Monday, May 24, 2021

நேற்று..இன்று..நாளை..!

 நண்பர்களே,

வணக்கம். எதிர்பார்த்தபடியே ஒரு களேபர தினத்தின் அனுபவங்கள் நேற்றைய பொழுதை செம சுவாரஸ்யமாக்கியிருந்தன - என்மட்டிற்காவது ! வண்டி வண்டியாய் 2 பதிவுகள் என்று நேரமெடுத்துக் கொண்டிராது - சிம்பிளாக "அவரவரது பரிந்துரைகள் ப்ளீஸ் ?" என்று மட்டும் நான் கேட்டு வைத்திருக்கலாம் தான் ! அதைச் செய்திடாது, பதிவுகளில் நான் நீட்டி முழக்கியதற்குக் காரணம் இல்லாதில்லை ! 

இந்தச் சிரமமான ஆண்டின் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன ? 

நமது பட்ஜெட்களின் இடர்கள் என்ன ? 

செயலாக்கச் சிரமங்கள் என்ன ? 

என்பதை பகிர்ந்திடுவதன் மூலம் உங்களை சற்றே grounded ஆக வைத்திருக்க விழைந்தேன் ! Not that you were totally convinced !! ஆளாளுக்கு "மூவாயிரத்துக்கு புக் ; நாலாயிரத்துக்கு புக்" என்று பீதிகளைக் கிளப்பி வந்த நிலையில், இந்தப் பகிர்வு நமக்கான எல்லைகளை வரையறுத்துக் காட்டிட உதவுமென்று எண்ணினேன் ! தவிர,  "இதுக்கு அது தேவலாமா ? அதுக்கு அந்த இன்னொண்ணு தேவலாமா ?" என்ற ரேஞ்சில் option-களை சரளமாய் தந்ததன் மூலம், கதைத் தேர்வினில் நம் சாத்தியங்கள் என்னவென்பதை பட்டியலிட்டது போலாகவும் ஆகிடுமென்றுபட்டது ! 

அதுமட்டுமன்றி நம்மிடையே "அந்த NBS மாதிரிலாம் இனியொருக்க போட  வருமா ? அந்த மெகா ட்ரீம் ஸ்பெஷல் போல் வருமா ?" என்ற பெருமூச்சுச் சிந்தனைகள் நிலவுவது நான் அறிந்ததே ! ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷயத்தை ரசித்திட சாத்தியமாகும் போது, அந்த நாட்களின் சூழல்களுக்குமே அந்த ரசனையில் ஒரு முக்கிய இடமிருந்திருக்கும் ! பின்னாட்களில் அந்தச் சூழல்களை மறந்து விட்டு - "அந்த நாள் மாதிரி வருமாப்பா ?" என்று ஆதங்கப் புகைகளை மட்டும் காது வழியாய் நாம் விடுவதுண்டு ! So அன்றைக்கு NBS ஏன் க்ளிக் ஆனது ? இன்றைக்கு ஏன் ஆகாது ? என்று விளக்கிடவும் நேரமெடுத்துக் கொள்ள நினைத்தேன் ! Again யதார்த்தம் புரிந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள நிறைய பேர் தடுமாறுவது எனக்குத் தெரியாதில்லை ! போன பதிவினில் ஒரு நண்பரின் பின்னூட்டத்துக்குத் தந்திருந்த பதிலை இங்கேயும் இரவல் வாங்கிடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன் : 

//ஒற்றை வரியில் சொல்வதானால் - சந்தாக்கள் மட்டும் இல்லையெனில் இங்கே "கன்னித்தீவு சிந்துபாத்" கதைகள் கூட சாத்தியமாகிடாது ! And இந்த நடப்பாண்டில் சந்தா சேகரிப்புக்கு நாங்கள் பட்ட பாடு என்னவென்பதை நேரடியாய் உணர்ந்தவன் என்ற ரீதியில், தொடரக்கூடிய அடுத்த சந்தாவின் பளுவைக் குறைத்திட வேண்டியதன் அவசியத்தை நன்றாகவே உணர்ந்துள்ளேன் ! 'வாத்து தான் முட்டையிடுகிறதே' என்ற மெத்தனத்தில் அதன் குரல்வளையைப் பிதுக்கிட நாம் முனைந்தால் - வாத்து பிரியாணியைப் போட்டு விட்டு நடையைக் கட்டவே வேண்டி வரும் !

சிந்தைகளுக்கு றெக்கைகள் இருந்திடலாம் தான் ; ஆனால் கால்கள் தரையில் நிலைகொண்டிருக்க வேண்டிய நாட்களிவை ! அதனை நானுமே உணராது போயின் - அது தான் வரலாற்றுப் பிழையாகிடக்கூடும்.//

ஐம்பதுக்குப் பின்னே ஐம்பத்தி ஒன்று ; ஐம்பத்தி ரெண்டு ; ஐம்பத்தி மூன்று என்று வருஷங்கள் தொடரவே செய்யும் தானே guys ?! ஆனால் 'இன்றைக்கு தெறிக்க விடுறோம் பாரேன்' என்ற முனைப்பில், காலத்துக்கு ஒவ்வா ஒரு பட்ஜெட்டை நாம் போட்டு வைத்திடும் பட்சத்தில், அதன் பாதிப்புகள் எவ்விதமிருக்கும் ? எத்தனை காலத்துக்கு இருக்கும் ? என்பதை நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்திடப் போகிறீர்கள் ? உங்கள் ஆர்வங்களுக்குத் தலைவணங்குகிறேன் guys ; உங்கள் வேகங்களுக்கு விசிலடிக்கிறேன் guys ; ஆனால் வேகத்தை மட்டுப்படுத்திடக் கோரும் ஸ்பீட்பிரேக்கரைப் பார்த்திடும் நொடியில் யதார்த்தத்துக்கும் ஸலாம் வைக்கிறேன் ! ஆரவாரங்களை தலைக்குப் போக அனுமதித்து விட்டு, சிக்ஸர் அடிக்கிறேன் பேர்வழியென்று பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து நிற்கக்கூடாது அல்லவா ?

நேற்றைய பின்னூட்டக் குவியல்களுக்கு இயன்ற மட்டிலும் பதிலளிக்க முனைந்திருந்தேன் ! தந்திருந்த option களுள் "கதைக்கே முக்கியத்துவம்" என்ற ரீதியிலானOPTION # 5 கணிசமான ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் நிற்பதாய் தோன்றியது & நண்பர் STV அதனை ஊர்ஜிதப்படுத்தியும் இருந்தார் ! So அதனை நமது துவக்கப் புள்ளியாய் அமைத்துக் கொண்டு மேற்கொண்டு திட்டமிடல் நலமென்று பட்டது ! ஆகையால்  முத்துவின் ஆண்டுமலர் 50 -ன் கொண்டாட்டங்களின் முதல் confirmed seat பெற்றிடுவது "ஒற்றை நொடி - ஒன்பது தோட்டா" ! சர்வ நிச்சயமாய் இந்த 5 பாக ஆல்பம் யாரையும் disappoint செய்திடாது என்பதால் ஒரு உத்திரவாதமான ஹிட் இருக்குமென்ற நம்பிக்கை கொள்ளலாம் !

அதே சமயம், "நாசியில் தூசி " என்றாலுமே பரவாயில்லை - பழைய பார்ட்டிஸ் இந்த மேளாவினில் கலந்திட வேண்டுமென்ற கோரிக்கைகளும் சற்றே ஒலித்ததைக் கவனிக்கவே செய்தேன் ! ஒரு மைல்கல் இதழில் மறுபதிப்புகளே வேண்டாமே என்பதே எனது நிலைப்பாடாக உள்ளது ! மும்மூர்த்திகளின் கதைகளுள் - CID லாரன்ஸ் தொடரில் மாத்திரமே சில புதுக் கதைகள் எஞ்சியுள்ளன - ஆனால் போன வருஷத்து "மீண்டும் கிங் கோப்ரா" ரேஞ்சிலான '60 s படைப்புகளே அவை ! அவற்றை உட்புகுத்தி இதழின் டெம்போவை மட்டுப்படுத்திட எனக்கு மனம் ஒப்பவில்லை ! அதே போல - "கையில் உள்ளன" என்ற ஒரே காரணத்துக்காக விற்பனையில் சொதப்போ சொதப்பென்று  சொதப்பிய மாண்ட்ரேக் & கோ.வை பவுடர் போட்டு விட்டு மரத்தைச் சுற்றி ஓடச் செய்திட தைரியமும் இல்லை ! So இப்படிச் செய்தாலென்ன guys - சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னே வெளிவந்திருந்த அந்த முத்து காமிக்ஸ் இதழ் # 1 ஆன  "இரும்புக்கை மாயாவி" புக்கை விலையின்றி black & white இணைப்பாகத் தருவோமா ? இதற்காகும் செலவினை சீனியர் எடிட்டர் sponsor செய்திட நிச்சயம் தயாராக இருப்பாரென்று தெரியும் எனக்கு ! வாசிப்புக்கு உதவுதோ இல்லியோ - நமது துவக்கப்புள்ளியை கண்முன்னே கொண்டு வரவாவது உதவிடும் அல்லவா ? 

"இல்லே...ஏற்கனவே மறுபதிப்புகளில் துவைத்துத் தொங்கப்போடப்பட்ட கதை இது ...! மறுக்காவும் வேணாமே !" என்பதே உங்களின் எண்ணமாக இருப்பின் - maybe முத்து காமிக்சின் இதழ் # 100 ஆன - "யார் அந்த மாயாவி ?" ஒரிஜினலாக வந்தது போலவே வண்ணத்தில் இம்முறையும் ? And விலையின்றி...?

முத்து காமிக்சில் இடம் பிடித்த பழையோர் சகலரும் நமது நன்றிகளும், வணக்கங்களும் உரியோரே - ஆனால் யாருக்கும் மாயாவியின் கிட்டக்க வந்து நிற்கும் ஆற்றல் கூடக் கிடையாது என்பதே யதார்த்தம் எனும் போது - "நேற்றைய பிரதிநிதியாய்" இம்முறையும், எல்லா முறைகளும் மிளிர்ந்திட மாயாவியாருக்கு மட்டுமே தகுதியுண்டு ! So உங்கள் தேர்வினை மாயாவியின் மத்தியில் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் !

நேற்றிரவு எனது கதைத்தேடல் குறிப்புகள் கொண்ட டயரியைத் தூக்கி வைத்துக் கொண்டு கண் அயரும் வரையிலும் உருட்டிக் கொண்டிருந்த போது 2 பொறிகள் தட்டின ! "Shortlist for the near future" என்று அடிக்கோடிட்டு 2 புதுத் தொடர்களை குறித்து வைத்திருந்தேன் ! அவை நினைவுக்கு வர, அதிகாலை 4 மணிக்கு தூக்கம் பிடிக்காது எழுந்து லேப்டாப்பை உருட்ட ஆரம்பித்தேன் - அவற்றின் digital files இன்னமும் உள்ளனவா என்று பார்த்திட ! ஹேய்..ஹேய்..ஹேய்...அவை ஒரு இண்டில் பத்திரமாய் குந்தியிருக்க அவசரம் அவசரமாய் பக்கங்களுக்குள் புகுந்து பார்த்தேன் ; ஒரு தெறிக்கும் இங்கிலீஷ் படத்தை NETFLIX-ல் பார்த்தது போலிருந்தது !! 

சமகால ஆக்ஷன் த்ரில்லர் ; நமக்கு ரொம்பவே பிடித்தமான துப்பாக்கிகளோடு அதிரடி காட்டும் சீக்ரட் ஏஜெண்ட்கள் ; மிரளச் செய்யும் car chases ; அழகான அம்மிணிகள் ; அளவான அஜால் குஜால்ஸ் ; ஐரோப்பாவின் அசாத்தியத் தலைநகர்களில் பயணிக்கும் கதை - என்று இந்தத் தொடர் ஓட்டமெடுக்கும் வேகம் நிச்சயமாய் நமக்குப் பிடிக்கும் என்றுபட்டது ! ஒவ்வொரு சாகசமும் 2 பாகங்கள் கொண்டதெனும் போது படிக்கவும் நிச்சயம் ஒரு சிரமமில்லா நீளம் இங்கு சாத்தியம் ! ஐந்து மணிக்கே ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டிருக்கிறேன் - இவற்றின் உரிமைகளைக் கோரி ; and  இன்று பொழுது சாய்வதற்குள் குட்டிக் கரணம் போட்டாவது அவற்றை வாங்கிடுவேன் என்ற நம்பிக்கையுள்ளது ! இது புது தொடர் # 1 பற்றி ! 

தொடர் # 2 சற்றே வித்தியாசமானது - in the sense that நாயகர் லார்கோவைப் போலான வித்தியாசப் பார்ட்டி ! மனுஷன் டிடெக்டிவோ ; ஷெரிபோ ; ரேஞ்சரோ கிடையாது ! தனியார் ஏஜென்சிக்களில் பாடிகார்டும் கிடையாது ! மாறாய் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் இவரை சாகசம் செய்யச் செய்கின்றன ! சிங்கிள் ஆல்பங்களான இவரது சாகசங்கள் ஒவ்வொன்றும் நிகழ்வது பூமியில் நாம் (காமிக்ஸ் களங்களில்) தரிசித்திருக்கா புதுப் புது இலக்குகளில் ! All out action என்றில்லாது - கதையோடு பயணிக்கும் ஆக்ஷன் ; இங்கும் சமகாலக் கதைப்பின்னல் ; இங்குமே அழகான பூனைக்கண் அழகிகள் ; இங்குமே பட்டும் படாது அஜால்ஸ் + குஜால்ஸ் என்று கதை நகர்வதை விடியும் வரைக்கும் பராக்குப் பார்த்தேன் ! With the right handling - இந்த நாயகருமே நமது எதிர்கால star பட்டியலில் இடம் பிடிக்கக்கூடும் என்று பட்டது ! இன்று பகலில் இன்னும் ஒருவாட்டி இவர் சார்ந்த அலசலை நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரோடு நடத்தி விட்டு - இவருக்கும் உரிமைகளைக் கோரிட எண்ணியுள்ளேன் ! 

No வறண்ட பாலைவனம்ஸ் ; no குளிக்காத cowboys ....no அரிசோனா or டெக்சாஸ் ; மாறாக உலகின் exotic location களில் பயணிக்கும் சமகாலக் கதைகள் ; கதைக்கே முக்கியத்துவமென்ற one-shots - இவையே இனி நமது எதிர்காலமோ ? என்று தோன்றியது அதிகாலை 5 மணிக்கு ! அட..இதையே  இந்த முயற்சியின் tagline ஆக்கிட்டால் என்னவென்று தோன்றியது அந்த நொடியினில் ! 

So இன்றைய பொழுதை இந்த சிந்தனையோடு பயணிக்க எடுத்துக் கொண்டு: 

  • நேற்றின் பிரதிநிதியாக மாயாவியையும் ; 
  • இன்றின் பிரதிநிதிகளாக சிக் பில் & ஜானி போன்ற current நாயகர்களையும் ;
  • நாளையின் பிரதிநிதிகளாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" plus  இந்தப் புதியவர்களையும்

கொண்டு திட்டமிடலை finetune செய்திட விழைந்திடவுள்ளேன் ! And for sure, "நாளை" என்ற அடையாளத்துக்கு மெருகூட்ட இன்னமும் தேடிட முனைவேன் ; சிந்தித்திடவும் முனைவேன் ! Just will need some time !!

ஆட்டம் சூடு பிடித்துள்ளதுங்கோ !! 

கடைசி மரம், சித்தே ஜாலியான குட்டி மரம் ! அது மாலைக்கு ! Bye guys...bye for now !!


                        நேற்றைய நமது தளப்பார்வைகள் 4204 !!! Phew !!

227 comments:

  1. Replies
    1. டாக்டர் சார்..."M50" என்பது இங்கிலாந்தின் ஏதோவொரு motorway நம்பர் மேரியே feel ஆவுது ! இன்றைய மாலையின் பதிவில் இது குறித்து மேற்கொண்டு..!

      Delete
  2. படிச்சுட்டு வர்ரேன்..

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  4. நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் திரு செல்வம் அபிராமி அவர்களின் மகள் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது.!

    மணமக்கள் Krishnaraj & Dharani Abirami இருவருக்கும் நமது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.!

    மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழட்டும்..💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழட்டும்..💐💐💐💐💐

      Delete
    2. மண மக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

      Delete
    3. அபராமி சாருக்கு எனது வாழ்த்துகள்.. கிஆக... அவருக்கும், மணமக்களுக்கும் என் வாழ்த்தையும், அன்பையும் தெரிவித்திடுங்கள்... ப்ளீஸ்...

      Delete
    4. மணமக்களுக்கு வாழ்த்துகள்

      Delete
    5. மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழட்டும்..💐💐💐💐💐

      Delete
    6. சந்தோஷமான தகவல் !! மணமக்கள் நலமாய், மகிழ்வாய் , எல்லாச் செல்வங்களுடனும் வாழ்ந்திட வாழ்த்துவோம் !!

      Delete
    7. மணமக்களுக்கு என் அன்பும், ஆசிகளும்!!💐💐💐💐💐

      Delete
    8. வாவ்... மிகவும் சந்தோஷமான செய்தி!

      மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழட்டும்..💐💐💐💐💐

      அனைவரது வாழ்த்தும் செனா அனாவிடம் தெரிவித்து விடு அன்பு மாமா!

      Delete
    9. மணவாழ்வெனும் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் மழலைகள் இருவருக்கும் உளமார்ந்த வாழத்துக்கள்!

      Delete
    10. வாழ்த்துகள்..

      Delete
    11. மனமார்ந்த வாழ்த்துக்கள் செனாஅனாஜீ...

      Delete
    12. மணமக்கள் வாழ்வின் எல்லா நலன்களையும் பெற்று வளமாக வாழ வாழ்த்துகிறேன்

      Delete
    13. மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்.
      பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.

      Delete
    14. மகிழ்ச்சியான செய்தி மாமா..

      மணமக்கள் சகல செல்வங்களுடன் (செனா அனாவுடனும்)வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.. வாழ்க வளமுடன்
      அன்புடன் பழனிவேல்

      Delete
    15. வாவ்... மிகவும் சந்தோஷமான செய்தி 💐💐💐

      நலமும் வளமும் பெற்று வாழ
      எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 💐💐💐💐💐
      .

      Delete
    16. புதுமண தம்பதிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

      Delete
    17. சந்தோஷமான தகவல் !! மணமக்கள் நலமாய், மகிழ்வாய் , எல்லாச் செல்வங்களுடனும் வாழ்ந்திட வாழ்த்துவோம் !!////

      மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!!.💐💐💐💐💐.

      Delete
    18. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்,
      வாழ்க வளமுடன்

      Delete
  5. Super Sir....

    Facsimile முத்து 1 for M50...

    Option 5... ஒற்றை நொடி + ஜானி + சிக்பில்...

    அருமை சார்....

    இதழ் வரலாறு காணா வெற்றியடைய எனது advance வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  6. வந்தாச்சு....












    இந்த பஞ்சாயத்துலயாவது ஒரு முடிவுக்கு வரணும்.


    ReplyDelete
  7. நாட்டாமை தீர்ப்பு செம....

    ReplyDelete
  8. அருமை சார்,

    எல்லோருக்கும் திருப்தியாக இருக்கும்.

    முத்து 100 கலரில்...

    ReplyDelete
  9. Nizhal nijamagirathu mounam kalaikirathu epdi venalum eduthukonga dear edi and friends ennoda karuthu ennana tex 75 ku tex ah thavira verethaiyum sinthika mudiyatho apdi than muthu pavala vizha (M50)ku old hero kalai thavirka kudathu athiradikaga onot vaiyum intha jeneeation ku ipdiyoru tharunam eni vara vaipillai 300 rs five old hero ultimate story mattum block white kandipa irandu kundu book aga veli ida vendum edi ellorukum mathipalithu aravanaithu M50 year ah sirapakka vendum...

    ReplyDelete
    Replies
    1. தமிழில் பதிவிட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் ; அல்லது இங்கிலீஷிலேயே பதிவிடுங்கள் ! சத்தியமாய் தற்போதைய தங்கிலீஷை வாசிக்கவே முடியலை !

      Delete
  10. அனைவரையும் திருப்திபடுத்த நினைக்கும் Editor க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தமிழ் காமிக்சின் புதிய வர(உற)வுகளுக்கு நல்வரவு.

    ReplyDelete
  12. ரொம்ப சந்தோசம். இதை படித்த பிறகு மனசு எந்தவித சந்தோசமும் ஏற்பட இல்லைஆசிரியரே.
    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வந்ததில் ரொம்ப சந்தோசம் ஆனால் இரண்டாவது புக் பிரபல ஹீரோக்களை வைத்து ஒரு தொகுப்பாக தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் அது மிஸ் ஆகிவிட்டது என்னை பொறுத்தவரை முத்து 50வது இதழ் சந்தோசம் அளிக்கவில்லை...
    எப்படி இருந்த போதிலும் வாங்கக்கூடியவன்... படிக்கக் கூடியவன் அவ்வளவுதான் .

    ReplyDelete
  13. எதற்கு சார் இலவச இணைப்பு எல்லாம் வேண்டாம் ஸார்... நன்றி நன்றி நன்றி. அப்படி தருவதாக இருந்தால் மாயாவிக்கு பதில் லாரன்ஸ் டேவிட்டின் புது கதையை தரலாமே.. (அதுதான் விற்பனைக்கு இல்லையே. புது கதை படித்த சந்தோசமாக கிட்டும் )... 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  14. சார், நீங்கள் குறிப்பிட்டது போல் 'முத்து காமிக்ஸின்' முதல் புத்தகம் 2-3 முறை மறுபதிப்பாகி விட்டது உண்மையே. அதனால் சற்றே ஆர்வம் மட்டுப்படவும் கூடும். அதற்கு மாற்றாக, முத்து வாரமலரில் வந்த 'ஒற்றைக்கண் மர்மம்' இதுவரை மறுபதிப்பாகவோ, ஒரே இதழாகவோ வந்ததாக நினைவில்லை. அந்த கதையை தேர்வு செய்வது ஒரு லேண்ட்மார்க் இதழில், லேண்ட்மார்க் நாயகரை கொண்டு வந்த திருப்தியையும், விற்பனையில் சாதிக்கவும் செய்ய இயலும்.

