Monday, May 24, 2021

ஒரு 'மிடிலே' பதிவு !!

 நண்பர்களே,

வணக்கம். அசோக மன்னர் எக்கச்சக்கமாய் மரம் நட்டினார் என்று பள்ளிக்கூடத்தில் வரலாற்றுப் பாடங்களில் சொல்லித் தந்தார்கள் ! ஆனால் அங்கே சொல்லாது விட்டுப் போனது - அவருமே அந்நாட்களில் ஏதாச்சும் காமிக்ஸ் போடுபவராக இருந்து ; அவருமே ஒரு ஸ்பெஷல் இதழை உருவாக்கும் முனைப்பில் மண்டை காய, தெருத்தெருவாக  மரம்  நட்டிச் சென்ற ரகசியத்தையே  என்றே நினைக்கிறேன் ! இந்த "பழையவர்களுடனான ஆடலும்-பாடலும் போட்டே தீரணும்" பஞ்சாயத்துக்கள் இப்போதைக்குள் ஓயப்போவதில்லை எனும் போது நானும் ஆலமரம், அரசமரம், புங்கைமரம், வில்வமரம் என்று நட்டிய கையோடு, இறுதியில் ஏதாச்சும் முருங்கை மரத்தில் வேதாளமாட்டம் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறேன் என்றே தோன்றுகிறது ! 

கிரைண்டரே சலித்துப் போகும் அளவுக்குச் சுற்றித் தள்ளிய அதே மாவை கொண்டே நீ தோசை சுட்டாலே ஆச்சு ; இல்லாங்காட்டி தெய்வ குத்தமாகிப்புடும் ; இல்லாங்காட்டி நாங்க அண்டராயரே போட மாட்டோமென்ற ரேஞ்சுக்கு இங்கே ரவுசு நடப்பதை பார்க்கும் போது ஒரேயொரு விஷயம் தான் மனசில் ஓடியது ! நாலு பேர் ..நாற்பது பேருக்கான குரலில்...நானூறு இடங்களில் உரக்க சத்தம் எழுப்பும் போது - அது அசரீரி ரேஞ்சுக்கு எதிரொலிக்கும் என்பதே ! இந்த அசரீரிகளுக்குப் பதில் சொல்லும் முன்பாக இன்றைக்கு மின்னஞ்சலில் நண்பர் கிரிதரசுதர்ச்ன அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலின் இணைப்புகளை இங்கே present செய்திடுகிறேன் ; சும்மா தெறிக்க விட்டிருக்கிறார் !! Take a look guys :




போன வாரத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு நீங்கள் தந்திருந்த பதில்களை நண்பர் STV தொகுத்து நம்பர்களில் சொல்லியிருந்தார் ! ஆனால் அந்த நம்பர்களையே இதோ graphics சகிதம் வழங்கிடும் போது அதன் தாக்கத்தைப் பாருங்களேன் !! எத்தனை சுளுவாய் நிலவரம் புரிகிறது & எத்தனை ஸ்பஷ்டமாய் நிஜங்கள் பிரதிபலிக்கின்றன ?!! In many ways - நமது காமிக்ஸ் கூட இதுவே தானே - ஒரு கதையினை ; ஒரு சேதியினை ; ஒரு நிகழ்வினை - சித்திரங்களின் துணை கொண்டு பிரம்மாண்டமாக்கி வழங்கிடுவது !! 

இந்த graphics மாடலை அப்படியே இந்த "அதே பழைய மாவில் சுட்ட தோசை தான் வேணும்" பஞ்சாயத்துக்குமே ஆட்படுத்திப் பார்த்திடுவோமெனில் - நிஜமும், யதார்த்தமும் புரிந்திடக்கூடும் ! என்மட்டில் இதனில் குழப்பங்கள் ஏதுமில்லை - simply becos நண்பர்களின் நர்த்தனங்களின் பின்னிருப்பது துளியும் சாத்தியங்களில்லா கோரிக்கைகள் ! And போகாத ஊர்களுக்கு தம் கட்டி ஆளாளுக்கு வழி சொன்னாலும், இதோ என்னிடம் இருப்பது மட்டுமே நிஜத்தின் ; சாத்தியத்தின் வரைபடம் !

கோரிக்கை # 1 : மறுபதிப்பே காணாத மாயாவி கதை வேணும் !

பதில் :ஏற்கனவே முந்தைய பதிவினில் சொன்ன சமாச்சாரத்தை இன்னொருவாட்டி மறுஒலிபரப்பு செய்கிறேன் : இங்கிலாந்தில் பழம் கதைகளின் பெரும்பான்மையினை டிஜிட்டல் கோப்புகளில் பத்திரப்படுத்த யாருமே அந்நாட்களில் முனைந்திருக்கவில்லை ! சில ஆண்டுகளுக்கு முன்பாய் REBELLION என்ற குழுமம் மொத்தமாய் Fleetway உரிமைகளை வாங்கியிருக்கும் நிலையில், இவற்றைத் தூசி தட்டி எடுத்து, முந்தைய இதழ்களின் நகல்களை டிஜிட்டலுக்கு உருமாற்றம் செய்து, அவற்றைத் துல்லியமாக்கும் நெடும் முயற்சியில் பொறுமையாய் ஈடுபட்டுள்ளனர் ! அங்கே அவர்களது பணிகள் நிறைவுறும் நேரமே நமக்கு கோப்புகள் இனி சாத்தியம் ! இப்போது நம் வசமிருப்பன எல்லாமே மக்கிப் போன பழைய நெகட்டீவ்கள் மட்டுமே எனும் போது - அவற்றிலிருந்து திரும்பவும் அச்சிடல் சாத்தியமே ஆகாது ! ஆகையால் முகமூடி போட்ட மாயாவி ; மூடாக்குப் போட்ட மாயாவி ; போர்வை பொத்திய மாயாவி - என சகலமும் அவர்கள் ரெடி செய்திடும் பொழுதில் மட்டுமே நமக்கும் சாத்தியம் ! இதோ இப்போது நாம் வெளியிட்ட "நியூயார்க்கில் மாயாவி" ; நான் வெளியிடலாமெனச் சொல்லும் "இரும்புக்கை மாயாவி" ; "யார் அந்த மாயாவி ?" ; ஆழ்கடலில் மாயாவி - ஆகியவையெல்லாமே அவர்கள் பணிமுடித்துள்ள கதைகள் ! So "தவளை மனிதர்கள்" ; "நண்டு மனிதர்கள்" - என தேடித் தேடி கேள்விகளை எழுப்பினாலும், பதில் இதுவே தான் ! There's NOTHING that can be done for now !!

கோரிக்கை # 2 : வேதாளன் ?

பதில் : அழுத்தமாகப் பதிவிடுகிறேன் - இந்தத்தொடருக்கான உரிமைகள் நம்மிடமில்லை ! கடந்த 2 ஆண்டுகளாய் முயற்சித்து, இதனில் முடக்கிட அவசியப்படும் தொகையினைக் கண்டு மலைத்து ஒதுங்கி விட்டேன் ! So இம்மியும் சாத்தியமில்லை - ஏதேனும் ஏழு இலக்கத் தொகையினை யாரேனும் நமக்கு தானம் தராத வரையிலும் !

கோரிக்கை # 3 : மாண்ட்ரேக் + காரிகன் + Rip Kirby

நல்ல நாளிலேயே நாழிப்பால் கறப்பார் மாண்ட்ரேக் ! அவரது கதைகளில் 3 உள்ளன நம்மிடம் கைவசம் ! மூன்றையும் சேர்த்தாலே 95 பக்கங்களைத் தாண்டிடாது பக்கங்களின் ஒட்டு மொத்த நீளம் ! And ஒவ்வொன்றும் பிடரி மயிர் வரைக்கும் நட்டுக்கச் செய்த கதைகள் - 25 ஆண்டுகளுக்கு முன்னமே !! அவற்றை இன்றைக்கு பந்திக்கு கொண்டு வராவிட்டால் வரலாற்றுப் பிழையாகிப் போய்விடுமெனில், நான் வரலாற்றுப் பாடம் இருக்கும் க்ரூப்பையே தேர்வு பண்ணலீங்க ! அட, நான் பள்ளிக்கூடத்துக்கே வரலீங்க !!

காரிகன் ஒரேயொரு கதையுள்ளது கையில் ! And நீங்கள் பார்த்துப் பழகிய அந்த classic பாணியின் கதாசிரியரோ, ஓவியரோ பணியாற்றியதே கிடையாது இந்தக் கதை ! டப்ஸாவிலும் டப்ஸா இந்த சாகசம் என்பதால், கையில் காசுமின்றி, கதையுமின்றித் திணறிய late '90-களில் கூட இதனை நான் தீண்ட முனையவில்லை ! இன்றைக்கு இவரைக் கொண்டு தான் ஒரு மெகா கோபுரத்தைக் கட்ட வேணுமெனில் நான் அந்த ஆட்டத்துக்கே வரலை சாமிகளா !  "கொரோனா காலகட்டத்தினை முன்னிட்டு கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன " என்ற போர்டை மாட்டி விட்டு, மாமூலான இதழ்களோடு 'சிவனே' என்று வேலையைப் பார்த்துப் போய்விடுகிறேன் !

ரிப் கிர்பி - கையில் உள்ளது ஒரேயொரு கதையே & அதுவும் முத்து காமிக்சில் ஏற்கனவே வெளியானதென்பதை கவனித்த பிற்பாடு தான் அதனை திரும்பவும் பரணுக்கு அனுப்பினேன் ! So இவர் விஷயத்தில் zero நமது புதுக் கதைகளின் ஸ்டாக் !

கோரிக்கை # 4 : விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ; சிஸ்கோ கிட் ; ரிப் கிர்பிய ; காரிகன் - இவங்களுக்குலாம்  கையில் கதைகள் இல்லாட்டியும் வாங்கி, போடலாமில்லே ?

பதில் : இவை சகலமுமே வேதாளனை சந்தைப்படுத்திடும் அதே King Features நிறுவனத்தின் உடைமைகள் ! இவர்களிடம் இன்றைக்கு ஒரு கதை வாங்கிக்குறேன் ; காக்கா  கடி கடிச்சிக்கிறேன் - என்று எந்தவிதத்திலும் கோரிக்கைகளை முன்வைக்கவே இயலாது ! குறைந்த பட்சமாய் ; ரொம்பவே குறைந்த பட்சமாய், ஒவ்வொரு தொடரிலும் 10 கதைகள் வீதம் வாங்கிடவும், அவற்றைத் தொடரும் 18 மாதங்களுக்குள் வெளியிடவும் சக்தி இருந்தால் மட்டுமே அவர்களின் தெருப்பக்கமே போக முடியும் ! இன்றைக்கு மலையாளத்தில் மட்டுமே வேதாளன் கதைகளை வெளியிட்டு வந்த ரீகல் காமிக்ஸ் - ஆங்கிலத்திலும் வேதாளன் & மாண்ட்ரேக் கதைகளை வெளியிடுவதன் முக்கிய காரணமே - அமெரிக்க நிறுவனத்தின் வியாபாரக் கட்டாயங்களைச் சமாளிக்கும் பொருட்டே ! தவிர, ஆண்டுக்குப் 12 மாதங்களும் அவர்களது ரிலீஸ் வேதாளன் மட்டுமே - simply because they need to !!

