Sunday, January 10, 2016

தெறிக்க விடுவோமா...?

நண்பர்களே,
            
வணக்கம். ‘A job well begun is half done !என்ற சிந்தனை மட்டும் நிஜமாக இருந்திடும் பட்சத்தில் இந்தாண்டு நமக்கொரு அமர்க்களப் பொழுதாக அமைந்திடப் போவது சர்வ நிச்சயம்!  ஜனவரியின் இதழ்கள் எல்லாமே அழகாய் அமைந்து போனதையும், அவற்றிற்குக் கிட்டிய ரம்யமான வரவேற்பைப் பற்றியுமே நான் குறிப்பிடுகிறேன் என்பதை யூகம் பண்ண ராக்கெட் விஞ்ஞான ஞானம் நமக்குத் தேவையில்லை தானே?! மாதம் 4 இதழ்கள் எனும் போது – அவற்றுள் ஏதாவது ஒன்றோ, இரண்டோ கோட்டை விடுவது அவ்வப்போதைய நடைமுறைகள் என்பதை மறுப்பதற்கில்லை! So இந்தாண்டின் திட்டமிடலைத் துவக்கிய போது நான் முக்கியமெனக் கருதியது 3 விஷயங்களை!

விஷயம் # 1 : ‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை என்ற tagline-ஐ வெறும் அலங்கார வார்த்தைகளாகக் கருதிடாமல்  - நடைமுறையில் அதனை நிஜமாக்கிட வேண்டுமென்பது எங்களது முதல் லட்சியமாக முன்நின்றது!

விஷயம் # 2 : Consistency!! ஒரு மாதம் அழகான கதைக்குவியல்கள் & மறு மாதம் சுமாரான படைப்புகள் என்று அமைந்திடும் போது – ஆறுவழிச் சாலையில் வேகத்தடை இருப்பது போலாகி விடுவதை இம்முறை எப்படியாவது தவிர்க்க வேண்டுமென்பதும் எங்களது கனவு!

விஷயம் # 3 : நோ விஷப் பரீட்சைகள்!! வித்தியாசமான கதைகள்; பரீட்சார்த்த முயற்சிகள்; கனமான களங்கள் என சகலத்தையும மெயின் தடத்தில் ஏற்றி விடும் வேலை நிச்சயமாய் கூடாது என்பதே எங்கள் அவா # 3 ! அவற்றை ரசிக்கத் தயாராகவுள்ள நண்பர்களுக்கென ஒரு தனி track தான் இவற்றிற்கு லாயக்கு என்று தீர்மானித்தோம் !

So- இந்த 3 கனவுகளையும் காத்திருக்கும் 12 மாதங்களுக்குள் வாழ்ந்து பார்க்கும் பேராவலுடன் தான் 2016-ன் படலத்தைத் துவக்கினோம்! ஆரம்ப மாதமே அதற்கு வாகாய் அமைந்து போனதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது நிச்சயமாய் நமது மஞ்சள் சட்டை மாவீரருக்கே! ஒரு 320 பக்கக் கதை அழகான சித்திரங்களோடும்; சுலபமான கதைக்களத்தோடும் நகர்ந்திடும் போது – வழிப்போக்கர்களாய் இணைந்து கொள்வோர் எந்த மொழி பேசுபவராக இருப்பினும் ஒரு ஈர்ப்பு ஏற்படத் தவறாது என்பதே போனெல்லியின் MAXI TEX கதைவரிசையின் பின்னணிச் சித்தாந்தம்! அதைக் கொஞ்சமாய் இரவல் வாங்கிக் கொண்டோம் – ஜனவரியை விசையோடு துவங்கிடும் பொருட்டு! And “சட்டத்திற்கொரு சவக்குழி” கச்சிதமாய் செயலாற்றியது போனெல்லியின் வெற்றியே - in more ways than one !

நமது இத்தாலிய சூப்பர்-ஸ்டார் புராணம் இன்னமும் ஓய்ந்த பாடில்லை! Simply becos – இதோ காத்துள்ளது அவரது பிப்ரவரி மாதத்து ஆக்ஷன் த்ரில்லரின் அட்டைப்பட preview! ‘காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ என்றதொரு சமாச்சாரத்தை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக (maybe இன்னும் முன்பாகவோ??) துவக்கிய சமயம் அதனில் மூன்றோ-நான்கோ பக்கங்களுக்குத் தலைகாட்டிய “திகில் நகரில் டெக்ஸ்” – இத்தனை காலத்தை வெறும் விளம்பங்களிலேயே செலவழித்து விட்டிருக்கிறார்! ஒருவழியாக வெளிச்சத்தைப் பார்த்திடக் காத்திருக்கும் இந்த சாகஸம் – ரொம்பவே வித்தியாசமானது! தேய்ந்து போன வார்த்தைப் பிரயோகமே இது என்ற போதிலும் – பிப்ரவரி பிறக்கும் போது இதன் பின்னணி நிஜம் அம்பலமாவது நிச்சயம்! ஒரு திருட்டு கும்பலைத் தேடிச் செல்லும் தடத்தில் – ஒரு சிறு நகரில் அரங்கேறும் கொடூரக் கொலைகளைத் துப்பறியத் தொடங்குகிறார் நமது பிரிய ரேஞ்சர்! அந்நகரிலேயே ஷெரீப்பாக டெக்ஸ் பதவியேற்றுக் கொள்வவதும் ; ஒரு டிடெக்டிவ் பாணியில் கொலையாளியைத் தேடித் திரிவதும் – நாம் இது வரை ரசித்திருக்காப் புதுப் பரிமாணம்! And- 'ஓக்லஹோமா' கதைக்கு சித்திரங்கள் போட்டிருந்த அதே ஓவியரின் கைவண்ணம் எனும் போது – இன்னுமொரு அழகான visual treat நமக்குக் காத்துள்ளது என்று சொல்வேன்!
 
இன்னமும் பணி நிறைவு பெறா டிசைனே இது...!    
அட்டைப்படத்தைப் பொறுத்தைவரை இது போனெல்லியின் ஒரிஜினலே – மிகச் சன்னமான மாற்றங்களோடு! அழகான இந்த ராப்பருக்கு பின்னட்டை மட்டுமே நமது ஏற்பாடு ! And முன்னட்டையில் அந்த TEX லோகோ; கதையின் பெயர் உறுத்தாது இடம் பிடிக்கும் பாங்கு; பின் ராப்பரின் பாணி – என சகலமும் ஒரே template-ல் இந்தாண்டு முழுக்கவும் இருந்திடப் போவதற்கு இதுவுமொரு அத்தாட்சி! பின்னட்டையில் டெக்ஸ் வில்லருக்கு நாம் நல்கிடும் ‘பன்ச்‘ அறிமுக வாக்கியம் மட்டுமே இதழுக்கு இதழ் மாறிடும்! And ஜாலியாக இதற்கென சில one liner-களை நீங்களும் சொல்லிடலாமே- காத்திருக்கும் இதழ்களில் பயன்படுத்திடும் பொருட்டு?! ராப்பரை தயார் செய்யும் அவசரத்தில் நான் எழுதும் அந்த வரிகள் சில சமயங்களில் ரொம்பவே cheesy ஆகத் தோன்றிடக்கூடும் தான் ; ஆகையால் உங்களின் பங்களிப்புகள் இருப்பின் – அவற்றுள் ரம்யமானவற்றை பயன்படுத்திக் கொள்வோமல்லவா ?

அட... இத்தோடு ‘தல‘ புராணம் இந்த வாரத்துக்கு ஓய்ந்ததுடா சாமி” நினைத்திட்டால் – சாரி; இன்னமும் சமாச்சாரம் பாக்கியுள்ளது என்றே சொல்லியாக வேண்டும்! சென்ற வாரம் இத்தாலிய மொழிபெயர்ப்பு முடித்த சில டிஜிட்டல் கோப்புகள் ஜுனியர் எடிட்டருக்கு வந்திருந்தன! அவற்றோடு இணைந்திருந்த கதைகளை மேலோட்டமாய் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்! அப்போது – “தலையில்லாப் போராளி” (டெக்ஸ்) ஆல்பத்தின் high-resolution ஃபைல்களையும் பார்க்க முடிந்தது! ஒற்றை வரியில் சொல்வதானால் – ஸ்தம்பித்துப் போய் விட்டேன்!! (புத்தக அளவில்) மெகா சைஸில் ரூ.200/- விலையில் வரக் காத்திருப்பது இந்தக் கதையே என்பதும்; இதனை நான் தேர்வு செய்ததன் பின்னணியே அந்த அசாத்தியச் சித்திரத் தரத்தின் பொருட்டே என்ற போதிலும்- ஏகப்பட்ட கதைகளைப் புரட்டிய அனுபவத்தினுள் இந்த சாகஸம் என் ஞாபகத்தில் மங்கிப் போயிருந்தது! ஆனால் நேற்றைக்கு அதன் சித்திரங்களைப் பக்கம் பக்கமாய் – ஒரிஜினல் தயாரிப்புத் தரத்தோடு பார்க்க முடிந்த போது – புல் மட்டுமல்ல – செடி, கொடி, மரம் என சகலமும் அரிக்கத் தொடங்கியது! இதோ பாருங்களேன் – அந்த ஆல்பத்தின் ஒரு sneak preview!! 
ஒவ்வொரு frame-க்கும் ஓவியர் எடுத்துக் கொண்டிருக்கும் சிரமத்தையும்; சிரத்தையையும் பார்த்தால் – இத்துறையில் ஐரோப்பியக் கொடி பெருமையோடு படபடப்பதன் காரணம் புரிகிறது! ஏப்ரலில் கோடை மலராகவும் அவதாரமெடுக்கக் காத்திருக்கும் “தலையில்லாப் போராளி” யை அந்தப் பெரிய சைஸில் உங்கள் கரங்களில் ஒப்படைக்க இப்போதே எனக்கு நமைச்சல் எடுக்கத் தொடங்கி விட்டது ! ஏப்ரலே சீக்கிரம் வாராயோ?

ஒரு வழியாய் அடுத்த topic பக்கமாய் வெளிச்ச வட்டத்தைத் திருப்புவோமென்று பார்த்தால் – ‘இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் ‘தல‘ சேதிகளைச் சொல்லி விடுகிறேனே?' என்று (என்) தலை சொல்லிட – here goes some more! ஜனவரியை டெக்ஸ் துணையோடு நாம் துவக்குவது ஒரு செய்தியாக (!!!) இருக்கலாம் தான்; ஆனால் நம் ரேஞ்சரோடே 365 நாட்களும் குப்பை கொட்டும் போனெல்லி குழுமத்திற்கு அதுவொரு தினசரி நிகழ்வு தானே? இதோ – மூன்றே நாட்களுக்கு முன்பாய் அங்கே வெளியான லேட்டஸ்ட் இதழின் அட்டைப்படம். And இது அவர்களது இதழ் # 663!! Phew! 
அதே போல – தயாரிக்கும் போதே முழு வண்ணத்திற்கென படைக்கப்படும் TEX Color இதழ்களில் வரிசைகளில் – சமீபமாய் உருவான 132 பக்க ஆல்பத்தினில் 4 x 32 பக்கக் குட்டிக் கதைகள் முழுவண்ணத்தில் உள்ளன! ஒவ்வொரு கதைக்கும் ஒரு புத்தம் புது கதாசிரியரும்,  ஓவியரும் பணி செய்துள்ளனர் !  அவற்றுள் ஒரு sample பக்கமிது!

சித்திரங்களையும், வண்ணங்களையும் பார்க்கும் போதே என் கடைவாயில் ஜலப்பிரவாகத்தைத் தவிர்க்க முடியவில்லை! 'மாதமொரு டெக்ஸ்' என்ன ? – 'வாரம் ஒரு டெக்ஸ் !' என்று கடைபோட்டாலும் –போனெல்லியின் பேழையை நாம் முழுமையாய் ஆழம் பார்த்திட இந்த யுகம் போதாது போலும்! இது போன்ற வேளைகளில் – ‘காமிக்ஸ் ஓவர்டோஸ்!‘; ‘டெக்ஸ் ஓவர்டோஸ்‘ என்ற சிந்தனை் சகலமும் ஜன்னலுக்கு வெளியே குதித்து ஓடிப் போய் விட – ‘அட.. இவற்றையெல்லாம் திரட்டி ஒரு ஸ்பெஷல் போடுவோமா?‘; ‘ஆட்ரா ராமா......தாண்ட்ரா ராமா!!'என்று இப்டிக்கா புதுசாய் ஏதேனும்  ஒரு குட்டிக்கரணம் போட்டுப் பார்ப்போமா? என்ற எண்ணங்கள் எனக்குள் அணிவகுத்துச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை! ‘மடக்-மடக்‘கென்று ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடித்து விட்டு – தறிகெட்டு ஓடும் தலையை (திரும்பவும் என்னதைத் தான்!!) நிதானத்துக்குக் கொண்டு வர ரொம்பவே பிரயத்தனங்கள் அவசியமாகின்றன! Such is the power of this man !! சரி- இதற்கும் மேலாய் ‘டெக்ஸ் கச்சேரியை‘ தொடர்ந்தால் பூமி தாங்காது என்பதால் – let’s move on!

இரவுக்கழுகார் புராணம் முடிந்த பின்னே - உடைந்தமூக்காரையும் கவனிக்காது போயின் அது பிழையாகிப் போகாதா ? Here are the updates from the world of Blueberry ! "என் பெயர் டைகர்" முன்பதிவுகள் 500-ஐ தொட்டுப் பிடிக்கும் தொலைவுக்குள் நெருங்கி விட்டன ! வண்ண இதழ்களில் 335 + black & white பதிப்பினில் 105 என்பதே தற்போதைய நிலவரம் ! நிஜத்தைச் சொல்வதாயின் - b&w பதிப்பிற்குக் கூடுதலாய் வரவேற்பிருக்குமென்றே நான் எதிர்பார்த்தேன் ! ஆனால் color is king !! கிட்டத்தட்ட மூன்றே முக்கால் ஆண்டு இடைவெளிக்குப் பின்பாக "இளம் டைகர்" கதைவரிசையினில் ஒரு புது ஆல்பம் போன மாதம் பிரெஞ்சில் வெளிவந்துள்ளது !  இதோ அதன் அட்டைப்படம் ! இந்த வரிசையில் இது ஆல்பம் # 21 ! நாம் ஆல்பம் 9 வரை எடிப்பிடித்திருக்கிறோம் என்பது நினைவிருக்கலாம் ! எஞ்சியிருக்கும் ஆல்பங்களை 2017 முதலாய் தீவிரமாய் பின்தொடர எண்ணியுள்ளேன் ! 

சந்தோஷச் சேதிகள் இரண்டு உள்ளன – உங்களோடு பகிர்ந்திட! நமது ஜனவரி இதழ்கள் வெளியானது முதலாகவே சந்தாக்களின் ஸ்பீடு கூடியுள்ளது ! நண்பர்கள் சிலரின் வளமான கற்பனைகளுக்கேற்ப நம்மிடம் 1000+ சந்தாக்களெல்லாம் எந்தவொரு யுகத்தினிலும் இருந்ததில்லை! அதனில் பாதிக்குச் சற்றே அதிகம் தான் கடந்த 4 ஆண்டுகளாய் நமது எண்ணம்! அதனை தற்சமயம் 80% எட்டிப் பிடித்து விட்ட நிலையில் – லேசாகவொரு நிம்மதிப் பெருமூச்சு சாத்தியமாகிறது! எஞ்சியிருக்கும் 20% நண்பர்களும், சென்னைப் புத்தக விழாவின் போது புதுப்பித்திடுவதாய் சொல்லியிருப்பது நம்பிக்கையூட்டுகிறது! And - நாளைய தினம் (ஜனவரி 11) உறுதிபடத் தெரிந்து விடும் – சென்னைப் பொங்கல் விழாவினில் நமக்கு ஸ்டால் உண்டா ? – என்ற நிலவரம்! நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்! 

‘சந்தாப் புதுப்பித்தல்‘ தொடர்பான விஷயத்தில் லயித்திருக்கும் சமயம், நமது வாசக நண்பரொருவர் அனுப்பியுள்ள இந்த மின்னஞ்சல் பொருத்தமானதொரு இடைச்செருகலாக இருந்திடுமென்று பட்டது! 
//விஜயன்  அவர்களுக்கு  வணக்கம்.!
      நான்  கடந்த  எட்டு  வருடங்களுக்கு  முன்  காமிக்ஸை  தேடி  கடை கடையாக  அலைந்து  நொந்து போய்  பின்பு  ஆர்.டி.முருகன்  அட்வைஸ்படி (சென்றவருடம் வரை) சந்தா  கட்டி  ஜாலியாக  இருந்தேன்.இம்முறை   எனது  தாயார்  கீழே  விழுந்து  கை  முறிந்துவிட்டது.அதனால்  ஆபரேஷன் 80 ஆயிரம்  வரை செலவாகிவிட்டது.பற்றாகுறைக்கு மழை வெள்ளம் புரட்டிபோட்டுவிட்டது.தென்னை  மரத்தில்  தேள் கொட்டினால் பனைமரத்தில்    நெறி கட்டிய மாதிரி  எனக்கு  நேரடியாக  பாதிப்பு  இல்லை  என்றாலும்  சுற்றி  உள்ளவர்கள்  பாதிப்பு  அடைந்ததால் பணம்  புழக்கம்  இல்லை. இதுவரை  கடனே  கேட்காத நண்பர்கள்  கூட கடன்  கேட்டதால்  கடன்  கொடுக்வேண்டியதாயிற்று.இதுவரை  சந்தா  கட்டாமல்  இருப்பவர்களை  இளக்காரமாக பார்த்ததற்கு கடவுள்  ஒரு சோதனை  கொடுத்துவிட்டார்.! இன்று மாலை  நுங்கம்பாக்கம் சென்று  இம்மாத இதழ்களை  வாங்கிவிட்டேன்.இதற்கு  மூன்று மணிநேரம் +ரூ 60 செலவு.சென்னையை  பொருத்த அளவில்  சந்தாவே  சுலபமானது ; சிக்கனமானது.இந்தமாதம் சந்தா கட்டிவிடுவேன்.! டெக்ஸ்  விஜயராகவன்  குறிப்பிட்டமாதிரி   ஈ.பு.க.கா.யிலே  சந்தா தொகையை  மட்டுமாவது அறிவித்தால் நன்றாக  இருக்கும்."ஆறிய கஞ்சி  பழங்கஞ்சி"  என்று  சந்தா அறிவிப்பை  தோரயமாக  எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.! நன்றி.! என்னை   போன்ற  மிடில் கிளாஸ்வகுப்பினருக்கு வசதியாக  இருக்கும்.!   //

தொடரும் ஆண்டுகளில் சந்தாத் தொகையினை மட்டுமாவது முன்கூட்டியே தெரிவிப்பது உங்களுக்கு வசதியெனில் - அதனில் நிச்சயமாய் நமக்குச் சிரமங்கள் இருந்திடாது !  And வீடு தேடி வரும் இதழ்களின் வசதியே அலாதி!‘ என்பதை சந்தாப் புதுப்பித்தலைச் செய்திருக்கா நண்பர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பார்களென்பது உறுதி! But - இன்றைய சூழல்களில் ரூ.4000 என்பது ஒரு சிறு தொகையல்ல எனும் போது- அவர்களுக்கு அவகாசம் தந்திடுவது நம் கடமை என்றுமாகிறது! We will wait folks..for sure !! 

Slowly inching towards target என்ற நிலையில் – புன்னகையோடு சின்னதாகவொரு ஏமாற்றத்தையும் சொல்லிடலில் தவறில்லை என்று நினைக்கிறேன்! ரொம்பவே கோரப்பட்ட ‘டெக்ஸ் சந்தா‘; ‘கார்ட்டூன் சந்தா‘; ‘100% கமர்ஷியல் கதைத் தேர்வுகள்‘ என்ற பின்னணியோடு இந்தாண்டின் அட்டவணையைத் தயாரித்த சமயம் – நான்கிலக்கச் சந்தா எண்ணிக்கையினை இம்முறை நெருங்கிட வாய்ப்புகள் பிரகாசம் என்ற எண்ணம் ஓசையின்றி என்னுள் குடி புகுந்திருந்தது! ஆனால் அது நிஜமாகவில்லை என்பதில் மெலிதான வருத்தமே! Maybe இப்படியொரு எதிர்பார்ப்பு இம்முறை எனக்குள் இருந்ததாலோ-என்னவோ- நார்மலான வேகம் கூட என் கண்களுக்கு ஆமை வேகம் போல் தோன்றியது போலும்!! 

ஆனால் அதை சற்றே அமிழ்ந்து போகச் செய்திடும் விஷயமொன்றும் கடந்த 10 நாட்களாக அரங்கேறி வருகிறது – நமது "ஆன்லைன் விற்பனையில் விறுவிறுப்பு" என்ற வகையில்! And நம்பினால் நம்புங்கள் – கடந்த 10 நாட்களில் மேக்ஸிமம் விற்றுள்ள இதழ்கள் நமது மாயாவிகாருவின் 4 மறுபதிப்புகளும்; லாரன்ஸ் & டேவிட்டின் இதழ்களும் தான்!! ‘சட்டத்திற்கொரு சவக்குழி‘ யை விட ஆன்லைனில் ஜாஸ்தி போணியாகியுள்ள இதழ் “பாம்புத் தீவு“ தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? நம்பியே தீர வேண்டும் நண்பர்களே - becos those are the facts ! முகம் துடைக்க டவல் எடுத்துப் போக; தாகத்திற்குத் தண்ணீர் எடுத்துச் செல்ல – 12-வது ஆட்டகாரர் ரீதியில் நாம் மறுபதிப்புகளை சில சமயங்களில் கருதினாலும் – அவர்கள் ஓசையின்றி அடிக்கும் பவுண்டரிகள் “தெறிக்க வைக்கும்“ ரகத்திலுள்ளன! Talk about evergreen stuff!!!

இம்மாத இறுதியில், திருப்பூரில் நடைபெறவுள்ள புத்தக விழாவிலும் பங்கேற்க முயற்சிக்கவிருக்கிறோம்! அளவில் சென்னை / ஈரோடு விழாக்களை விட திருப்பூர் சிறிதே எனினும் – பரபரப்பான இந்த நகரத்தினில் நிச்சயம் நல்ல வரவேற்பிருக்குமென்றே நினைக்கத் தோன்றுகிறது! And- நமது நண்பர்களில் பலருக்கும் அந்தப் பகுதிகளே ஜாகைகள் எனும் போது – விற்பனைக்கும், உற்சாகத்திற்கும் குறைவிராது என்பது நிச்சயமல்லவா?

Before I wind up – நமது ஆங்கில இதழ்களின் (CINEBOOKS) விற்பனை முயற்சிகள் பற்றிய சின்ன update! www.comics4all.in என்ற தளம் இப்போது செயல்படத் துவங்கியுள்ளது! அதுமட்டுமின்றி – விலைகளை முடிந்த மட்டிலும் குறைத்து லிஸ்டிங் செய்துள்ளோம்! (ஏற்கனவே ஆர்டர் செய்துள்ள நண்பர்களுக்கும் – இந்த விலை மாற்றச் சலுகை நிச்சயமாய் உண்டு) And சென்னைப் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் – இவை அங்கேயும் விற்பனைக்கு இருந்திடும்! So- நமது ஆதர்ஷ நாயகர்களை ஆங்கிலத்திலும் ரசித்திட ஆர்வமிருப்பின் – CINEBOOK–ன் தரம் நிச்சயம் உங்களை மெய்மறக்கச் செய்திடும்! மீண்டும் சந்திப்போம்! அது வரை have a great day & an awesome week ahead ! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்களும் கூட !!  

287 comments:

  1. Replies
    1. அடடே! நம்ம மகேந்திரன் சாரா.?புரஃபைல் போட்டோ வைத்தால் டக் என்று அடையாளம் தெரியவில்லை.வணக்கம் சார்.!

      Delete
    2. 30 வருடம் முன்பு கல்லூரியில் எடுத்துக் கொண்ட போட்டோ போல...

      Delete
    3. ஹலோ.. ரெண்டு பேரும் போட்டோவை நல்லா உத்துப் பாருங்க.. அது இன்னும் பழசு. ஏன்னா அது என்னோட போட்டோ இல்லை :)

      Delete
    4. மகேந்திரன் சார்.!

      அது உங்கள் போட்டோ இல்லை என்று தெரியும்.டெக்ஸ் உங்களை கலாய்க்கிறார்.!

      Delete
  2. தல புராணம் போரடிக்கவில்லை !என் பெயர் டைகர் முன்பதிவு 500 தொட்டுவிட்டது மிகவும் நல்ல சேதி!

    ReplyDelete
  3. இங்கே ஒரு ரகசியத்தை போட்டு உடைக்கிறேன் நான் இந்த வருட சந்தாவை 3 தவணைகளில் செலுத்தினேன்!

    ReplyDelete
  4. நான்காவது. இரவு வணக்கம்....!

    ReplyDelete
  5. காமிக்ஸ் பார் ஆல் இணையப்பக்கத்திற்கு உங்கள் பிளாக்கிலிருந்து லின்க் தரலாமே

    ReplyDelete
  6. வணக்கம் எடிட்டர் சார்.......!
    வணக்கம் நண்பர்களே....!

    ReplyDelete
  7. டெக்ஸின் புதிய பாணி ஓவியங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன!

    ReplyDelete
  8. ஜனவரியின் நான்கு இதழ்களும் ஹிட்டடித்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை!நானாவித சுவை நாவை நர்த்தனமாடத்தானே செய்யும்!

    ReplyDelete
  9. அன்பு எடிட்டருக்கு காலை வணக்கங்கள்!ஒர் சிறு சந்தேகம்..நிவர்த்தி செய்து வையுங்கள்!அதாவது யாதெனில்,தற்போது வந்து கொண்டிருக்கும் ஸ்பைடரின் மறுபிரவேசக் கதை வரிசைப்பட்டியலில் விண்வெளிப் பிசாசிற்கு இடமிருக்கிறதா,இல்லையா என்பதே அது!ஏனெனில் அது தொடராக வந்த காரணத்தினால்,பெரும்பாலன நண்பர்களிடம் இந்தக் கதை இருக்க வாய்ப்பில்லை..ஆகவே தான் இந்த வினா!

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்கலாம்னு நெனச்சேன் ..,
      நீயே கேட்டுட்டே.....!

      Delete
    2. ஹைய்யா சூப்பர்.+1

      Delete
    3. எஸ் பாஸ்!
      பேசாம அந்த மறுபதிப்பு full லிஸ்ட் upload பண்ணலாமே!

      Delete
    4. பிசாசும் உலவட்டும் சார்..

      Delete
    5. Guna Karur & others : மறுபடியுமா...? முதல்லேர்ந்தா ?

      Delete
    6. எடிட்டர் சார்!மறுபடியுமா..? என்ற உங்களது கேள்வியிலிருந்தே முந்தைய பதிவுகளிலோ அல்லது நண்பர்கள் சந்திப்பிலோ இதற்கு விளக்கம் தந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.ஆனால் அதை நான் அறியேன்!ஆகையினால்,வரும் வராது என்ற இரண்டில் வரும் என்பதை நீங்கள் டிக் செய்தால்,கள்ளுண்ட நரியாவேன்!வராது என்பதை டிக் செய்தால்,இஞ்சி தின்ற வானரமாவேன்...!

      Delete
    7. எடிட்டர் சார்!மறுபடியுமா..? என்ற உங்களது கேள்வியிலிருந்தே முந்தைய பதிவுகளிலோ அல்லது நண்பர்கள் சந்திப்பிலோ இதற்கு விளக்கம் தந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.ஆனால் அதை நான் அறியேன்!ஆகையினால்,வரும் வராது என்ற இரண்டில் வரும் என்பதை நீங்கள் டிக் செய்தால்,கள்ளுண்ட நரியாவேன்!வராது என்பதை டிக் செய்தால்,இஞ்சி தின்ற வானரமாவேன்...!

      Delete
  10. டியர் ஸார்...!
    நான்கு வருடங்களுக்கு முன்பு வரை காமிக்ஸ் என்பது கிடைத்தற்கரிய பெரருளாய் இருந்தது..!

    தஙங்களிடம் நேரடி விற்பனை முறையில் மட்டுமே காாமிக்ஸ் கிடைக்கும் என்ற நிலை தற்போது மாறி கடைகளிலும் தாரளமாய் கிடைப்பதும் சந்தா குறைவுக்கு ஒரு காரணமாய் இருக்குமோ.....?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இதுவும் ஒரு காரணமே.

      Delete
    2. ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும்.பெரிய சிட்டி மற்றும் சென்னையில்.,என் காமிக்ஸ் நண்பர்கள் வட்டத்தில் ரெகுலராக காமிக்ஸ் வாங்கினாலும் இரண்டு வருடங்களாக கடையில்தான் வாங்கு கின்றனர்.

      அதில் மூவருமே சந்தா கட்ட அதிக ஆவல் கொண்டவர்கள்.கட்ட வேண்டும் என்ற ஆவலில் இருப்பார்கள்.,குறுகிய கால அவகாசத்தில் பல குடும்ப செலவுகள் குறுக்கிடும்போது சந்தா கட்ட முடியவில்லை என்று வேதனை படுவார்கள்.கட்ட நினைக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிடும்.பின் கை விட்டு விடுவார்கள்.

      அதில் ஒருவர் அம்பத்தூரில் கடைவைத்துள்ளார்.காமிக்ஸ் வாங்குவதற்காகவே தி.நகர் (அ) நுங்கம்பாக்கம் டு வீலரில் வருவார். கிட்டதட்ட 35 கி.மீ.பயணம்(சென்னையில் டிராபிக் வாழ்க்கையை வெறுக்க செய்யும்) +அரை நாள் செலவு செய்வார்.!ஒவ்வொரு மாதமும் அவஸ்தை பட்டு இதழ்களை வாங்கிய பின்பு என்னிடம் சந்தா கட்டாமல் விட்டுவிட்டேனே என்று வருத்தப்படுவார்.

      இன்னொரு நண்பர் தாம்பரத்தில் இருந்து இதற்கு என்றே மின்சார ரயில் பஸ் என்று மாறி மாறி வந்து வாங்கி செல்வார்.அரை நாள் செலவாகி விடும்.சில சமயங்களில் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாலும் புத்தகங்கள வந்து இருக்காது அல்லது விற்றுத்தீர்ந்து இருக்கும்.!நொந்து போய்விடுவார்கள்.எனவே போன் செய்து உறுதி செய்துவிட்டே தற்போது கிளம்புகின்றனர்.!
      மூன்றாவது நண்பர் மார்க்கெட்டிங் ஆபிஸர் எனவே அவர் ரவுண்டில் இருக்கும்போது கடை பக்கம் வந்தால் வாங்கி கொள்வார்.!
      சந்தா கட்ட அவகாசம் கிடைத்தால் நிச்சயமாக மூவரும் கட்ட வாய்ப்பு உள்ளது.!

      Delete
    3. ஜேடர்பாளையம் சரவணகுமார் : //தஙங்களிடம் நேரடி விற்பனை முறையில் மட்டுமே காாமிக்ஸ் கிடைக்கும் என்ற நிலை தற்போது மாறி கடைகளிலும் தாரளமாய் கிடைப்பதும் சந்தா குறைவுக்கு ஒரு காரணமாய் இருக்குமோ.....?//

      நிச்சயமாய் ! ஆனால் சிறுநகரங்கள் தவிர்த்து - மாநகர்களில் கடை தேடி அலையும் படலம் நோவு நிறைந்ததென்பதில் சந்தேகமில்லை !

      Delete
    4. Venkatesan, andha Marketing Officer yaarunugha?

      Delete
    5. யுவராஜ் சார்.!

      வணக்கம்.!உங்களை கேட்காமல் உங்களைப்பற்றி எழதியதற்கு மன்னிச்சு.!சதா வண்டியிலே வலம் வரும் மார்க்கெட்டிங் ஆபிஸரே.!

      மற்ற இருவரும் மௌன பார்வையாளர்கள்.!ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும் டெலிட் செய்துவிடுகிறேன்.!

      Delete
  11. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்..

    ReplyDelete
  12. அப்புறம் இன்னொரு கேள்வி! என்னான்னா....,நான்கு பக்கங்கள் புரட்டுவதற்குள்ளாகவே காதில் ரத்தம் வந்து விடுகிறது என்று,ஸ்பைடரின் புதிய சாகஸம் ஒன்றைப் பற்றி (எப்போதோ) சொல்லியிருந்தீர்கள்.சரீரத்தின் ஒன்பது துளைகளிலும் பெருகப்,பெருக குருதி வழிய விட்ட (ஒருசில) கி.நா.க்களையே தாங்கிக்கொண்டோம்! ஸ்பைடருக்காக,ஒற்றைச் செவி ரத்தம் வழிதல் நிகழ்வை பொறுத்துக் கொள்ளமாட்டோமா என்ன...!ஸ்பைடரை வாசிக்கும் நேரம்,வாழ்வின் உன்னத நேரம்!

    ReplyDelete
    Replies
    1. குணா ஜி.!& ரவி ஜீ.!

      // ஒரு சில கி.நா. தாங்கிக்கொண்டோம்.!//

      ஹாஹாஹாஹாஹா................+1

      Delete
    2. அது சினிஸ்டர் செவன் என்ற கதை என்று நினைக்கிறேன்..!

      Delete
  13. டியர் எடிட்டர் ஸார்,
    அட்டை படங்கள் ( இன்னும் முடிந்து இருக்கா நிலையில் கூட) கலக்குகின்றன.
    2017 டைகர் வரவுள்ளது சூப்பர் செய்தி ஸார். ஸார் உங்கள் மைண்ட் வாய்ஸ் நல்லதுதான் சொல்லுகிறது . அவற்றை எல்லாம்திரட்டி ஒரு ஸ்பெஷல் டெக்ஸ் இதழ் போடுங்கள் ஸார். பிளீஸ் ஸார்.

    ReplyDelete
  14. டெக்ஸின் புதிய பாணி ஓவியங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன!

    ReplyDelete
  15. வரவிருக்கும் டைகர்,பாயுமா..பதுங்குமா..? தெரியலயேப்பா..?

    ReplyDelete
    Replies
    1. 23 ஆம் புலிகேசி படத்தில் .வடிவேல் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீரில் மூழ்கும் போது ஒரு கொல்லன் வருவனே.?நான்தான் சங்கிலியை செய்தேன் மன்னா என்பாரே பாலா.! அது போல் மொக்கை கதையாசிரியரை நாடு கடத்தினால்.,புலி நிச்சயமாக பாயும்.! இல்லையேல் ,புலி(ளி) ரசம்தான் வைக்கனும்.!

      Delete
    2. இல்லை இது ,துவக்க ஒரிஜினில் கதாசிரியரின் படைப்பு நிச்சயமாக சோடை போகாது....

      Delete
  16. காலை வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  17. எங்கள் காமிக்ஸ் உலக அண்ணா
    (இந்த பட்டம் ok வா ஆசிரியரே)
    விஜயன் சாருக்கும் நண்பர்களுக்கும்
    இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  18. ஸ்பைடர் மற்றும் இரும்புக்கையாரின் விற்பனைக்கே அசந்துபோய் நிக்கறீங்களே சாரே, சட்டித் தலையனை இறக்கிப் பாருங்க களத்துல....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்பா..ஆமாம்..!அதே..அதே..!!

      Delete
    2. ஆமா.....ஆமா....ஆமா....

      Delete
    3. ஆர்ச்சியின் முதல் மறுபதிப்பு -உலக போரில் ஆர்ச்சி.. தானே சார்???..

      Delete
    4. ஆமாம்பா..ஆமாம்..!அதே..அதே..!!

      Delete
    5. Podiyan & Others : "கோட்டையில்" ஏறி - காலத்தில் லூட்டியடிக்கும் அந்த அப்பாடக்கர் ஆர்ச்சியும் களமிறங்கினால் பூமி தாங்காது !! கொஞ்ச காலம் போகட்டுமே !!

      Delete
  19. ஆசிரியரே கண்டிப்பாக
    புத்தக திருவிழாவில் பங்கு பெறுவோம்
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்

    ReplyDelete
  20. திகில் நகரில் டெக்ஸ் நான் உங்களிடம்
    ஈரோட்டில் வைத்த பல கோரிக்கைகளில்
    இதுவும் ஒன்று அதனை மிக விரைவில்
    நிறைவேற்றியதற்க்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  21. ஆசிரியரே இனி வரும் கார்ட்டூன்
    கதைகளாவது மினி லயன் பேனரில் வருமா

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : லேபில்கள் இனி இரண்டே என்ற தீர்மானம் ஒன்றரையாண்டுக்கு முன்பானது நண்பரே ! "லயன்" & "முத்து" மாத்திரமே ரெகுலர் இதழ்களுக்கான முகவரிகளாக இருந்திடும் !

      Delete
  22. டெக்ஸின் ஓவியங்கள் மிகவும் அருமை அசத்துகிறது

    ReplyDelete
  23. திருப்பூர் நகரில் டெக்ஸ்.தயாரா நண்பர்களே?TEX-A DANGEROUS RANGER

    ReplyDelete
  24. சென்னை வாசகரின் கடிதம் பற்றி யோசிக்கும் போது ஏப்ரல் புது சந்தாவை உடனே அறிவிப்பு செய்வதே சரியான முறை?

    ReplyDelete
    Replies
    1. salemkelamaran@gmail.com : வழமையான BAPASI சென்னைப் புத்தக விழா இல்லாத சூழலில் ஆண்டின் துவக்கத்திலேயே ஒரு கணிசமான விற்பனைத் தொகை சாத்தியமில்லாது போய் விட்டது ! And இன்னமும் தொங்கலில் நிற்கும் 20% சந்தாக்களும் நமக்கொரு முக்கியமான தொகையின் அளவீடே ! So ஒரே நேரத்தில் விழுந்திருக்கும் இந்த double whammy -ஐ சமாளிக்கும் ஆற்றலை தேடிக் கொள்வதே இப்போதைய தலையாய priority !

      இந்தப் பொங்கல் புத்தக விழா ஆறுதல் தரும் விற்பனைக்கு வழிவகுத்தால் நம் சிரமங்கள் கணிசமாய் மட்டுப்பட்டுவிடும் ! So சற்றே பொறுமை அவசியமே இக்கணத்தில் !

      Delete
    2. நான் நேற்று சந்தா கட்டி வீட்டேன்(சனிக்கிழாமை).👍

      Delete
    3. நான் இந்த வருடம் முதன் முறையக கட்டி உள்ளேன்

      Delete
    4. அது ஓரு பெரிய கதங்க. இந்த வருடம் பெங்களூர்_ல வேலைக்கு சேர்ந்தாச்சு. பெங்களூக்கு எசி சந்தா எவ்வளவு ஆகும் தெளிவாக மெயில் அனுப்பி அப்புறம் கால் பன்னி எனக்கு பெங்களூர் எசி சந்தா மட்டும் வேண்டும் எவ்வளவு கட்டனும்னு மெயில் பன்னுங்க சென்னேன். தமிழ் நட்டுக்குள்ள எசி சந்தா இவ்வளவு ஓரு ரிப்ளே வந்துச்சு. பெங்களூர் தான் தமிழ்நாட்டுல இல்லையே. மறுபடியும் ஓரு மெயில் மறுபடியும் ஓரு கால் .எனக்கு எசி மட்டும் கர்னாடக மாநிலத்துக்கு வேனும் கேட்டேன். பெங்களூர் எபிசி சந்தா இவ்வளவு ஓரூ ரிப்ளே வந்துச்சு(இத கண்டுபிடிக்க ரெம்ப கஸ்டமாச்சே). ஒரு 1500(கணக்கில் பிழை இருந்தால் மயாவியார் மன்னிக்கவும்) போனலூம் பரவாயில்லைனூ ஏபிசி முன்றுக்கும் கட்டிவிட்டென்

      Delete
    5. Ganeshkumar Kumar @ அப்படி வாங்க வழிக்கு! பெங்களூர்_ல வேலை பார்ப்பது நன்றாக தெரியும். ITPL பக்கம் மாறிவிட்டிங்களா?

      Delete
  25. அருமையான பதிவு சார்....
    படித்தவுடன் உற்சாகமான ஃபீலிங்...

    ReplyDelete
  26. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.
    நல்லதொரு மகிழ்ச்சியான பதிவு ஆசிரியரே.

    ReplyDelete
  27. தலயோட வரவுகள் உங்களுக்கே நாவில் ஜலம் வர வெச்சா அப்ப எங்களுக்கு,நாங்க பாவம்,இதுக்கு பரிகாரமா தலயோட மினி சாகசங்கள் அடங்கிய ஒரு குண்டு புக் ஸ்பெஷலை அறிவிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே
      தலையின் 4 - 8 - 10 பக்க ஸ்டோரிகள் நிறைய உள்ளன

      இதை தனி தொகுப்பாக ஆசிரியரிடம் "பிரம்புடன்" நாமே கேட்டுப் பெறலாம்

      Delete
    2. ஜெய சேகர் சார்.!

      வாவ்.! வாங்க .! வாங்க.! உங்களைப் பற்றி அடிக்கடி நினைப்பேன். ஏன் இந்த நீண்ண்ண்ண்ட இடைவெளி.!

      Delete
    3. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!!!---பூந்தி மிக சிறிது, ஆனால் பல நூறு பூந்திகள் இணைந்த லட்டுக்கு வாயில் அருவி சுரக்கா ஆளும் உண்டோ!!!!..

      Delete
    4. மாடஸ்டி இன் மடிப்பாக்கம் சார்
      கூட்டுக்குடும்பத்தில் சில ப்ரச்சனைகள்
      இடம் வாங்கியதில் சில ப்ரச்சனைகள்
      இப்படி அதிகமான மனஅழுத்தம்
      எல்லாவற்றிற்க்கும் சிறிது இடைவெளி விட்டுவிட்டேன்

      இனி தொடரும்
      சேலம் ஸ்டீல் சார் நூறில் ஒருவார்த்தை பளிச்சென்று கூறினீர்கள்
      டெக்ஸ் இன் சிறு கதைகள் தொகுப்பு ஒன்றினை ஆசிரியரிடம் கேட்டுப்பெற நாம் முயற்ச்சிக்களாமே
      எ.பெ.டைகர் போல தனி பதிப்பாக.?

      Delete
  28. Sunday காலை வணக்கம்

    ReplyDelete
  29. சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். MAXI TEX கதைவரிசையினா என்ன? அதிக பக்கம்கள் உள்ள கதையா? இல்லை புத்தகத்தின் அளவு பெரியதாக இருக்குமா? ரொம்பநாளா உள்ள சந்தேகம் சாமி.

    ReplyDelete
    Replies
    1. அதிக பக்கங்கள் கொண்ட ஒரே சாகசம் மேக்ஸி சாகசம் நண்பரே.

      Delete
    2. பெரிய அளவுள்ள சைஸ் என்றால் எவ்வளவு பெரியசைஸ் நண்பரே.? ஏ4 ?அல்லது கொலைப்படை சைஸ்? கொலைப்படை சைஸ் என்றால் பாதுகாப்பது பராமரிப்பது கஷ்டம்.!

      Delete
    3. நீங்க சொன்னா சரிதான் சாமி!

      Delete
    4. சபரி மலைக்கு மாலை போட்டு உள்ளீர்களா.? சாமி.!

      Delete
    5. இல்ல சார்! நம்ப முதல் மரியாதையை படத்துல ஒரு சீன் வரும்... அந்த எபக்ட் சாமி.

      Delete
  30. விஜயன் சார், நமது மும்மூர்த்திகள் பற்றி ஒரு கேள்வி: நமது முத்து காமிக்ஸில் வந்த இவர்களில் கதைகளில் இன்னும் பலகதைகள் உள்ளன. ஆனால் நீங்கள் மொத்தம் 36 இதழ்கள் மட்டும் தான் மறுபதிப்பு செய்ய போவதாக (3 ஆண்டுகளில்) சொன்னீங்க! மும்மூர்த்திகளின் மிச்சம் உள்ள கதை மறுபதிப்பு செய்யும் எண்ணம் உண்டா? அடுத்த வருடம் முதல் எதிர்பார்க்கலாமா? - இப்படிக்கு மும்மூர்த்திகள் கதைகள் மூலம் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த ஒருவன்.

    http://mudhalaipattalam.blogspot.in/2012/06/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : மறுபதிப்பின் எண்ணிக்கை 60+ என்றல்லவா அறிவித்திருந்தேன் ?

      Delete
    2. I remember you mentioned as 36. Hence I asked. 60 means I am happy annachi.

      Delete
  31. எடிட்டர் சாருக்கும், நண்பர்களுக்கும் ஞாயிறு வணக்கம்!

    கதைகள் மட்டும்தான் என்றில்லை; 'தல'யைப் பற்றி பதிவுகளிலும்கூட எத்தனை படித்தாலும் சலிக்காது; அதுவும் உங்கள் பாணி எழுத்தில் படிக்கும்போது - சான்ஸே இல்லை!

    தலயின் இந்தமாத 'ச.ஒ.ச.கு' புத்தகத்தை கையில் ஏந்திடும் பாக்கியத்தை நேற்றிரவுதான் பெற்றேன். அம்மாடி!! அட்டைப்படத்தில்தான் என்னவொரு கம்பீரம்! மாலையப்பருக்கும், பொன்னருக்கும் எங்கள் வாழ்த்தரைச் சொல்லிவிடுங்கள் சார்! இந்த அட்டைப்படத்தை பார்த்துவிட்டு என் பொனெலி பாஸ் என்ன சொன்னார்னு நீங்க சொல்லவேயில்லையே?

    அப்புறம், அதிகமாக விற்பனை கண்டிடும் டெக்ஸ்/மாயாவி புத்தகங்களில் 'அடுத்த வெளியீடு / வருகிறது' விளம்பரங்களே இல்லாதிருப்பதும் ஏனோ?

    EBFல் சந்தா அறிவிப்பு என்பது நண்பர்களுக்கு அளிக்கப்படும் நல்லதொரு அவகாசமாகவே தோன்றுகிறது! நடக்கட்டும் நடக்கட்டும்! முதல் சந்தா என்னுடையது! :)

    'இளம் டைகரின்' புதிய ஆல்பமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது! தொகுப்பாக 4/5 பாகங்களாகப் போட்டு மொத்தத்தையும் சீக்கிரமே முடிச்சு கட்டிடுங்க எடிட்டர் சார்! தொலையட்டும்! ;)

    ஆன்லைனில் இரும்புக்கையார் கலக்குவதைப் பார்த்தால் ஆச்சர்யமாகவும், சற்றே முரண்பாடாகவும் இருக்கிறதே...! மாயாவிக்கு இளம் வாசகர்களிடம் வரவேற்பு அதிகரித்திருக்கிறதா அல்லது நமது சீனியர் வாசகர்கள் ஆன்லைனில் அதிகம் உலவுகின்றனரா? - இந்த இரண்டில் எது நிஜம்? ( ஒரு விரிவான ஆய்வரிக்கை ரெடி பண்ணுங்கள் மாயாவி சிவா அவர்களே!)





    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஈரோடு விஜய்.!

      சூப்பர் கருத்து.! நாங்கள் நினைப்பதை அப்படியே ஹாஸ்யமாக படிப்பது மனதுக்கு குளுகுளுன்னு இருக்கு.!

      /டைகர் கதையை மொத்தமாக போடுங்கள் தொலையட்டும்.//

      "தொலையட்டும்."

      ஹாஹாஹாஹாஹா............தங்க கல்லறை யில் கம்பீரமாக வந்த டைகருக்க இந்த கதி.?

      "எப்படி இருந்த டைகர் இப்படி ஆகிவிட்டார்.!"

      Delete
    2. //தொலையட்டும்..!ஹா..ஹா..!!பேஷ்..பேஷ்..!!ரொம்ப நன்னாயிருக்கு..!

      Delete
    3. வணக்கம் M.V சார்! தளம் ஆக்டிவாக இருக்க உங்களது தொடர் பங்களிப்பு அவசியமானதாகிவிட்டது. இதனால்தானோ என்னவோ வெள்ளத்தின்போது நண்பர்கள் பலரும் உங்களைக் காணாமல் பதை பதைத்துப் போய்விட்டனர். ( ஒருவேளை நீங்கள் வெள்ளத்தில் அடித்துச் செசெல்லப்பட்டால் உங்கள் வீட்டுப் பரணில் பெட்டிபெட்டியாய் நீங்கள் அடுக்கிவைத்திருக்கும் பொக்கிஷங்களை அள்ளிச் செல்ல ஆவலாய் சென்னையில் முகாமிட்டிருந்த கிராதகர்களில் நானும் ஒருவன் ;))

      குணா, சரவணன் உள்ளிட்ட நண்பர்கள் பலரும் கலக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது!

      மொய்தீன் அவர்களின் விமர்ச்சனங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. என்னவொரு தெளிவு, என்னவொரு கருத்தாழம்! அம்மாடியோவ்!! தொடர்ந்து கலக்குங்கள் சார்!

      Delete
    4. @ இத்தாலி விஜய்

      //குணா, சரவணன் உள்ளிட்ட நண்பர்கள் பலரும் கலக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது!
      மொய்தீன் அவர்களின் விமர்ச்சனங்கள் பிரம்மிக்க வைக்கின்றன.//
      நான் சொல்ல நினைச்சேன்..நீங்க சொல்லிட்டிங்க..ஹீ..ஹீ..!

      @ MH மெய்தீன்

      போனவாரம் திடீர் சோம்பேறித்தனம் தொத்திகிச்சி..அதாவது கடுமையான தொடர்வேலைபழுவில் சுற்றுவது,ஒருவகையில் சோம்பேறித்தனமே..ன்னு எங்கயோ படிச்ச ஞாபகம். அந்த வகை சோம்பேறித்தனம் சமீபமா தொத்திகிச்சி.
      ச.ஓ.ச விமர்சனம் எழுத ரூம் போட்டு எதுக்கு யோசிக்கணும்..ஹீ..ஹீ...நமக்குதான் ஒரு ரூம் கட்டவே துளியூண்டு வசதிஇருக்கே..! அதாவது விமர்சனமாக ஒரு பதிவு நாளை (?)..!!

      Delete
    5. //மாயாவிக்கு இளம் வாசகர்களிடம் வரவேற்பு அதிகரித்திருக்கிறதா அல்லது நமது சீனியர் வாசகர்கள் ஆன்லைனில் அதிகம் உலவுகின்றனரா? - இந்த இரண்டில் எது நிஜம்? //

      கிரர்ர்ர்ரர்ர்ர்ர்..........

      Delete
    6. @Erode விஜய்

      சூப்பர் ப்ரோ!
      இதான் நல்ல ஒசரமான எடத்துக்கு கூட்டிகிட்டு போய் 'டமால்னு' தள்ளி விடறது ;-)

      'இளம் டைகரின்' புதிய ஆல்பமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது! தொகுப்பாக 4/5 பாகங்களாகப் போட்டு மொத்தத்தையும் சீக்கிரமே முடிச்சு கட்டிடுங்க எடிட்டர் சார்!
      .
      .
      .
      தொலையட்டும்! ;)

      Delete
    7. சரவணன் ஜீ!,

      அதுதான் ஈரோடு விஜய் ஸ்டையில்.ஜாலியாய் சிரித்துக்கொண்டிருக்கும் போதே கடுக்காய் கொட்டையை தரையில் தேய்த்து சுருக் என்று சூடுவைத்துவிடுவார்.?



      சென்னை வெள்ளத்தில் கார்கள்,ஆடம்பர ஷோபா,அழகான மரச்சாமன்கள்,கட்டில் மெத்தை,டி.வி.வாஷிங்மிஷின்,பிரிட்ஜ் ,டூ வீலர் போன்ற பொருள்கள் எல்லாம் நாசமாய் போய்விட்டது.என் பேங்க் முழவதும் மூழ்கி விட்டது.கடல்கரை ஒரங்களில் கருவாடு காயபோட்டமாதிரி பேங்க் ரெக்கார்டுகளை பேங்க்கு முன்னாடி காயபோட்டு உலர்த்தி வருகின்றனர்.வெள்ளத்தில் மூழ்கிய ஏடிஎம் கள் இன்னும் திறக்கவில்லை.

      இப்படி பாதித்தாலும் நாங்கள் எங்கள் காமிக்ஸை பாதுகாத்து கொண்டோம்.என்னைப்போல் ஆர்.டி.முருகனும் பரணில் ஏற்றிவிட்டார்.இதை பார்த்த வீட்டினர் அக்கம்பக்கத்தினர் தலையில் அடித்துக்கொண்டனர்.உஸ்ஸ்........எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டி உள்ளது.


      எனக்கு பிறகு என் காமிக்ஸ்கலெக்ஷன் நல்ல காமிக்ஸ் ரசிகரிடம் போய் சேர்ந்தால் சந்தோசமே.!

      Delete
    8. சூப்பர் Modesty Venkateswaran சார் :)
      பார்த்து பாஸ்! Carefulla இருங்க!
      உங்க கருவாட்ட கவ்வ ஏகப்பட்ட பூனைகள் உலா வருது !

      (ஹலோ யாரு விஜயா! ஏப்ப இந்த MV சார் அட்ரஸ் மெயில் பண்ணுப்பா :) )

      Delete
    9. 'இளம் டைகரின்' புதிய ஆல்பமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது! தொகுப்பாக 4/5 பாகங்களாகப் போட்டு மொத்தத்தையும் சீக்கிரமே முடிச்சு கட்டிடுங்க எடிட்டர் சார்! தொலையட்டும்! ;////

      கர் கர் ர் ர்ர்ர்ர்
      உர் உர் ர் ர்ர்ர்ர்.




      Delete
    10. //இளம் டைகரின்' புதிய ஆல்பமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது! தொகுப்பாக 4/5 பாகங்களாகப் போட்டு மொத்தத்தையும் சீக்கிரமே முடிச்சு கட்டிடுங்க எடிட்டர் சார்! தொலையட்டும்! ;)//

      ஆமா... 2017லியே 12 கதையும் ஒரே ஸ்பெஷல் கஸ்டம் ப்ரிண்டா போட்டு முடிச்சுருங்க...

      Cinebook இதழ்கள் உங்கள் விலை நாங்கள் இங்க வாங்கும் விலையை விடவும் குறைவாக உள்ளது.

      Delete
  32. எடிடட்டருக்கு காலை வணக்கம்,
    புளூபெரியின் அட்டை(மிக அருமையான)படத்தை இப்படி போட்டு விட்டு கதைகளை 2017-ல் ஒரு கதை என்று கதை விடாமல்,இந்தாண்டிற்கே ஒரு பெஷல்இதழ் ஏற்பாடு செய்யுங்கள் ஸார்.

    ReplyDelete
  33. எடிட்டர் சார்,

    டெக்ஸ் கதைகள் பற்றி எவ்வளவு பேசினாலும் சரி,கதைகளை படித்தாலும் சரி அலுப்பே தட்டாது.!

    ReplyDelete
    Replies
    1. கட்சி மாறிய M.V (இவர் இளவரசியார் ரஸிகர் என்றதாக ஒரு ஞாபகம்)

      Delete
    2. ராஜேஸ் சார்.!

      எனக்கு அனைத்து ஹீரோக்களின் கதையும் பிடிக்கும்.ஆனால் இளவரசி அதுக்கும் மேலே.!மேலே..............!

      இரண்டாவதாக டெக்ஸ்.மற்றபடி பிடிக்கும் கதைகளை விட பிடிக்காத கதைகளை எண்ணிவிடலாம்.

      1)கி.நா.
      2)மாயாஜால கதைகள்மற்றும் அமானுஷ்ய கதைகள் இவை இரண்டுமே பிடிக்காதவை.

      அப்புறம் ரிப்கிர்பியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மனைவி டெக்ஸ்,ரிப்கிர்பி, டைகர் கதைகளை மட்டும் விரும்பி படிப்பாள்.!

      Delete
  34. திரு விஜயன் & நண்பர்களுக்கு காலை வணக்கங்கள்..!

    அடேங்கப்பா கிட்டதட்ட 19 வருடங்களுக்கு முன் பார்த்த திகில் நகரில் டெக்ஸ் ஒருவழியாக அடுத்தமாதம் வருகிறதா..! ஒரே திகிலா இருக்கு..!

    //‘காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ என்றதொரு சமாச்சாரத்தை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக (maybe இன்னும் முன்பாகவோ??)//
    முத்துகாமிக்ஸின் 250வது ஸ்பெஷல்இதழுடன் தான் முதல் காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் இலவச இணைப்பு தந்தீர்கள் ஸார். வெளிவந்த வருடம் ஏப்ரல்,1997. அதன் முதல் பக்கம் பார்க்க...இங்கே'கிளிக்'

    தளபதியின் புது ஆல்பம்...[நீண்ட தொடர் விசில்ல்ல்ல்ல்ல்கள்.....] வரட்டும்..வரட்டும்..!
    ஏலே..யாருல அது 'தொலையட்டும்' ன்னு சவுண்ட் உட்டது...செஞ்சிடுவேன் ஆமா..சாகிரத...

    பல நீண்ட வருடங்களுக்கு முன் கோடையில்வந்து குளிர்வித்த அந்த மந்திர பெயர் தாங்கிய மலர் மீண்டும் வருவது ரொம்பவே இதமான நியூஸ்..! [அதுதாங்க கோடை மலர்!]

    உண்மையை உரக்க சொல்லும் அந்த நெகிழ்ச்சியான வாசகர் சந்தா கடிதம் அருமை.வழிகாட்டிய RT.முருகனுக்கு குட்டி பாராட்டுகள்..!

    அந்த சாந்தா பஞ்சாயத்து ஒரு வழியா முடிவுக்கு வர்றது...ஸ்ஸ்ஸ்...சந்தா கட்டிட்டு வர்றாங்க அல்லாருக்கும் ஒரு சிரம் தாழ்ந்த கும்பிடுங்கோ..!

    அப்புறம் எடி'சன்' ஒருசின்ன விண்ணப்பம்: லயன் பிராண்டு-TEX பிராண்டு அடுத்து வெளியிடு எண்+விலை போட்டிருக்கிற ஸ்டைல்...ஒரு படி கவர்ச்சியில் மட்டுமில்ல,தரத்திலும் ஒரு படி பேக். சைடில் விலை+வெளியிடு எண் இருக்க மேச்சிங் இல்லாமல் முன் அட்டையில் இருப்பது பெரிய உறுத்தல்.அதை கவனிங்க,இல்லன்னா அழகா கட்டம் கட்டுங்களேன்..!

    ReplyDelete
    Replies
    1. //சைடில் விலை+வெளியிடு எண் இருக்க மேச்சிங் இல்லாமல் முன் அட்டையில் இருப்பது பெரிய உறுத்தல்.அதை கவனிங்க,இல்லன்னா அழகா கட்டம் கட்டுங்களேன்..!//
      +100

      இதையே தான் நானும் சொன்னேன்...

      Delete
    2. @mayavi. siva பாஸ் எப்பிடி பாஸ் இப்டி ஒரு ஞாபக சக்தி!
      சான்சே இல்ல போங்க!
      Hats Off JI!

      Delete
    3. சரவணன்@
      காமிக்ஸ் தான் வாழ்க்கை...
      வாழ்க்கை தான் காமிக்ஸ்...

      என இருக்கும் மாயா சாருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்...

      Delete
    4. mayavi.siva : //பல நீண்ட வருடங்களுக்கு முன் கோடையில்வந்து குளிர்வித்த அந்த மந்திர பெயர் தாங்கிய மலர் மீண்டும் வருவது ரொம்பவே இதமான நியூஸ்..! [அதுதாங்க கோடை மலர்!]//

      கடைசியாய் வெளியான கோடை மலர் எப்போதென்றே எனக்கு மறந்து போய் விட்டது !!

      Delete
    5. @ திரு விஜயன்

      சம்மர் ஸ்பெஷல் கடைசியாக வந்தது 1989-ல்.கிட்டதட்ட 27 வருடங்கள்.ரெண்டு வனவாசம்..!
      இதை கிளிளினால் ஏதும் மலரும் நினைவுகள் வருகிறதா பாருங்கள் ஸார்...இங்கே'கிளிக்'

      Delete
    6. mayavi.siva : 1989-க்கு அப்புறமாய் கோடை மலரென எதுவுமே நாம் வெளியிடவில்லையா ? OMG !!

      Delete
    7. இப்படித்தான் ஸார் வேகமா காலம் உருண்டு போயேபோச்சி..!ஏதும் பாத்து தூசிதட்டி,தூள் கிளப்புங்க..ஏப்ரலில் தரைதப்பட்டை கிழியனும்..!

      Delete
    8. ஆசிரியர் சார்&மாயா சார்@
      மாயா சார் ,தூக்கத்தை கொஞ்சம் உதறிவிட்டு நன்றாக யோசியுங்கள்...
      1989க்கு பிறகு பல கோடை மலர்கள் வந்துள்ளன...
      கடைசியாக வந்த கோடை மலர்- 2003 கோடையில் 20விலையில் வந்த இருளின் மைந்தர்கள்....
      ஆக 13 வருடங்கள் தான் (?) ஆகிறது.. அந்த இருளின் மைந்தர்களை ஒரு க்ளிக் போடுங்கள் மாயா சார்...

      Delete
  35. அருமை சார்....
    ௐரு பதிவையே விட்டு விட்டேன் ...
    யார் அந்த மி னி ஸ்பைடர் தானே ....அந்த வருகிறது விளம்பரம் இதுவரை எந்த விளம்பரமும் அந்த அளவு சந்தோசமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தியதில்லை...2 ஸ்பைடர்களும் நிற்கும் அட்டைபடமும் அந்த சந்தோசமும் எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடைபடாதே...
    கொலைபடை குறித்து நாளை எழுதுகிறேன்.
    ஸார் டெக்ஸ் பக்கங்கள் சந்தோசத்தை கூட்டுகின்றன...அட்ட'காசம்....
    டெக்ஸ் zல் தொடரலாமா...இவற்றையுமே

    ReplyDelete
  36. புத்தகங்கள் கிடைத்து விட்டன. நன்றி சார்

    ReplyDelete
  37. தல டெக்ஸ் + தளபதி டைகர் + எவர்க்ரீன் சூப்பர் ஸ்டார் இரும்புக்கை மாயாவி....

    சும்மா தெறிக்க விடுறோம்!!!

    ReplyDelete
  38. @விஜயன் பாஸ்
    உங்க டைட்டில் பார்த்தா நம்ம தல டெக்ஸ் கர்ஜிகற சவுண்ட் இங்க கேக்குது ;-)

    ReplyDelete
  39. அதிரடியான தலைப்பு

    ReplyDelete
  40. அட பாவமே! "என் பெயர் டைகர்" ஒட கடைய முடிருவாங்கனு பாத்த...
    மறுபடியும் வர போறாரா !

    ஐய்ஐய்ஐயயோ !
    ஒடுங்க! எல்லாரும் சுத்தமான பகுதிய நோக்கி ஒடுங்க !
    அந்த மிருகம் பாலைவன புழுதில புரண்டு நம்மள எல்லாம் அழுக்காக ஓடி வருது!
    எல்லாரும் தப்பிச்சு ஓடிடுங்க ;-)

    ReplyDelete
  41. வணக்கம் சார்...
    வணக்கம் நட்பூஸ்...
    லேட்டா தூக்கம் கலைந்து பார்த்தால், தல புராணம் காலையில் வயிறையும் மனசையும் நிரப்பி விட்டது சார்....
    சந்தா வேகம் எடுப்பது தான் முன்கூட்டியே பொங்கல் வாழ்த்து அனைவருக்கும் சார்....
    டைகர் இலக்கை நெருங்கி வருவது அட்டகாஷ், கருப்பு வெள்ளைக்கு என்ன ப்ளான் சார்???....

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : //டைகர் இலக்கை நெருங்கி வருவது அட்டகாஷ், கருப்பு வெள்ளைக்கு என்ன ப்ளான் சார்???....//

      அறிவித்தபடியே வந்திடும் - b&w ஆல்பமும் !

      Delete
  42. பெரும்பாலான நண்பர்கள் விருப்பமான கோடைமலர் மீண்டும் வருவது இந்த ஆண்டின் டாப் தருணம் ஆக இருக்கும்,
    அதிலும் தலை தாண்டவம் டபுள் ட்ரீட் தானே.. ஹீ..ஹீ...

    ReplyDelete
  43. டியர் எடிட்டர்

    1. காமிக்ஸ் 4 ஆல் லிங்க் இங்கே கொடுக்கலாமே
    2. சென்னை புத்தக கண்காட்சியில் இப்போது உள்ள priceக்கு மேலும் 10% தள்ளுபடி உண்டா - for Cinebooks ? (ஆம் என்றால் ஒரு ரகளையான நாள் காத்திருக்கிறது, உங்கள் பில் போடும் டீமுக்கு)
    3. YAKARI தருவிக்கலாமே - மேலும் காமிக்ஸ்களுள் ஒரு உச்சம் தொட்ட "Cimpanzee Complex" ?

    ReplyDelete
    Replies
    1. //YAKARI தருவிக்கலாமே - மேலும் காமிக்ஸ்களுள் ஒரு உச்சம் தொட்ட "Cimpanzee Complex" ?//

      ஹைய்யா.....+1

      Delete
    2. Raghavan :

      1.comics4all.in லிங்க் நேற்று இரவே செய்திருந்தேன் - ஆனால் உறக்கச் சொக்கில் save செய்யாது விட்டு விட்டேன் போலும் ; இதோ இப்போது ரெடி !
      2.Well...பத்து CINEBOOK ஆல்பங்கள் வாங்கிடும் பட்சத்தில் புக்பேரில் 10% கழிவு தந்திடச் செய்வோம் !
      3.இந்த முதல் லாட் விற்பனையாகும் துரிதத்தைக் கண்டான பின்னே YAKARI & more - ஆர்டர் செய்திடலாம் !

      Delete
  44. பொதுவா டெக்ஸ் கதைய பல தடவ படிச்சு பார்த்திருபீங்க !

    அது போல, இந்த பதிவ டெக்ஸ்சா"சூரர்கள்" பல முறை படிப்பது உறுதி !

    ReplyDelete
  45. தங்க தலைவனே சீக்கிரம் வா...

    ReplyDelete
  46. அட்டை படத்தில் கதையின் பெயரே தெரியவில்லை...இன்னும் சற்று பெரிதாக இருந்தால் தேவலாம்.

    ReplyDelete
  47. /* b&w பதிப்பிற்குக் கூடுதலாய் வரவேற்பிருக்குமென்றே நான் எதிர்பார்த்தேன் */

    This is true still. Wait for the bookfairs over the 1.5 years and judge it. Color may steal the pre-booking show but B&W will steal the bookfairs. That is the reason I have not ordered the B&W - waiting for Book fair to take it !!

    ReplyDelete
    Replies
    1. Sincerely hope this prediction will prevail...

      Delete
    2. Raghavan & selvam abirami : அத்தனை விரல்களும் crossed !

      Delete
    3. பாம்பு தீவு அதிகம் விற்பனை ஆவதற்கு பிளாக்கில் வந்த நல்ல விமர்சமும் ஒரு காரணம்

      Delete
  48. தலையில்லாப் போராளி யின் சித்திரங்கள் அற்புதம்...வரவேற்கிறேன்

    ReplyDelete
  49. ////And நம்பினால் நம்புங்கள் – கடந்த 10 நாட்களில் மேக்ஸிமம் விற்றுள்ள இதழ்கள் நமது மாயாவிகாருவின் 4 மறுபதிப்புகளும்; லாரன்ஸ் & டேவிட்டின் இதழ்களும் தான்!! ‘சட்டத்திற்கொரு சவக்குழி‘ யை விட ஆன்லைனில் ஜாஸ்தி போணியாகியுள்ள இதழ் “பாம்புத் தீவு“ தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? நம்பியே தீர வேண்டும் நண்பர்களே - becos those are the facts !///---நான் நம்புகிறேன் சார்.....காரணம் நேரிலேயே பார்த்த அனுபவமும் உண்டு...

    ///சேலம் Tex விஜயராகவன்10 November 2014 at 08:10:00 GMT+5:30
    நேற்று காலை 11.15முதல் இரவு 9மணி வரை , சாப்பிடச் சென்ற அரை மணி நேரம் தவிர நமது ஸ்டாலுக்கு வந்து சென்ற பெரும் பான்மை வாசகர்கள் உடன் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது சார். அப்பாடி எவ்வளவு விதவிதமான காமிக்ஸ் படித்து அனுபவிப்பதை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொண்டார்கள். பல மூத்த வாசகர்கள் டாக்டர்கள் , ஆடிட்டர் , அரசாங்க பணியாளர்கள் ,காவல்துறை நண்பர்கள் என பல முகங்கள் இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த ஒன்றே ஒன்று இரும்புக்கை மாயாவி,இரும்புக்கை மாயாவி ,இரும்புக்கை மாயாவி .............ஒன்று நிச்சயம் சார் இரும்புக்கை மாயாவி இன்றும் வாழ்ந்து வருகிறார் . பல பல நினைவுகளில் எப்படி எல்லாம் அவரை படித்து வளர்ந்தோம் என்று பெருமையுடன் சொல்லி சென்றார்கள் . அந்த அத்தனை மகிழ்ச்சி , பாராட்டுகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளுங்கள் சார் . அனேகம் பேர் இரும்புக்கை மாயாவி மீண்டும் வருகிறார் என்ற போஸ்ட்டரை என்னவோ அவரவர் திருமண பத்திரிகையை போல பார்த்து , அவர்களின் பால்யங்களை அந்த சில நிமிடங்களில் வாழ்ந்து சென்றனர். சார். அவர்கள் அனைவரின் முகங்களில் தெரிந்த ஆனந்தம் தெரிவிப்பது மாயாவியின் மறுவரவு வெற்றி நிச்சயம் என்பது தான் சார்.///-----

    .....இரும்புக்கரத்தாருக்கு எப்படீ இப்படீ
    வரவேற்பு என நான் வாயடைத்து நின்ற நாள் அது சார்...
    டெக்ஸ்க்குத்தான் டாப் வரவேற்பு இருக்கும் என்ற என் எண்ணம் உடைந்த கணமும் அதுவே,மாயாவி யின் ஆளுமை கண்டு நான் பொறாமை பட்ட நேரமும் அதுவே...
    மாயங்கள் செய்வதில் மாயாவியை முந்த டெக்ஸ்ஸே கூட இன்னும் பல காலங்கள் காத்திருக்க வேணும் என மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் டெக்ஸ் விஜயராகவன்.!

      இரும்பு கை மாயாவி பெரியவர்களின் ஆதரவை மட்டுமல்லாமல் சிறுவர்களையும் கவர்ந்து உள்ளது.! எனது அண்ணன் மகன் வயது (15) இரும்புகையாரின் தீவிர ரசிகன் இந்த புத்தகங்களை கேட்டு நச்சரிப்பான்.அவனுக்காகவே தனியே ஒன்று வாங்குவது வழக்கம்.!

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : //இரும்புக்கை மாயாவி மீண்டும் வருகிறார் என்ற போஸ்ட்டரை என்னவோ அவரவர் திருமண பத்திரிகையை போல பார்த்து , அவர்களின் பால்யங்களை அந்த சில நிமிடங்களில் வாழ்ந்து சென்றனர்.//

      சத்தியமான வார்த்தைகள் !!

      Delete
  50. tex kadaikalil kidaikkuma or santhavukku mattuma pls theriayapaduthavum sir.

    ReplyDelete
    Replies
    1. Sridhar : கடைகளிலும் கிடைக்கும் தான் நண்பரே - ஆனால் அவர்கள் பணம் / ஆர்டர் அனுப்பிடும் வேகத்தைப் பொறுத்தே இதழ்கள் அங்கே சென்றடையும் வேகமும் இருந்திடும் ! So கடைகளில் கிடைக்கும் தேதிகள் நிச்சயமற்றவையே என்பது தான் தவிர்க்க இயலா சூழல் !

      Delete
  51. Wonderful posting with good messages.
    wait anxiously for your next posting announcing the Chennai stall number and your visiting schedule to please the readers and to help them to plan their travels !

    ReplyDelete
    Replies
    1. Loknath : வெளியூரிலிருந்து வர எண்ணும் நண்பர்களுக்கு பொங்கல் விடுமுறைகளுக்கு மத்தியினில் டிக்கெட் கிடைப்பது ரொம்பவே கஷ்டம் சார் ! And பண்டிகை வேளையினில் வீட்டோடு ஏதாவது திட்டமிடல்கள் இருக்கவும் செய்யுமல்லவா ?

      பார்ப்போமே - முதலில் ஸ்டால் ஒ.கே. ஆகிறதா என்பதை !

      Delete
  52. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  53. Enter your comment...ஈரோடு விஜய் அவர்களே ஆன்லைனில் மாயாவி கலக்குவதற்கு காரணம் தெரியமா? இப்போதெல்லாம் ஆன்லைனில் இளசுகளைவிட வாலிபவயோதிக அன்பர்கள்தான் உலவுகின்றனர்.அவர்கள்தான் இப்படி கலக்குகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. //வாலிப வயோதிகர்கள்.!//

      ஹாஹாஹாஹாஹாஹாஹா.........!

      Delete
    2. Rajendran A.T : இதில் என்னையும் சேர்க்கவில்லை தானே ?!! :-) :-)

      Delete
    3. எடிட்டர் சார்.!

      தலையில்லா போராளிகள் சித்திரம் நல்லாவா இருக்கு..........? உஸ்ஸ் யப்பா.....
      (சங்கிலி முருகன் பஞ்சாயத்து மாதிரி ஏங்க நான் சரியாகத்தான் பேசறனா.? )
      இந்த சித்திரத்தை பார்த்தவுடன் கி.நா.பீதி வந்து விட்டது.! ஏங்க ? நான் சரியாகத்தான் பேசறனா.?

      Delete
    4. Madipakkam Venkateswaran : அதே சங்கிலி முருகன் கிராமத்துக் கோவில் பூசாரியாய் நடித்துள்ள படங்களின் மாடுலேஷனில் இதைப் படித்துக் கொள்ளுங்களேன் :

      "ஆத்தா...தாயீ....மகமாயி..கி.நா.பீதியிலே இருக்கும் இந்த மடிப்பாக்கத்துப் புள்ளைய காத்துக் கறுப்பு அண்டாமப் பாத்துக்கோமா....!! அதகள ஆர்டிஸ்ட் சிவிடெல்லியின் சித்திரங்களைப் பார்தேயும் புள்ளே மிரளுது தாயீ...!!!

      Delete
  54. எடிட்டர் அவர்களே வணக்கம். நீங்கள் காலையிலே டெக்ஸ்பற்றி எழுதி நான்கு கதைகள் ஒரே புத்தகம் 132 பக்கம் என்று நாக்கில் ஜொள் விட வைத்து விட்டீர்கள். பேசாமல் T shirt ஐடியாவை cancel பண்ணிவிட்டு அதற்கு பதிலாக டெக்ஸை களத்தில் இறக்கிவிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. செம ஐடியா நண்பரே.ஆசிரியர் உடனே இதை பரிசீலிப்பார் என்று நம்புவோம்.

      Delete
    2. Rajendran A.T : அட...அறிவித்ததை மாற்றுவானேன் சார் ? டெக்ஸ் சிறுகதைகளுக்கொரு வாகான ஸ்லாட் கிடைக்காமலா போய் விடும் ?

      Delete
    3. இல்லை எனக்கு டி சர்ட் தான் வேண்டும்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  55. இன்னும் பலர் மும்மூர்த்திகள் மறுபடியும் புது பொலிவுடன் வந்த்தை தெரியாமலே உள்ளனர். நான் எனக்கு தொடர்பில் உள்ள பால்ய காலத்து நண்பர்களிடம் வாய்ப்பு கிடைக்கும்போது தெரிவித்து வருகிறேன். சரியானமுறையில் விளம்பரம் இருக்குமானால் இப்போது உள்ள அனைத்து நாயகர்களையும் மும்மூர்த்திகள் ஓரங்கட்டுவது நிச்சயம்.

    ReplyDelete
  56. எடிட்டர் சார்..நூறு கமெண்ட்களையும் தாண்டி வந்துட்டீங்க..!தொடக்க கமெட்களுக்கும் கொஞ்சம் பதில் கொடுங்களேன்..!!

    ReplyDelete
  57. சட்டத்திற்க்கொரு சவக்குழி கனத, ஓவியம் அருனம.
    டெக்ஸ் சிறுகனத ஸ்பெசல் எப்ப சார்? ஆவலாக இருக்கு.....

    ReplyDelete
  58. Enter your comment...எடிட்டர் சார் வாலிப வயோதிக அன்பர்களின் லிஸ்டில் உங்களை சேர்ப்பேனா? அவ்வளவு முட்டாளா நான்.நாமெல்லாம் வயோதிக வாலிப அன்பர்களல்லவா???

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : இதுக்குப் பழசே தேவலாம் !!

      Delete
    2. அப்படி பழசுதான் உங்களுக்கு பிடித்திருக்குமானால் வாலிப வயோதிக அன்பர்கள் சங்க தலைவராக உங்களையே ஒட்டு மொத்த வாலிப வயோதிகர்கள் சார்பாக தேர்ந்தெடுக்கிறோம். தலைவர் பதவியில் உங்களை அமர்த்தியதற்கு ஏதாவது போட்டுக் கொடுங்கள்

      Delete
  59. @ மாயாவி

    //ச.ஓ.ச விமர்சனம் எழுத ரூம் போட்டு எதுக்கு யோசிக்கணும்..ஹீ..ஹீ...நமக்குதான் ஒரு ரூம் கட்டவே துளியூண்டு வசதிஇருக்கே..! அதாவது விமர்சனமாக ஒரு பதிவு நாளை (?) ///

    அசத்துங்க மாயாவி அவர்களே! காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  60. வாகான ஸ்லாட்டுக்கா பஞ்சம். வெள்ளத்தில் மீண்ட தமிழக சிறப்பு மலர் அறிவிப்பை வெளியிடுங்கள்.உடனே ஆரம்பியுங்கள் முன்பதிவினை. நாம் எத்தனை காலம்தான் ஆறிப்போன வறுத்த கறியும் பீன்ஸூம் சாப்பிடுவது. ஒரு முறையாவது சூடான வறுத்த கறியும் பீன்ஸூம் சாப்பிடலாமே

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுங்கள்..."மாதமொரு டெக்ஸ்" படலம் - 100% வெற்றியென ஆண்டின் இறுதியில் நமக்கெல்லாம் உறுதியாகின் - பொனெல்லியின் புத்தம் புதுக் கதைகளை - அதே மாதத்திலேயே நாமும் ஆவி பறக்க வெளியிட ஆவன செய்கிறேன் !

      Delete
    2. //கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுங்கள்..."மாதமொரு டெக்ஸ்" படலம் - 100% வெற்றியென ஆண்டின் இறுதியில் நமக்கெல்லாம் உறுதியாகின் - பொனெல்லியின் புத்தம் புதுக் கதைகளை - அதே மாதத்திலேயே நாமும் ஆவி பறக்க வெளியிட ஆவன செய்கிறேன் !//

      நல்லாப் பார்த்துக் கொள்ளுங்கள் டெக்ஸ் ரசிகர்களே... நிறைய லட்டு வேணுன்னா நிறைய பேர் வாங்கனும்...ஆவன செய்யுங்கள்...அதே சமயம் சந்தா Zல டெக்ஸ் கி.நா.க்கு மேல கேட்காதீங்க...

      Delete
  61. இந்த ஏப்ரலில் முதல் முறையாக தல தளபதி தனித் தனியான ஸ்பெஷல் இதழ்கள் ஒரே மேடையில் வெளியிடப் போகும் தருணத்தை இப்போது நினைத்தாலும், சும்மா ஜிவ்வென்று இருக்கிறது. மேடை என்ன பாடுப் படப் போகிறதோ...?

    திகில் நகரில் டெக்ஸ் அட்டைப்படம், கதையின் பெயருக்கேற்றார்ப் போல் திகிலாகவே வந்திருக்கிறது. திகில் நகரில் என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் 19 ஆண்டுகளுக்கு முன் வெறும் 4 பக்கங்கள் மட்டும் படித்து விட்டு, அடுத்து என்னவாகுமோ என்ற கேள்விக்கு ஒரு வழியாக இன்னும் சிறிது நாளில் விடை கிடைக்கப் போகிறது என்பதை நினைத்தாலே ரொம்ம Excited.

    இளம் டைகரின் எஞ்சியிருக்கும் 12 பாகங்களை 6 கதைகள் இணைத்த 2 இதழ்களாக வெளியிட்டால் கதையை சுவராஸ்யம் குறையாமல் ரசிக்க முடியும் எ. எ. க. கதையும் அடுத்து ராணுவம், போர் என நகருவதாகத தெரிகிறது. இந்த ஜானரில் சமீபத்தில் நாம் நுழையாததால் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காதென்றே நினைக்கிறேன். அதிலும், சித்திரங்களும், வர்ணக்கலவையும் 'ரம்மி'யமாகவே இருக்கிறது. Let's hope it will not be disappointed. cheers TIGER.

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : //இந்த ஏப்ரலில் முதல் முறையாக தல தளபதி தனித் தனியான ஸ்பெஷல் இதழ்கள் ஒரே மேடையில் வெளியிடப் போகும் தருணத்தை இப்போது நினைத்தாலும், சும்மா ஜிவ்வென்று இருக்கிறது. மேடை என்ன பாடுப் படப் போகிறதோ...? //

      கோடையிலேயே தீபாவளி ; ரம்ஜான் ; கிருஸ்துமஸ் என சகலமும் இணைந்த effect தான் !!

      Delete
    2. அந்த மேடையில் இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யமும் வண்ணத்தில் வெளியிட்டால் உங்களை வாலிபவயோதிக அன்பர்கள் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். சீனியர் எடிட்டருக்கு முதல் மரியாதை. அடுத்து உங்களுக்கு. அப்படி ஒரு நிகழ்வுக்கு வாய்ப்புள்ளதாக சார்.

      Delete
  62. இம்மாதம் ஷெல்டன் எதிர்பார்த்ததைவிட படுவேகம் நன்றாக இருந்தது.இது போன்ற கதையை 48 பக்கத்தில் முடிக்காமல் இன்னும் பெரியதாக இருந்தால் இன்னுமொரு லட்டு சாப்பிட்டது போல் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : 44 பக்கங்களுக்குள் ஒரு ஆரம்பம், ஒரு கதையோட்டம் & கிளைமாக்ஸ் அமைத்திடும் கட்டுப்பாடுகள் இருக்கும் போது நேராகவே டாப் கியரைக் கதாசிரியர் பிடித்ததில் வியப்பில்லை தான் ! எப்போதுமே அனல் பறப்பது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தானே ?

      Delete
  63. அய்யா சாமீ போதும் போதும் உங்க டெக்ஸ் புராணம். இளவரசியாருக்கு ஒரு ரஸிகர் கூட்டம் இருபது போல நான் ரிப் கெர்பியின் மற்றும் வேதாளர் ரஸிகன். இந்த கூட்டத்தில் எனக்கு குரல்கள் சேருமா தெரியல. இருந்தாலும் விஜயன் சாருக்கு எனது வேண்டுகோள் ஏதாவது சான்ஸ் இருக்கா மேற்கண்ட இருவரும் விஜயம் செய்வதற்கு?

    ReplyDelete
    Replies
    1. RAJESH RAMAN : நானும் கூட நமது ஜென்டில்மன் டிடெக்டிவ்வின் ரசிகனே ; ஆனால் இன்றைய தலைமுறை இவரை எவ்விதம் பார்ப்பார்களோ தெரியவில்லையே சார் !

      Delete
    2. அடியேனும் ரிப் கெர்பியின் ரசிகனே.இன்றைய தலைமுறை நல்லவற்றை ரசிப்பார்கள். நன்றாக இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விடுவார்கள். அது டைகராக இருந்தாலும் டெக்ஸாக இருந்தாலும் அதே நிலமைதான்.

      Delete
    3. Vethalar digest & rip kirpi digest podalamey annachi?

      Delete
    4. ராஜேஸ் சார்.!

      //இளவரசிக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது போல்.!//

      இந்த வார்த்தை என் காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது.!

      தலைவர் பரணியும் பெங்களுர் பரணியும் சேர்ந்து டூ மேன் ஆர்மியாக பல ராஜதந்திரத்தை பயன் படுத்தி சென்ற வருடம் சுலபமாக இரண்டு கதைகளை வாங்கிவிட்டார்கள்.!

      இந்த வருடம் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தும்.ஒரூ சீட் வாங்குவதற்குள் நமது மதியில்லா மந்திரி கலீபா ஆக ஆள்மாறாட்டம் செய்வதற்குள் நாக்கு தொங்கிவிட்டது.நல்ல வேளையாக மனதில் மட்டுமே இடம் என்று அல்வா கொடுக்காமல் விட்டுவிட்டாரேஅதுவரைக்கும் சந்தோஷம்.!

      அடுத்த வருடம் பார்ப்போம்............!

      Delete
  64. ச.ஒ.ச.கு-ல் டெக்ஸ் 60 கி.மீ வேகத்தில் மொத்த தூரமான 320 கி.மீ-யும் நிற்காமல் கடந்து இரண்டாமிடத்தை தட்டிசென்றார்.(முதலிடம்-ஷெல்டன் 100-கி.மீ வேகம்)டெக்ஸ்ன் பயணம் தொய்வில்லாமல் ஸ்பீடு பிரேக்கர் இல்லாமல் நேர்த்தியாக இருந்தது.
    ம.மந்திரியும் அருமை அவருக்கு 48 பக்கம் நிறைவானது.
    பாம்புத்தீவு நன்றாக இருந்தது.
    இப்படியே பட்டையை கிளப்புங்கள் எடி.ஸார்.
    இந்த வருடம் டாப் த்ரி மொக்கையை கண்டுபிடிக்க முடியாது போலுல்லததே.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : //இந்த வருடம் டாப் த்ரி மொக்கையை கண்டுபிடிக்க முடியாது போலுல்லததே.//

      ஒரு "கனவு வருடமென" நான் நினைக்கக் கூடியது - மொக்கைகளேயில்லாதொரு 12 மாதங்களைத் தான் !! ரிடையர் ஆகும் முன்பாக அதனை நனவாக்கிடும் அவா ஒரு வண்டி உள்ளது !!

      Delete
  65. மாலை வணக்கங்கள் நண்பர்களே..!

    வரிசைபடி TEX MAXI கதைகள் அடுத்தடுத்து போடாமல் ஏன் 16 வதா வந்த கதையை போடணும்..?

    டெக்ஸ் தனி சந்தாவின் முதல் கதைங்கிறது தானே அந்த முக்கிய காராணம்..!! அப்படி என்னதான் இருக்கு அந்த 16வது மேக்சியில் ஸ்பெஷலாக..? எடிட்டர் ஏன் அந்த கதையை தேர்ந்தெடுக்கணும்...?

    * ஏதும் இதுவரையில் வராதா கதையா..?
    * இல்லை இதுவரையில் தொடாத கதை களமா..?
    * அல்லது டெக்ஸ் சந்திக்காத கொடூர வில்லனா..?
    * ஒருவேளை டெக்ஸ் இதுவரையில் பார்க்காத பிரச்சினையா..?
    * அல்லது டெக்ஸ் மட்டுமே முக்கால்வாசி கதைவரையில் தனித்து வருவதோ..?
    * ம்...மிக சிக்கலான அரசியல்,வரலாறு பின்னணிகள் ஏதும்..?
    * ஆங்...திடும் திடுமென திருப்பங்கள் இதுவரையில் வராத மாதிரி ஏதும்..?
    * வித்தியாசமான காஸ்ட்டியூம் ஏதும் போட்டு டெக்ஸ்..?
    * இரும்பு பாதை, செவ்விந்தியர்கள், நவோஜோ கோட்டை ராணுவம் இப்படி..?
    * மொத்த டெக்ஸ் கோஷ்டியும் இறங்கிகளைகட்டும் அதகளம்..?

    மேற்குறிப்பிட்ட எந்த ஸ்பெஷல் அயிட்டமும் இந்த 16 வது maxi கதையில் கிடையாது. ஒரு முரட்டு போக்கிரி செரீப்பா,மேயரா,நீதிபதியா ஒரு நகரை பரிபாலம் பண்ணுகிறான்.அந்த நீதி பரிபாலம் பண்ணும் செரீப்புக்கு ரெண்டு சோதா கைத்தடிகள், வேறு ஒரு திருடனை தேடி வரும் டெக்ஸ் போக்கிரியின் கைங்கரியத்தை மோப்பம் பிடித்துதோல்உரித்துகாட்டுகிறார்... அவ்வளவுதாங்க சட்டத்திற்கொரு சவக்குழி! கதை.
    இதை 320 பக்கத்துக்கு கொஞ்சம் கூட தொய்வேஇல்லாம,விறுவிறுப்பா நகர்த்திட்டு போறதுங்கிறது லேசான காரியமில்லை.ஆனால் படிப்பவரை மயக்கும், விடாமல் கட்டி இழுத்து செல்லும் ஒரு அருமையான நுட்பத்தை கதாசிரியர் கையாண்டுள்ளார்.அந்த நுட்பம் ரொம்பவே என்னை வசீகரித்து விட்டது என்பதை விட, அந்த திரைக்கதைக்கு மயங்காதவர்கள் இல்லை எனலாம்..!

    ஒரு வித்தியாசமான,விரிவான அலசல் விரைவில்..ஒரே இங்கே'கிளிக்'-ல்.

    ReplyDelete
  66. எடிட்டர் சார்,

    திகில் நகரில் டெக்ஸ் "பிளாட்' ஐ கேட்ட உடனே கதையை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படி அருமையான படங்களும், கதைக் களமும் உள்ள இந்தக் கதையை ஏன் சார் இத்தனை நாள் கிடப்பில் போட்டீர்கள்? எதாவது ஸ்பெஷல் காரணம். Behind the scenes, உங்கள் ஸ்டைலில் சொன்னால் சுவையாக இருக்கும்.

    டெக்ஸ் இன் கலர் ஆல்பத்தின் ஓவிய பாணி எனக்கு துளியும் பிடிக்கவில்லை. படங்களில் details மிஸ்ஸிங். மற்றவர்களுக்கு எப்படியோ ?

    ReplyDelete
    Replies
    1. //இந்த கதையை ஏன் சார் இத்தனை நாட்களாக கிடப்பில் போட்டீர்கள்//

      அதுதானே.!இப்பொழுதெல்லாம் எடிட்டர் அறிவித்த கதைகளை வெளியிடாமல் கூட்ஸ்ரெயிலை போல் ஓரங்கட்டி நிறுத்தினால் , வெளியிடச்சொல்லி வற்புறுத்துவது இல்லை.சரண்டர்.!இரத்தத்தடத்திற்கு பின்...........,!

      Delete
  67. // ஆன்லைனில் ஜாஸ்தி போணியாகியுள்ள இதழ் “பாம்புத் தீவு“ தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? நம்பியே தீர வேண்டும் நண்பர்களே - becos those are the facts ! முகம் துடைக்க டவல் எடுத்துப் போக; தாகத்திற்குத் தண்ணீர் எடுத்துச் செல்ல – 12-வது ஆட்டகாரர் ரீதியில் நாம் மறுபதிப்புகளை சில சமயங்களில் கருதினாலும் – அவர்கள் ஓசையின்றி அடிக்கும் பவுண்டரிகள் “தெறிக்க வைக்கும்“ ரகத்திலுள்ளன! Talk about evergreen stuff!!! //
    இங்கே ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன் ஆசிரியரே,சில நாட்களுக்கு முன்பு எனது பள்ளி தலைமையாசிரியரிடம் கையெழுத்து பெற அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன்,அப்போது புக் ஸ்டால் நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்திருந்தார்,அப்போது இந்த மாத நமது வெளியிடுகளை பற்றி பொதுவான தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்,சற்று நேரம் கழித்து நான் அங்கே வருகிறேன் பேசுவோம் என்று முடித்தேன்.
    எனது அலைபேசி பேச்சை கேட்டு கொண்டிருந்த தலைமை ஆசிரியர்,நீங்க காமிக்ஸ் பற்றி பேசி கொண்டு இருந்தீர்களே,அது படக்கதை சம்மந்தப்பட்டதா ? அவை இன்னும் வருகின்றனவா ? என்று வினவினார்.
    எனக்கு ஆச்சிரியமாக இருந்தது,ஆமாம் மேடம் முத்து,லயன் பெயரில் வருகின்றன உங்களுக்கு தெரியுமா என்று கேட்கும்போதே இடைமறித்து,அதில் இரும்புக்கை மாயாவி கதை இருக்குமே அந்த கதை இன்னும் வருகிறதா என்று கேட்டார்கள்.
    மேடம் அவர் கதையை நீங்க படிச்சிருக்கிங்களா என்று கேட்டவுடன்,எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அவர்தான்,அந்த கதையை படித்த நாட்கள் மகிழ்ச்சியானவை,ஆனா அந்த புக்ஸ் எல்லாம் எங்க போனது என்றே தெரியவில்லை என்று வருத்தமாக கூறி,
    திரும்ப அந்த புக்ஸ் வருதுன்னு நீங்க சொல்றது உண்மையாவே ஆச்சிரியமா இருக்கு,வாய்ப்பு கிடைச்சா படித்து பார்க்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
    உண்மையாகவே இரும்புக்கையார் ஏற்படுத்திய தாக்கம் மிகபெரிதானது என்று நான் அன்று உணர்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரவி!@

      அருமையான செய்தி.!

      ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி நமது காமிக்ஸ் வருகை பெரும்பான்மையினருக்கு தெரியவில்லை.அனைவரும் அறிந்தால் இன்னும் பலமடங்கு வாசகர்கள் வட்டம் விரிவடையும் என்பதில் சந்தேகம் இல்லை.மார்க்கெட்டிங் சம்மந்மான புத்தகத்தில் படித்த ஒன்று.!

      "மார்க்கெட்டிங் இல்லாத பொருள், இருட்டில் ஒரு அழகான பெண்ணை பார்த்து கண் அடிப்பதற்கு சமம்.!"

      Delete
  68. ச.ஒ.சவில் டெக்சுக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு பாத்திரம்... மூச்சு காற்றை வைத்தே எதிராளியின் கட்டத்தை கணிக்கும் டெக்சுக்கு இந்த வில்லனை கண்டறிய ஒரு மேக்ஸி இதழ் தேவைப்படுவது ஒரு உறுத்தலே...
    ஆனாலும் கதை தொய்வின்றியே போகிறது.. சித்திரங்கள் அட்டகாசம்... நிறைய இடங்களில் என்னுடைய பேவரிட்டான காரிகனை நினைக்காமல் படிக்க முடியவில்லை.

    ReplyDelete
  69. Sir, I want to pay the subscription for this year. for that, I keep on asking your office staff the catalogue for the year 2016 but there is no response. Even for the last two months I ordered all the books and request them to enclose the catalogue but they fail to enclose it. Please kindly take necessary action even I am ready to pay the subscription I can't able to make it.

    ReplyDelete
    Replies
    1. Please check in this post:- this has all list of stories
      http://lion-muthucomics.blogspot.in/2015/10/blog-post_22.html

      Delete
  70. நண்பர்களே, இந்த பதிவின் தலைப்பு மூலம் நமது ஆசிரியர் தான் ஒரு "தல" ரசிகர் என்பதை மீண்டும் ஒரு முறை மறைமுகமாக சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  71. Tex collection eppothu nanbargaley poratakulu enge kanom

    ReplyDelete
  72. Lionmuthu online store_இல் எல்லா விலை பட்டியலும் இருக்ககே.

    ReplyDelete