    எனவே, முத்து வாரமலரில் தொடராக வந்த 'ஒற்றைக்கண் மர்மம்' கதையை ஒரே இதழாக வண்ணத்தில் கொடுப்பது சிறப்பாக இருக்கும். (யார் அந்த மாயாவி முத்துவின் 100வது இதழாகவும், 236-வது இதழாகவும் 2 முறை வந்து விட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்)

    ReplyDelete
    Replies
    1. இது வரை மறு பதிப்பாக வராத மாயவியே எனது சாய்ஸ்..

      +20000

      Delete
    2. அருமையான யோசனை ஐயா...

      Delete
    3. சார்... இதுவும் நல்ல ஐடியா தான்... வாய்ப்பு இருக்குமா?

      Delete
    4. இல்லை சார் ; அவற்றிற்கான ஒரிஜினல்களை இங்கிலாந்தில் டிஜிட்டலில் சேமித்திருக்கவில்லை ! So பழைய பக்கங்களிலிருந்து கர்ம சிரத்தையாய், இத்துறையின் top artwork restorers களைப் பணியமர்த்தி மெது மெதுவாய் தான் remaster செய்து வருகிறார்கள் ! So என்றைக்கு அவர்கள் "ரெடி" என்று அறிவிக்கிறார்களோ - அன்றைக்கே :ஒற்றைக்கண் மர்மம்" சாத்தியப்படும் !

      "யார் அந்த மாயாவி ?" அவர்கள் இந்த பிப்ரவரியில் வெளியிட்ட கதை என்பதால் digital files are not a problem !

      Delete
    5. தகவலுக்கு நன்றி சார்.

      யார் அந்த மாயாவி, முழு வண்ணத்தில் கலக்கலாகவே இருக்கும்...

      நண்பர் மாரிமுத்து விஷால் - விண்வெளி கொள்ளையர்கள் கேட்டிருந்தார்... அந்த வரிசையில் மாயாவிக்கோர் மாயாவி, கண்ணீர் தீவில் மாயாவி எல்லாம் இன்னும் மறுபதிப்பாகாத கதைகள்...

      காலம் வரும் போது செயலாக்கம் கொடுங்கள்...

      Delete
  15. யார் அந்த மாயாவி வண்ணத்தில், my Choice.

    ReplyDelete
  16. விஜயன் சார்,

    ஏதாவது கேள்வி கேட்டு வைத்துவிட்டு தான் போங்களேன் சார்.. கையெல்லாம் துறுதுறுவென்று இருக்கிறது ; மனசெல்லாம் பரபரவென்று இருக்கிறது!

    என்னமோ போடா மாதவா :)

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா.... அட ஆமா.

      கேள்வி இல்லாத பதிவானு ஆகிட்டது.

      Delete
  17. உங்கள் கணக்குப்படி ஒற்றை நொடி ஒன்பது தோட்டா பட்ஜெட்டில் 600 அப்படியே முத்து ஐம்பதுக்கு வந்துவிடுகிறது. ஒரு 500 க்கு கருப்பு வெள்ளையில் ஒரு குண்டு புக்கு தயார் செய்யலாமே செய்யலாமே ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, யதார்த்தங்களை ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நூறு தடவைகள் பகிர்ந்து விட்டேன் ; ஆனால் நீங்கள் புரிந்து கொள்வதாகக் காணோம் ! ஒரு டிரைவருக்கு முன்னே உள்ள ரோட்டைப் பார்ப்பதே பிரதானக் கடமை ; ரிவர்ஸ் எடுக்க வேண்டிய நேரத்தில், பின்னிருந்து ஓவர்டேக் செய்யும் வண்டிகளை கவனிக்க வேண்டிய நேரத்தில் வேண்டுமானால் rearview mirror ஐ பார்க்கலாம் தான் ! ஆனால் நீங்களோ அந்தக் கண்ணாடியைப் பார்த்தபடிக்கே வண்டியை முன்னே ஓட்டச் சொல்கிறீர்கள் ! புளியமரத்தில் கொண்டு போய் ஏற்ற மட்டுமே அது உதவிடும் என்பதை தலைப்பாடாய் அடித்துக் கொண்டாலும் ஏற்க மறுப்பதை என்னவென்பதென்று தெரியவில்லை எனக்கு !

      ஒரேயொரு விஷயத்தை மட்டும் உங்களையே கேட்டுக்கொள்ளுங்களேன் ? போன பொங்கலுக்கு செய்த சர்க்கரைப் பொங்கல் பிரமாதமாக இருந்ததென்பதற்காக அதனை பிரிட்ஜில் வைத்திருந்து இந்த தீபாவளிக்கு பசங்களுக்குப் பரிமாறுவீர்களா ?

      Delete
    2. நீங்க சொல்ல வர லாஜிக் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.பாருங்க வண்டி ஓட்டும்போது முன்னாடி மட்டும் தான் பார்க்கணும் நீங்க சொல்றீங்க ஆனா எனக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த ஆசிரியர் சொல்லி இருக்காரு டிரைவருக்கு நான்கு கண்கள் என்று......
      ஒரு பத்து வருட கனவு ஆசானே இது எனக்கு. முத்து 40வது ஆண்டு மலர் கையில் கிடைத்த போது... அந்த புக்கை தடவி பார்த்ததைவிட இன்னும் 10 வருடம் கிடைத்து வரப்போகும் 50வது ஆண்டு மலர் இதைவிட மிக சிறப்பாக அமையுமே என்றால் என்ற ஆசை ஆசை ஆசை . ஒரே நாளில் நிராசை ஆனதில் மனது ஏற்றுக் கொள்ள சற்று மறுக்கிறது அவ்வளவுதான் ஆசிரியரே.... மற்றபடி தங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு. இது உறுதி சத்தியம்... 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌

      Delete
    3. தீபாவளிக்கு எதுக்கு ஆசிரியரே எனக்கு பொங்கல் தீபாவளிக்கு தான் பிரியாணி ரெடியா இருக்குமே தல பிரியாணி. 😂😂😂😂😂

      Delete
    4. தீபாவளின்னா திருச்சில வான்கோழி பிரியானிதான்

      Delete
    5. ஐம்பதாவது ஆண்டு மலர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.


      இயல்பு நிலை திரும்பி,புத்தக விழாவில் வெளியிடுவதாக அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது.

      காமிக்ஸ் வாசகர் வட்டத்தை தாண்டியும் , பலதரப்பட்டவர்களுடைய கவனத்தை ஈர்ப்பது போல் திட்டமிடப்பட வேண்டும்.விற்பனையை தாண்டியும் இது மிக முக்கிய காரணியாக தோன்றுகிறது.

      ஒருவேளை இயல்பு நிலை திரும்பிருந்தால்,நடைபெற கூடிய புத்தக விழாவை சற்றே எண்ணிப்பார்க்க வேண்டும்.


      நேற்று சமைத்து மீந்து போன இட்லிதான் ,இன்றைய விருந்தில்"""உப்மா "" "வாக பரிமாறப்படும் என்பதை கற்பனையாக கூட இரசிக்க முடியவில்லை.

      நெருக்கமாக பயணிக்கும் வாசகர் வட்டத்துக்குள்ளேயே வரவேற்பை பெறாத வெளியீட்டை , திரை பிரபலங்களை கொண்டே விளம்பரம் செய்தாலும் விற்பனை இலக்கை எட்ட இயலுமா??? என்பதை உணர வேண்டும்.


      எதை வெளியிட்டாலும் வரவேற்கிறோம் என்பது சில நேரங்களில் ஏற்புடையதாக இருக்கும்.அதுவே அனைத்து நேரங்களுக்கும் பொருத்தமாக இருக்காது.


      தயவுசெய்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நண்பர்களே!!!!!.

      Delete
  18. ///நேற்றின் பிரதிநிதியாக மாயாவியையும் ;
    இன்றின் பிரதிநிதிகளாக சிக் பில் & ஜானி போன்ற current நாயகர்களையும் ;
    நாளையின் பிரதிநிதிகளாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" plus இந்தப் புதியவர்களையும்///


    --- சிறப்பான முடிவுங் சார்....!!


    முத்து 50 மெகா ஹிட் ஆகப் போவது உறுதி!!!!

    முன்கூட்டிய வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  19. நீங்கள் அனைத்து தரப்பினையும் திருப்தி படுத்த எடுத்த முடிவு சரியானதே. எனக்கு சந்தோசமே
    மாயாவி

    ஜானி, சிக் பில்

    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா+ புது வரவுகள்.

    பட்ஜெட் 1000 வரும் போல இருக்கே சார்.

    ReplyDelete
    Replies
    1. ///பட்ஜெட் 1000 வரும் போல இருக்கே சார்.///

      வரட்டுமேங் சார்?!! ஒரு சிறப்பு மிக்க இதழுக்கு இது நியாயமானதொரு விலையே!!

      Delete
    2. வரட்டும் வருவதில் எனக்கு மகிழ்ச்சி தான் EV

      Delete
    3. நாம போட்ட பட்ஜெட் இதைவிட பெருசாச்சே KS!

      Delete
  20. லெஃப்ட் ல போவோமா ?
    ரைட் ல போவோமா ?
    கேள்வி கேட்டு சடார்ன்னு யூ டர்ன் போட்டு ஸ்டெய்ட்டா போறீங்க சார்..
    கஷ்டப்பட்டு இங்கி பிங்கி போட்டு பார்த்தது எல்லாம் வேஸ்ட் போச்சே கோபால்ல்ல்ல்ல்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!! நானுமே இதை எதிர்பார்க்கலை தான்!! :))))

      Delete
    2. லெப்ட்டுக்கோசரம் - மாயாவி சாரு
      ரைட்டுக்கோசரம் - ஜானி..சிக் பில்லு
      ஸ்ட்ரெய்ட்டுக்கோசரம் - ஒற்றை நொடி நோற்பது தோட்டா & புதுக் கதைகள் !

      இதுவும் ஒரு புதுசு தானே சிவா ?

      Delete
  21. செல்வம் அபிராமி சார். மணமக்களுக்கு எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. 'ஒற்றைக்கண் மர்மம்' அடிக்கடி கூறப்படுகிறது, ஆகவே அது என் சாய்ஸ்.

