Tuesday, January 10, 2023

தொடரும் ஒரு கனவு...!

நண்பர்களே,

வணக்கம். ஞாயிறும் சும்மா ஆயிரம்வாலா பட்டாசாய்ப் பொரிந்து தள்ளி விட்டது - சென்னைப் புத்தக விழாவினில் !! ஒரு கட்டத்தில் பில் போட்டு புக்ஸை வாங்கிப் போக நமது ஸ்டால் முன்னே பொறுமையாய் நின்ற நண்பர்களின் அணிவகுப்பு எனது ஆயுட்கால ஞாபகங்களுள் ஒன்றாய் இருக்குமென்பது சர்வ நிச்சயம் ! Was a stunning day ! வார இறுதியின் 2 நாட்களும் சுவையான கேக்காகிட, திங்கட்கிழமை அதன் மீதான செர்ரிப் பழமாகியுள்ளது - simply becos வாரத்தின் முதல் நாளில் பொதுவாகவே கூட்டம் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையை சுக்குநூறாக்கியுள்ளனர் சென்னை நண்பர்கள் ! Of course சனி, ஞாயிறின் விற்பனை நம்பர்களைத் தொட இயலாது தான் ; ஆனால் Monday was truly remarkable too !! வாரத்தின் துவக்க நாளினில் தொடச் சாத்தியமாகியுள்ள இந்த விற்பனையானது செம மெர்சலூட்டுகிறது !! ஏதோவொருவித கனவு கண்முன்னே நனவாகி வருவதான உணர்வோடு உலாற்றி வருகின்றேன் - உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகளுக்கும் எவ்விதம் கைமாறு செய்திடப் போகிறோமென்ற யோசனையுடன் !! 

ஆமா...ஆமா....ஸாகோர் பேரவைக்கு மாத்திரமன்றி, அனைவருக்குமே குஷியூட்டக் கூடிய COLOR ZAGOR கூடிய விரைவில் fast track செய்திடுவோம் தான் ! வாரயிறுதியின் பதிவினில் அது பற்றி எழுதுகிறேன் ! இப்போதைக்கு பிப்ரவரி பணிகளுக்குள் குதித்தாக வேண்டிய கட்டாயம் என்பதால் விசாலமான பதிவுக்கு இந்த நொடியினில் அவகாசமில்லை people !! பார்த்திருக்க தேதி ஜனவரி 10 ஆகியிருக்க, மண்டைக்குள் பிப்ரவரி சார்ந்த அலாரம் உரக்க ஒலிக்கத் துவங்கியாச்சு ! So அதற்கான நேரத்தினைத் துண்டு போட வழியில்லை என்பதால் இப்போதைக்கு கிளம்புகிறேன் - "தரைக்கு வந்த வானம்" என்ன சொல்கிறதென்று பார்க்க ! 

Bye all ....."எல்லாம் அழகே " & "என்றென்றும்  எலியப்பா" இப்போது ரெடியப்பா ! வியாழன் or வெள்ளி முதல் சென்னையில் நமது ஸ்டாலில் கிடைக்க வேணும் ! See you around all !


மாயாவி மறுபதிப்புகள் ஏற்கனவே ஸ்டாலில் உள்ளன !



















171 comments:

  1. Replies
    1. Sorry sir, இப்பதான் உங்க மெஸேஜ் படிச்சேன். Thank u

      Delete
  2. பதிவை படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  3. Happy to see the celebrations sir. Planning to visit on Thursday.

    ReplyDelete
  4. சென்னையில் நமது காமிக்ஸ் புத்தகம் விற்பனை செய்தி மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. தொடரட்டும் இது போன்ற விற்பனை இந்த புத்தகத் திருவிழா முழுவதும்.

    ReplyDelete
  5. புத்தகத் திருவிழா படங்கள் அனைத்தும் சிறப்பு மனதை வானத்தில் பறக்க செய்கிறது

    ReplyDelete
  6. அடடே அருமை அருமை. நல்ல செய்திகள். பாஸிட்டிவ் எனர்ஜி.

    தரைக்கு வந்த வானம் இந்த வருடம் நான் மிகவும் எதிர்பார்க்கும் புத்கங்களில் ஒன்று.

    ஸாகோர் கலர் இதழ் அறிவிப்புக்கு ஆவலுடன்.

    என்றென்றும் எலியப்பா வாரே வா...

    அடுத்த வாரம் மினி டைலன் வந்து விடும் என்ற எதிர்பார்ப்புடன்.

    ReplyDelete
    Replies
    1. ////தரைக்கு வந்த வானம் இந்த வருடம் நான் மிகவும் எதிர்பார்க்கும் புத்கங்களில் ஒன்று.///

      மீ டூஊஊஊ!!

      Delete
  7. ஸ்மர்ப்வுடன் சுட்டி கூட்டம் படம் மிகச்சிறப்பு.சீக்கிரம் ஒரு புதிய ஸ்மர்ப் கதையை வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  8. என்றென்றும் எலியப்பாவில் புதிய கதைகள் உண்டா சார்?

    ReplyDelete
  9. கடந்த வாரம் நீங்கள் நமது ஸ்டாலுக்கு விஜயம் செய்தது போல் இந்த வாரம் நமது விக்ரம் அவர்களை நமது ஸ்டாலுக்கு தனியாக விஜயம் செய்ய வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவருக்கு இன்னும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் PfB!! நான் நினைச்சேன் - நீங்க சொல்லிட்டீங்க!! ஸ்டாலில்/விற்பனையில்/மக்களின் ரசணைகளில் இருக்கும் நிறைகுறைகளை அலசி ஆராய விக்ரமுக்கு இதுவொரு நல்ல பயிற்சிப் பட்டறையாக அமைந்திடும்!!

      Delete
    2. // ஸ்டாலில்/விற்பனையில்/மக்களின் ரசணைகளில் இருக்கும் நிறைகுறைகளை அலசி ஆராய விக்ரமுக்கு இதுவொரு நல்ல பயிற்சிப் பட்டறையாக அமைந்திடும்!! //

      YES! YES!!

      Delete
  10. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  11. அடடே!! நம்ம எடிட்டரை ராஜ் டிவி'யில் பேட்டியும் எடுத்திருக்கிறார்களா?!! செம செம!! யாருக்காவது லிங்க் கிடைத்தால் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே!!

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  13. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  14. ////ஏதோவொருவித கனவு கண்முன்னே நனவாகி வருவதான உணர்வோடு உலாற்றி வருகின்றேன் - ///

    உங்கள் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தை வந்திருப்பது நிஜமாகவே ஒரு பரவசத்தை ஏற்படுத்துகிறது எடிட்டர் சார்!!

    சுமார் 12 வருடங்களுக்கு முன்பு நீங்கள் எடுத்த சில தைரியமான முடிவுகளே இதற்குக் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து சார்!

    ReplyDelete
  15. ///ஒரு கட்டத்தில் பில் போட்டு புக்ஸை வாங்கிப் போக நமது ஸ்டால் முன்னே பொறுமையாய் நின்ற நண்பர்களின் அணிவகுப்பு எனது ஆயுட்கால ஞாபகங்களுள் ஒன்றாய் இருக்குமென்பது சர்வ நிச்சயம் ////


    அட்டகாசம் அட்டகாசம்!!

    இதெல்லாம் சென்னைக்கு மட்டுமே சாத்தியமாகிடும் சங்கதிகள்!! இனிவரும் காலங்களில் மற்ற ஊர்களிலும் இதுபோல நிகழ்திட புனித மனிடோ துணையிருக்கட்டும்!

    ReplyDelete
  16. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  17. கையில் ஸ்மர்ஃப் புத்தகங்களுடன் நின்றிடும் சிறுவர்களின் அணிவகுப்பு - கண்கொள்ளாக் காட்சி!! நண்பர் ப்ளூபெர்ரியின் இந்த ஏற்பாடு அட்டகாசம்!!

    ReplyDelete
    Replies
    1. // நண்பர் ப்ளூபெர்ரியின் இந்த ஏற்பாடு அட்டகாசம்!! //

      Good job @ ப்ளூபெர்ரி

      Delete
  18. விற்பனை சிறப்பது மகிழ்சியளிக்கிறது இதுவே தொடர்ந்து விற்பனை தூள் கிளப்பி தங்களின் கூடோன் பாரம் குறைய எல்லாம் வல்ல இறைவனை வழிபடுகிறேன்

    ReplyDelete
  19. ///உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகளுக்கும் எவ்விதம் கைமாறு செய்திடப் போகிறோமென்ற யோசனையுடன் !! ///

    எழுதிக்கோங்க சார்..

    1. இப்போதுபோலவே தரமான கதையம்சத்தோடு மாதம் 4 புத்தகங்கள்

    2. வாரம் ஒரு பதிவு. அவ்வப்போது உப பதிவு!

    3. வருடம் ஒருமுறை வாசகர் சந்திப்பு!


    அவ்ளோதான்!! இதான் எங்களோட minimum requirements!

    இதற்குமேல் நீங்கள் கொடுக்கும் எல்லாமே எங்களுக்கு குஷியான போனஸ் சமாச்சாரங்களே!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் EV இதை விட வேறு என்ன வேணும்+1000

      Delete
    2. Appuram 2 V comics extra - so total 6 books :-)

      Delete
    3. ///Appuram 2 V comics///

      நான் சொல்லியிருப்பது லயன்-முத்து எடிட்டருக்கு மட்டுமே ராக் ஜி!

      V-comics தனீஈஈ கணக்கு!
      மாதம் 2 புக்கு!
      அதுல ஒன்னு கார்ட்டூன்!
      3 மாசத்துக்கு ஒரு தபா - ஒரு கி.நா!
      வருசத்துக்கு ரெண்டு தபா - குண்டு புக்!
      வாசகர்களை ஒருங்கிணைப்பதில் உயர்தரத்தில் ஒரு android app!!

      V-காமிக்ஸ் எடிட்டர் சீக்கிரமே ஒரு premium cartoon packageக்கான pre-booking ஐ அறிவித்தால் மகிழ்வேன்! (899 எடிட்டரின் மைன்டு வாய்ஸ் : 'குண்டுப்பயபுள்ள எப்படி கோர்த்துவிடுது பாரு')

      Delete
  20. @Edi Sir..😍😘

    திருவிழாவில் குத்தாட்டம் போட்ட ஜாகோர் பேரவையினரின் போட்டோக்கள் ஒன்று கூட வெளியிடாததை
    ஜம்பிங் செய்து கண்டனத்தை பதிவு செய்கிறோம்.😘😘

    ReplyDelete
  21. ஹாட்ரிக் அடிச்சாச்சுங்களா சென்னையில்.... செம...செம் மகிழ்ச்சியான செய்திங் சார்....😍

    தொடர்ச்சியாக நல்லபடியாக அமையட்டும் பெருந தேவன் மனிடோ அருளோடு....

    ReplyDelete
  22. கோடலி பத்திரம்
    புதுத் தலைவரே..!

    ReplyDelete
  23. Super sales in Chennai - makes me very happy editor sir...

    ReplyDelete
  24. ஆமா...செதுக்கிட போகுது....🤪

    ReplyDelete
  25. சூப்பர் சார்....லட்சம் பிரதிகளை மீண்டும் தொட செந்தூரான் அருளட்டும்....எல்லாம் அழகே வீட்டுக்கு எப்ப அனுப்புவீங்க...உற்சாகம் தெறிக்கும் புகைப்படங்கள்....அட்டைப் படம் சூப்பர்....இது வரை வந்த குழந்தை கதைகள்ல டாப்

    ReplyDelete
  26. எல்லா குழந்தைக கைக்கும் இது போல் ஸ்மர்ஃப் கிடைக்கனும்...நமக்குமே....கலர் சாகோர் பொங்கல் ஸ்பெஷலா வந்தா சூப்பர்தா....

    ReplyDelete
  27. விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற வாசக நண்பர்களுக்கு, உங்கள் பதிவும்,
    கலந்து கொண்ட நண்பர்களின் ஃபோட்டோக்களும் பெரும் உற்சாகம்.
    காமிக்ஸ் வெளிவருவதையும், படிக்க வேண்டும் என்ற ஆவல் மற்றவர்களுக்கு வரவேண்டும் என்,
    "ராஜ் டிவி"பேட்டிக்கு உதவிய அன்பு நண்பரும், காமிக்ஸ் காதலருமான நாமக்கல் ஸ்ரீ சாய்பாபு (ஸாகோர் கோடாலி ஜி)க்கு பாராட்டுக்கள் 💐❤️💐
    உண்மையில் இந்த விசியம் லயன் காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விடயம். ரெம்ப ரெம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
    இந்த ஆண்டு நமது காமிக்ஸ் நல்ல முன்னேற்றம் காண்பதற்கு நல்ல ஆரம்பம் இந்த சென்னை புத்தக விழா.
    மீண்டும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்
    "ஸாகோர் ஜி".❤️💐❤️.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்!!

      காமிக்ஸுக்காண்டி இதுபோன்ற சிறப்பான செயல்களில் ஈடுபட்டு வரும் கோடாலி ஜி (எ) ஜம்ப்பிங் ஜி (எ) பாபு ஜிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்! (பிடியுங்கள் ஒரு மானசீக பூங்கொத்தை!)

      கூடவே, அண்ணாச்சி ராதாகிருஷ்ணனுக்கு வேஷ்டி-சட்டை பரிசளித்தும் மகிழ வைத்திருக்கிறார்!!

      (ஜம்ப்பிங் ஸ்டாரை விடவும் ஜம்ப்பிங் தலைவர் ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே?!!)

      Delete
    2. பாபு-ஜிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

      Delete
  28. பில் போட வரிசைகட்டி நின்ற வாசகர்களின் கண்கொள்ளாக் காட்சி அனைத்து புத்தக விழாக்களிலும் தொடர பெருந்தேவன் புனித மனிடோவை வேண்டுகிறேன் .கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  29. *** மைக் ஹேம்மர் தூள் பறத்தும் *** மரணம் சொன்ன இரவு *****

    சொத்துக்காகவும், இன்சூரன்ஸ் பணத்துக்காகவும் தன் கணவனையே ஆள்வைத்து போட்டுத்தள்ளிவிட்டு, தன் கணவரின் நண்பரான மைக் ஹேம்மரிடமே சரசமாட முயற்சித்திடும் ஒரு பெண்ணை நம் புது டிடெக்டிவ் மைக் ஹேம்மர் போட்டுத்தள்ளுவதில் ஆரம்பிக்கிறது கதை!!

    'அட! பரவாயில்லையே!' என்று பக்கங்களை புரட்டினால் இரவுநேர சூதாட்ட கிளப்புகள், மைக் ஹேம்மரின் அடாவடிகள், நொடி நேரத்தில் பறிபோகும் உயிர்கள் என்று ஒரு பழைய ஆங்கிலப் படத்தைப் புரிந்தும் புரியாமலும் பார்ப்பது போன்ற உணர்வு!

    ஆனால் அந்த உணர்வு அடுத்த சிலபல பக்கங்களுக்கு மட்டும் தான்! அப்புறம் தீயாய் தெறிக்கிறது கதையும், வண்ணக் கலவைகளும்!! யூகித்துவிடக்கூடிய க்ளைமாக்ஸ் தான் என்றாலும், கதை நகர்த்தப்பட்ட விதத்தில் ஒரு தனித்துவத்தைக் காட்டி இறுதியில் 'வாவ்! தூள் பண்ணிட்டேப்பா மைக் ஹேம்மர்' என்று மனசுக்குள் ஒரு விசிலடிக்க வைத்திருக்கிறார்கள்!!

    ஆரம்பப் பக்கங்களில் இரண்டாமாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் போன்ற தோற்றத்துடன் (அந்த மழைக்கோட்டும், தொப்பியும் தான் காரணம்) வந்து ஓவர் அலப்பறை செய்யும் மைக் ஹேம்மரைப் பார்த்தால் 'இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையாப்பா' என்று நினைக்கத் தோன்றுகிறது! ஆனால் பிற்பாடு அவரது குணாதிசயங்கள் நமக்குப் பழகிப் போய்விட 'யோவ் ஹேம்மரு.. பட்டையக்கிளப்புறேப்பா நீயி' என்றாகிவிடுகிறது!

    ஆக்ஸன் காட்சிகளுக்கு நிகராக படுக்கையறைக் காட்சிகளும் உண்டு! ஆனால் எல்லாமே பெரியசைஸ் டயலாக் பலூன்களால் கச்சிதமாக மறைக்கப்பட்டு - பாராட்டுவதா அல்லது திட்டுவதா என்ற குழப்பத்தில் நம்மை ஆழ்த்துகிறது!

    சித்திரங்கள் - பூசி மொழுகிய வண்ணங்களால் ஜொலித்தாலும் உயிரோட்டமாய் அமையாமல் போனது ஒரு மைனஸ் பாயிண்ட்! அழகுப் பெண்களாகட்டும்; அழிசாட்டியம் செய்திடும் ரவுடிகளாகட்டும் - யாருடைய கண்ணிலும் ஜீவனே இல்லை!!

    'இந்தக் கதை பிடித்திருக்கிறதா... மைக் ஹேம்மர் உங்களை கவர்ந்துவிட்டாரா..?' என்று யாரேனும் என்னிடம் கேட்டால் 'கொஞ்சம் யோசித்து நாளைக்கு பதில் சொல்கிறேனே?' என்பதுதான் என்னுடைய பதிலாக இருந்திடும்!

    மைக் ஹேம்மர் - இப்போதைக்கு மதில்மேல் மியாவ்!

    9/10

    ReplyDelete
    Replies
    1. /* சித்திரங்கள் - பூசி மொழுகிய வண்ணங்களால் ஜொலித்தாலும் உயிரோட்டமாய் அமையாமல் போனது ஒரு மைனஸ் பாயிண்ட்! அழகுப் பெண்களாகட்டும்; அழிசாட்டியம் செய்திடும் ரவுடிகளாகட்டும் - யாருடைய கண்ணிலும் ஜீவனே இல்லை!! */

      Exactly my feelings - it was like reading a comics full of zombies !!

      Delete
    2. No EV. look at the artwork. Have we ever seen such artwork after 'deva ragasiyam thedalukkalla', some graphic novel with Dalai lama as it's centre. This graphic novel has such excellent artwork. It's more than a movie script or storyboard.

      The author Mackey Spillane is like our writer rajeshkumar. Pulp fiction writer.

      The comic we got is nothing but a storyboard of that novel.

      We should have lots of storyboard s like this.

      Delete
    3. டாக்டர் சாப்..

      சிலவருடங்களுக்கு முன்பு சென்னையில் எழுத்தாளர் ராஜேஷ்குமாரை எதேட்சையாகச் சந்தித்தேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "ஆரம்ப நாட்களில் வெளியான க்ரைம் நாவலின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் படித்திருக்கிறேன் என்றும் தற்போது க்ரைம்நாவல் உள்ளிட்ட எந்த நாவல்களையும் படிப்பதற்கான நேரம் & சூழ்நிலை அமைவதில்லை" என்றும் அவரிடம் கூறினேன். அவர் அந்த மாதம் வெளிவந்திருந்த ஏதோ ஒரு கதையின் தலைப்பைச் சொல்லி "இந்தக் கதையை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் விஜய். படித்தபின்னே உங்கள் கருத்துகளை என்னிடம் நீங்கள் அவசியம் பகிர்த்துகொள்ள வேண்டும்" என்றவாறே தனது பர்சனல் நம்பரையும் கொடுத்தார். "கண்டிப்பாக சார்" என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டேன்.. அடுத்த நாளே அந்தப் புத்தகத்தை கடையில் வாங்கினேன் ( கதையின் தலைப்பு மறத்துவிட்டது). ஆனால் எத்தனை முயற்சித்தும் இரண்டு அத்தியாயங்களைக் கூட என்னால் தாண்ட முடியவில்லை!! அந்த எழுத்துக்களாகட்டும்; வசனப் பிரயோகங்களாகட்டும் - ஏனோ என்னை மேற்கொண்டு படிக்கவிடவில்லை!! கதையை முழுதாகப் படிக்காத காரணத்தால் அதன்பிறகு அவருக்கு ஃபோன் செய்யவும் இல்லை!!

      முன்பு ஸ்பைடரின் வெறியனாக இருந்த நான் - ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அக்கதைகளை காமெடியாக மட்டுமே படிக்க நேர்ந்தது. அதைப் போலவே ராஜேஷ்குமார் கதைகளும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு என் ரசணைக்கு செட் ஆகவில்லை!!

      இதோ, மிகச் சமீப வருடங்களில் வெளியான 'தனியொருவன்' லோன் ரேஞ்சரின் கதைகளைக்கூட நான் டவுசர் போட்டிருந்த நாட்களில் படிக்க நேரிட்டிருந்தால் ஒரு கறுப்பு ரிப்பனில் இரண்டு ஓட்டைகளைப் போட்டு கண்ணில் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கி ரவுசு பண்ணியிருப்பேன் என்பது உறுதி! ஆனால் இந்தக் காலகட்டத்தில் அதை படிக்க முடியவில்லையே!!

      இந்தமாதம் வெளியாகியிருக்கும் மைக் ஹேம்மரின் சித்திரங்களும், கலரிங் பாணியும் எனக்குப் பிடித்தே இருக்கிறது. ஆனால் சித்திரங்களில் ஒரு ஜீவன் இல்லாமல் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டியிருக்கிறேன் (காமிக்லவர் ராகவனும் இதையே சுட்டிக்காட்டியிருக்கிறார்)

      கதையைப் படித்துவிட்டு கருத்துச் சொன்ன நண்பர்களில் சிலர் இக்கதை தனக்கு ரொம்பப் பிடித்திருப்பதாகவும், வேறு சிலர் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். என்னளவில், இன்னும் ஓரிரு கதைகளைப் படித்தபிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும்!

      Delete
    4. அட .. 2000ம் ஆண்டு உறவினரான ஒரு பத்திரிகை ஆசிரியரை சந்திக்கச் சென்று அப்போது அங்கே இருந்த திரு ராஜேஷ்குமாரை சந்தித்தபோது நானுமே அவரது முதல் 100 கோல்டன் crime நாவல்களை சிலாகித்தேன். ஆனால் சமீபத்தில் திரு அசோகன் அவர்கள் அந்த கோல்டன் series மறுபதிப்பு செய்து வருகிறார். தொடர்பு கொண்டு வாங்கி படித்த பொது - 30 பக்கங்கள் தாண்ட முடியவில்லை ! இதே எண்ணம் தான் மைக் ஹெம்மர் படிக்கும்போதும் தலை தூக்கியது EV !

      அனால் ஒன்று - ராஜேஷ் குமார் மறுபதிப்புக்கள் சூப்பர் டூப்பர் ஹிட்ஸே !! (நமது மாயாவி மாமா மாதிரி)!! நாம் கடந்துவிட்டோம் .. அவ்வளவே !

      Delete
    5. ///சமீபத்தில் திரு அசோகன் அவர்கள் அந்த கோல்டன் series மறுபதிப்பு செய்து வருகிறார். தொடர்பு கொண்டு வாங்கி படித்த பொது - 30 பக்கங்கள் தாண்ட முடியவில்லை ///

      நானுமே ஆர்வமாக வாங்கினேன். ஆனால் ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு கதையை மட்டுமே படிக்க முடிந்தது!

      ///நாம் கடந்துவிட்டோம் .. அவ்வளவே !///

      யெஸ்!! அதை உறுதிப்படுத்திக்கொண்டேன்!! :)

      Delete
  30. வணக்கம் சார். ஒரே ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியுமா?

    டிடெக்டிவ் சார்லி எந்த மாதிரியான சைஸில் வரவுள்ளார் ? மாடஸ்டி சைஸிலா ? இல்லை பிற S60 நாயகர்கள் சைஸிலா ? மக்கள் எதற்கு ஆதரவு தெரிவித்தனர் ?

    ReplyDelete
    Replies
    1. At least 50% support was for regular S60 size only - so Editor may not change the size, is my feeling. Let us see.

      Delete
  31. சூப்பர் சென்னை..

    வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  32. சென்னை பு வி

    சென்னை செம புத்தக திருவிழா.

    ReplyDelete
    Replies
    1. மைக் ஹேமர்...

      அருமை அருமை அருமை.

      ஒரே ஸ்பீடு.

      ஸ்பீடோ ஸ்பீடு.

      என்னன்னா
      கொஞ்ச நாளைக்கி முந்தி வந்த ஒரே பிரெஞ்ச் கதையை ஞாபகப்படுத்தினாலும் இது தனி ரகம்.
      அதுல செனட்டரப் போட்டுத் தள்றதப் பாத்துட்டவனைப் போட்டுத்தள்ள தொரத்துற ஸ்பீடுன்னா இதுல யாருட்ட பத்துமில்லியன்னு தெரியாம போட்டுத் தள்றாரூ ஹேமர்.

      படங்கள் அருமை.தனியொரு ரகமாக பரிமளிக்கிறது.

      மின்னல் வேகத்தில் கதை நகர்கிறது.

      நொண்டிச் பிச்சை கேப்டன
      யாரோ போட்டுத் தள்னதும் சுதாரிச்சிக்கிறாரு ஹேமர்.

      அது யாராக இருக்கும்ங்கிறது தான் கதையின் திருப்பம்.

      இறுதியில் நயவஞ்சக நாடகமாடிய அந்த எதிரி பணத்தோடே கம்பி நீட்டியதும் தான் யூகம் நிரூபணமாகிறது.

      எமலோகம் வரை சென்று திரும்பும் மைக் ஹேமர் எப்படி வில்லியின் இருப்பிடம் கண்டறிந்தார் என்பது நுணுக்கம்.


      மின்னல் என்பது கூட இவரது வேகத்தில் தோற்றுவிடும்.

      சித்திரங்கள் தனிரகம்.

      திரைப் படமாக எடுத்தால் அந்த நீலாம்பரியாக நடிப்பவருக்கு நிச்சயமாக நல்ல விருது கிடைக்கும்....


      Delete
    2. முதலில் இரண்டு அல்லக் கைகளை எப்படி சட்டத்தில் சிக்காமல் போட்டுத் தள்ளுகிறார் மைக் ஹேமர் சூப்பரப்பு...

      Delete
    3. கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் இதை எதிர்பார்க்கலாம்

      Delete
  33. மைக் ஹேமரின் அடுத்த சாகசம் என்னங்க எடிட்டர் சார்.

    எப்பொழுது...

    ReplyDelete
    Replies
    1. மைக் ஹேமர் ரசிக்க எனக்கும் ஒரு துணை கிட்டியாச்சு.நன்றி J சார்.

      Delete
    2. எச்சூஸ்மீ சார்.நானும கூட ஏற்கெனவே மைக் ஹேம்மருக்கு லைக் போட்டவனாக்கும்

      Delete
    3. வாங்க பத்து சார். நம்ம கூட்டணில இணைந்துவிட்டீர்களா ,? ரைட்டு...நன்றி.

      Delete
    4. அப்படியே 'ஜல்சா ஸ்டார்' மைக் ஹேம்மருக்கும் ஒரு பேரவை, சங்கம்'னு ஆரம்பிச்சுட்டீங்கன்னா எடிட்டருங்க (ஆமா ப்ளூரல் தான்) கிட்டே கேட்டு தனித்தடம், தனி சந்தான்னு கோரிக்கை வச்சுடலாம்!

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது ஈவி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பத்து ஜி! மைக் ஹேமர் வந்ததுக்கப்புறம் இப்படியாகிடுச்சு! யாரைப் பார்த்தாலும் போட்டுத்தள்ளணும் போல இருக்கு!

      Delete
    2. ஏங்க என்னை உசுப்பேத்துரீங்க. நா சும்மாவே சாமி ஆடுவேன். எ டெம்பர இப்படி உசுப்பேத்துறது நியாயமா. நா இன்னு புக்குக்கு ஆர்டர் கொடுக்கலைங்க.

      Delete
  36. Zagor 64 pages comics is good, but price of the book is more the lion books why sir ?

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தத்துக்கு ஏற்ற விலை சார் இது ; லயனின் சர்குலேஷனும் இங்கு கிடையாது ; பழைய விலைகளில் வாங்கி ஸ்டாக் வைத்த காகிதக் கையிருப்பும் இங்கே கிடையாது !

      Delete
    2. பரவாயில்லை சார். இது நம்ம காமிக்ஸ். இத கைய பிடிச்சு, தானா நடக்க வைக்கிறது எங்க பொறுப்பு.

      Delete
  37. மைக் ஹேமர் வந்ததிலிருந்து யாரைப் பார்த்தாலும் போட்டுத் தள்ளும் போல இருக்கு.கூல் இளவரசே .மருந்து நம்ம கிட்டயே இருக்கு.லக்கி லூக்படிங்க . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. எடிட்டரை லக்கிலூக் கதையைப் போடச் சொல்லுங்க.. இப்பவே போடச் சொல்லுங்க.. படிக்கிறேன்!!

      Delete
    2. யாரப்பாத்தாலும் போட்டுத் தள்ளனும் போல இருப்பதால் லக்கிலூக்கயும் போடமாட்டாராம்

      Delete
    3. மொதல்ல இந்த கவிஞர்களை நிக்க வச்சு 'டிஸ்கோல் டிஸ்கோல்'னு சுட்டுத்தள்ளணும்!

      Delete
    4. நெஞ்சுக்கு குறிவச்சு சுடும்போது அப்படியெல்லாம் ஆடாதீங்க கவிஞரே.. குண்டு எசகுபிசகா எங்கயாவது ஏறிக்கிடுமில்லே?!!

      Delete
  38. அல்லது சென்னை புக்பேர் அப்டேட் ,வாட்ஸ்அப் க்ரூப்களில் பாருங்க .நார்மலாயிருவீங்க . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. WhatsApp group ah :-) ? புது உறுப்பினர்கள் சேர்வது எப்படி?

      Delete
    2. //சென்னை புக்பேர் அப்டேட் ,வாட்ஸ்அப் க்ரூப்களில் பாருங்க .நார்மலாயிருவீங்க//???
      என்னா இப்படி எல்லாம் க்ரூப் இருக்குதா.

      Delete
  39. பிரியமுடன் ஒரு போராளி!

    V காமிக்ஸின் முதல் வெளியீடு 20 நிமிடங்களில் படித்து முடிக்க முடிந்த சுலப மற்றும் நேர்கோட்டு கதை! இந்த வகையில், இந்த விலையில் கதைகள் வந்தால் மேலும் பலரும் காமிக்ஸ் குடும்பங்களில் சேர்ந்திட இயலும் என்பது எனது எதிர்பார்ப்பு!

    எந்த காலத்துக்கும் பொருந்தும் உளவாளிகள் கதையில் ஸாகோரும் அடித்திருக்கும் கில்லி! கதையின் பெயரை பிரியமுடன் ஒரு உளவாளி என்று வைத்திருந்தால் இன்னமும் சிறப்பு என்று சொல்லும் படி, 2 டபுள் ஏஜண்ட்களை கதையில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர்... ஒருவர் கதையை தொடங்கி வைத்து அழகில் நம்மை கொள்ளை கொள்ளுகிறார்! இன்னொருவர் எமரி என்ற நிழல் வில்லன்! இரண்டு பாத்திரங்களையும் சரி சமமாக பாவித்து கதை நகர்ந்து செல்கிறது!

    கோடாரி ஏந்திய மாயத்மாவைப் பற்றி இருள் மாயாத்மா யாரென்று பின்வரும் கதைகளில் தெரியவரும் என்ற எதிர்பார்ப்புடன் வாசிப்பு முடிந்தது!

    ஸ்கோர் - 10/10

    ReplyDelete
    Replies
    1. செம க்யூட் விமர்சனம்!!

      Delete
    2. //20 நிமிடங்களில் படித்து முடிக்க முடிந்த சுலப மற்றும் நேர்கோட்டு கதை //

      அதுவே தான் நோக்கம் சார் ; crisp & சுலப வாசிப்பு !

      Delete
  40. Edi Sir..
    நாளை பதிவுகிழமை..
    😍😘
    பொங்கல் அதிரடி சிறப்பு வெளியீட்டினை அறிவிக்குமாறு அன்போடு ஸாகோர் பேரவை சார்பாக ஜம்பிங் செய்து கேட்டு கொள்கிறோம்..😘😘

    ReplyDelete
    Replies
    1. என்றைக்கோ ஒரு பொங்கல் ஸ்பெஷல்தான் கொலைப்படைன்னு சைக்கிளெடுக்குமாறு....தலைவர் நண்பர் சார்பாக நானும் ஜம்ப் செய்து கேட்டுக் கொள்கிறேன்

      Delete
    2. ஊட்டுக்கு ஊடு சர்க்கரை பொங்கல் தான் இஸ்பேஷல் ஐட்டமாய் இருக்கப் போகிறது ஜம்பிங் சார் ? அன்னிக்கு மட்டுமாச்சும் ஜம்பிங்க்குக்கு சித்தே pause போட்டுப்புட்டு பொங்கலை சிந்தாம சிதறாம இறக்குமதி செய்யச் சொல்லி பேரவைக்கு சுற்றறிக்கை அனுப்பிடுங்கோ !

      Delete
    3. என்னது, நாளைக்கு சனி கிழமையா.

      Delete
  41. பொங்கலோ பொங்கல் !!
    நண்பர்களே,

    வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! இல்லமெங்கும் சந்தோஷமும், வளமும் செழிக்கட்டும் ! கரும்பும், பொங்கலும், புதுப்படமுமாய் கலகலக்கும் ஜாலியான இந்நாளில் நமது காமிக்ஸ் இதழ்களுக்கும் ஒரு ஓரமாய் இடமிருப்பின் - சூப்பர் !! இந்த வேளையில் நொய்-நொய் என்று ப்ளேடு போடாமல் என்ன எழுதுவதென்று யோசிக்கிறேன் !! "பொங்கல்" என்றாலே "பொங்கல் மலரும்" மலர்ந்திடும் அந்நாட்களே மனதில் நிழலாடுகின்றன ! அதுவும் நமது லயனுக்கு "தலைப் பொங்கலாய்" அமைந்த "கொலைப்படை" இதழ் பற்றிய ஞாபகங்கள் as always பசுமையாய் தொடர்கின்றன தலைக்குள் ! அந்த இதழைப் பற்றியும், அதன் தயாரிப்புப் பின்னணி பற்றியும் ஏகமாய் எழுதி இருக்கிறேன் என்பதால் மறுக்கா அதே பாட்டைப் பாடப் போவதில்லை !

    மாறாக - "மாதம்தோறும் 4 இதழ்கள்" என்ற இன்றைய template-க்கு பிள்ளையார் சுழி போட்டுத் தந்த 1987-ன் தை மாதத்தை நோக்கி எண்ணக் குதிரைகளை ஓடச் செய்ய நினைக்கிறேன் !! இன்னும் எத்தனை தூரம் நாம் பயணம் போனாலும் சரி, எத்தனை புது உயரங்களை உணர்ந்தாலும் சரி - 20 வயதுக் கொயந்தை பைய்யனாய் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாய் இதே ஜனவரியில் அனுபவித்த ஒரு த்ரில்லை எட்டிப் பிடிக்க முடியாதென்றே சொல்லுவேன் !! அந்நேரத்துக்கு முத்து காமிக்ஸின் நிர்வாகம் என் கைகளுக்கு வந்திரா நிலையில் - அதுவுமே என் கண்களுக்கொரு போட்டிக் கம்பெனியே !! அச்சூழலில் - லயன் காமிக்ஸ் ; திகில் ; ஜுனியர் லயன் காமிக்ஸ் & மினி லயன் - என 4 இதழ்களோடு களமிறங்கத் துணிந்தது - அசட்டுத் தைரியத்திலா ? வெற்றிகளை உணர்ந்த குசும்பிலா ? அல்லது புதுசையெல்லாம் உங்களிடம் காட்ட புதுப் புது தடங்கள் வேண்டுமே என்ற ஆர்வக்கோளாறினாலா ? - சொல்லத் தெரியவில்லை இன்றளவிற்கும் !! எது எப்படியோ - அலிபாபாவின் பொக்கிஷக் குகையைத் திறந்து பார்த்தவனின் வாயைப் போல என்னதும் அகலமாய் விரிந்து கிடந்தது - பிரான்க்கோ-பெல்ஜியப் பேழையை மாத்திரமின்றி, இத்தாலிய கதைச் சுரங்கத்தினையும் திறக்க முடிந்திருந்த அக்கணங்களில் !!

    பற்றாக்குறைக்கு நமது 'தானைத் தலைவர் இஸ்பைடரின்' புதுப் புதுக் கதைகளையும், சட்டித் தலையனின் மெகா சாகசங்களையும் பொட்டலம் போட்டு வாங்கி வந்திருக்க -'ஐயோ..இந்த தெருவை வாங்கிப் போடவா ? இந்த ரோட்டை விலை பேசவா ? " என்ற கவுண்டரின் நமைச்சல் தான் எனக்குள்ளும் குடியிருந்தது ! மாதம் ஒன்றோ-ரெண்டோ தான் இதழ்கள் ; இதனில் குறைந்த பட்சமாய் 6 இடங்களை - ஸ்பைடர் + ஆர்ச்சி கூட்டணிக்குத் தந்தே தீர வேண்டிய கட்டாயம் எனும் போது எஞ்சிக் கிடைக்கும் 18 இதழ்களைக் கொண்டு நாம் அன்றைக்கு சீட் தர வேண்டியிருந்த கட்சித் தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு :

    ரிப்போர்ட்டர் ஜானி
    ப்ரூனோ பிரேசில்
    கேப்டன் பிரின்ஸ்
    ரெட்டை வேட்டையர்
    லாரன்ஸ் & டேவிட்
    இரும்புக்கை நார்மன்
    இரும்புக்கை உளவாளி
    லக்கி லூக்
    சிக் பில்
    கராத்தே டாக்டர்
    மறையும் மாயாவி ஜாக் ( ஹி..ஹி..ஞாபகம் இருக்கோ?)
    சுஸ்கி & விஸ்கி

    ReplyDelete
    Replies
    1. //"கொலைப்படை" இதழ் பற்றிய ஞாபகங்கள் as always பசுமையாய் தொடர்கின்றன தலைக்குள்//
      மறக்க முடியுமா அந்த நாட்களை?

      Delete
    2. 1985 !! மறக்க முடியாத ஜனவரி அது உதய் !

      Delete
    3. நிச்சயமாக, உங்கள் சிங்கத்தின் சிறுவயதில் படித்துள்ளோம் சார்... முதல் வருசம் 15 இதழ்களை நிறைவு செய்தீர்கள்... 1989ல் எனக்கு முதன் முதலாக கிடைத்த கொலைப்படை அட்டையை பார்த்தபோது ஜிவ்வென்று புல்லரித்து போனது... பிக் பாய்ஸ் ஸ்பெசல் என்று உதிக்குமோ?☺️

      Delete
  42. டூப்ளிகேட் ஆரஞ்சு சட்டையின் கதை விமர்சனம்!

    நேற்று நிறைந்த வியாழக்கிழமை! வெளியூரில் இருந்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த நீண்ட கால நண்பர் ஒருவர் என்னை சந்திக்க வீட்டிற்கு வருகை தந்தார்!

    ஒரு கட்டைப் பை நிறைய கையோடு வாங்கி வந்திருந்த காமிக்ஸ் பொக்கிஷத்தைக் காட்டிப் பரவசமாக பேசிக் கொண்டே இருந்தார்!

    இடையே நம் ப்லாக் கமெண்ட்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்! நான், வேண்டாமே சார் அந்தப் பஞ்சாயத்து என்று கூறியும், விடாப்பிடியாக தொடரவே, எனக்கும் வேறு வழியில்லாமல் போய் விட்டது!

    அவர்: நீங்கள் ஏன் சார் Blog பக்கமே வருவதில்லை?

    நான்: அதான் மூன்று மாதங்கள் முன்பே Blog கமெண்ட் மூலமாக நம் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து விட்டேனே...

    அவர்: அட ஆமாம், சமிப காலமாக எப்பவாவது Blog படிச்சிங்களா சார்?

    நான்: இல்லையே, ஏன்?

    தொடர்கிறது!

    ReplyDelete
    Replies
    1. டூப்ளிகேட் ஆரஞ்சு சட்டையின் கதை விமர்சனம்! II

      அவர்: எப்படி சொல்றதுன்னே தெரியல சார் எனக்கு! சில கமெண்ட்களைப் படிக்கும் போது, கண்ணு ரெண்டும் கூசுது எனக்கு ; காது ரெண்டும் அவியுது எனக்கு! அப்புற>

      நான்: இடைமறித்து ஆ.. ஐயோ.. அப்படியெல்லாம் இருக்காது சார் ரொம்ப டீசன்டான நண்பர்கள் தானே அங்கே ரெகுலராக இருப்பார்கள் ?!

      அவர்: சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும் சார் என்று கூறிக் கொண்டே தன் மொபைலை எடுத்து, சில பல ஸ்க்ரீன் ஷாட்களைக் காண்பித்தார்..

      நான்: மெதுவாக எழுந்து நடந்து சென்று, காமிக்ஸ் சேகரிப்பு அட்டைப்பெட்டியில் வைத்திருந்த என்னுடைய ரீடிங் கிளாஸ் ஐ மாட்டிக்கொண்டு பொறுமையாகப் படிக்க ஆரம்பித்தேன்!

      தொடர்கிறது!

      Delete
    2. டூப்ளிகேட் ஆரஞ்சு சட்டையின் கதை விமர்சனம்! III

      என்னங்க.. இங்க கொஞ்சம் வரிங்களா..? காப்பியும் பலகாரமும் ரெடியாயிடுச்சு..

      வேறு யாரும் இல்லை.. என் மனைவி தான் என்னை கிச்சனிலிருந்து அழைத்துக் கொண்டிருந்தார்.. சற்றொப்ப கொஞ்சமான இடைவெளியில்...

      அவர் : பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே, காப்பியும் சிறிது சிறிதாக அருந்திக் கொண்டிருந்தார்..

      நான்: ச்சே.. இந்த கிளாஸ்ஸும் பவர் கம்மியாயிடுச்சே.. திரும்பவும் மாத்தணும் என்று மனசுக்குள் நொந்தவாரே, படித்து ஒரு வழியாக முடித்து இருந்தேன்..

      உண்மைதான் கண்கள் கூசுகிறது ; காது அவிகிறது! ஆனால் பலருக்கும் இது மிகப்பெரிய ஜோக்காகவும், காமெடியாகவும் தெரிந்து இருக்கிறது - என்பதை அதற்கு வந்திருக்கும் ரிப்ளைகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது!

      தொடர்கிறது!

      Delete
    3. டூப்ளிகேட் ஆரஞ்சு சட்டையின் கதை விமர்சனம்! IV

      ஜோக்கு.. ஜோக்கு.. இது ஜோக்குங்க.. என்று ஓங்காரமாக ஒலித்த ஒற்றை வேப்ப இலை காமெடியை - மனம் அப்படியே காட்சியாக கண் முன்னே நிறுத்தியது..

      காமெடி.. காமெடி.. இது காமெடிங்க.. என்று கலாய்த்தவாரே - இங்லீஷ் கேவாகவே சிலர் பின்னூட்டமிட்டிருந்தனர்!

      எது சிறியது எது பெரியது என்று ஆராய்ந்து கொண்டிருக்கவோ : எந்தப் பின்னூட்டம் நல்ல பின்னூட்டம் என்று கருத்து சொல்வதற்கோ நான் தயாராக இல்லை என்பதால்..

      நான்: இதுல என்ன சார் பிரச்சனை? இப்போதெல்லாம் கமெண்டுங்க இப்படி அப்படின்னு ரொம்ப சகஜம் ஆயிடுச்சு போல..

      அவர்: பரவால்ல சார் எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு! அதாவது நீங்க புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறீங்கன்னு தெரிஞ்சிருச்சு! தோழன் கத, செத்த மரம் கத, தாத்தா கத என்று படிச்சி வந்தவன் தானே சார் நானும்!

      சரி அத விடுங்க.. நீங்க ஒரு கதை விமர்சனம் போடணும்! அதுவும் முதல் வெளியீடான ஆன V காமிக்ஸ் பற்றி எழுதணும்! அதுவும் ஆரஞ்சு சட்டை போலவே நச்சென்று நாலு வரியில சுருக்கமா பதிவிடனும்! அதுவும் இப்போதைய பிளாக் ட்ரெண்டுக்கு ஏற்ப இருக்கணும்! நீங்க முன்னாடி எழுதுன மாதிரி வள வள வள வள வளனு எழுதாம நச்சுனு உங்களால விமர்சனம் செய்ய முடியுமா?

      எனக்கு: அவர் வார்த்தைகள் என்னை மிகவும் தூண்டிவிட்டது! அவர் சவால் விடுவது போல் பேசியது சற்றே எரிச்சல் ஊட்டியது என்பது உண்மைதான்! ஆரஞ்சு சட்டை அதுவும் நாலு வரியில் நச்சு.. முடியுமா என்று தெரியவில்லை..

      நான்: சார் என் நட்பைப் பாராட்டி என் வீட்டு வரை வந்து இருக்கிறீர்கள்! உங்கள் அன்புக்கு இதைக்கூட செய்ய இயலாத கல்நெஞ்சனாக நான் இருக்கப் போவதில்லை.. இது சத்தியம்!

      அடுத்து வருவது,

      டூப்ளிகேட் ஆரஞ்சு சட்டையின் கதை விமர்சனம்!

      Delete
    4. டூப்ளிகேட் ஆரஞ்சு சட்டையின் கதை விமர்சனம்! V

      இன்னைக்கு நம்ம கதை விமர்சனப் பதிவுல - புதுமுக எடிட்டர் விக்ரம் தயாரிப்புல வெளிவந்திருக்கிற - பிரியமுடன் ஒரு போராளி கதையைப் பத்தி பாக்கப் போறோம்!

      என்னத்த சொல்ல.. கதையை நம்பி காமிக்ஸ் வெளியிடுங்கன்னு சொன்னா, சதைய நம்பி ஒரு காமிக்ஸ வெளியிட்டு இருக்காங்க போனெலி அண்ட் சன்ஸ்!

      கதையோட அறிமுக பக்கத்திலேயே அம்மணக்கு***டியா ஒரு அழகியை களம் இறக்கியிருக்காங்க! அவங்களுக்கு கிளுகிளுப்பா இருந்துதோ இல்லியோ ஆனா நமக்கு சும்மா ஜிவ்வுன்னு உச்சி மண்ட வரை ஏறுது!

      அதுக்கப்புறம்..

      என்னத்த அதுக்கு அப்புறம்,

      என்னது கதையா? அதான் மொத நான்கு பக்கத்தப் பாத்து ஜொள்ளு விட்டீங்க இல்ல?! அதுக்கே டிக்கெட் காசு சரியா போச்சு, ப்ப்பா என்னா சரக்கு!



      Comments 10.1K

      Comics veriyan 1d ago
      யோவ் ஆரஞ்சு சட்ட, அந்த இருட்டுக்குள்ளார ஒக்காந்து இருக்கிற ஆசாமியே ஸாகோர் தான்யா 😘😘

      👍46👎

      Comics enathu pirappurimai 1d ago
      அப்போ இருட்டுல இருக்கிற ஆசாமிக்கு கொடுத்த பில்டப் எல்லாம் பொய்யா கோபால்? 🙄🙄

      👍13👎

      ella comicum enakke 1d ago
      அடுத்த V காமிக்ஸ் எப்ப வரும்னு இப்பவே ஜிவ்வுன்னு ஏறுது😘😘👆

      👍10K👎

      Read more

      Delete
    5. இப்படி ஒரு கிளுகிளுப்பு இருக்குன்னு யாரு சொல்லலையே. என் தலைவர் மற்றும் செயலர் இப்படி கமுக்கமா இருக்கலாமா.யாரு மஜா இருக்குன்னு சொல்லலையே. நாந்தா இம்மா நாளு படிக்காம தலவாணி அடியில வைச்சு தூங்குறேனா.

      Delete
    6. பாஸ்,
      இந்த விமர்சனத்துக்கான, அறிமுகம் படா பிரமாதம்.

      Delete
  43. @all..😍😘
    என்றென்றும் எலியப்பா & எல்லாம் அழகே Online listing போட்டாச்சுங்கோ..😍😃😀👍💪👌

    ReplyDelete
    Replies
    1. Yes, ஸ்டாலிலும் இருக்குது ஜ.த.!

      Delete
  44. அன்புசால் நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  45. V காமிக்ஸின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது..!

    ஜெய் ஜம்பிங் ஸ்டார்.!

    யாரா இருந்தாலும் முதல்ல எங்க தலீவரையும் செயலரையும் சந்திச்சிட்டு என்கிட்ட வாங்க.!

    ReplyDelete
    Replies
    1. ஆக....

      *V comics மகத்தான வெற்றி*💪💪💪💪💪

      அல்சர் டானிக்குகள் தாராளமாகவே விற்பனை ஏகிறுதாமே KOK அங்கிள்🤪🤪🤪

      Delete
    2. ///யாரா இருந்தாலும் முதல்ல எங்க தலீவரையும் செயலரையும் சந்திச்சிட்டு என்கிட்ட வாங்க.!///

      அப்புறம்.. புதுத் தலைவர்.. யங் அண்ட் எனஜிடிக் கோடாலியார் ஸ்ரீபாபுஜியையும் சந்திச்சிடுங்க.!

      Delete
    3. ///யாரா இருந்தாலும் முதல்ல எங்க தலீவரையும் செயலரையும் சந்திச்சிட்டு என்கிட்ட வாங்க.!////

      ஜம்ப்பிங் தலீவரையும், ஜம்ப்பிங் செயலரையும் தானே சொல்றீங்க?!!🤪🤪

      Delete

    4. ///ஜம்ப்பிங் தலீவரையும், ஜம்ப்பிங் செயலரையும் தானே சொல்றீங்க?!!🤪🤪///

      இல்லீங் குருநாயரே..!
      எங்களோட நிரந்தர தலீவர் பரணீதரன் அவர்களையும்.. நிரந்தர செயலர் ஈரோடு விஜய் அவர்களையும்தான் சொல்றேன்.!
      நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கிறதாலதான் நியாயம் நிலைச்சிருக்கு குருநாயரே.!
      உங்க ரெண்டு பேரையும் சமாளிக்க புதுசா ஒரு ஃபேக் ஐடி பிறந்து வந்தாத்தான் உண்டு.!

      Delete
    5. ///நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கிறதாலதான் நியாயம் நிலைச்சிருக்கு குருநாயரே.!
      உங்க ரெண்டு பேரையும் சமாளிக்க புதுசா ஒரு ஃபேக் ஐடி பிறந்து வந்தாத்தான் உண்டு.!///

      சை.. இந்த வரிகளை திரும்பத் திரும்ப படிக்கவுடாம கண்ணுகள்ல ஜலம் வந்து தேங்கிட்டே இருக்கு!🥲🥲

      Delete
    6. கொஞ்சம் பொறுங்க.. தெளியவெச்சி தெளியவெச்சி அடிப்பாங்க.. அப்போ கண்ணு தெளிவாத் தெரியும்..:-)

      Delete
    7. EV , KOK ஹிஹிஹி செம்ம செம்ம

      Delete
    8. ஒரே ஒரு சங்கத்தின் ஒரே ஒரு தலீவர் உறங்குறார் ; ஒரே ஒரு தலீவர் பல்லு விளக்குறார் ; ஒரே ஒரு தலீவர் ரவுண்டு பன் சாப்பிட போறார் ... ஆல் ஜம்பிங் பார்ட்டீஸ் வழி விடுங்கோ !

      Delete
    9. எங்களோட நிரந்தர தலீவர் பரணீதரன் அவர்களே மற்றும் நிரந்தர செயலர் ஈரோடு விஜய் அவர்களே,

      நடக்கிறதையெல்லாம் பாத்துகிட்டு நீங்க சும்மா இருக்கலாமா. நாங்க எல்லாம் கொதிச்சு போயி இருக்கோம். நீங்க வழி நடத்திகிறீர்களா. ,Or நாங்க களத்துல மோதி பாக்கட்டுமா. இது மகா பாரத யுத்தம். நம்ம எடிட்டர் தா கண்ண பரமாத்மா. அவரு யாரு பக்கங்கிறதை மட்டும் கன்பாம் பண்ணுங்க.

      Delete
  46. @all..😍😘😃😀

    இன்று நமது ஸ்டாலுக்கு திருமதி.கிருத்திகா உதயநிதி அவர்கள் வருகை தந்துள்ளார்.👍🙏💐
    மிக்க சந்தோஷம்..💪👍👌✌

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தவரை நம்ம 'ஜம்பிங் அண்ணாச்சி' அழைத்து வந்திருப்பார் சார் !

      இரவு போன் பண்ணுவார் ; அப்போது கேட்டால் தெரியும் !

      Delete
    2. ஆனால் அவர் ஏன் இரும்புக்கை மாயாவி புக் கையில் வைத்து போஸ் கொடுத்துள்ளார்...? நிச்சயம் விருப்பத்தோடு தான் போஸ் கொடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

      Delete
    3. Nopes...பிரபலங்கள் பொதுவில் வரும் போது சந்திக்க நேரிடும் தர்மசங்கடங்கள் நிறைய ; அவற்றுள் இதுவும் ஒன்று ! அண்ணாச்சியின் ஆர்வக்கோளாறு படுத்தும் பாடு !

      Delete
    4. அந்த அம்மாவுக்கு விருப்பம் இருப்பதால் தான் போட்டோவுக்கு அனுமதி தந்திருக்கிறார். இதில் ஏதும் பிரட்சனை ஒன்றுமில்லை.

      Delete
    5. உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பறேன்!

      Delete
  47. சென்னைப் புத்தகவிழாவின் வெற்றியிலும் ஸாகோர் ஸ்ரீபாபுஜி தலைமையிலான புதிய ஜம்பிங் ஸ்டார் பேரவையின் கரை புரண்டோடும் உற்சாகத்தையும் புதிய எடிட்டர் விக்ரமின் V க்கு கிடைத்த வரவேற்பையும் கண்டு மகிழ்கின்றேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. லயன்-முத்து-V காமிக்ஸ் யுனிவர்ஸைச் சேர்ந்த அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. எடிட்டர்கள் சமூகத்திற்கும், லயன், முத்து வி காமிக்ஸ் ஊழியர்களுக்கும், காமிக்ஸ் நண்பர்களுக்கும், காமிக்ஸ் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  50. நான் கூட போகியால் புகை வருதுன்னு நினைச்சேன். இப்பத்தான் புரிஞ்சுது வரும் புகை சமிஞ்சை எல்லாம் செ பு வி வெற்றி, வி காமிக்ஸ் வெற்றி குறித்துன்னு. இந்த மாதிரி நிறைய்புகை சமிக்ஞை வரவும் இந்த புகைத் திருநாளான போகியன்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  51. எடிட்டர்கள் சமூகத்திற்கும், லயன், முத்து வி காமிக்ஸ் ஊழியர்களுக்கும், காமிக்ஸ் நண்பர்களுக்கும், காமிக்ஸ் சொந்தங்களுக்கும், இதை டைப் செய்து கொடுத்த ஷெரீப் சமூகத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  52. ஜம்ப்பிங் செயலர், ஜம்ப்பிங் பொருளர் மற்றும் V-காமிக்ஸின் தளபதிகள் சார்பாக ஒரு அறைகூவல் :

    "சார்... இன்று பதிவுக் கிழமை!!"

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க EV


      சார் இன்று பதிவுக் கிழமை...

      Delete
  53. @Edi Sir..😍😃😘

    இன்றைய பதிவில் CBF பற்றிய புத்தம்புதிய அப்டேட்டுகள்❤,

    நமது *V காமிக்ஸ்* ன் அதிரிபுதிரி வெற்றியை கொண்டாடும் விதமாக அடுத்தகட்ட நகர்வுகள்💛,
    புத்தாண்டில் ஆரம்பமே பட்டையை கிளப்பி உள்ளதால்💪 வெற்றி கொண்டாட்டம் தொடர்பாக புத்தம் புதிய crispy அறிவிப்புகள்✌..
    என நிறைய நிறைய எதிர்பார்க்கிறோம் Sir..😍😘😘

    #புனித மானிடோவும், ஸாகோரும் அருள் புரிவார்களாக#🙏

    ReplyDelete
    Replies
    1. ஜம்ப்பிங் தலீவரே.. அப்படியே பதிவுக்கான தலைப்பையும் சொல்லிட்டிங்கன்னா எடிட்டருக்கு இன்னும் வசதியா இருக்கும்! ;)

      Delete
    2. ஹிஹிஹி எங்க தலைவர் அப்படிதான். கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விடுவாரு.

      Delete
    3. ஆமாங்க. தலைவரின் கூற்றை ஆமோதிக்கின்றேன் , வரவேற்கின்றேன்.இவண் சங்கப் பொருளாளர் சின்னமனூர் பி சரவணன்.

      Delete
  54. முத்து வில் ஆரம்பித்து, லயனில் தவழ்ந்து, V ல் விளையாடி கொண்டிருக்கும் "அனைத்து காமிக்ஸ் நெஞ்சங்களுக்கும்"
    அடுத்து 4 வது தலைமுறையாக வெளிவர இருக்கும்
    *S காமிக்ஸ்* ம் விடாது படித்து மகிழ "நல்ல உடல் நலத்தையும், நீண்ட நெடிய ஆயுளையும்" தருமாறு
    எல்லாம் வல்ல இறையை தைத்திருநாளில் வேண்டி கொள்வோம்.🙏💐

    ReplyDelete
    Replies
    1. S காமிக்ஸா? அது என்ன தலைவரே S?

      Delete
    2. *S* means Sounder காமிக்ஸ் ..😍💪✌

      Delete
    3. ///
      *S* means Sounder காமிக்ஸ்///

      இருக்காதுங்க ஜம்ப்பிங் தலீவரே!

      V-காமிக்ஸ்னா அது 'Vikram காமிக்ஸ்' கிடையாது; அது 'we' காமிக்ஸுன்னு விக்ரமே சொன்னாரே.. நாமகூட நம்பிட்டமே.. அதுமாதிரி 'S comics'னா கண்டிப்பா sounder காமிக்ஸா இருக்காது! 'Social comics' அல்லது 'Self comics' இப்படி ஏதாவது இருக்கலாம்! இல்லேன்னா 'Senior citizen's comics'னு கூட இருக்கலாம்!

      Delete
    4. @EV 😻
      ஒருவேளை Sub Junior பேருல *S* Comics ஆ இருக்குமோ?😘

      V ங்கறது We மாதிரி...
      S ங்கறது Yes ஆ இருக்குமோ..😃😘

      எப்படியோ காமிக்ஸ் படிச்சு வயசும் மனசும் எல்லோருக்கும் இளமையா இருந்தா சரி..😃😍😘😀👍✌💪

      Delete
    5. மனசு இளமையாக இருக்கும் தலைவரே..
      அது எப்படி வயசு இளமையாக இருக்கும்?

      Delete
    6. ///V ங்கறது We மாதிரி...
      S ங்கறது Yes ஆ இருக்குமோ///

      அட்டகாசம் ஜம்ப்பிங் தலீவரே! (இச் இச்)

      அதுதான்! அதுவேதான்! ஆனா நாம எதுவுமே தெரியாத மாதிரியே முகத்தை வச்சுக்கிட்டு மெய்ன்டெய்ன் பண்ணுவோம்! இல்லேன்னா A,B,C,Dல எல்லா எழுத்துகளுக்கும் என்ன அர்த்தம்னு கேட்டு ஜம்ப்பிங் பேரவை கண்மணிக களமிறங்கி களேபரம் பண்ணிப்புடுவாங்க!

      Delete
  55. இன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  56. @Edi Sir..😍
    எலியப்பா..🐘
    Online ல Order போட்டுட்டேனுங்க Sir..👍

    ReplyDelete
  57. எடிட்டரின் பொங்கல் பதிவு ரெடி நண்பர்களே!!

    ReplyDelete