Friday, November 03, 2017

First & next...!

நண்பர்களே,

வணக்கம். ஆபீசுக்கே விருந்தாளியைப் போல அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூழ்நிலையில் நானிருக்க, இங்கே அரங்கேறிய சில பல மொத்துப் படலங்களுக்கு முறையாய் பதில் சொல்ல இயலவில்லை என்பதில் எனக்கும் வருத்தமே !  ஏதேதோ காரணங்களுக்காக ஆண்டுக்கொருமுறையேனும் சாத்துக்கள் பல வாங்கி உரமேறிய முதுகு தான் என்பதால் அவகாசம் கிடைக்கும் போது சாவகாசமாய் அயோடெக்ஸ் போட்டுக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் புதிதாயொரு பதிவை போட அவசரம் காட்டவில்லை ! ஆனால் இந்த load more தலைநோவு எத்தகையது என்பதை செலபோனில் login செய்து பார்க்கும் சமயம் தான் முழுசாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்பதால் - புதிதாய் ஒரு உ.ப.வைப் போட்டு வைப்போமே என்று தோன்றியது !

As always - பலதரப்பட்ட எண்ணங்கள் ; அபிப்பிராயங்கள் ; ஆலோசனைகள் ; கடுப்புகள் என்று வானவில்லின் ஜாலங்கள் தென்பட்டன உங்களின் சமீபப் பின்னூட்டங்களில் ! என் தரப்பின் சிக்கல்களை பகிர்ந்தான பின்னே உங்களின் வருத்தங்கள்  ஓரளவேணும் மட்டுப்பட்டுள்ளனவா  ? என்பது தெரியவில்லை ; ஆனால் அடுத்த பிரின்ஸ் ஸ்பெஷல் முதல் பக்கத்தினில் உங்கள் படங்களை greyscale-ல் பார்க்கும் போது மீதமிருக்கக் கூடிய வருத்தங்கள் விலகிடவும்,  எனது ஸ்டிக்கர் தீர்மானத்தின் பின்னணி புரிந்திடவும் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! எது எப்படியோ - as always - சர்ச்சைகளின் மறுபக்கமானது விற்பனையில் சுவாரஸ்யத்தைக் கொணர்ந்துள்ளது என்பதையும் சொல்லாதிருக்க முடியவில்லை  ! ஏற்கனவே பரபரப்பாய் விற்கக்கூடிய இதழான 'டிராகன் நகரம்' இப்போது நிலவேம்புக் கஷாயம் போல சரசரவெனப் பறக்கின்றது !  And குறைவான பிரதிகளே அச்சிட்டுள்ளோம் என்பதால் ஜனவரி சென்னைப் புத்தக விழாவினைத் தாண்டி நம்மிடம் இதனில் ஸ்டாக் இராது என்றே தோன்றுகிறது !

டெக்ஸ் ஓவர்டோஸ் என்பதான அபிப்பிராயம்  ; இலவச இணைப்பு சார்ந்த பார்வைகள்   ; இந்த ஸ்டிக்கர் சமாச்சாரங்கள் என்ற வெவ்வேறு காரணங்களின் பொருட்டு சமீப நாட்களில் மத்தளம் கொட்ட உள்ளுக்குள் ஆர்வப்படும் நண்பர்கள் மீதும் / ஏற்கனவே கொட்டிய நண்பர்கள் மீதும் எனக்கு நிச்சயம் வருத்தமில்லை ! ஆளுக்கொரு பார்வை ; ஆளுக்கொரு சிந்தனை இருப்பதில் நிச்சயம் தவறில்லை எனும் பொழுது எனக்கு நேர்ந்த அந்தத் தருணத்துச் சங்கடங்களைத் தாண்டி பெரிதாய் எந்த விசனமும் தொடரவில்லை என்னுள் !  ஆனால் என் பொருட்டு "ஜால்ரா பாய்ஸ்" என்ற அழகான பட்டப் பெயரைச் சுமக்க நேரிடும்  நண்பர்களுக்காக சங்கடப்படாது இருக்க முடியவில்லை ! இது பற்றியெல்லாம் முன்பே ஏதோ எழுதிய ஞாபகம் லேசாக உள்ளது ; but still - சர்ச்சைகள் எழும் தருணங்களில் இந்த வார்த்தைப் பிரயோகம் தொடர்வதில் நிச்சயமாய் எனக்கு உடன்பாடில்லை ! So ஒரு மறு ஒலிபரப்பு போலாகத் தோன்றினாலும் தப்பில்லை என்று நினைத்தேன் :   

ஒரு விஷயம் எனக்குச் சுத்தமாய்ப் புரியவில்லை guys - ஆரம்பம் முதலாகவே ! நம் வட்டத்தின் விஸ்தீரணம் ரெண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்கக் கூடியதொரு அளவே என்பதில் இரகசியம் துளியும் கிடையாது ! இந்த வட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரின் ஆற்றல்களின் பரிமாணங்களும் எத்தகையது என்பதை அறியாதோர் இங்கில்லை  ! இலக்கியமா ? வரலாறா ? நகையுணர்வா ? அரசியலா ? தொழில் சார்ந்த தேர்ச்சியா ? ஆன்மீகமா ? காமிக்ஸ் ஞானமா ?  மழலைத்தனமா ? முதிர்ச்சியா ? பொது அறிவா ? ஒவ்வொன்றிலும் பட்டையைக் கிளப்பும் ஆற்றலாளர்கள் இங்கே கொட்டிக் கிடப்பது கண்கூடு ! இந்த அணியின் மத்தியில் உலவிடும் எனக்கு உங்களது திறன்களைக் கண்ட வியப்பு ஒரு நாளும்  குன்றுவதே கிடையாது  !  நானும் சரி, எனது தொழில் சார்ந்த அனுபவங்களும் சரி - இந்த high voltage அணியினில் என்னை வேறுபடுத்தியோ ; உயர்த்தியோ காட்டுவதாய் நான் ஒருநாளும் எண்ணியதில்லை ! And பக்கத்துத் தெருவிலேயே கூட  "முறைப்பான முட்டைக்கண்ணன்" என்பதைத் தாண்டி எனக்கென அடையாளங்கள் வேறேதும் கிடையாது என்பதும் எனக்கு அட்சர சுத்தமாய்த் தெரியும் ! இந்த ஆகக் குட்டியான வட்டத்துக்குள் மட்டுமே 'விஜயன்' என்ற பெயருக்கொரு சன்ன அடையாளம் உள்ளதென்பது மட்டும் தானே யதார்த்தம் ?

So ஒரு மாறுபட்ட ரசனைக்கென கொஞ்சமாய் மெனக்கெடும் இந்த ஆசாமியின் தோளினில், நட்போடு இங்குள்ள நண்பர்களின் ஒரு பகுதி கைபோட்டு அரவணைத்தால் அதுவே  அவர்கள் அனைவரையும் இளையராஜாவின் கச்சேரி மேடையில் ஏற்றிவிடவொரு முகாந்திரமாவதன் மர்மம் எனக்குப் புரிபடவில்லையே ? R.K நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நிச்சயமாய் நானங்கு வேட்பாளராகப் போவதுமில்லை ; அப்படியே நின்றாலும் நிச்சயமாய் ஜெயிக்கப் போவதில்லை ; அப்படியே ஜெயித்தாலும் ஏதேனுமொரு நினைவிடத்தில் தியானமும் செய்யப் போவதில்லை எனும் பொழுது -  எனக்கு சாமரம் வீசி இந்த ஜா.பா நண்பர்கள் சாதிக்க எண்ணிடுவது தான் என்னவாக இருக்கக் கூடுமோ என்பது புரிய மாட்டேன்கிறதே  ?  தத்தம் நேரங்களையும், சக்திகளையும் ஒரு பொதுத் தளத்தின் சகஜத்தன்மைக்கும் ; நட்புப் பாராட்டுதல்களுக்கும் செலவிட முன்வருவதில் யாருக்கென்ன சங்கடங்கள் இருந்திடக்கூடும் என்பது எனக்கொரு புரியாப் புதிராகவே தொடர்கிறது ! மௌனம் உங்கள் ஆதர்ஷமெனில் ; உரக்கப் பேசுவோரை உங்கள் நிம்மதிகளைக் குலைக்க வந்தோராய்ப் பார்ப்பது சரிதானா guys ? Moreover அந்தப் பாசக்கார "ஜா.பா." அணியின் ஒவ்வொருவருக்குமே எனது ஒவ்வொரு தீர்மானத்திலும் 100% உடன்பாடு இருக்குமென்ற பகல் கனவுகளெல்லாம் சத்தியமாய் எனக்கு கிடையாது !  எண்ணங்களில் பேதங்கள் எழும் வேளைகளிலும், அவற்றை நயமாய்ச் சொல்ல அவர்கள் முனைவது நட்பின்பால் அவர்கள் கொண்டிருக்கும் பிடித்தத்தின் காரணத்தின் பொருட்டே தவிர்த்து, பயத்தின் காரணமாய் அல்ல தானே ? அந்தப் பதவிசுக்குப் பரிசு இசைக் கருவிகள் எனில் - இலவசங்கள் செழிக்கும் தமிழகத்தில் இதுவும் ஜகஜமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலும் ! இலவச டி.வி. ; மடிக் கணினி வரிசையில் இசைக் கருவியுமே ?! சூப்பர்லே ?

அப்புறம் உடன்படுவோர் 'ஜிங்-ஜா கோஷ்டி' எனில்,  மாற்றுக் கருத்துக்கள் கொண்டோர் 'புரட்சிப் புயல்கள்' என்ற மாதிரியான சிந்தையும் சரி தானா ? Whenever & wherever you disagree -மாற்றுக் கருத்துக்கள் எல்லாமும், எப்போதுமே அக்மார்க்  சரியானவைகளாகவே இருக்கத் தான் வேண்டுமா ? Oh yes - இந்த ஸ்டிக்கர் சமாச்சாரம் போன்ற வேளைகளில் எனது கண்ணோட்டம் ஒருவிதமாயும், உங்கள் வருத்தங்கள் நியாயமாகவும் இருக்கலாம் தான் ; ஆனால் ஒவ்வொரு மாற்றுப் பாதையுமே சரியானதாக இருத்தலுக்கு உத்திரவாதங்கள் உண்டென்று மெய்யாகவே நம்புகிறீர்களா  ?  End of the day - இங்கொரு தொழிலும் நடந்தாக வேண்டும் எனும் பொழுது - அது சார்ந்த தீர்மானங்களின் பின்னணிகளை அறிந்திருக்க என்னைவிட வேறு யார்  தேர்ச்சி பெற்றிருக்க முடியும் நட்பூஸ் ? And ஒவ்வொரு முறையும் நானிங்கு சகலத்தையும் கடை விரித்து உங்கள் அனைவரது அங்கீகாரங்களையும் பெற்றிடல் நடைமுறைக்கு சரிப்படும்  சமாச்சாரம் தானா ?  

இதோ இம்மாதமே இந்த 2 நாட்களிலேயே பார்க்கிறோமே மௌன வாசகர்களின் அபிலாஷைகளையும், இங்கு சபைக்கு வராத அவர்களது  எண்ணங்களையும்  : 

இதுவரையிலும் 31 ஆன்லைன் ஆர்டர் வந்துள்ளன- நவம்பர் புக்குகளின் ஆன்லைன் லிஸ்டிங் செய்தான பின்பாக ! அவற்றுள் 27 ஆர்டர்களில் ஏதேனும் ஒரு TEX இதழ் (பலவற்றுள் multiple TEX இதழ்கள்) உள்ளன ; and  இந்த 31-ல் மர்ம மனிதன் மார்டினை சீண்டாது, அவர் திசையிலேயே வண்டியை விடாது பை-பாஸ் போட்டுள்ளோர் - 80 % !! இது தான் இன்னமுமே ஒரு யதார்த்த காமிக்ஸ் வாசக உள்ளத்தின் படப்பிடிப்பு ! "குழப்பங்கள் ; சோகங்கள் ; காதிலே புய்ப்பங்கள் வேண்டுமென்றால் நான் மெகா சீரியல்களுக்கும் ; அரசியல் விவாதங்களுக்கும் போய் கொள்ளுகிறேன் சாமி ; எனக்கு காமிக்ஸ்னா TEX ; லக்கி ; ஆக்ஷன் கதைகள் போதும் !" என்று அவர்கள் செயல்களின் மூலம் சேதி சொல்லுகின்றனர் ! ரசனைகளில் நெருடலிலா விஸ்தீரணம் ; அதே சமயம் வியாபார அவசியங்களுக்கும் செவி சாய்க்க வேண்டியதொரு தருணம் - என்ற கம்பி மேல் நடக்கும் அவசியம் இன்று நமக்குள்ளது என்பதை புரிந்து கொள்வதில் நம்முள் பேதமில்லை ; அதனை ஏற்றுக் கொள்வதில் மாத்திரமே பேதங்கள் தலைதூக்குகின்றன ! எனது தீர்மானங்களின் பின்னணிகளைப் புரிந்தும், ஏற்றும் கொள்வோர் - "ஜா.பா"க்களாகவும் ; புரிந்தும், ஏற்க மறுப்போர் - "பு.பு" அணியாகவும் தொடர்கின்றனர் ! அணிகள் எதுவாயிருப்பினும், காமிக்ஸ் ரசனையெனும் நம்  தாய்க்கட்சி ஒன்று தானே? So இது போன்ற மானசீகப் பாகுபாடுகளை ; "இங்கே நான் சொல்வதற்கு மரியாதை இல்லை" - என்ற ரீதியிலான chip களைச் சுமக்காது பயணிப்போமே - ப்ளீஸ் ? நம் ரேஞ்சுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்திட டில்லியிலிருந்தென்ன - கூடுவாஞ்சேரியில் இருந்து கூட ஆட்கள் வரப்போவதில்லை என்பதால், நம் கருத்து வேற்றுமைகளை நாமே பைசல் செய்து கொண்டால் தானே ஆச்சு ? இங்கே நிச்சயமாய் சகல சிந்தனைகளுக்கும் இடமுண்டு ; எழும் முதல் அபிப்பிராய மாறுபாட்டினை ஒரு விசனமாய்க் கொண்டு வருந்தாது, ஆரோக்கியமான விவாதங்களில் நயமாய் பங்கேற்றிட அனைவரும் முன்வந்தால் - இங்கு எழும் ஆர்ப்பரிப்பு இந்தக் குட்டியூண்டு வட்டத்தின்பால் பெரியதொரு வெளிச்சத்தை விழச் செய்யும் என்பதில் ஏது ஐயம் ? முகஸ்துதிகளை எதிர்பார்த்து காலத்தை நான் தள்ளுவது போலவும்,  ஐஸ் வைத்து 'ஜா.பா'. அணி பிழைப்பு நடத்துவது போலான எண்ணங்களும் சத்தியமாய் மாயைகளே ! I am as good or as bad as my last hit or my last flop என்பதற்கு இதோ - இன்றைய நிகழ்வுகளை விடவுமா வேறு உதாரணம் தேவை ? நான்கே நாட்களுக்கு முன்பு வரை தக தகவென எம்.ஜி.யாரைப் போல மின்னியவன், இப்போது 'அம்மாங்கோ' என்று மல்லாக்கக் கிடக்கவில்லையா -சங்கி-மங்கியைப் போல  ? 

ஒரு மாறுபட்ட 4 pack combo  வெளியாகியுள்ள  இந்த வேளையில், அழகான அந்த இதழ்களை review செய்திடத் துவங்கலாமே guys ? என்னைச் சாத்தி விளையாட சந்தர்ப்பங்களுக்கும், தருணங்களுக்குமா பஞ்சம் இருக்கப் போகிறது  ? அது தான் நானாக லட்டு போல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நிபுணன் ஆச்சே ? So இதழ்களின் அலசல் first ; முட்டுச் சந்தில் குமுறுவது next !!  என்று வைத்துக் கொள்வோமா ? Bye guys...see you around ! Lady S முதலிலா - ஒற்றைக்கை பகாசுரனா ? 

183 comments:

  1. எடிட்டர் சார்,

    நீண்ட நாட்களுக்கு முன் ஒரு பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த பான்டமோனியம் கதை க்ராஃபிக் நாவல் சந்தாவில் கொடுக்கப் போகிறீர்கள் என நினைக்கிறேன். அடுத்த வருட அட்டவணை அட்டகாஷ்.
    ஐ ஆம் வெய்ட்டிங். ஆவலுடன், ஆர்வத்துடன். மெனக்கெடலுக்கு நன்றிங் ஷாமியோவ்!!!!


    ஜூனியர் எடிட்டருக்கு மீண்டுமொரு முறை மனமார்ந்த (அட்வான்ஸ்) வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Replies
    1. Sir why can't you print everyone's photo with name in colour, hope it will solve the problem. You can avoid the Grayscale in individual books, we can see faces of people who are known only by names and id's.

      Delete
    2. Please read his answer on last post for color printing.

      Delete
    3. Parsnips sir, colour photos in normal printing ink will be fine. In last post vijayan sir mentioned about the difficulties in Grey scale and glitter ink. According to my understanding.

      Delete
    4. Parani sir, (sorry dictionary error at top)

      Delete
    5. He has mentioned about size of the photo and resolution also. If that's the case every one has to send the photo in short time hence the coloring is not possible. This is my understanding. I will recheck on this.

      Delete
    6. yes sir, size is a problem if we print in a pre defined box. If we print set the photos in a sheet it will be not be problem.

      Delete
  3. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  4. Lady s Super& tex Willerfantastic 😎👏👏😎👏

    ReplyDelete
  5. கருத்தது மோதல்கள் இத்தளத்தில் வருவது இயற்கையெ! சாதாரணமாக ஏதும் கூறினால் கூட சிலர் வரிந்து கட்டிக்கொண்டு குழாயடியாக்கிவிடுகிறார்கள். அதில் ஒன்றை கூறவிரும்புகிறேன். ஜா.பா. உங்களிடம் சாதிக்க போவதென்ன என்று கேட்டுள்ளீர்கள். அவர்கள் சார்பாகதான் நீங்கள் எதிர் கருத்துக்களை கூறுவோருக்கு பு.பு. பட்டத்தினை அளித்துள்ளீர்களே! எனக்குத் தெரிந்து பலர் பதில் லாவண்யம் பாடுவதை விட்டு இத்தளத்திலிருந்து வெளியேறி விட்டார்கள். அவர்கள் அனைவரும் காமிக்ஸ் படிக்கவில்லை என்றா நினைக்கீறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. Sir,

      Exactly as you said no one is going to stop reading comics. It's like arguments in a friend's circle. This is going to go on. That's what keeping this blog lively.

      Delete
  6. ஹாய்!

    "அட இந்த பஞ்சாயத்துகளே எனக்கு புடிக்கலைப்பா!!"

    புடிக்காது ஸ்மா்ப்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்.!

      அவரை நிம்மதியாக கல்யாண வேலை பார்க்கக் கூடாது விடமாட்டாங்க போல். ?

      Delete
    2. கூட என்பது கூடாது என்று தவறாக டைப் ஆகிவிட்டது மன்னிக்க. !


      நமது ஊரில் கையில் அச்சு இயந்திரத்தை சுற்றி திருமண பத்திரிகை பிரிண்ட் பண்றவன் கூட டூ வீலரில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு பன்ற அளப்பறையை தாங்க முடியலை.!!!

      காமிக்ஸ ஈன்னும் ஆர்வத்தில் எடிட்டர் என்பதை மறந்து வாசகர் களோடு வாசகராக சகஜமாக பழகும் ஈடிட்டரை புரிந்து மரியாதையாக நடந்து கொளவது சிலருக்கு ஜால்ராவா
      தெரியுது என்றால் அது நமது குற்றம் கிடையாது. !

      சாணிக்கும் சந்தனத்திற்கும் வித்யாசம் தெரியாமல்,

      செக்கிற்க்கும் சிவலிங்கத்திற்கும் வித்யாசம் தெரியாமல் பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. !

      Delete
    3. ///ஈடிட்டரை ///

      அதாவது, 'ஈடிணையற்ற எடிட்டரை' - அதானே MV சார்? :)

      Delete
    4. பூனையாரே. !

      சென்றமுறை மாயாவிகாரு தமிழ் டைப்பிற்கு ஒரு ஆப்பிள் லிங் கொடுத்தார். அது சூப்பாரா இருந்தது. !

      இந்த புதிய ஆப் தன்னை ஒரு புத்திசாலி தமிழ் வாத்தி மாதிரி அதுவே வார்த்தைகளை உருவாக்குகிறது.!

      உதாரணமாக, பூனையாரே என்று டைப் செய்தால் பூஜைகளுடன் என்று மாறிவிடுகிறது. !

      Delete
  7. போட்டோ ஒட்டி வந்தது சிறு வருத்தத்தை அளித்தாலும் அட்டகாசமான ட்ராகன் நகர புத்தக வடிவமைப்பு அதை மறக்கடித்து விட்டது. அருமையான நேர்த்தியான புத்தக வடிவமைப்புக்கு 100/100 சார். கையில் வைத்து படிப்பதற்கு இலகுவாக அருமை. இதே மாதிரி ஹார்ட் பௌண்ட் கவர் பிளஸ் இதே சைசில் பவள சிலை மர்மத்தை வெளி இடவும் ப்ளீஸ் என்னை பொறுத்தவரையில் டெக்ஸின் தி பெஸ்ட் என்றால் அது பவள சிலை மர்மம்தான் அது நிலவொளி சைசில் வருவதை கண்டிப்பாக ஏற்று கொள்ள முடியவில்லை. ஒரு புத்தகம் மறு பதிப்புக்கு என்று முடிவான பின்னே அதை தி பெஸ்ட் என்ற முறையில் சிறப்பிப்பதுதான் முறை பவள சிலை மர்மம் அதற்க்கு 100/100 தகுதியானதுதானே? ஆவண செய்வீர்கள் அன்று நம்புகிறேன்.
    Lady s அட்டை படம் அருமை.
    மார்ட்டின் அட்டை படம் பெரிய மைனஸ், இந்த மாதிரி அட்டை படம் போட்டால் யாரும் வாங்க முன் வருவார்களா என்பது கேள்வி. don't judge the book by its cover என்பது பழமொழி ஆனால் செலவு செய்து அதை வாங்கி ஜட்ஜ் பண்ணுவார்களா நம்மவர்கள் என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
    லக்கி அட்டை படம் அருமை.
    புத்தகங்களுடன் இலவசமாக வந்த சின்ன நோட்பேட், இரண்டு புத்தக அட்டவணைகள், சிங்கத்தின் சிறு வயதில் அண்ட் கல்யாண அழைப்பிதழ் பிளஸ் கவர்ச்சியான விளம்பரங்கள் பேசாமல் இந்த காம்போவை நீங்கள் தீபாவளிக்கு இறங்கி விட்டு இருக்கலாம் சூப்பர் சார். மொத்தத்தில் இந்த மாதம் பட்டாசுதான் எங்களுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. // அருமையான நேர்த்தியான புத்தக வடிவமைப்புக்கு 100/100 சார்.//
      உண்மைடிராகன் நகரம் இதழ் அபாரமான செய்நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது,பார்க்கவே கொள்ளை ஆசையாக இருக்கிறது.