    ReplyDelete
  23. Dear Editor
    U have a large heart
    This past present future combo seems perfect
    No one can better this idea
    Kudos
    Regards
    Arvind

    ReplyDelete
  24. ///முத்து காமிக்சின் இதழ் # 100 ஆன - "யார் அந்த மாயாவி ?" ஒரிஜினலாக வந்தது போலவே வண்ணத்தில் இம்முறையும் ? And விலையின்றி...?///

    இது என் சாய்ஸ் சார்....!!!

    ReplyDelete
  25. ///maybe முத்து காமிக்சின் இதழ் # 100 ஆன - "யார் அந்த மாயாவி ?" ஒரிஜினலாக வந்தது போலவே வண்ணத்தில் இம்முறையும் ? And விலையின்றி...?////

    சூப்பர்ங்க எடிட்டர் சார்!!

    கூடவே, லாரன்ஸ் & டேவிட்ன் புதிய கதை ஒன்றை வண்ணத்தில்?!! மாயாவி விலையின்றி இருக்கட்டும் - லா&டே வை விலையோடே போடுங்கள். ஒரே இதழாகவே போடுங்கள்! இரண்டு கதைகள் - ஆனால் ஒரு கதைக்கான விலையோடு!

    சாத்தியமாங் சார்?

    ReplyDelete
    Replies





    1. ///
      கூடவே, லாரன்ஸ் & டேவிட்ன் புதிய கதை ஒன்றை வண்ணத்தில்?!! மாயாவி விலையின்றி இருக்கட்டும் - லா&டே வை விலையோடே போடுங்கள். ஒரே இதழாகவே போடுங்கள்! இரண்டு கதைகள் - ஆனால் ஒரு கதைக்கான விலையோடு!

      சாத்தியமாங் சார்?///

      அப்போ எங்க ஸ்டெல்லாவும் அவங்களோட துணைக் கதாப்பாத்திரம் ஜானி நீரோவும் டொமாட்டோ தொக்கா குருநாயரே.!?

      மூணையும் இணைச்சி இண்டோட விலையில் கேளுங்க.. அதானே நியாயம்.. அதானே நீதி.. அதானே தருமம்.. அதானே அது.. அதானே இது..!

      Delete
    2. CID லாரன்ஸின் "மீண்டும் கிங் கோப்ரா" இதழுக்கு நீங்க எழுதின அலசல்களைத் தேடிட்டு வாரேன் பூனையாரே !

      Delete
    3. நல்லவேளை.. நான் எதுவும் எழுதலை..🏃🏃🏃🏃🏃

      Delete
    4. ////CID லாரன்ஸின் "மீண்டும் கிங் கோப்ரா" இதழுக்கு நீங்க எழுதின அலசல்களைத் தேடிட்டு வாரேன் பூனையாரே///

      ஹிஹி!! கிடைச்ச வாய்ப்பிலெல்லாம் பொதேல் பொதேல்னு லாரன்ஸும் டேவிட்டும் ஒருவர் மேல் ஒருவர் மயங்கி சரிந்து கிடந்ததெல்லாம் செம காமெடிங்க எடிட்டர் சார்! ரொம்ப ரசிச்சுப் படிச்ச காமெடிக்கதைகளில் அதுவும் ஒன்னு!!😂😂😂😂😂😂

      Delete
    5. ///அப்போ எங்க ஸ்டெல்லாவும் அவங்களோட துணைக் கதாப்பாத்திரம் ஜானி நீரோவும் டொமாட்டோ தொக்கா குருநாயரே.!?///


      ஸ்டெல்லாவுக்காகவாவது அதையும் கேட்டு வாங்கணும் KOK!

      Delete
    6. Erode vijay@ சூப்பரா சொன்னீங்க. நடந்தால் அருமையாக இருக்கும் மனசு வைப்பாரா நமது ஆசிரியர்..

      Delete
  26. நீங்கள் கூறியது போல் 51 52 53 என்று போனாலும் 50,100 என்ற அன்பர்களுக்கு என்றுமே தனி மரியாதை. கிரிக்கெட்டிலும் 99 அடித்துவிட்டு ஒரு ரன் அடிக்காமல் செல்லும் பேட்ஸ்மேன் இடம்.. உங்கள் மன நிலைமை எப்படி உள்ளது என்று கேட்டால்... 99 அடித்ததற்காக சந்தோசப்பட மாட்டார் ஒரு ரன் அடிக்காமல்100 கோட்டை விட்டோமே என்று சங்கடப் படுவார். துயரப் படுவார் அதுதான் சார் 50 100 150 என்ற எண்ணின் மகிமை.. 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. No worries sir...இந்தப் பேரிடர் காலத்தில் 99 அடித்தாலும் சரி, 98 அடித்தாலும் சரி, உசிரோடு ; கைகால் சுகத்தோடு மிஞ்சியிருப்பின் அதனை எண்ணி பேருவகை கொள்வேனே தவிர்த்து - சத்தியமாய் வருத்தம் கொள்ள மாட்டேன் ! And நூற்றுக்குத் தொண்ணூறு பேர் படிக்கப் போவதில்லை என்று தெரிந்ததொரு சமாச்சாரத்தை "தவற விட்ட சதமாய்" நான் எண்ணினெனில் என்னை கிட் ஆர்டினுக்கு டெபுடி ஆகக்கூடப் போட முடியாது !

      Delete
    2. நீங்கள் வருத்த கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை ஐயா நாங்கள் வருந்துகிறோம்.ஒரு ரன்னில் நூறு மிஸ் செய்து விட்டாரே என்று 😭😭😭😭😭

      Delete


  27. ///நேற்றின் பிரதிநிதியாக மாயாவியையும் ;
    இன்றின் பிரதிநிதிகளாக சிக் பில் & ஜானி போன்ற current நாயகர்களையும் ;
    நாளையின் பிரதிநிதிகளாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" plus இந்தப் புதியவர்களையும்
    கொண்டு திட்டமிடலை finetune செய்திட விழைந்திடவுள்ளேன் ! And for sure, "நாளை" என்ற அடையாளத்துக்கு மெருகூட்ட இன்னமும் தேடிட முனைவேன் ; சிந்தித்திடவும் முனைவேன் ! Just will need some time !!///

    அனைவரையும் திருப்திய்டையச் செய்யும் வகையிலான அருமையான முடிவு சார்.!
    சிக்பில் & ரிப்போர்ட்டர் ஜானி (கிளாசிக் ஜானிதானே?) எனது ஆதர்ஷ நாயகர்கள்.. அப்புறம்.. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவுக்குத்தான் ஓட்டுப் போட்டிருப்பேன்.. எனவே எனக்கு பரமதிருப்தி.!

    முத்துகாமிக்ஸ்க்கு அடையாளம் தந்த இரும்புக்கை மாயாவிக்கும் ஒரு ட்ரிபியூட்.. அத்தோடு நாளைய நாயகர்களையும் சேர்த்துக்கொள்ளப்போவதான அறிவிப்பு.. அடடா.. அருமையான முடிவு.. பாராட்டுகள் சார்.!

    முத்து 50ஆவது ஆண்டுக்கான அத்தனை நியாயங்களும் அமைந்துள்ளது.!

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் ஒரு கார்ட்டூன் ஷ்பெசல் போட்டிருந்திருக்கலாம்.. ஹூம்..😜😜😜.!

      Delete
    2. ஏஙக... சிக்பில் வர்றாரே! ஓவரா கேட்டா அப்புறம் நம்மையும் வெளுத்து கட்டீருவாங்க...

      மீதி சந்தாவில் வருமில்ல!

      Delete
    3. அந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்லச் சொல்றீங்க - கதைக்குறிப்பு டயரியில் 2 கார்ட்டூன் தொடர்களின் / கதைகளின் குறிப்புகளும் இருந்தன தான் ! நம்மவர்கள் ப்ளூ கோட் பட்டாளத்தையும், மேக் & ஜாக்கைப் பந்தாடுவதையும் பார்த்த பின்னே -பெருமூச்சோடு பக்கத்தைப் புரட்டி விட்டேன் !

      Delete
  28. எந்த மாயாவி கதை என்பதை முடிவு செய்யும் உரிமையை முத்து காமிக்சின் ஒரிஜனல் எடிட்டரிடமே விட்டு விடலாமே சார்??

    ReplyDelete
  29. சிறப்பான முடிவு சார்...

    வாழ்த்துக்கள்...


    ( என்ன ஒன்று மாயாவியை மாற்ற வேண்டாம் என சொல்லி விட்டீர்கள் ..மாயாவிக்கு பதிலாக படிக்காத பீரோவில் உறங்கும் மாண்ட்ரேக் போன்ற நாயகரை இறக்கி இருக்கலாமோ என்ற எண்ணமும் ஏற்படாமல் இல்லை..)

    ReplyDelete
    Replies
    1. ஏனுங் தலீவரே..மறுக்கா பரோட்டா சாப்பிடணும் போயிருக்கா ?

      Delete
    2. அதேதான் தலைவரே அந்த அந்த எண்ணம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன செய்வேன் 😭😭😭😭

      Delete
  30. யார் அந்த மாயாவி வண்ணத்தில் என நினைத்து பார்க்கும் போது அடடா.....

    ReplyDelete
  31. //Option # 5 : 2019 ஈரோட்டில் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஒரு முற்றிலும் புது இதழாய் ; எவ்வித ஸ்டார் நாயகரும் இல்லா முயற்சியாய், கதைக்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சிய இதழாய் களம்கண்டது ! உங்களுக்கு அது போலானதொரு முயற்சி இங்கேயும் ஓ.கே. வெனில் கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் ! இது பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ? //

    பெரும்பான்மை வாக்குகள் கிடைத்து விட்டதால் "ஒ.ஒ.ஒன்பது தோட்டா" வுடன் ""கென்யா" அல்லது "ரூட் 66" களமிறக்கி விட்டால் நீண்ட நாள் காத்திருப்பும் கைகூடும், மெர்சலான கதைகள் ஒன்றுக்கு ரெண்டாக இருக்கும், உங்களுக்கு வேளைப்பளுவும் குறையுமே சார்

    ReplyDelete
    Replies
    1. பொறுத்திருங்கள் சார் - அக்டொபரின் அட்டவணை ரிலீஸ் வரையிலும் ! நிச்சயமாய் ஏமாற்றம் கொள்ள மாட்டீர்கள் !

      Delete
  32. அப்படி மாயாவியார் வண்ணத்தில் வருகிறார் என்றால் ஒரு சின்ன வேண்டுகோள். மாயாவியின் அந்த கவச உடை கூடிய ஏதேனும் ஒரு சாகசத்தை வெளியிட முடியுமா? உதாரணமாக களிமன் மணிதர்கள்...

    ReplyDelete
  33. நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள் மாயாவி கவச உடையுடன் கூறிய சாகசங்கள் இதுவரை எத்தனை வெளிவந்துள்ளது?

    ReplyDelete
  34. வந்தாச்சுங்கோ.....

    ReplyDelete
  35. எதுக்கு சார் பிரச்சினை இரும்புக்கை மாயாவி யார் அந்த மாயாவி இரண்டையுமே போட்டுருங்க (தலையை சொறிய வைப்போர் சங்கம்)

    ReplyDelete
    Replies
    1. அடடே இது கூட நல்லாத்தான் இருக்கு 👌👌👌👌

      Delete
  36. ஆசானிடமிருந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றேன் முத்து 50 சிறப்பிதழ்க்கு.இன்னும் பழைய நாயகர்கள் கதை இரண்டு அல்லது மூன்று தந்தால் பஞ்சாயத்தை முடிச்சுப்புடலாம்.

    கொஞ்சம் தயவு பண்ணுங்க ஆசிரியரே!!!?

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம் நண்பரே இனி அதைப் பற்றி பேசவே வேண்டாம். மனதுக்கு சற்று கஷ்ட கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறாங்க...

      Delete
    2. வேண்டாம் நண்பரே இனி அதைப் பற்றி பேசவே வேண்டாம். மனதுக்கு சற்று கஷ்ட கஷ்டமாகத்தான் இருக்கிறது.//

      அதே நண்பரே.. இனி எப்போதும் எவர்கிரீன் ஹூரோக்களை நாம் சந்திக்க இயலாது..மாற்றம் நவீன உலகம் என்ற பேரலையில் அடித்துச்செல்லப்பட்ட கொடுத்துவைக்காத கதாநாயகர்கள்..பிழைத்திருந்தால் முத்து75 க்கு மீண்டும் கேட்போம்...

      Delete
    3. கண்ணீரை கட்டுக்குள் வைப்போம் இனி நாம் எவர்கீரின் ஹீரோக்களை கனவில் மட்டுமே சந்திக்க முடியும் என்பதே நிதர்சனம்

      Delete
    4. மாதமொரு மறுபதிப்பென்று வெறும் ஐம்பது ரூபாய்க்கு வெளிவந்த இதழ்களே தாக்குப்பிடிக்க வழியின்றி ஓசையின்றி மறைந்ததும் சரி , அவற்றின் மறுபதிப்பு உரிமைகளுக்கென நமது பணம் மூன்று லட்சத்திச் சொச்சம் இன்னமும் முடங்கியே கிடப்பதை நினைக்கும் போது எனக்கு எழுமே - அதே கண்ணீரா சத்யா ?

      Delete
    5. ஐயா, மிகவும் வருந்த வைக்கிறது உங்களுடைய பதில்! எனவே, இதுவரையிலும் மறுபதிப்பாகாத கதைகளை மட்டுமே தேர்வு செய்து, 3 மாதங்களுக்கொருமுறை வெளியிடலாம்... டைஜஸ்ட் ஆகவோ அல்லது தனித்தனிக் கதைகளாகவோ என்றும் செயலாக்கம் பெற வைக்கலாம்...

      மாண்ட்ரேக் கதைகள் உங்களைப் போலவே எனக்கும் மிகவும் பிடிக்கும்.... மாயாஜாலக்காரரின் சித்து விளையாட்டுகள் இங்கே ஏன் எடுபடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை... உணர்வோடு கலந்து பயணிக்கும் ஜான் சில்வர், சத்தமில்லாமல் அதிரடி காட்டும் ஜெஸ்லாங், டாக்டர் செவனுடன் மல்லுக்கட்டும் காரிகன், ஹுரோவில் பயணித்து டெவிலை துணைக்கு வைத்திருக்கும் வேதாளர்... இவர்களில் யாருக்குத் தான் பிடிக்காது!

      Delete
    6. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது மறுபதிப்பு கொண்டு வந்து சேர்த்த விதம் தவறோ என்று தோன்றுகிறது.. தாங்கள் குறிப்பிட்டதுபோல் இதுவரை மறுபதிப்பு காணாத புத்தகங்கள் வெளி வந்ததால் வெற்றியடைந்து இருக்குமோ என்னவோ அதுவும் சைசும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை நிலவொளி நரபலி போல் வந்தால் நன்றாக இருக்கும. பார்ப்போம் கொராணாவிற்கு பிறகு நல்ல முறையில் அந்த மறுபதிப்புகள் வெளிவரும். மிகச் சிறப்பாக அமையும் நம்பிக்கை உள்ளது

      Delete
    7. ஆசிரியரே உங்களை சங்கடப்படுத்துவது நோக்கமில்லை உங்களால் என்ன சாத்தியப்படுகிறதோ அதையே செய்யுங்கள் என்னுடைய கனிப்பில் லட்டு கேட்கிறேன் நீங்கள் பூந்தியாக கொடுத்தாலும் அதையே இறுக்கி பிடித்து லட்டாக மாற்றி ருசித்து கொள்வேன் நீங்கள் கொடுப்பது வடிவம் தான் வேறு இனிப்பு ஒன்றுதான் தங்களை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

      Delete
  37. Dear Editor
    I remember an old story of Sexton blake
    Vazhipari pisasu.It was a nice book.
    Any chance of adding that?
    Just a thought
    Regards
    Arvind

    ReplyDelete
    Replies
    1. Sorry, no sir. There is a 37 page SEXTON BLAKE story that has been reprinted in U.K. recently. That is the only one currently possible; but the storyline is ancient...

      Delete
  38. //முத்து காமிக்ஸ் இதழ் # 1 ஆன "இரும்புக்கை மாயாவி"//

    அதே அட்டைப்படத்தோடு அதே எழுத்துநடையோடு அதே பாணியில்

    எனது விருப்பம்..இதுவே..

    மற்றபடி முடிவெடுத்தபடியால் ஆசான் எவ்வழியோ நானும் அவ்வழி...

    ReplyDelete
  39. தயவு செய்து வண்ணத்தில் போட வேண்டாம் சார்...நல்ல தாளில் கருப்புவெள்ளையே போதும்சார்.. மாயாவியோ மாடஸ்டியோ...

    ReplyDelete
  40. நாங்களும் கேப்போம்.....அந்த "மஞ்சள் பூ மர்மத்தையும்,....திகிலூட்டும் நிமிடங்களையும் (முதன் முதலாய் படித்த கதை) கலர்ல,....மேக்ஸி சைஸ்ல போடுங்க விஜயன் சார்!! தட்றோம்!தூக்குறோம்!!

    ReplyDelete
  41. //No வறண்ட பாலைவனம்ஸ் ; no குளிக்காத cowboys ....no அரிசோனா or டெக்சாஸ் ; மாறாக உலகின் exotic location களில் பயணிக்கும் சமகாலக் கதைகள் ; கதைக்கே முக்கியத்துவமென்ற one-shots - இவையே இனி நமது எதிர்காலமோ ?//

    உண்மைதான் சார்! ஏற்கனவே டைகர் விஷயத்தில் இது நடந்தேறி விட்டது - என்பதே கடந்த கால அனுபவம்!

    இன்றைய நிகழ் காலம் - நாளைய கடந்த காலம்!

    ReplyDelete
    Replies
    1. No வறண்ட பாலைவனம்ஸ் ; no குளிக்காத cowboys ....no அரிசோனா or டெக்சாஸ்//

      இனிமே டெக்ஸ் வராதா நண்பரே...??

      டைகரின்கதை வேறு...மாற்றம் முன்னேற்றம் என எங்கோ போகிறோம்.. நண்பரே.. ஒருபோதும் வன்மேற்க்கை விட்டு நாம் விலக முடியாது...

      Delete
    2. Very true sir !! துரதிர்ஷ்டவசமாக பழையனவே வாழ்க்கை என்று கொடி பிடிக்கும் நண்பர்களுக்கு இன்றொரு நிகழ்காலம் இல்லையெனில் நாளைக்கு எதிர்காலமிராதென்பது புரிவதில்லை !

      Delete
    3. //மாயாவியோ மாடஸ்டியோ..//

      No...மாடஸ்டி இங்கே தேர்விலேயே கிடையாது ! பழமையின் பிரதிநிதி மாயாவியைத் தாண்டி வேறு யாராகவும் இருக்கப் போவதில்லை !

      Delete
    4. //இனிமே டெக்ஸ் வராதா நண்பரே...??//

      சும்மா சொல்லக்கூடாது பயலுக்கு தில இருக்கு!!! 🥴


      Delete
  42. விஜயன் சார்,

    கத்தி முனையில் மாடஸ்ட்டி/மாடஸ்டியின் (வண்ணத்தில்) சிறு வயது கதையையும் (இது குறைத்த பக்கங்கள் தான் என நினைக்கிறன்) + ப்ருனோ பிரேசில் 2.0 கதையையும் இணைத்து தர முடியுமா? அப்படி என்றால் முத்தின் ஆரம்ப காமிக்ஸ் நாயர்கள் சிலரை முத்து 50 கவர் செய்தது போல் இருக்கும். மாடஸ்ட்டி + ப்ருனோ பிரேசில் 2.0 ரெகுலர் சந்தாவில் இடம் கொடுக்கும் ஐடியா இருந்தால் இவர்களை இணைத்து ஒரு இதழாக கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பே கிடையாது சார் ! ஒன்றுக்கொன்று துளியும் தொடர்பில்லா பதிப்பகங்கள் !

      And கதை பாணிகளிலும் கிஞ்சித்தும் பொருத்தமில்லா கூட்டணி !

      Delete
  43. மிகுந்த மனவேதணையோடு இந்த முத்து50 போராட்டத்தில் இருந்து ஒதுங்குகிறேன் ஆசானே...

    எதுவந்தாலும் வாங்குவோம்...

    ReplyDelete
    Replies
    1. அவரவருக்கு அவரவரது பசிகள் மட்டுமே ! தப்பே இல்லை தானே பழனி !

      Delete
    2. நிச்சயமா உங்க முடிவை ஏற்றுக்கொள்கிறேன் சார்... முத்து75 க்கும் திரும்ப வருவோம்..

      Delete
    3. உயிருடன் இருந்தால் அப்படித்தானே நண்பரே... இப்பவே பருப்பு வேக வில்லையாம் இன்னும் 25 வருஷம் கழிச்சு 🤔🤔🤔🤔

      Delete
    4. ஆம் நண்பரே...இப்போ 38+25= 63 கொஞ்சம் சிரமந்தான் பாப்போம்..

      Delete
    5. நானேல்லாம் இன்னும் 10 வருடம்தான் விடுங்கள் நண்பர்களே நமது பதிவு ஆசிரியரை சங்கடப்படுத்துகிறது வருவதை ரசிப்போம் இப்போது ஓய்வு பெறுவோம்

      Delete
  44. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  45. முத்து காமிக்சின் இதழ் # 100 ஆன - "யார் அந்த மாயாவி ?" ஒரிஜினலாக வந்தது போலவே வண்ணத்தில் இம்முறையும் ?

    உங்க விருப்பம் அதுவாகியபோது எங்களுக்கும் ஓகே சார் 🙏🏼😇


    சமகால ஆக்ஷன் த்ரில்லர் ; நமக்கு ரொம்பவே பிடித்தமான துப்பாக்கிகளோடு அதிரடி காட்டும் சீக்ரட் ஏஜெண்ட்கள் ; மிரளச் செய்யும் car chases ; அழகான அம்மிணிகள் ; அளவான அஜால் குஜால்ஸ் ; ஐரோப்பாவின் அசாத்தியத் தலைநகர்களில் பயணிக்கும் கதை - என்று இந்தத் தொடர் ஓட்டமெடுக்கும் வேகம் நிச்சயமாய் நமக்குப் பிடிக்கும் என்றுபட்டது ! ஒவ்வொரு சாகசமும் 2 பாகங்கள் கொண்டதெனும் போது படிக்கவும் நிச்சயம் ஒரு சிரமமில்லா நீளம் இங்கு சாத்தியம் !

