Saturday, January 27, 2024

கதை சொல்லும் சென்னை !

 நண்பர்களே,

வணக்கம். "ரசனை" எனும் ஆறானது பொதுவாய் டிசைன் டிசைனான பாதைகளில் பயணிப்பதுண்டு ! 

*"ஒரு தோழனின் கதை" சூப்பரப்பு என்று நான் நினைத்திருக்கும் வேளையில், நீங்களோ நடுமண்டையோடு ஒரு டபுள் கொட்டை இறக்குவீர்கள் ! 

*"ஆத்தீ...இந்தக் கதைக்கு துடைப்பம் பிய்வது உறுதி !" என்ற பயத்தோடு வெளியிடும் "காலனின் கால்தடம்" கி.நா.வுக்கு சூப்பர்ஹிட் அந்தஸ்து தருவீர்கள் ! 

*சந்தாவில் இருக்கும் நண்பர்களுக்குப் பிடிப்பது கடைகளில் வாங்குவோருக்குப் பிடித்திருப்பதில்லை ! 

*And புத்தக விழாக்களில் போணியாவது சந்தா நண்பர்களின் ரசனைகளோடு ஒத்துச் செல்வதில்லை ! 

ஆனால்.....ஆனால்....ஒரு தெறி ஜனவரியில் ; ஒரு அனல் கூட்டணியில் துவங்கியுள்ள ஆண்டினில் - நம்ப இயலா ஒரு அதிசயமும் அரங்கேறியுள்ளது ! அது தான் மூன்று துருவங்களும் ஒற்றை நேர்கோட்டினில் இணைந்து நின்றிடும் அதிசயம் !! இன்னா மேட்டருங்குறீங்களா ? - தோ சொல்றேனே !

துருவம் # 1 : நாங்க !! மண்டைக்குள் ஓடும் முதல் சிந்தனைக்கு பூம் பூம் மாடாட்டம் 'ஜிங்கு ஜிங்கென்று' மண்டையை ஆட்டியபடியே, டைப் டைப்பாய் தொடர்களை / நாயகர்களை களமிறக்கும் பார்ட்டிகளான நாங்க !!

துருவம் # 2 : நீங்க !! நம் மீதான அன்பும், காமிக்ஸ் மீதான தீராக் காதலுமாய் இந்த பொம்ம புக் உலகினை தாங்கிப் பிடித்து நிற்கும் ஹெர்குலீஸ்கள் !! நல்லவற்றை நயமாக சிலாகிக்கும் கையோடு, டப்ஸாக்களுக்கு தெளிவாக டின் கட்டிவிடும் ஜூரிக்கள் !

துருவம் # 3 : Casual வாசகர்கள் ! சந்தர்ப்பங்கள் வாய்க்கும் சமயங்களில் ; புத்தக விழாக்களில் ; கடைகளில் ; ஏஜெண்ட்களிடம் - அந்த நொடியின் பொரி பறக்கும் திசையினில் உள்ள இதழ்களை on merits வாங்கிடுவோர் ! Of course காமிக்ஸ் நேசத்தில் யாருக்கும் சளைத்தோர் அல்ல தான் ; அதே சமயம் "சர்வம் பொம்ம புக்மயம்" என்று அவகாசம் தந்திடவும் வாய்ப்பில்லாதோர் ! 

இந்தப் பயணத்தின் பெரும்பான்மைக்கு - "இந்த மூணு நைனாக்களும் ஒட்டே நேர்கோட்டில இணைஞ்சு நின்னாக்கா இன்னாமா இருக்கும் ??!!" என்ற பெருமூச்சோடு தான் சுற்றி வந்திருக்கிறோம் ! ஆனால் நம்ம லயனின் 40-வது ஆண்டுக்கொரு gift ஆக இருக்கட்டுமென்று பெரும் தேவன் ஓடின் எண்ணினாரோ, என்னவோ - சென்னையின் அசாத்திய விற்பனையின் நடுவாக்கில் எனது அவா நிறைவேறிடும் அதிசயமும் அரங்கேறியுள்ளது !! 

Yes - நடப்பாண்டில் நாம் முன்னெடுத்திருக்கும் "ஸ்டார் நாயகர்களோடு, மாதா மாதம் crisp வாசிப்பு...!" என்ற அந்த template-க்கு சென்னைப் புத்தக விழாவின் casual வாசக வட்டமும் ஒரு மிகப்பெரிய thumbs up தந்துள்ளது !! இதோ - தொடர்கிறது சென்னையின் விற்பனை சார்ந்த அதகளங்களும், அலங்கோலங்களும் !! Here goes :

துளியும் ஐயமின்றி இந்தாண்டின் சென்னை ஹீரோ டின்டின் தான் ! ஏற்கனவே அவருக்கு இருக்கும் பிரபல்யம் ; star power பற்றி ஊருக்கே தெரியும் & பற்றாக்குறைக்கு இங்கும், FB ; வாட்சப் க்ரூப்களிலும் நீங்கள் செய்த சிலாகிப்புகள் "திபெத்தில் டின்டின்" இதழை ஒரு blockbuster ஹிட் ரேஞ்சுக்கு இட்டுச் சென்றுள்ளது ! And அதனில் நமக்கொரு பாடமுமே கிட்டியுள்ளது - காத்திருக்கும் பயணங்களில் வருஷத்தினைத் துவக்குவது இந்த மெகா ஸ்டாரோடு தான் இருந்திட வேண்டுமென்று !! So பொங்கலும், வடையும் போல ; பூரியும், கிழங்கும் போல ; பரோட்டாவும், பாயாவும்  போல, அடுத்த நாலைந்து வருஷங்களுக்காவது ஜனவரியும், டின்டின்னும் இணைந்தே காணப்படுவர் !!

Yes, டின்டின் ஊடு கட்டி அடித்துள்ளார் தான் ; காண்போரையெல்லாம் காதலில் விழச் செய்துள்ளார் தான் ! ஆனாலும் நம்பர்களில் அவரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டுப்புட்டு மொத இடத்தில நிற்பவர் யாரென்று தான் யூகியுங்களேன் folks ? யூகிப்போருக்கு நேபாளத்துக்கெல்லாம் டிக்கெட் தரப்போவதில்லை ; வேணும்னா மாயூரத்துக்கோ ; மாபலிபுரத்துக்கோ தரலாம் - becos அசைக்க இயலா முதலிடத்தில் இருப்பவர் 52 ஆண்டுகால ஜாம்பவானான இரும்புக்கை மாயாவி மாம்ஸ் தான் ! மொத்தம் 6 மறுபதிப்புகள் நம் கைவசமிருந்தன இந்தாண்டினில் - and ஒன்றே ஒன்று தான் நடப்பாண்டுக்கென சேர்த்தது ! அந்த இதழும் (இரும்புக்கை மாயாவிசென்னை எக்ஸ்பிரஸின் ஒரு அங்கமாக, maybe ஒரு வாரம் கழித்தே சென்னை ஸ்டாலுக்கு சென்றிருந்தது ! ஆனால் லேட்டா வந்தாலும், லேப்போ லேப்பென்று விற்பனையில் லேப்பி - "2024 சென்னையின் MOST SELLING புக்" என்ற வெற்றியினை தனதாக்கியுள்ளது ! And 6 மறுபதிப்புகளுமாய்ச் சேர்ந்து கண்டுள்ள விற்பனை - கிறுகிறுக்கச் செய்யும் ஒரு நம்பர் !! எண்ட தெய்வமே....எனக்குப் புரியில்லா !! அடுத்த வருஷத்துக்கு எந்த மாயாவியையெல்லாம் ரீபிரிண்ட் பண்ணுவதென்று இப்போதே யோசிக்க ஆரம்பிச்சுட்டோம் !!

அதே சமயம், மாயாவியின் செட் - CID லாரன்ஸ் - டேவிட் & ஜானி நீரோ-ஸ்டெல்லா ஒரு ரெண்டு, மூணு லெவெல்கள் கீழேயே இருக்கின்றனர் விற்பனையில் ! இத்தனைக்கும் "ஜானி in ஜப்பான்" ; "விண்ணில் மறைந்த விமானங்கள்" - ஒரிஜினல் அட்டைகளோடு, சமீப மறுபதிப்பு கண்டிரா இதழ்களாகவே இருந்துள்ளன ! Yet - மாயாவியில் 10 விற்றால், இவர்களது  ஆல்பங்களில் 5 தான் போணியாகியுள்ளன ! ஆனால் 'ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பதை நிஜமாக்கும் விதத்தில், இன்ன பிற சமகால நாயகர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு பெருசாய் ஒரு ஏப்பமும் விட்டிருக்கிறார்கள் ! க்ளாஸிக் நாயகர்கள் தான் ; இன்றைய நவீன ரசனைகளுக்கு ஈடுதர சிரமப்படுவோர் தான் - ஆனாலும் "ஜாலிலோ-ஜிம்கானா" என்று பாட்டுப் பாடியபடியே, புதுப்புது வாசக இல்லங்களுக்கு குடிபோகும் ஆற்றல் இவர்கட்கு உள்ளது !  

ஆனால், நாக்குத் தள்ளப் பணியாற்றி, நாளெல்லாம் மேடை போட்டு ; மைக் பிடித்து, "இது புதுசுங்கோ ; செம டிப்பரன்டுங்கோ" என்று  சிலாகித்தாலும் - கம்பீரமாய் சென்னைக்குப் பயணமாகி, சட்டையின் மடிப்பு கூடக் கலையாமல் மறுக்கா கிட்டங்கிக்கே திரும்பிடும் புதுயுக நாயக / நாயகியர்  கணிசம் ! இதோ - கண்ணில் ரத்தம் வரச்செய்யும் நம்பர்களுடன் சென்னையின் "சூரப்புளிகளை" பட்டியலிடுகிறேன் :

  • *கமான்சே : கைவசம் 6 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 24 புக்ஸ் !
  • *லேடி S : கைவசம் 3 தலைப்புக்கள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 9 புக்ஸ் !
  • *காலவேட்டையர் - 1 புக் !
  • *பிஸ்டலுக்குப் பிரியாவிடை - 4 புக்ஸ் !
  • *சோடா : கைவசம் 3 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 10 புக்ஸ் !
  • *டிரெண்ட் : மொத்தம் 8 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 31 புக்ஸ் !

இவை தவிர, நிறைய one shots "எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போயிருக்கார் !" என்ற பாணியில் ஜில்லென்று ஜிப்பாக்களையும், அங்கவஸ்திரங்களையும் போட்டிக்கினு சென்னை போய், ரேக்குகளில் புது மாப்பிள்ளைகளாட்டம் போஸ் கொடுத்து விட்டு, ஊருக்குப் புறப்படும் வேளை வந்தவுடன் முதல் ஆளாய் லாரியில் துண்டைப்போட்டு கிட்டங்கி திரும்பியுள்ளதும் அரங்கேறியுள்ளது  ! 

நடப்பாண்டில் சென்னையின் சோகக் கதைகள் இவையென்றால், சாகசக் கதைகளின் பட்டியலும் கணிசம் !! As always 2 கௌபாய் ஜாம்பவான்கள் போட்டுத் தாக்கியுள்ளனர் and அவர்களே விற்பனைகளில் நமக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளோர் ! "அந்த லைனா இருக்கிற டெக்ஸ் புக்ஸ் அல்லாத்திலேயும் ஒண்ணொண்ணு தாங்க ! இங்கே அடுக்கியிருக்கிற லக்கி லூக்கில all ஒண்ணொண்ணு !" என்ற குரல்கள் சென்னையில் அடிக்கடி ஒலித்துள்ளதன் பலனாய் - நமது விற்பனை நம்பர்கள் ஆரோக்கியம் கண்டுள்ளன ! அதிலும் டெக்சின் SUPREMO ஸ்பெஷல் செம மாஸ் ! அதே போல லக்கியின் 3 லேட்டஸ்ட் மறுபதிப்புகளும் கிட்டத்தட்ட விழாவின் halfway mark-ன் போது தான் ஸ்டாலுக்குச் சென்றிருந்தன ! ஆனால் மூன்றுமே பட்டையைக் கிளம்பியுள்ளன & "தலைக்கு ஒரு விலை" நம்ப முடியாத நம்பர்களை கண்டுள்ளது !! Phew !!!

மூன்றாவதாகவுமே ஒரு கௌபாய் இம்முறை தெறிக்க விட்டுள்ளார் - and அவர் தான் நம்ம 'தளபதி' !! நவம்பரில் வந்த "தளபதி ஸ்பெஷல்" தாறுமாறு-தக்காளிச்சோறு விற்பனை கண்டுள்ளதன் புண்ணியத்தில் - கிட்டங்கியினை காலி செய்துவிட்டார் இளம் தட்டைமூக்கார் ! திருப்பூரில் நமது ஸ்டாலில் உள்ள சொற்ப புக்ஸ் தான் அதனில் எஞ்சிய பிரதிகள் !! Phew ...நவம்பரில் வெளியாகி, ஜனவரிக்குள் "SOLD OUT" என்ற போர்டை மாட்ட சாத்தியமாகிறதெனில், பாக்கியுள்ள இளம் டைகர் சாகசங்களை தொடரும் ஆண்டுகளில் போட்டுத் தாக்கிடும் 'தகிரியம்' நமதாகிறது ! யாரங்கே...? தளபதியை சயனத்திலிருந்து தட்டி எழுப்பு !! 

சென்னையின் இன்னொரு அதிரடி ஆட்டக்காரர் - நம்ம டெங்காலி கானகத்தின் காவலர் தான் ! "நடமாடும் மாயாத்மா வேதாளர்" இம்முறை SUPREME '60s ஹார்ட்கவர் இதழாகவும், V காமிக்சின் கலர் இதழாகவும் கையிருப்பில் இருந்தார் ! முதல் பத்தே நாட்களுக்குள் ஹார்ட் கவர் வேதாளர் ஸ்பெஷல் -2 முற்றிலுமாய்க் காலி & "வீரனுக்கு மரணமில்லை" செம மிரட்டலான விற்பனை கண்டுள்ளது ! Again ஒரு ஸ்டார் நாயகர் + நேர்கோட்டுக் கதைகள் என்பதே வெற்றியின் template !! For sure - அடுத்த சென்னைப் புத்தக விழாவின் போது கணிசமான வேதாளர் இதழ்களை நம் அணிவகுப்பினில் பார்த்திடலாம் !  

சரி, பெருசுகளாய் சாதிக்கிறார்களே ?! என்ற நெருடலைப் போக்கிட ஒரு ஸ்டைலிஷ் சமகால ஹீரோவின் வெற்றியைப் பற்றியும் சொல்லுகிறேனே ? லார்கோ இந்தாண்டினில் சுழற்றியடித்திருக்கிறார் விற்பனையில் ! "இரவின் எல்லையில்" அடித்திருப்பது ரோஹித் சர்மா சிக்ஸர் எனில், தொடரின் மீத இதழ்களுமே செம்மையாய் ஸ்கோர் செய்துள்ளன ! So லார்கோ மொதலாளியின் தொடரில் நாம் நடுவாக்கில் skip செய்துள்ளதொரு டபுள் ஆல்பத்தினை அடுத்தாண்டினில் களமிறக்கிட எண்ணியுள்ளோம் ! And அதற்குப் பேனா பிடிக்க உள்ளவர் இங்கே நம் மத்தியில் உள்ளதொரு low profile நண்பரே ! ஏற்கனவே 2022-ல் அதன் முதல் பாகத்துக்கு மொழிபெயர்ப்பினை ஆர்வத்தினில் செய்து அனுப்பியுள்ளார் & பாகம் இரண்டையும் விரைவில் முடித்து வாங்கி விட்டோமெனில் அடுத்த ஜனவரியிலும் இதே template (டின்டின் + லார்கோ + டெக்ஸ் + வேதாளர்) சாத்தியமாகிடும் ! பேனா பிடித்துள்ள / பிடிக்கவுள்ள நண்பரின் பெயரில் 2 பெயர்களிருக்கும் and எங்களுக்கு நிரம்பவே அண்மையில் உள்ளவர் ! கண்டுபுடியுங்களேன் பார்ப்போம் - நேபாள ட்ரிப் இல்லாங்காட்டியும் நேந்திரங்காய் சிப்சாச்சும் பரிசுண்டு ! 

சென்னையில் இம்முறை அடிச்சுப் புடிச்சு தங்களது உறுப்புகளுக்கு நியாயம் செயதோர் 4 பேர் ! முதலாமவர் - நம்ம ரிப்போர்ட்டர் சார் ! Yes ; இம்முறை ரிப்போர்ட்டர் ஜானியின் எல்லா சாகசங்களுமே decent விற்பனை கண்டுள்ளன ! நிஜத்தைச் சொல்வதானால், சோடாவா ? ஜானியா ? என்ற கேள்வி எழுந்த போது எனது வோட்டு முன்னவருக்கே இருந்தது ! ஆனால் விற்பனையில் பாஸ்டர்-போல்ஸ்கார் சொதப்பியிருப்பதும், ஜானி சாதித்திருப்பதும் என்னை திருட்டு முழி முழிக்கச் செய்துள்ளது !

சாதித்துள்ள பார்ட்டி # 2 : நம்ம இளவரசி மாடஸ்டி  ! சிக்கென்ற black & white இதழ்கள் ; அடக்கமான விலைகள் - என்பன காரணமா ? அல்லது ஸ்டாலுக்கு கணிசமான டாக்டர்கள் வருகை புரிந்தனரா ? என்று சொல்லத்தெரியவில்லை - but அம்மணி செம பார்மில் இருந்திருக்கிறார் இம்முறை ! 

வெற்றி நாயகன் # 3 - நம்ம ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பி தான் ! ஹார்ட்கவர் தொகுப்பில் இருந்த "ரிப் கிர்பி ஸ்பெஷல்-2" அட்டகாசமாய் விற்றுள்ளது ! ரொம்பச் சீக்கிரமே இவருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தந்திட ஏற்பாடுகள் அரங்கேறினால் please don't be surprised ! மனுஷன் செம கில்லியாய் செயல்பட்டுள்ளார் & deserves a promotion !

சாதித்துள்ள ஹீரோ # 4 : ரின்டின் கேன் ! கையிருப்பில் மூன்று இதழ்கள் மட்டுமே இருந்தாலும் - செம sales ஒவ்வொன்றிலும் ! அதே போல "கதை சொல்லும் காமிக்ஸ்" தொடரின் 2 ஸ்டாக் இதழ்களும் குட்டீஸ்களுக்கு நிரம்பவே போணியாகியுள்ளது ! 

Surprise of Chennai - என்று குறிப்பிடுவதாயின் அது நமது கேரட் மீசை கிளிப்டன் தான் ! ஆறோ-ஏழோ இதழ்கள் கையிருப்பில் இருக்க, ஒவ்வொன்றிலுமே கணிசமான சேல்ஸ் ! அதிலும் "நில்..கவனி..சிரி" அதிரடி விற்பனை ! 

Maybe ...just maybe அடுத்தாண்டினில் வெறும் 6 இதழ்கள் கொண்டாவது ஒரு கார்ட்டூன் சந்தாவினை மறுக்கா கொணருவோமா ? என்ற மஹாசிந்தனை தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் போதே இன்னும் கொஞ்சம் நம்பர்கள் கண்ணில்பட்டன ! And அவற்றைப் பார்க்கப் பார்க்க ஷெரிஃபீடம் பிட்டத்தில் உதை வாங்கக்காத்திருக்கும் கிட் ஆர்டினைப் போலவே முழிக்கத் தோன்றியது ! Becos என் கண்ணில்பட்ட நம்பர்கள் - ப்ளூ கோட் பட்டாளம் & மேக் & ஜாக் வரிசைகளின் விற்பனை சார்ந்தது ! ரொம்பவே ; ரொம்ப ரொம்பவே சுமார் !!! Phew !!!! ரெகுலர் தடத்திலிருந்து சில தொடர்களை MYOMS பிரத்தியேக முன்பதிவுச் சந்தாவுக்கு நகற்ற நான் தீர்மானித்தது எத்தனை உத்தமம் என்பது அந்த நொடியில் உரைத்தது ! 

அதிரடி ; சூப்பர்-டூப்பர் என்றெல்லாம் இல்லாது, அழகான, ஆர்ப்பாட்டமில்லாத விற்பனை கண்டுள்ள தொடர்களை சொல்வதாயின் :

  • சிக் பில்
  • XIII 
  • ஏஜெண்ட் ராபின்
  • ஸாகோர் 
  • டெட்வுட் டிக் 
  • ஸ்பைடர் 

ஆகியோரைக் குறிப்பிடலாம் ! 

And ரொம்பவே இக்கட்டில் நிற்குமொரு prime நாயகர் - நம்ம பிரபஞ்சத்தின் புதல்வர் தான் ! மிகச் சரியாக ஒரு டஜன் டைட்டில்கள் கையிலிருக்க, வண்டியை தள்ளி விட்டுத், தள்ளி விட்டுத் தான் ஸ்டார்ட் செய்து வர வேண்டியுள்ளது ! புரியாத புதிர்களுள் பிரதானமானதென்பேன் - தோர்கலின் இந்த அற்புதத் தொடரின் slow movement !!

To cut a very long story short : 

  • ஸ்டார் value உள்ள நாயக / நாயகியர் அன்றி, இனி வரும் காலங்களில் இரண்டாம்நிலை ஹீரோக்கள் ஜெயம் காண்பதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம் போலும் !
  • Entertainment value ; சிண்டைப் பிய்க்க அவசியங்கள் ஏற்படுத்தா கதைகள் - முன்செல்லும் பாதையினில் இவையே சக்கரங்களை உருளச் செய்திடும் !
  • பரீட்சார்த்தங்கள் ; one shots ; இவையெல்லாமே இனி பிரத்யேக முன்பதிவுத் தடத்தில் மட்டுமே ஓடக்கூடியவை ! ரெகுலர் சந்தாவில் இணைத்து தொண்டைக்குள் திணிக்கப் பார்த்தால் மூக்கில் தான் குத்து விழும் போலும் !
  • விற்பனை உத்திரவாதம் வேணுமா - பழசை அரவணைத்தே போகணும் தான் போலும் ! இதனில் யார் கடுகடுத்தாலும், யார் முகம் சுளித்தாலும் - நிதர்சனம் மாறிடாது ! 
  • So 2025 முதலாய் அடிக்கடி முன்பதிவுத் தடங்களில் தான் புதுவரவுகளையும், வித்தியாசமான ஜானர்களையும் பார்த்திட சாத்தியமாகும் போலும் ! இப்போதே அதற்கான திட்டமிடலை ஆரம்பிச்சாச்சு folks !! 

அப்புறம்....அப்புறம்....இப்போவே கட்டை விரலை தொண்டைக்குள்ளாற திணிக்கவுமே ஆரம்பிச்சாச்சு - புதுசாய் 2 தொடர்களுக்கு துண்டை விரித்த கையோடு ! நாம என்னிக்கு இண்டிகேட்டர்களுக்கேற்ப வண்டியோட்டி இருக்கோம் - இன்னிக்கு ஒழுங்குப பிள்ளை டிரைவராகிட ? ஒவ்வொரு தினமும் ஒரு பாடம் கற்றுத் தந்திடும் சூழலில், விற்பனைக்கும் - ரசனைக்கும்  மத்தியில் ஒரு "கம்பி டான்ஸ்" ஆடப் பழகிக்குவோமா guys ? 

Bye all ....see you around !  புது இதழ்கள் பற்றிய previews நாளை போடுகிறேன் ! Have a cool Sunday !


237 comments:

  1. வணக்கம் நண்பர்களே 🙏

    ReplyDelete
  2. ///கமான்சே : 6 தலைப்புகள் - ஒரு செட்

    *லேடி S : கைவசம் 3 தலைப்புக்கள்
    -ஒரு செட்

    *சோடா : கைவசம் 3 தலைப்புகள் - ஒரு செட்

    *டிரெண்ட் : மொத்தம் 8 தலைப்புகள் -
    ஒரு செட்///

    இந்த கதைகளின் ஓர் செட்,
    கவர்ச்சிகரமான விலைகளில்
    விற்கலாம்.
    சீரிஸ் என்று ஒரு செட் டாக்
    வரும் போது, ஒரு ஹீரோ கதையை தொகுப்பாக படிக்கும் போது,
    நல்ல ஒரு அனுபவத்தை தரும்.

    இது மெல்ல பிக்அப் ஆனாலும் பின்னர்
    நல்ல ரிசல்ட் தரும்.

    மேலே குறிப்பிட்ட நான்கு ஹீரோக்களும் சிறந்தவைகளே.

    இவர்களோடு
    தோர்கலையும் சேர்த்து கொள்ளலாம்.

    ReplyDelete
  3. ///தல தளபதி லக்கி //

    இவங்க என்னைக்கும்
    "மாஸ்" தாங்க.

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  5. ///விற்பனை உத்திரவாதம் வேணுமா - பழசை அரவணைத்தே போகணும் தான் போலும் ! இதனில் யார் கடுகடுத்தாலும், யார் முகம் சுளித்தாலும் - நிதர்சனம் மாறிடாது///

    டிடெக்டிவ் சார்லி ஷ்பேசல் இப்போ படிச்சிக்கிட்டு இருக்கேன் சார்..!
    எல்லா கதைகளுமே சிம்பிளாக.. சின்ன சின்ன சம்பவங்களோடு எளிமையாவும் படிக்க இனிமையாவும் இருக்கு.!


    ரிப் கிர்பி.. விங் கமான்டர்லாம் அடுத்தடுத்து படிக்கச்சொல்லி லைன்ல நிக்கிறாங்க..!

    ReplyDelete
    Replies
    1. கிர்பியாரை மொதல்லே படியுங்க ; கலக்குவார் !

      வவுத்தையல்ல......மனசை !

      Delete
    2. கலக்குறதுன்னு ஆயிடுச்சி.. எதையாவது கலக்கி வைக்கட்டுமே சார்.😇

      Delete
  6. பேனா பிடித்துள்ள / பிடிக்கவுள்ள நண்பரின் பெயரில் 2 பெயர்களிருக்கும் and எங்களுக்கு நிரம்பவே அண்மையில் உள்ளவர்/
    சௌந்தர் தானே?

    ReplyDelete
    Replies
    1. ஊர் பெயரை முன்னாலும் தன் பெயரை பின்னாலும் வைத்திருப்பவரோ..?

      Delete
    2. முன்னாடி அப்படி வெசேசிருந்தார்.. இப்போ பின்னாடி வேற மாதிரி மாத்திட்டார்..

      அதாவது நண்பரின் பெயரில் இரண்டு பெயர்களிருக்கும்.. இது க்ளூ..

      இரண்டுமே ஒரே பெயர்.. இது பதில்..

      இதுவும் தப்புன்னா சொல்லிடுங்க சார்.. வேற யோசிக்கணுமில்ல..😇

      Delete
    3. /// Uhum ///

      இது கேள்வியை விட புதிரா இருக்குங்க சார்..😂

      Delete
    4. ம்ஹும்... 😄😄😄😄❤️👍..

      Delete
    5. மஹேந்திரன்... ரொம்ப தூரத்தில் இருந்தாலும்.., கடல் தாண்டி போனாலும்..
      எடிட்டர் "பக்கத்தில்"இருப்பவர் நீங்கதான்.. 😄😄.. 2பேரு உங்களுக்கு தான்..நீங்கதான்.. யுரேகா... "நேந்திரம் சிப்ஸ் " எனக்கு தான்...😄❤️...

      Delete
  7. ///Becos என் கண்ணில்பட்ட நம்பர்கள் - ப்ளூ கோட் பட்டாளம் & மேக் & ஜாக் வரிசைகளின் விற்பன சார்ந்தது ! ரொம்பவே ; ரொம்ப ரொம்பவே சுமார் !!! ///

    இது
    கவலைக்குரிய விஷயம்.
    வாசகர்களாய நாம்
    நமது சக்திக்கு தகுந்தாற்போல் வாங்கி
    நாம் விரும்பும் நபர்களுக்கு
    கொடுக்கலாம்.

    அப்படி
    என் சொந்த செலவில்
    நான் வாங்க விரும்பும் புத்தகம்

    "ஜூலியா" வின்

    நின்று போன நிமிடங்கள்

    ஸ்டாக்கில் உள்ள
    அனைத்து காப்பிகளும்

    ReplyDelete
    Replies
    1. நின்று போன நிமிடங்கள்...

      செம்ம கதை.!
      கீழே குதிச்சிருவானோன்னு தோணிக்கிட்டே இருக்கும்.!

      Delete
  8. ///Surprise of Chennai - என்று குறிப்பிடுவதாயின் அது நமது கேரட் மீசை கிளிப்டன் தான் !///

    எனக்கு லக்கி லூக் கை
    இந்த மீசை போலீஸ் தான்
    ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  9. ///பாக்கியுள்ள இளம் டைகர் சாகசங்களை தொடரும் ஆண்டுகளில் போட்டுத் தாக்கிடும் 'தகிரியம்' நமதாகிறது ! யாரங்கே...? தளபதியை சயனத்திலிருந்து தட்டி எழுப்பு !! ///

    இதே மாதிரி தொகுப்பாவே திட்டமிடுங்க சார்..!
    இந்த மேக்கிங்கும் வெற்றிக்கு ஒரு காரணம்.!

    ReplyDelete
  10. நண்பர் புன்னகை ஒளிர் சொன்ன மாதிரி..
    ஏதாவது ஒரு இதழை மொத்த ஸ்டாக்கையும் வாங்கிடணும்னு ஆசைப்பட்டா...

    நான் வாங்க விரும்புவது..

    *ஆர்டினின் ஆயுதம்*

    கிட் ஆர்டின் - கிடார் - டின் பெயர் குழப்பம்.. கச்சேரி கோட் வேர்ட்.. மேஸ்ட்ரோ பட்டம்.. கிரிமுரிகிரிமுரி.. ஹாஹாஹாஹாஹாஹா.ஹா. செம்ம கதை...😍😍😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. இந்த அப்ரோச்,
      எனக்கு ரொம்ப
      பிடிச்சிருக்கு...

      Delete
    2. இதெல்லாம் ரொம்ப ஓவருங்க..😂😂😂

      நம்ம சந்தோசத்துக்காக நாம வாங்குறோம்... இதுக்கெதுக்கு பட்டம்..கேடயமெல்லாம்..?!

      Delete
    3. Kid ஆர்டின் kannan

      நீங்க இன்னும்
      தூங்கலயா.
      நீங்களும் என்னை போல
      கல்யாணம் ஆகாதவரா...

      Delete
    4. நீங்க
      இப்படி சொல்லும் போது
      நா என்ன சொல்லுவேன் சொல்லுங்க.

      ஜூலியா
      மை ஃபேவரைட் ஹுரோ.

      Delete
    5. ///Kid ஆர்டின் kannan

      நீங்க இன்னும்
      தூங்கலயா.
      நீங்களும் என்னை போல
      கல்யாணம் ஆகாதவரா...///

      ஆமாங்கய்யா..

      உங்க ஊர் பக்கம் அடிக்காத... கொட்டாத.... முடியை புடிச்சி ஆட்டாத.. நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்கய்யா..!

      Delete
    6. ஆனா கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சுதுன்னா சகலத்தையும் ஆட்டிபுடுவார்....பாத்து....பாக்கியராஜ் படமொன்னிருக்கு பாக்க

      Delete
    7. ஹஹஹஹ...கிரிமுரிதான் ஆசிரியரின் மொழி பெயர்ப்புல டாப் வார்த்தை...தன்னால் சிரிச்சுகிட்டே இருப்பேன் ஆர்ட்டின்....வில்லன்கள் முகபாவனை அந்த கிரிமுரியால

      Delete
  11. ///புதுசாய் 2 தொடர்களுக்கு துண்டை விரித்த கையோடு ! நாம என்னிக்கு இண்டிகேட்டர்களுக்கேற்ப வண்டியோட்டி இருக்கோம் - இன்னிக்கு ஒழுங்குப பிள்ளை டிரைவராகிட ? ஒவ்வொரு தினமும் ஒரு பாடம் கற்றுத் தந்திடும் சூழலில், விற்பனைக்கும் - ரசனைக்கும் மத்தியில் ஒரு "கம்பி டான்ஸ்" ஆடப் பழகிக்குவோமா guys ? ///

    இது தான்
    இந்த வாரத்தில் சூப்பர் சங்கதி.
    வெளியான அந்த வேகத்திலேயே
    படிக்கிறோம்.
    கதையை அக்குவேறா
    ஆணிவேரா
    பிரிச்சு ஆயுறோம்.
    கையில காசு
    வாயில தோசை...

    ReplyDelete
  12. டிசம்பர் இதழ்களை படித்து முடிச்சாச்சு.

    சிஸ்கோ செம விறுவிறுப்பு. விலையில்லா டெக்ஸ் சிறுகதை என்றாலும் சிறுத்தையாய் சீறியது.

    விங் கமாண்டர் ஜார்ஜின் கதைகள் ஒவ்வொன்றும் அல்வாத் துண்டு. ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  13. ஜனவரி இதழ்களில் டின்டின் முடிச்சாச்சு. செம ரகளையான இதழ்.இதழ் மேக்கிங் நன்கு சுட்ட பார்பிக்யூ சிக்கனாய் மனதில் ஜலம் ஊற வைத்தது.

    வண்ண வேதாளர் கதையும் வண்ணமும் சபாஷ் போடவைத்தன.ஆனால் சித்திரங்கள் நன்கு வேக வைக்காத கிரில் சிக்கனாய் கொசகொசவென்று இருந்தன.

    லார்கோ இதழ் அமைப்பும் வண்ணமும் சித்திரங்களும் கதையும் நன்கு சுட்ட அல்பஹாம் சிக்கனாய் மொறுமொறுவென்று இருந்தன.

    தல டெக்ஸின் கண்ணீருக்கு நேரமில்லை மனதைத் தொட்ட தலைப்பு.கதையும் சித்திரங்களும் சபாஷ் போடவைத்தன. ஆனால் கதை தொடரும் என்று பாதியில் நிறுத்தியது அரை வேக்காட்டில் தந்தூரிச் சிக்கன் சாப்பிட்ட உணர்வைத் தந்தது.

    ReplyDelete
  14. ///// பேனா பிடித்துள்ள / பிடிக்கவுள்ள நண்பரின் பெயரில் 2 பெயர்களிருக்கும் and எங்களுக்கு நிரம்பவே அண்மையில் உள்ளவர் ! கண்டுபுடியுங்களேன் பார்ப்போம் - நேபாள ட்ரிப் இல்லாங்காட்டியும் நேந்திரங்காய் சிப்சாச்சும் பரிசுண்டு ! ///

    ஆதி தாமிரா

    ReplyDelete
    Replies
    1. அல்லது கார்த்திகை பாண்டியன்

      Delete
    2. செளந்திர பாண்டியன் (மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் சார்)

      Delete
    3. ///Nopes///

      யாரோ இங்கிலீஸ்காரர் போலிருக்கே...

      Delete
  15. டெக்ஸ் அட்டைப் படத்தில் மோரிஸ்கோ! அப்போ, அருமையான திகில் பட்டாசு வெயிட்டிங்!

    ReplyDelete
  16. சூப்பர் பதிவு சார்....அட்டை இது வரை வந்த கதைகளில் டாப்பிதே...அந்த அதிரடிச் சிவப்பும்.....அதாவது கீழ் வானம் மட்டுமா மேல் வானம் சிவக்கும்னு தூள் கிளப்ப....மோரிஸ் கோ டெக்ச காண ஆவல்....அடுத்த மாதம் பெரிய ஆர்வமில்லாமலிருக்க இந்த ஒரே அட்டை திடுதிப்பென உற்சாக வெள்ளத்த பாச்சுது


    நம்ம முதலாளி கதைல ஷேர் மார்கட்னு ஒதுக்கிட்டீங்களோ...சீக்கிரம் ஈரோட்டை தரலாமே அக்கதைகள....


    அந்த இரண்டு கதைத் தொடர்கள இப்பவே சொன்னா நிம்மதியா தூங்குவோமே...தூக்கம் போச்...


    தோர்கள் வருத்தமான விசயம்...மெதுமெதுவாக வாவது விக்க ஓடின் அருளட்டும்...வான்ஹாம்மேக்கு சோதனை ...வண்ணத்திலும் விறுவிறுப்பிலும் மாய லோகத்திலும் ...எதிர்காலத்திலும் டைம் மெசினோடு சுழலும் இக்கதை ஏதாவது மேஜிக் நிகழ்த்த ஓடின் மனசு வைக்கனும்

    ReplyDelete
  17. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. //ரொம்பவே இக்கட்டில் நிற்குமொரு prime நாயகர் - நம்ம பிரபஞ்சத்தின் புதல்வர் தான் ! மிகச் சரியாக ஒரு டஜன் டைட்டில்கள் கையிலிருக்க, வண்டியை தள்ளி விட்டுத், தள்ளி விட்டுத் தான் ஸ்டார்ட் செய்து வர வேண்டியுள்ளது ! புரியாத புதிர்களுள் பிரதானமானதென்பேன் - தோர்கலின் இந்த அற்புதத் தொடரின் slow movement//

      காலம் உறைந்து போன பள்ளதாக்கில் நடப்பது போல உள்ளது.

      நாமே மீண்டும் மீண்டும் ஓரோபோரஸ் மூலம் பின்னோக்கி பயணித்து திரும்பத் திரும்ப புத்தகங்களை வாங்க வேண்டும் போல...

      ஓடின்... ஒரு வழி காட்டப்பா...
      ஜெய் தோர்கல்!!

      Delete
    2. ஹஹஹா..வெற்றி வாய்ப்பு வாய்ப்பு நிச்சயம் என பட்சி சொல்லுது....இரத்தப் படலம் போல தேடப்படுவது உறுதி...

      Delete
  18. #20வது_திருப்பூர்_புத்தகத்_திருவிழா
    ஒரு பார்வை.....

    களை கட்டியது முத்து காமிக்ஸ் ஸ்டால்..
    25.1.24 ஆரம்ப நாளில் வெகு சுமாராக இருந்த வருகை, நேற்று 26.1.24 முதல் களை கட்ட துவங்கிவிட்டது.
    இன்றும் (27.1.24 ) மற்றும் நாளையும் (28.1.24)
    விடுமுறை தினங்கள் என்பதால்
    இன்னும் அதிக கூட்டம் வரும் என உறுதி.

    திருப்பூர் புத்தகத் திருவிழா எனும்போது,
    முதல் நாள் நேரமே சென்று புத்தகங்களை அடுக்க உதவுவது வழக்கம்.
    இந்த வருடம் முதல் நாள் (25.1.24) ஸ்டாலுக்கு நானும், Palladam Saravanakumar சார் என
    இருவரும் சென்ற போதே எங்களுக்கு காத்திருந்தது ஆச்சரியம் தான்.
    ஆம்,
    ஒரு சில ஸ்டால்கள் முழுமையடையாமலும்,
    பல ஸ்டால்கள் அரைகுறையாக நிற்க,
    நமது முத்து காமிக்ஸ் ஸ்டால் வருபவர்களை
    "வாங்க நாங்க ரெடி" என்பது போல வெகு அழகாக வரவேற்றது.

    விசியம் இதுதான்,
    24.1.24 அன்று மாலையே புத்தக பார்சல்கள் திருப்பூர் வந்துவிட்டது.
    வந்ததும் முதல் வேலையாக,
    ஆபிஸில் இருந்து அனுப்பிய உதவியாளருடன் கடகடவென புத்தகங்களை ஸ்டாலில் அடுக்கி அன்று மாலையே ரெடி செய்து விட்டார் நமது ஸ்டால் விற்பனையாளர் ஜோதி மேம். உதவியாளர் ஊருக்கு சென்றுவிட, ஜோதி மட்டுமே ஸ்டாலில் இருந்து எங்களை வரவேற்றார்.
    அன்றே ஸ்டாலில் விற்பனையும் திருப்தியாக இருந்தது.
    ஜோதி மேம்ன் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு என விசாரித்து விட்டு, ஏதாவது எமர்ஜென்சி இருந்தால் அழைக்க மொபைல் நம்பரையும் தந்துவிட்டோம்.

    நேற்று என்னால் ஸ்டாலுக்கு போக முடியவில்லை என்றாலும்,
    நண்பர் சரவணகுமார் உடன் ஸ்டாலில் இணைந்தது அன்பு நண்பர் Sivakumar Siva .
    எப்படியாவது ஏதாவது ஒரு காமிக்ஸையாவது ஸ்டாலுக்கு வருபவர்களை வாங்க வைத்துவிடுவார்.
    இரவு கடை மூடும்வரை உடனிருந்துள்ளார்.

    விற்பனை...
    இந்த முறையும் க்ளாசிக் மறு பதிப்புக்களை அள்ளிச் சென்றனர் வாசகர்கள்.
    இரும்புக் கை மாயாவி,
    விண்ணில் மறைந்த விமானங்கள்,
    ஜப்பானில் ஜானி நீரோ,
    இந்த மூன்றும் மறுபதிப்பாக வந்ததில்
    பலருக்கும் மகிழ்ச்சி.
    விட்டுபோன காமிக்ஸ் வாங்க வந்தவர்கள்,
    புதிதாக படிப்பவர்கள் என படு ஜோராக ஸ்டால் களை கட்டியது நேற்று.

    போன வருடம் போலவே,
    அதே வேலன் ஹோட்டல் வளாகம்,
    காங்கயம் ரோடு திருப்பூர்.
    முத்து காமிக்ஸ் ஸ்டால் நம்பர் 43.

    ReplyDelete
  19. தோர்கல் ...என்னவொரு அசாத்தியமான தொடர். விற்பனையில் சுணக்கம் தொடர்வது மனதை வருத்தச் செய்கிறது.

    ReplyDelete
  20. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  21. நானும் ஆஜர்.இன்று திருப்பூரிலும் அட்டெனன்ஸ்போடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க.. மதியம் மேல் ஸ்டாலில் இருப்பேன்

      Delete
  22. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  23. Phantom கதைகள் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவே B/W டில் கூட விலை குறைவாக , தனித்தனி கதைகளாக,phantom கதைகளை அதிகமாக வெளியிடுங்கள். புத்தகதிருவிழாவில் விற்பனை எண்ணிக்கையில் இவரும் அதிகமாக இருப்பார்.

    அதுபோல இரும்புக்கை மாயாவி இதுவரை வெளிவராத கதைகளை புத்தகவிழாக்களில் கொண்டு வரவும். முடிந்தால் சைத்தான் சிறுவர்களை கொண்டு வரவும்.

    Jhonny Nero கதை ,Jhonny in லண்டன் சூப்பர் ஹிட் கதை மறு பதிப்பு செய்யவும்.

    அடுத்து பெரிய ஈரோடு புத்தக திருவிழாக்களில் இதைப்போல் கனிசமான புத்தகங்களை போட்டு தாக்கவும்.

    Robot Archie சூப்பர் ஹிட் கதைகளை ஒன்று அல்லது இரண்டு மறு பதிப்பு செய்து திருவிழாக்களில் வெளியிடவும்.

    ReplyDelete
  24. Happy to hear that rin tin can and Clifton scored

    ReplyDelete
  25. சார் தளபதி...க்ளாசிக் கதைகளில் தகுதி வாய்ந்தத வண்ணத்ல விடுங்க சீக்கிரமா

    ReplyDelete
  26. Warm welcome to my favorite heros mayavi, largo and young tiger

    ReplyDelete
  27. மறுபதிப்பிட வேண்டிய புத்தகங்கள்:

    *இரும்புக்கை மாயாவி:*
    -பாதாள நகரம்
    -கொள்ளைக்காரப் பிசாசு

    *லாரன்ஸ் டேவிட்:*
    -பார்முலா X13
    -திசை மாறிய கப்பல்கள்

    *ஜானி நீரோ:*
    -மைக்ரோ அலைவரிசை-848
    - ஜானி in லண்டன்
    -கொலைகாரக் கலைஞன்

    ReplyDelete
  28. ஸ்பைடரின் சினிஸ்டர் செவன் இந்த சந்தோச தருணத்த சிறப்பிக்க....40 ஆண்டு கொண்டாட்டத்த புதுப்பிக்க கிளம்பிட வாய்ப்புண்டா...லார்கோ போலான வண்ணக்கலவைல....அவதார் போல வண்ணத்ல கலக்கிடும் விலங்குகள் போல

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் ஜுலை மாதத்த தள்ளி வர சாத்தியமில்லை யாருக்கும்...ஆண்டு மலர்கள மலரச் செய்தா மார்ச்சிலே ஜுலை ...வாய்ப்பாகும் காவலப்பயணம் நம்ம காமிக்சால காணப்படும் நமக்கே வாய்ந்த ஒன்றாருக்குமே

      Delete
  29. சார் அவர் சங்கர் செல்லப்பன் தானே

    ReplyDelete
  30. இரு தொடர்களில் ஒன்னு ஆஸ்ட்ரிக்சா...டின்டின்னோட போட்டி போட வேற யாரிருக்கா

    ReplyDelete
  31. இனிய காலை ஞாயிறு வணக்கங்கள்

    ReplyDelete
  32. முத்துவின் முதல் நாயகர் இன்னமும் டாப்.....செம, இதை எதிர் பார்க்கவில்லை

    டின்டின் ராக்ஸ், அருமை ஆசிரியரே
    டின்டின் பிறந்த மாதமான ஜனவரியில் டின்டின் தொடர்வது அருமையான முடிவு

    ReplyDelete
    Replies
    1. நமக்கு வருட ஆரம்பமே அதகளமாக அமைந்தும் போச்சு...

      Delete
  33. Replies
    1. இந்த முறை கோவையில் விற்று விடலாம் கடல் Don't worry.

      Delete
    2. ஜானியா சோடாவா என்ற போது சோடாவை தேர்வு செய்தேன்
      ஆனால் புத்தக விழாவில் ப்ரெஞ்ச் ரிப்போர்ட்டர் அளவுக்கு நியூயார்க் போலீஸ் டிடெக்டிவ் ஆக்ஷன் செய்ய மாட்டேங்கிறார், சாரி போலீஸ்காராரே

      Delete
    3. //இந்த முறை கோவையில் விற்று விடலாம் கடல் Don't worry.//

      😊😊😊😍😍

      Delete
    4. கோவையில் புத்தக suggestions கேட்கும்போது சோடாவையும் தோர்கல்லையும் எடுத்து குடுத்து விடுவேன் 😁😁😁

      Delete
  34. // திபெத்தில் டின்டின்" இதழை ஒரு blockbuster ஹிட் ரேஞ்சுக்கு இட்டுச் சென்றுள்ளது ! //
    அருமை,அருமை...

    ReplyDelete
  35. சென்னை புத்தக விழா புள்ளி விபரங்கள் அருமை சார்.

    தோர்கல் இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் இருப்பது வருத்தமே....

    ReplyDelete
  36. // becos அசைக்க இயலா முதலிடத்தில் இருப்பவர் 52 ஆண்டுகால ஜாம்பவானான இரும்புக்கை மாயாவி மாம்ஸ் தான் ! //
    எனக்கு End Card எப்போதும் இல்லை என்பதே இரும்புக் கையாரின் நிலைப்பாடு போலும்...

    ReplyDelete
  37. // மூன்றாவதாகவுமே ஒரு கௌபாய் இம்முறை தெறிக்க விட்டுள்ளார் - and அவர் தான் நம்ம 'தளபதி' !! //
    அடடே அருமை...

    // For sure - அடுத்த சென்னைப் புத்தக விழாவின் போது கணிசமான வேதாளர் இதழ்களை நம் அணிவகுப்பினில் பார்த்திடலாம் ! //
    அவ்...........

    ReplyDelete
  38. // லார்கோ இந்தாண்டினில் சுழற்றியடித்திருக்கிறார் விற்பனையில் ! //
    அருமை,அருமை...

    // Yes ; இம்முறை ரிப்போர்ட்டர் ஜானியின் எல்லா சாகசங்களுமே decent விற்பனை கண்டுள்ளன ! //
    ரிப்போர்ட்டரின் ரிப்போர்ட் டீசண்டாய் இருப்பது மகிழ்ச்சி...

    ReplyDelete
  39. தளபதி பட்டையை கிளப்பி விட்டார் என்ற செய்தி இன்பத் தேனாக காதில் பாய்கிறது.. இளம் டைகர் கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்ற செய்தியும் அட்டகாசம் தான்!!!!

    ReplyDelete
  40. // ஹார்ட்கவர் தொகுப்பில் இருந்த "ரிப் கிர்பி ஸ்பெஷல்-2" அட்டகாசமாய் விற்றுள்ளது ! //
    அடடே,சிறப்பு,சிறப்பு...

    // தோர்கலின் இந்த அற்புதத் தொடரின் slow movement !! //
    கவலை அளிக்கும் செய்தி...

    ReplyDelete
  41. லார்கோவும் ரவுசு பண்ணுகிறார் என்றால் கேட்கவும் வேண்டுமோ?

    ReplyDelete
  42. // So 2025 முதலாய் அடிக்கடி முன்பதிவுத் தடங்களில் தான் புதுவரவுகளையும், வித்தியாசமான ஜானர்களையும் பார்த்திட சாத்தியமாகும் போலும் ! இப்போதே அதற்கான திட்டமிடலை ஆரம்பிச்சாச்சு folks !! //
    அதிரடி மாற்றங்கள் நிகழப் போகின்றனவோ...!!!

    // புதுசாய் 2 தொடர்களுக்கு துண்டை விரித்த கையோடு ! //
    சிறப்பு,சிறப்பு...

    ReplyDelete
  43. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் களத்தில் டெக்ஸுடன் மோரிஸ்கோ கூட்டணியா அடடே ஆவலை எதிர்பார்க்கச் செய்கிறதே...

    ReplyDelete
  44. தோர்கல் புத்தகங்களுடன் என்னை ஒரு ஸ்வீட் கடையில் வைத்து பூட்டி விட்டால் ஒரு ஸ்வீட்டை கூட தொட்டுப் பார்க்க நேரம் இராது...தோர்கல்..தோர்கல்..தோர்கலே இனிப்பான இனிப்பு...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சாப்பிடும்போது காமிக்ஸ் படிக்கறது ரொம்பப் பிடிக்கும்! அதனால.. காமிக்ஸ் படிச்சுக்கிட்டே கடையையும் காலி பண்ணிடுவேன்!

      Delete
  45. திருப்பூர் புத்தக விழா சிறக்கவும்,நமது காமிக்ஸ் இதழ்கள் விற்பனை சிறக்கவும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  46. கதைகள்னாலே ஆச்சரியம்தானே....அதிலும் நாயகன் தன் சுயநலத்த துவங்கி தன் தேவைகளை மட்டும் நிறைவேத்திக் கொள்ளும் போது ....அடுத்தடுத்த கதைகளில் சூழல் மாறி அவன் மனதிலும் அன்பும் ...காதலும்...இருக்கிறதெனும் போது....நம்ம சிறுவயது முதல் இவன்தான் நல்லவன்னு ஒரு கோட்ட போட்டு அந்த கோட்ட ஒட்டியே போகும் போது...விலகலாம் அல்லது அதையொட்டியே தடுமாறியோ தடம் மாறியோ நாம் போனாலும் நாயகர்கள் அந்த கோட்டோடயே இருக்கும்னு மனம் எதிர்பார்க்க...விளைவு தூக்கியெறியபட்ட டயபாலிக்...சிஸ்கோ...முதல் கதைல தடுமாறிய இவர் இரண்டாம் கதைல பிடித்த இடத்த மூன்றாவது கதைல நச்சன்னு பிடிக்கிறார் காதலிக்காக போக விட்டு தவிக்கும் போதும்...தங்கைக்காக துடிக்கும் போதும்....


    கதையின் துவக்கமே கைகளை உரசி சூடுபடுத்த நினைக்கும் போதே வெடிகளை கொழுத்தி குளிர் காயும் பக்கங்களும்...அதுவும் துவக்கபக்கங்களில் அந்த பக்கங்களில் பனி படர்ந்து நிற்க அந்த வண்ணச்சேர்க்கை அவ்வுலகத்தை நம்ம வீட்டுக்குள்ளும் விரிக்கிறது...



    இந்த வரிகலுமே அசால்டாக....

    கேப்டன் இந்த வனாந்திரத்தில் ஈ காக்கா கூட இருப்பதில்லைதானே....பேசாம திரும்பிப் போய் விடலாமே....குளிரில் அத்தனையும் ஆடிப் போய் கிடக்குது..‌‌

    அப்படியானால் அடுத்த வேளை உனக்குச் செமத்தியாக ரசிக்கும்டா பையா...அடுப்பு மீது குத்த வச்சது போல சகலமும் ஜிவ்வென சூடாகிப் போகும் பாரேன்....

    என வரிகளும் வலைவிரிக்க குளிரிலும் ...எதிர்பார்ப்பு வெப்பத்தில் மூழ்கிப் போவதை தவிர்க்க இயலாது ரசிகர்களுக்கு...சூடு பிடிக்கத் துவங்கும் கதையானது நிக்காம பயணிக்குது....


    வெறும் உரையாடல்களால் அவ்வப்போது திடுக்கிடும் அதிரடியால்.....

    ஒரு செலவுமில்ல ஒரே பஸ்ல...ஒரே மலையேற்றத்ல...ஃபோன் பூத்த கதை விறுவிறுப்ப ஆர்வத்தை கடைசி வரை தருவத முடிவத... வியந்திருந்தா அதே போல் இக்கதயும்...



    நாடு விட்டு நாடு பாயும் கதைகள்....ஒரு நாட்டையே ஆட்டிப்படைக்கும் ஆயுத தளவாட வியாபாரிகள்....அவர்களுக்காக டிவியில் வரும் பேட்டிகள மாத்தி காணோம்னு பயணிக்கும் அரசியல்வியாதிகள நாம் இங்கேயும் பாத்தாலும் ....திட்டமிடல்கள்...நேர்த்தியாக எதையும் செய்யும்திட்டமிடும் கூலிக்/ங் கொலையாளிகள்...அதுவும் சிஸ்கோவுக்கிணையா திறமைசாலிகள் ...அந்த சாதாரண அல்பேனியா..அசாதாரண ஃபிரான்ஸ்..‌அமெரிக்கா என பறந்து ஸ்கெட்ச் போடும் காட்சிகள்....மனதைக் தொடும் சிஸ்கோவின் தங்கைப் பாசம்....கடத்தல்காரன விரட்டிப் பிடிக்க வெளிநாட்ல பாயும் சிஸ்கோவின் எதைப்பற்றியும் கவலையில்லா பாய்ச்சல்....

    அதிபர்....கடத்தல்முதலாளிகள்...அவர்களின் அடியாட்களோடு பாயும் உரையாடல்கள் மிரட்ட...சிஸ்கோவையும் தங்கய காட்டி மிரட்ட நம்மையும் விரட்டுகிறார்கள் ஈடுகொடுத்து வேகமா ஓடி வாங்கன்னு தொய்வு தராம

    ReplyDelete
    Replies
    1. எவ்ளோ அழகான வார்த்தை ஜாலம்....
      ஒரு கேள்வி...‌
      சார் ப்ளீஸ்...
      அவர்களோடு அமெரிக்க மண்ணிலே மோதும் எண்ணமுண்டா....

      செய்தியாளர் கேள்விக்கணையில் அந்த நாட்டில் ஃபிரான்ஸ் செய்தி தொடர்பாளரின் நேர்த்தியான அம்பு....

      பூமியின் எந்தவொரு முடுக்கில் இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்... ஆனால் அந்த முயற்ச்சியில் நாங்கள் தனித்து இல்லைதான்...இங்கே நியூயார்க்கில் உள்ள எங்களது அமெரிக்க சகாக்கள் உதவிடத் தயாராக உள்ளனர்...அவர்கள் மீது எங்களுக்கு பூரண நம்பிக்கையுள்ளது...



      பிணைக்கைதிகளை தேடும் விவகாரம் பற்றி சொல்ல முடியுமா..‌இதில் FBI களமிறங்காததேனோ....

      தேடல் இப்போதுதான் துவங்கியுள்ளது என்பதால் அது பற்றி பேசுவது சரிப்படாது...பொறுப்பேற்றிருப்பது யாராகயிருந்தாலுமே அமெரிக்க மண்ணில் எங்களுக்குத் தோள் கொடுக்கவிருக்கும் சகல ஏஜண்ட்களின் ஆற்றல்கள் மீதும் நம்பிக்கையுள்ளது...

      என்ன பொறுப்பான வார்த்தை ஜாலம்...இது போலவே கோர்வையாக பொறுப்பாய் சீறும் கதை....


      துவக்கத்தில் ஓவியங்கள் கூர்ந்து கவனிக்க ஆசிரியர் பணிக்க...மொழி பெயர்ப்பு ஜாலங்களில் நான் கூர்ந்து திளைக்க....

      சிஸ்கோவ சுட்டுத் தள்ளுமிடம் புரியாம நான் திகைத்து முன் பக்கங்கள் புரட்டி சிஸ்கோவ தொடருமிருவர ஓவியங்கள்ல திருப்பி ஒப்பிட பொருந்தாம விழிக்க...பிரசிண்ட சுடுவதாலயான்னு முழிக்க....படித்ததும் விமர்சனத்த கட்டுப்படுத்தி தள்ளிப் போட்டு மீண்டும் படிப்போம் இவ்வட்டகாச கதயன்னு தயங்க... சில நாள் கழித்து மீண்டும் படிக்க...அன்றய நாள் முழுக்க யூ ட்யூபில் திருச்சி வேலுச்சாமியோடு

      Delete
    2. தொடங்கியதால் ராஜீவ் கொலை வழக்குகள் நுழைய ...இரவு மறுவாசிப்பில் நுழைய பல விசயங்கள் யூ ட்யூபால் கதையை இன்னும் வேகப்படுத்த சிஸ்கோ நீரால் முகத்திலறய கனவுதான்ன சந்தேகம் உறுதிபட...


      பக்கம் 81 5ம் பேனல்...‌85...4 ம் பேனல்...91 ல எப்படி வரமுடிஞ்சதுன்னு சொல்ல...

      48 ம் பக்கம் கடத்திய கடத்தல்காரன் ...ஆட்டத்த வேற மாதிரி ஆடலாமோ என்னவோ என் அசால்டாக தம்ம பத்த வைத்து நம்ம பத்தவைக்க பதற வைக்க...அவனாடும் ஆட்டம் சிஸ்கோவ ஆட்டி வைக்க.....




      கடத்தல்காரன்....


      ஆனாலும் உன் தங்கச்சி செம ராங்கிதான்....என்னையே எதிர்த்து நிற்கும் துணிந்தவளுக்கு ஒரு சில விஷயங்களை "பட் பட் " டென்று புரிய வைக்க வேண்டியதாயிற்று...
      என நக்கலா சிஸ்கோவ சீண்ட
      அடேய் தெருப்பொறுக்கி பன்னாடை அவள் மீது உன் சுண்டுவிரல் பட்டிருந்தால் கூட உன் சாவு என் கையால் தான்....
      என சிஸ்கோ சீற...ஓங்கி அறைந்ததால் யாரும் செத்ததாக சரித்திரம் கிடையாது மிஸ்டர் அடங்கு என்னபன்னுவன்னு டெக்ஸ் போல திமிறி.. வார்த்தைகளால் கட்டிப் போடுமிடம் ஆசிரியரின் ஒரு பால் பல சிக்ஸர்கள் அந்தப் பேனாவிலிருந்து...கதையின் டாப் வரிகளுமிதே...

      இனி எழுதுனா படிக்காத நண்பர்களின் சுவாரஸ்ய எதிர்பார்ப்ப குறைச்சிடக் கூடாதென நழுவிப் செல்கிறேன்...சிஸ்கோ தங்கய மீட்டாரா...ஆயுத விற்பனையாளர்கள் ஆட்சியாளர்கள்...ஃபிரான்சிலும் ...அமெரிக்காவிலும் மிரட்ட...இதோ அந்த ஊடகங்கள்ல மக்கள் சந்தோஷப்படுத்தும் செய்திகள் போடச் சொல்றேன்னு மடைமாற்றுவது நம்ம ஊர் அரசியல்வாதிகள் பாத்த பிரம்மிப்போடு

      ...அவர்கள் கதைதான் என்னவாச்சு....அடுத்த பாகத்துடன் இதோட இணைச்சிருக்கலாமோங்ற கேள்வியோடு ...டிக்கின் கதையை படிக்கச் செல்கிறேன்

      Delete
  47. MYOMS அறிவிப்புக்கும் வெயிட்டிங் சார்!!!

    ReplyDelete
  48. அந்த மொழிபெயர்ப்பாளர் 'Dr. பால சுப்பிரமணி' என்பது என் யூகம்!!

    ReplyDelete
  49. புள்ளி விபரங்கள் அட்டகாசம் சார்! நிறையவே ஆச்சரியப்படுத்துகின்றன. தோர்கல், ப்ளூகோட்ஸ் உள்ளிட்ட சில சமாச்சாரங்கள் தவிர மற்றதெல்லாம் மகிழ்ச்சிகரமானதே!!

    அப்புறம் அந்த டெக்ஸ் அட்டைப்படம் - அந்த ரத்தச் சிவப்புப் பின்னணி - தலைப்பு - எல்லாமே வேற லெவல்!!

    ReplyDelete
  50. மொழிபெயர்ப்பாளர் Vikram

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பெயர்கள் இருக்கும்னு சொன்னாங்களே PfB...
      ஒருவேளை, வீட்ல அவரை விக் ரம்'னு கூப்பிடுவாய்ங்களோ?!!

      Delete
    2. இன்னொரு க்ளூ தர்றேன்...அவரது பின்னூட்டமும் இக்கட ; ஈ பதிவில உண்டு !

      Delete
    3. ஆங் கண்டு பிடிச்சுட்டேன்.. 'SURYA JEEVA'

      Delete
    4. ஆங் ...தப்பா கண்டுபுடிச்சிடீங்க !

      Delete
  51. 2025 இல் கார்ட்டூன் என்று தனிச் சந்தா வெளிவிடுவதாக இருந்தால் முதல் துண்டை நான் இப்பொழுது போட்டு வைக்கிறேன். எனக்கு ஒரு கார்ட்டூன் சந்தா பார்சல்.

    ReplyDelete
  52. ஒரு தோழனின் கதை தான் இப்போதைய சிவகார்த்திகேயன் படமாக இருக்குமோ? எழுத்துருவின் காரணமாக ஒரு தோழனின் கதை நான் படிக்கவில்லை. சிவகார்த்திகேயனின் படமும் பார்க்கவில்லை வெறும் டிரைலர் மட்டும்தான் பார்த்தேன். கதையைப் படித்தவர்கள் மற்றும் டிரைலரை பார்த்தவர்கள் இது பற்றி ஏதாவது கூறுங்கள்

    ReplyDelete
  53. ஏற்கனவே முத்து காமிக்ஸ் இல் 2000 களில் வெளியான மரண மாளிகைஎனும் ஜானியின் கதை தான்தற்போதைய பிக் பிரதர் பிக் பாஸ். என்ன பிக் பிரதமர் பிக் பாஸும் ஸ்கிரிப்ட்.

    ReplyDelete

  54. எடிட்டர் சாரின் இப் பதிவின் சாராம்சம் லார்கோவின் 'இரவின் எல்லையில்' பக்கம் 95- ல் ஒரு quote எனப் பொதிந்துள்ளது.
    "துறவியின் பூனை என்றென்றும் தூரமாய் போகாது". MONK'S CAT ALWAYS RETURNS. ட்வைட் கோஹ்ரேன் விஞ்ச் குழுமத்துடன் தொடர்ந்து இருப்பதாக சம்மதம் தெரிவிக்கும்போது இந்த உவமை சொல்லப்படுகிறது.

    கதை: ஒரு மடாலயத்தில் பல துறவிகள் வாழ்ந்து வந்தனர். காலை முதல் மாலை வரை தியானம் செய்வதே அவர்கள் வேலை. ஒருநாள் பூனையொன்று மடாலயத்தில் நுழைந்து விட்டது. தியானம் செய்து கொண்டிருந்த துறவிகளுக்கு தனது குறும்புகளால் பெரும் இடையூறு விளைவித்தது.
    மடாலயத் தலைவர் அப்பூனையை அங்கிருந்த ஆலமரத்தில் கட்டி வைக்கும்படி ஆணையிட்டார். மாலை
    வந்தவுடன் பூனையை அவிழ்த்து விடும்படி சொன்னார்.

    மறுநாள் காலையிலும் பூனை வந்தது. ஆலமரத்தில் கட்டப்பட்டு மாலை அவிழ்த்து விடப்பட்டது.பின் இதுவே வழக்கமாகி விட்டது. பூனையை சிலசமயம் காலையில் தேடிப்பிடித்து கட்டுவதும் இயல்பான ஒன்றாகிவிட்டது.( இடையில் வந்து ஊறு விளைவிக்கக் கூடாது என்பதற்காக)

    சிலகாலம் சென்றபின் மடாலயத் தலைவர் இறந்துவிட்டார்.ஆனால் பூனையைக் கட்டுவது தொடர்ந்தது.

    பல காலம் சென்றபின் அங்கிருந்த துறவிகள் சிலர் இறந்து போயினர்.பலர் வேறு மடாலயம் சென்றனர். புதிய துறவிகள் வந்தனர்.பூனை கட்டும்,அவிழ்க்கும் படலம் தொடர்ந்து கொண்டிருந்தது.

    ஒருநாள் அப்பூனை இறந்து விட்டது.
    துறவிகள் ஒன்று கூடி பேசி அருகில் உள்ள சந்தைக்குச் சென்று ஒரு பூனையை வாங்கி வந்து தியானம் காலையில் துவங்கு முன் அதை ஆல மரத்தில் கட்டி மாலையில் அவிழ்த்து விட்டனர். அதாவது காலையில் தியானம் துவங்குமுன் பூனையைக் கட்டுவது மரபாகி விட்டது.


    ReplyDelete
    Replies

    1. அதாவது காலையில் தியானத்துக்கு முன் பூனையைக் கட்டுவதென்பது அவசியம் என்ற நிலையைத் தாண்டி மடாலயத்துக்கு ஒரு மரபாகி விட்டது.
      கதை ஏன் என்ற கேள்வி கேட்க வேண்டும் என்பதை உணர்த்தினாலும் மடாலயத்தின் integerity -க்கு பூனையைக் கட்டுவது அவசியம் என்பதையும் சொல்ல முயல்கிறது.

      விஞ்ச் குழுமத்தில் பழமையின் பிரதிநிதியான ட்வைட் கோஹ்ரேன் குழுமத்தின் integerity - க்கு அவசியப்படுவது போலவே.

      மாயாவி, வேதாளர், ஸ்பைடர் போன்றவர்களும் லயன் குழுமத்தின் integerity - க்கு அவசியமானவர்களே. நாஸ்டாலஜியா என்ற நிலையையும் தாண்டி.

      The fire is burning ; but the cauldron is empty என J. k rowling சொல்வது போல தீ மூட்டியாகி விட்டது; அண்டா காலியாக கிடக்கிறது என்ற நிலை ஏற்படுமாயின் விற்பனையில் சாதிக்காவிட்டால் ஸோடா போன்றோரை முன்பதிவு தடத்தில் கொண்டு செல்வதில் யார் குற்றம் சொல்ல இயலும்?

      Delete
    2. வெல்கம் பேக் பொருளர் ஜி💐💐💐💐💐

      உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்....

      தங்களின் பதிவுகள் இனி

      Delete
    3. ..தளத்தை களை கட்டச் செய்யும்😍😍😍

      Delete
    4. ஹைய்யா.. சின்னத்தம்பி பாட ஆரம்பிச்சுட்டார்!!

      பூனைகள் பற்றிய கதை அட்டகாசம்ங்க செனா அனா!!

      Delete
    5. EV பூனையை கட்டி வைச்சா தளம் கலகலப்பா இருக்காது செனா அனா ஜி.
      இந்த பூனை எப்போதுமே சுதந்திரமா தி.

      Delete
    6. சுதந்திரமா திரியிட்டும்.

      Delete
    7. Sridharanrckz ji.. ஏற்கனவே அந்தப் பூனை ஒரு மார்க்கமாத்தான் திரிஞ்சுக்கிட்டிருக்கு! :)

      Delete
  55. ///பேனா பிடித்துள்ள / பிடிக்கவுள்ள நண்பரின் பெயரில் 2 பெயர்களிருக்கும் and எங்களுக்கு நிரம்பவே அண்மையில் உள்ளவர்///

    'அண்ணாச்சி ராதாகிருஷ்ணன்'

    இதுதான் சரியா ஒத்துப்போகுது!

    ReplyDelete
    Replies
    1. "மைதீன் அப்துல் காதர்"னா மூணு பேராகிடுது ! So அதுக்கும் சான்ஸ் லேது !

      Delete
  56. ///Lion Comics28 January 2024 at 10:29:00 GMT+5:30
    இன்னொரு க்ளூ தர்றேன்...அவரது பின்னூட்டமும் இக்கட ; ஈ பதிவில உண்டு////

    அட நம்ம ஷெரீப்பு..

    " மகேந்திரன் பரமசிவம் "

    தூரமாக உள்ளதை தான் அண்மையில் னு நையாண்டி பண்ணியுள்ளீர்களாங் சார்🤭🤣

    ReplyDelete
  57. //மகேந்திரன் பரமசிவம்// +1

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிலுக்கு சிப்ஸ் பாக்கெட் கவர் கூட பரிசா கிடைக்காது! :D

      Delete
    2. மார்கெட்டிலே வாழைக்காய் வாங்குற கவர் கூட பரிசா கிடைக்காது !

      Delete
    3. சார்.. வாழைப்பழத் தோலாவது பரிசா கொடுங்க சார். அதில்தான் விட்டமின்கள் அதிகமாம்!!

      Delete
  58. Replies
    1. டின்டினோட பயணம் போய்க்கினு இருக்கேன் சார் ; செமையாய் ஓடிட்டிருக்கு !

      அந்த flow தொடர்ற வரைக்கும் வண்டி ஓடட்டுமே ?!

      Delete
    2. அதாம்லே இது !

      அப்டின்னு பரணி சொல்லச்சொன்னார் !

      Delete
  59. என்னைப் பொருத்தவரை.. இந்த நேந்திரம்காய் சிப்ஸ் எல்லாம் ரவுண்டு பன்னின் அருகில் கூட நிற்கமுடியாது!
    'ரவுண்டு பன் பரிசு'ன்னு அறிவிப்பு வெளியாகியிருந்தால் மூனு நாளுக்கு முன்னாடியே பதிலைச் சொல்லியிருப்பேன்!

    நேந்திரங்காய் - புளிக்கி!

    ReplyDelete
    Replies
    1. அந்த ரவுண்டு பன்னு தலையில ஒளக்கு சாக்லெட்டை தடவி,சுத்துபுத்தும் சீனியும், வெண்ணையும் தடவி ஒரு doughnut இப்போ போடுறாங்க பாருங்க - எச்சில் ஒழுகியே கடை வாசலிலே தண்ணி தேங்கிடுது !

      Delete
    2. நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு சிவகாசியில் - பேக்கரிக்குப் பக்கத்திலேயே - குடியேறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லைன்னு தோனுதுங்க சார்!

      அப்போ நீங்க 'சமீபத்தில் சிவகாசிக்குக் குடியேறிய அந்த இரக்க சிந்தையுள்ளம் கொண்ட மொழிபெயர்ப்பாளர் யார்னு கண்டு பிடியுங்க பார்க்கலாம்'னு போட்டியெல்லாம் வச்சாலும் வப்பீங்க!

      Delete
  60. Replies
    1. அவர் ஈரோட்டுக்காரர்ங்க ஸ்டீல்!

      Delete
    2. ஈரோடு விஜய் : இதுகூட ரண்டு பெயர்கள் தானோ ?

      Delete
    3. அய்யா சாமீ.. நான் இந்த ஆட்டத்துக்கு வரலைங்க எடிட்டர் சார்! எனக்கு நாலு ரவுண்டு பன்னுகள் பரிசா கிடைச்சாப் போதும்!!

      Delete
  61. அந்த மொழி பெயர்ப்பாளர் பாம்பு பேரையும் மன்னர் பேரையும் ஒருங்கே கொண்ட மதுரக்காரராங்க.....

    ReplyDelete
    Replies
    1. அனகோண்டா அலெக்ஸாண்டர்?

      Delete
    2. வீரபாண்டிக் கோட்டையிலே ....
      மையிருட்டு வேளையிலே...

      சிப்ஸ் சத்தம் மனசைத் திருடியதே !

      Delete
    3. தேங்காய் எண்ணெயில வறுத்ததாங் சார்?

      Delete
  62. D e a r. E d i t o r. Siirrrrrrr
    //சாதித்துள்ள ஹீரோ # 4 : ரின்டின் கேன்

    Please allot just 1 book per year sir. Atleast as a bookfair special

    ReplyDelete
  63. நாகராஜ் சேதுபதி சாருங்களா

    ReplyDelete
    Replies
    1. நானும் அவரைதான் சந்தேக படுகிறேன்
      அவர் மதுரை, சிவகாசி பக்கம் தான்

      Delete
  64. வீரபாண்டியன் சார் .நீங்கள் ஆன்சர் சொல்லியிருக்கீங்களா .இல்ல க்ளூ குடுத்திருக்கீங்களாஉஙக க்ளூ வச்சு தான் நாகராஜ் சேதுபதின்னு சொல்லிருக்கேன்

    ReplyDelete
  65. இந்நேரம் அந்த சிப்ஸ் பாக்கெட்டை எடிட்டரே சாப்பிட ஆரம்பிச்சுருப்பார்னு தோனுது! :D

    ReplyDelete
  66. ///Lion Comics28 January 2024 at 10:29:00 GMT+5:30
    இன்னொரு க்ளூ தர்றேன்...அவரது பின்னூட்டமும் இக்கட ; ஈ பதிவில உண்டு////


    சிப்ஸ் பாக்கெட்டை அடிச்சாச்சி.. அது Inigo, தோர்கல் ரசிகர்...

    அவர் மொழி பெயர்ப்பில ஆர்வம் உள்ளவர்...

    ReplyDelete
  67. ராகவன்.. சிப்ஸ் பாக்கெட் எனக்கு
    தான்... பாருங்களேன்...எனக்கு சந்தேகமே இல்ல..அடிச்சு சொல்வேன்.. எங்க ஊரு "எல்லை
    முனியப்பன் " குறி சொல்லிட்டாரு.. மஹி தான் அது... "ஜக்கம்மாவும்" இப்படிதான் சொன்னாப்புல..
    சிப்ஸ் எனக்கே.. 😄😄❤️👍

    ReplyDelete
    Replies
    1. சாமீ.. கடவுளே.. யாருக்குப் பரிசு கிடைச்சாலும் கொரியர்ல போய் சேருவதற்கு முன்னால் எல்லா சிப்ஸையும் எறும்பு சாப்பிட்டிருக்கணும்!

      Delete
    2. வீரபாண்டியனாருக்கு ஒரு பார்சல்லல்!

      Delete
  68. சார்.. ஒரு டவுட்!
    டின்டின்னின் முதல் சாகஸம் நேபாள்ல நடக்கறமாதிரி இருப்பதால நீங்க நேபாள் பயணம் பரிசு அறிவிச்சிருக்கீங்க... ஓகே..!
    டின்டின் நிலாவுல போய் இறங்கி சாகஸம் பண்றாப்ல ஒரு கதை வரப்போகுதே.. அதுக்கு 'நிலவுப் பயணம் பேக்கேஜ் ட்ரிப்' பரிசு உண்டாங் சார்?

    நிலாவுல பத்துநாள் தங்கி பாட்டியுடன் வடை சுடும் பாக்கியம் கிடைக்கப்போகும் அந்த நண்பர் யாரோ?!!

    ReplyDelete
    Replies
    1. அதற்கு பதிலா நிலாவுக்கு போயிட்டு வந்த பாட்டி இங்கதான் இருக்காங்கனு அந்த வடை சுட்ட பாட்டி கடைக்கு அனுப்பிடறோம்
      ஓகே தானே சகோ

      Delete
    2. நம்ம டார்கெட் நிலா இல்லை; வடை தான்! வேளாவேளைக்கு வாய்நிறைய வடை கிடைச்சா எங்கே அனுப்பினாலும் சரிதான்!

      Delete
    3. Vijay @ ROFL. Seems to be in form after long time 😀

      Delete
    4. அந்தக் கதையிலே ஒரு sequence :

      புல்லா சரக்கடிச்சிட்டு மப்பில் இருக்கிற கேப்டன், ராக்கெட்டோட கதவைத் தெறந்துப்புட்டு விண்வெளியிலே வாக்கிங் போக நெனைப்பார் ! ஆனா பூமியை சுத்தி வர்ற நிலாவைப் போல ராக்கெட்டையே சுத்தி சுத்தி வர ஆரம்பிப்பாரு ! நிலா பயணம் போறவுகளுக்கு அந்த அனுபவமுமே உண்டாம் !

      பரால்லியா ?

      Delete
    5. பூமியில் சரக்கடிச்சாலே விண்வெளியில் மிதக்கறாப்ல இருக்கும். இதுல விண்வெளிக்கே போய் சரக்கடிச்சுட்டு அந்தரத்தில் மிதக்கும் கேப்டனின் அனுபவம் ரொம்பவே அலாதியானது தான்! ஒரிஜினல் கலாரசிகர் சார் அவர்!

      நீங்க எங்களை நிலாவுக்கெல்லாம் அனுப்ப வேண்டாம் சார்.. ஒரு பாட்டில் சரக்கை மட்டும் பரிசா அறிவிச்சுடுங்க. அதை யூஸ் பண்ணி நாங்க செவ்வாய், யுரேனஸ், சூரியன், பக்கத்து யுனிவர்ஸ்னு ஒரு ரவுண்டடிச்சுட்டு, அப்பல்லோ ஸ்பேஷ் ஷட்டில் இல்லாமலேயே அழகா பூமியில் வந்து லேண்ட் ஆகிடுவோம்!

      Delete
    6. ஆங் ...இப்புடி செய்யலாமா ?

      ஒரு பாட்டிலையும், ஒரேயொரு சுத்தியலையும் ஆத்துக்காரம்மாக்கள் பெயருக்கு கூரியரிலே அனுப்பிடுவோமாம் ! அவுக சுத்தியலைக் கொண்டு பாட்டிலையோ ; எதிர்படற கபாலத்தையோ ஓபன் பண்ணித் தந்திருவாங்களாம் !

      Delete
    7. ஆஹான்.. போட்டின்ற பேர்ல எங்க போட்டியை உருவப் பிளான் பண்றீங்களே எடிட்டர் சார்..

      Delete
  69. நேபாளத்துக்கு விட நேந்திரங்காய் சிப்ஸ் க்கு ரொம்ப போராட வேண்டிதா இருக்கே
    சரி இப்படி வருவோம்

    பேனா பிடிக்க இருப்பவரின் பெயர்
    Lion Comics

    ReplyDelete
    Replies
    1. அவர் சதா காலமும் பேனாவைப் பிடிச்சுக்கிட்டுத்தானே இருக்காரு சகோ?!!

      இதோ இப்பக்கூட பேனாவால் எழுதிக்கிட்டே சிப்ஸை கபளீகரம் பண்ணிக்கிட்டிருப்பாரு!

      Delete
    2. கொஞ்சம் லேட்டாக கவனித்தது, டெக்ஸ் அட்டைப்படம் சூப்பர்
      டிசைன் செய்தவங்களுக்கு பாராட்டுகள்
      எழுத்துகளின் பின்னனி டிசைன், நல்ல திங்கிங்

      Delete
    3. நானுமிப்பதா கவனிச்சேன் கடல்....அந்த பெரிய வௌவாலுக்குள்ள குட்டி குட்டி வௌவாலுக....கருநிற ரத்தமுறைய

      Delete
  70. Replies
    1. Kandu pudichiten athu enga allu


      கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்

      Vijayan sir, itha paidichittu sivakasiyai vittu odatheenga😊 ungal comics sevai enkaluku thevai😀

      Delete
  71. Pladam Saravanakumar or Kumar Salem or Arivarasu (a) Ravi 🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️

    ReplyDelete
  72. தோர்கல் கொஞ்சம் அடல்ட் கண்டன்ட் இருப்பதால் விற்பனையில் அடி வாங்கி இருக்கலாம்.



    ReplyDelete
    Replies
    1. தோர்கல் அடல்ட் கன்டென்ட்ன்னாக்கா சூப்பர் ஹிட்டடிச்ச "காலனின் காகிதத்தில்" இதழை என்னவென்பது நண்பரே ?

      Delete
    2. Adhu konjam adult content sir
      Idhu romba adult content sir

      Delete
  73. எனக்கு என்னவோ... "செந்தில் சத்யா" மேலே தான் சந்தேகமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சார் ...விடை தெரிந்து மதியப் பொழுதும் ஓடிப்புடிச்சி ! நீங்க ப்ரெஷா இப்போ கிளம்பி இருக்கீகளே ?

      Delete
    2. நம்ம ட்ரெயின் கொஞ்சம் லேட்டு போல ... (அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்)

      Delete
  74. பெரியண்ணன்.... இரும்புக்கை மாயாவி... மாடஸ்ட்டி 2.. பேரும்
    இன்னமும் விற்பனையில் top
    லிஸ்ட் ல இருப்பதை படித்து..
    நிஜமாவே மனசெல்லாம்
    "பட்டாம்பூச்சி " பறக்குதுங்க sir..
    சாதாரண விஷயம் அல்ல இது..
    என்ன சொல்றதுன்னே தெரியல.. வாழ்த்துக்கள்.. ❤️❤️👍🙏❤️❤️...

    ReplyDelete