நண்பர்களே,
வணக்கம். சர்வதேசப் புத்தகத் திருவிழாவாய் நமது சென்னை விழா புலிப்பாய்ச்சல் பாயும் ஒரு மைல்கல் ஆண்டினில் நாமும் தலையை உள்ளே புகுத்திட முடிந்திருப்பது பெரும் உவகையளிக்கின்றது ! எந்த ஆண்டும் இல்லாத கோலாகலத்தோடு, கிட்டத்தட்ட 900 ஸ்டால்களுடன் இம்முறை நந்தனம் YMCA மைதானத்தில் BAPASI விழா தூள் கிளப்பவுள்ளது !
And ஏற்கனவே சொல்லியிருந்தது போல நமக்கு இம்முறை டபுள் ஸ்டால் & அரங்குகளின் நம்பர்ஸ் 531 & 532. அண்ணாச்சி ; உதவியாளர் ; கம்பியூட்டர் பில்லிங் பணியாளர் மற்றும் நமது front office திருமதி.ஜோதி என உங்களை வரவேற்க நால்வரணி அங்கே காத்திருக்கும். Plus நமது 250+ காமிக்ஸ் ஆல்பங்கள், உங்கள் வருகைகளை எதிர்நோக்கி வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் !
***இம்முறை காமா-சோமா என்று அடுக்கப்படாமல், category ரீதியில் புக்ஸ் display செய்யப்படும் !
***பௌன்சர் ; தாத்தாஸ் ; பராகுடா ; டெட்வுட் டிக் போலான 18+ சமாச்சாரங்கள், வெகுஜன ரசனைக்கான புக்ஸுடன் குவிந்து கிடக்காது தமக்கென ஒரு இடம் பிடித்திருப்பர் !
***என்ன வாங்குவது ? என்ற தீர்மானங்கள் பெரிதாய் உள்ளுக்குள் இல்லாது பொதுவாய் browse செய்திடும் வாசகர்களின் வசதிக்கென "EDITOR'S CHOICE" என 30 புக்ஸ் தேர்வு செய்து தந்துள்ளேன் ; அவை ஒரு குட்டி மேஜையில் இடம் பிடித்திடும் !
***And இம்முறை முதலாய் ஸ்டாலுக்கு வரும் நண்பர்களிடம், அவர்தம் மொபைல் நம்பர்களை சேகரிக்கும் முயற்சியுமே முன்னெடுக்கப்படும் - அவ்வப்போது வாட்சப்பில் updates அனுப்பும் பொருட்டு !
***SMASHING '70s வரிசையில் வேதாளர் + ரிப் கிர்பி + மாண்ட்ரேக் + காரிகன் கொண்ட full set நம்மிடம் மொத்தமே 20 தான் இருக்கும். அவை நீங்கலாய் சீரான எண்ணிக்கைகளில் அல்லாது, ரிப் கிர்பி புக்ஸ் 35 ; மாண்ட்ரேக் 60 ; காரிகன் 75 - என்பது போல் கையிருப்பு odd நம்பர்களில் உள்ளன. வேதாளர் சுத்தமாய் காலி ! So அந்த 20 complete sets தவிர்த்த மீத இதழ்கள் (ரிப் ; மாண்ட்ரேக் & காரிகன்) சென்னையில் விற்பனைக்கு வந்திடும் !
***முதல்முறையாக ஸ்டாலில் உங்களின் கமெண்ட்ஸ் பதிவிட ஒரு நோட்டும் இருக்கும் ! புத்தக விழா அனுபவம் சார்ந்த உங்களின் பார்வைகளை ; ஸ்டாலில் செய்திடக்கூடிய மேம்பாட்டுக்களை அதனில் நீங்கள் பதிவிடலாம் folks ! MAXI சைஸ் ; மினி சைஸ் - என்ற நமது blog பஞ்சாயத்துக்களையெல்லாம் அங்கே கொண்டு செல்ல வேண்டாமே - ப்ளீஸ் !
***மாயாவி - 4 மறுக்கா மறுக்கா மறுபதிப்புகளுடன் ஆஜராகிடுவார் - maybe by this weekend ! கைவசம் மாயாவி புக்ஸ் இல்லாது புத்தக விழாக்களுக்குப் போவதற்கே நம்மாட்கள் மிரள்கிறார்கள் என்பதால் this is for them too !! அதனில் "இமயத்தில் மாயாவி"க்கு மட்டும் புது அட்டைப்படம் !
***சில வருடங்களுக்கு முன்பாய் செய்தது போல, கலரில் கார்ட்டூன்ஸ் + சுட்டீஸ் கார்னர் புதிர்கள் கொஞ்சமாய் அச்சிட்டு வைத்துள்ளோம் - நமது அரங்கு நம்பர்ஸ் + website விபரங்களோடு ! புக்ஸ் வாங்குவோர் வீட்டு குட்டீஸுக்கு அவை ஆர்வமூட்டினால் சந்தோஷமே !
***அப்புறம் கதை சொல்லும் காமிக்ஸ் வரிசையில் - "எல்லாம் அழகே" புக் ரெடியாகி வருகிறது ! திங்கள்வாக்கில் அது சென்னையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் ! And சேதி தெரியுமோ - இந்த வரிசையின் இதழ் # 2 ஆன சிண்ட்ரெல்லா கிட்டத்தட்ட stock காலி !! எனக்கே நம்ப முடியவில்லை - ஆனால் சரமாரியான புத்தக விழாக்களில் அது சூப்பராக நகன்றுள்ளது போலும் !! Phewwwwww !!
***ஜம்பிங் ஸ்டார் பேரவையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒரு வரிசை முழுக்க V காமிக்ஸ் ஆக்கிரமித்து நிற்கும் !!
***அப்புறம் நம்ம எலியப்பா சார் - ஒரு தொகுப்பில் மினுமினுக்கக் காத்திருக்கிறார் ! இவர் நகரும் வேகத்தைப் பொறுத்து கைப்புள்ள ஜாக் !
***டைலன் டாக் - முழுவண்ண சிறுகதைகளும் புத்தக விழாவினில் நடுவாக்கில் நுழைந்திடும் - if time permits ! கலர் டெக்ஸ் சைசில் ; சின்ன விலையினில் !
ஸ்டால் கிடைக்க ஆசி தந்த பெரும் தேவன் மனிடோ, விற்பனை சிறக்கவும் வழி காட்டுவாரென்ற நம்பிக்கையோடு, நாளை சட்டி-பெட்டிகளைக் கட்டிக் கொண்டு சென்னை நோக்கிய பயணத்தினை நம்மவர்கள் துவக்கிடுகிறார்கள் ! Wish them luck ப்ளீஸ் !! And please do drop in folks !!!
மீண்டும் சந்திப்போம் ! Bye for now !
1 st
ReplyDeleteபதிவை முழுமையாக படித்து விட்டு வருகிறேன்
ReplyDeleteமீ2
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete// கோலாகலத்தோடு, கிட்டத்தட்ட 900 ஸ்டால்களுடன் இம்முறை நந்தனம் YMCA மைதானத்தில் BAPASI விழா தூள் கிளப்பவுள்ளது ! //
ReplyDeleteவாவ். 900 ஸ்டால் மிகப்பெரிய நம்பர். சர்வதேச புத்தகத் திருவிழா என்பதால் பெல்ஜியம் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இங்கு ஸ்டால் போடுவார்களா சார்.
// பௌன்சர் ; தாத்தாஸ் ; பராகுடா ; டெட்வுட் டிக் போலான 18+ சமாச்சாரங்கள், வெகுஜன ரசனைக்கான புக்ஸுடன் குவிந்து கிடக்காது தமக்கென ஒரு இடம் பிடித்திருப்பர் ! //
ReplyDeleteநல்ல ஐடியா. வரவேற்கிறேன்.
சிறப்பு. மிகச் சிறப்பு.
Delete// என்ன வாங்குவது ? என்ற தீர்மானங்கள் பெரிதாய் உள்ளுக்குள் இல்லாது பொதுவாய் browse செய்திடும் வாசகர்களின் வசதிக்கென "EDITOR'S CHOICE" என 30 புக்ஸ் தேர்வு செய்து தந்துள்ளேன் ; //
ReplyDeleteசெம மாஸ் ஐடியா சார்.
இது அட்டகாசமான ஐடியா.
DeletePresent sir
ReplyDeleteவணக்கம் சென்னை
ReplyDelete// இதழ் # 2 ஆன சிண்ட்ரெல்லா கிட்டத்தட்ட stock காலி ! //
ReplyDeleteAda! This is super news sir!
இதழ் #3 எல்லாம் அழகேவும் இந்த புத்தக விழா முடிவதற்கு முன் விற்று தீர வாழ்த்துக்கள்.
Deleteஅடடே குட்டி குட்டி சர்ப்ரைஸ், சரியான திட்டமிடல் என்று சென்னை புத்தக விழாவுக்கு ரெடி ஆகி விட்டோம் சார். வாழ்த்துக்கள்
ReplyDeleteவந்துட்டேன்..!
ReplyDeleteவணக்கம் காமிக்ஸ் காதலர்களே..
ReplyDeleteசென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteபதிவை முழுமையாக படித்து விட்டேன். அருமையான திட்டமிடல் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு.
மாயாவியின் மறுபதிப்பு காணத ஏதாவது ஒரு கதையை தயார் செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
புத்தகத் திருவிழா சர்ப்ரைஸ் வெளியீடு ஏதாவது உண்டா சார்?
எல்லாம் அழகே, எலியப்பா, மினி டைலன் இப்போதைக்கு இது தான் சர்ப்ரைஸ் பரணி.
Delete@PFB..❤
DeleteCBF ல் சர்ப்ரைஸ் உண்டு. நேரில் வந்தால் வழங்கப்படும்..😍😘😘
இப்படிக்கு எடிட்டர் ..😃😜😜
Best wishes for smashing success in CBF.
ReplyDeleteஎல்லாம் அழகே, எலியப்பா, மினி டைலன் எல்லாம் வருவது மகிழ்ச்சி. எல்லாம் அழகாக நடந்து கைப்புள்ள ஜாக்கும் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கிறேன். Fingers crossed...
ReplyDeleteவணக்கம் சென்னை. குட்டி குட்டியான சர்ப்ரைஸ்கள் கண்டு மகிழ்ச்சி. விற்பனை சிறக்கட்டும். கிட்டங்கி காலியாகட்டும் என வாழ்வாங்கு வாழ்த்துவது ஜம்ப்பிங் ஸ்டார் பேரவை பொருளாளர் சின்னமனூர் சரவணன். ( பதவியை நாமே சொல்லிக் கொண்டால் தான் உண்டு ).
ReplyDeleteநீங்க பட்டைய கிளப்புங்க பொருளாளரே..😘😘😍...
Delete// நம்ம எலியப்பா சார் - ஒரு தொகுப்பில் மினுமினுக்கக் காத்திருக்கிறார் ! //
ReplyDeleteவாரே வா. இதில் உள்ளவை புதிய கதைகளா அல்லது இரண்டும் கலந்ததா சார்? இதற்கு உரிய பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு நமது அலுவலகத்துக்கு தகவல் சொன்னால் புத்தகத்தை அனுப்பிவைக்க முடியுமா சார்?
நம் ஸ்டாலில் மேற்கொள்ளப்படயிருக்கும் மாற்றங்களும், அறிமுகங்களும் - அருமை!! நல்ல பலனளிக்க பிரார்த்தனைகள்!
ReplyDeleteஇமயத்தில் மாயாவி...ஆஹா.
ReplyDeleteடைலன் டாக்....ஓஹோ.
எலியப்பா...பேஷ் பேஷ்....சபாஷ்.
திட்டமிடல் அனைத்தும் அட்டகாசம். எலியப்பா தொகுப்பையும் டைலன் டாக் கதைகளையும் வாங்கிவர சென்னை செல்லவிருக்கும் நண்பரிடம் அல்ரெடி அப்ளிகேசன் போட்டாச்சேய்.
ReplyDeleteதற்போதைக்கு மிக அத்யாவஸ்ய தேவையான விற்பனையும் சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களுக்கு கைப்புள்ள ஜாக்கும் சேர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள்
Deleteஇந்த வருட விற்பனை ஒரு புதிய ரெகார்ட் உருவாக்க வேண்டும்.
Deleteகைப்புள்ள தொகுப்பு வந்தா அதையும் வாங்கிடுவோம் குமார்.
DeleteHi..
ReplyDeleteஇமயத்தில் மாயாவியும் +டைலன் டாக்கும் வேண்டும் சார். விலை சார் ?
ReplyDeleteஎலியப்பா?
Deleteஎலியப்பா தான் சந்தாவில் மாதா மாதம் தந்தாங்களே நண்பரே ? இப்ப இது தொகுப்பாக வருகிறது.அவ்வளவு தான்.
DeleteYes
Deleteஎனக்கு ஒரு செட் பார்சல் பண்ணுங்க.
Deleteஎல்லாம் அழகே.எலியப்பா. மினி டைலன்.சூப்பர்ங்கசார் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteSuper Sir.... Waiting for CBF 👍
ReplyDeleteவரும் ஞாயிறு ஜனவரி 8 காலையில் இருந்து நம்ம ஸ்டாலில் ஆஜராகிடுவேன்..
உங்களையும் லயன் முத்து குடும்ப நபர்களையும் நேரில் சந்திக்கும் ஆவலுடன் 🥳👍
@Rafiq Raja..❤💐
Deleteஸாகோர் பேரவை சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்..😍😘
***And இம்முறை முதலாய் ஸ்டாலுக்கு வரும் நண்பர்களிடம், அவர்தம் மொபைல் நம்பர்களை சேகரிக்கும் முயற்சியுமே முன்னெடுக்கப்படும் - அவ்வப்போது வாட்சப்பில் updates அனுப்பும் பொருட்டு
ReplyDeleteசிறப்பான ஐடியா சார்...
விற்பனை சிறக்க வாழ்த்துகள்..
நல்ல திட்டமிடல்கள்.
ReplyDeleteமேலும் விற்பனை சிறக்க வாழ்த்துகள்..
Me வந்துட்டேன்..😍😘
ReplyDeleteதலைவரே நமக்கு நீங்கள் கேட்டது போலவே தனி ரேக். V காமிக்ஸ் வாழ்க வாழ்க
Delete// ஜம்பிங் ஸ்டார் பேரவையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒரு வரிசை முழுக்க V காமிக்ஸ் ஆக்கிரமித்து நிற்கும் !! // வெற்றி வெற்றி முதல் போராட்டமே வெற்றி.
Deleteஅனைத்துக்கும் நம்ம தல கோடாலி பாபுஜியே காரணம். விற்பனையும் சிறந்தால் தான் நம்ம சங்க மானமும் தப்பும்.
Delete@Kumar ji..😘😘😍
Deleteசெயலரே..💜💙❤
நம் V காமிக்ஸ் ..😍😘
நம் உரிமை..💪👍
நம் கோரிக்கை யை ஏற்று V காமிக்ஸ் க்கு தனி ரேக் தந்த நம் எடிட்டர் சாருக்கு நன்றிகளை நம் ஸாகோர் பேரவை சார்பாக ஜம்ப் செய்து தெரிவித்து கொள்வோம்..💐🌷🌹
@பொருளாளரே..😍😘😘
DeleteCBF ல V காமிக்ஸ் விற்பனை வேற லெவல் ல இருக்கும் பாருங்க...💪👍👌✊
ஸாகோர் சரித்திரம் படைப்பார்..😍😘💪👍👌✊✊
V காமிக்ஸ் முதல் இதழ் சீக்கிரமே விற்று தீர்ந்து சீக்கிரமே ரீபிரிண்ட் போடற மாதிரி இருக்கும்னு உளவுதுறை அறிக்கை சொல்லுதுங்க..😍😘😘👏👑
Deleteஎனது எண்ணமும் இதுவே. அந்த அட்டையே அசத்தல். அதற்கே புத்தகம் sold out ஆகப் போகுது.
Deleteஜம்பாபு
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteWelcome sir
ReplyDelete##ரிப் கிர்பி புக்ஸ் 35 ; மாண்ட்ரேக் 60 ; காரிகன் 75 - என்பது போல் கையிருப்பு odd நம்பர்களில் உள்ளன. வேதாளர் சுத்தமாய் காலி ! So அந்த 20 complete sets தவிர்த்த மீத இதழ்கள் (ரிப் ; மாண்ட்ரேக் & காரிகன்) சென்னையில் விற்பனைக்கு வந்திடும் ! ##
ReplyDeleteEdi Sir..
அப்ப வேதாளர்தான் வேணும்னு அடம் புடிக்கிறவங்களை என்ன பண்றதுங்க.😃😃😜😜
Set வாங்கி குடுக்க வேண்டியது தான் சார் ; சிம்பிள் !
DeleteDefinitely Sir..😍😘😃😀💐🌷
ReplyDelete56th
ReplyDeleteசென்னை அன்புடன் வரவேற்கிறது. விற்பனை சிறக்க வாழ்த்துக்கள். கண்டிப்பாக ஆஜர் ஆகிடுவோம் !!
ReplyDeleteசூப்பர் சார்.....
ReplyDeleteவிழா விற்பனை வெற்றி பெற செந்தூரான் அருளை வேண்டுகிறேன்
இரும்புக்கை மாயாவி இல்லாமல்..beautiful sir.. சொன்னா நம்பமாட்டிங்க...
ReplyDeleteஅவர் என் "மூத்த அண்ணன் " என்ற உணர்வு..8வயசில இருந்து... இப்ப 58 வயதிலும்
அப்படியே இருக்கிறது....
எனக்கே ஆச்சர்யமா இருக்கு... இந்த feeling வேறு
யாருக்காவது இருக்கா நண்பர்களே...? ❤️ 😄....
எனக்கு நண்பர் போல
Deleteஅடடே!! இப்படியெல்லாம் வேறயா?!!
Deleteஎனக்கு நான்தான் இரும்புகை மாயாவி என்ற பீலிங் எப்பவுமே இருக்குது..😃💪
Deleteசெமயா சொன்னீங்க நண்பா.
Deleteவிற்பனை சிறக்க வாழ்த்துக்கள் ஆசிரியர்!!!
ReplyDeleteஅப்புறம் இந்த மாதம் பெட்டி இன்னும் வரவில்லை. எனர்ஜி யே இல்லாமல் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது. சீக்கிரம் அனுப்பி வையுங்கள்.
@கோவை நிலா..😃🙏
ReplyDeleteபொட்டி இன்னைக்கு கிளம்புதுங்க..👍
Thanks for the information Sir
Deleteகனமாய் கிளம்பிய புத்தகப் பெட்டி காலியாய்த் திரும்பவும்,
ReplyDeleteகாலியாய்ப் போன பணப்பெட்டி
கனமாய்த் திரும்பவும்
வாழ்த்துகள்.
அட! இது நல்லாருக்கே!!
DeleteVery nice one!
Delete👍👍👍
Delete///ஜம்பிங் ஸ்டார் பேரவையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒரு வரிசை முழுக்க V காமிக்ஸ் ஆக்கிரமித்து நிற்கும் !! ///
ReplyDeleteநேற்றுப் பெய்த முத்த மழையில் இன்று முளைத்த காளான் சங்கத்துக்கெல்லாம் இத்தனை முக்கியத்துவம் தர்றதெல்லாம் பல ஆண்டுகளாய் சங்கம் வளர்த்துவரும் எங்கள் நிஜாரில்லா தலீவருக்கு செய்யப்பட்ட துரோகம்!! ஓரவஞ்சனை'னும் சொல்லலாம்!
'கோரிக்கைக்கு ஏற்ப'ன்னு போட்டிருந்தாக் கூட பரவாயில்லை - 'அறிவுறுத்தலுக்கு ஏற்ப'வாம்!! கிர்ர்ர்...
எடிட்டர் சாருக்கு ஒரு ஆலோசனை :
ReplyDeleteசென்னையில் ஜம்ப்பிங் ஸ்டார் பேரவை உறுப்பினர்களை வைத்து மரத்தடி மீட்டிங் போடமுயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் மரக்கிளை கண்ணுக்குத் தென்பட்ட மறுகணமே தாவிவிடுவார்கள்.. நீங்கள் தனியாகப் பேசிக்கொண்டிருக்க நேரிடலாம்!
ஆகவே, பூட்டிய அறையினுள் மீட்டிங்கை வைத்துக் கொள்ளுங்கள்!
ஜம்ப்பிங் சங்கத்தினர் எடிட்டரை சென்னையில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தால் அதன் ஷரத்துகள் பின்வருமாறு இருக்கக்கூடும் :
ReplyDelete* ஜம்ப்பிங் ஸ்டாருக்கு V-காமிக்ஸில் தனித் தடம் - தனி சந்தா!
* மாதம் ஒரு ஜம்பிங் ஸ்டார் இதழ்! ஆகமொத்தம், ஆண்டுக்கு 18!
* ஜம்ப்பிங் பேரவை உறுப்பினர்களுக்கு கவர் ப்ரைஸிலிருந்து பிரத்யேகத் தள்ளுபடி!
* மாதம் ஒரு ஜம்ப்பிங் ஸ்டார் போஸ்டர், புக் மார்க்ஸ், லேபிள்ஸ்!
* ஜம்ப்பிங் ஸ்டாரின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிட இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை மனு - கம்பேனி சார்பில்!
* ஜம்ப்பிங் பேரவை உறுப்பினர்களுக்கு கோடாலி சின்னம் பொறித்த பிரத்யேக பேட்ச் மற்றும் அடையாள அட்டை - காமிக்ஸ் கம்பேனியிடமிருந்து!
* ஜம்ப்பிங் பேரவைக்காக சிவகாசியில் பிரத்யேக அலுவல் அறை (A/C வசதியுடன்). எடிட்டர் சமூகத்துடன் 24x7 தொடர்பு கொள்ள பிரத்யேக ஹாட்-லைன் வசதி!
* வருடம் ஒருமுறை கம்பேனி செலவில் உறுப்பினர்களுக்கு ஒரு இத்தாலி விசிட் & போனெல்லியுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!
@EV..😘😍
Deleteஆஹா..ஆஹா..
கொ.ப.செ ன்னா ச்சும்மாவா..😍😘😘😘
சார் உங்கள் சாய்ஸ் ஆக லிஸ்டான 30 புத்தகங்களின் அட்டவணை ப்ளிஸ் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசென்னை புத்தகவிழா விற்பனை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteசிங்கம் வீறுநடை போடட்டும்
என்ன செயலரே..
ReplyDeleteகொஞ்சம் பிஸியா பதுங்குகுழில கொஞ்ச நாள் இருந்தது வாஸ்த்தவம் தான்...அதுக்குள்ள நமக்கு போட்டியா சங்கம் மொளைச்சுருக்கு ..தலைவராம் செயலராம் பொருளாளராம் உப செயலராம் இதெல்லாம் என்ன இது செயலரே...இதனால நம்ம சங்கத்துக்கு ஒண்ணும் பாதிப்பில்லையே...சங்கத்துக்கு பாதிப்பு வந்தாலும் நம்ம பதவிக்கு ஒண்ணும் பாதிப்பில்லை தானே செயலரே...
ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லுங்க செயலரே..முடிஞ்சவன வரேன்..
தலைவரே,
Deleteகவலை படாதீங்க. நாங்க உங்க கூடதா இருக்கோம். முதல்ல பதுங்கு குழிய கோட்டையா எழுப்புறோம். நம்ம கொடியை பறக்க விடுறோம்.
சூப்பர்ங்க...:-))
Deleteதலைவரே இன்னுமா உங்க செயலரை நம்புறீங்க, அங்க ரவுண்டு பன்னு நிறைய கொடுப்பதாக சொல்லி அவரை அங்க ஜம்ப் பண்ண வச்சிட்டாங்க :-)
Deleteஎனக்கு நீங்கதான் தலைவர் :-)
உங்க செயலர் சும்மாவது இருந்து இருக்கனும் அவங்கள காமெடி பண்ணுறேன் என்று நல்ல பப்ளிசிட்டி தேடி கொடுத்து விட்டார் :-) அதனால் அவங்க இவரை கொ.ப.சா வாக வைத்து இருகாங்க :-)
Delete2017 ல்cbfல் ஒரு தந்தை.;//லார்கோலாம் வேண்டாம் .நான் சின்னவயதில் இரும்புக்கை மாயாவி தான் படிச்சேன் என் பையனும் மாயாவி தான் படிக்கணும். // 2022 .ல் கரூரில் ஒரு தந்தை தன் மகனிடம்; //இவர்தான் இரும்புக்கைமாயாவிகரண்டுக்குள்கைவிட்டால் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைஞ்சிருவாரு .// இப்படி 70களின் தமிழ் வாசகர்களுக்கு ஒரு வாசிப்பு அடையாளமாக இருந்தவர் மாயாவி .நாம் இன்று மாயாவியை ரசிக்கிறோமோ இல்லையோ தமிழகமெங்கும் மாயாவியின் ரசிகர்கள் பரவலாக உள்ளனர்.புத்தகவிழாக்களுக்கு மாயாவி வாங்க வேண்டுமென்றே பல வாசகர்கள் வருகிறார்கள் .அவர்களுக்கு மாயாவி புது கதையா மறுபதிப்பா என்பதெல்லாம் கவலையில்லை.தங்கள் சின்னவயதின் ஒரு நண்பன் ..தானும் ஒரு வாசகனாக இருந்ததன் அடையாளம்.இவர்களின் இந்த உணர்வுக்கு மதிப்பளித்தே
ReplyDeleteவணிக நோக்கமில்லாமல் ஆசிரியர்புத்தகவிழாக்களுக்குமாயாவியைதவறாது இடம்பெறச்சேய்கிறார் .வாழ்க மாயாவி . கரூர் ராஜ சேகரன்
Nice!
Deleteஆக மொத்தம் ஜனவரில என்ன புக்குலாம் வருது - ஒண்ணுமே புரியலையே !? யாருக்காவது மொத்த வரிசையும் தெரியுமா? :-)
ReplyDeleteராக்ஸ்... காமிக் வாட்ஸ்ஆப் குழுவில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது.... இங்கே:
Deleteசந்தாவில் இல்லாமல் இந்த ஜனவரி வாங்க வேண்டியது.
1. புது அட்டை - இமயத்தில் மாயாவி
2. எலியப்பா தொகுப்பு
3. டைலன் டாக் - மினி கலர் சைஸ்
டெக்ஸ்...வேதாளன்,..மைக் ஹேமர்...ரெடியானா வி காமிக்கின் சாகோர்
DeleteAppo that color and black and white siruvar malar book? Not for Jan?!
Deleteடைலன்டாக் மினி சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பு என்று நினைக்கின்றேன்.
DeleteThis comment has been removed by the author.
Delete// Appo that color and black and white siruvar malar book? Not for Jan?! //
Deleteonline book fair :-)
@Raghavan ji..😃
Deleteகீழ்கண்ட 3 புக்குகள் ஜனவரியில் வருகின்றன..❤💚💙💛💜
1)Tex- "பகை பல தகர்த்திடு"
2)ஸாகோர்-
*V காமிக்ஸ்* ன் முதல் புத்தகம்- "பிரியமுடன் ஒரு போராளி"
3)மைக் ஹேமர்- "மரணம் சொன்ன இரவு".
4) Supreme 60s வேதாளர்.
Deleteஇந்த வருடம் காமிக்ஸ் நேசர்களுக்கு பலமான விருந்து படைக்கும்போல... வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteசார் புத்தாண்டு பரிசு கிளம்பியாச்சா
ReplyDeleteபடப் பொட்டி கிளம்பிடுச்சா சார்.
ReplyDeleteபொட்டி மேல கண்ணு...
ReplyDeleteஆன்லைன் லிஸ்டிங் போட்டுட்டாங்க...
ReplyDeleteOnline listing of January-2023 issues ready 😘👍💪
Deletehttps://lion-muthucomics.com/
Dear edi,
ReplyDeleteநான்கு மாயாவி கதைகள் என்று சொல்லி இருந்தீர்கள் இதுவரை அதிகமாக மறுப்பது செய்யாத கதைகள் தானே அவை
மறு பதிப்பு செய்யாத கதைகள் தானே
ReplyDeleteமறுக்கா..மறுக்கா மறுபதிப்பு செய்த கீழ்கண்ட 5ல் 4 இரும்பு கை மாயாவி கதைகள் வருகின்றன.😃👍✌
Delete💐🥰❤
1)இமயத்தில் மாயாவி.
2)நியுயார்க்கில் மாயாவி.
3)பாம்புத்தீவு.
4)கொரில்லா சாம்ராஜ்யம்.
5)உறைப்பனி மர்மம்.
நாளைக்கு புக் ரெடி. வாரே வா
ReplyDelete@செயலரே..
ReplyDeleteV காமிக்ஸ் & ஸாகோரின் first review போடுங்க..😍😘
நாளைக்கு முதல் வேலையே அது தான் தலைவரே. முதல் ரிவ்யூ நம்மது தான். (புக் நாளைக்கு கைக்கு கிடைக்கணும் முதலில் 😳).
Deleteபடப்பொட்டி கிளம்பியாச்சு என்ற ஆசிரியரின் பதிவுக்காகக் காத்திருக்கின்றோம்.
ReplyDeleteபுதிய பதிவு
ReplyDeleteரெடி இல்லை போல.
போய் தூங்குகின்ற வேலையப் பார்ப்போம்.
ReplyDelete