நண்பர்களே,
வணக்கம். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் அகவையும், முன்மண்டையில் காலி ப்ளாட்டும் ஏறிக் கொண்டே போனாலும், குட்டிக் கரணப் படலம் என்னவோ குறைந்த பாடைக் காணோம்! இதைக் குசும்பென்பதா? கொழுப்பென்பதா? நமது டீமின் மீதுள்ள நம்பிக்கையென்பதா? குடாக்குத்தனமான கணக்கென்பதா? அறியில்லா!! But ஒரு புத்தாண்டின் துவக்கமும், புதுத் தடத்தின் முதல் புள்ளியும், சென்னைப் புத்தக விழாவும், ஒருசேரச் சந்திக்கும் போது மறை பச்சக்! என தானாய் கழன்று கொள்கிறது! So வெல்கம் guys to தி சென்னை மேளா “25...!!
சென்னைப் புத்தக விழா! ஆண்டுதோறும், சிறு நகரம், பெரு நகரமென புத்தகத் திருவிழாக்கள் அரங்கேறினாலும் சென்னை தான் அத்தினிக்கும் தாதா; பிஸ்தா; ஜித்து என்பதை ஊரறியும்! So ஒவ்வொரு வருடமும் மனசு நிறைய எதிர்பார்ப்புகளோடு, முந்தைய வருஷங்களின் அனுபவங்களைப் பாடமாக்கிய கையோடு களமிறங்க முனைவதே வாடிக்கை! And no different this time too!
வாங்கும் திறனிலும் சரி, வருகை தருவோரின் எண்ணிக்கையிலும் சரி, சென்னை வூடு கட்டி அடித்தாலும், சமீப ஆண்டுகள் வரையிலும் அங்கு நிகழ்ந்து வந்த (நமது) விற்பனைகளில் இருந்த வரைபடத்தினை கிரகிக்க நமக்கு சாத்தியப்பட்டிருக்கவில்லை! “ஜனம் வர்றாங்க... அந்த நொடியில் ஈர்த்திடும் இதழ்களை வாங்கிடுகிறார்கள்!” என்றே முன்னெல்லாம் நினைத்திருந்தோம்! ஆனால் 2022 முதலாய் ஜுனியர் எடிட்டர் அறிமுகம் செய்திருந்ததொரு விற்பனை சார்ந்த Software-ன் புண்ணியத்தில் இந்த 2 1/4 வார மேளாக்களின் முடிவில் ஸ்பஷ்டாய் ஒரு pattern இருப்பதைப் புரிந்திட இயன்றது! இங்கு வருகை தரும் நண்பர்களில் மிகக் கணிசமானோர் casual walk-in readers அல்ல; ஆண்டுதோறும் தங்களது ஆதர்ஷ நாயக / நாயகியரின் இதழ்களை ஸ்டாலில் தெளிவாய் வாங்கிச் செல்கின்றனர் என்பதும் புரிந்தது! தவிர, நாம் இங்கும் சரி, FB / வாட்சப் க்ரூப்களிலும் அலசி, சிலாகிக்கும் இதழ்களை நினைவில் வைத்திருந்து அவற்றைக் கச்சிதமாய் வாங்கிச் செல்கின்றனர்! So இங்கே Lady S மொத்து வாங்கியிருந்தால், அங்கே புத்தக விழாவிலும் அம்மணியின் வண்டி ஸ்டார்ட் எடுப்பதில்லை! SODA பரவலான தாக்கத்தை இங்கே ஏற்படுத்தாது போயிருந்தால், அதுவே சென்னை விற்பனையிலும் எதிரொலிப்பதைப் பார்க்க முடிந்தது! Ditto with மேக் & ஜாக்... Ditto with சில ஜம்போ காமிக்ஸ் இதழ்கள்! So இந்தப் புத்தக விழா அபிமானிகளின் ரசனைகளையோ, நினைவாற்றல்களையோ சற்றே குறைச்சலாய் எடை போட்டால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியமாகிடும் என்பது புரிபட்டது!
மாயாவியார்!!
ஆட்சிகள் மாறியிருக்கலாம்... மெரினாவில் தினம் காணும் காட்சிகளும் மாறியிருக்கலாம்!
கரி எஞ்சின்களுக்கு கல்தா தந்திருக்கலாம்... வந்தே பாரத்துக்கு வந்தனம் சொல்லியிருக்கலாம்...!
மாருதி 800-ஐ வியந்து ரசித்த காலம் மலையேறியிருக்கலாம்; மெர்செடெஸ் பென்ஸை கொட்டாவியோடு பார்த்திடும் பொழுதுகளும் புலர்ந்திருக்கலாம்...
காப்பி க்ளப்புகள் இருந்த இடங்களில் இன்று KFCகள் காட்சி தரலாம்!
but...
கரெண்ட் துவாரத்துக்குள் விரலை விட்ட நொடியில் அரூபமாகிப் போகும் ஒரு காமிக்ஸ் ஜாம்பவானுக்கான மவுசு மட்டும் அன்றும், இன்றும், என்றும் தொடரும் என்பது ஒவ்வொரு வருஷமும் சென்னை சொல்லித் தரும் பாடம்! இடையில் ஒரு சின்னதொரு phase இருந்தது தான் - maybe 2018 & 2019... மாயாவி அவ்வளவாய் விற்பனை காணாதிருந்த நாட்களவை! ஆனால் 2022-ல் துவங்கி இரும்புக்கரத்தார் back in prime form ! சென்னையில் இன்னமுமே மாயாவியை மட்டுமே நலம் விசாரித்துப் போக வரும் சீனியர் வாசகர்களின் எண்ணிக்கையும் கணிசம்! So லாஜிக் அறியா இந்த மேஜிக் 2025-ல் தொடரவே செய்யும் என்ற நம்பிக்கையில் 2 மாயாவி மறுபதிப்புகள் ரெடி ! And அந்த இதழ்களுள் ஒன்று தான் :
“மும்மூர்த்திகள் ஸ்பெஷல்”!!!
முத்து காமிக்ஸின் துவக்க நாட்களில் களம் கண்ட
- இரும்புக்கை மாயாவி
- CID லாரன்ஸ் & டேவிட்
- ஜானி நீரோ & ஸ்டெல்லா
தான் நமது flagship நாயகப் பெருமக்களாய் அரை நூற்றாண்டுக்குப் பின்னரும் தொடர்கின்றனர் என்பது நாமறிந்ததே! இந்த மூவரில் யாரேனும் இருவர் முன்நாட்களில் காமிக்ஸ் க்ளாஸிக்கில் கூட்டணி போட்டு வெளிவந்திருப்பர்! ஆனால் மூவரது சாகஸங்களும் ஒந்றை ஆல்பத்தில் இதுவரை வந்ததில்லை என்ற போது, மும்மூர்த்திகளை ஒருங்கிணைக்கும் மகா சிந்தனை தோன்றியது! And ஏதோவொரு பதிவினில் நம்ம பொருளாளர்ஜி மாயாவிக்கொரு ஹார்ட்கவர் தந்தது இல்லையே? என்று ஆதங்கப்பட்டிருந்தது மண்டையின் ஓரத்தில் குந்தியிருந்தது! So 3 கதைகள் / 3 க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நொடியில் அவர்களுக்கு ஹார்ட்கவர் மரியாதையினையும் இணைத்திட்டால் சிறப்பாக இருக்குமென்றுபட்டது! அதன் பலனே தகதகக்கும் இந்த இதழ்!
