Sunday, January 03, 2016

ஜனவரி !!

நண்பர்களே,

வணக்கம். 'ஒரு வார இடைவெளிக்கொரு பதிவு' என்ற வழக்கமான அட்டவணைப்படி தலைக்குள்ளே உள்ள அலாரம் சனிக்கிழமைகளில் activate ஆகிடுவது வாடிக்கை ! ஆனால் இம்முறை வார நாட்களில் 2 புதுப் பதிவுகள்  உட்புகுந்து விட்டபடியால் அந்த அலாரம் கொஞ்சமாய் மக்கர் செய்து விட்டது ! நான்பாட்டுக்கு "திகில்நகரில் டெக்ஸ்' பணிகளுக்குள் மண்டையை நுழைத்துக் கொண்டே பகலை ஒப்பேற்றிவிட்டு, இறக்குமதி செய்துள்ள CINEBOOKS கஜானாவினுள் புகுந்து ஜாலியாய் கதை படிக்கத் தொடங்கியிருந்தேன் - மாலையில் ! சரி ...குறட்டை விடப் புறப்படும் முன்பாக வலைப்பதிவின் பக்கமாய்   எட்டிப் பார்ப்போமே என்று நுழைந்த போது தான் உறைத்தது - புதிய பதிவு due என்று ! So அரக்கப் பரக்கத் துவங்குகிறேன் ஆண்டின் இரண்டாம் நாளிலேயே - இரண்டாம் பதிவினை !! ஜனவரி இதழ்கள் மீது இன்னும் அழுத்தமாய் பார்வைகள் விழுந்திட வேண்டிய வேளையினில் - அடுத்த மாதத்து முன்னோட்டங்களை இப்போதே ஆரம்பிப்பது அர்த்தமற்றது என்பதால் - திரும்பவும் ஒரு about turn பதிவு தான் காலத்தின் கட்டாயம் என்று புரிந்த அந்தக் கணமே - எதைப் பற்றி எழுதுவது என்ற கேள்விக்கும் விடை கிட்டியது !! ஜனவரி !! Yes - ஆண்டின் இந்த முதல் மாதத்திற்கும் நமக்குமள்ளதொரு ஜாலியான கெமிஸ்ட்ரி பற்றி எழுதினால் என்னவென்று தோன்றியது ! So  அதுவே இந்தப் பதிவின் ஆரம்பப் புள்ளி ! 

நமது லயனின் ஆரம்பம் 'இங்குமிலா -அங்குமிலா'  ஒரு நட்டநடு ஜூலையில் தான் எனினும், வண்டி சூடு பிடித்து உச்ச கியரை எட்டிப் பிடிக்கத் துவங்கியது 1984-ன் இறுதிப் பகுதிகளில் தான் ! And 1984 நவம்பர் இறுதியினில் டெல்லிக்குப் பயணமாகிய பொழுது தான் தொடரவிருந்த புத்தாண்டின் நமது டமாக்கா இதழ்களின் கதைகள் என் கைக்கு வந்து சேர்ந்தன ! போபாலின் கொடூர விஷவாயுச் சம்பவம் இன்றைய தலைமுறைக்கு லேசானதொரு வரலாற்று ஞாபகமாக மாத்திரமே இருந்திடலாம் - ஆனால் அந்தக் கோரம் அரங்கேறுவதற்கு 8 நாட்கள் முன்பாகத் தான் Grand Trunk எக்ஸ்பிரசில் போபாலைத் தாண்டிச் சென்றிருந்தேன் ஒரு சிலுசிலுப்பான காலையில் ! கறுப்புக்கே புது இலக்கணம் சொல்லக்கூடியதொரு எண்ணெய்ச் சட்டியில் ஆவி பறக்கும் பூரிகளை வாங்கிட கூட்டத்தில் முண்டியடித்துச் சென்றது தான் போபால் பற்றிய எனது நினைவாக இருந்து வந்தது - ஊர் திரும்பிய சற்றைக்கெல்லாம் பேப்பரில் அந்த ரணகளம் பற்றிப் படிக்கும் வரையிலும் ! 

டில்லியிலிருந்து அச்சமயம் வாங்கி வந்திருந்த கதை தான் ஜனவரி 1985-ல் பொங்கல் மலராக(வும்) வெளியான ஸ்பைடரின் "கொலைப் படை" ! நிறைய இதழ்களைத் தயாரிக்கும் போதே அவை ஹிட்டடிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் ! டெக்சின் டாப் கதைகள் ; லக்கி லூக்கின் classics ; ஸ்பைடர் மேனியா உச்சத்தில் இருந்த பொழுது வெளியான கூர்மண்டை கதைகள் என்று இந்தப் பட்டியல் நீண்டு செல்லும். ஆனால் - "இது ஆர்ப்பரிக்கும் அதகள ஹிட்டாகும் !" என்ற நம்பிக்கையை பணி துவங்கிய முதல் நாள் முதலாகவே எனக்குத் தந்துள்ள இதழ்கள் இதுவரையிலும் இரண்டே இரண்டு தான் என்று சொல்லலாம் !! அதில் இதழ் # 1 - "கொலைப் படை" !  Spider Vs.The Android Emperor என்ற பெயர் கொண்ட இந்த சாகஸத்தை வழுவழுப்பான போட்டோ பேப்பர் ஒரிஜினலில் - ஆங்கிலத்தில்  படிக்க முடிந்த போது எனது இரத்தமெல்லாம் சூடாகிப் போனது இன்னமும் நினைவில் உள்ளது ! ஆக்ஷன் என்றால் அப்படியொரு அதிரடி ஆக்ஷன் & decent சித்திரங்களும் ஒன்று சேர்ந்திட - எனக்குக் குத்தாட்டம் போடணும் போலவே இருந்தது ! ஏற்கனவே ஆர்ச்சியின் "இரும்பு மனிதன்" இதழினை பெரிய சைசில் ; இரு வண்ணத்தில் அச்சிட்டு அனுபவம் கண்டிருந்த காரணத்தால் - இந்த இதழையும் அதே format-ல் பிரம்மாண்டமாய் ரூ.4/ விலையிலேயே (!!!) வெளியிடுவதெனத் திட்டம்  ! 

இம்முறையும் என் தந்தையின் அச்சகத்திலேயே - web offset இயந்திரத்திலேயே ஒரே நேரத்தில் முன்னும் பின்னும் 2+2 வர்ணங்களை அச்சிடத் தீர்மானித்திருந்தேன் ! ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் அரங்கேறியிருந்த அந்த  "நடுவிலே கொஞ்சம் பேப்பர் ரீலைக் காணோம்" படலம் இன்னமும் எனக்கு மறந்திருக்கவில்லை தான் ! ஆனால் நான் போட்ட சாமியாட்டம் கூட யாருக்கும் மறந்திருக்காது என்ற நம்பிக்கையும் ; நிச்சயமாய் அதே தவறு தொடர்ந்திடாது என்ற நம்பிக்கையும் இருந்ததால் - பேப்பர் ரீல்களுக்கு ஆர்டர் போட்டிருந்தேன் - அப்போது மித அளவில் வளர்ந்து கொண்டிருந்த கரூர் TNPL மில்லில் ! ஒழுங்காக முன்பணம் தந்து சில மாதங்களாய் பேப்பர் கொள்முதல் செய்து வந்தபடியால் அவர்களும் நம் மீதொரு அபிமானம் கொண்டிருந்தார்கள் ! "டாண்' என்று சொன்ன தேதிக்கு டிசம்பர் நடுவிலேயே ரீல்களும் வந்துவிட்டன ! என்னதான் நம்பிக்கை இருப்பினும், 'எதற்கும் இருக்கட்டுமே' என்று எனது குட்டி டீமை ரீல்களுக்குக் காவலாய் நிற்க வைத்திருந்தேன் ! And பொழுதைக் கடத்தாமல் காலா காலத்தில் அச்சிட்டு விட்டால் - தொல்லையும் தீர்ந்ததே ! என்ற வேகமும் உள்ளுக்குள் ! காளிராஜன் ; சிகாமணி என்று 2 ஆர்டிஸ்ட்கள்   அப்போது நம்மிடம் பணியாற்றிட - வேலைகள் தீயாய் நடந்து முடிந்தன ! இரவு 2 மணிக்குக் கூட நகரமே 'ஜே ஜே' வென விழித்திருந்து பணியாற்றும் காலமது  ! So ஆர்டிஸ்ட்களோடு   உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டே இரவு 11 மணிக்கு மேல் சாவகாசமாய் ஏதாச்சும் பரோட்டா கடையில் ஒரு கட்டு கட்டி விட்டு - பணி முடிந்த பக்கங்களை நெகடிவ் எடுக்கக் கொடுத்து வருவேன் ! அவர்களும் முகம் சுளிக்காமல் அர்த்தஜாமத்திலும் வேலை செய்து தர - மார்கழியின் பனியிரவில் அந்த நெகடிவ்களை சுமந்து கொண்டு ஊரின் இன்னொரு கோடியிலிருக்கும் அச்சகத்துக்கு ஜாலியாய் சைக்கிளை மிதித்த நாட்களவை ! நமக்காக 2 மணிக்குக் கூட பணியாட்கள் காத்திருக்க - ராவோடு ராவாய் ஸ்பைடர் அச்சாகத் தொடங்கினார் ! கிளிப் பச்சை & ஜவ்வுமிட்டாய் ரோஸ் & ஆரஞ்சு வர்ணங்கள் சேர்ந்திட - பக்கங்களை மடித்துச் சரி பார்க்கும் போதே எனக்குள் வாணவேடிக்கைகள் தான் ! பற்றாக்குறைக்கு - "பாதாளப் போராட்டம்" கதைக்கென நமக்கு வழங்கப்பட்டிருந்த ஒரிஜினல் ராப்பர் டிசைனை - இந்த ஸ்பெஷல் இதழுக்கென லவட்டி ரிசர்வில் வைத்திருந்தேன் ! So அட்டைப்படமும் டெரராக அமைந்திட - இதுவொரு blockbuster ஹிட் என்பதில் எனக்கு ஐயமே இருக்கவில்லை ! இரண்டே நாட்களில் அச்சுப் பணிகள் முழுமையாய் முடிந்திட - அட்டைப்படத்தினை எனது அண்ணனின் அச்சகத்தில் அச்சிட்டு முடித்திருந்தேன் இடைப்பட்ட வேளையில் ! ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் கூர்மண்டையர் விற்பனைக்குத் தயாராகி நின்றார் ! 

அப்போதெல்லாம் நமது நெல்லை முகவர் ஒவ்வொரு மாதமும் இதழ் தயாரான மதியத்துக்கு பஸ் பிடித்து சிவகாசி வந்து பண்டலைக் கையோடு கொண்டு செல்வது வழக்கம் ! அவரது முதல் அபிப்பிராயம் எப்போதுமே அந்த இதழின் விற்பனைக்கொரு கோடி காட்டுவதாய் அமைந்திடுவது மாமூல் ! இம்முறையோ மனுஷன் இதழைப் பார்த்த மறு கணம் - "பண்டலை பிரிங்க..பிரிங்க..!" என்று கூவினார் ! விஷயம் என்னவென்று பார்த்தால் அந்நாட்களில் 300 பிரதிகள் வாங்கிடும் அவர் - ஒற்றை நொடியினில் ஆர்டரை 500-ஆக உயர்த்திடத் தீர்மானித்திருந்தார் ! தொடர்ந்த 10 நாட்களுக்குள் ஆர்டினின் முதலாளி நம்மை ஒரு ரேஞ்சுக்குக் கொண்டு சென்று விட்டார் - விற்பனையில் தென்பட்ட அசாத்திய வேகத்தைக் கொண்டு ! அதுவரை நொண்டியடித்துக் கொண்டிருந்த சிறுநகர முகவர்கள் கூட அவசரம் அவசரமாய் ஆர்டர்கள் அனுப்பிட - மொத்தப் பிரதிகளும் பிப்ரவரி பிறக்கும் முன்பே தரைதட்டிப் போயிருந்தன நம் கிட்டங்கியில் ! வாழ்க்கையில் ஐம்பதாயிரத்தை  கடந்ததொரு தொகை நமது வங்கியிருப்பில் இருந்த முதல்முறை அது !! இன்றைய நாட்களில் startup salaries கூட லகரங்களில் ஓடும் போது - இந்த ஐம்பதாயிரம் ஒரு பிசாத்துத் தொகையாகத் தெரியக்கூடும் தான் ; ஆனால் 30 வருஷங்களுக்கு முன்பு அதெல்லாம் ஒரு ராஜாங்கத்தின் விலை bros !!

"எத்தனுக்கு எத்தன்" ; "Dr .டக்கர்" ; "இரும்பு மனிதன் " ; "பாதாளப் போராட்டம்" எல்லாமே ஹிட்கள் தான் - ஆனால் இது முற்றிலும் புதியதொரு பரிமாணத்திலான வெற்றியாக இருந்தது !! இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய குஷியை எனக்குத் தந்த சம்பவமும் அதே தருணத்தில் அரங்கேறியது - முத்து காமிக்ஸில்  பணியாற்றிவிட்டு ; அப்புறமாய் இங்கே-அங்கே என காமிக்ஸ் கடைகள் விரித்துச் சென்று கொண்டிருந்த முல்லை தங்கராசனை சந்திக்க நேர்ந்த பொழுது ! அப்போது மனுஷன் மேத்தா காமிக்சிலோ ; ரத்னபாலாவிலோ பணியாற்றிக் கொண்டிருந்தார் ! நம்மிடம் 500 பிரதிகள் வாங்கிய கையோடு அதே நெல்லை முகவர் இவரது ஆபீசுக்கும் சென்று அவர்களது அந்த மாதத்து இதழ்களில் குறைச்சலாக ஒரு எண்ணிக்கையில் பிரதிகள் வாங்கியுள்ளார் ! அங்கே போனவர் சும்மா இராமல் - "கொலைப் படை" இதழையும் காட்டி விட்டு - "500 பிரதிகள் வாங்கியிருக்கிறேனாக்கும் !!" என்று ஒட்டியிருக்கிறார் ! முல்லை தங்கராசனும் இதழைப் புரட்டிப் பார்த்து விட்டு - அதைத் தன்வசமே வைத்துக் கொண்டு அன்று மாலை எனது தந்தையின் ஆபீசுக்கு வந்து விட்டார்  ! என்னை அங்கே பார்த்தவர் - புலம்பாத குறையாக "Fleetway-ல் டாப் கதைகள் எல்லாவற்றிலும் துண்டு விரித்து விட்டே!" என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டார்! என்றைக்குமே எனக்கும், அவருக்கும் ஒத்துப் போனதில்லை எனும் பொழுது - இந்த மறைமுகப் பாராட்டு சிலீரென்ற ஆலங்கட்டி  மழையாகப் பட்டது எனக்கு !  ஸ்பைடரின் ultimate வெற்றித் தருணமாய் அந்த நொடி எனக்குப்பட்டது ! இன்றைக்கு அதுவொரு சிறுபிள்ளைத்தனமான சிந்தனையாகத் தோன்றினாலும், 18 வயதை தொட்டிருக்கா அந்த  நாட்களில் - சிந்தனையில் விசாலத்துக்கெல்லாம் அவசியமே தோன்றிடவில்லை ! ஜனவரியுடனான முதல் ஸ்பரிசம் அசாத்திய வெற்றியை நல்கிய நாட்களாய் அமைந்ததால் - இன்று காலை பார்த்த மனிதரின் பெயர் மறந்து போனாலும், 30 வருடங்களுக்கு முன்பான நாட்கள் பசுமையாய் ஞாபகத்தில் தங்கிவிட்டன ! 
"ஜனவரி காதல்" தொடர்ந்தது மறு ஆண்டிலும் கூட - தலைவிரிகோலமான பச்சைப் பிசாசு - ராப்பரில் நாக்கைத் துருத்திக் கொண்டு நின்ற "திகில்" அறிமுகத்தின் வாயிலாக ! வண்டி வண்டியாய் திகிலின் பின்னணி பற்றி ஏற்கனவே எழுதியுள்ள நிலையில் - maybe அங்கே விடுபட்டுப் போன finer details களை மட்டுமே இங்கே சொல்லிச் செல்கிறேனே..?! சிறு (திகில்) கதைகளின் தொகுப்பு...ஒரே ஒரு முழுநீள ஹாரர் த்ரில்லர் ; சின்னச் சின்ன கட்டுரைகள் ; துணுக்குகள் என்று இந்த இதழை ரொம்பவே ரசித்துச் செதுக்கினோம் ! அப்போதெல்லாம் Fleetway நிறுவனம் தடுமாற்றமானதொரு சூழலில் சிக்கிக் கிடக்க - சிறுகச் சிறுக அவர்களும் செலவினங்களைக் குறைக்கும் வேலையில் முனைப்பாகிப் போனார்கள் ! அந்நாட்களில் கறுப்பு-வெள்ளை ஒரிஜினல்கள் உயர் ரக bromide பேப்பரில் பிரிண்ட் போடப்பட்டு வந்திடும் ! ஆனால் அதெல்லாம் அனாவசியச் செலவென்று தீர்மானித்து - வரும் நாட்களில் நமக்குத் தேவைப்படும் கதைகளை ஜெராக்ஸ் மட்டும் எடுத்துத் தரப் போவதாகத் தகவல் சொல்லினர் ! ஜெராக்ஸ் எடுப்பது கூட அந்நாட்களில் இன்றைய ஐம்பது பைசா விவகாரமல்ல ; and அன்றைய ஜெராக்ஸ் தரங்கள் இப்போது போல் துல்லியமாய், அடர்த்தியாய் இருந்திடாது தான் ! அதிலும் "பேய்வீரர் லோகன்" தோன்றிய அந்த முழுநீளக் கதையின் ஜெராக்ஸ் - கதையின் கருவுக்கேற்ப - பேய் போலவே இருந்தது, வெண்மை மிகுந்து ! அந்தக் கதைக்கு உயிரூட்ட நமது ஓவியர்கள் விடிய விடிய வேலை செய்ததெல்லாம் - மறக்க இயலா அனுபவங்கள் !! "பேய்..பிசாசுகள் எல்லாமே வேற்று கிரகத்திலிருந்து இங்கே இறக்குமதியானவை!" என்பது போலான இந்தக் கதை எனக்கு ரொம்பவே பிடித்ததொன்று ! (பெயர் மறந்தே போச்சு !!) வழக்கமாய் பெரிய சைசிலிருக்கும் ஒரிஜினல்களை கட்டிங் - பேஸ்டிங் செய்து பாக்கெட் சைசாக்குவோம் ; ஆனால் இம்முறையோ தலைகீழ் ! பாக்கெட் சைசில் இருந்த கதையை பெரிய சைசுக்கு உருமாற்றம் செய்தோம் ! 

மொத்தமாய்ப் பணிகளை செய்து முடித்தான பின்பு - அட்டைப்படம் செம டெரராக இருக்க வேண்டுமே என்ற ஆர்வத்தில் மொத்தம் 3 டிசைன்கள் போடச் செய்தேன் நமது ஓவியரை ! பிசாசுகளை வரைவதென்றால்  நம்மவருக்கு அல்வா சாபிடுவது போல் ஜாலியான பணி ; பிரித்து மேய்ந்து விடுவார் ! மூன்று டிசைன்களுமே சூப்பராகத் தோன்றிட அதில் பெஸ்ட் என எனக்குத் தோன்றிய 2 டிசைன்களையும் முன் + பின் அட்டைகளுக்குக் கொண்டு சென்றேன் ! 

உட்பக்கங்களும் சரி ; ராப்பர்களும் சரி - என் அண்ணனின்  (பெரியப்பா பையன்) அச்சகத்தில் தான் அந்தச் சமயங்களில் பெரும்பாலும் அச்சாகும் ! அதே வளாகத்தில் தான் நமது ஆபீசும் இருந்ததால் - விறு விறுவென்று நடந்து சென்று பணி நிலவரத்தைப் பார்த்துக் கொள்ள முடியும் ! பேப்பரை இறக்கி விட்டு - அச்சிட பிளேட்களையும் தயார் செய்து வாங்கிக் கொண்டு அவர்களது அச்சகத்துக்குப் போனால் இருட்டாகக் கிடந்தது ! அந்நாட்களில் 12 மணி நேரம் வீதம் 2 ஷிப்ட் வேலை உண்டு எனும் பொழுது ஞாயிறு மாலை வரை செம பிசியாக இருக்கும் இடம் சனிக்கிழமை இரவில் இருட்டாகக் கிடப்பதைப் பார்த்த பொழுது வினோதமாய்ப்பட்டது ! என்ன-ஏது ? என்று விசாரித்தால் - தயங்கித் தயங்கி பணியாளர்கள் குண்டைத் தூக்கிப் போட்டனர் ! அண்ணனுக்கும், அவரது தந்தைக்கும் (என் பெரியப்பா) அடிக்கடி லடாய் நேர்வதுண்டு தான் ; ஆனால் இம்முறை லடாய் முற்றி - கோபத்தில் அண்ணன்காரு ஆபீஸைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போய் அவர்களது உறவுமுறையிலானதொரு  வக்கீலிடம்  ஒப்படைத்திருந்தாராம் !! பாகப்பிரிவினை செய்து விட்டுத் தான் மறு வேலை ; அதுவரைக்கும் யாரும் ஆபீஸைத் திறக்கக் கூடாது என்று ஒரே போடாய்ப் போட்டு விட்டார் ! உள்ளே நம் தாள் மட்டுமன்றி - இதே போல வந்து, செல்லும் நிறைய பார்ட்டிகளின் காகிதங்களும் சிக்கிக் கிடக்க, எல்லாரும் கோபத்தை யார் மீது காட்டவென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர் ! எனக்கோ ஒரே டென்ஷன் ; "பேப்பரை மட்டும் கொடுத்திடுங்க சாமிகளா...அப்புறமாய் உங்க பஞ்சாயத்தை எப்படியும் வைச்சுக்கோங்க !! என்று நான் அண்ணனைத் தேடித் பிடித்து மூக்கால் அழுக - என்ன நினைத்தாரோ தெரியவில்லை - மறு நிமிஷமே சாவியை வரவழைத்து நமது பேப்பரை மட்டும் வெளியேற்ற அனுமதித்தார் ! 'துண்டைக் காணோம்-துணியைக்   காணோம்' என்று ராவோடு ராவாக பேப்பரைத் தூக்கிப் போனவன் - என் பள்ளித்தோழனின் அச்சகத்தைத் தேடிப் பிடித்து அங்கே இறக்கி வைத்தேன் ! அவனும் அதிக வேலையின்றி ஈயோட்டிக் கொண்டிருக்க, மட மடவென்று பணிகள் நிறைவு பெற்றன ! "ஷப்பா..தப்பிச்சோம்டா சாமி !" என்ற நிம்மதிப் பெருமூச்சோடு நான் ஆபீஸ் திரும்பினால் - முகப்பிலிருந்த அண்ணனின் ஆபீசில் வழக்கம் போல் வேலைகள் ஓடிக் கொண்டிருந்தன !! "இது என்ன கூத்துடா சாமி ? நேற்றைக்குவரையிலும் "நடுவிலே சுவரைக் கட்டு ; பங்கைப் பிரி !"  என்ற கூச்சல் கேட்டுக் கொண்டிருந்த நிறுவனத்தில் இப்போது நார்மல் சர்வீஸ் எவ்விதம் ?என்று ஒரே திகைப்பாய் இருந்தது ! "என்னாச்சு ? "என்று விசாரித்தால் - அண்ணன் கோபிப்பது இது 113-வது தடவை என்றும் - அவர்களது குடும்ப வக்கீல் அண்ணனைப் பார்த்தாலே கன்னத்தில் மரு ஒட்டிக் கொண்டு ராமேஸ்வரம் பக்கமாய் எஸ்கேப் ஆகிடுவார் என்பதும் தெரிய வந்தது ! அடச் சை ! என்ற கடுப்பில் அடுத்த சில மாதங்களுக்கு அவர்களது ஆபீஸ் பக்கமே நான் போகவில்லை ! திகில் முதல் இதழோ - பட்டையைக் கிளப்பும் விற்பனை கண்டது - at least நம்மிடமிருந்து !! வாங்கிச் சென்ற முகவர்களால் கடைகளில் போட்டு சரிவர விற்பனை செய்திட முடியவில்லை என்பது வேறு விஷயம் ! But செம வேகமாய் ; செம எதிர்பார்ப்புகளை நல்கிய விதமான விற்பனையை ஜனவரி 1986-ம் நமக்குக் காட்டியது ! 

ஹாட்ரிக் அடித்த கதையாய் 1987 ஜனவரியும் இன்னொரு சந்தோஷ உச்சத்தைக் கண்ணில் காட்டிய மாதம் !! இம்முறையோ - ஜூனியர் லயன் & மினி லயன் ஜனித்த வகையில் !! இரண்டு ரூபாயில் ; முழு வண்ணத்தில் ஒரு முழுநீள லக்கி லூக் கதையை வெளியிட்டிருக்கக் கூடிய முதலும், கடைசியுமான பதிப்பகம் நாமாகத் தானிருக்க முடியுமென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை ! அன்றைய பொழுதில் வண்ண இதழ்களுக்கு ஒழுங்காகக் costing போட்டேனா ? என்பது கூட எனக்குச் சரிவர சொல்லத் தெரியவில்லை ! ஆனால் எப்படியேனும் கலரில் கலக்கியே தீர வேண்டுமென்ற வைராக்கியம் மட்டும் மேலோங்க - ஒற்றையொற்றை கலராய் சூப்பர் சர்க்கஸ் இதழினை அச்சிட்டோம் ! முன்பக்கம் 4 கலர் + பின்பக்கம் 4 கலர் என நியூஸ்பிரின்ட் காகிதத்தில் விடிய விடிய அன்றைக்கு அச்சிட்டதை நினைத்தால் மலைப்பாக உள்ளது ! ஒரே நேரத்தில் 4 கலர்களை அச்சிடும் இயந்திரங்கள் அந்நாட்களில் சிவகாசியில் கிடையாதெனும்  போது  - இந்த ஒற்றை-ஒற்றை கலர் பிரிண்டிங் தவிர்க்க இயலாதது ! But அந்தப் பணிக்கு அசாத்தியத் திறமை தேவை ! அந்நாட்களில் அத்தகைய கெட்டிக்காரர்கள் மிகுந்திருந்தது தான் எங்கள் நகரின் வளர்ச்சிக்கொரு முக்கிய காரணமும் கூட ! எல்லாவற்றையும் விட - "சூப்பர் சர்க்கஸ்" இதழை எடுத்து இப்போது புரட்டிப் பார்க்கும் போது - அதற்கு நான் எழுதியிருந்த தலையங்கம் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ! நான் தொழிலுக்குள் புகுந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிப் போயிருந்தன - 1987-ல் அதனை எழுதிய போது ; but still அந்த வயசுக்கு அந்த writing தேவலை என்று தோன்றியது ! இதழ் வெளியான பின்பு - ஒரு டாப் கார்ட்டூன் தொடரினை முதல்முறையாக முழுநீளக் கதையாய் ; வர்ணத்தில் பார்த்த சந்தோஷத்தை நீங்கள் வெளிப்படுத்திய கணத்தில் ஏதோ இமாலய உச்சியை சைக்கிளிலேயே எட்டிப் பிடித்து விட்டது போன்றதொரு உணர்வு !! ஜூனியர் லயன் ஒரு பக்கமெனில் - அதே ஜனவரியில் "மினி லயன்" ஒற்றை ரூபாய் விலையோடு - "துப்பாக்கி முனையில்" கதையோடு துவக்கம் கண்டது இன்னொரு வானவில் ! ACTION Library என்ற லேபிலின் கீழ் Fleetway வெளியிட்டு வந்த கதைகளை நாம் மினி-லயனில் அரங்கேற்றியிருந்தோம். "ஆஹா..ஓஹோ" தரமில்லை எனினும் எல்லாமே decent ஆன கதைகளே ! So 30,000+ பிரதிகள் அச்சிட்டு - சகலத்தையும் விற்பனை செய்ய இயன்ற அந்த ஜனவரியை மறக்கத் தான் முடியுமா ? Phew !!

அந்த நாட்களிலிருந்து டப்பென்று நிகழ்காலத்துக்குக் குதித்தால் - நமது மறுவருகைக்குத் தளமாய் 2012-ல் அமைந்ததும் இன்னொரு ஜனவரியே ! COMEBACK ஸ்பெஷல் ; சென்னைப் புத்தக விழா ; வாசக நண்பர்கள் சந்திப்பு ; வலைப்பதிவு ; தண்டவாளத்தில் வண்டி சீராய் ஓடத் துவங்கியது - என சகலத்துக்கும் பிள்ளையார்சுழி போட்டுத் தந்ததும் அந்த ஜனவரி தானே ?! And மறக்க இயலா NBS வெளியிட சாத்தியமானதும் தொடர்ந்தாண்டின் ஜனவரியில் தான் எனும் போது - ஆண்டின் இந்த முதல் மாதத்தின் மீது நான் விடாப்பிடியாய் காதல் கொண்டிருப்பதில் வியப்பேதும் உண்டோ ?

 Before I sign off - இரண்டே கேள்விகள் guys !! 

முதலாவது கேள்வி  : "ஆர்ப்பாட்டமான அதகள ஹிட்டடிக்கும் இதழாக இருந்தே தீருமென்ற" நம்பிக்கையை எனக்குத் தந்த  இதழ் # 2 என்னவாக இருந்திருக்கும் ?  Any guesses ?

இரண்டாவது கேள்வி : அந்தத் துவக்கத்து "திகில்" காமிக்ஸ் இதழ்களை சுத்தமாய் நீங்கள் நிராகரித்தது ஏனென்று ஏதேனும் thoughts ப்ளீஸ் ? நான் குறிப்பிடுவது திகிலின் ஆரம்ப 3 இதழ்களையும் ! அவை வாங்கிய சாத்துக்களின் சூடு தாங்காது - இதழ் # 4 முதல் வழக்கமான பார்முலாவுக்கே தாவியிருந்தோம் !! அந்த ஆரம்பத்து இதழ்கள் உங்களுக்கு ரசிக்காது போனதன் பின்னணி பற்றி ஏதேனும் நினைவிருந்தால் சொல்லுங்களேன்? 

கேள்விகள் மட்டுமன்றி - வேண்டுகோள்களிலும் 2 உள்ளன :

'குட் நைட்' சொல்லி விட்டு நடையைக் கட்டும் முன்பாக - சந்தாக்கள் பற்றிய நினைவூட்டல் !!  இன்னமும் சந்தாப் புதிப்பித்தல்களைச்  செய்திருக்கா நண்பர்களை போன் மூலமும், இங்கே நமது பதிவுகளின் வாயிலாகவும் தொடர்ந்து மென்மையாய் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்து வருகிறோம். சென்றாண்டின் சந்தா எண்ணிகையில் 60% தான் நாம் இதுவரையிலும் எட்டி இருக்கிறோம் என்பது வார்னிஷ் அடிக்கா நிஜம் ! ஏற்கனவே BAPASI-ன் சென்னைப் புத்தக விழா ஜனவரியில் கிடையாதெனும்  பொழுது ஒரு கணிசமான விற்பனைத் தொகைக்கு வழியில்லாது நிற்கிறோம் ! (புதிதாய் அறிவிக்கப்பட்டுள்ள புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைப்பின் ; பொதுமக்களின் வருகை  கணிசமாக இருப்பின் - ஓரளவுக்குத் தலை தப்பும் ! ) But எது எவ்விதமிருப்பினும், சந்தாக்களின் எண்ணிக்கையில் 40% குறைபாடிருப்பின்,  இந்தாண்டைக் கடப்பதற்குள் நிச்சயமாய் பெண்டு கழன்றே போய் விடும் ! இக்கட்டான சூழ்நிலை guys !! உங்கள் புரிதலும், ஒத்துழைப்பும் இப்போதைய அவசரத் தேவைகள் !! Please !!

இரண்டாவது கோரிக்கை - இதழ்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயப் பகிர்வுகள் தொடர்பாக  !! ஒவ்வொரு மாதமும் 4 இதழ்கள் எனும் பொழுது எங்கள் சக்கரங்கள் தொடர்ச்சியாய் சுழன்று கொண்டே இருந்தாக வேண்டும் ! இது போன்ற நிலையில்  எங்கள் ரசனைகளில் ஒரு செக்குமாட்டுத்தனம் தோன்றிட வாய்ப்புகளுண்டு ! So ஒவ்வொரு இதழையும் படித்தான பின்னே, சின்னதாய் நாலு வரிகளில் உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் - நம் பயணப் பாதை சரி தானா ? அல்லது செக்குமாடுகள் போல சுற்றிச் சுற்றி வருகிறோமா ? என்ற புரிதல் பிறக்கும் எங்களுக்கும் ! பாராட்டுக்களோ ; குறைகளின் வெளிப்பாடுகளோ - we would love to hear more from you folks ! சமீப வாரங்களில் பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் குறைவதில் எனக்குப் பெரிதாய் கிலேசமில்லை ; ஒற்றை ஆளாய் நானே ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து  தொடர்ந்து எழுதி வரும் நிலையில் ஓரளவுக்கு மேல் திகட்டல் தலைதூக்குமென்பது  இயல்பே ! அது மட்டுமன்றி - Whatsapp காமிக்ஸ் க்ரூப்கள் நிறைய உள்ள நிலையில் கருத்துப் பரிமாற்றங்களுக்கு இங்கு தான் அனைவரும் குழுமியாக வேண்டுமென்ற கட்டாயமும் கிடையாது !  So இதர சமயங்களில் am not too worried !  ஆனால் - இதழ்கள் வெளியாகும் வேளைகளிலும் ஒருவித மௌன / மந்த நிலை இங்கே நிலவிடின் - காமிச்ஸே ஓவர்டோஸ் ஆகிப் போகிறதோ ? என்ற பயம் தலைதூக்குவதை தடுக்க இயலவில்லை ! கார்ட்டூன் ; டெக்ஸ் கதை வரிசைகள் ; அக்ஷன் கதைகளென வெவ்வேறு பாணிகளில் மாதம்தோறும் variety meals பரிமாறும் போதும் பந்தியில் விறுவிறுப்பின்றிப் போகும் பட்சத்தில் அது நிச்சயமாய் சரி செய்யப்பட வேண்டியதொரு நிலையாகிடாதா ? See you around soon ! Bye for now !! 

310 comments:

  1. Happy new year to all my comics lovers
    happy new year to ed Mr.vijan junior end
    I am the first.

    ReplyDelete
  2. இரண்டாவது முதல் முறையாக....

    ReplyDelete
  3. முதல் முறையாக மூன்றாவது

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்..

    ReplyDelete
  5. 10 க்குள் நானும்.

    ReplyDelete
  6. சிநேகங்களுக்கு நமஸ்காரம்!

    ReplyDelete
  7. நம்ம ஊர்ல எஸ்டி கூரியர்னா,பாக்தாத்ல எஸ்டி பூரியர்...ம்ம்ம்!ஹா,ஹா,ஹா! நல்லாத்தாம்யா இருக்கு!

    ReplyDelete
  8. ஸ்பைடரின் நினைவலைகளை கிளர்ந்தெளச்செய்து விட்டீர்கள்! நானும்,என் அண்ணனும்(ஜேடர்பாளையம் சரவணக்குமார்)ஸ்பைடரின் மீது தீராக்காதல் கொண்டு பித்துப்பிடித்துத் திரிந்த காலங்கள் அவை!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பித்து தெளிந்தபாடில்லை என்பதுதான் நிஜம்!மாறாக முற்றிப்போய் விட்டிருக்கிறது!!

      Delete
    2. குணா சார்.!

      ஜேடர் பாளையத்தார் உங்கள் சகோதரரா.? சகோதரர்கள் இருவரும் இங்கு பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி.

      என் அண்ணன்கள் மூலமாகவே எனக்கு காமிக்ஸ் அறிமுகம்.ஆனால் தற்போது அவர்கள் காமிக்ஸ் படிப்பதில்லை.எனது அண்ணன் மகன் (வயது 15) தீவிர ரசிகனாகிவிட்டான்.! இரும்பு கை மாயாவியின் தீவிர ரசிகன்.!

      Delete
    3. சகோதரத்துவத்தையும் தாண்டி எங்களுள் ஒரு சிநேகத்துவம் மேலோங்கி நிற்கிறது!அதற்கு இணைப்புப் பாலமாய் இருப்பது காமிக்ஸ் என்ற ராட்சஷ சக்தியே..!

      Delete
  9. நா மோடி மஸ்தான் கலக்கி விட்டார்போங்கள்! அதிலும் பூதவேட்டை..சிப்போ..சிப்பு..!

    ReplyDelete
  10. காலை வணக்கம் எடிட்டர் சார் & நண்பர்களே அந்த இரண்டவது இதழ் சூப்பர் ஸ்பெஷல் தனே சார்

    ReplyDelete
    Replies
    1. NARESH KUMAR : இல்லை நண்பரே..! "சூப்பர் ஸ்பெஷல்" இதழின் போது அதன் விலையின் பொருட்டு (ரூ.10 !!!) பயம் எக்கச்சக்கம் !!

      Delete
    2. யார் அந்த ஸ்பைடர் என்று நீங்கள் எப்போதோ சொன்னதாக ஞாபகம் ( அது 2014 ஈரோடு புக்பேர்ரில் என்று நினைவு)

      Delete
  11. மதியில்ல்லா மந்திரி காமெடியில் கலக்கிவிட்டார்!மொழிபெயர்த்த உங்களுக்கு hats off!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : நிறையவே பெண்டைக் கழற்றிய பணியது ! நன்றிகள் !

      Delete
    2. ம.இ.மந்திரி முதல் ம கடைசி கதைகள் ஆகா ஓகோ
      இப்படியான கதைகளாக போடுங்க சார்

      ரொம்ப நாள் கழித்து சிரித்து மகிழ்ந்தேன்

      Delete
  12. இந்த பதிவில் ஏகப்பட்ட எழுத்து பிழை!தூக்க கலக்கத்தில் பதிவிட்டது புரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. senthilwest2000@ Karumandabam Senthil : ஷப்பா....பல்லெல்லாம் ஆடிப் போய் விட்டது - பிழைகளை இப்போது கவனிக்கும் போது ! அனைத்தையும் சரி பண்ணி விட்டேன் !! Thank you !

      Delete
  13. போபால் விஷவாயு நாட்களில் வெளியான கொலை படை ! என்ன பெயர் பொருத்தம்!திகில் காமிக்ஸின் தோல்விக்கு ஒரு காரணம் அதன் திகிலூட்டும் அட்டைப்படங்கள்.மற்றுமொரு ஒரு காரணம் அதன் விலை! அந்த நாட்களில் திகில் காமிக்ஸ் வாங்குவதற்கு வீட்டில் அனுமதிப்பதே கிடையாது காரணம் அட்டைப்படங்கள்! அதன்பிறகு வீட்டுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக படித்தது தனி கதை! இங்குதான் பிளஸ்சே மைனஸ் ஆனது!மேலும் அப்போது முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் 2 ருபாய்கே நிறைந்த தரத்தில் வந்துகொண்டிருந்தபோது 3 ருபாய் என்பது அன்றைய காலகட்டத்தில் விலை வாங்குவதற்கு கட்டுபடியாகவில்லை!ஏனினில் அன்றைய pocket money தற்போது பொழக்க்தில் இல்லாத 10,25 காசுகளே! 50 காசு pocket money கிடைத்தால் முன்செய்த புண்ணிய பலன் என்றிந்த காலம் அது! 1 ரூபாய் pocket money வைத்திருத்தது செல்வந்த நண்பர்களே! அவ்வளவு ஏன் நமது comeback அவதாரத்திற்கு பிறகு வந்த என் பெயர் லார்கோவின் பின் முகப்பு படத்தில் பழைய திகில் அட்டைபடத்தை வெளியிட்டு இருந்தீர்கள்! அதற்கு என் பெற்றோரிடம் கிளம்பிய எதிர்ப்பு சொல்லி மாளாது!

    ReplyDelete
  14. போபால் விஷவாயு நாட்களில் வெளியான கதை கொலை படை ! என்ன பெயர் பொருத்தம்!

    ReplyDelete
  15. To: Editor,
    //"ஆர்ப்பாட்டமான அதகள ஹிட்டடிக்கும் இதழாக இருந்தே தீருமென்ற" நம்பிக்கையை எனக்குத் தந்த இதழ் # 2 என்னவாக இருந்திருக்கும் ? Any guesses ?//
    மீள் வருகைக்குப் பின்னான இதழாக அது இருக்குமெனில் நிச்சயம் - 'என் பெயர் லார்கோ'தான்!!!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : லார்கோ ரசிக்கச் செய்வாரென்ற நம்பிக்கை இருந்தது வாஸ்தவமே...ஆனால் அதன் சற்றே கனமான கதைக்களங்களை நம்மில் அனைவரும் ரசிப்போமா என்பது குறித்து லேசானதொரு பயமும் இல்லாதில்லை !

      Delete
  16. காமிச்சே ஓவர்டோஸ் ஆகிப் போகிறதோ ? yes...

    ReplyDelete
    Replies
    1. ESS : கொஞ்சம் விளக்குங்களேன் நண்பரே..!

      Delete
  17. முதல்முறையாக நான் சந்தா கட்டிய 3நாட்களில் புத்தகங்கள் வந்து விட்டது.நன்றி சார்.மாடஸ்டியின் அடுத்த இதழை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.இந்த மாத டெக்ஸ் வழக்கம் போல படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத கதை

    ReplyDelete
  18. அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..! ஒரு சிறு வேண்டுகோள்... வழக்கமான எஸ்டி கொரியரை விட்டு டிட்டிடிஸி-யில் அனுப்பிட்டீங்க. அது நேற்றுத்தான் வந்தது. கொரியர் ஆளுக்கு ஃபோன்ல கேட்டா வரவே இல்லைன்னு சாதிக்கிறார்..!

    ReplyDelete
  19. வணக்கம் வாங்கிக்கோங்க!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கியாச்சுங்கோ !

      Delete
    2. பிடியுங்க பதில் வணக்கத்தை !

      Delete
  20. காமிக்ஸ் கடவுள் விஜயன் சாருக்கும்
    நண்பர்களுக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : ஐயோ..சாமி..தெய்வமே....வேண்டாமே இந்த அடைமொழி !! ஏற்கனவே "பெவிகால் பெரியசாமி" ; ஓட்டைவாய் உலகநாதன்" ; "பதிவு பருத்திவீரன்" "ஆந்தைவிழியார்" என்ற ரேஞ்சில் நிறையவே கைவசமுள்ளன !!

      Delete
    2. அப்படியே பழையனவற்றை மறந்தவர். ஏறிய ஏறிய எட்டி உழைத்தார் என்று என்னால் வழங்கப்பட்ட பட்டத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன் .என்னை ஞாபகம் இருக்கிறதா சார்.என்னால் உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டதை எப்போதோ திரும்ப பெற்றுக்கொண்டனர்.

      Delete
    3. காசா,பணமா சும்மா வாங்கிக்கோங்க.. பாஸ் !பிரியமா கொடுக்குறமில்ல..!

      Delete
  21. ///"ஆர்ப்பாட்டமான அதகள ஹிட்டடிக்கும் இதழாக இருந்தே தீருமென்ற" நம்பிக்கையை எனக்குத் தந்த இதழ் # 2 என்னவாக இருந்திருக்கும் ? Any guesses ?///

    டெக்ஸ் வில்லரின் "தலைவாங்கி குரங்கு " . சரியா சார்.!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : ஊஹூம்...! செந்தில் சத்யாவும் , தலீவரும் போட்டுத் தாக்கியுள்ளனர் - சரியான பதிலினை !!

      Delete
  22. அழகான மலரும் நினைவுகள் விஜயன் சார்

    உங்களோடு நாங்களும் சேர்ந்து பயணித்ததுபோல் ஒரு உணர்வு

    ஞாயிறு பதிவு சூப்பர் :))
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : இது எப்போதைக்குமே "நம் பயணம்" தானே சார் ?! நீங்கள் ஒவ்வொருவருமின்றி நான் என்ன செய்திருக்க முடியும் ?

      Delete
  23. முதலாவது கேள்வி : "ஆர்ப்பாட்டமான அதகள ஹிட்டடிக்கும் இதழாக இருந்தே தீருமென்ற" நம்பிக்கையை எனக்குத் தந்த இதழ் # 2 என்னவாக இருந்திருக்கும் ? Any guesses ?
    டிராகன் நகரம்- தானே சார் அது...
    பேரைக் கேட்டே அதகளமான நாட்களாக இருந்திருக்கும்....

    ReplyDelete
  24. இரண்டாவது கேள்வி : அந்த துவக்கத்து "திகில்" காமிக்ஸ் இதழ்களை சுத்தமாய் நீங்கள் நிராகரித்தது ஏனென்று ஏதேனும் thoughts ப்ளீஸ் ? நான் குறிப்பிடுவது திகிலின் ஆரம்ப 3 இதழ்களையும் ! அவை வாங்கிய சாத்துக்களின் சூடு தாங்காது - இதழ் # 4 முதல் வழக்கமான பார்முலாவுக்கே தாவியிருந்தோம் !! அந்த ஆரம்பத்து இதழ்கள் உங்களுக்கு ரசிக்காது போனதன் பின்னணி பற்றி ஏதேனும் நினைவிருந்தால் சொல்லுங்களேன்? ....
    Over to seniors.... plz...

    ReplyDelete
  25. மீண்டும் ஒரு அற்புதமானபதிவு

    ReplyDelete
  26. வணக்கம் சார்..
    வணக்கம் நண்பர்ஸ்..
    தொடர்ந்து இரு மாதங்களாக சி.சி.வயதில்.. வெளிவராத ஏமாற்றத்தை போக்கிய பதிவு சார்..டக்கரான நினைவுகள் சார்,...
    AT.ராஜேந்திரன் சார்@ அப்போது இதை எல்லாம் லைவ்வாக பார்த்து இருப்பீர்கள்.. அந்த நினைவுகளை இங்கே பகிருங்களேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் இந்த முறை தல
      தூள் கிளப்பி விட்டாரல்லவா

      Delete
    2. இன்னொரு முறை கேளுங்கள்...
      காது குளிரட்டும்....
      போன வருசத்துக்கு ஒக்லஹோமான்னா இந்த வருடம் இது...
      இனி பழி வாங்கும் புயல் தான் இதை அடிக்க முடியும்..., திகில் நகரில் டெக்ஸ்& தலையில்லா போராளி என ஏகப்பட்ட போட்டியாளர்கள் உண்டு..
      வரிசையாக லட்டு ஹிட்டு தான்... ஹீ.ஹீ.ஹீ...

      Delete
    3. @ FRIENDS : "திகில் நகரில் டெக்ஸ்" வித்தியாசமானதொரு த்ரில்லர் ! And 'தல' இதனில் ஷெரீப் அவதாரமெடுக்கவும் நேரிடுகிறது !

      Delete
    4. ஷெரீப்பாக டெக்ஸ்..? கடவுளே இதெல்லாம் ஒத்து வருமா..?

      Delete
  27. இந்த மாதம் இதழ்களின் வரிசை
    1.சந்தேகம் இல்லாமல்
    சட்டத்திற்கொரு சவக்குழி தான்
    2.சூ மந்திர காளி
    3.விதி எழுதிய திரைக்கதை
    ஷெல்டன் வில்லனிடம் வாள் சண்டையில்
    தோல்வியடைவது மட்டும் சற்று எரிச்சலை ஏற்படுத்தினாலும்
    விறு விறுப்பான கதை மறு பதிப்பென்றாலும் பாம்பு தீவும்
    அருமையான சித்திரத்துடன் அசத்தியது

    ReplyDelete
  28. /// அந்த ஆரம்பத்து இதழ்கள் உங்களுக்கு ரசிக்காது போனதன் பின்னணி பற்றி ஏதேனும் நினைவிருந்தால் சொல்லுங்களேன்? ///
    அப்போது கைக்குழந்தையாய் இருந்திருப்பென்னு நினைக்கிறேன் சார். (இப்போ கைப்புள்ளயாய் இருப்பது வேறு விசயம்) .
    திகில் என்கிற தலைப்பேகூட காரணமாக இருந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.!.
    அப்போதைய வாங்கும் திறனில் திகில் சாய்ஸில் விடப்பட்டும் இருக்கலாம் என்பது இரண்டாவது யூகம். !!!

    ReplyDelete
    Replies
    1. 10வருசத்தை முழுங்கி இருப்பீக கிட் அங்கிள்...கைகுழந்தையா????...ஆருகிட்ட..க்ர்ர்...

      Delete
    2. நான் அப்போது தான் அ ஆ இ ஈ படித்துக் கொண்டிருந்தேன்

      Delete
    3. நான் அப்பொழுது பிறக்கவே இல்லை.!(அப்பாடா.! நானும் யூத்.!)

      Delete
    4. @ FRIENDS : அட..நான் கூட யூத்துத் தானுங்கோ !! ("என்றைக்கு ?"என்று பலப் கொடுத்து விடாதீர்கள் !!)

      Delete
  29. ஆசிரியரே பாம்பு தீவு போல்
    அருமையான சித்திரங்கள்
    இனி வரும் மறு பதிப்புகளில்
    இருந்தால் நலம்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : சித்திரத் தரம் நம் கைகளில் அல்லவே நண்பரே..! But பொதுவாக மாயாவி கதைகளில் artwork அழகாகவே இருப்பது தான் நடைமுறை !

      Delete
  30. /// "என்னாச்சு ? "என்று விசாரித்தால் - அண்ணன் கோபிப்பது இது 113-வது தடவை என்றும் - அவர்களது குடும்ப வக்கீல் அண்ணனைப் பார்த்தாலே கன்னத்தில் மரு ஒட்டிக் கொண்டு ராமேஸ்வரம் பக்கமாய் எஸ்கேப் ஆகிடுவார் என்பதும் தெரிய வந்தது ! அடச் சை ! என்ற கடுப்பில் அடுத்த சில மதங்களுக்கு அவர்களது ஆபஸ் பக்கமே நான் போகவில்லை ! ///

    ஹாஹாஹா! LOL. சிரிச்சு மாளலை எடிட்டர் சார்! :))))

    என்னதான் மறுபதிப்பாக இன்று 'சூப்பர் சர்க்கஸ்' கையில் உள்ளது என்றாலும், அன்றைய பொடி வயதில் அந்த அட்டைப்படமும், விழுந்துவிழுந்து சிரிக்கவைத்த கதையும் அன்றைய நாட்களில் ஏற்படுத்திய சிலிர்ப்பான அனுபவங்கள் அபரிமிதமானவை! சற்றே சொரசொரப்பான ஒருவகை அட்டைப்படத்தை எத்தனைமுறை வாஞ்சையாகத் தடவியிருப்பேனோ எனக்கே தெரியவில்லை! ஸ்கூல்பேக்கிலேயே அதை வைத்துக்கொண்டு சகமாணவர்களிடம் பெருமையடித்துக்கொண்டதெல்லாம் இப்போதும் நிழலாய் மனதுக்குள் ஓடுகிறது! எப்போதோ அந்தப் பொக்கிஷம் என்னிடமிருந்து தொலைந்தும்விட்டது! எனவே யாராவது அதன் 'ஹாட்லைன்' பகுதியை 'இங்கே க்ளிக்' போட்டால் மகிழ்வேன் ( ப்ளீஸ் மாயாவி சிவா!)

    ReplyDelete
  31. ஆசிரியரே சட்டத்திற்கொரு சவக்குழியில்
    வசனங்கள் சூப்பரோ சூப்பர் பஞ்ச் டயலாக்குகளும் அருமை பின்னிட்டிங்க

    ReplyDelete
    Replies
    1. இல்லியா பின்னே....டெக்ஸ்க்கு மட்டும் தனி கவனம் தருவாரு தானே... நாராயண,நாராயண...

      Delete
  32. நானும் 'திகில்' வெளிவந்த அந்தக் காலகட்டங்களில் குழந்தைப்பய என்றாலும், ஞாபக அலைகளைத் திரட்டி என் பங்குக்கு ஏதேனும் சொல்ல முயற்சிக்கிறேனே!

    * 'ஹீரோ' என்று குறிப்பிட்ட யாரும் சாகஸம் செய்திடாததாய் இருந்த கதைகள்!

    * முழுநீளக் கதைகளுக்கு அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் நான்கைந்து பக்கங்களில் ; அதுவும் சற்று 'கி.நா' பாணியில் முடிவடையும் குறுங் கதைகள்!

    * பாக்கெட் மணியை சேமித்தே காமிக்ஸ் வாங்கிய நாட்களில் 'லயன் - முத்து'வுக்கே கொடுக்கப்பட்ட முன்னுரிமை!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //* பாக்கெட் மணியை சேமித்தே காமிக்ஸ் வாங்கிய நாட்களில் 'லயன் - முத்து'வுக்கே கொடுக்கப்பட்ட முன்னுரிமை!//

      சின்ன வயசில் புத்தக விஷயங்களில் மட்டும் எனக்கு அது போல் கட்டுப்பாடுகள் துளியும் இருந்ததில்லை என்பதால் இந்த angle -ல் சிந்திக்க அந்த நாட்களில் எனக்குத் தோன்றவே இல்லை ! வண்டி வண்டியாய் காமிக்ஸ் & நாவல்கள் வாங்க அன்றைக்கே எனக்கு சுதந்திரம் இருந்தது !

      Delete
  33. ஆசிரியரே இந்த மாதம் வெளியான
    நான்கு இதழ்களுமே சூப்பர்
    ஜனவரி மறக்க முடியாத மாதமாகிவிட்டது

    ReplyDelete
  34. Happy New year சார்! புது வருட காமிக்ஸில் முதலில் வாசித்தது பாம்பு தீவு. முதன் முறையாக படிக்கிறேன் என்பதால் 1980 களில் இருந்த விறுவிறுப்பு கிடைத்தது. வேய்ன் ஷெல்டன் கதை அடுத்த வாரிசு படம் மாதிரி இருந்தது. :) சூப்பர் கதை. இப்போது வாசிப்பில் டெக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. cap tiger : //பாம்பு தீவு. முதன் முறையாக படிக்கிறேன்//

      முதல்முறை வாசிப்புகளுக்கு இந்தப் பழங்கதைகள் சூப்பர் stuff !!

      Delete
    2. முதல்முறை மட்டுமல்ல முன்னூராவது முறையாக இருந்தாலும் பழங்கதைகள். சூப்பர் stuff!!!!!!!!!

      Delete
  35. புது வருடம் டெக்ஸ் வில்லரோடு
    அமர்க்களமாக ஆரம்பமாகிருக்கிறது
    இது வருடம் முழுவதும் தொடர வேண்டும்

    ReplyDelete
  36. பதிவின் தலைப்பு 'பண்டலைப் பிரி, வீட்டைப் பிரி' என்று வைத்திருக்கலாம். காலையில் தூக்கக் கலக்கத்தில் படிக்கும் போதுக்கூட ஆங்காங்கே சிரிப்பலைகளை உண்டு பண்ணி விட்டன! Quite Interesting & Humorous!

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : அதை விட - "மூடிய விழிகளும்...திறக்கும் இமைகளும்" என்ற தலைப்பு பொருத்தமாக இருக்குமல்லவா ? அரைத் தூக்கத்தில் நான் பதிவிட்டதையும் ; பாதி விழித்த நிலையில் நீங்கள் படித்ததையும் சுட்டிக் காட்டுமே..!! lol !

      Delete
  37. காலை வணக்கங்கள் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  38. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  39. பழைய நினைவுகள் அருமை ஆசிரியரே,இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாததால் தெரிந்தவர்கள் கருத்துக்காக காத்திருக்கறேன்.

    ReplyDelete
  40. இந்த மாத இதழ்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது ஆசிரியரே,எதுவும் சோடை போகவில்லை.
    விரிவான பதிவை மதியம் பதிகிறேன்.
    காமிக்ஸ் ஓவர் டோஸாக போக வாய்ப்பே இல்லை.அந்த சிந்தனை உங்களுக்கு தேவையும் இல்லை.
    அனைத்திற்குமான மையப்புள்ளி அதுவே.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //விரிவான பதிவை மதியம் பதிகிறேன்.//

      பதியுங்கள்...பதியுங்கள் !!

      Delete
  41. பிப்ரவரி நான் ரொம்ப நாட்களாக
    எதிர் பார்த்த திகில் நகரில் டெக்ஸ்
    மற்றும் என் தேவதை மாடஸ்டி
    இருவரும் வருவதால் களை கட்ட போகிறது

    ReplyDelete
  42. என் உயிரிருக்கும் வரை காமிக்ஸ்
    எனக்கு ஓவர் டோஸாகாது
    காமிக்ஸே என் மூச்சு

    ReplyDelete
  43. அந்த இரண்டாவது இதழ்
    யார் அந்த மினி ஸ்பைடர்தானே

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : பின்னி விட்டீர்கள் நண்பரே !

      Delete
    2. சரியாக யூகித்ததற்கு வாழ்த்துகள் செந்தில் அவர்களே! :)

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பர் செந்தில் அவர்களே,

      Delete
  44. காமிச்சே ஓவர்டோஸ் ஆகிப் போகிறதோ.////-- A Big noooooooooooo sir

    ReplyDelete
  45. 1984....பள்ளி பாட புத்தகங்களும் பைபிளும் தவிர மற்ற புத்தகங்கள் படிக்க தகுதியற்றவை என்ற விஷயத்தி்ல் கண்டிப்பான மற்றபடி கனிவான கிறித்தவ பள்ளி டார்மிட்டரிகளில் தொடர்ந்த வருடங்கள் அவை ....மாயாவி சிவா போன்றோர் எழுதுவதை படுக்க ஆவல் ...

    @ எடிட்டர்....பதிவு. படிக்க சுவை..

    சில இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தது......

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : "திகில்" என்ற அந்தப் பெயரும்..பேய்-பிசாசு அட்டைப்படமும் ஒரு மைனஸ் என்பது இப்போது புரிகிறது சார் !

      Delete
  46. வெளியூரிலேயே இருப்பதால் இன்னும் வீட்டில் உள்ள பார்சலை பிரிக்க முடியவில்லை...
    அந்த குறையை சரிக்கட்டி கொண்டிருப்பது உங்களது அடை மழை பதிவுகளே..

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : வான்மழை ஓய்ந்த போதிலும் நம் அடைமழை நின்றபாடில்லை தான் !!

      Delete
  47. மதியில்லா மந்திரி – இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை இதுதான். வழக்கமான நமது மந்திரியாரின் கொக்கு மாக்கான தந்திரம்கள் கடைசியில் அதுவே அவரை பாதாளத்தில் தள்ளிவிடும் இந்த நகைச்சுவை தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் அமைந்தது ரசிக்கும்படி இருந்தது. வண்ணத்தில் இவர் கலக்கலாக இருந்தார். இனி ஆண்டுக்கு ஒரு புத்தகம் இவருக்கு என்று கண்டிப்பாக ஒதுக்குங்கள்.

    ReplyDelete
  48. டெக்ஸ் – ஒரு விறுவிறுப்பான கதை, முதல் பக்கத்தில் இருந்து கடைசி வரை எக்ஸ்பிரஸ் வேகம். டெக்ஸ்க்கு ஈடு கொடுக்கும் வித்தியாசமான வில்லன். வழகமான டெக்ஸின் சவடால் வசனம் அதிகம் இல்லாத கதை, அவரை இந்த கதை ஒரு யதார்த்த நாயகனாக பார்க்க செய்தது இதன் வெற்றி. வழக்கமான (அதிக) அதிரடி இல்லாமல் ஒரு சிறந்த துப்பறியும் கதை படித்த திருப்தியைதந்தது. புத்தாண்டு ஒரு சிறந்த கதையுடன் அமைத்தது சிறப்பு.

    குறை: சில எழுத்து பிழைகள் (கோடி -> கொடி)

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //வழகமான டெக்ஸின் சவடால் வசனம் அதிகம் இல்லாத கதை, அவரை இந்த கதை ஒரு யதார்த்த நாயகனாக பார்க்க செய்தது//

      கதையில் flow வெகு இயல்பாய் சென்ற பொழுது வம்படியாய் அதிரடி வரிகளை உள்ளே நுழைக்கத் தோன்றவில்லை ! அது தான் இந்தக் கதைக்கும் பொருந்துமென்று நினைத்தேன் ! Glad it worked !!

      Delete
  49. விஜயன் சார், போகிற வேகத்த பார்த்தா கடந்த வருட மொத்த பதிவுகளை 6 மதத்திலேயே கடந்து விடுவோம் போல இருக்கு! வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : இந்த அழகில் - "பதிவுகளில் சிக்கனம்" என்பது தான் எனது புத்தாண்டுத் தீர்மானமாய் இருந்தது !!

      Delete
    2. செலவுகளில் சிக்கனம் பாருங்கள். ஆனால் பதிவுகளில் சிக்கனம் என்பதை இக்கணம் முதல் மறந்துவிடுங்கள்.

      Delete
    3. Rajendran A.T : இரண்டிலுமே "சிக்கனம்" நாம் அறிந்திருக்கா விஷயம் சார் !

      Delete
  50. 1988 முதலாகதான் (4ஆம் வகுப்பு 'ஆ' பிரிவு ஹி ஹி!) எனக்கு லயன், முத்து, மினி லயன் அறிமுகமானது. அந்த சமயத்தில் ரெகுலர் புத்தகக் கடைகளில் (சென்னை & காஞ்சிபுரம்) லயனும் முத்துவும் மட்டுமே என் கண்களுக்குத் தென்பட்டிருந்தது. மினிலயன் அபூர்வமாகப் பழைய புத்தகக்கடைகளில் கிடைத்தது.

    அதன் பின்னர் எப்போதாவது வெளியூர் செல்லும்போது (திருச்சி, பெரம்பலூர் பகுதிகள்) புதிய புத்தக்கடைகளில் அடிக்கடி திகில் தென்பட்டிருந்தாலும் அது லயன், முத்து அளவுக்கு வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டிருக்கிறது. சிறுவயதில் புத்தகங்களைப் புரட்டும்போது கார்ட்டூன், காமெடி, ஆக்க்ஷனைத்தாண்டி ரியலிஸ்டிக்கான விதத்தில் வரையப்பட்ட சித்திரங்கள் அட்ராக்ட் பண்ணியதில்லை. இதனால் லயன், மினி லயன் செய்த அட்ராக்ஷனை முத்துவும், குறிப்பாக திகிலும் எனக்கு செய்யவில்லை. ஒரு 8-10 ஆண்டுகள் கழித்து நண்பர் ஒருவரிடம் அனைத்து திகில் இதழ்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது புதியதொரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. Probably something to do with age factors!

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : Maybe "திகில்" அந்த நாட்களில் நம் வயசுகளுக்கு மீறிய சமாச்சாரமோ - என்னவோ !

      Delete
  51. தீபாவளி வித் டெக்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். டைனோசரின் பாதை ஒரு அட்டகாசமான கதை. பல விதங்களில் டைகரின் தங்க கல்லறை சாயல் உள்ளது. 2015ன் டாப் டெக்ஸ் கதை இதுதான்

    ReplyDelete
    Replies
    1. SIV : அட..2 மாதங்கள் பின்தங்கியுள்ளீர்களே நண்பரே..! பொங்கல் விடுமுறைகளின் போது எட்டிப் பிடித்து விடுங்களேன் - நடப்பு இதழ்கள் வரையிலும் ?

      Delete
  52. My guess
    Second predicted superhit must be
    Dragon nagaram

    ReplyDelete
  53. ஞாயிறு வழக்கம் போல் பதிவிட்டதற்கு நன்றி.!

    ஆர்ச்சின் கால எந்திரமான கோட்டையில் ஏறி ஒரு ரவுண்ட் வந்தது போல் பிரமை.! சூப்பர்.!

    திகில் காமிக்ஸை பார்த்தாலே எனக்கு ஏனோ .,உவ்வே.....தான் ஏனோ தெரியவில்லை.எனக்கு அடிப்படையில் பேய்மற்றும் மாயாஜால அமானுஷ்ய கதைகள் பிடிக்காது.ஒருவேளை சிறுவயதில் இருந்து இரும்பு கை மாயாவி போன்ற துப்பறியும் கதைகளுக்கு பழகிவிட்டதாக நினைக்கிறேன்.!

    // "காமிக்ஸ் ஓவர்டோஸ்.!"//

    அப்படியெல்லாம் இல்லை.இப்பொழுதுதான் திருப்தியாக உள்ளது.! முன்பெல்லாம் இரவு தூக்கத்தில் காமிக்ஸை அள்ளுவதுபோல் அடிக்கடி கனவு வந்து ஏமாறுவேன்.! தற்போது ஆழ்மனது திருப்தி அடைந்துவிட்டது.!கனவுகள் வருவதில்லை.!

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : கனவுகளுக்கு எல்லைகளை வரையறுப்பானேன் சார் ? எனக்கு இன்னமும் வண்டி வண்டியாய் கனவுகள் வருவதுண்டு - இந்த நாயகரை - அந்த நாயகரை தடித் தடி ஸ்பெஷல் இதழ்களில் பார்த்திடுவது போல் !!

      Delete
    2. //தடித் தடி ஸ்பெஷல் இதழ்களில் பார்த்திடுவது போல்.//

      உங்கள் கனவு நனவானால் நாங்கள் எல்லோரும் சந்தோசப்படுவோம்.!

      Delete
    3. Madipakkam Venkateswaran : தொடர்ந்து கனவு காணுங்கள் சார் ; உங்கள் கனவுகள் தான் பின்னாட்களில் எனதாகிப் போகின்றன !!

      Delete
  54. ஆசிரியர் அவர்களுக்கு ...

    முதல் முறையாக உங்கள் பதிவு வாய்விட்டு சிரிக்க வைத்தது ...

    அந்த இரண்டாவது இதழ் ...

    யார் அந்த மினி ஸ்பைடர் ..

    சரியா சார் ...


    கண்டிப்பாக நமது காமிக்ஸ் இதழ்கள் ஓவர் டோஸாக போகாது ..சார் ..வேண்டுமானால் மாதா மாதம் வரும் நான்கு காமிக்ஸ் இதழ்களால் நேரமும் ..பணமும் மிச்சமாகிறது என்பது தாம் உண்மை ...

    இது என்ன புதுகதை என்கிறீர்களா ?...உண்மை சார் ...அனுபவத்தில் சொல்கிறேன் ...முதலில் எல்லாம் மாதம் ஒரு காமிக்ஸ் வரும் பொழுது வேறு காமிக்ஸ் கிடைக்காதா ..பழைய காமிக்ஸ் ஏதாவது கிடைக்காதா என்று பழைய புத்தக கடைகளை தேடி ஓடுவதும் ...அப்படியே கிடைத்தாலும் அதிக விலை என்றாலும் (அது ஐம்பது ரூபாய் ..நூறு ரூபாய் என்றாலும் எனக்கு அதிகமே ) வாங்கி நேரத்தையும் ....பணத்தையும் இழந்த நான் இப்போது எல்லாம் எந்த பழைய புத்தக கடையையும் எந்த ஊரிலும் தேடி அலைவதில்லை ...அப்படியே கண்ணில் பட்டாலும் அதிக விலை சொன்னாலும் தவிர்த்து விடுகிறேன் ..காரணம் மாதா மாதம் தவறாமல் வரும் காமிக்ஸ்களும்....அதில் மறுபதிப்புகளும் ..அனைத்து பழைய இதழ்களுமே விரைவில் ஒவ்வொன்றாக மறுபதிப்பு என்ற தங்களின் உறுதி மொழியும் எங்கள் பாக்கெட்டை பத்திர படுத்தி வருகிறது ...

    இது மட்டுமல்லாமல் மாதம் நான்கு காமிக்ஸ் இதழ்கள் வந்தாலும் இரண்டு நாளில் ...அல்லது மூன்று நாளில் அனைத்தையும் படித்து விட்டு அடுத்த வாரத்தில் இருந்தே அடுத்த மாத இதழுக்கு நாங்கள் ஏங்கி கொண்டு இருக்க ....


    காமிக்ஸ் ஆவது ஓவர் டோஸாவது ...சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார் ...

    ReplyDelete
    Replies
    1. ///முதல் முறையாக உங்கள் பதிவு வாய்விட்டு சிரிக்க வைத்தது ...//

      தலீவரே, நல்லவேளையா "என் வாழ்க்கையில் இப்பத்தான் முதல்முறையா சிரிக்கிறேன்"னு சொல்லாமவிட்டீங்களே!

      Delete
    2. Erode VIJAY : இதுநாள்வரை 'மனசுக்குள் மத்தாப்பூ" கொழுத்திக் கொண்டிருந்த தலீவர் இப்போது தான் வீதிக்கு வந்து முதன்முறையாக ராக்கெட் விடுகிறார் போலும் !!

      Delete
    3. சூப்பர் சூனாபானா தலைவரே
      நானும் 2 கதை பற்றி கணித்தது சரிதான்

      உங்களிடம் எடி சார் இனி கதைகள் பற்றி கேள்விகள் கேட்கமாட்டார்

      Delete
  55. நேற்று தான் இம்மாத நமது பார்சல் இதழ்களை கைபற்றினேன் சார் ...பார்சலை பிரித்ததும் அடேயப்பா ...அசந்து விட்டேன் ..

    டெக்ஸ் வில்லர் அட்டை படத்தை பார்த்து விட்டு தான் ...இங்கே பதிவிலேயே அமர்கள படுத்தி இருந்தாலும் நேரில் இன்னும் அட்டகாசம் சார் ..கண்டிப்பாக இந்த வருட சிறந்த அட்டைப்படமாக இது தேர்வு பெறும் ..

    மேலும் ஒவ்வொரு மாத இதழ்களிலும் ஏதாவது ஒன்று எதிர்பார்ப்பை குறைக்கும் இதழாக அமைவது உண்டு ..(ஹீஹீ ...பயண பாதை பாதிப்பு குறைய வில்லை சார் ..)..ஆனால் இம்முறை டெக்ஸ் ...மந்திரி ...ஷெல்டன் ...என்னை அதிகம் கவர்ந்த பாம்பு தீவு மறுபதிப்பு என ஒவ்வொன்றும் ஆவலை கிளப்புகிறது ...இந்த மாதம் இப்படி என்றால் அடுத்த மாதமும் டெக்ஸ் ..மாடஸ்தி ...லக்கி ...மஞ்சள் பூ மர்மம் என இப்போதே பர பரக்கிறது ..இனி ஒவ்வொரு மாதமும் இப்படி தான் போல ...பட்டையை கிளப்புங்கள் சார் ...

    நேற்று நான்கு இதழ்களில் எதை முதலில் படிக்கலாம் ..என குழப்பத்திலேயே மணி துளிகள் கழிய டெக்ஸ் ன் அட்டைப்படத்தை விட்டு வேறு பக்கம் பார்வை திரும்பாத காரணத்தால் சட்டத்திற்கொரு சவகுழியே முதல் தேர்வானது ..

    வாவ் ...ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பர பர...விறுவிறுவென பறந்து சென்றது ..டெக்ஸின் குதிரையை அடக்கும் ஆரம்ப காட்சியே தூள் பறக்க ....கடைசி வரை புழுதி குறைய வில்லை ...அடங்காத குதிரை போல புழுதி பறக்க நானும் கதையின் ஊடே பறந்து சென்றேன் ...

    அதிலும் ஓவியங்கள் செம நேர்த்தி சார் ..நாமும் கெளபாய் உலகில் ஒன்றி நிஜத்தில் உழல்வது போல ஒரு உணர்வு ...54...ஆ...இல்லை 45 ஆம் பக்கமா நினைவு இல்லை ...அலுவல் வந்து விட்டேன் ...அதில் வில்லன் ஷெரிப் எதிரிகளை கொன்று விட்டு ஊரில் திரும்பும் பொழுது அந்த வஞ்சனையான மென் சிரிப்பு முகமே அவனது அயோக்கிய தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ...

    மொத்ததில் பழைய டெக்ஸ் சாகஸங்களை மிஞ்சுகிறது இந்த இதழ் ...

    அதனை முடித்த கையோடு மந்திரி யாரையும் ஓகே செய்து விட்டேன் ..என்னை பொறுத்த வரை சிறுசிறு கதைகள் அவ்வளவாக என்னை கவர்வது இல்லை ...(திகிலுக்கும் இந்த பதில் பொறுந்தும் சார் )..ஆனால் மந்திரியாரை பொறுத்தவரை எப்போதும் ஏமாற்றுவது இல்லை ..முழு இதழில் அவரின் முழு சாகஸமும் என்றாலும் எதுவுமே குறை வைக்காமல் ஒவ்வொரு கதையுமே சிரிக்க வைத்தது என்பதே உண்மை ..என்னை கேட்டால் மந்திரியாருக்கு இன்னமும் கூட இடத்தை சேர்த்து தரலாம் ...

    மனதை சந்தோச படுத்திய ...திருப்தி படுத்திய மற்றொரு இதழ் ...

    ம் ....மறந்து விட்டேனே ...டெக்ஸ் இதழில் இந்த ஓவியர் வேறு நாயகருக்கு வரைந்துள்ளார் ..யார் என தெரிகிறதா என கேட்டு இருந்தீர்கள் ...சில இடங்களில் பார்க்கும் பொழுது

    சிஸ்கோ ...இதழுக்கு வரைந்தவர் போல உள்ளது ...சரியா சார் ....

    ReplyDelete
    Replies
    1. இல்லை தலீவரே..! காரிகன் கதைகளுக்கு சித்திரம் போட்டவர் !!

      Delete
    2. என்னை கேட்டால் மந்திரியாருக்கு இன்னமும் கூட இடத்தை சேர்த்து தரலாம் ...
      +111111111111111111111111111111111111111111111111111111111111111

      Delete
    3. kabdhul : மந்திரியாரின் கதைகள் அனைத்துமே இதே தரத்தினில் இருப்பதில்லை என்பது தான் யதார்த்தம் ! ஒருசில கதைகளில் மொழிபெயர்ப்பினில் நகைச்சுவையை தக்க வைப்பதும் படு சிரமமாய் இருந்திடும் ! So மந்திரியாரை கவனமாகவே கையாள்தல் அவசியம் !

      Delete
  56. இப்போதே பாருங்கள் சார் ..

    இம்மாத இதழில் இரண்டை நேற்றே படித்தாகி விட்டது ...இன்று மீதி இரண்டும் முடிந்து விடும் ...நாளை முதல் அடுத்த மாத இதழுக்கு ஏங்க வேண்டும் ...இப்படி காமிக்ஸ் பற்றாகுறையால் தத்தளித்து கொண்டு கட்டு மரத்தில் மிதந்து கொண்டு இருக்கும் பொழுது ஓவர் டோஸா ...ஓவர் டோஸா ன்னு

    ஏன் சார் ...இப்படி ....;-(

    ReplyDelete
  57. ஹலோ சார் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    இந்த மதம் வந்த இரண்டு புத்தகங்களை படித்து விட்டேன், சட்டத்திற்கு ஒரு சவக்குழி, ரொம்ப நாள் கழித்து அழகாக நேர் கோட்டில் பயணித்து அதிரடியாக முடிந்தது 7/10. என்ன கார்சன் தான் மொக்கை பீஸ் ஆக்கி விட்டார்கள்
    சு மந்திர காலி - சிரிப்பு மழை :) 8/10
    என் Wife இன் கமெண்ட் - இந்த புக் கைல இருந்தாதான் சிரிக்கிறிங்க ;)

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : நானும் கூட கார்சன் ஏதோ அதிரடி பண்ணப் போகிறார் என்று பார்த்தால் - மனுஷன் வருத்தப்படா வாலிபர் சங்கத் தலைவர் ரேஞ்சுக்குத் தான் பணி செய்கிறார் !

      இது சிங்கத்தின் solo வருகை !

      Delete
  58. சார் ஒரு கேள்வி போன பதிவிலேயே கேட்டு இருந்தேன் நீங்கள் பார்த்திர்களா என்று தெரியவில்லை, ஒரு 6 கலர் மறு பதிப்பு (சிக் பில், கேப்டன் பிரின்ஸ், ரிபோர்ட்டர் ஜானி) 65 விலையில் கொடுக்கலாமே. கொஞ்சம் பரிசிலித்து பாருங்களேன் Please :(

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : ரெகுலர் சந்தாவிலேயே நாம் இன்னமும் 40% பின்தங்கி நிற்கிறோம் நண்பரே ! அதனை சரி செய்ய முடிந்தால் புது முயற்சிகளுக்குள் கால் பதிக்க சிந்தனைகளைச் செலுத்தலாம் !!

      Delete
    2. கதையும் தரமும் நன்றாக இருந்தால் -40% இல் இருந்து +40% போக லவய்ப்பு உண்டு ஆசிரியர் அவர்களே

      Delete
    3. கிரிதரன் சார்.!

      வெள்ளத்தில் காமிக்ஸ்க்கு பாதிப்பு இல்லையே.?

      Delete
    4. இல்லை நண்பரே, மடிபாக்கத்தில் எங்கள் வீடு இருக்கும் பகுதி ரொம்ப சேப்,சோ ஒரு பாதிப்பும் இல்லை :)

      Delete
    5. நம் ஏரியாவில் வெள்ளத்தின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்த போதும் பக்கத்துவீட்டில் வெள்ளம் புகுந்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் காமிக்ஸை பரணில் ஏற்றியபோது.எனக்கு உங்களின் நினைவுதான் வந்தது.!நல்லவேளையாக கடவுள் புண்ணியத்தால் நம் காமிக்ஸ் தப்பித்து.!

      Delete
  59. மொத்தம் 4 கதைகளும் அருமை.எனது பார்வையில் மதிப்பென் 8.5/10.
    இதே போல் வருடம் முழவதும் தொடர ஆசை.

    ReplyDelete
    Replies
    1. Suryantex Suresh Chand : நன்றிகள் பல !! நிச்சயமாய் ஒவ்வொரு மாதமும் ஒரு சலிப்பில்லா விருந்தினைப் படைக்க முயற்சி செய்வோம் !!

      Delete
  60. எடிட்டர் விமர்சனம் எழுத ஆசைதான் ஆனா தமிழ் typing முடியல இன்னும் உங்க கிட்ட காத்துக வேண்டியது உங்க சுறுசுறுப்பு ஆனா முடியல நைட் 2 மணிக்கு பதிவு ! traveling பதிவு யு ஆர் amazing ! இருந்தாலும் நீங்க சொன்னதல ஒரு முயற்சி ! மந்திரி சூப்பர் ஆனா இந்த கிரெடிட் பரணிதரன் பெங்களூர் அண்ட் எனக்குதான் (சாரி) ,நாங்க ரொம்ப நல்ல மந்திரி வேணும் கேட்டதால ! டெக்ஸ் rocks as usual ! ஷெல்டன் வெல்டன் ! மாயாவி முடியல ?! என்ன பண்றது அதநாலா ஓகே! அப்புறம் சிக்கனம் அது இது இன்னு பதிவ கம்மி பண்ணிராதிங்க சொல்லிபோட்டேன் தெய்வ குத்த மயிரும் ஆமா!

    ReplyDelete
    Replies
    1. kabdhul : சிறுகச் சிறுகப் பழகிடுங்கள் நண்பரே....நானும் கூட தமிழ் டைப்பிங்குக்கு செம மொக்கை போட்டவன் தான் ஆரம்பத்தில்..! இப்போது பழகி விட்டது ! Anyways முயற்சிக்கு நன்றிகள் !

      Delete
  61. திகிலின் ஆரம்ப மூன் று இதழ்கள் ...முதல் இதழை வாங்கிப் படித்துவிட்டுஒரு அ ஞ்சலட்டையில் அதன் குறை நிறைகளை எழுதி அனுப்பியிருந்தேன்..ரத்தினச் சுருக்கமாக அது வாசகர் கடிதத்தில் வந்து இருந்ததை இன்றும் கூட வைத்து இருக்கிறேன் ..ஆனால் அன்றைக்கு இருந்த ரசனையின்படி முழுக் கதைகளை எதிர்பார்த்து இருந்த போது குட்டிக் கதைகளின் தொகுப்பை மனம் ஏ ற்றிடவில்லை... ஏன்..?இன்றைக்கு வந்த ஸ்மர்ப் பும் கூட........மதியில்லா மந்திரியின் தொகுப்பும்,விஞ் சா னியின் லியனார்டோ ..கதைகளுமே முழுத் திருப்தி யை
    தரவில்லை என்பதே உண்மை ..அன்றைய திகில் தோற்க காரணம் குட்டிக் கதைகளுக்கு மட்டும் நம் ரசனை ஒத்து வராததே ...தலைவாழை இலை விரித்து வைத்து அதில் கூட்டு,அப்பளம்பொ ரியல்,ஊறுகாய் ,பாயாசம் வைத்து ருசி பார்த்துக் கொண்டு இருக்கும்போது சோறும் சாம்பாரும் வைக்காமல் அவ்வளவுதான் விருந்து எழுந்திருங்கள் என்று சொன்னால் எவ்வளவு ஏமாற்றமோ அவ்வளவு ஏ மாற்றம் ..அது இன்று வரை மாறவில்லை என்னைப் பொறுத்தவரை ....

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : //அன்றைய திகில் தோற்க காரணம் குட்டிக் கதைகளுக்கு மட்டும் நம் ரசனை ஒத்து வராததே ..//

      தொடரும் உங்கள் வரிகளைப் படிக்கும் போது - இன்றைக்கும் கூட அந்த ரசனைப் பாங்கு மாறியிருப்பதாகத் தெரியவில்லையே சார் !

      Delete
  62. அன்புள்ள. எடிட்டர் மற்றும் அனைத்து தோழர்களுக்கும் வணக்கம். விஜயராகவன் சார் வந்த இரண்டாவது நாளே என்னுடைய சுய புராணம் பாட ஆரம்பித்து விட்டால் இவனிடம் ஏன் கேட்டோமென்று வருத்தப்படநேரிடும். எனவே சிறிது காலம் போகட்டுமே. மேலும் நமது எடிட்டர். போல சிறந்த எழுத்தாற்றலும் எனக்கில்லை. Please. திகில் காமிக்ஸ் எடுபடாமல் போனதற்கு என்னை பொறுத்தவரை முழு நீள காமிக்ஸ் என்று பழக்க பட்டு இருந்த சமயத்தில். சிறுகதைகள் காமிக்சாக வந்தது திருப்தி அளிக்க வில்லை. அந்த காலத்தில் சினிமாவைகூட நன்றாக இருக்கிறதா என்று கேட்பவரைவிட எத்தனை ரீல் என்று கேட்பவர்தான் அதிகம். Full meals எதிர் பார்ப்பவர்களுக்கு Snacks கிடைத்ததுதான் என்னை பொருத்தவரையில் திகில் தோல்விக்கு காரணமாக தோன்றுகிறது. டெக்ஸ் வில்லராக இருந்தாலும் கூட மூன்று நான்குபக்க கதைகளாக இருந்தால் ரசிக்கமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. கடலூர் ஏ.டி.ராஜேந்திரன் வனச்சரகர் சரியா சார்.?

      Delete
    2. Rajendran A.T //அந்த காலத்தில் சினிமாவைகூட நன்றாக இருக்கிறதா என்று கேட்பவரைவிட எத்தனை ரீல் என்று கேட்பவர்தான் அதிகம்.//

      Valid point !!

      Delete
  63. சார் அருமையான பதிவு எம் தலைவர் ஸ்பைடர் பற்றிய எழதியதற்கு நன்றிகள்
    இம்மாத இதழ்கள் அனைத்து சூப்பர் டெக்ஸ் கதையில் வழக்கப்படி வசனங்கள் அருமைசார் மதி.மந்திரி இத்தனை நாள் கிடப்பில் போட்டது ஏனோ ??

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடர் ஶ்ரீதர் : உங்கள் தலைவர் இல்லாமல் ஒரு பின்னோக்கிய பார்வை சாத்தியமா - என்ன ?

      Delete
  64. டிட்டர் சார் மாயாவி என்ன பாவம் செய்தார்.இவ்வளவு கேவலமாக பாம்புத்தீவு அட்டையில் காட்சியளிக்கிறார். ஈல் மீன் மாயாவி கடிப்பதற்கு பதிலாக முகத்தை பார்த்து ஈ என்று சிரிக்கிறது. தயவு செய்து அட்டையில் கவனம் தேவை. இதுவே. கடைசி பதிப்பாக இருக்கப்போகிற கிளாசிக் இதழ்களில் கவனம் தேவை.

    ReplyDelete

  65. எடிட்டர் சார்,
    திகிலின் அட்டைப்படங்கள் அந்நாட்களில் பீதியை கிளப்பியதுபோல , இப்போது சில டைட்டில்கள் புளியைக் கரைக்கின்றன.

    உதா -
    சட்டத்திற்கு ஒரு "சவக்குழி "
    இனி எல்லாம் "மரணமே "
    "மரணத்தின் " முத்தம்

    இதுபோல தலைப்புகளை கொஞ்சம் மாத்தி யோசியுங்கள் சார் ப்ளீஸ்.!

    குழந்தை மிரளுது (என்னைச் சொன்னேன்) :-)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : மிரளும் குழந்தைக்குக் கருப்பசாமி கோவிலில் மந்திரித்த தாயத்தைக் கட்டி விட்டால் எல்லாம் சரியாகிப் போகும் !

      Delete
    2. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

      // மரணத்தின் முத்தம்.//
      எங்களுக்கு என்னவோ இந்த தலைப்பு கிளுகிளுப்பாகத்தான் இருந்தது.!

      Delete
  66. எடிட்டர் சார் சந்தா எண்ணிக்கை 60% மட்டுமே தொட்டிருப்பது உண்மையில் கேட்கும் எங்களுக்கு வயிற்றில் பயத்தை உண்டாக்கியது. உங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்க கவலையளிக்கிறது. வரும் ஆண்டிலாவது அடுத்த. ஆண்டு சந்தா தொகையை ஆண்டின் இறுதியில் அறிவிக்காமல் சற்று முன்னரே. அறிவிக்கவும் .

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : இதற்கும் முன்பை அறிவிப்பதென்பது நடைமுறை சாத்தியமாகாது சார் ! And எப்போது அறிவிப்பினும், டிசம்பர் இறுதி முதலாய்த் தான் வேகமே பிடிக்கின்றது ! So அறிவிப்புத் தேதிக்கும் ; சந்தாக்களின் வேகத்துக்கும் பெரியதொரு தொடர்பிருப்பது போல் தோன்றவில்லை !

      Delete
    2. ///சந்தாக்களின் வேகத்துக்கும் பெரியதொரு தொடர்பிருப்பது போல் தோன்றவில்லை !///-- இந்த கருத்தில் நான் மாறுபடுகிறேன் சார்...
      கொஞ்சம் முயற்சி செய்து அடுத்து ஆண்டு சந்தாவை இந்த ஆண்டு ஈரோடு விழாவில் அறிவித்து பாருங்கள் சார்..
      நல்ல தொடக்கம்+4மாதங்கள் நேரம், நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்கும் சார்... பல்வேறு காரணங்களால் இறுதி நேரத்தில் சந்தா கட்டாமல் போய்விடுகிறது....ஒரே முயற்சி, மாற்றம் இல்லை எனில் பேக் டூ ஓல்டு ட்ராக் சார்...
      ஆனால் கூடுதல் பலன் இருக்கும் என கிளாவின் பட்சி சொல்கிறது சார்....

      Delete
    3. சேலம் டெக்ஸ் விஜயராகவன்.!

      அருமையான கருத்து. தீபாவளிக்கு முன்( ஒரு மாதம்) சந்தா அறிவித்தால் நன்றாக இருக்கும்.தொகை மட்டும் அறிவித்தால் போதுமானதாகும்.!மற்றவை வழக்கம் போல் கதைகளை அறிவித்தால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.!

      Delete
  67. ஷெல்டன் - ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்..வழக்கம் போல விறுவிறுப்பான கதை.. இரட்டை ஹோனஸ்டி. இந்த கதையில் ஷெல்டன் அதிகம் சாதித்த மாதிரி தெரியவில்லை... ஒரு டம்மி பீசாக தெரிந்தார். கடைசி கட்டம் திருப்பம் எதிர்பாராதது.

    ஷெல்டன் வழக்கம் போல் ஏமாற்றவில்லை.

    ReplyDelete
  68. அடுத்த மாதம் வரவுள்ள மாடஸ்டி கதையின் விளம்பர படம் செம கலக்கல்.. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore :நாளொரு மேனி..பொழுதொரு வண்ணமாய் "இளவரசிக் கட்சி" வலு கூடிக் கொண்டே செல்கிறதே !!

      Delete
    2. // இளவரசி கட்சி //

      அப்பாடா.! " வசிஸ்டர் வாயால் பிரம்மஸ்ரீ பட்டம்.! "

      Delete
    3. விஜயன் சார், நான் எப்பவுமே இளவரசி கட்சிதான்... இளவரசி கார்வின் கதையில் எனக்கு பிடித்தது இருவருக்கும் இடையில் ஒடும் நட்பு. அது தற்சமயம் வரும் கதைகளில் மிஸ்ஸிங் :-(

      Delete
    4. பரணி சார்.!

      //மாடஸ்டி கார்வின் நட்பு.//


      உண்மை.! கதையின் சிறப்பம்சமே இதுதான்.! இதை புரிந்தால் மட்டுமே சிறப்பாக கதையை படித்து ரசிக்கமுடியும்.!

      பழி வாங்கும் புயல், மரணப்பிடி இவையிரண்டு கதைகளும் மாடஸ்டி கார்வின் நட்பிற்கு மகுடம் சூட்டிய கதைகள்.இதை வேண்டுமானால் மறுபதிப்பு செய்யலாம்.!

      Delete
    5. பார்ரா, கொஞ்சம் தொண்டர்கள் சேர்ந்த உடனே சுதி மாறுது...
      அடுத்த ஆண்டு 2 கதைகளை கேளுங்கள் MV சார்.. மறுபதிப்பெல்லாம் ஓவர்..
      பைத வே மீ டூ இளவரசி ரசிகன் தான்...ஹி.ஹி..

      Delete
    6. எம்.வி.சார்!மறுபதிப்பில் கழுகு மலைக்கோட்டையை விட்டு விட்டீர்களே..?!

      Delete
    7. டெக்ஸ் விஜய ராகவன்.!

      அட்டகாசமான சூப்பர் டூப்பர் கதைகளையெல்லாம் எடிட்டர் ஆரம்பகாலத்திலேயே வெளியிட்டுவிட்டார்.!தற்கால யூத் வாசகர்களும் படித்து ரசிக்கட்டுமே.!குறிப்பாக "மாடஸ்டியின் வரலாறு" கதையை கதையை தெரிந்தால் இன்னும் கதையின் வீரியம் தெரியும்.இன்னும் அதிகமான ரசிகர்களை கவர வாய்ப்பு உள்ளது.!(எப்பூடி.! பக்கத்து இலைக்கு பாயாசம் டெக்னிக்கை நானும் கத்துக்கிட்டேன் பார்த்தீர்களா.?)

      Delete
    8. குணா சார்.!

      கழுகு மலைக்கோட்டை சித்திரமும் சரி கதையும் சரி அட்டகாசமாக இருக்கும்.!

      தலைவரிடம் கோரிக்கை வைப்போம்.!எவ்வளவு போராட்டங்களை நடத்தி வெற்றி கனியை தட்டி பறித்துள்ளார்.!தலைவரே ஒரு பிராது ரெடி.!

      Delete
    9. Madipakkam Venkateswaran : மார்கழி என்பதால் தலீவர் மட்டனுக்கு முழுக்குப் போட்டிருக்கக் கூடும் என்பதால் - சுடச் சுட வாழைப்பூ வடையை மறுபடியும் கையில் எடுத்து விட வேண்டியது தான் !!

      Delete
  69. @ FRIENDS : ஜனவரி இதழ்கள் தொடர்பாக புதியதொரு POLL துவங்கியுள்ளது - பக்கத்தின் இடது மேல் கோடியில்..!

    ReplyDelete
  70. வான் ஹாம்மே - இந்த மனுசன பத்தி ஒருவார்த்தை... எந்த கதை தளம் எடுத்தாலும் மனுஷன் சிக்ஸ் தான் அடிக்கிறார்.. விறுவிறுப்பான கதை அமைப்பில் இவர் ஒரு வெளிநாட்டு "பாக்யராஜ்" என்றால் மிகையில்லை.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : சின்ன திருத்தம் : நம்மாளை வேண்டுமானால் "உள்நாட்டு வான் ஹாம்மே" என்று சொல்லிக் கொள்ளுங்கள் - தப்பில்லை !! :-)

      Delete
  71. எடிட்டர் சார். 450 ரூபாய் விலையுள்ள டைகர் ஸ்பெஷலுக்கு நீங்கள் கிட்டதட்ட ஆறுமாத கால அவகாசம் கொடுக்கிறீர்கள். இதற்கு மட்டுமன்றி இதுபோன்ற ஸ்பெஷல் வெளியீடு. அனைத்துக்கும் இந்தநிலை என்னும்போது. ஆண்டு சந்தா ரூபாய் 4000 எனும்போது. அதற்கும் கால அவகாசம் தேவையில்லையா? அறிவிப்பு வருவதே இறுதி மூன்றுமாத காலத்தில் எனும்போது முன் பதிவு டிசம்பரில் தான் வேகமெடுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ///4000 எனும்போது, அதற்கும் கால அவகாசம் தேவையில்லையா?///-- ATராஜேந்திரன் சார் பாயிண்ட்டை பிடித்து விட்டீர்கள்.. சூப்பர்.

      Delete
    2. நன்றி விஜயராகவன் சார்.

      Delete
    3. எனது கருத்தும் இதுவே!

      Delete
  72. 1984 நவம்பர் போபாலின் கொடூர விஷவாயுச் சம்பவம் சிறுவயதில் என்னை மிகவும் கலவரபடுத்தியது. விஷவாயுவை உடனே அவர்கள் நிறுத்த வேண்டும் இல்லை என்றால் காற்றின் முலம் தூத்துக்குடிவரை வந்து விடும், அப்பறம் நாமும் மேலோகம் செல்ல வேண்டியது தான் எனது சிறு மூளை அன்று சொன்னதை கேட்டு எனது மனம் விஷவாயு சிக்கிரம் நின்றுவிட வேண்டும் போபால் மக்கள் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும், விஷவாயு தூத்துக்குடிக்கு வரகூடாது என்று நாள் முழுவதும் எனக்கு பிடித்த முருக கடவுளை வேண்டி கொண்டு இருந்தது பசுமையாக நினைவில் உள்ளது.

    ReplyDelete
  73. விஜயன் சார், ஜனவரி மாதம் உங்களுக்கு பல புதிய அனுபவத்தையும் வெற்றிகளையும் கொடுத்துள்ளது என்பதை படிக்கும் போது சந்தோசமாக உள்ளது. இனிவரும் அனைத்து மாதமும் இது போன்று சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.

    ReplyDelete

  74. டெக்ஸ் கதைகளின்
    2வது கதையான

    திகில் நகரில் டெக்ஸ்

    முன்னட்டை படம் போடுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : அடுத்த வாரம் !

      Delete
  75. மதியில்லா மந்திரி - அங்கே நமது அரசியல்வாதிகளின் முக்கிய ஆயுதமான "பிரியாணியை" இந்த கதையில் புகுத்தியது ரசிக்கும் படி இருந்தது.

    எனக்கு என்னமோ இன்றைய அரசியல்வாதிகளின் தேர்தல் ஆயுதமான "பிரியாணி/பரோட்டாவை" அறிமுக படுத்தியது விருதுநகர்/சிவகாசி பக்கம் உள்ளவங்கதனோ என சந்தேகம் வருகிறது.
    கொசுறு செய்தி: தூத்துக்குடியில் தை பொங்கல் போது நண்பர்களுடன் தெருவில் பொங்கல் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடுவோம்... அவர்களை உற்சாகமாக வேலை செய்யவைக்க இரண்டு நாட்கள் இரவும் நானும் பரோட்டா வாங்கி கொடுத்த அனுபவம் இருக்கிறது. :-)

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : கல் தோன்றி - மண் தோன்றா காலத்திலேயே பரோட்டவைக் கண்டு கொண்டவர்களல்லவா - நாமெல்லாம் ?!!

      Delete
  76. மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் சார் நான். வனச்சரகர் இல்லை . கூட்டுறவு. துறையில் கணக்காளர்

    ReplyDelete
    Replies
    1. ஓ.! சாரி.! மாதம் ஒரு வாசகர் பகுதியில் பார்த்ததாக ஞாபகம்.!

      Delete
    2. உங்கள் ஞாபக சக்திக்கு பாராட்டுகள் .

      Delete
  77. நான் சிறுவயதில் படித்தது, விங் கம்மண்டோர் ஜார்ஜ் மொங்கோலியா பாலைவனத்தில் மாட்டிக்கொள்ள ஒரு மொங்கோலிய நாடோடி ஜீப் வண்டியை ஓட்டத்ரியாமல் ஒட்டி விபத்தில் மாட்டிகொள்வான். ஜார்ஜ் க்ளிதர் விமானத்தில் தப்புவார் . அது என்ன கதை மிகவும் பிடித்த கதை.

    ReplyDelete
    Replies
    1. leom : Maybe "ஒற்றன் வெள்ளை நரி".. ??

      Delete
  78. இந்த மாத வெளியிடுகள் எனது பார்வையில்,
    அ.இந்தாண்டின் தலயின் முதல் சாகசமே அசத்தலாக துவங்கி உள்ளது,அட்டைபடம் அசத்தலோ அசத்தல்,டெக்ஸ்சின் சிறந்த அட்டைப்பட வரிசையில் இது கண்டிப்பாக முக்கிய இடம் பிடிக்கும்,இந்தாண்டின் சிறந்த அட்டைப்படங்களில் ஒன்றாக இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    ஆ.வழக்கம்போலவே கதையில் வில்லன் யார் என்று தெரிந்தாலும் கதையோட்டத்தின் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்வதுதான் டெக்ஸ்சின் தனிச்சிறப்பு,கார்சனின் வருகை மிக தாமதமாய் இருந்தாலும் முக்கிய துருப்பு சீட்டாக பயன்பட்டுள்ளார்,ஆனால் அதனால் வில்லன் தனக்கு ஆப்பு வைத்து கொள்வது வேறு விஷயம்,கார்ஷனை கெஸ்ட் ரோல் கேரக்டர் என்று வைத்துக் கொள்ளலாமா?!
    இ.கதையை பொறுத்தவரை குறைவில்லை,டெக்ஸ்சின் வழக்கமான அதிரடி சரவெடி,கறுப்பின சிறுவன் ஷாம்மியின் பாத்திரம் டெக்ஸ்சின் மனிதநேயத்தை வெளிகாட்ட சரியான முறையில் பயன்படுத்தபட்டுள்ளது,நீக் லூயிஸ் கொல்லப்பட்ட உடன் அட கதை விறுவிறுப்பாக நகருமா என்று தோன்றியது,ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.ஸ்டார்க்கர் போன்ற வஞ்சக எண்ணம் கொண்டோரை சமாளிப்பது சவாலான விஷயம்தான்,டெக்ஸ் அதை அனாவசியமாக கையாள்கிறார்.
    ஈ.சித்திரங்கள் நல்ல முறையில் திருப்திகரமாக உள்ளது,ஆனால் சிறு குறையாக டெக்ஸ் ஆங்காங்கே சைடு ஆங்கிள்களில் பார்க்கும்போது வயதான தோற்றத்தில் வருவது போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.அச்சுத்தரமும் அருமை படங்கள் பளிசென்ற தோற்றத்தில் அமைந்துள்ளது.
    எ.இந்த மாத வெளியிட்டில் இதுவே முதலிடம்.மொத்தத்தில் எனது மார்க் -8/10.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //வழக்கம்போலவே கதையில் வில்லன் யார் என்று தெரிந்தாலும் கதையோட்டத்தின் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்வதுதான் டெக்ஸ்சின் தனிச்சிறப்பு,//

      Spot on !!

      Delete
  79. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  80. அ.வேயின் ஷெல்டன் வழக்கம்போல இந்த மாதமும் சோடை போகவில்லை,அபாரமான கதையோட்டம்,படிக்க ஆரம்பித்த உடன் புல்லட் ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தது போல் ஒரு உணர்வு,அட்டைபடம் கலக்கல்ரகம்.
    ஆ.அச்சுத்தரமும்,பின்னணி வர்ணச்சேர்க்கைகளும் நிறைவாக இருந்தன,குறிப்பாக மொழிபெயர்ப்பு அட்டகாசம்.
    இ.வசனங்கள் தூள் கிளப்புகின்றன,குறிப்பாக-(மரணமும்,ஜனனமும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை,கண்ணீரையோ புன்னகையையோ உதிர்ப்பது மட்டுமே நமக்கு சாத்தியம்
    (சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு கிருமியைக் கொள்வது குற்றமாகாது,ஆனால் உன்னைக் கொன்று என் கரங்களை நான் கறைப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை)
    (அட இந்த பெயர்,புகழ் எல்லாமே பல வண்ணப் பட்டாம்பூச்சியைப் போலத்தான்! நம்மை சுற்றித் தாண்டவமாடும்போது,வசீகரமாக இருக்கும்,பறந்து சென்று விட்டால் இழப்பேதும் இருக்காது
    ஈ.இதற்கு இரண்டாம் இடம் தர மனம் ஒப்பவில்லை,எனவே முதலிடத்தை டெக்ஸ் உடன் ஷெல்டனுக்கும் பகிர்ந்து அளிக்கிறேன்,இந்த இதழுக்கு மார்க் அதே-8/10.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //வசனங்கள் தூள் கிளப்புகின்றன//

      கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் ! நான் ரசித்து எழுதிய வரிகள் அத்தனையையும் இங்கே குறிப்பிட்டுள்ளதில் கூடுதல் மகிழ்ச்சி !!

      Delete
  81. மதியில்லா மந்திரியார்,எப்போதும் எனக்கு பிடித்தவரே,இந்த முறையும் ரசிக்கும்படியான முறையில் அமைத்துள்ளது,ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டும் நகைச்சுவைகள் ரசிக்க வைக்கின்றன,
    அட்டைப் படம் திருப்திகரமாக உள்ளது,அச்சுத் தரமும் ஓகே,பின்னணி வர்ணச்சேர்க்கையில் அடர் வண்ணத்தை பயன்படுத்தாமல் விட்டுள்ளது பாராட்டத்தக்கது.
    குறை எனில் இந்த ஆண்டு இன்னொரு ம.ம இல்லையே என்று ஒரு வருத்தம் இழையோடுகிறது,அடுத்தவருடமாவது மந்திரிக்கு இன்னொரு கூடுதல் இருக்கை தருவதை பற்றி பரிசீலிக்கலாம் ஆசிரியரே.
    இதற்கு எனது மார்க்-7/10

    ReplyDelete
  82. இரும்புக்கை மாயாவியின் பாம்புத் தீவு கதையை இப்போதுதான் முதன்முதலாக படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.கதை ரசிக்கும்படியாகவே உள்ளது.
    ஆரம்பகால ரசனைக்கு இக்கதை நல்லதொரு சாகசமாய் தோன்றியிருந்தால் அதில் வியப்பேதும் இல்லை.
    படிக்காத கதையை படித்த திருப்தியும்,இல்லாத கதைவரிசை கிடைத்த சந்தோசமும் கிட்டியது,
    வசன நடைகளை பொறுத்த வரை இன்னும் சற்று சுவாரஸ்யமாக மாற்றினால் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறது.
    இந்த கதைக்கு எனது மார்க்-6/10

    ReplyDelete
    Replies
    1. எஜமான்..,,சரிதானுங்கோ..,,இந்த வசனங்கள் அப்போதைக்கு சரியாக இருந்தது..!இப்போது கொஞ்சம் நெருடுகிறது!!

      Delete
    2. Arivarasu @ Ravi & Guna Karur : 1972-ல் செய்யப்பட்ட மொழியாக்கமிது ; so புராதன நெடியடிப்பதில் வியப்பில்லை ! அடுத்த மாதத்து "மஞ்சள் பூ மர்மம்" நிச்சயமாய் much better என்ற ரகத்திலிருக்கும் !

      Delete
  83. ஆறிலும் சரி,நூறிலும் சரி அறிவாளிகள் மாற்றம் காண்பதில்லை..கார்சனின் சூப்பர் பன்ச்!

    ReplyDelete
  84. இது வான் ஹாம்மே எழுதிய திரைக்கதை!உட்ச பட்ச பரபரப்பு! டாப் கியரில் பயணிக்கிறது கதை..!!

    ReplyDelete
  85. விதி எழுதிய திரைக்கதை ...

    அருமை ..அருமை ....இருபாக கதை மட்டுமல்ல 48 பக்க சாகஸத்திலும் தனது முத்திரையை பதித்து விட்டார் ஷெல்டன் ..பல வசனங்கள் அழகு ....அதையெல்லாம் ரவி அவர்கள் சொல்லிவிட்ட படியால் ...அதை தாண்டி செல்லலாம் எனில் கண்டிப்பாக ஓவியங்களை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது ...கட்டிடங்கள் ..வாகனங்கள் ...என அனைத்தும் கண் முன் புகைப்படமாக மின்னுகிறது ...க்ளைமேக்ஸ் எதிர் பாரா திருப்பம்...ஆனால் மான்ப்ரெட் கடைசியில் ஹன்னாவை நான் ஆழமாக நேசித்தேன் என்பது காதலால் போல தோன்றுகிறது .ஆனால் ஹன்னாவோ அவனுக்கு தாய் வயது போல உள்ளார் ...


    ஹானஷ்டி பழகி பார்த்தாயா ..என வினவுவதும் ..அதற்கு ஷெல்டனின் பதிலும் புன்னகையை வரவழைத்தன ...ஷெல்டன் ..டெக்ஸ் ..போல மனதிற்கு நெருக்கமாக தோன்றுவதன் காரணமே பல இன்னல்களை அதிரடியாக தாண்டுவதுடன் ...எவ்வளவு தாம் தம்மை பாதித்தாலும் கடைசியில் அவர்கள் புன்னகைப்பதுடன் நம்மையும் புன்னகைக்க வைக்கிறார்கள் பாருங்கள் ..அதில் தான் அவர்கள் வெற்றியே உள்ளது ..

    ஷெல்டன் இம்முறையும் சிக்ஸர் அடித்து விட்டார்....

    ReplyDelete
  86. பாம்பு தீவு ...

    ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்த கதை இது ..பழைய மொழி பெயர்ப்பை இப்போது எல்லாம் இக்காலத்திற்கு போல ஏற்றுவதை இதில் மறந்து விட்டீர்கள் போல ..இப்பொழுது கொஞ்சம் சிறு பிள்ளை போல தெரிகிறது சார் ..இனி வழக்கம் போல கொஞ்சம் அதில் திருத்தம் செய்து வந்தால் நலமே ...அதே போல முதல் நான்கு பக்கங்களில் கொஞ்சம் எழுத்து பிழைகள் தென்படுவதால் வேகம் குறைவது போல ஒரு எண்ணம் ..இந்த அட்டை படங்களை விட இதற்கு முன் வந்த மாயாவியின் அட்டை படங்கள் கலக்கல் சார் ..அவற்றை போலவே கொண்டு வாருங்கள் ..மற்றபடி இப்படி பெரிய அளவில் நிறைவான இதழாகவே இருந்தது பாம்பு தீவு ..

    மொத்ததில் நான்கு இதழ்களுமே மனதை கொள்ளை கொண்ட இதழ்கள் ...வாழ்த்துக்கள் ..சார் ..

    ஆனால் வழமை போல சிங்கத்தின் சிறு வயதில் ப்ரேக் ஆனதில் வருத்தமே ..அதை நிறுத்தாமல் தொடருங்கள் ...

    ReplyDelete
  87. மொழி பெயர்ப்பு அபாரம்!தமிழோட்டத்தில் இவைகள் அயல் மாெழிக்கதைகள் என்பதே மறந்து போகிறது! சூ மந்திரி காலியில் ஜெங்கிஸ்கான்,'உன் கட்டையை சித்தே நேரம் இங்கே சாத்து' என்று சொல்ல,அதே நேரம் கட்டைகளோடு ஒருவன் உள் நுளைய...தமிழுக்கு கட்டையை சாத்து என்பது பொருந்தி வந்து விட்டது,ஆங்கிலத்தில் என்னவாய் இருந்திருக்கும்,நமது எடி தமிழுக்கு சாதகமாய் எப்படி அதைக் கையாண்டிருக்கிறார் என்பதெல்லாம்,,!! அனுபவித்து,ரசித்து பெயர்த்திருக்கிறார்..!உங்களின் மொழி பெயர்ப்பு ரசனைக்கு ஒரு ராயல் சல்யூட் சார்!

    ReplyDelete