Friday, May 14, 2021

முச்சந்தியில் இன்னொருமுறை..!

TO THE PERSON(S) CONCERNED :

நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் - முச்சந்தியில் சலவை செய்யும் பழக்கம் எனக்கு ஏற்புடையது அல்லவென்று ! அதன் பின்னரும் இந்தப் பஞ்சாயத்தை இங்கே கொண்டு வருவதெனில், அதன் பின்னுள்ள லாஜிக் எனக்குப் புரியவில்லை !  

நடுநிலையின் பக்கம் மட்டுமே நீங்கள் நின்றிருப்பதாக இருப்பின், ஒதுங்கி நின்ற என்மீதும், இதனில் தம் அபிப்பிராயங்களை பதிவிட முயன்ற நண்பர்கள் மீதும் கடந்த சில நாட்களாய் குவிக்கப்பட்ட  அவதூறுகளின் கடுமையை கண்டும் காணாது பயணித்திருக்க இயலாது ! விமர்சனங்களும், பார்வைகளும் இருமுனைகள் கொண்ட வாள் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதில்லை ! முகமறிந்த ; பழகிய நண்பர்களை தடித்த வார்த்தைகளில் அர்ச்சனை செய்த போது smiley-க்கள் கை தந்ததும், மூன்றே நாட்களில் நிலவரம் வேறு விதமாய் மாறும் போது எள்ளும் கொள்ளும் தாண்டவமாடுவதும் ரசிக்கும் விதமாகயில்லை !

உங்களிடம் போனில் சொன்னதையே இங்கே திரும்பவும் சொல்கிறேன் : ஒரு தவறான துவக்கத்தினில் ஏதோவொரு வகையினில் தொடர்பு கொண்டான பின்னே அதனிலிருந்து விலகிக் கொள்வதே உங்கள் மட்டிற்கு நலம் பயக்கும் !  மாறாக அதனை நியாயப்படுத்தும் முனைப்பினில், மேற்கொண்டும் மேற்கொண்டும் இக்கட்டுக்களை தேடிக் குவித்துக் கொள்ளாதீர்கள் என்பது மட்டுமே எனது ஒற்றைக் கோரிக்கை ! 

உங்களுக்கு யோசனை சொல்வதோ ; எனக்குச் சம்பந்தமில்லா விஷயத்தில் என்னை ஆழ்த்திக் கொள்வதோ எனது நோக்கமே அல்ல ! ஆனால் "இங்கே ஆரம்பிச்சது...இங்கேயே முடியானும்"...என்று நீங்களே இங்கு ஆஜரான பின்னேயும் நான் தொடர் மௌனம் காப்பது, எனது பொருட்டு காயங்களை தொடர்ந்து சந்தித்து வரும் நண்பர்களுக்கு ; நிஜத்தை வெளிக்கொண்டு வர பிரயத்தனங்கள் செய்த நண்பர்களுக்கு நான் செய்திடும் துரோகமாக இருந்திடும் ! அந்தப் பிழையை நான் இனியும் செய்வதாக இல்லை ! So ரௌத்திரத்தில் செலவிடும் சக்தியின் ஒரு சிறுபான்மையை பின்வரும் விஷயங்களின் பக்கமாய் திசைதிருப்பித் தான் பாருங்களேன் ப்ளீஸ் :

இலங்கையிலிருந்து வெளியிடப்படுவதான காமிக்ஸின் முகவரியை ஒரேயொரு முறை ஏதேனுமோர் கூகுள் தேடலில் கொஞ்சமாய் ஆட்படுத்தித் தான் பாருங்களேன் .... ! இன்றைக்கு ஒரு தலைவலி மாத்திரையை வாங்கும் முன்னே கூட  "அதை போட்டால் தலைவலி போகுமா ? பிராணன் போகுமா ? " என்று கூகுளில் தேடும் ஆட்கள் நாம் என்பது தானே யதார்த்தம் ?

அவர்களதாய்ப் பதிவாகியுள்ள மின்னஞ்சல் முகவரி எந்த நாட்டில் உருவாக்கப்பட்டு, பதிவாகியுள்ளது என்பதை அறிய சற்றே மெனெக்கெட முயற்சியுங்களேன்....

"உயிரைத் தேடி" கதைத்தொடரின் மெய்யான உரிமையாளர்களான DAN DARE CORPPORATION விளக்கம் கோரி அந்த மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பிய அதே தினத்தினில், அடுத்த 2 மணி நேரங்களுக்குள் ஒரு "மரணச் சேதி" கிட்டியது மெய்யாகவே தற்செயல் தானா ? என்று அறிய நேரம் செலவிடுங்களேன்....

ஒரு மரணம் நிகழ்ந்திருப்பின் நிச்சயமாய் அது வருந்திட வேண்டிய நிகழ்வேயன்றி அரையணாவுக்குப் பெறுமானமில்லா பஞ்சாயத்துக்களுக்குள் அலசப்பட வேண்டியதொரு நிகழ்வே அல்ல ! ஆனால் உங்கள் குழுமத்தினில் அங்கத்தினர்களாக உள்ளோர்க்கே அதனிலும் எழுந்த நியாயமான சந்தேகம் உங்களுக்கே ஏன் எழவில்லை என்பதையும் உங்களையே சற்றே கேட்டுக் கொள்ள பாருங்களேன்...

ஏற்கனவே வெளியான முதல் இதழின் உரிமைகள் சர்வ நிச்சயமாய் பெறப்படவில்லை என்பதற்கு என் கையில் ஆதாரங்கள் இருந்தான பின்னேயே உங்களிடம் நான் தெள்ளத் தெளிவாய் போனில் பேசினேன் ! நீங்கள் வெளியிட்டுள்ளது DYNAMITE நிறுவனத்தின் உடைமையே அல்ல ; அவர்களே அதனை KING FEATURES-ல் தான் உரிமம் பெற்று வாங்கி வெளியிட்டுள்ளார்கள் ! அவ்விதமிருக்க அவர்கள் இதனை இலங்கைக்கோ ; இந்தியாவுக்கோ லைசென்ஸ் செய்திருக்க வாய்ப்பே கிடையாது ! தவிர King Features அமெரிக்காவுக்கு இங்கே மும்பையில் ஏஜெண்ட்கள் உள்ளனர் & அவர்களும் எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களே ! அவர்களும் இந்த விஷயத்தில் எவ்வித அங்கீகாரமும் , யாருக்கும், எப்போதும் வழங்கப்படவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டுள்ளனர் ! இவை சகலமும் உங்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பான அந்த சனி மாலையின் 45 நிமிட போன்காலின் போது விளக்கிச் சொன்னவன் நானே ! And இவற்றுள் எதையுமே பொதுவெளிக்கு கொண்டு வர நான் பிரியப்படவுமில்லை - நீங்கள் சங்கடம் கொள்ள நேர்ந்திடுமே என்ற ஒற்றைக்காரணத்தினால்  ! ஆனால் நாசூக்காய் விலகிக் கொள்ள தரப்பட்ட வாய்ப்பையுமே பகடியாக்கிப் பார்க்க நீங்கள் துவங்கிய பிற்பாடே இத்தனை இன்னல்கள் தொடர்கதையாகியுள்ளன ! இதனில் பிழை யார் மீதென்று சிந்தியுங்களேன் ப்ளீஸ் ? 

இதோ இன்றைக்கு நெட்டில் பணி செய்ய ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன் - பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு ; தமிழ் மொழிபெயர்ப்புக்கென ! ஆனால் கற்றுக்குட்டிப் பெண்களே கூட அங்கே கேட்கும் முதல் கேள்வி - "இந்த வேலையை எங்களுக்குத் தர நினைக்கும் உங்களிடம் இவற்றிற்கான உரிமைகள் உள்ளன தானா ? அதை உறுதிப்படுத்திய பின்னேயே இதனில் நாம் தொடர்ந்திடலாம் !" என்று தான் ! 49 வருட அனுபவங்கள் எங்கள் நிறுவனப் பின்புலமாகிட்டாலுமே, ஒரு புதியவர் கூட எங்களிடம் நியாயமான இந்தக் கேள்வியை முன்வைக்காது காண்டிராக்ட் அடிப்படையில் கூட பணியாற்ற தயாரில்லை ! இது தான் நிதரிசனம் & அதனில் பிழைகள் நிச்சயமாய் கிடையவும் கிடையாது ! அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் கடமையும் எனக்குள்ளது  !! ஆனால்  "கிட்டத்தட்ட ஓராண்டாய் நான் அவர்களோடு தொடர்பில் உள்ளேன் ; இந்த "உயிரைத் தேடி" கதை தான் அவர்களின் "கனவு இதழ்" ; தினமலர் நிறுவனத்தோடெல்லாம் பேசி சரி செய்து விட்டார் (?????) என்றெல்லாம் சிலாகிக்கும் அளவிற்கு பரிச்சயம் இருந்த பின்னேயும் - உங்களுக்கு அவர்களின் உரிமையாளர் பெயர் கூடத் தெரியாத நிலையினை என்னவென்பது ? அட, அதையும் விடுங்களேன் - பெயரின்றியே பயணிப்பது தவறல்ல தான் - ஆனால் ஒரு காண்டிராக்ட் மொழிபெயர்ப்பாள கற்றுக்குட்டி கேட்கும் அடிப்படைக் கேள்வியினை எடிட்டராய் பொறுப்பேற்ற நீங்கள் கேட்டிருக்க வேண்டாமா - அம்முயற்சியின் ஆரம்பத்திலேயே ? அதன் பிழைக்கு பொறுப்பேற்க உங்களையன்றி வேறு யாரிருக்க முடியும் சார் ?

இந்த சிக்கலிலிருந்து வெளியேறும் வாய்ப்பினை ஒரு பாராசூட்டாக இயன்ற சகல விதங்களிலும் உங்களுக்கு நான் வழங்கியிருந்தேன் என்பது நமது பரஸ்பர மனசாட்சிகளுக்குத் தெரியும்  ! ஆனால் அதனை உதாசீனப்படுத்த நீங்கள் முனைந்தது ஏனென்று மட்டும் சிந்தியிங்களேன் ! பின்னணியிலிருந்து "அடுத்து மெபிஸ்டோவை போடுங்க !" ; "ஒரு அப்பாவி மனுஷனை லயன் எடிட்டர் கொன்னுப்புட்டார் !" என்றெல்லாம் மனசாட்சிகளை அடகு வைத்த ஆசாமிகளின் உந்துதல்கள்,  உங்களின் சீர்தூக்கிடும் உணர்வினை அந்த நொடியினில் மட்டுப்படுத்தியிருக்கக்கூடும் என்பது தெளிவானதொரு பொழுதில் உங்களுக்குத் புலனாகாது போகாது ! 

பொதுவெளியில் தலைகுனிய நேர்வது எத்தனை வேதனையான அனுபவம் என்பதை இங்கே என்னைவிட அப்பட்டமாய் உணர்ந்திருக்கக்கூடியது வேறு யாராகவும் இருக்க முடியாது சார் ! எனது தவறுகள் சுட்டிக் காட்டப்பட்ட விதம் ரொம்பவே காரமானதாக இருந்திருக்கலாம் ; ஆனால் 'அதனை நான் மறுக்கிறேன் ; சமாதானம் சொல்கிறேன்' என்று முனைப்பு காட்டவே இல்லை ! விழுந்த செருப்படிகளை கைகட்டியே வாங்கியும் கொண்டேன் ! சாகும் வரையிலும் அந்தக் களங்கம் நீங்காதென்பது எனக்குத் தெரியும் தான் ; அதன் பொருட்டே சென்றாண்டு BBC ரேடியாவினில் என்னை பேட்டி கண்ட விஷயத்தைக் கூட இன்று வரைக்கும் சீனியர் எடிட்டருக்குக் கூட நான் சொல்லவில்லை ! முழுசாய் 45 நிமிடங்களுக்கு ஒலிபரப்பான அந்தப் பேட்டி பற்றி ஜூனியர் எடிட்டரைத் தவிர்த்து இந்த நொடி வரையிலும் யாருக்கும் தெரியாது ! பகடிகள் உருவாக்கவல்ல காயங்கள் அத்தகையவை ! ஆனால் "சிங்கமுத்து வாத்தியார்" என்று டைப்படித்து பகடிகளுக்குப் பரிச்சயப்பட்டுப் போன விரல்களுக்கு அதே வாளானது இன்று திசை திரும்பி நிற்கும் தருணத்தினில் வாளாவிருக்க இயலாது போவதே விதியின் வரிகள் !

"சாரி நண்பர்களே ; தெரியாது ஒரு தவறான முயற்சிக்கு நான் துணை போய்விட்டேன் ; இதனிலிருந்து என்னை தூரப்படுத்திக் கொள்கிறேன் ! " என்று மட்டும் நீங்கள் விலகி விட்டு, ஓரிரு வாரங்களுக்குப் பின்பாக _ "யாரையும் நம்பி இனி நான் மோசம் போவதாக இல்லை ; கையை ஊன்றிக் கரணம் போட்டாவது நானே ஒரு புது காமிக்ஸ் வெளியிட முயற்சிக்கப் போகிறேன் !" என்று நீங்களே அறிவித்திருந்தால் இன்று நீங்களொரு நாயகராய் நண்பர்களின் ஆராதனையை ஈட்டியிருப்பீர்கள் ! இன்றைக்கு அதே நண்பர்களின் பகடிகளின் இலக்காக மாறியிருக்க மாட்டீர்கள் ! இதனை நிச்சயமாய் உங்களின் ஆழ்மனசும் மறுக்காது என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது ! 

தணிந்து நீங்கள் நிற்பதாகவும், உபதேசம் செய்யும் உசரத்தில் நான் இருப்பதாகவும் ஆண்டவன் சத்தியமாய் நான் எண்ணிடவில்லை சார் ; ஆனால் உங்களின் நெடும் பின்னூட்டத்தில் எனக்கிருந்த நெருடல்களை வெளிக்காட்ட இனியும் நான் தயங்கிட்டால் - அது உங்களை இத்தனை ஆண்டுகளாய் நான் அறிந்திருப்பதற்குமே பொருளின்றிப் போய்விடும் ! இன்றைய உலகில், சமூக வலைத்தளத்தில் வாள் சுழற்றுவதைத் தாண்டியும் நட்பு ; நேசம் ; சக மனிதனுக்கு மரியாதை ; விமர்சனங்களிலும் நிதானம் - என நிறைய விஷயங்களுக்கு இடமிருப்பதாகவே நான் நம்புகிறேன் ! இதோ இதே தளத்தில் - அவர் பார்வையிலான விஷயத்தை சுட்டிக்காட்ட முனைந்த நண்பர் டாக்டர் சுந்தரின் பின்னூட்டத்தை நீக்கியது நானே ; அது எனக்கு ஆதரவு சொல்லும்  விதமாயிருந்த போதிலும் ! உன்னதப் பணியில் உள்ளவர் இந்த சமீப நாட்களின் காரங்களுக்கு ஆட்பட வேண்டாமே என்ற அவாவே என்னுள்ளத்தில் !! (Sorry Doctor !!) அதன் பொருட்டு அவருக்கு நிச்சயமாய் வருத்தமிருக்கும் தான் ; ஆனால் அதை அவர் இன்னொரு நண்பரிடம் நாசூக்காய் வெளிப்படுத்தினாரே அன்றி, எங்கும் கண்சிவக்க முனையவில்லை ! நட்புக்கள் வலுப்பெறுவது இத்தகைய பாலங்களினால் தானே சார் ? மாறாக "எச்ச" ; "நாதாரி" என்ற பதங்கள் நம் யாருக்கும் பெருமை சேர்க்காதே ? தலீவர் பரணி ; செயலர் விஜய் ; இந்த விவகாரத்தில் தானென்று இல்லாது ஏகப்பட்ட தருணங்களில் என் மீதான கோப வெளிப்பாடுகளை தங்கள் மீதே வாங்கி வந்துள்ளனர் ! அவர்கள் அனைவருக்குமே நான் ஆயுட்காலக் கடமைப்பட்டுள்ளேன் ! காலம் கடந்திருந்தாலும் , நீங்கள் பட்டிருக்கக்கூடிய காயங்களுக்கு எனது மன்னிப்புகள் மருந்தாகிடட்டும் guys !! SORRY !!! 

சந்திக்கு வந்து விட்டதால் சிந்தனைப் பகிரல்கள் தவிர்க்க இயலாததாகி விட்டன தான் & இங்கே மேற்கொண்டும் பேசி விடுகிறேனே ! "Fan Made " ; Scanlations : வாசக pdf " என்று ஏதேதோ ஏக காலமாய் சுற்றில் இருப்பதில் ரகசியங்கள் ஏதுமில்லை ! துவக்க நாட்களில் அவற்றைத் தவிர்க்க நான் முயற்சித்தது நிஜமே ; ஆனால் பின்னாட்களில் அதனில் தீவிரம் காட்டவில்லை என்பதும் நிஜமே ! ஆர்வக் கோளாறில் நடந்திடும் நிகழ்வுகள் என்றமட்டுக்கு ஒதுங்கி விட்டேன் ! ஆனால் இதோ - போன சனியிரவு பதிவில் "உயிரைத் தேடி" நமது இதழாய் வெளிவரவுள்ளதை அறிவித்த மறுநாள் காலையிலேயே "வாசக பேராதரவு பெற்ற ; வாசக கோரிக்கைகளுக்கு இனங்க (ஆமாங்க ; ஒரு சுழி தானுங்க !!) கலர் PDF முகநூல் க்ரூப்பில் வெளிவந்ததை நான் ரசிக்கவில்லை தான் ! குருவி உட்கார பனம்பழங்கள் உலகெங்கும் விழலாம் தான் ; ஆனால் கோவையில் விழும் பழங்களின் பெரும்பான்மைகள் முறையற்ற pdf பழங்களாகவே இருப்பது தான் வேடிக்கையும், வாடிக்கையும் ! "நீ புக் போடப் போறியா ? இயன்றமட்டுக்கும் உன் விற்பனையை ஒக்குட எனக்கு இயன்றதைச் செய்வோமென" முனைப்பு மட்டுமே இங்கே தென்படுகிறது !  தவிர, நமது புது இதழ்களையும் scan செய்து pdf ஆக்கி சுற்றில் விடும் அந்தப் பாங்கை ஆர்வமான அந்த ஆர்வலர் ஒரு பத்திரிகைப் பேட்டியிலும் தனது தொலைபேசி நம்பரோடு தந்துள்ளார் ! ஒவ்வொரு இதழிலும் statutory warning தந்திருக்கிறோம் - electronic copying தடை செய்யப்பட்டுள்ளது என்று ! அப்புறமும் "நீ என்ன சொல்ல ? நான் என்ன கேட்க ?" என்ற மீறல்கள் இனி  நமது தொழில் முடக்க நடவடிக்கைகளாய்ப் பார்க்கப்படும் & அதற்கேற்ப இழப்பீடு கோரி நடவடிக்கைகள் சட்டப்படி மேற்கொள்ளப்படும் ! நான் மண்டையைப் போடும் வரைக்குமே சட்டப்படி அதற்கான தீர்வுகள் கிட்டாமலேயும் போகட்டுமே ; at least முயற்சிதோமென்ற எண்ணத்தோடு போய்ச் சேருவேன் அல்லவா ?

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் ; ஆனால் இந்தக் கூத்தாடிக்கோ கிஞ்சித்தும் மகிழ்வில்லை ! இன்று விரல் நீட்டும் அவசியம் எழுந்துள்ளது இன்றளவுக்கும் என்னோடு கை குலுக்கி; சிரித்துப் பேசி, பரஸ்பர நட்பைப் பரிமாறிக் கொண்டோரை நோக்கியே ! எந்தச் சூழலிலும் அது எனக்கு மகிழ்வைத் தரப்போவதில்லை ! ஆர்ச்சியின் கால இயந்திரத்தினில் ஏறி, பின்னோக்கிச் சென்று இந்த சமூக வலைத்தளத்தினுள் நான் தலைகாட்டிய நாட்களுக்கு முன்பான சகஜ நாட்களை மீட்டிட இயலுமெனில் இதைவிடவும் பெரிய வரமாய் நான் வேறெதையும் பார்த்திட மாட்டேன் ! இங்கிருந்து நடையைக் கட்டும் நாள் புலரும் போது - "எடிட்டர்-பப்ளீஷர்-மொழிபெயர்ப்பாளர்" இத்யாதி ,,இத்யாதி என்ற அடையாளங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு "ஒரு decent ஆன மனுஷன்" என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே கொண்டு செல்ல ஆண்டவன் வரம் தந்தால் அதை விடவும் பெரும் பாக்கியம் வேறேதும் இராது  ! அதன் பொருட்டே என்னளவுக்கு என்னால் இயன்ற பொறுமைகளோடு செயல்பட முனைகிறேன் & அதற்கு உறுதுணை நிற்கும் அத்தனை நண்பர்களுக்கும் ஒரு பெருநன்றி சொல்லிட இதையே வாய்ப்பாக்கிக் கொள்கிறேன் !! THANKS TO EVERY SINGLE ONE OF YOU FOLKS !! 

வேற்றுமைகளை பின்தள்ளுவோம் guys ; இவை ஒற்றுமைக்கான நாட்கள் !! உலகமே ஒரு பெரும் துயரினில் நிற்கும் தருணத்தில் நம் பிணக்குகளை தூர எறிந்து விட்டு நம்மை ஒன்றிணைக்கும் அந்த காமிக்ஸ் நேசமெனும் குடையின்  கீழ் இளைப்பாறுவோமே - ப்ளீஸ் ?

See you around ! Bye for now all !



261 comments:

  1. அச்சச்சோ இன்னைக்கு அதிகாரி இல்லாத பதிவு நாள்

    ReplyDelete
  2. ஏன் ஒவ்வொரு தடவையும் விளக்கம் கொடுக்கறீங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. "கொலைகாரன்" என்ற பழியைக் கேட்டான பின்னேயும் நான்பாட்டுக்கு 'மானே..தேனே..கட்டிப்பிடி !" என்று மரத்தைச் சுற்றி ஓடணுமா நண்பரே ?

      Delete
    2. ///ஏன் ஒவ்வொரு தடவையும் விளக்கம் கொடுக்கறீங்க சார்.///

      இப்பவாவது விளக்கம் கொடுத்தாரேன்னு சந்தோசமில்ல படணும் டெக்ஸ்கிட்?!!

      Delete
    3. இப்பவாவது விளக்கம் கொடுத்தாரேன்னு சந்தோசமில்ல படணும் டெக்ஸ்கிட்?!!

      ####

      உண்மை...

      Delete
  3. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  4. வந்துட்டோம்ம்

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  6. நறுக்குன்னு பதில் தர தோணுது.. கட்டுபடுத்திக்க சொல்லுது பதிவின் அடிநாதம்.. இருந்தாலும் சொல்லிடுறேன்..



    சரியான பிய்ந்த செருப்படி பதிவு.. இது இல்லைனாலும் உரைக்காது போகலாம்..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளைக்கு பிறகு சரியாக பேசி உள்ளாய் ரம்மி!

      Delete
  7. ஆணித்தரமான விளக்கங்கள் சார். சம்பந்தப்பட்ட நண்பர் இனியாவது மனம் திறந்து பகிரங்க மன்னிப்பு கேட்பாரா??

    அல்லது வீம்புக்கு வேட்டையை தொடர்வாரோ??

    எது எப்படியாயினும் தங்களது விளக்கங்கள் பல கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டது.

    தங்களின் நேரங்களை விழுங்கும் இதுபோன்ற விசயங்கள் விரைவாக ஓய்ந்து தங்களது வழக்கமான பணிகள் , விரைவில் தொடர வேணும்..!!

    நாம் அனைவரும் ஆகஸ்டில் அந்த இதழை தரிசிக்கனும்!

    ReplyDelete
  8. இது என்னைக்கோ வந்திருக்க வேண்டிய பதிவு.. Stop loss hitஆன பின்னே வந்த பதிவு...

    ReplyDelete
  9. சேவையை தொடருங்கள் ஆசானே..!!

    ReplyDelete
    Replies
    1. பயணங்கள் தொடரும் பழனி.. !

      Delete
    2. நான் எப்போதும் உங்கள் வழியில் சார்

      Delete
  10. // வேற்றுமைகளை பின்தள்ளுவோம் guys ; இவை ஒற்றுமைக்கான நாட்கள் !! உலகமே ஒரு பெரும் துயரினில் நிற்கும் தருணத்தில் நம் பிணக்குகளை தூர எறிந்து விட்டு நம்மை ஒன்றிணைக்கும் அந்த காமிக்ஸ் நேசமெனும் கெடையின் கீழ் இளைப்பாறுவோமே - ப்ளீஸ் ? //

    இந்த பதிவுக்கு இதுதான் மிகச்சரியான பின்னூட்டமாகவும் இருக்கும் சார்

    இத்தனை ஆண்டுகாள தங்களின் மெச்சூரிட்டியை கண்டு பிரமிப்படையாமல் இருக்க முடியவில்லை சார்.நன்றி 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சூழ்ந்திருப்பது நண்பர்களும், நண்பர்களாய் இருந்தவர்களும் மாத்திரமே எனும் போது - நானென்றில்லை ; என்னிடத்தில் யார் இருந்திருப்பினும் இவ்விதமே ரியாக்ட் செய்திருப்பார்கள் சார் !

      Delete
  11. உங்கள் விளக்கம் உள்ளத்தை உருக்கியது.
    உண்மைகளை உரக்கச் சொல்லியுள்ளீர்கள்.நாங்கள் என்றும் உங்கள் பக்கம் துணை நிற்போம் ஆசானே.

    ReplyDelete
    Replies
    1. ப்ரீயா விடுங்க சார் ! எல்லாம் நாளையொரு அதிகாரிப் பதிவினில் சரியாகிடும் !

      Delete
    2. காலையில் சீக்கிரமாவே பதிவ போட்டு தள்ளுங்க

      Delete
  12. "ஆர்ச்சியின் கால இயந்திரத்தினில் ஏறி, பின்னோக்கிச் சென்று இந்த சமூக வலைத்தளத்தினுள் நான் தலைகாட்டிய நாட்களுக்கு முன்பான சகஜ நாட்களை மீட்டிட இயலுமெனில் இதைவிடவும் பெரிய வரமாய் நான் வேறெதையும் பார்த்திட மாட்டேன்"
    மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும், ஒவ்வொரு விளம்பரத்தைக் கண்டும் குதூகலமுமம், ஹாட்லைனை முதலில் படித்து ஹடையும் பேரானந்தமும்..அந்த அருமையான நாட்கள்.. போஸ்ட் கார்டில் பூதவேட்டையைக் கேட்டு நச்சரித்த தினங்கள்.. சூப்பர் சார்.. மீண்டும் மலரும் இழந்த அத்தனையும்.. அதே அன்புடன் தொடர்வோம்..

    ReplyDelete
    Replies
    1. அந்த நிம்மதியான நாட்களை மட்டும் மீட்டிட முடிந்தால்....... அற்புதமாக இருக்கும் சார் !

      Delete
    2. ன்றி. மீளும் மெல்ல மெல்ல காத்திருப்போம் சார்.

      Delete
  13. கண்ணீர் சிந்தும் பதிவு,😢😢

    ReplyDelete
    Replies
    1. கி.நா.பதிவோ நண்பரே ?

      Delete
  14. நடுநிலைன்னா உண்மைக்கும் பொய்யிக்கும் நடுவிலே நிற்கறதுன்னு நினைச்சுப்பாங்க போல... நடுநிலைன்னா உண்மையான பக்கம் நிக்கிறது தான்னு தெரியறதில்லே..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி அழகாக சொன்னீர்கள்...

      பெருமைப்படுகிறேன்....!

      Delete
    2. காலம் உணர்த்திடும் சார்....

      Delete
  15. நாங்கள் என்றும் உங்களுடன்

    ReplyDelete
  16. // ஒரு decent ஆன மனுஷன் // ரொம்பவே decent ஆன மனிதன் தான் சார். எப்போதுமே உங்களுடன் இருப்போம் சார். Without a doubt

    ReplyDelete
  17. எடிட்டர் சார், நண்பர்களுக்காக நீங்கள் எவ்வளவு தூரம் பொறுமையைக் கடைபிடிக்கிறீர்கள் என்பதற்கு இந்தப் பதிவே சான்று!
    உங்களது கண்ணியமும், நண்பர்கள் மீதான நேசமும் - உலகின் எந்த மொழியின் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டவை!

    எங்களுக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த எடிட்டராக, ஒரு நல்ல நண்பராக உங்களோடு பயணித்திருக்கும் இக்காலகட்டத்தை வாழ்க்கையின் சிறப்பான தருணமாகக் கருதுகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஒவ்வொரு வாசகரையும் நீங்கள் உங்கள் நண்பராக, உறவினராக தான் பார்க்கிறீர்கள்.

      Delete
    2. மிகவும் சரி விஜய்.

      Delete
    3. +1
      பாக்கியமாக கருதுகிறோம்!

      Delete
    4. +1.கடவுள் தந்த வரமாய்க் கருதுகின்றோம்.

      Delete
    5. ///உங்களது கண்ணியமும், நண்பர்கள் மீதான நேசமும் - உலகின் எந்த மொழியின் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டவை!

      எங்களுக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த எடிட்டராக, ஒரு நல்ல நண்பராக உங்களோடு பயணித்திருக்கும் இக்காலகட்டத்தை வாழ்க்கையின் சிறப்பான தருணமாகக் கருதுகிறோம்!///


      + நானும்.

      Delete
    6. இந்த ஒன்றேகால் ஆண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்து வரும் பெரும் துயர்கள் நமக்கு அன்பின் அவசியங்களை முன்னெப்போதையும் விடக்கூடுதலாய் உணர்த்தியுள்ளதாய் நான் நினைக்கிறேன் நண்பர்களே ! இன்று காலையில் படித்தது :

      கொல்கத்தாவினில் ஒரு மருத்துவமனையின் கொரோனா ICU-வில் பணிபுரியும் இளம் பெண் டாக்டர் எழுதியிருந்தார் : இன்றைய பொழுதைத் தாண்ட மாட்டார்கள் என்ற நிலையிலிருக்கும் நோயாளிகளின் உறவினரின் யாருக்கேனும் கடைசியாய் ஒரு முறை விடைதரும் வாய்ப்பை வீடியோ காலில் ஏற்படுத்தித் தருவது அவரது வாடிக்கை போலும் ! அன்றைக்கே இயற்கையோடு ஐக்கியமாகிடுவார் என்ற நிலையிலிருந்த 47 வயதுப் பெண்மணியொருவரின் மகனுக்கு அவ்விதமொரு போன் செய்துள்ளார் ! "டாக்டர்...எனக்காக 5 நிமிடங்கள் தருவீர்களா ? நான் எங்கம்மாவுக்குப் பிடிச்ச ஒரு R.D. பரமன் பாட்டை மட்டும் கடைசியாய் ஒருவாட்டி பாடுறேனே ? என்று கேட்டிருக்கிறார் ! மறு நிமிஷம் அழுகுரலில் அவர் பாடத்துவங்க ICU-வில் இருந்த அத்தனை மருத்துவர்களும், நர்ஸ்களும் ஈர விழிகளோடு அங்கே குழுமியிருந்திருக்கின்றனர் ! நடுவே உடைந்து போய் பாட முடியாத மகன் , அப்புறமும் அந்தப் பாடலைப் பூர்த்தி செய்து விட்டு - bye அம்மா !" என்றபடிக்கே போனை வைத்து விட்டானாம் !

      ஒரு தாய்க்கு விடைதரக் கூட இதுவே மார்க்கம் என்றாகிப் போயுள்ள இன்றைய உலகில் வன்மங்களை சுமந்து நாம் சாதிக்கப்போவது என்னவாக இருக்கக்கூடும் guys ?

      Delete
    7. ///ஒரு தாய்க்கு விடைதரக் கூட இதுவே மார்க்கம் என்றாகிப் போயுள்ள இன்றைய உலகில் வன்மங்களை சுமந்து நாம் சாதிக்கப்போவது என்னவாக இருக்கக்கூடும் guys///

      --- நிதர்சனம் சார்...!!!

      இந்த சூழலிலும் தங்களின் பெருந்தன்மை கைகூப்ப வைக்கிறது🙏🙏🙏🙏🙏

      Delete
    8. உங்களது கண்ணியமும், நண்பர்கள் மீதான நேசமும் - உலகின் எந்த மொழியின் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டவை!

      எங்களுக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த எடிட்டராக, ஒரு நல்ல நண்பராக உங்களோடு பயணித்திருக்கும் இக்காலகட்டத்தை வாழ்க்கையின் சிறப்பான தருணமாகக் கருதுகிறோம்!


      ######



      +1000000

      Delete
    9. கொல்கத்தா சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது எடிட்டர் சார்!

      தமிழ்நாட்டிலும் இப்படியான கொடுமைகள் நிகழ ஆரம்பித்துவிட்டதை ஊடகச் செய்திகள் உணர்த்துகின்றன!

      இதைத்தான் கலிகாலம் என்பார்களோ என்னவோ!! :(

      Delete
  18. மாசற்ற காமிக்ஸ் உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்

    ReplyDelete
  19. இந்த தவறை செய்தவர்கள், ஆசிரியர் மற்றும் நண்பர்களை வார்த்தைகளால் காயபடுத்தியவர்கள் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் தாங்கள் செய்த மிகப்பெரும் தவறு தெரியும்.

    இனியாவது உங்களை மாற்றிக்கொண்டு கலங்கமில்லா எண்ணத்துடன் காமிக்ஸ் உலகில் வாழ்வீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நம்பிக்கை பலித்திட வாய்ப்புகள் குறைச்சலே PfB!

      ஏனெனில் அவர்களது டிசைன் அப்படி!

      Delete
  20. // சென்றாண்டு BBC ரேடியாவினில் என்னை பேட்டி கண்ட விஷயத்தைக் கூட இன்று வரைக்கும் சீனியர் எடிட்டருக்குக் கூட நான் சொல்லவில்லை ! முழுசாய் 45 நிமிடங்களுக்கு ஒலிபரப்பான அந்தப் பேட்டி பற்றி ஜூனியர் எடிட்டரைத் தவிர்த்து இந்த நொடி வரையிலும் யாருக்கும் தெரியாது // நாங்கள் எப்போது அந்த பேட்டி யை கேட்க முடியும் சார்????

    ReplyDelete
    Replies
    1. ஒரு சங்கடமில்லா நிச்சலன நாள் புலரட்டும் சார் !

      Delete
    2. ///ஒரு சங்கடமில்லா நிச்சலன நாள் புலரட்டும் சார் !///

      வீ ஆர் வெயிட்டிங் சார்...

      Delete
  21. விஜய், தாரை பரணி, விஜயராகவன், மகேந்திரன், கண்ணன் மற்றும் பல நண்பர்கள் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் நமது காமிக்ஸ் மற்றும் ஆசிரியர் மேல் எறியப்பட்ட பல கற்களை உங்கள் காமிக்ஸ் காதலால் தாங்கிக் கொண்டதை கேள்விபட்டு இருக்கிறேன் சில நேரம் அவைகளை நேரில் பார்த்தும் இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இருகரம் கூப்பிய நன்றிகள். என்றும் உங்கள் அனைவரையும் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை.என்றென்றும் காமிக்ஸ் காதலால் அன்பு பூண்டிருப்போம்.

      Delete
    2. பெரிய வார்த்தைகள் PfB!

      'இதெல்லாம் உனக்குத் தேவையா?' என்று அவ்வப்போது எனக்கு நானே கேட்டுக்கொள்வதுண்டு தான்.. ஆனால் நம்மை விடவும் நூறு மடங்கு வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டும் காமிக்ஸ் காதலால் இன்றுவரை இரவும் பகலுமாய் உழைத்துவரும் நம் எடிட்டரை நினைக்கும் போது அந்த வசவுகளெல்லாம் ஒன்றுமே இல்லாததுபோல ஆகிவிடுவதும் உண்மை!

      உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் நட்பும் நேசமும் இந்தக் காமிக்ஸின் மூலமாகத்தானே கிடைத்திருக்கிறது? அதற்காகவாவது இன்னும் எத்தனை வசவுகளையும் தாங்கிக்கொள்ளலாம் தான்!

      Delete
    3. தேங்யூ பரணி!

      வாழ்க்கையின் அவசர பயணத்தில் நின்று இளைப்பாற இருக்கும் ஒரே விருட்சம் "லயன்- முத்து"-பரணி!

      என்றென்றும் அன்பால் இணைந்திருப்போம்....
      🤜🤛🤜🤛🤜🤛

      Delete
    4. பெரிய வார்த்தைகள் PfB!

      'இதெல்லாம் உனக்குத் தேவையா?' என்று அவ்வப்போது எனக்கு நானே கேட்டுக்கொள்வதுண்டு தான்.. ஆனால் நம்மை விடவும் நூறு மடங்கு வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டும் காமிக்ஸ் காதலால் இன்றுவரை இரவும் பகலுமாய் உழைத்துவரும் நம் எடிட்டரை நினைக்கும் போது அந்த வசவுகளெல்லாம் ஒன்றுமே இல்லாததுபோல ஆகிவிடுவதும் உண்மை!

      உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் நட்பும் நேசமும் இந்தக் காமிக்ஸின் மூலமாகத்தானே கிடைத்திருக்கிறது? அதற்காகவாவது இன்னும் எத்தனை வசவுகளையும் தாங்கிக்கொள்ளலாம் தான்!

      அப்படியே என் மனதில் உள்ள வார்த்தைகள்.!

      Delete
    5. பெரிய வார்த்தைகள் PfB! //
      +1

      காமி்க்ஸால் இந்த தளத்தால் நான் சிறப்பான உறவுகளையும் நட்புகளையும் பெற்றிருக்கிறேன் பரணி. So no problem.

      Delete
    6. பெரிய்ய வார்த்தைகள் பெங்களூர் பரணி சார்..

      நான் பெருங்காலம் தனிமையில் வாழ்ந்து வந்தவன் அந்த தனிமையை உணரமால் நானும் வாழ்க்கையை வாழ்ந்தவன் எனில் அதற்கு காரணம் ஆசரியரே...என்னை பொறுத்தவரை ஆசிரியர் என் குடும்பத்தை சேர்ந்தவர்..அவருக்காக எத்தனை கற்களையும் ஏந்தலாம்..

      அவரின் மூலம் எத்துனை அழகான ,அன்பான நட்புகளை சம்பாதித்து உள்ளேன் ..அந்த உறவுகளை தந்ததும் நம் ஆசிரியர் தானே..அவருக்காக எத்தனை அடிபட்டாலும் அது பெருமையே...

      Delete
  22. நமது காமிக்ஸ் காதல் அனைத்து இடர்களையும் வென்று வீறு நடை போடும் ஆற்றல் உடையது. நல்லதே நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் சார் !

      Delete
  23. தங்களின் இந்த சங்கட பதிவை வாசிக்கும்போது தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணி மனதிற்கு கஷ்டமாக உள்ளது. 500 சொச்ச (அவ்வுளவு பேராவது இருப்போமா? ) மிக சிறிய வாசகர் வட்டத்தினுள் ஒரு சிலர் செய்திடும் அசிங்க அரசியலை காணும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் விஜயன் sir. இந்த கசப்பு நிகழ்வுகளை மறக்க இயன்று கடந்து வர அன்புடன் வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சார்...மேஜையை நிறைத்துக் கிடக்கும் பணிகளுக்குள் மூழ்கிடும் நொடியிலேயே இவை சகலமும் பின்னே போய்விடும் ! லாக்டௌன் முற்றுப் பெறும் நாளில் அச்சுக்குப் போக நாங்கள் தயாராகிட வேண்டுமென்பதிலேயே எனது கவனங்கள் நிலைகொண்டிருக்கும் !

      Delete
  24. சார் நேர்மையையும், உண்மையான உழைப்பையும் , ஒழுக்கத்தையும் மதிக்கத்தெரியாத மனிதர்களுக்கு சற்று கடுமையாக தான் கற்று தரவேண்டும்.இதில் தயக்கம் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கடந்து போகட்டும் சார் !

      Delete
    2. இரவுக்கழுகு +1

      Delete
  25. விஜயன் சார், நீங்கள் மனிதம் உள்ள மனிதர் சார். உங்களை என்றும் மறவேன். எப்போதும் உங்களுடன் உறுதுணையாக பயணம் செய்வேன் செய்வோம் சார்.

    பதிவை படிக்கும் போது கண்களில் கண்ணீர். காமிக்ஸ் காதலுக்காக நீங்கள் படும் கஷ்டங்கள் மனதை நொறுக்கி விட்டது.

    உண்மையான காமிக்ஸ் நண்பர்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் அக்கரை தாயின் அன்பை போல் உள்ளது.

    என்றும் உங்களுடன் இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப உண்மை PfB!

      Delete
    2. கரம் கூப்பிய நன்றிகள் சார் ! என் பிள்ளைக்கு சொத்து சுகங்களை விட்டுச் செல்வேனோ - இல்லையோ ; நிஜமான நண்பர்களின் வட்டத்தை தந்து விட்டுப் போவேனென்ற உறுதி எனக்குண்டு என்றைக்குமே !

      Delete
    3. கமெண்டுகளை வாசிக்கையில் கண் கலங்கிறது நண்பர்களே!

      ஆசிரியர் சாரின் அன்பை கண்டு திகைத்துப் போய் உள்ளேன்.

      Delete
  26. சரியான நேரத்த்தில் சரியான உண்மையை உலகறியச் செய்துவிட்டீர்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. இதில் மகிழ்வில்லை என்பதே நிஜம் சார் ! சூழல்கள் மாறட்டும்...சங்கடங்கள் விலகட்டும் என்று வேண்டிக் கொள்வோம் !

      Delete
    2. // இதில் மகிழ்வில்லை என்பதே நிஜம் சார் ! சூழல்கள் மாறட்டும்...சங்கடங்கள் விலகட்டும் என்று வேண்டிக் கொள்வோம் ! //

      I like this sir!

      Delete
  27. உங்களுக்கு நேர்ந்த அவப்பெயர்கள், மனக் குமறல்கள், மிகவும் வருத்தத்தை தந்தன.

    எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்குண்டு.

    ReplyDelete
  28. ///இதோ இதே தளத்தில் - அவர் பார்வையிலான விஷயத்தை சுட்டிக்காட்ட முனைந்த நண்பர் டாக்டர் சுந்தரின் பின்னூட்டத்தை நீக்கியது நானே ; அது எனக்கு ஆதரவு சொல்லும் விதமாயிருந்த போதிலும் ! உன்னதப் பணியில் உள்ளவர் இந்த சமீப நாட்களின் காரங்களுக்கு ஆட்பட வேண்டாமே என்ற அவாவே என்னுள்ளத்தில் !! (Sorry Doctor !!) அதன் பொருட்டு அவருக்கு நிச்சயமாய் வருத்தமிருக்கும் தான் ; ஆனால் அதை அவர் இன்னொரு நண்பரிடம் நாசூக்காய் வெளிப்படுத்தினாரே அன்றி, எங்கும் கண்சிவக்க முனையவில்லை !///

    இது என் சமீபத்திய வருத்தங்களில் ஒன்று எடிட்டர் சார்! இதற்கான உங்களது விளக்கம் என் மனதிற்கு ஏற்புடையதோ இல்லையோ; நீங்கள் வருத்தம் தெரிவித்திருப்பதே என் வருத்தங்களைப் போக்கியிருக்கிறது! நன்றிகள் எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. எது நடக்க வேண்டாமென்ற எண்ணத்தில் அந்தப் பின்னூட்டத்தைத் தூக்கி விட்டேனோ, அது இல்லாமலுமே மறுநாளில் தடித்த வார்த்தைகள் வெளிப்பட்டதே விதி சார் ! இம்முறையாவது என்பொருட்டு யாரும் காயப்பட்ட வேண்டாமே என்று விரும்பினேன் ; ஆனால் அதற்கான கொடுப்பினை இல்லையே !

      Delete
    2. //இது என் சமீபத்திய வருத்தங்களில் ஒன்று எடிட்டர் சார்!//

      TO EDI SIR .. HEREAFTER PLEASE GIVE CREDIT ONLY WHERE ITS DUE SIR ..

      Delete
    3. // HEREAFTER PLEASE GIVE CREDIT ONLY WHERE ITS DUE SIR //

      +1

      Delete
  29. //"எடிட்டர்-பப்ளீஷர்-மொழிபெயர்ப்பாளர்" இத்யாதி ,,இத்யாதி என்ற அடையாளங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு "ஒரு decent ஆன மனுஷன்" என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே கொண்டு செல்ல ஆண்டவன் வரம் தந்தால் அதை விடவும் பெரும் பாக்கியம் வேறேதும் இராது //

    NOT ONLY DECENT SIR .. UR A "GOOD" MAN .. CAN C HOW MUCH UR HURT AND VEXED FROM UR WORDS .. FREE A விடுங்க சார் ..

    ReplyDelete
    Replies
    1. இதோ - ஜுனின் "ஒரு தோழனின் கதை" இறுதிக்கட்டப் பணிகளுக்குள் புகுந்தாச்சு நண்பரே ! அழகான கதை ; சகலத்தையும் மறக்கச் செய்து விடும் !

      Delete

  30. டியர் விஜயன் சார், தளத்திலிருந்து நீங்கள் என் கருத்தை தூக்கியது சிறிது வருத்தமே தவிர அது நீங்கள் Sorry கேட்குமளவு அல்ல.
    நெஞ்சை நெகிழ செய்யும் பதிவு....

    Dr sundar

    ReplyDelete
    Replies
    1. டாக்டர்....காயம் கொள்வீர்களென்று தெரிந்துமே நான் அதைச் செய்யத் துணிந்தது உங்களிடம் விளக்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் ! நமது mailbox-ல் உங்கள் செல்நம்பரைத் தேடியெல்லாம் பார்த்தேன் ; இருந்தால் போன் செய்து சொல்லி விடலாமென்று ! ஆனால் கண்ணில் படவில்லை !

      Delete
    2. டாக்டர் நெட் பிரச்சினையால் வர இயலவில்லை சார்! மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறார்..நன்றி சார்.!

      Delete
    3. அதனாலென்ன ? என்றேனும் இன்னொரு ஈரோட்டுக் காலையில், நண்பர் ஸ்டாலினின் இல்லத்தில் டாக்டரோடு கேசரி சாப்பிடும் நேரத்தில் பேசிக் கொள்ளலாம் சார் !

      Delete
  31. ரொம்பவும் decent ஆன ஒரு மனிதர் சார். ஒரு எடிட்டர் இவ்வளவுக்கு இறங்கி வந்து விளக்கம் சொல்வது என்பது , உங்களால் மட்டுமே முடியும் சார். எங்கள் ஆதரவு என்றும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. என்னுள்ளே எனது முன்னுரிமைகளின் வரிசைக்கிரமம் சரியாகவே உள்ளது சார்...முதலில் ஒரு நண்பன் ; அப்புறமே எடிட்டர்...இன்ன பிறவெல்லாம் !

      Delete
  32. படித்த பின் என்ன சொல்வது என்றே தோன்றவில்லை. My support & love towards Lion Comics is unconditional. It will continue.

    ReplyDelete
    Replies
    1. முத்து காமிக்ஸுக்கு சார் ?

      Delete
    2. முத்துவும் எங்கள் சொத்து தான் ஆசானே.எங்களின் மூத்த சகோதரன் முத்து என்றால் இளையவர் லயன் தான்.சகோதரர்களுக்கு இடையில் நாங்கள் வேறுபாடு பார்ப்பதில்லை ஆசானே.

      Delete
    3. யோசிச்சி நாளைக்குள்ள சொல்லிடுறோம் சார்.!

      Delete
    4. சார். டைப்படிப்பதில் நான் ஒரு சோம்பேறி சொக்கன்னு யாரும் இன்னும் உங்ககிட்ட சொல்லலீங்களா?

      பிரகாஷ் பப்ளிசர்ஸ்ல இருந்து வரும் எல்லா புக்குக்கும் ஆதரவு உண்டுங்க சார்.

      (பாட புக் எதும் போட்டுடாதீங்க🤣)

      Delete
    5. அப்போ "சன்ஷைன் லைப்ரரி" புக்ஸுக்கு ?

      Delete
    6. தலீவரை விட்டு கடிதாசி போட்டாத்தான் நீங்க சரிப்படுவீங்க.

      Delete
    7. தெய்வமே....ஏற்கனவே எகிறிக்கிடக்கும் பேப்பர் விலைகளை இன்னும் கொஞ்சம் ஏற்றிவிட வழி பண்ணிப்புடாதீங்கோ !

      Delete
    8. //(பாட புக் எதும் போட்டுடாதீங்க🤣)//

      :-)))) Mahi ji, super !

      Delete
    9. இப்பொழதைய கனத்த மனதை சிரிக்க வைத்து விட்டீர்களே ஆசிரியர் ,நணபர்களே..:-))))

      Delete
    10. சிவகாசியிலிருந்து வெளிவரும் காமிக்ஸுக்கு மட்டுமல்லாது, ஒருவேளை பாண்டிச்சேரியிலிருந்து (முறையாய் உரிமம் பெற்ற, நியாய விலையிலான, நாடகங்கள் நிகழ்ந்தேறாத) காமிக்ஸ் வெளிவந்தாலுமே ஆதரவு தருவேன் என்று உறுதி கூறுகிறேன்!

      Delete
  33. இவற்றை மிக மிக மிக முன்னரே அப்போதே சொல்லி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தான் படிக்கும் போது ஏற்பட்டது சார். சிலுவைகளை எடிட்டருக்காக விரும்பி சுமக்கும் நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...🙏🙏🙏

    ReplyDelete
  34. தற்போதெல்லாம் பிறரிடம் தன்மையாக நடப்பின் பயந்தாங்கொள்ளியாக அடையாளம் காணப்பட்டு விடுவோம் சார். மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பதிவு டாப் பதிவும் கூட சார்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் தான் சார் ; ஆனால் நாம் நினைத்தபடி வாழ்ந்த சந்தோஷம் நமதாகிடும் தானே ?

      Delete
    2. சூப்பர் சார்... (கை தட்டல்)

      இன்றைய பதிவு மட்டுமல்ல, எப்போதும்போல் உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடு கமெண்டிலும் அருமை.

      என்றென்றும் உங்களுடன்..
      ஹசன்.

      Delete
    3. ///தற்போதெல்லாம் பிறரிடம் தன்மையாக நடப்பின் பயந்தாங்கொள்ளியாக அடையாளம் காணப்பட்டு விடுவோம் சார். ///

      வேதனையான உண்மை நண்பரே!

      Delete
  35. தங்களின் கையறு நிலை நன்றாகப் புரிகிறது Editor Sir,

    நடைபெறுவது தங்கள் மனதுக்கு பிடித்த தொழிலையே பாதிக்கும் செயல் மேலும் தெரிந்தோ தெரியாமலோ இதில் ஈடுபட்ட நண்பர்களும் நமது காமிக்ஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களே,

    தவறை சுட்டிக்காட்டவும் வேண்டும், நண்பர்களின் மனமும் புண்பட்டுவிடக்கூடாது, இதற்காக நிச்சயமா க தாங்கள் மறக்க விரும்பும் தர்மசங்கடமான நிலையை தாங்களே அந்த நண்பருக்கு ஆதரவாக நினைவு கூர்ந்தது தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.

    தாங்கள் இல்லையேல் உலகத்தரம் வாய்ந்த காமிக்ஸ்கள் தமிழில் இந்த விலையில் கிட்ட வாய்ப்பில்லை என்பது அனைவரின் மனசாட்சிக்கும் தெரியும்,

    " அவர் ஒரு Decent ஆன மனிதர் " இந்த வார்த்தைக்கு உங்களை விட பொருத்தமான நபர் இல்லை Sir,

    ReplyDelete
    Replies
    1. //தாங்கள் இல்லையேல் உலகத்தரம் வாய்ந்த காமிக்ஸ்கள் தமிழில் இந்த விலையில் கிட்ட வாய்ப்பில்லை என்பது அனைவரின் மனசாட்சிக்கும் தெரியும்,//

      அப்படியெல்லாம் இல்லை சார் ; இலக்குகள் நிர்ணயம் காண்பது பின்வருவோர் அவற்றைத் தாண்டிட உந்துகோலாய் இருக்க வேண்டுமென்பதற்காகவே ! நிச்சயம் சாதனைகளை மேம்படுத்த புதியவர்கள் வருவார்கள் சார் !

      Delete
    2. அந்த புதியவர் நமது - Junior Editor தான் Sir

      Delete
    3. ////தாங்கள் இல்லையேல் உலகத்தரம் வாய்ந்த காமிக்ஸ்கள் தமிழில் இந்த விலையில் கிட்ட வாய்ப்பில்லை என்பது அனைவரின் மனசாட்சிக்கும் தெரியும்///

      +1

      மனசாட்சின்னு ஒன்னு இருப்பவங்களுக்குத் தானே அது தெரியும்?

      Delete
  36. விஜயன் சார், இனிமேலாவது நமது காமிக்ஸை வைத்து தவறு செய்பவர்கள் மேல் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் நம்புகிறேன்..

      Delete
  37. சார்...பதிவை படிக்க படிக்க மனதில் ஏதோதோ உணர்வுகள் ..அது பாரமா ,வருத்தமா ,மகிழ்வா ,ஆனந்தமா இல்லை இவை அனைத்தும் கலந்த ஒட்டுமொத்த உணர்வா என்னால் இனம் காணமுடியவில்லை...ஆனால் கண்களில் நீர் வழிந்து வருவது என்னவோ நிஜம்..டாக்டர் சுந்தர் சாரின் பதிவுகளை போலவே சில நமது நண்பர்களின் பதிவை நீங்கள் காணாமல் போன செய்தது உண்டு.அப்பொழுது எல்லாம் அவர்களை போலவே நானும் வருத்தப்பட்டுள்ளேன்..என்னடா ஆசிரியருக்கு ஆதரவாக பதிவிட்டால் கூட அதை தூக்கிவிடுகிறாரே என ... அதன் பொருட்டு சில சமயம் உங்கள் மீது எனக்கு கோபம் கூட வந்தது உண்டு ...ஆனால் இப்பொழுது புரிகிறது சார் ..அது எல்லாம் ஏன் காணமல் போனது என..சார்..நீங்கள்... நீங்கள் தான் .நீங்கள் மனதாலும் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டோம் சார்...நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்பதா ...சில சமயம் உங்களை புரியாமல் போனதற்கு நாங்கள் அல்லவா உங்களிடம் மன்னிப்பை கேட்கவேண்டும் .Big sorry சார்...

    ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சார் ...இனி என்னை அல்ல எங்களை ஜால்ரா ,ஜிங்ஜாங் என யாராவது அழைத்தால் சத்தியமாக சொல்கிறேன் சார் மிக மிக பெருமிதமாக உணர்வேன்.ஆறாத ஒரு மனக்காயத்தினால் உங்களின் அந்த நாற்பத்தைந்து பொன்னான நிமிடங்களை எங்களிடம் மட்டுமல்ல உங்கள் தந்தையாரிடம் கூட மறைத்துள்ளீர்களே சார்...எவ்வளவு பெரிய மகிழ்வான நிகழ்வை மனதினுள் மட்டும் புதைத்து உள்ளீர்கள் ..சத்தியமாய் இதை வாசித்தவுடன் எனக்கே மனம் கலங்கி மனதினுள் இவ்வளவு பாரமும் ,கண்களில் கண்ணீர் அளவும் கூடுகிறதே ..உங்கள் தந்தையார் இதனை வாசிக்கும் பொழது.....!

    சார் இன்னும் மனதில் ஏதோதோ உணர்வுகள் ...ஆனால் மனதிலும் ,கைகளிலும் கூட ஒரு வித தடுமாற்றம் ஏனோ...

    ஆனால் ஒன்றே ஒன்று சார்...தயவு செய்து இறுதிகாலங்களை பற்றி இனி எக்காரணம் கொண்டும் உங்கள் வார்த்தைகளிலும் சரி ,பதிவுகளிலும் சரி தயவுசெய்து கொண்டு வராதீர்கள் ..எங்களை பொறுத்தவரை நீங்கள் ஓர் நடமாடும் டெக்ஸ் சார்...

    அதிகாரிகளுக்கு முடிவே கிடையாது சார்...


    என்றும் உங்களுடன்...உங்களுக்காக ,,உங்களுடனே

    ReplyDelete
    Replies
    1. // சார்...நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்பதா ...சில சமயம் உங்களை புரியாமல் போனதற்கு நாங்கள் அல்லவா உங்களிடம் மன்னிப்பை கேட்கவேண்டும் .Big sorry சார்... // உண்மை தலைவரே நூற்றுக்கு நூறு உண்மை

      Delete
    2. // ஆறாத ஒரு மனக்காயத்தினால் உங்களின் அந்த நாற்பத்தைந்து பொன்னான நிமிடங்களை எங்களிடம் மட்டுமல்ல உங்கள் தந்தையாரிடம் கூட மறைத்துள்ளீர்களே சார்...எவ்வளவு பெரிய மகிழ்வான நிகழ்வை மனதினுள் மட்டும் புதைத்து உள்ளீர்கள் ..சத்தியமாய் இதை வாசித்தவுடன் எனக்கே மனம் கலங்கி மனதினுள் இவ்வளவு பாரமும் ,கண்களில் கண்ணீர் அளவும் கூடுகிறதே ..உங்கள் தந்தையார் இதனை வாசிக்கும் பொழது.....! // நான் மிக மிக வருத்தப்பட்ட இடம்.

      Delete
    3. எல்லாம் கடந்திடட்டும் தலீவரே !

      Delete
    4. தாரை பரணி @

      // ஆனால் ஒன்றே ஒன்று சார்...தயவு செய்து இறுதிகாலங்களை பற்றி இனி எக்காரணம் கொண்டும் உங்கள் வார்த்தைகளிலும் சரி ,பதிவுகளிலும் சரி தயவுசெய்து கொண்டு வராதீர்கள் ..எங்களை பொறுத்தவரை நீங்கள் ஓர் நடமாடும் டெக்ஸ் சார் //

      உண்மை! இதுவே எனது எண்ணமும்!

      Delete
    5. மனதில் தோன்றியதை அழகாய் வெளிப்படுத்தி அசத்திட்டீங்க தலீவரே!

      Delete
  38. காமிக்ஸ் ன்னு ஒண்ணு மாசா மாசம் வராதே பெருசு...

    ஐநூறோ ஆயிரமோ மொதல் போட்டு
    செய்றதே பெருசு இந்த காலத்துல...

    நம்மளால செய்ய முடியுமா...

    ஏதோ " காணாது கண்ட கம்பங்கூழ சிந்தாம குடிக்க பாருங்க" நண்பர்களே...

    வீக்க தூக்கமோ - ego வோ கவைக்குதவாது...

    1973 ல ஆரம்பிச்ச இந்த கெட்டப் பழக்கம் மட்டும் இன்னமுந் தொடருது...

    மாசா மாசம் வீட்ல வாங்கி அடுக்குற புத்தகங்களப் பாத்து பொருமாத பொண்டாட்டிங்க அரிது...

    இதுல ஏன் இந்த பாடு?

    மேயும் மாட்ட சும்மா கெடந்த மாடு நக்குன மாதிரி இருக்குற காமிக்ஸயும் போடாம - போங்கடா நீங்களும் உங்க பொச்சரிப்பும்ன்னுட்டு மனுஷன் கெளம்பீட்டார்னா - என்றானது!!!

    இந்த கொரானால்ல காமிக்ஸூம் அந்த கலெக்ஷனும் இல்லன்னா - பைத்தியமே பிடிச்சிருக்குங்க...

    என்னத்தையோ தத்து பித்து ன்னு ஒளறிக் கிட்டு வாராவாரம் blog பாத்துக்கிட்டு கமெண்ட் போட்டுக்கிட்டு - வாழ்க்கை அவலங்களையும் - மனதின் வெறுமைகளையும் - நிறைவேறாத ஆசைகளையும் சொல்லளவிலும் மனதளவிலும் வென்றெடுத்துக் கொண்டிருக்கும் எம்போன்ற எளியோருக்கு காமிக்ஸே கதி...

    காமிக்ஸே துணை...

    காமிக்ஸே நடைமுறை...

    காமிக்ஸே வாசிப்புப் சுவை...

    காமிக்ஸே நண்பன்...

    காமிக்ஸே தனிமைத் துணை...

    காமிக்ஸே ஆறுதல்...

    காமிக்ஸே சர்வமும்...

    காமிக்ஸே நிதர்சனம்...


    தயவு செய்து நண்பர்கள் மனப்புகை மறந்து பகை துறப்பீர்...

    நேசமொன்றே வாழ்வின் மிச்சங்கள்...

    கைவசப்படும் காமிக்ஸ் மட்டுமே சொத்து...

    முனைப்புடன் முன்செல்ல ஓத்துழைப்பீரே...

    இச்சிறியோனின் சொல்லில் பிழையிருப்பின் தவிர்ப்பீரே..‌

    ஆதலினால் காமிக்ஸ் காதல் செய்வோம்...

    வாரீர்...





    ReplyDelete
    Replies
    1. உண்மை ஜே சார்.ஒவ்வொரு வரிக்கும் கோடானு கோடி நன்றிகள் சார்.

      Delete
    2. ஆளாளுக்கு கத்திகிட்டு...

      குத்திக்கிட்டு...

      ம்ஹும்...ஆண்டவனே...

      நைட் பன்னெண்ட்ர வரைக்கும் கூட பஞ்சாயத்து...

      Delete
    3. // இந்த கொரானால்ல காமிக்ஸூம் அந்த கலெக்ஷனும் இல்லன்னா - பைத்தியமே பிடிச்சிருக்குங்க...// ஆமாம்.

      Delete
    4. ஆதலினால் காமிக்ஸ் காதல் செய்வோம்...

      வாரீர்...

      சூப்பர் வரிகள் சார் !

      Delete
    5. அடுத்த வேலையப் பாப்போஞ்சார்...

      Delete
    6. // ஆதலினால் காமிக்ஸ் காதல் செய்வோம்... //

      +1

      Delete
    7. பரணி

      கண்ணுல தண்ணி...

      மனசுல வலி...

      Delete
    8. தலீவரே...

      ரெண்டு இட்லியும் கெட்டி சட்னியும் கட்டிகிட்டு வாங்க...

      அந்த ...அந்த...பாதில நிக்கிற சிங்கத்தோட சின்ன வயசுல ய...கையோட வாங்கீட்டு ...

      வந்துடுவோம்...

      விடியிறதுக்குள்ள...

      என்ன நாஞ்சொல்றது...

      Delete
    9. // கண்ணுல தண்ணி...

      மனசுல வலி... //

      புரிகிறது ஜனா.

      Delete
  39. My support is for legally printed comics only forever!

    ReplyDelete
  40. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களது பதிவு மனதை கணக்கச் செய்கிறது.


    எத்தனையோ விதமான அசௌகரியமான சூழலை கடந்தது போல் இதையும் தாண்டி செல்லவே விரும்புகிறோம்.

    காமிக்ஸ் தொடர்பில் உள்ள ஒரு நட்பு கூட விடுபடுவதை விரும்பவில்லை என்பதே உண்மை.

    இதழியல் துறையில் காமிக்ஸ் மேலும் பல உச்சங்களை தொட வேண்டும் என்பதே அனைவரின் இலக்கும்.அது ஆசிரியர் அவர்களின் பணி காலத்திலேயே சாத்தியப்பட வேண்டும் என்ற முனைப்பும் உள்ளது.



    அதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தும்,சில தவிர்க்க இயலாத காரணங்களால் மட்டுமே கால தாமதம் ஏற்பட்டுள்ளது.


    கற்பனையால் நினைத்து பார்க்க இயலாத வகையில் காலம் அனைத்தையும் இடம்மாற்றிக் கொண்டுள்ளது.மனித குலத்துக்கான பேரழிவு கண்முன் அரங்கேறி கொண்டிருப்பதை ,ஆற்ற முடியாத மனத் துயரோடு அனுதினமும் தரிசிக்க வேண்டியுள்ளது.

    இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும் என்பதுதான் பிரார்த்தனை.

    காமிக்ஸ் உடனான பந்தத்தையும்,நட்பையும் எந்த சுனாமியாலும் வீழ்த்த முடியாது.

    ஆசிரியருக்கு பக்கபலமாக இருப்போம் என்பதை உறுதியாக சொல்ல இயலும்.

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸ் உடனான பந்தத்தையும்,நட்பையும் எந்த சுனாமியாலும் வீழ்த்த முடியாது.// முடியவே முடியாது

      Delete
    2. // காமிக்ஸ் உடனான பந்தத்தையும்,நட்பையும் எந்த சுனாமியாலும் வீழ்த்த முடியாது. //

      Well said.

      Delete
    3. ///காமிக்ஸ் உடனான பந்தத்தையும்,நட்பையும் எந்த சுனாமியாலும் வீழ்த்த முடியாது.

      ஆசிரியருக்கு பக்கபலமாக இருப்போம் என்பதை உறுதியாக சொல்ல இயலும்.///


      well said Sri ram!

      Delete
  41. //இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும் என்பதுதான் பிரார்த்தனை.//

    +1000000

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாந் திரும்பீரிச்சி....


      போங்கப்பா...
      போங்கப்பா
      போங்கப்பா...

      ஏய்...தாய் கெழவி...போவியா...

      ஏதேய்...போகமாட்டியா...

      கொரனாவ அவுத்து விட்டுவாங்கெ...

      கடுமையான நடவடிக்கை எடுக்கப் போறாய்ங்கெ. அடுத்த வருஷம்...அக்காங்...


      Delete
  42. தங்களையும் & தங்களை சார்ந்தோரை இகழ்ந்தாலும் வார்த்தைகளில் தான் எவ்வளவு நிதானம்,

    இழிச்சொல்லாயினும் ,
    பழிச்சொல்லாகினும் ,
    ஏற்று கொள்ளும் பக்குவம்,

    ஆதரிப்போரையும் ,
    புறக்கணிப்போரையும்
    அரவணைத்து செல்லும் பாங்கு,

    எதிரணியினருக்கும் வழிகாட்டும் ஆலோசனைகள்,


    வாசகர்களை தோளோடு தோள் கொடுக்கும் தோழனாக நினைக்கும் அன்பு,

    சான்ஸ்சே இல்ல சார்..

    என் மானசீக குருவாக உங்களை "ஆசானே" என்று அன்புடன் அழைப்பதில் மிகவும் பெருமையடைகிறேன்..

    'சிறுத்தை' படத்தில் ஒரு காட்சியில் கார்த்தியின் ஒவ்வொரு செயலுக்கும் தமன்னாவின் மனதில் கார்த்தி வானுயுருவார் , அதுபோலவே நீங்களும் என் மனதில் ஆளுயர ஆளுமையாக இருக்கிறீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சிவா. உண்மை.

      Delete
    2. அருமையாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே...!

      Delete
    3. என்னாது...

      தமன்னா மனசுல எடிட்டரு ஒசந்துட்டாரா...

      நா வேற தம்மன்னா சொல்லீட்டான்னு அட்டிகா க்கு

      கெளம்பீட்டிருந்தேனே...

      போச்சா...

      Delete
    4. சிவா...உங்கள் தோளில் கைபோடுவது போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை ! எங்கெங்கோ இருக்கும் நாம் ஏதோவொரு காரணத்தின் பொருட்டே இங்கு நட்பில் இணைந்து நிற்கிறோமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு ! அந்த நம்பிக்கை ஜீவிக்கும் வரையிலும் எல்லாம் நலமே !

      Delete
    5. அருமையா சொன்னீங்க சிவா! எடிட்டரின் பதிலும் அபாரம்!!

      Delete
  43. எடிட்டர் சார்,

    தாங்கள் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதற்க்கு இந்த பதிவில் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. பல சந்தர்ப்பங்களுக்கு பிறகே இந்த விளக்கப்பதிவு அதற்க்கு ஒரு சான்று.
    We will be with you always sir !

    ReplyDelete
    Replies
    1. அப்ப விக்ரம் கூட?

      (இப்படி கேட்டு எடிட்டரை இங்கே டைவர்ட் பண்ணி விடுவோம்).

      Delete
    2. அட, நான் உங்க கமெண்டுக்கு ஒரு பதில் போட்டா, இங்க எனக்கு ஒன்னு :-)

      Delete
    3. டாடிய மறந்தாச்சுல்லே ?

      Delete
    4. //டாடிய மறந்தாச்சுல்லே//

      :-))))))

      Delete
  44. ஆசிரியரின் இந்த பதிவு எனக்கு மகிழ்ச்சியையும் ஒருவகையில் வருத்தத்தையும் ஒருங்கே கொண்டு வந்துள்ளது.

    ஆம்! இந்த விளக்கத்தின் மூலமாக பல்வேறு திரைகள் விலக்கப்பட்டு உண்மை புரிந்ததுடன் ஆசிரியரின் பண்பட்ட உள்ளத்தின் தூய்மையும் வெளிப்பட்டது. காமிக்ஸ் என்ற சிறு வட்டத்தின் ஒற்றுமையை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதையும் வாசகர் என்ற வட்டத்தைத் தாண்டி ஒரு நண்பராக ஒவ்வொருவரின் மீதும் எத்துணை அன்பு கொண்டிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

    நன்றிகள் சார்! கரங்கள் கூப்புகிறேன்!

    ஆனால் வருத்தம் யாதெனின், நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் மீது வீசப்படும் கணைகளுக்கு உங்கள் நெஞ்சை திறந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பினை அளித்து விட்டீர்களோ என அஞ்சுகிறேன். சட்டரீதியான பாதுகாப்பு தாண்டி ஒவ்வொரு பழிச்சொல்லுக்கும் தாங்களே பதிலளிப்பது இயலுமா அல்லது தேவையும் தானா?

    மன்னித்து கொள்ளுங்கள்! மீண்டும் கரங்கள் கூப்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நான் இந்த விஷயத்தை பொதுவெளி அலசல்களுக்கு ஆட்படுத்திட வேண்டாமென்று எடுக்காத பிரயத்தனங்களே கிடையாது சார் ! ஆனால் ஓசை எழ இரு கைகளும் தேவையன்றோ ? நான்பாட்டுக்கு அரை லூசாட்டம் கையை ஆட்டிக் கொண்டேயிருக்க ; மறுதரப்பில் ஒத்துழைப்பின்றிப் போகிடும் சமயம் என்னை வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள் ?

      இன்னொன்றும் சொல்லட்டுமா சார் ? நான் தொடர் கல்லுளிமங்கனாய் இத்தனை நாட்கள் இருந்து வந்தது தான் - இம்முறையும் நான் கண்டும் காணாது அகன்று விடுவேனென்ற நம்பிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது ! என் தரப்பினைச் சொல்லி விட்டேன் ; இனி மேற்கொண்டு பணிகளில் தான் எனது கவனங்களிருக்கும் ! மேற்கொண்டும் இது தொடரத்தான் செய்யுமெனில் - சம்பந்தப்பட்டோர், சம்பந்தப்பட்டோரிடம் உரிய மார்க்கங்களில் பதில் கேட்டுக் கொள்வார்கள் !

      Delete
    2. // இனி மேற்கொண்டு பணிகளில் தான் எனது கவனங்களிருக்கும் ! மேற்கொண்டும் இது தொடரத்தான் செய்யுமெனில் - சம்பந்தப்பட்டோர், சம்பந்தப்பட்டோரிடம் உரிய மார்க்கங்களில் பதில் கேட்டுக் கொள்வார்கள் !//

      அருமையான முடிவு சார்!
      மீண்டும் நன்றிகள்!

      Delete
    3. ///நான் தொடர் கல்லுளிமங்கனாய் இத்தனை நாட்கள் இருந்து வந்தது தான் - இம்முறையும் நான் கண்டும் காணாது அகன்று விடுவேனென்ற நம்பிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது !///

      நிலைமையை நீங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எடிட்டர் சார்!

      Delete
  45. வடை போச்சே... அதிகாரி வெள்ளி மிஸ்சாயிடுச்சே... 🤔😀

    ReplyDelete
  46. நீண்ட நெடும் விளக்கத்திற்க்கு நன்றிகள் பல சார்.

    குழப்பத்தில் இருந்த எனக்கு தற்பொழுது முழுமையும் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த குழப்பத்தை தவிர்த்துக்கொள்ள நண்பருக்கு பல வாய்ப்புகள் இருந்ததும் புரிந்தது.

    நன்றி 🙏🏼

    ReplyDelete
    Replies
    1. நாளை அதிகாரியோடு பயணிப்போம் நண்பரே !

      Delete
  47. சார்...

    நீங்க பாட்டுக்கு தனித்தடம்...

    ஸ்பெஷல் தடம்...

    ஒத்தை தடம்...

    ஹைவே தடம்...

    ஆறு வழி தடம்...

    எட்டு வழித் தடம்னு கெளம்புறீங்களே...‌‌


    இந்த ...

    இந்த...

    இந்த...

    .பேப்பருங்கிற வஸ்துவ வாங்கீட்டீங்களா‌...

    போற போக்க பாத்தா...

    ஆளாளுக்கு கான்பெரன்ஸ்ஸகால் போட்டு நைட் நைட்டு அம்மா புள்ளங்களுக்கு கதை சொல்ற மாதிரி நெறைய வந்துரும் போல்ருக்கே...

    ReplyDelete
    Replies
    1. நடப்பாண்டின் முழுமைக்கும் பேப்பர் ஸ்டாக் உள்ளது சார் ! So இப்போதைக்காவது கவலையில்லை !

      Delete
  48. வருத்தம் அளிக்கும் வரிகள் சார்... தவறு ஏதுவுமே செய்யாமல்... தன்னிலை விளக்கம் தருவது இது உங்களுக்கு எத்தனையாவது முறையென தெரியவில்லை... இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என நினைப்பதை தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை...

    ReplyDelete
    Replies
    1. நம்மளோட cosmic design அப்படி சார் ! யாரை நொந்து என்ன செய்வது ?

      Delete

  49. //கரம் கூப்பிய நன்றிகள் சார் ! என் பிள்ளைக்கு சொத்து சுகங்களை விட்டுச் செல்வேனோ - இல்லையோ ; நிஜமான நண்பர்களின் வட்டத்தை தந்து விட்டுப் போவேனென்ற உறுதி எனக்குண்டு என்றைக்குமே//

    இந்த வரிகளை படிக்கும் பொழுது, இப்பொழுது உள்ள நிலைமை சரியாகி வழக்கம் போல எல்லோரும் நேரில் சந்தித்து மகிழ்ந்திடும் நாள் கூடிய விரைவில் வரவேண்டும் என்ற ஆசை மனதில் எழுகிறது.

    விரைவில் எல்லாம் சரியாகி, நாம் சந்திக்கும் நாட்களை எதிர்நோக்கி...

    திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. ////இப்பொழுது உள்ள நிலைமை சரியாகி வழக்கம் போல எல்லோரும் நேரில் சந்தித்து மகிழ்ந்திடும் நாள் கூடிய விரைவில் வரவேண்டும் என்ற ஆசை மனதில் எழுகிறது///

      ஏக்கமே எழுகிறது!

      Delete
  50. //விரைவில் எல்லாம் சரியாகி, நாம் சந்திக்கும் நாட்களை எதிர்நோக்கி...//

    +11111

    ReplyDelete
  51. அப்பிடியே அந்த தங்க தலைவனும் மற்றொரு நபரும் பங்குபெற்ற கேப்சன் போட்டியின் முடிவையும் அறிவித்துவிடுங்களேன் சார்..

    ReplyDelete
    Replies
    1. அது யாருங்க - "மற்றொரு நபர்" ? ஏதாச்சும் அடையாளம், கிடையாளம் இருந்தா சொல்லுங்க, தேட சொலபமா இருக்குமில்லியா ?

      Delete
    2. எழுபது வருசமா ஒரே சட்டையை போட்டிட்டிருப்பாராம்..

      Delete
    3. // எழுபது வருசமா ஒரே சட்டையை போட்டிட்டிருப்பாராம் //

      :-)

      ரம்மி @ அந்த பனியனை விட்டு விட்டிங்க :-)

      Delete
    4. ரெம்ப டீப்பா போறதல்லீங்க..

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. நண்பர்களே, ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும், அவர் கோணத்தில் நம்பால் கண்டிப்பாக யோசிக்க முடியாது! இதனை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்! கடந்த லாக்-டவுன் நேரத்தில் நகரும் நாட்கள் பதிவில் ஆசிரியர் "I லவ் காமிக்ஸ்" என்ற ஒரு படத்தை நம் அனைவரையும் வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில் பகிர சொன்னார். அதே நேரம் நண்பர்கள் யாரவது அழகாக வரைத்து அனுப்ப முடியுமா என கேட்டார்.

    எனது மகளிடம் இதனை சொல்லி நமது லயன் & முத்து லோகோ வரும்படி ஒரு படத்தை வரைய சொல்லி ஆசிரியருக்கு அனுப்பி இதனை தளத்தில் பதிவிட்டு நண்பர்களை ஷேர் செய்ய சொல்ல முடியுமா எனக்கேட்டேன் ! ஆனால் ஆசிரியரிடம் இருந்து பதில் வரவில்லை, சில முறை ஞாபகபடுத்தியும் பதில் வரவில்லை! வீட்டில் எனது மகள் தினமும் இது பற்றி கேட்பாள் ஆசிரியர் பிஸி என சொல்லிவந்தேன்! என்னடா இது என்று யோசித்து கொண்டு இருந்த போது ஆசிரியரிடம் இருந்து வாட்ஸ்-அப்பில் படம் நன்றாக உள்ளது; கடந்த பதிவில் நண்பர்களை லயன் முத்து காமிக்ஸ்காக லோகோவை ஷேர் செய்ய செய்தது தனக்கு கஷ்டமாக உள்ளது எனவே மீண்டும் அது போல் செய்ய விருப்பவில்லை சார் என பதில்! ஆச்சரியம் நான் சத்தியமாக இப்படி எல்லாம் ஆசிரியர் யோசிப்பார் என நினைக்கவில்லை! காமிக்ஸ் வாசகர்களை வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில் "I லவ் COMICS" என்பதை DP வைக்க சொன்ன ஒரு சாதாரண விசயத்திற்கு இப்படி வருத்த படுகிறார், இந்த சிறிய விஷயத்தில் கூட அடுத்தவர்களை தொந்தரவு கொடுக்கக்கூடாது அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட கூடாது என இருக்கும் இவரை என்ன சொல்ல! இது போன்று யோசிக்கும் மனிதர்கள் வெகு சிலரே நான் சந்தித்த இரண்டாவது மனிதர் நீங்கள் சார்.

    இங்கே பல நண்பர்கள் ஆசிரியர் எனது பின்னூட்டம் மற்றும் கேள்விக்கு பதில் சொல்லாமல் செல்கிறார், மேலும் ஆசிரியர் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ள சில நண்பர்கள் சில காரணகளால் இங்கு தளத்திற்கு வராமல் குறைவான கமெண்ட் போடும் போது எல்லாம் இதனை ஷேர் செய்யவேண்டும் என நினைத்தேன்! பலமுறை இதனை தயார் செய்த பிறகு அவைகளை பதிவிடவில்லை, சில காரணங்களால்! இன்று இதனை தவிர்க்க முடியவில்லை!

    விஜயன் சார், இதனை உங்கள் அனுமதி இல்லாமல் இங்கு பதிவிடுவது தவறு என்றால் மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. சார்.." I லவ் Comics " எனும்போது அதனில் காமிக்ஸ் காதல் வெளிப்படும் ; fine enough !! ஆனால் அதிலேயே நமது லயன் & முத்துவை நுழைத்தால் அது "கண்ணன் தேவன் டீ" விளம்பர பனியனை மளிகைக்கடையினில் போடச்சொன்னது போலிருக்குமில்லையா ?

      Delete
    2. //நண்பர்களே, ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும், அவர் கோணத்தில் நம்பால் கண்டிப்பாக யோசிக்க முடியாது! இதனை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்//

      Well said bro....

      Delete
    3. /////நண்பர்களே, ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும், அவர் கோணத்தில் நம்பால் கண்டிப்பாக யோசிக்க முடியாது! இதனை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்///

      உண்மை உண்மை!

      Delete
  54. நண்பர்களே, ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும், அவர் கோணத்தில் நம்பால் கண்டிப்பாக யோசிக்க முடியாது/// 1000% உண்மை..

    ReplyDelete
  55. என்னமோ நடக்குது. என்றபடிக்கே புரிந்தும் புரியாமலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதுபோன்ற நடப்புகள் எதுவுமே தெரியாமல், இந்தமாதம் என்னபுத்தகம் வந்துள்ளது,
    என்னபட்ஜெட் என்பதே ஏஜண்ட் பாலுஅண்ணாவீட்டில்சென்று பார்த்தபின்புதெரிந்து, புத்தகம்வாங்கி படித்தஅந்த சந்தோசம் தற்போது சத்தியமாய் இல்லை. இதில்சம்பந்தப்பட்டவரும்என்னைப்போல்ஒரு காமிக்ஸ் வாசகர்தான்என்பதுபுரிகிறது. வேய்ன்ஷெல்டனின் நற்குணங்கள்வெறும் வாசிப்புக்கு மட்டும் தானா. அதிலிருந்து வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள எதுவுமேஇல்லையா. ஆசிரியர் சார் உங்கள் பின்னே கரம் கோர்த்து நாங்கள்நிற்கவேண்டியநேரம் இது முன்னெப்போதையும் விட ஒற்றுமையாக. நிற்போம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. // ஆசிரியர் சார் உங்கள் பின்னே கரம் கோர்த்து நாங்கள்நிற்கவேண்டியநேரம் இது முன்னெப்போதையும் விட ஒற்றுமையாக. நிற்போம் //

      Yes.

      Delete
  56. #ISUPPORTSIR

    எதெதெக்கோ ஹேஸ்டேக் விடுறாங்க இது உங்களுக்காக சார்...!!

    ReplyDelete
  57. // சிவா...உங்கள் தோளில் கைபோடுவது போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை ! //

    சார் இது போன்று நண்பர்களுடன் நீங்கள் போட்டோவுக்கு உடன் இருக்கும் போது அதனை படம் பிடிக்கும் போது உங்கள் கண்களை பலமுறை பார்த்து இருக்கிறேன் ஒரு குழந்தையின் கள்ளமில்லாத மனம் மற்றும் புன்னகையைதான் தான் பார்த்து இருக்கிறேன்.

    புத்தகத் திருவிழாவிலும் சரி விக்ரம் திருமணத்தின் போதும் நீங்கள் நண்பர்களுடன் நலம் விசாரித்து பழகிய விதம் இது எடிட்டர் என்பதையும் தாண்டி வேறு ஒன்று நாமெல்லாம் ஒரு குடும்ப உறவு என்பதை புரிந்து கொண்டேன்/டோம் சார். இந்த உறவு என்றும் தொடரும்/தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  58. புத்தகத் திருவிழாவிலும் சரி விக்ரம் திருமணத்தின் போதும் நீங்கள் நண்பர்களுடன் நலம் விசாரித்து பழகிய விதம் இது எடிட்டர் என்பதையும் தாண்டி வேறு ஒன்று நாமெல்லாம் ஒரு குடும்ப உறவு என்பதை புரிந்து கொண்டேன்/டோம் சார். இந்த உறவு என்றும் தொடரும்/தொடர இறைவனை வேண்டுகிறேன்.//

    அதே அதே ..என்ன பழனி குழந்தைங்க என்ன பண்றாங்க நல்லாருக்காங்களா...இதுவே எப்போதும் கேட்கும் முதல்கேள்வி....பிறகுதான் அடுத்த விசயமெல்லாம்....இரண்டுநாளைக்கு முன்புகூட இதேதான்...

    ReplyDelete
  59. இதுவும் கடந்து பாேகும்.....

    ReplyDelete
  60. காமிக்ஸ் என்பது ஒரு இனிமையானய அனுபவம், பெரும்பாலும் அது நம் பால்ய கால மலரும் நினைவாக அமைந்து விடும்.
    அனால் இங்கு ஏனோ ஒரு சில இறுக்கமான சம்பவங்கள் எதிர் பாராமல் நடந்து விடுகிறது. இது இனிய காமிக்ஸ் பயணத்தை பாதிக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டியது அனைத்து நல் உள்ளங்களின் கடமை.

    ReplyDelete
    Replies
    1. // இனிய காமிக்ஸ் பயணத்தை பாதிக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டியது அனைத்து நல் உள்ளங்களின் கடமை. //

      நம் எல்லோருடைய கடமை.
      +1

      Delete
  61. நாளையே நாம் காண்போமா என்ற சூழலில் நாம்,இருக்கும் வரை மனதை அன்பு என்னும் நேரியோடு வாழ்வோமே, வன்மம் வேண்டாமே மனதுக்குள்,நண்பர்களே

    ReplyDelete
  62. கடந்ததை மறப்போம்,கடக்க போவதை கவனிப்போம், நம் ஆசானோட,

    ReplyDelete
  63. இதுப் போன்ற விஷயத்தில் தாங்கள் இதுவரை 'மாணிக்க' மாக இருந்தது போதும் சார்! இனிமேல் 'பாட்ஷா' வாக மாற வேண்டிய நேரமிது. குட்டக்குட்டக் குனியவும் கூடாது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டவும் கூடாது.

    ReplyDelete