Saturday, August 31, 2024

வருஷத்தின் முக்கால்வாசி....

 நண்பர்களே,

வணக்கம். இது காலத்துக்கேற்ற மாற்றமா? அல்லது என் சோம்பேறித்தனத்தின் பிரதிபலிப்பா? அல்லாங்காட்டி மாறி வரும் பொழுதுகளின் கட்டாயமா? சொல்லத் தெரியலை!! ஆனால் கடந்த சில நாட்களாகவே நமது வாட்சப் கம்யூனிட்டியில் அரங்கேறி வரும் ரகளைகளானவை துவக்க நாட்களில் இங்கே பதிவுப் பக்கங்களில் நாமெல்லாம் தரிசித்த உற்சாகங்களின் mirror image-ஆக இருந்து வருவதைக் கண்டு வியக்காது இருக்க முடியவில்லை! ஏற்கனவே “தெருக்கோடி தேங்காய்கடை குரூப்”...”முனீம்மா மாங்காய் பத்தை க்ரூப்” என்ற ரேஞ்சுக்கு ஒரு வண்டி வாட்சப் குழுக்களில் ‘தலையெழுத்தே‘ என்று குப்பைகொட்டி வருவோர்க்கு நாமும் புதுசாய் டொங்ங்ங்.... டொங்ங்ங்... என்று உசிரை வாங்க ஆரம்பித்திருப்பது கடுப்பேற்றக் கூடும் தான்! ஆனால் - விரல் நுனிகளில் கருத்துப் பரிமாற்றம் சாத்தியம் என்ற இந்த அரங்கமானது, காமிக்ஸ் மீதான ஆர்வங்களைத் தழைக்க உதவிடும் என்றே தோன்றுகிறது!

இதோ - இந்தப் பகுதியை நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒரு மீள்வருகையினை அங்கே சாத்தியமாக்கி சாதித்துக் காட்டியுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது! ஏக காலமாய் வனவாசம் சென்றிருந்த கமான்சே தொடரை “மறுக்கா பார்த்தே தீரணும்” என்று நண்பர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை கோரி வர அதனை வாக்கெடுப்புக்கு விட்டிருந்தோம்! திகிடுமுகுடான வித்தியாசத்தில் கமான்சே கெலிச்சும் வைக்க, 2025 சந்தாவோடு முன்னே b&wல் வெளியான ஓநாய் கணவாய் இதழினை ஒரு limited கலர் பதிப்பாக்கி, நமது அன்புடன் வழங்கிடவுள்ளோம்! Oh yes - அந்த நொடியில் தோன்றிய மகா சிந்தனையின் பின்னே நல்லதொரு செலவு காத்திருக்குமென்பது புரிகிறது தான்! ஆனால் அந்த உற்சாகப் பிரவாகங்களின் முன்னே பைசா கணக்கு - வழக்குகள் முக்கியத்துவத்தை இழக்கத் தான் செய்கின்றன! ஜெய் கமான்சே!

Moving on, செப்டம்பரின் இதழ்கள் சகலமும் பிரிண்டாகி, பைண்டிங்கில் உள்ளன! திங்கள் மாலை அவை நம்மை வந்து சேர, செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் என்பது திட்டமிடல்! பணிகளை 2 தினங்கள் முன்பாகவே முடித்திருக்க வேண்டும் தான் - ஆனால் V காமிக்ஸ் நீங்கலாய் பாக்கி சகலத்திலும் வண்டி வண்டியாய் பேனா பிடிக்கும் பணிகள் அவசியப்பட்டதால் கொஞ்சம் சுணங்கி விட்டது.

இம்மாதத்து ‘தல‘ சாகஸம் - “வல்லவர்கள் வீழ்வதில்லை” இதழினை நினைவுபடுத்தும் விதத்தில் ஒரு வில்லன் டீமையே கண்ணில் காட்டவுள்ளது! ஒரு மெயின் வில்லன்; சில துணை வில்லன்கள் மாத்திரமின்றி - ஒரு மெயின் வில்ல டீம்; இன்னொரு போக்கிரிகள் டீம் என்று இங்கே ஏகமாய் கதை மாந்தர்கள் உண்டு! நமது ரேஞ்சர்களும் முழு வீச்சில் களமிறங்குகிறார்கள்; again அணி - அணியாக! டெக்ஸ் & டைகர் ஒரு அணியாகிட., வெள்ளி முடியார் கார்சன் இன்னொரு அணியில் & சின்னக் கழுகார் கிட்டோ எதிரிகளோடு! In fact இங்கே ரேஞ்சர்கள் Vs ரேஞ்சர்கள் என்பதே கதையின் மையப்புள்ளி! கதாசிரியர் மௌரோ போசெலி வழக்கம் போல அழுத்தம் தந்திட, மாமூலான டமால் - டுமீல் - கும் - ணங் - சத் என்ற சாகஸமாய் இது அமைந்திடாது, மாறுபட்டு இருந்திடவுள்ளது! அங்கே இத்தாலியில் MAXI டெக்ஸாக வெளியானதே நமது ”சினம் கொண்ட சின்னக் கழுகு!” Don't miss it!  

இம்மாதத்து V காமிக்ஸ் நமது ஜம்பிங் பேரவையினை உற்சாகத்தில் துள்ளச் செய்யவல்ல சாகஸத்தோடு களம் காண்கிறது. 130 பக்க நீளத்து ஸாகோர் black & white அதிரடி - மெய்யாலுமே போனெலியின் ஆக்ஷன் பாணியில்! சும்மா ஈசி சேரில் குந்திக்கினு “அந்த நாளிலே ஸாகோர் என்ன பண்ணுனார் தெரியுமா?” என்ற ரீதியில் கதையை நகர்த்திடாது - வன்மேற்கின் பரபரப்பான களத்தில் கோடாரி மாயாத்மாவை இறக்கி விட்டுள்ளனர்! And துளியும் பிசிறின்றி ஸாகோர் கதை நெடுக எகிற அடிக்கிறார் - தொப்பையின் ஸீகோவின் துணையோடு! இங்கே மட்டும் ஸாகோர் & ஸீகோ என்ற ஜோடியை நகர்த்திப்புட்டு, டெக்ஸையும், கார்சனையும் உட்புகுத்திடும் பட்சத்தில் இம்மி கூட வித்தியாசம் தெரிந்திராது! அப்படியானதொரு Wild West களம்! And இதற்குப் பேனா பிடித்திருப்பது நம்ம மேச்சேரியார்! பெரியளவில் திருத்தங்கள் போடவோ, மாற்றியெழுதவோ அவசியமின்றி அவரது மொழிபெயர்ப்பு சுளுவாக அமைந்திருந்ததால் எனது பெண்டு லைட்டாகத் தப்பியது இந்த மாதத்தில்!

And இதோ - “வஞ்சத்திற்கொரு வரலாறு” அட்டைப்படம் மற்றும் உட்பக்க previews!! இழந்த மவுசை ஸாகோர் சிறுகச் சிறுக மீட்டு வரும் முயற்சிக்கு இந்த ஆல்பமும் கணிசமாய் உதவிடும் என்பதில் எனக்கு ஐயங்களில்லை! ஜம்பிங் செயலரே - over to you 👍


அப்புறம் போன வாரம் அட்டைப்படத்தை மட்டுமே கண்ணில் காட்டியிருக்க, கேரட் கேசத்து அழகி ரூபினின் உட்பக்க பிரிவியூவும் இதோ:

So 2 ப்ராங்கோ - பெல்ஜிய கலர் மேளாக்கள் & 2 இத்தாலிய b&w ரகளைகள் என்று செப்டம்பர் பயணிக்கவிருக்க - படிக்க நேரங்களைத் தேற்றும் வேலை மட்டுமே உங்களுக்குக் காத்திருக்கும்!

And further down the line - காத்திருக்கும் அக்டோபரில் இன்னொரு 4 இதழ் காம்போவும் வெயிட்டிங்! அது மாத்திரமன்றி அக்டோபர் 31-க்கு தீபாவளிப் பண்டிகை காத்திருப்பதால், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே நவம்பரின் தீபாவளி மலர்களையும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும்! So அக்டோபருக்கென செமத்தியான பணிகள் எங்களுக்குக் காத்துள்ளன! நீங்களுமே இயன்றமட்டுக்கு இம்மாதம் முதலாய் நிறைய தொக்கடிகளின்றி வாசிப்புகளைப் போட்டுத் தாக்கினால் தேவலாம் என்பேன்! வாட்சப் கம்யூனிட்டியில் காட்டும் அதே வேகத்தினை வாசிப்பிலும் காட்டினால் all will be super well!

தற்போதைய கவனமெல்லாம் 2025-ன் அட்டவணை மீதே எனும் போது, நெதமும் ஒரு புது யோசனை உதயமாவதும், பொழுது சாய்வதற்குள் இன்னொன்று உதயமாவதும் சமீப நாட்களின் வாடிக்கையாகி இருந்து வருகிறது! இதற்கென நான் ஆங்காங்கே வரவழைத்திருக்கும் கோப்புகள் ஒரு முழு லாரி லோடு தேறும்! நிஜத்தைச் சொல்வதானால் எனது லேப்டாப்பில் புதைந்து கிடக்கும் கதைகளைக் கொண்டு அடுத்த 20 வருஷங்களுக்கு - இருபது வெவ்வேறு பதிப்பகங்கள் செம சுளுவாய் வண்டி ஓட்டிட இயலும்! But நானோ உங்களின் உச்சத்திலான எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்திடுமோ - செய்யாதோ? என்ற பயத்திலேயே அவற்றின் பெரும்பான்மையை உள்ளே கிடத்திப் போட்டுள்ளேன் !

இதோ - எனக்குத் தெளிவு தேவைப்படும் சில சமாச்சாரங்கள் மீதான கேள்விகள்:

Voting link : https://strawpoll.com/e2naXX7lpyB

Next : ஹாரர் கதைகளை புத்தக விழாக்களில் கேட்டு வருகிறார்கள் என்று நம்மாட்கள் சொல்லுவதுண்டு! அந்த ஜானரை ரெகுலர் சந்தா தடத்தினுள் மெல்லிசாக நுழைப்பது குறித்து உங்க அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ்?

Last but not the least : ஆக்ஷன் + மெல்லிய காதல் கரம் கோர்க்கும் ஒரு ஒன் ஷாட் உள்ளது! சித்திரங்கள் வேற லெவல்! இது உங்களின் சுவாரஸ்யங்களை ஈர்க்க வாய்ப்புண்டோ? Answers please?

ரைட்டு, வண்டி வண்டியாய் அக்டோபர் பணிகள் காத்திருக்க, நான் நடையை கட்டுகிறேன் folks! See you around! Have a fun weekend  💪!

270 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. Mak and jak my choice .. OK for horror ..

    ReplyDelete
    Replies
    1. Same pinch தம்பி. எனக்கும் மேக் அண்ட் ஜாக் தான் வேண்டும்.

      Delete
  4. வணக்கம் காமிக்ஸ் உறவுகளே 🔥❤️💥🙏

    ReplyDelete
  5. வணக்கம் மக்காஸ்.. 😍😍😍

    ReplyDelete
  6. Double OK for action + romantic story ..

    ReplyDelete
  7. 1) மேக் அண்ட் ஜாக்
    2) யெஸ் for ஹாரர்
    3) யெஸ்ஸோ யெஸ்

    ReplyDelete
  8. சார் @ ஓநாய் கனவாய் வருவது சந்தோஷமாக உள்ளது. இதனை வண்ணத்தில் கொடுங்கள் சார். பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ளோம் சார். மறுபதிப்பாக வரவுள்ள இந்த கதையை வண்ணத்தில் கொடுங்கள்pl sir.

    ReplyDelete
    Replies
    1. பரணி சார்.. கலர்தான் வருதுங்கோவ்..

      Delete
    2. இலவசமாக வேண்டாம். பணம் அனுப்பி விடுகிறேன் சார்.

      Delete
    3. @PFB..😃😃

      அன்புடன் தருவதை மறுக்ககூடாது..😃

      அதை பெற்று கூடுதல் அன்புடன் சந்தாவில் இல்லாத அன்பு நண்பர்களுக்கு அன்பு பரிசாக அளித்தால் அன்பு பெருகுமே..😍😃😘..

      #செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா..# 😃😀😘😍

      Delete
  9. Clifton my choice...

    Horror genre கண்டிப்பாக இணைக்கலாம் சார்...

    அந்த மெல்லிய காதல் + ஆக்ஷன் HEAவாக முடியும் பட்சத்தில்... சித்திரங்கள் ட்டகாசமாக இருக்கும் பட்சத்தில்... Warm Welcome...

    😍♥️🌹🔥

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆக்சன்+லவ் போய் தான் பாப்போமே

      Delete
  10. ஹாரர் நுழைச்சு வுடுங்கோ.. நோ ப்ராப்ளம்

    ReplyDelete
  11. வஞ்சத்திற்கொரு வரலாறு மீண்டும் நீளமான சாகசத்தில் ஸாகோர் வருக வருக என்று வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @PFB..😍😘

      ஸாகோர் பேரவையின் கருநாடக மாநில பொறுப்பாளரின் வாழ்த்துக்களை வரவேற்கிறோம்..😍😘💐💐

      Delete
  12. கர்னல் கிளிப்டன்.. எனது அனுபவ தேர்வு இது தான்.
    உங்களுக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் என 4 அல்லது 5 கார்ட்டூன், கார்ட்டூன் அண்ட் ஆக்சன் புத்தகங்களை சிறுவர்களிடம் காண்பித்தால் அவர்களின் தேர்வு இந்த நாயகர் தான் அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    எனது தேர்வு கர்னல் கிளிப்டன்.

    ReplyDelete
  13. Replies
    1. வாழ்த்துக்கள் கண்ணா. இந்த முறை ஸாகோர் எகிறி அடிக்கப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

      Delete
    2. @Kumar ji.. 😍😘

      ஸாகோர் பேரவை பேனரை கட்டிடுவோமா...😍😘

      Delete
    3. நன்றி குமார்..!
      கொலமாஸ் கதைக்களம்..!

      Delete
  14. ஹாரர் கதைகள் வருவது வரவேற்கத்தக்க விஷயம்.. சந்தோசமாக ஆவலுடன் வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரொம்ப நாள் வேண்டுகோள் இது.

      Delete
  15. உணர்ச்சிவசப்பட்டு இருக்கும்போது முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள் சார் ப்ளீஸ். ஓநாய் கணவாய் கலரில் கொடுப்பது சரி. அதை இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? முன்பெல்லாம் அடையாறு என ஆரம்பித்தாலே லாபத்தின் பெரும்பகுதியை நன்கொடையாக கொடுத்திருந்தீர்கள். அடையாறு ஆனந்த பவன் என்று இருந்தாலும் சரி. உடனே கொடுத்து விடுகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. 1.க்ளிப்டன்
      2.யெஸ்
      3.யெஸ்

      Delete
    2. //அதை இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? //

      +1

      Delete
    3. ஆசிரியர்,
      சந்தாதாரர்களுக்கு, அன்பின் பரிசை வழங்க விரும்பினால், அதை அவர் வழங்கட்டுமே...
      அதை நீங்கள் சுமையாக எண்ணிணால், நீங்களும் அவருக்கு பரிசு அனுப்புங்களேன்.
      நீங்கள் அப்படி அவரை கௌரவிக்கும்போது, எங்களுக்கும் மகிழ்ச்சியே...

      Delete
    4. @புன்னகை ஒளிர் ஜி..😃😃😍

      இந்த அகுடியா நல்லா இருக்கே..👍✊✊👌👌

      Delete
  16. ஹாரரை எப்போதும் வரவேற்போம் சார்.நீங்க இந்த கேள்விய கேட்டதே லேட்டு.

    ReplyDelete
  17. ப்ளூ கோட் பட்டாளம்

    ReplyDelete
  18. // Last but not the least : ஆக்ஷன் + மெல்லிய காதல் கரம் கோர்க்கும் ஒரு ஒன் ஷாட் உள்ளது! சித்திரங்கள் வேற லெவல்! இது உங்களின் சுவாரஸ்யங்களை ஈர்க்க வாய்ப்புண்டோ? //

    வேண்டாம் வேண்டாம் சார்

    ReplyDelete
  19. எனது ஆதரவு ப்ளூ கோட் பட்டாளம்😀

    ReplyDelete
  20. ஹாரரை வரவேற்கிறோம் 😁

    ReplyDelete
  21. முதற்கண் சனி பதிவிற்கு நன்றி... தலையின் சாகசம் வல்லவர்கள் வீழ்வதில்லை என்ற கதை தொடர் போன்று இருக்கின்றது என்று சொன்னதால் அதன் மீது ஆர்வம் அதிகமாகிறது. வெயிட்டிங் ஃபார் தல...( நாம எப்போதுமே தலை புக் என்றாலே பயங்கர வெயிட்டிங் தான்)

    ReplyDelete
  22. @Edi Sir..

    1)Red carpet welcome to ப்ளூகோட் பட்டாளம் 😍

    2)Yes..
    Blood carpet welcome to Horror..😋😱😱😱

    3)Yes..
    Hearty welcome to Romance+Action.. 😘❤💛

    ReplyDelete
  23. Blue coat
    Horror (logical stories)
    Romance (let us have a try for one or two albums)

    ReplyDelete
    Replies
    1. லாஜிக்கோட சுத்துற பேய்கள் முருங்கைமரத்திலே ஏறி வைக்காதே சார் | ஏதாச்சும் மாமரம், ஆப்பிள் மரம்ன்னுல்லே ஏறிக்கும்? So ஆரம்பமே இடிக்குமே நம்மோட ஹாரர் தேடலில்?

      Delete
    2. லாஜிக்கோட சுத்துற பேய்கள் இல்லேன்னாலும், காதுல பூ அதிகமா சுத்தாத கதையா பாருங்க சார். 13 ஆம் நம்பர் மாடி போல...

      Delete
    3. ஓவியம் வேற லெவல் அப்படிங்கறீங்க... ஹாரர்
      போட்டு வுடுங்க sir... ❤️👍

      Delete
  24. சார் மீதமுள்ள கமான்சே கேட்டால் மறுபதிப்பை அல்லவா தாரேன் என்கிறீர்கள்.. அல்லது அடுத்த ஆண்டில் ஒரு கமான்சே புது புக்குக்கும் இடம் உண்டா..? விளக்கம் ப்ளீஸ் விஜயன் சார்..

    ReplyDelete
    Replies
    1. கேட்டது கமான்சே தானுங்களே - வரப் போறதும் கமான்சே தானே? இது தானே சார் அது?

      Delete
    2. Ok sir. வெல்கம் கமான்சே..

      Delete
  25. 1: மேக் & ஜாக்
    2: ஹாரர் ரெகுலர் சந்தாவுக்கு கொண்டு வரலாம்
    3: எஸ் டபுள் எஸ் ட்ரிபிள் எஸ்

    ReplyDelete
  26. ஓநாய் கணவாய் மறுபதிப்பு இலவசமாக தயவு செய்து தவிர்க்க முயற்சி செய்யுங்கள் சார்...

    கமான்சே கதைகள் வரிசை , முன்னர் வந்த கதைகளை தாங்கள் சமீப புத்தக விழாக்கள் வரை பெரும் தள்ளுபடி தந்தததே சிரமமான விஷயம்.

    இந்நிலையில் இந்த கதையும் இலவசமாக பெறுவதில் எனக்கு கூச்சமாக உள்ளது

    ReplyDelete
  27. கர்னல் க்ளிப்டன் ( மினி லயனில் இருந்து தொடரும் சில ஹீரோக்களில் ஒருவர்) வேண்டும் Sir

    Horror கண்டிப்பாக பழைய திகில் Style ல் இ.வேண்டும் சார்...

    அந்த மெல்லிய காதல் + ஆக்ஷன் வேண்டாம் Sir

    ReplyDelete
  28. ஓநாய் கணவாய் புத்தகத்தை இலவசமாக தருகிறீர்கள் என்பது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.. நன்றி ஆசிரியரே... ஆனால் ஏதோ ஒன்று மனதை .......

    ReplyDelete
  29. வாட்சப் கம்யூனிட்டியில் காட்டும் அதே வேகத்தினை வாசிப்பிலும் காட்டினால் all will be super well! ஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. அடுத்தடுத்த வாரங்களிலே அங்கே டெஸ்ட் ; quiz ன்னு வைக்கப் போறேன்... பாக்கணும் மக்கள் தெறிச்சு ஒடறாங்களா - நஹியான்னு!

      Delete
    2. முட்டை வாங்கி தெறிச்சு ஓடப்போறாங்க சார் ! :-)

      Delete
    3. 😄😄என்னங் sir இது அநியாயமா இருக்கு.. பரணி sir.. "காதல் கசக்குதையா.. வர, வர காதல் கசக்குதையா " அப்படினு பாண்டிய ராஜன் மாதிரி பாடறாரு..... என் no சொல்றாங்க...புதுசா ஒன்னு வரட்டுமே.. 😄😄

      Delete
  30. ப்ளூ கோட் பட்டாளத்தின் ஆகாயத்தில் அட்டகாசம்... ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களின் வேறு எந்த ஒரு கதை தொடரும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை..... ஆனாலும் அவர்கள் கதை மிகவும் பிடிக்கும். அதேபோல் கேரட் மீசை க்ளிப்டெனின் கதைகளும் மிக ....மிகப் பிடிக்கும்... இப்ப என்ன செய்வது ஓட்டை எப்படி போடுவது.... குத்துடா ரெண்டுக்கும் ஆசிரியர்ரெண்டு கதையும் சேர்த்து போடட்டும்.... எப்படி

    ReplyDelete
  31. ரேஞ்சர்களுக்கிடையிலான மோதல் கண்டிப்பாக அடுத்த மாதம் மறக்க முடியாததொரு மாதமாக அமைவது நிதர்சனம்.. சீக்கிரமே புத்தகத்தைத் தரிசித்திடவும் ஜாகோரோடும் ரூபினோடும் நாட்களை வேகமாக்கிடவும் தீபாவளிக்காக தாறுமாறான கதைக்களங்களை தரிசிக்க ஆர்வத்தோடும் காத்திருக்கப் போவது உறுதி சார்.. கலக்குக..

    ReplyDelete
    Replies
    1. நீங்க படிக்க.. நான் கலக்க ஏதுவா இருக்கும் 💪

      Delete
  32. ஆசிரியரே அப்படியே அலிபாபா முஸ்தபா கதைகளை போடுவதாக சொன்னீர்களே எப்ப ஏது என்று தகவல் உண்டா...

    ReplyDelete
  33. ஓட்டு புளுகோட்டிற்கு
    ஹாரர் கண்டிப்பாக முயற்சிசெய்யலாம் சார். ஆனால் காதல் எனக்கு வேண்டாம்
    ஹாரர் ரெகுலர் சந்தாவில் சேர்க்கலாம் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  34. வாட்சப்பில் இன்னும் களமிறங்காத தோழமைகள் கண்டிப்பாக வருகை புரியுங்கள்..

    ReplyDelete
  35. No Horror and Love Story in main-stream sir please ! Mudeela !! Mainstream - let it be for fast reads which are action packe or adventure or cartoons.

    If the choice is among the other three cartoons - the Blue Coats is my choice !

    ReplyDelete
  36. ## இம்மாதத்து V காமிக்ஸ் நமது ஜம்பிங் பேரவையினை உற்சாகத்தில் துள்ளச் செய்யவல்ல ஸாகோர் சாகஸத்தோடு களம் காண்கிறது.. ##
    😍😘


    இதோ வரவேற்பு விழா நடத்த கொடி, பேனர் உடன் ரெடியாகிட்டோம் சார்..
    😍😘😄😀

    ஜெய் ஸாகோர்..😍😘❤💛💙💚💜👍✊✊👌👌

    ReplyDelete
  37. சார் - இந்த வயசுல ஹாரரும் காதலும் ஒரே மாதிரி இருக்கும் சார் - பார்த்து - தொடர் ஆல்பம்-னு நெனச்சுர போறாய்ங்கே ! 

    ReplyDelete
  38. கமான்சே வரணும்
    ஒரு ரவுண்டு வரணும்

    ஹேப்பி அண்ணாச்சி .. 😘😘

    ReplyDelete
  39. Replies
    1. அதில ஒரு பஞ்சுமுட்டாய் மிஷின் கதை உண்டு ; அதை படிச்சிருக்கணும் நீங்க 🤕🤕

      Delete
    2. ஆஹா... அம்புட்டு பேரும்..
      "காதல் கசக்குதையா " அப்படிங்கராங்களே... 😔😔😔

      Delete
  40. மேச்சேரியார் வாழ்க..💐

    காமிக்ஸ் உலகின் "இளைய தளபதி" ஸாகோருக்கு புத்தம்புதிய திரைகதை வசனம் மூலம் மறுவாழ்வு அளிக்கும் எங்கள் மேச்சேரியார் வாழ்க.. வாழ்க...💐💐

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் தலைவரே..😁😁🙏

      கும்கி படத்துல தம்பீ ராமையாவை மலைகிராமத்தினர் மாறிமாறி புகழும்போது யானைக்கு கீழே குனிஞ்சிபாத்து அவர் சொல்வாரே...

      "தம்பி தம்பி.. போதும்பா.. நான் அவ்வளவுக்கு ஆளில்லைப்பா" ன்னு அதேமாதிரி நானும் ரெக்வெஸ்ட் வெச்சிக்கிறேன் ஜம்பிங் தல...!

      ஏதோ அங்கொன்னு இங்கொன்னுன்னு கிடைக்குது.... பாத்து பண்ணுங்க 😂😂

      Delete
    2. *மேச்சேரியார்*

      எடிட்டர் சார்...

      மேச்சேரியார்னா ஏதோ ரொம்ப வயசான பெரியவர் மாதிரி தோணுதுங்க சார்.. நீங்க எப்பவும்போல கண்ணன்.. கிட் ஆர்டின் கண்ணன்னே கூப்பிடுங்க சார்...😭😭

      (என்ர மச்சான் மகேந்திரனுக்கு ஒரு பின்குறிப்பு..

      கீழே வந்து நீ வயசான கிழட்டு பயல்தானேடான்னு எழுதி வெச்சே....


      கொன்னுபேக்கு..!!)

      Delete
    3. அப்ப KOK ன்னா கிழட்டு ஆறுடின் கண்ணன் இல்லியா. நான் தான் தப்பா புரிஞ்சுட்டேனா? இருக்காதே!!

      Delete
  41. V காமிக்ஸ் வர வர சுணங்கிட்டே போகுது டியர் எடி .. ஓப்பனா சொல்றேன் .. நல்ல கதைகளை போடாமல் இப்படியே போய்ட்டிருந்தால் V காமிக்ஸ் ஜெயிப்பது குதிரை கொம்புதான் .. முதல் ஆறு மாத சந்தா கட்டி வந்த புத்தகங்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கித்தான் வைத்திருக்கிறேன். கதைகளின் தரம் அப்படி இருக்கு .. ஒளிவுமரைவில்லாம ஓப்பனா சொல்லிருக்கேன் இதை எத்தனைபேர் மனசில நினைச்சிட்டிருக்காங்கன்னு எனக்கு தெரியாது

    ReplyDelete
  42. அனைவருக்கும் வணக்கம்....

    ReplyDelete
  43. 2025 அட்டவனையில் புத்தகங்களின் எண்ணிக்கை அடத்தி அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் .. வருசா வருசம் சந்தா எண்ணிக்கையை அதிகப்படுத்தனும்ன்னா வெளிய சொல்லமுடியாமல் இருக்கும் நண்பர்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் .. புத்தகங்களை வாங்கி வாங்கி மூலையில் போட்டு வைக்க எனக்கு விருப்பமில்லை .. அதிக புத்தகங்கள் ஆபத்து தான் .. மேலும் உங்க விருப்பம்தான் .. புத்தகங்கள் அதிகமானால் அடுத்த வருடம் நான் கண்டிப்பாக சந்தா கட்ட மாட்டேன் .. இது எனது கோரிக்கை மட்டுமே

    ReplyDelete
  44. சார் பேசாமல் அடுத்த வருஷம் ஜலபுலஜங் சந்தா என்று ஆரம்பிச்சு அதுல -
    பேய்க்கதை 
    தாத்தா கதை 
    காதல் கதை 
    சிப்பாயின் சுவடுகள் மீதி பாகங்கள் 
    எரேமியா 
    இத்யாதி இத்யாதி எல்லாம் சேர்த்து இறக்குங்க ! ப்ளீஸ் மெயின் சந்தாவில் வேண்டாம் !!

    ReplyDelete
  45. மேக் அண்ட் ஜேக் & கிளிப்டன் & ப்ளு கோட் அத்தனை சுகப்படவில்லை டியர் எடி .. வேறு ஏதேனும் சிரிப்பு மூட்டும் கதைகளை பரிசீலியுங்களேன் ..

    ReplyDelete
  46. இங்கே எல்லாரும் எல்லா கதைகளையும் சூப்பர் அட்டகாசம் மார்வலஸ் என்று சொன்னாலும் வாங்கி படிக்கும்போது ஏற்படுகிற ஏமாற்றத்தை என்ன வென்று சொல்வது .. சிலருக்கு அதிக புத்தகங்கள் வருவது நன்றாக இருந்திருக்கலாம் .. ஆனாலும் உங்கள் வாசகர்களின் வயது குடும்ப சுமை எல்லாத்தையும் பார்த்து பரிசீலிக்கவும் .. ( முன்பொருகாலத்தில் ஒரு ஆர்வத்தில் அதிக விலை கொடுத்தும் & ஸ்கேன்லேசன் புத்தகங்களையும் வாங்கி படித்திருக்கிறேன் அந்த வயது வேறு .. தற்போதுள்ள வயது குடும்ப சுமைகள் வேறு. அதையும் இதையும் இணைத்து கன்பியூஸ் பண்ணிக்க வேணாமே ப்ளீஸ் )

    ReplyDelete
    Replies
    1. கவலையே வாணாம் சம்பத் ; நான் தெளிவா கீறேன்!

      Delete
    2. 🌹🌹🌹சூப்பர் சார்

      Delete
  47. 1. க்ளிப்டன் ஓகே. மேக் & ஜாக் மிடில. ப்ளூகோட்ஸ் பிடிக்கல.
    2. ஹாரர் ட்ரை பண்ணலாம்.
    3. காதல் கசக்குதய்யா…வர வர காதல் கசக்குதய்யா…

    ReplyDelete
    Replies
    1. இந்தவாட்டி அடி கொஞ்சம் பலமோ தல?

      Delete
    2. எல்லாவாட்டியும் பலந்தாங்க சார். கூட இருக்கறவனுக எல்லாம் கிப்ட் தரேன்னு ஸ்டீல்ல பூரிக்கட்டையா அனுப்பி விடற நல்லவங்களா இருக்காங்க. பதுங்கி பதுங்கி வாழ வேண்டியதா இருக்கு. தலீவர் கூட பழகினதுல ஒரே லாபம் பதுங்கறதை கத்துக்கிட்டது தான்.

      Delete
  48. நான் வெளிப்படையா பேசிட்டேன் னு கோச்சுக்காதீங்க டியர் எடி .. வச்சும் செஞ்சிடாதீங்க .. ரொம்ப நாளா மனதினில் இருந்த ஆற்றாமையால் மனதில் உள்ளதை பேசிட்டேன் .. 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சம்பத்... உங்களுக்கு தெரியுறது ஒரு பார்வைக்கோணம்...!

      ஆந்தையாட்டம் உசக்கே குந்தியிருப்பவனுக்கோ கண்ணில்படறது பல கோணங்கள்! சகலத்தையும் உள்வாங்கிக் கொண்டு தானிருக்கிறேன். சில செயல்களின் காரணங்கள் புரிபடும் ; சிலவோ குழப்பமாய் தென்படலாம்! ஆனால் சகலத்தின் பின்னும் லாஜிக் கீது

      Delete
  49. 1. ப்ளூகோட்ஸ்
    (கிளிப்டனும் ரொம்ப பிடிக்கும்.. சாய்ஸ் இல்லையே..😫)

    2. ஹாரர் கதைகள் வரட்டும் சார்.. அதையும்தான் ரசிப்போமே..!
    (பேய்கள் எல்லாம் தமன்னா, த்ரீஷா, ஹன்சிகா மாதிரிதான் இருக்கும்..?!)

    3. ரொமான்ஸ் வித் ஆக்சன்
    (சரியாக அர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.. ஆக்சன்னா வீட்டம்மாக்கள் நம்மை அடிநொக்குகிறார்களே அது..!)

    நெடுநாள் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று.. கட்டாயம் வேணும் சார்.!

    ReplyDelete
    Replies
    1. உங்க மச்சானுக்கு வாணாமாமே 🤔

      Delete
    2. மார்க் ஆன்ட்டனி படத்துல சிலுக்கை பார்த்த SJ சூர்யாவின் மனசாட்சி ஜொள்ளுவிட்டு டான்ஸ் ஆட.. ஒரிஜினல் SJ சூர்யா மகனின் உத்தரவைப்பற்றி சொல்வார்.. அதுக்கு மனசாட்சி ஒரு வரி பேசும் சார்..... அதை பொதுத்தளத்தில் எழுதவும் முடியாது... மச்சானுக்கு புரிஞ்சிருக்கும் சார்..😂😂

      வாட்ஸ்அப்பா இருந்தா ஒரே ஒரு போட்டோ போதும்..😂😂😂😂😂

      Delete
    3. கடைசில அந்த SJS ஆன கதி உனக்கு வீட்ல நடக்கற மாதிரி பண்ணிட்டா போச்சு

      Delete
    4. இதே வேலையாப்போச்சி இவங்களுக்கு..!

      ஒரு மனுசன் ஒருநாளைக்கு சந்தோசமா ஜாலியா வெளியே பழமை பேசமுடியுதா.? உடனே குண்டு வெச்சிடுறாங்க..!

      Delete
    5. @எடிட்டர். தாங்கள் யூத் என்று நிரூபிக்க காதல் கதைக்கு ஆதரவா ஒரு சிலிண்டரும்., ஸ்பியரும் மாறி மாறி உருண்டு வரும். நம்பி ஏமாந்துடாதீங்க.

      Delete
  50. //ஓநாய் கணவாய்//

    எனது ஆல் டைம் பேவரைட்... இது எனக்கான பரிசாக தான் நான் எண்ணுகிறேன்... போதாக்குறைக்கு வண்ண சித்திர விருந்து வேற.. ஆவலை அடக்க முடியவில்லை.

    உங்களுக்கு நான் சென்னை பிலால் பன் அனுப்பட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியே மதுரைக்கும் அனுப்புங்க...

      Delete
  51. ஆஹா ஆகாகாக...
    "திரும்ப காமன்சே வருது" என்ற மகிழ்ச்சி நண்பர்கள் மத்தியில் ஒருபுறம் இருக்க, அதே சமயம் முந்தைய தொடர்களை தேடும் படலமும் ஆரம்பமாகி விட்டதை நண்பர்கள் பரபரப்பு மூலம் அறிய முடிகிறது.மேலும் கவெ யாக வந்த "ஓநாய் கணவாய்" கிடைக்க என்ன செய்வது என பலர் யோசிக்கும் நேரத்தில்,
    காமிக்ஸ் படிக்க கூலியா? என - "கலர் எடிஷனில் "ஓநாய் கணவாய் " அதும் சந்தாதாரர்களுக்கு நமது அன்புடன்" எனும் அறிவிப்பு, தாங்கள் வாசகர்கள் மனதை புரிந்து கொண்டதை அழகாக காட்டியது.
    மிக்க நன்றி ஆசான் அவர்களே❤️👌.

    பின்பு காமன்சே தொடர் வந்தபின் இந்த முறை புத்தக விழாக்களில் ஒரு கணிசமான அளவு, மீதமுள்ள முந்தைய பாகங்கள் தங்களது இடத்தை காலி செய்யும் என நம்புகிறேன்.

    தங்களது வாட்சப் குழு,என்றும் எங்களை தங்களுடன் நெருக்கத்தில் வைத்திருக்கும் ஒரு அற்புதமான வழி. இதை அனைத்து நண்பர்களும் விரும்புகிறோம்.
    அதற்கொரு ஸ்பெஷல் நன்றி சார் ❤️.

    //"வஞ்சத்திற்கொரு வரலாறு" And இதற்குப் பேனா பிடித்திருப்பது நம்ம மேச்சேரியார்! பெரியளவில் திருத்தங்கள் போடவோ, மாற்றியெழுதவோ அவசியமின்றி அவரது மொழிபெயர்ப்பு சுளுவாக அமைந்திருந்ததால் எனது பெண்டு லைட்டாகத் தப்பியது இந்த மாதத்தில்!//.
    உடல்நலம் தேறிவரும் இந்த நேரத்தில்,
    ஆசிரியருக்கு இந்த ஆசுவாசத்தை அளித்த இனிய நண்பர் @ கிட் ஆர்டின் கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே 💐❤️.

    சின்ன கழுகின் அட்டைப் படத்தை விட ஸாகோரின் மாஸ் காட்டும் அட்டைப்படமும்& க வெ சித்திரமும் எப்ப கைக்கு வரும் என்ற ஆவலை தூண்டுகிறது.

    சமாச்சாரங்கள் மீதான கேள்விகள்:....
    1) ப்ளூகோட் பட்டாளம்.

    2)பு விக்களில் ஹாரர் கதைகள்:- உண்மைதான் சார், பராகுடா, அன்டர்டேக்கர், இரவே இருளை கொல்லாதே போன்ற புக்ஸ் ஒரு குறிப்பிட்ட வாசகர்களை நோக்கி சென்றது.
    இன்னமும் இது போன்ற சில ஹாரர் கதைகள் இருந்தால் நல்லது.

    இது நீங்க சந்தாவில் விட்டாலும் சரி,
    பு வி ஸ்பெஷல் புத்தகங்களாக போட்டாலும் சரி.

    3)ஆக்சன்+காதல். டபுள் ஓகே.

    பிறகு....
    "காமன்சே திரும்ப வரும்" என்ற அறிவிப்பு கேட்கும் இந்த இனிய நேரத்தில்,
    இனிய நண்பர்/ சகோ சேலம் டெக்ஸ் வி ராவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். படிக்க வேண்டிய கதைகளின் வரிசையில்,
    ஓவ்வொரு கதையின் பரிந்துரையின் போது பெரும்பாலும் இந்த காமன்சே தொடரையும் வாசகர்களுக்கு ஒரு சாய்ஸாக சொல்லுவார்.
    அவர் சொல்லித்தான் காமன்சே தொடராக வந்த 9 புத்தகங்களையும் வாங்கினார்கள் பலர்.
    மேலும் எப்ப, எந்நேரம் கேட்டாலும் அந்த தொடர்களின் வரிசையை படங்களுடன் சொல்லி,படிப்பதற்கான ஆவலை தூண்டுவார்.
    கடந்த சில நாட்களுக்கு முன்
    நண்பர்கள் விற்பனை குழுவில் விற்பனைக்கு வந்த இந்த இதழைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது - இந்த தொடரில் இன்னும் எத்தனை பாகங்கள் இருக்கும் என நண்பர் BRUCE WAYNE இணையத்தில் தேடிப் பார்க்கையில், பாக்கி வரவேண்டிய தொடர் இருப்பதாலும், அதே சமயம் எடிட்டரின் வாட்சப் சாட்ல், ஆர்வமுடன் இருந்த நண்பர்கள் ஆசிரியரிடம் காமன்சே கேட்டு கோரிக்கையை முன் வைத்தபோது போது,
    இதோ இன்று முடிவாகியது அடுத்த காமன்சே தொடர் 2025 ல்.

    ஒரு நல்ல தொடரை, வாசகர்கள் மத்தியில் அவ்வப்போது படிக்க ஞாபகப்படுத்திய இனியவர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது.👏👏👏👏👏👏❤️.
    நன்றி.

    ReplyDelete
  52. Replies
    1. ///அன்டர்டேக்கர், இரவே இருளை கொல்லாதே ///


      மாஸ்....

      Delete
  53. 1. கிளிப்டன் (ப்ளூ கோட் டும் பிடிக்கும் but dry genre)

    2. மெல்லிசாக நுழைக்கலாம் சார்😊

    3. One shot னாவே கொஞ்சம் டர்ர் ஆகத்தான் செய்யுது சார்😅

    ReplyDelete
  54. 1) Blue coat
    2) Horror - Yes
    3) vanthalum santosham varalannalum no varutham

    ReplyDelete
  55. கதைகளைக் கொண்டு அடுத்த 20 வருஷங்களுக்கு - இருபது வெவ்வேறு பதிப்பகங்கள் செம சுளுவாய் வண்டி ஓட்டிட இயலும்! But நானோ உங்களின் உச்சத்திலான எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்திடுமோ - செய்யாதோ? என்ற பயத்திலேயே அவற்றின் பெரும்பான்மையை உள்ளே கிடத்திப் போட்டுள்ளேன் ! // அடேங்கப்பா ...

    ReplyDelete
  56. என்னுடைய வரிசை:

    ப்ளூகோட்ஸ் - கண்டிப்பாக வேண்டும்

    கர்னல் கிளிப்டன் - வேண்டும்

    மேக் & ஜாக் - வரலாமே?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.
      அனைத்தும் சந்தாவில் வரலாமே...

      Delete
    2. நான் விரும்பும் வரிசை

      1. கர்னல் கிளிப்டன்

      2.மேக் & ஜாக்

      3. ப்ளூகோட்ஸ்

      Delete
    3. இதில் ஒன்று சந்தாவில்,
      மற்ற இரண்டும் _______ புக் பேரில்
      லிமிடேட் எடிசனில்...

      Delete
  57. திகில் கதைகளை பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளது நல்ல விஷயம்.


    கருப்புக் கிழவி மட்டுமல்லாமல், பிசாசு நகரம் போன்ற இன்ன பிற திகில் ஜேனர் கதைகளையும் களமிறக்கி விடுங்கள் ஐயா!

    ReplyDelete
  58. 1. Clifton
    2. Horor - Yes. Sir, காலனி காலனின் கால் தடத்தில் - பாதியிலேயே விட்டுட்டீங்களே !
    3. Double Yes :-)

    ReplyDelete
  59. ஸாகோரை பொறுத்தவரை அவர் ஏற்கனவே சாதித்து விட்டார். ரெகுலர் தடத்தில் தொடர வேண்டிய நாயகர் இவர்!

    வீட்டுக்குள் உட்கார்ந்து பழங்கதைகளை அசை போடும், அந்த வகையான ஸாகோர் கதைகளையும் நிரம்பவே ரசித்தவன் நான்!

    ReplyDelete
    Replies
    1. // வீட்டுக்குள் உட்கார்ந்து பழங்கதைகளை அசை போடும், அந்த வகையான ஸாகோர் கதைகளையும் நிரம்பவே ரசித்தவன் நான்! // Me too

      Delete
    2. // ஸாகோரை பொறுத்தவரை அவர் ஏற்கனவே சாதித்து விட்டார். ரெகுலர் தடத்தில் தொடர வேண்டிய நாயகர் இவர் // உண்மை.

      Delete
    3. @Discover boo..😍😘

      ஸாகோர் பேரவையின் மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளர் அன்பு அண்ணன் பூபியின் சொல் இலட்சத்தில் ஒன்று..
      😍💐💐

      Delete
    4. நம்பளுக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட்லாம் கிளைகள் கீதா தல?😃😃

      Delete
  60. மொழி பெயர்ப்பில் ஆசிரியருக்கு உதவிகரமாக இருக்கும், நண்பர் kok அவர்களுக்கு நன்றிகள் பல.
    ஹாரர் கதைகள் வேண்டும் சார்.
    ப்ளுகோட் பட்டாளத்துக்கே எனது ஓட்டு.

    ReplyDelete
  61. ஓநாய் கணவாய் வருவது OK. ஆனால் நான் எதிர்பார்த்தது கமான்சேவின் புதிய கதையை. அந்த விதத்தில் ஏமாற்றமே. ஓட்டெடுப்பெல்லம் வைத்து ஒரு வித எதிர்பார்ப்பை கிளறி, இப்போது புஸ் என்று ஆகி விட்டது. இதற்கு பதில் Lady S வென்றிருந்தால் oru புதிய கதை கிடைத்திருக்கும். நீங்கள் மறு பதிப்பை தான் தரப் போகிறீர்கள் என்று தெரிந்திருந்தால் கமான்சேக்கு பதில் Lady S வென்று இருப்பார் என்பது என் எண்ணம்.

    1. ப்ளூகோட்ஸ்
    2. ஓட்டு போடவே பயமாக இருக்கிறது. Horror என்று சொல்லி மீண்டும் கருப்புக் கிழவியை இறக்கி விட்டு விடாதீர்கள். ஏற்கனவே இங்கு கிளாசிக் பாரம் ஜாஸ்தி. காலனின் கால் தடத்தை போன்று இருந்தால் முயற்சிக்கலாம் சார்
    3. Action with காதல். வேண்டாம் சார்.

    ReplyDelete
  62. திகில் என்ற பெயரிலேயே காமிக்ஸ் வெளியிட்ட காலம் போய் ஹாரர் கதை வெளியிட அனுமதி கேட்கும் நிலை வந்துவிட்டது!!!! ஹாரர் Ok, கர்னல் Ok love story ok

    ReplyDelete
  63. தீபாவளி - அக்டோபர் கடைசி நாள்,ஆனா அக்டோபர் மாத புத்தகங்கள்
    அக்டோபர் முதல் வாரத்துலயே வந்துவிடும் - இடையில் 20 நாள் இடைவெளி - அப்ப தீபாவளிக்கு ஏதாவது ஸ்பெஷல் புக்ஸ் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நவம்பர் மாத புத்தகம் தான் தீபாவளி ஸ்பெஷல். அது நவம்பர் மாதம் வருவதற்கு பதில் அக்டோபர் மாதமே வந்து விடும். போதுமா தமிழ் அய்யா?

      Delete
  64. ஆசிரியர், நாம முதல் பாகத்தை தேடும் வேலையை வெகு சுலபமாக குறைத்துள்ளார்.
    மேலும் சந்தாதாரர்களுக்கு அன்புடன் என்பது வருடா வருடம் அவர்களுக்கு தரும் ஒரு ஸ்பெஷல். இனி அதையும் வேண்டாம்னா வேறென்ன சந்தாதாரர்களுக்கு தருவார்?.
    வருவதை மகிழ்வுடன் பெற்றுக்கொள்வதே சாலச்சிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. அது முதல் பாகம் இல்லை. தமிழ் அய்யா

      Delete
    2. @கிடைக்கிறதை வேண்டாம்னு சொல்ல பெரிய மனஸ் வேண்டும்..😃

      But சந்தாவில் அன்புடன் கிடைக்கிறதை வாங்கி சந்தாவில் இல்லாத நண்பர்களுக்கு கூடுதல் அன்புடன் வழங்க ரொம்ப பெரிய மனஸ் வேண்டும்...😃😃😃😘

      Delete
    3. ///@கிடைக்கிறதை வேண்டாம்னு சொல்ல பெரிய மனஸ் வேண்டும்..😃///

      தனக்கு வேண்டாம் என்று, அதற்கு பணம் கொடுப்பது சரியே...
      ஆனால்
      கொடுப்பவரின் உவகை குணத்தை, அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

      அதில் உங்களுக்கு சங்கடம் இருந்தால், உங்கள் மனம் விரும்பியதை அவருக்கும் அனுப்புங்களேன்...

      Delete
  65. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  66. 1 .மேக்&ஜாக். 2 .ஹாரர் கதைகள் வேண்டும்..( 10,11,வயது குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தால் பேய் கதை ,சொல்லுங்க என்ற கோரிக்கைதான் 3.லவ் ஸ்டோரி கள் வேண்டாம். அந்த ஸ்பாட்டில் லேடி .s . கொண்டு வரலாம். .

    ReplyDelete
  67. வாழ்த்துக்கள்,நன்றிகள் k .o .k .sir👏👏👏.🙏

    ReplyDelete
  68. மேக் ஜாக் இவர்களின் அத்தனை கதைகளும் நகைச்சுவை விருந்து.
    எனது ஓட்டு மேக் ஜாக் ஜோடி

    ReplyDelete
  69. 1. மேக் ஜாக்
    .2. no horror.
    3. No romance

    ReplyDelete
  70. 1. Blue coats
    2. Yes. One trial for horror ok.
    3. Yes

    ReplyDelete
  71. மூன்றில் புளு கோட்,அப்படியே கறுப்பு கிழவி டைஜஸ்ட்டுக்கும் ஒரு ஓரு ஓட்டெடுப்பு பிளிஸ்

    ReplyDelete
    Replies
    1. ஒட்டெடுப்பை மட்டும் வைச்சுகினு என்ன செய்வது சார் - படைப்பாளிகளின் இசைவு என்றொரு சமாச்சாரம் இருக்குதே?!

      Delete
  72. //..ஹாரர் கதைகளை புத்தக விழாக்களில் கேட்டு வருகிறார்கள் என்று நம்மாட்கள் சொல்லுவதுண்டு! அந்த ஜானரை ரெகுலர் சந்தா தடத்தினுள் மெல்லிசாக நுழைப்பது குறித்து உங்க அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ்?//

    மெல்லிசாக என்ன சார்... தாராளமாகவே வெளியிடுங்கள். நானும் கருப்பு கிழவியின் கதைகளை நான்கு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நானுமாய் நாலு இல்லே, நாற்பது வருஷங்களா கேட்டாலும் ஆகப்போகுறது எதுவும் கிடையாது ஜெகத்! படைப்பாளிகள் மனசு வைக்கணும்!

      Delete
  73. ஹாரர் கதைகளை ரெகுலர் சந்தா தடத்தினுள் மெல்லிசாக நுழைப்பது

    ஆக்ஷன் + மெல்லிய காதல் கரம் கோர்க்கும் ஒரு ஒன் ஷாட் உள்ளது! சித்திரங்கள் வேற லெவல்
    கண்ணா 2லட்டும் தின்ன ஆசையா இருக்கு 😊😊

    ReplyDelete
  74. தாத்தா க்ளிப்டன் (ப்ளூகோட்ஸூம் பிடிக்கும்தான்.)

    ஹாரர் கதைகளுக்கு வெல்கம்
    (Sci -fic பரிசீலனை பண்ணலாம்)

    காதல் கதை...நோ

    ReplyDelete
  75. சூப்பர் சார்....நீண்ட நாட்களுக்கு பின்னர் ஓர் உற்சாகம் மீண்ட பதிவு.....


    டெக்ஸ் நீங்க சொல்ல சொல்ல இப்பவே படிக்கனும் போல உள்ளது....தனித்தனி டீம்ல ...கார்சனின் கடந்த காலம் போல....அது போல இக்கதையும் கலக்க போகுது

    சாகோர் சூப்பர்...இதுதான் எதிர்பாத்தேன்னு பல நண்பர்கள் துள்ளப்போவதுறுதி...அட்டைப்படம்னா இதான் டாப்...சூப்பர்...மேச்சேரியார் காத்திருக்கோம்

    ரூபின் அதகளம்.,..

    4 இதழ்கள் மாமாங்கத்துக்கு பின்னே

    ReplyDelete
    Replies
    1. ஸாகோர் பேரவையின் கொங்கு மண்டல பொறுப்பாளர் ஸ்டீல்கிளா சொல்வது முற்றிலும் சரியே...😍😘👍✊✊👌👌

      Delete
  76. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  77. மேக் ஜாக்
    ஹாரர் நிச்சயம்
    சித்திரங்கள் அதகளங்றீங்க...கதைக்களம் சூப்பர்னா வரட்டும்...இல்லன்னா வந்தா வரட்டும்

    ReplyDelete
  78. புளூகோட்ஸ்!!

    ஹாரர் ரெகுலரிலேயே வரட்டுமே!

    ReplyDelete
  79. டெக்ஸ்ம்....ஜாகோரும் அட்டையிலேயே அதகளப்படுத்துகிறார்கள்.

    என்ன...மஞ்சச்சட்டைக்காரரு சிகப்பிலே டாலடிக்கிறாரு.

    சிவப்புச் சட்டைக்காரர்.. மஞ்சள் கலரில் மின்னுகிறார்.😀

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் ஒன்றே மாறாதது...😃😃😃

      Delete
  80. // இதற்குப் பேனா பிடித்திருப்பது நம்ம மேச்சேரியார்! //

    வாழ்த்துக்கள் கண்ணா.

    ReplyDelete
  81. ///பேனா பிடித்திருப்பது நம்ம மேச்சேரியார்! பெரியளவில் திருத்தங்கள் போடவோ, மாற்றியெழுதவோ அவசியமின்றி அவரது மொழிபெயர்ப்பு சுளுவாக அமைந்திருந்ததால் எனது பெண்டு லைட்டாகத் தப்பியது இந்த மாதத்தில்!///

    வாழ்த்துகள் @Kannan Ravi.💐💐

    ReplyDelete
  82. இனிய ஞாயிறு வணக்கங்கள் 💐💐💐

    ReplyDelete
  83. மேக் & ஜாக்
    அதுவும் கேங்ஸ்டர் "அல் கப்போன்" வர கதைகள் செம

    ஹாரர் வேண்டுங்க, ஆசிரியரே
    ஆனால் விலை 100 தாண்ட வேண்டாம், ஏனென்றால் பள்ளி சிறார்கள் அதை தாண்ட மாட்டேகிறாங்க
    அல்லது, அவர்களக்கென ஒரு விலையில் ஸ்டாலில்
    கோவையில் "சக்கரதுடன் ஒரு சாத்தான்" விற்று தீர்ந்தது
    தனியே, தன்னந்தனியே அருமை


    ReplyDelete
    Replies
    1. //ஆக்ஷன் + மெல்லிய காதல் கரம் கோர்க்கும் ஒரு ஒன் ஷாட் உள்ளது! சித்திரங்கள் வேற லெவல்! இது உங்களின் சுவாரஸ்யங்களை ஈர்க்க வாய்ப்புண்டோ? Answers please?//


      எனக்கு ஓகே தான் ஆசிரியரே
      ஆனால் சகோதரர்கள் ஹாரர் கதை கேட்ட மாதிரி தெறிக்கறாங்க

      என்னனு தான் புரியல 😋😋😋😋😋

      Delete
    2. @கடல் யாழ்..😃

      நம்ப மாதிரி யூத்களுக்கு லவ் Genre புடிக்கும்..😍❤
      But..அவுங்க எல்லாமே Old age fellows..😃😃அதனால Love ன்னாலே தெரிச்சு ஓடறாங்க..😃😃


      Delete
    3. சரியா சொன்னீங்க ஜம்பிங் தல

      Delete
    4. தெறிச்சு ஓடுறாங்களா - லவ்ஸ் தாக்கம் எப்டி கீதும்னு தெரிஞ்சு ஓடுறாங்களா 🤔🤔🤔?

      Delete
  84. Come Back 💥💥💥💥

    Blue Coats💥💥💥💥

    ReplyDelete
  85. ///பேனா பிடித்திருப்பது நம்ம மேச்சேரியார்! பெரியளவில் திருத்தங்கள் போடவோ, மாற்றியெழுதவோ அவசியமின்றி அவரது மொழிபெயர்ப்பு சுளுவாக அமைந்திருந்ததால் எனது பெண்டு லைட்டாகத் தப்பியது இந்த மாதத்தில்!///

    வாழ்த்துகள் சகோ@கண்ணன் கிட் ஆர்டின் 💐💐💐💐💐

    காமெடிகள் கதைக்கு தான் தாங்கள் பேனா பிடித்து பார்த்துள்ளேன்
    நம்ம ஜம்பிங் ஸ்டார்க்கு முதல் தடவை, எப்படி இருக்க போவது என படிக்க ஆவலுடன்
    கூட வரும் ஸீகோ நல்ல காமெடி பண்ணுவார், எதிர்பார்ப்புடன் சகோ

    ReplyDelete
  86. //ஆனால் V காமிக்ஸ் நீங்கலாய் பாக்கி சகலத்திலும் வண்டி வண்டியாய் பேனா பிடிக்கும் பணிகள் அவசியப்பட்டதால் கொஞ்சம் சுணங்கி விட்டது.//

    ரூபினுக்கு இந்த தடவையும் நிறைய வசனங்களா, ஆசிரியரே

    இந்த தடவை தனி இதழாக வருகிறார்
    அட்டைப்படம் தெறிக்குது

    ReplyDelete
    Replies
    1. ரூபினில் எப்போதுமே ஸ்கிரிப்ட் ஜாஸ்தி தான் ரம்யா!

      Delete
  87. இம்முறை டெக்ஸ் அட்டைப்படம் கொஞ்சம் சுமார் ரகம் தான்.. ஆனால் ஸாகோர் அட்டைப்படம் - அசத்துகிறது!

    மேக் அண்ட் ஜாக், க்ளிப்டன், ப்ளூ கோட்ஸ் - முவருமே என்னை கவர்ந்தவர்கள் தான்! ஆனால் ஒருவருக்கு மட்டுமே ஓட்டு என்பதால் நீண்ட நேரம் யோசித்து கிளிப்டனுக்கு ஓட்டை பதிகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுமே ஒரிஜினல் அட்டைகள் தானுங்கோ!

      Delete
  88. கடந்த மாதம் வந்த மினி டெக்ஸ் ஏற்கனவே வந்த டெக்ஸ் கதையில் பார்த்தது தான். இந்த முறை கடுகும் சிறுசு அதன் காரமும் சுமார் தான். ☺️

    ReplyDelete
  89. Col. Clipton.... Ok.
    மேக் and ஜாக்..... அறுவை
    ப்ளூ coat பட்டாளம்.... ஓரம் வை ..... அவ்ளோதான் edi sir. 😊😁

    ReplyDelete
  90. விஜயன் சார் மாயமில்லே மந்திரமில்லே புத்தகத்தில் 17 மற்றும் 18 பக்கத்தில் ஒரே போன்று ஒவியம் பிரின்டிங் செய்து உள்ளது ஏதேனும் ஒரு பக்கம் விடுபட்டு உள்ளதா இது எனக்கு மட்டும் தானா இல்லை அனுவருக்குமா

    ReplyDelete
    Replies
    1. வசனங்களை வாசித்து பாருங்கள் சார். இரண்டு பக்கங்களிலும் வேற வேற வசனங்கள் இருக்கும்.

      Delete
    2. கி. நா. அனுபவம் நண்பரே... ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள் இன்னொருவாட்டி!

      இங்கு விடுதலும் இல்லை ; பிழையும் இல்லை!

      Delete
  91. எடிட்டர் அவர்களின் நோக்கம்..

    // 2025 சந்தாவோடு முன்னே b&wல் வெளியான ஓநாய் கணவாய் இதழினை ஒரு limited கலர் பதிப்பாக்கி, நமது அன்புடன் வழங்கிடவுள்ளோம்! Oh yes - அந்த நொடியில் தோன்றிய மகா சிந்தனையின் பின்னே நல்லதொரு செலவு காத்திருக்குமென்பது புரிகிறது தான்! //

    எனது தனிப்பட்ட கருத்து..

    // ஓநாய் கணவாய் மறுபதிப்பு இலவசமாக தயவு செய்து தவிர்க்க முயற்சி செய்யுங்கள் சார்...

    கமான்சே கதைகள் வரிசை , முன்னர் வந்த கதைகளை தாங்கள் சமீப புத்தக விழாக்கள் வரை பெரும் தள்ளுபடி தந்தததே சிரமமான விஷயம்.

    இந்நிலையில் இந்த கதையும் இலவசமாக பெறுவதில் எனக்கு கூச்சமாக உள்ளது //

    திரு. ரபீக் ராஜா, என்பாரின் கருத்து...

    //அவருக்கு இலவசம் வேணாம்னா, வேண்டாம்னு சொல்லிட்டு திருப்பி கொடுத்துட்டு போகட்டும்.

    அத விட்டு, வருஷம் மொத்தத்துக்கும் ஒரே தடவையா புத்தக விழாவுல போய் டிஸ்கவுன்ட்ல வாங்கிட்டு.... வருஷம் ஃபுல்லா சந்தா கட்டி மாசம் தவணையில் வாங்கும் நபர்களுக்கு தரப்படும் அன்பளிப்பை கேள்வி கேட்கிறார் ...

    இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லைங்க //

    1)இங்கு நான் கேட்ட கேள்வி என்ன?

    2) தவிர்ப்பது என்ற வார்த்தைக்கும், வேண்டாம் என்ற வார்த்தைக்கும்,தேவையில்லை என்ற வார்த்தைக்கு வித்தியாசம் உள்ளதா இல்லையா ? நான் பயன்படுத்தியது தவிர்க்கலாம் என்ற வார்த்தையை..

    3) புத்தக விழாக்களில் டிஸ்கவுண்டில் புத்தகங்களை பெற்று செல்லும் வாசகர்களும் நண்பர்களும் அறிமுக வாசகர்களும் இளப்பம்மானவர்களா? கருத்து சொல்ல தகுதி அற்றவர்களா ?

    4) புத்தக விழாக்களில் டிஸ்கவுண்டில் பெறுவது இழிவான செயலா?புத்தகத்தை வாங்குபவர்களுக்கு

    சற்று நேரம் பொறுமையுடன் காத்திருக்க உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஆழமாக யோசிக்க வேண்டாம் நண்பரே 😊 அனைவரும் ஒன்றே ☺️

      Delete
    2. // ரொம்ப ஆழமாக யோசிக்க வேண்டாம் நண்பரே 😊 அனைவரும் ஒன்றே ☺️//

      மன்னிக்கணும் சார்.. எனக்கு அப்படி தோன்றவில்லை சார்.
      பதிவிட்டவரும், விவரம் தெரிந்தவர்களும் அமைதியாக இருந்தது என் உணர்ச்சிகளுக்கு தீர்வாகாது.

      நன்றி. சார்..

      Delete
  92. வரவிருக்கும் 2025 சென்னை புத்தக விழா வழக்கம் போல ஜனவரி முதல் வாரத்தில் துவங்குவதற்கு பதில், கிருஸ்துமஸ் முன்பாக ஆரம்பித்து பொங்கலுக்கு முன்பாக முடிக்கலாம் என்ற திட்டத்தை பபாசி எடுத்துள்ளதாக கேள்வி, அதிகார அறிவிப்பு விரைவில் வரலாம்.

    ReplyDelete
  93. *காத்திருந்த நேரம் முடிந்தது..*

    பல பழைய வாசகர்களும், மூத்த வாசர்களும் ஏன் எந்த இடத்திலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் உள்ளார்கள் என்ற காமிக்ஸ் அரசியல் இன்று ஓரளவு புரிய ஆரம்பித்துள்ளது எனக்கு...

    தனிப்பட்ட கருத்துக்கு பாய்ந்து வந்து மட்டமான கருத்துக்களை பயன்படுத்தும் ஜாம்பவான்கள், உள்ளபோது என் போன்றவர்கள் விலகி திரும்பிப் பார்க்காமல் இருப்பது நல்லது...

    ReplyDelete
  94. காமிக்ஸ் வாசிக்கும் நண்பர்கள் பயன்படுத்தக்கூடிய கருத்துகளில், வார்த்தைகளில் பண்பாக பயன்படுத்துவது தவறு இல்லை.

    அதற்காக கருத்துக்களை தெரிவிக்கும் நண்பர்களை மட்டமாக விமர்சிப்பதால் இழப்பு ஏதும் உள்ளதா ? இல்லை.

    நிதானம் இழந்து சரியான வார்த்தைகளை பயன்படுத்துவது தான், உங்கள் சுபாவம் என்றால் உங்களது நட்பு உறியவன் நான் அல்ல..🙏🙏🙏

    காமிக்ஸ் ப்ளாக், நண்பர்கள் வட்டம் என்பதெல்லாம் எனக்கு இரண்டு வருடமாக தான் பழக்கம். இதை இழப்பது எனக்கு ஒன்றும் இழப்பில்லை எனக்கு தேவை காமிக்ஸ் மட்டுமே..🔥🔥🔥

    ReplyDelete