Sunday, October 29, 2017

ஐம்பதிலும் பாடம் படிக்கலாமோ..?

நண்பர்களே,

வணக்கம். அரசியல்வாதியாகிட பாதித் தகுதி எனக்கு வந்திருக்கும் என்பேன் - கடந்த சில நாட்களின் திருமண அழைப்பிதழ் வழங்கும் படலத்தில் நான் போட்டிருக்கக் கூடிய வணக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ! சித்தப்பாவா ? மாமாவா ? மச்சானா ? என்ற கேள்விக்கே சரியான பதில் தெரியா பிருகஸ்பதி நான் ; இதுவரையிலும் போயிருக்கக்கூடிய கல்யாண வீடுகளிளெல்லாம் மாமூலான ஒரு மந்தகாச பொத்தாம் பொதுச் சிரிப்பைச் சிரித்து வைத்துவிட்டு, பந்திக்கு எப்டிக்கா பை-பாஸ் போடலாமெனத்  திட்டமிடும் ஐன்ஸ்டீன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! Oh yes - எனது தங்கையின் திருமணத்தையும், தம்பியின் திருமணத்தையும் active ஆகப் பார்த்துக்கொண்டதெல்லாம் ஹேஷ்யமான நினைவுகளாய் உள்ளன தான் ; ஆனால் இன்றைக்கோ "புள்ளைக்கு கல்யாணம்" எனும் பொழுது நிறைய விஷயங்கள்  ஷங்கர் படப் பிரம்மாண்டத்தில் தெரிகின்றன !!  ஒரு இந்தியத் திருமணத்தின் முழுப் பரிமாணத்தையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்புக் கிட்டும் பொழுது, இத்தனை இத்தனை காலமாய்  பந்தியில் தொந்தியை ரொப்பியபடிக்கே மொய் எழுதிவிட்டு நடையைக் கட்டிய அத்தனை திருமண வீடுகளின் பின்னணி மனிதர்களையும் நினைத்து மானசீகமாயொரு மகா நமஸ்காரம் செய்யத் தோன்றுகிறது ! ஒற்றைப் பிள்ளையைப் பெற்று, அதைக் கரை சேர்க்கவே நமது  நாக்கார் இத்தனை தொங்கு தொங்குகிறாரே - இந்த அழகில் மூன்று / நான்கைப் பெற்ற கையோடு, ஒவ்வொன்றையும் அதே வாஞ்சையோடு கட்டிக் கொடுக்கும் மனிதர்கள் சகலர்களையும் என்னவென்பது ? தெய்வம் சாரே / மேடம் - நீங்கள் ஒவ்வொருவருமே !! என்னிடம் மட்டும் அதற்கான அதிகாரம் இருப்பின், கன்னியாகுமரியில் ஆரம்பித்து EC சாலையில் லைனாக உங்கள் ஒவ்வொருவருக்குமே  சிலைகளும், அவற்றை நமது பறக்கும் பிராணிகள் கட்டணமிலாக் கழிப்பறைகள் ஆக்கிடாதிருக்கக் குடைகளும் சேர்த்தே நிர்மாணித்திருப்பேன் ! துரதிர்ஷ்டவசமாக அந்த அதிகாரம் என்னிடமில்லை என்பதால் இப்போதைக்கு சிலை செய்யும் கான்டிராக்டை மனதளவில் மட்டுமே விட முடிந்துள்ளது ! 

"அட...மிஷின் வாங்கணுமா ? அமெரிக்க போவோம் வாங்க !! கிராபிக் நாவல் போடணுமா ? முப்பதே நாட்களில் அசத்தலாய் ஏற்பாடு செய்தால் போச்சு ! ஏதாச்சும் காலெண்டர் அச்சிடணுமா ? கண்ணில் காசை மட்டும் காட்டினால் - பாக்கி சகலத்தையும் செய்து தருகிறேன் !" என்று "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்" ஜாடையில் இத்தனை காலம் நெஞ்சை நிமிர்த்தித் திரிந்தவனுக்கு - இன்றைக்கு ஒரு நாதஸ்வரக் குழுவைத் தேடுவதற்கு நாக்குத் தொங்குகிறது ; பலசரக்குச் சிட்டையினை ஏற்பாடு செய்வதற்குள் பற்பல பேய்முழிகள் முழிக்க அவசியப்படுகிறது ! வண்டி வண்டியாய் ஹாட்லைன் / கோல்டுலைன் என்று பீலா விட்டவனுக்கு இப்போது ஒரேயொரு  திருமணப் பத்திரிகையின் வாசகங்களை  எழுதிட முயன்றால் 'பெப்பே பெப்பெப்பேப்பே' என்று மட்டுமே கிறுக்கிட முடிகிறது ! அட...சகல பொறுப்புகளையும்  ஏற்றுக் கொள்ளும் wedding arrangers தான் இருக்கிறார்களே - அவர்களிடம் மொத்தமாய் ஒப்படைத்து விடலாமே என்றால், பாழாய்ப் போன மனசு கேட்க மாட்டேன்கிறது ! "ஆயுசுக்கு ஒருமுறை நிகழும் சமாச்சாரத்தையும் கூட  முகம்தெரியா ஒரு மூன்றாம் நபரிடம் ஒப்படைத்து விட்டு நீ என்ன கழுதையா மேய்க்கப் போகிறாய் ?  - nonsense !!" என்று அசிங்க அசிங்கமாய் ஆழ்மனசு திட்டுவதால் - "முப்பதே நாட்களில் திருமணம் நடத்தப் படிப்பது எப்படி ?" என்ற புக்கைத் தேடித் திரிகிறேன் ! So நேற்றுவரைக்கும் "ஆர்ட்பேப்பர் என்ன விலை ? அட்டை என்ன விலை ?" என்று விசாரித்து வந்தவன் இப்போது "எக்ஸ்கியூஸ் மீ...! சாயந்திர டிபனுக்கு இன்னா எஸ்டிமேட் ?? பஜ்ஜியா ? காரவடையா ?" என்று சமையல்காரரிடம் வினவி வருகிறேன் ! என் தொழில் சார்ந்த செலவினங்களைத் தாண்டிய எந்தவொரு ஞானமும் இல்லாதவன்,  "ஒரு ரூபாய்க்கு தேங்காய் கிடைக்குமா அண்ணே ..? புள்ளையாருக்கு உடைக்க வேண்டியிருக்கு !!" என்று கேட்டு பல்பு வாங்கும் கவுண்டர் ரீதியில், கல்யாணச் செலவுகள் ஒவ்வொன்றின் இன்றைய பரிமாணத்தையும் பார்த்தும், கேட்டும், மண்டையை மங்கு மங்கென்று சொரிந்து கொள்கிறேன் ! "என்னென்னமோ போடா மாதவா !"moments aplenty#

அப்புறம், அந்நாட்களில் கொலம்பஸ்களும், மார்கோ போலோக்களும் 'உலகை ஆராய்கிறேன் பேர்வழி' என்று புறப்பட்டு வழிநெடுக  அடித்திருக்கக்கூடிய, வெளியே தெரியா அத்தனை திருட்டுமுழிப் படலங்களையும் நமக்கொருமுறை கண்முன்னே கொணர்ந்து காட்டும் திறன் இந்தப் "பத்திரிக்கை தரும் படலத்துக்கு " உண்டென்பதையும் உணர்ந்திட முடிகிறது ! நாலு தெருக்களை பதினான்கு முறைகள் வட்டமடித்தும்  ஒற்றை முகவரியைத் தேடிப் பிடிக்கத் தெரியாது முட்டையிட்டு நிற்கும் நிலையில் -  "அச்சச்சோ - நீங்க கிழக்கு கல் மண்டபத்துக்குல்லே வந்திருக்கீங்க ; மேற்கு கல் மண்டப ரோடு அப்பாலிக்கால்லே  இருக்குது  !" என்று டீ கிளாஸை கையிலேயே 360 டிகிரிக்கு லாவகமாய்ச் சுழற்றிக் கொண்டே வழி சொல்லும் சாலையோர ஆட்டோக்காரர் முன்னே நாம் 'ஓவென்று' கதறி அழுதால் அசிங்கமாக இருக்கும் என்பதால் "தாங்க்ஸ் அண்ணே !" என்றபடிக்கே, நடையைக் கட்டிக்கொண்டு மனசுக்குள்ளேயே கூகுள் maps மென்பொருளை, வன்பொருள்படும் வார்த்தைகளால் திட்டும் கணத்தில் - நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல்களுக்குள்ளேயும் வழி கண்டறிந்து முன்னேறிய மனிதர்களை நினைத்து ஸலாம் போடாது இருக்க முடியவில்லை !!(ஆத்தாடியோவ்...எத்தனை நீளமான வரி !!)

கறிக்குழம்பை மணக்க மணக்க சமைத்து, ரசித்து, ருசித்த கையோடு - சும்மா Dreamliner விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்த சொகுசில் குட்டியாயொரு மதியத் தூக்கத்தில் திளைத்துக் கிடப்போரை - "மச்சான்...அத்தாச்சி...அப்பச்சி... பத்திரிகை குடுக்க வந்திருக்கோம் !" என்றபடிக்கே உசிரை வாங்கும் அந்தக் கணங்களுமே - "பத்திரிக்கை விநியோக சாகசங்களின்" ஒரு பகுதியே என்பதை உணர்ந்து வருகிறேன் ! ஒரு வருஷத்து காமிக்ஸ் அட்டவணையை வெற்றியோடு முடிக்கும் கணத்தில் கிடைக்குமொரு ஆயாசம் கலந்த சந்தோஷம் -  ஒவ்வொரு ஏரியாவிலும் தர வேண்டிய அட்டைகளின் பட்டியலையும் பூர்த்தி செய்யும் நொடியில் எட்டிப் பார்ப்பதுமே இந்த அனுபவத்தின் ஒரு பகுதி ! ஒன்றை மட்டும் இப்போதைக்குத் தீர்மானித்துள்ளேன்  : ஆண்டவன் துணையோடு நவம்பர் 30-ல் திருமணத்தை சந்தோஷமாக நடத்தி முடிக்கும் கணத்தில், அமரர் சாவி எழுதிய "வாஷிங்டனில்   திருமணம்" புக்கைப் படித்தே தீர வேண்டுமென்று இருக்கிறேன் !! உள்ளூரில் ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்திடவே இந்தத் தடமாற்றமெனில், "வாஷிங்டனில் கல்யாணம் " என்றால் ???? ஆத்தாடி...!!! 

உடன்பிறந்த தமக்கைகளும், அவர்களது பொறுமைசாலித் துணைவர்களும் முழுவீச்சில் வழிகாட்டி வருவதால் - அந்த சூனா பானா கெத்தை maintain பண்ண முடிகிறது எனக்கு ! இல்லாவிட்டால் இந்நேரத்துக்கு என் பிழைப்பு "சிலாக்கி டும்மா" தான் என்பேன் !! அதிலேயும் சைக்கிள் கேப்பில், அவர்கள் கவனிக்காத நேரங்களில், பொதுவான சம்பாஷணையில் நானுமே ஈடுபட்டிருப்பது போல் "ஊம்" கொட்டிக் கொண்டே, மேஜைக்கடியில் வைத்து லக்கி லூக்கை எடிட் செய்திட முயலும் குரங்குச் சேட்டைகளும் இல்லாதில்லைதான் ! ஷப்பா....எது எப்படியோ இந்தத் திருமண நிகழ்வெனும் மெகா முயற்சியின் வெற்றி - ஒன்றல்ல, ரெண்டல்ல - ஒரு டஜன் "குண்டு புக்குகளைத்" தயாரிக்கும் லாவகத்தை அடியேனுக்கு வழங்கிடுமென்றே தோன்றுகிறது !! 

Moving on to work - இம்மாத இதழ்கள் நான்குமே நவம்பர் 1-ம் தேதி இங்கிருந்து புறப்பட்டிடும் - 2018-ன் அட்டவணையோடு !மாதத்தில் பாதி நாட்கள் நான் அலுவலகத்திலேயே இல்லையென்ற போதிலும், நமது டீமை ரிமோட் கண்ட்ரோலில் இயக்கினாலும் அவர்கள் அதே லாவகத்தோடு செயல்படப் பழகி விட்டதால் - normal service தொடர்கிறது என்பதில் ஏகப் பெருமிதம் எனக்கு !  And இம்முறை சந்தா நண்பர்களுக்கு மட்டுமே என்றில்லாது - "லக்கி லூக்கின் "ஒற்றைக்கை பகாசுரன்" இதழ் வாங்கிடக்கூடிய அனைவருக்குமே அட்டவணை பிரீயாகக் கிடைக்கும் ! (அது ஏன் "கார்ட்டூன் வாங்குபவர்களுக்கு மட்டும்" என்ற ஏற்பாடு ? Lady S கதை வாங்குவோரெல்லாம் சந்தா கட்ட மாட்டார்களென்று தீர்மானித்து விட்டீர்களா ?" என்று இன்னொரு பஞ்சாயத்து வேண்டாமே - ப்ளீஸ் ?) ஏற்கனவே நீங்கள் இங்கே பார்த்தான அட்டவணையே என்றாலும், அதன் வடிவமைப்பில் கொஞ்சம் சுவாரஸ்யமும் உண்டு ! So நிதானமாய்ப் புரட்டி, மனதில் அசை போட்ட பின்பாக சந்தாக்களில் இணைந்திட / புதுப்பித்திட தீர்மானித்தீர்களெனில் - எங்களது நன்றிகளும், வணக்கங்களும் உங்களுக்கு உரித்தாகுக ! And சந்தாக்கள் பற்றிய தலைப்பில் இருக்கும் வேளையில் நமது அன்பான அனாமதேயரின் அடுத்த கிபிட் - அவரது வரிகளிலேயே  : "Can you please award another A+B+C+D  (ST Courier) Subscription to சேந்தம்பட்டி போர்வாள் சேலம் டெக்ஸ் விஜயராகவன்?" So போர்வாள் சாருக்குமொரு சந்தா பார்சல்லல்ல !! 

இதோ - இம்மாத இதழ்களின் கார்ட்டூன் சந்தாவின் அட்டைப்பட preview :
வழக்கம் போல - ஒரிஜினல் டிசைனே ; பின்னணி வர்ண மெருகூட்டல்களோடு ! படைப்பாளிகளின் உருவாக்கமே நயமாய் இருக்கும் வேளைகளில், அவற்றை புதிதாய் வரையவோ ; மாற்றங்கள் செய்யும் சாக்கில் மொக்கையாக்கிடவோ இப்போதெல்லாம் மனசு ஒப்புவதில்லை ! And இதோவொரு உட்பக்க டீசருமே : 
லக்கி லூக்கின் பொற்காலமாக நாம் பார்த்திடும் அந்த எழுபதுகளின் ஆரம்பத்தில் உருவான கதையிது என்பதால் -அழகான கதையோட்டத்தோடு, இயல்பான நகைச்சுவையும் கைகோர்த்திருப்பது தெளிவாகத் தெரிகிறது ! இந்தாண்டின் முதல் (புது) லக்கி சாகசமுமே முந்தய லக்கி ஹிட்ஸ் போல சாதிக்கிறதாவென்ற ஆவலில் காத்திருக்கிறோம் ! 

நவம்பரில் black & white கோட்டாவில் காத்திருப்பவர் மர்ம மனிதன் மார்ட்டின் ! இதோ அவரது MYSTERY SPECIAL இதழின் அட்டைப்படமும் ! இரு தனித் தனிக் கதைகள் அடங்கிய இந்த twin அல்பத்திற்கான அட்டைப்படம் - இரு ஒரிஜினல் மார்ட்டின் ராப்பர்களின் சங்கமம் - நமது ஓவியரின் கைவண்ணத்தில் ! 
இந்த டிசைனுமே நமது ஓவியர் 2010 வாக்கில் போட்டு வைத்ததொன்று ! அந்நாட்களில் நமது இதழ்கள் வெளிவந்த வேகம், உசைன் போல்ட் ரகமல்ல என்பதால் - ஓவியருக்கு வேலைதரவே சிரமமாக இருக்கும் ! "எப்படியேனும் ; என்றைக்கேனும் போட்டே தீருவோம்" என்ற ரகத்தில் என்மனதில் தங்கி நிற்கும் கதைகளுக்கு அட்டைப்படங்களை முன்கூட்டியே போட்டு வைப்பது இத்தகைய slow தருணங்களில் நமது வாடிக்கை ! So அன்றைக்கே சுட்டு தயாராய்க் காத்திருந்த வடையை  தற்சமயம் லபக்கென்று கடைவாயில் ஒதுக்கிக் கொண்டேன் ! இம்முறை கோழி கீச்சல் பாணி ஓவியங்களின்றி, அழகாய், தெளிவான சித்திரங்களோடு 2 கதைகளுமே அமைந்திருப்பது highlight ! And இரு கதைகளுமே நமது கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பே ; எனது டிங்கரிங் சமாச்சாரங்கள் ஏதுமின்றி ! எப்போதும் போலவே அந்த லாஜிக் தேடல்களை சற்றே ஓரம்கட்டிவிட்டு, மார்டினோடு கதைகளுக்குள் புகுந்தீர்களெனில் நிச்சயமாய் கதாசிரியர்களின் கற்பனை வளத்தைக் கண்டு வாய் பிளக்காதிருக்க முடியாதென்பேன் ! பாருங்களேன் இந்த சாம்பிளை : 
பட்டியலில் கடைசியாய் நின்றாலும், இம்மாதம் அதிரடி சரவெடி கொளுத்தக் காத்திருப்பது நமது 'தல' தோன்றும் "டிராகன் நகரம்" தான்என்பதில் எனக்கு சந்தேகமில்லை ! அந்த "பங்ச்சர் first ; டிங்சர் next !!" பாணி அதிரடிகள் டெக்ஸ் ரசிகர்களுக்கொரு திகட்டா அனுபவமாய் அமைய உள்ளது சர்வ நிச்சயம் - moreso உட்பக்கங்கள் மினுமினுக்கும் வண்ணத்தில் எனும் போது !! ஏற்கனவே இதனைப் படித்திரா புது வாசகராய் நீங்கள் இருப்பின் - உங்கள் கைகள் எட்டும் தூரத்துக்கு நட்பூசோ ; சொந்தம்ஸோ இருக்காது பார்த்துக் கொள்ளுங்களென்பேன் - அவர்களது மூக்குகள் பிழைத்துப் போகட்டுமே என்ற நல்லெண்ணத்துடன் !!  இதோ டி.ந.வின் உட்பக்கங்கள் மீதானதொரு பார்வை : 
டிராகன் நகரத்தின் உட்பக்கத்தில் போட்டிட போட்டோக்களை அனுப்பிட இயன்ற மட்டிலும் கூவியதில் 220+ படங்கள் மாத்திரமே கிட்டியுள்ளது ! இன்னுமொரு 250+ நண்பர்கள் இது தொடர்பாய் சிரத்தை எடுத்துக் கொள்ளாததால் அவர்களது பிரதிகள் நார்மலாகவே அமைந்திடும் ! So இனிமேலும் அனுப்பிட வேண்டாமே - ப்ளீஸ் ? And அடடா..அடடடடா.....நம்மவர்களின் போட்டோக்களை பார்க்கும் பொழுது என் கண்ணே பட்டுவிடும் போலுள்ளது ; ஆளாளுக்கு அசத்தோ அசத்தென்று அசத்துகிறீர்கள் !! ஒருங்கிணைக்கப்பட்ட போட்டோக்களின் files என்னிடம் jpeg format-ல் தான் உள்ளதென்ற போதிலும், அவற்றைப் பொதுவில் பகிர்வது முறையாக இராதென்று மனத்துக்குப் பட்டது ! So they stay discreet !!

"டிராகன் நகரம்" அட்டைப்படத்தினை பிரதிகள் டெஸ்பாட்ச் ஆகும் தினத்தன்று கண்ணில் காட்டுகிறேன் - என்ற செய்தியோடு புறப்படுகிறேன் தூக்கத்தைத் தேடி !! Bye all ....see you around !!  

305 comments:

  1. நண்பர்கள் அனைவ௫க்கும் பேய்களும் உறங்கும் நள்ளிரவு வணக்கம்!!!@!

    ReplyDelete
    Replies
    1. பதில் வணக்கம் சரவணன் திருமணத்தில் சந்திப்போம்

      Delete
  2. டிராகன் நகரத்தை காண ஆவலாய் நான்

    ReplyDelete
  3. லக்கி லூக் அட்டைப் படம் செம சூப்பர்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் டெக்ஸ் விஜய ராகவன்
    வாழ்க அனாமதேயர்கள்
    வளர்க காமிக்ஸ் நேசம்

    ReplyDelete
  5. "தல"யின் டிராகன் நகரம் ஏதோ ஒ௫ தூரத்து நாளில் பால்யத்தில் படித்த மாதிரி உள்ளது. டீசர் இதழின் வெற்றியை உறுதி செய்துவிட்டது.வண்ணத்தில் படிக்க ஆவலோ ஆவல்@!!!!

    ReplyDelete
    Replies
    1. அறிவிக்கப்பட்ட அன்றே உறுதியான வெற்றிகளுள் இதுவும் ஒன்று நண்பரே...

      வண்ணத்தில் படிக்க நானும் கூட ஆவலுடன்..

      கிட்டத்தட்ட எல்லா சம்பவங்கள் ஓரளவு தெரயும்னாலும், வண்ணத்தில் அந்த வசீகரம் எப்படினு பார்க்கனும்...

      Delete
  6. 10 வது இடமாவது கிடைத்ததே😭😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. பல்லாயிரம் மைல்கள் தாண்டி இருந்தாலும் 10வது இடம்.

      பல நூறு மைல்கள் மட்டுமே தூரம், ஆனால் தூங்கி எழுந்து பார்த்தா 50தாண்டிட்டு...ஹூம்...

      Delete
  7. வாழ்த்துக்கள் டெக்ஸ் விஜயராகவன்&
    அனாமதேயர்.
    வாழ்க காமிக்ஸ் நேசம்.!!!

    ReplyDelete
  8. Kalyanham Pannhippar ! Veetai Kattippar ! Share the experiance Sir !
    You are welcome !

    ReplyDelete
  9. நண்பர் STV அவர்களுக்கும்,அவருக்கு சந்தா செலுத்திய அந்த அரூப மாயாவி அவர்களுக்கும் நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 💐💐💐💐💐

    ReplyDelete
  10. அட்டைப் படத்தில் மர்ம மனிதர் மார்ட்டின் என்னைப் பார்த்து முறைப்பது போல் தெரிவது எனக்கு மட்டும் தானா?

    ReplyDelete
  11. காமிக்ஸில் முட்டி மோதி ஜெயித்த தங்களுக்கு கல்யாண காரியங்கள் ஒரு வேலையா...துணிந்து இறங்கி விட்டால் நாளை நீங்களே கல்யாண புரோக்கராக மாறி விடுவீர்கள்.
    ஆதலால் பயந்த படியே நம்ம கல்யாண வேலையை முடித்து விட்டு வாருங்கள் இரண்டாம் உலகத்திற்குள்....👏👏👏👏👏

    ReplyDelete
  12. நவம்பர் படைப்புகள் அனைத்தும் Classics. Waiting to enjoy!

    ReplyDelete
  13. மார்ட்டின் கதைகளின் ஓவியங்கள் அசத்தலாக உள்ளனா....இது போன்ற கதைகளை ஏன் முன்பே வெளியிட வில்லை..செய்து இருந்தால் வருடத்திற்கு ஒரு ஸ்லாட் என்பதை 2அல்லது 3ஸ்லாட் செய்து இருப்பாரோ என்று தோன்றுகிறது. ...வாவ்....

    ReplyDelete
  14. வாஷிங்டனில் திருமணம் அற்புதமான நகைச்சுவை படைப்பு ஒரு ஆண்டிற்கு முன்பு படித்து இருக்கிறேன் அதற்கு சற்றும் குறையாதது தங்கள் மைந்தன் திருமண பத்திரிகை வைப்பு படலம். Need more updates.

    ReplyDelete
  15. இந்த வார பதிவில் தலயின் அட்டையை ரசிக்கலாம் என்று காத்திருந்தேன்.ஏமாற்றி விட்டீர்களே சார்😳😳😳😳😭😭😭

    ReplyDelete
    Replies
    1. சிங்கம் சிங்குளாத்தான் வரும் சாரே...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  16. ஆசிரியரின் எழுத்து நடை மணிமகுடம் என்றால் அதில் மிளி௫ம் நகைச்சுவை பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்கிறது!!!!!

    ReplyDelete
  17. Dear Edi,

    Lucky Cover is stunning.. Martin's could have been better. Looking forward the classic Tex story in color.

    ReplyDelete
  18. லக்கி லூக் அட்டைப் படம் அள்ளுகிறது... கதையை படிக்க ஆவலாக இருக்கிறது. இம்மாதம் ஒரு அருமையான கூட்டணி. கார்ட்டூன் சூப்பர் ஸ்டார் லக்கி, ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் டெக்ஸ், மிஸ்ட்ரி சூப்பர் ஸ்டார் மார்ட்டின் என கலக்கல் காம்போ.

    சும்மாவா சொல்லி வச்சாங்க... கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார்ன்னு... எது எப்படி இருந்தாலும் மணமக்கள் வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் டெக்ஸ் விஜய ராகவன் பாஸ்!

    ReplyDelete
  20. கல்யாண வேளை முஸ்தீபுகளை உங்கள்அ ருகிலிருந்தே பார்த்தது போல ஒரு உணர்வு சார். அனைத்து நிகழ்வுகளும் மன நிறைவு மற்றும் மகிழ்ச்சியுடன் நிறைவேற வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்..

      Delete
    2. வேண்டும் வேண்டும் சிங்கத்தின் சிறு வயதில்

      Delete
    3. சிங்கத்தின் சிறுவயதில்...

      Delete
    4. சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்...

      போராட்டம் ஓங்குக!

