Sunday, September 25, 2022

புலியாருக்கொரு கேள்வி !

நண்பர்களே,

மதிய வணக்கம் ! கேள்விகளென்றாலே இங்கே உற்சாகம் ஒரு மிடறு கூடி விடுவதை எண்ணற்ற முறைகள் பார்த்து விட்டோம் & கார்சர் சார்ந்த வினா latest to the list ! உள்ளதைச் சொல்வதனால் சமீப மாதங்களில் நான் கேட்டிருந்த ஏகப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் தந்திருந்த பதில்கள் நிரம்பவே பயன் தந்துள்ளன ! In particular - 2023 அட்டவணைக்கு உங்களின் inputs செமத்தியாக உதவியுள்ளன ! அக்டோபர் 30 புலரும் போது அது புரியும் ! And நேற்றைய வினாவுமே உங்களின் அபிப்பிராயங்களை தெள்ளத் தெளிவாய் போட்டுத் தாக்கியிருக்க, மெய்யாலுமே சந்தோஷம் எனக்கு - அதனைக் கேட்டு வைத்ததில் ! கலாய் in moderation ; and கதையின் சூழல்களுக்கேற்ப என்று வைத்துக் கொள்வோமே - இனி வரும் காலங்களில் !

While you are in the answering mode - இன்னொரு கேள்வியுமே folks ! கொஞ்ச காலமாகவே நண்பர் ஒருவர் வைத்திடும் கோரிக்கை சார்ந்த வினா இது ! சூட்டோடு சூடாய் இதையுமே சபைக்கு கொண்டு வந்துவிட்டால் "வேணும் - வேண்டாம்" என்பதைத் தீர்மானித்து விடலாமில்லியா ? இதோ விஷயம் :

"முத்து 50-வது ஆண்டினில் அதன் டாப் சாகசங்களுள் பிரதானமான - "தங்கக் கல்லறை" இதழினை MAXI சைசில் ஹார்டகவர் சகிதம் போட ஏன் தயக்கம் ? ஒரிஜினல் தமிழாக்கத்தோடு" என்பதே நண்பரின் கேள்வி ! 

நிஜத்தைச் சொல்வதனால், எனக்கு அந்த இதழும், அதன் நீட்சியான முதன் முதல் ஈஸ்ட்மேன் கலர் மூ.ச.வும் நேற்றைய சமாச்சாரங்களாய்த் தென்படுகின்றன ! So மறுபதிப்புக்கு மறுபதிப்பு - இத்தனை சீக்கிரமே தேவை தானா ? என்ற எண்ணத்தில் பெரிதாய் திட்டமிடவில்லை ! But சமீபத்திலும் நண்பர் மறுக்கா நினைவூட்டியிருக்க, நேற்றைய பதிவிலேயே அதனைக் கேட்டிராது போனோமே என்ற எண்ணம் எழுந்தது ! So சொல்லுங்களேன் folks - ஹார்டபவுண்ட் Limited collector's  எடிஷனாய் "தங்கக் கல்லறை" போடும் எண்ணமானது உங்களுக்கு ரசிக்கின்றதா ?

Simple & straight answers please 🙏 ?

Bye for now...see you around !



Saturday, September 24, 2022

கார்சனுக்கொரு கேள்வி ?!

 நண்பர்களே,

வணக்கம். வாயால் சுட்ட வடை பருப்பு வடையாய் ஆகாதே ..! வடையாகும் ஆட்டுக்கல்லில் அரைத்துச் சுட்டதே ! முட்டைக்கண் புலவன் அடங்க மாட்டானோ ? என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது !!  So நம்ம ஹைக்கூவின் (!!!) காரணத்தைச் சொல்லியாக வேண்டுமல்லவா ? கெத்தாய்ச் சொல்லியாச்சு : TEX தீபாவளி மலர் & ஸாகோர் ஸ்பெஷல் இந்த மாசம் பட்டையைக் கிளப்ப வருகிறதென்று !! ஆனால் பணிகளோடு கட்டிப் புரளும் போது தான் புரிகிறது - சுமார் 900 பக்கங்கள் கொண்ட 2 ஹார்ட் கவர் இதழ்களைக் கரை சேர்க்கும் பிரயத்தனம் என்னவென்று !! அதிலும் ஸாகோர் முதல் 4 பாகங்களில் உரித்த வாழைப்பழம் சாப்பிட்ட அனுபவத்துக்குப் பின்னே - பாகம் 5-ல் கதாசிரியர் போட்டுள்ள அடுத்த கியருக்கு ஈடு கொடுக்க வண்டி செம திணறு !! கொஞ்சம் செவ்விந்தியப் புராதன இதிகாச இணைப்புகள் ; நம்பிக்கைகள் என்றெல்லாம் இழையோட, நாக்குத் தொங்கி விட்டது ! ஒரு பக்கம் அமேசானில் ஓடிக்கொண்டிருக்கும் மெகா சேலில் மைக்ரோஸ்கோப்களும் விற்பனைக்கு உள்ளன என்ற தகவல் தெரிந்த போது, ராக்கோடங்கி வேலையை கூடுதல் வேகத்தில் தொடர வேண்டிப் போனது ! இதோ ஸாகோரின் முதல் 4 & இறுதி அத்தியாயம் ஒரு பக்கம் அச்சாகிக் கொண்டிருக்க, இடைப்பட்டுள்ள பாகம் 5-ல் எனது அந்தர்பல்டிக்கள் தொடர்ந்து வருகின்றன ! So இக்கட 'நீளமாய்ப் பதிவு போடுறேன் பேர்வழி' என எதையேனும் மொக்கை போட்டுத் திரிந்தால் - கத்தி மேல் நடக்கும் இந்த schedule சொதப்பிடும் ! ஆகையால் ஒரு மினி ; yet சுவாரஸ்யப் பதிவு மாத்திரமே இந்த வாரம் ! 

And in many ways - சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் முயற்சியும் கூட இது என்பது தெரியாதில்லை ! சும்மாவே தூக்கிப் போட்டு மொத்திப் பழகுவோர்க்கு நானே வலிய "வாங்க...வாங்க அண்ணாச்சி...வந்து பழகிப் பாருங்க !" என்ற வாயிலைத் திறந்து வைக்கிறேன் என்பது புரிகிறது ! But நமக்குத் தான் குசும்பும், கொழுப்பும் சம விகிதத்தில் விரவி நிற்கின்றதே ? So here goes :

"டெக்ஸ் கதைகளில் கார்சனை கலாய்ப்பது சுகப்படவே இல்லே ; மொக்கை போடுது !" என்று சமீபப் பதிவினில் நண்பர்களின் சில குரல்கள் ஒலிக்கக் கேட்டிருந்தேன் ! பொதுவாகவே விமர்சனமின்மையை நம்மோடு ஒத்துச் செல்லும் பாங்காய் நான் எடுத்துக் கொள்வேன் ; but குறைகளை ஒப்பிக்கும் குரல்களில் - merit கீதா - இல்லியா ? என்ற வினவல் என்மட்டிற்காவது முக்கியமாகிடுவதுண்டு ! So பின்னாடியே மேற்கொண்டு கொஞ்ச நண்பர்களும், "no to கலாய்ப்பு"  என்ற ரீதியில் பதிவிட்டிருக்க, மிகச் சரியாக TEX சாகசமான "பருவத்தே கொலை செய்" ஆல்பத்தினில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் பேனாவை கொஞ்சம் ஓரம் கட்டி விட்டு, யோசனைக் குல்லாயை சிரத்தில் மாட்டிக் கொண்டு மல்லாக்கப் படுத்தே யோசித்தேன் ! "Maybe இந்த எக்ஸ்டரா நம்பர் படலமெல்லாம்  தேவையில்லா ஆணி பிடுங்கல் தானோ ? மருவாதையாய் ஒரிஜினலில் உள்ளதோடு அடக்கி வாசித்து விடலாமோ ?"  என்ற சிந்தனை வலுப்பெற்றது ! இதை தலைக்குள் போட்டு ரொம்பவே உருட்டிக் கொண்டிருக்க அவகாசம் இல்லையென்றதால் ஏதேனும் ஒரு திக்கில் தீர்மானிக்க வேண்டியிருந்தது ! ரைட்டு...இந்தக் கதையின் பின்பகுதியிலாவது (நான் பிரேக் போட்ட வேலையினில் பணியாற்றிக் கொண்டிருந்த இடம் அது தான்) ஒரிஜினலில் உள்ளதற்கு நெருக்கமாகப் பயணித்தே விடலாம் என்று fix ஆகினேன் ! So தொடர்ந்த பக்கங்களில் உள்ளதை உள்ளபடிக்கே அமைத்து மின்னலாய் அச்சுக்கு கொண்டு செல்லும் வழியைப் பார்த்தேன் ! And வெள்ளியன்றே அச்சும் முடிந்தது !

ஆனால், இதோ அடுத்த TEX பணியானது மேஜையின் கோடியில் கிடக்க, தொடரவுள்ள காலங்களில் அவற்றிற்கான treatment எவ்விதம் இருத்தல் அவசியமோ ? என்ற கேள்வி எழுந்தது ! அப்போதே தீர்மானித்தேன் - ஏதேனும் ஒரு சாவகாசப் பொழுதினில் இந்த வினாவை உங்கள் முன்னே சமர்ப்பித்தே தீர வேண்டுமென்று ! And இந்த வாரயிறுதி செம rush ஆனதொன்றாக அமைந்திட, அந்தக் கேள்வியினை உங்களிடம் சிம்பிளாக ஒப்படைத்த கையோடு ஸாகோருக்குள் புகுவது மதி ! என்றுபட்டது ! இதோ தொடரவுள்ளவை காத்திருக்கும் தீபாவளி மலர் ஆல்பத்தின் 3 பக்கங்கள். முதலில் உள்ளவை நீங்கள் புக்கில் வாசிக்க உள்ளவை ! இரண்டாவதாய், ஆங்காங்கே சிகப்பில் மார்க் செய்யப்பட்டுள்ள டயலாக்களுடன் இருப்பவைகளோ - நான் ஒரிஜினலாய் எழுதியவை - கார்சன் கலாய்ப்புடன் ! கலாய்ப்ஸ் குறித்த கலவையான எண்ணங்கள் பகிரப்பட்ட பின்னே, சிகப்பில் உள்ள அந்த வரிகளை மாத்திரம் ஒரிஜினலுக்கு அருகாமைக்கு மாற்றி விட்டேன் !

இரண்டையும் ஜாலியாய்ப் படித்துவிட்டு, முடிந்தால் இரண்டையும் கழுவி ஊற்றாது, எது தேவலாம் ? என்று சொல்லுங்களேன் guys ? All Black-ஆ ? அல்லது கறுப்பு & சிகப்பா ? நான் பாட்டுக்கு - "இது சூப்பரப்பு ! " என்ற எண்ணத்தில்  டாரான பட்டாப்பட்டியோடு நடுரோட்டில் வாக்கிங் போயிடப்படாதல்லவா ? So இந்த விஷயத்தினில் ஒரு course correction  அவசியமெனில், என்னளவிற்கு ஓ.கே. !  



AND NOW WITH THE கலாய்ப்ஸ் :

PLEASE NOTE : கூட்டத்தினர் வடிவேலை மொத்தியெடுக்கும் போது, சந்தடிசாக்கில் தானும் வெளுத்து வாங்கும் ஆத்துக்காரம்மா ரேஞ்சுக்கு - ஒட்டு மொத்த மொழிபெயர்ப்பு சார்ந்த கும்மிகள் இப்போதைக்கு வேண்டாமே - ப்ளீஸ் ? அவசியப்படும் பட்சத்தில், ஒரு சாவகாசமான சந்திப்பின் போது அதனை வைத்துக் கொள்வோமே ? காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டு திரிய எனக்கு அவசியமாகிடும் இந்த வேளையில் வேண்டாமே ?! 

அதே போல "402 பக்கத்தில் ஆறாது பலூனில், மூணாவது ஆள் பேசுற ஐஞ்சாவது வஜனம் ஓ.கே. ; 404-லே மூணாவது கட்டத்திலே ரெண்டாது ஆள் பேசுற டயலாக் not ok !" என்ற ரீதியிலான ஆழ்கடல் ஆராய்ச்சிகளும் ; "நாலே முக்கால் வருஷங்களுக்கு முன்னே அந்த டெக்ஸ் கதையிலே இந்த வரியில் சொதப்பிப்புட்டே !!" என்ற தொல்பொருள் ஆராய்ச்சிகளும்  not here ; not now please !

YES to கலாய்ப்ஸா   ; or NO to கலாய்ப்ஸா ? என்ற கேள்வி மாத்திரம் இந்த நொடியின் தேடல் !! So இயன்றளவிற்கு சின்னத் துடைப்பங்களைக் கொண்டு வாங்கோ folks - மூ.ச. பக்கமாய் வருகை தரும் போது ?!

Before I sign out - சின்னதாய் இன்னொரு முயற்சியுமே !! சமீப பொழுதுகளில் ஸ்ரீ லங்காவில் பொதுவான சூழல் அத்தனை சுகமில்லை என்பதால் நமது இதழ்கள் அங்கு சரி வர அனுப்பிட இயலாச் சூழல் ! So நிலவரம் கொஞ்சம் சகஜமாகிடும் வரைக்கும் அவசியமாகிடும் புக்ஸ்களை அங்குள்ள நமது நண்பர்கள் நம்மிடமிருந்தே தருவித்துக் கொள்ளலாம் ! இதோ - அதற்கென சில திட்டமிடல்கள் !! மேற்கொண்டு விபரங்கள் தேவைப்படும் பட்சத்தில் please call our front desk - வாரநாட்களில் !! 

Bye all.. see you around !! Have a fun weekend !!

Thursday, September 22, 2022

நடுவாக்கிலே ஒரு விளம்பர இடைவேளை !

 நண்பர்களே,

வணக்கம். When it rains ..it pours என்பார்கள் ! அது மெய் தான் போலும் ! 2 ஆண்டுகளுக்குக் கூடுதலாய் சஹாரா வறட்சியில் குந்தியிருந்த தமிழகப் பதிப்பகங்களுக்கு தற்சமயம் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமில்லை ! அத்தனை பேருமே தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் அளந்த வண்ணமுள்ளனர் - ஆங்காங்கே சரமாரியாய் நிகழ்ந்து வரும் புத்தக விழாக்களின் உபயத்தில் !! விற்பனைத் தொகைகள் ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம், மாறுபட்டாலும், வாசகர்களின் முன்னே ஆஜராகிடுவதே ஒரு வரமாய்த் தோன்றுகிறது ! வயலுக்குப் பாயும் நீரில் ஒரு துளி வரப்புக்கும் பாயாது போகாதல்லவா - so நாமும் இயன்ற இடங்களில் தலைநுழைத்த வண்ணம் உள்ளோம் !! Thanks to all the respective organizers !!

போன வெள்ளி முதலாய் திருச்சியில் நடைபெற்று வரும் விழாவினில் துவக்கம் கொஞ்சம் மிதமென்றாலும், தொடர்ந்த தினங்களில் செம மாஸ் !! அதிலும் ஒவ்வொரு வார நாளிலும், பள்ளிகளிலிருந்து குவிந்து வரும் நமது அடுத்த தலைமுறை வாசக / வாசகியர் அத்தனை ஆர்வமாய் கார்டூன்களையும், டெக்ஸ் வில்லரையும் (!!!) அள்ளிச் சென்று வருகின்றனர் ! சில குழந்தைகள் வீட்டிலிருந்து துண்டுச் சீட்டுகளில் வாங்கி வர வேண்டிய இதழ்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டு வந்து ஞாபகமாய் வாங்கிச் செல்கின்றனராம் !! பாருங்களேன் - போட்டோக்களை !! இன்னமும் மூன்று தினங்கள் எஞ்சியுள்ளன எனும் போது - இதுவரைக்கும் அந்தப்பக்கமாய் ஆஜராகியிரா நண்பர்கள் ஒரு குட்டி விசிட் அடிக்கலாமே - ப்ளீஸ் ?

திருச்சி VESTRY பள்ளியில் புத்தக விழா நடைபெறுகிறது !! அங்கே நமது ஸ்டால் நம்பர் : 127 !








And திருச்சியில் விழா ஓடிக்கொண்டிருக்கும் போதே மதுரையிலும் புத்தக விழா துவங்குகிறது !! மதுரையில் தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 23 to அக்டோபர் 3 வரையிலும், புத்தக விழா நடைபெறவுள்ளது ! அங்கே நமது ஸ்டால் நம்பர் : 61 !

நமது சூப்பர்மேன் அண்ணாச்சிக்கு மட்டும் டபுள் ஆக்ட் கொடுக்க சாத்தியமாகியிருந்தால், அண்ணன் அண்ணாச்சியை ஒரு ஊரிலும், தம்பி அண்ணாச்சியை இன்னொரு ஊரிலும் குந்தச் செய்திருப்போம் ! Alas , அது சாத்தியமில்லை என்பதால் மதுரையில் நமது front office-லிருந்து திருமதி.ஜோதி பங்கேற்பார் !! இதோ மதுரையில் நமது ஸ்டாலின் first look ! 



தினமும் காலை 11 முதல் இரவு 9 வரை புத்தக விழா நடைபெறுகிறது ! மதுரை & சுற்று வட்டார நண்பர்களே - please do drop in !!

மதுரையிலிருந்து அடுத்த இலக்கு : காரைக்குடி !!

Wish us luck folks !! மீண்டும் சந்திப்போம்....see you around !! Bye for now !!

திருச்சியில் இன்று !! 






And இவை மதுரையிலிருந்து இப்போது !!




Saturday, September 17, 2022

விடலை...விடலை...எல்லாமே விடலை !!

