Sunday, August 16, 2020

மேலோட்டமாய் ஒரு பார்வை !

 நண்பர்களே,


வணக்கம். நெடும் வாரயிறுதிகள் எப்போதுமே சோம்பலானவைகளே ; ஆனால் மார்ச்  இறுதி முதலாகவே எல்லா நாட்களும்  கொட்டாவி விடும் பொழுதுகளாகவே தென்படுவதால், இந்த சனி & ஞாயிறு விடுமுறைக்கூட்டணியை 'அப்டிக்கா  ஓரமாய் போய் விளையாடுங்க புள்ளீங்களா !' என்றே சொல்லத் தான்  (என் மட்டிற்காவது) தோன்றுகிறது ! புது இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தாச்சு ; and உங்களுள் பெரும்பான்மையினருக்கு அவற்றைப் புரட்டிப் பார்க்க மட்டுமே அவகாசம் கிட்டியுள்ளது எனும் போது - அவற்றின் makings பற்றி in depth பேசிடுவது பொருத்தமாகவும் இராது ! So சும்மா ஜாலியாய் இங்கேயொரு  அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு ஹெர்மனின் "தனித்திரு...தணிந்திரு" மொழிபெயர்ப்போடு இணைந்திருப்பதே தேவலாமென்று தோன்றுகிறது ! So இந்தவாட்டி உள்ளுக்குள் ரெம்போ புகுந்திடாது, மேம்போக்காகவே ஒரு சிறு பயணம் மட்டுமே, இம்மாத இதழ்களோடு ! 

ஆகஸ்டின் நான்கு இதழ் கூட்டணியில், இதுவரையிலும் விரல் விட்டு எண்ணிடக்கூடிய அலசல்களே கிட்டியுள்ளன எனும் போது - எதையும்  taken for granted என எடுத்துக் கொள்வது சுகப்படாது என்பது புரிகிறது  ! And கிட்டியுள்ள அலசல்கள் (எதிர்பார்த்தபடிக்கே) XIII -ன் 2132 மீட்டர் கதைக்கொரு thumbs up தந்திருப்பதும், பனியில் ஒரு குருதிப்புனல் கி.நா.விற்கொரு 'ஓ' போட்டிருப்பதும் கண்கூடு என்றாலும், these are still very  early days !! இறுதி முடிவுகள் எவ்விதம் அமைந்திட்டாலுமே, என்னைப் பொறுத்தவரையிலும் இந்த மாதம் கொஞ்ச காலத்துக்கேனும் நினைவில் நிற்கவுள்ள மாதமே - simply becos மொழிபெயர்ப்பினில்  சந்திக்க நேர்ந்த பன்முகத்தன்மையின் காரணமாய் ! வித விதமாய் ; ஜானர் ஜானராய் கதைகளை வெளியிடும் போது, ஒரே மாதத்தினில் கலவையாய் இதழ்கள் அமைந்திடுவதும்,  அவற்றிற்குப்  பேனா பிடிப்பதென்பது ரொம்பவே unique ஆன அனுபவங்களாகிடுவதையும்  நான் உணர்ந்திடும் முதல் தருணமல்ல தான் ! ஆனால் நடப்பாண்டினில் ; அதுவும் இந்த லாக் டௌன் படலங்களுக்குப் பிற்பாடு, பெரிய மெனெக்கெடலைக் கோரிய இதழ்கள் அத்தனை அதிகம் இருந்திருக்கவில்லை ! போன மாசமெல்லாம், கார்ட்டூன்களின் தாலாட்டு நிகர் பணியினில் பணியாற்றியதும், 'இளம் டெக்சின்' பர பர சாகசத்தில் புகுந்து வெளியேறியதும் - மனுஷனை செம சோம்பேறியாக்கி வைத்திருந்தன ! 

ஆகஸ்டின் அட்டவணையைப் பார்த்த போதே ஜூலையின் சோம்பல் முறிக்கும் படலம்  மறுக்கா தொடர வாய்ப்பு லேதென்று புரிந்தது தான் ; but still ஜேம்ஸ் பாண்ட் 007 & 'பனியில் ஒரு குருதிப் புனல்' ஈரத் துணியை முக்காடாய்ப் போட்டு விட்டு, திணறத் திணறச் சாத்துமென்று எதிர்பார்த்திருக்கவில்லை ! Simply put - இந்த 2 கதைகளும் - வசனங்களின் பாணிகளில் ; அவசியப்படுத்திய மொழிக்கையாளலில் - இரு வேறு துருவங்களின் வேற்றுமைகளைக் கொண்டிருந்தன ! ஜேம்ஸ் பாண்டின் இந்த அமெரிக்க version-ஐ ஆங்கிலத்தில் படித்திருக்கக்கூடியோர்க்கு நான் சொல்ல முனைவது புரிந்திடக்கூடும் ! பெருசு பெருசாய்ப் படங்களும், தெறிக்க விடும் ஆக்ஷன் sequences-ம் நிறையப் பக்கங்களை எடுத்துக் கொண்டாலுமே , இந்தத் தொடரினில் பணியாற்றியுள்ள வெவ்வேறு கதாசிரியர்களுமே ஸ்கிரிப்டில் கொணர முற்பட்டிருக்கும் நவீனத்துவம் வேறொரு லெவல் ! ஏகப்பட்ட உளவுத்துறை சார்ந்த தகவல்கள் ; ஏகப்பட்ட ஹை-டெக் சமாச்சாரங்கள் என்பனவற்றை அந்த typical  பிரிட்டிஷ் வறண்ட நக்கல் பாணியுடன் கலந்து நறுக்கென்று பரிமாறியிருப்பார்கள் ! இது வரையிலுமான ஒவ்வொரு ஜேம்ஸ் பாண்ட் 2.0 கதையிலும் இந்த பாணி தொடர்ந்துள்ளதே என்பதால் - 'நில்..கவனி..கொல்' கதையிலும் அந்த template தொடர்ந்திட்டது புதுமையாய்த் தெரியவில்லை தான் ! ஆனால் இங்கிலீஷில் வாசித்து விட்டு நடையைக் கட்டுவதற்கும் , தமிழாக்கம் செய்ய மண்டையைச் சொரிவதற்குமிடையே உள்ள வித்தியாசம் மெகா சைஸாய் உருமாறித் தெரிந்ததென்னவோ நிஜம் தான் ! அதிலும் இம்முறை கதை நெடுகிலும் பாண்ட் அந்தக் கூட்டாளிப் பெண்ணிடம் பல்ப் வாங்கிக் கொண்டே திரிவதும், அதன் மத்தியிலும் அவளோடு ஜல்ஸாக்களில் ஈடுபட்டுத் திரிவதும், MI 6-ன் பூத்ராய்டோடு அடிக்கும் நையாண்டி தர்பார்களும் - இங்கிலீஷில் செம நாசூக்காய் வழங்கப்பட்டிருந்தன ! அவற்றைச் சேதப்படுத்திடாது தமிழுக்குக் கொணர்வதென்பது பேந்தப் பேந்த முழிக்குமொரு அனுபவமாய் அமைந்ததை மறுக்கவோ, மறக்கவோ மாட்டேன் ! Final output எத்தனை தூரத்துக்கு ஒரிஜினலுக்கு நியாயம் செய்துள்ளதோ - சொல்லத் தெரியலை & சொல்ல வேண்டியவனும் நானில்லை ; but எனக்கு இயன்றமட்டிற்கு இங்கு மெனெக்கெட்டுள்ளேன் என்பதை மட்டும் நினைவில் கொண்டிடுவேன் ! 

ஜேம்ஸ் பாண்ட் இன்றைய யுகத்தின் பிரஜையாய் வலம் வரும் காலத்திலிருந்து அப்டியே கி.நா. பக்கமாய் ஜம்ப் பண்ணினால், அங்கோ 2 நூற்றாண்டுகளுக்கு முன்பான கதைக்களம் ; மாந்தர்கள் & வசன நடை ! பற்றாக்குறைக்கு கதைநெடுகிலும் யுத்தத்தின் அயர்ச்சிகளை உணர்ந்து நிற்கும் சிப்பாய்களுக்கே உரித்தானதொரு  மெலிதான சோகம் கலந்த நக்கல் இழையோடியதைப் பார்க்க முடிந்தது ! And பின்பாதியிலோ - கதை சொல்லும் கார்பொரேல் எக்ரியனுக்கு முக்கியத்துவம் கூடிடும் பக்கங்களின் துவக்கம் முதலாய் ஒரு refined மொழிநடை அமலுக்கு வந்திருந்தது ! நமக்கு இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திடும் பெண்மணி இத்தாலியப் பிரஜையே என்பதால் தாய் மொழியில் அவரது புலமை பிரமாதமே ; ஆனால் இங்கிலீஷில் அதே ஆற்றலை எதிர்பார்த்திடலாகாது எனும் போது - என் கையிலிருந்த இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இந்திரா சவுந்தர்ராஜன் அவர்களின் மர்ம நாவலாய்க் கண்ணில்பட்டது ! அதையும் அச்சுக்குப் போக வெகு சொற்ப அவகாசமே எஞ்சியிருந்த நேரத்தில் கையிலெடுத்துக் கொண்டு நான் முழித்த முழி ஆந்தைகளுக்கே பெருமை சேர்த்திருப்பது உறுதி ! கதையின் முடிவு கி.நா.க்களுக்கே உரித்தான open ending எனும் போது - அதனை யார்-எவ்விதம் கிரகித்துக் கொள்வார்களென்பதை கதாசிரியர் அவரவரது கற்பனைகளுக்கே விட்டிருக்க - எனக்கு அதன் பொருட்டு பெருசாய் நோவுகளில்லை ! ஆனால் கதாசிரியரும், நீங்களும், ஒரு துக்கனூண்டு ரூபத்தில் நானுமே இடம் பிடிக்குமொரு ஆல்பத்தை அந்த open end வரையிலும் பத்திரமாய்க் கொணர்ந்து சேர்ப்பதற்குள் நாக்கு தொங்கோ தொங்கென்று தொங்கிப் போய் விட்டது ! இடையிடையே விக்கிப்பீடியாவில் தேடல்கள் ; கூகுளில் இத்தாலியப் பதங்களின் அர்த்தங்களைப் புரிந்திட  முயற்சிகள் என்ற கூத்துக்களும் இணைந்து கொள்ள - ஷப்பா !! இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருப்பின், இன்னும் கொஞ்சம் நிறைவாய்ச் செய்திருக்கலாமோ ? என்று எனக்கே தோன்றியது தான் ! ஆனால் புக்காய் கையிலெடுத்துப் படித்துப் பார்த்த போது, இதை கூடுதலாய் ஒரு வாரமெடுத்துச் செய்திருந்தாலும் பெருசாய் எந்த வித்தியாசமும் இருந்திராதென்றே தோன்றியது ! So இனி படித்திடும் நீங்களே இதனை ஜட்ஜ் செய்திட வேண்டிய ஆட்கள் ! உங்கள் தீர்ப்புகள் எவ்விதம் இருந்தாலுமே, எனக்கோ இதன் பணிகள் சார்ந்த நினைவுகள் ரொம்பவே ஸ்பெஷலாகவே இருந்திடும் - as with most graphic novels !! 

இம்மாதத்தின் இ.ப. சார்ந்த அனுபவங்களைப் பற்றி ஏற்கனவே விரிவாய் எழுதிவிட்டேன் எனும் போது எஞ்சியிருப்பது டயபாலிக்காரின் ஆல்பமே ! வித்தியாசமான களங்களுக்குப் பேனா பிடிப்பது எத்தனை பெண்டு கழற்றிடுமோ, அதற்குச் சிறிதும் சளைக்காத சிரமமே மாமூலான கதைகளோடு பயணிப்பதும் ! பக்கத்துக்குப் பக்கம் என்ன எதிர்பார்ப்பதென்றே தெரியாது ஓடிடும் கதைகள் ஒருவிதச் சவாலெனில், முதல் பக்கம் முதலே நெற்றி முழுக்க கதையை போஸ்டரடித்துச் சுமந்து திரியும் கதைகளுமே சவால்களில் குறைச்சலானவைகளல்ல ! சின்னதொரு உதாரணம் சொல்கிறேனே - போன மாதத்து "மீண்டும் கிங் கோப்ரா" வின் புண்ணியத்தில் ! பத்தி பத்தியாய் ; வண்டி வண்டியாய் டயலாக்ஸ் கொண்ட புராதன, நேர்கோட்டுக் கதையே அது ! சுட்டுப்போட்டாலும் என்னால் அதனுள் பேனாவும், கையுமாய்ப் பயணித்திருக்க இயலாது ! அதனை எடிட் செய்வதற்குள்ளேயே கைலாஸாவிற்கு கள்ளத்தோணிகள் ஓடுகின்றனவா ? என்று பார்க்கும் சபலம் ஆட்டிப் படைத்திருக்க, அதனை மொழிபெயர்ப்பதாயின் ஜார்க்கண்ட் பக்கமாய்க் குடி மாறவே செய்திருப்பேன் தான் ! ஆனால் நமது கருணையானந்தம் அவர்களோ செம ஜாலியாய் இதனை செய்து முடித்திருந்தார்கள் ! இதோ, இப்போது கூட JSK ஸ்பெஷல் ஆன அந்த ஸ்பைடர் சாகசத்துக்கு உற்சாகமாய் பேனா பிடித்து வருகிறார் ; எனக்கோ இப்போதே உதறுகிறது, அந்த எடிட்டிங்கை எண்ணி ! So கி.நா.க்கள் ; இஷ்டைலான கதைகள் என்பனவெல்லாம் ஒளிவட்டத்தை ஈர்த்திடக்கூடியவைகளாக இருக்கலாம் ; ஆனால் மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி பாட்டுப் பாடும் வேலைகளும் பெண்டைக் கழற்றுபவைகளே ! அவ்விதம் பார்க்கையில் இம்மாத கறுப்பு முகமூடிக்காரர் தன பங்குக்கும் கசரத் வாங்கியுள்ளார் ! 'இருக்கு....ஆனா இல்லே !' என SJ சூர்யா பாணியில் கதாசிரியர்கள் செய்திருக்கும் லூட்டிகளோடு 'துரோகம் ஒரு தொடர்கதை'யினில் பயணிக்க வாய்த்த வாய்ப்பானது memorable in a different way !! 

இந்த டயபாலிக் ஆல்பத்திற்குமே உங்களது ரேட்டிங்ஸ் என்னவாக இருக்குமென்று அறிந்திட ஆர்வத்தோடு வெயிட்டிங் ! So கழுவி ஊற்றுவதானாலும் சரி ; தட்டிக் கொடுப்பதானாலும் சரி, மறவாது செய்திடுங்களேன் guys ! 

Before I sign out - சில கேள்விகள் for you : 

  1. கி.நா.வினில் நிஜ வில்லனாய் கதாசிரியர் கருதுவதை யாரை / எதை ? என்று யோசித்தீர்களா guys ? 
  2. உங்களுக்கும் அந்த ஆல்பத்தில் முக்கிய பங்குள்ளதை உணர முடிந்ததா ? 
  3. நமக்குத் துளியும் தொடர்பில்லா ஒரு யுகம் ; ஒரு வரலாறு - என்பதே இந்த கி.நா. வின் தளம் ! ஆனாலும் நம்மை அங்கே இட்டுச் செல்லச் சாத்தியப்பட்டுள்ளதை ஓவியரின் வெற்றியாகப் பார்க்கிறீர்களா ? அல்லது கதாசிரியரின் சாதனையாகவா ? 'சமமாய்ப் பார்க்கிறேன்' என்ற பதில்ஸ் வேணாமே ப்ளீஸ் ! 
  4. Last but not the least, இதே நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பினைப் பின்புலமாய்க் கொண்டதொரு கிராபிக் நாவலும் சமீபத்தில் கண்ணில்பட்டது - with a completely different storyline !! அங்கும் கறுப்பு-வெள்ளையில் மிரளச் செய்யும் சித்திரங்கள் ! அதையும் எப்போதேனும் முயற்சிக்கலாமா folks ? இல்லாங்காட்டி நெப்போலியனை இஸ்திரியில் படித்ததோடு நிறுத்திக் கொள்வோம் என்பீர்களா ? 
Bye all....see you around ! தொடரும் நாட்களிலாவது புது இதழ்களுக்கென நேரம் தர முயற்சித்திடுங்களேன் ? Good reading !! 

P.S : நமது இரு ஆன்லைன் விற்பனைத் தளங்களுமே, உங்களின்   ஆன்லைன் ஷாப்பிங்கை சுலபமாக்கிட நிறைய மாற்றங்களுடன்,இப்போது தயாராய் உள்ளன ! And ரூ.500 க்கு மேலான backissue ஆர்டர்களுக்கு - ரூ.50 விலையிலான backissues நம் அன்புடன் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறேன் ! So முயற்சித்துப் பாருங்களேன் folks ? 

351 comments:

  1. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. ஞாயிறு காலை வணக்கம் காமிக்ஸ் காதலர்களே.....

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே...

    ReplyDelete
  4. Replies
    1. அது பத்து சாருக்குத் தெரியுமா ?

      Delete
    2. பத்து, பத்துலயும் வரலாம். பத்துக்குள்ளேயும் வரலாம். பட்ச்சே அனு பத்துக்குள்ளே வருமெங்கில் அது சந்திரமுகி கதையாகி போகுமல்லோ.

      Delete
    3. பத்து சார், காலை டிஃபன் என்ன சாப்பிட்டீங்க? குழா புட்டா?

      Delete
    4. சத்தியமாக உப்புமா இல்லை.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  5. நில் கவனி கொல்....

    ஒரு ஹைடெக் திரைப்படத்தை புத்தகத்தில் காண முடியுமா ...? முடியும் இம்மாத 007 ஜேம்ஸ்பாண்ட்டின் நில் கவனி கொல் மூலம்..
    கதையும் சரி சித்திரங்களும் சரி அடேங்கப்பா ரகம்... கதையில் வரும் சித்திரங்கள் அனைத்தும் அசத்துகிறது எனில் ஒரு முழு பக்க சித்திரங்கள் வரும் கட்டங்கள் இன்னும் அசுரடிக்கிறது .சித்திரங்கள் மட்டுமல்ல கதையுமே அசத்தல் ரகம்..ஓர் எதிர்பாரா திருப்பமாக வரும் க்ளைமேக்ஸ் பக்கங்களும் அட்டகாசம்.கதை படிக்க ஆரம்பித்தது தான் தெரிகிறது 137 பக்கங்களும் எப்படி போனது என்றே தெரியவில்லை...007 ன் வாகனம் போலவே ஜெட் வேகத்தில் பறந்து சென்றது.அன்றைய 007 ம் சரி இன்றைய 007 ம் சரி ஒரே விதமாகவே அசத்துகிறார்கள். இந்த கதையில் நாயகனை விட கதை நாயகி இன்னுமே அசத்துகிறார் எல்லா விதத்திலும் ..சிறு குறை எனில் முதல் பக்கத்தில் ஆரம்ப படத்திலியே காணப்படும் எழுத்துப்பிழைகள் அவ்வப்போது ஆங்காங்கே தொடர்வதும்

    மற்றபடி

    மீண்டும் ஓர் வெற்றிப்படைப்பு ஜம்போவிற்கும், 007 ற்கும்...

    *************
    பனியில் ஒரு குருதிப்புனல்..


    இந்த புதுப்பதிவில் இந்த விமர்சனம் வருகை தந்து இருந்தாலுமே இதை எழுதியது குருதிப்புனலை வாசித்து முடித்த அடுத்த விநாடியே...( இதழ்கள் கைக்கு கிடைத்த முதல் நாளிலியே முதல் இதழாக படித்த இதழ் )

    முன்பக்க அட்டைப்படம் பனியில் போராடும் வீரர்களை கொண்டு இது ஓர் ராணுவக் கதை போல என எண்ண வைத்தது எனில் பின் பக்க அட்டைப்படமோ இது ஓர் மாயாஜால படைப்போ அல்லது ஓர் பேய்கள் அரசாளும் ஓர் திகில் கதை படைப்போ என்ற எண்ணத்தை விதைக்க வைத்தது..ஆனால் கதையோ எங்கெங்கோ சென்று ஏதோதோ விதத்தில் முடிந்து கொஞ்சம் மலங்க ,மலங்கவே கற்பனையின் விஸ்வரூபத்தில் சிக்க வைத்து இருக்கிறது.

    எனக்கு தெரிந்து நமது இந்திய திருநாட்டில் மட்டுமே இயற்கை வழிபாடுகளை தெய்வங்களாக வணங்கி வந்திருக்கிறார்கள் என நம்பியிருந்தேன்.ஆனால் இந்த இத்தாலிய படைப்பை வாசித்தவுடன் தெரிகிறது உலகமே இதற்கு முன் இயற்கை வழிபாட்டைத்தான் கடைபிடித்து வந்திருக்கிறது என .மிக மிக அசாத்திய கற்பனை களமே ..முடிவோ அதைவிட அசாத்திய ஒன்று தான். வார்த்தை வித்தைகளில் கார்ப்போரல் மட்டும் ஜித்தன் அல்ல உண்மையான கதை ஆசிரியர் தான் ஜித்தன் என்பது கதை சொல்லும் பாங்கும் ,செல்லும் பாங்கும் தெரிவிக்கிறது . இயற்கை உயிர்பெறும் மிக அசாத்திய கற்பனை களமே என்றாலுமே அதற்கு காரணமாக போரும்,குருதியுமே எனும் போது கற்பனையும் "கற்பனை" ஆகிவிடுகிறது.

    அசாத்திய கருப்பு வெள்ளை சித்திரங்களும் ,குருதிகளும்,வெப்பமும் மட்டும் சிவப்பிலும் சித்திர படைப்பை கொண்டு வந்தது கூட ஓர் அழகிய கற்பனையே.
    ஆனால் எனக்கு ஓர் சந்தேகம் மட்டுமே இப்படைப்பு ஓர் மத எதிர்ப்பு படைப்பா என்பது மட்டுமே அதுவும் இப்படைப்பு வெளியான நாட்டில் இந்த படைப்பின் வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்பதே...?கதையில் பல வினாக்கள் கொக்கி போட்டு இழுக்கிறது தான் விடை தெரியாமலே...ஆனால் அதற்கும் கதையில் வரும் கதாபாத்திரமே நிலைமையை புரிய வைக்கிறது எனில் இதில் சிறந்தவன் வாசகனா ,படைப்பாளானா என்பதும் மேலும் ஓர் கொக்கியே...?

    மொத்தத்தில் இது ஓர் மலங்க வைத்த படைப்போ ,முகத்தில் ஓங்கி அறையும் படைப்போ ,கற்பனையின் விசித்திரத்தில் சிக்க வைக்க போகும் படைப்போ வாசிப்பவர்களுக்கு எவ்விதமோ ஆனால் என்பது ரூபாய் வவுச்சருக்கான படைப்பு அல்ல என்பது மட்டும் நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.....கொஞ்சமாய் நேரமெடுத்துக் கொண்டு நெட்டில் நான் கடைசிப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்த சமாச்சாரங்களை சார்ந்து உருட்டிப் பாருங்களேன் - இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும் !

      Delete
    2. ///வாசிப்பவர்களுக்கு எவ்விதமோ ஆனால் என்பது ரூபாய் வவுச்சருக்கான படைப்பு அல்ல என்பது மட்டும் நிஜம்.///

      நச்சுனு சொன்னீங்க தலீவரே! ஆரம்ப காலத்தில் கி.நா'வுக்கு எதிராக 80 பக்க கடுதாசி எழுதி எடிட்டரைக் கண்ணீரில் மூழ்க வைத்த நீங்களே ஒரு கி.நா குறித்து இப்படி எழுதியிருப்பதே நாம் கி.நா யுகத்தில் காலடி வைத்துவிட்டோம் என்பதை பறைசாற்றுகிறது!!

      Delete
    3. நீங்க வேற உறங்கிட்டிருக்கும் கடுதாசி மிருகத்தை உசுப்பிப்புடாதீங்க சாமீ !!

      Delete
    4. சூப்பர் பரணி. அட்டகாசம்.

      Delete
    5. எழுத்துப் பிழைகள் இம்முறை நமது DTP -ன் சொதப்பலின் காரணமாய் தலீவரே ; நிறைய பிழைத்திருத்தங்கள் செய்துள்ள போதிலும் அவை இறுதி வடிவத்தினில் save ஆகவில்லை என்பதை நேற்றுத் தான் நாங்களே கண்டுபிடித்திருக்கிறோம் !! பிழை திருத்தங்களை செய்திட ஒரு M.A. தமிழ் படித்த பெண் ஓராண்டாய்ப் பணியாற்றி வருகிறார் ! திருத்தங்களை போட்டிருக்கிறார்கள் ; ஆனால் சரியாக அவை save ஆகி விட்டனவா என்று கவனிக்கத் தவறியதால் சொதப்பியுள்ளது !

      Delete
    6. அருமையான விமர்சனம் பரணி. 007 அப்படியே ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல இருந்தது.

      இந்த கிராஃபிக் நாவல் 80 ரூபாய் voucher க்கான படைப்பு இல்லை. விலை மதிப்பு இல்லாத படைப்பு. வரவர கிராஃபிக் நாவல் ரசிகராக மாறிக்கொண்டு இருக்கீங்க தலைவரே

      Delete
  6. வெகு காலத்திற்கு பிறகு கதை விமர்சனம் செய்கிறேன்... பந்தியில் சாப்பிடும் பொழுது எந்தப் பொரியல்/கூட்டு சுவை கம்மியாக தோன்றுகிறதோ... அதையே முதலில் உண்டுவிடுவேன்.... கஷட்டத்தை முதலில் முடித்து விட்டால் இஷ்டத்தை மெதுவாக விரும்பி உண்ணலாம் என்பதே என் கண்ணோட்டம்...

    இதை ஏன் இங்கு சொல்கிறேனென்றால்.. இந்த சுதந்திர தின வெளியீடுகள் நாலும் என் முன்னே இருக்கும் பொழுது... ஆசையைத் தூண்டுவது Danger Diabolikக்கும், OO7ம்முமே.... “பனியில் ஒரு குருதிப்புனல்” raceல் 2132விற்கு பிறகு கடைசி இடத்திலேயே இருந்தது... 2132விற்கு முந்தைய பாகங்களை கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முடிவடையாதலால், 2132 மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது...

    OK... விஷயத்திற்கு வருகிறேன்... Diabolik அட்டை கண்களைப் பறித்தாலும்... கசப்பு மருந்தே முதலில் என்னும் என் தார்மீக கொள்கையினால்... சற்றே... இல்லை பலத்த கலக்கத்துடன்தான் “ பனியில் ஒரு குருதிப் புனலை” கையிலெடுத்தேன்.. முதலில் அந்த art style பழக இரண்டு பக்கங்கள் எடுத்தது... பின்னர் என்னையறியாமல் கதைக்குள் மூழ்கிப் போனேன்... கதையை என்னவென்று சொல்வது... போர்க்களமா..!? பனிப் பிராந்தியமா..!? அடர்கானகமா..!? கதை அனைத்தையும் தொட்டுச் செல்கிறது... இல்லை தொட்டு ஓடுகிறது... இரு வண்ணக் கலவை... அதுவும் சில பக்கங்கள் மட்டும் என்றெல்லாம் மற்ற நண்பர்கள் சொன்னபோது... சற்றே கிலி ஏற்பட்டது உண்மை... கிநா... என்றாலே கொஞ்சம் தயங்கும் எனக்கு இந்த colour experiment ஏதோ வேண்டாத வேலையாக இருக்கும் என எண்ணத் தோன்றியது... ஆனால் படிக்கும் பொழுது அந்த சிவப்பு நம்மை அந்த கதாபத்திரங்கள் போல அதை நோக்கி ஓட வைக்கிறது.... கருப்பு வெள்ளை கதையில் ஒரே ஒரு நிறச் சேர்ப்பு... கதையின்... அதன் தாக்கத்தின்... வீரியத்தை எந்த அளவிற்கு அதிகப்படுத்தும் என்பது... இந்த புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்...

    இந்தக் கதையின் மற்றொரு சிறப்பு அதன் வசனங்கள்... இல்லை கவிதா வரிகள்...

    “மரணம்! தொடும் நெருக்கத்தில் உலவிடும் போதுமே தூரமாய் இருப்பது போலவே தென்படுவது வாழ்க்கையின் புதிர்களுள் ஒன்றோ...?”
    இந்த வரிகள் தற்போதைய உலக நிலையை கண்டு எழுதப்பட்டதோ...!?

    “கோடானு கோடிக் காலைகளில் உதயமாகிச் சலித்துப் போன சூரியன் இன்றைக்கு மல்லாக்க விழுந்து விட்டதோ...!?”

    “இந்த மாதிரி சிந்தனைகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உதிக்குமோ..!?” என்ற self explanatory dialogue... கலக்கத்திற்கு மத்தியிலும்... சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல்... புன்னகைக்க வைக்கிறது...

    “ஒவ்வொரு கதையுமே மரணம் என்ற முற்றுப் புள்ளியில் தானே நிறைவுறுகிறது...!?”... அழுத்தமான உண்மை வரிகள்...
    அடுக்கிக் கொண்டே போகலாம்...

    கதையின் main theme... PAGANISM பற்றியது... இது ஒரு Blair Witch Project வகையான paganism போல் எனக்கு படவில்லை... Dennis Wheatleyன் கதையை படித்திருப்போருக்கு இது விளங்கும் என எண்ணுகிறேன்... Dennis Wheatley கதைகள் இரண்டாம் உலகப்போரில் Naziகள் paganism/satanism முதலியவற்றை பின்பற்றுவது போல பல கதைகளை அமைத்திருப்பார்... இந்த கதையை படிக்கும் போது... அந்த கதைகளை ஞாபகமூட்டியது..

    கதையின் கடைசி நான்கு panelகள்... குளிருக்கு இதமாய் நெருப்பின் முன் அமர்ந்திருக்கும் களைத்த பிரயாணியின் மேல் வாளி நிறைய குளிர்ந்த நீரை எறிந்தால் எப்படி இருக்குமோ... அப்படியிருந்தது... இரண்டு நிமிடங்கள் ஆசிவாசபடுத்திக் கொண்டு... உடனே இரண்டாம் முறை படிக்கத் தொடங்கினேன்... இனி Diabolik/OO7 படிக்க வேண்டுமா இல்லை “பனியில் ஒரு குருதிப்புனல்” மூன்றாவது முறை படித்துவிட்டு... மற்றதை எடுக்கலாமா என ஆலோசித்து வருகிறேன்...
    இந்த கதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ள அன்பு ஆசிரியர்க்கு என் நன்றி.... என்னையும் ஒரு கிநா விற்கு விமர்சனம் எழுத தூண்டிய ஆசிரியரின் எழுது கோலுக்கும், ஓவியரின் தூரிகைக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அட்றா சக்கை....அட்றா சக்கை.....! இன்னொரு விக்கெட் கி.நா.வுக்கு !! அற்புதமான அலசல் டாக்டர் சார் !

      Delete
    2. அருமை அருமை @AKK

      Delete
    3. அருமை சார்...தானுமே ரசித்தேன் ஒவ்வொரு வரிகளையும..

      Delete
    4. 👏👏👏👏👏👏. அசத்தல் விமர்சனம்.

      Delete
    5. பின்னிட்டீங்க AKK. அருமை.

      Delete
    6. // குளிருக்கு இதமாய் நெருப்பின் முன் அமர்ந்திருக்கும் களைத்த பிரயாணியின் மேல் வாளி நிறைய குளிர்ந்த நீரை எறிந்தால் எப்படி இருக்குமோ... அப்படியிருந்தது... // டாக்டர் சார் சும்மா வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க. அருமை ஐயா அருமையான விமர்சனம். One of the best reviews posted thus far.....

      Delete
    7. அருமையான விமர்சனம் சார் !
      👏👏👏👏👏👏

      Delete
  7. கி.நா.வினில் நிஜ வில்லனாய் கதாசிரியர் கருதுவதை யாரை / எதை ? என்று யோசித்தீர்களா guys ?

    ######

    சத்தியமாய் யோசித்தேன் சார்..கதாசிரியர் எதிர்ப்பது கிறிஸ்துவ மத்த்தையா அல்லது நரமாமிசம் சாப்பிடும் இயற்கையை வழிபடும் பழங்குடி மத்த்தையா என...?!

    ReplyDelete
  8. உங்களுக்கும் அந்த ஆல்பத்தில் முக்கிய பங்குள்ளதை உணர முடிந்ததா ?

    #####

    அந்த அளவிற்கு இன்னும் நான் வளரவில்லை சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....அப்பப்போ நீங்களும் பாட்டு கிளாசுலாம் போனால்லே வளர்றது !!

      Delete
  9. 2132விற்கு முந்தைய பாகங்களை கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முடிவடையாதலால்,//
    ஒரு போன் பண்ணியிருக்கலாமே சார்.. உடனடி டெலிவரி கொடுத்திருப்பேனே..?? அருமையான கதைக்களத்தை தவறவிட்டீர்கள்...

    ReplyDelete
  10. அன்பு ஆசானே லைன்ல இருகயிலே கேட்டு வைக்கிறேன்.. அடுத்த ஆண்டு XIII MEMORY RELOADED க்கு ஒரு ஸ்லாட் போட்டுவைங்க.. 2020 நவம்பரில் ப்ரெஞ்சில்.. நீங்க மனசு வைத்தால்... 2021 சந்தாவில் ஏப்ரல் ல் தகதகவென சுடச்சுட கொடுத்துவிடலாம்...

    ReplyDelete
    Replies
    1. போன பதிவைப் பாருங்க தெய்வமே !

      Delete
    2. பாத்துட்டேன் சார்.. இருந்தாலும் ப்ரஷ்ஷா ஒரு நினைவூட்டலுக்கு சார்...

      Delete
    3. 2021 சந்தாவில் முதல் மாதத்தில் வெளிவரத்தான் சார் வேறு ஒண்ணுமில்லை...

      Delete
    4. முதல் மாசம் இரத்தத்தோடு ஆரம்பித்திடாது !

      Delete
    5. அப்போ முத்தத் தோடு ஆரம்பிக்குமோ??

      Delete
    6. நல்லது சார் .. அப்போ மே மாதம் எங்க ஆதர்ஷ நாயகரின் தரிசனம் உண்டு...இன்னுமொரு எட்டு மாதம் தானே...காத்திருப்பேன் சார்...

      Delete
  11. நமக்குத் துளியும் தொடர்பில்லா ஒரு யுகம் ; ஒரு வரலாறு - என்பதே இந்த கி.நா. வின் தளம் ! ஆனாலும் நம்மை அங்கே இட்டுச் செல்லச் சாத்தியப்பட்டுள்ளதை ஓவியரின் வெற்றியாகப் பார்க்கிறீர்களா ? அல்லது கதாசிரியரின் சாதனையாகவா ? 'சமமாய்ப் பார்க்கிறேன்' என்ற பதில்ஸ் வேணாமே ப்ளீஸ் !

    #####

    ஓவயரின் பங்கும் உண்டு எனினும் எவ்வளவு சிறப்பான சித்திரங்களை படைத்து இருந்தாலும் வாசகனை கதை உலகினுள் நுழைய வைப்பது கதையின் ஆசிரியரே...எனவே பனியில் ஒரு குருதிப்புனலின் வெற்றி கதை ஆசிரியரையும்..மொழி ஆக்க ஆசிரியரையுமே சாரும்...

    ReplyDelete
    Replies
    1. வாவ்!! அருமையான தீர்ப்பு தலீவரே!! நான் நினைத்ததும் இதையேதான்!!

      Delete
    2. நானும் நானும்

      Delete
  12. /////கி.நா.வினில் நிஜ வில்லனாய் கதாசிரியர் கருதுவதை யாரை / எதை ? என்று யோசித்தீர்களா guys ? //////

    யுத்தம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னவுடன் உணர்கிறேன் செயலரே..

      உண்மை..!

      Delete
    2. அருமையான பதில் EV

      Delete
  13. Last but not the least, இதே நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பினைப் பின்புலமாய்க் கொண்டதொரு கிராபிக் நாவலும் சமீபத்தில் கண்ணில்பட்டது - with a completely different storyline !! அங்கும் கறுப்பு-வெள்ளையில் மிரளச் செய்யும் சித்திரங்கள் ! அதையும் எப்போதேனும் முயற்சிக்கலாமா folks ? இல்லாங்காட்டி நெப்போலியனை இஸ்திரியில் படித்ததோடு நிறுத்திக் கொள்வோம் என்பீர்களா ?



    *ஏன் கூடாது..?*

    ReplyDelete
    Replies
    1. ஆமா நண்பரே... அப்படியே நம்ம XIII THE HISTORY யையும் கொஞ்சம் பாத்து செய்யுங்க. எல்லாம் நம்ம ஆசிரியர் பாத்துக்குவார்....

      Delete
    2. உங்களிடமுள்ள அந்த பிரெஞ்சு புக்கைப் படம் பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள் பழனி ; அதைத் தமிழில் வெளியிட்டாலும் யாருக்கும், எதுவும் புரியப்போவதில்லை தான் ! போகாத ஊருக்கு வழி தேடும் வயசையெல்லாம் நான் தாண்டி ஏக காலமாச்சு சாமீ !

      Delete
    3. ரொம்ப நாளாவே அதுதான் போகுதுசார்...அந்த புக்குக்கு copyright எல்லாம் வாங்கிவச்சுட்டிங்க.நாம் digital comics முயற்ச்சிக்கு இந்த இதழை முயற்ச்சிப்போமே சார்...ஏன் சும்மா அது இருக்கனும்...??

      Delete
    4. மேலேயுள்ள பின்னூட்டத்தையே இதற்கும் பதிலாக எடுத்துக்கோங்க !

      டிஜிட்டல் காமிக்ஸ் ; டிக்கிலோனா காமிக்ஸ் என்று கனா மட்டுமே காண இயலும் இங்கிருக்கும் சூழல்களில் !

      Delete
    5. ஓகே சார்.எதிர்காலத்தில் digital comics நமக்கும் சாத்தியமே...காத்திருப்போம்...

      Delete
  14. **கி.நா.வினில் நிஜ வில்லனாய் கதாசிரியர் கருதுவதை யாரை / எதை ? என்று யோசித்தீர்களா guys ?**

    போர் மற்றும் மனிதனின் சுயநலம்.

    **உங்களுக்கும் அந்த ஆல்பத்தில் முக்கிய பங்குள்ளதை உணர முடிந்ததா ?
    நமக்குத் துளியும் தொடர்பில்லா ஒரு யுகம் ; ஒரு வரலாறு - என்பதே இந்த கி.நா. வின் தளம் ! ஆனாலும் நம்மை அங்கே இட்டுச் செல்லச் சாத்தியப்பட்டுள்ளதை ஓவியரின் வெற்றியாகப் பார்க்கிறீர்களா ? அல்லது கதாசிரியரின் சாதனையாகவா ? 'சமமாய்ப் பார்க்கிறேன்' என்ற பதில்ஸ் வேணாமே ப்ளீஸ் ! **

    ஓவியம் எங்களை கட்டிபோட்டது உண்மை. ஆனால் கி.நா வில் கதைதான் எப்போதும் பிரதானம். வாசகர் என்ற தொடர்பு இருக்கத்தானே செய்கிறது.



    **Last but not the least, இதே நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பினைப் பின்புலமாய்க் கொண்டதொரு கிராபிக் நாவலும் சமீபத்தில் கண்ணில்பட்டது - with a completely different storyline !! அங்கும் கறுப்பு-வெள்ளையில் மிரளச் செய்யும் சித்திரங்கள் ! அதையும் எப்போதேனும் முயற்சிக்கலாமா folks ? இல்லாங்காட்டி நெப்போலியனை இஸ்திரியில் படித்ததோடு நிறுத்திக் கொள்வோம் என்பீர்களா ? **

    இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //வாசகர் என்ற தொடர்பு இருக்கத்தானே செய்கிறது.//

      அதையும் தாண்டியோரு role உள்ளது சார் !

      Delete
    2. அடுத்த Napolean போடுங்க சார்.

      Delete
    3. நம்மில் பலருக்கு ரசனை முதிர்ந்து வருகிறது, என்று எடுத்து கொள்ளலாம். சரியா சார்.

      Delete
  15. இன்றைய காத்திருப்பு டயபாலிக் அன்ட் பதிமூன்று...:-)

    ReplyDelete
  16. மாடஸ்டி வாழ்க!
    மாடஸ்டி வாழ்க!

    அப்படியே
    கால்வின் வாக்ஸும் வாழ்க!

    ReplyDelete
  17. சில,பல காரணங்களால் இந்த மாத இதழ்கள் முதல் புரட்டலோடு நிற்கிறது...
    இனிதான் வாசிக்க வேண்டும்...

    ReplyDelete
  18. பனியில் ஒரு குருதிப்புனல் பற்றி இன்னும் ஒரு சிறு பதிவு. எனக்கு பழக்கம் எப்படி என்றால் புத்தகங்கள் வந்ததும் படிக்க ஆரம்பித்தால் அனைத்து புத்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்து முடித்து விடுவதே இத்தனை வருட பழக்கம்.

    இந்த மாதமும் அப்படிதான் ஆரம்பித்தேன், நான் செய்த தவறு என்னவென்றால் முதலில் பனியில் ஒரு குருதிப்புனல் படித்தது தான். 45 நிமிடங்களில் முன்னும் பின்னுமாக படித்து முடித்து விட்டு அடுத்த புத்தகத்தை எடுத்து படிக்க முயன்றால் முடியவே இல்லை நானும் முதலில் 007 பிறகு ஜேசன் என்று முயற்சித்து இது முடியாது ஒரு breezy read ஆக diabolik ஆவது படித்து relax செய்யலாம் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முயற்சித்து 2 பக்கங்களுக்கு மேல் எதையுமே படிக்க முடியாமல், இது சரிப்படாது நாளை பார்த்து கொள்ளலாம் என்று தூங்க சென்றேன்.

    பிறகு தான் EV இன் பாடு புரிந்தது இரவு 2:10 க்கும் மனிதர் தூங்காமல் ஏன் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்று...


    எனது மதிப்பெண்கள் 10/10.

    இந்த மாதத்தின் டாப் இதழ், இந்த மாத லைம் லைட் ஐ தனது ஆக்கி கொண்ட இதழ். 007, ஜேசன் இருவரையும் ஓரமாக போய் விளையாட சொன்ன இதழ்.

    ReplyDelete
  19. 007 நில் கவனி கொல்

    மற்றும் ஒரு பரபர பாண்ட் சாகசம். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் தொடங்கும் கதையின் வேகம் கடைசி வரை தொடர்கிறது. சுறா தொட்டிக்குள் நடக்கும் சண்டை கானகத்தில் நடக்கும் சண்டை மற்றும் கிளைமாக்ஸ் சண்டை எல்லாமே அருமை. ஆனால் சுறா வேட்டையில் இருந்த எதுவோ இம்முறை மிஸ்ஸிங்.

    எனது மதிப்பெண் 8.5/10

    ReplyDelete
  20. விஜயன் சார், அந்த நெப்போலியன் கி. நாவலை அடுத்த வருடத்தில் வெளியிடுங்களேன் ?

    ReplyDelete
  21. 3 வதாக படித்தது diabolik. அலைகடலில் அதகளம் அளவிற்கு மோசம் இல்லை. சித்திரங்கள் கண்ணில் ஒற்றிகொள்ளும் ரகம். கதையிலும் நிறைய டுவிஸ்ட் உள்ளது.

    எனது மதிப்பெண் 7/10

    ReplyDelete
  22. கடைசியாக படித்தது 2132 மீட்டர்

    இந்த முறை ஜேசன் சரியான வேகம், ஆரம்பம் முதல் முடிவு வரை, எடிட்டர் சார் எழுதிய preview ஞாயமான ஒன்று தான். எனக்கு இதை படிக்கும் போது நினைவுக்கு வந்த படம் Vantage point. கடைசியில் தொடரும் போடும் போது நமக்கு பதைபதைக்கிறது அடுத்து என்ன ஆகுமோ என்று.

    இந்த மாதம் இரண்டாம் இடம்.

    எனது மதிப்பெண் 9.5/10

    ReplyDelete
  23. Thanks for making my life easier.
    I was impressed by this interesting and excellent work.
    Its truly making my life easier & its totally valuable contribution. Heyyyyy looking for books and video courses pdf etc & more stuff visit Ebookworld.in

    ReplyDelete
  24. Thanks for making my life easier.
    I was impressed by this interesting and excellent work.
    Its truly making my life easier & its totally valuable contribution. Heyyyyy looking for books and video courses pdf etc & more stuff visit Ebookworld.in

    ReplyDelete
  25. நில் கவனி கொல் மற்றும் 2132 அட்டைப்படம் இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது. இரண்டிலும் லைட் பேக் டிராப் பிரதானமாக உள்ளது. அதிலும் வெள்ளை மற்றும் அதனை ஒட்டிய லைட் கவரில் 007 அட்டை செம. background கலர் வெள்ளையை வைத்து இது போன்று அட்டைபடத்தை அமைத்த ஓவியருக்கு ஒரு சலாம்.

    2132 லைட் மற்றும் இயற்கையின் பின்புலத்தில் ஒரு தத்துருவமான ஓவியத்துடன் உள்ள இதுவே இந்த மாத அட்டை படத்தில் முதலிடம்.

    இரண்டும் மேட் finishingல் மனதை வருடுகிறது.

    ReplyDelete
  26. புத்தகங்களை 48 மணி நேர தனிமைபடுத்தலுக்கு பிறகு இன்று தான் புத்தகங்களை பிரித்து பார்க்க ஆரம்பித்து உள்ளேன்.

    007 குண்டு புத்தகத்தை சரியான நேரம் கிடைக்கும் போது படிக்க முடிவு செய்து உள்ளேன்.

    முதலில் க்ராபிக் அல்லது 2132 படிக்க உள்ளேன். டயபாலிக் காஃபி குடிக்கும் போது கொறிக்க.

    ReplyDelete
  27. என்ன கொடுமை இது ..??
    தலைவருக்கே கி.நா பிடிச்சு போச்சு...

    இந்த மாத கி. நா எனக்கு புரியவே இல்லை..

    மறுபடியும் ஒரு தடவை நிதானமா படிக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. கதையை பற்றிய ஹைப் குறித்தான எண்ணங்களை அகற்றி விட்டு இயல்பாக படியுங்கள் சிவா

      சாதாரண கதைதான் ..
      ஆண்ட்டிபேரிடேல் கதைகளுக்கான பல அம்சங்கள் உள்ளன

      கதாசிரியர் மேஜிக் விண்ட்,டைலன்,மார்ட்டின் ,போன்றவர்களுக்கும் கதை எழுதியுள்ளார் என்பதால் கதையின் ஜீவன் ஆச்ச்ர்யமானதில்லை ..
      { கதாசிரியர் டிடோ பராசி டெக்ஸ்,டயபாலிக் ,நிக் ரைடர் கதைகளும் எழுதியுள்ளார் }

      கதை சொல்லப்பட்ட விதம் ,நடுவில் உள்ள ஜோல்ட்கள் ,சடன் டெத் முடிவு கதையினை மேலே கொண்டு செல்கின்றன ..

      இதனை நிஜங்களின் நிசப்தம் –உடன் ஒப்பிடுவது இயலாது

      இரண்டும் வெவ்வேறு ஜோனர்கள் என்பதோடு நி. நி ஒரு மாஸ்டர் கிளாஸ் படைப்பு

      ப .ஒ .கு .பு ஹாரர் எலமென்ட்டை தாங்கி நிற்கும் ஒரு பொழுதுபோக்கு படைப்பு

      உள்ளூர் தெய்வங்கள் எல்லாம் DEMONIC GODS என்ற கதாசிரியரின் சித்தாந்தத்தில் எனக்கு நம்பிக்கையில்லை ...


      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ///இதனை நிஜங்களின் நிசப்தம் –உடன் ஒப்பிடுவது இயலாது

      இரண்டும் வெவ்வேறு ஜோனர்கள் என்பதோடு நி. நி ஒரு மாஸ்டர் கிளாஸ் படைப்பு

      ப .ஒ .கு .பு ஹாரர் எலமென்ட்டை தாங்கி நிற்கும் ஒரு பொழுதுபோக்கு படைப்பு////

      சூப்பரா சொன்னீங்க செனாஅனா!!


      ////
      உள்ளூர் தெய்வங்கள் எல்லாம் DEMONIC GODS என்ற கதாசிரியரின் சித்தாந்தத்தில் எனக்கு நம்பிக்கையில்லை///

      நெத்தியடி!!

      Delete
  28. My Sunday thoughts... No violence, read with some patience

    Why should I read a comic? 💭
    Several people keep miming this.
    Comic books aren't necessarily for children
    Amar chitra katha is crafted with such extensive vocabulary
    It's equal to reading a dozen or two books or even a ton
    We run with Tex, Blueberry, Durango and XIII
    Along the path of righteousness, responsibility and for the greater good
    It's identical to Sanadhana Dharma
    Comics are not mere entertainment avenues
    They are a way of life
    Comic heroes keep fighting even when the universe ends
    They inspire us with hope, joy and happiness
    That no matter what happens, you never give up the fight
    Comics teach us how to view the big picture
    Via smaller panels, one moral at a time
    They are a handy sort of Bhagavad Gita
    You don't need a Lord Krishna to deliver sermons
    All you need is yourself and some time
    For people like me with a dozen health issues
    It makes us soar beyond our yoga pants, acupressure chappals and memory foam pillows
    To the vast, ever expanding world of possibilities
    Away from the ugliness of office politics, despair and lack of jobs, the courtesy of COVID
    Towards the path of Dharma, positivity and that everlasting hope
    That we goto sleep at night with
    Tomorrow will be a better place without face masks
    And the only masks we'll see
    Will be the ones on our superheroes.
    We love you comics and we pray to you
    To deliver us a better world filled with light.

    ReplyDelete
    Replies
    1. அருமை சகோதரி... அருமை ...
      // That no matter what happens, you never give up the fight // that's the point

      Delete
    2. Super.Sis..
      கீட்ஸ் சொல்லவில்லை. ஷெல்லி சொல்லவில்லை.நம்ம ஊர் அனு சொல்லிட்டாங்கோ.
      கவிதை பாடு குயிலே குயிலே
      இனி காமிக்ஸ் வசந்தமே.

      ஆண் கவியை (ஸ்டீல்ல்..?)
      வெல்ல வந்த பெண் கவியே வருக.
      நீர் அறிந்தவற்றை ஆங்கிலத்தில்,
      அப்படியே தமிழிலும்,
      சபையினிலே தருக.

      Delete
    3. அப்புறம்...
      எவ்வ்ளோ பெரிய்ய்ய இங்கிலீஷ் மாத்திரை.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. சரி பத்து சார். தமிழில் எழுதி பார்கிறேன்.உங்க அளவுக்கு வேகமா டைப் அடிக்க முடியாது, இருந்தாலும் முயற்சி பண்ணுறேன். இந்த காது வலி குடாக்கு இங்க்லீஷ்யை பார்த்தால் தானே பயப்படுவது. அதான் கொஞ்சம் கிறுக்கினேன்.

      Delete
    7. தரமான சம்பவம் சகோ!

      Delete
  29. ஆசிரியர் திருப்பி திருப்பி சொல்லாருன்னா அதிலே ஏதோ இருக்கு யோசிக்கலான்னுதிருப்பி திருப்பி படிச்சாலும் ஒன்னுமே புரியலே.சார் ப்ளீஸ் நீங்களே சொல்லீருங்க. எங்களுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. இருக்கு ஆனா இல்லைன்னுsj சூர்யா மாதிரி சொல்லீராதீங்க ப்ளீஸ்மண்டைகாஞ்சுக்கிட்டுருக்கு. தமிழ்ல படிச்ச எங்களுக்கே இப்படி இருக்கேமொழிபெயர்க்க நமதுடீம் எவ்வளவுசிரமப்பட்டிருக்கும் என்பதை நினைத்தால் தலைகிறுகிறுக்கிறது பனியில் ஒரு குருதிப்புனல் சூப்பர். எனது ரேட்டிங் 10 க்கு 10 கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்க்க டீமா ? Huh?அதுக்கெல்லாம் கம்பெனிக்கு என்னிக்குக் கட்டுப்படியாகியுள்ளது சார் ?

      Delete
  30. டயபாலிக் light readingகு மிக பொருத்தம் சார். டுவிஸ்ட்களுடன் நன்றாக இருந்தது.

    அடுத்து பாண்ட் அட்டகாசம் சார் அந்த ஆர்ட் ஒர்க் வாவ் அந்த சேஸிங் க்ளோஸ்அப்ஸ் வாவ் வாவ் வாவ். இன்னும் ஒரு ஸ்லாட் அதிகமாக கொடுக்கலாம் சார்.

    மீதம் இரண்டும் இன்னும் படிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு ஆல்பங்கள் தான் உள்ளதாக ஆசான் சொல்லியுள்ளார்.இரண்டையும் அடுத்தாண்டில் கொடுங்கள் என்று ஆசிரியரிடம் கேட்டால் தராமலா போய்விடுவார்?!!

      Delete
    2. தொடர்கின்ற சீரிஸ் சார் ; மேற்கொண்டும் புதுக் கதைகள் உருவாக்கிடுவார்கள் என்று நம்புவோம் !

      Delete
  31. Last but not the least, இதே நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பினைப் பின்புலமாய்க் கொண்டதொரு கிராபிக் நாவலும் சமீபத்தில் கண்ணில்பட்டது - with a completely different storyline !! ////
    கண்டிப்பாய் அடுத்த ஆண்டில் வெளியிடலாம் ஆசானே?

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் சார் ; ரைட்ஸ் வாங்கிடுவோம் முதலில் !

      Delete
  32. ஒரு சிண்ட்ரெல்லாவைத் தேடி.. வருகிறது என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது.... ஒருவேளை அடுத்து வருகிறது என்று இருந்ததை மாற்ற இந்த ஸ்டிக்கரா?

    இந்த வருடம் அட்டவணையில் கம்பி நீட்டிய சிட்டுக்குருவி என கிர்பியின் விளம்பரம் இருந்தது ஒருவேளை அதற்கு பதிலாக இந்த கதையா? ஒரே குழப்பமாக உள்ளது கோபால் ப்ளீஸ் ஹெல்ப் மீ கோபால். :-) தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என மட்டும் சொல்லாதீங்க கோபால் :-)

    ReplyDelete
    Replies
    1. வருகிறது என்றால் என்ன அர்த்தமோ - அதையே அர்த்தமாக்கிக்கலாம் கோப்பால்ல்ல் !

      Delete
    2. மறுபடியும் எனக்கு குண்டு பல்பா கோபால் :-)

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வேண்டுமானால் இப்படியும் வைத்துக்கொள்ளலாம் கோப்பால்.
      கம்பி நீட்டிய சிட்டுக்குருவி, ஒரு சிண்ட்ரல்லாவைத் தேடி, வருகிறது.
      ரைமிங்காக இருக்கு இல்லே.

      Delete
  33. இந்த வருட அட்டவணையை பார்த்தேன் ஏற்கனவே பல சூப்பர் கதைகள் வந்து விட்டது அவைகளில் ஆனால் இன்னும் பல சுவாரஸ்யமான இதழ்கள் வர உள்ளன... ஆகா ஆகா. தோர்கல்.. தீபாவளி மலர்... வாண்டு ஸ்பெஷல், டிடெக்டிவ் ஸ்பெஷல், மற்றும் இரண்டு கார்டூன் கதைகள்... அப்புறம் மேக்ஸி இதழ்கள் ய்ப்பா செம படையல் நமக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு :-)

    ReplyDelete
  34. என்னானாலும்...அடுத்தமாத வெளியீடுகளிலேயே மனம் கவரும் விளம்பரம் ஸ்பைடர் தான்....பார்த்தா மினி ஸ்பைடர் விளம்பரம் பாத்து குதூகலித்தது போலவே துள்ளுதே மனது...வாய்ப்பிருந்தா மினி ஸ்பைடர லயன் மேக்சில முழுவண்ணத்ல ஹார்டுபௌண்ட்ல தரிசிக்க ஆசை

    ReplyDelete
  35. டியர் எடி,

    இம்முறை எனக்கு பார்சல் இன்னும் கிடைத்தபாடில்லை... சுதந்திர தின விடுமுறையில் பட்டுவாடா மாட்டி கொண்டதா தெரியவில்லை.

    நாளை ஆபிஸில் கூரியர் docket கேட்டு பெற்றவுடன், தேடல் தொடரனும்.

    ReplyDelete
    Replies
    1. DTDC-ஆ சார் ? பெங்களூருவுக்குப் பொதுவாய் சொதப்ப மாட்டார்களே !

      Delete
  36. ரிப் கிர்பியின் கதை ஏற்கனவே முத்து காமிக்ஸ்சில் வந்த வாரிசு யார் கதை போலவே' தெரிகிறது. இதுவரை வெளியிடாத கதை வெளியிடுங்களேன் .

    ReplyDelete
    Replies
    1. நண்பரே அந்த கதை அப்படி ஓர் மறுபதிப்பு எனில் அதன் மதிப்பு இன்னமும எகிறிவிடும் ...:-)

      Delete
  37. 2132ம், துரோகம் ஒரு தொடர்கதையும் முக்காலே மூனு வீசம் எனக்கு புரிந்திருந்தாலே அதிகம்..
    எனக்கென்னவோ நிஜங்களின் நிசப்த்தத்தை சாத்தஜிக்கு எதிராக எடுத்த நிலைப்பாடாகவே காண்கிறேன் டயபாலிக் கதை தேர்வில்..

    ReplyDelete
    Replies
    1. டயபாலிக்கில் பிரிலியா ? அது எப்படின்னு எனக்குப் பிரில்லியே !

      Delete
  38. ////நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பினைப் பின்புலமாய்க் கொண்டதொரு கிராபிக் நாவலும் சமீபத்தில் கண்ணில்பட்டது - with a completely different storyline !! அங்கும் கறுப்பு-வெள்ளையில் மிரளச் செய்யும் சித்திரங்கள் ! அதையும் எப்போதேனும் முயற்சிக்கலாமா folks ///


    முதல்ல நீங்க கதைய படிச்சு பாருங்க சார்! உங்களுக்குப் பிடிச்சிருந்தா எங்களுக்கும் களமிறக்குங்க! படிக்கக் காத்திருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பார்த்தாச்சு !

      Delete
  39. துரோகம் ஒரு தொடர்கதை..

    அசத்தலான அட்டைப்படம் ,பழைய காமிக்ஸ் இதழை கைகளில் ஏந்தி மகிழ்வது போல உள்பக்க சித்திரங்கள்,அதை விட அருமையாக விரைவில் வருகிறது ரிப்கெர்பியின் விளம்பரம் என இதழ் பிரமாதப்படுத்துகிறது.இதற்கு முன் வந்த டயபாலிக் சாகஸங்களை விட இந்த துரோகம் ஒரு தொடர்கதை சாகஸம் திடுக் ,திடுக் வைர திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவே சென்றது.மொத்தத்தில் இந்த முறை டயபாலிக் பாஸ்மார்க் பெற்று விட்டார் என சொல்லலாம்...

    ReplyDelete
  40. இனி காத்திருப்பது பதிமூன்று மட்டுமே ...

    பொறுமையாய் நாளைய தினத்திற்காக காத்திருக்கிறது..அனைத்து இதழ்களையும் ஒரே நாளில் முடித்து விட்டால் மீண்டும் வெறுமையாகி விடுமல்லவா...?!

    ReplyDelete
  41. ////உங்களுக்கும் அந்த ஆல்பத்தில் முக்கிய பங்குள்ளதை உணர முடிந்ததா ? ////

    அப்படி உணர முடியலீங் சார்!

    கி.நா'க்களின் ஸ்பெஷாலிட்டியே கதாசிரியர் சொன்ன கதை போக, வாசகர்களே இட்டு நிரப்பிக்கொள்வதற்காக அவற்றில் விடப்பட்டிருக்கும் வெற்றிடங்கள் தான்!

    நிறைய கூகுள் செய்து பார்த்த பின்பு, கதையின் அந்த வெற்றிடங்களை நீங்கள் எவ்விதம் நிரப்பியிருக்கிறீர்கள் என்பதை முழுவதுமாக என்னால் உணரமுடியவில்லை! ஆகவே 'நம் அனைவருக்கும் பங்கு இருப்பதாக' நீங்கள் சொல்வதையும் எவ்விதத்தில் என்று புரிந்துகொள்ள முடியவில்லை!

    இந்தக் கி.நா'வை மிக நிதானமாக ஒருமுறையும், சற்றே வேகவேகமாக இரண்டு-மூன்று முறையும் படித்துமுடித்து, (கடைசி பக்கங்களை மட்டும் 30 தடவைக்கும் மேல்) மூன்றுநாட்கள் கிடைத்த கேப்பிலெல்லாம் இதைப் பற்றிச் சிந்தித்த பின்பு எனக்குத் தோன்றியது பின்வரும் சமாச்சாரத்தைத் தான்!

    இந்தக் கி.நா'வை இந்த அளவுக்கு மண்டையை உருட்டிப் புகுந்து பார்க்குமளவுக்கு கருத்தாழம் மிக்க கதையம்சம் கொண்டதெல்லாம் ஒன்றுமில்லை! சாதாரணமாகப் படித்தாலே போதும்! கூடவே, paganism பற்றி துளியூண்டு படித்தறிந்தாலே போதும்!

    மேலே செனாஅனா சொன்னது போல
    ////
    நி. நி ஒரு மாஸ்டர் கிளாஸ் படைப்பு

    ப .ஒ .கு .பு ஹாரர் எலமென்ட்டை தாங்கி நிற்கும் ஒரு பொழுதுபோக்கு படைப்பு
    ////

    இந்தப் புரிதலோடு படித்தாலே போதுமென்பது என் கருத்தும்!

    ReplyDelete
    Replies
    1. "அப்படியெல்லாம் ஏதுமில்லை.. இதில் புரிந்துகொள்ள இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உண்டு" என்று எடிட்டரோ, மற்ற நண்பர்களோ விளக்குவார்களாயின் அதை ஏற்றுக்கொள்ளவும்/விவாதிக்கவும் தயாராக இருப்பேன்!

      Delete
    2. எக்ரியனை அமர்த்தி வைத்துக் கதை கேட்பது யாராக இருக்கக்கூடுமென்று யோசித்துப் பாருங்களேன் சார் !

      Delete
    3. அதுவொரு இராணுவ உயரதிகாரியாக இருந்திருப்பின் - ஆட்டையைப் போட ஏதாச்சும் சிக்குமா ? என்று தேடிப் போன இடத்தில் வில்லங்கமாகிப் போச்சென்று ஒரு கார்போரல் தரும் விளக்கத்தை - 'அப்பாலிக்கா என்ன ஆச்சுப்பா ?" என்ற சுவாரஸ்யத்தோடு கேட்டுக் கொண்டிருப்பாரா ?

      Delete
    4. முடிந்தால் இன்றிரவு மீண்டும் ஒருமுறை நீங்கள் சொன்ன கோணத்தில் பக்கங்களைப் புரட்டிவிட்டு வருகிறேன் சார்!!

      Delete
    5. //எக்ரியனை அமர்த்தி வைத்துக் கதை கேட்பது யாராக இருக்கக்கூடுமென்று யோசித்துப் பாருங்களேன் சார் !//

      Yes sir! அதுதான் படைப்பாளிக்கு சல்யூட் போட வைக்கிறது!

      Judgement day!?

      Delete
    6. //எக்ரியனை அமர்த்தி வைத்துக் கதை கேட்பது யாராக இருக்கக்கூடுமென்று யோசித்துப் பாருங்களேன் சார் !//

      இந்த கோனத்தை நான் ஏன் யோசிக்க வில்லை. மறுபடியும் படிக்க போகிறேன்.

      Delete
    7. முதல்முறையாகப் படிக்கும்போது ஒரு ராணுவ உயரதிகாரின் நீதி விசாரணையின் முன் எக்ரியன் அமர்ந்திருப்பதாகவே நினைத்தேன்! ஆனால் அந்த க்ளைமாக்ஸ் நெருடலும், அந்த 'உயரதிகாரியால்' திறந்துவிடப்பட்ட கதவு - அங்கே இருண்டவெளியில் காத்திருந்த தன் கேப்டனோடு எக்ரியன் இணைந்துகொள்ளும்போது மீண்டும் மூடப்படும் கதவு - "வா எக்ரியன்.. நமக்கான நீண்ட பயணம் காத்திருக்கிறது" என்ற கேப்டனின் உரையாடல் - ஆகியவற்றை சற்றே அலசி ஆராய்ந்தபோது அதை சரியானபடிக்கு உணர்ந்துகொள்ளதிலும் அதிக சிரமம் ஏற்படவில்லை!

      மேலே எடிட்டர் "அந்த உயரதிகாரி யாராக இருக்கக்கூடும்?" என்று கேட்டபோது, என் புரிதலைத்தாண்டி வேறு ஏதாவது இருக்குமா என்று பார்த்திடவே இப்போதும் தாமதித்துவருகிறேன்!

      Delete
    8. // முதல்முறையாகப் படிக்கும்போது ஒரு ராணுவ உயரதிகாரின் நீதி விசாரணையின் முன் எக்ரியன் அமர்ந்திருப்பதாகவே நினைத்தேன்! ஆனால் அந்த க்ளைமாக்ஸ் நெருடலும், அந்த 'உயரதிகாரியால்' திறந்துவிடப்பட்ட கதவு - அங்கே இருண்டவெளியில் காத்திருந்த தன் கேப்டனோடு எக்ரியன் இணைந்துகொள்ளும்போது மீண்டும் மூடப்படும் கதவு - "வா எக்ரியன்.. நமக்கான நீண்ட பயணம் காத்திருக்கிறது" என்ற கேப்டனின் உரையாடல் - ஆகியவற்றை சற்றே அலசி ஆராய்ந்தபோது அதை சரியானபடிக்கு உணர்ந்துகொள்ளதிலும் அதிக சிரமம் ஏற்படவில்லை! //

      Me toooo

      Delete
    9. // இந்த கோனத்தை நான் ஏன் யோசிக்க வில்லை. மறுபடியும் படிக்க போகிறேன். //

      நமக்கு மீண்டும் படிக்க வாய்ப்புகள் குறைவு (நேரமின்மை). மெதுவாக கதையை மனதில் அசை போட்டு பார்க்க வேண்டும்.

      Delete
    10. //எக்ரியனை அமர்த்தி வைத்துக் கதை கேட்பது யாராக இருக்கக்கூடுமென்று யோசித்துப் பாருங்களேன் சார் !//

      சார் அது யார் என மெதுவாக எனது காதில் சொல்லுங்கள். வேறு யாருக்கும் சொல்ல மாட்டேன். :+)

      Delete
    11. //இந்தக் கி.நா'வை இந்த அளவுக்கு மண்டையை உருட்டிப் புகுந்து பார்க்குமளவுக்கு கருத்தாழம் மிக்க கதையம்சம் கொண்டதெல்லாம் ஒன்றுமில்லை! சாதாரணமாகப் படித்தாலே போதும்! கூடவே, paganism பற்றி துளியூண்டு படித்தறிந்தாலே போதும்!//

      எஸ்!! பரவாயில்லை ரக கதைதான்!!

      எகஸ்ராடினரி என சொல்ல முடியாது!!


      எல்லோரும் படித்தபின் பார்க்கலாம்!

      8/10

      Delete
    12. இந்த கதையின் கிளைமாக்ஸ் நித்திரை மறந்த நியூயார்க் போன்று இருந்தது எனக்கு. ஆனால் இதில் அனுமாசியம் + யுத்தம் + திகில் என சென்றது.

      Delete
  42. ஆசானே அடுத்த ஆண்டு அட்டவணையில் டயபாலிக் மற்றும் சட்டித் தலையருக்கு இடம் உண்டு தானே?

    ReplyDelete
    Replies
    1. மனசில் எந்த நேரமும் இடமுண்டு சார் ; அட்டவணையிலும் உண்டா என்பதை அந்நேரம் யோசிப்போமா ?

      Delete
  43. கி.நா - டார்க் என்டிங் கொண்டதொரு த்ரில்லர்.. 9/10

    ReplyDelete
  44. பனியில் ஒரு குருதிப்புனல்!

    வாவ்! அட்டகாசம்! நிச்சயமாக இது நிஜமாக இருக்க முடியாது என்று யூகித்துக் கொண்டே இருந்தேன்! எழுத்தும் கதை சொன்ன விதமும் அதை உறுதிப்படுத்தியது! படைப்பாளியின் அசாத்தியக் கற்பனைக்கு பெரிய சல்யூட்!

    எப்படி கதையை முடிக்கப் போகிறார் என்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது! பிரமாதம்!

    படித்த கையோடு பதிவிடுகிறேன்! இன்னும் இறுதிப் பக்கக் குறிப்பை படிக்கவில்லை!

    நான் ஹாலிவுட்க்கு ரெடி! பக்கம் பக்கமாக விளக்க ஆயிரம் விசயங்கள் இக்கதையில் உண்டு!

    நண்பர் கணேஷ்குமார் சொன்னதைப் போல நிஜங்களின் நிசப்தத்திற்கு நெருக்கமான படைப்பு தான்!

    ஆனால் நி.நி வேற லெவல்! High philosophy!

    இது fantasy!

    நிறைய நண்பர்கள் இன்னும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இப்போதைக்கு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. //பக்கம் பக்கமாக விளக்க ஆயிரம் விசயங்கள் இக்கதையில் உண்டு!//

      உங்கள் விளக்கத்தை அறிய ஆவலாக உள்ளேன் மிதுன்.

      Delete

    2. //பக்கம் பக்கமாக விளக்க ஆயிரம் விசயங்கள் இக்கதையில் உண்டு!//


      இயலும்போது இயன்றதை விளக்கிட முயற்சிசெய்யுங்கள் மிதுன்! உங்கள் விளக்கங்களைக் கேட்க ஆவலாய் இருப்பேன்!

      Delete
  45. //ப .ஒ .கு .பு ஹாரர் எலமென்ட்டை தாங்கி நிற்கும் ஒரு பொழுதுபோக்கு படைப்பு//

    சகுனி படத்தில் வரும் டயலாக்.

    "ஒரு முடிச்சை அவிழ்ப்பது எவ்வளவு சுவாரஸ்யமோ, அதே போன்று அவிழ்க்க முடியாத முடிச்சை போடுவது அதைவிட சுவாரஸ்யமான விஷயம்".

    கதையாசிரயர் Toto Faraci அவிழ்க்க முடியாத முடிச்சை ப.ஒ.கு.பு வில் போட்டு உள்ளார்.

    இது சாதாரண முடிச்சு இதை ஏன் அவிழ்க்க வேண்டும் என்று கடந்து போகலாம்.
    இந்த முடிச்சை அவிழ்க்க முடியாது. ஆனால் முடிச்சு அழகாக இருக்கிறது என்று தூரத்தில் இருந்து ரசிக்கலாம்.

    அல்லது இந்த கடினமான முடிச்சை ஆசிரியர் மாதிரி அவிழ்க்க முயற்சி செய்யலாம்.

    அது அவரவர் மனநிலை பொருத்தது.

    ReplyDelete
  46. பனியில் ஒரு குருதிப்புனல்:

    யுத்தம் யுத்தத்தின் நடுவில் ஒரு செட் வீரர்களை அழைத்து செல்லும் அபலைப் பெண். அவள் யார் அவளின் நோக்கம் என்ன அவளுடன் சென்ற வீரர்கள் என்ன ஆனார்கள் என எழுத ஆசைதான். ஆனால் நடுவே சில பக்கங்களில் இந்த கதையை தனது உயரதிகாரிகளுக்கு கதை சொல்லும் வீரர் எப்படி தப்பினார்... உண்மையில் தப்பினாரா என கூட எழுதலாம் ஆனால் நமது தலையை கிறுகிறுக்க செய்யும் ஒரு பக்க கிளைமாக்ஸ் எது மாதிரியும் இல்லாத வேறுமாதிரி கதை இது. சூப்பர்.

    கடைசி இரண்டு பக்கங்களில் கதையின் உள்ள சில முடிச்சுகள் அழகாக அவிழ்க்க பட்டாலும் இன்னும் சில முடிச்சுகளை நாம் அவிழ்க்க வேண்டும் என்ற சிந்தனை மனதில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  47. 'துரோகம் ஒரு தொடர்கதை' - அப்பா என்ன துரோகம் என்ன துரோகம். மாறி மாறி துரோகம் யாரும் யாருக்கும் உண்மையாக இல்லை இதற்கு காரணம் மரகத கற்கள். அதனை டயபாலிக் மற்றும் ஈவா கூட்டணி எப்படி கைப்பற்றுகிறது என்பது கதை.

    தெளிவான ஓவியம் கதையின் சிறப்பு. அட்டைப்படம் அருமை.

    இதற்கு முன்னால் இந்த வருடத்தில் வந்த டயபாலிக் கதையை விட இது சில படிகள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  48. இம்மாத புத்தகங்களின் மார்க்..

    ஜேம்ஸ் பாண்ட் : 10 க்கு 10

    ஜேசன். : 10 க்கு 9

    டயபாலிக். : 10 க்கு 7


    மாயாஜால கதை : 10 க்கு.....என்னா சொல்ரதுன்னு தெரியலை... தலையே சுத்துது ..


    ReplyDelete
    Replies
    1. // மாயாஜால கதை : 10 க்கு.....என்னா சொல்ரதுன்னு தெரியலை... தலையே சுத்துது .. //

      சோடா குடிச்சிட்டு வந்து சொல்லுங்கள் யுவா :-)

      Delete
    2. ஏகப்பட்ட சோடா குடித்தும் பார்த்தாச்சி....மூஞ்சில தெளிச்சும் பார்த்தாச்சி...அப்பவும் தலைசுத்தல் நிக்கலை ஜி. .

      Delete
    3. நீங்க ஒரு வாரம் பதுங்கு குழிக்கு ஜாகையை மாத்திப் பாருங்க யுவா !

      Delete
    4. தலீவருக்கே அங்க இடம் பத்தலையாம் சார்....

      Delete
    5. யுவா @ வெரி சிம்பிள் யோசனை ஒன்று... வீட்டில் உப்புமா செய்து தர சொல்லி சாப்பிட்டு பாருங்களேன் :-)

      Delete
  49. அடுத்த வருட அட்டவணை கதைகள் அனைத்தும் sure six என ஆசிரியர் அமைக்க உள்ள நிலையில் டயபாலிக்/ஆர்ச்சி அடுத்த வருடம் மட்டும் ஒய்வு கொடுக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

    அடுத்த வருடம் தனித்தனி சந்தா பிரிவாக இல்லாமல் நமது come back முன்னால் இருந்தது போல் ஒரே சந்தாவாக எல்லாம் ஹிட் ரக கதைகளின் வரிசையாக இருக்குமோ என ஆர்வமுடன் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் நீங்கள் கூறியது போல் தான் இருக்க வாய்ப்புண்டு.ஒரே சந்தா தான் அமைத்திருப்பார்.மாதம் மூன்று இதழ்களா,நான்கு இதழ்களா என்று தெரியவில்லை.எந்த எந்தக் கதாநாயகர்களுக்கு கல்தா என்று தெரியவில்லை.அட்டவணை பற்றிய எதிர்பார்ப்பு எகிறியடிக்கிறது.

      Delete
  50. //எக்ரியனை அமர்த்தி வைத்துக் கதை கேட்பது யாராக இருக்கக்கூடுமென்று யோசித்துப் பாருங்களேன் சார் !//

    ஆசிரியர் மேலே கூறிய கோனத்தில் இருந்து காமிக்ஸை மறுபடியும் படித்தேன்.

    இப்படியும் இருக்கலாம்.

    கார்போரல் எக்ரியன் தான் கதையை சொல்வது. இன்னொரு விதத்தில் எடுத்து கொண்டால் Toto Fraci தான் கதை சொல்லுகிறார்.
    எக்ரியன் விளக்கத்தை தன் மேலதகாரியிடம் சொத்லுவான்.

    Toto Fraci தான் கதை சொல்பவர் என்றால் கதை கேட்கும் மேலதிகாரி யார்?.

    கதை உருவாக்கி(ஆசிரியர்) சொல்பவர் சிறந்தவர் என்றால், அந்த கதையை படிக்கும் வாசகர் உயர்ந்தவர்.

    படைப்பாளிக்கு அங்கிகாரம் கிடைக்க வைப்பது வாசகர்கள் தான். அதானால் வாசகராகிய நாம் தான் Toto farci யின் உயர் அதிகாரி.

    நம்மிடம் தான் எக்ரியன் என்ற பெயரில் Toto farci கதை சொல்கிறார்.

    இதற்கு நிறைய உதாரணங்கள் காமிக்ஸில் வருகிறது.

    பக்கம் 72:
    "மனசுக்குள் உலக மகாக் கதாசிரியர் என்று நினைப்பாக்கும்", என்று உயரதிகாரி ஏக்ரியனிடம் கூறுவர்.

    நம்மிடம் அந்த கதையை Tato farci கூறும் பட்சத்தில், எரிச்சலடைந்து நாமுமே அவ்வாறு தான் கூறுவோம்.

    பக்கம் 104:

    "தொட்டதுகெல்லாம் வாசகர்களைக் குறை சொல்லும் குணம் எழுத்தாளர்களுக்கே உரித்தானது தானே?" என்று உயரதிகாரி எக்ரினிடம் கூறுவர்.

    உண்மையில் கதை படிக்கும் போது எங்களுக்கு சுவாரஸ்யமான விஷயத்தை தருவது தானே படைபாளியின் வேலை என்று நினைத்தேன்.
    அதை நெத்தியடி என்று Tayo farci யே சொல்லி விட்டார்.

    ஆரம்பத்தில் விசாரணை போல தோன்றினாலும், உயரதிகாரி கதை கேட்கும் வாசகர்கள் போலவே நடந்து கொள்வர்.
    அதனால் அந்த உயர் அதிகாரி வேறு யாரும் இல்லை. காமிக்ஸ் படிக்கும் வாசர்களவாசர்களாகிய நாம் தான்.

    ஆனால் க்ளைமாக்ஸ் ஸில் உயர் அதிகாரி தானே கேப்டனை கதவை திறந்து கண்பிக்கிறார். வாசகர்களாகிய நாம் எப்படி கதையை முடிக்க முடியும்?.

    முடியும். இந்த கதையே limbo எனப்படும் முடிவில்லாத, ஆனால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

    இங்கு எக்ரியன் எனப்படும் Toto Farci எவ்வளவு முக்கியமோ அதே போல் உயரதிகாரியாகிய நாமும் ரொம்ப முக்கியம்.

    இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் கதை இருக்காது.

    "கேப்டனின் திட்டம் நிறைவேறவில்லை" என்று Toto farci கூறினால் நாம் ஏற்று கொள்வோமா?. மாட்டோம்.

