Sunday, March 17, 2024

சம்முவம் வெயிட்டிங்க்க் !!

 நண்பர்களே,

வணக்கம். அனலாய் நாட்கள் கொதிக்க ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் ஆண்டின் ஒரு முதல் peak பொழுதினை நோக்கி விரைந்து கொண்டுள்ளது நம்ம காமிக்ஸ் வந்தே பாரத் !! அட்டவணைகளை எத்தனை சாதுர்யமாய்த் திட்டமிட்டாலுமே, கொஞ்ச மாதங்கள் லாத்தலாகவும், சில மாதங்கள் பிசியோ பிஸியாய் அமைந்திடுவதே வாடிக்கை ! And இதோ - பிப்ரவரி & மார்ச் என்ற 2 சாத்வீக மாதங்களைத் தொடர்ந்து வரவுள்ள ஏப்ரல் & மே மாதங்களில் ஜாக்கி சானின் வேகத்தில் ஆக்ஷன் துவங்கிடவுள்ளது ! ஒரு black & white குண்டு புக்கோடு க்ளாஸிக் காரிகனார் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் எனில், இதோ - முழுவண்ணத்தில் ஜொலிக்கும் ஹார்ட்கவர் இதழில் களம் காணவுள்ளார் ஒற்றைக்கர பௌன்சர் !!  

கிட்டத்தட்ட ஒன்பது-பத்தோ ஆண்டுகளுக்கு முன்னே நம்மோடு அன்னம், தண்ணீ புழங்க ஆரம்பித்தவர் இந்த வன்மேற்கின் violent நாயகர் ! கதாசிரியர் Jodorowski-ன் இந்த தாறுமாறு ஹீரோ, சிக்கிடும் வாய்ப்புகளிலெல்லாம் நம்மை திகைக்கச் செய்யத் தவறியதே இல்லை ! அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களாகட்டும் ; அடிதடி ரகளைகளிலாகட்டும் - இவருக்கு சமரசங்களே கிடையாது ! And இந்த ஆல்பமுமே அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல ! இங்கே விரசம் தூக்கலாக இருக்கப்போவதில்லை - ஆனால் கதைக்களமும் சரி, மாந்தர்களும் சரி - இரக்கம் அறியா ரகங்கள் ! So டெட்வுட் டிக் வந்த சற்றைக்கெல்லாம் yet another கௌபாய் சாகசம் - உங்கள் புருவங்களை விரியச் செய்திட தயாராகி வருகிறது ! இதோ - மேம்படுத்தப்பட்ட ஒரிஜினல் அட்டைப்படம் : 

வழக்கம் போலவே அட்டைப்பட நகாசு வேலைகளையும் கணிசமாகாவே செய்துள்ளோம் - கையில் ஏந்தும் போதே மிரட்டலானதொரு அனுபவத்தினைத் தந்திட ! And பக்கங்களைப் புரட்டும் போதோ, உங்களுக்கென ஒரு சித்திர அதகளம் காத்திருக்கும் ! பாருங்களேன் - ஓவியர் + கலரிங் ஆர்ட்ஸிட்களின் ரகளைகளை :

ரொம்பச் சமீபத்தில் திருவாளர் பௌன்சர் இன்னொரு புது ஆல்பத்தோடும் பிரெஞ்சில் களம் கண்டுள்ளார் ; so "சாபம் சுமந்த தங்கம்" கண்டிடும் வரவேற்பினைப் பொறுத்து அதனையும் அடுத்தாண்டின் ரயிலில் கோர்த்துக் கொள்ளலாம் ! What say folks ?

ஏப்ரலின் 2 black & white இதழ்களுமே பொரி பறக்கச் செய்கின்றன - இளம் டெக்ஸ் & ஏஜெண்ட் ராபினின் ரூபங்களில் ! அவற்றை அடுத்த வாரத்துப் பதிவுக்கென வைத்துக் கொண்டு அடுத்த சமாச்சாரம் பக்கமாய் நகர்ந்திடலாமா ? 

MAKE YOUR OWN MINI SANTHA !! MYOMS !!

நடப்பாண்டின் அட்டவணை அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த முன்பதிவுத் தடம் பற்றி நாம் நிரம்பவே பேசியிருந்தோம் ! Of course - 'சிவாஜி செத்துட்டாரா ?' என்ற ரேஞ்சில் நம்மில் சிலருக்கு இது மொத்தமாய் மறந்துமிருக்கலாம் தான் ! Anyways - இதோ, நவம்பர் 30 தேதிக்கு நிறைவுற்ற வோட்டெடுப்பினில் நீங்கள் சொன்ன சேதி : 

*C.I.A.ஏஜெண்ட் ஆல்பா 

*பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ

*க்ளாஸிக் - ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையர் மறுபதிப்பு

*ப்ளூகோட் பட்டாளம் 



விற்பனைகளில் லைட்டாய் பிசிறடிப்போர் கூட ரெகுலர் சந்தாக்களில் இடம்பிடித்திட வேண்டாமே - என்ற திட்டமிடலுக்கேற்ப, மேற்படி நான்கு இதழ்களையும் ஒரு பிரத்தியேக ; முன்பதிவுக்கு மட்டுமான தனித்தடத்தில் பயணிக்கச் செய்வதெனத் தீர்மானித்திருந்தோம் ! Here is the broad outline :

*இந்த 4 இதழ்களுமே 400 என்ற முன்பதிவு நம்பரை எட்டிடும் பட்சத்தில் மட்டுமே நனவாகிடும் !

*இவை கடைகளிலோ, புத்தக விழாக்களிலோ வலம் வந்திடும் இதழ்களாக இருந்திடாது !  Of course - முகவர்களும் முன்பதிவு செய்தால் கிடைக்கும் தான் ! 

*மிகச் சுருக்கமான பிரிண்ட்ரன் என்பதால், விலைகள் கொஞ்சம் தா.மா.த.சோ.ரேஞ்சில் இருப்பதினைத் தவிர்க்க இயலாது !

*CIA ஆல்பாவின் அடுத்த ஆல்பம் - 2 அத்தியாய 96 பக்க சாகசமாய் அமைந்திட வேண்டி வரும் !

*சிஸ்கோ சாகசமும் likewise - 2 அத்தியாயங்கள் ; 96 பக்கங்கள் ! 

*ப்ளூகோட்ஸ் எப்போதும் போலவே சிங்கிள் ஆல்பமாய் - 48 பக்கங்களில் !

*ஜான் மாஸ்டர் + ரெட்டை வேட்டையர் இணைந்த இதழானது - முன்வந்த அதே (பாக்கெட்) சைசில் - உத்தேசமாய் 240 பக்கங்களுடன் இருந்திடும் !

*So இந்த 4 இதழ்களின் combo நனவாகிடும் பட்சத்தில் - உத்தேசமாய் ரூ.930 ப்ளஸ் கூரியர் செலவுகள் என்பது போலானதொரு தொகையினை செலுத்த அவசியமாகிடும் !  

*முன்பதிவுக்கென 120 நாட்களின் அவகாசம் தந்திடலாம் ! Of course - நாம் எதிர்பார்க்கும் நம்பரானது அதற்கு முன்னமே தேறிவிட்டால், காத்திருப்புக்கு அவசியங்களின்றி ஒவ்வொன்றாய் இதழ்களை வெளியிட ஆரம்பிக்கலாம் !

*ஒருக்கால்.......ஒருக்கால்.... இந்த முன்பதிவு இலக்கினை 120 நாட்களிலும் எட்டிப்பிடிக்க இயலாது போயின், ஒரு கோடிச் சூறாவளிகள் சந்து பொந்தெல்லாம் சாத்தியெடுக்க - இந்தத் திட்டம் நமத்துப் போன பட்டாசாகிப் போய்விடும் ! அவ்விதமாகிடும் பட்சத்தில் முன்பதிவு செய்துள்ளோரின் தொகைகள் பத்திரமாய் திரும்ப அனுப்பப்படும் !

So இது தான் பொதுவான திட்டமிடல் ! "தகிரியமாய் களமிறங்கலாம் ; நாங்க வாங்கவும் செய்வோம் - வாசிக்கவும் செய்வோம் !" என்று நீங்கள் உறுதியாய் சொல்லும்பட்சத்தில், ஏப்ரலின் இதழ்களிலேயே இதற்கான அறிவிப்பைப் போட்டுத் தாக்கிடலாம் ! ஏப்ரல், மே, ஜூன், ஜூலை - என 4 மாத அவகாசம் சாத்தியமாகிடும் ! So இந்தத் திட்டமிடலில் எல்லாம் ஓ.கே. எனில் - "VVS" - என பதிவிடுங்கள் - "வண்டிய விட்றா சம்முவம் ! !" என்று அறிவித்திட !

அதே சமயம் - "இல்லீங்கணா....அந்நேரம் ஏதோ தோணுச்சு ; ஒரு குஜாலுக்கு  பச்சக்குனு பட்டனை அமுக்கிக்கினோம் ! ஆனா இப்போ அந்த வேகத்தை தேடுனா காங்கலே...! அதுமட்டுமில்லாம, மே மாசம் வேற ஆன்லைன் விழா ; ஆப்பம் சுடுற விழான்னு நடத்துவே தானே ? So பைய்ய..பதறாம அப்பாலிக்கா பாத்துக்கலாமே ?" என்று உங்களுக்குத் தோன்றிடும் பட்சத்தில் - "DMS" என்று பதிவிடுங்கள் - ""டிக்கிய மூட்றா சம்முவம் !" என்று தகவல் சொல்லும் விதத்தில் ! 

நீங்க எந்த லைட்டைப் போடச் சொல்றீகளோ, அதற்கேற்ப வண்டியின் பயணம் தீர்மானிக்கப்படும் ! பிரேக்கும் சரி, ஆக்சிலரேட்டரும் சரி - இப்போது உங்கள் கைகளில் guys ! So உங்கள் தீர்ப்பினை அறிந்திட, this சம்முவம் ஆவலுடன் வெயிட்டிங்க்க்க் ! Bye guys....see you around ! Have a cool Sunday !

329 comments:

  1. வெகு காலத்திற்கு பிறகு...
    முதல் முறையாக...

    ReplyDelete
  2. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. Replies
    1. பெளன்சர் அட்டைப்படம் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.அட்டகாசம்.

      "விற்பனைகளில் லைட்டாய் பிசிறடிப்போர் கூட ரெகுலர் சந்தாக்களில் இடம்பிடித்திட வேண்டாமே - என்ற திட்டமிடலுக்கேற்ப",
      "நாற்பதில் NOSTALGIA ஸ்பெஷல்" போட்டால் பறந்து விடுமே சார், அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்?.
      இதை நீங்க தனியாகவே போடலாம்,
      க்ளாசிக் கதைகளுக்கு இப்பவும் அதே வரவேற்பு உண்டுங்க சார்.

      "மே மாசம் வேற ஆன்லைன் விழா ; ஆப்பம் சுடுற விழான்னு நடத்துவே தானே ? So பைய்ய..பதறாம அப்பாலிக்கா பாத்துக்கலாமே ?",
      மே மாதம் ஆன்லைன் முடிந்து,
      இந்த புக்ஸ் வர எப்படியும் ஆகஸ்ட் வந்திடும்.
      So, 4 மாதம் இடைவெளி உள்ளதால் வரட்டுமே சார்.
      மை சாய்ஸ் "VVS".

      Delete
  4. // சாபம் சுமந்த தங்கம்" கண்டிடும் வரவேற்பினைப் பொறுத்து அதனையும் அடுத்தாண்டின் ரயிலில் கோர்த்துக் கொள்ளலாம் ! What say folks ?
    //

    Double okay

    ReplyDelete
  5. // ! "தகிரியமாய் களமிறங்கலாம் ; நாங்க வாங்கவும் செய்வோம் - வாசிக்கவும் செய்வோம் !" //

    I am ready. We are with you sir

    ReplyDelete
  6. @EDI Sir..😍😘😃

    நானு VVS😍 ..😃😄😀👍👌✊

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. VVS!!

      4 மாதங்கள் அவகாசம் எனும்போது ஆன்லைன் விழா முடிந்த பின்னரும் நிறைய டைம் இருக்கும்.

      Delete
    2. அதுக்குள்ள நானூறு தொட்டா அடுத்த மாதமேன்னு ஆசிரியர் சொன்னத கவனிக்கலயா

      Delete
  8. VVS" - என பதிவிடுங்கள் - "வண்டிய விட்றா சம்முவம் ! !"

    Yes VVS

    ReplyDelete
  9. வணக்கம் சகோதர சகோதரிகளே....

    ReplyDelete
  10. எப்பவுமே VVS தான் ஆசானே..
    மு பாபு
    ஆத்தூர்..

    ReplyDelete
  11. ப்ளூ கோட் .ஆல்பா. சிஸ்கோ. இரட்டை வேட்டையர் .ஜான்மாஸ்டர் தவிர்க்கமுடியாத ,தனித்தன்மையான அருமையான தேர்வுகள் .எனவே உற்சாகத்துடன் vvs

    ReplyDelete
  12. ஞாயிறு வணக்கங்கள்

    ReplyDelete
  13. VVS - வாங்கி வெச்சுப்போம் சம்முவம் (சார்)!

    இது என்ன மாதிரி வியாதி என்று தெரியவில்லை! நமது காமிக்ஸ்கள், வேறு தமிழ் காமிக்ஸ்கள் என்று மட்டுமல்ல....படிக்கிறேனோ இல்லையோ, அமேசான் மற்றும் பழைய புத்தகக் கடைகளிலும் கூட, கண்ணுக்குப் பிடிக்கும் ஆங்கில காமிக்ஸ்கள் மற்றும் கைக்கு கிடைக்கும் பிரெஞ்சு, ஜெர்மானிய காமிக்ஸ்கள் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்!

    மீண்டும் பழைய உற்சாகத்துடன் படிக்கும் முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போதைய வாசிப்பில், மிஸ்டர் நோ! ஒரு வாசக நண்பர் சமீபத்தியதொரு பதிவில் சொல்லி இருந்ததைப் போல, முப்பதாண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தால், மிகவும் கவனிக்கப் பட்டிருப்பார்!

    ReplyDelete
    Replies
    1. டேய் ராயப்பா.....நான் நான் தானா ? நீ நீ தானா ? இது நம்ம கார்த்திக் தானா ? moment#

      Delete
  14. பவுன்ஸர் சில பாகங்கள் விடுபட்டு அரைகுறையாக வருவதால் நீங்கள் நினைப்பதுபோல பெரிதாக எதிர்பார்ப்பெல்லாம் இல்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. "எதிர்பார்ப்பெல்லாம் இல்லை"ன்னு போய்க்கினே இருக்காமல், அதை சொல்றதுக்காகவே பின்னூட்டமிடுவதும் பௌன்சர் மகிமை தானே ?

      ஒன்-ஷாட்களின் மத்தியில், ஒற்றை ஆல்பத்து விடுதல் அந்தத் தொடரை அரைகுறையாக்கிடாது - at least நான் அறிந்த வரைக்குமாவது ! லார்கோவில் கூடத் தான் இடையே ஒரு பாகத்தை ஸ்கிப் செய்திருக்கிறோம் - yet புதுசாய் வந்த இதழ் போட்டுத் தாக்கவில்லையா ?

      சரக்கிருந்தால் எதுவும் சாதிக்கும் சார் - எனது பில்டப்களுக்கோ ; உங்களது pull down-களுக்கோ அவசியங்களேயின்றியுமே ! So absolutely no worries !!

      Delete
    2. பழைய பவுன்சர் இதழ்கள் இன்னும் கோடௌன் காதலர்களாக இருந்து வருவதை சொன்னதே நீங்கள் தானே ஸார் ? வாட்ஸாப் குழுக்களில் போட்டி நடத்தித்தானே அதை பரிசாக கொடுத்து காலிசெய்ய முடிந்தது? முழுவதுமாக போடமுடியாத சீரிஸ்களை எதற்கு அரைகுறையாக போட்டு எங்களை சோதிப்பானேன்? தோர்கலை ஏற்கனவே ஆர்க் வாரியாக போடாமல் பிச்சி பிச்சி காலி செய்தது போதாதா?

      Delete
    3. ஒரு தொடரை ஆரம்பிக்கும் போது அது நடுவாக்கில் ரூட் மாறினால் அதற்கேற்ப நமது திட்டங்களை மாற்றிடல் கொலைப்பாதகம் அல்ல - அத்தியாவசியம் நண்பரே !

      "இல்லேல்லே ....பாதை இது தான்னு ஒருக்கா தீர்மானிச்ச பிற்பாடு - அது புளியமரத்தில் செருக இட்டுப் போனாலும் அதிலேயே போயே தீரணும் !" என்றதொரு அபிப்பிராயத்துக்கு செவி சாய்க்காது இருப்பதுமே கொலைப்பாதகம் ஆகிடாது - அதுவும் அவசியமே !

      And மாறிப் போன ரூட், பின்னாட்களில் நமக்கேற்றார் போல சீராகிடும் சமயம், அதனில் மறுக்கா பயணிப்பதில் கொலைப் பாதகங்கள் இருப்பதாக உங்களது perspective-ல் தோன்றினால், கதையின் தரம் அதற்கு பதில் சொல்லிக் கொள்ளுமென்ற நம்பிக்கையில் நகர்வதுமே அவசியம் சார் !

      Delete
    4. And கொசுறாய் ஒரு தகவல் : பௌன்சர் இதழ்களில் இன்னமும் 4 நலமாய், தாட்டியமாய் கிட்டங்கிகளில் இருக்கின்றன !

      Delete
  15. Editor sir @

    *ஒரு நாள் முன்னதான பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..💐💐💐*


    உள்ளேன் ஐயா..!!

    ReplyDelete
  16. V V S

    வண்டிய விடுங்கோ சம்முவண்ணோவ்...

    ReplyDelete
  17. அப்படியே சார்லி ஷ்பெசல் 2.. ரிப்கிர்பி ஷ்பெசல் 3.. ன்னு வண்டியை அடிச்சி ஓட்டுங்க சம்முவண்ணோ..

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த மாடஸ்தி ஸ்பெசல், ஸ்படைர் ஸ்பெசல், ஆர்ச்சி ஸ்பெசல் லாம் என்ன பாவம் பண்ணுனதுக...!!!

      Delete
    2. அதையெல்லாம் நீ வாங்கி வெச்சிக்கோ..😇

      Delete
  18. கார்ட்டூன் ஷ்பெசல் (ரீப்பிரின்டா இருந்தாலுமே) ஒண்ணு போடுறேன்னு சொன்னா வேணாம்னா சொல்லிடப்போறோம்...

    ReplyDelete
    Replies
    1. 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல !' - வேலு நாயக்கர் !

      'நாலே பேர் தான் படிப்பாங்கன்னா எதுவும் ரைட்டில்ல !" - ஆந்த நாயக்கர் !

      Delete
    2. கார்ட்டூன்களை தவிர மத்த அனைத்து காமிக்ஸ்களும் சுவடே இல்லாம மொத்தமா அழிஞ்சி போயிடணும்னு சாபம் விடுறேன்..

      பத்தனன் (பத்தினிக்கு ஆண்பால்) சாபம் பலிக்கும் பாருங்க... 😬

      Delete
    3. பலிக்கலேன்னா அண்ணாச்சி ?

      Delete
    4. நாலு பேர் படிச்சா நானூறு பேர் படிச்சா மாதிரி.
      படிக்கிறது நாலு பேரா இருந்தாலும், அந்த நாலு பேருக்கு இது நல்லதுன்னா இதுவும் தப்பில்ல சாரே.

      Delete
    5. பலிக்கலேண்ணா அண்ணாச்சி ....சினிஸ்டர் செவன பலவண்ண/ஆரஞ்சு...பச்சை...நீலம்...பிங்க்.../ இரு வண்ணத்ல விடுவோம்

      Delete
  19. VVS

    We are waiting. Release at the earliest

    ReplyDelete
  20. VVS

    விசில்அடிச்சி வரவேற்போர் சங்கமுங்க சம்முவம் சார்....!!!

    ReplyDelete
  21. பெளன்சர் அட்டை சும்மா தெறிங் சார்.

    மிக நீஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நாள் இடைவெளியில் இந்த தொடரின் அடுத்த பாகங்கள் வாசிக்க இருப்பது சிலீர்னு உணர்வை தருகிறது...

    ReplyDelete
    Replies
    1. கதையும் - அனல் பறக்கிறது சார் !

      Delete
    2. I love பௌன்சர் சார்.. விடுபட்ட அல்லாத்தையும் எடுத்து போடுங்க சார்.. நான் 2 பிரதி வாங்குவேன்... ❤️😄👍..

      Delete
  22. பௌன்சர் அட்டைப்படம் சுமார்தான்..
    (பூராவும் ஆம்பள பசங்களா இருக்கானுவோ)

    ReplyDelete
    Replies
    1. தப்பண்டி.....! முன்னட்டையிலும், பின்னட்டையிலும் முகம் முழுக்க ட்டாட்டூ குத்தியிருப்பது பெண்பிள்ளைகள் !

      Delete
    2. அவுனா...

      அன்ட்டே.. அட்டைப்படமுலு சால பாக உந்தி அண்ணைய்யா..😍

      Delete
    3. மாடஸ்டி போட்டோ நடுவுல சேர்த்தா ஓகேவா சகோ

      Delete
    4. படகு, தூண்டில் எல்லாம் ரெடி.

      Delete
    5. ////மாடஸ்டி போட்டோ நடுவுல சேர்த்தா ஓகேவா சகோ ////

      அந்த பாட்டீக்கா இந்த போட்டோவுக்கு செட்டாகாது சகோ..

      Delete
  23. VVS SIR

    பொளன்சர் அட்டைப் படம் & உட்பக்க ஓவியங்கள், கலரிங் அட்டகாசம் சார்.

    ReplyDelete
    Replies
    1. புக்கை கையில் ஏந்தும் போது effect இன்னமும் ஜாஸ்தியாக இருக்கும் சார் !

      Delete
  24. சார், பெளன்ஸர் அட்டைப்படம் சும்மா தெறி ரகம். சூப்பரோ சூப்பர். அந்த புக் Spine ல தங்கக்கட்டி டிசைன் ரசனையோ ரசனை.

    ReplyDelete
    Replies
    1. நம்ம டிசைனர் கோகிலாவின் கைவண்ணம் சார் !

      Delete
    2. இப்பதா கவனிச்சேன்....செம் சூப்பர்....எனது வாழ்த்து கலந்த நன்றிகளும்...நேர்ல தங்கக் கட்டியா ஜொலிக்கும் போல

      Delete
  25. Replies
    1. அவர் ஒலகத்துக்கு ஏதோ சேதி சொல்ல வர்றாரு - பொறுமையா கேளுங்கோ !

      Delete
    2. கேட்டுட்டா போச்சி சார்..!

      அதிகாரி.. கார்சனின் நண்பர்.. தேடப்படும் குற்றவாளி.. இந்த மூணு வார்த்தைகள் இல்லாம அண்ணனை ஒரு நாலுவரி டைப் பண்ண சொல்லுங்க சார் பார்ப்போம்..😂

      Delete
  26. ஆசிரியர் சமூகத்திற்க்கு ஒரு வேண்டுகோள்...
    தேடப்படும் குற்றவாளிகளின் கதையை தவிர்க்கலாமே... இது என் பொன்ற இளைஞர்களை வன்முறை பாதையின் பக்கமர திருப்பலாம்...

    ReplyDelete
    Replies
    1. ///இது என் பொன்ற இளைஞர்களை ///

      முதியோர் கல்வியில அட்னன்ஸ் எடுக்கிறாங்க ஓடு.! லேட்டாப்போனா ஆயம்மா.. கோலு ஊனிக்கிட்டு நில்லுப்பான்னு சொல்லி வெளியவே நிப்பாட்டிருவாங்க.!

      Delete
    2. வாசகர் சமூகத்துக்கு ஒரு நினைவூட்டல் :

      தட்டையா மூக்கு வைச்சுக்கினு, சிலுக்குன்னு ஒரு பொண்ண கூப்பிடு தொலைவிலே வைச்சுக்கினு, பதுங்கி பதுங்கி பாயுற ஒரு பார்ட்டியுமே அப்பப்போ சட்டத்தால் தேடப்படுறவர் தான் ! அதில அலைபாயாத அந்தப் பிஞ்சு மனசு, இதிலே அல்லாடுறது ஏன்னு ஊருக்குள்ளாற கேக்குறாங்க !

      Delete
    3. ஹா ஹா! 'நச்' பதில் எடிட்டர் சார்! :))))))

      Delete
    4. அது ஏங்க சகோஸ் டெக்ஸ் தேடப்படும் குற்றவாளி

      Delete
    5. Vijayan sir & Kanna @ 😂 ROFL It seems both are in good form today

      Delete
    6. ஹ்ஹஹஹ...சார் நீங்களும்....அதும் டைகர் ரசிகரோட மூக்கையும் உடைப்பது தகுமோ

      Delete
    7. 😄😄😄😄😄.. Beautiful சார்.. 😄😄

      Delete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  29. பௌன்சர் அட்டைப்படம் செம ஆசிரியரே

    மீண்டும் கிடைக்க பெறுவதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  30. // அனலாய் நாட்கள் கொதிக்க ஆரம்பிக்க, //
    கொளுத்தும் வெயில் நம்மை ரோஸ்ட் போட்டுடும் போல சார்,அப்படியே தகிக்குது முடியல.....

    ReplyDelete
  31. // அடிதடி ரகளைகளிலாகட்டும் - இவருக்கு சமரசங்களே கிடையாது ! And இந்த ஆல்பமுமே அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல ! //
    அட்டைப்படமே டெரரா இருக்கு,எல்லோரும் மொறைப்பா வெறப்பா இருக்காங்க...

    ReplyDelete
    Replies
    1. நம்ம தலீவரையும், செயலரையும் இதே போல visualize பண்ணிப் பாருங்களேன் சார் ?!

      Delete
    2. Enga thalaivari vambukku ungalukku tookkam varathey sir 😊

      Delete
    3. அவங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாங்க சார்...🤔🤔🤔

      Delete
  32. Sir. Neenga Saturday post podalainna Kai nadunguthu sir. Pls post regularly

    ReplyDelete
    Replies
    1. நேத்திக்கு வூடு திரும்பின சாமத்துக்கு இங்கே குறுக்கே நடுங்குச்சு சார் !

      Delete
    2. குறுக்க ஏதாவது வந்திடுச்சுங்களா சார்?

      Delete
  33. ப்ளூகோட்ஸூக்கு மறுவாழ்வளித்த அந்த 209 (+ நானு) பேருக்கு நன்றி!

    மேகி கேரிஸனுக்கு வாழ்வு கொடுக்க முயற்சியெடுத்த அந்த 110 (+ நானு) பேருக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வோட்டெடுப்பில் கிடைத்திருக்கும் thumbs up - "ஐ லவ் யு" .....ரகம் !

      முன்பதிவிலும் அதே thumbs up கிடைத்தால் - "ஐ truly லவ் யு" ரகம் சார் !

      Delete
    2. அதான் மேகி கேரிஸன் இதுல இல்லையே, சகோ

      Delete
    3. கடல் சகோ.. மேகி செலக்ட் ஆகலேன்னாலும் அதற்காகப் போராடிய என்னை மாதிரி இளகிய மனம் கொண்ட கலாரசிக நண்பர்களுக்குத் தான் நன்றி சொல்லியிருக்கேன்! :)

      Delete
    4. ///முன்பதிவிலும் அதே thumbs up கிடைத்தால் - "ஐ truly லவ் யு" ரகம் சார் ! ///

      நம்ம நண்பர்கள் முன் பதிவிலும் போட்டுத் தாக்குவாங்க எடிட்டர் சார்! எங்க லவ் எப்பவுமே true லவ் தான்!

      Delete
    5. உங்கள மெரி உண்மையான லவ்வர்களுக்காக நல்லதொரு 'லவ்ஸ்' கதையா நானும் தேடிக்கினே இருக்கேன் ; ஆனால் சிக்குறதுலாம் பாதி லவ்ஸ்-மீதி ஜலபுலஜங்ஸ் கதைகளா வந்து சேருது !!

      Delete
    6. @Erode Vijay

      நாயகியர் லீடிங் கதைகளுக்கு வரவேற்பு கிடைப்பது குறைந்து விட்டது, சகோ😔😔😔

      Delete
    7. ஆசிரியரே, மங்காவில் தாங்கள் தேடும் லவ் ஸ்டோரிஸ் அகப்படும் வாய்ப்புகள் உள்ளது

      Delete
  34. 4 books for 930 INR for this set of heroes - DMS Sir ! However I look forward to Summer Online Fair even if the books amount double this amount.

    ReplyDelete
    Replies
    1. இவை நார்மல் சந்தாவில் வந்திருந்தால் - ரூ.250 + ரூ.250 + ரூ.120 + ரூ.130 = ரூ.750 ப்ளஸ் கூரியர் என்ற விலை கண்டிருக்கும் சார் !

      Delete
  35. VVVS sir. வண்டிய வேகமா விடுறா சம்முவம்!!!!!

    ReplyDelete
  36. VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS, VVS....

    ReplyDelete
    Replies
    1. ஞாயித்துக்கிழமை லீவுன்னா இப்படியெல்லாம் பண்ணுவிங்களா டாக்டர்.?!

      Delete
    2. Poluthu poganume kanna 😊 orvela meen pudika indru vali illai pola avarukku 😃

      Delete
    3. நானும் தொழிலதிபர் ஆயிடலாமான்னு யோசிக்கிறேன் பரணி..😇

      Delete
    4. @Parani from Bangalore
      @KiD ஆர்டின் KannaN

      குசும்பு

      Delete
    5. Kanna @ doctors having more value than tholil athipar 😀

      Delete
    6. அதுக்காக நான் இனிமே படிச்சி டாக்டராவா ஆக முடியும் பரணி...?!

      @செனா அனா
      @ AKK ராஜா..
      எனி பாசிபிலிட்டீஸ்...??

      Delete
    7. Maman makal sathyaraj dialogue naan vena padichi doctor aagattuma 🤣

      Delete
  37. Adutha matham tharamana சம்முவம் வெயிட்டிங்க்க் !!

    ReplyDelete
  38. ///சாபம் சுமந்த தங்கம்" கண்டிடும் வரவேற்பினைப் பொறுத்து அதனையும் அடுத்தாண்டின் ரயிலில் கோர்த்துக் கொள்ளலாம் ! What say folks ?///

    செம ஹிட் அடிக்கப் போவது உறுதிங் சார்...

    இப்பவே அடுத்த ஆண்டு ப்ளானர்ல பாகம் 12ஐ மொத என்ட்ரியாக போட்டுக்கலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கதையின் பிரெஞ்சிலான files வந்திருந்தது சார் ; phew .....மூச்சிரைக்கச் செய்கிறது ஆக்ஷன் ! மொழிபெயர்ப்பு வந்த பின்னே படித்துப் பார்த்து விட்டு தீர்மானிக்க வேணும் !

      Delete
    2. ஆகா அடுத்த வருடம் பவுன்சர் இன்னும் ஒன்று சார்.

      Delete
  39. Very Very Special (VVS) Sir👍

    (ஆல்ஃபா already பிடிக்கும்.
    இப்போ "களாஷ்நிகோவ் காதல்" க்கு பிறகு சிஸ்கோ in my Top 5)

    ReplyDelete
  40. பெளன்சர் அட்டைப் படம் அருமை. அதுவும் ஹார்டு பவுண்டு புக்குன்னு வேற சொல்லிட்டீங்களா? சும்மா ஜிலோர்ன்னு இருக்கு

    ReplyDelete
  41. பெளன்சர் அட்டைப்படம் அன்ட் உட்பக்கங்கள்...


    மாஸ் இது கொலை மாஸ்... :-)



    *****

    VVS sir

    ReplyDelete
  42. VVS ( ஏற்கனவே இருப்பதால் ஜான் மாஸ்டருக்கு 'ஜா' சொல்லி மற்றதை மட்டும் வாங்கிக்க முடியாதா, சார்?)

    ReplyDelete
  43. இதுவரை வந்த காமிக்ஸ் தொடர்களில் டேங்கோ, பவுன்சர், ட்யூராங்கோ தான் ஆர்ட் வொர்க்கில் டாப்!!! எனவே பவுன்சரை எதிர்பார்த்து ஜொள்ளுதான்!

    ReplyDelete
  44. ஒரு பண்ட மாற்றுப் படலம்

    அழகான ஓவியங்களுடன் எளிதான கதை. நல்ல விறுவிறுப்போடு போரடிக்காமல் சென்றது.
    மாடஸ்டியின் கதைகளில் இது போன்ற அழகான ஓவியங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  45. கானகத்தில் ஒரு கபட நாடகம்.

    கதையின் 99 சதவீதம் அமேசான் காடுகளில் நிகழ்கிறது.

    கருப்பு வெள்ளையில் அமேசானின் அழகை ரசிப்பதை விட கலரில் வந்தால் அருமையாக இருக்கும் என்று கதை படிக்கும் போது தோணியது.

    நோ கதை நன்றாகவே இருந்தது. இறுதியில் எதிர்பாரா திருப்பங்களுரடன் சுபமான முடிவு.

    ReplyDelete
  46. ஆசிரியர் சார்@

    VVS 4கோடியே 38லட்சம் வாக்குகளும்
    DMS ஒரேயொரு வாக்கும் பெற்றுள்ளதால்....ரிசல்ட்டை இன்றே அறிவித்து, ஏப்ரல் மாத புத்தகங்களில் முன்பதிவு அறிவிப்பினை வெளியிடக் கோருகிறோம் சார்.....😍😍😍

    ReplyDelete
  47. Vvs ல் என்னுடைய ஒரே கோரிக்கை ஜான் மாஸ்டர் கதை வந்தது நமது இதழில் இரண்டு தான் சார்...அந்த இரண்டையுமே இணைத்து வெளியிட்டால் சம்பவம் இன்னும் சூடு பறக்குமே சார்..

    ReplyDelete
    Replies
    1. அப்படியே இரட்டை வேட்டையர் களின் இரண்டு கதைகள் ஆப்பிரிக்க சதி, திக்கு தெரியாத தீவில் இரண்டையும் இணைத்து ஒரே புத்தகமாக வெளியிடவும்.

      Delete
    2. Wow..😍😃
      செம்ம மேட்டர்பா..😃😃👍👌

      Delete
  48. ஒரு மெபிஸ்டோ ஸ்பெஷல் கதையை போட்டு தாக்குங்க.

    ReplyDelete
  49. Myoms உள்ள இரட்டை வேட்டையர் மற்றும் ஜான் மாஸ்டர் மட்டும் தனியாக அல்லது ஆன்லைன் புத்தக திருவிழாவில் சேர்த்து விட முடியாதா எடி ஜி , விருப்பமில்லை என்றாலும் மற்றவர்கள் கதையும் சேர்த்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. Pls consider ஜி

    ReplyDelete
  50. ஃபெவிகால் பெரியசாமி & ஓட்டைவாய் உலகநாதன் என்று இருவேறு அவதாரங்களையும் ஒருசேர எடுக்கும் எடிட்டர் சமூகத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..💐💐💐

    ReplyDelete
    Replies
    1. Wishing you many more happy returns of the day sir😊

      Delete
    2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்...

      Delete
    3. நன்றிகள் நண்பர்களே !

      Delete
  51. V V S

    'V'etri meethu 'V'etri vandu ennai 'S'erum

    ReplyDelete
  52. அன்பு எடிட்டர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


    நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் அந்த 100 ஆண்டுகளும் எங்களுக்கு காமிக்ஸ் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ; "NKS"ன்னு போட்டுப்புடலாமோ ? அது தான் "நூறாண்டு காலம் ஸ்பெஷல் !"

      Delete
    2. இப்போவே முன்பதிவுகளை ஆரம்பிச்சுட்டா 43 வருஷங்கள் நிமிஷமா ஓடிப்புடும் சார் !

      ஒவ்வொரு புக்கோடும் ஒரு மூக்கு கண்ணாடி free !

      Delete
  53. HAPPY BIRTHDAY EDITOR SIR .. ORU JEREMIAH AND COMMANCHE SPECIAL PODUNGA SIR UNGA BIRTHDAY KU ..

    ReplyDelete
  54. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎁🎉👑 எடிட்டர் சார்.

    நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  55. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  56. ஆசிரியர் விஜயன் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....!!!

    ReplyDelete
  57. 💐💐ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
    மெய்க்கடு நிலையும் மிகும்நிறை கோற்கே💐💐

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🎉🎉🎉💐💐

    ReplyDelete