Saturday, October 01, 2022

அரை நூற்றாண்டின் முதல்வர் !

 நண்பர்களே,

வணக்கம். கும்முடிப்பூண்டி போறதுக்கு குவைத் வழியா போகலாமே ? என்ற மாமூல் நீட்டல்கள் & முழக்கல்களின்றி சேதியைச் சொல்லி விடுகிறேனே  : இன்றைக்கு கூரியரில் / பதிவுத் தபாலில் - 2 குண்டுப்பூசணி புக்ஸ் கிளம்பியாச்சு ! திங்களன்று எல்லா கூரியர்களும் வழக்கம் போல பணிசெய்வர் எனும் போது, காத்திருக்கும் விடுமுறை வாரத்தை, TEX & இளம் ஸாகோர் சகிதம் தூள் கிளப்பிடலாம் ! செவ்வாயன்று ST கூரியர் பணியாற்றுவார்களாம் ; so திங்கள் மிஸ் ஆனால் கூட செவ்வாயின் சரஸ்வதி பூஜை தினத்திலாவது புக்ஸைக் கைப்பற்றிடலாம் போலும் ! ஆனால் DTDC நெட்டுக்கு 2 நாட்கள் கடையைச் சாத்திப்புட்டு கிளம்பி விடுவார்கள் போலும் ; so DTDC உதவியில் புக்ஸைப் பெற்றிடப் பணித்துள்ள நண்பர்களுக்கு, திங்களே புக்ஸ் கிடைத்து விட்டால் தேவலாம் ! அப்புறம் ஒரு முக்கிய தகவலுமே : இந்த மாசப் பார்சல்களை உடைக்கும் போது, ரொம்பவே கவனமாய், பக்குவமாய் ; பதவிசாய் செயல்படுமாறு கோருகிறேன் - becos 2 ஹார்ட்கவர் புக்ஸ் மாதமிது என்பதால் வழக்கத்தை விடவும் நல்ல தடிமனான பெட்டிகளை செய்யச் சொல்லியிருந்தோம் ! ஆனால் டப்பிக்களை அகலத்தில் கொஞ்சமாய் குறைத்துச் செய்து தந்துவிட்டார்கள் ! So பெரும்பாடு பட்டே இன்றைக்கு புக்ஸை பேக் செய்துள்ளார்கள் நம்மாட்கள் ! பார்சல் ரொம்ப tight fit என்பதால், கத்திரியோ- ப்ளேடோ போட்டு பார்சலை திறக்கும் போது ரொம்பவே ஜாக்கிரதை ப்ளீஸ் !! அப்புறம் 2 முரட்டு டேங்கர் லாரிகளாய் ரூ.500 + ரூ.500 விலைகளில், டெக்ஸ் தீபாவளி மலரும், ஸாகோரும் வெளிவரும் மாதத்தில், அந்த டெட்வுட் டிக் தம்பியை TVS 50-ல் ஏற்றிவிட்டு களமிறக்கிப் பார்ப்பது கொடுமையாகிப் போய்விடும் ; கடைகளின் விற்பனையில் ரொம்பவே அடி வாங்கிடக்கூடும் என்றுபட்டது ! So அவரை ஆண்டின் இறுதிக்கு நகற்றி விட்டோம் ! And மீண்டும் இன்னொரு முக்கிய தகவல் : ஸாகோர் ரெகுலர் சந்தா இதழல்ல ; முன்பதிவுக்கு மாத்திரமே, எனும் போது நீங்கள் முன்பதிவு செய்திருக்காத பட்சத்தில் இம்முறை உங்கள் கூரியர் டப்பியினில் TEX தீபாவளி மலர் மாத்திரமே இடம் பிடித்திருக்கும் ! So திங்களன்று நம்மாட்களைத் துவைத்துத் தொங்கப்போட 'தம்' கட்டும் முன்பாய். ஸாகோர் ஸ்பெஷல் இதழுக்கு முன்பணம் அனுப்பியாச்சா ? என்று ஒருவாட்டி சரி பார்த்து விடுங்களேன் - ப்ளீஸ் ?

Moving on, போன பதிவினில், கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" சார்ந்த கேள்விக்கு, for  / against என்று ஆளாளுக்கு பொங்கியிருக்க, எனக்கோ அந்த அலசல்களின் bigger picture தான் கண்ணில்பட்டது ! பெரும்பான்மைக்கு இந்த இதழில் ஆர்வமில்லை என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிவதால், டைகராரும், ஜிம்மியும், லக்னரும், இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உறக்கத்தில் இருத்தல் அவசியம் என்றாகிறது ! நான் கவனித்த bigger பிக்சரோ - "டைகர்" என்ற அந்த நாயகரின் ஆளுமை நம் மத்தியில் விட்டுச் சென்றுள்ள impact எத்தனை ஆழமானது என்பதையே ! And நமது நிறுவனத்தின் ஐம்பதாவது ஆண்டுதனில்  - WHO IS THE BIGGEST OF THEM ALL ? இது வரையிலும் நாம் சந்தித்துள்ள நாயகர்களுள் # 1 யார் ? என்ற கேள்வி ஒரு சுவாரஸ்ய விவாதத்துக்குப் பொருளாகிடக் கூடும் என்று நினைத்தேன் ! 

Without a doubt - இந்த லிஸ்டில் முதல் பெயர் "இரும்புக்கை மாயாவி" என்று தானிருக்க வேண்டும் ! இதோ - தற்போது நடைபெற்று வரும் மதுரை புத்தக விழாவினில் கூட, மாயாவியின் விற்பனை அதகளப்படுத்தி வருகிறது ! In fact கைவசம் மூன்றே மூன்று "மாயாவி" புக்ஸ் தான் உள்ளன என்பதைப் பார்த்து விட்டு செம காண்டாகிடும் வாசகர்கள் எக்கச்சக்கம் என்று ரெண்டு நாட்களுக்கொருமுறை எனக்குத் தகவல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன ! இந்த phenomenon எத்தகையது என்பதை சத்தியமாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லை ; becos தீவிர பொம்ம புக் வட்டமான நாம் மாயாவிகாருவைத் தாண்டி அநேக தூரம் பயணித்து விட்டோம் ! So இன்றைக்கு மாயாவியைத் தேடி வருவோர் அனைவருமே, இந்தச் சிறு குடைக்கு வெளியிலுள்ள casual readers - அல்லது  அந்நாட்களின் ஞாபகார்த்தமாய் சேகரிப்போர் மாத்திரமே !! காமிக்ஸ் வாசிப்புகளை மாயாவியில் ஆரம்பித்து, மாயாவியோடு முடித்துக் கொள்ளும் இந்த நண்பர்கள் இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம் பேர் இருப்பரோ - புரிஞ்சில்லா !! 

இடைப்பட்ட ஒரு சிறு காலகட்டத்தில், அமெரிக்க சூப்பர் ஹீரோக்களை பார்த்து படைப்பாளிகள் மாயாவிக்கும் ஒரு கோமாளி வேஷம் கட்டிப் பார்த்த நாட்கள் நீங்கலாக - மாயாவியின் கதைகள் அனைத்துமே தரமானவை என்பதில் ஐயங்களில்லை ! Of course "காதில பூ" என்ற கோணத்தில் பார்த்தால், இந்தத் தொடரே வேஸ்ட் தான் ; ஆனால் அந்த அசாத்திய ஆற்றல் கொண்ட நாயகரின் பாத்திரத்தோடு காதல்வயப்பட்டு விட்டோர்க்கு - மாயாவியின் இந்த 30+ கதைகளுமே ஒரு விருந்து தான் ! 

"ஆளுமை லிஸ்ட்டில்" அடுத்த பெயராகச் சொல்வதானால் - வேதாளரைச் குறிப்பிடலாம் ! ரொம்ப ரொம்ப நேர்கோட்டுக் கதை தான் ; டென்காலி கானகம் ; ஈடேன் தீவுகள் ; கபாலக் குகை ; எப்போதேனும் நகர்ப்புறம், என்று இவர் வலம் வருவதுமே ரொம்பக் குறுகலான வட்டத்தினுள் தான் ! ஆனால் "இவர் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள தாக்கமென்ன ?" என்பதை நடப்பாண்டில் - ஸ்மாஷிங் '70s இதழ் # 1 செமத்தியாய்க் காட்டி விட்டது ! அந்த "வேதாளர் ஸ்பெஷல் # 1" வெளியான நாட்களில் குவிந்த சிலாகிப்புகள், ஒரு நூறு மூ.ச. அனுபவங்களை மறக்கடிக்கும் ஆற்றல் கொண்டிருந்தது ! அந்த கம்பீரம் ; ஆண்மை ; அஞ்சாமை என்பன, exotic ஆனதொரு கானகப் பின்னணியில் சொல்லப்படும் போது அதனில் மயங்காது போவது ரொம்பவே கடினம் என்பது புரிகிறது ! பற்றாக்குறைக்கு அந்த முகமூடியின் பின்னுள்ள மர்ம முடிச்சு ; makes for a complete hero !

ஆளுமை லிஸ்டின் அடுத்த பெயரை நான் உச்சரிக்காவிட்டால் தெய்வ குற்றம் ஆகிடக்கூடும் - becos எண்பதுகளின் பிற்பாதியையும், தொண்ணூறுகளின் முற்பாதியையும் முழுசாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தவர் தானைத் தலைவர் ஸ்பைடர் தானே ? நியூயார்க் நகரையே அலேக்காய்த் தூக்கிப் போவதாகட்டும், சிரசாசன SMS அனுப்புவதாகட்டும், ஹெலிகாரில் ஏறி வித விதமான வில்லன்களோடு போரிடுவது ஆகட்டும் - we just loved it all !! சத்யராஜ் ஸ்டைலில் முழு வில்லனாய் ஆரம்பத்தில் தலைகாட்டி விட்டு ; நாட்களின் ஓட்டத்தில் ஒரு நீதிக்காவலனாய் உருமாறிய ஸ்பைடர் - வெறும் சவடால் சவுண்ட் பார்ட்டியல்ல - நமது பால்யங்களின் அடையாளம் !! 

பட்டியலில் அடுத்து இடம்பிடிக்கக் கூடியவர் - நமது 'தல' டெக்ஸ் தான் ! 1985-ல் நம் மத்தியில் அறிமுகமானவர் ; தொடர்ந்துள்ள 37 ஆண்டுகளிலும் நமது காமிக்ஸ் வாசிப்புகளில் முதன்மையானவராய்த் தொடர்ந்து வருகிறார் ! "ஐயா...நேர்கோட்டுக் கதையே தான் ; நீங்கள் அட்டைப்படத்தை ரசித்து, உட்பக்க அச்சின் மையை முகர்ந்து  கொண்டிருக்கும் நேரத்திற்கெல்லாம் கதையின் வில்லன் யாரென்பது தெரிந்திருக்கும் தான் ; ஆனாலும் 224 பக்கங்கள் ; 336 பக்கங்கள் என்று சர்வ சாதாரணமாய் போட்டுத் தாக்கும் இவரது ஆல்பங்கள், நம்மிடம் உருவாக்கும் impacts பீரங்கி குண்டுகளுக்குச் சமானம் என்பேன் ! 

"ஆளுமை" என்ற அடையாளத்தோடு ஒரு சிரிப்பு நாயகரை அறிமுகப்படுத்தினால் நானே சிரிப்பை உண்டாக்குபவனாய்த் தெரியக்கூடும் தான் ; ஆனாலும் "லக்கி லூக்" என்ற பெயரை உச்சரிக்கும் போது நம்மையும் அறியாமல் நமது முகங்களில் ஒரு புன்னகை இழையோடுகிறதே - அதுவே இந்த poor lonesome கௌபாயின்  சாதனை என்பேன் ! 35 ஆண்டுகளாய் நம் மத்தியில் ஒரு நிரந்தரராய் ; கார்ட்டூன் ஜானரின் ஒரே தலீவராய்த் தொடர்ந்திடும் இந்த ஒல்லி கௌபாயின் தொடர் இன்றளவிற்கு நீண்டு சென்று வருகிறது ! வன்மேற்கின் பிரபல வில்லன்கள் ; பிரபல நிகழ்வுகள் என்றெல்லாம் தோண்டிப் பிடித்து, கதைக்குள் லாவகமாய் இணைத்திட்ட (ஒரிஜினல்) படைப்பாளிகளின் டீம் செமத்தியான பாராட்டுக்களுக்கு உரித்தானோர் ! Of course - தொடரின் பிற்பாதி - without doubt சுமார்மூஞ்சிக் குமாரு தான் ! அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அந்த க்ளாஸிக் காலகட்டத்தின் க்ளாஸிக் கதைகளை தேடிப் பிடித்தோமானால் - ஒவ்வொரு ஆல்பமும் மணி மணியாய் நம் முன்னே நிற்பது தெரியும் ! "லக்கி லூக்" - very much in the race !!

"கேப்டன் டைகர்" !! பெயரைக் கேட்டாலே விசில்கள் இன்னமும் பறப்பதே இந்தப் பரட்டைத்தலை நாயகரின் visiting card ! வன்மேற்கில் இவரோடு கரம்கோர்த்துப் பயணித்ததில் நாம் கண்டெடுத்த முத்துக்கள் ஒன்றல்ல ; இரண்டல்ல - ஒரு வண்டி !! இந்த மனுஷனை ஒரு ரெகுலரான ஹீரோ என்ற பட்டியலுக்குள் அடைப்பதே கஷ்டம் - becos இவர் படைப்பிரிவின் தளபதியுமல்ல ; ரேஞ்சுருமல்ல ; ஷெரீப்புமல்ல (பின்னாட்கள் வரையிலாவது) ! So ஒரு சாதாரண சிப்பாயாய் ரவுண்டடித்தபடிக்கே ஒரு மனுஷன் இத்தனை அபிமானத்தை ஈட்டியிருப்பது truly incredible ! பிரான்க்கோ-பெல்ஜிய படைப்புலகினில் கௌபாய் தொடர்களுக்கொரு இலக்கணமாய் ; ஒரு அளவுகோலாய் இன்றளவிற்கு நிற்கும் கேப்டன் டைகர் என்ற Mike ப்ளூபெரியை - பின்னாட்களில் யார் யாரையெல்லாமோ கொண்டு கதையெழுதி, படம் போட்டு "இளம் டைகர்" என்று உலவ விட்ட கூத்து மட்டும் அரங்கேறியிருக்கா விட்டால் - this man would be HUGE !! 

அடுத்தவரோ ஒரு நம்பர் !! XIII !! விற்பனையில் மாயாவியையே ; டெக்ஸ் வில்லரையே தண்ணீர் குடிக்கச் செய்த ஜாம்பவான் - இந்த ஞாபக மறதிக்காரர் ! நம் மத்தியில் 1986-ல் துவங்கி 2005 (???) வரைக்கும் தூண்டும், துக்கடாவுமாய் வெளியாகியே கூட ஒரு அசாத்திய அபிமான வட்டத்தை இவர் ஈட்டியிருந்ததில் no secrets ! விற்பனை அளவுகோல்களின்படி இந்த 50 ஆண்டுப் பயணத்தின் முதல்வரைத் தேர்வு செய்வதாயின் - வான் ஹாமின் இந்த அசாத்தியப் படைப்பைத் தாண்டிப் பார்ப்பது சிரமமாக இருந்திடும் ! 

தொடரும் நாயகருமே வான் ஹாமின் ஆக்கமே - லார்கோ வின்ச் எனும் செம வித்தியாசமான படைப்பாய் 10 ஆண்டுகளுக்கு முன்னே நமக்கு அறிமுகமான வகையில் ! அழுத்தமான நாயகக் கதாப்பாத்திரப் படைப்பு ; அதகளப்படுத்தும் கதைக்களங்கள் ; வசீகரிக்கும் ஒரு playboy நாயகன் ; யுத்தங்கள் வன்மேற்கிலும். குற்றங்கள் மலிந்த அமெரிக்க வீதிகளிலும் மட்டுமே நடப்பதில்லை - பெரும் குழுமங்களின் மத்தியில், வணிக உலகினிலும் அரங்கேறிடுவதுண்டு என்ற அழுத்தம் - லார்கோ வின்சை ஒரு சராசரி ஹீரோ எந்த அந்தஸ்திலிருந்து நிறையப் படிகள் உயர்த்தி நிற்கச் செய்துள்ளன !

எனது பார்வையில் மேலுள்ள இந்த 8 நாயகர்கள், நம் அணிவகுப்பில் உள்ள சக நாயகர்களை விடவும் கணிசமாய் உயர்ந்து நிற்கும் ஜாம்பவான்கள் ! "ஏன் ஆர்ச்சி லிஸ்ட்டில் இல்லியா ? சிக் பில் இல்லியா ? ட்யுராங்கோ இல்லியா ? தோர்கல் இல்லியா ? லாரன்ஸ்-டேவிட் இல்லியா ?" என்றெல்லாம் அந்தந்த நாயகர்களின் நேசர்கள் கேள்விகள் எழுப்பிடலாம் தான் ! ஆனால் நான் பேசுவது அரை நூற்றாண்டின் முதல்வரைப் பற்றி எனும் போது - we need to talk about THE ABSOLUTE VERY BEST !! So சொல்லுங்களேன் guys - உங்களின் பார்வையில் ஹீரோ # 1 யாரென்று ? And அந்தத் தேர்வின் பின்னணி பற்றியும் - இரத்தினைச் சுருக்கமாய் சொன்னீர்களெனில் சுவாரஸ்யமாய் இருக்கக்கூடும் ! Bye all....see you around ! Have a fun Sunday !

P.S : காரைக்குடி இன்னமும் சூடு பிடிக்கக் காணோம் - ஆனால் மதுரைப் புத்தக விழா விற்பனைகள் செம ரகளை !! தினமும் கல்லூரி மாணவ / மாணவியரும், பள்ளி மாணாக்கரும் குவிந்து வருகின்றனர் ! Absolutely heartening !! And the sales has been wow !!!

Online listings : https://lion-muthucomics.com/latest-releases/1025-october-pack-2022.html

https://lioncomics.in/product/october-pack-2022/

MADURAI :






KARAIKUDI :




346 comments:

  1. ஐ பர்ஸ்ட் of the பர்ஸ்ட் of the பர்ஸ்ட் of the பர்ஸ்டு!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. வந்தனம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  4. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே...

    ReplyDelete
  5. சார்,மதுரை புத்தக விழவில் நாளை தீபாவளி புத்தகங்கள் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ; நாளை டிரான்ஸ்போர்ட் கிடையாது ; திங்களன்று தான் !

      Delete
  6. 8 பேரில் முதல்வர் என்றால் கேப்டன் டைகரையே சொல்ல இயலும்...


    அவருடைய அளவுக்கு, நம்மிடைய நித்ர்சனமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் வேறு எவருமில்லை. அவருடைய கதைகளில் வரும் உண்மைத்தன்மை, வரலாற்று சம்பவங்களுடன் யதார்த்தமாக ஏற்படும் தொடர்புகள் எதுவுமே இன்று வரை வேறு கதைகளில் இல்லை. லார்கோ இந்த விசயத்தில் கொஞ்சம் கிட்டே வருவார்... ஆனாலும் டைகர் அளவுக்கு இல்லை. ...

    ReplyDelete
  7. நமக்கு கிட் ஆர்டின், லக்கி லுக் தான்

    ReplyDelete
  8. கூரியர் டப்பியில் டெட்வுட் டிக் இல்லாதது இக்ளியூண்டு வருத்தமே! ஆனாலும் தாட்டியமான இரு ஜாம்பவான்களோடு ஒரு கருப்பின கடுவன் பூனையை மோதவிடுவது விற்பனைமுனையில் சற்றே பரிதாபமான முடிவைத் தந்துவிடுமென்பதால் எடிட்டரின் முடிவைப் பாராட்டவே தோன்றுகிறது!

    எடிட்டரின் இந்த முடிவுக்கு மற்றோரு காரணம் டப்பியின் அகலக்குறைச்சாக இருக்கக்கூடும்!

    ReplyDelete
    Replies
    1. ஸாகோர் ரூ.350 விலையில் ; 4 பாகங்கள் என்றிருந்தவரைக்கும் டெட்வுடார் ஓ.கே.வாகத் தெரிந்தார் ; ஆனால் ஸாகோரின் விஸ்வரூபம் என்றான பிற்பாடு - டிக்கின் ஒத்திவைப்பு inevitable !

      Delete
  9. //தானைத் தலைவர் ஸ்பைடர் தானே ?//
    இல்லியா பின்னே, sir...
    படைப்பாளிகள் தலைவன் கதைகளை தரமாக மாதாமாதம் புதுப்பித்தால், நாங்களும் மாதம் ஒரு ஸ்பைடர் வாங்கி கொண்டாடுவோம்ல

    ReplyDelete
    Replies
    1. //அமெரிக்க சூப்பர் ஹீரோக்களை பார்த்து படைப்பாளிகள்
      மாயாவிக்கும் ஒரு கோமாளி வேஷம் கட்டிப் பார்த்த நாட்கள் நீங்கலாக..//

      Nooooooooo, Sir.... அப்படியும் இல்லை...
      களிமண் மனிதர்கள், இயந்திரப்படை எல்லாம் மிகவும் அட்டகாசமான கதைகள்... ...இயந்திரப்படை இரண்டாம் பாகத்தில் ஓரிரு அத்தியாயம் மட்டுமே மாயாவியின் சொதப்பலான சறுக்கின இடம். யதார்த்தம் இல்லை என்பதை தவிர மாயாவி கதைகள் ஒன்றும் சொதப்பியதே இல்லை.

      Delete
    2. // இது வரையிலும் நாம் சந்தித்துள்ள நாயகர்களுள் # 1 யார் ?//

      XIII ( # 1 நாயகர் C),
      கேப்டன் டைகர் ( # 1 நாயகர் B),
      இவர்களையும் மிஞ்சுபவர் ஒரு டஜன் கதைகள் மட்டுமே கொண்ட கேப்டன் பிரின்ஸ் ( # 1 நாயகர் A)...
      இவரை போய் லிஸ்டில் மறந்து விட்டீர்களே சார்?

      Delete
    3. விற்பனை....விற்பனை....என்றொரு அளவுகோலும் இங்கே முக்கியம் என்பதை நினைவூட்டட்டுமா ?

      Delete
    4. 16 கதைகள் கொண்ட ட்யுராங்கோ - செம ஹிட் நாயகரே ! அவரையும் லிஸ்டில் சேர்க்கலாம் தான் - because விற்பனையில் தொடர்ந்து சாதித்துள்ளவர் ! But ஒரு ALLTIME GREAT என்ற தேடலுக்கு அவரை இணைக்க தோன்றவில்லை !

      Delete
    5. 3 முழுவண்ண மறுபதிப்பு புத்தகம் ஸ்டாக்கில் இல்லாததை பார்த்து கேப்டன் பிரின்ஸ் விற்பனையிலும் சாதிக்கிறவர் என்று நினைத்திருந்தேன் சார்...

      Delete
    6. ////இவர்களையும் மிஞ்சுபவர் ஒரு டஜன் கதைகள் மட்டுமே கொண்ட கேப்டன் பிரின்ஸ்

      +1

      கேப்டன் டைகருக்கே tough கொடுக்க கூடிய ஒரே ஆள் கேப்டன் பிரின்ஸ் தான்.

      Delete
  10. #1 டைகர் தான் என்னளவில்
    #1 ஹீரோ.
    ஒரு பெரிய அலட்டல் இல்லா, யதார்த்தமான அடி வாங்கியும் ஜெயிக்கும் ஹீரோ. இடியாப்ப சிக்கலாக சிக்கல்ல மாட்டி இருந்தாலும் தளராத மனதுடன் போராடும் அந்த கேரக்டர்.

    என் பெயர் டைகரும் மிக அருமையான கதை.

    தங்கக் கல்லறை, மின்னும் மரணம் எல்லாம் ஆல் டைம் பேவரைட்.

    ReplyDelete
  11. அடுத்து #2 நிச்சயமாக XIII தான்.

    டைகர் & XIII கதைகள் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இவர்களின் கதைகள் எண்ணிக்கை குறைந்தாலும் நிச்சயமாக அனைவரின் மனதையும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்பதை மறுக்க முடியாது...

    ReplyDelete
  12. Minnum Maranam alone will eat all Tex books and XIII combined. And then will mop the floor with others.

    Spider and Largo are neck to neck in second place.

    ReplyDelete
  13. No.1 - டெக்ஸ் டைகர் XIII லார்கோ லக்கி

    யாரையும் பின்னால் தள்ள இயலவில்லை :-))

    ReplyDelete

  14. என்னளவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியவர் XIII தான் காமிக்ஸ் கதைகளில் இவ்வளவு வீரியம் உண்டா இவ்வளவு மர்மம் உண்டா என திகைக்க வைத்தவர் நம் 13 நம்பரார் இதற்கு அப்புறம் என் சிறுவயது பிராயத்தை சுவராஸ்யமாக்கியவர் சூப்பர் ஸ்டார் ஸ்பைடரே மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் ஆக்சன் ஹீரோ வில்லர் டெக்ஸ் வில்லர் அநியாயம் நடக்கும் இடங்களில் மூளைக்கு மட்டுமல்ல முஷ்டிக்கும் வேலை உண்டென உணர்த்தியவர் இவர் கதைகள் படிக்கும் போதெல்லாம் தானாகவே உடம்பு விரைப்பாகும் மீசை முறுக்கேறும் காமிக்ஸ் நாயகர்கள் அனைவருமே பிடித்திருந்தாலும் இவர்களுக்கென தனி இடமுண்டு

    ReplyDelete
  15. என்னோட ஆல்டைம் பேவரைட்ஸ் டாப் 3
    1. லக்கி லூக்
    2. தங்கத் தலைவன்
    3. XIII
    4. தோர்கல்
    5. வுட் சிட்டி கோமாளிகள்.

    ReplyDelete
    Replies
    1. 2. வலை மன்னனைத்தானே சொல்கிறீர்கள். ?

      Delete
  16. #எட்டுக்கு குட்டு!

    முதலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள 8 நாயகர்களில் இருவரை நான் தூரக் கடாசி விடுவேன். முதலாமவர் ஸ்பைடர். இரண்டாமவர் இ.கை.மாயாவி.

    இப்போ இருப்பது #ஆறுல யாரு?

    மும்மூர்த்திகாரு இவரு 👇

    1.பேரு பெத்த பேரு வேதாளரு!
    2.டெக்ஸ் வில்லரு!
    3.கேப்டன் டைகரு!

    பேலன்சு மூவரு அதுல ஒருத்தரு பட்டியலுக்கு அப்பாற்பட்டவரு அதான் நம்ம XIII.

    மீதி ரெண்டு பேரு லக்கி &லார்கோ காரு.

    என்னோட லிஸ்ட்டுல ஆறு பேரு.
    கதாசிரியரு கதைல பேலன்சு லேதுன்னா ஆறு பேரும் லிஸ்ட்டுல லேது....

    ReplyDelete
  17. மைக் ப்ளூபெரி எனும் கேப்டன் டைகர் தான் #1

    ஆர்ச்சிதான் என் காமிக்ஸ் வாசிப்பின் முதல் அடையாளம். தொடர்ந்து தாங்கள் வெளியிட்ட 4 இதழ்களின் நாயகர்கள் பலரும் என்னை கவர்ந்தனர்.

    ஆனால் தங்கக் கல்லறை முதல் பாகம் வெளியான போது புத்தகம் வாசிக்க வாசிக்க எனக்குள் ஒருவித பரபரப்பு அதிர்வு ஆச்சர்யம் என பல கலவையான உணர்வுகள். அதற்கு முன் நான் வாசித்த சித்திரக் கதைகள் போன்று இல்லாமல் இந்த கதை சொல்லல் ஒருவித mesmerizing செய்வது போல இருந்தது. அந்த ஒரு மாதத்தில் முதல் பாகத்தை பலமுறை வாசித்து தீர்த்தேன்.. அம்மாவிடம் இன்னொரு ₹7 ரூபாய் கெஞ்சி வாங்கி இன்னொரு புத்தகம் வாங்கினேன். (இந்த இரண்டாவது பிரதி இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.) அடுத்த மாதம் எப்போது வரும் என இரண்டாம் பாகத்திற்கு ஒரு தவிப்புடன் காத்திருந்தேன். அந்த இரண்டாம் பாகமும் அசாத்திய பரபரப்பு.. இந்தக் கதையை அம்மாவிடமும் தங்கையிடமும் பல முறைகள் கூறி மகிழ்ந்துள்ளேன்.. தற்போது என் பிள்ளைகளிடம் கூறி மகிழ்கிறேன்.

    நமது காமிக்சில் நேற்றும் இன்றும் நாளையும் எந்த நாயகர் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் கேப்டன் டைகர் தந்த impact வேறெந்த நாயகரும் தரப்போவதில்லை. என் தராசில் டைகருக்கு பின்பே மற்ற நாயகர்கள் வருவர்.

    காமிக்சில் அற்புதமான தருணத்தை தந்த எழுத்தாளர் சார்லியர், ஓவியர் ஜிராட், மற்றும் நம் எடிட்டர் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

    ReplyDelete
    Replies
    1. ///நமது காமிக்சில் நேற்றும் இன்றும் நாளையும் எந்த நாயகர் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் கேப்டன் டைகர் தந்த impact வேறெந்த நாயகரும் தரப்போவதில்லை. ///

      Super

      Delete
  18. கேப்டன் டைகர்#1 - தங்கக் கல்லறை, (இதற்க்கு மேல் இரத்தின சூருக்கமாக சொல்ல அவசியமில்லை)

    ReplyDelete
  19. பதிமூன்று....லார்கோ....ஸ்பைடர்...டெக்ஸ்....டைகர்...ட்யூராங்கோ.....ஆர்ச்சி..மாயாவி....லாரன்ஸ்....சிக் பில்.....லக்கி.....ஸ்மர்ஃப்ஸ்...

    ReplyDelete
  20. அன்பு எடிட்டர் மற்றும்நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    டெக்ஸ் #1.ட்ராகன் நகரம் .
    பலிகேட்ட புலிகள்,பழிக்கு பழி,ரத்த நகரம்,இளம் டெக்ஸ்...etc etc
    நமது காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் இவரே.டெக்ஸ் புத்தகங்களை கையில் எடுக்கும்போதெல்லாம் பரவசம்தான்.முடிக்கும் வரை. எந்த disturbance ம் வரக்கூடாதே என்ற பிரார்த்தனை டெக்ஸ் புக்கை தொடங்கும் போது மட்டுமே வரக்கூடியது.யார் புக்கை வாசிக்கும்பொதும் இந்த உணர்வு எழுவதில்லை

    ReplyDelete
  21. 1. உடைஞ்ச மூக்கார்
    2. ஸ்ஸுபைடர்
    3. டெக்ஸ்
    4. லார்கோ
    5. கேப்டன் பிரின்ஸ்
    6. லக்கி லூக்
    7. சிக்கு பில்லு

    ReplyDelete
    Replies
    1. இதை நம்பவே முடியலே

      Delete
    2. மரண மாஸ். இது தாங்க ரிசல்ட்.

      Delete
    3. அதோட கூட இரும்பு கை மாயாவி. பாஸ் அப்படியே இவர லிஸ்ட்ல சேத்துருங்க.

      Delete
  22. 1.தமிழின் முதல் சூப்பர்ஹீரோ. இரும்புக்கையார் . 2.இந்ததலைப்புஆண்களுக்குமட்டுமே என்று எடுத்துகெகொண்டாலும்இந்தவரிசையில் விட்டுவிடமுடியாதவர்இளவரசி3.டைகர்.டெக்ஸ் 4.13 .5 .லக்கி

    ReplyDelete
  23. No1

    டைகர் - 23 வைரங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. அடுத்து "லக்கி லூ...க்"

      Delete
    2. பால்ய நாட்களில் வேதாளர் என்னும் முகமூடி வீரர் மாயாவி...!

      Delete
    3. முதலில் வண்ண கதைகளாக படித்தது வேதாளரே. மரணம் இல்லாதவர், அப்புறம் டயானா. ஆனால் இந்த காமிக்ஸ்-அ படித்தது வேறெரு பதிப்பில்.

      Delete
  24. எத்தனையோ மறுபதிப்புகள் வருகின்றன...!

    இதில் கேப்டன் பிரின்ஸ் கதைகள் வராதா என ஏக்கத்தோடு எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்....!!

    உண்மையில் டைகருக்கு பிறகு படிக்கும் போது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும் கதைகள் இந்த பிரின்ஸ் கதைகள்...!

    ReplyDelete
    Replies
    1. பிரின்ஸின் சிறந்த பல கதைகள் நமது கம்பேக்கு பிறகு வண்ணத்தில் வந்து விட்டது. மிச்சம் உள்ள சிறந்த கதைகளை குடோனில் உள்ள கதைகள் காலியான பிறகு ஆசிரியர் வெளியிடலாம் என்பது எனது தாழ்மையான விருப்பம்.

      Delete
    2. Captain Prince 3 out of 5 reprint got sold. Rest is surely going to empty the rag for sure. there are 7 more hit stories need to be reprinted again.

      Delete
  25. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  26. ஆசிரியருக்கு வணக்கம்.
    என் பார்வையில் ஆளுமைமிக்க நாயகர் டெக்ஸ் வில்லர்.நாயகன் என்பவர் அனைத்து திறன்களிலும் சாதாரண மனிதனை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும்.பயம் துளியும் இருக்க கூடாது.அநீதிகளை ஒழிக்க வேண்டும்.அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது.நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட பாடுபட வேண்டும்.நாம் தற்போது வாழும் யுகத்தில் ஒரு டெக்ஸ் அல்ல ஓராயிரம் டெக்ஸ் வில்லர் தேவை. இதுதான் தற்போது ஒவ்வொரு மாதமும் டெக்ஸ் வில்லர் கதை வேண்டும் என்ற அசரீரி ஆக மாறி வருகிறது. டெக்ஸ் கதைகளின் சிறப்பு என்னவெனில் வில்லன் எப்போதுமே கதையின் இடையிலும் இறுதியிலுமே காட்சிக்கு வருவார்கள்.டெக்ஸின் வருகை எப்போதுமே என் மனதிற்கு மனமகிழ்வைத் தரும்.டெக்ஸின் வருகைக்கு பின் கதை எப்போதுமே ராக்கெட்டாக பயணிக்கும்.சிறிய வில்லனாக இருந்தாலும் பெரிய வில்லனாக இருந்தாலும் துவம்சம் செய்து எப்போதுமே வெற்றியை உறுதி செய்து வாசிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவார்கள்.டெக்ஸ் தொடரை பொறுத்த மட்டில் டெக்ஸ் கார்சன் டைகர் கிட் இந்த நால்வரும் தனித்துவம் மிக்க ஆளுமைகள்.டெக்ஸின் சிறு கதைகள் இரும்புக் கை மாயாவிக்கும்,வேதாளருக்கும் சமம்.நான் சிறுவயதில் இரும்புக் கை மாயாவி மற்றும் வேதாளனின் ரசிகனாக இருந்தேன்.டெக்ஸின் முதல் கதையைப் படித்த பின் டெக்ஸின் வெறித்தனமான விசிறியாக மாறி வாசித்துக் கொண்டு உள்ளேன்.

    ReplyDelete
  27. காரைக்குடியில் எந்த இடம்

    ReplyDelete
  28. Edi Sir..
    வந்துட்டேன்...😍😘

    ReplyDelete
  29. எந்த விதமான அபூர்வ சக்தியும் இல்லாமல் சாதாரண மனிதராய் கானகம், குதிரை,கபாலகுகை, மிருகங்கள் ,டமாரஒலி அழைப்பு என சாகசங்கள்
    பல புரிந்து வரும் வேதாளரே என் முதல் சாய்ஸ்
    2.. இரும்புக்கை மாயாவி 3.டெக்ஸ்

    ReplyDelete
  30. நம்ம லிஸ்ட்

    1. என் IDலயே இருக்காரு.. எங்கள் தானய தலைவர் தல டெக்ஸ் வில்லர்
    2. ஷினபா - உடைந்த மூக்கர் கேப்டன் டைகர் aka Lieutenant Mike Blueberry
    3. லக்கி லூக்
    4. Largo Winch
    5. எனக்கு XIII முழு தொகுப்பாய் வந்தபோதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...

    வேதாளர், ஸ்பைடர், இரும்புக்கையார் ஆகியோர் they are in a different league of themselves - like the league of extraordinary gentlemen

    ReplyDelete
  31. 1.Lucky Luke and Rintincan
    2. TeX
    3. Durango
    4. Stern
    5. Captain prince
    6. Tango
    7. Blue coats
    8. Smurf
    9. தாத்தாஸ்
    10. கி.நாஸ்..(கதையே நாயகனாய்)

    ReplyDelete
    Replies
    1. 8. டெட்உட்
      9. பாதிரியார்
      10. அண்டர்டேக்கர்

      Delete
  32. எங்கேயும்..எப்போதும் கேப்டன் டைகர்தான்..

    ReplyDelete
    Replies
    1. தேனாறு பாயுதுங்க. தானைத் தலைவன் வாழ்க.

      Delete
  33. புத்தகங்கள் கிளம்பிய செய்தி தேனாக வந்து பாயுது காதில்... ஆனா டெட் வுட் டிக் இல்லாதது வருத்தமே. நாளை புத்தகங்கள் கிடைத்து விடும் என்று நினைக்கிறேன். எனக்கு வருவது DTDC தான். Keeping my fingers crossed

    ReplyDelete
    Replies
    1. வந்துடும்னு நம்புவோம்...

      Delete
  34. நாம் சந்தித்த நாயகர்களில் முதல்வர் யார் என்றால் சந்தேகமின்றி அது கேப்டன் டைகர் தான். மேலே நண்பர்கள் சொன்னது போல தங்கக் கல்லறை ஏற்படுத்திய தாக்கம் மறக்கவே முடியாத ஒன்று.

    ReplyDelete
  35. Hero No.1 ஆர்ச்சி

    என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்
    எனது முதல் Comics Hero

    ReplyDelete
  36. Me..
    1.வேதாளர்
    2.இ.கை.மாயாவி
    3.ஸ்பைடர்
    4.டெக்ஸ்
    5.லக்கிலூக்

    ReplyDelete
  37. Last month No cartoon books. This month no cartoon book. என்னத்த சொல்றது.

    ReplyDelete
    Replies
    1. Yes sir :(

      Please make 6 cartoons a year sir - 1 chik bill and 1 lucky new, 1 chik bill and 1 lucky reprint, 1 bluecoats and something else so that you can send it alternate months sir.

      Delete
    2. Yes. ஆசிரியர் அதற்கு தான் கைப்புள்ள இருக்கிறது என்பார். அது யானை பசிக்கு சோள பொரி போல சார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக ஒரு கார்டூன் புத்தகம் வேண்டும் சார்.🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  38. Reporter Johnny not in a corner even? Albums keep coming though??!!

    ReplyDelete
  39. Captain tiger,tex willer, largo winch, Shelton, vethalar,irumbukai mayavi,spider,archie

    ReplyDelete
  40. Tiger
    Xiii
    Tex
    Largo winch
    Thorgal(as a story not hero)
    Reporter Johny
    Mayavi
    Durango
    Captain prince
    Lucky luke

    ReplyDelete
    Replies
    1. Tiger
      Xiii
      Tex
      E k mayavi
      Largo winch
      Thorgal(as a story not hero) செமையா சொன்னீங்க
      Reporter Johny
      Durango
      Captain prince
      Lucky luke

      Delete
  41. // so DTDC உதவியில் புக்ஸைப் பெற்றிடப் பணித்துள்ள நண்பர்களுக்கு, திங்களே புக்ஸ் கிடைத்து விட்டால் தேவலாம் ! //
    சத்திய சோதனை...

    ReplyDelete
    Replies
    1. சத்திய சோதனை - ஐ தலைப்பு நல்லா இருக்கே :-)😀😀😀😀

      Delete
    2. அட இன்னிக்கு அக்டோபர் 2 தானே...

      Delete
    3. நல்ல தலைப்புதான் ஆனா வேற எதுக்கும் வெக்க முடியாதே PFB...

      Delete
  42. // அப்புறம் 2 முரட்டு டேங்கர் லாரிகளாய் ரூ.500 + ரூ.500 விலைகளில், டெக்ஸ் தீபாவளி மலரும், ஸாகோரும் வெளிவரும் மாதத்தில், அந்த டெட்வுட் டிக் தம்பியை TVS 50-ல் ஏற்றிவிட்டு களமிறக்கிப் பார்ப்பது கொடுமையாகிப் போய்விடும் ; //
    நல்ல முடிவுதான் சார்...

    ReplyDelete
  43. // So சொல்லுங்களேன் guys - உங்களின் பார்வையில் ஹீரோ # 1 யாரென்று ? //
    டாப் 1 என்று சொல்ல மனமில்லை,
    ஆரம்பகால வாசிப்பில் ஈர்த்தவர்கள்-ஸ்பைடர்,இரும்புக்கை மாயாவிதான்...
    ஸ்பைடரின் முதல்கதையாக நான் வாசித்தது பாட்டில் பூதம்...அது மறக்க முடியாத இதழ்...
    ரிப் கெர்பி,மாண்ட்ரேக் கதைகளுமே அப்போதைய வாசிப்பில் அசத்தியவை,இப்போதும் பெரிய அளவில் சோடை போனதாய் தோன்றவில்லை..
    அடுத்த கட்ட நகர்வில் ஈர்த்தவர்கள் டெக்ஸ் மற்றும் டைகர்-டைகர் கதைகளை பிடிக்கும்னு சொல்றதை விட பிடிக்காதுன்னு சொன்னாதான் வியப்பு,நாயகருக்கான வரைமுறைகள்,இலக்கணங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதே டைகரின் பலம் என்று நினைக்கிறேன்,தங்கக் கல்லறை,மின்னும் மரணம்,இரத்தக் கோட்டை எல்லாம் மறக்கக் கூடிய இதழ்களா என்ன,அவை Cult Classic வகை கதைகளாக இருப்பினும் டைகர் கதைகள் கால ஓட்டத்தில் வலு இழந்ததை பலவீனமாக நினைக்கிறேன்.
    டெக்ஸ் பற்றி சொல்லவா வேண்டும்,பட்டியல் இட்டால் நாள் பற்றாதே,சர்வமும் நானே இதழை கையில் எடுத்தால் நேரம் போறதே தெரியாது,பக்கா ஆக்‌ஷன் ப்ளாக் பஸ்டர்,ஆல்டைம் எண்டர்டெயினர் டெக்ஸ் தான்,பொழுதுபோக்கையும் தாண்டி டெக்ஸ் கதைகள் மேல் எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு.
    லார்கோ வின்ச் முற்றிலுமே வித்தியாசமான களம்,பங்குச் சந்தை கதைகளை பொழுதுபோக்கோடு கலந்து சொல்வது மிகச் சவாலான விஷயம்,ஷெல்டனும் பிடித்தவரே அதன் கதாபாத்திர வடிவமைப்பு சுவராஸ்யமானது,ட்யூராங்கோ மற்றும் வெட்டியான் அண்டர் டேக்கர் போன்ற நாயகர்களின் அலட்டல் இல்லா பாத்திர வடிவமைப்பும் ஈர்ப்பானதே...
    கார்ட்டூன் கதைகளில் லக்கிலூக் மற்றும் சிக்பில் மனதை கவர்பவர்கள்,கூடவே ஸ்மர்ப்ஸையும் சேர்த்துக் கொள்ளலாம்....

    ReplyDelete
    Replies
    1. அருமையா, ஆத்மார்த்மா எழுதியிருக்கீங்க ரவி அவர்களே!

      Delete
    2. நன்னி பூனையாரே...

      Delete
    3. ஸ்மர்ப்ஸ் - ஆ .....கடவுளே எதுக்கு இந்த சோதனை.

      Delete
  44. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  45. For me oir heroes were always time based sir :

    Initially it was Spider. Then Tex overtook him in Dragon Nagaram especially with that burning bridge climax. Then came Lucky Luje with western comedy.

    When it came to Muthu Comics the stand out is always Blueberry for all his albums starting from Fort Navajo to Confederate Gold to Thangak Kallarai.

    ReplyDelete
  46. ஆரம்பத்தில் ஸ்பைடர் பிறகு வந்தார் வென்றார் உடைந்த மூக்கார்.முந்தயவர் கற்பனையின் உச்சம் பிந்தயவர் யதார்த்த நாயகன்.

    ReplyDelete
    Replies
    1. பாகம் பாகமா வந்த கதையில ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்தது பூளுபெர்ரிதாங்க

      Delete
    2. @புன்னகை ஒளிர் அது "ப்ளூ பெர்ரிங்க".
      டைகர் ரசிகர்கள் பெயரை தவறாக எழுதலாம்?!

      Delete
    3. அய்யா. இந்த அப்பாவிய மன்னிச்சுருங்க.

      Delete
  47. 1.XIII
    2.Tiger
    3.Tex
    4. வேதாளர்
    5. ஸ்பைடர்

    ReplyDelete
  48. அலைபேசியிலேயே பொழுது போனால் எப்படி என நினைத்து நேற்றைய மறுவாசிப்மில் துணைக்கு வந்தது நீல் கவனி சுடு..

    பரபரப்பு விறுவிறுப்பு சுறுசுறுப்பு அதே முதல் வாசிப்பு போலவே..

    ReplyDelete
  49. 1. டைகர்
    2. ஸ்பைடர்
    3. லக்கி லூக்
    4. XIII
    5. டெக்ஸ்
    6. வேதாளர்
    7.மாயாவி
    8. தோர்கல்

    ReplyDelete
    Replies
    1. நமது காமிக்ஸில் எதார்த்த நாயகர் என்றால் டைகர்தான். என்றும் இவர் புகழ் நீடித்து இருக்கும்.

      Delete
  50. நன்றாக இருக்கும் டைகரின் இளம் காலத்து கதை இரண்டை மட்டும் செலக்ட் செய்து வெளியிட முடியுமா சார்?

    ReplyDelete
  51. பாட்டில் பூதம் + உலகப் போரில் ஆர்ச்சி + இதுவரை மறுபதிப்பு செய்யாத மாயாவி கதை என மூன்று புத்தகங்களை இணைத்து ஒரு குண்டு புத்தகமாக இந்த முத்து 50வது ஆண்டில் தர முடியுமா சார்?

    ReplyDelete
    Replies
    1. ஹை பாட்டில் பூதம்...
      வந்தால் உமக்கு ட்ரீட் தான்...

      Delete
    2. இந்த மூன்றும் இணைந்து வந்தால் ஆசிரியருக்கு செம விருந்து கொடுக்கலாம் என இருக்கிறேன். 🙏🙏🙏🙏

      Delete
    3. ஓகே டீல். சேலத்தில் நம்ப வீட்டு சமையல் கடையில் (யுவா கடை பெயர் சரிதானா?) ஒரு மீல்ஸ் ரெடி பண்ணிடுங்க அறிவரசு.

      Delete
    4. அந்த கடை பெயர் நம்ம வீட்டு விருந்து PFB,
      அதை விட சிறந்த கடை எல்லாம் வந்துடுச்சிங்கோ...

      Delete
    5. திருநெல்வேலிக்கே அல்வாவா...!!!
      ஆசிரியருக்கே விருந்தா...!!!

      Delete
    6. // நம்ம வீட்டு விருந்து PFB,
      அதை விட சிறந்த கடை எல்லாம் வந்துடுச்சிங்கோ... //

      இருக்கட்டும். நான் நம்ப வீட்டு விருந்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் :-)

      Delete
    7. //பாட்டில் பூதம் //
      சதுரங்க வெறியன், நீதிக்காவலன் ஸ்பைடர், ஸ்பைடர் படை, மிஸ்டர் மர்மம், மரண ராகம், மீண்டும் ஸ்பைடர், என்று இதுவரை மறுபதிப்பு காணாத ஸ்பைடர் சாகசம் ஒரு வண்டி உள்ளதே சகோ.

      Delete
  52. அரை நூற்றாண்டின் நாயகர் என பலரை நினைவு கூறலாம்

    ஆரம்பத்தில் இரும்பு கையும் ,ஸ்பைடரும் இருந்தால் அதை தவிர வேறு எவருமே தேவையில்லை ..பழைய புத்தக்கடைகளில் அட்டையுடன் புத்தகம் இருந்தாலும் மாயாவியும் ,ஸ்பைடரும் கிழிந்து போய் புத்தகம் இருந்தாலும் முதல் உரிமை அவர்களுக்கே ..

    அவர்களை போல முழுதாக மனதை ஆட்கொள்ளாவிட்டாலும் ஜானிநீரோ ,லாரன்ஸ்டேவிட் ம் மனம் கவர்ந்தவர்களே..

    அந்த காலகட்டத்தில் கார்ட்டூன் என்றால் அவ்வளவு குஷி ..அதுவும் மினிலயனில் சூப்பர் சர்க்கஸை வண்ணத்தில் படித்த பொழுது ( கணக்கே இல்லை..)லக்கி லூக்கை போல சூப்பர் ஹீரோவாக வேறு எவருமே தோன்ற வில்லை ..

    பின் டைகர் ..தங்க கல்லறை வந்த பொழது ஆகா டெக்ஸை முந்திய ஹீரோ ,டெக்ஸ் அவர்களுக்கும் ஒரு போட்டி ஹீரோப்பா என்று வாசகர் கடிதம் எழுதி அதுவும் பிரசுரம் ஆனது..அடுத்து வந்த மின்னும் மரணம் ,இரத்தகோட்டை அதனை நூறு சதவீதம் உறுதிபடுத்தி எனது மனம் கவர்ந்த நாயகராய் டைகர் சிம்மாசனத்தில் உட்கார்ந்தார்..ஆனால் அதன் பிறகு வந்த கதைகள் சாதாரண நாயகர்களுடன் கூட போட்டி போட தோன்றாமல் பின்தங்கி போனது இதழ் அளவிலும் மட்டுமல்ல மன அளவிலும்..

    இந்த நாயகர்கள் மட்டுமல்ல நமது லயன் முத்து களம் இறக்கிய பல பல நாயகர்களுமே மனதை கவர்ந்து இழுத்தவர்களே..குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இரும்புக்கை நார்மன் ,அதிரடிவீர்ர் ஹெர்குலஸ்..இரட்டை வேட்டையர. ,அதிரடிப்படையினர் ,ஆர்ச்சி ,பிரின்ஸ்,ரிப்போர்ட்டர் ஜானி என இப்படி எத்தனையோ நாயகர்கள் மனதை கொள்ளை கொண்டதை மறுக்க முடியவில்லை..ஆனால் கால ஓட்டத்தில் இப்.பொழுது அந்த சூப்பர் ஹீரோக்களில் சிலரே ஏனோ மகிழ்ச்சியை அன்று போல் இன்று தரவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை..இருப்பினும் இவர்களை அரைநூற்றாண்டின் நாயகர்கள் என தைரியமாய் பறைசாற்றலாம்..

    ஆனால் என்று இவரின் முதல் சாகஸம் படித்தோமோ அன்று முதல் இன்று வரை அந்த நாயகரும் சரி ,நமது மனதும் சரி அவரை இன்றும் கொண்டாடி வருகிறது ..எந்த மாற்றமும் இல்லாமல்..வேறு வேறு கதை ஆசிரியர் ,வேறு வேறு ஓவியர்கள் அதனால் என்னப்பா நாயகர் இவர் அல்லவா என்றபடி அக்காலம் முதல் இக்காலம் வரை ஒரே வெற்றி நடையில் பவனி வரும் நாயகரும் இவர் அல்லவா் ,தலைவாங்கி குரங்கு படித்த நாள் முதலாய் அடுத்த இதழ் இவர் என்றால் எப்படி மனது துள்ளி குதித்ததோ இன்றும் இவரின் இதழ் என்றவுடன் மனம் துள்ளி குதிக்கிறதே ..

    இவரே ...இந்த நாயகரே...இந்த டெக்ஸ் வில்லரே அரை நூற்றாண்டின் முதல்வர் என்பதை சொல்லவும் வேண்டுமோ். மட்டுமல்ல எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இவரின் கொடி வீழ போவதில்லை என்பதே எனது இறுதியான ,உறுதியான எண்ணம்...

    ReplyDelete
  53. நாயகரின் அறிமுகம் டெக்‌ஸை தலை வாங்கி குரங்கில் அறிமுகம் செய்ததில் உங்கள் எடிட்டர் என்பதன் முக்கியத்துவம் உள்ளது. அது போல டைகரின் தங்க கல்லறை ,லக்கிலூக்கின் சூப்பர் சர்க்கஸ்,ஸ்பைடரின் எத்தனுக்கு எத்தன்,எடிட்டரையும் ஒரு ஹீரோவாக சேர்க்கலாம்.xii ஐ உலகம் கொண்டாடும் முன் கொண்டாடியவர்கள் நாம் என்பதால் xiii நம் முதல் நாயகர்.ஆனால் ஸ்பைடர் லயன் காமிக்ஸின் முதல் வசூல் சக்ரவர்த்தி,டெக்‌ஸையும்,டைகரையும் அடிச்சுக்க முடியாது.வேதாளர் பல காமிக்ஸ்களில் வந்தவர்.நம் அடையாளமல்ல.

    ReplyDelete
  54. என்னைப்பொருத்தவரை நம்பர் ஒன் என்றும் ப்ளூபெர்ரி என்கின்ற தட்டை மூக்கார் டைகர் தான்.
    தங்கக் கல்லறை படித்ததிலிருந்து அவரின் தீவிர வெறியராகவே ஆகிவிட்டேன். டைகரின் கதைகளில் எதார்த்தமாக இருப்பதே பலம். டெக்ஸ்க்கு பிதாமகர் போனொல்லிக்குப் பிறகு பல நல்ல கதாசிரியர்கள் கிடைத்தது போல் பிதாமகர் சார்லியாருக்கு பின் டைகருக்கு நல்ல கதாசிரியர்கள் அமையாதது துரதிர்ஷ்டவசமானது.

    ReplyDelete
  55. டெக்ஸ் வில்லர் & லக்கி லூக் 2 பேர்களை சொல்லலாம்.
    ஒருவர் ஆக்சன், மற்றவர் காமெடி.
    இந்த 2 பேரின் புக் வந்தால் அது சக்ஸஸ் தான்.

    இதில் குறிப்பாக,
    அரை நூற்றாண்டு நாயகர் எனில் அது டெக்ஸ் வில்லர் தான்.

    ஆரம்பத்தில் ஸ்பைடர் காமிக்ஸ் உலகை ஆக்கிரமித்த போதே, போட்டியாக வந்த இவரது கதைகள் பிரமாதமான வரவேற்பு பெற்றது. பின்னர் மெல்ல அனைத்து ஹீரோக்களையும் பின்னுக்கு தள்ளி காமிக்ஸ் உலகில் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று, இன்று "இவர் புக் வந்தால் நஷ்டமில்லை" என வசூல் நாயகன் ஆகி விட்டார்.
    வேறு எந்த நாயகருக்காவது இந்த மதிப்பு உண்டா என்றால் சற்று யோசிக்க வேண்டும்.
    இல்லைனா மாசம் ஒரு புக் எப்படி வந்து விற்கும்?.

    டைகர், XIII, லார்கோ, என மற்ற நாயகர்கள் அவ்வப்போது வந்து வரவேற்பு பெற்றாலும்,
    அது ஒருகட்டத்தில் நின்று போகிறது.
    அது அப்போதைக்கு மட்டுமே.
    இதுவே ரெகுலராக வந்தால்,
    டெக்ஸ் கதைகள் அளவுக்கு விற்பனையிலோ,
    கதைகளில் வெற்றியோ பெற்று சாதிப்பது எனில் அது பரமபதம் போன்றதுதான்.
    நிரந்தரமில்லை.

    இன்றைய நிலையில் வியாபார ரீதியாக
    வெற்றி பெறும் ஒரு காமிக்ஸ்னா அது டெக்ஸ் வில்லர் காமிக்ஸ்கள்தான்.

    ReplyDelete
  56. எல்லா நாயகர்களுமே காமிக்ஸ் என்னும் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது சமம் . ஆனால் :இப்பொழுதும் வெளி வந்து கொண்டிருக்கும் கதைகள்" என்னும் ஒரு நிலை வாசகர்கள் மனதில் ஒரு சில நாயகர்களுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடும்.
    கதை ஆற அமர்ந்து படிக்கும் நிலை இப்பொழுது குறைந்து வருகிறது. மனிதர்களுக்கு அவசியமான மென் உணர்வுகள் குறைந்து வருகின்றன அல்லது போதுமான அளவில் காண்பிக்கப்படுவதில்லை .

    இந்த நிலையில் நேர்மையான மனிதர்கள் குறைவான அளவில் கொண்ட சமூகத்தில் Tex #1.
    யதார்த்த நிலைமை மற்றும் humanbeing இல் தாங்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்று காலரை தூக்கி விடும் ஐரோப்பியன் மன நிலையில் XIII #1. நாடோடி மன நிலை மற்றும் சாகச விரும்பிகளுக்கு tiger #1.
    புராண இதிகாசம் மற்றும் அறநிலை குறைபாடு கொண்ட மேலை நாடுகளுக்கு தோர்கல் #1.
    பெரும் முதலாளி வர்க்கத்தில் என்ன மாதிரியான சிக்கல்கள், பங்கு சந்தை சந்தை முதலீடுகள் , இவை பற்றி
    ஏதும் தெரியாத கொஞ்சம் படித்த பாமர ஜனங்களுக்கு லார்கோ வின்ச் மீது மிகவும் அபிமானம் உண்டு.
    வைல்ட் வெஸ்ட் வெஸ்ட் பற்றி ஏதும் தெரியாத வன்மேற்கின் கூலி படைகளை ஏதும் தெரியாத பட்சத்தில் டுரங்கோ மிகவும் கவர்ச்சியான ஹீரோ என்பதில் சந்தேகம் இல்லை. cold war காலத்தின் adventure வேண்டும் என்றால் jhonny hazard அண்ட் modest blasie மிகவும் சுவையான கதைகள் என்பதில் சந்தேகம் இராது.
    கானக காவலரும் நீதி அரசரும் ஆன வேதாளர் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும். அவர்கள்
    மத்தியில் அவர்தான் no 1. கடலில் கடலில் பயணிக்கும் மீனவர்களுக்கும் இயற்க்கையை எதிர்த்து பொராடுபவர்ககு பிரின்ஸ கதைகள் மிகவும் உற்சாகம் அளிப்பவை . என்னை பொறுத்தவரையில்
    அந்த தந்த ஹீரோக்களுக்கு ஏற்ற மனநிலையில் கதைகளை படிக்கும்பொழுது அந்த ஹீரோ வே சிறந்த நாயகர். அதுவும் அந்த காலகட்டத்திற்கு அந்த கதை sitution க்கு மட்டுமே .

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான பார்வைக் கோணம் நண்பரே !

      Delete
  57. என்னளவில், எத்தனையோ காமிக்ஸ் கதைகளை கடந்த 40 வருடங்களாக படித்து வருகிறேன். எடிட்டர் உடைய கைவண்ணத்தில் எண்ணற்ற கதைக்களங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டன . எவ்வளவு சுவாரசியம்!!! இந்த 40 ஆண்டுகள் நகர்ந்ததற்கு முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ் இரண்டும் எனக்கு பேரு தவி புரிந்திருக்கின்றன. காமிக்ஸ் இல்லாத உலகத்தை இனிமேல் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . அத்தனை புத்தகங்களையும் குறிப்பாக டெக்ஸ், டைகர், XIII, லார்கோ,
    ஷெல்டன், தோர்கல், லக்கிலூக், சிக் பில் ஆகியோரின் கதைகளை எத்தனை முறை மறுவாசிப்புக்கு உட்படுத்தி இருக்கிறேன் என்று எனக்கே தெரியாது . அத்தனை வெறி!! ஆனால் ஒன்று நான் நம்பிக் கொண்டிருப்பது இத்தனை ஸ்ட்ரெஸ் பஸ்டர்சும் சேர்ந்து என் வாழ்வை சந்தோஷப்படுத்தி இருக்கின்றன எனவே எந்த நோயும் எனக்கு வராமல் இருப்பதற்கு இவை முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன . என்பதே எனது அனுமானம். ,விஷயத்துக்கு வருவோம். எனக்கு மிகவும் பிடித்த நாயகர் நிச்சயமாக லார்கோ தான். அருமையான கதைக்களங்கள் , உலகின் பல இடங்கள், அதகள சித்திரங்கள் உடன் இரண்டு நண்பர்கள் ஒரு தோழி என இந்த கூட்டணி செய்யும் அமர்க்களம் அளவில்லாத விருந்து . எத்தனை தடவை திருப்பித் திருப்பி வாசித்தாலும் புதிதாகத்தான் தோன்றுகிறது. மேற்கொண்டு அவருடைய சாகசங்கள் வராதா என்று ஏங்கித் தவிக்கும் நிலைதான் இப்போது.

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் சொல்லி சுற்றிப் போடச்சொல்லுங்கள் சார் ! இன்னும் ஏகமாய் காமிக்ஸ் கடல்களில் மூழ்கி முத்துக்கள் பல எடுத்து, இன்று போலவே என்றென்றும் ஆரோக்கியமாய் வாழ்ந்திட வேணும் !

      அப்புறம் லார்கோ வின்ச் புது சாகசம் 2024-ல் நமது முத்துவில் இருந்திடும் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. /// எனக்கு மிகவும் பிடித்த நாயகர் நிச்சயமாக லார்கோ தான். அருமையான கதைக்களங்கள் , உலகின் பல இடங்கள், அதகள சித்திரங்கள் உடன் இரண்டு நண்பர்கள் ஒரு தோழி என இந்த கூட்டணி செய்யும் அமர்க்களம் அளவில்லாத விருந்து . எத்தனை தடவை திருப்பித் திருப்பி வாசித்தாலும் புதிதாகத்தான் தோன்றுகிறது. மேற்கொண்டு அவருடைய சாகசங்கள் வராதா என்று ஏங்கித் தவிக்கும் நிலைதான் இப்போது ///
      Me too Sir.

      Delete
    4. // லார்கோ வின்ச் புது சாகசம் 2024-ல் நமது முத்துவில் இருந்திடும் ! //

      இதனை குறித்து கொள்ளுங்கள் நண்பர்களே.

      Delete
    5. மகிழ்ச்சி நண்பரே.

      Delete
    6. ///இந்த 40 ஆண்டுகள் நகர்ந்ததற்கு முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ் இரண்டும் எனக்கு பேரு தவி புரிந்திருக்கின்றன. காமிக்ஸ் இல்லாத உலகத்தை இனிமேல் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . ////

      அருமை சார்! அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! நம்மில் பலருக்கும் இதே நிலைமை தான்!

      Delete
  58. போறவன் வர்றவனை எல்லாம் மூக்கை உடைக்கும் டெக்ஸ் கதையில் எதார்த்தம் பூஜ்ஜியம்தான். அதிலும் 100 பேரை இரண்டு பேர் வேட்டையாடுவது, அவர்கள் எத்தனை குண்டுகள் சுட்டாலும் இவர்களை தொடாதது இதெல்லாம் சுத்த பேத்தல். நான் டெக்ஸ் ன் தீவிர ரசிகன் என்றாலும் கூட உண்மை அதுதான்.

    மாயாவி ,லாரன்ஸ் டேவிட் ஜானிநீரோ, ஸ்பைடர் , ஆர்ச்சி இவர்களையெல்லாம் இப்போது பார்த்தால் நிஜமாகவே கேலியாகத்தான் சிரிக்க தோன்றுகிறது. சிறுவயதில் என் ஹீரோக்கள்தான் இவர்கள். ஆனால் இப்போது இருக்கிற கதைக்களங்கள் நிச்சயமாக பிரமிக்க வைக்கின்றன.

    அடுத்து, டைகர். இவர் எதார்த்தமான ரோல் செய்பவர், நாயகர் தான் ஆனால் கதாநாயகரா? இருக்கிறவன் எல்லாம் அடிக்கறான், பேசாமல் நிக்கிறாரு, ஒரு தபா கூட சேவிங் செய்து பார்க்க முடியல, கூட ரெண்டு குடிகார கபோதிகள் வேறு அருமையான கதைகள்தான், ரசிக்க வைத்தவைதான். டைகரை நிரம்பப் பிடிக்கும்தான் . ஆனால் 50 ஆண்டு கால நாயகன் என்று சொல்லும் போது கேள்விக்குறிதான்

    அடுத்ததாக லக்கிலூக்கும், சிக் பில்லும். காமெடியன்கள் கதாநாயகனாக மாறினாலும் நிலைத்து நிற்பது என்பது நடக்காத காரியம் என்பதே கடந்த கால வரலாறு .(தமிழ் சினிமாக்களை பார்க்கவும்)

    வேதாளர் விற்பனையில் ஓகே ஆனால் அவரை இந்திரஜால் காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மூலமாகவே நாம் அதிகமாக அறிகிறோம் என்பதால் அவர் இந்த லிஸ்டிலேயே இல்லை

    இறுதியாக லார்கோ பற்றி மேலே சொல்லி விட்டேன். நிஜ உலகத்துக்கு பொருந்துகிற மாதிரி இன்றைய எதார்த்த வாழ்வின் எதிரிகளே அவர் கதைகளில் எதிரிகளாக தோன்றுவதால் அவர் அதை சமாளிக்கும் விதம் நிரம்பவே நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த அளவுக்கு சித்திரங்கள் வேறு எந்த லயன் காமிக்ஸ் வெளியீடுகளிலும் வந்ததில்லை ட்யூராங் கோவை தவிர. டெக்ஸ் கதைகளில் பின்னணி படங்களே இல்லாமல் வெறும் உருவங்களை பார்த்து கதைகளை படித்தோம் . அதிலும் பல கதைகளில் சித்திரங்கள் சுமார் ரகம்.லார்கோ அப்படி இல்லை.தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு இப்போதைக்கு இதுவே போதும்

    ReplyDelete
  59. இத்தனை காமிக்ஸ் புதையல்களை குவியல்களை கடந்த 35 , 40 வருடங்களாக நமக்குத் தந்து கொண்டிருக்கும் திரு விஜயன் அவர்கள் டாக்டர்களுக்கு எல்லாம் டாக்டர். எத்தனை பேரை மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்திருக்கிறார் என்று நினைத்தால் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறது. எனவே அலோபதி ஹோமியோபதி போல நமக்கெல்லாம் விஜயோபதி தான் நோய் வராமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது

    ReplyDelete
  60. தோர்கல் அடுத்த காமிக்ஸ் எப்ப வரும்

    ReplyDelete
  61. எனக்கு ஒரு நல்ல காமிக்ஸ் suggestion பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. மாயலோகம் என்றால் தோர்கல்.
      கௌபாய் என்றால் - டெக்ஸ் & டைகர் & ட்யூரங்கோ
      கார்டூன் என்றால் - லக்கி & சிக் பில் & ப்ளூகோட்
      அட்வென்சர் என்றால் - கென்யா
      சூப்பர் ஹிட் ஆக்சன் கதைகள் - நில் கவனி வேட்டையாடு, பராகுடா, நமது மகேந்திரன் மொழிபெயர்த்த கதை (பெயர் உடனே ஞாபகத்துக்கு வரவில்லை)

      உண்மையான வன்மேற்குக்கு - பௌன்சர் மற்றும் அண்டர் டேக்கர்.

      Delete
    2. குழந்தைகளுக்கு - ஸ்மர்ப், பொடியன் பென்னி, ரின் டின் கேன் கதைகள்

      Delete
    3. ஓவர் டூ விஜயராகவன்.

      Delete
    4. குழந்தைகளுக்கு - ஸ்மர்ப், பொடியன் பென்னி, ரின் டின் கேன் கதைகள் . இந்த கதைகளை எப்பொழுது மீண்டும் பார்க்க போகிறோம். ஆண்டவர் அடுத்த ஆண்டில் அருள் புரியட்டும்.

      Delete
  62. அரை நூற்றாண்டின் முதல்வர்.

    டெக்ஸ்-அ இதில் கொண்டு வரவே முடியாது. லக்கிலூக் கூட இந்த வகையறா தான். இவர்கள் என்றும் முடிசூடா மன்னர்கள்.
    என்றென்றும் நமது மனதில் ஆட்சி புரிபவர்கள் சரித்திர நாயகர்கள் யார் என்றால்...
    1. இரும்பு கை மாயாவி
    2. கேப்டன் டைகர்
    3. XIII

    ReplyDelete
  63. எனக்குப் பிடித்த ஆல்டை ம் ஃபேவரிட் ஹீரோ..லார்கோ தான்.
    W... மிகப் பெரிய வணிக குழுமம்.
    தந்தையின் மரணத்தால் (கொலை) சிறுவயதிலேயே குழுமத்தின் தலைவராகும் லார்கோ தன்னைச்சுற்றி இருக்கும பெருந்தலைகளில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று தெரியாத நிலையில், தன்னை வீழ்த்த துடிப்பவர்களின் துரோக சதிகளை எதிர்கொண்டு அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் சாகஸ ஹீரோ தான் லார்கோ வின்ச்.
    எதிரிகளால் வேட்டையாடப்படும் நிலையிலும் நண்பர்கள் உதவியுடன் சவால்களை சமாளிக்கும் தில்லான, அடிதடி, களேபரங்களுக்கு பஞ்சம் வைக்காத சாகஸ ஹீரோ.
    18 கதைகள். ஒவ்வொன்றும் பரபர பட்டாசு ரகம்.
    ப்ரான்ஸ், ஜெர்மனி, பர்மா, வெனிஸ் என பல நாடுகளை கண்முன்னே நிறுத்தும் அசத்தலான ஒவியங்கள்.
    கார், பைக் என விறுவிறு சேஸிங் காட்சிகள்.
    அடுத்த சாகஸ கதையை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வருகிறேன்.
    என்ன..ஒரே ஒரு உறுத்தல். W குழுமத்தின பெருந்தலைகள் எல்லோரும் அயோக்ய சிகாமணிகளாக இருப்பதுதான். கூடவே ஒரு சின்ன பயம். அடுத்து எந்த கதையில் ஜான் சல்லிவனையும் வில்லனாக காட்டப் போகிறார்களோ என.
    பல முறை என்னால் மறுவாசிப்பு செய்யப்பட்ட ஹீரோவின் கதைகள்.
    உற்சாக மீட்டருக்கு உத்தரவாதமான ஹீரோ மற்றும் கதைகள்.
    வான்ஹாம்மே என்னும் கதா (சுரர்)சிரியருக்கு மகுடம் சூட்டிய மற்றொரு வெற்றிகரமான ஹீரோ லார்கோ வின்ச்.
    அடுத்த கதைக்காக 2024 வரை வெயிட்டிங்.

    ReplyDelete
  64. @ALL : ரைட்டிலே இண்டிகேட்டரைப் போட்டு விட்டு, லெப்ட்டிலே புளிய மரத்தில் கொண்டு வண்டியைச் சாத்தும் எனக்கே tough தருபவர்கள் நீங்கள் என்பது தெரியும் தான் guys - ஆனால் இந்தவாட்டி மெய்யாகவே திகைக்க வைத்து விட்டீர்கள் !

    ரவுண்டு கட்டி டைகருக்கும், டெக்ஸுக்கும் வாக்குகள் விழுமென்றே எண்ணியிருந்தேன் - நேற்றைக்கு பதிவை டைப் செய்த போது ! But ரசனைகளின் வர்ணஜாலங்களை அட்டகாசமாய்க் காட்டி வருகிறீர்கள் ! Awesome !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. // எனக்கே tough தருபவர்கள் நீங்கள் என்பது தெரியும் தான் guys - ஆனால் இந்தவாட்டி மெய்யாகவே திகைக்க வைத்து விட்டீர்கள் ! //

      எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார் நீங்கள் அல்லவா சார்:-)

      Delete
    5. அப்படியே எங்களை சந்தோஷப்படுத்த இளம் டைகரின் கதைகளில் மிகச்சிறந்த மூன்றை தேர்ந்தெடுத்து ஒரு குண்டு புத்தகமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் சார்.

      Delete
    6. அட்டா. நல்ல செய்தி சொன்னீங்க.

      Delete
  65. யார் கதையை படித்தால் சந்தோஷமாக இருக்கிறதோ,
    யார் கதை மனதை இலகுவாக்குகிறதோ,
    யார் கதை தொடர்ந்து கொண்டிருக்கிறதோ

    அவரே சிறந்த நாயகன்

    டெக்ஸ்<\b>

    ReplyDelete
    Replies
    1. சரியா தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்

      Delete
    2. இவரோட கீர்த்திய நாம சொல்லி உலகம் தெரிஞ்சுகணுமா. அவர் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரை எல்லாருக்கும் பிடிக்கும். மதுரை புத்தக கண்காட்சில கண்கூடா கண்டேன். காமிக்ஸ் வாங்குற மாணவர்களோட One and one choice டெக்ஸ் தான். கிட்டத்தட்ட அதுவே முதல் இடமாய் இருந்தது. அதுவே 100 Choice-ஆக இருந்திருக்கும். சில மாணவர்களிடம் காணப்பட்ட பொருளாதார சூழலால். அதாவது அவர்களிடம் இருந்த பாக்கெட் மணியின் அளவு.

      Delete
  66. Dear Editor,
    My choice for the title is Spider.
    Most unique hero.
    Need some fresh reprints

    ReplyDelete


  67. எனக்கு ஏழு வயதே பூர்த்தியாகியிருந்த 1985ன் இறுதியில் நான் ஒரு நாயகரின் கதையைப் படிக்க நேர்ந்த போது அவர்மீது அன்று ஏற்பட்டிருந்த அபிமானம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றளவும் துளிகூட குறையாமல் இருக்கிறதென்றால், என்னளவில் அவரே எனது ஆல்-டைம் நாயகர்!!

    அந்தக் கதை 'தலைவாங்கிக் குரங்கு'!

    அந்த நாயகர்...

    டெக்ஸ்!<\b>

    இவரைத் தொடர்ந்து, மாறாத அபிமானத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் மற்ற இருவர் :

    லக்கிலூக்<\b>
    சிக்பில்<\b>

    ReplyDelete
    Replies
    1. 7 வயதிலா, 7ம் வகுப்பு படிச்சப்பவா.
      நா 7ம் வகுப்பு படிச்சப்ப தா வயன் காமிக்ஸ் முதன் முதலா படிச்சேன்.

      Delete
    2. அப்பதான் எனக்கு வெளி உலக தொடர்பு கிடைத்தது. அது வரை எனது கிராமம், பள்ளிக்கூடம் மற்றும் Church இவைகள் தான் என் உலகம்.

      Delete
  68. என் பெயர் Aன்னு சொன்னாங்க.
    ஸ்கூல்ல B,
    வீட்ல C,
    காலேஜ்ல D,
    ப்ரெண்ட்ஸ் மத்தியில E,
    ஆனா.. நேத்திக்கு என்னை லைப்ரரில Fன்னு கூப்புட்டாங்க.
    ஆபீஸ்ல G..அப்புறம்..கடைவீதியில....
    ஐயோ..
    நான் யார் ..நான் யார்..நான் யார.
    நாலும் தெரிந்தவர் யார்..யார்..
    என்று கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக தானும் கதறி, நம்மையும் கதறவிட்டவர்..
    நம்ம மறதிக்கார ஹீரோ. XIII.

    ஒரே ஒரு நபருக்கு இவ்வளவு பெயர்களா, அடையாளங்களா உண்மையிலேயே யார் தான் இவர்?இவர் எப்போது தன்னை தெரிந்து கொள்வார். நமக்கும் தெரிய வைப்பார் என வான் ஹாம்மேவால் உலகமெங்கும் ரசிகர்களை சஸ்பென்ஸால் கட்டிப் போட்டு , கதிகலங்க வைத்தவர் இவர்.

    இவரது ஒவ்வொரு தேடல் படலமும் நம்முள் பரபரப்பின் உச்ச மீட்டரை எகிற வைத்தது என்றால அது மிகையல்ல.
    18 பாகங்களில் தனித்தனியாகவும், தொகுப்பாகவும் நம்முள் ஆசனம் போட்டு அமர்ந்த ஹீரோ இவர் .
    இவரது இடம் நமது காமிக்ஸில் நிரந்தரமானது. யாரும் அசைக்க முடியாதது.
    குறுகிய காலத்தில் கருப்பு வெள்ளை, கலரில் இரண்டு முறை மறுபதிப்பு என வெற்றிக் கொடி நாட்டிய தே இதற்கு சான்று.
    இவரும் என் ஃபேவரிட் ஹீரோவே.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பட்டைய கிளப்புறீங்க பத்து சார்

      Delete
    3. மிகவும் அருமை சார்

      Delete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. .ஷி நாபா,..ப்ளுபெர்ரி.. என்றுசொன்னால் தெரிவதைவிட டைகர் என்று சொன்னால் டக்கென்று நம் மனதில் தோன்றுபவர் இந்த க்ளாசிக் ஹீரோ.
    இவருக்கென்று எந்த ஹீரோ அடையாளமும் கிடையாது. பரட்டைத்தலை. குளியல் காணாத மேனி.
    சீட்டாடுவார். சரக்கடிப்பார். மட்டையாகி கிடப்பார்.
    தெருவில் கட்டிப்புரண்டு சண்டையிடுவார்.அடிவாங்குவார்.ஜெயிலிலும் கிடப்பார். சில்க்குக்கு உருகுவார்.
    ஒரு சாதாரண சிப்பாய். குழலூதுபவராக ராணுவத்தில் நுழைந்து, லெப்டினன்ட் ஆக உயர்ந்து, மார்ஷலாக அவதாரமெடுத்தவர்.
    யதார்த்தமான, நம்மில் ஒருவர். இவரது பல செயல்பாடுகளில் நாம் நம்மையே காணமுடியும்.
    இந்த அடையாளங்களை தாண்டி, விளக்க முடியாத ஒரு ஈர்ப்பு இவரிடம் நமக்கு இருந்தது.அது எப்படி என்று சொல்ல இயலாத ஒன்று.
    மின்னும் மரணம் க்ளாசிக்ஸாகா,
    தங்கக் கல்லறை,
    இரத்தக்கோட்டை ,
    என் பெயர் டைகர்,
    இரும்புக்கை எத்தன்,
    மரண நகரம் மிசௌரி,
    இன்னும் பல கதைகள்..
    இன்றும் நம்மால் படிக்காமல் கீழே வைக்க முடியாத கதைகள்.
    இவரது கதைகள் ஒவ்வொன்றும் சாகஸங்கள்.
    தன்னிடம் கொடுக்கப்படும் எந்த வேலையையும் எடுத்தால் முடிக்காமல் ஓய்வதில்லை என்ற இவரின் மனவுறுதி, அதில் ஏற்படும் சிக்கல்கள், அதை இவர் கையாளும் விதம், நம்மை வியக்கவைக்கும்.
    நம்மையும் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை திறம்பட தீர்க்க வைக்க உதவும். (இது என் அனுபவபூர்வமான உண்மை).
    காமிக்ஸ் நாயகர்களில் எனக்கு இவரை மிகவும் படிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ////பரட்டைத்தலை. குளியல் காணாத மேனி.
      சீட்டாடுவார். சரக்கடிப்பார். மட்டையாகி கிடப்பார்.
      தெருவில் கட்டிப்புரண்டு சண்டையிடுவார்.அடிவாங்குவார்.ஜெயிலிலும் கிடப்பார். சில்க்குக்கு உருகுவார்.////

      இப்படியெல்லாம் சொல்லிட்டு...

      ////இவரது பல செயல்பாடுகளில் நாம் நம்மையே காணமுடியும்.////

      இப்படியும் சொல்றீங்களே பத்து சார்?!! இது நியாயமா?! ;)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. // இப்படியும் சொல்றீங்களே பத்து சார்?!! இது நியாயமா?! ;) //

      அதானே பரட்டை விஜயை பார்க்கிறேன் என சொல்லி இருக்கோணும்:-)

      Delete
    4. மிகவும் அழகாக எழுதி இருக்கீங்க சார்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  71. Replies
    1. முத்து, லயன், திகில், மினிலயன், ஜூனியர் லயன், CC, லயன் கி.நா

      (வரிசை சரியான்னு தெரியலைங்க)

      Delete
    2. வேதாளர் அல்லாது பாக்கி 7 நாயகர்கள் நமக்கு அறிமுகமான ஆண்டுகள் மேலேயுள்ளன !

      இந்த நம்பர்கள் சொல்லும் சேதியினை decipher செய்ய முயற்சித்து வருகிறேன் !

      Delete
    3. 1972 - மாயாவி
      1984 - ஸ்பைடர்
      1985 - டெக்ஸ்
      1986 - XIII
      1987 - லக்கி லூக்
      1995 - கேப்டன் டைகர்
      2013 - லார்கோ

      Delete
  72. 1980-க்களில். அம்புலிமாமா-பாலமித்ரா-கதைகளிலிருந்து-
    காமிக்ஸ் அறிமுகம் இ.கை. மாயாவி மூலம்தான்..
    அந்த ஸ்டைலிசான கதைகளத்திற்கு அறிமுகம் தந்த இ.கை. மாயாவி.என் முதல் ஹீரோ.
    துப்பறிதல்+அழகான கட்டங்களில் கண்ணாடி போட்ட (என்அப்பாவை நினைவூட்டிய) இயல்பான சுபாவத்தினால் மனதில் பதிந்த ரிப் கிர்பி இரண்டாவது ஹிரோ.
    அந்த வயசுக்கே உரிய கற்பனையான ஹிரோவாக, துப்பாக்கி பிடித்தல்+மர்ம மனிதன் (முகமூடி)+ மிருகங்களுடன் தனித்தீவு. என்று கலக்கிய வேதாளன். மூன்றாவது ஹிரோ.
    மற்றபடி, தாங்கள் பொறுப்பேற்றபின், அறிமுகப்படுத்திய கேப்டன் டைகரும், லார்கோ விஞ்ச் -ம் மறக்கமுடியாத ஹிரோக்கள்.

    ReplyDelete
  73. அப்றம் - என் சே மிப்பு காசிலிருந்து வாங்க ஆரம்பித்த முதல் இதழ்- இதுவரை காமிக்ஸ் என்று படித்து பொதுப்புத்தியில் பதியவைத்திருந்த தடத்திலிருந்துமாறு பட்ட கதைகளம்+பெண் ஹிரோயின் -இளவரசி மாடஸ்டி பிளைஸி - வில்லிகார்வின் ஜோடி. No:1
    அடுத்து, அதே போன்று-வித்தியாசமான கதைக்களத்தில் பயணித்த ஸ்பைடர். - No : 2
    (ஒவ்வொரு புக்கையும் எத்தனை முறை படித்து ரசித்திருப்போம்..)
    அடுத்தும், காமிக்ஸ் கதை ஓட்ட தடத்திலிருந்து புதிய களத்தை அறிமுகம் செய்த டெ க்ஸ் வில்லர்.. No:3.
    காமெடிகதைகளும் காமிக்ஸில் உண்டு என்றும்-.ஹீரோயிசம் - கார்டூன் பாணி சித்தரங்களில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் முகபாவணை மூலம் முகத்தில் புன்னகையுடனே கதையை படிக்க வை த்தல் என்றும்-அந்த சூப்பர் சர்க்கஸ் - இதழை படித்ததை என்றும் மறக்கமுடியாது.
    எனவே லக்கிலூக்-No:4
    இவ்வளவு நேரமும், அதை மறக்க முடியுமா/அவரை மறக்க முடியுமா- என்று எழுதிவிட்டு மறதியே எனது ஹீரோத்தனம் - என்று கதையாலும் - ஓவியத்தாலும் மிரட்டிய நண்பர் -. X 11 L. மன்னிக்க -நம்பர் X 111.
    (வரிசைப்படி 5 நம் பர் தான் கொடுக்கனும் இல்லையா..அவர்-நம்பரா - பேரா- இறுதிவரை நாமே முடிவெடுக்க முடியவில்லையே...i?. நன்றி சார்.

    ReplyDelete
  74. டெட் வுட் டிக் இல்லை. பரவாயில்லைங்கசார்.அதான் இரண்டு குண்டுபுத்தகம்வருதே போதுங்கசார் அதுவே திருப்தி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  75. 2024ல் லார்கோ. 2023லேயேஏதாவது ஒரு புத்தகத்திருவிழாவுக்குமுன்பதிவாககொண்டுவரசான்ஸ் இருக்குமாங்கசார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  76. காலையிலேயே வந்த பார்சலை இப்போதுதான் பிரிக்க முடிந்தது.

    முதல் பூர்வாங்க புரட்டலில்

    ஸாகோர், டெக்ஸ் ரெண்டுமே

    செம தூள்

    இன்று இரவு ஸாகோர் வாசிப்பு துவக்கம்!!

    ReplyDelete
  77. Spider is my all time favourite
    Tex is my favourite currently
    Tiger would have been on top of the list if he had more stories
    XIII & LARGO Next
    Lucky Luke last

    ReplyDelete
  78. 1.Spider
    2.Lawrence, David
    3. TeX
    4. Tiger
    5. Steel claw
    6. Largo
    7. Modesty
    8. Shelton

    ReplyDelete
  79. Spider
    Mayavi
    Archi
    Johny Nero
    Lawrence and David
    Jeslong
    Now One and only Tex

    ReplyDelete
  80. நாளை ஆயுத பூஜை ஸ்பெஷல் பதிவு வரும் போல. இப்போதே 194 Comments

    ReplyDelete