Saturday, December 31, 2022

ஹலோ சொல்லுவோமா ஒரு முயலுக்கு ?

 நண்பர்களே,

வணக்கம். வாரத்தின் இறுதி நாள் ; மாதத்தின் இறுதி நாளும் தான் ; அட, வருஷத்தின் இறுதி நாளுமே இன்றைக்குத் தானே ? பலருக்கும் பலவித அனுபவங்களைத் தந்த ஒரு dramatic ஆண்டுக்கு விடை தரும் தருவாயில் நிற்கின்றோம் - இந்த டிசம்பர் 31-ல் !! நம்மைப் பொறுத்தவரையிலும் நீராவி எஞ்சினைப் போலவொரு நெடும் பெருமூச்சையே 2022-க்கான பரிசாய்த் தந்து வழியனுப்பத் தோன்றுகிறது ! நிறைய highs ; கொஞ்சம் lows ; எக்கச்சக்க பெண்டு கழற்றல் ; அநேக அனுபவப் பாடங்கள் என்று இந்தாண்டு கண்ணில் காட்டியுள்ள அனுபவங்கள் எண்ணிலடங்காவொரு கலவை ! நாளை புலரவிருக்கும் திருவாளர் 2023 - சீன காலெண்டர்களின்படி "முயலின் ஆண்டு" என்று அறியப்படுகிறார் ! "நளினம், அழகு, நிதானம், நிம்மதி' என்பன இந்தாண்டுக்கான குறியீடுகளாம் ! நெடும் ஆயுள்....அமைதி....வளம் பெருகுமாம் இந்த வருஷத்தினில் !! சீன சமாச்சாரங்கள் என்றாலே டெரரான சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் இந்நாட்களில், அவர்களின் இந்தப் புராதன நம்பிக்கைகளாவது பொய்க்காதென்று நம்புவோமாக !! தெய்வமே !!

ஆண்டின் இந்த இறுதிப் பதிவானது, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னே துவங்கியதொரு சமாச்சாரத்தை விரைவில் ஒரு சுப க்ளைமாக்ஸுக்கு நகர்த்திட முனைந்திடும் பதிவாக இருக்கும் ! And yes - "உயிரைத் தேடி" பற்றிய பதிவே தான் இன்றைய highlight !

இப்போதெல்லாம் கி.பி...கி.மு...என்பது போல அடையாளத்துக்குச் சொல்லத் தோன்றுவது, 'மொத லாக்டௌன்' ; 'ரெண்டாது லாக்டௌன் ' என்ற கால கட்டங்களையே ! ஒன்றாவதுக்கும், இரண்டாவதுக்கும் இடைப்பட்டதொரு சோம்பலான நாளினில் "உயிரைத் தேடி" தொடருக்கான உரிமைகளை வாங்கியிருந்தோம் !  எண்பதுகளின் பிற்பகுதியில் (சரி தானுங்களா மக்களே ?) தினமலர் சிறுவர்மலரில் தொடராய் வெளி வந்து செம ஹிட்டடித்த கதை இது என்பது நம்மில் யாருக்கும் தெரியாதிராது - maybe 2K கிட்ஸ் நீங்கலாய் ! நிஜத்தைச் சொல்வதானால், இந்தத் தொடர் தினமலரில் வெளியான நாட்களில் நான் அதனைப் பெரிதாய்ப் பின்தொடர்ந்ததில்லை ! ராணி காமிக்ஸும் சரி, மேத்தா காமிக்ஸும் சரி ; தினமலரின் சிறுவர்மலர்களும் சரி, எப்போது வெளிவந்தாலும், அவற்றை மேலோட்டமாய்ப் புரட்டுவது ; எந்தக் கதைகளை வெளியிட்டுள்ளனர் ? என்பதைப் பார்க்க வேண்டியது ; அப்பாலிக்கா அவற்றுள் ஏதேனும் குறைகள் தென்படுகின்றனவா ? என்று பார்க்க மட்டுமே தோன்றிடும் ! முழுசாய் உட்புகுந்து எதனையும் வாசிக்க முனைந்ததில்லை - 'ச்சீசீ...இந்தப் பயம் புயிக்கும்' கதையாக ! So "உயிரைத் தேடி" தொடரை அன்றைக்கு சீரியஸாய் follow செய்திருக்காதவன், பின்னாட்களில் நண்பர்கள் அது பற்றிப் பேசுவதைக் காதில் வாங்க ஆரம்பித்த போது தான் இப்படியொரு weight இந்த நெடும் கதைக்கு உள்ளதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன் ! கமர்ஷியல் ஹிட்டடிக்க Fleetway தயாரிப்புகள் என்றைக்குமே உத்திரவாதமான material என்பதில் எனக்கு ஐயங்கள் இருந்ததில்லை என்பதால், அந்த லாக்டௌன் பொழுதுகளின் உருட்டல்களில் இந்தக் கதை பற்றிய பின்னணிகளை நெட்டில் தோண்டித் துருவினேன் ! எனது நல்லதிர்ஷ்டம் - இதன் கதாசிரியரை நேரில் தொடர்பு கொள்ளவொரு வாய்ப்பு கிட்டியது ! அவரிடம் கொஞ்சமாய் மின்னஞ்சல்களில் தகவல் பரிமாற்றங்கள் செய்த போதே தீர்மானித்து விட்டேன் - இது கூடையைப் போட்டு பொத்தப்பட  வேண்டிய செம வெடக்கோழி என்பதை ! தொடர்ந்த நாட்களில் கதையின் உரிமைகளைப் பெற்றான பின்னே தான் கதையையே நான் முழுதாய்ப் படிக்க முனைந்தேன் ! And கொரோனா அரக்கன் தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்நாட்களில் இந்தக் கதையினை வாசிப்பது ஒரு ஜிலீர் கிலி அனுபவமாக இருந்தது ! 

அச்சமயத்தில் நமது மொழிபெயர்ப்பு டீமில் இடம்பிடிக்க புதிதாயொரு சகோதரி முயற்சித்துக் கொண்டிருந்தார் ! IAS தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருந்தவர், கொரோனா உருவாக்கிய கட்டாய பிரேக்கில் வீட்டில் சோம்பலாய் இருக்க, அந்நேரத்தினில் நமக்குப் பேனா பிடிக்க ஆர்வம் காட்டியிருந்தார் ! அவரிடம் நான் தந்த கதை "உயிரைத் தேடி" தான் ! எல்லோருமே வீட்டில் மோட்டுவளைகளைப் பார்த்துக் கொண்டிருந்த 2021-ன் ஊரடங்கு நாட்களவை என்பதால் குறுக்கும் மறுக்குமாய் மொழிபெயர்ப்புகள், திருத்தங்கள், மறுக்கா மொழிபெயர்ப்புகள், மறுக்கா மறுக்கா திருத்தங்கள் என்ற கூத்துக்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன ! To her credit , நான் படுத்தியெடுத்த பாடுகளையெல்லாம் துளியும் முகச்சுளிப்பின்றி ஏற்றுக் கொண்டு முயற்சிகளைத் தொடர்ந்தவர், ஒரு கட்டத்தில் ரொம்பவே fluent ஆக எழுதும் ஆற்றலை வெளிப்படுத்த ஆரம்பித்தார் !! எனக்கோ செம குஷி ; ஆனால் ரொம்பவும் துள்ள வழியில்லை ; because லாக்டௌன் முடிந்த முதல் நாளில் அவர் நமது மொழிபெயர்ப்புப் பொறுப்புகளுக்கு டாட்டா காட்டிவிட்டு புறப்பட்டு விடுவார் என்பது முதலிலேயே தெரிந்திருந்த சமாச்சாரம் ! 5 மாதங்கள் எடுத்துக் கொண்டார் - முழுசாய் 184 பக்கங்களை பூர்த்தி செய்திட ! ஆனால் இறுதி output செம நீட்டாக இருந்தது & ரொம்பவே முக்கியமாய் சுலப நடையில், சுலப வாசிப்புக்கு உகந்திருந்தது !  

