நாடி ஜூனியர் குப்பண்ணாவில் துண்டை விரித்து வைக்க உத்தேசித்திருக்கும் சகலருக்கும் "சூ.ஹீ.சூ.ஸ்பெ.-வின்" ஒரு காப்பியைப் படிக்கக் கொடுத்து ஹாலிலேயே மடக்கி வைப்பதாகவும் உத்தேசம் ! ///

      இதெல்லாம் சர்வாதிகாரம்., ஜனநாயக உரிமை மீறல்,., மனித உரிமைகளுக்கு முரணானதுன்னு குருநாயர் புலம்பிட்டு இருக்கிறதா கேள்வி ..!!

      Delete
    7. எல்லோரும் உள்ளே நுழைந்த பிற்பாடு அரங்கக் கதவுகளைப் பூட்டி, சாம்பார் வாளிக்குக் கீழே பதுக்குவதாய் ஏற்பாடு ! செயலாளர் அடிச்சு கேட்டாலும் சொல்லிவிடாதீர்கள் !

      Delete
    8. இந்தமுறை ஒரு மாறுதலுக்காண்டி உங்கள் உரையை அரங்கத்திற்கு வெளியே, தூரத்திலேயே நின்று ரசித்துவிட்டு, அப்படியே கண்ணீருடன் விடைபெற்றுக்கலாம்னு இருக்கோம் எடிட்டர் சார்!!

      Delete
    9. ///சூ.ஹீ.சூ.ஸ்பெ.-வின்" ஒரு காப்பியைப் படிக்கக் கொடுத்து ஹாலிலேயே மடக்கி வைப்பதாகவும் உத்தேசம் ! ///

      இதுக்கு ஏன் சார் சூப்பர் ஹீரோ 'ஸை தொந்தரவு செய்யணும்? பூமியைக் காப்பாத்தினது பத்தாதுனு, இப்ப கேலக்ஸியைக் காப்பாத்துற வேலைல பிஸியா இருக்காங்க.

      வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.
      ஸ்பைடர் மேன் ,பேட் மேன், அயர்ன் மேன், மற்றும் பலரின் முகமூடிகளைக் கொள்முதல் செய்யலாம்.

      சனிக்கிழமை அதுவுமா யாரெல்லாம் குப்பண்ணாவுக்குப் போறாங்களோ ,அவங்களை அப்படியே குண்டுகட்டா தூக்கிட்டு வந்து, மேற்படியான முகமூடிகளை நம் நண்பர்கள் அணிந்து ,அவங்களோட ஒரு செல்ஃபி எடுத்து 'Shelfie with super heroes 'ங்கிற ஹேஸ்டாக்கோட பேஸ்புக்கில் ஏற்றப்பட்டு உலகம் முழுக்க பரப்புவோம்னு பீதியைக் கிளப்புவோம்.

      அதிர்ச்சியடையும் அசைவ அணியினர் 'போற உயிர் பசியிலே போகட்டும் 'னு குப்பண்ணா இருக்கிற பக்கம் கூட திரும்ப மாட்டாங்க.

      டிரை பண்ணிப் பாருங்களேன்.

      Delete
    10. யு டியூப்-ல் பிரபலமானவர் ‘சாம் ஆன்டர்சன்’. ‘யாருக்கு யாரோ’ என்ற இவர் நடித்த படம் 2008ம் ஆண்டிலேயே யு டியூப்பில் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான ‘ஹிட்’களை அள்ளியது.

      Delete
    11. குப்பண்ணா வாசலிலேயே நின்று கொண்டு உள்ளே நுழையும் நம் நண்பர்களிடம் யூ ட்யூப் சூப்பர் ஸ்டார் சாம் ஆன்டர்சனின் "யாருக்கு யாரோ" திரைப்பட விசிடியை இலவசமாக விநியோகம் செய்தாலே போதும்.உள்ளே நுழைய எண்ணியவர்கள் அலறி அடித்துக் கொண்டு LE JARDIN ஹோட்டலை நோக்கி ஓடமாட்டார்களா?
      அதையும் மீறி உள்ளே துணிச்சலாக நுழைபவர்களுக்கு வீராசாமி திரைப்பட விசிடி இலவசம்!!!

