Saturday, March 27, 2021

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு !!

 நண்பர்களே,

வணக்கம். "வந்துட்டேன்னு சொல்லு ; போன மாதிரியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு !!" 

மேற்படி வரிகளை தலைவர் பேசிய போது விசில் விட்டத்தைத் தாக்கியது ; ஆனால் அதே வரிகளை கொரோனா அண்ணாத்தே பேச நேரிடும் போது தேசமே மறுக்கா பேய் முழி முழிக்கத் தான் முடிகிறது !! இரண்டாம் அலை ; எகிறும் நம்பர்கள் ; காத்திருக்கும் கடின நாட்கள் என பேந்தப் பேந்த முழித்தபடிக்கே ஏப்ரலை எதிர்நோக்க வேண்டியுள்ளது ! போன வருஷம் இதே வேளைகளில் பூட்டிய வீடுகளுக்குள் இருந்தபடிக்கே பதிவுப் பக்கங்களை மட்டுமே (நமது) காமிக்ஸ் வடிகாலாக்கி நாட்களை நகர்த்திய அனுபவங்களெல்லாம் கண்முன்னே வந்து, ஏற்கனவே பேப்பர் விலைகளின் பேயாட்டத்தால் மிரண்டு கிடப்பவனை மேற்கொண்டும் பீதியாக்குகின்றன ! மார்ச் 22 - பேப்பர் & அட்டையின் அசாத்திய விலையுயர்வைக் கண்டிக்கும் கருப்பு தினமாய், இந்தியா முழுக்க அச்சகங்கள் அனுஷ்டிக்க, கூலாய் மறு தினமே டன்னுக்கு நான்காயிரத்தை உசத்தியுள்ளன இங்குள்ள பேப்பர் மில்கள் !! 2022-ல் அநேகமாய் நம்ம லக்கி லூக்கின் "புரட்சித்தீ "பாணியில் தான் வெளியீடுகள் அமைந்திட வேணும் - போலும் !! 2020 நவம்பருக்கும், இப்போதைக்கும் மத்தியில், ஆர்ட்பேப்பரின் விலைகளில்   நிகழ்ந்துள்ள ஏற்றம் - டன் ஒன்றுக்கு ரூ.37,000 !!! இந்த வருஷக் கடைசிக்குள் இந்த நம்பர் என்னவாக மாறியிருக்குமோ - ஆண்டவனுக்கும், ஆள்பவர்களுக்குமே வெளிச்சம் !!

"வந்துட்டேன்னு சொல்லு !! " என்று டயலாக் பேசிட இன்னொருவருமே தற்போது ரெடி !! ஆனால் இவரையோ நாம் கொண்டாடிடலாம் - தாரை தப்பட்டைகளோடு !! அவர் வேறு யாருமல்ல - நமது ஆதர்ஷ பெல்ஜியத்துக் கதாசிரிய ஜாம்பவானான ஷான் வான் ஹேம் தான் ! "போதும், இதுக்கு மேல் பொம்மை புக் படைப்புலகினில் உலாற்ற எனக்கு வயதுமில்லை ; தெம்புமில்லை !!" என்று சொல்லி தான் பணியாற்றி வந்த சகல தொடர்களிலிருந்தும் விடை பெற்றிருந்தார் வான் ஹேம் ! லார்கோ வின்ச் ; தோர்கல் ; XIII ; வெய்ன் ஷெல்டன் ; லேடி S என நிறைய prime தொடர்களை இன்றைய உச்சங்களுக்கு இட்டுச் சென்றதே இந்த அசாத்திய ஆற்றலாளர் தான் எனும் போது - அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பிட நிறைய புதுப் படைப்பாளிகள் கஜ கர்ணங்கள் செய்து பார்க்கின்றனர் தான் ; yet வான் ஹேம் - வான் ஹேம் தான் என்பதே இப்போது வரைக்குமான தீர்ப்பு ! ஆனால்...ஆனால்..மனுஷன் மனமிறங்கி மீள் வருகைக்கு புதுசாய் ஒரு களத்தை உருவாக்கியுள்ளார் என்பதே லேட்டஸ்ட் நியூஸ் ! தொடர்களை வெவ்வேறு புதியவர்களிடம் ஒப்படைத்து விட்டுள்ள நிலையில் வான் ஹேம் அவற்றினுள் மறுக்கா தலை நுழைக்க எண்ணிடவில்லை ; மாறாக அதனுள்ளேயே ஒரு ஸ்பெஷல் தடமிட முனைந்திருக்கிறார் ! "The Fortune of Winczlav" என்ற பெயரில் நேற்றைக்கு ரிலீஸ் ஆகியுள்ளது - லார்கோ விஞ்சின் (தத்துத்) தந்தை நெரியோ வின்ச் ; அவரது டாடி & அவருக்குமான டாடி என 3 தலைமுறைகளின் WINCH வரலாற்றை செம விறு விறுப்பாய் - 3 பாகங்களில் சொல்லிடும் முயற்சியின் பிள்ளையார் சுழியாய் ! XIII தொடரினில் spin-offs இருப்பது போல, லார்கோவுக்கும் long term திட்டமிடல்கள் ஏதேனும் இருக்குமோ ? என்ற கேள்வி எழுகிறது இந்த நொடியினில் ! கோப்புகளை வரவழைத்திருக்கிறேன் ; நமது மொழிபெயர்ப்பாளர் படித்து விட்டு தனது அபிப்பிராயத்தைச் சொல்லிட்டால் அதற்கேற்ப யோசித்திடணும் ! Meantime - உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ folks ? இஸ்திரி ; ஜியாகிரபிலாம் பள்ளிக்கூடத்தோடே போதும் என்பீர்களா ? அல்லது - 'வான் ஹேம் நிச்சயம் சொதப்பிட மாட்டார் !' என்ற நம்பிக்கையில் இதனுள் நாமும் குதித்துப் பார்த்திடலாமா ?  ஏதுவாகயிருப்பினும், இது 3 பாகத்து ஆக்கம் எனும் போது இதனைப் பூர்த்தி செய்திட அங்கேயே இன்னும் குறைந்த பட்சம் ஒரு வருஷமாவது ஆகிடக்கூடும் ! So நாம் தீர்மானிக்க எக்கச்சக்க நேரமுண்டு !




Moving on, ஏப்ரலின் இதர இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை ஓடவிடுவதெனில், கும்பலாய் முன்னிற்போர் நமது உட்ஸிட்டி அட்ராசிட்டி பார்ட்டிகள் தான் ! "நீரின்றி அமையாது உலகு !" ஒரு மாறுதலுக்காக சிக் பில் ; குள்ளன் ; டாக்புல் & கிட் ஆர்டின் - என நால்வருமே கதையினில் முழுமையாய் ஈடுபட்டிருக்கும் சாகசமிது ! And இது துவக்க நாட்களின் படைப்பு என்பதால் பக்க நீளமும் ஜாஸ்தி ! So ஒரு முழுநீள சாகசம் வித் வழக்கமான கோணங்கித்தனங்கள் என்பதே இங்கன template ! போன வருஷத்தில் ஏதோவொரு பொழுதிலேயே நமது கருணையானந்தம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, நமது DTP டீமில் புதுசாய்ப் பணி செய்து வரும் சுபாவால் டைப்செட் செய்யப்பட்டிருந்த 60 பக்கக் கதையை எடிட்டிங்கின் பொருட்டு ஜாலியாய்க் கையில் எடுத்தால், வெகு சீக்கிரமே நெளிய வேண்டிப் போனது ! கார்ட்டூன்களுக்கு இப்போதெல்லாம் நாம் தவறாது பயன்படுத்தி வரும் அந்தப் பேச்சு வழக்கு நடையைக் காணவில்லை ; மாறாக அத்தினி பேரும் சும்மா இலக்கிய நடையில் பின்னு பின்னென்று பின்னிக் கொண்டிருந்தனர் ! சுத்தமாய் ஒட்டவே செய்யாத அந்த பாணியைத் திருத்த நானும் தம் கட்டிப் பார்த்தால் - அது புதுசாய் எழுதுவதை விடவும் சிரமமாயிருக்க, 7 பக்கங்களைத் தாண்டவே நாக்குத் தொங்கிப் போய்விட்டது ! இலக்கிய நடை to பேச்சு வழக்கு நடை மாற்றங்கள் என்பதோடு மட்டுமல்லாது, வசனங்களில் இயன்ற மட்டுக்கு ஹ்யூமர் நுழைக்கவும் வேண்டியிருந்ததெனும் போது - ரொம்பவே திணறிப் போய்விட்டேன் ! வேறு வழியே இல்லாது, அப்படியே மொத்தத்தையும்  திருப்பி அனுப்பி வைத்து, திருத்தி எழுதிடக் கோர வேண்டிப் போனது ! So 'இருக்கா' எழுதப்பட்டு ; 'இருக்கா' டைப்செட் செய்யப்பட்டு ; 'இருக்கா' எடிட்டும் செய்யப்பட்ட ஜாகஜத்தின் முதல் பார்வை இதோ ! 


ஒரிஜினல் அட்டைப்படம் ; கோகிலாவின் கைவண்ணத்தில் வண்ணங்கள் சற்றே மாற்றியமைக்கப்பட்டு !! உட்பக்கங்களைப் பொறுத்த வரைக்கும் இது டிஜிட்டல் யுகங்களுக்கு முன்பான படைப்பு எனும் போது அந்த கலரிங் பாணிகள் தான் கொஞ்சம் பல்லைக் காட்டுகின்றன ! ப்ரேமுக்கு ப்ரேம் அடர் வர்ணங்கள் !! 

Last, but not the least : இம்மாதத்து இதழ் # நான்காக இருந்திருக்க வேண்டிய "வைகறைக் கொலைகள்" one step back எடுத்து வைக்க, "ஜெரோனிமோ - ஒரு தலைவனின் கதை" one step forward வருகின்றது ! "வைகறைக் கொலைகள் " - ஒரு நிஜ சம்பவத்தின் காமிக்ஸ் உருவாக்கம் ! இன்றளவிற்கு முடிச்சவிழ்க்கப்படாத 3 நிஜக் கொலைகளை கதாசிரியர்  மிரட்டும் b&w ஓவியங்களில் (yes - சித்திரங்களல்ல, ஓவியங்கள்) சொல்லியிருக்கிறார் ! ஒவ்வொரு மாதமும் black & white கதைகளைக் கடைசியாய்க் கையில் எடுப்பது ; தட தடவென பணியாற்றுவது ; அச்சிடுவது - என்ற ரீதியிலேயே இதனையும் சில நாட்களுக்கு முன்னே கையில் எடுத்த போது எனக்கு ரொம்பவே ஜெர்க் அடித்தது ! ரொம்பவே அடர்த்தியான கதை ; இதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலும் ஏக complexities & பற்றாக்குறைக்கு இன்டர்நெட்டில் நிறைய refer செய்து பணி செய்திட வேண்டியுள்ளது புரிந்தது ! ஆனால் இது எதையுமே அறியாதவனாய் கொஞ்ச காலம் முன்னே கருணையானந்தம் அவர்களிடம் எழுதச் சொல்லி இதனை  அனுப்பியிருந்தேன் & அவரும் இயன்ற மட்டிற்கு உழைத்துள்ளார் ! என் முன்னே விரிந்த 52 பக்கங்களை வாசித்த போது - இது இன்னொரு லெவெலில் பணியாற்றத் கோரிடுவது புரிந்தது ! நிறைய ; ரொம்பவே நிறைய நேரம் தந்து பேனா பிடிக்க வேண்டியிருப்பது புரிவதால், கொஞ்சமாய் நேரம் கிட்டும் தருணத்தினில் இதை முழுசாய் மாற்றி எழுத தீர்மானித்துள்ளேன் ! 

So அதனிடத்தில் "ஜெரோனிமோ" !!  And இக்ளியூண்டு பில்டப் கூட அவசியப்படா ஆக்கமிது என்பேன் ! அந்த அட்டைப்படமும், உட்பக்க preview-ம் நான் மாங்கு மாங்கென்று சொல்ல விழைவதை நொடியில் express செய்து விடுமென்பேன் !! கீழே பாருங்களேன் : 



Before I sign out, மாமூலான அந்த "சந்தா நினைவூட்டல்" folks !! அடுத்த வாரத்தினில் புது புக்ஸ் சகலமும் புறப்படவுள்ள தருணத்தில் - சந்தா எக்ஸ்பிரஸில் தொற்றிக் கொள்ள முயற்சியுங்கள் ப்ளீஸ் ! அவசியமெனில் 3 தவணைகளிலும் செலுத்திடலாம் நண்பர்களே ; please do join in !!

And - "கழுகு வேட்டை" இதழினில் போட்டோக்களை அனுப்பிட சந்தா நண்பர்கள் தினமும் நம்மவர்களை உலுக்கி வருவதால் Sunday & Monday இரு நாட்களின் அவகாசத்தினை கூடுதலாக்குகிறோம் !! சந்தா ரயிலில் ஏறிட எண்ணுவோரும் சரி, ஏற்கனவே இடம் பிடித்து, போட்டோ அனுப்ப மறந்தோரும் சரி, இந்த 2 நாட்களை பயன்படுத்திக் கொண்டால் சந்தோஷமே !! Bye folks...see you around !!

P.S : CINEBOOK ஆங்கில இதழ்களின் விற்பனை நிஜமான ஆச்சர்யம் தந்துள்ளது !! YAKARI & KENYA full sets கிட்டத்தட்ட காலி !! And Barracuda & லக்கி லூக்கின் இதழ்களும் றெக்கை கட்டி வருகின்றன !! Truly surprised & grateful !!

அப்புறம் சந்தா ரயிலில் இடம் பிடிக்கவோ ; பிடிக்க இயலாதோருக்கு உதவிடவோ - இதோவொரு வாய்ப்பும் !! கீழுள்ள சித்திரத்துக்கு ஜாலியான caption எழுதிட முயற்சியுங்கள் guys !! வெற்றி பெறும் 3 captions-க்கு தலா ஒரு ஜம்போ சீசன் 4 சந்தா நம் அன்புடன் ! அதனை நீங்களே எடுத்துக் கொள்ளலாம் ; அல்லது யாருக்கேனும் gift செய்திடவும் செய்யலாம் !  


281 comments:

  1. A: என்னைப் போல கொள்ளையன் இன்னொருத்தன் பொறந்து வரணும்
    B: இந்தியாவில இருக்கற பேப்பர் மில்லுகளப் பத்தி பயலுக்கு தெரியாது போல.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. C: இந்தியா போனதும்ற கிடைக்கிற முதல் வாய்ப்புல கட்சி தாவிட வேண்டியதுதான்

      Delete
    3. @ Padmalochan Karthikeyan

      ஹா ஹா செம்ம! என்னா ஸ்பீடு.. என்னா டைமிங்கு!! :))))

      Delete
  2. சொல்லிடுவோம் சொல்லிடுவோம் :-)

    ReplyDelete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. // CINEBOOK ஆங்கில இதழ்களின் விற்பனை நிஜமான ஆச்சர்யம் தந்துள்ளது !! YAKARI & KENYA full sets கிட்டத்தட்ட காலி !! And Barracuda & லக்கி லூக்கின் இதழ்களும் றெக்கை கட்டி வருகின்றன !! Truly surprised & grateful ! //

    வாவ் சூப்பர் சூப்பர். மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. டுமீல். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  6. // "கழுகு வேட்டை" இதழினில் போட்டோக்களை அனுப்பிட சந்தா நண்பர்கள் தினமும் நம்மவர்களை உலுக்கி வருவதால் Sunday & Monday இரு நாட்களின் அவகாசத்தினை கூடுதலாக்குகிறோம் !! //

    நன்றி சார். கடந்த 10 நாட்களாக போட்டோ அனுப்ப நினைத்து மறந்து விடுகிறேன் வேலைப்பளு காரணமாக. நாளை அனுப்பி வைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  7. நானும் வந்திட்டேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  8. // "ஜெரோனிமோ" !! And இக்ளியூண்டு பில்டப் கூட அவசியப்படா ஆக்கமிது என்பேன் ! அந்த அட்டைப்படமும், உட்பக்க preview-ம் நான் மாங்கு மாங்கென்று சொல்ல விழைவதை நொடியில் express செய்து விடுமென்பேன் !! //

    நன்றி. அட்டைப்படம் மற்றும் உட்பக்கங்கள் அழகு. ஆவலுடன் காத்திருக்கிறேன் இவரை தரிசிக்க.

    ReplyDelete
  9. படித்து விட்டு...

    நன்றி பெ.ப

    ReplyDelete
  10. சார் இது என்ன புத்தகங்க சார் ஆசிரியர்:போர்முனையில் தேவதை ப்ரிவியூங்க, லேசா, சென்சார் பண்ணியதுங்க

    ReplyDelete
  11. கிட் ஆர்டின் சிக் பில் கதை நீண்ட இடைவெளிக்கு பிறகு. எங்களை சிரிக்க செய்து வயற்றை பதம் பார்க்கும் உட்சிட்டி காமெடி நாயகர்களே வருக வருக சிரிப்பை தருக.

    ReplyDelete
    Replies
    1. அட்டைப்படம் அட்டகாசம். உட்பக்கங்கள் சிரிப்பு விருந்துக்கு உத்திரவாதம் என சொல்லும் வகையில் உள்ளது.

      Delete
    2. வாருங்கள் உட்சிட்டியின் கவுண்டமணி செந்தில் அவர்களே.

      Delete
  12. CINEBOOK ஆங்கில இதழ்களின் விற்பனை நிஜமான ஆச்சர்யம் தந்துள்ளது !! YAKARI & KENYA full sets கிட்டத்தட்ட காலி !! And Barracuda & லக்கி லூக்கின் இதழ்களும் றெக்கை கட்டி வருகின்றன !! Truly surprised & grateful !

    *****

    மகிழ்ச்சியான செய்தி சார்...

    ReplyDelete
  13. கிட் ஆர்ட்டின் இதழின் அட்டைப்படத்தை பார்த்தாலே புத்தக காட்சிகளில் புதிதாய் பார்ப்போர் உடனடியாக செலக்‌ஷன் செய்து விடுவார்கள் என நினைக்கிறேன் அருமை..சார்..

    போன வாரம் தான் நமது சிக்பில் குழுவின் " வெள்ளையாய் ஒரு வேதாளம் " மறுவாசிப்பில் மீண்டும் படிக்க நேர்ந்தது.. பழைய கதைகளில் உண்மையாகவே சிக்பில் ஹீரோவாகவே (!) சாகஸம் செய்வார் ..அந்த கதையும் அவ்வாறே...மீண்டும் இவர் நாயக அவதாரம் எடுப்பாரா என்று நினைக்கும் சமயம் இந்த முறை அனைவருமே பெரும்பங்கு வகிக்க போகிறார்கள் என்ற செய்தியும்..பக்க நீளமும் ஆவலை கூட்டுகிறது...

    மிகுந்த எதிர்பார்ப்புடன் வுட்ஸிடி நண்பர்களை எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  14. வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே....!!!

    ReplyDelete
  15. ஒரு தலைவனின் கதை ..

    அட்டைப்படமும் அசத்துகிறது..

    சூப்பர்..!

    ReplyDelete
  16. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  17. கடைசி கதையை தவிர லார்கோவின் அனைத்து பாகங்களும் செம சூடு பறந்த ஆக்‌ஷன் கதைகள் ..லார்கோ தந்தையின் அந்த என் பெயர் லார்கோ முதல் சாகஸத்தில் அவரின் பங்களிப்பு பாகமும் செம விறுவறுப்பாகவும் ,பரபரப்பாகவுமே இருந்தன..

    அதே போலவே வெறும் வாழ்க்கை சரித்திரம் போல் அல்லாமல் பரபரப்பும் விறுவிறுப்பமாகவும் அமைந்தால் கண்டிப்பாக வரவேற்கலாம் சார்..

    லார்கோ மீண்டும் தலைகாட்ட மாட்டாரா என்ற எண்ணம் அவரின் பழைய இதழ்களை கண்ணில் பார்த்தாலே ஏங்க செய்து விடுகிறது என்பதும் உண்மை..:-)

    ReplyDelete
  18. Sir சந்தாவின் முதல் தவணை எவ்வளவு என்று சொல்லுங்கள் நான் சேர விரும்புகிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே ‌.

      Delete
    2. இரு தவணைகளெனில் ரூ.2400 ; மூன்றெனில் ரூ.1600 sir...!

      Delete
  19. நான் மே மாதம் சந்தாவில் சேருகிறேன்

    ReplyDelete
  20. பேப்பர் விலையேற்றம் கண்ணை கட்டுகிறது. இறக்குமதி இல்லை என்றால் உள்நாட்டு வர்த்தகம் பெருகும் என நினைத்தால் நம்ப உள்ளூர் பெரியப்பாக்கள் 10 நாட்களில் கோடிஸ்வரர்கள் ஆக வேண்டும் என ஆடுகிறார்கள்.கடவுளே இந்த உள்ளூர் பெரியப்பாக்களிடம் இருந்து புத்தக உலகை காப்பாற்றுங்கள்.

    ReplyDelete
  21. ப்ரசன்ட் சாரே..

    ReplyDelete
  22. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. வான் ஹாமின் மறுவருகை.... நிஜமாகவே விசிலடிக்கத் தோன்றுகிறது...!

      Delete
    2. வணக்கம் சார். யெஸ் வான் ஹாம் kku டபிள் ஓகே.....

      Delete
  23. இந்த அல்லது சென்ற வருடத்தின் டாப் கதை என்னை பொறுத்த வரையில் கௌபாய் எக்ஸ்பிரஸ் தான்.. முதம் தடவை ஆரம்பித்து இது வரை எட்டு முறை படித்தாயிற்று.. இன்னமும் சலிக்கவில்லை்.. செம கெத்தான கதை.்் அட்டை டூ அட்டை செம கெத்து.்

    ReplyDelete
  24. சார் வந்தட்டார்னதும் என் மனசிலாடுனது லார்கோ தான்....அவர் தந்தை சுவாரஸ்யமானவரே....படிச்சு பாக்காம அடிச்சு விடுங்க....மூனு பாகத்தையும் ஏகமாய்...வேகமாய்

    ReplyDelete
  25. Replies
    1. சிக் குனா கதையும் கிக் தான்யா க்ளா!

      Delete
  26. தலைவனின் கதை அட்டையும்....உள் சட்டையும் பட்டை....வேற லெவலும்பாவளே அதன் அர்த்தம் இப்பதா புரியுது...இது வர வந்த அட்டைவள்ளயே ஒரே பெஸ்ட் இதுதாங்குது மனது...மாற்றம் இனிக்குது....மாற்றமே மாறாதே...எவ்வளவு அழகிய வார்த்தை என்பது புரியுதிவ்வட்டய நோக்கயிலே...கழுகு...யப்பா...சான்சே இல்ல....மலை மேல் இருப்பது போலோர் அதிர்வு...அதிரட்டும் நமது களம்

    ReplyDelete
  27. ஏப்ரலில் வெளிவரும் கழுகு வேட்டையை இன்னும் எதிர்பார்க்க வைக்கிறது!"முதன்முதலாக காமிக்ஸ் புத்தகத்தில் போட்டோ தாங்கி வருவது மட்டற்ற மகிழ்ச்சியும் நன்றியும் சார்! வான் ஹேம்மே மீண்டு(ம்) வருவது மட்டற்ற மகிழ்ச்சியே! மூன்று கதைகளையும் ஒன்றாகவே போட முயற்சியுங்கள் சார்! வைகறைக் கொலைகளை முந்தி ஜெரோனிமோ வருவதும் மகிழ்ச்சியே

    ReplyDelete
    Replies
    1. செமயான போட்டோ கொடுத்து உள்ளீர்கள்... முதல்முறை போட்டோ என்பதால் நகம் கடித்துக்கொண்டே காத்திருங்கள்... வாழ்த்துகள் ஜி🌹

      Delete
    2. மிக்க நன்றி ஸ்டீல்கிளா நண்பரே!
      @ சேலம் Tex விஜயராகவன்
      ஆமாம் ஜி இது என் மகள் எடுத்தது அதுவுமில்லாமல் இது எனக்கு மிகவும் பிடித்த போட்டோக்களில் ஒன்று ஏற்கனவே டிராகன் நகரத்துலேயே வரவேண்டியது அப்போ சிலபல குளறுபடியால் மிஸ்ஸிங்! இப்போ வெளிவருவது ஐ ஆம் வெரி ஹேப்பீ 😍

      Delete
    3. அட்டகாசமான ஃபோட்டோ கலீல் சார். வாழ்த்துக்கள். செம்ம செம்ம

      Delete
  28. பரணிஜி . கம்பிநீட்டிய குருவியும் அப்படித்தான் ஈர்க்கிறதுநான் இரண்டையும் பலமுறை படித்துக்கொண்டே இருக்கிறேன். மொழிபெயர்ப்பின் சுவாரஸ்யம் நம்மை அப்படி வாசிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அட. சூப்பர் ராஜசேகரன். நீங்கள் ரிப் கிர்பி ரசிகர்.

      Delete
    2. நமக்கு காசில்லா கோடீஸ்வரனும், ஆபரேசன் அலாவுதீனும் தான் பேவரைட்ஸ்...!!

      Delete
    3. எனக்கு ரோஜா மாளிகை ரகசியம் மட்டுமே நினைவில் நிற்கின்றது.

      Delete
  29. உட்சிடிகலரிங் பாணி. அடர் வண்ணங்களாக இருப்பினும்நன்றாகவே உள்ளதுங்கசார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  30. யெஸ் ரிப்கிர்பி ரசிகன்சார் நான். முதல்முதல் படித்த முத்துகாமிக்ஸ்கிர்பியின்நாலுகால்திருடன்

    ReplyDelete
  31. கேள்வி எதற்கு சார்.. விஞ்ச் க்ரூப்பைப் பற்றி அறிய மகா ஆவலுடன் நாங்கள்... வரவர கேப்பே விடாமல் புக்கைக் கொடுத்து விடுங்கள்.. அதுவே எங்க வாசிப்புப் பசிக்கான தீனி...

    ReplyDelete
    Replies
    1. அடடே இன்னும் ஒரு லார்கோ ரசிகர் வாங்க வாங்க

      Delete
    2. நம்மளையும் அந்த கூட்டத்தில் போட்டுகிடுங்க....!!!
      என் பெயர் லார்கோ& துரத்தும் தலைவிதி& கான்கிரிட் கானகம் நியூயார்க் 3ம் நம்ம ஃபேவரைட்.

      Delete
    3. நம்மளையும் லார்கோ கூட்டத்தில் சேர்த்துப்புடுங்க...!
      அத்தனை லார்கோ கதைகளும் என்னைக் கவர்ந்துவிட்டன.

      Delete
  32. கொடுத்துவைத்த லார்கோ டெக்ஸ் ரசிகர்கள்..

    ஏனோ XIII history எங்களுக்கு எட்டாகனியாகவே இருக்கப்போகிறது..

    ReplyDelete
    Replies
    1. எந்த பால் போட்டாலும் XIII அடிகிரீங்க :)

      Delete
    2. இல்லை நண்பரே டெக்ஸ்ஸோட அண்ணன் தம்பி அப்பா
      லார்க்கோவோட அப்பா தாத்தா பாட்டா கதைகளுக்கெல்லாம் வாய்ப்பு கதவைதட்டுகிறது எங்க XIII HISTORY SPINOFF னா கதவு இறுக்கமா மூடிக்கொள்கிறதே...எதுக்கும் ஒரு ராசி வேண்டும்...எங்களுதான் 13... ராசியில்லாதவராச்சே சார்...விதியை நொந்துகொள்வதைத்தவிர வேறுவழியில்லை....

      Delete
  33. ஜெரோனிமோ முந்திவருவது அட்டகாசம்...சார்.. இம்மாதம்..ஒரே வெஸ்டர்ன்நெடி தூக்கியடிக்கப்போகுது...

    ReplyDelete
  34. A எதோ கப்பல் மாட்டிகிட்டு இருக்குதாமே ?
    B Captain க்கு பெரிய jack sparrow னு நினைப்பு.நாம்ம மியூசியத்தில் இருக்கோம்ன்னு இன்னும் தெரியல்ல..
    C ஆமா தல, நமக்கு Suez கால்வாயிலாம் தெரு கால்வாய் மாறி தான்.. போய் கை வரிசை காட்டுவோம்

    ReplyDelete
  35. அப்புறம் அந்த லார்கோ Prequelஸ் கண்டிப்பா வரணும் Sir..

    ReplyDelete
  36. A: கரை தென்பட்டுவிட்டது. யார் யாருக்கு என்ன வேணும் சொல்லுங்க?
    B: எனக்கு ஃபேர் & லவ்லி கிரீம்
    C : எனக்கு மாஸ்க்

    ReplyDelete
  37. பரணிஜி ரிப்கிர்பியின் வேங்கை வேட்டை படிச்சுப்பாருங்கநீங்களும் கிர்பிரசிகராகிவிடுவீர்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. படித்து இருக்கிறேன் ஜி

      Delete
  38. A: வந்துட்டோம்னு சொல்லு.. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு.

    B: கப்பல் எந்தப்பக்கம் தல.. சென்னையா..கோவையா..

    C: கோவையில எங்கடா கடல் இருக்கு.. மண்டையா..

    B: இந்த எலக்ஷன் ல யாரோ வாக்குறுதி தந்த மாதிரி இருந்துச்சே. நாங்க ஆட்சிக்கு வந்தா கோயமுத்தூர்ல பீச் கொண்டுவருவோம்னு..

    A: அவங்களுக்கு தெரியல.. அடுத்த மாதமும் ஆட்சி நம்மளோடதுதான்னு..

    B: மேல கொடியில் தலயோட தல போட்டோ தான் சூப்பரா இருக்கே. கழுகு வேட்டை புக்குல பிரிண்ட் போட இந்த படத்தையே அனுப்பிடலாமா.


    C கீழே பெயரை கொரோனா 2.0 அப்பிடின்னு மறக்காம எழுதிடனும்.

    ReplyDelete
    Replies
    1. பழைய பத்மநாபன் வந்துட்டார்ன்னு சொல்லுங்கள்.

      Delete
  39. என் காமிக்ஸ் என் மகிழ்ச்சி என்ற வாசகத்துடன் அழகாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் கலிலியின் போட்டோ மிக அருமை....
    tex ன் சிறு வயது போல் லார்கோ வும் வருவதில் மிக மகிழ்ச்சி...
    கூலும் குடிக்கணும் மீசையிலும் படக்கூடாது ரொம்ப கஷ்டமான விஷயம் சார் இதுக்கு என்ன செய்யலாம் ஒன்னு மீசையை
    எடுக்கனும் இல்லனா கூலே குடிக்கக்கூடாது. அதுமாதிரி பேப்பர் விலை ஏற்றத்தால் தடுமாறிக் கொண்டிருக்கும் சமயத்தில். ஒன்னு விலை ஏத்தணும் இது உங்களுக்கும் சரி எங்களுக்கும் சரி மனசு ஏற்புடைய கூடிய விஷயமாக இருக்காது. டெக்ஸ் வில்லர் புக்கு சைசுக்கு அனைத்து கதைகளையும் சுருக்கி நல்ல கதைகளை மட்டும் கலரில் அயல்நாட்டு தரத்தில் வெளியிட்டு மற்ற கதைகளை B&W வெளியிட்டால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  40. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  41. B: பாஸ்..நாம இப்ப இருக்கிறது இந்தியப் பெருங்கடல்ல.. கப்பலை அரபிக்கடல் பக்கம் மும்பைக்கு திருப்பவா..இல்லே வங்கக்கடல் பக்கம. சென்னைக்கா?...

    A. முமபைல ஏற்கெனவே கொரானா சாஸ்தியாயிட்டுது. சென்னைக்கே திருப்பு. அங்க தான் எலக்ஷன் களை கட்டுது. ஒரு பய கூட மாஸ்க் போடல. நாமளும் உசுருங்கள கலெக்க்ஷன் அள்ளலாம்.

    C: பாஸ்..எனக்கு ஒரு டவுட்டு நாமளும் மாஸ்க் போடணுமா..

    B: இந்த மூஞ்சிக்கு மாஸ்க் போட்டா என்ன..போடாட்டி என்ன?

    ReplyDelete
  42. ஏனோ கார்டூன் ரசிகர்களுக்கு ரின் டின் மதியில்லா மந்திரி, பென்னி, லியார்டினோ மற்றும் ஸ்மர்ப் ஒன்பதாவது கனியாகவே இருக்கிறது. ஹூம் என்ன சொல்ல. தமிழ் கார்டூன் ரசிகராக இருப்பது தவறா? தமிழில் மீண்டும் இவர்களை எப்போது பார்க்க போகிறமோ. ? இந்த எலெக்ஷனில் மாதம் ஓரு கார்டூன் கதை நமது காமிக்ஸில் வரச்செய்வோம் என யாராவது ஒரு கட்சி தலைவர் உறுதி கூறினால் எனது ஒட்டு அவருக்கு தான். செய்வார்களா செய்வீர்களா ? :-)

    ReplyDelete
  43. கேப்டன்(A): என்னங்கடா கடலில் நம்மள தவிரவேற யாரையும் காணோம்.
    (B): எல்லாரும் கப்பலை விட்டுட்டு தமிழ்நாட்டுப் பக்கம் போய்ட்டாங்க..
    (C): ஆமாம் கேப்டன் கடலில் கொள்ளை அடிக்கிறது காட்டிலும் இப்போது தமிழ்நாட்டில் ஓட்டுக்கு 5000 10,000 கிடைக்கும்னு ஓடிட்டாங்க

    ReplyDelete
  44. Sir what's the price of Kenya full set? Available now or not.Please inform me sir

    ReplyDelete
  45. A: வர வர கடற்கொள்ளை கரங்களுக்கு மரியாதை இல்லாம போயிடுச்சு.
    B: ஏன் கேப்டன் இப்படி சலித்துக் சொல்றீங்க.
    C: பின்ன கேப்டன் சொல்றதிலும் அர்த்தம் இருக்கு. இப்ப எல்லாம் நாட்டை கொள்ளை அடிக்கிற ங்களுக்கு தானே மவுசு அதிகம்.

    ReplyDelete
  46. A: ம் .... கப்பலை வேகமாக திருப்பு! தாக்குதலுக்குத் தயாராகுங்கள் வீரர்களே!

    B: சொன்னவுடனே திரும்பனுமாம்ல.. சுக்கான உன் கையில கொடுத்திருக்கணும்...

    C: ஏதாவது பிரச்னையா கேப்டன்?

    ReplyDelete
  47. B: ... தான் வர்றாரு. விடியல் தரப் போறாரருன்று அந்தக் கட்சி சொல்லுது..பாத்தியா தல

    C: தொடரட்டும் வெற்றிநடைன்னு இந்தக் கட்சி சொல்லுதே..இதப் பாத்தியா தல..

    A: ரெண்டுமே நமக்காகவே சொல்ற மாதிரி இருக்கே. நீ அத கவனிச்சியா.

    B. நாம என்ன வாக்குறுதி கொடுக்கறது.

    A: நம்ம ஆட்சி நீடிக்கிறதா,வேண்டாமானு மக்களோட அலட்சியமே முடிவு பண்ணிக்கிட்டு இருக்கு. அதனால வாக்குறுதி எதுவும் வேணாம். விடு.

    ReplyDelete
  48. லார்கோ மீண்டும் மகிழ்ச்சி. நன்றாக இருந்தால் மூன்று கதைகளை ஒரே புத்தகமாக கொடுங்கள்.

    இதனை கொடுப்பதற்கு முன்னர் லார்கோ, ஷெல்டன், லேடி-s மற்றும் தோர்கல் நமது கிட்டங்கியில் இருந்து காலியான பிறகு அட்லீஸ்ட் பாதியாவது காலியான பிறகு இவரை களம் இறக்குங்கள் சார்.

    ReplyDelete
  49. விஜயன் சார், டெக்ஸ் வண்ணகதைகள் பலரை கவர்ந்து புத்தகத் திருவிழாவில் விற்பனை சாதனை படைக்கிறது எனும் போது இனி வரும் காலங்களில் டெக்ஸ் வில்லரின் வண்ணக்கதைகள் மற்றும் இளவயது டெக்ஸ் கதைகளை மட்டும் கூடுதல் பிரிண்ட் ரன் செய்யமுடியுமா? புத்தகத் திருவிழா இன்னும் விற்பனையில் களைகட்டும் என்ற ஆர்வத்தில் இந்த யோசனை.

    ReplyDelete
    Replies
    1. வேண்டியது டெக்ஸின் கூடுதல் வண்ணக் கதைகள். எனக்கென்னவோ டெக்ஸ் மறு பதிப்புகளைத் தவிர மீதி டெக்ஸ் எல்லாம் க. வெ. வர மாதிரி ஒரு பீலிங்.

      Delete
    2. Same feeling ஷெரீஃப்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. சில சிறப்பிதழ்கள் அவ்வப்போது வண்ணத்தில் வருகிறதே.. எ.க. தீபாவளி மலர்.

      Delete
  50. B: என்ன பாஸ்..இந்த தடவை நாங்க ரெண்டு பேர் மட்டும் கூட வந்தா போதும்னுட்டீங்க...

    A: கொரானா மறுபடியும் பரவிக்கிட்டு இருக்குறதாலட வேட்பாளர் கூட ரெண்டு பேர் தான் வேட்புமனு தாக்கல் பண்ண வரலாம்னு தமிழ்நாட்டுல தேர்தல் கமிஷன் ல ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. அதான்.

    B: அது சரி. அது என்னர.. மண்டைக்கு மேல கொண்டை மாதிரி தொப்பி.

    A. அதுவா.. மண்டைக்கு உள்ளேயும் ஒண்ணும் இல்லே.. வெளியேயும் ஒண்ணும் இல்லேன்னு சொல்லிக் கூடாதில்லயா..அதான் தொப்பி.

    C : தொப்பி போடடவர் தலைவர்.. கூட நாம ரெண்டு பேரும் செயலர்.. பொருளர்... காகித ஓடம்..கடலலை மேலே..போவது போலே.. மூவரும் போவோம்.

    B: நடுக்கடல்ல கட்சியே காத்து வாங்குது. மண்டையனுக்கு பாட்டைப் பாரு...பாட்டை..

    ReplyDelete
  51. படைப்புலக ஜாம்பவான் வான் ஹேம் திரும்பி வந்தது , படைப்புலகிற்கும் நமக்கும் எதிர்பாராது கிடைத்த வரப்பிரசாதம். அவருடைய மாஸ்டர் பீஸ் படைப்புகள் மறக்க முடியுமா சார்? பெரியவர் நெரியோ வின்ச் & அவருடைய டாடி கதையும் வெற்றிதான் - சிவப்பு கம்பளம்

    காமடி வறட்சியான இக்காலகட்டத்தில் வூட் சிட்டி கோமாளிகள் கிச்சு கிச்சு மூட்ட வருவது ஆனந்தம்.
    “ஜெரோனிமோ “ அட்டை படம்+உட்பக்க பிறீவியூ சித்திரங்கள் கதை பேசுகின்றன

    ReplyDelete
  52. நானும் வந்துட்டேன்னு சொல்லு.

    ReplyDelete
  53. கண்டிப்பாக வான்ஹேம் வரட்டும்.

    ReplyDelete
  54. ஜெரோனிமா படிக்க ஆவலுடன் வெயிட்டிங்.வுட் சிட்டி சிரிப்பாளிகளையும் படித்துச் சிரிக்க ஆவல்.

    ReplyDelete
  55. A டாய் மண்ட கஷாயம் எவன்டா நா வார ரூட ல கேட்டு போட்டது
    C தலைவா காவாய்ல கப்பல் சிக்கிடுச்சு நல்ல பாருங்க
    Bஆல்ரெடி அடக்கமானதா மறந்துட்டு ஆனந்தமா பேசிட்டு இருக்கங்களே

    ReplyDelete
  56. Hi sir friends my my first post thank you

    ReplyDelete
  57. Largo Prequel, is it possible to show inner pages ? Is the artist different from largo series? from the book cover it looks diff to me.

    ReplyDelete
    Replies
    1. என்பெயர் டைகர் கையில் வைத்துள்ளீரா..அதே மாதிரி ஆர்ட்வொர்க்தான்...வேறு ஓவியர் வரைந்தது... நண்பரே..

      Delete
    2. https://www.dupuis.com/la-fortune-des-winczlav/bd/la-fortune-des-winczlav-tome-1-vanko-1848/88256

      இங்கே சென்றால் சில பக்கங்களை பார்க்கலாம்...

      Delete
  58. ரிப் கிர்பியின் வேங்கை வேட்டை_
    ஊம் நாட்டு அமீர், மற்றும் அவரதுஉதவியாளர்என்றுகூறிக்கொண்டுமோசடிப் பேர்வழிகள் இருவர்வருகின்றனர்வைரச்சுரங்கங்களும் அவற்றின்மூலம்மூலம் நண்பர்களை பணக்காரர்களாக்குவதும்தங்களைப்பிஸியாக்குவதாகரீல் விடுகிறார்கள். சுரங்கங்களின் பங்குகளில்(ஷேர்) முதலீடுஎன்றுகூறிபோலிப்பத்திரங்கள் மூலம் பணத்தை சுருட்டதிட்டமிடுகின்றனர். மயங்கிய ஹனி டோரியனும்தனது சேமிப்பை முதலீடுபண்ணவும் அதன்மூலம்கிர்பியின் கடுப்பைக்கிளறவும் நினைக்கிறாள். நிலமை விபரீதமாவதை உணர்ந்தகிர்பிமோசடியாளர்களின் கைரேகைகளைஇண்டர்போலுக்கு அனுப்பகிரிமினல்களின் எஸ்டிடீஅறிகிறார்.
    கிரிமினல்கள்யானைமீதுஅமர்ந்து புலிவேட்டைக்கு சென்று மக்களைக்காப்பாற்றியதாக ரீல்விடுகிறார்கள். விக்கர்ஸின்மூலம் பீர்குடிக்கும் ஒருசர்க்கஸ்யானையும். மீன்இறைச்சிமட்டும் சாப்பிடும், வேட்டை என்றால் என்னவென்றுதெரியாத ஒருபுலியும்கிர்பிக்குஅறிமுகமாக போக்கிரிகளின்வேசத்தைகளைக்க யானைமீது ஏறிபுலிவேட்டைக்குசெல்வதாக ஒருநாடகத்தை அறங்கேற்றுகிறார் கிர்பி. பதுங்கிக்கொண்ட புலியைவிளக்குமாற்றால்அடித்து டெஸ்மாண்ட்களேபரப்படுத்த பயந்துஓடுகிறார்கள்எட்டி. ஸ்பைக் என்னும் அந்த இருகயவர்களும்.மிகவும் சுவாரஸ்யமானரிப்கிர்பியின் வேங்கைவேட்டைபலமுறை படித்தாலும் சலிக்காத ஒரு லேண்ட்மார்க் இதழ். பலஅஆண்டுகளுக்குப் பிறகு ம் இன்றும் மனதில். மறக்கஇயலா நினைவுகளுடன்கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அருமையான நினைவுகள்.

      Delete
    2. வேங்கை வேட்டை - நமது குழுமத்தில் வந்த இதழ் இல்லை என்று நினைக்கிறேன்

      Delete
  59. A : அடேய், இந்தியா வந்துட்டம்டா

    C : அண்ணே, நமக்கு, நம்ம கப்பலுக்கு பெட்ரோல் போடனும்னே

    B : ம்க்கும், இந்த கேப்டன் நல்ல நாள்லயே சோறு போடாம இப்படி எலும்புக்கூடா ஆக்கி வைச்சிருக்கான்! இந்தியால பெட்ரோல் விக்கிற விலைக்கு, நாலு விலா எலும்பையும், ஒரு கால் எலும்பையும் கேப்பானே!!

    ReplyDelete
  60. நெரியோ விஞ்ச் கதைக்கு டபுள் தம்ப்ஸ் அப் சார்!

    ReplyDelete
  61. B: ஏண்டா தலைவர் கையில டெலஸ்கோப்போட, கடல்ல வந்து, என்னடா தேடறாரு?..

    C: காத்து வாங்கக்கூட தப்பித்தவறி அந்த கட்சியோட ஆபீஸ் இருக்கற தெருப்பக்கமா போகாதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே..இப்ப நம்மள கூட்டணியில் சேர்த்துக்கிட்டு 7 சீட்டு வேற கொடுத்துட்டாங்க. இதுல ஒதுக்கின சீட்டை ஆள் இல்லேன்னு திருப்பிக் கொடுக்கக் கூடாதுன்னு கண்டிஷனாம். ஏற்கெனவே ஒரு கட்சி 3 சீட்டுக்கு ஆள் இல்லேன்னு அப்படி பண்ணிடுச்சாம். அதனால அவங்க உஷாராயிட்டாங்க. அங்கே நாட்டுல யாரும் சிக்கலியாம். இங்க கடல்லயாச்சும் யாராவது சிக்குவாங்களான்னு தேடறாரு.

    B: கடல்ல வார மீன வலை வீசி தேடலாம். சிக்கும். வேட்பாளர்ல்லாம் சிக்குமா என்ன?

    A: என்னடா, நக்கலா .. நீங்க ரெண்டு பேரும் ஆளாளுக்கு ரெண்டு தொகுதியில வேட்பாளரா நிக்கறீங்க. நான் மூணு தொகுதியில வேட்பாளரா நிக்கறேன். ஏற்கெனவே ஒரு தலைவர் தாலு தொகுதியில நின்னதால வேட்புமனு தள்ளுபடி ஆகி யிருக்கு.அது மாதிரி என்னுதும் தள்ளுபடி ஆயிடும். ஐயாவும் எஸ்கேப் ஆயிடுவேன். எப்படி ஐடியா?..

    B: இந்த ஆள் கூட சேர்ந்து சுத்தினா நடுத்தெருவுல தான் நிப்பேன்னு எங்க வீட்டுல சொல்லிச்சு.நான் தான் கேக்கல. மனுஷன் இப்ப நம்மள நடுக்கடல்ல கொண்டாந்து நிறுத்திட்டானே. பாவிப்பய.

    ReplyDelete
  62. தல:ஏண்டா கூமுட்டை தலையா சிவகாசிக்கு போனா கப்பல் நிறைய பொம்மை புக்கு அள்ளிட்டு வரலாம்னு சொன்ன. கண்ணுக்கெட்ன வரைக்கும் சிவகாசியை காணுமடா?

    அல்லக்கை: அய்யோ தலைவா சிவகாசியில் கடலே கிடையாது தலைவா.

    தல;ஆஹா நாமதான் கொஞ்சம் ஒணர்ச்சிவசப்பட்டுட்டமோ?

    ReplyDelete
  63. "அடேய் பயல்களா, தூரத்துல சிவகாசி தெரியுது. லய்ன் ஆபிஸ் போறோம் மாயாவியோட 'கொரில்லா சாம்ராஜ்யம்' புக்ஸ் எல்லாத்தையும் அபேஸ் பன்றோம், வாசகர்களுக்கு கிடைக்காம பன்றோம், அப்படியே எஸ்ஸாகிட்றோம்".

    "ஓகே பாஸ், மாயாவி அவன் இரும்பு கையால கரண்ட் ஷாக் கொடுத்து நம்ம எல்லாறையும் பொசுக்கி இப்படி எலும்பனுங்களா மாத்தி அலைய விட்டதுக்கு பழி வாங்குறோம்".

    "ஆமா ஆமா... அப்படியே வாசகர்களை காப்பாத்தின புண்ணியமாச்சும் நமக்கு கிடைக்கும்".

    ReplyDelete
  64. B: கேப்டன் ஏன் கோவமா இருக்குறாரு?..

    C அதுவா..அவர் கெளம்பறப்போ, கைப்புள்ள காலையிலயே துப்பாக்கியோட கெளம்பிட்டானே..இன்னிக்கு எத்தன தல உருளப் போகுதோன்னு தலைவர் காதுபடவே எவனோ நக்கலா கமெண்ட் அடிச்சானாம். அதான் டென்ஷனாயிட்டாரு.

    A: எல்லாம் என் நேரம்டா. உங்க ரெண்டு பேரையும் அள்ளக்கையா வெச்சுக்கிட்டு இருக்கேன்ல. எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்.

    ReplyDelete
  65. "தூரத்துல மணல் திட்டும் மக்கள் நடமாட்டமும் தெரியுது. வாங்க இந்தவாட்டி தரைக்கு போய் கொள்ளை அடிப்போம்"

    "பாஸ், கோரோனா காரணமா கப்பல் போக்குவரத்து இல்லாததால நம்ம பிஸினஸ் டல்தான். இருந்தாலும் நாம கடற்கொள்ளையர்கள். நம்ம கெத்த விடக்கூடாது பாஸ்"

    "அத்தோட அவங்ககிட்ட இருந்து கொரோனா வைரஸ் தொத்து நமக்கும் சான்ஸ் இருக்கு. அதனால கடல்லயே வெயிட் பண்ணுவோம் பாஸ்".

    ReplyDelete
  66. C என்ன தலைவர் சோகமா இருக்காரு..

    B: அதுவா..நாம பாட்டுக்கு சிவனேனு கப்பல்ல போயிட்டு இருக்கோம். இந்த எடிட்டர் நம்ம போட்டோவ போட்டு கமெண்ட் போட சொல்லிட்டாரு யார் யார் நம்மள வறுக்க போறாங்களோன்னு சோகத்தில் இருக்காரு.

    A: எனக்கு அது கூட வருத்தம் இல்லடா...சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்த கதையாய், இத்தனை நாளா சும்மா இருந்த இந்த பத்மநாபன்வேற கமெண்ட் போட கிளம்பிட்டாரு. அத நினைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு. பாவம் ஆசிரியர்.

    ReplyDelete
  67. செம்ம பதிவு சார். உட் சிட்டி டீம் எப்போதுமே எனது ஃபேவரைட் 2021 வருட சந்தாவை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    1. நீரின்றி அமையாது உலகு
    2. ஜெரோனிமோ
    3. சோடா
    4.கழுகு வேட்டை அனைத்தும் கலர் புத்தகங்கள் ஆட்டத்தின் ஆரம்பமே அமர்க்களம்.

    இந்த வார preview அருமை. ஜெரோனிமோ A class. நன்றிகள் சார். புத்தகம் எப்போது கிடைக்கும்????

    ReplyDelete
  68. வணக்கம்.
    சந்தாவை மூன்று தவணையாக செலுத்தலாம் என்று கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.முதல் தவணைத் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தயவு செய்துக் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. // இரு தவணைகளெனில் ரூ.2400 ; மூன்றெனில் ரூ.1600 sir...! //

      ஆசிரியர் பதில் 👆

      Delete
  69. நெரியோ விஞ்ச்சை தமிழ் பேசும் காமிக்ஸ் நல்லுலகத்திற்கு வரவேற்கிறோம்.
    மகன் எட்டடி பாய்ந்தால், தந்தை பதினாறடி பாய மாட்டாரா என்ன? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    மூன்று பாகமும் வெளிவந்தபின்பு ஒரே புக்காக ஹார்டு பவுண்டு அட்டையுடன் களமிறக்குங்கள். மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
    லார்கோ கதைகள் அனைத்தும் எனது ஃபேவரிட் கதைகள்.

    ReplyDelete
  70. // நமது மொழிபெயர்ப்பாளர் படித்து விட்டு தனது அபிப்பிராயத்தைச் சொல்லிட்டால் அதற்கேற்ப யோசித்திடணும் ! Meantime - உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ folks ? //
    ஸ்பின் ஆப் என்றாலே கொஞ்சம் ஜெர்க் ஆகுது சார்...!!!

    ReplyDelete
  71. // நிறைய ; ரொம்பவே நிறைய நேரம் தந்து பேனா பிடிக்க வேண்டியிருப்பது புரிவதால், கொஞ்சமாய் நேரம் கிட்டும் தருணத்தினில் இதை முழுசாய் மாற்றி எழுத தீர்மானித்துள்ளேன் ! //
    அடடா,நல்ல த்ரில்லிங்கான ஒரு அனுபவம் தள்ளிப் போயிடுச்சே...

    ReplyDelete
  72. // அடுத்த வாரத்தினில் புது புக்ஸ் சகலமும் புறப்படவுள்ள தருணத்தில் - சந்தா எக்ஸ்பிரஸில் தொற்றிக் கொள்ள முயற்சியுங்கள் ப்ளீஸ் ! //

    மார்ச்சில் ஏப்ரல் உண்டா சார் ???!!!

    ReplyDelete
  73. தாள்களின் அதிரிபுதிரி விலை உயர்வு கவலை அளிக்கிறது,எதிர்காலத்தை வளமாக கட்டமைப்பதும்,தொழில்களை சிரமமின்றி நகர்த்துவதும் ஆகச் சிறந்த சவால்களாக இருக்கும் போல...

    ReplyDelete
  74. A: அப்பாடா...கொரோனா கூட்டத்துலருந்து தப்பிச்சிட்டோம்ப்பா...

    B: ஊர அடிச்சி உலய்ல போட எப்டி அலையுறாங்க கொடிய பிடிச்சிக்கிட்டு - கொரோனாவாவது மண்ணாங்கட்டி யாவது...

    C: நாமள்லாம் ஜூஜூப்பீ கேப்டன்...
    ஏற்கனவே கொள்ளயடிச்சத மொதலாப் போட்டு - பெருங்கொள்ளக்கி ரெடியாகுறாய்ங்கே கேப்டன்...

    ReplyDelete
  75. A: காமிக்ஸ் கடல்ல நீந்த வா என் காமிக்ஸ் பிறப்பேன்னு சிவகாசி மய்யம் விடுத்த அறை கூவலுக்கு செவிமடுத்து வந்தது தப்போ...ஆளக் காணோமே...

    B: அப்டீன்னா...சந்தா கடல்ல இணைஞ்சிட்டீங்களான்னு கேக்குறாருன்னு அர்த்தம் தலீவரே...

    C: ஆஹா...கழக கண்மணிகள் கலக்குறாங்க ...கலக்குங்க...

    ReplyDelete
  76. A: என்னாங்க டா இது...ஒத்த கப்பலக் கூட காணோங் கொள்ளையடிக்கலாம்னா...

    B : கொரோனா 2.0 லாக் டவுணு போட்டாங்கே கேப்டன்...

    C : அதாம்ல அவனவன் மனம் போன போக்குல கொள்ளயடிச்சிட்டிருக்காங்கள்ல கேப்டன்...கழுவி ஊத்தி தொடச்சிட்டங்கே பாஸ்...நமக்கு உப்மா தாம் பாஸூ...

    ReplyDelete
  77. அசானின் மிக சிறந்த மொழிபெயர்ப்பில்.... எப்போதும் என்னை சிரிக்க வைக்கும் வார்த்தை......


    கிறிமுறிகிறிமுறிகிறிமுறி......


    எப்படி இதை தேர்ந்தெடுதீங்கோ ஆசான்.....

    இன்னம் சிரிப்பு வருது....😊😊😊😊😊

    ReplyDelete
  78. This comment has been removed by the author.

    ReplyDelete
  79. A..நம்ம காமிக்ஸ் ஆசான் ரொம்ப அறிவு....

    B.... இல்ல ரொம்ப அழகு....

    C.... விடுங்க பாஸ் நாளைக்கு வேற ஜோக் சொல்லுவோம்....

    ReplyDelete
    Replies
    1. இது செம்ம.. ஆனா எடிட்டர்தான் பாவம்..ஆனா சோசலிஸத்துல அதெல்லாம் பாக்க முடியாதே.

      Delete
    2. நான் என்ன வம்பிலுத்தாலும் கோச்சுக்க மாட்டார்..பத்து சார்...

      ஏன்னா நா தான் மதியில்லா மந்திரியாச்சே....ஹி ஹி

      Delete
  80. A.(காமிக்ஸ் ஆசான்)
    நண்பர்களே...உங்களுக்கு என்ன காமிக்ஸ் வேணும்...

    B.. வைரஸ் X
    C... விண்வெளி பிசாசு....

    A..(காமிக்ஸ் ஆசான்). மண்டைய எத்தனை முறை FORMAT பண்ணினாலும் இது மட்டும் போகமாட்டேங்குது....

    ReplyDelete
  81. A. என்ன பாஸ் தேடுறீங்க...
    B... ஏண்டா நம்ம கப்பலிலேயே கொள்ளை அடிசீங்க...
    C.... WORK FROM HOME.. பாஸ்...

    ReplyDelete
  82. A: என்னாங்க டா இது...நாம கொள்ளயடிக்க வந்த பேப்பர்(ஏத்தி) கப்பலு கவுந்து கெடக்குது...

    B : யாரோ சிவகாசிக்காரராம் பாஸ்... காமிக்ஸ் படம் காட்றவராம்...நம்மள முந்தீட்டாரூ பாஸ்...
    C: ரூம் போட்டு யோசிச்சி கொள்ளயடிப்பாங்களோ...

    ReplyDelete
    Replies
    1. A : சிவகாசிக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக் ஒரு டப்பா அனுப்பீருங்கடா...ஸ்ஸப்பா ...கண்ணக் கட்டுதே...

      Delete
  83. A. காமிக்ஸ் ஆசான் ஏன் TELESCOPE வெச்சு..லயன் காமிக்ஸ் ரசிகர்கள் முதுகையே வெறிச்சு பாக்குறார்...

    B....பேப்பர் விலை தாருமாறா ஏறுதாம்....


    C...புரிஞ்சிடுச்சு புரட்சி தீ ஸ்டைலில் முதுகில் பிரிண்ட் பண்ண போறாராம்...

    ReplyDelete
  84. A : கொரோனா பரவீரிச்சி...ஈஸியாக கொள்ளையடிக்கலாம்னீங்களே டா லகுடபாண்டீங்களா...அவனவன் கூட்டங்கூட்டமா திரியிறாங்கே...மாஸா மாஸ்க் இல்லாம கெடக்காங்கே...

    B : எலக்க்ஷன் முடியட்டும் கேப்டன்...நெறய பேரு உசிரோட இருக்கமாட்டாங்கே...நாம அடிச்சதுதாங்...கொள்ளன்னு இஷ்டத்துக்கு அடிக்கலாம் பாஸ்...

    C : பேசாம நாமளும் தேசிய நீரோட்டத்துல கப்பல திருப்பீடுவோம் கேப்டன்...ங்கொய்யால...

    ReplyDelete
  85. C: தலைவர் கையில டெலஸ்கோப் வச்சிருக்காரே,
    எதுக்கு?

    B: தூரத்துல வர்ற கப்பல பாக்குறதுக்குத்தான்..

    C நம்ம கண்ணுக்கு தான் பக்கத்துல வந்தாலே தெரியாதே..அப்புறம் ஏன்?..

    A. அதுக்குல்லாம் இல்லடா அரை மண்டையா.. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கைய தொலைநோக்குப் பார்வையோட தயாரிச்சு இருக்கோம்னு சொல்றாங்க. அத படிச்சுப் பார்க்கத்தான் இந்தத் தொலைநோக்கி..

    ReplyDelete
    Replies
    1. செம பார்மில் இருக்கீங்க போல தெரிகிறது.

      Delete
  86. வான் ஹாம். நமது ஆதர்ஷ எழுத்தாளர். அவர் எந்தவடிவில் வந்தாலும் வரவேற்கநாம் தயார். நமக்குப் பழக்கப்பட்ட நெரியோவிஞ்ச் கேரக்டர்மூலம் அவரது2. O வரும்போது ஆரவாரத்துடன்வரவேற்க்க நாம் தயாரல்லவா. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  87. லார்கோ 2.0 வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  88. A: கேப்டன் இங்கிருந்து பார்க்கும் போது சூயஸ் கால்வாய் தெரியுதா?

    B: ஏன் கேட்குற.....?

    A: இல்ல, அங்கே தரைத்தட்டி நிற்கும், ஒரு ராட்ஷஸ சரக்கு கப்பல, டன் டன்னாக ஆர்ட் பேப்பர் குவிந்து கிடக்காம். அதை மட்டும் ஆட்டையைப் போட்டா போதும், அதை வெளி மார்க்கெட்ல விற்று லைஃப்ல செட்டில் ஆயிடலாம்...!

    B: OK, சலோ, சூயஸ்.

    C: ஆசையே...அலைப் போலே.... நாமெல்லாம் அதன் மேலே....!

    ReplyDelete
  89. //வேறு வழியே இல்லாது, அப்படியே மொத்தத்தையும் திருப்பி அனுப்பி வைத்து, திருத்தி எழுதிடக் கோர வேண்டிப் போனது ! So 'இருக்கா' எழுதப்பட்டு ; 'இருக்கா' டைப்செட் செய்யப்பட்டு ; 'இருக்கா' எடிட்டும் செய்யப்பட்ட//

    எடிட்டர் சார்,

    தவறாக நினைக்க வேண்டாம். இப்பெல்லாம் இந்த வசனத்தை மறுக்கா மறுக்கா கேட்கற மாதிரி இருக்கு !!!

    ReplyDelete
    Replies
    1. அடியேன் inclusive, மொழிபெயர்ப்பு அணிக்கு வயசாகுதோல்லியோ சார் ; அதன் பிரதிபலிப்பே ! இள ரத்தம் need of the hour என்பது அப்பட்டம் !

      ஆனால் டமில் - டுமீல் ஆவதே இன்றைய தலைமுறையின் பேனா திறன்களாய் இருப்பதை சங்கடத்துடன் பார்த்து வருகிறேன் ! சத்தமின்றி கடந்த ஓராண்டில் நிறைய பேரை பரிசீலித்து வருகிறேன் சார் - அதுவரையிலும் ஜெயம் நஹி !

      Delete
  90. C - கேப்டன்! மழை கொஞ்சம் வெறிச்ச மாதிரி இருக்கு, இப்பவாச்சும் கரைக்கு வழி கண்டுபுடிங்க.
    A - டோன்ட் வொறி மை பாய்ஸ்!! இந்த தடவை கண்டிப்பா மிஸ்ஸாவாது. Wheel புடிக்கிற தம்பி, அப்படியே ரைட் திரும்பி ஒரு U-turn போடு!!
    B (மனதிற்குள்) - என்னது U-turnஆ! அடப்பாவிங்களா! போற போக்க பாத்தா ஒரு எலும்பு கூட மிஞ்சாது போலருக்கே!!

    ReplyDelete
  91. A. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை!

    B. ஆமா..!! ஆமா..!!

    C. (மனதிற்குள்) ஆனா காலுக்கடியில் இருப்போம்!

    ReplyDelete
  92. Caption contest
    Entry 1
    A: நீண்ட நாளா நாம பயணிச்சு தமிழ்நாடு வந்துட்டோம். இனிமே ஜாலியோ கொள்ளையோ தான்
    c: போட்டுத்தாக்குங்க கேப்டன்.
    B(mindvoice): யோவ். அங்கே எலக்ஷன் நேரம்யா. கட்சிக்காரன் மேக்கப் போட்டு வந்திருக்கான்னு தான் நினைப்பாங்க. பயப்பட மாட்டாங்க

    Entry 2
    A: நீண்ட நாளா நாம பயணிச்சு தமிழ்நாடு வந்துட்டோம். இனிமே ஜாலியோ கொள்ளையோ தான்
    c: போட்டுத்தாக்குங்க கேப்டன்.
    B(mindvoice): நல்ல பேப்பர் மில்காரனா பாத்து கொள்ளையடிப்போம். இப்ப அவங்ககிட்ட மட்டும் தான் துட்டு இருக்காம்

    Entry 3
    B (mind voice): கேப்டன் ஜாக் ஸ்பாரோ இலக்கை எத்திட்டான். இப்ப வசனம் பேசுவான் பாரேன்.
    A: தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு. இலவச கொரோனா தடுப்பூசி போடணும்
    C: வாக்சினை எலும்புல தான் போடணும்

    Entry 4
    C : கேப்டன் பார்போஸா. பாம்பே எத்திட்டோம்.
    A : ஆமா. இன்னிக்கி செம வேட்டை தான்
    B (mind voice): தங்கத்தோட சேத்து கொரானாவையும் வாங்கப்போறான் எலும்பு வாயன்


    Entry 5

    C : கேப்டன் நாம கொ.மா.பு.க கட்சிக்கு ஒட்டு போட போறமா, இல்ல பு.மா.கா.ய கட்சியா?
    A : இந்த தடவை க.சா.மு.சா கட்சிக்கு டா
    B (mind voice): பல வருஷமா இவன்வோளுக்கு ஓட்டு போட்டு தான் இப்படி சாபத்துக்கு ஆளானோம்கிறத மறந்து இப்படி எலக்ஷன் ஜூரத்துல இருக்கானுவோளே

    Entry 6
    C (ஆக்டிவ் வாசகர்கள்): இந்த வருஷம் கண்டிப்பா எங்க ஆசைக்கு இணங்க மேக்சி சைஸ் கலர் மாடஸ்டி வேணும்
    A (ஆசிரியர்): பெரும்பாலான வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இதை நான் வழி மொழிகிறேன்
    B (சைலன்ட் வாசகர்கள்) : வைக்கறோம்டி ஆப்பு

    Entry 7
    C: கேப்டன் அந்த பைனாகுலர்ல நிலம் தெரியுதா?
    A: ஆமாண்டா. செழிப்பான இடத்துக்கு வந்துட்டோம்.
    B (mindvoice): ங்கொ..ல. கண்ணே இல்ல. பாக்குறானாம்

    Entry 8
    C : கேப்டன் சிவகாசி வந்திருச்சா
    A : வந்தாச்சி.
    B (mind voice): டேய் கண்ணில்லாத பொக்கைகளா. சிவகாசில கடல் எங்கேடா இருக்கு???

    ReplyDelete
  93. மார்ச்சில் ஏப்ரல் உண்டா?

    ReplyDelete
  94. A: எடோ கோபி கண்ணுக்க்கு எட்டின தூரம் மட்டும் ஞான் எதுவும் கண்டுட்டில்லா
    C: ஆசானே நாம இருக்கிறது சூயஸ் கால்வா முன்னாடி பார்த்தா ஒன்னும் தெரியாது கொஞ்சம் பின்னால பாருங்க மொத்த கப்பலும் ஜாம் ஆகி நிக்கிது
    B: அடடா ஒர்க் பண்ணாத காம்பசை வச்சுக்கிட்டு இந்த கேப்டனோட அலப்பறை தாங்க முடியல யாரவது இவன சூப் வச்சு குடிங்கப்பா!!!

    ReplyDelete
  95. A: ஓட்டு கேட்டு கரையோரமாகவே சுத்திகிட்டு இருக்கானுக. கடல்ல காலை
    வச்சானுகனா லபக்கிக்கிட்டு போய் லம்ப்பா, பணய தொகைய தேத்திருலாம்னு
    பாத்தா நடக்க மாட்டேங்குதே?, சே!!!

    C: இந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டா அடுத்தது 5 வருஷம் கழிச்சுத்தான்.
    அப்பத்தான் இவனுகள இங்க பாக்க முடியும். வல்லிய சான்சு மிஸ்சாகுதே!!!?
    என்டே அம்மே!!!

    B: இங்க தேவுடு காக்கறதுக்கு பதிலா நடுக்கடலுக்கு போய் சுறா,
    திமிங்கலம்னு வேட்டையாடி சாப்பிட்டு உடம்பையாச்சும் தேத்தலாம். அதுக கூட
    இவனுக அளவுக்கு ஆபத்தானதுக இல்ல. சொன்ன கேக்கவா போறாங்க?? ஹூம் , என்னவோ
    போடா மாதவா!!!

    ReplyDelete
  96. This comment has been removed by the author.

    ReplyDelete