Oh yes - எண்ணிலடங்கா தடவைகள் இவை மறுபதிப்பு கண்டுள்ளன தான்; ஆனால் “விற்பனை” என்ற கோணத்தி்ல் இவையே சொல்லியடிக்கும் பந்தயக் குதிரைகள் எனும் போது, சென்னையில் மட்டுமாவது இது போன்ற initiatives அவசியமாகிடுகின்றன. So நமது ஸ்டாலுக்குள் நுழைந்த நொடியே மாயாவி மயக்கும் பார்வையோடு உங்களை வரவேற்கக் காத்திருப்பார்!
அருகிலேயே “பாதாள நகரம்” மறுபதிப்பிலும் மாயாவி தகதகத்துக் கொண்டிருப்பார்! இது போன ஆண்டே வந்திருக்க வேண்டிய இதழ்; நேரமின்மை காரணமாய் skip செய்திருந்தோம்!
And இங்கே இன்னொரு சுவாரஸ்யக் கொசுறு சேதியுமே! இதுவரை மறுபதிப்புக் கண்டிராத
1. ஒற்றைக்கண் மர்மம்
2. பறக்கும் பிசாசு
3. ப்ளாக்-மெயில்
4. இயந்திரப்படை
சாகஸங்களெல்லாம் அங்கே ரெடியாகி வருகின்றன! So அந்நாட்களில் நீங்கள் ரசித்த அதே டபுள் கலரில் / வண்ணத்தில் இவை இங்குமே களம் காணும் வேளைகள் not too far!
சென்னையின் அடுத்த டார்லிங் நம்ம லக்கி லூக் தான்! லைனாக அவரது புக்ஸ் அடுக்கி இருந்தால் அவற்றை லைனாக வாங்கிச் செல்ல நண்பர்கள் காத்திருப்பதுண்டு! In fact போன வருடம் வந்த “தலைக்கு ஒரு விலை” மறுபதிப்பு தான் விற்பனையின் டாப் இடத்தைப் பிடித்திருந்த இதழ்களுள் ஒன்று! அதற்கேற்ப இம்முறையும் 2 reprints வெயிட்டிங்! இரண்டுமே நமது இரண்டாவது இன்னிங்ஸின் போது வெளியானவை என்றாலும் ஒரு முழு வருஷம் கூட ஸ்டாக்கில் தாக்குப் பிடித்திருக்கவில்லை! புது அட்டைப்படங்களுடன் மெர்சலூட்டும் ப்ரிண்டிங் சகிதம் இந்த 2 க்ளாஸிக் கதைகள் மறுக்கா கிச்சுகிச்சு மூட்டக் காத்துள்ளன!
- பனியில் ஒரு கண்ணாமூச்சி
&
- எதிர்வீட்டில் எதிரிகள்
Next will be கபிஷ் ஸ்பெஷல்-2
சேலத்தில் முதல் இதழ் வெளியானது மட்டுமன்றி, விற்பனையிலும் அசத்தியிருந்த நமது அபிமான கபிஷ் இதோ - இரண்டாவது ஆல்பத்தோடும் ரெடி! இத்தொடரின் ஓவியரான திரு.மோகன்தாஸ் அவர்களே நமது கபிஷ் ஆல்பங்களைப் பார்த்த கையோடு எனக்கு ஃபோன் அடித்து அற்புதமாய் சிலாகித்திருந்தார். படைத்தவரே பாராட்டும் போது, அதை மிஞ்சிய திருப்தி வேறென்ன இருக்க முடியும் folks! இதோ - உங்களது பால்ய நினைவுகளுக்குத் தீனி போடவும், அடுத்த தலைமுறைக்குக் கதை சொல்ல வாகாகவும் கபிஷ் - மிளிரும் கலரில்!!
”அடுத்த தலைமுறை” என்ற டாபிக்கில் இருக்கும் போதே அடுத்த 3+3 இதழ்களைப் பற்றிப் பேசிடல் பொருத்தமாக இருக்குமென்பேன்! பழமையை ஆராதிக்கும் வாசகர்களையும், சேகரிப்பாளர்களையும் target செய்திட ஒரு பக்கம் முனைகிறோமென்றால் - ஒரு புத்தம் புதிய, ஆக இளம் தலைமுறையினை காமிக்ஸ்களின் பக்கமாய் ஈர்த்திட பெருசாய் மெனக்கெட்டதில்லை என்பதே bottomline. சில வருஷங்களுக்கு முன்னமே இந்த “கதை சொல்லும் காமிக்ஸ்“ முயற்சியினை முன்னெடுத்திருந்தோம் தான் – சந்தாக்களை எதிர்பார்த்து! And அன்றுமே நமது target audience ஆக இருந்தோர் நம் வீட்டுக் குழந்தைகள் தான்!
ஆனால் Jack & The Beanstalk கதையில் வரும் குட்டிப்பயல் ஜாக் யோக்கியனா? அயோக்கியனா? என்று ஆரம்பித்த அலசல்களில் அந்த முன்னெடுப்பின் முனைப்பே பணாலாகிப் போனது! உலகெங்கும் சொல்லப்படும் சிறார் கதைகளிலும் “லாஜிக்டா... நீதிடா... நேர்மைடா... நாயம்டா" என்று நாம் தேடத் துவங்கிய போது ஓசையின்றி அந்தத் தடத்தை பரணுக்கு பேக்-அப் பண்ணியிருந்தோம் ! ஆனால் அதன் பின்பாய் தொடர்ந்த ஒவ்வொரு சிறுநகர / பெருநகரப் புத்தக விழாவிலுமே இந்த இதழ்கள் செம வாஞ்சையாய் விற்பனை கண்டது அந்த இதழ்களைக் கரை சேர்த்திருந்தது!
நிலவரம் அவ்விதமிருக்க, இங்கே நம்ம ஜுனியர் எடிட்டர் இந்த முயற்சியை reboot செய்திட்டால் என்னவென்ற கேள்வியை 2 மாதங்களுக்கு முன்பாக முன்வைத்த போது – “பேஷாய் முயற்சிக்கலாம்” என்று இசைவு சொல்லியிருந்தேன். So கதைத் தேர்வுகளிலிருந்து புத்தக வடிவமைப்பு வரை சகலமும் ஜுனியரின் முயற்சிகளே! As we know – இந்த ஆல்பங்களின் ஒரிஜினல் வார்ப்புகளில் ஒற்றை வரி கூட வசனமே கிடையாது. ஒரிஜினலில் முழுக்க முழுக்கவே சித்திரங்கள் மாத்திரமே கொண்ட மௌனக் கதைகள் இவை! ஆனால் நமக்கு அது சுகப்படாதென்பதை படைப்பாளிகளுக்குப் புரியச் செய்து அவர்களின் சம்மதத்தோடு முழுக்கவே புதுசாய் வசனங்கள் உருவாக்கி, இந்த புக்ஸ்களை அன்றும் சரி, இன்றும் சரி, ரெடி பண்ணியுள்ளோம்! இம்முறையோ கதைத் தேர்விலேயே குழந்தைகளைக் கவரும் அட்டைப்படங்களாகப் பார்த்து தேர்வு செய்வதில் தொடங்கி, வசனங்களிலும் குழந்தைகளை ஈர்க்கும் சுலப பாணிகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம்.
