Sunday, April 12, 2015

வேங்கையின் திருவிழா !!


நண்பர்களே,

வணக்கம். குட்டிக் குட்டி ராட்டினங்கள் ; கலர் கலரான பானங்கள் ; காற்றில் கலக்கும் குலவைச் சத்தங்கள் ; ஓசையில்லா பிரார்த்தனைகள் என ஒரு வாரமாய் திருவிழாக் கோலத்தில் உருமாறிப் போயிருந்த எங்கள் சாலைகள் தகிக்கும் வெயிலில் இப்போது நிசப்தமாய் காட்சி தருகின்றன ! இன்னுமொரு பங்குனித் திருவிழா அழகாய் நிறைவு பெற்ற திருப்தியில் ஊரே லயித்திருக்க - நமக்கோ பரபரப்பு ஓய்ந்தபாடில்லை ! நமது "வேங்கையின் திருவிழாவுக்கு" இன்னும் ஏழு தினங்கள் மட்டும்மே எஞ்சியிருக்க, இங்கே 'லப்-டப்'கள் overdrive -ல் உள்ளன என்பது தான் நிஜம் ! மெகா பணிகள் நமக்குப் புதியவைகளல்ல ; குறுகலான காலக்கெடுவுக்குள் காரியம் சாதிக்க நமது டீம் சமீபமாய் பழகியும் உள்ளது தான் !  ஆனால் ஒவ்வொரு project -ம் முந்தையதுக்குத் துளியும் தொடர்பின்றி முற்றிலும் புதியதொரு அனுபவம் தர வல்லதாய் இருப்பது தானே நமது பிழைப்பின் தனித்தன்மையே !! So NBS தயாரித்த அனுபவங்களோ ; LMS தந்த பாடங்களோ கைகொடுக்குமென்ற உத்தரவாதங்கள் துளி கூட இல்லாதொரு நிலையில் தான் இம்முறையும் பிள்ளையார் சுழி போட்டு வைத்தோம் ! 

தொட்ட மாத்திரத்திலேயே அத்தனையும் பொன்னாகும் ஒரு யோக வேளையில் NBS -ன் திட்டமிடல் துவங்கியிருக்குமோ என்னவோ - அதன் பணிகள் சகலமும் செம வழுக்களை நடந்தேறின ! இத்தனைக்கும் வண்ணப் பாணிகளுக்கு ; ராட்சஸ இதழ்களுக்கு நாம் பரிச்சயம் செய்து கொண்டிருந்த துவக்க நாட்களவை ! Yes, of course குட்டிக்கரணங்கள் எக்கச்சக்கமாய் போடத் தேவைப்பட்டது தான் ; ஆனால் பெரியதொரு டென்ஷன் இன்றி பணிகளை நிறைவேற்றுவது அன்றைக்கு எப்படியோ சாத்தியமானது ! Maybe அதற்கு முந்தைய 2 மாதங்களின் நமது ரெகுலர் அட்டவணை ரொம்பவே நோஞ்சானாக அமைந்திருந்தது - NBS -ன் பொருட்டு முழுக் கவனமும் தர உதவியதோ - என்னவோ ?!

LMS-ஐப் பொறுத்தவரை தயாரிப்பினில் ஏகப்பட்ட படபடப்பு 60 முழு நாட்களுக்கு எனக்குள் குடியிருந்தது ! நாட்காட்டியின் ஒவ்வொரு சருகையும் கிழிக்கும் ஒவ்வொரு காலையிலும் வயிறு கலங்காது இருக்காது - ஆகாரத்தில் துளியும் கோளாறு இலாத போதிலுமே ! ஆனால் jigsaw puzzle -ன் பல முகங்கள் 'பட பட'வென்று ஒன்று சேர்வது போல கதைகளின் பணிகள் ; அச்சு ; பைண்டிங் என எல்லாமே ஒரு திடீர் வேகம் பெற்று deadline -க்கு வெகு முன்கூட்டியே இதழ் தயாராகியிருந்தது ! 

ஆனால் - மின்னும் மரணமோ முற்றிலும் மாறுபட்டதொரு அனுபவம் ! பாகம் 11 நீங்கலாக மற்ற அத்தியாயங்கள் எதற்கும் மாங்கு-மாங்கென்று மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இங்கே அவசியமில்லை எனும் போது இந்தப் பணி cakewalk ஆக இருந்திடவேண்டுமென்ற மிதப்பு எனக்குள் நிறையவே இருந்தது - துவக்க நாட்களில் ! தவிரவும், முன்பதிவுகளின் ஆரம்பத்து மந்தகதி எனக்குள்ளும் ஒரு சூட்டிகையைக் கொண்டு வரவில்லை என்பதும் நிஜமே ! "ஆஹ்...மாதம் 50 முன்பதிவுகள் என்ற வேகத்தில் தான் புக்கிங் நடக்கிறது ; 500-ஐ எட்டிட எப்படியும் எட்டுப் பத்து மாதங்கள் ஆகிதேனும் போது எக்கச்சக்கமாய் அவகாசம் தான் உள்ளதே ! "  என்ற கொழுப்பு குடி கொண்டிருந்தது ! பிளஸ் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியோ-மாதமோ நிர்ணயம் செய்திராத நிலையில், அவ்வப்போது முன்னின்ற மாதாந்திர ரெகுலர் இதழ்களுக்குள் மூழ்கிடுவதில் மும்முரமாகிப் போனோம் ! ஜனவரியில் "சென்னைப் புத்தக விழா " ; "பௌன்சர் அறிமுகம்" என இரு முக்கிய நிகழ்வுகள் காத்திருந்ததால் டிசெம்பரின் பெரும் பகுதி அந்த முனைப்பிலேயே செலவாகிப் போயிருந்தது ! சொல்லப் போனால் பௌன்சரின் முதல் ஆல்பம் + சென்ற மாதத்து ஆல்பம் # 2-ன் பொருட்டு நான் எடுத்துக் கொண்ட தயாரிப்பு அவகாசம் மாமூலை விட 50% ஜாஸ்தி ! 

ஜனவரியின் பரபரப்புகளின் மீது லேசாகத் தூசு படியத் தொடங்கிய வேளைகளில் தான் "மின்னும் மரணம்" எனது focus-க்குள் சீரியசாகப் புகுந்திடத் தொடங்கியது ! 11 பாகங்கள் ; நம்மிடம் பணியாற்றி வரும் 5 DTP டீம்களிடம் ஆளுக்கு இரண்டாய்ப் பகிர்ந்து தந்து விட்டால் - மேகி நூடுல்ஸ் பாணியில் பதார்த்தம் தயாராகிடுமே என்று யதார்த்தமாய் நான் சிந்தித்து - தைப் பொங்கல் முடிந்த பின்னொரு சுபயோக சுபதினத்தில் மி.மி. வேலைகளை முடுக்கி விடத் தொடங்கினேன் ! அப்போது தான் காதோடு சேர்த்து 'பொளேர் ..பொளேர்' என சாத்துக்கள் விழுந்தன நமது அன்றைய DTP டீமின் புண்ணியத்தில் ! ஏற்கனவே அது பற்றி இங்கு நான் லேசாக எழுதியிருந்தது கூட நினைவிருக்கலாம் ! வெளியூரில் வேலையென ஒருத்தர் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட ; தாய்மைப் பேற்றின் காரணமாய் அடுத்தவர் விடைகொடுக்க ; திருமண ஏற்பாட்டின் காரணமாய் மூன்றாமவர் bye -bye சொல்ல, நானும் மைதீனும் ginger உண்ட monkeys பாணியில் ஒருத்தர் முகத்தை அடுத்தவர் பார்த்துக் கொண்டோம் ! எஞ்சியிருந்த 2 பணியாளர்களும் கூட பகுதி நேரத்து ஊழியர்கள் மாத்திரமே எனும் போது - அந்தந்த மாதங்களது கதைகளைக் களமிறக்குவதற்குள்ளாகவே குடல் வாய்க்கு வரத் தொடங்கி விட்டது ! "விடாதே ...பிடி...வேலைக்குப் புதியவர்களை எப்படியேனும் அமர்த்து.." என்று வலைபோட்டு நகரைச் சுற்றி வர - "டிசைனிங் தெரியும் ; Coreldraw தெரியும் ; ஆனால் டமில்..டமில் டைப்பிங் நஹி மாலும் !" என்ற டயலாக்குகளுக்கு எங்களது காதார்கள் நிறையவே பரிச்சயமாகிப் போனார்கள் ! தமிழ் அச்சுக்கோர்ப்பறியாது - வண்டி வண்டியை வசனங்கள் கொண்ட நமது கதைகளைக் கரை சேர்ப்பது எவ்விதமோ ? என்ற பீதியில் நியூஸ் பேப்பர்களில் விளம்பரங்கள் ; வெளியூர் பதிப்புகளிலும் விளம்பரங்கள் என சத்தமின்றிச் செய்தோம் ! விண்ணப்பங்களும் வந்தன தான் - ஆனால் அவர்கள் எதிர்பார்த்த கட்டணங்களுக்கு நமது கோவணங்களையும் சேர்த்து விற்றால் கூட கட்டுபடியாகாது என்ற நிலை ! திரும்பவும் துவக்கத்துப் புள்ளிக்கே செல்வோமென்ற தீர்மானத்தில் உள்ளூரிலேயே தேடலைத் தொடர்ந்தோம் ! ஆண்டவனும் நிச்சயமாய் ஒரு காமிக்ஸ் பிரியர் என்பதாலோ - என்னவோ நம் உளைச்சலுக்கு மருந்திட்டார் - புதிதாய் ஒரு அணியை அறிமுகம் செய்து வைத்ததன் மூலமாய் ! புதுவரவுகளை ஒரேடியாகப் பிழிந்து எடுத்து அவர்களும் பேஸ்த்தடித்துப் போய் விடக்கூடாதே என்ற பயம் ஒரு பக்கம் ; நாட்கள் நழுவிச் செல்கின்றனவே என்ற நடுக்கம் இன்னொரு பக்கம் - எப்படியோ பணிகள் ஒரு மாதிரியாக அரங்கேறத் தொடங்கின ! 

பாகம், பாகமாய் கதை என் மேஜைக்கு வரத் துவங்கிய போது அடுத்தகட்ட அந்தர்பல்டிகள் ஆரம்பித்தன ! "பார்ட் பார்ட்டாய் டைப்செட் செய்யப்பட்டு வருது ....அன்னிக்கு விடிய விடிய முழித்திருந்து அண்ணாத்தே வேலை பாக்குது ...இரண்டே வாரத்திலே எல்லா வேலையும் முடிக்குது !" என்ற மௌன சபதத்தோடு முதல் அத்தியாயத்துக்குள் புகுந்தால் - 'கட கட' வென ஓசை மேஜைக்கு மேலிருந்தும், கீழிருந்தும் கேட்கத் தொடங்கியிருந்தது ! "அரே..பேஸ்மென்ட் வீக்கா இருந்தாக்கா முட்டிங்கால்களின் நடனக் கச்சேரி சகஜம் தான் ; ஆனால் ஊப்பர் கதக்களி ஏனோ ?" என்ற குழப்பத்தோடு தந்தியடிக்கும் என் பற்களை உற்றுப் பார்த்தேன் ! ஒரு மூட்டை வசனங்கள் ...மத்தியிலே தம்மாத்துண்டாய் ஆங்காங்கே ஒரு சப்பை மூக்கரின் சித்திரங்கள் என என் மேஜையிலிருந்த பக்கங்கள் காற்றில் படபடப்பதோடு - எனக்குள்ளும் பீதியை உருவாக்கிக் கொண்டிருந்தன ! அந்நாட்களில் "மின்னும் மரணம்" கதையின் 10 பாகங்களையும் டிசைன் டிசைனாய் நாம் பிரித்துப் போட்டிருந்த சமயங்களில் நமது ஆர்டிஸ்ட்களின் சகாயத்தால் படங்களை வெட்டியும், ஒட்டியும் வசன மழைகளை லாவகமாக இங்குமங்கும் திணித்திருந்தோம் என்பதும், இன்றைய standard format-ல் அந்த பல்டிகளுக்கெல்லாம் இடமில்லை எனும் போது - சிக்கிய சந்திலெல்லாம் நமது (புது) DTP அணி சிந்து பாடியுள்ளது என்பதையும் உணர முடிந்தது ! கோனார் உரைக்குள் கொஞ்சமாய் நம் டைகரை நடமாட அனுமத்தித்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை ! To be fair to them - அனுபவசாலிகளே தண்ணி குடிக்கக் கூடிய இந்தக் கதையை எடுத்த எடுப்பிலேயே புதியவர்களிடம் ஒப்படைத்தது பெரியதொரு சவாலே ! Sincere ஆக முயற்சித்திருந்த அவர்களது பணிகளையும் குறை சொல்வதற்கில்லை ! ஆனால் பட்டி-டின்கெரிங்க் அவசியமோ அவசியம் என்றான நிலை ! மதுரையில் கொத்து புரோட்டா போடுவதைப் பார்த்திருப்போர்க்குத் தெரியும் - அந்த தோசைக் கல்லின் மீது புரோட்டா படும் பாடு ! தொடர்ந்த நாட்களில் அதே பாடு தான் பட்டனர் நமது DTP அணியினரும் என் கைகளில் ! "இதை அங்கே நகற்றுங்கள் ; இதைக் குட்டியாக்குங்கள் ; அதை அந்த இடைவெளியில் பொருத்துங்கள் " என்று ஓராயிரம் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர்களது பிராணன்களில் ஒரு பகுதியை வாங்கினேன் என்றால் - பிழை திருத்தப் படலத்திலும், எடிட்டிங் efforts லும்  மிச்சம் மீதியை கரைந்தே போகச் செய்திருப்பேன் ! 

எழுத்துப் பிழைகளைத் தேடிக் கொண்டு மேலோட்டமாய் ஒரு வாசிப்பைப் போட்டு விட்டு - proofreading-க்கு தள்ளி விட்டு விடலாமென்ற வேகத்தில் திரும்பவும் உள்ளே நுழைந்த எனக்கு முட்டிங்கால்கள் இன்னுமொரு ஜலதரங்கக் கச்சேரி வாசிக்கத் தொடங்கின ! ஒரு பக்கத்துக்கு சராசரியாய் 10-12 frames ; ஒவ்வொரு frame குள்ளும் குறைந்த பட்சம் 3-4 டயலாக் பலூன்கள் ; ஒவ்வொருவரும் கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஏகமாய் வசனங்கள் பேசுவது என்ற பாணியைக் கடைப்பிடித்து வந்ததால் - ஒரு நேரத்திற்கு 10-12 பக்கங்களைத் திருத்தி கரைசேர்ப்பதே பெரும்பாடாகிப் போனது ! "இத்தனை பெரியதொரு முயற்சி எனும் போது - முடிந்தளவுக்கு சிற்சில பிழைகளையும் சரி செய்து விடலாமே ?" என கடல்கடந்த நண்பரொருவவரோடு சமீபமாய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்  கருத்துச் சொல்லியிருந்தது தலைக்குள் தொட்டுப் பிடித்து விளையாட - பரணிலிருந்து ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்புகளையும் எடுத்துக் கொண்டு - திரும்பவும் பக்கம் 1-க்குப் பயணமானேன் ! ஷப்பா...குட்டிக் குட்டியாய் ஆங்காங்கே அந்நாட்களில் நிகழ்ந்திருந்த மொழிமாற்றப் பிழைகள் ; அடிக்கொருதரம் தலைகாட்டிய "சாக்கடைப் புழுக்களே" ; " தெரு நாய்க்குப் பிறந்த நீசனே " டயலாக்குகள் ; செய்திடக்கூடிய மெல்லிய நகாசு வேலைகள் என என்னென்னவோ கண்ணில்படத் துவங்க, "மாற்றங்கள் / திருத்தங்கள் செய்யாது ஆணியே பிடுங்கப் போவதில்லை !" என்ற வைராக்கியம் குடி கொண்டது ! So சிக்கிய அவகாசங்களிலெல்லாம் - மி.மி. ஆங்கிலப் பதிப்புகள் ; நமது அந்நாட்களது இதழ்கள் + தற்போதைய printouts என குட்டி போட்ட குரங்கு ஜாடையில் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தேன் - அன்று முதலாய் ! தாம்பரம் ரயில் நிலையத்து ஆறாம் நம்பர் பிளாட்பார்மில் கூட "மின்னும் மரணம்" தொடர்பான அதிகாலை நினைவுகள் எனது souvenirs பட்டியலில் உண்டு ! 

ஒரு மாதிரியாய் இந்தக் கூத்துக்களும் நிறைவு பெற்று அச்சுக்குத் தயாராகும் சமயம் "வைட்டமின் ப" பற்றாக்குறை ஜிங்கு ஜிங்கென்று தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தது ! ஒரு மொத்தமாய் பணம் கைக்குக் கிட்டுவதற்கும் - ஒன்பது மாத அவகாசத்தினில் பிரித்துப் பிரித்து வசூலாவதற்கும் தான் ஏகப்பட்ட வித்தியாசமுள்ளதே ?! அவ்வப்போது வரும் சில ஆயிரங்கள் அவ்வப்போதைய அவசியச் செலவுகளுக்கு ஸ்வாஹா ஆகிப் போயிருக்க - ஒட்டு மொத்தமாய் ராயல்டிக்கும், பேப்பர் கொள்முதலுக்கும் பணம் புரட்ட உள்ளூர் பேங்குகளின் கஜானாக்களை டால்டன்கள் பாணியில் துவாரம் போட்டால் என்னவென்ற அளவிற்கு மகா சிந்தனைகள் கிளைவிட்டிருந்தன ! நிறைய சர்க்கஸ் ; எக்கச்சக்க அந்தர் பல்டிகள் ; நிறைய "ஹி..ஹி..ஹி.."களுக்குப் பின்பாய் அந்தக் கிணற்றையும் தாண்டிவிட - அச்சுப் பணிகளை ஆரம்பிக்கும் வேலை புலர்ந்திருந்த போது மார்ச்சின் மூன்றாம் வாரம் துவங்கும் வேளையில் இருந்தோம் ! நம்மவர்களை விடிய விடிய விழித்திருக்கச் செய்து அச்சு வேலைகளை நடத்தினாலும் கூட இது சுமார் 2 வாரத்து job என்பது தான் யதார்த்தம் ! பற்றாக்குறைக்கு, நான் இல்லாத் தருணங்களில் பிரிண்டிங் செய்திட வேண்டாமென்ற ஊரடங்கு உத்தரவை சமீபமாய் நாமே அமல்படுத்தியிருக்க, எனது ஊர்சுற்றல் படலங்கள் நிகழும் சமயமெல்லாம் அச்சு வேலைகளையும் ஆறப் போடவும் தேவையாகிப் போனது ! நான் உடனிருந்து பெரிதாய் கிழிக்கப் போவது எதுவும் கிடையாதென்ற போதிலும், பகலோ ; ராத்திரியோ - அச்சின் தருணங்களில் நானும் அங்கேயே குடியிருக்கிறேன்  என்றால் செய்யும் பணிகளின் முக்கியத்துவம் பற்றி நம்மவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பழக்கம் தொடர்கிறது ! 

இதெல்லாம் ஒரு பக்கத்துப் பிரயத்தனங்கள் எனில் - "அட்டைப்படம்" என்ற அந்த அஸ்திரம் எனக்கு அஸ்தியில் ஜூரம் வரச் செய்து கொண்டிருந்தது ! LMS -க்கெல்லாம் படக்கென ஒரிஜினல் டிசைனின் மாதிரி செட் ஆகிட ; அதனை மாலையப்பன் அழகாய் வரைந்து தர ; நமது டிசைனர் மேம்படுத்தித் தர துளியும் சிரமமின்றி அட்டைப்படம் தேறியிருந்தது ! ஆனால் மி.மி மெகா முயற்சிக்கோ என்ன முட்டு முட்டினாலும் திருப்தியாக ஒரிஜினல் சிக்கவேயில்லை ! எங்கோ - எதையோ உருட்டி 2 மாதிரிகளைத் தேடிப்பிடித்து நமது ஓவியரை வரவழைத்து படம் போட்டால் - உஹும் ...எனக்குத் துளி கூடத் திருப்தியில்லை ! இன்னொருபக்கமோ நமது டிசைனர் பொன்னனிடம் சில பல மாதிரிகளைக் காட்டி, அவரது கைவண்ணத்தில் எதையேனும் தயார் செய்திடவும் சொல்லியிருந்தேன் ! அவரும் ரெடி செய்து காட்டிய முதல் டிசைன் சற்றே வித்தியாசமாய் இருப்பினும், என் உற்சாக மீட்டரில் துள்ளல் ஏதும் பதிவாகவில்லை ! உதட்டைப் பிதுக்கி விட்டு - "I want more emotions" என்று சொல்லிவிட்டு 'உர்ர்' ரென்ற முகத்தோடு 10 நாட்கள் சுற்றி வந்தேன் ! நெட்டில் எங்கெங்கோ உருட்டி, ஏதேதோ கௌபாய் டிசைங்களைத் தேடித் பிடித்தாலும், ஜிரௌவின் அமர கதாப்பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் விதமாய் எனக்கு உருப்படியாய் எதுவும் கிடைத்தபாடில்லை ! நாட்கள் நெருங்கிட - எனது பய மீட்டர் படபடக்கத் தொடங்க, டைகரின் சில பல அத்தியாயங்களின் ஒரிஜினல் ராப்பர் டிசைன்களில் எதையாச்சும் தத்து எடுத்துக் கொள்ளலாமா ? என்ற ரீதிக்கு சென்று விட்டேன் ! ஆனால் அத்தனையுமே ஏற்கனவே பற்பல தருணங்களில் நாம் சுட்ட ஊத்தப்பங்கள் தான் எனும் போது அவற்றில் ஒன்றை இப்போது திரும்பவும் சூடு பண்ண மனசு கேட்கவில்லை ! அப்போது தான் நமது டிசைனர் புதிதாய் 2 டிசைன்களின் first looks அனுப்பி வைக்க என் மண்டைக்குள் பலப் பிரகாசம் பெற்றதை உணர முடிந்தது ! அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்து - அதனில் மாற்றங்கள் / திருத்தங்கள் என கிட்டத்தட்ட 10 நாட்களாக கபடி ஆடத் தொடங்கினோம் ! "இதை பச்சையாக்கிப் பார்ப்போமே ; இல்லை..இல்லை..ப்ளூ...!! இதை சின்னதாக்குவோம் ...முன்னட்டையில் சில்க் புள்ளை வரட்டும் - நோ-நோ..பின்னட்டையில் அம்மணி---நோ-நோ..டைகர் தான்...எழுத்தை வேற ஸ்டைலில் போட்டுப் பார்ப்போமே!" என தினமும் ஒரு correction சொல்லி பொன்னனின் தூக்கத்தை அம்பேலாக்கிய புண்ணியத்தையும் ஈட்டிக் கொண்டேன் ! டிசைனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் - இது நமது மாமூலான "மஞ்சக்கலரு ஜிங்குச்சா..பச்சைக்கலரு ஜிங்குச்சா.." ஸ்டைலில் சுத்தமாய் இராது ! ரொம்பவே offbeat பாணியில் இதனை உருவாக்க வேண்டுமென்று நானும், பொன்னனும் முனைப்பாக இருக்க, மாற்றங்கள் டிசைன் பாணியில் மட்டுமன்றி ; பிராசசிங் முறையில் ; அச்சுக் காகிதத்தில் ; அச்சிடும் முறையில் என்று ஏகமாய் இருக்கட்டுமே என்று பொன்னன் கோரிக்கை வைத்தார் ! செலவு டிரௌசரைக் கழற்றும் விதமாய் இருந்த போதிலும் மந்திரித்த ஆடு போல மண்டையை ஆட்டி வைத்தேன் ! இறுதி நிமிட நகாசு வேலைகளையும் முடித்து, ராப்பர் அச்சுக்குச் சென்றது 6 மணி நேரங்களுக்கு முன்பு தான் என்றால் எங்கள் லூட்டிகளின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமே ?! ராப்பரை நேரில் பார்க்கும் வரை அதன் feel என்னவென்பதைப் புரிந்திடுவது சிரமம் என்பதால் இப்போதைக்கு  let's leave it under wraps ?! 19-ஆம் தேதிக்கு இதழை நீங்கள் பார்த்திடும் போது எங்களின் இந்த முயற்சிகள் ஈட்டும் மதிப்பெண்களை அறிந்திடும் ஆவல் இப்போதே ! But please be warned guys - இது நமது மாமூலான பாணியில் இருக்கப் போகுமொரு  அட்டைப்படமல்ல  ! 

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் உட்பக்கத்தில் இரு இடங்களில் சற்றே சொதப்பலான எழுத்துப் பிழைகள் தலைதூக்கியிருப்பதை லேட்டாகக் கவனிக்க - விடாதே...ஸ்டிக்கர் செய்து அது தலையில் போட்டு அமுக்கு ! என்று நம்மவர்கள் இப்போதும் கூட பணி செய்து வருகிறார்கள் ! Phew !! 

இந்த ரணகளங்கள் ஒரு பக்கமெனில் - நான் பெரிதாய் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது சுற்றி வர முயற்சித்துக் கொண்டிருந்த போதிலும் - மின்னஞ்சல்களில் அர்ச்சனைகளுக்கும், அறிவுரைகளுக்கும் பஞ்சமே இருந்திடவில்லை ! "டெக்ஸ் வில்லர் கதைக்கு தாம் - தூம் ஏற்பாடுகளும், முன்னறிவிப்புகளும் களை கட்டுகிறது ; டைகர் என்றால் இளப்பமா ? " என்ற காரசார மெயில்கள் ஒருபக்கமெனில் ; "மின்னும் மரணம் வெளியீட்டு விழாவின் திட்டமிடல் இப்போது வரை ஏனில்லை ? என்று பத்தி பத்தியாய் பதைபதைப்பு இன்னொரு பக்கம் ! இதன் நடுவே, கவிதைகளைப் பதிவில் பகிர்ந்திடப் பிரியம் கொள்ளா நண்பர்கள் மின்னஞ்சல்களில் திறமைகளைக் காட்டியிருக்க நமது inbox-ல் திருவிழாக்கோலம் தான் ! ஆத்திரங்களும், ஆதங்கங்களும் , அறிவுரைகளும் பகிரப்படுவது காமிக்ஸ் மீதான நேசத்தின் பொருட்டே என்பதைப் புரிந்து கொள்ள நானொரு ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க அவசியமே இல்லை தான் ! ஆனால் இங்கே என்பக்கத்து நடைமுறைப் பிரச்சனைகளைச் சமாளிக்க சற்றே working space எனக்குத் தேவையென்பதை நண்பர்கள் உணரும் நாள் புலரும் போது எனது சுவாசம் சற்றே இலகுவாகிடும் ! ஒவ்வொரு கட்டத்திலும் நேர்ந்திடும் சிற்சிறு சிக்கல்களை ; தாமதங்களை நான் டமாரம் அடித்துக் கொண்டே போனால் அந்த அயர்ச்சி உங்களையும் தொற்றிக் கொண்டு விடக்கூடும் என்பதால் அதனை நான் செய்ய முனைவதில்லை ! அத்தியாவசியம் என்ற நிலை ஏற்படும் வரை என் தலைவலிகள் எனதாக மட்டுமே இருந்து விட்டுப் போகட்டுமே ?! So எனது மௌனங்கள் மெத்தனத்தின் அடையாளமாய்ப் பார்க்கப்பட்டு, அதன் பொருட்டும் சஞ்சலம் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ?! 

பைண்டிங்கில் இன்னொரு பக்கம் பணிகள் வேகமாய் அரங்கேறி வர, 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! (இன்னமும் அந்த போஸ்டர் வேலை பாக்கியுள்ளது ! phew again !!!)  

பெரியாள் யாரையாவது வைத்து இந்த மெகா இதழை வெளியிடலாமே ? என்ற ரீதியிலும் நண்பர்களின் கோரிக்கைகள் வந்துள்ளன ! என்னைப் பொறுத்தவரை இந்த இதாலே நமது வாசக வட்டத்தின் ஒரு கொண்டாட்டமே எனும் போது உங்களை விட இத்தருணத்தில் பெரியாட்கள் வேறு யாரிருக்க முடியும் ? என்ற எண்ணம் தான் ! This is truly a celebration of the spirit of the tamil comics fans !! So இதற்கென ஒரு VIP -ஐத் தேடுவானேன் ? காலை 11 மணிக்குத் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் : 128-ல் எப்போதும் போலவே மின்னும் மரணத்தை unveil செய்திடுவோமா ? அல்லது அருகாமையில் ஏதேனும் ஹோட்டலில் AC அரங்கம் கிடைக்கும் பட்சத்தில் buffet lunch சகிதம் அங்கே நம் சந்திப்பை அரங்கேற்றிடுவோமா ? புத்தக சங்கமத்தின் வெளியரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மாலைகளில் உண்டென்று சொன்னார்கள் ! ஆனால் சாயந்திரம் வரையிலும் இதழை உங்கள் கண்களில் காட்டாது வைத்திருப்பது என் மண்டையின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதால் அந்த சிந்தனை சுகப்படவில்லை ! தவிர, பஸ் / ரயில் பிடித்து ஊர் திரும்பக்கூடிய நண்பர்களை மாலை நேரத்து நிகழ்வுகள் தாமதப்படுத்தவும் கூடுமே என்று நினைக்கத் தோன்றியது ! So - "காலை எழுந்தவுடன் மின்னும் மரணம் " என்ற slogan தேவலை என்று தோன்றியது ! எங்கே ? என்ற தேர்வு உங்களது folks ! "வெளியீட்டு விழா" என்ற சிந்தனைக்கு நான் எதிரியல்ல ; its just that I am  totally drained at the moment  that I don't have it in me to plan ! உங்களிடம் அது பற்றி திட்டமிடல்(கள்) ஏதேனும் இருப்பினும் காதுகளை இரவல் தர நான் தயார்! என் தந்தையையும் அழைத்து வர முயற்சிப்பேன் ; அதனையும் கருத்தில் கொண்டு பிளான் பண்ணிடலாமே ?! பந்து உங்களது தரப்பில் உள்ளது guys - ஆடும் விதம் இனி உங்களது ! எல்லோருக்கும் எற்புடையதொரு திட்டமிடலுக்கு நாங்கள் ஒ.கே. ! Start music ! 

Before I wind up - "மூட்டை சுமந்தது போலான இந்த நீட்டல்-முழக்கல் அவசியம் தானா ? இத்தனை பில்டப் ஓவர் !" என்ற சிந்தனை கொண்டிருக்கக்கூடிய நண்பர்களின் பொருட்டு : இது என் ஒருவனது பீற்றலின் நோக்கில் எழுதப்பட piece அல்ல ! ஒரு மெகா முயற்சியை வழக்கமான, பிசியான அட்டவணைக்கு மத்தியினில் செயல்படுத்திப் பார்க்க எத்தனிக்கும் சமயங்களில் நமது சின்ன டீமுக்கு நேர்ந்திடும் overload-ன் மீதான ஒரு பார்வையே இது ! அப்புறம், இத்தனை எழுதி விட்டு - கதையின் நாயகரைப் பற்றி எழுதவில்லையே - என்ற விசனத்துக்குச் சொந்தம் கொண்ட நண்பர்களின் பொருட்டு : இது "the making of மின்னும் மரணம்" போன்றதொரு ஆக்கம் மட்டுமே ; "தளபதி" பற்றி வரும் வாரத்தினில் ! 

கிட்டத்தட்ட 2 மாதங்களாய் ஒவ்வொரு சனியிரவும் ஒரு வண்டிப் பக்கங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு அவற்றையே முறைத்துப் பார்த்துப் பழகியான நிலையில் இன்றைக்குக் காலியாகக் காட்சி தரும் என் மேஜையைப் பார்க்கும் போது எப்படியோ உள்ளது ! இரு மாதம் என்னோடிருந்த அந்த வேங்கை இன்று வெளியே வலம் வரத் தயாராகி விட்டதால் -  இனி அந்த மேஜையினில் அடுத்த தொப்பிக்காரருக்கு இடம் ஒதுக்க ஆரம்பித்து விட்டேன் !! சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்!  Bye guys & good night ! 


263 comments:

  1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : குட் நைட் !!

    ReplyDelete
  2. விடிஞ்சிருச்சா ... :)

    ReplyDelete
  3. யப்பா இதை படிப்பதற்கே இவ்வளவு மலைப்பாக இருக்கிறதே, இதை வாழ்ந்து பார்த்த உங்களுக்கும் மற்றும் உங்கள் டீமுக்கும் கோடி வந்தனங்கள்.

    இந்த making of மின்னும் மரணம், உங்களின் மேல் உள்ள பிரமிப்பை அதிகரிக்கச் செய்கிறது. It's true.

    நமது காமிக்ஸில் இது ஒரு மைல்கல் இதழ் என்பது இப்போதே தெள்ளத்தெளிவு.

    ReplyDelete
    Replies
    1. Radja : //நமது காமிக்ஸில் இது ஒரு மைல்கல் இதழ் என்பது இப்போதே தெள்ளத்தெளிவு.//

      முதல் நாலிலக்க விலையிலான இதழ் என்பதைத் தாண்டியும் சாதிக்க வேண்டுமென்ற பிரார்த்தனை எங்களுள் !

      Delete
  4. ஏசி ஹால், லன்ச் இதெல்லாம் அதிகம் செலவு வைக்கும்,
    அது மட்டுமல்ல எல்லோரும் பங்கு பெறுவதும் சிரமம்

    புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தில் என்றால் நலம் என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. //புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தில் என்றால் நலம் என்பது என் கருத்து//

      அடியேனின் விருப்பமும் இதுவே.கண்காட்சி ஏற்பாட்டாளர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று நமது ஸ்டாலிலேயே புத்தக வெளியீட்டை வைத்து கொள்ளலாம்.அப்படியொரு அனுமதி கிடைக்காத பட்சத்தில் வேண்டுமானால் ஹால் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

      Delete
    2. // புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தில் என்றால் நலம் என்பது என் கருத்து.//
      முதலில் இதற்கு முயற்சி செய்யலாம்,அப்படி வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஹோட்டல் ஹாலில் நடத்தலாம்.
      எங்கு நடக்கிறது என்பதை விட அது எவ்வளவு சிறப்பாக நடக்கிறது,நடத்துகிறோம் என்பதே முக்கியம்.

      Delete
    3. ///எங்கு நடக்கிறது என்பதை விட அது எவ்வளவு சிறப்பாக நடக்கிறது,நடத்துகிறோம் என்பதே முக்கியம்.///- அதே தான் சார் . ஆடம்பரம் இல்லாத எளிமையான விழாவே போதும் என்பதே என் கருத்தும் சார் . தங்கள் தந்தையாரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன் சார் . அனைவரின் காலார் நலன்களை மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள் சார் . வயிரார் நலன்களை இராயப்பேட்டை ஏரியா பிரியாணிகள் பார்த்து கொள்ளும் சார் . தட் தட் மேன் தட் தட் பில் - என்பது எங்கள் மூத்தவர் தாரக மந்திரம் சார் .

      Delete
  5. //தமிழ் காமிக்ஸின் ஆயுளோ ; வளர்ச்சியோ எனது கைகளில் என்பதெல்லாம் ஒரு மாயை ! மாறாக எனது வளர்ச்சிகள் சார்ந்திருப்பது தமிழ் காமிக்ஸை என்பதே நிஜம் ! காமிக்ஸ் எனும் ஒரு பின்னணியின்றி நான் ஓசையின்றி வேறேனும் தொழிலில் பெரிதாய் சாதித்து / சம்பாதித்து வந்திருந்தால் கூட - அடுத்த தெருவிலிருப்பவருக்குக் கூட நானொரு முட்டைகண் XYZ மட்டுமே ! (அதற்காக நான் இப்போதொரு VIP என்றெல்லாம் சொல்லவரவில்லை !) //

    நீங்கள் தன்னடக்கமாக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் sir! உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஆலை இல்லாத ஊரில் எங்களுக்கு cadbury சாக்லேட் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் வேண்டுமானாலும் அவ்வப்போது "We are with you" என்று பீலா விட்டாலும் நீங்கள் எங்களுடன் இருப்பதே எங்களுக்கு உற்சாகமும் பெருமையும் தருகிறது, 2014 மே முதல் 2015 February வரையிலான புத்தகங்கள் எனக்கு மார்ச்சில் கிடைத்தது. 90% கதைகளை படித்து விட்டேன். முதலில் படித்து முடித்தது Spider. இரணடாவது மாயாவி. பிறகுதான் மற்றதெல்லாம் படித்தேன். LMS ல் இன்னும் 2 கதைகள் பாக்கி.

    கதை, தரம், மற்றும் மொழிபெயர்ப்பு அனைத்திலும் எனக்கு மிக்க திருப்தி. Spider எனது மகளுக்கு படித்துக் காண்பித்தேன். மிகவும் ரசித்தார். என்ன சக்கடைப் புழுவை poopsi worm என்றும் வேறு சிலவற்றை மாற்றியும் படித்தேன்.இன்னொரு நண்பர் ஜூன் மாதம் முதல் வாரம் அங்கிருந்து வருகிறார். டெக்ஸ் முதல் வாரம் வருவாரா? வந்தால் அனைத்து புத்தகங்களும் எனக்கு ஜூனில் கிடைத்து விடும்.

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது சார். எங்களை சந்தோசப்படுத்த கடினமாக உழைக்கும் உங்களுக்கும் உங்கள் டீமிற்கும் வந்தனம். நீங்களும் உங்கள் டீமும் நல்ல வெற்றி அடைந்து உற்சாகமும் சந்தோசமும் பொங்க இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @Mahendran paramasivam
      போன வருசம் என்னுடைய நிலமையும் இதுதான்.
      இந்த வருசம் மாசா மாசம் புத்தகங்கள் வந்துருது, என்ன ஒரு 15 நாள் தாமதமாக வரும்.
      ஆனாலும் ஒவ்வொரு மாசமும் புத்தகம் வந்து படிப்பது ஒரு சூப்பர் அனுபவம்

      Delete
    2. Mahendran Paramasivam : //Spider எனது மகளுக்கு படித்துக் காண்பித்தேன். மிகவும் ரசித்தார்.//

      ஒரு கடல்கடந்த இளம் தலைமுறைக்கும் (தமிழில்) காமிக்ஸ் சென்றடைவது சந்தோஷம் தருகிறது ! Carry on the good work !!

      Delete
  6. அம்மாடியோவ்!!!!!!¡!!!!!!!!!¡!!¡¡!!!!¡!!!!!!!!!!!!!¡!!!!!!!!!!!!
    இத்தனை சிக்கல்களா?!!!!!!!!/
    //யப்பா இதை படிப்பதற்கே இவ்வளவு மலைப்பாக இருக்கிறதே, இதை வாழ்ந்து பார்த்த உங்களுக்கும் மற்றும் உங்கள் டீமுக்கும் கோடி வந்தனங்கள்.

    இந்த making of மின்னும் மரணம், உங்களின் மேல் உள்ள பிரமிப்பை அதிகரிக்கச் செய்கிறது. It's true.

    நமது காமிக்ஸில் இது ஒரு மைல்கல் இதழ் என்பது இப்போதே தெள்ளத்தெளிவு./// (நன்றி: Radja)

    ReplyDelete
  7. ஆனாலும் எடிட்டர் சார்... இத்தனை சிரமங்கள், சிக்கல்கள், வேலைப்பளுவின் இடையிலும் இப்படியொரு ஹாஸ்யமான நடையுடன் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஒரு பதிவைப் போட்டுத்தள்ள உங்களுக்கு எப்படித்தான் சாத்தியமாகியதோ!!! நானாக இருந்திருந்தால் "இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவும் கிடையாது... பணியாரமும் கிடையாது. எல்லாரும் ஓடிப்போய்விடுங்கள் இங்கிருத்து... க்ரா... உர்ர்ர்..." என்று முழங்கியிருப்பேன்! அதுவும் கடைசியாக
    //சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! Bye guys & good night ! ///
    அப்படீன்னு ஒரு போடு போட்டீங்க பாருங்க....!!

    உங்களுக்கெல்லாம் இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! நல்லா அவஸ்தைப் படுங்க!

    ReplyDelete
    Replies
    1. // "இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவும் கிடையாது... பணியாரமும் கிடையாது. எல்லாரும் ஓடிப்போய்விடுங்கள் இங்கிருத்து... க்ரா... உர்ர்ர்..." //
      LOL
      @Erode vijay
      உங்களுக்கு நகைச்சுவை இயல்பாகவே சூப்பராக வருது.

      Delete
    2. Erode VIJAY : இடுக்கண் வருங்கால் என்ன செய்வதென்று தான் பெரும் புலவர் சொல்லிச் சென்று விட்டாரே ...பின்னே அதை ஆறாம் வகுப்பில் படித்ததோடு காற்றில் பறக்க விடுவானேன் ?

      Delete
  8. Good morning editor sir and dear friends. We are also waiting for Thalapathi

    ReplyDelete
  9. டியர் விஜயன் சார்,இப்போதெல்லாம்,ஒவ்வொரு பதிவை முடிக்கும்போதும் நீங்கள் எழுதும் வார்த்தைகள் மனதை என்னவோ செய்கின்றன.மின்னும் மரணம் 'பிரசவவலி'யை அழகாக எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள்.டெக்ஸ் கதையாக இருந்தால்,ஏழெட்டு கும்மாங்குத்து,பத்திருவது டமால்டுமீல்,இருக்குமே தவிர மொழிபெயர்ப்பில் அதிகம் சிக்கலிருக்காது.ஆனால் டைகர் கதையில் மூளைக்கு அதிகம் வேளையிருக்கும்.,என்பது இப்போதாவது டெக்ஸ் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு,உரைத்தால் சரி.:-)

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் டைகர் கதையில் மூளைக்கு அதிகம் வேளையிருக்கும்., //

      உண்மை உண்மை உண்மை

      இதில் ஒரு உள்குத்து இருப்பதாக தெரிகிறது நண்பரே ;-)

      " மூளை " யாருக்கு என்பதுதான்

      மில்லியன் டாலர் கேள்வி

      கதாசிரியருக்கு அப்படீன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன்

      ஓவியருக்குன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்

      ஆனா தயவு செய்து " அவருக்குன்னு " மட்டும்

      சொல்லிடாதீங்க இந்த பச்ச மண்ணு மனசு தாங்காது :(
      .


      Delete
    2. Dr.Sundar,Salem. //டெக்ஸ் கதையாக இருந்தால் மொழிபெயர்ப்பில் அதிகம் சிக்கலிருக்காது//

      ஆஹா..இப்படியும் ஒரு நினைப்பா ? மொழிமாற்றத்தில் சுலபம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது டாக்டர் ! ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் பெண்டைக் கழற்றும் சக்தி கொண்டவை !

      Delete
  10. உங்க அப்ரோச்ச நான் பாராட்டுறேன்

    ReplyDelete
  11. காலை வணக்கங்கள் நண்பர்களே...ஒரு மெகா புத்தகத்தின் பொருட்டு தங்களின் உழைப்பு மற்றும் வேலைபளுக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... புத்தகத்தை ..மன்னிக்கவும் பொக்கிசத்தை எதிபார்த்து காத்திருக்கிறோம்....

    ReplyDelete
    Replies
    1. கருவூர் சரவணன் : ஒரு வாரமே காத்திருப்பு !

      Delete
  12. Wow
    யப்பா இவ்வளவு சிக்கல்கலா
    உங்களுடைய இந்த முயற்ச்சி நிச்சயம் வெற்றி பெரும்
    மின்னும் மரணம், LMS ஐ தூக்கி சாப்பிட்டு விடும் என்று நினைக்கின்றேன்.
    It's reall inspiring to know that you try so hard to being the best that you can.👏
    Can't wait 😀

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : மாறி வரும் நம் ரசனைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் நியாயம் செய்யும் கடமை நமக்குண்டல்லவா நண்பரே ?! Let's at least not be found wanting on efforts !

      Delete
  13. மதிய உணவுடன் ஏதேனும் ஒரு ஹோட்டலில் 'மி.ம' வெளியீடு என்பது ஓ.கே தான்! ஆனால் ஏற்கனவே டால்டன்களில் ஒருவராக மாறி பேங்க்கை ஓட்டைபோட முயற்சித்திருக்கும் எடிட்டரின் பாக்கெட்டுகளை ஓட்டைபோட நாங்களும் டால்டன்களாக மாறுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை! (அதானே நண்பர்களே?)

    மாறாக,

    * வெளியீட்டு விழாவுக்கு வருகைதரும் நண்பர்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை (கொடுத்தே தீரவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல்) நம் நண்பர்களில் யாரிடமாவது செலுத்தவேண்டியது (ரசீதெல்லாம் தரப்படமாட்டாது ஆமாம்).

    * வசூலாகும் தொகை - பில் தொகையைவிட குறைச்சல் என்றால், மீதத் தொகையை எடிட்டர் செலுத்தவேண்டியது.

    * ஒருவேளை, வசூலாகும் தொகை பில் தொகையைவிட அதிகமென்றால், பில் செலுத்தியதுபோக மீதமுள்ள தொகையை மாலைநேர டீ செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டியது!

    குறிப்பு: 'பணம் அனுப்பினால் சாப்பாடு பார்சலில் அனுப்பப்படுமா' என்று யாராவது கேட்டீர்களோ தெரியும் சேதி! கிர்ர்ர்... ;)

    ReplyDelete
    Replies
    1. //ஒருவேளை, வசூலாகும் தொகை பில் தொகையைவிட அதிகமென்றால், பில் செலுத்தியதுபோக மீதமுள்ள தொகையை மாலைநேர டீ செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டியது! //

      அதுக்கு அப்புறமும் பணம் மிச்சமிருந்தால்?? :D

      Jokes part. Really a nice idea Vijay.

      Delete
  14. டியர் விஜயன் சார்,இவ்வளவு நீண்ட பதிவிட்டும்,தளபதியின் அட்டை படத்தை கண்ணில காட்டலீயே,அட அதுகூட பரவாயில்லை,சஸ்பென்ஸ் போயிடும்னு சிலர் நினைக்கலாம்,பட்,பிரிண்டான புத்தகத்தில் சில பக்கங்களையாவது காட்டலாமே சார்.நீங்க ரொம்ப சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் செய்யறதாலே,ஏதோ,இனிய அதிர்ச்சி.,டைகர் புத்தகத்தில் இருக்கும் என்று சொல்லும் நண்பர்களின் கூற்று,வலுப்பெற்று வருவதாகவே எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //ஏதோ,இனிய அதிர்ச்சி.,டைகர் புத்தகத்தில் இருக்கும் என்று சொல்லும் நண்பர்களின் கூற்று,வலுப்பெற்று வருவதாகவே எனக்கு தோன்றுகிறது///

      நண்பர்களின் கூற்று எப்போதும்போல இந்தமுறையும் ஊத்திக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்! :D

      Delete
    2. ஆமா ஆமா இரத்த கோட்டை முழு தொகுப்பையும் நைசா உள்ள சொருகிட்டாராம் ;)

      Delete
    3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )....ஹாஹாஹா...மிகவும் அட்டகாசமான நகைச்சுவை. @எடிட்டர் கவனிக்கவும்...அடுத்த தொகுப்பிற்கான முன்பதிவை, இந்த வெளீயீட்டில் ஆரம்பிக்கலாமே.

      Delete
    4. @ FRIENDS : S.விஜயன். c/o சஞ்சய் ராமசாமி !

      ஐயாம் எஸ்கேப் !!

      Delete
  15. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.

    ReplyDelete
  16. இந்தப்பதிவை படிக்க ஆரம்பித்தவுடன் எனக்கு வயிறு கலக்க ஆரம்பித்து விட்டது. இவ்வளவு பிரச்சினைகள் தாண்டி புத்தகம் நேரத்தில் தயாராகி விட்டது என்றதும் தான் நிம்மதியாக உள்ளது ஆசிரியரே ...
    ஆமாம் சந்தாதாரர்களுக்கு என்றைக்கு கிடைக்கும் ...?

    ReplyDelete
    Replies
    1. I had same feeling, thought editor is going to say that book will be delayed by couple of weeks.
      But at the end editor finished everything on time

      Delete
    2. செய்து விட்டுச் சொல்வோமே என்ற சிந்தனை தான் !

      Delete
    3. புரியவில்லை ஆசிரியரே ..

      Delete
  17. //அத்தியாவசியம் என்ற நிலை ஏற்படும் வரை என் தலைவலிகள் எனதாக மட்டுமே இருந்து விட்டுப் போகட்டுமே ?! So எனது மௌனங்கள் மெத்தனத்தின் அடையாளமாய்ப் பார்க்கப்பட்டு, அதன் பொருட்டும் சஞ்சலம் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ்//- உண்மை உரைக்கும் உத்தம்மான வரிகள் சார் . காலை வணக்கம் சார் . நீங்கள் குறிப்பிடும் சஞ்சலம் சற்றே எட்டிப் பாரக்க ஆரம்பித்தது என்னவோ நிஜம்தான் சார் . ஆனாலும் இன்றைய பதிவில் நீங்கள் நிச்சயமாக நடப்பது என்ன ?- என்பது பற்றி எழுதுவீர்கள் என நம்பினேன் சார் . (அட நம்புங்கள் நட்புகளா மற்றும். சக விசிலடிச்சான் குஞ்சுகளா ). அடேயப்பா .. நிஜமான மலைப்பு தரும் பணிதான் சார் . இவ்வளவு சிரமப்பட்டு குறித்த நேரத்தில் பணியை முடித்த உங்கள் அணியினரை என்ன சொல்லி பாராட்ட சார் . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : நம்பிக்கைகள் வீண் போகாது நண்பரே !

      Delete
  18. //பைண்டிங்கில் இன்னொரு பக்கம் பணிகள் வேகமாய் அரங்கேறி வர, 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! //
    அருமை சார் இதை படிக்கும் போதே உடலில் மின்சாரம் பாய்ந்த சிலிர்ப்பு ஏற்படுவது ஏனோ தெரியவில்லை.உங்களுடைய & உங்கள் டீமின் அர்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : நம் டீமின் உழைப்பு இம்முறை அசாத்தியம் !

      Delete
    2. உங்களுடைய வழிகாட்டல் இன்றி எதுவும் சாத்தியம் இல்லை சார்.

      Delete
  19. தல ரசிகர்கள் சார்பில் தளபதியை வரவேற்க தயாராகிறோம்!!! dr சுந்தரம் சார் ..தல கும் கும் னு கெட்டவங்கல தான் கும்முவாறு,... அப்பாவிகள அட்டாக் பண்ண மாட்டாரு!!! கதையே இல்லாமலா தல வண்டி இவ்ளோ நாள் ஓடிகிட்டு இருக்கு?? just think it sir...

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath : ஜாலியாக விடுங்க சார் ! தலையின் முதல் ரசிகர்கள் தளபதி முகாமில் இருப்பதும் ; தளபதியின் சிஷ்யர்கள் தலையின் கேம்பில் இருப்பதும் ஊரறிந்த இரகசியம் தானே ?!

      Delete
  20. I am waiting for Thalapathi. Thanku Vijiyan Sir.Thanku Sir. Thanku sir........

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் விஜயன் சார்

    எவ்வளவு தடைகளை தாண்டி வந்துள்ளீர்கள்

    இதுவே ஒரு காமிக்ஸ் காதலரல்லாது
    வேறு யாராவதாக இருந்திருந்தால்
    கண்டிப்பாக இந்த புத்தகம் வெளிவருவது சிரமமே

    அதற்காக முதற்கண் எங்களது நன்றி சார் _/\_

    ReplyDelete
    Replies
    1. rajaganesh & Prabakar T : அட..நன்றியாவது ஒன்றாவது ! அதற்கேது சார் இங்கே அவசியம் ?

      Delete
  22. // 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! //

    APRIL 19 SUNDAY VARUDHU SIR. COURIER OFFICE LEAVE. SO (UNGA VAAKKU NIRAIVERA) NEENGA APRIL 17TH EVENING BOOK'KA ANUPPIDUNGA.

    ReplyDelete
    Replies
    1. Jagath Kumar : ஏப்ரல் 18-க்கு முன்பாக தயாரிப்புப் பணிகள் முடிய வாய்ப்பிலையே நண்பரே !

      Delete
    2. IT'S OK SIR..!! NEENGA 20'LA ANUPPI 21'LA ENGA KAIKKU KIDAICHALUM ENGALUKKU SANDHOSHAME..!!

      Delete
  23. சார் எங்களுக்கு மிகப்பெரிய VIP நீங்கதான்

    உங்க தந்தையரும் உடன் வரும்போது
    அதைவிட பெரிய பேறு வேறு ஏது

    எங்களுக்கு புத்தக விழா முக்கியம்
    அதனுடன் சேர்த்து நண்பர்கள் அனைவரையும் மறுபடியும் ஒருங்கே சேர்த்து காணக்கிடைக்கும் சந்தர்ப்பம்

    ஆஹா நினைத்தாலே இனிக்கும் (இனிக்கிறது)

    எங்க எப்படி வேணாலும் வையுங்க

    நாங்க ரெடி :))
    .

    ReplyDelete
    Replies
    1. //சார் எங்களுக்கு மிகப்பெரிய VIP நீங்கதான் //

      100% உண்மைதான் சிபி அவர்களே! ஆனால் வெகுஜனத்தின் பார்வை நம் காமிக்ஸ் மீது இன்னும் சற்று அதிகமாகத் திரும்ப சில ஸ்டண்ட் வேலைகள் அவசியமாகிறது ( நகைக்கடை திறப்பு விழாவுக்கு நடிகையை அழைப்பதுபோல).

      காமிக்ஸ் மீது ஈடுபாடுகொண்ட சினிமாத் துறையினர் யாரையாவது வைத்து வெளியிட்டால் (டைரக்டர் சிம்பு, மிஸ்கின்etc.,) மீடியாவின் பார்வையும், அதன்மூலம் விளம்பரமும் கிடைக்கும்!

      '1000 ரூபாயில் வெளிவரும் முதல் காமிக்ஸ்' என்ற மகத்தான சாதனை நம் சிலருக்குள் மட்டுமே முடங்கிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை!

      Delete
    2. Erode VIJAY : நல்ல சிந்தனையே...அந்த நகைக் கடை திறப்பு விழா பாணிகள் பக்கமாய் செயலாளரின் குதிரைகள் ஓடாத வரைக்கும் !

      Delete
  24. கொள்ளைக்கார மாயாவி – முதல் முறையாக படித்தேன். முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு, அதைவிட சிறப்பு இயல்பான ஒரு கதை. அதிர்வு கருவி திருடு போவது, அதுவும் நிழல்படை வீரர்கள் முன்னால், இதை விட பெருத்த அவமானம் வேறு எதுவும் இல்லை என்ற நிலையில்; அதனை கண்டு பிடிக்க வழிகள் ஏதும் இல்லா நிலையில் தன்னை பகடைகாயாக சம்மதித்து, சிறையில் பொறுமையாக நாட்களை கடப்பதில் ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அவர்களின் நன்மதிப்பை பெற தனது தலைவரை கொல்வது (இங்கு ஒரு படபடப்பு, உண்மையில் நிழல் படை தலைவர் இறந்து விட்டாரா, அப்படி இல்லேன்னா எப்படி தப்பிப்பார்); இறுதியில் சாதாரணமாக அவர்களுடன் சண்டை போட்டு வெல்வது என அனைத்து வகையிலும் என்னை கவர்ந்து விட்டது.
    அதிர்வு கருவி – பூ சுற்றல் என சொல்லலாம், ஆனால் இது போன்ற விசயம்கள் நடைமுறைக்கு சாத்தியம்; சாதாரண செல்போன் வைபரேசன் போல பலமடங்கு அதிர்வு உண்டாக்க கூடிய கருவிகள் கண்டு பிடிக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் இது போன்ற கதைகளை ஹோலிவூட்டில் வந்தால் ஆச்சரியத்துடன் ரசிக்கிறோம், பாண்டாசி, கலக்கிடாங்க என இன்றும் ரசிக்கும் நாம், இது போன்ற நமது கதைகளை பூசுற்றல் என நினைக்காமல் படித்தால் கண்டிப்பாக பிடிக்கும்.

    இது போன்ற லைட் வெயிட் கதைகள் நமது குழந்தைகளுக்கு அருமையான பொழுதுபோக்கு; அவர்கள் ரசிப்பார்கள், எனது மகளுக்கு இந்த கதையை சொன்ன போது மிகவும் ரசித்தால்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore :அட..இத்தனை காலமாக கொ.மா. படித்திருக்கவில்லையா ? I agree - இலகுவான வாசிப்புகளுக்கு இவற்றை அடித்துக் கொள்ள முடியாது !

      //எனது மகளுக்கு இந்த கதையை சொன்ன போது மிகவும் ரசித்தாள்.//

      கதை சொல்வது அற்புதமானதொரு அனுபவம் - நமக்கும், கேட்கும் குழந்தைகளுக்கும் ! தொடரட்டும் !!

      Delete
  25. வெளியில் ஒட்டலில் வைப்பது வேண்டாம் சார், மிண்ணும் மரணத்தை புத்தக கண்காட்சியில் உங்கள் அப்பா கையால் வெளியிடாலம்,

    ReplyDelete
  26. இனிய காலை வணக்கம் நண்பர்களே! இன்றைய நாளும் உங்களுக்கு மிகச் சிறப்பானதாக அமையட்டும்!

    ReplyDelete
  27. இனிய காலை வணக்கம் நண்பர்களே

    உங்கள் அனைவருக்கும்
    புதிய
    'மன்மத'
    வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அப்பாடி எத்தனை நாட்கள் ஆகி விட்டது இப்படி ஒரு "குண்டு "பதிவை படித்து ...:)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே...பதிவுகள் தொடர்ச்சியாய் குண்டாக இருந்திட்டால் , எனது விரல்கள் உங்கள் ஜாடைக்கு மாறிப் போய் விடும் !!

      Delete
  29. Dear Mr. Vijayan... the book can be released in the stall itself, if the organisers have no objection on that. it would be difficult and as well as expensive to release the book in a separate Hall.

    I thought initially to give a suggestion that the book release can be done in SIVAKASI itself, so that many readers will be having a chance to visit the lion in it's den. (anyway many people will be travelling to chennai and instead of that they can travel to Sivakasi.). However it is too late for that now.

    ReplyDelete
    Replies
    1. Comic Rider Arul : எங்களைத் தேடி நீங்கள் அனைவரும் வருவதென்பது இந்தக் கோடை விடுமுறைகளின் மத்தியில் எத்தனை தூரம் சாத்தியமென்று தெரியவில்லை ! டிக்கெட் செலவுகள் ஒருபக்கமிருக்க, டிக்கெட்கள் கிடைக்க வேண்டுமே முதலில் !

      If at all things could be managed, we would be delighted to host you here !!

      Delete
  30. (adding this line)........To visit the Lion in it's den and witness the release of tiger from it's Cage.....

    ReplyDelete
  31. வேங்கையின் வேட்டை ஆரம்பமாகி விட்டது ! வெளியிட்டு தேதி தொடர்பாக சிறு ஆலோசனை 19 ம் தேதி sunday வருவதால் வெளியூர் காமிக்ஸ் அன்பர்களுக்கு திங்கட்கிழமை பணிக்கு செல்வதில் சிரமமாகிவிடலாம் என்பதால் 17ம் தேதியோ 18ம் தேதியோ வெளியிட்டுவிடலாம் !

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : ஞாயிறுக்கு முன்பாக இதழே தயாராகியிராது நண்பரே !

      Delete
  32. சார் ...உண்மையை சொல்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் .மின்னும் மரணம் இதழை பொறுத்த வரை முன் பதிவை கட்டி விட்டேனே தவிர மனதின் ஓர் ஓரத்தில் ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு இதழை வாங்குகிறோமே ...தேவைதானா ..புது இதழ் என்றால் ஆயிரத்திற்கும் அதிகம் என்றாலும் ஓகே .இது ஏற்கனவே நம்மிடம் உள்ள புத்தகம் ..கதை அருமையான கதை தான் .அதனால் தானே மொத்தமாக இதுவரை இரண்டு முறை மீண்டும் படித்து உள்ளோம் .ஒரே ஒரு புது பாகம் ..அதுவும் காதல் பாகம் எனும் போது இவ்வளவு தொகை கொடுத்து வாங்க வேண்டுமா வண்ணம் என்ற காரணத்திற்காக மட்டும் என்ற எண்ணம் தலை தூக்கி கொண்டே இருந்தது நிஜம் .எனவே தான் காலம் தாழ்த்தி முன் பதிவு செய்தேன் ...

    ஆனால் இந்த பதிவை படித்தவுடன் மனதில் இத்தனை நாள் இருந்த ஒரு வெறுமை நீங்கியதுடன் நான் முன் பதிவு செய்யாமல் இருந்தால் இதற்கு பணம் கட்டாமல் இருந்து விட்டோமே என்று இப்போது பெரிய ஆதங்கமே ஏற்பட்டு இருக்கும் ..

    நன்றி சார் ...உங்களுக்கும் ..உங்கள் "உழைப்பாளர் " குடும்பத்திற்கும் ...

    ReplyDelete
    Replies
    1. எ..எங்க தலீவரை இப்படி அடிக்கடி கண்கலங்க வைக்கறதுல இந்த எதிர்கட்சிக்காரங்களுக்கு அப்படி என்னதான் சந்தோசமோ தெரியலை!
      நீங்க கவலைப்படாதீங்க தலீவரே! 'இரத்தைக் கோட்டை' முன்பதிவுத் தொகையை முதலில் நீங்களே செலுத்திட்டா அப்புறம் நாம யாருன்னு புரியவச்சுடலாமில்ல? :)

      Delete
    2. //ஒரே ஒரு புது பாகம் ..அதுவும் காதல் பாகம்//

      என்னாது காதல் பாகமா ?? தலீவரே! பேர் தான் அரிசோனா லவ் வே தவிரே, கதை சும்மா விறு விறு என நகரும் சிவகாசி பட்டாசு ரகத்தை சார்ந்தது. It's one of the best stories in the series.

      பாருங்களேன் கதையை படித்துவிட்டு நீங்களே உங்களுடை கருத்தை மாற்றிக்கொள்வீர்கள் !!! :D (Thanks Vijay for the Smiley)

      Delete
    3. ராட்ஜா தி பாஸ் சார் ....#

      ஒரு முறை ஆசிரியர் சார் ...காதல் பாகம் என்பதால் அதை வெளி இட வில்லை என சொல்லியதாக நினைவு .....அதுதான் ...நான் அப்படி குறிப்பிட காரணம் ...
      விறுவிறுப்பான ஆக்ஷன் சாகசம் என்றால் சந்தோஷமே... :-)

      Delete
    4. Paranitharan K : "காதல் காட்சிகளும் "நிறைந்த பாகம் என்பதால் இத்தனை காலம் காத்திருப்பில் இருந்தது தலீவரே !

      அது சரி..தற்போது இந்த ஒற்றை பாகத்துக்காக மட்டுமே சங்கச் செயலாளர் கடவாயில் பம்ப்செட் பொருத்திக் கொண்டு சுற்றி வருவதைக் கவனிக்கவில்லையா ? போச்சு போங்க !

      Delete
    5. //"காதல் காட்சிகளும் "நிறைந்த பாகம் என்பதால் இத்தனை காலம் காத்திருப்பில் இருந்தது தலீவரே ! //

      என்ன காதல் காட்சி.. அதான் எல்லாம் எடிட் பண்ணிடுவிங்களே...

      Delete
  33. Sir , Dont feel that your table is empty .. Lets start another mega special .. Ratha padalam (XIII) full in colour ..
    Consider it Sir ...

    ReplyDelete
    Replies
    1. Mks Ramm : ஹல்லோ..ஹலோ....ஹல்லோ..இங்கே சிக்னலே கிடைக்க மாட்டேங்குது !

      Delete
  34. அனைவருக்கும் வணக்கம். வேங்கை வெளியே வர தயாராகி வருகிறதா? கேட்கவே சந்தோசமாகவுள்ளது. அடிக்கிற அனலுக்கு ஒரு அனல் பறக்கும் மெகா இதழை நினைக்கவே அட்டகாசமாக உள்ளது. அனால் தாங்கள் படும், பட்ட சிரமங்கள் இதழை தாங்கள் வெளியிடும்போது காணமல் போய் விடும். புத்தகத்தில் கண்டிப்பாக நன்றாகவே வரவேண்டும். தங்கள் நல்ல மனத்திற்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்.

    ReplyDelete
  35. எடி சார்
    உங்களுக்கும்
    உங்கள் டீமுக்கும் மெத்ததொரு சல்யூட் சார்

    புத்தகம் வெளியீடு ஸ்டாலிலயேவைத்துக் கொள்ளலாம்.
    அதிலும் காலை என்பதே நலம் சார்

    என் போன்ற வெளியூரில் வசிக்கும் வாசகர்களுக்கு பேருதவியாய் இருக்கும்

    சென்னை வாசகர்கள்
    சென்னை வரும் நண்பர்களை வரவேற்க தயாராகுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : பகல் பொழுதிலேயே வைத்துக் கொள்வோம் நண்பரே !

      Delete
  36. விஜயன் சார், ஒவ்வொரு மைல் கல் இதழ்கள் வெளிவர நீங்களும் நமது அலுவலக நண்பர்கள் அடிக்கும் அந்தர் பல்டிகளை பார்க்கும் போது கண்களில் நீர் வருகிறது! "நன்றி" அடிமனதில் இருந்து வரும் உணர்வு பூர்வமான வார்த்தை!

    எளிதாக மாதம் ஒரு குண்டு புத்தகம் வேண்டும் என நண்பர்கள் இங்கு பதிவிடலாம், ஆனால் அதனை உருவாக்கி நமது கைகளில் சேர்க்க நீங்கள் படும்பாடு மறக்க முடியாது.

    நமது மைல்கல் இதழ்களில் இதுவும் சாதனை படைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : அட..ஒரு விருந்தெனும் வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் செய்யும் வேலைகளும் கூட இதே போல் தானே நண்பரே ?! மேஜைக்கு வரும் ருசியான பதார்த்தங்களின் பின்னே சமையலறையின் வியர்வை இல்லாது போக முடியுமா ?

      ரசித்து சாப்பிடும் போது பட்ட சிரமங்கள் மறந்து / பறந்து போய் விடாதா ?

      Delete
  37. விஜயன் சார், நமது மின்னும் மரணம் புத்தக வெளிஈட்டை நமது புத்தக திருவிழாவில் வைத்து கொள்ளலாம். தனியாக ஹால் பிடித்து வெளி ஈடுட முயற்சிப்பது இன்னும் நமது வேலை பளுவை அதிகரிக்கும்; மேலும் செலவு அதிகமாகும்; இதனை நண்பர்கள் சேர்ந்து நடத்தலாம் என்றால் அனைவராலும் செலவில் பங்கேற்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம். எனவே மி.ம. வெளிஈட்டை புத்தக திருவிழாவில் வைத்துகொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : அனைவருக்கும் ஏற்புடைய தீர்மானம் நமக்கும் ஒ.கே. !!

      Delete
  38. விஜயன் சார்,
    புத்தகம் வெளி ஈடும் நேரம் பற்றிய எனது சிறிய கோரிக்கை: கடந்த பதிவு வரை புத்தகம் வெளியீடுவது மாலை என அறிவித்தால் என்னை போல் சில நண்பர்கள் காலையில் கிளம்பி சென்னைக்கு மதியம் வருவது போல் திட்டமிட்டு இருந்தோம். காலை 11 மணிக்கு என்றால் எங்களால் இதில் கலந்து கொள்ள முடியாது.

    காலை 11 மணி என்பதற்கு பதில் மதியம் 2 அல்லது 3 மணிக்கு நமது மின்னும் மரணத்தை வெளி ஈட முடியுமா! இதனால் நாங்கள் அனைவரும் இதில் பங்கேற்க முடியும், அதே போல் அங்கு இருந்து மாலை கிளம்பி இரவில் நண்பர்கள் அனைவரும் அவர்களின் இருப்பிடம் சேர்ந்து விடலாம்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : காலை Shatabdi-ஐ பிடிக்க முடிந்தால் 11 மணிக்கெல்லாம் சென்னையைத் தொட்டு விடலாமே ?

      Delete
  39. விஜயன் சார், நமது காமிக்ஸ் VIP நீங்கள் தான், எனவே இதனை நீங்கள் வெளி ஈட நமது VVIP, அதுதான் உங்கள் தந்தை பெற்று கொள்வது மிகவும் அர்த்தமுள்ள வெளி ஈடாக அமையும் என்பது எனது எண்ணம்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : நண்பரே - "VIP" அது இதுவென்ற அடைமொழிகளோடு அடியேனை ஓரம் கொண்டு போய் விட வேண்டாம் ! "VVIP " இருக்கும் போது நான் நம் ஜோதியில் ஐக்கியமாகி ஜாலியாகப் பொழுதை ஒட்டிக் கொள்கிறேனே ! :-)

      Delete
  40. சென்னை நண்பர்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புத்தக திருவிழா திடலுக்கு வர பஸ் மற்றும் மெட்ரோ ரயில் விவரம்களை சொன்னால் உதவியாக இருக்கும்.

    பயணசீட்டு எல்லாம் போட்டாச்சு, வீட்டில் பேச்சு வார்த்தை ஓடி கொண்டு இருக்கிறது.. அனுமதிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  41. காலை வணக்கங்கள் நண்பர்களே..!

    திரு விஜயன் அவர்களுக்கு,

    என் கற்பனையில்...மி.ம.வெளியீடு நெருக்கடியில் VIP களுடன் மேடையில் நீங்களும்,கீழே நாங்களும் என முக்கிய தருணத்தில் உங்களை விட்டு,அருகில் இல்லாமல், எதிரில் (கொஞ்சமே எட்டாத தூரம் என்றாலும்கூட) நிற்பது, கொஞ்சம் நேரமே என்றாலும்...உங்களை பிரிந்திருப்பது..என்ன சொல்வது மனதில் ஒரு சின்ன கணமா,பாரமா, பெருமூச்சா,உறுத்தலா சொல்ல தெரியவில்லையே..! பாலகனாக மாறும் அந்த தருணத்தில் மனதில் தோன்றும் ஏக்கத்தை சொல்ல...அகப்படாத ஒரு வார்த்தை..ம்..!

    // என்னைப் பொறுத்தவரை இந்த இதழாலே நமது வாசக வட்டத்தின் ஒரு கொண்டாட்டமே எனும் போது உங்களை விட இத்தருணத்தில் பெரியாட்கள் வேறு யாரிருக்க முடியும் ? //

    மேற்கண்ட உங்கள் வார்த்தைகள் படித்தும்..ஒரு நிமிடம் மனம் கனத்து, என் கண்கள் பளித்துவிட்டன காமிக்ஸ் காதலரே..! வரும் பிரமுகர்கள் எல்லோர் கால்களிலும் விழுந்து விழுந்து வணங்கும் மகனுக்கு...ஏழை விவசாய தந்தையில் கால்களில் விழுந்து ஆசிபெறுவதே பிரதானம் என தெரியாமல், அந்த முக்கிய தருணத்தில் அருகில் வைத்துக்கொள்ளாமல்...புகழ் ஒன்றே குறி என ஓடும் இந்த கலியுகத்தில், தப்பி பிழைத்த இந்த காமிக்ஸ் உலக நட்பை விட்டுத்தராமல் கட்டியனைத்த உங்களை...மானசீகமாக என் இரு கரங்களாலும் ஒருமுறை இறுக கட்டியணைத்து கொள்கிறேன் காமிக்ஸ் காதலரே..!

    வருகை தரும் 'பெரியாட்கள்' பட்டியல் தெரிந்தால், விழாவை நிறைவாக திட்டமிடமுடியும்..! வரிசைஎண்களுடன் துவக்குகிறேன்..!

    0. சர்வாதிகாரி ஸ்டாலின்
    1. புனித சாத்தான்
    2. ஈரோடு விஜய்
    3. ஸ்பைடர் ஸ்ரீதர்
    4. டெக்ஸ் விஜயராகவன்
    5. சுசிந்தர்குமார்
    6. கார்த்திக்
    7. யுவா கண்ணன்
    8. கிட் ஆர்ட்டின் கண்ணன்
    9. ஜெயகுமார்
    10. தங்கராஜ் துரை
    11. பழனி வேல்
    12. பிரபாகர்.T
    13. ரம்மி XIII
    14. அறிவரசு@ரவி
    15. ஸலூம் பெர்னாண்டஸ்
    16. ஸ்ரீதர் சொக்கப்பன்
    17. செல்வம் அபிராமி
    18. மயிலாடுதுறை ராஜா
    19. புளுபெர்ரி.நாகராஜன்
    20. ராஜ் முத்து குமார்
    21. ரபீக் ராஜா
    22. பெங்களூர் பரணி
    23. கோவை ரமேஷ் சண்முகசுந்தரம்
    25. மாயாவி.சிவா
    26. மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்
    27. கிருஷ்ணா VV
    28. காமிக்ஸ் லவ்வர் ராகவன்
    29. நரேஷ்குமார்
    30. சத்யா
    32. லக்கி லிமிட்
    31. கிங் விஸ்வா .....அன்பு கூர்ந்து எண்களுடன் பட்டியலை தொடருங்கள் நண்பர்களே..!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. mayavi. siva : இரண்டு நிமிட ஒளி வட்டப் பார்வைகள் ; 'பெரியவர்களோடு' தோள் உரசிட எப்போதாவது கிடைக்கும் சில பல நிமிடத்து வாய்ப்புகள் - இவற்றின் ஆயுட்காலம் என் நினைவலைகளுக்குள் எப்போதுமே ரொம்பவே குறைவு ! விற்பனைக்கு உதவிடும் பொருட்டும், காமிக்ஸ் இன்னமும் ஜீவனோடு தழைத்து நிற்கின்றது என்ற சேதியைப் பரப்புவதற்கும் அந்த ஒளிவட்டங்கள் உதவிடும் என்பதே அவற்றின் பக்கம் எனக்குத் தெரிந்திடும் அனுகூலம் !

      ஆனால் ஒவ்வொரு சந்திப்பின் போதும் நண்பர்களின் மத்தியில் நாங்கள் உணரும் அந்த நேசமும், உற்சாகமும் , கலப்படமில்லா மகிழ்வும் எங்களின் வாழ்க்கைகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் தருணங்கள் !
      எல்லாப் புகழும் படைப்பாளிகளுக்கும், காமிக்ஸ் எனும் இந்தக் கலைக்கும் அர்ப்பணமாகிட வேண்டிய பொழுதுகளில் நாம் ஏன் அந்த frame -க்குள் தலையை நுழைப்பானேன் ?

      உங்களோடு சேர்ந்து நின்று கொண்டு வழுக்கை மண்டையில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டே ஜாலியாக பேசுவதற்கு வேறு எது தான் ஈடாகிட முடியும் ? இன்றைக்கும், என்றைக்கும் அந்த சந்தோஷத்துக்கு இணை கிடையாதே !

      Delete
    3. மாயாஜீ ....உங்கள் ....நமது நண்பர்களின் பயணம் இனிதே அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

      Delete
    4. mayavi.siva : அட...சர்வாதிகாரியும் பயணம் மேற்கொள்கிறாரா ? சூப்பர் !

      Delete
    5. @ Vijayan Sir : பட்டியலில் அவருக்கு எண் கவனிக்க..! ஒரு மரியாதை நிமித்தமே..! :-)))

      Delete
  42. 32.ராம்குமார் (ramg75)

    ReplyDelete
  43. 'மி.ம' வெளியீட்டு விழாவை
    1. ஸ்டாலிலேயே நடத்துவது
    2. புத்தக சங்கமத்திலேயே இதற்கென ஒதுக்கப்பட்ட அரங்கத்தில் நடத்துவது
    3. ஹோட்டலில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து நடத்துவது

    மேலே உள்ள 3 பாயிண்டுகளின் சாதக பாதகங்களை (என் அறிவுக்கு எட்டிய வரையில்) கொஞ்சம் அலசியிருக்கிறேன்...

    1.ஸ்டாலிலேயே நடத்துவது

    நிறைகள்:

    * செலவு கிடையாது
    * வெளியீட்டை முடித்த கையோடு விற்பனையையும் சூடாகத் துவங்கிவிடலாம்

    குறைகள்:
    * நம்முடைய மகிழ்ச்சி ஆரவாரமும், கூட்டமும் மற்ற ஸ்டால் பொறுப்பாளர்களை முகம் சுளிக்கவைக்கும் (கடந்த காலத்தில் நாம் நிறையவே சந்தித்திட்ட பிரச்சினைதான் இது). இதனால் அடுத்தமுறை ஸ்டால் கிடைப்பதில் சிக்கல் நேரிடக்கூடும்!
    * குறுகலான இடத்தில் நாம் நிற்க, நடக்கவே சிரமம் ஏற்படும்
    * வெயில் காலம் என்பதால் வியர்வையில் குளிக்க நேரிடலாம்


    2. புத்தக சங்கமத்தில் இதற்கென உள்ள அரங்கத்தில் நடத்துவது

    நிறைகள்:

    * ஹோட்டல் வாடகையோடு ஒப்பிட்டால் குறைவான அரங்கக் கட்டணம் ( அதிகமிருக்க வாய்ப்பிருக்காது என்றே நினைக்கிறேன்)
    * புத்தகத்திருவிழா அமைப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட புத்தக வெளியீடாக அமையும்
    * அனைவருக்கும் வசதியான இடம்
    * யாராவது ஒரு VIPயை வைத்து வெளியிடலாம்
    * மீடியாக்களின் பார்வையும் அதன்மூலம் கிடைக்கும் விளம்பரமும்.

    குறைகள்:

    * நாம் கேட்கும் நேரத்தில் அரங்கம் கிடைப்பதில் உள்ள சிக்கல்
    * அரங்கத்திற்கான கட்டணம்


    3. ஹோட்டலில் ஒரு அரங்கத்தில் (மதிய உணவுடன்) நடத்துவது

    நிறைகள்:
    * நண்பர்கள் கொண்டாட, குதூகலிக்கத் தடை ஏதும் இருக்காது
    * வசதியான இடம்
    * வியர்வை மழையில் நனையவேண்டியதிருக்காது
    * யாரவது VIPஐ அழைப்பதில் comfortable ஆக உணர்வோம்
    * மதிய உணவு
    * 3 அல்லது 4 மணிநேரங்கள் வசதியாக உரையாடும் வாய்ப்பு.
    * மீடியாக்களின் வெளிச்சம்

    குறைகள் :
    * செலவு அதிகம்
    * புத்தக சங்கமத்திற்கு அருகிலேயே ஹோட்டல் (அரங்கத்துடன்) கிடைப்பதில் உள்ள சிக்கல்
    * இதுபற்றிய விவரமறியாத / வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து சென்றுவிடும் வாய்ப்பு.

    ( வேறு ஏதேனும் நிறை/குறை இருந்தால் நண்பர்கள் சொல்லலாமே ப்ளீஸ்?)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : நாட்டாமைகளாக தீர்ப்புச் சொல்ல அரசமரம், தண்ணீர் செம்பு ; துண்டு என்று சகலத்தையும் தயாராக எடுத்துக் கொடுத்தால் - முன்சீப் கோர்ட் வக்கீலைப் போல பாய்ண்டுகளை மட்டும் அடுக்கி வைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டால் எப்படியாம் ?

      அட...எங்கே நமது தாரமங்கலத்து பாப்பையா சார் ?

      Delete
    2. ஆசிரியர் சார் ....இந்த முறை தாரமங்கல தலிவரு சென்னை வருவது கடினம் போல உள்ளதால் இந்த வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதி இல்லாமல் போய் விட்டது ..... :-(

      Delete
    3. Paranitharan K : ஐயகோ...என்ன இது..நீதிக்கு வந்த சோதனை ?!

      Delete
    4. Erode VIJAY : Jokes apart : உங்களின் OPTION # 2-ன் குறைகள் அரங்கக் கட்டணமாக இருக்க வாய்ப்பில்லை ; அது நிச்சயமாய் பெரியதொரு தொகையாக இராது ! ஆனால் அது வெளியரங்கம் எனும் போது பகலில் அனல் பறக்கும் என்பது மட்டுமே சிக்கல் !

      OPTION # 3-ஐப் பொறுத்த வரையிலும் வெளியே ஒரு AC ஹால் எடுப்பதில் செலவினங்களை ஒரு சிக்கலாகப் பார்த்திடும் அவசியம் நிச்சயமாய் இராது ! எவ்வளவோ தொலைவுகளிலிருந்து நம் பொருட்டு இந்த மண்டையைப் பிளக்கும் வெயிலில் வரும் நண்பர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு நாம் வழி செய்வதால் குறைந்தா போய்விடப் போகிறோம் ? Not at all !

      //இதுபற்றிய விவரமறியாத / வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து சென்றுவிடும் வாய்ப்பு.//

      இது மாத்திரமே என் பார்வைக்குத் தோன்றிடும் சிரமம் ! இதற்கு ஏதேனும் தீர்வு கிட்டும் பட்சம் - சீனியர் எடிட்டர் சந்தோஷமாய் பில்லுக்குப் பணம் தந்திடுவார் !

      Delete
    5. வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து // வலைக்கு அப்பாற்பட்ட எனில், இன்றைய பொழுதில் அவர்களில் 'வலையில் இயங்காத சந்தாதாரர்கள்' ஒரு முக்கியப் பங்கு வகிப்பார்கள் அல்லவா? சந்தாதாரர்கள் அல்லாதோரை த‌கவல் சென்றடைவது சிரமம் இருப்பினும் சந்தாதாரர்களுக்கு விபரம் தெரிவித்து, தபாலில்/கூரியரில்/ஒரு போஸ்ட் கார்டில் அழைப்பு அனுப்பிவிடலாமே. பர்சனல் டச்சாகவும் இருக்கும். இது சாத்தியமா தெரியவில்லை. சும்மா ஒரு யோசனையாக சொல்லிவைக்கிறேன்.

      Delete
    6. ஆதி தாமிரா : Oh yes...சாத்தியமே ! நாமொரு தீர்மானத்துக்கு முதலில் வந்திடும் பட்சத்தில் !

      Delete
    7. சார் ...இது நீதிக்கு வந்த சோதனை அல்ல ...பொண்டாட்டியால் புருஷனுக்கு வந்த சோதனை ...

      (வெளியே சொல்லிராதீங்க சார் ..மானா ...மரி....போயிறும் )

      Delete
    8. ///இதுபற்றிய விவரமறியாத / வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து சென்றுவிடும் வாய்ப்பு.///

      எடி சார்
      நீங்கள் சிரமம் பார்க்காமல் சந்தா கட்டியுள்ள அனைவருக்கும்
      விழா நடக்கும் இடம் , நேரத்தை கடிதம் வாயிலாக தெரிவித்தால் வருபவர்கள் அனைவரும் சிரமம் இல்லாமல் வந்திடமுடியும் அல்லவா!!

      Delete
  44. அருமையான பகிர்வு. மின்னும் மரணம் ஒரு சாத‌னை இதழ்.

    புத்தக வெளியீட்டுக்கு புத்தக கண்காட்சி ஸ்டால், அரங்கம் இவையெல்லாம் நிச்சயம் இடைஞ்சலாகவும், பின்விளைவுகள் ஏற்படுத்துவதாகவும்தான் அமையும்.

    இந்தச் சாத‌னைக்கு நமது காமிக்ஸ் குடும்பம் மட்டுமேதான் காரணம், நாமே பெருமைக்குரியவர்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வாய்ப்பை விளம்பரத்துக்காக பயன்படுத்திக்கொள்வதுதான் நம் எதிர்காலத்துக்கு, காமிக்ஸ் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். ஆகவே, சிறிது செலவைப் பாராமல் அண்ணாசாலை 'புக் பாயின்ட்' போன்ற நடுத்தரமான ஒரு அரங்கில், ஓரிரு விஐபிக்களை அழைத்து, சற்றே மீடியா வெளிச்சம் படும்படி புத்தக வெளியீட்டை நடத்துவதுதான் சரியாக இருக்கும். கிங் விஸ்வா போன்ற முன்னோடிகள், மீடியா நண்பர்கள் இதற்கான முன்னேற்பாடுகளை சிறப்புறச் செய்வார்கள் (ஏற்கனவே பணிகளைத் துவக்கியிருப்பார்கள் என நம்புகிறேன்) என்பதில் ஐயமில்லை. பஃபே போன்ற பெரிய செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிம்பிளாக ஸ்னாக்ஸோடு முடித்துக்கொள்ளலாம். ஒரு வேளை மாலை வேளையில் புத்தக வெளியீட்டை வைக்க நேர்ந்தாலும், காலையிலேயே நம் ஸ்டாலில் புத்தக விற்பனையை துவக்கிவிடலாம். இதிலென்ன ஃபார்மாலிடி வேண்டியிருக்கிறது?

    பர்சனல் சோகம்:

    தீவிர வெளிநாட்டு சதி காரணமாக, சரியாக 15ம் தேதி பணி காரணமாக மும்பை செல்லவிருப்பதால், ஊஊஊம் ஊஊம் என்று அழுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களை பார்ப்பது, விழாவை மிஸ் பண்ணுவது மட்டுமல்லாது, இதழ் வீட்டுக்கு வந்தபின்பும் அதைப் பார்க்க நான் 10 நாட்கள் காத்திருக்க வேண்டுமென்பதுதான் இன்னும் கடுப்பேற்றுகிறது. :‍((

    ஊர் வம்பு:

    எங்கள் தளபதிக்கு இப்படி ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க இதழ் உருவானதில் பேருவகையும், பெருமையும் பெருகுகிறது என்னுள். எதிர்காலத்தில் டெக்ஸ் ரசிகர்களின் தொல்லை தாளாமல் இப்படி ஒரு இதழ் வந்தாலும் கூட முதல் இதழ் என்ற சாதனை தளபதிக்குரியதாகவே வரலாற்றில் பதிந்திருக்கும். பை தி வே, பெருமையெல்லாம் தேடி வர‌ வேண்டும், தொல்லை செய்து வாங்குவதில் என்ன பெருமை இருக்கப்போகிறது? :‍))))

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : //செலவைப் பாராமல் அண்ணாசாலை 'புக் பாயின்ட்' போன்ற நடுத்தரமான ஒரு அரங்கில், ஓரிரு விஐபிக்களை அழைத்து, சற்றே மீடியா வெளிச்சம் படும்படி புத்தக வெளியீட்டை நடத்துவதுதான் சரியாக இருக்கும்//

      ஐடியா சொல்லிவிட்டு எஸ்கேப் ஆவது பற்றாதென்று - சைக்கிள் கேப்பில் தல-தளபதி என பற்றவும் வைப்பது !! அய்யா..நீர் புலவர் !!

      Delete
    2. /// தொல்லை செய்து வாங்குவதில் என்ன பெருமை இருக்கப்போகிறது ///

      தலை தளபதி
      இருசாரரும் அப்படி தொல்லை செய்ததினால்தானே
      இன்று காமிக்ஸ் உலகில் புதியதொரு சாதனை புத்தகமாக 'மி.ம' வருகின்றது

      இது உங்களுக்கு தெரியாதா ஆதி சார்

      Delete
    3. @ ஆதி

      யாருங்க அது? மும்பை போறீங்கன்னா கிளம்பிப் போக வேண்டியதுதானே? அப்புறம் என்ன 'அண்ணாசாலை புக் பாயிண்ட்ல விழாவை வச்சுக்கங்க... ஆதித்தனார் சாலை சிக்னல் பாயிண்ட்ல விழாவை வச்சுக்கங்க'னு அட்வைஸ் வேண்டிக்கிடக்கு? போய் நேரங்காலத்தோட ட்ரெயினைப் பிடிக்கற வழியைப் பாருங்க. ஆயிரம் ரூவா புத்தகத்தையும் நாங்க மரத்துக்கடியில வச்சுத்தான் ரிலீஸ் பண்ணுவோம்... ன்னான்றீங்க இப்ப?

      எப்படியும் அடுத்த வருடம் CBF சமயத்திலயும் வேலை விசயமா விசாகப்பட்ணம் போவீங்க... இப்பவே டிக்கெட் போட்டுவச்சுடுங்க. :))))))) (என்ன பாக்குறீங்க... நீங்க போடுற அதே இஸ்மைலி தான்!)

      Delete
  45. விஜயன் சார், எந்த ட்ரைன் நேரத்திற்கு வந்து சேர்க்கிறது நமது ஊரில்? 11 மணி என்றாலும் அது வந்து நான் அங்கு இருந்து ஆட்டோ அல்லது பஸ் பிடித்து வருவதற்குள் 12 மணி ஆகிவிடும் :-) மேலும் நான் தற்சமயம் வரும் ட்ரைன் 12 மணிக்கு வரும், அங்கு இருந்து புத்தகம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர 1 மணி ஆகிவிடும் :-(

    ReplyDelete
    Replies
    1. @ பரணி: முயன்றால் முன்பே வரலாம் நண்பரே..! 108 க்கு நம் மனம் வழிவிட்டு தயாராவது போலவே..!

      Delete
    2. சதாப்தி எல்லாம் இன்றைய சூழ்நிலையில் யோசிக்க கூட முடியாத விஷயம் சார்!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. சிவா, முடியும். ஆனால் புத்தக வெளி ஈடும் "சரியான நேரத்தை" ஆசிரியர் முடிவு செய்து சொன்னால் வந்து விடுவேன்!

      Delete
    5. //காலை 11 மணிக்குத் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் : 128-ல் எப்போதும் போலவே மின்னும் மரணத்தை unveil செய்திடுவோமா ? அல்லது அருகாமையில் ஏதேனும் ஹோட்டலில் AC அரங்கம் கிடைக்கும் பட்சத்தில் buffet lunch சகிதம் அங்கே நம் சந்திப்பை அரங்கேற்றிடுவோமா ? புத்தக சங்கமத்தின் வெளியரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மாலைகளில் உண்டென்று சொன்னார்கள் ! ஆனால் சாயந்திரம் வரையிலும் இதழை உங்கள் கண்களில் காட்டாது வைத்திருப்பது என் மண்டையின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதால் அந்த சிந்தனை சுகப்படவில்லை !//
      //Parani from Bangalore : காலை Shatabdi-ஐ பிடிக்க முடிந்தால் 11 மணிக்கெல்லாம் சென்னையைத் தொட்டு விடலாமே ?//

      எடிட்டரின் மேற்கண்ட எண்ணங்கள் உறுதிபடுத்தும் நேரம்: காலை 11:00 க்குவந்துவிடும் படி திட்டமிடுங்கள் என்பதேயாகும். இதை மனதில் கொண்டு வந்துவிடுங்கள் பரணி..!

      Delete
    6. நான் குழம்பியதன் காரணம், ஒரு வேலை வெளி இடத்தில் புத்தகம் வெளியிடுவதாக இருந்தால் நேரமாற்றம் இருக்கும் என்ற எண்ணத்தில் எழுந்த கேள்வி!

      Delete
  46. மின்னும் மரணம் கொண்டாட்டம்..! பகுதி-1

    என் கணிப்பு படி திருவிழாவின் மையப்பகுதியான நேரம் காலை 11:30 to 12:30
    அன்றையதினம் எப்படியிருக்கும் ? என் மனக்கண்ணில் தெரியும் காட்சிகள் இனி வரும்மாறு..! ( இது கொஞ்சமேனும் திட்டமிட உதவுமே என்பதே )

    மாயாவி.சிவாவின் டைரி குறிப்பு..!

    தேதி: ஞாயிறுக்கிழமை,19-ஏப்ரல்,2015.

    5:00 AM : விடிய விடிய காமிக்ஸ்பற்றி 'அரட்டைஅரங்கம்' கேட்டுட்டிருந்த 'இரயில் போகி'... "போறீங்களாப்பா..நைட்டு இதே வண்டிதானே? சீக்கிரம் வந்துடுங்க..! உங்க கொண்டாட்ட கதையை கேக்க நான் காத்திருக்கேன்."..என இரும்புகுதிரை கேட்க...நாங்கள் இருபது பேரும் சென்ட்ரலில் இருந்து, ராயபேட்டைக்கு பஸ் ஏறினோம்.

    6:00 AM : ஒரு வழியாக ராயபேட்டைGHக்கு எதிரில் ரூம் போட்டுவிட்டு தெரு முனையில் இருந்த டீ கடையில், 'சப்' ன்னு இருந்த காபி டீ யை ஒருவரும் கண்டுக்காமல்...வாட்ஸ்ஆப், fb, sms, மூலமாக நண்பர்கள் யார்யாரெல்லாம் எந்தெந்த ஊரில் இருந்து, எந்நேரம் வர்றாங்கன்னு வாங்கி பேப்பரை படிக்காம பேசிட்டிருந்தோம். 'இதுவரை முகம் காட்டாத ஒருவர் விழாவுக்கு வர்றார்' ன்னு வந்த மெயில் பத்தி பேசினது பெரிய டாப்பிக்..!

    7:00 AM : விதவிதமான சோப்,சென்ட் வாசனையுடன்..கொண்டுவந்த பைகளை கண்ட மேனிக்கு கலைத்து, ஆளாளுக்கு கலர்கலராய் சட்டைகள் போட்டுக்கொண்டு, ராவுடிக்கு தாயரானர்கள். இதில் பொறுப்பாக குளித்து பட்டை போட்டுக்கொண்டிருந்த நண்பர் "மாயாவி பக்கத்து கோவிலுக்கு போய்ட்டு வரலாமா..! " ன்னு கேட்க 'தோ' என அவருடன் நடைபோட்டேன்.

    8:00 AM : " சுவ்வப்பா..இப்பவே வெயில் சட்டைய நனச்சிடுச்சே, ஏங்க டிபனுக்கு நேரமாச்சிங்க சீக்கிரம் ரெடியாவுங்க அப்பறம் ஆறிபோனத்தை சாபிடணும், ஏங்க குளிச்சி ஒரு பிரயோஜனமும் இல்லிங்க, நைட்டு போக்குள்ல குளிச்சிசா தான் பெஸ்ட்டு,குளிக்கறதா இருந்தா ஜட்டி பனியனை துவச்சு போடுங்க, சாயந்தரமே போட்டிருக்கிறதெல்லாம் நஞ்சி போய்டும்,அது யூஸ் அன் துரோதான், ஆண்டவா...அஞ்சி நிமிஷத்துல கரண்டை திரும்ப கொடுத்து, என் உசுரை காப்பைத்திட்டேப்பா..முருகா, நீ ரெண்டு சம்சாரத்தோட நல்லயிருக்கனம்பா..!" என விதவிதமான டையலாக்..ஹீ..ஹீ..!

    9:00 AM : "ஐயோ காலைலியே இட்லியா? ஒடம்பு கெட்டுபோய்டுங்க..! ஏங்க இங்க பன் புரோட்டா, முட்ட வீச்சு எங்க நல்லஇருக்குங்க..?" என தெருவில் உள்ள ஒருவனை விடாமல் விசாரித்து கொண்டே ஒரு குழு போக...அவர்கள் விசாரித்ததை பார்த்துக்கொண்டே ஒரு குழு ஆஆஆ ன்னு நிற்க... "காலையிலயே கிளம்பிட்டாங்கையா.." என இன்னொரு குழு நடையை கட்ட... 'டிபன் படலம்' துவங்கியது

    தொடர்ச்சி : மாலை வேளையில்

    ReplyDelete
    Replies
    1. பட்டைய கிளப்புறிங்க மாயாவி ஜி.இன்னும் இன்னும் எமோஷன உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.
      அருமை நண்பரே அருமை.

      Delete

    2. வேதாளரே.! ஹிஹிஹி.!
      இதை படிக்கும் போது., நகைக்கடை திறக்க நடிகர் நடிகையர் செய்யும் அலப்பறைதான் நினைவுக்கு வருது. (அந்த பங்க்ஷன் வெள்ளிக்கிழமை) .

      Delete
    3. நாங்களும் வாரோம், நீங்களும் வாங்க, அதானே ஹி,ஹி.

      Delete
    4. மின்னும் மரணம் கொண்டாட்டம்..! பகுதி-2

      9:00 AM : எடிட்டரின் புதிய பதிவு "இன்னும் என் காதுகளில் மி.ம. கலரில் சார்..கலரில் சார்..என
      வேண்டுகோள்கள் ஒழித்துக்கொண்டே இருக்கிறது...ஆனால் அது முடிந்து உங்கள் கைகளில் கனக்க தயாரகிவிட்டனவே...என எதிரில் உள்ள புத்தகங்கள் உரக்க சொல்வது போலவும், நம் கனவில இந்த அற்புதத்தை தயாரித்தோம் என்ற வியப்புடன் வெளியீட்டுக்கு கிளம்பி விட்டேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் புத்தககண்காட்சி." என்ற உற்சாக துவகத்துடனும்...
      " ALL FRIENDS: ymca வில் நானும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன், அங்கிருந்து அருகில் உள்ள தனி அரங்கிற்கு உற்சாக நடை போடுவோம்" என்ற குறிப்பும் வந்தன.

      10:00 AM : "* ஹலோ..நாங்க மெஸ்ல டிபன் முடிச்சாச்சி..நீங்க எங்க இருக்கிங்க..?
      * நாங்க ymca எதிர்ல இருக்கோம்..நீங்க வந்துடுங்க அங்க வெயிட் பண்றேன்.
      * நாங்க டிரெயின்ல இருவது பேர் வந்தோம், நீங்க வந்துட்டிருக்கிங்களா ? அப்ப 11 மணிக்குள்ள ymca வந்துடுங்க
      * ymca குள்ள இருக்கிங்களா? முன்னாடியே போன் பண்ணியிருந்தா, ரூமுக்கு வந்து ஒன்னாவே சாப்பிட்டிருக்கலாம்,
      *டூ ஹவர்சா அங்கியேவா இருக்கிங்க? என்னை அடையாளம் தெரியுமில்லையா? வந்துடறேன்..! "
      பல நண்பர்கள் சக நண்பர்களிடம் போனில் பேசியவை காதுகளில் ஒலித்தன..!

      11:00 AM : YMCA கிரவுண்டின் மரத்தடியில் மெதுவாக நண்பர்கள் வரத்துவங்கினர்...பெங்களூரில் இருந்து கார்த்திக் சோமாலிங்கா, ஸ்ரீராம்,பரணி,TK அகமத் பாசா,சுப்பிரமணி-கோவையில் இருந்து பொன்ராஜ், தங்கவேல்,ரமேஷ் சண்முகசுந்தரம்-பாண்டிச்சேரியில் இருந்து கலீல்நண்பர்கள் கார்த்திகேயன்,வில்லர் fan,பாலாஜி சுந்தர்,ராம்குமார்,செந்தில் குமார்-திருப்பூரில் இருந்து சிபி,ரம்மி,நாகராஜன்,ராஜ்குமார்,டெக்ஸ் சம்பத்-ஈரோடு சர்வாதிகாரி,விஜய்,புனித சாத்தான்,ராஜா,சங்கர்,பேங்க் குமார்,வினோஜ்-தமிழகத்தின் மையத்தில் இருந்து டெக்ஸ்விஜயராகவன்,ஸ்பைடர்ஸ்ரீதர்,போ.கு.தலைவர்,கிட்ஆர்ட்டின்கண்ணன்,
      ஜெயகுமார்,Dr.சுந்தர்,கார்த்திக்,யுவாகண்ணன்,பழனிவேல்,சுசிந்தர்,மல்லூர் ரவி,கர்ணன்,ஆ.ப.ராஜ்குமார்,
      அஸ்தம்பட்டி குமார்,டிரைவர் குமார்-தமிழகத்தின் தலைமையகத்தில் இருந்து RT.முருகன்,ரபீக் ராஜா,ஜான் சைமன்,சொக்கலிங்கம்,கிருஷ்ணாVV,லக்கிலிமிட்,ராஜ்முத்துகுமார்,ராகவன்,மஞ்சள்.ச.மாவீரன்,நரேஷ்குமார்,சத்யா,பெருமாள்,வெங்கடேஸ்வரன்-சிவகாசி SS சௌந்தர்,RSK சரவணன் மற்றும் செல்வம் அபிராமி,சாலும், சாக்ரடிஸ்,ஜோசப்...இன்னும்,இன்னும் காமிக்ஸ் பிரியர்கள் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் போல கிரவுண்டில் இருந்த மரங்களின் நிழலில் கூடியவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். காமிக்ஸ் பிரியர்களை இப்படி ஒரு சேரபார்ப்பது என் கேமராவில் 'இங்கே'கிளிக்' செய்ய சரியான வேட்டை.

      11:15 AM : 'கிங் விஸ்வா' மட்டும் மிஸ்ஸிங், காரணம் 1000 ரூபாய்க்கு இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பு பார்க்கும் ஆவலில் மூத்த பிரபல காமிக்ஸ் பிரியர்கள் அவர்களே விருப்பம் தெரிவித்ததால், 'S.ராமகிருஷ்ணன் டிராஸ்கி மருது' ரெண்டு சீப்கெஸ்ட்டை கூட்டிட்டு வர்றபொறுப்புள இருக்கார்..! அப்ப எல்லோரும் பாரபரபானார்கள், எல்லோரு கண்களும் மெயின் கேட்டை பார்த்தது. காரணம் மொபைலில் வந்த notify மெயில்- //Mr.மரமண்டை: நீங்கள் பார்க்க விரும்பும் முகம் கால்டாக்ஸியில் உள்ளே வருகிறார்//
      உண்மையில் கால்டாக்ஸி வந்தது, அப்படியேன்றால் வருவது மரமண்டையா ? யார் அந்த மரமண்டை? என்ற கேள்வியுடன்...அதில் இருந்து இறங்கியவர் முகம் பார்த்ததும் ஒரு நிமிடம் எல்லோரும் அதிர்ந்து விட்டார்கள்..அதிர்ந்து..!

      தொடர்ச்சி :நள்ளிரவு or அதிகாலையில்..ஹீ..ஹீ..!

      Delete
    5. @mayavi siva- கலக்குங்க

      Delete
    6. மாயாவி எனக்கு அப்படியே மூன்று தியேட்டரில் (சப்னா) அமர்ந்து படம் பாக்கற பீலிங் வருது.

      Delete
  47. ANAIVARUKKUM VANAKKAM VARUTHU VARUTHU ADA VILAKU VILAKU VAYNKAI VELIAY VARUTHU VAYNKAI TIGERTHAAN ATHU SEERUM NAALTHAAN ENDRU MANAM KUTHOOKALIKKIRATHU ENNAAL CHENNAI VARA MUDIYAATHATHAI NINAITHU VARUTHAMAKA ULLATHU BY THE BY ST CORIER NOKKI VALIMEL VILIVAITHU KAATHIRUPPAYN

    ReplyDelete
  48. சார்,

    ஒரு உற்சாகமான பதிவு. ஒரு கனவு இதழ் மெய்ப்பட கடினமாக உழைத்த உங்களுக்கும், உங்கள் டீமிற்கும் நன்றிகள். மஞ்ச கலரு, பச்சைக் கலரு ஜிங்குச்சா அட்டையில் இல்லையென்றால், பெயருக்கேற்றார்ப் போல் 'மின்னும் மரணம்' தங்கக் நிறத்தில் தகதகக்கப் போகிறது தானே?

    அப்புறம், வெளியீட்டு விழா வெளி அரங்கமா..? அல்லது குளு குளு அரங்கமா..? இந்த விஷயத்தில் என் மண்டை கொஞ்சம் மந்தமாகவேயிருக்கிறது! மதியம் உண்ண உணவு பிரியாணி தானே, கொஞ்சம் சிக்கன் 65, அக்குவா ஃபீனா, செரிமானத்திற்கு 7Up, ஃபினிஷிங் டச்சாக ஸ்வீட் பீடா இவைகளை நண்பர்கள் கொஞ்சம் confirm செய்தால் தெம்பாகயிருக்கும்!

    ReplyDelete
  49. என்னாங்க நடக்குது இங்க.???

    ReplyDelete
  50. // சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! //

    விடுங்க சார்.!!
    அடுத்து ஒரு ஆயிரம் ரூபாய் புக்கு. , தீபாவளிமலர்னு அறிவிச்சிட்டா போச்சி.! சுகமான சுமைகள் தொடர்ந்து இருக்குமே.! எப்பூடீ.!!!

    ReplyDelete
  51. // சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! //
    என்னதான் கடின அனுபவங்களை பட்டாலும் நீங்களும் உங்கள் டீமும் அதை திரும்பவும் சுகமான நினைவுகளாய் விட்டு விட்டு மீண்டும் அடுத்த சுகமான சுமைகளுக்கு தயாராகி விடுவிர்கள் என்று எங்களுக்கு தெரியும் சார்.
    ஏனெனில் த்ரில்,டெட் லைன் தான் உங்களுக்கு பழகிவிட்டதே,
    ஹி,ஹி நான் இப்ப என்ன சொல்ல வரேன்னா அடுத்த குண்டு புக்குக்கு சீக்கிரம் ரெடியாவுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. //ஏனெனில் த்ரில்,டெட் லைன் தான் உங்களுக்கு பழகிவிட்டதே,
      ஹி,ஹி நான் இப்ப என்ன சொல்ல வரேன்னா அடுத்த குண்டு புக்குக்கு சீக்கிரம் ரெடியாவுங்க சார்.//
      +1

      Delete
  52. // ! So - "காலை எழுந்தவுடன் மின்னும் மரணம் " என்ற slogan தேவலை என்று தோன்றியது ! எங்கே ? //
    அருமையான ஸ்லோகன் சார்,மின்னும் மரணம் வெளியீட்டு விழா முடியும் வரை இதை வைத்து கொள்வோம், பிறகு "காலை எழுந்தவுடன் காமிக்ஸ் " என்று மாற்றிக்கொள்ளலாம் சார்.

    ReplyDelete
  53. // ஆனால் இங்கே என்பக்கத்து நடைமுறைப் பிரச்சனைகளைச் சமாளிக்க சற்றே working space எனக்குத் தேவையென்பதை நண்பர்கள் உணரும் நாள் புலரும் போது எனது சுவாசம் சற்றே இலகுவாகிடும் ! //
    உண்மைதான் வெளியில் இருந்து விமர்சன கணைகளை விடுபவர்களுக்கு நிதர்சனம் புரிய வாய்ப்பில்லை,எல்லாவற்றிற்கும் நீங்களும் பதில் அளிப்பது சாத்தியம் அல்ல.உங்கள் மவுனம் காரணத்துடன் தான் உள்ளது என்று எல்லோரும் நாளடைவில் புரிந்து கொள்வர்.
    நாங்கள் உங்களுடைய அனுபவத்தை நம்புகிறோம் சார்.

    ReplyDelete

  54. இது போன்ற சந்தர்பங்கள் எப்பொழுதும் அமைவதில்லை. எனவே புத்தக வெளியீட்டு விழா நல்லதே.

    புத்தக கண்காட்சி அரங்கத்தில் நடத்துவது சற்று நெருடலாகவே அமையும். ஒருவருக்கு ஒருவர் free யாக move செய்ய இயலாது.

    வெளியில் A.C அரங்கமே சரி.

    100 நபர்களுக்கு அதிகம் இல்லை என்றால், புத்தக கண்காட்சிக்கு அருகாமையில் இல்லாமல் ( நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில்) என்றால் என்னால் ஒரு அரங்கம் கட்டணம் எதுவும் இல்லாமல் (மின்சாரம்+cleaning =Rs.3000/- மட்டும் செலுத்தவேண்டும்) ஏற்பாடு செய்து தர முடியும். உணவு வெளியில் இருந்து நம் விருப்பப்படி ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் இந்த ஏற்பாடை செய்ய தயாராக உள்ளேன்.

    வேறு யாரும் இதைவிட சிறந்த ஏற்பாடு செய்தாலும் வரவேற்க தக்கதே.

    ReplyDelete
    Replies
    1. மாலை வணக்கம் பெருமாள் ஸார்,

      அருமை..! முதலில் கைகொடுங்கள்..! உற்சாகமான தகவல், ஒரு சந்தேகம்..ராயபேட்டை ymca வுக்கும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் எவ்வளவு தூரம் ? ராயபேட்டைக்கு அருகிலேயே ஏதும் கிடைக்க வாய்ப்புண்டா...பாருங்களே..ப்ளிஸ்..!

      Delete
    2. @ Parimel

      இது சாத்தியமாகிறதோ இல்லையோ, உங்கள் எண்ணங்களுக்குத் தலைவணங்குகிறேன்!

      Delete
    3. @ மாயாவி

      Parimelஐ பெருமாள் ஆக்கிட்டீங்களே மயாவி சீவா! :D

      Delete
    4. அருமையான எண்ணங்கள் பரிமள் சார் . நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை க்கு அருகே தான் வர வாய்ப்பு உள்ளது . மேப்பில் நுங்கம்பாக்கம் டூ புத்தகவிழா அரங்கம் 6கிமீ என உள்ளது . இனிமேல் ஆசிரியர் தான் இந்த முயற்சி சரிவருமா என பரிசீலிக்க வேண்டும் .

      Delete
    5. @parimel - சூப்பர். பேச்சு மட்டும் இல்லாமல் செயலிலும் இறங்க ரெடியாக உள்ளீர்கள்.

      Delete
    6. பரிமள் சாரின் ஐடியா அருமையானது சீக்கிரம் முடிவெடுங்கள்.

      Delete
    7. மன்னிக்கவும் நண்பர்களே.!
      அவருடைய பெயர் தமிழில் பரிமேல் என்று உச்சரிக்க முடியலாம்னு நினைக்கிறேன்

      "பரிமேலழகர் " என்பதன் சுருக்கமாக இருக்க வேண்டும்.

      தவறெனில் நண்பர்கள் மன்னிச்சூ.!!!

      Delete
    8. இத்தாலி விஜய் அவர்களே..அவர் நமக்கு தெரிந்த நண்பரே, அவர் முழு பெயர் கதிரேசன் பரிமேழகன் . டைபிங் மிஸ்டேக் மன்னிக்க..!

      Delete
  55. Vijay. I send you an email on this from my yahoo id. Please respond to that when you get a chance.

    ReplyDelete
  56. இணையத்திற்கு வெளியே உள்ள நண்பர்களும் கலந்து கொள்ள உதவும் வழிகள்

    1.சந்தாவில் உள்ள நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்தல்/குறுஞ்செய்தி அனுப்புதல்/மின்னஞ்சல் அனுப்புதல்
    2.fb &WhatsApp ல் தகவல் பரிமாற்றம்
    3.நமக்கு தெரிந்த நண்பர்களுக்கு நாமே தெரிவித்தல்

    4.

    ReplyDelete
  57. @ ALL : நண்பர்களே,

    "சென்னை புத்தக சங்கமம்" ஜனவரியின் விழாவை விடப் பன்மடங்கு சிறியதே ! அதிலும் இந்தாண்டு 150 ஸ்டால்களுக்கும் குறைவாகவே உள்ளது தெரிகிறது ! அதிர்ஷ்டவசமாக நமது ஸ்டால் நுழைவாயிலை ஒட்டிய வரிசையில் முதலாவதாக உள்ளது ! ஸ்டால் லேயவுட் மேப்பினை மேலே கொடுத்துள்ளேன் - பாருங்களேன் !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. எடிட்டர் ஸார்...
      *அதிர்ஷ்டவசமாக நமது ஸ்டால் நுழைவாயிலை ஓட்டிய வரிசையில் முதலாவதாக மட்டுமில்லை.
      *அதை விட அதிர்ஷ்டம் நுழைவாயிலை எதிரில் இல்லாமல் பின் முதல் வரிசையில் உள்ளது.
      *அதை விட அதிர்ஷ்டம் மீட்டிங் ஹால் புத்தககண்காட்சியில் உள்ளேயே உள்ளது.
      *அதை விட அதிர்ஷ்டம் ஸ்டாலை ஓட்டி மினி மீட்டிங் ஹால் உள்ளது என்பதே..!
      *அதைவிட சூப்பர் அதிர்ஷ்டம் காலை 11:00 மணிக்கு எந்த புத்தக வெளியீடும் இல்லை என்பதே..!

      ஆக காலையில் முதல் வேலையாக வெளியீட்டு வேலையை சட்டுன்னு முடிச்சிட்டு, சேல்ஸ் ஆரம்பிச்சுட்டு...கச்சேரியை ஆரம்பிச்சு..அப்படியே எதிரில் உள்ள நல்ல ஹோட்டலுக்கு பொடிநடையாக போய் சாப்பிட்டு வந்து...சும்மா கிடக்கிற மீட்டிங் ஹால் சேர்லயே உட்காந்து ஆரம்பிச்சா....நிமிஷத்துல நாள் சுவாகா.! :-)))

      Delete
    4. பக்கத்திலேயே கேன்டீனும் இருக்கா என்று விசாரித்து வையுங்கள் மாயாவி சார்

      Delete
  58. சென்னை மாநகர ரசிகப் பெருமக்களுக்கு ஓர் நற்ச்செய்தி : 🙏🙏🙏

    வருகின்ற 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் சேந்தம்பட்டி முத்தையன் குழுவினரின் கரகாட்டம் நடைபெற இருக்கிறது.

    சேந்தம்பட்டி முத்தையன் - மாயாவி சிவா.
    கரகாட்ட குயின் காமாட்சி - டெக்ஸ் விஜயராகவன்.

    தனித்தவில் வித்வான்கள்.:-
    "கோடையிடி " கிட் ஆர்டின் கண்ணன்.
    "கலியுக நந்தி " ஸ்பைடர் ஸ்ரீதர்.
    துணைத் தவில் - அறிவரசு ரவி.

    நாதஸ்வரம் - "நாதஸ்" சிபி (எ) பிரபாகர்.
    ஒத்து ஊதுபவர் - ரம்மி lll (எ) ரமேஷ்.

    "நந்தவனத்தில் வந்த ராச குமாரி " பாடலை பாட இருப்பவர் - "கானக்குயில் " ஏழரை இசைவேந்தர் ஈரோடு விஜய்.
    கோரஸ் பாடுவோர் - மேச்சேரி ஜெயக்குமார்., சேலம் கார்த்திக்.

    ஜிகினா சட்டை., ரோஸ்பவுடர்., லிப்ஸ்டிக் உபயம் - யுவா கண்ணன்., சுசீந்தர குமார்.

    நன்றியுரை - அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கே ஆலோசனை சொல்லும் அன்பர் -
    புனித சாத்தான் (எ) நல்ல பிசாசு (எ) சகுணி (எ) சோமசுந்தரனார்.

    மைக் ஸ்பான்சர் - துரை தியாகராஜ்

    கச்சேரி புக் செய்தவர் - சர்வாதிகாரி ஸ்டாலின்.

    புரோக்கிராமு சிறப்பா நடக்க வெளியே இருந்து வேண்டிக் கொள்வோர் - போ.கு.த. பரணியானந்தா.
    சேலம் "சில்க் " சுந்தர்.

    வருகின்ற 18ஆம் தேதி இரவு 9 மணியளவில் சேலத்தில் இருந்து "சொப்பன சுந்தரி " வைத்திருந்த காரில் கிளம்பி., எங்கள் கரகாட்ட கோஷ்டி ஞாயிறு காலையில் சென்னை வந்தடையும்.

    ஆடப்போகும் தெருக்கள் கோணல் மாணலாக இல்லாமல் நேராக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய எங்க கோஷ்டி மானேசர் ஷல்லூம் பெர்னான்டஸ்., ஒருநாள் முன்னதாகவே சென்னை வந்தடைவார்.

    வெளியூர் ஆட்டக்காரங்கள மதிக்குறதுதான் உள்ளூர் ஆட்டக்காரங்களுக்கு பெருமை.

    எனவே சூடா மோரு குடுத்து வழியனுப்பி வைக்கும்படி உள்ளூர் ஆட்டக்காரங்களை கேட்டுக் கொள்கிறோம்.

    அந்த மாரியாத்தா அருளால எல்லாரும் நல்லா இருப்பிங்க தம்பி.!!


    (கோஷ்டியில பேரு வராதவங்க தயவு செஞ்சி மன்னிச்சூ.)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
      முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு.

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
      முடியல கண்ணன் ஜி முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு.

      Delete
    3. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
      முடியல கண்ணன் ஜி முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு.

      Delete
    4. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
      முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு.

      சென்னை நோக்கிவரும் கரகாட்ட கோஷ்டியின் கம்பேனி கார் பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    5. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

      ROFL. அட்டகாசம் தனித் தவில்காரரே! செமையா வாசிக்கறீங்க. என்னா ஒரு கற்பனை வளம்!! :))))

      Delete
    6. ரவி கண்ணன் @ லொள்ளு தாங்கல!

      Delete
    7. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
      முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு.

      Delete
  59. விஜயன் சார், புத்தக வெளியிட எந்த நேரத்தில் வைத்தாலும் அதில் கலந்து கொள்ள எதுவாக எல்லா combinationனிலும் பயணச்சீட்டு போட்டு விட்டேன்!

    ஆல் செட்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சிறந்த கேமரா காரர் மாதிரி போஸ் கொடுத்துட்டு திரியாம.... நல்ல படமா எடுத்து போடுங்க பரணி ...

      Delete
  60. டியர் எடிட்டர் ஸர்ர்,
    இது ஒரு மைல்கல் இதழ் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த பொக்கிஷத்தை அள்ள ஏப்பிரல் 19 வரை கரத்திருப்பதும் ஒரு சுகமரன அனுபவமே. மின்னும் மரணம் making of படிக்கும்போதே எனக்கு கண்ணை கட்டுகிறதே. வரழ்ந்து பர்ர்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் ஸர்ர்? அந்தர் பல்டிகள் சகஜம் என்பது புரிகிறது. சூப்பர் ஸர்ர்.

    ReplyDelete
  61. அருமையான பதிவு. புத்தகத்தை காணும் ஆவல் இப்பொழுதே பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது.

    ReplyDelete
  62. ஹ ஹ ஹ ஹ ஹ . அட்டகரஸ்யி.

    ReplyDelete
  63. விஜயன் சார், உங்களுக்கு ஏது சரி என படுகிறதோ அதன் படி வெளியீட்டு விழாவை திட்டமிடவும்! யு ஆர் தே பாஸ்!

    ReplyDelete
  64. interesting video found while casual browsing
    Top 10 Comic Books That Deserve A Movie Or TV Show Adaptation
    https://www.youtube.com/watch?v=dHqtfgA3yGA

    MICHEL BLANC-DUMONT drawing Blueberry (real time video)
    https://www.youtube.com/watch?v=bOo34F-cJzA

    RARE "Lt. Blueberry" footage. A COMIC CLASSIC with Martin Kove
    https://www.youtube.com/watch?v=J8IdGYoMi00

    MOEBIUS DRAWING BLUEBERRY
    https://www.youtube.com/watch?v=31eMG8MoXD8

    ReplyDelete
    Replies
    1. jst thinking why dont we request our MalayAppan sir to draw one of his version(speedy sketch drawing) of Tiger and post it in youtube!

      Delete
  65. நண்பர்களே,

    திட்டமிடல்கள் பிரமாதம். எனக்கு மனதில் தோன்றியவை :

    1.19-ஆம் தேதி நம் ஸ்டாலுக்கு வரவிருக்கும் நண்பர்களின் பட்டியல் முதலில் தேவை - உங்களின் முன்பதிவுப் பிரதிகளை சென்னைக்குக் கொண்டு வரும் பொருட்டு ! நம்மவர்கள் கூரியரில் அவற்றை உங்கள் முன்பதிவு விலாசங்களுக்கு அனுப்பி வைத்து விட்டால் - சென்னையில் திரும்பவும் ஒரு பிரதி வாங்கும் விரயம் நேரலாம் ! So லிஸ்ட் is a must !

    2.கரகாட்டக் கோஷ்டியில் கவுண்டமணி யாரு ; செந்தில் யாரு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விபரங்கள் மிஸ்ஸிங் !! அதை சரி செய்யும் வேலைகள் ஒரு பக்கமிருக்க, உள்ளூர் ஆட்டக்காரர்களின் பங்களிப்பு இல்லாது போனால் களைகட்டாது ! So எந்தத் திட்டமிடலாக இருப்பினும், அதனில் உள்ளூர் ராமராஜன்களும், அசலூர் கனகாக்களும் or vice versa மேடையேறுவது முக்கியம் அல்லவா ?

    3.சேர்ந்தம்பட்டியிலிருந்து செட்டாக வரும் கோஷ்டி நீங்கலாக ஒற்றை வித்வான்கள் பெங்களூருபட்டிகளில் இருந்தும், திருச்சிப்பட்டிகளில் இருந்தும் இதர பட்டிகளில் இருந்தும் காலைப் பயணமாய் வரும் வாய்ப்புகள் உள்ள போது, பெட்டியும், கையுமாய் அவர்களை இரு வேறு இடங்களுக்கு அலைய வைப்பது சிரமமாக இருக்கலாம் !

    4.பரிமேல் சார் சொல்லும் அரங்கு அருமை தான் ; ஆனால் ராயபேட்டாவிலிருந்து நுங்கம்பாக்கம் போக வர ; இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க கொளுத்தும் இந்த வெயிலில் எல்லோருக்கும் ரசிக்குமா என்பது தெரியவில்லையே ! தவிர, நாம் புத்தக விழாவில் காலைப் பொழுதைக் கழித்து விட்டு - மதிய நேரத்துக்கு நுங்கம்பாக்கம் செல்வதாக இருப்பின், அங்கே முன்கூட்டிச் சென்று லஞ்ச் ஏற்பாடுகளைக் கவனிக்க யாரேனும் இருத்தல் அவசியமாகும் தானே ? அது சாத்தியமில்லை எனும் போது 2 இடங்களது புரோக்ராம் என்பது சுகப்படாது ! So let's keep it to 1 location - wherever that is ?

    5.இன்றைய பொழுதும் சிந்தித்து விட்டு, உள்ளூர் ஆட்டக்காரர்களின் inputs கிடைத்தால் அதனையும் இணைத்துக் கொண்டு, இரவுக்குள் ஒரு முடிவுக்கு வருவோமே ?!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்..! உடனே களத்தில்இறங்குகிறேன்..!

      Delete
    2. ஒரு குட்டி யோசனை-1

      *புத்தககண்காட்சியில் உள்ளே உள்ள மீட்டிங் ஹாலில் கொஞ்சம் 'குளுகுளு'வென்று இருக்க ரெண்டு aircooler இரண்டு jet fan வாடகைக்கு எடுத்து போட்டால் 75 % எரிச்சல் போயே போயிந்தீ...ஹீ..ஹீ..!

      Delete
  66. மிண்ணும் மரணம் புத்தகத்தை புக்பேரில் வெயிடுவாதுதான் மிகசிறந்த வழியாக இருக்கும்.

    ReplyDelete
  67. சார் முன் கூட்டியே பணம் கட்டியவர்களுக்கு எந்த தேதியில் புத்தகம் அனுப்பி வைப்பிர்கள்,18ந் தேதி அனுப்பி வைத்தால்.19ந் தேதி ஞாயிற்றுக்கிழமை புத்தகம் கிடைக்காது,20ந் தேதியில் தான் புத்தகம் கிடைக்கும். சனிக்கிழமை கிடைகும்மாறு வழிவகை செய்ய முடியுமா?

    ReplyDelete
  68. இல்லையேன்றால் புத்தக வெளியிட்டு விழாவை 20ந்தேதி வையுங்கள் .எல்லோரும் ஒரே நேரத்தில் புத்தகங்கள் கிடைத்தது போல் இருக்கும்

    ReplyDelete
  69. பரிமல் சார் ..# அருமை ...உங்கள் எண்ணத்திற்கும் ...மனதிற்கும் ...
    .காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக மாபெரும் பாராட்டுகள் .அது நடைமுறைக்கு வந்தாலும் ..வரா விட்டாலும் ....

    **************************

    ரவிகண்ணன் $ கிட் ஆர்ட்டின் #

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
    முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்து விட்டது ....

    இப்போது மாயாவி சிவா ஜி அவர்களுக்கு ஒரு போட்டி ...ரவிகண்ணன் அவர்கள் கற்பனைக்கு உங்கள் புகைப்படத்தால் உயிர் ஊட்டுங்கள்....எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் ....நீங்கள் வென்றால் ஒரு பரிசு எங்கள் செயலாளர் தருவார் :-)

    *************************

    ஆசரியர் சார் ..சந்தா நண்பர்களுக்கு புத்தகம் எப்போது கிடைக்கும் என்று சொன்னால் மகிழ்வோம் ....

    ***************************

    ReplyDelete
  70. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே ...............இன்னும் கொஞ்சம் அடிச்சா என்ன .................?

    அந்த ரத்த படலம் ..............வண்ணத்தில்

    ReplyDelete
    Replies
    1. சார்..........
      கீழ வலை விரிக்காமல்
      மூக்குல அடிபடாம .......
      ரத்தம் வராம ....
      டபுள் அந்தர் பல்டி அடிபீங்கலாமே ...................

      அதே மாதிரி இன்னொருக்கா சார்

      Delete
    2. இரத்தத் படலம் கிளை கதைகளும் கொத்தாக ....போதுமா மந்திரியாரே

      Delete
  71. சார் தங்கள் எழுத்துக்களில் இதும் ஓர் தனி இடம் பிடித்துவிட்டது ...அனைத்து நண்பர்களும் உரக்க கூறியது போல ....நீங்கள் புத்தகம் தயாராகி விடுமா என பட்ட அதே பதை பதைப்பை எங்களுக்குள்ளும் துவக்கவரி முதல் விதைத்து விட்டீர்கள் ....புத்தகம் தயார் என்றவுடன்தான் உயிரே வந்தது நிஜம். ஆனால் அடுத்த வாரம் என கூறி நச்சென அம்மி கல்லை தலையில் போட்டாலும் புத்தகம் சிறப்பாய் வர வேண்டும் என்ற தங்கள் என்னத்தால்தானே ...இந்த சாகசங்களுக்கு இடையிலும் தங்கள் பொறுப்புணர்வை மெச்சிய படி துடித்து கொண்டிருக்கிறது உயிர்.... ஆனால் செவ்வாய் அன்று எந்த வகையில் தாமதமானாலும்.....அதாவது பிறருக்கு கிடைத்து எனக்கு வந்து சேரவில்லை என்றால் புல்டோசரை என் மேல் ஏற்றிய பாவம் தங்களை சாரும் ....
    நண்பர்களில் கலை கட்டிய உற்ச்சாகம் மேலும் உற்சாகத்தை பன்மடங்கு பூசிவிட்டது .....
    சூப்பர் சார் அற்புதம் நிகழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நமது வாசக நண்பர்களின் உற்ச்சாகம் கலந்த நன்றியை கூறி விடுங்கள்...சூப்பர் நன்றி சார் தங்களது உர்ச்சாகள் மீட்டிடும் வரிகளுக்கு ......தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இரத்த படலம் முழு தொகுப்பும் வெளியிடும் தங்கள் என்னத்தை முடிந்தால் மதியமே கூறி விடுங்கள் என்னால் நாளை பங்கு பெற இயலாது என்பதால் இப்போதே கூறி கொள்கிறேன்...இல்லாவிடில் நாளை இரவில் அறிவித்து விடுங்கள் நானும் துவக்கத்திலே பங்கு கொள்ள எதுவாக ...நன்றி சார் ....

    ReplyDelete
  72. சார் லார்கோ இரண்டாம் பாகமும் அருமை .....விஜய் லார்கோ அந்த கொடாளிலை தூக்கி செல்வது எதிரியை தீர்த்து கட்ட....சென்ற இதழில் , இறந்து கிடந்த fbi ஆசாமி துப்பாக்கியை தேடி எடுத்து செல்வாரே ...கை ரேகைகளை படர விடுவதுதானே அவரது ஸ்டைல்

    ReplyDelete