      Delete
    2. அதே!அதே!

      பவளச்சிலை அற்புதமான கதை.

      Delete
  8. மர்ம மனிதன் மார்ட்டின் இந்த முறையும் அட்டகாசப்படுத்திவிட்டார் சார் .....செமயா இருந்தது.......இரண்டு கதையும் ஒரே வாசிப்பில் முடித்துவிட்டேன்.....புத்தகத்தை கீழே வைக்கவே தோன்றவில்லை .....உண்மையில் இப்பொழுது தமிழில் வருகின்றன காமிக்ஸ்களில் மார்ட்டினின் கதைகள் மட்டுமே முழுக்க...முழுக்க வித்தியாசமான அனுபவத்தை தருகிறது சார்.......

    ReplyDelete
    Replies
    1. மார்ட்டின் வெற்றி நடையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்..என்பது புரிகிறது..

      இன்று மார்ட்டின் உடன்..:-)

      Delete
  9. சென்னை மழையில் மிதக்கிறது எங்கள் பகுதியில் கரண்ட் கட்டாகி மூன்று நாட்களாகிறது அதனால் பிளாக் பக்கம் எட்டிப் பார்க்க முடிய வில்லை இப்போது பார்த்தால் ஒரே கலவரமாக இருக்கிறது
    டிராகன் நகரத்தில் புகைப்படம் ஸ்டிக்கராக மாறியதில் எனக்கு சின்ன வருத்தமே தவிர மற்ற எல்லாமே அதனை மறக்கடிக்ககூடிய நிறைகளே அருமையான அட்டைப் படம் அதை விட அருமையான பின் அட்டைப் படம் சிறப்பான ஹார்ட் பவுண்ட் மொத்தத்தில் டிராகன் நகரம் பொக்கிஷமே
    அடுத்த முயற்ச்சியில் ஆசிரியர் கண்டிப்பாக அணைவரையும் திருப்தி படுத்துவார் எனக்கு அந்த நம்பிக்கையிருக்கிறது இதை சொல்லுவதால் எனக்கு ஜால்ரா பாய்ஸ் பட்டம் கிடைத்தாலும் மிக்க மகிழ்ச்சியே
    மழையின் பிடி இருகுகிறது நண்பர்களே மீண்டும் வெகு விரைவில் சந்திப்போம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. +1. ஜிங் சக்.. ஜிங் சக்...

      Delete
    2. செந்தில் சத்யா.@

      மடிப்பாக்கத்திலும் அதே நிலைதான்.

      *** தரைமேல் பிறக்க வைத்தான்.எங்களை தண்ணீரில் மிதக்க விட்டான்***






      Delete
  10. சென்னை மழையில் மிதக்கிறது எங்கள் பகுதியில் கரண்ட் கட்டாகி மூன்று நாட்களாகிறது அதனால் பிளாக் பக்கம் எட்டிப் பார்க்க முடிய வில்லை இப்போது பார்த்தால் ஒரே கலவரமாக இருக்கிறது
    டிராகன் நகரத்தில் புகைப்படம் ஸ்டிக்கராக மாறியதில் எனக்கு சின்ன வருத்தமே தவிர மற்ற எல்லாமே அதனை மறக்கடிக்ககூடிய நிறைகளே அருமையான அட்டைப் படம் அதை விட அருமையான பின் அட்டைப் படம் சிறப்பான ஹார்ட் பவுண்ட் மொத்தத்தில் டிராகன் நகரம் பொக்கிஷமே
    அடுத்த முயற்ச்சியில் ஆசிரியர் கண்டிப்பாக அணைவரையும் திருப்தி படுத்துவார் எனக்கு அந்த நம்பிக்கையிருக்கிறது இதை சொல்லுவதால் எனக்கு ஜால்ரா பாய்ஸ் பட்டம் கிடைத்தாலும் மிக்க மகிழ்ச்சியே
    மழையின் பிடி இருகுகிறது நண்பர்களே மீண்டும் வெகு விரைவில் சந்திப்போம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  11. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அருமையான பட்டப்பெயர்...Jalra boys சுருக்கமாக J.B..எடிட்டர் மட்டுமா எம்.ஜி.ஆர் போல மின்னுகிறார்...நாமும்தான்.எப்படி என்று என்னுகிறீர்களா...அன்பேவா படத்தில் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் J.B

    ReplyDelete
  12. நமது வாசகர்களின் மிகப் பெரிய குறைபாடே, அன்பாயினும் அல்லது விமர்சனமாயினும் அளவுக்கு மீறி வெளிப்படுத்துவதே, Editor ஐ கொண்டாடிம் நமது வாசகர்களே Sticker விவகாரத்தில், அவர் விளக்கம் அளிக்கும் முன்னரே பொதுத்தளத்தில் மிகக் கடுமையாக கேலி, கிண்டலுடன் விமர்சனம் செய்திருந்தனர். Editor தனது நிலைக்கு விளக்கம் கூறி, அடுத்த பதிப்பில் சரி செய்து விடுகிறேன் என்று கூறிய பிறகு, நாம் கொட்டிய வார்த்தைகளை மீண்டும் பெற இயலுமா, பலர் மௌனப் பார்வையாளர்கள் ஆனது இதனால்தான்,

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் திரு.விஜயன் சாரை நன்கு கொண்டாடும் நண்பர்கள் யாரும் அப்படி கடுமையாக விமர்சித்ததை எங்கும் பார்க்கவில்லை நண்பரே,நீங்கள் சொல்வது தவறான வாதமாகும்.அவரை தெளிவாக புரிந்தவர்கள் பொதுத் தளத்தில் கிண்டல் செய்ய வாய்ப்பில்லை,அவ்வாறு கிண்டல் செய்திருந்தால் அவரை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும்.

      Delete
  13. மெளன பார்வையாளர்கள்--- நானும் தான்

    ReplyDelete
  14. இதை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை. குடும்ப விழா காரணமாக வேலைகளை பகிர்ந் ததில் ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை சரி செய்து விடலாம். நான் போட்டோ அனுப்பியும் அதில் ஸ்டிக்கர் கூட ஒட்டவில்லை.

    ReplyDelete
  15. டியர் விஜயன் சார், டிராகன் நகரம் ஏற்கனவே பல முறை படித்திருந்தாலும், வண்ணத்தில் படிப்பதே ஒரு தனி அனுபவம்தான் என்பதை கூறவும் வேண்டுமா.
    மெர்சலின் அபார வெற்றிக்கு முன், பம்மிய மேயாத மான் போல, டிராகன் நகரம் என்கிற மாஸ் கதை முன்பு ஸ்டிக்கரில் ஒட்டிய எங்கள் முகங்கள் எடுபடாமல் போய் விட்டன போல.
    இருந்தாலும் என் மகன் டிராகன் நகரம் புத்தகத்தை கட்டிக்கொண்டு, அந்த சிறு ஸ்டிக்கரை தடவி அப்பா, அம்மா, அக்கா என்று தடவிக்கொண்டே தூங்கும்போது, அட மேயாத மான் கூட அதன் பட்ஜெட்டிற்குட்பட்ட வரையில் வெற்றிதானே என்று தோன்றுகிறது...
    வேறென்ன சொல்ல! !!!

    ReplyDelete
  16. டியர் விஜயன் சார், டிராகன் நகரம் ஏற்கனவே பல முறை படித்திருந்தாலும், வண்ணத்தில் படிப்பதே ஒரு தனி அனுபவம்தான் என்பதை கூறவும் வேண்டுமா.
    மெர்சலின் அபார வெற்றிக்கு முன், பம்மிய மேயாத மான் போல, டிராகன் நகரம் என்கிற மாஸ் கதை முன்பு ஸ்டிக்கரில் ஒட்டிய எங்கள் முகங்கள் எடுபடாமல் போய் விட்டன போல.
    இருந்தாலும் என் மகன் டிராகன் நகரம் புத்தகத்தை கட்டிக்கொண்டு, அந்த சிறு ஸ்டிக்கரை தடவி அப்பா, அம்மா, அக்கா என்று தடவிக்கொண்டே தூங்கும்போது, அட மேயாத மான் கூட அதன் பட்ஜெட்டிற்குட்பட்ட வரையில் வெற்றிதானே என்று தோன்றுகிறது...
    வேறென்ன சொல்ல! !!!

    ReplyDelete
    Replies
    1. அருமை டாக்டர் சார்..:-))

      Delete
  17. காலை வணக்கம்.

    ReplyDelete
  18. ஒற்றைக்கை பகாசுரன் :

    அல்டாஃப் - ஆர்தர் சகோதரர்களின் அரிய கண்டுபிடிப்பான சூதாட்ட மெஷினை விளம்பரப்படுத்தச் செல்லும் பயணத்திற்கும், மெஷினின் விளம்பரத்திற்கும் லக்கி லூக் துணையாக போவதே கதை.!
    அந்த சகோதர விஞ்ஞானிககளின் கண்டுபிடிப்புகளும் அவர்களின் பாஷையும் ஆரம்ப பக்கங்களில் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. ஆனாலும் லக்கியுடன் சேர்ந்து அவர்கள் போக்கர் கல்ச் நகருக்குள் நுழைந்ததிலிருந்தே ஒவ்வொரு கட்டமும் வெடிச்சிரிப்புதான்.
    இவர்களுடைய மிஷினால் பாதிக்கப்படும் தொழில்முறை சூதாடியும் அவருடைய அல்லக்கையான அரைவேக்காடு குட்டித்தம்பியும் செய்யும் அலப்பறைகள் விலாநோக சிரிக்க வைக்கும் ரகங்கள். அதிலும் குட்டித்தம்பி குதிரையாகவே மாறிவிடுவதும், அவனுடைய "திறமை "யைப் பார்த்து போனி எக்ஸ்பிரஸில் ஒப்பந்தம் செய்வதெல்லாம் உச்சகட்ட காமெடி.!

    வழக்கமான வழிப்பறி கொள்ளையர்களை வாயில் டுமீல் டுமீல்னு சவுண்டு விட்டே விரட்டுவதெல்லாம் கதாசிரியரின் நகைச்சுவை திறனுக்கான சான்று ..ஹாஹாஹா!

    போலவே "டால்டன்கள் நான்கு பேரும் சிறையிலிருந்து தப்பிவிட்டார்கள்னு நாலு தந்தி வந்திருக்கு .. அந்த காவலாளிகள் டால்டன்களைவிட மங்குணிகள் " ஹாஹாஹா ..!

    போக்கர் கல்ச்சின் செனட்டர் ஃபோர்ட்வெண்டி, தனது குடும்பத்தாரை அறிமுகம் செய்துவைக்கும் அழகு சிரிச்சி மாளலை. !
    லக்கிலூக் சீரியஸாக பேசிக்கொண்டே இருக்க, அதைவைத்தும் பெட் கட்டுவதும், கவனத்தை ஈர்க்க லக்கி மேல்நோக்கி சுட, குண்டு தீர்ந்துடுச்சா இல்லையான்னு ஷூவை பெட் கட்டுவதும் என சூதாட்டத்திலே திளைக்கும் போக்கர் கல்ச் வாசிகளும், அந்த ஊர் குதிரைகளுமே கூட பெட் கட்டிக்கொள்வதும் என ஒரு அக்மார்க் காமெடித்தோரணம் ..!!

    கடைசியாக லக்கி விடைபெறும் போது, விஞ்ஞானிகள் " போகிற வழியில் இந்த ஊரிலும் மிஷினை விளம்பரம் செய்துவிட்டு போகிறோமே? " என்று கேட்க
    லக்கியோ " அந்த ஊர் மக்களுக்கு சூதாட்டமே பிடிக்காது .. அங்குள்ள குடும்பங்களுக்கு சூதாட்டம் என்பதே கெட்டவார்த்தை " என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அந்த ஊரின் பெயரை போர்டில் பார்த்தால் லாஸ் வேகாஸ் என்று இருக்கிறது ..ஹாஹாஹா ...!!!

    ஒற்றைக்கை பகாசுரன் - ஒல்லிப்பிச்சு காமெடியசுரன்

    மதிப்பெண்கள் : 10/10

    ReplyDelete
    Replies
    1. நிறையவே சிரிக்க வைத்த, ரசிக்க வைத்த இதழ் இது!

      Delete
  19. ட்ராகன் நகரம் :

    அந்த அட்டகாசமான ஹார்டு பவுண்டும், ட்ராகன் நகரம் எழுத்துருக்களும் பின்னட்டையில் தல யின் கெத்தான போஸும், உட்பக்கங்களில் கண்களை உறுத்தாத குளிர்ச்சியான வண்ணச்சேர்க்கையும் முன்னின்று மற்றவற்றை மறக்கடித்துவிட்டன என்றால் மிகையாகாது ..!
    கதையைப் பொறுத்தவரை ஏற்கனவே படித்திருந்தாலும் தற்போதைய அழகுசெறிந்த மேக்கிங்கில் மீண்டும் படிக்கும்போது குதூகலமே மேலோங்குகிறது ..!
    டெக்ஸ் வில்லரின் எல்லா மறுபதிப்புளையும் இதைப்போன்றதொரு க்யூட்டான மேக்கிங்கில் பார்க்கவேண்டூமென்ற ஆசையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.! ( இவ்விடம் ஒரு செறிய வேண்டுகோளும் .. பவளச்சிலை மர்மத்தை பழைய சைசிலேயோ அல்லது ட்ராகன் நகரம் சைசிலோயோ வெளியிட்டால் மகிழ்வோம் சார்)

    ட்ராகன் நகரம் கலரிங்கில் சொக்கிப்போய் இனிவரும் எல்லா டெக்ஸ் கதைகளும் இதேபோல முழுவண்ணத்திலேயே வேண்டும் என்று கோரிக்கை வைத்திட ஆசையோ ஆசையாய் இருக்கிறது ..!

    ட்ராகன் நகரம் - "தல " நகரம்.

    மதிப்பெண்கள் : 10 /10

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸ் வில்லரின் எல்லா மறுபதிப்புளையும் இதைப்போன்றதொரு க்யூட்டான மேக்கிங்கில் பார்க்கவேண்டூமென்ற ஆசையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.!//
      +1111111111

      Delete
  20. //"டிராகன் நகரம்" அட்டைப்படத்தினை பிரதிகள் டெஸ்பாட்ச் ஆகும் தினத்தன்று கண்ணில் காட்டுகிறேன் - என்ற செய்தியோடு புறப்படுகிறேன் தூக்கத்தைத் தேடி !! Bye all ....see you around !! //

    ReplyDelete
  21. என்ன தான் படிக்காத இதழ்கள் இப்பொழுது கைகளில் இருந்தாலும் பலமுறை படித்து..படித்து...ரசித்த "தல" யின் டிராகன் நகரமே...இம்மாத எனது முதல் சாய்ஸ்...

    முதல் பக்கத்தில் ஆரம்பித்த டெக்ஸ் ன் தெனாவெட்டு ஸ்டைல்கள் கடைசி வரை சென்று அதகளபடுத்தியது.பலமுறை ரசித்த ட்ராகன் நகரம் இம்முறை வண்ணத்தில் முதன்முறையாக படிப்பது போலவே படபட...விறுவிறு வென சென்று கடைசி பேனல் முடிந்தவரை தான் புத்தகத்தை கீழே வைக்க சென்றது.இந்த முறை டெக்ஸ் மறுபதிப்பு வண்ணத்தரம்..அச்சு தரம் என எந்தவித குறைபாடும் இல்லாமல் அசத்தியது..

    இச்சமயம் ஒரே வேண்டுகோள் சார்..

    பவளசிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்களேன் சார்..ப்ளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. \\இச்சமயம் ஒரே வேண்டுகோள் சார்..

      பவளசிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்களேன் சார்..ப்ளீஸ்...\\

      +1

      Delete
    2. // பவளசிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்களேன் சார்..ப்ளீஸ்...//
      +11111111111

      Delete
    3. // பவளசிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்களேன் சார்..ப்ளீஸ்...//
      +11111111111

      Delete
    4. // பவளசிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்களேன் சார்..ப்ளீஸ்...//
      +44444443

      Delete
    5. பவளச்சிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்களேன் சார் ப்ளீஸ்

      Delete
  22. ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

    "இருவடை எடுத்து ஒருவடை என்பார்
    திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"

    மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

    இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

    ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
    டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

    ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
    ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’
    வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

    டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.
    சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.

    நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.

    ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...

    ‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.."


    எனக்கு மிக மிக பிடித்த பதிவு..எனவே பகிர்ந்தேன் .

    நண்பர்கள் தவறு எனில் மன்னிக்கவும்..!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் பரணி.சொல்லும் விதம் நல்லதாயின் அவர்கள் ஜால்ரா பாய்ஸ் என்க

      Delete
    2. பின்னிட்டீங்க தலீவரே ..!!அற்புதமான பதிவு..! 👌👌👏👏

      ஆனாக்கா, இம்மாம் டைம் எடுத்து நீங்க டைப்பியது ஏதாவது உபயோகப்படும்னு நினைக்கிறீங்க .. சான்ஸே இல்ல ..!!

      வடிவேலு சார் தேங்காக்கடையில பேரம் பேசுற கதைதான் ..!

      நாம எவ்வளவு இறங்கிவந்து நிலைமையை விளக்கினாலும் அவர்களோ சிம்பிளாக

      " செரீ .. ஆர்ர்ரூப்பாய் " ம்பாங்க.!

      😂😂😂😂😂😂😂😂😂

      Delete
    3. ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் பரணி.

      உங்ககிட்ட இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் நான்.

      Delete
    4. தலீவரே கலக்குறீங்க. சபாஷ்

      Delete
    5. தலீவரே பின்னிப் பெடலெடுத்துட்டீங்க!! பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையை இதைவிட அழகாகச் சொல்லமுடியாது!

      இதை ஒவ்வொரு பதிவிலும் காப்பி-பேஸ்ட் பண்ணலாம்ற அளவுக்கு தகுதியானது தலீவரே!

      இதைப் படிச்சுட்டு யாராச்சும் திருந்தினாங்கன்னா ரொம்ப சந்தோசம்!

      Delete
    6. அற்புதம்! அற்புதம்!!

      இதைப் பாராட்டினா அதையும் ஜா.பா. என யாரேனும் நினைப்பாரேயானால் அது அன்னாருடைய மடமையேயன்றி வேரொன்றும் இல்லை!

      Delete
    7. Redirect to
      "பனியும் ஒரு புதிர் பெண்ணும்"
      மற்றவர்களின் உணர்வுகளுக்கு
      மதிப்பளிக்கும் நற்குணம் கொள்வோம்.

      Delete
    8. தலைவரே அசத்திட்டீங்க...நண்பர்களுக்கு விளக்கம் தேவையில்லை...எதிரிகள் அதை நம்பப் போவதில்லை........உண்மையான அக்கறயுடன் நண்பர்கள் மௌனம் கலைக்கட்டும் ..இதைப் போல ிதழ் வருமா எனும் வண்ணம் பட்டய கிளப்பிய வடிவமைப்புக்கு குரல் கொடுங்கள் நண்பர்ளை...சிறு பாராட்டு ..பெரும் சந்தோசம்...வாழ்த்துங்கள்..வளரட்டும...

      Delete
    9. Super! ஜிங் சக்.. ஜிங் சக்...

      Delete
    10. http://www.namadhunambikkai.com/2011/06/01/1734/#more-1734

      Delete
    11. நன்றி கார்த்திக் ஜி :

      அடப்பாவி மக்கா :((

      எப்படி அடுத்தவரின் பதிவைத் திருட மனம் வருகிறதோ தெரியவில்லை. திருடியது மட்டுமல்லாமல் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் , நண்பர்கள் அனைவரின் பாராட்டுக்களையும் எப்படித் தான் ஏற்று கொள்ள முடிகிறதோ தெரியவில்லை !!

      காப்பி ஆற்ற இந்த தளம் ரொம்பவே வசதியானது போல :((

      Delete
  23. விஜயன் சார், இந்த பதிவில் ஜா.பா மற்றும் பு.பு பற்றி எழுதி இருப்பதை விட்டு கல்யாண வேலையில் நீங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கலாம்.

    பலமுறை இதனை இங்கு பேசிவிட்டோம் இதுவரை எதுவும் மாறவில்லை. இனி மாற வேண்டும் என்றால் அது தனிப்பட்ட நண்பர்களின் கைகளில் உள்ளது, இதனை வளர்ந்தும் குழந்தைகளாக உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன் சார்..

      Delete
  24. I received all.
    The Treasure Box contains :
    1. Dragon Nagaram
    2. Mystery Martin
    3. Ori Kai Pakkasuran
    4. Sudum Pani(Lady S)
    5. Singathin siru Vayathil
    6. Schedule of 2018
    7. Small Scribbling Pad with Chick Pill wrapper
    8. Junior Edi's Wedding invitation
    9. Book Mark
    My Ranking of this month issues
    1. Dragon City.
    2. Mystery Martin (Super picture and Story - Nowdays)
    3. One Hand Pagasuran
    4. Lady S.
    Lady S Super pictures.

    ReplyDelete
  25. ///ஆனால் அடுத்த பிரின்ஸ் ஸ்பெஷல் முதல் பக்கத்தினில் உங்கள் படங்களை greyscale-ல் பார்க்கும் போது மீதமிருக்கக் கூடிய வருத்தங்கள் விலகிடவும், எனது ஸ்டிக்கர் தீர்மானத்தின் பின்னணி புரிந்திடவும் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !///

    சார்... ஆறுதல் சொல்றீங்களா இல்லை பயமுறுத்தறீங்களான்னே புரியலையே... :D

    ReplyDelete
    Replies
    1. வெச்சு செய்ய ப்ளான் பண்ணிட்டார்

      Delete
    2. பயமுறுத்தல் தான்!

      கண்டிப்பா க.வெ.யில் நல்லா வராது என்பது என் எண்ணம்!

      அதுவும் நாம் அனுப்பிய போட்டோவை பொருத்து மாறுபடலாம்!

      Delete
    3. ம்ஹும்
      செஞ்சு வச்சுட்டாரு.

      Delete
    4. சும்மாவே புடிச்சி வச்ச
      புள்ளையாருங்களாட்டம் இருப்போம்.
      இது வேறயா

      Delete
  26. சார்... அடுத்தமாச புக்கோட ஒரு ஜால்ராவையும் இலவச இணைப்பாக் கொடுத்துட்டீங்கன்னா... எல்லோர் கையிலும் ஜால்ரா இருக்கும்... அப்புறம் யாரும், யாரையும் ஜால்ரா-பாய்'னு சொல்ல முடியாது பாருங்க? ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. :-)))

      வயிறுவலிக்க சிரிச்சுட்டு கீழே வந்தா நெஞ்சு வலிக்குற அளவுக்கு சிரிக்க வைக்குறீங்களே செயலரே..


      :-))))

      Delete
    2. ஜிங் சக்

      Delete
    3. சிரிச்சு சிரிச்சி மிடில.

      Delete
    4. ஏ ஜோக்கு ஜோக்கு ஜோக்கு

      Delete
    5. அதுவும் அதிரிபுதிரியா
      பிளாஸ்டிக் ஜால்ரா வாக்கும்

      Delete
  27. Dear Edi,

    My only concern was that you could have made people aware about the practical difficulties with photo saga, much before, which would have avoided lot of expectations around the unboxing. But, let bygones be bygones.

    Apart from the photo saga, Dragon Nagaram was a classic reprint to cherish.... Only complaint, the original cover should have been printed inside... But the Hardbound quality usurped it.

    Would post more, as I read the single volumes. Please concentrate on Vikram's marriage... All other things can wait.

    ReplyDelete
    Replies
    1. Agreed. பாட்டிகள் பாஸ்போர்ட் ஆட்டையைப்போட்டதெல்லாம் உடனுக்குடன் சூடாக ஒளிபரப்பும் நாம், சுமார் 10 மாதங்கள் எதிர்பார்த்த போட்டோ புத்தகத்தில் வரவில்லை எனில் இருநாட்கள் முன்னரோ அல்லது ஒரு வாரம் முன்னரோ ஸ்டிக்கர்தான் என்று சொல்லி இருக்கலாமே. எவ்வளவோ புரிந்து செயல்படும் நண்பர்கள் இதனையும் ஏற்றிருப்பார்களே !

      Delete
    2. Absolutely right. I too have the same opinion

      Delete
  28. ஆங், ஒரு ஐடியா!

    நம்ம தளத்தின் வரலாற்று / தொல்லியல் துறை வல்லுனர்களைக் கொண்டு 'ஜால்ரா - ஒரு இசைக் கருவியின் வரலாறு'ன்ற தலைப்புல, ஜால்ரா உருவானதன் பின்னணி, ஜால்ராவை உருவாக்கிய நாடு, உருவாக்கப்பட்ட வருடம், உலகின் சிறந்த ஜால்ரா இசைக் கலைஞர்களின் பட்டியல், உலக இசை வரலாற்றில் ஜால்ரா ஏற்படுத்தி புரட்சிகர மாற்றங்கள் - இப்படியாப்பட்ட தகவல்களை சேகரிச்சு ஒரு பெரிய்ய பதிவா போடவச்சுட்டோம்னா, அதைப் படிக்கும் எல்லா நண்பர்களுக்கும் ஜால்ரா மேல் ஒரு பெரிய மரியாதை ஏற்பட்டுடும்! அப்புறம் 'ஜால்ரா-பாய்'னு வசைபாடும் வாய்ப்பே இல்லாமப் போயிடும்! ;)

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லட்டுமா ஈ வி ? :-)

      Delete
    2. Why can't you leave that and move on instead of keep getting into the same as "So Sad"? Sometimes it is better to ignore the things that you don't like and move on instead of keep pinching on it. That makes the real difference.

      Delete
  29. ஜால்ரா பாய்ஸ் ங்கிறது ரொம்ப நாளா ஓடிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் நாங்க வருத்தப்படறதே இல்லை. என்னைப் பொறுத்தவரை லயனுக்கு ஜால்ரா பாய்ங்கற பட்டத்தை விரும்பி வெளிப்படையாக அணியும் விலையுயர்ந்த ஆபரணமா ஏத்துக்கறேன்👍🏻👍🏻👍🏻

    ReplyDelete
    Replies
    1. ஜிங் சக்

      Delete
    2. இன்னும்...நல்லா...சத்தமா...

      Delete
    3. // என்னைப் பொறுத்தவரை லயனுக்கு ஜால்ரா பாய்ங்கற பட்டத்தை விரும்பி வெளிப்படையாக அணியும் விலையுயர்ந்த ஆபரணமா ஏத்துக்கறேன்👍🏻👍🏻👍🏻//
      நல்லா சொன்னிங்க சார்.

      Delete
    4. ஜிங் சக்.. ஜிங் சக்...

      Delete
  30. வழக்கமாக எங்க சென்னையில் மழை வந்தா கூடவே இந்த ஸ்டிக்கர் பிரச்சினை எப்படியோ சேர்ந்து கொண்டு விடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. செமையா சொன்னீங்க.

      Delete
    2. நவநீத கிருஷ்ணன் சார்..:-))))

      Delete
  31. இன்று காலையில் கிடைக்கப்பெற்ற புத்தகங்களை இன்னும் படிக்காமல் கையில் வைத்து அழகு பாா்த்துக் கொண்டிருக்கிறேன்!
    (அதிலயும் நம்ம போட்டோ வேற இருக்குல்ல)

    டிராகன் நகரம் அற்புதம்!
    டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் பாா்ப்பதே அழகுதான்!

    அதுவும் போட்டோ ஒட்டப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!

    அந்த முழுப் பக்கத்தையும் வண்ணத்தில் பிாிண்ட் எடுத்து ஒட்டியிருந்தால் இன்னும் அபாரமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்!!

    யாருக்கு எப்படியோ என்னைப் போன்ற குழந்தைகளுக்கு அவரவா் போட்டோவை புக்கில பாா்க்கிற குஷியே அலாதி தான்!

    உண்மையில் எல்லா போட்டோவையும் சோ்த்து குரூப்பா போடுவாங்கனு தான் இதுவரை நெனைச்சுட்டிருந்தேன்!

    ReplyDelete
  32. For me that photo in the book was decent..And i showed happily to all..

    ReplyDelete
    Replies
    1. Veetammave approved vera enna venun

      Delete
    2. அப்புறமென்ன கவலை!

      HAPPY READING 😊😊😊

      Delete
  33. For me that photo in the book was decent..And i showed happily to all..

    ReplyDelete
  34. உடனடித் தேவை : சிறந்த ஃபோட்டோகிராபர்

    ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும். அது கலரிலோ, கருப்பு-வெள்ளையிலோ, கிளிப்பச்சையிலோ - எப்படி மாற்றி பிரின்ட் செய்யப்பட்டாலும் தொடர்ந்து அழகாகவே இருக்க வேண்டும். அப்படியாப்பட்ட புகைப்படத்தை எடுக்கக்கூடிய நிபுணர் உடனே இங்கே தொடர்பு கொள்க. உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது!;)

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும். அது கலரிலோ, கருப்பு-வெள்ளையிலோ, கிளிப்பச்சையிலோ - எப்படி மாற்றி பிரின்ட் செய்யப்பட்டாலும் தொடர்ந்து அழகாகவே இருக்க வேண்டும் ///

      அதுக்கு நீங்க என்னையதான் போட்டோ எடுக்கணும்.! 😊

      Delete
    2. ///அதுக்கு நீங்க என்னையதான் போட்டோ எடுக்கணும்///

      அத எடுத்தா என்ன... எடுக்காட்டி என்ன! :D

      Delete
    3. உட்டு தள்ளுங்க ஈ வி
      நெகட்டிவ்வ கண்டிப்பா தர்றேன்.

      Delete

  35. டிராகன் நகரம்
    வறுத்து எடுக்கிறார் டெக்ஸ்
    கேட்டு முடிப்பதற்குள் - சீரியஸாக முடிவெடுக்கிறார்.
    சொல்லி முடிப்பதற்குள்- முடிவாக சொல்லிவிடுகிறார்.
    அலசி ஆராய்வதற்குள் - ஆயத்தமாகிவிடுகிறார்.
    எதிரிகள் உஷாராவதற்குள் -உச்ச கட்டத்தை அரங்கேற்றுகிறார்.
    இந்த கதைக்குள் - டெக்ஸ் ருத்ர தாண்டவமாடுகிறார் மற்றவர்கள்
    டுமீல் சுடுவதற்குள்.

    ஆக மொத்தத்தில் - டிராகன் நகருக்குள் டெக்ஸ்

    நாடி
    நரம்பு
    எல்லாத்திலயும்
    ஆக்ரோஷம்
    ஆக்ரோஷம்
    ஆக்ரோஷம்

    சர்வமும் டெக்ஸ்
    இடைவேளையே விடாத
    "பாட்ஷா" படம்

    ReplyDelete
    Replies
    1. லேடி S - பைஜாமா போட்டு
      படுத்து தூங்குகிறார்.

      Delete
    2. ஒற்றை கை பகாசுரன் - சுவைக்க முடியாத நகைச்சவை.(வசனங்கள் மட்டும் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகின்றன).

      Delete
    3. மார்டின்
      Mystery ஸ்பெஷல்.

      வேட்டையரை வேட்டையாடுவோம்
      அவரது பழைய கதை ஒன்றை ஞாபக படுத்தியது.
      அலெக்ஸாண்ட்ரியா லைப்ரரியின்
      உருளை அமைப்பு போல் இங்கு செப்புத்தகட்டு கண்ணாடிகள்.
      பாதாள வெஞ்சிறை - கற்பனையோ என்று நினைவாடும் அமானுஷ்ய உயிரினங்கள் - கட்டுக்குள் வைக்க அதி அமானுஷ்ய புராதான கெட்ட ஆவிகள்.
      துஷ்ட ஆவிகளை கட்டி வைக்க மந்திரங்கள்.
      மந்திரங்கள் மறை பொருளாக பழம் புத்தகத்தில்.


      அந்த சிறைக்கு சீக்ரெட் வார்டன்.

      நான் கூட மார்ட்டினின் கிளாஸ்மேட் தான் (எரிந்து போன முகத்த மறைச்சு மாஸ்க் - கொக்கி கை துப்பாக்கி) நாஸ்ட்டை பின்புலமாய் இருந்து
      இயக்குறாரோ என்று சுதாரித்தால் சவ சவ என்று முடிந்து விட்டது.

      பனியும் ஒரு புதிர் பெண்ணும்.

      ஜேன் ஸ்கேட்டிங் செய்து மிதக்கும் போதே யூகித்து விட முடிந்தது - அயல்கிரகவாசிகளின் ஆதிக்க கதை என்று.
      ஜேன் இறந்து விட்டிருப்பாள் என்றோ ,
      இறுதியில் இறந்து விடுவாள் என்றோ
      உடலோடு மறைந்து விடுவாள் என்றோ

      நினைத்ததற்கு மாறாக
      "மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நற்குணம்" என்று
      கதையை முடித்தது மட்டுமே twist.

      ஆகவே சகல காமிக்ஸ் மாந்தர்களாகிய
      நாமும்

      மற்ற இன்ன பிற
      காமிக்ஸ் நண்பர்களுடைய
      நற்குண உணர்வுகளுக்கு மதிப்பளித்து

      எடிட்டரோட உணர்வுகளுக்கும்
      நற்குணங்களையும் மதித்து

      ஸ்ஸ்ஸ்ஸப்பாட.....

      எப்போதும் போல
      சண்டை (கருத்து மோதல்களால்)
      போடுவோம்
      மக்கா

      மறுபடியும் சொல்றேன்
      "காணாது கண்ட கம்பங்கூழ
      சிந்தாம குடிடி சில்லி மூக்கி"

      j



      Delete
  36. தனிப்பட்ட எனது இந்த கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும். மறுபதிப்புகளுக்கென்று மாதம் ஒரு புத்தகம் என்பது கொஞ்சம் அதிகம் என்று தோன்றுகிறது.அதற்கு பதிலாக editor's choice என்ற பெயரில் முழுக்க அவரது விருப்பத்தின் பேரில் யாருடைய தலையீடும் இல்லாமல் ஒரு சந்தா இருந்தால் இன்னும் பல மிகச்சிறந்த படைப்புகள் நமக்கு கிடைக்கும்.அதற்காக மறுபதிப்பே வேண்டாம் என்று அர்த்தம் இல்லை மறுபதிப்பில் மிகச்சிறந்த கதைகள் மட்டும் வருடத்திற்கு அளவாக வெளிவந்தால் அதன்மீது இன்னும் மதிப்பு கூடும்.

    ReplyDelete
    Replies
    1. +1 ஜிங் சக்.. ஜிங் சக்...

      Delete
    2. உங்கள் கருத்தை மதிக்கிறேன்.
      ஆனால் எனக்கு மறுபதிப்புகள் தொடர்ந்து தற்போது வரும் எண்ணிக்கையில் வரவேண்டும். காரணம் நமது பழைய க்ளாஸிக் கதைகள் பலவற்றை படித்து இல்லை நண்பரே.

      Delete
    3. Editors choice என ஒன்று இருந்தால் பல அண்டர்டேக்கர்களையும் பல ஜெரமயாக்களையும் மாதம் ஒரு முறை ஆர்ட் பேப்பரில் முழுவண்ணத்தில் தரிசிக்க முடியும் என்ற எண்ணத்தில் கூறினேன்.அதற்காக மறுபதிப்புகள் முழுமையாக வேண்டாம் என்று கூறவில்லை நண்பரே.

      Delete
  37. வேட்டையரை வேட்டையாடுவோம் :

    லிஸா ஃபார்ராஸ்ட் என்றொரு அழகுப்பதுமையின் நூலகத்திற்கு பழங்காலத்திய புத்தகம் ஒன்றை தேடிவருகிறார் நாஸ்ட் என்றொரு லூஸ்ஹேர் மனிதர்.!

    அந்த புத்தகம் தீவிபத்தில் எரிந்துவிட வேறெங்குமே அதன் பிரதிகள் கிடைக்கும் வாய்ப்பும் அறவே இல்லையெனும் சூழலில் மர்ம மனிதன் மார்ட்டினிடம் ஒரு ஸ்கான் பிரதி இருப்பது அவர்களுக்கு தெரியவருகிறது.

    தொடர்ந்து லிஸா, மார்ட்டின், ஜாவா, நாஸ்ட் இவர்கள் நால்வரும் பாலைனமொன்றில் புதையுண்ட புரதான காலத்து நூலகம் ஒன்றைத் தேடிச்செல்ல என்னென்ன நடக்கிறது, இலக்கை கண்டறிந்த பின்னர் ஏற்படும் விளைவுகள் .. நாஸ்ட் யார் என்று பல மர்மங்களை த்ரில்லாக சொல்லியிருக்கிறார்கள். கருப்புவெள்ளையிலேயே லிஸா கலராக தெரிவது நேக்கு மாத்திரந்தானான்னு தெரியலை .. 😍

    வேட்டையரை வேட்டையாடுவோம் : பழமையும் புதுமையும்

    மதிப்பெண்கள் 8/10

    பனியும் ஒரு புதிர்பெண்ணும் :

    விடுமுறையை கழிக்கச் செல்லும் இடத்தில் ஜேன் என்னும் ஒரு சுவாரஸ்யம் நிறைந்த இளம்பெண்ணை சந்திக்கிறார் மார்டின். அதிசயமான பல திறமைகளைக் கொண்ட அந்தப்பெண் மாயமாகிப்போக, விசாரணையில் அவள் தனித்திறமை எதுவுமே இல்லாத மிகச் சராசரியான ஒரு பெண் என்பது தெரியவருகிறது ..!
    இங்கே தொடங்கும் மர்மங்கள் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அழகாக தெளிவாக முடிச்சவிழ்க்கப்படுகிறது. !
    நல்ல விறுவிறுப்பான கதையோட்டம்.

    மார்ட்டின் மிஸ்ட்ரீயின் இந்த இரண்டு கதைகளில் இந்த கதை முன்னதைவிட சுவாரஸ்யமான த்ரில்லராக இருக்கிறது. ! படைப்புகளின் உன்னதத்தை கடைசிப் பக்கங்களில் அழகாக காட்டியிருப்பது அருமை. பிரபஞ்சத்தின் மர்மங்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமானவை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.!

    முதல் கதையில் லிஸா ஃபார்ரஸ்ட் என்றால் இந்தக் கதையில் டயானா மார்ட்டின். .! ( இருவரும் கதையில் முக்கிய பங்குவகிக்கிறார்கள்னு சொல்ல வந்தேன். ஜொள்ளெல்லாம் விடலை. .. நம்புங்கோ)

    பனியும் ஒரு புதிர்ப்பெண்ணும் - மர்மமும் மார்ட்டின் மிஸ்ட்ரீயும்

    மதிப்பெண்கள் 9/10

    ReplyDelete
    Replies
    1. நல்ல விமர்சனம் ரவிகண்ணன் அவர்களே..!

      Delete
  38. ***** சுடும் பனி *****

    ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் வருடாந்திரம் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு வழங்கும் விழாவும், அவ்விழாவில் பரிசுபெறும் மேதைகளைக் கடத்திப் பயணக்கைதிகளாக்க முயற்சிக்கும் ரஷ்ய மாஃபியா கும்பலும், அதை முறியடிக்கக் களமிறங்கும் பயங்கரவாத முறியடிப்பு உளவுப் பிரிவும், ஒரு கட்டாயத்தின்பேரில் அந்த உளவுப்பிரிவுக்காக ரகசியப் பணியாற்ற நேரிடும் ஷானியாவும், தொடரும் பரபரப்பான நிகழ்வுகளுமே கதை!

    வான் ஹாமே'வின் நேர்த்தியான, வியக்கவைத்திடும் கதை சொல்லும் திறமையோடு, ஷானியா என்ற அழகோவியமும் பயணத்தில் இணைந்திடுமானால், அப்பயணத்தில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சம்தான் ஏது?!! சற்றே அழுத்தமான, அவ்வப்போது சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகளோடு நகர்ந்திடும் கதைக்கு அழகான சித்திரங்களும், நேர்த்தியான மொழிபெயர்ப்பும் கைகோர்த்திட, மீண்டும் ஒரு பிரம்மிப்பான அனுபவம் எளிதாக வசமாகிவிடுகிறது நமக்கு! 'சுடும் பனி' என்ற பெயர்க்காரணமும் கடைசிப்பேனலில் விளக்கப்படும்போது ஷானியாவின் மனநிலையைப் போலவே நமக்கும் மனதில் ஏதோ ஒரு பாரம்! ( பூஊஊவ்... க்ரா...)

    அட்டைப்படமும், அந்த 6 ம் பக்க ஒயிலான/மயிலான ஓவியமுமே ரூ.75க்கு சரியாய்ப் போய்விடுவதால் மீதப் பக்கங்கள் எல்லாமே போனஸ் மாதிரிதான்! ( கர்சீப் ப்ளீஸ்!)

    ஆனால், இதற்கு முந்தைய பாகங்களில் பார்த்த ஷானியாவின் எழில் தோற்றம் மட்டும் ஏனோ இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்! ( ஓவரா வேலை செஞ்சு உடம்பைக் கெடுத்துக்காதேடா செல்லம்!)

    எனது மதிப்பெண்கள் : 9.75/10

    ReplyDelete
    Replies
    1. 'சுடும் பனி'யில் சின்னச் சின்ன ஏமாற்றங்கள் :

      * 'சுடும் பனி' என்ற பெயரும், முன்னட்டைப் படமும் - இக்கதை ஏதோவொரு பனிப்பரப்பில் நிகழவிருப்பதாக நம்பச் செய்திருந்தது. மாறாக, கதைக்களம் முழுக்கவே வானுயர்ந்த கட்டிடங்களையும், நட்சத்திர ஹோட்டலையுமே சுற்றி வருகிறது. முன்அட்டையில் வரும் அந்தப் பனிப்பரப்பும், கானகமும் 'கெஸ்ட் ரோலில்' மட்டுமே தலைகாட்டிச் செல்கின்றன!

      * அசாதாரண மதிநுட்பமும், பல்வேறு திறமைகளும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் ஷானியா கூட - ஆள் யார், என்னவென்று ஆராயாமல் - இரண்டாவது சந்திப்பிலேயே ஒரு அந்நியனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், காதல்வயப்பட்டதாகக் கண்ணீர்விடுவதும் - அவளுடைய பாத்திரப்படைப்புக்கு நேர்மாறான பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது ( யூ டூ ஷானியா?!!).
      சிறுவயதிலிருந்தே அவளைப் பல்வேறுவிதங்களில் பாதுகாத்துவரும் ஆன்டனுக்கு இந்த 'வாய்ப்பு' கொடுக்கப்படாததும் 'நல்லதுக்கு காலமில்லேடா சாமி' என்று நினைக்கத் தோன்றுகிறது!

      கடைசியாக வெளிவந்த ஜூலியாவின் ( நிஜமாகவே கடேஏஏசியா போயிடுச்சே... ஜூலியா கண்ணு...பூஊஊஊவ்...) 'பெளர்ணமியில் காலன் வருவான்' கதையில்கூட, ஜூலியா காதல்வசப்படும் சம்பவங்கள் கதையோடு வெகு இயல்பாகக் காட்டப்பட்டிருந்ததை இங்கே நினைவுகூர்கிறேன்!

      இந்த விசயத்தில் ஷானியாவைப் பின்னுக்குத் தள்ளி, காதல் வயப்பட்ட இயல்பான விழிகளை மனத்திரையில் கொண்டுவந்து நிறுத்தி முன்னனியில் தெரிவது - ஜூலியாவே!

      Delete
    2. ஜொள்ளுவதெல்லாம்
      ஜொள்ளல்ல
      ஈ வி யின்
      ஜொள்ளே ஜொள்ளு.
      ஈ வி F &F ல் ஒரு கவர்ச்சி கதாநாயகி
      இருக்கிறார் அவருக்கும் கொஞ்சம்
      மிச்சம் வைக்கவும்.

      Delete
    3. லேடி S இன்னும் படிக்கவில்லை செயலரே..

      அதனால் படித்துவிட்டு "படிக்கிறேன்".

      Delete
    4. //// F &F ல் ஒரு கவர்ச்சி கதாநாயகி
      இருக்கிறார் அவருக்கும் கொஞ்சம்
      மிச்சம் வைக்கவும்.///

      அதுவொரு வற்றாத நீரூற்று கணேஷ் ஜி! எல்லோருக்குமே தாராளமாக இருக்கிறது! :D

      Delete
  39. நேற்று நடந்ததொரு நெகிழ்ச்சியான சம்பவம். கூரியர்ல வந்த பார்சலை பிரித்து ட்ராகன் நகரம் புக்கில் போட்டோ எப்படி வந்துள்ளது என்று ஆர்வத்தோடு பிரித்து, ஸ்டிக்கரைப் பார்த்தும் லேசான ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தேன்.
    அப்போது என் முதுகுக்கு பின்னால் இருந்து பார்த்துகொண்டிருந்த என்னுடைய நான்கு வயதான மகள் Febina புத்தகத்தை வாங்கி போட்டோவை பார்த்தாள். அந்த போட்டோவில் இருந்தது எடிட்டரும் என்னுடைய மகளும். (போனவருடம் சந்தித்த போது எடுத்த போடட்டோவைத்தான் அனுப்பியிருந்தேன்.)

    "எனக்கு சாக்லேட் ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தாங்களே, அந்த மாமாதானே இது. .! இந்த மாமா பேரென்னப்பா " என்று கேட்டாள்.
    விஜயன் ம்மா என்று சொன்னேன்.
    உடனே புத்தகத்தை தூக்கிக்கொண்டு அம்மாவிடம் ஓடினாள். "அம்மா. . அம்மா .. இங்கப் பாரும்மா .. விஜயன் மாமாவும் நானும் .. போட்டோ பாரும்மா .. " என்று கைதட்டியபடி குதித்துக்கொண்டே அம்மாவிடம் கூறினாள்.
    ஹை! சூப்பர்மா என அம்மா சொல்ல, அதே குதூகலத்துடன் என்னிடம் திரும்ப ஓடிவந்தாள்.
    "அப்போ .. சூப்பரு .. போட்டோ ..சூப்பரு "என கூறியபடி போட்டோவிற்கு முத்தம் தந்து சிரித்தாள்.
    என்னுள் ஏதோ கரைந்ததுபோன்ற உணர்வு. முதலில் லேசாக தோன்றிய ஏமாற்ற உணர்வு எங்குபோனதென்றே தெரியவில்லை.
    ஒரு குழந்தையை மகிழவைத்த போட்டோ எனக்கேன் ஏமாற்றத்தை தரவேண்டும்.? வளர்ந்துவிட்டதாலா?
    மகிழ்ச்சியில் மலர்ந்திருந்த என் மகளின் முகத்தைப் பார்த்துவிட்டு, திரும்பவும் போட்டோவைப் பார்த்தேன்.(இப்போது என் கண்களுக்கு ஸ்டிக்கராய் தெரியவில்லை) ஹை.! சூப்பரு என, எனக்கும் சொல்லத் தோன்றியது.!
    சில விசயங்களில் நாமும் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ எனத் தோன்றுவது போல, இப்போதும் தோன்றியது.!

    சின்ன ஏமாற்றம்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதையே அரற்றி அரற்றி பெருசாக்கி நிம்மதி இழப்பதைவிட என் மகளைப்போல ஹை சூப்பரு என்ற குழந்தை மனதுடன் இருந்துவிட்டு போவது சிறந்ததாகப் பட்டது. !
    அனைத்துக்கும் காரணம் நமது மனமும் எண்ணமும்தானே?
    சத்தியமாய் இப்போது என் கண்களுக்கு போட்டோ அழகாக தெரிகிறது ..!

    ReplyDelete
    Replies
    1. ஷல் ஜி சூப்பரா சொன்னிங்க,அருமையா சொன்னிங்க,நச்சுனு சொன்னிங்க.
      +1111111111

      Delete
    2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷல்லூமிடமிருந்து ஒரு நீளமான கமெண்ட்!!!

      எழுதப்பட்ட விதமும், அது சொல்லும் விசயங்களும் - செம!!

      ///சத்தியமாய் இப்போது என் கண்களுக்கு போட்டோ அழகாக தெரிகிறது ..///

      அந்த ஃபோட்டோவில் நீங்கள் இல்லைதானே? அதான் அப்படித் தெரிகிறது! :D

      Delete
    3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அந்த மழலை உலகினில் எல்லாமே வானவில்லின் வர்ணங்களாய்த் தெரிவது கடவுளின் வரம் சார் !

      Delete
    4. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) = ரின் டின் கேன்

      நல்லா பாருங்க நண்பர்களே, எப்படி எல்லாம் கோல்மால் நடக்குது இங்கே :((

      //ஈரோடு விஜய் has left a new comment on the post "First & next...!":

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷல்லூமிடமிருந்து ஒரு நீளமான கமெண்ட்!!!//

      //ரின் டின் கேன் has left a new comment on the post "First & next...!":

      //நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷல்லூமிடமிருந்து ஒரு நீளமான கமெண்ட்!!!//

      @ ஈசேலி விஜய்
      டைப்புவதில் மெகா சோம்பேறி நான்//

      Delete
    5. இவர்கள் தான், போலி ஐடியைப் பற்றி இங்கே காது கிழிய கிழிய பாடம் எடுப்பவர்கள்...

      என்னத்தச் சொல்ல :((

      Delete
    6. ஷல்லும் ஜீ....அருமை...அழகு...:-))

      Delete
    7. Udaya Kumar :

      பலநாள் திருட்டு கிறுக்கன்...

      ஒருநாள் அகப்படுவான்...

      நான்குமறை தீர்ப்பு பலித்து...

      Delete
    8. Udaya Kumar :

      பலநாள் கிறுக்கன்...

      ஒருநாள் அகப்படுவான்...

      நான்குமறை தீர்ப்பு பலித்து...

      ஒரு ஜால்ரா முகம் கிழிந்தது...

      Delete
    9. ஹா ஹா ஹா
      அபார கண்டுபிடிப்பு உதய் குமார் அவர்களே' தாங்கள் இன்னும் என் மீது பழைய கோபத்துடனே யே இருக்கிறீர்கள் என்பது தங்களது கண்டு பிடிப்பில் தெரிகிறது. முன்னாள் நான் கொஞ்சம் அதிகமாக எழுதி வந்தபோது ஸ்பைடர் குமார் என்பவர் என் மகளின் பிறந்த நாளிற்கு அழைத்ததையே கேலிக்குரிய் தாக்கி என்னை துரத்த முயன்றார். இப்போது உதய் குமார் எடுத்திருக்கும் ஆயுதம் ரின்டின் கேன். இவன் எப்ப தலை தூக்குவான் அவனை அப்படியே அமுக்கிடலாம் என காத்திருந்தது நன்றாக தெரிகிறது. இதில் வேறொன்றும் புரிகிறது, ஹர ஹர மஹா தே வக்கீ யை இன்னும் மறக்கவில்லை அல்லவா.

      Delete
    10. அப்போ ரின்டின்கேனாக வந்துகொண்டு இருந்தது ஷல்லூம் ஃபெர்னான்டஸ்தானா????!!!??

      நல்லாத்தான்யா எழுதிட்டு இருந்தீங்க .. வாழ்த்துகள் ..!! 💐💐💐

      Delete
    11. அப்போ ரின்டின்கேனாக வந்துகொண்டு இருந்தது ஷல்லூம் ஃபெர்னான்டஸ்தானா????!!!??

      நல்லாத்தான்யா எழுதிட்டு இருந்தீங்க .. வாழ்த்துகள் ..!! 💐💐💐. அதுவும் யாருக்குமே உறுத்தாத அன்பான காமெடியுடன்.

      Delete
  40. ""தல"" யின் தாண்டவம்.....

    டிராகன் நகரம்!
    =============

    லயன்காமிக்ஸ் 50 வது இதழாக வந்து கலக்கிய புத்தகம் இன்று வண்ணத்தில் 311 மறுபதிப்பு நூலாக வந்துள்ளது.

    டிராகன் நகரம் என்ற பெயருக்கு ஞாயம் செய்யும் விதமாக டிராகன் உருவம் தாங்கிய பெயர் அருமையான முடிவு.

    கதையின் மையம் சீனர்கள் என்பதால் சீனப்பட்டாசக அட்டை பிரகாசிக்கிறது, வச்சகுறி தப்பாத தலயின் துப்பாக்கித் தோரணம் செம லுக்காக அட்டை அமைந்துள்ளது. வாழ்த்துகள் எடிட்டர் சார்.

    ஆஸ்டினில் உள்ள ரேஞ்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த "தல" யிடம் புதிய மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.
    டெக்ஸாஸ்ஸில் தலைவிரித்தாடும் சட்ட ஒழுங்கை நேர் செய்ய புரப்பட்ட ரேஞ்சர்கள் அனைவரும் மீளாத்துயிலில் உறங்குகின்றனர். ஆகவே தல தனக்கே உரித்தான முறையில் பணியை பொறுப்பேற்றதோடு எச்சரிக்கை உணர்வோடு தன் குழுவிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறார்.


    தலயை பின் தொடர்ந்து உறங்கும்போது அவரை மடக்க எதிரி எத்தனிக்கையில் கார்சன் அன்ட்கோ அவனை சுட்டுத்தள்ளி காப்பாற்றும் காட்சி அருமை.
    தலயை தொலைநோக்கியில் பார்க்கும் காட்சி விசுவல் ட்ரீட்.....

    டெக்ஸாஸ்ஸில் உள்ள மதுக்கடையில் நுழையும்போதே அதிரடி ஆக்சன் தூள்பறக்கிறது....

    ஜிம் அண்ட்கோ குழுவை அடித்து துவம்சம் செய்து தங்கள் பணியை டெக்ஸாஸ்ஸில் தொடங்குகின்றனர்.

    ##நாம் எண்ண ஆயூதம் எடுக்கவேண்டும் என்று எதிரிதான் தீர்மானிப்பான். ##
    ** தோழர் மாவோ**
    அவர்களின் கூற்றிற்கு ஏற்ப மதுபானக்கடை மற்றும் சூதாட்டத்தைை பின்புலமாகக்கொண்டு ஊரைசுரண்டும் எத்தன் டான் மானுவல் அவனது வழியை பின்பற்றி மதுபானக்கடையை 2000 டாலருக்கு விலைக்கு வாங்கிறார், நில்ஸன் எனும் சூதாடியின் உதவியோடு சூதாட்டத்தை ஒழிக்க அவர்கள் சூதாட்ட வருமானத்தில் 10% வசூலிப்பது பின் அவர்களை துவைத்து எடுத்து ஊரைவிட்டு ஓடச்செய்வது என சமூகத்தின் கேடுகளை கழை எடுக்கும் அதிரடி தூள்பறக்கிறது.

    டான் மானுவல் தலயை விலைக்கு வாங்க முயல எண்ணி அவருக்கு அழைப்பு விடுக்கும்போது அதனை தில்லாக எதிர் கொள்ளும் காட்சி அட்டகாகம் போங்கள்.

    பிளாக் டிராகன் கூட்டத்தலைவன் வாங்கை அவனது கூடாரத்தில் சென்று உதைக்கும் காட்சி அமர்க்களம்.

    அமைதியாக வாழும் சீனர்களை தூண்டிவிட்டு சமூக விரோத செயலில் ஈடுபடும் வாங்கின் தூண்டுதலால் 50 பேர்கொண்ட குழு தலயின் குழுவை அழிக்க வரும் செய்தி அறிந்து அவர்கள் கடந்து செல்லும் பாலத்தில் அதிரடியாக மறித்து நடத்தும் ஆக்சன் மேளா சீனப்பட்டாசாக வெடிக்கிறது.

    இறுதியில் டிராகன் குகையில் மாட்டிக்கொள்ளும்போது அதில் வெளியேற உதவும் எதிரி இறந்த போதும் அவனை பாதுகாப்பாக வெளியெடுத்துவரும் காட்சி எதிரிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் காட்சி நெஞ்சில் ஈரம்.!!!

    இறுதியில் நில்ஸன் சன்னலை உடைத்துக் கொண்டு எதிரியை சுடும்காட்சி பற்றி தல பாராட்டுகிறார் அதற்கு நில்ஸன் "வஷிஸ்டர் பிரம்மரிஷி பட்டம்" என மெய்மறந்து ஏற்றுக்கொள்ளும் சூழல்....
    தவறுகளை களைந்து துடிப்போடும் பொறுப்போடும் உள்ளவர்களை அங்கிகரிக்கவேண்டும் என வெளிப்படுத்துகிறார் அதன் மூலம்.

    தல கதை தரமாண நோக்கில் படைத்த பொனெல்லி, காலப்பினி குழுவிற்கு நன்றிகள் கோடி......

    30 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு வெள்ளையில் படித்த கதை இன்று முழுவண்ணத்தில் சீனப்பட்டாசு தோரணமாக வெடிக்கிறது.!!!!

    பலமுறை படித்தாலும் திகட்டாத
    சரளமான மொழிபெயர்ப்பு, அட்டகாசமான கதை.....

    பக்கம் 64, 65 ல் எதிரிகளை தலயின் குழு துப்பாக்கி தூரிகையில் வெடிக்கும் காட்சியில் முதல் கட்டம் தொடங்கி இறுதி கட்டம்வரை டுமீல் என சுடும் வாக்கியம் ஒன்று தான் எழுத்து பாண்டு சையும் ஒன்றுதான் ஆனால் அதில் மாறிமாறி வரும் வண்ணம் என்னை கவர்ந்துள்ளது.
    வர்ணசேர்க்கையில் விளையாடியுள்ளனர் அட்டகாசம் போங்கள்.
    இதுபோல் நிறைய இந்த புத்தகத்தில் உள்ளது வர்ணச்சேர்க்கை.

    இந்த கதையின் முழுவதும் கிட் பேசியது ஓர் இரு வார்த்தை தான்
    எப்போதுமே தல கிட்கார்சனை வாரூம்போது தன் பங்கிற்கு சில வேலையை காட்டுவது உண்டு அவை இதில் இல்லை. ஒருகாட்சிதவிர.

    இன்னும் இன்னும் நிறைய உள்ளது.....
    படியுங்கள் உடனே......

    யாழிசை செல்வா
    04/11/2017

    ReplyDelete
    Replies
    1. சார்...மிக அழகான விவரிப்பு ..அனைத்து இதழ்களுக்கும் உங்கள் பாணியில் இதே போல் தொடருங்கள் சார்...

      Delete
    2. @ yazhisai selva

      பின்னிப் பெடலெடுத்துப் பிரிச்சு மேஞ்சுட்டீங்க நண்பரே!

      எழுதத் தூண்டிய தல'யின் கீர்த்தி ஓங்குக!

      Delete
    3. நன்றி நண்பர்களுக்கு .....
      தல மேல உள்ள காதல் அவ்வளவே.....

      Delete
  41. திரு விஜயன் சார் அவர்களுக்கு என் இனிய வணக்கம் .... இன்று என் முதல் காமிக்ஸ் பதிவு உங்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. வருக சார்...காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறோம்..!

      Delete
    2. மிக்க நன்றி பரணி சார் .... வாழ்த்துக்களுடன் நானும் காமிக்ஸ் நண்பர்களோடு இணைகிறேன் ...

      Delete
    3. @ Kalanithi from Erode

      நல்வரவு நண்பரே! EBFல் நமது காமிக்ஸ் திருவிழாவுக்கு வந்திருக்கிறீர்களா?

      Delete
    4. வணக்கம் விஜய் ... இது வரை நான் EPF comics திருவிழாவுக்கு வந்தது இல்லை... வேலை விசயமாக வெளிநாட்டில் இருப்பதால் என்னால் முடியவில்லை... அடுத்த வருடம் வர முயர்ச்சி செய்கிறேன்...
      உங்கள் பதிவு மிக்க அழகாக உள்ளது...

      Delete
    5. மிக்க நன்றி ரவி சார் 🙏.....

      Delete
    6. @ Kalanithi from Erode

      வாய்ப்புக் கிடைக்கும்போது அவசியம் கலந்துகொள்ள முயற்சியுங்கள் நண்பரே! உற்சாகத் திருவிழா அது!

      கனிவான வார்த்தைக்கு நன்றிகள் பல _/\_

      Delete
    7. நிச்சயம் முயர்ச்சி செய்கிறேன்... நாம் EPFல் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு...

      Delete
    8. மிக்க நன்றி பாஷா சார் ....

      Delete
    9. தளத்திற்கு வருகை தந்த
      புதிய நண்பா் கலாநிதி அவா்களுக்கு
      இனிய வணக்கங்கள்!!

      Delete
    10. மிக்க நன்றி .... வணக்கம் மிதுன் 🙏...

      Delete
    11. கலாநிதி அவர்களே....வ௫க..வணக்கம்.
      எங்கள் ஜோதியில் ஐக்கியமானதற்கு நன்றிகள் பல!

      Delete
  42. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய காலை வணக்கம் ஏடிஆர் சார்..

      Delete
  43. மார்ட்டின் இதழை முடித்தாயிற்று ..

    இந்த முறை ஒரே வரியில் சாரி ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறேனே...


    "அபாரம் "

    ReplyDelete
  44. இந்த மாத இதழ்கள் ரேட்டிங்,
    1.ஒற்றைக் கை பகாசுரன்-10/10,
    2.சுடும் பனி-9/10,
    3.டிராகன் நகரம்-8/10,
    4.மார்ட்டின் மிஸ்ட்ரி-
    அ.வேட்டையரை வேட்டையாடுவோம்-9.5/10,
    ஆ.பனியும் ஒரு புதிர்ப் பெண்ணும்-10/10.
    எல்லா புக்ஸுமே புத்தக வடிவமைப்பு,அச்சுத் தரம்,பைண்டிங்,கலரிங் எல்லாமே அசத்தல்,குறிப்பாக டிராகன் நகரம்,கையில் வைத்துப் பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது, கண்ணை உறுத்தாத வர்ணக் கலவைகள் இன்னும் சிறப்பு,என்ன ஆங்காங்கே தட்டுப்படும் எழுத்துப் பிழைகள் மட்டும் உறுத்தல்,அப்புறம் இன்னுமொரு அன்பு வேண்டுகோள் மீண்டும் சார் 2019 லாவது
    மர்ம மனிதன் மார்ட்டின்,ரிப்போட்டர் ஜானி இருவருக்கும் இன்னுமொரு கூடுதல் ஸ்லாட் வழங்கினால் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரே... அதிக மதிப்பெண் வாங்கிய மார்டினுக்கு 4வது இடம் கொடுத்திருக்கிறீர்களே?!!இன்னா உங்க கணக்கு?!!

      Delete
    2. அது வெறும் வரிசை தான் ஈ.வி தர வரிசை அல்ல.மார்ட்டினுக்கும்,ரிப்போட்டர் ஜானியும் தான் என் ஆல்டைம் பேவரட்.

      Delete
    3. ஆங் அப்படீன்னா சரி! ஆனா நீங்க 1,2,3க்கு பதிலா '*' மாதிரி எதையாவது போட்டிருந்தா எனக்கு இந்தக் குழப்பம் வந்திருக்காது!

      Delete
  45. அடடே !

    பெரும் பாலான வாசகர்கள் படித்து முடித்து விட்டார்கள் போல. ?


    சென்ற வருடம் வரை சந்தா புத்தகங்களை வந்த வுடனே ஒரேநாளில் படித்து முடித்துவிடுவேன்.ஆனால் இன்றோ பொடி எழுத்துக்கள் சுத்தமாக தெரியவில்லை. கண்ணாடி உதவி இல்லாமல் படிக்கவே முடியவில்லை. ! என்னுடைய காமிக்ஸ வாசிப்பு 75% குறைந்த போய்விட்டது.படித்துவிட்டு வருகிறேன். என்னமோ போடா மாதவா.!

    ReplyDelete
  46. Tex,tex,tex,.....ப.சி.மர்மமும் கலர் ரிலீஸ்னா செயலரே உடைந்தமூக்காருக்கு முந்தியே தாத்தா வுக்கு கல்யாணம் நிச்சயம். கலர் ல கார்ஸன் டாலடிக்றார்.

    ReplyDelete
  47. மிக்க நன்றி பாஷா சார் ....

    ReplyDelete
  48. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete