Saturday, November 28, 2020

படைத்தவருக்கும்....நம்மைப் படித்தவர்களுக்கும் ...!!

 நண்பர்களே,

வணக்கம். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து ஒரு பெரிய பதிவை உருவாக்கலாம் தான் – இத்தனை நாட்களாய் நான் செய்து வந்ததைப் போல ; God willing தொடரும் நாட்களிலும் நான் செய்யப் போவதைப் போல ! அதே சமயம் பெரிய விஷயங்களைச் சுருக்கமாய்ப் பகிர்ந்துமே நிறைவானதொரு பதிவை உருவாக்க முடியுமா ? முடியும் என்பேன் ! Read on please...!!

ரொம்பச் சமீபத்தில் எனக்கொரு வாட்சப் சேதி :

ஸ்பைடரின் “சர்ப்பத்தின் சவால்” புக்கில் நண்பர் JSK-க்கு நீங்கள் எழுதியிருந்த tribute--ஐப் படித்த கையோடு இதை எழுதத் தோன்றுகிறது !” என்று ஆரம்பித்தது அந்த மெசேஜ் ! 

ரொம்பவே பரிச்சயமான நண்பரே எனும் போது - ‘அட... என்ன சொல்ல வருகிறாரோ?‘ என்று அறியும் ஆவலில் தொடர்ந்து படித்தேன் ! 

மறைந்த நண்பருக்கென ஒரு ஸ்பெஷல் இதழ் போட்டிருப்பது பிரமாதம் ; ஆனால் அவரது குடும்பத்துக்கென ஏதேனும் செய்திட சாத்தியப்பட்டுள்ளதா ?" என்று நண்பர் வினவினார் ! 

சின்னதொரு தயக்கத்துக்குப் பின்னே- "பெரிதாய் எதுவும் நடைமுறை கண்டிருக்கவில்லை சார் ! ஏற்கனவே JSK-ன் மருத்துவ சிகிச்சைக்கென நண்பர்கள் இயன்ற சிறு பங்கினை செய்திருக்கும் நிலையில், அவர்களை மேற்கொண்டும் சங்கடப்படுத்த நான் விழையவில்லை!” என்றேன்!

அதுவும் சரி தான்; இந்தக் கொரோனோ காலத்தில் யாரது நிலவரமும் சொல்லிக் கொள்ளும் விதமாய் இருக்கலை தான் ! என்று நண்பரின் பதில் வந்தது !

ஆமாம் சார் ! மேலோட்டமாய் இது குறித்து நான் பேசி விட்டு நண்பர்களது பிரியங்களுக்கு விட்டு விட்டேன் !” என்றேன் !

இழப்பைச் சந்தித்திருக்கும் அந்தக் குடும்பத்துக்கு நம் காமிக்ஸ் குடும்பத்தின் சார்பாக ஏதாச்சும் செய்யணுமே சார் !” என்று தொடர்ந்தது நண்பரின் அடுத்த மெசேஜ் !

எனக்கும் அந்த அவா உள்ளது தான் சார் ! Maybe ஒரு வாகான சந்தர்ப்பத்தில் நம்மிடமிருக்கக்கூடிய ஒருசில அட்டைப்பட பெயிண்டிங்குகள் ; முந்தைய artwork போன்றவற்றை நம்மவர்கள் மத்தியில் ஒரு ஏலம் போல நடத்தி, அதனில் கிடைக்கும் தொகைகளையும், நமது பங்களிப்பையும் இணைத்து நண்பரின் குடும்பத்துக்குத் தரலாமா ? என்ற ரீதியில் எண்ணமுள்ளது சார்!” என்றேன்!

”போச்சு போங்க – நீங்களும் கடைவிரிச்சு விற்க ஆரம்பிச்சாசா...? நாங்க விற்றா குற்றம்... நீங்க வித்தா மதர் தெரசாவா..? ன்னு  அதுக்கும் உங்களைத் துவைத்து தொங்க விடுவாங்க சார் ! வேண்டாமே அந்த எண்ணம் !” என்றார் !

அட... நம்மளைத் துவைப்பதுலாம் துவையல் அரைக்கிறதை விடச் சுளுவாச்சே சார்...?! தவிர நான் விற்கலாம் என்று நினைப்பவையுமே அட்டைப்படங்கள் ; ஆர்ட்வொர்க் என collector’s value கொண்டவை மாத்திரம் தானே ? அதில் பெருசாய் என்ன சர்ச்சை நேரக்கூடும் ?” என்றேன் !

"வேண்டாம் சார்! ஒரு நல்ல காரியத்துக்கு எதையேனும் செய்யப் போய் அதுவுமே விவாதப் பொருளாகிட வேண்டாமே ! மாறாக – ஏதேனும் ஒத்தாசை செய்திட ஆண்டவன் அருளால் நல்ல நிலையில் உள்ள மிகச் சிறிய வட்டத்திடம் நானே கேட்டுப் பார்க்கட்டுமா ? இந்த ”சர்ப்பத்தின் சவால்” புக்கின் மூலமாய் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தை உங்கள் பங்களிப்பாக வைத்துக் கொள்ளலாம் ; நான் உட்பட இன்னும் இருவர் – ஆக மொத்தம் 3 வாசகர்கள் அதே அளவுத் தொகையினை அவரவரது பங்களிப்பாகச் செய்திடுகிறோம் ! ஆக 4 பங்குத் தொகையினையும்  லயனின் அன்புடன் JSK-ன் குடும்பத்துக்கு வழங்கிடலாமே சார் ?! என்ற மெசேஜைப் படித்த போது எனக்கு விக்கித்துப் போனது !

“இல்லை சார்! யாரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திட வேண்டாமே... ஏற்கனவே சிரமத்திலுள்ள நண்பர்களின் சந்தாக்களுக்கு ; ”கழுகு வேட்டை” விலையில்லா இதழுக்கென ஏகமாய் தயாள முகங்களைக் காட்டியுள்ள நிலையில் மேற்கொண்டும் சிரமப்படுத்த வேண்டாமே ?!” என்றேன்!

அப்படியில்லை சார்; நான் மனதில் வைத்திருக்கும் இருவருமே துளி கூடத் தயக்கமின்றி உதவத் தயாராக இருப்பார்கள் ! இழப்பின் வலியானது முதல் ஆண்டில் தான் ரொம்பவே ரணமாய்ப் படுத்திடும் அந்தக் குடும்பத்தை ! இந்தச் சமயத்தில் ஏதேனும் உதவிட முடிந்தால் அது அவர்களுக்கு ஏதேனுமொரு விதத்தினில் பிரயோஜனப்படக்கூடும் !” என்றார் ! 

தொடர்ந்த சேதிப் பரிமாற்றத்தில் தொகைகள் ; யார்-யாரிடமிருந்து ஒத்தாசை கோரிடவுள்ளார் ? எப்போது பணம் அனுப்புவது ? என்ற தகவல்கள் பரிமாறிடப்பட்டன !

And இது நடந்து ஒரு வாரம் பின்பாய் – இந்த புதனன்று மீண்டும் வாட்சப் சேதி ! ”சார்... மூவரது பங்களிப்பும் உங்கள் அக்கவுண்டில் சேர்ப்பித்தாயிற்று !!” என்று ! 

ஏற்கனவே வங்கியிலிருந்து வந்திருந்த குறுந்தகவலும் அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்க – கரம் கூப்பும் படங்களை அனுப்பி வைப்பதைத் தாண்டி வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை !

அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் சார் ! தயவு செய்து மூவரது பெயர்களையும் வெளியிட வேண்டாம் ! இது லயனின் ஒத்தாசையாகவே களம் காணட்டும் !” என்று...!

மறுபடியும் தொண்டை அடைத்தது எனக்கு !! ”சார்... தெருமுனையில் ஒரு கேன் கபசுரக்குடிநீர் தருவோரே 40 அடி உசரத்துக்கு பேனர் வைக்கும் நாட்களிவை ! இந்த வேளைகளில், அனாமதேயர்களாய் நீங்கள் தொடர்ந்திட விரும்புவது வேண்டாமே ?! இந்த அன்புகள் அங்கீகாரம் காண வேண்டுமே !” என்றேன் !

நொடியும் தாமதமின்றி வந்த பதில் இது தான் : 

Lion is a family sir !!

சுருக்கமாய் கிட்டிய நண்பரது பதில் என்னைச் சாய்த்து விட்டது ! 

உடன்பிறந்தோருக்குச் செய்யவே கணக்குப் பார்க்கும் உலகமிது...! நம் குடும்பம்... நம் பிள்ளைகள்... நம் வட்டம் ! என சகலமுமே ஒரு சிறு வளையத்தினுள் அடங்கிப் போயிருப்பது யதார்த்தம் ! And இதன் பொருட்டு சத்தியமாய் யாரையும் குறை சொல்வதில் அர்த்தமும் கிடையாது என்பதை இந்தப் பேரிடர் காலமும் உணர்த்தியுள்ளது ! ஒற்றை வைரஸின் வருகையால் தடம்புரண்ட தொழில்கள் ; உத்தியோகங்கள் ; பிழைப்புகள் தான் எத்தனை – எத்தனை ? என்பதை நாம் தான் நித்தமும் பார்த்து வருகிறோமே ?! So ‘தனக்குப் போகவே தர்மம்‘ என்பது ஒரு எழுதப்படா விதியாகிவிட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தினில் – ஒரு பொம்மை புக் மீதும், அதன் குறுகிய வாசக வட்டத்தின் மீதும் இத்தனை நேசமும், அபிமானமும் கொண்டிட சாத்தியப்படுகிறதெனில் அதனை விளக்கிட வார்த்தைகள் பற்ற மாட்டேன்கின்றன ! And to top it all இப்போது உதவியுள்ள 3 நண்பர்களுக்கும் நண்பர் JSK உடன் நேரடிப் பரிச்சயம் இருந்திருக்க வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப சொற்பம் ! Makes it all the more awesome !!

இந்தக் காமிக்ஸ் பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பிலிருக்கும் எனக்கு, “காமிக்ஸ் குடும்பம்” ; ”வாசகக் குடும்பம்” என்ற பதங்களைப் பயன்படுத்துவது பழகிப் போனதொரு சமாச்சாரமே ! ஆனால் – அதனை மெய்ப்பிக்கும் இத்தகைய தருணங்கள் இந்த ஒட்டுமொத்தப் பயணத்துக்குமே ஒரு புது அர்த்தத்தை வழங்குகின்றன ! ஒரு பேரிடரின் மத்தியிலும் ; மழையும் ; புயலும் வதைக்கும் நாட்களிலும் கூட, வாழ்க்கை தனது சந்தோஷப் பரிமாணத்தைக் காட்டுவது ஆண்டவனின் அசாத்தியத் திட்டமிடல்களை yet again புரியச் செய்கிறது ! கரம் கூப்புகிறேன் - படைத்தவருக்கும் ; நம் முயற்சிகளைப் படிப்பவர்களுக்கும் !

நிதியாய் உதவிடும் சூழலில் இல்லாத நமது இதர நண்பர்களுமே இந்தச் சந்தோஷங்களின் ஒரு இன்றியமையாப் பங்கென்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகங்களில்லை ! ஒவ்வொரு ஓவியத்திலும், ஒவ்வொரு வர்ணமும் சமஅளவில் முக்கியம் தானே guys ? நீங்கள் ஒவ்வொருவரும் இணைந்திடும் போது தானே "லயன்" எனும் கோலம் பூர்த்தி காண்கிறது ?!! So உங்கள் ஒவ்வொருவரின் சார்பிலும் modest ஆன அந்தத் தொகையினை நண்பர் JSK–ன் குடும்பத்துக்கு வரும் புதனன்று  அனுப்பிடவுள்ளோம் – ஏதோ ஒரு சிறு விதத்தில் அது அவர்களுக்கு உதவிடக்கூடுமென்ற நம்பிக்கையில் ! நண்பர் கரூர் குணா – விபரங்களை ஈ-மெயிலில் அனுப்பிடுங்கள் ப்ளீஸ் !

So முன்னோட்டங்கள்; பின்னோட்டங்கள்; சைடு ஓட்டங்கள் என்ற எந்தச் சமாச்சாரமுமில்லாத ஒரு பதிவை நிறைவுக்குக் கொணர்வதில் முதன்முறையாய் முழு நிறைவு எனக்குள் !

‘இதுவும் கடந்து போகும்...!‘ என்பது நாமெல்லாம் உணர்ந்துள்ள வேதவரிகள் ! ஆனால் கடப்பது துயர்களாக மட்டும் இருந்திடும் ; மனிதமாக ஒருபோதும் இருந்திடாது என்பதை நிலைநாட்டிய அன்புகளுக்கு சிரம் தாழ்த்திடுகிறேன் !

Bye all... See you around !

ஆங்...அப்புறம் பதிவோடு ஏதாச்சும் படம் வந்திட வேண்டுமல்லவா ? Surprise entry தரவிருக்கும் நமது கேரட் மீசைக்காரரின் அட்டைப்பட preview இதோ ! 

214 comments:

  1. நண்பர்களல்ல கடவுள்கள்🙏

    ReplyDelete
  2. 🙏

    நண்பர்கள் அல்ல கடவுள்கள்

    ReplyDelete
  3. 6வது..வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...

    ReplyDelete
  4. இரவு வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  5. Replies
    1. நீங்கதான் அதில் முதல்வர் ...

      அன்புன்னா ... 😍😍

      Delete
  6. YES.

    “Lion is a family sir !!"

    TRUE.

    ReplyDelete
  7. ‘இதுவும் கடந்து போகும்...!‘ என்பது நாமெல்லாம் உணர்ந்துள்ள வேதவரிகள் ! ஆனால் கடப்பது துயர்களாக மட்டும் இருந்திடும் ; மனிதமாக ஒருபோதும் இருந்திடாது என்பதை நிலைநாட்டிய அன்புகளுக்கு சிரம் தாழ்த்திடுகிறேன் !

    ReplyDelete
  8. யாராப்பா அந்த 3 பேர்?!!

    நீங்கள்லாம் மனுசங்கதானா? இல்லே தேவ தூதர்களா.. ஹஹ்?!!!

    நல்லா வருவீங்க!

    பெருமிதத்தோட சொல்றேன்!!

    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. மூவருக்கும் என் சிரம்தாழ்ந்த 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  9. Lion is a family sir !!" //

    இதுக்கு மேல் சொல்ல எதுவுமில்லை. வாழ்த்துகள் நண்பர்களே.

    ReplyDelete
  10. சார்.. நம்ம கேரட் மீசை கர்னல் சர்ப்ரைஸாக வருவதில் ஐயாம் வெரி வெரி ஹேப்பி!

    ஏனோ அவரை எனக்குப் பிடிக்கும்! அந்த வயசிலும் அப்படியொரு துறுதுறுப்பா இருக்காரே.. அதுவா? இல்ல, போகிற இடமெல்லாம் எக்குதப்பா மாட்டிக்கிட்டு சிரிக்க வைக்கிறாரே.. அதுவா? இல்ல, பரபரப்பா நகருமே அவரோட கதைப் பாணி.. அதுவா?!!

    சொல்லத் தெரியல.

    ஆனா பிடிச்சிருக்கு! ரொம்பப் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. வயசு ஒரே மாதிரி என்பதால் உங்களுக்கு பிடிச்சுருக்கு என்பதில் ஆச்சரியம் இல்லை.

      ஆனால் இந்த சின்ன வயசுலயே எனக்கும் அவரை பிடிச்சுருக்கு என்பதுதான் ஆச்சரியமே.

      கதைகளும் பிடிச்சுருக்கு. ஆவலுடன் Waiting.

      Delete
  11. “Lion is a family sir !!"

    வார்த்தைகள் வரவில்லை!
    கண்கள் பணிகிறது!

    மனிதநேயத்தை கண்கூடாக காட்டிய காமிக்ஸ் நேசம் வாழ்க!

    ReplyDelete
  12. இன்பத்திலே பங்குகொண்டால்
    புன்னகை சொல்வது நன்றி..

    துன்பத்திலே துணையிருந்தால்
    கண்ணீர் சொல்வது நன்றி..

    வாழும் போது வருவோர்க்கெல்லாம்
    வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

    வார்த்தையின்றி போகும் போது
    மௌனத்தாலே நன்றி சொல்வோம்..

    அந்த நாலு பேருக்கு நன்றி..

    உண்மையில் வார்த்தைகள் ஏதும் இல்லை..
    இந்த அன்பு உள்ளங்களை வாழ்த்த.

    ReplyDelete
  13. ///Lion is a family sir ///

    நிஜம்தான்! நிறையத் தாத்தாக்களும், ஒரு சில பாட்டீம்மாக்களும், என்னைப் போல் ஓரிரு சிறுவர்களும் நிறைந்து கிடக்கும் ஃபேமிலி!

    ReplyDelete
    Replies
    1. ஓயயய் இது தனிமனித தாக்குதல். ரிடையர் ஆகும் வயதில் என்னங் காணும் பூ சுத்தல்.

      Delete
    2. பிழை திருத்தம் : 'பாட்டீம்மாக்களும்' என்பதை 'ரவுடி பாட்டீம்மாக்களும்' என்று மாற்றிப் படிக்கவும்!😜😜

      Delete
    3. கரரர்,புரரர் இருந்தாலும் அந்த த்ரீ கிங்ஸ்/ரொசஸ் நண்பர்களை நினைக்கையில் மகிழ்ச்சி பொங்குவதால் இதோடு விட்டுட்டேன். . . . 🤣

      Delete
    4. // பிழை திருத்தம் : 'பாட்டீம்மாக்களும்' என்பதை 'ரவுடி பாட்டீம்மாக்களும்' என்று மாற்றிப் படிக்கவும்!😜😜 //

      :-) Vijay Rocks!

      Delete
    5. ரிடையர் ஆகும் வயதில்// ஆகும் வயதில் அல்ல. அவர் அல்ரெடி ரீ டையர் (re tyre) ஆகிட்டார்

      Delete
  14. மிகவும் நெகிழ்ச்சியான.. அதை விடவும் மகிழ்ச்சியான பதிவு.. Very much proud to be a part of Lion family.. எனக்கு பின்னேயும் என் குடும்பத்திற்க்கு ஒரு Backup இருக்கும்மென்ற நம்பிக்கை துளிர் விடுகிறது..
    வாயடைச்சு போயிடுச்சுன்னு கேட்டு இருக்கேன்.. படிச்சிருக்கேன் உணர்ந்தது இப்போ தான்..
    நல்ல உள்ளங்கள் அவுங்க மனசை விடவும் பெரிதாக வாழ வேண்டும்.்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் கழிச்சு தெளிவா ஒரு பதிவு போட்டுருக்கீங்க ரம்மி!

      ///நல்ல உள்ளங்கள் அவுங்க மனசை விடவும் பெரிதாக வாழ வேண்டும்.்///

      அருமையான வாழ்த்து!!

      Delete
    2. // நல்ல உள்ளங்கள் அவுங்க மனசை விடவும் பெரிதாக வாழ வேண்டும் //

      Well said Rummi!

      Delete
  15. உதவிய இதயங்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்

    ReplyDelete
  16. தீபாவளிக்கு மூனு அதிகாரி கதையை படிச்ச துக்கத்தை கூட மறக்கடித்து விட்டது இந்த பதிவு.. நன்றி சார்.்்்்்்்்்்்்்்்்்்.

    ReplyDelete
    Replies
    1. அந்த துக்கத்தை வேற ஏன் ஞாபக படுத்துறு தம்பி.

      Delete
  17. We are Lion family!மூன்று நண்பர்களின் பேருதவி கண்டு வாயடைத்து இருக்கிறேன்!I am proud to be in Lion family

    ReplyDelete
  18. ஜேடர்பாளையத்தாருக்கு உதவிய மனித கடவுள்களுக்கு நன்றிகள் உங்கள் உதவிகள் நல்ல பாதைகளை இன்னும் அகலமாக்கட்டும் இந்த உதவும் கூட்டுமுயற்சிகளுக்கு நன்றி நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  19. மூன்று தெய்வங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.வணங்குகிறேன் நானும்.

    ReplyDelete
  20. அட! நம்ம கிளிப்டன்...!!! வரணும்...வரணும்...

    ReplyDelete
  21. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. தெய்வங்கள் வாழ்வது சொர்க்கத்தில் மட்டுமல்ல... கண்கள் பனிக்க சொல்கிறேன்... வாழ்த்துகள் நண்பர்களே!

      Delete
  22. Luon is a family sir..!!


    🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏

    ReplyDelete
  23. நல்ல மனம் வாழ்க



    ReplyDelete
  24. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  25. கடவுளுக்கு நிகரான மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர், Proud to be a part of this family

    ReplyDelete
  26. இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லை சார்...!!!

    ReplyDelete
  27. // Lion is a family sir !!" //
    சூப்பரப்பு....
    எல்லாம் நன்மைக்கே...
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  28. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நம்ம காமிக்ஸ் புக்ஸ் அடுக்கிவைக்க வாகாக டப்பிகள் தயாரித்து அனுப்ப வாய்ப்பு இருப்பதாக சொன்ன நினைவு....!!!
    2021 இல் அதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கா சார்.....

    ReplyDelete
  29. .......Lion is a Family,.....

    🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  30. “Lion is a family sir !!"

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  31. மூன்று நண்பர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏! மிகவும் நல்ல விஷயம்!!! வாழ்த்துகள் நண்பர்களே!!!

    ReplyDelete
  32. மனதை நெகிழச் செய்யும் செய்தி !!!

    Yes, Lion is a Family !

    ReplyDelete
  33. 💜💜💜💜💜💯உயர்ந்த உள்ளங்களுக்கு 💞💟🙏🙏

    ReplyDelete
  34. ஒரு வாகான சந்தர்ப்பத்தில் நம்மிடமிருக்கக்கூடிய ஒருசில அட்டைப்பட பெயிண்டிங்குகள் ; முந்தைய artwork போன்றவற்றை நம்மவர்கள் மத்தியில் ஒரு ஏலம் போல நடத்தி, அதனில் கிடைக்கும் தொகைகளையும், நமது பங்களிப்பையும் இணைத்து நண்பரின் குடும்பத்துக்குத் தரலாமா ? என்ற ரீதியில் எண்ணமுள்ளது சார்-இது இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் சார்.

    ReplyDelete
  35. அழகான அருமையான மனதை தொடும் பதிவு சார். நண்பர்களுக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள் சார். எவ்வளவு கடினமான சமயத்திலும் சக மனிதர்களை பற்றி நினைக்கும் நண்பர்கள் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  36. மூன்று மனித தெய்வங்களையும்வணங்குகிறேன். கரூர் ராஜசேகரன்.

    ReplyDelete
  37. உதவிக்கரம் நீட்டுவதையும் இப்போதெல்லாம் நாலு பேருக்கு முன்னுதாரணமாக வெளிக்காட்டுவதில் தவறில்லை சார். அது உதவி செய்யும் மனப்பாங்கையே வளர்க்கும் என்பது என்வரையில் உண்மை. பலர் முன்வந்து இன்றைக்கு கொடுத்துதவும் பரந்த மனப்பான்மையில் இருப்பது தாங்கள் அறிந்தவர் செய்த தானதருமங்களை அறிந்து கொண்டதாலேயே.. விருப்பமில்லாத முகம் அறியா தானம் செய்வோருக்கு நன்றியும் அன்பும். இங்கேநாம் ஒரு குடும்பமாகவே உதவி ஒத்தாசைகளை செய்து வருவதையும் அந்த மூவருக்கும் தெரிவித்து விடுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஜானி சார்..
      வாட்சப்ல இப்பதான் உங்க மெசேஜ் பார்த்தேன்..
      பார்த்த உடனே இங்கே வந்து விட்டேன்..

      Delete
  38. கடவுளே..

    என்ன தவம் செய்தனை..

    ReplyDelete
  39. சர்பத்தின் சாவல் - செம சவால். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  40. இது வரையிலும் முகம் தெரிந்த தெரியாத நண்பர்களின் மாசற்ற அன்பின் மூலம் எங்கள் குடும்பம் பெரும் பேறு பெற்றது..

    இடையிலே இது பற்றி சில நண்பர்கள் தெரிவித்திருந்த.போது கூட கொரோனா காலத்தில் வேண்டாம் என மறுதலித்திருந்தேன்.நண்பர்களுக்கு மேலும் சிரமம் தரக் கூடாது என நினைத்திருந்தேன்..

    ஆனால்...

    இன்று..

    எங்கள் குடும்பத்திற்கு உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நெல் முனையளவும் பிசிறில்லாத எனது ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன

    ReplyDelete
  41. காமிக்ஸ் உறவுகள் காமிக்ஸ் சொந்தங்கள் என்றதை தாண்டி காமிக்ஸ் கடவுள்போல் தெரிகிறார்கள்நமது நண்பர்கள்.... நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  42. 'காலத்தினால் செய்த உதவி.!'

    காமிக்ஸ் வாசகன் என்பது பெருமைக்குரிய விசயம்.
    🙏🙏🙏🙏

    ஆம்.Lion is a family.!

    ReplyDelete
  43. Lion is a family .
    ஆம்.நெஞ்சம் நெகிழ்ந்தேன்.
    மூன்று மனிதத் தெய்வங்களின் பாதம் பணிந்து வணங்குகின்றேன்.
    கொரோனாவால் சீரழிந்து கிடந்த எனக்கு உதவிய மனித தெய்வங்கள் இப்போதும் வணங்கி மகிழ்கின்றேன்.இவர்கள் போன்ற நல்லவர்களால் தான் வானம் பொழிகிறது.பூமி விளைகிறது.நன்றி சொல்லவே வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  44. அன்று லயன் காமிக்ஸ் வாசகனாக இருக்க பெருமைப்பட்டுள்ளேன். தரமான, கண்ணியமான, கச்சிதமான காமிக்ஸி ற்காக.

    இன்றும் பெருமைப்படுகிறேன்
    வாசகர்களை குடும்பமாய் மதித்திடும் ஆசிரியருக்காக, நம்பவே முடியாத அளவு ஈகை செய்யும் தங்கமனம் படைத்த வாசக நண்பர்களுக்காக.

    ReplyDelete
  45. Replies
    1. Yes Sir. Lion has a family too. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  46. நெகிழ்ச்சியான பதிவு சார்! காமிக்ஸ் மீதுள்ள காதலில் பிறந்த கருணை! யாராக இருந்தாலும் இம்மாதிரியான சூழலில் Jsk குடும்பத்திற்கு உதவுனம்னு சிந்தித்ததே பெரிய் விஷயம்! என்னைப் பொருத்தவரை உதவிகள் எல்லோரையும் சென்றடைவதை விட இல்லாதவர்களுக்கு சென்றடைந்தால் மகிழ்ச்சி தான்! கர்ஜனையுடன் சிங்கத் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. அந்த மும்மூர்த்திகளுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...

    ReplyDelete
  48. நெஞ்சம் நெகிழ்ந்து கிடக்கிறது சார்🙏🏼

    இடதுகை கொடுப்பது வலது கைக்கு கூட தெரியக்கூடாது என நினைக்கும் கர்ணபரம்பரையில் வந்தவர்களாக இருப்பார்களோ சார் 🙏🏼🙏🏼🙏🏼

    அவர்களின் பரந்த மனதுக்கு எல்லாம் வல்ல இறைவன் இன்னமும் நிறைய வழங்கிடுவார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  49. இப்படி ஒரு அன்பான உணர்வுபூர்வமான மனித நேயமிக்க குடும்பத்தில் நானும் ஒரு அங்கமெனும் போது அதை எண்ணி விய்ப்படைகிறேன்.லயன் குடும்பம் வாழ்க.

    ReplyDelete
  50. நாளுக்கு நாள் அரிதாகி வரும் மனிதத்தை
    நமது சிறு வட்டத்தில் அடிக்கடி காண்பது நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.

    ReplyDelete
  51. //“Lion is a family sir !!" //

    அந்த கடவுள்களுக்கு நன்றி.

    ReplyDelete
  52. " LION is a family Sir". ஒரே வார்த்தையில் எல்லாத்தையும் அடக்கி விட்டாரே..
    இனி ஒவ்வொரு புக்கையும் எடுத்துப் படிக்கும் போதும் இந்த நேசமே மேலோங்கி நிற்க்கும்..
    எங்களை அரவனைத்த்துத் செல்லும் உங்களுக்கு நன்றிகள்.. சார் .i

    ReplyDelete
  53. நேற்றிரவு தான் யுத்த பூமியில் டெக்ஸ் படித்தேன்.... 324 பக்கங்கள் வரையிலும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்... (இடையில் இரவு உணவுக்ககாக சற்றே...). டெக்ஸ் தனது பழைய அனுபவங்களை கார்ஸன், கிட் மற்றும் உள்ளூர் ஷெரீப்-க்கு சொல்வதாக தொடங்குகிறது கதை...

    3 நண்பர்களுடன் தொடங்கும் கதையின் ஆரம்பத்திலேயே 2 ஆக மாறுகிறது. கார்சன் இல்லாத குறையை பூர்த்தி செய்கிறார் இரண்டாமவர் - கதை முழுவதும்.

    இந்த கதையை பொறுத்த வரையில் ஹைலைட்டாக தெரிவது, டமால் டுமீல் என்று சுட்டுத்தள்ளுவதை விட, சமயோசிதமாக திட்டமிடுவதும், பிசகின்றி அதனை செயல்படுத்துவதுமே. உயிருக்கே உலை வைக்கும் சில இடங்களில் கூட டெக்ஸ் திடசித்தமாக செயல்படுவது கேப்டன் டைகரின் கதைகளுடன் ஒப்பிட வைக்கிறது.

    அடுத்த கதையை இனிமேல் தான் படிக்கோனும்...

    ReplyDelete
    Replies
    1. // அடுத்த கதையை இனிமேல் தான் படிக்கோனும்... //
      பனிவனப் படலம் அசத்தும்.....

      Delete
  54. காலவேட்டையர்:

    சற்றேறக்குறைய மர்ம மனிதன் மார்ட்டினை நினைவுக்கு கொண்டு வந்த கதை இது. எதிர்கால ஆட்கள், நிகழ்காலதினரின் நேரத்தை திருடி... நினைத்துப் பார்க்க இயலாத கற்பனை... நல்ல கதை சார். இவ்வளவு நாள் துயில் பயின்றிருந்தாலும், இந்த நேரத்தில் கை கொடுக்க வந்துள்ளது.

    இரண்டு பாகங்களிலும் பல ப்ரேம்கள் அடடே போட வைத்தன. இப்போதெல்லாம் யாராவது கோட் சூட் போட்டு அருகில் வந்தால், அவர்களுடைய பற்கள் சுறாமீன் போல இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றுகிறது காலவேட்டையர்களை எண்ணி... வண்ணத்தில் வந்திருந்தால் நன்றாக இருக்குமென்றாலும், விலையை கட்டுக்குள் வைக்க எண்ணி கறுப்பு-வெள்ளையில் வந்துள்ள கதை. கறுப்பு-வெள்ளையும் அழகே!!!

    இது போன்ற ச.பி (சயின்ஸ் பிக்ஷன்)-களை மேலும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    டெலிபதி உரையாடல்கள்
    விசித்திர துப்பாக்கிகள்
    நேரத்தோடு போட்டி போட்டு செல்லும் வாகனம்
    மெய்நிகர் திரை
    யூலா (ஹிஹிஹி)

    இன்னும் பல ஈர்ப்புகள் நிறைந்த கதை 'கால வேட்டையர்கள்'

    ReplyDelete
  55. பதிவை படிக்க படிக்கவே மனதில் ஏதோ ஓர் இன்ப பாரம் போல் ஓர் உணர்வு...


    நமது காமிக்ஸ் நண்பர்களை நினைத்தால் மிக மிக பெருமையாக உள்ளது சார்..


    என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை..


    வணங்குகிறேன் நண்பர்களே...

    ReplyDelete
  56. அந்த நண்பர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.அவர்களின் பரந்த மனதுக்கு எல்லாம் வல்ல இறைவன் இன்னமும் நிறைய வழங்கிடுவார் 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  57. #Lion is a family sir - இந்த அளவுக்கு ட்ரெண்டிங் ஆகும்னு அந்த பரந்த மனம் படைத்த நண்பரே கூட எதிர் பார்த்திருக்க மாட்டார் தான்!

    மகிழ்ச்சி! அடுத்ததாக #Muthu is a joint family sir - என்பதையும் ட்ரெண்டிங்கில் கொண்டுவந்தால் சீனியர் எடிட்டர் இன்னும் மகிழ்ச்சியடைவார் என்று தோன்றுகிறது!

    ஆங்! ஜூனியர் எடிக்கு ஒரு hashtag இல்லாமலா?!!
    #Junior-Lion is a nuclear family sir!

    ReplyDelete
    Replies
    1. பொறுமை.... பொறுமை...

      ஜஸ்ட் 14மாதங்களில்....

      ""#Muthu is a joint family sir""---முத்து 50வது ஆண்டில் இதை ட்ரெண்டிங் ஆக்குவோம்!!!

      Delete
  58. கர்னல் கிளிப்டன் அடுத்த மாதம் வருவது சர்பிரைஸ், அப்பா கார்ட்டூன் கதை படித்து பல நாட்களாகி விட்டது! கேரட் மீசைக்காரரின் அட்டைப்படம் வழக்கம் போல் வித்தியாசமான கலர் மற்றும் ஒரு சேஸிங் சீனுடன் அருமையாக உள்ளது!

    ReplyDelete
  59. இப்படி கூட நடக்குமா? வாழ்த்துக்கள். நம்ம லயன் ஃபேமிலி னு நினைக்கும் போது பெருமையாக உள்ளது. தொடரட்டும் நம் குடும்ப மனித நேயம்.

    ReplyDelete
  60. டெக்ஸ் தீபாவளி புத்தகம் சும்மா பட்டைய கிளப்பிடுச்சு. குண்டு புக்னா இப்படிதான் இருக்கனும். ஐ லவ் குண்டு புக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு முறை சொல்லுங்க....

      Delete
    2. மறுக்கா,மறுக்கா சொல்லனுமா...!!!

      Delete
    3. அதே....அதே.....!!!
      குண்டு புக் அதுவும் டெக்ஸ் குண்டுபுக் சக்கை போடுபோட்டா.....!!!

      Delete
    4. சக்கைப் போடு போடு இராஜா.....

      Delete

  61. பனிவனப்படலம்......

    கனடிய பனிப்பரப்பில் ஒரு மெல்லிய ரொமாண்டிக் காதல் கதையாக துவங்கி மென்நடை போடும் கதை; போக போக அசாதாரண சம்பவங்களை இணைத்துக் கொண்டு எக்ஸ்பிரஸ் வேகம் எடுக்கிறது.

    கிளியிர்டான்- "தூய பனிப்பரப்பில் முகிழ்த்த விடியல்". தூய பனியின் வெண்மையான மனதைக் கொண்டவள். கதையின் ஜீவநாடி இவளே! கதாசிரியர் கதையை நகர்த்துவது இவளின் வாயிலாக!

    பேரழகி மேரி காம்டன் மேல் வாலிப உள்ளங்கள் பலவும் காதலில் விழுகிறது. மேரியின் உள்ளமோ எஸ்கிமோ நாடோடி நெளடாக்கிடம் தஞ்சம் அடைகிறது.

    கனடிய மேஜர் காம்டனிடம் வழிகாட்டியாக பணி புரிகிறான் நெளடாக். வழக்கம்போல அஸ்தஸ்து காதலை தடுக்க, காதல் ஜோடி சிறகை விரித்து பறக்கிறது.

    மேரியைக் காதலித்த (நமக்கு ஏற்கெனவே அறிமுகமான கர்னல்) ஜிம் பிராண்டன் மேரியின் நலனில் அக்கறை செலுத்துகிறார்.

    வெள்ளை இனப்பெண்ணான மேரிக்கு பழங்குடியினர் வாழ்க்கை முறை செட் ஆகல. மீண்டும் கைடு பணியில் சேர நெளடாக்கிடம் சொல்கிறாள். ஆனா அவன் மறுத்து விடுகிறான்.

    விதி விளையாடுகிறது. மேரியின் அழகே அவளது வாழ்வை சிதைக்கிறது.

    மேரியின் அழகில் மயங்கி அவளை தன் மோக வலையில் வீழ்த்துகிறான் தங்க சேகரிப்பாளன் ரெட் டக்!
    கிளியிர்டானை தலைமுழுகிட்டு மேரி, ரெட்டோடு போய்விடுவிறாள்.

    நெளடாக்கை போட்டு தள்ள கொலையாளிகளை ஏவுகிறான் ரெட். ரெட் டக்-மேரியை தேடி கலிபோர்னியா செல்லும் ஜிம்மை அதிரடியாக சுட்டு விடுகிறான் தீய ஆவியாக உருவெடுத்து உள்ள ரெட்!

    பிழைத்தெழும் ஜிம், ரெட்டை பின்தொடர்கிறார். ஆனா அவன் மேரியை கொன்று புதைத்து விடுகிறான். ஆத்திரத்தோடு ரெட்டை தேடிப்பிடித்து கடற்கரையில் சுட்டு"கொன்று" பழிதீர்க்கிறார் பிராண்டன்.

    ஆனா ஒரு கண்ணை இழந்த ரெட் கனடிய பனிப்பரப்பில் வெண்டிகோ எனும் தீய சக்தி அவதாரமாக உருவெடுத்த செவ்விந்தியர்களை அடிமைபடுத்தி தங்க தேட்டையை தொடர்கிறான்.

    .....................

    ReplyDelete
    Replies
    1. கதை நெடுக சம்பவங்கள் நிறைய...
      விவரிக்க கொஞ்சம் டைம் எடுக்கும்...

      Delete
    2. ஆமா...ஆமா.... சம்பவங்களை விவரிக்காம, லேசா கதையை தொட்டுட்டு போகலாம்னு ஆரம்பிச்சா கதைக்கருவே நீஈஈஈஈஈண்டு கிடக்குது...!!!

      Delete


    3. கிளியிர்டானை வளர்க்கும் பொறுப்பு ஜிம்மின் நண்பரான பிக் ஜீனை சேர்கிறது. ரெட்டின் கொலையாளிகளை தீர்த்துக் கட்டி, சமூக விரோதியாகும் நெளடாக்கை கனடிய போலீஸ் கதை முடிக்கிறது.

      ஆன்மாக்களை விழுங்கும் வெண்டிகோவை காட்டி அடிமைபடுத்திய "அத்னா" இன செவ்விந்தியர்களை கொண்டு, குட்சின் இன செவ்விந்தியர்களை அழித்தொழிக்கிறான், இழந்த தன் ஒரு கண்ணில் தங்க துண்டை வைத்துக் கொண்ட "பொன் விழியான்" ரெட்!

      ஆண்டுகள் பல ஓடுகிறது! எஞ்சிய கடைசி குட்சின் இன கிழவன் ஜிம்மை வரவைக்க செய்தி அனுப்புகிறான் ஒரு பாதிரியார் வாயிலாக. ஆங் அதேதான் பாதிரியாரை போட்டு தள்ளுகிறது பொன் விழி. இறக்கும் தருவாயில் பாதிரியார் அனுப்பும் செய்தி பிராண்டனை பிரிட்டிஷ் கொலம்பியா வரவைக்கிறது.

      பொன் விழியானை கடைசி தடவையாக கொல்ல தனியாக கிளம்புகிறார் ஜிம்.

      ஜிம்மின் கதி என்னவாயிற்று என கவலை கொள்ளும் பிக் ஜீன் நம்ம அரிசோனா சோடி டெக்ஸ் & கார்சனை வரவைக்கிறார்.

      டெக்ஸ் & கார்சன் வருவதற்கு முன்பே கதை கனடிய பனிப்பரப்புக்கு நிகராக நீண்டு ஓடிட்டு இருக்கு...!!!

      பறந்து விரிந்த கனடிய பனிப்பரப்பில் டெக்ஸ் தன் தேடலை துவங்குகிறார்.

      ஜிம்மை தேடிக் கண்டு பிடித்தாரா ???

      கிளியிர்டான் என்ன செய்தாள்???

      ஜிம் தன் காதலியை கொன்ற "பொன்விழி"யை பழிதீர்த்தாரா???

      வெண்டிகோ மர்மம் என்ன???

      அத்னா செவ்விந்தியர் கதி என்னவாயிற்று???

      குட்சியனின் பழி தீர்க்கும் படலம் நிறைவேறியதா???

      பறந்து விரியும் நீஈஈஈஈஈண்ட சாகசம் எல்லா கேள்விகளுக்கும் பதில் தருகிறது!

      பரப்பரப்பான க்ளைமாக்ஸ் காட்சிகள் இடம் பெறும் இறுதிகட்டம் சரசரவென 10ஆயிரம் வாலா......!!!


      Delete
    4. ஸ்காக்வேயில் டெக்ஸ் & கார்சன் அறிமுகம் ஆகும் காட்சியில ஆரம்பிக்கும் கார்சனின் காமெடி வெடிகள் கதை நெடுக சிதறிக் கொண்டே இருக்கின்றன.....,
      கதையின் மெது நடைக்கு உயிர்ப்பூட்டிக் கொண்டே!!!

      நிறைய நேரம் எடுத்துக் கொண்டு உரையாடல்களை தீட்டியுள்ளார் எடிட்டர் சார்.

      கதையின் பனிப்பரப்பில் நம்மை உலவ விட்டுள்ளார் ஓவியர்.
      கனடிய பனியில் மைனஸ்30°டிகிரி நடுக்கத்தில் நாமும் பிரயாணிகள் நெடுகிலும்....!!!

      நின்று நிதானமாக ரசிக்க வேண்டிய ஓவியங்கள்....,

      #பக்கம் 326ன் லில்லோய்ட் கிராமம்.....

      #பக்கம் 343ன் ஜிம் கிளம்பும் காட்சி...

      #பக்கம் 344ல் விரியும் ஸ்காக்வே துறைமுக தோற்றம்...

      #பக்கம் 394ல் கண்ணை பறிக்கும் சில்கூட் கணவாய்...

      #பக்கம் 420ல் லின்டே ஏரியின் போர்ட்ராய்டு ஓவியம்...

      #பக்கம் 471ன் பனிசிகரங்களின் பக்கவாட்டுத் தோற்றங்கள்...

      #பக்கம் 508ல் கைவிடப்பட்ட அத்னா கிராம குடியிருப்பு...

      #பக்கம் 524ன் செங்குத்து சரிவு...சரிவுல கார்சன் நிற்கும் போதே நம் காலில் ஒரு நடுக்கம் பரவும்...

      #பக்கம் 529& 601ன் மஞ்சள் மலையின் கம்பீரம்...ஒரு பக்கம் வர்ணிக்கலாம் அதன் அழகை!

      #பக்கம் 562ன் செங்குத்து பாறை அரண்...

      #பக்கம் 639ன் ஸ்காக்வே மலைத் தொடர்கள்...!!!

      Delete
    5. குறிப்பு:- நம்ம மாதிரி இளசுகளுக்கு மட்டுமே! (கிழங்கட்டைகள் தாண்டிப் போகவும்)

      செவ்விந்தியப் பெண்கள் எப்போதும் அழகு. முந்தைய இதழ்களில் ரசித்து உள்ளோம்.

      இந்த பனிவனப்படலம்ல வரும் இரு அழகிகளை பற்றி சொல்லலனா பெரும் பாவம் வந்து சேரும்.

      அசாத்திய அழகிகளான டானும், சாஸ்கியாவும் பட்டாம்பூச்சிகளாக சிறகடிக்கிறார்கள்.

      அவர்களின் பறந்த விசாலமான "மனசை" பக்கங்கள் 365 & 620ல் தரிசிக்கலாம்! தூரிகையின் ஜாலம்!!!😍😍😍😍😍

      Delete
    6. ஓவராலாக தீபாவளிமலர் 2020
      மிகப்பெரிய மெகா ஹிட்!!!

      பெஸ்ட் பிரசன்டேசன் ஆஃப் த இயர்.

      மீண்டும் மீண்டும் ரசிக்கும் பட்டியிலில் இந்த இதழ் இடம்பெற்றது.

      எடிட்டர் சாரின் உழைப்புக்கு 10/10......!!!!

      Delete
    7. // பக்கம் 524ன் செங்குத்து சரிவு...சரிவுல கார்சன் நிற்கும் போதே நம் காலில் ஒரு நடுக்கம் பரவும்... //
      வாசிக்கும்போது இதை கவனித்து உணர முடிந்தது...

      Delete
  62. “Yes. Lion is a Family.”
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இந்த பாசம், அன்பு, பரோபகார மனம் வேறெங்கும் கிடைக்காது.

    ReplyDelete
  63. நமச்சிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!
    எல்லாம் வல்ல மலைத்தீபத்தின் திருவருளால் நம்ம காமிக்ஸ் நண்பர்கள் எல்லா நலமும் பெறுவார்கள்.

    அருணாச்சலேஸ்வர் மகிமை நம்மை எல்லாம் நலனுடன் வரும் ஆகஸ்டில் சந்திக்க வைக்கும்!
    ஓம் நமச்சிவாய! போற்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  64. யுத்த பூமியில் டெக்ஸ்: வடக்கு மற்றும் தெற்கு ராணுவத்துக்கு இடையில் நடக்கும் யுத்தம். இங்கு எப்படி டெக்ஸ் மற்றும் டிக் பங்கு பெறுகிறார்கள். இந்த யுத்தத்தை டெக்ஸ் மறக்க விருப்புவது ஏன் என அழகான சித்திரங்களுடன் அட்டகாசமான யுத்த தந்திரங்கள் மற்றும் அமர்க்களமான ஆக்சனுடன் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்கள்.

    யுத்தத்தில் பங்கு பெறும் ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு நியாயம் என போரிடும் இடத்தில் தனது எதிரியும் மனிதன் என்று மனிதாபிமானத்தை ஆங்காங்கே டெக்ஸ் காண்பிப்பது ரசிக்க செய்தது.

    டிக் கதையில் இல்லாமல் இருந்து இருந்தால் கதையில் சுவாரசியம் குறைந்து போய் இருக்கலாம். ஆசிரியர் இவருக்கு வசனம் எழுதிய வசனங்கள் கார்சன் இல்லாத குறை போக்கியுள்ளது.

    கதையின் ஆரம்பத்தில் வரும் சலூன் நம் மங் சக் டெக்ஸ் ரசிகர்களுக்கு கிடைக்கும் விருந்து.

    அழகான படங்கள் நிறைவான வசனங்கள் கதைக்கு பக்கபலம்.

    யுத்த பூமி - டெக்ஸ் விருந்து.

    ReplyDelete
    Replies
    1. ///அழகான படங்கள் நிறைவான வசனங்கள் கதைக்கு பக்கபலம்.////

      ----யெஸ்ஸூ....கொஞ்சம் நீண்டு கொண்டே போகும் கதையில் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொள்பவை இவை இரண்டும்.
      டயலாக்குகள் கதாசிரியர் & ஓவியரோடு போட்டி போடுபவை!

      Delete
  65. ///“Lion is a family sir !!"///

    இதுதான் மனிதநேயம் என்பது,
    முகமறியா நண்பர்களுக்கும் & தங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  66. மரியாதைக்குரிய செனா அனா ஜி@

    பனிவனப்படலம்....

    சில சந்தேகங்கள்,

    1.பனிச்சரிவில் டெக்ஸ் புதையுண்டு போகிறார். டானின் நாய் அவரை கண்டுபிடிக்கிறது. டானும் ,பிக்ஜீனும் பனிக்குவியிலில் இருந்து டெக்ஸை மீட்கிறார்கள். பனியில் புதையுண்டு போகும் மனிதன் எத்தனை நேரம் தாக்குப்பிடிக்க இயலும்??? நிஜத்தில் அப்படி பிழைக்க வாய்ப்பு உள்ளதா???

    2.டெக்ஸ் & கார்சன்-பிக் ஜீனிடம் உரையாடும்போது இந்த சீசனில் -30°டிகிரி குளிர் அடிக்கிறது. சில சமயம் -60°டிகிரி வரை குளிர் அடிக்கும் என சொல்கிறார். -30°ல் அவர்கள் அணிந்துள்ள உடைகள் போதுமானவைகளா??? -60°ல் அதே ஆடைகளோடு ஜீவிக்க இயலுமா???

    3.அலாஸ்கா பகுதி 1949ல் தான் அமெரிக்க மாகாணமாக அறிவிக்கப்பட்டது போல. நம்ம கதை நடக்கும் காலகட்டத்தில் அமெரிக்க பகுதி என அழைப்பது பொருத்தமானதா???

    ReplyDelete
    Replies
    1. 1.பனிச்சரிவில் டெக்ஸ் புதையுண்டு போகிறார். டானின் நாய் அவரை கண்டுபிடிக்கிறது. டானும் ,பிக்ஜீனும் பனிக்குவியிலில் இருந்து டெக்ஸை மீட்கிறார்கள். பனியில் புதையுண்டு போகும் மனிதன் எத்தனை நேரம் தாக்குப்பிடிக்க இயலும்??? நிஜத்தில் அப்படி பிழைக்க வாய்ப்பு உள்ளதா???

      வட அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது நீரின் வெப்பம் மைனஸ் இரண்டு ..பாதுகாப்பு ஆடைகள் இல்லாமல் நீச்சல் தெரிந்திருப்பினும் மிதவையில் தொத்தி கொண்டு இருப்பினும் அவர்கள் உயிரோடு இருந்தது 15 – 3௦ நிமிடங்கள் .
      பாதுகாப்பு ஆடைகள் இருப்பதாக இருப்பினும் பனிச்சரிவில் மூச்சு விட முடிகிறதா என்பதே பிரச்சினை
      Surface avalanche vs deep avalanche [மேலாக அல்லது ஆழமான ]
      Dry ice vs wet ice [ உலர்ந்தபனி அல்லது ஈரமான பனி]
      Loose ice vs slab ice [ உதிரி பனி துணுக்குகள் அல்லது பனிப்பாளங்கள் ]
      டெக்ஸ் மேல் மூடியது முதல் பகுதியில் வருவது போல் மேலான, உலர் ,பனி துணுக்குகள் எனில் சில நிமிடங்கள் வரை ஹைப்போதெர்மியாவின் மோசமான தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் ..
      ஆனால் டெக்ஸ் எவ்வளவு உடலுறுதியோடு இருப்பினும் பனிக்கு அவ்வளவு பழக்கமில்லாதவர் என்பதால் –இது முக்கிய காரணி- ஹைப்போதெர்மியாவின் மூன்றாம் நிலைக்கு போவதாக கதையில் காட்டப்பட்டுள்ளது [ டெக்சாசில் பனிப்பொழிவு அபூர்வம் ]
      ??? நிஜத்தில் அப்படி பிழைக்க வாய்ப்பு உள்ளதா???
      இல்லை என்பதே நிஜம்

      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      2.டெக்ஸ் & கார்சன்-பிக் ஜீனிடம் உரையாடும்போது இந்த சீசனில் -30°டிகிரி குளிர் அடிக்கிறது. சில சமயம் -60°டிகிரி வரை குளிர் அடிக்கும் என சொல்கிறார். -30°ல் அவர்கள் அணிந்துள்ள உடைகள் போதுமானவைகளா??? -60°ல் அதே ஆடைகளோடு ஜீவிக்க இயலுமா???

      எடிட்டர் இதற்கு மிக சிறப்பாக பதில் சொல்ல முடியும் .. அவரது தனிப்பட்ட அனுபவங்களை நாமே படித்திருக்கிறோம் ..
      Wind chill factor - டெக்ஸ்& கோ பயணிக்கையில் காற்றின் வேகம் எவ்வளவு என்பதை பொறுத்தது –மைனஸ் 3௦ டிகிரி செல்சியசில் காற்று வேகம் பொறுத்து மூக்கு வாய் மூடப்படாவிடில் மூக்கு அழுகி போய் விடும் .[ gangrene ]
      இவ்வளவு குளிர் காற்று நுரையீரலில் நுழையுமாயின் விரைவில் நிமோனியா வந்து சேரும் ..
      அத்தனை பாதுகாப்பு ஆடைகளும் –காகில் என்கிற கண்ணாடி உட்பட – பாதுகாப்பு ஆடைகள் அனைத்தும் அக்குழு அணியுமாயின் கதையில் படங்களாக வெறும் துணிமூட்டைகள்தான் தென்படும் ..
      கனடாவில் மைனஸ் 63 டிக்ரி செல்சியஸ் ஒருமுறைதான் பதிவாகியுள்ளது..
      டெக்ஸ் ,கார்சன் போன்ற குளிருக்கு அறிமுகமில்லாதவர்களுக்கு மிகவும் கஷ்டமான நிலைதான் ..

      Delete
    2. மூன்றாவது கேள்விக்கு இரவு வருகிறேன்

      Delete
    3. நன்றிகள் பொருளர் ஜி🙏🙏🙏🙏

      அற்புதமான துறை சார்ந்த விளக்கங்கள்!
      தேவையான தகவல்களை தேடிப்பிடித்து தொகுத்து அளித்த தங்களது டெடிகேசன் வேற லெவல்!

      3வது விளக்கத்திற்கு காத்திருக்கிறேன்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. //.அலாஸ்கா பகுதி 1949ல் தான் அமெரிக்க மாகாணமாக அறிவிக்கப்பட்டது போல. நம்ம கதை நடக்கும் காலகட்டத்தில் அமெரிக்க பகுதி என அழைப்பது பொருத்தமானதா???///
      ஆம் ..என்பது சுருக்கமான பதில் ..

      1867 –அக்டோபர் 18 அலாஸ்காவில் இருந்த சுமார் நானூறு ரஷ்ய குடும்பங்களில் ஒரு வீட்டில்

      திருமதி ரமநோவ் : என்னங்க இன்னிக்கு சனிக்கிழமைதானே ? அந்த மீன் வியாபாரி இன்னிக்குதானே வர்றதா சொல்லியிருந்தாரு?
      ரமநோவ் : [ விரக்தியுடன் ] இன்னிக்கும் வெள்ளிக்கிழமைதான் !!!

      திருமதி ரமநோவ் : என்ன உளர்றீங்க ? நேத்திக்கு அக்டோபர் 7 வெள்ளி . இன்னிக்கு அக்டோபர் 8 .சனி

      ரமநோவ் : [கூடுதல் விரக்தியுடன் ] இன்னிக்கு அக்டோபர் 18 ..வெள்ளிக்கிழமை

      திருமதி ரமநோவ் : மனுஷருக்கு புத்தி மாறிப்போச்சா ??? என சத்தமாகவே முணுமுணுத்தாள்

      ஆனால் ரமநோவ் – ன் புத்தியில் எவ்வித கோளாறும் இல்லை ...

      அவருக்கு நியூ ஆர்ச்சேஞ்சலில் [ இப்போது சிட்கா] ரஷ்ய கொடி இறக்கப்பட்டு அமெரிக்க கொடி ஏற்றப்பட்டுவிட்டது என தெரியும் .

      ஜூலியன் காலண்டர் இனி புழக்கத்தில் இல்லை

      கிரிகோரியன் காலண்டர்தான் இனி உபயோகப்படும் ..

      அலாஸ்காவில் இன்டர்நேஷனல் டேட் லைன் மாறிவிட்டது

      355 நாட்களை மட்டுமே கொண்டிருந்த ஜூலியன் காலண்டர்க்கும்
      365 சொச்சம்நாட்களை கொண்டிருந்த கிரிகோரியன் காலண்டர்க்கும் அப்போது வித்தியாசம் 11 நாட்கள்

      இந்த பதிவு எழுதும் நாளில் நவம்பர் 3௦ எனில் ரஷ்ய கிழக்கத்திய ஜூலியன் காலண்டர்படி -அமெரிக்காவில் இதே நாள் இருப்பின் – இன்று நவம்பர் 17..
      பதிமூன்று நாள் வித்தியாசம் ...

      Delete
    6. அலாஸ்கா --- அமெரிக்காவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணம் ..அமெரிக்க நிலப்பரப்பில் 17% தன்னகத்தே கொண்டிருப்பது

      அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மாகாணமான டெக்சாஸ் ,மூன்றாவது பெரிய மாகாணமான கலிபோர்னியா மற்றும் மான்டானா பகுதியை சேர்த்தால் கூட அதனை விட பெரியது ..
      அலாஸ்காவின் விசித்திரங்களில் ஒன்று அமெரிக்க மாகாணங்களின் மேப்பில் அலாஸ்காவை பார்க்க முடியாது என்பதுதான்..

      மேப்பின் இடது கீழ் மூலையில் கனடிய நிலப்பரப்புடன் ஒரு சிறிய படம் கூடுதலாக இருக்கும் .. [ ஹவாய் தீவுகள் மற்றொன்று]

      ஆசியாவில் இருந்து வட அமெரிக்க அலாஸ்காவுக்கு –[ மூலப்பெயர் Unalaska –தீபகற்பத்தின் அருகில் எனப் பொருள்] ரஷ்யர்கள் வந்ததின் நோக்கம் குளிர்கால ஆடைகளுக்கான உரோமங்களை பசிபிக் கடல் வாழ் பிராணிகளை வேட்டையாடி விற்பதே ..1740-களில்

      ஒரு நூற்றாண்டு காலம் கம்பிளி உரோம விற்பனை செழித்தபோதும் 1840-களில் பிரிட்டிஷ் வியாபாரிகள் மற்றும் ஒரேகானில் இருந்து ஹட்சன் பே கம்பெனி ஆகியவர்களிடம் ரஷ்யர்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிட்டது ..

      கிரிமீயா யுத்தத்தில் [1853-1856] பிரிட்டிஷ் படையிடம் தோல்வியுற்று பொருளாதார நெருக்கடியில் இருந்த [நிக்கோலஸ்I இறந்து அலெக்ஸாண்டர்
      II பேரரசராக பதவியேற்ற நிலையில்] ரஷ்ய பேரரசிடம் அலாஸ்காவில் ராணுவத்தை நிறுத்த பண பலமோ , படைபலமோ இல்லை ..

      எனவே அலாஸ்காவை வளரும் நிலையில் இருந்த அமெரிக்காவிடம் விற்க இசைந்தது ..

      மேற்கு நோக்கிய விரிவு என்ற வகையில் இதற்காக துடிப்புடன் இருந்த அமெரிக்காவிடம் பேச்சு வார்த்தைகள் 1859-லேயே துவங்கி விட்டன ..
      ஆனால் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் இதற்கு [1861- 1865] தடையாக வந்தது ..

      சிவில் வார் முடிந்தவுடனே அப்போது செகரட்டரி ஆப் ஸ்டேட் ஆக இருந்த வில்லியம் சீவர்ட் ரஷ்ய பிரதிநிதிகளுடன் 1867 மார்ச் மாதம் பேச்சுவார்த்தை துவங்க ஏப்ரலில் செனட் அங்கீகாரம் வழங்க மே மாதம் அப்போதைய பிரசிடன்ட் ஆண்ட்ரூ ஜான்சன் காசோலையில் ஒப்பமிட பூர்வாங்க பணிகள் நிறைவுபெற்று 7.2 மில்லியன் டாலர்கள் –ஒரு ஏக்கருக்கு 2 சென்ட் என சுமார் 6 லட்சம் சதுர மைல் பரப்பு அலாஸ்கா அக்டோபர் மாதம் அமெரிக்கா வசம் வந்தது ..

      அலாஸ்கா மற்ற எந்த அமெரிக்க மாகாணங்கள் உடனும் நில வழியாக தொடர்பில் இல்லாத மாகாணம்

      மற்றொன்று ஹவாய்

      Delete
    7. அலாஸ்காவின் கிழக்கு எல்லை பெரும்பாலும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம்தான்...

      நிலவழியாக அலாஸ்கா செல்ல கனடா எல்லைக்குள் நுழைந்துதான் அமெரிக்கர்கள் செல்லவேண்டும்
      நியாயமாக கனடாதான் அலாஸ்காவை வாங்கியிருக்க வேண்டும்

      ஆனால் கனடா அப்போது பிரிட்டிஷ் காலனி பகுதி ..

      ஒட்டமான் பேரரசு பலவீனமுற்று இருந்த நிலையில் அங்கு நுழைந்து மத்திய கிழக்கு , மற்றும் ஐரோப்பாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பிய ரஷ்ய பேரரசின் முயற்சிகளை பிரிட்டிஷ் தலைமையிலான கூட்டுப்படைகள் முறியடித்ததால் [கிரிமீயா யுத்தம் ] பிரிட்டிஷ் அரசை தனது ஜன்ம விரோதியாக ரஷ்யா கருதி வந்த நிலை அப்போது ..
      எனவேதான் அமெரிக்காவுக்கு வழங்கியது

      வாங்கி சுமார் முப்பது ஆண்டுகள் வரை அமெரிக்கா அதை கண்டுகொள்ளவில்லை

      1867- 1877- அமெரிக்க ராணுவம்

      1877-1879- அமெரிக்க ட்ரெஷரி

      1879-1884 - அமெரிக்க கப்பல்படை

      ஆகியோரின் மேற்பார்வையில் இருந்த அலாஸ்கா அமெரிக்க பகுதி என அழைக்கப்பட்டது ( DEPARTMENT OF ALASKA] இக்காலகட்டத்தில்

      1884- 1912 வரை அலாஸ்கா மாவட்டம் என அழைக்கப்பட்டது

      1912 – 1959 வரை அலாஸ்கா டெரிட்டரி என அழைக்கப்பட்டது

      1959 அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றானது ..

      நமது கதை நடக்கும் காலத்துக்கு டிபார்ட்மென்ட் ஆப் அமெரிக்கா பொருத்தமாக வருகிறது ..

      சில்க்கூட் பாஸ் , வொயிட் பாஸ் பற்றி டெக்ஸ் & கோ பேசுகையில் லக்கி லுக் கதை மூலம் நமக்கு மிகவும் அறிமுகமான க்லோண்டிகே –யுகான் நதி பகுதி -கோல்ட் ரஷ் பற்றி ஏதும் பேசவில்லை என்பதால் [1896-1899 ] இதற்கு முந்தைய கால கட்டத்தில் டெக்ஸ் கதை நடப்பதை யூகிப்பது எளிது...

      அலாஸ்காவை வாங்கியது முட்டாள்தனம் என கருதப்பட்டதை பின்னாட்களில் அங்கு தங்கம் கிடைத்தபோது ,அதன் எண்ணெய் வளத்தையும் ,கடல் வளத்தையும் அமெரிக்க பெற்ற போது ,அலாஸ்காவின் பூகோள இருப்பிடம் காரணமாக ஆசிய பசிபிக் பிராந்திய பெரும் சக்தியாக உருவெடுக்க வைத்தபோது தோன்றிய எண்ணங்கள் மக்கள் மத்தியில் மறக்க வைத்தன .


      பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஒரே தீவு மாகாணமான ஹவாய் கூட 1893-ல் முடியாட்சி கவிழ்க்கப்பட்டு அமெரிக்காவோடு இணைக்கப்பட்டபோதும் 1959 – ஆகஸ்டில் அமெரிக்க ஐம்பதாவது மாகாணமாக அறிவிக்கப்படும்வரை ஹவாய் –அமெரிக்கப்பகுதி என்றே அழைக்கப்பட்டது

      கொசுறு : WIKI என்றழைக்கப்படும் இச்சொல் ஹவாய் வார்த்தை ..விரைவாக –QUICK –என பொருள்படுவது

      Delete
    8. வாவ்...வாவ்... ஃபெண்டாஸ்டிக் பொருளர் ஜி!

      எழுந்து நின்று கைதட்டுகிறேன் பலமாக.......👌👌👌👌👌👌👌👌👌

      அலாஸ்கா பற்றிய அத்தனை தகவல்களை வரிசையாக தந்து விட்டீர்கள்.
      அருமையான பணி!

      அலாஸ்கா வரலாற்றையும் போனஸாக அறியச் செய்து விட்டீர்கள்.

      அலாஸ்கா வரலாற்றை படிக்கும்போதே, நிலத்தோடு தொடர்புடைய கனடாவுக்கு ஏன் விற்கபடவில்லை??? எனத் தோன்றும் ஐயத்தை அங்கேயே தெளிவு படுத்தி விட்டீர்கள்.

      சிறப்பான பதிவு!

      நம்ம கதை நடக்கும் காலத்தை துல்லியமாக கணித்து விட்டீர்கள்! எதிர்பாரா சஸ்பென்ஸ் இது. செம.


      Delete
    9. அலாஸ்கா பின்னாளில் இத்தனை முக்கிய கேந்திரமாக மாறும் எனத்தெரிந்து இருந்தால் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி இருக்க முடியாது, அமெரிக்காவால்...!!!

      கனடாவுக்கு அலாஸ்கா பெண்ணை கட்டிக்க கொடுத்து வைக்கல... வடை போச்சே!ஹூம்.

      Delete
  67. சர்பத்தின் சவால் - ஸ்நேக் வழக்கமான ஸ்பைடர் சந்திக்கும் எதிரிகளை விட வலிமையானவன் மற்றும் வித்தியாசமானவன்.

    கதையின் நடுவே ஸ்பைடர் தனது பழைய எதிரிகளுடன் போரிடும் போது மாட்டிக்கொண்டு முழிக்கும் போது ஸ்நேக் வந்து காப்பாற்றுவது ஏன் இவனின் நோக்கம் என்ன இவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்விகளுடன் விறுவிறுப்பாக செல்கிறது.

    ஸ்பைடரின் பழைய எதிரிகளும் வலிமையாவர்களாக காட்டியது ரசிக்க செய்தது.

    ஸ்பைடரை வழக்கமான திமிர் தனத்துடன் ஆனால் அதேசமயம் கொஞ்சம் இயல்பான கதாநாயகனாக காண்பித்தது கதையில் ஆங்காங்கே தென்படும் பூச்சுற்றலை கதையோடு ஒன்றச்செய்தது எனலாம்.

    ஸ்நேகின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பிரமிக்க செய்தது.

    ஸ்நேக்கை ஸ்பைடர் வெல்லும் காட்சி சைத்தான் விஞ்ஞானி கதையின் இறுதி காட்சியை நினைவுபடுத்தியது.

    சித்திரங்கள் அருமை. ஸ்பைடர் எதிரிகளுடன் மோதும் காட்சிகள் மற்றும் அளவான வசனங்கள் இந்த நீளமான கையை தோய்வில்லாம் கொண்டு போனதற்கு ஒரு ப்ளஸ் என சொல்லலாம்.

    சர்பத்தின் சவால் - ஸ்நேக் ஸ்பைடருக்கு சரியான சவால்.

    ReplyDelete
  68. சந்தாதாரர்களுக்கு இறப்பு காப்பீடு,விபத்து காப்பீடு ₹3 இலட்ச ரூபாய்க்கு எடுத்து விடலாம் குரூப் இன்சூரன்ஸ் வழியாக . மொத்தமாக எடுப்பதால் ₹600 முதல் 750 வரை வருட பீரிமியம் வரும். 500 பேருக்கு சேர்த்து எடுக்கும் பட்சத்தில் 40% டிஸ்கவூண்ட் கிடைக்கும். நண்பர்கள் கொடுக்கும் பட்சத்தில் இது சாத்தியமே.

    ReplyDelete
  69. Pfb and டெக்ஸ் வி. விமர்சனம் சும்மா பின்னரீங்க.சூப்பர். படித்த புத்தகத்தின் குறை நிறைகளைஇது போல் ஒவ்வொருவரும் தமது பார்வையில்விமர்சிப்பதைபடிக்கும் போது புத்தகம் மனதினில் ஒரு இனியநினைவாக நிறைகிறது. வானம் வசப்படும் புத்தகத்தைப் பற்றியும்டெக்ஸ் ஜி இதுபோல் பக்கம்வாரியாக சிறப்பம்சங்களை விமர்சித்தால்பார்த்துமகிழ ஸாரி படித்து மகிழகாத்திருக்கிறேன் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ராஜசேகரன் ஜி.

      அமாயாவை மீண்டும் பார்த்து ரசிப்போம்; விமர்சனம் தானே செய்துடலாம்.

      Delete
    2. அமாயா ஒரு தாராள ராணி :-)

      Delete
  70. @ ALL : அன்பின் பிரவாகங்கள் தொடர்கின்றன !! இன்று பகலில் நம் நண்பர்களும் இன்னொருவர் ஒரு ஐந்திலக்கத் தொகையினை நண்பர் JSK குடும்பத்திற்கென அனுப்பியது ஒரு பக்கமெனில், வலைப்பக்கங்கள் ; FB இத்யாதிகளுக்குள் தலையே நுழைக்கா இன்னொரு வாசக நண்பர் தனது பங்காய் ஒரு தொகையினை அனுப்பியிருக்கிறார் !! Phew !!!

    JSK எங்கிருப்பினும் நிச்சயமாய் புன்னகைப்பார் என்று நம்புவோம் !!

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்வதென்றே தெரியல சார். மனிதநேயம் புதிய பரிணாமம் எடுத்து உள்ளது.
      வாழும் கடவுளர்களுக்கு பணிவான வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏

      Delete
    2. இரக்கம் கடலளவு உள்ள நண்பர்களுடன் காமிக்ஸ் எனும் கப்பலில் பயணிப்பதற்க்காக பெருமைப்படுகிறேன்

      Delete
  71. கூற வார்த்தைகளில்லை 🙏

    ReplyDelete
  72. பரோபகார முகமறியா நண்பர்களுக்கு சுரம் தாழ்ந்த நன்றிகள் கோடி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😰

    ReplyDelete
  73. செனா. அனா. அலாஸ்காவைப் பற்றியும் எழுதுகிறார். கபஞ்சலப் பறவை பற்றியும் எழுதுகிறார். காமிக்ஸூம்எழுதுகிறார்வாசகர்களில் இவர் ஒரு ... சுஜாதா கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  74. இன்னிக்கு 1 ஆம் தேதின்னு தலைவர் சொல்லச் சொன்னார் சார்......

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு 2ம் தேதி என சேலம் குமார் சொல்ல சொன்னார் சார் :-)

      அப்புறம் நாளை மறுநாள் 3ம் தேதி என விஜய் சொல்ல சொன்னார் சார் :-)

      Delete
    2. சார் இந்த மாதம் 10 ஆம் தேதி போல புத்தகங்கள் வர வாய்ப்பு இருக்கா சார்????

      Delete
    3. 9 தேதி அனுப்புனா ஒத்துக்க மாட்டீங்களான்னு தலைவர் கேட்கச் சொன்னார் குமார்....!!!

      Delete
    4. எல்லா புத்தகங்களையும் 3ம் தேதி அனுப்பினால் நீங்கள் படிக்க மாட்டிங்களா என ஆசிரியர் உங்களிடம் கேட்க சொன்னார் அறிவரசு :-)

      Delete
    5. எல்லா புத்தகங்களையும் சீக்கிரமா அனுப்பனும்தான் ஆசிரியர் அதிகம் இங்கே வரலை போல...
      அதனால் சர்ப்ரைஸா ஏதாவது நடக்கும்னு நம்புவோம்...

      Delete
  75. காலவேட்டையர்கள் இரண்டாம் அத்தியாயம் இன்னும் படிக்கவில்லை. அதே போல் பனிவனப் படலம் இன்னும் பாதி கதை படிக்க வேண்டி இருக்கிறது. இந்த வாரத்திற்குள் இவைகளை படித்து முடிக்க வேண்டும். இது எல்லாம் படித்த பிறகுதான் நான் ஆசிரியருடன் அடுத்து புத்தகங்கள் எப்போது அனுப்புவீங்க என கேட்க முடியும் :-)

    இத எதற்கு சொல்ல்கிறேன் என்றால் மேலே போட்ட பின்னூட்டம் கண்டிப்பாக பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் இல்லை என்பதற்கே ;-)

    ReplyDelete
  76. லயன் ஆண்டு மலர்

    பொன் தேடிய பயணம்
    ——————————
    செம கதை. டயலாக்குகள் நிறைய சிரிக்க வைச்சுது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது 9.5/10

    ஒரு கௌபாய் கலைஞன்:

    பல இடங்களில் வசனங்கள் சிரிக்க வைத்தாலும் கதை என்னமோ ஸ்லோ தான். 7/10

    ReplyDelete
    Replies
    1. அட்டைப்படத்துல செய்திருந்த நகாசு வேலைகள் எல்லாமே சூப்பர்.

      Delete
    2. பொன் தேடிய பயணம் இந்த வருடத்தின் டாப் கதைகளில் ஒன்று.

      Delete
  77. இன்னைக்கு தேதி இரண்டுண்ணுஞானும் சொல்லரேன் சார்நாளைக்குதேதி மூணுங்க சார்.நவம்பர்ல12ம்தேதியே புத்தகம் கைக்கு கிடைக்கசெய்தீங்க டிசம்பர்ல7ம்தேதியே கிடைக்கசெய்தீங்கன்னா அடுத்த மாதம்புத்தாண்டண்ணிக்கேபுத்தகம்கைக்கு கிடைக்க செய்து விடலாம் வேலை கொஞ்சம். சுலபமாகிவிடும்என்றநல்ல எண்ணத்திலேயே இந்தப்பதிவுங்க சார். ஹிஹிஹி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. எனது எண்ணத்தை அப்படியே வார்த்தைகளில் வடித்த நண்பர் கரூர் ராஜசேகரன் அவருக்கு நன்றி நன்றி நன்றி.

      Delete
    2. இராஜசேகர் ஜி ம்ம்ம்ம்ம் அசத்துங்க...!!!

      Delete
  78. எதிரிகள் ஓராயிரம்
    ——————————

    இளம் தல ஹேட்ரிக் அடித்திருக்கிறார். கதை ஆறாம் பக்கத்தில சரமா வெடிக்க ஆரம்பிச்சது கடைசிப் பக்கம் வரை வெடிச்சிகிட்டே போகுது.

    இந்த மாதிரிக் கதைகள் மறு வாசிப்புக்கு அடிக்கடி உள்ளாகும். படிக்கும் வழக்கத்தையும் தொடர இந்த மாதிரி கதைகள் மிகவும் உதவும்.

    டேஷாவை முன்னட்டைல போடாம விட்டதுக்கு தனியா கண்டனங்களை தெரிவிச்சிக்கறேன்.

    மொழிபெயர்ப்பும் கதைக்கும் கேரக்டர்களுக்கும் ஏற்ற வகையில் இலகுவான வார்த்தைகளால் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. // டேஷாவை முன்னட்டைல போடாம விட்டதுக்கு தனியா கண்டனங்களை தெரிவிச்சிக்கறேன்.// +1000000

      Delete
  79. கண்ணான கண்ணே
    ————————-
    படிக்க பத்து நிமிசந்தான் ஆச்சு. ஆனா விமர்சனம் எழுத நிறய நேரம் வேண்டும். அது வரைக்கும் அடுத்த கதைக்கு போறதா இல்லை.

    ReplyDelete
    Replies
    1. //அது வரைக்கும் அடுத்த கதைக்கு போறதா இல்லை // போக முடியாது.

      எடிட்டர் சார் கேட்க ஆரம்பிக்கும் முன்பு நானே ஆரம்பித்து விடுகிறேன்

      இந்த வருடத்தின் டாப் கதை எது???

      என்னை பொறுத்த வரை இந்த வருடத்தின் மிகச் சிறந்த கதை கண்ணான கண்ணே தான். அந்த கிளாரா ஏதோ நம் பக்கத்து வீட்டு சிறுமி போல மனதில் இடம் பிடித்து விட்டாள்.

      Delete
    2. இந்த வருடத்தின் டாப் கதை எது???

      தனித்திரு தணித்திரு

      Delete
  80. பலரையும் படிக்க வைத்தவரை தாமதமாகப் படிக்க வைத்த கொரானா மேல் கடும் கோபம் வருகிறது.. கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  81. கண்ணான கண்ணே
    ———————————

    ஒருவர் இறக்கும் போது அவரை விரும்புவர்கள் அவராது இழப்பால் எப்படி வருந்துவார்கள் என்பதை ஒரு சிறுமியின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் பெரியவர்களுக்கான கதை. இதை சிறுவர்களும் படிக்கலாம்.

    க்ளாராவின் five stages of grief படிப்பவர் மனதையும் சிறிதாவது கலங்கச் செய்யும்.

    இதைப் படித்த ஏதாவது ஒரு பெற்றோர் தனது குழந்தைகள் தான் மறைந்தால் இப்படித்தான் சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து தனது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றி அமைக்க முயன்றாலே இக்கதைக்கு கிடைத்த வெற்றி தான்.

    ஓவியங்கள். சிறுமியின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதால் சிறுமிகள் வரைந்த ஓவியம் போலவே. ஆனாலும் மம்மியின் முகத்தில் அதிர்ச்சி, சோகம், நோயின் அயர்ச்சி, டாடியின் இயலாமை, வருத்தம், பாட்டியின் கவலை, க்ளாராவின் அப்பாவித்தனம், கோபம், மறுப்பு கனவில் வரும் பொம்மைகள் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகள், அரக்கனின் முகத்தில் தோன்றும் குரூரம் என ஓவியை வித்தை காட்டியிருக்கிறார்.

    மொழி பெயர்ப்பு. வசனங்கள் எல்லாமே ஒரு சிறுமி எப்படி பேசுவாளோ அல்லது ஒரு சிறுமியிடம் எப்படி மற்றவர்கள் பேசுவார்களோ அப்படி மிக யாதர்த்தமாக இருக்கிறது. இந்த கதைக்கு இதை விட சிறப்பாக செய்ய முடியாது.

    எளிதில் என்னுடன் ரிலேட் பண்ண முடிந்த நிறைவான படைப்பு. ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. // இதைப் படித்த ஏதாவது ஒரு பெற்றோர் தனது குழந்தைகள் தான் மறைந்தால் இப்படித்தான் சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து தனது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றி அமைக்க முயன்றாலே இக்கதைக்கு கிடைத்த வெற்றி தான். //

      +1

      Delete
    2. அருமையான அழகான விமர்சனம் ஷெரீஃப். I love you

      Delete
    3. 100% True.. Any child lost their one or both parent can really relate to this... The story has lot of hidden meanings....The message is unique one. Hats off to the Editor for bringing this to Tamil

      Delete
  82. அநேகமா ஷெரிப்போட அடுத்த விமர்சனம் சூப்பர் சர்க்கஸ் இல்லேன்னா பயங்கர பொடியன் , ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி இப்டி எதனா இருக்கலாம்னு நினைக்கறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. 🤣🤣🤣 சர்ப்பத்தின் சவாலை ஆரம்பிச்சிருக்கேன். சமாளிக்க முடியாத சவாலா இருக்கு.

      Delete
    2. பயப்படாதீய...ஸ்பைடர் எவ்ளோ பெரிய சவாலையும் சமாளிப்பான்...தைரியமா படிங்க...ஸ்பைடருக்குதான் வெற்றி

      Delete
  83. சர்ப்பத்தின் சவாலை சமாளிக்க முடியாமல் சரணாகதி அடைந்து விட்டேன்.

    ReplyDelete
  84. பிரிவோம் சந்திப்போம்
    ————————————
    ஆரம்ப பக்கங்கள் மெதுவாக நகர என்னடா இது ஸ்பைடரே தேவலாம்னு சொல்ல வைச்சிருவாங்களோன்னு ஒரு அச்சம். போகப் போக கதை சூடு பிடிக்கலன்னாலும் வித்யாசமான பாதையில் சென்றதென்னவோ நிஜம்.

    நட்பிற்காக பொறுப்பேற்றல், நட்பிற்காக அபாயமேற்றல், பணத்திற்காக கொள்ளை, பணத்திற்காக துரோகம், வன்கொலை புரிதல், மற்றும் கடமைக்காக தியாகம் என மனித கணங்களின் பல் வேறு பரிணாமங்களை கதை தொட்டு சொல்கிறது. கதையின் முக்கியமான திருப்பம் எதிர்பாராமல் ஏற்படும் விபத்து, அது சம்பந்தமாக பல் வேறு கதை மாந்தர்களின் வினை மற்றும் எதிர்வினைகளின் விளைவே.

    முடிவு சுபமா சோகமா என்பது படிப்பவர்களின் மனநிலையைப் பொறுத்து. 48 பக்கங்களில் முடித்திருந்தால் கதை இன்னும் வேறு தளத்தை அடைந்திருக்கும்.

    ஒவ்வொரு உற்சாகமான ஹலோவிற்கு பிறகும் ஒரு சோகமான குட்பை உண்டு என்பார்கள். சோகத்திலும் சுகமிருப்பதை உணர்ந்தால் கதையை நன்றாகவே ரசிக்கலாம்.

    எனக்கு பிடிச்சிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. // ஒவ்வொரு உற்சாகமான ஹலோவிற்கு பிறகும் ஒரு சோகமான குட்பை உண்டு என்பார்கள். சோகத்திலும் சுகமிருப்பதை உணர்ந்தால் கதையை நன்றாகவே ரசிக்கலாம். //

      Yes.

      Delete
    2. பிரிவோம் சந்திப்போம்!

      கண்ணான கண்ணே!

      பொன் தேடிய பயணம்!

      2132 மீட்டர்!

      பந்தம் தேடிய பயணம்!

      மா துஜே சலாம்!

      பனி வன படலம்!

      வின்டர் special (Tex free book)

      ---2020 இன் டாப் 3 ல வர நிறைய போட்டி உள்ளது....!!!

      Still இன்னும் நிறைய புக்ஸ் வெயிட்டிங்...!!

      Exciting year தொடருது...!!!

      உங்கள் தொடர் விமர்சனங்கள் எல்லா இதழ்களை நினைவில் கொண்டு வருகிறது.
      தொடருஙகள் மஹி!!!
      👌👌👌👌👌👌👌👌

      ---STV

      Delete
    3. நில் கவனி வேட்டையாடு

      பொன் தேடிய பயணம்

      பனியில் ஒரு குருதிப் புனல்

      இன்னும் வரவேண்டிய

      யுகம் தாண்டி ஒரு யுத்தம்

      அழகாய் ஒரு அகதி

      பிரளயம்

      Detective special

      தகிக்கும் பூமி

      Surprise Maxi-6 (cartoon)

      இருக்கு திருவிழா இன்னும் இருக்கு

      Delete
  85. கணங்களின்- குணங்களின்

    ReplyDelete
  86. அலைகடலில் அதகளம்
    ————————————
    டப்பாபாலிக் இந்த தடவை பரவாயில்லைன்னு சொல்லலாம். நேர்கோட்டுக் கதை. எந்த சிரமமும் தராம எந்த திருப்பமும் இல்லாம சீராப் போகுது. ஒருக்கா படிக்கலாம்.

    ReplyDelete
  87. @ ஷெரீப்

    கதைகளை (வேறு வழியில்லாமல்) லேட்டாகப் படிக்க நேர்ந்தாலும், ஆர்வத்துடன் நீங்கள் எழுதும் இந்த நறுக்-சுறுக் விமர்சனங்கள் ரொம்பவே ரசிக்க வைத்திடுகிறது!!

    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜி. கதைகளைப் படிக்கும் போது என்ன தோணுதோ அதை எழுத ட்ரை பண்றேன். நீங்க, ஈவி, செனா, ரவிடி, பரணி, ஜிபி இன்னும்மற்றும் பலர் எழுதற விமர்சனங்களை விட இது ஒண்ணும் ரீச் ஆகப் போறதில்லை. ஆனா நாம கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பது எடிட்டருக்கு செலக்சனுக்கு உதவியா இருக்கும்என்பதற்காக குறைந்தபட்சம் எனக்கு பிடித்திருந்ததா இல்லியான்னு மட்டுமாவது தெரிவிக்க வேண்டியது என்னோட கடமை.(இல்லன்னா பூனை பிராண்டிடும்). இன்னும் சில தினங்களில் பயங்கர பிசி ஆயிடுவேன். அதுக்குள்ளே எல்லாத்தையும் படிச்சு விமர்சனம் எழுதிடுவேன்.

      Delete
    2. இதழ்களை வாங்கிய கையோடு விமர்சனம் போடுவது ஒருவகை; கலங்கிய குட்டையில் மீன் மீடிப்பது! ஆர்ப்பாட்டங்கள் இல்லாத அமைதியான நேரத்தில் விமர்சனம் போடுவது அமைதியான குளத்தில் அகலமான சில்லை வைத்து அப்படியே செதுக்கி கொண்டு போவது போல விளையாடுவமே அதுபோல...!!!ஏற்படும் நீர் வட்டங்கள் பார்ப்பது அழகு!

      அதேபோல இப்போதைய உங்கள் விமர்சனம் எங்கள் மனதில் பொதிந்துள்ள கதைகளை நினைவு படுத்துது.....!!!

      நறுக் சுறுக் என்றாலும் நச்சுனு இருக்கு....!!! தொடருங்கள்!

      விண்டர் ஸ்பெசல் & பனிவனப்படலம்-2க்கும் உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.

      Delete
    3. I always adore people who write reviews whether its just one line or whatnot..

      Or whether its sooner or later..

      Other than Editor's perspectives reviews constitute the most important aspect of this blog I presume..

      So sheriff you must pursue this course.

      For fans when such books were published is irrelevant.

      We are all reading..

      I don't find fault with others who couldn't find time to write albeit they read..

      But it's always nice to bring forward your views in this blog...

      Delete
    4. @விஜி, குமார் & செனா

      கண்டிப்பாகத் தொடருவேன்.

      Delete
  88. தனித்திரு தணிந்திரு
    ——————————-

    பிள்ளைக்கறி தின்னும் வெள்ளை ஓநாய்கள். அதில் ஒன்று நீல உடையில் வேறு. அவற்றை வஞ்சம் தீர்ப்பதே கதை.

    கதையின் காலகட்டம் என்னவென்று தெரியவில்லை. லிஞ்சிங் (விசாரணையின்றி தூக்கிலிடுவது) இல்லையெனினும் இன்றும் மிஸ்ஸிசிபி, அலாபமா போன்ற இடங்களின் கறுப்பர்களின் நிலை மிகவுமே சிரமம் தான்.

    இவ்வளவு ஏன் வளர்ந்த நகரங்களில் கூட நிறவெறி சாதாரணமா செல்பவனை நிறுத்தி எச்சரித்து அனுப்புவதோ அல்லது ஜார்ஜ் ப்ளாய்ட் போன்ற நிகழ்வுகளோ நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

    இது அமெரிக்காவி்ல் மட்டுமே அல்ல; வேறு விதமாக இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் மனிதனின் விகாரங்கள் தாண்டவமாடிக் கொண்டுதானிருக்கிறது.

    உலகெங்கும் அசியலோ, மதமோ, இனமோ, மொழியோ மனிதனை வேறுபடுத்தி இந்த விகாரங்களை பெருக்கிக் கொண்டிருக்கிறது. குழு மனப்பான்மையோ அவற்றை தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. இடையே நல்லவர்களோ வலுவிழந்து கோழைகளாய் சார்ஜண்டைப் போல சவமாகிக் கொண்டிருக்கிறார்கள்

    1619 பிராஜக்ட் வாசிப்பு, அமிஸ்டாட், ஹெல்ப், ரிமம்பர் த டைட்டான்ஸ் போன்ற பல் வேறு படங்கள் பார்த்திருந்தாலும் இந்த கதை இது ஒரு தனி ரகம்.

    வண்ணங்களும் ஓவியங்களும் வசனங்களும் உணர்வகளை வெறுமனே கடத்தவில்லை; ஆண்டர்சனுடன் சோகமாக நாமும் விரக்தியோடு நடந்து செல்வதைப் போல ஒரு உணர்வைத் தருகிறது.

    இந்த வருடத்தின் மிக சிறந்த கதை மட்டுமல்ல; லயனில் வந்த மிக சிறந்த கதைகளில் ஒன்றாக எனது ரேங்கிங்கில் இடம் பெறுகிறது.

    சேர்ந்திரு...புரிந்திரு

    ReplyDelete
    Replies
    1. ///இன்றும் மிஸ்ஸிசிபி, அலாபமா போன்ற இடங்களின் கறுப்பர்களின் நிலை மிகவுமே சிரமம் தான்///
      ---கிட்டத்தட்ட 160ஆண்டுகள் ஆகியும் இப்படியா...!! வேதனை!

      ஆம், சில மாதங்கள் முன்பு அந்த கறுப்பின்னை கழுத்தில் நசிக்கி கொன்ற காவலனின் இனவெறி உணர்த்துவது இதைதான்...!

      Delete
  89. வானமும் வசப்படும்
    ————————-
    Non stop chase. ஆனா வேகமில்லை. ஒருக்கா படிக்கலாம்.

    ReplyDelete
  90. போர்முனையில் ஒரு பாலகன்
    ———————————————
    நல்ல காமெடி. கதையும் வேகமாக நகருது. வசனங்கள் பலே. மறுக்கா மறுக்கா வாசிக்கலாம். அப்புறம் ஐ லவ் கார்ட்டூனுங்க.

    ReplyDelete
  91. நில் கவனி கொல்
    —————————-

    அதகள அதிரடி ஆக்சன் அட்வெஞ்சர். சூப்பர் மாஸ் தெறி ஹிட். ஜேம்சுக்கும் எனக்கு ஒரு ஒத்துமை என்னன்னா...அவருக்கு மார்ட்டினியை கலக்குனா (stir) பிடிக்காது. எனக்கு காபியை கலக்கினா பிடிக்காது. ஆத்தி நுரையோட குடிக்கனும். ஹி..ஹி...

    ஜேம்ஸ் 2.0 முடியப்போகுது. ஜெப் பார்க் கோட ஜேம்ஸ் ஆரிஜினோ அல்லது வாரன் எல்லிசோட மற்ற கதைகளில் ஏதாவதோ வந்தால் தன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சேம்ஸ்னா, நமக்கு அழகியை தேடி சேம்ஸ்தானுங்க...!!!

      ஒரு பக்க ஓவியங்கள் வேற லெவல்தான்!!!

      Delete
  92. லேட்டாக விமர்சனம் வந்தாலும் ட்ரம்ப் நாட்டின் சாரி ஜோ பைடன் நாட்டின் விமர்சனம் லேட்டஸ்ட்டாகவே வருகிறது...


    வாழ்த்துக்கள் ஷெரீப்....

    ReplyDelete
  93. கதவைத் தட்டும் கோடி 
    --------------------
    சமீபத்தில் இப்படி ஒரு நகைச்சுவை காமிக்ஸ் படித்ததில்லை. அமெரிக்காவின் அதி terror  தாதாவான Al Capone-ஐ யாருக்கும் இவ்வளவு வாரத் தோன்றி இருக்காதுதான். Heavy laughter at places and smiles all through ! படிக்க வேண்டிய இதழ் !

    ReplyDelete
  94. அலைகடலில் அதகளம்
    ————————————------------

    எனக்கு எப்போதுமே diabolik கதைகள் பிடிக்கும் - படிக்க அதிகம் சிரமப்பட வேண்டாம் - fast action entertainers. இதுவும் அவ்வகையே. Agree with ஷெரிப் - ஒரு முறை கண்டிப்பாக படிக்கலாம் ! 

    ReplyDelete
  95. சர்பங்களின் சாபம் --------------------------------
    சூ ஹி சூ ஸ்பெஷல் புக்கையே overnightல படித்துவிட்டு அற்புதம் என்று சொன்னவன் நான். ஸ்பைடர் கதை - அவர் என்ன பண்ணாலும் புடிக்கும். அவ்வகையில் எனக்கு பிடித்த கதையே. முதலில் வாரப்பத்திரிகையில் வாரம் 4 பக்கங்கள் கொண்ட கதையாய் வெந்திருப்பதால் சற்றே நீட்டித்து விட்டார்கள்.

    எடிட்டர் சொன்னது போல 80களில் one panel per page பாக்கெட் சைசில் வந்திருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கும் !

    வருடத்துக்கு ஒரு ஸ்பைடர் கதையை எப்படியாவது நுழைத்து விடவும் எடிட்டர் சார் ..

    ReplyDelete
  96. இப்போது படித்துக்கொண்டிருப்பது லாரன்ஸ் அண்ட் டேவிட் - மீண்டும் கிங் கோப்ரா :-) :-) :-) :-)

    ReplyDelete