Saturday, September 17, 2022

விடலை...விடலை...எல்லாமே விடலை !!

 நண்பர்களே,

வணக்கம். புதிரின் பல துண்டுகளை இணைக்கும் ஆட்டத்தை, புனித மனிடோ அவ்வப்போது நம்மோடு ஆடுகிறாரோ என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு ; and இதோ அதனை ஊர்ஜிதப்படுத்தும் லேட்டஸ்ட் அத்தியாயம் - இந்த அக்டொபரில் காத்துள்ளது ! கிட்டத்தட்ட ஒன்னரை ஆண்டுகள் பீரோவுக்குள் துயின்றவர் - இத்தாலியத் 'தனி வேங்கை' ZAGOR !! And கிட்டத்தட்ட அதற்கு நிகரான அதே அவகாசத்தை, அதே பீரோவுக்குள், செலவிட்டவர் அதே இத்தாலியைச் சார்ந்த 'சின்னத் தல' இளம் டெக்ஸ் ! ஒற்றுமைகள் அத்தோடு முடிஞ்ச பாடுமில்லை : 

***ஸாகோரின் (இந்த லேட்டஸ்ட்) ஆக்கத்தின் பின்னணி முழுக்க முழுக்க திரு மௌரோ போசெல்லி ! Guess what - 'இளம் டெக்சின்' இந்த சாகசத்தின் கதாசிரியருமே சாட்சாத் போசெல்லியே தான் ! 

***And இரு இளைஞர்களுமே போனெல்லி குழுமத்தின் flagship நாயகர்கள் என்ற விதத்தில் ஒற்றுமைகள் தொடர்கின்றன !  

***இளம் டெக்ஸை தீபாவளிக்கு களமிறக்குவது என்பதை போன வ்ருக்ஷத்தைய அட்டவணையிலேயே அறிவித்திருந்தோம் எனும் போது no surprises there !! ஆனால் ஸாகோரை பொங்கலுக்குப் போடுவோமா ? கோடை விடுமுறைகளுக்குப் போடுவோமா ? ஈரோட்டுக்குப் போடுவோமா ? என்ற ஊசலாட்டம் தொடர்கதையாகிட, இறுதியில் அதே அக்டொபருக்கு ; அதே தீபாவளி தருணத்தில் !! 

***அதே முழுவண்ணத்தில் ; அதே ஹார்ட்கவரில் and அதே விலையிலும் !! 

இந்த simultaneous களமிறங்களெல்லாம் நிச்சயமாய் நம்மளவின் பெரும் திட்டமிடல்களின் பலனெல்லாம் நஹி ! 2023-ன் அட்டவணையினை நவம்பர் முதல் தேதி இதழ்களோடு உங்களிடம் ஒப்படைத்தாக வேண்டும் எனும் போது, இந்த ஸாகோர் மனுஷனை அதற்கு முன்பாகவே களமிறக்கிவிட்டு வெள்ளோட்டம் பார்ப்பது அவசியமென்றாகிறது ! So இந்த நொடி - புது நாயகரின் அறிமுகத்துக்கு tailormade என்று நினைத்தேன் !!  அவரோடு போன பதிவிலேயே லைட்டாகப் பழகிப் பார்த்தாச்சு எனும் போது - its time now for the one & only TEX !!

புதுசாய் புயல் வீசினாலும் சரி, பொரிகடலை பறந்தாலும் சரி.... தீபாவளியாய் இருந்தாலும் சரி, பள்ளி திறப்பு நாட்களாக இருந்தாலும் சரி ; சந்தோஷ நாட்களாக இருந்தாலும் சரி, கோவிடுக்குப் பயந்து ஊட்டுக்குள்ளாற குந்திக்கிடந்த இருண்ட நாட்களாக இருந்தாலும் சரி,  "நான்பாட்டுக்கு வருவேனுங்கண்ணா ; என் வேலையைப் பார்த்துப்புட்டு  போய்க்கினே இருப்பேனுங்கண்ணா !" - என்று சொல்லும் ஆற்றல் கொண்ட பொம்ம புக் நாயகர்கள் சொற்பமே !! சொல்வது மாத்திரமன்றி, செயலிலும் காட்டிடக் கூடியோர் அவர்களுள் இன்னும் குறைச்சலே ! And அந்தச் செயல்கள் ஒவ்வொரு முறையுமே ஒரு சாதனையாய்த் தொடர்ந்திடுவது நமது இரவுக்கழுகாருக்கு மட்டுமே கைவந்த கலை என்பேன் ! So without more ado, இதோ - காத்திருக்கும் "தீபாவளி மலர்'22"previews :



இளம் டெக்ஸ் சாகசங்கள் ஒவ்வொன்றுமே தலா 62 பக்க நீளத்து சாகசங்கள் ! (அவற்றைத்தான் மாதமொன்று வீதம் தனித்தனியாய்ப் போட்டுப் பார்க்கலாமா ? என்று 2 வாரங்களுக்கு முன்னே கேட்டு வைத்து முதுகை வீங்கச் செய்து கொண்டேனே ?!) And "மாயனோடு மோதல்" 4 அத்தியாயங்கள் கொண்டதொரு ஆல்பம் ! So ஒரு பட்டாசான பரபர 248 பக்க வாசிப்பு அனுபவம், இந்த தீபாவளி மலரின் முதல் கதையாக வெயிட்டிங் ! இந்த ஆல்பத்தின் பணியினில், செம சுவாரஸ்யமான highlights  மூன்று  உண்டு ! 

பொதுவாகவே நீண்டு ஓடும் நேர்கோட்டுக் கதைகள் என்றாலே எனக்கு பேனா பிடிப்பதற்கு மேலெல்லாம் நோவதுண்டு ! இம்முறையும் அது தொடர்ந்திட, புதிதாய் பணியாற்ற ஆர்வம் காட்டியதொரு சகோதரியிடம் தள்ளி விட்டிருந்தேன் ! ஆனால் அது குட்டிக்குருவி தலையில் ஏற்றி வைத்த பூசணியாய் அமைந்து போக, என்னிடமே வந்து சேர்ந்தது வேலை ! தம் கட்டி எழுதிக் கொண்டே போனால் surprise ...surprise...ஒரு வரலாற்று மாமனிதருக்கு தமிழில் குரல் கொடுக்கும் வாய்ப்பும் கிட்டியிருப்பது தென்பட்டது ! ஜெரோனிமோ ; கோச்சைஸ் போன்ற நிஜ செவ்விந்தியப் பெரும்தலைகளை நம் வரிசைகளில் பார்த்துள்ளோம் தான் ; வ்யாட் ஏர்ப் ; டாக் ஹாலிடே போன்ற real life gunslingers கூட குறுக்கும் மறுக்கும் உலாற்றியுள்ளனர் நம்மூடே ! ஆனால் இம்முறை இளம் டெக்ஸோடு டிராவல் செய்திருப்பது அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ! கெத்தாய், ஜனாதிபதியாய், வெள்ளை மாளிகையில் போஸ் கொடுக்கும் set property போல கதையினில் உலவிடாது, அழகாய் மேடைகளில் உரையாற்றும் வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதியாய் ; கடி ஜோக் சொல்லிவிட்டு சுற்றியிருப்போரை மிரளச் செய்யும் ஜாலி மனுஷனாய் ; மேடையில் உறங்கி விட்டேனென்று அசடு வழியும் சாமான்யராய் ; ஏலேலோ ஐலசா என்று படகோட்டிடும் உழைப்பாளியாய் கதையின் கணிசமான பகுதியினில் இடம்பிடிக்கின்றார் ! நிஜத்தில் அவர் எவ்விதமோ - no clue ; ஆனால் கதாசிரியர் மௌரோ போசெல்லியின் பார்வையில் இந்த வரலாற்று நாயகர், ரொம்பவே ரசிக்கச் செய்திடும் man next doors !! And அவருக்கான வரிகளை எழுதுவதென்பது செம ஜாலி அனுபவமாக இருந்தது ! அமெரிக்காவின் உள்நாட்டு சித்தாந்த மோதல்களுக்கு (அடிமைத்தனம் vs கறுப்பினத்தவருக்கும் சுதந்திரம்) நிறையவே இங்கே இடமுள்ள போதிலும், அவற்றை வள வளவென்று இஸ்திரி கிளாஸாக்கிடாது, கதையோடு அம்சமாய் இணைத்துக் கொண்டு சென்றுள்ள அந்த லாவகத்தில் போசெல்லி touch கண்கூடு ! 

And Surprise # 2 - நம்ம 'சின்னத் தல' கேரெக்டர் !! கதை நெடுக, செம breezy ! வயசுக்கேற்ற விடலைத்தனம் ; துடுக்குத்தனம் ; ஒன்றுக்கு இரண்டாய்க் கதையினில் வலம் வரும் ஜில்பான்ஸ்களோடு யதார்த்தமாய் ஒளிவட்டத்தைப் பகிர்வது ; ஓவரான சூப்பர் ஸ்டார் பந்தாவெல்லாமின்றி, வயசுக்கேற்ற ஜாலி போக்கிரிப் பார்ட்டியாய் இளம் டெக்ஸுக்கு ரோல் தந்து பின்னி பெடலெடுத்துள்ளார் கதாசிரியர் ! சொல்லப்போனால் இந்த ஆல்பத்தை நமது பாயாசக் காதலருமே கூட வெளிப்படையாகவே ரசிக்க இயன்றிடும் என்பேன் ! என் பங்குக்கு - ஒரு மகா நாயகன் டெக்ஸுக்கு வஜனம் எழுதுவதான நினைப்புகளின்றி, ஒரு வளர்ந்து வரும் ஹீரோவுக்கு பேனா பிடிக்கவே முயற்சித்துள்ளேன் ! 

And இந்த ஆல்பத்தின் சர்ப்ரைஸ் # 3 - again கதாசிரியரின் உபயத்தில் - மெபிஸ்டோவின் பாத்திரப்படைப்பே ! நமக்குப் பரிச்சயமான அந்த டெர்ரர் வில்லனாகிடும் முன்பான ஒரு மேடை மாயாஜாலக்காரனாய் ; போசெல்லி மெபிஸ்டோவுக்குத் தந்திருப்பது இங்கே ஒரு subtle role தான் ! ஆகையால் அந்தப் பூச்சாண்டி காட்டும் விட்டலாச்சார்யா வில்லனை எதிர்பார்த்திட வேண்டாமே யுவா ?! வசியமறிந்த மொள்ளமாறியாய் அவனது ஆரம்பம் அமைந்திட, போகப் போக அவன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் ? என்பதைத் தான் நடப்பாண்டினில் போசெல்லி புத்தம்புதுக் கதைகளில் மிரட்டலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் - இத்தாலிய வாசகர்கட்கு !! So வில்லனும் விடலை ; நாயகரும் விடலை ; (இந்தக் கதையினில்) அரசியலில் ஆபிரகாமும் விடலை ; பக்கத்துக்குப் பக்கம் மிரட்டும் சித்திரங்கள் ஏற்படுத்தும் ஈர்ப்பும் நம்மை விடலை ; வண்ணத்தில் செய்துள்ள அதகளங்களின் மிரட்சியும் என்னை இன்னும் விடலை !

And 'தல' புராணமும் இன்னமும் விடலை !! 

Becos இந்த ஆல்பத்தில் காத்திருப்பது ஒரு முழுநீள black & white சாகசமுமே - இம்முறை டெக்ஸ் & கார்சன் சகிதம் ! "பருவத்தே கொலை செய்" ஒரு அக்மார்க் ஆக்ஷன் block and நான் பயணிக்க இன்னமும் 65 பக்கங்கள் காத்துள்ளன- கதையின் இறுதியினை தொட்டிட !! ஆனால் அதற்குள்ளாகவே அனல் பறப்பதில் கதையின் tone புரிகிறது ! கதைக்கான ஓவியர் சற்றே ஜாலி ஸ்டைல் கொண்டவர் எனும் போது, வெள்ளிமுடியாரைப் பார்த்தாலே கலாய்க்கத் தான் தோன்றுகிறது & அதை ஜாலியாய்ச் செய்துள்ளோம் கதைக்கு நெருடல்களின்றி ! இதோ - அந்த b & w ஆல்பத்தின் preview கூட :  

அட்டைப்படத்தைப் பொறுத்தவரையிலும் இது ஒரிஜினல் டிசைனின் மீது நமது கோகிலாவின் கைவண்ணம் ! And ஜூனியர் எடிட்டரின் நகாசு வேலைகள் அட்டையை டாலடிக்கச் செய்ய தம் பங்குக்கு உதவியுள்ளன ! In fact இங்கே ஸ்க்ரீனில் பார்ப்பதைக் காட்டிலும், நேரில் செம மிரட்டு மிரட்டுகிறது அட்டைப்படம் ! So பழைய தமிழ் சினிமா வசனம் தான் எனக்கு இந்த நொடியில் ஞாபகத்துக்கு வருகிறது - "சபாஷ்....சரியான போட்டி !!" என்று !! சிகப்புச் சட்டை ஸாகோர் vs மஞ்சச் சட்டை டெக்ஸ் !! May the winner make this a sparkling Deepavali !!

Just curious - இம்மாதத்து இதழ்களுள் உங்கள் வாசிப்பினில் முதலிடம் யாருக்கு இருக்கக்கூடும் guys ? புதியவருக்கா ? சின்னவருக்கா ? 

"பருவத்தே கொலை செய்" இன்னும் காத்துக் கிடைப்பதால் நான் இப்போது நடையைக் கட்டினால் தான் சரிப்படும் ! அதற்கு முன்பாய் சில updates :

1.திருச்சி புத்தக விழா ஆரம்பிச்சாச்சூ & அண்ணாச்சி நமது ஸ்டால் # 127-ல் நமது இதழ்களோடு உங்களுக்காக வெயிட்டிங் !!  Please do drop in Trichites !!

2 .தொடரும் வாரங்களில் காரைக்குடிக்கு பயணிக்கவுள்ளது நமது காமிக்ஸ் கேரவன் ! நமக்குப் பெரிதாகப் பிடிமானங்கள் இல்லாத பகுதி அது ! Fingers crossed - வரவேற்பு எவ்விதம் இருக்கக்கூடுமோ என்று !

3 2023 அட்டவணையில் ஒரு தெறிக்கும் புது ஆக்ஷன் ஹீரோ துண்டு விரித்துள்ளார் - வாய் பிளக்கச் செய்யும் சித்திரங்களுடன் !! And  இன்னொரு தெறிக்க விடும் கிராபிக் நாவலுக்கு உரிமைகள் வாங்கிட முயற்சிகள் on the way !! ரொம்ப...ரொம்ப....I repeat ரொம்ப...ரொம்ப மாறுபட்ட களம் அந்த கி.நா. !! அட்டவணை unveiling-க்கு முன்பாய் அது ஓ.கே. ஆகியிருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு ! 

4 YEAREND ஸ்பெஷல் இதழ்களுக்கான முன்பதிவுகள் செம விறுவிறுப்பு ! ஸாகோரை தீபாவளிக்கு உங்கள் இல்லம் தேடி வரவழைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திட மறந்து விடாதீர்கள் - ப்ளீஸ் !
5 And 2023-ன் க்ளாஸிக் நாயகர்களின் தனித்தடம் SUPREME '60s முன்பதிவுமே தூள் கிளப்பி வருகிறது !! இன்னமும் அந்தச் சந்தாவினில் இணைந்திருக்கா பட்சத்தில் no time like now folks !! 
Bye all...see you around ! மீண்டும் சந்திப்போம் ! Have a fun weekend !

257 comments:

  1. It is Bonelli Mela this Diwali looks like. Awaiting both the books.
    Is Corrigan also coming sir?

    ReplyDelete
  2. //இம்முறை இளம் டெக்ஸோடு டிராவல் செய்திருப்பது அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ! கெத்தாய், ஜனாதிபதியாய், வெள்ளை மாளிகையில் போஸ் கொடுக்கும் set property போல கதையினில் உலவிடாது, அழகாய் மேடைகளில் உரையாற்றும் வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதியாய் ; கடி ஜோக் சொல்லிவிட்டு சுற்றியிருப்போரை மிரளச் செய்யும் ஜாலி மனுஷனாய் ; மேடையில் உறங்கி விட்டேனென்று அசடு வழியும் சாமான்யராய் ; ஏலேலோ ஐலசா என்று படகோட்டிடும் உழைப்பாளியாய் கதையின் கணிசமான பகுதியினில் இடம்பிடிக்கின்றார்...//
    Wow... Eagerly waiting for this story

    ReplyDelete
  3. அந்த தேடப்படும் குற்றவாளியின் க்ரைம் ரேட் கூடிக் கொண்டே போகிறது ஒரு ஜென்டில்மேனின் ஷாம்பெயினினை தட்டி விட்ட வகையினில்...
    #பாயாசங்கள் தீர்வதில்லை..

    ReplyDelete
    Replies
    1. Ha Ha !! Thangak Kallarai Hard Bound kEttu kodi pidikkaren - asaya maatEngiraar - vandhu 10 varsham aachu !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Me too... But this time it should in international A4 size

      Delete
    4. // குற்றவாளியின் க்ரைம் ரேட் கூடிக் கொண்டே போகிறது ஒரு ஜென்டில்மேனின் ஷாம்பெயினினை தட்டி விட்ட வகையினில்... //

      அது சரிதான்! ஆனால் உங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் குற்றம்சாட்டுவது போல தெரிகிறது ரம்மி :-)

      Delete
    5. ஆமாம் தங்கக் கல்லரை HB வேண்டும்

      Delete
    6. பாயாசத்தையு, ஷாப்பெயினா நினைச்சு குடிப்போமுல.

      Delete
  4. Sir - small typo in the smashing 60s ad - It should be ASAATHIYA THARATHIL ... or can be ASATHTHAL THARATHIL .. not ASATHIYA THARATHIL :-) ;-)

    ReplyDelete
  5. மொத வாசிப்பு தல தான். தீபாவளி மலரை கைக்கிடைச்சவுடனே அனுப்ப சொல்லி சேலம் சுசீயண்ணா கால்ல விழுந்து கெஞ்சியாச்சேய்.

    இருந்தாலும் ஸாகோருக்காக வெயிட்டிங். எபிசென்டர் வர்சனில் படித்தது. தமிழில் உங்கள் கைவண்ணத்தில் படிப்பதும் குஷியே.

    அப்பறம் எபிசென்டர் புத்தகங்களில் கடைசிபக்கத்தில் வித விதமான மாடல்கள் ஸாகோர் படம் போட்ட டீசர்ட்டோடு இடம் பிடிப்பார்கள்🥰🥰🥰. அதுக்கு வாய்ப்பிருக்குங்களா எடிட்டர் ?

    ReplyDelete
    Replies
    1. Send scans in whatsapp Mahi .. Hee Hee !!

      Delete
    2. எனக்கு பிங்க் டீசர்ட்

      Delete
    3. "எனக்கு பிங்க் டீசர்ட்". //
      பதிவுத் தலைப்புக்கு ஏத்த மாதிரி விடலைப் புள்ளையாண்டானா இருக்கீங்களே!

      கோவைக்காரவுகளும், மெட்ராஸ்காரவுகளும் பேசிக்கிறது அந்த டீஷர்ட் போட்ட கொமரிங்களைப் பத்தி! :-)

      Delete
    4. இந்த கூத்து இப்படி போகுதா..

      Delete
    5. அப்பால, சின்ன டவுட்டுங்கோ. பிங்க் கலரு நல்லா தானே இருக்கு.

      Delete
  6. வணக்கம் நண்பர்களே🙏🙏🙏🙏

    ReplyDelete
  7. Edi Sir..
    Supreme 60-விளம்பரத்தில் *அசாத்திய தரத்தில்*
    (Excellent quality)..
    என மாறுதல் செய்யமுடியுங்களா?..🙏

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  9. Edi Sir..
    முதல் மரியாதை புதுசா வர்ர Red shirt மச்சானுக்குதான்..😍
    அப்புறமாதான் Yellow shirt மாப்பிளைக்கு..😘😍

    எப்பவுமே வீட்டுக்கு வர்ர விருந்தாளிக்குதான் முதல் மரியாதை..😃

    அதுதானே நம்ப பண்பாடு!.. கலாச்சாரம்!!..💐

    ReplyDelete
  10. @Trichites..

    நாளை (18.9.2022) மாலை 6.00 மணிக்கு நமது ஸ்டால் எண் 127-ல் சந்திக்கலாமா?..😎

    ReplyDelete
  11. இம்முறை முதலில் படிக்க விரும்புவது படகோட்டிடும் உழைப்பாளியாய் விடலை ஆபிரகாம் லிங்கனை தான்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிஜமான ஹீரோவை இம்முறை கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி, எடிட்டர் சார்.

      Delete
  12. முதல் வாசிப்பு எப்போதும் தல தான்..

    ReplyDelete
  13. சூப்பர் சார்....இது வன
    ரை வந்த அட்டைகள்ள இதே டாப்....ஓவியம் வண்ணம்......நானுமே விடலை....போஸ் எல்லாமே அசத்தல்....அதிலும் வண்ணப்பக்கங்கள் ....யப்பா

    ReplyDelete
    Replies
    1. தம்பி பொன்ராஜ், ரொம்பநா ஆச்சு. ஒரு கவிதை எழுதுங்க.

      Delete
  14. டெக்ஸ் தீபாவளிக்குத்தான்...

    பலகாரங்களை சுத்தி வச்சுட்டு ஜாலியா
    டெக்ஸ் படிச்சிட்டு ....

    ReplyDelete
    Replies
    1. எது இந்த தீபாவளி லேகியம் மாதிரிங்களா டாக்டர்...???

      Delete
    2. Doc,

      Light-aa Bhaagyaraaj vaasanai adikkidhu indha commentla ;-)

      Delete
    3. /Light-aa Bhaagyaraaj vaasanai adikkidhu indha commentla ;-)//

      :-)))))

      Delete
    4. //எது இந்த தீபாவளி லேகியம் மாதிரிங்களா டாக்டர்...???//

      ரம்மி@ :-)))))

      Delete
  15. நான் முதலில் படிக்க போவது டெட் வுட் டிக் தான் சாரே

    ReplyDelete
    Replies
    1. இது லிஸ்ட் லயே இல்லையே

      Delete
    2. கிருஷ்ணா ஹிஹிஹி. போன வருடமே நான் டெட் வுட் படித்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகி விட்டேன். அது மட்டும் இன்றி அடுத்த மாதம் வரும் புத்தகங்களில் அது தான் சிறிய புத்தகம். எனவே...

      Delete
  16. ஆவலை கிளப்புகிறது முன்னோட்டம்...


    எவரை முதலில் படிப்பது என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை சார்...

    ReplyDelete
    Replies
    1. முறைச்சு முறைச்சு பாக்க வேண்டியது தா. எப்படியு அடுத்த தீபாவளி வந்துரு தானே.

      Delete
  17. //2023 அட்டவணையில் ஒரு தெறிக்கும் புது ஆக்ஷன் ஹீரோ துண்டு விரித்துள்ளார் - வாய் பிளக்கச் செய்யும் சித்திரங்களுடன் !! And இன்னொரு தெறிக்க விடும் கிராபிக் நாவலுக்கு உரிமைகள் வாங்கிட முயற்சிகள் on the way !! ரொம்ப...ரொம்ப....I repeat ரொம்ப...ரொம்ப மாறுபட்ட களம் அந்த கி.நா. !! அட்டவணை unveiling-க்கு முன்பாய் அது ஓ.கே. ஆகியிருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு ! //
    மிக்க நன்றி சார். அதே போல் ஒ.ஒ.தோட்டா, கென்யா, பராகுடா போன்ற ஐந்தாறு பாகங்கள் கொண்ட கதைகள் ஒன்றாவது அட்டவணையில் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
  18. தீபாவளிக்கு டெக்ஸ் என்றாலே ஆனந்தமே! அதுவும் இளம் டெக்ஸ் மற்றம் டெக்ஸ் என இரட்டை குழல் துப்பாக்கியாக மிரட்ட வருகிறார்கள்! இதில் ஒருகதை வண்ணத்தில் என்பது கூடுதல் சிறப்பு! வாரே வா :-)

    டெக்ஸ் அட்டைபடம் உண்மையில் மிரட்டல் ரகம், உட்பக்க டீசர் செம, வண்ணத்தில் குளுமையாக உள்ளது! கருப்பு வெள்ளை ஓவியம் கீச்சி கீச்சாக தெரிவதாக இருந்தாலும் அதிலும் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. இளம் டெக்ஸ் ஆக்ஷன் போஸ் மற்றும் அதன் வித்தியாசமான கோணங்கள் புதுமையாக ரசிக்கும்படி உள்ளது!

      Delete
  19. // இன்னொரு தெறிக்க விடும் கிராபிக் நாவலுக்கு உரிமைகள் வாங்கிட முயற்சிகள் on the way //

    சந்தோசம்! சந்தோசம்!

    // I repeat ரொம்ப...ரொம்ப மாறுபட்ட களம் அந்த கி.நா //

    மகிழ்ச்சி சார்! ஒரு தலைவனின் கதை மற்றும் அந்த அக்கா கதை மாதிரி இருக்காது என நினைக்கிறேன்.

    // புது ஆக்ஷன் ஹீரோ துண்டு விரித்துள்ளார் - வாய் பிளக்கச் செய்யும் சித்திரங்களுடன் //

    செம! மிக்க மகிழ்ச்சி! அசாத்திய சித்திரங்கள் சூப்பர்!! நல்ல ஆக்ஷனுடன் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. "நில் கவனி வேட்டையாடு" போன்று சித்திரம் + ஆக்ஷன் + விறுவிறுப்புடன் உள்ள கதைகள் சமீபத்தில் வரவில்லை, அது போன்ற கதைகளை கொடுங்கள் சார்.

      Delete
    2. // "நில் கவனி வேட்டையாடு" போன்று சித்திரம் + ஆக்ஷன் + விறுவிறுப்புடன் உள்ள கதைகள் சமீபத்தில் வரவில்லை, அது போன்ற கதைகளை கொடுங்கள் சார். //
      அது வேற லெவல் கதையாச்சே,ஜாரோப் போன்ற கேரக்டர்களும் சரியான களமும் அமையனும்...

      Delete
    3. அந்த மாதிரி கதைகள் வருடத்திற்கு ஒன்றாவது ஆசிரியர் தேடலில் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

      Delete
  20. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    எனக்கு தீபாவளி வாசிப்புக்கு மூன்று சாய்ஸ்
    1) டெக்ஸ்
    2)வில்லர்
    3)டெக்ஸ்வில்லர்

    ReplyDelete
    Replies

    1. அதிகாரிக்கு இன்னும் வேற பேரு ஏதாவது இருக்கா. சேலம் டெக்ஸ் முன்ன வாங்க. விரிவா பதில் சொல்லுங்க.. அப்படியே மிரண்டு போற மாதிரி சொல்லுங்க.
      . சவாலுக்கு ரெடி ஆயீட்டீங்கன்னு நெனைக்கிறேன் சார்.

      Delete
  21. "முத்துவின் நன்முத்துக்கள்" செம விளம்பர தலைப்பு! பசுமையான நிறத்தில் அமைத்தது சிறப்பு! "அசத்திய " அல்லது "அசாத்திய" அல்லது "அசத்தும்" தரத்தில் இதில் எது சரிங்க :-)

    ReplyDelete
  22. இந்த மாதம் இதழ்களில் டாப் "துள்ளுவதோ முதுமை". எனது மனைவியும் படித்து விட்டார் அவருக்கு பிடித்து இருந்தது, அதுவும் ரொட்டியில் உபயோகிக்கும் மாவு பற்றிய சிந்தனை அவரை ரசிக்க செய்தது! நம்ப தாத்தாவின் முதல் கதையையும் கடந்தமுறை வந்த போதே படித்து விட்டதை தற்போதுதான் தெரிவித்தார்!

    தாதாஸ் - சிறப்பு!

    ReplyDelete
  23. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  24. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  25. மூக்குக் கண்ணாடி வாங்கி மூன்றாண்டுகள் ஆகியிருந்தாலும், ஏதாவது ஆவணத்தில் கையெழுத்து போடும் மட்டுமே அதை எடுத்து மாட்டிக் கொள்வதுண்டு. அந்த ஆணவத்தை சற்றே தளர்த்தி, மூக்குக் கண்ணாடி சகிதம் இம்மாத புத்தகங்கள் மூன்றையும் படித்து விட்டேன்.

    1) டேங்கோவின் கதை ஒன்று இதற்கு முன்னரே வந்திருந்தாலும், சிவந்த மண்ணைத் தான் முதலில் படிக்கிறேன். பழைய பிரின்ஸ் & பார்னே பாணி நேர்கோட்டுக் கதையுடன், சற்றே வளவளா வஜனங்கள், மோசமில்லை! முதலாவது இதழை தேடி எடுக்க வேண்டும்!

    2) இளம் டெக்ஸ் பரவாயில்லை, இள வயது டெக்ஸ் கதை போலவே இருக்கிறது.

    3) துள்ளுவதோ முதுமை - என்னத்தைச் சொல்ல! எனக்கு இது போன்ற கதைகள் பிடிப்பதில்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! இது நேர்க்கோட்டுக் கதையல்ல என்பதால், நீங்களே அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் போல! ;)

    4) அப்புறம் "கதை சொல்லும் காமிக்ஸ்கள்" கையில் சிக்க, அவற்றையும் வாசித்து வைத்தேன்! 90s பொடியனான எனக்குப் பிடிக்கவில்லை. 2k மற்றும் 2.1k பொடியர்கள் பற்றி பேசாமல் இருப்பதே நலம்!

    5) புத்தக அலமாரியில் கையை நுழைத்து, லொஜக் மொஜக் பஜக் போட்டுப் பார்த்ததில், "லக்கி கிளாஸிக்ஸ் 2" கையில் சிக்கியது, 2018-ல் வந்திருக்கிறது போல! அதிரடிப் பொடியன் & மேடையில் ஒரு மன்மதன் - இரண்டுமே ஏற்கனவே படித்த கதைகள் தானென்றாலும், ஏறத்தாழ 35 ஆண்டுகளாக, டெக்ஸுக்கு இணையாக லக்கி லூக்கும் தனி முத்திரை பதித்து வருவது எதனால் என்பதை உணர வைக்கும் கதைகள்!

    //Just curious - இம்மாதத்து இதழ்களுள் உங்கள் வாசிப்பினில் முதலிடம் யாருக்கு இருக்கக்கூடும் guys ? புதியவருக்கா ? சின்னவருக்கா ?//
    எனக்கென்னவோ இளம் டெக்ஸை விட ஸாகோர் பெட்டராக இருப்பார் என்று தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. /இளம் டெக்ஸ் பரவாயில்லை, இள வயது டெக்ஸ் கதை போலவே இருக்கிறது//

      :-)))) சிரிப்பை அடக்க முடியல!
      எப்படித்தான் இப்படி எழுதுறாரோ?

      Delete
  26. அவர்: நமிபியாவிலிருந்து 8 சீட்டா இன சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கிறார்களாம்.

    லயன்வாசகர்: பூ.! இது என்ன ப்ரமாதம்?! எங்க எடிட்டர் சார் அடுத்த வருடம் நமிபியாவையே இந்தியா கொண்டு வரப் போறாரு!!!!

    ReplyDelete
    Replies
    1. அவர்: நமிபியாவிலிருந்து வந்த 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி காட்டில் ரிலீஸ் பன்னிட்டாராம்
      லயன் வாசகர் : பூ இதென்ன பிரமாதம் எங்க எடிட்டர் இள வயது ஆபிரஹாம் லிங்கையே காமிக்ஸில் ரிலீஸ் பன்றார் விரைவில் பிரதமர் மோடியையே காமிக்ஸின் கொண்டு வருவார்

      Delete
    2. ஏ இந்த கொலவெறீ. எங்களுக்கு வடிவேல காமிச்சாலே புறந்த பயன அடைஞ்சுறுவோம் சத்யா சார்.

      Delete
  27. Yes!!!! Lion comics is always a part of Diwali Celebration.

    ReplyDelete
  28. இளம் டெக்ஸ்ககு பாயசம் வைப்பது கஷ்டம் (இப்படிக்கி ரெகுலர் டெக்ஸின் தீஞ்சு போன பெரிய பாயாச அண்டா கொண்டான்)
    உதாரணத்துக்கு சொர்கத்தில் சாத்தான்கள் கதை எடுத்துக்கொள்வோம்.
    இரண்டு பாகம் 128 பக்கங்கள்... பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு. ரெகுலர் டெக்ஸ்ஸில் இப்போதெல்லாம் இடம் நிறப்பி கட்டஙகள் அடிகடி வருகிறது.
    இளம் டெக்ஸ் கதையில் நடக்கும் சம்பவங்களுக்கு தனக்கு சங்கடமாக இருந்தாலும் சம்பந்த பட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ள படுகிறார்...ரெகுலர் டெக்ஸ்! நீதி கெட்பது தனது பிறப்புறிமை என நடந்துக்கொள்வார். சொ.சா வில்லனும் சலைத்தவரல்ல , டெக்ஸ் எப்படி தப்பிப்பார் என்ற பதட்டம் வருகிறது. டெக்ஸ் தப்பிப்பது தனது புத்திசாலிதனத்தால்... ரெகுலரில் வரும் வில்லன்கள் வாசன் ஐ-கேர் க்கு வசதி இல்லாமல் கன் தெரியாது குறிவைக்க சைத்தியமாக நம்மாட்கள் மேல் படவேபடாது. I like இளம் டெக்ஸ் very much

    ReplyDelete
  29. இந்த தடவை எனது முதல் வாசிப்பு அந்த அதிரடி சேப்பு சடைக்காரர் மெஃபிஸ்டோ தான், அவர் கதை தொடர்ந்து வர அந்த புனித சாத்தானை வேண்டிகொள்கிறேன்

    ReplyDelete
  30. //வெள்ளிமுடியாரைப் பார்த்தாலே கலாய்க்கத் தான் தோன்றுகிறது & அதை ஜாலியாய்ச் செய்துள்ளோம்//

    கார்சனை அதிகமாக கலாய்ப்பது மிகவும் போரடிக்கிறது மற்றும் பெரிதாக ரசிக்கவில்லை ஐயா!

    ReplyDelete
  31. டியர் எடி,

    அட்டை வடிவமைப்பு, சாம்பிள் பக்கங்கள், மெபிஸ்டோ, லிங்கன் கேமியோ.... என்று இளம் டெக்ஸின் தொகுப்பு ஆர்வங்களை தூண்டி விடுகிறது. என்ன மாதா மாதம் ஒரு தனி தடமாக இதை பார்க்கும் வாய்ப்பை தான் நழுவ விட்டுவிட்டோம். A great opportunity lost.

    ஆனால், முதல் வாசிப்பிற்கு கண்டிப்பாக ஸாகோர் தான். பல வருடங்கள் காத்திருந்தேன், இவர் கதையை முழுவதும் படிக்க.... புரிந்த மொழியில் ☺️

    ReplyDelete
  32. //ஒன்றுக்கு இரண்டாய்க் கதையினில் வலம் வரும் ஜில்பான்ஸ்களோடு யதார்த்தமாய் ஒளிவட்டத்தைப் பகிர்வது ; //
    கார்சனின் கடந்த காலமும் பார்த்துள்ளோம், டெக்சின் தணியாத தழலிம் பார்த்துள்ளோம்.
    கார்சனின் பாத்திர படைப்பிற்கு வேண்டுமானால் மேற்பட்ட உங்களின் வரிகள் பொருந்திவரலாம். போனெலி உருவாக்கின டெக்சின் பாத்திர படைப்பு மேற்கண்ட தன்மை பொருந்தி வராதே.
    பொசெல்லியின் ஒரு இளம் டெக்ஸ் கதை படித்துள்ளேன் நன்றாகவே இருந்தது. ஆனால் இங்கோ போனெலியின் ஒரிஜினல் டெக்ஸ் நாயக தன்மையை

    விட்டு விட்டு முரணாக மாற்றி இருப்பதாகவே படுகிறது. மம்ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, stereotype களை உடைப்பதே பொசெல்லியின் வெற்றியின் அடையாளம் ! In fact இந்த இளம் டெக்ஸ் தனித்தடமே பொசெல்லியின் பார்வையினில் டெக்சின் முன்கதையினையே யதார்த்தம் கலந்து சொல்லிடுவதற்காகத் தான் ! ஸாகோரிலுமே கனகச்சிதமாய் அதனைச் செய்துள்ளார் ! So பொசெல்லியின் பார்வையே இனி போனெல்லியின் பாணி !

      Delete
    2. யங் ஜகோர் அண்ட் யங் டெக்ஸ் வருவதால் இந்த முறை நமக்கு தீபாவளி முன்னேயே தொடங்கி விடுகிறது சார். பூஜா விடுமுறைக்கு முன்னால் புத்தகம் அனுப்ப வாய்ப்பு உள்ளதா சார்?

      Delete
    3. ஒகே, இருக்கட்டும் சார். நான் எல்லாம் அந்த பழைய ஸ்டீரியோ type டெக்சின் பிரியனே.

      Delete
  33. Tex 75 . பிரமாண்டமாக கொண்டாடும் நமக்கு லக்கி 75 ஐ மறந்துவிட்டதாக நினைக்கும் பொழுது வருத்தமாக உள்ளது. ஏன் Lucky 75 ஒரு Special Edition வெளியிடலாமே. Pl. Consider sir.

    ReplyDelete
    Replies
    1. ஆம் லக்கிலூக்கின் டபுள் ஆல்பம் போட்டே ஆகவேண்டும்.

      Delete
    2. ஊகூம். ஒண்ணுல அஞ்சு. நல்ல குண்டு வரணுங்க.
      அவரு ஒல்லியா இருந்தா, ஒல்லி புக்கு தா வரணுமா.

      Delete
    3. அந்நேரம் யாரும் பெருசாய்க் குரல் கொடுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, படைப்பாளிகளே பெருசாய் எதுவும் செய்திருக்கவில்லை நண்பரே !

      Delete
    4. நாமளாவது லக்கி 75க்கு சிறப்பு மலர் போடலாமே சார்.

      Delete
  34. 'தீபாவளி மலர்'ன்ற எழுத்துக்களைப் பார்த்தாலே உற்சாகம் ஊற்றெடுக்கும். அப்படியிருக்க;
    * அந்த தீபாவளி மலரில் டெக்ஸ் கதை வரப்போகுதுன்னா ஊற்றெடுக்கும் உற்சாகம் டபுள் ஆகிடும்
    * அதுவும் டெக்ஸின் டபுள் ஆல்பம்னா உற்சாகம்X4
    * அதிலேயும் ஒன்னு மதிமயக்கும் முழுவண்ணத்துலேயும், இன்னொன்னு கவர்ந்திழுக்கும் கருப்பு-வெள்ளையிலும்னா உற்சாகம்x8
    * தீபாவளிக்கு வரப்போவது டெக்ஸ் குண்டு மட்டுமல்ல.. ஸாகோர் குண்டுமே சேர்த்துத்தான் எனும்போது உற்சாகம்x16

    நேற்றிரவு இந்த தீபாவளிமலர் அட்டையைப் பார்த்ததிலிருந்தே மனசுக்குள் ஓயாமல் ஒரு விசில் சத்தம்! உய்ய்ய்ய் உய்ய்ய்ய் உய்ய்ய்ய்

    எங்களுக்கு தீவாளி வந்திடுச்சேஏஏஏஏய்!!!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் இந்த கதையில் மெபிஸ்டோ வருகிறார் என்பது கூடுதல் சந்தோசமாக இருக்கிறது அண்ணா

      Delete
    2. அது சமையல்கட்டிலே நீங்க பிசியா இருக்கச்சே கேக்குற குக்கர் விசில் சத்தம் சார் ! சாதத்தைக் குழைய விட்டுப்புடாதீங்க !

      Delete
    3. /அது சமையல்கட்டிலே நீங்க பிசியா இருக்கச்சே கேக்குற குக்கர் விசில் சத்தம் சார் ! சாதத்தைக் குழைய விட்டுப்புடாதீங்க !//

      :-)))))

      Delete
  35. இந்தக் கதை வந்த பின்னாவது மெயின் மெபிஸ்டோவுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. மெபிஸ்டோ கதை மாண்ரேக் மாதிரி இருந்தாலும் , அதை திரில்லா படிச்சி பட்டையை கிளப்புற மாதிரி வர்ணிச்சு சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கணுங்க. ஆசிரியரு என்னய்யா நடக்குது இங்கனு சொல்லணுங்க

      Delete
    2. // இந்தக் கதை வந்த பின்னாவது மெயின் மெபிஸ்டோவுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்று பார்க்க வேண்டும். //
      +111111

      Delete
  36. எனக்கு இன்னும் இளம் டெக்ஸ் செட் ஆக வில்லை சார். இன்னும் அவருக்கான பாணி பிடி படாததால் திசை போகும் போக்கில் கதைகள் போவதாக ஒரு எண்ணம்.

    ஆனால் இம்முறை கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது மெபிஸ்டோ வருவதால். ஆனால் எனது முதல் சாய்ஸ் கண்டிப்பாக சகோர் ஆக தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அதாகப்பட்டது..டெக்ஸின் சின்ன வயதில் சொதப்பிFy பண்ணிட்டே எதையாவது சாதிச்சிருவார்.

      Delete
    2. // எனக்கு இன்னும் இளம் டெக்ஸ் செட் ஆக வில்லை சார். // எனக்கு எப்போதோ செட் ஆகி விட்டது

      Delete
  37. ஜாகோர்தான் பர்ஸ்ட். மிகவும் எதிர்பார்த்திருந்த சுத்தியல் ஆசாமி. இளம் டெக்ஸ் அப்பாலே..அச்சச்சோ மெபிஸ்டோ வாராரில்லே.. அவ்.. ரெண்டு புக்கையும் பிரிச்சி லெப்ட் ரைட்டா வெச்சிக்க வேண்டி வரும் போலிருக்கே..

    ReplyDelete
  38. கண்ணா & விஜய் @ இளம் டெக்ஸ் டீசரில் காண்பித்த பெண் அழகாக உள்ளார் அதே நேரம் அவர் காலை சுழற்றி சுழட்டி அடிப்பதை பார்த்தால் இவர் ஒரு லேடி விஜயகாந்த் போல தெரிகிறது! அதனால கொஞ்சம் கவனமாக பார்த்து ரசித்து படியுங்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றாக கவனியுங்கள் PfB.. கதவைத் திறந்து வெளியே வரும் அந்த யுவதி வெளியே நிற்கும் அந்த ஆடவனை மரியாதை நிமித்தம் முத்தமிடச் சொல்லி தன் பாதத்தைத் தூக்கிக் காட்டுகிறாள்.. அதாவது, புறங்கையில் முத்தமிடுவதைப் போல அவங்கவூரில் புறங்காலில் முத்தமிடுவதுதான் வாடிக்கையாம்!
      அவ்வாறு முத்தமிட மறுக்கும் அவன்மீது கோபம் கொண்டே அவள் அவனை புரட்டியெடுக்கிறாள்!

      இப்போது அவனிடத்தில் நானோ, நமது கிட்கண்ணனோ இருந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு எத்தனை மரியாதை செய்திருப்போம் என்று நீங்கள் அறியாதவரல்லவே?!!

      Delete
    2. ஹா ஹா. அப்படியே அந்த யுவதி கையில் உள்ள துப்பாக்கியை பாருங்கள்;-) அவங்க ஊரில் புறங்காலில் முத்தமிட கூப்பிடுவது போல் கூப்பிட்டு கையில் உள்ள துப்பாக்கியால் பொட் என்று போட்டு விடுவார்களாம்:-)

      Delete
  39. // இதோ - காத்திருக்கும் "தீபாவளி மலர்'22"previews //
    தீபாவளி மலர் அட்டைப்படம் கலக்கல் சார்,தீபாவளி மலர்னு பெயரை பார்த்தாலே உற்சாகமா இருக்கு...

    ReplyDelete
  40. // Becos இந்த ஆல்பத்தில் காத்திருப்பது ஒரு முழுநீள black & white சாகசமுமே - இம்முறை டெக்ஸ் & கார்சன் சகிதம் ! "பருவத்தே கொலை செய்" //
    பருவத்தே கொலை செய் ஆவலை கிளப்புகிறது,என்ன டெக்ஸின் முகம்தான் கொஞ்சம் Rugged Feel ஐ கொடுக்குது...

    ReplyDelete
    Replies
    1. நம்ம கண்ணே கொலை மானே மாதிரி ஓவியங்கள்.

      Delete
  41. முத்துவின் நன்முத்துகள் 5 எனும்போது வெளியிடலில் எப்படி திட்டமிடுவிங்கன்னுதான் யோசனை எழுகிறது,4 எனில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திட்டமிடுவீர்கள்,6 எனில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை திட்டமிடலாம்...
    ஆனாக்கா 5 எனும்போது... மோட்டுவளையை பார்த்து யோசிக்கும் படங்கள் பத்து...

    ReplyDelete
    Replies
    1. அது தான் மாண்ட்ரெக் தனியாக வரும் என்று சொல்லி இருக்கிறாரே அண்ணா. எனவே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகம். திருவிழா ஆரம்பம்

      Delete
    2. அட ஆமால்ல ஓகே,ஓகே...

      Delete
  42. // இம்மாதத்து இதழ்களுள் உங்கள் வாசிப்பினில் முதலிடம் யாருக்கு இருக்கக்கூடும் guys ? புதியவருக்கா ? சின்னவருக்கா ? //
    கண்டிப்பாக டெக்ஸ் தான் சார்,யங் டெக்ஸ் & யங் மெபிஸ்டோ கூட்டணி எப்படி இருக்குன்னு பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்...

    ReplyDelete
    Replies
    1. அந்த இரண்டாவது கதையின் ஓவியங்கள் கண்ணே கொலைமானே ஓவியங்கள் போலவே இருக்கிறது. சும்மா தாறுமாறாக இருக்கும் இந்த கதை என்று எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. கதை நல்லா இருந்தா மத்தது எல்லாம் பெரிதாய் தெரியாதுதான்....

      Delete
    3. "கண்ணே கொலைமானே" sold out என்று நினைக்கிறேன் சார் !

      Delete
  43. // 2023 அட்டவணையில் ஒரு தெறிக்கும் புது ஆக்ஷன் ஹீரோ துண்டு விரித்துள்ளார் - வாய் பிளக்கச் செய்யும் சித்திரங்களுடன் !! //
    அருமை...

    // And இன்னொரு தெறிக்க விடும் கிராபிக் நாவலுக்கு உரிமைகள் வாங்கிட முயற்சிகள் on the way !! //
    அருமையோ அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க வெல்கம் புது ஹீரோ அண்ட் கிராஃபிக் நாவல்...

      Delete
  44. சார் டெக்ஸ் கிளாசிக் ல எனக்கு மிகவும் பிடித்த மந்திர மண்டலம் எப்போது சார் வரும் அடுத்த வருடம் வாய்ப்பு உள்ளதா???

    ReplyDelete
    Replies
    1. சந்திர மண்டலத்துக்கே போகலாம் சார் - நவம்பருக்கு அட்டவணையே கையில் இருக்கும் அல்லவா ?

      Delete
    2. ஆகா ரொம்பவே ஆர்வத்தை தூண்டிவிடுறீங்க சார்.

      2023 காமிக்ஸ் அட்டவணை ஆயுத பூஜை விடுமுறை நாளில் தானே சார் வெளியிடப்போறீங்க?

      Delete
    3. இல்லை சார் ...நவம்பர் புக்ஸுடன் வரவுள்ள அட்டவணை எனும் போது அக்டோபர் இறுதியில் என்றல்லவா சொல்லியிருந்தேன் ?

      Delete
    4. அட்டவணை கையில் இருக்கும் சார் அதில் டெக்ஸ் classics மந்திர மண்டலம் இருக்குமா?

      Delete
    5. // அக்டோபர் இறுதியில் என்றல்லவா சொல்லியிருந்தேன் ? //
      எஸ் சார்!!
      நான் ஆயுத பூஜை விடுமுறையில் அட்டவணை வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அப்படி எழுதி இருந்தேன் சார்!

      Delete
    6. சந்திர மண்டலத்துக்கே போகலாம் சார் - நவம்பருக்கு அட்டவணையே கையில் இருக்கும் அல்லவா ?//

      அப்ப டெக்ஸ் 75 க்கு ஸ்பெசல் கவனிப்பு இருக்கும் போல.

      Delete
    7. இருக்கு இருக்கு சம்பவம் இருக்கு. அக்டோபர் 30 அன்று.

      Delete
    8. முத்து 50க்கு குண்டு புத்தகத்தை கொடுத்தது போல் டெக்ஸ் 75க்கு ஒரு செம மாஸான விருந்தை ஆசிரியர் கொடுப்பார் என நினைக்கிறன்!

      Delete
  45. துள்ளுவதோ முதுமை தாத்தாஸ் முதல் கதை போல் அவ்ளோ சுகப்படவில்லைதான். படைப்பாளிகளின் சமுதாய பார்வை வெளிப்பட்டு இருந்தாலும், கதை முழுக்க ஒரு பரப்புரை நெடி அவ்வளவா ரசிக்கலை. சமுதாயத்துக்கு அறிவுரை சொல்றேன் பேர்வழினு நிறைய பக்கங்கள் போரடிக்க வைச்சுட்டாங்க. இருந்தாலும் ஒன் டைம் படிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. True sir...கொஞ்சம் "கருத்து கந்தசாமி" அவதாரை கதாசிரியரிடம் பார்க்க முடிந்தது தான் !

      Delete
    2. ஆனால் மிக அவசியமான கருத்துத் தான்.

      உடம்பால் அழியின்
      உயிரால் அழிவர் - திருமூலர் சொன்னது.

      உலக இயற்கை பாதுகாக்கப் படாவிட்டால்
      நம் எல்லோரின் கதி.

      விலை வாசி உயர்வே போட்டு புரட்டி எடுக்குது...

      Delete
    3. சார்! தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பாவைக்கூத்து என தமிழில் , puppet show என ஆங்கிலத்தில், ்marionettes என ப்ரெஞ்சில் அழைக்கப்படும் கலை இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாலேயே அதன் அருமையை உணர்ந்து கொள்ள வேண்டும். பாவைக் கூத்து பிரெஞ்சு கலாச்சாரத்தோடு இணைந்தது.

      3000 வருடம் பழமையான இக்கலையின் மூலம் " சமூக செய்தி" சொல்வது நமக்கு புதிதாக இருக்கலாம். பிரெஞ்சு ஆடியன்ஸ்க்கு அப்படி இருக்காது. இந்தியாவுக்கும் இது புதிதல்ல.வழக்கொழிந்து வருகிறது. Glove puppet, rod puppet, marionette puppet எனப் பலவிதம் உண்டு.

      வியட்நாமில் water puppet பிரசித்தம்.
      இடுப்பளவு தண்ணீரில் நின்று puppeteer செயல்படுவதை பார்க்க அற்புதமாக இருக்கும்.யூடுப்பில் பார்க்க மனதை ஈர்க்கிறது.

      தசாவதாரத்தில் காண்பிக்கப்படும் - முகுந்தா முகுந்தா பாடலில் - நிழல் பாவைக்கூத்து ( shadow puppetry) நினைவில் இருக்கிறதா?

      மேலும் எழுத ஆசைதான். டாகுமெண்டரி என சொல்லிவிடுவீர்கள்.சிரமம் எனினும் து. முதுமை பிரெஞ்சு பண்பாடு , கலாச்சாரப் புரிதலோடு படித்தால் மனதைக் கவ்வும்.

      Delete
    4. ///எனினும் து. முதுமை பிரெஞ்சு பண்பாடு , கலாச்சாரப் புரிதலோடு படித்தால் மனதைக் கவ்வும்.///

      சூப்பர்...!

      Delete
    5. இங்க தாத்தா கோலத்த பாத்தா எனக்கு ஒண்ணு புரியல. இப்பவே கொடுக்குறே ஆர்டரு. நானும் படிச்சு என்னதா உள்ள இருக்குன்னு பாக்குறேன்.

      Delete
    6. // இங்க தாத்தா கோலத்த பாத்தா எனக்கு ஒண்ணு புரியல. இப்பவே கொடுக்குறே ஆர்டரு. நானும் படிச்சு என்னதா உள்ள இருக்குன்னு பாக்குறேன். //

      Good!

      Delete
  46. துள்ளுவதோ முதுமை -ரசிக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. பிடித்தால் நிரம்பவே பிடிக்கவும் ; பிடிக்காது போனால் ரொம்பவே படுத்தவும் கூடிய தொடர் தான் சார் இது ! Sorry , உங்கள் பொறுமையைச் சோதித்த இந்த இதழுக்கு !

      Delete
    2. எல்லோரும் ஒரே கட்சிக்கு ஒட்டு போட வேண்டியதில்லை தான்...
      தாத்தாக்கள் கதை நம்முடைய எதிர்கால மனசாட்சி, அதனை இப்பவே படிக்கும் அனுபவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே...

      Delete
  47. *** அட்டைபடுத்திய பாடும் ஒரு ஆரூடமும் ***

    தீபாவளி மலர் அட்டைப்படம் - கொள்ளை அழகு!

    அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் அவளது தாடையின் கீழ் விரலை விட்டு நிமிண்டி 'சப்ளிங் விளையாட்டு' விளையாட முயற்சிக்கும் சில க்ளாசிக் கெளபாய்களைப் போல் அல்லாமல், கடமையே கண்ணாக எப்போதும் பெண்களிடத்தே கண்ணியத்துடன் நடந்துகொள்ளும் இளம் டெக்ஸ் தன் கம்பீரமான ஆளுமையால் கவர்கிறார்! டெக்ஸுக்கு இதுவே அழகு! இதுவே டெக்ஸ் கதைகளின் அழகு! இதனால்தான் தமிழ்நாட்டில் காமிக்ஸ் படிக்கும் பெண்களின் விருப்பத் தேர்வாக எப்போதும் டெக்ஸ் கதைகளே முன்நிற்கின்றன!

    டெக்ஸின் இப்படியாப்பட்ட ஆளுமை குறித்து திருக்குறள் உள்ளிட்ட சில உள்நாட்டு நூல்களிலும், இங்கிலீஸ், பிரெஞ்சு, மங்கோலிய இலக்கியங்களிலும் கூட நிறையவே குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் தேடிப்பிடித்து சுவைபட இங்கே எழுதித்தள்ள நானொன்றும் வரலாறு படித்த மருத்துவர் அல்ல என்பதால்,

    அட்டைப்படமே பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் முக்கியக் காரணியாக அமைந்து, இந்த தீபாவளி மலர் விற்பனையில் ஒரு புதிய சாதனையை படைத்திடும் என்பதை ஆரூடமாகச் சொல்லிக்கொண்டு இன்று கிடைத்திருக்கும் சிறு ஓய்வை தாத்தாக்களுடன் கழிக்கச் செல்கிறேன். நன்றி. வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. தாத்தாக்களே இனிமே தானா ? இன்னும் ரெண்டு வாரங்களில் தீபாவளி புக்சே வந்திடும்கோ ! ஜரிகண்டி ...ஜரிகண்டி !

      Delete
    2. அட்டைப் படத்துக்கே இப்படி ஒரு விமர்சனமா? சூப்பர் சூப்பர். I like it.

      Delete
    3. //இங்கிலீஸ், பிரெஞ்சு, மங்கோலிய//

      இ.சி.ஈ.இளவரசர் கோபால் பல்பொடியின் ப்ராண்ட் அம்பாஸடர் ஆக மாறிவிட்டாரோ? :-)

      Delete
    4. //இதனால்தான் தமிழ்நாட்டில் காமிக்ஸ் படிக்கும் பெண்களின் விருப்பத் தேர்வாக எப்போதும் டெக்ஸ் கதைகளே முன்நிற்கின்றன!//

      ஒரு நாலஞ்சு பேரு?? :-)

      Delete
    5. பொண்ணுக்கு முதுகை காட்டி அந்த பக்கமே திரும்பலன்னா எப்படிங்க?! மீன் பிடிக்க போன டாக்டருங்க கதையால்ல இருக்கு.
      :-))

      Delete
    6. //பொண்ணுக்கு முதுகை காட்டி அந்த பக்கமே திரும்பலன்னா எப்படிங்க?! ///

      செனா அனா..
      ஒரு பட்டர்ஃபிளையை நீங்க துரத்திக்கிட்டுப் போனா அது சிறகடிச்சுப் பறந்து சிக்காமப் போய்டும்! இதுவே அந்தண்டை திரும்பி வேறெங்கோ வெறிச்சுப் பாருங்க.. அந்த பட்டர்ஃபிளையே தேடிவந்து உங்க காதுமேல உட்கார்ந்து காத்து வீசிக்கிட்டிருக்கும்!

      அப்பப் பிடிக்கணும் பட்டர்ஃபிளையை!!

      Delete
    7. ///ஒரு நாலஞ்சு பேரு??///

      முன்னாடி அவ்ளோதான் இருந்துச்சு! ஆனா இப்ப நிஜமாவே அதிகம்! ஒரு நாற்பது அம்பதாவது தேறும்!!

      Delete
    8. அந்த பட்டர்ஃபிளையே தேடிவந்து உங்க காதுமேல உட்கார்ந்து காத்து வீசிக்கிட்டிருக்கும்!//

      இப்படி புடிச்ச என் பட்டர்ப்ளை என் தோளுக்கு மேலே உக்காந்து பூரிக்கட்டையைத்தான் வீசிக்கிட்டுருக்கு..

      என்னமோ போங்க !!!

      Delete
    9. முன்னாடி அவ்ளோதான் இருந்துச்சு! ஆனா இப்ப நிஜமாவே அதிகம்! ஒரு நாற்பது அம்பதாவது தேறும்!!//

      இருக்கலாம்..மீதிப் பேரு மேட்சிங் ப்ளவுசுக்கு கலர் கஸ்டமைஸ் செய்ய புக்க உபயோகப்படுத்துறாங்களோ என்னவோ?

      :-)

      Delete
  48. Replies
    1. தீபாவளி மலர் என்ற எழுத்துக்களை பார்த்தவுடன் மனதுக்குள் மத்தாப்பூ! முன் பக்கத்தில் மாயன் பெரிய அங்கி தலையில் கொம்பு போன்று ஏதோ வைத்துகொண்டு புகைமண்டலத்துடன் (மாயன் என்றால் புகையில்லாமலா) சிகப்பு நிறம் அதே நேரம் அவரின் நிழலை கருமை நிறத்தில் மிகவும் சரியாக வரைத்துள்ளார்கள்! அவரை எதிர்த்து போராடி அடக்கவுள்ள டெக்ஸ் ஸ்டைலாக துப்பாக்கியை பிடித்து கொண்டு அந்த ஸ்டைலை முகம் மற்றும் உடம்பு முழுவதும் தெரியும் படி அமைத்தது சிறப்பு! அந்த யுவதி துப்பாக்கி பிடிக்கும் அழகே அழகு; மேற்கொண்டு எழுத விஜையும் கண்ணனும் அனுமதி கொடுக்கவில்லை என்பதால் அந்த யுவதியை பற்றி எழுதுவதை நிறுத்தி கொள்கிறேன்!

      தீபாவளி மலரின் முனையில் இரண்டு ராக்கெட் அதாவது இரண்டு ராக்கெட் வேகத்தில் செல்லும் கதை என குறிப்பிடுவது போல, என்ன ஒரு சிந்தனை!

      பின்பக்கத்தில் நான்கு விதமான படங்கள் அனைத்திலும் டெக்ஸின் வித்தியாசமான போஸ், எல்லாமே செம ஆக்ஷன் படங்கள், இவை இந்த முறை ஒரு சிறப்பான ஆக்ஷன்மேளா நமக்கு காத்திருப்பதை சொல்வது போல் உள்ளது! மத்தாப்பூ மழை பொழிய மஞ்சள் சிகப்பு கருப்பு என அருமையான கலர் காம்பினேஷன் உடன் அழகாக உள்ளது!

      இது போக நமது சின்னவர் (விக்ரம்) பைனல் டச் மற்றும் நகாசு வேலை எல்லாம் இருக்கிறது எனும்போது புத்தகம் கையில் கிடைத்த பிறகு 10000 வாலா சரத்தை கைகளில் பிடித்து போடும் பொது கிடைக்கும் ஒரு குதூகுலத்தை தரும் என நினைக்கிறன்!

      Delete
    2. PfB.. நீங்க ஒரு கலா ரசிகருங்க! பர்மிஷன் கிரான்டட்.. நீங்க அந்த யுவதியைப் பற்றியும் வர்ணிக்கலாம்!

      Delete
    3. //அந்த யுவதி துப்பாக்கி பிடிக்கும் அழகே அழகு; மேற்கொண்டு எழுத விஜையும் கண்ணனும் அனுமதி கொடுக்கவில்லை என்பதால் அந்த யுவதியை பற்றி எழுதுவதை நிறுத்தி கொள்கிறேன்!//

      இதற்கு இணையான வாக்கியங்களை எழுதுக

      1. டெக்ஸூக்கு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது. மளிகை பாக்கி, பால் பாக்கி, வாடகை பாக்கி போல் ஏதோ ஒன்று என நினைத்துக் கொள்வார்.

      2.கார்சனுக்கு குறுந்தாடியும் வறுத்த கறியும் பிடிக்காது.

      3. பல்லடம் சரவணக்குமார் சார் சோறில் பாறாங்'கல்' இருந்தால் கூட பொறுத்துக் கொள்வார். தோர்' கல்' பிடிக்காது.

      4.டைகர் மூக்கு கூரானது. அவர் தினமும் குளிப்பார்.

      5. மாடஸ்டிக்கு ஆண்களென்றாலே கூச்ச சுபாவம் .

      6.செல்வம் அபிராமி இப்போதெல்லாம் புரியும்படி எழுதுகிறார்

      7.ஸ்டீல் கிளாவின் கூட்டெழுத்து வடிவம் சாகித்திய அகாடமி பரிந்துரையின் பேரில் தமிழ் மொழிதான் என அங்கீகரிக்கப்பட்டது.

      7.a . தமிழ் வாசகர்கள் ரசனை திடீரென உயர்ந்ததால் கோடவுன் காலியாகி எடிடடர் சார் அதை மினி ஹாலாக்கி வரவேற்பு போன்ற விழாக்களுக்கு வாடகைக்கு விடுகிறார்.

      9.ரம்மி டெக்ஸை இனி அதிகாரி என அழைக்காமல் டெக்ஸ் என்றே அழைக்கப் போவதாக அறிவித்தார்.

      Delete
    4. // நீங்க ஒரு கலா ரசிகருங்க! //

      அந்த வயசான அம்மாவை கோர்த்து விடலாம் என நினைக்கிறீர்களா:-) அஸ்கு புஸ்கு :-)

      Delete
    5. வாக்கியங்கள் 1,4,5,7 & 7a :))))))))))))

      Delete
    6. // தமிழ் வாசகர்கள் ரசனை திடீரென உயர்ந்ததால் கோடவுன் காலியாகி எடிடடர் சார் அதை மினி ஹாலாக்கி வரவேற்பு போன்ற விழாக்களுக்கு வாடகைக்கு விடுகிறார். //

      உங்க வாக்கு விரைவில் உண்மையாகட்டும்.

      Delete
    7. சின்ன திருத்தம் சார் ; தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் ரசனைகள் எற்கனவே தட்டோடு உசரத்தில் தான் வீற்றுள்ளன எனும் போது , அவை இன்னமும் உசந்து தான் கிட்டங்கி காலியாகிடணும் என்பதில்லை ! இதே தரத்தில் மேற்கொண்டும் வாசகர்கள் கிட்ட வேண்டுமென்று wishlist-ல் சேர்த்துக் கொள்வது maybe பொருத்தமாக இருக்கலாம் !

      Delete
    8. //தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் ரசனைகள் எற்கனவே தட்டோடு உசரத்தில் தான் வீற்றுள்ளன எனும் போது , அவை இன்னமும் உசந்து தான் கிட்டங்கி காலியாகிடணும் என்பதில்லை ! இதே தரத்தில் மேற்கொண்டும் வாசகர்கள் கிட்ட வேண்டுமென்று wishlist-ல் சேர்த்துக் கொள்வது maybe பொருத்தமாக இருக்கலாம் !//

      Misunderstood sir! தமிழ் வாசகர்கள் என குறிப்பிட்டது
      இதுவரை தமிழ் காமிக்ஸ் வாசிக்காமல் இருந்த ஆனால் பிறநூல்களை வாசித்து வந்த வாசகர்கள்

      Delete
    9. // இதே தரத்தில் மேற்கொண்டும் வாசகர்கள் கிட்ட வேண்டுமென்று wishlist-ல் சேர்த்துக் கொள்வது maybe பொருத்தமாக இருக்கலாம் ! //

      Agreed sir!

      Delete
  49. அந்திரிக்கி நமஸ்காரம்.. பாக உண்ணாரா.?

    என் பெயர் டைகர் தையில் வரும் டைகரின் பெயர் என்ன.? யோசிச்சி வைங்க.. நான் போய் பாக்கியிருக்கும் டேங்கோவை படிச்சிப்போட்டு.. சாரி.. சாரி.. பாத்துப்போட்டு வாரேன்.!

    ReplyDelete
    Replies
    1. //என் பெயர் "டைகர்'' 'தை'யில் வரும் ?//

      "சிகுகுவா சில்க்" கோடதுன்னா சொல்லுங்க! போட்டது போட்டபடி
      ஓடியாறோம்.

      Delete
  50. /// கதவைத் திறந்து வெளியே வரும் அந்த யுவதி வெளியே நிற்கும் அந்த ஆடவனை மரியாதை நிமித்தம் முத்தமிடச் சொல்லி தன் பாதத்தைத் தூக்கிக் காட்டுகிறாள்.. அதாவது, புறங்கையில் முத்தமிடுவதைப் போல அவங்கவூரில் புறங்காலில் முத்தமிடுவதுதான் வாடிக்கையாம்! ///
    பாதக் கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்..
    பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

    ReplyDelete
  51. /// கிடைத்திருக்கும் சிறு ஓய்வை தாத்தாக்களுடன் கழிக்கச் செல்கிறேன். ///
    நம்ம ஈக்வல் செட் ஆளுங்க கூட ஓய்வை கழிப்பது என்பது சுகமானதே.
    விருப்ப ஓய்வுங்களா ஈவி...?

    ReplyDelete
    Replies
    1. /////// கிடைத்திருக்கும் சிறு ஓய்வை தாத்தாக்களுடன் கழிக்கச் செல்கிறேன். ///

      நேத்திக்கு சாயந்திரம் நான் உங்களுக்குத்தான் ஃபோன் பண்ணி சித்தே நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னு நினைச்சிருந்தேன் பத்து சார்! ஹிஹி!

      Delete
    2. அப்போ என் கமெண்ட் சரிதான்.. வாருங்கள். வரவேற்கிறேன்..

      Delete
    3. தலைவர் பதவி உங்களுக்கே..

      Delete
  52. அட்டைப்படத்துக்கே விமர்சனமான்னு ஆச்சர்யத்துல கேள்வி கேட்ட PFB அட்டைப்படத்தை ஆராதித்திருக்கும் அழகே அழகு.

    ReplyDelete
  53. மன்னிக்கவும். எடிட்டரின் மொழிபெயர்ப்பு ஹாஸ்யங்கள் டெக்ஸ் புக்கில் இரசிக்கவில்லை. ஷூப்பெய்ன் போன்ற வார்த்தைகள் புதிது எனினும் சிரிக்கத் தோன்றவில்லை. லக்கி போன்ற கதைகளுக்கு ஓகே. டெக்ஸ் போன்ற கதைகளுக்கு ஒட்டவில்லை. கார்சனைக் கலாய்க்கும் டயலாக்கும் அதேதான். மாறுவதேயில்லை.
    சற்றே Time எடுத்து, அவசரமில்லாமல் எடிட்டர் எழுதினால், அவறை மிஞ்ச இங்கே ஆளே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனையில்லை நண்பரே ; தொடரும் டெக்ஸ் சாகசங்களுக்கு, கார்சனைக் கலாய்க்காது ஒரிஜினலில் உள்ளபடிக்கே எழுதிடலாம் ! அதுவே ஒ.கே என்ற உணர்வு பெரும்பான்மைக்கு கிட்டும் பட்சத்தில் வண்டியை அப்படியே ஓட்டிப்புடலாம் ! எனக்குமே வேலை சுலபம் என்றாகிடும் !

      But ஒரிஜினலின் சம்பாஷணைகள் கொஞ்சம் பத்தியச் சாப்பாடாய் இருக்கும் என்பதையும் சொல்லி விடுகின்றேன் !

      Delete
    2. எனக்கு பத்திய சாப்பாடே பிடிக்காதே

      Delete
    3. //தொடரும் டெக்ஸ் சாகசங்களுக்கு, கார்சனைக் கலாய்க்காது ஒரிஜினலில் உள்ளபடிக்கே எழுதிடலாம் !//

      அது சுவாரஸ்யமாக இருக்காதே. எப்போதும் போலவே எழுதுங்கள் சார்

      Delete
    4. அது சுவாரஸ்யமாக இருக்காதே. எப்போதும் போலவே எழுதுங்கள் சார்//

      +1 டெக்ஸை பொறுத்தவரை மொழிபெயர்ப்பில் எந்த மாற்றமும் தேவையில்லை. எப்போதும் போலவே தொடருங்கள் சார்

      Delete
    5. The bond between carson and tex can be expressed by the way they pull each others leg. So tex carsonai kalaaippathum carson texai kalaaippathum niruthinaal antha natpin magathuvam namakku pudipadaathu sir

      Delete
    6. Mahesh +1
      Unfortunately Shoepain konjam ottavilai Sir...
      We know your writing style. Pathia sapataye virunthakki viduveergal.

      Delete
    7. // The bond between carson and tex can be expressed by the way they pull each others leg. //

      +1

      // அது சுவாரஸ்யமாக இருக்காதே. எப்போதும் போலவே எழுதுங்கள் சார் //

      +1

      Delete
    8. //ரச்சனையில்லை நண்பரே ; தொடரும் டெக்ஸ் சாகசங்களுக்கு, கார்சனைக் கலாய்க்காது ஒரிஜினலில் உள்ளபடிக்கே எழுதிடலாம் ! //

      நண்பர்களுக்குள் நகைச்சுவை உணர்வு பேச்சில் ஜாலியாக இருப்பது நல்லது. ஆனால் அதுவே கார்சனை பெரிசு பெரியவரே கிழவா என்று கலாய்ப்பது நிச்சயம் நன்றாக இல்லை. ப்ளீஸ் ஆவண செய்யுங்க சார்

      Delete

  54. "எண்ணங்களாலே பாலம் அமைத்து..
    இரவும் பகலும் கடக்கவா?..

    இத்தனைக் காலம் பிரிந்ததை எண்ணி..
    இருகை கொண்டு வணங்கவா.?
    இருகை கொண்டு வணங்கவா.?

    பிரிந்தவர் மீண்டும் சேர்கின்ற போது..
    அழுதால் கொஞ்சம் நிம்மதி.

    பேச மறந்து சிலையென நின்றால்...
    அதுதான் தெய்வத்தின் சந்நதி..
    அதுதான் காதல் சந்நதி.."

    உணர்ச்சிமயமான தோர்கல் கதைக்கான கச்சிதமான பாடல்..

    ReplyDelete
    Replies
    1. நம்ம கூண்டில் ஒரு கணவன். என்னா கதை.

      Delete
  55. சார் தயவு செய்துடெக்ஸ் கார்சனை கலாய்ப்பதை நிறுத்திவிடாதீர்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  56. து. முதுமை : மேலும் ஒரு உற்று நோக்கிய பார்வை

    வழிப்போக்கன், நாகராஜசேதுபதி போன்ற காமிரேடுகள் து.முதுமை இதழ் குறித்து லேசாக முகம் சுளித்தபோது தோன்றிய லேசான வருத்தத்துடன் து.முதுமை இதழை மீண்டும் புரட்டியபோது

    நான் ஆங்கில மூலத்தை எப்போதும் படித்ததில்லை.படிப்பதில்லை.ஆனால் பேக்கரி கடை உரையாடல்களை முழுமையாக அறிந்துகொள்ள இந்த இதழின் ஆங்கில வெர்ஷனை படிக்க நேர்ந்தது. இப்போது அதனையும் மீண்டும் சேர்த்து புரட்டியபோது

    உதித்த , வாசித்த விஷயங்களின் வெளிப்பாடே இப் பதிவு.

    நாமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில.

    எடிட்டர் சாரின் மேலும் சில மொழிபெயர்ப்பு விடுதல்கள், வேறு வார்த்தைகளால் மொழிபெயர்ப்பு செய்தல் , மூலத்தில் கீழே உள்ள லெஜண்ட் அல்லது கேப்ஷனை விட்டுவிடுதல் ஆகியவற்றால் நாம் அறிந்து கொள்ளவே முடியாமல் போனவை..

    எடிட்டர் சார் ஏற்கனவே தன்னிலை விளக்கம் அளித்தபின்னும் இதை மறுபடியும் சொல்வது அநாகரிகச்
    செயல் அல்லவா? என நண்பர்கள் மனதில் கேள்வி எழலாம்.எடிட்டர் சாரின் மேல் குற்றம் சுமத்துவதாக இதனை பார்க்க வேண்டாம்.ஒரு தீவிர வாசகனின் மனம் திறந்த பார்வையாக பார்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.இதில் பல புதிய விஷயங்களும் இடம் பெறுகின்றன. எடிட்டர் சாரின் மேல் எனக்கு உள்ள அன்பும் ,மரியாதையும் ஒரு வாசகனின் உரிமையான பதிவினால் குறையப் போவதில்லை என்பதை தள நண்பர்கள் உணர்ந்தால் போதும்.

    சில "கிழட்டுச் சவங்களின்' அடாவடியாக "து .முதுமை"யைப் பார்க்காமல் ஒரு அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் கதாசிரியர் கதையை கொண்டு செல்வதை உணர வேண்டும்.
    அதற்கான அடையாளங்களை கதாசிரியர் படங்களாக, உலக முக்கிய சரித்திர நிகழ்வுகளின் குறியீடு வார்த்தைகள் வாயிலாக
    கதையெங்கும் அள்ளி தெளித்துக் கொண்டே செல்கிறார்..

    ReplyDelete
    Replies
    1. இ.சி .ஈ .இளவரசர் - க்கு இயல்பாக கைக்கூடும் " இங்கே க்ளிக்குங்க பாஸ்" எனக்கு இன்னும் கைவரப் பெறாததால் இதற்கான படங்கள் அருமை நண்பர் STV - ன் வாட்ஸ் அப்புக்கு அனுப்பியுள்ளேன்.

      1.பியரி ஒரு இடது சாரிக்காரர் என்பதற்கான நேரடி அடையாளமாக

      பக்கம் 28 நான்காவது பேனல் முதல் படத்தில் ஒரு பேனரில் அரிவாள்- சுத்தியல் இடம் பெற்றுள்ளது.

      2. பக்கம் 14, கடைசி பேனல் - கடைசி படம்

      ஒரு வட்டம். அதனுள்ளே ஆங்கில கேப்பிட்டல் A.

      இது ப்ளிஸ் ஐலண்ட் நுழைவாயிலில் உள்ள கொடிகளில் இடம் பெற்றுள்ளது.

      இதே சின்னம் பாபாவும் , அன்ட்வானும் உள்ளே நுழைகையில் லிப்ட் கூண்டின் மேல் பக்கம் 15 முதல் பேனலில் இடம் பெற்றுள்ளது.

      இது அனார்கிஸ்ட்களின் சின்னம்.

      என்னப்பா பியரி இடதுசாரி அனுதாபிங்கறே? அப்புறம் அனார்கிஸ்ட்களின் சின்னம் பொறித்த இடமே அவர் குழு செயல்படும் தலைமையகம் அப்படின்னும் சொல்றே? என்ற கேள்வி எழுகிறதா?

      இடதுசாரி ,அனார்கிஸம் இரண்டுமே பெருமளவில் ஒத்து போகும் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டவை.

      மே 5 , 2018 பிரெஞ்சு இடதுசாரிகளின் துணைத் தலைவர் Francoise ruffin அழைப்பின் பேரில் பிரான்ஸின் TOULOUSE பகுதியில் பல நூறு பேர் கூடிய போது சாலையில் அரிவாள் சுத்தியல் படமும் அதன் கீழே அனார்கிஸ -வட்டத்துக்குள் A- சின்னமும் வரையப்பட்டு இருந்தது.

      Delete
    2. பியரியின் முன்னாள் காதலியும் பீட்டரின் இன்னாள் மனைவியுமான
      ஆன்னி போன்னி எனும் சங்கேதப் பெயர் கொண்ட பெண்ணின் உண்மைப் பெயரான ANITA (அனிட்டா) என்ற பெயர் தமிழில் கடைசி வரை குறிப்பிடப்படவேயில்லை.

      பக்கம் 25 -ல் " அந்த நாட்களிலே கிளர்ச்சி பண்ணிக் கொண்டிருந்த ஆன்னியோட சங்கேதப் பெயர் அதுதானாம் " என்ற வரிகளால் ஏற்பட்ட குழப்பம் ஆங்கில வெர்ஷனைப் பார்த்தபின்னரே முடிவுக்கு வந்தது.

      Delete
    3. பக்கம் 15 கடைசி பேனலின் முதல் படம்

      "நாளங்களிலே ஓடறது ராஜ பரம்பரை ரத்தமா இருந்தாலும் உள்ளத்தில் துள்ளிக் குதிக்கிறதோ ஒரு புரட்சிக்காரியின் தில்." என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

      இதன் ஆங்கில வசனம்

      ...Blessed with the blood of an aristocrat and the heart of an anarchist...

      இங்கு நேரடியாக அனார்கிஸ்ட் என கதாசிரியர் சொல்லியிருந்தும் எடிட்டர் சார் தவறவிட்டது வருத்தமே.

      Delete
    4. பக்கம் 25 முதல் பேனல்

      " ஆன்னியோட அம்மா அல்ஜீரியாக்காரங்க. அப்பா ஸ்பெயின் நாட்டவர். அங்கேயிருந்து துரத்தியடிக்கப்பட்டாங்க"

      இந்த வசனத்தில்" ஏன் அந்த குடும்பம் துரத்தியடிக்கப்பட்டது?" "எங்கேயிருந்து துரத்தியடிக்கப்பட்டாங்க? அல்ஜீரியாவிலிருந்தா? ஸ்பெயினிலிருந்தா ? "

      "யார் துரத்தியடிச்சாங்க?"என்ற கேள்விகள் எழுகின்றன.

      ஆங்கில வெர்ஷனில் ஒரேயொரு வார்த்தை மூலம் விடை கிடைக்கிறது.
      தமிழில் அது இல்லை.

      அந்த வார்த்தை " Franco".

      ஆங்கில வெர்ஷனில்

      Anita's mother was Algerian; her father was Spanish; her family was driven out of Spain by" Franco"

      என உள்ளது.

      யார் இந்த Franco?

      இதற்கு விடை தெரிய ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் பற்றி அறியவேண்டும்.

      1936-1939 வரை நடந்த இப்போரில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலானோர் பலியாயினர்.

      இடது சாரியினரை பின்புலமாக கொண்டு தேர்தலில் வென்று பதவியேற்ற "ரிபப்ளிகன்" ஆட்சிக்கு எதிராக வலது சாரியினரை பின்புலமாகக் கொண்டு "நேஷனலிஸ்ட்கள்" ராணுவப் புரட்சி மூலம் போர்க்கொடி உயர்த்தினர்.

      நேஷனலிஸ்ட்களின் தலைவர்தான் Francisco Franco என்ற FRANCO.

      Franco- வின் தலைமையிலான படை மாட்ரிட்டில் 1939-ல் நுழைந்தபோது போரின் இறுதிக்கட்டத்தில் 2.5 லட்சம் ரிபப்ளிகன் படையினரும் குடிமக்களும் உயிர் பிழைத்தால் போதும் என ப்ரான்ஸில் தஞ்சம் புகுந்தனர்.அதாவது துரத்தியடிக்கப்பட்டனர். இப்படி வந்த குடும்பங்களில் ஒன்றுதான் அனிட்டா என்ற ஆன்னி போன்னியின் குடும்பம்.

      அமெரிக்க சிவில் வார் அளவுக்கு நமக்கு ஸ்பானிஷ் சிவில் வார் பரிச்சயமில்லை.இரண்டாம் உலகப்
      போருக்கான " ஒத்திகைப் போர்'' என்று அழைக்கப்பட்டதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

      நேஷனலிஸ்ட் தரப்பை இத்தாலி, ஜெர்மனி , போர்ச்சுகல் நாடுகள் ஆதரித்து வீரர்கள், ஆயுதங்களை அளித்தன.

      ரிபப்ளிகன் தரப்பை இதே போல் சோவியத் ரஷ்யா ஆதரித்தது.

      ( But I am digressing)

      கதையைப் பொறுத்தவரை அனிட்டாவுக்கு - ஒரு கதாபாத்திரத்துக்கு- இப்படி ஒரு பிண்ணனியை வழங்கியது கதாசிரியர் இடது- வலதுசாரி மோதல் ஏற்பட்ட வரலாற்று சம்பவத்தை நினைவூட்டவே என்பதில் ஐயமில்லை.

      Delete
    5. பக்கம் 25

      "அல்ஜீரியாவில் நடந்துகொண்டிருந்த யுத்தத்துக்கு எதிரான ( பாரிஸில்) ஆர்ப்பாட்டத்தின்போது ரெண்டு பேரும் சந்திச்சிருக்காங்க " என்ற வசனம் இடம் பெறுகிறது.

      இதன் காட்சி வடிவமே பியரியின் கடந்த கால அசைபோடும் படலமாக பக்கங்கள் 28,29, 30 - களில் இடம் பெறுகின்றன.

      "ஏதோ கூட்டம் கூட்டமா போறாங்க" என எண்ணாமல் ப்ரான்ஸ் மற்றும் அல்ஜீரியாவுக்கும் உள்ள தொடர்பு என்ன ? என அறிய முயன்றால் விடை அறியலாம்.

      இல்லாவிடில் இப்பக்கங்களை உள் வாங்குவது கடினம்.

      "போர்முனையில் தேவதைகள்" கதைக்காக அல்ஜீரியா- ப்ரான்ஸ் உறவை அறிய நேர்ந்தது.பக்கம் 29-ல் உள்ள OAS ASSASSINS என்ற பேனர் வாசகத்தின் அர்த்தத்தை இது அறிய உதவியது.

      1830- ல் அல்ஜீரியாவில் நுழைந்து ப்ரான்ஸ் 132- ஆண்டுகள் காலனியாதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது. அல்ஜீரிய பெரும்பான்மை முஸ்லிம்கள் உட்பட பலர் FLN எனப்படும் நேஷனல் லிபரேஷன் ஃப்ரண்ட் என்ற அமைப்பின விடுதலைக்காக போராடி வந்தனர்.இவர்களை பிரெஞ்சு ராணுவமும் பின்னாளில் OAS( இது பின்னர்) அமைப்பும் தாக்கி ஒடுக்கி வந்தனர்.ப்ரான்ஸில் வாழ்ந்த அல்ஜீரியா மக்கள் மட்டுமின்றி பல பிரெஞ்சு அரசியல் அமைப்புகளும் குறிப்பாக இடது சாரிகளும் அல்ஜீரிய முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ப்ரான்ஸில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.பிரெஞ்சு போலிஸ் இவர்களை விரட்டியடித்து வந்தது.

      இப்படி தொடர் போராட்டங்களில் கலந்து கொண்ட பியரியும் அனிட்டாவும் காதலர்களாக மாறுகின்றனர்.

      பக்கம் 29-ல் rue de charronne - ல்( CHARRONNE STREET) போராட்டம் நடப்பதாக உள்ளது.

      இச்சாலையில் பிப்ரவரி 8 ,1962-ல் அல்ஜீரிய விடுதலைக்காக இடதுசாரிகள் நடத்திய உண்மையான போராட்டத்தை சித்தரித்துள்ளது.போலிஸ் நடத்திய தடியடியால் சிதறிய மக்கள் பக்கத்திலுள்ள charronne (மெட்ரோ ) ரயில் நிலையத்தில் நுழைய முயல கூட்ட நெரிசலில் 9 பேர் மாண்டனர்

      ( 2017-ல் இத்தேதியே 08.1962 சம்பவம் நடந்த குறுக்கு சாலைக்கு பெயராக வைக்கப்பட்டது).

      மற்றொரு துயர சம்பவம் நவம்பர் 13 , 2015- ல் நடந்தது

      ISIS அமைப்பு பாரிஸ் எங்கும் நடத்திய தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஒன்று இதே rue de charronne சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் நடந்தது. 19 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமுற்றனர்..

      Delete