Tuesday, December 24, 2024

2024 - ஒரு வாசகப் பார்வை!

நண்பர்களே,

வணக்கம். பொஸ்தவங்களை டப்பி உடைக்கவும், பொம்ம பார்க்கவுமே நேரம் கிடைக்காது அல்லாடும் ஒரு அணியின் நடுவே - இதோ, 62 இதழ்களின் ஒரு வாசக அலசல்! இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில நிறைகளில் எனக்கு உடன்பாடு குறைவே & அடிக்கோடிடப்பட்டுள்ள குறைகளுக்கு லாஜிக்கலான விளக்கங்களும் என்னிடம் உள்ளன தான் ; yet அவற்றை இங்கே நான் பதிவிடப் போவதில்லை! இதுவொரு வாசகப் பார்வை & அவ்விதம் இருப்பதே பொருத்தம் என்பதால் நானிங்கு இந்த ஓப்பனிங்கோடு நடையைக் கட்டி விடுகிறேன் - with just 1 question

இதனை எழுதியது யாராக இருக்குமோ - any guesses?

 2024 ஒரு பார்வை :

மொத்தம் வெளிவந்த புத்தகங்கள் (இலவசங்களையும் சேர்த்து) - 67

இதில் அரக்கன் ஆர்டினி, இரும்புக்கை மாயாவி, ஜானி in ஜப்பான், கடத்தல் முதலைகள், விண்ணில் மறைந்த விமானங்கள் ஆகிய ஐந்து புத்தகங்களையும் வாங்கவும் இல்லை, படிக்கவும் இல்லை.

வாங்கிய புத்தகங்கள் - 62

வாங்காதவை - 5

படித்த புத்தகங்கள் - 62

படிக்காதவை - 0

புத்தக எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கில் கொண்டு 62 புத்தகங்களை எனக்கு பிடித்த வகையில் வரிசை படுத்தி இருக்கிறேன். இது முழுக்க முழுக்க எனது ரசனையின் அடிப்படையில் விவரிக்கப்பட்டதே ஆகும். ஆளாளுக்கு ரசனை மாறும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். படிக்கும் போதும், படித்து முடித்த பின்னும் ஏற்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் சமரசமில்ல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.

//ஆஹா, ஓஹோ, தெறி, தூள், செம, வேற லெவல், போட்றா விசில, தரமான சம்பவம்பா, (A+) EXCELLENT//

1. பனி மண்டலப் போராளிகள் - டெக்ஸ்

2. இரவின் எல்லையில் - லார்கோ

3. நதி மூலம் கியூபா - XIII

4. அடிமையாய் தோர்கல் 

5. லயன் லக்கி 40வது ஆண்டு மலர்

6. திபெத்தில் டின் டின்

7. தவணையில் துரோகம் - டேங்கோ

8 ஓநாய் வேட்டை - டெக்ஸ்

9. பனிமலைப் பலிகள் - ஜாகோர்

10. பனிக்கடலில் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்

11. ஆர்டிக் அசுரன் - மார்ட்டின்

12. மாயப் பந்துகள் 7 - டின் டின்

13. தலைக்கு ஒரு விலை - லக்கி லூக்

14. சட்டைப் பையில் சாவு - டைலன் டாக்

15. மாயமில்லே மந்திரமில்லே - தாத்தாஸ்

16. Magic Moments Special - டெக்ஸ்

17. ஜேன் இருக்க பயமேன் - லக்கி லூக்


//வாய் பிளக்க வைக்காவிட்டாலும், இதுவும் நல்லா தான் இருக்குப்பா, தப்பு சொல்ல முடியாது, (A) VERY GOOD//

18. தென்றல் வந்து என்னைக் கொல்லும் - டெட் வுட் டிக்

19. கடமையை கைவிடேல் - கிட் ஆர்டின் & கோ

20. சிறையில் ஒரு அழகி - Spoon & White

21. வஞ்சத்துக்கோரு வரலாறு - ஜாகோர்

22. கதிரவனின் கைதிகள் - டின் டின்

23. சுட்டி குரங்கு கபிஷ் ஸ்பெஷல் - 1


//கொஞ்சம் தம் கட்டியிருந்தா அடுத்த லெவல் போயிருக்கலாம். அதற்கான சாரம் உண்டு. ஆனால் நிச்சயம் ஏமாற்றம் இல்லை, (B) GOOD//

24. புயலுக்கு பின்னே பிரளயம் - டெக்ஸ்

25. கண்ணீருக்கு நேரமில்லை - டெக்ஸ்

26. பகைவருக்கு பஞ்சமேது - டெக்ஸ்

27. டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் - டெக்ஸ்

28. சாபம் சுமந்த தங்கம் - பெளன்சர்

29. வேங்கை என்றும் உறங்காது - Zaroff

30. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் - டெக்ஸ்

31. ஒரு பண்டமாற்று படலம் - மாடஸ்டி

32. வேதாளருக்கு திருமணம்

33. ஆருடத்தின் நிழலில் - ராபின்

34. பாலையில் ஒரு போராளி - Mr. No

35. சிறைப்பறவையின் நிழலில் - டெக்ஸ்

36. கானகத்தில் கறுப்பு நிழல் - Mr. NO

37. சினம் கொண்ட சின்ன கழுகு - டெக்ஸ்

38. நள்ளிரவின் நாயகன் - ஜானி

39. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - டெக்ஸ்

40. மாயா எல்லாம் மாயா - ஸ்டெர்ன்

41. தண்டர் in ஆப்பிரிக்கா

42. அதிர்ஷ்டத்தை தேடி - வேதாளர்

43. Classic சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 1

44 Classic சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 2

45. Classic சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 3

46. இறுதி ஆட்டம் - டெக்ஸ்


//இதுவுந்தே நல்லா இருக்கு ஆனாலும் இங்க, அங்க கொஞ்சம் இடிக்குதே, (C) Above Average//


47. கானகத்தில் ஒரு கபட நாடகம் - Mr. No

48. துணைக்கு வந்த மாயாவி

49. தலைவனுக்கொரு தாலாட்டு - ராபின்

50. மங்களமாய் மரணம் - ரூபின்

51. மேற்கே ஒரு மாமன்னர் - லக்கி லூக்

52. சக்கரத்துடன் ஒரு சாத்தான் - டைலன் மினி

53. சிறுத்தையின் சீக்ரெட்


//எந்த மலையையும் புரட்டி போடல, ஆனா தொய்வும் இல்லை, (D) Average//


54. திகில் லைப்ரரி

55. சூறாவளியின் தடத்தில் - டெக்ஸ் மினி

56. சாலையில் ஒரு சிறுத்தை


//பிடிங்கினது எல்லாமே தேவை இல்லாத ஆணி - பல்பு (E) Below Average//


57. காரிகன் ஸ்பெஷல் - 2

58. லேடி ஜேம்ஸ்பாண்ட் ஸ்பெஷல் - 1

59. வீரனுக்கு மரணமில்லை - வேதாளர்

 

//மிடில, எடுத்தேன் பாரு ஓட்டம், (F) - Disaster//


60. மான்ட்ரேக் ஸ்பெஷல் - 2

61. The சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்

62. விண்வெளிப் பிசாசு - ஸ்பைடர்


ஜொலிக்கும் அட்டைப்படங்கள் :


1. விண்வெளிப் பிசாசு

2. இரவின் எல்லையில்

3. The சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்

4. நதிமூலம் கியூபா

5. பனிக்கடலில் முதலைகள்

6. லயன் லக்கி 40வது ஆண்டு மலர்

7. தண்டர் in ஆப்பிரிக்கா

8. பனி மண்டலப் போராளிகள்

9. புயலுக்கு பின்னே பிரளயம்

10. சாபம் சுமந்த தங்கம்

11. தவணையில் துரோகம்

12. அதிர்ஷ்டத்தை தேடி

13. ஒரு பண்டமாற்று படலம்

14. ஓநாய் வேட்டை

15. தலைக்கு ஒரு விலை

16. ஜேன் இருக்க பயமேன்

17. கண்ணீருக்கு நேரமில்லை

18. பனிமலைப் பலிகள்

19. பகைவருக்கு பஞ்சமேது

20. மாயாமில்லே மந்திரமில்லே

21. அடிமையாய் தோர்கல்

22. திகில் லைப்ரரி

23. The Magic Moments Special

24. வீரனுக்கு மரணமில்லை

25. டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்

26. கடமையை கைவிடேல்

27. மாயா எல்லாம் மாயா

28. நள்ளிரவின் நாயகன்

29. வேங்கை என்றும் உறங்காது

30. தென்றல் வந்து என்னைக் கொல்லும்

31. இறுதி ஆட்டம்

 

மொக்கை அட்டைகள் :

1. ஆருடத்த்தின் நிழலில்

2. கானகத்தில் ஒரு கபட நாடகம்

3. Classic சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 1

4. Classic சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 2

5. லேடி ஜேம்ஸ்பாண்ட் ஸ்பெஷல் - 1

6. Classic சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 3

7. ஆர்டிக் அசுரன்


Best மேக்கிங் :

1. எகிப்தில் டின் டின் 

2. மாயப் பந்துகள் 7

3. கதிரவனின் கைதிகள்

4. இரவின் எல்லையில்

5. பனி மண்டலப் போராளிகள்

6. பனிக்கடலில் முதலைகள்

7. நள்ளிரவின் நாயகன்

8. விண்வெளிப் பிசாசு

9. The சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்

10. லயன் லக்கி 40வது ஆண்டு மலர்

11. சுட்டி குரங்கு கபிஷ் ஸ்பெஷல் - 1


Worst Making


1. வீரனுக்கு மரணமில்லை

2. மான்ட்ரேக் ஸ்பெஷல் 2


Best Title

1. இறுதி ஆட்டம்

2. சாபம் சுமந்த தங்கம்

3. வேங்கை என்றும் உறங்காது

4. கண்ணீருக்கு நேரமில்லை

5. தென்றல் வந்து என்னைக் கொல்லும்

6. ஆருடத்தின் நிழலில்

7. தலைக்கு ஒரு விலை

8. புயலுக்கு பின்னே பிரளயம்

9. பனிக்கடலில் முதலைகள்

10. பனி மண்டலப் போராளிகள்

11. கானகத்தில் கறுப்பு நிழல்

12. சக்கரத்துடன் ஒரு சாத்தான்

13. தவணையில் துரோகம்


சிறந்த மொழி பெயர்ப்பு :

1. எகிப்தில் டின் டின்

2. மாயப் பந்துகள் 7

3. கதிரவனின் கைதிகள்

4. தென்றல் வந்து என்னைக் கொல்லும்

5. வேங்கை என்றும் உறங்காது

6. தவணையில் துரோகம்

7. மாயமில்லே மந்திரமில்லே 

8. சுட்டி குரங்கு கபிஷ் ஸ்பெஷல் - 1

9. The சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்

Book of the Year - எகிப்தில் டின் டின்

Story of the year - பனி மண்டலப் போராளிகள்

Best Find for the Year - கபிஷ் in Colour

Best New Hero - டின் டின் 

Month of the year - October (பனிக்கடலில் முதலைகள் - Action, மாயா எல்லாம் மாயா - Graphic Novel, இறுதி ஆட்டம் - Western, நள்ளிரவின் நாயகன் - Crime). சித்திரம், கதை, கலரிங், அச்சு & அட்டைப்படம் என அனைத்திலும் score செய்து பல்சுவைகளைக் கொடுத்து ஒன்றுக்கொன்று சளைக்காமல் முட்டி மோதியது அழகு.

குறைகள் :

(-) லயன் 40 வது ஆண்டு மலர் சொதப்பல்கள். ஒரு மறக்க முடியா தருணத்தை சரியாக பயன்படுத்தாதது நெருடலாக உள்ளது. இங்கு நடந்த முதல் தவறே, ஸ்பைடருக்கும், லக்கி லூக்குக்கும் போக இருக்கும் பட்ஜெட்டில் டெக்ஸ் வில்லரை நுழைத்தது. 40 வது ஆண்டு மலருக்கென தேர்வாகும் டெக்ஸ் கதை எப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு 100 பக்க மறுபதிப்பு அங்கே இடம் பிடித்து இருக்கிறது என்றால் இதை எப்படி எடுத்து கொள்வது. டெக்ஸ் கதை ஏதோ ஒன்று பேருக்கு இருந்தால் போதும் என்ற அளவில் தான் இருந்திருக்கிறது தேடல் (இந்த இதழைப் பொறுத்தவரை). BIG Disappointing. 

(-) கேப்டன் பிரின்ஸ், இதோ வர்றார், அதோ வர்றார் என்று வருடம் முழுதும் இழுத்து கடைசியில் எந்த அறிவிப்பும் இல்லாமல் காணாமல் போய் விட்டார்.

(-) எழுத்து பிழைகள். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அதிகமாக தென்படுகிறது. பல முயற்சிகள் மேற்கொண்டாலும் போதிய பலன் கிட்டவில்லை என்பதே நிதர்சனம்.

(-) ஒரு வித அவசரம் தெரிகிறது. புத்தகங்களை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் தான் மேற்கூறிய குறைகள் (1&3) நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பது என் எண்ணம். கொஞ்சம் நிதானிக்கலாமே.

(-) கதைகளை பிரித்து போடுவதை என்று தான் முற்றிலும் நிறுத்த போகிறோமோ தெரியவில்லை. ஜனவரியில் ஆரம்பித்த இளம் டெக்ஸ் கதை டிசம்பரில் முடிந்திருக்கிறது. கிளாசிக் சூப்பர் ஸ்டாட்ஸ் ஸ்பெஷல் அடுத்த உதாரணம். தனித்தனியாக படித்த போது குழப்பமாகவும், மிக சுமாராகவும் இருந்தது. ஆனால் அதையே சேர்த்து வைத்து மீண்டும் படிக்கையில் நன்றாக இருக்கிறது. எத்தனை பேர் இப்படி முயற்சிக்க போகிறார்கள். அவசர உலகம், நேரப்பற்றாமை ஆகிய காரணங்களுக்காகவே CRISP வாசிப்பு நடைமுறையை கொண்டு வந்திருக்கிறோம். இதில் எப்படி இவ்வகை தொங்களில் உள்ள கதைகளை கையாள்வது. அனைவருக்கும் திரும்ப படிக்கும் அவகாசம் கிடைக்குமா. இது மேற்கொண்டும் இனி மேல் நடக்காது என்று டிசம்பர் மாத டெக்ஸ் ஹாட் லைனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கதையே தொங்களில் இருப்பதை எவ்வாறு எடுத்து கொள்வது.

நிறைகள்:

(+) 62 கதைகளில், 46 கதைகள் நன்றாக score செய்திருப்பது ஆரோக்கியமான விசயம். புத்தகங்களின் எண்ணிக்கையில் அதிக அளவில் வெளிவந்த இந்த ஆண்டில், இந்த வெற்றி சதவீதம் நிச்சயம் கொண்டாட பட வேண்டிய ஒன்றே. வாசகர்களின் தேவைகளை கண்டறிவதிலும், அதை பூர்த்தி செய்வதிலும் இருக்கிற அந்த அசுர உழைப்பிற்கும் , மெனெக்கெடலுக்கும் ஆசிரியர் & team க்கு கரகோசத்துடன் பலத்த கைதட்டல்கள். CLAPS 

(+) மூன்று தீபாவளி மலர்கள். அதில் ஒன்று Slip case. இந்த ஐடியாவே பாதி வெற்றியை கொடுக்க, மீதியை மூன்று கதைகளும் சரவெடியாய் வெடித்து தள்ளி இந்த தீபாவளியை நமது வரலாற்றில் ஓரு மறக்க முடியா அங்கமாக்கி விட்டது. அதுவும் டெக்ஸ் கதை கொடுத்த தாக்கம். அப்பப்பா. மெர்சல் ரகம்.

(+) டின் டின். இந்த கதையெல்லாம் தமிழில் வராதா என்று ஏங்கிய நாட்கள் எத்தனை. தமிழில், அதுவும் அதே உலகத் தரத்தில் கிடைக்கிறது என்றால் இதை விட ஒரு காமிக்ஸ் காமிக்ஸ் ரசிகனுக்கு என்ன வேண்டும். BIGGEST ACHIEVEMENT OF THE YEAR.

(+) அச்சு மற்றும் காகித தரம். ஜனவரி to டிசம்பர் வந்த அனைத்து புத்தகங்களிலும் இவ்விரு அம்சங்களில் எந்தவொரு குறையும் இல்லாமல் பார்த்து கொண்டது நிச்சயம் கவனிக்க மற்றும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். Great Job.  

(+) பவுன்சர் மற்றும் ப்ருனோ பிரேசில் ரீ என்ட்ரி. இவ்விரு கதை தொடரின் மேல் நம்பிக்கை வைத்து மீண்டும் கொண்டு வந்தது. இரண்டுமே வெற்றி பெற்றது DOUBLE TREAT.

(+) லயன் 40 ஆம் ஆண்டு கொண்டாட்டம் + ஈரோடு புத்தக விழா, Online புத்தக விழா, Cricket கொண்டாட்டம், புத்தக விழா ரிலீஸ்கள் மற்றும் சமீபத்திய சேலம் புத்தக விழா என்று வருடம் முழுதும் களை கட்டிய காமிக்ஸ் உற்சவங்கள் காலத்துக்கும் மறக்க இயலா தருணங்கள்.

வளரட்டும் காமிக்ஸ் நேசம். நன்றி.

===============================

மேற்படிக் கருத்துக்களுக்கு yes-yes-yes என்றோ ; no-no-no என்றோ பதிவிடாது உங்களின் independent சிந்தனைகளை பகிரக் கோருவேன் மக்களே!

Bye for now.... Merry Christmas 👍👍

P. S : ஜனவரி இதழ்களின் டெஸ்பாட்ச் வியாழன் அன்று folks ; இன்னமும் சந்தாக்களில் இணைந்திரா நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டல்!


119 comments:

  1. காமிக்ஸ் உறவுகளுக்கு இனிய வணக்கம் ❣️💐

    மீண்டும் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி 😇✨.
    2025 ஆம் ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் 🌈 துயரங்கள் நீங்கி,
    அறிவிலும் 📚 ஆரோக்கியத்திலும் 💪 உயர்வுகள் தந்து,
    வெற்றிகள் சிரமமின்றி வந்து சேரும் ஆண்டாக அமைய
    எல்லாம் வல்ல திருவண்ணாமலையாரை 🙏🕉️ பிரார்த்திக்கிறேன்.

    நம் காமிக்ஸ் எனும் கனவுலகம் புதிய கதைகளால் 📖✨ சுறுசுறுப்படையட்டும்,
    வண்ணங்களின் தீபங்களால் 🎨🌟 காமிக்ஸ் பிரபஞ்சம் மிளிரட்டும்,
    சூப்பர் ஹீரோக்கள் 💥🦸‍♂️🦸‍♀️ உங்களை ஒவ்வொரு நாளும் உற்சாகமாய் தூண்டட்டும்,
    உங்கள் வாழ்க்கை அற்புதமான பக்கம் 🖋️📜 திருப்பம் அடையட்டும்! 😍🎉

    ReplyDelete
  2. அடடே வந்துட்டேன்

    ReplyDelete
  3. Replies
    1. வாங்க சேம்ஸ் பாண்டு😂🥰

      Delete
    2. சீக்ரேட் சர்விஸ் பெயரெல்லாம் வெளியே சொல்ல கூடாதுங்க

      Delete
    3. அவரு தான் தீபாவளிக்கு மிரட்டலா துப்பாக்கி உடன் ஃபோட்டோ போட்டு இருந்தாரே😜

      Delete
  4. கோவை திருநாவுக்கரசு சகோ

    ReplyDelete
  5. நல்ல அலசல். நேரம் எடுத்து எழுதிய அந்த நண்பருக்கு பாராட்டுகள் 👏🏻

    ReplyDelete
  6. பதிவருக்குத் திருத்தம் : டின்டின் சென்றது திபெத்துக்கு.... எகிப்துக்கு நஹி!

    ReplyDelete
    Replies
    1. டின்டின் எகிப்பது போற கதை இருக்குங்களா ஆசிரியரே, தமிழில் எப்போ போடுவீங்க

      Delete
    2. டின்டின் இந்தியாவுக்கு வர்ற கதையே இருக்கே ரம்யா

      Delete
    3. கடவுளே டெக்ஸ்சே😍🤣

      Delete
    4. //டின்டின் இந்தியாவுக்கு வர்ற கதையே இருக்கே ரம்யா//

      சூப்பர் ஆசிரியரே😍

      Delete
    5. அந்த கதையை சீக்கிரம் போடுங்கள் சார்.

      Delete
  7. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  8. திபெத்தில் டின் டின், மேகிங் சூப்பர்

    ReplyDelete
  9. மாண்ட்ரேக் ஸ்பெஷலை "மிடில.." வகையறாவில் சேர்த்தது மட்டும் எனக்கு உடன்பாடில்லை. அவரெல்லாம் அந்தக் காலத்து ஜெய்சங்கர் போல.பழைய "யார் நீ" படம் இன்றும் ரசிப்பது போல மாண்ட்ரேக்கையும் லாஜிக் பார்க்காமல் ரசித்தல் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Mandrake 1 - மிதமே.... But # 2 டீசென்ட் ரகம் என்பேன்!

      Delete
    2. கதைத் தேர்வுகளும், சைஸும் 2-க்கு வெற்றியடைய காரணம்.

      Delete
    3. மாண்ட்ரேக் எல்லா கதைகளும் நன்றாக இருந்தது. இன்னும் ஒரு கதை படிக்க உள்ளது.

      நார்த்தாவை தேடி கதை தலைப்பு மட்டும் பொருத்தமாக இல்லை, கதையில் அவர்கள் தேடுவது கார்மாவை ☺️

      Delete
  10. தலைக்கு ஒரு விலை சூப்பர், இரவின் நிழலில் லார்கோ ஆவரேஜ்.
    வீரனுக்கு மரணமில்லை மோசம்

    ReplyDelete
    Replies
    1. "இரவின் நிழலில்" - 2024-ன் டாப் ஹிட்ஸில் ஒன்று சார்!

      Delete
    2. இரவின் நிழலில் - என்னை பொறுத்தவரை செம கத. பிரிண்டிங் வேற லெவல் .

      Delete
    3. //இரவின் நிழலில்" - 2024-ன் டாப் ஹிட்ஸில் ஒன்று சார்!//


      +9

      Delete
    4. இரவின் நிழலில் இந்த வருடத்தின் டாப் கதைகளில் ஒன்று.

      Delete
  11. டின் டின் விற்பனை சேலத்தில் எப்படி இருந்தது சார் .

    ReplyDelete
  12. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  13. "சாபம் சுமந்த தங்கம்" இந்த வருடம் ஆச்சரியப்படுத்திய கதை.
    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.

    ReplyDelete
  14. இதுவரை மாஸ் ஹிட் அடித்துக் கொண்டிருந்த இளம் டெக்ஸ் இந்த வருடம் மண்ணைக்
    கவ்வியது போல் தோன்றியது..
    பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

    ReplyDelete
  15. லயன் 400//

    லயன் 400, மேஜிக் மொமென்ட்ஸ், வரப் போகும் டெக்ஸ் 200 போன்ற தருணங்களில் வெளி வரும் சிறப்பிதழ்களுக்கு பட்ஜட்டை வைத்து கொண்டாட்டத்தை குறைக்க வேண்டாம் என்பது எனது கருத்து.

    அதை சாப்பிட்டா சக்கரை இதை குடிச்சா கொலஸ்ட்ரால் வரும்னு சாப்பிடறதைக் கூட சந்தோசமா சுதந்திரமா செய்ய முடியறதில்லை. மனசுக்கு பிடிச்சா காமிக்சையாவது கொண்டாடிக்கறோம்.

    அதனால் இந்த சிறப்பிதழ்களை குண்டா சிறப்பா பெருசா பாதுகாக்கிற மாதிரி கடின அட்டையோடு உள்ள புத்தகங்களோடு எங்களைத் தாக்குங்க என்று வேண்டிக் கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. // லயன் 400, மேஜிக் மொமென்ட்ஸ், வரப் போகும் டெக்ஸ் 200 போன்ற தருணங்களில் வெளி வரும் சிறப்பிதழ்களுக்கு பட்ஜட்டை வைத்து கொண்டாட்டத்தை குறைக்க வேண்டாம் என்பது எனது கருத்து. // எனது கருத்தும்

      Delete
    2. மகேந்திரன் @ உங்கள் எண்ணமே எனது எண்ணமும். இதனை நானும் பலவகையில் ஆசிரியரிடம் வெளிபடுத்தி விட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஆசிரியர் ஏதாவது காரணம் சொல்கிறார், புரிகிறது அவரின் நிலைமை. ஆனால் இது போன்ற மைல் கல் இதழ்களுக்கு அந்த அந்த நேரத்தில் கதை மற்றும் தயாரிப்பு முதல் கொண்டு சிறப்பாக செய்தால் நன்றாக இருக்கும். ஆசிரியருக்கு இது போன்ற மைல்கள் பெரியதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் 35 வருடங்களுக்கு மேலாக காமிக்ஸ் நேசிக்கும் நமக்கு காமிக்ஸ் என்பது வாழ்வில் ஒன்றாக்கி போன நமக்கு இது கொண்டாட வேண்டிய தருணம். ஆசிரியர் இதனை தயவு செய்து பரிசீலனை செய்ய வேண்டும் 🙏🏻

      Delete
  16. பாராட்டுகள் திருநாவுக்கரசு சகோ
    நேரம் எடுத்து இதை எழுத ஆர்வமும் பொறுமையும் வேண்டும்

    அருமை சகோதரரே 💐💐💐💐💐

    ReplyDelete
  17. திருநா.. வா தான் இருக்கணும் சார். 👍

    அவரு ஏற்கனவே..
    இதே மாதிரி ஒரு விமர்சனம்
    A+, தெறி, தூள்..அப்படினு போட்டிருந்தாருங்க Sir😘💐

    ReplyDelete
  18. வணக்கம் நண்பர்களே.

    வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  19. திகில் லைப்ரரி
    இது எந்த மாதம் வந்தது???

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்டில் ஏதோ புத்தக கண்காட்சி போது வெளியான ஞாபகம், ரீப்ரிண்டாக

      Delete
    2. ஈரோடு ஸ்பெஷல்..

      Delete
  20. என்ன ஒரு காமிக்ஸ் மீதான அற்ப்பணிப்பு.... நானெல்லாம் காமிக்ஸ் ரசிகன்னு சொல்லிகிட்டு திரியுறத பார்த்தா எனக்கே காமெடியா இருக்கு.... 😁

    ReplyDelete
  21. அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

      Delete
  22. வணக்கம்..... Happy christmas... Advance wishes for a Happy New Year😍🥰🙏

    ReplyDelete
  23. அப்போ வெள்ளிக் கிழமை புத்தாண்டு சும்மா சூப்பர் தான்

    ReplyDelete
  24. Replies
    1. சாண்டா கேக் சாப்பிடுகிறார் ☺️ காலண்டர்ல் தேதிய கிழிலே 😂

      Delete
    2. நேத்தே வந்திருக்கனுமில்ல ...அதாம்ல கேட்டேன்...தண்ணிய குடி..தண்ணிய குடி ...

      Delete
    3. எதுலே டீயா 🤣 உனக்கு வீட்டில் சாம்பார் சோறு கொடுப்பதே அதிகம் இதில் டீ எல்லாம் வீட்டில் கேட்கதாலே 😉

      Delete
  25. //தொங்களில் உள்ள கதைகளை கையாள்வது. அனைவருக்கும் திரும்ப படிக்கும் அவகாசம் கிடைக்குமா. இது மேற்கொண்டும் இனி மேல் நடக்காது என்று டிசம்பர் மாத டெக்ஸ் ஹாட் லைனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கதையே தொங்களில் இருப்பதை எவ்வாறு எடுத்து கொள்வது.//
    இதற்கு உங்கள் பதிலை ஆவலாக எதிர்பார்க்கிறோம் சார்🙏

    ReplyDelete
  26. அருமையான அலசல்...

    பாராட்டுகளும்...வாழ்த்துகளும் பதிவருக்கு...

    இளம் டெக்ஸ் மட்டும் இதில் எனக்கு மாறுபாடு ஒரு வேளை அதுவும் ஒரே கதகயாக ஒரே இதழில் வந்து இருந்தால் நண்பர் இன்னமும் நல்ல மதிப்பெண் கொடுத்து இருப்பார் என்பது என் எண்ணம்..

    ReplyDelete
  27. டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் - தனித்தனியாக அதுவும் தொடர்ந்து அடுத்த அடுத்த மாதங்களில் வராததால் இதற்கு முந்தைய கதையில் வநத சம்பவங்களை நினைவில் வைத்து படிக்க கஷ்டமாக இருந்தது. என்னை பொறுத்தவரை இந்த கதைக்கு எனது மார்க் 70/100. இனியும் இளம் டெக்ஸ் கதையை இப்படி பிரித்து போடாமல் ஒரே புத்தகமாக ஹார்ட் பவுண்டில் (முடிந்தால்) கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நான், மற்ற இரண்டு புத்தகங்களையும் தேடி எடுத்து அவற்றை மறுவாசிப்பு செய்து விட்டு, அதன் பிறகே இந்தக் கதையை படித்து முடித்தேன். சிங்கிள் ஷாட் கதைகள், அல்லது ஒரே ஆல்பமாக 3 (அ) 4 கதைகள் என்று வந்தால் படிக்க வசதியாக இருக்கும்.

      Delete
    3. எனக்கு புதிய புத்தகங்களை படிக்க கிடைக்கும் நேரமே குறைவு, இதில் பழைய புத்தகங்களை தேடி பிடித்து படிப்பதற்கு வாய்ப்பே இல்லை சார்.

      Delete
  28. டைலன் டாக்கின் கதைகளில் அமானுஷ்யத்தை விட சமீப காலங்களில் ஆபாசம் சற்றே அதிகமாகி வருகிறது. 50களில் இருக்கும் நம்வர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல என்றாலும் புதிய இளம் வாசகர்களையும் இந்த இதழ்கள் சென்றடையும் சாத்தியம் இருப்பதால் சற்றே அடக்கி வாசிப்பது நலம்.

    70s நாயகர்களை (எங்களின் சூப்பர் ஸ்டார் ஸ்பைடரையும் சேர்த்து) ரசிக்க முடியவில்லை. சிறுவயதில் சைக்கிள் டையரை வண்டியாக ஓட்டும் போது முழு சைக்கிள் வீலை ஹேண்டில் பாருடன் ஒட்டுவதுதான் கனவாக இருந்தது , அதற்காக இப்போது முழு சைக்கிள் வீல் ஹேண்டில் பாருடன் கிடைத்தால் அதனை கயாலன் கடை சரக்காகத்தான் தோன்றும். 70s நாயகர்களின் பெரிய ஆல்பங்கள் எனக்கு இதைதான் நினைவு படுத்துகின்றன. வாங்குகிறேன். ஆனால் படிப்பதில்லை. அதில் ஸ்பைடரின் புதிய அவதார்... முடியல!

    எந்த ஒரு பெரிய கதையையும் பாகங்களாக பிரிக்காமல் வெளியிடுவது நன்று. முந்தைய பாக சம்பவங்களை நினைவு வைத்ததுக் கொள்ள முடியவில்லை.

    கபீஷ் கதைகளை போல காக்கை காளி, தந்திரக்கார மந்திரி, பழைய அமர் சித்திரகதாவின் இந்திய வரலற்று கதைகள், இதிகாச கதைகளை வெளியிடலாம்.

    லேடி ஜேம்ஸ்பாண்ட், ஸ்பூன் அண்ட ஒய்ட் - - தவிர்க்கலாம்.

    பொதுவாக அமர்க்களமான ஆண்டு. தோர்கல் போன்ற நாயகர்களின் கதைகளை தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போது வரும் டைலன் கதைகளில் அவர் கன்ஸல்டன்சி கொடுப்பதே பெட்ரூமில் தானோ என்று தோன்றுகிறது.
      இல்லை அது ஒரு விதமான சிகிச்சையோ என்னவோ?

      Delete
    2. பத்மநாபன் சார் @ 🤣🤣🤣🤣🤣

      Delete
    3. சிக்+இச்சை....அந்தக் கதையில் தவிர்க்க முடியாது....துரோகிகள் நாயகரானாலும் விடுபட இயலாது...என அது ஒரு வகை பாடம்...தவறு தவறுதான் நாயகரானாலும்...சிக்க வைக்கும் இச்சைகளுக்கு சிகிச்சை...கதைகளிலேயே 18 வயதுக்கு என போடுகிறார்களே.....

      தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே...ஸ்பைடரயே நாம் தள்ளி வைக்கிறோம்...நாம் வளர்ந்து விட்டோமென...வளர்ந்து விட்ட நமக்கான பாடம்தான் இக்கதை...தடுமாறும் மனதுக்கோர் அதட்டல் பாடம்......

      சிக்(நோய்)...இச்சையால்...சிகிச்சை

      Delete
    4. எப்படில இப்படி செமலே 😊

      Delete
    5. ஸ்பைடர் உதைக்கிறது.... ஒ. கே.. புரிகிறது சார்!

      But அப்படிப் பார்த்தால் கபிஷும் அந்த பால்ய வயசுக்கு மட்டுமே ரசிக்கும் சமாச்சாரமாய், இன்று ஓரம் கட்டப்பட வேணுமே - அது மட்டும் எவ்விதம் ஒ.கே.வாகிறதோ 🤔?

      Delete
    6. அப்புறம் ஸ்பூன் & ஒயிட் - நடப்பாண்டின் bestseller சார் 🤕

      Delete
    7. விஜயன் சார், ஸ்பைடர் மேக்ஸி சைஸ் எனக்கு பிடிக்கவில்லை.

      Delete
    8. உன் ரசனை அப்படிலே 😉

      Delete
    9. ஆமாம் இந்த மேக்ஸி சைஸ் பிடிக்கவில்லை. டெக்ஸ் புக் size இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

      Delete
    10. உண்மை குமார். அடுத்து வரவுள்ள மாடஸ்டி மற்றும் ஆர்ச்சி கதைகளும் இதே அளவு தான்; ஆசிரியர் இதன் அளவை இனி மாற்றுவது கடினம் அறிவித்த படி இதே மேக்ஸி சைசில் தான் வரும் என நம்புகிறேன். எனக்கு இந்த கதைகள் பிடிக்கும் எனவே எஸ் சைஸ் என்பதை பொருட்படுத்தாமல் இவைகளை வாங்கி படிக்கிறேன்.

      எனக்கு பிடித்தது பிக் பாய்ஸ் ஸ்பெஷல் சைஸ் அல்லது ரெகுலர் டெக்ஸ் சைஸ்.

      Delete
    11. உனக்கு தமிழ் புரியாதாலே 😉

      Delete
  29. // எத்தனை பேர் இப்படி முயற்சிக்க போகிறார்கள். அவசர உலகம், நேரப்பற்றாமை //

    உண்மை உண்மை

    ReplyDelete
  30. ஒரு பதிவாகவே வெளியிட்டு என்னை திக்கு முக்காட செய்து விட்டீர்கள் சார். சிறு வயதில் நான் எழுதிய நீண்ட வாசகர் கடிதத்தை புத்தகத்தில் பிரசுரித்து அன்றே என்னை குதூகலிக்க வைத்தீர்கள். காலம் மாறினாலும் இரு தரப்பு (வாசகர் & ஆசிரியர்) நேசம் துளி கூட குறைந்திடவில்லை. இது தொடரும். மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  31. ஸ்பாய்லர் அலெர்ட் ஏற்கனவே கொடுத்திருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியல .முதல் வரிசையில் வந்திருக்க வேண்டிய மங்களமாய் மரணம்(ரூபின்)above averageல்இறக்கப்பட்டுள்ளது என்னைப் பொருத்தவரையில் குறை . சிறப்பான அருமையான அலசல் பாராட்டுக்கள் சகோ.அப்புறம் மாண்ட்ரேக் எனது பார்வையில் சூப்பரே.

    ReplyDelete
  32. ஆசிரியரின் ஒரு பதிவு அளவுக்கு மிக நீண்ட அலசல் வாழ்த்துக்கள் &தேங்க்ஸ் வ.பாறை. திருநாவுக்கரசு சகோ.

    ReplyDelete
  33. இன்று Despatch நாளை புத்தகம்

    ReplyDelete
  34. எகிப்தில் டின்டின் ? அப்படி எதுவும் வந்ததாக நினைவில்லையே !

    ReplyDelete
    Replies
    1. அதன் பெயர் திபத்தில் டின் டின் சார்.

      Delete
  35. புத்தகங்கள் இன்னும் வரவில்லை 😌

    ReplyDelete