“பண்றதுன்னு ஆச்சு... இவற்றை இங்கிலீஷிலுமே முயற்சி செய்து பார்த்தாலென்ன? என்று ஜுனியர் வைத்த அடுத்த கேள்விக்குமே மறுப்பு சொல்லத் தோன்றவில்லை. கணிசமான பெற்றோர் – ”ஓ... இங்கிலீஷிலே காமிக்ஸ் லேதுவா உங்களிடம்? வாடா கண்ணா... போலாம்!” என்று ஆர்வமாய் நுழையும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வெளியேறுவதை ஸ்டாலில் பார்த்துள்ளதால் – இந்த ஆங்கிலப் பதிப்புகள் worth a try என்று பட்டது. ஆக Lion Books என்ற லேபிலுடன், ஜுனியர் எடிட்டரின் ஸ்க்ரிப்ட் சகிதம் ஆங்கிலப் பதிப்புகள் ரெடியாகி உள்ளன! And அந்த ஆங்கில வசனங்களை நம்மள் கி தமிழ் பதிப்புகளுக்கு மாற்றியெழுதுவதை மட்டும் அடியேன் செய்திருக்கிறேன்!
- The Princess of the Pea = பட்டாணி இளவரசி
- Alibaba & The 40 Thieves = அலிபாபாவும் 40 திருடர்களும்
- The Three Little Pigs = விடாமுயற்சி
மூன்று கதைகளுமே உலகெங்கும் பிரசுரமாகும் Fairy Tales தொகுப்புகளில் தவறாது இடம்பிடித்து வருபவை!
- சிறார் கதைகளின் உலகில் நீங்கா இடம் பிடித்திருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் க்ரிஸ்டியன் ஆண்டர்சென் 1835-ல் எழுதிய கதை தான் “பட்டாணி இளவரசி”!
- 18ம் நூற்றாண்டில் சிரியாவில் சொல்லப்பட்ட கதை அலிபாபா!
- And 1886-ல் இங்கிலாந்தில் உருவான கதை தான் “விடாமுயற்சி”.
So கிட்டத்தட்ட 140 வருடங்களைத் தாண்டியும் பயணித்து வரும் இந்தக் கதைகளை ஒரு காமிக்ஸ் பார்வையில், சுலபத் தமிழிலும், இங்கிலீஷிலும் நம் இல்லத்து அடுத்த தலைமுறைகளுக்கென உருவாக்கியுள்ளோம்! And yes – இவற்றை தொப்பையும், தாடியும் வைத்த “வளர்ந்த, குழந்தைகளுமே” படிக்கலாம் தான்! அதிலும் குறிப்பாக “பட்டாணி இளவரசி” புக்கைச் சொல்வேன் ; செம ஜாலியான புக் அது !
- நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வழங்கிட...
- பிறந்தநான் பரிசுகளாய் அனுப்பிட...
- நமது அப்பார்ட்மெண்ட் நூலகங்களுக்கோ...
- பள்ளி நூலகங்களுக்கோ அன்பளிப்பாக்கிட...
- பொடுசுகள் வரக்கூடிய க்ளினிக்களில் போட்டு வைக்கவோ...
இவை எல்லாமே பிரமாதமாய் suit ஆகிடக்கூடும்! So பயன் தராது மூலையில் முடங்கிடும் இதழ்களாய் இவை சர்வ நிச்சயமாய் இராதென்று நம்பலாம் folks! “கதை சொல்லும் காமிக்ஸ்”க்கு நாங்க கியாரண்டி!
Last of the mela books – ஒரு புத்தம் புது திகில் கிராபிக் நாவல்! புத்தக விழாக்கள்தோறும் “ஹாரர்” என்ற ஜான்ராவுக்கொரு மவுசு இருந்து வருவது சமீபத்தைய trend! சொல்லப் போனால் 10 வருஷங்களுக்கு அப்பால் “இரவே.... இருளே... கொல்லாதே” இதழானது சக்கை போடு போட்டு வருகிறது! So அந்த இருண்ட, ஹாரர் பாணிக்கு ஒரு புதுவரவாய் “மூன்றாம் தினம்” black & white-ல் கலக்கிடவுள்ளது! However – லாஜிக் தேடும் நண்பர்கள் இந்த ஆல்பத்தினை காதவெளி தூரத்தில் வைத்திருப்பது நல்லது என்பேன்!
H.P.Lovectaft என்றதொரு அமெரிக்க எழுத்தாளர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் ஒருவிதமான மாறுபட்ட திகில் நாவல்களை எழுதத் தொடங்கினார். மாமூலான பேய் – பிசாசு – ஆவி – ஆத்மா என்றெல்லாம் இல்லாது, திகிலுக்கு ஒரு அண்டவெளி அணுகுமுறையினைத் தந்து வெற்றி கண்டார்! "Cosmic Horror" என்று கொண்டாடப்பட்ட கதைகள் இவை! அதாவது இறைவனின் படைப்பில் மனுஷனானவன் ஆக அற்பமானதொரு பிறவி and எந்த நொடியிலும் மனித இனமானது நிர்மூலமாகிடக் கூடும் என்பதே அவரது concept. அதற்கு உரம் சேர்க்கும் விதமாய் விசித்திர ஜந்துக்கள்; அசாத்திய அசுரர்கள்; திகிலூட்டும் உயிரினங்கள் என பலரகப்பட்ட சமாச்சாரங்களை உருவகப்படுத்தி எழுதினார். ஒரு கட்டத்தில் இந்த பாணிக் கதைகள் செம பாப்புலர் ஆகிப் போய் ஒரு சிறு வட்டமாய் திகில் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி Lovecraft Circle என்றொரு அமைப்பை உருவாக்கி, இந்த ரகக் கதைகளை படைக்கவும் தொடங்கினார்கள்! இந்த Lovecraft யுனிவெர்ஸில் “The Call of Cthulhu” என்ற நாவல் செம பேமஸாம்! விக்கிப்பீடியாவுக்குப் போய் H.P.Lovecraft என்று அடித்தீர்களேயானால் வண்டி வண்டியாய் தகவல்களை அள்ளித் தரும்!
H.P.Lovecraft - 1936-ல் |
On a totally different note – 1966-க்குப் போறோம்! பிரபல சர்வதேச திரைப்பட டைரக்டரான ரோமன் பொலான்ஸ்கியின் ‘Cul-de-Sac” திரைப்படம் பிரமாதமாய் சிலாகிக்கப்படுகிறது; விருதுகளை ஈட்டுகிறது! இரு கொள்ளைக்காரர்கள், சின்னதொரு தனித் தீவிலிருக்கும் ஆளரவமற்றதொரு கோட்டையில் தஞ்சம் தேடுகின்றனர். அங்கு வசிப்பதோ ஒருவித மனப்பிறழ்வு கொண்ட இங்கிலீஷ்காரரும், அவரது அழகான ப்ரெஞ்சு மனைவியும்! ஆரம்பத்தில் கொள்ளையர்கள் அந்த ஜோடியைப் பணயக் கைதிகளாக வைத்திருக்க, விரைவிலேயே அங்கொரு புதிரான, இருண்ட சக்தி தலைதூக்க ஆரம்பிக்கின்றது! இறுக்கமான சூழல்... இருண்ட சக்திகள்... மனித மனத்தின் சிதைவுகள் என்ற வட்டத்துக்குள் தடதடக்கிறது திரைப்படம்!
இப்போது H.P.Lovecraft-ன் அண்டவெளி திகிலையும்; ரோமன் பொலான்ஸ்கியின் Cul-de-sac படத்துப் பின்னணியினையும் ஒருங்கிணைத்து ஒரு செம டார்க்கான கிராபிக் நாவலை உருவாக்கினால் எவ்விதமிருக்கும்? இதோ - இந்த “மூன்றாம் தினம்” கி.நா. போலிருக்கும்!
“மூன்றாம் தினம்” என்ற குறியீட்டிற்கு பைபிளில் ஒரு பொருளுண்டு! அந்த நாளில் தான் ஆண்டவர் புது உயிர்களைப் படைத்தாரென்று நம்பப்படுகிறது! சிலுவையில் அறையப்பட்டவரும் உயிர்த்தெழுந்தது அந்த மூன்றாம் நாளில் தான்! So இந்த கான்செப்டையுமே கிராபிக் நாவலுக்குள் புகுத்தி – போனெலியின் படைப்பாளிகள் களமிறக்கியுள்ள செம டார்க்கான ஆல்பமிது! துவக்கத்தில் சொன்னது போல – லாஜிக் தேடாதீர்கள் பாஸ் – இந்த இருள் பயணம் நிச்சயமாய் தெறிக்கவிடும்! And இதே முன்னுரையை புக்கிலும் தந்துள்ளோம் ; So இந்தத் தகவல்களை மனதில் இறுத்தியபடியே உங்களது வாசிப்புகளைத் துவக்கினால் would make for better readings!
ரைட்டு...மே மாத ஆன்லைன் புத்தக விழாத் திட்டமிடலினை இறுதி செய்திட ஞான் கிளம்புது !! Bye all, have a great Sunday !! See you around !!
பின்குறிப்பு :
சந்தாக்கள் சார்ந்த நினைவூட்டலுமே folks!
- TEX
- இளம் டைகர்
- வேதாள மாயாத்மா
என்ற 3 ஜாம்பவான்கள் முழுவண்ணத்தில் முதல் மாதமே களமிறங்கிடவுள்ளனர்! So இயன்றமட்டுக்குத் துரிதமாய் சந்தா எக்ஸ்பிரஸில் ஒரு சீட்டைப் போட்டு வைத்து விடலாமே – ப்ளீஸ்?!
And yes – இரு தவணைகளில் சந்தா செலுத்தவும் வாய்ப்புண்டு!
Me first
ReplyDeleteவாழ்த்துக்கள் மகேந்திர பாகுபலி ஜி
DeleteCongrats Sir👏🎊
Delete🙏🏻
Deleteபகலில் முழிந்திருந்து முதல் கமெண்ட் போட்டதற்கு வாழ்த்துகள்
DeleteRamya @ ROFL 😂 அவர என்ன ஈரோடு விஜய் என நினைத்தீர்களா 😃
Delete😁😁😁
DeleteMe First...
ReplyDeleteMe second
ReplyDelete😐😐😐
Delete4th
ReplyDelete10 kullaa
ReplyDeleteHi friends
ReplyDeleteHello Edi sir
ReplyDeleteGood night friends and Edi sir.
ReplyDeleteMe
ReplyDelete@Edi Sir😘..
ReplyDeleteMe in😘🥰🙏💐
" பழமையை ஆராதிக்கும் வாசகர்களையும், சேகரிப்பாளர்களையும் target செய்திட ஒரு பக்கம் முனைகிறோமென்றால்"
ReplyDeleteநல்ல விசயமா இருக்கே Sir, Classic கதைகளை Reprint கேட்கும் வாசகர்களை அபொதுவாக நக்கல் செய்வதுதான் நடக்கும், அவை நன்றாக விற்றாலுமே கூட, இந்த மாற்றம் நல்லது,,மகிழ்ச்சிக்குரியது
வந்துட்டேன்
ReplyDeleteஆஜர்
ReplyDeleteமறு பதிப்புகள் ஆர்வத்தை கிளருகிறது
ReplyDeleteபாதாள நகரம் அட்டை படம் டாப் சார்
ReplyDeleteவருடத்திற்கு ஒரு மும்மூர்த்திகள் ஸ்பெஷல் வந்தால் சூப்பர் சார்
ReplyDeletePresent Sir !
ReplyDeleteGood Morning Friends,🙏
ReplyDeleteHi..
ReplyDeleteசென்னை புத்தக விழா விற்பனை சிறக்க வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteசூப்பர் சார்...மும்மூர்த்திகள் ஹாட் பௌண்டில்....அட்டைப்படம் தெறிக்க விடுது...
ReplyDeleteபாதாள நகரம் அருமை....
ஆனா இருவண்ணம்...வண்ணம்னு சொன்ன இதழ்களில் இமயத்தில் ஏற்றி விட்டீர்கள்...சூப்பர்
அந்த சிறுவர் கதைகள் அட்டை ஈர்க்க...இப்பவே கதை சொல்ல தயாராகிட்டேன்...பீன்ஸ் கொடியில் ஜாக்கை முன்னூறு முறை ரசித்த மகனாருக்காய் ஆவலுடன் தந்தையார் வெய்ட்டிங்...அட்டை வண்ணங்கள் அதகளம்...அந்த மூன்றாவது அலிபாபா அட்டை வண்ணந்தாம் சுமாரா படுது...ஆனா நீங்க சொன்னது போல குழந்தைகளிடமே விட்டிடுவோம்....அருமை விக்ரம்
அடுத்து எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுது...நம்ம ஹாரர் ஸ்பெசல் விவரிப்புகள்...மனம் பிறன்ற அந்த ஜோடின்னதும் நம்ம ஆங்கிள் டெர்ரி நினைவில் வராது போகலை...
அதீத ஆவலுடன்...
லக்கியாரின் அட்டகாச எதிர் வீட்டில் எதிரிகள் அட்டைப்படம் தூள்
கபீஷ் சூப்பர்
லாரன்ஸ் & டேவிட் ஃப்ளைட் 731எதிர்பார்த்தேன் .பலரும் தேடிக் கொண்டிருக்கும் இதழ்.
ReplyDeleteதலைய தூக்கி பாருங்க...வந்தாச்சே நண்பரே
Delete☺️
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் 💐💐💐
ReplyDeleteபடித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசென்னை புத்தகத் திருவிழாவில் மீண்டும் புதியதொரு சாதனையை ஈட்ட... வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇதில் என்னிடம் இல்லாதது மற்றும் படிக்காதது அந்த ஒற்றை கிராபிக் நாவல் மட்டுமே. Waiting for MAY ஆன்லைன் புத்தக விழா. சென்னை புத்தக விழா விற்பனை சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteமும்மூர்த்திகள் ஹார்டு பவுண்டு அட்டை இந்த காம்போ சூப்பர் ஸார்.
ReplyDeleteகபிஷ் . ஓவியர் திரு . மோகன்தாஸ் சாரின் சிலாகிப்பு we all happy
ReplyDelete2025 சென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனை மற்றும் புதிய வாசகர்களிலூம் சாதனையை எட்டிட வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteசெம்ம பதிவு சார். உங்கள் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்கிறது. சென்னை 25 அத்தனை பழைய சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவியாழன் அன்றே புத்தகங்கள் கிளம்பும் அடடே அப்போ வெள்ளி கிடைக்கும். செம்ம செம்ம செம்ம
ReplyDeleteபுத்தகங்களின் அறிவிப்புகள் தூள் கிளப்புகிறது.
ReplyDeleteHorror கிராஃபிக் நாவல் சும்மா பட்டையை கிளப்புது சார். எல்லா புத்தகங்களையும் வாங்குவதா? இல்லை கிளாசிக் தவிர மற்ற புத்தகங்களை வாங்குவதா?
ReplyDeleteConfusion confusion
ஒரே மாதத்தில் 15 புத்தகங்கள் இதற்கு முன்பு இது போல அதிக புத்தகங்கள் வந்த மாதம் எது? நண்பர் STV அவர்களே?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஹய்யா... ஜாலி.. ஜாலி.. 😘🥰💐
ReplyDeleteஒற்றைக்கண் மர்மம்.. 😘😘😘💐
எப்போ கிடைக்கும் சார்.. 👍💐
சார் இந்த வருடம் வந்தஆன்லைன் ஸ்பெஷல் புத்தகங்கள் மற்றும் ஈரோடு சேலம் ஸ்பெஷல் புத்தகங்கள் சென்னையில் கிடைக்குமா?
ReplyDeleteநிச்சயமாக கிடைக்கும்..
Deleteகிளாசிக் பிரியர்களுக்கு & சென்னை புத்தக விழாவில் மட்டும் காமிக்ஸ் வாங்கி படிக்கும் வாசகர்களுக்கு மும்மூர்த்திகள் ஸ்பெஷல் + லக்கி கதைகள் நல்ல விருந்து🍔🥗🍜
ReplyDeleteதீவிர வாசகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க ' மூன்றாம் தினம் ' புத்தகம் சிறப்பான அறிவிப்பு🔥
எல்லாவற்றையும் விட அடுத்த தலைமுறை காமிக்ஸ் வாசகர்களான சிறுவர்களை கவர்ந்து இழுக்க கபீஷ் & கதை சொல்லும் காமிக்ஸ் கதைகள்
அற்புதமான தேர்வுகள்👏🥰
மொத்தத்தில் சென்னை புத்தக விழா அறிவிப்புகள் புத்திசாலித்தனமான, அழகான, தெளிவான அறிவிப்புகள் சார்👏👏👏
விற்பனை வழக்கத்தை விட உச்சம் தொட வாழ்த்துக்கள்💐🎊🎉
(நமக்கு மே மாத -ஆன்லைன் புத்தக விழாவில் ஃபுல் மீல்ஸ் விருந்து காத்து உள்ளது, so no worry🙂)
ஒரே மாதத்தில் 15 வெளியீடுகளா!! பின்றீங்க எடிட்டர் சார்.. 😍😍💐💐💐
ReplyDelete///வேட்டிக்குள் கரப்பான் புகுந்து ஓடியாடினால் துள்ளிக் குதிக்கும் அதே பாணிகளில் இங்கே ஆபீஸில் அத்தினி பேரும் அடிக்காத பல்டிகள் எதுவும் கிடையாது! ////
ReplyDeleteகொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்தேன்.. ஹி ஹி 😁😁😁😁
முத்து மினி காமிக்ஸ் வந்த மாதம்?
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteகதை சொல்லும் காமிக்ஸ் வரிசையை ரீபூட் செய்ததில் மகிழ்ச்சி சார்!
Deleteஇம்முறை சாதிக்காது போகாது சார் ; புக்ஸ் அழகாய் வந்துள்ளன👍
Delete// புக்ஸ் அழகாய் வந்துள்ளன //
DeleteSuper! Super!!!!
Ji, web site la, credit card மூலமாக ஆண்டு சந்தா பணம் செலுத்த முடியவில்லை.
ReplyDeleteஉங்க பேங்க் ஆப்'பில் போய் கிரெடிட் கார்டு ஆன்லைன் ஆப்ஷனை ஆன் செய்யுங்கள்.
Deleteநம் பக்கம் ஓகே நண்பரே ; இப்போது கூட கார்டில் payments வந்து கொண்டு தான் உள்ளன!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமும்மூர்த்திகளுக்கு ஹார்ட் பவுண்டு குடுத்தது ஓகே சார், மகிழ்ச்சி. மிக சிறப்பு.
ReplyDelete“மூன்றாம் தினம்” - ஆர்வத்தை கிளப்புகிறது .
ReplyDeleteChennai புத்தக திருவிழா - நீங்கள் சென்னை போரீங்களா சார்? எந்த நாட்கள் என்று சொன்னால் நண்பர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட வசதியாக இருக்கும் சார்.
ReplyDeleteஏற்கனவே சொல்லியிருந்த ஞாபகம் உள்ளதே சார் - ஜனவரியின் முதல் வார இறுதி - சனிக்கிழமை & ஞாயிறு (4 & 5 Jan)
DeleteOkay sir!
Delete//ஓ...... இங்கிலீஷிலே காமிக்ஸ் லேதுவா உங்களிடம்? வாடா கண்ணா... போலாம்!” என்று ஆர்வமாய் நுழையும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வெளியேறுவதை//
ReplyDeleteகோவையில் நடப்பதுண்டு, ஆங்கிலத்திலும் இதை கொண்டு வர முடிவு செய்ததை வரவேற்கிறேன்
பாதாள நகரம் படித்ததாக ஞாபகம் இல்லை. ஆவலுடன் 😍
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி எனக்கு பிடித்த ஹீரோ
ReplyDelete1. ஒற்றைக்கண் மர்மம்
2. பறக்கும் பிசாசு
3. ப்ளாக்-மெயில்
4. இயந்திரப்படை
பறக்கும் பிசாசு தவிர்த்து மற்ற சாகஸங்களெல்லாம் நான் படித்தில்லை, விரைவில் வரட்டும்
அப்ப அடுத்த மாயாவி மறுபதிப்பு பறக்கும் பிசாசு தான்-:) மகளிர் அணி தலைவி கேட்ட பிறகு இல்லை என்று சொல்ல முடியுமா 😊
Delete//மகளிர் அணி தலைவி கேட்ட பிறகு இல்லை என்று சொல்ல முடியுமா 😊//
Deleteஅப்படினா ஒற்றைக்கண் மர்மம் தான் வேண்டும் 😁😊
உங்களுக்கு இல்லாததா 😊
Deleteபட்டாணி இளவரசி எதிர்பார்த்து ஆவலுடன்
ReplyDeleteநிச்சயம் ஏமாற்றாது பாருங்க!
Deleteஏற்கனவே ரி பிரினிட் பண்ண புக்ஸ் பெரும்பலானவர்களிடம் இருக்கும். புதுசா போடுங்க சார்.
ReplyDeleteசுஸ்கி ஹார்ட் கவரால வராமல் சாதாரண விலையில் வந்து இருந்தால் நல்லா விற்பனை ஆகி இருக்கும்.
ReplyDeleteஅபிப்பிராயப் பஞ்சம் ஒரு போதும் நிகழாதென்று மட்டும் அடித்துச் சொல்லலாம் நண்பரே 💪
Delete30 ரூபாய் குறைஞ்சிருக்கும் ; so அந்த விலை வித்தியாசம் அந்த இதழை தூக்கி நிறுத்தியிருக்குமென்று மெய்யாலுமே நம்புகிறீர்களா?
Delete///சென்னை புத்தக விழா சேதி !! இந்தாண்டு நமக்கான ஸ்டால் நம்பர்ஸ் : 93 & 94 !! ///--- சென்னை விழாவில் விற்பனை பட்டையை கிளப்ப வாழ்த்துகள் சார்.
ReplyDeleteஎன் பால்ய நண்பர்களுக்கு (பெரியண்ணன் களுக்கு ) ஹார்ட் பவுண்ட்... நன்றி sir... மிக்க மகிழ்ச்சி... "எத்தனையோ காலம் தள்ளி... நெஞ்சோரம் பனித்துளி.. ❤️👍🙏...
ReplyDeleteகபீஷ், மும்மூர்த்திகள் return of the OLD😍🥰
ReplyDeleteஇதுவரை மறுபதிப்பு காணாத மும்மூர்த்திகளின் கதைகளை இந்த வருட சென்னை புத்தக விழாவிற்கு எதிர்பார்த்தேன். சிறிது ஏமாற்றமே.
ReplyDeleteநமது ஆசிரியர் பதில் what’s up community இல்
Delete// காதில் நெத்தம் கசியும் அளவிற்கு சொன்ன பதிலே சார் ; எவை மறுபதிப்பாகின்றன என்பதை தீர்மானிப்பது - கதை கோப்புகளின் availability தானே தவிர, நமது பரஸ்பர விருப்புகளோ - வெறுப்புகளோ அல்ல! //
ஆனாலும் தம்பி அந்த மே மேளால இதுக்கெல்லாம் வட்டியாக 24 புக்கு வரனும்...அவ்ளோதா
Deleteசூப்பர் ஸ்டீல் , சந்தாவில் எம்மி பண்ணியதற்கு, மே மேள வில் அதிகமாக குடுக்க சொல்லிடுவோம்
Deleteரம்யா @ பொன்ராசு மாதிரியே எழுதுறீங்க 🤣
Delete😂😂😂 கவனிக்கல சகோ
Deleteஒரே ஊருல, ஒட்டிகிச்சு 😁😁😁
பார்த்து அடுத்து கவிதை எழுத ஆரம்பித்து விடாதீங்க 🤣
Delete🎇🎇🎇🎇 *டெக்ஸ்வில்லர் 175....*🎆🎆🎆🎆
ReplyDelete1985ல் லயன் காமிக்ஸில் அறிமுகம் ஆகி மாதந்தோறும் ஒரு இதழ் வெளியாகும் அளவு வளர்ந்துள்ள *டெக்ஸ் வில்லர்* இதழ்கள் செய்துள்ள சாதனைகள் பல....
*இம்மாதம் டிசம்பர்-2024ல் புதியதொரு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளார் நம் அரிசோனா அதிகாரி!*
*லயன் காமிக்ஸ் வரலாற்றில் 175 இதழ்களில் இடம்பெறும் முதல் நாயகன் டெக்ஸ் வில்லரே...*
*லயன் காமிக்ஸில் அதிக ஸ்பெசல்களில் இடம்பெற்ற நாயகனும் இவரே...*
இதழ்களின் பட்டியலைக் காண்போமா....
(தனித்தனி வெளியீடு எண்கள் உள்ள இதழ்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, தொடர்கதைகள்& மறுபதிப்புகள் உட்பட...)
*1.தலைவாங்கிக் குரங்கு-நவம்பர்1985*
2.பவளசிலை மர்மம-ஜூலை1986
3.பழிவாங்கும் பாவை-1ஜனவரி987
4.பழிக்குப்பழி-ஏப்ரல்1987
5.ட்ராகன் நகரம்-மே1988
6.இரத்த முத்திரை-நவம்பர்1988
7.வைக்கிங் தீவு மர்மம்-ஏப்ரல்1989
8.மாய எதிரி-ஜூலை1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் புக்கில் இணைந்து வந்தது)
9.அதிரடிக் கணவாய்-நவம்பர்1989
10.எமனோடு ஒரு யுத்தம்-ஜூலை1990
11.மரணத்தின் நிறம் பச்சை-பிப்ரவரி1991
12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்-ஏப்ரல்1991
13.பழிவாங்கும் புயல்-பிப்ரவரி1992
14.கழுகு வேட்டை-நவம்பர்1992
15.இரத்த வெறியர்கள்-ஏப்ரல்1993
16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-மே1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)
17.பாலைவனப் பரலோகம்-மே1995(லயன் டாப்10 ஸ்பெசல்)
18.மரண முள்-ஏப்ரல்1996
19.நள்ளிரவு வேட்டை-நவம்பர்1996
20.மரண நடை-மார்ச்1997
21.கார்சனின் கடந்தகாலம்1-ஏப்ரல்1997
22.கார்சனின் கடந்தகாலம்2-மே1997
23.பாங்க் கொள்ளை-ஜூலை1997
24.எரிந்த கடிதம்-பிப்ரவரி1998
*25.மந்திர மண்டலம்-மே1999*
26.இரத்த நகரம்-நவம்பர்1999
27.எல்லையில் ஒரு யுத்தம்-ஜனவரி2000
28.பழிவாங்கும் பாவை-CC-மறுபதிப்பு-மார்ச்2000
ப29.மரண தூதர்கள்-நவம்பர்2000
30.மெக்ஸிகோ படலம்-செப்டம்பர்2001
31.தனியே ஒரு வேங்கை-பாகம்1-பிப்ரவரி2002
32.கொடூர வனத்தில் டெக்ஸ்-பாகம்2-மார்ச்2002
33.துரோகியின் முகம்-பாகம்3-மே2002
34.பயங்கரப் பயணிகள்-பாகம்1-ஆகஸ்ட்2002
35.துயிலெழுந்த பிசாசுகள்-பாகம்2-அக்டோபர்2002
36.பறக்கும் பலூனில் டெக்ஸ்-ஜனவரி2003
37.ஓநாய் வேட்டை-பாகம்1-மே2003
38.இருளின் மைந்தர்கள்-ஜூன்2003
39.இரத்த தாகம்-பாகம்2-ஜூலை2003
40.சாத்தான் வேட்டை-அக்டோபர்2003
41.கபால முத்திரை-பாகம்1-ஏப்ரல்2004
42.சிவப்பாய் ஒரு சிலுவை-மே2004
43.சதுப்பில் ஒரு சதிகார கும்பல்-பாகம்2-ஜூலை2004
44.இரத்த ஒப்பந்தம்-பாகம்1-ஏப்ரல்2005
45.தனியாத தணல்-பாகம்2-ஜூன்2005
46.காலன் தீர்த்த கணக்கு-பாகம்3-ஆகஸ்ட்2005
47.கானகக் கோட்டை-மே2006
48.பனிக்கடல் படலம்-மே2007
49.மரணத்தின் முன்னோடி-பாகம்1-ஏப்ரல்2008
*50.காற்றில் கரைந்த கழுகு-பாகம்2-ஆகஸ்ட்2008*
51.எமனின் எல்லையில்-பாகம்3-நவம்பர்2008
52.தலை வாங்கிக் குரங்கு-CC-மார்ச்2012
53.சிவப்பாய் ஒரு சொப்பனம்-ஜனவரி2013
54.பூத வேட்டை-ஜூன்2013
55.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் முதல் கலர் இதழ்)-ஜூன்2013-சன்ஷைன் லைப்ரரி
56.தீபாவளிமலர்-நவம்பர்2013-சன்ஷைன் லைப்ரரி (நீதியின் நிழலில், மரண தேசம் மெக்ஸிகோ )
57.நில் கவனி சுடு-மே2014
58.காவல் கழுகு-ஜூலை2014
59.சட்டம் அறிந்திரா சமவெளி-ஆகஸ்ட்2014
60.கார்சனின் கடந்த காலம்-அக்டோபர்2014-சன்ஷைன் லைப்ரரி-முதல் வண்ண மறுபதிப்பு
61.வல்லவர்கள் வீழ்வதில்லை-டிசம்பர்2014
62.தி லயன் 250-ஜூலை2015 (ஒக்லஹோமா,முகமில்லா மரண தூதன்,பிரம்மன் மறந்த பிரதேசம்)
63.தீபாவளி வித் டெக்ஸ்-நவம்பர்2015
(டைனோசரின் பாதையில், எமனின் வாசலில்)
64.சட்டத்திற்கொரு சவக்குழி-சனவரி2016
65.திகில் நகரில் டெக்ஸ்-பிப்ரவரி2016
66.விதி போட்ட விடுகதை-மார்ச்2016
67.தலையில்லாப் போராளி-ஏப்ரல்2016
68.டாக்டர் டெக்ஸ்-மே2016
69.பழிவாங்கும் புயல்-ஜூன்2016
70.குற்றம் பார்க்கின்!-ஜூலை2016
71.ஒரு கணவாயின் கதை-ஈரோட்டில் இத்தாலி முழுவண்ண இதழ்-ஆகஸ்டு2016
72.துரோகத்திற்கு முகமில்லை-செப்டம்பர்2016
73.தற்செயலாய் ஒரு ஹீரோ-அக்டோபர்2016
74.சர்வமும் நானே!-நவம்பர்2016
*75.நீதிக்கு நிறமேது?-டிசம்பர்2016*
76.ஆவியின் ஆடுகளம்-சனவரி2017
Delete77.அராஜகம் அன்லிமிடெட்-பிப்ரவரி2017
78.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-மார்ச்2017
79.ஒரு வெறியனின் தடத்தில்-ஏப்ரல்2017
80.கவரி மான்களின் கதை-ஜூன்2017
81.கியூபா படலம்-லயன்300-ஜூலை2017
82.மரணத்தின் நிறம் பச்சை-ஆகஸ்ட் 2017
83.கடற்குதிரையின் முத்திரை-செப்டம்பர்2017
84.தீபாவளிமலர்-அக்டோபர்2017
(ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
அழகாய் ஒரு அராஜகம்)
85.ட்ராகன் நகரம்-நவம்பர்2017
86.ஒரு கணவாய் யுத்தம்-ஜனவரி2018
87.விரட்டும் விதி-பிப்ரவரி2018
88.வெண்பனியில் செங்குருதி-பிப்ரவரி2028
89.பாலைவனத்தில் புலனாய்வு-மார்ச்2018
90.கடைசிப்பலி-ஏப்ரல்2018
91.பவளச்சிலை மர்மம்-ஏப்ரல்2018
92.நடமாடும் நரகம்-ஜூன்2018
93.இரவுக்கழுகின் நிழலில்-ஜூன்2018
94.காற்றுக்கு ஏது வேலி-ஜூலை2018
95.டெக்ஸ் மினி 3in1-விரட்டும் விதி-ஆகஸ்ட்2018
96.சைத்தான் சாம்ராஜ்யம்-செப்டம்பர்2018
97.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-செப்டம்பர்2018
98.டைனமைட் ஸ்பெசல்-அக்டோபர்2018
99.காதலும் கடந்து போகும்-நவம்பர்2018
*100.புனிதப் பள்ளத்தாக்கு-நவம்பர்2018*
101.காலனின் கானகம்-டிசம்பர்2018
102.யார் அந்த மரண தூதன்-டிசம்பர்2018
103.சாத்தானின் சீடர்கள்-ஜனவரி2019
104.வைகிங் தீவு மர்மம்-பிப்ரவரி2019
105.பாலைவனத்தில் ஒரு கப்பல்-மார்ச்2019
106.டெக்ஸ் மினி3in1-2-புனிதப் பள்ளத்தாக்கு-ஏப்ரல்2019
107.பச்சோந்திப் பகைவன்-ஏப்ரல்2019
108.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-மே2019
109.சிங்கத்தின் சிறுவயதில்-ஜூன் 2019.
110.நட்புக்கு நாட்களேது-ஜூலை2019
111.தகிக்கிம் நியூ மெக்சிகோ-ஆகஸ்ட்2019
112.பழி வாங்கும் பாவை-ஆகஸ்ட்2019
113.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-செப்டம்பர்2019
114.புதைந்து போன புதையல்-அக்டோபர் 2019
115.சர்க்கஸ் சாகசம்-தீபாவளிமலர்-நவம்பர்2019
116.சூது கொல்லும்-டிசம்பர்2019
117.ரெளத்திரம் மற-டிசம்பர்2019
118.இருளின் மைந்தர்கள்1-சனவரி2020
119.இருளின் மைந்தர்கள்2-சனவரி2020
120.ரெளத்திரம் மற- 4in1 தொகுப்பு-சனவரி2020
121.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020
122.வானவில்லுக்கு நிறமேது!-மே2020
123.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020
124.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020
*125.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020*
126.தலைவாங்கி குரங்கு-அக்டோபர் 2020
Delete127.தீபாவளிமலர்-நவம்பர்2020
128.ஒரு கசையின் கதை-டிசம்பர்2020
129.மரணமுள்-சனவரி2021
130.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021
131.கழுகு வேட்டை-ஏப்ரல்2021
132.நெஞ்சே எழு-மே2021.
133.ஒரு பிரளயப் பயணம்-ஜூலை2021.
134.புத்தம் புது பூமி வேண்டும்-லயன்400-ஆகஸ்ட்2021
135.சிகப்பாய் ஓரு சிலுவை-ஆகஸ்ட்2021
136.கண்ணே கொலைமானே-அக்டோபர்221
137.தீபாவளிமலர்2021-நவம்பர்2021.
138.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021
139.டெக்ஸ் க்ளாசிக்1-பழிக்குப்பழி&கானகக் கோட்டை-ஜனவரி2022
140.பாலைவனத்தில் பிணம் தின்னிகள்-மார்ச்2022
141.சிகாகோவின் சாம்ராட்-ஏப்ரல்2022
142.டெக்ஸ் க்ளாசிக்2- இரத்த வெறியர்கள்-பனிக்கடல் படலம்-ஏப்ரல்2022
143.விடாது வஞ்சம்-மே2022
144.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022
145.புயலில் ஒரு புதையல் வேட்டை-ஜூலை2022
146.மெளன நகரம்-ஆகஸ்ட்2022
147.சொர்க்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022
148.தீபாவளி மலர்-அக்டோபர்2022
149.பாலைவனப் பரலோகம்-அக்டோபர்2022
*150.நிழல்களின் ராஜ்யத்தில்-டிசம்பர்2022.*
151.பகை பல தகர்த்திடு-ஜனவரி2023
152.பறக்க மறந்த பறவைகள்-பிப்ரவரி 2023
153.ஓநாய் வனத்தில் டெக்ஸ்-மார்ச்2023
154.கலவர பூமியில் கனவைத் தேடி-ஏப்ரல்2023
155.டெக்ஸ் க்ளாசிக்4-மந்திர மண்டலம்&மரண நடை-மே2023
156.ஒரு கெளபாய் காதலி-மே2023
157.கரையெல்லாம் குருதி-ஜூன்2023
158.கைதியாய் கார்சன்-ஜூலை2023
159.மீண்டு(ம்) வந்த மாயன்- ஆகஸ்ட் 2023
160.டெக்ஸ் க்ளாசிக்5-கார்சனின் கடந்த காலம்- ஆகஸ்ட் 2023
161.The Supremo Special-Tex75-அக்டோபர்2023
162.சகோதரனின் சகாப்தம்-V10-அக்டோபர்2023
163.The Tex சிக்ஸர் ஸ்பெசல்-நவம்பர்2023
164.உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி-டிசம்பர்2023
165.கண்ணீருக்கு நேரமில்லை..!-ஜனவரி2023
166.காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்...!-பிப்ரவரி2024
167.புயலுக்குப் பின்னே பிரளயம்!-மார்ச்2024
168.பகைவருக்குப் பஞ்சமேது?.-ஏப்ரல்2024
169.டெக்ஸ் க்ளாசிக்6-ஓநாய் வேட்டை-மே2024
170.சிறைப் பறவையின் நிழலில்-ஜூன்2024
171.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை-ஜூலை2024
172.சினம் கொண்ட சின்ன கழுகு-செப்டம்பர்2024
173.இறுதி ஆட்டம்-V22-அக்டோபர்2024
174.தீபாவளி மலர்2024-நவம்பர்2024
*175.The Magic Moment Special-டிசம்பர்2024*
176.டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ்-டிசம்பர்2024
குறிப்பு1:- வெளியீடு எண்கள் இல்லாத மினி டெக்ஸ்கள்:-
1.இருளோடு யுத்தம்-மார்ச்2020 (சந்தா ஃப்ரீ கிஃப்ட்)
2.விண்டர் ஸ்பெசல்- ஃப்ரீ வித் தீபாவளிமலர்-நவம்பர்2020
3.பனியில் ஒரு புதுநேசம்- ஃப்ரீ வித் லயன்400-ஆகஸ்ட்2021
4.குற்றத்தின் குரல்- சந்தா ஃப்ரீ -நவம்பர்2023
5.பருந்துக்கொரு பொறி-சந்தா ஃப்ரீ-டிசம்பர் 2023
6.சூறாவளியின் தடத்தில்-சந்தா ஃப்ரீ-ஆகஸ்ட்2024
சார், 2027ல வரக்கூடிய *லயன் TeX 200* க்கு ஒரு அவுட் லைனை இப்பத்திலுருந்தே ரெடி பண்ணிகிடுங்க சார்....🥰🥰🥰🥰🤩🤩🤩🤩
Deleteதி லயன் 250"- மாதிரி ஒரு குண்டு புக் எதிர்பார்க்கிறோம் சார்.
சூப்பர் டெக்ஸ்...மாதிரி என்ன மாதிரி...அத விட பெருசா...கார்சன் கடந்த காலத்த...இப்ப மிஞ்சும் வண்ணம் குண்டா
Deleteஇது போன்ற ஸ்பெஷல் இதழ்களை சந்தாவில் சேர்க்காமல் கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் ஹார்ட் பவுண்டில் கொண்டுங்கள் சார்; ஹார்ட் பவுண்ட் செய்ய தாமதமானாலும் பரவாயில்லை சார். இது போன்ற ஸ்பெஷல் இதழ்கள் தயாரித்து அனுப்ப கொஞ்சம் தாமதம் ஆனாலும் ஓகே சார். 🙏🏻
Deleteநன்றி விஜயராகவன், டெக்ஸ் 200 ஆவலுடன் சிறந்த கதைகள் மற்றும் தரத்தில் நமது காமிக்ஸ் காதலை கொண்டாடும் வகையில் ஆசிரியர் கொடுக்கும் நாளை எதிர்பார்த்து 😊
Delete2026 இல் டெக்ஸ் 200 எதிர்பார்க்கலாமா ?!
Deleteமுடிஞ்சா டெக்ஸ் 200 வது இதழை கொஞ்சம் அட்வான்சா அடுத்த வருஷமே வெளியடுங்கள் சார்
Delete175 இப்போ...!
Delete10 - 2025 க்கு...!
------
ஆக 2026 துவக்கத்தில் - 185.
ஒரே வருஷத்தில் 15 டெக்ஸ் போட்டா மாத்திரமே 200 in 2026 possible சார் 🤕🤕
2027 க்கு இப்போவே திட்டமிடுறதுலாம் டூ மச் - த்ரீ மச் ஆகிடும் guys
Deleteஓகே சார்! ஆனா அந்த ஹார்ட் பௌண்ட் மட்டும் மறந்து விடாதீங்க :-)
Deleteபாதாள நகரம் முதல் மறுபதிப்பா,ஏற்கனவே வந்துள்ளதா சார் ?!
ReplyDeleteஅநேகமாக அரை டஜன்வாட்டியாவது மறுபதிப்பாகி இருக்கும் சார்!
DeleteArivarasu @ Ravi @ ஆசிரியார்கிட்ட இப்படி கஷ்டமான கேள்வி கேட்காதீங்க :-)
Deleteபெரிய சிங்கம், காமிக்ஸ் பிதாமகர், சீனியர் எடிட்டர், முத்து காமிக்ஸ் நிறுவனர் செளந்திரபாண்டியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் & வணக்கங்கள்.....💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteசந்தா புத்தகங்கள் கிளம்பியாச்சா சார்
ReplyDeleteபொன்ராஜுக்கு tough குடுப்பீங்க போலிருக்கே 🤭....
Deleteவியாழன் டெஸ்பாட்ச் என்று சொன்ன ஞாபகம் ; and நேத்திக்கு திங்கள் என்றும் ஞாபகம் சார்!
எங்க ஆளுதான் கேட்க சொன்னான்!
Deleteஅப்புறம் இன்று செவ்வாய்க்கிழமை சார்!
// வியாழன் டெஸ்பாட்ச் என்று சொன்ன ஞாபகம் //
Deleteஆமாம் சார்! நல்லாவே ஞாபகம் இருக்கு! என்ன இந்த பாழாய் போன மனசு கேட்க மாட்டிங்கு!
தமிழ் காமிக்ஸ் தலைவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா.. 💐💐💐💐😘😘😘😘😘
ReplyDeleteSir,
ReplyDeleteWill Magic Moments Special continuing parts be published in 2025 ? Seems the storyline is not concluded.
சென்னை 25 டெக்ஸ் வில்லர் புதிய மறுபதிப்பு இல்ல.அப்ப இந்த வருடம் டெக்ஸ் கிளாசிக்கல் மறுபதிப்பு கள்! ஆகஸ்ட் ப்ளானாங்க சார்.கொஞ்சம் ஹெவியா குடுங்க
ReplyDeleteதலைமையாசிரியருக்கு எனது பிறந்த நாள் வணக்கங்களும்
ReplyDelete