5 தொடர்கள் x 10 கதைகள் வீதம் = மொத்தம் 50 கதைகள் ! And இந்த ஐம்பதையும் அடுத்த 18 மாதங்களுக்குள் வெளியிட்டதாக வேண்டும் ! சொல்லுங்க தெய்வங்களா - இதற்கான முதலீடும், திட்டமிடலும் யாரிடமெல்லாமிருந்து வரவுள்ளதென்று ? மட மடவென்று வேலையை ஆரம்பித்து விடலாம் ! ஒற்றை "குண்டு" புக்கென்ன - மாசம்தோறும் ஒரு குண்டு புக் போட்டுத் தாக்கிபுடலாம் - நீங்களே தெறித்தடித்து ஓடும் வரையிலும் ! 

கோரிக்கை # 5 : 500 பக்கங்களில், கருப்பு-வெள்ளையில் compact சைசில் "குண்டு புக்" இல்லாட்டி நிறைவாவே இருக்காது !! புதுசு எப்போனாலும் வந்துக்கும்லே ? பழசுக்கு இதை விட்டா வேற வாய்ப்பு ஏது ? 

பதில் : கிட்டங்கியில் உள்ள classic மறுபதிப்புகள் நான்கை ஒன்றாக்கி பைண்ட் பண்ணினால் 500 பக்க புக் ரெடியாகிடும் ! 50 ரூபாய் விலைகளே ; அதிலும் 25% discount தருகிறோம் - so 4 புக் சேர்ந்தாலே ரூ.150 தான் ஆகிறது ! சந்தோஷமாய் அதை விலையின்றியே தர ரெடி ! ஒரு மாயாவி ; ஒரு லாரன்ஸ்-டேவிட் ; ஒரு ஜானி நீரோ என்று கலந்து கட்டி பைண்ட் பண்ணிடலாம் ! நான் ரெடிங்க !! ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அறிவிப்பில் சேர்த்திடலாம் ! 

கோரிக்கை # 6 : இதை - அதோடு போடலாமில்லே ; அதை அடுத்த வீட்டோடு சேர்க்கலாமில்லே ? முன்னெல்லாம் செஞ்சே ? இப்போ என்ன கொள்ளை உனக்கு  ?

நூற்றியெட்டாம் அறிவிப்பு ! ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நிறுவனத்தின் மாறுபட்ட படைப்புகளையே ஒன்றிணைத்து வெளியிடுவது தலை கீழாய் நின்று தண்ணீர் குடிக்கும் அசாத்தியம் எனும் போது - "அப்புசாமியோடு சாம்புவைப் போடலாம் ; வேம்புவோடு சீதாப்பாட்டியை கோர்க்கலாம் " என்ற ரீதியிலான பரிந்துரைகள் சத்தியமாய் out of question !!

நேற்றைக்கு Options வழங்கிய சமயம் நான் பழமை பார்ட்டிக்களையும் லிஸ்ட்டில் சேர்த்திருக்காவிட்டால் நிச்சயமாய் அதற்கும் செருப்படி வாங்கியிருப்பேன் என்பது தெரியும் ! அதனாலேயே அவற்றைப் பெயரளவிற்குச் சேர்த்திருந்தேன் !  இத்தனை எதிர்பார்ப்புகளை சுமந்து வரும் ஒரு இதழினில் அவற்றை நுழைக்கச் சொல்லிக் கோரிட யாருக்கும் மனசு வராது  என்றே நம்பியிருந்தேன்  ! ஆனால் இந்த டஜன் நண்பர்கள் இன்றைய பொழுதையும், பதிவையும் திசைதிருப்பும் அளவுக்கு செயல்படுவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை தான் ! 

"பழமைக் காதல் ; பழசை இன்னும் படிச்சா தான் அக்மார்க் காமிக்ஸ் ஆர்வலர் ; வளர்ந்து வந்த ஏணி ; புதுசுலாம் உருப்படாது" - என்ற இந்த வாதங்களை காதில் தக்காளிச் சட்னி வரும் வரையிலும் கேட்டாச்சு ! and  விரல் ரேகைகள் அழிந்திடும் வரையிலும் அவற்றிற்குப் பதில் சொல்லியும் விட்டாச்சு ! "ஆசானே...அய்யனே.." என்ற அடைமொழிகளை நான் ஒருபோதும் மண்டைக்கு எடுத்துச் சென்றதே கிடையாது and that was exactly for reasons like this !! உங்களுக்குப் பிடித்தமான திக்கில் வண்டியை இட்டுச் செல்லும் வரையிலும் "ஆசானாய்" தென்படுபவன், அவசியமான, ஆனால் உங்களுக்கு ரசிக்காத பாதையில் புகுந்திடும் முதல் நொடியில் வெறும் "ஆசாமியாய்" மட்டுமே தெரிவேன் என்பதை நாள் ஒன்றிலேயே நான் உணர்ந்து கொண்டேன் ! சிலாகிப்புகளின் ஆயுட்காலம் முதல் தோல்வி வரையிலுமே என்பதை புரிந்திருப்பதால், கொண்டாடப்படுவதையோ, குமட்டில் குத்தப்படுவதையோ நானொரு பெரிய சமாச்சாரமாகவே எடுத்துக் கொள்வதில்லை ! So இன்றைய இந்த "சுட்டா புளிச்ச மாவுத் தோசையைத் தான் !" என்ற வாதங்களின் பொருட்டு இதற்கு மேலும் நான் திராணியைச் செலவிடுவதாக இல்லை guys ! இது திமிராகத் தென்பட்டால் - so be it ! உரக்கக் கேட்கும் ஒரு சன்னமான அணியின் லாஜிக்கற்ற குரல்களின் முன்னே நான் நிதானத்தைத் தொலைப்பதாக இல்லை ! 

உருப்படியாய் எதையேனும் செய்திட உடம்பிலும், மனசிலும் வலு உள்ளவரைக்கும் எல்லோருக்கும் பிடித்தமான எதையேனும் பொதுவாய் செய்திடுவோமே என்ற எனது ஆர்வங்கள் / ஆதங்கங்கள் - அவரவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் முன்னே பொசுங்குவதை நான் உணர்வது இது முதன்முறையுமல்ல ; அடுத்த 6 ஆண்டுகளுக்குள் கடைசி முறையாக இருக்கப் போவதுமல்ல !  எனக்குப் பிடிச்ச கலரில் அலங்காரம் இல்லாங்காட்டி, நான் ஆங்காரமே கொள்வேன் என்பதை ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டிய நேரத்திலுமே திரும்பத்திரும்ப ஊர்ஜிதம் செய்திடும் நண்பர்களே - பொதுநலத்திலும்  மகிழ்வு சாத்தியமே என்பதை உணர்ந்திடும்  நிலையில் நீங்களில்லை இப்போது ! என்றைக்கேனும் அது புரியுமென்று நம்புவதைத் தாண்டி இந்த நொடியில் நான் செய்திடக்கூடியது வேறென்னவாக இருக்கக்கூடும் ?! 

Anyways அனைவருக்கும் ஒரே மாதிரியான விருப்பு-வெறுப்புகள் இராதென்றாலுமே, இந்த ஒற்றை முயற்சியிலாவது அனைவருக்கும் ஏற்புடையதொரு common ground-ஐ  தேடிடவே நேற்றும், இன்றும் 'தம்' கட்டிப் பார்த்தேன் ! ஆனால்  நானல்ல ; ஸ்பைடரோ ; ஆர்ச்சியோ ; சூப்பர்மேனோ வந்தாலுமே அதெல்லாம் சாத்தியமாகாது என்பது புரிந்திடும் போது - போன லாக்டவுனின் சமயத்தினில் தொங்கலில் நின்ற "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மொழிபெயர்ப்புக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன் guys ! வேலையாச்சும் ஆனது போலிருக்குமல்லவா ? எது எப்படியோ - "ஒவ்வொரு முகத்திலும் ஒரு புன்னகை" என்ற தேடலில் நானே அதைத் தொலைக்க நேர்வது தான் முரண்களின் உச்சம் போலும் !! Sighhhh !!

Bye all...stay safe !! அடுத்த (குட்டி) ஆலமரத்தை நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் ! See you around !


210 comments:

  1. என்னது அடுத்த ஆலமரமா...?? இருங்க படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  2. இதோ படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  3. இங்கு நிழலில் நீங்கள் படுத்து கிடப்பது போல் தெரிகிறது பழனி :-)

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Replies
    1. அதாகப்ப.டது ஒன்பதும் எனதே

      Delete
  5. ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மொழிபெயர்ப்புக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன் guys ! //

    நச்சுனு நருக்குனு சொல்லிட்டிங்க ஆசானே.. சூப்பர்...

    ReplyDelete
  6. கிரிசன சுதர்சன் வாழ்த்துக்கள்.. எளிமையான படங்களுடனான விளக்கம் அருமை.

    ReplyDelete
  7. உங்கபாடு நெம்ப சிரமந்தானுங்கோ சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  10. புதியன புகட்டும்.. தங்கள் கருத்தில் 100% உடன்பாடு எனக்கு. வெயிட்டிங் பார் ஒற்றை நொடி ஒன்பதுதோட்டா.. புதுமையான ஏகப்பட்ட இலக்குகள் எதிர்வரும் காலங்களில் நம்மை மகிழ வைக்கக் காத்திருக்கையில் நாமும் கொண்டாட்டத்துடன் வரும் ஆண்டை எதிர்கொள்வோம்..

    ReplyDelete
  11. Dear Editor
    I feel sorry for you
    One cannot satisfy everyone.
    Some kiddish behaviour here from readers.
    A sample of old and new is enough.
    Its an occasion 2 celebrate and not to alienate.
    Regards
    Thanks for superhuman effort to please everybody
    Results of such effort does not matter
    Arvind

    ReplyDelete
    Replies
    1. We can't expect the readers to possess a passion with comics and behave in a more matured way... just kidding

      Delete
  12. கடந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சியாய் இருந்தன உங்கள் பதிவுகள்... இன்று உங்கள் பதிவை படிக்கும் போது வருத்தமாக உள்ளது... இதுவும் கடந்து போகும் சார்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா ...புரிது...ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது...இறுதித் தீர்ப்பு இன்னும் வரல...

      Delete
  13. சார் மைசூர் எமர்ஜன்சியா போனதால் வர முடில.வண்டி ஓட்டிட்டு நிக்காம வந்தால் வர முடில...மன்னியுங்கள்..எப்படியும் நண்பர்கள் ஐயாயிரத்துக்கு குறயாம வாங்கிருப்பாங்க...அப்டில்லன்னா முதல்லருந்து கோடு போடுவம்

    ReplyDelete
    Replies
    1. ""ஙே"" மறுபடியும் முதலில் இருந்தா ?

      பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சுருச்சு தல.மெதுவாகவே வாங்க.ஒன்றும் அவசரமில்லை.

      Delete
  14. கிரிதரசுதர்சன்@ கலக்கி எடுத்துட்டீங்க...👏👏👏👏👏👏

    புள்ளியலின் இன்னொரு பரிணாமம்.. நம்ம காமிக்ஸிற்காக... அற்புதம்.... தொடருங்கள்....

