Saturday, August 24, 2024

வந்தாச்சுன்னு சொல்லு(ங்க) !!

 நண்பர்களே,

ஒவ்வொரு மாதமும் புக்ஸ்களை சூட்டோடு சூடாய் வாசித்து அலசிடும் நண்பர்கள், இந்தப் பதிவின் முதல் பாதியினை  அலேக்காகத் தாண்டிப் போய்விடலாம் !! அந்தப் பாதியானது வாசிக்க நேரமின்றியோ ; ஆர்வம் குன்றியோ  அல்லாடும் சங்கத்தினருக்காக  மட்டுமே !!

வணக்கம். ”சனிக்கிழமைக்குப் பதிவு” என்ற வாடிக்கைக்கு மறுக்கா திரும்பியாச்சு! படுத்தியெடுக்கும் தோள் வலிக்கோசரம் வாரயிறுதிகளில் வைத்தியம் பார்க்கும் படலம் கடந்த 2 1/2 மாதங்களாய்த் தொடர்ந்திடும் நிலையில், பதிவுகளை அதே ஸ்லாட்டுக்குள் புகுத்துவது ஒரு பிரயத்தனமாகவே இருந்து வந்தது! 'பச்சக்...பச்சக்' என்று வூடூ பொம்மைகளுக்குள் இறக்கும் குண்டூசிகளைப் போல, அக்குபங்ச்சர் நீடில்களை கழுத்திலும், தோளிலும் இறக்கிப்புட்டு அவற்றைக் கொண்டு தசைகளுக்குள் ஒரு சுற்றுப்பயணத்தை டாக்டர் முடிக்கும் நொடியில், அந்தத் தசைப் பகுதிக்கான பிரேத்யேகப் பயிற்சிகளை மேற்பார்வையிட டிரெய்னர்கள் காத்திருக்கும் போது பார்த்திபனோடு போகும் வடிவேலைப் போலவே ஒரு பீலிங்கு தான் மேலோங்கும் !  'ஆத்தீ...இங்கனல்லாம் ஒரு தசை இருக்குதா ?' என்ற கேள்வி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஆட்டிப்படைக்க - "இந்த வலி சாஸ்தியா ? நோயின் வலி சாஸ்தியா ?" என்ற பட்டிமன்றமே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ! அந்த நொடியினில், ஏதாச்சும் ஒரு தேவ வாக்கை உலகுக்குச் சொல்லும் பொறுப்பை நம்மகிட்டே கடவுளே ஒப்படைத்திருந்தாலும் - " இதை நாளைக்கி பாத்துக்கலாமே தெய்வமே ?" என்று தான் சொல்லத் தோன்றும் ! So அந்தத் தருணத்தினில் ஒரு புதுப் பதிவை 'மாங்கு மாங்கு' என்று டைப்பிடித்து ரெடி பண்ணும் உத்வேகத்தை சல்லடை போட்டுத் தான் தேட அவசியமாகி வந்தது !! ஆனால் இப்போதோ டாக்டரே 3 வாரங்களுக்கு அயல்நாட்டுக்குப் பயணமாகப் புறப்பட்டிருப்பதால் - ஒன்னரைக் கை டோரியாவாக back to the saturday routine!

சமீப வாரங்களில், சமீபமாய் உருவாக்கிய அந்த வாட்சப் கம்யூனிட்டியில் கேள்விகளைக் கேட்பதும், மினி போட்டிகள் நடத்துவதுமாய் பொழுதுகளை நகர்த்திடுவதில் கணிசமான பாசிட்டிவ்ஸ் தெரிவதை நான் மறுக்க மாட்டேன்! தலைகீழாய் நின்று தண்ணீர் குடிச்சாலும், சில மௌனங்களை இங்கே தகர்க்க முடிந்ததேயில்லை! ஆனால் அங்கோ குறைந்தபட்சமாய் 200 நண்பர்கள் தங்களது எண்ணங்களைப் பகிர்வது சாத்தியமாவது பிரதான ப்ளஸ்! அது மாத்திரமன்றி இன்னொரு ஜாலியான அனுபவமும் அக்கட உண்டு ! அட... ‘நாங்கள்லாம் காமிக்ஸ் தா(த்)தாக்களாக்கும்...இதையெல்லாம் படிக்கிற பச்சாக்கள் நாங்க நஹி ..!‘ என்று வெளியே கம்பு சுற்றும் பார்ட்டிகள் கூடத் தவறாது வந்து ஒவ்வொரு ஓட்டெடுப்பிலும், ஆகச் சிறந்த நெகட்டிவ் பதில்களைத் தேர்வு பண்ணிப் பதிவு செய்யும் வாடிக்கையுமே வாட்சப் கம்யூனிட்டி ஜாலிகளில் இன்னொரு அத்தியாயம்! On the flip side - மேகி 2 மினிட் நூடுல்ஸ் போலான அந்தப் பக்கத்தினில் இங்கு ப்ளாக்கில் சாத்தியமாகிடும் விஸ்தீரணம் not possible at all! அது மட்டுமன்றி.- சாவகாசமாய் எப்போதாச்சும் வாசிச்சுக்கலாம்; பதில் பின்னூட்டங்களையும் பார்த்துக்கலாம்‘ என்ற வசதி‘ அங்கே குறைச்சல்! So fast food ஆர்வலர்களுக்கு அக்கட ஒரு கடை; மீல்ஸ் ரசிகர்களுக்கு இக்கட எப்போதும் போல கடை என்பதே தொடர்ந்திடும் template ஆக இருந்திடும்! Just in case - நீங்கள் அங்கே நமது கம்யூனிட்டி ஜோதியில் ஐக்கியமாகியிருக்கவில்லை எனும் பட்சத்தில், அதில் இணைந்து கொள்வதற்கான லிங்க் இதோ:

சமீப பொழுதுகளில் அங்கும் சரி, இங்கும் சரி, நான் கேட்டு வரும் கேள்விகளுள் பிரதானமானது டின்டின் சார்ந்ததே! அதற்கு ஏன் இம்புட்டு மெனக்கெட வேண்டும்? என்ற கேள்வி நம்மில் சிலருக்குத் தோன்றலாம் தான் - becos நேரமின்மை காரணமாய் நம்மில் நிறையப் பேர் படிக்காது வைத்திருக்கும் பரண் மீதான கையிருப்பு பொதுவாகவே கணிசம் என்பதில் no secrets! இவ்விதமிருக்க, டின்டினை நீங்கள் படிக்காதிருப்பது மட்டும் இம்புட்டு பெரிய விசாரமாகிட வேண்டிய அவசியம் என்னவென்று உங்களுக்குத் தோன்றிடலாம் ! இருக்குதே......! காரணங்கள் இருக்குதே!

1. செம முரட்டு சிங்கிளாய்; செம solo பார்ட்டியாய் காலம் தள்ளி வந்த ஒரு பையன், அற்புதமானதொரு பெண்ணை, பெரும் பிரயத்தனப்பட்டு 'லவ்ஸ்' பண்ணி, நெடும் காத்திருப்புக்குப் பின்னே அந்தப் பெண்ணையே வீட்டின் சம்மதத்தோடு கண்ணாலமும் கட்டிக்கினான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! பச்சே கண்ணாலம் ஆன ரெண்டாவது மாசத்திலேயே அந்தப் புள்ளையாண்டான் நடுக்கூடத்தில் குந்தியபடியே ‘ஹாாவ்வ்‘ என்ற கொட்டாவியோடு தனது PubG கேமைத் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தால் வூட்டிலே இருக்கும் பெருசு எவ்விதம் react செய்திடும்? That பெருசு தான் me & அந்த PubG பார்ட்டி தான் நீங்கோ...and that பொண்ணு தான் டின்டின் ! ஒரு காமிக்ஸ் உலக ஜாம்பவானுடனான ஹனிமூனுக்கே இன்றைய தேதியினில் இம்புட்டு தான் shelf life ஆ ? என்பதே எனது வியப்புகளில் பிரதானமானது !

2. ஒரு “டின்டின் ஆல்பம்” என்பது - ஆயிரத்துச் சொச்சம் புக்ஸ் போட்டு ஒரு நூறு மு.ச. & மூ.ச. பார்த்த அனுபவசாலிக்கே கிட்டத்தட்ட இரண்டு மாதப் பணி! So டபுள் ஆல்பம் எனும் போது, கிட்டத்தட்ட மூணு to நாலு மாதங்களின் உழைப்பு இதன் பின்னணியில் உள்ளது! Of course, காசு தந்து புக்ஸ் வாங்கி விட்டீர்கள் தான்! Yet பின்னணியிலுள்ள உழைப்ப்பானது நீங்கள் தரும் பணத்துக்கோசரம் மட்டுமே ஆனதல்லவே?! காசு தான் பார்க்க வேண்டுமெனில், ஒரு டெக்ஸ் வில்லர் கலர் க்ளாசிக் ஆல்பத்தை ”கார்சனின் கடந்த காலம்” சைஸில் போட்டுப்புட்டு ஒரே மாதத்தில் கல்லா கட்டிவிட்டு, 'லல்லால்லா' ..என்று கர்ணகொடூரமாகவேனும் பாட்டுப் பாடிக்கினே, போய்க்கினே இருந்திடவும் முடியுமே - இம்மி நோவுகளுமின்றி ?! So பரண் மீது சயனம் செய்திடுவோர் சங்கத்தில் தான் கணிசமானோருக்கு டின்டினுமே இணைந்திடப் போகிறார் எனும் பட்சத்தில் - உங்களுக்கு ரெண்டு காசையும், எங்களுக்கு ரெண்டு மாச உழைப்பையும் மிச்சம் பிடித்துவி்ட்டுப் போகலாமில்லீங்களா?

3. More importantly - there is a bigger picture at stake here! 

‘தல‘ ஆல்பங்களை கொஞ்சம் லேட்டா படிக்கலாம்னு தீர்மானமா? புரியுதுங்கோ - ‘தல‘ தான் மாசா மாசம் வர்றாரே! 

கி.நா.களை கொஞ்சம் வாகான சந்தர்ப்பம் அமையும் போது பார்த்துக்கலாம்னு தீர்மானமா? அதுவும் சரி தான் - சற்றே கனமான களங்களுக்கு relaxed பொழுதுகள் அவசியம் தான்! 

ஆனால் காமிக்ஸ் உலகின் சிலபல கோடானு கோடி வாசகர்களின் கனவு நாயகன் உங்கள் ஹாலிலுள்ள மேஜையில் ‘தேமே‘ என்று காத்திருக்கும் போதுமே அதை வாசிக்க ஒரு வேகம் நமக்கு ஊற்றெடுக்கவில்லை ; அதற்கான அவகாசத்தினைத் தேற்றிட முடியவில்லை என்றால், அது ஒரு எச்சரிக்கை மணி folks! ஒரு 'தளபதி' / 'தல' பட அனுபவம் போலான டின்டினால் உங்களை உசுப்ப இயலாது போகிறதெனில் - பாக்கி இரண்டாம் நிலை ஈரோக்களும், ஈரோயினிகளும் நடிச்ச படங்களை எங்கே கொண்டு திரையிட்டு வெற்றி காண்வதோ ? என்ற விசாரமே உள்ளுக்குள் ! And இதுவே யதார்த்தம் எனும் போது - “அந்த குண்டு புக்; இந்தத் தொகுப்பு” என்ற கோரிக்கைகளெல்லாமே உதட்டதளவு உச்சரிப்புகளாகவே இருந்திடுமோ ? என்று பயந்து பயந்து வருது !

ஒவ்வொரு டின்டின் ஆல்பமும் என் கைக்குக் கிட்டிடும் வரைக்கும், நான் அவற்றை எதிர்பார்த்துக் கிடந்து, தொலைத்த இரவுகளின் தூக்கங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் - அது ஒரு டபுள் ஆல்பத்தின் அளவிற்கு நீண்டு விடும்! இதோ - இன்றைக்கும் டின்டின் இதழ்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் தருணங்களில் முகரை முழுக்கப் புன்னகையே ஈஷியிருப்பது வாடிக்கை ! So எனக்கு அத்தனை big deal ஆகத் தென்பட்டதொரு நாயகர், இன்றைக்கு பத்தோடு பதினொன்றாய் பாவிக்கப்படுகிறாரே என்ற ஆதங்கம் தான் என்னை மாலைக்கண் வந்த கவுண்டரைப் போல நாலு சுவர்களுக்குள் புலம்பச் செய்கிறது!

4. The பணம்!!! கதைகளுக்கென பல்லாயிரங்களை வாரியிறைக்கும் கிறுக்கு நமக்குப் புதிதே அல்ல! வாங்கினவற்றை ஏதேதோ காரணங்களால் பீரோவில் பூட்டிப்போடும் குடாக்குத்தனமுமே நமக்குப் பரிச்சயமே! ஆனால் டின்டினார் சமாச்சாரத்தில் சின்னதொரு வித்தியாசம் உண்டு! இக்கட நாம் சிதற விட வேண்டியதோ - பல்லாயிரங்களை அல்ல; சில லட்சங்களை! So கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே டின்டினுக்கென பிரத்யேகமாய் ஒரு தொகையினை earmark செய்திட வேண்டும் ! அந்த மெனக்கெடல் உங்களது வாசிப்பினில் மகிழ்ச்சியாய் பிரதிபலிக்கும் பட்சத்தில் சூப்பர்! ”ஊஹும்... இவரும் என் வீட்டு பீரோவுக்கு அழகு சேர்க்கப் போகிறவரே!” என்பீர்களேயானால் - tough ! And டின்டினுக்கான பணத்தை உரியில் போட்டு வைத்து சேகரிக்க வேண்டிய வேளை இதுவே என்பதால் தான் திரும்பத் திரும்ப ஒரே சமாச்சாரத்தோடு கும்மியடித்து வருகிறேன்!

For sure 2025-ல் டின்டின் நம் மத்தியில் வலம் வருவார் தான்! ஆனால் நாம் இப்போதே பணம் அனுப்ப வேண்டியது அதற்கு மறுவருட ஆல்பங்களுக்குமே சேரத்துத் தான்! So 2026 மீது விரவிக் கிடக்கின்றது எனது ஆந்தைவிழிப் பார்வை இந்த நொடியில் !

5. The பயணம் more சுவாரஸ்யம் than the இலக்கு!!

இது கொஞ்ச காலமாகவே கண்ணில் பட்டு வரும் ஒரு செம trend தான்! 

வாட்சப் கலாய்களா? Oh yess!! 

FB கும்மிகளா? ஜமாய்ச்சிடலாம்! 

பதிவில் கூத்துக்களா? நானாச்சு! 

வாசக சந்திப்புகளா? ஜாலிலோ ஜிம்கானா!!! 

இவை தானன்றோ கொஞ்ச காலமாகவே நடைமுறை ? இந்த சமூக வலைத்தள யுகத்தினில் social interactionகள் செம பிரதானம் பெறுவதில் வியப்பே லேது! In fact, முற்றிலும் அந்நியர்களான ஒரு சிறு வட்டம், காமிக்ஸ் எனும் குடையின் கீழ் குழுமி்; நட்பு வளர்த்து, அதன் கதகதப்பில் பொழுதுகளை ஓட்டுவதென்பது ஓராயிரம் ‘பொம்ம புக்‘ வெளியீடுகளையும் விட மகத்தானது என்பது சர்வ நிச்சயம்! And நமக்கு அசாத்தியப் பெருமிதம் தந்திடும் சமாச்சாரமும் இதுவே!

பச்சே, ஒரு கட்டத்தில் பயணம் சார்ந்த ஜாலிகளுக்குத் தர சாத்தியமாகிடும் அவகாசங்கள், இலக்கை ஆராயும் போது மிஸ்ஸிங் ஆவது தானே இக்கட்டே ?! பயணத்தின் மீதான வாஞ்சை - இலக்கின் மீதான மையலைக் காட்டிலும் மிகுந்து சென்றால் அது சிக்கலின் முதற்புள்ளி ஆகிடாதா ? பழம் நினைவுகளை அசைபோடுவதும்; பாட்டும் கூத்துமாய் பயணத்தை ஜமாய்ப்பதும் ஜுப்பரே - but பஸ்ஸிலிருந்து இறங்கிடும் தருணத்தில் அங்கிருக்கக்கூடிய கல்லணையையோ; தஞ்சாவூரின் பெரிய கோவிலையோ; மகாபலிபுரத்து சிற்பங்களையோ; அதே ஆர்வத்தோடு ரசித்திட்டால் all is well என்றாகிடும்! மாறாக ஊர்களில் இறங்கிய நொடிகளில் ”ஹாாாவ்வ்வ்... நேக்கு தூக்கம் தூக்கமா வருது பெருசு! அது தான் சின்னப் பிள்ளையா இருக்கப்போவே பார்த்த ஊர்கள் தானே ?! நாங்க பஸ்ஸிலேயே சித்த உறங்கிக்கிறோம்!" எனும் போது பஸ் டிரைவரும், கண்டக்டரும் பேந்தப் பேந்த முழித்த கதையாகிப் போகும்! And சும்மாவே அந்த டிரைவருக்கு முட்டைக் கண்கள் வேற !! முழிக்கிறப்போ கர்ண கொடூரமாகிப்புடாதா ?

So பயணத்தையும் சரி, இலக்கையும் சரி, சமமான சுவாரஸ்யத்தோடு அணுகிட சாத்தியமாகினால் - புச்சு புச்சாய் ஊர்களைத் தேடிப் பிடித்து பயண அட்டவணையில் இணைத்திடும் ஆர்வம் மேலோங்கிடும்! மாறாக பயணங்களின் முடிவில் உறக்கமே வெயிட்டிங்ங்ங் என்றாகிப் போனால் புளியங்குடிக்கும், கொட்டாம்பட்டிக்கும் வண்டிகளை விட்டாலே மதி என்று பஸ் சர்வீஸுக்கு தோன்றிடாதா?

In a nutshell - எங்கிட்டு கூடியாச்சும் வாசிக்க நேரத்தைத் தேற்றுங்கோ மக்கா! Becos இந்தத் தாஜ்மஹால் எழும்பியுள்ளதே ”காமிக்ஸ் வாசிப்பு” எனும் காதலின் அஸ்திவாரத்தில் தான்! அந்த பேஸ்மெண்ட் வீக்காகிப் போனால் மேலே உள்ள பில்டிங் எத்தினி சொகுசாக இருந்தாலும் அது சுகப்படாது! Bottomline - வாசிப்பு ப்ளீச்ச்!!

ஹய்யாா!! சில வாரங்களாய் மனசில் அரித்துக் கொண்டிருந்த சமாச்சாரங்களை இறக்கி வைத்து விட்ட நிம்மதியில், அடுத்த பல்டிக்குள் மும்முரமாகிடலாம் இனி ! In the meantime - சந்தோஷம் தரும் ஒரு சேதியும் உள்ளது உங்களிடம் பகிர்ந்திட! நம்மிடம் மிகுந்து கிடக்கும் க்ளிப்டன்; ப்ளூகோட்; ஷெல்டன்; லியனார்டோ தாத்தா போலானோரின் 2 டஜன் புக்குகளை மாணவர்களுக்கென ரூ.25; ரூ.30 என்ற விலைகளில் புத்தக விழாக்களில் ஸ்பெஷலாக வழங்கிடுவம் முயற்சியானது செம smash ஹிட்! செம ஆர்வமாய் சின்ன விலைகளுக்கு, கலரில் தரமான புக்ஸ்களை ஈரோட்டிலும் சரி, இப்போது நாகப்பட்டினத்திலும் சரி, வாங்கிப் போகிறார்கள் பள்ளி / கல்லூரி மாணாக்கர்கள்!! கையிலிருக்கும் சொற்ப பணத்துக்கே இந்த புக்ஸ் சாத்தியம் எனும் போது, அடியும் பிடியுமாய் அந்தக் கையிருப்பு பறக்கிறது! And நேற்றைய பொழுது (Friday) செம highlight !! ஸ்டாலில் இருக்கும் ஜோதி பின்மதியப் பொழுதில் போனில் அழைத்த போது அவரது குரலில் அப்படியொரு உற்சாகம், சந்தோஷம் ! திங்களும் பள்ளி விடுமுறை என்பதால், மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பில் அத்தனை ஸ்கூல்களிலிருந்தும் பசங்கள் ஸ்கூல் பஸ்களில் வந்து புத்தக விழாவில் குவிந்து விட்டனர் ! And நம்ம ஸ்டாலில் சொல்லி மாளா கூட்டம் போலும் !! கையிருப்பிலுள்ள 300+ டைட்டில்களையும் புரட்டோ புரட்டென்று புரட்டி விட்டு, ஆளுக்கொரு புக் என்று ஏதேதோ வாங்கிச் சென்றது மட்டுமல்லாமல் - "அடுத்த வருஷமும் நீங்க இங்கே கடை போடுவீங்களா ?" என்றும் பசங்க கேட்டுள்ளனராம் !! "மாலை நாலேகால் மணிக்குத் தான் மதிய சாப்பாடே சாப்பிட முடிந்தது ; அப்படியொரு மின்சார ஆர்வம் ஸ்டாலில் !!" என்று அவர் சொன்னதைக் காதில் போட்டுக் கொண்ட போது, வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைக் கேட்டபடிக்கே சீட்டில் நிமிர்ந்து உட்கார ஆரம்பிக்கும் நாகராஜா சோழன் M.A .வின் முகம் தான் மனசில் ஓடியது !! ஒரு விழாவிற்கு 200 பசங்கள் கொள்முதல் பண்ணி; அவர்களுள் வெறும் 10 சதவிகிதத்தினர் ரெகுலர் வாசகர்களானாலுமே ஊருக்கு 20 புது வரவுகள் என்றாகி விடும்! இந்த ”விதைக்கும் படலம்” ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சமாய் 15 நகரங்களில் தொடர்ந்தாலுமே வருஷத்துக்கு 300 வாசகர்கள் வரவு என்று entry போட்டுக் கொள்ளலாம்! அது போதுமே புது இரத்தம் உட்புகுந்திட!

And தொடரவுள்ள பொழுதுகளில் மதுரை, விருதுநகர், திருச்சி - என்று புத்தகவிழா கேரவன் ரவுண்டடிக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கான பிரத்தியேக புக்ஸ்களை இன்னும் ஜரூராய் ரெடி பண்ணி வருகிறோம்! ரொம்பச் சீக்கிரமே கிட்டங்கி காலியாகிடும் பட்சத்தில், பசங்களுக்கென்ற விலைகளில் ஒரு தனி ரேஞ்ச் புக்ஸ் உருவாக்கிடவும் திட்டங்கள் உள்ளன! காத்திருக்கும் சென்னைப் புத்தகவிழாவில் அவற்றைக் களமிறக்க ஒரு ஐடியாவும்  உள்ளது! Fingers crossed!

Looking ahead, செப்டம்பரின் நாற்கூட்டணி தயாராகி வருகிறது! And இந்த முறை ஒரு கோணங்கி புதுமுக டீம் உங்களை சந்திக்கக் காத்துள்ளது! And இதுவொரு புதுயுக சிரிப்புப் போலீஸ் டீம்! பொதுவாகவே நமது கார்ட்டூன் ஜாம்பவான்களான லக்கி லூக் & சிக் பில் நீங்கலானோரெல்லாமே ஸ்மர்ப்ஃஸ் போல ஒரு கற்பனை லோகத்திலோ; மேக் & ஜாக்; பஞ்சு மிட்டாய் தாத்தா; மதியில்லா மந்திரி போலானோரின் புராதன காலகட்டங்களிலோ நடமாடுவதே வழக்கம்! ஆனால் “பால் டப்பி” பற்றித் தெரியாங்காட்டி பூமர் பார்ட்டியாகிடக் கூடிய இந்தப் புது யுகத்தில் அந்தப் புராதன சிரிப்பு வகையறாக்கள் பெருசாக எடுபடாது போனதில் வியப்பில்லையோ - என்னவோ? So ஆஜராகவிருக்கும் ஸ்பூன் & ஒயிட் போல்ஸ்கார்ஸ் ஒரு நவீன களத்தில் காமெடி கூத்தடிக்க முனைகின்றனர்! ஸ்பூன் - குள்ளமானவன்; பூப்போட்ட ஜட்டியோடு மிக்கி மவுஸ் பொம்மைகளை துணைக்கு தூக்கித் திரியும் வீரன்! ஒயிட் - நெடுநெடுவென்ற உசரத்தோடு, உருட்டும் முட்டைக் கண்களோடு வலம் வருபவன். இருவருக்கும் மத்தியில் உள்ள ஒரே ஒற்றுமை - BNN சேனலின் அழகான ஆங்கரான மிஸ் பால்கனி மீது கொண்டிருக்கும் வெறித்தனமான காதல்! ட்யூட்டியா? காதலா? என்ற கேள்விக்கு ”ரெண்டும் தான்!” என்றபடிக்கே இந்தக் கோணங்கி ஜோடி அடிக்கும் கூத்துக்கள் தான் செப்டம்பரின் “கைதியாய் ஒரு அழகி”யின் one-liner! இங்கே கவனிக்க வேண்டியதொரு சமாச்சாரமும் உண்டு! ஒரிஜினலில், ப்ரெஞ்சில் இந்தக் கதைகளில் ஹாலிவுட்டின் க்ளாஸிக் படங்களையும், டயலாக்குகளையும் போட்டுக் கலாய்த்திருக்கிறார்கள்! தமிழாக்கம் செய்யும் போது, அவற்றை அப்படியே மொழிமாற்றம் மட்டும் செய்தால் சரிப்படாது என்பதால் தமிழ் சினிமா டயலாக்களையும், பாட்டு வரிகளையும் தான் நுழைக்க அவசியமாகியுள்ளது! So ”சினிமாப் பாட்டை நான் கேட்டானா?” என்ற கண்சிவத்தல்களில் எனர்ஜியை வீண் பண்ண வேண்டாமென்பேன்! இது கதையோடு பயணிக்கும் template என்பதால் அதைக் களைய வழியில்லை!


இது கார்ட்டூன் தொடரே ; ஆனால் நவீன யுகக் கதைக்களம் கொண்டது !! So let's give it a try folks ? செம வித்தியாசமான கலரிங்கில் இந்த இதழ் டாலடிக்கிறது !!

அப்புறம் செப்டம்பரின் கலர் இதழ்களுள் ஒரு சிறு மாற்றமும் இருந்திடவுள்ளது! திட்டப்படி ரிப்போர்ட்டர் ஜானி களமிறங்கியிருக்க வேண்டும் தான்! And அதற்கான கதையும் வந்தாச்சு; அட்டைப்படமும் ரெடி! ஜானியின் மொழிபெயர்ப்பினை வெகு காலம் கழித்து கருணையானந்தம் அங்கிளிடம் தந்திருந்தோம் - ஸ்க்ரிப்டும் வந்து DTP முடித்து ரெடியாகியும் விட்டது! ஆனால் ஜானி தொடரின் மிக சமீபத்தைய கதைகளுள் ஒன்றான “நள்ளிரவின் நாயகன்” இதழுக்கு அங்கிளின் க்ளாஸிக் பாணி அத்தனை சுகப்படவில்லை! கணிசமாகவே மாற்றியெழுத வேண்டிய அவசியம் இருப்பது போல் படுகிறது! So அதை மறுக்கா பட்டி-டிங்கரிங் பார்க்கும் நேரத்திற்கு, இன்னொரு பக்கம் தயாராகயிருக்கும் டிடெக்டிவ் ரூபினை போட்டுத் தாக்க நினைத்தேன்! So ரிப்பேர்ட்டர் ஜானி மறு மாதத்திற்கும், ரூபின் செப்டம்பருக்கும் என்பதே இந்த நொடியில் திட்டமிடல். இதோ - சிகாகோவின் அழகிய ராட்சஸிக்கென நமது அமெரிக்க ஓவியை போட்டுத் தந்துள்ள அட்டைப்பட டிசைன்!

ஆங்... கன்னம் அம்மைக்கட்டு வந்தா போல கீது,.. கால்கள் முருங்கைக்காயாட்டம் உள்ளன” என்ற கலையார்வலர்களின் கவனத்துக்கு: ரூபினின் சித்திரம் ஒரிஜினல்! So அம்மணியை படைப்பாளி உருவகப்படுத்தியுள்ள விதத்திலேயே வழங்கியுள்ளார் நமது ஓவியை! இந்த ஆல்பம் பற்றிய preview & முன்னோட்டம் அடுத்த வாரப் பதிவினில்!

Before I sign out - இதோ இங்குமே சில கேள்விகள் - நமது 2025 அட்டவணையின் பொருட்டு:

1. ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்? 

நிதானமாய் யோசித்து; ”அவர் என்ன சொல்லுவாரோ? இவர் என்ன கலாய்ப்பாரோ?” என்ற கவலைகளெல்லாம் இல்லாமல் ஒற்றை ஆண்டின் வாசிப்புக்கென எத்தனை புக்ஸ் வந்தால் தேவலாம் என்று சொல்லுங்களேன் ?! கோவைக் கவிஞர் பாணியில் அள்ளி விடாது let's have a realistic number please!

a. 24

b. 30

c. 32

d. 36

கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?

a. 9

b. 10

c. 12

கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

a. 3

b. 2

c. 1

கேள்விகளில் சில, ஏற்கனவே கேட்டவை போல தோன்றிடலாம் தான் ; but வேகமாய் மாறி வரும் நமது வாசிப்புகள் சார்ந்த வினாக்களுக்கு current பதில்கள் கேட்டறிவதில் தப்பில்லை என்று நினைத்தேன் !! So answers ப்ளீஸ் ?

Bye all...see you around ! Have a super weekend !!

286 comments:

  1. வந்துட்டோம் ல 🥳✌️😎

    ReplyDelete
  2. ஆவலுடன் எதிர்பார்த்தேன்❤️👏👏👏👏

    ReplyDelete
  3. அப்பாடி. வந்துட்டேன்

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  5. // fast food ஆர்வலர்களுக்கு அக்கட ஒரு கடை; மீல்ஸ் ரசிகர்களுக்கு இக்கட எப்போதும் போல கடை என்பதே தொடர்ந்திடும் template ஆக இருந்திடும்! //

    Thank you sir 🙏🏻🙌🙌🙌🙌🙌🙏🏻

    ReplyDelete
  6. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்..
    பாபு
    ஆத்தூர்

    ReplyDelete
  7. Dear Editor
    Answers
    1 36 +
    2 12
    3 1
    The Reason for my disinterest in Tintin is that it was accessible to me from childhood.Same holds true for Asterix Obelix.I always felt the USP of lion comics was the tonnes of new heroes and stories. U have introduced to us which could have been hitherto unknown.Even though I feel Asterix and obelix are pinnacle of comics, I still would not be interested to read them in your publication as I have read most of them in English.I come here for our USP may it be Spider or Tex Carson or Tiger or Sheldon or Largoor XIII. I love Reporter Johnny , Detective Rubin and even Maggie Garrison over Tamil Tintin.
    Regards
    Arvind

    ReplyDelete
    Replies
    1. Each to their own sir.. The very same Tintin sells close to 20,000 copies per album / per year in Hindi!

      For sure there must be umpteen readers amongst them who have read it a zillion times in English too!

      Delete
    2. Dear Editor
      Just my personal opinion Sir
      U are right

      Delete
  8. ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்? // 36

    கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்// 12


    கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்? // 3

    ReplyDelete
  9. // For sure 2025-ல் டின்டின் நம் மத்தியில் வலம் வருவார் தான்! //

    கோடான கோடி நன்றிகள் சார்🙏🙏🙏🙏

    இவர் 2026, 2027. ..... எல்லா வருடங்களில் கண்டிப்பாக தொடர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது சார் 😊

    ReplyDelete
  10. . ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்?

    d. 36+12(specials)

    கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?

    c. 12 + 6(young TeX)

    கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

    a. 3

    ReplyDelete
  11. 1. ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்?

    d. 36

    கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?

    c. 12 + 2

    கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

    a. 3

    ReplyDelete
  12. சுஸ்கி விஸ்கி அடுத்த ஆல்பம் வர வாய்ப்பு தாருங்கள் எடிட்டர் சாரே

    ReplyDelete
    Replies
    1. இத்துடன் காமெடி செய்திகள் நிறைவு பெறுகின்றன !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. முடிச்சுட்டிங்க போங்க🥲

      Delete
  13. 1) 24 in regular stream sir - more than that cover in classic+special fairs+online book fairs
    2) Tex - 12 sir - NO YOUNG TEX - please move YOUNG TEX to pre-booking sir
    3) Tintin - 4 per year sir - not together - 1 per 3 months

    ReplyDelete
  14. //Bottomline - வாசிப்பு ப்ளீச்ச்!!//

    It would be better if my kids or my friends kids dive into reading. Hoping timtin will help my friends kids reading habit. As for my son he is hooked to lucky luke

    ReplyDelete
  15. When you announce 36+ books sir - all regular readers WILL PAY and get it SUBSCRIBED but not more than 40% will read all the 36 (and this will include albums like TINTIN) and you will be scratching for reviews again same time next year sir. So if you keep at 24 - more chances it will be read sir ! Moving Tex to seperate 12 books a year stream and having 18 regulars is also good sir !

    ReplyDelete
    Replies
    1. The crunch is the courier costs sir ; plus the cost of the boxes + shipping....On a much smaller number of books this cost cannot be absorbed by us at all !

      Delete
    2. Unfortunately then 'books unread' is a backlog list we have to live with sir !

      Delete
    3. Case in point - I love Mandrake - even the most basic stories. I was the one who pushed hard for a second Mandrake special. Felt joyous recieving it. However absolutely no time to open and read ! :-( The kelavans took 2 weeks to read and the next weekend I read Tintin 2 albums. That is exhasuting all my reading time already.

      Delete
    4. தாத்தாசுக்கு 2 வாரங்களா?

      சார் - அவர்களுக்குப் பேனா பிடிக்க அதில் பாதிக்கும் குறைவான அவகாசமே எனக்கு அவசியப்பட்டது 🥶

      Delete
  16. //ஒவ்வொரு மாதமும் புக்ஸ்களை சூட்டோடு சூடாய் வாசித்து அலசிடும் நண்பர்கள், இந்தப் பதிவின் முதல் பாதியினை அலேக்காகத் தாண்டிப் போய்விடலாம் !! அந்தப் பாதியானது வாசிக்க நேரமின்றியோ ; ஆர்வம் குன்றியோ அல்லாடும் சங்கத்தினருக்கோசரமே !!//

    பதிவு படிச்சு்முடிச்சிட்டு refresh செஞ்சா இது நம்மள பார்த்து கண்ணடிக்குது

    ReplyDelete
  17. 1. ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்?

    நிதானமாய் யோசித்து; ”அவர் என்ன சொல்லுவாரோ? இவர் என்ன கலாய்ப்பாரோ?” என்ற கவலைகளெல்லாம் இல்லாமல் ஒற்றை ஆண்டின் வாசிப்புக்கென எத்தனை புக்ஸ் வந்தால் தேவலாம் என்று சொல்லுங்களேன் ?! கோவைக் கவிஞர் பாணியில் அள்ளி விடாது let's have a realistic number please!

    a. 24

    b. 30

    c. 32

    d. 36

    Ans D:36

    கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?

    a. 9

    b. 10

    c. 12

    Ans :C.12. (D: அதுக்கூம் மேலே..)

    கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

    a. 3

    b. 2

    c. 1

    Ans: B.2

    ReplyDelete
  18. Question 1 - d. 36
    Question 2 - c 12
    Question 3 - a 3

    ReplyDelete
  19. 1.ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்?

    36 + ..

    2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?

    12+ ..

    3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

    3 ..

    ReplyDelete
  20. Any number of Tintin is okay for us.(More than three). Any number of stories are okay because each day we read books and most of the time we repeat the books if the story is good. For example I recently bought marmakathi in erode bookfair. I have already read it thrice. This same book when it was originally published, I have read it innumerable times. So number of books per month is immaterial to me.

    ReplyDelete
  21. டின்டின் புத்தகங்களை கையில் ஏந்தும் போது கிடைக்கும் சந்தோஷம் படிக்கும் போது கிடைக்கவில்லை.என் றாலும் புத்தகங்கள் வந்தவுடன் படித்து விட்டு அடுத்த மாதம் எப்போதும் வரும் என காத்திருப்பதே என் வழக்கம்.

    ReplyDelete
  22. 1. b 30 total books
    2.a. 9 books Tex
    3.a 3Tin Tin

    ReplyDelete
  23. // க்ளிப்டன்; ப்ளூகோட்; ஷெல்டன்; லியனார்டோ தாத்தா போலானோரின் 2 டஜன் புக்குகளை மாணவர்களுக்கென ரூ.25; ரூ.30 என்ற விலைகளில் புத்தக விழாக்களில் ஸ்பெஷலாக வழங்கிடுவம் முயற்சியானது செம smash ஹிட்! //

    சூப்பர் சூப்பர். மகிழ்ச்சி🥰

    ReplyDelete
  24. //ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்? //

    A. 24

    //ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?//

    எனது கருத்து:- 6 புக்ஸ். இரண்டு மாதத்திற்கு ஒன்று என.

    /ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

    A. 3

    ReplyDelete
  25. டின்டின். ஆல்பம் தமிழில் பார்க்கும் பொழுது வரும் உணர்வுக்கு விலையே கிடையாது.நமது சராசரி 45 + என்பதுதான் காரணம் .இந்த வயதில் லக்கிலூக்,ஆஸ்ட்ரிக்ஸ் போன்றsatire பாணி நகைச்சுவைகள் அளவிற்கு டின்டினின் நேரடி நகைச்சுவை சற்று லேசாகவே ஈர்த்திடும்.டின்டினின் வீச்சை உணர புது இளம் வாசகர் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம தானைத் தலைவரை என்ன மாதிரியான காரணத்துக்காக ரசிக்கிறோமோ சார்?

      Delete
  26. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  27. கதையின் தலைப்பு “கைதியாய் ஒரு அழகி” அல்லது "சிறையில் ஒரு அழகியா" சார் 🤔

    ReplyDelete
  28. /* And தொடரவுள்ள பொழுதுகளில் மதுரை, விருதுநகர், திருச்சி - என்று புத்தகவிழா கேரவன் ரவுண்டடிக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கான பிரத்தியேக புக்ஸ்களை இன்னும் ஜரூராய் ரெடி பண்ணி வருகிறோம்! ரொம்பச் சீக்கிரமே கிட்டங்கி காலியாகிடும் பட்சத்தில், பசங்களுக்கென்ற விலைகளில் ஒரு தனி ரேஞ்ச் புக்ஸ் உருவாக்கிடவும் திட்டங்கள் உள்ளன! காத்திருக்கும் சென்னைப் புத்தகவிழாவில் அவற்றைக் களமிறக்க ஒரு ஐடியாவும் உள்ளது! Fingers crossed!*/

    Will our old college ID cards work sir ? :-D

    ReplyDelete
  29. ஸ்பூன் & ஒயிட் - கார்டூன் ரசிகர்கள் அனைவரும் இவர்களை வருக வருக என வரவேற்கிறோம் 😍

    ReplyDelete
  30. Replies
    1. அது இன்னாங்கோ ஒரு முட்டை நடுவாக்கில்?

      Delete
    2. டெக்ஸ்வில்லர் வேண்டாம் என்கிறாரோ. 😭😭😭😭

      Delete
    3. அப்ப நீங்க படிக்க ஒரு புத்தகமும் இருக்காதே ரம்மி 😂

      Delete
  31. சார் உடம்புக்கு பரவால்லயா....நீங்க சுறுசுறுப்பா இயங்க நேர்ல பாத்து உடல்நலத்தை விசாரிக்க தோணலையேங்றதே...நண்பர்கள் விசாரிச்சத சொல்லைலதா பக்னு பட்டது...உடல் நலத்தை கவனிக்க ..மெதுவா பதிவு வரட்டும்...நாளை டின்டின்னோடுதான்...படிக்க முயற்சித்தா தடைகள் தான்...அதனால் படிச்சதயே படிச்சுட்டுதானிருக்கேன்...படிக்காமலில்லை...இரத்தப் படலம் ரெண்டாம் சுத்து படிக்கைலதான் ...எவ்ளோ விசயங்கள் கோட்டை விட்டிருக்கேன்...எவ்ளோ அழகா செதுக்கியிருக்காங்கன்னு புரிஞ்சுது...வாசகர் பார்வையில் புலன் விசாரணை எழுத ஆசை...தயாராகிக்கோங்க...எனது தாக்குதலுக்கு

    புது நாயகர் காட்டிய பக்கம் வண்ண லார்கோ பக்கத்த காட்டினீங்களே அதே போலீர்ப்பு..சூப்பர் சார்...லார்கோ வெள்ளை பச்சை..இங்க சிவப்பு வெள்ளை

    ReplyDelete
    Replies
    1. அதான் டாப்பென டைப்பும் கைய ஒடச்சே போட்டார்...என் மனங்கவர் புது நாயகி ரூபின்...என்னா அட்டை என்னா கலரு..இது வரை வந்ததிலே டாப் இதான்...கோகிலா அவர்களுக்குஎனது நன்றியயும் சொல்லிடுங்க

      Delete
  32. கேள்வி #01:
    ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்?

    😘 36

    கேள்வி #02: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்

    😘 09

    கேள்வி #03: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

    😘 03

    ReplyDelete
  33. மாணவர்களுக்கு சூப்பர்...என் மகன் வெண்மணி இளவரசியை ரசிக்கிறார் பீன்ஸ் கொடி ஜாக்க மறந்து...ஒவ்வோர் கட்டத்துக்கும் ஆயிரம் கேள்விகள் பக்கத்த புரட்டவிடாம...இனியோர் ஸ்மர்ஃப் செய்வோமா

    ReplyDelete
    Replies
    1. கொத்தனார் கிட்டே சொல்வோமா?

      Delete
    2. தாஙுகள் கொத்தனார் கிட்ட சொன்னாலும் அங்கயும் நம்ம கவிஞர் பெரிய லிஸ்ட் வைச்சு இருப்பாருங்க, ஆசிரயரே 😁😁😁

      Delete
    3. நீங்கள் தான் சார் அந்த கொத்தனார் சார் 😀

      Delete
  34. Question 1 - d. 36
    Question 2 - c 12 (6 இளம் டெக்ஸ் + 4 புதிய கதைகள் + 2 கிளாசிக் மறு பதிப்பு)
    Question 3 - a 3

    ReplyDelete
  35. ஒரு மாதத்தில் வரும் புத்தகங்களை அடுத்த மாதம் புத்தகங்கள் வருவதற்குள் திட்டமிட்டு படித்து விடுவேன். குறைந்த பக்க கதைகள் வரும் மாதங்களில் பழைய கதைகள் மறு வாசிப்பும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. உங்களை clone பண்ண பெர்மிஷன் வேணுமே சார்!

      Delete
  36. 1) 36
    2)12 than irukku extra vantha nalla than irukkum
    3) 2

    ReplyDelete
  37. பதிவு இரவு மெதுவாக வரும், அப்போ நெட் ஆன் பண்ணிக்கலாம் என்று விட்டு வைத்தேன்
    பதிவு எப்ப வரும்னு கேட்கலாம் என்று வந்தால், க மாலையே வந்து விட்டது பதிவு , நான்தான் லேட்

    சனிக்கிழமை மீண்டும் பதிவுக்கிழமை ஆனதில் மகிழ்ச்சிங்க, ஆசிரியரே(நல்லவேளை தலீவரும், செயலாளரும் வேப்பிலை டான்ஸ் ஆட வேண்டியதில்லை)

    ReplyDelete
  38. ஆசிரயரே மாதத்தில் பாதிக்கு மேல்தான் புத்தகங்கள் படிக்க கிடைக்கும், முதல் பாதியில் அம்மாவும், சகோதரியும் படிச்சுடுவாங்க
    பின்னர் தான் நமக்கு

    ReplyDelete
  39. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  40. 36 +

    12+

    3+



    ( Baranitharan..k...tharamangalam)

    ReplyDelete
    Replies
    1. பதுங்கு குழி தலைவர் ஏதோ போட்டியில் தோற்று தனது பெயரை மாற்றியது போல தெரிகிறது🤩🤣😀😂

      Delete
    2. வணக்குங்க...

      ....

      தோற்பதா அதற்கு பெயர் விட்டு கொடுப்பது பரணிசார்...:-)

      Delete
  41. நாகபட்டினதில் புத்தக விழா கொஞ்சம் கவலையாக இருந்தது, ஜோதி அக்காவிடம் திங்கள் அன்று பேசியபோது, பள்ளிக்கூட சிறார்கள் ஆர்வமுடன் வாங்குவதாக சொன்னார்,
    ஆனால் இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கவில்லை, சூப்பரூங்க ஆசிரயரே
    நாகப்பட்டினத்திற்கு பெரிய "ஜெ"

    ReplyDelete
    Replies
    1. நாகப்பட்டினம் பற்றி ஈரோட்டில் இருக்கும் போது ஜோதி அக்காவிடம் பேசும் போது கவலையுடன் தான் சொன்னார்கள், எனக்கும் நாகப்பட்டினம் இது முதல் முறை என நினைக்கிறேன் எனவே விற்பனை பற்றி சரியாக சொல்ல முடியவில்லை அதே போல் அந்த பக்கம் நமக்கு காமிக்ஸ் ரசிகர்கள் இருப்பார்களா என்று கவலையாக இருந்தது; ஆனால் தற்போதைய விற்பனை நிலவரம் மகிழ்ச்சி கூத்தாட செய்கிறது. I am happy 😃

      Delete
  42. மாதத்தின் ஒவ்வொரு வார இறுதிக்கும் ஒரு புத்தகம் என வைத்து கொண்டாலுமே நான்கு புத்தகங்கள் தேவை. ஆகையால் வருடத்திற்கு குறைந்தது 48 புத்தகங்கள் தேவை.

    1. 48
    2. தல - 12
    2. டின் டின் - 2

    சந்தாவில் குறைத்து வெளியிட்டாலும், பிறகு ஏதாவது ஒரு ரூபத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறது. ஆகையால் சந்தாவிலேயே சேர்த்து விட்டால் வாங்குவோர்க்கு விலையாவது கணிசமாக குறையும் சார்

    ReplyDelete
    Replies
    1. 1. மாதம் 3... அதில் கண்டிப்பாக ஒன்று தலை ( இரண்டாவது கேள்விக்கு பதிலும் கிடைத்து விட்டது அல்லவோ 🤣🤣🤣)
      2. இரண்டாவது கேள்விக்கும் பதிலளித்து விடுகிறேன் ஆசிரியரே...மாதம் 1 தலை புக்கு... அத்துடன் இளம் டெக்ஸ் கலர் டெக்ஸ் மேக்சி டெக்ஸ் என்று ஏதேனும் ஒரு டெக்ஸை சேர்த்து இரண்டாக கொடுக்க முடியுமா என்று முயற்சி செய்யவும்.🤣🤣🤣🤣 அல்லது மூன்றுமே டெக்சா கொடுத்தாலும் சந்தோஷமே..❤️❤️❤️❤️.
      3. இதுவரை டின் டின்னை அடியேன் வாசித்தது இல்லை.. இருப்பினும் உங்களது முன்னோட்டம் புத்தகத்தின் தரம் இவற்றை மனதில் கொண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதாவது வருடத்திற்கு இரண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

      Delete
    2. // மாதத்தின் ஒவ்வொரு வார இறுதிக்கும் ஒரு புத்தகம் என வைத்து கொண்டாலுமே நான்கு புத்தகங்கள் தேவை. //

      இந்த டீல் நல்லா இருக்கு 😊

      Delete
  43. மன்னிக்க ஆசிரயரே
    மற்ற விஷயங்கள் கவனித்துவிட்டு தங்கள் உடல்நலத்தினை கேட்ட தவறிவிட்டேன்

    தற்போது உடல்நிலை எப்படி உள்ளதுங்க ஆசிரியரே

    ReplyDelete
  44. கேள்வி-1: மினிமம் 36
    கேள்வி-2: மினிமம் 12
    கேள்வி-3: 6

    ReplyDelete
  45. ரூபின் அடுத்த மாதத்தில் வருவது ரொம்ப மகிழ்ச்சிங்க, ஆசிரியரே
    அதுவம் தனி ஆல்பமாய் இந்த வருடத்தில் முன்னேறி இருப்பது மிக அருமை

    ReplyDelete
  46. ❤️❤️👍🙏... எத்தனை போட்டாலும் வாங்கிடுவேன் sir...
    டெக்ஸ் ம் அப்படியே... டின், டின் னும் அப்படியே...ஈரோடு ஸ்டாலின் சகோ... எனக்கு ஒரு பிரதி வைத்திருப்பார்... நாளை டின், டின் னுக்காக ஒரு பயணம் ஈரோடு நோக்கி... ❤️❤️👍🙏

    ReplyDelete
  47. டின் டின் - ஒவ்வொரு தாளும் ஒரு அட்டை போன்று உள்ளது. பக்கங்களை திரும்பும் போது இரண்டு மூன்று பக்கங்களை சேர்ந்து திரும்பி விட்டோமோ, இது காகிதம்மா அல்லது அட்டையா என இந்த கதையை படிக்கும் போது பல முறை ஆச்சரியம் கொள்ள செய்தது. திபெத்தில் டின் டின் படிக்கும் போதும் இதே அனுபவம் 🥰😍 இதன் விலை அதிகம் என்று நினைக்கிறேன், எப்படி சார் இவ்வளவு குறைவான விலையில் தரமான புத்தகங்கள் கொடுக்க முடிகிறது; நாங்கள் கொடுத்து வைக்கவேண்டும் 🙏 நன்றி.

    டின் டின் ஒரிஜினல் கதைக்கும் இதே போன்ற காகிதங்கள் தான் உபயோக படுத்துகிறார்களஆ சார் ? என்னிடம் உள்ள டின் டின் ஒரிஜினல் புத்தகங்கள் டெக்ஸ் கதை புத்தகத்தை விட கொஞ்சம் பெரிய size ஆனால் காகிதம் இந்த தரம் கிடையாது.

    ReplyDelete
  48. @திருச்சி புத்தகவிழா 😍😘😃

    செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை.. 👍👌

    @செயிண்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரீ ஸ்கூல், கண்டோன்மேன்ட் திருச்சி
    ❤💛💙💚💜

    ReplyDelete
  49. விஜயன் சார், உடல் நலம் முக்கியம் சார். உங்கள் உடல் நலம் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்☺️

    ReplyDelete
  50. 1. வருடம் .36 புத்தகங்கள் . 2.டெக்ஸ் 12.(மாதம் 1 டெக்ஸ்.+ இளம் டெக்ஸ் +விலையில்லா கலர் டெக்ஸ்+மறுபதிப்பு டெக்ஸ்+தீபாவளி சிறப்பிதழ் டெக்ஸ்)1100+1200+1250+1300வது பதிவு சிறப்பிதழ் டெக்ஸ் இதெல்லாம்சேர்த்துடெக்ஸ் மட்டும் வருசம் முடிந்தவுடன் கணக்கு பார்த்து எண்ணிக்கலாங்க சார்.

    ReplyDelete
  51. 1, 36 Book,
    2,. 12 + + ( டெக்ஸ் ),
    3, 2,

    ReplyDelete
  52. ரயிலில் சகபயணியுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சாவகாசமாய் கீழே இறங்கி வரும் டின்டின்னுடன் ஆரம்பமாகும் கதைமேஜிக்‌ ஷோவில் கலகலப்பு டன் நகர்ந்து பிறகு ஆராய்ச்சி குழுவினரை தேடி ஓடும் டின்டினுடன்பரபரப்பாக பறக்கிறது .இடையில் நம்ம கேப்டனின் அலப்பறைகள்,பாட்டுப் பாடும் ,அம்மணி ,மேஜிக்மேன் ,கத்தி வீசும் முன்னாள் ஜெனரல் ,,ஆராய்ச்சிக் குழுவினரின் திடீர் சுகவீனம், மர்மமான முறையில் உடைந்து கிடக்கும் ஸ்படிக துண்டுகள் என்று எண்ணற்ற சுவாரஸ்யங்கள் டின் டின் டின் டின் என்று ஆசிரியரும் குமார் சாரும் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு துளி சான்றுகள்.ரயிலில் பயணிக்கும்போது டின் டின் பெட்டியை மட்டும் கழட்டி விடுவது போன்ற சம்பவங்கள் இன்றைக்கும் ரசிக்கும்படி உள்ளன.மொத்தத்தில் டின்டினைபடிக்கவில்லை. வாழ்ந்த உணர்வே.

    ReplyDelete
    Replies
    1. // டின்டினைபடிக்கவில்லை. வாழ்ந்த உணர்வே. // அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் 😊

      Delete
  53. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. டின் டின்னின் சாகசங்கள் ஒவ்வொன்றும் ஒரு எக்ஸ்படிஷன் செல்லும் திரில்லிங்கை அளிக்கிறது ஆசிரியரே!!

      எழுதத்தான் நேரம் வாய்க்கவில்லை... சாரி சார்!!

      Delete
    2. That's ok sir... வாசிக்க இயலும் வரைக்கும் things are o.k...

      Delete

  54. கேள்வி ஒன்று : 36

    கேள்வி இரண்டு : 9

    கேள்வி மூன்று : 2

    ReplyDelete
  55. கேள்விகள் முறையே பதில். -36, 12,3

    ReplyDelete
  56. துணைக்கு வந்த மாயாவி விமர்சனம்.......

    ஒரு அழகான காமிக்ஸ் கவிதை. சிறப்பான வாசிப்பு அனுபவம் பெற உதவும் கதை. ஒரு முதியவரை வயதானவரை நாயகனாக காட்ட கதாசிரியருக்கு எவ்வளவு துணிச்சல். அம்ரோசியஸ் மார்கன் ஒரு வீரமான கவ்பாய். தனியாள்.திடீரென தனக்கு ஒரு மகள் இருப்பதாக கடிதம் ஒன்று வர தன் மகளைத் தேடி பயணம் புறப்படுகிறார் மார்கன். மார்கனுடன் ஒரு செவ்விந்திய சிறுவனும் பயணத்தின் இடையே ஒட்டிக் கொள்கின்றான். வழி தோறும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றார் மார்கன். முடிவில் தன் மகளைக் கண்டாரா? கூட வரும் சிறுவன் யார்? என்பதை கதை படித்து தெரிந்து கொள்ளலாம். ஒரு ஒரு வகையான சித்திரங்கள் நடந்த இடங்களை கண் முன்னே காட்டுகின்றன. பிட்டுக்கு எப்படி தேங்காய் பூ சீனி மற்றும் நல்ல எண்ணெய் எப்படி சரியாக இருக்குமோ அப்படி இந்தக் கதைக்கு சிறப்பான சித்திரங்கள் சிறப்பான வண்ணக் கலவை சிறப்பான மொழிபெயர்ப்பு மேலும் சுவை கூட்டுகின்றன.ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம் பெற மிகச்சிறந்த கதை இது. மார்கனுடன் நாமும் பயணம் சென்ற உணர்வை தருகிறது. நல்லதொரு சித்திரக் கதை இது.

    ReplyDelete
  57. 1. ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்? ///

    36.

    ReplyDelete
  58. கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?////

    12.

    ReplyDelete
  59. கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?/////

    2.

    ReplyDelete
  60. For sure 2025-ல் டின்டின் நம் மத்தியில் வலம் வருவார்.///

    வயிற்றில் பாலை வார்த்தீர்கள் ஆசானே.

    ReplyDelete
  61. டியர் விஜயன் சார் , 

    டின்டின் குறித்த உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது சார். "திபெத்தில் டின்டின்" வெளியான போதே, வரவேற்பு சற்று muted ஆக இருந்ததாக எனக்குத் தோன்றியது.

    நமது இந்த சிறிய வட்டத்துக்குள், டெக்ஸ் வில்லர் ,  லக்கி லூக் ,  கிளாசிக் நாயகர்கள், அவ்வப்போது சில கி.நா,க்கள் என்று சுற்றிக் கொண்டிருக்கும் நம்மிடம் ,  இனி ஒரு புதிய நாயகர் (தமிழுக்கு) அறிமுகமாகி, வழக்கமான நாயகர்களின் ஸ்டார் அந்தஸ்த்தைப் பெறுவது கடினம் எனத் தோன்றுகிறது , அதுவும் டின்டின் மாதிரியான பரம சாதுப் பார்ட்டிகளுக்கு!

    ஆகவே, வட்டத்துக்குள் முக்கோணமாகச் சுற்றிக் கொண்டிருக்கும், இந்த முன்னூற்றுச் சொச்சம் பேர் படிக்கிறார்களா,  இல்லை வாங்கி வைத்து அடுக்குகிறார்களா என்ற கவலையை விடுத்து, இறுதி முயற்சியாக, நமது டின்டினார், ஆயிரக் கணக்கான மாணவர்களை சென்றடைய வழிகளேதும் உள்ளனவா என்று தேட வேண்டும் சார்.

    விளம்பரத்துக்கென்றே அச்சிடப் பட்ட ஏதோ ஒரு சிங்கிள் ஆல்பம், கருப்பு வெள்ளையில் இருந்தாலும் தவறில்லை, அது கதையின் முதல் 16 பக்கங்களை மட்டும் தாங்கிய இலவச பதிப்பாகவும் கூட இருக்கலாம்! அட்வைஸ் சொல்லிச் செல்வது எளிதுதான், ஆனால் புதிய வாசகர்களை சென்றடைந்தாலொழிய, நீங்கள் எதிர்நோக்கும் வரவேற்பு டின்டினாருக்கு சாத்தியமா என்று தெரியவில்லை சார். 

    ReplyDelete
    Replies
    1. டின்டின் படைப்பளிகள் இம்மியூண்டு விலகிட எண்ணினாலும் கண்ணைக் குத்திப்புடுவாங்க கார்த்திக் - அவர்களின் universal standards நூல் பிடித்தது போல பின்தொடரப்பட வேண்டும்!

      நிஜத்தைச் சொல்வதானால் சரிந்து செல்லும் வாசிப்பு ஆர்வமே இங்கு bigger picture - டின்டின் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு star நாயகர் மாத்திரமே!

      Delete
  62. Tintin audience is different than this group. Despite being cartoon lover i could not feel connected with it. Previously want to say don't judge the second issue by the first one. As first one would have got better reach because of curiosity like one i had.

    Tintin will sell more in book fair only

    ReplyDelete
    Replies
    1. Tintin is just NOT a cartoon sir 🥴🥴... It's an unique presentation with a generous dose of humor...

      Delete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. 1. ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்?
    30 (Quality of the story is more important than quantity)

    கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?
    9 (Sergio bonelli'ன் மற்ற புது ஹீரோக்களுக்கு ஒரு chance கொடுக்கலாம்)

    கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?
    3 (நான்கு மாதங்களுக்கு ஒரு முறை)

    ReplyDelete
  65. A) - 36 (+ V - காமிக்ஸ்)
    B) - 8 (அப்பதான் வேறு
    வழியில்லாமல் -ஸ்பெஷல்
    வெளியீடுகள் வாங்க
    மனம் (பணம்) வரும்.
    C) - 2

    ReplyDelete
  66. //. தமிழ் சினிமா டயலாக்குகளை யும்,பாட்டுவரிகளையும்தான் நுழைக்க அவசிமாகியுள்ளது// சூப்பர்ங்க சார். நீங்க வூடுகட்டி வெளாடலாம். வெல்கம் ஸ்பூன்&ஒயிட் போலிஸ் கார்ஸ்

    ReplyDelete
  67. டியர் சார்..
    உடல்நலம் தேறி சனி கிழமை பதிவுக்கு இறைவனுக்கு நன்றிகள் சார்..
    டின்டின் - பற்றி ..
    இவரை ரிப்.. ஜானி போல் ஸிரியசாக எடுத்துக் கொள்வதா
    (அ) கிட் ஆர்டின் படிப்பது போல் காமெடியில் ரசிப்பதா என்ற தடுமாற்றம் இருக்கிறது.. (ஏனெனில் - சிக்பில் - டின்டின்,
    கிட்ஆர்டின் - ஸ்நோயி., டாக் புல்-கேப்டன் .. இந்த ஓப்பீடை தவிர்க்க முடியவில்லை..
    இவர்கள் எங்கள் ஆதர்ச நாயகர்கள் . )
    டின்டின் - பதிப்பகத்தார்கள் குறைந்தது - 10 ஆண்டுகளுக்கு
    முன்பாவது நமக்கு ஒப்புதல் தந்திருக்க வேண்டும்..
    தற்போதைய வயசு + மனநிலையில் ஒரு சுவராஸ்யமான கதையைக்கூட
    நாங்க இது மாதிரி நிறைய பார்த்தாச்சு என்பது போன்ற . மன நிலையில் தான் அணுக முடிகிறது..
    ஆனாலும், புதிய வாசகர்களுக்கு இது ஒரு அற்புத சித்திர விருந்து தான்..
    எனவே, டின்டின் (எங்களுக்கு) எனக்கானது அல்ல..
    என் தம்பி பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கக் கூடிய தொடர் ..
    எனவே - வருடம் இரண்டு கண்டிப்பாக வெளியிடுங்கள்..சார்..

    ReplyDelete
  68. Question 1 - d. 36
    Question 2 - c 12
    Question 3 - a 3

    Dear sir,
    I am someone who regularly buys and reads every comics you publishes. I couldn't connect myself with this post much. I could understand the tone of borderline lamenting though. For me, the reading of this titles in Tamil translation is refreshing and I'm also rereading both English and Tamil Tintin side by side and it's extremely interesting.

    In the latest Tintin edition, the binding of the cover page alone wasn't upto the standard. The story, your translation and rest all are exceptionally good.

    ReplyDelete
    Replies
    1. Warm welcome come. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கமெண்ட் தளத்தில் ☺️

      Delete
  69. Sir almost எல்லா கதையும் படிசாச்சு,தாத்தா தவிர. Reprints படிக்க முடியாலா ஆன அது உங்க choice so நோ comments. ஆனா நல்லா action கதை படிச்சு ரொம்ப நாளாச்சு sir. பாத்து பண்ணுங்க

    ReplyDelete
  70. கேள்வி 1:
    36 புக்ஸ் (அதுபோக ஸ்பெஷல்ஸ் தனி)

    கேள்வி 2: 12 புக்ஸ் (அதுபோக தனி வெளியீடுகள்)

    கேள்வி 3 : 3 (டபுள் ஆல்பங்கள்)

    ReplyDelete
  71. இது என் கதை.
    நான் 2018 வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 2018ல் திடீரென்று கொஞ்சம் கொஞ்சமாக நடக்க இயலாமல் போய்விட்டது. எந்த வழியும் இல்லை எப்படி நமக்கு இது நடந்தது என்பதே எனக்கு புரியவில்லை. ஏதோ சுளிக்கிக் கொண்டு விட்டதோ என்பது இதுபோல் இயற்கை வைத்தியத்துக்குச் சென்றேன். ஆனாலும் அது சரிப்பட்டு வரவில்லை. சரி இது வேலைக்காகாது என்று கோயமுத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே மருத்துவர் அசோகன் அவர்களை பார்த்தேன். அவர் ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தார். ஸ்கேன் செய்து வந்ததும் அதைப் பார்த்துவிட்டு முதுகு தண்டுவடத்தில் ஐந்தாவது ஆறாவது லேயரில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறினார். மாத்திரை கொடுத்து பார்ப்போம் அதன் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஆனாலும் அதிக சிரமமாக இருந்ததால் மீண்டும் அவரிடம் சென்றேன். அவர் மருத்துவர் விக்ரமை சென்று பார்க்கும் படி சொல்லிவிட்டார். அன்று அவர் மருத்துவமனையில் இல்லை. அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்பதையும் தெரிந்து கொண்டேன். பின்னர் ஒரு நாள் நானும் எனது அக்கா வீட்டுக்காரர் மச்சான் இருவரும் அவரை சென்று பார்த்தோம். அவர் பின்வருமாறு கூறினார். எப்போதோ கீழே விழுந்த போது ஏற்பட்ட அதிர்வில் முதுகு தண்டுவட ஜவ்வானது கொஞ்சம் கொஞ்சமாக விலையை விட்டது என்றும் கீழே ரத்த ஓட்டம் சுத்தமாக நின்று விட்டது என்றும் கூறினார். இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி என்றும் சொன்னார். அதுமட்டுமல்ல இந்த அறுவை சிகிச்சையை செய்தாலும் எழுந்து நடக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறினார். ஏனென்றால் அப்போது இருந்த சூழலில் என்னால் சுத்தமாக நடக்கவே முடியாது. அடுத்தவரின் துணை இன்றி ஏங்கும் செல்ல முடியாது என்ற நிலை இருந்தது. நாங்களும் சரி என சம்மதித்து அன்று அங்கே மருத்துவமனையில் சேர்ந்து விட்டோம். அதற்கு அப்புறம் அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து ரிசல்ட்களும் எடுக்கப்பட்டு அடுத்த நாளே அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் நாள் குறித்தார்கள். அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு என்னை அறுவை சிகிச்சை அரங்குக்கு கூட்டிச் சென்றார்கள்.

    ReplyDelete
  72. அங்கே மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அதன் பின் நான் கண் முழித்த போது சாயங்காலம் 5 மணி. அப்பொழுது அறுவை சிகிச்சை முடிந்து மேற்பார்வை அறையில் என்னை வைத்திருந்தார்கள். அறுவை சிகிச்சை என்பது லேப்ராஸ்கோபிக் அதாவது கழுத்துப் பகுதியில் ஒரு ஓட்டை போட்டு அதன் மூலம் அந்த குறிப்பிட்டஜவ்வை வெளியே எடுத்துவிட்டுஅந்த இடத்தில்ஸ்பிரிங் போல் இயங்கும் ஒருபிளேடு வைத்திருக்கிறார்கள். இது காலம் புல்லாம் நம்முடனே இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் தண்டுவடத்திலிருந்து கீழ்ப்பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்லும்படி செய்யுமாம். இது பின்னர் எனக்கு தெரிவிக்கப்பட்டது. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ய கழுத்துப் பகுதியில்தொலையிற்ருந்தபடியால் அந்த இடத்தில்அசையாமல் இருக்க கழுத்துப் பகுதியில் கிளிப் போன்ற ஒன்றை மாட்டி விட்டு விட்டார்கள். அதுமட்டுமல்ல சாய்ந்து கொடுப்பதோ குப்புற படுக்க கூடாது.எழுந்து செல்வதாக இருந்தாலும் நேராக எந்திரித்து அப்படியேதான் எந்திரிக்க வேண்டும். அன்று இரவும் மறுநாள் காலையும் அதே அறையில் தான் நான் இருந்தேன். இரவு மற்றும் காலை சாப்பாடு தேவதைகள் எனக்கு ஊட்டி விட்டனர். இந்தப் பிரச்சனையில் எனது வலது கையும் இடது காலும் பாதிக்கப்பட்டது. அடுத்த நாள் வெட்டுக்கு மாற்றினார்கள். அப்பொழுதும் அதே போல் தான் படுத்து இருக்க வேண்டிய சூழ்நிலை. காலை மதியம் இரவு என இரண்டு நாட்கள் தேவதைகள் தான் எனக்கு ஊட்டி விட்டார்கள். இரண்டு நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக சைடாக படுக்க வைத்தார்கள் நீ நடக்க முயற்சி செய்யச் சொன்னார்கள்.

    ReplyDelete
  73. இந்த சூழலில் ஆறு நாட்களில் என்னை மருத்துவமனையில் இருந்து டெஸ்ட் சார்ஜ் செய்து விட்டார்கள். ஒரு மாதம் கழித்து அந்த கழுத்துப் பகுதியில் இருந்த தையலை எடுத்துக்கொண்டு சென்றேன். மூன்று மாதம் கழித்து ஒரு டெஸ்ட் மட்டும் செய்து பார்த்துவிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று விக்ரம் மருத்துவர் கூறினார். அப்பொழுது என்னால் ஏதோ முடிந்த அளவு அப்படியே நடக்க முடிந்ததை பார்த்து இந்த அளவு எழுந்து நடப்பதே பெரிது. இதுபோல் அறுவை சிகிச்சை சிறந்த இரண்டு ஒருவர் இன்னும் நடக்கவில்லை உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். ரத்த ஓட்டம் போக ஆரம்பித்த போது முதுகு பகுதியில் இருந்து ஏதோ ஒரு பொருள் அப்படியே கீழே போனால் எப்படி இருக்கும் அது போல் இருந்தது. அப்படி ரத்த ஓட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே போக இரண்டு மாதங்களுக்கு மேலானது. அந்த ரத்த ஓட்டம் கொஞ்சம் கொஞ்சமாக செல்ல ஆரம்பித்த போது ஏற்பட்ட உணர்வை வலியும் இல்லாமல் பிடித்திருந்த ஒரு இடத்தில் ஏதோ உள்ளே போகும்போது போல் இருந்த அந்த உணர்வை அந்த வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் எழுந்து நடந்து சென்றால்சில அடிகள் வைக்கும் வரை எதுவும் தெரியாது திடீரென்று கீழே தள்ளிவிடும்.அது எப்போது தள்ளுகிறது என்று உணர்வு நமக்கு தெரியாது. அப்படி இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக நான் நடந்து தான் ஓரளவுக்காவது சரி செய்தேன். மருத்துவரோ எதற்கு மருந்து எதுவும் கிடையாது அதாகவே சரியானால் தான் உண்டு என்று கூறிவிட்டார். அதன் பின் எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக நடந்து ரத்த ஓட்டத்தை சரி செய்து ஓரளவுக்கு ஒரு 70% வரும் அளவு இன்று செய்து விட்டேன். இப்பொழுதும் குனிந்து எந்த வேலையும் செய்ய முடியாது. அதேபோல் குனிந்து எந்த ஒரு பொருளையும் தூக்கக்கூடாது. 15 கிலோக்கு மேல் எந்த ஒரு எடையையும் தூக்கவும் கூடாது, பிடிக்கவும் கூடாது. சமாதானப் பகுதியை தவிர்த்து சரியான பகுதிகளில் இன்றும் என்னால் ஏற முடியாது இறங்கவும் முடியாது. ஒரு நான்கடிக்கு மேல் இருக்கும் குழியில் ஏற முடியாது இறங்கவும் முடியாது. அதுமட்டுமில்லை இப்பொழுது எந்த ஆபத்து வந்தாலும் ஓடவும் முடியாது. ஓரளவு நடக்கலாம் அந்த அளவில்தான் இப்போது நானும் இருக்கிறேன். இப்பொழுது ஆசிரியரின் கை வலி எப்படி என்பதை உணர்வதற்கு என் கால் வேலை செய்யாமல் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது உணர்கிறேன். எனக்கு என் குலதெய்வம் ஸ்ரீ பொன் அழகு நாச்சியம்மன் அருளினால் இன்று ஓரளவுக்கு எனக்கு சரியாகி விட்டது. இன்று என் வேலையை நானே செய்து கொள்ளும் நிலைக்கு நான் வந்து விட்டேன். ஆசிரியருக்கும் அந்த வலி நீங்கி பூரணம் குனம் அடைய எங்கள் குலதெய்வத்தை வேண்டுகிறேன்

    ReplyDelete
  74. இப்பொழுது நான் சொன்னது எளிதாக இருக்கலாம் ஆனால் அந்த நிமிடங்களில் நரக வேதனையாக இருந்தது. வலியும் இல்லாமல் யாரோ நம்மை இழுத்துப் பிடித்துக் கொள்வது போல் அப்பப்ப என்று நினைத்தாலும் கடினமாக உள்ளது. இது போன்ற ஒரு நிலை என் எதிரிக்கும் வரக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. சதாசிவம் சார். நீங்கள் விவரித்த ஒவ்வொரு விஷயத்தையும் என்னால் உணர முடிகிறது. உங்களுக்கு நடந்தது எனக்கு 2008 இல் நடந்தது. எனக்கு கழுத்தில் ஒரு டிஸ்க் விலகி இருந்தது. அதனால் வலது கையில் தாங்க முடியாத வலி இருந்தது. அந்த டிஸ்க்கை நீக்கியே ஆக வேண்டும் என்று மருத்துவர் கூறியதால் ஆபரேஷன் செய்யப் பட்டது.அதற்கு பிறகு நீங்கள் சொன்னது போல 6 மாதம் படாதபாடு பட்டேன். ஆனால் எனக்கு அதற்கு பிறகு physio தெரபி மூலம் சரியாகி விட்டது. இப்பொழுது நன்றாகவே இருக்கிறேன். நீங்கள் எழுதியது என்னையும் எழுத தூண்டியது. நன்றி

      Delete
    2. @ சேலம் குமார் சகோ இப்பொழுதும் மருத்துவர் விக்ரம் அவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கும் ஆறு வகையான உடற்பயிற்சியை தினமும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்த பிசியோதெரபி செய்யும் ஒருவர் எனக்கு பிசியோதெரபி ஒத்து வராது என்று சொல்லிவிட்டார். வேண்டுமானால் கை கால்களுக்கு மட்டுமே செய்து விட முடியும் அதுவும் அந்த பிளேடை நகர்த்தி நகர்த்தி விட்டால் சிரமமாகிவிடும் என்று கூறினார். அதனால் தற்போது அவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கும் அந்த ஆறு உடற்பயிற்சியை மட்டுமே காலையில் செய்கிறேன். இப்பொழுதும் சில சமயங்களில் இருக்கும் இடத்தில் இருக்கும் போது கீழே தள்ளிவிட்டு விடும். அதைப் பார்த்து பலர் சிரித்து இருக்கிறார்கள். ஆனால் நம் வழி நமக்குவே தெரியும் என்பதால் அது பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை.

      Delete
    3. Musculo skeletal சிக்கல்கள் என்ன மாதிரியான வலி தருபவை என்பதை கொஞ்சமாய் உணர்ந்தவன் என்ற முறையில் உங்களது வேதனை புரிகிறது சார்!

      நல்ல டாக்டர்களும், இடைவிடா பயிற்சிகளும், தளரா மனமுமே நம்மைக் கரைசேர்க்கும் எனும் போது, உங்களுக்கு அந்த மூன்றையுமே இறைவன் அருளியுள்ளார்! அவருக்கு நன்றி சொல்லிடுவோம் சார்

      Delete
  75. Dear Editor Sir,

    டின்டின் புதிய உச்சங்களை தொடப்போகும் இதழ்

    இப்பொழுதுதான் விதைத்துள்ளீர்கள், ஆலமரமாய் வளர்ந்து மீண்டும் காமிக்ஸ் காதலை, விற்பனையை உச்சத்திற்கு கொண்டு செல்லும்,

    இரத்தப்படலம் கதைக்கும் காப்பிரைட் வாங்கிவிட்டு நீங்கள் விற்பனை குறித்து பயந்ததாக தெரிவித்துள்ளீர்கள், Rest is history

    டின்டின் யாருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை, அதன் தரம் அப்படி, அவசரமாக படித்து விமர்சிக்க. மாட்டேன், இரசித்துப் படிக்க பொக்கிசமாய் வைத்துள்ளேன்,

    சுஸ்கி விஸ்கியும் எங்களுக்கு வேண்டும் Sir,

    ReplyDelete
    Replies
    1. //அவசரமாக படித்து விமர்சிக்க. மாட்டேன், இரசித்துப் படிக்க பொக்கிசமாய் வைத்துள்ளேன்,//

      சார்.. ஒயின் நாளாசரியாய் rich ஆகிடுமாம், so அதை வருஷக்கணக்கில் நிலவறையில் போட்டுவைச்சாலும் ஓகே தான்! இத அவ்வளவு ஆற போட வேணாமே?

      Delete
  76. எனது முகநூல் காமிக்ஸ் குழுவில் எழுதியது இங்கும்.

    எடிட்டர் Vijayan S அவர்களின் கவனத்திற்கு:-
    எல்லா புக்கையும் வாங்கினாலும் ஏன் வாசிப்பதில்லை? எனும் தங்களின் கேள்விக்கு எனது கருத்தை தெரிவிக்க விழைகிறேன்.

    90 களில் வந்த லயன், முத்து வருடத்திற்கு 24 இதழ்கள், அல்லது அதற்கும் குறைவுதான். ஆயினும் அந்த இதழ்களில் ஒவ்வொரு மாதமும் ஆக்சன், அட்வென்சர், காமெடி, வெஸ்டர்ன், பேன்டஸி, திரில்லர், War.. என ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒன்று எங்களை வாசிக்க உள்ளிழுத்தது. அந்த Genre வெரைட்டி தற்போது இல்லாதது போல இருக்கிறது. தற்போது வரும் கதைகளும் வாசிக்க தூண்டுதல் தருவதில்லை. முன்பெல்லாம் (90களில்) அடுத்த இதழ்கள் விளம்பரம் வரும்போதே அந்த இதழ்களை எப்போது வாசிப்போம் என்று இருக்கும்.. அந்த ஆவல் தற்போது டோட்டலி மிஸ்ஸிங்.

    உதாரணமாக.. என் காமிக்ஸ் தொடக்கத்திலிருந்து பார்க்கலாம்.
    நான் அதிசய தீவில் ஆர்ச்சியில் இருந்துதான் தொடங்கினேன், அந்தக் கதை கானக அட்வென்சர் சார்ந்திருந்தது, தொடர்ந்து என்னைக் கவர்ந்த அடுத்தடுத்த இதழ்கள் பொக்கிஷம் தேடிய பிசாசு, ஆபரேஷன் அலாவுதீன். அதற்கடுத்து வந்த பனிமலை பயங்கரம் ஒரு அருமையான விஞ்ஞான திரில்லாராக என்னை அசத்தியது.. தொடர்ந்து வந்த பழிவாங்கும் புயல் ஒரு அனல் பறக்கும் சாகசமாக அமைந்தது. மின்னலோடு ஒரு மோதலில் சைமன் ஆக்சனில் சும்மா தெறிக்க விட்டிருந்தார். கழுகு வேட்டை, ஆர்ச்சி இன் பாரிஸ் என விதவிதமான ஜானர்களில் என்னை வசீகரித்து அடுத்த லயன், முத்து எப்போது வரும் என்று எதிர்ப்பை உண்டு பண்ணியது. ( இடைப்பட்ட காலத்தில், மந்திர ராணி, மரணத்தின் நிறம் பச்சை, மரணத்தின் நிழலில், திக்கு தெரியாத தீவில், டிராகன் நகரம், மிஸ்டர் ஜெட்.. இன்னும் பல... என தேடிக் கண்டடைந்து வாசித்து கிட்டத்தட்ட லயன், முத்துவின் தீவிர அபிமானியாக மாறியிருந்தேன்.) இது ஒருபுறம் எனில், மறுபுறம் முத்துவும் எப்பேர்ப்பட்ட கதைகளை கொடுத்தது, கொலை வள்ளல், பச்சை நரிப் படலம், நடக்கும் சிலை மர்மம், நடுநிசிப் பயங்கரம், மரணத்தின் முகம், மாண்டுபோன நகரம், ஒரு வீரனின் கதை... என வெரைட்டி ஜானர்களில் வாசகரை தக்கவைத்து கொண்டது. தொடர்ந்த நாட்களில் கேப்டன் டைகர் வந்து முத்துவின் நெடுநாளைய கௌரவத்திற்கு மேலும் அந்தஸ்தை சேர்த்தார்.

    தொடர்ச்சி... 👇

    ReplyDelete
    Replies
    1. ஆனால் தற்போது நீண்ட நாள் வாசகனாக வாங்குகிறேனே ஒழிய சில கதைகளே வாசிக்க தூண்டுகிறது, பல கதைகள் வாசிப்பை தூண்டுவதில்லை. நான் வாசித்து ரசித்த கதைகளை முகநூலில் விமர்சனம் எழுதியும் உள்ளேன். இவ்வருடத்தில் (2024) எனக்கு மிகவும் பிடித்திருந்த கதைகள் எனில்..
      பள்ளத்தாக்குப் படலம், ஆர்க்டிக் அசுரன், பௌன்சர், XIII போன்றவற்றை குறிப்பிடலாம், வேதாளரின் அதி தீவிர ரசிகன், அவர் கதைகளை வாசிக்கும்போது மனம் சிறுவனாக மாறி அவருடன் பெங்காலியாவில் நானும் உலா வருவதுபோல மகிழ்வேன். ஆனால் இவ்வருடத்தில் வந்த வேதாளர் கதைகளை வண்ணத்தில் தருகிறேன் எனும் பெயரில், கதைகளின் ஆன்மாவை கொன்று வருகிறீர்கள் போட்டோஷாப்பில் Gradinents கொண்டு ஒவ்வொரு பேணலையும் வண்ணமிடுகிறேன் எனும் பெயரில் செய்யும் அலங்கோலம் உண்மையில் ரசிக்க வில்லை. ஆனால் இங்குள்ள பெரும்பாலோர் அதை சூப்பர், டூப்பர் ரேஞ்சுக்கு புகழ்வதால் நல்ல கதைகளின் தரம் எதுவென்று தெரியாது போகிறது. வண்ணமிடும் தொழில்முறை காமிக்ஸ் சார்ந்த ஆர்டிஸ்டுடன் இணைந்து வண்ணம் செய்தல் நலம், இல்லையெனில் கருப்பு வெள்ளையே சிறப்பு. எதிர்வரும் காலத்தில் வேதாளரை v காமிக்ஸ் லோக்கல் வண்ண ஆர்ட்டிஸ்களிடம் காத்தருளுங்கள் கர்த்தரே என்று ஜெபித்து கொள்கிறேன்.

      ஏன் அந்நாள் போல தற்போது வரும் கதைகள் ஈர்ப்பதில்லை என்பதற்கு எனது யூகம்... தங்களின் ரிட்டயர் மெண்டுக்குள் விரைவில் லயன், முத்து 1000 இதழ்களை தொட்டிட வேண்டும் எனும் வேகத்தில் கதைகளை அள்ளித் தெளிப்பதாக தோன்றுகிறது, ஆகையால் ஒவ்வொரு வருடமும் மிகுதியான புக்ஸ் மற்றும் ஸ்பெஷல் வெளியீடுகள் என நிறைந்து போகிறது. அதில் சில கதைகளே நல்ல கதைகள் என்று பேசப்படுகிறது.. பல கதைகளின் தலைப்பு கூட நினைவின்றி போகிறது. அதாவது அளவுக்கதிகமாக வொர்க் லோடை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொண்டு நல்ல கதைகளை தேர்வு செய்ய தவறுகிறீர்களோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் புக்ஸ் குறைத்து கொண்டு நல்ல கதைகளை நன்கு வாசித்து தேர்வு செய்து வெளியிடலாம்.. நானறிந்தவரை நீங்கள் ஆகச்சிறந்த காமிக்ஸ் வாசகர், மற்றும் இந்திய அளவில் உங்களலவிற்கு ஆகச்சிறந்த காமிக்ஸ் எடிட்டர் எவரும் இல்லை எனலாம். அன்று நாங்கள் தமிழில் வாசித்து மகிழ்ந்த கதைகள் எல்லாம், பிற மொழியில் நீங்கள் வசித்து ரசித்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகையால் தற்போதும் தங்களுக்கு வொர்க் லோடு குறையும் எனில் நல்லக் கதைகளை தேர்வு செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

      லயனின் மறுவருகைக்கு பின்பு.. எத்தனை கதைகள், எத்தனை தலைப்புகள் நினைவில் உள்ளது எனக் கேட்டால்.. மிக சொற்ப கதைகளே நினைவில் வந்து போகிறது.

      மரண மண்டலம் கதையில் நாஜிக்கள் பிரிட்டிஷார் போல ஊடுருவல் செய்ய வேண்டி பிரிட்டிஷ் இராணுவம் போல பயிற்சி பெறுவார்கள்.. கதையில் நம் மின்னல் படையினர் தூங்கும் ஒரு நாஜி வீரனின் காலை மிதித்து விடுவர், அவன் எழுந்து நல்ல ஆங்கிலத்தில் ஒரு வாங்கு வாங்குவான்.

      அது போல நம் அந்நாளைய வாசகர் யாரை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் அந்நாளில் வந்த இதழின் தலைப்பு, மற்றும் கதைகளை விவரிப்பர். ஆனால் அவ்வாறு இன்று ஏனில்லை என்பது கேள்விக்குரியது. தற்போது சொற்ப வாசகர்களே காமிக்ஸ் வாசிப்பில் உள்ளனர் எனும்போது அந்த சொற்பமும் வரும் அனைத்து இதழ்களையும் வாங்கினாலும் ஏன் வாசிப்பதில்லை என்பதற்கு எனது மேற்படி ஐயப்பாட்டை சற்று நேரம் எடுத்து டைப் செய்து விட்டேன். நன்றி.

      Delete
    2. நீண்ட பதிவுக்கு நன்றி நண்பரே ; but கணிசமான faulty அனுமானங்கள் உள்ளே விரவிக் கிடக்கின்றன!

      'பாயிண்ட் பாயிண்டாய் அவற்றை சுட்டிக் காட்டுகிறேன் பேர்வழி' என்று ஏற்கனவே நேரமின்றித் தவிக்கும் வாசகர்களுக்கு இங்குமொரு சோதனையை வைக்க விரும்பாததால், ஒற்றை விஷயத்தை மாத்திரம் சுட்டிக்காட்ட காட்டி விட்டு நகர்கிறேன்!

      அந்த நாட்களில் ஜானர்கள் மிகுந்திருத்தனை ; இன்றோ அது மிஸ்ஸிங் என்பது நிஜமென்று மெய்யாலுமே நம்புகிறீர்களா? ஒரு கதை கானகத்தில் நடப்பதும், அடுத்தது பனிமலையில் நடப்பதும் ; மூணாவது நகரத்தில் நடப்பதும் தான் variety எனப் போகிறீர்களா? ஒரு மழைநாளில் 2012 to இப்போது வரைக்கான புக்சை பட்டியலிட்டு, ஜானர்வாரியாய் பிரித்து தான் பாருங்களேன் -யதார்த்தம் புரியும்.

      மெய்யாக இன்று மிஸ் ஆவது நீங்கள் ஆராதிக்கும் நாட்களில் உங்களிடமிருந்த பால்யம் மட்டுமே! அதை மீட்க புனித மனிட்டோவுக்கு மட்டுமே இயன்றடும்!

      Delete
    3. வேதாளர் கதைகளை வண்ணத்தில் தருகிறேன் எனும் பெயரில், கதைகளின் ஆன்மாவை கொன்று வருகிறீர்கள் போட்டோஷாப்பில் Gradinents கொண்டு ஒவ்வொரு பேணலையும் வண்ணமிடுகிறேன் எனும் பெயரில் செய்யும் அலங்கோலம் உண்மையில் ரசிக்க வில்லை. ஆனால் இங்குள்ள பெரும்பாலோர் அதை சூப்பர், டூப்பர் ரேஞ்சுக்கு புகழ்வதால் நல்ல கதைகளின் தரம் எதுவென்று தெரியாது போகிறது.

      மறுக்க முடியாத உண்மை 😮‍💨😮‍💨

      Delete
  77. நானும் இந்த மாதம் வந்ததும் முதலில் படித்தது டின் டின் தான். இரண்டு பாகமும் கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனென்றால் முன்னர் வெளியான தீபத்தில் டின்டின் எனக்கு மிகவும் பிடித்தது காரணம். எனக்கு கதை படிக்க தான் தெரியுமே தவிர படித்த கதையை கோர்வியாக இங்கே விமர்சனமாக வெளியிட எனக்கு வராது. அதனால் ஆசிரியர் அவர்கள் டின் டின் படிக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். பின் பின் படித்தேன் நன்றாக இருந்தது என்கிற அளவில் மட்டுமே எனது விமர்சனம் இருக்கும். தவிரவும் பிடிக்கவில்லை என்று எந்தக் கதையும் படிக்காமல் விட்டதில்லை. சைபர் சைபர் ஏழு எனக்கு பிடிக்காது தான். ஆனாலும் படித்து விடுவேன். நான் படிக்காமல் விட்ட ஒரே புத்தகம் விண்வெளியில் இருந்து வந்த ஒரு நபரை பற்றிய கதை மட்டுமே. அதுவும் எழுத்து படிக்க விடாமல் செய்ததால் தான் அந்த கதையை படிக்கவில்லை. முடிந்த அளவு அனைத்து கதைகளையும் ஒரே மாதத்திற்குள் படிப்பது தான் என் வழக்கம்.

    ReplyDelete

  78. கிளாசிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் (2)

    மர்ம மண்டலம் :

    திகைக்க வைக்கும் கதை சொல்லல். கதை நடத்தப்பட்ட விதம் பிரம்மிப்பூட்டியது.

    9.3/10

    சட்டி தலையன் வெர்சஸ் சிலந்தி மன்னன்

    மறுபடியும் ஒரு ஆச்சரியம். வியப்பில் ஆழ்த்திய கதைக்கரு.

    9.2/10

    ReplyDelete
    Replies
    1. Yes sir... புராதன பார்ட்டிகளுக்குமே ஒரு makeover முடியுமென்று காட்டியுள்ளனர் 😁

      Delete
  79. டின்டின் க்கு தரும் ஆதரவை சுஸ்கி விஸ்கிக்கும் தர வேண்டும் ஆசிரியர் அவர்களே......அதைப் படித்து முடித்து இனிமேல் அது வராது என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை......என் போன்ற பலரின் ஏக்கத்திற்கு செவி சாயுங்கள்......we want #சுஸ்கி-விஸ்கி

    ReplyDelete
    Replies
    1. முழுசாய் இன்னுமொரு 500 புக்ஸ் இருக்கும் கார்த்திக் - இரண்டாவது ஸ்பெஷலில்! அதை விற்று முடித்தவுடன் நிச்சயமாய் அடுத்த ஆல்பத்துக்கு பிளான் பண்ண ஆரம்பிக்கலாம்! ஓகேவா?

      சும்மா ஒரு எட்டோ பத்தோ வருஷங்கள் பொறுத்தா போதும்!

      Delete
  80. ஞாயிறு மதிய வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  81. //வேதாளர் கதைகளை வண்ணத்தில் தருகிறேன் எனும் பெயரில், கதைகளின் ஆன்மாவை கொன்று வருகிறீர்கள் போட்டோஷாப்பில் Gradinents கொண்டு ஒவ்வொரு பேணலையும் வண்ணமிடுகிறேன் எனும் பெயரில் செய்யும் அலங்கோலம் உண்மையில் ரசிக்க வில்லை. ஆனால் இங்குள்ள பெரும்பாலோர் அதை சூப்பர், டூப்பர் ரேஞ்சுக்கு புகழ்வதால் நல்ல கதைகளின் தரம் எதுவென்று தெரியாது போகிறது.//

    நானும் பல முறை இந்த கருத்தை கூறிவிட்டேன். ஆனால் பலனில்லை. ஒரிஜினலாகவே கலரில் இருந்தால் நாமும் அதையே பின்பற்றலாம், இல்லையேல் கறுப்பு வெள்ளையிலேயே வெளியிடுவதே நலம்.
    மன்னிக்கவும் சார், கொரில்லா சாம்ராஜ்யம், உயிரைதேடி, கழுகுமலை கோட்டை, வீரனுக்கு மரணமில்லை, விண்வெளி பிசாசு என்று நீண்டு கொண்டிருக்கும் இந்த விஷ பரீட்சையை இத்தோடு நிறுத்தி விட்டு, அந்த பட்ஜெட்டை வேறு கதைக்கு பயன்படுத்தினால் உங்கள் உழைப்புக்கும், நேரத்துக்கும், எங்களது காசுக்கும் நியாயம் செய்வதாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சின்ன திருத்தம் சாரே : "வீரனுக்கு மரணமில்லை " ஒரிஜினல் KING FEATURES கலரிங்! வரைந்த ஓவியரே கலரிங்கும் செய்திருந்தார்!

      சொல்லுங்களேன் - அவருக்கும் "போதுமேயா" என்று சொல்ல முடியுமாவென்று?

      Delete
  82. மெய்யாக இன்று மிஸ் ஆவது நீங்கள் ஆராதிக்கும் நாட்களில் உங்களிடமிருந்த பால்யம் மட்டுமே

    உண்மை சார்..

    ReplyDelete