Tuesday, April 14, 2015

சித்திரையின் சந்தோஷம் !

நண்பர்களே,

வணக்கம். லக்கியும், ஜாலியும் போல ; லார்கோவும், சைமனும் போல, டெக்சும், வெற்றியும் போல, டைகரும், மதியூகமும் போல, ஆர்டின்னும், டாக் புல்லும் போல - புலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டில்  நலன்களும், வளங்களும் நம்மோடு இணைபிரியா வாசம் செய்திட ஆண்டவனை வேண்டிக் கொள்வோமே ! காமிக்ஸ் நேசமும், நம்முள் நட்பும், புரிதலும் இந்த மன்மத ஆண்டில் இன்னமும் அற்புத உயரங்களைக் காணட்டுமே !

சென்ற பதிவிற்கு இங்கே தத்தம் கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களின் பட்டியலோடு - மின்னஞ்சல்களில் தம் சிந்தைகளை தெரிவித்துள்ள நண்பர்களும் இணைந்து கொள்கின்றனர் ! பெரும்பாலானோர் - வெளியீட்டை புத்தக விழாவிலேயே வைத்துக் கொள்வோமே என்ற கோரிக்கையைத் தான் முன்வைத்துள்ளனர் ! அதிலும், நண்பர் ஒருவரின் வரிகள் லேசாக சலனத்தை ஏற்படுத்தியதை குறிப்பிடவும் விரும்புகிறேன் : 

"சார்..புத்தக வெளியீடை ஸ்டாலிலேயே வைத்துக் கொண்டால் என்னைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு கலந்து கொள்வதில் நெருடல் இருக்காது ! என்ன தான் நீங்கள் உங்கள் செலவிலேயே ஏற்பாடுகளை செய்து ஒரு நல்ல AC ஹோட்டலில் இதை நடத்தினாலும், அங்கே சகஜமாக வர  எனக்கு கூச்சமாக இருக்கும் ! வேண்டுமானால் எங்கேயாவது புத்தக வெளியீட்டு இடங்களில் இதை நடத்தினீர்கள் என்றால் கூட ஒ.கே. என்பேன். ஏனென்றால் அங்கே என் போன்ற ஆள்கள் கொஞ்சமாகவேனும் வருவதுண்டு. மத்தபடிக்கு உங்க இஷ்டம் !"

காமிக்ஸ் காதல் எனும் ஒரு வீரியமான பிணைப்பின் குடைக்குக் கீழே குழுமி நிற்கும் நம்மிடையே  இந்த ஏற்ற-தாழ்வுகள் நிச்சயமாக ஒரு விஷயமே அல்ல என்பதையும் ; ஒருநாளும் இது போல் சங்கடம் கொள்ள அவசியமே இல்லை என்றும் அந்த நண்பருக்கு நான் பதில் அனுப்பிவிட்ட போதிலும், இந்தக் கோணத்தில் நினைத்துப் பார்க்கத் தோணலியே என்றும் லேசாக மனம் கனத்தது ! 

வந்த இன்னுமொரு மின்னஞ்சல் சுருக்கமாய் - அழகாய் இருந்தது : 

"விஜயன் சார், திட்டமிடல் பற்றி நாம் ரொம்ப பேசுறோம்னு நினைக்கிறன் :-)  

1. புத்தகம் 11 மணிக்கு நமது ஸ்டாலில் வைத்து வெளியட போகிறோம்
2. 1 மணி அளவில் அருகில் உள்ள ஓர் நல்ல உணவகத்தில் நண்பர்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து உணவு உண்ண போகிறோம். (சென்னை நண்பர்கள் அருகே உள்ள ஒரு சிறந்த உணவகத்தில் ரிசர்வ் செய்தால் போதும்)

ரொம்ப யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகரிக்கும் என்பது எனது எண்ணம்."

நண்பருக்கொரு ஸ்மைலியை அந்நேரம் பதிலாக அனுப்பியிருப்பினும், இதுவே தேவலை என்ற எண்ணம் வலுப்பெற்றது ! அதுமட்டுமன்றி நேற்றைக்கு தொடங்கிய புத்தக சங்கமத்தில் உள்ள நமது பணியாளர்களிடம் பேசிய போது - நமது ஸ்டாலைச் சுற்றிலும் நிறையவே இடம் உள்ளதாகவும் ; ஜனவரியின் விழாவைப் போல அலைமோதும் கூட்டமெல்லாம் இல்லை என்றும் சொன்னார்கள் ! அதுமட்டுமன்றி நமது வரிசைக்கு ரொம்பவே அருகிலுள்ள  மீட்டிங் ஹால் விசாலமாகவே உள்ளதாகவும் சொன்னார்கள் ! இது போதுமே நம் கச்சேரிகளுக்கு ? மதிய லஞ்ச மட்டும் எங்கேயாவது ஒன்றாகச் சேர்ந்து வைத்துக் கொள்வோமே ! 

So - இது தான் plan ! 11 மணிக்குத் தான் புத்தக விழா தொடங்கும் எனும் போது 11-30-குள்ளே இதழை unveil செய்து விடுவோம் ! அதன்பின்னே வித்வான்கள் தங்கள் ஆடல், பாடல் நிகழ்சிகளை அமர்க்களமாய் களமிறக்கலாம் ! மதிய லஞ்ச் எங்கே என்பதை மட்டும் ஒரு நாளைக்கு முன்பாக தீர்மானித்துக் கொள்ளலாம் ! இதனையே ஒரு குட்டியான அழைப்பிதழாய் தயார் செய்து முன்பதிவு செய்துள்ள அத்தனை வாசகர்களுக்கும் தபாலில் அனுப்பிடுவோம் ! 

இப்போதைக்கு சென்னைக்கு கொண்டு வரவேண்டிய முன்பதிவுப் பிரதிகள் பட்டியல் மட்டுமே அவசரமாய்த் தேவை நமக்கு !! விரைவில் சந்திப்போம் guys !! Have a wonderful day ! 

165 comments:

  1. Replies
    1. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  2. இனியய மற்றும் மறக்க முடியாத இரண்டாமிடம்..!

    ReplyDelete
    Replies
    1. அனைத்து நண்பர்களுக்கும், ஆசிரியர் மற்றும் அவர் தம் குழுவினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்..!

      Delete
    2. ஆனந்த அதிர்ச்சியில் கொஞ்சம் சொற்பிழை ("இனியய..!") ஏற்பட்டுவிட்டது... இனிமே நடக்காமப் பாத்துக்கிறேன்...! எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை... சொக்கா..! என்ன செய்வேன்..? ரெண்டாம் இடத்துக்கு வந்துட்டேன்..!

      ரெண்டாம் இடம் சார்..! ("ரம்பா சார்..!" ஸ்டைலில் படிங்க பாஸ்!!!!!!!!!!!)

      Delete
  3. எடிட்டர் மற்றும் லயன் முத்து குடும்பத்தாருக்கும் அலுவலக நண்பர்களுக்கும் வாசக வாசகிய நட்புகளுக்கும் இனிய இதயங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எடிட்டர் ,அலுவலக நண்பர்கள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  5. எடிட்டர் ,அலுவலக நண்பர்கள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  6. தங்களுக்கும் ...தங்கள் குடும்பத்தினர்க்கும் ...தங்கள் பணியாளர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் ...

    விழா எப்படி நடந்தாலும் ...என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ...முக்கியமாய் உங்கள தந்தையார் ...ஜூ.எடி ...தாங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவது போல ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது சார் ...மேலும் நண்பர்களின் கரகாட்ட கோஷ்டியில் பங்கு பெறாமையும் வருத்தமே ...

    எனவே அடுத்த சேலம் புத்தக காட்சியில் கண்டிப்பாக தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் சார் ..

    இதுவே நான் செய்யும் தவறுக்கு நீங்கள் செய்யும் "பிராயச்சித்தம் "..:)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்கள் வரவை எண்ணியிருந்தேன் நண்பா! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
    3. சாரி நண்பரே ....தவிர்க்க முடியாத சூழ்நிலை ....

      தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

      Delete
    4. //இதுவே நான் செய்யும் தவறுக்கு நீங்கள் செய்யும் "பிராயச்சித்தம் "... ///

      :D

      Delete
  7. விஜயன் சார்,கககபோங்கள்:-), போ.கு.த. தாரை பரணி,சென்னை செல்லும் வாய்ப்பிருந்தால்,மண்சோறு திங்கும் போராட்டத்தையாவது நடத்தி,மூளைத்தளபதி டைகரின் வெளியீட்டை ஏசி ஹாலில் நடத்த செய்திருப்பார்.ஹீம்,என்ன செய்வது,:-)

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் சார் ...என்னதான் போராட்டம் நடத்தி ஏசி ஹால்ல புத்தகத்தை வெளியிட்டாலும் எங்கள் போராட்ட குழுவில் இருந்து ஒரு பைசா பெயராது என்பது தாம் உண்மை ..ஹி ஹி ...சங்கம் அபராததில் ஓடுவது உலக மகா வெளிச்சம் ஆயிற்றே ..

      Delete
  8. சென்னைக்கு வரும் நண்பர்களின் முன்பதிவு பிரதிகளை நேரிலேயே கொண்டுவந்து தரும் உங்களது முடிவு அருமை சார்.
    ஏனெனில் LMS வெளியீட்டின் போது உங்கள் கைகளால் இதழை வாங்க இயலாமல் போன வருத்தம் இன்னுமே இருக்கிறது. (நான் எந்த புக்கும் ஒன்றுக்கு மேல் வாங்குவதில்லை.)

    ஆனால் ஈரோட்டில் நீங்கள் புக்கை ரிலீஸ் செய்வதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே LMS என் வீட்டிற்கு கூரியரில் வந்தடைந்தது வேறு விசயம். ஹிஹிஹி.!!

    எனவே.,
    எது எப்படி ஆயினும்., என்னுடைய பிரதியை நான் சென்னையில் நேரிலேயே வாங்கிக் கொள்கிறேன் சார்.கூரியரில் அனுப்பிவிட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மேச்சேரி ஜெயக்குமார் அவர்களின் பிரதியும் சென்னையில் நேரிலேயே வாங்கிக்கொள்ள பிரியப்படுகிறார் சார்!
      அவருடையதையும் கொண்டுவந்து விடுங்கள் சார்.

      ( சென்னை லிஸ்டை நண்பர் மாயாவி சிவா பின்னர் அறிவிப்பார்)

      Delete
    2. என்னையும் List ல் சேர்த்துக்கொள்ளுங்கள். (கர்காட்டத்திற்கு அல்ல). <^>
      எனது முன்பதிவு எண். 477 P. சரவணன்

      Delete
  9. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  10. //ஜனவரியின் விழாவைப் போல அலைமோதும் கூட்டமெல்லாம் இல்லை என்றும் சொன்னார்கள் ! அதுமட்டுமன்றி நமது வரிசைக்கு ரொம்பவே அருகிலுள்ள மீட்டிங் ஹால் விசாலமாகவே உள்ளதாகவும் சொன்னார்கள் ! //

    ரொம்ப வசதியா போச்சி.!
    அப்போ கச்சேரிய அங்கேயே வெச்சிக்குவோம்.
    தவிலுக்கு வார் புடிச்சி கொண்டு வந்துடுறேன்....:)

    ReplyDelete
  11. எது எப்படி ஆயினும்., என்னுடைய பிரதியை நான் சென்னையில் நேரிலேயே வாங்கிக் கொள்கிறேன் சார்.கூரியரில் அனுப்பிவிட வேண்டாம் +1.

    ReplyDelete
  12. இனிய தமிழ் புத்தாண்டிற்கு ஒரு....இங்கே'கிளிக்'

    மறு ஒளிபரப்புக்கு ஒரு...இங்கே'கிளிக்'

    ReplyDelete
  13. Sir please bring my copy also. Order no 1402. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - Saravanan

    ReplyDelete
  14. I would like to get my copy in book fair.

    S.Mahesh
    Nungambakkam

    ReplyDelete
  15. Friends. Pl add me in comics watsapp group. My number is 9840234991. Thanks in advance

    ReplyDelete
  16. ஆசிரியர் மற்றும் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. எடிட்டர் மற்றும் லயன் முத்து குடும்பத்தாருக்கும் அலுவலக நண்பர்களுக்கும் வாசக வாசகிய நட்புகளுக்கும் இனிய இதயங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. எடிட்டர் மற்றும் லயன் முத்து குடும்பத்தாருக்கும் அலுவலக நண்பர்களுக்கும் வாசக வாசகிய நட்புகளுக்கும் இனிய இதயங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. எடிட்டர் சார்,

    ஒரு சிறு வேண்டுகோள்! 11:30 க்கு 'மி.ம'வை unveil செய்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அன்றைய பதிவை காலையிலேயே போட்டுவிட்டு வந்து இதைச் செய்வதைவிட, 11:30 மணிக்கு புத்தகம் வெளியிடப்படும் அதே நேரத்திலேயே நம் வலை நண்பர்களும் 'மி.ம' அட்டைப்படத்தைக் காணும்படிக்கு உங்களுடைய பதிவை scheduled post ஆகச் செய்தால் என்ன?

    Bloggerல் உள்ள 'Post settings' menuவில் இரண்டாவதாக உள்ள 'Schedule' optionஐ பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே உங்களுடைய பதிவை Publish ஆகும்படியாகச் செய்திடுவது ரொம்பச் சுலபம். இப்படிச் செய்வதுதான் ஒரு நிஜமான unveil ஆக இருந்திடும் எ.எ.க!

    உங்களுக்கு சரி என்று பட்டால் முயற்சித்துப் பார்க்கலாமே?

    ReplyDelete
  20. எனது புத்தகத்தினையும் தங்கள் கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன் சார். தயவு செய்து என் பெயரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  21. நேரில் வந்து வாங்குபவர்கள் எப்போது வந்து வாங்கவேண்டும் ஐயா?

    ReplyDelete
  22. dear editor sir, i am also collect my copy in Chennai book fair( world mart order no 1225) thank you
    D.Rajkumar Perambalur

    ReplyDelete
  23. திரு விஜயன் அவர்களுக்கு,

    சக நண்பர்கள் 'மின்னும் மரணம்' பல வழிகளில் முன்பதிவு செய்திருக்கிறார்கள். சிலர் புத்தககண்காட்சியில், சிலர் மணியாடர் மூலமாக, சிலர் செக் அனுப்பியிருக்கிறார்கள், சிலர் உங்கள் கணக்கில் பணம் காட்டியிருக்கிறார்கள், சிலர் e-டிரான்ஸ்பர் என பலவாறு செய்திருப்பதால்...பதிவு எண் மற்றும் ரசீது என்ற விஷயம் என உறுதியாக ஒற்றை வழியில்லாமல் உள்ளது.
    so...என்ன பெயரில், முகவரியில் முன்பதிவுக்கு செய்தார்களோ, அதை உங்களுக்கு, இங்கோ அல்லது e-மெயிலிலோ தெரிவித்து விடுகிறோம். நீங்கள் வரவு வைத்த முன்பதிவு பட்டியலை ஸ்டாலில் வைத்து சரிபார்த்து, (ஒரு ரிசீவ்டு கையெழுத்து வாங்கிட்டு) புதையலை ஒப்படைக்கிரீர்கள். சரிதானே ஸார்..?

    ReplyDelete
  24. இன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் நண்பர் கிங் விஸ்வா அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! தெரிவித்துக் கொள்கிறேன்.
    அன்பு ஆசிரியருக்கும், இனிய வாசகர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தங்கத் தமிழாக வாழ்வில் மின்னிட என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. எடி சார் & நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. விஜயன் சார்
    மற்றும் லயன் முத்து குடும்பத்தாருக்கும்
    அலுவலக நண்பர்களுக்கும்
    வாசக வாசகிய நட்புகளுக்கும்
    இனிய இதயங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் _/\_
    .

    ReplyDelete
  27. எடிட்டர் மற்றும் அவரது குழுவிற்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  28. I will take the book in chennai itself. Wish you all very happy new year

    ReplyDelete
  29. My booking number is 246. Sent an email to the lion comics office. Thanks

    ReplyDelete
  30. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  31. வணக்கம் சார் . அன்பான ஆசிரியருக்கும் அவர்தம் குழுவினருக்கும் ,ஆரவாரமான நண்பர்களுக்கும் இனிய ,இனிப்பான புத்தாண்டு நல்வாழ்த்துகள் . வாழ்த்து இங்கே ,இனிப்பு அங்கே . சென்னையில் சந்திப்போம் நண்பர்களே.

    ReplyDelete
  32. தமிழ் காமிகஸ் உலகின் அற்புதமான மி.ம எனக்கு இரண்டு வேண்டும்.எனவே என் முன்பதிவை வீட்டிற்கு அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  33. Due to sickness I am unable to attend the book release functionest wishes for successful book release function Sir. Happy Tamil new year to all friends

    ReplyDelete
  34. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  35. சரியான முடிவு விஜயன் சார்! அனைத்தும் நல்ல முறையில் வெற்றிகரமாக நடை பெற வாழ்த்துகள்.

    நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தை சந்திப்பதே ஒரு பெரிய விருந்து!

    காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  36. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. We are getting close to MM release, exciting:)

    ReplyDelete
  38. சித்திரைக்கனி இனிக்கட்டும் இனி
    மிம உடன் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  39. காமிக்ஸ் காதல் மன்னர்கள்
    அனைவருக்கும்
    அவர்தம் குடும்பத்தார்க்கும்

    தமிழர் திருநாளாம் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  40. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    The decision is simple and best.

    Will meet on 19th 11.00 a.m

    ReplyDelete
  41. Dear Editor,
    I would like to collect both of my copies in Chennai Book fair itself - Dr. AKK Raja, Karur

    ReplyDelete
  42. இன்று பிறந்த நரள் கொண்டாடும் நண்பர் கிங் விஷ்வர அவர்களுக்கு எனது வரழ்த்துக்கள்

    ReplyDelete
  43. இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
    இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!

    ReplyDelete
  44. நண்பர் 'கிங் விஷ்வா' அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  45. நமது இனிய காமிக்ஸ் மருத்துவர் சுந்தர் சார் அவர்களுக்கு இன்று காலை அன்பான ஆண் குழந்தை பிறந்துள்ளது .

    மேலும் ஒரு காமிக்ஸ் நண்பரை இணைத்த அவருக்கு காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    விரைவில் அவர் வாரிசு எங்கள் போராட்ட குழுவில் இணைய இருப்பதால் ஆசிரியர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன் .. :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் டாக்டர் சுந்தர்! :)

      Delete
    2. வாழ்த்துக்கள் Dr.Sundar,Salem :-)

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. மினி லயன் ''டைகரை'' பெற்றெடுத்ததற்கு ..........வாழ்த்துக்கள் சார்........

      Delete
    5. எங்களது வாழ்த்துக்களும் உரித்தாகுக டாக்டர் !

      புது வரவு - தலீவர் வழியில் பயணம் செய்தாலும், செயலாளரின் புஷ்டியோடு இருந்திடட்டுமே ?!

      Delete
  46. விஜயன் சார் .................
    என்னோட முன் பதிவு .............

    சைத்தான் சாம்ராஜ்யத்துல ......5

    வைகிங் தீவு மர்மம் அதுல .......2

    போதும் ..........எனக்கு ரொம்ப ஆசை கிடையாது

    ReplyDelete
  47. டரக்டர் சுந்தர் அவர்களுக்கும் குட்டி பரப்பரவிற்கும் எனது வரழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. ///குட்டியான அழைப்பிதழாய் தயார் செய்து முன்பதிவு செய்துள்ள அத்தனை வாசகர்களுக்கும் தபாலில் அனுப்பிடுவோம் ! ///

    நல்ல விசயம்! சென்னை புத்தக சங்கமம் 19ம் தேதியன்று 'சென்னை காமிக்ஸ் சங்கமம்'ஆக மாறப்போவது உறுதி!

    ReplyDelete
    Replies
    1. சார்... அப்படியே அந்த அழைப்பிதழ்ல நம்ம சேந்தம்பட்டி முத்தையன் குழுவோட பெர்பாமன்ஸு பத்தி இரண்டு வரி போட்டீங்கன்னா உங்களுக்கும் ஒரு பெருமை... எங்களுக்கும் ஒரு கெளரவம் பாருங்க?

      அப்பறம் இன்னொரு விசயம்... நியூஸு பேப்பர்ல ஒரு கா-பக்கத்துக்காவது விளம்பரம் குடுக்காம எங்க கலைக்குழுவோட பென்ஸு காரு சேந்தம்பட்டி ஊர் எல்லையைத் தாண்டினதில்லைன்றத புரிஞ்சிக்கிடணும் நீங்க!

      Delete
  49. மெட்ராஸுக்கு போய் பெர்பாமன்ஸு காட்டப்போகும் நம்ம சேந்தப்பட்டி முத்தையன் குழுவுக்கு, வெளியிலிருந்துகொண்டே ஆதரவு காட்டும் நம்ம போ.கு.தலீவர் ஆனந்தக் கண்ணீரோட ஒரு அட்வைஸுபாட்டெழுதி வாசிக்கறார்

    " ஊருவிட்டு ஊருவந்து... பப்பப்பா
    லந்து கிந்து பண்ணாதீங்க...பப்பப்பா
    சந்துக்குள்ள சிக்கினோம்னா ... பப்பப்பா
    தொந்தி மேல மிதிப்பானுங்க ... பப்பப்பா"

    ReplyDelete
    Replies
    1. தம்பி...இத்தாலி தம்பி..

      -உங்கள் பாட்டுல தப்பு இருக்கு தம்பி...
      -என்ன பிழை சேந்தப்பட்டியாரே..?
      -எங்க கம்பேனியில யாருக்கும் 'தொந்தி' இல்லை தம்பி....இருந்த ஒன்னு உள்வாங்கிடிச்சி தம்பி..
      -இப்ப என்ன அந்த வரிய 'பட்டி' டிங்கரிங்' பாக்கணும், அதுதானே..?
      -(காலை உதைத்து..)ஜில்ஜில்ஜில்ஜில்...தம்பி ஆமா தம்பி...
      - இப்புடு சூடு...'சங்கு மேல மிதிப்பானுங்க...பப்பப்பா...' இப்ப ஓகேவா...!
      -தம்பி..தம்பி,ரொம்ப அருமையா மாத்தினீங்க தம்பி..தம்பி நீங்க நல்லா வருவீங்க தம்பி...எனக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியல தம்பி..! தம்பி கொஞ்ச இருங்க தம்பி உங்களுக்கு ஒரு பழம் வாங்கியார -சொல்றேன்,உக்காருங்க தம்பி..!
      -என்னது 'பபபழமா'........................................................................................__/\__

      Delete
  50. செயலாளர் அவர்களே நான் வேண்டுவது எல்லாம் நமது கரகாட்ட குழுவின் பென்ஸ் கார் டயர் உங்களுக்கு முன்னரே புத்தக காட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்பது தான் ...

    ReplyDelete
    Replies
    1. 'டயரு வரும் முன்னே - கலைக்குழு
      காரு வரும் பின்னே' அப்படீன்றதுதானே தலீவரே மக்கள் நமக்கு குடுத்துருக்கற அடையாளம்! ;)

      Delete
  51. அப்புறம்... மெட்ராஸுல கேரவன் கேரவன்'னு ஒரு வண்டி சுத்துதாமில்ல?... அத ஒன்ன வாடகைப் புடிச்சு ஸ்டேஜுக்குப் பின்னான்டி நிறுத்திப்புட்டீங்கன்னா எங்க காமாட்சிப் பொண்ணு உடுப்பு மாத்தி ரெடியாகறதுக்கு வசதியா இருக்கும் பாருங்க...

    ReplyDelete
    Replies
    1. 'அதெல்லாம் முடியாது, மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சி நின்னுதான் ட்ரெஸ்ஸு மாத்திக்கிடணும்'னு மத்தவங்க மாதிரியே நீங்களும் சொல்றதா இருந்தா... இப்பவே அட்வான்ஸை திருப்பிக் குடுத்துப்புட்டு அய்தராபாத்துல ஆடக் கூப்பிடிருக்காய்ங்க... அங்க போய்டுவோம்... ஆம்ம்ம்மா!"

      Delete
    2. நீங்க எல்லாம்சென்னை வரேன்னு சொன்னவுடன் இன்று சென்னையில் பலத்தமழை கொட்டி தீர்த்துவிட்டது.

      Delete
    3. ஜனவரி புத்தக விழாவிற்கும் 10பேராக வந்து ஃபெர்பாமன்ஸ் தந்தமே வெங் சார் , ஆனா அப்ப மழை கொள்ளவில்லையே ..........ஏனாம் ?

      Delete
    4. கொள்ள அல்ல கொட்ட .......எச்சுச்சூமி

      Delete
    5. 'கோடையிடி' சென்னைக்கு வரப்போகிறார்னு நாம சொன்னதை மேகங்கள் தப்பாப் புரிஞ்சுகிட்டதுனு தோணுது! ;)

      Delete
    6. வெயில் குறைந்து, குளுகுளு என மாறிவிட்டது.

      Delete
    7. நல்லவேளையா ஏ.சி ஹால் புக் பண்ணல. இல்லேன்னா குளிர்ல நடுங்கிப் போயிருப்போம். இல்ல? ( நரி - திராட்சைக் கொத்து கதை ஞாபகத்துக்கு வருதுங்களா?) :D

      Delete
  52. நன்றிகள் பல விஜயன்சார்&நண்பர்களே.

    ReplyDelete
  53. செயலாளர் அவர்களே நான் வேண்டுவது எல்லாம் நமது கரகாட்ட குழுவின் பென்ஸ் கார் டயர் உங்களுக்கு முன்னரே புத்தக காட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்பது தான் ...

    ReplyDelete
  54. அன்பு ஆசிரியரே...
    தவிர்க்க முடியாத காரணத்தினால் மின்னும் மரணம் வெளியீட்டில் கலந்து கொள்ள முடியாது என தோன்றுகிறது.
    மிகவும் எதிர்பார்த்த நிகழ்ச்சியில் கலந்துககொள்ளாதது வருத்தமாக உள்ளது.
    தயவு கூர்ந்து என்னுடைய இதழை விழாவுக்கு வருகை தரும் நண்பர் ஈரோடு விஜய் அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
    நான் பெற்றுக்கொள்கிறேன்.
    விழாவில் கலந்துக்கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    ,,(,பிரின்டிங் சரியாக வந்துள்ளது தானே....?)

    ReplyDelete
  55. Whether we will be able to get a copy of MM if we haven't done pre-booking ?

    ReplyDelete
    Replies
    1. @ Jayaprabhu Nadarajan

      நீங்கள் சென்னையைச் சேர்ந்தவரென்றால் 19ம் தேதி காலையில் புத்தக சங்கமத்தில் வாங்கிட இயலும் ( சொற்ப எண்ணிக்கையில் தயாராகும் புத்தகமென்பதால் உங்கள் பிரதிக்கு முந்துங்கள்). அல்லது, இவ்வலைத் தளத்திலேயே உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம். அல்லது, lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயிலைத் தட்டிவிடுங்கள்! (உடனே பதில் வந்தாலும் வரலாம். ஓரிரு நாட்கள் ஆனாலும் ஆகலாம். பொறுமை காப்பது அவசியம்!)

      Delete
  56. காமிக்ஸ் ரசிகர்கள் என்று சற்றே காலரைத்தூக்கி விடும் சம்பவம் சற்று முன் என்னுடைய சேலம் ஸ்டீல் கிஃப்ட் ஷாப்பில் நடந்தது நண்பர்களே. சேலம் உருக்காலையின் அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலகத்தின் முக்கிய பொறுப்பாளர் நம்முடைய காமிக்ஸ் ரசிகர் . சில பல வண்ண இதழ்களை படித்து வருகிறார் . இரும்புக்கை மாயாவி புக் ஏதும் வருதா இப்போது என கேட்டார் . ஆம் என்றவுடன் 100வாட்ஸ் பல்ப் அவர் முகத்தில் எரிந்தது . நயாகராவில் மாயாவி ரீப்பிரிண்ட்டை பார்த்து துள்ளி குதித்து விட்டார் . "நயாகராவில் மாயாவி"ல்லாம் எத்தனை தடவை படித்து இருப்பேன் , அட்டகாசம் செய்வார் மாயாவி என ஆரவாரமான சொற்பொழிவு ஆற்றினார் . இதுவரை வந்த மறுபதிப்புகள் 6யும் அள்ளிச்சென்றார் ஆசையுடன் . அவரின் பேத்தி 1வயது குழந்தை வந்து உள்ளதாம் அதைக்கொஞ்சும் சந்தோஷ்த்துக்கு இணையானது இந்த நயாகராவில் மாயாவியை மீண்டும் படிப்பது என சொல்லி நடையை கட்டினார் . நாமும் இன்னும் 15வருடம் கழித்து இப்படித்தான் ஃபீல் செய்வோம் என எண்ணி ........... மனசு லேசானது . 1000க்கு ஒரே காமிக்ஸ் ஞாயிறு ரிலீஸ் ஆகுது சார் , லான்ச்சுக்கு நானும் சென்னை போகிறேன் என்றவுடன் ,"விஜி என்னா சொல்ர 1000க்கு காமிக்ஸ் ஆஆஆஆஆஆ" என்று வாயைப்பிளந்தவர் .......சற்று நேரம் கழித்து ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லி சென்றார் .

    ReplyDelete
    Replies
    1. குட்! சீக்கிரமே அவரை சந்தாதாரர் ஆக்கிடுங்க விஜயராகவன்!

      Delete
  57. கச்சேரிக்கு இன்னும் மூணே நாளுதான் இருக்கு.!!!

    ReplyDelete
  58. கொள்ளைக்கார மாயாவி.:-

    பழீய பயாஸ்கோப்புல ஈரோ சண்டை போடச்சொல்லோ., கூடவே கீற காமெடியனும் சண்டை போடுவாப்போல.
    அப்போ வில்லனடோ அடியாளு ஒர்த்தன் காமெடியனான்ட வந்து கராத்தே சவுண்டு குடுத்துகினு கையிகால ஆட்டி எம்மா நேரம் கமால் காட்டிகினே இருப்பான்.
    நம்ப காமெடியன் ஐஸாவா பாத்துகினே இருந்துட்டு., கபால்னு ஒரு கட்டைய எடுத்து டமால்னு அடியாளு மண்டையிலியே போடுவாப்போல.
    கண்ணு ரெண்டுத்தியும் ஏறக்குத்திகினு அடியாளு மயங்கி வுயுந்துருவான். இத்த நாம நெறியா சினிமால பாத்துருப்போம். இத்த மைண்டுல பிக்ஸ் பண்ணீட்டு அடுத்தத படிங்கோ.!

    நெவுலு படை ஆசாமிங்கோ நாலு பேரு இருக்க சொல்லோவே அதிருவு கருவிய லவட்டீனு போவ கேடிப்பசங்கோ வருவானுங்கோ.
    ("எந்தவிதமான ஆபத்தையும் சமாளிக்க நிழல்படை அதிகாரிகள் பயிற்றுவிக்க பட்டுள்ளனர் " ன்னு டயலாக் வேற வரும்.)
    உடனே நம்ம நெவுலு படை ஆளுங்கோ (அந்த அடியாள நெனச்சிக்கொங்க) ஆளுக்கொரு ஸ்டைல்ல திரும்பி சீன் போடுவாங்கோ.
    கேடிப்பசங்க மயக்க வாயு டுபாக்கில சுட்டதும் டொங்குனு நாலு நெவுலும் தரையில கெடக்கும்.

    எனக்கு அந்த பழீய பட காமெடிதான் ஞாபகம் வந்துச்சி.!

    அத்ர்வு கருவிய கண்டுபுடிக்கக ப்ளைன் கோட்டு நல்லவரா இருக்குற மாயாவி கட்டம் போட்ட கோட்டு கெட்டவனா மாறி தியாகம் பண்றாப்போல.
    கடோசில ஒருவழியா ரயிலு வந்து கருவியையும் கதையையும் முடிச்சி வெக்குது.
    இப்போ ஒரு டவுட்டு.-
    மாயாவி கெட்டவரா மாறினதும் அவுரு கைல கீற அல்லா வெப்பன்ஸையும் ரிமூவ் பண்ணுறாங்க.
    அதுக்கு பதிலா இரும்புக் கையையே ரிமூவ் பண்ணி இருக்கலாமே.??

    பித்தளை சொம்ப திருடி பேரிச்சம்பழத்துக்கு போடுறதை விட டைரக்டா பேரிச்சம்பழத்தையே திருடறது பெட்டர் இல்லியா.??
    யோசிங்க ப்ர்தர்ஸ்.!!

    ReplyDelete
    Replies
    1. //கேடிப்பசங்க மயக்க வாயு டுபாக்கில சுட்டதும் டொங்குனு நாலு நெவுலும் தரையில கெடக்கும். ///
      LOL. :D

      Delete
  59. ஐ பி எல் ஆரம்பித்து விட்டதால்.,
    டாலர் ராஜ்ஜியம் படிக்கவில்லை.
    ஏதாச்சும் டம்மி மேட்சு வரும்போது லார்கோவை படிக்கணும்.
    எச்சூஸ்மி லார்கோ ஸீ யூ அப்பாலிக்கா.!

    ReplyDelete
  60. கடைசியில பங்ஷன் இப்படி சிம்பிளா ஏற்பாடானதுல லைட்டா ஒரு சோகம்.

    வரப்போற வெளியூர் கரகாட்டக்கோஷ்டிய வரவேற்க முறைப்படி உள்ளூர் ஆட்டக்காரர்கள் இல்லைன்னா நாளைப் பின்ன பொல்லாப்பு வந்துடும். அதுல ஒரு சோகம். உள்ளூர் கரகாட்ட சீனியர் கிங் விஸ்வா அதைப் பாத்துப்பார்னு நம்புறேன். (மொட்டை மண்டையில கரகம் நிக்காட்டியும் அவருதாம்ப்பா எல்லாம்):-)))

    எல்லாத்துக்கும் மேல புக்கைப் பார்க்க இன்னும் 10-15 நாள் வெயிட் பண்ணனும் நினைக்கச்சொல்லோ கண்ணுல தண்ணி வர அளவுக்கு சோகமோ சோகம்!

    அட போங்கபா.. தனிமையே என் துணைவன்! லாலாலா!

    ReplyDelete
    Replies
    1. //கடைசியில பங்ஷன் இப்படி சிம்பிளா ஏற்பாடானதுல லைட்டா ஒரு சோகம்///

      சிம்பிளா இருந்தாலும் செமத்தியாவும் இருக்கும்றதுல டவுட்டே இல்லை ஆதி அவர்களே! நண்பர்கள் தங்களுக்கான முன்பதிவு பிரதிகளை வாங்கிக்கொள்ளவும், முன்பதிவு செய்யாதவர்கள் மி.ம காலியாவதற்குள் வாங்கிக் கொள்ளவும் நிறைய எண்ணிக்கையில் குவியயிருப்பதால் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமிருக்காது ! ஒரே ஒரு ஸ்டாலில் மட்டும் காலை 11 மணிக்கே கூடவிருக்கும் கூட்டத்தைப் பார்த்து மொத்த அரங்கமும் மிரளப்போவது நிச்சயம்!

      Delete
  61. காலை வணக்கங்கள் நண்பர்களே,

    எங்கள் 'சேந்தம்பட்டி' கோஸ்ட்டி நண்பர்கள் புதையலை சென்னையில் பெற... மெயிலில் சிலர், போனில் சிலர் விவரங்கள் கூறி விழா மேடையில் முன் வரிசையில் வைக்க சொல்லிவிட்டோம்.
    நீங்களும் உங்கள் அட்டகாசமான புதையலை (கவனிக்க: பேக்செய்யப்பட்ட அட்டை பாக்ஸ்) 19-ம் தேதி ஞாயிறு அன்று சென்னை புத்தககண்காட்சியில் பெற விரும்புபவர்கள் மட்டும் புத்தகத்தில் வெளிவந்த பட்டியலில் உள்ள உங்கள் வரிசைஎண் + உங்கள் முன் பதிவுக்கு கொடுத்த முகவரியை www.lion-muthucomics.com இந்த மெயில் id க்கு தட்டிவிடுங்கள். அல்லது 04562272649 என்ற நெம்பருக்கு போன் செய்து உங்கள் பதிவுஎண் பெயர்,ஊர் விவரங்களை குறிப்பிட்டலாம்..!
    வேண்டுகோள்: இன்று மாலைக்குள் தகவல் தெரிவப்பது மிக உதவியாக இருக்கும் என்பதே அது..!

    உங்கள் வசதிக்கு பட்டியல்கள் கீழ்வரும்மாறு...

    முதல் பட்டியல் 'காதலிக்க குதிரையில்லை...இங்கே'கிளிக்'

    இரண்டாவது பட்டியல் 'கார்சனின் கடந்த காலம்'....இங்கே'கிளிக்'

    மூன்றாவது பட்டியல் 'இரவே இருளே கொல்லாதே..!' ...இங்கே'கிளிக்'

    நான்காவது பட்டியல் 'உயரே ஒற்றை கழுகு' ...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. உபயோகமான 'இங்கே க்ளிக்'! நன்றி மாயாவி அவர்களே!

      //முகவரியை www.lion-muthucomics.com இந்த மெயில் id க்கு தட்டிவிடுங்கள். ///

      சிறுபிழை:
      மெயில்-ஐடி : lioncomics@yahoo.com

      Delete
    2. மெகா குண்டு புக் ராப்பகலா படிக்க இப்பவே அதுக்காண்டி எல்லோரும் தூங்கிட்டிங்களான்னு 'செக்' பண்ணினேன்...ஹீ..ஹீ..அலாட்டதான் இருக்கிங்க...!

      Delete
  62. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  63. @ FRIENDS : நண்பர்களே,

    இன்று மாலைக்குள் சென்னைக்குக் கொண்டு வரத் தேவையான இதழ்களின் பட்டியல் கிடைத்தால் தவிர, சிரமமாகிப் போய் விடும் ! அது மட்டுமன்றி - இங்கே பயன்படுத்தும் பெயர்களில் நீங்கள் சொல்லும் தகவல்கள் சற்றே குழப்பத்தையும் ஏற்படுத்துவதால் - புக்கிங் எந்த பெயரில் செய்யப்பட்டுள்ளதோ அந்தத் தகவலோடு விபரம் அவசியம் ! Urgent please !!

    ReplyDelete
    Replies
    1. S.Mahesh,
      Nungambakkam,
      Chennai - 600034

      Delete
    2. என்னுடைய முன்பதிவு
      87.M.Ravikannan
      Mecheri
      Salem.
      எனது நண்பருடையது
      389. T.Jayakumar
      Mecheri
      Salem

      இரண்டையும் சென்னையில் நேரில் பெற்றுக் கொள்கிறோம்., கூரியரில் அனுப்ப வேண்டாமென போனில் லயன் ஆஃபிஸிக்கு தகவல் சொல்லிவிட்டேன்.
      சரிபார்த்து விடுங்கள் சார்.!!

      Delete
    3. என்னுடைய முன்பதிவு எண்: 174 மற்றும் 109 [ஒரு முறை பணம் கட்டியதற்கு இரண்டுமுறை முன்பதிவு எண்கள் தரப்பட்டுள்ளது. எனக்கு மட்டும் Buy 1 get 1 Free offerஆ? ஹைய்யா ஜாலி! :) ]

      பெயர் : விஜய் சேகர்
      ஊர் : ஈரோடு

      Delete
    4. மேற்கூறிய தவறை நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தகுந்தது! (வரலாறு முக்கியமில்லையா)

      Delete
    5. புதையலை சென்னையில் பெற விரும்புபவர்கள் பட்டியல் நண்பர்களுக்காக....

      3. K.பரிமேளழகன் - சென்னை
      17. RT.முருகன் - சென்னை
      20 . S.கிருபாகரன் - சேலம்
      36. C ஜான் சைமன் - சென்னை
      40. TK அகமது பாசா - பெங்களூர்
      51. R ஸ்ரீதர் - சேலம்
      87. M ரவிகண்ணன் - சேலம்
      100. P ரமேஷ் - திருப்பூர்
      107. L.சுசிந்தர் குமார் - சேலம்
      108. V விஜயராகவன் - சேலம்
      109. P. விஜய சேகர் - ஈரோடு
      112. A.ஸலூம் பெர்னாண்டஸ் - நாகர்கோவில்
      246. அருள் நடராஜன் - சென்னை
      289. AKK ராஜா - கரூர்
      389. T.ஜெயக்குமார் - சேலம்
      399. L. சுசிந்தர் குமார் - சேலம்
      447. P சரவணன் - கருவூர்

      Delete
    6. 96.B சிவகுமார் - சேலம்

      Delete
    7. 114. TKP நிகிதா - திருப்பூர் ( இரண்டு பிரதிகள்)

      Delete
    8. @இத்தாலி விஜய்,

      'லஞ்ச்' டைம் வேறு..'லஞ்ச' டைம் ..!
      'விஜய்' சேகர் வேறு ...'விஜய' சேங்கர் வேறு ..!
      ஒரு புள்ளி என்றாலும் விவகாரமானது, இத்தாலி விஜய் அவர்களே...உங்களுக்கான கேள்வி என்னவென்றால் நீங்க 'புள்ளி ராஜா' இல்லையா ? என்பதே...ஹாஹா..! :D

      Delete

    9. (அண்ணன் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

      ஓஓஓ.…… இவுருதான் அந்த புள்ளி ராஜாவா??

      Delete
    10. @ மாயாவி & ஆர்ட்டின்

      அந்தப் புள்ளிராஜா நானில்லைன்னு சொன்னாமட்டும் நம்பவா போறீங்க? ம்... யூஸ்!

      Delete
    11. @ இத்தாலி விஜய் அவர்களே,

      இப்ப உங்க 'பட்டா' நெம்பர் என்ன 109 தா..? 174..? Urgent please !! எல்லா குழப்பத்த விட இது ரொம்பவே பெருசா இருக்கே..! ஏன்னா வரலாறு முக்கியமில்லையா..! (அப்புறம் ரெண்டுக்கு ஆசைபட்டு ஒண்ணுமேயில்லாம போய்டகூடாதில்லையா..அதுக்குதான்.)

      Delete
    12. பிரச்சினையை பெரிசு பண்ணாமக் கொஞ்சம் பேசாம இருங்க மாயாவி! சின்னதா ஒரு மருவை ஒட்டிக்கிட்டு எடிட்டர்ட்ட போய் "யேஸ்... ஐ யம் சேங்கர் ஃப்ரம் ஈரோட். டாங்க் யூ"னு சொல்லி அந்த இரண்டாவது புக்கையும் வாங்கிக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடிடலாம்னு இருக்கேன்! :D

      Delete
    13. அதுல பாருங்க... மருவை நான் முகத்தில்தான் ஒட்டிக்கணும்றதில்லை... முதுகுல ஒட்டிக்கிட்டாக்கூட அவரால அடையாளம் கண்டுக்கிட முடியாது! :)

      Delete
    14. ஆமாமா..பாஷா பாய் வேற புக்கை உங்ககையில தரசொல்லியிருக்கார், வாத்தியார் 'ஆண்டவா இந்த ஒரு புக்குல மட்டும் எந்த குறையும் வெச்சிடாதப்பா..உன்னோட உண்டியல்ல ரெண்டு MM காணிக்கையா போடுறேன்'னு கண்ணைமூடி வேண்டுறதுலையே கவனமா இருப்பார்..சோ, மச்சமாவது...ஹெங்கராவது... ஜமாய்ங்க, இத்தாலி விஜய் அவர்களே..! :D '

      Delete
    15. 15. Nagarajan, Chennai


      மாயாவி ஜி நம்ம பேரை விட்டுடீங்களே :)

      Delete
    16. மாயாவிஜி, எனது பெயர் கரூர் P. சரவணன் என்பது சரி, ஆனால் எனது பதிவு எண். 477 என்பதே சரி. நான் இப்போதே சென்னையில் தான் உள்ளேன்.

      Delete
    17. @ திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்

      நாகராஜன், உங்களுக்கு கலையில் கூட வாட்ஸ் ஆபில் தனியே கேட்டேன், எண் மட்டும் சொல்லுங்கள், இங்கு நினைவுட்டி விடுகிறேன் என கேட்டிருந்தேன். நீங்கள் போட்ட 'தம்சப்' ஐ பார்த்து முன்பே மெயில் போட்டிருக்கலாம் என நினைத்தேன். ராஜ் முத்து குமார்,ரபீக் ராஜா,லக்கி லிமிட் என நீங்கள் ஒருசேர தெரிவித்திருப்பீர்கள் என்பதால் உங்களுக்கு போன் செய்யவில்லை மன்னிக்க..!

      21. கிருபாகரன் - சேலம் & 477.Pசரவணன் -கரூர் நீங்களும் நான் செய்த எண் தவறுக்கு மன்னிக்க..!

      Delete
    18. dear editor sir, i am pre order following the name only, already am told our office

      D.RAJKUMAR - PERAMBALUR (WM023lioncomics.in_1225)

      Thank You

      Delete
    19. 28.MH முகமது ரபீக் ராஜா - சென்னை

      Delete
    20. மன்னிப்பெல்லாம் எதற்கு சார், இருந்தாலும் மன்னித்த்துவிட்டேன்..

      Delete
  64. Sir, when we will get the MM book in courier, 18th saturday or 20th monday? Please confirm sir...

    ReplyDelete
  65. 'அரிசோனா லவ்'லேர்ந்து குளுகுளுன்னு ரெண்டு பக்கம் டீசராப் போட்டாத்தான் என்னவாம்? ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. ரோம் (இத்தாலி )தீப்புடிச்சு எரிஞ்சப்போ மன்னன் நீரோ வயலின் வாசிச்ச கதையா ...

      செல்போன் டவர் கிடைக்கலன்னு சேலத்து மக்கள் பரிதவிக்க "சில்க் ஷவர் "கேட்கிறார் சேரோடு விஜய் ..

      அவரை மாயாவிஜி "இத்தாலி விஜய் "என அழைப்பதில் என்ன தவறு ??

      ...இப்படிக்கு செந்துறைபட்டி வயிற்றெரிச்சல் கரகாட்ட கோஷ்டி நாகலிங்கம் ...

      பி .கு ..எடிட்டர் சார் !இதற்கு பாடம் புகட்ட ஒரே வழி ..2க்கு பதிலாக 4டீஸர் போடுவதுதான்..அதாவது முள்ளை முள்ளால் ..(ஹி ..ஹி ..)

      Delete
    2. 'இத்தாலி விஜய்' ன்னு நாங்க கூப்பிட ...(புரியாத ) புது விளக்கம் சொன்ன 'செந்துறைபட்டி வயிற்றெரிச்சல் கரகாட்ட கோஷ்டி நாகலிங்கம் ...' தம்பிக்கு எங்க கம்பேனி சார்பா, இந்த புது 'டையம் பாஸ்' பொத்தகத்த..
      பழைய முத்துகாமிக்ஸ் 'ரயில் கொள்ளை' பொத்தகமா நெனச்சி வாங்கிக்க சொல்லி, சேந்தப்பட்டி சார்பா கேட்டுகிறேன் தம்பி...வாங்க தம்பி, வாங்க..! செந்துறைபட்டி நாகலிங்கத்துக்கு ரெண்டு பழம் வாங்கியாற சொல்லுங்க தம்பி..!

      Delete
    3. ஹ .ஹா ...மாயாவிஜி ..

      சும்மாச்சுக்கும் விஜயை வம்புக்கு இழுத்தேன் ....

      வயிற்று எரிச்சலுக்கு காரணம் லயனின் தங்கமான தருணங்களில் என்னால் தொடர்ந்து நேரில் பங்கேற்க இயலாமல் போவதே ...

      உண்மையில் சேலம் ஈரோடு நண்பர்களின் பங்களிப்பு இங்கு எல்லோருக்கும் பெருமிதம் தருகிறது (கொஞ்சூண்டு பொறாமையும் ஏற்படுகிறது )
      மின்னும் மரணம் வெளியீட்டு விழாவுக்கு செல்லும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .

      விழா பெரிய வெற்றி பெற மனங்கனிந்த வாழ்த்துக்கள் ...

      Delete
    4. தம்பி...செல்வம் தம்பி...

      என்ன சொல்றீங்க தம்பி...வம்பிலுத்திங்களா...தம்பி..! உங்க நம்பி பழம் வாங்கிட்டு வர சொன்னேனே தம்பி..! இந்த சேந்தம்பட்டிகாரங்க 'ஆட்டத்த' பாத்தா..வயித்தெரிச்சல் என்ன தம்பி, நெஞ்ஜெரிச்சல் கூட சிட்டா பறந்து போயிடும் தம்பி...!
      இருந்தாலும் தம்பி நம்ம பயலுக ஆட்டத்தை பாக்கமையே வாழ்த்துறிங்களே தம்பி...உங்களுக்கு தங்கமான மனசு தம்பி..! உங்க எல்லா எரிச்சலும் எடந்தெரியாம போகனோன்னு ஆத்தா கிட்ட வேண்டிகிறேன் தம்பி..! நல்லாயிடுவிங்க தம்பி..!

      Delete
    5. @ செல்வம் அபிராமி

      நீங்களும் சென்னைக்கு வருவதாக மாயாவி மூலம் அறிந்தபோது உற்சாகமடைந்தேன்..... சரி விடுங்க, மி.ம'வின் மெகா சக்ஸஸைத் தொடர்ந்து விரைவில் வெளிவரவுள்ள 'இரத்தக்கோட்டை' மறுபதிப்பு மற்றும் 'டெக்ஸ் க்ளாசிக் கலெக்ஸன் ஸ்பெஷல்' வெளியீட்டு விழாவில் ( வழக்கம்போல ஏதாவது மரத்தடியில் தான்) சந்தித்துக்கொள்ளலாம். என்ன... அதுக்குள்ள நான் இத்தாலிக்கே போய்டாம இருக்கணும்! ;)

      Delete
    6. அப்படி 'செல்வம் அபிராமி' வர வெளியீடு விழாவுக்கு... என்னால வரமுடியாதுங்க இப்பவே சொல்லிடுறேன், எனக்கு மரத்தடியில நின்னு பேச முடியாத அளவுக்கு அப்போ பயங்கர 'கால் எரிச்சல்' ..! :-)

      Delete
  66. எனது பிரதியையும் சென்னையில் பெற்றுக் கொள்கிறேன். இதைப் பற்றி Lion அலுவல கத்திலும் சொல்லியாயீற்று

    ReplyDelete
  67. சார் வணக்கம் நாளை அமாவாசை நல்ல நாள் எனவே முதல் பிரதியை தங்களின் தந்தையிடம் அல்லது சின்னவரிடம் வெளியிட விரும்புகிறேன் நாளை மறுநாள் பாட்டிமை ஒரு நல்ல வெளியேடு பாட்டிமயீல் வருவதை விரும்பவில்லை

    அன்புடன்

    பழனிவேல்

    அதிகமாக இருந்தால் மன்னிக்க

    ReplyDelete
    Replies
    1. டியர் பழனிவேல் !!!

      நல்ல யோசனை தான் ஸார் .ஆனால் இதை நடைமுறை படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.ஏற்கனவே நம்ம தளபதியை சகட்டுமேனிக்கு நய்யாண்டி செய்து ஓட்டோ ஓட்டென்று ஓட்ட "ஈரோடு பூனையார்" வகையறா ஏதாவது மேட்டர் கிடைக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணை விடாத குறையாய் தேடிக்கொண்டிருக்கிறது.நீங்கள் கூறியபடி நாளை புத்தக வெளியீட்டை நடத்தினால் வேறு வினையே வேண்டாம்."அமாவாசைக்கு பிறந்தவன்" என்று தங்க தளபதியை நார அடித்துவிடுவார்கள்.ஆகவே தங்கள் ஆலோசனை தற்போதைய சூழலில் தளபதியின் இமேஜை டேமேஜ் ஆக்கும் என்பதால் தயவு செய்து ஐடியாவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.ஹிஹி!!!

      Delete
    2. சாத்தான் அவர்களே...
      சரியான பதிலடி..! என்னா டையமிங் சூப்பர்..! டைகர் இரசிகர்கள் மூளகாரங்ககிறது உங்க யோசனை மூலமா மறுபடியும் ப்ரூஃப் ஆயிடிச்சி..!

      Delete
    3. //டைகர் இரசிகர்கள் மூளகாரங்ககிறது ///

      நல்லவேளையா மாயாவி தனது வழக்கமான எழுத்துப் பிழையுடன் 'மூலக்காரங்க'னு போடலை! இல்லேன்னா உள்மூலமா, வெளிமூலமா'னு கேட்டிருப்பேன்! ;)

      Delete
    4. @ சாத்தான்ஜி

      //வேறு வினையே வேண்டாம்."அமாவாசைக்கு பிறந்தவன்" என்று தங்க தளபதியை நார அடித்துவிடுவார்கள் ///

      LOL. :)))))

      Delete
    5. இத்தாலி விஜய் அவர்களே...

      வில்லர் இரசிகர்கள் வில்லங்கத்துக்கு பெயர் போனவர்கள் என்பது மீண்டும்மீண்டும் உங்கள் "உள்மூலமா, வெளிமூலமா'' ங்கிற, எடக்கு யோசனை மூலமாக ப்ரூஃப் ஆயிடிச்சி..! சூப்பர்..! :D

      Delete
  68. பெரியவர் வெளியிட்டரலும் சரி, நம்ம சின்னவர் வெளியிட்டரலும் சரி. தளபதிக்கு பெருமைதரனே.

    ReplyDelete
  69. One more day to go, I'm eagerly waiting to see what surprise editor sir is having for us in this book, one step more than LMS. Fingers crossed.

    ReplyDelete
  70. 'மி.ம நிகழ்த்தவிருக்கும் ரெக்கார்டு' என எடிட்டர் குறிப்பிட்டது எதை?

    யூகத்தின் அடிப்படையில் இன்று மாலைக்குள் சரியாகக் கணிப்பவர்களுக்கு ஈரோடு/இத்தாலி விஜயின் சார்பாக சிங்கிள்-டீயும் பன்னும் பரிசாக அளிக்கப்படும்!

    குறிப்பு: ஜூனியர்/சீனியர்/நடுத்தர எடிட்டர்களுக்கு இப்போட்டியில் அனுமதியில்லை!

    ReplyDelete
    Replies
    1. //இந்தாண்டின் துவக்கம் முதலே நமது DTP டீமில் ஏகப்பட்ட மாற்றங்கள் ! ரெகுலராய் / மின்னல் வேகத்தில் பணி செய்து வந்த அருணா தேவி தாய்மைக்குத் தயாராகி வரும் நிலையில் டாக்டரின் ஆலோசனைப்படி முழுமையான ஓய்வுக்குள் புகுந்து விட்டார் ! நம்மிடம் பணியாற்றிய டிசைனர் ரமேஷ் வெளியூர் வேலைக்கு one fine morning சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டார் ; இன்னொரு பெண் பணியாளரோ திருமண ஏற்பாட்டின் பொருட்டு வேலையிலிருந்து நின்று கொண்டார் ! So ஒரே சமயத்தில் அச்சாணிகளை இழந்தது போன்றதொரு நிலையில் சத்தம் காட்டாமல் சமாளிக்க அந்தர் பல்டிகள் ஓராயிரம் அடித்து வந்துள்ளோம் ! //

      கடந்த சில பதிவின் முன் சொன்னதைவைத்து பார்த்தால், "இவ்வளவு பெரிய குண்டு புத்தகத்தை மொத்தம் எத்தனை பேர் சேர்ந்து செய்திருக்கிறார்கள் என தெரியுமா ?" என்ற கேள்விக்கு நம்பவேமுடியாத பதில் சொல்லி எங்களை அஆஅஆச்சரியபடவைத்து...சாதனையை பகிர்ந்து கொள்வதுதான் அந்த ரெக்கார்டோ..!

      Delete
  71. "இளம் புளி " டைகரு ...."அம்மாவாசையில் " பிறக்கவில்லை என போராடும் நண்பர் சாத்தான் அவர்களை எங்கள் "போராட்டகுழு " சார்பாகவும் மனம் உவந்து பாராட்டுகிறோம் .....

    கன்னா பின்னா குறிப்பு : இந்த பாராட்டில் எந்த " உள் குத்தும் "கிடையாது என எங்கள் செயலாளர் மீது ......ஹும்.....வேண்டாம் .....பாவம்....

    அந்த "டைகரு " மீதே ஆணை........

    ReplyDelete
  72. உற்சாகக் கொண்டாட்டத்தை இழக்க விரும்பாத ஸ்டீல்க்ளா பொன்ராஜ் இப்போது தானே முன்வந்து சென்னைக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்!

    இதுபோலவே இன்னொருவரும் மதுரையிலிருத்து வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் 'தளபதியின் போர்வாள்' - மிஸ்டர் முகுந்தன் குமார்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல செய்தி ! வருக..பொன்ராஜ் & முகுந்தன் குமார் ..! சேந்தம்பட்டி கோஷ்டி சார்பா வரவேற்கிறேன்..!

      Delete
    2. நல்ல செய்தி ! வருக..பொன்ராஜ் & முகுந்தன் குமார் ..! சேந்தம்பட்டி கோஷ்டி சார்பா வரவேற்கிறேன்..!

      Delete
  73. Sir, கொரியர் பிரதிகள் அனுப்பிியாகிவிட்டதா. Book Fair கு வரமுடியாதவர்களுக்கு, எப்போது புத்தகம் கைக்கு வந்து சேரும்...Please give an update...

    ReplyDelete
  74. சேந்தம்பட்டி குழுவினர் சென்னை வந்திறங்கினர். ஆட்டோக்காரர்கள் ஆரவார வரவேற்பு! :)

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் விஜய்.

      Delete
    2. உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் விஜய்.

      Delete
  75. இனிய காலை வணக்கம் விஜயன் Sir :)
    இனிய காலை வணக்கம் காமிக்ஸ் சகோதரர்களே :)

    மின்னும் மரணம் வெளியீடு விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துக்கள் விஜயன் Sir :)

    சகோதரர்களே வரலாறு மிக்க இந்நாளை கேப்டன் டைகர் உடன் கொண்டாடுங்கள் :)

    ReplyDelete
  76. Just returned from kanyakumari..
    மின்னும் மரணம் "வெளியீட்டில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
    இரவு ஜோலாரப்பேட்டையில் காத்திருப்பேன் விஜய் ....

    ReplyDelete
  77. Replies
    1. பொறுமை INTERNET-ஐவிட பெரியது...

      Delete
  78. மின்னும் மரணம் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள். இந்த இனிய தருணங்களை அனுபவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  79. ஆசிரியரை தாமதமாக பதிவை போட சொல்லி ....ஐடியா கொடுத்து சென்னை செல்ல முடியாத நண்பர்களை டென்சன் ஏற்படுத்தி கொண்டு இருக்கும் எங்கள் செயலாளர் அவர்களை போராட்ட குழுவில் இருந்து இரண்டு நாட்களுக்கு சஸ்பென்ட் செய்யும் படி உத்தரவு இடுகிறேன் ...

    ReplyDelete
  80. சென்னையில் நேரில் சந்தோஷத்தை அனுபவிக்க காத்திருக்கும் நண்பர்களின் மகிழ்ச்சிக்கு ஈடாக, துளியுண்டு சந்தோஷத்தை ஞாயிறு பதிவு மூலமாக அடைய காத்திருந்து ஏமாந்து கொண்டு இருக்கிறோம் ஆசிரியாரே....Please post....Eventhough we too booked for MM but we don't know when we will get the book...feeling sad...

    ReplyDelete