 நண்பர்களே,

வணக்கம். புதிரின் பல துண்டுகளை இணைக்கும் ஆட்டத்தை, புனித மனிடோ அவ்வப்போது நம்மோடு ஆடுகிறாரோ என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு ; and இதோ அதனை ஊர்ஜிதப்படுத்தும் லேட்டஸ்ட் அத்தியாயம் - இந்த அக்டொபரில் காத்துள்ளது ! கிட்டத்தட்ட ஒன்னரை ஆண்டுகள் பீரோவுக்குள் துயின்றவர் - இத்தாலியத் 'தனி வேங்கை' ZAGOR !! And கிட்டத்தட்ட அதற்கு நிகரான அதே அவகாசத்தை, அதே பீரோவுக்குள், செலவிட்டவர் அதே இத்தாலியைச் சார்ந்த 'சின்னத் தல' இளம் டெக்ஸ் ! ஒற்றுமைகள் அத்தோடு முடிஞ்ச பாடுமில்லை : 

***ஸாகோரின் (இந்த லேட்டஸ்ட்) ஆக்கத்தின் பின்னணி முழுக்க முழுக்க திரு மௌரோ போசெல்லி ! Guess what - 'இளம் டெக்சின்' இந்த சாகசத்தின் கதாசிரியருமே சாட்சாத் போசெல்லியே தான் ! 

***And இரு இளைஞர்களுமே போனெல்லி குழுமத்தின் flagship நாயகர்கள் என்ற விதத்தில் ஒற்றுமைகள் தொடர்கின்றன !  

***இளம் டெக்ஸை தீபாவளிக்கு களமிறக்குவது என்பதை போன வ்ருக்ஷத்தைய அட்டவணையிலேயே அறிவித்திருந்தோம் எனும் போது no surprises there !! ஆனால் ஸாகோரை பொங்கலுக்குப் போடுவோமா ? கோடை விடுமுறைகளுக்குப் போடுவோமா ? ஈரோட்டுக்குப் போடுவோமா ? என்ற ஊசலாட்டம் தொடர்கதையாகிட, இறுதியில் அதே அக்டொபருக்கு ; அதே தீபாவளி தருணத்தில் !! 

***அதே முழுவண்ணத்தில் ; அதே ஹார்ட்கவரில் and அதே விலையிலும் !! 

இந்த simultaneous களமிறங்களெல்லாம் நிச்சயமாய் நம்மளவின் பெரும் திட்டமிடல்களின் பலனெல்லாம் நஹி ! 2023-ன் அட்டவணையினை நவம்பர் முதல் தேதி இதழ்களோடு உங்களிடம் ஒப்படைத்தாக வேண்டும் எனும் போது, இந்த ஸாகோர் மனுஷனை அதற்கு முன்பாகவே களமிறக்கிவிட்டு வெள்ளோட்டம் பார்ப்பது அவசியமென்றாகிறது ! So இந்த நொடி - புது நாயகரின் அறிமுகத்துக்கு tailormade என்று நினைத்தேன் !!  அவரோடு போன பதிவிலேயே லைட்டாகப் பழகிப் பார்த்தாச்சு எனும் போது - its time now for the one & only TEX !!

புதுசாய் புயல் வீசினாலும் சரி, பொரிகடலை பறந்தாலும் சரி.... தீபாவளியாய் இருந்தாலும் சரி, பள்ளி திறப்பு நாட்களாக இருந்தாலும் சரி ; சந்தோஷ நாட்களாக இருந்தாலும் சரி, கோவிடுக்குப் பயந்து ஊட்டுக்குள்ளாற குந்திக்கிடந்த இருண்ட நாட்களாக இருந்தாலும் சரி,  "நான்பாட்டுக்கு வருவேனுங்கண்ணா ; என் வேலையைப் பார்த்துப்புட்டு  போய்க்கினே இருப்பேனுங்கண்ணா !" - என்று சொல்லும் ஆற்றல் கொண்ட பொம்ம புக் நாயகர்கள் சொற்பமே !! சொல்வது மாத்திரமன்றி, செயலிலும் காட்டிடக் கூடியோர் அவர்களுள் இன்னும் குறைச்சலே ! And அந்தச் செயல்கள் ஒவ்வொரு முறையுமே ஒரு சாதனையாய்த் தொடர்ந்திடுவது நமது இரவுக்கழுகாருக்கு மட்டுமே கைவந்த கலை என்பேன் ! So without more ado, இதோ - காத்திருக்கும் "தீபாவளி மலர்'22"previews :



இளம் டெக்ஸ் சாகசங்கள் ஒவ்வொன்றுமே தலா 62 பக்க நீளத்து சாகசங்கள் ! (அவற்றைத்தான் மாதமொன்று வீதம் தனித்தனியாய்ப் போட்டுப் பார்க்கலாமா ? என்று 2 வாரங்களுக்கு முன்னே கேட்டு வைத்து முதுகை வீங்கச் செய்து கொண்டேனே ?!) And "மாயனோடு மோதல்" 4 அத்தியாயங்கள் கொண்டதொரு ஆல்பம் ! So ஒரு பட்டாசான பரபர 248 பக்க வாசிப்பு அனுபவம், இந்த தீபாவளி மலரின் முதல் கதையாக வெயிட்டிங் ! இந்த ஆல்பத்தின் பணியினில், செம சுவாரஸ்யமான highlights  மூன்று  உண்டு ! 

பொதுவாகவே நீண்டு ஓடும் நேர்கோட்டுக் கதைகள் என்றாலே எனக்கு பேனா பிடிப்பதற்கு மேலெல்லாம் நோவதுண்டு ! இம்முறையும் அது தொடர்ந்திட, புதிதாய் பணியாற்ற ஆர்வம் காட்டியதொரு சகோதரியிடம் தள்ளி விட்டிருந்தேன் ! ஆனால் அது குட்டிக்குருவி தலையில் ஏற்றி வைத்த பூசணியாய் அமைந்து போக, என்னிடமே வந்து சேர்ந்தது வேலை ! தம் கட்டி எழுதிக் கொண்டே போனால் surprise ...surprise...ஒரு வரலாற்று மாமனிதருக்கு தமிழில் குரல் கொடுக்கும் வாய்ப்பும் கிட்டியிருப்பது தென்பட்டது ! ஜெரோனிமோ ; கோச்சைஸ் போன்ற நிஜ செவ்விந்தியப் பெரும்தலைகளை நம் வரிசைகளில் பார்த்துள்ளோம் தான் ; வ்யாட் ஏர்ப் ; டாக் ஹாலிடே போன்ற real life gunslingers கூட குறுக்கும் மறுக்கும் உலாற்றியுள்ளனர் நம்மூடே ! ஆனால் இம்முறை இளம் டெக்ஸோடு டிராவல் செய்திருப்பது அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ! கெத்தாய், ஜனாதிபதியாய், வெள்ளை மாளிகையில் போஸ் கொடுக்கும் set property போல கதையினில் உலவிடாது, அழகாய் மேடைகளில் உரையாற்றும் வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதியாய் ; கடி ஜோக் சொல்லிவிட்டு சுற்றியிருப்போரை மிரளச் செய்யும் ஜாலி மனுஷனாய் ; மேடையில் உறங்கி விட்டேனென்று அசடு வழியும் சாமான்யராய் ; ஏலேலோ ஐலசா என்று படகோட்டிடும் உழைப்பாளியாய் கதையின் கணிசமான பகுதியினில் இடம்பிடிக்கின்றார் ! நிஜத்தில் அவர் எவ்விதமோ - no clue ; ஆனால் கதாசிரியர் மௌரோ போசெல்லியின் பார்வையில் இந்த வரலாற்று நாயகர், ரொம்பவே ரசிக்கச் செய்திடும் man next doors !! And அவருக்கான வரிகளை எழுதுவதென்பது செம ஜாலி அனுபவமாக இருந்தது ! அமெரிக்காவின் உள்நாட்டு சித்தாந்த மோதல்களுக்கு (அடிமைத்தனம் vs கறுப்பினத்தவருக்கும் சுதந்திரம்) நிறையவே இங்கே இடமுள்ள போதிலும், அவற்றை வள வளவென்று இஸ்திரி கிளாஸாக்கிடாது, கதையோடு அம்சமாய் இணைத்துக் கொண்டு சென்றுள்ள அந்த லாவகத்தில் போசெல்லி touch கண்கூடு ! 

And Surprise # 2 - நம்ம 'சின்னத் தல' கேரெக்டர் !! கதை நெடுக, செம breezy ! வயசுக்கேற்ற விடலைத்தனம் ; துடுக்குத்தனம் ; ஒன்றுக்கு இரண்டாய்க் கதையினில் வலம் வரும் ஜில்பான்ஸ்களோடு யதார்த்தமாய் ஒளிவட்டத்தைப் பகிர்வது ; ஓவரான சூப்பர் ஸ்டார் பந்தாவெல்லாமின்றி, வயசுக்கேற்ற ஜாலி போக்கிரிப் பார்ட்டியாய் இளம் டெக்ஸுக்கு ரோல் தந்து பின்னி பெடலெடுத்துள்ளார் கதாசிரியர் ! சொல்லப்போனால் இந்த ஆல்பத்தை நமது பாயாசக் காதலருமே கூட வெளிப்படையாகவே ரசிக்க இயன்றிடும் என்பேன் ! என் பங்குக்கு - ஒரு மகா நாயகன் டெக்ஸுக்கு வஜனம் எழுதுவதான நினைப்புகளின்றி, ஒரு வளர்ந்து வரும் ஹீரோவுக்கு பேனா பிடிக்கவே முயற்சித்துள்ளேன் ! 

