Thursday, February 01, 2024

ஒரு பரபர பிப்ரவரி !

 நண்பர்களே,

வணக்கம். விண்ணைத் தொடும் வியாழனில் பிப்ரவரியின் புக்ஸ் புறப்பட்டாச்சு - நாளைக்கு உங்களின் இல்லக்கதவுகளைத் தட்டிடும் பொருட்டு ! "ஜனவரியில் பிப்ரவரி"க்கு முயற்சித்தோம் தான் - ஆனால் இளவரசியின் மொழியாக்கத்தில் டீம் V கொஞ்சம் தடுமாறிப் போக, கடைசி நிமிடத்தில் நான் உட்புக வேண்டிப் போனது ! And நியூசிலாந்தில் அரங்கேறும் இந்த சாகஸத்தில், வாடிக்கையான டாக்டர்களோ, தொழிலதிபர்களோ லேது என்பதால் வசனங்கள் ஜாஸ்தியாகி விட்டன ! So செப்பனிடும் பணியும், மாற்றி எழுதும் பணியும் நேரத்தை விழுங்கி விட்டதால், ஒற்றை நாள் தாமதமாகிப் போச்சு ! இதோ - நீங்கள் பார்த்திராத V பிப்ரவரி இதழின் previews + டெக்சின் உட்பக்க preview-ம் !



அட்டைப்படம் - மாடஸ்டியின் fan + டிஜிட்டல் ஆர்டிஸ்ட்டுமான ஒரு சென்னை ஓவியையின் கைவண்ணம் ! ஒரிஜினல் black & white டிராயிங்கையே வர்ணமூட்டியுள்ளார் - background-ல் மட்டும் கடல்..கப்பல் என்ற additions சகிதம் ! இதனை ஜூனியர் என்னிடம் காட்டிய போது எனக்குத் தெரிஞ்ச டிராயிங் ஞானத்துடன், கண்ணு..மூக்கு...காது...கழுத்து என்று பார்த்து விட்டு, மண்டையை ஆட்டியிருந்தேன் ! நம் மத்தியினில் உள்ள விற்பன்னர்களின் தீர்ப்பு எவ்விதம் இருக்கப் போகுதோ - அறியில்லா !  ஏற்கனவே இதே கோணத்தினில் ஒரு மாடஸ்டியினை காலம் சென்ற நமது ஓவியர் மாலையப்பன் ஏழோ-எட்டோ ஆண்டுகளுக்கு முன்னே போட்டிருந்தார் என்ற ஞாபகம்.....அது வரையப்பட்ட இளவரசி ;  இது டிஜிட்டல் இளவரசி ! 

கதையைப் பொறுத்தவரை ரொம்பவே வித்தியாசமான பின்புலன் ; கதை மாந்தர்கள் என்று தடதடக்கிறது ! மருத்துவ ரசிகர்கள் மனமொடிந்து போகப்படாதே என்பதற்கோ, என்னவோ - ஒரேயொரு டாக்டர் மட்டும் கதையில் ஆஜராகிறார், சொக்காயே போடாமல் !! அது ஏன் ? என்றறிய படியுங்கள் இம்மாதத்து V காமிக்ஸ் !! செம crisp read !!  

And இதோ - போன வாரமே கண்ணில் காட்டுவதாய்ச் சொல்லியிருந்த டெக்ஸ் சாகச உட்பக்க preview :  


மொரிஸ்கோ வந்தாலே கோக்குமாக்காய் விலங்குகள் ; தாவரங்கள் ; ஜந்துக்கள் ; அமானுஷ்யங்கள் தலையெடுப்பது வாடிக்கை and இந்த ஆல்பமும் அதற்கொரு விதிவிலக்கல்ல !  கதையின் பெரும்பங்குக்கு ஒரு டெரரான காட்டேரி கும்பலாய் உலா வர, நம்மவர்கள் ஒரு ஈயச் சுரங்கத்தையே காலி செய்யும் அளவிற்கான தோட்டாக்களைப் பறக்க விடுகின்றனர் !! 224 பக்கங்களும் செம ஆக்ஷன் mode-ல் இருப்பதால் இந்த ஆல்பம், ஒரு மின்னல் வாசிப்புக்கு simply perfect என்பேன் !

இதோ - ஆன்லைன் லிஸ்டிங் : https://lion-muthucomics.com/latest-releases/1177-february-pack-2024.html

கிளம்பும் முன்பாய் திருப்பூரிலிருந்து updates !! 

சென்னை போட்டுத் தந்த பாதையினில், திருப்பூரும் இதுவரைக்குமான (அந்நகரத்திலான) விற்பனை ரெக்கார்டுகளை விளாசியுள்ளது ! நேற்றைக்கே பழைய நம்பரைத் தாண்டியாச்சு & இந்த ஞாயிறுக்குள்ளாக அங்குள்ள நமது நண்பர்களின் ஒத்தாசைகளுடன், ஒரு புது உசரத்தைக் கண்ணில் பார்த்திடுவோம் என்பது உறுதிபட தெரிகிறது ! Thanks a ton all !! அதிலும் நமது தோர்கல் முன்னேற்றக் கழகத்தின் பல்லடத்து கொள்கைபரப்புச் செயலாளர், திருப்பூரில் உள்ள வடநாட்டு ஆசாமிகளுக்கு கூட "तीस थिन में तमिल सीकना कैसे ?" என்ற தமிழ் படிக்கும் கைடோடு ஆளுக்கொரு தோர்கலை போணி பண்ணியிருப்பார் என்று உறுதிபட நம்பலாம் ! ஜெய் தோர்கல் !! ஜெய் ஜெய் திருப்பூர் !!   

And நாளை மறுநாள் முதல் (3rd.FEBRUARY) நெல்லை மாநகரத்தில் நமது கேரவன் நிலைகொண்டிருக்கும் ! அக்கட இருக்கக்கூடிய நமது நண்பர்கள் நெல்லையினையும் smash hit ஆக்கிட உதவுவார்கள் என்ற நம்பிக்கை நிரம்பவுள்ளது ! ஒரே நேரத்தில் நாமக்கல் ; சிவகங்கை ; திருவாரூர் ; மயிலாடுதுறை என்று புத்தக விழாக்கள் ரவுண்டு கட்டியடிக்க, அந்த வேகத்துக்கு ஈடு தர நமக்குத் தான் தடுமாறுகிறது ! ஒவ்வொரு விழாவிலுமே கலந்து கொள்ளும் ஆட்பலம் மட்டும் நம்மிடம் இருப்பின் - தெறிக்க விடலாம் தான் ! புனித மனிடோ அதற்குமொரு வழி காட்டுவாரென்று நம்புவோம் !


 Before I sign out - இதோ ஒரு குட்டியான ஜாலி நியூஸ் !! 

Bye all....see you around ! Happy Reading !! 

185 comments:

  1. Hi sir, which factor do you consider for an old classic to be reprint ?

    ReplyDelete
    Replies
    1. நிறைய காரணிகள் நண்பரே ! One size fits all என்பது போல ஒரே அளவுகோல்கள் எல்லா நேரங்களிலும், எல்லா classic நாயகப் பெருமக்களுக்கும் பொருத்திட மாட்டோம் !

      Delete
  2. ஒரு கிலோ சாக்லேட்டா பாத்தா
    கண்ணில அடிக்கிற டால் ஜாலி சம்மர் ஸ்பெசலை பாத்ததும் அடிக்குதே

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்ணா - அது குட்டீஸுக்கோசரம்னு போட்ருக்கதை கவனிக்கலீங்களோ ?

      Delete
    2. மனசுக்கு வயசாகாம இருக்கதானுங்களே காமிக்ஸ் படிக்கறது.

      Delete
    3. ஒரு தீவிர வாசகரும், உறவினருமானவர் இதைத் தான் எனக்கு வாட்சப்பில் சொல்லியிருந்தார் சார் :

      "Growing Old is Mandatory ...but Feeling Old is an option ! காமிக்ஸ் வழியாய் என்னை இன்னமும் இளமையாய் உணரச் செய்திடும் எண்ணற்ற நமது நாயகர்களுக்கு நன்றிகள் !!"

      Delete
    4. // ஒரு கிலோ சாக்லேட்டா பாத்தா
      கண்ணில அடிக்கிற டால் ஜாலி சம்மர் ஸ்பெசலை பாத்ததும் அடிக்குதே // சம்மர் ஸ்பெஷல், கோடை மலர் எல்லாம் மறக்க முடியாத பெயர்கள்.

      Delete
    5. //ஒரு கிலோ சாக்லேட்டா பாத்தா//

      ஒரு கிலோ நாட்டு கோழி வருவலை பாத்தா...

      Delete
    6. ஏனுங்ணா - அது குட்டீஸுக்கோசரம்னு போட்ருக்கதை கவனிக்கலீங்களோ ?

      ######

      அப்ப எனக்கானது சார்...!

      Delete
    7. ##// Growing Old is Mandatory ...but Feeling Old is an option ! காமிக்ஸ் வழியாய் என்னை இன்னமும் இளமையாய் உணரச் செய்திடும் எண்ணற்ற நமது நாயகர்களுக்கு நன்றிகள் !!" //##

      # Ultimate #👍👌

      Delete
  3. 3 இதழ் மாத்ம் முற்றும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!

    சம்மர் ஸ்பெஷல் பீரிவியூவும் அற்புதம்!

    மோரிஸ்கோவுக்காக வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ! 3 புக்ஸ் என்பது அனைவருக்குமே சுமை தரா ஒரு அளவாய் அமைந்திடும் என்று நினைக்கிறேன் !

      Delete
  4. Dear sir... பிளைசி க்கு விங் கமாண்டர் ஸ்பெஷல் மாதிரி ஒன்னு ஏற்பாடு பண்ணுங்க sir..
    இன்னும் ஒரு 30 ஆல்பம் பாக்கி
    இருக்குமா.. அல்லாத்தையும்
    போட்ருங்க sir... ❤️🙏👍..

    ReplyDelete
    Replies
    1. ஏன் சார் - நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு ?

      மாடஸ்டியில் மொத்தம் 100 கதைகள் !!

      Delete
    2. சொக்கா.. நூறு கதையாம்.. ஷெரிப்க்கு ஒரு ஸ்பெஷல் புக் பார்சல்..😍😍😍

      Delete
    3. 100.. ங்களா... ஆஹா... பிளைசி... சாதாரண ஆள்
      இல்லீங்க... 🤭🤭🤭❤️

      Delete
  5. இளவரசி 😍🌹🔥♥️

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. Edi Sir..😍😘
    இன்று 1.2.2024 பொன்னுக்கு நிகரான புதன் அல்ல..😄

    விண்ணை தொடும் வியாழன்..😍😘

    🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமால்லே....!! நேத்திக்கு சென்னை போய்ட்டு வந்தேன் - லைட்டா குயப்பம் ஆகிப் போச்சு சார் ! இதோ மாத்திப்புடுவோம் !

      Delete
    2. இங்கே இன்னும் புதன் தானுங்க…

      Delete
    3. @Edi Sir..😍😘

      Thanks for the correction Sir..🙏🙏🙏

      Delete
  8. இளவரசியின் அட்டைப் படம் அமர்க்களம்.

    உட் பக்கங்களில் இளவரசி அழகோவியமாக இருக்கிறார் 😍🤩

    ReplyDelete
    Replies
    1. Romero சித்திரங்களாச்சே சார் !

      Delete
  9. அனைவருக்கும் வணக்கம் வைப்பது உங்கள் சின்னமனூர் சரவணன்.

    ReplyDelete
  10. இந்த மாதம் ஒரு வண்ண இதழ் கூட இல்லை. இந்த மாதம் கறுப்பு வெள்ளை மாதமோ?

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாதமுமே !

      Delete
    2. ஆஹா பார்ப்போம் அடுத்த மாதம் என்ன சர்ப்ரைஸ் என்று.

      Delete
  11. ஜெய் மாடஸ்தி.. கலர்குட்டீஸ் வெல்கம்..

    ReplyDelete
  12. எங்கள் இளவரசியின் அட்டைப் படம் செம அழகாக உள்ளது. நன்றி ஆசிரியர் சார்.

    ReplyDelete
  13. டியர் எடி, இன்னும் ஜனவரி பார்சல்களே பிரித்து முடிக்கல, அதுக்குள்ள பிப்ரவரி பார்சல் ரெடி பண்ணிட்டீங்க. அடிச்சு தூள் கிளப்புங்க.

    ரோமேரோ சித்திரங்களில் மாடஸ்தி அமர்க்களமாக தெரிகிறார். அதற்கு ஏற்றது போல அட்டை வண்ண பூச்சு அத்தனை அலாதி. நம் சென்னை ஓவியர்கள் படை இரட்டிப்பு ஆனதில் மிகவும் சந்தோஷம்.

    ஜாலி ஸ்பெஷல் கதை தேர்வுகள் செம்ம. பல காலம் கழித்து சிறுவர் மலர் X-Ray கண்ணனை மீண்டும் பார்க்க வாய்ப்பு.... 😍🫡

    ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. கண்மூடிக் கண் திறப்பதற்குள் மாதமொன்று ஓட்டமெடுத்து விடுகிறதே சார் - அந்த வேகத்துக்கு ஈடு தர வேண்டியிருக்கல்லவா ?

      Delete
    2. கண்டிப்பா.... கண்டிப்பா....

      அமர்க்களம் தொடரட்டும். 🤓🤩

      Delete
  14. எக்ஸரே கண் மற்றும். ஜோக்கர் மீண்டும் வருவது மிக்க சந்தோஷம் சார் ஏதோ வகையில் வாண்டுகளை இழுத்தால் சரி தான்

    டிக் இம்முறை ஒரு முயற்சி செய்து பார்கிறேன் உங்களது சென்னை புக் பேர் உரையாடல் நம்பிக்கை ஊட்டுகிறது

    ReplyDelete
  15. தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்களத்தில்,
    இந்த மாத மாடஸ்டியின் அட்டைப்படம் மிக அழகு. "சிரித்து சாக வேண்டும்" அட்டைப் படத்தை விட செம்ம மாஸ் இது.

    ஜாலி சம்மர் ஸ்பெஷலில் எக்ஸ்ரே கண் எடிசனை மீண்டும் பார்ப்பது, கடந்த சென்ற பாலர் காலத்தை எட்டிப்பாக்க வைக்கும்.
    அப்படியே விச்சு & கிச்சுவையும் குட்டிபுக்காக போடுங்க சார்.

    திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சென்ற ஆண்டை விட இந்த வருடம் அதிக வாசகர்களை இழுத்துள்ளது.
    மேலும் 2 ஆண்டுகளுக்கு பின் ஈரோடு,கரூர் உடுமலை, பொள்ளாச்சி நகர நண்பர்களையும் பார்க்க வைத்துள்ளது.

    சென்ற ஆண்டு புதிதாக காமிக்ஸ் வாசிக்க துவங்கிய சிறார்கள் இந்த ஆண்டும் காமிக்ஸை தேடிவந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
    க்ளாசிக் வாசகர்கள் மத்தியில் சென்னை புத்தகக் திருவிழா ஸ்பெஷல்கள் செம வரவேற்பு.
    இன்னும் கூட, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட் கதைகளை மறுபதிப்பாக கேட்டுள்ளனர்.

    நண்பர் தோர்கல் சரவணகுமார் நேற்று தன் பள்ளிக்குழந்தைகளை ஸ்டாலுக்கு அழைத்து வந்து அனைவருக்கும் காமிக்ஸை அறிமுகபடுத்தியதில் அக மகிழந்தேன்.
    இதில் 5 குழந்தைகளாவது காமிக்ஸை தேடி மறுபடியும் வந்தால் நிச்சயம் அடுத்த காமிக்ஸ் தலைமுறை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
    சரவணகுமார் அவர்களுக்கு வாசக நண்பர்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐🔥.

    இன்னும் 3 தினங்கள், வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு திருப்பூரின் முக்கிய தினங்களாக அமைவதால் விற்பனைக்கு சரியான நாட்களாக அமையும்.

    நன்றிகள் சார்🙏....

    ReplyDelete
  16. மாடஸ்டி அட்டைப்படம் இது வரை வந்ததிலேயே டாப் சார்....குட்டீஸ் இதழ் சூப்பர்

    ReplyDelete
  17. This month looks very interesting. டெக்ஸ் and மோரிஸ்கோ, மாடஸ்டி, டெட் வுட் டிக் எல்லாம் சேர்ந்து ஒரு கலவையான வாசிப்புக்கு தயார். பொக்கிஷப் பெட்டியை கைப் பற்ற வெகு ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. டெட்வுட் டிக் தான் முதலில்...

      Delete
    2. ஆனா எனக்கு மாதம் ஆனால் முதலில் V காமிக்ஸ் படித்து பழகி விட்டதே. Confusion Confusion.

      Delete
    3. // டெட்வுட் டிக் தான் முதலில் //

      Me too

      Delete
  18. நண்பர்களுக்கு பிரச்சினை .வழக்கம்போல் தன்னலம் இன்றி களத்தில் இறங்கும் மாடஸ்டி ஜோடி .ஆக்சன்,அதிரடி+இளவரசியின் புத்திசாலித்தனம் அனைத்தும் கலந்தஇனிய வாசிப்பு அனுபவத்திற்கு ஆர்வத்துடன் வெய்ட்டிங். இளவரசி fans

    ReplyDelete
  19. மீண்டும் இளவரசி...

    Welcome back.

    மாடஸ்தி டைஜஸ்ட் வேண்டும் சார்

    ReplyDelete
    Replies
    1. சார். ப்ளீஸ்..
      வருடத்திற்கு இரண்டு இதழ்கள் தந்தாலே பெ
      ரிய விசயமாய் உள்ளது..
      எனவே..
      லயன் - நாயகி-லயனில் ஒன்று.
      V. காமிக்ஸில் - ஒன்று.
      என்று இரண்டு இதழ்களுக்கு உத்தரவாதம் வாங்குங்கள்..
      அதுவே. மகிழ்ச்சிதான்.. ii .

      Delete
  20. ஜாலி சம்மர் ஸ்பெஷல் அருமை.

    சிறுவர் மலரில் வண்ணத்தில் வந்த ஜோக்கர் & எக்ஸ் ரே மீண்டும் லயனில் வருவது மகிழ்ச்சி. வண்ணத்தில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு.....

    ReplyDelete
  22. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  23. இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  24. மாடஸ்டி அட்டைப்படம் நன்றாக உள்ளது
    ஓவிய சகோதரருக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  25. இந்த மாத புத்தகங்கள் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதுங்களா சார்?.
    வந்தால் நல்லாருக்கும்.
    நிறைய நண்பர்களின் எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  26. வாவ்....2ந் தேதியே புக்ஸ் கிடைக்கப்போகிறதா...
    செம ஸ்பீடு சார் தங்கள் அணி...

    சமீபத்திய உற்சாகம் தயாரிப்பிலும் தொடர்கிறது....அருமை...

    மாடஸ்தி அட்டை அவ்ளோ நல்லாயிருக்குனும் சொல்ல முடியல...அவ்ளோ நல்லாயில்லனும் சொல்ல முடியல..😉😉😉😉

    ReplyDelete
    Replies
    1. ஆமா மீண்டும் மாத துவக்கத்தில் கிடைக்கும் இதழ்கள் நமக்கு ஒரு பூஸ்டர்.

      Delete
  27. மோரிஸ்கோ வந்தாலே கலவரந்தான்...இம்முறை எகிறி அடிக்கும் போல இருக்கே....

    என் போன்ற சிறார்கள்லாம் பெரியவங்க துணையில்லாம வாசிக்கலாமா???

    அட டே நம்ம குட்டி தோழர்ஸ்லாம் வர்றாங்களா...எவ்ளோ நாள் ஆச்சி..வாங்க பாய்ஸ் வாங்க...கண்ணா லட்டு திங்க ஆசையா!!!!
    சந்தாவுக்கு இலவசமா!! கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா!!!!

    சீக்கிரம் மேக்அப்பை போட்டுகிட்டு கொரியர் ஆபீஸ் போவோம்....

    ReplyDelete
  28. //அதிலும் நமது தோர்கல் முன்னேற்றக் கழகத்தின் பல்லடத்து கொள்கைபரப்புச் செயலாளர், திருப்பூரில் உள்ள வடநாட்டு ஆசாமிகளுக்கு கூட "तीस थिन में तमिल सीकना कैसे ?" என்ற தமிழ் படிக்கும் கைடோடு ஆளுக்கொரு தோர்கலை போணி பண்ணியிருப்பார் என்று உறுதிபட நம்பலாம் ! ஜெய் தோர்கல் !! ஜெய் ஜெய் திருப்பூர் !! //

    நன்றிங்க சார்!

    பேண்டஸி கதைகள் பிடிக்கும் என்ற சிறுவர்களுக்கு விண்வெளியின் பிள்ளையைப் பரிந்துரைத்தேன்.

    பெண் வாசகர்கள் பேண்டஸி கதைகள் கேட்டால் கடவுளரின் தேசம், சாகாவரத்தின் சாவி, மூன்றாம் உலகம் போன்ற கதைகளைப் பரிந்துரைத்தேன்.

    ஏற்கனவே அவர்கள் வாசித்துள்ள பிற புத்தகங்கள் அல்லது ஆங்கில காமிக்ஸ் பற்றி கேட்டறிந்து அதைக் கொண்டே அவர்களுக்கான புத்தகங்களை பரிந்துரைத்தேன்.

    பத்து வயதுக் குழத்தைகள் கூட ஹாரர் கதை, பேய்க்கதை வேண்டுமென்று கேட்கிறார்கள். ஓடிப்போய் தனியே தன்னந்தனியே புத்தகத்தை எடுக்கிறார்கள். அவர்களை மடைமாற்றி மர்ம மண்டலத்தையோ அல்லது விண்வெளியின் பிள்ளையையோ கொடுக்க வேண்டி உள்ளது.

    சிறுவர்களுக்கான குட்டி புத்தகங்கள் இன்னும் நிறைய தேவை.

    க்ரைம் திரில்லர், டிடெக்டிவ் விரும்பும் வாசகர்களும் நிறைய வருகை தந்தனர். அவர்களுக்கு ஜானி, ராபின் போன்றோரை சஜஸ்ட் செய்தேன். கொஞசம் டீனேஜர்ஸ் கேட்டது மிஸ்ட்ரி வகையறா...

    ReplyDelete
    Replies
    1. Wow..😍😘
      Semma..@PSK ji.. 😍😃💐💐💐

      Delete
    2. அருமையான பணி நண்பரே SK...வருங்காலம் நல்ல பல ரசிகர்களை உருவாக்க இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளே தேவை...குட் ஜாப்....💐💐💐💐💐

      Delete
    3. Good Jo sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

      Delete
    4. அருமையான பணி நண்பரே...

      Delete
  29. 11மணிக்கு புத்தகங்களை கைப்பற்றியாச்சுதுங் சார்....

    இம்மாதம் வித்தியாசமான காம்பாக்ட் பேக்... அனைத்தும் டெக்ஸ் சைஸ் இதழ்களே எனும் போது கைக்கு அடக்கமான பார்சல்...

    மூன்று அட்டைப்படங்களில் டெக்ஸ் டாப்... மாடஸ்தி அட்டை நேரில் கலக்குது..
    "கன்"னும் என்னதுதான்....
    "கண்"ணும் என்னதுதான்னு மாடஸ்தி முறைக்குது....

    டெட்வுட்டும் அந்த கெள கேர்ள்ம் மாலை வெயிலில் ஓடுவது லேசான இள மஞ்சள் ஆரஞ்சு வர்ணத்தில் அட்டகாசம்....

    பின்னட்டைகளில் டெட்வுட் மைல்ஸ் அஹைட்...

    அந்த செவ்விந்தியனின் ரெளத்திரம் ஆத்தாடி..

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் உள்பக்கங்கள் அருமையான பிரிண்டிங்கில கலக்குது....

      ஓவியங்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன..

      மாடஸ்தி ஓவியங்கள் விட அள்ளுதே...

      டெக்ஸ்& மாடஸ்தியை விட ஒருபடி முந்துகிறது டெட்வுட் ஓவியங்கள் & உட்பக்கங்கள்...

      @நண்பரே SK
      டெக்ஸ் ஆரம்பமே மோரிஸ்கோ மாளிகையில்..துவக்க பேணலே கட்டிபோடுது...

      Delete
    2. //டெக்ஸ் ஆரம்பமே மோரிஸ்கோ மாளிகையில்..துவக்க பேணலே கட்டிபோடுது...//

      ஆஹா... செம்ம!!

      எனக்கு இன்னும் புக் வரலையே!!

      Delete
  30. தயவு செய்து Tex willer கதைகளில் மெபிஸ்டோ / விட்டலாச்சர்யா க்களை தவிர்க்கவும். தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  31. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப்போட்டி முடிவுகள் :-

    *போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் அட்மின்ஸ் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்.!*
    *வழக்கம்போல் அல்லாமல் இம்முறை பரிசு பெற்ற போட்டியாளர்களின் பெயர்களை மட்டும் அறிவிக்க இருக்கிறோம்.!*

    *ஒரு போட்டியாளரின் இரண்டு விமர்சனங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்களுக்கு ஒரு பரிசு மட்டுமே.. அதாவது இரண்டில் ஒன்று.!*

    *இரு நடுவர்களும் தனித்தனியாக மதிப்பிட்டு அவற்றின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த விமர்சனங்கள்..*

    👇🏻👇🏻👇🏻👇🏻

    *எந்தையின் கதை- 8 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் திரு சுரேஷ் தனபால்*

    *நதி போல ஓடிக்கொண்டிரு - 8 மதிப்பெண்கள்*
    &
    *கறைபடிந்த கரண்சி- 8 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் திரு ராஜ்குமார் திருப்பூர்*

    *இரண்டாம் இடம் பிடித்த விமர்சனங்கள்*

    *எல்லாம் கிழமயம் - 7.5 மதிப்பெண்கள்*
    &
    *ஓநாய் வனத்தில் டெக்ஸ் - 7.5 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் திரு புன்னகை ஒளிர் (எ) சகாய நாயகம்*


    *96 மணி நேரங்கள் - 7.5 மதிப்பெண்கள்*
    &
    *மரணத்தின் நிறம் நீலம் - 7.5 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் கடல்யாழ் ரம்யா*

    *பூதம் காத்த புதையல் - 7.5 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் சரவணன் சின்னமனூர்*

    *மேற்குறிப்பிட்ட ஐந்து நண்பர்களுக்கும் பௌன்சர் செட் (மூன்று புக்ஸ்) நமது கனவுலகம் சார்பாக பரிசளிக்கப்படும்*

    *அடுத்து ஆறுதல் பரிசுகள்*

    *காலனின் கால் தடத்தில் - 7 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் ஸ்டீல் க்ளா பொன்ராஜ்*

    *ஒரு கௌபாயின் காதலி - 7 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் டெக்ஸ் விஜயராகவன்*

    **காலனின் கால் தடத்தில் - 7 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் பாரதி நந்தீஸ்வரன்*

    *உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி - 7 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் - குணா கரூர்*

    *எல்லாம் கிழமயம் - 7 மதிப்பெண்கள்*
    &
    *காலனின் கால் தடத்தில் - 7 மதிப்பெண்கள்*
    *எழுதியவர் சிவலிங்கம் சென்னை*

    *மேற்குறிப்பிட்ட ஐந்து நண்பர்களுக்கும் லார்கோ இதழ்கள் கனவுலகம் சார்பில் பரிசளிக்கப்படும்.!*

    *இன்னுமொரு சிறப்புப் பரிசை குறிப்பிட்டாக வேண்டும் நண்பர்களே.!*

    *சென்னையைச் சேர்ந்த மறைந்த நமது நண்பர் வெற்றி அவர்களின் புதல்வர் கௌசிக் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பினார்.! அவருக்காக ரூல்ஸில் சின்னதாக ஒரு அட்ஜஸ்மன்ட் செய்திருந்தோம்.!*

    *அவருடைய விமர்சனங்களை பொதுப் போட்டிக்காக வைக்காமல் சிறு வயதில் இத்தனை ஆர்வத்தோடு கலந்துகொண்டதையே வெற்றியாக நினைத்து அவருக்கும் கனவுலகம் சார்பாக அவருக்கு சில புத்தகங்களை பரிசாக அனுப்பிவைக்க விரும்புகிறோம்.!*

    *நடுவர்களில் ஒருவர் சில காரணங்களால் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை.. அவருக்கு Captain Jack டெக்ஸ் வில்லர் ஆங்கில இதழ் பரிசாகவும்.. இன்னொரு நடுவரான திருப்பூர் ஸ்ரீ என்கிற சிவக்குமார் என்கிற தமிழய்யாவிற்கு அடுத்த டெக்ஸ் கிளாசிக் பரிசாகவும் கனவுலகம் சார்பாக வழங்கப்படும்.!*

    நன்றிகள் நட்பூக்களே..💓🙏🏻💓

    ReplyDelete
    Replies
    1. Thanks for giving me a opportunity to take part in this contest. Thank you kanavulagam

      Delete
    2. அருமையாக நடந்து முடிந்த போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐💐


      சிறப்பாக போட்டியை நடத்திய அட்மீன் குழுவுக்கும், நடுவர்களுக்கும் பாராட்டுகள்🌹🌹🌹🌹🌹🌹

      மீ ஆறுதல் பரிசு வென்றது மகிழ்ச்சி....அடுத்த போட்டியில் டாப்3ல இடம்பெற முயல்வேன்...💪

      முதல்முறையே பரிசு வென்ற க்ளாவுக்கும் வாழ்த்துகள்.

      Delete
    3. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

      Delete
  32. Wow ...

    வ்வ்வ்வூவூ.. மினி சம்மர் ஸ்பெஷல் .. 😍😍😍

    சின்னஞ்சிறு வயதில் சிறுவர் மலரில் கொள்ளை கொண்ட இரு கதாநாயகர்கள் எக்ஸ்ரே கண்(ணண்) ரே & ஜோக்கர் இருவரும் !!!! எப்பங்க எடி சம்மர் வரும் .. ??

    ReplyDelete
  33. இளவரசியின் அட்டைப்படம்
    இந்த முறை செம கலக்கல் சார்...மிக நன்றாகவும் ..மாடஸ்தியின் முக அமைப்பு தெளிவாகவும் அமைந்து உள்ளது...பாராட்டுகள்..

    ReplyDelete

  34. மாடஸ்டியின் பல கதைகளில் ஒன்று கதைநிகழிடம் எக்ஸோட்டிக் என இருக்கும் அல்லது கதையின் வில்லன் எக்ஸென்ட்ரிக் ஆக இருப்பான்.ஒரு பண்டமாற்றுப் படலம் முதலாம் ரகத்தைச் சார்ந்தது
    மிகவும் விறுவிறுப்பான கதையோட்டம்.எடுத்ததும் வைத்ததும் தெரியவில்லை.

    ஓவியங்கள் அற்புதம்.

    9/10

    ReplyDelete
  35. கதை நிகழுமிடம் எக்ஸோட்டிக்கா இருப்பதால்தான் ரசிக்கிறீர்களா அல்லது கதையை நிகழ்த்தும் கேரக்டர் எக்ஸோட்டிக்காக இருப்பதால் ரசிக்கிறீர்களா..?

    ஜொள்ளுங்கள் செனா ஜொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கதையின் லீட் கேரக்டர் (enthrallingly) ரொமாண்டிக் கேரக்டர் என்பதனால்தான் ஐயா! ஈவி பத்து பதினைந்து கிலோ மஞ்சளை விற்று விட்டு ஈரோடு சேம்பர் ஆஃப் காமர்ஸில் முனைந்து வரும் தொழிலதிபராக பெயரை பதிவு செய்திருப்பதாக வரும் செய்திகள் அது மாடஸ்டியின் கடைக்கண் கடாட்சம் பெறுவதற்காகவே என்பதை தெளிவாக உணர்த்துகின்றன.:-)
      நீங்கள் ஏற்கனவே சுயம்புவான தொழிலதிபர்தான். அமெரிக்க மச்சானின் பேச்சைக் கேட்டு மோசம் போக வேண்டாம்.

      Delete
    2. ///நீங்கள் ஏற்கனவே சுயம்புவான தொழிலதிபர்தான்.///

      கல்லக்கா ஒடைக்கிற மிசின் வெச்சிருக்கிறனுங்க ன்னு பாண்டித்துரை படத்துல சிலுக்குகிட்ட சொல்ற தலைவர் கவுன்டர்தான் ஞாபகத்துக்கு வரார்..😂😂😂

      Delete
    3. இந்த தொழிலதிபருக தொல்ல தாங்க முடியலப்பா…ஒரே ஒரு லொட்டைப் பிகரை வைச்சுட்டு அவங்க பண்ற அலப்பரை இருக்கே…

      Delete
    4. @ கண்ணன் & ஷெரிப்
      :-))

      Delete
  36. சர்.ஜெரால்டு அவர்களின் மகள் (கரோல் ) கொலை முயற்சிக்கு ஆளாகி,தற்செயலாக அப்பொழுது அருகிலிருக்கும் கார்வினால் காப்பாற்றப்படுகிறாள்.கொலைமுயற்சியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த டையஸ் என்பவன் ஏற்கனவே மாடஸ்டி ,கார்வினை அறிந்தவன்.பணியமற்த்தியவர்களிடம் மாடஸ்டி பற்றி அவன்கூற பலமானவேறு குழு களமிறக்கப்படுகிறது.கரோலை காப்பாற்ற கரோல் போல் நாடகம் ஆடுகிறார் இளவரசி.விறுவிறுப்பான கதையம்சம். V.காமிக்ஸின் க்ரிஸ்ப் ஆன வாசிப்பு நடைக்கு மிங் அழகாக செட் ஆகியுள்ளார் .இளவரசி

    ReplyDelete
  37. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்..!

    டெக்ஸ் வில்லர் கதைகளில் மோரிஸ்கோ உடன் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மரணமுள், தலையில்லா போராளி போன்றவை அதில் டாப் ரகம்!

    இந்த கதையும் பிலாராஸில் அமைந்திருக்கும் மோரிஸ்கோவின் மாளிகையிலேயே வெகுபிரமாதமாய் துவங்குகிறது. மேய்ப்பர்கள் சிலர் அமானுஷ்யத் தன்மை வாய்ந்த ஏதோ சில எலும்புகளை மோரிஸ்கோவிடம் கொண்டு வந்து கொடுத்து அது குறித்து ஆராய்ந்து விளக்குமாறு கோர அவ்வண்ணமே செய்வதாக பதிலுரைத்து அவர்களை அனுப்பி விடுகிறார். பின்னர் அவற்றை ஆராய முயலும்போது மாளிகையில் மர்மமான முறையில் துர்சகுனங்கள் தோன்ற அவற்றை மூடிவைத்துவிட்டு, அவை கிடைத்ததாக கூறப்பட்ட மூர்க்க மேடுகளைத் தேடி ஆராய உதவியாளர் யூசேபியாவுடன் கிளம்புகிறார்.

    அதேசமயம் டெக்ஸ்வில்லரின் நால்வர் கூட்டணியானது கொடூரன் மடேரா குழுவினரைத் தேடி அவனைப் பின்தொடர்ந்து வருகின்றனர். வழியில் சில தகவல்கள் அடிப்படையில் அவனது அடுத்த இலக்கினை அறிந்துகொள்ளும் அவர்களும் அதைத்தேடி புறப்பட கதை வேகம் பிடிக்கிறது.

    மோரிஸ்கோ தேடிச் சென்ற மூர்க்க மேடுகளில் இருந்த பயங்கரம் என்ன? அதிலிருந்து அவர்களால் தப்ப இயன்றதா? டெக்ஸ் கூட்டணியினரால் மடேராவைப் பிடிக்க முடிந்ததா? இறுதியில் வெளியான ரகசியம் என்ன? என மர்மங்களை வெளிப்படுத்தியவாறே செல்கிறது கதை.

    கதையைப் பற்றி சொல்வதானால் ஒரு பகுதி மோரிஸ்கோ தேடிச்செல்லும் காட்டேரி, மரணமுள் சாகசத்தை ஒத்ததாக இருக்கிறது. டெக்ஸ் தேடி வரும் ரகசியமோ, பாலைவனப் பரலோகத்தின் அடிப்படையாக இருக்கிறது. இந்த இரண்டு கதைகளையும் ஒன்றிணைத்து கதாசிரியர் மேலும் தன்பங்குக்கு சில ரசவாத களேபரங்களை கிளைமாக்சில் சேர்த்து பரிமாறிவிட்டார். மோரிஸ்கோ கதை போலவும் இல்லை. ரெகுலர் டெக்ஸாகவும் இல்லை. இது இரண்டும் கலந்த காக்டெயிலாக அமைந்தது இதன் பலமா பலவீனமா என புரியவில்லை?!

    முதல் ஐம்பது பக்கங்களிலேயே மோரிஸ்கோவின் திகில் முற்றும் பெற்று விடுகிறது. அதன்பின்னர் இது ரெகுலரான டெக்ஸ் கதையே! இது குறித்த நண்பர்களின் அலசலை அறிய ஆவல்.

    நன்றி நண்பர்களே!!

    ReplyDelete
  38. சாரி . (சர் ஜெரால்ட் இன் மகள் என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன்.)ஜேம்ஸ் மெகன்ட்ரூ என்னும் கோடீஸ்வர முதியவர் இறந்து விடுகிறார்.அவருடன் கருத்து வேறுபாடு கொண்ட அவரது மகன் டொனால்டு என்பவரது மகள்தான் கரோல்.எனவே மெகன்ட்ரூ வின் சொத்துக்களுக்கு வாரிசு வாய்ப்புக்கொண்டிருந்தமார்டின்ஹெய்ன் என்பவனால் இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    ReplyDelete
  39. பக்கத்துக்குப் பக்கம் மாடஸ்டி யின் முத்திரை கதை முழுதும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இளவரசி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ஆக்சன் வாசகர்களையும்நூறு சதவீதம் திருப்திபடுத்தும் அருமையான கதை. இவ்வளவு நல்ல கதையை தேடிப்பிடித்து வழங்கியதற்கு நன்றிகள் .ஜூனியர் எடிட்டர்சார்

    ReplyDelete
  40. அதுமட்டுமல்ல ங்க செனா. ஆனா ஜி. அவர் தற்போது டாக்டர் என்று பெயர் பலகை வைத்துகொண்டு பலருக்கும் ஊசி போட்டுக் கொண்டிருப்பதாக நம்பத்தகாத இடங்களில் இருந்து தகவல் வந்து கொண்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஆமாமுங்க.. கோவாக்சின் மாதிரி கொச்சியாக்சின்.. கோவளாக்சின்.. அப்படின்னு புதுசா அஞ்சாறு மருந்துங்க கூட கண்டுபுடிச்சிருக்கேனுங்க.

      Delete
  41. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப் போட்டி
    பெயர் - சுரேஸ் தனபால்
    ஊர் - திருவண்ணாமலை

    ENTRY - 2

    எந்தையின் கதை

    XIII மர்மம் என்ன என்பது இரத்தப் படலம் படித்த மக்களுக்கே தெரியும். ஆனால் இந்த கதையில் மூழ்கி திளைக்க இரத்தப் படலம் குறித்து கிஞ்சிற்றும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதே இந்த கதையின் பலம்.


    கதை சம்பந்தமே இல்லாமல் அனிடா என்ற பெண்ணின் சாகசத்தில் இருந்து தொடங்குகிறது. முதல் மூன்று பக்கங்கள் நிதானமாய் நடை போடும் கதை, நான்காவது பக்கத்தில் அரசியல் சூடு பிடித்து பரபர என்று பற்றிக் கொள்கிறது. அதன் பிறகு கதை நெடுக நிதானமாக நின்று எரிந்து கிளை கிளையாய் தாவி முடிவு அதிர வைக்கிறது.

    பாஸ்டர் ஐஸாயா - ஜானதன் மக்லேன் எனும் ஜானதன் ப்ளை - ஜேஸன் மக்லேன் எனும் ஜேஸன் ப்ளை - ஜெஸ்பர் கோன்ராட் க்ளோவர் என்பவர்கள் தான் இந்த கதையின் பிரதான நாயகர்கள்.

    பக்கங்கள் 48,49,50 படங்களின் மூலம் இருவேறு நிகழ்வுகளை இணைக்க தூரிகை விளையாடியிருக்கிறது. பிளாஷ் பேக் சீன்களுக்கு செபியா டோன் உபயோகித்திருப்பது மேலும் வலு சேர்க்கிறது. பல இடங்களில் வர்ணங்களும், முகத்தில் பொங்கும் உணர்ச்சிகளும் நம்மை ஓவியத்தில் இருந்து கண்ணை எடுக்க முடியாமல் செய்து விடுகிறது.

    அமெரிக்க ரஷ்ய பணிப்போர் - கு கிளக்ஸ் க்ளான் - எப் பி ஐ அமைப்பின் பகாசுர நெட்ஒர்க் - அரசுக்கு எதிரானவர்களை சத்தமே இல்லாமல் காலி செய்வது போன்ற பல வரலாற்றில் கிசு கிசுவாக வலம் வந்த செய்திகளை கதை நெடுக தூவி செல்கின்றனர். ஆனால் பிரதான கதை வேறு.

    தந்தை மகனின் உறவு எப்பொழுதுமே சிக்கல் நிறைந்தது தான். இத்தனைக்கும் தந்தை தான் மகனின் முதல் ஹீரோ. அந்த உறவை பேணிக் காக்க ஒவ்வொரு தந்தையும் போராட்டம் நடத்துகிறான். அப்படி பட்ட ஒரு போராட்டமான வாழ்க்கை குறித்து தான் இந்த கதை.

    ஒவ்வொரு மனிதன் மீதும் இலக்கு என்ற ஒரு பிம்பம் கட்டி வைக்கப் படுகிறது. அதிலும் ஆண்களுக்கு அந்த இலக்கை அடைய வில்லையென்றால் தோற்றவன் என்று முத்திரை குத்தப் படுகிறான்.


    ஓட்டப் பந்தயத்தில் இலக்கை அடைய எண்ணற்ற தியாகங்கள் செய்ய வேண்டும். அங்கே தான் ஒரு தந்தை என்பவன் தன்னை ரோல் மாடலாக கருதும் மகனை அல்லது மகளை மறந்து விடுகிறார்கள். பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்குவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதோ அனாவசியம் என்னும் ஒரு மாயையில் சிக்கி யாருமில்லாத அனாதையாகி விடுகிறார்கள்.

    இந்த கதையிலோ சமூகத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஒருபுறம், பக்குவம் அடையாத மகனுக்கு அரசியலை புரிய வைக்க முடியாத இயலாமை ஒரு புறம். படு பயங்கரமான ஒரு அமைப்பை எதிர்த்து புரியும் வேள்வி ஒரு புறம். அந்த அமைப்பினால் தன் மகனுக்கு ஆபத்து நேரக் கூடாது எனும் பதைப்பு ஒரு புறம். கடமை ஒரு புறம். என்று ஜானதன் சிக்கி சின்னாபின்னமாகிறார்.


    "பொய்கள் ஆட்டம் போடக் கூடாது என்றதொரு பெரும் கோபம் உனக்குள்ளே இருப்பது புரிகிறது", என்று வில்லன் ஜேசன் ப்ளையிடம் கூறுவதன் மூலம் ஜேசனின் மனதை வில்லன் புரிந்து வைத்து உள்ள அளவுக்கு அவன் தந்தை ஜானதன் புரிந்துக் கொள்ளாமலா இருந்திருப்பார். ஆனால் பாசம் பல சமயங்களில் தன் இரத்த உறவுக்கு ஆபத்து நேரக் கூடாது என்று பொய் வடிவில் புரண்டோடி உறவுக்கே ஆபத்தாகிறது.

    சொன்னால் புரியாது என்று குழந்தைகளை தட்டி வைக்காமல் உண்மைகளை உடைத்து பேசி புரிய வைக்க முயற்சித்தாலாவது தந்தைகள் வயதான காலத்தில் அனாதைகள் ஆக மாட்டார்கள். அது மட்டுமன்றி பெரியவர்கள் பேசும் பொய்கள் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்கிறது என்பதும் ஒரு பெற்றோராக மறக்கக் கூடாது என்பதை கதையின் போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.

    “புணர்ந்தகாதலியிற் புதல்வன் தலையும்
    அமர்ந்தஉள்ளம் பெரிதாகின்றதே
    அகன்பெரும் சிறப்பில் தந்தை பெயரன்
    முறுவலின்இன்நகை பயிற்றிச்
    சிறுதேர்உருட்டும் தளர்நடை கண்டே”
    - (ஐங்குறு நூறு: 403)

    ஐங்குறுநூற்றின் இந்த பாடலை ருசிக்க நாம் நம் மகனிடம் நண்பனாக வேண்டும். இந்த கதையை படித்து முடித்த பின் ஜானதன் செய்த தவறை நான் செய்யக் கூடாது என்று உணர்ந்தேன்.

    54 பக்கங்களில் 120 ரூபாயில் ஒரு தந்தையாக நீங்கள் இருந்தால் உணர்ச்சி குவியலுக்குள் புகுந்து வெளிவருவீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி.


    *பரிசு பெற்ற விமர்சனம்..!!*

    ReplyDelete
  42. Like Jan books, the Feb ones also live up to their selection for speed reading. Have finished TEX and Modesty. Will read Deadwood Dick tomorrow.

    TEX was super action !

    ReplyDelete
  43. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete

  44. காட்டேரியின் ராஜ்ஜியத்தில்

    படிக்க படு சுவாரஸ்யமான கதை.
    மோரிஸ்கோ வந்தாலும் விஞ்ஞான வரம்புகளுக்கு உட்பட்டே கதை நிகழ்கிறது.மந்திர மாயாஜாலங்களுக்கு இடமேதுமில்லை.

    9/10

    ReplyDelete
  45. இளவரசி ;ஒரு நண்பன் என்றைக்குமே சுமையாக மாட்டான். கரோல்:மாடஸ்டி யும் வில்லியும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் .ஆனாலும்......
    சர் .ஜெரால்டு :அதை ரொம்பவும் .அலச முயற்சிக்காதே டியர் அவர்கள் .அவர்களாய்இருக்கிறார்கள்..இது போலொரு ஜோடியை என் நண்பர்கள் என்று சொல்வதற்கு நான் பெருமிதம் கொள்கிறேன்

    ReplyDelete
  46. ஆம் சக்தி சகோ.. அந்த ஆழ்ந்த
    நட்பு.. ஆஹா.. நன்றி.. ❤️👍🙏..
    Peter o donnel ஐ வணங்குகிறேன்.. ❤️🙏..

    ReplyDelete
  47. முதலில் படித்தது பண்டமாற்றுப் படலம்

    மாடஸ்டி இந்த முறை சரியான வேகம் துவக்கம் முதல் இறுதி வரை. மாடஸ்டி, கார்வினின் நண்பர்களுக்கு தொல்லை வர அதை அவர்கள் பாணியில் தீர்த்து வைப்பது தான் கதை. முதல் பாதியில் கார்வினும் இரண்டாம் பாதியில் மாடஸ்டியும் எதிரிகளை துவம்சம் செய்ய முடிவு சுபம்.

    எனது மதிப்பெண் 8/10

    ReplyDelete
  48. இரண்டாவதாக படித்தது டெட் வுட் டிக்.

    என்ன ஒரு கலவையான அலையடிக்கும் உணர்வுகள் இந்த கதையை படித்து முடித்த இந்த நொடியில். ஒவ்வொரு முறை டெட் வுட் டிக் படிக்கும் போதும் நாம் அவனுடைய இடத்தில் நம்மை பொருத்தி தான் பார்க்கிறோம். அதும் இந்த 3 பாகங்கள் அப்பப்பா அபாரம். முதல் பாகத்தில் செவ்விந்தியர்களிடம் சிக்கி கொள்ளும் காட்டெருமை வேட்டையர் கூட்டம் எப்படி தப்பினார்கள் என்றும் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் மில்லீ மற்றும் டெட் வுட் இடையே ஏற்படும் நெருக்கம், பிளாக் ஹாட் ஜாக் உடன் ஏற்படும் நட்பு. மில்லீயை டெட் வுட் பிரியும் போது நமக்கு ஏற்படும் வலி, அந்த முடிவு எவ்வளவு இயல்பானது என்று பிறகு நமக்கு தோன்றும்.

    உங்கள் மொழிபெயர்ப்பு இந்த முறை அற்புதம் சார் ஒன் ஆப் தி பெஸ்ட். இந்த வருடத்தின் டாப் இதழ் என்னை பொறுத்த வரையில் இது தான்.

    இந்த அனுபவம் கொடுத்த கதைக்கு என்னால் மதிப்பெண் இட முடியாது.

    ReplyDelete
  49. எதிரிகளின் திட்டங்களை மாடஸ்டி முன்கூட்டியே யூகிப்பதும் அதை அறியாமல் எதிரிகள் மாடஸ்டியின் வலையில் வந்து விழுவதும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுகிறது.ஒரு பண்டமாற்றுப் படலம் சூப்பர்

    ReplyDelete
  50. கோவா. ஆக்சின் . கோவள .ஆக்சின் கடைகளில் வியாபாரத்துக்கு வருமாங்க.அல்லது தனிச் சுற்றுக்கு மட்டுமாங்க.

    ReplyDelete
  51. குமார் .சார் .இந்ந வருடத்தின் டாப் கதை இதுதான் என்று இப்பவே நாம் மதிப்பிட முடியாது . ஏனென்றால்இவ்வருடத்திற்கு சார் அறிவித்துள்ள அட்டவணை தெறி மாஸ் ஆக உள்ளது . முதல் மாதத்தை விட அடுத்த மாதம் வரும் கதை மிகவும் அருமையாக இருக்கும்.எனவே முதல் இடத்துக்கு போட்டி மிகவும் கடுமையாகவே இருக்கும்.

    ReplyDelete
  52. இன்று பார்சல் வந்து விட்டது😊😊😊😊😊😊

    ReplyDelete
  53. ....ஒரு பண்டமாற்றுப்படலம்...
    மாடஸ்டி, கார்வின் நண்பர்கள் இணைந்து கலக்கும் அற்புதமான, அருமையான நேர்கோட்டுக் கதை.
    அருமையான தெளிவான படங்கள்.
    எந்த இடத்திலும் பிசிறில்லாத டயலாக்குகள்.
    'ஒரு நண்பன் என்றுமே சுமையாக மாட்டான்.'
    இது ஒன்றே போதுமே.
    எடிட்டர் சார், மாடஸ்டி splபுக் ஏதாவது சிறப்பு வெளியீடாக வெளியிடுங்கள். அதில் கல்கியில் 70களில் வெளிவந்த சிங்கக் கழுகு அவசியம் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இளவரசிக்கு "டைஜஸ்ட்" போடலாம் சார் - நம்மில் அநேகருக்கு அது டைஜஸ்ட் ஆகிடும் பட்சத்தில் !

      Delete
    2. இன்னான்றீங்க அண்ணாத்தேஸ் ?

      Delete
    3. Nowadays we have enough digest coming but not finding time to read them sir 😊

      Delete
    4. பரணி அப்போ வேணான்றீங்க?

      // இன்னான்றீங்க அண்ணாத்தேஸ் ? // சார் எனக்கு ரெண்டு நாள் லீவ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
    5. மாடஸ்தியின் தைரியமும், திட்டமிடலும், போராட்ட குணமும், அறிவும், அழகும், நல்லவற்றிற்கான மெனக்கெடலும், கார்வினுடனான நட்பும், என ரசிக்க பல இருக்க, ஏன் டைஜஸ்ட் போடக்கூடாது சார்?

      டைட்டன் இதழ்கள் போல மேக்ஸி சைஸ்+TPBல் வந்தாலும் நன்றாக இருக்கும்.

      Delete
    6. Singakazhughu still remembering best one carry on sir

      Delete
    7. By principle I ought not encourage modesty blaise digest. ( despite the fact I covet her. ) a single album per year is enough. Oldtimers however good they were or are should not present themselves in the newly laid path.( of course I will buy modesty digest if it were to come).

      Delete
    8. Sir the panel size is bothersome given our ageing. If Modesty digest is attempted the book gotta be large sized with bigger panels sir. Current size digest is getting cumbersome to read. Tex in this size is okay because it is mostly action (and you know the technique I use to read Tex or any heavy bubble these days :-D :-D :-D ) but for Modesty it may not work sir !

      Delete
    9. // பரணி அப்போ வேணான்றீங்க? //

      Ippadi santhama ketkatheenga 😊

      Delete
  54. நாமக்கல் சிவகங்கை மயிலாடுதுறை திருவாரூர் என்றுபுத்தகவிழாக்கள் ரவுண்டு கட்டி அடிக்க அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கநமக்குதான் நாக்கு தள்ளுகிறது.நாமக்கல்லுக்கு முன்னுரிமை கொடுங்க சார்

    ReplyDelete
  55. .மாடஸ்டி டைஜஸ்ட் வரும் காலம் நெருங்கிடுச்சு. சார் சீக்கிரம் முன்பதிவு அறிவியுங்கள்.

    ReplyDelete
  56. மாடஸ்தியின் தைரியமும், திட்டமிடலும், போராட்ட குணமும், அறிவும், அழகும், நல்லவற்றிற்கான மெனக்கெடலும், கார்வினுடனான நட்பும், என ரசிக்க பல இருக்க, ஏன் டைஜஸ்ட் போடக்கூடாது சார்?

    டைட்டன் இதழ்கள் போல மேக்ஸி சைஸ்+TPBல் வந்தாலும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  57. சுவாரஸ்யமான முழு நீளப்பதிவை நீங்கள் போட்டு வெகு நாள் ஆகிறது எடி சார்!!

    ReplyDelete
  58. Kazhugu malai kottai ..
    Diamond of the digest.

    ReplyDelete
  59. சனிக்கிழமை இரவை எதிர்பார்த்து காத்திருக்கும் சுவாரஸ்யம் சற்றே குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது சார்!!கனமான தகவல்கள், எதிர்பார்ப்பை தூண்டும் எக்கச்சக்கமான அறிவிப்புகள் என்று களை கட்டும் சனி இரவு, உப்பு குறைந்த உப்புமா போல ஆகி விடக்கூடாதே என்ற கவலைதான் சார்!!

    ReplyDelete
    Replies
    1. சார்..ஒரு கரம் மசாலா நெடும் பதிவுக்கு கிட்டத்தட்ட சனியின் முக்கால் பொழுது அவசியமாகிடும் எனக்கு ! 57-ஐ தொட்டுப் பிடிக்க ஒன்னரை மாதங்களே உள்ள ஒருவனுக்கு அந்த அவகாசம் சுளுவாய்க் கிட்டிட வேண்டும் தான் ; but இயமை ஊஞ்சலாடுறச்சே தான் தாறுமாறாய் பணிகளைக் கொடுத்து 'ஆட்றா ராமா-தான்ட்றா ராமா' என்று கரணம் போடச் செய்கிறார் புனித மனிடோ !

      And அதிரடியாய் அறிவிப்புகள் ; எதிர்பாரா ரவுசுகள் என்றெல்லாம் நான் கூத்தடிக்கும் பட்சங்களில் இன்னும் கணிசமான வாசிப்பு அவகாசம் அவசியமாகிடும் உங்களுக்கு ! Which is a luxury most people do not have today !

      தவிர, காலத்தின் ஓட்டத்தோடு நமக்கெல்லாமே அகவைகளும், பொறுப்புகளும், பொறுமைகளும் கணிசமாய் மாற்றம் கண்டுள்ளன ! So ஏகமாய் மாறி வரும் சூழலில், மாற்றமே காணா ஒன்றினைத் தேடுவது சிரமம் தானே சார் ?!

      Delete
  60. மாடஸ்டி digest நன்றாகத்தான் இருக்கும்!! கலரில் வந்தால் காவியம் படைப்பார்தான், பெண் ஷெல்டன் போல...

    ReplyDelete
  61. இளவரசிக்கு "டைஜஸ்ட்" போடலாம் சார் - நம்மில் அநேகருக்கு அது டைஜஸ்ட் ஆகிடும் பட்சத்தில்

    டைஜஸ்டுக்கு டபுள் ஓகே

    ReplyDelete
  62. Replies
    1. பதிவு உண்டு தோழரே

      Delete
    2. சத்யா காலையிலேயே நான் வந்து கேட்டு விட்டேன்.

      Delete
    3. காலையிலே போட்ருவோம் guys ; நான் இப்போது தான் ஊட்டுக்கே திரும்பியிருக்கேன் !

      Delete
    4. நன்றிகள் சார்.

      Delete
    5. சத்யா காலையிலேயே நான் வந்து கேட்டு விட்டேன்.


      அதானே பாத்தேன் காலையிலேயே உங்க ஜனநாயக கடமையை நிறைவேத்திட்டிங்களா

      Delete
  63. ...டெட் வுட் டிக்...
    ...தென்றல் வந்து என்னைக் கொல்லும்...
    அற்புதமான கதை.
    7ம் பக்கத்தில் இருந்து 155 ம் பக்கம் வரை ரணகளமான முற்றுகை,
    பின்பு தப்பித்தல், ஓட்டம் என படு அமர்க்களம்.
    காட்சியமைப்புகள் அருமை.
    மில்லீ எனும் மங்கை வடிவில் உடன் வரும் தென்றல் வந்து டிக்கைத தொட இதமான ரொமான்ஸ் என கதை இறுதிக்கு நகர்கிறது.
    அடோப் வால்ஸ், மறக்க முடியாத இடம்.
    ஜாக் மறக்கவியலா நண்பன்
    என கதை நம்மை கட்டிப்போட்டுவிட்டது.
    முற்றுகைப் போர் காட்சிகள் அமர்க்களம்.
    அற்புதமான ஓவியங்கள்.
    வண்ணத்தில் இருந்திருந்தால் என ஏங்க வைக்கிறது.
    மூன்று பாகங்களும் அமர்க்களம்.
    டெட் வுட் டிக் அமர்க்களமான ஹீரோ.
    இனி டெட் வுட் டிக்கை பார்க்க முடியாது என்பது வருத்தமே.
    வாசிப்பை தவற விடக் கூடாத கதை.
    பாராட்டுக்கள் எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. நிஜத்தைச் சொல்வதானால் பாராட்டுக்கள் உங்கள் ஒவ்வொருவரையும் தான் சார்ந்திட வேண்டி வரும் சார் !

      அநேகமாய் இத்தாலிய மொழிக்குப் பின்பாய் இந்த டெட்வுட் டிக் தொடரானது வெளியாகியிருப்பது தமிழில் மட்டுமாகத் தானிருக்கும் ! வேற்று மொழிகளில் இந்த கார்மேகக்கண்ணனை யாரும் வெளியிட்டிருப்பதாக எனக்குத் தெரியலை ! 'இத்தகைய கதைகளையும் நாங்கள் ரசிப்போம்' என்ற தைரியத்தை எனக்குத் தந்தது மாத்திரமன்றி - செம கட்டாணியும், புட்டாணியுமான கதை மாந்தர்களையுமே ரசித்து உள்வாங்கிக் கொள்ள எங்களுக்கு சாத்தியமே !" என்று நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் !

      இந்தியாவுக்குள் இன்னும் ஒற்றை மாநிலத்தில் கூட உங்களின் பன்முகத்தன்மை கொண்ட காமிக்ஸ் வாசகர்கள் லேது என்பதே bottomline ! அந்த நிஜமே எனது விஷப்பரீட்சைகளின் முதுகெலும்பு !

      So ஷொட்டுக்கள் all !!

      Delete
    2. சார் இதை நீங்கள் முதலில் பிளான் செய்தது போல 4, 3 பாகமாக போட்டு இருந்தால் வேற லெவலில் இருந்து இருக்கும். என்பது ஒன்றே எனது குறை.

      Delete
  64. மாடஸ்டி டைஜஸ்ட் போட்டால், டாக்டர்கள் மட்டும்தான் என்றில்லை, பல சாமானியர்களும் மீன் பிடிக்க இங்கு தயாராகவே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  65. நான் டாக்டர் இல்லை ஆனா மீன் பிடிக்க தயாரா இருக்கேன்

    ReplyDelete
  66. // ஒரு பண்டமாற்றுப்படலம். //

    Mikavum sariyana thalaipu sir😊

    ReplyDelete
  67. //மாடஸ்டியின் தைரியமும் ,,திட்டமிடலும் ,போராட்ட குணமும், அறிவும் ,அழகும் நல்லவற்றிற்கான மெனக்கெடலும்கார்வினுடனான நட்பும் என ரசிக்க பல இருக்க ஏன் டைஜஸ்ட் போடக்கூடாதுசார்.//வெல் செட் .சங்கர் c sir.ஆனா மிக்ஸி ஸைஸ் வேண்டாங்க சார்

    ReplyDelete
    Replies
    1. ஒன்னாவது வந்துட்டு போகட்டுமே...கீழ நண்பர் கோரிய படி கத்தி முனை சைசுல... டைஜஸ்ட் பிற நாயகர்களுக்கு போல

      Delete
  68. //நான் டாக்டர் இல்லை .ஆனாலும் மீன் பிடிக்க தயாரா இருக்கேன்.//தேங்ஸ் ஷெரிப். ஜி .டைஜெஸ்ட் வரவேற்கிறோம் சார்.100கதைகள் கொண்ட ஒரு சூப்பர் பெண்மணியின் கதைகளில் நமது ரசனைக்கேற்ப கதைகள் உடனான டைஜெஸ்ட்.செம ஹிட் அடிக்கும் சார்

    ReplyDelete
  69. எடிட்டர் சார்! மாடஸ்டியின் கதை ஒரு பண்டமாற்று படலம் நன்றாக இருந்தது. ஆனால் சித்திரங்களை மீறிய பலூன்கள்தான் ரசிக்க ஒட்டாமல் செய்துவிட்டது... விலை கூடுதலானாலும் பரவாயில்லை. ஆரம்பத்தில் வந்த "கத்தி முனையில் மாடஸ்டி!"சைசில் சித்திரங்கள் சிதைவுறாமல் இனி வரும் மாடஸ்டியின் கதைகளை வெளியிட்டால் அனைவருக்கும் பிடிக்கும்,.

    ReplyDelete
  70. பூபதி சார் .சித்திரங்களை மீறிய பலூன்கள் தான் ரசிக்க ஒட்டாமல் செய்துவிட்டது.அது வசனங்களுக்கு இடமில்லாமல் அல்லங்கசார் . சென்சார் .சென்சார்.

    ReplyDelete
  71. தேங்க்ஸ்ங்க குமார் சார்.மகி ஜி தான் மாத்திட்டாருனு நெனச்சேன்.இளவரசிக்கு ஆதரவு பெருகுவதால் சந்தோசம் தாங்கல.தலகால் புரியல

    ReplyDelete
  72. டெட் வுட் டிக்.மிஸ்யூ டா கருவாயா மறுபடியும் எப்படியும் வரத்தான் போற . இப்பத்திற்கு போய்ட்டு வா.அடுத்த ஆல்பம் ரெடியானவுடன் உன்ன அலேக்காக தூக்கிட்டுவர ஆசிரியரும் ரெடி நாங்களும் ரெடி

    ReplyDelete
  73. எடிட்டர் சார். ஒரு டவுட்டு.
    டெட் வுட் டிக் கதையில் அந்த அடிதடி ஜேன் பெண்ணுக்கு மில்லீங்கற பெயர் ஒரிஜினலா கதையில வந்ததா, இல்லே வாசகர்களுக்கு கொஞ்சம கிக்'கா இருககட்டுமேன்னு நீங்க வெச்சதா ?
    எப்படி இருந்தாலும் பெயருக்கு ஏத்த மாதிரிதான் இருந்தது.
    உங்கள் கத்தரிக்கோலும் படுகச்சிதம்.
    கடமையை சிறப்பாகவே செய்தது.

    ReplyDelete
    Replies
    1. //ஜேன் பெண்ணுக்கு மில்லீங்கற பெயர் ஒரிஜினலா கதையில வந்ததா, இல்லே வாசகர்களுக்கு கொஞ்சம கிக்'கா இருககட்டுமேன்னு நீங்க வெச்சதா..//

      ROFL..எப்டியெல்லாம் யோசிக்கறாங்க.?

      Delete
  74. இன்னான்றீங்க அண்ணாத்தேஸ் ?//--

    S60ல அதுபாட்டுக்கு வரட்டும் சார்....!!!

    யார் யாரோ வரும் போது மாடஸ்தியுந்தான் வரட்டுமே!!

    அடுத்த S60ல 5ங்கிறதை 6ஆக்கினா ஆல்டர்நேடிவ் மாதங்களில் பழங்காமீஸ் பறவைகளும் குஷியாவாங்க....!!

    ReplyDelete
  75. புத்தகத்துக்கு எதிர்பார்ப்பு இம்மாதம் பெருசா இல்லை....
    இரவு ஒன்னறைக்கு வீட்டுக்கு வந்து பார்சல தேடுனா....கீழருக்குன்ன என்னவள் தாண்டி கதவ தட்டி வீட்டப் புரட்டிப் போட போன என்ன தடுத்த தூங்குறவியல தொல்ல பன்னாதீங்கன்ன குரல கரச்ச இரவின் தடுப்பை தாண்டி...சொன்ன இடத்ல தேடுனா காணமேன்னு மேல் பாஞ்சா....பார்சல் அட்டை காலியாருக்கு என் மகன் திருவருளால ...அடடா பார்சல் நச்சுன்னு இருக்கே...மேஜைக்குள் கசங்கிய விளம்பரக் குட்டீஸ் தாள் என் இளம் மகனை ஈர்த்தது புரிய என்னையும் கட்டிப் போடுது அந்த சிறார் ஸ்பெசல் வண்ண விளம்பரம்...தாண்டுனா தடுக்கி விழுகிறேன் அந்த அட்டகாச மோரிஸ்கோ தத்ரூப ஒவியத்திலும் அந்த மரணமுள்ளுருண்டைய நினைவுறுத்தும் சடலத்திலும்...பின்னட்டையோஅடேயப்பா இது வரை வந்த அட்டைகளிலே என கீச்சிட....டெட்வுட்டிக் வித்தியாசமா ஈர்க்குது வண்ணச் சேர்க்கையில் சிவப்பில் கலக்கிய டெக்சோடு போட்டி போடுது டிக்கின் நிழலின் பின்னால் மாறும் கருநீல நிறத்தோடு...பின்னரட்டையும் என்னை தலைகீழா தூக்கி உலுக்க நழுவி விழுகிறேன் மாடஸ்டி கண் மீது....செம சார் அட்டகாச வண்ணங்களையும் தெறிக்க விடுகிறார் மாடஸ்டி பச்சைவண்ணத்த மீறி...சிவப்பு ...பச்சை...மஞ்சை மத்தாப்பாய் புத்தகங்க ஈர்க்க....ஆச்சரியமென்னன்னா பல நண்பர்கள் கூறுவது போல இந்த சைஸ் ஃபிரான்கோ பெல்ஜிய சைஸ் ஈர்ப்பை மீற....


    உள்ள மூனு மூனு பக்கங்கள் புரட்டி....முதல் முன்பக்கம் மாடஸ்டி செயல் பண்டமாற்று படல தலைப்பு ஏதோ சொல்ல..

    முதல் மாடஸ்டி கதைஃபிரேம் இங்க முதல் ஃபிரேம ரசிச்ச படி நுழைய வில்லி...மரச்சிற்பி...மனைவி சம்பாசனைகள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்க...மாடஸ்டிய கூர்ந்து படிச்சா இன்பமே வேற லெவல்....

    டிக் முதல் பக்கமே அந்த

    தலையல்லா போராளி இரவ...காககா அப்பாவிகளோட நானும் ஊர்ந்து செல்கிறேன் உரையாடல்கள காதில் வாங்கிய படி....செமயாருக்கு சார்....

    நம்ம மோரிஸ் கோ இல்லம் காற்றில் அசைந்த அந்த தாவரங்களோடு ...காத்தோடு நானும் கதவைத் தட்ட ...திறந்த பக்கமோ விறுவிறுப்ப கூட்டி என்ன மொத படிடாங்குது..


    அடுத்த மாதமும் மூனுதானான்னு பசியோட பாத்தா அட்டகாச விருந்து...மார்ட்டின் அடடா...ஒரே அசுரர்களோட...அடுத்து மிஸ்டர் நோ...அடுத்த டெக்ஸ்...பரபரப்புக்கு பஞ்சமில்லாத அடுத்த மாதமும் பட்ஜட்டோட...அடுத்த மாசம் தாராளமாகக் பாருங்க ...கோடை கொடை விழாவுக்கு...

    டிக்கின் இரண்டாம் கதையை படிக்கப் போறேன்

    ReplyDelete
  76. காமிக்ஸ் எனும் கனவுலகம்
    விமர்சனப் போட்டி
    எழுதியவர் - ராஜ்குமார் திருப்பூர்

    கறை படிந்த கரென்ஸி!

    இம்மாதம் லயனில் வந்துள்ளது ஒரு புதுமுக நாயகரான I.R.$ ஏஜெண்ட் லேரி B. மேக்ஸின் கறை படிந்த கரென்ஸி! கதை முழுதும் சொல்லிடாமல் மேலோட்டமாக பார்ப்போம். புதிதாக வசிப்போருக்கு அடுத்தடுத்து என்ன என்ற திரில் இந்த பதிவின் வழி கலைந்திடக் கூடாதல்லவா.
    ஒரு நல்ல தந்தையாக பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பது சொத்துக்கள் அல்லது பெரும் சேமிப்புகள் விட்டுச் செல்ல வேண்டும் அல்லவா, அப்படி ஒரு பெரும் சேமிப்பை வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்றுதானே சேமித்து வைப்போம்.. நம் காலத்திற்குப் பிறகு வாரிசுகள் அதை எடுத்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளட்டும், என்பதுதான் ஒரு நல்ல தந்தையின் அடையாளமாக இருக்கும். பின்னாளில் அப்படியான சேமிப்பை அணுக வரும் வாரிசுகளை வாங்கிகள்.. அந்த சான்றிதல் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று இழுத்தடித்து நம்மை ஏமாற்றி நம் பணத்தை தின்று ஏப்பமிட முனைந்தால் நாம் நொறுங்கிப் போய் விடுவோமல்லவா? இந்தக் கதையில் யூதர்களின் மொத்தப் பணத்தையும் ஒருவன் வங்கி அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுத்து அமுக்கி விடுவதுதான் இந்தக் கதையின் மையம்.
    யூத செல்வந்தர்கள் பலர் தமது சேமிப்பை ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைத்துள்ளனர். பின்னாளில் நிகழ்ந்தேறும் மனித வரலாற்றின் நீங்கா கறையான யூத படுகொலைகளுக்குப் பின்னராக தப்பிப் பிழைக்கும் யூதர்கள் தங்களின் தந்தை சேமித்துள்ள தொகையை வேண்டி ஸ்விஸ் வங்கிகளை அணுகும்போது.. உங்கள் தந்தையின் இறப்புச் சான்றிதழ் கொண்டு வாருங்கள் என்று அலைகழிக்கப்படுகின்றனர். ஆஷ்விட்ஸ் போன்ற கொலைகளங்களில் படுகொலை செய்யப்பட்ட எண்ணற்ற தந்தைகளுக்கு எப்படி இறப்புச் சான்றிதழ் பெறுவது. இதன் பின்னணியில் கலிபோர்னியாவில் லுக் க்ரெடியோ எனும் நபரை ஒரு விபத்தில் கொல்கின்றனர். அவர் I.R.$ (Internal Revenue Service) எனப்படும் அமெரிக்க வருமான வரித்துறையின் கண்காணிப்பில் இருப்பவர். இவர் மரணம் பல சந்தேகங்களை கிளறவே... தொடரும் பக்கங்களில் அதகள ஆக்ஸனோடு ஏஜெண்ட் லேரி மேக்ஸ் துப்பறிய ஆரம்பிக்கிறார். இதன் வில்லன் யாரென்று பாதிப் பக்கத்திலேயே நான் யூகித்து அவனை துரோகியாகவே எண்ணி வாசிக்க தொடர்ந்தேன். ஆனால் க்ளைமேக்ஸில் என் யூகம் தவறு என்று நச்சென்று முடிந்திருந்தது.
    கதையை Stephen Desberg என்ற கதாசிரியர் எழுதியுள்ளார். தமிழில் இவரை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறோம் என்று நினைக்கிறேன். இவரின் கதை சொல்லல் அபாரம். புத்தகத்தை கீழே வைக்கத் தோணாத வண்ணம் கதையை அருமையாக நகர்த்தி செல்கிறார். பக்கம் 27ல் அநாதையாகிப் போன அந்த யூத சிறுவன் கண்ணீரோடு அமர்ந்திருக்க அந்த வங்கி அதிகாரி போலி அனுதாபம் காட்டி ‘ஆவணங்கள் அவசியம்’ எனும்போது வாசிக்கும் நமக்கும் நெஞ்சில் பெரும் துயராக இருக்கிறது. இந்த இடத்தில் தமிழ் மொழிபெயர்ப்பு அபாரம். அதேசமயம் க்ளைமேக்ஸ் ரோடு சேசிங் காட்சியில் அவ்வளவு உயிர் போகும் பரபரப்பிலும்... ' ஆனால், என்னைத் தான் ஏழாம் வகுப்பிலேயே ஒழுங்கீன சிகாமணி என்று முத்திரை குத்திவிட்டார்களே!" ... என்று ரொம்ப லென்தியாக சூழலுக்கு பொருந்தாமல் பேசுவது ரசிக்க வில்லை.

    சித்திரம் Bernard Vrancken என்பவர். இவரும் நமக்கு புதிது. காமிக்ஸை பொறுத்தவரை ஒரு நல்ல கதாசிரியருக்கு நல்ல ஆர்டிஸ்ட் கிடைத்துவிட்டால் பட்டையை கிளப்பி விடுவார்கள் இல்லையா.. அதுபோலதான் இங்கும் தூள் கிளப்பி உள்ளார் Bernard Vrancken. வண்ணச் சேர்க்கையும் பிரமாதம். அத்தியாயம் 2 ஹாகென் வியூகத்தில் அந்தக் கொலைக்களம் ஆஷ்விட்ஸ் காட்சிகள் வரும்போது ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் நினைவில் வந்து போனது. கூடவே கதையின் கிளைமேக்சில் மொஸாட் வரும்போது Munich படமும் நினைவில் வந்தது. கதையின் சில பக்கங்களில் World Trade Center வருகிறதே... Cinebookல் 2008ல் உருவான கதையில் 2001ல் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட டவர் எப்படி வரும் என்று குழம்பி இணையத்தில் ஆராய்ந்ததில்.. அடடே இது பிரெஞ்சில் 1999ல் வந்தது என்று தெரிந்தது.
    புதுமுக நாயகரான I.R.$ ஏஜெண்ட் லேரி B. மேக்ஸுக்கு நல்வரவு.
    மற்ற நண்பர்களுக்கு.. கண்டிப்பாக மிஸ் செய்திடாமல் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

    ### பரிசு பெற்ற விமர்சனம்

    ReplyDelete
  77. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete