Monday, February 01, 2021

பிப்ரவரியில் - "பிப்ரவரி"

 நண்பர்களே,

வணக்கம். "பிப்ரவரியில் - "பிப்ரவரி" என்பதில் பெருசாய்க் கம்பு சுத்தும் சாகசங்கள் இருக்க இயலாது தான் ; ஆனால் நமக்கோ கரணங்களில்லா மாதங்களே கிடையாதாச்சே ?! So நேற்றைய விடுமுறைப் பொழுதிலுமே பைண்டிங்கில் குடல் உருவும் படலங்கள் அரங்கேறின - ARS MAGNA ஹார்ட்கவரின் பணிகளுக்கோசரம் ! திக்கெட்டும் திருமணங்கள் எனும் போது பைண்டிங் பணியாளர்களிலும் கணிசமான ஆட்பற்றாக்குறை - இறுதிப் பணிகளை முடித்துத் தந்திட ! ஞாயிறன்றும், இன்று காலையிலும் பணிகள் ஒரு மாதிரியாய் முடிவுற, மூன்று இதழ்களையும் தூக்கிக் கொண்டு நம்மாட்கள் ஓட்டமாய் ஆபீசுக்கு  ஓடிவந்தால்  - "கண்ணில் 2 பிழைகள் பட்டிருக்கின்றன புள்ளீங்களா ; ஸ்டிக்கர் போட்டட்ட்டே தீரணும் !!' என்று டார்ச்சர் தங்கவேலாய் நான் நின்று கொண்டிருந்தேன் ! அப்புறமென்ன - உள்ளுக்குள் திட்டியபடிக்கே ஸ்டிக்கர்கள் போட்டு வாங்கி வந்து ; அவற்றைக் கர்ம சிரத்தையாய் புக்சில் ஒட்டிய கையோடு, டப்பிக்களுக்குள் நுழைத்து - கூரியருக்கு அள்ளியடித்துக் கொண்டு ஓட்டமெடுத்தனர் ! So மாதத்தின் முதல் தேதியின் டெஸ்பாட்ச் படலம் இனிதே நிறைவுற, நாளைய பொழுதை நல்லபடியானதாய்ப் புலரச் செய்ய கூரியர்வாலாக்கள் உதவ வேண்டுமே என்ற நினைப்பு மட்டுமே மண்டைக்குள் இப்போது ! And பணி முடிக்கும் நேரத்துக்குள் ஆன்லைன் லிஸ்டிங்களும் போட்டுவிட்டனர் நம்மாட்கள் ! So சூட்டோடு சூடாய் வாங்கிட என்னும் நண்பர்களுக்கு : 

https://lion-muthucomics.com/latest-releases/669-february-pack-2021.html 

(or )

https://lioncomics.in/product/2021-february-pack/ 

சந்தேகங்களின்றி இம்மாதத்தினில் கவனங்களை ஈர்க்க ஆற்றல் கொண்ட இதழ் MAXI லயனே என்பது உறுதி ! 'தல' கலரில் மினுமினுத்தாலும், அவரது மினி சாகசங்கள் இரண்டுமே - பந்தியில் வைக்கும் பாதுஷாக்கள் போலவே தான் ! பொரியலைப் பரிமாற எடுத்து வரும் முன்னமே தொந்திகளுக்குள் பாதுஷாக்கள் ஐக்கியமாகிடுவது போல - டப்பிக்களை உடைத்து ARS MAGNA வை புரட்டும் நேரத்துக்குள் "மின்னும் சொர்க்கம்" புக்கானது உங்கள் வாசிப்புப் பட்டியலில் அடைக்கலமாகியிருக்கும் ! இதோ - இதழின் அட்டைப்படம் : 


And இம்மாதத்தின் மூன்றாம் இதழும் உங்கள் நேரங்களை ரொம்பவெல்லாம் கோரப் போவதில்லை என்பதில் ஐயங்களில்லை அடியேனுக்கு ! டெஸ்மாண்ட் ஒரு காப்பியைப் போட்டுக் கொணர தேவைப்படக்கூடிய அவகாசத்துக்குள் "கம்பி நீட்டிய குருவி" "சுபம்" போட்டிருப்பதை நீங்கள் கண்டிடுவது உறுதி ! So இதழ்கள் கைக்குக் கிட்டியவுடன் முதல் வாசிப்பைப் போடும் போட்டியை இம்முறையும் நடைமுறைப்படுத்தினால், ஏகப்பட்ட மைசூர்பாகுகள் தேவைப்படக்கூடும் ! இம்முறையோ அந்தப் பரிசு (!!!) நமது ARS MAGNA க்குள் முதலில் மூழ்கிடும் நண்பருக்கே ! I repeat - scanlation அல்லாது - நமது இம்மாத MAXI லயனில் முதலில் வாசித்து கருத்துப் பதிவிடும் நண்பருக்கு மைசூர்பாகு பார்சல்லல்லல் ! So வாரத்தினூடே வாசிப்புகளுக்கும் சித்தே நேரம் ஒதுக்க முயற்சியுங்கள் folks !!

அப்புறம் நேற்றும், இன்றும் என்னை பிசியாக வைத்திட்ட சமாச்சாரங்களைப் பற்றி இவ்வார இறுதியின் பதிவில் ! வெயிட்டான சில பல புது ஆல்பங்கள் கண்ணில்பட்டதன் தொடர்ச்சியாய் சில பல ஜரூரான முஸ்தீபுகளில் இறங்கிட நேர்ந்தது பற்றி சனியிரவு ! So it's bye for now folks - Happy Reading !!



244 comments:

  1. நான் தான் முதலில்

    ReplyDelete
  2. "மின்னும் சொர்க்கம்" - Cover - Wow!

    ReplyDelete
    Replies
    1. ஆமா பொடியனாரே... சம்திங் ஸ்பெசல் ஆன் இட்... லுக்ஸ் வெரி நைஸ்...

      Delete
  3. // வெயிட்டான சில பல புது ஆல்பங்கள் கண்ணில்பட்டதன் தொடர்ச்சியாய் சில பல ஜரூரான முஸ்தீபுகளில் இறங்கிட நேர்ந்தது //

    ஆர்வத்தை கிளப்பும் வார்த்தைகள்...!!!

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டுன்னாவே குற்றாலம் தான் கடைவாயில்....!!!!

      Delete
  4. இப்ப படிக்க ஆரம்பிக்கலாம்..

    ReplyDelete
  5. அவ்ளோ தானா.. மறுபடியும் சனிக்கிழமை வரைக்கும் வெயிட் பண்றது கஷ்டம் தான்.. கொஞ்சம் மனசு வைங்க ஆசானே..

    ReplyDelete
  6. Welcome back Gentleman detective...!

    🥰🥰🥰🥰🥰

    ReplyDelete
  7. TeX... அட்டை செம...சும்மா இதுவரை வந்த எவற்றாலும் & இனிமேலும் வரம்போவதில் கூட எதுவும் இதை அடிச்சிக்க முடியாது... ஆமா...!!

    ReplyDelete
    Replies
    1. இது என் டயலாக் இல்ல..!

      (ஸ்டீலார் மைண்ட் வாய்ஸ்)

      Delete
    2. ஹி...ஹி...மூச்சு கொஞ்சம் அழுத்தி விட்டா கூட கண்டுபிடிச்சிடுறீங்கப்பா!

      நம்ம க்ளா நள்ளிரவுல இதைத்தான் வந்து சொல்லப்போறாரு...!!

      Delete
  8. கெர்பி வருக வருக!!

    ReplyDelete
  9. இம்மாதத்து மூன்று இதழ்களுமே எதிர்பார்ப்பில் உள்ளவைதான்! அதிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ - எண்ட்ரீ ஆகியிருக்கும் கண்ணாடிக்கார மனிதரைத்தான் முதலில் வாசிக்கணும் னு இருக்கு, அடுத்ததாக தலை தாண்டவத்தை ரசித்து விட்டு, நிதானமாக புதையலுக்குள் மூழ்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. என்னோட முதல் சாய்ஸ்ம் ரிப் கிர்பி தான்.

      Delete
    2. இங்கேயும் அதே சாய்ஸ் தான் :-)

      Delete
    3. Wow - so many fans for Rip Kirby :-)

      Delete
  10. Waiting for kirpy, ars and tex. Karur Raja sekaran

    ReplyDelete
  11. புக் வந்தாலே திருவிழா தான். I'm waiting so eagerly for ARS மேக்னா and ரிப் கிர்பி. போன மாதம் தோர்கல் இந்த மாதம் ARS. மாதாமாதம் சூப்பர் ஹிட்ஸ் தான்

    ReplyDelete
    Replies
    1. போன மாசம் மரணமுள், இந்த மாசம் மின்னும் சொர்க்கம்!

      Delete
  12. Hope u r good. Was worried something happened seeing no post

    ReplyDelete
  13. Hope u r good. Was worried something happened seeing no post

    ReplyDelete
  14. வாசிக்க நான் ரெடி...

    கொரியர் மனசு ரெடியா..
    ?!

    ReplyDelete
  15. 3 அட்டைகளும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுது....

    அர்ஸ் நேரில் கலக்கும் போல....

    டெக்ஸ் முகம் வசீகரிக்கிறது...

    ரொம்ப நாள் கழித்து ரிப்பை மீட் பண்ணுவது, கல்லூரி தோழர்களை இப்போ பார்ப்பது போல பீலிங் தருது....!!

    முதல் சாய்ஸ் ரிப்புக்கு தான்....!!!

    ReplyDelete
  16. Color TeX and TeX fonds மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுது..
    ஏதோ இருக்கு அந்த வண்ண சேர்க்கையில்.....😍😍😍😍

    ReplyDelete
  17. தல அட்டைப்படம் அசத்தல்! ரணகளமான வண்ணப்பக்கங்களைத் தரிசித்திட ஆவல்!

    அர்ஸ் மேக்னாவின் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைப் பெற்றிட ஆவலோ ஆவல்!

    மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரிப்கிர்பியையும், டெஸ்மாண்டையும் காணப்போவதில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. ///
      மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரிப்கிர்பியையும், டெஸ்மாண்டையும் காணப்போவதில் மகிழ்ச்சி!//!---

      பழைய நண்பர்களை காணப்போவதான பீலிங் எல்லோருக்கும்....!!! ஹிட் அடிச்சி தனது ஸ்லாட்டை தக்க வைத்து கொள்ளனும் பட்லர்& பாஸ்!

      Delete
  18. ////திக்கெட்டும் திருமணங்கள் எனும் போது பைண்டிங் பணியாளர்களிலும் கணிசமான ஆட்பற்றாக்குறை////

    திருமண சீசன் வந்துட்டா இப்போல்லாம் டீ-மாஸ்ட்டர்களுக்குக் கூட கடும் கிராக்கி வந்துடுது! டீ-பாய்லரை உருட்டிவிட்டுட்டு தொந்திகளை பாய்லர் மாதிரி ஆக்கும் பணிகள்ல ஜோரா இறங்கிடறாங்க!

    நாங்கல்லாம் சிங்கிள் டீக்கு கிடந்து அல்லாட வேண்டியிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. அல்லாரும் பட்ஜெட் கேக்க போயிருப்பாங்கெ...

      Delete
  19. Waiting for ரிப் கிர்பி 😍

    ReplyDelete
  20. அட்டைப்படத்தைப் பார்க்கும் ரிப் கிர்பி மேல்தான் ஆர்வம் பீறிடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. கிர்பி ஸ்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறோம்... சூப்பர்.. அந்த அப்பாவி டெஸ்மாண்ட்டும் ஒரு சாஃப்ட் கார்னர் கிரியேட் பண்ணிடறாரு.

      Delete
  21. குட்டி டெக்ஸ் (அதாங்க மினி டெக்ஸ்) ஆக்கங்களெல்லாம் சம்திங் டிபரெண்டாகவே உள்ளன.மின்னும் சொர்க்கமும் அந்தவகையில் சேர்த்தியே இருக்கும் எனப் புலப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமா..ஆமா... "குட்டி" டெக்ஸ்னாவே ஒரு எதிர்பார்ப்பு இப்பலாம் நிலவிடுது.

      விண்டர் ஸ்பெசல்- ஆக்டேவியா, பாட்ரீஷியா மெல்லிய ரொமான்ஸ் கதைக்கு பிறகு இன்னும் இது கூடிட்டது.

      Delete
  22. அர்ஸ் மேக்னா..
    எந்தவித எதிர்பார்ப்புமின்றி புரட்டவே ஆசை.அது பற்றிய செய்திகளை ஓசையின்றி கடக்கவே எத்தனிக்கிறேன்.வெறுமையாக சிந்தனையை வைத்து, உள்ளே நுழைந்தால் பிரமாண்டமான ஆச்சரியங்கள் நம்மை வரவேற்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  23. Replies
    1. யெஸ்ஸூ.... தீபாவளிமலரை விட அந்த இணைப்பு கலக்கியது போல...!!!

      Delete
  24. இன்னமும் வட வரல

    ReplyDelete
    Replies
    1. ஆருக்குமே புக்கு வல்லியா

      Delete
    2. நாளைக்கு தான் அண்ணா புக் வரும்.

      Delete
    3. காலங்காத்தால கூரியரு ஆபீஸ்ல தேவுடு தான்...

      Delete
    4. போறவழியில நூறு கிராமு மைசூரூபாக் நாமளே வாங்கீட்டு எடிட்டரு அனுப்பீட்டார்ன்னு பெருமையடிச்சிட்டா போச்சி

      Delete
  25. ரிப்பு...

    கெர்பியா...

    ஙே....


    ஓடிர்ரா கைப்புள்ள

    ReplyDelete
  26. அர்ஸ் மேக்னா.ன்னா அந்த ஆப்ரிக்கா கதயா...

    ReplyDelete
    Replies
    1. என்னமோ போங்க குமாரு...


      எடிட்டரு தீயா வேல் செய்றாரூ

      Delete
    2. ஆளாளுக்கு வேல தூக்கீட்டு திரியிறாங்கெள்ல...

      Delete
    3. ஆரையுங் காணோம்...

      போய்ட்டு தூங்குவோம்

      Delete
    4. இயேசுவைக் குத்திய ஈட்டி முனைக்கு தனி பவர்னு கதை போகும்ங்.. ஹிட்லர் து கிடைச்சதாலயே உலகை ஜெயிச்சார்னு தீவிரமா நம்புறாங்க.. அந்த ஈட்டியைப் பத்திய கதைங்..

      Delete
    5. ஊஹூம் அதுவல்ல அர்ஸ் மேக்னாவின் கதை ! இயேசுவைக் குத்திய முனையின் தேடல் வேய்ன் ஷெல்டனின் சாகசம் !

      Delete
    6. விதி எழுதிய திரைக்கதையா சார் ???!!!

      Delete
    7. வரலாறும் ஒரு வல்லூறும் கதை

      Delete
  27. தல அட்டைப்படம் பிரமாதம், இனி வரும் டெக்ஸ் கதைகளுக்கு ஒரிஜினல் அட்டைப்படங்களையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    அர்ஸ் மேக்னா புத்தகத்ததைக் காண ஆவல். எக்கசக்க எதிர்பார்ப்பு.

    ஆனால் முதல் வாசிப்பு கிர்பி தான். சித்திர தரத்தை பெரிய சைஸில் காண ஆவல். ஒரே நெருடல் இன்றைய ரசனைக்கு கிரிபியால் ஈடுகொடுக்க முடியுமா என்பது தான்.

    ReplyDelete
  28. அனைவருக்கும் வணக்கம்����

    ReplyDelete
  29. சார் அட்டை அருமை....கம்பி நீட்டிய குருவிய தனியா காணமே.....நாளை தட்டிருவம்

    ReplyDelete
  30. Replies
    1. பெருசா எதிர்பார்ப்போம்.. புத்தம்புது தேர்வுகள் நம்மை அசத்த ஆவல்...

      Delete
  31. வெயிட்டிங்....இன்றைய பார்சலுக்காக....

    ReplyDelete
  32. ரிப் கிர்பி ரொம்பவே ஆர்வத்தை தூண்டுகிறார். Expectation is the only cause of disappointment. ஆகையால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதை படிக்க முயலுங்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. உண்மை...ஆமோதிக்கிறேன்..

      Delete
  33. Tex 60விலையில்.... எனக்கு நிழவொளியில் ஒரு நரபலி ஐ.. நியாபகப்படுத்துகிறது.... அது Tex ever green story sir... அது போன்றே மின்னும் சொர்க்கம் இருக்குமா என்பதே என் கேள்வி?

    ReplyDelete
    Replies
    1. Tex 60விலையில்.... எனக்கு நிழவொளியில் ஒரு நரபலி ஐ.. நியாபகப்படுத்துகிறது..

      ******


      ட்ரூ ...பக்கங்கள் அவ்வாறே நினைக்க வைக்கிறது ..மேலும் இரண்டு கதைகளாக இருப்பதால் இது ஒரு ஸ்பெஷல் இதழ் போல் அவ்வளவு ஆனந்த்த்தை அளிக்கிறது...இதுவே தொடருமாயின் அருமை..

      Delete
    2. எடிட்டர் சார் தான் இனி முடிவெடுக்க வேண்டும் நண்பரே..
      மாதம் முழுதும் புழுதிக்காடான அரிசோனாவிலேயே திரியாமல்.. கனடா.. கப்பல்..ஆவி..காடு வனம் என ரேஞ்சர்களுக்கு பலவித பாதைகளை அமைக்க வேண்டும்

      Delete
  34. பொட்டி வந்துடுச்சி சார்...
    முதல் புரட்டலில் அர்ஸ் மேக்னா அதிரி புதிரியா இருக்கும் போல,புத்தக உருவாக்கம் அசத்துகிறது,முன்னும் பின்னுமாய் சிறு குறிப்புகள் ஆர்வத்தை கிளப்புகின்றன...

    மின்னும் சொர்க்கம் கைக்கு அடக்கமாய் ஜொலிக்கிறது...
    ரிப்கெர்பி அட்டையில் கவர்கிறார்,கதையிலும் கவர்வார் என்று நம்புகிறேன்,எழுத்துருக்களின் அளவு நிறைய நண்பர்களுக்கு செளகர்யமாய் இருக்கும் என்று தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம்.படியுங்கள்.ரசியுங்கள்.விமர்சியுங்கள்.

      Delete
    2. ழுத்துருக்களின் அளவு நிறைய நண்பர்களுக்கு செளகர்யமாய் இருக்கும் என்று தோன்றுகிறது

      ப்ளஸ்ஸோ ப்ளஸ்...இதே போல் இருந்தாலே போதுமானது என்னை போன்ற சிறுவர்கள் எழுத்து கூட்டி படிக்க...:-)

      Delete
  35. முதலில் ரிப் கிர்பியைத் தரிசிக்கவே ஆசை.

    ReplyDelete
  36. புத்தகங்கள் கிடைக்க பெற்றேன்

    ReplyDelete
  37. எனக்கும் புத்தகங்கள் வந்து விட்டது.

    ReplyDelete
  38. யுகம் தாண்டிய யுத்தம் அட்டைப்படத்தில் ஆரம்பித்த அதகளம் கதையின் இறுதிபக்கம் வரை மாறாமல் பயணித்தது. இப்படி எல்லாம் கதைகள் எழுதமுடியா என யோசிக்க வைத்தது. வசனங்கள் வழக்கம் போல் வேற லெவல். சித்திரங்கள் வண்ணத்தில் செம செம. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத கதை.

    Ars magna என்று தமிழில் படிக்க கிடைக்கும் என்ற எனது கனவு இன்று மெய்பட்டு விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இதேபோல் எனது கென்யா கனவும் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

      Delete
    2. எனது கென்யா கனவும்

      Delete
    3. அப்டியே அந்த ஆப்ரிகாவும்

      Delete
    4. அப்பாலிகா நமீபியாவும்.


      நமீபியா தான்

      Delete
  39. ரிப் கிர்பி அட்டைப்படம் மிகவும் வித்தியாசமான அமைப்பு. அதிலும் அந்த ரிப் கிர்பி என எழுதிய விதம் மிகவும் நன்றாக உள்ளது. கதையில் உள்ள படங்களை கோர்த்து கதையின் நாயகனின் பின்பக்கத்தில் வடிவமைத்த விதம் அருமை.

    ReplyDelete
  40. அப்புறம் இந்த மாத சஸ்பென்ஸ் என்ன என்றால் அடுத்த மாதம் வரும் புத்தகங்கள் பற்றிய விபரங்கள் இல்லை. டாக்டர் நோ வருகிறார் என்பது அட்டைப்படம் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  41. இன்றே இதழ்கள் கைகள் கிடைத்ததில் ஹேப்பியோ ஹேப்பி .

    யுகம் தாண்டியதொரு யுத்தம் ஹார்ட் பைண்டிங் இதழ் ஒன்றே போதும் இந்த மாத காமிக்ஸ் பசிக்கு ...மாதம் ஒரு இதழாவது இந்த அளவில் ,இந்த பக்கங்களில் ,இந்த தரத்தில் வந்தாலே காமிக்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான்...அதுவும் உள்ளே சித்திரங்கள் செம...செம..செம...ஒவ்வொரு பக்கங்களாக புரட்டி புரட்டி ரசித்து கொண்டே இருந்தேன்...

    கம்பி நீட்டிய குருவி உண்மையிலேயே இந்த மாத இதழ்களில் இந்த அட்டைப்படம் தான் எனக்கு டாப்பாக தோன்றுகிறது சார்..உள்ளேயும் தெளிவான அழகான சித்திரங்களும் ,தெளிவான பளீச் வெள்ளை தாளின் அச்சுத்தரமும் ,நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் அந்த சாந்தமான நாயகரும் மனதை கவர்கிறார்கள்.இதழுக்கு இதுவரை வந்த இந்த வரிசை இதழ்களில் இதற்கு தான் எனது முதலிடமும் ...கதையும் அவ்வாறே கவர்ந்து விட்டால் ரிப்கெர்பியை அடிக்கடி கொண்டு வரலாம்...கதையை படிக்க ஆவலுடன் வெயிட்டிங்...

    மின்னும் சொர்க்கம் உண்மையிலேயே இந்த இலவச இதழ் இந்த மாத டெக்ஸ் வில்லர் இதழுக்கான முழு திருப்தியை கொடுத்துள்ளது.காரணம் ஒன்று இதற்கான அட்டைப்படம்...இரண்டு அதிக பக்கங்கள் .இந்த இரண்டின் காரணமாக ஒரு முழுமையான டெக்ஸ் இதழை கையில் ஏந்திய திருப்தி ..இனிவரும் சமயங்களில் டெக்ஸ் இல்லா மாதங்களில் இதே போல் வெளியிட்டாலே எங்களுக்கு முழு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கண்டிப்பாக நிறைவேறும் சார்..முடிந்தால் நிறைவேற்ற முயற்சியுங்கள் சார்..

    மொத்தத்தில் பிப்ரவரியில் மூன்று இதழ்களும் பார்வையில் முழு மகிழ்ச்சியை அளித்துள்ளது...கதையிலும் ,கதை வரிசையிலும் எவை எப்படி முந்துகிறார்கள் என்பதை அறிய இதோ புரட்டுகிறேன்...

    ReplyDelete
  42. அர்ஸ் மேக்னா:
    1.புதிர்கள்:
    முதல் பாகம் நிறைவாய் முடிந்தது,
    முதல் பாகத்தின் முடிவு அடுத்த பாக வாசிப்பிற்கு ஆர்வமூட்டும் விதையைப் போடுகிறது...
    காட்ஃப்ரே ஆஃப் பூயோனை மையமாக வைத்து புதிர்களின் பின்னே பயணிக்கும் களமானது,நல்லதொரு வாசிப்பிற்குத் தீனியாய் அமைந்து விட்டது..
    டான்பிரவுனின் கதைக் களங்கள் கணிதப் புதிர்களையும்,சாதூர்யமான முடிச்சுகளைகளையும் மையமாக வைத்து பயணிக்கும்,அந்நாவலை மையமாக வைத்து வெளியான இன்பர்நோ,டாவின்ஸி கோட்,ஏஞ்சல்ஸ் அன்ட் டீமோன்ஸ் திரைப்படங்களும் அப்படியே,
    வாசிப்பாளனை யோசிக்க வைக்கும் ஒரு படைப்பு எப்போதும் கொண்டாடப்பட வேண்டியதே...

    அசத்தும் வசனங்கள்,

    "வன்முறை பலவீனர்களின் ஆயுதம் கர்னல்"
    "நான் நீயாக இருந்தால் இத்தருணத்தில் மரியாதையின்றி நடந்திட மாட்டேன்"
    "நல்லவேளை நீர் நானாக இல்லை"
    "நடுநிலை என்பது கோழைகளின் கேடயம்"

    -இனி கண்ணாமூச்சியின் தடத்தில் பயணிக்கனும்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணனுக்கு ஒரு மைசூர் பா பார்சல்

      Delete
    2. இது முதல் பாகத்திற்கான விமர்சனம் மட்டும்தான் குமார்...

      Delete
    3. எழுதும் போது பெருசாய் ஏதும் தோன்றாது தான் சார் ; பக்கங்களை நகற்றுவதே பிரதானமாய் படும் ! உங்கள் விமர்சனங்களில் குறிப்பிட்ட வரிகளை highlight செய்திருப்பதை வாசிக்கும் போது தான் - 'அட...இது நல்லா வந்திருக்கோ ?" என்று நினைக்கத் தோன்றும் ! பொறுமையாய் சுட்டிக் காட்டவும், டைப்படிக்கவும் மெனெக்கெடுவதற்கு நன்றிகள் சார் !

      And of course பாராட்டுக்களுக்குமே !

      Delete
    4. உங்கள் மெனக்கெடலை விட இதெல்லாம் பெரிதா என்ன சார்,வாசிப்பினிடையே மண்டைக்குள் ஓடும் தகவல்களை இறக்கி வைப்பதும் ஒரு திருப்திதானே சார்...

      Delete
    5. நடுநிலை என்பது கோழைகளின் கேடயம்"

      செம்ம சூப்பர்

      Delete
    6. முதல்பாக விமர்சனம் அட்டகாசம்க அறிவரசுரவி!

      இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் - விமர்சனப் புயலிடமிருந்து!

      Delete
  43. சார் புத்தகங்கள் பத்திரமாய் வந்து சேர்ந்தன...நன்றிகள்....வேலை காரணமாய் இப்பதா பாக்க முடிஞ்சது.....ஆர்ச்சி ...தோர்கள் சூப்பர்....ஆர்ச்சிய நேரா பாத்தாதா நல்லாருக்கும் போல....லக்கி சென்ற மாதம்னா...இம்மாதம் ஆர்ச்சி நோய்கள்...அருமை எதிர்பாரா பரிசு...அடுத்த மாதம் கென்யாவாருக்கனும்

    ReplyDelete
    Replies
    1. மேக்சி ஜொலிக்க...பனியிலும்...நீலபின்னணியிலும் முதலிடம் எங்களுக்குதானன்னு துப்பாக்கி தூக்கி....நம்மள மயக்கி...வாயு வீசி...துப்பாக்கி காட்டி மிரட்டுது முன்னட்டை....அசத்தல் சார்...கைல பிடிக்கவே அசத்துது...கிச்....ரிப்பின் அட்டயும் அருமை

      Delete
    2. குட்டி டெக்சோ...பக்கங்கள் விரட்ட விரட்ட...புரட்டிப் போடுது வண்ணங்களால்....சும்மா பின்ணியிழுக்குது கண்கள

      Delete
  44. அர்ஸ் மேக்னா: யுகம் தாண்டியொரு யுத்தம்.

    சரியான தலைப்பு:

    நூற்றாண்டுகளாக செயல்பட்டு வரும் ஓர் அமைப்பு பேரழிவினை விளைவிக்கக் கூடியதோர் அறிவியலை தம் எதிரிகளிடமிருந்து எவ்வாறு பாதுகாத்து அதை இந்த சந்ததிக்கு கடத்துகிறார்கள் என்பது கதையின் மறுதலை.

    வரலாற்று ஆசிரியரான பிலிப், பெல்ஜிய புரட்சி படையினருடன் தன் விருப்பமின்றியே பயணிக்க நேர்ந்தது முதல் நகரும் ஒவ்வொரு பக்கமும் அதிரடி, டான் பிரவுன் எவ்வாறு தனது நாயகன் ராபர்ட் லட்லம் வாயிலாக குறியீடுகளை மொழிபெயர்த்து புதிர்களை விடுவிப்பாரோ அதே பாணி கதையோட்டம்.

    பிலிப்பிற்கு நிகராக ஜெர்மானிய கர்னல் கர்டனும் புதிர்களை ஏதோ ஓர் விதத்தில் நெருங்குவது நல்ல சேசிங் அனுபவத்தைத் தருகிறது.

    மொழிபெயர்ப்பில் அசாத்திய உழைப்பினைக் கோரியிருக்கும் கதை என்ற உணர்வு வாசித்து முடிக்கும் நொடியில் மேலோங்கி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

    தமிழில் புதிர்களை கட்டமைத்திருக்கும் விதமும் அற்புதம்...

    *விண்மீன்களில் இருந்து மன்னர் வரையிலும் ஞானத்தின் ஒளி போர்த்திடட்டும்!

    *மௌன விரதத்தின் பாதையில் செல் பாதைகள் இன்றி போனாலும் விடை கிட்டும்!

    *சபிக்கப்பட்ட கட்டடக் கலைஞன் சரியாக மூன்று மணிக்கு ஒரு மாபெரும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளான்!

    *ஜெருசலேம் மன்னரின் இல்லத்துக்கு நடந்து சென்றால் எங்கள் உழைப்பின் பயனை கண்டுபிடித்துவிடலாம்!


    கதையில் தெரிக்கும் வசனங்களுக்கும் பஞ்சமில்லை.

    "வன்முறை பலவீனர்களின் ஆயுதமே"

    "நடுநிலை என்பது கோழைகளின் கேடயம் "

    "எதைத் தேடுகிறோம் என்பது சற்றே தெளிவாகி விட்டது என்பதால் எங்கே தேடுவது என்ற கேள்விக்கு பதிலும் கிட்டி விட்டதாக ஆகாதல்லவா "

    "நகர் எங்கிலும் தென்படும் சிலைகள் வெறும் அலங்காரங்கள் மட்டுமல்ல! யுகங்களாய் நாங்கள் சேகரித்த ஞானத்தின் வெளிப்பாடுகள் அவை."

    "எனக்குள் ஊற்றெடுக்கும் ரௌத்தத்திற்கு இணையானதொரு வெடிகுண்டை உருவாக்கி தொலை!"

    இவை போன்ற வசனங்கள் கதைநெடுக காணப்படுவது மொழிபெயர்ப்பின் பலம்.

    அர்ஸ் மேக்னா‐ 1000/10.

    ReplyDelete
    Replies
    1. மைசூர்பாகு பார்சல்லல் !!!!

      Delete
    2. *கதையை வாசிக்கத் தொடங்கும் முன்னே அது சார்ந்த பின்னணிகளை கொடுத்திருப்பது கதையை தெளிவாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது

      *நிஜ ஹாட்லைன் என்ற தலைப்பில் கதாசிரியரின் அனுபவங்களும் இடம்பெற்றிருப்பது ஒரு சர்ப்ரைஸ்...
      கண்ணான கண்ணே ஓவியர் அந்த கதையை பற்றி பகிர்ந்தது போல இங்கே கதாசிரியர் அவருடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதுவும் நமது லயன் வாசகர்களுக்காகவே அவர் மனம் திறந்து இருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

      Delete
    3. மைசூர்பாகு பார்சல்லல் !!!!

      ஆஹா.... எனக்கே எனக்கா?

      நன்றிகள் ஆசிரியரே...

      Delete
    4. And yes, மொழிபெயர்ப்பில் இங்கு எனக்குக் கிட்டிய அனுபவங்கள் ஒரு தனி ரகம் தான் சார் ! வரலாறு ; மதக்கோட்பாடுகள் ; ரசவாதம் ; யுத்தம் என்றதொரு செமத்தியான கலவையினூடே கதாசிரியரின் கற்பனை பயணிக்க, அதனைச் சரியாய்ப் புரிந்து கொண்டுள்ளோமா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்வதே பிரதான சவாலாக இருந்தது !

      ஒரு வேகத்தில் மொழிபெயர்ப்பை சடுதியில் போட்டுத் தாக்கி விட்டிருந்தேன் தான் ; ஆனால் தொடர்ந்திட்ட எடிட்டிங்கில் மூச்சு வாங்கி விட்டது ! இந்த 144 பக்கங்களையும் குறைந்த பட்சமாய் ஐந்து தடவைகளாவது நெட்டுரு போட்டிருப்பேன் !

      And கூகுள் தேடல்கள் !!!!! Ufffff ... கதாசிரியரின் கற்பனை ரயில்வண்டியின் நெளிவுகளையும், வளைவுகளையும் சமாளிக்க கூகுளை ஒரு நூறுவாட்டி தட்ட அவசியங்கள் தலைகாட்டின !

      In many many ways - மறக்கவியலா பணியே !

      Delete
    5. உங்களின் அசாத்திய உழைப்பு அதற்கான மதிப்பினை நிச்சயம் ஈட்டித் தருவதாக அமையும் சார். மொழியாடலை கதையோட்டத்திற்கு ஏற்ப அமைத்துள்ளீர்கள்...
      நிகழ்காலம் Dialogue style, கடந்தகாலம் Narrative style , தனித்தனி பாணி superb.

      புதிர்களடங்கிய கதையை தெளிவாக வாசகர்களுக்கு கடத்த நிரம்பவும் மெனக்கெட்டு இருக்கிறீர்கள்...

      மறு... மறு... மறு... மறுவாசிப்பைக் கோரக்கூடிய இதழ்...
      வெல் டன் அர்ஸ் மேக்னா...

      Delete
    6. மைசூர்பா வென்றதற்கும் சிறந்த விமர்சனங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே! 💐💐💐💐💐

      உங்களின் தோர்கல் விமர்சனம் & இது எல்லாம் சமீபத்தில் வந்தவைகளில் டாப் கிளாஸ்!🌹

      தொடருங்கள்... தொடர்கிறோம்!

      Delete
    7. மைசூர்பா வென்றதற்கும் சிறந்த விமர்சனங்களுக்கும் வாழ்த்துகள் சரவணன்.

      Delete
    8. // எனக்குள் ஊற்றெடுக்கும் ரௌத்தத்திற்கு இணையானதொரு வெடிகுண்டை உருவாக்கி தொலை //

      மிகவும் ரசித்தேன்.

      Delete
    9. வாவ்!! அட்டகாசமான, நேர்த்தியான விமர்சனம் @Saravanakumar! அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகளில் உணரமுடிகிறது!

      மைசூர்பா டப்பிக்கும் என் வாழ்த்துகள்!!

      Delete
    10. அருமை சரவணகுமார் சார். புத்தகத்தை படித்த பின் தான் உங்கள் விமர்சனத்தை படிக்கவேண்டும் என்று தாண்டி சென்று இருந்தேன். அனைத்து விசயங்களையும் நீங்கள் தொட்டு சென்று இருக்கிறீர்கள்.

      எடிட்டர் சார் உங்கள் உழைப்பு அசாத்தியம் இந்த கதைக்கு.

      Delete
  45. "எனக்குள் ஊற்றெடுக்கும் ரௌத்தத்திற்கு இணையானதொரு வெடிகுண்டை உருவாக்கி தொலை! "

    இந்த வசனத்தின் வீரியம் என் தலையின் ஒருபுறத்தே பாய்ந்து மறுபக்கம் வெளிப்பட்ட உணர்வு. ஸ்டன்னிங்!

    ReplyDelete
    Replies
    1. அந்த பிரேமில் ஹிட்லரின் முகத்தைப் பார்த்த நொடியில் துளிர்விட்ட வரி சார் ; நியாயப்படிப் பார்த்தால் ஓவியருக்கே அந்த credit !

      Delete
    2. ப்பா!! என்னவொரு வீரியமான வசனம்!!!

      Delete
  46. ரிப்கெர்பியின் சாகஸத்தையே முதலில் படிக்க தூண்டிய ஆவலை ஏற்படுத்தியது இதழின் அழகான வடிவமைப்பு..சாதாரண எளிதான கதை அமைப்பு தான் எனினும் மற்ற பழைமை நாயகர்களை போல போரடிக்காமல் விறுவிறுப்பாகவே தொடர்ந்து படிக்க வைத்து உள்ளார் இந்த ஜென்டில் மேன் டிடெக்டிவ்...எனக்கு ஓகே...ரிப்கெர்பியை தொடர்ந்து தாராளமாக கொண்டு வரலாம்...


    ஒரே நேர்க்கோட்டு கதையில் செம தெளிவான அழகான சித்திரங்களும் இதழின் வெற்றிக்கு மெருகூட்டுகிறது.வங்கியில் இருந்து பணம் கையாடல் செய்த ஒரு நாகரீக பெண்மனியை ரிப் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதையும் இறுதியில் அந்த பெண்மணியின் நிலை என்னவாயிற்று என்பதையும் ஒரே மூச்சில் படிக்க வைத்துள்ள இந்த ரிப்கெர்பியின் சாகஸமான கம்பி நீட்டிய குருவி ஓர் வெற்றி படைப்பே...

    ReplyDelete
  47. தங்கத்தின் பாதையில்,மின்னும் சொர்க்கம்:
    இரண்டுமே மினி வெடிகுண்டுகள்தான்,இரு களத்தின் மைய இழையுமே மஞ்சள் உலோகமும் அதன் மீதான பற்றும்தான்...
    குறைந்த பக்கத்தில் நிறைவாய் கதையைச் சொல்வது சவலான விஷயம்,இரு காதாசிரியர்களும் அதை சரிவரச் செய்துள்ளனர்...
    நல்ல டைம்பாஸ்,இலகுவான வாசிப்பிலும் கூட நம்மை கட்டிப்போடுவதே டெக்ஸ் களங்களின் மேஜிக்...
    ஓவியங்களும்,கலரிங்கும் சிறப்பு...

    தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் அமையும் கதைகள் மினிமம் கியாரண்டி வெற்றிக்கு உத்தரவாதம் என்று சொல்வார்கள்,அதுபோல
    செவ்விந்தியப் பின்னணியில் அமைந்திருக்கும் மின்னும் சொர்க்கம் சற்றே நம்பகத்தன்மைக்கு அப்பால் இருப்பினும் சோடை போகவில்லை...

    எமது மதிப்பெண்கள்-09/10.

    ReplyDelete
  48. ரிப் கிர்பி அட்டை சூப்பர் சார்

    ReplyDelete
  49. 1.ரிப் கிர்பி "கம்பி நீட்டிய குருவி"..

    அட்டை படம் , தெளிவான சித்திரங்கள் , சுலப நேர் கோட்டு கதை.. ஒரு முறை படிக்கலாம் nostalgia factorகாக மட்டும் .. 7/10 ..

    2.COLOR TEX :

    TEX கலரில் பார்ப்பது எப்போதுமே சூப்பர் தான் .. ரெண்டு கதையுமே நன்றாக இருந்தது .. "மின்னும் சொர்க்கம்" போன்று செவ்விந்திய , அம்மானுஷிய GENRE கதைகள் இன்னும் வேண்டும்.. அப்பொழுது தான் TEX கதைகளில் ஒரு VARIETY இருக்கும் ..இதற்காகவே MEFISTO அடுத்த வருடம் வேண்டும் SIR .. 9/10 ..

    ReplyDelete
    Replies
    1. இதற்காகவே MEFISTO அடுத்த வருடம் வேண்டும் SIR .. ..

      உண்மை தான் ஶ்ரீ.....மெபிஷ்டோ கண்டிப்பாக வேண்டும்...வர...வர இப்பொழுது எல்லாம் எனக்குமே டெக்ஸ் கதைகள் ஒரே மாதிரியாக இருப்பது போல , படிக்கவே சலுப்பாக இருக்கிறது ......600+ கதைகள் இருக்கிற தொடரில் , ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து வெளியிடுவது ஏன் என்றே புரியவில்லை ...

      Delete
    2. மெமிஸ்டோ வேண்டும்

      Delete
  50. புதிர் - முதல் இரண்டு பக்கங்களில் பேராசிரியர் மற்றும் கர்னலுக்கு இடையே நடக்கும் உரையாடல் செம, அதுவும் பேராசிரியரின் பதில் சூப்பர். முதல் பக்கத்தில் இருந்தே புதையல் பற்றிய ஆர்வத்தை புதிர் கிளப்பி விட்டது.

    நண்பர்கள் அனைவரும் படித்த பிறகு ஒருநாள் விரிவான விமர்சனம் எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பேராசிரியர் வீட்டில் நடக்கும் அந்த காட்சிகளில் ஒவ்வொரு பிரேமும் அவர் வீட்டின் அமைப்பை பற்றி அழகாக காட்டியுள்ளனர்; சுருக்கமாக சொன்னால் கர்னலுடன் நாமும் பேராசிரியர் வீட்டுக்குள் நுழைந்து வெளியே வந்தது போல் இருந்தது. கர்னல் மற்றும் சார்ஜன்ட் பேராசிரியர் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக ரோட்டை பார்க்கும் படம் இது ஓவியமா அல்லது நாமே நேரடியாக பார்கிறோமா என்ற உணர்வை தந்தது.

      டாப் கிளாஸ் சித்திரங்கள்.

      Delete
  51. ARS அட்டைப்படம்:

    துப்பாக்கியுடன் இருவர் முகத்தில் கவசம் அதனை தான்டி அவர்கள் கண்களில் தென்படும் மிரட்சி லைட் கலர் உடை பின்பக்கத்தில் கொடிகள், போக்கஸ் விளக்கின் வெளிச்சம் மற்றும் பனிப்பொழிவு என்ற சித்திரத்தை மேலும் சிறப்பானதாகும் வண்ணக்கலவை கதையின் தலைப்பை சிகப்பு நிறத்தில் எழுதியது என அனைத்தும் மனதை அள்ளுகிறது.

    அநேகமாக இந்த கதை ஈரோடு புத்தகத் திருவிழா வருவதற்கு முன்னால் முழுவதும் விற்று காலியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

    ARS MAGNA அனைத்து இடங்களிலும் சிக்ஸர்.

    ReplyDelete
    Replies
    1. 300 ரூபாயில் ஹார்ட் பௌன்டில் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. நன்றி.

      Delete
    2. முன் அட்டையில் பிரதானமாக ஊதா வண்ணம் என்றால் பின் அட்டையில் சிகப்பு மற்றும் அதனை சேர்ந்த வண்ணங்களை கொண்டு வடிவமைத்து சூப்பர்.

      Delete
    3. // அநேகமாக இந்த கதை ஈரோடு புத்தகத் திருவிழா வருவதற்கு முன்னால் முழுவதும் விற்று காலியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். //
      உண்மைதான் பரணி,புத்தக வடிவமைப்பு உலகத்தரத்தில் உள்ளது,என்ன உட்பக்கங்களை இன்னும் சற்று பொறுமையாக கவனித்து பைண்டிங் செய்திருக்கலாமோ என்று தோன்றியது...
      இது சில நண்பர்களின் கருத்தும் கூட...

      Delete
    4. /// அநேகமாக இந்த கதை ஈரோடு புத்தகத் திருவிழா வருவதற்கு முன்னால் முழுவதும் விற்று காலியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். ///

      டெபனட்லி.. டெபனட்லி..!!

      Delete
  52. கொரியர் நேற்று வந்தது. அர்ஸ் மேக்னா ஹார்டு பவுண்ட் என் மட்டில் Soft பவுண்ட். நான்கு அட்டைகளும் நசுங்கி வளைந்து unsatisfactory condition. கொரியர் பாக்ஸும் கெட்டித் தன்மை இல்லை.

    ReplyDelete
  53. சூட்டோடு சூட்டாக ARS MAGNAவை தூத்துக்குடியில் உள்ள எனது அண்ணனுக்கும் ஒரு பார்சல் அனுப்ப சொல்லி விட்டேன்.

    ReplyDelete
  54. Just Now, லயன் ஆபீஸில் இருந்து போன்.அர்ஸ் மேக்னா புத்தகம் டேமேஜ் ஆக வந்தது பற்றி ஆசிரியர் விசாரித்து வேறு புத்தகம் அனுப்பலாமா என்று கேட்கச் சொன்னதாக சொன்னார்கள். சிரமப்பட வேண்டாம் என்று சொல்லி ஆசிரியர்க்கு என் நன்றியை தெரிவிக்கச் சொன்னேன்.

    மிக்க நன்றி சார். சிரமம் வேண்டாம். சமீப மாதங்களாக தீபாவளிக்கு முன்பு இருந்தே வருகின்ற அட்டைப் பெட்டி சற்று தரமில்லாமல் இருக்கிறது.இதை முன்பே தெரிவிக்க நினைத்தேன். சில குடும்ப சூழல்களால் தளத்தின் பக்கம் வர இயலாததால் தெரிவிக்க முடியவில்லை.
    மீண்டும், மீண்டும் நன்றிகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் தன்னுடைய பெருந்தன்மையையும், நீங்கள் உங்களுடைய பெருந்தன்மையையும் ஒருசேரக் காட்டியிருக்கிறீர்கள் 10 சார்!

      Delete
  55. டெக்ஸ் மின்னும் சொர்க்கம்...

    இதழை கைகளில் ஏந்திய பொழுதே மேலே நண்பர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தவாறு நிலவொளியில் ஒரு நரபலி இதழை கைகளில் ஏந்தியது போலவே ஓர் சந்தோச உணர்வு...முதல் கதையில் டெக்ஸ் ன் முகம் மட்டும் சற்று வேறுபட்டு இருப்பது போல் தோன்றினாலும் பொதுவான சித்திரங்கள் அப்படியே ஒன்ற வைக்கிறது..கதை சிறிதாக இருப்பது போல் தோன்றினாலும் படித்து முடித்தவுடன் ஒரு முழுதிருப்தி..அமைதியான இடத்தில் அமைதியாக படித்த காரணமாகவோ என்னவோ டெக்ஸ் வில்லனை பிடிக்க குதிரையில் இருந்து இரயிலுக்கு தாவும் அந்த சமயம் உண்மையிலேயே மெய்சிலிர்த்தது போல ஓர் உணர்வு.

    இரண்டாவது கதை அதற்கு முற்றிலும் சோடை போக வில்லை..ஆவி அமான்ஷ்யம் என்ற வகையில் சென்றாலுமே கூட..இதுவுமே சிறப்பாக இருக்கும் பொழுது மெபிஸ்டோ கதை எல்லாம் ஏமாற்றாது என்றே தோன்றுகிறது சார்..எனவே மெபிஸ்டோவை தயங்காமல் வெளியிடலாம் என 1001 வது முறையாக நண்பர் யுவா அவர்கள் கேட்டுக்கொண்டார் சார்..

    இந்த முறை சந்தா தாரர்களின் இலவச வண்ண டெக்ஸ் என்னை பொறுத்தவரை சிறு இதழ் அல்ல..சிறந்த இதழ்..

    நண்பர்களே இது போன்ற இதழ்களை தாமதமாக கடைகளில் விலை கொடுத்து வாங்கலாம் தான்..ஆனால் இது போன்ற சிறப்பான இதழ்களை இலவசமாகவே சூட்டோடு சூடாக வாங்கி படிக்க சந்தா கட்டுங்க...சந்தோசமா இருங்க...அப்புறமா சந்தா கட்றவங்களுக்கு மட்டும் இப்படி இதழ் கிடைக்கிறதே என்று வருத்தப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை..சந்தா நண்பர்களை கூடுதலாக்க தான் இந்த விலையில்லா இதழை ஆசிரியர் இலவசமாக அளிக்கிறார் எனும் பொழுது சந்தா கட்டாமல் அது கிடைக்கவில்லை என்பதில் எந்த நியாயமும் இல்லை...

    ReplyDelete
  56. இனி பொறுமையாக மைசூர்பா கிடைக்கா விட்டாலும் பெரிய்ய இதழை நோக்கி...:-)

    ReplyDelete
  57. நன்றி நண்பர்களே!

    வழக்கமாக ஒருநாள் தாமதமாகவே எப்போதும் இதழ்கள் என்னை வந்தடையும். இந்த முறை அனுப்பிய மறுநாளே கிடைத்து விட்டது ஆச்சரியம்தான்.

    மாலை வீட்டிற்கு வந்ததும் SOP நடைமுறைகளுக்குப் பிறகு பார்சலை திறந்ததும் அர்ஸ் மேக்னா புத்தகத்தை பார்த்ததும் இது 'வேற லெவல்' என்று புரிந்து விட்டது. அட்டைப்படம், மெருகூட்டும் பணிகள் மார்வெலஸ்! அசாதாரண தரம்!

    அப்படியே உட்பக்கங்களை புரட்டி பார்க்க திருப்பியபோது தானாகவே ஈர்த்து கொண்டது. வாசிக்க ஆரம்பித்தவுடன் பற்றிக்கொண்ட வேகம்... முடித்த பின்னரும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சற்று நேரம் அவசியப்பட்டது என்றால் அது மிகையாகாது.

    அடுத்து நிதானமான மறுவாசிப்பு... ஓவியங்களைப் பருகி... வசனங்களை ரசித்து... கதைக்களத்துக்குள் நாமும் குதித்து தேட ஆரம்பிக்கும் போதுதான் ஒவ்வொரு பிரம்மாண்டமும் நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கிறது.

    வாசிக்கும் நண்பர்களின் நிச்சயமாக அந்த சஸ்பென்ஸை உணரவேண்டும் என்பதாலேயே விமர்சனத்தைக் கூட கதையொட்டிச் சொல்லாமல் அதன் மறுதலையாகவே சொன்னேன்.

    மறைந்திருக்கும் முத்துக்களை தேடி அர்ஸ் மேக்னா கடலுக்குள் குதியுங்கள் நண்பர்களே! அட்டகாசமான அனுபவம் உங்களை எதிநோக்கிக் காத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ///மறைந்திருக்கும் முத்துக்களை தேடி அர்ஸ் மேக்னா கடலுக்குள் குதியுங்கள் நண்பர்களே! அட்டகாசமான அனுபவம் உங்களை எதிநோக்கிக் காத்திருக்கிறது.///

      வாவ்!! அட்டகாசம்!!!

      Delete
  58. டிசம்பர் கடைசியில் இருந்து நமது புத்தகங்கள் வந்த உடன் பார்சலை சானிடைஸ் செய்து ஒரு மணிநேரம் கழித்து பிரித்து பார்த்து நேரம் இருந்தால் படித்து முடித்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வீட்டில் நமது comics parcelலுக்கு மட்டும் இந்த தளர்வு கொடுத்து உள்ளார்கள் :-)

      Delete
    3. நீங்க ரொம்ப லேட் பரணி. நாங்கள் எல்லாம் மே மாதமே இதை ஆரம்பித்து விட்டோம்.

      Delete
  59. எனக்கு 2021ம் ஆண்டிற்கான சந்தா செலுத்திய நண்பர் பெங்களூர் பரணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சரவணாரே💐💐💐💐

      நல்ல விசயம் PFB ,பாராட்டுகள்🌹🌹🌹🌹

      Delete
    2. வாழ்த்துக்கள் சரவணன் சார். அருமை பரணி

      Delete
  60. ரிப் கிர்பி கலக்கலோ கலக்கல்.
    பெரிய எழுத்துருவில் அள்ளுகிறது..
    அட்டகாசம்..அட்டகாசம்..

    ReplyDelete
  61. ARS மேக்னா ..

    இதழை படித்து முடித்த கணத்தில் இதை எழுதுகிறேன்..இந்த அனுபவத்தை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை..உண்மையை சொல்லப்போனால் ஆரம்பத்தில் சில பக்கங்களில் ஆஹா இது நமக்கு சுத்தப்படாத கதை போல உள்ளதே ..ஏதோ மிகப்பெரிய ஆக்‌ஷன் ஸ்டோரி போல் நினைத்து இருந்தால் வரலாற்று நிகழ்வுகள் ,அழுத்தமான ஓர் கிராபிக் நாவல் பாணி போல கதை எங்கெங்கோ நகர்ந்து போகிறதே சத்தியமாய் இந்த கதைக்கு நம்மால் ஒன்றி போக முடியாது போல என நினைத்தவாறே தான் தொடர்ந்தேன்.ஆனால் பக்கங்கள் நகர ,நகர கண்களும் ,மனதும் வேறெங்கும் நகர வில்லை..

    அப்பா...எப்படிப்பட்ட கற்பனை. அதுவும் அந்த கற்பனை கதையை நிஜமாக்கும் அசாத்திய சித்திர பாணி..இந்த கதையின் ஆக்கத்திற்கான மொழிப்பெயர்ப்பு அனைவருமே எந்த அளவுக்கு உழைத்திருப்பார்கள் என்பது கதையை படித்து முடித்தவுடன் அறிய முடிந்தது.. நமது நாட்டில் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்பார்களே அது போல் தான் எனது நிலை இப்பொழுது இந்த கதையை விமர்சிக்க சத்தியமாய் எனக்கு 10% கூட தகுதி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை..உண்மையில் பிரமித்து போயிருக்கிறேன்..அதுவும் கதை ஆசிரியரின் ஹாட்லைனை படித்தவுடன் உண்மையிலேயே அவ்வளவு மகிழ்வாக உணர்ந்தேன்.அதேப்போல் ஏற்கனவே என்னை கவராது போல் தோன்றிய ஜேஸன் பிரைஸ் இதழை இவருக்காகவது மீண்டும் ஒருமுறை எடுத்து பொறுமையாக வாசிக்க மனது பரபரக்கிறது...இல்லம் சென்றவுடன் அந்த இதழை எடுத்து படிப்பது தான் எனது முதல் வேலை என்பதை உறுதியாக கொண்டேன்.

    பல கதைகளில் முன்.பக்கத்தில் ,பின்பக்கத்தில் சில வரலாற்று தகவல்களை பகிர்ந்து இருந்தாலும் அவ்வளவு உன்னிப்பாக எல்லாம் அதை நான் படிப்பது இல்லை..ஆனால் இந்த முறை ஆரம்ப பக்கங்களில் நீங்கள் கொடுத்துள்ள முன்னோட்ட பக்கங்கள் கதையில் மேலும் ஒன்ற வைக்க மிகவும் உதவியாக இருந்த்து என்பது உண்மை சார்..

    சில படைப்புகளுக்கு எவ்வளவோ பாரட்டுகள் இதழுக்கும் ,ஆசிரியருக்கும் ,மொழி ஆக்கத்திற்கும் கிடைத்திருக்கும் தான் சார்..ஆனால் இந்த படைப்பை பொறுத்தவரை கதை ஆசிரியருக்கும் ,ஓவியருக்கும் , இப்படிப்பட்ட ஒரு சிறந்த அசாத்திய படைப்பை மொழிப்பெயர்த்த தங்களுக்கும் 100% எழுந்து நின்று சல்யூட் அடிக்கிறேன் சார் ஒரு பெருமித கண்ணீரோடு...


    ARS மேக்னா - நூற்றிஒரு சதவீதம் ஓர் பிரமாண்ட காமிக்ஸ் புதையல் மட்டுமல்ல எந்த வாசகருமே தவறவிடக்கூடாத புதையல்..




    ReplyDelete
    Replies
    1. மனதின் ஆழத்திலிருந்து வரும் வரிகள் தலீவரே!

      Delete
    2. தலைவரே அசத்துங்க...

      Delete
    3. // ARS மேக்னா - நூற்றிஒரு சதவீதம் ஓர் பிரமாண்ட காமிக்ஸ் புதையல் மட்டுமல்ல எந்த வாசகருமே தவறவிடக்கூடாத புதையல்.. // சத்தியம்

      Delete
    4. //ARS மேக்னா - நூற்றிஒரு சதவீதம் ஓர் பிரமாண்ட காமிக்ஸ் புதையல் மட்டுமல்ல எந்த வாசகருமே தவறவிடக்கூடாத புதையல்.. //

      யெஸ்! மாபெரும் புதையல்!!

      Delete
  62. வழக்கம் போலவே தல தெறிக்க விடுகிறார்..

    மின்னும் சொர்க்கத்தில் கொலைகாரர்களோடு கூடவே பயணிக்கும் அந்த செவ்விந்தியப் பெண் ஒரு ஆவி என்றறியும் தருணம் செம..
    எதிர்பார்க்கவில்லை..

    ReplyDelete
    Replies
    1. இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே சார்

      Delete
  63. உண்மை. விமர்சிக்கும் தகுதிஇல்லை. மாறாக, மேலோட்டமாக கதையைபடிக்காமல்ஆழ்ந்து அனுபவித்துமீண்டும்ஒரு முறை படிப்பதே படைப்புக்குச் செய்யும் மரியாதை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  64. அர்ஸ் மேக்னா:
    2.கண்ணாமூச்சி:

    உண்மையிலேயே கண்ணாமூச்சி ஆட்டம்தான்,ஒவ்வொரு புதிரை அவிழ்க்கும்போதும் ஒரு சிறுகுறிப்பும்,அதைத் தொடர்ந்து வரலாற்றின் ஊடான ஒரு பயணமும் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன...
    அர்ஸ்மேக்னா தொட்டுச் செல்லும் சம்பவங்கள் பல,இவ்வளவு சம்பவங்களைத் தொகுத்து எப்படி கோர்வையாக கொடுத்தனர் என்பது உண்மையில் வியப்பிற்குரிய விஷயம்தான்,கொடுக்கப்படும் சிறு குறிப்புகள் கதையை அயற்சியடைய செய்யாமல் நகர்த்திச்செல்லவும் உதவுகின்றன...
    காமிக்ஸில் இதுபோன்ற கதைகளை வாசிப்பது மிகவும் சிறப்பான விஷயம்...
    ஆம் வரலாற்றைப் பெரும் சுவராஸ்யத்துடன்
    நாம் புரட்டிச் செல்கிறோம்...

    மூன்று மணிக்கு மாபெரும் சந்திப்பு, ஒருமணிநேர வித்தியாசம்,அட செம ட்விஸ்ட் சார்....
    விடையை நெருங்குவதுமாய்,ஆபத்தோடு விளையாடுவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம்தான்...
    புதிரை நெருங்க,நெருங்க அடுத்தடுத்த புதிர்களுக்கு வழிகாட்டுவது ஆட்டத்தை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது...
    வீழ்ந்த மாபெரும் சதுக்கத்தை மீண்டும் 5 வருடத்தில் புனர்நிர்மாணம் செய்வதென்பது உண்மையில் அசாதரண செயல்தான்...
    வரலாற்றின் பக்கங்கள் இரத்தக்கறைகளால் எழுதப்பட்டவை போலும்,எத்தனை அழிவுகள்,எவ்வளவு இழப்புகள்...

    17 ஆம் நூற்றாண்டில் பிரம்மாண்டமாய் திகழ்ந்த அரண்மனை,ஆனால் இன்றோ எஞ்சியிருப்பதுதான் என்ற வார்த்தைகளை தொட்டுச் செல்லும்போது மனதில் தோன்றியது,
    "காலம் விழுங்கிய பிரம்மாண்டங்கள்தான் எத்தனை, எத்தனை...
    முதல்பாகத்தின் முடிவில் ஹிட்லர்,இரண்டாம் பாக முடிவில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...
    என்னசார் நடக்குது இங்கே ???!!!

    அசத்தும் வசனங்கள்,

    "எல்லாக் கற்பனைகளும் நிஜங்களெனும் அடித்தளத்தினில் கட்டப்படும் மாளிகைகளே"
    "உன் உயிர் உன்னிடம்தானே உள்ளது இன்னமுமே ? யுத்தம் ஆரம்பித்த நாள் முதலாய் அதைத் தொலைத்து,பூமிக்குள் அடங்கிக் கிடப்போர் எத்தனை ஆயிரம் பேர் என்பது தெரியுமா உனக்கு ?"

    சிறுபிழையாய் கண்ணுக்குத் தெரிந்தது,
    ஷான் கெடாய்ரை அடிக்கும்போது வரும் வசனம்,இது எல்லாமே "என்னால்" வந்த வினை.... இதில் 'என்னால்" என்பது "உன்னால்" என்று வரவேண்டும் சரியா சார்...

    அடுத்து புவியின் ஆழத்தில் பயணம்...

    ReplyDelete
    Replies
    1. //மூன்று மணிக்கு மாபெரும் சந்திப்பு, ஒருமணிநேர வித்தியாசம்,அட செம ட்விஸ்ட் சார்....//

      டான் பிரவுனின் 'டாவின்சி கோட்' இலும் இது போன்ற சீக்வென்ஸ் வரும்... அங்கே டேலைட் சேவிங் முறை க்ளூவாக அமையும்.

      Delete
  65. இனி....


    இனி என்ன...?!


    பிப்ரவரியில் மார்ச்சை எதிர்நோக்கி..

    28 நாட்களே ஆனாலும்...:-)

    ReplyDelete
  66. Yesterday around 9:00 PM I've started reading the story and completed around 10:00 PM. The story was very interesting and could not give a break in the middle. As in Jason Price lots of Codes were given. While reading the story Davinci Code movie just crossed in my mind (Enacku mattumthaana?). One more thing I wish to post here is I guessed what "Phoenix" is in the starting itself from the "Picture Portrayal". Lots of Skeletons and "Greenish glowing of Light remined me Radium" conveyed the message. Also the author clearly underlined the protector of the Phoenix turns to death due to unnamed disease (Mary Curie who involved in the research died due to Cancer caused by Radiation). Was much curious to go to last page, but controlled myself to go page by page :-) hope most of us had the same feel. Real good reading as usual ... Thanks to Editor.

    ReplyDelete
  67. நேற்று சொன்னது போலவே இன்று மேக்னாவின் ஆசிரியரின் முன்னாள் படைப்பான ஜேஸன் ப்ரைஸ் ன் மூன்று தொகுப்புகளையும் ஒரே மூச்சில் படித்தாயிற்று...முதல் முறை படித்த பொழுதும் பிடித்த கதை தான் ..ஆனால் திரை விலகும் நேரத்தில் ஓர் நம்ப முடியாத அதாவது ( சிறுவனின் உடலில் இருந்து வெளிவரும் விலங்கின் மூலம் ) கதை முடிவுக்கு வந்ததன் காரணமாக மட்டுமே கொஞ்சம் மிகைப்படுத்தலாக தோன்றியது அப்பொழுது.ஆனால் இப்பொழுது இதுவுமே ஓர் வித்தியாசமான படைப்பாக ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்தது என்பது உண்மை...சரியாக இன்றைய ஒருமணி நேரமும் ஓர் வித்தியாச உலகில் பயணிக்க வைத்து விட்டார் கதை ஆசிரியர்.

    அடேங்கப்பா கதாசிரியருக்கு தான் எப்பேர்ப்பட்ட கற்பனை திறன்.சான்ஸே இல்லை...

    செம...

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...ஆனாலும் அநியாயத்துக்கு இஸ்லோவ்வ் நீங்க !! 4 வருஷம் கழிச்சு அலசலா ?

      Delete
  68. Dear Editor,
    ARS Magna was very good and it manages to fulfill the lofty ambitions of having that name.Brilliant Artwork,Imaginative story and superb translation.
    An instant classic!
    Regards
    Thanks
    Arvind

    ReplyDelete
  69. Dear Editor
    Eagerly waiting for your announcements!
    Need more surprise books and a heavyweight 2022 sandha so that u can give us more books including tex thanithadam.We have lost 3 months of books overall due to Covid crisis.Need to regain all those and more before 2022 end!
    Of course Lion Comics and our editor are our Ars Magna!
    Regards
    Arvind

    ReplyDelete
  70. யுகம் தாண்டியொரு யுத்தம்
    —————————————

    Ars Magna

    Magnum Opus

    ReplyDelete
  71. 3 புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். திங்கள் மாலை ஆர்டர் செய்து இருந்தேன். புதன் மதியம் புத்தகங்கள் கிடைத்து விட்டது. நேற்று மாலை மின்னும் சொர்க்கம் மற்றும் கம்பி நீட்டிய குருவி இரண்டையும் படித்து விட்டேன். செம்ம லைட் read. எனது மதிப்பெண்கள் முறையே 9/10, 8.5/10.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிப் பை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.ரொம்ப Pleasant ஆன கதை. அவரது கதைகள் எப்போதுமே நிஜத் திற்கு அருகில் இருக்கும். இம்முறையும் அப்படியே.

    மின்னும் சொர்க்கம் செம்ம சூப்பர். ஷார்ட் அண்ட் ஸ்வீட் இரண்டு கதைகளுமே மிக மிக அருமை. இரண்டாவது கதையின் டுவிஸ்ட் எதிர்பாராதது. மினி டெக்ஸ் ரசிகன் நான். இந்த வருடமும் இது தொடரவேண்டும் என வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //மினி டெக்ஸ் ரசிகன் நான்//

      நானும்தான் சார்!
      காரம் குறையாத கடுகு... கண்டிப்பாக தொடரவேண்டும்!

      Delete
  72. கடைசியாக ARS மேக்னா நேற்று இரவே படிக்க துவங்கி விட்டேன் முதல் 10 பக்கங்கள் நிறைய விசயங்களை தொட்டு சென்றதால் தலைவர் சொன்னது போல கதையில் ஒன்றவில்லை. ஆனால் அதற்கு பிறகு எடுக்கும் வேகமும் ஒவ்வொரு க்ளூ ஆக கண்டு பிடித்து அந்த புதையலை இரண்டு அணியினரும் நெருங்கும் போது நமக்கு ஏற்படும் பதைபதைப்பு எந்த ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படங்களுக்கு நிகரானது. பெரும் படைப்பு என்பது 100 க்கு 100 உண்மை.

    உங்கள் மொழிபெயர்ப்பு உங்கள் உழைப்பு அபாரம் சார். பிஸ்டலுக்கு பிரியாவிடை க்கு பிறகு அந்த லெவல் ஐ எட்டிய ஏன் அதையே மிஞ்சிய ஒரு படைப்பு இது என்றால் மிகையில்லை.

    எனது மதிப்பெண் 1000/10. அந்த த்ரில் மற்றும் chase க்கு ஆகவே. செம்ம செம்ம செம்ம.

    சரவணகுமார், அறிவரசு ரவி, தலைவர் மற்றும் ஷெரீஃப் ஆகியோர் சொன்னது அனைத்தும் உண்மையே என்று உறுதியாக கூறுகிறேன். நண்பர்கள் படித்து விட்டு மேலான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. //முதல் 10 பக்கங்கள் நிறைய விசயங்களை தொட்டு சென்றதால் தலைவர் சொன்னது போல கதையில் ஒன்றவில்லை//

      மறுவாசிப்பின் போது அந்த பக்கங்கள் நம்மை 'அட' போட வைக்கும்.

      எந்த ஒரு படைப்பு ஒரு வாசகனை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதோ... அங்கே தான் அப்படைப்பு வெற்றிபெறுகிறது. படைப்பாளி கொண்டாடப்படுகிறார்.

      Delete
  73. //அந்த த்ரில் மற்றும் chase க்கு ஆகவே. செம்ம செம்ம செம்ம.//

    அருமை குமார் சார்!

    ReplyDelete
  74. அர்ஸ் மேக்னா:
    3.புவியின் ஆழத்தில்,
    புதிரை அவிழ்க்கும் பயணத்தையும் முடிச்சாச்சி,என்ன சொல்றதுன்னே தெரியலை,ஒருகணம் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற வேண்டியதாகி விட்டது,
    புதிரின் முடிச்சு எதிர்பார்க்காத முடிச்சுதான்,அடுத்து அதை இரண்டாம் உலகப் போரின் முக்கிய நிகழ்வோடு இணைத்தது கதாசிரியரின் புத்திசாலித்தனம்தான்...

    சிறந்த கதைக்கருவும்,விறுவிறுப்பாய் திரைக்கதையாக்கும் உத்தியும்,சிறந்த ஓவிய பாணியும் கொண்ட கூட்டணி அமையும்போது அப்படைப்பு பெருவெற்றி அடைவதில் வியப்பில்லைதான்...
    ப்ரஸ்ஸல்ஸ் நகரின் பிரம்மாண்டத்தை ஓவியர் மிலன் தனது தூரிகையில் நம் கண்முன் கொணர்கிறார்...
    இயற்கையை நேசிப்பவர்களுக்கும்,இயற்கை வழி உணவை விரும்புபவர்களுக்கும் கலப்படமில்லாமல் ஒரு பொருள் கிடைக்கும்போது பெரும் மகிழ்ச்சியானது ஆகச்சிறந்த ஓர் உணர்வாகும்...
    இப்படைப்பை அதன்வழி கொண்டாடுவதில் தவறில்லை...
    இறுதியில் கதாசிரியரின் நிஜ ஹாட்லைன் அவரின் அசாத்திய உழைப்பையும்,நல்ல படைப்பிற்கான அர்ப்பணிப்பையும் உணர்த்துகிறது....
    அர்ஸ் மேக்னாவை முடிக்கும்போது தோன்றியது இதுதான்,"ஒரு நல்ல படைப்பை தரிசிக்க ஒரு நல்ல வாசகன் எப்போதும் தயாரான மனநிலையில் இருக்க வேண்டும்"
    அதுவே அந்த படைப்புக்கு நாம் செய்யும் மரியாதை...
    இது போன்ற சிறந்த படைப்புகளை நாம் கொண்டாடித் தீர்ப்பதைத் தவிர அந்த பெரும்படைப்பாளிகளுக்கு நாம் வேறென்ன மரியாதை செய்துவிட முடியும்...
    2021 இன் இரண்டாவது பிரம்மாண்ட சிக்சர் சார்...
    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. அருமை அண்ணா ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு விமர்சனம். அருமை அருமை.

      Delete