    ஆஹான் கேட்கவே/படிக்கவே செமயா இருக்கே
    உங்கமேல நம்பிக்கை இருக்குங்க சார் கண்டிப்பாக
    முத்து50க்கு வந்திடுவாருன்னு நம்புறோம் 🙏🏼😇

    தொடர் # 2 சற்றே வித்தியாசமானது - in the sense that நாயகர் லார்கோவைப் போலான வித்தியாசப் பார்ட்டி ! மனுஷன் டிடெக்டிவோ ; ஷெரிபோ ; ரேஞ்சரோ கிடையாது ! தனியார் ஏஜென்சிக்களில் பாடிகார்டும் கிடையாது ! மாறாய் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் இவரை சாகசம் செய்யச் செய்கின்றன ! சிங்கிள் ஆல்பங்களான இவரது சாகசங்கள் ஒவ்வொன்றும் நிகழ்வது பூமியில் நாம் (காமிக்ஸ் களங்களில்) தரிசித்திருக்கா புதுப் புது இலக்குகளில் ! All out action என்றில்லாது - கதையோடு பயணிக்கும் ஆக்ஷன் ; இங்கும் சமகாலக் கதைப்பின்னல் ; இங்குமே அழகான பூனைக்கண் அழகிகள் ; இங்குமே பட்டும் படாது அஜால்ஸ் + குஜால்ஸ் என்று கதை நகர்வதை விடியும் வரைக்கும் பராக்குப் பார்த்தேன் !

    இது போங்கு ஆட்டம் சார்

    நீங்க மட்டும் பராக்குபாத்திட்டே இருந்தா போதுமா
    சீக்கிரமா முத்து 50ல் நாங்களும் பார்க்க ஏற்பாடு பண்ணுங்கோ உங்களுக்கு புண்ணியமா போகுமின்னு


    <\>நம்ம ஈனா வினா பாசு சொல்ல சொன்னாரு சார்<\b>🤷🏻‍♂️😇🙏🏼

    ஜருகண்டி ஜருகண்டி 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
    .

    ReplyDelete
  46. Great decision sir!

    And Steelclaw in colour is my choice and thanks for making it free.

    THANKS TO SENIOR EDITOR.


    And also make some slot for R66 and KENYA next year.

    Thank you!

    ReplyDelete
  47. அந்த மாயாவி கதையையும் இணைத்து போட்டால் ஒரு குண்டு புக் ஃபீல் கிடைக்குமே சார். சந்தாதாரர்களுக்கு மட்டுமே இலவசமென்றால் அந்த கதைக்கு தோரியமாக ஒரு நூறு ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை தொகையை சந்தா வாசர்களுக்கு கழித்துவிட்டு தனியாக வாங்குபவர்களுக்கு முழு MRP ரேட்டுக்கு தரலாமே சார். ஏனென்றால் முத்து காமிக்கு முதன்மை நாயகர் தனியாக வருவதைவிட ஸ்பெஷ்ல் இதழில் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா பதிப்பகங்களின் படைப்புகளை ஒன்றிணைக்க ஒருபோதும் சம்மதங்கள் வாங்கிட இயலாது சார் ! ஒவ்வொரு அறிவிப்பின் பின்னும் ஏதேனுமொரு லாஜிக் இருந்திடுமென்ற நம்பிக்கையை ஈட்டிட இன்னும் நான் நிறையவே பயணிக்க வேண்டும் தான் !

      Delete
  48. ஒருவழியா இதழ்கள் கிட்டத்தட்ட முடிவாயிடுச்சி போல...
    ஓகே,ஓகே...

    ReplyDelete
  49. பதிவு படிச்சாச்சு தூங்கி எழுந்து வந்து கமெண்ட்ஸ் படிச்சுக்கறேன்.

    ReplyDelete
  50. சார் சிக் பில் எப்படி முத்துவில்?

    மாயவிக்கு அடுத்து முத்துவின் பெரிய ஹீரோ உடைந்த மூக்கார் தான் ஜானியை விட. அவர் தான் present.

    சமீப பதிவில் லக்னர் பற்றி ஆசை வேறு தூண்டிவிட்டார்கள் ஆகையால் தங்க கல்லறை மறுபதிப்பு சாத்தியமா கருப்புவெள்ளையில்.

    யார் அந்த இரும்புக்கை மாயாவி வேண்டாம் சார். முதல் கதை போல vintage கதை கொடுங்கள் ப்ளீஸ்.

    மற்றபடி நீங்கள் கூறிய 3 future கதைகள் ஒகே

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் முழுவதும் வரும் முத்து காகிக்ஸ் லோகோவில முத்து 50 என வரும் நண்பர்கள் யோசனையை நானும் வழிமொழிகிறேன்

      Delete
  51. சார் மாயாவி யின் மந்திர வித்தை கூட அருமையான சாகசம் சார். ஆரம்பத்தில் பெரிய நாடோடி ரெமி சைஸில் வந்து பாக்கெட் சைசில் 93/94ல் மறுபதிப்பு கண்ட கதை. அந்த கதையையும் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வெளியீடு எண்: 119
      மறுபதிப்பு: 228

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 1980 மற்றும் 1994ல் வந்தவை

      Delete
  52. //கூடவே, லாரன்ஸ் & டேவிட்ன் புதிய கதை ஒன்றை வண்ணத்தில்?!! மாயாவி விலையின்றி இருக்கட்டும் - லா&டே வை விலையோடே போடுங்கள். ஒரே இதழாகவே போடுங்கள்! இரண்டு கதைகள் - ஆனால் ஒரு கதைக்கான விலையோடு!//

    சார் இதனை பலத்த கைதட்டல் உடன் விசிலடித்து வரவேற்கிறேன்.
    மற்றபடி உங்கள் முடிவு எல்லோருக்குமானது என்பதால் பெரும் பான்மையோர் விருப்பப்படி செய்யுங்கள்.
    சிங்கத்தின் சிறு வயதில் வாய்ப்பு உண்டா சார்?

    ReplyDelete
  53. நெப்போலியன் பொக்கிஷம், ஒற்றன் வெள்ளை நரி - ஜார்ஜ்
    சிறை மீட்டிய சித்திரக்கதை, யார் அந்த அதிர்ஷ்டசாலி - சார்லி
    வைரஸ் X, வான்வெளி சர்க்கஸ் - காரிகன்
    பிரமிட் ரகசியம், பகல் கொள்ளை - ரிப் கெர்பி
    ஜும்போ,கீழ்த்திசை சூனியம் - வேதாளன்
    விபரீத வித்தை, கொலைக்கு விலை பேசும் கொடியவன் - மாண்ட்ரெக்.
    இவைகள் அனைத்தும் (என்னளவில்) இன்றும் ரசிக்க வைக்கிறது சார்.. ஏதேனும் வாய்ப்பு இருப்பின் கவனத்தில் கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் - என்ற பட்டாளம் தானே சார் முத்து காமிக்ஸ்'ன் அடையாளம்.

      பீரோவில் துயிலும் பெஸ்ட் மாண்ட்ரேக் கதை + காரிகன் + பழைய/புது வேதாளன் கதை + ரிப் கெர்ரி குண்டு புக்- இந்த தூசி தட்டும் படலம் இந்த மைல்கல் தருணத்துக்குப் கண்டிப்பாக பெருமை சேர்க்காமல் போகுமா என்ன சார்??? (மீள் பார்வைக்கு)

      Delete
    2. இந்த கதைகளெல்லலாம் மீண்டும் முத்து லோகோவுடன் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆசிரியர் மனது வைக்க வேண்டும்!

      Delete
  54. லயன் 50 ஏமாற்றம். மாயாவி கதையை படிப்பதற்கு தனி மனசு வேணும் சார்.
    எல்லாரும் முழுமையாக மனசுல என்ன நினைக்கிறார்களோ அதை சொல்லுகிற மாதிரி தெரியவில்லை. மென்றும் விழுங்கியும் பேசுவது ,
    திருப்தியில்லாத மனநிலையில்இருப்பது போலவும் உள்ளது எனவே நீங்களே முடிவு செய்யுங்கள் சார் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று வேறுவழியின்றி சொல்கிறார்கள் என எண்ணுகிறேன். நானும் அதையே தான் சொல்கிறேன் நீங்கள் என்ன கொடுத்தாலும் படிக்கப் போகிறோம்.

    ReplyDelete
  55. ஜானி எல்லாம் ஐம்பதாவது ஆண்டு மலரில் வருவார் என்று ஒரு பொழுதும் எதிர்பார்த்ததில்லை ..அயகோ...

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் நண்பரே 😭😭😭😭

      Delete
  56. இரும்புக்கை மாயாவியை நீங்கள் கொடுத்தாலும் மறுபடியும் பத்திரமாக படிக்காமல் பூட்டி தான் வைக்கப் போகிறோம் இதனால் யாருக்கு என்ன லாபம் சார்?
    நீங்கள் இலவசமாக கொடுத்தாலும் அதில் பயன் இருக்க வேண்டுமல்லவா?

    ReplyDelete
  57. //ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா பதிப்பகங்களின் படைப்புகளை ஒன்றிணைக்க ஒருபோதும் சம்மதங்கள் வாங்கிட இயலாது சார் ! ஒவ்வொரு அறிவிப்பின் பின்னும் ஏதேனுமொரு லாஜிக் இருந்திடுமென்ற நம்பிக்கையை ஈட்டிட இன்னும் நான் நிறையவே பயணிக்க வேண்டும் தான் !//

    சார், இனியாவது தயவுசெய்து ஒவ்வொரு புத்தகத்திலும் (அது ரீ-பிரிண்ட் ஆக இருந்தாலும் சரி) ஒரு சிறிய எடிட்டோரியலாவது எழுதுங்கள். அதில், நமக்கு நீங்கள் தெளிவுபடுத்த விரும்பும் விடயங்களை அவ்வப்போது குறிப்பிடுங்கள். ஏனென்றால், நீங்கள் என்னதான் இந்த ப்ளாக்கில் எழுதி எழுதி தேய்ந்தாலும் அவை மீள் வாசிப்புக்கு வராது. புத்தகமெனில், அவ்வப்போது எடுத்துப் புரட்டும்போது ‘அட, எடிட்டர் இப்படிச் சொல்லியிருக்கிறார்‘ என்று மனதில் சற்றே ஆழமாகப் பதிய வாய்ப்புக் கிட்டும்.

    ஏனென்றால், பல விடயங்களில் நாம் ஒரு வட்டத்துக்குள் வளையவந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்வதேயில்லை. வெளியீட்டில் இருக்கும் சாத்தியங்களையும் புரிவதில்லை. ஏனென்றால், எங்களது கடந்த கால வாசிப்பு அனுபவங்கள் அப்படி. தயிர் வடையையும் சிக்கன் கறியையும் சேர்த்து அடித்துக் குழைத்து நீங்கள் படைக்க, அள்ளி அள்ளி சுவைத்தே பழகிட்டோமா... ”அப்போ பண்ணாரே.. இப்ப என்னா புளுகு விடுறார்..!” போன்ற எண்ணங்கள் எழுவதை தவிர்ப்பது கடினம். அவ்வப்போது ஆசிரியர் பக்கங்களில் அழுத்தம் கொடுத்து எழுதினீர்களென்றால்தான் மாற்றம் எம் மனங்களில் கொஞ்சமேனும் ஏற்படும்...

    ReplyDelete
    Replies
    1. // இனியாவது தயவுசெய்து ஒவ்வொரு புத்தகத்திலும் (அது ரீ-பிரிண்ட் ஆக இருந்தாலும் சரி) ஒரு சிறிய எடிட்டோரியலாவது எழுதுங்கள். அதில், நமக்கு நீங்கள் தெளிவுபடுத்த விரும்பும் விடயங்களை அவ்வப்போது குறிப்பிடுங்கள். ஏனென்றால், நீங்கள் என்னதான் இந்த ப்ளாக்கில் எழுதி எழுதி தேய்ந்தாலும் அவை மீள் வாசிப்புக்கு வராது. புத்தகமெனில், அவ்வப்போது எடுத்துப் புரட்டும்போது ‘அட, எடிட்டர் இப்படிச் சொல்லியிருக்கிறார்‘ என்று மனதில் சற்றே ஆழமாகப் பதிய வாய்ப்புக் கிட்டும். //

      +1
      Agreed!

      Delete
  58. இப்போதே நாம் ஒரு சில கதைகள் தவிர்த்து 70 - 2000 க்குள் வந்த கதைகளைத்தான் ”புதிய வெளியீடுகளாக” படித்து வருகிறோம் என்பதையும் அவ்வப்போது மறந்துடுறோம். உதாரணமாக, நம்ம மறதிக்காரர், லார்கோ இவங்களெல்லாம் ஏனைய மொழிகளில் ஒரு சுற்று வந்த பிறகுதான் நம்ம பக்கம் எட்டிப் பார்த்தாங்கோ.. இல்லையா...

    ReplyDelete
  59. ஜி.நாங்கள் அதைத் தான் சொல்கின்றோம்.பீரோவிலுள்ள கதைகளில் இதுவரை மறுபதிப்பு செய்யாத கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள் என்கின்றோம்.முடக்கிப்போட்ட முதலில் கொஞ்சம் குறையுமே சார்.பழமையும் புதுமையும் கலந்த இதழாய் முத்து பொன்விழா இதழைச் சிறப்பியுங்கள் என்று கேட்கின்றோம். அவ்வளவு தான் சார் எங்கள் கோரிக்கை.என் இறுதி வேண்டுகோளும் இதுவே சார்.

    ReplyDelete
  60. ஆனால் கேட்கிறார்கள் மாயாவி தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மாயாவி வேண்டும் என கேட்கவில்லை..அதைதர முடியும் என கூறும்போது என்ன செய்ய...?? மாயாவி இப்பொழுதும் வந்துகொண்டே இருக்குதே...

      Delete
  61. சார், நண்பர்களின் கோரிக்கை முழுவதும் ஏமாற்றமாக போகாதிருக்க.... இதுவரை வெளிவராது உங்களிடம் உரிமம் உள்ள ஆதர்ச நாயக நாயகிகளின் 4- 5 கதைகளை கறுப்பு வெள்ளையில் ஒரு ”முத்து 50 க்ளாஸிக்ஸ் ஸ்பெஸல்‘லாக வெளியிட்டால் (சந்தாவுக்கு வெளியில்கூட இருக்கலாம்) அவர்களுக்கும் ஒரு திருப்தி ஏற்படுமல்லவா? அண்மையில் வந்த ரிப்கிர்பி கதைகூட அட்டைப்படத்துக்கும் கதையமைப்புக்கும் பாராட்டுப் பெற்றதுதானே?

    ReplyDelete
    Replies
    1. கலரில் மாயாவி மீண்டும் வருவதை விட இப்படியொரு தொகுப்பை ஓரளவு குறைந்த விலைக்கு கொண்டுவர இயலாதா?

      Delete
    2. உங்கள் தயக்கம் நிச்சயம் புரிகிறது. நீங்கள் வாங்காத சாத்துக்களா சார்? முத்து 50க்கா ஒரு ஸ்பெஸல் சாத்துப்படி என்று எடுத்துக்கொள்ளலாமல்லவா?

      Delete
    3. இல்லை நண்பரே ஆசிரியர் முடிவெடுத்துவிட்டார். இனி அவர் பின்வாங்க மாட்டார் அது மட்டும் உறுதி. கொஞ்சம் ஆலமரம் ஒன்னு பாருங்க எடுத்த எடுப்பிலேயே 1+1=11 என்றுதானே ஆரம்பித்தார். என்ன புதிதாக மாயாவி சிக்பில் ஜானி எல்லாம் வராங்க அவ்வளவுதான் வித்தியாசம்... 🙏🙏🙏🙏

      Delete
    4. எனக்கும் புதிய தொடர்கள், கதைகளில்தான் ஆர்வம் அதிகம் நண்பரே. ஆனால், இங்கே பல நண்பர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவதைப் பார்க்கும்போது சைடுல ஒரு பைபாஸ் ரோட்டை ஆசிரியர் போட்டால் நல்லாருக்கும்ணு தோணுது...!

      Delete
  62. செல்வம் அபிராமி சார் வீட்டுத் திருமணம். வாழ்த்துக்கள் சார். சந்தோசம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. ஆசானே கூறியிருக்கிறார்.. பிரிட்டிஷ் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை தூசுதட்டி மறுஆக்கம் செய்து வெளியிட்டு வருகிறது என ..ஏனோ நமக்கு அது முடியாமல் போகிறது..வாரவாய்ப்பிருந்தும் வழிவிடாததே காரணம்..STV அவர்கள் சொல்லது பீரோவுக்குபோகும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.இப்போ வருகிற அனைத்து இதழ்களையும் தினம் தினம் மீண்டும் மீண்டும் படிக்கிறோமா என்ன...??

    ReplyDelete
    Replies
    1. இனி இதைப் பற்றி பேசுவதை விடுத்து.. கிடைத்ததை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம் நண்பா... 🙏🙏🙏

      Delete

    2. பலவருடங்களாக நாம் விரும்பியதை நாம் எதிர்பாரா நேரத்தில் கொடுத்து நம்மை திக்கு முக்காட வைத்த ஆசிரியர், உங்கள் எண்ணங்களை சரியான தருணத்தில் நிறைவேற்றுவார் என நம்புங்கள் நண்பர்களே!

      Delete
    3. நம்பிக்கையே வாழ்க்கை

      Delete
  65. முத்து 50 ஒரு திருப்தியான இதழாகவே தோன்றுகிறது. அனைத்து வகையினரையும்திருப்திபடுத்தஇயன்ற அளவுமுயற்ச்சித்துள்ளது புரிகிறது . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  66. விஜயன் சார்,

    மாயாவி ஏற்று கொள்கிறேன்!

    சிக்-பில் ஏற்றுகொள்கிறேன்! இது போன்ற சிறப்பிதழில் ஒரு சிரிப்பு பார்ட்டி கண்டிப்பாக இருப்பது நல்லது!

    ஆனால் ஜானி தான் ரெகுலராக வருகிறாரே! அப்படி இருக்கும் போது முத்து 50 அவரை சேர்ப்பதால் புதியதாக இந்த சிறப்பிதழுக்கு சிறப்பு வெளிச்சம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு! எனவே இது போன்ற ஒரு இந்த சிறப்பு இதழுக்கு கூடுதல் வலு சேர்க்கும் நாயகர்கள் கதைகளை தேர்த்தெடுத்து வெளியிடலாமே!

    எனவே அவருக்கு பதில் மாயாவியை போல் கிளாசிக் பழைய நாயர்கள் கதை ஏதாவதை வெளியிடலாமே? ப்ருனோ பிரேசில் 2.0 (இவர் முத்துவின் நயாகரா என தெரியவில்லை) அல்லது கிளாசிக் கதையான நெப்போலியன் பொக்கிஷம் போன்ற சில கதைகளை ஜானிக்கு பதில் கொடுக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. க்ளாசிக் வீரர்களே முழுக்க வேண்டாம் என முடிவெடுக்கும் அளவுக்கு அவர்கள் இன்னும் சோர்ந்துவிடவில்லை என நினைவுபடுத்துகிறேன்...ஜானி சிக்பிலுக்கு எந்த வகையிலும் வேதாளர் மாண்ட்ரேக் காரிகன் ஜார்ஜ் சார்லி சிஸ்கோ ரிப்கெர்பி குறைந்தவர்கள் இல்லை..

      Delete
    2. லாரன்ஸ்&டேவிட்/ஸ்பைடர்/ஆர்ச்சி கதைகளை கடந்த இரெண்டு வருடங்களில் பார்த்து விட்டோம்! எனவே அவர்கள் இந்த சிறப்பிதழுக்கு வேண்டாம்!

      Delete
    3. ப்ருனோ பிரேசில் 2.0 (இவர் முத்துவின் நயாகரா என தெரியவில்லை)

      முன்னாள் திகில் இந்நாள் முத்து நாயகர் நண்பரே...

      Delete
    4. பழனி @ சமீபத்தில் ரிப்கெர்பி வந்து விட்டார், எனவே அவர் வேண்டாம்! விற்பனையாளர்கள் பார்வையில் மாண்ட்ரேக் பற்றி ஆசிரியர் சொல்லிவிட்டார்! எனவே மாண்ட்ரேக்ஐ விட்டுவிடலாம்! ஜார்ஜ / சார்லி / சிஸ்கோ இந்த சிறப்பிதழுக்கு வேதாளர் போல வலுசேர்ப்பார்களா என யோசிக்கலாமே!

      ஜார்ஜ / சார்லி / சிஸ்கோ இவர்கள் முத்து விற்பனையில் அந்த காலத்தில் சாதித்தார்களா என்பதை விட முத்துவின் தூண்களாக இருந்தார்களா? அப்படி முத்துவின் தூணாக இருந்த கிளாசிக் நாயகர்களுக்கு இந்த சிறப்பிதழில் இடம் கேட்கலாம்! வேதாளம் கேட்கலாம்!

      தவறாக என்ன வேண்டாம் பழனி! எனது எண்ணத்தை மட்டுமே பகிர்கிறேன்!

      Delete
    5. // முன்னாள் திகில் இந்நாள் முத்து நாயகர் நண்பரே... //

      Thank you!

