Thursday, September 22, 2022

நடுவாக்கிலே ஒரு விளம்பர இடைவேளை !

 நண்பர்களே,

வணக்கம். When it rains ..it pours என்பார்கள் ! அது மெய் தான் போலும் ! 2 ஆண்டுகளுக்குக் கூடுதலாய் சஹாரா வறட்சியில் குந்தியிருந்த தமிழகப் பதிப்பகங்களுக்கு தற்சமயம் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமில்லை ! அத்தனை பேருமே தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் அளந்த வண்ணமுள்ளனர் - ஆங்காங்கே சரமாரியாய் நிகழ்ந்து வரும் புத்தக விழாக்களின் உபயத்தில் !! விற்பனைத் தொகைகள் ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம், மாறுபட்டாலும், வாசகர்களின் முன்னே ஆஜராகிடுவதே ஒரு வரமாய்த் தோன்றுகிறது ! வயலுக்குப் பாயும் நீரில் ஒரு துளி வரப்புக்கும் பாயாது போகாதல்லவா - so நாமும் இயன்ற இடங்களில் தலைநுழைத்த வண்ணம் உள்ளோம் !! Thanks to all the respective organizers !!

போன வெள்ளி முதலாய் திருச்சியில் நடைபெற்று வரும் விழாவினில் துவக்கம் கொஞ்சம் மிதமென்றாலும், தொடர்ந்த தினங்களில் செம மாஸ் !! அதிலும் ஒவ்வொரு வார நாளிலும், பள்ளிகளிலிருந்து குவிந்து வரும் நமது அடுத்த தலைமுறை வாசக / வாசகியர் அத்தனை ஆர்வமாய் கார்டூன்களையும், டெக்ஸ் வில்லரையும் (!!!) அள்ளிச் சென்று வருகின்றனர் ! சில குழந்தைகள் வீட்டிலிருந்து துண்டுச் சீட்டுகளில் வாங்கி வர வேண்டிய இதழ்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டு வந்து ஞாபகமாய் வாங்கிச் செல்கின்றனராம் !! பாருங்களேன் - போட்டோக்களை !! இன்னமும் மூன்று தினங்கள் எஞ்சியுள்ளன எனும் போது - இதுவரைக்கும் அந்தப்பக்கமாய் ஆஜராகியிரா நண்பர்கள் ஒரு குட்டி விசிட் அடிக்கலாமே - ப்ளீஸ் ?

திருச்சி VESTRY பள்ளியில் புத்தக விழா நடைபெறுகிறது !! அங்கே நமது ஸ்டால் நம்பர் : 127 !








And திருச்சியில் விழா ஓடிக்கொண்டிருக்கும் போதே மதுரையிலும் புத்தக விழா துவங்குகிறது !! மதுரையில் தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 23 to அக்டோபர் 3 வரையிலும், புத்தக விழா நடைபெறவுள்ளது ! அங்கே நமது ஸ்டால் நம்பர் : 61 !

நமது சூப்பர்மேன் அண்ணாச்சிக்கு மட்டும் டபுள் ஆக்ட் கொடுக்க சாத்தியமாகியிருந்தால், அண்ணன் அண்ணாச்சியை ஒரு ஊரிலும், தம்பி அண்ணாச்சியை இன்னொரு ஊரிலும் குந்தச் செய்திருப்போம் ! Alas , அது சாத்தியமில்லை என்பதால் மதுரையில் நமது front office-லிருந்து திருமதி.ஜோதி பங்கேற்பார் !! இதோ மதுரையில் நமது ஸ்டாலின் first look ! 



தினமும் காலை 11 முதல் இரவு 9 வரை புத்தக விழா நடைபெறுகிறது ! மதுரை & சுற்று வட்டார நண்பர்களே - please do drop in !!

மதுரையிலிருந்து அடுத்த இலக்கு : காரைக்குடி !!

Wish us luck folks !! மீண்டும் சந்திப்போம்....see you around !! Bye for now !!

திருச்சியில் இன்று !! 