    ReplyDelete
  15. பாவம் தான் சார் ..நீங்க...:-)

    ReplyDelete
  16. // So இன்றைய இந்த "சுட்டா புளிச்ச மாவுத் தோசையைத் தான் !" என்ற வாதங்களின் பொருட்டு இதற்கு மேலும் நான் திராணியைச் செலவிடுவதாக இல்லை guys //

    சரியான முடிவு சார்...

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. நானே மாயாவிக்கு பதிலாய் மாண்ட்ரேக் கேட்ட ஆளுதான் தான் சார்..

    நிதர்சனத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாய் சொல்லியபிறகும் மாறுதலை வேண்டுவது இனி என்னளவில் தவறே..

    சிறப்பு முத்து 50 க்கும் வாழத்துகளும்.. ,இலவச வண்ண மாயாவிக்கு நன்றிகளும் சார்..

    ReplyDelete
  19. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இப்படியே விடவும் மனசில்லை. என்றும் எங்களில் ஒருவராகவே உங்களை காண்கிறோம். தங்களின் முயற்சிக்கும், உழைப்புக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  20. பெர்சனலாக ரிப்பின் ஜென்டில்மேன் பாணிக்கு நான் ரசிகன்.
    அவரது ஒவ்வொரு கதையில் இருந்தும் ஒரு சிறப்பான நிகழ்வை ஞாபகார்த்தமாக வைத்துள்ளேன்.

    ஆனா இந்த பொன்விழா தருணத்தில் இடம்பெறும் அளவு அவருக்கு வரவேற்பும் இராது, விற்பனையும் ஆகாது என்ற நிதர்சனம் புரிவதால் நான் என் ஆசையை என்னோடு வைத்துக் கொண்டேன்!

    நிதர்சனம் என்ற நடைமுறைக்கு வாருங்கள் நண்பர்களே...!!!🙏

    பழைய நாயகர்களை போட்டு படு பிளாப் ஆவதை அந்த நாயகர்களே அனுமதிக்க மாட்டார்கள்!

    ...........

    ஆலமரம் 4ல் சந்திப்போம்!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே...பின்னர் கேட்போம்...நமக்கு வாய்த்த ஸ்பைடர்ம் சேத்து கடந்த கால மலராய்...இந்த ஐம்பதாமாண்டு மலர் தெறிக்க விடனும்

      Delete
    2. இரும்புக்கை மாயாவி, மாடஸ்தி,காரிகன்,ப்ளாஸ்கார்டன்,மாண்ட்ரேக்,விங் கமாண்டர் ஜார்ஜ் உட்பட பல நாயகர்களை மிகவும் இரசித்து படித்த காலங்கள் இருக்கிறது.

      தனிப்பட்ட விதத்தில் ரிப்கிர்பியின் மீதான ஈர்ப்பு அதிகம்.



      அனைத்து துறைகளுமே தொழில்நுட்ப அடிப்படையில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது.

      சுவாரஸ்யமான கதைக்களத்தில் (கதைக்காக மட்டும் ) ஒரேயொரு பேனலில் ஓவியத்தை வரைந்து விட்டு,விறுவிறுப்பாக கதையை நகற்றிச் செல்லும் பாணி என்பது முடிந்து விட்டதாக தோன்றுகிறது.

      காட்சிகளில்(ஓவியங்களில்) கதை சொல்லப்படும் படைப்புகள்தான் இன்றைய படைப்பாளிகளுடைய ஆற்றலாக உள்ளது.

      துல்லியமான ஓவியங்கள்,வர்ண சேர்க்கைகள் என்று ஒவ்வொரு படைப்பும் நாளுக்கு நாள் மெருகேற்றப் படுகிறது.

      ப்ளுபெரி போன்ற காவியங்கள் மட்டும் காலம் கடந்தும் சாகாவரம் பெற்றவைகளாக இருக்கும்.அந்த படைப்பில் இருக்கக் கூடிய ஆன்மா உயிர்ப்போடு இருக்கும் வரையிலும் காலம் கடந்தும் இரசிக்கப்படும்.அபூர்வமாக ஒரு சில படைப்புகள் அவ்விதம் அமைந்துவிடுகிறது.

      மாடஸ்தி,ரிப்கிர்பி,விங்கமாண்டர் ஜார்ஜ் உட்பட ஏனைய நாயகர்களுடைய கதைகளிலும் மிகச்சிறந்த படைப்புகள் இருக்கிறது.மறுக்க முடியாத உண்மை.

      காலம் கடந்தும் இரசிக்கும்படியாக இருக்கும் என்பது மட்டுமே சந்தேகம்.

      கடந்த கால நாயகர்களும் ஆராதிக்கப்பட்டவர்கள்தான்.


      காமிக்ஸ் வாசகர் வட்டத்தை தாண்டியும் சந்தைப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.

      ஆயிரம் சொச்சம் வாசகர்களுக்கு மட்டும் காமிக்ஸ் நடத்த வேண்டும் என்று ஒரு நிறுவனம் முனைப்பு காட்ட முடியாது தானே நண்பர்களே!!!!!.

      ஒவ்வொரு ஆண்டும் காமிக்ஸ் வாசகர் வட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றவில்லை.அதற்கு பல்வேறு காரணங்களை ஆராய்ந்து அடுக்கு இயலும்.

      ஆனால் எதிர்காலத்துக்கான திட்டமிடலும் அவசியமான ஒன்று தானே.

      இந்த வார்த்தைகள் யாருடைய மனதையும் காயப்படுத்தும் தற்காக இல்லை.தயவு செய்து அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டாம்.

      தொழில் முறை எழுத்தாளர்கள் போல் நெளிவு சுழிவோடு வார்த்தைகளை பயன்படுத்தும் யுக்திகள் கை வரவில்லை என்பதே உண்மை.

      பிழையாக இருந்தாலும் பொறுத்துக் கொள்வீர்கள் என்ற எண்ணத்தில் தோன்றுவதை எழுதியுள்ளேன்.

      Delete
  21. கிரிதரசுதர்சன் well said bro.

    ReplyDelete
  22. மே21 க்கும் விளக்கபடம்(Infographics) emailல் அனுப்பி உள்ளேன் சார்

    ReplyDelete
  23. ஒவ்வொரு முகத்திலும் ஒரு புன்னகை" என்ற தேடலில் நானே அதைத் தொலைக்க நேர்வது தான் முரண்களின் உச்சம் போலும் //

    நிச்சயம் அப்படியிராது சார்..எல்லாம்
    முத்து50 புக்க கையில் வாங்கும் போது அனைவரின் முகத்திலும் ஆனந்தமே...!!

    ReplyDelete
  24. //
    ** ஒவ்வொன்றும் பிடரி மயிர் வரைக்கும் நட்டுக்கச் செய்த கதைகள் - 25 ஆண்டுகளுக்கு முன்னமே !!

    ** "கொரோனா காலகட்டத்தினை முன்னிட்டு கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன " என்ற போர்டை மாட்டி விட்டு,

    **மாசம்தோறும் ஒரு குண்டு புக் போட்டுத் தாக்கிபுடலாம் - நீங்களே தெறித்தடித்து ஓடும் வரையிலும் !

    **கிட்டங்கியில் உள்ள classic மறுபதிப்புகள் நான்கை ஒன்றாக்கி பைண்ட் பண்ணினால் 500 பக்க புக் ரெடியாகிடும் !

    //

    சார், கார்ட்டூன் கதைகள் குறைஞ்சு போனதில் இந்த எழுத்துக்களை ரொம்போவே மிஸ் பண்ணினேன்.... சிரிச்ச சிரிப்பிலே வயிறு கொழுவிக்கிச்சு....

    ReplyDelete
    Replies
    1. இந்த டார்க் ஹ்யூமர் ங்கிறாங்களே... அது இதுதானா?

      Delete
    2. //
      ** ஒவ்வொன்றும் பிடரி மயிர் வரைக்கும் நட்டுக்கச் செய்த கதைகள் - 25 ஆண்டுகளுக்கு முன்னமே !!

      ** "கொரோனா காலகட்டத்தினை முன்னிட்டு கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன " என்ற போர்டை மாட்டி விட்டு,

      **மாசம்தோறும் ஒரு குண்டு புக் போட்டுத் தாக்கிபுடலாம் - நீங்களே தெறித்தடித்து ஓடும் வரையிலும் !

      **கிட்டங்கியில் உள்ள classic மறுபதிப்புகள் நான்கை ஒன்றாக்கி பைண்ட் பண்ணினால் 500 பக்க புக் ரெடியாகிடும் !

      //

      உண்மையில் செம! செம!! மிகவும் ரசித்தேன்!

      Delete
  25. ஆலமரம் நாலுகாக காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  26. ரிப்போர்டர் ஜானியின் டிசைன் தெறி ரகம் சார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. புதிய கதைகளுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு சார்..

    ReplyDelete
  28. வணக்கம் சார்.

    வணக்கம் நண்பர்களே.

    முதலில் ஆசிரியர் மற்றும் நண்பர்களிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.கடந்த இரண்டு மூன்று பதிவுகளில் நான் வெளியிட்ட என்னுடைய கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

    என்னுடைய ஆசைகள் சிலவற்றை இங்கே நான் பகிர்ந்தேனே ஒழிய அவை அப்படியே நிறைவேற வேண்டும்; உடனே நிறைவேற வேண்டும் என்று நான் விரும்பவுமில்லை , எதிர்பார்க்கவுமில்லை.

    எனவே எதிர்பார்ப்புகளைச் சுட்டிக் காட்டினேன்.நிறைவேறாது என்று தெரிந்துவிட்டதால் ஏமாற்றமுமில்லை , வேதனையுமில்லை.

    முத்து பொன் விழா மலர் சிறப்பிதழாக வந்தாலும் சரி இல்லை நார்மல் இதழாக வந்தாலும் சரி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    நன்றி.வணக்கம்.

    ReplyDelete
  29. கிரிதரசுதர்சன் - சிறப்பான பணி நண்பரே! மிக்க நன்றி.

    ReplyDelete
  30. சார் சந்தோஷமாக ஆரம்பித்து சோகத்தில் முடிக்க வேண்டாம்.. வருத்தமாக உள்ளது ப்ளீஸ்

    ReplyDelete
  31. நண்பர் கிரிதரசுதரசன் செம சார். நச் சென்று மண்டைக்குள் பதிவாகிறது.

    ReplyDelete
  32. // கிரிதரசுதர்ச்ன // Excellent JOB! Keep up the good work!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் போட்ட இந்த ஒவ்வொரு படம், அதில் செய்துள்ள வேலை என நிதானமாக பார்த்தால் உங்களில் கற்பனை மற்றும் இதன் பின்னால் உள்ள உழைப்பு தெரிகிறது! பாராட்டுக்கள் கிரிதரசுதரசன்!

