Sunday, August 30, 2020

சீக்கிரமே செப்டெம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். நாடும், ஜனமும் ஏதேதோ இக்கட்டுகளில் சிக்கி நிற்க, 'நாட்கள்' எனும் ஓடம் மட்டும்,  'ஏலேலோ ஐலசா' என தன்பாட்டுக்கு  ஓட்டமாய் ஓடிச் செல்வதும், பிரபஞ்சப் புதிர்களுள் ஒன்று போலும் ! இதோ - லாக்டௌன் ; வைரஸ், கை கழுவு,  காய் கழுவு ; மாஸ்க் போடு ; சானிடைசருக்கு 'O' போடு... இத்யாதி இத்யாதி, என்பெனவெல்லாமே சுத்தமாய் 5 மாதங்களை விழுங்கியிருக்க - ஆண்டின் இறுதிக் க்வாட்டரை எதிர்நோக்கி நிற்கின்றோம் ! வேறொரு க்வாட்டரை வாங்கி, தம் சனநாயகக்  கடமைகளை  ஆற்றிடும்  குடிமக்களின் ஆர்வங்களை, இந்த 'பொம்மை புக் க்வாட்டர் மோகத்தால்' மிஞ்சிட இயலாது தான் என்றாலுமே, 'செப்டெம்பர் to டிசம்பர்' என்ற இந்த 4 மாதங்களில் காத்திருப்பன செம சுவாரஸ்ய ஆல்பங்கள் எனும் போது the interest quotient is bound to be high for us too !

So இதோ - தொடரவுள்ள செப்டெம்பரின் வெளியீடுகளின் பிரிவியூ படலத்தின் துவக்கம் ! ஆண்டின் அடுத்த  MAXI மாதம் இதுவே, என்பதால் லக்கி லூக்கின் "பிசாசுப் பண்ணை" - முழு வண்ணத்தில், மெகா சைசில் மினுமினுக்கத் தயாராகி விட்டது !  இந்தப் பெரிய சைஸ் அத்தனை ரசிக்கவில்லை என சில நண்பர்கள் முணுமுணுத்திருந்ததைக் கவனித்திருந்தேன் தான் ; ஆனால் வண்ணத்தில் இந்த சைசிலான பக்கங்கள் ஒவ்வொன்றையும் பார்த்திடுவது, கழுதை வயசான எனக்கே இன்னமும் ஒரு உற்சாகமூட்டும் அனுபவமாகவே உள்ளது ! Maybe புதுசாய் பல்டிகளை முயற்சிக்கும் மாறாக் குணம் என்னை ஒருவிதமாகவும், 'பழகியதைத் துறப்பானேன் ?' என்ற உங்களின் பாரம்பரியப் பிரியங்கள் வேறொரு விதமாகவும் சிந்திக்கச் செய்கின்றனவோ - என்னவோ ! Whatever the reasons might be - அட்டவணையினில் அறிவிக்கப்பட்டிருந்த 6 MAXI ஆல்பங்களுள் 2 ஏற்கனவே வெளியாகி விட்டன & ARS MAGNA இன்னொரு 2 ஸ்லாட்களை ரெகுலர் சைசில் எடுத்துக் கொள்ளவுள்ளது ! So எஞ்சியுள்ள இரண்டினில் - இதோ வெளியாகிடவுள்ள  'பிசாசுப் பண்ணை' ஒரு ஸ்லாட்டையும், இன்னொரு மறுபதிப்பு அந்த இறுதி ஸ்லாட்டையும் எடுத்துக் கொள்வதோடு நடப்பாண்டின் MAXI சைஸ் புராஜெக்ட்ஸ் நிறைவுற்றிடும் ! ஏற்கனவே அடுத்த வருஷமானது - 'வவுரைச் சுத்தித் துணிங்கோ ; துணி முழுக்க ஈரமுங்கோ' என சிக்கன சிங்காரவேலனாய் வலம் வரவுள்ளதால் - there will be no MAXI sizes - at least for 2021 !!   முத்துவின் ஐம்பதாவது வருஷமாகிடக்கூடிய 2022 - நமக்கு என்ன கொணரக்கூடுமோ - அதனை அப்போது பார்த்துக் கொள்வோமே ! 


ஆண்டின் துவக்கத்திலேயே தயாராகி விட்ட ராப்பர் என்பதால் - அந்தப் பெயரினைக் கையால் எழுதிட ஓவியர் சிகாமணியும் ; ஒரிஜினல் டிசைனை சித்தே effects கொடுத்து தூக்கலாக்கிட நமது DTP அணியில் கோகிலாவும் இருந்தனர் ! So ஒரு நார்மலான ராப்பரை - என் கண்களுக்கேனும் 'பளிச்' ஆக்கிட்ட புண்ணியம் அவர்களை சாரும் ! Maybe உங்களுக்குமே இது ரசித்திடும் பட்சம் - உங்களின் kudos அவர்களைச் சார்ந்திடட்டும் ! வெவ்வேறு மினி லயன் இதழ்களில் பிரித்துப் பிரித்து வெளியான லக்கி சிறுகதைகளின் தொகுப்பு இது என்பது உங்களுள் எத்தனை பேருக்குத் தெரியுமோ ; எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ - not very sure ! ஆனால் இதன் ஒரிஜினல் பதிப்பு வெளியான நாட்களை (early '90s ??) எனக்கு நினைவில் இருத்திட ஒரு குட்டி சம்பவம் இல்லாதில்லை ! அநேகமாய் கரைவேட்டி மேடைப்பேச்சாளர்களுக்கு அப்பாலிக்கா, தொட்டதுக்கெல்லாமே  ஒரு குட்டிக்கதையினை ஸ்டாக்கில் வைத்திருக்கக்கூடியது அநேகமாய் இந்த ஆந்தை ஆண்டியப்பனாகத் தானிருக்க முடியும் என்று தோன்றுகிறது !! 

1990-க்குப் பின்னேயான ஏதோவொரு வருஷத்தின் பிப்ரவரி அது ! மாமூலாய் புது டெல்லியின் பிரகதி மைதானில், மெகா உலகப் புத்தக விழா பிப்ரவரிகளில் நடைபெறுவது வழக்கம். நடு நடுவே நேரம் கிடைக்கும் ஆண்டுகளில் நான் அதற்கொரு விசிட் அடிப்பதுண்டு ! டெல்லியில் இருக்கும் Fleetway -ன் ஏஜெண்ட்களைப் பார்த்த மாதிரியும் இருக்கும், புத்தக விழாவினில் நமக்கு art reference-க்கு புக்ஸ் வாங்கியது போலவுமிருக்கும்  ; வடஇந்தியப் பதிப்பகங்களின் புதுத் தயாரிப்பு யுக்திகளைக் கொஞ்சம் பார்வையிட்டது போலவும் இருக்குமே - என்பதே எனது பயணங்களின் பொதுவான பின்னணி ! கரோல் பாக்கில் கிடைக்கக்கூடிய அந்தப் பஞ்சாபி சமோசாக்களும், ரசகுல்லாக்களும் ஒரு உபரி காரணமென வைத்துக் கொள்ளுங்களேன் ! இன்டர்நெட்கள் இல்லாத அந்த நாட்களில், இங்கிலீஷ் நியூஸ்பேப்பர்களில் மட்டும் இந்தப் புத்தக விழா பற்றிய விளம்பரங்கள் வெளிவந்திடுவதுண்டு ! So ஜனவரியின் நடுவாக்கினில் ஹிந்து நாளிதழில், அந்த வருஷத்துப் புத்தக விழாவினைப் பற்றிய விளம்பரத்தை பார்த்த போது, ரயிலுக்கு டிக்கெட்டைப் போட்டுவிடத் தீர்மானித்தேன் ! அன்றைக்கெல்லாம் லொஜக்-மொஜக் என டிக்கெட்டை நொடியில் போட்டுத் தரும் app-கள் கிடையாது ! ரயில்வே ஸ்டேஷனில் போய் , கிருஷ்ணாயில்  வாங்கும் ரேஷன் கடை க்யூவை ஒத்த வரிசையினில் தேவுடா காத்தே டிக்கெட் வாங்கிட வேண்டி வரும் ! அதற்கெல்லாம் நமக்கு மேல் வலிக்கும் பட்சங்களில், டிக்கெட் எடுத்துத் தரும் புரோக்கர்கள் இருப்பர் ! நமக்கோ அந்நாட்களில் தினமுமே ரயிலில் ஏஜெண்ட்களுக்கான பார்சல்கள் புக்கிங் ஆவதுண்டு & so அவற்றிற்கான பாஸ் அடித்து மாலையில் ஆபீசுக்கு கொணர்ந்து கொடுத்துச் செல்லும் புரோக்கர் ஒருவர் உண்டு ! பகல் முழுக்க ரயில்வே ஸ்டேஷனிலேயே இருப்பவர் என்பதால் விபரங்களை மட்டும் சொல்லி வைத்தால், மாலையில் ஆபீசில் டிக்கெட்டைப் பட்டுவாடா செய்துவிடுவார்  ! So மறு நாள் அவரிடம் விபரத்தைச் சொல்லிட, டாண்னென்று டிக்கெட்டும் வந்து விட்டது ! So பிப்ரவரி முதல் வாரத்தில் மூட்டையைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு ரயிலேறி, அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸைப்  பிடித்து தலைநகருக்குப் பயணமானேன். 

சிலு சிலுப்பான இரண்டாவது நாள் அதிகாலையில், டில்லி ரயில்நிலையத்தில், ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு இறங்கிய போது உற்சாகம் பீறிட்டது - நோவுகள் ஏதுமின்றிய 3 நாட்களின் பணிகளை முன்னிட்டு ! தங்கிட இம்முறை ஹோட்டலில் ரூம் போட்டிருக்கவில்லை ; கன்னாட் பிளேஸில் இருந்த  YMCA -வில் ஒரு சிங்கிள் ரூம் சொல்லி வைத்திருந்தேன் ! அவர்களோ காலை 8 மணிக்கு தான் செக்கின் செய்வார்கள் எனும் போது - கொள்ளை போகுதென அந்த அதிகாலைக்கே அங்கே ஓட்டமெடுப்பதில் அர்த்தம் இருக்காதென்றுபட்டது ! So பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் சாவகாசமாய்க் குந்தியபடிக்கே சோம்பல் முறித்துக் கொண்டிருந்தேன் ! நியூஸ்பேப்பர் கட்டுக்கள் அப்போது வந்திறங்க, எனக்குப் பின்னேயிருந்த கடையில் உடைத்து அடுக்க ஆரம்பித்தார்கள் ! ஒரு பேப்பரை வாங்கிப் புரட்ட ஆரம்பித்தேன் - ஸ்போர்ட்ஸ் பக்கத்திலிருந்து ! சாவகாசமாய் மூன்றாம் பக்கத்தை எட்டிய போது - டெல்லி புத்தக விழாவின் விளம்பரம் முரட்டு சைசில் கண்ணில் பட்டது !  யாரேனும் மந்திரி அல்லது M.P. - புத்தக விழாவினைத் துவக்கி வைக்கும் விளம்பரமாக இருக்குமென்று தோன்றியது ! 'அடாடாடாடா....இந்த அரசியல்வாதிங்க தொல்லை தாங்கலைடா சாமீ !' என்றபடிக்கே விளம்பரத்தைப் பார்த்தால் - நான் நினைத்தபடிக்கு எதையும் காணோம் ! மாறாக - "இன்னும் எட்டே நாட்கள் தான் !!" என்பது போல என்னவோ எழுதியிருந்தார்கள் ! ஊசிப்போன மசால்வடையை உள்ளே தள்ளியதை போல லைட்டாக அடிவயிறு கலங்கும் உணர்வு தலைதூக்க - அவசரம் அவசரமாய் விளம்பரத்தை நிதானமாய் வாசிக்க ஆரம்பித்தேன் ! சரியாக மறுவாரத்தில் விழா ஆரம்பித்து, பதினைந்தோ-இருபதோ நாட்களுக்கு ஓடவுள்ளதாய் கொட்டையெழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது ! நான் ஊரில் டிக்கெட்டைப் போட்ட சமயத்தில் தேதியை சரியாய் உள்வாங்கியிருக்காது - ஒரு வாரத்துக்கு முந்தின தேதியில் டிக்கெட்டைப் போட்டு வைத்துத் தொலைத்திருப்பது மெது மெதுவாய்ப் புரிந்த போது, சாயா விற்றுக்கொண்டிருந்த பசங்கள் கூட என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது ! 

Up 3 நாட்கள் ; Down 3 நாட்கள் பயணம் + 3 நாட்கள் டில்லியில் ஜாகை : ஆக மொத்தம் 9 நாட்கள் அரையணாவுக்குப் பிரயோஜனமில்லா விரயம் என்பது புரிந்த போது துக்கம் தொண்டையை அடைத்தது !! சில நிமிடங்களுக்கு முன்வரையிலும் காந்தக்கண்ணழகியாய்த் தென்பட்ட டெல்லி - திடுமென கறுப்புக் கிழவியாகத் தெரியத் தொடங்கிட -  எத்தனை காசு கோவிந்தா ஆகிவிட்டுள்ளது என்ற கணக்கு மனசுக்குள் கிடு கிடுவெனஓட ஆரம்பித்தது ! ரயிலில் வாங்கிய சிக்கன்மீல்ஸ் கூட அந்த நொடியில் ஒரு அவசியமில்லாச் செலவாய்த் தோன்றிட, 'ஊருக்குத் திரும்பும் வரையிலும் மவனே...உனக்கு ரொட்டிப் பாக்கெட் மட்டும் தான் !' என்று யாரோ சொல்வது போலிருந்தது ! தளர்நடைபோட்டு ரயில் நிலையத்தின் முகப்பில் ஆட்டோக்காரர்களோடு கொலைவெறியில் பேரம் பேசியது ;  YMCA-வுக்குப் போனது ; மலர்ந்த முகத்தோடு செக்கின் செய்த அம்மணியைப் பார்த்துப் பேஸ்த்தடித்ததொரு சிரிப்பை ஒப்புக்குச் சிரித்து வைத்தது ; ரூமில் போய் பெட்டியைப் போட்டு விட்டு கட்டிலில் சாய்ந்த போது - "இன்னிக்கு இன்னா பண்றது ? நாளைக்கு ? நாளான்னிக்கு ??" என்று உலுக்கிய கேள்விகளுக்கு விடை தெரியாது பேந்தப்பேந்த முழித்தது - என சகலமும் 30 வருஷங்கள் கழிந்தும் நினைவில் நிலைத்து நிற்கின்றன ! 

வெந்நீர் காலியாகிப் போகும் முன்பாய்க் குளிப்போமென்ற ஞானோதயம் ஒரு மாதிரியாய் புலர, குளித்து விட்டு Fleetway ஏஜென்ட்கள் ஆபீசை நோக்கி நடந்தேன் ! அன்றைக்கெல்லாம்  செல்போன்களோ ; மின்னஞ்சல்களோ லேது என்பதால் கடுதாசிப் போக்குவரத்துக்கள் மாத்திரமே ! 'புத்தக விழாவுக்கு வர்றேனுங்கோ ; அந்நேரத்துக்கு உங்களையும் பாத்துப்போட்டு அப்பீட் ஆகிக்கிறேனுங்கோ !' என்று லெட்டர் எழுதியிருந்தது நினைவில் இருந்தது ! 'தெய்வமே...இந்த மனுஷனாச்சும்  ஆபீசில் / ஊரில் இருந்தாத் தேவலாம் !' என்றபடிக்கே அவரது ஆபீஸ் இருந்த கட்டிடத்தின் படிக்கட்டுக்களை ஏறிய போது - ஒரு பரிச்சயமான முகம் எதிர்ப்பட்டது ! பாலக்காட்டைச் சேர்ந்ததொரு தமிழர் ; கிருஷ்ணன் என்று பெயர் - டெல்லியில் அரைநூற்றாண்டாய் வசித்து வருபவர் - Fleetway ஏஜெண்டின் அலுவலகத்தில் மேனேஜராய்ப் பணியாற்றும் முதியவர் அவர் ! என்னை விடவும் வயதில் ரொம்பவே மூத்தவர் என்ற போதிலும் - 'வாங்கோ ; போங்கோ !' என்றே மரியாதையாய்ப் பேசுவார் ! "அடடே....விஜயன் !! என்ன திடீர் விஜயம் ? பாஸ் கூட ஊரில் இல்லியே ? அடுத்த வாரம் தானே வர்றதா இருந்திங்க ? " என்று குண்டைத் தூக்கிக் கடாசினார் ! எனக்கோ - 'இன்ன மெரி.. இன்ன மெரி.. டிக்கெட் தேதியில் சொதப்பிட்டேனுங்க ; 3 நாளைக்கு டெல்லியிலே மாடு மேய்க்கிறது தான் வேலையுங்கோ !' என்று சொல்ல முடியாதில்லையா - 'தத்தா-புத்தா ' என்று எதையோ உளறிக் கொட்டினேன் ! 'சரி வாங்க....வந்து ஒரு Thumbs Up குடிச்சிட்டுப் போங்க" என்றவரிடம், "இல்லை சார் ; அப்புறமாய் வாரேன் ; இன்னும் 3 நாளைக்கு இருப்பேன்லே  !" என்றபடிக்கே கீழே இறங்கி ஆட்டோவைப் பிடித்து YMCA வுக்கே திரும்பினேன் ! கொஞ்ச நேரமாச்சு ; ஏதோ ஒரு வித நிதானத்துக்குத் திரும்ப ! 

டிக்கெட்டை தேதி மாற்றி, முன்கூட்டியே ஊருக்குக் கிளம்பிட வேணுமெனில், ரயில்வே ஸ்டேஷன் சென்று, அங்கு சதா சர்வ காலமும் நிற்கும் க்யூவில் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது காத்திருத்தல் அவசியமென்று புரிந்தது ! அந்நாட்களில் தற்போதைய RAC ; WL ; தட்கல் முறைகளெல்லாம் கிடையாது ! டிக்கெட் உறுதியாகிடா பட்சத்தில், ரயிலில் தொற்றிக் கொண்டு - TT பின்னே காவடியெடுத்து, சரிக்கட்டி, பெர்த் வாங்குவதற்குள் பிராணனில் பாதி போய் விடும் ! நமக்கு இந்தச் சரிக்கட்டும் யுக்திகள் அத்தனை சுகப்படாது ; so உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் இல்லாத பட்சத்தில், ரயிலில் ஏறிடும் வேலையே வைத்துக் கொள்வதில்லை ! And invariably மறுநாளைக்கு, அதன் மறுநாளுக்கு என்றெல்லாம் confirmed tickets இருக்கவே இருக்காது என்பது தெரியும் ! So ஒன்றரை மணி நேரங்களை க்யூவில் கழித்து விட்டு - "நை ..நை..டிக்கெட் நை" என்ற வசனத்தைக் கேட்பதற்குப் பதிலாய் 3 நாட்களை டெல்லியில் எப்படியேனும் ஓட்டி விடுவதே மேல் என்று தோன்றியது ! 'புண்பட்ட மனத்தைக் குறட்டை விட்டு ஆத்து' என்ற அற்புதச் சிந்தனை அந்நொடியில் தலைகாட்ட - காலை பதினோரு மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன் ! 

இரண்டரை சுமாருக்கு பசித்த வயிறு எழுப்பி விட, சாப்பிடக் கீழே இறங்கிச் சென்ற சமயம் புத்தி லேசாய் செயல்படத் துவங்கியிருந்தது ! நேராய் ரிசெப்ஷனுக்குப் போய், காலையில் சீக்கு வந்த கோழியாட்டம் சிரித்து வைத்திருந்த பெண்மணியிடம் இம்முறை சித்தே சுரத்தோடு சிரித்து விட்டு,  டெலிபோன் டைரெக்டரியைக் கேட்டு வாங்கினேன் ! இரு ஆண்டுகளுக்கு முன்னமே டெல்லி புத்தக விழாவுக்குச் சென்றிருந்த சமயம், ஒரு பிரெஞ்சு புக் ஷாப்பின் பெயர் எங்கேயோ கண்ணில்பட்டிருந்தது !  'அடுத்தவாட்டி வர்றச்சே பாத்துக்கலாம்' என்று கிளம்பியிருந்தேன். அது மண்டைக்குள் ஒரு ஓரமாய்த் துயின்று கொண்டிருக்க, வேலை வெட்டியே இல்லாத அத்தருணத்தில் நினைவுக்கு வந்தது. டெலிபோன் டைரக்டரியில் அதன் அட்ரஸைத் தேடினால் Ring Road - Defence காலனி என்று சொன்னது ! நானிருந்த இடத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு  என்று ரிசப்ஷன் அம்மணி சொல்லிட, மண்டைக்குள் கால்குலேட்டர் குலேபகாவலி கணக்குப் போடத் துவங்கினார் ! "சரியாய் இடம் தெரியாது...ரிங் ரோடுங்கிறப்போ நிச்சயம் அவுட்டர் தான் ; நீபாட்டுக்கு ஆட்டோவில் ஏறினால், தாஜ் மஹால் வரைக்கும் ரவுண்ட் அடிச்சுக் காட்டி மீட்டரைப் பழுக்க வைச்சுப்புடுவாங்களே !!" என்ற பயம் தலைதூக்கியது. ச்சீ..ச்சீ..ஆட்டோ புளிக்கும் என்றபடிக்கே - பஸ்ஸில் போவதாயின் ரூட் எது ? ; எங்கே மாறணும் ? என்றெல்லாம் கேட்டுக் கொண்டு டபாரென்று பஸ்ஸைப் பிடித்து விட்டேன் ! மதிய நேரமென்பதால் அவ்வளவாய் நெரிசல் இல்லை ; ஆனால் பராசக்தி படத்தில் நடிகர் திலகம் பேசிய வசனத்தை அந்த பஸ் டிரைவர் ரசித்திருப்பாரோ - என்னவோ ? என்றே சந்தேகமே வந்துவிட்டது எனக்கு ! 'போனார்..போனார்..வாழ்க்கையின் ஒரத்துக்கே பஸ்ஸை ஒட்டிக்கினே போனார் !'  சுத்தமாய் ஒரு மணி நேரம் எங்கெங்கோ நெளிந்தும், வளைந்தும் சென்ற பஸ் ஒரு மாதிரியாய் ரிங் ரோட்டில் ஏதோவொரு ஸ்டாப்பில் நின்றது. 'இறங்கி, விசாரிச்சு, நடந்தே இனி போய்க்கலாம் !' என்று தீர்மானித்தவனாக சட்டென்று இறங்கிவிட்டேன் ! 

பஸ் புகை கக்கியபடிக்கே நகன்ற போது பார்த்தால் - மழு மழுவென ஷேவிங் செய்யப்பட்ட கன்னம் போலான இரட்டைச் சாலையில் இங்கிட்டும், அங்கிட்டுமாய் வண்டிகள் மட்டுமே சீறிப் போய்க்கொண்டிருந்தன ! வழி விசாரிக்க ஒரு ஆட்டோ ஸ்டாண்டோ ; டீக்கடையோ ; பொட்டிக்கடையோ கண்ணுக்கு எட்டினமட்டுமே தெரியவில்லை ! இப்போ நேரா போணுமா ? ரிவர்ஸில் போணுமா ? என்றெல்லாம் எதுவும் தெரியாத நிலையில் குத்து மதிப்பாய் ஒரு திக்கில் நடக்கத் துவங்கினேன். 'நெடுஞ்சாலையில் ஒரு பேமானி !' என்ற ரீதியில் கார்களில் போகும் ஜனம் அத்தனையும் என்னையே பராக்குப் பார்ப்பது போலொரு பீலிங்கு எனக்கு ! To cut a long story short - அரை மணி நேரம் தொண்டையை அடைக்கும் தாகத்தையும், துக்கத்தையும் அடக்கிக் கொண்டே நடந்தவனுக்கு - ஒரு மாதிரியாய் நெடுஞ்சாலையில் ஒரு சிறு சாலை பிரிந்து, வீடுகளும், ஆபீஸ்களுமாய் இருந்ததொரு பகுதிக்கு இட்டுச் செல்வது தெரிந்தது ! ஏற்கனவே வாங்கும் மூச்சோடு, பெருமூச்சும் கலந்து கொள்ள - அங்கே தெரிந்த முதல் குடியிருப்பின் வாட்ச்மேனிடம்  விசாரித்தேன் ! அப்புறம் தான் புரிந்தது - நான் இறங்கிய பஸ் ஸ்டாப்பிற்கு 2 ரோடுகள் parallel தான் நான் செல்ல வேண்டிய defence காலனி என்று ! நானோ மாக்கானாய் நேராய் நடந்து சென்றிருக்கிறேன் ! 

இன்னொரு 20 நிமிட தட்டுத் தடுமாற்றத்துக்குப் பின்னே THE FRENCH BOOK CENTRE என்ற கடையைக் கண்ணில் பார்த்த போது மாலை மணி 5 ஆகவிருந்தது ! அடிச்சுப் பிடிச்சு உள்ளே போனவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமே ; தடி தடியாய் பிரெஞ்சு இலக்கியம் ; நாவல்ஸ் என்ற ரீதியில் குவிந்து கிடந்தது ! நான் எதிர்பார்த்துப் போயிருந்த காமிக்ஸ் எதுவும் கண்ணில் படக்காணோம் ! இத்தனை பாடும் இதுக்குத் தானா ? என்ற எரிச்சலில் அங்கிருந்த ஆளிடம் Comics ? என்று கேட்க - கையைக் காட்டினார் இன்னொரு கோடிக்கு ! அங்கே போய்ப் பார்த்த நொடியில், வடிந்திருந்த உற்சாகங்கள் அதிசயமாய் ஊற்றடித்தன ! ஒரு சிறு ரேக் முழுசுமாய் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் இதழ்கள்    குமிந்து கிடந்தன ! நான் முன்னமே பார்த்திருந்த தொடரின் ஆல்பங்கள் கொஞ்சம் ; பார்த்திராத தொடர்களின் ஆல்பங்கள் ஏகம் - என இறைந்து கிடக்க, புரட்டத் தொடங்கினேன் ஒவ்வொன்றாய் ! அந்நாட்களில் இன்டர்நெட் கிடையாதெனும் போது படைப்பாளிகளின் கேட்லாக்குகளில் உள்ள சமீபத்தைய படைப்புகளைத் தாண்டி, முந்தைய இதழ்கள் பற்றிய அலசல்களுக்கெல்லாம் வழியே இராது ! அது மட்டுமன்றி, நாம் வெளியிட்டு வரும் ஒரு தொடரிலேயே - 'எது நல்ல கதை ? எது சுமாரான கதை ?" என்ற ஆராய்ச்சிகளுக்குமே பெருசாய் வாய்ப்புகள் இராது ! படைப்பாளிகளிடம் கேட்டால் ஏர்-மெயிலில் புக்ஸை அனுப்பிடுவார்கள் தான் ; ஆனால் ஓவராய்த் தொல்லையும், செலவும் வைக்கப் பயம் மேலோங்கும் !  So கண்முன்னே கிடந்த இந்தப் புதையல் was too good to be true ! கையில் என்னிடமிருந்த பணத்தைக் கணக்கிட்டு, அதற்குள் அடங்கிடும் அளவில் ஷாப்பிங் செய்திட வேணுமென்பதும் மண்டையில் தோன்ற, ரொம்பவே selective ஆகத் தேர்வுகளைச் செய்ய ஆரம்பித்தேன் ! அந்தப் பட்டியலில் சிக்கியது தான் லக்கி லூக்கின் இந்த "பிசாசுப் பண்ணை" ஆல்பம் - அதுவும் இங்கிலீஷில் !! அதுவரைக்கும் predominant ஆக முழுநீளக்கதைகளை மட்டுமே லுக்கியின் தொடரில் வெளியிட்டு வந்திருந்தோம் ; இத்தகைய சிறுகதை format என் தேர்வுகளுக்கு பெரிதாய் உட்பட்டிருக்கவில்லை ! அந்நேரமோ நாம் மினி லயனில் கலவையாய்க் கதைகளை வெளியிட்டு வந்த நேரம் ! So இந்த லக்கி சிறுகதைகள் அந்த template-க்கு செம்மையாய் உதவிடும் என்ற வகையில் எனக்கு செம குஷி ! பற்றாக்குறைக்கு இங்கிலீஷ் ஆல்பம் கிட்டியதால், பிரெஞ்சிலிருந்து  மொழிபெயர்ப்புக்கெனச் செலவழிக்க வேண்டிய ஆயிரத்துச் சொச்சம் மிச்சம்டோய் !!  என்று உள்ளம் கூவியது ! "வந்து - போற டிக்கெட் காசு மிச்சம் பண்ணியாச்சு !!' என்ற நினைப்பே கொஞ்சம் குளிர்வித்தது ! லக்கியின் அந்த ஆல்பத்தையும்  இன்னும் அரை டஜன் பிரெஞ்சு ஆல்பங்களையும் பில் போட்டு வாங்கி விட்டு வெளியேறிய போது இருட்டத் துவங்கியிருந்தது ! அப்போது தான் - 'ஆஹா.திரும்பப் போக பஸ்ஸை எங்கே பிடிப்பதோ ?' என்ற கேள்வி எழுந்தது எனக்குள் ! 

சத்தியமாய் அந்த அந்தியினில் ரிங் ரோட்டை மறுக்கா அளவெடுக்க ஜீவனில்லை எனக்கு ! வேறு வழியின்றி, வேண்டா வெறுப்பாய் ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன் - 'லொடக்-லொடக்' என மீட்டர் ஏறும் போதெல்லாம் என் நாடித்துடிப்பும் ஏறியபடிக்கே ! சிங்ஜி வந்த பாதையிலேயே கூட்டிக்கினு போறாரா ? இல்லாங்காட்டி ஊரெல்லாம் சுற்றிக் காட்டப் போறாரா ? என்ற பயம் வேறு உள்ளுக்குள் ! ஆனால் சுருக்கமான ரூட் எதையோ பிடித்து மனுஷன் அரை மணிநேரத்தில் ;  ஏழுமணிவாக்கில் YMCA-வில் கொணர்ந்து இறக்கி விட்டிருந்தார்   ! கையிலிருந்த ஆல்பங்கள், ப்ளஸ் மொழிபெயர்ப்புச் செலவு மிச்சம் என்ற சந்தோஷங்கள் - மீட்டரின் கட்டணத்தை மறக்க உதவியிருந்தன ! ரூமுக்குப் போன உடனே லக்கியின் இந்த ஆல்பத்தைப் படிக்க ஆரம்பித்த போதே - 'இந்தச் சிறுகதையை இந்த மாசத்துக்கு வைச்சுக்கலாம் ; அதை - அந்த மாசத்துக்கு' என திட்டமிடலானேன் ! தொடர்ந்த மாதத்தினில் ஒரு பளீர் பச்சைப் பின்னணியில் இதே அட்டைப்பட டிசைன் சகிதம் ; 2 வண்ணத்திலான உட்பக்கங்கள் நியூஸ்பிரிண்ட்டில் பல்லைக்காட்ட  "பிசாசுப் பண்ணை"யின் ஒரிஜினல் பதிப்பு வெளிவந்தது ! யாரிடமேனும் அது இன்னமும் உள்ளதா ? என்றறிய ஆவல் folks ! இருப்பின், அதனோடு ஒரு selfie எடுத்து அனுப்புங்களேன் - இதே பதிவினில் இணைத்து விடலாம் ! And இதோ - உட்பக்கங்களின் preview : 



'ரைட்டு....ஒரிஜினலாய் இது நமது கருணையானந்தம் அவர்கள் எழுதினது.....மொழிபெயர்ப்பில் நோண்டும் வேலை இந்தவாட்டி வேணாம் ; அப்டியே திருத்தங்களை மட்டும் போடுறோம் ; அச்சுக்கு அனுப்புறோம் !' என்றபடிக்கே 7 நாட்களுக்கு முன்னே அமர்ந்தேன் ! முதல் சிறுகதையும் ஒரு மாதிரி ஓடிவிட்டது - ஜாலி ஜம்ப்பரின் வசனங்களில் மட்டும் கொஞ்சம் திருத்தங்களை போட்ட கையோடு ! ஐயகோ - காத்திருப்பது சுலபப்பணியே என்ற எனது எதிர்பார்ப்பு சுக்கலானது அடுத்த கதையையும் ; அதற்கடுத்ததையும்; அதற்கும் அடுத்ததையுமே படித்த போது ! முதல் சிறுகதை மட்டுமே லக்கிக்கென இப்போதெல்லாம் நாம் பிசகின்றிக் கையாளும் பேச்சு வழக்குத் தமிழ் இருந்தது ஒரிஜினல் மொழிபெயர்ப்பினில். பாக்கி 3 கதைகளிலும் ஜாலி ஜம்ப்பர் முதற்கொண்டு தூய தமிழில் செப்பிக்கொண்டிருக்க - எனக்குப் பகீரென்று ஆகிப்போனது ! நடைமுறையினை மாற்றிடக்கூடாதென்பது ஒருபக்கமிருக்க, ஒரே ஆல்பத்தில் இரு தின்சுகளில் மொழியாக்கம் இருப்பின் ரொம்பவே நெருடும் என்று தோன்றியது ! அப்புறமென்ன ? ஏலேலோ-ஐலசா தான் - பக்கத்துக்குப் பக்கம் ரணமாகிய சிகப்பு மசித்திருத்தங்களோடு ! ஒரிஜினல் பாணியை கிஞ்சித்தும் மாற்றிடாது, நடையை ; அவசியப்பட்ட வசனங்களை + ஜாலி ஜம்ப்பரின் டயலாக்குகளை மட்டுமே திருத்திய போதிலும், அந்தப்பணியானதே முழுசுமாய் போன வாரத்தினை விழுங்கிவிட்டது !  நேற்றைக்கு அச்சுக்குச் சென்று பணிமுடிந்த பக்கங்களை பார்த்த போது தோன்றிய இளிப்பில்  அந்த  வாரத்தின் பல்டிகள் மறந்தே போச்சு ! புதுசாய்ப் படிப்போர்க்கும், பழசையே தேடுவோர்க்கும் இம்முறை எவ்வித ஏமாற்றங்களுமிராது ! பிழையிருந்த ஈக்களை மட்டுமே அடிக்காது, பாக்கி ஈக்கள் அனைத்தையுமே அட்சர சுத்தமாய்க் கொணர்ந்துள்ளேன் ! So கிட்டக்கவே முந்தைய இதழ்களையும் வைத்துக் கொண்டு ஒப்பீடு செய்தாலும் நெருடாதென்ற நம்பிக்கை நிறையவுள்ளது ! 

ஆக அடுத்த தெருவினில் இருக்கக்கூடிய  நாலு சிறுகதைகளின் பின்னணியை விளக்கிட, திருத்தணி வரைக்கும் பாதயாத்திரை போய்ச் சொல்லும் படலம் இனிதே நிறைவுறுகிறது ! இந்தப் பதிவின் மொக்கை நிச்சயமாய் இந்த இதழினில் இருக்காது என்ற நம்பிக்கையைத் தந்த கையோடு கிளம்புகிறேன் - 'தல' கூட "பந்தம் தேடிய பயணம்" மேற்கொள்ள ! And before i sign out - here you go with another cover preview :


அடுத்த பதிவினில் இது பற்றி இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன் ! Bye for now !! See you around ! 

Thursday, August 27, 2020

RIP ஆண்ட்ரே பால் டூஷாடோ...

 நண்பர்களே,

வணக்கம். காமிக்ஸ் கதாசிரியர் ; திரைக்கதை எழுத்தாளர் ; நாவல் எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட திரு ஆண்ட்ரே பால் டூஷாடோ நேற்றைக்கு, தனது 95-வது வயதில் காலமாகியுள்ளார் ! நமக்கு 1986 முதலே அறிமுகமான ரிப்போர்ட்டர் ஜானி தொடரினில் பணியாற்றிய ஆற்றலாளர் இவர் ! Tintin என்ற பெயரில் பிரெஞ்சில் வெளிவந்து கொண்டிருந்த காமிக்ஸ் இதழினில் எடிட்டராகவும் ; ஆர்ட் டைரெக்டராகவும் பணியாற்றியுள்ளவர் எனும் போது - ஏராளமான புது படைப்பாளிகளை இத்துறைக்கு கொணர்ந்திட இவரது ஊக்கம் நிறையவே உதவியுள்ளது !

1925-ல் பெல்ஜியத்தில் பிறந்தவர், டீனேஜியிலேயே சித்திரங்கள்   போட்டுப் பார்க்க ; கதை எழுதிப் பார்க்க என்று முயற்சித்துக் கொண்டேயிருக்க  - 16 வயதில் முதல் நாவல் பிரசுரமாகியுள்ளது ! சிறுகச் சிறுக காமிக்ஸ் துறைக்குள்ளும் கால்பதிக்க - ஆரம்பித்தவர் 1955-ல் ஜாம்பவான் திபெத்துடன் கரம்கோர்த்து ரிப்போர்ட்டர் ஜானி (RIC HOCHET) தொடரை துவக்கினார் ! தொடர்ந்த 60 ஆண்டுகளுக்கு இந்தக்கூட்டணி அழகாய்த் தொடர்ந்துள்ளது ! And நமது ஆதர்ஷ டாக் புல் & கிட ஆர்டின் கதைகளும் இந்தக்கூட்டணியின் அற்புதப் படைப்பே ! அப்புறம் அமரர் வில்லியம் வான்சோடு இணைந்து ப்ரூஸ் ஹாக்கர் என்ற கப்பற்படை தொடர் ; ரிங்கோ தொடரில் 1 ஆல்பம்  , (தோர்கல் புகழ்) ரோசின்ஸ்கியுடன் HANS என்ற தொடர் ; ஆலன் செவாலியே என்றதொரு கார் ரேஸ் தொடர் ; etc etc என்று கிட்டத்தட்ட 27 தொடர்களில் அசத்தியுள்ள  ஆற்றலாளர் இவர் ! பல நூறு ஆல்பங்கள் இவரது பெயரைத் தாங்கி வந்துள்ளன ! 

நாவலாசிரியராகவும் அவ்வப்போது அற்புதங்களை உருவாக்கியவர் "139-வது பலி" என்ற நாவலுக்கு விருது பெற்றிருக்கிறார் ! 

நல்ல மனிதர் ; நிஜமான ஜென்டில்மேன் ; கருணையுள்ளம் கொண்டவர் - இனி விண்ணுலகில் தனது திறமைகளைக் காட்டக் கிளம்பி விட்டுள்ளார் ! We salute you Sir....!! RIP  !! 


Wednesday, August 26, 2020

Exit வாண்டு Spl & Entry குண்டு Spl !

நண்பர்களே, 

வணக்கம். இன்றைக்கு இரவோடு வோட்டிங் (!!) முடிவுறுகிறதென்றாலும் - வெற்றியாளர் யாரென்று யூகிப்பதில் சிரமங்கள் இராது தானே folks ?! By a distance - ARS MAGNA வே தொடர் முன்னணியில் உள்ளதெனும் போது, அதுவே நமது தீர்மானமாகவும் இருந்திடும் ! So தொடரும் மாதங்களில் 2 x வாண்டு ஸ்பெஷல்ஸ் இதழ்களுக்குப் பதிலாக, இந்த ஆக்ஷன் த்ரில்லரே ரெகுலர் சைசில் இடம்பிடித்திடும் ! I repeat - இது மாக்ஸி சைசில் இராது ! And மாக்ஸி லயனுக்குமே நீங்கள் சந்தா செலுத்தியிருக்கும் பட்சத்தில், இது உங்கள் இல்லம் தேடி வந்திடும் ! ஏற்கனவே TEX தீபாவளி மலர் ; தோர்கல் போன்ற "வெயிட் பார்ட்டிகள்" வெயிட்டிங் இருப்பதால், அநேகமாய் 2021 தான் இந்த இதழுக்கான வேளையாக அமைந்திடும் என்று அனுமானிக்கிறேன் ! வோட்டெடுப்பை அறிவித்த கையோடு - நான் போட்ட வோட்டு வேறொரு அணிக்கே என்பதால், பெருமூச்சு ஒன்றை இந்தத் தருணத்தில் விட்டுக் கொள்கிறேனே !! Phewwwwwww !! என்ன ஒரே ஆறுதல்  - அந்த அணி கட்டக்கடேசியாய் வராததை எண்ணி  சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் ! 😇😇

இந்த 3 பாக ஆக்ஷன் அதகளத்துக்குப் பேனா பிடிக்க நண்பர்கள் ஆர்வமாயிருப்பின், முயற்சிப்போமா guys ?  Worth a try ?

And here you go, அந்த இதழின் டிரெய்லருமே !! 





Saturday, August 22, 2020

கொஞ்சம் சேதிகள் & கொஞ்சம் கேள்விகள்..!

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் எனக்கொரு சந்தேகம் அடிக்கடி எழுகிறது ! நமது மறு வருகைக்குப் பின்பான முதலிரண்டு வருடங்களுக்கு, 'மாசத்துக்கு இரண்டே புக்ஸ்' என்ற சிக்கன அட்டவணையில் வண்டி ஓடிய வண்ணமிருந்தது ! And அவற்றைக் கொண்டே மாதத்தின் முழுமையையும் ஒட்டி வந்தோம் ; பற்றாக்குறைக்கு இந்தப் பதிவுப் பக்கத்தினையும் சமாளித்து வந்தோம் ! ஆனால்  இன்றைக்கோ மாதம் 4 புக்ஸ் வெளி வந்தாலுமே பத்தே நாட்களுக்குள் சகலத்தையும் படித்து ; முடித்து ; அலசி ; ஆராய்ந்து தொங்கப்போட்டு முடித்து விடுகிறீர்கள் எனும் போது, படிக்கவும் சரி, பதிவிடவும் சரி, ஒரு பஞ்சம் நிலவுவது போலொரு பீலிங்கு ! இதோ இந்த ஆகஸ்டின் 4 இதழ்களையும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாய்த் தட்டி முடித்து விட்டிருக்கிறீர்கள் எனும் போது, செப்டெம்பர் இதழ்களின் பக்கமாய்ப் பார்வையை நகற்றும் சபலம் தலைதூக்குகிறது ! ஆனால் அதற்கு இத்தருணம் ரொம்பவே ரொம்பவே too early என்பதால், சம்முவதை வண்டியை வேறெங்கே விடச் செய்யலாமென்ற யோசனை ஓடுகிறது தலைக்குள் ! கனகச்சிதமாய் இந்த நொடியினில், ஒரு மாதத்துக்கு முன்பாய் கண்ணில் பட்டிருந்த சில பல சுவாரஸ்யத் துக்கடாத் தகவல்கள் நினைவுக்கு வந்திட, அதனைப் பகிர்ந்திடத் தீர்மானித்தேன் ! அந்தத் தகவல்களோடு ஒரு வைராக்கியமும் என்னுள் குடியேறியுள்ளதால் - all the more reasons to share ! So இந்த வாரத்துக்கு பிள்ளையார் சுழி போடுவது some comics trivia !!

கொரோனாவின் புண்ணியத்தினில் கேன்சல் ஆகியுள்ளவை உள்ளூர் புத்தகத் திருவிழாக்கள் மாத்திரமன்றி, சர்வதேசத் திருவிழாக்களுமே ! மார்ச்சில் நடைபெற்றிருக்க வேண்டிய பாரிஸ் ; இலண்டன் ; லெய்ப்சிக் (ஜெர்மனி) விழாக்கள் ; ஏப்ரலின் போலோனியா (இத்தாலி)  ; மே மாதத்தின் வார்சா (போலந்து) விழா ; ஜூலையின் சான் டியேகோ (அமெரிக்க) காமிக் கான் ; அக்டொபரின் நியூயார்க் காமிக் கான் என ஏகப்பட்ட சேதாரம் இந்தாண்டு ! நிலவரம் இவ்விதமிருக்க - உலகின் பதிப்பகத் தொழில் நிச்சயமாய்த் தடுமாறித் தானிருக்கும் என்ற யூகத்தோடு -  நமது ஆதர்ஷ காமிக்ஸ் பதிப்பகங்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் எவ்விதம் தாக்குப் பிடித்து வருகிறார்களோ ? என்ற மண்டைக்குடைச்சலில் நெட்டை உருட்டிக் கொண்டிருந்தேன் ! அப்போது கண்ணில் பட்ட 2019 சார்ந்த விற்பனைத் தகவல்கள் மெய்யாலுமே மெர்செலாக்கின !

  • வட அமெரிக்கா + கனடா என்ற தேசங்களின் கூட்டணியினில் - 2019-ல் ஒட்டுமொத்தமாய் விற்றுள்ள காமிக்ஸின் மதிப்பு சுமார் 1.21 பில்லியன் டாலர்கள் !! இந்தியப் பணத்தில் ரூ.90,66,44,53,000 - அதாச்சும் 9000 கோடிகள் ! முந்தைய ஆண்டை விட, இது 11 சதவிகிதம் ஜாஸ்தியாம் ! 
  • அவர்கள் 'கி.நா.க்கள்' எனப் பொதுப்படையாய்க் குறிப்பிடும் முழுநீள ஆல்பங்களின் விற்பனை 765 மில்லியன் டாலராகவும், வாராந்திர / மாதாந்திரத் தொடர் இதழ்களின் விற்பனை 355 டாலராகவும், டிஜிட்டல் காமிக்ஸின் விற்பனை 90 மில்லியன் டாலராகவும் உள்ளது ! 
  • ரைட்டு....விற்பனையின் உச்சத்தில் நிற்கப் போவது சூப்பர்மேனோ ; பேட்மேனோ ; ஸ்பைடர்மேனோ ; X- மெனோ என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களெனில் நல்லதொரு ரப்பரைக் கொண்டு அந்த நினைப்பை அழித்து விடுங்களேன் folks  ! ஏனெனில் தற்சமயம் அதகளம் செய்து நிற்கும் "மேன்" ரொம்பவே வித்தியாசமானவர் ! அண்ணாச்சியின் பெயர் DOG MAN & ஒட்டு மொத்த அமெரிக்க முழுநீளக் கதைகள் aka கி.நா.க்கள் மார்க்கெட்டில் சிக்ஸர்கள் அடித்து வருபவர் இவரே !! குட்டியூண்டு வாசகர்களை மனதில் கொண்டு டேவ் பில்கி உருவாக்கியுள்ள இந்தத் தொடரின் நாயகர் - காலங்காலமாய்ப் பழம் தின்னு கொட்டை போட்டிருக்கும் ஜாம்பவான் சூப்பர் ஹீரோக்கள் அத்தனை பேரையும் ஓரம் கட்டிவிட்டு தனியாய் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் !
  • 2016-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரினில் இதுவரையிலும் உள்ளது 8 ஆல்பங்களே ! And இது வரையிலும் அவை இங்கிலீஷ் பேசும் முக்கிய மார்க்கெட்களில் (USA ; Canada ; UK ; Australia & New Zealand) சுமார் மூன்றரைக் கோடி புக்ஸ் விற்பனையாகியுள்ளன !! And இதன் படைப்பாளி அமெரிக்காவின் பெருநகரங்களில் தனது குட்டி வாசகர்களை சந்திக்க மேற்கொள்ளும் டூர்களானது - நம்மூர்களில் IPL மேட்ச்களுக்குக் கூடும் கூட்டத்தைப் போல பின்னியெடுக்கின்றன ! 
  •  

  • ஒவ்வொரு ஆல்பத்தின் இறுதியிலுமே, குட்டீஸ்களுக்கு அதே பாணியில் படம் வரையும் யுக்திகளையும் டேவ் விவரிக்கிறார் என்பதால், வீட்டுக்கு வீடு துக்கனூண்டுப் படைப்பாளிகள் உருவாகி பெற்றோர்களையும் நெக்குருக வைக்கின்றனர் ! "காமிக்ஸ் படிக்க இன்னிக்குப் புள்ளீங்க இல்லை ; இந்தத் தலைமுறையோடு காமிக்ஸ் கோவிந்தா ....!!" என்றெல்லாம் நாம் நினைத்திருப்பின், நமக்கு அவசரமாய் ஏர்வாடிக்கு டிக்கெட்கள் தேவை போலும் !! கூடும் கூட்டங்களைக் கொஞ்சம் பாருங்களேன் ! எத்தனை நேரமானாலும், தன்னைப் பார்த்திட விரும்பும் ஒவ்வொரு குழந்தையையும் பொறுமையாய்ச் சந்தித்துப் பேசி, கலக்கிடுகிறார் வரம் வாங்கி வந்துள்ள இந்தப் படைப்பாளி ! 


  • மொத்த விற்பனையின் புள்ளி விபரங்களை பார்த்திடும் போது ஜாம்பவான்கள் மார்வெல் காமிக்ஸ் & DC காமிக்ஸ் கோலோச்சுவதும் ஒரு தொடர்கதையாய்த் தொடரவே செய்கிறது ! அமெரிக்காவின் காமிக்ஸ் விற்பனை எண்ணிக்கையில் மார்வெல் 44.7 சதவிகிதத்தையும்  ; DC 30.7 சதவிகிதத்தையும் கையில் வைத்திருக்க, பாக்கி 24 சதவிகிதத்தை பாக்கிப் பதிப்பகங்கள் பகிர்ந்து கொள்கின்றன ! நமது ஜேம்ஸ் பாண்ட் 2.0 வெளியிடும் டைனமைட் காமிக்ஸ் வைத்திருப்பது 2 சதவிகிதத்துக்குக் கொஞ்சூண்டு குறைவாய் !
  • மாதாந்திர பத்திரிகைகள் எனும் பிரிவினில் மார்ச் 2019-ல் DC காமிக்ஸின் டிடெக்டிவ் காமிக்ஸ் # 1000 வெளியாகி - விற்பனையில் தொட்டுள்ள உச்சம் சுமார் 6 லட்சம் பிரதிகள் எனும் sales !! (அயல்நாடுகளிலும் சேர்த்து) BATMAN தோன்றுமொரு landmark இதழிது ! 
  • பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் சமுத்திரத்தின் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்பினால், முத்லிடத்தைப் பிடித்து நிற்போர் - நமக்கு இன்னமும் தூரத்துக் கனவாய்த் தொடர்ந்திடும் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஜோடியினரே !! ஒவ்வொரு புது ஆல்பமும் தோராயமாய் 60 இலட்சம் பிரதிகள் முதலாண்டினில் விற்கிறதாம் !! பிரெஞ்சு காமிக்ஸ் மார்க்கெட்டின் சகல விற்பனை ரெக்கார்டுகளையும் ஆக்ரமித்து வருவது இந்த ஒற்றைத் தொடரின் படைப்புகளே ! And இந்த உச்ச ஸ்தானத்தை அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பது எண்ணற்ற ஆண்டுகளாய் !! So சந்தேகங்களே இன்றி ஐரோப்பிய உச்சம் இந்த சிரிப்பு சாகச ஜோடியே !!  
  • நம்ம XIII-ன் ஆல்பங்கள் இந்த இரண்டாம் சுற்றில் தோராயமாய் 1.75 லட்சம் இதழ்கள் விற்கின்றனவாம் ! தோர்கல் இரண்டு லட்சம் அச்சாகிறது ! நமது ஒல்லிக் கௌபாய் அரை மில்லியன் (5 லட்சம் ) அச்சாகிறார் !  
  • கொரோனா தாக்கத்தில் மார்ச் முதல் சுருண்டு கிடந்த பிரான்ஸ் தேசம் ஜூன் முதலே சுதாரிக்கத் துவங்கி விட்டதால் - காமிக்ஸ் உருவாக்கம் ; அச்சு & விற்பனை - எப்போதும் போலவே பரபரப்பாய் நடந்தேறி வருகிறதென்கின்றனர் நமது படைப்பாளிகள் அத்தனை பேருமே !! ஆண்டுக்கு 5000+ ஆல்பங்கள் வெளியீடு என்ற நம்பரில் கொஞ்சமே கொஞ்சமாய் அடி இருக்கலாமென்றாலும், இங்கே நாம் பார்த்து வரும் தர்ம அடிகள் நிச்சயம் அங்கில்லை என்கிறார்கள் !     
  • சமீபமாய் காமிக்ஸ் படிக்கும் மத்திய வயதினரிடம் எடுக்கப்பட்டுள்ளதொரு சர்வேயில் கிட்டியுள்ள முடிவுகளும் செம interesting !! அவர்களது டாப் 10 காமிக்ஸ் பட்டியலில் 9 தொடர்கள் கார்டூன்களே ! முதலிடத்தில் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ; இரண்டாமிடத்தில் ஆக்ஷன் + காமெடி என்று கலக்கிடும் டின்டின் & மூன்றாமிடத்தில் நமது லக்கி லூக் இடம்பிடிக்கின்றனர் ! நீலப் பொடியர்களுக்கோ இடம் # 7 ! Phewww !!
  • இத்தாலியில் கொரோனா வாங்கிய காவுகள் ; நடத்திய கோர தாண்டவம் இப்போதெல்லாம் ஒரு தூரத்துக் கனவாகவே தெரிகிறதென்கிறார்கள் - சகஜ வாழ்க்கைகளுக்குத் திரும்பிய கையோடு, கோடை விடுமுறைகளையும் ரசித்து வரும் நமது படைப்பாளிகள் ! நோய்த் தாக்கத்தின் உச்சத்தினில் கூட பதிப்புகளை நிறுத்தியிருக்கா போனெல்லி - பழைய வேகத்தோடு டெக்ஸ் & டைலன் டாக் ஆல்பங்களை வெளியிடுகிறார்களாம் ! மார்ச் & ஏப்ரல் மாதங்களில் விழத் துவங்கியிருந்த புத்தகக்கடை விற்பனைகள் -  இப்போது back with a bang என்கிறார்கள் !!     
So மூக்கில் விரல் வைக்கச் செய்யும் இந்த நம்பர்கள் நம்மளவிற்கு நிரூபிப்பதாய் நான் நினைப்பது ஒரேயொரு சமாச்சாரத்தையே !! இலட்சங்களும், பல்லாயிரங்களும் சர்வ சாதாரணமாய்ப் புழங்கிடும் இந்தத் துறையினில், இப்போதெல்லாம் ஒற்றை ஆயிரத்தைத் தாண்டவே நுரை தள்ளும் நாமுமே ஒரு அங்கமென்று சொல்லிக் கொள்ளும் வாய்ப்பினை நல்கிடுவது - நிச்சயமாய் நமது படைப்பாளிகளின் பெருந்தன்மைகளன்றி வேறேதும் அல்ல !! அவர்கள் மாமூலாய்ப் பார்த்து வரும் விற்பனை நம்பர்களின் முன்னே ; கொட்டிடும் வருவாய்களின் முன்னே - நம்மையும் ஒரு உருப்படியாய் மதித்து, அன்போடு உதவிடுவது nothing short of a miracle தானே ?!  என்றேனும் ஒரு நாள் ; நாமும், ஒரு மரியாதைப்பட்ட சர்குலேஷனைக் கண்ணில் பார்த்திடும் பொழுதும், அதை அவர்களிடம் சந்தோஷமாய்த் தெரிவிக்கும் பொழுதும் புலர்ந்திட்டால் - நிச்சயமாய் நம் பொருட்டு குதூகலிக்கும் முதல் ஆட்கள் நமது படைப்பாளிகளாகவே இருப்பர் என்பது நிச்சயம் ! பிரவாகமெடுக்கும் இந்த நம்பர்களைப் பார்க்கும் நொடியில், நமது விற்பனை நம்பர்களைத் தேற்றிட என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தப்பில்லை என்ற ஆசை எனக்குள் அலையடிக்கிறது !  அதன் முதற்படியாக - ஒரு சிக்கனச் சந்தாவோடு துவக்கிட எண்ணியுள்ள 2021-ன் பயணத்தில், முழுக்கவே உத்திரவாதமான ஹிட் நாயக / நாயகியர் + தொடர்கள் என்ற பார்முலாவை அமல்படுத்திட வேண்டுமென்ற வேகமும் பிறக்கிறது ! ஒரே பாட்டுப் பாடி முடிப்பதற்குள் கோடீஸ்வரர்களாகிடும் கோலிவுட் நடைமுறைகள் நமக்கு சாத்தியமாகாது ; so ஒரே சந்தாவில் ஐந்தாயிரம் ,பத்தாயிரமென்று ஜனம் முண்டியடித்துவிடுமென்ற கற்பனைகளில் எல்லாம் நானில்லை ! என்ன - தற்போதைய அந்த மந்த நிலை விலகி, முன்பு போலான சகஜம் திரும்பினாலே, அது முன்செல்லும் பயணத்துக்கான முதற்படியாக இருந்திடாதா ? என்ற ஆதங்கமே ! So நடப்பாண்டினில் அறிமுகமாகியுள்ள மக்காவுக்கும், இப்டிக்காவும், அப்டிக்காவும் ஊசலாடிடும் மக்காவுக்கும் - இடங்களை மறுக்கவோ /  உறுதி செய்யவோ தீர்மானிக்கும் முன்பாய்  உங்களிடம் ஒரு வார்த்தை கேட்க நினைத்தேன் - as always ! 

Of course ; நிறைய முறைகள் கேட்டிருக்கக்கூடிய அதே கேள்விகளாய் இவை இருக்கவும் கூடும் தான் ; ஆனால் சந்தா காலமாய் இம்முறை நமக்கு வாய்க்கவுள்ளது 9 மாதங்களே & as a result சுருக்கமான இதழ்களே இயலுமெனும் போது - கல்தா தரும் கத்திரியின் வீச்சு ரொம்பவே விசாலமாகிட வேண்டியுள்ளது ! So வழக்கமான கேள்விகளாய் இருந்தாலும், வழக்கத்தை விடவும் முக்கியத்துவம் அதிகம் பெறுகின்றன !  
  1. SODA : என் மட்டிற்கு நிச்சயம் இடம்பிடித்திட வேண்டியவர் ! உங்கள் தரப்பிலும் ஒரு ஏகோபித்த YES-ஆ ?    
  2. ரிப்போர்ட்டர் ஜானி : ஒரு டைட்டான போட்டி நிலவிடும், குறுகலான வாய்ப்புகளுடனான அட்டவணையில் இவரும் ஓ.கே. தானா ? 
  3. CID ராபின்
  4. கேரட் மீசை க்ளிப்டன்
  5. 'இம்முறை கொஞ்சம் தேவலாம்' என்ற remarks ஈட்டியுள்ள டேஞ்சர் டயபாலிக் - worth one more go என்பீர்களா ? Maybe இதே போல ஒரு சமீபத்தைய கதையாய்த் தேர்வு செய்தால் சித்திரங்களும், கதையும் புராதன நெடியின்றி லயிக்கச் செய்யுமா ? 
  6. அ-அது வந்து....இந்த அவங்க இருப்பாங்களே....நம்ம இளவரசிங்க ....அது தானுங்க நம்ம மாடஸ்டிங்க !அவுகளுக்கும் ஸ்லாட் ஒன்று ஓ.கே. தானா ? 
  7. மாறுவேஷ மன்னன்  ஹெர்லாக் ஷோம்ஸ் ? 
மேற்படி 7 பேர் சார்ந்து என்னளவிற்கு நானொரு   தீர்மானம் எடுத்துள்ளேன் தான் ; but அட்டவணையினில் இறுதி பட்டி + டிங்கேரிங்காய் எதையேனும் செய்திடுவதாயின் - now is the time for it ! ஆகையால் உங்களின் தனிப்பட்ட எண்ணங்கள் ப்ளீஸ் ?  

அடுத்தாண்டின் சந்தா குறித்த கேள்விகள் ஒரு பக்கமிருக்க, இது நடப்பாண்டின் சந்தா குறித்ததொரு சமாச்சாரம் ! இம்முறை MAXI லயனில் 2 வாண்டு ஸ்பெஷல் இதழ்கள் தலா ரூ.150 விலையில் அறிவிக்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம் ! 'நாங்களும் படிக்கிற மாதிரி இருக்கணும் ; புள்ளீங்க படிக்கிற மாதிரியும் இருக்கணும்' என்ற கண்டிஷனை  இங்கே நான் அமலுக்குக் கொணர்வதாயின் - லக்கி லூக் அல்லது சுட்டி லக்கி மட்டுமே இந்த ஸ்லாட்களை ஆக்ரமித்திட முடியும் ! ஏற்கனவே இந்த வருஷத்தில் 3 லக்கி லூக் கதைகள் இடம் பிடித்திட, மேற்கொண்டும் திணிப்பது ஓவர்கில் ஆகிடக்கூடும் என்பதால் அந்த அகுடியாவை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை ! மாறாக, :வாண்டு ஸ்பெஷல்" என்ற தலைப்புக்கு மெய்யாகவே நியாயம் செய்திடும் விதமாயொரு கதையினை இனம்கண்டு வைத்துள்ளேன் & அதற்கான உரிமைகளும் நம்மதாகி விட்டன இந்த வாரத்தில் !  திரைப்படமாக வெளிவந்து செம succesful ஆக ஓடவும் செய்ததொரு படைப்பு இது ! இதில் beauty என்னவெனில், நம் வீட்டுப் பிள்ளைகள் மாத்திரமன்றி, மனமிருந்தால் நாமுமே  ரசித்திடக்கூடியதொரு ஆக்கமிது !! ஆனால் 'ஆக்ஷனே காமிக்ஸ் ; காமிக்ஸே ஆக்ஷன் மட்டும் தான்' என்று எண்ணிடக்கூடிய நண்பர்களுக்கு இது ரசிப்பது ரொம்பவே சிரமம் என்பதும் புரிகிறது ! "மனமிருந்தால் நாமுமே ரசித்திடலாம்' என்று நான் அடிகோடிட்டிருப்பதை மறுக்கா கவனித்தீர்களெனில், எனது point புரியும் ! நார்மலானதொரு சூழலாய் இது இருப்பின், தோசைகளோ, ஊத்தப்பங்களோ - முதுகில் ஊற்றப்படக்கூடியது  எதுவாயினும் ஓ.கே. என்றபடிக்கு, இந்த அக்மார்க் "வாண்டு ஸ்பெஷல்"-க்கு எப்போதோ தோரணம் கட்டியிருப்பேன் ! ஆனால் முன்னூறு ரூபாய்களெனும் தொகை இன்றைய சூழலில் ஒரு கணிசமானதாய்த் தெரிவதால் லைட்டாக பிரேக் போடத் தோன்றுகிறது ! 

இங்கே என் முன்னே இருக்கும் இன்னொரு option - "வாண்டு ஸ்பெஷல்" முயற்சியினை அடுத்தாண்டினில் அல்லது முன்பதிவினில் களமிறக்கத் தயாராகி விட்டு,  யாருக்கும் நெருடல் தரா ஒரு ஆக்ஷன் த்ரில்லரை மருவாதையாய் வெளியிடலாம் ! And  அதன் பொருட்டு கச்சிதமான பிரதிநிதியாய் ARS MAGNA (ரெகுலர் சைசில்) கை தூக்கி நிற்பதாக எனக்குத் தோன்றியது ! நிச்சயமாய் இந்தத் தெறிக்கும் த்ரில்லர் இன்றைய இக்கட்டான நாட்களிலும் விற்பனையில் சோடை போகாதென்று நம்பிடலாம் ! 
இல்லாங்காட்டி - இருக்கவே இருக்குது சகலரோக சர்வ நிவாரணி - நமது 'தல' டெக்சின் வண்ண MAXI மறுபதிப்புப் படலத்தை இன்னும் வீரியமாய் நடைமுறை செய்து பார்க்கும் option !! "கழுகு வேட்டை" கதையினையோ ; "மரண முள்" கதையினையோ ; அல்லது வேறு ஏதேனும் classic கதைகளை அந்த 2 MAXI ஸ்லாட்களுக்குள் புகுத்தினால் விற்பனையில் எந்தக் கேள்விக்குறிகளும் இராது - சர்வ நிச்சயமாய் ! 


So உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ? வாண்டு ஸ்பெஷலா ? புதையல் வேட்டையா ? தல தாண்டவமா ? இதோ - அதற்கான வோட்டெடுப்பினில் பங்கேற்கும் உங்களின் வாக்குச் சீட்டு : https://strawpoll.com/qdsx4cduc

Bye guys...செப்டெம்பரின் பணிகளுக்குள் தீவிரமாய்த் தலைநுழைக்கும் பாட்டைப் பார்க்க நான் கிளம்புகிறேன் ! See you around !! 

P.S. : அப்புறம் சின்னதொரு தகவலுமே : 

நமது lioncomics.in தளம் முற்றிலுமாய்ப் புதுப்பிக்கப்பட்டு, புதுசாய் ஒரு Payment gateway-ம் இணைக்கப்பட்டிருப்பதால் - நீங்கள் ஒரேயொரு முறை மறுபடியும் பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கும் ! மறுக்கா ரிஜிஸ்டர் செய்திடும் நண்பர்களில்  நிறைய பேர் - PAYTM என்ற பெயரைப் பார்த்ததும், 'இங்கே அது மட்டும் தான் பணப் பரிவர்த்தனைக்கான ஏற்பாடு போலும் !' என்று நினைத்துக்கொண்டு ரிவர்ஸ் கியர் போட்டு வருகிறார்கள் ! "என்கிட்டே Paytm கணக்குலாம் இல்லியே ...வழக்கம் போல கிரெடிட் கார்டு & டெபிட் கார்டு மூலமா பணப் பரிவர்த்தனை பண்ண முடியாதா ?" என்று கேட்டு வருகின்றனர் ! நிலவரத்தைத் தவறாகப் புரிந்துள்ளீர்கள் guys ; PAYTM என்ற icon -ஐ க்ளிக் செய்தாலே வழக்கம் போல க்ரெடிட் & டெபிட் கார்டு ; நெட்பாங்கிங் என சகல வசதிகளுக்குமான பக்கம் திறந்திடும். PAYTM நமக்கு பணத்தை வசூலிக்கும் ஒரு gateway மாத்திரமே ; so உங்களுக்கும் Paytm-ல் ஒரு கணக்கு இருந்தால் தான் நம் தளத்தில் புக்ஸ் வாங்கிட இயலுமென்றெல்லாம் ஏதும் கிடையாது ! Happy & Safe Shopping !!

Wednesday, August 19, 2020

XIII - பழசும் / புதுசும் !

 நண்பர்களே,

வணக்கம். காதில் தக்காளிச் சட்னி பீறிடும் அளவுக்கு இம்மாதத்துக் கி.நா. பற்றிய அலசல்களைப் போட்டுத் தாக்கி விட்டிருப்பதால் - time to move on என்பேன் ! And ஒன்றுக்கு இரண்டாய் ஆக்ஷன் ஜாம்பவான்கள் ரகளை செய்திருக்கும் மாதமிது எனும் போது ஒளிவட்டத்தின் பாய்ச்சல் XIII மீதும், ஜேம்ஸ் பாண்ட் மீதும் இனி லயித்திடட்டுமே folks ?

XIII-ன் ஆல்பத்துப் பெயரைப் பார்த்த போதே நம் அனைவருக்கும் ஒரே வித curiosity மேலோங்கியிருக்குமென்பது நிச்சயம் - "அது என்ன 2132 மீட்டர்ன்னு ???" நண்பர் செல்வம் அபிராமி தந்த long distance sniper shot புள்ளி விபரங்கள் + வாஷிங்க்டன் நகர் சார்ந்த சில குறிப்புகளைப் படித்த போது - கதாசிரியர் Yves Sente செய்திருக்கக்கூடிய ஆராய்ச்சிகளின் ஆழமும், ரயிலின் ரூட் நம்பர் மாதிரியான அந்தத் தலைப்பின் பின்னணியும் புரிந்தது ! எது எப்படியோ - நேற்றைக்கு இதன் தொடர்ச்சியாகிடவுள்ள அடுத்த ஆல்பத்தின் ஒரு முன்னோட்டக் குறிப்பினை படைப்பாளிகள் அனுப்பியிருந்தனர் ! அவற்றைப் படித்த  போது 2132 மீட்டர் ஆல்பத்தின் முடிச்சுகளின் மிச்சம் மீதிகள் அனைத்துமே அடுத்ததில் அவிழ்க்கப்படுவது புலனாகிறது ! And ..and ...and ...சரி....அதைப் பற்றி இப்போது வேண்டாமே ; கதை வெளிவரும் வரைக்கும் மௌனமே தேவலாம் !! இதோ அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முன்னோட்டம் + உட்பக்க சித்திர ஜாலங்களின் preview :



காத்திருக்கும் "புது" XIII ஒருபக்கமெனில், முன்பதிவில் தரை தட்டி நிற்கும் "பழைய" XIII இன்னொரு பக்கம் ! முதல் 30 நாட்களின் வேகம் தொடர்ந்த நாட்களில் போயிண்டே...its gone !! முதல் மாதத்தினில் 90 முன்பதிவுகள் என்று கெத்து காட்டிய புக்கிங்ஸ் - அடுத்த மாதத்தினில் ஆறோ / ஏழோ என்று நண்டு பிடிக்கத் துவங்கியுள்ளது ! 'இதை ஒரே புக்கா போட்டுப்புட்டா கொரோனா வைரஸிலிருந்து, புக்கிங்களின் வேகம் வரைக்கும் எல்லாமே சரியாகிப்புடும் !" என்று XIII அதிதீவிர அணியினர் அவ்வப்போது கருத்துக் சொல்லி வருவது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டே தானுள்ளது ! ஆனால் ஒரு புக்கா ? பற்பல புக்குகளா ? என்பதையெல்லாம்  நிர்ணயிக்க வேண்டியது, நடைமுறை சாத்தியங்களேயன்றி ; காமிக்ஸ் ஆர்வங்கள் மாத்திரமே அல்ல என்பதை ஏற்கனவே நான் சொல்லிவிட்டிருக்கிறேன் நண்பர்களே ! And I repeat - ஆர்ட்பேப்பரில் ஆயிரம் பக்கங்கள் கொண்டதொரு இதழை ஒற்றை புக்காய் பைண்டிங் செய்வதென்பது - கழுத்தில் கற்களை அழகாய்க் கட்டிக்கொண்டு, செம மொட்டைக் கிணறாய்த் தேடிக்குதிப்பதற்குச் சமானமானது !  மொத்த எடையினையும் தாங்கி நிற்கப்போகும் அட்டைப்படமானது,  ஐந்தாறுவாட்டி புரட்டிய பின்னேயே வெடிப்பு விட்டபடிக்கே, சிறுகச் சிறுக பைண்டிங்கிலிருந்து பிய்த்துக் கொண்டு வருவதும், துடைப்பங்களோடு மக்கள் எங்களைத் தேடிடுவதுமே பின்விளைவாகிடும் என்பதை நமது பைண்டிங் நண்பரும் உறுதி செய்துவிட்டிருக்கிறார் ! எங்கேனும் நூலகங்களில் உங்கள் கண்களில் இது போல தடிமனான புக்குகள் பட்டிருக்கக்கூடும் தான் ; "அதுலாம் நல்லாத்தான் இருந்துச்சு" என்றும் தோன்றிடலாம் தான் ! ஆனால் அவையெல்லாம் பைண்ட் செய்யப்படுவது சில பல கோடிகள் விலைகளிலான hardcover binding இயந்திரங்களினால் ! அதில் அவர்கள் பயன்படுத்துவது ரொம்பவே உயர் grade கோந்து  & அது மிஷினில், சூட்டில் இளகிய பிற்பாடு தான் ஒட்டிடவே செய்யும். நாம் கையால் பைண்ட் செய்யும் போது பயன்படுத்திடும் பெவிக்காலின் grade முற்றிலும் வேறானது ! (எங்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளாய் வெளிவந்து கொண்டிருக்கும் Nightingale brand டயரிக்களை பைண்ட் செய்வதற்கென 12 கோடிக்கு அவர்கள் ஒரு புது மிஷினை 15 வருஷங்களுக்கு முன்னேயே வாங்கினர் !!) நாமோ கையால் தான் இது சார்ந்த பணிகளை எப்போதுமே செய்து வருகிறோம் எனும் போது - அந்த இயந்திரத்து துல்லியமா, வலுவோ சாத்தியமே ஆகிடாது ! So "XIII மறுபதிப்பு --- ஒற்றை புக்" என்ற போகா ஊருக்கு பஸ் ரூட்டைத் தேடிடும் நேரத்துக்கு - 2 தொகுப்புகளாக வரவுள்ளதை இன்னமும் அறிந்திருக்கா நண்பர்கள் இருப்பின், அவர்களின் காதுகளில் போட்டு வைத்திட முயற்சித்தால், இந்த புக்கிங்குகளை அடுத்த வருஷம் ஏப்ரலுக்குத் தள்ளிப்போட வேண்டிய அவசியங்கள் இல்லாது போகலாம் ! October இறுதிவரையிலும் முன்பதிவுகளின் Phase 1 தொடர்ந்திடும் என்பதால், இன்னமும் நிறையவே அவகாசமுள்ளது தான் ; so பார்ப்போமே ! 

In the meantime - JSK Special - ஸ்பைடரின் "சர்ப்பத்தின் சவால்" ஜாலியாய் புக்கிங் ஆகி வருகிறது ! And முகவர்கள் கூட இப்போதே அதன் பொருட்டு துண்டை விரித்து வைத்துள்ளனர் ! 

மீண்டும் சந்திப்போம் folks ...இப்போதைக்கு bye !! And ஜேம்ஸ் பாண்ட் 007 + டயபாலிக்காரையுமே அலசிட மறக்க வேணாமே ப்ளீஸ் ? 

Sunday, August 16, 2020

மேலோட்டமாய் ஒரு பார்வை !

 நண்பர்களே,


வணக்கம். நெடும் வாரயிறுதிகள் எப்போதுமே சோம்பலானவைகளே ; ஆனால் மார்ச்  இறுதி முதலாகவே எல்லா நாட்களும்  கொட்டாவி விடும் பொழுதுகளாகவே தென்படுவதால், இந்த சனி & ஞாயிறு விடுமுறைக்கூட்டணியை 'அப்டிக்கா  ஓரமாய் போய் விளையாடுங்க புள்ளீங்களா !' என்றே சொல்லத் தான்  (என் மட்டிற்காவது) தோன்றுகிறது ! புது இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தாச்சு ; and உங்களுள் பெரும்பான்மையினருக்கு அவற்றைப் புரட்டிப் பார்க்க மட்டுமே அவகாசம் கிட்டியுள்ளது எனும் போது - அவற்றின் makings பற்றி in depth பேசிடுவது பொருத்தமாகவும் இராது ! So சும்மா ஜாலியாய் இங்கேயொரு  அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு ஹெர்மனின் "தனித்திரு...தணிந்திரு" மொழிபெயர்ப்போடு இணைந்திருப்பதே தேவலாமென்று தோன்றுகிறது ! So இந்தவாட்டி உள்ளுக்குள் ரெம்போ புகுந்திடாது, மேம்போக்காகவே ஒரு சிறு பயணம் மட்டுமே, இம்மாத இதழ்களோடு ! 

ஆகஸ்டின் நான்கு இதழ் கூட்டணியில், இதுவரையிலும் விரல் விட்டு எண்ணிடக்கூடிய அலசல்களே கிட்டியுள்ளன எனும் போது - எதையும்  taken for granted என எடுத்துக் கொள்வது சுகப்படாது என்பது புரிகிறது  ! And கிட்டியுள்ள அலசல்கள் (எதிர்பார்த்தபடிக்கே) XIII -ன் 2132 மீட்டர் கதைக்கொரு thumbs up தந்திருப்பதும், பனியில் ஒரு குருதிப்புனல் கி.நா.விற்கொரு 'ஓ' போட்டிருப்பதும் கண்கூடு என்றாலும், these are still very  early days !! இறுதி முடிவுகள் எவ்விதம் அமைந்திட்டாலுமே, என்னைப் பொறுத்தவரையிலும் இந்த மாதம் கொஞ்ச காலத்துக்கேனும் நினைவில் நிற்கவுள்ள மாதமே - simply becos மொழிபெயர்ப்பினில்  சந்திக்க நேர்ந்த பன்முகத்தன்மையின் காரணமாய் ! வித விதமாய் ; ஜானர் ஜானராய் கதைகளை வெளியிடும் போது, ஒரே மாதத்தினில் கலவையாய் இதழ்கள் அமைந்திடுவதும்,  அவற்றிற்குப்  பேனா பிடிப்பதென்பது ரொம்பவே unique ஆன அனுபவங்களாகிடுவதையும்  நான் உணர்ந்திடும் முதல் தருணமல்ல தான் ! ஆனால் நடப்பாண்டினில் ; அதுவும் இந்த லாக் டௌன் படலங்களுக்குப் பிற்பாடு, பெரிய மெனெக்கெடலைக் கோரிய இதழ்கள் அத்தனை அதிகம் இருந்திருக்கவில்லை ! போன மாசமெல்லாம், கார்ட்டூன்களின் தாலாட்டு நிகர் பணியினில் பணியாற்றியதும், 'இளம் டெக்சின்' பர பர சாகசத்தில் புகுந்து வெளியேறியதும் - மனுஷனை செம சோம்பேறியாக்கி வைத்திருந்தன ! 

ஆகஸ்டின் அட்டவணையைப் பார்த்த போதே ஜூலையின் சோம்பல் முறிக்கும் படலம்  மறுக்கா தொடர வாய்ப்பு லேதென்று புரிந்தது தான் ; but still ஜேம்ஸ் பாண்ட் 007 & 'பனியில் ஒரு குருதிப் புனல்' ஈரத் துணியை முக்காடாய்ப் போட்டு விட்டு, திணறத் திணறச் சாத்துமென்று எதிர்பார்த்திருக்கவில்லை ! Simply put - இந்த 2 கதைகளும் - வசனங்களின் பாணிகளில் ; அவசியப்படுத்திய மொழிக்கையாளலில் - இரு வேறு துருவங்களின் வேற்றுமைகளைக் கொண்டிருந்தன ! ஜேம்ஸ் பாண்டின் இந்த அமெரிக்க version-ஐ ஆங்கிலத்தில் படித்திருக்கக்கூடியோர்க்கு நான் சொல்ல முனைவது புரிந்திடக்கூடும் ! பெருசு பெருசாய்ப் படங்களும், தெறிக்க விடும் ஆக்ஷன் sequences-ம் நிறையப் பக்கங்களை எடுத்துக் கொண்டாலுமே , இந்தத் தொடரினில் பணியாற்றியுள்ள வெவ்வேறு கதாசிரியர்களுமே ஸ்கிரிப்டில் கொணர முற்பட்டிருக்கும் நவீனத்துவம் வேறொரு லெவல் ! ஏகப்பட்ட உளவுத்துறை சார்ந்த தகவல்கள் ; ஏகப்பட்ட ஹை-டெக் சமாச்சாரங்கள் என்பனவற்றை அந்த typical  பிரிட்டிஷ் வறண்ட நக்கல் பாணியுடன் கலந்து நறுக்கென்று பரிமாறியிருப்பார்கள் ! இது வரையிலுமான ஒவ்வொரு ஜேம்ஸ் பாண்ட் 2.0 கதையிலும் இந்த பாணி தொடர்ந்துள்ளதே என்பதால் - 'நில்..கவனி..கொல்' கதையிலும் அந்த template தொடர்ந்திட்டது புதுமையாய்த் தெரியவில்லை தான் ! ஆனால் இங்கிலீஷில் வாசித்து விட்டு நடையைக் கட்டுவதற்கும் , தமிழாக்கம் செய்ய மண்டையைச் சொரிவதற்குமிடையே உள்ள வித்தியாசம் மெகா சைஸாய் உருமாறித் தெரிந்ததென்னவோ நிஜம் தான் ! அதிலும் இம்முறை கதை நெடுகிலும் பாண்ட் அந்தக் கூட்டாளிப் பெண்ணிடம் பல்ப் வாங்கிக் கொண்டே திரிவதும், அதன் மத்தியிலும் அவளோடு ஜல்ஸாக்களில் ஈடுபட்டுத் திரிவதும், MI 6-ன் பூத்ராய்டோடு அடிக்கும் நையாண்டி தர்பார்களும் - இங்கிலீஷில் செம நாசூக்காய் வழங்கப்பட்டிருந்தன ! அவற்றைச் சேதப்படுத்திடாது தமிழுக்குக் கொணர்வதென்பது பேந்தப் பேந்த முழிக்குமொரு அனுபவமாய் அமைந்ததை மறுக்கவோ, மறக்கவோ மாட்டேன் ! Final output எத்தனை தூரத்துக்கு ஒரிஜினலுக்கு நியாயம் செய்துள்ளதோ - சொல்லத் தெரியலை & சொல்ல வேண்டியவனும் நானில்லை ; but எனக்கு இயன்றமட்டிற்கு இங்கு மெனெக்கெட்டுள்ளேன் என்பதை மட்டும் நினைவில் கொண்டிடுவேன் ! 

ஜேம்ஸ் பாண்ட் இன்றைய யுகத்தின் பிரஜையாய் வலம் வரும் காலத்திலிருந்து அப்டியே கி.நா. பக்கமாய் ஜம்ப் பண்ணினால், அங்கோ 2 நூற்றாண்டுகளுக்கு முன்பான கதைக்களம் ; மாந்தர்கள் & வசன நடை ! பற்றாக்குறைக்கு கதைநெடுகிலும் யுத்தத்தின் அயர்ச்சிகளை உணர்ந்து நிற்கும் சிப்பாய்களுக்கே உரித்தானதொரு  மெலிதான சோகம் கலந்த நக்கல் இழையோடியதைப் பார்க்க முடிந்தது ! And பின்பாதியிலோ - கதை சொல்லும் கார்பொரேல் எக்ரியனுக்கு முக்கியத்துவம் கூடிடும் பக்கங்களின் துவக்கம் முதலாய் ஒரு refined மொழிநடை அமலுக்கு வந்திருந்தது ! நமக்கு இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திடும் பெண்மணி இத்தாலியப் பிரஜையே என்பதால் தாய் மொழியில் அவரது புலமை பிரமாதமே ; ஆனால் இங்கிலீஷில் அதே ஆற்றலை எதிர்பார்த்திடலாகாது எனும் போது - என் கையிலிருந்த இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இந்திரா சவுந்தர்ராஜன் அவர்களின் மர்ம நாவலாய்க் கண்ணில்பட்டது ! அதையும் அச்சுக்குப் போக வெகு சொற்ப அவகாசமே எஞ்சியிருந்த நேரத்தில் கையிலெடுத்துக் கொண்டு நான் முழித்த முழி ஆந்தைகளுக்கே பெருமை சேர்த்திருப்பது உறுதி ! கதையின் முடிவு கி.நா.க்களுக்கே உரித்தான open ending எனும் போது - அதனை யார்-எவ்விதம் கிரகித்துக் கொள்வார்களென்பதை கதாசிரியர் அவரவரது கற்பனைகளுக்கே விட்டிருக்க - எனக்கு அதன் பொருட்டு பெருசாய் நோவுகளில்லை ! ஆனால் கதாசிரியரும், நீங்களும், ஒரு துக்கனூண்டு ரூபத்தில் நானுமே இடம் பிடிக்குமொரு ஆல்பத்தை அந்த open end வரையிலும் பத்திரமாய்க் கொணர்ந்து சேர்ப்பதற்குள் நாக்கு தொங்கோ தொங்கென்று தொங்கிப் போய் விட்டது ! இடையிடையே விக்கிப்பீடியாவில் தேடல்கள் ; கூகுளில் இத்தாலியப் பதங்களின் அர்த்தங்களைப் புரிந்திட  முயற்சிகள் என்ற கூத்துக்களும் இணைந்து கொள்ள - ஷப்பா !! இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருப்பின், இன்னும் கொஞ்சம் நிறைவாய்ச் செய்திருக்கலாமோ ? என்று எனக்கே தோன்றியது தான் ! ஆனால் புக்காய் கையிலெடுத்துப் படித்துப் பார்த்த போது, இதை கூடுதலாய் ஒரு வாரமெடுத்துச் செய்திருந்தாலும் பெருசாய் எந்த வித்தியாசமும் இருந்திராதென்றே தோன்றியது ! So இனி படித்திடும் நீங்களே இதனை ஜட்ஜ் செய்திட வேண்டிய ஆட்கள் ! உங்கள் தீர்ப்புகள் எவ்விதம் இருந்தாலுமே, எனக்கோ இதன் பணிகள் சார்ந்த நினைவுகள் ரொம்பவே ஸ்பெஷலாகவே இருந்திடும் - as with most graphic novels !! 

இம்மாதத்தின் இ.ப. சார்ந்த அனுபவங்களைப் பற்றி ஏற்கனவே விரிவாய் எழுதிவிட்டேன் எனும் போது எஞ்சியிருப்பது டயபாலிக்காரின் ஆல்பமே ! வித்தியாசமான களங்களுக்குப் பேனா பிடிப்பது எத்தனை பெண்டு கழற்றிடுமோ, அதற்குச் சிறிதும் சளைக்காத சிரமமே மாமூலான கதைகளோடு பயணிப்பதும் ! பக்கத்துக்குப் பக்கம் என்ன எதிர்பார்ப்பதென்றே தெரியாது ஓடிடும் கதைகள் ஒருவிதச் சவாலெனில், முதல் பக்கம் முதலே நெற்றி முழுக்க கதையை போஸ்டரடித்துச் சுமந்து திரியும் கதைகளுமே சவால்களில் குறைச்சலானவைகளல்ல ! சின்னதொரு உதாரணம் சொல்கிறேனே - போன மாதத்து "மீண்டும் கிங் கோப்ரா" வின் புண்ணியத்தில் ! பத்தி பத்தியாய் ; வண்டி வண்டியாய் டயலாக்ஸ் கொண்ட புராதன, நேர்கோட்டுக் கதையே அது ! சுட்டுப்போட்டாலும் என்னால் அதனுள் பேனாவும், கையுமாய்ப் பயணித்திருக்க இயலாது ! அதனை எடிட் செய்வதற்குள்ளேயே கைலாஸாவிற்கு கள்ளத்தோணிகள் ஓடுகின்றனவா ? என்று பார்க்கும் சபலம் ஆட்டிப் படைத்திருக்க, அதனை மொழிபெயர்ப்பதாயின் ஜார்க்கண்ட் பக்கமாய்க் குடி மாறவே செய்திருப்பேன் தான் ! ஆனால் நமது கருணையானந்தம் அவர்களோ செம ஜாலியாய் இதனை செய்து முடித்திருந்தார்கள் ! இதோ, இப்போது கூட JSK ஸ்பெஷல் ஆன அந்த ஸ்பைடர் சாகசத்துக்கு உற்சாகமாய் பேனா பிடித்து வருகிறார் ; எனக்கோ இப்போதே உதறுகிறது, அந்த எடிட்டிங்கை எண்ணி ! So கி.நா.க்கள் ; இஷ்டைலான கதைகள் என்பனவெல்லாம் ஒளிவட்டத்தை ஈர்த்திடக்கூடியவைகளாக இருக்கலாம் ; ஆனால் மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி பாட்டுப் பாடும் வேலைகளும் பெண்டைக் கழற்றுபவைகளே ! அவ்விதம் பார்க்கையில் இம்மாத கறுப்பு முகமூடிக்காரர் தன பங்குக்கும் கசரத் வாங்கியுள்ளார் ! 'இருக்கு....ஆனா இல்லே !' என SJ சூர்யா பாணியில் கதாசிரியர்கள் செய்திருக்கும் லூட்டிகளோடு 'துரோகம் ஒரு தொடர்கதை'யினில் பயணிக்க வாய்த்த வாய்ப்பானது memorable in a different way !! 

இந்த டயபாலிக் ஆல்பத்திற்குமே உங்களது ரேட்டிங்ஸ் என்னவாக இருக்குமென்று அறிந்திட ஆர்வத்தோடு வெயிட்டிங் ! So கழுவி ஊற்றுவதானாலும் சரி ; தட்டிக் கொடுப்பதானாலும் சரி, மறவாது செய்திடுங்களேன் guys ! 

Before I sign out - சில கேள்விகள் for you : 

  1. கி.நா.வினில் நிஜ வில்லனாய் கதாசிரியர் கருதுவதை யாரை / எதை ? என்று யோசித்தீர்களா guys ? 
  2. உங்களுக்கும் அந்த ஆல்பத்தில் முக்கிய பங்குள்ளதை உணர முடிந்ததா ? 
  3. நமக்குத் துளியும் தொடர்பில்லா ஒரு யுகம் ; ஒரு வரலாறு - என்பதே இந்த கி.நா. வின் தளம் ! ஆனாலும் நம்மை அங்கே இட்டுச் செல்லச் சாத்தியப்பட்டுள்ளதை ஓவியரின் வெற்றியாகப் பார்க்கிறீர்களா ? அல்லது கதாசிரியரின் சாதனையாகவா ? 'சமமாய்ப் பார்க்கிறேன்' என்ற பதில்ஸ் வேணாமே ப்ளீஸ் ! 
  4. Last but not the least, இதே நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பினைப் பின்புலமாய்க் கொண்டதொரு கிராபிக் நாவலும் சமீபத்தில் கண்ணில்பட்டது - with a completely different storyline !! அங்கும் கறுப்பு-வெள்ளையில் மிரளச் செய்யும் சித்திரங்கள் ! அதையும் எப்போதேனும் முயற்சிக்கலாமா folks ? இல்லாங்காட்டி நெப்போலியனை இஸ்திரியில் படித்ததோடு நிறுத்திக் கொள்வோம் என்பீர்களா ? 
Bye all....see you around ! தொடரும் நாட்களிலாவது புது இதழ்களுக்கென நேரம் தர முயற்சித்திடுங்களேன் ? Good reading !! 

P.S : நமது இரு ஆன்லைன் விற்பனைத் தளங்களுமே, உங்களின்   ஆன்லைன் ஷாப்பிங்கை சுலபமாக்கிட நிறைய மாற்றங்களுடன்,இப்போது தயாராய் உள்ளன ! And ரூ.500 க்கு மேலான backissue ஆர்டர்களுக்கு - ரூ.50 விலையிலான backissues நம் அன்புடன் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறேன் ! So முயற்சித்துப் பாருங்களேன் folks ? 

Wednesday, August 12, 2020

அடித்து ஆட ஒரு ஆகஸ்ட் !

 நண்பர்களே,

வணக்கம். எப்போதும் போலவே மசியின் மணம் நாசியைத் தாக்கும் சூட்டோடு சூடாய், புக்ஸ் நான்கும் கூரியர்களில் இன்றைக்குப் புறப்பட்டு விட்டன ! So இந்த நெடும் வாரயிறுதிக்கு உங்கள் அனைவரின் கைகளிலுமே நமது இதழ்கள் இருந்திடும் வாய்ப்புகள் செம பிரகாசம் என்பேன் ! 

And இதோ - இன்னமும் நீங்கள் பார்த்திரா இம்மாதத்து இதழ் # நான்கின் முதல் பார்வை - நமது இத்தாலிய முகமூடியாரின் லேட்டஸ்ட் சாகசத்தோடு :

போன முறையின் டயபாலிக் ஜாகஜம் ரொம்பவே ரொம்பவே நேர்கோட்டில் இருந்ததாய் நீங்கள் அபிப்பிராயப்பட்டிருந்தது நினைவுள்ளது ; இதுவோ அந்தக் குறையினைத் தீர்க்கவுள்ள அருமருந்தாய் (!!) இருந்திடப் போகின்றது ! தவிர, இது டயபாலிக் தொடரினில் ரொம்பவே சமீபப் படைப்பு என்பதால் சித்திரங்களிலும் புராதனம் தெறிக்காது ! And வழக்கம் போல அட்டைப்படத்தினில் மினுமினுப்பு உண்டு !

அப்புறம் - இதோ ஜேம்ஸ் பாண்டின் உட்பக்க preview :


So இன்னொரு 4 புக் மாதத்தின் பணிகள் எங்கள் மட்டிற்கு ஓவர் ! நிறையவே கற்றிட வாய்ப்புகள் தந்துள்ள கூட்டணி இது என்பதால் ரொம்ப நாளைக்கு  இவை எனக்கு நினைவில் நிற்குமென்பது உறுதி ! படித்தது என்னவென்பதை இவ்வார இறுதியினில் எழுத முற்படுகிறேன் ! இப்போதைக்கு பந்து உங்கள் தரப்பில்....அடித்தாடுங்கோ !! 

Here are the online listings too : 

https://lion-muthucomics.com/latest-releases/544-august-pack-2020.html

https://lioncomics.in/product/august-pack-2020/

Bye all....see you around !!

Sunday, August 09, 2020

ஒரு கி.நா.வின் கதை !

 நண்பர்களே,

வணக்கம். எழு கழுதை வயசாச்சு ; 36 வருஷங்களாய் ; சுமார் 900 இதழ்களைப் பார்த்தாச்சு ; எக்கச்சக்கமோ எக்கச்சக்கத் தொடர்களைப் புரட்டியாச்சு ; வாசித்தும் பார்த்தாச்சு.....ஆனால் இனி இதில் புதுசாய்ப் பார்த்திட என்ன இருக்கக்கூடுமோ ? என்ற நினைப்பு மட்டும் ஒரு நாளும் தலைகாட்டியதில்லை ! 'அடடே...தம்பியாபுள்ளை அவையடக்கத்தில் ஓவரா குழையுதே ' என்று தோன்றுகிறதா ? தப்பில்லை தான் guys - ஆனால் எந்தவிதமான அடக்கமும் இந்த statement-ன் பின்னணிக் காரணமகிடாது !! மாறாக கற்பனையெனும் ஊற்று ஒருக்காலும் வற்றிடா ஒரு வண்டி ஜாம்பவான்கள் இந்த காமிக்ஸ் லோகமெங்கும் கோலோச்சுவதால், எந்த நொடியில் எந்தத் திக்கிலிருந்து திகைக்கச் செய்யும் எந்தப் புதுப் படைப்பு எட்டிப்பார்க்குமோ ? என்று யூகிக்கக்கூட இயலாத வேகத்தில் படைப்புலகம் சுழன்று வருகிறது ! So நான்பாட்டுக்கு 'அல்லாத்தையும் கரைச்சாச்சு ; குடிச்சாச்சு !!' என்ற மிதப்பில் திரிந்தால் - அழகான குண்டு பல்புகள் அடிக்கடி பட்டுவாடா ஆகிடும் ! And அதை நூற்றிஎட்டாவது தபாவாக உணர்ந்திடும் வாய்ப்பு கடந்த 3 நாட்களில் வாய்த்துள்ளது !


புதனன்று இரவு டயபாலிக்குடனான கண்ணாமூச்சி ஆட்டம் நிறைவுற ; ஏற்கனவே XIII & ஜேம்ஸ் பாண்ட் கலர் இதழ்களும் அச்சாகியிருக்க - மாதத்தின் 3 இதழ்களில் என்மட்டுக்கான பணிகளில் கையைத் தட்டியிருந்தேன் ! எஞ்சியிருந்தது ஏற்கனவே 2 மாதங்கள் தள்ளிப் போக நேரிட்டிருந்த கி.நா. - "பனியில் ஒரு குருதிப்புனல்" மட்டுமே !! இந்த  110 பக்க இத்தாலிய கி.நா.வினில் - லாக்டவுன் படலங்களெல்லாம் துவங்கிடுவதற்கு முன்பான மார்ச்சிலேயே முப்பது பக்கங்களை எழுதியிருந்தேன் ! திடுமென மொத்தமாய் நாட்டுக்கே திண்டுக்கல் பூட்டுப் போடும் அவசியம் எழுந்த போது, பணிகளில் focus குன்றியதும், சோம்பல் முளைத்ததும் ஒருங்கே நடந்தன ! பற்றாக்குறைக்கு 30 பக்கங்கள் பயணித்திருந்த போதிலும், இது என்ன மாதிரியான கதையோட்டம் என்பதை யூகிக்க முடிந்திருக்கவில்லை & இதன் இத்தாலிய மொழிபெயர்ப்புமே சீடையுருண்டையை root canal செய்த பற்களோடு கடிப்பது போலிருக்க - 'அப்பாலிக்கா பாத்துக்கலாம் !' என்று மூட்டை கட்டிவிட்டிருந்தேன் ! So காரணங்களும் வாகாய் அமைந்த போது இந்த இதழைத் தள்ளிப்போடுவது சுலப option ஆகப் பட்டது ! But இம்முறை தள்ளிப்போட சாத்தியங்களில்லை என்ற போது மார்ச்சில் எழுதிய ஸ்கிரிப்ட் + பாக்கியிருந்த 80 பக்கங்களை தூசி தட்டியெடுத்து மறுக்கா பேனா பிடிக்க முயன்றேன் ! 

Timeline : புதனிரவு 10-30 p.m

கொட்டாவிகளோடு மல்லுக்கட்டுவதே பெரும்பாடாகிட, 'அவசரம்' என்ற அலாரம் ஒரு மூலையில் விடாப்பிடியாய் ஒலித்துக்கொண்டிருந்ததால்  'தம்' கட்டி 25 பக்கங்களை நிறைவுசெய்துவிட்டு படுக்கக் கிளம்பினேன் ! 'ரைட்டு...பாதிக் கிணறைத் தாண்டியாச்சு ; மீதத்தை நாளைக்குத் தாண்டிப்புடலாம் !" என்ற நிறைவு இருந்திருக்க வேண்டிய இடத்தினில்  எனக்குள் இருந்ததோ கொஞ்சமாய்க் குழப்பமே ! 'சரியாய் கதையின் நடுவினில் நிற்கிறேன் ; ஆனால் இன்னமும் இது என்ன மாதிரியான கதையென்பது கிஞ்சித்தும் புலனாகவில்லையே ?!!' என்ற நெருடலின் பலனே அது ! பேனா பிடிக்கும் போது எப்போதுமே எனக்கொரு கெட்ட பழக்கமுண்டு ; கதையினை முன்கூட்டி முழுசாய்ப் படிக்கும் பொறுமை எனக்கு வாய்த்திடுவதே கிடையாது  - unless it's a cartoon in English ! So 'படிச்சுக்கினே எழுதிக்கலாம் ; எழுதிக்கினே படிச்சுக்கலாம் !' என்ற ஒருவித துடுக்குத்தனத்தோடே தான் பிரெஞ்சுக் கதைகளையும் சரி ; இத்தாலியக் கதைகளையும் சரி - நான் அணுகிடுவது வாடிக்கை ! Maybe கதையினை முன்கூட்டியே முழுசாய் வாசித்து விட்டால், நடு நடுவே இன்னும் கொஞ்சம் பெட்டராக கையாள சாத்தியமாகிடுமோ ? என்று அவ்வப்போது தோன்றும் தான் ; ஆனால் எப்போதுமே கடிகாரத்தோடும், காலெண்டரோடும் ; deadlines-களோடும் போட்டியியிட்டுக் கொண்டே தான் நம் வண்டி ஓடிடும் எனும் போது, அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடிவதில்லை ! தவிர, ஒரு கதையை முன்கூட்டியே படித்து அசை போட்டுவிட்டால், எழுதும் போது சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து போகுமோ ? என்ற நினைப்புமே எட்டிப்பார்த்திடும் தான் ! So  இந்த கி.நா.வையும் -  take it as it comes என்று எடுத்தபடிக்கே பயணித்து வந்ததால் - கதாசிரியர் எப்டிக்கா வண்டியைத் திருப்பவுள்ளார் என்பதை எனக்குத் துளியும் யூகிக்கவே முடியவில்லை ! 'சரி, பாத்துக்கலாம் ; அசாத்தியமான உச்ச reviews பெற்றிருந்த கதை தானே...நிச்சயமாய் சோடை போகாது !' என்றபடிக்கே நித்திரையுலகினுள் புகுந்தேன் ! 


Timeline : வியாழன் அதிகாலை 2 -00 a.m.

நெருடலோடே படுக்கும் போது தூக்கம் ரசிக்காது தானே ? சத்தமில்லாது எழுந்து அமர்ந்தவனுக்கு - 'இனியும் கதை என்னவென்று தெரிந்து கொள்ளாவிட்டால் இன்னிக்கு சிவராத்திரி தான் ! என்பது புரிந்தது ! கதையின் க்ளைமாக்ஸை பர பரவெனப் புரட்டி படங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன் ! எனது நல்ல காலம், இதுவொரு சித்திர அதகளம் என்பதால் வசனங்கள் வண்டி வண்டியாய்க் கிடையாது ! So ரொம்பச் சீக்கிரமே கதையின் ஜீவநாடியைத் தொட்டிட முடிந்தது ! அதனைக் கடந்து முடித்தவனுக்கு அடுத்த கால் மணி நேரத்துக்கு  மலங்க மலங்க முழிக்க மட்டுமே முடிந்தது ! பாதித்தூக்கத்தில் சண்டித்தனம் செய்து வந்த மூளையோ - பேஸ்தடித்துப் போய் எங்கெங்கோ தறி கேட்டு ஓடத் துவங்கியிருந்தது ! 'தெய்வமே.....இந்த ஆல்பத்தை என்னவென்று நான் தேற்றி வெளியிடுவது ? ஏற்கனவே ஒரு வைரஸின் புண்ணியத்தில் ஆளாளுக்கு சட்டையைக் கிழிக்காத குறையாய்த் திரிந்து வரும் நிலையில் - இது வேறா ?" என்ற பதட்டம் குடிகொள்ள, ரொம்ப நேரம் அந்தப் படங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாய் லைட்டை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்த போது மணி 2-45 என்றது கடிகாரம் ! சரி..'இந்த மாசமும் வாஸ்து சரியில்லை ; சகுனம் சரியில்லை' என்று எதையாச்சும் சப்பைக் கட்டு கட்டிவிட்டு ஒத்திப் போட வேண்டியது தான் ; அப்புறமாய்ப் பார்த்துக்கலாம் ' என்று தீர்மானித்திருந்தேன் ! 'ரைட்டு.... நாளைக்கு மீத 55 பக்கங்களை எழுதாமல் அல்வா கொடுத்திடலாம் !' என்பது மட்டுமே அந்நேரத்து ஆறுதலாய்த் தோன்றியது !   


Timeline : வியாழன் அதிகாலை 3-15 a.m.

கழுதை போல புரண்டு புரண்டு படுத்தவனுக்குத் திடீரென மண்டைக்குள் flashlight அடித்தது போலொரு வேகம் துளிர்விட்டது ! 'ஆஹா....கருணையானந்தம் அங்கிளிடம் XIII spin-off - "சதியின் மதி" கதை எழுதி ரெடியாய்க் கிடக்குது ; காலையில் முதல் வேலையாய் அதை வரவழைக்கிறோம் ; ஒரே நாளில் டைப்செட்டிங் செய்து, ராவோடு ராவாய் எடிட் செய்து சனிக்கிழமைக்கு அச்சிடுகிறோம் !' என்று சொல்லிக்கொண்டேன் ! 'பனியில் ஒரு குருதிப்புனல்' இதழுக்கான ராப்பரோ  "வெளியீடு நம்பர் 13" என்ற விபரத்தோடு பிப்ரவரியிலேயே அச்சிடப்பட்டுக் கிடக்க -  அதை பின்னெப்போதாவது பார்த்துக் கொள்ளலாம்  ; இருக்கவே இருக்கின்றன நமக்கு ஸ்டிக்கர்கள்  - என்றும் தீர்மானித்துக் கொண்டேன் ! 'ஆனாலும் சமர்த்துப் புள்ளைடா நீ ; இதையும் சமாளிக்க வழி கண்டுபுடிச்சிட்டே பாரேன் !' என்று எனக்கு நானே உச்சி மோர்ந்து கொண்ட போது தூக்கம் சௌஜன்ய சகாவாய்த் தோன்றியது !  

Timeline : வியாழன் அதிகாலை 5-45 a.m.

'இப்போதைக்காவது சிக்கலைத் தீர்த்தாச்சு !' என்ற நிம்மதியில் முரட்டுத் தூக்கம் பிடிக்குமென்று நினைத்திருக்க - அது பொய்த்துப் போனது, வீட்டுக்கு வெளியே பால்காரர்களின் ஓசைகளோடு கண்விழித்த போது !! 'சிக்கலை இனம் கண்டாச்சு ; தீர்வையும் தேடிப்பிடித்தாச்சு !' என்ற போதிலும் மனசு மட்டும் அந்தப் பனிபடர்ந்த ரஷ்ய வனாந்திரத்திலேயே இன்னமும் உலாற்றி வருவது போலிருந்தது உள்ளுக்குள் ! 1812 !!  நடுக்கும் குளிருக்கு மத்தியில், மாமன்னர் நெப்போலியனின் படைவீரர்களுள் ஒரு சிற்றணி சந்திக்கும் ஒரு வித்தியாச அனுபவமே இந்த கிராபிக் நாவல் ! ரொம்பவே வித்தியாசமான backdrop என்பது ஒருபுறமிருக்க, சித்திரங்களும், கதை நகர்ந்திடும் விதமும் மனசுக்குள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை ஸ்பஷ்டமாய் உணர்ந்திட முடிந்தது ! 7 பேர் கொண்ட அந்த அணி ஏதோவொரு விதத்தில் மனசுக்கு நெருக்கமாகி விட்டது போலவும், அவர்களைக் கைகழுவிடுவது நியாயமாகாது ! என்பது போலவும் ஒரு பீலிங்கு !  கதையினில் என்னை நெருடிய க்ளைமாக்ஸ் பற்றி அசை போட்டபடிக்கே நெட்டில் கொஞ்சம் உருட்டிட முனைந்த போது கண்ணில்பட்ட சில தகவல்கள் ; வரலாற்று நிஜங்கள் என் ஆந்தை விழிகளை XLL சைஸாக்கின ! அவற்றைப் படித்தபடிக்கே கதையை மனசுக்குள் மறுபடியும் ஓடவிட்டு போது - கலவையாய் சிந்தனைகள் பெருக்கெடுத்தன ! And போன வருஷம் இதே வேளையினில் கதைத்தேர்வுகளின் போது, இந்த ஆல்பத்தின் review-களை ரொம்பவே பொறுமையாய் வாசித்திருந்தது நினைவுக்கு வர, வேக வேகமாய் அவற்றை இணையத்தில் மறுபடியும் தேடிப்பிடித்து வாசிக்கத் துவங்கினேன் ! கதையைப் போட்டுடைத்து வாசிப்பு அனுபவத்தை குன்றிட அனுமதிக்காது - வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு critics செய்திருந்த அனைத்து அலசல்களும் இந்த ஆல்பத்தை அசாத்தியமாய்க் கொண்டாடியிருப்பதை மறுக்கா தரிசிக்க முடிந்தது ! பற்றாக்குறைக்கு இந்த ஆல்பத்தை, போனெலியினில் இருக்கும் நண்பரொருவர் ரொம்பவே உயர்வாய்ப் பரிந்துரை செய்திருந்தார் என்பதும் நினைவுக்கு வர, அந்த மின்னஞ்சலையும் தேடிப்பிடித்து வாசித்த போது புலர்ந்திருந்தது புதுப் பொழுது மாத்திரமல்ல - எனக்குள் ஒரு தீர்மானமுமே ! 'Come what may - இந்த இதழை ரெடி பண்றோம் ; ஊருக்குள் உள்ள சகல முட்டுச் சந்துகளுக்குள்ளும், கட்டி வைத்து நமது போராளிகள் குமுறினாலுமே, புன்சிரிப்பையே பதிலாக்குகிறோம் ! This album will see daylight for sure !! ' என்ற தெளிவு பிறந்திருந்தது ! 

Timeline : வியாழன்  பகல்  :

மறுக்கா படுத்து, எப்போதோ எழுந்து, கிளம்பி, ஆபீசில் ஒரு attendance போட்ட போது வேறு ஏதேதோ பணிகள் மொய்யென்று தொற்றிக் கொள்ள, பாக்கி பக்கங்களின் மொழிபெயர்ப்புக்கு நேரம் ஒதுக்கவே இயலவில்லை ! In any case - எழுதிட ராத்திரிகளே வசதிப்படும் என்பதால் ரொம்ப அலுத்துக் கொள்ளவும் தோன்றவில்லை ! அந்தக் கதைக் களமும், கதாசிரியரின் தகிரியமும் மட்டுமே நாள் முழுக்க மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தன ! 

Timeline : வியாழன் இரவு  10-45 p.m. :

நேரடியாய் க்ளைமாக்ஸை மட்டுமே படித்திருந்தவனுக்கு - கதையை அங்கு வரை கதாசிரியர் எவ்விதம் இட்டுச் செல்கிறாரென்ற குறுகுறுப்பு மேலோங்கிட, மொங்கு மொங்கென்று எழுத ஆரம்பித்தேன் ! வசனங்கள் மிகுந்தில்லை என்பது ஒருபக்கம் ; ஒரு செம கோக்குமாக்கோ மாக்கு ஆல்பத்தின் மத்தியினில் இருக்கிறோமென்ற புரிதல் மறுபக்கம் - பக்கங்கள் பறந்தன ! 

Timeline : வெள்ளி அதிகாலை 12-45 a.m :

மொத்தமாய்ப் பக்கங்களை ஸ்டேப்ளர் பின்னடித்த போது ஒவ்வொரு கதையினிலும் பணிமுடிக்கும் நொடியில் தோன்றிடும் மாமூலான அந்த  "சுபமங்களம் " என்ற உணர்வு எழவில்லை ! மாறாய் ஒருவித பரபரப்பு ; ஒருவித எதிர்பார்ப்பு ; ஒருவித மருகல் என்று கலந்து கட்டியடித்தது ! 

  • நானெடுத்திருக்கும் தீர்மானத்தில் லாஜிக் உள்ளதா ? என்று கேட்டால் - 'இல்லீங்க எசமான் !' என்பதே எனது  பதிலாய் இருக்கும் ! 
  • "சரி, தொலையுது ....'இதை வாசகர்கள் எவ்விதம் அணுகுவார்களென்றாச்சும் யூகிக்க முடியுதா ?" என்பது அடுத்த கேள்வியாக இருந்திடும் பட்சத்தில் - "முடியுதுங்க சாமீ ; 2 நாளுக்கு முன்னே ராவிலே நான் குந்தியிருந்தா மேரியே நிறைய பேர் குந்தப் போறது வாஸ்தவம்னு யூகிக்க முடியுது !" என்று சொல்லி வைப்பேன் ! 
  • "சும்மாவே முதுகிலே தோசை சுட செம ஆர்வமாய் ஒரு அணி காத்திருக்கிறச்சே - நீயே மாவையும் ஆட்டி, தோசைக்கரண்டியையும் தேடிப்பிடிச்சு கையிலே தருவானேன்டா தம்பி ? "வச்சு செஞ்சுப்புட்டான்" என்று வாருவார்களே ?" என்பது கேள்வி # 3 ஆக இருந்திட்டால் - "என்றைக்கோ ஒரு யுகத்தில் - பாற்கடலையே கிண்டி திவ்யமாய் எதையேனும் கொணரும் வரத்தைப் பெரும் தேவன் மனிடோ வழங்கினாலும்  கூட - "வேர்க்கடலைக்கு உப்பு குறைச்சல் !" என்று தோசை ஊத்தும் படலங்கள் தப்பாது நடைபெறவே போகிறது எனும் போது, அதனைக் காரணமாக்கி ஒரு offbeat அனுபவத்தை மறுப்பானேன் ?' என்பதே எனது பதிலாகிடும் ! 
  • 'சரி...தோசை ஊற்றுவோர் சங்கம் ஒருபக்கமிருக்கட்டும்டா அம்பி....on merits ரசிக்கவோ, விமர்சிக்கவோ செய்திடும் வாசகர்கள் கூட மண்டையைப் பிய்க்க நேரிடும் - என்பதாச்சும் புரியுதா - இல்லியா ?" என்ற இறுதிக் கேள்விக்குமே பதில் இருந்தது என்னுள் !  இந்த ஆக்கத்தினில் எழக்கூடிய கேள்விகள் சகலத்துக்குமான பதிலை கதாசிரியர் Tito Faraci கதையினூடே ஒரு கட்டத்தில் பதித்தும் உள்ளார் என்பதால் - என் கடன் பணிசெய்து நகர்வதே என்று தோன்றுகிறது folks ! தவிர, கதையின் பின்பகுதியில் கதாசிரியர் உருவாக்கித் தந்திருந்த இடங்களில் இட்டு நிரப்ப முடிந்த வரிகள் - இத்தனை variables இருக்கும் போதிலும் இந்த ஆல்பத்தை வெளியிட உனக்குத் தோன்றுவதேனோ ? என்ற கேள்விக்கு பதிலாகிடுவதாய்த் தோன்றியது ! 

கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அந்த ஆற்றலாளரோடு நாம் இணங்கிப் போக வேண்டுமென்ற அடிபிடிக் கட்டாயங்களெல்லாம் ஒருபோதும் கிடையாது தான் ; ஆனால் குறைந்தபட்சமாக அதனை நுகர்ந்தாவது பார்த்திடுவோமே - போற்றவோ, தூற்றவோ தீர்மானிக்கும் முன்பாய் என்ற அவா உந்தித் தள்ள I decided to say Aye !மண்டைக்குள் இப்படி ஏதேதோ எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாய்ச் சாலடிக்க - கோழி கிறுக்கியது போலிருந்த முழு ஸ்கிரிப்டையும் கொஞ்ச நேரத்துக்கு உற்றுப் பார்த்துவிட்டு - பெருமூச்சோடு தூங்கக் கிளம்பினேன் !

Timeline : வெள்ளி பகல்  :

திருமணமாகி பணியிலிருந்து விடைபெற்றிருந்த கோகிலா ஆடிக்கு ஊர் திரும்பியிருக்க, காலையிலேயே கதவைத் தட்டி விட்டோம் - இந்த பாக்கி 80 பக்கங்களை டைப்செட் செய்திட ! பற்றாக்குறைக்கு இந்த இதழின் குறிப்பிட்ட சில பக்கங்கள் மட்டும் 2 வண்ணத்தில் என்றிருக்க, அதற்கான பிராசசிங் பணிகளிலும் நிறைய வேலைப்பாடுகள் அவசியப்பட்டது ! வெள்ளி பகலில் முழுசும் டைப்செட் செய்யப்பட்டு, மாலையே என் கைக்கு வந்திட, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் திருத்தங்கள் போட்டு, மறுக்கா ஒரு பிரிண்ட் போடக் கேட்டேன் ! 

Timeline : வெள்ளியிரவு :   

ஒன்பது மணிக்கு அதுவும் வந்து சேர, மறுபடியும் முழுசையும் வாசிக்கும் போது கோர்வையில் நிறையவே வித்தியாசம் தட்டுப்பட்டது ! முதல் 30 பக்கங்கள் எழுதப்பட்டது 5 மாதங்களுக்கு முன்னே எனும் போது - அவை மட்டும் ஊரோடு அன்னம் தண்ணி புளங்காத, தள்ளிவைக்கப்பட்ட பக்கங்களாய்த் தென்பட்டன ! 'ஆஹா...சும்மாவே தெறிக்க விடுற கி.நா.....!! இதிலே நீ உன்பங்குக்கு சொதப்பினேனா .... நிச்சயமடியோவ்  டண்டணக்கா..! என்று மண்டை சொல்லிட, மறுக்கா பேனா ; pad என்று தூக்கிக்கொண்டு முதல் 30 பக்கங்களை மாற்றியமைக்க முனைந்தேன் ! நனைத்துச் சுமப்பது எப்போதுமே எரிச்சலூட்டும் அனுபவமே என்றாலும், இம்முறை அது அவ்வளவாய் நோகச்செய்யவில்லை ! சனி அதிகாலை 1 மணிக்கு தூங்கப்போன போது - 'ரைட்டு...இனி பெ.தே.ம. விட்ட வழி !!' என்ற அமைதி துளிர்விட்டிருந்தது ! 

Timeline : சனிக்கிழமை :

பரபரப்பாய் பணிகள் முடிந்து, மறுக்கா அந்த முதல் 30 பக்கங்களில் திருத்தங்கள் பார்த்து - அச்சுக்கு இவற்றைத் தயார் செய்யும் போது அந்தி சாய்ந்திருந்தது ! ஒரு முன்னுரை எழுதினால் தேவலாமென்று நடுவாக்கில் தோன்றிட, 'கிராபிக் டைம்' பகுதியினில் அவசரமாய் எழுதித் தந்தேன் ; and அதன் பொருட்டும் கொஞ்ச நேரம் ஓடிப்போயிருந்தது !  இங்கு மாலை 7 மணி ஊரடங்கு என்பதால் - 6 மணிக்கெல்லாம் ஆபீஸையும், அச்சகத்தையும் பூட்டிட வேண்டியிருந்ததால், இவற்றின் அச்சுப் பணிகள் திங்களன்றே நிறைவுறும் ! அதற்குள்ளாக - கதையின் இறுதியில் ஒரு Post Script போல எழுதினால் தேவலாம் என்றும் தோன்றிட, விளம்பரப்பக்கத்தைக் கடாசி விட்டு அங்கும் கதையின் பின்புலத்தினைப் பற்றி எழுதியுள்ளேன் ! இந்தக் கூத்துக்களையெல்லாம் அடித்து விட்ட கையோடு பதிவை டைப்ப முனைந்த போது சனியிரவு 11 !

Timeline : ஞாயிறு 2-30 a.m. 

மேஜிக் விண்ட் ; டெக்ஸ் என நமக்கு ஏற்கனவே பரிச்சயமானரே ஓவியர் Frisenda ! கதாசிரியரோ - டெக்ஸ் ; டைலன் டாக் ; மேஜிக் விண்ட் ; டயபாலிக் போன்ற நமக்குத் பரிச்சயமான தொடர்களில் மட்டுமன்றி, Spiderman ; Captain America போன்ற தொடர்களிலும் பணியாற்றியுள்ளார் ! 20 தேசங்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன - India included !! So இரு அசாத்தியத் திறமைசாலிகள் கைவண்ணத்தை ரசிக்க முயற்சிப்போமே - இந்த கி.நா. காலத்தினில் ? நான் விட்டிருக்கும் பில்டப்புக்கு இந்த ஆல்பம் ஒரு spectacular ஹிட்டாகிடவும் சாத்தியமே ; ஒரு இமாலய சொதப்பலாகிடவும் சாத்தியமே என்பது புரிகிறது ! ரிசல்ட் எதுவாயினும் அதனை இயல்பாய் எடுத்துக் கொள்வோமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! 

Just a word of caution : 'எனக்கு point to point பஸ் மட்டும் தான் புடிக்கும் ; இக்கட போயி, அக்கட போயி, மூக்கை தேடுற ஆட்டத்துக்கே ஞான் வரில்லா !!' என்பதே உங்களின் நிலைப்பாடாக இருப்பின் - இந்த ஆல்பம் உங்களுக்கு சுகப்படாது ! And சந்தாவினில் நீங்கள் இருந்தாலுமே, இந்த இதழை skip செய்திட நினைக்கும் பட்சத்தினில் ஒரேயொரு மின்னஞ்சல் அல்லது போன் அடித்துச் சொன்னால் போதும் - உங்களின் கூரியர் டப்பியில் இது இடம்பிடித்திடாது ! And உங்களின் பணம் ரூ.80 -க்கு ஈடாய் ஒரு voucher உங்களுக்கு வழங்கப்படும் ; அடுத்தாண்டின் சந்தாவிலோ - வேறு ஏதேனும் புக்குகளின் கொள்முதல்களிலோ கழித்துக் கொள்ள ஏதுவாய் ! So என் தலைக்குள் தோன்றிய குறுகுறுப்பு உங்கள் பணத்துக்கு வேட்டு வைத்திடாது ! 

And here is the preview of this album :

Tito Faraci கதாசிரியர் 

ஓவியர் Pasquale Frisenda


தூக்கம் சுழற்றியடிப்பதால் இப்போதைக்கு கிளம்புகிறேன் folks - ஜேம்ஸ் பாண்டின் அட்டைப்படத்தை மட்டும் கண்ணில் காட்டியபடிக்கு ! உபபதிவினில் ; அல்லது நாளைக்கு எந்நேரமாவது 007 பற்றி எழுதிட முயற்சிக்கிறேன் ! 
Bye for now ! Have a lovely Sunday all !

பி.கு : நம்மாளை ஒரு மார்க்கத்தோடு தான் படைப்பாளிகள் முன்னெடுத்துச் செல்கிறார்கள் போலும் !! பாருங்களேன் : 

Saturday, August 01, 2020

ஒரு பெருமூச்சுப் பதிவு ..!

நண்பர்களே,

வணக்கம். அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் ! அந்தக் காலத்துக் கரி எஞ்சின் ரயில் ஏதேனும் இந்த நொடியினில் என்னருகே இருந்திருந்தால், மலைத்தே போயிருக்கும், நான் விடும் பெருமூச்சைப் பார்த்து ! என்னப்பு சமாச்சாரம் என்கிறீர்களா ?

நார்மலானதொரு நாளாய் இது இருந்து ; நார்மலானதொரு லோகமாகவும் இது இருந்திருந்தால் – நேற்றைக்கு ஈரோட்டுப் புத்தகத் திருவிழா துவங்கியிருக்கும் ; மாலை ரயிலைப் பிடித்து சாமத்துக்கு நானும் ஈரோட்டில் ஐக்கியமாகியிருப்பேன் & இன்றைய பகல் பொழுதில் நமது வாசக சந்திப்பு அரங்கேறியிருக்கும் -ஒரு வண்டி ஸ்பெஷல் இதழ்களோடு :

- ஒற்றை நொடி ஒன்பது தோட்டா!

- கென்யா!

- T & T ஸ்பெஷல் (Tex & Tesha)

  (+)

- ஒரு சஸ்பென்ஸ்  B&W இதழ்

நாம் போட்டிருக்க வேண்டிய வாண வேடிக்கைகளில், பக்ரீதோடு தீபாவளியும், கிறிஸ்துமஸுமே, முன்கூட்டி இணைந்து கொண்டுவிட்டனவோ என்ற சந்தேகமே எழுந்திருக்கும் ! ஆனால் கண்ணுக்கே தெரியா ஒரு நுண்கிருமி பூமியையே புரட்டிப் போடுவதென்பது தான் divine design எனும் போது வாண வேடிக்கைகளை விடுவதற்கு ஏது வழி – பெருமூச்சே கதி ! So Phewwwwww !!

நோய்த் தாக்கங்களின் எதிரொலிகள் ஏதேதோ விதங்களில் ; ஏராள ஜனங்களைப் படுத்தியெடுத்து வரும் நிலையில் – காற்றில் கரைந்து போய்விட்ட விற்பனை வாய்ப்புகள் + வியாபார முனைப்புகள் பற்றியெல்லாம் இப்போது பெருசாய் தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுவதில்லை ! அங்கே பிய்க்கவும் பெருசாய் ஏதுமில்லை தான் என்றாலுமே இந்த வருஷத்தை ஆரோக்கியத்தோடு ; உசிரோடு கடத்தினாலே தம்புரானுக்கு நன்றி சொல்லியாக வேண்டும் என்ற புரிதல் புலர்ந்து விட்டுள்ளதால், எனது பெருமூச்சுப் படலம் பண இழப்புகளுக்கோசரமல்ல ! மாறாக – 2013 முதலாய் ஒவ்வொரு ஆகஸ்டின் முதல் வாரயிறுதினையும், ஈரோட்டுப் புத்தக விழாவினிலும், வாசகச் சந்திப்பினிலும், செம குஷியாய்ச் செலவிட்டுப் பழகியபின் பிற்பாடு இந்த திடீர் லீவு மண்டை காயச் செய்கிறது ! ஆண்டுதோறும் ஈரோடும், சென்னையுமே நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு தரும் களங்கள் என்றிருந்தாலும் – ஈரோட்டில் முறையானதொரு அரங்கு ; சந்திப்பு ; கலந்துரையாடல் என்று செட் ஆகியிருக்க – ஆகஸ்டில் சார்ஜ் ஆகும் நமது பாட்டரிகள் ஜனவரி வரையிலும் வண்டியை இழுத்துப் போய் விடும் & ஜனவரியின் சென்னைப் புத்தக விழா அடுத்த 7 மாதங்களுக்கான ‘தம்‘மை நமக்கு வழங்கிடும் ! இம்முறையோ இறைவனின் சித்தம் வேறுவிதமாய் இருப்பதால் பழசை அசைபோட்டே பொழுதைப் போக்கிட வேண்டும் போலும் ! Phewwwwww!!

முதன்முறையாக ஈரோட்டுக்குப் பயணமானது 2013-ல் என்று ஞாபகமுள்ளது ! நண்பர் ஸ்டாலினின் முயற்சிகளின் பலனாக 2012-ல் வேறு பதிப்பகங்களோடு கூட்டுக் குடித்தனம் பண்ணியிருந்த நாம் – 2013-ல் தனி ஸ்டால் பெற்றிடும் அளவுக்குத் தேறியிருந்தோம் ! நமது பதிவுகளில் பின்நோக்கிப் பயணித்தால் ஏழு வருடங்களுக்கு முன்பான அந்தச் சின்னத் துவக்கத்தை அழகாய் நினைவு கூர்ந்திட முடிகிறது : http://lion-muthucomics.blogspot.com/2013/08/blog-post_14.html !நேரம் கிடைத்தால் நீங்களுமே அந்தப் பதிவுக்குள் புகுந்து தான் பாருங்களேன்!! இதோ over the years – ஈரோடு நாட்களின் ஒரு அணிவகுப்புமே : 

ஏழெட்டு ஆண்டுகளின் ஓட்டத்தில் அங்காங்கே ரிவர்ஸ் கியர் போட்டிருக்கும் முன்மண்டைகளையும்; பார்வார்ட் கியர் போட்டுள்ள மத்தியப் பிரதேசங்களையும் கவனித்தீர்களெனில், அவையே ஒரு தனிக்கதை சொல்லும் !! Phewwww!

When it all began - 2013 :





2013 
Followed by 2014 :





And this is 2015 :






எழுத்தாளர் திருமிகு.N சொக்கன் அவர்கள் பங்கேற்ற 2016








HERE'S 2017 :









FROM இரத்தப்படல  2018 :





பின்னோக்கிய நினைவுகள் கொணரும் உணர்வுகள் ; சந்தோஷங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கிடும் ரகமல்ல எனும் போது நான் அதனைச் செய்திட முனைந்திடக்கூடப்போவதில்லை ! ஒரு குண்டாச் சோற்றுக்கு ஒரேயொரு சோறை உதாரணமாக்கிடுவதாயின் - கலப்படமிலா மகிழ்வும், ஆனந்தமும் தாண்டவமாடும்  2017 -ன் அந்த இரும்புக்கவிஞரின் போட்டோவை மட்டுமே சொல்லுவேன் !! இப்போது சொல்லுங்களேன் - எனது பெருமூச்சுகளுக்குப் பின்னணி உள்ளதாயென்று !! Phewwww !!

Looking ahead – இந்த ஆகஸ்டின் ரெகுலர் இதழ்களைப் பற்றிய preview-க்குள் புகுந்திடலாமா? இதுவொரு '4 புக் மாதம்' எனும் போது எங்களுக்கு ஜுலையின் காலாட்டும் அவகாசம் லேது ; மாறாக காலில் வெந்நீரை ஊற்றியது போலவே சுற்றித் திரிய வேண்டியுள்ளது ! ஆனால் வாசிப்பில் இம்முறை உங்களுக்கு choice அதிகம் என்பதால் சுவராஸ்ய மீட்டர் எகிறும் வாய்ப்புகளுமே அதிகம் என்பேன் ! Moreso because – இம்மாதத்து சந்தா A-வின் சார்பில் ஆஜராகிடுவது நமது மறதிக்கார XIII ! இரத்தப் படலத்தின் மூன்றாம் சுற்று : 2132 மீட்டர் என்ற விசித்திரமான பெயருடன் துவங்குகிறது ! 

நிஜத்தைச் சொல்வதானால் ”இ.ப.” ஆல்பங்களின் எடிட்டிங் என்பது கடுங்காப்பியைக் காலையும், மாலையும் 'கபக் கபக்'கென்று குடிக்கும் அனுபவங்களுக்குச் சமானம் என்பேன் ! துவக்க நாட்களின் முதல் சுற்றில், கதைகளில் ஒரு அசுர வேகம் இருந்தாலுமே நாம் அவற்றைத் தனித்தனிப் பாகங்களாய்ப், பெரிய இடைவெளிகளில் வெளியிட்டு வந்தோம் எனும் போது – முந்தைய ஆல்பங்களின் கதைப்போக்கை நினைவு கூர்வது ; கதை மனிதர்களை ஞாபகம் வைத்திருந்து, சொதப்பாது பணியாற்ற முயற்சிப்பதென்பது ஏகமாய் குடலை வாய்க்கு வரச் செய்திடும் ! And அந்நாட்களில் “இ.ப.”வின் ஆங்கிலப் பதிப்புகளும் கிடையாதெனும் போது சாத்தியப்பட்ட ப்ரெஞ்சு மொழிபெயர்ப்புகளின் மீது ஊன்றிக் கொண்டே தான் தட்டுத் தடுமாறி நடை போட்டிட வேண்டி வரும் ! வருடங்கள் ஓட்டமெடுத்த நிலையில் – “இ.ப.” இரண்டாம் சுற்றினை நாம் சமீபத்தில் கலரில் வெளியிட்ட போதுமே Cinebook-ன் ஆங்கிலப் பதிப்புகள் வந்திருக்கவில்லை தான் ; ஆனால் சந்தேகங்கள் எழுந்திடும் இடங்களிலெல்லாம் இன்டர்நெட்டின் சகாயத்தோடு ப்ரெஞ்சு மொழிபெயர்ப்புகளை ; எனது புரிதல்களைச் சரிபார்க்கச் சாத்தியப்பட்டதால் நோவு குறைந்திடுமென்று நம்பினேன் ! ஐயகோ !! அந்த நம்பிக்கையைப் பணால் பணாலென பொடனியிலேயே போட்டுச் சாத்தியது - புதுக்கதாசிரியர் போட்டுத் தந்திருந்த “மேபிளவர்” என்ற  புது ரூட்! அமெரிக்கக் குடியேறிகளின் இஸ்திரி...ஜாக்கிரபி என்று எங்கெங்கோ சுற்றிய கதையின் / கப்பலின் பயணத்தைப் புரிவதற்குள் பொறுமைகளின் கையிருப்புகள் பரபரவென்று காலாவதியாகின ! So முதல் சுற்றிலாவது ஞாபகங்களைத் தூசி தட்டுவதோடு முடிந்த பணிகளானவை, இரண்டாம் சுற்றின் போது திணறத் திணற அடிப்பது போலிருந்தது ! 

இது தான் நிலவரம் என்றிருக்கும் போது ”2132 மீட்டர்” என்று “இ.ப.” சுற்று # 3 பற்றிய அறிவிப்பைப் போன வருஷம் பார்த்த போது கலவையான உணர்வுகள் உள்ளுக்குள் தலைதூக்கின ! "ஆஹா... தொங்கலில் இரண்டாம் சுற்று நிற்கும் நிலையில் இந்தச் சுற்றினை நாம் கண்டும், காணாது இருக்க இயலாதே !!" என்று புரிந்தது. அந்த நொடியில் “மறுபடியும் மேபிளவர்” என்றவுடன் மலங்க மலங்க முழிக்காதிருக்கவும் முடியவில்லை ! சரி... இருக்கவே இருக்கிறார் நமது கருணையானந்தம் அங்கிள் & இருக்கவே இருக்கிறார் கூகுள் ஆண்டவர் என்ற தைரியத்தில் அட்டவணையில் நமது மறதிக்காரரைச் சேர்த்து வைத்தேன் !

2020-ம் புலர்ந்து, மாதங்களும் ஓட்டமெடுத்து வந்தாலும், உள்ளுக்குள்ளிருந்த பீதி காரணமாய் ”2132 மீட்டர்” ஆல்பத்தை டிக் அடிக்கத் தயக்கம் நிறையவே இருந்தது ! 'இன்னிக்கு அஷ்டமி. நாளன்னிக்கு தசமி...' என்ற கதையாய்த் தள்ளிப் போட்டுக் கொண்டே போக – ஒரு கட்டத்தில் this is the moment ; இனியும் ஒத்திப் போட வழி லேது என்பது புரிந்தது ! So ஒரு சுபயோக சுபதினத்தில், சுமார் 45 பக்கங்களை கொண்ட பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பும் தயாராகியது & அதை அப்படியே நமது கருணையானந்தம் அவர்களுக்கு கைமாற்றி விட்டேன் ! And அவரும் சிரத்தையோடு எழுதியனுப்பியிருந்தார் – குழப்பமான இடங்களை மட்டும் blank ஆக விட்டபடிக்கு ! டைப்செட்டிங் மூன்றே நாட்களில் நிறைவுற்று – பிரிண்ட் அவுட்கள் ஜுனின் இறுதியிலேயே என் மேஜையில் செட்டில் ஆகிவிட்டன ! நல்ல நாளைக்கே நாழிப்பால் கறப்பவன் – அடுத்த ஒரு மாதத்துக்கு அவற்றை quarantine-ல் போட்டு வைத்த மாதிரி ஓரம் கட்டிவிட்டேன் ! And இனிமேலும் லேட் பண்ணினால் ஆகஸ்ட் இதழ்கள் ‘அரோகரா‘ ஆகிடும் என்ற நிலையில், புதன் மாலை (29-ஜுலை) இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிய கையோடு XIII-க்கு  ஹலோ சொல்லத் தயாராகினேன் !

முதல் பக்கத்திலேயே... முதல் ப்ரேமிலேயே ஏதோ செல்போன் டவர் மாதிரியான உசரத்தில், நம்மாள் கையில் ஒரு உயர்ரகத் துப்பாக்கியோடு சுடத் தயாராக இருக்க, ‘அட... கப்பலைக் காணோம்... இஸ்டரி.. ஜாக்கிரபியைக் காணோம் !‘ என்று மனசு துள்ளியது. மெதுமெதுவாய் பக்கங்கள் நகர்ந்திட, வேக வேகமாய் எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது ! ‘இந்தவாட்டி தெளிய வைத்துச் சாத்த மாட்டார்கள் போலும் !‘ என்று !! ஓவியர் வில்லியம் வான்ஸ் சித்திர ஜாலங்களில் இந்தத் தொடருக்கென ஒரு புது உச்சத்தை நமக்குக் கண்ணில் காட்டிச் சென்றிருக்கிராரெனில், அவரது மறைவுக்குப் பின்னே பொறுப்பேற்றிருக்கும் இந்தப் புது ஓவியர் முற்றிலும் வேறொரு லெவலில் மிரட்டி வருவது நாம் அறிந்ததே ! அதிலும் இந்தப் பாகத்தின் ஓவிய துல்லியம் கூரை மேலேறி நின்று கொண்டாட வேண்டியதொரு அற்புதம் ! கதை நெடுக நடமாடும் பெண்களின் முகங்களின் நுணுக்கங்களிலிருந்து, வாஷிங்டனின் வீதிகளைப் படம் பிடித்திருக்கும் லாவகம் வரை மனுஷன் செய்துள்ள அதகளங்களைக் கல்லறையிலிருக்கும் அமரர் வான்ஸ் கூட ஆரவாரமாய்க் கொண்டாடியிருப்பார் ! பக்கத்துக்குப் பக்கம், பாட்டம் பாட்டமாய் ஆளாளுக்கு வரலாற்றுப் பாடம் நடத்தியதே முந்தைய இதழ்களின் நடைமுறை என்ற போது, ஓவியரின் மாயாஜாலம் மழுங்கியே தென்பட்டது எனக்கு ! ஆனால் surprise... surprise... இம்முறை வசனங்களில் ஏகச் சிக்கனம் என்றதால், சித்திரங்கள் வீறுகொண்டு எழுந்து உலவியது போல் எனக்குத் தோன்றியது ! So மிரண்டு கிடந்தவனுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ள, 14 பக்கங்களைத் தொட்டு விட்டேன் ஒன்றரை மணி நேரங்களுக்குள் !

அங்கே சின்னதாய் நெருட, பிரெஞ்சு ஸ்க்ரிப்டில் எனது குழப்பத்துக்கு விடை தெரியக் காணோம் ! சரி... பார்த்துக் கொள்ளலாமென்று பக்கங்களை புரட்டினால், சில இடங்களில் கருணையானந்தம் அவர்களும் சில வசனங்களை blank ஆக விட்டு வைத்திருப்பதைக் கவனித்தேன் ! அங்கே நிரப்ப வேண்டிய சமாச்சாரம் என்னவோ என பிரெஞ்சு ஸ்க்ரிப்டை மறுக்கா உருட்டினால் எனக்கும் முட்டி தட்டியது ! நமது மொழிபெயர்ப்பாளர் பிரெஞ்சில் ஆற்றல் கொண்டவர் தான் எனினும், ஒரு தேர்ந்த எழுத்தாளரல்ல எனும் போது அவரது ஸ்கிரிப்ட் எப்போதுமே ஒரு கம்பியூட்டர் பாடத்தைப் போலவே இருந்திடும் ! சில நேரங்களில், நமக்கு கிட்டும் ஸ்கிரிப்ட்டில் ஒரு கதை சொல்லும் பாங்கு இழையோடினால் மொழிபெயர்ப்பினில் ரொம்பவே உதவிடும் - அதிலும் மர்ம மனிதன் மார்ட்டின் ; XIII போன்ற கதைத்தொடர்களில் ! கொஞ்ச நேரம் ப்ரிண்ட் அவுட்களையும், பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் மலங்க மலங்க பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன் ! மணி 11 ஆகியிருந்தது ! ரைட்டு... விஷப்பரீட்சைக்கு இது களமுமல்ல...அதற்கான நேரமுமல்ல என்ற தீர்மானத்தில் பரபரவென்று பாரிஸில் உள்ள நமது படைப்பாளிகளுக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் : “இ.ப. புது ஆல்பத்தின் பணிகளில் எனக்குக் கொஞ்சம் கேள்விகள் உள்ளன... நெடுந்தொடரில் குத்துமதிப்பாய் எதையேனும் பூசி மெழுகி வைத்து, நாளைக்குக் கதையின் போக்கில் அதுவே பிழையான புரிதல்களுக்கு வழிவகுத்திடக் கூடாதே என்று பயமாக உள்ளது ! ‘இதற்கான Cinebook இங்கிலீஷ் pdf கிடைக்குமா - ப்ளீஸ் ?‘ என்று எழுதிவிட்டு கட்டையைக் கிடத்தினேன்.

வியாழன் காலையில் முட்டைக் கண்களைத் திறந்ததே லாப்டாப்பில் முகத்தில் தான் !  ஆங்கிலப் படிவம் இருந்தால், தடுமாற்றமின்றிப் பணிகளை முடித்து விட முடியுமே என்ற நினைப்போடே படுத்தவனுக்கு விடியற்காலையில் வேறு சிந்தனைகள் ஓடவேயில்லை ! மின்னஞ்சலைப் பார்த்தால் – எனது மெயில் கிடைத்த இருபதாவது நிமிடமே நான் கோரியிருந்த pdf சகிதம் அவர்களது பதிலும் கிட்டியிருந்தது : "Of course –இதோ நீ கேட்ட இங்கிலீஷ் pdf ! ஒத்தாசைகள், எப்போது தேவைப்பட்டாலும் கேட்கத் தயங்க வேண்டாம்  ! All the best !’ என்று எழுதியிருந்தனர் ! 'அட்றா சக்கை' என்றபடிக்கே pdf-ஐ டவுன்லோட் செய்த கையோடு பக்கங்களை எடுத்துக் கொண்டு மறுபடியும் துவக்கத்திலிருந்தே புறப்பட்டேன் ! ஒரு ஒரிஜினல் பிரெஞ்சு எழுத்தாளர் பேனா பிடிப்பதற்கும், அந்த மொழியினைக் கற்ற நம்மவர் பேனா பிடிப்பதற்குமிடையே புரிதல்களில் பெரிதாய் வேற்றுமை எனக்கு கண்ணில்படவில்லை தான் ! ஆனால் பேனா பிடிப்பவர் ஒரு எழுத்தாளராய் ; கதை சொல்பவராய் இருக்கும் போது வரிகளில் தென்படும் சுலபத்தன்மை தான் தூக்கலாய்க் கொடி பிடித்துத் தெரிந்தது !  ஏற்கனவே ப்ளூ கோட்ஸ் ; தோர்கல் போன்ற சில ஆல்பங்களிலும் இது போன்ற அனுபவம் எனக்கிருந்துள்ளது தான்; ஆனால் அவை எல்லாமே நேர்மறையான கதைகள் என்பதால் பெரிதாய் எந்தவொரு குழப்பங்களும் அன்றைக்குத் தோன்றியதில்லை ! ஆனால் இதுவோ ஒரு தடதடக்கும் இடியாப்ப கிராபிக் நாவல் எனும் போது, சின்னச் சின்ன வித்தியாசங்கள் கூட ஏதேனும் குழப்பிடக் கூடுமோ ? என்ற பயம் தலைதூக்கியதால் முதற் பக்கத்திலிருந்தே redo செய்து கொண்டே புறப்பட்டவன் மதியத்திற்குள் பாதிப் பக்கங்களை முடித்திருந்தேன் !

கொஞ்ச நேரம் காலாட்டிக் கொண்டிருக்கலாமென எழுந்த போது தான் சில விஷயங்கள் பிடரியில் சாத்துவதை உணர முடிந்தது ! Without a doubt - மூன்றாம் சுற்றின் இந்த முதல் ஆல்பம் ஒரு அசாத்தியத் த்ரில்லர் ! இதற்கு முந்தைய ஆல்பங்களில் தென்பட்ட தொய்வுகளையெல்லாம் ஈடு செய்திடும் விதமாய் இந்தப் புதுச் சுற்றில் தெறிக்க விட்டிருக்கிறார் கதாசிரியர் ! வழக்கமாய் ஆடியில் ஆரம்பிக்கும் புதிர்களை, மறு சித்திரைக்கு சாவகாசமாய் முடிச்சவிழ்க்க முனைந்திடும் பாணிகளைக் கடாசி விட்டு, இந்த ஆல்பத்தினில் ஆங்காங்கே jigsaw puzzle போலத் துளிர்விட்ட முடிச்சுகள் ஒவ்வொன்றுக்குமே இந்த ஆல்பத்தினிலேயே புரிதல்களும் கிடைத்திட கதாசிரியர் வழிசெய்திருப்பதை உணர்ந்த போது எனக்கு மூஞ்சியெல்லாம் பல் ! சம்பந்தமே இல்லாது தோன்றும் சமாச்சாரங்களைக் கூட கதைக்கு crucial ஆன லிங்க்களாய் உருமாற்றும் லாவகத்தைப் பார்த்த போது பிரமிக்காது இருக்க முடியவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாய் முன்னே இடப்பட்டிருந்த புள்ளிகளெல்லாம் என்ன மாதிரியானதொரு ரங்கோலிக்கென Yves Sente திட்டமிட்டிருந்தார் என்பதை இந்த ஆல்பத்தில் செமையாய் புரிந்திட முடிகிறது ! என்ன ஒரே சமாச்சாரம் – இரண்டாம் சுற்றின் முந்தைய இதழ்கள் சகலத்தையும் ஒருவாட்டி 'தம்' கட்டிப் படித்து விட்டு இந்த ஆல்பத்தினுள் புகுந்தால் – “இந்தாள் அந்நாளைய வில்லன் ஆனந்தராஜா ? அல்லது இந்நாளைய காமெடியன் ஆனந்தராஜா ? என்ற ரீதியிலான கதைக்குழப்பம் எழாதிருக்கும் ! Cinebook-ன் ஆங்கிலப் பதிப்பின் உதவியோடு எடிட்டிங்கில் மறுக்கா புகுந்த போது, சில இடங்களில் திருத்தங்களும், கதையின் க்ளைமேக்ஸ் பகுதிகளில் மொத்தமாகவே மாற்றி எழுதவும் தேவைப்பட்ட போதிலும், கதையின் விறுவிறுப்பின் புண்ணியத்தில் பெரிதாய் சோர்வு தலைதூக்கிடவில்லை ! In fact இத்தனை பக்கங்களை அலுப்பின்றி நான் மாற்றி எழுதியது ரொம்ப ஆண்டுகளுக்கு பின்பாக இப்போது தான் என்று சொல்வேன் ; இல்லையேல் முக்கியபடிக்கே தான் வேலைகள் ஓடிடும் ! (கடைசியாக இம்மாதிரி ஜாலியாய் redo செய்தது மார்டினின் “கனவுகளின் குழந்தைகள்”!)
Yves Sente - கதாசிரியர் 

ஓவியர் Youri Jigounov
Coloring : Bruno Tatti
கதையின் ஓட்டத்தோடு ஏகப்பட்ட புதுப்புதுச் சமாச்சாரங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது ! "Designated Survivor" என்றால் என்ன? தலைநகர் வாஷிங்டன் D.C.யில் வானளாவிய உசரமான கட்டிடங்கள் ஏன் கிடையாது ? அமெரிக்க அரசியல் சாசனங்களின் புதிரான விதிமுறைகள் என்ன ? என்றெல்லாம் தெரிந்து கொண்ட திருப்தியோடு க்ளைமேக்ஸுக்கு வந்தால் ஒற்றைப் பக்கத்தில் தெறிக்கும் காமெடியும், மறுபக்கத்தில் தெறிக்கச் செய்யும் ஆக்ஷனும் இடம்பிடிப்பதைப் பார்க்க முடிந்த போது – “ஆஹா. இந்த கதாசிரியர் மனுஷன் - ஜாம்பவானான வான் ஹாமிற்கே செம tough fight” தந்திடுவார் போலிருக்குதே என்று பட்டது !! Phewwwww !!!

பொதுவாய் ஒரு கதை ஹிட்டடிக்கும் என்பது உறுதிபடத் தெரிந்தாலுமே அதற்கு over the top பில்டப்களைத் தர முயற்சிப்பதில்லை ! ஓவராய் வாயைச் செலவழித்து விட்டு, ஓவராய் எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டு, அப்பாலிக்கா ஓவராய் முட்டுச்சந்துகளைத் தேடிப் பயணம் பண்ணுவானேன் ? என்ற முன்ஜாக்கிரதையில் மேலோட்டமாய் நாலு பிட்டைப் போட்ட கையோடு அடுத்த இதழுக்குத் தாவுவது என் வழக்கம். ஆனால் முதன்முறையாக அந்தப் பழக்கத்துக்கு ஒரு விதிவிலக்கு இருந்து போகட்டுமே என்ற எண்ணம் ”2132 மீட்டர்” ஆல்பத்தின் புண்ணியத்தில் எனக்குள் தோன்றுவதால் – இந்த வாரம் the preview’s focus will be on XIII & nobody else ! 'அது சரி, வாங்குன காசை விட ஜாஸ்தியாய் இந்தவாட்டி தம்பி கூவுறாப்டி... ஏன்னு தான் தெரியல!‘ என்ற லேசான அல்லது பலமான எண்ணம் உங்களுக்குள் ஓடினால் தப்பில்லை தான் ! Simply becos - "இ.ப" இரண்டாம் சுற்றின் முந்தைய பாகங்களின் கதையோட்டம் என்மட்டிற்காவது ரொம்பவே படுத்தி எடுத்தது போலத் தோன்றியதால் – மிரண்டு கிடந்தவனுக்கு, இந்த ஆல்பம் அடிக்கும் பரபரப்பு சிக்ஸர் ஒவ்வொன்றுமே 12 ரன்கள் பெறுமானமானதாய்த் தெரிகிறது ! அதனால் தான் “வருங்கால சனாதிபதி அண்ணன் XIII வாழ்க!” என்று தம் கட்டிக் கூவிடுகிறேன் ! அதுவும் அந்தக் கடைசி 2 பக்கங்களில் ரஃபேல் போர்விமானமாய் சீறிடும் கதையானது வேறு லெவல் ! அடுத்த அத்தியாயத்தோடு இந்தச் சுற்று நிறைவுறுகிறது என்பது போல காதில் சேதிகள் விழுந்தன! ஆனால் தற்போது கோடை விடுமுறைகளில் உள்ள படைப்பாளிகள் ஆகஸ்ட் மத்தியில் திரும்பிய பிற்பாடு விசாரித்தால் தான் சரியான தகவல்கள் தெரியும் ! எது எப்படியோ – செல்போன் டவரை ரிப்பேர் பண்ண டுப்பாக்கியும் கையுமாய் நம்மாள் ஏறுவது ஏனோ ? என்ற கேள்விகளுக்குத் காத்திருக்கும் விடைகள் இந்தத் தொடருக்கு ஒரு லோடு பூஸ்ட்டைத் தந்துள்ளது மட்டும் நிஜம் ! Phewwwwww !!

இதோ – ஒரிஜினல் டிசைனுடனான நமது அட்டைப்படம் & உட்பக்கப் preview ! செவ்வாயன்று அச்சுக்குச் செல்கின்றன – ஜம்போவின் ஜேம்ஸ் பாண்டுடன் ஜோடி சேர்ந்து கொண்டு ! 2019-ல் ரிலீஸ் ஆன இந்த 2132 மீட்டர் இதழுக்கு state of the art கலரிங் பாணி எனும் போது அதிலும் ரகளை காத்துள்ளது ! So 'வந்துட்டாருன்னு சொல்லு... 10 வருஷத்துக்கு முந்தைய ஜேஸனாகவே வந்துட்டாருன்னு சொல்லு !' என்று தகிரியமாய்க் கூவுகிறேன் !! 

Moving on, ‘இ.ப.‘ & ஸ்பைடரார் முன்பதிவுகள் பற்றி :

- இ.ப. தற்போதைய புக்கிங் # 92 தான் ! அந்த துவக்கத்து euphoria வடியத் துவங்கிய பின்னரும் ஆர்வங்கள் தொடர்ந்திடுமா ? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி ! இன்னமும் மூன்று மாத அவகாசமுள்ளது எனும் போது we'll wait & watch !

- And ஸ்பைடர் முன்பதிவின் number : 22 !

ஸ்பைடர் இதழானது சின்ன விலையிலானது என்பதால் இதழ் வெளியாகும் தருணத்தில் வண்டி வேகம் கண்டிடும் என்று நினைக்கிறேன் ! XIII ஸ்பெஷல் தான் காத்திருக்கும் 90 நாட்களில் எவ்விதம் பயணிக்கவுள்ளது என்று அறிந்திட ஆர்வமாய்க் காத்திருப்பேன்! For now உங்களது முன்பதிவுத் தொகைகள் பத்திரமாய் டெப்பாஸிட்டாய் துயின்று வருகின்றன !
கிளம்பும் முன்பாய் - பல முறைகள் நாம் (சு)வாசித்துள்ளதொரு தலைப்பினில் சமீபமாய்க் கிட்டியதொரு லெட்டர் பற்றி : 
=================================================================
அன்பின் ஆசிரியருக்கு,

வணக்கம். நீங்களும் நம் காமிக்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலம் என நம்புகிறேன்.

வெகு நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். மிகவும் துயரமான இந்தக் காலக்கட்டத்தைக் கடந்து வருவதில் நம் காமிக்ஸ் எனக்குப் பெருந்துணையாக உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. கொரோனா ஆரம்பித்த காலத்தில் பொள்ளாச்சி அருகேயிருந்த பழங்குடி இன மக்களுக்கு என்னுடைய பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷின் சகாயத்தோடு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தோம். ஆனால் நாட்கள் நகர நகர எங்களுடைய நிலைமையும் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. உளச்சோர்வு பெரிதாக என்னை ஆக்கிரமிக்கும் சமயங்களில் எல்லாம் நம்முடைய காமிக்ஸிடம்தான் தஞ்சம் புகுகிறேன். அதிலும் குறிப்பாக அதிகாரியின் கதைகள் அனைத்தையுமே கிட்டத்தட்ட மறுவாசிப்பு செய்து விட்டேன். எத்தனைதான் டைகரின் மிகப்பெரிய விசிறியாக இருந்தாலும் இருண்ட காலங்களில் நம் முகங்களில் சிறிதளவு ஒளியையேனும் கொண்டு வருபவை கார்ட்டூன்களும், அதிகாரியும் மட்டுமே. அதற்காக உங்களுக்கு என் நன்றி. இந்தப் பயணம் தடையின்றி தொடர என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். அண்மையில் நம்மை நீங்கிச் சென்ற வாசகர் ஜே எஸ் கே-வின் பொருட்டு ஒரு காமிக்ஸை வெளியிடுவதென்பது மகத்தான காரியம். தேவையின்றி உங்களைக் காயப்படுத்தும் சங்கதிகளைத் தவிர்த்து காமிக்ஸ் பணிகளில் தொய்வின்றி ஈடுபடுங்கள். உங்களோடு நாங்கள் எப்போதும் இருக்கிறோம். உங்களுக்கு மீண்டும் என் நன்றியும், அன்பும்.

பிரியமுடன்,

கார்த்திகைப் பாண்டியன்
=================================================================

நண்பர் ஒரு தீவிர டைகர் அபிமானி என்பதில் ரகசியங்கள் இல்லை எனும் போது, அவரது மின்னஞ்சலில் 'தளபதி' vs 'தல' என்ற போட்டி நோக்கெல்லாம் இருப்பதாய் நான் நினைக்கவேயில்லை ! மாறாக - இந்த சிரம நாட்களில் அந்த 'feel good factor ' க்கு அதிகாரியாரே ஒரு மிடறு உசத்தி என்ற கருத்தை அடிக்கோடிடுவதாய் மட்டுமே பார்த்திடுகிறேன் ! So பாயசங்களுக்கு பரணை உருட்டாதீங்கோ சம்முவம்ஸ் !!  And கார்ட்டூன்கள் பற்றியும் நண்பர் எழுதியுள்ளது செம்மையாய் மனத்தைக் குளிர்விக்கிறது !! துரதிர்ஷ்டவசமாக  வெகுஜன ஆதரவு நம் சிரிப்பு பார்ட்டிகளுக்கு இல்லாது போயினும் - அவர்களின்பால் அவ்வப்போது பாய்ந்திடும் கனிவான ஒளிவட்டங்கள் warms the heart !! நன்றிகள் கா.பா. சார் !! 

Bye guys... See you around !  2021-ன் கேட்லாக் பணிகள் அழைப்பதால் நடையைக் கட்டுகிறேன் !!  Have a cool weekend &  Do Stay Safe !!