Saturday, March 13, 2021

வள்ளியப்பன் alias சுருளிராஜன் !!

 நண்பர்களே,

வணக்கம். 'வள வளா' வள்ளியப்பனுக்கு டாட்டா சொல்லிவிட்டு 'சுறுக்' சுருளிராஜன் ஆகத் தீர்மானித்த நாள் முதலாய் வாரயிறுதிகள் சற்றே விசாலமாய்த் தெரியத் துவங்கியுள்ளன ! பதிவினை தயார் செய்திட தவறாது செலவாகி வந்த ஐந்தோ / ஆறு மணி நேரங்களை இப்போது அம்மாதத்து இதழ்களுக்கெனச் செலவிட முடிவதால் ஆபீசில் நம் DTP அணியும் ஹேப்பி ! And true to the new form - இதோ நேராய் இவ்வாரயிறுதிப் பதிவின் சமாச்சாரங்களுக்குள் புகுந்திடுகிறேன் !

சென்னைப் புத்தக விழா 2021 !!

ஒரு பேரிடருக்குப் பின்பான முதல் மேஜர் புத்தகத் திருவிழா ; அதுவும்  பொங்கல் விடுப்போடு ஒத்துச் செல்லும் மாமூலான அந்த ஸ்லாட்டில் கிடையாது எனும் போது - என்ன எதிர்பார்ப்பதென்று சத்தியமாய்த் தெரிந்திருக்கவில்லை ! நமக்கு ஸ்டால் உறுதியான பின்னே, புக்ஸை பேக் செய்ய முனைந்த சமயத்தில், வழக்கமான அளவுகளில் எல்லா டைட்டில்களிலும் அனுப்புவதா ? அல்லது முன்ஜாக்கிரதையோடு அடக்கி வாசிப்பதா ? என்று எதுவுமே தெரிந்திருக்கவில்லை ! சரி, போன வருஷத்து விற்பனையினை ஒரு வழிகாட்டியாய்க் கொண்டு, அதனிலிருந்து ஒரு கால் பங்கைக் குறைத்து அனுப்புவோம் என்று தீர்மானித்தேன் ! 14 நாட்கள் அரங்கேறிய விழாவின் முடிவினில் நமக்கு மட்டுமென்றில்லை ; பங்கேற்ற அத்தனைப் பதிப்பகங்களின் முகங்களிலும் ஒரு மெல்லிய புன்னகை !! ஓராண்டாய் நாய் படாத பாடு பட்டு வந்த பதிப்புலகிற்கு சென்னை தெளித்துள்ள பன்னீர் காலத்துக்கும் நினைவினில் நின்றிருக்கும் ! இதைவிட மிரட்டலான விற்பனைகள் பார்த்த ஆண்டுகள் பல இருந்துள்ளன தான் ; எதிர்வரும் ஆண்டுகளில் புதிய உச்சங்கள் காத்திருக்கவும் செய்யலாம் தான் ; ஆனால் ஒரு சொகுசான நாளில் கிட்டும் புஹாரி பிரியாணியை விட, பசித்துக் கிடக்கும் வேளைக்கு வாய்க்கும் இட்லிக்கு மரியாதை ஜாஸ்தியன்றோ ? அந்த வகையில் இந்தாண்டின் புத்தக விழாவினை தெறிக்கச் செய்த சென்னையுள்ள திசைக்கு ஒரு பெருவணக்கம் ! மாநகரம்..மாநகரம் தான் ; அதன் கெத்து - கெத்து தான் !

விற்பனை சார்ந்த தகவல்களுக்குள் டைவ் அடிக்கும் முன்பாய் ஒரு விஷயத்தை highlight செய்திட நினைக்கிறேன் ! பொதுவாய் புத்தக விழாக்களின் விற்பனை pattern-களை பெருசாய் அலசும் வாய்ப்பெல்லாம் அமைந்திருப்பதில்லை எனக்கு ; 'எது நல்லா ஓடுச்சு ? எது மொக்கை போட்டுச்சு ? ' என்ற ரீதியில் மேலோட்டமான வினவல்களோடு, கல்லா கட்டிய தொகையினைக் கொண்டு, அடுத்த 6 மாதங்களை எவ்விதம் ஓட்டுவதென்ற திட்டமிடல்களுக்குள் புகுந்திருப்பேன் ! ஆனால் சமீபமாய் ஜூனியர் எடிட்டர் ஏற்பாடு செய்திருக்கும் ஏதோவொரு புது software-ன் புண்ணியத்தில், நம்மாட்கள் ஊருக்குத் திரும்பிய பத்தாவது நிமிடத்தில் விற்பனைகளின் ஜாதகமே என் மேஜைக்கு ஒரு கற்றைக் காகிதங்களில் வந்து சேர்ந்திடுகிறது ! So அவற்றைக் கொண்டு நிதானமாய் அலசினால் விற்பனைகள் மட்டுமன்றி, இன்னொரு பொதுவான pattern-ம் புலனாகிறது ! "புத்தக விழாக்களின் விற்பனைகள் ஒருவித 'அந்த நொடியின் உந்துதல்' சார்ந்த சமாச்சாரங்கள் ; ஏதேனும் ஒரு தலைப்போ, ஒரு அட்டைப்படமோ, இன்ன பிற சமாச்சாரமோ வாடிக்கையாள வாசகரைக் கவர்ந்திட, அதனை வாங்கிடுகிறார் !" என்பதே எனது அனுமானமாய் இருந்தது ! ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் தகவல்கள் சொல்லும் சேதியே வேறு ரகம் ! புத்தக விழாக்களில் வாங்கிடும் வாசகர்களில் ஒரு கணிசப் பகுதியினர் - கிட்டத்தட்ட ரெகுலர் வாசகர்களே ! ஆண்டுக்கொரு தபா சென்னையில் வாங்க மட்டும் செய்கிறார்களா ; அல்லது இதர சமயங்களில் ஆன்லைனிலும் வாங்குவரா என்பது தெரியலை ; but  அவர்களுக்கு புது வரவுகள் எவை ? ஸ்பெஷல் வரவுகள் எவை ? இங்கு அலசப்படும் ஹிட் இதழ்கள் எவை என்பதிலெல்லாமே நல்லா தெளிவு உள்ளது விற்பனையாகியுள்ள டைட்டில்களிலும், நம்பர்களிலும் பிரதிபலிக்கின்றது ! So - 'இவை  சும்மா casual ஆன விற்பனைகள் தானே - இவற்றின் சேதிகளை பெரியதொரு pointer ஆக எடுத்துக் கொள்ள அவசியமில்லை !' என்ற நினைப்புகளுக்கு பெரியதொரு முழுக்குப் போடணும் போலும் ! These are trueblue stats & deserve all our attention on the way ahead !!

வழக்கம் போலவே நல்ல சேதி - கெட்ட சேதி என்று 2 பிரிவுகள் and as always - நல்லதிலிருந்தே ஆரம்பிக்கிறேனே !! 

இப்போதெல்லாம் இதைச் சொல்லும் போது ஒரு கொட்டாவி தவிர்க்க இயலா தோழனாகிப் போகிறது ! "மாயாவி சார் இந்தப் புத்தக விழாவிலும் பின்னிப் பெடல் எடுத்து விட்டார் ; மாயாவி சாரே ரேக்கிலிருந்து பரந்த முதல் ஆசாமி ; மாயாவி சார் தான் இந்த தபாவும் புத்தக விழாவின் நாயகர் ! ஹாவ்வ்வ்வ் " என்று சொல்லிவிடுகிறேன் ! கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்த மாயாவி சார் மோகம் சற்றே மட்டுப்பட்டுத் தெரிந்ததென்னவோ வாஸ்தவம் தான் ; "ரைட்டு, இந்த evergreen நாயகருக்குமே வயசாகிடுத்து போலும் !" என்று நினைத்துக் கொண்டேன் ! In fact - இங்கிலாந்தில் அந்த STEEL CLAW தொகுப்பு வெளியாகிடவுள்ள தகவல் வந்த சமயம், "நியூயார்க்கில் மாயாவி" & இதர மறுபதிப்புக் கதைகளுக்கு உரிமைகளை வாங்குவோமா ? வேணாமா ? என்ற சலனம் கூட லைட்டாக எட்டிப் பார்த்தது ! ஆனால் எனக்குள் குடியிருக்கும் முந்திரிக்கொட்டை முத்தண்ணா - அந்த சலனத்தை மண்டையில் தட்டிப் படுக்கப் போட்டிருந்தது ! அதன் பலனாய் சாத்தியமான "நியூயார்க்கில் மாயாவி" தான் இந்தாண்டின் topseller - எண்ணிக்கையினில் !! பெரிய சைஸ் ; பளீர் அட்டைப்படம் ; சின்ன விலை ; ஆதர்ஷ மாயாவி - என்ற combo போட்டுத் தாக்கியுள்ளது விற்பனையில் ! And ஏனோ தெரியலை - "மர்ம தீவில் மாயாவி" ஆல்பமும் அதிரடி சேல்ஸ் !! வாசிக்கிறார்களோ - சேமிக்கிறார்களோ - மாயாவியை நேசிக்கிறார்கள் என்பது மட்டும் நூற்றுச் சொச்சமாவது தடவையாய் நிரூபணமாகியுள்ளது ! நேரம் மட்டும் இருந்திருப்பின் - "யார் அந்த மாயாவி" இதழையுமே களமிறக்கியிருப்போம் ! A chance wasted !!

இந்தாண்டின் surprise package நம்ம சட்டித்தலையன் ஆர்ச்சி தான் ! வண்ணத்திலான அந்த மாக்சி சைஸ் இதழும் சரி, பாக்கி b&w இதழ்களும் சரி, போட்டி போட்டு விற்றுள்ளன ! So மாயாவியாருக்குச் சொன்ன அதே பன்ச் லைனைத் தான் நமது சிகப்பனுக்கும் சொல்லணும் போல : வாசிப்போ, சேமிப்போ - நேசிப்புக்கு குறைவில்லை ! என்ன - நம்மில் பலருக்கு இரும்பு மண்டையன் குளிர் ஜுரத்தை வரவழைப்பதால் அடக்கி வாசிக்க வேண்டிப் போகிறது ! But undoubtedly இந்தாண்டின் வெற்றிக் கதைகளுள் ஒன்று !!

வெற்றி எனும் மங்களகரமான தலைப்பின் போது - மங்களகரமான மஞ்சளை மறக்க இயலுமா ? So ஒரு ஜோடிக் கொட்டாவிகளோடு இந்தத் தகவலையும் மறுஒலிபரப்புப் பட்டியலில் சேர்த்திடுகிறேனே :

டெக்ஸ் வில்லர் !! 'பேர கேட்டாலே சும்மா அதிருதுலே !!" என்ற டயலாக் நம்ம 'தல' ஒருத்தருக்கு நிரந்தரமாய்ப் பொருந்தும் போலும் !! 2020 -ன்  பிற்பகுதியில்  வெளியாகி, 2021 -ன் முற்பகுதியிலேயே காலியாகிப் போன இதழ்கள் 3 ! And அவை மூன்றுமே நமது இரவுக்கழுகாரின் இதழ்களே - எனும் போது எனக்கு ஏன் வியப்பே எழ மாட்டேன்கிறதோ  ?? "எதிரிகள் ஓராயிரம்" ; "பந்தம் தேடிய பயணம்" & "தீபாவளி with டெக்ஸ்" என்ற லிஸ்டில் எஞ்சியிருந்த மிக சொற்ப புக்ஸும் சென்னையில் இரண்டே நாட்களில் காலி ! And இவை நீங்கலாய்க் கையிலிருந்த 28 டைட்டில்களில் கலந்து கட்டி சேல்ஸ் ! அவற்றுள் 2020 -ன் வெளியீடுகள் நல்லாவே தூக்கலாய் விற்றுள்ளன !! Icing on the cake என்பதனால் - அது சந்தேகமின்றி "மரண முள்" தான் ! வண்ண இதழ் ; க்ளாஸிக் சாகஸம் ; சமீப இதழ் - என்பனவெல்லாம் இதன் விற்பனையின் பின்னணிகளா ? என்று சொல்லத்தெரியவில்லை ; ஆனால் - செம சேல்ஸ் ! நடப்பாண்டைத் தாண்டிடாது இந்த இதழும் - என்பது உறுதி ! காசியப்பன் பாத்திரக் கடை அண்டாக்களில் கிண்டப்படும்  கிஸ்மிஸ் போட்ட பாயசங்கள் இவருக்கு கிச்சுகிச்சு மட்டுமே ஊட்டுகின்றன ! மூத்திரச் சந்துகளில் நடத்த முனையப்படும் மண்டகப்படிகள் இவரிடம் மந்தகாசப் புன்னகையினையே ஈட்டுகிறது ! 'ஒரே மாதிரியான கதைகள் ; மிடிலேடா சாமீ ' என்ற புலம்பல் பந்துகளைப் பக்குவமாய் பவுண்டரிக்கு மேலே பறக்க விடுகிறார் ! சேவாக் ; சச்சின் ; ரிஷாப் பண்ட் - என காலங்களுக்கேற்ப அதிரடிக்காரர்கள் மாறிடலாம் அரங்கினில் ; ஆனால் இந்த திடகாத்திரரை மட்டும் இடம் மாற்ற யார் எண்ணினாலும் - "வாய்ப்பில்லியே ராஜா !!" என்பதே பதிலாகிறது ! Take a bow 'தல' !! You are an immoveable force !! உங்களை வாசிக்கிறார்களா ? சேமிக்கிறார்களா ? என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல - simply becos நாங்கள் உங்களை சுவாசிக்கிறோம் !