      Delete
    5. நல்ல வேளை தப்பித்தீர்கள் எடிட்டர் சார்.
      இல்லையென்றால் மக்கள் உங்கள் கல்யாண கலாட்டக்களை ( சிங்கத்தின் சீறும் வயதில்) கேட்டு போராடியிருப்பார்கள்.

      Delete
  22. நமது சிறு வலை வரலாற்றில் முதல் முறையாக ஒரே மாதத்தில் 11 பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாவ்...வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்...

      Delete
    2. பன்னிரண்டாவது பதிவும் வாங்கி விடுவோம்ல!!!
      நாங்கலாம் அப்பவே அப்படி,
      இப்ப சும்மா விட்டு விடுவமா?

      Delete
  23. நான் எனது மைத்ததுனர் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் காமிக்ஸ் இல்ல மணமக்களை பதினாறும் பெற்று சிறப்பாக வாழ ஆண்டவன் அருள் வழங்கும்படி ஆண்டவனை வேண்டி மணமக்களை மனதாரா வாழ்த்துகிறேன். 'வாழ்க பல்லாண்டு'

    ReplyDelete
  24. அதிகாலை வணக்கம்

    ReplyDelete
  25. /// நமது அன்பான அனாமதேயரின் அடுத்த கிபிட் - அவரது வரிகளிலேயே : "Can you please award another A+B+C+D (ST Courier) Subscription to சேந்தம்பட்டி போர்வாள் சேலம் டெக்ஸ் விஜயராகவன்?" So போர்வாள் சாருக்குமொரு சந்தா பார்சல்லல்ல !! ///

    அன்பான அனாமதேயாவுக்கு பாராட்டுகளும், ஹிஹி அதிரடிபுதிரடி மாம்ஸ்க்கு வாழ்த்துகளும். ..

    இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க ...!!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் டெக்ஸ்,அன்புள்ளம் கொண்ட அனாமதேயாவுக்கு பாராட்டுகளும்.

      Delete
    2. வாழ்த்துக்கள் டெக்ஸ்.

      Delete
    3. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே...!!!

      Delete
    4. எம்மாம் பெரிய்ய்ய மனசு

      Delete
    5. வாழ்த்துக்கள் டெக்ஸ் விஜயராகவன் சார் . பெரிய மனம் படைத்த அன்பான அனாமதேயாவிற்கு மிகப் பெரிய நன்றிகள் .

      Delete
  26. //Can you please award another A+B+C+D (ST Courier) Subscription to சேந்தம்பட்டி போர்வாள் சேலம் டெக்ஸ் விஜயராகவன்?" So போர்வாள் சாருக்குமொரு சந்தா பார்சல்லல்ல !! //
    வாழ்த்துக்கள் டெக்ஸ் விஜயராகவன்.

    ReplyDelete
  27. Sir pls do not worry about delay we re with you . Pls spend ur time more on Junior editor's wedding arrangement

    ReplyDelete
  28. // Moving on to work - இம்மாத இதழ்கள் நான்குமே நவம்பர் 1-ம் தேதி இங்கிருந்து புறப்பட்டிடும் - 2018-ன் அட்டவணையோடு !//
    காலையில் ஒரு இனிமையான தகவல்.
    // "லக்கி லூக்கின் "ஒற்றைக்கை பகாசுரன்" இதழ் வாங்கிடக்கூடிய அனைவருக்குமே அட்டவணை பிரீயாகக் கிடைக்கும் !//
    நல்ல திட்டம் சார்,இந்த முடிவு பலருக்கு சவுகர்யமாக இருக்கும்.

    ReplyDelete
  29. சார் அட்டைம் படங்கள் அனைத்தும் அருமை...லக்கி பின்னிப் பெடலெடுக்கிறார்...கல்யாணக்களை நம்ம பிளாக்லய்ம் பட்டய கிளப்புது.....நகைச்சுவை கலந்த அட்டகாசமான பதிவு...

    ReplyDelete
  30. // மார்டினோடு கதைகளுக்குள் புகுந்தீர்களெனில் நிச்சயமாய் கதாசிரியர்களின் கற்பனை வளத்தைக் கண்டு வாய் பிளக்காதிருக்க முடியாதென்பேன் ! //
    எப்போதுமே நம்ம ரிப்போர்ட்டர் ஜானியும்,மார்ட்டினும் வாசிப்பில் ஒரு அசாத்திய அனுபவத்தை நமக்கு அள்ளி வழங்குவார்கள்,அந்த வகையில் மார்ட்டினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  31. விக்ரம் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள், மார்டினின் கதை எனறாலே சந்தோசம் தான்

    ReplyDelete
    Replies
    1. ஓ ஞானும் மார்டின் பார்ட்டியாக்கும்

      Delete
  32. Drogan nagaram book second time patikka waiting......

    ReplyDelete
  33. போர்வாள் சார்வாளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. ஒரு வருடத்திற்கு பின் தலைகாட்டும் மார்டின் அவர்களை
    அன்போடு,
    ஆவலோடு,கொஞ்சம்
    திகிலோடு,
    வரவேற்கிறேன்.

    ReplyDelete
  35. பட்டாசு நகரில் இருந்து, டெக்ஸ் (கரூர்)நகருக்கு வருகை தரும் டெக்ஸின் டிராகன் நகரத்தை
    அன்புடனும் ஆவலுடனும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் செல்லும் எல்லா நகரும் பட்டாசு நகர் தான் நண்பரே...

      இம்முறை பட்டாசு வெடிக்கும் பேனலுக்கு பேனல்...

      Delete
  36. //// "Can you please award another A+B+C+D (ST Courier) Subscription to சேந்தம்பட்டி போர்வாள் சேலம் டெக்ஸ் விஜயராகவன்?" So போர்வாள் சாருக்குமொரு சந்தா பார்சல்லல்ல !!////...
    🙏🙏🙏🙏🙏
    ....ஆண்டவனே...
    கண்கள் கலங்கிட்டது..
    இதயம் ஆடிப்போனது..
    அந்த நண்பரின் அன்பு கண்டு எழுத ஏதும் வார்த்தைகள் வரவில்லை..
    காமிக்ஸ் என் உயிர்...!!!
    காமிக்ஸ் நண்பர்கள் என் உயிரைவிட மேலானவர்கள் என்பதை மட்டுமே இன்று பதிவு செய்கிறேன்...
    நெகிழ்ச்சி...அன்பரே...

    இத்தையை அன்பான உள்ளங்களை உருவாக்கி உலவ விட்டதே இந்த
    தமிழ் காமிக்ஸ் சாதித்த சாதனை...💖💖💖💖
    இந்த உயர்ந்த உள்ளங்களின் துணை இருக்கும் வரை நூறாண்டு, ஆயிரமாண்டு காலங்களுக்கும் காமிக்ஸ் வாழும்...

    ReplyDelete
  37. அந்த அன்பான நண்பருக்கும்....அன்பு பரிசை பெறும் போர் நண்பருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..:-)

    ReplyDelete
    Replies
    1. தேங்யூ தலீவரே...!!!

      சி.சி.வ. இருக்குமா இம்முறை???

      Delete
    2. அட...ஞாயிறு காலையினில் சிக்கன வாங்குவதா ? மட்டன் எடுப்பதா ? என்ற குழப்பத்தில் இருக்கும் தலீவரை உசுப்பி விடுவானேன் சார் ? அப்புறம் சங்ககிரிக்கு பஸ் பிடிக்கும் சிரமம் தலைதூக்குமல்லவா ?

      Delete
  38. விஜயன் சார் கல்யாண வேலைகளில்
    நானும் நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு உதவி செய்ய உள்ளோம்.
    பிற கல்யாண வேலைகள் அனைத்தையும் நீங்கள் பார்த்துக்கொள்ள
    மிக கடினமான பணியான பந்தியில்
    உண்ணும் வேலையை நாங்கள் அனைவரும் செய்ய உள்ளோம். Ok.

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா...
      கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லப்படாது கணேஷ் சார்...😁😁😁

      Delete
    2. ஞான் ரெடி

      அவுக் அவுக் சங்கம்
      தல்லைவர்

      Delete
  39. நல் காலை பொழுது.
    வணக்கங்கள்.

    ReplyDelete
  40. லக்கியின் அட்டைப்படம் கலக்கல் ...அடுத்த வருட அட்டவனை இதழை காண மிக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன்..

    ReplyDelete
  41. " கல்யாணம் பண்ணி பார் ,வீட்டை கட்டி பார்." என்று அந்த காலத்திலே சொன்னது சரி போச்சு.


    சுவாரசியமான பதிவு. !

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஷப்பா....எது எப்படியோ இந்தத் திருமண நிகழ்வெனும் மெகா முயற்சியின் வெற்றி - ஒன்றல்ல, ரெண்டல்ல - ஒரு டஜன் "குண்டு புக்குகளைத்" தயாரிக்கும் லாவகத்தை அடியேனுக்கு வழங்கிடுமென்றே தோன்றுகிறது !!


      #####


      விரைவிலியே இது செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் சார்..:-)

      Delete
  43. சந்தா பரிசு பெற்ற 'சேந்தம்பட்டியின் போர் வாள்' டெக்ஸ் விஜய்'க்கு நெகிழ்வான வாழ்த்துகள்!! You deserve it, buddy!

    மீண்டும் மீண்டும் தன் ஈகை குணத்தை சத்தமின்றிக் காட்டிவரும் அந்த 'அன்புள்ள அநேமதேயா'க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றிகளும்! _/\_

    ( 'சண்டைக் கோழி' அப்டீன்றதைத்தானே டீசன்ட்டா 'போர் வாள்'னு சொல்லியிருக்கீங்க அ.அநேமதேயா சார்?!! ;) )

    ReplyDelete
    Replies
    1. நன்றி செயலரே...!!!

      சண்டைக் கோழியா நானா...???
      ஹூம் அப்பாவிங்க நானு..😜😜😜

      பூ வை பூ னு சொல்லலாம்;
      புய்ப்பம் னு சொல்லலாம்;
      நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்... மொமென்ட்... ஹா...ஹா...😁😁😁😁

      Delete
    2. பாத்து கோழின்னதும் கரூர்க்காரர்
      ஓடி வர்ரார். டெக்ஸ் ஜாக்கிரதை.

      Delete
  44. டெ.வி மச்சக்கார மனுசன்
    வாழ்க அந்த மகானுபாவ சந்தா கொடையாள கர்ணன்

    j

    ReplyDelete
    Replies
    1. இந்த சிறிய வட்டத்தில் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் ஐயன்மீர்
      வாழ்க உம் தொண்டு

      Delete
  45. அருமையான பதிவு சார்...
    பத்திரிகை வைக்கும் படலம் உண்மையில் கடினமான பணிதான்; 3தங்கைகளுக்கு பத்திரிகை வைத்து அழைத்தபோது என்னுடைய அனுபவங்களை உங்களின் இந்த பதிவு மீட்டி விட்டது. என் தந்தை அரசு பணி காரணமாக வெளியூரில் வேலைனு போயிடுவார்; எல்லா சொந்த காரங்க வீட்டுக்கும் எங்க அம்மாவோட போய் பத்திரிகை வைத்து, வைத்து, அழைத்து...ஸ்அப்பா.. எத்தனை கூல் டரிங்ஸ் ப்ராண்டு சேலத்தில் இருக்கு என அப்பத்தான் தெரிந்தது.

    உங்கள் பதிவிற்கு நடுசாமத்திலும் விழித்திருக்கும் இரவு காவலர்களுக்கு இம்முறையும் கொளுத்த வேட்டையாக அமைந்தது. இயல்பான தனி நடையில் மீண்டும் ஒரு தனித்துவ பதிவு...

    உங்கள் கூடவே பயணம் செய்து பார்த்த திருப்தி...

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வார்த்தைகள்.

      Delete
  46. நண்பர்களே இது ஆசியரின் பதினோராவது பதிவு,இது மிகப் பெரிய சாதனை. பன்னிரண்டாம் பதிவை வாங்கி சாதனை நிகழ்த்துவோம்.அதனால் பின்னூட்டங்களைப் போட்டுத் தாக்குவோம் .
    "போட்டுத் தாக்கு போட்டுத் தாக்கு"
    பின்னூட்டங்களைப் போட்டுத் தாக்கு!!.
    போட்டுத் தாக்கு பின்னூட்டங்களைப் போட்டுத் தாக்கு!!!

    ReplyDelete
  47. நவம்பர் மாதம் செம வி௫ந்து காத்துள்ளது நண்பர்களே!!!!!
    டெக்ஸ் வில்லர், மார்ட்டின் ,லக்கி லூக் ,ஷானியா என அதகளம் காத்துள்ளது. நான்கு விதமான களங்கள் நமக்கு வி௫ந்து படைக்கக் காத்துள்ளன.இதழ்கள் வ௫ம் நாள் தி௫நாள் தான் எமக்கு!!!.

    ReplyDelete
  48. காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே _/|\_
    .

    ReplyDelete
  49. கோவமாக இருந்தாலும் சரி, பாசமாக இருந்தாலும் சரி, அதை முரட்டுதனமாக காட்டும் கோவக்கார கோவாலு டெக்ஸ் விஜயராகவனுக்கு வாழ்த்துகள் பல.

    அந்த அனாமதேய நண்பரின் கவனத்திற்கு, சேந்தம்பட்டியில் என்னைபோன்ற அப்பாவி நபர்கள் (கார்சனின் கடந்த காலம் வகையறா அப்பாவி இல்லைங்கோ)உள்ளார்கள் என்பதை சொல்லிகொண்டு.......

    ReplyDelete
    Replies
    1. அதி கோவக்கார கோவாலு சுந்தரனுக்கு நன்றிகள்... (கடவுளே நன்றி சொன்னா மூஞ்சிலியே குத்துவாப்ளயே, சரி சமாளிப்போம்)

      Delete
    2. மருத்துவரே,ஹா,ஹா,ஹா.

      Delete
  50. // அன்பான அனாமதேயரின் அடுத்த கிபிட் - அவரது வரிகளிலேயே : "Can you please award another A+B+C+D (ST Courier) Subscription to சேந்தம்பட்டி போர்வாள் சேலம் டெக்ஸ் விஜயராகவன்?" So போர்வாள் சாருக்குமொரு சந்தா பார்சல்லல்ல !! //

    அந்த நல்ல மனம் கொண்ட அநாமதேயர் யாருங்க சார் _/|\_

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் போர்வாள் அவர்களே _/|\_
    .

    ReplyDelete
  51. ////அதிலேயும் சைக்கிள் கேப்பில், அவர்கள் கவனிக்காத நேரங்களில், பொதுவான சம்பாஷணையில் நானுமே ஈடுபட்டிருப்பது போல் "ஊம்" கொட்டிக் கொண்டே, மேஜைக்கடியில் வைத்து லக்கி லூக்கை எடிட் செய்திட முயலும் குரங்குச் சேட்டைகளும் இல்லாதில்லைதான் ! ////

    ஹா ஹா ஹா! அட்டகாசம் சார்! :)))

    ReplyDelete
    Replies
    1. பயண கட்டுரை, இதபோன்ற அனுபவ கட்டுரை, புத்தகங்கள் அனுப்பும் படலம் போன்றவற்றில் வழக்கத்தை விட 1% நகைச்சுவை மிளிர்வது வழக்கந்தானே செயலரே...!!! இம்முறை இன்னும் டாப்பு..

      Delete
  52. கல்யாணத்தை செய்து பார் வீட்டைக்கட்டி பார் என்று சும்மாவா சொன்னார்கள். இதில் இரண்டாவது அனுபவம் ஒரு முறை தான் கிடைக்கும். ஆனால் முதலாவது நமது நெருங்கிய உறவினர்கள் எண்ணிக்கையை பொருத்து அமையும்.

    பத்திரிகை கொடுப்பதில் ஞாயிறு மிக முக்கியமான நாள், அன்றுதான் பல குடும்பத்தலைவர்களை வீட்டில் பார்த்து அழைப்பு விடுக்க முடியும்.

    நமது வீட்டைச் சுற்றி உள்ள நண்பர்களை வீட்டில் உள்ள பெண்களை கொண்டு பத்திரிகை கொடுக்கலாம்.

    சமையல்காரன் - ஊருக்குக்குள் திருமணங்கள் செல்லும் போது அங்கு சாப்பாடு நன்றாக இருந்தால் அவர்கள் முகவரி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்; நமது வீட்டில் திருமணம் வரும் போது உபயோகபடும்.

    பத்திரிகை கொடுக்கும் போது "கண்டிப்பாக குடும்பத்துடன் வரவேண்டும்" என சிரித்த முகத்துடன் சொல்வது முக்கியம்.

    திருமண நாள் அன்று அன்று வருபவர்கள் (தெரிந்தவர் தெரியாதவர்) அனைவரையும் அரசியல்வாதி போல் வாங்க வாங்க முதலில் டிபன் சாப்பிடுங்கள் என சொல்வது மிக முக்கியம்.

    வீட்டில் உள்ள பெண்களை (குழந்தை & பெரியவர்களை) மேடை பக்கம் மற்றும் வரவேற்பு அறை பக்கம் இருந்து வேலை பார்க்க வேண்டும்.

    ஆண்கள் அனைவரும் வெளி வேலைகளிலும் உணவு பரிமாறும் இடத்தில் இருந்து விருந்தாளிகள் அனைவரையும் நன்றாக கவனித்து கொள்ள சொல்ல வேண்டும். உணவு பரிமாறும் இடத்தில் தெரிந்தவர் தெரியாதவர் அனைவரையும் நன்றாக சாப்பாடு போட்டு கவனிக்க வேண்டும். விருந்தாளிகளை சாப்பாட்டில் திருப்தி செய்துவிட்டால் கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.

    எனக்கு உணவு பரிமாறும் இடத்தில் வேலை செய்வது ரொம்ப பிடிக்கும்; எல்லோரும் பரிமாறிவிட்டு கடைசி பந்தியில் நெருங்கிய சொந்தங்களுடன் அன்றைய நிகழ்ச்சிகளை பேசிக்கொண்டே சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும்.

    இன்னும் நிறைய சொல்லலாம்.....

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு பழைய நினைவுகளை கிள்ளி விட்டதால் நானும் எனது அனுபவங்களை எழுதிவிட்டேன்.

      Delete
    2. எல்லாம் சரி பரணி...

      ஆனா,
      ///நமது வீட்டைச் சுற்றி உள்ள நண்பர்களை வீட்டில் உள்ள பெண்களை கொண்டு பத்திரிகை கொடுக்கலாம்.///---்இப்படி செய்தால், அந்த வீட்ல இருந்தும் பெண்கள் மட்டுமே திருமணத்திற்கு வருவாங்க...

      தம்பதிகளாக போய் அழைத்தால் தான் எல்லோரும் வருவார்கள்... அதுவும் வீட்டின் அருகே உள்ள சொந்தங்கள்&நண்பர்கள் மிக முக்கியம்,...

      நானும் பரிமாறுவதையே ரசிப்பேன்...😜😜😜

      Delete
    3. // வீட்டைச் சுற்றி உள்ள நண்பர்களை வீட்டில் உள்ள பெண்களை // நம்மை விட அவர்களின் பழக்கம் அதிகம் என்பதால்.

      பழக்கம் முக்கியம் & அழைக்கப்படும் முறையும் முக்கியம் என்பது உண்மை விஜயராகவன்.

      Delete
    4. பின்றீங்க PfB!

      உங்களோட முதல் கல்யாணத்துக்கு என்னால வரமுடியலை. என்னை மன்னிச்சுடுங்க. உங்களை அப்ப யார்னே தெரியலைன்னாலும் நான் வந்திருக்கணும், அதான் முறை! :(

      போவட்டும்!

      உங்களோட அறுபதாங்கல்யாணத்துக்கு (2020திலா?) ஒருவாரம் முன்னாடியே வந்து பந்திகளையும், பதார்த்தங்களையும் சிறப்பிச்சுடலாம்னு இருக்கேன்! ;)

      Delete
    5. ///உங்களோட அறுபதாங்கல்யாணத்துக்கு//..... ஆமாமாம் மறக்காம அழைப்பிதழ் அனுப்பிடுங்க, சும்மா தகவல் சொன்னாவே வந்துடுறோம்...விலாவை சிறப்பித்து விடுவோம்...😜😜😜

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. விஜய் @ அறுபது முடிஞ்சு 5 வருடம் ஆச்சு, உங்க யாரையும் தெரியாது என்பதால் கூப்பிடவில்லை. கவலைப்படாதிங்க 100வது கல்யாண நாளுக்கு கூப்பிட்டு விடலாம்.

      எல்லாம் சரி போன வருசம் முடிஞ்ச உங்க எழுபதாம் கல்யாணத்துக்கு ஏன் எங்களை எல்லாம் கூப்பிட வில்லை?

      விஜயராகவன் @ 2 வருடத்திற்கு முன்னால் நடந்து முடிந்த உங்கள் 70ம் கல்யாணத்துக்கு என் எங்களை கூப்பிட வில்லை. அது என்கிறேன். !!!

      Delete
  53. அழகான எழுத்து நடை சார்
    மனதில் உள்ளதை அப்படியே வார்த்தைகளாக்கி எளிமையாக உங்களுடன் பயணிக்கும்படி செய்துவிடுகிறீர்கள் சார்

    உங்களது நல்ல மனதிற்கு அனைத்தும் நலமாய் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் _/|\_
    .

    ReplyDelete
  54. மார்ட்டின் கதை என்றால் சந்தோசம் அதில் இரண்டு கதைகள் என்பது டபுள் சந்தோசம்.

    ReplyDelete
  55. டிராகன் நகரம் முதல் முறையாக படிக்க போகிறேன். ஜாலி.

    இந்த இதழுக்கான உழைப்பு மற்ற புத்தகங்களை விட அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக வாசகர்களின் புகைப்படங்களை அச்சிட்டு கொடுப்பது, அதனை உரியவருக்கும் கொரியரில் அனுப்புவது உட்பட அனைத்தும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என்னாது ட்ராகன் நகரமே படிக்கலயா...ஹூம்...

      Delete
    2. புத்தகம் இருந்தால் தானே படிக்க முடியும் ஜி. இந்த நாட்களில் வந்த பழைய கதைகளை படித்து இல்லை. பவளச்சிலை மர்மம் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      Delete
    3. நானும் நிறைய டெக்ஸ் கதைகள் படித்தது இல்லை. பழைய டெக்ஸ் கதைகள் இரண்டு மூன்று வைத்தி௫க்கும் நண்பர்கள் தந்து உதவினால் படித்தவுடன் பத்திரமாகத் தி௫ப்பித் தரப்படும்.நன்றி.

      Delete
    4. பழைய டெக்ஸ் கதைகள் இரண்டு மூன்று வைத்தி௫க்கும் நண்பர்கள் தந்து உதவினால் படித்தவுடன் பத்திரமாக என் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வேன். டெக்ஸ் கதை இல்லேன்னாலும் நமது காமிக்ஸ் நாயகர்கள் வேறு யார் கதை என்றாலும் பரவாயில்லை. நன்றி. அடிக்க வராதிங்கப்பா.!!!

      Delete
    5. என்ன ஓய் பரணி
      ஒண்ணாங்கிளாஸே படிக்காம டைரக்ட்டா வந்துட்டீர்
      இப்பவாச்சம் நன்னா படிச்சு பாஸ் பண்றீர் ஓகே வா

      Delete
    6. விவேக் ஜோக் மாதிரி

      டாக்டர்ர் நீங்க பத்தாவது பாஸ் பண்ணீட்டீங்க.....!

      Delete
    7. கழகு வேட்டை இதுவரை நான் படித்தது இல்லை. !

      குறிப்பு;

      புதிய முறை யில் டைப் செய்கிறேன். தவறு ஏற்பட்டாலும் அர்த்தம் மாறினாலும் மன்னிக்க வேண்டுகிறேன். !

      Delete
    8. ஆளாளுக்கு படிக்கலங்கிறீங்க.. சென்னை, பெங்களூர், மதுரைனா எப்பூடி....

      Delete
    9. கூரியரில் அனுப்புங்க .
      படித்தவுடன் தி௫ப்பி கூரியரில் அனுப்பப்படும்.

      Delete
    10. @ மாடஸ்டி ஆர்மி

      ///புதிய முறை யில் டைப் செய்கிறேன். தவறு ஏற்பட்டாலும் அர்த்தம் மாறினாலும் மன்னிக்க வேண்டுகிறேன்///

      மண்டையால முட்டி முட்டியே டைப் செய்யறீங்களோ?!! :D

      Delete
    11. பூனையாரே. !

      // மண்டையால் முட்டி.!//

      அதைவிட கஷ்டமாக உள்ளது. !

      பூனையாரே என்று டைப் செய்து விட்டு பின்னர் படிக்கும் போது பூனைக்கு என்று மாறிவிடுகிறது.



      வடிவேல் காமெடி யில் சுருட்டிய ஓலை பாயை விரிப்பதுபோல் கஷ்டமாக உள்ளது. !

      Delete
  56. இந்த எழுத்து நடைக்கு இன்னுமொரு ஆயிரம் பத்திரிக்கை கூட அடிக்கலாம்... சூப்பர் சார்...

    ReplyDelete
  57. லக்கிலூக் அட்டைப்படம் - டாப்! பின்ணணி வண்ணம் முன்ணணிக்கு மெருகூட்டுகிறது!

    மார்டின் - அட்டைப்படம் கொஞ்சம் க்ளாசிக் லுக் கொடுத்தாலும் கூட, நன்றாகவே இருக்கிறது! பின்னால் தெரியும் அந்த ஏழுதலை ட்ராகன் -என்னோட சிறுவயதில் (அதாவது 'பூனையின் சிறுவயதில்') எங்க பாட்டிம்மா சொன்ன மாயமந்திரக் கதைகளை ஞாபகப்படுத்துது! ய்யீஈஈஈக்!!!

    தொடர்ந்து தனது வித்தியாசமான கதைக்களங்களால் கலக்கி வரும்; தனி சந்தாவுக்குக்கூட தகுதியான - மார்டினுக்கு அடுத்தவருடப் பட்டியலில் ஒரே ஒரு - போனாப் போகட்டும்னு - சிங்கிள் ஸ்லாட் மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது - எடிட்டர் சமூகத்தின் ஏதேச்சதிகாரப் போக்கையே காட்டுகிறது! ( ஹைய்யா! மறுபடியும் பிரச்சினையைக் கிளப்பியாச்சு!)

    ReplyDelete
    Replies
    1. சி.சி.வ க்கு சவால் விடும்படி தொடர் பின்னூட்டங்களிலேயே பூ.சி.வ தொடரை எழுதும்படி நண்பரை கேட்டுக் கொள்கிறேன்.

      :-))

      Delete
    2. சி.சி.வ Vs பூ.சி.வ

      அடடே! இந்த கான்செப்ட் நல்லாருக்கே!! "நீங்க சி.சி.வ எழுதலேன்னா நாங்க பூ.சி.வ எழுதி இங்ஙனக்குள்ள போஸ்ட் பண்ணிப்புடுவோம் பண்ணி!" அப்படீன்னு எடிட்டரை ப்ளாக்மெயில் பண்ணலாம்னு இருக்கேன்!

      ஐடியாவிற்கு நன்றி ஆதி அவர்களே! :)))

      Delete
  58. ஆசிரியரின் எழுத்து நடை அட்சரலட்சம் பொன் பெறும்!!!!!!!
    அதிலும் அதில் நகைச்சுவை கலந்துவிட்டால் கேட்கவேவேண்டாம்,
    நமக்குக் கொண்டாட்டம் தான்.என்ன தவம் செய்தாயோ சரவணா!!!!

    ReplyDelete
  59. க்யூபா படலம் படித்துக்கொண்டு இருக்கிறேன். டெக்ஸ் ரசிக கண்மணிகளுக்கு ஒரு கேள்வி:
    1. இந்த கதையில் வருவது போன்று வேறு எந்த கதைகளில் வாள் சுழற்றி உள்ளார்.
    2. தனக்கு நன்றாக வாள் சுழற்ற வரும் என சொல்லும் டெக்ஸ் எந்த கதையில் வாள் சுழற்றும் பயிற்சி எடுத்தார்?

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்ததுபோல கூடத்தான் இதுவரைக்கும் எந்த கதையிலும் காட்டினதில்லை... அதுக்காக?

      Delete
    2. டெக்ஸ் ரசிகர் இப்படி எல்லாம் சமாளிக்க கூடாது விஜய்.

      Delete
    3. 1. எனக்கு தெரிந்த வரை டெக்ஸ் எந்த கதையிலும் வாள் வைத்து சண்டை போடவில்லை. இது தான் முதல் முறை என நம்புகிறேன்.
      இதற்கு முன்னர் சில கதைகளில் சிற கத்தி கொண்டு ஒற்றைக்கு ஒற்றையாக செவ்விந்தியர்கள் உடன் மோதி இருக்கிறார்.
      2. வாள் சண்டையே போடவில்லை எனும் போது எப்படி பயிற்சி எடுப்பார்.
      இந்த கதை ஆரம்பிப்பதற்கு முன் matrix பட styleல்ல cd மூலமாக வாள் சண்டை பயிற்சிய அவர் மண்டைக்குள் லோட் செய்ததாக கேள்விப்பட்டேன் :-)

      Delete
  60. எம்ஜியார் ட்ட கேட்டுட்டு சொல்றேன்

    ReplyDelete
  61. ஏன்ன் கிளின்ட் ஈஸ்ட்வுட் டே டெக்ஸ்
    கதை படிச்சுத்தான் படத்தில் காப்பி
    அடிச்சதாக ஹாலிவுட்டில் பேசிக்கிறாங்க.

    ReplyDelete
    Replies
    1. முக்கியமான மூன்று க்ளின்ட் ஈஸ்ட்வுட் படங்களும் இத்தாலி பிராடக்ட்.

      Delete
  62. ஆசிரியரின் கல்யாண ஏற்பாட்டு படலம் அவரின் பாணியிலேயே நகைசுவையுடன் பகிர்ந்து இருந்தார். ஆல் தி பெஸ்ட், சார்.

    ரொம்ப நாள் கழித்து மார்ட்டின் புத்தகம், என்னை பொறுத்தவரையில், மார்டினுக்கும் மாதா மாதம் வந்தால் சந்தோஷ படுவேன். மார்டீனின் பயங்கர விசிறி நான்.

    ஒரு சந்தேகம், டிராகன் நகரம், சந்தா கட்டியவர்களுக்கு மட்டும் தான் வருமா, இல்லை என் போன்ற கடையில் வாங்குபவர்களும் கிடைக்குமா ?

    நான் டிராகன் நகரம் படித்தது இல்லை.

    சரி இந்த வாரம் நான் படித்த கதைகள்.

    அன்று:
    கொலை பொக்கிஷம்: ராபினின் டிடெக்ட்டிவ் சாகசம். இந்த முறை ஜப்பானியர்களின் கொலைகளை ஆராய்கிறார். நன்றாக இருந்தது

    இன்று:
    1 தடை பல தகர்த்தெழு - ரின் டின் கானின் சிரிப்பு மேல. ரொம்பவும் பிடித்த கதை
    2 ஒரு ஷெரிப் சிப்பாயாகிறார் - இதில் வரும் ரெண்டு கதைகளுமே. படு சூப்பர்.

    3 இரும்பு குதிரையில் ஒரு தங்க புதையல் - இந்த வருடத்தில் நான் படிக்கும் நாலாவது டெக்ஸ் கதை. தி பெஸ்ட் சோ பார். இந்த கதை ஓவியர் ஜோஸ் ஆர்ட்டிசின் விசிறி நான்.

    4 என் சித்தம் சாத்தனுக்கே சொந்தம் - நான் ஏதோ இது ஒரு பேய் கதை அல்லது சைக்கோ கதை என்று நினைத்தேன். அற்புதமாக இருந்தது. இது கொஞ்சம் மனதை பாதித்தது என்று சொன்னால் மிகை ஆகாது.

    எனக்கு இப்பொழுது கிராபிக் காமிக்சின் ஜானர், புரிந்து விட்டது, கதை படித்ததும் மனதை ஒரு மாதிரி பண்ணினால் அது தான் கிராபிக் நாவல்..

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கு இப்பொழுது கிராபிக் காமிக்சின் ஜானர், புரிந்து விட்டது, கதை படித்ததும் மனதை ஒரு மாதிரி பண்ணினால் அது தான் கிராபிக் நாவல்..///

      அடடே!

      Delete
  63. ////கறிக்குழம்பை மணக்க மணக்க சமைத்து, ரசித்து, ருசித்த கையோடு - சும்மா Dreamliner விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்த சொகுசில் குட்டியாயொரு மதியத் தூக்கத்தில் திளைத்துக் கிடப்போரை - "மச்சான்...அத்தாச்சி...அப்பச்சி... பத்திரிகை குடுக்க வந்திருக்கோம் !" என்றபடிக்கே உசிரை வாங்கும் அந்தக் கணங்களுமே - "பத்திரிக்கை விநியோக சாகசங்களின்" ஒரு பகுதியே என்பதை உணர்ந்து வருகிறேன் ////


    இப்போ, இந்த நிமிஷத்தில் - எடிட்டர் இந்த சாகஸத்தைத்தான் செஞ்சுக்கிட்டிருப்பார்னு நினைக்கிறேன்! ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. இந்த சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு MV சார்!!

      மகிழ்ச்சி மகிழ்ச்சி!

      Delete
  64. பூனையாரே!

    //சிங்கிள் ஸ்லாட் மட்டும். //


    மாடஸ்டி க்கே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு தான். !!

    மாடஸ்டி க்கே இந்த கதி என்றால். ..........

    ReplyDelete
  65. இன்னும் இரண்டு மாதங்களுக்கு நமக்கு அழகான கல்யாணப்படலக் கதைகள் காத்திருக்கின்றன. இந்த பத்திரிகை வைப்பு வைபவம் சிறப்பு. தொடர்க..

    இம்மாத இதழ்களுக்கு ஆவலோடு வெயிட்டிங். குறிப்பாக, டிராகன் நகரம். போட்டோ பார்க்கலாம்ல..

    (நிச்சயம் ஒரு புக்காவது மாறிப்போகணும். அது சார்ந்த சுவாரசி நிகழ்வுகளை ரசிக்கணும்னு ஆவல் மிகுகிறது. பார்ப்போம்)

    உதாரணமாக என் புத்தகம், கி.ஆ.கண்ணனுக்கு போகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? நாம அச்சில் எவ்வளோ அழகா இருக்கோம்னு ஒரு மணி நேரம் மகிழ்ந்துவிட்டு அப்பாலிக்கா சந்தேகம் வந்து ஓடிப்போய் கண்ணாடியை பார்ப்பார் என்று நினைக்கிறேன்.

    :-)))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா! நினைச்சுப் பார்க்கும்போதே சிப்பு தாங்கல!! கற்பனை வளத்துல பின்றீங்க ஆதி அவர்களே! :)))))))

      Delete
    2. Kok பாவம்
      விட்ருங்க
      அழுதிடுவாரு.
      அப்பறம்
      அழவெச்சுடுவாரு.

      Delete
    3. ///உதாரணமாக என் புத்தகம், கி.ஆ.கண்ணனுக்கு போகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? நாம அச்சில் எவ்வளோ அழகா இருக்கோம்னு ஒரு மணி நேரம் மகிழ்ந்துவிட்டு அப்பாலிக்கா சந்தேகம் வந்து ஓடிப்போய் கண்ணாடியை பார்ப்பார் என்று நினைக்கிறேன்.///

      ஆதி @ 😂😂😂😂😂😂

      அப்புறம் .. கோயமுத்தூர் செட்டாயிடுச்சி போல ..!! 😜

      Delete
    4. ///அப்புறம் .. கோயமுத்தூர் செட்டாயிடுச்சி போல ..///

      ஏன்... ரொம்ப நாளா கோயமுத்தூர் பின்னாடி சுத்திக்கிட்டிருந்தாரா? ;)

      Delete
    5. ஹா ஹா ! செம நண்பர் ஆதி தாமிரா வாழ்த்துக்கள்

      Delete
    6. ///ஏன்... ரொம்ப நாளா கோயமுத்தூர் பின்னாடி சுத்திக்கிட்டிருந்தாரா? ;)///

      காமா பயில்வானின் ஒரே சிஷ்யரான சோமா பயில்வானின் ஒரே சிஷ்யரும், (மூக்கு)பொடிபெற்ற ஓரே புலவர் பாணபத்திர ஓணாண்டியின் பிரதம மாணாக்கருமான நண்பர் ஆதி தன்னுடைய பாசறையை தற்போது கோவைக்கு மாற்றிக்கொண்டுவிட்டார் குருநாயரே ..!

      Delete
    7. பாசறையை மாற்றிக் கொள்வதில் அவர், லக்கி சுடும் வேகத்தையும் விஞ்சக்கூடியவர் என்பதை குருநாயரின் சிஷ்யர் அறியாதது ஆச்சரியமே! கோவையை காலிபண்ணியும் ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது நண்பரே!

      ஆமா, அதாரு பாணபத்திர ஓணாண்டி? நான் நிறைய பின்னூட்டங்களை தவற விட்டுவிட்டதால் இது போல பல விசயங்கள் தெரிவதில்லை. 'கிருஷ்ணா நீ பேகனே' புகழ் பூனைக்குட்டிப்புலவரா? இல்லை வேறு யாரும்? :-)))))

      Delete
    8. ஆதி அவர்களே
      இம்சை அரசன் 23ம் புலிகேசி பாக்கலியா.

      Delete
    9. ///பாசறையை மாற்றிக் கொள்வதில் அவர், லக்கி சுடும் வேகத்தையும் விஞ்சக்கூடியவர் என்பதை குருநாயரின் சிஷ்யர் அறியாதது ஆச்சரியமே!///

      சொல்லவே இல்லையே பகவானே??
      கோயமுத்தூர் பிடிக்கலையா இலலை அவங்க உங்களை வெச்சிக்கலையா?? 😝😝😝

      ///ஆமா, அதாரு பாணபத்திர ஓணாண்டி?///

      வாலிப வயசுல நிறைய கவிதைகள் எழுதுவீங்களே.. ..அதேமாதிரி ஒரு கவிஞர்தான் அந்த பாணபத்திர ஓணாண்டிப்புலவர்..! 😝😝😝

      Delete
    10. கோவை பிடிக்கலையா?.. // ரெண்டும்தான்.. அந்தக் கொடுமைய என் வாயால எப்பிடிச் சொல்லுவேன்..
      :-)))))

      பாணபத்திரர்// ஓ.. அவரா? இப்ப புரிஞ்சு போச்சு. நா அவரு சிசியர்தான். :-))))

      வேணும்னா சொல்லுங்க.. குருநாயர் பாட்டுப்பாடி கொல்றாப்பல, நான் கவிதை சொல்லி கொல்லுறேன். :-)))

      Delete
    11. @ ஆதி

      ////வேணும்னா சொல்லுங்க.. குருநாயர் பாட்டுப்பாடி கொல்றாப்பல, நான் கவிதை சொல்லி கொல்லுறேன்///

      வேணாம் வேணாம், அதுக்கெல்லாம் ஏற்கனவே இங்கே ஒருத்தர் இருக்கார். சமீபத்துலகூட கல்யாணப் பத்திரிக்கையில கவிதை எழுத முயற்சி பண்ணினாராம்... தகவல் வந்துச்சு!

      பத்திரிக்கையை வாங்கிப் படிக்கிற சொந்தக் காரங்களோட நிலைமையை நினைச்சுப்பாருங்களேன்! ய்யீஈஈஈக்!! :P :D

      Delete
  66. Congratulations my dear friend Tex vijayaraghavan🙌🙋👍👏👏

    ReplyDelete
  67. இன்னாப்பா அல்லாரும் பத்திரிக்க வொய்க்க பூட்டீங்களா,
    இங்க யாரையும் காணோம்

    ReplyDelete
  68. Replies
    1. இங்கே எப்பவுமே பாஸ் ஆகிவிடுவேன் மாடஸ்தி சார் நல்ல ஆசிரியர் இருப்பதால்...:-)

      Delete
    2. தலீவரே... செம!

      இங்கே வகுப்பெடுப்பது ஒருவேளை 'ஆசிரியை'யாக இருந்திருந்தால், நீங்கதான் இங்கே 'கோல்டு மெடலிஸ்ட்' தலீவரே! ;)

      Delete
    3. நீங்க இருக்கச்சே அது கொஞ்சம் கஷ்டம் செயலரே...:-)

      Delete
    4. ஹா ஹா ஹா! கெளன்ட்ர்ஆக்ட் குடுக்கறதுல கவுண்டரையும் மிஞ்சிடுவீங்க போலிருக்கே தலீவரே!

      Delete
    5. இங்கே எப்பவுமே பாஸ் ஆகிவிடுவேன் மாடஸ்தி சார் நல்ல ஆசிரியர் இருப்பதால்...:-)

      Delete
  69. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது சங்கத்தின் ஒரே ஒரு நிரந்தர தலிவர் அவர்களின் தவப்புதல்வி அனுப்ரியா அவர்கள்

    இன்றுபோல வாழ்வில் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼

    🎂🎂🎂🎂🎂
    🍧🍧🍧🍧🍧
    🍫🍫🍫🍫🍫
    🍭🍭🍭🍭🍭

    ReplyDelete
  70. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    அனுப்பிரியா.
    வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  71. அனுப்பிரியா பல்லாண்டு பொங்கு செல்வத்தோடு வளமாக நலமாக வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. இந்த மாத புத்தகம் கைப்பற்றிய நண்பர்கள் யாராவது இ௫க்கின்றீர்களா?

    ReplyDelete
    Replies
    1. நவம்பர் ஒன்னாம் தேதிதான புறப்படும்னார்..அப்ப நீங்களும் வாங்கியாச்சா

      Delete
  73. அனுப்ரியாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  74. சார் ஆச்சரியங்கள் இப்டியும் நடக்குமா..ஏழே முக்காலுக்கு வந்த மிஸ்டு கால அழைக்கிறேன்....யாருங்க ....நா கூப்டலையே எதிர் முனை...நா ஆட்டோ...இது கொரியர் ..ஓ புக் வந்திருச்சா....பொன்ராஜா...ஆமா சார் தேங்ஸ்..இதோ வர்றேன் .....dtdc துரித சேவைக்கு நன்றி..கோவைவாசிகள் இதிலும் கொடுத்து வைத்தவர்கள்.. 😊

    ReplyDelete
  75. அனுப்ரியாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  76. வாவ்,மெகா சர்ப்ரைஸ் பதிவு வராமலே நவம்பர் இதழ்களை வாங்கியாச்சி.சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அப்ப நம்ம ஆசிரியர் அலுவலகம் போகவில்லை என்றால் அலுவலக நண்பர்கள் நல்லா வேலை பார்க்கிறார்கள்.

      Delete
  77. Books recvd .puthakangal mudal parvai super.Athai Vida junior editor kalyana invitation Supero super.

    ReplyDelete