Monday, October 23, 2017

TMT !

நண்பர்களே,

வணக்கம். நமது வலைப்பக்கப் பரபரப்புகளை இப்போதெல்லாம் பார்த்தாலே, நிறைய திட்டமிடல்களை மாற்றியமைக்க அவசியப்படும் போல் தோன்றுகிறது ! "த்ரீ மில்லியன் ட்ரீட்" 2019-குத் தான் அரங்கேறிடுமென்று  இனியும் மெத்தனமாய் இருக்க முடியாது போலும் ; வண்டி தெறித்து ஓடுவதைப் பார்த்தால் TMT - தொடரும் ஆண்டிலேயே நிஜமாகிடுமோ ?! கிழிஞ்சது ; ஓட்டை வாய் உலகநாதன் உலவும் வேளையா இது ? பொத்திப் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய சமாச்சாரத்தை பொடேரென போட்டு உடைத்து விட்டானே ?!

Anyways - போகிற போக்கைப் பார்த்தால் இந்த 3 மில்லியன் பார்வைகளை நாம் தொட்டுப் பிடிக்கும் தருணமும்  தொடரும் ஆகஸ்ட் 2018 ஆகத் தானிருக்குமோ ?  இன்னும் எத்தனை திட்டமிடல்களைத் தான் ஈரோடு 2018 தனதாக்கிடக் காத்துள்ளதோ? போகிற போக்கில் விடியக் காலையில் ஒரு காப்பித் தண்ணியை குடிச்சிப்புட்டு ஆஜரானால், பொழுது சாயும் நேரம் வரைக்கும் நம் ரவுசு தொடர முகாந்திரங்கள் இருக்கும் போலுள்ளதே ?! 

என்னமோ போடா மாதவா moments aplenty # !!

அப்புறம் நேத்திக்குத் தான் LADY S-ன் "சுடும் பனி"யின் பணிகள் முடிந்தன ! கதைநெடுக வேறொரு காரணத்தின் பொருட்டு கைக்குட்டை அவசியமாகிடக் கூடுமென்றால், கிளைமாக்சில் இளகிய மனம்படைத்த நமது பல ராஜகுமாரர்கள் - "கண்கள் வேர்க்குதே !" என்று கைக்குட்டைகளைத் தேடப் போவதும் நிச்சயமென்று தோன்றுகிறது ! Maybe இம்மாத கிப்ட் ஒரு கர்சீப் என்றிருந்தால் பொருத்தமாய் இருக்குமோ ? Bye all ! See you around ! லக்கி லூக் waiting எனக்கோசரம் !

அப்புறம் உங்களின் சந்தாக்களுக்காக 27 நாயகர்களுமே waiting !! So நாளைய பொழுதை அதற்கென செலவிட முடிகிறதாவென்று பாருங்களேன் ப்ளீஸ் ? 

271 comments:

  1. முதல் இடம் முதன் முறையாக!

    ReplyDelete
  2. உப பதிவுக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  3. சுடும் பனி உங்களுக்கு
    கடும் பனி யாகி விட்டதோ

    ReplyDelete
  4. நவம்பர் அக்டோபரில் கிடைக்குமா சாரே?

    ReplyDelete
  5. உப பதிவு தந்த வாத்தியா௫க்கு சலாம் வைச்சுக்கறேங்க!!!!!!!

    ReplyDelete
  6. ஆகஸ்ட் 18ல் பல விஷேசங்கள் வ௫வதால் ஒ௫ குண்டு புக் த௫மாறு ஆசிரியரிடம் வேண்டுகோள் அல்ல கோரிக்கை வைக்கின்றோம். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதை எமது போராட்டக் குழு பதுங்கு குழிப் புகழ் தலைவர் உடன் ஆலோசித்து முடிவெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!!!!!

    ReplyDelete
  7. Replies
    1. கனவுகளின் கதையிது - கதையின் முதல் சில பக்கம்களை படித்தவுடன் இறந்தவர்களின் கடைசி ஆசையை கனவு கண்டு சொல்லும் ஒரு பெண்ணின் கதை என்பதை புரிந்து கொண்டேன்! கொஞ்சம் வித்தியாசமான கற்பனைதான் ஆனால் இதனை வைத்து எப்படி கதை நகர்த்த போகிறார்கள் என்று அடுத்த சில பக்கம்களை படிக்க ஆரம்பித்தவன் முழுகதையும் ஒரே மூச்சில் படித்த பின்தான் புத்தகத்தை கீழே வைத்தேன்!

      படிக்கும் போது ஆங்காங்கே கேள்விகள், மற்றும் சில பக்கம்கள் விட்டு போனது போன்ற உணர்வு. ஆனால் கதையின் கடைசி சில பக்கம்களை படிக்க ஆரம்பித்தவுடன் சகலமும் புரிய ஆரம்பித்தது. மறுநாள் காலை வரை ஒவ்வொரு விசயமாக அசை போட்டு எனது புரிதல் சரிதானா என யோசிக்க செய்த கதை!

      சூப்பர்!!

      Delete
  8. எடிட்டர் சார்...

    நீங்க மேலே எழுதியிருப்பதெல்லாம் கீழேயிருக்கும் அந்தப் படத்தைப் பார்த்தவுடன் கணநேரத்துல மறந்து போயிடுச்சே... ஏன் சார்?!!!

    ReplyDelete
    Replies
    1. கணநேரத்துல இல்ல கண்ணடிக்குற நேரத்துல மறந்துட்டிங்க செயலாளரே

      Delete
    2. அதுக்கு " ஜொள்ளோடிக்கா-வடிச்சோடிக்கா" என்றொரு வைரஸ் கிருமி தான் காரணம் ! ஒரு மண்டலத்துக்கு பதுங்கு குழியில் அடைந்து கிடப்பது தான் இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட ஒரே உபாயமாம் !

      டாக்டர் smurf கிட்டே கேட்டேனாக்கும் !

      Delete
    3. அந்த இனிய நோய் என்னையும் தாக்கிடிச்சின்னு நினைக்கிறேன் வழின்ற ஜொள்ளை துடைச்சு மாளல
      இந்த நோய் அடுத்து தாக்க போகும் நபர்கள் கிட் ஆர்ட்டின் கண்ணனும் டெக்ஸ் விஜய ராகவனும் பெரிய துண்டா எடுத்து வச்சுக்கங்க நண்பர்களே
      ஜொள் வடிதலை துடைக்க

      Delete
    4. @kit,

      செயலாளர் எப்போது பாடகரானார்? நிறையவே பின்னூட்டங்களை மிஸ் பண்ணிவிட்டேன் போலிருக்கிறது.

      கிருஷ்ணா நீ பேகனே..

      :-)))))

      பை தி வே, இந்தக் கதையில் லேடி எஸ்ஸைப் பார்த்து வரப்போகும் கண்ணீரைத் துடைக்க கர்ச்சீப்பை எடுத்துக் கொள்ள சொல்கிறார். ஆனால், வழியும் ஜொள்ளை துடைக்கத்தான் அந்த கர்ச்சீப் உதவப்போகிறது போலிருக்கிறது.

      பி்கு:

      சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக: ஜொள் என்பதும் ஒரு பழந்தமிழ்ச் சொல்லேயாம். சரியான ஸ்பெல்லிங்: 'சொள்'. பொருள்: தன்னை மறந்த நிலையில் வழியும் உமிழ் நீர்.

      :-)))

      Delete
    5. இப்படிப்பட்ட மாபெரும் உண்மையை உலகிற்கு சொன்ன அண்ணன் வாழ்க!!!

      Delete
  9. இத்தளத்தின் விகடகவி,நகைச்சுவை நாயகன், பாடலில் வல்லவன், காதல் இளவரசன்,நண்பர்களால் விரும்பும் பாணி விமர்சனத்தின் வித்தகர்,
    என்னுடைய காமிக்ஸ் உலகின் முதல் நண்பருமான, தளத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ஈவி (எ) செயலருக்கும்,

    எல்லா போராட்டங்களிலும் வெல்லும், அனைத்து போராட்டங்களையும் முன்னெடுத்து செல்லும் போ.கு.தலீவர் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவரும்,
    லயன் காமிக்ஸ் க்ளப்பில் தன்னுடன் இடத்தை பகிர்ந்து கொண்டவருமான தலீவருக்கும் அன்பான இரவு வணக்கங்கள்....

    ReplyDelete
    Replies
    1. சோலிய முடிச்சுப் போட்டீங்களே விஜயராகவன்!!

      "கிருஷ்ணா நீ பேகனே... பரோஓஓ"

      Delete
    2. நன்றி மறப்பது நன்றன்று செயலரே...!!!😎😎😎😁😁😁

      Delete
    3. விடைபெறுகிறேன் நண்பர்களே... _/\_
      இன்றோ, நாளையோ சில போலி ஐடிக்காளால் எனக்கு ஆபத்து நேரவிருப்பது சர்வ நிச்சயமாகிவிட்டதால், 'அர்ச்சணைகள்' அடங்கும்வரை தலீவரின் பதுங்குகுழியைப் பகிர்ந்துகொள்ளப் புறப்படுகிறேன்!

      இங்கே பூரண அமைதி நிலவுவது உறுதியான பின்னே, யாராவது பதுங்குகுழியின்மேல் நின்றுகொண்டு டாக் டாக் டாக் என்று மூன்றுமுறை உதைக்கவும்! :)

      Delete
    4. டாக் டாக் என்று உதைக்கணும்னா டாக் புல்ல தான் கூப்பிடோணும்

      Delete
    5. ஹிஹி..!!

      ரூல்ஸ் அடிப்படையில பாத்தா உங்களுக்கும் தலீவருக்கும் அடுத்துதான் எனக்கோ டெக்ஸ் மாம்ஸ்க்கோ கிடைச்சிருக்கணும்.!

      என்ன பண்ண, எம்பட சைசையும் ஃபேசையும் பாத்தவுடனே அந்த தாம்பரத்துல தாலியறுத்த கேசை இவன்மேல போடு, அப்புறம் அந்த அறுவதுவயசு ஆயா கேசையும் இவன்மேலயே போடுன்னு பலபேருக்கு தோணிடுதே..!! :-)

      அதுக்காக பதுங்குகுழிக்கு ஏன் போகணும் குருநாயரே?! சிஷ்யப்பிள்ளை நானிருக்கேன்., எத்தனை போலி ஐடிக்கள் வந்தாலும் சிரிச்சே வெறுப்பேத்தி விரட்டிப்புடுவோம் விரட்டி.. யூ டோண்ட் வொர்ரி..!!

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

      Delete
    6. எல்லாம் சரிதான் கீழே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு குழிக்கோ பாதாளத்துகோ போங்க விஜய்!

      Delete
    7. ஓய் மாம்ஸ்@்தலீவர், செயலர், செயலரோட சீடர்னு சீனியர்கள் மூவர் இருக்க, வர்ர போலி ஐடிலாம் என் மேல் அதாவது இந்த பச்சை மண்ணுமேல, பிள்ளையார் சுழி போடுதாங்களே...!!!
      அது ஏன்னேன்...??? எனக்கு மட்டும் ஏன்னேன்????

      Delete
    8. /// எத்தனை போலி ஐடிக்கள் வந்தாலும் சிரிச்சே வெறுப்பேத்தி விரட்டிப்புடுவோம் விரட்டி.. யூ டோண்ட் வொர்ரி..!!

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂///

      சிரிக்காம என்ன பண்ணுவீங்க.. வாங்கிக் கட்டிக்கப்போறது நானாச்சே?!!

      Delete
    9. ///சிரிக்காம என்ன பண்ணுவீங்க.. வாங்கிக் கட்டிக்கப்போறது நானாச்சே?!!///

      நாம ஒண்ணா சேந்து சிரிப்போம்னுதானே சொல்லியிருக்கேன் ..! தவிரவும் வாங்கிக்கட்டிக்கிறதோ வட்டிபோட்டு குடுப்பதோ எதுனாலும் சேர்ந்தே செய்வோம் குருநாயரே..!

      கிருஷ்ணா நீ பேகனே பாரோ..!

      Delete
    10. ///வாங்கிக்கட்டிக்கிறதோ வட்டிபோட்டு குடுப்பதோ எதுனாலும் சேர்ந்தே செய்வோம் குருநாயரே..! ///

      நீங்க நாளைக்கு ப்ளாக்குக்கு லீவுன்னு கேள்விப்பட்டேனே...? :D

      Delete
    11. அந்த ரகசியமும் உங்களுக்கு தெரிஞ்சு போச்சா

      Delete
    12. As i am suffering from என்னன்னு எழுதி லீவ் கேக்கட்டும்?!

      ம்ம்.. .ம்ம் Affecting by some fake id ' s வயித்தெரிச்சலோஃபோபியான்னு எழுதிடலாமா??

      Delete
    13. ///வயித்தெரிச்சலோஃபோபியான்னு எழுதிடலாமா??
      ///

      :D :D :D

      Delete
    14. இது கிருஷ்ணாவுக்கான வலையா?ஹி ஹி நீங்க மட்டுமா வலைவிரிச்சி வெச்சிருக்கிங்க,கடைசியா பதிவு போட்ட டூப் கிருஷ்ணாவும்தான்.
      தனிநபரின் தவறை சுட்டிகாட்டியதற்கு அதை ஒரு அணியின் மேலுள்ள குற்றச்சாட்டாக மாற்றி ஹா ஹா என்னா ஒரு வில்லத்தனம்.

      Delete
  10. Replies
    1. மைசூர்ல மைசூர்பா என்ன விலை???

      Delete
    2. மைசூருக்கு ஒரு மைசூர் பாகே போகிறதே அடடே ஆச்சரியக்குறி

      Delete
    3. என்ன சைசுலதான் ரொம்ப பெரிய்ய மைசூர் பாகு

      Delete
  11. ஜம்போ காமிக்ஸ் அறிவிப்பு
    அம்போ வாகி விட்டதே

    ReplyDelete
    Replies
    1. பீ கூல்& பொறுமை செந்தில்...

      என் கணிப்பு, நியூ இயர் அன்று அறிவிப்பு வரக்கூடும்...

      அல்லது டிசம்பரில் அறிவிக்கப்பட்டு நியூ இயரில் வெளியிடப்படலாம்...

      Delete
    2. சாமி இன்னொரு ரவுண்ட் தாங்காது...😲😲😲

      Delete
    3. மறுக்கா மறுக்கா தாங்கலாம் டெக்ஸ்

      Delete
    4. அப்டியா சொல்றீங்க...நீங்கள் சொன்னா சரிதான்...
      ஜெய் மக்கான் பேடாய நமக...!!!
      சிவகாசி பன்னாய நமக...!!!
      மல்லூர் கமர்கட்டாய நமக...!!!

      Delete
    5. A time for everything....& everything in it's time...!

      Delete
    6. ///A time for everything....& everything in it's time...!///

      அதாவது, ஜம்போ காமிக்ஸ் பத்தி நாளைக்கு காலம்பர அறிவிக்கிறதா இங்கிலீஸ்ல சொல்லியிருக்காரு எடிட்டரு! :D

      Delete
    7. அந்த 'டாக்..டாக்...டாக்" சத்தம் ஏதோவொரு ஆசாரி,எங்கேயோ ஒரு பட்டறையில் வேலை பாக்குற சத்தம்னு விபரமாச் சொல்ல யாரும் இல்லியோ ?

      Delete
    8. மொழிபெயர்ப்பிற்கு தேங்க்ஸ் செயலரே....

      ஆனா காத்தால ஆயிறுச்சே...:-(

      Delete
  12. கனவுகளின் கதையிது - படித்து முடித்தவுடன் தோன்றியது, நண்பர்கள் எனது புரிதல் தவறு என்றால் சொல்லவும்!

    பெட்சி & சமந்தா இருவரின் தந்தை ஜெரால்ட், ஆனால் தாய் வேறு வேறு

    ஷானேன் & டிம் இருவரின் தந்தை ஒருவர் ஆனால் தாய் வேறு வேறு

    ஜெர்ரி & டிம் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பெட்சியை கொலை செய்தார்கள், சமந்தாவின் கோரிக்கைகாக.

    டிம் ஜெர்ரியை கொன்று விடுகிறான், காரணம் ஷானேன் அவனை அடையாளம் கண்டுகொண்டதால்.

    டிம் ஷானேனை கொள்ளாமல் இருக்க காரணம் தனது தங்கை என்பது.

    டிம்இன் அம்மாவிற்கு தெரியும் ஷானேன் தந்தைதான் டிம்மின் தந்தை என்று.

    கேள்விகள்:
    1. சமந்தா - உயிர் உடன் இருக்கிறாளா கதையின் முடிவில்?
    2. சுரங்கத்தில் வேலை பார்பவர்கள் அங்கே தனிமையை தொலைக்க துணை தேடுவதற்கு பதில் தனது குடும்பத்தை தாங்கள் வேலை பார்க்கும் சுரங்கத்தின் அருகில் வைத்து கொள்ளலாமே?
    3. ஷானேன் கனவு காணும்போது அந்த பெண் தனது பெயரை சொல்லி அழைக்க கேட்கிறாள்; அவரது தந்தை ஷானேன் படத்தை காண்பித்து அவளை பற்றி சொல்லி உள்ளேன் என்று ஒரு இடத்தில் குறிபிட்டு உள்ளார். அதனால் அது பெட்சி என கொள்ளலாம், மற்றும் ஒரு காரணம் ஷானேன் தனது ஆராய்ச்சியில் கொலையுண்டவளை யாரும் தேடவில்லை என்பதால் வெளியூர் நபராக இருக்கலாம்! நிற்க: சமந்தாவும் பெண்தான் அவளும் டிம்மால் கொலை செய்ய வாய்ப்புகள் அதிகம், என் என்றால் தனது சகோதரி (ஷானேன்) காப்பாற்ற!
    எனது அனுமானம்: ஷானேன் கொலையுண்டதாக பார்த்த பெண் பெட்சி!

    ReplyDelete
    Replies
    1. 4. ஷானேன் உயிர் உடன் இருக்கிறாளா? அல்லது அவளையும் டிம் கொலை செய்து விடுகிறானா?

      Delete
    2. சூப்பர் பரணி, நிருத்தி நிதானமாக படித்து உள்ளீர்கள்... விசில் போடும் படங்கள் 100

      Delete
    3. 1.சமந்தா உயிரோடு இல்லை... அவளின் கடைசி கனவு வாயிலாகத் தானே ஷானன்க்கு உண்மைகள் தெரிய வருது...

      Delete
    4. ///டிம் ஷானேனை கொள்ளாமல் இருக்க காரணம் தனது தங்கை என்பது. ///

      தனக்கு கிடைக்கவேண்டிய தந்தைபாசம் பெட்சிக்கு போய்விடுவதாலேயே பெட்சி மீது கொலைவெறி உண்டாகிறது சமந்தாவுக்கு..
      இதை கதையில் நேரிடையாக சொல்லியிருக்கிறார்கள்.
      அதே மனநிலைதான் டிம்முக்கும் ஷானென் மேல் இருக்கும். (இது மேற்கூறிய சம்பவத்தால் நமக்கு மறைமுகமாக சொல்லப்பட்ட விசயம்)

      சமந்தா - பெட்சி இவர்களின் தந்தை கதையை நேரிடையாக சொல்லி, டிம் - ஷானென் இவர்களின் தந்தை கதையை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்கள்.
      சமந்தாவிடம் என் தங்கையை நானே கஷ்டப்படுத்துவேனா என்று டிம் பேசுவது வெற்று சமாதான வார்த்தைகளாத்தான் இருக்கவேண்டும். எனவேதான் ஷானெனை கொல்ல கத்தியுடன் நிற்கிறான்.
      அதில் ஷானென் இறந்திருக்கவும் வாய்ப்புண்டு, தப்பித்திருக்கவும் வாய்ப்புண்டு..!
      முடிவை நாமே தேர்ந்துடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.!

      இதுதான் நான் புரிந்துகொண்டது. !

      Delete
    5. 2.சுரங்கங்கள் கைவிரிச்சால் தொழிலாளிகள் அடுத்த சுரங்கம் மாறனும், அல்லது நகரமோ பிரதேசமோ கூட மாறனும் உடனடியாக. மேலும் சுரங்கத்தை சுற்றி இருக்கும் தற்காலிக நகரங்கள் ஒரு உல்லாச புரியாகத்தான் இருக்க கூடிம்... இன்னும் சரியான வேறு காரணங்கள் இருக்கலாம்...

      Delete
    6. @ KOK

      ஞானும் அவ்வண்ணமே புரிஞ்சூ!

      Delete
    7. 4.கடேசி பேனலில் ஷானனை கொல்ல டிம் கத்தியோடு வர்றான், நிச்சயமாக கொன்றிருக்கவே வாய்ப்பு அதிகம்... கதையில் வரும் 3இளம் பெண்களும் இறக்கவே படைக்கப்பட்டுள்ளார்கள்... பெட்சி, சமந்தா வரிசையில் ஷானேன் கொலையாவதற்கே அதிக வாய்ப்பு...
      டிம்மின் பாத்திரம் அப்படி..!!!

      Delete
    8. கண்ணா @ ஷானன் பற்றிய எனது புரிதலும் அதுவே.

      Delete
    9. 3.உங்கள் அனுமானம் தான் என்னதும்...

      Delete
    10. டிம் அறிமுகமானதில் இருந்து இவர்கள் இருவரையும் பிடிக்கவில்லை, போதா குறைக்கு டிம்பிள் அம்மாவிற்கு ஷானன் மேல் வெறுப்பு வேறு.

      Delete
    11. ///டிம்பிள் அம்மாவிற்கு ///

      யாரு பரணி அந்த டிம்பிள்..பேரே சூப்பரா இருக்கே?? !! :-)


      (டிம்மின் அம்மான்னு புரிஞ்சாலும் டமாஷ் பண்ணாம இருக்கமுடியலை.:):):))

      Delete
    12. கண்ணா @ எல்லாம் இந்த மொபைல் பண்ற குசும்பு :-)

      Delete
    13. விஜயராகவன் @ இந்த கதையில் கதாபாத்திரங்கள் குறைவு அதேநேரத்தில் அதிக குழப்பம் இல்லாத கதை. அதைவிட கதையில் மனத்தைத்தொடும் விஷயங்கள் அதிகம். அதுவே என்னை இப்படி எழுத தூண்டியது.

      Delete
    14. விஜயராகவன் @ 2. அட ஆமாங்க. சூப்பர்.

      Delete
  13. Replies
    1. அனுபவிச்சுப் படிச்சுருக்கீங்க PfB!அதை அழகாக எழுதிய செம!

      Delete
    2. இந்த கதை எனக்கு சில பாடம்களை சொல்லி கொடுத்து உள்ளது என்றால் மிகையில்லை!

      Delete
    3. கனவுகளின் கதையிது:
      மனதை தொட்ட சில இடம்கள்: ஷானேன் சிறுகுழந்தையாக இருக்கும் போது இடி மின்னல் மழைக்கு பயந்து தனது அம்மா அறைக்கு செல்லும் போது அவளது அம்மா உதிர்க்கும் வார்த்தைகள். அதே நேரம் அந்த குழந்தை தனது பாட்டிதன்னை எப்படி கவனித்து கொள்வார்கள் என நினைத்து பார்க்கும் இடம், கண்களில் நீரையும் பெற்றோர்களுக்கு சில படிப்பினைகளை சொல்லவதாக இருந்தது. அற்புதமான மொழி பெயர்ப்பு! வாழ்த்துக்கள் விஜயன் சார்.

      ஷானேனின் தாய் அவளை இறந்தவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதும் அவளின் மனதில் என்ன உள்ளது என்பதை புரிந்துகொள்ள கூட இல்லாமல் இருப்பது; இத்தனைக்கும் அவரும் ஒரு பெண்! இப்படி இந்த கதாபாத்திரத்தை கதையின் ஆசிரியர் எந்த எண்ணத்தில் உருவாக்கி உள்ளார், என்ன சொல்ல வருகிறார் (குழந்தைகளின் எண்ணம்களுக்கு/உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்கிறார் என நினைக்கிறன்)!

      சுரங்கத்தில் வேலைக்கு சேரும்போதே தங்களின் ஆயுள்காலம் குறைவு என்று தெரிந்தே வேலை செய்யும் தந்தைமார்களின் தியாகத்தை என்ன சொல்லி பாராட்ட?

      இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் :-)

      Delete
    4. Parani from Bangalore : அந்தச் சிறு வயது ஷானென் கதாப்பாத்திரத்துக்குப் பக்கங்கள் குறைவென்றாலுமே, பின்னாட்களில் அவளுக்கு கிடைக்கும் ஆற்றல்களுக்குத் துவக்கப் புள்ளி அந்தப் பால்ய நாட்களே ! So அந்தப் பகுதியை எழுதும் பொழுது ரொம்பவே சிரத்தை அவசியமென்று நினைத்தேன் சார் !

      Delete
    5. ரொம்ப நன்றாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.

      Delete
    6. வசனங்களில் பின்னிப் பெடலெடுத்துருக்கீங்க எடிட்டர் சார்!!

      Delete
    7. இல்லாங்காட்டி, இங்கே பின்னி பெடல் எடுத்துப்புடுவீங்களே ?!!

      Delete
    8. ஆசிரியர் சார்@ இதுவரை வந்த 4கி.நா.களும் அவை வெளியான வரிசைக்கு நேர்மாறான ரேங்கிங்கை பெற்றுள்ளன...

      உங்கள் அதீத உழைப்பு மெருகேறி வந்ததை இந்த 4ஐ வரிசையில் படித்தாலே உணரலாம் சார்...

      லிஸ்ட்ல 5வதை சுவைக்க ஆவலுடன் வெயிட்டிங்....

      Delete
    9. ஷானனுக்கு உருவம் கொடுக்க ஓவியர் மிகவும் சிரமப்பட்டு இருப்பார் என நினைக்கிறேன். அதில் வெற்றியும் பெற்றது விட்டார் என்றே சொல்லலாம். வளர்ந்த பின்னும் குழந்தை போன்ற உள்ளம், மனதில் ஓடும் எண்ணம்களை மறைக்க தெரியாமல் தவிக்கும் கண்கள், மனதில் குழப்பத்துடன் இருக்கும் இடம்.

      ஷானன் உருவம் என் மனதில் நீங்கா இடம் பிடித்தது விட்டார் என்று சொல்லலாம்.

      Delete
    10. Jokes apart, ஒரு கதையின் மூடைப் பொறுத்தே மொழிபெயர்ப்பின் மூடும் செட் ஆவது வழக்கம் ! ஒரு கலகலப்பான கதையில் லைட்டான வார்த்தைகள் தானாய் முன்வந்து நிற்பதை பலமுறைகள் பார்த்திருக்கிறேன் ! ஆனால் சற்றே இருண்ட கதைகள் எனும் போது வார்த்தைத் தேர்வுகள் அத்தனை சுலபமாகிடுவதில்லை ! அந்தந்த frame -களின் emotions க்குப் பொருந்தும் வரிகளாக அமைந்திட வேண்டுமென்பதற்காக மனதில் தோன்றும் முதல் choice வார்த்தைகளை ஒத்துக்கிடவே முனைவேன் ! அந்த முதல் choice மாமூலான, அடிக்கடி பயன்பாட்டில் இருக்கும் பதங்களாய் இருக்கும் என்பதால் ! சில வேளைகளில் ஒட்டு மொத்த ரிசல்ட் அழகாய் அமைவதுண்டு ; சில வேளைகளில் இந்த யுக்தி சுமாராகவும் மிளிர்வதும் உண்டு தான் !

      Delete
    11. ///மனதில் தோன்றும் முதல் choice வார்த்தைகளை ஒத்துக்கிடவே முனைவேன் ! அந்த முதல் choice மாமூலான, அடிக்கடி பயன்பாட்டில் இருக்கும் பதங்களாய் இருக்கும் என்பதால் ! சில வேளைகளில் ஒட்டு மொத்த ரிசல்ட் அழகாய் அமைவதுண்டு ; சில வேளைகளில் இந்த யுக்தி சுமாராகவும் மிளிர்வதும் உண்டு தான் !///

      அருமை சார்!

      Delete
    12. எனது இந்த மாத காமிக்ஸ் வாசிப்பில் இந்த கதைக்குதான் முதல் இடம்.

      Delete
    13. And இன்னொரு முக்கிய விஷயத்தை எத்தனை பேர் கவனித்தீர்களென்று தெரியவில்லை :

      முடியா இரவில் - கதை மாந்தர்கள் அதிகப் படிப்பறிவிலா சராசரிகள் ; களமுமே நாம் இதுவரையிலும் பார்த்தேயிரா ஒன்று ! BATMAN கதையில் வந்த (ஜோக்கர்) "சிரித்துக் கொல்ல வேண்டும்" தவிர்த்து ஒரு மனநல விடுதியில் நமது கதைகளில் எவையும் அரங்கேறியதாய் நினைவில்லை எனக்கு !

      "சித்தம் சாத்தானுக்குச் சொந்தம்" : முழுக்கவே மேல்வர்க்கத்து மாந்தர்கள் ; களம் புதிதல்ல தான் ; ஆனாலும் கதையினில் ஒரு அசாத்திய முதிர்ச்சி விரவிக் கிடந்தது போல் தோன்றியது.

      "கனவுகளின் கதையிது" : கிட்டத்தட்ட கதையின் முக்கியஸ்தர்கள் சகலருமே டீன் ஏஜ் பசங்களே ! And கதை நடக்கும் Wales மண் நமக்குப் புதிதே ! அந்த மண்ணிற்கென ஒரு பாஷை ; ஒரு மாறுபட்ட கலாச்சாரம் ; பேச்சுமுறை ; வாழ்க்கைமுறைகள் என ஏக வித்தியாசங்கள் உண்டு ! அவற்றுக்கு கொஞ்சமேனும் நியாயம் செய்திட முனைய வேண்டும் என்றும் தோன்றியது !

      மூன்று கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பிலா, வித்தியாசமான எழுதும் பாணிகளைக் கோரிடும் ஆக்கங்கள். என்றேனும் ஒருநாள் அக்கடாவென்று கிடக்கும் வேளையில் இவற்றை கையில் எடுத்து நிதானமாய் இன்னொருமுறை எழுதி பார்க்க வேண்டுமென்பது எனது எதிர்காலத்து ஆசைகளுள் ஒன்று ! இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது தினப்படி அல்ல தானே ?!

      Delete
    14. அட ஆமாம் சார். இந்த கோணத்தில் யோசித்துப் பார்க்கவில்லை.

      Delete
    15. இந்தக் கதைகளின் பலமே - ஒன்றைப் போல அடுத்தது கிடையாது என்பதே !

      Delete
    16. அட்டகாசம் எடிட்டர் சார்!

      ///என்றேனும் ஒருநாள் அக்கடாவென்று கிடக்கும் வேளையில் இவற்றை கையில் எடுத்து நிதானமாய் இன்னொருமுறை எழுதி பார்க்க வேண்டுமென்பது எனது எதிர்காலத்து ஆசைகளுள் ஒன்று ! ///

      எங்களுக்குக்கூடத்தான் நீங்க 'சி.சி.வயதில்'ஐ தொடர்ந்து எழுதணும்னு ஆசையா இருக்கு! நாம நினைச்சது எது சார் நடக்குது?! :P

      Delete
    17. நானே நேத்திக்கு தலீவருக்கு குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித் தந்து சமாதானம் செஞ்சு வைத்திருந்தேன் ; அதை சொதப்பிப்புட்டீங்களேன்னு இருக்கேன் !!

      Delete
    18. ஈவி நம் அடுத்த போராட்டம் ஆசிரியர்
      நமக்கு கொடுக்காமல் ஏமாற்றிய
      குச்சி மிட்டாய்
      குருவிரொட்டி
      கேட்டு மெரீனாவில் போராடுகிறோம்.
      அனைவருக்கும் ஹெல்மெட் உண்டு.

      Delete
    19. சார்...இனி குச்சி மிட்டாய் அல்ல..தடி தடியா மிட்டாய் கொடுத்தாலும் சரி....குருவி ரொட்டி அல்ல ..ஈகிள் ரொட்டியே கொடுத்தாலும் சரி மயங்காமல் இருக்க செயலர் நேற்றே பாடம் எடுத்து விட்டார்..மேலும் தீவிர போராட்டத்தை தாங்கும் சக்தி எதிரணிதலைவருக்கு இல்லாதவாறு போராட்ட திட்டங்கள் அமைந்து வருவதால் தாங்களாகவே சி.சி.வ.க்கு தயார் ஆகுமாறு பணிவன்புடன் போராட்ட குழு சார்பாக வேண்டிகொள்கிறோம் .

      Delete
    20. இந்த வருஷம் கி.நா வைத்தான் எல்லோரும் அலசி பிழிஞ்சி நல்லா காயப் போட்டுள்ளோம் போல.
      PFB நல்ல விமர்சனம்.

      Delete
  14. ஆசிரியரே கொரில்லா சாம்ராஜ்யம் கலரில் 2018 ல் என்று அறிவித்திருந்தீர்கள்
    நடுநிசிக் கள்வனுக்கு பதிலாக கொரில்லா சாம்ராஜ்யத்தையே போடலாமே

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : ஒரு நூறு புது உணவு வகைகள் மேஜையில் உள்ளன சத்யா ; புளியோதரை எங்கேயும் போய் விடாது !

      Delete
    2. ///ஒரு நூறு புது உணவு வகைகள் மேஜையில் உள்ளன சத்யா ; புளியோதரை எங்கேயும் போய் விடாது !///

      ஒவ்வொருவருக்கும் அவரவர் பாணியிலேயே பதில் சொல்லி அசத்தறீங்க எடிட்டர் சார்!!

      (கிருஷ்ணா... நீ பேகனே... பரோஓஓஓ..)

      Delete
    3. பிரியாணி யோ புளியோதரை யோ உங்கள் கைகளினால் எது கொடுத்தாலும் ருசி தான்

      Delete
    4. என்ன செயலாளரே என்னையும் கோர்த்து விட என்னமா

      Delete
  15. மேலே ஷானியாவின் அந்த PP size ஃபோட்டோவை கவனியுங்களேன்...

    கண்ணுக்குக் கீழேயும் ஒரு மச்சம்...
    'S'க்கு கீழேயும் ஒரு மச்சம்!

    கிடைக்கிற கேப்புல எல்லாம் அசத்தறாங்கப்பா அந்த படைப்பாளிகள்!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மச்சக்காரி எங்கள் கனவுகளின் மொத்த குவாரி

      Delete
    3. அது முற்றுப்புள்ளி ஜி.

      அரன்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்கிற கதையாகிவிட்டது.

      Delete
    4. அந்த செல் போன் ஸ்க்ரீனை காலையில் லைட்டாகத் துடைத்து விட்டுப் பாருங்க சாமி ; ஏதாச்சும் தூசி ஒட்டிக்கிட்டதா இருக்கக் கூடும் !

      Delete
    5. நல்ல வேளை கண்ணைத் தொடச்சிட்டு பார்க்க சொல்லவில்லை. அப்படின்னா ஷானியா கண்ணப்போய் தொடச்சிட்டு இருப்பார் நம்ப விஜய்.

      Delete
  16. ///- போகிற போக்கைப் பார்த்தால் இந்த 3 மில்லியன் பார்வைகளை நாம் தொட்டுப் பிடிக்கும் தருணமும் தொடரும் ஆகஸ்ட் 2018 ஆகத் தானிருக்குமோ ? இன்னும் எத்தனை திட்டமிடல்களைத் தான் ஈரோடு 2018 தனதாக்கிடக் காத்துள்ளதோ?///

    எதையெதையோ பேசுறோமே தவிர இதை யாரும் கவனிக்கவே இல்லை பாத்தீங்களா?

    த்ரீ மில்லியன் ஹிட்ஸை ஆகஸ்டுல எட்டிப்பிடிச்சிடப் போறோம்.! அதற்கான ஷ்பெசலைப் பற்றி இப்போதிருந்தே துண்டுபோட்டு வைத்தால்தானே உண்டு..!

    முதல் ஆளாக என்னுடைய கோரிக்கை ..

    LMS, NBS போல ஒரு கலர்ஃபுல் கதம்ப ஷ்பெசலாக போட்டுத்தாக்கிடுவோம் சார்.!

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது ஆளா என்னுடைய கோரிக்கை

      Delete
    2. முதல் ஆளா கோரிக்கை வைத்தது ஞானாக்கும்? மேலே சென்று என் பின்னூட்டம் படிக்கவும் சாமிகளா?!!

      Delete
    3. ///முதல் ஆளா கோரிக்கை வைத்தது ஞானாக்கும்?///

      அடடா சரியா கவனிக்காம போட்டுட்டேனே..!
      சரி.. ரரெண்டாவது ஆள்னு சொல்லலாம்னா செந்தில் கோச்சுக்குவாரு.. அதனால முதல்A ன்னு வெச்சுக்குவோம்..! :)

      Delete
    4. // LMS, NBS போல ஒரு கலர்ஃபுல் கதம்ப ஷ்பெசலாக போட்டுத்தாக்கிடுவோம்.//
      ஹைய்யா கதம்ப ஸ்பெஷல், எப்ப,எப்ப.

      Delete
  17. One more stats guys in 2-3 years we will be reaching 1000 books combined all publications.

    ReplyDelete
    Replies
    1. That's excluding reprints, if we add reprints it will be very soon.

      Delete
    2. அடடே!! ஆயிரமாவது இதழை அசத்திப்புடுவோம் அசத்தி!

      Delete
    3. ஹை...இது வேறேயா ?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. டெக்ஸ் ஸ்பெசல் 1000 பக்கம் 1000 ரூபாய். ரெகுலர் சந்தாவில் இல்லாமல்.

      Delete
    6. Total books until Oct 2017 = 843

      Delete
    7. Friends

      இந்த 1000, 700, 2250 எல்லாம் 2018க்கு பின் வேண்டாமே. 75 - 120க்குள் இருத்தல் அனைவருக்கும் நலம். அது விசேஷ பதிப்பாக இருந்தாலும் கூட. கிளாசிக் reprints @ 200 நமது உச்ச வரம்பாக கொள்ளல் வேண்டும்.

      Delete
    8. அனைவருக்கும் கிடைக்கனும் என்ற உங்கள் நல்ல மனம் வாழ்க ராக்ஜி...

      ஸ்பெசல் தருணங்களில் கொண்டாட ஏதாவது வேணும் தானே, 2020ல் வரக்கூடிய 1000வது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் இதழை 1000ம் பக்க குண்டு மலராக போடுவதே சிறப்பு. இத்தகைய இராட்சத இதழுக்கு அனைத்து நாயகர்களும் இடம்பெற வேணும் என்பதே என் அவா...!!!

      சடுதியில் 3ஒருடங்கள் ஓடிடும் ஆசிரியர் சார்... இதற்கு உங்கள் மனதில் ஒரு ப்ளுபிரிண்ட்டை அவ்வப்போது அசை போடுங்கள் சார்...

      இதற்கு இடையில் 2019ஜனவரியில் Tex100 the lion TeX 100 specialஐ மறந்து விட வேண்டாம் சார்...

      இப்போது டெக்ஸ் மினி இதழ்கள் 6 எண்ணிக்கையில் இணைவதால் 100வது டெக்ஸ் இதழ் ஜனவரி 2019ல் தந்தே ஆகணும் சார்...,

      அடுத்து வரும் ட்ராகன் நகரம் டெக்ஸ் நெம்பர்85,
      அடுத்த ஆண்டு 8ரெகுலர்+6 மினி
      மொத்தம்99 ஆகிடும், 2018முடிவில்...

      ஜனவரி 2019ல் வரக்கூடிய 100வது டெக்ஸ் இதழை அடுத்த சந்தாவில் இப்போதே எழுதி விடலாம் சார்...

      Delete
    9. // இந்த 1000, 700, 2250 எல்லாம் 2018க்கு பின் வேண்டாமே. //
      +100

      வண்ணத்தில் என்றால் அதிகபட்சம ரூபாய் 300 (நான்கு கதைகள்) என்றும் கருப்பு வெள்ளை என்றால் ரூபாய் 250 (நான்கு கதைகள்) கொண்ட புத்தகமாக வெளியிடலாம்.

      Delete
    10. அடடடடா நண்பர் சேலம் அவர்கள் என்னமாக கணக்கு போட்டு உள்ளார்..குறிச்சிங்கப்பா...குறிச்சிங்கப்பா.....அவரின் எண்ணம் சிறக்க வாழ்த்துவோமே...

      Delete
  18. விடிகாலை வணக்கம்.
    விஜயன் சார்
    கொரில்லா சாம்ராஜ்யம்
    கொள்ளையர் பிசாசு
    யார் இந்த மாயாவி
    இம்மூன்று கதைகளையும் அற்புதமான
    வண்ணத்தில் தற்போதைய மறுவெளியீடு
    வரும் அளவில் வெளியிடுமாறு
    அன்போடும்
    பணிவோடும்
    கோபமாகவும்
    மிரட்டலாகவும்
    பயமுறுத்தியும்
    தாழ்மையுடனும்
    கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ....ஹலோ...ஹலோ...விட்டு விட்டுக் கேக்குது சார் !

      Delete
    2. கணேஷ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் முதல இருந்து சொல்றிங்களா :-)

      Delete
    3. பரணி
      மறுபடி
      முதலில்
      இருந்து
      படிக்கவும்.

      Delete
    4. கனவுகளின் கதை புரிந்த உங்களுக்கு
      என் ஏக்கம் கோரிக்கை புரியவில்லையா.

      Delete
    5. ganesh kv உங்கள் மறுபதிப்பு கோரிக்கைக்கு +1111111222222222233455667899000000000000000

      Delete
    6. கணேஷ் @ தூக்கம் வருது நீங்கள் எழுதியத மீண்டும் படித்தால் :)

      புரிந்து கொண்டேன்.

      Delete
  19. ஹலோ....ஹலோ...ஹலோ...விட்டு விட்டுக் கேக்குது சார் !
    சார் அப்பிடியே மொட்ட மாடிக்கு
    வந்தீங்கன்னா சிக்னல் நல்லாவே
    கிடைக்கும்.எங்களுக்கும் நிறைய
    காமிக்ஸ் கிடைக்கும்.

    ReplyDelete
  20. ஹலோ....ஹலோ...ஹலோ...விட்டு விட்டுக் கேக்குது சார் !
    சார் அப்பிடியே மொட்ட மாடிக்கு
    வந்தீங்கன்னா சிக்னல் நல்லாவே
    கிடைக்கும்.எங்களுக்கும் நிறைய
    காமிக்ஸ் கிடைக்கும்.

    ReplyDelete
  21. எனது பால்யங்களை நன்முறையில் பதியம் போட்டது சித்திரக்கதைகளே.....
    இன்று அதன் வளர்ச்சி நவீனத் தொழில் நுட்பத்தில் மேம்பட்டு புதிய பயணத்தில் தடம் பதிப்பது மகிழ்ச்சியமகிழ்ச்சியாக உள்ளது.
    ஆசிரியர் அதற்காக பல தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வருவது இன்னும் மகிழ்ச்சி அதே வேளையில் எங்கள் தலைவி இளவரசியை ஓரங்கட்டி ஒதுக்கி வைக்க வேண்டாம் என தலைவியின் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.......
    தொடரும் நாட்களில் இளவரசிக்கு கார்டு கவர் பைண்டிங்கில் இளவரசி கிளாசிக்ஸ் வெளியிட வேண்டுமாய் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.....
    பயணம் தொடரட்டும், வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  22. சேலம் டெக்ஸ் விஜயராகவன் உங்கள் விளக்கம் 4 ல் ஒ௫ தவறு உள்ளது.பெட்சி, சமந்தா,ஷானென் மூன்று இளம்பெண்களும் இறப்பதற்காகவே படைக்கப்பட்டி௫க்கின்றார்கள், டிம்மின் வடிவம் அப்படி என்று எழுதியி௫க்கின்றீர்கள். அது எப்படி? சமந்தா இறப்பதாகக் காட்டப்படவில்லையே? சமந்தாவும் ஜெர்ரியும் மற்றும் டிம்மும் சேர்ந்து தானே பெட்ஸியை கொல்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. sorry.நீங்கள் தான் சரி விஜயராகவன் சார்.

      Delete
    2. சரவணன்@ ஓவ்....
      ////சமந்தா இறப்பதாகக் காட்டப்படவில்லையே? சமந்தாவும் ஜெர்ரியும் மற்றும் டிம்மும் சேர்ந்து தானே பெட்ஸியை கொல்கின்றனர்.///----

      இது தான் கதையின் சாரம்சமே...இந்த ரகசியம் நன் நயமாக சொல்லப்பட்டு இருந்ததில் தான் இது இந்தளவு சுவாரசியமான படைப்பாக மிளிர்கிறது...

      ஷானனின் கனவில் ஒருவர் வந்தால் என்ன அர்த்தம்??? அவர் இறந்து விட்டார் என்பதல்லவா...!!!

      ஷானேனின் கனவு இறந்து போனவரின் கடேசி நினைவுகள் என்பதாகத் தானே கதை அமைக்கப்பட்டுள்ளது...

      சமந்தாவும்,டிம்மும் தனிமையில் இருக்கும் காட்சியில், அவளும் டிம்மும் ஜெர்ரோயோடு சேர்ந்து பெட்சியை கொன்றதாக விவரிக்கப்பட்டு இருக்கும். இறந்து போன சமந்தாவின் கனவையே, ஷானன் காண்கிறாள்.

      அந்த 3இளம்பெண்களும் டிம்மின் கையால் இறக்க என்றே படைக்கப் பட்டுள்ளார்கள்... பெட்சி இறந்ததை , சமந்தாவின் கடேசி நினவு வாயிலாக சொல்வதன் மூலம் அவளும் டிம்மால் கொல்லப்பட்டாள் என்பதே... கடேசி பேனலில் டிம் கத்தியோடு ஆஜர் ஆவது ஷானனை கொல்வதற்கு மட்டுமே, என்னைப் பொறுத்து. இந்த இடத்தில் இருவேறு கருத்து எனக்கு இல்லை... இதைத்தான் டிம்மின் பாத்திரப் படைப்பு என சொல்லி இருந்தேன்...

      ஏற்கெனவே போலீஸ்க்கு போகலாமா என ஷானன் யோசிப்பது டிம்முக்கு தெரியும். சமந்தா காலி என்றவுடன் ஷானன் அந்த முடிவிற்கே வருவாள். அவளைத் தப்ப விடும் ரிஸ்க்கை டிம் எடுக்க வாய்ப்பே இல்லை. எனவே டிம் கொல்லும் 4வது நபர் ஷானன்(ஜெர்ரியோடு சேர்த்து)...

      Delete
    3. ஜெர்ரி கொல்லப்பட்டதாக எங்கும் காட்டப்பட வில்லையே (அ) சொல்லப்படவில்லையே சார்.

      Delete
    4. ஜெர்ரி என்ற நபர் கொலையானதாகவும், போலீஸ் அவன் பாடியை கைப்பற்றி விசாரிப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கும்...

      ஜெர்ரியின் பாடியை கண்டுபிடிக்க இயலாதவாறு ஓளித்து வைத்ததாக சமந்தாவிடம், டிம் சொல்வதாக கனவிலும் காட்டப்பட்டு இருக்கும் நண்பரே...

      Delete
    5. அதே கனவில் 4வது பேனலில் டிம் கூறும் டயலாக்கை கவனிங்கள்.ஜெர்ரி உயிரோடு இருப்பது புரியும்.

      அடுத்த பேனலில் 'அவள் கதையை முடித்த பின்னே ' என்ற வசனம் வரும். இதிலிருந்து புதைத்த பாடியானது 'அவன் ' அல்ல. 'அவள் ' என உறுதியாகிறது.

      So அந்த பாடி பெட்ஸியாகத்தானிருக்க முடியும்.அதே கனவின் முதல் பேனலைப் பாருங்களேன். 'பாடியை ஒழுங்காக கடத்தி விட்டாயா? ' என்று வரும்.

      அதாவது பெட்ஸியை தீர்த்துக் கட்டிய யாருக்கும் தெரியாது என்ற நிலையில் இரகசியம் 'லீக் ' ஆனதால், பாபநாசம் ஸ்டைலில் பாடியை இடம் மாற்றியதையே குறிக்கிறது.

      Delete
    6. Yes, exactly கோவிந்த்...

      அதே போல, அந்த நகரில் ஒரு கொலையான பாடி கிடைத்தது, விசாரணையில் அது ஜெர்ரி எனத் தெரிய வந்தது, அதனால் இறுதியாக ஜெர்ரியோடு இருந்தவர்களை விசாரித்து வருகிறோம்//// என ஏதோ ஒரு பேனலில் பார்த்ததாக ஞாபகம். இதில் ஜெர்ரியை, டிம் போட்டுத்தள்ளியது என நாம் கதையோட்டத்தில் உணரலாம்...

      Delete
    7. கொலை நடந்ததா போலிஸ்கார் சொல்கிறார். அடுத்த பேனலில் ஜெர்ரியின் போட்டோவைக் காட்டுகிறார்.அதற்காக செத்தது ஜெர்ரியாக இருக்கணுமா என்ன? ஏன் கொலையாளியாக கூட இருக்கலாமே?

      Delete
    8. கொலை நடந்த பிறகும் உலவுவது டிம்; இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டது டிம்& ஜெர்ரி தான் ,
      உளவு பார்ப்பதிலேயே ஜெர்ரியின் புத்திசாலித்தனம் தெரிகிறது, சோ கொலை செய்யும் துணிவு ஜெர்ரிக்கு இல்லை... கொலையானுது அவன் தான் என்பதற்கு இதுவே போதுமானது...

      Delete
    9. என்ன பண்றது சார்.இது மாதிரியான த்ரில்லர் கதைகளையே கொஞ்சம் உஷாராத்தான் படிக்க வேண்டிருக்கு.

      ஹென்னர்ச் 'ங்கிறது ஒரு சின்ன கிராமம்.

      105 பக்கத்துல அந்தப் போலிஸ்கார் 'சிட்டில கொலை நடந்திருக்குன்றாரு.' So கொலையானது கிராமத்தைச் சேர்ந்தவங்க இல்லை. ஆனா கொலையாளி இந்த கிராமத்துக்காரன்தான்.

      Delete
    10. எல்லோரையும் கொலை செய்த கொலைகாரன் டிம்! தான் செய்த கொலைகளுக்கு உறுதுணையாக இருந்த ஜெர்ரி & சமந்தாவையும் இறுதியில் கொலை செய்கிறான்! ஜெர்ரியை கொலை செய்ய காரணம் ஷானன் அவனை கண்டு பிடித்து விட்டாள். சம்மந்தாவை கொல்லக்காரணம் தனது தாயை ஏமாற்றிய நபரின் நண்பரின் பெண் மற்றும் இது போன்ற சுரங்கத்தில் வேலைபார்க்கும் நபர்தான் தனது தாயை கைவிட்டார் என்பதும் ஒரு காரணம்தான்!

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. ///ஷானன் என் மனதில் ஒரு தாகத்தை ஏற்படுத்தி விட்டார் என்பதுதான்! ///

      தாகம்?!!

      ஹிஹி!

      'ஏதோ... மோகம்! ஏதோ... தாகம்'

      Delete
    13. ஷானென் அடையாளம் கண்டுகிட்டாதால ஜெர்ரியை கொன்னுட்டு, அப்புறமா ஏன் ஷானெனைக் கொல்லணும்.?
      மொதல்லேயே ஷானெனை கொன்னிருந்தா ஒரு கொலை மட்டுமில்ல ரெண்டு கொலையும் மிச்சமாகியிருக்குமே.

      சாட்சியை சாச்சிட்டா போதுமே. ஏன் தேவையில்லாத சுத்து வழி?

      Delete
    14. ஷானனை கொலை செய்தானா இல்லையா என்பது நமது அனுமானத்திற்கு கதாசிரியர் விட்டுவிட்டார்! கதையின் இறுதி படத்தை பார்க்கும் போது ஷானன் கொலையாக போவது போல் முடிந்து இருக்கிறது. ஆனால் எனது மனம் அப்படி இருக்க கூடாது என்று துடிக்கிறது, ஆம் ஷானன் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்பதுதான்!

      Delete
    15. ஜெர்ரி கொஞ்சம் பயந்தவன்/விவரம் இல்லாத மாதிரி தெரிகிறது, அவனால் இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் டிம் போலீசில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று கூட எடுத்து கொள்ளலாமே கோவிந்தோ!

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. சமந்தாவிடம் வாக்கு கொடுத்த மாதிரி ஷானனை கொல்ல மாட்டேன் என டிம் சொல்லிடறான்;
      மாட்டிக்கிவோம்னு பயந்த ஜெர்ரி, டிம்மை சாய்த்துவிட்டு,
      கடேசி பேனலில் ஷேனனை கொல்ல வர்றான்... ஓகே வா???
      இந்த முடிவும் எடுத்து கொள்ள வாய்ப்பு அதிகம் அப்படித்தானே கோவிந்த்????

      Delete
    18. ஜனாதிபதி வில்லியம் ஷெரிடன் கொலையோ, அல்லது அதன் பின்னிருந்த சதியோ அல்லது காரங்டனும், ஹென்றி ஷரிடனும் தயாரித்த மாற்று புலனாய்வு திட்டமோ எதுவும் தெரியாது ஆமோஸ்க்கு; ஆனால் அவரு மொசாட் ஏஜென்ட்டுகளின் தலைமை அப்டீங்கிற மாதிரி இருக்கு....இது...

      மொசாட் ஒரு நாட்டில் பலமாக இருக்குனா அங்கே நடக்கும் சதி திட்டங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்காது. இது எதுவும் தெரியாத டம்மி பீஸ் ஆமோஸை மொசாட் தலைமை ஏஜன்ட் ஆக ஏற்று கொள்ள எத்தனை சதவீதம் வாய்ப்பு இருக்கோ, அத்தனை சதவீதம் வாய்ப்பு இங்கே ஜெர்ரியும் கொலைகாரன் என்பதற்கு இருக்கு...

      என்னைப் பொறுத்து ஆமோஸ்& ஜெர்ரி இருவரும் தத்தம் ஃபீல்டுல சாதாரண ஆசாமிகள்.... இருவரும் பிறர் கட்டளையை செயல்படுத்தும் நிலையில் மட்டுமே இருக்கிறார்கள்... அவர்களின் பாத்திரப் படைப்பு அவ்வளவே...

      Delete
    19. ஜெர்ரி ஒரு எடுபிடியே. இந்த கதை சுரங்க தொழிலாளிகளின் வாழ்க்கை. இது ஷானன், டிம், மற்றும் சமந்தாவை மற்றும் சுற்றிவரும் கதை. இதில் ஜெர்ரி கதையில் நமக்கு சுவாரசியம் சேர்க்க வந்த ஒரு பாத்திரம். கடைசி பக்கத்தில் உள்ளது டிம் மட்டுமே.

      Delete
  23. ///டிம் ஜெர்ரியை கொன்று விடுகிறான், காரணம் ஷானேன் அவனை அடையாளம் கண்டுகொண்டதால்.///

    பரணி சார் இந்தப் பாயிண்ட் புரியலையே.

    ReplyDelete
    Replies
    1. பெட்ஸியைக் கொன்றது டிம் மற்றும் ஜெர்ரி மற்றும் சமந்தா. ஷானென் ஜெர்ரியை அடையாளம் கண்டு கொள்வதால் ஜெர்ரியைக் கொன்று விடுகின்றான் டிம்.
      ஏன் சமந்தாவையும் கூட கொன்று விடுகின்றான். ஷானென் கூட டிம்மால் கொல்லப் படுவாளா மாட்டாளா என்ற முடிவை நம்மை யூகிக்குமாறு கடைசிப் பேனலில் காட்டிக் கதையை முடிக்கின்றார் கதாசிரியர்!!!!!

      Delete
    2. ரொம்ப சரி சரவணன்.

      Delete
  24. கொஞ்சம் தாமதமா வந்திருக்கேன் போல.
    😁😁😁

    ReplyDelete
    Replies
    1. ஆமா ரவி. நாளைக்கு வந்து இருந்தீங்க என்றால் அடுத்த உ.ப. பார்த்து இருக்கலாம். கொஞ்சம்தான் மிஸ் ஆகிவிட்டது.

      Delete
  25. 3 millionக்கு 334858 பார்வைகள் பாக்கி

    ReplyDelete
  26. 2018ல் ஜில் ஜோர்டனின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இது சந்தோசம். மீள்வருகையில் விற்பனையில் சாதித்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.

      Delete
    2. ஜில் ஜோர்டன் மறு வ௫கை நன்று.அதுவும் NBSல் "அலைகளின் ஆலிங்கனம்" நன்றாகவே இ௫ந்தது.

      Delete
  27. நிஜங்களின் நிசப்தம் -பெரிய கதையா சார்?

    ReplyDelete
  28. @ ATR & MITHUN ஆழ்ந்த அனுதாபங்கள் .எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மனஉறுதி தரட்டும்

    ReplyDelete
  29. இனி "மேஜிக் விண்ட்" கதைகள் வரவே வராதா சார்?

    ReplyDelete
  30. இன்றுபோல் என்றும் வாழ்க.
    பல்லாண்டு வாழ்க.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பழனி.
    🎂🍰🍧🍦🍰🎂🍧🍦
    இன்று பழனி வேல் ஆறுமுகம்
    தன் இனிய பிறந்தநாளை நம்முடன்
    கொண்டாடுகிறார்.

    ReplyDelete
  31. தமிழக XIII ஆர்மியின் ஜெனரல் அவர்களுக்கு...
    என் பிறந்தநாள் வாழ்த்து பார்க்க... இங்கே'கிளிக்'

    ReplyDelete
  32. பழனிவேல் ஆறுமுகம் அவர்களுக்கு இரத்தப்பபடல முழு தொகுதியைப் போல கெட்டியான பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  33. பழனிவேல் ஆறுமுகம் நண்பர் அவர்களுக்கு;;;;;<;
    Happy birthday to u!!!.
    many more happy returns of the day!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  34. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே..💐💐💐💐🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  35. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் புளு வேல் சாரி சாரி பழனி வேல் நண்பரே

    ReplyDelete
  36. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉பழனிவேல்🎂🎂🎂🎂

    ReplyDelete

  37. நண்பர் மகேஷ் மேலே குறிப்பிட்டுள்ளது போல லயன் முத்து வெளியீடுகள் எத்தனை என கணக்கு பார்த்தால், பல்வேறு அளவுகோல்கள் கணக்கீட்டில் வருகின்றன.

    இது என்னுடைய எல்லையில் இல்லாத பணி என எடுத்த உடன் புரிந்து போனது. முதுபெரும் காமிக்ஸ் வாசகரும், கலக்டரும், எனது நண்பருமான கலீல் ஜியை காலை ஒரு இரண்டு மணி நேரம் இதுசம்பந்தமாக படுத்தி எடுத்து விட்டேன். என் சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கம் தந்து இந்த பட்டியல் தயாரிக்க பெரிதும் உதவினார். அவருக்கு அனைத்து நண்பர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகள்...🙏🙏🙏🙏🙏

    இந்த லிஸ்ட் இறுதியானது என சொல்ல மாட்டேன். இன்னும் ஏதாவது தகவல்கள் இருக்கலாம். இதில் இல்லாத தகவல்கள் தெரியவரும் நண்பர்கள் பட்டியலை திருத்த உதவுங்கள்... ப்ளீஸ்....

    அக்டோபர் முடிய,
    லயன்-308
    முத்து-405
    திகில்-61
    மினிலயன்-40
    முத்துமினி-8
    ஜூனியர் லயன்-4
    சன்ஷைன் லைப்ரரி-15
    லயன் கிராஃபிக் நாவல்-4
    திகில் லைப்ரரி-2
    காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-27
    முத்து வாரமலர்-22
    டிங்டாங்-1

    மொத்தம்-897..


    வெளியீடு எண்கள் உள்ள அனைத்து இதழ்களையும் கணக்கில் எடுத்து கொண்டுள்ளோம். இலவச இணைப்புகளும் வெளியீடு எண்கள் இருந்தால் பட்டியலில் இடம்பெறவது தானே முறை...!!!

    ReplyDelete
    Replies
    1. 1000வது இதழ் 2019லேயே வந்து விடக்கூடும் என பட்டியலைப் பார்த்தால் தெரிகிறது...

      எனவே 2019ல் 3முக்கிய மைல்கற்கள் இப்போதே தென்படுகின்றன...

      Texஇடம்பெறும் 100வது இதழ்...
      லயன் முத்துவின் 1000வது இதழ்...
      TMT எனப்படும் 3மில்லியன் ஹிட் ஸ்பெசல்...

      Delete
    2. @ சேலம் இரவுகழுகார்

      லயன் கிராபிக் நாவல் - 4

      இதை சேர்க்காம விட்டீங்க...(கையில் கத்தியில்லாமல் டிம் சிரிக்கும் படம் இரண்டு)

      Delete
    3. ஸாரி...
      சேர்த்துள்ளது கவனிக்கலை...மன்னிக்க..! (கைகூப்பும் படம் ஒன்று)

      Delete
    4. // Texஇடம்பெறும் 100வது இதழ்...
      லயன் முத்துவின் 1000வது இதழ்...
      TMT எனப்படும் 3மில்லியன் ஹிட் ஸ்பெசல்...//
      அருமை,அருமை,2019 ல் காமிக்ஸ் மழை பொழியப் போகிறது,அதுவும் குண்டு ஸ்பெஷல் மழை.
      😍😍😍

      Delete
    5. பாராட்டப்பட வேண்டிய முயற்சி டெக்ஸ் விஜய்! வாழ்ததுகள்!!

      Delete
    6. வாழ்த்துக்கள் திரு டெக்ஸ் விஜய்!!!

      Delete
    7. வாவ்.. இரும்பு நகர் இரவுக் கழுகு... பட்டய கிளப்பறீங்க..உங்களுடய ஆர்வத்துக்கும் செயல் வெற்றிக்கும் எழுந்து நின்று கைதட்டல்.

      Delete
    8. வணக்கம் நண்பர்களே இதுதான் என்னுடைய முதல் கமெண்ட்.

      Delete
    9. டெக்ஸ் விஜய் அவர்களுக்கு கைதட்டும் படங்கள் பத்தாயிரம்!!!

      Delete
    10. @ இந்திரஜித்

      நல்வரவு நண்பரே!

      ///வணக்கம் நண்பர்களே இதுதான் என்னுடைய முதல் கமெண்ட்.///

      மேலே ஏற்கனவே ஒரு கமெண்ட் போட்டிருக்கீங்களே நண்பரே?!! ஓ... நீங்க ஜீரோலேர்ந்து ஆரம்பிச்சிருக்கீங்க போலிருக்கு! :P

      பை த வே, உங்களுக்கு டெக்ஸ் விஜயை ஏற்கனவே பழக்கமா?

      Delete
  38. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉பழனிவேல்🎂🎂🎂🎂

    ReplyDelete
  39. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பழனிவேல்..!!
    💐💐💐💐💐💐

    ReplyDelete
  40. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பழனிவேல்..!!
    ������������

    ReplyDelete
  41. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பழனிவேல்.

    ReplyDelete
  42. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பழனிவேல் சார்...:-)

    ReplyDelete
  43. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பழனிவேல் சார்...:-)

    ReplyDelete
  44. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉பழனிவேல்🎂🎂🎂🎂

    ReplyDelete
  45. MANY MORE HAPPY RETURNS OF THE DAY PALANIVEL SIR

    ReplyDelete
  46. மிக்க மகிழ்ச்சி முகமறிந்த முகமறியா நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்தந்த நன்றி

    ReplyDelete
  47. சார் எல்லாம் வேண்டாம் நண்பர்களே !அன்னியமாக தெரிகிறது
    சகோ தம்பி நண்பன் அண்ணா மாமா இப்படி ஏதாவது ஓகே

    ReplyDelete
  48. நண்பர் இந்திரஜித் அவர்களுக்கு நல் வரவு !!!!!

    ReplyDelete
  49. சார் எல்லாம் வேண்டாம் நண்பர்களே !அன்னியமாக தெரிகிறது
    சகோ தம்பி நண்பன் அண்ணா மாமா இப்படி ஏதாவது ஓகே

    ReplyDelete