Saturday, November 26, 2022

விழாக்களும், வினாக்களும் !

 நண்பர்களே,

வணக்கம். அப்டியே கேப்டன் விஜயகாந்தின் கம்பீரக் குரலை மனசுக்குக் கொண்டு வந்துக்கோங்கோ ! அப்டியே அவரது பாடி லாங்குவேஜையும் மனசிலே ஓட விட்டுக்கோங்கோ ! அதே ஏத்த-இறக்க மாடுலேஷனில் பின்வரவுள்ள நம்பர்கள் கலந்து வரிகளை வாசியுங்கோ - 'ஜிலோ'ன்னு effect கிட்டாது போகாது ! 

'இன்னா மன்னாரு மேட்டரு ?' என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை folks - இதோ - எனது மேஜையினில் கிடக்கும் மார்ட்டின் கதையினில், எஞ்சியுள்ள 30 பக்கங்களை முடித்து விட்டால் - 2022-ன் பணிகளின் முழுமையையும் பூர்த்தி செய்திருப்போம் !! Oh yes, ஒரு 12 மாதத்தின் திட்டமிடல் முழுமை கண்டிடும் நொடி எனக்கு வெகு அண்மையில் காத்துள்ளது ! ஆண்டு முழுக்க புலி வாலைப் பிடித்த கதையாய் ஓட்டமெடுப்பது என்னவோ கடந்த 10+ ஆண்டுகளாய்ப் பழகிப் போனதொரு routine தான் ; ஆனால் ஆண்டுக்கு ஆண்டு நம்ம 'இயமை' ஊஞ்சல் ஆடிக்கினே போகும் நிலையினில், நம் பயண வேகங்களுக்கு ஈடு கொடுப்பதென்பது not getting easy at all ! அதிலும் ஒரு மைல்கல் ஆண்டினில் ஏதேதோ திட்டமிடல்களை ; ஏதேதோ அசட்டுத் துணிச்சல்களில்  களமிறக்கி விட்டான பின்னே, அவற்றிற்கும், உங்களின் நம்பிக்கைகளுக்கும் நியாயம் செய்திட, கடந்த பதினொன்றரை மாதங்களில்  அடிக்க அவசியப்பட்டுள்ள குட்டிக்கரணங்கள் - சொல்லி மாளா ரகம் !  ஒரு புத்தாண்டும், முற்றிலும் புதுசாயொரு ஓட்டமும், அது சார்ந்த பணிகளும், தொட்டு விடும் அண்மையில் காத்திருப்பது தெரிந்தாலுமே, இதோ இந்த நொடியினை ; 2022-ன் எண்ணற்ற பல்டிகளுக்கு டாட்டா சொல்லிடும் தருணத்தை 'ஷப்பாஆஆஆஆ' என்றதொரு பெரும் பெருமூச்சுடன் ரசிக்கும் சபலத்தை தவிர்க்கவே இயலவில்லை !! And அதன் நீட்சியாகவே இதோ வரும் 'ரமணா' பாணியிலான புள்ளி விபரங்கள் ! இப்போ கேப்டன் வாய்ஸ் + பாடி லாங்குவேஜ் + மாடுலேஷன்ஸ் ப்ளீஸ் :

  • நடப்பாண்டிலே வந்திருக்கிற மொத்த பொம்ம பொஸ்தவங்களின் எண்ணிக்கை : 45 !
  • இதிலே கலரிலே வந்திருக்கது  : 30
  • கருப்பு-வெள்ளையிலே வந்தது : 15
  • கொசுறுங்க எண்ணிக்கை : 10
  • இந்த வருஷத்துக்கான மொத்த பக்க எண்ணிக்கையோ : 6950
  • கலரிலே - 4206
  • ஒத்தைக் கலரிலே - 2744
  • ஆக ஒவ்வொரு மாசமும் நீங்க படம் பாத்திருக்கது...ஆங்...ஐயாம் சாரி, நீங்க படிச்சிருக்கது - சராசரியா  580 பக்கங்கள் ! 

இப்போது சொல்லுங்களேன் folks - இது நாம் சன்னமாகவாவது இளித்துக் கொள்ளுமொரு தருணம் தானே ? 

If I'm not mistaken , ஆண்டுக்கு ஆறாயிரம், ஏழாயிரம் என்ற பக்க எண்ணிக்கைகள் நமக்குத் புதியனவே அல்ல தான் ! கடந்த சில ஆண்டுகளாய் இது போலான நம்பர்களுக்கு மத்தியினில் தான் பயணம் செய்து வருவதாய் எனக்கொரு ஞாபகம் ! ஆனால் தம்மாத்துண்டு அளவிலான எங்களின் டீம் இன்னமும் on an average, மாதம்தோறும் 600 பக்கங்களுக்கு அனுசரித்ததொரு output-ஐ அடித்துத் தாக்கி வருவது பிரமிக்கச் செய்யத் தவறவில்லை ! In simple numbers, இது  நாளொன்றுக்கு வெறும் இருபது பக்கங்களாய்த் தோன்றிடலாம் தான் ; but trust me guys - வெயிலோ, புயலோ,மழையோ,வெள்ளமோ, பொங்கலோ, தீபாவளியோ, ரம்ஜானோ, கிருஸ்துமஸோ, எவ்வித சால்ஜாப்புகளுமின்றி மிஷின்களாட்டம் இந்த எண்ணிக்கையினை தொட்டு நிற்பதென்பது ஒரு பெரும் அணிக்கே மூச்சிரைக்கச் செய்யுமொரு சமாச்சாரம் ; நம் போன்ற துக்கடாக்களின் பாட்டைப் பற்றிக் கேட்கவும் வேணுமா ? And இந்த ஆண்டு எனக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் extra special - simply becos இந்த ஆண்டினில் தோராயமாய் நான் பேனா பிடித்திருப்பது மட்டுமே நான்காயிரம் பக்கங்களுக்கு அருகிலானதொரு நம்பருக்கு !! ரெம்போ சீக்கிரமே சீனியர் சிட்டிசன் சலுகைகளில் டிக்கெட் எடுக்கக் காத்துள்ள ஒரு ஆசாமிக்கு இது மோசமே இல்லாத நம்பர் தானுங்களா ? திரும்பிப் பார்க்கும் இந்த நொடியினில் 'ஆத்தாடியோவ்வ்வ்வ் !!' என்று மட்டுமே சொல்ல இயல்கிறது !

முதுகை நானே சொரிந்து கொள்ளும் பணியை கொஞ்சமாய் ஓரம் கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் 2022-ன் highlights எக்கச்சக்கமாய்க் கண்ணில் படுகின்றன தான் ! ஆனால் டிசம்பரின் இதழ்கள் இன்னமும் உங்களை எட்டியிருக்கவில்லை & அவற்றின் reviews நமக்கு அவசியமே எனும் போது இந்த நொடியின் பெருமூச்சு கலந்த பார்வையில் ஆண்டின் முழுமையும் cover ஆகிடாது தான் ! So இந்தாண்டினை review செய்திடும் வேலையினை டிசம்பரின் நடுவாக்கில் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பேன் ! இந்த நொடிக்கொ - இன்னொரு நிம்மதி பெருமூச்சை விட்டுக்கிறேனே ! Moreso இந்தாண்டினில் க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டுக்குப் பதிலாய் இன்னொரு மாடஸ்டி சாகசம் என்ற மாற்றத்தைத் தவிர்த்து பாக்கி அனைத்துமே அறிவிக்கப்பட்டவாறே வந்துள்ளன ! குரங்கை விடவும் மோசமாய்க் கிளை தாவும் நமக்கு இதெல்லாம் சரித்திரச் சாதனையாச்சே ?!

And வேறு topic பக்கமாய் கிளை தாவும் முன்பாய் ஒரு சமாச்சாரத்தினைப் பேசிடுவோமே ? இளவரசி மாடஸ்டியின் 2 கதைகள் இணைந்த தொகுப்பாய் இதுவரைக்கும் நாம் எப்போதும் வெளியிட்டதாய் எனக்கு நினைவில்லை ! (Correct me if I'm wrong please !) So இந்த மாதத்தின் எதிர்பாரா மாடஸ்டி டபுள் டமாக்காவினில் பணியாற்றுவது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது ! And அதிர்ஷ்டவசமாய் 2 கதைகளுமே நீட்டான சாகசங்களாய் அமைந்து போக, எனக்கே 'அட....இது கூட நல்லாத்தான் இருக்கே ?!' என்ற எண்ணம் எழுந்தது ! நமது தீவிர நண்பர்களுள் ஒருவர், 'இளவரசிக்கு MAXI சைசில் ஒரு Collector's எடிஷன் போடலாமே ?' என விடாப்பிடியாய்க் கேட்டு வருவது அந்த நொடியினில் நினைவுக்கு வந்தது ! இம்மாத "சிரித்துச் சாக வேண்டும்" இதழ் வெளியான பிற்பாடு, மாடஸ்டிக்கொரு மாக்ஸி (ட்ரெஸ்ஸில் அல்லங்கோ !!) தரும் ஐடியா பற்றிய உங்களின் அபிப்பிராயங்களை சொல்லிடலாமே folks ? And டாக்டர்களுக்குப் பிரியமான அம்மணிக்குப் பேனா பிடிக்கும் பணியினை நம் மத்தியில் மிகுந்துள்ள டாக்டர்களிடமே பகிர்ந்தும் தந்து விடலாம் ! What say folks ? 

டிசம்பரின் நிச்சய highlight கெட்ட பையன் டெட்வுட் டிக் பக்கமாய் இனி பார்வையினை ஓட்டுவோமா ? ஏற்கனவே சொன்னது போல, கரடு முரடான நாயகனுக்கேற்ப, கரடு முரடான ஸ்கிரிப்ட் தான் ஒரிஜினலில் ! And உங்களின் சம்மதங்களுடன் தமிழிலும் அதே பாணியினையே பின்தொடர்ந்துள்ளேன் - சில புருவங்கள் உயர்ந்திடக்கூடுமென்று தெரிந்திருந்துமே ! And இங்கே இன்னொரு விஷயமும் கூட guys : ஒரு டெக்ஸ் கதையைப் போல ; டைகர் சாகஸத்தைப் போல பெருசாய் கதை ; வில்லன் கோஷ்டி ; பில்டப் ; கிளைமாக்ஸ் என்றெல்லாம் லேது ! மாறாக நிற துவேஷம் தலைவிரித்தாடிய அந்நாட்களில் அமெரிக்காவினில் ஒரு கறுப்பினன் சந்தித்திடும் இடர்கள் ; வன்மேற்கின் யதார்த்தம் மிகுந்த சிரம வாழ்க்கை - என இதுவொரு டயரிக் குறிப்பு மாதிரியானதே ! So "கிணத்தைக் காணோமென்று" வடிவேலு பிராது தந்ததைப் போல, புக்கில் பக்கங்களை புரட்டப் புரட்ட கதையினைத் தேடி என்னை மூ.ச.வுக்கு இழுத்திட வேணாமே - ப்ளீஸ் ? இது நமக்கு ரொம்பவே பரிச்சயமானதொரு களத்தில் அரங்கேறும், பரிச்சயமற்ற படைப்பு ! So இதுவொரு கமர்ஷியல் கதையல்ல என்பதை நினைவில் இருத்திய பின்னே புக்கினுள் நுழைந்திட பரிந்துரைப்பேன் ! இதற்கான அட்டைப்படம் + உட்பக்கக் கோப்புகளை நம்மாட்கள் எனக்கு அனுப்பாமல் சொதப்பி இருப்பதால் நாளை பகலில் அவற்றை இங்கே upload செய்திடுவேன் ! 



காத்துள்ள இறுதி இதழான "மரணத்தின் வாடிவாசல்" பற்றி இனி ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த நொடியில் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் - மார்ட்டினின் இந்த ஆல்பத்தின் பின்னணியிலுள்ள பிரெஞ்சு வரலாற்றை ; நிஜத்தோடு அதனை கதாசிரியர் பிணைத்துள்ள லாவகத்தை புரிந்திட ! கருணையானந்தம் அங்கிள் பேனா பிடித்திருக்க, புரியாத இடங்களையெல்லாம் காலியாக விட்டு எனக்கு அனுப்பியிருந்தார் - 'நீயே பார்த்துக்கோப்பா' என்றபடிக்கு ! 'பக்கங்கள் கொஞ்சம் தானே ? ; பார்த்துக்கலாம் !' என்று நானுமே சாவகாசமாய் இருந்து விட்டு, கடைசி நொடியினில் எடுத்துப் பார்த்தால் - பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து வண்டி வண்டியாய் வரலாற்றுத் தரவுகளைத் தேடி மொக்கை போட வேண்டியிருப்பது புரிகிறது ! வருஷத்தின் 6920 பக்கங்களைக் கடந்து விட்டவனுக்கு, இந்தக் கடைசி 30 பக்கங்கள் குறுக்கைக் கழற்றி வருகின்றன !! தெய்வமே !!

சில நேரங்களில் - variety என்ற பெயரில் நம் ஆழங்களுக்கு மீறிய சமாச்சாரங்களுக்குள் கால்பதிப்பதெல்லாம் தேவை தானா ? என்ற கேள்வி இது போன்ற தருணங்களில் எழாதில்லை ! Moreso - இதோ கடந்த ஒரு வாரமாய் சேலத்திலும், விருதுநகரிலும் பட்டையைக் கிளப்பி வரும் புத்தக விழா விற்பனைகளைப் பார்க்கும் போது, இந்தக் கேள்வி முன்னெப்போதையும் விட  தலைக்குள் உரக்கக் கேட்பது போலுள்ளது ! அனுதினமும் அங்கே ஸ்டாலில் காலியாகிப் போன / ஸ்டாக் குறைவாகிப் போன இதழ்கள் எவை எவையென்ற லிஸ்ட் போட்டு ஆபீசுக்குச் சொல்வார்கள் & அந்தக் குறிப்பிட்ட ரக புக்ஸ் டிராவல்ஸில் பயணிக்கும் ! இந்த வாரம் முழுசும் இரு நகர்களுக்கும் பார்சல் ஆகி வரும் புக்ஸ் லிஸ்ட் என்னவென்று பார்த்தால் - ரொம்ப சிம்பிள் !!!

*மாயாவி

*அப்புறம் மாயாவி 

*மறுக்கா மாயாவி

*அப்புறம் டெக்ஸ்

*மீண்டும் டெக்ஸ்

*இன்னொருக்கவும் டெக்ஸ் 

*ஸாகோர் 

லக்கி லூக் நடு நடுவே பயணமாகிறார் ; கேப்டன் டைகர் ; சுட்டிப் புயல் பென்னி ; சிக் பில் போன்றோர் என்னிக்காச்சும் ஒரு நாள் ; பாக்கி சார்வாள்களெல்லாம் அந்தந்த நகரங்களின் சீதோஷ்ணங்களை ஜம்மென்று அனுபவித்தபடிக்கே ரேக்குகளில் ஓய்வெடுத்து வருகின்றனர் ! Of course கலவையாய் புக்ஸ் வாங்கும் வாசகர்களும் வருகை தருகின்றனர் தான் ; ஆனால் சக்கரங்களைச் சுழலச் செய்வோர் முன்னாள் ஜாம்பவானும், இந்நாள் ஜாம்பவானும் மாத்திரமே ! So நாமிங்கே மாங்கு மாங்கென்று பணியாற்றி 'டக்கிலோ..கபாப்..ஸ்ப்ரிங் ரோல்...'என மெனுவை பந்தாவாய்த் தயாரித்து வைத்தால் - 'பொரட்டா இல்லியா ? இட்லி இல்லியா ?' என்ற கேள்விகள் மாத்திரமே எதிர்கொள்கின்றன ! புத்தக விழா வரும் casual வாசகர்களுக்கான பதார்த்தங்களும், ரெகுலரோ ரெகுலர் தீவிர, வாசகர்களுக்கான பசி தீர்ப்பினிகளும், எல்லா நேரங்களிலும் ஒன்றாகவே இருந்திட இயலாது என்பது புரிகிறது தான் ! ஆனால் 2 அணிகளுக்கும் மத்தியினில் இத்தனை பெரிய ரசனை வேறுபாடு ஓ.கே. தானா ? இயல்பு தானா ? என்பதைச் சொல்லத் தெரியலீங்கோ ! 

And இந்த புத்தக விழாக்களின் இன்னொரு eye opener - சமீபமாய் நாம் சந்தித்து வரும் பள்ளி மாணாக்கர்களின் பிரவாகங்கள் ! ஒவ்வொரு மாவட்டத்திலும் ரெகுலராக பள்ளிகளிலிருந்து பசங்களை விழாக்களுக்கு இட்டார வேண்டிய உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வருகின்றனர் என்பதால் யூனிபார்ம் அணிந்த அடுத்த தலைமுறையினை விழாக்களில் இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது ! And surprise ..surprise ...இப்போதெல்லாம் அவர்கள் நமது ஸ்டாலில் செமத்தியான ஆர்வங்களுடன் ஐக்கியமாகி விடுகின்றனர் ! கார்ட்டூன்கள் ; மாயாவி ; டெக்ஸ் - என அவர்களும் அள்ளிடுவது பொதுவான light reading ; commercial reading புக்ஸ்களே !! Phew ...இதோ - பிரெஞ்சுப் புரட்சியில் எவன் தலையை எவன் கொய்தான் ? என்று ஆராய்ச்சியை அர்த்த ராத்திரியில் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் - இந்த புத்தக விழா சார்ந்த தகவல்களை நம்மாட்கள் காதில் போடுவது, இரு மடங்கு வீரியத்தோடு ஒலிப்பது போலுள்ளது ! சொல்லுங்களேன் ப்ளீஸ் : சினிமாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சீக்கிரமே நமக்கும் அவசியமாகிடுமா ?

*** "பொன்னியின் செல்வன்" போலான படங்களை ஜனம் தியேட்டர்களில் விரும்பிப் பார்ப்பதைப் போல - கமர்ஷியல்  கதைகளை / புக்ஸ்களை மட்டும் ரெகுலர் தடத்தில் இறக்கி விடணுமோ ?

*** பாக்கி ரசனைகளுக்கான படங்களை Netflix : Amazon Prime போலான OTT தளங்களில் வெளியிடுவது போல, நாமும் பிரத்தியேக முன்பதிவு தடத்திற்கு மடைமாற்றம் செய்து கொண்டு சென்றாகனுமா ?

எல்லாமே, எல்லோருக்கும் ! என்ற காலங்களெல்லாம் மலையேறி விடுமோ ?சொல்லுங்களேன் ப்ளீஸ் folks !! Your thoughts ?

And அந்த caption போட்டிக்கான வெற்றியாளர்களை (TOP 3) அறிவிக்கும் பொறுப்பை நம் தளத்தின் தன்னிகரில்லா அசல்நாட்டு ஜட்ஜையாக்களிடம் ஒப்படைக்கிறேன் ! பாரிஸ் ரட்ஜா சார் & அமெரிக்க ஷெரீப் - please help ! அந்த caption போட்டிக்கான வெற்றியாளர்களை (TOP 3) அறிவிக்கும் பொறுப்பை நம் தளத்தின் தன்னிகரில்லா அசல்நாட்டு ஜட்ஜையாக்களிடம் ஒப்படைக்கிறேன் ! பாரிஸ் ரட்ஜா சார் & அமெரிக்க ஷெரீப் - please help ! இங்கே மார்ட்டினைக் கரை சேர்க்காவிடின் டிசம்பர் கூவிடும் இக்கட்டில் உள்ளேன் ! 

As usual - சந்தா சார்ந்த நினைவூட்டலுமே guys ! கூப்பிடு தொலைவில் ஜனவரி இருப்பதால் நமது சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட விரைந்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...மார்ட்டினோடு மல்யுத்தத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் ! See you around ! Have a fun Sunday !















Marvel ஸ்டுடியோவிலிருந்து பஸ்ஸில் கிளம்பியாச்சாம் - அடுத்த AVENGERS படத்துக்கு நாயகர்களை புக்கிங் பண்ண !








As usual சந்தா சார்ந்த நினைவூட்டலுமே guys ! கூப்பிடு தொலைவில் ஜனவரி இருப்பதால் நமது சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட விரைந்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...மார்ட்டினோடு மல்யுத்தத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் ! See you around ! Have a fun Sunday !

179 comments:

  1. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  3. சார் உங்களுடைய கால் கட்டை விரலுக்காக கொண்டு வந்தது தான் ஜம்போ என்று நினைவு அது போல பிரத்யேக சந்தா தேவை தான் சார். மற்ற படி நீங்கள் கூறியது போல கமர்சியல் கதைகளை ரெகுலர் ஆகி விடலாம்.

    அனைத்து புத்தகங்களும் அனைவருக்கும் என்பதை நாம் உடைத்து வெகு நாட்கள் ஆகிறது சார்.

    ReplyDelete
  4. வெரைட்டி தாங்க நம்ம லயன் குழுமத்தின் தாரக மந்திரம் உயிர மூச்சு எல்லாம். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாமே ?! உலகின் மூலை முடுக்குலாம் சென்று எங்களுக்கு பல்சுவை விருந்துக்கான
    பதார்த்தங்களை சாப்பிடத்
    தந்துவிட்டு இப்போது பத்தியச் சாப்பாடு தான் தருவேன் என்று சொன்னால் எப்படிங்க ஆசிரியர் சார் ?

    ReplyDelete
    Replies
    1. கேள்வியை இன்னொருக்கா வாசியுங்க நண்பரே !

      Delete
  5. Me வந்துட்டேனுங்க..😃😍😘😀

    ReplyDelete
  6. மடஸ்டிக்கொரு மாக்சி: துன்பத்திலும் ஒரு இன்பம் உண்டு; துயரத்திலும் ஒரு மதுரம் இருக்கு. சோகத்திலயும் ஒரு சுகம் இருக்கும்பாங்க. போட்டு விடுங்க. எத்தினியோ பாத்துட்டோம். இதையும் பாத்துடறோம் (வேண்டாம்னா மட்டும் விட்டுடவா போறீங்க. நீங்களும் ஒரு தொழிலதிர் தானே 😉)

    ReplyDelete
    Replies
    1. நடக்கட்டும்... நடக்கட்டும்!!

      Delete
    2. Aahaaaaa.. Mahi.. I love you.. சும்மாங்காட்டி மாடஸ்ட்டி யை கலாய்க்கறீங்க.. மனசுக்குள்ள அம்மணி மேல love வ்உண்டு... ❤️😄

      Delete
  7. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  8. //
    *** "பொன்னியின் செல்வன்" போலான படங்களை ஜனம் தியேட்டர்களில் விரும்பிப் பார்ப்பதைப் போல - கமர்ஷியல் கதைகளை / புக்ஸ்களை மட்டும் ரெகுலர் தடத்தில் இறக்கி விடணுமோ ?

    *** பாக்கி ரசனைகளுக்கான படங்களை Netflix : Amazon Prime போலான OTT தளங்களில் வெளியிடுவது போல, நாமும் பிரத்தியேக முன்பதிவு தடத்திற்கு மடைமாற்றம் செய்து கொண்டு சென்றாகனுமா ?

    //

    இங்கு
    நல்ல
    மீன்கள்
    விற்கப்படும்

    கதையாகிப் போய்விடும் சார்!

    ReplyDelete
  9. // ஒத்தைக் கலரிலே // கருப்பு வெள்ளையா சார்? இது எந்த ஊர் பாசை சார்?

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு தான் கவிஞர் கிட்டே அப்பப்போ டியூஷன் போகணும்ங்கிறது !

      Delete
    2. ஓ...இதுதானோ ஒத்தை கலரா, நானும் என்னதுனு யோசிச்சுட்டுருந்தேன்

      Delete
    3. உங்களை மாதிரி ரசிகக் கண்மணிகள் எல்லாம் அவனோட ஆழ்மனதிற்குள் சென்று அவனை கவிஞன் என நம்ப வைத்து விட்டதால் தான் ஒரு கவிஞர் என்ற நினைப்பில் ஏதோ கவிதை எனச் சொல்ல அவனை வீட்டில் அடித்து நுங்கு எடுத்து விட்டார்கள்:-)

      Delete
    4. தம்பி பொன்ராசுக்கு இப்படி ஓர் போராட்டமா.

      Delete
    5. வெள்ளை தாள் நிறமாகாது நண்பர்களே... கருப்பு மட்டும் ஒரு வண்ணம்... ஆசிரியர் சொன்னது அப்பட்டமான உண்மை.. 😄❤️

      Delete
  10. @ஸாகோர்..😍😘😃😀

    வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. 🤓
    எங்க செஞ்சட்டை தலைவன் சேல்ஸ் லிஸ்ட்ல வந்துட்டான்யா..👍😍🤓

    Zagor.. ஸாகோர்..😍😍🤓வெற்றி கொடி கட்ட கிளம்பிட்டாறுங்கோவ்..🤪🤪🤪💐👌🔥💥

    😍ஸாகோர்தான் வர்றாரு..

    😘வெற்றி பெற போறாரு..

    😃😍👍இனிமேல் ரசிகர்கள் மனசில அவரோட ஆட்சி..

    ReplyDelete
  11. // அந்த caption போட்டிக்கான வெற்றியாளர்களை (TOP 3) அறிவிக்கும் பொறுப்பை நம் தளத்தின் தன்னிகரில்லா அசல்நாட்டு ஜட்ஜையாக்களிடம் ஒப்படைக்கிறேன் ! பாரிஸ் ரட்ஜா சார் & அமெரிக்க ஷெரீப் - please help ! அந்த caption போட்டிக்கான வெற்றியாளர்களை (TOP 3) அறிவிக்கும் பொறுப்பை நம் தளத்தின் தன்னிகரில்லா அசல்நாட்டு ஜட்ஜையாக்களிடம் ஒப்படைக்கிறேன் ! பாரிஸ் ரட்ஜா சார் & அமெரிக்க ஷெரீப் - //

    சொன்னதையே இரண்டு முறை மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைலில் எழுதி இருக்கீங்க சார்.

    ReplyDelete
  12. @Edi Sir..😍😘

    வரும் ஆண்டுகளில் எங்கள் *Jumping star ஸாகோர்* க்கு கூடுதல் ஸ்லாட் ஒதுக்கிட வேண்டும் என "ஸாகோர் சகாக்கள் பேரவை" சார்பாக ஜம்ப் பண்ணி கேட்டுகொள்கிறோம்.😃😀😍😘

    ReplyDelete
    Replies
    1. // *Jumping star ஸாகோர்* //

      :-)

      போகிற வேகத்தை பார்த்தால் நீங்கள் அவரை காமெடியனாக ஆக்காமல் விட மாட்டீங்க போலத் தெரிகிறது:-)

      உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் அவரோட ரசிகரா இல்லை டெக்ஸோட ரசிகரா :-)

      Delete
  13. // இந்த ஆண்டு எனக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் extra special - simply becos இந்த ஆண்டினில் தோராயமாய் நான் பேனா பிடித்திருப்பது மட்டுமே நான்காயிரம் பக்கங்களுக்கு அருகிலானதொரு நம்பருக்கு !! //

    சூப்பர் சார். அடுத்த வருடம் இதனை விட அதிக பக்கங்களை உங்கள் மொழிபெயர்ப்பில் கொடுங்கள் சார். உங்களின் எழுத்துக்கள் அந்த அந்த கதைக்கு ஏற்ற‌ மாதிரி வித்தியாசமாக வெவ்வேறு நடையில் ரசித்து படிக்கும் படி இருந்தது. நன்றிகள் சார்.

    ReplyDelete
  14. என்னது, மாடஸ்டிக்கு மேக்சியா ? (அந்த மேக்சி இல்லீங்கோ..) இதெல்லாம் ரொம்ப ஓவர் சார்? நீங்க காமெடிப் பண்றீங்கன்னு மட்டும் புரியுது, ஆனால் அது மாடஸ்டியை வைத்தா அல்லது எங்கள வைத்தா என்று தான் புரியல!!!!!????

    ReplyDelete
  15. @Edi Sir..

    #As usual - சந்தா சார்ந்த நினைவூட்டலுமே guys ! கூப்பிடு தொலைவில் ஜனவரி இருப்பதால் நமது சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட விரைந்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...மார்ட்டினோடு மல்யுத்தத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் ! See you around ! Have a fun Sunday !#

    ரிப்பீட்டு...😶

    ReplyDelete
  16. புத்தகத் திருவிழாவில் அதுவும் நமது ஸ்டாலில் குழந்தைகள் கூட்டத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தொடரட்டும் குழந்தைகள் ஆட்சி.

    ReplyDelete
  17. மாடஸ்டி மெக்ஸி சைசில் கதையை சாரி படத்தை பார்த்தவங்க கோவிலுக்கு போய் மந்திரித்து தாயத்து கட்டாமல் இருந்தால் நலம்:-)

    ReplyDelete
  18. சார், முன்பு அறிவித்த மார்ட்டினின் "சொர்க்கம் காத்திராது" இல்லையா...?

    ReplyDelete
  19. அவசியமாகிடுமா ?

    *** "பொன்னியின் செல்வன்" போலான படங்களை ஜனம் தியேட்டர்களில் விரும்பிப் பார்ப்பதைப் போல - கமர்ஷியல் கதைகளை / புக்ஸ்களை மட்டும் ரெகுலர் தடத்தில் இறக்கி விடணுமோ ?//

    Yes.

    *** பாக்கி ரசனைகளுக்கான படங்களை Netflix : Amazon Prime போலான OTT தளங்களில் வெளியிடுவது போல, நாமும் பிரத்தியேக முன்பதிவு தடத்திற்கு மடைமாற்றம் செய்து கொண்டு சென்றாகனுமா ?//

    Double Triple Yes…

    இது உங்களுக்கும் நல்லது. 500-600க்கும் குறையாத அதி தீவிர ரசிகர்களுக்கும் நல்லது. ரெகுலரில் வர முடியாத கதைகளை இந்த தடத்தில் போட்டுத் தாக்கவும். ரெகுலர் தடத்தில் கமர்சியல் கேரண்டி உள்ள கதைகளை மட்டுமே போடவும்.

    ReplyDelete
    Replies
    1. ஷெரீஃப் அவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன். மற்ற ரசனைகளை முன்பதிவு தடத்துக்கு கொண்டு வரவும்

      Delete
  20. அப்பறம் அந்த போட்டோவி்ல் இருக்கறவங்களா பாத்தா எனக்கு expendables தான் ஞாபகத்துக்கு வருதுங்க.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. குமார் @ எவ்வளவு முக்கியமான பஞ்சாயத்து ஓடிக் கொண்டு இருக்கிறது நீங்கள் நடுவில் வந்து காமெடி பண்ணி தலைவரை இன்னும் கோப படுத்தறீங்க :-) :-)

      Delete
    3. ///அப்பறம் அந்த போட்டோவி்ல் இருக்கறவங்களா பாத்தா எனக்கு expendables தான் ஞாபகத்துக்கு வருதுங்க.///

      நான் ப்ளாக் பேந்தர் மாதிரியே இருக்கேன்னு உனக்குப் பொறாமை..!

      (முதல்ல தோர் மாதிரி இருக்கேன்னுதான் சொல்ல நினைச்சேன்.. உடனே நீங்கல்லாம்... நீ தோர் மாதிரி இல்லே.. ரோடு போடுற தார் மாதிரி இருக்கேன்னு கிண்டல் பண்ணுவிங்களேன்னு மாத்திக்கிட்டேன்..😛)

      Delete
    4. ப்ளாக் பேந்தர் மாதிரியில்லே. ஒரு பளாக் பேந்த பேந்த முழிக்கற மாதிரி தான் இருக்கு.

      Delete
    5. // ப்ளாக் பேந்தர் மாதிரியில்லே. ஒரு பளாக் பேந்த பேந்த முழிக்கற //

      😂😂😂😂

      Delete
  21. சார் இட்லி தோசை விற்பனை செய்த ஹோட்டல்களில் சைனீஸ் தந்தூரி உணவு வகைகள் இருப்பதைக் கண்டு அவைகளை டெஸ்ட் பண்ணி பார்க்கும்‌ சாம்பார் பார்ட்டிகள் இப்போது எல்லாம் அதிகமாகி வருகிறார்கள் சார். எனவே இப்போதைக்கு பிரத்தியேக முன்பதிவு தடம் வேண்டாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக காலத்தின் கட்டாயம் என்றால் கமர்ஷியல் கதைகளை மட்டும் ரெகுலர் தடத்தில் மற்றும் கதைகளை தனித்தடத்தில் வெளியிடுங்கள் சார்.

      Delete
  22. காரிகன் ஸ்பெஷலின் அட்டைப்படம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுவும் அட்டைப் படத்தில் உள்ள ஒவ்வொரு படங்களை வடிவமைத்த விதம் அதனை தனியாக எடுப்பாகத் தெரியும் படி செய்த நகாசு வேலைகள் எல்லாம் சிறப்பு.

    ReplyDelete
  23. GMT+5:30
    இந்த ஆண்டு எனக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் extra special - simply becos இந்த ஆண்டினில் தோராயமாய் நான் பேனா பிடித்திருப்பது மட்டுமே நான்காயிரம் பக்கங்களுக்கு அருகிலானதொரு நம்பருக்கு
    காத்திருக்கும் வருடத்தில் இன்னும் அதிக பக்கங்கள் மொ(மு)ழி பெயர்த்து சாதனை பன்னிடுங்க ஆசிரியரே

    ReplyDelete
  24. சார் விற்பனை குறையக் கூடிய கதைகளை தனித்தடத்தில் விட்டு விட்டு.....டெக்ஸாரை ...கோடாலியாரையும் ரெகுலர் தடத்தில் விடலாம்

    ReplyDelete
    Replies
    1. ❤💚*Jumping star zagor* பேரவையின் ஆஸ்தான கவி *கோவை ஸ்டீல்கிளா பொன்ராஜ்* அவர்களை வரவேற்கிறோம்.🤓💐

      Delete
  25. மாடஸ்டி மேக்சி - வரவேற்கப்படுகிறது...

    மாணவர்களும், புத்தகத் திருவிழாக்களும் - எதிர்கால தலைமுறையை காமிக்ஸ் படிக்க வைக்க சிறந்த வாய்ப்பும், தருணமும் அமைந்துள்ளது. இவர்களை நோக்கி சில அட்டகாச படைப்புகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை...

    ReplyDelete

  26. டபுள் மாடஸ்டிங்கறதால எடிட்டர் சாருக்கு உற்சாக மீட்டர் எகிறுதோ என்னவோ ஜட்ஜ்கள் நியமிக்கறச்சேவும் பதிவின் epilogue பகுதியும் ரெண்டு வாட்டி வந்திருக்கு.

    :-)

    விக்கறதை ரெகுலர் தடத்திலும்
    மதில் மேல் பூனை ரக கதைகளை முன்பதிவு தடத்திலும் கொண்டாறது
    நடைமுறைக்கு ஒத்து வருகிற யுக்திங்கறதை ஒத்துக்கத்தான் வேணும்.

    புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
    உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
    போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
    தேற்றும் புலவரும் வேறு. 318

    என்று நாலடியார் சொல்வது சரிதான்.

    சொல்லப் போனால் இவ்வளவு காலத்திற்குப் பிறகு எடிட்டர் சார் நூல்கள் வெளியீட்டு விஷயத்தில் ஒரு சௌகரியமான இடத்தில்தான் இருந்திருக்க வேண்டும்.

    ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம்
    காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்
    வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
    தாழ்வின்றித் தன்னைச் செயின்” - (நாலடியார்: 192)



    மரஞ்செடி கொடிகளால் சூழப்பட்டு சுரங்கப்பாதை [அதரிடை] போலச் காட்சிதரும் வழியில் மிக மென்மையான தளிரோடு கூடிய துவளும் கொப்புடன் நின்ற சிறுசெடி வளர வளர உள்ளே வயிரமாகி வளர்ந்து முதிர்ந்த மரமாகும் போது ஆண் யானைகளைக் கட்டும் கட்டுத்தறியாகப் பயன்படும்..

    இந்நேரம் செடியாக துளிர்விட்ட லயன் முத்து காமிக்ஸ் இது போன்ற பிரச்சினை யானைகளை கட்டி வைக்கும் மரமாக மாறி இருக்கவேண்டும்.ரசிக மேகங்கள் போதுமான மழைப் பொழிவை தராதது மரத்தின் குற்றமல்ல.



    மாறுதலான நல்ல நூல்களை முன்பதிவு தடத்திலாவது கொண்டு வரவேண்டும்.

    வள்ளுவர் கூட முள்மரம் களைக என்றுதான் சொன்னார்.

    அண்ணன்மார் பயன் தரும் மரஞ் செடி கொடிகளை வெட்டி எறிந்து அவ்விடத்தில் வேறுபயிர் செய்தால் கூட அவர்களது தங்கையைக் காதலிப்பது தப்பு என்னும் கருத்து பண்டைத் தமிழரிடையே இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் ‘பயனுள்ள மரஞ் செடி கொடிகளை வெட்டுவோரின் தங்கைக்கு எப்படி பிறரது துன்பத்தை உணர்ந்து இரக்கங்காட்டும் குணமிருக்கும்?' எனும் எண்ணமேயாகும்.
    “நறுந்தண் தகரம் வகுள மிவற்றை
    வெறும்புதல் போல் வேண்டாது வேண்டி - எறிந்துழுது
    செந்தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
    நொந்தினைய வல்லளோ நோக்கு”
    - (திணைமாலை நூற்றைம்பது: 24)

    லயன்முத்து காமிக்ஸை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் தம்பிமார்களும் நல்ல மாறுதலான காமிக்ஸ் செடி கொடி ,இள மரங்களை வெட்டாமல் அவற்றை உயிர்ப்பிக்க விண்ணப்பிக்கிறேன்( முன் பதிவு என்றாலும் அதற்கும் இலக்கு உண்டல்லவா?)


    மாடஸ்டி மொழிபெயர்க்க ஆர்வம் உண்டெனினும் நேரம் போதாமை , பணிச்சுமை, ஊடுதுயர்கள் அவ்வெண்ணத்தை களைகின்றன.

    ஏற்கனவே எடிட்டர் சார் நூலாளர் ஒருவரிடம் நமது காமிக்ஸ் பற்றி பேச எனது அலைபேசி எண்ணைக் கொடுக்க ,அவரும் அழைக்க என்னால் அவரிடம் பேச முடியாது கடும் வேலை குறுக்கிட வேறு யாராவது பேசும் வாய்ப்பும் பறிபோனது.இன்று வரை இருவரிடமும் மன்னிப்பு கோரவில்லை.( இப்போது அதற்காக எடிட்டர் சாரிடம் மன்னிப்பு கோருகிறேன்.)

    மற்ற நண்பர்கள் ஆர்வமுடன் முன்வருவார்கள் என நம்புகிறேன்.

    சிஸ்கோ : முதல் கதை ஏற்படுத்திய எதிர்மறை தாக்கம் இரண்டாவது கதையில் இல்லை.மிக சுவாரஸ்யமான கதை. கதையின் உட்கரு வித்தியாசமாக இருந்தது.

    9/10

    மாடஸ்டி மேக்ஸி : இன்ப அதிர்ச்சி

    ReplyDelete
    Replies
    1. //. சிஸ்கோ : முதல் கதை ஏற்படுத்திய எதிர்மறை தாக்கம் இரண்டாவது கதையில் இல்லை.மிக சுவாரஸ்யமான கதை. கதையின் உட்கரு வித்தியாசமாக இருந்தது. //

      குமார் @ இப்ப நம்புவீர்களா? :-)

      // மாடஸ்டி மேக்ஸி : இன்ப அதிர்ச்சி //

      நீங்கள் மாடஸ்டி படம் போட்ட t-shirt போட்டு எடுத்த படத்தை பார்த்தவுடன் ஆசிரியர் எடுத்த முடிவு சார் இது :-)

      Delete
    2. மாடஸ்காவுக்கும் மேக்ஸிக்கும் என்ன சம்மந்தம்.? அந்தக்கா எப்பவும் டூ பீஸ்லதானே திரியும்னு ஜனங்க பேசிக்கிறாங்க..!

      Delete
    3. மாடஸ்காவுக்கும் மேக்ஸி என படித்த உடன் மேச்சேரி பக்கம் ஒருத்தர் அதுவும் கண்ணன் என்ற பெயருடையவர் கறிகடை பக்கம் குத்தாட்டம் போடுவதாக தகவல் கிடைத்துள்ளது:-)

      Delete
    4. வேண்டாத மாமியாரு வெசாலக்கிழமை வந்தா என்ன..வெள்ளிக்கிழமை வந்தா என்ன..

      அப்படீன்னு எங்கூரு பக்கம் ஒரு சொலவடை இருக்குதுங்க பரணி..😂

      Delete
  27. எடிட்டர் சார்,

    மாடஸ்டி மாக்ஸி சைசில் : சூப்பர் நியூஸ் :-)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வேண்டும்..

      Delete
    2. சரி..வேண்டாம்..
      வருடம் ஒருமுறை இதேமாதிரி இரட்டை ஆல்பங்களாக வந்தாலே மதி..

      Delete
  28. ஷெரிப் உடன் கலந்துரையாடி நாளைக்கு தீர்ப்பை சொல்லிடறோம் சார் !

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் சொல்லுங்க டாப் 3 வரப்போற ஒருத்தர் அதை எனக்கு ஸ்பான்சர் பன்றதா சொல்லியிருக்கார்

      Delete
  29. கண்காட்சி நிழற்படங்கள் மகிழ்வூட்டுகின்றன.

    காரிகனில் சில பக்கங்களே புரண்டிருக்கின்றன. பொங்கல் தொடர்விடுமுறை நாட்களில் படிக்கலாம் என நினைக்கிறேன்.

    மாரட்டின் பற்றிய முன்னோட்டம் ஆர்வத்தை தூண்டுகிறது.

    ReplyDelete
  30. உள்ளேன் ஐயா!

    மீ த 49த்!!

    ReplyDelete
  31. ஹய்யா நான் 50வது...

    //பாக்கி ரசனைகளுக்கான படங்களை Netflix : Amazon Prime போலான OTT தளங்களில் வெளியிடுவது போல, நாமும் பிரத்தியேக முன்பதிவு தடத்திற்கு மடைமாற்றம் செய்து கொண்டு சென்றாகனுமா ?//

    ஜம்போ தடம் முன் பதிவில் என்று கேட்கிறது நேக்கு...

    ReplyDelete
  32. As Modesty stories are also collections of newspaper strips, it's doubtful if they fit maxi size I.e. big borders but small strips. If this will not appear, Maxi size is double ok , triple ok sit.

    ReplyDelete
  33. இதழ்களுக்காக காத்திருக்கிறேன் சார்...

    ReplyDelete
  34. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  35. நேற்று சேலம் புத்தகவிழாவில் அண்ணாச்சிக்கு துணையாக ஒருவர் தேவை என டெக்ஸ் விஜயராகவர் கேட்டதன் காரணமாக காலை முதல் மாலை வரை உடன் இருப்பதாக தகவல் சொல்லி நானும் ஆவலுடன் இருக்க சரியாக திடீர் உறவினரின் வருகையால் அது தடைப்பட்டு போனது..எனவே தாமதமாக மதியத்திற்கு சிறிது பிறகே செல்ல நேரிட்டது... எனவே சிலமணி நேரங்கள் மட்டுமே அங்கு இருக்க நேர்ந்தது.அந்த சில மணி துளிகளில் நான் கண்டது.....


    *வயதான இரு பெரியவர்கள் ஸ்டாலில் நுழையும் பொழுதே ஏய் காமிக்ஸ்.. இதெல்லாம் நீ படிச்சு இருக்கீயா ..சின்னவயசுல இதெல்லாம் படிச்சு இருக்கேன் .இரும்புக்கை மாயாவி ,லாரன்ஸ்டேவிட் எல்லாம் சூப்பரா இருக்கும் என்றபடியே வேறு எதுவும் நோக்காமல் அதனை மட்டும் புரட்டி புரட்டி பாரத்து கொண்டு இருந்தார்..இதெல்லாம் நம்ம பேரன்கள் படிச்சா பரவால நாளைக்கு கூட்டிட்டு வந்து காட்னும் என்றபடியே நடையை கட்டினார்கள்*

    *ஒரு கணவன் ,மனைவி ,குழந்தை என குடும்பமாக உள்ளே நுழைந்தவர்கள் ..மனைவியிடம் ஏய் இதெல்லாம் சின்னவயசுல நான் நிறைய்ய படிச்சு இருக்கேன் என்றபடி உள்ளே துழாவியவர் இரும்புகை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யத்தை மனைவியிடம் எடுத்து காட்டி பாரு இவருக்கு கரண்ட் ஷாக் அடிச்சா அப்படியே மறைஞ்சு போயிறுவாரு இரும்புக்கை மட்டும் தான் தெரியும் என விவரிக்க மனைவியும் டேய் இது படிக்கிறாயா நல்லாருக்கும் என மகனிடம் என சொல்லி கொண்டு இருந்தார் ..பின் மாயாவி ,டெக்ஸ் மட்டும் சில இதழ்களை எடுத்து சென்றார்கள்.*

    *ஒரு நண்பர் அனைத்து டெக்ஸ் இதழ்களையும் எடுத்து கொண்டு இருக்க நண்பர் யுவா அவரிடம் மேலும் விசாரிக்க தாம் யுஎஸ்ஸில் இருப்பதாகவும் ,சேலம் சொந்த ஊர் விடுமுறையில் வந்து இருப்பதாவும் .காமிக்ஸ்ன் தீவிர ரசிகர் மூன்று வருடமாக விட்டு போயிற்று ..இப்பொழுது புத்தக ஸ்டாலில் வந்தவுடன் தான் தெரிகிறது ..டெக்ஸ்ன் தீவிர ரசிகர் எனவும் தெரிவித்தார்..பிறகு டெக்ஸ் ரசிகரான யுவா டெக்ஸ்ன் கதைகளுடன் டைகரின் இரத்த கோட்டை இதழையும் எடுத்து கொடுத்து இது செமயான கதை சார் ..இதையும் கண்டிப்பாக வாங்கி படியுங்கள் என்று தேர்ந்து எடுத்து கொடுக்க அந்த டெக்ஸ் ரசிகர் தினகரன் சார் அவர்களும் ஆவலுடன் டைகரையும் தேர்ந்தெடுத்து கொண்டார்*

    *அவருக்கு உடனடியாக யுஎஸ்ஸில் இருக்கும் நமது ஷெரிப் பற்றியும் , நமது காமிக்ஸ் தளம் பற்றியும் ,காமிக்ஸ் வாட்ஸ் அப் குழு பற்றியும் ,அடுத்த வருட சந்தா பற்றியும் ரவிக்கண்ணன் ,யுவா அவர்கள் எடுத்துரைத்து உடனடியாக குழுவில் இணைக்க வைத்து நமது குழுவில் உடனடியாக ஐக்கியமாக்கி விட்டனர்..நேற்று இரவே வாட்ஸ்அப்பிலும் நண்பர் ஜோதியில் கலந்து கொண்டார் ..இனி இங்கேயும் வந்து கலக்குவார் என்பது உறுதி*

    *பள்ளி மாணவர்கள் ஒரு மூன்று பேர் நமது இதழ்கள் அனைத்தையும் புரட்டி பார்த்து விட்டு மிகவும் ரசித்து ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து ரசித்தார்கள் ..பின் விலையை கவனத்தில் கொண்டு பகிர்ந்து பேசி ஜேம்ஸ்பான்ட் ,விலை குறைவான டெக்ஸ் இதழ்களை எடுத்து பில் போடும் பொழுது தொகை கம்மியாக இருப்பதை உணர நண்பர் யுவா நீங்க வாங்கிக்க என்றபடியே மீத தொகையை அவர் செலுத்தினார்..( நண்பர் யுவா தினம் நமது புத்தக ஸ்டாலுக்கு வருகை தருவதுடன் தினம் இது போல் பள்ளி மாணவர்களுக்கு இதழ்களை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது தொகை குறைவாக இருப்பதாக அறிந்தால் அவர் அந்த தொகையை செலுத்தி பலருக்கு வாங்கி கொடுப்பதை சேதி வழியாக கேட்டுக்கொண்டு இருந்த நான் நேற்று நேரிலும் கண்டேன்.மனமார்ந்த பாராட்டுகள் யுவா*)

    *கணவன் மனைவி இருவர் நமது ஸ்டாலில் நுழைய கணவர் எனது அருகே வெளியே நிற்க மனைவி உள்நுழைந்து நமது இதழ்களை தேர்ந்தெடுத்து வாங்கியதை கண்டு மனம் மகிழ்ச்சியிலும் ,ஆச்சர்யத்திலும் ஆழ்ந்தது*

    *இந்த முறை சேலம் புத்தகவிழா ஈரோட்டை போல் மிக சிறப்பாக அமைத்து இருந்தார்கள் ..அதைவிட அதிகமாக இடவசதி ,பார்க்கிங் வசதி ,குழந்தைகுளுக்கான இடங்கள் ,கலந்துரையாட நிரம்ப இடங்கள் என மிக சிறப்பான இடமாக அமைந்து இருந்தது ..இது தொடர்ந்தால் இங்கு ஆசிரியரும் வருகை தந்தால் இன்னமும் சேலம் புத்தகவிழா நமக்கு கை கொடுக்கும் என்பது உறுதி*

    *மிகுந்த குடும்ப சூழல் ,பணி சூழல் காரணமாக அருகே உள்ள சேலத்தில் நமது ஸ்டாலுடன் புத்தகவிழா நடந்தாலும் அப்பொழுது போல் இப்பொழுது எல்லாம் பங்கு பெற முடியவில்லையே என்ற ஏக்கமும் மனதில் உண்டானது. இன்று நண்பர்கள் அழைத்தாலும் இன்றும் நான் அலுவலகம் செல்ல இருப்பதான் காரணமாக வருகை தரமுடியா நிலை வருத்தத்தை ஏற்படுத்துகிறது*

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் அப்டேட்ஸ் தலைவரே. நமது ஸ்டாலில் களப்பணியாற்றிய நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

      Delete
    2. வயசானா மறதி இருக்க வேண்டியதுதான் அதுக்குன்னு இப்படியா தலைவரே ?! காலையில் ஒரு மனுஷன் மல்லூரில் இருந்து வந்துட்டு மதியம் வரைக்கும் இருந்துட்டு போனாராமே நினைவு இல்லையா தலைவரே,போச்சி உங்களை போன் போட்டு திட்டப் போறாரு,எப்படி சமாளிக்கப் போறிங்களோ ?!

      Delete
    3. அய்யா ...நான் அவ்வளவு மறதிக்காரன் இல்லீங்கய்யா...நான் தான் தெளிவாகவே சொல்லி உள்ளேனே..நான் நமது ஸ்டாலில் இருந்த பொழுது நடந்த நிகழ்வுகள் என...:-)

      Delete
  36. Double ok for the FMCC (Fast Moving Commercial Comics (!!)) in Subscription track and SAAC in pre-paid track sir (Shelf-Aggregating Arivusaar (அறிவுசார்)Comics(!!!!)) in Pre-booking lane sir - idumbos like me will rely on bookfairs to pick up SAAC.

    Modesty Maxi (only in book size) - double ok when it comes as collectible sir !

    ReplyDelete
  37. ரெகுலர் தடம் --(சந்தா)
    தனித்தடம் - (விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும்)
    இதில் கவனிக்க வேண்டிய விசயம் - ரசனை மற்றும் விலை.
    நான் சொல்லவருவது-நன்றாக விற்கக்கூடியதை தனித்தடத்திலும்-
    சுமாராக விற்கக்கூடியதை ரெகுலர் சந்தாவிலும்-
    வெளியிட்டாலே மாறுபட்ட ரசனை இதழ்களை காப்பாற்ற முடியும் என்பதை.
    உதாரணத்திற்கு-எனக்கு "தோர்கல்"- ரசிக்கவில்லை-
    ஆரம்பத்தில் சந்தாவில் வந்ததை வாங்கினேன்.
    தனித்தடத்தில் வந்ததை வாங்கவில்லை--
    தற்போது -சந்தாவில் வருவதை சேகரித்து வைக்கிறேன்.
    பத்து பக்கம் படிப்பேன்-பின் படம் பார்த்துவிட்டு மூடிவைத்துவிடுவேன்..
    ஆனால், ஒருநாள் - மாயாவியும் - டெக்ஸ்-ம் ரசனையில் போரடிக்கும் போது -.."தோர்கல், -"_எடுத்து வைத்து படிக்க வாய்ப்பு உள்ளது.
    இதையே - தனித்தடத்தில்- எனும்போது-"தோர்கல் "-விலையும் கூடி விடும்- தீவிர காமிக்ஸ் ரசிகனான நானும் வாங்க மாட்டேன்-புத்தக விழாக்களில் வெளிவாசகர்களும் வாங்க மாட்டார்கள்.. (விலை?)
    எனவே, இது போன்ற இதழ்கள் தனித்தடம் கண்டால்-விலையை-ஒரு கட்டுக்குள் வை க்க முடியாமல் கூடி கூடி-கடைசியில் மாறுபட்ட ரசனை இதழ்களே காணமல் போகும் அபாயம் உள்ளது..
    எனவே - தனித்தடம் என்பதை
    விலையையும் - மனதில்கொண்டு யோசிக்க வேண்டுகிறேன்.. (காமிக்ஸ் ரசிகர்களை...)

    ReplyDelete
    Replies
    1. இதில் எடிட்டருக்கு ஒரு சங்கடம் உண்டு - அதற்கு முன் நான் தோர்கள் ரசிகன் என்பதை நினைவுப்படுத்திவிடுகிறேன்.
      சங்கடம் என்னவெனில் - சந்தப்பிரதிகள் சேர்த்து 1200 அச்சடிக்கிறார் என்று கொள்ளுங்கள்.  600 சந்தா தவிர தோர்கல் வெளியே 100தான் விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்போ அவருக்கு விற்காமல் தேங்கி இருப்பது 500 புத்தகங்கள். இவற்றை எங்கே எப்போது விற்பார்? இன்னொரு 5 வருடத்தில் 100 விற்பனை ஆனாலும் மீதம் உள்ள 400ன் கதி ?
      இதுவே வெளியே மாயாவி 400 விற்கிறது என்றால் அவர் 1200 அச்சடித்தால் 1000 முதல் வருடத்தில் விற்கவும் மற்றும் 200 புத்தகங்கள் வருமாண்டுகளில் விற்கவும் (ஏனெனில் அவை வெகுஜன ரசனை சார்ந்தவை என்பதால்)ஒரு வழி உள்ளதே ? (All numbers quoted  are imaginary).
       

      Delete
    2. விலை..? (-தனித்தடத்தில் -தோர்கல்-ன்) விலை..? எவ்வளவு ஆகும் என்று மதிப்பிட்டீர்களா?.. சார்..

      Delete
    3. பிரீமியம் விலைதான் இருக்கும் - குறைந்த பிரதிகளால் வருவது - ஒரு மினிமம் guarantee நம்பரில்தான் அச்சிடுவார். நமக்கு வேண்டுமென்றால் வேறு சில தியாகங்கள் செய்யத்தான் வேண்டும் (உதாரணம் : நான் OTT தவிர சினிமா பார்ப்பதில்லை, தமிழ் மற்றும் தேர்ந்தெடுத்த ஆங்கில காமிக்ஸ்களை வாங்க இந்த ஏற்பாடு எனக்கு உதவுகிறது. நமது பொழுதுபோக்குச் செலவுகளில் எது முக்கியம் என்று நாம் தான் முடிவு செய்யவேண்டும்).

      Delete
  38. அன்பு சால் எடிட்டர் ஐயா
    வணக்கம்

    கால மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

    வெகு ஜன ரசனைகள் மாற்றம் கண்டு மாமாங்கம் ஆகிவிட்டது. வெகு சிலரே வாசிப்பை மேற் கொள்கின்றனர். இதில் நமது விற்பனை என்பது ரெகுலர் மற்றும் ஓ டீ டீ தளங்களில் - அதுவும் ரீலீஸ் ஆகி பல மாத பணமுடக்கத்திற்கு பிறகு என்பது பிஸினஸில் தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டது.

    ஆகவே ரெகுலரில் ரெகுலராக விற்பனையாகும் சரக்குகளை போடுங்கள்.

    ஓ டீ டீ யில் முன்பணம் கட்டுபவர்களை புதிய புதினங்களை தந்து கௌரவியுங்கள்...

    நவீன விலையேற்றங்கள் புதிய தொழில்நுட்பங்களை பொறுத்தும் கால நேர சமூக மாற்றங்களைப் பொறுத்தும் ஏறுமுகமாகவே இருக்கும். இதில் சந்தைப் பதுக்கல் கள் தவிர்க்க முடியாதவை.

    என்ன தான் ரசனை சார்ந்த விஷயமானாலும் பணம் என்ற பிரதான மாயசக்தி பின்புலத்தில் ஆடுவதை தவிர்க்க முடியாது.

    ஆட்றா ராமா என்றே நாமும் கோஷ்டி கானம் பாடிட வேண்டும்...

    உள்ளக்கிடக்கைகள் வள்ளல்களுக்குத் தானே வெளிச்சம்...

    ReplyDelete
  39. டெக்ஸ் விற்கிறது, மாயாவி விற்கிறது. அப்புறம் என்ன சார் மாதம் 2 டெக்ஸ், 2 மாயாவி என்று வருடத்துக்கு 48 கதைகளை போட்டு தாக்குங்கள். பின்பு மறுக்கா மறுக்கா மறுபதிப்புக்கு ஒரு தடம், கிளாஸிக் நாயகர்களுக்கு ஒரு தடம் (விச்சு கிச்சு, குண்டன் பில்லி, 13 தளம், அமாயா, கபீஷ், இன்னும் யார் யாருக்கு மரியாதை தரவில்லையோ அத்தனை பேரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்) அதுவும் மேக்ஸி சைஸில் ஹார்ட் பவுண்டில். ஏன் என்றால் இங்கு சைஸ் தான் முக்கியம், உள்ளே படங்கள் எப்படி இருந்தால் யாருக்கென்ன. வெளியே மட்டும் தடவிப்பார்த்து விட்டு, நேரே பீரோவுக்குள் வைப்போர் தான் இங்கு அதிகம் No cartoon, no graphic novel, no fantasy, மொத்தத்தில் no variety. நம் முன் இருப்பது ரெண்டு சாய்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும்.

    1. டெக்ஸ்
    2. க்ளாஸிக் நாயகர்கள் (மாயாவி, வேதாளர், மாட்ஸ்டி etc.)

    இவை தான் இப்போதைக்கு ட்ரெண்ட் என்றால் இவைகளே போதும். உங்களுக்கும் தலைவலி மிச்சம், குடோன் நிரப்பிகள் இருக்காது, அனைத்தும் நேர்ர்ர்ர்ர்ர் கோட்டு கதைகள்.

    என்னுடைய கோரிக்கையும் இதுவே, ஒரு வருடம் இப்படி விட்டு தான் பாருங்களேன். அதன் பின் variety க்கு அலறி அடித்து கொண்டு ஆதரவுகள் குவியும் என்பது நிதர்சனம்.

    கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் "மாடஸ்டிக்கு மேக்ஸி". பார்த்தவுடன் எழுந்த குமுறலே இவை.

    நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. அது எப்படிங்க சார் ?

      **12 வருஷமா கையிலே ஸ்டாக் உள்ள புக்ஸையும் குஜாலா சுமந்துக்கிட்டு....
      **கூடிய சீக்கிரமே அவை எடைக்குப் போனாலே பெரிய சமாச்சாரம் என்ற புரிதலையும் விழுங்கிக்கிட்டு...
      **விற்பது எது ? விற்காதது எது ? என்பதை ஸ்பஷ்டமாய்த் தெரிஞ்சுக்கிட்டு..
      **"கிட்டங்கிக்கு வலு சேர்க்கவுள்ளவை" என்பது தெள்ளத்தெளிவாய் தெரிந்த பின்னுமே அநேக ரசனைகளுக்கேற்ப அந்த இதழ்களையும் விடாப்பிடியாய் வெளியிட்டுக்கிட்டு...
      **நாள்தோறும் பிதுங்கும் கிட்டங்கி பக்கமாய்ப் போகும் போதெல்லாம் படபடக்கும் இதயத்தையும் சமாளிச்சிக்கிட்டு...

      ஜாலியாய்ச் சுற்றி வரும் ஒரு பேயனுக்கு வராத மனக்குமுறல்கள் - ஒரேயொரு ஜாலியான உரத்த சிந்தனையைப் படித்த மறுகணத்தில் பிரவாகமெடுக்கிறதே உங்களுக்கு ?

      புரியலீங்களே ?

      Delete
  40. கமர்சியல் கதைகள் ரெகுலர் தடத்திலும்,மற்றவைகள் தனித் தடத்திலும் வரலாம் என்பதற்கே என் ஓட்டு..
    18+ போன்றவைகளை வேண்டுமென்பவர்கள் மட்டும் தனித்தடத்தில் வாங்கலாம்.
    ஆசிரியருக்கும் குடோன் நிரம்பாது.

    புத்தகக் கண்காட்சிகளில் இரண்டும் வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 2024 எவ்விதம் pan out ஆகிறதென்று பார்த்து முடிவெடுப்போம் சார் !

      Delete
  41. // வருஷத்தின் 6920 பக்கங்களைக் கடந்து விட்டவனுக்கு, இந்தக் கடைசி 30 பக்கங்கள் குறுக்கைக் கழற்றி வருகின்றன !! தெய்வமே !! //
    மார்ட்டின் எப்போதுமே அப்படித்தானே சார்,மார்ட்டினை இப்படி ஓட்டி,ஓட்டியே வருஷத்துக்கு ஒன்னுதான் வருது,அடுத்த வருஷத்துக்கு ஒன்னுகூட இல்லை…இப்படியே போனால் மார்ட்டின் நிலை என்ன ஆகுமோ ?!

    ReplyDelete
  42. ஸ்டாலில் நான் இருந்த வரை சிலர் கேட்டது,மார்வல் காமிக்ஸ் இருக்கா,டின் டின் இருக்கா,இரும்புக் கை மாயாவி இருக்கா (இது மூன்று பேர்),ஆங்கில காமிக்ஸ் இருக்கா,காமெடி ஜானர் இருக்கா (இது பலர் கேட்டது,ஆனால் எடுத்தவர்கள் சிலரே),மாண்ட் ரேக் இருக்கா (ஒரே ஒரு நபர்),ஹாரர் இருக்கா,டெரரான ஹாரர் இருக்கா (இதை ஒரு 10 பேராவது கேட்டிருப்பார்கள்,கேட்டது எல்லாமே பள்ளிக் குழந்தைகளும்,காலேஜ் ஸ்டூடண்ஸ்களும் தான்),
    கடைசியா பெரும்பாலும் ஓடியது எல்லாம் டெக்ஸ் தான்,பள்ளிக் குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்ப்பது 50 அல்லது 100 க்குள்ளான குறைந்த விலை புத்தகங்களே…
    சேலத்தை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி நிறைய குழந்தைகள் அழைத்து வரப்பட்டாலும்,அவர்களுக்கு புத்தக விழா குறித்தான விழிப்புணர்வோ,உரிய தகவல்களோ தெளிவாக எடுத்து சொல்லப்படவில்லை என்பதே நிஜம்,கும்பலாய் வரும் குழந்தைகளை சமாளித்து அனுப்பும் சங்கடங்கள் நிறைய ஸ்டால்களுக்கு ஏற்பட்டதும்,நெரிசலில் ஏற்பட்ட புழுக்கமும் மைனஸ்கள்,நிறைய குழந்தைகள் வந்து பார்வையிட்டது வரும் காலத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்,பின்னாளில் வாங்கும் ஆர்வம் ஏற்படலாம் என்பது ப்ளஸ்…
    பள்ளிநாட்களில் மட்டுமல்லாமல்,விடுமுறை நாட்களில் பெற்றோர்களை அழைத்து வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தக விழாக்களில் ஏதேனும் கூடுதல் சலுகைகள் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் மாற்றம் ஏற்படலாம் என்றும் தோன்றியது…

    ReplyDelete
  43. ஏஜென்ட் 327 ன் தூங்கிப் போன டைம் பாம் யதேச்சையாக மறுவாசிப்பு செய்ய நேர்ந்தது சார். மிகவும் ரசிக்க கூடிய கதை + காமெடி + மொழியாக்கம். அந்த கதை வரிசையில் மீதம் ஏதும் உள்ளதா சார்?

    ReplyDelete
  44. நமது smashing 60's + 70's கதை வரிசையில் ஏற்கனவே வெளிவந்த முத்து/லயன் சூப்பர் ஹிட் கதைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு (உதாரணமாக வேதாளர் - முகமூடி வேதாளன், ஜும்போ, கீழ்த்திசை சூனியம், மாண்ட்ரேக் - கொலைக்கு விலை பேசும் கொடியவன்/விபரீத வித்தை, காரிகன் - வைரஸ் X/ வான்வெளித் கொள்ளையர், ரிப் கெர்ரி - பிரமிட் ரகசியம், பகல் கொள்ளை) போன்றவை இணைந்து வந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை இனிமேல் வரும் சுப்ரீம் 60s இல் ஆவது இது போன்ற கதைகளை முன்பே முத்துவில் வந்தது என்று காரணம் சொல்லி ஒதுக்காமல் வெளியிடவும். எங்களில் 90% மக்களிடம் இந்த புத்தகங்கள் கிடையாது.

      அப்படியே வேண்டும் என்று ஏதேனும் விற்பனை குழுவில் வாங்கப் போனால் அவர்கள் சொல்லும் விலையில் நாம் ஒரு வருட சந்தாவே கட்டி விடலாம். எனவே ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்

      Delete
    2. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் குமார். எனது எண்ணமும் இதுவே.

      Delete
  45. வரவுள்ள கதைகளிலும் விங் கமாண்டர் ஜார்ஜ் - ஒற்றன் வெள்ளை நரி/நெப்போலியன் பொக்கிஷம், சார்லி - சிறை மீட்டிய சித்திரக்கதை/வெடிக்க மறந்து வெடிகுண்டு போன்ற கதைகள் இணைந்து இருந்தால் இதழ்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் சார்

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார். மிக சிறப்பாக இருக்கும்

      Delete
    2. @Kumar..😍
      @Puthagapriyan ji😘
      @Parani ji😃

      I accept your views ji..👍👏♥

      Delete
    3. ஆமாம் சார் அப்போது வெளிவந்த சூப்பர் ஹிட் கதைகளும் கலந்து வந்தால் அப்போது மிஸ் பண்ணவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு அதை மறுபடியும் படிக்க.

      ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட் 🙏🙏

      Delete
  46. >>>பாக்கி சார்வாள்களெல்லாம் அந்தந்த நகரங்களின் சீதோஷ்ணங்களை ஜம்மென்று அனுபவித்தபடிக்கே ரேக்குகளில் ஓய்வெடுத்து வருகின்றனர்


    இது வருத்தமான செய்தி என்றாலும் நீங்கள் நகைச்சுவையாக சொல்லிருப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை....

    மாடஸ்ட்டி Maxi size இல்லை என்றாலும் மல்டி-ஆல்பம் குண்டு புக் என்றால் ஓகே தான் சார்.

    ReplyDelete
  47. Looking at the sales vs selections in another perspective sir :

    Since come back, for the last 10 years you played to varied tastes and interests sir and some were hits and some were misses - one heck of a journey it was but also resulting in a huge backlog collection ! Given this result, the next 5 (or even 10 years, God willing) - even as age catches up - it would be good to play to the arena sir - at the end of the day there should be some cash in the box !!

    ReplyDelete
  48. புத்தக விழாக்களில் மாணவர்களின் கவனத்தை நமது காமிக்ஸ்கள் கவர்வது சந்தோஷமான சமாச்சாரம் தான்; ஆனால், அவர்களுக்கான இதழ்களை வாங்குவதில் ஸ்டாலில் யாரேனும் வழிக் காட்டினால் சில பல சங்கடங்களை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  49. வருடத்துக்கு 7000+ பக்கங்கள்... நிஜ சாதனை sir.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. ❤️💞🙏

    ReplyDelete
  50. சார் ஒரு யோசனை ஏன் அந்த பழைய முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி கதைகள் ரீபிரிண்ட் பண்ண புக்குகள் காலியாக காலியாக மறுபடி மறுபடி பிரிண்ட் பண்ணி வச்சுக்க கூடாது?

    ReplyDelete
    Replies
    1. அதற்கு பதில் மாயாவின் மறுபதிப்பு காணாத கதைகளை மட்டும் வெளியிடுவது நன்றாக இருக்கும் நண்பரே.

      Delete
    2. பரணி அவர் நமக்கு சொல்லவில்லை. புத்தக விழாவில் மாயாவி தேடி வரும் வாசகர்களுக்கு சொல்கிறார்

      Delete
    3. Exactly Kumar !

      Parani - I guess it is time we take a look at stark reality of time - Editor is nearing 60 - while comics will keep him happy, it should also not become a burden by imposing our wish lists any longer. We should leave the ball to him - he should be in a position to take minimal financial risks and maximum sales benefit over the next 5 to 10 years. if this means altering indifferent to market genres and replacing them with commercially moving titles - this is the time for that. You don't want to see the Editor calling it a day (albeit in a distant future, God Willing and HE will for this is Lion/Muthu Comics )- you definitely don't want the godown full or half full even at the point of exit.

      Delete
    4. புரிந்து கொண்டேன் குமார் & ராகவன்.

      Delete
  51. @Edi Sir..😍😘

    இன்று சேலம் புத்தக திருவிழாவில் இ.கை.மாயாவி,
    ஸ்பைடர் கதைகள் பலர் வாங்கி சென்றனர்.👍

    Tex கதைகள் பரபரவென விற்பனைஆகிறது..👍

    Zagor ஸ்டாக் தீர்ந்துவிட்டது..❤

    லாரன்ஸ் டேவிட்டின் "மஞ்சள் பூ மர்மம்" தேடி வந்து ஒரு தம்பதியினர் வாங்கி சென்றனர். ஜானி &ஸ்டெல்லா கதையினை ஒருவர் விரும்பி வாங்கி சென்றார்.
    மொத்தத்தில் இன்றைய ஆட்டம் நேற்றைப் போலவே களை கட்டியது.😍😘😃😀💐🌷

    நண்பர்களுடனான உற்சாக சந்திப்பு பேட்டரியை ரீசார்ஜ் பண்ணிவிட்டது.😍👍👌
    சார்ஜ் அடுத்த புக்ஃபேர் வரை தாங்கும்..😍✊💪

    ReplyDelete
  52. இன்றைய சேலம் புத்தகவிழா சந்திப்பு
    மதியம் நண்பர்களின் உற்சாக வெள்ளத்தில் களை கட்டியது.😍👍

    சேலம் Tex அண்ணாச்சி தலைமையிலே திருப்பூர் திருமகன்கள் அன்பு ஸ்ரீ ஜி, GP ஜி & ஜெகதீஷ் ஜி முன்னிலையில் மோதி லட்டுடன் ஆரம்பித்து வைக்க, நம்ப ஈரோட்டு பூனைக்குட்டி ஸ்னாக்ஸ் வழங்க, நண்பர்கள் ஒருவரையொருவர் கலாய்த்து கொள்ள இனிதே காமிக்ஸ் உலகம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.😍😃

    இளைஞர் பட்டாளம் யுவா, MKS ராம், சேலம் கார்த்தி மற்றும் கோவையிலிருந்து இவ்வளம் தூரம் வந்திருந்த கடல் ரம்யா, மதுரையிலிருந்து லட்டுகளுடன் வந்து surprise தந்த ஆடிட்டர் செந்தில்ஜி.. ஆகியோருடனான கருத்துபகிர்வு கலகல வென காதில் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது..❤💛💙💚💜

    இன்றைய பொழுதை இனிமையாக்கிய நட்பூக்களுக்கு நன்றிகள் ..💐🌷🌹🙏

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. // Each book fair publish a oldies reprint. Make options for online buying too. // Good idea. Keep printing மாயாவி சார்.

      Delete
    2. /* We don't have godown or big racks. */ Doc, that was probably unintentional but can make Editor wince :-) Good that he has extreme sense of humor but yet as a comic lover it can pinch him !

      Delete
  54. Maxiless ...I mean Maxi Book Modesty...Double OK EDI sir...

    ReplyDelete
  55. நானும் தொழில் அதிபர் தான்

    ReplyDelete
  56. மாயனோடு ஒரு மோதல் எல்லாரும் எப்பவோ படிச்சிருப்பிங்க..

    நான் இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன்...

    ப்பா... இல்லினாய்ஸ் டவுனையும் செயின்ட் லூயிஸையும்... மிஸிஸிபி நதியையும்... அதன் படகுகளையும்.. என்னமாய் வரைந்திருக்கிறார்கள்... ஸ்ட்டன்னிங்...!

    அப்புறம் லில்லி டிகார்ட் மற்றும் கேட்டி வார்னே... அமேசிங்..!

    ReplyDelete
    Replies
    1. ரசிகன் சார் நீங்க

      Delete
    2. நான் இன்னும் ஆரம்பிக்களையே :)

      Delete
  57. Replies
    1. இங்கேயும் மிக்சர் கிடைக்கும் செந்தில் 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

      Delete
  58. நவம்பரில் டிசம்பராங்க ? டிசம்பரில் டிசம்பராங்க?

    ReplyDelete
    Replies
    1. சார் மார்ட்டின் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டதா? இந்த வார் இறுதியில் புத்தகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

      Delete
    2. மொழிபெயர்ப்புப் பணி நடைபெறுவது மார்ட்டின் கதைக்காக என்றால் "சார் இந்த வருட இறுதியில் புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதா?" என்று கேட்பதுதான் சரியா இருக்குமுங்க KS!

      Delete
    3. கதையைப் பொறுத்து புக்கே பரண் மேல போகலாம் :-) அடுத்த வருஷம் ஒரு இலவச மாயாவி வரலாம். நான் மார்ட்டின் Mysterie பார்த்துதான் 6000 சந்தா செலுத்தினேன் .. நீ ஆரு மாத்துறதுக்குன்னு ஒரு முறுக்கு மீசை இங்கே தாண்டவம் ஆடலாம் !! இதெல்லாம் ஜகஜமப்பா !! ஒரு குடம் எண்ணெய் ரெடி பண்ணி வெச்சுக்கணும் !

      Delete
    4. எடிட்டர் ஒய்வு பெற்ற பின்னர் நாம முகத்துல ஒரு மரு ஒட்டிக்கிட்டு மாறுவேஷத்துல பொய் அந்த வெளிவராத பழைய கதைகள் இருக்கும் பீரோ இருக்கே அதை மட்டும் ஆட்டைய போட்டுட்டு வரணும் !!

      Delete
  59. ப்ளூ கோட் பட்டாளத்தின் "களமெங்கும் காதல்" வந்து விட்டதா? எப்பொழுது?

    ReplyDelete
  60. அந்நாளைய ஹிட் அடித்த ஹீரோ கதைகளை இப்போது போலவே தனி தடத்திலும் புதிய கதைகளை சந்தாவிலும் தொடரலாம் சார்.

    அவ்வப்போது புத்தக விழாவில் அதிகம் எதிர்பார்க்கும் மாயாவி கதைகளையும் ஒரு மாக்ஸி தொகுப்பாகவோ இல்லை தற்போது வருவது போல் அதே சைஸ்லயும் கூடுதல் பிரதிகளை கொண்டுவரலாம்.

    கள நிலவரம் பார்த்து முடிவெடுங்கள் சார். அதேபோல் இதுவரை மறுபதிப்பு காணாத கதைகளையும் வெளியிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வரவேற்கின்றேன். ஆமோதிக்கின்றேன்.

      Delete
  61. அந்நாளைய ஹிட் கதைகளை இதுவரை மறுபதிப்பு காணாத கதைகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.பழைய ஹீரோக்களின் புதிய கதைகளையும் வெளியிடலாம். ஆசிரியரின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்..

    ReplyDelete
  62. நிறையபேர் புக்ஃபேரில் வேதாளர் படத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு தேடுகிறார்கள். 😃😍

    கிடைக்கவில்லை என்றதும் வேறு ஏதாவது வாங்குகிறார்கள்..🤓

    Editor Sir..🙏🤓புக்ஃபேரில் S70 books கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்..🙏

    Book fair ல் Gpay மூலம் பணம் நிறையபேர் செலுத்துகிறார்கள்.
    அண்ணாச்சிக்கு பணம் வரவு ஆகிவிட்டதா என்பதை அறிந்து கொள்ள இயலாமல் தடுமாறுகிறார்.

    எனவே நமது அண்ணாச்சிக்கு
    Gpay மூலம் பணம் வரவு ஆனவுடன் அதனை தெரிவிக்கும் சிறு கருவி அனைத்து புக் ஸ்டாலிலும் வைத்திருப்பதைபோல் வாங்கி கொடுங்கள். 🙏

    ReplyDelete
    Replies
    1. // Gpay மூலம் பணம் வரவு ஆனவுடன் அதனை தெரிவிக்கும் சிறு கருவி அனைத்து புக் ஸ்டாலிலும் வைத்திருப்பதைபோல் வாங்கி கொடுங்கள். 🙏 //

      சென்னை புத்தகக் திருவிழா போன்ற பெரிய நகரங்களில் இது போன்ற வசதி இருப்பது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் சார்.

      Delete
    2. உண்மை ஜி..நமது அண்ணாச்சி பாவம்..😶

      ஸ்டாலில் Books வாங்குபவர்கள் upi apps மூலம் அனுப்பும்போது பணம் credit ஆகி விட்டதா எனத் தெரியாமல் அண்ணாச்சி சங்கடப்படுகிறார்..😏

      So..நம்ப எடிசார்தான் மனசு வைக்கணும்..

      Delete
    3. @Edi Sir..😍😘

      upi app கள் மூலமாக QR code ஸ்கேன் செய்து பணம் செலுத்த வழிவகை செய்யும் முக்கிய நிறுவனங்களான GPay/Phonepe/paytm போன்றவற்றில் paytm நிறுவனம் மட்டுமே இந்தமாதிரி technology ல் advance ஆக உள்ளது. அந்த நிறுவனம் மட்டுமே பணம் வரவு வைக்கபட்டதை voice over மூலம் உறுதி செய்யும் சிறு கருவியை வழங்குகிறது. மற்ற நிறுவனங்கள் வழங்குவதாக தெரியவில்லை.
      எனவே paytm நிறுவனம் மூலம் இதுபோன்ற ஒரு கருவியை பெற்று அண்ணாச்சிக்கு வழங்கிட வேண்டுகிறேன்.🙏💐

      Delete
    4. 'ஸாகோர்'ன்ற பதத்தை எப்போ தன்னோட பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டாரோ அன்னியிலிருந்தே ஒரு போராட்ட குணம், ஒரு விடாமுயற்சி - இதெல்லாம் நம்ம பாபுஜிக்கு வந்துட்டதை கவனிச்சீங்களா மக்களே?

      எமோஜியிலேயே இச் இச் னு அள்ளி வழங்கறார் - அதையும் கவனிச்சீங்களா? :P

      Delete
  63. சேலம் புத்தக விழா வரும் ஞாயிறு வரை (டிசம்பர்-4) நீட்டித்துள்ளதாக தகவல், டிசம்பர் இதழ்கள் சேலம் ஸ்டாலில் கிடைக்க வாய்ப்புள்ளதா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. அருமையான கேள்வி அண்ணா?

      Delete
    2. Yes sir...கிடைக்கும் !

      Delete
    3. அட்ரா சக்கை அட்ரா சக்கை

      Delete
    4. நன்றி சார்...
      எப்போன்னு சொல்லிட்டிங்கன்னா போய் வாங்க வசதியா இருக்கும்...

      Delete
  64. @Edi Sir..😘😃😍

    *டிசம்பர் மாடஸ்டி* நிறைய காப்பி சேலம் புக்ஃபேர் க்கு அனுப்பிச்சு வைங்க..😍

    கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர்... டாக்டர்ஸ் & தொழிலதிபர்ஸ் மாடஸ்டிய பாக்க படையெடுக்க எடுக்க போறாங்கலாம்.😃😍😘.


    ReplyDelete
  65. @all..

    ஒருவேளை இன்னைக்கு Short & sweet ஆ புது பதிவு ஏதும் இருக்குமோ..
    😍😃😘😏😶😑😐

    ReplyDelete
  66. சேலம் போன்ற பெருநகரத்தில் ஏன் புத்தகத்திருவிழா இத்தனைச் சாதாரணமாக.. சிறிய அளவில் நடத்தப்படுகிறது.. ஸ்டால்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றதே... பொதுமக்கள் , மாணாக்கர்களின் வருகையும் சொல்லிக்கொள்ளும்படி இருப்பதில்லையே.. போன்ற மனத்தாங்கல்கள் எனக்கு வெகுநாட்களாக இருந்ததுண்டு.!

    அத்தனை மனத்தாங்கல்களையும் ஒட்டுமொத்தமாய் போட்டு மிதித்து துவம்சம் செய்துகொண்டு இருக்கிறது இந்த வருட சேலம் புத்தகத் திருவிழா..!

    இன்று கடைசி நாள் என்று கேள்விப்பட்டு நேற்றும் இன்றும் அலைமோதிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு திருவிழாவை நான்கு நாட்கள் நீட்டித்திருக்கிறார்கள்..!

    நம்முடைய ஸ்டாலில் விற்பனை நிலவரம் எப்படி என்பது எடிட்டர் சார் சொன்னால் தெரிந்துகொள்ளலாம்.. (நிச்சயம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது) .!


    இனி அடுத்தவருடம் முதல் எங்களுக்கு சேலம் ஷ்பெசல் என்ற பெயர் தாங்கிய சிறப்பு வெளியிடுகள் வேண்டும்.... அவற்றை எடிட்டர் சாரே வந்திருந்து வெளியிட வேண்டும்.. ஈரோட்டில் இத்தாலி இருக்கோ இல்லையோ இனி ஆண்டுதோறும் சேலத்தில் இத்தாலி இருந்தே தீரவேண்டும்..!

    எட்டியிருக்கும் ஈரோட்டையே கலக்கும் நாம் சொந்த ஊர் சேலத்தை விட்டுவிடுவோமா என்ன..!? இம்முறை சற்று குறைவாக இருந்தாலும் அடுத்தவருடத்தில் இருந்து சேலம் திருவிழாவை சிறப்பாக கொண்டாடிவிட வேண்டும்.!

    சேலத்துக்கு வாக்கப்பட்டு சேலத்துலயே இருந்துக்கிட்டு பெயருக்கு முன்னால் ஈரோட்டை சுமந்துகொண்டு உலாத்திக் கொண்டிருக்கும் குருநாயர்கள் இனி மாறித்தான் ஆகவேண்டும்..!

    ஜெய் சேலம்..!

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே மாறியாச்சு ஹிஹிஹி!!

      நிறைய சமாச்சாரங்கள் ஈரோட்டை விட நன்றாகவே இருக்கிறது!

      * பஸ் ஸ்டாண்டுக்கு மிகமிகமிக நெருக்கத்தில்
      * வசதியான மிகப் பெரிய கிரவுண்ட்
      * பார்க்கிங் - இலவசம்
      * ஸ்டால் கட்டமைப்பு அபாரம்!
      * குவாலிட்டியான உணவு வகைகள் கிட்டத்தட்ட பாதிவிலையில்
      * அட்டகாசமான இன்டீரியர்
      * ரசணையான வெளிப்புற ஏற்பாடுகள் (குழந்தைகள் விளையாட இடம், வெளிப்புற கூடார அமைப்புகள், லைட்டிங்ஸ்

      * ரெஸ்ட்ரூம் சமாச்சாரம் மட்டும் கொஞ்சம் பராமரிப்புக் குறைச்சல்

      மற்றபடி, சேலம் இந்தவாட்டி உண்மையிலேயே அசத்தியிருக்கிறது!

      (KOK, ஈரோடு மீட்டிங்கை இனி சேலத்துக்கு ஷிஃப்ட் பண்ண வேண்டியிருக்கும் போல இருக்குன்னு நேற்று நான் அண்ணாச்சியிடம் பேசிக்கொண்டிருத்தது தெரியுமா?!!) :)

      Delete
    2. நாமதான் அதை போனவாரமே டிச்கிச்சன் பண்ணினோமே குருநாயரே..!

      அண்ணாச்சி ஓ.கே சொல்லிடுவாங்க..! நம்ம பெரிய அண்ணாச்சி எடிட்டர் சாரைத்தான் கிட்நா பண்ணிட்டு வரோணும்...

      வீட்ல ஒரு ரூமுல பழைய டயரு.. இரும்பு ட்ரம்.. எல்லாம் அடுக்கிவெச்சி ரூமுக்கு செகப்பு பெயிண்ட் அடியி..ஜீரோ வாட்ஸ் பல்பு மாட்டி வைங்க.. சதிஆலோசனை பண்ண வேண்டியிருக்கு...!

      Delete
    3. அப்புறம் ஒரு முக்கியமான விசயத்தை மறந்துட்டேன்..

      சதியாலோசனை பண்ணும்போது கண்டீப்பா ஹாஹாஹா ன்னு பெருசா சிரிச்சிக்கிட்டே.. கையில் கோப்பையோடு கவர்ச்சி நடனம் பாத்தே ஆகணும்.. இல்லேன்னா நம்மேளை வில்லன்களா ஒத்துக்கமாட்டாங்க...!
      உடனே ரெண்டு மார்க்கெட் போன ஹீரோயின்களை புக் பண்ணி வைங்க..!

      Delete
    4. ஆஹ்ஹாஹ்ஹா!!!

      இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க கிட்?

      இத்தனை ஐடியாக்களையும் மனசுக்குள்ளேயே பூட்டிவச்சுக்கிட்டு இவ்ளோ இயல்பா உங்களால எப்படி இருக்க முடிஞ்சது?!!

      பேசாம கொஞ்சநாளைக்கு நீங்க குர்நாயரா இருங்க!

      Delete
    5. //சதியாலோசனை பண்ணும்போது கண்டீப்பா ஹாஹாஹா ன்னு பெருசா சிரிச்சிக்கிட்டே.. கையில் கோப்பையோடு கவர்ச்சி நடனம் பாத்தே ஆகணும்.. இல்லேன்னா நம்மேளை வில்லன்களா ஒத்துக்கமாட்டாங்க...!//
      :-))))))

      Delete
    6. சங்கத்திலே அந்த அளவு வசதி இல்லையாம் அதனால் தலைவரே ஒரேயொரு கருவேப்பிலையை மட்டும் முன்னால் கட்டிக் கொண்டு ஆட ரெடியாகி வருகிறார்:-) நல்ல கருப்பு கண்ணாடியை தேடி கண்ணிலே மாட்டிக்கோங்க :-)

      Delete
    7. 😱😱😱😱

      கற்பனைக்கே கண்ணுல ரத்தம் வந்துடுச்சி பரணி...


      😢😥😢😥

      Delete
    8. //சதியாலோசனை பண்ணும்போது கண்டீப்பா ஹாஹாஹா ன்னு பெருசா சிரிச்சிக்கிட்டே.. கையில் கோப்பையோடு கவர்ச்சி நடனம் பாத்தே ஆகணும்.. இல்லேன்னா நம்மேளை வில்லன்களா ஒத்துக்கமாட்டாங்க...!//

      கரூர்ல இருந்து வாத்துகளை இறக்கிடறேன்...

      (வாத்து... டான்ஸ் ஆடறதுக்கு இல்ல.. ஃப்ரை பண்ண..)

      Delete
  67. நா சிவகாசி பக்கங்தாங்க. நா 2 நாளா மரு வச்சிகிட்டு பழைய ஆம்னிலே அவரு ஆபீஸ்ஆன்ட நிக்கிறேன். 4,5 பாடி பில்டரோட. எடிட்டர் வெளியே வந்தா நா கடத்துறேன். டீ, காபி சம்சா செலவு யாராவது பொறுப்பெடுத்தா ப்ளான் சக்சஸ். இந்த விசயம் எடிட்டர்க்கு தெரியாம பாத்துக்கங்க.

    ReplyDelete
    Replies
    1. நாலஞ்சி பாடிபில்டர் எல்லாம் தேவையில்லிங்க..

      ஆம்னி வேன் கண்ணாடியில மாடஸ்கா போஸ்டர் ரெண்டு ஒட்டி வைங்க.. அவரே வந்து ஏறிக்குவார்..!

      Delete
    2. மாடஸ்டி கவர்ச்சி ப்ளக்ஸ் போர்டு மாட்டினேனுங்க. ப்ளான் ஓர்க் அவுட் ஆகுங்தானே.அக்கா கவர்ச்சி ஸ்டில் பாத்து பெருங் கூட்டங் வந்துர கூடாது பாருங்க. நம்ம பாடி பில்டர் கையில நம்ம எடிட்டர் போட்டோ இருக்குதுங்க. ஆனா நம்ம எடிட்டர் சுதாரிச்சிட கூடாது பாருங்க.

      Delete
    3. @புன்னகை ஒளிர்..😃😃

      அப்படியே அந்த சுகர் மாத்திரை போட்டுக்க மறந்துடாதீங்க...😃😃😃😀

      Delete
    4. கல்கோனா, கமர்கட், குருவி மிட்டாய் அடிச்சி நொறுக்குவேங்க. கிட்டத்தட்ட நானும் பாடி பில்டர் தாங்க. கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாதீங்க.

      Delete
    5. அப்பால காரு குள்ளார ஜுலி பாப்பா, லேடி,S செல்லம் பேனரு இருக்குதுங்க.

      Delete
  68. நேற்று சேலத்தில் இடம்பெற்ற புத்தக கண்காட்சி கடைசி நாள். பேருந்து நிலையத்திற்கு அடுத்து அமைந்திருந்தது. நல்ல அமைப்பு. நிற்க முடியாத அளவுக்கு மாணவ மாணவிகள் கூட்டம். நான்கு படக்கதைகள் மட்டுமே வாங்க முடிந்தது.

    பக்க வாட்டில் பின் செய்வதால் நடுவில் இழுத்துக் கொண்டு படிக்க வேண்டிய நிலை. போதிய இடம் கொடுத்து அச்சடிப்பு அவசியம். ஓரங்கள் 5 mm இருந்தால் போதும். நடுவில் கூடுதல் இடம் படிக்க ஏதுவாக தேவை.

    விற்காத புத்தகங்களுக்கு சப்பைக் கட்டு கட்டுவதை விட்டு விட்டு, வாசகர்கள் விரும்புவதை மட்டும் நியாயமான விலையில் கொடுக்க முயல்வது புதியவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும்.

    தங்கள் புத்தகங்கள் வாங்குபவர்கள் மீண்டும் மீண்டும் படிப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் தந்தை காலத்தில் உருவாக்கப்பட்ட வாசகர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    தரமான ஒற்றை அல்லது இரட்டை கதைகள், வண்ணம் வேண்டிய தில்லை, வண்ணத்தில் மோசமான கழுகு மலைக்கோட்டை நினைவில் வருகிறது. நியாயமான மாணவர் கள் வாங்கக் கூடிய விலை இவைதான் நீண்ட காலம் பயன் தரும்.

    ReplyDelete
    Replies
    1. //வாசகர்கள் விரும்புவதை மட்டும் நியாயமான விலையில் கொடுக்க முயல்வது புதியவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும்.//

      அப்படியே வாசகர் விரும்பும் கதைகளையும் ஒரு லிஸ்ட் போட்டீங்கன்னா எடிட்டருக்கு வசதியா இருக்கும் !

      Delete
  69. ஜாகோர்...

    தடிமனான குண்டு புக்குகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும். படிப்பற்கு அதன் தடிமனே பெருந்தடையாக உள்ளது.தடையைத் தாண்டி ஒருவாறாக படிக்க முற்பட்டேன்.

    தவிர..
    சமீப காலமாக மூச்சுக்கு முந்நூறு தடவை ஜாகோரின் மெய்கீர்த்தி? ( புகழ்மாலை) கள் காத்து வாக்கில் நாமக்கல்லில் தொடங்கி பொடிநடையாக தமிழகம் முழுதும் சுற்றி வந்து வாகை சூடிய செய்தி ..காவிரி கடந்து..கங்கை கடந்து..கடல்கடந்து..அதன் தாய்மண்ணான வன்மேற்கு வரை எட்டியதாகக் கேள்விப்பட்டபோது.ஆவல் இன்னும் அதிகரித்தது.

    கேள்விக்கு பதிலாக ஜாகோரை படித்துவிட்டு பதிலடி கொடுக்கலாம் என.எட்டிப் பார்த்தவனை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டது. ஓவியங்களும் கலரிங்கும் மெல்ல மெல்ல. ஆக்ரமித்து..அது கதையாக விரிந்து முழுவதுமாக ஆட்கொண்டது.

    சிம்பிளாகச் சொன்னால்.." ஒரு நாயகன் உதயமாகிறான்" கதைதான். இந்தச் சின்னக் கருவை சீரும் சிறப்புமாக. வெளிப்படுத்திய மௌரோ போசெல்லியின் எண்ணமும்..ஆக்கமும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.

    ஒவ்வொரு ப்ரேமையும் அமைத்த நேர்த்தியும்.குழப்பமின்றி புரிய வைத்த தெள்ளிய வசனங்களும்.ஒரே சீரான முறையில் நகர்ந்த கதையோட்டமும்.எண்ணிலடங்கா மனிதர்களும் மிகையில்லாத ஆக்சனும்.என எண்ணி வியக்கும் படி ஏகப்பட்ட விசயங்கள் நீக்கமற நிறைந்துள்ளன.

    சமீபக் கதைகளில் 'ப்ளாக் பஸ்டர்' என ஜாகோரை தாராமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  70. @GP..😍😃

    *ஜாகோர் படை* க்கு பலம் சேர்க்க வருகைதரும் அய்யா GP அவர்களை இரு மரம் ஜம்பி வருக வருக என வரவேற்கிறோம்.✊💪

    *ஜம்பிங் ஸ்டார் பேரவை*🙏

    ReplyDelete
    Replies
    1. ////இரு மரம் ஜம்பி////

      😃😃😃😀😃😃😃😀 பின்றீங்க பாபுஜி!

      Delete
  71. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete