Sunday, February 07, 2021

ஒரு ப.பா.ப !

 நண்பர்களே,

வணக்கம். “வச்சு செய்வது எப்படி ? ஒரு செயல்முறை விளக்கம்!

1.முதலில் உள்ளூர் உற்பத்தியில் பெரிதாய் விரிவாக்கம்; நவீனமயமாக்குதல்களில் ஆர்வம் காட்டப்படாது! “இதெல்லாம் செய்யணும்னாக்கா ரொம்போவே மெனக்கெடணும்டா அம்பி...! அது தான் கிட்டக்கவே சீனாக்காரன் இருக்கான்லே – அவன்கிட்டே வாங்கிக்கோ!” என்று கையைக் காட்டிவிட்டு, ஜரூராய் மிக்சர் சாப்பிட வேண்டியது!

2. டொட்டாய்ங்...! கொரோனா தாண்டவம்! சீனாவுடன் உரசல்! பலனாய் சீன இறக்குமதிகள் ஒரே நாளில் - 'இஸ் கான்... போயிண்டே!!' துறைமுகங்களில் சரக்குடன் காத்துக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான கன்டெய்னர்கள் – மறுபடியும் சீனாவுக்கே நடையைக் கட்டுகின்றன!

3. ரைட்டு...இத்தினி காலமாய் மிக்சர் சாப்பிட்டு வந்த உள்ளூர் உற்பத்திக்காரப் பெரிப்பாக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் ? ஒரே ராவில் துள்ளிக் குதித்து எழுந்து, காலம் காலமாய் செய்யத் தயங்கிய அந்தச் சரக்குகைளை, சீன தரத்துக்கே செய்யும் சூட்சுமத்தைக் “கண்டுபிடித்து விடுகிறார்கள்!” பின்னென்ன? ராப்பகலாய் வேலை வைத்து சரக்கு செய்து, மார்கெட்டில் பூந்து விளையாடுகிறார்கள்!

4. “நில்லு.... நில்லு... நில்லு... சீனாக்காரன் சரக்கை வேணாம்னு சொல்லி விட்டு, அதே தரத்துக்கு நம்மாட்கள் உற்பத்தி ஆரம்பிச்சுட்டாக்கா அதிலே விசனம் ஏன்? கொண்டாட வேண்டிய சமாச்சாரமாச்சே?இது உங்க மைண்ட் வாய்ஸ்!

5. கொண்டாட வேண்டிய மேட்டரே தானுங்கண்ணா... நம்ம முன்னாள் மிக்சர் பெரிப்பாக்கள் போட்டிக்கு ஆள் இல்லாத காரணத்தால் விலைகளில் இன்றைக்கு சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளாமல் இருந்தாக்கா!! கப்பல் கட்டணங்கள் தந்து, சுங்க வரிகளையும் செலுத்திய பிற்பாடு, சீனாவிலிருந்து இறக்குமதியான சரக்கு 100 ரூபாய்க்கு மார்கெட்டில் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்... இன்றைக்கோ அதே சரக்கு உள்ளூரில் கூசாமல் நம்ம பெரிப்பாக்களின் உற்பத்தியில் - ரூ.140-க்கு விற்று வருகிறது!!

6. இத்தனை காலமாய் – சீன சரக்குகளோடு போட்டி போடுவானேன் ? சின்ன லாபத்துக்கு உற்பத்திகளில் ஆர்வம் காட்டுவானேன்?” என்று ஒதுங்கிக் கிடந்த மிக்சர் முதலாளிகள் – இன்று ஆளேயிராத ஆறு வழிச்சாலைகளில் பிய்த்துப் பிடுங்கிப் பறக்கும் ஆம்னி பஸ்களைப் போல தூள் கிளப்பி வருகிறார்கள்! 

அண்ணாச்சி... ரெண்டு டன் வேணும்; உடனே கேஷ்! என்ன ரேட் போடலாம்!” இது வாடிக்கையாளர்!

போன வாரத்தை விட டன்னுக்கு எட்டாயிரம் சாஸ்திண்ணே! போட்டர்லாமா? இது விற்பனையாளர்!

7. ‘திருதிரு‘வென்று விழி பிதுங்கிக் கிடக்கும் வாடிக்கையாளரைப் பார்த்து அக்கறையாய் விற்பனை அண்ணாச்சி இன்னுமொரு அட்வைஸும் வழங்குகிறார்!

யோசிச்சிட்டு சனிக்கிழமை சொல்றதானா மேற்கொண்டு ஆறாயிரம் கூடியிருக்கும்ணே... !! மில்லிலிருந்து ஏற்கனவே ஓலை வந்தாச்சு!”

வச்சு செய்வது” என்பது இதுவில்லையெனில் வேறு எதுவாகயிருக்கக் கூடுமோ  தெரியலைடா சாமி!!

வாயோரம் நுரை தள்ள இத்தினி நேரம் நான் பெனாத்தினதெல்லாம் – இன்றைய நமது பேப்பர் மார்கெட் உற்பத்திகள் + விற்பனைகள் சார்ந்த நடைமுறைகளைப் பற்றியே ! அக்டோபர் ’20 முதற்கொண்டே நிலவரம் ஒரு தினுசாய்ப் போய்க் கொண்டிருந்தது பேப்பர் விலைகளில் ! ஆனால் இது ஆண்டுதோறும் வருஷக்கடைசிகளில் நிகழும் டிமாண்டுக்கான மினி விலையேற்றமே; சனவரி பொறந்தா நிதானம் திரும்பிடும் – என்ற நினைப்பில் பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை ! தவிர நம்மிடம் ஜனவரி வரைக்குமே தாள் கையிருப்பு இருந்ததால், எவனோ – என்னமோ செய்திட்டுப் போகட்டும் என்று உலாற்றித் திரிந்தேன் ! ஆனால் பிப்ரவரியில் ARS MAGNA விற்குத் துவங்கி, இதர இதழ்களுக்குமான பேப்பர் வாங்கிட முனைந்த போது தான் தலைக்கு மேல் ஏவுகணைகள் ‘சர் சர்ரென்று பறந்து கொண்டிருப்பது புரிந்தது! வேறு வழியே இல்லாமல் - டன் ஒன்றுக்கு சுமார் 30% கூடுதல் விலை தந்து கொள்முதல் செய்த போது கபகபவென எரிந்த வயிற்றில், டில்லிப் பனிக்கு விவசாயிகள் இலகுவாய்க் குளிர்காய்ந்திருக்கலாம் ! 

“சரி... தொலையுது... அடுத்த மாதம் பார்த்துக்கலாம்!” என்றபடியே அதை மறந்து விட்டு, 2 நாட்களுக்கு முன்பாய் மார்ச் இதழ்களின் purchase-க்குப் போனால் – வாங்க அண்ணாச்சி...! போன மாசமே சேர்த்து வாங்கியிருக்கப்படாதா ? இன்னும் எட்டாயிரம் கூடியிருக்கே?!” என்று அவர் பூத்த புன்முறுவலுக்கு நான் காட்டிய ரியாக்ஷனை பற்பல சென்சார்கள் செய்தாலுமே, இங்கு ஒலிபரப்பும் நிலையில் இராது! கலாமிட்டி-ஜேன் ஒழுக்கமான, வாய்ச்சுத்தமான அம்மணியாய்த் தென்பட்டிருப்பார் – என்னோடு அந்நொடியில் ஒப்பிட்டிருந்தால்! ஒன்றரை நாட்கள் மறையைக் கழற்றி மரத்தில் தொங்கவிட்ட மந்தியைப் போலச் சுற்றித் திரிந்தேன் - “யாரையாச்சும் மூக்கில் குத்தியே தீரணுமே?” என்ற கடுப்பில்! உள்ளூர்... சென்னை... பெங்களூர் என அத்தனை பேப்பர் ஸ்டோர்களிலும் சொல்லிவைத்தாற் போல அதே விலைகள் ; அதே அனுசரனையற்ற குரல்கள் !! நேற்று வரையிலும், டன் ஒன்றுக்கு ரூ.1500 லாபத்துக்கு வியாபாரம் செய்து வந்தோர் – இன்றைக்குக் கூசாமல் ரூ.10,000 லாபங்கள் பார்த்து வருவது புரிகிறது!

To cut a grossly long story short - அசுரத்தனமான இந்த விலையேற்றத்தைச் சமாளிக்க ஏதேனும் தடாலடியாய்ச் செய்திடாவிட்டால் - புதுச் சந்தாக்கள் துவங்கிடும் ஏப்ரலில், சாணித் தாளில் தான் தோர்கல்களும், ப்ளூகோட்களும் , டெக்ஸ் வில்லர்களும் வலம் வர வேண்டியிருக்குமென்பது புரிந்தது !  அந்த நேரம் தான் நமக்குத் பரிச்சயமானதொரு அச்சக அதிபரின் நினைவு வந்தது !நம்மிடம் முன்நாட்களில் அச்சு இயந்திரம் வாங்கியிருந்தவர் நல்லதொரு நண்பருமே ! அவரது நிறுவனம் எப்போதுமே கையிருப்பில் கணிசமாய் ஆர்ட் பேப்பர் வைத்திருப்பதுண்டு ! சத்தமில்லாமல் போய் அவர் கையைக் காலைப் பிடித்தாவது சகாயம் கேட்பதென்று தீர்மானித்தேன் ! அவரும் நம் இக்கட்டைப் புரிந்து கொண்டவராய், மறுப்புச் சொல்லாமல் நமக்குத் தேவையான சரக்கைத் தர சம்மதித்தார் – மார்கெட்டில் இன்று நிலவும் மரண உச்சங்களில் அல்லாது – சற்றே குறைவாய் ! நாம் வாங்கிப் பழகியிருந்த நார்மல் ரேட்களிலிருந்து இது எக்கச்சக்க அதிகமே என்றாலும் – வெளிமார்க்கெட்டில் அரங்கேறி வரும் “ஏக் மார் – தோ துக்கடா” கசாப்புகளை விடத் தேவலாம் ரகம் ! So கண்ணை இறுக மூடிக் கொண்டு ; அவரிடம் நமக்கு பயன்படக்கூடிய சைசில் இருந்த பேப்பரை அப்போதே லவட்டும் ஏற்பாடுகள் செய்து வைத்தேன் ! 

அதற்குள் ஜூனியர் தன் பங்குக்கு, இன்னொரு மொத்த இறக்குமதியாளரைத் தேடித் பிடித்து, அவரிடமும் நமக்கு ஆகும் விதமான பேப்பர் இருப்பதை ஊர்ஜிதம் செய்திருந்தார் ! சனிக்கிழமை காலை, தலைவர் பட முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்க ஓடுவதை போல அவர்களின் ஆபீசுக்கு ஓட்டமெடுத்தோம் ! மதியத்துக்குள் நமக்கு ஏற்ற சரக்கை இனம் கண்டு ; அவர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி சற்றே சகாய விலையில்  கையிலிருந்த காசு முழுமைக்கும் பேப்பரை வாங்கித் தள்ளிவிட்டேன்! அநேகமாய் இது நடப்பாண்டின் November இதழ்கள் வரைக்கும் தாக்குப் பிடித்து விடும் ! அதற்குள்ளும், நிலவரம் சீராகியிராது ; விலைகளில் இதே வெறித்தாண்டவங்கள் தொடர்ந்திடும் பட்சங்களில், ஆர்ட் பேப்பருக்கு ஒரு பெரிய கும்பிடைப் போட்டு விட்டு – நார்மல் தாட்களுக்கு மாறுவதைத் தவிர்த்து வேறு வழியே இராது ! நிலவரம் கைமீறி ; கால்மீறி ; மூக்குமீறி ; முகரைமீறிப் பயணித்து விட்டன ! சும்மா சும்மா இந்த மனசாட்சிகளில்லா செலவின விலையேற்றங்களை நமது இதழ்களின் விலையேற்றங்களாக்கிடுவதில் எனக்குச் சம்மதமில்லை ! So தெறிக்கும் உச்சங்களே தொடர்ந்தாலோ ; அல்லது விலைகள் இன்னமும் கூடினாலோ - bye bye ஆர்ட்பேப்பர் என்பதே தீர்மானமாக இருந்திடும் ! We just have no choice !!

And பளா பளா மாப்பிள்ளையான ஆர்ட் பேப்பர் ஒருபக்கமாய் செம கெத்து காட்டி வருகிறாரெனில், ‘நாங்க என்ன இளப்பமா?‘ என்று இன்னொரு பக்கமிருந்து கொடி பிடிக்கின்றன - நாம் அட்டைப்படங்களுக்குப் பயன்படுத்தி வரும் கெட்டியான அட்டை ரகங்ளும் ! இங்கேயும் தலைசுற்றச் செய்யும் விலையேற்றங்கள் அரங்கேறி வருவதால் – இனி தொடரும் நாட்களில் உட்புறத்தில் சற்றே நிறம் குறைச்சலான ரகங்களைப் பயன்படுத்த உள்ளோம் ! வண்ணத்தில் அச்சாகிடும் முன்பக்கங்களில் எவ்வித மாற்றங்களும் இராது; ஆனால் ‘அடுத்த வெளியீடு‘; ‘விரைவில் வருகிறது‘; ‘ஸ்டாக் லிஸ்ட்‘ என்று தாங்கி வரும் உட்பக்கங்கள் இனி வெள்ளையாய்  இராது! Please do bear with us on this guys!

இம்மாதிரியான ஸ்திரத்தன்மையற்ற மார்கெட் நிலவரங்களைத் தவிர்க்கும் பொருட்டே இரத்தப்படலம் – வண்ண மறு-மறு-மறுக்கா பதிப்புப் project-ல் சூட்டோடு சூடாய், மூன்றே மாதங்களுக்குள் முன்பதிவுகளை நிறைவு செய்திட ஆசைப்பட்டிருந்தேன்! ஆனால் முன்பதிவு ரயில் எதிர்பார்த்த வேகங்களைத் தொடாது போனதால் - ஒத்திப் போட வேண்டிப் போனது ! இப்போதோ புது விலைகளிலேயே பேப்பர் வாங்க வேண்டிப் போகும் ! Phewww !!!

ரைட்டு... பஞ்சப்பாட்டுக்கள் படலம் போதுமென்பதால் let’s move on!

அர்ஸ் மேக்னா! மினுமினுக்கும் ஹார்ட்கவர் அட்டையுடன், தாட்டியமாய் நிறைய இல்லங்களில் அமர்ந்திருப்பது நிச்சயம் ! And ஒரு சிறு அணியினர் அதற்குள் வாசித்து; சிலாகித்து பட்டையைக் கிளப்பவும் செய்து முடித்து விட்டுள்ளனர்! Taking things to new heights – நமது பல்லடத்து ஆசிரிய நண்பர் இம்மாதம் நம்மிடமிருந்து பெறவுள்ளது மைசூர்பாகு டப்பியாக இருக்கலாம்; ஆனால் அவர் பதிலுக்குச் செய்திருப்பதோ ஒரு அசாத்திய காரியம்! தன் செலவில் அர்ஸ் மேக்னாவின் 20 இதழ்களை வாங்கி, தன் சக ஆசிரியர்களுக்கோ, அன்பர்களுக்கோ விநியோகம் செய்து வருகிறார்!! தான் ரசித்ததோடு நிறுத்திக் கொள்ளாது ரூ.6000 செலவழித்து, அந்தப் படைப்பைத் தனது வட்டத்தினில் உள்ளோரிடமும் கொண்டு சேர்ப்பிக்க அவர் காட்டி வரும் ஆர்வம் – just wow!

And இதுவரையிலான அலசல்களையும், விமர்சனங்களையும் பார்த்திடும் போது – நமது பட்டியலுக்குப் பெருமை சேர்க்கும் ரொம்ப ஸ்பெஷல் இதழாக இது அமையக்கூடுமென்று தோன்றுகிறது! பத்துப் பதினைந்து நண்பர்களது சிலாகிப்புகளால் இதனை "All centers blockbuster ஹிட்" என்று இப்போதே கூத்தாடிக் கொண்டாடிடப் போவதில்லை நான் ; ஆனால் அதற்கான வேளை புலராது போகாது என்ற நம்பிக்கை கணிசமாய் உள்ளது உள்ளுக்குள்! இந்த முப்பாக ஆல்பத்துக்கான உரிமைகளை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே வாங்கி விட்டோம்; ஆனால் கதையின் செம complex ஓட்டத்தை – மொழிபெயர்ப்பில் சமாளிக்க நமது டீமுக்கு சாத்தியமாகிடுமா? பிரதானமாய் ஐரோப்பிய வரலாறு ; மத நம்பிக்கைகள் எனப் பயணிக்கும் கதைக்களத்தை வாசிப்புகளில் சமாளிக்க நம் வட்டத்துக்கு சுகப்படுமா ? என்ற கேள்விகள் ஸ்பீட்-பிரேக்கர்களாய் நின்று வந்தன! In fact மேக்ஸி லயனின் வாண்டு ஸ்பெஷல் இதழ்கள் மட்டும் தள்ளிப் போகாதிருப்பின் அர்ஸ் மேக்னாவை இன்னமுமே ஜவ்விழுத்திருப்பேன் நான்! 

கிருஸ்துவத்தின் வரலாறு; அவை சார்ந்த படைப்புகள்; Dan Brown ; Da Vinci Code நாவல்கள் என்றைக்குமே எனக்குப் பெரிதாய்ப்  புரிந்ததுமில்லை; பிடிபட்டதுமில்லை! ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘ பணிகளில் கூட சன்னமான பயங்களோடே நான் பணியாற்றியிருந்தேன்! ஆனால் அர்ஸ் மேக்னாவில் கதாசிரியர் எனது பயங்கள் சகலத்தின் வழியேயுமே சர்ர்...புர்ர்ரென்று வண்டியை ஓட்டோ ஓட்டென்று ஓட்டியிருக்க ‘தம்‘ பிடித்துக் கொண்டு தான் பேனா பிடிக்க நேர்ந்தது. வழிநெடுகிலும் கூகுள் references என்று ஒப்பேற்றியிருந்தாலும், எடிட்டிங்கின் ஒவ்வொரு முறையிலும் புதுசு புதுசாய் என் புரிதலின் குறைபாடுகள் கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தன தான்! இன்னமுமே எனது பணி bullet proof ஆனதென்ற நம்பிக்கை முழுசாய்ப் பிறந்த வழியைக் காணோம்; maybe நண்பர்களின் பெரும்பான்மை மூழ்கி எழுந்து புதிதாய் சந்தேகங்களை எழுப்பாத பட்சத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்!

சரி... ஒரு பெரும் பரீட்சையைத் தக்கி முக்கி எழுதியாச்சு; இனிமேல் ‘ஓங்கியடிச்சா ஒண்ணேமுக்கால் டன்; ஓங்காமல் அடிச்சா மூணேமுக்கால் டன்‘ என்ற ஜாலியான பன்ச் டயலாக்குகளோடு கும்மியடிக்கப் போகலாமென்று பார்த்தால் ‘பிரளயம்‘ என்றொரு அசாத்தியம் முன்நிற்கிறது! மீண்டுமொரு முப்பாகத் தொகுப்பு; இங்கோ உலுக்கியெடுக்கும் ரகத்தில் கதைக்களம்!! சொல்லப் போனால் இந்தப் பணியை முடித்து சுபம் போடச் சாத்தியமாகும் வேளையில் – முன்மண்டையானது மொசைக் தளம் போலாகியிருக்கும் போலும்! இங்கே பணியில் சிரமங்கள் இல்லை; அதே போல மொழிபெயர்ப்பில் score செய்திடும் வாய்ப்புகளும் பேனா பிடிப்பவனுக்கு லேது! மாறாக ரொம்பவே disturb செய்திடும் அந்தக் கதையோடு பயணிப்பதில் தான் சவாலே உள்ளது! முதல் அத்தியாயத்தை முடித்த கையோடு இந்தப் பதிவுக்குப் பேனா பிடிக்கப் புறப்பட்டு வந்து விட்டேன்; ஆனால் மனசெல்லாம் எஞ்சியிருக்கும் 2 அத்தியாயங்களைச் சமாளிப்பதிலேயே நிலைகொண்டுள்ளது! And நேற்று பின்னிரவு இதன் இரண்டாம் பாகத்தினுள் பணி துவக்கிய நொடியே ஜெர்க்கோ ஜெர்க் !! அது பற்றி - அடுத்த பதிவினில் !

மார்ச் மாதத்தின் வெளியீடுகள் பற்றிய விளம்பரங்கள் ஏதும் இம்முறை இல்லாது போனதற்கு அர்ஸ் மேக்னாவைச் சிந்தாமல், சிதறாமல் கரைசேர்க்கும் உத்வேகத்தில் இதர சமாச்சாரங்களை மறந்து தொலைத்ததே காரணம்! எனக்குத் தானென்றில்லை; நம் டீமுக்குமே வெண்டைக்காய் அரை லோடு அவசியம் தான் போலும்! And here you go :


So மார்ச்சுக்கு : மேற்படி இதழ்கள் 3 & அத்தோடு 1 கிராபிக் நாவலுமே ! ! 

And அவற்றோடு 2020-ன் சந்தா முழுமையடைந்திடும் guys - ஏப்ரல் முதலாய் 2021-ன் புதுச்சந்தாக்கள் நடைமுறைக்கு வந்திடும் ! Please do take note !!

அப்புறம் போன வாரயிறுதியில் நான் மும்முரமாய் பொழுதைக் கழித்தது பற்றி! கொரோனாவின் உபயத்தில் உள்ளூர் புத்தக விழாக்கள் மாத்திரமின்றி உலகளாவிய புத்தகத் திருவிழாக்களுமே காணாது போயிருக்க, நமது படைப்பாளிகளோ ஓய்ந்து இருக்கத் தயாரில்லை! தமது படைப்புகளை உலகெங்கும் வெளியிட்டு வரும் இதர மொழிப் பதிப்பகங்களோடு வாரயிறுதிகளில் TEAMS எனும் காணொளி மூலமாய் உரையாடி வருகின்றனர் ! And சென்ற வாரயிறுதியினில் 2 வெவ்வேறு ப்ரெஞ்ச் பதிப்பகங்கள் ஆன்லைன் சந்திப்புகளில் நமக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தனர் – தலா 30 நிமிடங்கள் வீதம் ! ரைட்டு... அதை முடித்த கையோடு blog எழுத ஆரம்பிக்கலாமென்று இருந்தேன் தான்! ஆனால் இரு பதிப்பகங்களுமே தமது புதுப் படைப்புகள், காத்திருக்கும் திட்டமிடல்கள் பற்றி மேலோட்டமாய்ப் பேசத் துவங்க – எனது ஆர்வ மீட்டர் கூரையைப் பிய்த்துக் கொண்டு எகிறத் தொடங்கியது! 

பல்வேறு புத்தகவிழாச் சந்திப்புகளிலும் சரி, அலுவலகச் சந்திப்புகளின் போதும் சரி, ஒரு விஷயத்தை நன்றாகவே கவனித்திருக்கிறேன் நான் : இதர மொழிப் பதிப்பகங்களின் பிரதிநிதிகளாய் வருவோர், கோட்டும், சூட்டுமாய் செம professional லுக்குளில் அசத்துவர்! அமர்ந்த மறுகணம் தமது லேப்டாப்களைத் திறந்து வைத்தபடி சுருக்கமாய் எதையோ பேசுவர்; நிறைய மண்டையை ஆட்டுவர்; சத்தம் போட்டு ஓரிருதபா சிரித்து விட்டு லேப்டாப்பை மூடியபடியே எழுந்து நின்று கைகுலுக்கி விட்டுக் கிளம்பி விடுவர்! ஆனால் நம்ம கதையே வேறாக இருக்கும்! அரை மணி நேரம் டயம் தந்திருப்பார்கள்; நானோ பிரான்ஸ் சுதந்திரம் வாங்கிய வருஷத்தில் வெளியானதொரு ஆல்பத்தின் ஒற்றைப்பக்க பிரிண்ட் அவுட்டைக் கையில் வைத்தபடிக்கே ஆரம்பித்தேனென்றால், 2030 வரைக்குமான திட்டமிடல்கள் என்னவாக இருக்கக்கூடமென்பது வரைக்கும் பிடுங்கி எடுத்து, பாடாய்ப்படுத்தி எடுத்து விடுவேன்! ஒரு வண்டி ஆல்பங்களைக் கேட்டு வாங்கி புரட்டோ புரட்டென்று புரட்டி, அவற்றின் கதைச்சுருக்கங்களைக் கேட்டு குடலை உருவுவேன்! So ஆன்லைனோ; ஆஃப்லைனோ எனது பாணி ஒன்றாகவே இருந்திட - அந்த ஞாயிறின் காணொளி மீட்டிங் ஒவ்வொன்றுமே கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரங்களுக்கு நீண்டு சென்றன! அவர்கள் கண்ணில் காட்டிய புது ஆல்பங்களை சரசரவென்று குறித்துக் கொண்டு இந்தப் பக்கமாய் என் செல்போனிலேயே அவற்றின் மீதான கூகுள் தேடல்களைத் தட்டி விட, நொடியில் சில பின்னணித் தகவல்கள் கிட்டின! அவற்றை வைத்துக் கொண்டே படைப்பாளிகளிடம் மேற்கொண்டு பேசினால் லட்டு லட்டாய் சிலபல புது ஆல்பங்களை அடையாளம் காண முடிந்தது!

- ஒரு செம cute கௌபாய் காமெடித் தொடர்!

- ஒரு ரணகள ஆக்ஷன் கௌபாய் தொடர்!

- முன்னாள் ஜட்ஜ்; இந்நாள் காமிக்ஸ் ஓவியர் என ஒரு வித்தியாசமான படைப்பாளியின் ரொம்பவே வித்தியாசமான கிராபிக் நாவல்!

- ஒரு நிஜ சம்பவப் பின்னணியில் உருவானதொரு after the war ஆல்பம்!

- கார்ட்டூன் ஸ்டைலில் ஒரு ரகளையான கௌபாய் ஆக்ஷன் one-shot!

- கண்ணுக்குக் குளிர்ச்சியானதொரு செம வீரியமான கௌபாய் தொடர் – மொத்தம் 5 பாகங்கள் கொண்டது! இதுவரையிலும் 4 உருவாகி விட்டுள்ளன; இறுதிப் படலம் may be 2022 –ல் ரெடியென்றால் உத்திரவாத அதகளம் ரெடி எனலாம்! சித்திரங்களும் கதையோட்டமும் மின்னும் மரணத்துக்கு tough fight தந்திடுவது போலுள்ளன!

- க்ரைம் த்ரில்லர் – 2 பாகம் – நினைத்தே பார்க்க முடியாததொரு கதைக்கருவோடு! And சித்திரம் + கலரிங் ஸ்டைல் க்ரிஸ் கெய்ல் அடிக்கும் சிக்ஸர்களை விடவும் அசாத்தியமாய் இருக்கின்றன!

- நிஜ வாழ்க்கையில்; வரலாற்றில் சில தெளிவில்லாத அத்தியாயங்கள் மீது வெளிச்சம் போட முனையுமொரு மினி தொடர்! அதன் ஆல்பம், ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வரலாற்று மர்மத்தையோ; இருளில் கரைந்து நிற்கும் மாந்தர்களையோ அலசிட முனைகிறது! அதனிலிருந்து ஒரு அற்புத அழகியின் கதையைத் தேர்வு செய்துள்ளோம் நமது ஜம்போ சீஸன் 4க்கென! சித்திரங்களும் சரி, கலரிங்கும் சரி – வேறு லெவல்! ஜம்போ சீசன் 4-ன்  இதழ் # 3.

ஆக பலகாரக் கடைக்குள் புகுந்த பசித்தவனைப் போல – போன ஞாயிறின் மதியமும், மாலையும் எனக்குக் கரைந்து போயிருந்தன! அன்றைய பொழுதின் தேடல்களின் பலன்களை நாம் காணக் கூடியது 2022-ல் தான் என்றாலும், ஒரு ஸ்பெஷலான வருஷத்துக்கு இப்போதிலிருந்தே தயாராவது தப்பில்லையென்று நினைத்தேன்!

ஓ.கே... வாரயிறுதிக்கு இந்த மொக்கை போதுமென்பதால் – காத்திருக்கும் பணிகளுக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன்! இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் சனி பகலினில் பேங்க்கில் உள்ள பணத்தின் முழுமையையும் வழித்துத் துடைத்து பேப்பர் கொள்முதலுக்கான பட்டுவாடாக்களைச் செய்து முடித்தும் விட்டாச்சு! So திங்கள் காலை - காற்றோட்டமான வங்கியிருப்போடு தான் பணிகளைத் துவங்கிட வேண்டி வரும் என்றாலும், கிட்டத்தட்ட ஆண்டின் இறுதிவரைக்குமான தாள் உள்ளே வந்து இறங்கி விட்டதில் செம  திருப்தி ! அறிவித்த இதழ்களை, அறிவித்த விலைகளிலும், தரங்களிலுமே உருவாக்கிட இனி சிக்கல்களில்லை என்ற நிம்மதி !  அடுத்த 10 மாதங்களுக்காவது எவன் தலையில், பெரிப்பாக்கள் எந்தக் கல்லை போட்டாலும் நமக்கு கவலையில்லை ; நான் மிக்ஸர் சாப்பிடுவேனே மம்மி !

And இன்னொரு பக்கமோ, நடப்பாண்டின் ரெகுலர் இதழ்கள் ; புக்பேர் ஸ்பெஷல்ஸ்; பூனைக்குட்டி ஸ்பெஷல்ஸ் – என சகலத்துக்குமான கதைகளும் வந்து சேர்ந்து விட்டன ! Post கொரோனா நாட்களில், நம் வண்டி குடைசாயாது ஓடிட, படைப்பாளிகள் அவர்களால் இயன்ற சகாயமாய் - கதைகளை இம்முறை கடனுக்கு அனுப்பியுள்ளனர்! So : கதைகள் வந்தாச்சு; பேப்பரும் வந்தாச்சு; பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் 2022 வரைக்கும் தயாராச்சு! 

இனி egg eyes தமிழாக்கம் பண்றான்... புக் ப்ரிண்ட் பண்றான்... நிம்பள் வாசிக்கிறான்! 

And முடிஞ்ச தருணங்களிலே 2021-க்கான சந்தாப் புதுப்பித்தல்களுக்கு நீங்கள் சற்றே மெனெக்கெட்டிட முடிந்தால் - all will be well ! இந்த நொடியில் பாதிக் கிணற்றையே தாண்டியிருக்கிறோம் - 2021 சந்தாப் பரீட்சையினில் !

ஞான் இப்போ முன்கூட்டியே thanks சொல்லிட்டுக் கிளம்புறான்! டாட்டா... பை...பை! See you around folks ! ARS MAGNA அலசல்கள் தொடரட்டுமே - ப்ளீஸ் ?

P.S.: சின்னதொரு வேண்டுகோள் guys : எகிறியுள்ள செலவினங்களின் பொருட்டு விலையேற்றும் எண்ணமெல்லாம் இல்லை ! In fact 2022-க்குமே இதே விலைகளில் தொடர்வது தான் திட்டமிடலும் ! And இரத்தப் படலமும் அறிவித்த விலையினிலேயே மறுக்காப்பதிப்பு கண்டிடும் ! 

'ரைட்டு - அப்படியானால், வேண்டுகோள் ; வேண்டாதகோள் இன்னா ?' என்கிறீர்களா ? சமீபத்தைய நமது ஆன்லைன் புக் பேர் விழாவின் ஆர்ச்சி + மாயாவி இதழ்களினை இன்னமும் நம்மில் நிறையப் பேர் வாங்கியிருக்கவில்லை ! அவற்றுள் ஏதேனும் ஒன்றையோ ; அல்லது நமது back issues–களில் ஒரேயொரு Smurf or லக்கி லூக் or whatever வாங்க உங்களுக்குச் சாத்தியமாயின் – அதனை உங்களின் மார்ச் கூரியர்களுக்குள் நுழைத்து விடலாம் ! துயில் பயின்று கொண்டிருக்கும் முதலீட்டை சற்றே உயிர்ப்பித்தது போலிருக்கும் ;  and தேறிடக்கூடிய தொகையானது, இந்த வேளையில் ரொம்பவே பயன் தரும் ! இயன்றால் முயன்று பாருங்களேன் ப்ளீஸ் ?

And of course – சந்தாப் புதுப்பித்தல்களுமே !! இதோ உங்கள் வசதிக்கோசரம் - சந்தா செலுத்திட ஆன்லைன் லிங்க்ஸ் : 

https://lion-muthucomics.com/2021-subscription/643-jumbo-4-falooda-subscription-2021-april-to-december-abce-tamilnadu.html

https://lioncomics.in/product/jumbo-falooda-subscription-2021-april-to-december-abce-tamilnadu-copy/

Bye for now folks !! Have a fun Sunday !!

181 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. குளிருடன் காலை வணக்கம் சார்...:-)

    ReplyDelete
  4. ///ஒரு செம cute கௌபாய் காமெடித் தொடர்///

    இதுவும் கானல் நீராகிடுமோ..?? 😒

    ReplyDelete
    Replies
    1. ரிப் கிர்பியை ரசிக்கும் நம்மவர்கள் கார்ட்டூன்கள் மீதும் கடைக்கண் கடாட்சங்களைக் காட்டாது போக மாட்டார்களென்று நம்புவோம் சார் !

      Delete
  5. Ars Magna .. அற்புதமாக இருந்தது Hollywoodல் The davinci code, Angeles vs Demons, Inferno, The national tressure போன்ற படங்கள்
    புதிர் விடை தேடும் பாங்கில் எடுக்கப்பட்டவை... ஏன் நம் மார்டின் கூட அந்த ரகம் தானே சார்... அந்த hollywood படங்களுக்கு இணையாக இந்த மாபெரும் காமிக்ஸ் படைப்பு (ARS MAGNA) உள்ளதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை....
    எங்களை Passport செலவு இல்லாமலும், Ticket செலவு இல்லாமலும் பெல்ஜியத்தின் அரண்மனை மாளிகைகள், மூலை முடுக்குகளை... சந்து பொந்துகளை... குகை, சுரங்கங்களை சுற்றி காட்டியதற்க்கு நன்றி Editor sir....


    ReplyDelete
    Replies
    1. அதிலும் பயண கட்டுப்பாடுகள் உள்ள இந்நாட்களில் நானுமே பிரஸ்ஸல்ஸை ஒரு டூர் அடித்து விட்டேன் - ARS பெயரைச் சொல்லி !

      Delete
  6. சூப்பர் பதிவு சார். இனிப்பு கசப்பு இரண்டும் கலந்த பதிவு. அடுத்த வெளியீடுகள் விளம்பரம் அருமை சார். நான் மிகவும் எதிர் நோக்கும் டிடெக்டிவ் ஸ்பெஷல்.

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களையும் தோதான நேரம் பார்த்து களம் இறக்கவும். 2022 நிறைய புது வரவுகள் உண்டு போல...


    சென்னை புத்தக விழா இடம் கிடைத்ததா சார்????

    ReplyDelete
  7. அடேயாப்பா... நீஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட்டட்டட பதிவு.. போன வாரத்திற்கும் சேர்த்து....!!!!

    பார்க்கும் போதே கண்ணை கட்டுது...
    எழுதிய ஆசிரியர் சார்& டைப்பிய பணியாளர்.🙏🙏🙏🙏🙏

    மெதுவாக படித்து உள்வாங்கி கொண்டு வர்றேன்.

    ஞாயிறு அதகள ஆரம்பம்.... நன்றிகள் சார்.

    ReplyDelete
  8. ஹலோ. பேப்பர் நிலைமையை பற்றி நான் ஏ‌ற்கனவே அறிந்தது தான். இது பஞ்ச பாட்டு இல்லை சார், நிதர்சனம். மேக் இன் இந்தியா எல்லாம் regulate ஆக ரொம்பவே காலமாகும். சீனாவின் பிரமாண்ட உற்பத்தி திறன் முன் நாம் இன்னமும் தூசு என்பதே உண்மை. I applaud your commitment to perfection. சென்னை பக்கம் வருவீர்களா?

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  10. பிரமாதமான விறுவிறுப்பாக உள்ள கதை.
    படிக்க ஆரம்பித்தேன், முடித்த பின்தான் எழ முடிந்தது.நல்ல கதை தேர்வு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. ARS மேக்னா காமிக்ஸ் புதையல் தான்.

    பிரான்ஸும் பெல்ஜியமும் கலைகளின் சொர்க்கம் தான்.

    உலக தரத்தில் இந்த காமிக்ஸ் வழங்கிய ஆசிரியரருக்கு நன்றி. Hardbound இந்த காமிக்ஸ் கட்டாயம் தேவை. இது இந்த கதை மற்றும் ஓவியரின் உழைப்பு க்கு கொடுக்கும் மரியாதை.

    ஒரு டென்னிஸ் பால் அளவுள்ள யூரேனியம் சில நொடிகளில் லட்சக்கணக்கான மக்களை சம்பல் ஆக்கியது. தலைமுறை தலைமுறையாக பிள்ளைகளை ஊனத்துடன் பிறக்க வைப்பது எப்படி ஏன் சாத்தியம் ஆகியது என்று புரியவில்லை.

    கதை பாட்டாசக செல்கிறது. ஒவ்வொரு கதை நகர்வும் நேர்த்தியாக படைக்கபட்டுள்ளது.

    P. O என்ற எழுத்தை மட்டும் வைத்து நாஜிக்கள் ஹுரோவை கண்டு பிடிப்பது. குடோனில் ஹீரோ ஹீரோயின் மட்டிய பிறகு அங்கிருந்து தப்பிப்பது போன்றவைகள் உதாரணம்.

    ஓவியம் பற்றி சொல்லவே வேண்டம். வேற லெவல். அதுவும் 129 வது பக்கம் சிந்தனை யின் உச்சம்.


    ஒவ்வொரு புதிரும் வித்தியாசமான ஒரு அநூபவத்தை கொடுத்தது.







    ReplyDelete
    Replies
    1. // P. O என்ற எழுத்தை மட்டும் வைத்து //
      அது P.O இல்லை ஜி,P.C (பிலிப் கெடாய்ர்), மேலோட்டமாக பார்க்கும்போது P.O என்றுதான் தெரியும்,சற்றே கூர்ந்து கவனித்தால் புலப்படும்...

      Delete
    2. ///பிரான்ஸும் பெல்ஜியமும் கலைகளின் சொர்க்கம் தான்.///

      +111

      Delete
  12. இது பஞ்சபாட்டு இல்லை ஆசிரியரே உங்களின் கஷ்டங்களை வாசக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள் அதுவும் புண்ணகையோடு எவ்வளவு சிரமங்கள் அதனை சிரித்துக்கொண்டே பகிர்வது உங்களால் மட்டுமே முடியும் சீக்கிரமே நல்லது நடக்க ஆண்டவன் அருள் புரிவாராக

    ReplyDelete
  13. நண்பர் பல்லடம் சரவணகுமாருக்கு வாழ்த்துக்கள் தான் ரசித்ததை தன்னை சேர்ந்தோரும் ரசிக்க வேண்டுமென அவர் எடுத்திருக்கும் முயற்ச்சிக்கு காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete
    2. என்னுடைய வாழ்த்துகளும்.🌹

      Delete
    3. சூப்பர்! வாழ்த்துக்கள்!!

      Delete
  14. நியூஸ் பேப்பர் ப்ரிண்ட். சார் சந்தடி சாக்கில் ஒரு வேண்டுகோள். முத்து. 50.
    நமது மலரும் நினைவுகளாக மண்ட்ரேக் ரிப்கிர்பி மாடஸ்டி சார்லி மறுபதிப்புகள்நியூஸ் பேப்பர் ப்ரிண்டில். ரத்தப்படலம்மறுமறுக்கா புக்கிங் முறையில் ஒரு ஸ்பெசல் வெளியிட வேண்டுகிறேன் கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  15. கடந்த வாரம் நண்பரின் இல்ல பிறந்தநாள் விழாவில் நமது காமிக்ஸைதான் பரிசாக கொடுத்தேன் தயவுசெய்து படித்துபாருங்கள் என்று உள்ளே எழுதி கொடுத்துவிட்டு வந்தேன் உள்ளே லக்கி.ஸ்மர்ப்.பென்னி.ரின்டின். தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட போகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல முயற்சி சத்யா. நீங்களும் உங்களால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள்...

      Delete
    2. பாராட்டுகள் செந்தில் சத்யா! தொடருங்கள்!

      Delete
    3. அருமை சத்யா! நல்ல விஷயம். தொடருங்கள்!

      Delete
    4. வாழ்த்துக்கள் சத்யா...

      Delete
    5. அருமையான செயல் சத்யா.

      Delete
    6. அருமை சத்யா தொடருங்கள்.

      Delete
    7. ஐ! உங்க ஐடியா சூப்பர் சத்யா!

      நானும் டெக்ஸ், மாடஸ்டி, மூவேந்தர் கதைகளை பரிசாக கொடுக்கலாம்னு இருக்கேன்!

      ஹிஹிஹி!

      Delete
    8. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள் நான் மூன்று வருடங்களுக்கு முன்பே ஒரு திருமணவிழாவில் நண்பரொருவருக்கு டெக்ஸ்.டைகர்.லக்கி.அடங்கிய காமிக்ஸ் செட் பரிசளித்தேன் 3 நாட்களுக்கு பிறகு அந்த நண்பரின் ரிப்ளை என்ன இதுதான் பரிசா என்று அதனால் காமிக்ஸின் மதிப்பு தெரியாதவர்களுக்கு அதனை கொடுப்பதிலில் பலனில்லை என்று நிறுத்தி விட்டேன் இப்போது பிறந்தநாள் விழாக்களில் கார்ட்டூன் காமிக்ஸ்கள் பரிசளிக்க ஆரம்பித்திருக்கிறேன் நல்லதே நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

      Delete
    9. நானும் டெக்ஸ், மாடஸ்டி, மூவேந்தர் கதைகளை பரிசாக கொடுக்கலாம்னு இருக்கேன்!

      ஆரம்பிங்க மிதுனரே ரொம்பவும் நல்ல விஷயம் தாமதம் வேண்டாம்

      Delete
  16. // ஆக பலகாரக் கடைக்குள் புகுந்த பசித்தவனைப் போல – போன ஞாயிறின் மதியமும், மாலையும் எனக்குக் கரைந்து போயிருந்தன! //
    தகவல்கள் நாவில் ஜலம் ஊற வைக்கின்றன சார்,படிக்க நாங்க ரெடி,2022 ஐ நோக்கி ஆவலுடன்...

    ReplyDelete
  17. இந்தப் பதிவே ஒரு முழுநீள சாகஸத்தைப் படித்த உணர்வை ஏற்படுத்துகிறது எடிட்டர் சார்! வழிநெடுக காமெடியில் வயிறு வலித்தாலும், அதன் பின்னணியில் இழையோடும் சோகங்களும் சோதனைகளும் 'உச்' கொட்ட வைக்கின்றன! நீங்களும், ஜூனியரும் சமயோஜிதமாய் செயல்பட்டு நடப்பாண்டுக்குத் தேவையான பேப்பர்களைக் கொள்முதல் செய்துவைத்திருப்பது பாராட்டக்கூடியது!

    அடுத்த வருடங்களில் மீண்டும் சாணித்தாள்களில் படிக்க வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது! அப்படியெல்லாம் எதுவும் நிகழ்ந்துவிடாமல் புனிதமனிடோ நம்மைக் காத்தருளட்டும்!

    புது ஆல்பங்களைப் பற்றி புளூகலரில் நீங்கள் போட்டிருக்கும் குறிப்புகளெல்லாம் நாக்கில் ஜலம் பெருகச் செய்கிறது! குறிப்பாக அந்த க்யூட் காமெடி கெளபாய், மி.ம'வுக்கு சவால் விடக்கூடிய அந்த 5 பாக கெளபாய் ஆல்பம், நினைத்தே பார்க்கமுடியாத கதைக்கருவோடு கூடிய அந்தக் க்ரைம் த்ரில்லர், அற்புத அழகியின் கதை - இதெல்லாம்! சீக்கிரமே ஏற்பாடு பண்ணுங்க எடிட்டர் சார்!

    பதிவின் இறுதியில் நீங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கை நிலைமையை கவலையோடு உணரச் செய்கிறது! தேங்கிக்கிடக்கும் இதழ்களில் ஏதாவது ஒன்றிரண்டையாவது நிச்சயம் வாங்கிட முயற்சிப்போம்!

    அர்ஸ் மேக்னாவை நண்பர்களுக்காக ஆர்டர் செய்திருக்கும் நண்பர் சரவணகுமாருக்கு நம் அனைவரின் சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும்!

    ReplyDelete
  18. //சீனாவிலிருந்து இறக்குமதியான சரக்கு 100 ரூபாய்க்கு மார்கெட்டில் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்... இன்றைக்கோ அதே சரக்கு உள்ளூரில் கூசாமல் நம்ம பெரிப்பாக்களின் உற்பத்தியில் - ரூ.140-க்கு விற்று வருகிறது!!//


    இதற்கு தான் ஓரிரு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு தொழிலிலும் இருக்க வேண்டும். த ரம் மற்றும் விலை இரண்டுமே உலக தரத்தில் கிடைக்க ஆரம்பித்தது விடும்.

    இல்லாவிட்டால் உற்பத்தி பொருட்கள் இது போல் ஏலத்திற்கு வந்து விடும் !

    ReplyDelete
  19. // ரைட்டு... பஞ்சப்பாட்டுக்கள் படலம் போதுமென்பதால் let’s move on! //
    படிக்கற எங்களுக்கே இவ்வளவு கடுப்பா இருக்குன்னா,நேரடியாக அனுபவித்த உங்களுக்கு எவ்வளவு கடுப்பா இருக்குன்னு புரியுது சார்...
    காலமாற்றத்தில் தொழில்களில் சில செளகரியங்களை தருவதாய் சிலர் சொல்லிக் கொண்டிருக்க,இதை வைத்து கள்ளத்தனமாய் குளிர் காய்பவர்களால் பலருக்கு சிரமங்கள் ஏற்படுவதையும் காண முடிகிறது...
    கஷ்டம்தான் சார்,எனினும் காலப்போக்கில் நல்லது நடக்கும் என்று நம்புவோமாக...

    ReplyDelete
  20. அடடே அடுத்த மாதம் மார்ட்டினும் உள்ளாரா...சூப்பரு....!!!!

    ReplyDelete
  21. // க்ரைம் த்ரில்லர் – 2 பாகம் – நினைத்தே பார்க்க முடியாததொரு கதைக்கருவோடு! And சித்திரம் + கலரிங் ஸ்டைல் க்ரிஸ் கெய்ல் அடிக்கும் சிக்ஸர்களை விடவும் அசாத்தியமாய் இருக்கின்றன! //
    அடடே,அடடே,அடடே.....!!!!

    ReplyDelete
  22. // தன் செலவில் அர்ஸ் மேக்னாவின் 20 இதழ்களை வாங்கி, தன் சக ஆசிரியர்களுக்கோ, அன்பர்களுக்கோ விநியோகம் செய்து வருகிறார்!! //

    அருமை,அருமை,அருமை...

    ReplyDelete
  23. // கண்ணுக்குக் குளிர்ச்சியானதொரு செம வீரியமான கௌபாய் தொடர் – மொத்தம் 5 பாகங்கள் கொண்டது! //
    வரட்டும்,வரட்டும்,ஒரே தொகுப்பா போட்டுத் தாக்கிடுவோம்...

    // இறுதிப் படலம் may be 2022 –ல் ரெடியென்றால் உத்திரவாத அதகளம் ரெடி எனலாம்! //
    மே வில் வருதா,ஓகே,அப்ப 2022 ஈ.பு.வி வெளியீடுகளுக்கு ஒரு இடத்தை முன்பதிவு பண்ணிடுவோம்...

    ReplyDelete
  24. // இனி egg eyes தமிழாக்கம் பண்றான்... புக் ப்ரிண்ட் பண்றான்... நிம்பள் வாசிக்கிறான்! //
    ஹா,ஹா,ஹா,நம்பிள் கி வேறென்ன வேலை சாப்...

    ReplyDelete
  25. //So தெறிக்கும் உச்சங்களே தொடர்ந்தாலோ ; அல்லது விலைகள் இன்னமும் கூடினாலோ - bye bye ஆர்ட்பேப்பர் என்பதே தீர்மானமாக இருந்திடும் ! We just have no choice !!//

    மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. But நான் அல்லது என்னைப் போன்ற ஒரு சிலராவது கொஞ்சம் அல்ல நிறையவே யோசிப்போம் ❤️

    ReplyDelete
  26. // நண்பர் இம்மாதம் நம்மிடமிருந்து பெறவுள்ளது மைசூர்பாகு டப்பியாக இருக்கலாம்; ஆனால் அவர் பதிலுக்குச் செய்திருப்பதோ ஒரு அசாத்திய காரியம்! தன் செலவில் அர்ஸ் மேக்னாவின் 20 இதழ்களை வாங்கி, தன் சக ஆசிரியர்களுக்கோ, அன்பர்களுக்கோ விநியோகம் செய்து வருகிறார்!! தான் ரசித்ததோடு நிறுத்திக் கொள்ளாது ரூ.6000 செலவழித்து, அந்தப் படைப்பைத் தனது வட்டத்தினில் உள்ளோரிடமும் கொண்டு சேர்ப்பிக்க அவர் காட்டி வரும் ஆர்வம் – just wow! //

    வாழ்த்துக்கள் சரவணன். நீங்கள் செய்தது மிகவும் தரமான சம்பவம்.
    சூப்பர்.

    ReplyDelete
  27. //விலைகளில் இதே வெறித்தாண்டவங்கள் தொடர்ந்திடும் பட்சங்களில், ஆர்ட் பேப்பருக்கு ஒரு பெரிய கும்பிடைப் போட்டு விட்டு – நார்மல் தாட்களுக்கு மாறுவதைத் தவிர்த்து வேறு வழியே இராது ! நிலவரம் கைமீறி ; கால்மீறி ; மூக்குமீறி ; முகரைமீறிப் பயணித்து விட்டன ! சும்மா சும்மா இந்த மனசாட்சிகளில்லா செலவின விலையேற்றங்களை நமது இதழ்களின் விலையேற்றங்களாக்கிடுவதில் எனக்குச் சம்மதமில்லை !//

    அதாவது அம்மா உணவகம் போன்று என்று தானே சொல்ல சொல்கிறீர்கள் ?! ❤️

    ReplyDelete
  28. ஆசிரியருக்கு,
    உங்களது எந்த முடிவையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் சார்,எந்த ஒரு தயக்கமும் இன்றி புன்முறுவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. +1....

      ஏற்றுக் கொள்கிறோம் சார்.

      தயங்காமல் எது சரியோ அதை செயல்படுத்தவும்.

      Delete
  29. முதலில் கேட்டவுடனே குறிப்பிட்ட அளவு சகாயத்துடன் கொரியர் செலவு இல்லாமல் எனக்கு புத்தகங்களை அனுப்பி வைத்த தங்கள் ஒத்துழைப்புக்கு மிகுந்த நன்றிகள் சார்!

    இது சார்ந்து ஒரு சுவாரசியமான பின்புலமும் உள்ளது. என்னுடைய ஆசிரிய நண்பர்கள் வட்டத்தில் நிறைய நண்பர்கள் புத்தகங்கள் வாசிப்பதிலும் அது குறித்த விவாதங்களில் அளவளாவுதலும் பெரும் ஈடுபாடு கொண்டிருப்பது உண்மையே. கல்கி, சாண்டில்யனின் படைப்புகள் குறித்து சிலாகிப்பதில் இருந்து சுஜாதா, தா.வி.வெங்கடேஸ்வரன் ஆகியோரின் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அலசுவதும், டான் பிரவுன், அமித், சேப்பியன்ஸ் ஹராரி போன்றோரின் புனைவுகளைக் கண்டு பிரமிப்பதுமான நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் சமாச்சாரங்கள்தான். எப்போதும் காரசாரமாக விவாதிக்கும் இவர்கள் அனைவரும் ஒத்துப்போகும் ஒரே விஷயம் குறித்து நமக்கெல்லாம் வருத்தமே மிஞ்சும், ஆமாம் காமிக்ஸ் சின்னப் பசங்க சமாச்சாரம் எனும் கொள்கை தான் அது. இவர்கள் அனைவருமே பால்யத்தில் இரும்புக்கையாரையும், வேதாளரையும் தரிசித்து வளர்ந்தவர்கள்தான். தற்போதும் வாசிப்பை சிறுவர்களிடம் விதைக்க சித்திரக்கதைகள் முதன்மையானது என்ற என் கருத்தோடு உடன்பட்டவர்கள் தான். ஆனால் கருத்து சார்ந்த விவாதங்களை காமிக்ஸ் தூண்டுவது குறித்த புரிதலை அவர்களிடம் என்னால் ஏற்படுத்த இயலவில்லை. ஒட்டுமொத்த குழுவில் உள்ளோரில் என்னைத் தவிர்த்து காமிக்ஸ் படிப்பவர் ஒருவர் மட்டுமே (அந்த அளவுக்கு நன்றி கடவுளே). அவரும் நமது சந்தாதாரர் அல்ல, தேர்ந்தெடுத்து கடையில் வாங்கிப் படிக்கும் வாசகர்.

    காமிக்ஸ் என்றாலே கௌபாய், கார்ட்டூன்,... என்ற எண்ணம் கொண்டவர்களிடம்
    அருமையான களத்துடன் அசாத்திய படைப்பாய் மிளிரும் அர்ஸ் மேக்னாவை அளித்து "நாங்க ஒன்னும் சின்னப் பசங்க இல்லை" என்று அவர்களுக்குச் சொல்ல கிடைத்த வாய்ப்பைத் தவற விடுவேனா என்ன? பயன்படுத்திக் கொண்டேன். புத்தக வடிவமைப்பும் பரிசளிக்க ஏதுவாய் பளீரென அமைய எனக்குக் கொண்டாட்டமாகவே அமைந்தது. இது அவர்கள் எண்ணத்தில் மாற்றத்தை விதைக்கிறதா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் நன்றிகள் சார்!
    நன்றி நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே....


      கண்டிப்பாக மாறுவார்கள்...:-)

      Delete
    2. @Saravanakumar

      சக ஆசிரிய நண்பர்களிடம் காமிக்ஸைக் கொண்டு சேர்க்கும் உங்கள் முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியவை! ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்! அருமை!!

      Delete
    3. @Saravanakumar

      சிறப்பு நண்பரே!🌹🌹🌹🌹

      தங்களது முயற்சி வெற்றி அடையட்டும்.
      ஓரிரு ரசிகர்கள் கூடினால் பெருமகிழ்ச்சி. உங்களது முயற்சிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்க வாழ்த்துகள்.

      Delete
    4. மிகச்சிறப்பான பணி சரவணன் அவர்களே!

      Delete
    5. சூப்பர்! சூப்பர்!!

      Delete
  30. ஆசிரியருக்கு,
    வெகு சீக்கிரமாய் எனது சந்தாவை புதுப்பிக்கிறேன் சார், மார்ச் மாசத்திற்குள்ளாக.

    ReplyDelete
  31. /So தெறிக்கும் உச்சங்களே தொடர்ந்தாலோ ; அல்லது விலைகள் இன்னமும் கூடினாலோ - bye bye ஆர்ட்பேப்பர் என்பதே தீர்மானமாக இருந்திடும் ! We just have no choice !!/


    #####

    எப்படி இருப்பினும் நாங்கள் உங்களுடன் என்றும் இணைந்தே இருப்போம் சார்...

    டோன்ட் வொர்ரி...காமிக்ஸ் நேசர்கள் என்றும் உங்களுடன்...

    ReplyDelete
  32. கண்ணுக்குக் குளிர்ச்சியானதொரு செம வீரியமான கௌபாய் தொடர் – மொத்தம் 5 பாகங்கள் கொண்டது!

    ******

    கண்டிப்பாக ஒரே தொகுப்பாக சார்...

    ReplyDelete
    Replies
    1. பௌன்ஷர்னு ஜொள்ளாம ஜௌள்றீங்க...இல்லியா தல்லீவர்ரே...

      Delete
  33. சார், உங்கள் ஆன்லைன் சந்திப்பில் டிக் செய்த அனைத்து இதழ்களும் ஆர்வத்தை கிளப்புகிறது. விரைவில் அவைகளை எங்கள் கைகளில் தவழ ஏற்பாடு செய்யுங்கள் யுவர் ஆர்னர்.

    ReplyDelete
  34. புதிர்கள் - புதையல் என்ன? இரண்டு குழுக்கள் தேடுவது எங்கே உள்ளது? இடையில் புதையல் பற்றிய ஒரு கடந்த கால காட்சிகள். புதிர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் அதனை அழகாக முடிச்சவிழ்கக்கும் விதமும் அருமை. அரண்மனை முன்னால் நடக்கும் அந்த காட்சிகள் செம திருப்பம் மற்றும் திகைக்க வைத்தது.

    இந்த கதையில் ஓவியத்தின் பங்களிப்பு அதிகம். அதற்காக ஓவியர் அபாரமாக உழைத்துள்ளார். கதையின் ஒவ்வொரு பிரேமும் பல கதைகள் சொல்லும். உதாரணமாக "இறுதியாய் ஒளி போர்த்திடட்டும் தெருவின் விளக்கொளி எதிரில் அரண்மனை அங்கு தென்படும் வெளிச்சம் அதேநேரம் நிலவின் ஒளி என மூன்றையும் அழகாக காட்டியுள்ளனர். அதே நேரம் அந்த விளக்கின் பின்னால் நாம் நின்று பார்த்தால் எப்படி இருக்கும் என அமைத்து இருப்பது சிறப்பு. இது நாம் அந்த இடத்தில் நிற்க அந்த கர்னல் நம்மிடம் சொல்வது போல் ஒரு உண்வை தரும். இதுபோல் சிறப்பான ஓவிய கதை எனக்கு மிகவும் புதிது. முதல் முறை அதனை தரிசிக்கிறேன்.

    வசனங்கள் பல இடங்களில் செம.

    புதிர்கள் - பல புதினங்களின் ஆரம்பம்.

    ReplyDelete
  35. மிக நீண்ட பதிவு.மிக்க மகிழ்ச்சி ஆசானே.

    ReplyDelete
  36. டிடக்டிவ் ஸ்பெஷல் காண ஆவல்.மூன்று கதைகளும் வண்ணத்திலா ஆசானே ?

    ReplyDelete
    Replies
    1. Dylon மட்டும் வண்ணத்தில்

      Delete
  37. விஜயன் சார், காகிதங்களின் விலையில் நீங்கள் சந்திக்கும் மற்றும் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் காமெடியாக சொன்னாலும் அதன் பின்னால் உள்ள வலி புரிகிறது. இது எப்படியாவது சரியாகி நார்மலாக வேண்டும் என வேண்டுகிறேன்.

    Euro books, மற்றும் அமர்சித்திர கதை ஆங்கில புத்தகங்கள் எனது குழந்தைகளுக்கு கதை சொல்வதற்காக வாங்கினேன். அவற்றின் காகிதங்கள் பளபளப்பு இல்லாமல் இருந்தது. இது போன்ற காகிதங்கள் என்ன ரகம். இதில் நமது வண்ணக் கதைகளை அச்சடித்தால் நன்றாக இருக்குமா? நமது பட்ஜெட்டுக்கு சரிப்படுமா சார்.

    ReplyDelete
    Replies
    1. அவை எல்லாமே நம் உள்ளூர் பெரிப்பாக்களின் காலங்காலமான உற்பத்தி ரகங்கள் சார் ! பெரிப்பாக்கள் என்றைக்குமே விலைகளில் விட்டுத் தரும் ரகங்கள் கிடையாதென்பதே சிக்கல் !

      But பார்ப்போமே சார் - இன்னும் ஓராண்டு அவகாசம் உள்ளதே ; அதற்குள் சீன இறக்குமதி நிலவரத்தின் கலவரங்கள் தீர்ந்திருப்பின், விலைகள் ரிவர்ஸ் அடித்திருக்கும் !

      Delete
    2. ரிவர்ஸ்ஸா...

      நோ சான்ஸ்...அட் ஆல்...

      சைனாக்காரங்கெ லேசுபட்டவங்கெளாக்கும்...

      கொரானா இல்லாத சாதாரண நேரத்திலியே...வெல ஏறீடிச்சினு நீங்க போனவாட்டி பொலம்புனீங்களே ...

      Delete
    3. அந்த விலையேற்றங்கள் இப்போ ஜுஜுபியாய் தெரிகின்றன சார் ; சீனாக்காரர்களையே நம்ம மிக்ஸர் முதலாளிகள் நல்ல பிள்ளைகளாய்த் தெரியச் செய்து விட்டார்கள் !

      Delete
    4. // நம் உள்ளூர் பெரிப்பாக்களின் காலங்காலமான உற்பத்தி ரகங்கள் //

      அதுவும் பெரிப்பாக்களின் கைகளில் தானா. எந்த பக்கம் போனாலும் பெரியப்பா கேட் போடுகிறார்கள் :-)

      Delete
  38. ஆசிரியரின் கூற்று மிகச் சரியே..
    படைப்பாளிகள் கொண்டாடப்படவேண்டியவர்களே .
    (எடிட்டரையும் சேர்த்து)

    சரித்திரத்தின் துவக்கப் பக்கங்களுக்கும் , உலக யுத்தத்தின் பக்கங்களுக்கும் முடிச்சு போடுவது சாமான்யமான காரியமா.?ஆதிகாலத்துக்கும் ,அணுவியல் காலத்துக்கும் வரலாற்றின் வழியாக இணைப்பை ஏற்படுத்த முற்படுவது எளிதான காரியமா.?


    சிறு புள்ளியில் தொடங்குவது, பெருவெடிப்பில் தானே முடியும். ஆரம்பத்தில் ,ஏதோ ஒரு ரகசியம், ஒரு புதையல் என்ற வகையிலே பயணிக்கும் கதை, மெல்ல மெல்ல விஸ்தீரணமாகி, மெது மெதுவாக தன் முகத்தை மாற்றி ,, போகிற போக்கில் எல்லாருக்கும் போக்கு காட்டி ,தன்னை விஸ்வரூபமாய் வெளிப்படுத்தும் அந்தத் தருணம்.. அப்பப்பா..!
    கற்பனைகள்தான் எப்படி பிரவாகமெடுக்கின்றன? .சிந்தனைகள்தான் எப்படி சிறகடிக்கின்றன.?,

    வரலாற்றிலிருந்து கொஞ்சம் சம்பவங்களை எடுத்து, அப்படியே வரும் வழியில், ஆன்மீகத்தையும் , அரசியலையும் அளவாக தொட்டு இழுத்தபடி, , புது நூற்றாண்டில் புகுந்து வெளியேறி , துணைக்கு அறிவியலையும், கூடவே ஐன்ஸ்டீன் அவர்களையும் உடனழைத்து ஹிட்லரையும், இரண்டாம் உலகப் போரையும் காரண காரியமாக்கி ,மொத்தத்தையும் ஓரிடத்தில் குவிக்கும் யுக்தி இருக்கிதே... அது ஒரு ரசவாத வித்தை ..!

    முதல் பக்கத்தில் பிடிக்கும் வேகம் இறுதி பக்கம் வரை அசராமல் அநாயசமாக இழுத்துக் கொண்டு வந்தது.கூடவே அருகில் இருந்து பயணிப்பது போன்ற பிரமை.
    நடக்கும் சம்பவங்களில் எது கற்பனை? எது நிஜம் என சில வேளைகளில் மனம் குழம்புகிறது .ஒருவேளை இதுதான் நிஜமாக இருக்குமோ என ஐயப்படவும் வைக்கிறது.

    கதாசிரியருக்கு போட்டியாக ஓவியரும் தன் பங்குக்கு பிரஸ்ஸல் நகரை தன் பிரஸால் அழகாக்குகிறார்..நுணுக்கமான ஓவியங்கள், அணு, அணுவாய் ரசிக்க வைக்கின்றன.நகர வீதிகளும், மாட மாளிகைகளும் வரைந்ததா? இல்லை போட்டோவா? என்ற மனக் குழப்பம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. கண்ணில் படுபவற்றையெல்லாம் உண்மையாகவே கண்முன் நிறுத்துகிறார் மனிதர்.

    அர்ஸ் மேக்னா..

    ஒரு மாஸ்டர் பீஸ்.

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா சார் - உலகமே பிராங்கோ பெல்ஜியப் படைப்புகளை தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறது ? நாமும் அதன் ஒரு சிறு நுனியையாவது மேய்ந்திடச் சாத்தியப்பட்டிருப்பது நமது அதிர்ஷ்டமே !

      Delete
    2. //நடக்கும் சம்பவங்களில் எது கற்பனை? எது நிஜம் என சில வேளைகளில் மனம் குழம்புகிறது .ஒருவேளை இதுதான் நிஜமாக இருக்குமோ என ஐயப்படவும் வைக்கிறது.//

      வரலாற்றை ஒட்டி புனைந்து அதை உண்மை போல சித்தரிப்பது கதாசியரின் வல்லமை சார். இங்கு அவர் உச்சம் தொட்டு நிற்கிறார் என்பது கண்கூடு.

      Delete
  39. // அடுத்த 10 மாதங்களுக்காவது எவன் தலையில், பெரிப்பாக்கள் எந்தக் கல்லை போட்டாலும் நமக்கு கவலையில்லை ; நான் மிக்ஸர் சாப்பிடுவேனே மம்மி //

    // இனி egg eyes தமிழாக்கம் பண்றான்... புக் ப்ரிண்ட் பண்றான்... நிம்பள் வாசிக்கிறான்! //

    சார் அல்டிமேட். சிரிப்பை அடக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன்கள் இல்லாத குறையை நாமளாவாச்சும் தீத்துக்குவோம் சார் !

      Delete
  40. We are expecting more ARS MAGNA style books.

    ReplyDelete
    Replies
    1. முழுநிலவு தினமும் தலைகாட்டுவதில்லையே ?!

      Delete
  41. டியர் எடி,

    ஆர்ட்பேப்பரில் இருந்து ஒருவேளை விலகவேண்டி வந்தால் (அந்த நிலை வராது என்றே நினைக்கிறேன்), பளீர் வெள்ளை நிற தடிமனான காகிதங்களாவது கண்டிப்பாக பயன்படுத்துஒஈர்கள் தானே? அதையும் கருப்புவெள்ளைக்கான மெலிய வெள்ளை காகிதம் பயன்படுத்தாத வரை சுகமே. அதற்கு பிறகு, அட்டை பின்புறம் வெள்ளை இல்லாமல் போனாலும் பெரிய விஷயமே இல்லை.

    மார்ச் மாத இறுதியில் என் 2021 சந்தா, வழக்கம்போல வந்து சேரும்.

    ReplyDelete
  42. //சமீபத்தைய நமது ஆன்லைன் புக் பேர் விழாவின் ஆர்ச்சி + மாயாவி இதழ்களினை இன்னமும் நம்மில் நிறையப் பேர் வாங்கியிருக்கவில்லை ! அவற்றுள் ஏதேனும் ஒன்றையோ ; அல்லது நமது back issues–களில் ஒரேயொரு Smurf or லக்கி லூக் or whatever வாங்க உங்களுக்குச் சாத்தியமாயின் – அதனை உங்களின் மார்ச் கூரியர்களுக்குள் நுழைத்து விடலாம்///

    --- ஆகட்டும் சார்.

    சமீபத்திய ஆர்ச்சி, மாயாவி+ மரணமுள்--- மார்ச் மாத கொரியரோடு அனுப்ப எவ்வளவு தொகை அனுப்பி வைக்க வேணும்???

    இங்கேயுள்ள பழைய ரசிகர் ஒருவருக்கு கிஃப்ட் பண்ணிடலாம்!

    (நமக்கு ஆல்ரெடி அன்பு பரிசாக வந்துட்டது.)

    இயன்ற நண்பர்கள் நம்ம அருகேயுள்ள இதழ்களை வாங்காம இருக்கும், பழைய ரசிகர்களுள் யாருக்கும் இந்த செட்டை கிஃப்ட் பண்ணுங்கள் பரெண்ட்ஸ்🙏🙏🙏🙏

    பழைய ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்+ துயிலும் இதழ்களின் தூக்கத்தை கலைக்கும் முயற்சியில், எடிட்டர் சாருக்கு நம்மாள் இயன்ற சிறு பங்களிப்பு!

    ReplyDelete
    Replies
    1. //சமீபத்திய ஆர்ச்சி, மாயாவி+ மரணமுள்--- மார்ச் மாத கொரியரோடு அனுப்ப எவ்வளவு தொகை அனுப்பி வைக்க வேணும்??? //

      Book cost Rs.260 + (தமிழகத்தினுள்ளான) கூரியர் கட்டணம் ரூ.40 = Rs.300 sir..

      Delete
    2. நன்றிகள் சார்.

      நாளை அனுப்பி புக்கிங் செய்துடறேன்.

      Delete
  43. சார் பேப்பர்கள் சாதான்னாலும் சரி.....ஓட்டும் வண்டி....மின்னும் மரணத்துக்கிணையாய் சூப்பர்....அந்த நாட்டு நடப்புகள் கொண்ட அழகி கதை..அருமை.

    ReplyDelete
  44. //- ஒரு செம cute கௌபாய் காமெடித் தொடர்!// - wow....


    //சித்திரங்களும் கதையோட்டமும் மின்னும் மரணத்துக்கு tough fight தந்திடுவது போலுள்ளன?// - மெய்யாலுமேவா சார்!!??

    ReplyDelete
    Replies
    1. இரண்டுக்குமே ரைட்ஸ் வாங்கியாச்சூ சார் !

      Delete
    2. அட மிசைல் தோற்றது போங்கள் உங்களிடம். சூப்பர் சார்.

      Delete
    3. // இரண்டுக்குமே ரைட்ஸ் வாங்கியாச்சூ சார்//

      சூப்பர் சார் ! செம!! செம!!!

      Delete
    4. ///இரண்டுக்குமே ரைட்ஸ் வாங்கியாச்சூ சார் ////

      வாவ்!!! அட்டகாசம் சார்!! என்னா ஒரு ஸ்பீடு!!!!!!

      Delete
  45. எடிட்டர் சார்...


    திரும்ப திரும்ப பேப்பர் விலை ஏற்றம் காணவே செய்யும்...

    நேற்று வாங்கிய வெங்காயம் இன்று அதே விலையில் கிடைப்பதில்லை...

    இன்று ஆட்டுக்கறிக்கு வேற ரேட்டு போன வாரத்தில் முப்பது ரூவா கூடவாம்...

    யாரும் ஏன் என்று கேட்க நாதியில்லை....

    அப்பறம் வாழ்க்கை முந்தி மாதிரி இல்ல...

    ஆஸ்பத்திரியில் போனா டாக்டரு சொல்ற பில்ல பேசாம கட்டீட்டு வர்றோமா இல்லியா...

    காமிக்ஸ் மட்டும் சிவகாசி கோடாங்கி வாக்கு மாறாம வரணும்னா எப்டி... எதிர்பாக்குறது சரிதான்...ஆனா எதார்த்தம்னு ஒண்ணு இருக்கு...

    நீங்க வெல ஏத்துனா கேள்வி கேப்பாங்க இல்லாட்டி சந்தா கொறஞ்சி போகும்ன்னு மனசு கலங்கவோ வருந்தவோ வேண்டாம்...

    இந்த காமிக்ஸ் ஒண்ணே ஒண்ணு தான் வாழ்க்கைல நிம்மதிய தருது...

    அதை இழக்காமலிருக்க நாங்கள் எவ்வளவும் இழக்க ரெடி...

    அந்த வலிகள் தற்காலிகமானவையே...

    ReplyDelete
    Replies
    1. சார் ..ஏதேனும் காரணங்கள் வலுவாய் இருந்து, விலைகளில் சதிராட்டங்கள் நிகழ்ந்திடும் பட்சங்களில் இத்தனை வலிக்காது ! ஆனால் கோதாவில் போட்டிக்கு ஆள் நஹி என்ற மறுநொடியில் டாப் கியரில் விலைகளைத் தூக்குவது தான் கடுப்பேற்றுகிறது !

      உள்ளூரிலிருக்கும் மொத்த ஸ்டாக்கிஸ்ட்டோ வெவ்வேறு கிட்டங்கிகளில் வைத்திருக்கும் ஒரே சரக்கை - "இது இப்போ வந்துச்சு ; இது அடுத்த வார கோட்டாவென்று" கூசாமல் டன்னுக்கு 6000 ஜாஸ்தி சொல்லி போணி பண்ணி வருகிறார் ! கேட்க நாதி நஹி !

      Delete
    2. சார்...

      அதான் சார் வியாபார சாணக்கியத்தனம்...

      மாசா மாசம் பெட்ரோல் விலை ஏறிய போது கொடிபிடித்த காம்ரேட்களை தினந்தினம் விலை ஏற்றி கத்தவிடாம பண்ணுனது மகா அரசியல் புத்திசாலித்தனம் ல...

      இப்ப எங்க போராட்றாங்க...

      மக்களும் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள பழகிவிட்டனர் என்று சொல்வதைவிட பழகிக்கொள்ள கட்டாய மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டனர் என்பதே நிதர்சனம்...

      எரியிற வீட்ல புடுங்குன வரக்கும் லாபங்குறது தான் இப்ப லேட்டஸ்ட்...

      நாளக்கா....ம்ஹூம் ...இன்னிக்கே இருக்குறத வச்சி வாங்கீடுன்னு அர்ஸ்மேக்னால அந்த வியாபாரி ஹீரோட்ட சொல்வார்ல...அக்காங்க்...

      அது...

      Delete
  46. ///அதனிலிருந்து ஒரு அற்புத அழகியின் கதையைத் தேர்வு செய்துள்ளோம் நமது ஜம்போ சீஸன் 4க்கென! சித்திரங்களும் சரி, கலரிங்கும் சரி – வேறு லெவல்! ஜம்போ சீசன் 4-ன் இதழ் # 3.////

    ---ரோமாபுரியை ஆட்டிப்பாக்க நினைத்த "கறுப்பழகி"யோ???

    ReplyDelete
    Replies
    1. கிள்ளியோ பார்ட்றா...
      அஹ்ஹஹ்ஹா

      Delete
    2. ///வரலாற்றில் சில தெளிவில்லாத அத்தியாயங்கள்///

      ---அப்டீனா அந்த அற்புத அழகி மன்றோ தான்.

      Delete
  47. அர்ஸ் மேக்னா ...

    கதையின் கால கட்டத்தில் ஸ்நைப்பர் இருந்ததா...

    ReplyDelete
    Replies
    1. நிரைய மெனக்கெட்டிருக்கின்றீர்கள்...

      நிறைவைத் தர...

      Delete
    2. இதைவிட மோசமான அழிவைத் தந்த பிரம்மாஸ்த்திரம் என்ற ஏவுகணைகள் பற்றி மகாபாரதத்தில் படித்து எள்ளல் செய்வோம்...

      ஆனால் ஃபிராங்கோ பெல்ஜியர்கள் அணுகுண்டு தொழில்நுட்பம் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்...இதைத்தான் நம்முன்னோர்கள் பல யுகங்களாக சொல்லிவந்துள்ளனர்...

      கர்ணனிடமும் அர்ஜுனனிடமும் இருந்ததைவிட பீஷ்மரிடமிருந்த பிரம்மாஸ்திர அணு ஆயுதமானது ஃபவர்புல்...

      எப்படி தயாரித்தார்கள்...

      என்ன டெக்னாலஜி...

      நீரும் நெருப்பும் பகை...ஆனால் அவையிரண்டும் நிலத்திலடக்கம்...இந்த நிலமும் வாயுவும் விண்ணிலடக்கம்...

      விண்ணை அடக்க வல்ல டெக்னாலஜி தெரிந்தால் எதுவும் சாத்தியம்...

      இருந்த இடத்திலிருந்தே இமயத்தை பெயர்த்தெடுத்த இராவணன் வலிமை என்ன...அவனை கால் கட்டை விரலால் அழுத்திய சிவனின் டெக்னாலஜி என்ன...

      நியூக்கிளியர் பியூஷன் அர்ஸ் மேக்னா வில் சிலாகிக்கப் படுகிறது...

      லிட்டில்பாயே வீசப்பட்டாலும் அது வினை பெற நெருப்பும் - தொடர்வினையாற்ற காற்றும் வேண்டுமே...

      இவையெல்லாம் இயற்கைக்கு எதிர்வினைகளே...

      இதையெல்லாம் தாண்டிய கற்பனைக்கெட்டாத பல பரிமாண சக்திகள் உள்ளன...

      கற்பனைகளல்ல...

      Delete
    3. // நிரைய மெனக்கெட்டிருக்கின்றீர்கள்...

      நிறைவைத் தர...//

      Yes. +1

      Delete
    4. சூப்பர்! நாம்மாளுக சொன்னா? சூடோ சைன்ஸ்ங்கிறாங்க!

      J ஜி! செகப்ப இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்! ஹிஹிஹி!
      சும்மா தமாஸ்காண்டி!!!

      மற்றபடி நல்ல கற்பனை!
      அர்ஸ் மேக்னா 9/10

      Delete
    5. அமெரிக்க சிவில் யுத்தத்திலேயே ஷார்ப்சூட்டர்ஸ் என்ற ஒரு அணியினர் ஸ்நைப்பர் போல செயல்பட்டு உள்ளார்கள் எனத்தெரிகிறது.

      1895இலிருந்தே ஸ்நைப்பர் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்து வந்தாலும் முதல் உலகப்போரின் போது தனிப்பட்ட பயிற்சி பெற்ற ஸ்நைப்பர்கள் பங்கேற்றனர். அர்ஸ் மேக்னா கதை நடக்கும் இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட வேளையில் நிறைய மேம்பட்ட ஸ்நைப்பர் துப்பாக்கிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

      கதையில் ஹிட்லரை சுடப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி Mauser Karabiner 98 வகை போலத் தெரிகிறது. இது அந்நாட்களின் சிறந்த ஸ்நைப்பர் துப்பாக்கிகளில் ஒன்றுதான்.

      தகவல் Wiki மூலம் பெறப்பட்டது.

      Delete
  48. சார், கடந்த சில பதிவுகளுக்கு முன்னால் ஆர்ஸ் மேகனாவில் சில விஷயங்களை முயற்சி செய்வதாக கூறி இருந்தீர்கள். புத்தகங்கள் வந்து படித்து முடித்து விட்டாச்சு. ஆனால் நீங்கள் செய்ய நினைத்தது என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முடிந்தால் அதனை பற்றி சொல்ல முடியுமா? குமார் சேலம் உங்களால் என்ன என கண்டுபிடிக்க முடிந்ததா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை பரணி என்னாலும் கண்டு பிடிக்க முடியவில்லை

      Delete
    2. அப்ப நம்ம ஆசிரியரிடம் இருந்து தான் பதிலை ஏதிர்பார்க்கனும். விஜயன் சார் நீங்களே சொல்லிவிடுங்களேன்.

      Delete
  49. மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு அரைமணிநேரம் படுக்கலாம் என்று கண்களை மூடினால் பெல்ஜியத்தில் புதையலை தெரு தெருவாக தேடுவதாக நினைவுகள், கண்ணை திறந்து பார்த்துவிட்டு மீண்டும் கண்களை முடியால் இதே நினைவுகள் தான். புதையல் புதையல் :-)

    ReplyDelete
    Replies
    1. அப்படியென்றால் அந்தப் புதையல் பரணித் தம்பி வீட்டில் தான் இருக்க வேண்டும் ;)

      Delete
    2. வாழ்க்கை ஒருதபாவாவது பிரஸ்ஸல் நகரை பார்த்திடணும்!

      கையில் நம்ம அர்ஸ்மேக்னா கைடு வைச்சுக்கிட்டு!!

      Delete
    3. // அப்படியென்றால் அந்தப் புதையல் பரணித் தம்பி வீட்டில் தான் இருக்க வேண்டும் ;) //

      இரண்டு புதையல்கள். எனது குடும்பம் முதல் புதையல் இரண்டு இந்த காமிக்ஸ் நண்பர்கள் :-)

      Delete
  50. சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி சொல்லவில்ைலையே

    ReplyDelete
  51. நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் போல கையில் இருக்கும் அண்டா குண்டா எல்லாத்தையும் வைச்சு ஆபிஸ் போட்டாச்சு!

    நம்ம படம் ஓடினா மன்னன்! இல்லைனா நாடோடி! கோரானா வாழ்க!!!

    மூன்று மாத முஸ்தீபுகளுக்கு பிறகு ஜனவரியில் தொழிலை துவங்கியாச்சு!

    பார்ப்போம்! மொத வருமானத்தில 2021 சந்தா கட்டினும்னு இருக்கேன்!

    EMI, Insurance எல்லாம் பிறகு பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் மிதுன். மேலும் மேலும் நீங்கள் தொழில் முன்னேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
    2. வெற்றி பெற வாழ்த்துகள் ப்ரோ.

      Delete
    3. நல்லபடியாக நடந்தேற வாழ்த்துகள் மிதுனரே!
      🌹

      Delete
    4. நல்ல விசயம்.வாழ்த்துகள் சார்.

      Delete
    5. நல்வாழ்த்துகள்

      என்ன ஆபீஸ் போட்ருக்கீங்க

      Delete
    6. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!!!

      MRP CONSULTANCY
      Stock Market
      Trading & Trading
      Financial Planning &
      Investments

      Delete
    7. தொழில் செழிக்க வாழ்த்துகள் நண்பரே!

      Delete
    8. பட்டய கிளப்புங்க மிதுன். உச்சம் தொட வாழ்த்துகள்

      Delete
    9. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
    10. நெம்பர் கெடைக்குமா??

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. உங்கள் what's up message பாருங்கள் ரம்மி.

      ரம்மி @ MRP இது அந்த MRP இல்லை :-)

      Delete
  52. எடிட்டர் சார்

    இந்தவருஷம் ஈரோடு சந்திப்புல ஒரு treasure hunt போடுங்களேன்...

    ReplyDelete
  53. தோர்கல்
    —————

    ஐந்து ஆல்ப தொகுதியை இன்று தான் முடித்தேன். தோர்கல் இதழுக்கு இதழ் ஹீரோ ரேட்டிங்கில் மேலே போய்க்கினே இருக்காரு. இப்போதைக்கு என்னோட பர்சனல் ரேட்டிங்கிலே டவுசருக்கு ஈக்குவலா இருக்காரு்தோர்கல்.

    புத்தக மேக்கிங் வண்ணக் கலவை மொழிபெயர்ப்பு எல்லாமே அட்டகாசமாக இருக்கு. 21 ல் தோர்கலுக்கு வெறும் 2 ஸ்லாட் என்பது மகிழ்ச்சியாக இல்லை. கொரானவை திட்டிட்டு பரவால்லைன்னு விட்டுட வேண்டியது தான்.

    ReplyDelete
  54. // ஒரு அற்புத அழகியின் கதையைத் தேர்வு செய்துள்ளோம் நமது ஜம்போ சீஸன் 4க்கென! சித்திரங்களும் சரி, கலரிங்கும் சரி – வேறு லெவல்! ஜம்போ சீசன் 4-ன் இதழ் # 3 //

    ஜம்போ சீசன் 4ல், ஏற்கனவே 4 இதழ்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இது 5வது இதழா சார்? அல்லது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட #3ன் (சித்திரமும் கொலைப்பழக்கம்) replacement ஆ?

    ReplyDelete
    Replies
    1. ஆக ஜம்போவில் இந்த வருடம் Lone Ranger கிடையாது. ஜேம்ஸ்பாண்ட் 2.0 இல்லாமல் போக வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

      Delete
    2. கரெக்ட் ஆக பிடித்து விட்டீர்கள் சார்.

      Delete
  55. மரணமுள் (வண்ண மறுபதிப்பு)

    அதிகாலை மூன்றரை மணிக்கே தூக்கம் கலைந்து விட... சரி மீண்டும் தூக்கம் வரும்வரை படிக்கலாம் என மரணமுள் மறுபதிப்பினை கையிலெடுத்திருந்தேன். ஏற்கனவே வாசித்த கதையென்பதால் தூக்கம் வந்து பாதியிலேயே வைத்துவிட்டாலும் பாதகமில்லை என்ற எண்ணத்திலேயே அதை தேர்வு செய்திருந்தேன்.

    அட்டையில் செக்கச்செவேலென இரத்தச்சிவப்பில் பூத்து நிற்கும் அந்த முள்ளுருண்டையை பார்த்தவாறே பக்கங்களை புரட்டினேன். அறிமுக முன்னுரையை சற்று அசுவாரசியத்துடனே மேய்ந்துவிட்டு அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்றேன். 8-ஆம் பக்கத்தில் ஸ்...ஸ்...சென நகர ஆரம்பித்த முள்ளுருண்டைகளைக் கண்டதும் என் மனம் பின்னோக்கிச் செல்ல இத்தனை ஆண்டுகள் கழித்தும் பின்கழுத்தில் அதே குறுகுறுவென்ற கூச்சம்... அடேயப்பா... என்ன ஒரு அதீத உணர்வை இந்த ஜந்துக்கள் என் ஆழ்மனதில் விதைந்திருந்தனவோ அறியேன்... இம்முறை வண்ணத்தில் வேறு இருந்ததால் முழுக்கவும் முதன்முறையாக படிப்பது போன்றே இருந்தது. இத்தனைக்கும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதை மறுவாசிப்பும் செய்திருந்ததால் கதை நன்றாகவே ஞாபகம் இருந்தது. தூக்கம் எங்கு போனதென்றே தெரியவில்லை. டெக்ஸ் வில்லர் ஒருமுறை கூட துப்பாக்கியை முழக்காத இந்த சாகசம் வழக்கமான டெம்ப்லேட் கதைகளிலிருந்து மாறுபட்டு புதுமையான அபிமானத்தை விதைக்கிறது.

    தற்சமயம் ஒரு கேள்வி எனக்குள் எழுகிறது. இந்த கதையைப் படிக்கும்போது எனக்குள் எழும் இந்த உணர்வு இந்த கதையின் வீரியத்தினாலா? அல்லது பால்யத்தில் இக்கதையை வாசித்தபோது பெற்ற அனுபவத்தின் ஆழ்மனப் பதிவுகளின் வெளிப்பாடா?

    முதன்முதலாக இதை வாசிக்கும் இளம் நண்பர்களின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

    மரணமுள் (வண்ண மறுபதிப்பு) 9.5/10

    ReplyDelete
  56. ARS MAGNA :

    ஏற்கனவே இந்த படைப்பாளிகளின் JASON BRICE என் FAVORITE .. நீங்கள் போன பதிவினில் இக்கதை பற்றி சொன்னதும் , நண்பர்களின் விமர்சனமும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன .. படித்த பிறகு அந்த EXPECTATION நிறைவு செய்யும் விதமாய் இருந்தது ..INDIANA JONES FILM, DAN BROWN NOVEL படித்தது போல் ஒரு உணர்வு.. பெயர்க்கு ஏத்த மாறி நிஜமாகவே MAGNUS OPUS தான் .. 9.5/10 ..

    ReplyDelete
  57. 2020 சந்தாவில் உள்ள இறுதி நான்கு இதழ்கள் எதிர்ப்பார்ப்பை கிளப்பி உள்ளது. பிரளயம் என்ன மாதிரியான கதை என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது. டிடெக்டிவ் ஸ்பெஷல் பல வருட காத்திருப்புக்கு பின்னர் வருகிறது, மூன்று நாயகர்கள், மூவரும் தனித்திறமை கொண்டது சிறப்பு.

    டாக்டர் நோ பெயரே அதிருகிறது கலக்குவார், 007 இதுவரை வந்த அனைத்து இதழ்களும் நன்றாக இருந்தது.

    கௌபாய் எக்ஸ்பிரஸ் எனது favourite. குழந்தைகளுக்கு அடுத்த மாதம் கதை சொல்ல லக்கி-லூக். காமெடிக்கு பஞ்சம் இல்லாத கதை, முதலில் படிக்க இருப்பது இதுவே.

    ReplyDelete
    Replies
    1. அந்த காலத்துல மயிர் கூச்செறியும் திகில் கதைன்னு சொல்லுவாங்களே. கிட்டத்தட்ட அந்த மாதிரி. லைட்டா சோக இழை ஓடும்.

      Delete
    2. //டாக்டர் நோ பெயரே அதிருகிறது கலக்குவார், 007 இதுவரை வந்த அனைத்து இதழ்களும் நன்றாக இருந்தது.//
      உண்மை 007 இந்த வருடம் ஒரு ஸ்லாட்தான் என்பதில் கவலையே

      Delete
    3. டாக்டர் நோ@ பிரேசில் கார்னிவல் விழா நடக்கும் கதை தானே??? 007 அங்கே உள்ள ஏர்கன் னுக்கு பதிலாக கோட் பாக்கெட்ல இருந்து துப்பாக்கி எடுத்து சுடுவாரே!!!

      Delete
    4. ஆம்... சீன உளவாளி...லயனில் வரும் நாளை ஆவலுடன் எதிர் நோக்கி...😍

      Delete
  58. ***** கலர் டெக்ஸ் - தங்கத்தின் பாதையில் *****

    110 பக்கங்களிலோ, 220 பக்கங்களிலோ ஒரு முழுநீளக் கதையாக வந்திருக்க வேண்டியதைச் சுருக்கி 32 பக்கங்களில் வீரியமாகக் கொடுத்திருக்கிறார்கள்! அனல்பறக்கும் கதைக்கு தலைப்பு மட்டும் சுமார் ரகம்!

    **** கலர் டெக்ஸ்- மின்னும் சொர்க்கம் *****

    கொஞ்சமாய் அமானுஷ்யம் சேர்க்கப்பட்ட ஒரு பழிதீர்க்கும் கதை! டெக்ஸின் கண்களுக்கு ஆவிகள் தெரிய வாய்ப்பில்லையென்பதால் டைகர் ஜாக்குக்கும் கதையில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது!

    பளீர் வண்ணப் பக்கங்களில் ஒரு ஜிலீர் அனுபவம்!!

    சந்தாதாரர்களுக்கு விலையின்றி கொடுத்தமைக்கு நன்றிகள் பல, எடிட்டர் சார்!

    ReplyDelete
  59. அந்த விலையேற்றங்கள் இப்போ ஜுஜுபியாய் தெரிகின்றன சார் ; சீனாக்காரர்களையே நம்ம மிக்ஸர் முதலாளிகள் நல்ல பிள்ளைகளாய்த் தெரியச் செய்து விட்டார்கள் !/// Peiraasai Peru nastum ivargalukku porundhaadhaa sir?

    ReplyDelete
  60. அர்ஸ்மேக்னா....

    ஆயிரம் சூரியன்கள்!

    ரசவாதத்தின் பின்னணியை அறியப்போகிறோம் என போக்குகாட்டிவிட்டு, பயங்கரத்தின் பின்னணியை வெளிச்சம் போட்டு காட்டியது.

    அசாத்தியமான படைப்பு!

    கிங் சாலமைன் மைன்ஸ்,
    மெக்கனாஸ் கோல்டு,
    நேசனல் ட்ரஸ்ஸர்,
    இன்டியானா ஜோன்ஸ் சீரியஸ்...என பல படங்களின் புதிர்களை விடுவித்து புதையலை தேடும் சுவாரயஸ்யமான பாணியை தழுவி பரபரவென கதையை நகர்த்தியது!

    க்ளைமாக்ஸ் ஸ்டன்னிங்!

    ReplyDelete
    Replies
    1. //ரசவாதத்தின் பின்னணியை அறியப்போகிறோம் என போக்குகாட்டிவிட்டு, பயங்கரத்தின் பின்னணியை வெளிச்சம் போட்டு காட்டியது//

      எக்சாக்ட்லி!!

      Delete
  61. ம்கும்..." கம்பி நீட்டிய குருவி" மிகவும் ரசித்து படித்த கதை. அதே "ரிப் கிர்பி" - யும் மிகையில்லாத கதைப் போக்கும்.. இந்த தடவை பக்கத்திற்கு 6 படங்கள் என்று வசனங்களை எல்லாம் மேலே ஏற்றி. தயாரித்த விதமும் - நான் இதுவரை படிக்காத புதுக்கதையும் என்று பக்கங்களை பிரட்டிப் பிரட்டி ரசிக்கச் செய்துவிட்டது...
    அட்டைப்படம் தான் ஏனோ? i ரிப் கிர் பியின் கண்களை மூடிவிட்டீர்கள்.இல்லையெனில் எனது ஃப்ரொபைல் பிச்சர் ஆக ஆக்கி இருப்பேன்.

    ReplyDelete
  62. ஜனவரி மற்றும் பிப்ரவரி இரண்டு மாத புத்தகங்கள் அனைத்தும் அருமை! என்ன பொறுத்தவரை 2021 இரண்டு மாதங்களும் ஹிட் மாதங்களே!

    ReplyDelete
    Replies
    1. என்னை பொறுத்தவரையும் அதுவே தான்.

      Delete
  63. Thorgal colouring and artwork awesome. Timetraveller remind me recent Tenet movie. Ripkirby story is so nice. I love the innocence of the main character throughout the story. Please give Rip Kirby more chances. Texwiller mini series short and sweet.

    ReplyDelete
  64. ஊதா நிறத்தில் நீங்கள் கூறியுள்ள அனைத்துப் படைப்புகளையும் படிக்க வெகு ஆவல்.ஆவலைத் தூண்டிய பதிவு.

    ReplyDelete
  65. முத்து காமிக்ஸின் ஆரம்ப கால வெற்றிக்கு தரமான, ஒருவித்தியாசமான மொழி பெயர்ப்பே காரணம். இத்தனை ஆண்டுகள் கழிந்தும் கம்பி நீட்டிய குருவியில் அதே மொழிநடை பக்கத்திற்க்குப் பக்கம். படிக்கும் போது70 களுக்கு மனம் பின்னோக்கிச் செல்கிறது. கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. உண்மையோ உண்மை. யார் சார் நீங்க உங்களை பார்க்கவே கரூர் வரணும் போல...

      Delete
  66. K. S. ஜீஈரோட்டில்சந்திப்போம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  67. Hello friends
    Please comment
    I will serve hot and spicey vaniyambadi biryani.
    Start now.

    ReplyDelete
    Replies
    1. அர்ஸ் மேக்னா முடிச்சிட்டீங்களா???

      Delete
    2. உங்களுக்கு என்ன கமெண்ட் வேணும் என்று சொல்லுங்கள் அதையும் போட்டு விடலாம்.

      Delete
    3. குமார் எனக்கு பிரியாணி சம்பந்தப்பட்ட கமெண்ட் வேனும் :-)

      Delete
  68. கம்பி நீட்டிய சிட்டுக்குருவி:

    நிறைய பணத்துடன் ஒரு சிட்டுக்குருவி ஓடிப்போய் விடுகிறது. சிட்டுக்குருவி எங்கே போனது தனது ஆசைபோல் பணத்துடன் சந்தோஷமாக இருக்க முடிந்த்தா? இதனை நமது ரிப் கிர்பி மற்றும் டெஸ்மாண்ட் எப்படி துப்பறிகிறார்கள் என்பதை சொல்லும் விதம் அருமை. ஆங்காங்கே கிடைக்கும் சிறிய துப்புக்களை கொண்டு சிட்டுக்குருவியை கண்டுபிடிக்கும் பழமைதான் என்றாலும் ரசிக்கும் படி இருந்தது. சிட்டுக்குருவியுடன் ஒட்டி கொள்ளும் நபர் யார் அவரின் குறிக்கோள் என்பது அழகான சஸ்பென்ஸ் அது கதைக்கு சுவாரசியம் சேர்த்தது.

    படங்கள் மிகவும் தெளிவு, அதுவும் எழுத்துரு படிக்க வசதியாக ஒரே அளவில் கதை முழுவதும் இருந்தது சிறப்பு.

    நேர்கோட்டு கதை என்றாலும் மேற்பட்ட காரணங்கள் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.

    தொடரட்டும் ரிப் கிர்பி சாகசங்கள் இதுபோல்.

    ReplyDelete
  69. இந்த பதிவின் தலைப்பு ப.பா.ப சுருக்கமாக என உள்ளது. இதன் முழுமையான பெயர் என்ன?

    ReplyDelete
    Replies
    1. பதிவில் ஆசிரியரே சொல்லி உள்ளாரே...

      Delete
    2. இன்னும் ஒரு முறை பதிவை படித்து விட்டு வருகிறேன்.:-)

      Delete
    3. பஞ்ச பாட்டு படலம்...

      Delete
    4. எனக்கு இப்போது புரிந்து விட்டது குமார். நன்றி.

      Delete
  70. பதிவு இரவிலேயே இல்ல நாளைக்கு

    ReplyDelete
  71. ஆசிரியரின் புதிய பதிவு சுடச்சுடத் தயார்...

    ReplyDelete