      Delete
  33. சார் உங்கள் ஆதங்கம் வருத்தம் புரிகிறது.
    Future என நீங்கள் கூறிய 3 கதைகளே முத்து 50வது ஆண்டு மலரை அலங்கரிகட்டும் 🙏🏼

    குண்டு புக் கேட்டதற்கு மன்னிக்க 🙏🏼

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளை குண்டு கேட்டதற்கு 😀

      Delete
  34. ஆசிரியரே நீங்கள் எது கொடுத்தாலும் சந்தோஷமே உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என்று போன் பதிவிலியே சொல்லியிருந்தேன் மீண்டுமொரு சொல்கிறேன் உங்களுக்கு எது சாத்தியமோ அதனையே செய்யுங்கள் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறோம் உங்களை வருத்தமடைய செய்திருந்தால் மன்னியுங்கள் நீங்கள் எனது ஆசிரியர் (ஆசான்) என்பது என் உயிருள்ளவரை மாறாது மறையாது நன்றி

    ReplyDelete
  35. ஒற்றை வரியில்.. சொல்லப்போனால்.. ஒற்றைவார்த்தையில் முடியாது என்று சொல்லவேண்டியதை...

    வாசக நண்பர்களின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக இவ்வளவு விளக்கமாக ஒரு பதிவாகவே போட்டிருக்கும் எடிட்டரின் அந்த மனசுக்கு....

    ஒக்க பெத்த சல்யூட்டு பெட்டுதானன்டி..!!

    ReplyDelete
    Replies
    1. // ஒற்றை வரியில்.. சொல்லப்போனால்.. ஒற்றைவார்த்தையில் முடியாது என்று சொல்லவேண்டியதை...

      வாசக நண்பர்களின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக இவ்வளவு விளக்கமாக ஒரு பதிவாகவே போட்டிருக்கும் எடிட்டரின் அந்த மனசுக்கு ///

      Very TRUE Kanna!

      Delete
    2. ஏலே மண்ட கஷாயம் தூங்க போலே! :-)

      Delete
    3. // நீ தூங்ல மக்கா நா பாத்துக்றன் //

      ஐய்யா சாமி நமக்கு வேண்டியதை எப்போது கொடுக்கணும் என்று ஆசிரியருக்கு தெரியம்! நீ கொடிய சுருட்டிக்கிட்டு தூங்கு! ஏதாவது சத்தம் வந்தது e-பாஸ் இல்லாமல் Mysore போய்வந்தே என போட்டு விட்டுடுவேன்!:-)

      Delete
    4. நா உன்ன கென்யாக்கே கூட்டிட்டு போவம்ல ஆசிரியர்ட்ட கேட்டு...மைசூராம்...போண்டாவாம்...தூங்குனது போதும் முழில

      Delete
  36. // இந்த ஒற்றை முயற்சியிலாவது அனைவருக்கும் ஏற்புடையதொரு common ground-ஐ தேடிடவே நேற்றும், இன்றும் 'தம்' கட்டிப் பார்த்தேன் ! ஆனால் நானல்ல ; ஸ்பைடரோ ; ஆர்ச்சியோ ; சூப்பர்மேனோ வந்தாலுமே அதெல்லாம் சாத்தியமாகாது என்பது புரிந்திடும் //

    நண்பர்கள் ப்ராக்டிகலாக கொஞ்சம் ஆசிரியர் பக்கம் இருந்து யோசித்தால் நன்றாக இருக்கும்!

    விஜயன் சார், உங்களின் ஆலமரம் 2 பதிவுக்கு அடுத்த பதிவு "நேற்று இன்று நாளை" பதிவு எல்லோரையும் திருப்தி படுத்துகிறேன் என்று ஒரு புது ரூட்டை எடுப்பீர்கள் என நினைத்தேன் அதுபடியேதான் இருந்தது "நேற்று இன்று நாளை" பதிவு! இன்னும் எத்தனை நாட்கள் அல்லது வருடம் எங்களை திருப்தி படுத்துகிறேன் என்று உங்களை உடல் மற்றும் மன அளவில் கஷ்டப்படுத்த போறீங்க! வேண்டாம் சார்! வேண்டாம்! இனியாவது உங்களுக்கு எது சரிப்படும் என்பதை முக்கியமாக காமிக்ஸ் வளர்ச்சிக்கு எது சரி என படுகிறதோ அதை செய்யுங்கள் சார். நாங்கள் அதனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம்! உங்கள் பின்னால் எப்போதும் போல் உறுதியாக இருப்போம் சார்!

    ReplyDelete
  37. சார் மாயாவி 100கலரில் வரட்டும்...
    ஒற்றை நொடி ஒற்றைத் தோட்டா முழுமையாக
    ஏதோ நான்கைந்து மூன்று பாக கதைகள் சொன்னீங்கல்ல...அதுல நாலு...நேத்து கலவரம் போல...அதுக்குள்ள நுழைந்து ஏதேனும் தேன் சிந்திய மலர்கள நானும் பொறுக்கி வருகிறேன்

    ReplyDelete
  38. ஒவ்வொரு மாதமும் புக்ஸ் வந்தவுடனெ அடுத்த வெளியிடு என்னா என்று தெடிவதும், நமது அட்டவனை வெளியீட்டை திருவிழா பொல் கொண்டாடும் ரசிகர்களில் நானும் ஒருவனெ!!!. புது கதை... மன்னுச்சு.. புது அறிவிப்பு(பழைய கதையாக இருந்தாலும்), அதன் ப்ரிவியு, அதன் பெயர், அதன் நாயக நாயகியர் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு.. அந்த உண்ர்ச்சி, 50வது ஆண்டுமலர் அறிவிப்பில குறைய காரணம் ஏற்கனவே வரும் என்று தெரிந்து காரணமாக இருக்கலாம். பலர் மகிழ்ச்சியளிக்கவில்லை என கூற இந்த psychological reason இருக்கலாம்.
    பி.கு: ஒ.நொ.ஒ.தொ. ருட்666 கென்யா ஆகியவற்றை பொங்கள் என்றொ... 50வது ஆண்டுமலர் தீபாவளி என்றொ... வருவது உப்புமா என்றெ சிறிதும் நினைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் வாங்கி விடிவோன் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஒ.நொ.ஒ.தொ. ருட்666 கென்யா ஆகியவற்றை பொங்கள் என்றொ... 50வது ஆண்டுமலர் தீபாவளி என்றொ....ஒன்னா வந்தா அடடா

      Delete
  39. //ஒற்றை வரியில் சொல்வதானால் - சந்தாக்கள் மட்டும் இல்லையெனில் இங்கே "கன்னித்தீவு சிந்துபாத்" கதைகள் கூட சாத்தியமாகிடாது ! And இந்த நடப்பாண்டில் சந்தா சேகரிப்புக்கு நாங்கள் பட்ட பாடு என்னவென்பதை நேரடியாய் உணர்ந்தவன் என்ற ரீதியில், தொடரக்கூடிய அடுத்த சந்தாவின் பளுவைக் குறைத்திட வேண்டியதன் அவசியத்தை நன்றாகவே உணர்ந்துள்ளேன் ! 'வாத்து தான் முட்டையிடுகிறதே' என்ற மெத்தனத்தில் அதன் குரல்வளையைப் பிதுக்கிட நாம் முனைந்தால் - வாத்து பிரியாணியைப் போட்டு விட்டு நடையைக் கட்டவே வேண்டி வரும் !

    சிந்தைகளுக்கு றெக்கைகள் இருந்திடலாம் தான் ; ஆனால் கால்கள் தரையில் நிலைகொண்டிருக்க வேண்டிய நாட்களிவை ! அதனை நானுமே உணராது போயின் - அது தான் வரலாற்றுப் பிழையாகிடக்கூடும்.//
    சார் சந்தா இதழ்கள குறைத்து இதுல ஏத்திரலாமே...பவள விழா

    ReplyDelete
  40. நீங்க எது செஞ்சாலும் சரியாகவே இருக்கும் ஆசிரியரே...வழக்கம் போல மாற்றமே மாறாததே...மெகா குண்டு....குண்டுக்கெல்லாம் குண்டு

    ReplyDelete
  41. ஸ்பைடர் லயன்லதாம் கேட்போம்...கலர்ல சினிஸ்டர் வேண்டாம் சார்...விண்வெளிப் பிசாசு கலர்ல போதும்...அத பின்னாடி தரேன்ங்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குறது சார்...வேறேன்ன வேனும்

    ReplyDelete
  42. Dear Editor Sir,

    we can understand the fact that you can't satisfy everybody, from your experience you can do well,

    Take possible opinions and prepare a memorable book for us, thank you

    ReplyDelete
    Replies
    1. "Possible" opinions are seldom possible here sir !!

      Delete
  43. பதிவை படிக்க படிக்க உஷ்ணம் தாங்கலை சார் 🔥🔥🔥. படிக்கும் எங்களுக்கே இப்படின்னா அங்கன நெனச்சுப் பாக்கவே மிடிலயே 🤐🤐🤐

    ReplyDelete
    Replies
    1. "உஷ்ணம்" என்பதை விடவும் "ஆற்றமாட்டாமை" என்று சொல்லலாம் சார் ! நண்பர்கள் தேடுவது ; மிஸ் செய்வது அந்தப் பழைய நாயகர்களை அல்ல ; அந்த நாயகர்களுடனான தத்தம் இளமைகளின் நாட்களை !! இனி திரும்பிட வாய்ப்பில்லா ; கானல் நீரான அந்தக் காலங்களை இந்த பழம் நாயகர்களெனும் நினைவுச் சின்னங்கள் நினைவூட்டுகின்றன ! ஆனால் அதற்கான வாய்ப்புக்கு நான் கேட் போடும் போது எரிச்சல் மேலோங்குகிறது ! இது தான் யதார்த்தம் !

      ஆனால் ஒட்டுமொத்தமாய் ஏதோ சிலப்பதிகார, சீவக சிந்தாமணி ரேஞ்சிலான பில்டப்பை பழசுக்கு நண்பர்கள் தரும் போது - 'அடங்கப்பா !!' என்ற பெருமூச்சே வெளிப்படுகிறது !

      Delete
    2. ///சிலப்பதிகார, சீவக சிந்தாமணி ரேஞ்சிலான பில்டப்பை///

      ஹாஹாஹா! இதே மூடில் ஒரு கார்ட்டூன் எடுத்திங்கனா ரகளையா இருக்கும்!!!

      Delete
    3. சரியா சொன்னீங்க சார் இனிமையான நினைவுகளை மனதில் வைப்போம் எனது விருப்பம் புதிய கதைகள் தான் சார்

      Delete
    4. நண்பர்கள் தேடுவது ; மிஸ் செய்வது அந்தப் பழைய நாயகர்களை அல்ல ; அந்த நாயகர்களுடனான தத்தம் இளமைகளின் நாட்களை !! இனி திரும்பிட வாய்ப்பில்லா ; கானல் நீரான அந்தக் காலங்களை இந்த பழம் நாயகர்களெனும் நினைவுச் சின்னங்கள் நினைவூட்டுகின்றன//// அருமையான புரிதல் சார். உண்மை. முயற்சி செய்து திருத்திக் கொள்கிறோம் பழச நெனச்சு பத்து பைசாக்கு பிரயோஜனமில்லைனு சாணக்கியர் சொல்லியிருக்கிறாரு ("ஒருவன் நிகழ் காலத்தில் வாழ வேண்டும். கடந்த காலத்தை எண்ணிக் கவலைப் படுபவன் நிகழ்காலத்தை இழக்கிறான்.நிகழ்காலத்தை இழப்பதால் எதிர்காலத்தையும் இழக்கிறான்")

      Delete
  44. @ கிரிதரசுதர்ஸன்

    நிஜமாகவே தெறிக்க விட்டிருக்கிறீர்கள் நண்பரே! வில்லன்/வில்லிகளின் படங்களைத் தேடியெடுத்துப் போட்டிருப்பதில் உங்கள் உழைப்புத் தெரிகிறது! விமர்சனங்களைப் பார்த்து புக்கு வாங்குவதற்கு 'பச்சை சட்டை'யையும், நோ கமெண்ட்ஸுக்கு 'மிக்சர் மாமா'வையும் போட்டிருப்பதெல்லாம் ஹா ஹா ஹா ரசணை ரசணை!!

    தொடர்ந்து கலக்குங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. இந்த "புளிச்ச மாவு தோசை தான் வேணும்" படலத்துக்கு நண்பர் செய்திடப்போகும் graphics-ஐப் பார்க்க செம ஆவலாய் வெயிட்டிங் !

      Delete
    2. ///இந்த "புளிச்ச மாவு தோசை தான் வேணும்" படலத்துக்கு நண்பர் செய்திடப்போகும் graphics-ஐப் பார்க்க செம ஆவலாய் வெயிட்டிங் !///

      ஆனாலும் இது ஓவர் நையாண்டிங்க எடிட்டர் சார்!!😝😝😝

      Delete
    3. ஹா..ஹா..ஹா.. வடிவேலுவோட "அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல்!!! " போதுமென்று நினைக்கிறேன்.

      https://youtu.be/j_XBjVBOZBA

      Try செய்வோம்

      Delete
    4. // "அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல்!!! //

      my favorite comedy :-) மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த "புளிச்ச மாவு தோசை தான் வேணும்" படலத்துக்கு. :-)

      Delete
    5. ஓ...கவிதையா...கவனிக்கல வாழ்த்துக்கள் நன்றிகள் நண்பர்களே...கவனிச்சதுக்கும் கவனிக்க வெச்சதுக்கும்

      Delete
    6. ஏலே பொன்ராசுசு கவிதை கிடையாதுல :-) பதிவை இன்னும் ஒருக்கால படிச்சிட்டு வாலே மக்கா :-)

      Delete
  45. இந்த ஒற்றை நொடி ஒன்பது தோட்டா என்ற கதை தலைப்பின் காரணத்தை அறிந்து கொள்ள ஆவல் சார்!

    ReplyDelete
    Replies
    1. @ PfB
      அமெரிக்க ஜனாதிபதியைச் சுட்டுக் கொல்வது போன்ற கதையாக இருக்கக்கூடும்! அந்த ஒற்றை நொடியில் வெவ்வேறு திசைகளிலிருந்து வெவ்வேறு தோட்டாக்கள் சீறிவந்திருக்கலாம்!

      ஒரு அனுமானம் தான்!

      Delete
    2. இல்லை சார்....San Francisco நட்டு நடுவே ஒரு gunshot ஓசை கேட்கிறது ; 9 சடலங்கள் பலனாகின்றன ! கதையின் துவக்கமே அது தான் !! அங்கிருந்து துவங்கும் ஒரு புலனாய்வு தான் கதையே !! தெறிக்க வைக்கும் ஆக்ஷன் த்ரில்லர் !

      5 பாகங்கள் & ரணகள வேகம் !! கொரோனா மட்டும் குறுக்கிட்டிராவிட்டால் இன்றைக்கு இதற்கொரு மறுபதிப்புக் கோரி கொடி பிடிக்க ஒரு அணி கிளம்பியிருப்பது நிச்சயம் !

      Delete
    3. நாம எல்லாம் இந்த இங்கிலிஷ் காமிக்ஸ் கதை படிப்பது கிடையாது. அதனால் இந்த கேள்வி!

      ஒருவேளை ஒன்பது குரூப் சேர்த்து ஒரு விஷயத்தின் பின் செல்வதால் நடக்கும் கதை என்பதால் இருக்குமோ?

      என்னமோ போங்க விஜய் இதற்கு தான் அப்பப்ப நாமும் இங்கிலிஷ் காமிக்ஸ் படிக்க வேண்டும் போல தெரிகிறது!

      பாருங்க நம்ப ஆசிரியர் கென்யா தமிழில் போடுவார் என்று கடந்த இரெண்டு வருடமாக காத்து கொண்டு இருக்கிறேன்! இந்தா வருது அந்தா வருது என சொல்லுறாங்க கைக்கு இன்னும் புத்தகம் வரவில்லை!

      பேசாம ஒரு இங்கிலிஷ் டீச்சர் கிட்ட டியூஷன் போய் இந்த இங்கிலிஷ் காமிக்ஸ்ஸை எல்லாம் படித்து கதை சொல்ல சொல்லாமல் என இருக்கேன்! நீங்க வாரீங்களா ? :-)

      Delete
    4. // ஒரு புலனாய்வு தான் கதையே !! தெறிக்க வைக்கும் ஆக்ஷன் த்ரில்லர் ! //

      சார் சீக்கிரம் போட்டு தாக்குங்க சார்! இன்னும் தாமதிக்க வேண்டாம்!!

      Delete
    5. //
      பேசாம ஒரு இங்கிலிஷ் டீச்சர் கிட்ட டியூஷன் போய் இந்த இங்கிலிஷ் காமிக்ஸ்ஸை எல்லாம் படித்து கதை சொல்ல சொல்லாமல் என இருக்கேன்! நீங்க வாரீங்களா ? :-)//
      தெரியம்னு சொல்வதுவிட தெரியாது ன்னு சொல்ரதுலதான் ரொமான்ஸ் அதிகம்னு தல செல்லிருக்காப்ல... நீங்க நடத்துங்கள்.

      Delete
    6. ////San Francisco நட்டு நடுவே ஒரு gunshot ஓசை கேட்கிறது ; 9 சடலங்கள் பலனாகின்றன ! கதையின் துவக்கமே அது தான் !! அங்கிருந்து துவங்கும் ஒரு புலனாய்வு தான் கதையே !! தெறிக்க வைக்கும் ஆக்ஷன் த்ரில்லர் !///

      வாவ்!! அட்டகாசமான கதைக்களமா இருக்கும் போலிருக்கே எடிட்டர் சார்!!
      காத்திருக்கிறோம்... சீக்கிரமே களம் கண்டிட!!

      Delete
    7. அடப் போங்க PFB Kenya ஆங்கில புக் செட்டை நம்ம ஆன்லைன் புக்பேர்ல வாங்கிப்புட்டு நானும் முழு முழியாங்கண்ணண் ஆகிட்டேன் போங்க... முதல் பாகமே இன்னும் தாண்டலே... ஏதோ ஒரு ஈர்ப்பு மிஸ்ஸிங்... ஒன்றவே இயலவில்லை அந்த ஃபீல் இல்லாமல்...😤

      Delete
    8. ////பேசாம ஒரு இங்கிலிஷ் டீச்சர் கிட்ட டியூஷன் போய் இந்த இங்கிலிஷ் காமிக்ஸ்ஸை எல்லாம் படித்து கதை சொல்ல சொல்லாமல் என இருக்கேன்! நீங்க வாரீங்களா ? ////

      ஹிஹி!! கொரோனா முடியட்டும் PfB - ஒரு இளம் இங்கிலீஸ் டீச்சரை தேடிப் புடிச்சிடலாம்!

      நம்ம அனு சகோ கூட ஒரு இங்கிலீஸ் டீச்சர் தான்! ஆனா எல்லாப் பாடத்திலும் உப்புமா வாசம் தூக்கலா இருக்குமேன்னுதான் பயமாயிருக்கு!

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. ஈ.வி: ஆனால் கென்யா படங்கள் எல்லாமே 🥰🥰 வேற வேற லெவல் 😁😁😁... அதுனால கூட ஸ்லோ ஆயீயீயீயீயீ... 😁😁😁

      Delete

      Delete
    11. ////ஆனால் படங்கள் எல்லாமே 🥰🥰 வேற வேற லெவல் 😁😁😁///

      உங்களால கதையை ஏன் படிக்க முடியலைன்னு இப்பப் புரியுது!

      நானும் ஆன்லைனில் ஒரு செட் ஆர்டர் பண்ணிடலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்...

      Delete
    12. // ஏதோ ஒரு ஈர்ப்பு மிஸ்ஸிங்... //

      தாய் மொழி தமிழில் இல்லாதது தான் என நினைக்கிறேன் :-)

      Delete
    13. தேடிப் புடிச்சிடலாம் தேடிப் புடிச்சி கென்யா படிச்சிடுவோம்.

      Delete
    14. தேடல் எல்லாம் எதற்கு??? வேண்டுமெனில் கூறுங்கள் சார் அனுப்பி வைக்கிறேன்.👍🙏

      Delete
  46. எடிட்டர் சார்..

    பதிவுல நிறைய நையாண்டிகள் இருந்தாலுமே கூட ஒட்டு மொத்தமா அனல் தெறிக்குதுன்றது தான் உண்மை! ('அடுத்த பதிவு லைட்ட்டாத்தான் இருக்கும்'னு நீங்க சொன்னது இதானுங்களா சார்?!!)

    சகட்டுமேனிக்கு ஆசைப்படுவதும், அதை எக்குத்தப்பாக கேட்டு வைப்பதும் தான் எங்களது வேலை! மத்தபடி உங்களுக்கு எது சரின்னு தோனுதோ அதைச் செய்யுங்க! எப்படியும் எங்களுக்குக் கிடைக்கவிருப்பது BEST ஆகவே இருந்திடுமென்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உண்டு!

    ReplyDelete
    Replies
    1. ஒரு சந்தோஷத் தருணம்....பகிர்ந்திட...கலந்தாலோசிக்க...மகிழ்ந்திட.... ஒரு நூறு விஷயங்கள் உள்ளன ! எதுவுமே இன்னும் கல்லில் வார்க்கப்பட்டிருக்கா நிலையினில் ; மாற்றங்கள், முன்னேற்றங்கள் மட்டுமே இங்கு லட்சியங்களாய் இருக்க முடியும் ! அடுத்த ஸ்டார் நாயகர்களாகிடக்கூடிய 2 புதியவர்களைப் பற்றி அதிகாலை 4 மணிக்கு தோண்டியெடுக்க முயற்சித்து வருகிறேன் - ஆனால் அவர்களைப் பற்றிய பெயரளவிலான விசாரணைகளுக்குக் கூட யாருக்கும் அவகாசம் தந்திடாமல் - "தாத்தா நாலாப்பில் மாங்கா வாங்கித் தந்த நாளில் நான் படிச்ச 'மாங்கா'வே தான் இன்னிக்கும் வேணும் ; இல்லாட்டி குடியே முழுகிப் போயிடும் !' என்ற ரேஞ்சுக்குப் புலம்புவதை என்னவென்பது சார் ?

      நாலு பேர் ; நாலாபுறமும் நின்று கொண்டு ; ஏழு கட்டை சுருதியில் அழுகுரல் எழுப்பும் போது சற்றே ஊன்றிக் கவனிக்க நேரமில்லா நண்பர்களுக்குமே - 'இத்தினி சத்தம் போட்டு அழறாங்கன்னா - மெய்யாலுமே இதிலே ஏதோ தப்பாகிடுச்சி போல !!' என்ற எண்ணங்கள் எழுவதுமே கண்கூடு ! Positivity எனும் குமிழை உருவாக்குவது பிராணன் போகும் பிரயத்தனம் ; ஆனால் அதை அல்லாசல்லையாக்குவது அரை நொடியின் ரௌத்திரங்கள் !

      And இது எல்லாமே to what end ??

      கையில் மாவே கிடையாது ; இருக்கும் சொற்ப மாவும் ரெண்டு மகாமகங்களுக்கு முந்தைய வண்டு விழுந்த சரக்கு ! ஆனால் நீ என்ன செய்வியோ - எது செய்வியோ தெரியாது, இதிலே தான் நெய்யெல்லாம் போட்டு பணியாரம் சும்மா ஜிலோன்னு சுட்டுத் தந்தே தீரணுமென்று அடம் பிடிப்போருக்கு என்ன சொல்வது ? பொறுமையாய் ஒவ்வொருவருக்கும் நிஜத்தை விளக்க முற்பட்டாலும் 'என் காது கேட்காது !!' என்றிட்டால் எனக்கு வேறென்ன மார்க்கங்கள் முன்னிருக்க முடியும் சார் ?

      Delete
    2. இங்கே காமெடியாக எழுதி இருந்தாலும் அதன் பின்னால் உள்ள உங்களின் ஆதங்கம் புரிகிறது!

      Delete
    3. அப்புறம் அந்த அடுத்த ஸ்டார் நாயகர்களாகிடக்கூடிய 2 புதியவர்களை பற்றிய முனோட்டம் எப்போது சார்!

      Delete
    4. சார் முன்னேற்றம் நிச்சயம்னு செந்தூரான் சொல்லிட்டார்....நீங்க நம்ம மாலைய விதவிதமா நிறய பூ தொடுத்து ஆளுயரமாலையா தரனும்...அந்த முத்துகளுடன் கோர்த்தே...

      Delete
    5. சார் அவர்கள் கௌபாயா...கடல்கொள்ளயரான்னு நாளைய பதிவில் சொன்னால் மகிழ்ச்சி

      Delete
    6. இல்லைங்க சார் ! பொதுப்படையான outline தந்ததற்கே இங்கே இந்தக் கூத்துக்கள் ! இதில் நான் முழுசுமாய் விபரங்கள் ; முன்னோட்டங்கள், பின்னோட்டங்கள் என்று தரும் பட்சத்தில் இப்போவே அலசுறேன் - ஆராயுறேன் என்று இறங்கி சகலத்தையும் ஒரு வழியாக்கி விடுவார்கள் ! அட்டவணையில் தான் இனி விபரங்கள் எல்லாமே !

      எனக்குமே நிறைய திட்டமிடல்கள் ; உரிமைகள் கோரல் ; அவற்றிற்கான பண ஏற்பாடுகள் என ஏகமாய் வேலைகள் இருக்கும் இதனில் !

      Delete
    7. //தாத்தா நாலாப்பில் மாங்கா வாங்கித் தந்த நாளில் நான் படிச்ச 'மாங்கா'வே தான் இன்னிக்கும் வேணும்// எச்சூஸ்மீ..‌ எங்க தாத்தா அது கூட வாங்கி தந்ததில்லை சாரே😁😁😁

      Delete
  47. ///உங்களுக்குப் பிடித்தமான திக்கில் வண்டியை இட்டுச் செல்லும் வரையிலும் "ஆசானாய்" தென்படுபவன், அவசியமான, ஆனால் உங்களுக்கு ரசிக்காத பாதையில் புகுந்திடும் முதல் நொடியில் வெறும் "ஆசாமியாய்" மட்டுமே தெரிவேன் என்பதை நாள் ஒன்றிலேயே நான் உணர்ந்து கொண்டேன்///

    ஹாஹாஹா!

    ஆஹா! என்ன பஞ்சாயத்துன்னு தெரியலையே!

    ReplyDelete
  48. Replies
    1. பனிப் போர் காலத்தில் அமெரிக்காவில் ஊடுருவிய ரஷ்யா உளவாளிகள், அவர்களை தீர்த்து கட்டும் ஒரு கொலைகாரன், அவனிடம் இருந்து தப்பி ஓடும் ஒரு தந்தையும் மகனும், அந்த கொலைகளை புலனாய்வு செய்யும் FBI, இறுதியில் இவை அனைத்தும் நடப்பது எதனால் என்ற புதிர் விடுபடுமா???

      Delete
    2. ஆகா கதய சொல்லிட்டிங்களே...அதகளமாருக்கும் போல...ரஷ்யா அமெரிக்கான்னாலே பிச்சிக்குமே

      Delete
    3. கதையை சொல்லவில்லை பொன்ஸ் ஒரு outline தான் கொடுத்து உள்ளேன். ரொம்ப நாள் ஆச்சு படித்து நினைவில் இருந்ததை வைத்து சொல்லி இருக்கிறேன்.

      Delete
    4. நானும் 666 பத்தி கேட்க வேண்டும் என்று தான் நினைத்தேன். நன்றி சார் தகவலுக்கு. எடிட்டர் ஆல்ரெடி ரூட் 666 பற்றி பதிவில் கூறியுள்ளாரா சார்???🤔🤔🤔

      Delete
  49. // அடுத்த (குட்டி) ஆலமரத்தை //

    விஜய் & கண்ணா இதை கவனிச்சிங்களா? ஒருவேளை நாளைக்கு "நேற்று இன்று நாளை" பதிவில் சொன்ன தொடர் # 2 கதையின் படங்கள் + மூன்னூட்டம் வருமோ நாளைய பதிவில் :-)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! 'பட்டும் படாமலும்'னு ஏதோ சொன்னாரு. பார்ப்போம் - எங்கே படுது.. எங்கே படலைன்றதை! :)

      Delete
    2. இல்லைங்க சார் ! பொதுப்படையான outline தந்ததற்கே இங்கே இந்தக் கூத்துக்கள் ! இதில் நான் முழுசுமாய் விபரங்கள் ; முன்னோட்டங்கள், பின்னோட்டங்கள் என்று தரும் பட்சத்தில் இப்போவே அலசுறேன் - ஆராயுறேன் என்று இறங்கி சகலத்தையும் ஒரு வழியாக்கி விடுவார்கள் ! அட்டவணையில் தான் இனி விபரங்கள் எல்லாமே !

      எனக்குமே நிறைய திட்டமிடல்கள் ; உரிமைகள் கோரல் ; அவற்றிற்கான பண ஏற்பாடுகள் என ஏகமாய் வேலைகள் இருக்கும் இதனில் !

      Delete
    3. கோகிலா கிட்டே சொல்லி இப்போவே ஒரு சட்டி தார் ரெடி பண்ணிடச் சொல்ல வேண்டியது தான் போலும் !

      Delete
    4. // அட்டவணையில் தான் இனி விபரங்கள் எல்லாமே ! //

      சூப்பர். Very good move.

      Delete
    5. // கோகிலா கிட்டே சொல்லி இப்போவே ஒரு சட்டி தார் ரெடி பண்ணிடச் சொல்ல வேண்டியது தான் போலும் ! //

      சொல்லுறது தான் சொல்லுறீங்க தாரை ஒரு டிரம்மா சொல்லி விட வேண்டியதுதானே சார் :-)

      Delete
    6. //அலசுறேன் - ஆராயுறேன் என்று இறங்கி சகலத்தையும் ஒரு வழியாக்கி விடுவார்கள் ! அட்டவணையில் தான் இனி விபரங்கள் எல்லாமே ! //

      சரியான முடிவுங்க சார். உங்க கிட்ட விற்பனை விவரம் இருக்கு. கேள்வி பதில் மூலம் கிடைத்த கருத்துக் கணிப்பு (கணிப்பு தான். ஏன்னா 300 சந்தாதாரர்களில் 50 பேர் மட்டுமே பதில் சொல்லி்ருக்காங்க) இருக்கு. இதுக்கு மேல நீங்க பாட்டுக்கு முடிவெடுத்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்.

      ஆசைகளை சொல்வதோடு எங்கள் வரம்பு முடிவடைந்து விடுகிறது. முடியாது முடியும் என்பது தவிர நீங்கள விளக்கம் அளித்து பயன் ஏதுமிருக்கா என்று எனக்குத் தெரியவில்லை.

      சந்தாவில்கதைகள் பட்டாசாக இருக்க வேண்டும். அப்போது தான் சந்தாவை அதிகரிக்க முடியும். அதற்கு என்னென்ன தேவையோ அதை மட்டும் கவனிங்க சார்.

      2022 விற்பனையில் சிறக்கும் வருடமாக இருக்க வாழ்த்துகள்.

      Delete
    7. //சந்தாவில்கதைகள் பட்டாசாக இருக்க வேண்டும். அப்போது தான் சந்தாவை அதிகரிக்க முடியும். அதற்கு என்னென்ன தேவையோ அதை மட்டும் கவனிங்க சார்.

      2022 விற்பனையில் சிறக்கும் வருடமாக இருக்க வாழ்த்துகள்.//
      அதே அதே அருமை மகி...
      ஸ்பைடர் இல்லாமலா...சார் இக்கதைகள் எத்தனன்னியாச்சும் சொல்லுங்க...ஆலமரம் காத்திருக்கு விழுதுகள் தாங்கி

      Delete
    8. Well said மகேந்திரன்!

      Delete
  50. டிடெக்டிவ் ஸ்பெஷலில் வந்த மார்ட்டின் கதையை இந்த வாரம் எப்படியாவது நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்!

    ReplyDelete
  51. // அடுத்த ஸ்டார் நாயகர்களாகிடக்கூடிய 2 புதியவர்களைப் பற்றி அதிகாலை 4 மணிக்கு தோண்டியெடுக்க முயற்சித்து வருகிறேன் //

    யார் சார் அவிங்க எனக்கே அவிங்களை பார்க்கணும் போல இருக்கே ;)

    ReplyDelete
  52. அன்புடன் ஆசிரியரே..!!
    நாங்கள் விவரம் தெரிந்தநாள் முதலாக மனதிலே நின்ற நாயர்கள் தான் வேண்டும் என்று நண்பர்கள் விரும்பினார்கள்..!
    ஆனால் புதியவர்களையும் ஏற்றுகொண்டார்கள் முத்து காமிக்ஸ் என்றால் அது எங்கள் இதயம் அதுவும் 50 ஆண்டு நிறைவு என்பது மறக்கமுடியாதது
    இதில் கலந்து கொள்ளமுடியாமல் போன காமிக்ஸ் சொந்தங்கள் எத்தனையோ அதுவும் தெரியாது..? இருக்கும்போதே படித்து விடவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு..?நீங்கள் எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் உங்கள் தேர்வு நன்றாகவே இருக்கும்.

    முத்து 50 ஒன்றே வருகினும் நன்றேவரும் என்ற நம்பிக்கையுடன்....................

    மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது

    ஆனால் முத்து, லயன் என்றால் அது எங்கள் உயிருக்கு நிகரானது அதில் மாற்றம் கிடையாது👍

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், புரிதலுக்கும் நன்றிகள் சார் !

      Delete
    2. அருமை நண்பரே ...சார் ஒரே புக்கா நிறய கதைகள்னு ஒத்துகிட்டீங்களே அது போதும்

      Delete
    3. சார் மாதாமாதம் வரும் காமிக்ஸ் புக்கிலே மிகுந்த கவனம் செலுத்தும் நீங்கள் ஆண்டுமலர் அதுவும் 50 வது என்னும் போது அதில்
      அதீத கவனம் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு சார்..!!
      உங்கள் அன்பான பதிலுக்கு நன்றி சார்

      Delete
  53. மதியில்லா மந்திரி துக்கடா கதையில் ஒன்னு பார்ஸல்....ல் ல் ல் ல் ல் ல் ல் ல் ல்

    ReplyDelete
  54. எங்களுக்கும் 45 வயாசாவுது....வராத பழைய நாயகர்களை பார்த்துப்புட்டுடால் ஒரு திருப்தி....விண்வெளி பிசாசு.....மறுபதிப்பு காணா மாயாவி....


    ஜானி நீரோ.....நோ நோ நோ

    ReplyDelete
    Replies
    1. ஹை...ஜாலி ! விண்வெளிப் பிசாசு !! இப்போ யே...டண்டணக்கா..என்றபடிக்கே நம்மாள் வந்திடுவார் !

      Delete

    2. // யே...டண்டணக்கா..என்றபடிக்கே நம்மாள் வந்திடுவார் ! //

      நம்ப மக்கா வரதுக்குள்ள நான் தூங்க போறேன் சார் :-)

      Delete
    3. சார் அதற்க்கு நேரம் கனியாமலா போகப் போகுது...இன்னைக்கு இல்லாட்டி...நாளை ஒருநாள் இப்ப படிக்கைல தூங்றதா சொன்ன எல்லாரும் தங்கள் தட்டி எழுப்ப ஸ்பைடர் வேணும்னு கூறப் போவது உறுதி...இப்ப நீங்க சொன்ன மாதிரி தளர்வே இல்லாத விறுவிறு கதைகள் வரட்டும்...இரண்டு வருடங்கள் கழித்ததும் இங்க தட்ற தட்டுல லண்டன் கதவுகள் திறக்கப்படும்...அதுக்குள்ள நம்ம குடோன் காலியாயிடும்...

      Delete
    4. ஸ்பைடர் இல்லாத ஆண்டு மலர்....😢😢😢😢😢😢

      அய்யோ யாரையாவது கட்டிப்பிடிச்சு அழ முடியல.....கோரோனா வேற....😢😢😢😢😢

      Delete
    5. கவனமா இருங்க மந்திரியாரே.

      Delete
    6. ////அய்யோ யாரையாவது கட்டிப்பிடிச்சு அழ முடியல.....கோரோனா வேற....😢😢😢😢😢////

      மந்திரியாரே... 🤣🤣🤣🤣

      Delete
  55. எடிட்டர் சார்,
    குழப்பம் வேண்டாம்.உங்கள் விருப்பம் போலவே நல்ல படைப்புகளை வெளியிடுங்கள்.தரமாகவே இருக்கும் அவற்றை வரவேற்க தயாராக இருக்கிறோம்.விருப்பம் வேறு நிலவரம் வேறு என்று உணர்ந்தவர்கள் நாங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் தெளிவாகவே உள்ளேன் சார் ; புரிதலுக்கு நன்றிகள் !!

      Delete
  56. நண்பர் கிரிதரசுதர்ஸன் - செம

    👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  57. ஐயா, ஆப்ஷன் கொடுத்ததால் அழுத்தமாக கேட்டது உண்மை. ஆனால், இந்த பதிவில் தாங்கள் கொடுத்த விளக்கங்கள், நடைமுறை சிக்கல்கள் நிறையவே பாடம் எடுத்தது போல் இருந்தது.

    நமது காமிக்ஸ் தொடர்ந்து புதிய திசைகளில் தெறிக்க விட வாழ்த்துக்கள்...

    பழைய காமிக்ஸ்களை பொறுத்தவரையில், உங்களால் முடிந்ததை, வாய்ப்பு கிடைக்கும் போது வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது!

    நன்றி!

    ReplyDelete
  58. சார் நாங்க வெளியிடும் கருத்துக்கள்ஒரு ஆப்சன் மட்டுமேஎதை எப்படி எப்போது வெளியிடுவது என்பதுஉங்களுக்குநன்கு தெரியும். ஆனால் எல்லோரையும் திருப்திப் படுத்தவே எப்பொழுதும் முயற்சிக்கிறீர்கள்ரிப் கிர்பியின் கதைகள் மறுபதிப்பு என்று கேட்டுக் கொண்டபோதெல்லாம். தற்போது இயலாது, பிறகு முயற்சிப்போம் என்று கூறினீர்கள். கூறியவாறே( கம்பி நீட்டியகுருவி) வெளியிட்டீர்க ள்ஆனால் போதியவரவேற்புகிடைக்கவில்லை."முத்து 50"ல் முடியாவிட்டாலும் இயன்ற பொழுது நாங்கள் கேட்டமாண்ட்ரேக்.மெபிஸ்டோ,கிர்பி,மாடஸ்டி,சார்லிஎன அனைத்து புத்தகங்களையும்கொடுப்பீர்கள்என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தற்போதைக்கு முத்து 50 விலை, புத்தகம் எப்பொழுது வரும் புத்தகஅமைப்புபோன்றவற்றில்தாங்கள்கவனத்தை செலுத்துங்கள் சார். பஞ்சாயத்துக்களை பிறகுபார்த்துக் கொள்ளலாம்.என்றும் உங்களுடன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  59. ஐயா, ஆப்ஷன் கொடுத்ததால் அழுத்தமாக கேட்டது உண்மை. ஆனால், இந்த பதிவில் தாங்கள் கொடுத்த விளக்கங்கள், நடைமுறை சிக்கல்கள் நிறையவே பாடம் எடுத்தது போல் இருந்தது.//

    விளக்கமாக புரிய வைத்தமைக்கு நன்றி ஆசானே...நாங்கள் எப்போதும் உங்களுடனே... வழக்கம்போல உங்க ஸ்டைல்ல முத்து50 தெறிக்கவிடுங்க நாங்கள் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  60. கிரிதரசுதர்சன்@ கிறிஸ் ஆப் வால்நார் வில்லிக்கு நிறைய ஓட்டுகள் பெற்ற மாதிரி ஞாபகம், ஆனால் அவரை பற்றி ஒன்றும் நீங்கள் சொல்லவில்லை! am I missing any!

    ReplyDelete
    Replies
    1. நேரடி பதில்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டேன். கி.ஆ.வி பற்றி போட அவர்களின் ரிப்ளையில் சில விமர்சனம், விவாதம் மற்று பகடிகளை கணக்கில் எடுத்துக்கலை. அவருக்கு வந்த 4 direct ஓட்டுடன் கடைசி வரிசையில் உள்ளார

      Delete
  61. சிரமங்கள் நிறைய இருப்பின் முத்து 50 வது ஆண்டுமலரை ஏதாவது ஒரு குண்டு ஸ்பெஷல் சாகஸத்தோடு கொடுத்து விடுங்கள் சார் (ஹார்ட் பைண்டிங் முக்கியம்),எப்படியும் 2023 ல் முத்து 500 வது இதழ் வர வாய்ப்பிருக்கு அதில் பெரிதாக திட்டமிட்டு கொள்ளலாமே சார்...!!!

    ReplyDelete
  62. அன்பார்ந்த ஆசிரியருக்கு,
    ஆலமரம் 2 பதிவை படிப்பவர்களுக்கு இரண்டு விஷயங்கள் புரிந்திருக்கும்.
    1 காமிக்ஸ்க்கான தங்களின் உழைப்பு, முயற்சி &சிந்தனை.
    2. தங்களின் பரந்துபட்ட முயற்சி உதாரணம் Fleetway , Bonneli , Dargaud, என்கிற பல்வேறு தரப்பட்ட நிறுவனங்களில் இருந்து தமிழுக்கு கொண்டு வரும் செயல்.
    Option #1 to #4 No options at all. அதாவது சாய்ஸ் நஹி.

    Tiger ன் டை ஹார்டு பேஃனாகிய நான் கனத்த மனதுடன் அடுத்த ஆப்சனுக்கு நகருகிறேன்.

    Option #5 கென்யா, ரூட் 66 - கென்யா - ஓ. கே.

    Option #6 மர்ம மனிதன், சிஐடி ராபின், ஜுலியா. டைலன் டாக் - இது ஓ.‌கே தான். ஆனால் Option #5 80 மார்க் என்றால் இந்த ஆப்சனுக்கு 75 மார்க்.

    Option #7. மாயாவி, லாரன்ஸ் டேவிட், செக்டன் பிளேக். 13 வது தளம். - இதுக்கு மொத்தமாக நாட் ஓ. கே. ( Not Ok).

    Option #8 வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கெர்பி காரிகன். இது ஓ. கே. ஆனால் முத்து 50 என்ற லேபிளில் 12 இதழ்களாக ஆண்டு முழுவதும் கொண்டாடலாம். உதாரணமாக இளைஞர் ஆண்டு, பெண்கள் ஆண்டு என்பதைப் போல.

    Option #9 தோர்கல் சிக்பில் ரிப்போர்ட்டர் ஜானி - இதில் தோர்கல் குண்டு புத்தகமே சரி என்பது எனது எண்ணம்.


    Option #10 ஹெர்மன் - ஓ. கே.

    ஆக எனது ஆப்சன்கள் 5 , 6 , 9, 10.

    ReplyDelete
  63. Please see ethe option No. 3 in your post Edi Sir.

    You mentioned Soda OK Stern Not Twice Please change it.

    ReplyDelete
  64. நண்பர்களின் பதிவுகளில் ஓர் பதைபதைப்பு தென்பட்டது...அதாவது இப்ப விட்டா முத்துவில் வாய்ப்பே இல்லாம போயிடுச்சு...
    ஆசிரியர் கூறிய காரணங்கள் நண்பர்கள் யோசிக்க...
    1.இடத்தை அடைக்கும் மும்மூர்த்திகள்...
    2.இந்த ஆண்டின் இரத்தப்படலம்
    3.சந்தா வசூல் தடுமாற்றம்
    இக்கதைகள் சத்தால் உள்ளோர் 30அல்லது 50சதம் வாங்கினாலும்... கதைகள் குறித்து படித்த பின் வாங்க உள்ள நண்பர்கள் வாங்குனாதான இன்னோர் சக்கரமும் உருளும்...
    ஆக மிகச்சிறந்த கதைகள் வந்தா எல்லோர்க்கும் சந்தோசம்
    மகி சரண் போன்றோர் விலைகள் குறைக்க அட்டவணை போட்டது அருமை...அதில் ஆயிரம் ரூபாய் மிச்சம்...ஆனா டெக்ஸ் ஏறத்தாள பாயாச பார்ட்டிக உட்பட வாங்கிக் குவிக்க கூடிய ...நமது நான்கு தூண்கள் இந்த இடர் காலத்ல குறைஞ்சா தாங்கும் வழிதான் ஏது...ஏற்கனவே ஆசிரியர் 12 டெக்சும்..கூட3 இளம் டெக்சும்...கூட 6 சிறப்பு தட டெக்சும் தர உறுதி அளித்துள்ளார்
    ...இந்நிலையில்

    ReplyDelete
    Replies
    1. நம்ம பழம் நாயகர்கள பத்து கதைகள வாங்னாதான் தருவேன்கிற நிர்பந்தம் இல்லா கதைகளாய் ஒர்இரு வருடங்க கழிச்சி கேப்பமே...இப்ப மூச்சு விடுவோம்...அப்புறம் ஊர் சுத்து வோம் சந்தோசமாய்

      Delete
    2. ஆசிரியர் இரத்தப்படலம் முடியாதுன்னார்...இப்ப இரண்டாம் மறுபதிப்பு...தலைவாங்கிகுரங்கு இரண்டாம் மறுபதிப்பு...நாம் அன்பா கேட்டு மறுத்ததுடண்டா...சரியான கால கட்டத்ல ஒரு தொகுப்பு ...நம்மைப் போன்றோர்க்கு லிமிட்டட்ல கேட்டு வாங்குவோம்

      Delete
  65. சார்...