2021-ன் பிற்பகுதியில் கிடைக்கும் ஓய்வுகளின் போதெல்லாம் நம்மாட்கள் DTP வேலைகளை செய்து முடித்திருக்க, ஒரு கத்தைப் பக்கங்களோடு "உ.தே" எனது மேஜையில் ஜாகையினைத் துவங்கியிருந்தது ! புத்தக விழாக்கள் ஒன்று பாக்கியின்றி ரத்தாகிக் கிடந்த அந்த நாட்களில், அட்டவணையினில் இடம்பிடித்திருக்காத இந்த இதழினை குறுக்காலே வெளியிட சற்றே தயக்கம் மேலோங்கியது ! Moreso நம்மைச் சுற்றிலும் அந்நேரங்களில் வைரஸ், நோய்த்தொற்று, ஆஸ்பத்திரிகள் ; வண்டி வண்டியாய் வதந்திகள் என எக்கச்சக்க நெகட்டிவ் சமாச்சாரங்கள் சுழன்றடித்துக் கொண்டிருக்க, நம் பங்குக்கு இந்த apocalypse ரக ஆல்பத்தை இறக்கிவிட்டு புண்ணியம் சேர்ப்பானேன் என்ற தயக்கத்தில் கொஞ்சம் பிரேக் விட தீர்மானித்தேன் ! 2022-ம் பிறந்தது & ரைட்டு...இந்தாண்டினில் இதனைக் களமிறக்கி விட்டுப்புடலாம் என்ற திட்டமிடலோடு அறிவிப்பினை வெளியிட்டோம் - black & white ஹார்ட் கவர் ஆல்பம் - ரூ.200 விலையில் என்று ! Truth to tell - இந்த விலையானது "உயிரைத் தேடி" திட்டமிடலின் பிள்ளையார் சுழி போட்ட தருணத்தினில் நிலவி வந்த பேப்பர் விலைகளைக் கருத்தில் கொண்டு நிர்ணயித்தது ! 2022-ன் பிற்பகுதியில் நிறையவே விலையேற்றம் இருப்பினும், இந்த cult இதழை ஒரு ஜனரஞ்சக விலையிலேயே தொடர்வது உசிதமென்று தீர்மானித்தோம் ! And இதோ - இந்த ஆல்பம் ஒரு வழியாய் ரிலீஸ் ஆகிடவுள்ள 2023-ல் இந்த இருநூறு ரூபாய் விலையானது இம்மியூண்டு சாத்தியம் கூட இல்லாததொன்று என்பது புரிந்தாலும் - 'மணந்தால் மகாதேவி' பாணிக்கு விடை தரும் உத்தேசங்கள் இல்லவே இல்லை ! So அதே இருநூறில் செம ரிச்சாக black & white இதழ் வெளியாகும் !  

Cut to a phase in end 2021 - இத்தனை மவுசுள்ளதொரு இதழ் தினமலர் சிறுவர்மலரிலேயே 2 வண்ணங்களிலும், கலரிலுமாய்க் கலந்து கட்டி வெளியாகியிருக்க, அதனை நாமும் கலர் பண்ணி வெளியிட்டால் என்ன ? என்ற கேள்வியினை நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டேயிருக்க, 'ரைட்டு, இழுக்கும் தேரை முழுசுமாய் இழுத்துப்புட்டால் போச்சு' என்ற எண்ணத்துடன் படைப்பாளிகளிடம் மறுக்கா பேச ஆரம்பித்தேன் - full color இதழையும் ஒருசேர வெளியிடுகிறோமே ? என்று ! ஆனால் அவர்கள் அதற்கு அப்போது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை ; maybe கொஞ்ச காலத்தினில் நாங்களே கலரில் வெளியிட்டாலும் வெளியிடலாம் என்பது போல சொல்லியிருந்தார்கள் ! சரி...அவர்களே கலரிங் செய்து விட்டால் செம அழகாய் இருக்கும், நமக்கும் நோவு மிச்சமே என்றபடிக்கு நான் ஒதுங்கிக் கொண்டேன் ! நிலவரம் இவ்விதமிருக்க, நடப்பாண்டினில் சில மாதங்களுக்கு முன்பாய் - "நீங்களே கலர் பண்ணி ஒரு கலர் ஆல்பத்தினையுமே வெளியிடுவதாக இருந்தால் - carry on ...! எங்களுக்கு இப்போதைக்கு இதனைக் கையில் எடுப்பது மாதிரியான திட்டமிடல் இல்லை" என்று சொல்லியொரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது ! 

அந்நேரத்துக்கோ black & white பதிப்புக்கென நமக்கு கணிசமான முன்பதிவுகள் கிட்டியிருந்தன & அட்டைப்படமும் ரெடியாகி இருந்த நிலையில் 2022 தீபாவளிக்கு ஆல்பத்தை வெளியிடும் முஸ்தீப்பில் இருந்தோம் ! But கலர் இதழுக்கும் green signal கிட்டிவிட்ட நிலையில், அதை இன்னமொரு 6 மாதங்கள் கழித்து நான் அறிவிப்பதாக இருந்தால், சாணிப்பாலைக் கரைத்துத் தலையில் ஊற்ற 'நானு..நீயு..' என்று கூட்டம் அலைமோதுமென்பதை யூகிக்க முடிந்தது ! 'ஒரு ரவுண்டு black & white-ல் சில்லறை பார்த்துப்புட்டு, இப்போ அடுத்த ரவுண்டு கலரிலே கல்லா கட்ட தீர்மானமாக்கும் ராசுக்கோல் ? ....கலர் இப்போதைக்கு நஹி என்று சொன்னதெல்லாம் பொய் தானா கோப்பால் ??' என்று ஆளாளுக்கு மொத்தியெடுக்கும் காட்சி ஒரு கணம் என் மனசில் ஓட, "ஆத்தீ...!! கருப்பு-வெள்ளை இதழின் பணிகளை அப்டியே pause போடுங்க !! கலர் ஆல்பத்துக்கான உரிமைகளை பேசிமுடித்த பிற்பாடு, கலரிங் வேலைகளையும் முடித்துக் கொண்டு, ஒரே நேரத்தில் black & white இதழ் + கலர் இதழ் என்ற திட்டமிடலோடு கிளம்பலாம் !" என்று சொல்லி வைத்தேன் ஆபீசில் ! இது எதுவுமே நம்மாட்களுக்குத் தெரியாதென்பதால் - 10 நாட்களுக்கு ஒரு தபா, "சார்...உயிரைத் தேடி எப்போ வரும்னு கேட்டு மூக்கிலே குத்துறாங்க சார் !" என்ற முகாரி ராகங்களோடு வருவார்கள் ! கொஞ்சமாய் டிஞ்சர் போட சொன்ன கையோடு நான் silent mode க்குப் போய்விடுவேன் ! 

ஓசையின்றி நவம்பர் துவக்கம் முதலாய் கலரிங் பணிகளை துவக்கியிருக்க, 184 பக்கங்கள் கொண்ட இந்த ராட்சஸப் பணிக்குள் அந்த டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் ராப்பகலாய் உழைத்து வருகிறார் ! அன்றாடம் செய்து முடித்த பணிகளை என்னிடம் காட்டுவது, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் செய்து முடிப்பது - என கிட்டத்தட்ட 2 மாதங்களாய் தனது இதர வேலைகளையெல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டு இதனுள் ஒரு தவமாய்ப் பணியாற்றி வருகிறார் ! இந்தப் பணிகளைக் co-ordinate செய்திடும் பொறுப்பை நம் நண்பர்களுள் ஒரு தீவிர "உயிரைத் தேடி" fan முழுவீச்சில் ஏற்றுக் கொண்டிருக்க, என் பாடு கொஞ்சம் இலகுவாகியுள்ளது ! ஆனால் அவர்களுக்கோ எக்கச்சக்க சிவராத்திரிகள் தொடர்ந்து வருகின்றன ! டிசம்பர் 31-க்குள் கலரிங்குக்கு சுபம் போட முடிந்தால் அதன் பிற்பாடு எடிட்டிங், புராசசிங் ; அச்சு & பைண்டிங் என fast track செய்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்திட எண்ணியிருந்தோம் ! ஆனால் இந்தப் பணியின் ராட்சஸப் பரிமாணம் அதற்கு முட்டுக்கட்டை போட, இன்னமும் ஒரு 10 நாள் வேலை எஞ்சியுள்ளது ! Once that is done too - "உயிரைத் தேடி" கலர் ஆல்பம் ரூ.500 விலையிலும், black & white ஆல்பம் ரூ.200 விலையிலும் simultaneous ரிலீஸ் கண்டிடும் - நமது ஆன்லைன் புத்தக விழாவினில் (date will be announced soon!) 

  • ஏற்கனவே black & white இதழ்களுக்கு முன்பதிவு செய்துள்ளோர் அதுவே போதுமென்று எண்ணினால் - no problems, அதற்கேற்ப அனுப்பிடுவோம் !
  • ஏற்கனவே black & white இதழ்களுக்கு முன்பதிவு செய்திருந்தோர் - 'இல்லே...கலர் வருதுன்னா எனக்கு கலர் தான் வேணும் ! B & W கேன்சல் !" என்றால் again no problems, மேற்கொண்டு ரூ.300/ அனுப்பினால் அதற்கேற்பவும் அனுப்பிடலாம் !
  • 'எனக்கு b &w இதழும் வேணும், கலர் ஆல்பமும் வேணும் !' - என்று சொன்னால், மவுண்ட் ரோடில் இல்லாங்காட்டியும், மன்னார்குடி ரோட்டிலாச்சும் உங்களுக்கு ஒரு சிலை வைத்த கையோடு, அவற்றின் மீது காக்காக்கள் 'ஆய்' போய் வைக்காதிருக்க குடைகளை பிடித்தபடிக்கே நிற்போம் !!
  • And இந்த நொடியில் உடனே பணம் அனுப்ப அவசரங்களில்லை ! நிதானமாய் நமது ஆன்லைன் புத்தக விழாவின் போது உங்களுக்குத் தேவையான இதழுக்கோ / இதழ்களுக்கோ ஆர்டர் செய்து கொள்ளலாம் !!

So இதுவே திட்டமிடல் guys :



Phew....ஒரு வழியாய் அறிவிப்பை செய்தாயிற்று என்பதால், இனி அடுத்த விஷயங்களுக்குள் குதிக்கும் வேலையினைப் பார்க்கலாம் !! 

Moving on, ஜனவரியில் debut செய்திடவுள்ள V காமிக்ஸ் அட்டைப்படத்தினை உங்களிடம் காட்டச் சொல்லி 900 எடிட்டர் சொல்லியதால் - here you go :


Just look at these illustrations !!! Uffffff......!! மிரட்டல் !! ஜம்பிங் ஸ்டார் பேரவையினர் இதனை அண்ட சராச்சரங்களெங்கும் கொண்டு சேர்த்து விடும் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்வார்களென்ற நம்பிக்கை 899 & 900 க்கு உள்ளது !! 

அப்புறம் போன பதிவிலேயே நான் குறிப்பிட்ட அந்த டெக்ஸ் அட்டைப்படமும் இதோ ! கோப்பினை வாங்க மறந்து போச்சு ; so கையில் உள்ள புக்கிலிருந்து ஒரு photo !!

Before I wind up, ஒரு மாதம் முன்னே கேட்டிருந்ததொரு கேள்வியின் நீட்சி - இம்முறை உங்களுக்கு தீர்மானம் பண்ணிட இலகுவான வாய்ப்புடன் :

இதோ - அடுத்த SUPREME '60ஸ் இதழில் களமிறங்கத் தயாராக உள்ள டிடெக்டிவ் சார்லி - 2 வெவ்வேறு பக்க அமைப்புகளில் ! 



  1. சித்திரம் 1 - வழக்கமான MAXI சைஸ்....பக்கமொன்றுக்கு 12 படங்களுடன் !
  2. சித்திரம் 2 & 3 - வழக்கமான டெக்ஸ் சைஸ்....பக்கமொன்றுக்கு 6 படங்களுடன்!

இவற்றுள் எந்த அமைப்பு ஓ.கே. என்பீர்களோ folks ? 

உங்கள் பதில்களை சிம்பிளாக "12" என்றோ - "6" என்றோ இங்கு பதிவிட்டால் போதும் ! உங்களின் தேர்வுகள் மாத்திரமே ப்ளீஸ் - அவற்றின் பின்னணிக் காரணங்கள் not really needed because, அடுத்த நண்பரின் தேர்வின் மீதான விமர்சனமாய் அவை தென்படலாம் !! 

And இதோ - இன்னமுமொரு சந்தா நினைவூட்டலோடு ஞான் கிளம்புது - புத்தாண்டுக்கும், புத்தாண்டின் பணிகளுக்கும் தயாராகிக் கொள்ளும் பொருட்டு !! செம தெறி வேகத்தினில் ஓட்டமெடுத்து வரும் சந்தா சேர்க்கை தொடரும் நாட்களில் இதே வேகத்தில் பயணித்தால் - 2023 இன்னுமொரு அற்புத ஆண்டாக அமைந்திடும் நம் அனைவருக்கும் !! 



மீண்டும் சந்திப்போம் folks !! புதிதாய்ப் பிறக்கவுள்ள ஆண்டானது நம் அனைவருக்கும் நலம் + வளம் + நம் கனவுகள் அனைத்தினையும் நிஜமாக்கும் திறனையும் வழங்கிடும் ஆற்றலுடன் அமைந்திட புனித மனிடோவிடம் கரம்கூப்பி வேண்டிக் கொள்வோம் !! See you all in the NEW YEAR folks !! 

Have a wonderful wonderful New Year 's Eve & a Beautiful 2023 !! God be with us all !! 


பி.கு : நண்பர் STR போன பதிவினில் போட்டுத் தங்கியிருந்த அந்த TEX புள்ளி விபரங்கள் செம மாஸ் !! அதனை ஜனவரி டெக்ஸோடு இணைக்க வழியுண்டா ? என்று பார்க்கவுள்ளோம் !! நன்றிகள் ஒரு நூறு சார் !!

232 comments:

  1. Replies
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
    2. பெரியாசிரியர்
      ஆசிரியர்
      சிற்றாசிரியர்

      சிவகாசி டீம்

      அனைவருக்கும் இனிய 2023 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  2. அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நண்பர்கள் & ஆசிரியர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து நட்புக்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🤝💐🎆🎇

    ReplyDelete
  4. 6 is my choice sir. Innum gundaa irukumlE book-u :-) So !!

    ReplyDelete
  5. V காமிக்ஸ் முதல் இதழ் ஸாகோர் அட்டைப் படம் சும்மா தெறி மாஸ்.

    ReplyDelete
  6. காமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு ( 2023 ) வாழ்த்துக்கள் 🎂🎂

    ReplyDelete
  7. பதிவை முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  8. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. லயன் குழும ஆசிரியருக்கும், வி காமிக்ஸ் ஆசிரியருக்கும் முத்து காமிக்ஸ் மூத்த ஆசிரியருக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய முயல் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    சார் 200 பதிப்பான கருப்பு வெள்ளை ஹார்ட் பவுண்ட் இல்லையா?

    எனக்கு இரண்டுமே வேண்டும் அதற்கான பணம் அனுப்பிவிடுகிறேன்.

    6 படங்கள் போட்டா இன்னும் குண்டா ஆகிடும் அதுவும் நன்றாக இருக்கும் போல தான் தெரிகிறது

    ReplyDelete
  10. எனக்கு உயிரை தேடி இரண்டும் வேண்டும்.

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே..

    உயிரைத்தேடி .. B&W ,color இரண்டுமே பார்சல்...

    சுப்ரீம் 60 - "6"

    ReplyDelete
  12. @Edi Sir..🙏
    முயலின் ஆண்டிலே சாந்தியும் சமாதானமும் சிறந்து விளங்க வேண்டி கொள்வோம் Edi Sir..💐🌷🌹

    ReplyDelete
  13. ஜம்பிங் ஸ்டார் ஆர்ட் வொர்க் சும்மா அள்ளுதே. வரும் வருடம் ஸாகோர் வருடம்.

    ReplyDelete
    Replies
    1. செயலரே...😍😘😃
      கட்அவுட் ரெடி பண்றோம்.😍😃. கலக்குறோம்..😍😃😘

      Delete
    2. கலக்குவோம் தலைவரே

      Delete
    3. ///வரும் வருடம் ஸாகோர் வருடம்.///

      ஜம்ப்பிங் பார்ட்டிகளின் அட்டூழியம் ரொம்ப ஓவரா போய்ட்டிருக்கு! டெக்ஸ்-75 இயர்ல வந்து நின்னுகிட்டு 'ஸாகோர் வருடம்'னு சொல்றதெல்லாம் அழிச்சாட்டியத்தின் உச்சம்!!

      Delete
  14. சித்திரம் 1 - வழக்கமான MAXI சைஸ்....பக்கமொன்றுக்கு 12 படங்களுடன் !
    சித்திரம் 2 & 3 - வழக்கமான டெக்ஸ் சைஸ்....பக்கமொன்றுக்கு 6 படங்களுடன்!

    சித்திரம் 2 & 3 ஆனால் Maxi யில்

    ReplyDelete
    Replies
    1. இது பாயிண்ட்..💪
      இதுக்குதாங்க ஊருக்குள்ள ஒரு ஆல்இன்ஆல் அழகுராஜா வேணுங்கறது..😍😃👌

      Delete
    2. வாய்ப்பில்லை சார் !

      Delete
  15. @Edi Sir..😍😘😃
    உயிரைத்தேடி ..
    B&W & கலர் ரெண்டுமே வேண்டும்.👍💪.

    சார்லி- 12 & 6... இரண்டுமே நல்லாருக்கே...😃😍

    ReplyDelete
    Replies
    1. //சார்லி- 12 & 6... இரண்டுமே நல்லாருக்கே.//

      :-)

      Delete
  16. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சார் இது வரை வந்த பதிவிலேயே அட்டகாசப் பதிவு....
    இதுவரை வந்த அட்டைகள் ஒரே டாப் சாகோரின் இந்தட்டைதான்...இதப் போல அட்டை இனி வர வாய்ப்பேயில்லை....முதல் புத்தகத்தையே கலக்கலா தந்த வியாருக்கு வாழ்த்துக்கள்.....என்னா கலக்கல் சார்...சுஸ்கி விஸ்கி அட்டையப் போல அதகளம் சிவப்பில் அதிரடி...செம சூப்பர் வியாரே....
    சார் இனிய அட்டைப் படங்களுக்கு நண்பர் விக்ரமையே தயார் செய்ய விட்டு விடலாம்....
    கலரில் வரவுள்ள உயிரைக் தேடி அட்டைப் படத்த விக்ரம் கையில் தந்தா சூப்பர்....
    எனக்கு கறுப்பா ஒன்னு....வண்ணத்ல ரண்டு...அதும் ஹார்டு பௌண்ட்ல....கலக்குங்கசார்...மாபெரும் வெற்றி உறுதி...விக்கும்....உதேக்கும்....பொங்கலுக்கு செம் கலக்கல் உறுதிடோய்

    ReplyDelete
  18. காமிக்ஸ் நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎂🎂

    ReplyDelete
  19. @Edi Sir..😍😘
    துணிவுடன் வாரிசை களமிறக்கி கலக்கும் உங்களிடம் ஸாகோர் பேரவை சார்பாகவும்,
    V காமிக்ஸ் ரசிகர் மன்றம் சார்பாகவும் ஒருவேண்டுகோள்.🙏

    எங்கள் தங்கம் ஸாகோருக்கு ஒரு சைடு ரேக் புல்லா, எல்லா வரிசையிலயும்அடுக்கி ஒரு Grand opening கொடுக்கணுங்க..😍😘😃
    மனசு வைங்க..😘😘😘

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உண்டு தலைவரே. ஒரு முழு ரேக் ஃபுல்லா ஸாகோர் தோன்றும் V காமிக்ஸ். சும்மா தெறிக்கப் போகுது

      Delete
    2. ஆமாங்க செயலரே..😍😘😘
      ச்சும்மா பட்டைய கிளப்ப போறாரு நம்ப ஸாகோரு..💪தெறி மாஸ்..✌✌👍💐

      Delete
  20. சார்லியும் மேக்சில ஒன்னு வந்துட்டு போட்டுமேன்னு தோனுது....
    குண்டா வந்தாலும் நல்லாருக்குமேன்னும் தோணுது...‌
    வேற ஒன்னுந் தோணுது....பாதி கதைக மேக்சிலயும் ...மீதக்கதைக டெக்ஸ் சைசுலயும் ....இரு இதழா வந்தா வேண்டாங்க மாட்டோமே

    ReplyDelete
  21. உயிரைத் தேடி வண்ணத்தில் தருவதற்கு நாங்க தான் உங்களுக்கு சிலை வைக்கனும்னு நினைக்கிறேன்.

    இரண்டுமே பார்சல்..

    ReplyDelete
  22. 12. கோல்டன் ஓல்டீஸ் யாவும் இதுபோல் மேக்ஸியிலேயே வரட்டுமே என்ற எண்ணம் தான்

    ReplyDelete
  23. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  24. பருப்பு தான் எனக்கு புடிச்ச கொழம்பு... அட சே... கருப்பு தான்
    எனக்கு புடிச்ச கலரு.... ❤️

    ReplyDelete
  25. ஜனவரிப் புத்தகங்கள் எப்போது கிளம்பும் என்பதை ஆசிரியர் சொல்லவே இல்லையே ?!

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் புத்தகம் கிளம்பி விடும் என்று நினைக்கிறேன். புதன் அல்லது வியாழன்.

      Delete
  26. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. @ஸாகோர் பேரவை 😘😘😘

    எங்க தல ஸாகோர் டுபாக்கிய தூக்கிட்டு கிளம்பிட்டாரு..😮

    எத்தனை தலை உருளப் போவுதோ தெர்ல..😱

    ReplyDelete
    Replies
    1. அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இத்தனை கிழிசல்னா,அடிவாங்குனவன் உசுரோட இருப்பாங்கிற......🤪

      Delete
    2. ///எங்க தல ஸாகோர் டுபாக்கிய தூக்கிட்டு கிளம்பிட்டாரு..😮

      எத்தனை தலை உருளப் போவுதோ தெர்ல..😱///

      குதிரையில உட்கார்ந்திருக்கும் அந்த பாப்பாவோட 2 துப்பாக்கிகள்ல ஒன்னு கீழே விழுத்துடுச்சு. அதை ஜம்ப்பிங் ஸ்டார் பொறுக்கியெடுத்து 'இதுவா பார்'னு காட்டும்போது ஓவியர் வரைஞ்சதுதான் அந்த அட்டைப்படம்!

      ஆனாலும் நீங்க குடுக்கற பில்ட்அப் இருக்கே...

      Delete
  28. அனைவருக்கும்புத்தாண்டு வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

      Delete
  29. சீனியர் சார்,
    ஆசிரியர்,
    900 எடிட்டர்,
    நண்பர்கள்,
    சொந்தங்கள்,
    சகோதரிகள்,
    லயன் காமிக்ஸ் பணியாளர்கள்.....
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐💐💐

    ReplyDelete
  30. // சித்திரம் 2 & 3 - வழக்கமான டெக்ஸ் சைஸ்....பக்கமொன்றுக்கு 6 படங்களுடன்! //

    6. படங்கள் அருமையாக படிக்க ஏதுவாக தெரிகிறது.

    ReplyDelete
  31. 12
    (மேக்சி சைஸ் தான் வேண்டும். 2024 வண்ணத்துக்கு மாறும்போது வேண்டுமெனில் டெக்ஸ் சைசுக்கு மாற்றிக் கொள்ளலாம். அறிவித்தாற்போல் இந்த கருப்பு வெள்ளை இதழ்களை ஒரே சைசில் வெளியிடுவது தான் சிறப்பு.)

    ReplyDelete
    Replies

    1. /// 12
      (மேக்சி சைஸ் தான் வேண்டும். 2024 வண்ணத்துக்கு மாறும்போது வேண்டுமெனில் டெக்ஸ் சைசுக்கு மாற்றிக் கொள்ளலாம். அறிவித்தாற்போல் இந்த கருப்பு வெள்ளை இதழ்களை ஒரே சைசில் வெளியிடுவது தான் சிறப்பு.) ///
      Me too

      Delete
  32. 12 மேக்சி சைஸில் வரவேண்டும் என்பது தான் எனது விருப்பமும்.
    .. இந்த ஆண்டு முழுவதும் அனைத்து புத்தகங்களும் இந்த சைஸிலேயே வரட்டும்....

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  35. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
    மு பாபு
    கெங்கவல்லி..

    ReplyDelete
  36. சீனியர் எடிட்டர், அவர்தம் துணைவியாருக்கும், எடிட்டர், அவர்தம் துணைவியாருக்கும், ஜூனியர் எடிட்டர், அவர்தம் துணைவியாருக்கும்,பணியாளர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு இணைந்து, நானும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

      Delete
  37. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் காமிக்ஸ் காதலர்ஸ்...💐💐

    ReplyDelete
    Replies
    1. உங்கள விடுவேனா.
      உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
  38. ////உங்கள் பதில்களை சிம்பிளாக "12" என்றோ - "6" என்றோ இங்கு பதிவிட்டால் போதும் ! ////

    6

    ReplyDelete
  39. ஆசிரியர் குடும்பத்தினர்களுக்கும் , அலுவலர்களுக்கும் ,இங்கு கூடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தலைவருக்கு,
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  40. சாரலி

    எனக்கு "6" சார்..


    தெளிவான சித்திர பக்கங்களுடன் மெகா குண்டாக காட்சி அளிப்பதை காண காத்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தலைவர் சொன்னா அது சரி தான். எனக்கு அந்த ஆசை கீது.

      Delete
  41. டெக்ஸ்..ஸாகோர் இரண்டு அட்டைப்படங்களும் செம அட்டகாசமாய் அமைந்து உள்ளது சார்...சூப்பர்..


    வி காமிக்ஸ் ஜீ.எடியின் ஹாட்லைன் உண்டு தானே சார்...

    ReplyDelete
  42. ///உங்கள் பதில்களை சிம்பிளாக "12" என்றோ - "6" என்றோ இங்கு பதிவிட்டால் போதும் ! ////

    6 ..

    Happy new year to all ..

    ReplyDelete
  43. ஆஹா ஆஹா!! 'உயிரைத்தேடி' வண்ணத்தில் அசத்துகிறது! கண்களைச் சோதிக்காத நல்ல வண்ணத் தேர்வுகள். இப்பணியை சிரத்தையுடன் செய்துகொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்! ஒவ்வொரு ஃபிரேமிலும் எத்தனை உழைப்புத் தேவைப்படுமென்பதை இக்ளியூண்டாவது உணர்ந்துகொள்ள முடிகிறது. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரிவியூ பக்கங்களில் கூட சுவற்றில் படர்ந்திருக்கும் அந்தக் கொடிகளுக்கு பச்சை வண்ணம் தீட்டுவது எத்தனை நுட்பமான வேலையென்பது புரிகிறது!! உங்கள் உழைப்பின் பலனால் இப்புத்தகம் இதுவரை எட்டாத ஒரு விற்பனை உயரத்தை எட்டிச் சாதனை படைக்கட்டும்!! மொழிபெயர்த்த சகோதரிக்கும் என் நன்றிகளும், வாழ்த்துகளும்!!

    வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று (ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டுபிடிப்பதே இந்த எடிட்டர்களுக்கு வாடிக்கையாப் போச்சு) படைப்பாளிகளின் பிரத்யேக அனுமதி பெற்று எங்கள் மதிப்பிற்குரிய 'உயிரைத் தேடி'யை வண்ணத்தில் வெளியிட ஆவணஞ்செய்த 899 எடிட்டருக்கு காமிக்ஸ் ரசிகர்களின் கோடி நன்றிகள் உரித்தாகட்டும்!

    நானும் கலரில் ஒன்றும், கருப்பு-வெள்ளையில் ஒன்றும் வாங்கிட உத்தேசித்திருக்கிறேன்!

    உயிரைத் தேடியின் இந்த வண்ண அறிவிப்பாலும், V-காமிக்ஸின் அறிமுகத்தாலும், வருடம் முழுக்கவே கொண்டாடயிருக்கும் TEX-75யாலும் இவ்வாண்டு காமிக்ஸ் ரசிகர்களுக்கு குதூகலமான ஆண்டாகப் புலர்ந்திருக்கிறது. இந்த குதூகலமும், வெற்றிகளும், சாதனைகளும் ஆண்டு முழுவதும் தொடர்ந்திட அசலூர் புனித மனிடோ தெய்வமும், உள்ளூர் ஆத்தாக்களும் உறுதுணை புரியட்டும்!!

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  44. // நண்பர் STR போன பதிவினில் போட்டுத் தங்கியிருந்த அந்த TEX புள்ளி விபரங்கள் செம மாஸ் !! அதனை ஜனவரி டெக்ஸோடு இணைக்க வழியுண்டா ? என்று பார்க்கவுள்ளோம் !! //

    சூப்பர்.

    ReplyDelete
  45. உயிரைத் தேடி கதையை நான் இதுவரை படித்தது இல்லை தினமலரில் வந்தது கூட ஞாபகம் இல்லை. இந்த கதையை பற்றி நீங்கள் எழுதிய விஷயங்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது. இந்த கதையை கருப்பு வெள்ளையிலும் வெளியிடுவதால் பலரால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க முடியும் காரணம் விலை. வண்ணத்தில் விருப்பம் உள்ளவர்கள் வாங்கி மகிழலாம்.

    சென்னை புத்தகத் திருவிழா ஸ்டால் பற்றிய தகவல்கள் ஏதும் உண்டா சார்.

    குழந்தைகளுக்கு கதை சொல்லும் காமிக்ஸ் புத்தகங்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை என்பதை பார்க்கும் போது வருடத்தின் ஆரம்ப இதழ்களின் வேலைப்பளு காரணமாக இந்த புத்தகங்கள் வருவது ஜனவரிக்கு தள்ளிப் போகிறது என நினைக்கிறேன். க.சொ.கா. முடியும் போது புத்தகங்களை அனுப்பி வையுங்கள் சார்.

    V காமிக்ஸ் முதல் கதை அட்டைப்படம் மற்றும் உட்பக்க டீசர் படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உயிரை தேடி நானும் படித்தது இல்லை, ஆனால் சிறுவர் மலரில் வந்தது ஞாபகம் இருக்கு .

      Delete
    2. சிறுவர் மலரில் வந்த விநாயகர், சிவன் மற்றும் முருகன் கதைகளை மிகவும் ஆர்வமுடன் படித்து இருக்கிறேன்.

      Delete
    3. அதே நிலை தான் பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை வந்த புதிதில். அதன் பின்பு தான் கேள்விப்பட்டேன். படிக்க ஆவலுடன் உள்ளேன்

      Delete
    4. இந்த மாத இறுதிக்குள் நம் கையில்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  46. // இது எதுவுமே நம்மாட்களுக்குத் தெரியாதென்பதால் - 10 நாட்களுக்கு ஒரு தபா, "சார்...உயிரைத் தேடி எப்போ வரும்னு கேட்டு மூக்கிலே குத்துறாங்க சார் !" என்ற முகாரி ராகங்களோடு வருவார்கள் ! கொஞ்சமாய் டிஞ்சர் போட சொன்ன கையோடு நான் silent mode க்குப் போய்விடுவேன் ! // என்னா குசும்பு சார் உங்களுக்கு.

    ReplyDelete
  47. 6 is good

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐🤝🤓

    ReplyDelete
  48. அன்பான காமிக்ஸ்-ஆசிரியர்களுக்கும்..
    அழகான காமிக்ஸ் ஆர்வலர்களுக்கும்..
    பண்பான அலுவலக நண்பர்களுக்கும். -
    என் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
  49. 6-(என்றென்றும்-6 தான்..)

    ReplyDelete
  50. 12
    கிளாஸிக் ஓவியங்கள் குட்டியா இருந்தா தான் பார்க்கவும் படிக்கவும் நல்லா இருக்கு !

    ReplyDelete
  51. Dear Editor
    My option is artworks 2 and 3
    Regards
    Arvind

    ReplyDelete
  52. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!

      Delete
    2. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
    3. S60 size -6;
      ஆனால் இந்த ஆண்டு மேக்ஸியிலேயே தொடரட்டும் சார்.2024ல் புதிய சைஸ்!

      Delete
  53. // உங்கள் பதில்களை சிம்பிளாக "12" என்றோ - "6" என்றோ இங்கு பதிவிட்டால் போதும் ! //
    6.....

    ReplyDelete
  54. // "உயிரைத் தேடி" கலர் ஆல்பம் ரூ.500 விலையிலும், black & white ஆல்பம் ரூ.200 விலையிலும் simultaneous ரிலீஸ் கண்டிடும் - நமது ஆன்லைன் புத்தக விழாவினில் (date will be announced soon!) //
    அருமை,அருமை…

    // V காமிக்ஸ் அட்டைப்படத்தினை உங்களிடம் காட்டச் சொல்லி 900 எடிட்டர் சொல்லியதால் - here you go //
    அட்டைப் படம் கலக்கலா இருக்கு…

    // நண்பர் STR போன பதிவினில் போட்டுத் தங்கியிருந்த அந்த TEX புள்ளி விபரங்கள் செம மாஸ் !! அதனை ஜனவரி டெக்ஸோடு இணைக்க வழியுண்டா ? என்று பார்க்கவுள்ளோம் !! //
    பயனுள்ள தகவல்,இணைத்தால் சிறப்பாய் இருக்கும்…

    ReplyDelete
  55. ///இந்தப் பணிகளைக் co-ordinate செய்திடும் பொறுப்பை நம் நண்பர்களுள் ஒரு தீவிர "உயிரைத் தேடி" fan முழுவீச்சில் ஏற்றுக் கொண்டிருக்க, என் பாடு கொஞ்சம் இலகுவாகியுள்ளது ! ஆனால் அவர்களுக்கோ எக்கச்சக்க சிவராத்திரிகள் தொடர்ந்து வருகின்றன///

    ----உயரைத்தேடி"- பற்றி ஏதும் தெரியாது.. நண்பர்கள் சிலாகிப்பதை கண்டு வாசிக்க ஆவல்....!!!

    இந்த பணியை ஒருங்கிணைக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்!

    கறுப்பு வெள்ளையில் வாசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான். எனது சாய்ஸ் கூட க / வெள்ளை தான். ஆனா அந்த கலரு சும்மா அள்ளுதுங்க.

      Delete
  56. V comics book1அட்டைப்படம் செம..... அந்த புள்ளிமான் யாஆஆருங்கோ..அள்ளுதே!!

    இந்த ஸோகோர் பேரவை(4பேரு இருப்பது போல தெரியுது)வேறு இச்..இச் னு தந்து தள்ளுறாங்க.. அனேகமாக அட்டையை......🤭

    ReplyDelete
    Replies
    1. ஏங்க. பாப்பா ரொம்ப அழகா இருக்குங்க. ஸ்டெயிலா வேற இருக்குது. அதான் ஒரு பாசத்துல கொஞ்சுறாங்க.

      Delete
  57. டெக்ஸ் அட்டைப்படம் செம மாஸ்.....!!!

    இந்தாண்டு இடம்பெறும் டெக்ஸ் புக்குகளில் டெக்ஸ் 75 னு இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் சார்...

    ReplyDelete
  58. SUPREME '60ஸ் "6"பேனல்கள்... டெக்ஸ் சைஸ் செம லுக்!

    ReplyDelete
  59. ////நண்பர் STR போன பதிவினில் போட்டுத் தங்கியிருந்த அந்த TEX புள்ளி விபரங்கள் செம மாஸ் !! அதனை ஜனவரி டெக்ஸோடு இணைக்க வழியுண்டா ? என்று பார்க்கவுள்ளோம் !! நன்றிகள் ஒரு நூறு சார் !!////

    ----ஒரே ஹீரோவின் 150இதழ்களை வெளியிட்டு இன்னும் தொடர்ச்சியாக ஹிட் அடித்துட்டு இருப்பதற்கு வாழ்த்துகள் சார்💐💐💐💐

    200என்ற மந்திர இலக்கை அடையும் போது தமிழ் காமிக்ஸின் அதிக இதழில் வெளியான நாயகன் என்ற பெருமையை டெக்ஸ் பெறும் கணத்தை எதிர்நோக்கி....

    ReplyDelete
  60. My choice is 6, because this size is easy to read,handle and store.

    ReplyDelete
  61. லயன் ஆபீஸ் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  62. Dear Edi Sir,

    Maxi or Regular Tex Size Anything is ok for Supreme 60s. But We would be grateful to you if you please ensure, all 5 books are in Same size in order to maintain Uniformity in size (for special edition books only). So that it will be easier for us to maintain safely.

    Thank You.

    ReplyDelete
  63. உயிரைத் தேடி வண்ணத்தில் வருகிறது என்ற செய்தி மகிழ்ச்சியளித்தாலும் நாமே வண்ணம் தீட்டினால் அது சரியாக வராதோ என்ற கவலை இருந்தது (எடிட்டரின் வார்த்தைகள்: "அவர்களே கலரிங் செய்து விட்டால் செம அழகாய் இருக்கும்"). இப்போது அந்தக் கவலை உறுதியாகிவிட்டது. எனக்குத் தெரிந்த குறைகளைச் சுட்டிக் காட்டுகிறேன்.

    1. வண்ணங்களின் தேர்வு: பொதுவாகவே நமது ரசனை ‘அடிக்கும்’ saturated கலர்களின் பக்கமே சாய்ந்து இருக்கும். அது இதிலும் தெரிகிறது. கதை நிகழும் இடம் ஒரு utopian உலகமாக இருந்திருந்தாலும்கூட இங்கு அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் saturated வண்ணங்கள் பொருந்தியிருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியிருக்க, ஒரு post-apocalyptic உலகத்திற்கு இந்த bright and energetic, almost neon color palette பொருத்தமேயில்லை—grayscale பக்கமாகச் சாயும் desaturated கலர்களே பொருத்தமாக இருக்கும். எனினும், இது ரசனை சார்ந்த விஷயம் என்பதால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம்.

    2. வண்ணத்தீட்டலின் தரம்: வண்ணத்தீட்டலில் ஏகப்பட்ட பிசிறுகள் தென்படுகின்றன. பல இடங்களில் வண்ணங்கள் அதன் எல்லைக்கோட்டை தாண்டி அடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வண்ணங்கள் முழுமைப்படுத்தப்படவில்லை. எடுத்துக்கட்டாக, ஒரே பேனலில் இருக்கும் வானம் ஒரு இடத்தில் ஒரு வண்ணத்திலும், அதற்கு அருகிலேயே, ஒரு foreground objectக்கு அடுத்து இருக்கும் பகுதியில் வண்ணம் அடிக்கப்படாமலேயோ அல்லது வேறு வண்ணத்திலோ உள்ளது. மொத்தத்தில், coloring செய்தது போல் இல்லாமல் color blocking செய்தது போல் உள்ளது.
     
    3. Figure-ground relationship: ஒரு பேனலில், தரை, அதன் மேல் இருக்கும் எலும்புக்கூடு, இரண்டும் ஒரே வண்ணத்தில் உள்ளன. அதே போல், இன்னொரு இடத்தில், ஒரு மோட்டார்சைக்கிள் ஷோரூமின் உடைந்த கண்ணாடி இரு வேறு வண்ணங்களில் உள்ளது. வேறொரு பேனலில் வானம், சாலை இரண்டும் ஓரே வண்ணத்தில் உள்ளன. Figure ஒரு கலரிலும் ground வேறு கலரிலும் (not necessarily in different hues but in different values and/or saturation) இருக்க வேண்டும் என்ற அடிப்படையையே பின்பற்றாமல் விடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    மொத்ததில், சென்ற மற்றும் இந்த வாரப் பதிவுகளில் காண்பிக்கப்பட்டுள்ள சாம்பிள்கள் color blocking phaseஇன் first draft போல் உள்ளது. அது உண்மையாக இருந்து, final artwork நன்றாக இருந்தால் மிகவும் சந்தோஷமே. ஆனால் அப்படியில்லாவிட்டால்?

    இக்குறைகளை நான் சுட்டிக்காட்டுவதின் நோக்கம், இப்போதும் காலம் கடந்துவிடாமலிருக்குமோ என்ற நம்பிக்கையிலேயே. ஏற்கனவே வருடக்கணக்கில் தள்ளிப் போடப்பட்ட நிலையில், பல தசாப்தங்கள் வைத்துப் போற்றக்கூடிய ஒரு பொருள், original creatorsகளிடம் காண்பித்துப் பெருமைபட்டுக் கொள்ளக்கூடிய ஒரு பொருள், மேலும் சில மாதங்கள் தாமதமாக வந்தாலும் உயர்ந்த தரத்தில் வந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான்.

    ஆனால், சுமார் ஆயிரம் பேர் அடங்கிய ஒரு சிறு வட்டத்திற்கெனத் தயாரிக்கப்படும் ஒரு படைப்பு, அவ்வட்டத்தில் பெரும்பாலானோர்க்கு கண்ணில் படாத இத்தகைய குறைகளுடன் இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தாலும் பரவாயில்லைதான், Original artistஇன் படைப்பில் வந்த கருப்பு வெள்ளையை வைத்ததே நான் மகிழ்ச்சியடைவேன், அதற்கு நன்றி. But, in my point of view, anything worth doing is worth doing well.

    ReplyDelete
    Replies
    1. வாவ்!! அருமை நண்பரே!! உங்களின் இந்தக் கருத்தைப் படித்தபிறகே கடந்தபதிவின் வண்ணப் பிரிவியூ பக்கங்களைப் பார்த்தேன்! நீங்கள் சொல்லியிருப்பதன் அர்த்தத்தைப் (ஓரளவுக்கேனும்) புரிந்துகொள்ள முடிந்தது! இன்னும் காலதாமதமாகினாலும் கூட குறைகளைக் களைந்து வெளிவருவதே சிறப்பு!!

      எடிட்டர் சமூகத்தின் பதிலறிய ஆவல்!!

      Delete
    2. ஏற்கனவே வாசகர்கள் பேப்பர் தரம், அச்சுதரம் என்று கமெண்ட் அடித்து கிராபிக் வல்லுநர்கள் என்று ஆசிரியரிடம் பேர் எடுத்துவிட்டார்கள். இன்னும் வண்ணசேர்க்கை குறித்து கருத்துச்சொல்ல ஆரம்பித்தால் .....

      Delete
    3. ராகேஷ் @ உங்கள் எண்ணங்களை அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். எனது எண்ணமும் இதுவே.

      இதற்கு முன்னால் கிளாசிக் நாயகரின் ஒரு கதை வண்ணத்தில் வந்த போது எனக்கு அந்த அளவு பிடிக்க வில்லை.

      இந்த முறை இவைகளை நமது வாசக நண்பர் புரிந்து கொண்டு ஒரு அருமையான படைப்பை நமக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      Delete
  64. தொடர்ந்து "6 " முண்னணியில் உள்ளது. வாக்களித்த வாக்களிக்கப் போகும் நண்பர்களுக்கு நன்றிகளும் அன்புகளும் உரித்தாகுக.

    ReplyDelete
  65. *வரலாற்றின் வாடி வாசல்*

    வாவ்!!!
    *அருமையான கதை.*
    *பலரும் இதைப் படித்து ஏன் புரியவில்லை என்று சொன்னார்கள் என்று எனக்கு புரியவில்லை.*

    சித்திரங்களின் கட்ட அமைப்பை கவனித்தால் இந்த கதை ரொம்ப தெளிவாகவே புரிகிறது.

    *கட்டங்களின் முனை மழுங்கி இருந்தால் கடந்த காலத்தில் நடப்பதைப் பற்றியும் மற்ற கட்டங்கள் தற்போது நடக்கும் கதையையும் விளக்குகிறது.*

    அந்தக் காலத்தில் மேடை நாடகத்தில் திகில் காட்சிகளை காட்ட பயன்படுத்தப் பட்ட ஒரு ப்ராஜெக்டரை ஒரு பெண் தொடும் போது அது கால இயந்திரம் போல செயல் படுகிறது.

    இதை தெரிந்து கொள்ளும் மார்டின் ஜாக்குவிஸ் என்ற ஒரு இளவல் தன் தோழியை பயன் படுத்தி பிரஞ்சு புரட்சி நடக்கும் காலகட்டத்திற்கு காலப் பயணம் போகிறான்.

    அவன் ஏன் அந்த முடிவு எடுத்தான், அங்கே அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்கள் அருமை.

    இதில் தொலைந்த அந்த பையனைக் கண்டுபிடிக்க மார்ட்டின் வர்றாரு.

    நம்ம ஹீரோ மார்ட்டின் எப்படி அவங்கள கண்டு பிடித்து மறுபடியும் நிகழ்காலத்திற்கு திரும்பி வற்றாங்கன்றது மீதி கதை.

    அட்டகாசம் 👌🏻👏🏻👏🏻
    *அருமையான ஒரு வித்தியாசமான கதை*

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றின் வாடி வாசல் உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

      எடிட்டரின் முன்னுரையைப் படித்து உள்வாங்கி - கதையைப் படிப்பவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்புக்குறைவு!

      அந்த முன்னுரையை படிக்காமல் கதைக்குள் நுழைபவர்களுக்குக் கதை புரிவதற்கான வாய்ப்புக் குறைவு!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  66. வேதாளன் ஸ்பெஷல் இரண்டிலாவது வெள்ளை இளவரசி கதை வருமா ?

    ReplyDelete
  67. *****சித்திரம் 2 & 3 - வழக்கமான டெக்ஸ் சைஸ்....பக்கமொன்றுக்கு 6 படங்களுடன்!*****


    6

    ReplyDelete
  68. தயவுசெய்து Maxi size-ல் 12 படங்களுடனே சார்லி மற்றும் இதர க்ளாசிக் கதைகளைத் தொடர்ந்து வெளியிடவும்

    ReplyDelete
  69. ஜனவரி புத்தகங்கள் எப்பொழுது கிளம்பும் என ஓரளவு உத்தேசமாக சொல்ல முடியுமாங்கசார். கிளாசிக்ஸ் மேக்ஸி சைஸ் என ஓரளவு செட்ஆகியாச்சு சார்லிமட்டும் சைஸ் குறைந்தால் கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். பக்கத்திற்கு 6 படங்கள் என்பதும் குண்டுபுத்தகம் என்பதும் நன்றாகத்தான் உள்ளது இதுவுந்தான், அதுவுந்தான்இங்கி பிங்கி பாங்கி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  70. உயிரைத்தேடி மூவண்ணத்தில் (கருப்பு, வெள்ளை மற்றும் கலர்) வருவது மிகவும் சந்தோசமான செய்தி.

    ReplyDelete
  71. V காமிக்ஸில் ஜாகோர் கருப்பு வெள்ளையில் பிரமாதமாகத் தென்படுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா..😍😘😘
      ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் ரசிகரே..❤💐🙏

      Delete
  72. டெக்ஸ் அட்டைப்படம் சிறப்பாக இருந்தாலும் ..கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும் டெக்ஸ் பாவமாக பயந்தபடி தெரிகிறார்..

    ReplyDelete
    Replies
    1. அன்பு தம்பி ஸாகோரின் வளர்ச்சியை எட்ட நின்று ரசிக்கிறார் அன்பு அண்ணன் Tex..😍😘😃😀💪👍

      Delete
  73. 6...படிப்பற்கு சரியான சைஸ்.

    ReplyDelete
  74. ராக்கேஷ் கருத்துக்கள், வாசகர் பலரை காமிக்ஸ் ரசனையின் அடுத்த லெவெலுக்கு அழைத்துச்செல்லும், படைப்பாளிகளை அவர்களின் திறனின் உச்சத்துக்கு இழுத்து செல்லும். படைப்பாளிகளின் பாடுதான் படு திண்டாட்டம்! கலரிங் செய்யும் ஆர்டிஸ்டுக்கு(முழு காமிக்ஸ்ஸுக்கும் வண்ணமடிப்பது அவருக்கு இது முதல் பணியாக இருக்கலாம்) இது பெரும் சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை!
    // "உயிரைத் தேடி" கலர் ஆல்பம் ரூ.500 விலையிலும், black & white ஆல்பம் ரூ.200 விலையிலும் simultaneous ரிலீஸ் கண்டிடும் - நமது ஆன்லைன் புத்தக விழாவினில் (date will be announced soon!) //

    // இத்தனை மவுசுள்ளதொரு இதழ் தினமலர் சிறுவர்மலரிலேயே 2 வண்ணங்களிலும்//

    இரண்டு வண்ண பாதிப்புகளுக்கும் NOSTALGIA ரசிகர்கள் பலர் உண்டு! லயனில் டொனால்டு புத்தகத்துக்கு கடைசியாக இருவண்ண FORMAT வந்ததாக நியாபகம். வாய்ப்புகள் இருந்தால் B&W பதில் 2 வண்ணங்களிள் வந்தால் நன்றாக இருக்கும். இல்லை "மூன்று!" FORMATகளில் வந்தாலும் மூன்றையும் வாங்கும் ரசிகர்கள் இந்த வாசகர் வட்டத்தில் உண்டு!

    ReplyDelete
  75. சூப்பர் நண்பர்களே....நிச்சயமா நுணுக்கமா ஆராய்ந்தா படைப்பாளிக பாடு திண்டாட்டமே....ஆனா அந்த துள்ளும் வண்ணங்கள் கண்டாலே என் போன்றோர்க்கு கொண்டாட்டமே....கருப்பு வெள்ளைக்கு பதிலாக இரு வண்ணம் வந்தாலுமே நல்லாருக்கும் தான்...ஒரே மாதிரி பாத்த பாத்து போடிக்காது...


    ஆனா சின்ன சின்ன வண்ணஞ்சார்ந்த சரியா நிரப்பா இடங்கள் சரி பன்னா நல்லாருக்கும்...அதுக்கான நேரம் சம்பளம்...சரியான விலை அனைத்தும் நமது சின்னஞ்சிறு அரிய வாசக இனத்துக்கு சரியாக நிர்ணயிக்க ஆசிரியரால் மட்டுமே இயலும்....
    வண்ணமில்லா இதழ்கள் வண்ணத்ல பிரகாசிக்க செய்வதே பேரானந்தமே....அந்த படைப்பாளிகள திருப்தி செய்வத விட நம்ம படைப்பாளிகள உற்சாகப் படுத்துவதும் ஓரளவு வாசகர்கள திருப்தி படுத்துவதும் முக்கியமே....

    இனி எப்படி வந்தாலும் காரணமிருக்குமென உணர்ந்து போற்றுவோம்...சீக்கிரம் வர வேண்டுவோம்...புரிதலுக்கு நன்றிகள் நண்பர்களே

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆகா பெரிய அறிவிப்பாக இருக்கும் போலவே....

      Delete
  77. சூப்பர் நியூஸ் guys : சென்னை புத்தக விழாவினில் நமக்கு டபுள் ஸ்டால் கிட்டியுள்ளது ! ஸ்டால் நம்பர்ஸ் 531 & 532 !

    இம்முறை அண்ணாச்சியும், வழக்கமான பில்லிங் ஆட்களும் நீங்கலாக, நமது front office staff திருமதி ஜோதியும் சென்னையில் இருப்பார் ! So ஸ்டாலில் புதிய வாசகர்களுக்கு guide பண்ணிட ஆளில்லை என்ற குறை இருந்திடாது !

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான செய்தி சார். இந்த முறை அருமையான விற்பனை நடக்கும் நமது ஸ்டாலில். வாழ்த்துக்கள்.

      Delete
    2. ஆஹா!! அட்டகாசமான, இனிப்பான செய்தி!! விற்பனை சிறக்க புனித தேவன்கள் ஓடினும், மனிடோவும் துணையிருக்கட்டும்!

      ஹிஹி.. அப்புறம் சார்.. புத்தகத்திருவிழா ஸ்பெஷல் கிஷல் ஏதாவது...

      Delete
    3. ///நமது front office staff திருமதி ஜோதியும் சென்னையில் இருப்பார் ! So ஸ்டாலில் புதிய வாசகர்களுக்கு guide பண்ணிட ஆளில்லை என்ற குறை இருந்திடாது !///

      சார்.. உங்கள் எழுத்துக்களை வைத்துப் பார்த்தால் சகோ ஜோதியும் நம் காமிக்ஸ்களைப் படிப்பவர் போல தெரிகிறதே?!! இப்படியெல்லாம் கூட அதிசயம் நடக்குமாங் சார்?

      Delete
    4. டபுள் ஸ்டால் - டபுள் இட வசதி - டபுள் மகிழ்ச்சி!!
      (டபுள் வாடகை - அது உங்க பாடு. ஹிஹி)

      Delete
    5. ஸ்டால் கிடைப்பதற்கே ஜம்பிங் ஸ்டார் தான் காரணம்னு சொல்லிகிட்டே இச் இச் சவுண்டோட ஒருத்தர் இப்ப வருவார் பாருங்க...

      Delete
    6. ஆமா புத்தக விழா என்றாலே ஸ்பெஷல் இருக்க வேண்டும் என்பது தானே முறை.

      Delete
    7. ஓராண்டு இடைவெளியில் டபுள் ஸ்டால் கிடைத்திருப்பது மிகப்பெரிய செய்திங்சார்... இதெல்லாம் ஒரு சிறப்பு குறும்பதிவு போட்டு சொல்ல வேண்டியது.. இப்படி பொசுக்குனு முடிச்சிட்டீங்களே....!!!!
      வழக்கம்போல பட்டையை கிளப்ப வாழ்த்துகள்💐💐💐💐

      சரிசரி சட்டுபுட்டுனு பெவிகாலை ஓப்பன் பண்ணி என்னென்ன சிறப்பிதழ்கள் திட்டமிடலில் என ஒரு சிறப்பு பதிவோட இரவு வாங்க சார்...

      ரெண்டு மூனு நாள் நாங்க அதிலயே திளைப்போம்ல...

      பெளன்சர் வந்தா....🥰😘🥰😘🥰😘🥰😘

      Delete
    8. @EV 😍😘😘😘

      வாழ்த்துக்கள் கொபசெ..😍😘
      ஒன்றுக்கு இரண்டாய் நமது
      ஜம்ப்பிங் ஸ்டார் ராசியால் ஸ்டால் கிடைத்திருப்பதை மகிழ்வுடன் ஜம்பிங் செய்து கொண்டாடுவோம் வாருங்கள்..🎨🏆🍻

      Delete
    9. மகிழ்ச்சியான செய்தி சார்.
      நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில்.

      வெல்கம் 💐🙏🤝

      Delete
    10. //உங்கள் எழுத்துக்களை வைத்துப் பார்த்தால் சகோ ஜோதியும் நம் காமிக்ஸ்களைப் படிப்பவர் போல தெரிகிறதே?!! //

      ச்சே..ச்ச்சே ...அந்தத் தப்பைப் பண்ண ஆபிசில் யாருமே கிடையாதுங்கோ - DTP இவாஞ்செலின் நீங்கலாக !

      ஒருவாட்டி ஸ்டெல்லா கிட்டே கேட்டேன் - 'புக்ஸ் படிச்சு பாக்கலாம்லேமான்னு !' " Try பண்ணினேன் சார் , நாலு பக்கம் புரட்டுறதுக்குள்ளே தூக்கம் வந்துடுச்சி !" என்றாள் ! " உனக்கு இது தேவையா ? தேவையா ?" என்றபடிக்கே நடையைக் கட்டினேன் !

      Delete
    11. இந்த வருட விற்பனை புது உயரம் தொட வாழ்த்துக்கள் சார். "உயிரைத் தேடி"யும் விழா முடிவதற்குள் ரிலீசானால் கூடுதல் பலன்.

      Delete
    12. இரட்டை ஸ்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி. விற்பனை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
    13. ///ஒருவாட்டி ஸ்டெல்லா கிட்டே கேட்டேன் - 'புக்ஸ் படிச்சு பாக்கலாம்லேமான்னு !' " Try பண்ணினேன் சார் , நாலு பக்கம் புரட்டுறதுக்குள்ளே தூக்கம் வந்துடுச்சி !" என்றாள் ///

      ஹா ஹா!! ஆனாலும் பொசுக்கென்று உண்மையை வெளிப்படையாக - அதுவும் உங்களிடமே - சொன்ன ஸ்டெல்லாவின் தில் பாராட்டுக்குரியது சார்!
      'ஸ்டெல்லா'ன்னு பேர் இருந்தாலே தன் பாஸிடம் தில்லாத்தான் இருப்பாய்ங்க போல!!

      Delete
    14. ஆஹா...புத்தாண்டு சிறப்புச் செய்தி பொறி பறக்குதே..

      Delete
    15. EV செம்ம டைமிங்

      Delete
    16. என்னாது ஜானி & ஸ்டெல்லா CBF க்கு வர்றாங்களா..😁😄😄
      😘😍
      V காமிக்ஸ் ல் **ஸாகோர்** முதல் விற்பனைய தொடங்கி வைக்கிறாங்கலா..😍😘😃😀👍💪😌😌

      Delete
    17. சார் ஸ்டாலுக்கொன்னா....ரெண்டு ஸ்பெசல்கள் வேனும்....கலர் தயாராக லேட்டானா கருப்பு வெள்ளைலயாச்சும் புத்தக விழா துவங்கினன்று வெளியிடலாமே...

      Delete
    18. புத்தகவிழால சிறுவர் மலர்ல 80 களில் வெளியான என விளம்பரமும் கூடுதல் கவனத்தையும் அன்றய வாசகரயும் ஈர்க்குமல்லவா

      Delete
  78. உயிரைத் தேடி கருப்பு வெள்ளை இதழுக்கு பதிவு செய்தோமோ இல்லையோ என்பதே மறந்து விட்டது. நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேனா இல்லையா என்று கேட்டு ஆபீஸ் பெண்களை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. கலரில் ஒன்றை முன் பதிவு செய்ய இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல முடிவு நல்ல முடிவு! :)

      Delete
  79. @உயிரைத்தேடி..😍😘😃😀

    கலர் ஒண்ணு இன்னைக்கு புக் பண்ணிட்டனுங்கோவ்..❤💛💙

    ReplyDelete
    Replies
    1. புக்கிங் நம்பர் கிம்பர் ஏதாவது கொடுக்கறாங்களா ஜம்ப்பிங் ஜி?

      Delete
    2. @கொபசெ EV..😍😘

      பணம் கட்டட்டுமான்னு கேட்டேனுங்க.. 😶

      கட்டுங்கன்னாங்க..👍

      கட்டிட்டேன் ..✌

      அம்புட்டுதான் ஜி..😍

      நமக்கு உ.தே B&W புக்கு& கலர் புக்கு ரெண்டுமே வந்துருங்க ஜி..💪👍👏✊✌❤💜

      Delete
  80. @சதாசிவம்..😃

    ஜி..நீங்க நம்ப ஜம்பிங்ஸ்டார் ஸாகோர் ரூ.700 pay செய்து book பண்ணி வாங்கியிருந்தீங்கன்னா கூடவே உயிரைத்தேடி B&W க்கும் தான் பணம் கட்டியிருப்பீங்க.. ((ஸாகோர் (கலர்) - ரூ.500 & உ.தே (B&W)-ரூ.200))

    ReplyDelete