Tuesday, July 24, 2018

வாராதோ வாரயிறுதிகள் ?!

நண்பர்களே,

வணக்கம். நித்தமும் ஒரு வாரயிறுதியாய் இருந்திடக் கூடாதா ? என்ற ஏக்கம் எழுகிறது ! அட...பெர்முடாக்களைப் போட்டுக் கொண்டு வீட்டில் ஹாயாகத் திரியவொரு முகாந்திரம் என்பதற்காகவோ ; ஒரு  full கட்டு கட்டி, தொந்தியை ரொப்பிக் கொண்டு ஏகாந்தமாய் ஏப்பம் விடும் மதிய நேரத்து ரம்யங்களுக்காகவோ இந்த ஏக்கப் பெருமூச்சல்ல ! மாறாய் - மக்கள் குஷாலாய் வெளியே outing  புறப்பட ஒரு தருணமாகவும், அந்த வேளையினில் ஒரு புத்தக விழா எதிர்ப்பட்டால் அவர்களது வாங்கும் ஆர்வங்கள் விஸ்வரூபமெடுப்பதும் -  வாரயிறுதிகளெனும் அந்த 2 நாட்களின் மகிமையால் எனும் காரணத்திற்காகவே வாரஇறுதிகளை காதலிக்கத் தோன்றுகிறது !! தற்போது கோவையில் நடந்து வரும் புத்தக விழாவின் கதையும் இந்த "வாரயிறுதி magic " சார்ந்ததே ! 

வெள்ளிக்கிழமை துவங்கிய விழாவின் முதல் நாள் சுமாரான விற்பனை தான் ; ஆனால் தொடர்ந்த அடுத்த 2 நாட்களும் அழகான அனுபவங்களே !! Of course - சென்னையின் ஒரு மிதமான விற்பனை நாளின் நம்பர்களுக்கு அருகே கூட, இதர நகரங்களின் peak sales நெருங்கிடாது தான் ; ஆனால் அமாவாசைகள் நித்தமும் வருவதில்லை அல்லவா ? சனி & ஞாயிறு இரு நாட்களுமே பரபர விற்பனை ! இரு தினங்களுமே ஆஜராகி, கடல்யாழ் விற்பனைக்கு ஆனதையெல்லாம் முயற்சிக்க, நமது கவிஞர் ஸ்டீலோ  - ஞாயிறுக்கு ஒரு பாலு மஹேந்திரா அவதாரெடுத்து ஒளி  ஓவியக் கலைஞராக உருமாறி, சும்மா மடக்கி மடக்கி போட்டோக்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்ததை 5000 மைல்களுக்கு அப்பாலிருந்தே வாட்சப்பின் புண்ணியத்தில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது !! அங்கே கோவையில் நிலவும் சூழலை நொடிக்கு நொடி எனக்கு update செய்து வந்தார் நம் மின்னல் மனிதர் !

ரம்யா ஸ்டாலில் செய்யும் ஒத்தாசைகள் பற்றாதென, அவரது தந்தையோ - தொலைவிலிருக்கும் வங்கியில் பணம் செலுத்தக் கிளம்பிய நமது அண்ணாச்சியை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று,வேலையை முடித்த கையோடு மறுபடியும் ஸ்டாலில்  கொணர்ந்து இறக்கி விட்டுள்ளார் ! இன்னொரு பக்கம் கவிஞரோ - சிவகாசியிலிருந்து அனுப்பப்பட்ட பண்டல்களை தன் பொறுப்பில் டெலிவரி எடுத்து வந்து ஸ்டாலில் ஒப்படைக்கிறார் - அதற்கான பணத்தைக் கூடப் பெற்றுக் கொள்ளாது !! And கோவையில் புத்தக விழா நடைபெறும் இடமானது ஊருக்கு வெளியே guys !! ஒவ்வொருமுறையும் நிறைய மெனெக்கெடாது நமக்கு உதவிடல் சாத்தியமே ஆகாது !! ஆனால் சகலத்தையும் தம் கடமைகளாய் பாவித்து நண்பர்கள் செய்திடும் உதவிகளுக்கு என்ன மாதிரியாய் நாம் நன்றி சொல்லப் போகிறோமோ - தெரியலை !! Thank you guys !!! Simply Awesome stuff !!

நேரம் கிட்டும் போது மேற்கொண்டும் போட்டோக்களை இங்கே பதிவிடுகிறேன் !! Bye for now !!

























174 comments:

  1. நாங்களும் அந்த வார இறுதிக்காக வெயிட்டிங் சார் _/|\_
    .

    ReplyDelete
  2. Good evening friends
    Now reach Tamilnadu Coimbatore

    ReplyDelete
  3. பாராட்டுகள் உரித்தாகுக !

    கடல்யாழ்& ஸ்டீல் ..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் இருவருக்கும்

    ReplyDelete
  5. அருமை

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    கவிஞர் ஸ்டீல் மற்றும்
    கடல் யாழ் அவர்களே _/|\_
    .

    ReplyDelete
  6. உதவி செய்யும் நண்பர்களுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  7. நண்பர்களின் காமிக்ஸ் பணி பெருமிதமளிக்கிறது! தொடர்ந்து பட்டையைக் கிளப்புங்கள் நண்பர்களே!!

    ReplyDelete
  8. // ஆனால் சகலத்தையும் தம் கடமைகளாய் பாவித்து நண்பர்கள் செய்திடும் உதவிகளுக்கு என்ன மாதிரியாய் நாம் நன்றி சொல்லப் போகிறோமோ - தெரியலை !! Thank you guys !!! Simply Awesome stuff !!//
    எல்லா புகழும் காமிக்ஸ்க்கே,நண்பர்களின் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  9. யார் வாங்கினாலும் விற்பனை ஆனால் சரிதான்! ஆனாலும் குழந்தைகள் கையில் காமிக்ஸ் புக்குகள் பார்ப்பது மிகவும் உவகையூட்டும் விஷயம்.

    ReplyDelete
  10. ஸ்டீலோ ஸ்டீலு.......
    யாழோ கடல் யாழு....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் கவிஞருக்கும்,கடலுக்கும்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் & பாராட்டுகள் டூ ஸ்டீல்&கடல்👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  13. கடல்
    உங்களது தந்தைக்கு எங்களின் நன்றியினை தெரிவித்துவிடுங்கள்.

    ReplyDelete
  14. கவிஞர் ஸ்டீல் க்ளா மற்றும் சகோ கடல்யாழ் ..வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழமைகளே ..!!

    ReplyDelete
  15. மனப்பூர்வமான வாழ்த்துகள் தோழமைகளே...:-)

    ReplyDelete
  16. நன்றிகள் நண்பர்களே, ,,,வாழ்வில் இதுவும் கடமைதானே,,,,

    ReplyDelete
  17. எடிட்டர் சார்
    அண்ணாச்சி அவர்களின் புகைப்படம் Please...

    ReplyDelete
  18. சார் எங்க ஆர்வங்களுக்கு நீங்க தீனி போடும் போது இதெல்லாம் சாதாரணம்,,,,,நீங்க ரோடு போடும் போது நான் கோடு போட்டத பெரிது படுத்த வேண்டாமே,,,நன்றிகள் அனைத்துக்கும் சார்,,,,

    ReplyDelete
  19. நாச அலைகள், C.I.D.லாரன்ஸ்!!!
    சூப்பர்.

    ReplyDelete
  20. // ஆனால் சகலத்தையும் தம் கடமைகளாய் பாவித்து நண்பர்கள் செய்திடும் உதவிகளுக்கு என்ன மாதிரியாய் நாம் நன்றி சொல்லப் போகிறோமோ - தெரியலை !! Thank you guys !!! Simply Awesome stuff !!//

    கைதட்டும் படங்கள் பல பல!! வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் தொண்டு நண்பர்களே!

    ReplyDelete
  21. // சனி & ஞாயிறு இரு நாட்களுமே பரபர விற்பனை ! //

    கேட்க சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  22. // ரம்யா ஸ்டாலில் செய்யும் ஒத்தாசைகள் பற்றாதென, அவரது தந்தையோ - தொலைவிலிருக்கும் வங்கியில் பணம் செலுத்தக் கிளம்பிய நமது அண்ணாச்சியை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று,வேலையை முடித்த கையோடு மறுபடியும் ஸ்டாலில் கொணர்ந்து இறக்கி விட்டுள்ளார் //

    இது தான் காமிக்ஸ் குடும்பம். நன்றி ரம்யா. உங்கள் தந்தைக்கும் நமது நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  23. ஸ்டீல்
    நீங்கள் குனிந்தபடி இருக்கும் படத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ளவர்தான் அண்ணாச்சி அவர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்.

      Delete
    2. ஆனால் அவர் குரலை மட்டும் கேட்டிருந்தால் மீசை வைத்த பெரிய்ய ஆம்பள மாதிரி தெரியும்

      Delete
  24. நன்றி ரம்யா & ஸ்டீல்..

    ReplyDelete
  25. தூள் கிளப்பியுள்ளீர்கள் ஸ்டீல் & கடல் தொடரட்டும் உங்கள் சேவை ரம்யா உங்கள் அப்பாவிற்க்கு ஸ்பெஷல் நன்றிகள்

    ReplyDelete
  26. ஒரு பொழுது போக்கு படலம்:-

    2018அட்டவணையை சும்மா உருட்டிக் கொண்டு இருந்த போது ஆசிரியர் சார் சொன்னது ஞாபகம் வந்தது. சொற்ப இதழ்களே இன்னும் பாக்கியுள்ளது என தெரிவித்து இருந்தார். அடக்கடவுளே மாசம் 4புக் படித்துவிட்டு , இன்னும் எத்தனிதான் மாசாமாசம் கிடைக்கும் என பார்க்கலாம்னு தோணியது.

    11புக்ஸ்களே சந்தாவில் பாக்கி என பலமுறை ஆசிரியர் சார் சொன்னது ஏற்கெனவே நமக்கு தெரியும்.

    கடந்த ஞாயிறு சாரின் அறிவிப்பு படி 11இதழ்கள் என்பது, 12ஆக உயர்ந்துட்டது. அந்த 12எவை என அட்டவணையை ஒரு 5நிமிடம் உருட்டியபோது தெரிந்தது...

    சந்தாA,

    1.மரணம் சொல்ல வந்தேன்-ஜானி
    2.களவும் கற்று மற-ட்ரெண்ட்

    சந்தாB,

    1.டைனமைட் ஸ்பெசல்-டெக்ஸ்வில்லர் 70ம் பிறந்தநாள் மலர்
    2.தீபாவளிமலர்2018-காதலும் கடந்து போகும்-டெக்ஸ்
    3.தெய்வம் நின்று கொல்லும்-ராபின்
    4.மாடஸ்தி ப்ளைஸி சாகசம்.
    5.சிங்கிள் ஷாட் டெக்ஸ் கதை.

    சந்தாC,

    1.யார் அந்த மிஸ்டர்X-க்ளிப்டன்
    2.கனவெல்லாம் கலீஃபா-மந்திரியார்
    3.பனிகள் பனிரெண்டு-பென்னி

    சந்தாD,

    1.லக்கி க்ளாசிக்-II
    2.சைத்தான் சாம்ராஜ்யம்-டெக்ஸ்.

    ஆகஸ்டில் இரத்தப்படலம் மட்டுமே என ஏற்கெனவே ஆசிரியர் சார் அறிவித்து உள்ளார். எனவே செப்டம்பர் டூ டிசம்பர் இந்த 12ம் மாதம் 3 இதழ்களாக வரும் போல. மாதம் 3வந்தாலும் ஆவரேஜ் 4ல் ஒன்று குறைவு. ஹூம் காமிக்ஸ் வறட்சியை எப்படியாவது சமாளித்து கொள்ள வேண்டியது தான், இரத்தப்படலம் & டைனமைட் படித்து அல்லது இருக்கவே இருக்கு ஜம்போஓஓஓஓஓ...!!!

    இப்ப நாமும் கணிப்பு திலகங்களாக மாறும் வேளை இது. எவை எவை எந்த மாதம் வரும்னு கணித்து பார்ப்போமா???
    சில இதழ்கள் எவ்வப்போது என ஆசிரியர் சார், அவ்வப்போது இங்கே அறிவித்து உள்ளார். தளத்தில் ரெகுலராக பார்வையை வீசும் நண்பர்களுக்கு அது தெரியும்.

    என் கணிப்பு....

    செப்டம்பர்,
    1.சைத்தான் சாம்ராஜ்யம்-டெக்ஸ்
    2.களவும் கற்று மற-ட்ரெண்ட்
    3.தெய்வம் நின்று கொல்லும்-ராபின்.

    அக்டோபர்,
    1.டைனமைட் ஸ்பெசல்-டெக்ஸ்
    2.பனிகள் பனிரண்டு-பென்னி
    3.மாடஸ்தி ப்ளைசி

    நவம்பர்,
    1.தீபாவளி மலர்-டெக்ஸ்
    2.மரணம் சொல்ல வந்தேன்-ஜானி
    3.கனவெல்லாம் கலீஃபா-மந்திரியார்.

    டிசம்பர்,
    1.லக்கி ஸ்பெசல்-II
    2.யார் அந்த மிஸ்டர்X?-க்ளிப்டன்
    3.டெக்ஸ் சிங்கிள் ஷாட் ஆல்பம்.

    குறிப்பு: ஆசிரியர் சாரின் வெளியீட்டிற்கு இணையாகவோ அல்லது மிக அருகேயோ கணிக்கும் நண்பருக்கு வழக்கம்போல செயலர் வழங்கும் டீ வித் பன்.

    ReplyDelete
    Replies
    1. லக்கியும் கிளிப்டனும் ஒரே மாதத்திலா??

      Delete
    2. ஜம்போல 2 காா்ட்டூன் இருக்கு தலைவரே!

      இரண்டுமே 2018லயே வந்துடும்னு நெனைக்கறேன்!!

      Delete
    3. மிதுனரே@ இது ரெகுலர் சந்தாவின் இதழ்கள் மட்டுமே. சூப்பர் 6, ஜம்போ போன்ற ஸ்பெசல்ஸ் இதில் வராது, அது தனி தடம்.

      Delete
    4. ///லக்கியும் கிளிப்டனும் ஒரே மாதத்திலா??///---இது என் கணிப்பு. தங்களது கணிப்பை மேலே உள்ள 12புக்ஸ்ம், 4மாதங்களில் பிரித்து போடுங்க.

      நண்பனுக்கு நாலு காலும்,
      சிக்பிக் க்ளாசிக்கும் ஒரே மாதம் தானே வந்தது...!!!

      Delete
    5. ///லக்கியும் கிளிப்டனும் ஒரே மாதத்திலா??///---👏👏👏

      அருமையான கேள்வி மிதுனரே. சரியான கணிப்பு. உங்கள் வினாவைப் பார்த்த பின்பான மினி தேடலில், ராபினின் வெளியீடு எண்426 என "தெய்வம் நின்று கொல்லும்"-அட்டையில் உள்ளது. எனவே அது கடேசியக டிசம்பரில் வரக்கூடும். இதையும்,க்ளிப்டனையும் இன்டர்சேஞ் செய்த என் திருத்தப்பட்ட பட்டியல்...,


      செப்டம்பர்,
      1.சைத்தான் சாம்ராஜ்யம்-டெக்ஸ்
      2.களவும் கற்று மற-ட்ரெண்ட்
      3.யார் அந்த மிஸ்டர்X?-க்ளிப்டன்

      அக்டோபர்,
      1.டைனமைட் ஸ்பெசல்-டெக்ஸ்
      2.பனிகள் பனிரண்டு-பென்னி
      3.மாடஸ்தி ப்ளைசி

      நவம்பர்,
      1.தீபாவளி மலர்-டெக்ஸ்
      2.மரணம் சொல்ல வந்தேன்-ஜானி
      3.கனவெல்லாம் கலீஃபா-மந்திரியார்.

      டிசம்பர்,
      1.லக்கி ஸ்பெசல்-II
      2.தெய்வம் நின்று கொல்லும்-ராபின்
      3.டெக்ஸ் சிங்கிள் ஷாட் ஆல்பம்.

      தங்களது கணிப்பு பட்டியலையும் எதிர் பார்க்கிறேன் மிதுனரே.

      என்னைப் போல பொழுது போகாத நண்பர்களும் முயற்சிக்கலாம்.

      Delete
    6. நான் ரொம்ப.. பிஸி!

      Delete
    7. நண்பரே டெக்ஸ் விஜய்,

      இ.ப.வுக்காக என்னை தயாா்படுத்திக் கொண்டிருக்கிறேன்!

      புக் வெளியிடுவதோடு ஆசிாியருக்கு வேளை முடிஞ்சுது!

      நமக்கு அப்படியா??!!

      படிக்கணும், மறுவாசிப்பு பண்ணணும், மறுக்கா மறு வாசிப்பு, மறு மறு வாசிப்புன்னு...

      இதுக்கெடையில பிளாக்ல கமாண்ட் போடணும்!! சிலநேரம் கத்தி கத்தி சண்டை போடணும்!

      கி.நா.படிச்சு நீா்துளிகளை வெளியேத்தணும்!

      காா்ட்டூன் படிச்சு கெக்க பெக்கனு சிாிக்கவும், கூடவே சிந்திக்கவும் செய்யணும்!

      புக் ஃபோ்ல வாங்கிய படிக்காத காமிக்ஸையெல்லாம் படிக்கணும்!

      இதுக்கெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் வேலைக்கு போகணும்! (வேலை நேரத்துலயும் சிலபல பக்கங்களை புரட்டணும்)

      இதையெல்லாம் முடிச்சுட்டுத்தான் இ.ப.க்கு வரணும்!

      புக்க வாங்கிய கையோட 4 நாள் லீவு போடணும்!

      பிளேன் பண்ணாம எதையும் செய்யப்படாது! இல்லையா??!!

      Delete
    8. ///புக் வெளியிடுவதோடு ஆசிாியருக்கு வேளை முடிஞ்சுது!

      நமக்கு அப்படியா??!!

      படிக்கணும், மறுவாசிப்பு பண்ணணும், மறுக்கா மறு வாசிப்பு, மறு மறு வாசிப்புன்னு...

      இதுக்கெடையில பிளாக்ல கமாண்ட் போடணும்!! சிலநேரம் கத்தி கத்தி சண்டை போடணும்!

      கி.நா.படிச்சு நீா்துளிகளை வெளியேத்தணும்!
      ////


      ஹா ஹா ஹா!! :)))))))

      Delete
    9. 4நாள் லீவாஆஆஆஆஆ...!!!-என்சாய்....

      ஒருமாசம் கத்தி கத்தி விவாதம் பண்ண போறீங்க. சூப்பர், நல்லா பொழுது போகும்.... வெயிட்டிங்.

      அண்டர்டேக்கர் 2பார்ட் க்கே ஒரு 10நாள் பிழிஞ்சி எடுத்தீங்க... இது 18பாகம் எத்தனை நாளோ???.

      ஸ்நாக்ஸ் கொறித்து கொண்டே வேடிக்கை பார்க்க ஐயாம் ரெடி...!!!

      Delete
  27. கவிஞர் ஸ்டீல் க்ளா மற்றும் சகோ கடல்யாழ் ..வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழமைகளே ..!!

    ReplyDelete
  28. நன்றி சகோதரர்களே :) :) :) :) :)

    ReplyDelete
  29. ஆசிரியரே, இதெல்லாம் பெரிதாக சொல்ல வேண்டியது இல்லை

    தாங்கள் ஆற்றும் காமிக்ஸ் பணிக்கு முன்னால் எல்லாம் சிறியது தான் சார்

    ReplyDelete
  30. நான் ரொம்ப.. பிஸி!

    கேப்டன் டைகாின் 23 வைரங்களோடு கடந்த நான்கு நாட்களாய் மறுவாசிப்பில் உறவாடிக் கோண்டிருக்கிறேன்!!

    டைகா் கதைகளில் கதை சொல்லும் பாங்கில் ஒரு தனித்த ஈா்ப்பு உள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியா நிஜம்!

    சான்ஸே இல்லை! நின்னா காமிக்ஸ், நடந்தா காமிக்ஸ், படுத்த காமிக்ஸ்னு நான் டைகரோடு வேறொரு லோகத்தில் வசித்து வருகிறேன்!

    படிக்கும் ஒவ்வொரு முறையும், சீட்டின் தலவு நுனிக்குச் செல்வது தவா்க்க இயலா அனிச்சையாகவே உள்ளது!

    மின்னும் மரணத்தை தவிர மீது அனைத்தையும் ஒரு ரவுண்டு விட்டாச்சு!

    இரண்டொரு நாளில் மின்னும் மரணமும் முடிச்சுருவேன்!!

    கடேசியா என் பெயா் டைகா்!!!

    ஆசிாியாின் ஆக்சன் ஹீரேக்கள் பற்றிய கேள்விக்கு இளம் டைகா் வேணுமானு பதில் சொல்லும் முன்பாக டைகா் தொடா் முழுவதையும் ஒருமுறை படிப்பது நலமென பட்டதன் பலனிது!

    சான்ஸே இல்லைங்க "டைகா்"னு பேரு இருந்தாலே அது வேணும் என்பதே என் பதில்!!

    ReplyDelete
    Replies
    1. இடைவேளை நல்லது!
      லீவும் நல்லது!!

      புது காமிக்ஸ் இல்லா இடைவேளையும் நல்லது!

      வேலை மந்தமான லீவும் நல்லது!!

      Delete
    2. இளம் டைகர் வேணுமா என்ற கேள்விக்கு விடை பகிறும் முன் இளம் டைகர் கதைகளை மீண்டும் படித்து விடுங்கள். அப்போது தான் தெளிவாக (?????)விடையளிக்கலாம்.

      உங்களுக்காக டைகர் & இளம் டைகரின் பட்டியல், இதை பார்க்கும்போதே தலைசுத்துனா கம்பெனி பொறுப்பல்ல...

      Delete
    3. அட்லாண்டா ஆக்ரோசம் படிச்ச கையோடதான் இப்பதிவை போட்டேன்!

      இளம் டைகரும் நல்லதானே இருக்கு!

      Delete
    4. அப்புறம் எனக்கு 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த டைகா் கதைகள் பிட்டுபிட்டாக வந்ததினாலோ, என்னவோ எனக்கு சாிவர ஞாபகம் இல்லை!

      இதேநிலை தான் XIII யிலும்!!

      வண்ணத்தில் ஒரே தடவையில் படிக்க ஆவலோடு இருக்கிறேன்!!

      Delete
    5. // XIII யிலும்!!

      வண்ணத்தில் ஒரே தடவையில் படிக்க ஆவலோடு இருக்கிறேன் //

      Me too

      இதே நிலை தான் ஆரம்பத்தில் வந்த டைகர் கதைகள். பின்னர் ஒரே தொகுப்பாக வந்த பின்னர் மின்னும் மரணம் மற்றும் இரத்தக் கோட்டை எனக்கு மிகவும் பிடித்தது இருந்தது.

      Delete
    6. சில பல ஆண்டுகள் காத்திருந்து வரவே வராதோ என நினைக்கையில் அடுத்த பாகம் வரும். அப்படி படித்ததும் ஒரு சுவைதான்.

      இப்போது ஒரே சமயத்தில் படிக்கும் நண்பர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.

      முக்கியமாக மின்னும் மரணம் & இரத்தப்படலம் கலரில் ஒரே சமயத்தில் படிப்பது மிகச்சிறந்த என்சாய்மெண்ட் ஆகத் தான் இருக்கும். முதல் முறை இரத்தப்படலம் படிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

      Delete
  31. ஹலோ எடிட்டர் சார், நான் பெங்களூரில் இருந்து கோவை வந்து, நான் எடுத்து வைக்க சொல்லி இருந்த ஜூன் மற்றும் ஜூலை புத்தகங்களை ( 7 புத்தகங்கள் )பாரதிராஜா புக் ஸ்டோரில் இருந்து வாங்கி கொண்டு நேராக கோடிசியாவிற்கு வந்து சேர்ந்தேன்.

    உள்ளே வர அப்பொழுது தான் எல்லா கடைகளிலும் பூக்குகளை அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். நான் முதல் கடையில் இருந்து எல்லா கடைகளையும் ஒன்று ஒன்றாக வந்து 123 வந்து சேர்ந்தேன்.

    "வெள்ளிக்கிழமை துவங்கிய விழாவின் முதல் நாள் சுமாரான விற்பனை தான்" என்று சொன்னீர்கள்.

    அந்த சுமாரான விற்பனைக்கு வலிமை சேர்த்தவன் என்ற முறையில் எனக்கு சந்தோஷம். அதுவும் இல்லாமல் நான் தான் முதல் ஆளாக இருந்திருக்க கூடும்.
    இந்த முறை இதுவரை என்னிடம் இல்லாத புத்தகங்களை எல்லாம் அள்ளி கொண்டு வந்து விட்டேன்

    1 முத்து மினி - 6
    2 தேவ ரகசியம் தேடலுக்கல்ல
    3 விடுதலையே உன் விலை என்ன
    4 ஒரு சிப்பாயின் சுவடுகளில்
    5 லயன் ஆல் நியூ ஸ்பெஷல்
    6 ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்
    7 மனதில் மிருகம் வேண்டும்

    மொத்தத்தில் சிறிது பெரிது மெகா என 19 புத்தகங்கள் அள்ளி கொண்டு வந்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் பிரபு. சந்தோஷம். நீங்கள் பெங்களூரா? எந்த ஏரியா?

      Delete
    2. /அந்த சுமாரான விற்பனைக்கு வலிமை சேர்த்தவன் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்/
      Me too

      Delete
  32. போன வாரம் நடந்த உள்ளே வெளியே அலசலின் என் கருத்துக்கள்.

    உள்ளே
    -----------
    தோர்கல்
    டுரங்கோ
    ரிப்போர்ட்டர் ஜானி - ௧ ஓல்ட் + ௧ நியூ
    ஷெல்டன்
    லேடி ஸ்
    மாடஸ்டி - மொக்கையா இருந்தாலும் வாங்குவேன்
    யங் டைகர்
    ரோஜர் - மர்ம கத்தி நன்றாக இருந்தது. நல்ல கதை மட்டும்


    வெளியே
    --------------
    கமான்சே
    ஜில் ஜோர்டன்
    ஜெரோம்

    ReplyDelete
  33. டைகர் கதைகள்:-

    லெப்டினன்ட் ப்ளூபெர்ரி (தமிழில்: கேப்டன் டைகர்) கதை தொடர்கள் 1963ல்
    முதன் முறையாக
    வெளியிடப்பட்டன. இதில்
    இதுவரை 28கதைகள் இடம்பெற்று
    உள்ளன.இவை அனைத்தும்
    தமிழில் வந்துவிட்டன.

    1,2,3,4&5=இரத்தக்கோட்டை-5பாக
    கதை(ஒற்றை ஒற்றை பாகங்களில் கறுப்பு வெள்ளையில் முத்து காமிக்ஸ்ல போடப்பட்டு, ஆகஸ்ட் 2017ல் ஈரோடு விழாவில் ஒரே இதழாக வண்ண மறுபதிப்பாக வெளியிடப்பட்டது)

    6.தோட்டா தலைநகரம்-சிங்கிள்
    சாட்- வண்ண மறுபதிப்பு-2018மார்ச்.

    7,8,9&10=இரும்புக்கை
    எத்தன்-4பாக கதை.(முத்து 250ல் ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கி, வண்ணத்தில் 2013 மே மாதம் க்ளைமாக்ஸ் பாகங்கள் போடப்பட்டன.)

    11&12=தங்க கல்லறை-இருபாக
    கதை(2012நவம்பரில் வண்ணமறுபதிப்பு)- என்னைப் பொறுத்து நெ1.ஆஃப் டைகர்.

    13to23=மின்னும் மரணம்-11பாக
    கதை- தி கிரேட் ஸ்டோரி ஆர்க் ஆஃப் டைகர். முத்துவில், லயனில் என ஆங்காங்கே போடப்பட்டு, 2015ஏப்ரலில் பிரமாண்டமான வண்ண மறுபதிப்பாக வெளியானது.

    24,25,26,27&28=என் பெயர்
    டைகர்-5பாக கதை-கி.நா. பாணியில் இருந்தாலும் கூட வசீகரிக்க ஏதோ உள்ளது.

    இத்தொடர் பெரிய வெற்றி
    பெற்றதை அடுத்து டைகரின்
    இளவயது நடப்புகளை கொண்ட
    யங்டைகர் சீரியஸ் 1989ல்
    வெளியிடப்பட்டது. அதில்
    இதுவரை 21கதைகள் வந்துள்ளன.
    தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக
    கதைகளாக வெளிவந்துள்ளன.
    இன்னமும் 12பாக்கியுள்ளன.

    இளம்டைகர்...
    1,2&3=இளமையில் கொல்-3பாக
    கதையாக லயன் மெகா ட்ரீம் ஸ்பெசலில் வெளியானது.(அடுத்த வண்ண மறுபதிப்பு இதுவாகத்தான் இருக்கும்)

    4.மரணநகரம் மிசெளரி(வைல்டு
    வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)
    5.கான்சாஸ் கொடூரன்
    (முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்)

    6.இருளில் ஒரு
    இரும்புக்குதிரை(முத்து NBS
    jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)
    7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
    2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)

    8.அட்லான்டா ஆக்ரோசம்
    9.உதிரத்தின்விலை...8&9-ஒரே
    இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக
    சாகசம்.

    அடுத்த 12பாகங்கள் கொண்ட இளம் டைகருக்காக ஆவலுடன் வெயிட்டிங். 4பாகங்கள் கொண்ட 3இதழ் அல்லது 6பாகங்கள் கொண்ட 2இதழ் என கதைகளின் முடிவுக்கு ஏற்ப வெளியிட்டால் நலம்.

    அதிலும் சமீபத்திய ஆங்கிலத்தில் வந்த 20ம் பாகமான கேட்டீஸ்பர்க் பார்த்தேன். அட டா ஸ்டன்னிங் ஓவியங்கள். டியூராங்கோவில் உள்ளது போன்ற கலரிங் நேர்த்தி. எப்போ வருமோஓஓஓஓஓ லயனில்.....!!!!

    டைகரின் முன்கதை கொண்டு
    இளம்டைகர் உருவாக்கப்பட்டது
    போல பின்கதைக்கு ஏதும்
    உண்டா என்றால் அதற்கும் "ஆம்"
    என்பதே பதில். சீக்வலாக மார்சல்
    டைகர் என்ற 3பாக டைகர்
    சாகசமும் வந்துள்ளது.

    தமிழில்...2014ஆகஸ்டில் லயன்
    மேக்னம் ஸ்பெசலில் வந்த முதல்
    பாகம்+2015மார்ச்சில் வந்த "
    வேங்கைக்கு முடிவுரையா" ல்
    இரண்டு பாகம் என 3ம்
    வந்துவிட்டன.
    அவ்வப்போது இங்கே கொஞ்சம்
    அங்கே கொஞ்சம் னு கொத்து
    புரோட்டா போட்டதால் இந்த
    கன்பியூசன்.

    குறிப்பு: "அபாச்சே"----என் பெயர் டைகரில் வந்த ஜெரோனிமோ பற்றியும் அபாச்சேக்கள் பற்றியும் ஹைலைட் ஆக என் பெயர் டைகரில் இருந்து சில பக்கங்களை எடுத்து ஒரு இதழாக உருவாக்கியுள்ளனர். டைகரின் தாயகமான ப்ரென்சில் இது பாகம் "0" வாகவும், மற்ற நாடுகளில் பாகம் 29ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
  34. எப்படி டெக்ஸ் இப்படி!
    மலைக்க வைக்கிறது உங்களின் பதிவு!
    டெக்ஸ் பற்றிதான் எழுதுவீர்கள் என நினைத்தால் டைகர் பற்றியும் அலசுகிறீர்கள்!
    நிச்சயம் அனைவருக்கும் உபயோகமான தகவல்கள்தான்.
    வாழ்த்துகள். தொடருங்கள்...தொடர்கிறோம்...!!

    ReplyDelete
    Replies
    1. தேங்யூ சார்.
      உங்களை போன்ற சீனியர் நண்பர்களின் அன்பும் ஆசிர்வாதமும் இருந்தால் போதும்.

      காமிக்ஸ் எனும் இனிப்பு குவியல் முன்னே ஓடியாடும் குழந்தை நானுமே. டெக்ஸ், டைகர் என்பதெலாம் அந்தந்த நேரத்து டைம் பாஸ் மட்டுமே. காமிக்ஸ் என்பதே நமது உயிர்மூச்சு,எப்போதும்.

      Delete
    2. //காமிக்ஸ் என்பதே நமது உயிர்மூச்சு,எப்போதும்.//
      சத்தியமான வார்த்தை.
      👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
  35. கோவையில் புக் கலெக்ஷன் முன்று மடங்காக விற்பனை ஆக என் வாழ்த்துக்கள்.

    ஐ.வி.சுந்தரவரதன்
    சின்ன காஞ்சிபுரம்
    செல் : 7667291648.

    ReplyDelete
  36. உங்களது வாழ்த்து பலிக்கட்டும் சார்.
    ஆசிரியரின் கிட்டங்கியை விட்டு வெளியேற மறுத்து பிடிவாதமாய் இருந்துவரும் புத்தகங்கள் புதுப்புது வாசகர்களின் இல்லங்களை நோக்கி படையெடுப்பை மேற்கொண்டால் நல்லதுதானே.

    ReplyDelete
  37. Happy to hear about sales sir. The new visitors must be the happiest! ...what a surprise it would be to see a stall full of Tamil comics ....!

    ReplyDelete
  38. ஈரோடு புத்தக விழா சந்திப்புக்கு இந்தமுறையும் நீங்கள்
    வராவிட்டால் நாங்கள் பதுங்குகுழியில் இருந்து கொண்டே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரித்த சேந்தப்பட்டி குழுவின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஈரோட்டுக்கு டிக்கெட் போட்டுவிட்டேன்.!

    அப்டேட்: மேலே சொன்னது நிசத்தில் நடக்கவில்லை. ஒருவேளை கனவாக இருக்குமோ? :-))

    இரத்தப்படலம் வெளியாகவிருக்கும் ஒரு தமிழ் காமிக்ஸ் ஹிஸ்டாரிகல் நிகழ்வை மிஸ் செய்யக்கூடாது எனும் எண்ணத்தில் டிக்கெட் போட்டுவிட்டேன்.

    அதோடு சென்னை மற்றும் பிற நிகழ்வுகளில் நண்பர்களை சந்தித்திருந்தாலும், புகழ்பெற்ற ஈரோடு சந்திப்புக்கு இதுவரை வந்ததில்லை எனும் களங்கத்தையும் போக்கிக்கொள்ளலாம்.

    முன்பே கேட்டதாக ஞாபகம். சந்திப்பு நடக்கும் ஹாலில் நமது பழைய ஐகானிக் இதழ்களை நம் அலுவலகம் சார்பில், மூத்த சேகரிப்பாளர்கள் சார்பிலோ கண்காட்சிக்கு வைக்க இயலுமா? ஆவன செய்யுங்கள். நன்றியும், அன்பும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார். நமஸ்காரம்.

      Delete
  39. ///. சந்திப்பு நடக்கும் ஹாலில் நமது பழைய ஐகானிக் இதழ்களை நம் அலுவலகம் சார்பில், மூத்த சேகரிப்பாளர்கள் சார்பிலோ கண்காட்சிக்கு வைக்க இயலுமா?///

    ஓஹோ ...உம்ம ப்ளான் புரியுது ..!!

    ஆனா கதவு ஜன்னல் எல்லாத்தையும் மூடி வெச்சிருப்பாங்களே ஆதி.!?

    ReplyDelete
  40. வாசகர் சந்திப்பின் வசீகர புன்னகை-"ஈரோடு புத்தகவிழா":-

    *2018ன் ஈரோடு புத்தகக் காட்சியில் வாசகர் சந்திப்பின் அழைப்பு ஆசிரியர் சாரால் முறையாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதை பார்க்கையில் குதூகலிக்கும் மனதிற்கு கடிவாளம்தான் ஏது?. குதூகலிக்கும் மனசு இறக்கை கட்டிய குதிரையில் பறந்து முதல் சந்திப்பான 2013திருவிழாவில் சஞ்சரிக்கிறது.

    *2013விழாவுக்கு நான் போய் சேர்ந்ததே ஒரு இனிய கனவுதான்.

    *1990களில் காமிக்ஸ் எனும் பூஞ்சோலையில் இளைப்பாறும் பேறு எப்படியோ எனக்கும் கிட்டியது. சீனியர் நண்பர்கள் நிறைந்த அந்த சோலை இந்த எளியோனையும் ஏந்திக் கொண்டது.

    *20ஆண்டுகள் எல்லாவித காமிக்ஸ் சுவையையும் நுகர்ந்து இன்புற்ற வேளையில், 2009ல் சோலை தற்காலிகமாக நறுமனம் வீசுவதை நிறுத்திக் கொண்டது. கலங்கிப்போனது பலநூறு உள்ளங்கள்.

    *ஆசிரியர் சாரின் அருமுயற்சியும், கடற்கரை தலைநகர நண்பர்களின் ஒத்துழைப்பும் மீண்டும் சோலைக்கு உயிர்ப்பூட்டியது. "கம்பேக்" எனும் மறுமலர்ச்சி மலர் கண்டு தேனுண்ட வண்டாக ஆனந்தக் களிப்பில் கூத்தாடியது நண்பர்கள் மனம்.

    *இந்த இரண்டாம் பயணத்திலும் இணையும் வாய்ப்பு வாகாக எனக்கும் வாய்த்தது காமிக்ஸ் க்ளாசிக்கில் கண்ட விளம்பரம் வாயிலாக.

    *22ஆண்டுகள் ஹாட்லைனில் மாத்திரமே அறிந்த ஆசிரியர் சாரை பெங்களூரு காமிக்கானில் சந்தித்து திரும்பி இருந்த காலம் அது. லயன் நியூலுக் ஸ்பெசலில் வெளியாகியிருந்த ஈரோடு வாசகநண்பர் திரு புனிதசாத்தான் அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டேன்.

    *ஈரோட்டு விழாவில் நாமும் கால்பதிக்க காரணமான மூத்த வாசகநண்பர் திரு ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தில் இந்த இருவரோடு, மற்றொரு வாசகநண்பர் திரு ஆடிட்டர்ராஜாவும் உரையாடிக் கொண்டு இருந்த நேரம் தான் நான் அழைத்த நேரம். தொடர்ந்த அறிமுகங்கள் மற்றும் சுவாரசியமான பேச்சுக்கள் புதிய வாய்ப்புகளை வழங்கியது.

    *தொடர்ந்து ஈரோட்டில் 2012நவம்பரில் நடந்த ஒரு மினி சந்திப்பில் தளத்தின் நகைச்சுவை நாயகர் ஈரோடு விஜய் & போ.கு.தலைவரையும் சந்திக்க முடிந்தது. அப்போது, 3 மாதங்கள் முன் நடந்து முடிந்த 2012 ஈரோடு புத்தகவிழாவில் எப்படி லயன் வெளியீடுகளை விற்பனை செய்தார்கள் என விவரித்தார்கள்.

    *2013ல் நிச்சயமாக தனித்த ஸ்டால் பிடித்து விடுவோம் என தெரிவித்து இருந்தார்கள். சொன்னதுபோல செய்தும் காட்டினார்கள். அந்த நாளும் வந்தது.....

    குறிப்பு: இந்த நினைவு படுத்தல் முயற்சி ஒரு சாதாரண வாசகனின்(நானேதான்) பார்வையில் பதிவு செய்யப்படுவது மட்டுமே. ஆசிரியர் சாரின் அருகில் இருந்து பார்த்தமையால் ஓரளவு வாசகநண்பர்களின் பெயர்களை குறிப்பிட முடிகிறது. எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, குழுவையோ குறிப்பிடுவது நோக்கம் அல்ல.

    ReplyDelete
  41. ஒரு குட்டி டவுட் எனக்கு : "போ.கு" தலீவர் என்றால் - "போடு குப்பையிலே " தலீவர் என்பதன் சுருக்கம் இல்லை தானே ?

    ReplyDelete
    Replies
    1. போடு குல்லா....

      Delete
    2. போராட்டக் குழு அல்லது பதுங்கு குழி என இரண்டு பொருள் உள்ளன...!!!

      Delete
    3. சொல்லிட்டீங்கள...இனிமே போட்றுவாங்க சார்...:-(

      Delete
    4. ஜே சார்...மனதிற்கு பிடித்தவர்களுக்கும்..,நல்ல மனிதர்களுக்கும் நான் குல்லா போடுவதீல் தயக்கமே காட்ட மாட்டேன்.உண்மையை சொன்னா நூறு சதவீதம் எனக்கு அதில் பெருமையே ...:-)

      Delete
    5. தலீவர்
      ஈரோட்ல அஜெண்டா பத்தி சொல்லுங்க....

      ஏதாச்சும் அதிரடி உண்டா...

      Delete
    6. பிரியாணி அண்டா ஈஸ் த சோல் அஜெண்டா...!!!

      Delete
    7. அடல்ட்ஸ் ஒன்லி பிரியாணியா

      Delete
  42. சேலம் டூ ஈரோடு2013.....தொடருது...

    *2013ஈரோடு விழா நெருங்கி விட்டது ஆசிரியர் 2வது ஞாயிறு வருகிறார் , நீங்கள் முதல் ஞாயிறும் வர வேணும் என்ற வாசகநண்பர் ஸ்டாலின் சாரின் அன்பான அழைப்புக்கு ஏற்ப, நான் என் மனைவி மற்றும் மகனுடன் முதல் ஞாயிறு அன்று சென்று இருந்தேன் .

    *காலை 10.30க்கு ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள பிருந்தாவன் ஓட்டலில் காலை டிபன் இட்லியும் மசால் தோசையும் சாப்பிட்டு விட்டு, ஸ்டாலின் சாருக்கு போன் அடித்தேன். பிருந்தாவன் ஓட்டல் வாசலில் உள்ளேன் என சொல்ல அவர், "அப்படியே லெஃப்ட்ல பாருங்கள் 100மீட்டர் தூரத்தில் ஈரோடு புத்தக விழா நுழைவாயில் உங்களை வரவேற்கும்" என்றார்.

    *சேலத்தில் புத்தக விழா என்றால் ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும், ஒரு 50கடைகள் அதிலும் அதிகம் கோலப்புத்தகமும் ஜோசிய புத்தகமும் குவிந்து கிடக்கும். இங்கே மட்டும் என்ன பெருசா இருக்க போவுது ??? என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தேன். ஒரு கணம் நான் தலை சுற்றிப் போனேன். அடேயப்பா .....200கடைகளுக்கு மேல் இரு பிரதான வரிசைகளில் ஒரு அரைக்கிலோமீட்டருக்கு.... நேர்த்தியான ஒழுங்குடன் அணிவகுத்து என்னைப் பார்த்து மெளனப் புன்னகை பூத்தன. இது உண்மையிலேயே புத்தக கடல் என்ற ஆச்சரியத்துடன் நமது ஸ்டாலை தட்டுத்தடுமாறி அடைந்தேன்.

    *முதலில் என்னை வரவேற்றது வாசகநண்பர் திருப்பூர் ப்ளூபெர்ரி தான் ....அவருடன் நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். பிறகு புனிதசாத்தான் சார், ஆடிட்டர் ராஜா சார் மற்றும் நிறைய நண்பர்கள் ஒவ்வொருவராக சேரத்துடங்கினர். பிறகு ஈரோடு விஜய் , ஒரு மணிநேரம் கழித்து தனது மகன் மனோஜ் உடன் ஸ்டாலின் சார் ஒரு வழியாக வந்த சேர்ந்தார். 5ம் வகுப்பு படித்து வந்த என் பையனும், அதே ஸ்டாண்டர்ட் படித்து வந்த மனோஜும் உடனடியாக செட்டு சேர்ந்து கொண்டனர். இரு பொடியன்களையும் என் வீட்டுக்காரியையும் சுற்றி பார்க்க அனுப்பி விட்டு, நாங்கள் அரட்டை கச்சேரியை தொடர்ந்தோம்.

    *2012ல் இறுதி நொடியில் நமக்கு எப்படி ஸ்டால் கிடைக்காமல் போனது, இந்த ஆண்டு அப்படி நடக்காமல், தனிஸ்டால் கிடைக்க நண்பர் ஸ்டாலின் சார் செய்த பகீரத முயற்சிகள், வெள்ளிக்கிழமை தொடக்கம் முதலே கிடைத்து வந்த வரவேற்பு மற்றும் விற்பனை, நண்பர்களின் உற்சாக பங்கெடுப்பு மற்றும் ஒத்துழைப்பு என பலவும் பேச, நேரம் ஓடியதே தெரியவில்லை. 3மணிக்கு சரி சாப்பிட போலாம் என பொடுசுகளை தேடி போனேன். பசங்கல எப்ப சார் வீட்டுக்கு கூட்டி போவீர்கள் என்று ஒரு கடைக்காரர் கேட்டேவிட்டார். இருவரும் போட்ட ஆட்டம் அப்படி போலும், அவர்கள் புகுந்து புரட்டாத ஒரு கடையும் இல்லை எனத் தெரிந்து கொண்டேன்.

    *மாலை 5மணி வரை அனைத்து ஸ்டால்களையும் சுற்றி வந்த என் வீட்டுக்காரி சொன்னது, "என்னங்க நம்ம- காமிக்ஸ் ஸ்டாலில் மட்டும் தாங்க கூட்டம் அதிகம், எல்லாரும் வாங்கிட்டும் போறாங்க. மத்த கடைகளில் கூட்டம் போகுது ஆனால் எதாவது ஒரு கடையில் தான் விற்குது". ஈரோடு விழாவில் காமிக்ஸ்க்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறது எனபுரிந்த கணம் அதுவே.

    *வாசகநண்பர் ஸ்டாலின் சார் வீட்டிற்கும் ஒரு மினி விசிட் அடித்து விட்டு சேலம் வந்தோம். நான் கிளம்பி வந்த பிறகு நிறைய நண்பர்கள் வந்துள்ளனர் என ஸ்டாலின் அவர்களின் ப்ளாக் மூலம் அறிந்து கொண்டேன். அடுத்த ஞாயிறு ஆசிரியர் வரும் நாள் காலையில் சீக்கிரம் வந்து விடுங்கள் என்ற ஸ்டாலின் சாரின் அழைப்பு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த ஞாயிறும் வந்தது.

    *இந்த சமயத்தில் இந்த லயனின் 2வது இன்னிங்ஸில் வாசகநண்பர் கர்ணன் மற்றும் ஓரிருவர் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்த காலம் அது, அவருக்கு ஏதோ முக்கிய வேலை ஞாயிறு காலை இருந்ததால் மதியம் வந்து விடுகிறேன் என்றார், நான் மட்டும் காலை 8க்கு கிளம்பினேன். இம்முறையும் அதே ஓட்டல், மசால்தோசையும், பேப்பர் ஆணியனும் உள்ளே தள்ளிட்டு ஒரு மினி காபியையும் குடித்துவைத்தேன்.

    *அன்பின் ஆசிரியர் சாரையும், அனேக நண்பர்களையும் சந்திக்கும் ஆர்வத்தில் புத்தக காட்சி நுழைவாயில் செல்லும் முன்னே திடீரென "டெக்ஸ் விஜய்ய்ய்...." என்ற குரல் என் கவனத்தை திருப்பியது. யார்னு பார்த்தால் தலீவர் பரணீதரன் , தன் குட்டி மகன் நரேந்திரன் உடன் மரத்தடியில் இருந்தவர் வரவேற்றார். ஆர்வ மிகுதியால் 10.15க்கே வந்து விட்டதாகவும் இன்னும் அரை மணி நேரம் உள்ளது நம்மை அனுமதிக்க என்றார்....

    ReplyDelete
  43. முதல் முறையாக ஈரோடு புத்தக விழாவிற்கு வருகிறேன். கூடவே நண்பர் சிவகுமார் (தலைமை ஆசிரியர்) மற்றும் ராஜேஷ் (சப் இன்ஸ்பெக்டர்) வருவதாக சொல்லி இருக்கிறார்கள். Waiting.

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.கூடவே நானும்.

      Delete
    2. போராட்ட குழு தங்களை அன்புடன் வரவேற்கிறது...:-)

      Delete
    3. தி.வி'யை அன்புடன் வரவேற்பது ஈ.வி!

      Delete
    4. சேலம் விஜய்!
      ஈரோடு விஜய்!!
      திருச்சி விஜய்!!!

      வாவ்!

      இன்னும் எத்தனை ஊா் விஜய்லாம் இருக்காங்களோ தொியலயே!!

      Delete
    5. மிதுனரே@

      எல்லா ஹீரோவையும் தமிழ்பேச வைத்த நிஜ ஹீரோ, நம் சார்,

      "சிவகாசி விஜய்!!!!"----அல்லவா!

      Delete
    6. திருச்சி விஜய் @ super! வருக வருக!

      Delete
  44. இரத்தப்படலம்
    ஓர் அலசல்.

    தலையில் குண்டடிபட்ட நிலையில் கடற்கரை ஒதுங்குகிறான் ஒரு பேரிழைஞன்.

    ஆசியப் போரில் தனது இளம் மகனை பறிகொடுத்து புத்திர சோகத்தில் தனித்து வாழும் ஆபோ - ஷாலி வயதான தம்பதியினர் அவனைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கின்றனர்.
    ( போலீஸில் சொல்லிவிட்டு கடமை முடிந்தது என்று கை கழுவிடாமல்).😢😢😢😢😢😢😢😢😢

    ReplyDelete
    Replies
    1. மருத்துவத்தொழில் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்ட குடிகாரியான பெண் டாக்டர் ஒருவரை அழைக்கின்றனர்.ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டு டாக்டரும் ஈடுபாட்டுடன் தலையிலிருந்த துப்பாக்கி குண்டை அறுவை சிகிச்சை ( குறைந்தபட்ச உபகரணங்களைக் கொண்டு) மூலம் நீக்குகிறார்.திடகாத்திர கட்டு மஸ்தான உடற்கூறு கொண்ட கதா நாயகன் பிழைத்து எழுகிறான்.

      கதையும் எழுகின்றது.

      Delete
    2. அசாதாரண கதைக்களம்.
      அழகிய காமிக்ஸ் படங்கள்.
      அபூர்வ கதைக்கோர்ப்பு.

      ஒரு வகையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி JK KENNEDY யின் பயங்கர கொலைப்பின்னணியைக் கொண்டு கதை நகர ஆரம்பிக்கின்றது.

      பிழைத்தெழுந்த இளைஞனுக்கு ஒன்றுமே ஞாபகத்தில் இல்லை.அவனது முகமே அவனுக்கு அந்நியப்பட்டு போனதால் வெறுமையை உணர்கிறான்.பெயர் ஊர் நண்பர்கள் (மனைவி குழந்தைகள் ) எல்லாமே பூஜ்யம்.

      Delete
    3. J சார். EBF ல் உங்களுடன் செல்ஃபி எடுக்க உறுதி பூண்டுள்ளேன்.

      Delete
    4. சைவ சித்தாந்தத்தில் ஒரு வழக்கு உண்டு.ஒவ்வொன்றாக இல்லை என்று சொல்லிக்கொண்டு செல்வது.
      அதாவது....
      இப்பொழுது உங்களை நீங்களே மையப்படுத்திக் கொள்ள வேண்டியது.
      உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள்.
      உங்கள் வீடு இல்லை.
      அடுத்து உங்கள் தெருவே இல்லை.

      உங்கள் ஊர் இல்லை.

      தமிழ்நாடே இல்லை...
      இந்தியாவே இல்லை.

      அடுத்தது இந்த பூமியே இல்லை.

      வானில் நவ கோள்கள் இல்லை.

      கதிரும் இல்லை ..

      நட்சத்திரங்கள் இல்லை...

      ஏதும் இல்லை.

      இருள் ஒளியற்ற பாழ் வெளியா.

      அதை எப்படி யூகிக்க முடியும்...
      ஒன்றுமில்லாத ஒன்றை கற்பித்து கற்பனை செய்திட யாரிருப்பர்.

      இந்த அண்டம் என்பதை ,ஒன்றுமில்லாத ஒன்றை ........பிண்டம் என்ற நம் உடலிலும் உணர்ந்து காண்பதே யோகம்.

      பாழும் வெளி நம் உடலில் பாலாழி கடந்த முகுளம் கடந்த சிறுமூளை கடந்த பீனியல் சுரப்பி கடந்த சின்னஞ்சிறு அந்தம்.
      அதை கடந்தால் அரூபம் மட்டுமே...



      போதும் இந்த சப்ஜெக்ட்.

      இப்பொழுது உங்களுக்கு ஒன்று புரிந்திருக்க வேண்டும்.

      இல்லாத ஒன்றிலிருந்தே எல்லாமே ஆரம்பம்.....

      இது வரைச் சொல்லியதை - இதிலிருந்து முன்னோக்கி ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே சென்றால் மட்டுமே இறுதியில் நான் என்பதில் வந்து முடிவதை உணரலாம்.


      இதற்கு அசாதாரணமான முயற்சித் தேவைப்படும்...


      நம் கதாநாயகன் XIII ம் இந்த வகையே.

      ஒன்றுமே இல்லை.
      பேர் ஊர் உற்றார் உறவினர் ஒன்றுமே இல்லை. தெரிய வில்லை.
      நான் யார் என்று இளம் ரமண மகரிஷி கேட்டுக்கொண்டதைப் போல ஆரம்பிக்கிறார்.தன்னைப்பற்றிய புதிரை விடுவிக்கப் புறப்படுகிறார்.


      ஏன் அவருக்கு இந்த நிலைமை. தலையில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டு விட்டாலும் மூளைக்குள் ஏற்பட்ட காயம் இரத்தம் படர்ந்ததால் - "இரத்தப் படலம் "உண்டாகிறது.

      Delete
    5. G P சார் கண்டிப்பாக.....

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. ///கட்டு மஸ்தான உடற்கூறு கொண்ட கதா நாயகன் பிழைத்து எழுகிறான்.

      கதையும் எழுகின்றது.///

      எழுத்தாளர்களுக்கே உரிய திறமை!!

      செம!!!

      Delete
    8. J ji@ 18பாகம் இருக்கே... இந்த வேகத்தில் போனா 2019விழாவே வந்துடுமே. கொஞ்சம் வெரசா போங்க...

      Delete

    9. ஆபோவும் ஷாலியும் இறந்துபட்ட தன் மகன் ஆலன் ( XIII ன் முதல் நாமகரணம் )பெயர் சொல்லியே பாசத்தை பொழிகிறார்கள்.
      வியட்நாம் போரில் ஒரு வயர்லெஸ் வாக்கி டாக்கியை கைப்பற்ற சென்று அநியாயமாக இறந்து விடுவார். அதற்கு ராணுவ வீரப்பதக்கம் அளிக்கபட்டாலும் ஆலனுக்கு ஈடாகுமா.


      மார்த்தா என்ற அந்த டாக்டர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிரத்தையுடன் XIII க்கு சிகிச்சை அளித்து அவனை இயல்புக்கு கொண்டு வருகிறார்.அவனது வசீசரமும் எஃகு போன்ற உடலமைப்பும் மார்த்தாவை கவர்கின்றன.
      பொதுவாக தான் விரும்பும் ஆண்மகனுக்காக பெண்கள் தன் சுயத்தை மறந்து ஈடுபாட்டுடன் சேவை செய்வர்.சாப்பிட மாட்டார்கள்- விரதம் இருப்பார்கள் - விருப்பமானதை தியாகம் செய்வார்கள் - கண் இமை மூடாமல் இரவில் கூட துயர் தாங்குவார்கள்- இறையை வேண்டுவார்கள்.
      இங்கு விஸ்கி அடிமை மார்கத்தா அவன் மேல் கொண்ட பிரேமையால் குடியை மறக்கிறார். அவனது பூர்வீகத்தை அறிந்து கொள்ள உதவுவதாக சொல்கிறார்.அவனது அண்மை மார்த்தாவை சகலத்தையும் மறக்கச் செய்கிறது.
      இந்நிலையில் இருவரும் கடற்கரைக்கு சென்று திரும்புகையில் கொலை முயற்சிக்கு ஆட்படுகிறார்கள்.கொல்லப்பட்டு கிடக்கும் நாயைக்கண்டதும் சுதாரிக்கும் அவன் மிகத்திறமையாக கொலையாளிகளை கையாளுவதோடு ஒருவனை சாதாரண கத்தியைக்கொண்டே அசாதாரண திறமையோடு எறிந்து கொல்கிறான்.
      லார்கோ விஞ்ச் சர்க்கஸ் பயிற்சிகளில் கற்று திறமையாக கத்திகளை கையாள்வார்.

      அது போல மிகத்திறமையாக (கிளம்பும் போதே கத்தியை ஏடுத்துக் கொள்வது ) யூகித்து எதிரிகளை பந்தாடுவதும் , கேன்வாஸ் காலணிகளை சுவர் திருப்பதில் வைத்து கோலையாளிகளை ஈர்ப்பதும் , அவன் இந்த திறமைகளை எங்கு கற்றான்- பெற்றான் - ஏற்படுத்தக் கொணாடான் - இன்னும் என்னென்ன அவனிடம் மறை பொருளாக வெளிப்படுமோ என்று யூகத்திற்கு கதாசிரியர் வான் ஹாமே எற்படுத்திவிடுகிறார்.


      நாமும் கூட இது போன்ற சூழ்ச்சிகளை கற்றுக்கொள்ளலாம்(இங்கு வில்லரும் கார்சனும் அடிக்கடி துப்பாக்கி சூப்பர் மியூசிக் இசைக்கும் எதிரிகளிடமிருந்து தப்ப வின்செஸ்டர் குழல் மீது தோப்பியை மாட்டி எதிரிகளின் மறைவிடத்தை அறிவதை நினைவு கொள்ளலாம்)

      ஆபோவும் ஷாலியும் கொல்லப்பட்டு விடுகிறார்கள்.அவர்களின் பாசத்தை அனுபவித்த XIII ன் சுய தேடல் தீவிரம் அடைகிறது.
      கொலையாளிகள் அடையாளத்திற்காக கொண்ட வந்திருந்த அவனது போட்டாவின் பின்னால் உள்ள ஈஸ்ட் டவுணுக்கு செல்லத் துணிகிறார்.அவனைப் பிரிய மனமில்லாவிட்டாலும் தடுக்க இயலாது என்றுணர்ந்த மார்த்தா வரைபடங்களையும் பணமும் கொடுத்து அவனிடம் முத்தத்தை கேட்டு பெற்றுக் கொண்டு அவனது பிரிவை தாங்கமுடியாமல் மீண்டும் விஸ்கியை நாடுகிறார்

      Delete
    10. மீதியை K V கணேஷ் கீழ போட்ருக்காரு........
      நன்றி

      Delete
  45. காமிக்ஸ் தளத்துக்கு ஓர் சுய அறிமுகம்.
    செகப்பு மிட்டாய் கலர்ல சொக்காப் போட்ட‌;கடேசி புகைப்படத்தில் உள்ள பொடியன் அடியேன்.பின்புலமாய் அரண் தாங்கி உடனிருந்தனர் என் இனிய அன்பு உடன்பிறப்பு.தளத்தி இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. நைஸ் போட்டோ ஸ்ரீ👌👌👌👌👌

      Delete
    3. உறுதியாக G.P சார்.
      நன்றி S.T.V அவர்களே.

      Delete
    4. வாங்க ஸ்ரீ ராம்!

      Delete
  46. நண்பரே டெக்ஸ் விஜய்,

    இந்த LMS, NBS லாம் இருந்தால் கொண்டு வாங்களேன்! உங்க புண்ணியத்துல கண்லயாவது பாத்துகிடுவோம்ல!

    ReplyDelete
    Replies
    1. யெஸ் நிச்சயமாக கொண்டு வந்துடலாம் நண்பரே...!

      Delete
    2. அப்படியே பழைய டெக்ஸ்வில்லர் புத்தகங்களையும் கொண்டு வந்துடுங்க.

      Delete
    3. அலோ அலோ G.P.லைனே சரியாக இல்லையே நண்பரே...!

      Delete
    4. லைனா இல்லைன்னாலும் பரவாயில்ல சார்.இருக்கிறதைக் கொண்டாங்க போதும்.😂😂😂

      Delete
    5. எனக்கும் ஒரு காப்பி தர்றீங்களா க்ளா!.ஆஹா தன்யனானேன்.

      Delete
  47. சேலம் டூ ஈரோடு 2013...தொடருது...!!!

    *அப்புறம் என்ன ...11மணி வரை நம் புராணம்தான், ஒரு வாராக உள்ளே நுழைந்தால் சாத்தான் சார், மற்றும் ஆடிட்டர் சார் இருவரும் உடனடியாக வந்தனர் . ஆசிரியர் சாரை ஸ்டாலின் அவர்கள் அழைத்து வருவதாகவும் இப்போது வந்து விடுவார்கள் என்றும் சொன்னார்கள்.

    *அடுத்து செயலர் விஜய், மளமள என சில பல நண்பர்கள் வந்தார்கள், என்னென்னவோ பெயரில் ஒன்றும் காதில் ஏறள...அந்த ஒரு முகத்தை தேடியே வழியை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

    *11.30க்கு அந்த முகத்தின் சொந்தக்காரர், ஆசிரியர் சார் வந்து சேர்ந்தார். ஒவ்வொரு நண்பராக கை குலுக்கி நலம் விசாரத்தவாரே வந்த ஆசிரியர் சார், என் கையையும் பிடித்து விஜயராகவன் நல்லா இருக்கீங்களா என்றாரே பார்க்கலாம் .... ஒரே ஒரு முறை 11மாதங்கள் முன்பு பெங்களூரு காமிக்கானில் ஒரு 15நிமிடங்கள் மட்டுமே சந்தித்து இருந்த என் பெயரையும் மறக்க வில்லையே என நான் ஆச்சர்யப்பட்டு போனேன் ...பிறகு தான் உரைத்தது ஆசிரியர் சார் ஒவ்வொரு நண்பரின் பெயரை சொல்லித்தான் அழைத்தார், அவரையே பார்த்து கொண்டு இருந்த ஆர்வத்தில் கவனிக்க மறந்தேன் என்பது. ஆசிரியர் சாரின் ஞாபகசக்தி கண்டு அனைத்து நண்பர்களும் சற்றே அரண்டு விட்டனர் .

    *அதுநாள் வரை லயன் வலை தளத்தில் வெறும் பெயர்களாக மட்டுமே தெரிந்து வந்து நண்பர்களும், பெயராக கூட தெரியாத நண்பர்களும் என பலரையும் நேரிலே பார்த்து பேச முடிந்தது . அனைவரும் ஆசிரியர் சார் உடன் துவக்க நிமிட தயக்கங்கள் உதறி சகஜமாக பேச ஆரம்பித்தனர்.

    *கேள்விகள், வினாக்கள், வினவல்கள்......என சரமாறித் தாக்குதல் தொடுக்க அத்துனை பேருக்குமே சிரித்தும், சில சமயம் மளுப்பியும், யோசித்தும் என ஆசிரியரும் சளைக்காமல் பதில் தொடுத்தார். தலீவர் ஒரு லாங் சைஸ் நோட்ல இருந்து பல கோரிக்கைகளை போட்டுத்தாக்கினார்.

    *தனது ஒரு வயது செல்ல பாப்பா, துணைவியார் உடன் நண்பர் பழனிவேல் , வீட்டம்மாவோடு நண்பர் சல்லூம், பள்ளி செல்லும் செல்ல மகள், துணைவியார் சகிதம் ஈரோட்டுக்கு மிக அருகே இருக்கும் பள்ளிபாளையம் புனித சாத்தான் சார்...மற்றும் அறிமுகம் இல்லாத சில நண்பர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கொண்டாட்டத்தில் தங்களையும் இணைத்து கொண்டனர்.

    *எத்தனை தோட்டாக்கள் டெக்ஸ் சுடுவாறோ அத்துனை போட்டோக்கள் எடுக்கப்பட்டன. இரத்தபடலம் மற்றும் மின்னும் மரணம் முழு தொகுப்பு வண்ணத்தில் மறுபதிப்பாக கேட்காத நண்பர்கள் யாரும் இல்லை அன்று .....

    *தளத்தில் அந்த சமயத்தில் கடுமையான வாதங்களில் ஈடுபட்டு வந்த ஈரோடு விஜய்யும் பெங்களூரு கார்த்திக் சோமலிங்காவும் நேரிலே அந்த விழாவில் சந்தித்த போது..........அட டா அற்புதக் காட்சி. மதுரை நண்பர் கா. பா., நண்பர் கோகுல், மூத்த வாசக நண்பர் திரு.பாரதி நந்தீஸ்வரன், ஓவியர் &நண்பர் அஜய்சாமி, இன்னும் சில நண்பர்கள் காலை முதலே எல்லா கொண்டாட்டத்தின் போதும் உற்சாகத்தோடு ஆசிரியரோடும் நண்பர்களுடனும் பேசி மகிழ்ந்தனர்.

    *அருகே இருந்த ஆக்ஸ்போர்டு ஓட்டல் ஏசி ஹாலில் மதிய உணவுக்கு ஈரோடு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் சார் அருகே ஸ்டாலின் சார், எதிரே நான் என ஒரே டேபிளில் சாப்பிட்டது மறக்க இயலா நிறைவான நீங்கா நினைவு . வெஜிடபிள் பிரியாணி மட்டுமே சாப்பிட்டார் ஆசிரியர் சார். நான் அன்லிமிடெட் மீல்ஸ் வெளுத்துக் கட்டினேன். இவனுக்கு மட்டும் டபுள் டோக்கன் வாங்கி இருப்பாங்களோ என நினைத்து இருப்பார் சார். நம்ம உற்சாகம் அப்படி... ஹி...ஹி....

    *அருகருகே அனைத்து நண்பர்களும் கலகலப்பான உரையாடல்கள் உடன் சாப்பிட்டோம். சாப்பாட்டின் இடையே திருப்பூர் வாசகநண்பர் பிரபாகர் (எ) சிபி அவர்கள் இணைந்து கொண்டார். குடும்பத்தோடு சாப்பிடும் நண்பர்கள் சாப்பிட்டு விட்டு மாவாட்டனும் எனவும், இல்லை இல்லை இருக்கவே இருக்கு செயலரின் போன்-அதை அடகு வைத்து விடலாம் எனவும் கேலியும் கிண்டலுமாக ஒரே உற்சாகம்தான்.

    *ஐஸ்கிரீம் கடையில் லெமன் சோடா குடித்த போது ஆசிரியர் சாரிடம் வண்ணத்தில் டெக்ஸ் வர வாய்ப்புண்டாங் சார் என கேட்டுவைத்தேன். 9மாதங்களில் அந்த வேண்டுகோளை சர்ப்ரைஸாக நிறைவேற்றி என்னை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் திக்கு முக்காட வைத்து விட்டார் ஆசிரியர் சார். வண்ண டெக்ஸ்க்கு துவக்க புள்ளி வைத்த அந்த லெமன் சோடாவை என்றும் மறக்க இயலுமோ ????...........


    ReplyDelete
    Replies
    1. *4மணிக்கு நண்பர் கர்ணன், திருப்பூர் வாசகநண்பர் சிவசரவணகுமார் மற்றும் பல நண்பர்கள் சேர்ந்து கொண்டனர். ஸ்டீல் கிளா எனும் கோவை பட்சி மட்டும் கடைசி வரை வரவேயில்லை. இப்போது நண்பர்கள், மின்னும் மரணம் முழுவண்ண தொகுப்புக்காக ஆசிரியர் சாரை, டெக்ஸின் பிடிவாதத்துடன் நெருக்க ஆரம்பித்தனர்.

      *ஆரம்பத்தில் மிடுக்குடன் மறுத்து வந்த அவரின் குரல் சற்றே தேய தொடங்கியதுடன் நண்பர்கள் "பீல்டிங்கை"சற்றே இன்னும் டைட் செய்தனர். வந்ததே அந்த ஆனந்த அறிவிப்பு, "2015ஜனவரியில் மின்னும் மரணம் இறுதி பாகத்துடன் சேர்ந்து வரும் ".......நண்பர்களின் உற்சாக ஆரவாரமும் கைதட்டல்களும் காதை பிளந்தன. அக்கம் பக்கம் அனைத்து ஸ்டால் காரர்களின் பொறாமை பார்வையும் நம் ஸ்டால் மீது விழ ஆரம்பித்தது. மின்னும் மரணம் வெளிவர அஸ்திவாரம் போட்ட அந்த 15 டூ 20நண்பர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் காலரைத் தூக்கி விட்டு சற்றே பெருமிதம் கொள்கிறேன்.

      *அந்த உற்சாகத்துடன், மாலை சேர்ந்து கொண்ட நண்பர்களுன் கும்மாளம் என அந்த நாள் இனிய நாளாக என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் நண்பர்களே...........இத்தனை சம்பவங்களை நினைவு கூர்ந்து எழுதுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல, ஏதும் சுவையான சம்பவங்களை நான் விட்டிருந்தால் அப்போது இருந்த நண்பர்கள் இங்கே குறிப்பிடவும். பெயர்கள் விட்டுப்போன நண்பர்களிடம் ஒரு சின்ன சாரியை தெரிவித்து கொள்கிறேன். எத்தனை விழா வந்து போனாலும் முதல் விழா என்ற வகையில் ஈரோடு 2013 ஆல்வேஸ் டாப் இன் மை லிஸ்ட்...!!!

      நாளை LMSம் ஈரோடும்....

      Delete
    2. @ டெக்ஸ் விஜய்

      உங்களின் அபார நினைவாற்றலின் மீது எனக்குக் கொஞ்சம் பொறாமை கலந்த வியப்புண்டு!

      அபாரம்!!!

      Delete
    3. மனக்குறை தீர்ந்தது சார்

      Delete
    4. நீங்கள் வந்தது 2014விழாவுக்கு தான் போல க்ளா...2013ல நீங்கள் வர்ல.
      2013ன் போட்டோக்களில் உங்களை காணோம்.

      Delete
    5. ஈரோட்டுப் புத்தகவிழாவின் எனது ஆதர்ஷ நினைவானது நண்பர் சிபிக்கு மரத்தடியில் பிறந்தநாள் கேக் வெட்டியதைச் சொல்லலாம் !! ரொம்பவே அழகான தருணம் !

      Delete
    6. தன்யனானேன் சார் _/|\_
      .

      Delete
  48. வணக்கம் விஜயன் சார்
    வணக்கம் நண்பர்களே
    ALL ROADS LEADS TO ERODE.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரு.KVG இங்கே வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!

      வாங்க ஜி!

      Delete
    2. நன்றி ஈரோடு விஜய்.
      இருந்தும் என் பெயரை விட்டுட்டீங்க.

      Delete
    3. லிஸ்டுல

      Delete
  49. இரத்தப்படலம்
    கதைச்சுருக்கம்

    பாகம் 1கறுப்பு கதிரவன் தினம்.
    தலையில் குண்டுகாயத்துடன் கண்டெடுக்கப்பட்டு ஆபோ-ஷாலி
    தம்பதியால் டாக்டர் மார்த்தா உதவியால்
    காப்பாறப்பட்டு ஆலன் என்ற XIII
    அம்மூவரின் கொலைக்கு பழி வாங்கவும்
    தன் நினைவுகளை தேடி புறப்பட
    பெரும் தொகைக்கு அமெரிக்க
    ஜனாதிபதியை கொன்ற நாடே தேடும்
    குற்றவாளி என்பதோடு தன்னை தேடியலையும் கும்பலில் இருந்து
    தப்பி செல்வதோடு முடிகிறது.
    பாகம் *2செவ்விந்தியன் போகுமிடத்தில்.
    ஸ்டீவ் ராலண்ட் என்று பெயரிடப்பட்டு
    புதிய குடும்பத்திற்குள் ஜெனரல்
    காரிங்டனால் வந்த13தன் மனைவி
    கிம்ராலண்டை பற்றி அறியும்போது
    தன் புதிய சிற்றன்னை பெலிசிட்டியால்
    தந்தை மற்றும் சித்தப்பாவை கொன்ற
    பழி விழ. கர்னல் ஜோன்ஸின் உதவியால்
    தப்பி மனைவி கிம்மை சந்திக்கும்போது
    அவளிடம்XVIIஎன்ற எண் பச்சை குத்தப்படிருக்க குழம்பிய நிலையில்
    கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில்
    மன நோயாளிக்கான சிறையில் ஆயுள்
    கைதியாக அடைக்கப்படுகிறார்.
    பாகம் * 3 நரகத்தின் கண்ணீர்.
    ப்ளைன் ராக் சிறைக்கூடத்தில் அடைக்கப்பபடும் ராலண்டை கொலை
    வெறியுடன்13ஐ கொல்ல பின் தொடரும்
    மங்கூஸ் . அதிலிருந்து மீண்டும் ஜோன்ஸ்
    உதவியுடன் தப்பி காரிங்டனிடம்
    சேர்கிறார்.
    பாகம் *4 SPADS அதிரடிப்படை.
    ராஸ் டான்னர் என்ற புதிய பெயருடன்
    காரிங்டனால் SPADS அதிரடிப்படையில்
    சேர்க்கப்பட்டு அங்கு பெட்டிபார்னோவ்ஸ்கி
    மற்றும் ஜோன்ஸுடன் கர்னல் மாக்கால்
    ஷெரிடன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்
    என்று அறியும் 13 மற்றும் பெட்டி,ஜோன்சுடன்
    தப்புகிறார்.
    பாகம் * 5 உச்ச நிலை உஷார்.
    கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஹென்றி
    ஷெரிடன் தந்தையை சவஅடக்கம் செய்யுமிடத்தில் அவர் தம்பி வாலியை
    கொல்ல முயற்சி நடக்கிறது அவர்
    தப்பித்துக்கொள்ள கொல்ல முயன்றவன்
    சுடப்படுகிறான்.அரசியல் சூதாட்டத்தில்
    துணை ஜனாதிபதி கால்வின்வாக்ஸ்
    ஜெனரல் காரிங்டனை கைது செய்கிறார்.
    சான்மிகுவலில் நண்பர் மார்குயிஸின்
    உதவியுடன் அமெரிக்கா திரும்பிய 13
    கர்னல் ஆமோசின் உதவியுடன் வாலி
    ஷெரிடனுடன் தளம் SSH1ல் உள்ள
    தற்போதய ஜனாதிபதி கால்பிரெயினை
    சந்திக்க மாறு வேடத்தில் நுழைய அங்கு
    கர்னல் மாக்கால் அனைவரையும் கொல்ல
    முயற்சிக்க அதனை13முறியடிக்கிறார்.
    மேலும் கால்வின் வாக்ஸ் நம்பர்2 என்று
    கண்டுபிடிக்க அவர் தற்கொலை செய்து
    கொள்கிறார்.பிடிபட்ட ஸ்டான்ட்வெல் முலம்
    அவர் எண்3என்றும் மேலும் 52 பேர்
    சதியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    வாலி ஷெரிடன் புதிய ஜனாதிபதியாக
    தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
    பாகம் 6.ஜேஸன் ஃப்ளை படலம்
    தனது நினைவுகளைத்தேடி கிரீன்ஃபால்ஸ்
    வரும் 13ஃப்ளெமிங் என்ற மாற்றுப்பெயரில்
    ஜுடித்&டேவிட்ரிக்பிக்கு அறிமுகமாகிறார்.
    இடையே அமெரிக்காவில் ஜோன்ஸை
    கொல்ல முயற்சி நடக்க தப்புகிறாள்.
    காரிங்டன் உதவியால் தனது தந்தை ஜோனதன்ஃப்ளை பற்றி அறிந்து அவர்
    மர்ம மரணம் பற்றிவிசாரிக்கிறார்.
    மௌண்டன்நியூஸ் பத்திரிகையின் முன்னாள்
    உரிமையாளர் முதியவரால் 13 ஜேஸன்ஃப்ளை
    என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார்.13ஐ
    தேடி ஜோன்சும் 13கொலைசெய்ய மங்கூசும்
    கிரின்ஃபால்ஸ் வர அங்கே நிகழும் பனிச்சரிவு
    வெடிவிபத்தில் ஜோன்ஸ் காயமடைகிறாள்.
    13 ஐ தேடி கொலை வேட்டை தொடர்கிறது.
    பாகம் 7*ஆகஸ்ட்3ன் இரவு.
    தன் தந்தையை கொன்றது ரிக்பி &ஷெரீப் கீய்ன் மர்டோக் டாக்டர் ராபபர்ஸ்சன்
    மேலும் சிலர் குக்ளக்ஸ்கான் வேடமணிந்து
    என்றறியும் ஜேஸன் மங்கூஸின் மற்றும்
    ரிக்பியின் கொலை தாக்குதலில் பெரியவர்
    ஜேகே ஹட்டாவேயினால் காப்பாற்றப்படுகிறார்.
    பாகம் 8* பகைவர்கள் 13
    சிறையில் அடைக்கப்பட்ட மங்கூஸ் தந்திரமாக
    தப்புகிறான்.புதிய ஜனாதிபதி வாலி நம்பர்1
    யாரென்று கண்டுபிடிக்குமாறு மக்லேனிடம்
    பணியை ஒப்படைக்கிறார்.காரிங்டனின்
    சகோதரியிடன் விசாரணை செய்யும் ஜோன்ஸ்
    வாலிக்கும் கிம்முக்கும் உள்ள உறவை பற்றி
    அறிகிறாள்.13மிச்சேல் என்ற பெயரில் வாலி
    அறுவை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவமனையில் துப்பறியும்போது
    இரினா என்ற பெண் கொலையாளியின்
    முயற்சியில் தப்பி கர்னல் ஆமோஸை
    சந்திக்கிறார்.வாலிதான் நம்பர்1 என்று
    கண்டுபிடிக்கும்போது நடக்கும் தாக்குதலில்
    ஆமோஸ் காயமடைகிறார்.நார்த்ஷோர்
    தீவில் ஒளிந்திருக்கும் தன் மனைவி கிம்மை
    சந்திக்கும்13 மங்கூஸால் சிறைபிடிக்கப்பட்டு
    ஜோன்ஸ் கிம் மற்றும் கிம்மின் மகன் காலின்
    ஆகியோருடன் படகில் கட்டப்பட்டு படகில்
    பொருத்தப்பட்டுள்ள குண்டால் கொலை
    முயற்சி நடக்க 13ம் ஜோன்ஸும் மட்டும் தப்பிக்கின்றனர்.வாலியை சந்திக்கும்13
    அவர்தான் நம்பர்1 என்று கண்டுபிடித்து அவரை அடித்து விட்டு வெள்ளை மாளிகையை
    விட்டு வெளியேறுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. பாகம் * 9 மரியாவுக்காக
      ஸான் மிகுவலில் தங்கியிருக்கும் மக்லேனுக்கு பாதர் ஜஸின்டோ என்பவரிடம்
      இருந்து அவர் மனைவி பற்றிய தகவல்
      உள்ளதாக சொல்கிறார் அங்கே கோஸ்டா
      வெர்டில் உள்ள போராளி மரியாதான் உன்
      மனைவி உன்பெயர் கெல்லி என்கிற
      ஸ்டன்ட்மேன் என்று கூறி மெரிடித் என்ற
      ஆயுதவியாபாரியின் மாறுவேடத்தில்
      கோஸ்டாவெர்டிக்கு அனுப்புகிறார்.அங்கே
      அதிபர் ஓர்டிஸின் ஆசைநாயகியாக தனது
      சிற்றறன்னை பெலிசிட்டியை காண்கிறார்.
      அரண்மனையில் இருந்து கடத்தப்படும் 13
      போராளி ஏஞ்சலை சந்திக்கிறார்.மரியா
      அவனது சகோதரி என்றும் ரோகாநெக்ரா
      சிறையில் 4நாட்களில் கொல்லப்பட உள்ளதாக
      அறிய அரண்மணை திரும்பி பெலிசிட்டியுடன்
      தப்ப முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டு
      ரோகாநெக்ரா சிறையில் அடைக்கப்படுகிறார்.
      கோஸ்டாவெர்டிக்கு ஜோன்ஸ் பெட்டி மற்றும்
      மார்குயிஸ் மல்வே&பாதர் ஜஸின்டோவை
      சந்திக்கின்றனர்.இந்த சதி வேலையில்
      அமெரிக்காவை சேர்ந்த மினார்கோ என்ற
      கம்பெனி இயங்குகிறது.
      பாகம் * 10 *புதையல் வேட்டை
      சிறையை தாக்க போராளிகளின் உதவியோடு
      ஜோன்ஸ் பெட்டி ஜஸின்டோ வர அங்கிருந்து
      தப்பி மரியாவை காப்பாற்றுகிறார்13.பிறகு
      நடக்கும் ஆட்சி மாற்றத்தில் ஏஞ்சல் அதிபராக
      13கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
      போராளிகளுக்கு துரோகம் இழைத்ததாக
      கூறப்பட 13க்கு ஆதரவாக மல்வே வாதம்
      செய்கிறார்.ஜெர்மானியம் என்ற தாதுவை
      வெட்டிஎடுக்க மினார்கோவினர் ஒரு போராளிக்கு பெரும் செல்வத்தை லஞ்சமாக
      வழங்கியதை கூற ஏஞ்சல் தற்கொலை செய்து
      கொள்கிறான்.மரியா புதிய அதிபராக பதவி
      ஏற்கிறார்.தனது உண்மை தந்தை மல்வே
      என்று அறியும் ஜேஸனுக்கு தங்கள் முன்னோர்
      வரலாறை விளக்கமாக கூறுகிறார்.
      பாகம் * 11 * வெள்ளிக்கடிகாரங்கள் 3 .
      முன்னோர்களான. ஸாம் மக்லேன்
      ஜாக் கல்லஹன் ஜோர்ஜ் மல்வே மூவரும்
      அயர்லாந்தில் இருந்து பிழைப்பு தேடி
      அமெரிக்கா சென்றனர்.மெக்சிகன் போரில்
      ஈடுபட்டு அங்கே களவாடப்பட்ட பெரும்
      செல்வத்தை மறைத்து அந்த ரகசியத்தை
      மூன்று சங்கேத குறியீடுகளால் மூன்று
      வெள்ளி கடிகாரங்களில் செதுக்கி தங்கள்
      சந்ததியினர் பலன் பெற தகவல் தருகின்னர்
      இந்த சம்பவம் நடந்தது1911ம் ஆண்டு.
      முன்னாள் அதிபர் ஓர்டிஸின் தளபதி
      பெரால்டா ஒரு படையை திரட்டிவந்து
      சண்டையிட முயற்சி செய்ய அவரையும்
      படைகளையும் அழிக்கிறார் ஜேஸன்.பின்னர்
      மரியாவிடம் விடைபெற்று அமெரிக்கா
      திரும்புகிறார்.
      பாகம் * 12 *தீர்ப்பு
      ராணுவ தலைமையகம் பென்டகனில் வந்து
      இறங்கும் ஜனாதிபதி வாலியை ஜெனரல்
      காரிங்டன் கடத்தி ஆளில்லா நெவாடா பாலை
      வனத்தில் சிறைவைக்கிறார்.கர்னல் ஆமோசுடன் இணைந்த 13 ஜோன்ஸ் தீவு
      ஒன்றில் ஒளிந்திருக்கும் மங்கூஸை கைது
      செய்கிறது.இரினா காயத்துடன் கடலில்
      மூழ்குகிறாள்.மங்கூஸை விசாரிக்கும்
      ஜியார்டினோ ( 13 ன் தாய் மாமன்) வெடிகுண்டு பொருத்திய துப்பாக்கியை
      ரகசியமாக கொடுத்து காரிங்டனை கொல்ல
      சொல்கிறார்.பாலை வன தளத்தில் கடத்தப்பட்ட ஜனாதிபதி வாலியை நேரடி
      விசாரணை TVல் ஒளிபரப்ப அங்கு நடக்கும்
      குழப்பத்தில் வாலி மங்கூஸை சுட்டுவிட்டு
      தப்பிக்கீறார்.இறக்கும் தருவாயில் மங்கூஸ்
      வாலி உண்மை குற்றவாளி என கூறி உயிர்
      விடுகிறான்.தப்பி ஓடும் வாலி துப்பாக்கியில்
      உள்ள குண்டு ஜியார்டினோவால் தவறாக
      தூண்டப்பட்டு வெடித்து இறக்கிறார்.பின்
      தங்கும் 13 சிறைப்படுகிறார்.
      பாகம் * 13 தேசத்துக்கொரு அபாயம்.
      ஜியார்டினோவால் கைது செய்யப்பட்டு
      விசாரணையில் பல சூழ்சிகளால் மல்வே
      ஜேஸனை தன் மகன் அல்ல என்றும் அவர்
      பெயர் ஸீமஸ் ஓ நீல் என்ற கியூபாவை
      சேர்ந்த பயங்கரவாதி என்றும் குற்றம்
      சாட்டப்பட்டு அரிஸோனா சிறையில் அடைக்க
      கொண்டு செல்கிறார்கள்.புலனாய்வு நிருபர்
      டான்னியுடன் வரும் ஜெஸிக்கா மார்டின்
      இவள் CIAதலைவர் ஜியார்டினோவால்
      அனுப்பப்பட்ட இரட்டை வேடதாரி உளவாளி
      கொலைகாரி.13 மற்றும் டான்னியை கடத்திய
      ஜெஸிக்கா அவர்களை இரினாவிடம் கொண்டு சேர்க்கிறாள்.பழிக்குபழி வாங்க
      துடிக்கும் இரினா இருவரையும் மனித
      வேட்டைக்காக அருகில் உள்ள திவுக்கனுப்ப
      இருவரும் தப்புகின்றனர்.
      பாகம் * 14 * கட்டவிழ்த்த வெறிநாய்கள்
      இரயிலில் ஏறி தப்பிக்கும் ஜேஸனை
      பின் தொடரும் ஜெஸிக்கா அவரிடம் சிக்குகிறாள். கொலையாளிகளிடமிருந்து தப்பி செல்கையில் இருவருக்கும் நட்பு
      மலர்கிறது.தன்னை கொல்ல முயன்ற
      ஜியார்டினோவை பழிவாங்க ஜேஸனுடன்
      செகிறாள்.பிறகு நடக்கும் சண்டையில்
      துப்பாக்கி குண்டடி படுகிறாள்.விமானத்தில்
      தப்பும் ஜேஸன் தன் நண்பர்களான ஜோன்ஸ்
      பெட்டி மார்குயிஸ் காரிங்டனை கோஸ்டா
      வெர்டிக்கு வரச்சொல்லி தானும் அங்கு
      செல்கிறார்.அங்கே மரியா இருக்கிறார்.

      Delete
    2. பாகம் *15 * மான்டிகிரிஸ்டோ படலம்
      கோஸ்டாவெர்டியில் அடைக்கலம் புகுந்த
      13 நண்பர்கள் அங்கே கைதியாக பெலிஸிட்டி
      இருப்பதையும் மரியாவின் திட்டத்தின் மூலம்
      கடத்தல் நாடகத்தில் அனைவரும் வேறு இடம்
      மாறுகின்றனர்.அங்கிருந்து பெலிசிட்டி தப்பி
      செல்கிறாள்.13ன் தந்தை மல்வேயின் கனவு
      தங்கள் மூதாதையர் மறைத்த தங்கத்தை
      மீட்பது அதற்கு 13 உதவுகிறார்.மூழ்கிய
      நகரத்தில் இருந்து வெள்ளி கடிகாரத்தை
      மீட்கின்றனர்.தப்பிய பெலிசிட்டி ஜேசனின்
      எதிரிகளுடன் சேர்ந்து தாக்க அதில் கர்னல்
      ஆமோஸ் உயிரிழக்கிறார்.மற்ற அனைவரும்
      அமெரிக்கா திரும்புகின்றனர்.
      பாகம் * 16 * தங்கத்தேட்டை
      வெள்ளி கடிகாரங்களின் புதிரை விடுவிக்க
      ஜேஸன் மற்றும் நண்பர்கள் முயற்ச்சிக்க
      ஜியார்டினோ ஜேசனை கொல்ல முயற்சி
      மேற்கொள்கிறார்.தங்கம் தேடும் முயற்சியில்
      தகவல் அறிந்துஜேஸன் ஜோன்ஸ் அந்த
      பகுதிக்கு செல்ல பின் தொடரும் உள்ளுர்
      கேடி கும்பலால் தாக்கப்பட்டுகிடைத்த தங்ககாசுகளும் வீணாக
      மலைச்சரிவில் யாரும் எடுக்க இயலாமல்
      யாருக்கும் பயன்படாமல்1000000 தங்க
      காசுகளும் சிதறி விழுகிறது.கடைசியில்
      மிஞ்சியது13தங்க காசுகளே.வாஷிங்டனில்
      ஜனாதிபதியை சந்திக்கும் ஜெஸிக்கா
      ஜியார்டினோவை கைது செய்யவும் 13
      அவர்தம் நண்பர்களை விசாரணை கமிஷன்
      முன் சாட்சி அளிக்கவும் நியமிக்கப்படுகிறாள்.
      பாகம் * 17 * அயர்லாந்து படலம்
      ஸிமஸ் ஓ நீல் என்ற அயர்லாந்து போராளி
      புரட்சி இயக்தின் உதவியுடன் அமெரிக்கா
      சென்று கெல்லி ப்ரையன் என்ற பெயரில்போல்டர் யுனிவர்சிட்டியில் சேர்ந்து
      படிக்கிறான்.அவனுக்கு ஜேஸன் ஃபிளையின் நட்பு கிடைக்ககிறது.தாய்மாமன் ஜியார்டினோ
      ஸிமஸ் என்ற கெல்லிபிரையனையும்
      ஜேஸன்பிளையையும் வேவு பார்க்க இளம்
      உளவாளி ஜெஸிக்காவை அனுப்புகிறார்.
      கெல்லியை காதல் வலையில் வீழ்த்தும்
      ஜெஸிக்கா அவன் சுடப்பட்டடதும் ( கெல்லி)
      ஜேஸனை கெல்லியின் பெயரோடு க்யூபாவுக்கு போராளியாக அனுப்புகிறாள்.
      பாகம் * 18 *இறுதிச்சுற்று
      புலனாய்வு நிருபர் டான்னி (13 ல் காப்பாற்றப்பட்டவர்) ஜெஸிக்கா மார்டின்
      உதவியுடன் எழுதிய புதிர்மனிதன் XIII
      என்ற புத்தகம் நாட்டில் பெரும் அதிர்வலையை
      உண்டாக்கியது.இடையே தனது மாபியா
      சொந்தங்களுடன் சேர்ந்து13 கொல்ல
      ஜியார்டினோ எடுத்த முயற்சிகள் தோல்வியில்
      முடிய விசாரணை தீர்ப்பு 13 நிரபராதி என்று
      அறிவித்து விடுதலை செய்கிறது.தனக்கு
      கொடுமை இழைத்த இரினா மற்றும்
      ஜியார்டினோவை கொன்று ஜெஸிக்கா
      வஞ்சம் தீர்த்துக்கொள்கிறாள். தன்னை
      குண்டு காயத்துடன் மீட்ட ஆபோ ஷாலி யின்
      வீட்டில் தன் புது வாழ்க்கையை தொடங்குகிறார் நம் ஜேஸன்.
      நண்பர்களே எனக்கு தெரிந்தவகையில்
      இரத்தப்படலம் கதையை சுருக்கமாக
      கொடுத்துள்ளேன்.தவறுகள் குறைகள்
      இருப்பின் மன்னிக்கவும்.சுருக்கமாக
      சொவதால் பல பகுதிகள் விடுபட்டிருக்கலாம்
      இது என் சிறு முயற்ச்சியே.முழுவண்ண
      பதிப்பாக வெளிவரவிருக்கும் காமிக்ஸ்
      இதிகாசம் இரத்தப்படலம் அதிக முன்பதிவு
      பெற முன்பதிவு செய்ய நண்பர்களை வேண்டி
      கேட்டுக்கொள்கிறேன்.
      நன்றி.
      என்றும் அன்புடன்
      K.V.GANESH.

      Delete
  50. வணக்கம் நண்பர்களே!

    நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஈரோடு புத்தகத் திருவிழா இனிதே துவங்க இன்னும் ஏழு நாள் குதிரைப் பயண தொலைவுதான் என்ற நிலையில்...
    விழாவில் நேரடியாகப் பங்குகொள்ள இயலாத நண்பர்களுக்காகவும், கலந்துகொள்ளயிருக்கும் நண்பர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் 'Almost LIVE' என்ற கான்செப்ட்டில் நமது வாசகர் சந்திப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் ஒரு WhatsApp குரூப்பின் மூலமாக உடனுக்குடன் பகிரப்படயிருக்கிறது!

    சென்ற வருடம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதின் பின்னணியில் நண்பர்கள் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்தாலும் குறிப்பாக நண்பர்கள் டெக்ஸ் விஜய், J மற்றும் PfB ஆகியோரது பணி பாராட்டுக்குறியது! அதிலும் குறிப்பாக ஒரு தகவல்களஞ்சியம் போல செயல்பட்டு பழைய நினைவுகளைப் படங்களோடு பகிர்ந்துகொண்ட டெக்ஸ் விஜயின் பணி ஈடுபாடு மிகச் சிறப்பானது!

    இம்முறையும் நண்பர்களின் ஒத்துழைப்போடு இந்த வாட்ஸ்அப் குரூப் தன் கடமையைச் செய்தபின்னே வழக்கம்போல சிலநாட்களுக்குப் பிறகு கனத்த மனதோடு கலைக்கப்படும்!

    குரூப்பில் இணைய

    இங்கே க்ளிக்குங்க பாஸூ!


    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் கவனத்திற்கு:

      * இந்த குரூப் ஈ. பு. வி. பற்றிய தகவல்கள் அனைத்து நண்பர்களையும் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது

      * இது ஒரு தற்காலிக குரூப்பே. இந்த குரூப் ஈ. பு. வி. முடியும் வரை தான் இருக்கும்.

      * காமிக்ஸ் தொடர்பான மற்றும் விழா நிகழ்வுகளை தவிர வேறு எதுவும் பகிர வேண்டாமே ப்ளீஸ்

      * காமிக்ஸ் பற்றிய விவாதங்கள் இடம்பெறலாம். காமிக்ஸ் பகிர்தல் தவிர்க்க பட வேண்டும்!

      * 04-08-2018 சனிக்கிழமை அன்று நடைபெறும் இரத்தப்படலம் வெளியீட்டு விழா படங்கள் / வீடியோக்களை நண்பர்கள் உடனுக்குடன் இங்கே பதிவேற்றம் செய்யலாம். இதனால் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயலாத நண்பர்கள் பயன் பெறுவார்கள்!

      நன்றிகள்!!

      Delete
  51. கடந்த வருடங்களில் நமது ஈரோடு காமிக்ஸ் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்களின் பெயர்கள் - அகர வரிசைப்படி :
    (பெயர் விடுபட்டிருப்பின் மன்னிக்கவும் & தெரிவிக்கவும்)

    Ahamad Bhasha T.K
    Anand KTS Chennimalai
    Arun V R K (a) SIMBA
    auditor Raja
    Babu (Modesty blaise) tiruppur
    Bala ganash Thanjavur
    balachandar B
    Balakrishnan Erode
    Balasubramanian P Karur
    Baranitharan
    Blueberry Nagararajan Santhan
    Boopalan R.M
    Boopathi M, T.code
    Chinnanchiru gopu
    Chinnasamy S, Tiruppur
    Chokkan N
    CIBI Tiruppur
    Dekshinamurthy S
    Devaraj S, Tiruppur
    Dinesh K
    Dr. A.K.K Raja
    Dr. K. Abdhul
    Dr. Saminathan K
    Erode vijay
    Ganeshkumar G Trichy
    Gogul C, Namakkal
    Govindraj perumal
    Guna Karur
    Immanuvel kumar, tiruppur
    Jailani M.A (Art teacher)

    ReplyDelete
    Replies
    1. தொடர்ச்சி...

      Janarthan (J) kumbakonam
      Jegadish M
      Jeyakumar A mettur
      Jeyalani Dharapuram
      Kaleel A, Puduchery
      Kalishwaran M CBE
      KalyanaKumar P
      Kanda Sivakasi
      Karthik K.S Salem
      Karthikaipandiyan Kovai
      Karthikeyan A
      karthikeyan L
      Karthikeyan Puduvai
      karthikeyan V
      karthikumar
      Karthikumar S
      Karunamoorthy Erode
      Kumar N
      Madavan M
      MadhanKumar V
      Mahadevan S SriRamasamudram
      Mahendran Paramasivam
      Manikandan M, Kulithalai
      Marimuthu R Erode
      Mathan
      Mathankumar V Thiruppur
      Mayavi shiva salem
      Mithun Chakkaravarthi Gobi
      Mohaideen S
      Mohamed Hassan M

      Delete
    2. தொடர்ச்சி -2

      Mrs. Chandrakala K.S salem
      Murugaiyan C, P.velur
      Nagarajan Santhan S, Tiruppur
      palaniamy S
      Palanivel ka.puththur
      parameshwaran N
      Parani from Bangalore
      Paranitharan Tharamangalam
      Prabakar T
      Prabhu Raj Salem
      Prabhu V.S
      Prasanna M R
      Prasanna S karaikkal
      Prasanth Karthik mannarkudi
      praveen T
      Radja R
      Raja C (postal phoenix)
      Raja sekaran A, Karur
      Rajaraman P thiruppur
      Rajasekaran C
      Rajasekaran Karur
      Rajasekaran R
      Rajendran R Dalmia, Salem
      Rajkumar VK Mannarkudi
      Ramesh R Dharmapuri
      Ramji Erode
      Ramkumar V Chennai
      Ramya Sri, CBE
      Ravi D, Mallur
      RaviKannan M

      Delete
    3. தொடர்ச்சி -3

      Rummi Tiruppur
      sadhasivam C
      Sakthivel Erode
      Sanjay Kumar G
      sankar P, Erode
      SanthanaKumar G
      Sarathi (Artist)
      Saravan K.C
      Saravanakumar M Jedarpalayam
      saravanan
      saravanan Dharmapuri
      Saravanan Karur
      Saravanan N (Olagadam)
      Saravanan P, karur
      Saravanan R
      Saravanan R Erode
      Sasikumar P
      satheesh kumar E.M
      Satheesh Periyasamy, Erode
      sathish K
      Sathish K Erode
      sathyamurthy, kangayam
      Selthil Madhesh CBE
      selva sundaram Arachalur
      selvakumaran Perundurai
      selvam abirami
      Senthil Kumar S, Namakkal
      senthil puduvai
      Senthil Sathya
      Senthilkumar R

      Delete
    4. தொடர்ச்சி - 4

      Senthilkumar R Trichy
      Shallum Fernandas
      Shankar M (sham) Erode
      Shine smile foundation
      Siva ARS
      sivakumar (siva - tiruppur)
      Sivakumar J Tiruppur
      Sivakumar M
      Somasundaram V
      SreeRam, Aravakkurichi
      sridhar G
      Srithar C
      steel claw ponraj
      Subramanian K Dharmapuri
      Sumathi P
      Sundaran M
      Suresh chand
      suresh kumar
      SuseendraKumar L
      swaminathan Karur
      Tex Sambath, Tiruppur
      Thandapani P Dharapuram
      Thangamuthu S
      Tharik Ahamad A.P Erode
      Thirumavalavan Tiruppur
      Thirunavukkarasu R , CBE
      thiruvalluvanar J.M T.code
      Tiruppur kumar
      Vasanth G, Karur
      venkat prasanna S
      Venkateshwaran S
      Vijayaragavan V, Salem Tex
      Vincent thanjavur
      Vinesh Erode
      VinojKumar Erode
      vinothkumar S
      vishnukumar Mannarkudi
      Vishnupriya P, CBE
      Viswanathan R Chennimalai

      Delete
    5. ///(பெயர் விடுபட்டிருப்பின் மன்னிக்கவும் & தெரிவிக்கவும்)///

      எடிட்டர், சீனியர் எடிட்டர், ஜூனியர் எடிட்டர் ...பெயர்களை மறந்துட்டீங்க குருநாயரே ..!!

      (ஓடீர்ரா கைப்புள்ள ....)

      Delete
    6. மைக்செட்காரர், வடை-டீ பரிமாறிய பணியாளர்கள், ஹோட்டல் மேனேஜர் இவங்களையெல்லாம் கூட லிஸ்ட்டில் விட்டிருக்கேனே KOK?!!

      Delete
    7. அந்த சிவகாசி ஷ்பெசல் ரவுண்டு பன்னு (ரவூண்டு பன்னுன்னும் சொல்லலாம்) ........!?!?!:-)

      Delete
    8. ரெண்டு நாளா செயலர் கூடவே சுத்துனாலும் அந்த பன்னு மட்டும் ரவுண்டா ,சதுரமான்னு கூட என்னால கண்டுபிடிக்க முடிலை...:-(

      Delete
    9. ஈரோடு விஜய் @ அப்படியே எத்தனை பேர் என எண்ணிகையை சொன்னால் நல்லா இருக்கும்! அல்லது எல்லா பெயருக்கும் முன் வரிசை எண் போட்டால் கூட சந்தோசம் தான்! :-)

      Delete
    10. @ PfB

      லிஸ்ட்டில் இருப்பவர்கள் மொத்தம் 161 பேர்! விடுபட்டவர்கள் இன்னும் சிலர் இருக்கலாம்!

      Delete
    11. ///அந்த பன்னு மட்டும் ரவுண்டா ,சதுரமான்னு கூட என்னால கண்டுபிடிக்க முடிலை///

      முக்கோணம் தலீவரே! அதுவும் தலைகீழ் முக்கோணம் - செவப்பு கலர்ல! :P

      Delete
    12. நன்றி ஈவி

      Delete
    13. நன்றி ஈவி

      Delete
    14. அட ..எங்க ஊர் ரவுண்ட் பன்னுக்கும் ரசிகர்களா ? மறக்காமல் வாங்கிட்டால் போச்சு !

      Delete
    15. இந்த முறை வருகை தரும் நண்பர்கள் அத்தனை பேரையும் entry போடும் வேலையை நானே கையில் எடுத்துக் கொள்ளணும் என்று தோன்றுகிறது ; பட்டியலிலுள்ள நிறையப் பேரை இன்னமும் நல்ல பரிச்சயம் செய்து கொண்டது போலிருக்கும் !!

      Delete
    16. ///இந்த முறை வருகை தரும் நண்பர்கள் அத்தனை பேரையும் entry போடும் வேலையை நானே கையில் எடுத்துக் கொள்ளணும் என்று தோன்றுகிறது///

      சூப்பா்ங்க சாா்!!

      Delete
  52. ஆசிாியாின் புதிய பதிவு ரெடி!






































    😂😂😂

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்....கர்ர்....சே, ஏமாந்தே போயிட்டேன்...
      இந்த ஸ்மர்ஃப் களே இப்படித்தான்...

      Delete
  53. அடுத்த வாரம்...



    இதே நாளில்...



    திருவிழா ....




    ஆரம்பம்...





    தயாரா நண்பர்களே....:-)

    ReplyDelete
    Replies
    1. யேயேயே... ஏஏஏ...

      Delete
    2. ///யேயேயே... ஏஏஏ...///

      +1

      Delete
    3. ஏ அஜக் ...அஜக்...அஜக்...

      Delete
  54. நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டல் :

    இரத்தப் படலம் புத்தகத்தை முன்பதிவு செய்திருப்பவர்கள் அதை ஈரோடு விழாவில் பெற்றுக்கொள்ள விரும்பினால் தயவுசெய்து உங்கள் புக்கிங் நம்பருடன் பெயரையும் lioncomics@yahoo.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பிடுவது அவசியம்!

    குறைந்த நாட்களே மீதமிருப்பதால் நண்பர்கள் காலம்தாழ்த்திட வேண்டாமே ப்ளீஸ்?

    ReplyDelete
  55. ///வாராதோ வாரயிறுதிகள் ?!///

    வந்துருச்சு! ஆனாக்கா புதிய பதிவு தான் வரலை!

    ReplyDelete
  56. இப்ப சனிக்கிழமை மணி 10.30 என்பதை நினைவூட்டுகிறேன் ஆசிரியரே.!

    ReplyDelete
  57. இரத்தப்படலம் பற்றி எதுவும் தகவல் கசியுமோ, புது பதிவில்????

    ReplyDelete