Friday, January 01, 2016

WELCOME 2016 !!


நண்பர்களே,

வணக்கம். "பதிவுகளில் சிக்கனம்" - புத்தாண்டின் கோட்பாடாய் இருந்திட வேண்டுமென்ற உத்வேகம் ஒரு பக்கமாய் மீசையை முறுக்கிக் கொண்டிருக்க, 'கெக்கே பிக்கே' சிரிப்போடு இன்னொரு பக்கம் கீ-போர்டை தட்டத் துவங்கி விட்டான் 'பதிவு பருத்திவீரன்"! அட..நேற்றைக்குத் தான் மாங்கு மாங்கென்று பதிவொன்றைப் போட்டுள்ள போது - புதுசாய் இன்றைக்கு என்ன சேதி சொல்லி பூமியைக் காப்பற்றப் போகிறாய் அப்பனே ? என்ற கேள்வி தலைக்குள் ஒலிக்கிறது ! As always, கீ-போர்டைத் தட்டும் போது மண்டைக்குள் சிந்தனைச் சக்கரங்களும் தாமாய் இயங்குமென்ற நம்பிக்கை தான் ! காத்திருக்கும் கதைகள்...நாயகர்கள்..திட்டங்கள்..அட்டவணைகள் பற்றியெல்லாம் பத்தி பத்தியாய் எழுதித் தள்ளி விட்டுள்ள நிலையில் திரும்பவும் அதே மாவை அரைத்திட ஆர்வம் எழவில்லை ! ஒரு மாற்றத்துக்கு - கொஞ்சம் லைட்டாக - ஒரு ஞானி அவதாரத்தைப் புனைய முனைகிறேன் ! "திரும்பிப் பார்க்கும் போது ; அந்த நொடியைக் கடந்து வந்தான பின்பு - நாம் அனைவருமே ஞானிகள் தான் !" எனும் போது -  here are some of my ஞானி moments !!

காலச் சக்கரத்தைத் திருப்பிட வாய்ப்புக் கிட்டிடும் பட்சத்தில் நான் செய்திட நினைக்கும் முதல் வேலை - "தங்கக் கல்லறையின்" மொழிபெயர்ப்பினைப் பட்டி டிங்கரிங் செய்திடாது - அதே பழைய கலவையோடு வண்ணத்தில் பிரசுரிப்பது ! இந்த இதழின் பொருட்டு உங்களில் ஒவ்வொருவரும் எத்தனை ஆவலாய்க் காத்திருந்தீர்கள் என்பதில் இரகசியம் ஏதுமில்லை ! But நமது புதுயுக மொழிமாற்றம் உங்களில் நிறையப் பேரை நோகச் செய்தது நம் வரலாற்றின் ஒரு பக்கம் ! இன்றளவும் புதிய மொழிநடை தான் தேவலை என்று நானும் கருணையானந்தம் அவர்களும், கருதினாலும் - உங்கள் அபிப்பிராயங்கள் was on the contrary ! 'எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொன்னேனா ?' என்ற உங்கள் வெப்பச் சலனத்தைத் தவிர்த்திருக்க விழைவதே எனது முதல் பின்னோக்கிய ஆசையாக இருந்திடும் ! 
NBS எனும் ஒரு மைல்கல் இதழினை வெளியிட்டதும், அது நமக்கு உற்பத்தி செய்து தந்த உத்வேகமும் மறக்க இயலா விஷயங்கள் ! ஆனால் - நமது மறுவருகையின் துவக்க காலத்திலான அந்நாட்களில் எனக்குள் துயின்று கொண்டிருந்த டெய்லர் வீறு கொண்டு எழுந்ததும் அதே NBS தயாரிப்பின் வேளையிலும் தான் !  'சிவனே' என்று தீவொன்றில் மாடஸ்டி சூரியக் குளியல் போட்டுக் கொண்டிருக்க - சீற்றத்தோடு அவருக்குப் போட்டு விட்டேனே அந்தக் கோடுகள் - ஐயோ சாமி ! இன்றைக்கும் NBS-ஐப் புரட்டும் பொழுது புல்லரித்துப் போகின்றது !! கொடஸ்டியாய் மாறிப் போன மாடஸ்டியை - புனர்ஜென்மம் எடுக்கச் செய்ய விரும்புவதே எனது ஆசை # 2 !!

என்னையே முதலிலும், அப்புறமாய் உங்களையும் 'தெளிய வைத்துத் ..தெளிய வைத்துத் ' துவைத்துத் தொங்கப் போட்டதொரு அனுபவம் சிக்கியது கூட அதே காலகட்டத்தினில் தான் ! உபயதாரர்கள் நமது மாயாவிகாருவும்...கூர்மண்டை சேட்டனுமே ! "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" பின்னாட்களில் நமது 'அதிகம் தேடப்படும் இதழ்கள்' பட்டியலினுள் இடம் பெற்றிடக் கூடும் தான் ; அந்தக் காதுலே புய்ப்பம் ரகக் கதைகளின் ஆர்வலர்கள் அதனைக் கொண்டாடக் கூடும் தான்- ஆனால் சத்தியமாய் அதன் எடிட்டிங்கின் போது - "சுலபமாய் சந்நியாசம் பெறுவது எவ்விதம் ?" என்ற நூல்களைத் தேடும் ஆர்வம் எனக்குள் ஊற்றடித்தது !! "ஐயோ..தெய்வமே..இதற்கொரு முடிவே இல்லியா ? என்று எண்ணும் விதமாய் பக்கம் பக்கமாய் "டமால்..டுமீல்...ழ்ழ்ழ்ழ்ழ்...ச்ச்ச்ச்ச்...சொய்ந்ங்..டும்" என்று ஒலி வசங்கள் எழுதியே என் பேனா முனை மழுங்கிப் போனது ! Given a choice - அந்த இதழின் பணிகளை மட்டும் நமது நண்பர் ஸ்டீல் பொன்ராஜிடம் ஒப்படைத்திருக்க ஆசை !! 
"பச்சை மாளிகைப்" படலமும் கொஞ்சம் மாறுதலோடு செயலாக்கிட வாய்ப்புக் கிட்டின் - would love to give it another shot ! நமது இதழ்களுள் நிறைய விவாதிக்கப்பட்ட இதழ்களுள் கிரீன் மேனரும் ஒன்று ! அதனை ஆங்கிலத்தில் வாசித்த பொழுது அந்தப் புராதன கதைக்களம் ; உயர்மட்டப் புள்ளிகளின் சிந்தனைகள் ; உரையாடல் பாணிகள் எல்லாமே striking ஆக இருந்தது மறக்க இயலா சங்கதி ! அதனைத் தமிழாக்கம் செய்திட அமர்ந்த போது - ராணியார் காலத்து இங்கிலாந்தில் நடக்கும் கதைக்களத்திற்கு புராதன ; தூய தமிழ் தான் பொருத்தமாக இருக்குமென்று உறுதிபட நம்பினேன் ! And I'm pretty sure that was right too ! ஆனால் சிக்கல் எழுந்ததே அதனை எழுதத் துவங்கிய பிற்பாடு தான் ! கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இலக்கியத் தமிழ் நடையின் போதைக்குள் நான் மூழ்கிப் போக..கிட்டத்தட்ட ஒரு முழு வாரத்திற்கு என் தலைக்குள் நான் சின்ன வயசில் பார்த்த அத்தனை RS மனோகர் புராண நாடகங்களின் வரிகளும் ஓடிக் கொண்டே இருந்தன !! "மைதீனாரே...இன்றைய  தினத்தின் அஸ்தமனத்துக்கு முன்பாய் அச்சு இயந்திரத்தினில் வர்ணப் பக்கங்கள் பயணிப்பதினை நான் தரிசித்தே தீர வேண்டும் !"  என்ற ரீதியில் ஆபீசிலும் நான் உளறிக் கொட்டாத குறை தான் ! அந்த மொழிநடை அந்தக் கதைக்குப்   பொருத்தமானதே என்ற ஒருசாராருக்கு தோன்றியிருக்கலாம் தான் ; ஆனால் புதிதாய் காமிக்ஸ் படிக்க நினைத்து அந்த இதழினைக் கையில் தூக்கியிருக்கக் கூடிய வாசகரை நினைத்துப் பார்க்கும் போது - பர்மாவின் கானகங்களில் கொஞ்ச நாட்கள் குப்பை கொட்டி விட்டு வரலாமாவென்று தோன்றும் ! ஓவர்டோஸ் ஆகிப் போனதை சீர் செய்ய வாய்ப்புக் கிட்டின் - அதுவே எனது ஆசை # 4 ஆக இருந்திருக்கும் !!

ஒரு வித மென்சோகம் கலந்த யுத்தக் கதைகள்...நிஜ நிகழ்வுகளின் கதையாக்கங்கள் எப்போதுமே எனது ரசனைப் பட்டியலில் உயரே இருப்பது வாடிக்கை ! So அவை உங்களுக்கும் பிடிக்குமென்ற எனது எதிர்பார்ப்பே நான் திருத்தி அமைக்க எண்ணும் விஷயம் # 5 ! "பிரளயத்தின் பிள்ளைகள்" 'ஆஹா..ஓஹோ..'வெனப் பாராட்டுப் பெறும் கதையாக அமைந்திடுமென்ற எதிர்பார்ப்பு எனக்குள் திடமாய்க் குடி இருந்ததால் - கதையினில் ஆங்காங்கே இருந்த பலவீனங்கள் எனக்குப் பிரதானமாய்த் தோன்றிடவில்லை ! அது வெளியான பின்பு - உங்களில் ஒருசாரார் - விழுங்கவும் முடியாது ; துப்பவும் தெரியாது விழித்த கொடுமை நிச்சயம் என் ஞாபகங்களின் பெட்டகங்களிளிருந்து தப்பிடவில்லை ! "காமிக்ஸ் படிப்பதே எங்கள் பிடுங்கல்களை மறக்கத் தான் ; இதில் ஊரான் வீட்டு அழுகாச்சியை நான் கேட்டேனா ?" என்ற கேள்விக்கு இடம் தந்திடாதிருப்பின் - சந்தோஷப்பட்டிருப்பேன் !

"சிப்பாயின் சுவடுகளின்" இறுதியினில் மொழிபெயர்ப்பினில் நமது அணி சறுக்கியிருந்ததையும், அதனை நான் கவனிக்கத் தவறி இருந்ததையும் சரி செய்திட வாய்ப்புக் கிட்டின் - that would be # 6 !!  "சிரமமான கதைகள்" பட்டியலில் நிச்சயமாய் உயரே ஒரு இடம் பிடிக்கும் ரகத்திலானவை -அந்தக் கதையின் பணிகள் ! அதனில் 95% கழுதைப் பொதியைச் சுமந்தான பின்னே - இறுதி 5%-ல் விட்ட கோட்டை இன்றைக்கும் என்னை உறுத்தும் ஒரு விஷயம் ! அழிரப்பர் இருக்கா guys - பின்னே சென்று தவறை சரி செய்து விட்டுத் திரும்பிட ?

இப்போது நினைத்தாலும் - என்னை நானே உதைத்துக் கொள்ளும் சம்பவம் - KAUN BANEGA TRANSLATOR - 1-ன் சமய நிகழ்வுகள் ! "மதியில்லா மந்திரி" குட்டி சாகசம் ஒன்றினை மொழிபெயர்க்கும் போட்டியினை அறிவித்து விட்டு - சுமார் 30 பேர் பங்கேற்றான பின்பு - அதனில் "பிரமாதம்" என்று சொல்லும் விதமாய் ஏதுமில்லை என்ற அறிவிப்போடு - நானே அந்தக் கதையினை மொழிபெயர்த்தும்  இதழினை வெளியிட்டிடத் தயாரும் ஆகி இருந்தேன் ! நேராக ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை ஆடாமல் விட்டு க்ளீன் போல்டான ஹாஷிம் அம்லாவைப் போல அந்த வேலையினில் எனக்கு brain freeze நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதைத் தவிர - வேறு விளக்கங்கள் எதையும் என்னால் முன்வைக்க முடியவில்லை ! எந்தக் கடவுளின் புண்ணியமோ - நிதானம் கொஞ்சமாய் திரும்பி - அப்புறம் ஒரு குட்டி புக்லெட் வடிவில் வாசக மொழிபெயர்ப்பினையும் வெளியிட்டு பிராயச்சித்தம் தேட முடிந்தது !! Definitely a moment to erase !!

அதே போலொரு கூமுட்டைத்தனம் நிகழ நான் இடம் தந்தது சென்றாண்டின் சமயம் ! நமது திருப்பூர் முன்னாள் முகவரிடமிருந்து விற்பனையாகா 15 வருடப் பழைய இதழ்களை பொட்டலம் கட்டிக் கொண்டு வந்து ஆபீசில் இறக்கிய போது - 'அட..இதை பதிவில் போட்டு நண்பர்களை உற்சாகம் கொள்ளச் செய்ய வேண்டியது தான் !" என்று மகா சிந்தனைக்குச் சொந்தம் கொண்டாடினேன் ! ஆனால் மறு நாள் பகலில் நமது ஆபீசே ரணகலமாகிப் போனதைப் பார்த்த பொழுது தான் நான் சொதப்பியதன் பரிமாணம் புரிந்தது ! இருந்ததோ 9000 ரூபாய்க்கான இதழ்கள் ; அதனைக் கோரி வந்திருந்த ஆர்டர்களோ 100-கும் அதிகமாய் ; அதுவும் முதல் நாளிலேயே ! விடிய விடிய உட்கார்ந்து மின்னஞ்சல் அனுப்பியோரின் நேரங்களை நோட் செய்து - வரிசைக்கிரமம் பண்ணி - 'முதலில் வந்தோருக்கு முன்னுரிமை' என்று ஏதோ நான் பட்டியல் போட்டுத் தர - அதுவும் ஒரு புத்தம்புது சர்ச்சைக் காலமாகிப் போனது ! "தெரிஞ்சவங்களுக்கு முன்னுரிமை !" என்று நண்பர்களுள் யாரோ ஏமாற்றத்தில் திரிக் கொளுத்திப் போட - வாகை சிக்கிய சொட்டை மண்டையில் ஒருவண்டி மிளகாய் மீண்டும் அரவையானது ! ஐயோ சாமி - அந்த இதழ்களை உங்க ஊரின் லைப்ரரிக்கே தூக்கிக் கொடுத்து விடுங்கள் !" என்று திருப்பு முகவரிடம் சொல்லாமல் போனோமே என்ற ஏக்கம் தான் எனது moment to change # 8 !!

இன்னுமொரு சான்ஸ் கிட்டின் - நான் தவிர்த்திருக்க எண்ணியிருப்பேன் - நமது இரவுக் கழுகாரின் KING SPECIAL இதழினை !! போனோமோ- வில்லனை சாத்தோ சாத்தென்று சாத்தினோமா...ஒரு லோடு தோட்டாக்களைக் காலி செய்தோமா என்றில்லாது - மெக்சிகப் புரட்சி ; வரலாற்று லிங்க் ; என்று எங்கெங்கோ பயணம் சென்ற டெக்சின் இந்த இதழை ரசிக்க ரொம்பவே சிரமமாக இருந்தது ! பற்றாக்குறைக்கு ராப்பரில் டிராபிக் constable போல நின்ற டெக்ஸ்- !!  மொக்கைக் கதைகளொன்றும் நமக்குப் புதிதல்ல தான் எனினும் - சூப்பர் சித்திரங்கள் ; பார்வைக்கு அட்டகாசமான ஆக்ஷன் என்றெல்லாம் ஓடிய நமது டாப் ஹீரோவின் சாகசம் இப்படிப் பப்படம் ஆனதில் மனது ரொம்பவே சலனமானது ! Moment to change # 9 !!

மொக்கைக் கதைக்கு வாய்ப்புத் தந்தது ஒரு சங்கடமெனில் - சூப்பர் தொடர் ஒன்றினை aggressive ஆக உங்களிடம் திணிக்க முயற்சிக்காது போன தவறைச் செய்தவனாவேன் - தோர்கலின்   கதையில் !! Fantasy கதைகளை நீங்கள் எவ்விதம் ஏற்பீர்களோ என்ற கலக்கத்தில் ஒரு prime நாயகரை ஓரத்தினில் நடை பயிலச் செய்திட நேர்ந்தது ! And அதன் பலனாய் 2016-ன் mainstream சந்தாவில் அவருக்கு இடமில்லாது போயுள்ளது ! இன்னும் கொஞ்சம் தைரியமாய் இந்தத் தொடரினை முன்னிலைப்படுத்த விரும்புவதே - எனது wish to change # 10 !!

இதே போல் இன்னமும் சின்னச் சின்ன விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம் தான் ; ஆனால் ஞானிகளும் கொட்டாவி விடத் துவங்கும் போது "சுப மங்களம்" தான் அடுத்த வரியாகிட வேண்டுமேம்ற ஆர்வம் எழுகிறது  !! புலர்ந்திருக்கும் புது வருடத்தினில் - அனுபவங்கள் தந்த பாடங்கள் திரும்பவும் இது போன்ற boo -boo க்களைத் தவிர்த்திடும் திறமையை நமக்கு நல்கிடும் என்ற நம்பிக்கையோடு தூங்கச் செல்கிறேன் ! ஜாலியான இந்தப் பதிவை ஜாலியாகவே மாத்திரம் பார்த்து / படித்து விட்டு - ஜனவரியின் இதழ்களின் பக்கமாகவே கவனத்தைத் தொடர்ந்திடக் கோருகிறேன் ! நடுச்சாமத்து எனது பருத்திவீரப் பதிவுகளை விட - முன்செல்லும் பாதையே பிரதானம் என்பதால் நமது பார்வைகள் அங்கே நிலைகொண்டிருக்கட்டுமே !!

புலர்ந்திருக்கும் புது வருஷம் நமக்கெல்லாம் ஒரு வரம் தரும் ஆண்டாய் அமைந்திட வேண்டிக் கொள்வோமே !! Bye for now folks !!

P.S : புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம் முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? அல்லது - இப்போதேவா ? என்ன நினைக்கிறீர்கள் all ?

150 comments:

  1. Replies
    1. ஆசிரியர் சார்& உங்கள்
      அணியினர்&அனைத்து
      நட்பூஸ்க்கும் இனிய ஆங்கில
      புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2016 ....

      Delete
    2. புத்தாண்டின் முதல் கமெண்ட்டுக்கு வாழ்த்துகள் டெக்ஸ் விஜய்! :)

      Delete
  2. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுடன்...இங்கே'கிளிக்'

    ReplyDelete

  3. ஆர்டினின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.!!!

    ReplyDelete
  4. ///அரை மணி நேரத்தில் புதிய பதிவோடு !! ///

    அமர்க்களமான ஆரம்பம்.!! :)

    ReplyDelete
  5. சூப்பர் சார்! am waiting!

    புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே! :)

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் விஜய்...
      ஹாவ்..2016ன் முதல் கமெண்ட் போட்ட திருப்தி யோட ,கொர்..கொர்...

      Delete
    2. வெல்கம் டெக்ஸ் 2016 ன்
      முதல் கமெண்ட்ஸ்
      வாழ்த்துக்கள்

      Delete
  6. அட! எடிட்டர் இந்தப் பதிவைப் போட்டிருக்கும் நேரத்தைக் கவனிச்சீங்களா?
    பங்க்ச்சுவாலிட்டி'னா அது எடிட்டர்தானுங்க! :)

    ReplyDelete
    Replies
    1. ஆனாக்க இப்போ இரண்டு அரை மணி நேரம் ஆயிடுத்தே

      Delete
    2. டைப் அடித்தே விரல் நுனிகள் ஓய்ந்து விட்டன சாமி !

      Delete
    3. இந்த கண்ணடித்தால் டைப்படிக்கும் இயந்திரம் இன்னும் இந்தியாவிற்கு வரலையோ...??!!

      Delete
  7. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //அப்புறம் 52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டினில் 69 பதிவுகளைப் போட்டு கதிகலங்கச் செய்திருக்கிறேன் என்பதை Posts count சொல்கிறது !! - 2015-ன் இந்த ரெக்கார்டை காலத்துக்கும் நிலைத்து நிற்குமொரு எண்ணிக்கையாய் பத்திரமாகப் பேணிக் காத்திடுவோமே !!//
    Need to break this record in this year 2016

    ReplyDelete
    Replies
    1. 75பதிவுகள் என்ற எண்ணம் தாண்டாமல் பார்த்து கொள்வோம் சார்....

      Delete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. //தற்போதைய தொடர்கள் கொஞ்சம் முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? அல்லது - இப்போதேவா ? என்ன நினைக்கிறீர்கள் all ?//
    இப்போதே - இப்போதே!!!

    ReplyDelete
  11. /// புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம் முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? அல்லது - இப்போதேவா ? என்ன நினைக்கிறீர்கள் all ///


    இப்போதே வேண்டும்.!
    ஜேசன் ப்ரைஸை சந்தா Z க்கு ட்ரான்ஸ்பர் செய்து விட்டு அவ்விடத்தில் இக்கௌபாயை இணைக்கலாம் என்பது சிறியேனின் கருத்து சார்.!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்..இதை கொஞசம் பரிசீலனை செய்யுங்கள்....ஜேஸனை ஏப்ரல் சந்தாவில் இணைத்து அதன் மூன்று பாகங்களையும் ஒரே புக்காக போட்டு விடுங்கள்.கி.நா.அதற்குரிய சந்தாவிலேயே வரட்டும்..

      Delete
    2. அதே அதே சார்...
      ப்ளீஸ் மூவ் ஜேசன் டூ சந்தாZ...
      புதிய கெளபாய் அந்த இடத்தில் வரட்டும் சார்....
      டெக்ஸ்க்கு சற்றேனும் போட்டி வேணும் சார்....
      டைகர்-இனிமேல் ஸ்பெசல்களில் மட்டுமே வருவார் என்றான பின்னே புதியவரை தாமத படுத்த வேணாமே சார்..

      Delete
    3. @ FRIENDS : சந்தாவை பட்டி-டிங்கரிங் செய்வதில் ஆபத்துக்கள் ஏகம் உள்ளன ! So டப்பென்று தீர்மானம் செய்திடல் சரியாகாது ! மாற்று வழிகள் உள்ளனவா என்று யோசிப்போமே !

      Delete
  12. //புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம் முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? அல்லது - இப்போதேவா ? என்ன நினைக்கிறீர்கள் all ?//

    முடியட்டும் என காத்திருந்தால் முடி கொட்டிவிடும்.

    Zக்கு முன்னாடி ஒரு E for extra fitting அப்படின்னு ஒரு track கொண்டு வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : இனி கொட்ட ஏதுமில்லை என்பதால் எங்களுக்குப் பிரச்சனையில்லை !!

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அட...காத்திருந்தாலும் கொட்டிப் போகும் ஆபத்து அடியேனுக்கில்லை என்று சொன்னேன் !!

      :-) :-)

      Delete
  13. ///இன்னுமொரு சான்ஸ் கிட்டின் - நான் தவிர்த்திருக்க எண்ணியிருப்பேன் - நமது இரவுக் கழுகாரின் KING SPECIAL இதழினை !! போனோமோ- வில்லனை சாத்தோ சாத்தென்று சாத்தினோமா...ஒரு லோடு தோட்டாக்களைக் காலி செய்தோமா என்றில்லாது - மெக்சிகப் புரட்சி ; வரலாற்று லிங்க் ; என்று எங்கெங்கோ பயணம் சென்ற டெக்சின் இந்த இதழை ரசிக்க ரொம்பவே சிரமமாக இருந்தது.///

    இம்மாத இதழ்கள் இன்னும் கையில் கிடைக்காத காரணத்தால் "வல்லவர்கள் வீழ்வதில்லை "யைத்தான் 12 மணிவரை படித்துக் கொண்டிரூந்தேன்.!

    போனோமா சாத்துனோமா -
    வில்லரின் தரத்தை குறைத்து மதிப்பிடுவது போல் தெரிகிறதே சார்.!

    கார்சனின் கடந்த காலம்
    வல்லவர்கள் வீழ்வதில்லை
    எமனின் வாசலில்

    சுலபமான களங்கள் இல்லைதான். ஆனால் கனமான கலக்கல் களங்கள்!

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க கிட்ஆர்ட்டின்! King special - நான் சிலநாட்களுக்கு முன்புகூட ரசித்து மறுவாசிப்புச் செய்த கதை! க்ளைமாக்ஸ் வழக்கமான Bang bang ரகமென்றாலும், கதைக் களம் - சித்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் - அபாரமானது!

      நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு... எடிட்டருக்கு திடீர்னு என்னாச்சு?

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : நான் அப்படி நினைக்கவில்லை நண்பரே ! பொதுவான கதை சொல்லும் மரபுகளை சுக்கலாக்குபவர் நமது இரவுக் கழுகார் ! எடுத்த எடுப்பிலேயே வில்லன் யாரென்பதை பகிரங்கமாக்கும் பாணியிலாகட்டும் ; சுலபமாய் யூகிக்கக்கூடிய பாதைகளில் கதையின் ஓட்டம் பயணிப்பதிலாகட்டும் - டெக்சின் கதைகளில் ஒரு தெனாவட்டு எதிரொலிப்பதைக் காண முடியும் ! "டெக்ஸ்" என்றதொரு அசகாய சூரனின் ஆற்றல் ஒன்றே போதும் - மாமூலான கதை சொல்லும் யுக்திகளுக்குத் தேவை இங்கில்லை என்று அதன் படைப்பாளிகள் தீவிரமாய் நம்புவது கண்கூடு ! இதனைத் தான் நான் குறிப்பிட்டிருந்தேன் - in a lighter vein !

      Delete
    3. போனோமா சாத்துனோமா - ///--ஹா ஹா..

      Delete
  14. ஆசிரியர் சார்& உங்கள்
    அணியினர்&அனைத்து
    நட்பூஸ்க்கும் இனிய ஆங்கில
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2016 ...
    நேற்றுஇரவு11-30க்கு படிக்க ஆரம்பித்த
    டெக்ஸ் 2016-1-00க்கு படித்து முடித்து
    2016 எனக்கு டெக்சுடன் ஆரம்பம்.

    ReplyDelete
  15. என்னவேணா சொல்லிக்கோங்க எடிட்டர் சார்! நீங்க ரப்பர் எடுத்து அழிக்க நினைக்கும் விசயங்களில் க்ரீன்மேனர் மொழிபெயர்ப்பும் ( புதிய வாசர்களுக்கு தலையைச் சொறிய வைத்திடும் விசயமென்றாலும்கூட), King special ன் கதைக்களமும் இடம்பெற்றிருப்பது மனசுக்கு ஒப்பலை!

    க்ரீன்மேனர் - அந்த கால கட்டத்திற்கு ஏற்ற சரியான மொழிபெயர்ப்பே! ( நண்பர் கார்த்திக் தன் திறமையைக் காட்டியிருந்ததையும் மறக்க இயலாது!)

    King special - வழக்கமான டெக்ஸ்வில்லர் கதை இல்லையென்றாலும்கூட, ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அழுத்தமான பின்னணியாகக் கொண்ட ஒரு வித்தியாசமான கதை! இதற்கு நீங்கள் ரப்பரைத் தேடுவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இந்தக் கதைக்கு நமது தீவிர டெக்ஸ் ரசிகர்களிடமிருந்தே வந்திருந்த வருத்தக் கடிதங்கள் / மின்னஞ்சல்கள் ஒரு வண்டி என்வசமுள்ளன என்பதே பிரதான காரணம் !!

      Delete
    2. ஆச்சர்யம்தான் சார்! சாவகாசமாய் ஒரு மறுவாசிப்புப் படலத்தை அந்த நண்பர்கள் மேற்கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தால் ஒருவேளை தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ள ரப்பரைத் தேடுவார்களோ என்னவோ!

      Delete
    3. Aachariyam thaan sir, naan rasiththu paditha maarupattak kalam ulla kathaikalil Green Manner mukkiyamanathu!!

      Delete
    4. @Erode Vijay and @Ganesan

      இந்த இரண்டு விஷயமும், கமல் படம் மாதிரி :)
      படம் ஓடாது ஆனா வெளிவந்து 2 வருஷம் அப்புரம் பாராட்டுவாங்க எல்லோரும்

      Delete
  16. ///காலச் சக்கரத்தைத் திருப்பிட வாய்ப்புக் கிட்டிடும் பட்சத்தில் நான் செய்திட நினைக்கும் முதல் வேலை - "தங்கக் கல்லறையின்" மொழிபெயர்ப்பினைப் பட்டி டிங்கரிங் செய்திடாது - அதே பழைய கலவையோடு வண்ணத்தில் பிரசுரிப்பது !///

    அப்படியே.,
    கார்சனின் கடந்த காலத்தில் வரும்
    "தப்பியோடி காணத்துடிக்கிறேன்
    பாதையில் தடையாய் பாவி செவ்விந்தியர்கள் "
    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்!

    ReplyDelete
  17. அந்த 'புது கெளபாய்' நம்ம பெளன்ஸருக்கு வேண்டப்பட்டவரா எடிட்டர் சார்? ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இவருக்கு உசிலம்பட்டி என்றால் - அவருக்கு உளுந்தூர்பேட்டை !

      Delete
  18. 2016 இதழ்கள்பற்றி
    No-1டெக்ஸ்-2ஷெல்ன்-3-மந்திரி
    4-மாயாவி.---( பேப்பரின் தரம் மிகவும்
    மோசம் பின்பக்க படங்கள் முன்பக்கமும்
    தெரிகிறது .தயவு செய்து நல்ல தரமான
    காகிதம் உபயோகிக்கவும்.

    ReplyDelete
  19. நான் சொல்வது மாயாவி மறுபதிப்பில்
    காகிதத்தின் தரம்.

    ReplyDelete
    Replies
    1. durai kvg : ஊஹூம் ! முற்றிலும் தவறான கருத்து ! டன் ஒன்றுக்கு ரூ.65,000 விலையிலான முதல் தர மில்லின் natural shade காகிதமிது ! And கடந்த 6 மாதங்களாய் மறுபதிப்புகளில் நாம் பயன்படுத்தி வருவதும் இதனையே ! இதற்கு மேல் உசத்தியான காகிதமெனில் ஆர்ட் பேப்பர் மட்டுமே !

      Delete
    2. மன்னிச்சூ. பழய மறு பதிப்புகளுடன்
      ஒப்பிட்டு காகித தரத்தை சோதிக்க
      வேண்டுகிறேன்

      Delete
    3. ஆசிரியரிடம் இருந்து இன்னும்பதில்
      இல்லை.

      Delete
  20. ஆசிரியர் அவர் குடும்பத்தினர்
    லயன் காமிக்ஸ் அலுவலகத்தில்
    பணியாற்றும் ஊழியர்கள்
    மற்றும் காமிக்ஸ் நண்பர்கள்
    அனைவருக்கும் எனது இனிய
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ஆசிரியரே வல்லவர்கள் வீழ்வதில்லை
    உண்மையில் நல்ல கதை
    அது சொதப்பியது என்றால்
    ஆச்சரியம் தான் கிளைமாக்ஸில்
    டெக்ஸ் ஒன் மேன் ஆர்மியாக இல்லாமல்
    எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுத்திருப்பார் நல்ல கதை
    ரப்பர் கொண்டு அழிக்க வேண்டிய லிஸ்ட்டில் சேர்ந்தது மிகவும் வருத்தத்தை
    கொடுக்கிறது

    ReplyDelete
  22. 44வது. படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  23. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
  24. வருடத்தின் முதல் கதையே
    பட்டையை கிளப்புகிறது சட்டத்திற்கு சவக்குழி அதுவும் டெக்ஸ்டைல் வில்லர்
    உன் மேனியின் வண்ணம் உன் வாழ்க்கையின் உயரத்தை தடை செய்ய அனுமதிக்காதே நீ எந்த மனிதனுக்கும்
    சளைத்தவனில்லை எனக் கூறும் இடம்
    டெக்ஸ் வில்லரின் கம்பீரம் வெளிப்படுகிறது வசனமும் அருமையாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : அழகான finishing touch அந்த வசனம் -இல்லையா ?

      Delete
  25. Happy 2016!தயக்கம் ஏன் கெளபாயை களமிறக்க ஆசிரியரே!வீறு கொண்டு வெளியிடுங்கள்!

    ReplyDelete
  26. சந்தாக்களின் நிலவரம் என்ன 2015 விட 2016 எப்படி உள்ளது என அரிய ஆவல்

    ReplyDelete
    Replies
    1. Anandappane karaikal : நிஜத்தைச் சொல்வதானால் இப்போது தான் வண்டி வேகமே பெறத் தொடங்கியுள்ளது ! "புது இதழ்கள் தயார்" என்றான பின்னே - விறுவிறுப்பு காட்டி வருகின்றனர் நண்பர்கள் !

      Delete
  27. ஆசிரியர் சார் புது வரவை எப்படியாவது இப்போதே நுழைத்து விடுங்கள் ...நிரம்ப கடினம் எனில் அக்கா ஜீலியாவை அத்தான் வீட்டுக்கு அனுப்பி விட்டு இவரை உள் நுழையுங்கள் ....;-)

    ReplyDelete
  28. நண்பர்கள் அனைவருக்கும், அவர்தம் குடும்பங்களிற்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. வல்லவர்கள் வீழ்வதில்லை...


    உண்மை தான் சார் ..டெக்ஸ் கதைகளில் மீண்டும் எடுக்க தோன்றாத ஒரே கதை அதுதான் என்பது சாப்ட் காரணம் ...

    பலமாக சொல்ல வேண்டுமென்றால் ..

    டெக்ஸ் அவர்களும் கிராபிக்ஸ் நாவலில் கலக்கி உள்ளார் என்றும் சொல்லலாம் ....;-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவருக்கும்...செயலாளருக்கும் கருத்து லடாய் ! அடடே..!!

      Delete
  30. எடிட்டர் ஸார்,
    புது கெளபாயினை எப்படியாவது களமிறக்கி எங்கள் கண்ணில் காட்டி விடுங்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

    ReplyDelete
  31. எடிட்டர் அவர்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. இந்த ஜனவரியில் 13to 24 நடக்கும் புத்தக திரு விழாவில் நமது லயன் காமிக்ஸ் கலந்து கொள்கிறாதா சார் ?

    ReplyDelete
    Replies
    1. Ranjith Ranjith : வழக்கம் போல் ஆவலாய்க் காத்திருக்கிறோம் - அமைப்பாளர்களின் கருணைப் பார்வையினை எதிர்நோக்கி !

      Delete
  33. அட.....! நேற்றுதானே பதிவு வந்தது இனி ஞாயிறுதான் என்றிருந்தேன்.இன்று லேட்டாக தூங்கி எழுந்து வழக்கம்போல் நமது ப்ளாக்கை எட்டிப்பார்தால்.....புது பதிவு.....50+பின்னூட்டங்கள் என கொண்டாட்டமாய் இருக்கிறது. சூப்பர் சார் !
    புத்தாண்டின் முதல் காலைப்பொழுதை உற்சாகமாய் ஆக்கியதற்கு நன்றி .
    அப்புறம் பதிவிடுவதில் சிக்கனமெல்லாம் வேண்டாம் சார்...!போட்டுதாக்குங்கள்.....
    கொண்டாட நாங்கள் காத்திருக்கிறோம்....!

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : நமது "சிக்கனம்" தான் எத்தனை சிறப்பானது...சிரிப்பானது என்பதை நள்ளிரவுப் பதிவு சொல்லி விட்டதே சார் !

      Delete
    2. ஹா!ஹா! சிக்கனமாக சிரித்து வைத்துக்கொள்வோம்!

      Delete
    3. ஹா!ஹா! சிக்கனமாக சிரித்து வைத்துக்கொள்வோம்!

      Delete
  34. எடிட்டர் அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்தார் அவர்களுக்கும், லயன் முத்து காமிக்ஸ் பணியாளர்கள் மற்றும் நமது காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும்....
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

    எல்லா ஆண்டயைப் போலவே இந்தாண்டும்... காமிக்ஸ்களின் சிறந்த ஆண்டாக வேண்டும் என்ற பிரார்த்தனையோடு...

    Wish u Happy New Year:-):-):-)

    ReplyDelete
  35. Thanks for your and your team new year gift sir. A perfect gift to start new year.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடி இப்பவாச்சும் நாலு எழுத்து டைப்ப மனசும் நேரமும் வாய்த்ததே டெக்ஸ் கிட்...வாழ்த்துக்கள்... தொடர்ந்து கலக்குங்கள்..

      Delete
  36. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு ,எடிடோர்ருக்கு ஸ்பெஷல் நன்றிகள் மதி இல்ல மந்திரி அளித்ததற்கு சார் 25 வருட காமிக் ரசிகன் பார்வையில் பெஸ்ட் five
    1.கர்சனின் கடந்த காலம்
    2, மின்னும் மரணம்
    3.பென்சர்
    4.கிரீன் மனோர்
    5.இரத்த படலம்
    6.smurfs
    7.லக்கி கதைகள்
    ஹீரோஸ்
    1.டெக்ஸ்
    2.tiger
    3.lucky
    4.லார்கோ
    5.wayne
    6.Spider
    7.மாயாவி
    சிலது மிஸ் ஆகி இருக்கலாம் sorry எடிட்டர் பெஸ்ட் thing in you i admire is புதிய புதிய முயற்சிகள் எடுக்கும் உங்கள் தன்னம்பிக்கை dont give up Happy நியூ year

    ReplyDelete
    Replies
    1. kabdhul : சுவாரஸ்யமான பட்டியலே !! முக்கிய நாயகர்களில் அநேகம் பேரை கவர் செய்தும் விட்டீர்கள் என்றே தோன்றுகிறது !!

      Delete
  37. நம் அனைவரின் மீதும் அந்த ஏகனின் வற்றா கருணை பொழியட்டும்...

    ReplyDelete
  38. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  39. Happy new year editor
    Wayne Sheldon rocks as usual
    Kamal pola hero
    Get lots of chicks on the way
    Enjoy able ride due to good story and super pictures!

    ReplyDelete
    Replies
    1. ARVIND : அட...ஆமாலே...?! அந்த ஓரத்து நரைக்குக் கொஞ்சம் டையடித்து விட்டால் - இள வயது கமல் போலத் தானிருப்பார் ஷெல்டனும் !!

      Delete
  40. All 4 books are well done Sir
    All 3 new book covérs are good
    Tex logo and cards background rocks
    Mandiri rear cover is one of the best rear covers in long time

    ReplyDelete
  41. I read mongoose spin off story again
    Was superb
    Perfect assassin story and a great spinoff
    Wonder if it was well received during release
    BTW green manor Tamil translation was good and made it enjoyable read
    We do need such variations along the way

    ReplyDelete
    Replies
    1. ARVIND : Oh yes...."விரியனின் விரோதி" தான் 2014's பெஸ்ட் என நம்மவர்கள் ஏக மனதாய்த் தேர்வு செய்திருந்தனர் !

      Delete
  42. அன் புமிகு நண் பர்கள் அத்தனை பேருக்கும் புலர்ந்திருக்கும் புத்தாண்டு ஏற்றமிகு எழுச்சி தர வேண்டி வாழ்த்துகிறேன் ..வாழ்த்துக்கள் நண்பர்களே ...

    ReplyDelete
  43. I am happy that v vl be getting 48 books this year but to be frank the golden oldies are also ran only
    So that leaves us with 36 books to look forward to
    Really eager to know what's n store in
    Sandha Z
    Especially the numbers
    Also would like to propose a masala mix
    special just like olden days
    At least one BIG FAT Obelix like book
    even if it is in B and W
    Say a 1000 page one
    What say guys?????
    Would it not complete 2016??

    ReplyDelete
    Replies
    1. ஆம் , சந்தாZலாவது ஒரு குண்ண்ண்ண்டு வேணும் சார்...
      அதுல தோர்கல் கணிசமான இடங்களை ஆக்ரமிக்கட்டும் சார்....

      Delete
    2. @ FRIENDS : ரெகுலர் சந்தாவிலேயே நாம் 2015-ன் எண்ணிக்கையை நெருங்கிடவில்லை நண்பர்களே ! So இன்னமும் கொஞ்சம் பொறுமை அவசியம் !

      Delete
  44. சாரி சார்...
    அழி ரப்பர் தேவைப்படும் பல கதைகள் இருக்க , டெக்ஸின் வல்லவர்கள் வீழ்வதில்லையை அந்த பட்டியலில் இணைத்த செயல் ....
    உங்கள் பட்டியலில்11 வதாக இடம் பிடிக்கட்டும் சார்...
    அழிக்க வேண்டியவை பட்டியல் போட வேண்டிய அவசியம் இல்லை சார்..

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : அட..ஜாலியானதொரு எண்ணப் பகிறலாக மட்டுமே பார்த்திடுங்கள் சார் !

      பின்சென்று அழிக்கும் ரப்பர்கள் மட்டும் படைப்பின் திட்டமிடலில் இருந்திருந்தால் - யோசித்துப் பாருங்களேன் - உலகம் எவ்விதமிருக்குமென்று !!

      Delete
  45. காதில் விதவிதமான சிவகாசி வெடிச்சத்தங்கள், புதுமணம் பரப்பும் புத்தாடையில்,தீபதிருநாள் கொண்டாட்டத்தில் உள்ளம் நிறைந்திருக்க...மெல்ல அந்த பார்சலை பிரித்து அந்த குண்டு புத்தகத்தை கையில் எடுத்ததுமே எதிர்பாராதவிதமாக ஒரு இன்பஅதிர்வு தொற்றிக்கொண்டது.! ஆறுபாகங்கள் அடங்கிய அந்த தொடர்காவியத்தின் தொகுப்பு...அந்த ஹட்பொவுண்டு பைண்டிங்கில் கண்ணைபறிக்கும் அட்டைபடதுடன், உள்ளே வழவழப்பான காகிதத்தில் என்ன அழகான வண்ணகலவையில், சீனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்பில்,இந்த நிஜஉலகை விட்டு நம் குழந்தைஉலக கற்பனைக்கு அழைத்து செல்லும் அந்த ஓவியங்கள்,அடுத்தடுத்து பாகத்தை பரவசத்துடன் பயணிக்கவைக்கும் ஆறு விதவிதமான உள் அட்டைகள் என....

    இப்படி ரசித்துக்கொண்டே இருக்கும்போது சடாரென்று ஒரு பிஞ்சு கரங்கள் அந்த ஆல்பத்தை பறித்துக்கொண்டு " அப்பா இது எனக்கு...நான் கேக்கறப்போ எனக்கு கதை சொல்லு, மத்தபடி இதை தொடகூடாது ஆமா.." என என் மகள் சொல்ல கேட்டு, நான் ஒரு கணம் திகைத்தது மட்டுமல்ல...

    கலைந்தது, புத்தாண்டின் இரவில் என் கனவும்தான்..! என் கனவு மெய்படுமா..!!!

    அவுக் சொல்ல மறந்துட்டேன்..அந்த தொடர் தொகுப்பு மாயஉலகம் தோர்கல்

    இந்த கனவுக்கு கர்த்தா : //சூப்பர் தொடர் ஒன்றினை aggressive ஆக உங்களிடம் திணிக்க முயற்சிக்காது போன தவறைச் செய்தவனாவேன் - தோர்கலின் கதையில் !! Fantasy கதைகளை நீங்கள் எவ்விதம் ஏற்பீர்களோ என்ற கலக்கத்தில் ஒரு prime நாயகரை ஓரத்தினில் நடை பயிலச் செய்திட நேர்ந்தது ! And அதன் பலனாய் 2016-ன் mainstream சந்தாவில் அவருக்கு இடமில்லாது போயுள்ளது ! இன்னும் கொஞ்சம் தைரியமாய் இந்தத் தொடரினை முன்னிலைப்படுத்த விரும்புவதே - எனது wish to change # 10 !!//

    ReplyDelete
    Replies
    1. mayavi. siva : நிச்சயமாய் இந்தப் பிழைக்குப் பரிகாரம் தேடி விடுவோம் - வெகு சீக்கிரமே !!

      Delete
  46. டியர் எடிட்டர்,

    மேலே லிஸ்டில் சிவகாசி காமிக்ஸ் கவிஞர் சௌ.ஸ்ரீ.மு.வியாரின் படைப்புக்கள் மீள் பார்வை செய்யப்படுமா ;-)

    Pulls apart .. wishing everyone a Happy New Year 2016 ... !!

    ReplyDelete
    Replies
    1. Raghavan : மீள் பார்வை செய்திட அவசியம் நேர்ந்தால் - கவிதைகள் version 2.0 அரங்கேற நேரிடலாம் !!

      Delete
  47. சிலப்பல போராட்டங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்சலை கைப்பற்ற முடிந்தது.!

    பளிச்சுன்னு கண்ணில் நின்றது
    ஹிஹிஹி!!!!

    எளவரசி விளம்பரந்தேன்.!!!

    ReplyDelete
  48. MV சார்@ புத்தாண்டு செலபரேசன் பலமா ????...

    ReplyDelete
  49. தலயின்
    இவ்வருட முதல் கதையே

    அதகளமாய் துவங்கி இருக்கிறது
    எடி சார்

    இனி தலைய எதிர்பார்த்து மாதம் மாதம் 30 ம்தேதி (பிப்ரவரி இதில் விதிவிலக்கு) காத்திருக்க வைத்து விட்டீர்கள்

    ஷெல்டன் வழக்கம்போல்

    மதிமந்திரி - மிதிமந்திரி (அருமை)

    இரும்புகரத்தார் அடிக்கடி இவரை படிப்பதால் சுவராஸ்யம் இல்லாமல் பீரோவில் பதுக்கியாயிற்று

    அனைத்து காமிக்ஸ் தீவிரவாதிகளுக்கும் ம அவர்தம் குடும்பத்தார்க்கும்
    அவர்களை உருவாக்கிய தலைமை தீவிரவாதி எடிட்டர் ம அவர்தம் குடும்பத்தார்க்கும்
    அச்சக நண்பர்கள் ம அவர்தம் குடும்பத்தார்க்கும்

    இனிய
    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இரும்புக்கரத்தார் என் பீரோவிலும் துயில் பயில்கிறார்!

      Delete
  50. புத்தாண்டு வாழ்த்துகள், டியர் விஜயன்சார்&டீம்.

    விஜயன் சார், போன வருடத்தில், டெக்ஸின்.,படத்துக்கு,வசனபோட்டி வைத்து, பழைய லயன் காமிக்ஸ் தருவதாக,அறிவித்திருந்தீர்கள்.இந்த வருடத்திலாவது அதற்கு ஆவன செய்வீர்களா சார்:-).

    ReplyDelete
  51. 100 வது கமென்ட் and சந்தோஷமான கமென்ட்:-):-):-)

    ReplyDelete
    Replies
    1. சந்தா கட்டியாச்சே :-):-):-)

      Delete
    2. என்னது இவ்ளோ லேட்டா ஜந்தா கட்டிட்னீங்களா ??

      Delete
  52. புது வருடத்தினை

    புதிய பதிவுடன் அட்டகாசமாக துவங்கியிருக்கிறீர்கள் விஜயன் சார்

    அதுவும் சரியாக நள்ளிரவு 12:00 மணிக்கு :))
    .
    // புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம் முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? அல்லது - இப்போதேவா ? என்ன நினைக்கிறீர்கள் all //

    ஒன்றே செய்

    நன்றே செய்

    இன்றே செய்

    அப்படீன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க சார் :))

    கைவசம் சந்தா Z இருக்க பயமேன்

    அடிச்சு விளையாடுங்க சார்
    .


    ReplyDelete
  53. நேற்றே சந்தா பார்சல் வந்தும் தவிர்க்க முடியா காரணத்தால் வாங்க முடியாத சூழ்நிலையில் இன்று கைப்பற்றலாம் என நினைத்தால் கொரியர் அலுவலகம் விடுமுறை ....


    புத்தாண்டு முதல் நாளிலியே பெருத்த ஏமாற்றம் .....;-((

    ReplyDelete
  54. புதிய கெளபாய் நாயகரை ஏப்ரல் சந்தாவில் இணைத்து அதற்கும் இணைந்தே கட்டணத்தை அறிவித்தால் இதுவரை ஏப்ரல் சந்தா கட்டணம் அறிவிக்காத காரணத்தால் இடைஞ்சல் இல்லாமல் போய் விடும் சார் ..

    ReplyDelete
  55. புத்தாண்டு பரிசாக இம்மாத இதழ்கள் அருமையாக அமைந்துள்ளன.(சென்ற மாதம் தம்ப்ஸ் டவுன்).
    மறுபதிப்புகளிலே பாம்பு தீவு ஒரு அற்புத படைப்பு....மிக துல்லிய சித்திரங்களும்,அச்சும் என நிறைவாக உள்ளது.மற்ற இதழ்களும் மன நிறைவை கொடுக்கும் ரகங்கள் .....
    நன்றி ஆசிரியரே...

    ReplyDelete
  56. புத்தாண்டின் முதல் இதழாய் படித்தது (வேறேன்ன) மதியூக மோடி மஸ்தானின் சூ மந்திரி காலி தான்.!

    ஹாஹாஹா!!!
    செம்ம தொடக்கம் சார் கார்ட்டூன் வரிசைக்கு! !!
    ஒவ்வொரு கதையும் சிரிப்பு தோரணங்கள்.! பல இடங்கள் வாய்விட்டு சிரிக்க வைத்தன.
    டாப்மோஸ்ட் 'வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் ' - வசனங்களும் முக பாவங்களும் குபீர் சிரிப்பு வெடிகள்.!
    அருமை அருமை!!

    வருடத்திற்கு இதுபோல ரெண்டு ஆல்பம் போட்டாலும் சூப்பராக இருக்கும் சார்! !!

    ஆர்டின் ஹேப்பி ஆயிட்டாப்புல :)

    ReplyDelete
  57. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு,
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    - Hassan, France.

    ReplyDelete
  58. //புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம் முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? அல்லது - இப்போதேவா ? என்ன நினைக்கிறீர்கள் all ?//

    Lion கோடை மலராக வெளியிடலாம் !!!!!!

    ReplyDelete
  59. "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" ......
    நிறைவான font இருந்திருந்தால் நான் மீண்டும் மீண்டும் படிப்பேன் .....
    ஹூம் .............

    ReplyDelete
  60. யாரந்த ஜூனியர் ஆர்சியுடன் ஆங்கில புத்தாண்டு தொடக்கி உள்ளேன் .............

    ReplyDelete
  61. யார்பா அது......புது ''கௌட்டிவாயன்'' ஜேசன் fried ரைஸ்...

    இட்டாங்க பார்க்கலாம் ஒரு தபா..........





    அருஞ்சொற்பொருள்
    cow .....கௌ
    tea .....டீ


    ReplyDelete
  62. சார் சூஹீசூஸ் மறுவாசிப்பில் என்னை கவர்ந்த இதழ்...ஸ்பைடரின் sisnsters 7இதழ் மொழி பெயர்க்க அந்த தங்கப்பேனாவைத் தாருங்கள்....

    ஜேசன் பிரைஷ் சுமார் எனில் கெளபாய அங்க விடலாமே...
    Zல் தோர்களை முழுதும் போட்டு முடித்திடலாமே....

    ReplyDelete
  63. அன்புள்ள எடிட்டர் அவர்களுக்கும் நம் காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2016 நம் எடிட்டர் அனைத்து முயற்சிகளும் புதிய உச்சம் தொட அனைத்து காமிக்ஸ் தோழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் சார்...
      உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், அனைவரின் சார்பில்...

      Delete
  64. அன்புள்ள எடிட்டர் அவர்களுக்கு 1972 முதல் நம் காமிக்ஸ் வாசிப்பை தொடர்ந்து வந்து சமீப காலம்வரை தங்களுடன் கடிதம் மூலமே தொடர் பிலிருந்த நான் 2016 ல்தான் இணையம் மூலம் தொடர்பு கொள்கிறேன்.தங்களின் சற்றும் போரடிக்காத இணைய பதிவுகளும் நம் காமிக்ஸ் தோழர்கள் பகிர்ந்து. கொள்ளும் கருத்துகளையும் தொடர்ந்து வாசிப்பது மட்டுமே வழக்கமாக. கொண்டிருந்த எனக்கு இன்றுதான் நம் காமிக்ஸ் கழகத்தில் உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.அனைவருக்கும். வணக்கம்.

    ReplyDelete
  65. The new cow boy series can be released in Chennai Book fair....

    ReplyDelete
  66. நன்றி விஜயராகவன் சார்.

    ReplyDelete
  67. சட்டத்திற்கொரு சவக்குழி- ஆர்ப்பாட்டம் நிறைந்த தொடக்கம் சார்... சரசரவென நகரும் கதை....
    மற்றொரு கார்சனின் கடந்த காலம்-போல சம்பவங்கள் நடக்கிறது..
    ரே க்ளம்மன்ஸ்க்கு இணையாக வஞ்சக செரீப் என போகிறது...
    முழுவதும் படித்து விட்டு வருகிறேன் சார்...
    டெபுடிகள்-எடுபுடிகள் ..என உள்ளது,எதனால்...???

    ReplyDelete
  68. டியர்
    எடி சார்


    திருப்பூர் புத்தககண்காட்சி நடத்துபவர்களிடம் இருந்து
    பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு அழைப்பிதழ் அனுப்பி விட்டதாக கூறினார்கள்

    அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றதா எடிட்டர் சார்

    இந்தவருடமாவது திருப்பூர் புத்தககண்காட்சியில் ஸ்டால் போடலாமே

    இவ்வருடம்
    சென்னை புக்பேர் நடக்காத காரணத்தால்
    திருப்பூர் புத்தகக்கண்காட்சிக்கு ஸ்டால் வைக்க நிறைய பதிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன

    உங்கள் கருத்து?

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : இன்னமும் படிவங்கள் ஏதும் கிட்டிடவில்லை ; நம்மவரை திங்கட்கிழமை திருப்பூர் அனுப்பி நேரில் விபரம் தெரிந்து கொள்ளச் சொல்லியுள்ளேன். ஸ்டால் கிடைத்தால் நிச்சயம் பங்கேற்போம் !

      Delete
  69. மதியில்லா மந்திரி....

    6 குட்டி கலாட்டா....


    எல்லாமே....ஆஹா ரகம்...


    எனக்கு ரொம்ப புடிச்சது...


    ஒரு பயணம்.....செம.....


    சூ...மந்திரி காலி...

    ஓ...ரொம்ப ஜாலி....

    ReplyDelete
  70. மாறி மாறி ஒரே திசையில் போய்க் கொண்டிருந்த கதையில் 264 ம் பக்கத்தில் கார்சனின் திடீர் வரவு மிகுந்த சந்தோசம் தந்தது ..வந்த வேகத்தில் அதிரடி மோதல் காட்டும் கார்சன் வில்லரைக் காப்பாற்றப் போகிறார் என்று எதிர்பார்த்த தருணத்தில் கார்சனே எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள தலை தன்னையும் காப்பாற்றிக் கொண்டு கார்சனையும் காப்பாற்றும் விதம் ஜோர் ...அற்புதம் புத்தாண்டின் சரவெடி சட்டத்திற் கொரு சவக்குழி ..பலே

    ReplyDelete
  71. இந்த முறையும் வே ய்ன் செல்டன் ஏமாற்றவில்லை..பர ..பரப்பாக ஓட்டமெடுக்கும் ஆள்மாறாட்ட கதை ..நாடோடி மன்னன் போல் அதிரடி கத்திசண்டை காட்சிகள் ..ஆங்காங்கே கிளுகிளுப்பான வசனங்கள் .நச்சென்ற இச்சுக்கள் ..கடைசியில் வில்லனின் கைப்பாவையே வில்லனுக்கு எமனாவது எதிர்பாராத திருப்பம் ..விதி எழுதிய திரைக்கதை ..வித்தியாசமான புத்தாண்டு விருந்து ..

    ReplyDelete
  72. அறுசுவை விருந்து சூ மந்திரி காலி...கொண்டாட்டம்.... புத்தாண்டின் முதல் நகைச்சு வை விருந்து .செஸ் கட்டத்தில் சிக்கிக்கொண்ட மந்திரியை விடுவித்து மீண்டும் எங்களுக்கு நல்ல கதைகள் தர வேண்டும்

    ReplyDelete
  73. திரும்பப் படிக்கத்தூண்டும் பாம்புத்தீவு ...மின்சார மீன் வசம் இருந்தே மின்சாரத்தைப் பெரும் மாயாவி நல்ல கற்பனை ....

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : முதல்முறை வாசிப்பா சார் - "பாம்புத் தீவு" இதழிற்கு ?

      Delete
  74. புதிய பதிவை பார்க்காமல் பழைய பதிவில் பதிவு செய்து விட்டேன்,ஹி,ஹி,நல்லவேளை நண்பர் கிட் ஆர்டின் தகவல் கூறினார்.

    ReplyDelete
  75. இதழ்களை நேற்றுதான் கைப்பற்ற முடிந்தது,மூன்று இதழ்களை முடித்தாயிற்று.
    டெக்ஸ் தான் பாக்கி,இப்போது தான் கார்ப்பொரி + டெக்ஸ் கூட்டணியில் பரபரப்பாக வாசித்து கொண்டுள்ளேன்,அனைத்து இதழ்களின் விமர்சனம் நாளை.

    ReplyDelete
  76. ஜூனியர் எடிட்டரின் ஆங்கில இதழ் விற்பனை முயற்சி சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகிறேன் ஆசிரியரே.

    ReplyDelete
  77. வல்லவர்கள் வீழ்வதில்லை என்னைப் பொறுத்தவரை அருமையான கதைக்களம் கொண்டது,அதில் டெக்ஸ் இடம்பெற்றது சிறப்பான விஷயம்,ஒரு மசாலா + மாஸ் ஹிரோ அவ்வப்போது இதுபோன்ற கதைகளனில் பங்களிப்பு செய்வது பெருமைதானே,தல ஆழமான கதைக்களனிலும் சாகசம் செய்துள்ளார் என்ற வாதத்திற்கு துணை செய்ய இது உதவுமே.

    ReplyDelete
  78. புதிய பதிவை பார்க்காமல் பழைய பதிவில் பதிவு செய்து விட்டேன்,ஹி,ஹி,நல்லவேளை நண்பர் கிட் ஆர்டின் தகவல் கூறினார்.

    ReplyDelete
  79. எடிட்டர் ஹாட்ரிக்கா

    ReplyDelete
    Replies
    1. அதில் என்ன சந்தேகம் Sv சார்...
      ஞாயிறு வழக்கத்தை மாற்ற காரணம் ஏதுமில்லை தானே...

      Delete
    2. @ FRIENDS : இனிமேல் தான் எழுதவே ஆரம்பிக்கணும் நண்பர்களே ; தூங்கி விட்டு காலையில் ப்ரெஷ்ஷாக வாருங்கள் - பதிவு காத்திருக்கும் !

      Delete

    3. ஹைய்யா!!!!!

      (தகவலுக்கு நன்றி சார். இல்லேன்னா ஒரு மணி வரைக்கும் ரெப்ரஷ் பண்ணிக்கிட்டே இருந்திருப்பேன்.) :-)

      Delete
  80. // புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம்
    முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? //

    முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாம்
    +1000000000000000

    ReplyDelete
  81. எடிட்டரின் மற்றுமொரு புதிய பதிவு காத்திருக்கிறது நண்பர்களே! :)

    ReplyDelete
  82. ,விஜயன்,

    டெக்ஸ் வில்லாின் இதழ் ஆக்கம் ஒரு வீடியோவாக பாா்த்தால் ஒரு திருப்தி இருக்கும் எங்களுக்கு.
    அதை பிாிண்ட் செய்யும் நபா்களும், உருவாகும் விதத்தையும் அதுவும் உங்கள் குரலில். சிவகாசியில்.... அட்டகாசம்...... தமிழ் காமிக்ஸின் அடுத்த கட்டத்திற்கான முன்னோட்டமாய் இந்த வீடியோ இருக்கும்....

    ஆவலாய் இருக்கிேறாம் இது சாத்தியபட்டால்..

    பாவாணன்

    ReplyDelete