லக்கி லூக் : இந்த மஞ்சள்சட்டையருமே "வெற்றி - ஒரு தொடர்கதை" என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டே போகும் ஜாம்பவான் ! சின்ன சைஸ் ; மாக்சி சைஸ் ; புது இதழ் ; மறுபதிப்பு - எதுவாக இருப்பினும், பரிச்சயமான அந்த ஒற்றைநாடி முகம் மட்டும் அட்டைப்படத்தினில் இருந்தால் - குதூகலமே புலனாகிறது !! No different this time too !! பயங்கரமாய் ஸ்பின் எடுக்கும் செபாக் மைதானத்தினில் பேட்டிங் செய்திடத் தடுமாறும் ஆட்டக்காரர்களைப் போல கார்ட்டூன் எனும் ஜானரின் இதர பிரதிநிதிகள் அத்தினி பேருமே தட்டுத் தடுமாறி வரும் வேளையினில், இந்த ஒல்லிப் பிச்சான் மட்டும் ரோஹித் ஷர்மாவைப் போல நொறுக்கித் தள்ளுகிறார் ! அதிலும் 'பரலோகத்திற்கொரு படகு" ; பிசாசுப் பண்ணை & 2020 லக்கி ஆண்டு மலர்  smash hits !! கொஞ்ச நேரம் இவரது விற்பனை நம்பர்களையே இமைதட்டாது பார்த்துக் கொண்டே இருந்தேன் - தலைக்குள் ஏதேதோ சிந்தனைகள் சகிதம் ! ஹ்ம்ம்ம் !! More on this later...!

வெற்றிநடைக்கு ஒரு மெருகூட்டும் அடுத்தவர் நமது 007 !! சொற்ப விலையிலான black & white ஜேம்ஸ் பாண்ட் ஆல்பங்களும் சரி ; கலரின் ஜேம்ஸ் 2.0 ஆல்பங்களும் சரி, பரபரப்பாய் விற்பனை கண்டுள்ளன ! ரொம்பவே பரிச்சயமான பெயர் & ரொம்பவே பிடித்தமான நபர் எனும் போது இவரது hits வியப்புக்கு வழி கோலவில்லை ! 

நல்ல சேதியின் அடுத்த அத்தியாயங்களில் இடம் பிடிப்போர் மூவருமே போரிஸ் ஜான்சனின் தேசத்துப் புள்ளீங்கோ ! இந்தாண்டினில் CID லாரன்ஸ்-டேவிட் வழக்கத்தை விடவும் வேகமாய் களமாடியுள்ளனர் & ஸ்டெல்லாவின் முதலாளியும் இம்முறை சளைக்காது ஈடு கொடுத்துள்ளார் ! நிறைய ரெகுலர் தடுத்து current நாயக ' நாயகியர் 'தேமே' என குச்சி ஐஸ் சப்பிக்கொண்டிருக்க, சீனியர் சிடிசென்ஸ் டாட்டா காட்டிக் கொண்டே முந்தியுள்ளனர் ! And நான் மட்டும் என்ன இளப்பமா ? - என ஸ்பைடர் சாரும்  இந்த வருஷம் தில்லாய் கெத்து காட்டியுள்ளார் ! மாயாவி ரேஞ்சுக்கு இல்லாவிடினும், ஆர்ச்சியின் நடப்பாண்டுக்கு இல்லாவிடினும், கூர்மண்டையர் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் தேவலாமே !

அடுத்த சந்தோஷ சேதி - என்று சொல்வதாயின், ஜம்போவின் இதழ்களின் பெரும்பான்மை  ஆரவாரமாய் இல்லாவிடினும், அழகாய் ஸ்கோர் செய்திருப்பதைச் சொல்லணும் ! 'ஹீரோக்களின் பெயரைக் காணோமே ?' என்றெல்லாம் தயங்கிடாது, சரளமாய் இந்த oneshots-களை ஜனம் வாங்கியுள்ளனர் ! And குறிப்பிட்டுச் சொல்வதானால், இங்கே அலசப்பட்டு, சிலாகிக்கப்பட்ட இதழ்கள் எல்லாமே ஒரு லெவல் கூடுதல் விற்பனை கொண்டிருப்பது கண்கூடு ! 'நில்...கவனி...வேட்டையாடு..' ; 'பிரிவோம் சந்திப்போம்' ; மா..துஜே ஸலாம்'  ; அர்ஸ் மேக்னா என உங்களிடம் தரச் சான்றிதழ் பெற்ற சரக்கெல்லாமே done well !! "இன்ன மெரி...இன்ன மெரி இளநிக்கடை இசக்கியப்பன் கடையிலே இளநி தேனா இனிக்குது ; சர்பத் கடை சடகோபன் கிட்டே டேஸ்ட் அள்ளுது" ; டீக்கடை தேனப்பன் கடையிலே இஞ்சி டீ ஏ-1ன்னு" நீங்க தர்ற பாராட்டுப் பாத்திரங்களின் மதிப்பு இங்கே பிரதிபலிப்பதாய் தோன்றுகிறது ! அதற்காக பல்லி விழுந்த பாலில் டீ போடும் தருணங்களில் குமட்டில் குத்த வேணாமென்றெல்லாம் சொல்லவில்லை ; இதோ இம்மாதத்து ராபினுக்கு விழும் கொட்டுக்கள் என் மண்டையில் விழுவதாகவே உணர்கிறேன் ! ஆனால் the power of positivity - ஓராண்டுக்கும் மேலாய் நிலைப்பது தான் இங்கே highlight என்றுபட்டது ! 

கார்ட்டூன்கள் பக்கமாய்ப் பார்வைகள் ஓடிடும் போது இம்முறை ஒரு sweet surprise காத்துள்ளது - நமது நீலப் பொடியர்கள் விற்பனையில் சோடை போகாததன் புண்ணியத்தில் !  வியப்பூட்டும் விதமாய் இம்முறை விற்பனை எண்ணிக்கையில் - லக்கி லூக்குக்கு அடுத்த இடம் Smurfs களுக்கே !! ஒருக்கால் பெற்றோர்கள் இவற்றை தம் குட்டீஸுக்கு வாங்கித் தந்துள்ளனரா ? அல்லது கார்ட்டூன் சேனல்களில் இந்த பொடியர்களைப் பார்த்த பரிச்சயத்தில் குட்டிஸ்களே தேர்வு செய்து கொண்டனரா ? - தெரியலை ; ஆனால் the net result has been good ! 

ஆச்சர்யமூட்டும் விதமாய் மூன்றாம் இடத்தில இருப்பது யார் தெரியுமோ - நமது ஹெர்லக் ஷோம்சார் தான் ! பொதுவாய் இவரது (சொற்ப) டைட்டில்கள் எங்கேனும் கண்ணுக்குத் தெரியா விதமாய் ஒதுங்கி விடுவது வாடிக்கை ! ஆனால் surprise ...surprise ...நமது லண்டன் காத்தாடி ராமமூர்த்திக்கு இம்முறை செழுமையான வரவேற்பு ! Stands third in the cartoons !

Reasonably ok - என்று சொல்லும் விதமாய் அமைந்துள்ளன - ப்ளூகோட் பட்டாளம் & சிக் பில்லின் விற்பனைகள் ! So குறைந்தபட்ச உத்திரவாதத்தில் தலை தப்பிக்கிறார்கள் இந்த இருவருமே !

தொடர்வது bad news & கார்டூனிலிருந்தே அதனை ஆரம்பிக்கிறேனே !

கேரட் மீசைக்காரர் Clifton தான் அந்த பிரஷ் மீசை நிறைய மண் வாங்கியிருக்கும் முதல்வர் ! மொத்தமாய் 4 டைட்டில்கள் உள்ளன கைவசம் & நான்கும் சேர்த்து உருவாக்கியிருக்கும் விற்பனைத் தொகையானதைக் கொண்டு ஒரு கிராமத்துச் சந்தையில் நாலு பூமெக்ஸ் அண்டடாயர் கூட கொள்முதல் செய்திட இயலாதென்பதே சோகம் ! ஏற்கனவே ரெகுலர் ஆன்லைன் விற்பனைகளிலும் இவரொரு செல்லப்பிள்ளை அல்ல எனும் போது - looks very much like the end of the road for க்ளிப்டன் !! நடப்பாண்டினில் இந்த பிரிட்டிஷ் உளவாளியைப் பார்ப்பதே நமக்கினி இறுதி முறையாய் இருக்கும் போலும் !! 

'க்ளிப்தனை விட துளியூண்டு தேவலாம்' என்று சொல்வது சமீப வரவுகளான மேக் & ஜாக் ஜோடியே ! ஆனால் அவர் பாடியிருப்பது முகாரியெனில், இவர்கள் இசைப்பதோ கொஞ்சமும் விடுதலில்லா சோக கீதமே !! மூன்று டைட்டில்ஸ் இணைந்து கொணர்ந்திருக்கும் விற்பனைத் தொகையைக் கொண்டு சென்னையில் நமக்கு கம்பியூட்டர் பில் போடா உதவிய நண்பனின் ஒற்றை தினத்து சம்பளத்தைக் கூடப் போட்டிருக்க இயலாது !! ஆன்லைன் விற்பனைகளில் இவர்களது performance எவ்விதம் உள்ளதென்று பார்க்க உத்தேசித்துள்ளேன் & இந்த சிகாகோ ஜோடிக்கு இறுதியாய் ஒரு வாய்ப்பை 2022-ல் தர எண்ணியுள்ளேன் ! சண்ட மாருதங்களாய் செயல்பட்டார்களெனில் சூப்பர் ; இல்லையேல் சமீப தினங்களில் அரங்கேறி வரும் சீட் பங்கீட்டில் ஒரு முக்கிய கட்சிக்குக் கிட்டி வரும் அல்வாவே மேக் & ஜாக் ஜோடிக்கு நாமும் தர வேண்டிப் போகும் ! தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்பவே பிரியமானதொரு நகைச்சுவை ஜோடியும் மேடையேறி இப்படிச் சொதப்புவதை பார்க்கும்  போது கண்கள் வேர்க்கின்றன ! 

ஏற்கனவே மதியில்லா மந்திரியாரும் கல்தா பட்டியலில் இருக்கும் நிலையில் ; ஹெர்லோக் ஷோம்ஸ் தொடரினில் புதுக் கதைகள் லேது எனும் போது - காத்திருக்கும் காலங்களில் - 'கார்ட்டூன் என்றொரு ஜானர் இருந்தது இங்கே' என்று கல்வெட்டில் பதித்து நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளணும் போலும் ! எத்தனை முயன்றும், கார்ட்டூன்களை அக்மார்க் குயந்தைக சமாச்சாரமாகவே கருதிடும் பாங்கு truly disappointing !!

இதே பாணியினில் ராயலான சொதப்பலுக்குச் சொந்தக்காரர்கள் ஆக்ஷன் ஜானரிலும் உள்ளனர் !! கமான்சே எப்போதும் போலவே சிங்காரச் சென்னைக்கு புது மாப்பிளையாய்ப் புறப்பட்டுப் போய், காலரில் வைத்த அந்த மஞ்சளின் மெருகு கூடக் கலையாது அலுங்காமல், குலுங்காமல் பத்திரமாய்த் திரும்பியுள்ளார் வீட்டுக்கு ! ஒரே saving grace ; "கமான்சே பேக்" என்று நாம் போட்டிருந்த பாக்கெட்டினில் மொத்தம் 4 full sets விற்றுள்ளன ! கிடைக்கும் முதல் அவகாசத்தினில் இந்தத் தொடரின் ஒன்பதோ - பத்து புக்ஸை உள்ளடக்கவல்ல slipcase ஒன்றினைத் தயாரித்து, அதற்கென விலையேதும் கூட்டிடாது, மொத்த பேக்காகவே என் கொள்ளுப் பேரன் காலம் வரையிலும் வைத்திருந்து விற்கணும் போலும் ! ஒரு ஜாம்பவானின், ஹிட் தொடர் நம் மத்தியில் இத்தனை சொதப்புவது ரொம்பவே சங்கடமூட்டுகிறது ! ஜெரெமியா கூட இந்தளவுக்கு சாத்து வாங்கலை எனும் போது - கமான்சே உருவாக்கும் record மறக்கப்பட வேண்டியவொன்று ! 

Slipcase # 2 - தயாரிக்க வேண்டியது 'W' குழுமத்தின் முதலாளிக்குமே என்று சொல்லிட வேண்டும் தான் ! லார்கோ சமீப ஆண்டுகளை விட, இம்முறை கொஞ்சமாய் தெரியுள்ளார் தான் ! ஆனால் இந்த ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரை நம் கிட்டங்கியிலிருந்து வழியனுப்ப இன்னும் ஏக காலமாகும் போலும் !! Truly perplexing ! 

Slipcase # 3 - நரைமீசை ரோமியோ ஷெல்டனுக்கே ! இவரும் லார்கோவைப் போலவே இம்முறை an improved performance என்றாலும், Wayne Shelton-க்குப் புதுசாய் பல இல்லங்கள் தேடித் தருவது கிட்டங்கியின் கட்டாயம் ! 

சாத்துக்களில் ரணமாகி, மூஞ்செல்லாம் காயம் தாங்கி நிற்கும் இன்னும் 2 பிரெஞ்சு தொடர்கள் உள்ளன - ப்ருனோ பிரேசில் & கேப்டன் பிரின்ஸ் ரூபத்தில் ! "சாக மறந்த சுறா" நம் கிட்டங்கியை ஒருபோதும் மறவாது என்பது ஊரறிந்த விஷயம் தான் ; ஆனால் இந்த தபா பிரின்சும் வாங்கியுள்ள மொத்துக்கள் ஒரு வண்டி !! புராதனங்கள் சிறுகச் சிறுக ஓரம் கட்டப்படாவிடின், நீங்களே அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்து விடுவீர்கள் போலும் !! ஆனால் அந்த லாஜிக் ப்ரூனோ பிரேசிலுக்கும், பிரின்சுக்கும் பொருந்தினாலும், செம சமயுகத் தொடரான லார்கோவுக்குப் பொருந்த மறுக்கிறதே ? வடிவேலுக்குப் பஞ்சாயத்துப் பண்ணப் போன சங்கிலி முருகன் போல தான் மடக் மடக்கென்று சொம்புத் தண்ணீரை குடிக்க வேண்டியுள்ளது !

சிகப்பு லைட் ஏரியாவிடினும், தனது பெயருக்கு நேராய் ஆரஞ்சு லைட் கண்சிமிட்டும் இன்னொரு ஹீரோவும் இல்லாதில்லை & believe it or not - அவர் ரிப்போர்ட்டர் ஜானியே !! அவரது லேட்டஸ்ட் வெளியீடான "ஆதலினால் கொலை செய்வீர்" இதழைத் தவிர்த்த பாக்கி சகல டைட்டில்களிலும் விற்றுள்ளதைக் கொண்டு கவுண்டருக்கு வெற்றிலை பாக்கோ ; செந்திலுக்கு முறுக்கோ மட்டுமே வாங்கிட முடியும் !! "சொம்பு தண்ணீ பத்தலையே மைதீன்....அந்த டிரம்மையே ஆலமரத்தடிக்குக் கொண்டு வர முடியுமா ??"