And இந்த ஆல்பத்தின் சர்ப்ரைஸ் # 3 - again கதாசிரியரின் உபயத்தில் - மெபிஸ்டோவின் பாத்திரப்படைப்பே ! நமக்குப் பரிச்சயமான அந்த டெர்ரர் வில்லனாகிடும் முன்பான ஒரு மேடை மாயாஜாலக்காரனாய் ; போசெல்லி மெபிஸ்டோவுக்குத் தந்திருப்பது இங்கே ஒரு subtle role தான் ! ஆகையால் அந்தப் பூச்சாண்டி காட்டும் விட்டலாச்சார்யா வில்லனை எதிர்பார்த்திட வேண்டாமே யுவா ?! வசியமறிந்த மொள்ளமாறியாய் அவனது ஆரம்பம் அமைந்திட, போகப் போக அவன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் ? என்பதைத் தான் நடப்பாண்டினில் போசெல்லி புத்தம்புதுக் கதைகளில் மிரட்டலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் - இத்தாலிய வாசகர்கட்கு !! So வில்லனும் விடலை ; நாயகரும் விடலை ; (இந்தக் கதையினில்) அரசியலில் ஆபிரகாமும் விடலை ; பக்கத்துக்குப் பக்கம் மிரட்டும் சித்திரங்கள் ஏற்படுத்தும் ஈர்ப்பும் நம்மை விடலை ; வண்ணத்தில் செய்துள்ள அதகளங்களின் மிரட்சியும் என்னை இன்னும் விடலை !

And 'தல' புராணமும் இன்னமும் விடலை !! 

Becos இந்த ஆல்பத்தில் காத்திருப்பது ஒரு முழுநீள black & white சாகசமுமே - இம்முறை டெக்ஸ் & கார்சன் சகிதம் ! "பருவத்தே கொலை செய்" ஒரு அக்மார்க் ஆக்ஷன் block and நான் பயணிக்க இன்னமும் 65 பக்கங்கள் காத்துள்ளன- கதையின் இறுதியினை தொட்டிட !! ஆனால் அதற்குள்ளாகவே அனல் பறப்பதில் கதையின் tone புரிகிறது ! கதைக்கான ஓவியர் சற்றே ஜாலி ஸ்டைல் கொண்டவர் எனும் போது, வெள்ளிமுடியாரைப் பார்த்தாலே கலாய்க்கத் தான் தோன்றுகிறது & அதை ஜாலியாய்ச் செய்துள்ளோம் கதைக்கு நெருடல்களின்றி ! இதோ - அந்த b & w ஆல்பத்தின் preview கூட :  

அட்டைப்படத்தைப் பொறுத்தவரையிலும் இது ஒரிஜினல் டிசைனின் மீது நமது கோகிலாவின் கைவண்ணம் ! And ஜூனியர் எடிட்டரின் நகாசு வேலைகள் அட்டையை டாலடிக்கச் செய்ய தம் பங்குக்கு உதவியுள்ளன ! In fact இங்கே ஸ்க்ரீனில் பார்ப்பதைக் காட்டிலும், நேரில் செம மிரட்டு மிரட்டுகிறது அட்டைப்படம் ! So பழைய தமிழ் சினிமா வசனம் தான் எனக்கு இந்த நொடியில் ஞாபகத்துக்கு வருகிறது - "சபாஷ்....சரியான போட்டி !!" என்று !! சிகப்புச் சட்டை ஸாகோர் vs மஞ்சச் சட்டை டெக்ஸ் !! May the winner make this a sparkling Deepavali !!

Just curious - இம்மாதத்து இதழ்களுள் உங்கள் வாசிப்பினில் முதலிடம் யாருக்கு இருக்கக்கூடும் guys ? புதியவருக்கா ? சின்னவருக்கா ? 

"பருவத்தே கொலை செய்" இன்னும் காத்துக் கிடைப்பதால் நான் இப்போது நடையைக் கட்டினால் தான் சரிப்படும் ! அதற்கு முன்பாய் சில updates :

1.திருச்சி புத்தக விழா ஆரம்பிச்சாச்சூ & அண்ணாச்சி நமது ஸ்டால் # 127-ல் நமது இதழ்களோடு உங்களுக்காக வெயிட்டிங் !!  Please do drop in Trichites !!

2 .தொடரும் வாரங்களில் காரைக்குடிக்கு பயணிக்கவுள்ளது நமது காமிக்ஸ் கேரவன் ! நமக்குப் பெரிதாகப் பிடிமானங்கள் இல்லாத பகுதி அது ! Fingers crossed - வரவேற்பு எவ்விதம் இருக்கக்கூடுமோ என்று !

3 2023 அட்டவணையில் ஒரு தெறிக்கும் புது ஆக்ஷன் ஹீரோ துண்டு விரித்துள்ளார் - வாய் பிளக்கச் செய்யும் சித்திரங்களுடன் !! And  இன்னொரு தெறிக்க விடும் கிராபிக் நாவலுக்கு உரிமைகள் வாங்கிட முயற்சிகள் on the way !! ரொம்ப...ரொம்ப....I repeat ரொம்ப...ரொம்ப மாறுபட்ட களம் அந்த கி.நா. !! அட்டவணை unveiling-க்கு முன்பாய் அது ஓ.கே. ஆகியிருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு ! 

4 YEAREND ஸ்பெஷல் இதழ்களுக்கான முன்பதிவுகள் செம விறுவிறுப்பு ! ஸாகோரை தீபாவளிக்கு உங்கள் இல்லம் தேடி வரவழைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திட மறந்து விடாதீர்கள் - ப்ளீஸ் !
5 And 2023-ன் க்ளாஸிக் நாயகர்களின் தனித்தடம் SUPREME '60s முன்பதிவுமே தூள் கிளப்பி வருகிறது !! இன்னமும் அந்தச் சந்தாவினில் இணைந்திருக்கா பட்சத்தில் no time like now folks !! 
Bye all...see you around ! மீண்டும் சந்திப்போம் ! Have a fun weekend !

Saturday, September 10, 2022

ஒரு புயலின் கதை !

 நண்பர்களே,

வணக்கம். வயசாகி விட்டதென்பதை உணர்ந்திட கண்ணாடியில் தெரியும் வெள்ளைமுடிகளை முறைத்து முறைத்துப் பார்க்க அவசியமில்லை ; அந்த வெள்ளைக்கற்றைகளை மறைக்கக் கரிச்சட்டிகளுக்குள் தலையை முக்கியெடுக்கும் அவகாசங்கள் சுருங்கிக் கொண்டே செல்வதைக் கணக்கில் கொள்ளவும் தேவையே இல்லை ! மாறாக, கல்யாண சீசனில் வந்து குவியும் அழைப்பிதழ்களின் எண்ணிக்கையிலேயே தெரிந்து விடுகிறது - நம்மள் கி அகவை என்னவென்று ! முன்னெல்லாம் அம்மா-அப்பாவுக்குப் பத்திரிகைகளைத் தந்து விட்டு - "நீங்களும் வந்துடுங்க தம்பி !" என்றபடிக்கே கிளம்பியோரெல்லாம் இப்போது நமக்கென தனியாய் ஒரு கார்டையும் ; 'சித்தப்பு...பெரிப்பு..மாம்ஸ்...மாம்பா...மச்சான்' என்று டிசைன் டிசைனாய்க் கடுப்படித்து விட்டுச் செல்லும் போதே புரிந்துவிடுகிறது - காலச்சக்கரங்களின் சுழற்சி நம்மை எங்கென கொணர்ந்து நிறுத்தியுள்ளதென்பதை ! So முகூர்த்த சீஸனும் துவங்கி, நெட்டுக்கு புதன், வியாழன், வெள்ளி என்று முகூர்த்த நாட்களும் ரவுண்டு கட்டியடிக்க, கல்யாண வீடு ; நிச்சயதார்த்தம் என்று எதெதெற்கோ கிளம்பிப் போய்க்கொண்டே இருந்தது போலாகி விட்டது - செவ்வாய் இரவு முதலே ! So பதிவுப் பக்கமும் சரி, பணிகளின் பக்கமும் சரி, இந்த வாரத்தின் முழுமையிலுமே எட்டிப் பார்த்திட இயலவில்லை ! And காத்திருப்பது தீபாவளி மாதமெனும் போது - டெக்சில் சுமார் 500 பக்கங்களும், ZAGOR-ல் இன்னொரு வண்டியும் வெயிட்டிங் ! So உள்ளுக்குள் லைட்டாய் உதறலோடே பணிகளுக்குள் நேற்றிரவு முதல் புகுந்தேன் - 2 ஹார்ட்கவர் இதழ்களையும் காலத்தில் கரைசேர்த்தாக வேண்டுமே என்று ! 

ZAGOR !! 

போனெல்லியின் இந்த நாயகரை நாம் வாங்கி கணிசமாகவே காலம் ஓடி விட்டது ! ஏதோவொரு கொரோனா லாக்டௌன் சமயத்தினில் வாங்கியிருந்தோம் இவருக்கான உரிமைகளை ! And நடப்பாண்டின் ரெகுலர் அட்டவணைக்குள் - ஒன்று கென்யாவை நுழைத்தாகணும் ; அல்லது ஸாகோரை புகுத்திடணும் என்றதொரு இக்கட்டு முன்நின்றது - பட்ஜெட்டின் காரணமாய் !  காத்திருப்புப் பட்டியலில் "கென்யா" இன்னமுமே சீனியர் என்பதால் அட்டவணைக்குள் துண்டை விரிக்க அது முந்திக் கொண்டது & போனெலியின் இந்தப் புது வரவு இதோ - காத்திருக்கும் இந்த அக்டோபர் வரையிலும் தேவுடு காக்க வேண்டிப் போனது !! நிஜத்தைச் சொல்வதானால், ஸாகோரின் சாகசங்களை  கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாய்ப் பராக்குப் பார்த்து வந்திருந்த போதிலும், அவரை நமது அணிவகுப்புக்குள் கொண்டு வர பெரிதாய் ஒரு ஆர்வமோ, முனைப்போ தோன்றியதில்லை ! "இந்த மனுஷன் கௌபாய் மாதியும் தெரியக் காணோம் ; டார்ஜான் மாதிரியும் தோன்றக் காணோம் - இவரை எந்தக் கணக்கில் சேர்ப்பது ?" என்ற நினைப்பே காலமாய் ஓங்கியிருந்தது ! மேஜிக் விண்ட் போல் இந்தச் சிகப்பு பனியன்காரரின் சமாச்சாரத்திலும் சாத்து வாங்கிடப்படாதே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருந்தது ! ஆபத்பாந்தவர்களாய் வந்தோர், சுமார் ஒன்பதாயிரம்  மைல்கள் தொலைவிலிருக்கும் முகமறியா பதிப்பகத்தினர் ! இங்கிலாந்தின் CINEBOOK பதிப்பகமானது பிராங்கோ-பெல்ஜியப் பெருங்கடலுக்குள் மூழ்கி முத்துக்கள் பலவற்றைச் சேகரித்து அற்புதமான ஆங்கில மொழியாக்கத்துடன் வெளியிடத் தொடங்கியது நமக்கு எத்தனை சகாயங்களை செய்துள்ளதென்பதை க்ரீன் மேனர் ஆல்பங்களும் சரி ; லார்கோ ; XIII ; XIII மர்மம் ; கிளிப்டன் ஆல்பங்களும் சரி - கதை கதையாய்ச் சொல்லும் ! என்னதான் நாமிங்கே பிரெஞ்சு மொழிபெயர்ப்பினைத் தெளிவாகச் செய்திட முனைந்தாலும், பிரெஞ்சைத்  தாய்மொழியாகக்  கொண்டோரோடு போட்டி போடவாவது முடியுமா ? அவர்களது செமத்தியான ஆங்கிலப் படைப்புகள் நமக்கு என்ன மாதிரியாய் உதவியுள்ளனவோ, அதே பாணியில் இத்தாலிய நல்முத்துக்களைத் தேர்வு செய்து அழகான மாலையாக்கி வரும் அமெரிக்க EPICENTER காமிக்ஸ் பதிப்பகமானதும் உதவிடக்கூடும் என்பதை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் உணர்ந்தேன் ! டைலன் டாக் ; டெக்ஸ் ; ஸாகோர் என போனெல்லியின் cult ஹீரோக்களை அட்டகாசத் தரத்தில் இங்கிலீஷில் அவர்கள் வெளியிடத் துவங்கியிருக்க, நமது ஆர்வ மீட்டர்களும் மெது மெதுவாய் உயரத்துவங்கின ! கூடவே கொஞ்சம் பயமுமே !! பயம் because - மேஜிக் விண்ட் தொடருக்குள் நான் தலைநுழைக்கத்  துணிந்ததுமே இதே அமெரிக்கப் பதிப்பகத்தின் ஆங்கில மே.வி. ஆல்பங்களைப் பார்த்துத் தான் ! So 6 பாக ஆல்பமாய் ஸாகோர் அங்கே அறிவிக்கப்பட்ட போது பெருசாய் நான் சபலம் கொள்ளவில்லை ! 'வரட்டும்...எப்படி இருக்குன்னு பார்க்கலாம் !' என்பதே எனது ஆரம்ப ரியாக்ஷன் !  

ஸாகோர் மீதான எனது மித ஆர்வத்துக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது !! டெக்ஸ் தொடரைப் போலவே இதுவும் செம நீளமான ரயில்பெட்டி !  1961-ல் துவக்கம் கண்டுள்ள இந்த நாயகரின் சாகஸங்களின் எண்ணிக்கை 700-க்கு அதிகம் ! ஆனால் டெக்ஸ் வில்லரில் எவ்வித அறிமுகங்களும் இல்லாது, தொடரின் நடுவாக்கில் ஏதோவொரு கதையினை in random தேர்வு செய்து, 'பப்பரக்கா' என்று புகுந்திட்ட போதிலும், யாருக்கும் எவ்வித நெருடல்களோ, குழப்பங்களோ இல்லாது போனது போல இங்கே ஸாகோருக்கும் சாத்தியமாகிடாதென்ற பயம் எனக்குள் கணிசம் ! இந்த நாயகருக்கு நிச்சயமாய் ஒரு flashback இருக்கும் ; அதைச் சொல்லாது, குறுக்கால ஏதோவொரு கதையிலிருந்து நாம் ஆரம்பித்து வைத்தால் சப்பல்ஸ் பிய்வது சர்வ நிச்சயம் என்பதை ரொம்பச் சீக்கிரமே உணர்ந்திருந்தேன் ! ஆனால் ZAGOR-ன்  அந்த 1960's ஆரம்ப ஆல்பங்களின் ஆர்ட் ஒர்க், ரொம்பவே தியாகராஜ பாகவதர் புராதனத்தோடு காட்சி தந்து மிரட்டிக் கொண்டிருந்தது ! பற்றாக்குறைக்கு அந்நாட்களின் அந்த ஜாகஜங்களில், மாங்காய் நறுக்கும் கத்திகளைக் கொண்டு டைனோசர் சைசிலான முதலைகளோடு ஸாகோர் மல்லுக்கட்டுவதும், சப்பட்டையான அவரது டிரேட்மார்க் கோடாரியைக் கொண்டு பீம்பாய்களை வீழ்த்துவதையும் லைட்டான 'கெக்கேபிக்கே' சகிதமே பார்க்கத் தோன்றியது ! So அமெரிக்காவில் Epicenter பதிப்பகமானது ஸாகோரைக் கலரில் களமிறக்கும் தகவல் காதில் விழுந்த சமயத்தில் கூட, பழைய பஞ்சாங்கத்துக்கு மேக்கப் போடப்பட்டிருக்கும் என்றே நினைத்திருந்தேன் ! ஆனால்...ஆனால்...அவர்களது முன்னோட்டங்களைப் பார்க்கப் பார்க்க கடைவாயெல்லாம் ஜொள்ளு பொங்கத் துவங்கியது - becos அங்கே பிதாமகர் போனெல்லியின் பெயரோடு M.BOSELLI என்றொரு பெயருமே கடேசியில் தென்பட்டது !! 

இன்னுமொரு 20 ஆண்டுகளுக்குப் பிற்பாடு போனெல்லியின் வரலாற்றை ஆய்வு செய்தொமெனில், "போசெலி" எனும் இந்தப் படைப்புலக அசுரரின் பங்களிப்பின் முழுப்பரிமாணமும் சிறுகச் சிறுகப் புரிபடும் என்பேன் ! லேசாய்ப் பேஸ்த்தடித்துப் போய், ஒரே மாதிரியான வட்டங்களுக்குள் உழன்று வந்த பல போனெல்லி flagship நாயகர்களுக்குப் புதுசாய் ஒரு இலக்கும், அழகாய் ஒரு புனர்ஜென்மமும் தந்திருப்பது நிச்சயமாய்ப் பேசப்படும் ! So போசெல்லி இந்த ஸாகோர் மறுமலர்ச்சியினில் பங்கேற்கிறார் என்றாலே புராதனங்களுக்கு இடமிராது என்ற தெம்பு பிறந்தது !! ஒட்டு மொத்தமாகவே கதையினை இந்நாட்களின் பாணிகளுக்கேற்ப மாற்றியமைத்து ; முற்றிலும் புதுசாய் சித்திரங்கள் ; ஸ்கிரிப்ட் ; கலரிங் என்று போசெல்லி மேற்பார்வையில் பிரித்து மேய்ந்திருப்பதுமே தெரிய வந்த போது, இந்தத் தொடரினை தமிழில் முயற்சிக்கத் தடையென நான் எண்ணியிருந்த சமாச்சாரங்கள் சகலமுமே ஒற்றை நொடியில் காணாது போயிருப்பதையும் உணர்ந்தேன் ! தொடர்ந்த நாட்களில் ஒரு 448 பக்க மெகா கலர் ஆல்பத்தினில் ஸாகோரின் முன்கதை flashback + ஒரு சாகசமும் இடம்பிடிக்க, நெட்டில் செமத்தியான reviews ! அப்புறமென்ன - 'ரைட்ஸ் கோரிடும் படலம்' சிறப்பாய் அரங்கேறியது & ஸாகோரின் முழு flashback சார்ந்த 6 அத்தியாயங்களை வாங்கியிருந்தோம் ! And நமது 2022 அட்டவணையில் அழகாய் போஸ் கொடுத்து நின்றார் மனுஷன் !  

இதுவரையிலுமானது ஸாகோர் முன்கதைப்படலம் ! தொடரவுள்ளது பின்கதைப் பேஸ்த்தடித்த படலம் !

இங்கிலீஷில் ஸாகோர் வெளிவந்திருந்தாலுமே, நாம் உரிமைகளை வாங்கிய பிற்பாடு நமக்கு தரப்பட்டது இத்தாலிய ஒரிஜினல்கள் தான் ! So அவற்றை வழக்கம் போல இங்கிலீஷுக்கு மொழிபெயர்த்து வாங்கி கருணையானந்தம் அங்கிளிடம் எழுத அனுப்பி விட்டேன் ! நேர்கோட்டுக் கதையே and ஸாகோர் இதன் முழுமையிலும் ஒரு வளர்ந்து வரும் நாயகராகவே வலம் வருவார் எனும் போது பன்ச் -கின்ச் பெருசாய் அவசியப்படாதென்று எண்ணியிருந்தேன் ! By and large எனது அனுமானத்தில் பிழைகளில்லை & அவரும் பணிகளைத் துவக்கியிருந்தார் ! ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில் என்னை போனில் அழைத்தவர் - "மொத்தம் 6 பாகம் இருக்குப்பா ; ஆனா 4 பாகங்களில் அறிமுக படலம் முடிஞ்சா மாதிரி தென்படுது ! அத்தோடவே மங்களம் போட்டுப்புடலாமா - முதல் புக்குக்கு ?" என்று கேட்டார் ! எப்போதுமே விலைகளைக் குறைக்க ஏதேனுமொரு பொந்து தென்பட்டால் அதனைத் துளை போட்டு மெட்ரோ ரெயில் விட வாய்ப்பிருக்கா ? என்று பார்க்கும் புத்தி கொண்ட எனக்கு அந்தத் தகவல் தேனாய் இனித்தது ! "ஓ ..பேஷாய் முடிச்சிடலாம் ! அடுத்த 2 பாகங்களை 2023 ஆரம்பத்திலே இன்னொரு புக்காப் போட்டுப்புடலாம் !" என்று சொல்லிய கையோடு - ஸாகோர்  : "4 அத்தியாயங்கள் - 240 பக்கங்கள் - ரூ.350" என்று விளம்பரத்தை ரெடி செஞ்சாச்சு ! 

கதைகளுக்கு DTP வேலைகள் ஏற்கனவே செம ஸ்பீடாய் நிறைவேறியிருக்க, என் மேஜையில் குவிந்து கிடந்த பக்கங்களுக்குள்   வெள்ளியிரவு முதலாய் நானும் பேய் ஸ்பீடில் எடிட்டிங்கில் ஓட்டமெடுக்க ஆரம்பித்தேன் ! And சனி காலையில், 3 அத்தியாயங்களை அவசியமாகிய திருத்தங்கள் ; revisions சகிதம் எடிட் செய்து ஆபீசுக்கு அனுப்பிய போது எனக்குள் லைட்டாய் ஒரு நெருடல் ! கதை செம அட்டகாசமாய் பயணமாகிறது ஓ.கே. ; ஸாகோரின்  துவக்கப்புள்ளிகள் ஒவ்வொன்றையுமே ஸ்பஷ்டமாய் போசெல்லி புரிய வைத்து வருகிறார் ஓ.கே.....ஆனால் முக்கால் கிணற்றைத் தாண்டி விட்டுள்ள நிலையிலும், கதையின் இறுதியினை நெருங்கி விட்டது  போலான உணர்வே வர மாட்டேங்குதே ?!! என்பதே அந்த நெருடலாக இருந்தது ! "சரி, பர பரவென்று 4-ம் பாகத்தை படிச்சிப்புடலாம்" என்றபடிக்கே உப்மாவை விழுங்கியபடியே வேக வேகமாய் காலையில்  வாசித்தால், கொழ கொழவென ஒரு உணர்வு - and அது உப்மாவின் கைங்கர்யமே அல்ல !  இங்கே முற்றுப்புள்ளி போடலாமென்ற எண்ணத்துக்கு அங்கிள் எவ்விதம் வந்தாரோ, கிஞ்சித்தும் புரியவில்லை ; செம டைட்டானதொரு தருணத்தில் தான் பாகம் 4-ஐ நிறைவு செய்திருந்தனர் ! பற்றாக்குறைக்கு கதையின் ஒரு முக்கிய மனிதன் சாய்க்கப்பட்டிருக்கும் நொடியும் அது ! So அந்த இலக்கினில் இந்தப் புதுக்கோலத்தை நிறைவு செய்தால் நூற்றுக்கு நூறு சுகப்படாது என்பது புரிந்தது ! And எல்லாவற்றிற்கும் மேலாக ZAGOR என்ற பெயர் நாயகனுக்குக் கிட்டுவது ஏன் ? எவ்விதம் ? என்ற கேள்விகளுக்குமே அத்தியாயம் 4-ன் நிறைவினில் பதிலில்லை ! 

'செத்தாண்டா சேகரு !!' என்றபடிக்கே கொஞ்ச நேரத்துக்கு தலையை சொறிந்தேன் - என்ன செய்வதென்றே கேள்வியோடு ! கதையின் முழுமையையும் நானே சரி பார்க்க மெனெக்கெட்டிராதது எனது பிழை என்பது புரிந்தது ! இதனில் என்னைத் தவிர்த்து வேறு யாரையும் குறை சொல்வதில் அர்த்தமே கிடையாது தான் ! ஆபீசுக்கு ஓட்டமாய் ஓடிப் போய் பாகம்ஸ் 5 & 6 கோப்புகளை எடுத்துப் பார்த்தேன் - நதி போல சீராய் கதை ஓட்டமெடுத்து, ஒரு ஆர்ப்பரிக்கும் க்ளைமாக்சில் நாயகனுக்கான  பெயர்சூட்டலுடன் நிறைவுறுவது தெரிந்தது !  வேறு வழியே இல்லை - ஆறு அத்தியாயங்களுடன் ஒரே புக்காய் வெளிவந்தாலொழிய ஒரு star in the making சொதப்பிடவே வாய்ப்புகள் ஜாஸ்தி என்பது நெற்றியில் எழுதியிருந்தது ! ரைட்டு....உங்களிடம் உள்ளதைச் சொல்லி, மன்னிப்புக் கோரிய கையோடு, திட்டமிடலை மாற்றியமைப்பதைத் தாண்டி வேறு மார்க்கமில்லை என்ற writing was very much on the wall !! உங்களிடம் சாத்து வாங்குவது எனக்கொன்றும் புதிதில்லை என்றாலும் இந்தச் சொதப்பல் ரொம்பவே சங்கடமூட்டும் அனுபவம் என்பதை மறுப்பதற்கில்லை ! Sorry folks ....மாறிடும் திட்டமிடல் கீழ்க்கண்டவாறு இருந்திடும் :

  • **YEAR-END ஸ்பெஷல்ஸ் - மொத்தம் இரண்டே மெகா இதழ்கள் தான் !
  • **ZAGOR - 360 பக்கங்கள் ; 6 அத்தியாயங்கள் ; முழு வண்ணம் ; ஹார்ட் கவர் !
  • **மேகி கேரிசன் பாகம் 2 - நடப்பாண்டினில் இடம் பிடித்திடாது !
  • **உயிரைத் தேடி - எவ்வித மாற்றங்களுமின்றி ரூ.200 

So முன்பதிவுத் தொகை ரூ.700 (தமிழகத்தினுள்) என்றாகிறது ! 

ஆனால் - ஏற்கனவே ரூ.650 அனுப்பியுள்ள நண்பர்கள் இதற்கென மீண்டும் மெனெக்கெடத் தேவையிராது ! 

அவர்களுக்கு புக்ஸ் இரண்டுமே ரெடியான கையோடு அனுப்பிடுவோம் ! இனி முன்பதிவு செய்திடவிருக்கும் நண்பர்கள் மாத்திரம் ரூ.50 கூடுதலாய் அனுப்பிட வேண்டியிருக்கும் !! Once again deep apologies all !!! 🙏🙏


திடு திடுப்பென இன்னொரு 120 பக்க மொழிபெயர்ப்பும், அது சார்ந்த பணிகளும் இந்த நொடியினில் முளைத்து நிற்பதால், அதனுள் புகுந்திட I am இடத்தைக் காலி பண்ணிங் now !  கிளம்பும் முன்பாய் இதோ - ஸாகோரின் preview !! கலரில், புது பாணியில் செமத்தியாய் (எனக்கு) ரசிக்க முடிகிறது இந்த நாயகரை  !! இதழ் வெளியான பிற்பாடு உங்களுக்கும் இவர் ரசிக்கும் பட்சத்தில், நம் முன்னே ஒரு சூப்பர் இடியாப்பச் சிக்கல் காத்திருக்கும் - 2023 அட்டவணைக்குள் இந்த மனுஷனை எவ்விதம் நுழைப்பதென்று ?!! Phew !!! அட்டவணை எல்லாமே ரெடி என்று பெருமூச்சு விட்டு ரொம்ப நாழியெல்லாம் ஆகவில்லை தான் !! புனித மனிடோ & ஒடின் - வழி காட்டுவீர்களாக !!



Before I sign out, நமது காமிக்ஸ் கேரவன் மலைக்கோட்டை மாநகரை நோக்கி செப்டம்பர் 16-க்குப் பயணமாகிறதென்ற சந்தோஷத் தகவல் ! நீண்டதொரு இடைவெளிக்குப் பின்பாய் திருச்சிக்குள் புகுந்திடவுள்ளோம் ! Fingers crossed !! மீண்டும் சந்திப்போம் ; see you around all !!


Monday, September 05, 2022

நாடி புடிக்கலாம் வாங்க..!

 நண்பர்களே,

வணக்கம். வெத்திலைப்பொட்டி மாதிரியொரு டப்பியைக் கையில் ஏந்தியபடிக்கே, நெற்றி முழுக்கப் பட்டையைப் போட்டுக்கினு. குடுமியோட ஒரு பெருசு வரும்....!! "வைத்தியர் ஐயா...! அம்மிணி பொசுக்குன்னு மயக்கம் போட்டுப்புடிச்சி..! இன்னான்னு சித்தே பாத்துச் சொல்லுங்க !" என்று நைனாக்கார கேரக்டர் புலம்பும் !.....அம்மணியின் நாடியை புடிச்சுக்கினு வைத்தியர்வாளும் ஒண்ணரை நிமிஷம் மூஞ்சை சீரியஸா வைச்சுக்கினு இருக்கும்....! அப்புறமா - "எல்லாம் நல்ல விஷயம் தான் ; நீங்க தாத்தாவாகப் போறீங்கன்னு !" நைனாகிட்டே சிரிச்சிக்கினே சொல்லுவாரு ! "அடப்பாவி மவளே !!" என்று நைனா கொந்தளிக்கும் போது தான் தெரியும் - வைத்தியர் சொல்லிப்போட்டது அந்தக் குடும்பத்துக்கு சந்தோஷம் தரவல்ல சேதியல்ல என்பது ! அந்த வைத்தி இடத்தில நம்மளை வைச்சுக்கோங்க....(குடுமி போட தோதுப்படாதென்பதையெல்லாம் பெருசாக்கிக்காதீங்க !) உங்க ரசனைகளெனும் நாடிய புடிச்சி - "ஆகாகா...நல்ல சேதி தான்....கி.நா.குவியலா வர போகுது!"ன்னு சொல்லி விட்டு ஜாலியாய் நடையைக் கட்டியிருப்பேன் - உங்கள் முகங்கள் பேஸ்தடித்து அஷ்டகோணலாகியிருப்பது தெரியாமலே ! 

இதோ அத்தகைய சொதப்பல் இந்தவாட்டி just miss  - போன பதிவின் உபயத்தினில் ! Of course - இங்கே கருத்துச் சொன்ன 75+ நண்பர்கள் நமது வாசக வட்டத்தின் முழு பிரதிபலிப்பாகிட இயலாது தான் ; ஆனால் கோடிக்கணக்கான ஜனம் வாக்களிக்கும் தேர்தல்களின் முடிவுகளையே கணிக்க முயலும் exit polls கூட வெறும் ஆயிரம்+ அபிப்பிராயங்களின் அடிப்படையில் தானே இயங்கிடுகின்றன ? So இந்தப் பருக்கைகளை, உலையில் கொதிக்கும் சோற்றுச் சட்டியின் sample ஆகப் பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது ! 

ப்ளூகோட்ஸ் பட்டாளமா ? மேக் & ஜாக்கா ? என்று வினவியிருந்தேன் ! எனது பர்சனல் favorite மேக் & ஜாக் தான் எனும் போது - "ப்ளூ கோட்ஸ் தொடரின் அந்த dark humor வாசகர்களுக்கு லயிக்காது....so அந்த சிகாகோ டிடெக்டிவ் ஜோடியோடே சவாரி செய்யலாம்" என்று  தான் நிச்சயம் தீர்மானித்திருப்பேன் ! ஆனால்....ஆனால்...உங்களின் வாக்களிப்பைப் பார்த்தால் : 

  • ப்ளூ கோட்ஸ் score செய்திருப்பது 30.5 மதிப்பெண்கள் ! 
  • மேக் & ஜாக் ஜோடியோ 11.5 மட்டுமே !!  

கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஓட்டுக்கள் ஸ்கூபி & ரூபி ஜோடிக்கு !! "நான் அப்டியே ஷாக்காகிட்டேன் " என்றெல்லாம் ஓவர் பில்டப் தரமாட்டேன் தான் ; ஆனால் நாடிபிடிக்கும் கலையில் இன்னும் நிறையவே தூரம் பயணிக்க வேண்டுமென்பதை புரிந்திருக்கிறேன் !

Same goes for மர்ம மனிதன் மார்ட்டின் too ! இவரை உள்ளுக்குள் நுழைக்காவிட்டால் சுனாமி சாத்தி விடும் ; வெள்ளம் வெளுத்துவிடும்...பூகம்பம் புரட்டி எடுத்து விடும் - என்ற ரீதியினில் உள்ளாற எண்ணியிருந்தேன், இத்தனை நாட்களாய் ! ஆனால்...ஆனால்... "தெய்வமே....நீ நல்ல இருப்பே...அவருக்கொரு தற்காலிக ஒய்வு கொடு !" என்ற குரல்களே உரத்துக் கேட்டுள்ளன !!

  • மார்ட்டின் வேணும் என்போர் : 18 
  • மார்ட்டின் வேணாம் என்போர் : 22 

Again ராஜதந்திரங்களில் ராவோடு ராவாக, ஒரு ரகசிய rush course கற்றாக வேண்டுமென்பது புரிகிறது !! தவிர, ஒவ்வொரு ஆண்டிலும் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன ? ரசிப்பது என்ன ? பெருசாய்க் கருதாதது என்ன ? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் have been an eye-opener to me ! என் கோலிக்குண்டுக் கண்களையே அகல விரியச் செய்ய உங்கள் எண்ணப்பகிரல்களுக்குச் சாத்தியமாகியுள்ளது எனில் - அவற்றின் சாரம் எத்தகையதென்று பார்த்துக் கொள்ளுங்களேன் ! கொஞ்சமே கொஞ்சமாய் பதிலளிக்க நீங்கள் மெனெக்கெட்டால் அதன் பலன் எவ்விதமிருக்கும் என்பதை வரும் அக்டோபர் 30-ம் தேதி நிச்சயம் பார்க்கத் தான் போகிறீர்கள் guys ! Thanks a ton !!

Bye for now ...செப்டெம்பர் அலசல்கள் தொடரட்டுமே !! And SUPREME '60s + YEAR END SPECIALS-களுக்கான முன்பதிவுகளையும் செய்திடலாமே - ப்ளீஸ் ?

நண்பர் கிரியின் கைவண்ணம்...! 

And இது - நண்பர் ஆதியின் கைவண்ணம் - for the காரிகன் cover ! அந்த எழுத்துருவும், header பேனரும் சூப்பராக உள்ளதாக எனக்குப்பட்டது ; உங்களுக்கு  guys ? 

Saturday, September 03, 2022

மீண்டும் தருமி !

 நண்பர்ர்ர்ர்ர்களே,

வணக்கம். கொஞ்சம் அழுத்தம் சாஸ்தியா இருக்கேன்னு பாக்குறீகளா...? மரியாத..மரியாத தான் !! குண்டர் பில்லிக்கும் ; விச்சர்-கிச்சருக்கும் ரேஞ் கூடியிருக்கும் போது, இந்த வண்டியை இத்தினி காலம் ஓட உதவி வரும் உங்களுக்குமே சித்தே ஒஸ்தியாய் மருவாதி வழங்குவதில் தப்பில்லையே ? அதுவும் SUPREME '60s முன்பதிவுகளுக்கு ரவுண்டு கட்டி அடித்து வரும் க்ளாஸிக் காதலர்ர்ர்ர்ர்களுக்கு ஒரு மிடறு தூக்கலாய் ! இந்த பழசுகளின் மீதான பிடிவாதமான காதல் long run-ல் நம்மை எங்கே இட்டுச் செல்லுமோ, சொல்லத் தெரியலை ; ஆனால் இந்த நொடியில், பிடித்து நின்ற சக்கரங்களுக்கு அழகாய் க்ரீஸ் போட்டு சைக்கிளை கொஞ்சம் இலகுவாய் மிதிக்க இந்தப் பால்யக் காதல்களின் வெளிப்பாடு உதவி வருகிறது ! இதே உத்வேகம் ரெகுலர் சந்தா தடத்தினிலும் தொடர புனித ஒடின் + மனிடோ உதவிடுவார்களாக !!  

செப்டெம்பர் இதழ்கள் அலசல்களுக்கு உட்பட வேண்டிய தருணமிது என்பதால் இந்த வாரத்தில் தளம் பிசியாக இருக்க வேண்டியது உங்களின் உபயங்களில் ! So இந்த வாரத்தினில் லொட லொடவென்று நான் ஓட்டப்போவதில்லை ! மாறாக, அட்டவணை சார்ந்த final set of questions மாத்திரமே என்வசம் ! இவற்றிற்குப் பதில் சொல்ல நண்பர்கள் சற்றே மெனெக்கெட்டால் என் பணி கொஞ்சம் இலகுவாகிடும் !  So, here we go :

1.ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் நீங்கள் முதலில் எதிர்பார்ப்பது எதை ?  

இந்தக் கேள்விக்கான உங்களின் பதில்கள் தெரிய வந்தால்,  எதிர்பார்ப்புகளுக்கு இதுவரைக்கும் நான் எந்தமட்டுக்கு நியாயம் செய்து வந்திருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்ளவும், on the way forward என்ன செய்தால் தேவலாம் ? என்பதை உணர்ந்து கொள்ளவும் உதவிடும் ! So கொஞ்சமாய் யோசித்து, தெளிவான பதில்ஸ் ப்ளீஸ் ?

2.எனக்கு மண்டைக்குள் ஒரு குறுகுறுப்பு சதா நேரமும் ஓடிக்கொண்டே இருப்பது வாடிக்கை - ஒவ்வொரு அட்டவணையிலும் புது ஹீரோக்கள் இருந்தாக வேண்டுமென்று !! அவ்விதம் இருந்தால் தான் உங்களின் உற்சாக மீட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்திடும் என்பதாய் எனக்குள் ஒரு நினைப்பு ! அது நெசம் தானுங்களா - இல்லாங்காட்டி புதியவர்கள் பற்றிய அறிவிப்புகள் உங்களை அப்டி ஒண்ணும் குஜாலாக்குவதில்லீங்களா ? 

Again மனம் திறந்த பதில்ஸ் ப்ளீஸ் ?

3.கழுத்து தேயும் என்பது அனுபவத்தில் தெரியும் தான் ; ஆனால் - கழுதை தேயுமா - தேயாதா ? என்றெல்லாம் பெருசாய் ஞானம் இல்லீங்கோ ! So கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பாகவோ, சிற்றெறும்பாகவோ ஆவதைப் பார்த்ததில்லை தான் ! ஆனால் நமது கார்ட்டூன் ஜானரின் வலு மெய்யாலுமே கட்டெறும்பாகி இருப்பதை பார்க்கத் தான் செய்கிறேன் ! எனது கேள்வி அந்தக் கார்ட்டூன் உலகினில்  உலாற்றி வரும் நாலே நாலு பாவப்பட்ட ஜீவன்களைப் பற்றியது :

3 a)ஒரேயொரு ஸ்லாட் தான் கீது கைவசம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் .....அந்த ஸ்லாட்டுக்கோசரம் அடிச்சிப்பது ப்ளூகோட் பட்டாளமும், மேக் & ஜாக் ஜோடியெனில் உங்களின் வோட்டு யாருக்கு விழும் ?

3 b) ப்ளூ கோட் பட்டாளமோ / மேக் & ஜாக்கோ - இந்தப் போட்டியினில் யாரோ ஒருத்தர் கெலித்து, அந்த இடத்துக்குத் துண்டு போட்டு வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ; ஆனால் அங்கன, அந்த ஸ்லாட்டை லக்கி லூக்கின் இரண்டாவது ஆல்பத்துக்காகத் தாரை வார்த்து விட்டால் எவ்விதமிருக்கும் ? Variety முக்கியமா ? அல்லது கார்ட்டூன்களின் 'தல' கூடுதலாயொரு இடத்தில கடை விரிப்பதே சுகமா ? 



4) "பழையன கழிதல், புதியன புகுதல்" கோட்டாவில் நடப்பாண்டினில் உள்ள நாயக / நாயகியரில் யாரைக் கழற்றி விட்டால் நீங்கள் மகிழ்வீர்கள் ? 

5) ஒரு செம பெரிய ஈரோ ....but சமீபமாய் சறுக்கிங்ஸ் ...பெருங்காய டப்பியின் வாசனையிலேயே நாட்களை நகர்த்தி வருகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! இன்னொரு ஈரோவோ பெரிய பருப்பெல்லாம் கிடையாது ; ஆனால் முறுக்கான சரக்குக்குச் சொந்தக்காரர் ! இப்போ என்னிடத்தில் நீங்கள் இருந்தால் யார் பக்கம் தராசைச் சாய அனுமதிப்பீர்கள் ? - ஒரு காலத்து ஜாம்பவானின் சமகாலத்து படைப்பின் திக்கிலா ? அல்லது வலு குறைவாகினும், விறுவிறுப்பில் உத்திரவாதம் தரும் படைப்பின் திசையிலா ?

6) விலையேற்றம்....கணிசமான விலையேற்றம் தவிர்க்கவே இயலா பூதமாய்ப் பயமுறுத்தி வருகிறது ! On an average - சந்தாவினில் 10%-ஐ நிச்சயமாய் விலைவாசி உயர்வே கபளீகரம் செய்து விடுமென்று படுகிறது ! ஐஞ்சோ, பத்தோ ஏற்றினால் சமாளிக்கலாமென்ற காலமெல்லாம் போயிண்டே ...போயே போச்சு ! இந்த நொடியில் இந்த ஆந்தையனின் இடத்தில நீங்கள் இருப்பின் என்ன செய்வீர்கள் ?

  1. Bite the bullet ...அவசியமாகிடும் விலையேற்றத்தைச் செய்வேன் !
  2. "சைஸ் குறைப்பு" என்ற ஆயுதத்தை வெளியே உருவி எடுப்பேன் ! 
  3. அல்லாருக்கும் போனிலேயே இனிமே கதை சொல்ல டிரெய்னிங் எடுத்துப்பேன் ! 

(தயை கூர்ந்து இக்கட, "ஆர்ட் பேப்பர் வாணாம் ; செலவு குறையும்லே" என்ற பரிந்துரைகள் வாணாமே ப்ளீஸ் - சாதாத் தாள்களும், ஆர்ட் பேப்பருக்கு சளைக்காது tough தரும் விலைகளில் தான் உள்ளன !! நியூஸ்பிரிண்ட் மட்டுமே விலைகுறைப்பிற்கு உதவிடக்கூடும். )

7)மர்ம மனிதன் மார்ட்டின் கதைகளில் சுவாரஸ்யமான தேர்வுகள் செய்வதற்குள் பெண்டு நிமிர்ந்து விடுகிறது ! நடப்பாண்டுக்கென தேர்வு செய்துள்ள கதைக்குள் புகுந்தால் பேஸ்தடித்தே வெளியேறிய பாடு ! கடைசியாய் மார்ட்டின் தந்த மெகா hit - அந்தப் பூச்சிகள் படையெடுப்பு சார்ந்த ஆல்பம் என்றே எனது ஞாபகம் ! "மெல்லத் திறந்தது கதவு" கூட ஹிட் தான் ; but கண்ணை அகல அகல விரித்து, இருட்டிலேயே எடுக்கப்பட்ட படத்தை பார்த்துப் புரிந்து கொள்ள பிரயத்தனம் செய்ததே இப்போது வரைக்கும் என்னில் தங்கியுள்ள நினைவுகள் ! So மார்டினுக்கு ஒரு தற்காலிக break தந்தால்,  மாநிலத்தில் மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, அரைபாடி லாரியெல்லாம் ஓடாமல் ஸ்தம்பித்து நிற்க நேரிடுமா ? வேப்பிலைகளைக் கோர்க்க ஆரம்பித்து, தலீவரின் பட்டாப்பெட்டிகளை கண்ணுக்குத் தெரியாமல் புதைக்க ஆரம்பித்து விடுவீர்களா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?

8)லார்கோ தொடரில் ஜாம்பவான் வான் ஹாம் இல்லையென்று ஆகிப் போச்சு ; இப்போதைய தொடரில் அந்தப் பழைய fire தொடர்ந்திடுமா - தெரியவில்லை !

  • ஷெல்டர் (மருவாதி) தொடர் ஓவர் !
  • டிரெண்ட் தொடர் - கடைசி ஆல்பம் மட்டுமே பெண்டிங் !
  • டைகர்ர்ர்ர் (again மருவாதி) : நெடும் ஓய்வினில் உள்ளார் !
  • ரிப்போர்ட்டர் ஜானி : 1 ஸ்லாட்டுக்கு ஓ.கே. நாயகராகவே தொடர்கிறார் !
  • ட்யுராங்கோ : ஒற்றை ஆல்பமே பாக்கி !

ஒரு big name ஹீரோ பஞ்சமுள்ள இந்த நொடியினில் தோர்கல் அந்த இடத்தினை இட்டு நிரப்பும் வல்லமை கொண்டவரா ? Of course 'தல' ரேஞ்சுக்கெல்லாம் சான்ஸ் இல்லை தான் ; ஆனால் at least நமது கலர் இதழ்களின் பிரிவினிலாவது தோர்கலை முன்னிலைப்படுத்துவது ஓ.கே. ஆகிடுமா ? அல்லது அவர் அத்தனை பெரிய அப்பாடக்கரெல்லாம் இல்லையா ? 

Honest answers ப்ளீஸ் ?

இவற்றிற்கு உங்களின் பதில்கள் கிட்டி, அவற்றை நான் உள்வாங்கிச் செயல்பட மட்டும் நேரம் எடுத்துக் கொண்டால் 2023 அட்டவணையினை அச்சுக்கு அனுப்பி விடுவேன் ! So get cracking please folks !!

Bye all...செப்டெம்பர் அலசல்களை ஆரம்பிக்கலாமே - முழு வீச்சில் ! டாக்டர் ஹரிஹரன் அவர்கள் வீடியோ விமர்சனத்தினை அனுப்பியுள்ளார் ; அதனை நாளைய பொழுது upload செய்திட்டு சொல்கிறேன் !! See you around & have a fun weekend !!