Thursday, March 11, 2021

போர்முனையில் தேவதைகள் !

 நண்பர்களே,

வணக்கம். சென்னைப் புத்தக விழா அழகாய் நிறைவுற்றிருக்க, நம்மவர்கள் இன்று காலை ஊர் திரும்பினர் ! விற்பனை சார்ந்த தகவல்களும், நம்பர்களும் என் மேஜையில் கிடக்க, நானோ SODA சார்வாளோடான பயணத்தில் பிசி ! அவருக்கும், சிக் பில்லுக்கும் முதல் மரியாதை செய்தான பின்னே, சென்னையின் புள்ளிவிபரங்களுக்குள் புகுந்திட உத்தேசித்துள்ளேன் ! So இந்த வாரயிறுதிக்கான பதிவில் அது பற்றி !

In the meantime - நெடுநாள் கழித்து ரெகுலர் பதிவுகள் 300+ என்ற பின்னூட்ட எண்ணிக்கைகளைத் தொடத் துவங்கியிருக்க, கம்பெனி ரூல்ஸ்படி உபபதிவு அவசியமென்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டிப் போனது ! மார்ச்சின் புது புக்ஸ் இன்னமும் மெருகுடனே தொடரும் வேளையினில் - ஏப்ரலுக்குள் பார்வைகளை ஓடச் செய்வது ரொம்பவே premature ஆக இருக்கும் என்பதால், வேறொரு திக்கில் இந்த உ.ப. இருந்திடல் நலமென்று பட்டது ! So 2021-ன் சந்தாவினில் எஞ்சி நிற்கும் ஒற்றை காலி ஸ்லாட்டைப் பூர்த்தி செய்திடவுள்ள இதழைப் பற்றிச் சுருக்கமாய் ஒரு preview செய்ய நினைத்தேன் !!

போர்முனையில் தேவதைகள்...!

ஜம்போ சீசன் 4-ன் இறுதி இடத்தினில் மிளிரவுள்ள இதழ் இதுவே !! உலக பெண்கள் தினத்தன்று இந்த இதழை அறிவிக்க நினைத்திருந்தேன் - ஆனால் நம்ம மாயாவி சார் அதிரடியாய் கவனங்களைத் தனதாக்கியதால், சாத்தியப்படவில்லை ! மாமூலான ரகக் கதைத் தேடல்களுக்கு அவசியங்களின்றி ; நாயக பிம்பங்களின் பின்னான ஓட்டங்களின்றி, வித்தியாசமான கதைகளை களமிறக்க ஜம்போ நமக்கு ரொம்பவே உதவிடுவதில் no secrets ! நீங்கள் தரும் அந்த சுதந்திரமே தினுசு தினுசான ஜானர்களையும் பரிசீலிக்கும் தகிரியத்தை எனக்கு நல்கிடுகிறதென்பதிலுமே no secrets too ! அத்தகையதொரு ஜாலியான தேடலின் போது கண்ணில்பட்ட ஆல்பம் தான் "போர்முனையில் தேவதைகள்!

ரொம்பவே சமகாலத்துக் கதையிது என்பதோடு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தான் பிரெஞ்சிலேயே வெளியாகியுள்ளது என்பதும் highlight ! மத்திய கிழக்கில் யுத்தம் அரங்கேறி வரும் பின்னணியில், ISIS ; ஜிகாத் என பேப்பர்களிலும், டிவி நியூஸ்களிலும் நாம் கேட்டிடும் விஷயங்களை முற்றிலுமொரு புது பார்வைக்கோணத்தில் காமிக்ஸ் படைப்பாக, அட்டகாசமான சித்திரங்களுடன் உருவாக்கியுள்ளனர் ! இதில் icing on the cake என்ன தெரியுமோ ? கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாய் தீவிரவாதம் சார்ந்த கேஸ்களை விசாரிக்கும் ஜட்ஜாக இருந்தவரே இங்கே கதாசிரியருக்கு முக்கிய ஆலோசகர் ! பெண்களும் போர்முனைக்குப் பயணம் செய்திட நினைக்கும் போது அதனைத் தடுக்க நினைக்கும் பிரெஞ்சு உளவு அமைப்பு ; அவர்களோடு அந்தப் பெண்கள் நடத்தும் ஆடுபுலியாட்டம் ; செம வித்தியாசமான க்ளைமாக்ஸ் - என இந்த ஆல்பம் தெறிக்கும் வீரியத்துடன் தட தடக்கிறது ! 




லொடக் லொடக்கென பாலைவனங்களுக்குள் குருதையில் நமது நாயகர்கள் அடிக்கும் ஷண்ட்டிங்கிலிருந்து இது நிச்சயம் ஒரு செம மாற்றமாய் இருக்கும் என்று சொல்வேன் ! And இந்த one shot ஆல்பத்தை உருவாக்கியுள்ள அதே படைப்பாளிகளே ஒரு ஆர்ப்பரிக்கும் முப்பாக ஆக்ஷன் த்ரில்லரையுமே உருவாக்கியுள்ளனர் ! சொல்லப்போனால், அந்த 3 part ஆல்பத்தின் அதிரடி வெற்றிக்குப் பின்னர் தான் "போர்முனையில் தேவதைகள்" ஆல்பமே திட்டமிடப்பட்டுள்ளது ! அந்த 162 பக்க சாகசமானது மதம் சார்ந்த பின்னணியுடனான கதை என்பதால், அது நம் வாசக வட்டத்தினை எவ்விதத்திலும் சங்கடப்படச் செய்யாத விதமாய் இருக்குமா ? என்ற பரிசீலனைகள் ஓடிக்கொண்டுள்ளன ! அது ஓகே.எனில் - 2022-ல் ஒரு மிரட்டலான ரகளை ரெடியென்பேன் ! 

So ஒரு பக்கம் 55 வருஷங்களுக்கு முன்னே உருவான கதையினை  வண்ணத்தில் பார்க்கக் கச்சை கட்டி வரும் அதே வட்டமானது, ஒரு செம current சாகஸத்தையும் (சு)வாசிக்கவுள்ளது ! இந்தியாவின் நீள அகலங்களை அலசினாலுமே உங்களை போன்றதொரு பன்முகத்தன்மை கொண்ட (காமிக்ஸ்) வாசக வட்டத்தைக் கண்ணில் பார்க்கவே சாத்தியப்படாது ! பீட்சாவும் ஓ.கே. ; மோர்சாதமும் ஓ.கே. எனும் போது - சமையல் மாஸ்டராக இருப்பது செம உற்சாக அனுபவமாகிடுகிறது !!  

ஆக ஜம்போ சீசன் 4 -ன் பட்டியல் இதுவே :

  1. ஜெரோனிமோ - ஒரு தலைவனின் கதை
  2. அண்டர்டேக்கர் - ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்
  3. One Shot க்ரைம் த்ரில்லர் - சித்திரமும் கொலைப்பழக்கம்
  4. One Shot க்ரைம் த்ரில்லர் - வைகறைக் கொலைகள் (Black & white )
  5. One Shot Fiction - உளவும் கற்று மற (மாத்தா ஹாரியின் கதை)
  6. One Shot Fiction - போர்முனையில் தேவதைகள் 

சந்தா எக்ஸ்பிரஸுக்கான சகல முஸ்தீபுகளும் நம் தரப்பில் பரபரப்பாய் நடந்தேறி வருகின்றன ! And கடந்த ஒரு வாரமாய் அதனில் இடம் பிடிப்பதில் நீங்கள் முனைப்பு காட்டத் துவங்கியுள்ளது உற்சாக மீட்டர்களை பரபரக்கச் செய்து வருகின்றன ! சந்தாக்களில் இணைந்திட இதே வேகமும், உத்வேகமும் தொடரின் - 2021 ஒரு ரகளையான பயணமாய் அமைந்திடுமென்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு ! And நினைவூட்டுகிறேன் folks - "கழுகு வேட்டை" கலர் புக்கில் உங்கள் போட்டோக்கள் இடம்பெற்றிட வேண்டுமெனில் உங்கள் சந்தா நம்பர் + போட்டோ - என இரண்டையும் அனுப்பிட மார்ச் 15 தான் கடைசி நாள். So please hurry !!

ரைட்டு...பணிகளைத் தொடர நான் கிளம்புகிறேன் ! See you around all ! Bye for now !!

159 comments:

  1. சர்பத் கடை சடகோபன் first !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சார்

      Delete
    2. வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்..:-)

      Delete
  2. எந்த முகவரிக்கு போட்டோ அனுப்பனும் சார்?

    ReplyDelete
  3. டாப் டென்ல வந்தது ஹேப்பிங்ங்

    ReplyDelete
  4. சார் எதோ புதுப்பது ரூட்ல வண்டியகிளப்புறாரு. தம்பி மைதீன் கத்தரிக் கோல ரெடிபண்ணுங்க. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. மக்களே...நான்பாட்டுக்கு இருக்க, கத்திரியை ஞாபகப்படுத்தறது ராஜசேகரன் சார் தான் !

      Delete
    2. ராஜசேகரன் ஜி@ வெய்ய காலம் பாருங்க... கொஞ்சம் ப்ரியாத்தான் இருக்கணும்.

      கத்திரிக்கோலை போய் ஞாபகப்படுத்தலாமோ... அதை ஒளித்து வைக்க நாங்க பட்டபாடு இருக்கே...ஹீம்....

      பிரியரே கரூராரை கொஞ்சம் கவனிங்க😉

      Delete
    3. கரூர் கார்க்கு கட்டம்/நேரம் சரியில்லை சார்..‌ அவரை எவ்ளோ நேக்கா ஜிவ்வ்காசி கா(சா)ர் நம்ம கிட்ட கோத்து வுட்டாருன்னு பாத்தீங்களா??? கத்திரி ன்னு
      யாராச்சும்சொன்னாா பிச்சு பிச்சு... /*இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்* _/\_

      Delete
  5. அப்போ இந்த வருஷம் BOND 2.0 இல்லிங்களா சார் ..

    ReplyDelete
    Replies
    1. சாரி..ப்ரோ ! 2022 ல் ரெகுலர் தடத்தில் 007 ஆஜராகிறார் ! ஜம்போவில் எல்லாமே one shots என்று வைத்துக் கொள்வோமே ? அண்டர்டேக்கர் தொடர்ந்திடும் பட்சதில் அவரும் இனி ரெகுலர் track ல் தான் !

      Delete
    2. நல்ல செய்தி சார். அப்படியே தனி ஒருவனையும் ரெகுலர் தடத்துக்கு????

      Delete
  6. ஜம்போ சீசன் - 4.... ஒரே மாதத்தில் இந்த ஆறு புத்தகங்களும் ஒன்றாக கிடைத்துவிடாதா.... என ஏங்க வைக்கிறது உங்கள் அற்புத selection...

    ReplyDelete
    Replies
    1. ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள் டாக்டர் சார்.

      Delete
    2. ஒரு வட்டத்துக்குள் அல்லாது பரந்த மைதானத்தில் இஷ்டத்துக்கு ஓடிக்கலாம் என்ற சுதந்திரம் கிடைக்கும் போது தானாய் சில கதைகள் கண்ணில்படுகின்றன சார் ! நீங்கள் வழங்கிடும் அந்த carte blanche தான் அதன் பிரதான காரணம் !

      Delete
  7. ///ரொம்பவே சமகாலத்துக் கதையிது என்பதோடு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தான் பிரெஞ்சிலேயே வெளியாகியுள்ளது என்பதும் highlight!///


    நாமளும் (காமிக்ஸ்)வல்லரசாயிட்டோம்..!

    ReplyDelete
    Replies
    1. ///நாமளும் (காமிக்ஸ்)வல்லரசாயிட்டோம்///!

      யெஸ்ஸூ...!

      ப்ரெஞ்சுலயே வராத புக்கை சந்தாவுல சேர்த்து இருக்கோம் மாம்ஸ். அதற்கு என்ன பெயர் சொல்லி அழைப்பது.? சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மாதிரி நச்சுனு ஒன்று சொல்லும்!

      Delete
    2. புல்லட் :-) சிங்கான் சென் (ஜப்பான் மொழியில் புல்லட் இரயில்) என வச்சுக்கலாம் விஜயராகவன்.

      Delete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. உப்புமா போட்டோ போடுவீங்களா???

    ReplyDelete
    Replies
    1. 'புக்கே உப்மா' என்று சொல்ல ஆளிருக்கையிலே உப்புமாவை புக்கிலே போடாட்டி எப்புடி ? ஜமாய்ச்சுப்புடுவோம் !

      Delete
    2. கழுகு வேட்டை-- யை பார்த்தபின்பு திருப்பூரிலும் பெங்களூரிலும் சிலபல அபிப்ராயங்கள் மாறும் சார்.

      Delete
    3. சோ ஸ்வீட் எடி சார் :-)

      Delete
    4. // 'புக்கே உப்மா' என்று சொல்ல ஆளிருக்கையிலே உப்புமாவை புக்கிலே போடாட்டி எப்புடி ? ஜமாய்ச்சுப்புடுவோம் //

      :-) :-)

      Delete
  10. சார் வணக்கம். சமகாலத்துக் கதைகள் நிறைய வருவது சந்தோசம். நாமளும் காமிக்ஸ் வல்லரசாயிட்டோம்.இதைவிட மகிழ்ச்சியான விசயம் வேறென்ன இனிமேல். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  12. வெல்கம்போர்முனையில் தேவதைகள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  13. போர்முனையில் தேவதைகள் - மிக வி்த்தியாசமான கதைக்களமாகத் தெரிகிறநு.
    ஆவலுடன் வெய்ட்டிங. இதை முதல புத்தகமாக வெளியிடலாமே சார்!

    ReplyDelete
  14. போர்முனையில் தேவதைகள் - மிக வி்த்தியாசமான கதைக்களமாகத் தெரிகிறநு.
    ஆவலுடன் வெய்ட்டிங. இதை முதல புத்தகமாக வெளியிடலாமே சார்!

    ReplyDelete
  15. மன்ஹாட்டன் மரணங்கள்:
    கொஞ்சம் கிளுகிளுப்பு,
    கொஞ்சம் விறுவிறுப்பு,
    கொஞ்சம் பரபரப்பு...

    சிக்கலில்லாத நேர்கோட்டுப் பாணி,திருப்தியான வாசிப்புக்கு உத்தரவாதம்...

    எமது மதிப்பெண்கள்-8/10.

    ReplyDelete
  16. அனைத்தும் ஒன் ஷாட் ...


    ஷாட் குறி தவறாமல் போகும் என்ற நம்பிக்கை பலமாகவே உண்டு சார்...


    காத்திருக்கிறேன்...!

    ReplyDelete
  17. டைலன் டாக்:
    ஒரு கனவு இல்லம்:
    பிரம்மாண்டமான செல்வங்கள் தராத திருப்தியை உயரிய நேசமும்,எதிர்பார்ப்பில்லாத அன்பும் தரும் இதுவே உளவியலின் அடிப்படை என்று நம்புகிறேன், மனித குல எதிர்பார்ப்பும் அதுவே...
    எதிர்பார்க்கும் நேசம் கிட்டாவிடில் ஏமாற்றமடையும் மனமானது எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கும் வியப்பில்லை...
    இக்களத்தின் அடிநாதமும் அதுவே...
    எதிர்பார்த்த நேசம் கிடைப்பின் பெரும்துயர சம்பவங்கள் கூட நிகழாமல் கூட போகலாம்...

    ஓப்பனிங் சீனே மிரட்டல்தான்...
    சிறுகதை மாதிரி டக்குனு படிச்ச உணர்வு...
    வண்ணத்தில் டைலன் அசத்துகிறார்...
    ஓவியங்கள் நச் இரகம்,காட்சிகள் மிரட்டல் இரகம்...
    கனவு இல்லம் Short and Sweet..
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
  18. தேவதை களுக்கு வெல்கம் வெல்கம் ....

    ஜம்போ சீசன் 4 சும்மா பட்டையை கிளப்ப போகிறது.

    ReplyDelete
  19. நல்ல நல்ல கதைகளை தேடிப்பிடிக்கும் பாணிக்கு ஹாய் சொல்லி ஜம்போ நெக்ஸ்ட் லெவலில் ஸ்பீடாமீட்டரை எகிற வைத்திருப்பதால் அத்தனை புது வரவுகளுக்கும் நல்வரவினையும் தங்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்திட விழைகிறேன்..

    ReplyDelete
  20. எத்தினி தேவதை வந்தாலும் எனக்கு புடிச்ச தேவதை Kriss of Valnor மட்டுமே...

    ReplyDelete
    Replies
    1. +1000 ஹிஹிஹி செம்ம செம்ம மஹி

      Delete
    2. இல்லத்து தேவதைக்குமே அது தெரியும்ங்களா ? பொது அறிவுத் தகவலாச்சே - காதிலே போட்டு வைக்கலாமில்லியா ?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. காதிலே போட்டு வைக்கலாமில்லியா ?//

      ஏதோ பொம்மை புக்கு படிச்சிட்டிருக்கேன்னு விட்டு வைச்சிருக்காங்க. அதுக்கு வேட்டு வைச்சுருவாங்க போலிருக்கே.

      காமிக்ஸ் படிக்கறவங்களை endangered species list ல சேத்தறதுக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணனும்.

      Delete
    5. // இல்லத்து தேவதைக்குமே அது தெரியும்ங்களா ? பொது அறிவுத் தகவலாச்சே - காதிலே போட்டு வைக்கலாமில்லியா ? //

      :-) :-)

      Delete
  21. போர்முனையில் தேவதைகள் செம தலைப்பு சார். செம செம.

    ReplyDelete
  22. """போர்முனையில் தேவதைகள்""-- பிரிவீயூ பேஜ் பார்த்தா "ப்ரித்வி"
    விளம்பரம் போலயே இருக்கு.

    கதை முழுதும் செமயா இருக்கும் போலயே....!!!

    ReplyDelete
    Replies
    1. ப்ரித்வியா? உங்களுக்கு சுடர்மணியே ஜாஸ்தி இப்படி அடிக்கடி கட்சி மாறினா அமாயாவின் வாழ்க்கை என்ன ஆவுறது?

      Delete
    2. அமாயா, ஷானியா எல்லாம் பரண்ல வெச்சி பூட்டிட்டாங்க!

      அந்த மன்றங்களை கலைத்து மாமாங்கம் ஆச்சு.

      Delete
    3. பரவாயில்லை அமாயாவிற்காக டீ குடிங்க, எடி சார் பயந்து ஸ்பெஷல் டைஜெஸ்ட் போட வாய்ப்பிருக்கு

      Delete
    4. டீ குடிச்சா எப்படி டைஜஸ்ட் போடுவாருனு ரோசிக்கும் சனங்களுக்கு,
      அது அமாயாவுக்காக தீ குளித்தா ஸ்பெசல் போடுவாராம். கோடு வேர்டு.

      பெறவு அமாயாவை கவனிப்பது ஆராம்???

      Delete
    5. அமையா நற்பணி மன்ற ரசிகர்கள் அதை பார்த்துப்பாங்க, உங்க வீட்டம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சா சூப்பர்மேன் மாதிரி பார்வையாலேயே உங்க மூக்கை பணால் பண்ணிடுவாங்க. மன்றம் சார்பா கொஞ்சம் burnol தரோம்.

      Delete
    6. ஹல்லோ ஜிஸ்டர் இது வாலிப வயசு... /*இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்* _/\_

      Delete
    7. அண்ணே அது அந்தியா இல்லை தொந்தியா?

      Delete
    8. உடன்பொறப்ப தப்பா பேசப்படாது ஜிஸ்டர்... உட்டா நம்ம கிளப் பேர /அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் ஓல்டு பாய்ஸ்*/ ன்னு மாத்திடுவாங்க போல...

      Delete
    9. அப்பிடியே இந்த வரியையும் சேர்த்துக்கோங்க "அதி தீவிர உப்புமாவும் அதில் விளைத்த எவெர்க்கும் அஞ்சா தொந்தியும் கிளப்புகடை பாய்ஸ்"

      Delete
    10. அனு சகோ.. 😁😁😁😁😁😁

      Delete
    11. அண்ணணுங்களை இப்படில்லாம் வகை தொகை தெரியாம பயப்படுத்தப் படாது ஜிஸ்டர்... பூஞ்சை இதயம்ல இம்புட்டு அதிர்ச்சிய தாங்காது 😁😁😁

      Delete
  23. சார் 'தேவதை'யின் அட்டைப்படம் அபாரம்!! அதைப் பார்த்ததுக்கப்புறம் கீழே நீங்க எழுதியிருப்பதெல்லாமே மசமசன்னுதான் தெரியுதுன்னா பார்த்துக்கோங்களேன்!! தேவதைகளின் ஜாகஜங்களை கண்டிடடவும் ஆவல்!!

    ஜம்போ சீஸன்-4 கதைத் தேர்வுகள் எல்லாமே திணுசு திணுசாய் பட்டையைக் கிளப்புகிறது!

    ReplyDelete
  24. தேவதை...

    தேவதை..தேவதை..தேவதை...

    அவளொரு தேவதை..

    (பாட்டாவே பாடிட்டேன்) :-)

    ReplyDelete
    Replies
    1. GP வரவர உங்க குறும்பு கூடிகொண்டே போகிறது.

      Delete
  25. சலாம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க.

    ReplyDelete
  26. ஜம்போ தேர்வுகள் என்னை மகிழ்ச்சியில் ஜம்ப் போடவைத்தன.2022ல் ஜம்போ இதழ்களை 12 ஆக்கினால் நாங்க ரொம்பவும் ஹேப்பியாவோமுங்க.நீங்கள் செய்வீர்களா ஆசானே?!

    ReplyDelete
  27. சகோதரி அனு உற்சாகத்துடன் வந்து கலக்கறாங்களே.வெல்கம் அனு சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் சரவணன்

      Delete
    2. உப்புமா'ன்னாலே உடன்பிறப்புக்கு உற்சாகம் ஊற்றெடுக்கும்ற உண்மைதான் ஊரறிஞ்ச சமாச்சாரமாச்சே! :)

      Delete
    3. எனக்கே கண்ணுல உப்பு கரிக்குது. விஜயண்ணா இதோட ஆள விடுங்க. தற்போது நான் ஜில்லுனு ஐஸ்கோல்டு காபிக்கு மாறிட்டேன்.வெயில் மண்டைய பிளப்பதால் காலையில் ரெண்டு கிளாஸ் கோல்டு காபி தான்.

      Delete
    4. பஞ்சதந்திரம்' படத்தில் நாகேஷ் குடிக்கும் 'அதே' ஐஸ்கோல்டு காப்பிங்களா சகோ?!! ம்.. நடத்துங்க நடத்துங்க! :P

      Delete
    5. அது போன வாரம் பா. இந்த வாரம் அனு குட் கேர்ள்.

      Delete
  28. போர்முனையில் தேவதைகள்+மாத்தா ஹாரி செம ஹிட்டடிக்கப் போவது உறுதி.வித்தியாசமான ஜானர்களில் காமிக்ஸ்களைச் சுவைப்பது ஒரு தனி ரசனை தான் .ஆசிரியர் அவர்களுக்கு அனேக நன்றிகள்.

    ReplyDelete
  29. மிண்டி!

    'வழியனுப்ப வந்தவன்' கதையில் இடம்பெறும் ஒரு கருப்பின வேசியின் பெயர்!!

    மொத்தக் கதையிலும் மிக மிக பாவப்பட்ட ஜென்மம் இதுவே!

    பிழைப்புக்காக - வேசி தொழில்! தொழிலில் ஏற்படும் ரணங்களை மறக்க - போதைப் பொருளின் சகவாசம்! எந்தத் தவறும் செய்யாமலேயே கொலைப்பழி & சிறைவாசம்! இறுதியில், குறிதவறிய தோட்டா நெஞ்சில் பாய்ந்து உயிரையும் இழந்த பரிதாபம்!

    உச்.. உச்.. உச்! பாவம்ல?

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப பாவமா இருக்கு மிண்டியை பார்த்தா...!!!

      அந்த கொலைப்பழியை கூட ஒருவேளை கஞ்சாவுக்காக ஏற்று கொண்டு விட்ட பாவப்பட்ட ஜீவன்.

      பிரிவோம் சந்திப்போம்ல இதேபோல 2ஜீவன்கள் சுட்டுத்தள்ளப்படும்போதும் இப்படி தான் இருந்தது!!😢😢😢

      Delete
    2. ///அந்த கொலைப்பழியை கூட ஒருவேளை கஞ்சாவுக்காக ஏற்று கொண்டு விட்ட பாவப்பட்ட ஜீவன்.///

      யெஸ்!! பாவம்!!

      Delete
  30. மேலே அட்டைப்படத்தில், நிலைக்கண்ணாடியின் முன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அந்த தேவதையைப் பார்த்தால் ஒரு சாயலில் (பூப்போட்ட டவுசரின் செக்கரட்டரி) ஸ்டெல்லாவைப் போலவே இருக்கிறது!

    எனது கருத்து உங்களுக்குப் பிடித்திருந்தால் 'லைக்' செய்யுங்கள்!

    ரொம்பப் பிடித்திருந்தால் 'ஷேர்' செய்யுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்பப் பிடித்திருந்தால் ஆரும் 'ஷேர்' பண்ண மாட்டாங்களே ? திங்கிங் !

      Delete
    2. 'ஸ்டெல்லா'மாரிஸும், க்வீன் மாரீஸும் தென்றல் வீசிடும் பூந்தோட்டம்...
      உங்கள் கருத்துக்கு லைக் செய்வதை விட கருத்துக்கான காரிகைக்கு லைக் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

      Delete
    3. ///ரொம்பப் பிடித்திருந்தால் ஆரும் 'ஷேர்' பண்ண மாட்டாங்களே ? திங்கிங்///

      செம திங்கிங் சார்! :)))

      ///ஸ்டெல்லா'மாரிஸும், க்வீன் மாரீஸும் தென்றல் வீசிடும் பூந்தோட்டம்...///

      பத்து சார்.. GPயை அடுத்து இப்ப நீங்களும் கவிதையா..?!!

      அட்டைப்படத்துக்கே இம்புட்டு கவிதைகள் வந்து கொட்டுதே.. புத்தகம் வெளியானா இது புலவர்கள் நிறைந்த கவியரங்கமாயிடும் போலிருக்கே?!

      இப்படிக்கி,
      ஈரோட்டு எளிமைக் கவி

      Delete
    4. ஐயா கவிதை என்பதை சத்தமாக சொல்லாதிங்க அப்புறம் நம்ம கோவை கவிஞர் கவிதை மழை பொழிய ஆரம்பித்து விடுவார்:-)

      Delete
    5. வரவர இங்க ஒரே ஜொள் மழையா கொட்டுது. எதுக்கும் பெரியவங்க எல்லாம் வாக்சின் போட்டுருங்க

      Delete
    6. ////எதுக்கும் பெரியவங்க எல்லாம் வாக்சின் போட்டுருங்க///

      தலீவரே.. சகோ சொல்லிட்டாங்கள்லே.. போய் வாக்சின் போட்டுக்கங்க.. அப்படியே எதிரணித்தலைவரையும் கூட்டிட்டுப் போயிடுங்க!

      Delete
    7. அதெல்லாம் போட்டு பத்து நாட்கள் ஆயிடுச்சு சார்.. பர்ஸ்ட் லாட்ல நமக்கெல்லாம் /*இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்* _/\_

      Delete
  31. டாக்டர் நோ - இப்படியா எங்கள் 007 சித்திரவதை செய்வீர்கள், ஓ நோ! எப்படி ஜேம்ஸ் டாக்டர் நோவை சித்திரவதை செய்யாமல் இப்படி பறவைகளின் எச்சத்தை கொட்டி பொசுக்குன்னு கொன்னுட்டிங்க!

    நேர்கோட்டு கதை என சொன்னாலும் இந்த டாக்டர் யார் அவர் தீவில் இருக்கும் ரகசியம் என்ன அவரின் திட்டம் என்ன என்று பல சுவாரஸ்யமான முடிச்சுகள் என்னை கட்டி போட்டு கதையோடு ஒன்ற செய்து விட்டது.

    குறை என காண்பது: எழுத்து பிழைகள்!

    டாக்டர் நோ - எஸ் டாக்டர்!

    ReplyDelete
    Replies
    1. படிக்கத் தூண்டும்படியான விமர்சனம்!

      நீங்க டாக்டர்..டாக்டர்'னு சொன்னதுமே சிலபல மாதங்களாக இங்கே காணாமல் போயிருக்கும் நம் வரலாற்று டாக்டரின் ஞாபகம் வந்துவிட்டது! மார்ட்டின் கதையெல்லாம் வேற ரிலீஸ் ஆகியிருக்கு.. அவருமாதிரி யாராவது வந்து ஆராய்ச்சி பண்ணி சொன்னாத்தானே நமக்கும் நாலு கதை புரிஞ்சாப்ல இருக்கும்னேன்?

      சீக்கிரமா வாங்க டாக்டர்!

      Delete
  32. கௌபாய் எக்ஸ்பிரஸ் - காமெடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.

    ReplyDelete
  33. போர்முனையில் தேவதைகள் - அட்டைப்படமே பல கதைகள் சொல்கிறது! ஓவியருக்கு அட்டகாசமான சிந்தனை!

    ReplyDelete
    Replies
    1. ///போர்முனையில் தேவதைகள் - அட்டைப்படமே பல கதைகள் சொல்கிறது!///

      இன்னிக்கு நைட்டு ஃபோன் பண்றேன்.. அதுல ஒரு கதையாவது சொல்றீங்க நீங்க!

      Delete
    2. வாங்க என் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நேரத்தில் உங்களையும் சேர்த்து கொள்கிறேன் :-)

      Delete
    3. இந்த பக்கங்களை வெச்சி எங்களை மாதிரி கொயந்தைகளுக்கு தானே "கதை" சொல்ல இயலும் PfB😉

      Delete
  34. செயலர்ஜி like கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ராஜசேகர்ஜி!

      Delete
  35. டியர் விஜயன் சார்...

    கழுகு வேட்டை இதழுக்காக போட்டோ lioncomics@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தாயிற்று.

    எனக்கு இன்னும் இரண்டு இதழ்கள் கழுகு வேட்டை தேவைப்படும் (இதே போட்டோவுடன்). அதற்கான தொகையை தங்கள் வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைத்தால் போதுமா சார் ?

    மொத்தம் மூன்று புத்தகங்களாக பெற்று கொள்ள முடியுமா ?

    நன்றி
    திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. சார்.. எனக்குமே கூட இன்னொரு இதழில் அதே ஃபோட்டோவுடன் தேவை! உங்கள் பதில் புளீஸ்?

      Delete
    2. இது செம டீலிங்கா இருக்கே...

      Delete
    3. முதற் சுற்றில் சந்தா இதழ்களுக்கான பணிகளை முறையாய் நிறைவு செய்வதே நமது priority ! எக்ஸ்டரா பிரதிகள் ; சந்தாவினில் அல்லாதோருக்கான ஏற்பாடுகளை இரண்டாம் கட்டமாய்த் தான் செய்திட இயலும் சார் !

      ஏப்ரலில் !

      Delete
  36. வழியனுப்ப வந்தவன் :

    ரொம்ப யதார்த்தமான கதை! டாப் angle, wide shot என சித்திரத்தரம் அருமையாக இருக்கிறது ஆனால் கதை ?
    நாம செய்ய முடியாததை ஹீரோ செய்ஞ்சாதானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்? அதெல்லாம் இல்லாம கதை ரொம்ப யதார்த்தமா போறதால கதையோடு ஒன்ற முடியவில்லை. கதையில் விக்டர் ஹியூகோ, ஷேக்ஸ்பியர்ன்னு உள்ளபோய் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு.
    இந்தக்கதை யாருக்கெல்லாம் பிடிக்கும்? கிராபிக் நாவல் யதார்த்த விரும்பிகளுக்கு நிச்சயம் இந்தக்கதை பிடிக்கும் அனால் என்னைப்போன்ற சாகஸ விரும்பிகளுக்கு ?? உப்பும் இல்லை உறைப்பும் இல்லை !

    ReplyDelete
    Replies
    1. ///நாம செய்ய முடியாததை ஹீரோ செய்ஞ்சாதானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்?///

      உண்மைதான்! ஆனா, மனைவியின் மூக்கில் நச்சென்று குத்துவிடும் ஹீரோக்கள் யாருமே இருக்கறமாதிரி தெரியலையே?!!!

      Delete
    2. இந்த பஞ்சாயத்துக்குலாம் பயந்திட்டு தான் அந்த எலிஜா கண்ணாலமே பண்ணிக்கலை !

      Delete
  37. கௌ-பாய் எக்ஸ்பிரஸ் :

    பக்கத்துக்கு பக்கம் சிரிப்பு சரவெடி
    எதை சொல்வது எதை விடுவது ?
    wheel சேர் தாத்தா வேலை கேட்டு வருவது, பாட்டியம்மா கொடுக்கும் முட்டைகள் கடைசிவரை மருமகளிடம் முழுமையாக சென்றடையாமல் இருப்பது, ரயில்வே ஊழியரின் கிரீஸ் கொட்டும் தந்திரம், ஜாலி ஜம்பெரின் ட்ரைனிங் செஷன் என ஒவ்வொரு பேனலிலும் சிரிப்பிற்கு உத்தரவாதம்.

    புத்தக மேக்கிங்யும் மிகவும் அருமை !

    ReplyDelete
  38. மரண முள் :

    கதை முதல் பக்கம் ஆரம்பித்து கடைசிப்பக்கம் வரை விறுவிறு சுறுசுறு !
    கதையை விடுங்கள், மேக்கிங் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.
    புத்தகத் தரம் வேர்ல்ட் டாப் கிளாஸ் ஆக இருக்கிறது, அட்டைப்படமும் சரி, உள்ளே கலரிங்யும் சரி மிகவும் அருமை!
    ஒரு 1,50 யூரோவில் இப்படிப்பட்ட புத்தகத்தை உங்களைத்தவிர உலகத்தில் யாராலும் வழங்க முடியாது. இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை இல்லை, பலநாடுகள் சென்று நேரில் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன்.

    Kudos to you and to your team !

    ReplyDelete
    Replies
    1. @ராஜா...கலக்கலான விமர்சனங்கள். கடைசி இரண்டு பத்திக்கு +1.

      Delete
    2. ////ஒரு 1,50 யூரோவில் இப்படிப்பட்ட புத்தகத்தை உங்களைத்தவிர உலகத்தில் யாராலும் வழங்க முடியாது. இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை இல்லை, பலநாடுகள் சென்று நேரில் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன்.////

      அருமை அருமை & உண்மை!!

      எல்லா விமர்சனங்களும் நறுக்-சுறுக்!

      ஆமா.. இம்புட்டு சீக்கிரமே படிச்சு விமர்சனம் போட்ருக்கீங்கங்கன்னா.. நம்மூர் பக்கம் வந்திருக்கீங்கபோலயே?!!

      Delete
    3. இல்ல விஜய், அங்கிருந்து இங்க வந்தவங்க இந்தமுறை சீக்கிரமே புத்தகங்களை எனக்கு கொடுத்துவிட்டார்கள்!

      Delete
    4. குட்! நம்மூர் ST கொரியரை விடவும் வேகமா செயல்பட்டிருக்காங்க! :)

      Delete
    5. ரெண்டே ரூபாய்க்கு "சூப்பர் சர்க்கஸ்" இதழை வண்ணத்தில் தந்த டிரெய்னிங் சார் ! அன்றைக்கு Dargaud நிறுவனத்தில் புக்கின் விலையைப் பார்த்து விட்டு, 'incredible' என்று புன்னகைத்தது மறக்கவே செய்யாது !

      Delete
  39. மன்ஹாட்டன் மரணங்கள்
    ------------------------------

    நேர்கோட்டுக் கதைதான்.அதுக்காக ஸ்கேலில் பென்சிலை வச்சி, சரக்'னு இழுத்த மாதிரி .. படக்'னு கதையே முடிஞ்சது.நடுவிலே மானே...தேனே..னு ஏகப்பட்ட குளறுபடிகள்.

    கதாசிரியருக்கு ராபின் மேல் ஏகப்பட்ட கரிசனம் போல.க்ளைமாக்ஸ் கும்....ணங்... சத்...தாண்டி ராபினை சும்மாவே இருக்க வச்சி அழகு பார்த்திருக்காரு. ஓவரா திங்க் பண்ணி உடம்பை அலட்டிக்க கூடாது மேலாப்புல வேலை கொடுத்திருக்காரு.

    ரொம்ப வேலை மெனக்கெட்டால் மேனி கெட்டுப் போகும் என நினைத்தாரோ? இல்லைனா கொரோனா காலத்தில் களப்பணி வேலைக்காகாதென யோசித்திருப்பாரோ.?
    ராபினும் தன் பங்குக்கு சோதிக்கவே செய்கிறார்.
    சைக்கோ கில்லரைப் பிடிக்க, மூளையைக் கசக்கி திட்டமிடுவார் எனப் பார்த்தால்,
    லட்டு மாதிரி கிடைத்த தடயம் விசாரணையே இல்லாமல் கில்லரை கை காட்டுகிறது. அப்படியே அந்த செல்லத்தை அள்ளி வந்து ட்ரீட்மெண்ட் செய்யாமல் , இன்கம்டாக்ஸை விட்டு நோட்டம் பார்ப்பது, கன்னிப் பொறி(நன்றி @ஈ.வி) வைத்து ஆழம் பார்ப்பது ....ம்...எப்படி இருந்த மனுசன்.

    ஆர்ட் அவர்கள் நல்ல யோசனை சொல்கிறார்.அதாவது கில்லரோட போட்டோவை சம்பவம் நடந்த பக்கத்து வீடுகள்ல காட்டினா ,.ஏதாச்சும் பிடி கிடைக்கும்னு.ஆனா.. பாருங்க ..பிடிச்சா கையும் களவுமாத்தான் பிடிப்பேனு பிடிவாதமா நிற்கிறாரு நம்மாளு...என்னதான் ஆச்சு நம்ம ராபினுக்கு?

    சிக் 'கென சிறுகதை போல் இருந்திருந்தால் நல்லதொரு ஃபீலிங் கிடைத்திருக்கும் போல.துரதிருஷ்டவசமாக
    ஏகப்பட்ட பக்கங்கள் வெறும் பக்கநிரப்பிகளாக அடைத்து சைக்கோ த்ரில்லர் எனும் கான்செப்டுக்கு மங்களம் பாடிவிட்டன.

    ஒரு ஆறுதல் உள்ளது.அது...ராபினுக்கான தேவை இன்னுமே உள்ளது என்பதே.ராபின் மீண்டும் முன்போல ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே என் அவா.

    ReplyDelete
    Replies
    1. ///கதாசிரியருக்கு ராபின் மேல் ஏகப்பட்ட கரிசனம் போல.க்ளைமாக்ஸ் கும்....ணங்... சத்...தாண்டி ராபினை சும்மாவே இருக்க வச்சி அழகு பார்த்திருக்காரு. ஓவரா திங்க் பண்ணி உடம்பை அலட்டிக்க கூடாது மேலாப்புல வேலை கொடுத்திருக்காரு.///

      கடேசி பேனல்களில் ராபினை கவனிச்சீங்களா GP? :P

      Delete
    2. //ராபினுக்கான தேவை இன்னுமே உள்ளது என்பதே.//

      2022 வேறு மாதிரி இருக்கவுள்ளது சார் !

      Delete
    3. இளம்-டைகர், இளம்-டெக்ஸ் மாதிரி 'இளம்-ராபின்' வரப்போறாராங் சார்?!!

      Delete
    4. அட அட சும்மா வரச் ஜொள்ளுங்கள் சாரே 😌😌😌. வயசான ராபினே இப்படிக்கான்னா இளம் ராபின் ஜாகசம் ஜொள்ளி அடிக்கும்லே 😌😌😌

      Delete
    5. இது பேச்சு!😁😁😁 😁😁😁

      Delete
  40. CID ராபின் - அறிமுகக் கதையான "பனியில் ஒரு பிணம்" இதே சாயல்தான்.
    ஆனால், அதுதான் எவ்வளவு சுவராஸ்யமான கதை ஓட்டம்.

    ReplyDelete
    Replies
    1. ராபின் தொடரில் தரம் ஒரே சீராய் இருப்பதில்லை என்பதே பிரச்சனை சார் ! அந்தத் தொடரை ஆல்பம் # 200-ல் மங்களம் பாட நேர்ந்தது இதனால் தான் போலும் !

      Delete
  41. "வழியனுப்ப வந்தவன்" - முக்கிமுக்கி-படித்து முடித்துவிட்டேன். ம்ஹூம்...
    இன்னும் இது ேபால் இரண்டு கதைகள் (தனித்திரு, தனிந்திரு)-ெவெளியிட்டால்-
    ேமேலும், மேலும்- டெக்ஸ் வில்லைரையும், இ.ைகை. மாயாவியையும் ேதடி ஓடத்தான்ேதாண்றுகிறது..

    ReplyDelete
    Replies
    1. வாரயிறுதியின் பதிவு வரைக் காத்திருங்கள் சார் ; சென்னையின் புத்தக விழா stats சிலபல சுவாரஸ்யங்களை வெளிக்கொணரவுள்ளது !

      Delete
    2. ஆவலோடு காத்திருக்கிறோம் சார்.... ஆனா பாருங்க நீங்க சொன்ன அந்த 'வார இறுதி'க்கு இன்னும் சில மணி நேரங்களே பாக்கி! விடிஞ்சா - பதிவுக்கிழமை!!

      Delete
    3. நாளைதான் அந்த வாரயிறுதி என நினைவூட்டக் கடமைபட்டுள்ளேன் சார்.:-)

      Delete
    4. நான் சொல்ல வந்ததை ஏற்கனவே இருவர் சொல்லிவிட்டனர். சார் இன்று பதிவுக் கிழமை.....

      Delete
  42. இந்த மாதக் கதைகளில் கௌபாய் எக்ஸ்பிரஸ் மட்டும் படித்துள்ளேன், இந்த Maxi size ல் படிக்கும் அனுபவமே வேற லெவல், I support maxi size,

    ReplyDelete
    Replies
    1. தட் கவுண்டர் டயலாக் moment#

      Delete
    2. 'இனிமே வயசுக்கு வந்தா என்ன.. வரலேன்னா என்ன?' - டயலாக்காங் சார்? :)

      மேக்ஸியில் டெக்ஸ்தான் ஒத்துவரவில்லையே தவிர, லக்கிலூக்கை படிப்பது அலாதி இன்பம் தான்னு இப்பவும் அடிச்சுச் சொல்வேனாக்கும்!

      Delete
  43. ராபின் கதை ஒரு மாதிரி கிளுகிளுப்பாக இருந்தது சார்... 😁😁😁 /*இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்* _/\_/ வி வாண்ட் மோர் சார் 🥰

    ReplyDelete
    Replies
    1. வீ ஆல் பாய்ஸ் ஃபீல் வெ(றி)ரி ஜ்ஜை (shy) சார் /*இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்* _/\_

      Delete
    2. மார்டின் கதையைப் படிச்சுப் பாருங்க.உங்களையே அறியாமல் உண்மையை கூறுவீங்க.

      Delete
    3. மார்ட்டின் ஒரு மாதிரி வித்தியாசமான ரசிக்க வைத்த knot/plot சார்...

      Delete
  44. சார் அருமை...வழியனுப்ப வந்தவன் கதை அருமை...சரசரவென பயணிக்கிறது....அந்த கொலைகாரன கொன்றது நம்ம நாயகனாத்தானிருக்கும்....எதிர்பார்ப்ப வழக்கம் போல எகிறச் செய்யுது நீங்க அறிவித்த கிநாவும் உங்க பேனாவும்

    ReplyDelete
  45. உண்மையின் உரைகல்-பினோக்கியா-தொற்று...
    வித்தியாசமான கதைக்கருதான்,எனினும் பெரிய அளவில் வியப்பூட்டாமல்,சின்ன அளவில் அடடே போட வெக்குது...
    மார்ட்டினுக்கு ஏன் பெஸ்ட் ரோல் வழங்காமல் கெஸ்ட் ரோல் தான் கிடைச்சருக்கு...
    கூடவே துக்கினியூண்டு கெஸ்ட் ரோல் ஸ்மர்ப்பிக்கு...
    கோடை வெயிலுக்கு ஆங்காங்கே ஜில் ஜில்,ஜொள்,ஜொள்னு போகுது...
    கதையை நகத்திய விதத்தில் இன்னும் கொஞ்சம் சுவராயத்தை கூட்டியிருந்தால் நல்லா இருந்திருக்குமோ...
    எமது மதிப்பெண்கள்-8/10.

    ReplyDelete
  46. உண்மையின் உரைகல்.
    -------------------------------------


    "முன்னோக்கிய மூக்குடைய பினோக்கியோ"

    ஏதேனும் ஒரு அதிசயம் நடந்து, அனைவரும் அரிச்சந்திரா அவதாரமெடுத்தால்....பினோக்கியோ விளைவுகள் என்னவென்பதே கதை.

    திடீரென ஒரு தொற்று பரவுவதை உணரும் ஓர் அமைப்பு, அதன் தோற்றுவாயை, புள்ளிவிவரங்களின் மூலம் தோண்டியெடுக்க முற்படுகிறது.அது ஓஹையாவை சுட்டிக்காட்டுகிறது

    ஏதோ ஒரு கார்ப்பரேட் புன்னகை மன்னர். ஒரு விசித்திரமான காலடித் தடங்களை ஆராய மார்டின் சகவாசத்தை வேண்டுகிறார். அந்தக் கால் தடம் ஓஹையாவை நோக்கியுள்ளது.

    இரு போக்கிரிகள் தம் முப்பாட்டனாரின் குறிப்புகள் மூலம் ஒரு புதையலை அடைய பயணமாகிறார்கள்.அந்தக் குறிப்புகள் ஓஹையாவை குறிப்பிடுகிறது.

    தொற்று...
    காலடித் தடம்...
    புதையல்....

    அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஓஹையோ.

    தனித்தனியே மேற்க்கண்டவாறு பார்ப்பது, அட்டகாசமான அட்வென்சர் போலவே தென்படும்.ஆனால் உஷார்..உண்மையில் அப்படியில்லை மக்களே.

    அது நம்மை குழப்பத்தில் வைக்கும்.
    அது தலை சுற்றி காதில் பூ சுற்றும்.
    அது மண்டை காய வைக்கும்.

    இத்தனை சிரமங்களையும் தாண்டி 'கதையில ஏதோ ஒண்ணு இருக்கு பாஸு 'னு சொல்ல வைக்கும்.

    அதாம்ல மார்டின்.!

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தமான வாரத்தைகளோடு கூடிய, செம விமர்ச்சனம் GP!

      Delete
  47. கருப்பு மசியும், கண்ணியமும் என்ற கொள்கையை ஆசிரியர் மறந்துவிட்டார் போலும்.அதனால் வேறுவழியின்றி கருப்பு மசியை நானே கையில் எடுக்க வேண்டியதாப் போச்சு.!

    ReplyDelete
  48. /// உப்புமாவை புக்கிலே போடாட்டி எப்புடி ? ஜமாய்ச்சுப்புடுவோம்///

    அர்ஸ் மேக்னா வந்தப்பவே போட்டிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்க...


    பைண்டிங் கம்ப்ளெயிண்ட்ல்லாம் வந்தே இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. பத்து சார் ஹிஹிஹி. உங்கள் டைமிங் so good.

      Delete
    2. பத்து சார் :)))))))

      Delete
  49. 'உண்மையின் உரைகல்' படிக்க ஆரம்பித்திருக்கிறேன்! அட!!! பக்கத்துக்குப் பக்கம் ஹாஸ்யம் இழையோடுகிறதே.. கெக்கபிக்கேன்னு சிரிக்க வைக்கும் அளவுக்கு!! மார்டின் கதையில் இப்படியான சமாச்சாரம்லாம் புதுசால்ல இருக்கு?!!!

    ReplyDelete
  50. கழுகு வேட்டை புக்குல எங்க பேரன் பேத்தி ஸாரி ஜ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு, ஃபேமிலி மெம்பர்ஸ் பூரா பேரை போடுவீங்களா இல்ல போட்டோ மட்டுமா சார்??? சட்டு புட்டுன்னா சொன்னா போட்டோ எடுக்க வசதியா இருக்கும்னு சார் 😁😁😁 /இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்*/

    ReplyDelete
    Replies
    1. ///ஸாரி ஜ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு///

      ஹா ஹா ஹா!! பட்டையக் கிளப்புறீங்க யூத்!! :)))))

      Delete
    2. புத்தக பிரியன் சார் செம்ம செம்ம....

      Delete
  51. கௌ பாய் எக்ஸ்பிரஸ் .. உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் தான் .
    லக்கியின் அறிமுகமே அதகளம் . கண்ணாடியில் பீர் கிளாஸ் கையில் இருக்க நிஜத்திலோ பின் நோக்கி எல்லாரையும் சுட.. செம கெத்து..
    இம்முறை லக்கியின் வேகத்தோடு ஜாலியும் போட்டியிட.. அட்டகாசம் தான் .
    முதல் முறை வாசிப்பு என்பதால் மிகவும் ரசித்தேன்.
    மொத்தத்தில் கௌபாய் எக்ஸ்பிரஸ் லக்கி வெர்சன் ஆப் KGF

    ReplyDelete
  52. வழியனுப்ப வந்தவன் கூட பாதி வழி வரைக்கும் வந்து விட்டேன். பயணம் இதுவரை சுவாரசியமாகவே இருந்தது. மீதி தூரத்தை நேரம் கிடைக்கும் போது இன்று படித்து முடித்து விட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் படித்து விமர்சனம் போடுல.

      Delete
  53. சார் டெக்ஸ் வில்லர், இதுலார்கோ இதுடைகர் ரொம்ப நல்லாருக்கும். சாரிங்க நான் சின்ன வயசுல இரும்புக்கை மாயாவி தான் படிச்சேன். என் பையனுக்கும் அதேதான் இப்ப வாங்கனும். மாயாவி இருந்தா கொடுங்க. காலங்கள்மாறினாலும் மாறாத புக் பேர்நிகழ்வுகள் இன்னும் சிறிது நேரத்தில் பதியப்படும் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  54. ****** உண்மையின் உரைகல் ***** டிடெக்டிவ் ஸ்பெஷல் - கதை #2 *******

    மர்ம மனிதன் மார்ட்டினின் வழக்கமான, சீரியஸான கதை என்று நினைத்து இக்கதைப் படித்தால் நிறையவே ஏமாந்துபோவீர்கள் மக்களே!
    இந்தமாத 'கெளபாய் எக்ஸ்பிரஸ்'ஸுடன் போட்டி போடும் போலிருக்கிறது - இக்கதைநெடுக விரவிக்கிடக்கும் ஹாஸ்யங்கள்! குறிப்பாக, மரகதப் பேழையைத் தேடியலையும் கெல்லியும், அவனும் பாஸும் அடிக்கும் கூத்துகள் நிறைய இடங்களில் 'கெக்கபிக்கே' ரகம்! ஓவியரும் இந்தக் காமெடிக்கதை(?!!)யை நன்றாக உள்வாங்கிக் கொண்டுவிட, விளைவு - கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் தலைகாட்டி ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகின்றன! 'தொற்றால்' பாதிக்கப்பட்டவர்கள் தங்களையும் அறியாமல் உண்மைகளையே பேசிவிட, விளைவு - அங்கும் நிறைய கெக்கபிக்கேக்களே!

    நம் பிரியமான 'ஸ்மர்ஃபி'யும் கூட ஒரு ஃப்ரேமில் தலைகாட்டிப் போகிறது! போலவே, மார்ட்டினும் ஜாவாவும் கூட சில ஃப்ரேம்களில் தலைகாட்டிப் போகிறார்கள்! (!?!!!)

    தொற்று, பினோக்கியோ பொம்மை, வேற்றுக்கிரக குள்ளன், வேதாளத்தின் காலடித் தடம் - என்று என்னென்னவோ மேற்பூச்சுகள் பூசப்பட்டிருத்தாலுமே கூட, அடிப்படையில் இதுவொரு காமெடிக் கதைக்களமே! அதை மட்டும் புரிந்து கொண்டு படித்தாலே போதும் - ஒரு ஜாலியான வாசிப்பு அனுபவத்திற்கு!

    உண்மையின் உரைகல் - சிரிப்புச் சிதறல்!

    என்னுடைய ரேட்டிங் - 9/10


    ReplyDelete
    Replies
    1. // இதுவொரு காமெடிக் கதைக்களமே! அதை மட்டும் புரிந்து கொண்டு படித்தாலே போதும் - ஒரு ஜாலியான வாசிப்பு அனுபவத்திற்கு! // Now I realize well said EV

      Delete
    2. நம் எடிட்டரும் கூட வழக்கமான சீரியஸ் ரகக் கதை என்று நினைத்தே மொழிபெயர்க்க ஆரம்பித்து, பிற்பாடு நிறைய வசனங்களில் ஹாஸ்ய பாணிக்கு மாற்றம் செய்திருக்கக்கூடும்!

      Delete
  55. ஒன்று ஆறு ஒன்று

    ReplyDelete