    இந்த கஷ்டமான உலக சூழலில்... எங்களுக்கு "வெறும்" பொழுதுபோக்கான ஒரு விஷயம்... காமிக்ஸ்... போன வருடம் இதே காலகட்டத்தில்... நமது பொழுதுபோக்கான காமிக்ஸ் தொடர்ந்து வருமா என்பதே எனக்கொரு கேள்விக்குறியாய் இருந்தது... எங்களுக்கு just like thatஆன விஷயம்... உங்களுக்கோ உயிர்மூச்சு... வாழ்வாதாரம்... இப்படிப்பட்ட சூழ்நிலையில்... நீங்கள் கடந்த இரண்டு வருடங்களாக படும் பிராயத்தனங்களை ஒரளவு கண்டே வருகின்றோம் நாங்கள்... இந்த சூழல் மாற இன்னும் சில காலம் ஆகும் என்பது கண்கூடு... இந்தளவிற்கு இந்த கடின சூழலில் எங்களது சிறந்த/பிடித்த பொழுதுபோக்கை எவ்வித குறையுமின்றி திகட்ட திகட்ட வழங்கி வரும் உங்களுக்கும் உங்கள் பின் நின்று செயல்படும் அனைத்து பிரகாஷ் பப்ளிஷர்ஸ் செயல்வீரர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..

    முத்து50 இந்த கடின சூழலில் வரவிருப்பது மகிழ்ச்சியையும்/கலக்கத்தையும ஒருங்கே அளிக்கிறது... நாங்கள் என்னதான் ideas கொடுத்தாலும்... they are just that... Always take them with a pinch of salt... இந்த திட்டங்களின் கஷ்டகணக்குகளை நாங்கள் என்றும் பார்க்கப் போவதில்லை... நீங்கள் எப்படியும் எங்களிடம் மறைக்கத்தான் போகிறீர்கள்... என்னைப் பொருத்தவரை... நீங்களே சிறந்த judge... எது விற்கும்... எது stockroom போகும என்பது எங்களை விட உங்களுக்கே வெளிச்சம்...

    நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும்... நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையிருப்போம்...

    என்னைப்பொருத்தவரை... இந்த கடினத்தருணத்தில்.. எவ்வளவோ விஷயங்கள்.. இடந்தெரியாமல் போயிருக்க... நம் காமிக்ஸ் சிறுவட்டம் உயிர்ப்புடன் இருப்பதே... இந்த "முத்து50" ன் சிறப்பாக நான் எண்ணுகிறேன்...

    நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. முத்து50 இந்த கடின சூழலில் வரவிருப்பது மகிழ்ச்சியையும்/கலக்கத்தையும ஒருங்கே அளிக்கிறது... நாங்கள் என்னதான் ideas கொடுத்தாலும்... they are just that... Always take them with a pinch of salt... இந்த திட்டங்களின் கஷ்டகணக்குகளை நாங்கள் என்றும் பார்க்கப் போவதில்லை... நீங்கள் எப்படியும் எங்களிடம் மறைக்கத்தான் போகிறீர்கள்... என்னைப் பொருத்தவரை... நீங்களே சிறந்த judge... எது விற்கும்... எது stockroom போகும என்பது எங்களை விட உங்களுக்கே வெளிச்சம்...

      நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும்... நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையிருப்போம்...
      +1

      Delete
  66. ஐயோ பாவம்! பதிவைப் பார்த்தவுடன் தோன்றிய எண்ணமிது சார். ஆவுற வேலய பாப்பம்!

    ReplyDelete
  67. உங்களில் யார் அடுத்த ஜால்ராபாய் .......

    சதி மதி மந்திரியின் அடுத்த பிளான் .....ரெடி

    ‘’விண்வெளி பிசாசு’’ வெளியில் வர ஒரு சதித்திட்டம் தயார்


    மந்திரி: டேய் ஜால்ராபாய் ஆசானை கவுக்க அடுத்த கட்டம் தயார்
    ஜால்ராபாய்: வேணாம் மாஸ்டர் உங்க பிளான் உலக பிரசித்தம்
    மந்திரி: ச்சலோ சிவகாசி
    ஜால்ராபாய்: வேண்டாம் மாஸ்டர்
    விதி யாரை விட்டது

    மந்திரி: ஜால்ராபாய்..............ராத்திரியோட ராத்திரியா .....ஆசான் வீட்டு
    வாசல் முன்னாடி குழி தோண்டுறோம்
    ஜால்ராபாய்: வேண்டாம் மாஸ்டர்
    மந்திரி : கதவை தட்டும் முன் சாபிட்டறானு பார்க்கணும்
    ஜால்ராபாய்: கதவை தட்டும் முன் ஏன் சாபிட்டறானு பார்க்கணும்????????
    மந்திரி : சஸ்பென்ஸ்
    ஜால்ராபாய்: வேண்டாம் மாஸ்டர்


    மந்திரி: ஆசான் வீட்டு கதவை தட்டுறோம்

    ஜால்ராபாய்: வேண்டாம் மாஸ்டர்


    மந்திரி ஜால்ராபாய்: ‘’ஈரோட்டுல இருந்து இத்தாலி’’................ வந்துருக்கேன்னு நீ கூவுற ...............
    மந்திரி ஜால்ராபாய்: வேண்டாம் மாஸ்டர்

    மந்திரி: ஆசான் தடால்ல்னு கதவை திறந்து .......தொபுக்கடீர்னு குழியில
    விழுவாரு.....அந்த சமயம் பார்த்து நாம எழுதிவச்சு இருக்குற
    ‘’விண்வெளி பிசாசு’’ லோடு கமெண்டுகளை குழியில கொட்டுறோம்
    நிறைய கொட்டினா அதுமேல ஏறி வந்துடுவாரு
    ஜால்ராபாய்: ஓகே :அப்ப பாதி கொட்டினால் போதும்

    மந்திரி :மத்தியானம் வரை காத்துட்டு இருக்கணும்

    ஜால்ராபாய்: ஒஹ்......... அதுக்கு தான் காலையில டிபன் சாபிட்டாரான்னு
    பார்க்கணும் சொன்நீங்களா .....
    மந்திரி : மத்தியானத்துக்கு சாப்பிட வெளியில விட சொல்லுவாரு அப்ப
    நம்ம விண்வெளி பிசாசு கேட்டு வாங்கிக்கிறோம்
    ‘’லோட் மோர் கமெண்ட் பாய்ஸ்’’......களை கூப்பிடுறோம்
    கமெண்டுகளை அள்ளி குழியில போடுறோம்....ஆசான்
    கமெண்டுகள் மேல ஏறி வருவாரு
    தூக்கிவிட்டுட்டு “”குழியில் விழுந்த குளியலே’’’ னு (கமெண்ட் குளியல்) துதி பாடுறோம்
    மந்திரி ஹாப்பி அண்ணாச்சி ...............



    இனி நடக்கபோவது ...........
    விடிந்தும் பல தடவை கதவை தட்டியும் ஆசான் வராத காரணத்தினால்

    கொள்ளை புறவாசலை உடைத்து உள்ள நுழைந்தார் ....மந்திரி

    இருட்டில் தட்டு தடுமாறி ஆசானை தேடினார் ....

    எங்கேயும் ஆப்படாத ஆசானை தேடி ........முன்பக்க வாசலை திறந்தார் .....மந்திரி

    தொபக்கடீர் .........

    ஆசான்..........டாஆஆஆ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    மறுபடியும் விதி U TURN போட்டுடுச்சே ............








    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே... 🤣🤣🤣🤣

      Delete
    2. மந்திரியாரே 😂😂😂😂

      Delete
    3. அந்த குழியில மன் அள்ளி போடுரோம் :) :) :)

      Delete
    4. அந்த குழியில மன் அள்ளி போடுரோம் :) :) :)

      Delete
    5. ஹஹஹஹ....மதியுள்ள மந்திரி...சார் ஒநொஒதோட்டாவ விட்டு போட்டு விண்வெளிப் பிசாசுக்கு கலரடிக்க ஆரம்பிச்சாச்சா...

      Delete
    6. ஆலமரத்தில் தொங்கும் விண்வெளிப் பிசாசு...இதுக்கு ஓர் படம் போட்டுடுங்க கிரி

      Delete
    7. முதலை முகத்துடன் விண்வெளி பிசாசு கொள்ளை அழகு போங்க........


      ஸ்பைடரை நோக்கி செல்லும் தோட்டா...மீண்டும் துப்பாக்கி உள்ளேயே செல்லும் காட்சி....


      அதுவும் வண்ணத்தில் ....


      சொக்கா......

      Delete
  68. அன்று ரசித்து ரசித்துபடித்தக்ளாசிக் நாயகர்களின் கதைகளும் அதிலுல்லசம்பவங்களும் தற்போது மனதில் ஒட்டுவதே இல்லை.அன்றைக்கு சமகால நாயகர்களாக கலக்கிய க்ளாசிக் நாயகர்கள்இன்று நம்மைப்போலவே அங்கிள் களாகவே தென்படுகின்றனர்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  69. சார் இன்றைய பதிவு ????

    ReplyDelete
    Replies
    1. ஆமா..I'm waiting
      அடுத்த ஆலமரத்துல குட்டி இருக்கும்னு வேற பொட்டிருந்தாரு :p :p :p

      Delete
    2. அனல் பறந்த கடந்த பதிவுகளைப் போல் அல்லாமல், அடுத்து வரும் பதிவில் அமைதி நிலவட்டும்! போர்க்களம் பூங்காவனமாகட்டும்!

      Delete
    3. ரேடி... எங்க அனுப்ப?

      Delete
  70. 200!

    காமிக் லவருக்காண்டி!

    ReplyDelete
  71. எனக்கென்னமோ அடுத்த பதிவுல செம ட்விஸ்ட் ஒன்னு காத்துக்கிட்டிருக்கப் போகுதுன்னு தோனுது!

    மும்மூர்த்திகள் - வண்ணத்தில் - ஒரே குண்டுவாக'ன்னு அறிவிப்பு வருமோ என்னமோ!!

    கொளுத்திப் போடுவோம்.. என்ன இப்ப!

    ReplyDelete
    Replies
    1. ஈவி...ஆசிரியர் பல வழிகள யோசிச்சி...
      கென்யா
      ரூட்666
      ஒநொ
      இத்தோட
      சில மூன்று பாக கதைகள் ஒட்டா விடப்போறதா பட்சி சொல்றது

      Delete