And இவை மதுரையிலிருந்து இப்போது !!




97 comments:

  1. திண்டுக்கல்லில் இருந்து பரணி :-)

    ReplyDelete
    Replies
    1. என்ன கோல்மால் இது. டிபில பெங்களூர்், இருக்கறது தூத்துக்குடி மெசேஜில திண்டுக்கல்லு 🤔

      Delete
    2. சாயங்காலம் 5.15 தூத்துக்குடியில் இருந்து ரயிலில் ஏறி இப்போது வண்டி திண்டுக்கல் ஸ்டேஷனை தாண்டி உள்ளது. நாளை காலையில் பெங்களூரில் இருப்பேன் யூவர் ஆனர் 😂 இப்ப இதில் எங்கே கோல்மால் என சொல்லுங்க அண்ணே சொல்லுங்க :-)

      Delete
  2. ஆகா ஆகா நமது ஸ்டால் முழுவதும் குழந்தைகள்.அப்ப விரைவில் ஒரு கார்டூன் ஸ்பெஷல் வரப்போகிறது:-)

    ReplyDelete
  3. // குழந்தைகள் வீட்டிலிருந்து துண்டுச் சீட்டுகளில் வாங்கி வர வேண்டிய இதழ்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டு வந்து ஞாபகமாய் வாங்கிச் செல்கின்றனராம் !! //

    அருமை. மிகவும் அருமை.

    ReplyDelete
  4. ஓரே நேரத்தில் மதுரை மற்றும் திருச்சி புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டால்களா.‌வாவ் சூப்பர். மகிழ்ச்சியான செய்தி. விற்பனையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    மதுரையில் நமது காமிக்ஸ் ஸ்டாலில் பணியாற்ற உள்ள நமது சகோதரி திருமதி.ஜோதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

    ReplyDelete
  5. இருளின் விலை இரண்டு கோடி மிரட்டல் என்றால் தூங்கும் நகரம் அதனை விட மாஸ் மிரட்டல். தூங்கும் நகரம் என்னை கதையோடு கட்டிப் போட்டு படபடக்கச் செய்தது.

    இருளின் விலை இரண்டு கோடி கடைசி இரண்டு பக்கங்கள் வரை திக் திக் என சென்றது. கிளைமாக்ஸ் இன்னும் சில பக்கங்கள் போகும் என நினைக்கும் இடத்தில் மாயாஜால மன்னர் வில்லனை டக் என்று தனது வசியத்தால் கவிழ்த்ததில் கதையின் சுவாரசியம் கொஞ்சம் குறைந்து விட்டது..

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. விற்பனை சிறக்கட்டும்

      Delete
    2. குடோன் ஸ்டாக்குகள் காலியாகட்டும் ...

      Delete
    3. குடோன் ஸ்டாக்குகள் வெகு சீக்கரமே காலியாகட்டும்.

      Delete
  7. நா மதுரைக்கு வந்துருக்கேன்.

    ReplyDelete
  8. மதுரை நண்பர்கள் யார் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  9. நடுவாக்கிலே ஒரு விளம்பர இடைவேளையில் நாளைய காமிக்ஸ் வாசகர்கள்

    ReplyDelete
  10. ஆகா ஆகா ரெண்டு காமிக்ஸ் ஸ்டாலு ரெண்டு காமிக்ஸ் ஸ்டாலு :-)‌‌சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. ஐ ஆம் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி:-)

    ReplyDelete
  11. Edi Sir, in subscription track please have one separate track containing titles which can be given to kids.. last few years i have wanted to subscribe for one or two kids but everytime i got hesitant and did not proceed as i was not sure on all the books in the subscription options.. i am not saying all have to be cartoon.. a mix of tex, lucky, bluecoat, johnny old, etc.,

    ReplyDelete
  12. Edi Sir..
    நேற்று நம்ப திருச்சி Bookfair போயிட்டு வந்தாச்சு..

    Me Happy அண்ணாச்சி😍😘

    ReplyDelete
    Replies
    1. அடடே!! அண்ணாச்சி குஷியாகியிருப்பாரே?!!

      Delete
  13. குழந்தைகள் அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் ஆர்வத்துடன் காமிக்ஸ்களை அலசி ஆராய்வதும் வீடுகளுக்கு வாங்கி செல்வதும் அருமை. ஒளிமயமான ஒரு எதிர்காலம் உண்டென்பதை காட்டுகின்றது.

    ReplyDelete
  14. தீபாவளிக்கு ஒரு ரெண்டு வாரம் முன்னே ஒரு ஆன்லைன் புத்தக விழா போட்டா பட்டய கெளப்பாது?

    ReplyDelete
    Replies
    1. போட்ருவோமா ? போட்ருவோமா ?

      Straight & Live from தி கிட்டங்கி Sale !!

      புத்தம் புது ரேக்குகள் !
      பளீரிடும் LED பல்புகளோடு !!

      Delete
    2. ரயில் வண்டி நீளத்தில் !!

      Delete
    3. ////புத்தம் புது ரேக்குகள் !
      பளீரிடும் LED பல்புகளோடு !!///

      ஆஹா! நைட்லயும் சேல் வச்சுக்கிட்டீ ங்கன்னா பல்புகளை ரசிச்சுக்கிட்டே ஆர்டர் போட்டுடுவோம் சார்!

      Delete
    4. ஒரு பானிப்பூரி வண்டி ?

      Delete
    5. சார்.. டெபனட்லி.. டெபனட்லி!!

      Delete
    6. பாத்துட்டே இருங்க...மெய்யாலுமே ரெண்டு நாட்களுக்கு ஒரு அதிரடி ஆன்லைன் விழா நடத்திப்புடுவோம் ; ஒவ்வொரு கொள்முதலுக்கும் ரவுண்டு பன் ; ஸ்பாஞ் கேக் ; மக்ரூன் ; ப்ளம் கேக் என்ற ஊக்குவிப்புகளுடன் !!

      Delete
    7. ///ரவுண்டு பன் ; ஸ்பாஞ் கேக் ; மக்ரூன் ; ப்ளம் கேக்///

      சார்.. நான் எதிர்காலத்தில் வேலைக்கு சேர இருக்கும் அந்த கொரனேஷன் பேக்கரியிலேயே மேற்குறிப்பிட்ட ஐட்டங்களை ஆர்டர் போட்டுவச்சுடுங்க. ஆன்லைன் திருவிழாவை ஜமாய்ச்சுப்புடுவோம். நீங்க ஓகே சொன்னீங்கன்னா நேர்லயே வந்திருந்துகூட விழாவை சிறப்பிக்க நான் ரெடி! பன்னுகள், பதார்த்தங்களை பேக்கிங் பண்ணி அனுப்பற வேலையை நான் பார்த்துக்கறேன்!

      Delete
    8. பாத்துட்டே இருங்க...மெய்யாலுமே ரெண்டு நாட்களுக்கு ஒரு அதிரடி ஆன்லைன் விழா நடத்திப்புடுவோம் //

      🙌👏

      Delete
    9. ப்ளம்கேக்கு பன் எல்லாம் பேபியே சாப்பிட்டடறாரு. புக்கு மட்டுந்தான் வருது.

      Delete
  15. தல டெக்ஸ்க்கு பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும் பஞ்சோடு போஸ்ட்டர் அருமை. ஸ்டால்களுக்கு விசிட் அடிப்போரில் டெக்ஸை தெரியாதோரையும் இனி இவர் யார் என்று கண்டிப்பாக திரும்பி பார்க்க வைக்கும்.

    தல, தளபதி என்பது போல் லக்கிக்கும் ஒரு பட்டப்பெயர் வைத்து அவருக்கும் கிட்ஆர்டின் &கோ வுக்கும் வருகை தரும் சிறாரை கவர இதே போல் ஒரு பஞ்சோடு போஸ்ட்டர் அடியுங்க சார்.

    ReplyDelete
  16. புக் பேர்களில் .. டெக்ஸ் ஸை குட்டி குட்டி ஸ்டிக்கர்களாக குழந்தைங்க வசம் கொடுத்தால் நான்றாயிருக்குமென என் மனம் சொல்கிறது டியர் எடி ( அவங்க இத நோட்புக்கில் / டிராயரில் / கிளாஸ் டேபிளில் / வீட்டு அலமாரியில்) ஒட்டி வைக்கும் வாய்ப்புட்டே டியர் எடி .. 😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். அப்படியே லக்கி லூக் ஸ்டிக்கரும் கொடுங்கள் சார்

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு அந்த டைப்பிங் மிஸ்டேக்கே பரவாயில்லைனு தோனுதுங்க சம்பத்! 😶

      Delete
    2. டொலிட் பண்ணிட்டேன் பூனக்குட்டி .. 😉😉

      Delete
    3. ஏன் டொலிட் பண்ணீங்க. காலைலேர்ந்து ஒரு இருபதுவாட்டியாவது சிரிச்சிருப்பேன்.. அந்தக் கமெண்ட்டைப் படிச்சு! :D

      Delete
  18. Visited and bought books from trichy book fair. Stall number 127.Felt very happy. Want to visit again.

    ReplyDelete
  19. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே..

    ReplyDelete
  20. இந்த அமர்க்களத்தில் விடுபட்ட பழைய இதழ்களை மீண்டும் படிக்க முடிந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

    ReplyDelete
  21. Forget the sales sir. Going place to place and showcasing our books will make many book readers know that tamil comics is there. This is an investment for the future.

    ReplyDelete
  22. வாவ்....வாழ்த்துக்கள் சார்....

    அனைத்து இடங்களிலும் விற்பனை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  23. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  24. பரவலான புத்தக கண்காட்சிகளும் மக்களின் தேடல்களும் பெரும் உவகை அளிக்கின்றன...
    அடுத்தடுத்த விழாக்கள் சிறப்புறட்டும்,எல்லா புத்தக தலைப்புகளும் பல இல்லங்கள் சென்று புத்தக அலமாரிகளை அலங்கரிக்கட்டும்,வாசிப்பை உயிர்ப்புறச் செய்யட்டும்...

    ReplyDelete
  25. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. //ஒவ்வொரு வார நாளிலும், பள்ளிகளிலிருந்து குவிந்து வரும் நமது அடுத்த தலைமுறை வாசக / வாசகியர் அத்தனை ஆர்வமாய் கார்டூன்களையும், டெக்ஸ் வில்லரையும் (!!!) அள்ளிச் சென்று வருகின்றனர் ! சில குழந்தைகள் வீட்டிலிருந்து துண்டுச் சீட்டுகளில் வாங்கி வர வேண்டிய இதழ்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டு வந்து ஞாபகமாய் வாங்கிச் செல்கின்றனராம் ! //

      அருமை!!!
      ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன் சார்!

      Delete
    2. இன்றைக்கு add பண்ணியுள்ள போட்டோக்களையும் பாருங்கள் சார் !!

      Delete
    3. வாவ்...! அட்டகாசம் சார்!

      காமிக்ஸ் வருங்காலம் நிச்சயமாக தேய்ந்து போய்விடப் போவதில்லை என்ற தெம்பினை ஊட்டுகிறது மேற்காண் புகைப்படங்கள்!

      அதிலும் இது தேர்வு நேரம் சார். இப்போதே குழந்தைகள் அமர்க்களப் படுத்துகிறார்கள்.

      அடுத்த வாரமும் அதற்கடுத்த வாரமும் விடுமுறைகள் வரவிருக்கும் வேளையில் மதுரை மற்றும் காரைக்குடி களைகட்டப் போகிறது.

      சூப்பர்!!!!

      Delete
  26. பரவலான புத்தக கண்காட்சிகளும் மக்களின் தேடல்களும் பெரும் உவகை அளிக்கின்றன...
    அடுத்தடுத்த விழாக்கள் சிறப்புறட்டும்,எல்லா புத்தக தலைப்புகளும் பல இல்லங்கள் சென்று புத்தக அலமாரிகளை அலங்கரிக்கட்டும்,வாசிப்பை உயிர்ப்புறச் செய்யட்டும்...

    நன்றி : அறிவரசு ரவி

    ReplyDelete
    Replies
    1. காப்பிக்கு ஒரு ஸ்பெசல் பன் ப்ளீஸ்...

      Delete
    2. ஸ்பெஷல் பன்னோட ஒரு காப்பியும் ஆர்டர் பண்ணிடுங்க ப்ளீஸ்!!

      Delete
  27. திருச்சியில் இன்று !! New photos added above !!!

    ReplyDelete
    Replies
    1. ப்பா!! மதுரையில ராணுவ படைப்பிரிவே நம்ம ஸ்டாலுக்கு வந்தா மாதிரி இருக்குங்க சார்!!

      Delete
    2. பிள்ளைகள் தெறிக்க விட்டு வருகிறார்கள் சார் - இங்கும், அங்கும் !!

      Delete
    3. 50 ல் ஒரு பிள்ளை நம் காமிக்ஸின் சுவையறிஞ்சாக் கூட போதும் சார் - எப்படியும் அடுத்த தலைமுறை வாசகர்கள் ரெடி ஆகிடுவாங்க!

      Delete
    4. பை த வே, மிஸ்ஸுகளையும் நிக்கவச்சு ஒரு போட்டோ போட்டிருத்தா இன்னும் நல்லாயிருத்திருக்கும்!

      Delete
    5. அருமை சார் குழந்தைகளை நமது ஸ்டாலில் பார்ப்பது எப்போதுமே மகிழ்ச்சி தான். ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களில் புத்தக விழாவில் நாம் பங்கேற்பது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

      Delete
    6. //50 ல் ஒரு பிள்ளை நம் காமிக்ஸின் சுவையறிஞ்சாக் கூட போதும் சார் - எப்படியும் அடுத்த தலைமுறை வாசகர்கள் ரெடி ஆகிடுவாங்க!//

      1988 வாக்கில் 45ல் ஒரு மாணவன் நான்... உங்கள் பேராசை பலிப்பதாக

      Delete
  28. வருங்கால காமிக்ஸ் உலகம் மீது நம்பிக்கை வருகிறது.

    ReplyDelete
  29. நாளை பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  30. #TBF 2022#
    இரண்டாவது முறையாக இன்று 23.09.2022 புத்தக கண்காட்சி நமது ஸ்டாலுக்கு சென்றிருந்தேன்.😘

    ரூ.50 to 75 விலையில் Tex மார்ட்டின் கதைகள் வந்தால் விற்பனை பட்டையை கிளப்பும் போலிருக்கிறது..😃
    எடிட்டர் அய்யா தான் மனது வைக்க வேண்டும்.

    அதேபோல் வேதாளன் & மாண்ட்ரெக் கதை புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தால் விற்பனை சூடு பிடிக்கும் போல் தோன்றுகிறது.😃

    வேதாளர் விளம்பர படத்தை போட்டோ எடுத்து சென்றவர்கள் பலர்.👍👍

    ReplyDelete
  31. #TBF 2022#

    இன்று ஸ்டாலில் Phd student ஒருவர் வந்திருந்தார். ரூ.300 பட்ஜெட்டுக்குள் புக் கேட்டார்.

    வெளியே பராக்கு பார்த்து கொண்டிருந்த என்னை அண்ணாச்சி உள்ளே அழைத்து Phd தம்பியிடம் விளக்க சொன்னார்.

    அப்படி இப்படி பேசி விளக்கியவுடன் 550 ரூபாய்க்கு வாங்கி சென்றார்.🙏🤓 ஜானி நீரோ, டெக்ஸ், ஸ்பைடர், இ.கை.மாயாவி .. வாங்கி சென்றார்..😃

    ReplyDelete
  32. #TBF 2022# 23.09.2022

    1)பள்ளி ஆசிரியை ஒருவர் டெக்ஸ் கதைகளை புரட்டிவிட்டு யாருக்கோ போன் அடித்தார். மறுமுனையில் வந்த instruction படி பல பல டெக்ஸ் கதைகளை அள்ளி சென்றார்.
    போட்டோ வேண்டாம் என்று சொல்லி விட்டார்.


    2)நிறைய முதிர்கண்ணர்கள் வெட்க சிரிப்புடன் வந்து மாயாவி கதையெல்லாம் இன்னுமா வருது என்று கேட்டு கொண்டே பென்சன் பணம் கைக்கு வந்தவுடன் பர்ஸ்ட் வீக் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.
    ரூ.50 to 100 புக்ஸ் சேல்ஸ் பரவாயில்லை.👍

    3)இதர பல ஸ்டால்களிலும் பார்த்த வரையில் குழந்தைகள் கூட்டம் அப்புகிறது.

    சில அப்பா அம்மாவிடம் கேட்டபோது தமிழ் படிக்கவே வர மாட்டேங்குது,
    படகதை வாங்கி கொடுத்தாலாவது தமிழ் படிப்பான்னு நினைச்சு வாங்குவதாக சொன்னார்கள்..❤️

    ReplyDelete
    Replies
    1. //ரூ.50 to 100 புக்ஸ் சேல்ஸ் பரவாயில்லை.👍//
      Note this point your honor!

      Delete
  33. #TBF 2022# 23.09.2022

    4)நிறைய பேர் வேதாளர், மாண்ட்ரெக், ரிப்கிர்பி கேட்டார்கள்..
    சந்தா கட்டினால் நாளை யே கூரியரில் 3 புக்ஸ் வந்துவிடும், மீதம் ஒன்று அடுத்தமாதம் வந்துவிடும் என்று சொன்னவுடன்,details வாங்கி சென்றார்கள்..👍

    5)நிறையபேர் டெக்ஸ் வாங்கி சென்றார்கள். மரணமுள் விற்பனை அபாரம். காமெடி ஜார்னர் புக்ஸ்களை எடுத்து புரட்டி பார்த்துவிட்டு வைத்துவிட்டு,

    மார்ட்டின், ஸ்பைடர் & டெக்ஸ் வாங்கி செல்கிறார்கள்.

    😘 எல்லா பேரும் சீரியசாதான் படிப்பாங்க போலிருக்கு..😃

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம் Shribabu ji!

      இயல்பான, ஹாஸ்ய நடையில் உங்களின் அனுபவங்களைப் படித்திடுவது ரொம்பவே சுவாரஸ்யம்!! தொடர்ந்து அசத்துங்கள்!!

      Delete
    2. புத்தகத் திருவிழா பற்றிய தகவல்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

      Delete
  34. இன்று பதிவுக்கிழமை சார்.

    ReplyDelete
  35. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  36. #TBF 2022# 23.09.2022

    Gpay ல் மக்கள் பணம் செலுத்தும்போது பணம் கணக்கில் வந்து சேர்ந்ததா என தெரியாமல் நம் அண்ணாச்சி தடுமாறுகிறார்.

    எனவே, பணம் அக்கவுண்டுக்கு credit ஆனவுடன் வாய்ஸ் மெசேஜ் வருவதுபோல ஒரு instrument எல்லா ஸ்டால்களிலும் உள்ளது.

    Edi Sir..
    *இதுபோல் ஒன்றை நம் அண்ணாச்சிக்கு வழங்கிடுங்கள்* 🙏🤓👍

    ReplyDelete
    Replies
    1. // *இதுபோல் ஒன்றை நம் அண்ணாச்சிக்கு வழங்கிடுங்கள்* //

      Yes. Good suggestion. Even small road side shop's are having this sir. Please do the needful ASAP sir.

      Delete
  37. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  38. Priyatels! எடிட்டர் சாரின் புதிய பதிவு ரெடி!

    ReplyDelete