Powered By Blogger

Sunday, August 19, 2012

வண்ணத்தில் ஒரு பயணம் !


நண்பர்களே,

வணக்கம். "கறுப்பை" சிலாகித்து முந்தைய பதிவென்றால், வண்ணத்தில் மிளிர்ந்ததொரு முன்னோடி இதழை ரசித்திட முயற்சிக்கும் காலப் பயணம் இம்முறை ! 

சமீபத்தில் எனது பீரோவை ஒதுக்கிக் கொண்டிருந்த போது 1968 -ல் நமது அபிமான Fleetway நிறுவனம் வெளியிட்டிருந்ததொரு இரும்புக்கை மாயாவியின் சாகசம் என் கண்ணில் தட்டுப்பட்டது !   முத்து காமிக்ஸில் ஏறத்தாள 35 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி மலராய் வெளிவந்த முழுநீள..முழு வண்ண சாகசமான "கொள்ளைக்காரப் பிசாசு" இதழின் ஆங்கில ஒரிஜினல் அது  ! பின்னாட்களில் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் மறுபதிப்பும் கண்ட இதழ் தான் என்ற போதிலும்,The Phantom Pirate  என்ற அந்த ஆங்கில ஒரிஜினலைப் பார்த்திட்ட போது என்னுள் ஏராளமான பழைய நினைவுகள் பிரவாகமாய் ஓடுவதை உணர்ந்திட முடிந்தது ! எனது நினைவுத் திறனை நான் முழுவதுமாய் நம்பிடத் தயாரில்லை ; எனினும் 1977 -ல் முத்து காமிக்ஸில் வெளிவந்த இதழ் இது என்று எனக்கொரு ஞாபகம் ; correct me if I'm wrong ப்ளீஸ் ? 



அற்புதமான கதை ; மாயாவியின் மாறுதலான கதைக் களம் ; அந்தக் காலத்து வண்ண அசத்தல் என்பதையெல்லாம் தாண்டி, இந்த இதழின் ஆக்கத்தில் அடியேனின் சொற்பமான பங்கும் அந்தக் காலத்திலேயே இருந்திட்ட காரணத்தினால் இது எனக்கு நிரம்பவே பிரியமானதொரு இதழ் ! 

1975 -ன் தகிக்கும் மே மாதத்தில் family முழுவதையும் அழைத்துக் கொண்டு டில்லி & மும்பைக்குப் பயணமாகினார் என் தந்தை ! முத்து காமிக்ஸ் என்பது பிரமாதமான விற்பனையை கொண்டிருந்த போதிலும், என் தந்தைக்கு அது பிரதான தொழில் அல்ல ! காலெண்டர்கள் ; நோட் புக் ராப்பர்கள் அச்சிட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் தொழிலில் அதகளம் செய்து கொண்டிருந்த சமயம் அது. So டில்லியில் இருந்த பிரதான காலெண்டர் முகவர் வீட்டுத் திருமணத்தில் பங்கெடுத்து விட்டு, பின்னர் மும்பைக்கும் சென்று அங்குள்ள காலெண்டர் ஓவியர்களை சந்தித்திடுவதே என் தந்தையின் பயண நோக்கம். முழுப் பரீட்சை விடுமுறை என்பதால் எங்களையும் அழைத்துக் கொண்டு சென்றார். ரொம்பவே பொடியனாக நான் இருந்த போதிலும், நமது காமிக்ஸ் கதைகளின் ஆங்கில ஒரிஜினல்களில் இருந்து, சமயம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லிச் சொல்லி எனக்கு அவற்றின் மேல் தீவிரக் காதல் கொண்டு வந்திருந்தார் என் தந்தை. மும்பையில் பகலில் அவரது வேலைகளைப் பார்த்திட கிளம்பிப் போய் விட்டாலும், மாலைகளில் என்னை அழைத்துக் கொண்டு மும்பையின் பழைய புத்தகக் கடைகளுக்கு shunting அடிப்பது ஒரு routine ஆகி இருந்தது. அது போன்றதொரு மாலை நேர புத்தகத் தேடலின் பொது மாஹிம் பகுதியில் இருந்ததொரு லெண்டிங் லைப்ரரியில் என் கண்ணில் தட்டுப்பட்ட அந்தப் பழுப்பு நிறப் புத்தகமே இன்றைக்கும்   எனது பீரோவில் துயிலும்  The Phantom Pirate ! 

இன்டர்நெட் என்பதோ ; தகவல் தொடர்புகளில் துரிதம் என்பதோ பரிச்சயமே இல்லாத நாட்கள் அவை என்பதால், ஒரு கதைத் தொடரில் உள்ள மொத்த இதழ்கள் எத்தனை ; அவற்றின் நிறை-குறைகள் என்ன ; போன்ற பின்னணி ஆராய்ச்சிகள் செய்வது அப்போதெல்லாம் சாத்தியமே அல்ல  ! Fleetway நிறுவனத்தின் இந்திய முகவருக்கோ இதில் துளியும் ஆர்வமெல்லாம் கிடையாது ; "மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ் டேவிட் - இவை எல்லாமே அவருக்கு பில்லில் டைப் அடிக்கத் தேவையான பெயர்கள் மாத்திரமே. So நாமாகத் தேடித் பிடித்து கதைகளின் பெயரைச் சொல்லி இலண்டனிலிருந்து கதைகளை வரவழைக்கும் முயற்சிகளை அவ்வப்போது செய்திட வேண்டி இருக்கும். அன்று மாஹிம் லெண்டிங் லைப்ரரியில் அடியேன் தேடித் பிடித்த இதழை refer செய்து கதைக்கு ஆர்டர் செய்ததார்கள் நமது அலுவலகத்தில் ; எனக்கோ ஏதோ இமாலய சாதனை செய்து விட்டது போன்றதொரு பெருமிதம் ! 

சில மாதங்கள் இடைவெளியில் கதையின் ஒரிஜினல்கள் வந்து சேர்ந்தது ; இக்கதையினை வண்ணத்தில் வெளியிட எனது தந்தை தீர்மானித்தது எல்லாமே எனக்கு 'பளிச்' என்று நினைவு உள்ளது. அப்போதெல்லாம் கலரில் காமிக்ஸ் என்பது ஒரு rarity என்பதால், அதன் பணிகளை நான் தொடர்ச்சியாய் பராக்குப் பார்த்து வந்தேன் ! வர்ணம் பூசிட 32 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பிற்கு ஒரு ஓவியர் என்று - மொத்தம் 4 தனித்தனி ஓவியர்களிடம் பொறுப்பு தரப்பட்டது !  சிவகாசிக்கருகே இருந்திட்டதொரு பள்ளியில் டிராயிங் மாஸ்டராக பணி புரிந்ததொரு ஓவியர் நமக்கும் பகுதி நேரப் பணியாளரே ! முதல் 32 பக்கங்களை அவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது ! பக்கம் 33 - 64 நம்மிடம் இருந்ததொரு staff ஆர்டிஸ்ட் (பெயர் நினைவில் இல்லை) வசம் ! மூன்றாவது தொகுப்பு எங்களது ஸ்டார் ஆர்டிஸ்ட் ஆன தெய்வசிகாமணி வசம் தரப்பட்டது ! சமீபம் வரை நமக்குப் பணி செய்து வந்த இவர் லைன் டிராயிங் பணிகளில் அசகாய சூரர் ! துல்லியம் ; அசாத்திய நுட்பம் என்று நிரம்பவே திறமைசாலியான இவர் எக்கச்சக்கமாய் கூச்ச சுபாவம் கொண்டவர் ! யாரிடமும் ஒரு வார்த்தைக்கு மேல் பேசுவதே அரிது ! அப்போதைய முத்து காமிக்ஸ் அலுவலகம் நகரின் மையத்தில் இருந்ததொரு பெரிய கட்டிடத்தில் இருக்கும் ! நான் வாரத்தில் பாதி நாட்கள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் இங்கே நின்று விட்டு ; கொஞ்ச நேரம் ஒவ்வொருத்தரின் பணிகளையும் பராக்குப் பார்த்து விட்டே திரும்புவது வழக்கம். மாடிக்குச் செல்லும் படிகளின் நடுவில் ஒரு தாழ்வாரம் போன்ற பகுதியில் தரையில் அமர்ந்து தான் சிகாமணி வேலை செய்து கொண்டிருப்பார் ! 



அவரோடு பேசுவது, அவரது வேலைகளை ரசிப்பது எனக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு ! 4 வெவ்வேறு ஓவியர்களின் கை வண்ணமும் ஒரே இதழில் இருந்திடப் போவதால் யாருடைய பணி சிறப்பாக ஸ்கோர் செய்யப் போகிறதென்று அவர்களுக்குள் ஒரு மௌனமான போட்டி நிலவியது எனக்குத் தெரியும் ! எனக்கோ எனது favorite ஆன சிகாமணி தூள் கிளப்ப வேண்டுமென்பதே ஆசை ! 

கடைசி 32 பக்கங்கள் நம்மிடம் பணிபுரிந்த இன்னொரு புதிரான ஓவியர் வசம் இருந்தது ! புதுக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமத்திலிருந்து வேலை தேடி வந்த அந்த நபரைப் பார்க்கும் போதே வறுமையின் தாண்டவம் அப்பட்டமாய் தெரிந்தது ! சோலையப்பன் என்ற அவர் ஓவியத்தில் துளியும் பயிற்சி இல்லாத, ஒரு பிறவிக் கலைஞன் என்றே சொல்லிட வேணும் ! அழகாக வேலை செய்து கொண்டிருக்கும் போதே சிதறும் சிந்தனைகள் மனுஷனை எங்கேயாவது இட்டுச் சென்று விடும் ; திடீரென ஒரு 3 மாதங்கள் காணாமல் போய் விடுவார் ! பின்னர் திரும்பவும் வந்து எனது தந்தையிடம் மன்றாடி பணியில் சேர்ந்திடுவார் ! பின்னாட்களில் நமது லயன் காமிக்ஸ் இதழுக்கும் மனுஷன் பணி புரிந்திட்ட நாட்களும் உண்டு ; அதே போல் கண்ணாமூச்சி ஆட்டம்  ஆடிய சமயங்களும் நிறையவே உண்டு !  





நான்கு பேரும் கலரிங் பணிகளை நிறைவு செய்த பின் இந்த இதழுக்கான அட்டைப்படம் நமது சீனியர் ஓவியரின் கைவண்ணத்தில் தூள் கிளப்பியது ! காளியப்பா ஆர்டிஸ்ட் என்ற அந்த முதியவரே பின்னாட்களில் நமது 'கத்தி முனையில் மாடஸ்டி' ; 'மாடஸ்டி in இஸ்தான்புல்' ; 'இரும்பு மனிதன் அர்ச்சி' போன்ற லயன் இதழ்களுக்கும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்திட்டவர் ! 1984 -ல் முதன்முறையாக அவர் தீட்டிக் கொடுத்த சித்திரத்துக்கு அவர் வாங்கிட்ட கூலி ரூபாய் 60 மட்டுமே என்று சொன்னால் நம்ப முடிகிறதா என்ன ??!! இன்றைக்கும் "கொள்ளைக்காரப் பிசாசு" இதழுக்காக அவர் வரைந்த ஒரிஜினல் அட்டைப்படம் நம்மிடம் பத்திரமாக உள்ளது ! இதோ அதன் ஸ்கேன் ! 


முழுவண்ணத்தில் அட்டகாசமாய் வந்திட்ட இந்த இதழுக்கு "தீபாவளி வண்ண மலர்" என்ற பெயரும், ரூபாய் 1 -50 என்ற விலையும் வழங்கப்பட்டது ! விற்பனையில் தூள் கிளப்பிய இதழ்களின் பட்டியலில் பிரதானமான இடம் பிடித்த இதழ் என்பது நம் எல்லோருக்குமே இன்று தெரியும் ! வண்ணங்கள் என்பது இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு மிகவும் இலகுவாகி விட்ட சமயத்தில் , 35 ஆண்டுகளுக்கு முந்தைய அச்சுலகில் இதனை சாதித்தது எத்தனை பெரிய சங்கதி என்ற வியப்பும், மலைப்பும் என்னுள் என்றுமே தங்கிடும் ! இந்த இதழ் வெளிவந்த போதே ரசித்திருக்க வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள் இங்கிருந்தால், உங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டிடலாமே ? பின்னாட்களில் தேடித் பிடித்து இந்த இதழை வாங்கிட ; ரசித்திட முடிந்த நண்பர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் சுவையாக இருக்கும் !  

See you soon folks ! Enjoy the Sunday ! ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் முன்னதாகவே ! 


146 comments:

  1. i am the first . Had the opportunity to read this book only in comics classics .Steel claw looks like Actor Dev Anand in the cover page .

    ReplyDelete
  2. Second blog in last three days! good to see our editor is in full writing mood! Keep going sir!!

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் இந்த புத்தகம் உள்ளது! இதனை 1998 சென்னை சென்றபோது ஒரு பழைய புத்தக கடையில் ரூபாய் 5 கொடுத்து வாங்கினேன். என்னது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லுவேன்; இதுவரை அனைத்து ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் புதகம்களை 5 அல்லது 10 ரூபாய் மட்டும் கொடுத்து வாங்கி உள்ளேன்!
      இன்றும் என்னக்கு நேரம் கிடைக்கும் போது அவைகளை படிப்பது கரப்பான் பூச்சி வராமல் இருக்க தூசி தட்டி நாப்தலின் குண்டு போட்டு வைப்பது எனது பொழுதுபோக்கு! அவற்றில் சில ரொம்ப பழையது ஆனதால் நம்பிகையான ஒரு பிரிண்டிங் பிரஸ்-இல் கொடுத்து பைண்டு செய்து வைத்து உள்ளேன்! என்னது பொக்கிஷம் இவை

      Delete
  3. I have read this book in CC. But I had the opportunity to read another steel claw comics in color. I dont remember the name now. The story line was like a scientist accidentally gets super powers and chooses the wrong way. He dips his right hand in silver paint before committing his crimes, so the spot light will be on steel claw. Can anyone tell me the name of that story

    ReplyDelete
    Replies
    1. It was the 4 part Quality comics series featuring the steel claw. The first two parts of this series came in the comics classics recently as "New Yorkil Mayavi". The Dpart that you recollect here is the part where Dr. Deutz impersonates as Mayavi and I am not sure if it ever came out in our comics.

      Delete
    2. நண்பரே அந்த கதை யார் அந்த மாயாவி.
      அக்கதை பற்றி அறிய நமது ஸ்டாலின் அவர்களின் பதிவை பாருங்கள்,
      கலரில் மாயாவி ஜொலிப்பதை காணலாம்.

      http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2012/06/3.html

      Delete
    3. நன்றி BN USA & கிருஷ்ணா வ வெ (Thanks for the link too)
      மாயாவி கதைகளில் என்னை மிகவும் கவர்த்த கதைகளில் இதுவும் ஒன்று

      Delete
  4. thanks for another quick post ...no one expected this post this much earlier... but its goood to post every 15 days or every week a particular day please .... what ever u have in mind be ready in ur computer or create a secret post like ur personal post.. then release it on that particular day.. waiting for books in B&W around 400 pages size ... like never bfore spl ...may be

    ReplyDelete
  5. அன்பு ஆசிரியருக்கு ,
    அருமை,இது போன்ற பாணியில் உங்கள் நினைவுகளை தொடருங்கள் காத்திருக்கிறோம்.எப்படி பட்ட சிறுவரையும் ஈர்க்கும் இந்த கதைதனை நீங்கள் செலக்ட் செய்தது ஆச்சரியமல்ல .ஆனால் இந்த கதையினூடே அச்சிறு வயதில் உங்கள் ஆர்வமே பின்னாளில் இப்போதைய சாதனைகளை செய்ய ,சாதிக்க உதவியது என்றால் மிகை ஆகாது.நான் என்ன சாதித்தேன் என்று கேட்க வேண்டாமே..................
    அட்டை படம் வரைந்த ஓவியருக்கு எனது வாழ்த்துக்கள் ,மாயாவி நீங்கலாக கவனித்தால் மிக தத்ரூபமான கண்ணை கவரும் அட்டை படம் ,மாயாவி மட்டும் ஏனோ கவரவில்லை என்னை................
    1982 ல் தான் நான் பள்ளியில் சேர்ந்தேன்,1984 ல் நமது இரும்புமனிதனில் நானும் என் அன்னை அருளால் படிக்க துவங்கினேன்,இல்லை, இல்லை கொண்டாட்டங்களில் பங்கு பெற்றேன்.
    எனது கதை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது,சிறு வயதில் என் தந்தை கூறிய கதைகளும்,பின்னர் தங்களது இரும்பு மனிதனும் என்றால் மிகை ஆகாது.அது இன்று வரை தொடர்கிறது .
    இந்த புத்தகத்தை சுமார் 10 அல்லது 12 வருடங்களுக்கு முன் ராஜா புத்தக நிலையத்தில் முன்னாள் ,மற்றும் பின்னால் சில பக்கங்களின்றி அந்நாளிலே வாங்கினேன் .தங்கள் இரு வண்ண கதைகள் மாயாவியின் பூமிக்கொரு பிளாக் மெயில்,பறக்கும் பிசாசு,முத்து காமிக்ஸில் படித்துள்ளேன்,வண்ணத்தில் பார்த்து அசந்து போனேன்,இப்படி நமது முத்துவில் வந்ததா என ஆச்சரிய பட்டு துள்ளி குதித்த படி வாங்கி வந்தேன்.எனது உற்ச்சாகத்தை தூண்டிய பதிவிற்கு நன்றிகள் பல பல பல ,..................

    ReplyDelete
    Replies
    1. அப்படியே இந்த புத்தகத்தை வண்ணத்தில் வெளியிடுங்களேன் சைஸ் கவலை இல்லை .......எப்படி உங்களுக்கு தோதாய் படுகிறதோ அப்படியே .......இந்த ஒரு கதை மட்டும் விட்டால் 25 அல்லது 30 க்கு சத்திய படுமல்லவா ,இதனை மாத வெளியீட்டில் சேர்க்காமல் திடுமென நடுவே நுழைப்போமே, வாய்ப்பிருந்தால் ,தற்போதைய ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்களது உடனடி சரவெடி பதிவை போல ................

      Delete
    2. நண்பர்களே ,பூமிக்கொரு ப்ளாக் மெயில் என்பதை ப்ளாக் மெயில் என திருத்திக்கொள்ளுங்கள் .......

      Delete
  6. dear எடி ,,,,,,,,,,,,,,,,,, ஹுஊம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மிக பெரிய பெருமூச்சு,,,,,,,,,,,,,,,,,,,,,, சொக்கா,,,,,,,,,,,,,,,,,,, 5000 பொன்னாம்,,,,,,,,,,,,,,,, இது எனகில்ல ,,,,,,,,, எனகில்ல ,,,,,,,,,, பழைய புத்தக கடையில பார்த்தும் ,,,,,,,,,,,,,,,, புத்தக கடைக்காரர் ,,,,,,, கூசாமல் 5000 ரூபா கேட்டதும் ,,,,,,,,,,,,, சொக்கா 5000 பொன் எங்கிட்ட இல்லையே ,,,,,,,,,,,,என்று திருவிளையாடல் ,,,,,,,,,,,,நாகேஷ் மாதிரி புலம்பியதும் ,,,,,,,,,,,,,,,, பழைய comics ,,,,,விலைய,,,, ஏத்தி விட்ட மகராசனங்கள நினச்சா,,,,,,, அப்படியே 10 மொளகா பச்சிய,,,,,, காரசட்னி தொட்டு,,,,,,,, ஓட்டுக்கா சாப்ட மாதிரி வவுறு ,,,,,,,, சும்மா பத்திகித்து,,,,,,,,,,,,,,, அது சரி ,,பல் இருகிறவன் பகோடா சாப்பிடறான்,,,,,,,,, எங்கள்ள மாதிரி ஏழை பக்கிங்கலாலா பொலம்ப தானே முடியும் ,,,,,,,,,, இதற்கு ஒரே தீர்வு,,,,,,,,,, மறுபதிப்பு எடி சொன்னமாதிரி ,,,,,,,,,வருவதுதான் ,,,,,,,,,,, அதுவும் சிறந்த தரத்தில் ,,,,,,,,, பழைய முத்து,,,,மாதிரி ஓவியங்கள் நல்ல கிளாரிட்டி யில் வருவதுதான் ,,,,,,,,,, எந்த பழைய புத்தக கடை என்று கேட்காதிங்க நண்பர்களே ,,,,,,,,,,,,,, அப்புறம் விலைய ஏத்தி விட்ட மகரசனுன்களே ,,,,,,,,,,?????????????? ஊரில் ஒரு குற்றம் என்று scandal போடுவாங்க ,,,,,,,,,,,,,, அதுக்கு நான் ஆள் இல்லை நண்பர்களே ,,,,,,,,,,,,,,,,take care guys ,,,,,,,,,,,, ஹாப்பி ரம்ஜான் ,,,,,,,,,,,, ஹாப்பி hollidays ,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். நீ உண்மையிலேயே லூசுபயதான்.

      Delete
  7. பாக்கெட் சைஸில், வண்ணத்தில் வந்த இந்த இதழை சிறுவயதில் பார்க்கையில் உருவாகிடும் உணர்வுகள் தேவதைகளின் கனவுகள்போல --- விபரிக்க முடியாதவை.... கொள்ளைக்கார பிசாசு வருவதற்காக காத்திருக்கும் மாயாவி, அந்த தருணத்தின்போது ஒரு சிறுவனிற்கு ஏற்படக்கூடிய திகில் எல்லாம் நினைவில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இக்காமிக்ஸின் கதையோட்டம் இன்று என் நினைவில் இல்லை. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த மாயாவி காலவோட்டத்தில் அந்த இடத்திலிருந்து இறங்கி வந்தாலும் அவரின் கொள்ளைக்கார பிசாசு, நடுநிசிக் கள்வன் போன்ற கதைகள் அவரின் பெயர் சொல்லும் கதைகளாக சென்ற தலைமுறை வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்பது உண்மைதானே.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. தியேட்டர் போகாம படம் பார்த்த திருப்தியை அளித்தது. ராணிமுத்து காமிக்ஸ். முகமூடி வீரன் மாயாவி தோன்றும் கதைகள் யாவற்றையும் படித்திருக்கிறேன். மாயாவியின் பரமரசிகன் நான்.

      Delete
  8. மிக அழகான பதிவு!!!
    பி.கு: உங்கள் அலுவலகத்திலோ, காமிக்ஸ் கிடங்கிலோ அல்லது வீட்டிலோ பீரோ ஒதுக்கும் பணிகள் இருந்தால் நான் ஓசியில் செய்து தர தயார்! ;)

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் நானும் வருகிறேன்.ஒருதற்கு இரண்டு பேர் இருந்தால் வேலை சுளுவாக இருக்கும் அல்லவா.

      Delete
    2. ஆட்டோ என் செலவு நண்பர்களே ,நகர்த்துமிடம் கோயம்புத்தூர்

      Delete
    3. பெங்களூரில் ஆரம்பித்து சென்னை வந்து பின் கோவை வழியாக சிவகாசி செல்ல வேண்டும்.
      நெடிய பயணம் ஆகையால் நண்பர்கள் தங்களிடத்தில் இருக்கும் அறிய புத்தகங்கள் கொண்டு வந்தால் பயணத்தில் படித்து இன்புறலாம்.

      Delete
    4. உள்ளே வந்த புத்தகங்கள் எக்காரணம் கொண்டும் கோவை செல்லும் வரை வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க பட மாட்டது என்ற வாசகங்களை விட்டு விட்டீர்களே நண்பரே.....

      Delete
    5. எங்கே நண்பரே எனது வலை பூ பக்கம் உங்கள் கால்தடம் பதிய வே இல்லையே.

      Delete
    6. மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பரே.உங்களது பின்னுட்டம் எதுவும் இல்லாததால் இந்த குழப்பம்.

      Delete
  9. சார், உங்களிடம் பணிபுரிந்த ஓவியர்களை பெருமை படுத்தும் ஒரு பதிவாகவே இதை கருதுகிறேன். ஓவியர்களின் வாழ்க்கையோட்டம், வறுமை மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது( நானும் ஒரு ஓவியன் என்பதால் அந்த கஷ்டம் உணரமுடிந்தது!)

    ReplyDelete
  10. "கொள்ளைக்காரப் பிசாசு" - இதை கலரில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. நண்பர்கள் யாராவது ஓசியில் படிக்க கொடுத்தல் நன்றாக இருக்கும். நிறைய நண்பர்களிடம் இந்த புத்தகம் இருக்கம் என்று நம்புகின்றேன். ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு திருப்தியான கதை இந்த மாதா வெளிவரவு. பிரின்ஸ் கதை கதையின் தலைப்பைப்போலவே பச்சை நிறத்தில் வண்ணத்தில் எடுப்பாக இருத்தது. ஜானி கதையும் நன்றாக இருந்தது, ஒரு இடத்தை தவிர. கதை ஆசிரியரே அதை கோட்டை விட்டாரோ?. அந்த இடம், இறந்து போனதாக கருதப்பட டாக்டர் அகோனி ஒரு மரத்தின் பின்பகா மறைத்து இருக்கும் காட்சி.. கொலைகார பொம்மை ஒரு சர்பரைஸ். நன்றன ஒரு கதையோட்டம்.. கருப்பு வெள்ளை கதைகளை வெளிடும்போது இந்த மாதரி கதைகளை தேர்ந்து எடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே,நானும் கேட்க நினைத்தேன்,பின் தயங்கி விட்டு விட்டேன் ,....................

      Delete
  11. Dear Editor,

    நான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த இதழ் இது என்பதை உங்கள் பதிவுமூலம் இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

    பல வருடங்களுக்குப் பிறகு, பழைய புத்தகமாக முன்னட்டை பிரிக்கப்பட்டு பைண்ட் செய்யப்பட்ட புத்தகமாக எனக்கு இது கிடைத்தது. இதன் வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்திருக்கவே இல்லை. ஆஹா...

    மிகச் சிறிய வயதில் ஒரு சில காமிக்ஸ் புத்தகங்களோடு ஆரம்பித்த காமிக்ஸ் பித்து இன்று அளவு கடந்து நிறைந்துபோய்க் கிடக்கிறது என்றால் அதற்கு என் அம்மாவும் முக்கிய காரணகர்த்தா. இரும்புக்கை மாயாவி எனக்கு அறிமுகமாகியிருக்காத காலத்தில் அவர் சொல்லுவார், "நாங்கள் முன்பு வாசித்த மாயாவியின் கதைபோல வராதுடா. கரண்ட் வயரைப் பிடித்ததும் அவர் மறைந்துபோய்விடுவார். கைமட்டுமே தெரியும். உங்களுக்கு அந்தக் கதைகளை வாசிக்க கிடைக்கிறதோ தெரியாது..." என்று. ஆனால், காலங்கள், தலைமுறைகள் கடந்தும் நிற்கிறார் மாயாவி என்றால், காரணங்கள் பல.

    ரசிக்கக்கூடிய விதவிதமான கதைக் களங்கள். ஒவ்வொரு தடவையும் அவருக்கு மின்சாரம் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு. மர்மம், திகில், சாகசங்கள் கொண்ட கதை நகர்த்தல், மிகத் துல்லியமான, சராசரி மனிதர்களைப் படம் பிடித்ததுபோன்ற ஓவியங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் உரையாடல். வசனங்கள்.எடிட்டரும், சில குறித்த பகுதி வாசகர்களும் வரட்டுப் பிடிவாதத்தோடு இரும்புக்கை மாயாவியை இன்னும் இழுத்துப் பிடித்து வைத்திருப்பதாக சில நண்பர்கள் நினைக்கலாம். ஆனால், மாயாவியின் கதைகள் இசைஞானியின் பாடல்கள் போன்றவை. இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் நிச்சயம் நிலைத்திருக்கும். ஓவியப்பணி பற்றி விரிவாக எழுதியமைக்கு ஸ்பெஷலான நன்றிகள் ஸார்.

    ஆரம்பகால அச்சுக் கோர்ப்பு முறைகள், பதிப்பு முறைகள் (அதாவது ப்ளாக்குகள் பயன்பாட்டிலிருந்த காலப்பகுதி - அதற்கும் முன்பல்ல) பற்றி ஓரளவுக்கு அனுபவப் பாடம் படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தபடியால் அவைபற்றி நீங்கள் எழுதியவற்றை சிலாகித்து உணரமுடிகிறது. கலர் செப்பரேட்டிங்கை மனுவல் முறையில் செய்த ஓவியர்களுக்கு நிச்சயம் ஸ்டாண்டிங் ஓவெஷன் கொடுத்தாகவேண்டும். 3 வர்ணங்கள் சேர்ந்து ஒரு வர்ணம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரவேண்டும் என்றால், அவற்றை பிலிம் தாளிள் தனித்தனியே தீட்டி அச்சில் ஒன்றாக்கும் திறமைகொண்டவர்களுக்கு, இன்று கணினியில் கலர் தீட்டி கொடுத்தால் 'வெப் மெஷின்' மூலமாக பிளேட் கூட போடாமல் அச்சில் புத்தகமாகவே வெளிவரக் கூடிய தொழில்நுட்ப காலத்தில் சொகுசாக வேலை பார்க்கும் நாம் வேறென்ன முறையில் மரியாதை கொடுக்கமுடியும்?

    இப்படியொரு பதிவு எழுதிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். உங்களது இந்தப் பதிவு நிச்சயம் அச்சிலும் வரவேண்டும். அனைவரும் படிக்கவேண்டும்!

    -Theeban (SL)

    ReplyDelete
  12. //இந்த இதழ் வெளிவந்த போதே ரசித்திருக்க வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள் இங்கிருந்தால், உங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டிடலாமே ?//

    It was not 1977 but I think it was 1975 November that this issue first came out. I was in high school in the 7th standard at that time. It was such a long time ago and it is hard to recollect, but I do remember enjoying the nice coloring and the different type of Mayavi story.

    I remember that there were no IPC fleetway stories from 1976 onwards upto 1979. The years 76 to 79 were dominated by Dr. Kildare/Corrigan/Johnny Hazard/Phantom/Mandrake stories.


    //ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் முன்னதாகவே ! //

    Thank you! Ramzan greetings to Rafiq and other friends here as well.

    ReplyDelete
    Replies
    1. // It was not 1977 but I think it was 1975 November that this issue first came out. //

      விஜயன் சார் BN USA அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை

      அந்த கொள்ளைக்கார மாயாவியின் உள் கடைசி அட்டையில் ஜனவரி வெளியிடு வைரஸ் X என்றும் அத்துடன் வெளியிடு எண் மற்றும் வருடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது :))
      .

      Delete
    2. Thank you for the confirmation. I was pretty sure of the year when this issue came out and when I saw the editor's post I thought maybe I am losing my memory.

      Delete
    3. பி என் ரம்ஜான் வாழ்த்துகளுக்கு நன்றி.. முத்து இதழ்களை பொறுத்த வரை உங்கள் நினைவு தவறி போகும் வாய்ப்புகள் மிக குறைவே, எனவே அந்த கவலை உங்களுக்கு என்றும் வேண்டாம் :P

      Delete
  13. 1977 இல் அடியேனுக்கு வயது 4.அப்போது எனக்கு எழுத ,படிக்க தெரியாது.(இப்போதும் எழுத,படிக்க தெரியாது.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. Saint satan:
      //இப்போதும் எழுத,படிக்க தெரியாது//

      !!??!!!!

      நமது காமிக்ஸ் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டி படங்களை மட்டுமே பார்த்து இவ்வளவு பெரிய ரசிகராகிப்போன நமது புனித சாத்தானைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
      (இந்தமாதிரி சாதனைகளெல்லாம் சாத்தானுக்கே சாத்தியம்! ஹிஹிஹி!)

      Delete
    2. சரியாக இந்த புத்தகம் வரும் போது இந்த வண்ண உலகில் அந்த வண்ண புத்தகத்துடன்
      நான் பிறந்திருக்கிறேன் .இதே மாதம் ,இதே ஆண்டு ஆஹா ,இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன .அதனால்தானோ என்னவோ ஆசிரியர் எவ்வளவு கூறியும்,மனது வண்ணத்தை கேட்டு அடம் பிடிக்கிறது

      Delete
  14. இந்தக் காமிக்ஸ் வந்த பொழுது மிகச்சிறிய வயது எனக்கு. ஆனால் கலரில் வந்த கதையும்.. நீங்கள் நினைவு கூர்ந்த விதமும் அருமை. மூன்று ஓவியர்கள் தனித் தனியாக வேலை செய்து உருவாக்கிய தகவல் வித்தியாசமாக இருந்தது. ஸ்கூலுக்குப் போய்விட்டு வரும்பொழுது காமிக்ஸ் வேலைகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதனையே (எங்களுக்கு காமிக்ஸ் படிப்பது மட்டுமே) பொழுதுபோக்காக கொண்ட உங்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது :).

    ReplyDelete
  15. இரும்புக்கை மாயாவியின் அட்டை படங்களை பார்க்கும் போது நண்பர் முத்து விறியின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. முத்து விசிறியும், இரும்புக்கை மாயாவியின் உருவமும் அந்த அளவிற்கு ஒன்றாக என் ஞாபகத்தில் பதிந்துவிட்டது.

    முதல் முதலாக முத்து காமிக்ஸ் வந்த வருடத்தை நீங்கள் எனக்காக மீண்டும் ஒரு முறை பரிசோதித்து தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால், 2013-ம் வருடம் முத்து காமிக்ஸுக்கு 40-வது வருடம் என்றால் முதல் வெளியீடு வந்தது 73-ம் வருடம் என்றாகிறது. எனது மனதில், முத்து காமிக்ஸ் 1973-க்கு சில வருடங்கள் முன்னதாகவே வந்ததாக பழைய ஞாபகங்கள் சில மாதங்களாக தொந்தரவு செய்கிறது.

    இரும்புக்கை மாயாவியின் கொள்ளைக்காரப் பிசாசு வெளிவந்தது ஒரு தீபாவளி பண்டிகை சமயத்தில் என்பது ஞாபகம் இருக்கிறது. எந்த வருடம் என்பது நினைவில் இல்லை. இந்த வண்ண காமிக்ஸ் எந்த அளவிற்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், இன்றளவிலும் உங்களிடம் காமிக்ஸை வண்ணத்தில் வெளியிடுங்கள் என்று வாதிட்டு, சண்டை போட்டு, அடம் பிடிப்பதற்கு காரணம் இந்த வண்ண காமிக்ஸும், உங்களது மற்ற வண்ண வெளியீடுகளுமே.

    கொள்ளைக்கார பிசாசு முதன் முதலில் வெளிவந்த போதே இதை வாங்கி படித்திருக்கின்றேன். கதையை படிக்கும் போது மனதில் சிறு கிலி ஏற்பட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. என்னிடம் இருந்த முதல் கொள்ளைக்கார பிசாசு புத்தகத்தை யாரோ கொள்ளையடித்து போய்விட்டனர். இந்த கதையை மறந்தாலும், புத்தகத்தின் தரம் மறக்க முடியாதது.

    அச்சு வேலையில் உள்ள சிரமங்களை நான் சிறுவயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அதனால் உங்களுடைய சிரமங்களை உணர முடிகின்றது.

    ReplyDelete
    Replies
    1. If I remember correctly:

      1972 Jan - First Issue of Muthu - Irumbukkai Mayavi
      March- Uraipani Marmam
      May - Naasa alaigal
      July - Pambu Theevu

      After this the issues came monthly instead of once in two months.

      Delete
    2. Aug - Flight 731
      Sep - Pathazha Nagaram
      Oct - Katril karaindha kappalgal
      Nov - Imayathil Mayavi
      Dec - Kolaigara kalaignan

      1973 - Jan : Nadunisi Kalvan (This issue came with a beautiful 1973 color calendar featuring Mayavi as a free gift)

      Those were great days.... Main entertainment in those days were comics and MGR action movies :)

      Delete
    3. BN USA: Thank you very much for your valuable information. I made this query because I had a confusion that the First Issue of Muthu Comics was not released in the year 1973, but it came sometime between 1969 to 1971. I can very well remember that even though I had a elder sister, my mother brought this book and gave it to me only. Still I can remember that this book was filled with lot of action scenes, but I don't know how to read it. So, I was constantly pestering my sister to read the contents of the balloons.

      Since I was not able to read anything at that time and had trouble in reading, my mother might have brought this book for me. She succeeded in her effort to make me fluent in reading. Within few release of Muthu Comics, I started reading the books for my self. Thanks for the Muthu Comics, for me it was God sent blessing.

      Delete
    4. ஆஹா ,BNusa அனைத்து புத்தகங்களையும்(பொக்கிசங்களையும்) கையில் வைத்துள்ளீர்கள் போலுள்ளதே,தொடக்க காலத்திலிருந்து இன்று வரை தொடரும் தங்களது நினைவுகளை பகிர்த்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி ,மற்றும் நன்றிகள் பல .........தொடருங்கள் உங்கள் தாலாட்டும் நினைவுகளை ,ரசிக்க நங்கள் தயார் ஆசிரியருடன் சேர்ந்து ......இந்த நினைவுகளை மேலும் கிளறிய ,சிந்தனைகளை தீட்டுகின்ற அற்புதமான மனமொத்த மற்றும் கலா(கலை) ரசிகர் நண்பர் பாலாஜி சுந்தருக்கு மேலும் நன்றி,நிறைய பேருக்கு தாயார் மூலமாகவே காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகம் போலும் .......... தொடர்வேன்

      Delete
    5. BN USA - உங்களின் நினைவாற்றல் எங்களை மிகவும் வியப்படைய வைக்கிறது :))
      .
      // Those were great days.... Main entertainment in those days were comics and MGR action movies :) //

      Me too :))
      .

      Delete
    6. //அனைத்து புத்தகங்களையும்(பொக்கிசங்களையும்) கையில் வைத்துள்ளீர்கள் போலுள்ளதே//


      I wish I had them. All I have are memories only........

      I do have all the classics reprints though, except for the first issue.

      Now you know why I keep troubling our editor to reprint the original Muthu stories. The pocket size classics reprints are not so easily readable with my eyesight.

      Delete
    7. கேட்பதுதான் கேட்கிறீர்கள்........இரும்பு மனிதன் ஆர்ச்சி ,கொலை படை,நதி அரக்கன் சைசில் கேளுங்கள்....................இந்த சைசிர்க்கு பேப்பர்,எடிட்டிங் வேலைகள் கடும் முயற்சி செய்தால் சத்தியம் எனில் ஆசிரியர் தொடரட்டும் ............

      Delete
  16. எனது காமிக்ஸ் வாழ்க்கைக்கு முதல் படி எனது தாயார்தான்

    எனது சிறுவயது முதல் காமிக்ஸே இதுதான். நான் சிறுவன் என்பதாலும் கிழித்துவிடுவேனோ என்று இந்த இதழை எனது தாயார் தருவதற்கு தயங்கினார். பின்னர் கஷ்டப்பட்டு அதனை வாங்கி எனது நண்பர் பட்டாளத்துடன் முடுக்கில் ( சந்து..) வைத்து எழுத்துகூட்டி படித்ததும் அதில் ஏற்பட்ட சந்தேகங்களை எனது தாயாரிடம் கேட்டு தெளிவு பெற்றதும் , அதில் வரும் பெரிஸ்கோப் பற்றிய தகவலையும் தாயார் விளக்கியது இன்றும் பசுமரத்தாணிபோல் நன்றாக நினைவில் உள்ளது.
    இன்றும் எனது தாயார் மாயாவியின் பரமவிசிறி .... ஆனால் லயன் கம்பேக் ஸ்பெசல் மாயாவியை படிக்க கொடுத்த பொழுது மிக பொடி எழுத்து என்பதால் படிக்காமல் விட்டு விட்டார்..


    இன்று அந்த பழய புத்தகம் இல்லை என்றாலும் cc ல் அதனை கண்டபொழுது நான் அடைந்த மகிழ்வு வர்ணிக்க இயலவில்லை. எனது முதல் காமிக்ஸின் மறுபதிவு என்பதால் அப்போது இரண்டு வாங்கினேன்....

    எனது காமிக்ஸ் வாழ்க்கைக்கு முதல் படி எனது தாயார்தான்


    ReplyDelete
  17. இன்னொரு பதிவர் காமிக்ஸ் பற்றி எழுதியுள்ளார்! :)
    http://www.thaamiraa.com/2012/08/blog-post_2969.html

    ReplyDelete
  18. விஜயன் சார்,

    தாங்கள் எதைப் பற்றி எழுதினாலும் மிக அருமையாக எழுதுகிறீர்கள். தங்களின் இந்த "கொள்ளைக்கார பிசாசு" மலரும் நினைவுகள் சூப்பர்.
    முத்து காமிக்ஸ் எனக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தாலும், தீவிரமாக சேகரிக்க ஆரம்பித்தது லயன் காமிக்ஸில் "இரும்பு மனிதன்" வந்த பிறகு தான்.
    இரண்டு வருடம் முன்பு வரை இந்த "கொள்ளைக்கார பிசாசு" என்னிடம் பல பக்கங்கள் இல்லாமல் இருந்தது. பிறகு என் நண்பர் ஒருவர் முழுமையான புத்தகத்தை (முன் அட்டை இல்லாமல்) எனக்கு கொடுத்தார். அருமையான மாயாவி கதை. இதேபோல் வண்ணத்தில் வந்த "யார் இந்த மாயாவியும்" ஒரு விறுவிறுப்பான சூப்பர் ஹிட் கதை. அதுபற்றியும் எழுதுங்களேன் please.

    ReplyDelete
    Replies
    1. அக்கதை பற்றி அறிய நமது ஸ்டாலின் அவர்களின் பதிவை பாருங்கள்,
      கலரில் மாயாவி ஜொலிப்பதை காணலாம்.

      http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2012/06/3.html

      Delete
  19. சிறு வயது ஞாபகம் வந்தது...
    விரிவான விளக்கம்...
    பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  20. Dear Editor sir,

    NEXT YEAR KINDLY CONSIDER "MINNUM MARANAM" IN CC-SPECIAL SIR.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்கள் வேண்டுதல் ஆசிரியரின் மனத்தை கரைத்ததன் விளைவே இந்த பதிவு ,என்னடா இவர்கள் மின்னும் மரணம் வேண்டும் என, மின்னிக்கொண்டே இருக்கிறார்களே என்று யோசித்து ,ஆசிரியர் தங்க கல்லறை வருவதற்கு முன் மின்னும் மரணத்தை வெளியிட ,மிக வேகமாக பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்த்துள்ளது ,மேற்கொண்டு வரும் இது பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கிறேன் ,புத்தகம் வெளி வரும் முன் இதனை தயவு செய்து யாரிடமும் கூறி விட வேண்டாம் .

      Delete
    2. நண்பரே உங்களைபோல ரகசியம் காப்பவரை இதுவரை கண்டதில்லை இனியும் ...........!!!!!!!!!!!

      தொடருங்கள் உங்கள் இனிய அறிவிப்பை மன்னிக்கவும் செய்திகளை ;-)
      .

      Delete
    3. கோ.ஸ்டீல் க்ளா - தங்கக் கல்லறை கலரில் வெளிவர இவ்வளவு தடைகளா ? அதுவும் கே.டைகரே.. அவருக்குப் போட்டியாக :) . மின்னும் மரணம் ஒரு வருடம் முன்பு வரை கூட கிடைத்ததே. அதனால் அந்தக் கதையின் மறுபதிப்பு என்பதை நம்ப முடியவில்லை :)

      Delete
    4. ஓ! அப்போ கார்சனின் கடந்த காலமாக இருக்கும்,எனக்குத்தான் சரியாக காதில் விழவில்லை போலும்,யாரோ ஒரு கௌ பாய் அவ்வளவுதான் நண்பரே ............

      Delete
    5. எனக்கு வந்த தகவல்களும் ”கார்சனின் கடந்த காலம்” மறுபதிப்பு வருவதாகவே உள்ளது :)

      Delete
    6. அதுவும் வண்ணத்தில் ,பெரிய சைசில் என்று வந்ததா (இது லேட்டஸ்ட் நியூஸ் )
      (கேட்டீங்களா ...கேட்டீங்களா .............பாவம் இவர்களிடம் அதிகம் பேர் பழைய பதிவு வைத்துள்ளனர்,அதை விட சிறப்பை எதிர்பார்க்கிறார்களே என்று எடிட்டர் யோசித்ததன் விளைவாமே ) .....................................

      Delete
    7. நமது எடிட்டர் தனது எடிட்டிங் திறமையை காட்டவிருக்கிறார் ,தயாராகுங்கள் நண்பர்களே வாழ்த்தொலிகள் முழங்க ..............அதன் விளைவே முன்னோட்டமாக சென்ற பதிவில் ,டெக்ஸ் கலரில் அலசுவோம் என்று இலை மறை காயாய் ஒரு அற்புதமான அறிக்கை ,மீண்டும் படித்து பாருங்கள்,இதை நான் சொல்லவில்லை,நமது நம்பிக்கைக்குரிய எடிட்டரே நண்பர்களே......................

      Delete
    8. சொல்லி விட்டேன் கேட்பது உங்கள் கையில்,காதில் ..................

      Delete
  21. "கொள்ளைக்கார பிசாசு" வண்ண இதழ்... நான் பார்த்ததில்லை. ஆனால், காமிக்ஸ் கிளாசிக்ஸ் இல் வெளிவந்த புத்தகம் என்னுடன் உள்ளது.

    ReplyDelete
  22. விஜயன் சார்,

    இப்போது நம் இதழ்கள் முதல் 100 பக்கங்கள் (இரண்டு கதைகள்) வண்ணத்திலும், மீதி பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் வெளிவருவது நன்றாகத்தான் உள்ளது.

    ஒரு சின்ன suggestion , சரிவருமா என்று பாருங்களேன்....

    வண்ணத்தில் வரும் இரண்டு கதைகளை பிரித்து, முதல் வண்ண கதைக்கு பிறகு, அதாவது முதல் 50 கலர் பக்கங்களுக்கு பிறகு கருப்பு வெள்ளையில் வரும் கதைகளும், அதன்பிறகு மீதி 50 கலர் பக்கங்கள் என்று புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டு வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது. இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னவென்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

    நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவும் ஆவல்....

    ReplyDelete
    Replies
    1. Karthikeyan, if we do that what is the advantage? why do you wanted them to be printed like this? any specific reason! just to curious to know!

      Delete
    2. நீங்கள் கூறிய படி செய்தால் பைண்டிங்கில் பிரச்சினை வரும் என நினைக்கிறேன். புத்தகத்தின் சைடில் வைத்துப் பார்த்தால் ஒரு பக்கத்தை இரண்டாக மடித்து பிரிண்ட் செய்யப்பட்டது தெரியவரும்.. எனினும், இதனை எடிட்டர் மட்டுமே உறுதி செய்ய முடியும். பரணி கேட்டபடி என்ன காரணம் ?

      Delete
  23. நண்பர் ஸ்டாலின் மூலம் ஈரோடு புத்தக திருவிழா புகை படம்கள் பார்த்தேன்! அருமை!! இனிமையான தருணங்கள் அங்கு சென்றவர்கள் அனைவர்க்கும்!! நமது பெங்களூர் காமிக்ஸ்-காண் புத்தக திருவிழாவில் அனைவரையும் காண ஆவலுடன் உள்ளேன். பெங்களூர் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூட அன்புடன் அழைக்கிறேன்! வாருங்கள் நண்பரகளே!!

    ReplyDelete
  24. Dear Editor Sir,

    Never Before இதழ் புக் பண்ணியாச்சு! Hope I will get confirmation by mail. அப்புறம் தான் நிம்மதி. எனக்கு கடைகள்ல போய் புக் வாங்றது தான் பிடிச்சிருக்கு. ஆனா நிறைய கடைகள்ல comics கிடைக்காதது வறுத்தமா இருக்கு. இப்போ Discovery Book Palace தான் ஒரே வழி. Hope you will increase the list.:)

    ReplyDelete
  25. லயன் காமிக்ஸ் ஸ்கூல்

    விஜயன் வருகை பதிவு எடுக்கிறார்
    மாயாவி.. உள்ளேன் அய்யா .....சுவிச் போர்டு கிட்ட
    ஸ்பைடர்.. உள்ளேன் அய்யா .....மொட்டு வலையில்
    அர்டினி... உள்ளேன் அய்யா .....பீரோ அருகில்
    பெல்ஹாம்.. உள்ளேன் அய்யா ....லேபில்
    பார்னே ...உள்ளேன் அய்யா .......சரக்கு கடையில்
    பிரின்ஸ்....உள்ளேன் அய்யா ......போட்டுக்கு அடியில்
    ஜின்... உள்ளேன் அய்யா .......பிகர் அருகில்
    மாடஸ்டி ...உள்ளேன் அய்யா .......வில்லி மடியில்
    கார்வின் ...உள்ளேன் அய்யா .......மாடஸ்டி மடியில்
    மந்திரி....உள்ளேன் அய்யா ........குண்டுபாய் அருகில்
    அடிமை... உள்ளேன் அய்யா குண்டுபாய்க்கு பின்னால்..... மந்திரிக்கு முன்னால்......( நடுவுல மாட்டி கிட்டியா ..)
    டெக்ஸ் வில்லேர் ......
    டெக்ஸ் வில்லேர் .......முரட்டு பய வாய திறக்கிறானா பார்
    கார்சன்.........டெக்ஸ் முறைக்கிறான் சார்.........
    விஜயன், ''இவனுகளை வச்சுக்கிட்டு காமிக்ஸ் போடறதுக்குள்ள ........ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு இடத்தில
    உக்காந்துகிட்டு .....உயிரை வாங்குறானுங்க ''
    லயன் காமிக்ஸ் ஸ்கூல் கலாட்டா தொடரும் ......




    ReplyDelete
    Replies
    1. // லயன் காமிக்ஸ் ஸ்கூல் கலாட்டா தொடரும் ...... //

      நமது நண்பர் கிருஷ்ணா கூறியதுபோல நல்லதொரு ஆரம்பம்

      உங்கள் கலாட்டாவை தொடருங்கள் மந்திரியாரே ;-)
      .

      Delete
    2. ஆ,ஆ ஆ ,,,,,,,,,, மதியில்லா மந்திரி அலறும் சத்தம்,,,,,,,, சட்டி தலையன் ஆர்ச்சி ,,,, மந்திரியின் ,,, கழுத்தை பிடிக்கிறார் ,,,,,, என் பெயரை விட்ட உன்னை ????????,, கொஞ்சம் ஆயிலும் ,டிங்கரிங்கும் போட போயிருந்தால்,,,,,,,, அப்படியே மறந்து போறதா ????????,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,, காமா,,, சாரி கமா,,,,போட்டு எழுதுவது ஏன் என்று நண்பர் ஒருவர் போன பதிவில் ,,,,,,,,, கேட்டு இருந்தார் ,,,,,,,,, கொஞ்ச நாளா விரல்ல சுலுக்கு,,,,,,,,,,,,,, அக்காங் !!!!!!!!!!! take கேர் பிரிஎண்ட்ஸ்,,,,,,,,,,,,

      Delete
    3. சூப்பர்! சூப்பர் மந்திரி!! T.R மாதிரி கலகுறிங்க!!

      Delete
    4. ஆசிரியர் : டைகர்
      ஜிம்மி : (வாசலில் நின்று குடித்தபடியே ) உள்ளே ஆல்..வா.. இருக்கிறார் ,சிறையின் உள்ளே ............
      ஆசிரியர் : தங்க கல்லறைக்குள் செல்லும் முன் , அழைத்து வா,அதற்க்கு பின் முக்கியமான வேலை இருக்கிறது(அவனை வைத்து இந்த முறை பாடம் நடத்துவோம்)
      டைகர் : அழைத்தீர்களா,
      ஆசிரியர் :நமது லயன் அலுவலகம் சென்று வா ,மின்னும் மரணம் வேண்டும் என்று ஏக பட்ட கலாட்டவமே,அடுத்த வருடம் முதல் மாதம் நீ அங்கே இருக்கணும் (அப்பாடா தப்பினோம் ,கலகக்காரர்களை அடக்க இவரே சரியான ஆள் )(நல்ல வேளை மந்திரியின் புண்ணியத்தால் தப்பினோம் )
      பாடம் படிக்க தயாராகுங்கள் நண்பர்களே

      Delete
    5. கிருஷ்ணா சிபி பரணி லூசு தம்பி கை ...எல்லோருக்கும் நன்றிகள் ..
      கடைசியில் ஆசிரியர் கையில் நான் கொட்டு வாங்க போறேன்னு தோணுது

      எடி ...''டைகர் இந்த தபா கண்டிப்பா நீயும் ஜிம்மியும் கண்டிப்பா குளிச்சு (என்னது........... குளிகரதாவது .......லூசு தம்பி மன்னிக்கவும் )பவுடர் போட்டுக்கிட்டு வந்துடுங்க .....
      தங்க கல்லறை புக் ரிலீஸ் அகிற வரை கம்முனு இருங்க நீங்க பாட்டுக்கு கெளம்பி சிகுவாகுவா பிர்லை பார்க்க போய்டாதீங்க ...
      குறிப்பா நீங்க ரத்தபடல புக் (ஜோன்ஸ்)... மாடஸ்டி புக்... பக்கத்துல போகவே கூடாது''

      Delete
  26. Hi friends, I am also transferred amount for "Never Before Special". Waiting for confirmation mail.

    ReplyDelete
  27. சிறப்பான நினைவுகள்! அருமை!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
    Replies
    1. அண்ணா காமிக்ஸ் பத்தி எதாவது இருந்தால் சொல்லுங்கள்! சும்மா உங்க கதை எல்லாம் இங்க "URL" போட்டு சீப் விளம்பரம் தேடாதிங்க!! இந்த ப்ளாக் லைன் மற்றும் முத்து காமிக்ஸ் மட்டும் தான்!! இதுபோல் இனி செய்யாதிர்கள் நண்பரே!

      Delete
  28. டபுள் த்ரில் இதழைப் படித்து முடித்தேன்.

    - அட்டைப்படத்தில் நிகழ்ந்த எழுத்துப் பிழையை அப்படியே விடாமல் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பியிருந்தது, பாராட்டுக்குரியது. புத்தகத்தின் தரத்தினை உயர்த்த தொடர்ந்து உழைப்பது கண்கூடு.

    - இரண்டு கதைகளின் ஹீரோக்களையும் முதல் முறையா கலரில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. சித்திரங்களில் கேப்டன் பிரின்ஸ் கதை, ஜானியைவிட நன்றாக இருந்தது. அதுவும் அந்த 20ஆம் பக்கத்தை 5 நிமிடங்கள் ரசித்துப் பார்த்துவிட்டே கதையைப் படிக்க முடிந்தது.

    - இரண்டு கதைகளிலும், ஹீரோக்களுக்கு பெரிதான வேலை ஒன்றும் இல்லை. இது பிரின்ஸின் கடைசி கதை என்பதால் சற்றே அதிக ஆக்‌ஷன் எதிர்பார்த்தேன்.. அதில் ஏமாற்றமே.

    - ஜானி கதையில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. நடுவில் வந்த அந்த டாக்டர் குழப்பத்திற்கு சரியான பதில் க்ளைமேக்ஸில் சொல்லப்படவில்லை.

    - கருப்பு/வெள்ளைக் கதை வித்தியாசமாக இருந்தது. அதிலும் ஒரு சின்ன நெருடலான விஷயத்தை க்ளைமேக்சிலும் விவரிக்கவில்லை.. ஒரிஜினல் கதையிலேயே அப்படி என்றால் சரியே...

    - முன் அட்டையை (பிரின்ஸ்) விட பின் அட்டை (ஜானி) அருமையாக இருந்தது.

    இனி கே.டைகர், லார்கோவின் காலம் ஆரம்பித்துவிட்டதை இந்த இரண்டு கதைகளும் நமக்கு (எனக்கு) உணர்த்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. sir,it is a shock to me that you are giving fare well to CAPTAIN PRINCE. We are expecting NARAGATHIN ELLAIYIL AND wing commander GEORGE Napoleonin pokkisham.

      Delete
  29. அடிமை ;மாஸ்டர் ஏன் சோகமா இருக்கறீங்க....?
    மந்திரி ;பணியில் ஒரு பரலோகம் படிச்சேன் ....அது ''மைகேல் மதன காம ராஜனுக்கு'' சமமா இருக்கு ஒருத்தனே சவறான் அவனே சவ பொட்டில போய் படுத்துகுறான் அப்புறம் அவனே ஜீப் ஓட்டுறான் அப்புறம் அவனே உயிரோட வரான் ...இது பத்தாதுன்னு ஒரு லேடி கேரக்டர் வேற டபுள் act குடுக்குது .....சாவுது பொறக்குது

    ''செத்து செத்து விளயாடுரங்கப்பா''
    ''செத்து செத்து விளயாடுரங்கப்பா''
    ''செத்து செத்து விளயாடுரங்கப்பா''
    ''செத்து செத்து விளயாடுரங்கப்பா''

    ReplyDelete
  30. சார், Facebookஇல் லயன் காமிக்ஸ் இன் உத்தியோகபூர்வ பக்கம் ஆரம்பித்திருக்கிறீர்களா? இல்லை, அதுவும் வழமைபோல வாசகர்கள் ஆரம்பித்ததுதானா? (புதிதாக ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், லயனுக்கு மட்டுமாக... முத்து, திகில், க்ளாஸிக்ஸ் எதற்கும் இடமில்லை?)

    ReplyDelete
  31. Dear Mr. Vijayan,
    I got Double thrill special. First i congratulate entire Lion comics team for bringing issues without delay. Off course we are getting recent issues without delay. This is a great feat of achievement for the Lion comics team. Hat's Off!
    Again i have to congratulate Lion team for producing yet an another quality issues! Colour issues with good quality paper! I'm thrilled!
    The long...long... and patience wait for many of the Die hard Lion comics fans are answered right now!



    Now...
    Caption Prince story was excellent! Art quality is good and excellent with details!
    The guy who got his left arm broken during the initial stages of story was rightly attended to, by his colleagues on the background and had wrapped his left arm and was seen his left arm covered with bandage through out the story!! The original creaters have shed so much of their sweat and given their maximum effort in creating it! Congratulations for the original creaters!
    Mr.Vijayan...to recognise their beauty of creation, should'nt we not put our minimum effort to make the work look realistic!

    Here i mean to say the alignment of Tamil text "KALUGU III" painted on the boat. The way it was executed shows our CARELESS ATTITUDE! At no place the text was aligned to the geometry of the surface (The angle of Boat) To be frank it takes hardly 1 minute in Photoshop to do this alignment! Please take care in future!
    Again there is a place where the dialogue balloon is misplaced to a wrong person in Prince story! Please take care!
    Coming to Reporter Jony story it was really good to see Jony in colour for the first time! Details are vivid and pleasing to the eye! Good work!
    The B&W story was very poor and less attractive in terms of art work. Friends are saying that the story is really good! I'm yet to read!
    Finally do we need to dedicate(Waste???) so much of pages for letters and comments???I would like to hear comments of our friends on this!!

    ReplyDelete
    Replies
    1. // At no place the text was aligned to the geometry of the surface//
      +1

      //The B&W story was very poor and less attractive in terms of art work. Friends are saying that the story is really good!//
      I am equally surprised!

      Delete
    2. Finally do we need to dedicate(Waste???) so much of pages for letters and comments???I would like to hear comments of our friends on this!!

      >> It is really required!!

      Delete
  32. கதை சொல்லாமல் ஒரு விமர்சனம் - பாகம் 1:

    லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தமது புது அவதார பாணியில் இவ்வருடம் வெளியிட்டிருக்கும் நான்காவது இதழ்! வழக்கம் போல உயர்தர ஆர்ட் பேப்பரில் இரண்டு முழு வண்ண சாகசங்கள் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் "பரலோகப் பாதை பச்சை!" மற்றும் ரிப்போர்ட்டர் ஜானியின் "பனியில் ஒரு பரலோகம்!". கொசுறாய் கருப்பு வெள்ளையில் ஒரு ஆதி கால காமிக்ஸ் கதை - "கொலைகார பொம்மை". அப்புறம் பக்கம் பக்கமாய் ஆசிரியரின் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மற்றும் வெளிவரவிருக்கும் இதழ்களின் விளம்பரங்கள் என ஒரு சுவாரசியமான இதழாக அமைந்திருக்கிறது!

    1. பரலோகப் பாதை பச்சை! - கேப்டன் பிரின்ஸ் குழுவின் அதிரடி சாகசம்!:
    முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளவாக கவரவில்லை என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது! உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பிரின்ஸ் கதைத் தொடரின் சிறப்பம்சம் - கருப்பு வெள்ளையிலேயே சிறப்பாக இருக்கும்! அப்படி இருக்க இவ்விதழில் முழு வண்ணத்தில் கண்களை கவர்கிறது! படங்களை நின்று, நிதானித்து, இரசித்து கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கிப் படித்தால் ஒரு ராம்போ படத்தைப் பார்த்த எஃபெக்ட் கிடைப்பது நிச்சயம்!

    2. பனியில் ஒரு பரலோகம்! - ரிப்போர்டர் ஜானியின் குழப்படி சாகசம்!:
    டபுள் த்ரில்லில் வெளியாகியுள்ள 'பனியில் ஒரு பரலோகம்' - மேற்சொன்ன ரீதியிலான ஒரு அக்மார்க் ஜானி சாகசம் - பலப் பல குழப்பங்களின் முடிச்சுகள் கதையின் இறுதியில் ஒவ்வொன்றாய் அவிழ்கிறது - எடிட்டர் பாணியில் சொல்வதென்றால் இடியாப்ப சிக்கல் க்ரைம் த்ரில்லர்! வண்ண ஓவியங்கள் அவ்வளவு தெளிவு! பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் cool blue வண்ணத்தில் முக்கி எடுத்த சித்திரங்கள் - சொக்க வைக்கிறது! அதுவும் இதற்கான பின்னட்டை டாப் கிளாஸ்! சமீபத்தில் இவ்வளவு வசீகரமான அட்டையை பார்த்தது இல்லை!

    3. கொலைகார பொம்மை - ஒரு சாவகாசமான சாகசம்!
    புதிய லயனை தொட்டுத் தொடரும் பழைய காமிக்ஸ் சகவாசம்! இந்த கதையைப் படிக்கும் போது வேதாளர் குகை போல எழுந்த கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை! ஜானியின் கதை குழப்பமாக இருந்தாலும், இரசிக்க முடிந்ததிற்கு காரணம் அதன் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் - அதுவும் வண்ணத்தில்! ஆனால், இந்தக் கதையின் ஓவியங்கள் ரொம்பவே சுமார் ரகம்! கதையும் அவ்வளவு பரபரப்பாக இல்லை! எடிட்டர் வலைப்பூவில், பல நண்பர்கள் இந்த கதையை பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளி, இது போன்ற அரதப் பழசான கதைகளுக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டிருப்பதை நினைத்தாலே பகீர் என்கிறது!

    எது எப்படியோ, சமீபத்தில் மிகவும் திருப்திப்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று! ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ்! டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர்! :D

    ReplyDelete
  33. குறை சொல்லாமல் ஒரு விமர்சனம் - பாகம் 2:

    வாசகர்களின் எண்ணங்களை கேட்டு அதை "ஓரளவுக்காவது" நடைமுறைப்படுத்தும் அரிதான பத்திரிக்கை ஆசிரியர்களில் விஜயனும் ஒருவர்! வாசகர்கள் சுட்டிக்காட்டிய பல குறைகளை அல்லது காண விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! சமீபத்திய ஒரு சில முக்கிய உதாரணங்களாக பேக்கிங் முறையில் கொண்டு வந்த முன்னேற்றம் மற்றும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஓரளவு தரமான வெள்ளைத்தாளை உபயோகிப்பது இவற்றைச் சொல்லலாம்! அப்புறம் ஓரளவு குறைந்த விலையில் கருப்பு வெள்ளை காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்!

    இந்த இதழில் அவர் வாசகர் விருப்பத்திற்கேற்ப செய்துள்ள மாற்றங்கள் சில!

    * வெளியீட்டாளர் விபரம் - எளிய Ebay முகவரியுடன் ;)

    * மொழிப்பெயர்ப்பு நிஜமாகவே சூப்பர்! சமீபத்தில் வந்த இதழ்களில் இதுதான் பெஸ்ட்! குறிப்பாக பார்னேவின் புலம்பல்கள் உதட்டோரம் புன்னைகையை வரவழைத்தன!

    * கதைகளில் எழுத்துப் பிழைகளைப் பார்த்த நினைவில்லை!

    * முன்னட்டையில் சிறிய புள்ளிப் பிழையை சரி செய்ய மெனக்கெட்டு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது - என்னே ஒரு கடமை உணர்ச்சி! சட்டென்று பார்க்கும் போது கொஞ்சம் கூட வித்தியாசமாய்த் தெரியவில்லை! (பாட புத்தகத்திலேயே பக்கம் பக்கமாய் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பார்த்துப் பழகிய தமிழர்கள் அல்லவா?!)

    * அப்புறம் சக வாசகர் உதயகுமாருக்கு வாழ்த்துக்கள் - ரொம்பவே மெச்சூர்டான ஒரு சுய அறிமுகம்! மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. // * வெளியீட்டாளர் விபரம் - எளிய Ebay முகவரியுடன் ;)//
      இதழ் வெளியான மாதம் மற்றும் வருடத்தையும் அச்சிட்டால் நிறைவாக இருக்கும்! :)

      Delete
  34. குறை சொல்லத் துடிக்குது மனசு! ;) - பாகம் 3:

    குறை சொல்லவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது என்பதால், ஒரு சில குறைகளை பட்டியலிடுகிறேன்! ;) விஜயன் அவர்கள் இவற்றைப் படித்து டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரிதான்!

    * பரலோகப் பாதை பச்சை - அட்டையில் பச்சையை ஹைலைட் செய்கிறேன் பேர்வழி என்று சிகப்புக் கம்பளம் விரித்தது செம காமெடி! ;)

    * மாதம் ஒரு வாசகர் பகுதியை வண்ணத்தில் வெளியிடுங்களேன் ப்ளீஸ்?!

    * எழுத்துருக்கள் சிறிதும் பெரிதுமாய் இருப்பதை தவிர்க்க, அதிக அளவு மார்ஜின்கள் விடாமல் அச்சிடுவது சாத்தியமா? "Proportionate"ஆக இமேஜை என்லார்ஜ் செய்து, குறைவான மார்ஜின் விட்டு அச்சிட்டால் டயலாக் பாக்ஸ்சுகளுக்கு சற்றே கூடுதல் இடம் கிடைக்குமே?! இப்படிச் செய்தால், பைண்டிங்கில் பிரச்சினை வருமோ?

    * கருப்பு வெள்ளையில் உள்ள வேர்களை அடியோடு துண்டிக்கக் கூடாதுதான் - ஓக்கே! ஆனால் எண்பது, தொண்ணூறுகளில் வந்த கருப்பு வெள்ளைக் கதைகளை வெளியிடலாமே?! அறுபதுகளின் கதைகள் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன!

    * தமிழ் சினிமாவின் மூத்த மும்மூர்த்திகளான MKT, MGR மற்றும் சிவாஜி - இவர்களின் திரைக்கு வெளிவராத படங்களை தூசு தட்டி இப்போது வெளியிட்டு புத்தம் புதிய படம் என சொல்வதை போல் இருக்கிறது மாயாவி, லாரன்ஸ் - டேவிட், ஜானி நீரோ இவர்களின் வெளிவராத சாகசங்களை 'புத்தம் புதிய சாகசம்' என்று அழைப்பது! புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும்! தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள்! எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு!

    * அப்புறம் முன்பதிவுப் பட்டியலில் உள்ள என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - சரி செய்ய ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா?! :D - just kidding! ;)

    ReplyDelete
    Replies
    1. * பரலோகப் பாதை பச்சை - அட்டையில் பச்சையை ஹைலைட் செய்கிறேன் பேர்வழி என்று சிகப்புக் கம்பளம் விரித்தது செம காமெடி! ;)
      >>
      "பச்சை"-யை " பச்சை-யாக " பிரின்ஸ் & கோ பின்பக்கம் " பச்சை"-யாக பிரிண்ட் செய்தது உங்கள் கண்ணனுக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்குது!! நீங்கள் சொல்வதை பார்த்தால் கதை டயலாக் எல்லாத்தையும் பச்சை பச்சை பிரிண்ட் செய்ய சொல்லுவிங்க போல தெரியுது!! நீங்கள் சொல்ல்வதுதான் காமெடி!!

      Delete
    2. பரணி: பச்சை பசேலென்ற உங்கள் கருத்துக்கு நன்றி! :)

      இலை, செடி, கொடிகளோடு சேர்ந்து பிரின்சின் தலை முடியும் பச்சை நிறத்தில் மின்னியதை நான் கவனிக்காமல் இல்லை! ;) சிகப்பே எடுப்பாய் தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்! ஆனால், உண்மையில் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுக்க நினைத்திட்ட வண்ணம் "Metallic Gold"-தான்! Anyways, பின்னட்டை தூள்! :D

      Delete
    3. பரணி:
      //1. பரலோகப் பாதை பச்சை! - முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளவாக கவரவில்லை என்றாலும் *****நன்றாகத்தான் இருக்கிறது!*****//
      என்னுடைய இந்த கமெண்டை உங்களுக்கு ஹைலைட் செய்ய விரும்புகிறேன்!

      Delete
    4. To be frank the cover for prince story is not great! I agree with you!!

      Delete
  35. ஆசிரியர் ஐயா!

    நாங்க எல்லாம் ரொம்ப வெறித்தனமா படிச்சி ரசித்த கபிஷ், காக்கை காளி ( நம்ம இரும்புக்கை மாயாவி மாதிரியே ) கலெக்டர் எடிஷன் , நம்ம லயன் காமிக்ஸ் ல வருமா ?

    அப்படியே இந்த காலத்து குட்டிஸ் க்கும் காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை அறிமுக படுத்தின மாதிரி இருக்கும்.

    நண்பர்களே எத்தனை பேரு இந்த வேண்டுகோளை நம்ம ஆசிரியருக்கு வலியுறுத்த போறீங்க ?

    ReplyDelete
  36. athu nadakatha vishayam thiru mariappan avargaley tinkle endra peyaril aangilathil vetri karama poi kondu irukirathu ... ana neenga online la angilathil padika mudium ..thedungal googulil.. allathu vangungal tinkle ah... ana tamilil vara villai...ithai vida parvathi chithira kathaigali editor sir try pannalam ana thaniya release panna ... odathu intha puthakathilaeye serthu veli idalam...

    ReplyDelete
    Replies
    1. பார்வதி சித்திரக் கதைகள் என் சிறு வயதின் மாயாபுரி! சொப்பன லோகம்! வசந்த மாளிகை! அதனை எல்லாம் யாராவது வெளியிட்டால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் யார் செய்வது :(

      Delete
  37. தம்பி gokul mathan. விஷயம் தெரியாம கதைக்கப்படாது! நமது முத்து காமிக்ஸ் இன் ஆரம்ப காலத்தில் கபீஷின் கதைகள் வந்து அசத்தியிருக்கின்றன. அவை அனைத்தும் அற்புதமாக கதைகள். வேட்டைக்காரன் (ரங்கையா?) அவனது மருமகள் எல்லாம் கூட்டாக ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். அந்தக் கதைகளை வேறு எந்த பதிப்பிலும் நான் படித்ததில்லை. சித்திரங்களும் வித்தியாசமாகவே இருக்கும். அந்தக் கதைகளின் உரிமை இன்னும் ஆசிரியர் வசம் இருந்தால் வெளியிடுவது ஒன்றும் கடினமான காரியமே இல்லை! ஆசிரியரின் பதில் என்னவென்று பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. தம்பிக்கு தம்பி பாண்டியன் தம்பி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பூந்தளிர் புத்தகம் லைன் காமிக்ஸ் இல் வந்த மாதிரி தெரியவில்லை .... கபிஷ் கு வால் மொளச்ச மாதிரி எங்க காதுல பூவ சுத்தாதீங்க .. அய்யா எடிட்டர் ... ஸ்டீல் claw மத்த அறிவாளிங்க இங்க இருகுரங்க சொல்லுங்க
      கபிஷ் .. புக் லைன் ல எபவவது பாது இருக்கீங்களா ,,, நன் பொறந்ததே 1975 லதான் கோகுல் மதன் சின்ன பைய்யன் மாதிரி இருக்கு ஆன அவங்க அப்பா பழைய புக் reader nu ninaikuren இலங்கைல இருந்து பேசுறீங்க போல இருக்கு ,,,,, .

      Delete
  38. டபுள் த்ரில் ஸ்பெஷல் கிடைத்து விட்டது. வண்ணக் கலவைகள் அட்டகாசம்! கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கிறது. லார்கோ தான் வண்ணத்தில் இது வரை வந்ததில் சிறப்பாக வந்ததாக நினைத்தேன். இப்போது இது அதனைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. 2013க்கு தயவு செய்து 1200 ரூபாய் சந்தா வாங்கி 12 வண்ண இதழ்கள் வெளியிடுங்களேன்? இப்படி அட்டகாசமான வண்ணத்தில் வரும் புத்தகம் 100 ரூபாய்க்கு மிகவும் மலிவு என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  39. தம்பிக்கு தம்பி பாண்டியன் தம்பி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பூந்தளிர் புத்தகம் லைன் காமிக்ஸ் இல் வந்த மாதிரி தெரியவில்லை .... கபிஷ் கு வால் மொளச்ச மாதிரி எங்க காதுல பூவ சுத்தாதீங்க .. அய்யா எடிட்டர் ... ஸ்டீல் claw மத்த அறிவாளிங்க இங்க இருகுரங்க சொல்லுங்க
    கபிஷ் .. புக் லைன் ல எபவவது பாது இருக்கீங்களா ,,, நன் பொறந்ததே 1975 லதான் கோகுல் மதன் சின்ன பைய்யன் மாதிரி இருக்கு ஆன அவங்க அப்பா பழைய புக் reader nu ninaikuren இலங்கைல இருந்து பேசுறீங்க போல இருக்கு ,,,,, ...

    ReplyDelete
  40. neenga romba kolapi vituta mathiri theriuthu ??? romba confusing ah iruku nan sonnathu thappo nnu ....

    ReplyDelete
    Replies
    1. முத்து காமிக்ஸ் நண்பர் திலீபன் கூறியது போல கபீஷ் வந்துள்ளது நண்பரே,அவர் கூறியது போல ஓவியங்கள் வித்தியாசமாய் ,அற்புதமாய் இருக்கும் .

      Delete
    2. வாங்க,ஸ்டீல் க்ளா!

      நமது ஆசிரியர் அவர்களின் தந்தையார் ஓய்வுபெற்று, நமது ஆசிரியர் முத்து காமிக்ஸ்ஐயும் பொறுப்பேற்றுக்கொண்ட காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும்கூட கபீஷ் கதைகள் இடம்பெற்றது என்பதை இவர்களுக்கு புரியும்படி எடுத்துக்கூறுங்கள்!

      Delete
    3. என்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன் எதாவது மனது புண்படும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும் .. நான் இலங்கைல் இருந்து பேசுகிறீகளா என்றுதான் கேட்டேன் அதில் நக்கல் நய்யாண்டி ஏதும் இல்லை ..... கோகுல் மதன் சிறுவன் அவர் கூறியதில் தவறு இல்லை நான் தன தெரியாம சொல்லிவிட்டேன் என்னை தான் அனைவரும் மன்னிக்கவேண்டும் ...

      Delete
  41. Kapish, supandi, Kakkai Kaali, Thupariyum Ranjith, Vettaikara Vembu and many more stories are published in Poonthalir, published by Vandumama. Don't confuse it with our Lion & Muthu Comics.

    ReplyDelete
  42. சிலருக்கு விஷயங்களை வாசித்து விளங்கிக்கொள்வதற்குக்கூட தெரிவதில்லை.

    லைனில்!! (லயனிலாம்!) பூந்தளிர் வந்ததில்லை என்கிறார் இங்கே ஒருவர்.

    முன்னே எழுதியிருப்பவர்கள், பூந்தளிரில் வந்த கதைகளை மீள்பதிப்பு செய்து நமது காமிக்ஸ்களில் வெளியிடலாமே என்று கேட்கிறார்கள். அது சாத்தியமில்லாத ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், முத்து காமிக்ஸ் இல் சுட்டிக்குரங்கு கபீஷின் கதைகள் வந்தது என்பதை யாராவது 'இல்லை' என்று மறுத்தால், அவர்கள் உண்மையில் நமது காமிக்ஸ்களின் 'கோல்டன் ஏஜ்' இதழ்களைக் கண்ணால் கண்டுகூட இருக்கவில்லை என்பதே அர்த்தம்.

    ஒன்றில், ஒரு விடயம் தமக்கு தெரியாவிட்டால் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்து அறிந்துகொள்ளவேண்டும். இல்லை, 'ஓ.. அப்படியா?' என்று கேள்விகேட்டு தாங்களே தேடிப் பார்க்கவேண்டும்! அதைவிட்டுவிட்டு, மற்றவர்களை சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் விரட்டக்கூடாது.

    யார் எந்த ஊரில், நாட்டில் இருந்து எழுதினால் என்ன? அனைவரும் நமது காமிக்ஸ்களில் விருப்பம்கொண்டுதானே இங்கே ஓடி ஓடி வருகிறார்கள்.

    சரி, கபீஷ் கதைகள் 'முத்து'வில் வரவில்லை என்றே வைத்துக்கொள்வோம்! அப்படியானால், இங்கே இந்த இணைப்பில் இருப்பவை நமது ஆசிரியரும், அவரது தந்தையாரும் தாங்கள் மட்டும் படிப்பதற்காக லே-அவுட் பண்ணி வைத்துக்கொண்ட பக்கங்கங்களா? (தலைவரே, அ.கோ.தீ.க தளத்திலிருந்து உங்கள் அனுமதி பெறாமல் இணைப்பை சுட்ட(டி) தற்கு மன்னிக்கவும்). போய்ப்பாருங்கள்; புரிந்துகொள்ளுங்கள்!

    இணைப்புக்கள்: http://lh5.ggpht.com/_563DQEzTL2s/SeCr5QFnLKI/AAAAAAAAAiQ/b_4BzeymAkU/s1600-h/Image.gif

    http://lh3.ggpht.com/_563DQEzTL2s/SeCm08ZDa0I/AAAAAAAAAf4/3jQv-2qm2XQ/s1600-h/12.gif

    ReplyDelete
    Replies
    1. ennai mannithu vidungal theriyamal solliviten enaku poonthalir il vanthathu thaan therium neengal ellam sonna pinnar than nan therinthu konden ...ennai mannithu vidungal ..ithai melum discuss panna vendam.. nan puthiyavan enaku nitchayamaga theriyathu.... sooo sooryy ,,

      thileeban sir...

      Delete
    2. என்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன் எதாவது மனது புண்படும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும் .. நான் இலங்கைல் இருந்து பேசுகிறீகளா என்றுதான் கேட்டேன் அதில் நக்கல் நய்யாண்டி ஏதும் இல்லை ..... கோகுல் மதன் சிறுவன் அவர் கூறியதில் தவறு இல்லை நான் தன தெரியாம சொல்லிவிட்டேன் என்னை தான் அனைவரும் மன்னிக்கவேண்டும் ...

      Delete
  43. நமது காமிக்ஸ்களின் வரலாற்றை பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே, அலசி ஆராய்ந்து எழுதிவரும் பல அருமையான பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளைப் போய்ப் படியுங்கள். காமிக்ஸ் மட்டுமல்ல.. ஏனைய சித்திரக்கதை இதழ்களின் வரலாறும், அவற்றில் வந்த கதைகளும், அவற்றிலும் நமது காமிக்ஸ்களிலும் வந்த ஒரே கதைகள் பற்றியும் அறியமுடியும். நமது இதழ்களில் கபீஷ் மட்டுமல்ல இன்ஸ்பெக்டர் கருடா போன்று பல இந்திய தயாரிப்பு கதைகளும் (புயல் வேக ..(பாலு?) ) இடம்பிடித்திருந்தன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்! வரலாறு முக்கியம் அமைச்சரே!!!!

    ReplyDelete
  44. இது யாருக்கும் சப்போர்ட் செய்யும் கமெண்ட்டும் அல்ல, யாரையும் எதிர்க்கும் கமெண்ட்டும் அல்ல. ஒரு பொதுவான கமென்ட்.

    அங்கிள் பாய் அவர்களின் மேற்பார்வையில் வெளியான பல கதைகளை நமது முத்து - லயன் காமிக்ஸ் குழுமத்தினர் தமிழில் வெளியிட்டுள்ளனர்.

    உதாரணமாக கபீஷ், ராமு & சோமு, சுட்டிப் பெண் போன்றவை இப்போதும் டிங்கில் இதழ்களில் வந்து கொண்டு இருப்பவை. இவற்றை நமது முத்து, முத்து காமிக்ஸ் வார மலர், இவ்வளவு ஏன் ஆரம்ப கால லயன் காமிக்ஸ் இதழ்களிலும் காணலாம்.

    இதை தவிர Faster fenay என்கிற கதை வரிசை வாயுவேக வாசு, bipin என்கிற கதை வரிசை புத்தக பிரியன் பிரபு என்கிற பெயரிலும் முத்து மினி காமிக்ஸ் இதழ்களில் வந்துள்ளன. இதைதவிர இன்ஸ்பெக்டர் விக்ரம், கருடா போன்றவையும் முத்து, முத்து மினி, மினி லயன் மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களில் வந்துள்ளன.

    ஒரு விஷயம் புரிய மாட்டேன்கிறது: நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் பேசுவது அவரவர் விருப்பம். ஆனால் அதனை ஒருவர் சொல்ல வரும்போது அதனை காது கொடுத்து கேட்டல் நலம். அதற்காகவே இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரு வாயையும் கொடுத்துள்ளான்.

    ReplyDelete
    Replies
    1. ஒலக காமிக்ஸ் ரசிகன், நன்றி உங்கள் விரிவான தகவல் உதவிக்கு.

      புயல்வேக பாலு இல்லை.. வாயுவேக வாசுதான் சரியானது. சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை.

      காமிக்ஸ்களில் மூழ்கி திளைத்த பலரும் எழுதுவதை 'ஆ!'வென்று வாய் பிளந்து ரசிக்கும் சிறுவன் நான். ஏதோ, நான் படித்தவற்றையும் என்னிடம் எஞ்சியிருக்கும் ஒரு சில காமிக்ஸ்களில் பார்த்தவற்றையும்கொண்டு கபீஷ் பற்றி எழுதினேன். அதற்கு பரிசாகக் கிடைத்த நக்கல், நையாண்டிகளை பார்த்தீர்களா? 'வரலாறு' படத்தில் கிரேன் மனோகர் சொல்வார் "வேணாம். உண்மையச் சொன்னா.. பைத்தியம்பாங்க..."!

      Delete
    2. //ஒரு விஷயம் புரிய மாட்டேன்கிறது: நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் பேசுவது அவரவர் விருப்பம். ஆனால் அதனை ஒருவர் சொல்ல வரும்போது அதனை காது கொடுத்து கேட்டல் நலம். அதற்காகவே இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரு வாயையும் கொடுத்துள்ளான்.//
      சரியாக சொன்னிர்கள் நண்பரே ,இங்கு ரசிக்க ,உங்கள் அனைவரிடம் உள்ள காமிக்ஸ் பற்றிய சிந்தனைகளை ரசிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன சகோதரர்களே ,இருவரும் உங்களது அடுத்த சிறந்த ,மனதை ஈர்க்கும் நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளலாமே ..................அடுத்த உங்கள் விருப்பமான ,எதிர்நோக்கும் புத்தகங்களை முன் வையுங்களேன் .....

      Delete
    3. நான் இட்ட கமெண்ட்டை மறுபடியும் படிக்கும்போது ஏதோ ஒரு அதிகார தொனியில் இருப்பதாகவே படுகிறது.

      ஏதோ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கருத்து கந்தசாமி ஆக எதையும் சொல்ல விரும்பவில்லை.

      நண்பர்கள் மனம் நோகும்படி இருந்தால் மன்னிக்கவும்.

      Delete
  45. முன்னட்டையில் எழுத்துப்பிழை, அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியது என்று இங்கே நண்பர்கள் பலவிடயங்கள் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்த இதழை இன்னும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்த இதழின் அட்டைப் படங்களை ஆசிரியர் வெளியிட்டவேளை, துண்டைப்போட்டு முதலாவதாக இட்ட பின்னூட்டங்களை தயவுசெய்து ஒரு தடவை மீண்டும் படித்துப்பாருங்கள் நண்பர்களே! அச்சில் வருமுன்பே இச்சிறுவன் சொன்ன விடயங்கள் நியாயமானவைதானே?

    ஆசிரியரின் பதிவும், நான் துண்டுபோட்டு இடம்பிடித்துப் போட்ட பின்னூட்டமும் இருக்குமிடம்:

    http://lion-muthucomics.blogspot.com/2012/06/blog-post_19.html

    ReplyDelete
    Replies
    1. நான் அப்படியே ஏற்று கொள்கிறேன் நண்பரே,பார்ப்போம் நமது பிற நண்பர்களின் கருத்துக்களையும் .............

      Delete
  46. அன்பு ஆசிரியர் அவர்களுக்கு ,

    அட்டை படமென்றால்,நமது லயனில் 100 ரூபாய்க்கு இதழ்கள் வெளியிட்ட அட்டை படங்களிலே பெஸ்ட் கௌ பாய் ஸ்பெசல்தானென நினைக்கிறேன் (200 வது இதழ் ) .முன்,மற்றும் பின் அட்டை படத்தை மிஞ்சுமளவிற்கு இனி அட்டை படத்தை வழங்க அதை வரைந்த ஓவியருக்கே சாத்தியபடுமா எனுமளவிற்கு,வண்ணங்களும் ,எழுத்து அமைப்பும்,அந்த சீறி கொண்டு நிற்கும் குதிரையும்..................அட்டை படத்தை பார்த்தாலே போதும் .அட்டை படத்திற்காகவே அந்த நூறு ரூபாயும் போதாதென நினைக்கிறேன்.தங்க கல்லறைக்கு மிக பொருத்தமான ,இதை விட சிறந்த அட்டை படத்தை எதிர்நோக்கி ...............

    ReplyDelete
    Replies
    1. தங்கக் கல்லறைக்கு ஒரிஜினல் இதழ்களின் அட்டைப்படம் வரும் என நினைக்கிறேன்..

      Delete
    2. எப்படியோ,அட்டையை பார்த்தவுடன் வாங்கும் எண்ணத்தை தூண்டசெய்வதாய் இருக்க வேண்டும் நண்பரே ......நமது கை வண்ணமாயிருந்தாலும் சரி ,ஒரிஜினலெனினும் சரி , choose the best

      Delete
  47. மை டியர் மானிடர்களே.நமது காமிக்ஸ் நண்பர்கள் பெஞ்சமின் பட்டன் போல குழந்தையாக மாற ஆரம்பித்துவிட்டார்கள்.கபீஸ் என்கிறார்கள்.காக்கை காளி என்கிறார்கள்.கருடா என்கிறார்கள்.வாசு என்கிறார்கள்.இப்படியே போனால் அப்புசாமி,ரசகுண்டு,பீமாராவ்,சீதாப்பாட்டி,போன்றவர்களையும் இழுப்பார்கள் போலிருக்கிறது.இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இரும்புக்கை மாயாவியின் டப்பாவே டான்சாடுகிறது.இந்த லச்சணத்தில் மேற்ப்படி வாசக குழந்தைகளின் கோரிக்கையை ஏற்றால் நமது காமிக்ஸ்களுக்கு நிச்சயம் மூடுவிழா நடத்த வேண்டியதுதான்.(யார் அந்த பெஞ்சமின் பட்டன்?என்று கேட்டுவிடாதீர்கள்.ஹிஹி).

    ReplyDelete
  48. I have noticed that we are writing the postal address manually every time for sending our books through post/courier! it take lot of time to write the address. Instead of that we can have a data base for whoever subscribed for our comics and have a serial number for each subscriber. While sending them every month through post/courier we can take a printout of them and stick for address and send! this will help you in reducing the time of writing and easy to track whom all we have sent through the serial number.

    ReplyDelete
  49. nice suggestion dear Parani!
    data base...
    serial number...
    print-out...

    Editor sir, I hope this may reduce our staff's work load & sometimes confusions too.

    ReplyDelete
  50. அன்பு எடிட்டருக்கு,

    இக்கதை வெளிவந்த காலங்களில் நான் பிறந்திருக்கவே இல்லை, 1980 க்கு மத்தியில் தான் காமிக்ஸ் அறிமுகமே கிடைத்தது. எனவே, அந்த கோல்டன் வருடங்களை காமிக்ஸ் நண்பர்கள் நினைவு கூறும் போது ஆச்சர்யமாக கேட்டே தெரிந்திருக்கிறேன்.

    பிற்காலத்தில் அவர்கள் கலெக்ஷனில் இந்த புத்தகத்தை முழு கலரில் பார்த்த போது, நம்மிடமும் இல்லையே என்று ஏக்கம் மட்டுமே தொற்றி கொண்டு விட்டது. பிற்பாடு காமிக்ஸ் கிளாசிக்கில் வெளிவந்த போது கருப்பு வெள்ளை கதைகள் அந்த பழைய மேஜிக்கை நிகழ்த்தவில்லை என்பது வருத்தம். மீண்டும் இந்த புத்தகத்தை வண்ணத்தில் வெளியிடுங்களேன்.... சொல்ல போனால் அனைத்து ஸ்டீல் க்ளா வண்ண தமிழ் இதழ்களையும் இணைத்து கிளாசிக்கில் வெளியிடலாம், புதிய பரிணமாத்தில்.

    ஒரிஜினல் அட்டை ஓவியத்தை இன்றும் பேணி காக்கும் உங்கள் லாவகம் அலாதி. இப்படி உங்களிடம் பத்திரமாக இருக்கும் அரிய ஓவியங்களை அவ்வப்போது பதிவேற்றி எங்களை மகிழ்வியுங்கள்.

    ReplyDelete
  51. நண்பர்களே! என்னுடைய காமிக்ஸ்

    கலெக்ஷனில் சட்டையில்லாத(?!) காமிக்ஸ் ஒன்று உள்ளது.

    இரு வண்ண புத்தகம். ஷெர்லக் ஹோம்ஸ் (இவர் வேறு!) பல வேடங்களில் பலரை போல மாறி துப்பறிவார்.

    இந்த நகைச்சுவை கதை நமது ஜுனியரில் வந்ததா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அவரது சாகசங்கள் சில நமது காமிக்ஸ்ல் வந்துள்ளன. ரசிக்கத்தக்கவை. ஆங்கிலத்தில் இவர் 'ஹெர்லக் ஷோம்ஸ்'!

      Delete
  52. பதிலுக்கு நன்றி. அப்படியே கதைகளின் பெயர் லிஸ்ட் பீளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்து விற்பனைக்கு ஒரு பேய் மற்றும் எழுந்து வந்த எலும்புக்கூடு இரண்டு புத்தகம் உள்ளன.
      அதனை பற்றிய பதிவிற்கு

      என்னுடைய இந்த பதிவை பாருங்கள்.
      http://www.kittz.info/2012/07/xi-modesty-blaise-collections.html

      Delete
  53. ''காணமல் போன கடல்'' நேற்று கூரியரில் வந்தது.
    வடக்கே சென்று பனிபுரம் கண்ட நண்பரே உமக்கு கோடி நன்றி ...
    டேவிட் தன் தலைக்கு மேல் உள்ள இரும்பு முள் உருண்டையை முடுச்சு போடும் இடம் அபாரம்.

    ReplyDelete
  54. Nanbargale kolaikara bommai story Johnny kathai mathiriye oru thrliller story arumai

    ReplyDelete
  55. Dear editor,
    2013 வருடத்திற்குரிய நமது வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள் தயாராகிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், எனக்குத் தோன்றிய ஒரு விஷயத்தை உங்கள் பரிசீலணைக்காக வைக்கிறேன்.

    ஒருவாரம் முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவின்போது நமது ஸ்டால்களில் நான் கவனித்தவை::

    1. Lion new look special - அனைத்துத் தரப்பினரையும் (குறிப்பாக இளம் வாசகர்களை) கவர்ந்து, விற்பனையிலும் தூள்கிளப்பியது. காரணம்,
    * அட்டகாசமான அட்டைப்படத் தரம்.
    * இளம் வாசகர்களை சுண்டியிலுக்கும் கார்ட்டூன் பாணியிலான நமது லக்கிலூக்.

    2. என் பெயர் லார்கோ - அதிகம் கவரவில்லை. காரணம்,
    * வண்ணங்கள் குறைந்த, சோம்பலான அட்டைப்படம்.
    * அதிகம் அறிமுகமில்லாத லார்கோ.

    இனிவரும் காலங்களில் லார்கோ கலக்கப்போகிறார் என்றாலும், அட்டைப் படத்தில் நீங்கள் செய்திருந்ததைப் போல பரிட்சார்த்த முயற்சிகள் வேண்டாம் என்று தோன்றுகிறது.
    இளம் வாசகர்களைக் கவர அவ்வப்போது நம் கார்ட்டூன் கதாநாயகர்களான லக்கிலூக், சிக்பில் குழுவினருக்கும் சற்றே அதிக வாய்ப்பளிக்கலாமே!

    இதில் நண்பர்களின் கருத்துக்களை அறியவும் ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே,அட்டை படம் மிகவும் முக்கியம்,ஒருவரை ஈர்க்க ,அவர் வாங்கிய பின்னர் நமது கதைகளின் தரமே அவரை தொடர செய்யும்,கண்டிப்பாக தொடர்வார் தரமான கதைகளே இது வரை வெளிவந்துள்ளன.லக்கி லூக்கை விட சிறந்த கதை வரிசைகள் நம்மிடையே உள்ளன என நினைக்கிறேன். மேலும் உள்ளே வண்ணத்தை அற்புதமாய் படைத்த லார்கோ,பிரின்ஸ்,மற்றும் நீங்கள் கூறிய சிக்பில் லக்கி லூக்கை விட காமெடி பின்னும் வரிசை ,ஆசிரியர் வெளி விடாமல் பாதியில் நிறுத்திய பல கதைகள்,சிந்துபாத் (கதைகள் சுமாரா என தெரியவில்லை 20 கதைகள் உள்ளன என கூறி விட்டு ஒரே ஒரு கதையைதான் வெளிவிட்டரென நினைக்கிறேன்.),அலிபாபா,என்னை மிகவும் ஈர்த்த கோடை மலரில் வந்த ஈகிள் மேன், டேஞ்சர் டயாபாலிக் ,கேப்டன் அலெக்சாண்டர் ,டைனமைட் ரெக்ஸ் , அவளவுதான் என் நினைவில் ...............மீதம் நினைவில் உள்ள நண்பர்கள் கூறலாமே ,

      அட்டை படமென்றால்,நமது லயனில் 100 ரூபாய்க்கு இதழ்கள் வெளியிட்ட அட்டை படங்களிலே பெஸ்ட் கௌ பாய் ஸ்பெசல்தானென நினைக்கிறேன் (200 வது இதழ் ) .முன்,மற்றும் பின் அட்டை படத்தை மிஞ்சுமளவிற்கு இனி அட்டை படத்தை வழங்க அதை வரைந்த ஓவியருக்கே சாத்தியபடுமா எனுமளவிற்கு,வண்ணங்களும் ,எழுத்து அமைப்பும்,அந்த சீறி கொண்டு நிற்கும் குதிரையும்..................அட்டை படத்தை பார்த்தாலே போதும் .அட்டை படத்திற்காகவே அந்த நூறு ரூபாயும் போதாதென நினைக்கிறேன் .

      Delete
    2. ஏற்கனவே நெட்டில் பார்த்து சலித்துப் போனதாலும் 'டல்' கலர் என்பதாலும் லார்கோ அட்டைகள் என்னை கவரவில்லை. ஸ்பெஷல் இதழ்களின் அட்டைப்படங்களில் 'மெகா டிரீம் ஸ்பெஷல்' தான் என்னை பொருத்த வரை டாப் (டெக்ஸ், டைகர், லக்கி ஒன்றாக குதிரைகளில் வருவார்களே). சாதாரண சைஸ் இதழ்களில் 'லயன் சென்ச்சுரி ஸ்பெஷ்ல், மின்னும் மரணம்' ஆகியவை சிறப்பாக இருக்கும்.

      பளிச் வண்ண அட்டைகளே எனது விருப்பமும்....

      Delete
  56. விஜயன் சார் ஒரு சிறு சந்தேகம்.
    ரு 100 விலையில் வந்த லயன் கம் பேக் ஸ்பெசல் 200 பக்கங்கள்.
    பின்பு வந்த அனைத்து புத்தகங்களும் 150 பக்கங்கள்.
    இது ஏன் சார்.

    ReplyDelete
  57. எனக்கு இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது . பாளையம்கோட்டை தெற்கு பஜார்-ல் இரண்டு பழைய பேப்பர் கடைகள் உண்டு. ஒரு கடையில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த மாற்று திறனாலி ஒருவர் உண்டு அவரிடமே காமிக்ஸ்கள் வாங்குவேன். இந்த "கொள்ளைக்காரப் பிசாசு" அவர் எனக்கு அட்டை இல்லாத புத்தகமாகத்தான் தந்தார் அன்று எனக்கு இரண்டு புத்தகங்கள் கொடுத்தார் 15 பைசாவுக்கு. ஒன்று "கொள்ளைக்காரப் பிசாசு" மற்றது என்னை வெகுவாக கவர்ந்த தலைக்கேட்ட தங்கப்புதையல். புத்தகத்தின் நிலையை பொருத்து 10 பைசா முதல் 25 பைசா வரை கொடுப்பார். அட்டை இல்லாததால் 5 பைசாவுக்கு கொடுத்தார் என்று நினைக்கிறேன். எனவே நான் அந்த அட்டைப்படத்தை பார்த்ததில்லை. புதிய கதைகள் வாங்க அப்பொழுது நிலைமை இல்லை. எனவே உடனே தொடர்ச்சியாக எல்லா கதைகளையும் நான் படித்ததில்லை. அவர் கொடுத்த புத்தகங்கள் மட்டுமே எனது லைப்ரரி. அந்த கதைகளை படிக்க சொந்தக்கார சிறுவர்கள் அதிகம் எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவார்கள். பின்னர் வேலை நிமித்தம் வெளிமாநிலம் சென்றதால் எனது லைப்ரரி காணாமல் போனது.
    2012 சென்னை புத்தககண்காட்சிக்கு பிறகே மறுபடியும் காமிக்ஸ் வாசிக்க தொடங்கினேன். ஒரு நண்பர் மூலம் சில சமிபத்திய கதைகள் கிடைத்தது. அதில் இருந்த ஒரே பழைய புத்தகம் காமிக்ஸ் கிளாசிக்-ல் வந்த "கொள்ளைக்காரப் பிசாசு". சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பழைய புத்தக கடையில் 7 காமிக்ஸ் கிளாசிக் மற்றும் ஒரு லயன் ஆண்டு மலரும் கிடைத்தது. அந்த பேப்பர் கடைக்காரர் வியப்புடன் நான் இந்த மாதிரி கதைகளை பார்த்து நான்கு ஐந்து வருடங்கள் இருக்கும் என்று சொன்னார்.
    அதில் மறுபடியும் ஒரு "கொள்ளைக்காரப் பிசாசு இருந்தது. எனவே இப்பொழுது காமிக்ஸ் கிளாசிக்-ல் வந்த இரண்டு "கொள்ளைக்காரப் பிசாசுகள் என்னிடம் உள்ளது. வண்ணத்தில் இல்லை.
    -க.பரிமேலழகன்.

    ReplyDelete
  58. பெரியோர்களே தாய்மார்களே, சென்ற ஆசிரியரின் பதிவான "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" வில் நமது நண்பர் ஒலக காமிக்ஸ் ஒரு லிங்க் "கோவையில் ஒரு குற்றம்"தந்து இருந்தார். மெகா காமெடி ஸ்பெஷல் அந்த லிங்க். எனது கருத்துக்கள் இங்கே.
    //நண்பர் முத்து விசிறியின் பாலிசி தான் என்னுடையதும் - பத்து ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பழைய புத்தகமும் வொர்த் இல்லை. அதை அந்த விலை கொடுத்து வாங்குவதும் தேவை இல்லை.- ஒலக காமிக்ஸ்//
    நல்லா சொன்னிங்க பாஸ், எப்புடி எப்புடி? அதனால் அநியாயமாக 15 ரூபாய் 20 ரூபாய் 50 ரூபாய் என்று எந்த பழைய புத்தக கடை காரராவது ஏமாற்றினால் நமது ஒலக காமிக்ஸ் சொன்ன வரிகளை அந்த கடைகாரரிடம் எடுத்து விடலாமே ப்ளீஸ்!!!! (நான் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தந்து மட்டுமே எந்த பழைய புத்தகமும் வாங்குவேன் ஹி ஹி ஹி அது முத்து முதல் வெளியீடாக இருந்தாலும் வொர்த் இல்லை என்பது எனது பாலிசி. எனக்கும் பாலிசி தான் முக்கியம் புக் அல்ல ஹி ஹி ஹி )
    நாம் என்ன சிங்கப்பூர் (பல ஆயிரம் பெரும்) ஒரிஜினல் கலர் புக்ஸ் தந்து பழைய மெருகு குறையாத முத்து, லயன், மினி லயன் , திகில் காமிக்ஸ் யா வெளி உலகம் அறியா வாசகர்களிடம் வாங்க முடியும்? தெரியுமா உங்களுக்கு? அதில் பின் பிரிக்க வில்லை என்றால் இரண்டு மூன்று கலர் ஒரிஜினல் உண்டாமே? இந்த விடயமும் என்னுடைய ஹை ஃப்ரீக்வன்சி ட்ரான்ஸ்பான்டர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டது தான். அனுபவப்பட்டவர்கள் இந்த விடயத்தை உறுதி செய்யலாமே ப்ளீஸ்...
    நமது ஒலக நண்பர் சொன்னது சரி தான்... இது பண்ட மாற்று முறை தானே? பணம் தர வில்லையே. எனவே இவர்களது பாலிசி இல் இருந்து விலகாது உள்ளனர்...
    பின் குறிப்பு: இதில் எந்த வித உள் அர்த்தமும் இல்லை நண்பர்களே...
    சமர்ப்பணம்: அயல்நாட்டு காமிக்ஸ் கு ஆசைப்பட்டு இருக்கும் பழைய அரிய முத்து, லயன், மினி லயன் , திகில் காமிக்ஸ் ஐ இழக்கும் நமது ஏமாளி நெஞ்சங்களுக்கு...
    புத்தக ப்ரியன்

    ReplyDelete
  59. பார்ட் 2
    //ஆனால் நண்பர்களே, பிரச்சினை இதுவல்ல. இங்கே இருக்கும் அணைத்து புத்தகங்களுமே லேட்டஸ்ட் புக்ஸ் தான். அப்படி இருக்க இவை ஒவ்வொன்றும் விலை இருவது ருபாய் என்றே இந்த கடைகாரர் விற்கிறார். வழக்கமாக பத்தடு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த புத்தகங்கள் இப்படி சில தீவிர வேட்டையர்களால் இப்போது இருவது ருப்வாய் என்கிற விலையை எட்டியுள்ளது. இதுதான் கவலை அளிக்கும் விஷயம். இதனை படிக்கும் நண்பர்கள் சற்றே யோசிக்க வேண்டும்.- ஒலக காமிக்ஸ் //

    கேட்டிர்களா நண்பர்களே? தீவிர வேடையர்களே!!! தயவு செய்து யோசித்து பாருங்கள், சிந்தித்து செயல்படுங்கள். அதிக விலைக்கு விற்கும் காமிக்ஸ் கடைகளை ஐ பஹிஷ்கரியுங்கள். (அப்போ தானே எங்களுக்கு அங்க வரும் போது அந்த புக்ஸ் கிடைக்கும் ) நமது இந்த செயலின் வாயிலாக தமிழ்நாட்டில் பழைய காமிக்ஸ் விலையை பத்து ரூபாய்க்கும் கீழே குறைக்க அனைவரும் ஒன்றுபடுங்கள்... (ஹி ஹி ஹி இதில் எந்த வித உள் அர்த்தமும் திரும்பவும் இல்லை. ஹி ஹி ஹி உபயோக படுத்தியதற்கு புனித சாத்தான் மன்னிப்பாராக ஹி ஹி ஹி )
    கண்டனம் : இருவது ருப்வாய் விலையை அநியாயமாக எட்ட வைத்த தீவிர வேட்டையர்களுக்கு!!!
    புத்தக ப்ரியன்

    ReplyDelete
  60. காமிக்ஸ் வளர ரூம் போட்டு யோசித்ததில்(?!) உதித்த சில ஐடியாஸ்.!!

    1.நாம் காமிக்ஸ் படிப்பதை நம் குட்டீஸ்களிடமும் அறிமுகப்படுத்த வேண்டும்.(7,8 வயதுகளில்) (எனக்கும் இந்த வயதுகளில் தான் அறிமுகமானது)!

    இதற்கு ஒரு பக்க கதை அவசியம் தேவை. கலர் மிக முக்கியம். ( கபீஷ், காக்கா காளி, விச்சு கிச்சு, இரத்த வெறியன் ஹேகர் போன்றவை)
    ஏனென்றால் குட்டீஸ்கள் அந்த படங்களால் கவரப்பட்டு சிறுசிறு கதை களை படித்து பழக எளிதாக இருக்கும். பிறகு அவர்கள் வளர வளர பெரிய கதைகளை அவர்களே படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

    ReplyDelete
  61. அது என்னமோ தெரியவில்லை இரும்புக் கை மாயாவியை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒரே வள வள என்று போகிற மாதிரி இருக்கு. அதே டெம்ப்லேட் வகையான யுக்திகளுடன் அவர் செய்யும் சாகசங்கள் (?) சவ சவ. ஆசிரியர் அதற்க்கு ஒரு பதிவை போட்டிருப்பதை பார்த்தல் வயிற்ரை கலக்குகிறது.

    ReplyDelete
  62. குற்றத்தின் தலைநகரம் சென்னை ,,,,,,,,,,,,,,, டியர் friends ,,,,,,,,, சென்ற வாரம்,,,,, சென்னை டேரா,,,,,,,,,,,, அது என்னங்க அப்படி ஒரு காமிக்ஸ் வறட்சி அந்த ஊரில்,,,,,,,,,,ஒரு இடம் பாக்கி இல்லாமல் ,,,,,,,,, எல்லா பழைய புத்தக கடைக்கும் அலைந்தேன் ,,,,,,,,,, ஒரு பழைய ராணி காமிக்ஸ் கூட கிடைக்க வில்லை ,,,,,,,,,,,,,, என்ன கொடுமை சரவணன் இது ,,,,,,,,,,,,,,, மூர் மார்க்கெட் ல் அந்த நாற்றத்தையும் தாண்டி,,,,,,,,, உள்ளே நுழைந்தேன் ,,,,,,,,, ஒரு புத்தக கடை ல் புத்தக கடை காரன்,,, பையன் என்று நினைக்கிறன் ,,,,,,, அப்பா உச்சா,,,,,,,,, என்றான் ,,,,,,,, அங்கே போடா என்றார் ,,,,,,, புத்தக சந்தில் சர்ர் ,,,,,,,,,,,, தயங்கிய படியே ,,,,,,,,, சார் ,,,,பழைய தமிழ் காமிக்ஸ் ,,,, ,,,,,, என்னது காமிகிறியா? என்று புத்தக கடைக்காரர் கேட்டார் ,,,,, அது எதோ கெட்ட வார்த்தை போல தெரிந்ததால் ,,,,,,,,, திரும்பவும் ஹஸ்கி வாய்ஸ் ல் சார் காமிக்ஸ் ?,,,, திரும்ப அவர் ,,,,,என்னது காமிகிரியா,,,,, என்று கேட்க ,,,,,, நான் இடத்தை காலி செய்தேன் ,,,,,,,,, அட கொய்யாலே ,,,,,,,, colleage படிக்கும் போது,,,,,,,, பழைய புத்தக கடையில் சரோஜா தேவி புக் ( அது என்ன புக் என்று கேட்பவர்கள் saint sathan யை தொடர்பு கொள்ளுங்கள் ,,,,, எனக்கு அறிமுக படுத்தியவரே அவர்தான் ,,,ஹி ஹி ,,,) கேட்கும் போது கூட இவளவு பம்மியது இல்லை ,,,,,,,,, சார் காமிக்ஸ் ,,,, ஒரு கடை விடாமல் ஏறி எறங்கினேன் ,,,,, கடைகாரர்கள் , பக்கத்துக்கு கடை பாரு,,,,, என்று சொல்ல ஒருகணம் பிச்சை காரன் போல உணர்ந்தேன் ,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, ,,,,, local பாய்ஸ் க்கு காமிக்ஸ் கிடைக்க விடாமல் ,,,, nri இடம் பணம் வாங்கி,,,,, அதில் ஒரு பிட்டு புத்தக கடையில் முன்பணம் கொடுத்து ,,,,, ,,, ,,, சிங்கபூர் &மலேசியா என்று புத்தகம் கடத்தும் ,,,,,,, ஒலக மகா காமிக்ஸ் கடத்தல் ரசிக மன்னர்களே ,,,,,,,,,, உங்களை பாராட்ட வார்த்தை கூகுளே ல் தேடி கொண்டு இருக்கிறேன் ,,,,,,,,,, அது எப்படிங்க மக்களே ,,,,,,,,, பார்வதி சித்திர கதை( வாண்டு மாமா ) கூட கிராக்கி பண்ணி விட்டு டிங்க அதுக்கும் nri ல் demand ஆ என்ன ?,,,,,,,,,,,,,கலை பொன்னி காமிக்ஸ் என்று ஒரு பச்சா காமிக்ஸ் வந்ததே ,,,,,,,,, அதையும் ஒரு கும்பல் தேடி அலையுதாம்,,,,,,,,,,,,,,, என்னாங்கடா கொடுமை இது ?,,,,,,,,,,, எதுவும் புரியாமல் தவிக்கும் ,,,,,,,,,, உங்கள் லூசு பையன் ,,,,,,,,, ,,,, டேக் கேர் guys

    ReplyDelete
    Replies
    1. லூசு பையன் அவர்களே.எங்கே எதை தேடுவது என்கிற ஞானமே உங்களுக்கு இல்லையே.போயும் போயும் சென்னையில் காமிக்ஸ்களை தேடி அலைகிறீர்களே.அதற்க்கு சரோஜா தேவி கதைகளையே தேடியிருக்கலாம்.(சாத்தானுக்கு கன்னட பைங்கிளி சரோஜா தேவியைத்தான் பிடிக்கும்.ஹி ஹி).

      Delete
  63. சென்னை காமிக்ஸ் பாலைவனமா மாறிடுச்சா ?
    அடடா ...காமிக்ஸ் கடத்தல் ரொம்ப பாதிச்சிருச்சு போல இருக்கு ?
    லூஸ் தம்பி இந்த வாரம் பழைய காமிக்ஸ் பத்து கிடைக்க வாழ்த்துக்கள் .
    அடுத்த பயண கட்டுரை எப்போ எந்த ஊரு ?

    ஊரு விட்டு ஊரு வந்து காமிக்ஸ் கீமிக்ஸ் தேடாதிங்க ........

    ReplyDelete
  64. loose payyan kavalai padavendam! annasalai lic arugil ulla bustand oramai old bookshop ulladhu!
    metro rail project irupadhal konjam maraindhu irukum. arugil karumbu juice kadai undu ange sendru ketal
    kandippaga comics kidaikkum. eng and tamil (nane sendru neraya murai vangi ullen)

    ReplyDelete
  65. நண்பர்களே,
    நமது லயனின் காந்தக்கண்ணழகி மாடஸ்டி பற்றிய சில/பல சுவையான தகவல்களுக்கு நம் நண்பர் பாலாஜி சுந்தரின் வளைத்தளத்திற்கு ஒரு விசிட் செய்யலாமே!

    http://picturesanimated.blogspot.in/

    ReplyDelete
  66. comics con banglore il comics exibition paraka varukiren ... anga cheap and best ah hotel ulllatha .. angey 500 rs il thanga mudiuma .. thayvu srithu banglore nanbargal thagaval thanthal nanraga irukum..banglore bustand il irunthu evalavu thooram koramangala ... ponrtra thagaval gal tharavum pleaseeeeeeeeeee

    ReplyDelete
  67. மை டியர் மானிடர்களே.உங்களிடம் உள்ள பழைய காமிக்ஸ்களை குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ள புனித சாத்தான் பெருந்தன்மையுடன் சம்மதிக்கிறான்.ஆகவே ,லூசு பையன்,புத்தக பிரியன்,மதியில்லா மந்திரி,ஈரோடு ஸ்டாலின்,விஜய்,கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா,ஆகிய அருமை நண்பர்கள் தங்களிடம் உள்ள பழைய காமிக்ஸ்களை புனித சாத்தானுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டுமாறு கேட்டு கொள்கிறேன்.(புனித சாத்தான் ஒரு கார்பரேட் வியாபாரி.ஹிஹி).

    ReplyDelete
  68. Mandhiri visting tanjavur tommorow. any old book house to get comics?please reply friends

    ReplyDelete
  69. இங்கே.. ஆசிரியர் திரு.விஜயன் அப்படீன்னு ஒருத்தர்....

    ReplyDelete
  70. நண்பர்களே! இன்று 30/8/2012 முதல் மதுரையில் ஆரம்பித்துள்ள புத்தக கண்காட்சியில் லயன் , முத்து &cc காமிக்ஸ்கள் ஸ்டால் எண் 125,126 "இந்து பப்ளிகேஷன்"ஸில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள நண்பர்கள் இந்த இனிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

    ReplyDelete
  71. MAAYAVI,CID LAWRENCE JUDO DAVID,JOHNY NERO,STELLA ELLORUM MARAKKAMUDIYATHA COMICS HEROES,40 VARUDANGALUKKU MUNBIRUNTHU IVARKALAI RASITHU PADITHATHU INTRUVARAI PASUMAYAI NINAVIRUKIRATHU.NADUNISI KALVAN MY FAVOURITE ISSUE

    ReplyDelete
  72. MAAYAVI,CID LAWRENCE JUDO DAVID,JOHNY NERO,STELLA ELLORUM MARAKKAMUDIYATHA COMICS HEROES,40 VARUDANGALUKKU MUNBIRUNTHU IVARKALAI RASITHU PADITHATHU INTRUVARAI PASUMAYAI NINAVIRUKIRATHU.NADUNISI KALVAN MY FAVOURITE ISSUE

    ReplyDelete
  73. ஓவியர்கள் உலகமே தனி தான்.. அவர்கள் தொலைந்து போனாலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் கலை வழியே

    ReplyDelete