Sunday, January 17, 2016

மொக்கைக்கொரு மருந்து..!

நண்பர்களே,
            
வணக்கம். தமிழர் திருநாளின் உற்சாக வாரயிறுதியில் உங்களை நான் சந்திக்கவிருப்பது 2015-ன் மார்க் ஷீட்டோடு.! கடந்து சென்ற 12 மாதங்களை என் பார்வையில் ஏற்கனவே கடந்து விட்ட போதிலும் நிஜமான அலசல் உங்கள் தரப்பினதாக இருப்பது தானே பொருத்தம்? பரீட்சை எழுதியது நாங்கள்; திருத்துவது நீங்களெனும் போது நீங்கள் போடும் மார்க்குகள் தானே செல்லுபடியாகும்? So- இதோ வருகிறது வலைத்தளத்திலும், மின்னஞ்சல்களிலும், கடிதங்களிலும் கிட்டியுள்ள உங்கள் feedback-ன் சாராம்ஸம் :

கேள்வி # 1 : 2015-ன் Top 3 இதழ்கள் எவை?

‘Fairly easy!’ என்றே சொல்வேன்; ஏனெனில் நம் வரலாற்றினிலேயே (!!) ஒரு மறக்க இயலா முத்திரை பதித்த இதழான “மின்னும் மரணம்“ முழுத்தொகுப்பாக வெளிவந்தது இந்த 2015-ல் தானே? நான்கிலக்க விலைகளைத் தொட்டது ஒருபக்கமிருப்பினும் ஒரு ஹாலிவுட் blockbuster திரைப்படத்திற்கு நிகரான அந்தக் கதையினை ‘ஏக் தம்' தொகுப்பாய் பார்த்திட முடிந்த பரவசம் இந்த இதழையே சென்றாண்டின் undisputed # 1 ஆக தேர்வாகச் செய்துள்ளது! ‘மறுபதிப்பு தானே..?; கடைசி பாகம் நீங்கலாக பாக்கிக் கதைகள் சகலமும் ஏற்கனவே நாம் படித்தது தானே?‘ என்ற விமர்சனம் தலைதூக்கலாம் தான்; ஆனால் for the sheer intensity of the adventure – இந்த ஒரு முறை மட்டும் (நம்) விதிமுறைகளை சற்றே தளர்த்திடல் தெய்வ குற்றமாகிவிடாதல்லவா? So- 2015-ன் pole position – கேப்டன் டைகரின் “மின்னும் மரணம் The Complete Sagaவிற்கே!

இரண்டாமிடத்துக்கான போட்டி நிஜமான இரு மேற்கத்திய ஜாம்பவான்களுக்கி்டையே! ஆண்டின் துவக்கத்திலேயே அறிமுகமான `பௌன்சர்‘ ஒரு பக்கமெனில் வருடத்தின் இரண்டாம் பாதியைத் தனதாக்கிக் கொண்ட நமது இரவுக் கழுகார் மறுபக்கம் ! நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த இரு heavy weights-ம் பாணிகளில் எதிரெதிர் துருவங்கள் என்பதில் சந்தேகமில்லை ! டெக்ஸின் கதைகள் எப்போதுமே squeaky clean; துளியும் விரசமோ, ஆபாசமோ இவர் பக்கமாய் தலைவைத்துக் கூடப் படுப்பதில்லை! ஆனால் ஒற்றைக்கரத்தாரோ இதுநாள் வரைக்கும் நாம் அஞ்சி, ஒதுங்கி நின்ற அத்தனை சமாச்சாரங்களுக்கும் தெனாவட்டான பிரதிநிதியாகக் காட்சி தந்தது நிஜமே! முதுகுத் தண்டில் சலசலப்பை உண்டாக்கும் வன்முறை; ‘just like that’ அரங்கேறிடும் அடல்ட்ஸ் ஒன்லி சங்கதிகள்; வக்கிரமான கதை மனிதர்கள் என ‘பௌன்சர்‘ எல்லா வகைகளிலுமே ஒரு ‘அழுக்கு மனிதனே‘! ஆனால் அத்தனை விமர்சனங்களையும் மீறி- சொரோவ்ஸ்கியின் இந்த ஆக்கத்திலொரு அனலடிக்கும் வசீகரம் குடியிப்பதை நம்மில் யாரும் மறுக்கவில்லை என்பதே 2015-ன் ஆச்சர்யங்களுள் தலையாயது! ‘ரௌத்திரம் பழகு‘ ஒரு அதிரடி ஆரம்பமெனில் தொடர்ந்த ‘சர்ப்பங்களின் சாபம்& கறுப்பு விதவை‘ நமது இதுநாள்வரையிலான கட்டுப்பெட்டித்தனங்களை சம்மட்டியால் போட்டுத் தாக்கிய ஆல்பம்களாய் அமைந்து போயின! So- டெக்ஸின் ‘ஓக்லஹோமா;பிரம்மன் மறந்த பிரதேசம்;எமனின் வாசலில் போன்ற டாப் சாகஸங்கள் 2015-ன் லிஸ்டில் இருந்தபோதிலும் பௌன்சரிடமுள்ள அந்த ‘X-factor’ – தராசின் முள்ளை அவர் பக்கமாய் சாய்க்கும் சக்தியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது ! 2015-ன் Top Title # 2 ? என்ற கேள்விக்கு ‘பௌன்சர்‘ என்று உங்களில் பலரும் பொதுவான பதில் தந்துள்ள போதிலும் ‘சர்ப்பங்களின் சாபம்‘ என குறிப்பிட்டு எழுதியுள்ள நண்பர்களும் கணிசம்! So- மேற்கின் வக்கிர முகத்தின் காமிக்ஸ் பிரதிநிதியாய் வலம் வந்திருக்கும் பௌன்சரின் ஆல்பம்கள் 3 & 4 இணைந்த (நமது) இதழான ‘சர்ப்பங்களின் சாபம்‘ வெள்ளிப் பதக்கத்தை ஆட்டையைப் போடுகின்றது!

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு அவசியமே ஏது?‘ என்ற ரீதியில் நமது இரவுக்கழுகாரின் மும்முனைத் தாக்குதலைத் தாங்கி வந்த The Lion 250இதழைத் தேர்வு செய்துள்ளீர்கள்! No surprises indeed ! வண்ணத்தில் 3 கதைகள்; அவற்றுள் 2 blockbusters ; ‘தல‘யின் அதகள அதிரடிகள்; ஹார்ட்கவர் பைண்டிங் என நிறைவாக அமைந்து போன இந்த இதழை 2015-ன் டாப் 3க்குள் நுழைத்துள்ளீர்கள்!

முதல் 3 இதழ்களின் தேர்வுகளை உங்கள் ரசனைகளின் வெளிப்பாடாய் மட்டும் பார்த்திடாமல் - வரிகளுக்கு மத்தியில் புதைந்து கிடக்கும் சேதிகளையும் சொல்லும் பட்சிகளாகவும் பார்க்க முடிந்தது! அவற்றுள் நான் கிரகித்த சிற்சில விஷயங்கள் பின்வருமாறு!

§ என்ன தான் நாயகர்களை நாம் சிலாகித்தும், கொண்டாடியும் வந்தாலும் வலுவான கதைக்களங்கள் அமையும் போது மாத்திரமே அவர்கள் விஸ்வரூபம் எடுக்க சாத்தியமாகிறது! 2015-ன் Top 3 தேர்வுகளிலும் இத்தனை powerful storylines இல்லாது போயின் இந்த வெற்றிகள் நிச்சயம் சாத்தியமாயிராது!
§  காலமாய் ஒரு கூட்டுக்குள் குடிகொண்டிருந்த நமது ரசனைகள் இன்றைக்கு நிறைய தளைகளைத் தகர்த்து விட்டு விசாலமான வெளிகளை நாடுவதும் பௌன்சரின் வெற்றி மூலமாய்ப் புரிந்திட முடிந்தது! புதியதொரு தலைமுறை அத்தனை சுலபமாய் shock ஆவதுமில்லை; எதையும் சுலபமாய் எடுத்துக் கொள்வதும் அவர்களுக்குச் சிரமமில்லை எனும் போது, நம் பயணத்திற்கு பௌன்சர் கொணர்ந்திருக்கும் ஒரு சிந்தனை மாற்றம் சாதாரண ரகத்திலானதல்ல! சில வருடங்களுக்கு முன்பாக சற்றே முதிர்ந்த ரசனைகளுக்கு மாத்திரமே லாயக்குப்படுமென்று நாம் ஓரம்கட்டிய ‘ஜேஸன் பிரைஸ்‘ இன்றைக்கு நமது ரெகுலர் அட்டவணைக்குள் அடியெடுத்து வைத்தல் சாத்தியமாகிறதென்றால் அது பௌன்சர் உண்டாக்கியுள்ள தாக்கதின் பலனே!
§    ராக்கெட் விஞ்ஞானியாக நானிருத்தல் தேவையில்லை தான்; ஆனால் தொடர்ச்சியாய் சில ஆண்டுகளாகவே ‘ஸ்கோர்‘ செய்து வருவது ‘குண்டூஸ்‘ புத்தகங்களே என்பதும் இங்கே வெளிச்சத்துக்கு வரும் சேதி! ஒரு நீ-ண்-ட கதையையோ; புஷ்டியானதொரு இதழையோ படித்திடும் / ரசித்திடும் அனுபவமே அலாதி என்பதை இன்னொரு முறை அழுத்தமாய் பதிவு செய்துள்ளீர்கள்! ஆனால் 2016-ல் அதற்கான வாய்ப்புகள் அத்தனை அகப்படவில்லை என்பதோடு, சந்தாவில் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அவசியப்படும் நிர்பந்தங்களும் இந்த ‘குண்டூஸ்‘ ஆசையினை சற்றே நீர்த்துப் போகச் செய்கின்றன! May be 2017ல் ஏதாவது landmarkகள் நம்மை எதிர்நோக்கியிருப்பின் அங்கே இந்த குண்டுப் பார்ட்டிகளை இறக்கி விட்டுப் பார்க்கலாமோ?
§  And எப்போதும் போலவே டாப் 3 நாயகர்களும், வன்மேற்கின் பிரதிநிதிகளே என்பதைப் பார்த்திடும் போது நமது ரசனைகள் குதிரைப் பசங்கள் திசையில் தீர்க்கமாய்த் திரும்பி நிலைகொண்டுவிட்டதா ?    அல்லது இதர genre களின் தரங்கள் கீழே சென்று விட்டனவா என்பது கேள்விக்குறியே! But இந்த நடப்பாண்டில் கார்ட்டூன் கோட்டா வலுவாக உள்ளதால் கௌ-பாய்களுக்கு நமது கிச்சு கிச்சு நாயகர்கள் சவால் விடுவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்த்திட வேண்டும்!

கேள்வி # 2 : 2015-ன் Top 3 மொக்கைப் பீஸ்கள்?

ஏகோபித்த தேர்வாய் டிக் வாங்குவது ‘விடுதலையே உன் விலையென்ன?‘ தான்!! இந்தக் கதைத்தேர்வின் பின்னணி பற்றி ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் அதே மாவை மறுபடியும் கிரைண்டரில் போடுவானேன்? நிறைய எதிர்பார்ப்போடு களமிறக்கிவிடும் கதைகள் இது போல அட்டகாசமாய் சொதப்பிடும் போது ரொம்பவே தர்மசங்கடமாயுள்ளது!

And உப்மா # 2 என்ற ‘பரிசை‘ லபக்கிச் செல்வதும் 2015ன் புதுவரவான ‘Lady Spitfire‘! அழகான சித்திரங்கள்; (எனக்குப்) பிடித்தமானதொரு யுத்தக் கதைக்களம் என்றிருந்தும் விண்ணில் ஒரு வேங்கை‘ தரையை விட்டு அகலவில்லை என்பதே நிதர்சனம்! 

சந்தா செலுத்தியுள்ள நண்பர்களை வம்படியாய் இது போன்ற “நொந்து நூடுல்ஸாகிடும் அனுபவங்களுக்குள்“ பயணிக்கச் செய்வதை சங்கடத்தோடே பார்க்கிறேன்! கடைகளில் வாங்கிடும் நண்பர்களாவது விமர்சனங்களை படித்து விட்டு எதை வாங்குவது? எதைத் தவிர்ப்பது?‘ என்ற சுதந்திரத்தோடு செயல்பட முடிந்திடலாம்! ஆனால் சந்தாதாரர்களுக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதெனும் போது விதியை நொந்து கொள்வதைத் தாண்டி அவர்கள் செய்திடக் கூடியது வேறெதுவும் இருக்க முடியாதென்பது புரிகிறது! So- 2015ன் இரு மொக்கைப் பீஸ்களை சகித்துக் கொண்ட அந்தப் பெருந்தன்மைக்குச் சின்னதொரு ஈடாய் நடப்பாண்டில் சிக் பில்லின் நிழல் 1 நிஜம் 2முழு வண்ண மறுபதிப்பை சந்தாதாரர்களுக்கு மட்டும் நம் அன்பளிப்பாய் வழங்கிடத் தீர்மானித்துள்ளேன்! சந்தாவினில் அங்கமாக இல்லா நண்பர்கள் (தேவையெனில்) இதனை நம்மிடமிருந்துவாங்கிக் கொள்ளலாம்! இனி வரும் காலங்களில் கதைத் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்த எங்களுக்கொரு நினைவூட்டலாகவும்;சந்தா கட்டினால் சிரத்துக்கு ஆபத்தென்று‘ எண்ணிடும் நண்பர்களுக்கொரு சிறு சமாதானமாயும் இது அமைந்திட்டால் சந்தோஷமே! ‘நிழல் 1நிஜம் 2'‘ மே மாதம் வந்திடும்!

 
மொக்கை பீஸ் of the year – மூன்றாமிடத்திற்குக் கடுமையான போட்டி ரோஜரின் மஞ்சள் நிழல் இதழுக்கும், வானமே எங்கள் வீதியின் மூன்றாம் பாகமான “பாதைகளும், பயணங்களும்“ இதழ்களுக்கிடையே தான்! ஆண்டுதோறும் கடைசி பென்ச்சின் மாணாக்கர் பட்டியலில் நமது ரோஜரார் இடம்பிடித்து வருவது நெருடலான விஷயமே! இம்முறை “மஞ்சள் நிழல்“ அத்தனை பாடாவதியல்ல என்று எனக்குப்பட்டது; ஆனால் உங்களில் பலரும் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது தான் சங்கடமே! ஆனால் “மஞ்சள் நிழலையும்“ விட ரணமாக்கியது “பாதைகளும்... பயணங்களும்“ தான் என்று சொன்னோரின் எண்ணிக்கை ஜாஸ்தியென்பதால் அந்த dubious distinction பெற்றிடுவது “பா.ப.“ இதழே! Phew!

கேள்வி # 3 : 2015-ன் Top அட்டைப்படம்?
     
நிஜமாகவே சிரமமான தேர்வுக்களம் simply becos 2015-ல் நமது அட்டைப்படத் தரம் நிஜமான முன்னேற்றம் கண்டிருந்தது நிதர்சனம்! மறுபதிப்புகளைக் கணக்கில் சேர்த்திடாது பார்த்தால் ஆண்டில் ஏழே இதழ்களுக்கு மட்டுமே நமது ஓவியர் சித்திரங்கள் போட்டுள்ளார்! பாக்கியனைத்தும் ஒரிஜினல்களின் தழுவல்களே! So- இந்த அட்டைப்படத் தர ஏற்றத்திற்காக நாம் ஒரேயடியாய்க் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வது முறையாகாது என்றாலும். ஒரிஜினல்களை மெருகூட்டும் போது அவர்களையே நம்மவர்கள் மிஞ்சிய தருணங்களும் இல்லாதில்லை தான்! 2015-ன் பெஸ்ட் அட்டைப்படம் என்ற கோப்பையை நீங்கள் வழங்கியிருப்பது கீழ்க்கண்ட இதழ்களுக்கே :    
§         சைத்தான் துறைமுகம்
§         சீற்றத்தின் நிறம் சிகப்பு
§         சாத்வீகமாய் ஒரு சிங்கம்



இந்த மூன்றுக்குமே ஓவியப் பணியாற்றியது ஹெர்மென் தான் என்பதால் மூன்றுமே அவரது மழலைகள் என்ற காரணத்தினால் பரிசைப் பகிர்ந்திடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன்! What say folks?


4. கேள்வி # 4 : 2015-ன் worst அட்டைப்படம்?

இந்தக் கேள்விக்கான பதில் நிஜமாகவே என்னை மண்டையைச் சொரியச் செய்தது! ஓவியர் வில்லியம் வான்ஸின் க்ளாசிக் அட்டைப்படச் சித்திரமே நமது ‘மஞ்சள் நிழல்‘ இதழின் ராப்பர்! அதனில் கதையின் பெயர், நமது லோகோ போன்றவற்றைப் பதித்ததைத் தாண்டி நாமும் கை வைக்கவில்லை! ஆனால் 2015-ன் செம டொக்கு ராப்பராக இதனையே நண்பர்களில் பெரும்பான்மை தேர்வு செய்திருப்பது ஏனென்பது நிஜமாய் புரியவில்லை!

5. 2015-ன் மறக்க இயலாத் தருணம்?
     
சுலபமான கேள்வியே! ஈரோட்டுப் புத்தகவிழாவும் தொடர்ந்த வாசகர் சந்திப்பும் செம ஜாலி அனுபவங்களாய் அமைந்திருப்பினும் நேரில் சந்திக்க வாய்ப்புக் கிட்டா நண்பர்கள் அனைவருக்குமே ‘மின்னும் மரணம்‘ இதழினை டப்பாவிலிருந்து உடைத்துக் கையில் ஏந்திய அனுபவத்தின் பரவசம் 2015-ன் பிரதானத் தருணமாக அமைந்திருப்பது புரிகிறது! இது போன்றதொரு இதழை வெளியிடும் வேளை இனி புலரக் காத்திருப்பது எந்த மாமாங்கத்திலோ எனும் போது இந்த மைல்கல் தருணத்தின் முக்கியத்துவம் இன்னமும் பன்மடங்காகிறது! அப்படியே இன்னுமொரு மெகாாா இதழ் உருவாகிடும் நாளே மலர்ந்தால் கூட முதலாவதைக் கோட்டைக் கடந்த சந்தோஷத்தை தொடர்ந்து வருபவர் அனுபவிக்க முடியாது தானே?

6. 2015-ல் முத்திரை பதித்த நாயகர் யார்?

திரும்பவும் ஒரு நேருக்கு நேர் மோதல் இம்முறை பௌன்சருக்கும், தோர்கலுக்கும் இடையில்! ஆண்டின் துவக்கத்தின் போது ‘பௌன்சர்‘ என்ற பெயர் கிரிக்கெட் ஆடுகளத்தினில் மூஞ்சைப் பதம் பார்க்கும் பந்தாகவும்;தோர்கல்‘ என்ற பெயர் சுமாரான விட்டலாச்சார்யா ரகக் கதைகளில் தலைகாட்டுமொரு பரட்டைத் தலைப்பையனாகவம் மட்டுமே நமக்கும் தெரியும்! ஆனால் 2015-ன் இறுதியில் ‘பௌன்சர் என்ற பதத்தின் பரிமாணமே வேறாகிப் போனது மட்டுமன்றி தோர்கல்‘ என்ற நாமகரணத்திற்கொரு புது கம்பீரமும், வீரியமும் உருவாகியிருப்பது நிஜமல்லவா? இந்தாண்டின் ‘டாப் நாயகர்‘ என்ற கௌரவத்திற்கு இருவருமே தகுதியானவர்கள் என்றாலும் தோர்கலே‘ உங்களது வாக்குகளை அதிகம் பெற்றுள்ளார்! So- 2015ன் டாப் நாயகர் ஆரிசியாவின் மணாளனே! ஒரு விதத்தில் பார்த்தால் உங்களின் இந்தத் தேர்வின் பின்னணியில் லாஜிக் நிறையவே உள்ளது; ஏனெனில் ஏழெட்டு ஆல்பங்கள் கொண்ட பௌன்சரின் ராஜ்யம் அத்தனை விசாலமானதல்ல. ஆனால் தோர்கலோ 1977 முதல் இன்று வரையிலும் கடந்து சென்றிருக்கும் பாதை பிரமாண்டமானதெனும் போது வான் ஹாம்மேயின் இந்தப் படைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கியது spot on!

கேள்வி # 7 : 2015-ல் அதிகம் ஏமாற்றமளித்த இதழ் எது?
     
Top 3 மொக்கை பீஸ்கள்‘ பற்றிய கேள்வியும், இந்தக் கேள்வியும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால் பெரும்பாலான நண்பர்கள் இதற்கு பதிலளிக்க மெனக்கெடவில்லை! So நாமும் இதனைக் கடந்து செல்வது தான் வழி!

கேள்வி # 8 : கௌ-பாய் இதழ்கள் திகட்டவில்லையா?
            
இந்த பயம் எனக்கு அவ்வப்போது தலைதூக்குவது உண்டு தான்; ஆனாலும் தொடர்ந்து தொப்பிக்காரத் தம்பிகளைத் தேடியலைவதை நான் கைவிடுவதில்லை தான்! நீங்களும் ஆண்டுதோறும் இந்தத் தங்கக்கம்பிகளை ரசிப்பதில் துளியும் ஆர்வக் குறைவினைக் காட்டுவதில்லை! 2015ன் Top 3 இதழ்களுமே கௌ-பாய் கதைகளே எனும் போது என் கேள்விக்குப் பின்புலமே இல்லாது போகிறது! Cowboys are still Kings!

9. 2015-ன் Best அறிமுகம்?

“அறிமுகம்“ என்று பார்த்தால் 2015-ல் புதுவரவுகளாய் தலைகாட்டியோர் பட்டியல் இதோ :
§         பௌன்சர்
§         லேடி ஸ்பிட் ஃபயர்
§         கர்னல் க்ளிப்டன்
§         ஸ்மர்ஃப்
§         லியனார்டோ தாத்தா
‘லேடி ஸ்பிட் ஃபயர்‘ போட்டிக்கு முன்பாகவே வீட்டுக்கு அனுப்பப்பட்டதால் அவரைக் கணக்கில் சேர்ப்பதில் பிரயோஜனமில்லை! And லியனார்டோ தாத்தா கூட குட்டிக் குட்டி gag தொகுப்பின் நாயகரென்பதால் அவரை 50-50 என்ற விகிதத்தில் தான் ரசிக்க முடிந்துள்ளது உங்களில் நிறைய பேருக்கு! எஞ்சி நிற்கும் மூவருள் ‘பௌன்சர்‘ பெற்ற வாக்குகளுக்குச் சளைக்காது நமது கார்ட்டூன் பிரதிநிதிகளும் ‘ஸ்கோர்‘ செய்துள்ளனர்! ஆனால் ரொம்ப நுணுக்கமாய் பார்க்கும் போது கர்னல் க்ளிப்டனுக்கு விழுந்துள்ள மார்க்குகள் தான் ஜாஸ்தி! என்றோவொரு மாமாங்கத்தில் இவர் நமது மினி லயனில் ஒரேயொரு சாகஸத்தில் தலைகாட்டியுள்ள போதிலும் அவரது வண்ண அவதாரம் ஒரு புத்தம் புதிய பரிமாணம் என்றே சொல்லலாம்! So- கேரட் மீசைக்காரரை 2015-ன் டாப் அறிமுகமாய் நீங்கள் தேர்வு செய்துள்ளதில் எனக்கும் சூப்பர் குஷி! And a close second were THE SMURFS !! 

10. என்ன குறைகிறதென்று பட்டது 2015-ல்?
     
இங்கும் கிட்டத்தட்ட ஏகோபித்த பதில்கள்! முன்பெல்லாம் தடுக்கி விழுந்தால் “துப்பறியும் சிங்கங்கள்“ மீதே விழுந்தாக வேண்டுமென்ற நிலை தற்சமயம் அடியோடு ாறியிருப்பது குறித்து நண்பர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்! C.I.D. ராபின்; ரிப்போர்ட்டர் ஜானி நீங்கலாய் ‘டிடெக்டிவ்‘ என்ற பதத்திற்குப் பெருமை சேர்க்கும் ஆசாமிகள் நம்மிடம் அதிகமில்லை என்பதை மறுக்க இயலாது தான்! இந்த flavour மாத்திரம் இன்னும் சற்றே தூக்கலாகயிருப்பின் இன்னும் சிறப்பாகயிருக்குமென்பதே உங்களின் opinion! சிந்திப்போம் இது தொடர்பாய்!!

கேள்வி # 11 : 2015-ன் overall அனுபவம் எப்படி?

முன்னேற்றத்திற்கு நிறையவே வாய்ப்பிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அதே மூச்சில் இந்த 2015-ன் வாசிப்பு அனுபவத்தை நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள் guys! காமிக்ஸ் தாகம் தீர்ந்திட ‘வாராதோ ஓர் விடியலே?‘ என நீங்கள் காத்திருந்த நாட்கள் காலாவதியாகிட ‘தங்கம் தேடிய சிங்கமாய்‘ நமது லயனும், முத்துவும் செயல்படுவதை 2015 வலியுறுத்தியுள்ளதைக் கனிவாகச் சிலாகித்துள்ளமைக்கு thanks a ton! 2015ன் குறைகளைக் களைந்து; நிறைகளை இன்னமும் விசாலமாக்கிட வரும் நாட்கள் உதவுமென்று நம்புவோம்!

பின்னோக்கிய படலம் இத்தோடு இனிதே நிறைவாகிட  -   நிகழ்காலத்துக்குத் திரும்பிடுவோமா ? இதோ - பிப்ரவரியில் காத்திருக்கும் அடுத்த கௌபாயின் அட்டைப்படப் preview !! இவரோ - நமது ஒல்லிப் பிச்சான் காமெடிக்காரர் என்பதால் - இங்கே கேட்கும் வெடிச் சத்தம் சிரிப்பு வெடிகளின் ஓசையாகவே இருந்திடும் ! "ஒரு பட்டாப் போட்டி" - ஒரிஜினல் முன் + பின் அட்டைகளின் அக்மார்க் நகல்களே ! ஒரிஜினல்களே சூப்பராக இருந்தபடியால் அவற்றில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்கும் அவசியம் தோன்றவில்லை ! நாம் ஏற்கனவே டெக்சின் "ஒக்லஹோமா " சாகசத்தில் படித்து  ரசித்த அதே குடியேற்ற நிகழ்வின் கார்ட்டூன் பாணியிலான பார்வை இது ! அழகான சித்திரங்கள், ரம்யமான வண்ணக் கலவைகள் கொண்ட இந்த இதழ் ஏற்கனவே அச்சாகி விட்டது ; கையில் வண்ணப் பக்கங்களை வைத்து ரசிக்கும் போது அட்டகாசமாய்த் தோன்றியது எனக்கு ! நமது 'மக்கன்பேடா நண்பரை' நிச்சயமாய் உற்சாகத்தில் துள்ளச் செய்யப் போகும் இதழிது !

கிளம்பும் முன்பாக - பட்டையைக் கிளப்பும் ஒரு சேதியும் கூட !! ஒரு சில நாட்களுக்கு முன்பாய் சென்னையில் துவங்கியுள்ள  "பொங்கல் புத்தக   விழா"வினில்  எவ்வித வரவேற்பை எதிர்பார்ப்பதென்ற யூகங்களின்றியே இருந்தோம் ! வழக்கமாய் நடந்திடும் ஜனவரி புத்தக விழா அளவில் பன்மடங்கு பிரம்மாண்டமானது (750 ஸ்டால்கள் !!) ; ஆனால் இந்த விழாவிலோ 208 ஸ்டால்கள் மாத்திரமே என்ற போது - மக்களின் வரவேற்பு பற்றி பெரியதொரு கற்பனைகளை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை தான் ! ஆனால் ஜனவரிக்கும், சென்னைக்கும், புத்தகங்களுக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாய் ஏற்பட்டுப் போயுள்ளதொரு பந்தம்  - மழையாலோ ; வெள்ளத்தாலோ மட்டுப்படப் போவதில்லை என்பதை தீர்க்கமாய்ப் புரிந்து கொள்ள கடந்த சில நாட்களொரு வாய்ப்பாக அமைந்து போயுள்ளது ! அட்டகாசமான ஜனத்திரள்   ; அழகான விற்பனைகள் என அரங்கில் அனைத்துப் பதிப்பகங்களும் சந்தோஷத்தில் திளைத்திருக்க - நமக்கும் சூப்பர் -டூப்பர் வரவேற்பு !! நமது ஸ்டாலின் இடமும் அருமையாய் அமைந்திட - பொங்கலன்றும், நேற்றும் நம்மவர்கள் திணறிப் போய்விட்டனர் பொங்கிய மக்கள் வெள்ளத்தை சமாளித்திட ! விற்பனை தொகைகளில்  BAPASI-ன் ஜனவரி விழா முற்றிலும் வேறொரு league என்பதால் அந்தத் தொகைகள் (இதுவரையிலும்) சாத்தியமாகிடவில்லை தான் - ஆனால் கடந்த 2 நாட்களின் வேகமும், விறுவிறுப்பும் தொடரும் நாட்களிலும் தொடரும் பட்சத்தில் - தமிழ் பதிப்பக உலகில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பாக புன்னகைகள் சரளமாய்ப் புழங்கத் தொடங்கியிருக்கும் !! And நமது ஸ்டால்களில் ஒரு போட்டியே நடக்கிறது - bestseller என்ற பட்டத்தைத் தட்டிச் செல்ல !! "நயாகராவில் மாயாவி" இன்னமும் வண்டி வண்டியாய் விற்பனையாகி வர - நம் இரவுக்கழுகாரின் "நில்..கவனி..சுடு !" & "சட்டத்துக்கொரு சவக்குழி" இன்னொரு பக்கம் அதகளம் செய்து வருகின்றன !! டெக்சின் விற்பனை கோணத்தினில் பார்த்திட்டால் - "நில்..கவனி..சுடு.." ஒரு all time high என்று சொல்லலாம் ! மூன்றாவது தரப்பிலோ - கார்ட்டூன் இதழ்கள் பின்னிப் பெடலேடுத்தும் வருகின்றன !! லக்கி லூக் எப்போதும் போல அனல் பறக்கச் செய்ய, SMURFS இதழுக்கும் அமோக வரவேற்பு ! நடப்பாண்டில் நமது அட்டவணையினில் ஒரு கார்டூன் தனித்தடம் அமைந்திருப்பதால் தொடரும் புத்தக விழாக்காலங்களில் நம்மிடம் கார்ட்டூன் ஆல்பங்கள் கணிசமாகவே இருந்திடும் என்ற நினைப்பே ஜில்லென்று உள்ளது ! 

அடுத்த ஞாயிறு வரைக்கும் நடக்கவுள்ள இந்த விழாவினை வாஞ்சையோடு நாம் நினைவு கொண்டிட நிச்சயமாய்  சூழல்கள் அமைந்திடுமென்ற நம்பிக்கையோடு இரவு மூன்றரைக்கு மட்டுப்பட்ட எனது தூக்கத்தைத் தொடரச் செல்கிறேன் !! Have a wonderful Sunday folks !! See you around soon...bye for now !! 

283 comments:

  1. Replies
    1. குண்டுபுக்கிற்கென மைல்கல்லிற்காக காத்திருக்க வேண்டாமே....'கோடை', 'தீபாவளி' என ஏதேனும் wildcard round-ல் நுழைக்க முடியாதா...!?

      Delete
    2. // கோடை,தீபாவளி என்று......//

      அதுதானே.? மதியில்லாத மந்திரி யில் வரும் சுல்தானைப்போல் கொண்டாடவேண்டியதுதான்.!பண்டிகைக்காக நாம் ஏன் காத்திருக்கனும்.?

      Delete
    3. குண்டு புத்தகம் பல கதைகள் கலந்த கதம்பமாக இருக்க வேண்டும்.!கக்டெயிலாக (நன்றி:பிளேடு!)இருந்தால் அனைத்து தரப்பினருக்கும் ரசிக்குபடி இனிதாக இருக்கும்.!

      குண்டு புத்தக எதிர்பாளர் மிஸ்டர் மரமண்டை!எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.!

      Delete
    4. கதம்ப குண்டுக்கு என் ஓட்டு

      Delete
    5. கதம்ப மலர் கட்டாயம் வேண்டும்

      Delete
  2. இதோ நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  3. குண்டு புக்குகள் இந்த வருடமே வர ஏற்பாடு செய்யுங்க சார்

    ReplyDelete
  4. Replies
    1. மக்கன் பேடாவை எடிட்டர் இன்னும் மறக்கவில்லை.!

      Delete
    2. மறக்க இயலா இன்சுவை .....இன்னும் இனிப்பதில் வியப்பில்லை...

      Delete
    3. ஆசிரியரின் இனிமைத்தமிழில் வெளிவரும் அனைத்து அருமை படைப்புகளுக்கும்....
      சுவாமி" ஸ்ரீஸ்ரீ அஹ்மதானந்தா" அவர்களின் பரிபூரண ஆசிகள் என்றென்றும் உண்டு....!

      Delete
  5. அட இந்த தபா 5வது..!

    ReplyDelete
  6. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
    Replies
    1. செந்தில் மாதேஷ் கொஞ்ச நாள்
      ஆளையே காணோம் நண்பரே

      Delete
  7. 'நிழல்1 நிஜம் 2' ஐ ஈட்டுப் புத்தகமாக அளிக்க முடிவு செய்த உங்கள் பெருந்தன்மை பாராட்டுக்குரியது சார்! ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும்போது எங்களுக்குள் சிறு குற்ற உணர்வு குடிகொள்ளும் என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை! அற்புதமான வெளியீடுகள் பல சென்ற வருடத்தில் எங்கள் மனதை நிறைத்திருக்கையில், ஒன்றிரண்டு சருக்கினால் குறைந்தாபோய் விடுவோம்?! தவிர, ஓரிடத்தில் 'சூப்பர்' என்ற ஒன்று இருந்திடும்போது 'சுமார்/மொக்கை' என்ற ஒன்று அவ்விடத்தில் இருப்பதும் இயல்புதானே? இதற்குப் போய் ஏன்...

    சரி, அப்படியே எதையாவது நாங்கள் வாங்கிக்கொண்டே ஆகவேண்டுமென்று நீங்கள் முடிவுசெய்திருந்தால், எங்கள் அனேகர்களிடம் இல்லாத ஆரம்பகால சிக்பில் இதழ்களில் ஏதாவது ஒன்றாக இருக்குமானால் ( விண்வெளியில் ஒரு எலி?) குற்ற உணர்வு குறைந்து குதூகலம் குடிகொள்ளும்! ;)

    சென்னை புத்தகத் திருவிழா பட்டையைக் கிளப்பிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்பார்த்த ஒன்றுதான்! :)

    ReplyDelete
    Replies
    1. விண்வெளியில் ஒரு எலி!மகிழ்ச்சியான சேதிகளுக்கு பஞ்சமென்பதே ஏது..!?

      Delete
    2. ஈரோடு விஜய்.!

      ஹாஹாஹாஹா........

      // நிழல் ஒன்று1 நிஜம் 2 இதழ் வேண்டாம் குற்ற உணர்வு வந்து விடும் விண்வெளியில் ஒரு எலி கொடுங்கள் குதூகலம் வந்துவிடும்.!//

      இதைப்படித்த போது.,எஸ்.வி.சேகர் நாடகம் தான் நினைவில் வந்தது.ஒரு காட்சியில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்வார்கள் அப்போது அவர்., "கல்யாணத்திற்கு இப்ப என்னப்பா அவசரம் ?,அடுத்த வாரம் வச்சுக்கலாம் " என்பார் அது மாதிரியல்லவா
      இருக்கு.?

      Delete
    3. Vinveliyil oru eli thaan vendum

      Nilal 1/2 vendaam

      Delete
    4. Erode VIJAY : நஷ்ட ஈடென்று நான் நிச்சயமாய்ப் பார்த்திடவில்லை நண்பரே ; நண்பர்களின் மாறா அன்புக்கும், தீரா நம்பிக்கைக்கும் ஒரு சிறு நன்றி நவிலல் என்று எடுத்துக் கொள்ளுங்களேன் !

      And - எலியார் ; இரும்புக் குதிரையார் என classic சிக் பில் கதைகளின் மறுபதிப்புகளும் நிச்சயமாய் வந்திடும் - தொடரும் நாட்களில் !

      அந்த கிளாசிக் பட்டியலில் ஒரு அங்கமான "ஆர்டினின் ஆயுதம்" மே மாதம் வருகிறது ! இசை மீது திடீர் மையல் கொண்டு வயலின் வாசிக்கப் படிக்கத் தொடங்குகிறார் நம்மாள் ஆர்ட்டின் ! தொடரும் லூட்டிக்குக் கேட்கவும் வேண்டுமா ? "ஹிட் லிஸ்டில்' நிச்சயம் சேரவிருக்கும் இதழ் என்று நம்புகிறேன் !

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. //And - எலியார் ; இரும்புக் குதிரையார் என classic சிக் பில் கதைகளின் மறுபதிப்புகளும் நிச்சயமாய் வந்திடும் - தொடரும் நாட்களில் !// super news sir, apadiye prince, reporter johnny and lucky luke ivargalin marupathipayum viraivil ethirparkkalama?

      Delete
    7. Bernard reprint must ...on this year...

      Delete
  8. புத்தக விழாவில் காமிக்ஸ்களின் வி்ற்பனை அனல் பறப்பது கண்டு ஆனந்தம் கொண்டேன்!2016-ன் மகிழ்ச்சி தரும் சேதிகளில் இதுவே பிரதானமாகிப் போகிறது!

    ReplyDelete
  9. இந்த Bookfairல் cinebooks விற்பனையாகிறதா சார்?

    ReplyDelete
    Replies
    1. Pugaz : Yes, ஆனால் மெதுவாக !! ஆன்லைனில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் பிக் அப் ஆகி வருகிறது ! இன்று கூட ஒரு நண்பர் ஒரு full set லக்கி லூக் ஆர்டர் செய்துள்ளார் !!

      Delete
  10. ஆசிரியரக்கும், நண்பர்களுக்கும் - இனிய காலை வணக்கம்!

    ReplyDelete
  11. முகநூலில் நண்பரொருவர், புத்தக விழா நாயகன் மாயாவி மாமா தான் என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த போது..ஹூம்ம்..க்ராண்டேல் சரித்திர நாயகன் தான் என்பதில் நெல் முனையளவும் ஐயமில்லை..!

    ReplyDelete
  12. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
    (அதற்குள் பொங்கல் முடியப்போகிறது :( )

    புத்தக திருவிழாவில் விற்பனை களைகட்டட்டும் :))
    .

    ReplyDelete
  13. ஆகா சூப்பர்!. அன்றிலிருந்து இன்று வரை காமிக்ஸ் வாங்கியவுடன் ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடன் முதலில் படிப்பது உங்கள் ஹாட்லைன் தான்.ஆனால் அதைவிட பலமடங்கு ஆர்வத்துடன் படிப்பது, வாசகர் கருத்துக்கணிப்புடன் உங்கள் அலசலலுடன் படிக்கும் இந்த வருட ஆய்வு கட்டுரைகள்தான்.

    இதில் எனக்கொரு சந்தோசம்.!நி.நி.யு. மொக்கை லிஸ்ட்டில் வரவில்லை.! உய்ய்ய்.........(நானும் மாடஸ்டி மாதிரி விசில் அடிப்பேன்.)

    ReplyDelete
    Replies
    1. M.v.சார் தேவதையை மொக்கையென யாரும் சொல்ல மாட்டார்கள்

      Delete
    2. மரண மொக்கைகள் நிறைய இருந்ததால் சாதா மொக்கை தப்பி விட்டது...

      Delete
    3. செந்தில் சார்.!

      :-))))))))))))))))))))

      டெக்ஸ் விஜய ராகவன் சார்.!
      கர்ர்ர்ர்........

      ஓவியபாணிதான் நிறையபேருக்கு பிடிக்கவில்லையே தவிர கதை சூப்பர்தான்.இன்னொரு விசயம் இதுவரை லயனில் எந்த ஒரு மாடஸ்டி கதையும் சொதப்பியதாக சரித்திரம் இல்லை.!

      அப்புறம் கவனித்தீர்களா.? வாசகர்கள் கருத்துகணிப்பில் டைகருக்கு முதலிடம்.......

      கதை ஆசிரியர் சார்லியர் மட்டும் நீண்ட ஆயுளை பெற்றிருந்தால் .......இங்கு நிலைமையே தலைகீழாக மாறி போயிருக்கும் டைகருக்கு தனி சந்தா கோரிக்கை வலுத்து இருக்கும்பிறகு நிறைவேறி இருக்கும்.ஹும் ! என்னமோ போடா மாதவா.!

      Delete
    4. Mv சார்@ சும்மா சும்மா.. பீ கூல்...
      நான் இளவரசிக்கும் ரசிகன்தான்...

      Delete
    5. டெக்ஸ் விஜய ராகவன்.!


      அடடே! பத்த வைச்சு பார்த்தேன்.!ஹும் பத்தமாட்டேன்குது.!

      Delete
    6. நாம எல்லோருமே கழுவர மீனுல நழுவர மீனுங்கதான்..!சில சமயத்துல நம்ம எடி கழுவும்போது திமிங்கிலமா இருக்கிறார்..நழுவும் போது அயிர மீனா வழுக்கிகிட்டு போயிடராா்..!

      Delete
    7. குணா சார்.!


      ஹாஹாஹா.........! கடந்த கால வரலாறை யாரும் மறக்கவில்லை போலும்.!

      Delete
  14. ஆசிரியரக்கும்,நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்..

    Reply

    ReplyDelete
  15. Replies
    1. "சிங்கம் களத்தில் இறங்கி விட்டது."

      வணக்கம்.!

      Delete
    2. நமஸ்காரமண்டி மாடஸ்டிகாரு!

      Delete
  16. வணக்கம் சார்...
    வணக்கம் நட்பூஸ்...
    குண்ண்ண்ண்டான பதிவு..

    ReplyDelete
  17. நக்கல் மன்னன் கவுண்டமணி.
    ஏங்க....! ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவங்களுக்கெல்லாம் நெலம் குடுக்குறீங்களே.....
    அது நஞ்சையா.....?
    இல்ல..
    புஞ்சையா..?
    ஏரிப்பாசானமா..!
    இல்ல..
    கெணத்து பாசானமா....?
    கெணத்து பாசானம்னா கொழா வக்கனுமே....?
    நீங்க வச்சுக்குடுப்பீங்களா....?
    இல்ல ...
    நாங்களே வச்சுக்கனுமா..!


    ரைட்டு...

    எடிட்டர் சார்...
    மொக்கைக்கு மருந்துன்னு சிக்பில் கதைய குடுக்கறேன்னு சொல்றீஙகளே...
    அது..
    போன வருசம் சந்தா கட்டி இந்த வருசம் கட்டாம வுட்டவங்களுக்கும் குடுப்பீங்களா..?
    இல்ல..
    போன வருசம் கட்டாம வுட்டு இந்த வருசம் புதுசா சந்தா கட்டுவங்களுக்கும் குடுப்பீங்களா....



    ஹீ....ஹீ......ஹீ...

    சும்மா தமாஷ்....

    ReplyDelete
    Replies
    1. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.? உஸ்ஸ்.....தாங்கல.!

      Delete
    2. கரெக்டான கேள்வி
      சென்ற வருடம் சந்தா கட்டவில்லை ஆனால் மொக்கை புக் வாங்கியிருக்கேன்
      இந்த வருடம் சந்தா கட்டி இருக்கேன்
      எனக்கு உண்டா?
      ஏதாவது பார்த்து குடுங்க

      Delete
    3. போன வருசமோ,இந்த வருசமோ ..பேர் இருந்தா தருவாங்கய்யா...

      Delete
    4. ஜேடர்பாளையம் சரவணகுமார் : ஒவ்வொரு சூழ்நிலைக்கும் கவுண்டரிடம் ஒரு கிளாசிக் இருப்பதைக் கவனித்தீர்களா ?

      Delete
  18. வணக்கம் சார்
    வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  19. எடிட்டர் மற்றும் அனைத்து காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  20. இனிய காலை வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  21. எடிட்டர் சார் கொடுக்க முடிவு செய்து விட்டீர்கள். வேண்டாம் என்றால் விடவா போகிறீர்கள். நண்பர் ஈரோடு விஜய் கூறியது போல வின்வெளியில் ஒரு எலியை எங்கள் கரங்களில் தவழ விட்டால் மிகவும் சந்தோஷம்

    ReplyDelete
  22. இந்த ஆண்டு முதல் நாம் மறந்த கோடை மலரை மீண்டும் வெளியிட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் கோடைமலராக டெக்ஸின் 'தலையில்லாப்போராளி' வரப்போகிறதே சார்....!

      Delete
  23. எங்கள் காமிக்ஸ் உலக அண்ணா விஜயன் சாருக்கும் நண்பர்களுக்கும்
    இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. waiting for 2 million special ...another 23000 to go

    ReplyDelete
  25. ஆசிரியரே வியாழனன்று நான் நமது
    ஸ்டாலுக்கு வந்திருந்தேன் 2015 ல்
    வந்த மொத்த செட் புத்தகங்களையும்(மிண்ணும் மரணம்)
    உட்பட வாங்கி என் நண்பருக்கு
    பரிசாக கொடுத்தேன் அவர் அடைந்த
    மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அவர் போன
    வருடத்தின் ஒரு புத்தகம் கூட படிக்க வில்லை இந்த விஷயத்தை இங்கு ஏன் சொல்கிறேனென்றால் எனக்கு நண்பர் ஒருவர் சந்தா கட்டியதால் நான் இன்னொரு நண்பருக்கு புத்தகங்கள் பரிசாக
    வழங்க முடிந்தது அதனால் எனக்கு சந்தா கட்டிய முகம் தெரியாத நண்பருக்கு நான் எனது நண்பர் இருவரும் நண்றி கூறுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : முகம் தெரியா நட்புக்களையும் உருவாக்கிடும் பாலமே இந்தக் காமிக்ஸ் ரசனை தானே சார் ? கடல்களையும் கடக்கும் வலிமை கொண்டதிந்த நட்பு என்று சொல்லுவேன் !!

      :-)

      Delete
  26. /// நடப்பாண்டில் சிக் பில்லின் ‘நிழல் 1 நிஜம் 2‘ முழு வண்ண மறுபதிப்பை சந்தாதாரர்களுக்கு மட்டும் நம் அன்பளிப்பாய் வழங்கிடத் தீர்மானித்துள்ளேன்! ///

    சும்மாவே கெடைக்கப் போகுதே சொக்கா!!!!

    என்ன ஒரு சங்கடம். நஷ்டஈடு ன்னு சொல்லாம., சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பு ன்னு சொல்லியிருந்தா சந்தோசமா இருந்திருக்கும் சார்.!

    ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் செய்திட்ட முயற்சிதானே சார்.! சின்ன சறுக்கல் ஏற்பட்டதால் நொந்துபோக வேண்டாமே ப்ளீஸ்.!!

    உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.!! (புது முயற்சிகளை) !!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : அதென்ன - கட்சி மாறி விட்டீர்கள் ? ஜால்ரா பாய் ஜம்மென்று நிற்கிறாரே display -ல் ?

      Delete

    2. எடிட்டர் சார் ,

      கட்சி மாறவில்லை. கட்சி கொடியின் சின்னங்களுள் இதுவும் ஒன்று என்று வைத்துக்கொள்வோமே!
      கடந்த EBF மீட்டில் 2016 எப்படி இருக்கணும்னு நினைக்கிறிங்க.? என்று ஒரு கேள்வியை முன் வைத்தீர்கள் சார்.
      அப்போது எல்லோரையும் முந்திக்கொண்டு கையை தூக்கி கார்ட்டூன் தனி சந்தா வேண்டும் சார் என்று குரல் கொடுத்தேன்.
      அன்று அமைதியாக சிரித்தபடி இருந்துவிட்டீர்கள். சரி! கார்ட்டூன் தனி சந்தா கனவாய் போய்விட்டது என்ற முடிவுக்கு நான் வந்திருந்தேன்.!
      ஆனால் அதிரடியாக சந்தா C அறிவுப்பு வந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

      மாதம் ஒரு கார்ட்டூன் வரும்போது., அந்தந்த மாதத்தின் கதைமாந்தர்களில் என்னை கவர்ந்தவர்களை புரொபைல் போட்டோவில் வைத்து ஒரு சின்ன ட்ரிப்யூட் தர முடிவு செய்திருக்கிறேன்.
      இம்மாத ம.மந்திரிக்கு மரியாதை செய்யும் விதத்தில் விசுவாசத்தின் மறுஉருவமான ஜால்ராபாயை ப்ரொபைலாக வைத்துவிட்டேன். (ஏதோ என்னால முடிந்த சின்ன மருவாதி.) :-)

      Delete
    3. அடப்பாருப்பா.! மருவாதையை......சூப்பர்.!உங்கள் கார்ட்டூன் காதல் மெய்சிலீர்க்க வைக்கிறது.!

      என் புரஃபைல் பாருங்கள்.! என்றுமே..." அடைந்தால் மகாராணி இல்லையேல் மரணதேவி.!!"

      Delete
  27. எடிட்டர் சார் ஒன்று மட்டும் புரியவில்லை. நாங்கள் கட்டிய சந்தா தொகைக்கு (2015) நீங்கள் புத்தகம் வழங்கிவிட்டீர்கள். என்னுடைய 40 ஆண்டு கால வாசிப்பு அனுபவத்தில் எந்த பதிப்பகமும் தாங்கள் வெளியிட்ட புத்தகம் சரியில்லை என்று அந்த குறையை ஈடு செய்ய நஷ்ட ஈடு தொகையை வழங்குவது போல இன்னொரு புத்தகம் வழங்கியதில்லை. வழங்கப்போவதுமில்லை. எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்கமுடிகிறது. பல லட்சம் பிரதிகள் விற்கும் எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தோமா லாபத்தை அள்ளினோமா கடையை கட்டினோமா என்று இயங்கிவரும் நிலையில் நீங்கள் எல்லாவற்றிலும் மாற்றி யோசிக்கிறீர்கள். உங்களின் இந்த அடுத்தவர் சந்தோஷமே எனதுசந்தோஷம் என்ற அரிதான மனப்பாங்கிற்கு நீங்கள் இருக்கவேண்டிய இடமே வேறு. இந்த மனப்பாங்கிற்கு நமது காமிக்ஸ் விற்பனை லட்சங்களை தொட்டால் உங்களைவிட உங்கள் வாசகர்கள்களாகிய நாங்கள்தான் பெருமகிழ்ச்சி கொள்வோம். அந்த நாள் விரைவில் வர நமது காமிக்ஸ் தோழர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உண்மை...உண்மை..ராஜேந்திரன் ஜி.....அந்த நாள் கண்டிப்பாக வெகு விரைவில் வரும் ஜி...

      Delete
    2. அருமையா சொல்லியிருக்கீங்க ராஜேந்திரன் அவர்களே!

      100000 likes

      Delete
    3. Rajendran A.T & Friends : அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் சார் ! குத்துமதிப்பாய் 500 சந்தாக்கள் என எடுத்துக் கொண்டாலே - ஆண்டின் துவக்கத்தில் நீங்கள் எங்களிடம் ஒப்படைக்கும் தொகை ரூ.20 இலட்சம் ஆகிறது ! ஒரு நிறுவனமாய் எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இதனைப் பார்க்கிறேன் ! And உங்களின் நம்பிக்கைகளுக்கு வலு சேர்ப்பது எனது ரசனை மீதும், எனது வாக்குறுதிகள் மீதும் நீங்கள் வைத்திடும் பற்றுதல் தானே?

      "இது ஆஹா ரகம்..இது ஓகோ ரகம்" என நான் தரும் உத்தரவாதங்கள் நூற்றுக்கு நூறு நிஜமாகிடல் சாத்தியமல்ல தான் ; ஆனால் அந்த margin of error ஒவ்வொரு ஆண்டிலும் குறுகிச் சென்று - எதிர்காலத்தில் என்றோ ஒரு நாள் "இந்த வருஷத்தில் சகலமும் ஹிட் !!" என்ற நிலை நிலவிட வேண்டுமென்பதே எனது அடங்கா ஆசை ! அதை நோக்கிய பயணத்துக்கொரு நினைவூட்டலாய் "நிழல் 2 ; நிஜம் 1" அமைந்திடட்டுமே ?!

      And கிட்டே வாருங்களேன் - சின்னதாயொரு இரகசியத்தைச் சொல்லட்டுமா ? "வாசக நண்பர்களின் நாடித் துடிப்பை கச்சிதமாய்க் கணித்திடும் ஆற்றல் நமக்குண்டு !" என்ற ஒருவித இறுமாப்பு எனக்குள் குடிகொண்டிருந்த நாட்களும் நிறைய உண்டு ! ஆனால் நமது இரண்டாம் வருகைக்குப் பின்பாக - நாம் சொதப்பிய ஒவ்வொரு தருணங்களிலும் அந்த இறுமாப்பு சிறுகச் சிறுகக் கரைந்து உருத் தெரியாது போனது ! So இந்த மூன்று / நான்கு ஆண்டுகளில் நீங்கள் காட்டியுள்ள பெருந்தன்மைகளுக்கொரு அன்பளிப்பாய் இதைப் பார்த்திடலாமே ?

      Delete
  28. ///டெக்சின் "ஒக்லஹோமா " சாகசத்தில் படித்து ரசித்த அதே குடியேற்ற நிகழ்வின் கார்ட்டூன் பாணியிலான பார்வை இது ! அழகான சித்திரங்கள், ரம்யமான வண்ணக் கலவைகள் கொண்ட இந்த இதழ் ஏற்கனவே அச்சாகி விட்டது ; கையில் வண்ணப் பக்கங்களை வைத்து ரசிக்கும் போது அட்டகாசமாய்த் தோன்றியது எனக்கு !///


    மாதமொரு கார்ட்டூன் என்பது வாரமொரு கிடா விருந்துக்கு சமம். அதுவும் லக்கி லூக் வரும் மாதம் மட்டன் பிரியாணி வித் சிக்கன் ப்ரைக்கு சமம். (இன்னிக்கு கரிநாள் இல்லீங்களா?? இன்னும் டிபன் ரெடியாகலே. அதான் அதே நினைப்பு. கி.கி.கி)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : சேலம் டெக்ஸ் பாணியில் முரட்டு நான்-வெஜ் மெனுவாகத் தெரிகிறதே இந்தப் பின்னூட்டம் ?!!

      Delete
  29. ஆசிரியரே நான் நமது ஸ்டாலில் சிறிது
    நேரம் வேலை பார்த்தேன் இதை பெருமையாக நினைக்கிறேன் நான் இருக்கும் போது விற்பனையில் பட்டையை கிளப்பியது மறு பதிப்புகளே அதற்கடுத்ததக
    டெக்ஸ் மற்றும் கார்ட்டூன் டைகர் விற்பனையானது
    கிராபிக் நாவல்களை யாரும் கண்டு கொள்ள வில்லை இதனை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : ஒத்தாசைக்கு நன்றிகள் சார் !

      கிராபிக் நாவல்களும் விற்பனையாகி வருகின்றன ! இன்றைய பண்டல்களில் பிரதான ஆர்டரே "தேவ இரகசியம் தேடலுக்கல்ல " ; "இரவே..இருளே.கொல்லாதே" & சிப்பாயின் சுவடுகள்" தான் !

      Delete
    2. ///! இன்றைய பண்டல்களில் பிரதான ஆர்டரே "தேவ இரகசியம் தேடலுக்கல்ல " ; "இரவே..இருளே.கொல்லாதே" & சிப்பாயின் சுவடுகள்" தான் !///

      மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

      Delete
    3. மறுபதிப்புகள் அதிகம் விற்பனையாவது குறித்து ஆச்சர்யம் மற்றும் சந்தோஷம்.
      இவை விற்பனையில் சாதிப்பதை பார்க்கும் போது நாம் விரும்பும் மற்ற கதைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
      இந்த மறுபதிபபுகளை பொறுத்தவரை எனக்கு எடிட்டரின் மீது சிறு சங்கடமிருந்தது.என்னடா இது போட்ட கதைகளையே மறுபடியும் போடுகிறார் என்று..!
      ஆனால் சில நாட்களுக்கும் முன் அந்த சங்கடம் சுத்தமாய் அகன்று விட்டது.
      பாக்கெட் சைஸில் வந்த காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் இதழ்களை தற்போது பார்க்கவே சகிக்கவில்லை.அந்த குட்டியான எழுத்துகளும் படங்களும் ரசிக்கவும்,படிக்கவும் உகந்ததாய் இல்லை.
      மாயாவியின் 'பறக்கும் பிசாசு' கதையை மீண்டும் படிக்கலாம் என்று எடுத்து விட்டு,லென்ஸ் இல்லாத காரணத்தால் மீண்டும் பெட்டியிலேயே வைத்து விட்டேன்.அவ்வளவு பொடி எழுத்துகள்.
      ஆனால் தற்போது தரத்திலும் சைஸிலும் ரீபிரிண்டுகள் அதகளம் செய்து வருகின்றன.

      Delete
    4. ஜேடர் பாளையத்தார்.!

      //பொடி எழத்துக்களை படிக்க முடியவில்லை//

      உண்மை.!உண்மை.!நானும் பாக்கெட்சைஸ் புத்தகங்களை சிறுவர்களுக்கு கொடுத்துவிடலாமா என்று பார்க்கின்றேன்.!

      மாடஸ்டி கதைகளை மட்டும் சிரமப்பட்டு படிக்கின்றேன்.அதுவும் பெரியதாக மறுபதிப்பு வந்தால் சந்தோசமாக இருக்கும்.!

      Delete
    5. Mv சார் @நானும் கூட சின்னஞ்சிறு சிறுவன் தானுங்கோ...

      Delete
    6. ஜேடர்பாளையம் சரவணகுமார் : "ஒரு இறுதி மறுபதிப்பு" என்ற ரீதியினில் - தரத்திலும், உழைப்பிலும் முடிந்தளவு compromise செய்திடாது அவற்றை உருவாக எண்ணியுள்ளோம் நண்பரே ! So நிச்சயமாய் ஒவ்வொரு மறுபதிப்புமே சிறப்பாக அமையுமென்ற நம்பிக்கை கொண்டிடலாம் !

      Delete
    7. சேலம் டெக்ஸ் விஐய ராகவன்.!

      :-)

      Delete
    8. //Mv சார் @நானும் கூட சின்னஞ்சிறு சிறுவன் தானுங்கோ...//

      அப்ப நாங்க எல்லாம் கைக்குழந்தைங்கோ...:)

      Delete
  30. டாப் 3 மொக்கைகள் நான் எதிர்பார்த்தது
    போலவே வந்திருக்கிறது

    ReplyDelete
  31. ///! C.I.D. ராபின்; ரிப்போர்ட்டர் ஜானி நீங்கலாய் ‘டிடெக்டிவ்‘ என்ற பதத்திற்குப் பெருமை சேர்க்கும் ஆசாமிகள் நம்மிடம் அதிகமில்லை என்பதை மறுக்க இயலாது தான்///

    அந்த கண்ணாடிக்கார அண்ணாச்சி ஜெரோமுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே சார்?
    தெளிவான சித்திரங்கள் கலரில் வந்தால் மேலும் சிறப்பாக இருக்குமே?
    ஏற்கனவே வந்திருந்த சிவப்பு கன்னி மர்மம்., தற்செயலாய் ஒரு தற்கொலை., அவ்வளவு மோசமில்லை. நன்றாகவே இருந்தது.!

    ReplyDelete
    Replies
    1. யெஸ் ஸார்..
      ஜெரோமுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : //ஏற்கனவே வந்திருந்த சிவப்பு கன்னி மர்மம்., தற்செயலாய் ஒரு தற்கொலை., அவ்வளவு மோசமில்லை. நன்றாகவே இருந்தது.!//

      In fact, அவை பிரமாதமாக இருந்ததாய்த் தான் நானும் எண்ணினேன் சார் ; ஆனால் கதையின் நாகரீகம் கருதி க்ளைமேக்ஸில் நான் செய்திருந்த மாற்றத்துக்கு எழுந்த விமர்சனத்தினில் கதையின் ஓட்டம் அமுங்கிப் போய் விட்டது ! 2016-ன் திட்டமிடலில் கூட ஜெரோம் நிறைய நேரம் நம்மோடு பயணித்தார் ; ஆனால் இந்தாண்டில் "நோ விஷப்பரீட்சைகள்" என்ற சபதம் எடுத்திருந்தபடியால் கண்ணாடிக்காரரை கழற்றி விட வேண்டிப் போனது !

      பார்க்கலாமே 2017-ல் நமக்கும், இவருக்கும் என்ன காத்துள்ளதென்று ?

      Delete
    3. ///2016-ன் திட்டமிடலில் கூட ஜெரோம் நிறைய நேரம் நம்மோடு பயணித்தார் ; ஆனால் இந்தாண்டில் "நோ விஷப்பரீட்சைகள்"////---ஜேசன் ப்ரைஸ் விசப்பரீட்சை கிடையாதா சார்???...
      இதற்கு பதில் அந்த புதிய குதிரை பயலை கொண்டு வந்து விட்டீர்கள் எனில், நிச்சயமாக நோ விசப்பரீட்சை தான் சார்..

      Delete
    4. யெஸ் ஸார்..
      ஜெரோமுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

      Delete
    5. Jerome b&w enough, when it's coming...

      Delete
  32. ///நமது ஸ்டால்களில் ஒரு போட்டியே நடக்கிறது - bestseller என்ற பட்டத்தைத் தட்டிச் செல்ல !! "நயாகராவில் மாயாவி" இன்னமும் வண்டி வண்டியாய் விற்பனையாகி வர ///

    அடேங்கப்பா!!!

    இந்த கரண்டு பொட்டிக்குள்ளாற கைய வுட்ற மாயாவி மாமான் மெய்யாலுமே மாஸ் ஹீரோதான் போல!!!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : அதிலும், நயாகராவில் மாயாவி & பாம்புத் தீவு....!!! சான்சே இல்லை !!

      லார்கோவாது ..? ஷெல்டனாது....?ஆளாளுக்கு எதாச்சும் இரும்பு காது, மூக்கு, முழங்கால் என்று எதாச்சும் இரும்பில ஐட்டத்தைத் தேடிட்டு வாங்கப்பூ-ன்னு சொல்லத் தோன்றுகிறது !!

      Delete
    2. எடிட்டர் சார் .!


      பாம்பு தீவு கதையில்.,பின் அட்டையின் உள் பக்கத்தில் பழைய கதைகளின் லிஸ்ட் இல்லை.!மீள் வருகை பழைய வாசகர்கள் மீண்டும் நம் வட்டத்தில் வர வாய்ப்பு உள்ளது அல்லவா.?

      Delete
  33. டியர் எடிட்டர்

    நான் சென்றிருந்த நாள் (15.1) செம விறுவிறுப்பான விற்பனை. நீங்கள் கூறிய வரிசையிலேயே விற்பனைகள் அமைந்திருந்தன - மாயாவி, டெக்ஸ், கார்டூன்ஸ் - குடும்ப சகிதமாய் காமிக்ஸ்களை ரசித்து வாங்கியது ஒரு நல்ல விஷயம். பலர் "இரவே .. இருளே .. கொல்லாதே" மற்றும் "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" வாங்கியதையும் பார்க்க முடிந்தது.

    You need a marketing professional at your stall ..

    ஒரு மூலையில் பௌன்சர் இதழ்கள் இருந்ததால் கவனிப்பாரற்று இருந்தது. Thorgal இதழ்களும் - நான்கும் சேர்ந்த ஒரு discounted pack ஏற்பாடு செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக விற்பனை காணும்.

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //பௌன்சர் இதழ்கள் இருந்ததால் கவனிப்பாரற்று இருந்தது. Thorgal இதழ்களும் - நான்கும் சேர்ந்த ஒரு discounted pack ஏற்பாடு செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக விற்பனை காணும்.//

      நல்லதொரு யோசனையே...நடைமுறைப்படுத்தப் பார்ப்போம் !!

      And yes , ஸ்டாலில் விற்பனைக்கு ஒத்தாசை செய்திடக்கூடிய காமிக்ஸ் தெரிந்த பிரதிநிதி(கள்) அத்தியாவசியம் என்பது புரிகிறது ! நம்மிடமுள்ள டைடில்களின் எண்ணிக்கை 100-ஐத் தொடும் வேளையில் - ஒவ்வொரு கதைப் பிரிவைப் பற்றியும் கொஞ்சமேனும் விளக்கிச் சொல்லத் தெரிந்தவர்களின் அவசியமும், தேவையும் முன்பை விட இப்போது அதிகரித்துத் தெரிகிறது !! சிக்கல் என்னவெனில் - 22 பேர் பணியாற்றும் எங்கள் நிறுவனத்தில் - "காமிக்ஸா ? மாசா மாசம் அண்ணாச்சி ரெடி பண்ற பொம்மை புத்தகம் தானே ?" என்பதைத் தாண்டிய புரிதல் யாரிடமும் கிடையாது ! ஆண்டாண்டு காலமாய் நம்மிடம் பணியாற்றிய மூத்தவர்கள் பொன்னுசாமி & இராதாகிருஷ்ணனும் கூட இதே பட்டியலில் தான் எனும் போது - துவக்கம் முதலே இந்தச் சிக்கல் நம்பக்கம் நிலைகொண்டுள்ளது !

      சமயம் கிடைக்கும் போது நம் ஸ்டால் பக்கமாய் விசிட் அடிக்கும் நண்பர்கள் தான் ஒவ்வொரு ஊரிலும் நம் தலையைக் காப்பாற்றி வருகின்றனர் !! சென்னை நண்பர்களே : இம்முறையும் உங்களை நோக்கிக் கரம் கூப்புவது தான் இந்தத் தருணத்தில் எனக்குத் தெரியும் உபாயம் ! சந்தர்ப்பம் வாய்க்கும் சமயம், கொஞ்சமாய் நம் ஸ்டாலில் நேரம் செலவிட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ?

      Delete
    2. There is a way out for this ... !

      நமது வாசகர்கள் பலர் மார்க்கெட்டிங்ல் இருப்பது இங்கிடப்படும் comments வழியாக நாம் அறிவதே ! So ஒவ்வொரு சென்னை புத்தக கண்காட்சிக்கு சில வாரங்கள் / இரு மாதங்களுக்கு முன் நம் நண்பர்கள் இருவரை நமது ஸ்டாலில் மார்க்கெட்டிங் செய்ய சொல்லலாம். அவர்களின் ஒரு வார சம்பளத்தையும் கொடுத்து விடலாம் (இருவர் -> ஒரு வாரத்துக்கு ஒருவர்).

      சில லட்சங்கள் விற்பனை ஆகும் என்றால் சில ஆயிரங்கள் வாரச் சம்பளம் என்பது குறைந்த செலவு தானே ? மனம் இருந்தால் மார்க்கபந்து !

      Delete
    3. //வார சம்பளம்//
      ராகவன் ஏன் இந்த கொலைவெறி.?

      கடையில் இருக்கும் போது கடைக்கு வரும் வாடிக்கையாளரகளிடம் அவர் கள் கேட்கும் சந்தேகங்கள் மற்றும் கதை ஒப்பீனியன்கள் கூறும் போது கிடைக்கும் சந்தோசம் அலாதி சுகம்.!ஆத்ம திருப்தி .!கடை பொறுப்பாளர் ஏதுவும் கூறிவிடக்கூடாதே என்ற தயக்கத்தை தவிர வேறு ஏதுவும் இல்லை.!மற்றொன்று சென்னை வாசிகள் எதைப்பிடிக்க இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று நானும் ஓடிக்கொண்டே அடிக்கடி சிந்திப்பது உண்டு.! என்னைப்போன்று பல நண்பர்கள் ஸ்டாலில் நின்று மார்க்கெட்டிங் செய்ய ஆசைப்படுவது உண்டு ஆனால் தயக்கமும் நேரமின்மையும் முக்கிய காரணம்.!பணம் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.!

      Delete
    4. அய்யா மடிப்பாக்கம் நாட்டாமை .. நான் ஒன்றும் கொச்சைப் படுத்தவில்லை -

      ஒரு மார்க்கெடிங் professional முழு நேர பணியாற்ற (நமது ஸ்டாலில்) அதற்கு அவர் வாங்கும் சம்பளத்தை நாம் அளிப்பது நாம் அவரது உழைப்புக்கு செய்யும் மரியாதை .. ஒரு நாள் இரு நாள் எனில் அங்கே நின்று செய்யலாம் .. ஒரு முழு வாரமெனில் professional மார்க்கெட்டிங்கை காமிக்ஸ் ஆர்வலர்கள் செய்வது நன்மை பயக்கும் ... professional ஆக சம்பளம் பேசி விட்டால் நேரமின்மை என்ற வாதமும் குறையுமே !!

      இதில் கச்சை .. கொச்சை எல்லாம் இல்லை ..

      மேலும் இது நான் எடிட்டர்க்கு சொன்ன ஐடியா .. நீங்க யாரு குறுக்க வந்து பணம் .. கொச்சை . என்று நாட்டாமை செய்ய ??!!!

      Delete
    5. M. V சார்,

      ராகவன் சொன்னதில் தவறேதுமில்லை. உண்மையில் அது அவசியமான ஒரு ஐடியாவுமாகும்! நண்பர்களாகிய நாம் - ஸ்டாலுக்குச் சென்று உதவுவது எல்லா நாட்களிலும்/ எல்லா நேரங்களிலும் சாத்தியப்படுவதில்லை. நம் அலுவலக/குடும்ப/இதர வேலைகளே இதற்குக் காரணம்!

      காமிக்ஸ்பற்றி/ நாயகர்கள் பற்றி/ கதைக்களம் பற்றி ஓரளவுக்காவது அனுபவமுள்ள ஒரு 'முழுநேர' பணியாளர் புத்தகத் திருவிழாவின்போது நம் ஸ்டாலுக்கு அவசியம் தேவை. இதைப் பற்றி எடிட்டரிடமும், நண்பர்களிடமும் நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன். உண்மையில், நமது காமிக்ஸ் விற்பனையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மிக முக்கிய அம்சமேயாகும்!

      உங்களுக்குள் கடினமான விவாதங்கள் வேண்டாமே ப்ளீஸ்!

      Delete
    6. @ ராகவன் & ஈனா.வீ. : நிஜமான வார்த்தைகள் ! In fact இதனை முன்மொழிய நான் பல முறைகள் நினைத்ததுமுண்டு ; ஆனால் நண்பர்கள் அதன் பொருட்டு சங்கடப்பட்டு விடுவார்களோ என்ற தயக்கம் தான் என்னை மௌனமாக்கியது ! And இன்றைய MNC ரகச் சம்பளங்கள் நமக்கு சாத்தியமற்றவை எனும் பொழுது நாம் தர முன்வந்திடும் தொகையானது குறித்த தர்மசங்கடமும் தான் ! But இதனை நடைமுறைக்குக் கொணர நாம் நிச்சயம் தயார் ; சென்னை நண்பர்களுள் இதன் பொருட்டு ஆர்வம் காட்டிடக் கூடியவர்கள் இருப்பின், நமக்கொரு மின்னஞ்சல் அனுப்பிடலாமே !

      @ M.V. : சார், ஆர்வத்தோடு நமக்கென எண்ணற்ற நண்பர்கள் நேரம் செலவிடுவது நடைமுறையே ! ஆனால் ஒரு முழுநேரப் பணியாக அதனைச் செய்திட நிச்சயமாய் யாருக்குமே சாத்தியமாகாதல்லவா ? ஒவ்வொரு BAPASI விழாவின் முதல் நாளிலும் சென்னையில் வசிக்கும் 79 (இப்போது 80 ??) வயது அன்பரொருவர் நமது ஸ்டாலில் பேன்னர் ஓட்டுவதில் தொடங்கி, பிரதிகளை அடுக்குவது வரைச் செய்திடுவார் ஆர்வத்தின் வெளிப்பாடாய் ! ஆனால் அவருக்கு சாத்தியமாவது அந்த அரை நாள் மட்டுமே எனும் பொழுது, விழா நடக்கும் 10 நாட்களுக்கும் அவரையோ, அதே போல் உதவிடும் எண்ணற்ற நண்பர்களையோ நாடுவது நம் தரப்பிலும் நாகரீகம் ஆகாதல்லவா ?

      And of course , ஆர்வத்தின் காரணமாய் நம் பக்கமாய் விசிட் அடிக்கும் நண்பர்கள் சமயம் கிட்டும் பொழுதெல்லாம் உதவிடுவதில் தடையேதும் கிடையாதல்லவா ? காமிக் லவர் & ஈனா.வீ. சொல்ல வருவதெல்லாம் - நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நடைபோட எண்ணும் வேளைகளில் இன்னமும் கூடுதல் முயற்சிகளுக்கு தேவை எழுந்துள்ளது என்பதை வலியுறுத்தவே !

      Delete
    7. We have the response to support our editer on this time.

      Delete
  34. ///"நயாகராவில் மாயாவி" இன்னமும் வண்டி வண்டியாய் விற்பனையாகி வர - நம் இரவுக்கழுகாரின் "நில்..கவனி..சுடு !" & "சட்டத்துக்கொரு சவக்குழி" இன்னொரு பக்கம் அதகளம் செய்து வருகின்றன !! டெக்சின் விற்பனை கோணத்தினில் பார்த்திட்டால் - "நில்..கவனி..சுடு.." ஒரு all time high என்று சொல்லலாம் !///--- காலரை லைட்டா தூக்கி விடும் மூமெண்ட்...
    இந்த3 இதழ்களின் விற்பனையும் சேர்ந்து மாயாவியை சாய்த்தால் மெத்த சந்தோசமே...ஹீ..ஹீ..ஹீ...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : மேலே ..மேலே...அதுக்கும் மேலே...!! அது தான் மாயா சாரின் மாயாஜாலம் !!

      Delete
  35. ஆசிரியர் சார்@
    2015ல் சந்தாவில்,கார்டூன் ஸ்பெசலுக்கு என தனியாக பணம் சந்தா நண்பர்களிடம் வசூலிக்கப்படவில்லை,மாறிப்போன மாப்பிள்ளை- க்கு மட்டுமே சந்தாவில் 60 கட்டினோம்...கார்டூன் ஸ்பெசலுக்கு அதிகப்படியான ரூபாய்180ல் அந்த வெளிவராத கருப்பு வெள்ளை கி.நா.பணம் 100 ஐ கழித்து விட்டால் இன்னும் 80+
    லயன் தீபாவளி மலரில் வசூலிக்கப்பட்ட பணம் 175மட்டுமே,அதிகப்படியான பணம் 25=105. இந்த சந்தா 2015ன் சந்தா தொகையை விட ரூபாய்105க்கு அதிகமாகவே புத்தகங்கள் வழங்கி உள்ளீர்கள்...
    இந்த பணம் தள்ளுபடியா சார்??..
    இந்த சூழலில் நீங்கள் மேலும் ஒரு புத்தகம் நஷ்ட ஈடாக வழங்க முன் வந்தது உங்கள் பெருந்தன்மை சார்..
    ஆனால் அதை நஷ்ட ஈடாக பெற்று கொள்வது எங்களுக்கு சங்கோஜமாக உள்ளது சார்..
    தயவுசெய்து இதை அடுத்த ஆண்டு வெளிவரும் முத்து 400உடனோ அல்லது லயன் 300 உடனோ அன்பளிப்பாக வேண்டுமானால் அனைத்து நண்பர்களுக்கும் தாருங்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : கூட்டிக், கழித்துப் பாருங்கள் சார் - கணக்கு சரியாக வரும் !! (நிச்சயமாய் தலைவரின் மாடுலேஷனில் அல்ல !!)

      Delete
  36. டியர் எடிட்டர்,
    இங்கே ஒரு புகார் பதிவு செய்கிறேன். கடந்த 2015 தீபாவளி ஸ்பெஷல் டெக்ஸ் வில்லர் புக்கில் சித்திரங்களால் அதிக எதிர்பார்பை ஏற்படுத்திய இரண்டாவது கதையில் எனக்கு கிடைத்த புக்கில் பக்கம் 384 கழிந்து அடுது 411லிருந்து தொடங்குகிறது. இடையில் சில பக்கங்கள் ரிப்பீட்டாக வந்துள்ளது. ஏறக்குறைய ரெண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று வாசிக்க எடுத்தபோதுதான் இந்த பிழையை கண்டேன். இதற்கு மாற்று என்ன? புத்தகத்தை கொரியரில் திருப்பி அனுப்பலாமா?
    நன்றி.

    கடந்த சிலவருடங்களைப்போல இந்தவருடமும் சந்தா கட்டிய வாசகன் :-)

    ReplyDelete
    Replies
    1. Rathan Surya : Damaged பிரதிகளுக்கு எவ்விதக் கேள்விகளுமின்றி மாற்று உண்டு ! மின்னஞ்சல் அனுப்பிடுங்கள் ; நாளைய தினம் வேறொரு பிரதியினை அனுப்பிடுவார்கள் !

      Delete
    2. சூப்பர்!சிங்கம் சிங்கம் தான்..!

      Delete
    3. உடனடி பதிலுக்கு நன்றி சார்.
      பிழையான பக்கங்களின் Photo, சப்ஸ்க்ரிப்ஷன் டீட்டெய்ல் உடனேயே மெயில் அனுப்புகிறென்.
      _/|\_

      Delete
  37. எடிட்டர் சார்! புத்தக விழாவில் ஸ்பைடரின் நிலையைப்பற்றி சொல்லவேயில்லையே..!என்னவானான் நீதிக்காவலன்?!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே மறு பதிப்புகள் எல்லாமே
      சக்கை போடு போடுகிறது ஜானி நீரோ வே விற்பனையில் பரவாயில்லையெனும்போது ஸ்பைடர் சளைத்தவரா களை கட்டுகிறார் நான் நேரில் பார்த்ததால் சொல்கிறேன்

      Delete
    2. ஜானி நீரோவே பரவாயில்லை எனும்போது....ஹா..ஹா..ஹா..!தகவலுக்கு நன்றி செந்தில் சத்யா அவர்களே! மாயாவி புராணமாகவே இருக்கிறதே ஸ்பைடரை பற்றி ஏதும் தகவல் இல்லையே என்ற ஆதங்கம் தான்..!

      Delete
    3. மறுபதிப்புகளின் விற்பனை அதகளத்திற்கு பக்கங்களின் எண்ணிக்கையும்,கையைக் கடிக்காத விலையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்..!

      Delete
    4. 120 ரூபாய்க்கு ஒரு புத்தகமா..?அல்லது 100 ரூபாய்க்கு இரண்டு புத்தகங்களா.? என்ற நிலையில் நான் புதிய வாசகனாக இருக்கும் பட்சத்தில்,100 ரூபாய்க்கு இரண்டு என்பதே என் நிலைப்பாடாய் இருக்கும்...!

      Delete
  38. எடிட்டர் சார் சென்ற பதிவில் இந்த ஆண்டு கோடையில் ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்று கூறியிருந்தீர்கள். ரம்ஜானுக்கு டெக்ஸ், தீபாவளிக்கு டெக்ஸ், ஆனால் கிறிஸ்துமஸுக்கு ????கணக்கு உதைக்கிறதே சார். கோடையில் மூன்று பண்டிகையை கொண்டாட இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் வண்ணத்தில் வெளியிட்டால் கணக்கு சரியாகிவிடும் சார். ஒரே மேடையில் மூன்று நாயகர்களின் வெளியீடு. கற்பனை பண்ணும்போதே அதிரடி காட்சிகள் நெஞ்சில் படபடப்பை அதிகரிக்கிறதே. அப்படி ஒரு நிகழ்வு நிகழுமானால்..... நீங்கள் மனது வைத்தால் சாத்தியமே. இதற்கு வாய்ப்பு உண்டா சார்.

    ReplyDelete
  39. மீண்டும் ஒரு அற்புத அட்டகாச கலக்கல் அட்டைப்படம்!(ஒரு பட்டா போட்டி).உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒன்னாம் தேதி வரதுக்குள்ள ஒடம்பு ரண களமாயிடுது..!

    ReplyDelete
  40. லக்கி லூக் அட்டை படம் அருமை

    ReplyDelete
  41. நிழல் 1 நிஜம் 2 வண்ண மறுபதிப்பு இலவசம்........
    இளிப்பு படம் 1 இருக்கை கூப்பிய படம் 2.......
    I embrace this gesticulation of camaraderie warm heartedly……….
    அப்புறம் சினிபுக் இப்போது நம் கசின் ஆகிவிட்டபடியால் சில வார்த்தைகள்

    கென்யா...............................
    தயக்கத்துடன் வாங்கியது.............................
    இப்போது இதே சீரீஸ்-ல் மீதி இருக்கும் 3 டைட்டில்களை எடிட்டர் எப்போது அப்டேட் செய்வார் என ஆவலுடன் காத்து இருக்கிறேன்....................................
    ஆர்டிஸ்ட் லியோ(Luiz Eduardo de Oliveira)
    பிரேசில் காரர் எனினும் பிரெஞ்சு வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெயர். நமது காந்தி பற்றி கூட
    1. Gandhi, le Pèlerin de la Paix - (Gandhi, the Pilgrim of Peace) (1989)
    என ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார்..........

    அருமையான ஓவியங்கள்..........................கென்யாவின் லேண்ட்ஸ்கேப் அழகாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது...............

    கதாசிரியர் ரொடால்ப் ஜாகெட்(Rodolphe D. Jacquette
    (b. 18 May 1948, France),,,,,,,,,,,,,,,,,,இவரும் பிரெஞ்ச் வட்டாரங்களில் மிக பிரபலமான பெயர்தான்......................

    எளிதில் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்


    நமது கமான்சே –ஆம் நமது கமான்சே-வின் இறுதி பாகத்தை ஜாம்பவான் Michael greg –க்கு பதிலாக முடித்து கொடுத்தவர் இவர்தான்..



    அருமையான கதையோட்டம்...............எளிய ஆங்கிலம்........

    படிக்க சுவை..................

    (லிட்டில் வார்னிங்.....எடிட்டரின் வழக்கமான சென்சார் இருக்காது :-) }

    ReplyDelete
    Replies
    1. Blake and Mortimer
      Adventures of Blake and Mortimer
      சினிபுக் பற்றி தொடர்கிறது.......................................................
      இதுவும் சுவாரஸ்யமான தொடர்தான்................
      கதாசிரியர் எட்கர் ஜேகப்ஸ் பெல்ஜிய நாட்டவர்....................
      நமக்கு பரிச்சயமான டின்டின் கதை வரிசைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்பு செய்தவர்...................
      துப்பறிதல்+sci-fi என்ற பார்முலாவில் இவர்கள் கதை பெரும்பாலும் பயணிக்கும்....
      மார்ட்டிமர்................ஒரு விஞ்ஞானி..........
      ப்ளேக்......பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர்...............................
      ஒல்ரிக்(olrik)......கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் வரும் வில்லன்.......
      நான் படித்தது the septimus wave………………….
      Jacobs மரணத்திற்கு பின்பு பலர் இந்தகதைகளை எழுதி இருக்கிறார்கள்.......
      நமது வான் ஹாமே கூட நான்கு கதைகள் எழுதி இருக்கிறார்.....................
      படங்கள், புக் சைஸ் டின்டின்-ஐ ஞாபகபடுத்துகிறது.............................
      மீதி கதைகளும் படிப்பதாக உத்தேசம்.....................................
      தெளிவான ஆங்கிலம்.......எளிதில் படிக்க இயலும்..........

      Delete
    2. SA: Pls try The Gondwana Shrine .. one of the best B&M :-)

      Delete
    3. .. and don't miss The Strange Encounter .. B&M .. another good story !

      Delete
    4. /* படங்கள், புக் சைஸ் டின்டின்-ஐ ஞாபகபடுத்துகிறது............................. */

      Same feeling :-)

      /* மீதி கதைகளும் படிப்பதாக உத்தேசம்..................................... */

      Yes and also for kids to whom science has to be popularized ... !!

      /* தெளிவான ஆங்கிலம்.......எளிதில் படிக்க இயலும்.......... */

      Yes .. though not more than one album/set of albums in two months - its tedious !

      Delete
    5. Thanks for the suggestions ragavanji...!!!!!!

      Delete
    6. @ Friends : ஆன்லைனில் விற்பனையாகி வரும் இன்னொரு தொடர் LADY S ! அதனை வாங்கியுள்ள நண்பர்களும் இங்கிருப்பின், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே - ப்ளீஸ் ?

      Delete
    7. LADY S -

      அந்த புள்ளைக்கு தமிழ் கத்துக்கொடுத்துட்டா., பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்து கருத்து சொல்ல சுலபமா இருக்கும் சார்.!

      பெண்மணி ஆமாம் ( LADY S) எப்போ இப்படி தமிழில் வருமோ? ??

      Delete
    8. ஆமாம் சார்...!
      லேடி எஸ் தமிழ் பேசினால்தான் எங்களைப்போன்றோர் படிக்க முடியும்..!

      ஏதோ பார்த்து செய்யுங்கள் சார்....!

      Delete
  42. கோடை மலர் - Tex, lucky,chik bill& Co,Modesty,Reporter Johny,Sheldon,largo,Thorgal,largo,combination la ஒரு Super Dooper special வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ Manikandan.N : ஏற்கனவே இங்கே நாம் வலைபதிவினில் இது பற்றிப் பேசியுள்ளோம் நண்பரே ! வெவ்வேறு படைப்பாளிகள் ; பதிப்பகங்கள் வெளியிடும் கதைகளை ஒற்றை இதழாக - கதம்ப ஸ்பெஷல் இதழாக வெளியிடுவது இன்றைக்கு almost impossible - அதன் படைப்பாளிகள் இந்தக் கூட்டணிகளை இப்போதெல்லாம் அனுமதிப்பதில்லை ! LMS -ல் வெளியானது போல் - பொனெல்லியின் ஆக்கங்களை (டெக்ஸ் ; டைலன் ; மர்ம மனிதன் மார்ட்டின் ; CID ராபின் etc.,) இணைப்பது மட்டும் தான் சாத்தியம் !

      அதற்காக இப்போதே ஒரு LMS -2 கோரிடாதீர்களே - please !

      Delete
  43. மாலை வணக்கங்கள் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  44. இந்த வருடம் ஒரு 1000 பக்க கருப்பு வெள்ளை வேணும்கிறவங்க எல்லாம் கைய தூக்குங்க பாப்போம்

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : ஆரம்பிச்சாச்சா ? ஆஹா..!

      Delete
    2. எல்லொருக்கும் முன் நம்ம கட்டை விரல் காதலரே கை தூக்கிவிட்டபடியால் தைரியமாக எல்லோரும் கை தூக்குங்க

      Delete
    3. இந்த ஆட்டைக்கு நாங்கள் ரெடி. எங்கள் வலது கை கட்டைவிரல்கள் உயர்த்தி விட்டோம். ஆசிரியர் தங்களின் (கால்களின்) கட்டைவிரலை உயர்த்த ஆயத்தமாகவும். எதிர்காலத்தில் இதனை 'விஜயவிரலாசனம்' என அழைக்கலாம்.

      Delete
    4. ரெண்டு கைகளையும் தூக்கும் படம் ரெண்டு. (மொத்தம் நாலு ஓட்டு கணக்கு வெச்சிக்கோங்க)

      Delete
    5. சாத்தியமிருந்தால்,நம்மவர்களால் வண்ணப்படுத்தப்பட்ட ஒரு மாயாவி/ஸ்பைடர்/ஆர்ச்சி கதையை அடுத்த வருடமாவது முயற்சிக்கலாம் சார்! ஒரு வித்தியாசத்திற்கேனும்!

      Delete
  45. ///கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : ஆரம்பிச்சாச்சா ? ஆஹா..!///

    போன வருசமே ஆரம்பிச்சிட்டோமே சார். இன்னிக்கு போராட்டத்தோட முதல் வருடாந்திர நாள் கொண்டாட்டம்.

    ////அதற்காக இப்போதே ஒரு LMS -2 கோரிடாதீர்களே - ///

    ச்சேச்சே! இப்போ வேண்டாம் சார்.! ஏப்ரலில் அறிவித்தாலே போதும்.!

    ReplyDelete
  46. எடிட்டர் சார் சென்ற வாரமும் இன்று காலையும் நான் விடுத்த வேண்டுகோளுக்கு தங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லையே! ஏப்ரல் மாதம் டெக்ஸ், டைகர் இவர்கள் களமிறங்கும் அதே மேடையில் இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யமும் வண்ணத்தில் வரும் வாய்ப்பு கிட்டுமா? அந்த காலத்தில் வண்ணத்தில் மிரட்டிய இவ்விதழ் இன்றைய தரத்தில் வண்ணத்தில் வெளியானால்...... அத்தகைய அரிய வாய்ப்பு கிட்டுமா? எவ்வளவோ செய்கிறீர்கள். இதை செய்ய வாய்ப்புள்ளதா? Please என் தலை வெடிக்குமுன் பதில் கூறிவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : நிறைய நடைமுறை சிக்கல்கள் கொண்ட கோரிக்கை இது - சாத்தியமாதலுக்கு நிறையவே செலவாகிடும் !

      கொரில்லா சாம்ராஜ்ஜியம் மட்டுமன்றி - பாக்கி அனைத்து மாயாவி கதைகளுமே கறுப்பு-வெள்ளையில் உருவாக்கப்பட்ட கதைகளே ! அவற்றுள் ஒன்றிரண்டை அந்நாட்களில் கலரில் முத்து காமிக்ஸில் வெளியிட்டது - நெகடிவில் கலர் செய்திடும் புராதன யுக்திகளைக் கொண்டு ! இன்றைக்கு அந்த டெக்னாலஜியே காலாவதியாகிப் போய்விட்டது ; and சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பான அந்த கலர் பிலிம்களில் இன்றைக்கு சுத்தமாய் ரசாயனக் கலவைகள் எதுவும் மிஞ்சியிராது என்பதால் அவை குப்பைக்குச் செல்லத் தான் உகந்தவை ! இன்றைய தொழில் நுட்பத்துக்கு ஏற்ப நாமாய் கதை முழுவதுக்கும் டிஜிடல் முறையில் வர்ணம் பூசி, பின்னர் வழக்கமான பிராசசிங் வேலைகளைச் செய்து, வண்ணத்தில் அச்சிட வேண்டும் ! இதற்கென அவசியமாகிடும் தொகை பல ஆயிரங்களில் நின்றிடும் எனும் பொழுது அறிவிக்கப்பட்ட அதே 50 ரூபாய் விலைக்குள் இத்தனையையும் செய்திடல் impossible!

      And சந்தா தொகை அறிவிக்கப்பட்டு, வசூலும் செய்தான பின்னே, இந்த கலரில் கொரில்லா முயற்சியின் பொருட்டு மேற்கொண்டு ஐம்பது ரூபாய் அனுப்புங்கள் ; அறுபது ரூபாய் அனுப்பங்கள் என்று சொல்வதோ ; ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இதழ்களுள் ஒன்றுக்குக் கல்தா தருவதோ நடைமுறையில் ஒவ்வாதவை !

      Delete
    2. எடிட்டர் சார் இவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருப்பதை உணராமல் எழுப்பப்பட்ட என் கேள்வியில் நியாயம் இல்லாத காரணத்தால் என் கேள்வியை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். மன்னிக்கவும் ஆர்வக்கோளாறுதான் வேறொன்றுமில்லை. ஆனால் ஏப்ரலில் டெக்ஸ்,டைகர் இவர்களுடன் கொரில்லா சாம்ராஜ்யம் Black and white ல் வெளியிட சாத்தியமென்றால் செயல்படுத்தலாமே? ஏனெனில் போட்டி பலமாக இருந்தால் தானே ஆட்டம் களைகட்டும். இது கூட ஆர்வக்கோளாறால் எழுப்பப்பட்ட வேண்டுகோள்தான்

      Delete
    3. Dear editor, y can't v postponed gorilla samrajyam for next year and make it in colour. For waiting one year to get it in colour is worth i think.

      Delete
    4. Dear editor, y can't v postponed gorilla samrajyam for next year and make it in colour. For waiting one year to get it in colour is worth i think.

      Delete
    5. சாத்தியமிருந்தால்,நம்மவர்களால் வண்ணப்படுத்தப்பட்ட ஒரு மாயாவி/ஸ்பைடர்/ஆர்ச்சி கதையை அடுத்த வருடமாவது முயற்சிக்கலாம் சார்! ஒரு வித்தியாசத்திற்கேனும்!

      Delete
  47. 1000 பக்க கருப்பு வெள்ளை ஷ்பெசல் :-
    ஏன் கூடாது (Why not)?
    ஏன் முடியாது (Why can't) ?
    என் சிற்றறிவுக்கெட்டிய (பிஞ்சு பிட்டலுக்கு) சில சமாச்சாரங்கள்.

    LMS 1 சைசில் வரலாம். கலர் பக்கங்கள் கிடையாதெனும்போது ஆயிரம் பக்கங்களின் கனமும் LMS 1 அளவிற்கே இருக்கும்.

    குண்டு கதம்ப ஷ்பெசல்கள் எப்போதும் விற்பனையில் பட்டையை கிளப்பி விரைவில் பட்டறையை (குடோனை) காலி செய்வதால் துணிந்து வெளியிடலாம்.

    இதுவரையில் 1000 பக்கங்களில் காமிக்ஸ் வந்ததில்லை என்ற பெருங்குறையை தீர்த்த புண்ணியமும் கிடைக்கக்கூடும்.

    முழுக்க க / வெ யின் ஆதிக்கமே என்பதால் விலையும் பெரிதாக பர்ஸை பதம் பார்க்க போவதில்லை.

    எப்போது எப்படி வெளியிடலாம்?

    இதோ இன்னும் சில மாதங்களில் தொடப்போகும் 2 மில்லியன் ஹிட்ஸ் ஷ்பெசலாக அறிவிக்கலாம்.

    போனெல்லி க்கு மரியாதை தரும் வகையில் போனெல்லி ஷ்பெசலாகவும் அறிவிக்கலாம்.

    ஒருவேளை இளவரசியையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் வேறேதேனும் பெயரில் ஷ்பெசலாக அறிவிக்கலாம்.

    என்னென்ன சேர்த்து கதம்ப பிரியாணி செய்யலாம்?

    நீண்ட நெடுங்காலமாக கோரிக்கையாகவே இருக்கும் அந்த 550 பக்க டெக்ஸ் வில்லர் சாகசமே பாதி இதழுக்கு சரியாப் போகும் பட்சத்தில்.,
    மார்ட்டின் -200 + பக்கங்கள்
    ராபின் - 100 + பக்கங்கள்
    ஜூலியா - 100 + பக்கங்கள்
    ஏதேனும் விறுவிறுப்பான கி /நா - 100+ பக்கங்கள்

    அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து கூட்டிப் பார்த்தால் 1000 பக்கங்களை தாண்டுகிறது.! (போனெல்லி ஷ்பெசலுக்கு)

    இளவரசியை சேர்த்தே ஆகவேண்டுமெனில் கி /நா வுக்கு மாற்றாகவோ ஜூலியாவுக்கு கல்தாவாகவோ செய்யலாம். ஆனால் போனெல்லி ஷ்பெசலாக இல்லாமல் 2 மில்லியன் ஹிட்ஸ் ஷ்பெசலாக வெளியிடலாம்.

    மேற்கூறியவை சத்தியமாய் ஆலோசனைகள் அல்ல.
    ஆவல் மிகுதியில் வெளிப்பட்ட ஆசைக் கருத்துகள் மட்டுமே.!

    ஆதரவு தாரீர் நண்பர்காள்.!

    தட்டுங்கள் திறக்கப்படும்

    கேளுங்கள் கொடுக்கப்படும்.

    சிம்பிளா சொல்லோணும்னா
    "அழுற புள்ளைக்குதான் பால் கிடைக்கும் "

    - நன்றி ஹை -

    ReplyDelete
    Replies
    1. +12345678900000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
      Hats of kid ji

      Delete
    2. julia must come , i dont want any comment against julia, dear lion and muthu reader pls stop this kind of comment against julia, i warn u all first and overall . if u need ask directly

      Delete
    3. u can ask directly, surely u can get. pls don't dominate growing hero's, this is my personal request to all, julia must come and she should make her kingdom in among us.

      Delete
    4. முழு ஆதரவு உண்டு.

      Delete
    5. ///julia must come , i dont want any comment against julia, dear lion and muthu reader pls stop this kind of comment against julia, i warn u all first and overall . if u need ask directly///

      ஜூலியா வேண்டாம்னு சொல்லவில்லை அய்யா.!
      மாடஸ்டி அல்லது ஜூலியா இருவரில் ஒருவர் என்பதே சாரம்.!

      தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்!

      Delete
    6. Kannan Sir , no need to ask sorry , we r one family, we support this two girl, surly they will get the place.

      Delete
    7. ///மாடஸ்டி அல்லது ஜூலியா இருவரில் ஒருவர் என்பதே சாரம்.!//----2million hitsகதம்ப 1000பக்க கருப்பு வெள்ளை கதம்பத்தில் இருவருமே வரட்டும்.....
      டெக்ஸ்க்குதான் கதாநாயகிகள் இல்லை, அட்லீஸ்ட் அட்டையிலாவது இரு பெண்களுடன் வரட்டுமே...

      Delete
    8. பலத்த, மிக பலத்த ஆதரவு உண்டு!
      குண்டுபுக்குக்கு ஆதரவு இல்லேன்னா அப்புறம் வேற எதுக்கு கொடுப்பதாம்?

      இந்த இதழுக்கான தலைப்பு வைக்கும் போட்டியை அடுத்த பதிவில் அறிவிக்கும்படி கணம் எடிட்டார் அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

      Delete
    9. +1
      1000 பக்கங்கள் ஓகே, ஆனா கனக்கை கொங்சம் இப்படி யோசித்தால்
      டெக்ஸ் - 300
      ராபின் - 200 (2 கதைகள்)
      மார்ட்டின் - 200 (1 கதை)
      டைலான் டாக் - 200 (2 கதைகள்)
      ஜூலியா - 100

      Delete
  48. ஆசிரியர் ...அவர்களுக்கும் ...நண்பர்களுக்கும் தாமதமான பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ...தைதிருநாளை கொண்டாட ஒரு மலை சூழ்ந்த கிராமத்தில் இருக்க நேர்ந்தமையால் நோ இணையம்...நோ தொலைகாட்சி ...ஏன் நோ செய்தி தாள் கூட ....எனவே ஐந்து நாட்களுக்கு பிறகு பதிவையே ஊர் வந்து சேர்ந்த இப்போதைய நேரத்தில் தான் படிக்க முடிந்தது ...இன்னும் நண்பர்களின் கமெண்ட்ஸ் கூட படிக்க வில்லை ..அதற்குள் கமெண்ட்ஸ் லோடுமோரை நோக்கி சென்று விட்டது ...ஆகா ....



    **********

    டாப் 3 இதழில் டெக்ஸை பெளன்சர் முந்தியது கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் நமக்கும் பிடித்த நாயகர் தானே என்று சமாதான படுத்தி கொண்டேன் ..ஹீம் ..ஆனால் மறுபதிப்பு இதழ் முதலிடம் ...ஜீரணிக்க வில்லை தான் ...ஆனாலும் உங்கள் காரணத்தை ஏற்று கொஞ்சம் சமாதானம் செய்து கொள்கிறேன் ...


    ReplyDelete
  49. யாகாவராயினும் காமிக்ஸ் காக்க காவாக்கால்
    நிற்பார் எச்க்கேஞ்க்கு அல்லால் பட்டு

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முத்து முத்து மினி இரண்டும் தங்கா உலகம்
      நல்ல கலெக்டர் அகாதெனின்.

      Delete
  51. காமிக்ஸால் வாழ்வாங்கு வாழ்பவன் பெண்டாட்டி
    கையினால் பெட்டியில் பூட்டப்படும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா....ஹா...அருமை...அருமை..

      ஒருரூபாய் காமிக்ஸ் இல்லையென உரைத்திட்டால்
      தருவாரிந்த காமிக்ஸ் வள்ளுவர்....

      :-)

      Delete
    2. காலத்திற் போட்ட கமெண்ட் சிறிதெனினும்
      ப்ளாக்இன் மாணப் பெரிது.

      Delete
    3. மந்திரியார் .....அட்டகாஷ்.....தூள் கிளப்புறீங்க......

      Delete
  52. அடக்கம் காமிக்ஸுள் உய்க்கும் அடங்காமை
    ஓட்டை பிரித்து எடுக்கப்படும்.

    ReplyDelete
  53. (ஒரு ருபாய்)முத்து வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    ரீப்ரின்ட் போர்த்த உடம்பு.

    ReplyDelete
  54. இனிய உளவாக இன்னாத நாவெல் (கிராபிக்)
    திகில்இருப்பக் மினிகவர்ந் தற்று.

    ReplyDelete
  55. டாப் மொக்கை இதழ்கள் மூன்றுமே எனது அலைவரிசையை ஒத்து இருந்தது சந்தோசமே ...ஆனால் அதற்கு நஷ்ட ஈடு என்று ஒரு அழகான மறுபதிப்பை தாங்கள் எங்களுக்கு ஈடு செய்வது உங்களுக்கு கிரேட் சார் ...ஆனால் எங்களுக்கு செயலாளர் சொல்வது போல ஒரு குற்ற உணர்ச்சி அந்த மூன்று இதழ்களை நிரம்ப ஊற்றி கழுவி விட்டோமோ என்று ....நூற்றில் பத்து பர்சென்ட் கூட ஆகாத இதழ்களை தராத தாங்கள் நஷ்ட ஈட்டை ஏற்று கொள்வது ...ஏற்று கொள்ள கூடியது அல்ல என்பதால் அந்த இதழை சந்தா நண்பர்களுக்கு மட்டும் ஒரு காமிக்ஸ் இதழ் இலவசமாக வழங்கலாமே என்ற எனது முன்னர் யோசனையாக இதை ஏற்று கொண்டு சந்தோசமாக அந்த இதழை பெற்று கொள்கிறேன் சார் ..ஹீஹீ ...

    ReplyDelete
  56. 1000 பக்கத்தில் குண்டு புத்தகமா..பேஸ் பேஸ் ..ரொம்ப நன்னா இருக்கும் உடனே போடுங்கோ

    ReplyDelete