      Delete
  67. சார் முடிந்தால் இளமையில் கொல் மீதமுள்ள இரு பாகங்களையும் வெளியிடுங்கள். மறுபதிப்பில் முதல் பாகம் மட்டும் வாசித்த என்னைப்போல் பல வாசகர்கள் இருப்பார்கள்..

    அதே வேளை எங்களின் (முத்துவின்) ஆஸ்தான நாயகர் கேப்டன் டைகர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில் இடம் பெறுவார்.

    வாய்ப்புகள் இருந்தால் பாருங்கள் சார்...

    ReplyDelete
  68. புத்தகம் வெளிவந்தபின் ஆண்டு இறுதியில் சூழ்நிலைக்கேற்பமற்றொரு சிறப்பிதழ் (முத்து 50 வருட நிறைவு, சிறப்பிதழ்)முழுக்கமாயாவிகாரிகன் மாண்ட்ரேக், வேதாளர், மாடஸ்டி, லாரன்ஸ் & டேவிட் சமரசத்திற்கே இடமில்லாமல் வேண்டும் சார். தற்போதைக்கு இது போதும் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  69. சார்..

    ஆஸ்டெரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் மற்றும் டின்டின் இணைத்து அதனோடு அந்த வாட்ச்மேன் சீரீஸில் ஒரு ரெண்டுகதை இணைத்து அத்தோடு லாக்கி அண்ட் கீயின் முதல் பாகத்தை சேர்த்து அப்புறம்...

    யோசிச்சி சொல்றேன்...!

    ReplyDelete
    Replies
    1. மாமா....நீ கலக்கு..

      Delete
    2. அப்புறம் இந்த டொனால்ட் கதையை மறந்துராதீங்க கண்ணா! :-)

      Delete
    3. ஆமால்ல.. நன்றி பரணி.!

      அதைமட்டும் விட்டுவைப்பானேன்..

      டோனால்ட் டக்கையும் அலிபாபாவையும் சேர்த்து.. டாம் அண்ட் ஜெர்ரியோடு இணைத்து.. சிந்துபாத்தையும் சோட்டாபீமையும் கலந்து..

      ...ஆமேலு பர்த்தினி..🏃🏃

      Delete
    4. ஆமேல.. இந்த விச்சு கிச்சு தொகுப்பு குண்டன் பில்லி தொகுப்பையும் உங்களுக்கு ஞாபகபடுத்தும் கடமை எனக்கு உள்ளது கண்ணா!

      Delete
  70. சார்...

    இந்த கஷ்டமான உலக சூழலில்... எங்களுக்கு "வெறும்" பொழுதுபோக்கான ஒரு விஷயம்... காமிக்ஸ்... போன வருடம் இதே காலகட்டத்தில்... நமது பொழுதுபோக்கான காமிக்ஸ் தொடர்ந்து வருமா என்பதே எனக்கொரு கேள்விக்குறியாய் இருந்தது... எங்களுக்கு just like thatஆன விஷயம்... உங்களுக்கோ உயிர்மூச்சு... வாழ்வாதாரம்... இப்படிப்பட்ட சூழ்நிலையில்... நீங்கள் கடந்த இரண்டு வருடங்களாக படும் பிராயத்தனங்களை ஒரளவு கண்டே வருகின்றோம் நாங்கள்... இந்த சூழல் மாற இன்னும் சில காலம் ஆகும் என்பது கண்கூடு... இந்தளவிற்கு இந்த கடின சூழலில் எங்களது சிறந்த/பிடித்த பொழுதுபோக்கை எவ்வித குறையுமின்றி திகட்ட திகட்ட வழங்கி வரும் உங்களுக்கும் உங்கள் பின் நின்று செயல்படும் அனைத்து பிரகாஷ் பப்ளிஷர்ஸ் செயல்வீரர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..

    முத்து50 இந்த கடின சூழலில் வரவிருப்பது மகிழ்ச்சியையும்/கலக்கத்தையும ஒருங்கே அளிக்கிறது... நாங்கள் என்னதான் ideas கொடுத்தாலும்... they are just that... Always take them with a pinch of salt... இந்த திட்டங்களின் கஷ்டகணக்குகளை நாங்கள் என்றும் பார்க்கப் போவதில்லை... நீங்கள் எப்படியும் எங்களிடம் மறைக்கத்தான் போகிறீர்கள்... என்னைப் பொருத்தவரை... நீங்களே சிறந்த judge... எது விற்கும்... எது stockroom போகும என்பது எங்களை விட உங்களுக்கே வெளிச்சம்...

    நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும்... நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையிருப்போம்...

    என்னைப்பொருத்தவரை... இந்த கடினத்தருணத்தில்.. எவ்வளவோ விஷயங்கள்.. இடந்தெரியாமல் போயிருக்க... நம் காமிக்ஸ் சிறுவட்டம் உயிர்ப்புடன் இருப்பதே... இந்த "முத்து50" ன் சிறப்பாக நான் எண்ணுகிறேன்...

    நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. Well said! I agreed this!!

      நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையிருப்போம்!

      Delete
    2. நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையிருப்போம்!

      அது நிச்சயம் நண்பர்களே...

      Delete
    3. // நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும்... நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையிருப்போம்... // அவ்வளவு தான் சார். பஞ்சாயத்து முடிந்தது.

      Delete
    4. டாக்டர் சார் சிம்பிளா சிறப்பா சொல்லிட்டிங்க...அருமை...இனி எல்லாம் ஆசான் பாத்துக்குவார்...

      Delete
    5. ஆலமரம் #4 வந்தா வேலைமுடிஞ்சிடும்...

      Delete
    6. ////என்னைப் பொருத்தவரை... நீங்களே சிறந்த judge... எது விற்கும்... எது stockroom போகும என்பது எங்களை விட உங்களுக்கே வெளிச்சம்...

      நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும்... நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையிருப்போம்...
      //////

      +100000 அருமையா சொன்னீங்க ஜி!


      ////என்னைப்பொருத்தவரை... இந்த கடினத்தருணத்தில்.. எவ்வளவோ விஷயங்கள்.. இடந்தெரியாமல் போயிருக்க... நம் காமிக்ஸ் சிறுவட்டம் உயிர்ப்புடன் இருப்பதே... இந்த "முத்து50" ன் சிறப்பாக நான் எண்ணுகிறேன்...///

      ஆயிரம் லைக்ஸ்!

      Delete
    7. நன்றி டாக்டர் சார்.இந்தக் கொரானா காலத்திலும் பல சிரமங்கள்.உயிரோடு இருப்பதே பெரும் பாக்கியம் என்ற சூழ்நிலை.என் போன்ற அன்றாடங்காய்ச்சிகள் வேலைக்குச் சென்றே ஒரு மாதமாகிவிட்டதால் பயங்கரமான பொருளாதாரச் சிரமங்கள்.இவ்வளவு இருந்தும் இங்கு வந்து ஏன் கேட்கின்றோம்.முத்து காமிக்ஸ் எங்கள் உணர்வோடும் உயிரோடும் ஒன்றிவிட்டதால் தான்.அந்த இதழுக்கு 50 வயதாகிவிட்டதால் பொன் விழா இதழைச் சிறப்பாகத் தரக் கேட்கின்றோம்.அவ்வளவு தான்.புதிய இதழ்கள் வருடம் பூராக வரப்போகிறது.இந்த பொன்விழாத் தருணத்தில் பழமையும் புதுமையும் கலந்த இதழாகத் தாருங்கள் என்று தான் கேட்கின்றோம்.பழைய நாயகர்களின் சில மறுபதிப்பாகாத கதைகளை அல்லது புதிய கதைகளை கறுப்பு வெள்ளையில் குண்டு இதழாக சுமார் 500 பக்கங்களில் compact sizeல் தர வேண்டுகின்றவோம்.அவ்வளவு தான்.இனி ஆசிரியரின் விருப்பம்.
      நன்றி.நண்பர்களே.

      Delete
  71. ஒவ்வொரு நண்பர்களும்.. அவரவர்க்கு பிடித்த நாயகர்கள் இந்த சிறப்பான இதழில் இடம்பிடிக்க வேண்டுமென்று விரும்பி..
    அதற்கான சாதகபாதகங்களை அவர்களாகவே விளக்கி.. பாயிண்டகளை எடுத்துவைப்பதை படிக்கும்போது..

    காமிக்ஸ் வெறுமனே பொழுதுபோக்கு சமாச்சாரம் மட்டும் இல்லை அதையும்தாண்டி நெஞ்சோடு கலந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது..!

    அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்..! வேண்டியதை தயங்காமல் முன்வையுங்கள்..!
    எனக்கு சிக்பில் ஒண்ணு இடப்பபிடிச்சதே போதும்..ஹிஹி..!!

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் வெறுமனே பொழுதுபோக்கு சமாச்சாரம் மட்டும் இல்லை அதையும்தாண்டி நெஞ்சோடு கலந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது..!//

      100% உண்மை மாமா...

      Delete
    2. எனக்கு முத்து 50 சிறப்பிதழ் வருவதே போதும்!
      #எந்த கதை வந்தாலும் படிப்போர் மற்றும் #காமிக்ஸ் தொடர்ந்து வந்தாலே போதும் என நினைக்கும் சங்கம்!

      Delete
    3. ///ஒவ்வொரு நண்பர்களும்.. அவரவர்க்கு பிடித்த நாயகர்கள் இந்த சிறப்பான இதழில் இடம்பிடிக்க வேண்டுமென்று விரும்பி..
      அதற்கான சாதகபாதகங்களை அவர்களாகவே விளக்கி.. பாயிண்டகளை எடுத்துவைப்பதை படிக்கும்போது.///

      மிகச்சரியாக சொன்னாய் மாம்ஸ்.

      இதில் யாரும் யாருடைய வாய்ப்பையும் தடுக்கும் நிலைப்பாடு துளியும் கிடையாது என்பதை நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேணும்

      அவரவர் கேட்கிறோம்... ஆசிரியர் அவரால் உகந்தது தருகிறார்.

      யாரும் எந்த ஹீரோவின் வாய்ப்புகளையும் தடுக்க இயலாது. அந்த ஹீரோ அந்த இடங்களை டிசர்வ் பண்ணுகிறார்னா நிச்சயமாக வரும்.

      Delete
    4. // யாரும் யாருடைய வாய்ப்பையும் தடுக்கும் நிலைப்பாடு துளியும் கிடையாது என்பதை நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேணும் //

      +1
      Well said!!

      Delete
  72. ஆசிரியர் தீர்ப்பே முடிவானது இதை யாரும் மறுக்க போவதுமில்லை வெறுக்கப் போவதுமில்லை எனவே ஆசிரியர் என்ன செய்கிறரோ அதையே ஏற்றுக் கொண்டுவிட பக்குவம் வேண்டும் நமக்கு நன்றி.

    ReplyDelete
  73. ஆலமரம் ஒன்று ஆலமரம் 2 இது நமது மனதின் ஆழத்தை அறியவே ஆசிரியர் வைத்த தேர்வு.

    ReplyDelete
  74. ஆலமரம் மூன்றில் முடிவை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம்.

    ReplyDelete