ஒற்றை இலக்க விற்பனையோடு, கூட்டத்துக்குள் நசுக்கப்படும் இன்னொரு தொடர் ஜில் ஜோர்டன் ! Again பிராங்கோ பெல்ஜிய படைப்புலகின் பிரதம தொடர்களில் ஒன்று, நம் மத்தியில் திருவிழாவில் காணாது போன குழந்தையாட்டம் விழித்து நிற்பது sad !! 

"மொக்கை" என்று வந்துவிட்டால் - பிரெஞ்சு மொழியென்ன ? இத்தாலிய மொழியென்ன ? எல்லாமே ஒன்று தான் என்றே எடுத்துக் கொள்ளணும் போலும் !  மேஜிக் விண்ட் தொடரின் 3 ஆல்பங்கள் சேர்ந்து வாங்கியுள்ள உதை - WWF மல்யுத்தங்களில், தார் பீப்பாய் போன்ற ஆசாமிகள் எதிராளியை மல்லாக்கப் போட்டுவிட்டு, கயிற்றில் ஏறி நின்று, திடும் திடுமென அவன் மீதே குதிப்பதற்கு சமமானது ! 

"உதவியாளன் க்ரோவ்சோ போடும் மொக்கை பெருசா ? அல்லது டைலன் டாக் தொடருக்கு நீங்கள் தரும் கும்மாங்குத்துக்கள் பெருசா ?" என்றொரு பட்டிமன்றம் நடத்தினால், திண்டுக்கல் லியோனி தெறித்து ஓடி விடுவார் ! சுத்தமான, நயமான, மஸ்கொத் அல்வா தான் அவருக்கு வாய் நிறைய தர இயன்றிருப்பது !! போகிற போக்கில், இத்தாலிய ஆக்கங்களில் 'தல' டெக்ஸ் & மர்ம மனிதன் மார்ட்டின் தவிர்த்து, பாக்கிப் பேருக்கெல்லாம் நெஞ்சங்களில் மட்டுமே ஜாகைகள் தந்தாக வேண்டும் போலும் ! 

ஆனால் சைக்கிள் கேப்பில் ஸ்கோர் செய்துள்ள இத்தாலியர் - நம்ம 'பாட்டீம்மா போட்டுத் தள்ளும் கழகத்து தலீவர்' !! அந்தப் பெரிய சைஸ் ; பளிச் அட்டைப்படங்கள் ; உட்பக்கச் சித்திர அமைப்புகள் என்ற கூட்டணி வேலை செய்ததா ? அல்லது வேறு காரணங்களா ? தெரியலை - டயபாலிக் has seen decent sales !

குறுக்கால புகுந்து சாகுபடி செய்துள்ள இன்னொரு நாயகர் - நமது சகஜ வீரர் தான் ! ரோஜரின் "நேற்றைய நகரம்" நடப்பாண்டின் புத்தக விழா விற்பனையில் நான்காம் இடத்தினில் !! "சந்தாவில் அல்லாத இதழ் " என்பதால் நிறைய பேரை அது அந்நேரம் சென்றடைந்திருக்கவில்லையோ - என்னமோ ; சென்னையில் rocking sales !!

ஓரளவுக்கு மானத்தைக் காத்துக் கொண்டுள்ளனர் டிரெண்ட் & தளபதி டைகர் ! நிச்சயமாய் மோசமில்லை என்பேன் - இரு தொடர்களிலுமான விற்பனை ! 

Same goes for XIII ! புது இதழ்களான "2132 மீட்டர்" & "சதியின் மதி" ஓ.கே என்ற விற்பனை !! அனலெல்லாம் பறக்கலை ; ஆனால் definitely decent !

ஆச்சர்யம் தொடர்கிறது - நமது 'தானைத் தலைவி' ரூபத்திலும் ! Oh yes , மீன் பிடிக்கிறாரோ, நண்டு பிடிக்கிறாரோ, மாடஸ்டி இம்முறை விற்பனையிலொரு குறைந்தபட்ச சாதனைக் கோட்டைத் தொட்டுப் பிடித்து இருப்பது உற்சாகமூட்டுகிறது ! 

ஆனால் ஒரு தலைவியின் வெற்றி, அடுத்த தயைவிக்கு கை கொடுக்கக் காணோம் !! நம்மூர் கட்சித் தலீவர்கள் போல ஏதாச்சும் ஒரு புயட்சி செய்யக் கிளம்பிய அமாயாவுக்கு ஆருமே பெருசாய் ஆதரவு தராது டீலில் விட்டுப்புட்டீங்களே மகாஜனங்களே ? அந்தப் பரந்த மனசு என்னமாய் சலனம் கொள்ளும் ? பட்டவர்த்தனமான பல்ப் ! அம்மணிக்கும்..நேக்கும் !!

Before I wind up - சங்கடத்தின் உச்சம் பற்றி !! நடப்பாண்டில் சென்னை விற்பனையில் தோர்கல் ரொம்பவே...ரொம்ப ரொம்பவே கோட்டை விட்டுள்ளார் !! ஜனவரி இதழான "அழகிய அகதி" நீங்கலாய் பாக்கி அனைத்துமே shocking numbers !! சத்தியமாய் இதை எவ்விதம் எடுத்துக் கொள்வதென்றோ ; இதன் பின்னணிச் சேதி என்னவென்றோ புரிந்து கொள்ளத் தெரியலை !! 'மைதீன்...டிரம் பத்தாதுடாப்பா ; தண்ணி ட்ரக்கருக்கு சொல்லிடேன் !!' Phew !!

ஆனால் இம்முறை பார்த்திட முடிந்த silver streak பற்றியும் சொல்லிடுகிறேனே ?! பழசோ, புதுசா ; கலரோ ; black & white ஆல்பமோ - கிட்டத்தட்ட அனைத்து கிராபிக் நாவல்களுமே இம்முறை செமையாய் ஸ்கோர் செய்துள்ளன ! மாறி வரும் ரசனைகளுக்கொரு வழிகாட்டியோ ? புரிந்திட முழி பிதுங்கி நிற்கிறேன் !  'யப்பா சாமி...டிரக்கர் கான்சல் ;  கம்மாய்க்குள்ளே குதிச்சு நானே குடிச்சுக்கிறேன் !!'

Bye guys..இந்தப் பதிவின் துவக்க வரியினைப் பொய்யாக்கி விட்டு, வள்ளியப்பனாகவே விடை பெறுகிறேன் ! So "சுருக்கா மேட்டரை சொல்லுப்பூ ?"  என்று எண்ணிடும் நண்பர்கள், மார்டினின் "உண்மையின் உரைகல்" இதழோடு இம்முறை பொழுதைச் செலவிடலாம் ! இந்த விற்பனைகளின் தகவல்களை தலைக்குள் அசைபோட ;  நம் அடுத்தாண்டின் திட்டமிடலில் இவற்றின் takeaway-களுள் அவசியமானவற்றை இணைக்க என்செய்வதென்ற மகா சிந்தனைகளோடு சவாரி செய்திட, தொடரும் வாரங்களும், மாதங்களும் எனக்கு அவசியமாகிடும் ! நிச்சயமாய் kneejerk ரியாக்ஷன்ஸ் இராது தான் ; அதே சமயம் அத்தியாவசியக் கசப்புகளை விழுங்கவும் தயங்க மாட்டோம் தான் !

Bye all ; see you around !! Have a fun weekend ! 

பின்னாடி குறிப்புங்கோ :

நம் சென்னை ஓவியர் பிரித்து மேய்ந்துள்ளார் - அடுத்த பதிவினில் நான் கண்ணில் காட்டவுள்ள கலர் அட்டைப்படத்தினில் !

கொரில்லா சாம்ராஜ்யத்துக்கு அட்டைப்படம்  வருது !!

"கழுகு வேட்டை" (சந்தாதாரர்கள்) விலையில்லா இதழ்களின் போட்டோக்கள் ப்ளீஸ் ? வரும் திங்கள் அதற்கான last date folks !! அதனை விசாலன் வரையிலும் நீட்டிக்கிறோம் (18th மார்ச்) !

அப்புறம் சந்தா எக்ஸ்பிரஸ் தடதடக்கத் துவங்கிவிட்டது  - ஒருவழியாய் !! இன்னமும் 2021-ன் சந்தாவினில் இடம்பிடித்திரா நண்பர்களுக்கு இதனையே ஒரு நினைவூட்டலாக்கிட அனுமதியுங்களேன் ப்ளீஸ் ? "சும்மா வாரா வாரம் இங்கே நொய்யு..நொய்யு'ன்னு துட்டுக்கு அடிபோடறியே ?" என்று எனது அனற்றல்கள் உங்களுக்கு நெருடிடக்கூடும் என்பது புரிகிறது தான் ! ஆனால் இந்த யாசிப்பே நம் ஒட்டுமொத்த (காமிக்ஸ்) வாசிப்பின் பின்னணி எனும் போது, சந்தோஷமாகவே கையேந்திக் கரம் கூப்புகிறேன் ! Please do jump in asap folks !!


247 comments:

  1. வள்ளியப்பனின் வந்தனமுங்கோ !

    ReplyDelete
  2. வணக்கம் சர்பத் சடகோபன் :-)

    ReplyDelete
  3. உங்கள் பதிவை படிச்சிட்டு வர்றான் பரணி ஆமேலே கமெண்ட் போடுறான் :-)

    ReplyDelete
  4. // தோர்கல் ரொம்பவே...ரொம்ப ரொம்பவே கோட்டை விட்டுள்ளார் !! ஜனவரி இதழான "அழகிய அகதி" நீங்கலாய் பாக்கி அனைத்துமே shocking numbers !! //

    தோர்கலுக்கு வந்த சத்திய சோதனை :-(. வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அழகிய அகதி கண்டிப்பாக தோர் கால் தொடரில் மிகவும் அருமையான கதைகள் கதை 234 மனதைக் கவர்ந்தது

      Delete
  5. // சும்மா வாரா வாரம் இங்கே நொய்யு..நொய்யு'ன்னு துட்டுக்கு அடிபோடறியே ?" //

    சார் ஒரு நாளும் ஒரு போதும் அப்படி நினைத்தது இல்லை நினைக்க போவதும் இல்லை சார்.

    சந்தாவே நமது பயணத்தின் முக்கிய காரணி என்பது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் சார். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  6. // நிச்சயமாய் kneejerk ரியாக்ஷன்ஸ் இராது தான் ; அதே சமயம் அத்தியாவசியக் கசப்புகளை விழுங்கவும் தயங்க மாட்டோம் தான் ! //

    உங்கள் எண்ணம் போல் நல்லதை செய்யுங்கள். நாங்கள் அதனை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம்.

    ReplyDelete
  7. // முதல் அவகாசத்தினில் இந்தத் தொடரின் ஒன்பதோ - பத்து புக்ஸை உள்ளடக்கவல்ல slipcase ஒன்றினைத் தயாரித்து, அதற்கென விலையேதும் கூட்டிடாது, மொத்த பேக்காகவே //

    நைஸ் ஐடியா.

    ReplyDelete
  8. // இதழ்களான "2132 மீட்டர்" & "சதியின் மதி" ஓ.கே என்ற விற்பனை !! அனலெல்லாம் பறக்கலை ; ஆனால் definitely decent !

    ஆச்சர்யம் தொடர்கிறது - நமது 'தானைத் தலைவி' ரூபத்திலும் ! Oh yes , மீன் பிடிக்கிறாரோ, நண்டு பிடிக்கிறாரோ, மாடஸ்டி இம்முறை விற்பனையிலொரு குறைந்தபட்ச சாதனைக் கோட்டைத் தொட்டுப் பிடித்து இருப்பது உற்சாகமூட்டுகிறது ! //

    மகிழ்ச்சி

    ReplyDelete
  9. ///Take a bow 'தல' !! You are an immoveable force !! உங்களை வாசிக்கிறார்களா ? சேமிக்கிறார்களா ? என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல - simply becos நாங்கள் உங்களை சுவாசிக்கிறோம் !////


    Yessssssssssssss........

    ReplyDelete
  10. // ஓரளவுக்கு மானத்தைக் காத்துக் கொண்டுள்ளனர் டிரெண்ட் & தளபதி டைகர் ! நிச்சயமாய் மோசமில்லை என்பேன் //

    ஆகா சூப்பர்.

    ReplyDelete
  11. // டயபாலிக் has seen decent sales !

    ரோஜரின் "நேற்றைய நகரம்" நடப்பாண்டின் புத்தக விழா விற்பனையில் நான்காம் இடத்தினில் !! //

    சூப்பர் சூப்பர்.

    ReplyDelete
  12. ப்ரசன்ட் சார்..

    ReplyDelete
  13. // போகிற போக்கில், இத்தாலிய ஆக்கங்களில் 'தல' டெக்ஸ் & மர்ம மனிதன் மார்ட்டின் தவிர்த்து, பாக்கிப் பேருக்கெல்லாம் நெஞ்சங்களில் மட்டுமே ஜாகைகள் தந்தாக வேண்டும் போலும் ! //

    எப்படி சார். இப்படி சொல்லிட்டீங்க. ஹும் விற்பனை சொல்லும் செய்தி வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  14. // ரிப்போர்ட்டர் ஜானியே !! அவரது லேட்டஸ்ட் வெளியீடான "ஆதலினால் கொலை செய்வீர்" இதழைத் தவிர்த்த பாக்கி சகல டைட்டில்களிலும் விற்றுள்ளதைக் கொண்டு கவுண்டருக்கு வெற்றிலை பாக்கோ ; செந்திலுக்கு முறுக்கோ மட்டுமே வாங்கிட முடியும் ! //

    கொஞ்சம் வெளிச்சம் தரும் விஷயம் இது.

    ReplyDelete
  15. ///வியப்பூட்டும் விதமாய் இம்முறை விற்பனை எண்ணிக்கையில் - லக்கி லூக்குக்கு அடுத்த இடம் Smurfs களுக்கே !!///

    குட் நியூஸ்..😍

    ReplyDelete
  16. ///காத்திருக்கும் காலங்களில் - 'கார்ட்டூன் என்றொரு ஜானர் இருந்தது இங்கே' என்று கல்வெட்டில் பதித்து நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளணும் போலும் !///

    பேட் நியூஸ்...😒

    ReplyDelete
  17. கிளிப்டன்+மேக் அன்ட் ஜாக் விற்பனை கார்டூன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

    // கார்ட்டூன் என்றொரு ஜானர் இருந்தது இங்கே' என்று கல்வெட்டில் பதித்து நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளணும் போலும் //

    ஓ நோ சார். கார்டூன் இல்லாத காமிக்ஸை நினைத்து பார்க்க முடியவில்லை என்னால் :-(

    ReplyDelete
  18. இளவரசி....


    இனிமை....

    ReplyDelete
  19. இளவரசி....


    இனிமை....

    ReplyDelete
  20. // லக்கி லூக்குக்கு அடுத்த இடம் Smurfs களுக்கே //

    வாரேவா.. அடுத்த சில புத்தகத் திருவிழாவில் ஸ்மர்ப் விற்பனையில் சாதித்தால் 2022 சந்தாவில் முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒரு புத்தகத் திருவிழா ஓரே ஒரு ஸ்பெஷல் புத்தகமாகவாது கொடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எண்ணிலடங்கா ப்ளஸ்கள்

      Delete
    2. அதுவும் குண்டு புக்கா போடுங்க சார்.

      Delete
    3. சூப்பர் நியூஸ்.. சார் அப்படியே அந்த பென்னியும் வந்தா சந்தோசமா இருக்கும்.

      Delete
    4. ஆமாம் பென்னி எனக்கு ஸ்மர்ப்பை விட பிடித்திருந்தது.

      Delete
    5. எனக்கும் பென்னி..

      Delete
    6. எனக்கு இரண்டும் வேண்டும்!

      Delete
    7. // ஏதாவது ஒரு புத்தகத் திருவிழா ஓரே ஒரு ஸ்பெஷல் புத்தகமாகவாது கொடுங்கள். //
      பென்னியும்,ஸ்மர்ப்பும் இணைந்து குண்டு புக்கா,ஹார்ட் பைண்டிங்கா வந்தா நல்லதான் இருக்கும்,ஆனா படைப்பாளிகள் அதற்கு ஏற்பளிக்க வாய்ப்பில்லை...
      ஆக முதல்ல ஸ்மர்ப்ஸ் குண்டு புக்கை கண்டுகளிப்போம்...

      Delete
    8. முடிஞ்சா ஈ.பு.வி யில்...

      Delete
    9. ஸ்மர்ப்ஸ் குண்டு புக் - ஈ.பு.வி யில்...

      Delete
    10. +1000 பென்னி க்கும் Smurfs க்கும்

      Delete
  21. // ப்ளூகோட் பட்டாளம் & சிக் பில்லின் விற்பனைகள் ! So குறைந்தபட்ச உத்திரவாதத்தில் தலை தப்பிக்கிறார்கள் இந்த இருவருமே ! //

    நன்று. 2022 இவர்களுடன் பயணிக்க வாய்ப்புகள் உறுதி என தெரிகிறது. மகிழ்ச்சி.

    ReplyDelete
  22. ஆர்ச்சிக்கு ஜே.
    மாயாவி மாயாவிதான் விற்பனை மாயங்கள் புரிவதில்.

    ReplyDelete
  23. // 14 நாட்கள் அரங்கேறிய விழாவின் முடிவினில் நமக்கு மட்டுமென்றில்லை ; பங்கேற்ற அத்தனைப் பதிப்பகங்களின் முகங்களிலும் ஒரு மெல்லிய புன்னகை !! //
    மகிழ்ச்சி. சந்தோஷமான விஷயம். நம்பிக்கை துளிர் விடுகிறது. இனி வரும் புத்தகத் திருவிழாவில் விற்பனை இதனை விட சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  24. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  25. விவரமாக சாப்ட்வேர் உதவி கொண்டு விற்பனையை அலசி ஆராய உதவிய ஜூனியர் எடிட்டர் விக்ரமுக்கு வாழ்த்துக்கள்.. அலசல் சிறப்பாக இருந்தது..பல காமிக்ஸ் டைட்டில்களின் விற்பனை விவரங்களும் புதுப்புது கிராபிக் நாவல்களின் ரீச்சும் வாசகர் வட்டத்தின் ஒட்டுமொத்த வாங்கு திறனும் தவிர்க்க வேண்டிய நாயகர்கள் குறித்த அதிர்ச்சிகளும் என வெகுவாக தகவல் களஞ்சியமாக புத்தகத் திருவிழா ரிசல்ட்டுகளை விவரித்திருக்கிறீர்கள். நன்றி..

    _ராபின் கதை இன்றைய வாசிப்பில்.. சராசரியான சைக்கோ கதையும் நத்திங் க்ளைமாக்ஸூம்.. கண்டிப்பாக வீடியோவில் ஒரு வெடிகுண்டு போல கனவிலும் துரத்தி வரும் கதைகளை மாத்திரமே ராபினில் கொடுங்க..
    _டைலன் டாக்.. கடுகு சிறிதெனினும் சிறப்பான கதையம்சம் உள்ள கதை.. நன்றாக இருந்தது..

    _மார்ட்டின்.. அதற்குள்ளே அம்மாவிடம் கதைப்புத்தகம் கொடுத்து விட்டேன். ஆதலால் லேட்டாகும்.

    _எலிஜா_முதல் கதையிலேயே துறுதுறுவென ஆராய்வதும் சாத்து வாங்குவதும் சமாளிப்பதும்.. தனக்கு நியாயமெனப்பட்டுவிட்டால் எப்பாடுபட்டேனும் பிரச்சினைகளைக் களைய விழைவதும் என முதல் கதையிலேயே முத்தான ஹீரோவாகி விட்டார். அடுத்த கதைக்கு ஆவலோடு..
    _மறுபதிப்புகள் சிறப்பாகவே வந்திருக்கும்..
    ஹேப்பி ரீடிங்..

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் அருமை. தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள் ஜானி.

      Delete
  26. எனக்கு மிகவும் பிடித்த தோர்கல் தொடர் வசூலில் நொண்டியடித்துள்ளது நெம்ப வருத்தம். ஆங்கிலத்தில் வராததைக் கூட கூகுளாண்டவரின் புண்ணியத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். இனி வரும் கதைகளும் நல்லாவே இருக்கு. கமான்சே தொடருக்கு நேர்ந்தது போல் ஆகாமல் இத்தொடர் முற்றுப்பெறணும்னு ஆத்தாகிட்ட செயலருக்கு மொட்டை போட்டுக்கறதா்வேண்டிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. செயலருக்கு முடி முளைத்தவுடன் மீண்டும் அவருக்கு மொட்டையடிக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்..:-)

      Delete
  27. சார்... சினிபுக் இதழ்கள்வந்து விட்டதா? ஆன்லைன் லிஸ்டிங் போடும் போது பதிவில் ஒரு வரி எழுதி விடுங்கள் சார்.

    ReplyDelete
  28. விற்பனையில் சாதிக்காதவற்றை ஒதுக்கி விடுங்கள் சார். When going gets tough...tough gets going என்பது காமிக்ஸ் ஹீரோக்களுக்கும் பொருந்தும். சந்தாவைப் பொறுத்தவரை க்ரிஸ்ப்பான விற்பனைக்கு உத்தராவதமுள்ள கதைகளையும் மீதத்தை முன்பதிவுக்கோ குறைந்த எண்ணிக்கையிலோ சமயம் மற்றும் வசதி பொறுத்து கொண்டு வரலாம். உங்களிடம் இருக்கும் டேட்டாவைக் கொண்டு எப்படி முடிவெடுத்தாலும் ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. // சந்தாவைப் பொறுத்தவரை க்ரிஸ்ப்பான விற்பனைக்கு உத்தராவதமுள்ள கதைகளையும் மீதத்தை முன்பதிவுக்கோ குறைந்த எண்ணிக்கையிலோ சமயம் மற்றும் வசதி பொறுத்து கொண்டு வரலாம் //


      உண்மை. இதற்கு எனது ஆதரவு உண்டு.

      Delete
    2. வழிமொழிகிறேன்..

      Delete
  29. 14 நாட்கள் அரங்கேறிய விழாவின் முடிவினில் நமக்கு மட்டுமென்றில்லை ; பங்கேற்ற அத்தனைப் பதிப்பகங்களின் முகங்களிலும் ஒரு மெல்லிய புன்னகை

    ######


    வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. ஆனால் இந்த திடகாத்திரரை மட்டும் இடம் மாற்ற யார் எண்ணினாலும் - "வாய்ப்பில்லியே ராஜா !!" என்பதே பதிலாகிறது ! Take a bow 'தல' !! You are an immoveable force !! உங்களை வாசிக்கிறார்களா ? சேமிக்கிறார்களா ? என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல - simply becos நாங்கள் உங்களை சுவாசிக்கிறோம் !

    ######

    100 % ட்ரூ சார்...


    அருமை ...அருமை...:-)

    ReplyDelete
  31. ////காத்திருக்கும் காலங்களில் - 'கார்ட்டூன் என்றொரு ஜானர் இருந்தது இங்கே' என்று கல்வெட்டில் பதித்து நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளணும் போலும் ! எத்தனை முயன்றும், கார்ட்டூன்களை அக்மார்க் குயந்தைக சமாச்சாரமாகவே கருதிடும் பாங்கு truly disappointing !!////

    மனசு கஷ்டமாயிடுச்சுங்க சார்!
    😫😫😫😫😫😫😫

    ReplyDelete
  32. குறிப்பிட்டுச் சொல்வதானால், இங்கே அலசப்பட்டு, சிலாகிக்கப்பட்ட இதழ்கள் எல்லாமே ஒரு லெவல் கூடுதல் விற்பனை கொண்டிருப்பது கண்கூடு

    #####

    அலசும்..அலசிய நண்பர்களுக்கு ஓர் அழகான பூங்கொத்து ..தொடருங்கள் நண்பர்களே...!

    ReplyDelete
  33. கமான்சே எப்போதும் போலவே சிங்காரச் சென்னைக்கு புது மாப்பிளையாய்ப் புறப்பட்டுப் போய், காலரில் வைத்த அந்த மஞ்சளின் மெருகு கூடக் கலையாது அலுங்காமல், குலுங்காமல் பத்திரமாய்த் திரும்பியுள்ளார் வீட்டுக்கு

    #####

    சோகமான செய்தி .:-(..ஆனால் புன்னகைக்க வைக்கும் வரிகள்..

    :-)

    ReplyDelete
  34. ////கேரட் மீசைக்காரர் Clifton தான் அந்த பிரஷ் மீசை நிறைய மண் வாங்கியிருக்கும் முதல்வர் ////

    ஆனா எனக்கு ஏனோ கர்னலை ரொம்பப் பிடிக்கும்! 😫😫😫😫😫😫😫

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கர்னலை ரொம்ப பிடிக்கும்.

      Delete
  35. ஆச்சர்யம் தொடர்கிறது - நமது 'தானைத் தலைவி' ரூபத்திலும் ! Oh yes , மீன் பிடிக்கிறாரோ, நண்டு பிடிக்கிறாரோ, மாடஸ்டி இம்முறை விற்பனையிலொரு குறைந்தபட்ச சாதனைக் கோட்டைத் தொட்டுப் பிடித்து இருப்பது உற்சாகமூட்டுகிறது

    ######

    மகிழ்ச்சி

    ReplyDelete
  36. "சும்மா வாரா வாரம் இங்கே நொய்யு..நொய்யு'ன்னு துட்டுக்கு அடிபோடறியே ?" என்று எனது அனற்றல்கள் உங்களுக்கு நெருடிடக்கூடும் என்பது புரிகிறது தான்

    ####

    கண்டிப்பாக இல்லை சார்..சந்தாவே நமது வண்டியின் ஆயில் என்பதை நாங்களும் உணர்ந்தே உள்ளோம்..

    ReplyDelete
  37. கார்ட்டூனோ ,ஆக்‌ஷனோ..பழமையோ ..புதுமையோ விற்பனை நிலவரங்களை கொண்டே இதழ்களை முடிவெடுங்கள் சார்..

    விறுப்பு வெறுப்பின்றி ஆதரவளிக்க நாங்கள் தயார்..

    ReplyDelete
  38. ரொம்ப ஆச்சரியம் + அதிர்ச்சி கலந்த சமாச்சாரமே தோர்கலின் விற்பனையில் ஏற்பட்ட தொய்வுதான்! காரணம் என்னவாக இருக்குமென்று இங்கே ப்ளாக்கிலேயே ஒரு கலந்தாய்வுக் கூட்டம் வைக்கணும் போலிருக்கே?!!

    ReplyDelete
  39. டெக்ஸ் வில்லர் - ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் இவர் நமது காமிக்ஸ் பயணத்தின் மிக முக்கியமான தூண் என நிருபித்து வருகிறார். வணக்கம் டெக்ஸ்.

    ReplyDelete
  40. மகிழ்ச்சியான செய்திகளையும்,சங்கடமான செய்திகளையும் பதிவில் அழகாய் ஒருங்கிணைத்து சிரிப்பு சாரல்களை ஆங்காங்கே அழகாய் தூவி அருமையான பதிவாய் கொடுத்திருக்கிங்க சார்...

    ReplyDelete
  41. /காத்திருக்கும் காலங்களில் - 'கார்ட்டூன் என்றொரு ஜானர் இருந்தது இங்கே' என்று கல்வெட்டில் பதித்து நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளணும் போலும் ! எத்தனை முயன்றும், கார்ட்டூன்களை அக்மார்க் குயந்தைக சமாச்சாரமாகவே கருதிடும் பாங்கு truly disappointing !!/

    எனக்குமே லக்கி ,சிக்பில்லை தவிர மற்றவைக்கு அதிகம் ஆர்வம் குறைவாகவே இருப்பினும் இந்த செய்தி கொஞ்சம் வருத்தமான சேதியாகவே கண்களில் படுகிறது சார்..

    ReplyDelete
  42. // And ஏனோ தெரியலை - "மர்ம தீவில் மாயாவி" ஆல்பமும் அதிரடி சேல்ஸ் !! //
    இரும்புக் கையாரின் அதகளம்...

    ReplyDelete
  43. // இந்தாண்டின் surprise package நம்ம சட்டித்தலையன் ஆர்ச்சி தான் ! //
    பழைய ஆட்கள் தனது இடத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வது வியப்பு...

    ReplyDelete
  44. // 'பேர கேட்டாலே சும்மா அதிருதுலே !!" என்ற டயலாக் நம்ம 'தல' ஒருத்தருக்கு நிரந்தரமாய்ப் பொருந்தும் போலும் !! //
    அரிமா,அரிமா...நானோ ஆயிரம் அரிமா...

    ReplyDelete
  45. // ஆனால் இந்த திடகாத்திரரை மட்டும் இடம் மாற்ற யார் எண்ணினாலும் - "வாய்ப்பில்லியே ராஜா !!" என்பதே பதிலாகிறது ! //
    இவரு ரூட்டு தல இல்லை,தில்லு தலை...

    ReplyDelete
  46. // இந்த ஒல்லிப் பிச்சான் மட்டும் ரோஹித் ஷர்மாவைப் போல நொறுக்கித் தள்ளுகிறார் ! //
    மகிழ்ச்சி,மகிழ்ச்சி...

    ReplyDelete
  47. // ஸ்பைடர் சாரும் இந்த வருஷம் தில்லாய் கெத்து காட்டியுள்ளார் ! //
    கூர் மண்டையரா கொக்கா...

    ReplyDelete
  48. // இங்கே அலசப்பட்டு, சிலாகிக்கப்பட்ட இதழ்கள் எல்லாமே ஒரு லெவல் கூடுதல் விற்பனை கொண்டிருப்பது கண்கூடு //
    நல்ல செய்தி...

    ReplyDelete
  49. // லக்கி லூக்குக்கு அடுத்த இடம் Smurfs களுக்கே !! //
    மகிழ்ச்சி,மகிழ்ச்சி...

    ReplyDelete
  50. // ஆனால் இந்த ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரை நம் கிட்டங்கியிலிருந்து வழியனுப்ப இன்னும் ஏக காலமாகும் போலும் !! Truly perplexing ! //

    அடடே லார்கோவும்,ஷெல்டனும் விறுவிறுப்பான ஸ்லாட் ஆச்சே...!!!

    // சிகப்பு லைட் ஏரியாவிடினும், தனது பெயருக்கு நேராய் ஆரஞ்சு லைட் கண்சிமிட்டும் இன்னொரு ஹீரோவும் இல்லாதில்லை & believe it or not - அவர் ரிப்போர்ட்டர் ஜானியே !! //

    ஓ காட்...!!!

    // நடப்பாண்டில் சென்னை விற்பனையில் தோர்கல் ரொம்பவே...ரொம்ப ரொம்பவே கோட்டை விட்டுள்ளார் !! //

    எதிர்பார்க்காத அதிர்ச்சியான செய்தி...!!!

    ReplyDelete
    Replies
    1. // சிகப்பு லைட் ஏரியாவிடினும், தனது பெயருக்கு நேராய் ஆரஞ்சு லைட் கண்சிமிட்டும் இன்னொரு ஹீரோவும் இல்லாதில்லை & believe it or not - அவர் ரிப்போர்ட்டர் ஜானியே !! //

      வருத்தமான செய்தி ☹️

      Delete
  51. பேசாம தோர்கலுக்கும் மஞ்சளோ, சிகப்போ, பச்சையோ ஒரு சட்டைய மாட்டி விடுங்க. வசூலும் களை கட்டிடும்.

    ReplyDelete
  52. // கிட்டத்தட்ட அனைத்து கிராபிக் நாவல்களுமே இம்முறை செமையாய் ஸ்கோர் செய்துள்ளன ! //
    அடடே சூப்பரு...

    // மாறி வரும் ரசனைகளுக்கொரு வழிகாட்டியோ ? புரிந்திட முழி பிதுங்கி நிற்கிறேன் ! //
    விற்பனை நிலவரங்கள் கலவையாய் உள்ளன சார்...
    இதுவுந்தேன்,அதுவுந்தேன்னு எல்லாதையும் கலந்து கட்டி அடிச்சிருக்கு...

    ReplyDelete
  53. ரெட்டஸ்ட் கதைக்கு கமான்சேன்னு பேர் வச்சது நேமாலஜிபடி சரியில்லே. பேர மாத்துங்க. ஒர்க்அவுட் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. ரெட் டஸ்ட் பேரை வேணும்னா புல் டஸ்ட்னு மாத்திருவோம்...
      அவரை நிலைமை இப்ப அப்படித்தான் இருக்கு...

      Delete
  54. சலாம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க....

    ReplyDelete
  55. Sir

    Time to introduce 4 Lucky Luke MAXIS a year apart from the hard bound annual double album.

    As for Thorgal the covers need a relayering. Thorgal stories have been super good but have always felt covers needed to catch up. Take Sticker Saathappan's help or that of Dust Cover David.

    Others look as expected. The size and price range of classics are making an impact as well.

    ReplyDelete
    Replies
    1. Not sure if all our current readers are fully on board the fantasy genre that Thorgal represents sir...

      Delete
    2. சார், இப்போது நீங்கள் விற்பனை பற்றிக் குறிப்பிட்டிருப்பவற்றில் சற்றே பின்தங்கியிருக்கும் நாயகர்கள், அவர்களின் கதைகளில் தமிழில் வெளிவந்தவை பற்றி - அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படும் புத்தகங்களில் (டெக்ஸ், லக்கி, இரும்புக்கையார், ஆர்ச்சி.....) குட்டி குட்டியாக விவரணங்கள், அவற்றின் சுவாரஸ்யங்கள் பற்றி படங்களோடு எழுதினால் என்ன?

      ஃபில்லர் பக்கங்களாகவும் அவை மாறும்; நமது புத்தகங்கள் பற்றிய பதிவுகளாகவும், அந்தக் கதைகள் பற்றிய புரிதல் அல்லது ஈடுபாடு இல்லாதவர்களை கொஞ்சம் ஈர்க்கவும் முடியுமாக இருக்கலாமில்லையா?

      Delete
  56. இந்தாண்டின் surprise package நம்ம சட்டித்தலையன் ஆர்ச்சி தான் ! வண்ணத்திலான அந்த மாக்சி சைஸ் இதழும் சரி, பாக்கி b&w இதழ்களும் சரி, போட்டி போட்டு விற்றுள்ளன ! So மாயாவியாருக்குச் சொன்ன அதே பன்ச் லைனைத் தான் நமது சிகப்பனுக்கும் சொல்லணும் போல : வாசிப்போ, சேமிப்போ - நேசிப்புக்கு குறைவில்லை ! //// ஹா ஹா ஹா....எங்க போய் மூஞ்ச வச்சுக்குவாங்கனு தெரியலியே!!!! சிரிப்பு சிரிப்பா வருது...

    ReplyDelete
  57. சம்மருக்கு ஒர் ஆர்ச்சி பெசலு பார்சலு.....

    ReplyDelete
    Replies
    1. அடுத்த சம்மருக்குப் பாத்துப்போம் சாரே !

      Delete
  58. இனிமேல் நெச ஹீரோக்கள கழுவி ஊத்தருத்துக்கு முன்னால யோசிப்பாங்கல்ல? இந்த ஹீரோக்கள் வரது கம்பெனிக்கும் நல்லதுதானே?

    ReplyDelete
  59. Sir, please share the email id to write comics review.

    ReplyDelete
  60. கொரில்லா சாம்ராஜ்யம் - அட்டைபடத்துக்கு சென்னை ஓவியர் போட்ட அட்டைப்படம் செம. வேற லெவல். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  61. நானும் வந்துட்டேன். கொஞ்சம் லேட் தான் ஆனாலும் வந்துட்டேன்.

    ReplyDelete
  62. கொரில்லா சாம்ராஜ்யத்துக்கு நமது சென்னை ஓவியர்(?!!) போட்ட அட்டைப்பட ஓவியம் அட்டகாசம்! இரண்டாவதை விட முதல் ஓவியமே அழகாகவும், இயல்பாகவும் இருக்கிறது! இரண்டாவது ஓவியத்தில் கண்களில் தெரியும் அந்த மிரட்சி ரொம்பவே தூக்கல் ! தன்னுடைய இரும்புக்கையைப் பார்த்து தானே அதிர்ச்சியடைவதைப் போல! (இன் ஃபேக்ட், நாங்கதானே அதிர்ச்சியடையணும்?! ;) )

    ஆகவே எனது வோட்டு முதல் அட்டைக்கே!

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ, ஸ்டீல் க்ளா கை மட்டும் ப்ளாஸ்டிக் கைப் போல தெரிகிறதே!?

      Delete
    2. முடித்து வந்திருக்கும் கலர் டிசைனை அடுத்த பதிவில் கண்ணில் காட்டுகிறேன் பாருங்கள் சார் - மிரட்டும் !

      Delete
    3. ///எனக்கென்னவோ, ஸ்டீல் க்ளா கை மட்டும் ப்ளாஸ்டிக் கைப் போல தெரிகிறதே!///

      அப்படீன்னா ப்ளாஸ்டிக் கை மாயாவி தோன்றும் 'கொரில்லா சாம்ராஜ்யம்'னு போடச் சொல்லுவோம்! :D

      Delete
  63. ///நியூயார்க்கில் மாயாவி" தான் இந்தாண்டின் topseller///

    எனக்கென்னமோ யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் தான் மொத்த புத்தகத்தையும் வாங்கியிருப்பாங்களோன்னு தோனறது! :D

    ReplyDelete
    Replies
    1. Ha ha நம்ம மாயாவி சிவாவா இருக்குமோ

      Delete
  64. இனிமேலாவது டெக்ஸ் மெபிஸ்டா யுமா கதைகளை களமிறக்குங்க சாரே. விற்பனை பின்னி பெடெலெடுக்கும். அதுவும் கலர்ல்ல ஹார்ட் பவுண்டில போட்டிங்கன்னா செம கலெக்ஷன் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்க சார் - நிம்மதியாய் ஓடி வரும் 'தல' பிழைப்பையும் நாமாகவே கெடுத்துக் கொள்ளவா ?

      இளம் டெக்ஸ் தொடரில் அடுத்த வருஷம் வரவுள்ளதொரு பாகத்தில் மெபிஸ்டோ உண்டு ! அதுவே மேற்கொண்டும் பின்னாட்களில் நீடிப்பின், அதனில் ரசித்துக் கொள்ளுங்கள் ! அது நீங்கலாய் ரெகுலர் டெக்ஸ் வரிசையில் இப்போது போலவே கதைத் தேர்வுகள் தொடர்ந்திடும் !

      Delete
    2. ஏனுங்க சார் - நிம்மதியாய் ஓடி வரும் 'தல' பிழைப்பையும் நாமாகவே கெடுத்துக் கொள்ளவா ?




      Sir ithukku munnadi yetthanai mefisto Kathaiyai veliettu , athu sales aagama ninnu pochinga sir..? Nenga ivlo saluppa solrathukku......sales a aagatha kathaiyai yellam yegappattathu velieduringa...aana nalla sales aagura tex kathaiyai yen velida ivlo yosikiringa.? ..oru mefisto story a veliettutu Athoda sales yeppadi erukkunu parthuttu oru mudivukku vantha paravala....atha vittutu oru story kuda viliedama nengaley oru mudivu yeduthuttu eppadi sonna Yennanga sir arttham....oru tex book sales aagama pona adutha book um sales aagama poieduma yenna...? Eni nenga veliettalum sari...veliedalainalum sari...enimel atha a pudicikittu kenjikittu erukka porathu ella sir....romba santhosam sir...

      Delete
  65. இளவரசி விற்பனையில் முன்னேற்றம் கொண்டிருப்பது மகிழ்ச்சி

    ReplyDelete
  66. தோர்கல்- தொடராக இருப்பதானால், அனைத்து வெளியீடுகளையும் வாங்குவதை விட, ஒன் ஷாட் கதைகள் வாங்குவது சுலபம் என்பது புது வாசகர்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //புத்தக விழாக்களில் வாங்கிடும் வாசகர்களில் ஒரு கணிசப் பகுதியினர் - கிட்டத்தட்ட ரெகுலர் வாசகர்களே ! ஆண்டுக்கொரு தபா சென்னையில் வாங்க மட்டும் செய்கிறார்களா ; அல்லது இதர சமயங்களில் ஆன்லைனிலும் வாங்குவரா என்பது தெரியலை ; but அவர்களுக்கு புது வரவுகள் எவை ? ஸ்பெஷல் வரவுகள் எவை ? இங்கு அலசப்படும் ஹிட் இதழ்கள் எவை என்பதிலெல்லாமே நல்லா தெளிவு உள்ளது விற்பனையாகியுள்ள டைட்டில்களிலும், நம்பர்களிலும் பிரதிபலிக்கின்றது !//

      Delete
    2. ரெகுலர் வாசகர்களுக்கு தோர்கல் புத்தக விழாவில் வாங்கும் தேவை இல்லாது போகலாம். எனது அனுமானம், புதியதாய் புரட்டி பார்த்து வாங்கிடும் வாசகர்/பெற்றோர்.
      அதுவே அமயா தேர்ந்தெடுக்க படாமல் போனதன் காரணமாகவும் இருக்கலாம்

      Delete
  67. தாங்கள் ஷேர் செய்த வெற்றி நாயகர்கள் அனைவரின் கதைகளும், தனியாக படித்து விட்டு சுலபமாய் கடந்துவிடலாம். தோர்கல், அப்படி அல்ல. அது ஒரு மெகா தொடர்.

    ReplyDelete
  68. சார்‌அருமை...ஸ்மர்ஃப அடுத்த ஆண்டே களமாட விடலாமே....லார்கோ....தோழர்கள் சுனக்கம்....நம்பவே ஏலல....ஜீரனிக்கவுந்தா

    ReplyDelete
  69. அது போல ஆர்ச்சி..மாயாவில்லா கலர்ல மேக்சி சைசுலயே வரட்டுமே....யார் அந்த மாயாவியுமே

    ReplyDelete
  70. ஸ்மர்ஃப்- எனது மகளை படிக்க வைக்க தூண்டிகொன்டிருக்கிறேன். அவள், மிகவும் பிடிக்கும் தியா ஸ்டில்டன் புத்தகங்கள்,ஒரு நாளில் இரண்டு படிப்பவள், டோர்க் டைரிஸ் - முழு புத்தகம் படிக்ககூடிய பெண், இரண்டு பக்கங்கள் படிக்க விருப்பப்படவில்லை. 5th std.
    அவளிடம் பேசியபோது அவள் சொன்னது,
    1. பொடி பாஸை புரியவில்லை. தமிழ் இரண்டாம் மொழியாய் படிக்கும் பல குழந்தைகளால், திரிபு சொர்க்க்களை கண்டு உணர, ரசிக்க பொறுமையோ, தேவையோ இருப்பதில்லை.
    2. Lucky லூக் - புத்தகத்தில் பார்த்தாலே புரியும் வண்ணம் இருக்கும் நகைச்சுவை, இதில் இல்லை என்பதும் அவள் கருத்து.
    ஆச்சரியமாக, அவளுக்கு பென்னி பிடித்துள்ளான்

    ReplyDelete
    Replies
    1. அட குட்டி ரசிகை + கமெண்ட் மிக முக்கியத்துவம் ஆனது. பாராட்டுக்கள்.

      Delete
  71. ஆசிரியர் அவர்களுக்கு,
    வணக்கம்.
    தங்களது அனுபவங்களை பதிவுகள் வாயிலாக வாசகர்களாகிய எங்களின் அறிவை,உணர்ச்சிகளை கூர்மையாக்கிவயும்,விசாலமாக்கியும்,
    ஆழமாக்கியுமிருக்குக்கிறீர்கள்.
    தங்களது பதிவின் முடிவில் கூறிய வாசகம் (யாசகம்)எம்மை சங்கடப்படுத்துகிறது.தயவு செய்து இம்மாதிரியான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்பதை சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தனபாலன்,மதுரை +100000000

      காமிக்ஸில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் பிழைப்பு நடத்தவேண்டுமென்ற அவசியம் உங்களுக்கில்லை என்பதை நாங்கள் அனைவருமே நன்கு அறிவோம் எடிட்டர் சார்!

      காமிக்ஸ் மீது நீங்கள் கொண்ட அதிதீவிரக் காதலே இத்தனை தூரம் உங்களை இறங்கச் செய்கிறது என்பதையும் நாங்களறிவோம்தான்..

      ஆனாலும்.. ஆனாலும்...

      காமிக்ஸை வாழ வைக்க நீங்கள் கரம் கூப்பும் ஒவ்வொரு முறையும் நெஞ்சு கனத்துப் போவதைத் தவிர்க்க முடியவில்லையே! :(

      உங்களின் இந்த நேசத்திற்கு வேறு என்ன கைமாறு செய்திட முடியும் எடிட்டர் சார் - இறுதிவரை இந்தப் பயணத்தில் உங்களோடு நாங்களும் இணைந்திருப்பதைத் தவிர?!!

      Delete
    2. // காமிக்ஸை வாழ வைக்க நீங்கள் கரம் கூப்பும் ஒவ்வொரு முறையும் நெஞ்சு கனத்துப் போவதைத் தவிர்க்க முடியவில்லையே! :( //

      +1

      காமிக்ஸ் ஆசிரியர் என்று இருந்த உங்களுடன் இந்த தளத்தில் மற்றும் புத்தகவிழாகளில் நேரில் உரையாட ஆரம்பித்த முதல் நாளில் இருந்து நீங்கள் ஒரு ஆசானாகவே எனக்கு தெரிய ஆரம்பித்தீர்கள், உங்களின் பதிவுகளில் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டேன், குறிப்பாக பொறுமை, நிதானமாக ஒரு விஷயத்தை அனுகுவது மற்றும் நண்பர்களுக்கு உதவும் மனப்பான்மை. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் போல் அனுபவம் மூலம் வாழ்க்கை பாடங்கள் சொல்லிய நீங்களும் எனது வாழ்வில் மிக முக்கியமானவர்.

      இனி இதுபோல் எழுதாதீர்கள் சார். மனது ரனமாக வலிக்கிறது.

      Delete
    3. அன்பிற்குரியவர்களிடம் சங்கோஜப்பட அவசியங்கள் இல்லியே சார் ? கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய அங்கமாகியுள்ளதொரு விஷயத்தின் பொருட்டெனும் போது எனக்கு கை கூப்புவதில் கஷ்டம் தெரியலை சார் !

      Delete
    4. And sorry நண்பர்களே, வார்த்தைப் பிரயோகம் உங்களை நெளிய வைத்திருப்பின் !

      Delete
    5. நெளிய வைக்கவில்லை சார் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

      Delete
    6. சார், எங்களுைடைய ஆதங்கம் புதிய வாசகர்களையும் சென்றடைய முடியவில்ைலயே என்பது மட்டுமே..
      மற்றபடி நாங்கள் உங்களோடு பயணிப்பதில் எந்த குறையும் ஏற்படாது. சார்.

      Delete
  72. எனது மனைவியிடம் டெக்ஸ், ஜானி அண்ட் ஜானி2.0, மூன்று கதைகள் தந்து படித்தே ஆக வேண்டும் என கூறி (பதிலுக்கு அவர் அனுப்பிய youtube வீடியோ பார்த்தேன் 😂). அவர் முழுமையாக படித்து முடித்தது தலயின் கதை - கைதியாய் டெக்ஸ் - போராடி முடித்தது ஜானி 2.0.
    அவர்களின் கருத்து, தலயின் "கதை படிக்க ரொம்ப இன்டெரஸ்ட் ஆக இருக்கு"

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! சூப்பர்ங்க நவனீதன்!! :))))

      Delete
    2. டெக்ஸ் - பென்களின் favorite, எங்க வீட்டிலேயும் அதே

      Delete
    3. ஒரு வேளை, நம்மை போலவே வீரம், தீரம், அறம், மறம், எல்லாம் அவர்க்கு கதைல இருக்கற மாதிரி படிக்கிறதால, நம்ம மேல பொழியற அன்பு கொஞ்சம் புல்லுக்கும்- தல- பாயுதோ என்னமோ 😉

      Delete
    4. கொடுத்தது கொடுத்தீங்க ; டெக்சின் எதேனும் மிரட்டலான புக்கைத் தந்திருக்கப்படாதோ ?

      Delete
  73. Watched the movie pinocchio 2019 after reading martin book. Great movie. Enjoyed with my sons. Thanks

    ReplyDelete
  74. டிடெக்டிவ் ஸ்பெஷல்-
    1. மன்ஹாட்டன் மரணங்கள்- எனக்கு மிகவும் பிடித்த கதை இது. மிஸ்டர் கப்லன்- (one of famous character in Blacklist serial got the same name) பாலியல் குறைபாடு கொண்ட ஒரு நபர். தனக்கு எட்டாத இடத்தில் இருக்கும் பெண்களை கண்டால் மட்டுமே சற்று நேரம் அந்த குறைபாடு ஓரளவேனும் மறையும் மனச்சிதைவு நோய் கொண்ட ஒரு நபர்.
    ஆனால் முட்டாள் அல்ல.
    துணைக்கு யாரும் இல்லாத, அழகான, இளம் பெண்களின் வீட்டில், ஒரு ப்ளம்பர் ஆக சென்று, எவ்வாறு அவர்களை ஏமாற்றி, கட்டிலில் கட்டிவைத்து, ஆடைகளை களைந்து, அவர்களை சித்திரவதை செய்து, அவ்வாறு அவன் செயல்களில் ஈடுபடும்போது ஏதேனும் சிறு இன்பம் கிடைக்காதா என தேடும், செய்யும் குற்றங்களுக்கு சற்றும் வருந்தாத, இயல்பாய் உலாவரும் ஒரு மன நோயாளி (Highly functional sociopath).
    ராபின் குற்றங்கள் நிகழ ஆரம்பித்த 2 மாதத்திற்க்க்குள் அவனை கண்டுபிடித்து, முடித்து விடுகிறார் என்றே எண்ணுகிறேன்.
    இம்மாதிரி சைக்கோ கொலையாளிகள் இவ்வளவு சீக்கிரம் மாட்ட மாட்டார்கள், ஆனால் அவர்கள் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் 7 கொலைகள் செய்வதும் இல்லை.
    மிஸ்டர் கப்லன் தனக்குள் அடக்கபட்டிருந்த வெறி கட்டுப்பாடிழந்து இவ்வாறு வெளியானதும் காரணமாக இருக்கலாம்.
    இதே கதையினில், BDSM - 50 shades story line- ஒத்த சில விசயங்களிள் ஈடுபாட்டுடைய ஒரு நபரும், சந்தேக பட்டியலில் இடம் பெற்று, பல சூழ்நிலை அவரை குற்றாவாளி என கை காட்டினாலும், ராபின் தீர்க்கமாக, யோசித்து இவனை நெருங்கும் முறையும், வைக்கும் பொறியும் அட்டகாசம்.
    இறுதியில் சுமார் 6 பேனல்களில் அவர் தரும் கும், நங், சத் சொல்லும் உள்ளிருந்த ஆவேசத்தை.
    10/10

    ReplyDelete
  75. Watched the movie pinocchio 2019 after reading martin book. Great movie. Enjoyed with my sons. Thanks

    ReplyDelete
  76. சந்தா பற்றிய ஒரு சிந்தணை - For next year is it possible to keep the book names, front cover secret?
    Idea can be given which hero stories will be featured but keeping the actual titles under cover until the release will increase the curiosity

    ReplyDelete
    Replies
    1. Can do sir, but not sure if everyone would be o.k with it...

      Delete
  77. ஆனால் இந்த யாசிப்பே நம் ஒட்டுமொத்த (காமிக்ஸ்) வாசிப்பின் பின்னணி எனும் போது, சந்தோஷமாகவே கையேந்திக் கரம் கூப்புகிறேன்//

    சார் ப்ளீஸ் வேண்டாம் வருத்தமாக உள்ளது.. எப்பொழுதும் உங்களுடன்...இருப்போம்..

    ReplyDelete
    Replies
    1. அட..நம்மவர்களிடம் எனக்கென்ன கூச்சம் பழநி ?

      Delete
  78. ஒரு கனவு இல்லம் -
    Bagua- பகுவா- ba- 8, Gua - areas.
    எட்டு திக்குகள் என்று கூறி, அவற்றிற்கான நிறம், குணம் என வாஸ்து கூறுவதுண்டு.
    சீனர்களில் டஒய்ஸ்ம்-taoism என்னும் வழக்கில் நம்பிக்கை உள்ளவர்கள், இந்த பகுவாவினை பாதிகாதவாறு கட்டிடங்கள் கட்டுவார். நம்மிடையே மண்டலம் என யந்திரம் எழுதுகையில் கூறப்படுவது போல, அவர்கள் யின்யாங் என இரு பொருள் தத்துவம் கொண்டு அமைப்பார்கள்.
    வயதான காலத்தில் பணத்திற்க்கு ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்து கொண்ட இளம் மனைவியை வெறுத்து, அவளை தண்டிக்க எண்ணி நல்ல எண்ணம் தோன்றாது, தீய எண்ணங்கள் வலுப்பெறும் வண்ணம் வீட்டை நிர்மாணிக்க திட்டமிட்ட ஒரு தேர்ந்த கட்டிட கலைஞன், எவ்வாறு அந்த திட்டம் நூற்றாண்டு கடந்தும் பல குடும்பங்களை சிதைத்து இறுதியில் இல்லாமல் போகிறது என்பதே கதை.
    இயல்பாக பல நாட்கள் அல்லது மாதங்கள் கழித்து வரும் துர் எண்ணங்கள், டைலன் டாக்கிற்கு உடனே வர காரணம் அவரது கூர்ந்து அறியும் நுண்ணறிவு புலன்களே. பல நேரங்களில் உதவியாய் இருந்த அவை, இந்த கதையில் அவரை சுலபமாக பாதிப்பிற்க்கு உள்ளாக வைப்பது எதிர்ப்பாரத ட்விஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. கதை சொல்லக் கையிலெடுத்த கரு செம different !

      Delete
  79. //இந்த யாசிப்பே நம் ஒட்டுமொத்த (காமிக்ஸ்) வாசிப்பின் பின்னணி எனும் போது, சந்தோஷமாகவே கையேந்திக் கரம் கூப்புகிறேன்// ஆசிரியரே கண்டிப்பாக காலமெல்லாம் உங்கள் கரங்களோடு இனைந்திருப்போம் அப்படி இல்லாத நாளில் நாங்கள் பூமியை விட்டு மறைந்திருப்போம்

    ReplyDelete
    Replies
    1. அட...ப்ரீயா விடுங்க சத்யா ! இந்தச் சிறு வட்டத்துக்கு பெரும் தேவன் மனிடோவின் ஆசிகள் என்றைக்கும் இருக்கும் !

      Delete
    2. இணைந்திருப்ேபாம்.. இன்றேல்
      மறைந்திருப்ோம்...செம...

      Delete
  80. //இதோ இம்மாதத்து ராபினுக்கு விழும் கொட்டுக்கள் என் மண்டையில் விழுவதாகவே உணர்கிறேன் !//

    இது தவறு ஐயா!


    மன்ஹாட்டன் கொலைகள்:


    ராபினுக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதை மிகச்சரியாக கொடுத்துள்ளது இந்த கதை என்பது என் கருத்து.

    திருடன்-போலீஸ் கண்ணாமூச்சி ஆட்டத்தில், திருடன் முன்னணியில் இருக்கும் வரையிலும், ஆட்டம் சுவரசியமாகவே இருக்கும். அந்த வகையில், இறுதி இரண்டு பக்கங்கள் வரையிலும், திருடனே (கொலைகாரனே) இந்த கதையின் முன்னணியில் இருக்கிறான். இதைவிட வேறென்ன வேண்டும் ராபின் கதைக்கு.

    வழக்கமான முடிச்சுகளும், மாறுபட்ட எண்ணவோட்டங்களும் கதையின் போக்கை சுவரசியமாக கொண்டு சென்றன.

    அதிலும் கடைசி இரண்டு பக்கங்களின் ட்விஸ்ட் அடடே போட வைக்க, இடையிடையே வசனங்களிலும் ஆசிரியர் புகுந்து விளையாடியுள்ளது சிறப்பு🥰🥰🥰

    மற்ற கதைகள் இனிமே தான்...

    ReplyDelete
  81. அப்புறம், சட்டத்தலையன் பற்றிய செய்தி, ஆர்ச்சி இன்னமும் சாதி்ப்பதை உறுதி செய்கிறது.

    அதுவும் மேக்ஸி கலர்,மெய்யாலுமே அதகளம்!!!

    நன்றி ஐயா🙏🏼

    ReplyDelete
  82. லார்கோ, தோர்கல்

    தற்காலிக சறுக்கலாகவே தோன்றுகிறது. இந்த கதைகளையெல்லாம், யார் தான் வேண்டாமென சொல்வார்கள் 🤷🏻

    ReplyDelete
    Replies
    1. நிஜத்தைச் சொல்வதானால் முன்னவர் என்றைக்குமே புத்தக விழாக்களின் செல்லப் பிள்ளையாய் இருந்தது கிடையாது நண்பரே !

      Delete
  83. விற்பனையில் முன்னேற்றம் கண்ட மாடஸ்டி. இத்தனைக்கும் மாடஸ்டியின் கதைகள் நன்றாக இருந்த போதிலும்நண்பர்கள் நெகட்டிவ்வானவிமர்சனங்களையே பதிவிட்டு வந்துள்ளனர். எனினும்நமது முதல் கதாநாயகி தனதுஇருப்பை நிரூபித்தே வருகிறார்.மாடஸ்டியின் விற்பனை சந்தோசத்தைத்தருகிறது கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அந்த பெரிய சைசில் பளிச் அட்டைப்படத்தில் இளவரசி பார்வைகளைச் சுண்டி இழுத்தாரோ - என்னமோ சார் !

      Delete
  84. சார் லார்கோ....தோழர்கள்....ஷெல்டன்....நிறைய கதைகள் என்பதால் புதிதாய் வாங்குவோர் வாங்காமலிருப்பார்களோ....

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே, 'தல' டெக்சில் நம்மிடம் உள்ளவை லார்கோவையும் , ஷெல்டனையும் சேர்த்ததை விடவும் ஜாஸ்தியான டைட்டில்கள் ஆச்சே ?

      Delete
    2. லார்கோவை பொறுத்த வரையில், கடைசியாக புதிய கதை வெளிவந்து குறைந்தது 1 வருடம் இருக்கும் சார். புதிதாக கதைகளை வெளியிட்டிருந்தால், விற்பனையில் சாதித்திருக்கலாம்.

      தனிப்பட்ட வகையில், லார்கோவின், ஷெல்டனின் சமகால ஆக்ஷன் கதைகளுக்கு ஈடாக வேறு கதைகளை நினைத்தும் கூட பார்க்க முடியாது. லேடி எஸ் கதைகளில் இந்த முயற்சி நன்றாகவே பலித்திருந்தாலும், விமர்சனங்களால் ஓரம்கட்டப்பட்டு விட்டார்.

      Delete
  85. 2021 - ரெகுலர் புத்தகங்களில் புதுமையாக ஏதாவது செய்யலாமா (சில பதிவுகளுக்கு முன்னால் நீங்கள் கேட்ட கேள்விக்கு எனது suggestions)
    1. விமர்சனம் இது தளத்திற்கு அப்பால் உள்ள வாசகர்களை சென்று அடையும் அவர்களும் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை செலக்ட் செய்து வாங்க உதவும்.

    2. மாதம் இரு வாசகர்கள் - ஆரம்ப காலத்தில் நமது புத்தகங்களில் தவறாமல் இடம் பெற்ற இது பகுதியை முடிந்தால் மீண்டும் தொடரவும்.

    3. கிச்சு விச்சு, மற்றும் பல முக மன்னன் பிங்கி போன்ற சிறிய சிரிப்பு துணுக்குகள்.

    4.அறிவியல் சார்ந்த துணுக்குகள் அல்லது கதைகளில் வரும் ஏதாவது விஷயம் பற்றி தெரிந்து கொள்வோமா என்ற தலைப்பில் எழுதலாம். சமீபத்தில் 007 கதையில் ஹனீ நண்டுகளிடம் தான் தப்பியது பற்றி சொன்னதை கூட இது உண்மையா என சொல்லலாம்.

    5. நமது வாசகர்கள் குடும்பத்தினர் வரைந்த நமது காமிக்ஸ் நாயக/நாயகிகள் படம்.

    6. சிங்கத்தின் சிறுவயதில்

    7. சீனியர் எடிட்டர் தளத்தில் எங்களுடன் உரையாட வாய்ப்புகள் இல்லை அதேநேரம் அவரின் எழுத்துக்களை ரசிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டது (கடைசியாக தோர்கல் கதையில் அவரின் எழுத்துக்களை ரசித்தேன்). அவரை நமது காமிக்ஸில் மாதாமாதம் ஏதாவது (ஆரம்பகால காமிக்ஸ் அனுபவங்களை) விஷயங்களை எழுத சொல்லலாமே?

    8. மாதம் ஒரு விற்பனை முகவர் என்ற தலைப்பில் நமது காமிக்ஸ் விற்பனைக்கு உதவி வரும் நண்பர்கள்/புத்தக விற்பனையாளர்கள் பற்றி எழுதலாம்.

    இதில் பல விஷயங்கள் நண்பர்கள் ஏற்கனவே சொன்னவைகள் தான் என நினைக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே சில சமாச்சாரங்களை நடைமுறைப்படுத்தத் துவங்கியாச்சு சார் ; in fact நேற்று முதலாய் அந்தப் பணிகள் தான் ஒடி வருகின்றன !

      Delete
  86. கௌபாய் எக்ஸ்பிரஸ் மூனு தடவை படிச்சாச்சு.. ராபினும் முடிச்சாச்சு.. மீதி கதைகளை இன்னிக்கு முடிக்கனும்..

    ReplyDelete
    Replies
    1. இது தான் லக்கியின் மேஜிக் போலும் !

      Delete
  87. ராபின் கதை மன்ஹாட்டன் மரணங்கள்.. நேர் கோட்டு கதையானுலும் விறு விறுப்புக்கு ஒரு துளி கூட பஞ்சமில்லை.. வாசிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் புத்தகத்தை வைக்க முடியாது.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. அட மற்றும் ஒரு நச் விமர்சனம்.

      Delete
  88. புத்தக விழாக்களில்...

    மாயாவி - இளமையை மீட்டெடுக்கும் கனாக் காலங்கள்...

    லார்கோ ஷெல்டன் 13 - ரசித்தோருக்கே அதன் ருசி தெரியும்...

    டெக்ஸ் - பெரும்பாலும் வாங்குவோர் சைலண்ட் அணியினர்...

    லக்கி லூக் - ----do---

    தோர்கல் - ரெகுலர் வாசகர்களுக்கே புரிவதில்லை...

    மாடஸ்டி - அறிந்தவர் வாங்குவர்...மாடஸ்டிக்கு பிடித்த சீனியர் சிட்டீஸன்ஸ்ஸ்ஸ்...

    கமான்சே பிரின்ஸ் புரூனோ எல்லாமே ஆறிப்போன தோசைகள்.

    கேஷுவல் வாசகர்கள் - நாஸ்டால்ஜியா வுக்காக வாங்குவர்...

    சினிமா பார்க்க ஆயிரக்கணக்கில் தியேட்டரில் வெட்டி பந்தா செலவு செய்வோர் தான் இப்பொழுது அதிகம்...
    தெரிந்திருந்துமே அங்கே கூடுதல் விலையில் மசாலா பாப் கர்னயும் அக்காமாலா கப்சியையும் குடிப்பார்கள் ஸ்ட்ரா பந்தா...

    காமிக்ஸ் படிப்போர் வட்டம் இம்மியே...

    புதிய வாசகர்கள் கிடைப்பது அபூர்வம்...

    எம் குடும்பத்து இளையோரே வேறு வழியின்றி இதை படிக்க (செல்பௌன் டிஸ்ச்சார்ஜ் ஆயிருந்தால்) தொட்டதினால் தொடர் வட்டமாகியுள்ளனர்...ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் அவர்களும் சந்தாதாரர்கள் ஆகிவிடுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை...

    இயன்ற வரை யாம் தொடர்வோம்...
    நாளை -- மகன் மகளிடம் சார்ந்து வாழும் பொழுதில் ஆண்டவனே துணை.‌.





    ReplyDelete
    Replies
    1. அந்த கும்பேஸ்வரர் பார்த்துக் கொள்வார் சார் !

      Delete
    2. */சினிமா பார்க்க ஆயிரக்கணக்கில் தியேட்டரில் வெட்டி பந்தா செலவு செய்வோர் தான் இப்பொழுது அதிகம்...
      தெரிந்திருந்துமே அங்கே கூடுதல் விலையில் மசாலா பாப் கர்னயும் அக்காமாலா கப்சியையும் குடிப்பார்கள் ஸ்ட்ரா பந்தா.../*

      ஜி, எல்லாரும் அப்படி இல்லை ஜி. எங்கயோ நாம இந்த தலைமுறை குழந்தைக்களை கவர தவறுகிறோம். நான் அறிந்த அளவில் அவர்கள் படிக்கும் ஆங்கில புத்தகங்கள் ஒன்றின் விலையில் நாம் ஓராண்டுக்கான கார்ட்டூன் புத்தகங்கள் நம்முடைய பதிப்பில் வாங்கி விடலாம், ஆனால் படிப்பதில்லை.
      சில திரைப்படங்கள் திரையில் சென்று அந்த எபெக்ட் இல் பார்த்தாலே திருப்தி. இல்லையேல், நெட்ப்ளிக்ஷ், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ இருக்கு ஆப்ஷன் ஆக.
      சில படங்கள் எதிலுமே பார்க்க லயிப்பதில்லை.
      இந்த கால சிறுவர்களை நம்பி அந்த கால சிறுவர்களை சற்றே மறந்து, தைரியமாக சில முடிவுகள் எடுக்கலாம்

      Delete
  89. விஜயன் சார், இனிவரும் காலங்களில் பெரிய நகரங்களில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் டெக்ஸ் வண்ண கிளாசிக் மறுபதிப்பு+ புதிய டெக்ஸ் கலர் என போட்டு தாக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. சென்னையும் , ஓரளவுக்கு ஈரோடும் தவிர்த்த இதர புத்தக விழாக்கள் நம்மாட்களுக்கு ஒரு ரெண்டு வாரம் ரிலாக்ஸ் செய்திடும் வாய்ப்புகளே சார் !

      Delete
    2. ஓகே. அப்படி என்றால் இந்த இரண்டு நகரங்களில் இனிவரும் காலங்களில் நடைமுறை படுத்த முடியுமா?

      Delete
    3. இதோடு சேர்த்து மாயவியும்

      Delete
  90. ஆசிரியருக்கு வணக்கம் தற்சமயம்வண்ணத்தில் வர இருக்கக்கூடிய கொரில்லா சாம்ராஜ்யம்ஏற்கனவே வந்த கழுகு மலைக்கோட்டை புத்தகத்தின் அளவில் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது

    ReplyDelete
  91. /இதோ இம்மாதத்து ராபினுக்கு விழும் கொட்டுக்கள் என் மண்டையில் விழுவதாகவே உணர்கிறேன்


    $###

    இந்த குண்டு டிடக்டிவ் ஸ்பெஷலில் எனக்கு முதலிடத்தை பிடித்த கதை ராபின் உடையது தான் சார்...

    ராபினுக்கு விழுவுது கொட்டுக்கள் அல்ல அழகான தடவல்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன் சார்..

    ReplyDelete
  92. ராபின் கதை மன்ஹாட்டன் மரணங்கள்.. நேர் கோட்டு கதையானுலும் விறு விறுப்புக்கு ஒரு துளி கூட பஞ்சமில்லை.. வாசிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் புத்தகத்தை வைக்க முடியாது.. அருமை..

    நன்றி திரு ரம்மி அவர்கள்...

    ReplyDelete
  93. இதைவிட வேறென்ன வேண்டும் ராபின் கதைக்கு.

    வழக்கமான முடிச்சுகளும், மாறுபட்ட எண்ணவோட்டங்களும் கதையின் போக்கை சுவரசியமாக கொண்டு சென்றன.

    அதிலும் கடைசி இரண்டு பக்கங்களின் ட்விஸ்ட் அடடே போட வைக்க, இடையிடையே வசனங்களிலும் ஆசிரியர் புகுந்து விளையாடியுள்ளது சிறப்பு🥰🥰🥰

    நன்றி discoverboo

    ReplyDelete
  94. இந்தமுறை குறிப்பிட்ட சில காரணங்களால் என்னால் CBFக்கு சென்றுவர இயலவில்லை! செல்லமுடியாதது குறித்து வருத்தமே! இரண்டுநாள் பொழுதை நம் ஸ்டாலுக்கு வருகைபுரிந்திடும் நண்பர்களோடும், புதிய வாசகர்களோடும், திரைப் பிரபலங்களோடும்(!?) கழித்திடும் சுகமே அலாதிதான்!

    அப்பொழுதெல்லாம் ஒருநாளில் ஓரிருவராவது "அட! முத்து காமிக்ஸா?!! இன்னும் வந்துகிட்டுதான் இருக்கா?!!" என்று வியப்புக்காட்டத் தவறியதில்லை! முகம்நிறையப் புன்னகையோடு, கண்கள் மிளிர அவர்கள் இரும்புக்கையையோ, லாரன்ஸ்-டேவிட்டையோ, ஸ்டெல்லாவின் பாஸையோ கையில் ஏந்திக் குதூகலிக்காமல் இருந்ததில்லை! அக்கதைகளின் சிறப்புப் பற்றித் தன்னுடன் வந்திருப்போரிடம் பெருமை பேசத் தவறியதுமில்லை!

    இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்.. அந்நாட்களில் தீவிர வாசகராக இருந்து ஏதோதோ காரணங்களால் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்திலிருந்து விலகியிருந்தவர்களும் கூட, நமது தற்போதைய வெளியீடுகளைக் கண்டு வியப்பதும், பழைய நினைவுகளை நினைவுகூர்வதும், மீண்டும் காமிக்ஸ் படிக்கும் எல்லைக்குள் வர முயற்சிப்பதையும் CBF போன்ற பெருவிழாக்களில் தான் கண்கூடாகக் காணமுடியும்!

    நம் புதிய அவதாரம் பற்றி இன்றுவரையிலுமே கூட தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாதவர்கள் இன்னும் எத்தனை பேரோ?!! அவர்களில் ஒரு சிறுபகுதியனராவது பணி அல்லது தொழில் காரணமாக வெளிமாநிலங்களுக்கு / வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டவர்களாக இருக்கக் கூடும்! அவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நமது காமிக்ஸ் வருகை குறித்த செய்திகள் சென்று சேருமானால் நிச்சயம் அவர்கள் தங்களுக்காகவோ அல்லது தங்கள் சந்ததியினருக்காகவோ நமது காமிக்ஸை மீண்டும் வாங்க முன்வரக்கூடும்! அவர்களில் சிலர் சந்தாக் குடும்பத்தில் இணையவும் முன்வரக்கூடும்!

    சிறுதுளி பெருவெள்ளமானால் 'ஆயிரம் சந்தா எண்ணிக்கைகள்' என்ற எடிட்டரின் இலட்சிய எண்ணைத் விரைவிலேயே தொட்டுவிட முடியும்! அந்த மந்திர எண் - வாசகர்களாகிய நமக்கும், எடிட்டர் சமூகத்திற்கும் நிறையவே நன்மைபயக்கும்! இன்னும் பல களங்களைக் கண்டிட முடியும்! இதுவரை எட்டாக்கனியாக - ஒரு நெடுநாள் கனவாகவே - இருந்துவரும் டின்டின், ஆஸ்ட்ரிக்ஸ் & ஓப்லிக்ஸ் உள்ளிட்டவைகளும் கூட விரைவில் அழகுத் தமிழில் அறிமுகமாகிடக்கூடும்!

    ஆகவே நண்பர்களே.. உங்களுக்கே தெரியாமல் உங்கள் நண்பர்களில் யாரேனுமோ, உறவினர்களில் யாரேனுமோ அன்றைய காமிக்ஸ் ரசிகராக இருந்து, இப்போதைய நமது வெளியீடுகள் குறித்த ஞானம் இல்லாதவர்களாக இருப்பார்கள் எனில் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை காமிக்ஸ் வாசகர்களாகிய நமக்கும் இருக்கிறது!

    நண்பர்கள் தயவுசெய்து தங்களது உறவினர்கள் & நண்பர்களுக்கான வாட்ஸ்அப்/முகநூல்/டெலிக்ராம்/இன்னபிற சமூக வலைத்தளங்களில் நமது காமிக்ஸ் வருகை குறித்து ஒரு அறிமுகம் கொடுக்கலாம்! மேலும் விவரங்களுக்கு கீழுள்ள லிங்க் செய்யக் கோரிக்கை வைக்கலாம்!
    www.lion-muthucomics.com
    www.lioncomics.in
    www.facebook.com/LionMuthuComics.Sivakasi
    &
    https://youtu.be/QaRWOUyxUBU

    இதற்காக நாம் செலவிடப்போவது சிலநிமிடங்களை மட்டுமே! ஆனால், நம்முடைய இச்செய்கையால் நம் ஒவ்வொருவரின் சார்பிலும் ஒரே ஒருவர் சந்தாக் குடும்பத்தில் இணைந்தாலுமே கூட அதன் ஒட்டுமொத்த பலன் எப்படியிருக்குமென்பதை சற்றே கண்களை மூடி யோசித்துப் பாருங்களேன்!!!

    இன்றே நல்லநாள் நண்பர்களே!
    இதுவே நல்ல தருணம்!

    பயனித்துப் பயன்பெற வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்!🙏

    ReplyDelete
  95. சில சமாச்சாரங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியாச்சுசார் நேற்று முதலாய் அந்தப்பணிகள் தான் ஓடிக்கொண்டுள்ளன. ஆவலுடன் காத்திருக்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  96. சார், இப்போது நீங்கள் விற்பனை பற்றிக் குறிப்பிட்டிருப்பவற்றில் சற்றே பின்தங்கியிருக்கும் நாயகர்கள், அவர்களின் கதைகளில் தமிழில் வெளிவந்தவை பற்றி - அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படும் புத்தகங்களில் (டெக்ஸ், லக்கி, இரும்புக்கையார், ஆர்ச்சி.....) குட்டி குட்டியாக விவரணங்கள், அவற்றின் சுவாரஸ்யங்கள் பற்றி படங்களோடு எழுதினால் என்ன? ஃபில்லர் பக்கங்களாகவும் அவை மாறும் அதே நேரம் நமது புத்தகங்கள் பற்றிய பதிவுகளாகவும், அந்தக் கதைகள் பற்றிய புரிதல் அல்லது ஈடுபாடு இல்லாதவர்களை கொஞ்சம் ஈர்க்கவும் முடியுமாக இருக்கலாமில்லையா?

    உதாரணமாக - தோர்கல் - இந்தத் தொடர் ஆரம்பமான விதம், அதன் கதை நகர்த்தல், ஓவியங்களின் அட்டகாசம், தமிழில் நமது காமிக்ஸ்களில் இதுவரை வந்துள்ள கதைகள் - இனி அடுத்ததாக வெளிவரப்போகும் கதைகள் , எந்த ஒழுங்கில் வாசித்தால் அவை இலகுவாகப் புரியும் - கதைக்குள்ளேயிருக்கும் சில நுணுக்கங்கள் - வரலாறு- பின்னணி - போன்றவை பற்றி எழுதினால் நிச்சயம் இன்னும் அதிக வெளிச்சம் இந்தத் தொடர்கள் மேல் விழ வாய்ப்புண்டு. இணையத்துக்கு அப்பாலுள்ள அல்லது இணையத்தோடு பெரியளவு உறவாடாத வாசகர்களுக்கு இவை ஒரு விளம்பரமாகவும் அமையக்கூடுமல்லவா?

    ReplyDelete
  97. Sila Pala Nalla vishayangalai Pana prachinaiyinal marandu varugirom. Asiyarukku enadu othuzippu endrum irukkum.

    ReplyDelete
  98. எது எப்படியோ....வருஷம் ஒரு முறை...மதியில்லா மந்திரி....வந்தே ஆகணும் ஆசான்....

    ReplyDelete
    Replies
    1. அதுதான் கமெண்ட் போட கரெக்டா வந்துட்டீங்களே சாரே..

      Delete
  99. //பங்கேற்ற அத்தனைப் பதிப்பகங்களின் முகங்களிலும் ஒரு மெல்லிய புன்னகை !! //

    அருமை... அருமை... கேட்பதற்கே இனிமையான செய்தி சார்.

    //ஒரு சொகுசான நாளில் கிட்டும் புஹாரி பிரியாணியை விட, பசித்துக் கிடக்கும் வேளைக்கு வாய்க்கும் இட்லிக்கு மரியாதை ஜாஸ்தியன்றோ ?.//

    ஐ லைக் இட்! கூடவே கொஞ்சம் கொத்துமல்லி சட்னியும் இருந்தா ஆஹா!

    தங்களின் இந்த வார்த்தைகளில் உள்ள செய்தி புரிந்து கொள்ள முடிகிறது சார்.

    ReplyDelete
  100. அமாயா வை புரட்சி பெண் ஷீலா ....என்றே தெரியும்....ராணி காமிக்ஸ் உபயம்.....




    அமாயா பெயர் மனதில் ஓட்ட மறுக்கிறது...

    ஏனென்று தெரியலை....

    ReplyDelete
  101. //"நியூயார்க்கில் மாயாவி" தான் இந்தாண்டின் topseller - எண்ணிக்கையினில்///

    --- மாயாவி மாமாவின் ஆட்டம் வழக்கம்தானுங்களே!!!!

    சில ஆண்டுகள் முன்பு சேலம் விழாவில் இரு ஞாயிறுகளில் மாயாவி போஸ்டரை காதலோடு விழுங்கிய பார்வைகள் இன்னும் எனக்கு நினைவிருக்கு!

    மாயாவியும் வெற்றியும் பிரிக்க முடியாதவை...!!!

    ReplyDelete
  102. தோர்கல் நிலவரம் சொல்லவே இல்லையே..!எடிட்டர் சார்...!

    ReplyDelete
    Replies
    1. ///நடப்பாண்டில் சென்னை விற்பனையில் தோர்கல் ரொம்பவே...ரொம்ப ரொம்பவே கோட்டை விட்டுள்ளார் !! ஜனவரி இதழான "அழகிய அகதி" நீங்கலாய் பாக்கி அனைத்துமே shocking numbers !! சத்தியமாய் இதை எவ்விதம் எடுத்துக் கொள்வதென்றோ ; இதன் பின்னணிச் சேதி என்னவென்றோ புரிந்து கொள்ளத் தெரியலை !! '///

      Delete
  103. /// சில ஆண்டுகள் முன்பு சேலம் விழாவில் இரு ஞாயிறுகளில் மாயாவி போஸ்டரை காதலோடு விழுங்கிய பார்வைகள் இன்னும் எனக்கு நினைவிருக்கு ///

    ஏனுங்க ஞாயித்து கெழமையில வூட்ல ஏதாவது தகராறா? அம்புட்டு பசியோடவா விழாவுக்கு போனீங்க?..அதுவும் ரெண்டு ஞாயிறு ?

    ReplyDelete
    Replies
    1. விழாவில் வந்திருந்த சீனியர் ரசிகர்களின் பார்வை அது பத்து சார்.

      அங்கு வந்தவர்களின் கருத்தை கேட்டது நானு. பலரும் ஏப்பா எடிட்டர்ட்ட சொல்லிடுவியா?? சொல்லிடுவியா?? னு கேட்டு உறுதிபடுத்தி கொண்டு, மாயாவி காதலை தெரிவித்து சென்றார்கள்.

      Delete
  104. ///வண்ணத்திலான அந்த மாக்சி சைஸ் இதழும் சரி, பாக்கி b&w இதழ்களும் சரி, போட்டி போட்டு விற்றுள்ளன !///

    ---அந்த முழு வண்ண மேக்ஸி பக்கங்கள் பார்க்கும் போதே அசத்தியது. வண்ண ஆர்ச்சி இதழின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்.
    கருப்பு வெள்ளை ஆர்ச்சி-நோ கமெண்ட்ஸ்!

    மேக்ஸி சைஸ்-- வண்ண ஆர்ச்சிக்கும், கார்டூன்களுக்கும் ஓகே தான்.
    இத்துடன் இணைந்த மாயாவி செட் புக்ஃபேர் சமயத்தில் முயற்சிக்கலாம் சார். இதன் சாதக பாதகங்கள் தங்களுக்கே தெரியும் என்பதால் தங்களது முடிவு எதுனாலும் சரி!

    ReplyDelete
  105. This comment has been removed by the author.

    ReplyDelete
  106. ///Take a bow 'தல' !! You are an immoveable force ///

    ---தலடா...கெத்துடா...💪💪💪💪💪

    ReplyDelete
  107. /// சந்தோஷமாகவே கையேந்திக் கரம் கூப்புகிறேன்///

    சந்தோஷமாகக் கூப்பும் கரங்கள் CBF சிறப்புற நடந்து முடிந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாவும், எதிர்வரும் EBF க்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாகவும் மட்டுமே தவிர வேறெதற்கும் வேண்டாமே சார்.
    யாசகம் என்ற வார்த்தை மனதிற்கு மிகவும் நெருடலாக இருக்கிறது. எதிர் வரும் காலங்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம், ஆண்டவனின் அருளுடனும் நல்ல நண்பர்களின் துணையுடனும்.

    ReplyDelete
    Replies
    1. +1...

      பியூச்சர்ல யாசகம் என்ற பதத்தை உபயோகிக்க வேணாம் சார்.🙏🙏🙏🙏🙏

      மனசை என்னவோ செய்கிறது.

      Delete
  108. ///பரலோகத்திற்கொரு படகு" ; பிசாசுப் பண்ணை & 2020 லக்கி ஆண்டு மலர் smash hits !! கொஞ்ச நேரம் இவரது விற்பனை நம்பர்களையே இமைதட்டாது பார்த்துக் கொண்டே இருந்தேன் - தலைக்குள் ஏதேதோ சிந்தனைகள் சகிதம் ! ஹ்ம்ம்ம் !! More on this later...!////

    ---- எகெயன் எதிர்பார்த்த ரிசல்ட் என்றாலும் மகிழ்ச்சி சார்.

    இவருக்கு மட்டுமே மேக்ஸி எடுபடும்& சேல்ஸ் ஓகே எனில் மேக்ஸியிலும் லக்கியை தொடரலாம் சார்.

    டெக்ஸூக்கு மேக்ஸி செட் ஆகல என்பதால், செட் ஆகும் லக்கிக்கும் தடைபோட வேணாமே! ப்ளீஸ் கன்சிடர் சார்.

    ReplyDelete
  109. ஆசிரியருக்கு வணக்கம் மற்றும் நன்றி நான் ஏற்கனவே சந்தாதாரராக உள்ளேன் இந்த வருட சந்தாவை சம்பளம் வாங்கியவுடன் கட்டி விடலாம் என இருந்தேன் ஆனால் இது வரை சம்பளம் தரவில்லை 15 ம் தேதிக்குள் கட்ட கடன் வாங்கலாம் என இருந்தேன். இன்று உங்கள் பதிவில் கால அளவு நீட்டித்து பதிவு போட்டதை கண்டு மகிழ்ச்சி மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ..தெய்வமே ..கடனெல்லாம் வாங்கும் அவசரங்களில்லை சார் ! இரு தவணைகளில் ; தேவையெனில் முன்று தவணைகளிலும் சந்தா செலுத்திடலாம் ; நம்மவர்களிடம் சொல்லி விடுகிறேன் !

      Delete
  110. மன்ஹாட்டன் மரணங்கள் :

    என்னடா இது ? ஆசிரியரே இந்தக் கதைக்காக குட்டு வாங்கிக்கொண்டிருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டே படிக்க துவங்கினேன்.
    அனால் கதை நேர்மாறாக இருந்தது.

    தொடர்கொலைகள், அதை துப்புதுலக்கும் நம்ம மார்ட்டின், நேர்கோட்டு கதைக்களம் ஆனாலும் செம த்ரில்ல்லிங்காக கதை சென்றது.
    ஐட்டம் லூசியிடம் சென்று போலீசில் பிடிபடும் ஆல்பர்ட், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் என் மனைவிக்கு மட்டும் இது தெரிய வேண்டாம் எனக் கெஞ்சும் இடம் நிறையவே சிரிப்பை வரவழைத்தது.
    மார்ட்டின் தன் தோழியையே பணயமாக வைத்து ஆடும் ஆடு புலி ஆட்டம் திக் திக் நிமிடங்கள் :
    கடைசியில் மார்ட்டின் தன் கடமையை செய்யும் இடம் : icing on the cake :-)

    மொத்தத்தில் மன்ஹாட்டன் மரணங்கள் : ஒரு திக் திக் திரில்லர்

    ReplyDelete