      Delete
    12. ஆசிரியர் சைவ சாப்பாடு வழங்குகிறார்.நம் தோழர்கள் சிக்கன் லெக்பீஸ்களை தேவையான அளவு குப்பண்ணாவில் கொள்முதல் செய்து கொண்டு மறைவாக எடுத்துக்கொண்டு LE JARDIN ஹோட்டலில் ஆசிரியர் வழங்கும் சைவ சாப்பாட்டுக்கு 'சைட் டிஷ்' ஆக கடித்துக் கொள்ளலாம். இதில் மிக முக்கியமான ஒன்று நம் பார்வை ஆசிரியரின் மீதே மையம் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் நம்மை கவனிக்கையில் பொறியலையோ அப்பளத்தையோ நல்ல பிள்ளையாக உள்ளே தள்ளலாம்.ஆசிரியர் பார்வை நம்பக்கம் திரும்பாத போது சிக்கன் லெக்பீஸை "அவுக் அவுக்" கென்று கடித்து விழுங்கலாம்.

      Delete
    13. ஆசிரியருக்கும் சைவ சாப்பாடு வழங்கின சந்தோஷம்.
      நமக்கோ நம் வயிற்றுக்கு வஞ்சனை செய்யவில்லையென்ற ஆத்ம திருப்தி!!

      Delete
    14. சிக்கன் பார்சலை பிரிக்க ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய முக்கிய வேலை ஆசிரியர் கவனத்தை கொஞ்சமேனும் திசை திருப்ப வேண்டும்.அதற்கு முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றை செய்ய வேண்டியது அவசியம். சைவ சாப்பாடு பறிமாற ஆரம்பித்த சமயத்திலிருந்தே ஆசிரியரிடம் "சார்! சிக்கன் வாசனை வருகிறமாதிரி இல்லையா சார்?" என்று ஒரு பத்து முறையாவது நம் தோழர்கள் நச்சரிக்க வேண்டும். ஆசிரியர் " இல்லையே! சைவ சாப்பாடுதான் சார்.சிக்கன் வாசனை எப்படி வரும்?" என்று ஒரு பத்து முறை பதில் சொல்லி அலுத்துவிடுவார்.
      அதற்கப்புறம் சிக்கன் பார்சலை தைரியமாக ஓப்பன் பண்ணலாம். சிக்கனின் மணம் மெல்ல மெல்ல ஆசிரியரின் நாசியை வருடினாலும் அவருக்கு சந்தேகம் வந்தாலும் "நாம்தானே சிக்கன் வாசனை வரவில்லையென்று சொன்னோம்.இப்போது வாசனை வருகிறதென்று சொன்னால் நம்மை தப்பாக நினைக்க மாட்டார்களா? இது வெறும் மனப்பிராந்திதான்" என்று அவரை அவரே சமாதான படுத்திக் கொள்வார்!!
      நாமும் தைரியமாக "அவுக் அவுக்" கை துவக்கலாம்.
      இந்த விஷயத்தை ஆசிரியரின் காதுக்கு எட்டாமல் பாதுகாக்க வேண்டியது நம் தோழர்களின் கடமை!!

      Delete
  38. என் மகன் 6 வது படிக்கிறான். அவன் ரெகுலராக காமிக்ஸ் படிப்பது இல்லை. ஆனால் அவ்வப்போது படிக்கிறான். அவனது பிடித்த நாயகர்கள் லாரன்ஸ் அண்ட் டேவிட். இப்போ டெக்ஸ் வில்லர் படிக்க ஆரம்பித்து இருக்கிறான் . அவனை எப்படி கார்ட்டூன் பக்கம் திருப்புவது என்று யோசித்து கொண்டு இருக்கிறேன். உங்கள் புது முயற்சி ஒரு வேலை பலிக்கும் என்று நினைக்கிறேன். அதனால் குழந்தைகளுக்கு என்று தனி புத்தகம் முயற்சி செய்யலாம் . கூடுதல் தகவல் தினமும் இரவு கபீஷ் கதையை கேட்டுவிட்டுதான் எனது மகளும் மகனும் தூங்குகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //தினமும் இரவு கபீஷ் கதையை கேட்டுவிட்டுதான் எனது மகளும் மகனும் தூங்குகிறார்கள்.//

      +1
      Started yesterday for my kids.

      Delete
    2. டிங்கிளின் சுப்பாண்டி ; காலியா காகம் போன்ற தொடர்கள் கார்ட்டூனுக்குள் பிள்ளைகளைக் கொணர உதவிடலாம் நண்பரே ! சிறுகச் சிறுக காமிக்ஸ் டேஸ்ட் ஒட்டிக் கொண்டால், அப்புறம் அவனாய் உங்கள் சேகரிப்பிலிருந்து இதழ்களை கைப்பபற்றத் துவங்கிடுவான் !

      Delete
    3. // காலியா காகம் // காளிங்கா?

      Delete
  39. 3 மில்லியன் ஹிட் என்னாச்சு சார்

    ReplyDelete
    Replies
    1. 2019 ஜனவரிக்கு சார் !

      Delete
  40. Replies
    1. Welcome
      Come and mingle yourself in comics ஜோதி

      Delete
    2. வாங்க, உள்ளே வாங்க! பயப்படாம வாங்க.. அது பூனைதான்.. நாய் மாதிரி குலைச்சு மிமிக்ரி பண்ணிக்கிட்டிருக்கு! :)

      Delete
    3. வருக வருக....
      வந்து எங்கள் ஜோதியில் ஐக்கியமாகுக...!

      Delete
  41. LMS போல் ஒரு கலவை குண்டு இதழ் 2019ல் வேண்டும்ம்ம்ம.

    ReplyDelete
  42. @ Prabhu & friends : ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் நிகழ வேண்டிய மாற்றங்கள் இப்போதெல்லாம் ஒவ்வொரு 5 ஆண்டுகளிலுமே நிகழத் துவங்கிவிட்டன சார் ! இன்றைய தலைமுறை gadgets தலைமுறை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை ; ஆனால் உரிய ஊக்கம் கிட்டும் தருணங்களில் வளரும் பிள்ளைகளின் கவனங்களை புத்தகங்களின்பால் channelise செய்யவுமே சாத்தியப்படலாம் என்பதை அனுபவத்தில் உணர்ந்து வருகிறேன் ! இந்தப் பதிவில் நான் கேட்ட கேள்வியுமே அந்த அனுபவத்தின் பலன் என்று வைத்துக் கொள்ளலாம் !

    நம் தீவிர வாசகர் அவர் ; வெகு சமீபமாய் ஒரு பெருநகரின் பிரசித்தமான பள்ளியின் முக்கிய நிர்வாகப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார் ! வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாய் நமது கார்ட்டூன் இதழ்களின் மொத்தத்திலும் 2 பிரதிகள் தருவித்துள்ளார் ! நமது CINEBOOK ஸ்டாக்கிலிருந்துமே - நான் பரிந்துரைத்தவற்றில் ஒவ்வொரு பிரதி வீதம் வாங்கி ஸ்கூல் லைப்ரரியில் அடுக்கியுள்ளார் ! Early days yet - ஆனால் பிள்ளைகள் செம ஆர்வமாய் அவற்றைப் புரட்டத் துவங்கியுள்ளனராம் ! தொடரும் காலங்களில், குழந்தைகள் தினம் போல் ஏதேனும் ஒரு வாகான தருணத்தின் போது - ஸ்கூல் வளாகத்தில் பிரத்யேகமாய் ஒரு comics ஸ்டால் அமைத்து - பிள்ளைகள்-பெற்றோர் கவனத்தை காமிக்ஸ் பக்கமாய் ஈர்க்க இயலுமா என்றும் முயற்சிக்கக் கேட்டிருக்கிறார் !

    அந்தப் பள்ளியின் strength சுமார் 3000 + ! அந்த எண்ணிக்கையிலிருந்து வெறும் 5 சதவிகிதம் வாசிப்பெனும் சுவையை ரசிக்கத் துவங்கினாலுமே ஆண்டொன்றுக்கு உருவாகக் கூடிய புது வாசகர்கள் ஆயுட்கால வாசகர்கள் தானன்றோ ? காமிக்ஸை ஊக்குவிக்க ஒற்றை மனிதர் இத்தனை தெளிவான முயற்சிகளை எடுக்கத் தயாராக இருக்கும் போது, நம் பங்குக்கு ஒரு சிறு துரும்பையாவது தெளிவோடு கிள்ளிப் போட்டாலென்ன என்று தோன்றியதன் வெளிப்பாடே எனது உரத்த சிந்தனை !

    Of course - one swallow doesn't make a summer ! ஒற்றை நிகழ்வே இதே போன்ற தொடர் நிகழ்வுகளுக்குப் பிள்ளையார் சுழியாகிடாது என்பது புரிகிறது ! But எல்லா முயற்சிகளுக்கும் ஏதோ ஒரு சிறு பொறி தானே துவக்கப் புள்ளி ? என்றைக்கோ நமக்கு சாத்தியமாகிடக்கூடியதொரு முயற்சிக்கான துவக்கப் புள்ளியாக இன்றைய தினம் இருந்தாலென்னவென்று ஆசைப்பட்டேன் ! அவ்வளவே !

    ReplyDelete
    Replies
    1. Editor sir, the future is with The next Gen. Subscribers only - I mean the younger generation today are the ones who may turn as long terms prospective subscribers later. We,Mid age folks like us , came through that transition path. I read out Lucky Luke to my kids Evey time to keep up their reading habits. So, I would suggest to plan such ways to reach out to new audiences.

      Delete
  43. Sir,
    My Ratha padalam booking number is 324. I never saw my name any of the list published in this blog or book. In last list also after 323 the number 325 is there. Kindly make sure l get the book with out issues.


    ReplyDelete
  44. Chick Bill / Lucky Luke /Madhi Illa Mandhiri /Rin Tin / jack Mac and Blue Coats.

    I'm not saying these are the ones , should find a slot in Editors list. But, these are my favourites only. Editor should accomodate others input as well and finalize who's IN n Who's OUT. Tx

    ReplyDelete
  45. ஆசிரியர் சார்@

    2019சந்தா , இதழ்கள்பற்றிய கவனம் இருக்கையில் இதையும் கேட்டு விடுகிறேன்.

    *2018பிளானர்ல வெயிட்டிங்ல இருக்கும் 11கதைகளில் 6லயனிலும், 5முத்துவிலும் இருக்கு.

    *முத்து421(நடுநிசிக் கள்வனோடு)+5= 426. 2019ல் தோராயமாக ஒரு 20வந்தாலும் முத்து 450வது இதழ் 2020ல் தான் வரும்.

    *இரத்தப்படலம் லயன்ல வரும் என நினைக்கிறேன். லயன்330 (எரிமலை தீவில் பிரின்ஸ்) +இந்த ஆண்டு வெயிட்டிங்ல இருக்கும் எல்லாம் சேர்த்தால் 2018முடிவில் லயன் 341இதழ்கள் வந்திருக்கும்.

    *லயன் 350வது இதழ் அடுத்த ஆண்டு அமைகிறது.

    *முத்து 350க்கு கார்டூன் ஸ்பெசல் போட்டு அசத்துனீர்கள்.

    *லயன் என்றாலே கெளபாய்ஸ் தான்; லயன் 350க்கு சிறப்பான ஒரு கெளபாய் ஸ்பெசல் போட வேணும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
    அப்படி இல்லைனாலும் ஒரு நச் ஸ்பெசல் போடுங்க சார். லயன் உங்க செல்லப்பிள்ளை சும்மாவா விட்டுறுவீங்க...


    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் விஜய்!

      செம கால்குலேஷன்!

      கோடை மலராக ஏப்ரலில் வந்தால் பட்டையைக் கிளப்பும்!

      Delete
    2. தேங்ஸ் ஈ.வி.

      "கோடைமலர்"-லயன்350...!!!

      சொல்லும்போதே கம்பீரம், அமைந்தால் நச்சுனு இருக்கும்.

      அதுவும் டெக்ஸ், லக்கி, சிக்பில், டியூராங்கோ& யங் டைகர் இணைந்த மெகா கூட்டணியாக இருந்தா சும்மா பிச்சிக்கும்....(ஆனா, போனெல்லி தவிர வேறு கூட்டணிக்கு வாய்ப்பு நஹி எனும்போது.......ஹூம்)

      டெக்ஸ் தலைமையில் இத்தாலியன் டிலைட் கிடைத்தாலே மதி...!!!

      Delete
  46. ஆகஸ்ட் 4

    காத்திருப்பு

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 4.

      கலகலப்பு அன்லிமிடெட்.

      Delete
    2. //கலகலப்பு அன்லிமிடெட்.//

      +123

      Delete
  47. நாம அத நெருங்கிட்டோம் மிஸ்டா் ஜேக்!

    அதுங்க நம்மல கொல்லாம விடாது!!

    எல்..லா..ரும் ஓ..டு..ங்..க....

    இது ரொம்ப ஆபத்தானது!

    இந்த எடமே அவன கொன்னுரும்!..

    😂😂😋😋😎😎😍😍

    ReplyDelete
  48. அடுத்த மாதம் இரத்தப் படலம் (வண்ணத்தில்) கிடைக்கப் போகும் குஷியில் உள்ளே வந்தேன்" மற்றபடி நான் வண்டு முருகன் மாதிரி எல்லாம் ஜட்ஜய்யா பொறுப்புள்ள விட்டு விடும் ஆள்தான்
    நீங்க கேளுங்க எங்களுக்கு வாங்க மட்டும் தான் தெரியும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. // நீங்க கேளுங்க எங்களுக்கு வாங்க மட்டும் தான் தெரியும். நன்றி //

      +1

      அப்படியே ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வாங்க.

      Delete
  49. காற்றுக்கென்ன வேலி.

    சமீபத்திய டெக்ஸ் சாகஸங்களில், வன்மேற்கின் வாசனை குறைந்துள்ளது போல ஒரு ஃபீலிங். ஆனால் அத்தனைக்கும் சேர்ந்து கூட்டு, பொரியல் (வட்டி, முதலுமா ) சேர்த்து தலைவாழை இலையில் ஒரு அன்லிமிட்டெட் மெகா மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை இளம் வில்லர் ஏற்படுத்தி விட்டார்.

    குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஓவியங்கள். மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது வெளிர் மஞ்சள் நிறத் தாள்.மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இதை B/Wல் வெளியிட்ட எடிட்டரின் சரியான முடிவு.

    வில்லர் ஒரு சகாப்தம் என நிரூபித்துள்ளார்.இது போன்ற சாகஸங்கள் அமைந்தால், 'வில்லர் ஓவர் டோஸ் 'என்ற வார்த்தை காற்றில் கரைந்துவிடும்.

    ReplyDelete

  50. Maybe Under 12 அல்லது Under 8 குட்டீஸ்களுக்கான ஒரு சில கார்ட்டூன் கதைகளை நமது சந்தாவில் ஒரு இக்ளியூண்டு அங்கமாக்கினால் - அவை நம்மில் எத்தனை பேருக்கு பயன் தரக்கூடுமோ ? அவற்றை தத்தம் வீட்டில் உள்ள சுட்டீஸ்களுக்குக் கதை சொல்லவோ ; படிக்கத் தரவோ - வாகான சூழல் கொண்ட நண்பர்கள் எத்தனை பேர் இருக்கலாமிங்கே ?

    Yes.i would love to.☺

    ReplyDelete
  51. PLEASE INTRODUCE FEW BOOKS ESPECIALLY FOR CHILDREN AND MAKE SURE THAT IT CONTAINS BIG FONTS AND SHORT DIALOGUES.

    ReplyDelete
  52. கோவை புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன? 20.07.18 அன்று மாலை புத்தகங்கள் வாங்க இயலுமா? நாளை இரவு சொந்த ஊரான பாண்டிச்சேரி செல்லவிருக்கிறேன்.அலுவலக விஷயமாக கோவை வந்து ஜூலை 20ஐ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  53. இ.ப. 😘😘😍😍💞💞💖💕💓💘💘

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ஐயோ!!

      எப்பத்தான் இந்த ஆகத்து 4 வருமோ தெரியல!

      ஒரு கால இயந்தியம் இருந்தா ஆவாதா??!!

      Delete
    2. ச்சை! எனக்கு இந்த வெயிட்டிங்கே புடிக்காது!!

      Delete
  54. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பத்து நாட்களுக்கு இணைய விடுமுறை எடுத்து வருவதால் ஆசிரியரின் இரு முக்கிய வினாக்களுக்கு ( பதிவுகளுக்கு ) எட்டி பார்த்து வருகை கொடுப்பதுடன் இருந்து எனது கருத்தை விரிவாக சொல்ல முடியாமல் போனது .இருப்பினும் கால தாமதம் ஆனாலும் மனதில் பட்டதை சுருக்கமாக சொல்லி விடலாமே என்ற எண்ணத்தில்...


    கார்ட்டூன் இதழ்கள் :

    கண்டிப்பாக கார்ட்டூன் இதழ்கள் வேண்டும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் கிடையாது.அதே சமயம் கார்ட்டூன் என்றாலே அதில் நாம் எதிர்பார்ப்பது நகைச்சுவையை .இந்த பரபரப்பான காலகட்டத்தில்,குடும்ப சுமை ,பணிச்சுமை ,பலவித தேவைகள் தேவைப்படும் சூழலில் ஒரு கார்ட்டூன் இதழை படித்து விழுந்து விழுந்து சிரிப்பதும் ,குலுங்கி குலுங்கி சிரிப்பதும் என நடப்பது மிக பெரிய சிரமம். அதே சமயம் அந்த இதழை படித்து முடிக்கும் பொழுது அந்த இதழ் பல இடங்களில் புன்னகையை கொண்டு வந்தாலே போதுமானது .கண்டிப்பாக அந்த இதழ் வெற்றியே.அந்த இதழ் நாயகராக எவராக இருந்தாலுமே கூட.
    அதே சமயம் சில நண்பர்கள் சொல்வது போல நாம் குழந்தை மனதுடன் கார்ட்டூன் இதழ்களை ரசித்து படித்தால் தான் அனைத்தையுமே ரசிக்க முடியும் என்றாலும் கூட அதுவும் சாத்தியமா என தெரியவில்லை.இப்பொழுது பிறக்கும் குழந்தைகளே குழந்தைத்தனமாக இல்லாமல் பெரிய மனிதர்களின் எண்ணத்தை தான் அப்படியே பிரதிபலிக்கிறார்கள் :-) எனும் போது நாம் குழந்தை உள்ளத்தை திரும்ப கொண்டுவருவது சாத்தியமா என தெரியவில்லை..?

    அதே சமயம் தொடர் கார்ட்டூன் நாயகர் எனில் சில நாயகர்கள் பலருக்கு ஆதர்சமாகவும் ( லக்கி ,சிக்பில்..போல ) ஸமர்ப் ,தாத்தா போன்றோர் பலருக்கு அலர்ஜியாகவும் போனதன் காரணம் அந்த புன்னகை வெளிகொண்டு வந்த விதம் காரணமாக தான் என்பது எனது எண்ணம்.லக்கியிலும் சில கவராத கதைகள் உண்டு .ஆனால் கவராத சதவீதத்தை விட சிரிக்க வைத்த சதவீதம் பன்மடங்கு அதிகம் எனும் போது ஒரு சாகஸம் பிடிக்காமல் போனாலும் கூட அடுத்த இதழில் கண்டிப்பாக கவர்வார் என்ற நம்பிக்கை மனதினுள் தானாக எழுந்து விடுகிறது.

    அதே சமயம் ஸமர்ப் ,தாத்தா ,ரின்டின் போன்றோர் அந்த சதவீதத்தை அப்படியே தலைகீழாக மாற்றி அமைத்த காரணத்தால் தானாக அந்த நம்பிக்கை பொய்த்து போய் ம்ஹீம் இவர்கள் ஆகாது என்ற முடிவிற்கு வந்து விடுகிறோம்.இதுவே புது நாயகர் எனும் போது அவரின் ஆரம்ப சாகஸமே படிப்போர் மனதில் புன்னகையை கொண்டு வர தவறினால் ஆரம்பத்திலியே அவரும் தோல்வி நாயகர் பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்.


    மொத்தத்தில் புன்னகைக்க வைக்கும் கார்ட்டூன் கதைகளை தேர்ந்தெடுப்பதில் தான் ஆசிரியரின் சவாலாக நிற்கும் விஷயம் அந்த கதைகளில் எந்த நாயகராக இருப்பினும் :-)

    ReplyDelete
    Replies
    1. நேற்றைக்கு தான் நினைத்து கொண்டு இருந்தேன்
      எங்கே நம் தலீவரை காணோம் என்று

      Delete
  55. நான் வெகு சொற்பமாக தான் கமென்ட் செய்வேன் என்றாலும், இங்குள்ள சிலருக்கு தெரிந்திருக்கும், நான் ஒரு முழுமையான காமிக்ஸ் வாசகன் என. எடிட்டர் டேஸ்ட் தான் என் டேஸ்டும் (அப்படி பழக்கி விட்டார்). அவர் என்ன போட்டாலும் எனக்கு அது பிடிக்கும்.

    கார்டூன் எனக்கு மிகவும் பிடித்தது. முன்பு நாம் கார்டூன் வறட்சியில் இருந்தோம். இப்போது தான் நன்றாக இருக்கிறது. சீரியசான காமிக்ஸ் இரண்டோ மூன்றோ, மாதம் ஒரு கார்டூன் வரும்போது கிடைக்கும் திருப்தியே தனி.

    என்னுடைய ரேங்கிங்கில் முடிசூடா மன்னராக லூக் தான் இருந்தார். ஒருத்தனுக்கு தோசையையே தினமும் சுட்டுப் போட்டால் நமக்கு தோசை பிடித்து தானே ஆக வேண்டும்? இப்போது வெரைட்டி கிடைக்கும் போது டேஸ்டும் மாறுகிறது.

    ரிண்டின்கேன்,
    லியனார்டோ,
    ப்ளுகோட்
    லூக்
    சிக்பில்
    பெண்ணி
    ஸ்மர்ப்ஸ் -இதுவே என் ரேங்கிங்
    மந்திரி, ஜில் ஜோர்டான் அத்தனை சுகப்படவில்லை
    மற்றவர்கள் ஞாபகம் இல்லை

    என் இரண்டு வயது பையன் எப்போதும் இரவில் நான் காமிக்ஸ் படித்துக்கொண்டே தூங்கப் போகும் போது, அவனும் ஒரு காமிக்ஸை வைத்துக் கொண்டு, தூங்குவது போல பாவ்லா செய்வான்.

    பெரியவன் ஆறு வயது. என்னென்வோ பண்ணிப் பார்த்தும் காமிக்ஸில் ஆர்வம் வரவைக்க முடியவில்லை. கொஞ்சம் கேம்ஸ், பழைய லயனில் வருவது போன்ற சிறுவர் சமாச்சாரம், சிறுவர் காமிக்ஸ் இருந்தால் தேவலை என்பேன்.

    ReplyDelete
  56. கர்னலை எட்டாவதாக என் லிஸ்டில் சேர்க்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  57. தலீவரே
    நீங்கள் சுருக்கமாக சொல்ல வந்ததே இவ்வளவு நீளமாக இருக்கிறதே!
    விளக்கமாக சொல்ல வந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கையிலே....?
    ஆனாலும் உங்களது காமிக்ஸ் பற்றிய கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். கோழி கால் ஊனமாக இருந்தாலும் எனக்கெல்லாம் குழம்பு ருசியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.எந்த நாயகராக இருந்தாலும் பரவாயில்லை படிக்கையிலே கதாநாயக பிம்பம் மறைந்து கதையுடன் ஒன்றி விழுந்து விழுந்து சிரித்து, (அடிபடாமல்தான்) படித்து, படித்தபின் மனசு லேசாகி அப்படியே என்னையும், என் மனதையும் இதமாக வருடிக் கொடுக்கும் எந்த கார்ட்டூனாக இருந்தாலும் ஓகே தான்.
    அப்புறம் ஒரு சந்தேகம்!
    அதென்ன இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பத்து நாள் இணைய விடுமுறை?
    அந்த பத்து நாளும் பதுங்கு குழியில் படுத்து ரொம்ப ரோசனை பண்ணுவீகளோ?
    ஆனாலும் இது நல்ல ஐடியாகத்தான் இருக்கிறது.இதோ நான் இப்போதே பதுங்கு குழிக்குள் பாய்ந்து விடுகிறேன். எனக்கும் இன்றிலிருந்து இணைய விடுமுறை.மீண்டு(ம்) சந்திப்போம்.வணக்கம்.

    ReplyDelete