    காமிக்ஸ் இப்படி தான் முடிய வேண்டும் என்று வாசகர்களாகிய நாம் Toto farci அறிவுரை அல்லது கட்டளை இடுவது போல் மேதை Toto farci முடித்துள்ளார்.

    இதுதான் எனது புரிதல். இது சரியா சார்??.

    ReplyDelete
    Replies
    1. வாவ்!! அருமையான புரிதல் & சிறப்பான விளக்கம் @Ganesh kumar 2635

      Delete
    2. அருமை கணேஷ் அருமை. எழுந்து நின்று கை தட்டும் படங்கள் 100

      Delete
    3. ஆனால் நீங்கள் சொன்ன Limbo குறித்து கூகுளில் தேடியபோது, பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விளக்கங்கள் நிஜமாகவே அது 'வாசகர்கள்' தானா என்ற சந்தேகமும் எழுகிறது!

      The "Limbo of the Patriarchs" or "Limbo of the Fathers" (Latin limbus patrum) is seen as the temporary state of those who, despite the sins they may have committed, died in the friendship of God but could not enter Heaven until redemption by Jesus Christ made it possible.

      இது நம் கதையோடு ஒத்துப்போவதாக எனக்குத் தோன்றுகிறதே!!

      Delete
    4. "Limbo" என்பதை எதோடும் நான் சேர்த்து குறிப்பிட வில்லை. Limbo என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் முடிவில்லாத ஒரு (மாய) சுழற்சி.

      Delete
    5. ஆனால் limbo என்பதற்கான ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களில்

      an uncertain period of awaiting a decision or resolution; an intermediate state or condition.

      என்பது பிரதானமாய் இருக்கிறதே?!!

      இதுவும் நம் கதையோடு அழகாககப் பொருந்திப்போகிறதே?!!

      Delete
    6. கணேஷ் குமார் சார் ! செம !

      Delete
    7. Limbo விறக்கு பல அர்த்தம் உள்ளது விஜய். "Inception" என்ற ஆங்கில படத்தில் வரும் limbo என்ற வார்த்தை கான hero கூறும் அர்த்தத்தான் இங்கு நான் எடுத்து கொண்டேன்.

      ஆசிரியர் நமக்கும் கதையில் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டார். அந்த ஒரு விஷயத்தை தான் நான் கண்டுபிடிக்க முயன்றேன். மற்றப்படி Limbo என்ற வார்த்தைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது.

      Delete
    8. //கணேஷ் குமார் சார் ! செம !//

      நான் கூறியது சரிதானே!!?? சார்.

      Delete
    9. புதுசாய்ப் படிக்கும் வாசகர்களும் அலசிட ஒரு கேள்விக்குறி தொடர்ந்திடட்டும் சார் !

      Delete
    10. ///புதுசாய்ப் படிக்கும் வாசகர்களும் அலசிட ஒரு கேள்விக்குறி தொடர்ந்திடட்டும் சார் !///

      மீண்டும் ஒரு Yes sir!

      Delete
    11. கணேஷ் @ ஆசிரியர் இந்த கேள்வியை கேட்ட போது கதாசிரியர் தான் என நினைத்தேன். சஸ்பென்ஸ் உடைத்து விட வேண்டாம் என நினைத்தேன். மற்றும் ஒரு காரணம் எனது அனுமானம் தவறாகி பல்ப் வாங்கி விடுவோமோ என பயம் வேறு.

      தற்போது தங்கள் விளக்கம் என்னைத் தெளிவு படுத்தி விட்டது. அருமையான அலசல்.

      Delete
    12. // காமிக்ஸ் இப்படி தான் முடிய வேண்டும் என்று வாசகர்களாகிய நாம் Toto farci அறிவுரை அல்லது கட்டளை இடுவது போல் மேதை Toto farci முடித்துள்ளார். //

      செம செமை. நன்று.

      Delete
    13. அருமை!!!!

      கற்பனை புதினங்களில் 6th wall breaking

      என சொல்வார்கள்...


      சினிமாவில் ஆடியன்ஸை நோக்கி வசனம் பேசப்பட்டால் 4th wall breaking..

      புதினத்தில் குறிப்பிட்ட வாசகர்களை உட்கார வைத்தால் 5th wall breaking .

      வாசகனின் சப்கான்ஷியஸ் உணர்வை கதாபாத்திரமாக மாற்றினால் 6 th wall breaking...

      இருப்பினும்

      நெல்லிக்காயை உண்டபின் நீர் குடித்தால்

      இனிப்பு சுவை தோன்றும்..

      ஆனால் நெல்லிக்காயை உண்ணுகையில் புளிப்பும்,துவர்ப்பும் சுவை உணர்வோம்.

      கதை - நெல்லிக்காய்

      முடிவு- இறுதியில் நீர் குடித்தபின் உணர்வது...

      ஆனாலும் நெல்லிக்காய் சத்துள்ளது என்பதை மறுக்கமுடியாது..

      Delete
    14. // கற்பனை புதினங்களில் 6th wall breaking

      என சொல்வார்கள்...


      சினிமாவில் ஆடியன்ஸை நோக்கி வசனம் பேசப்பட்டால் 4th wall breaking..

      புதினத்தில் குறிப்பிட்ட வாசகர்களை உட்கார வைத்தால் 5th wall breaking .

      வாசகனின் சப்கான்ஷியஸ் உணர்வை கதாபாத்திரமாக மாற்றினால் 6 th wall breaking... //

      அட இப்படி எல்லாம் கூட உண்டா. நன்று.

      Delete
  51. ஜேம்ஸ் பாண்ட் மற்றும் பனியில் ஒரு குருதிபுனல் படிச்சாச்சு. இரண்டுமே கையில் எடுத்தால் முடித்த பின்னர் தான் கீழே வைக்க முடியும். நல்ல தடதட வேகம். கி. நா.வை பொறுத்தவரை எனக்கு அந்த குண்டு வடிவில் இருக்கும் பகான் ஏனோ கொரோனா வைரஸை ஞாபகப்படுத்தியது. இதன் கதாசிரியர் கண்டிப்பாக சில மிஷனரி சித்தாந்த கொள்கைகளை ஆதரிப்பதாக தான் எனக்கு தோன்றுகிறது. இருப்பினும்,அதற்காக கதையை லேசாக எடை போடவில்லை. ஆனந்த் நீலகண்டன் என்ற எழுத்தாளர் இருக்கிறார். அவர் புத்தகங்கள் அதிகப்படியான leftist மனப்பான்மை பிரதிபலிக்கும், சில நேரங்களில் எரிச்சல் கிளப்பும். ஆனால் அதையும் மீறி அவரது எழுத்து நடை சுவாரஸ்யமாக இருக்கும். நான் ஆங்கிலத்தில் படித்த பல கி.நா.க்கள் இதே பாணியில் அமைத்திருக்கிறது, அதனால் கதை ஒகே ஆனால் ஓவியங்களை ஏனோ சோபிக்கவில்லை. என்னை கேட்டா கதையுடன் ஒன்றிட முடியாத முக்கிய காரணம் ஓவியங்களே. பீரியட் டிராமா எ‌ன்பது நமக்கெல்லாம் தூசு. So historical fiction isn't a problem. ஒரு வாரமாக DC Arrowverse crossover எபிசோடுகளை பார்த்து, பழகி, சலித்து, ஒரு வித மெச்சூரிட்டி வந்திடுத்து. BTW ஜேம்ஸ் சும்மா அட்டகாசம் செய்கிறார். ஆங்கில பதிப்புக்கு காரம் சிறிதும் குறையாமல், தரமான மொழி பெயர்ப்பு. இந்த மாதிரி வெளியீடுகள் உள்ள வரை காமிக்ஸின் எதிர்காலம் பற்றிய கவலை இல்லை. ஜே.பா.வில் சிரிப்பு வந்த இடங்கள், அந்த பற்கள் வந்த காட்சிகள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நான் செய்து கொள்ளும் dental scaling போன திங்கள்கிழமையே due. டிமிக்கி கொடுத்து விட்டு சுற்றி கொண்டிருக்கிறேன். பாண்ட் புண்ணியத்தில் இந்த வாரம் போய் டாக்டரை பார்த்து பல்லை காட்டுவது (நிஜமாகவே) என்று முடிவு செய்துட்டேன். டாயபாலீக் மற்றும் XIII பற்றி முழுசா படித்த பின்னர் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிடுவது எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டனை என்று நினைக்கிறேன் சிஸ் ! Correct me if I'm wrong please...

      Delete
    2. இல்லை எடி சார். நான் குறிப்பிட்டது Anand Neelakantan. Asura, Ajaya மற்றும் இப்போது பாகுபலி சீரிஸில் இரண்டாம் பாகமான சதுரங்கா எழுதியுள்ளார்.

      Delete
  52. பொதுவாக கதை படிக்கும்போது படிக்கும் சூழல் முக்கியமானது! அசாத்திய கதைகளை நல்லதொரு சூழ்நிலையும், மனநிலையும் இல்லாத வேளையில் படிக்கும் போது, அதனை குறைத்து மதிப்பிட அதுவே வழிசெய்து விடுகிறது!
    பலநேரங்களில் நாம் சாதாரணமாக கடந்து சென்ற கதைகள் சில மாதங்களோ, வருடங்களோ கழித்து சாவகாசமானதொரு வேளையில் படிக்கும் போது முற்றிலும் வேறு பரிமாணத்தைக் காட்டக்கூடும்!

    ரோஜா மலரை அதன் முள்ளோடும், இதழ்களோடும் உள்ளபடியே ரசிப்பதே அழகு தான்! ஒரு இதழை பிய்த்து எடுத்து அதில் உள்ள ரசாயன வேதிக் கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் நிச்சயமாக அதன் அழகு தெரியாது!

    படைப்புகளும் அதுபோலத் தான்!

    "பனியில் ஒரு குருதிப்புனல்" நிச்சயமாக தகவல் திரட்டுக்கான கதையல்ல!

    போர்ப் பின்புலத்தை கொண்டிருந்தாலும் இது அழகியல் சார்ந்த கதை!

    கதை சொல்லப்பட்ட விதம்தான் இதில் அழகே!

    என்னளவில் கி.நா. என்பது ஒரு கவிதையை போல இருக்க வேண்டும்!
    மசாலாவாக இருக்கக் கூடாது!

    இதுவரை நமது காமிக்ஸ்களில் வெளியான இத்தாலிய கதைகளில் நான் மிகவும் ரசித்த முதல் இத்தாலிய கதை இதுதான்!

    "அழகுகள் தெரிவதில் அழகொன்றுமில்லை!
    அவைகாணுங் கண்ணின் ரசனையின் முன்னே"

    ReplyDelete
    Replies
    1. அழகை ரசிக்க வேண்டும். ஆராய கூடாது என்பது உண்மைதான்.

      ஆனால் இது எதனால் இவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஆராய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது மிதுன்.

      Delete
    2. ஒரு பொம்மை புக் இத்தனை ஆராய்ச்சிகளுக்கு வித்திடுவதே கதாசிரியரின் இலட்சியம் ஈடேறி விட்டதன் அடையாளம் என்பேன் !

      Oh yes, நிஜங்களின் நிசப்தத்தின் ஆழமோ அடர்த்தியோ இங்கு கிடையாது தான் ! ஆனால் கதை சொன்ன விதமும் , முழுக்கவே காதிலே புய்ப்பமான நிகழ்வுகளையும் நெருடலாகிட அனுமதிக்காத லாவகமுமே இங்கே standout performers for me !

      Delete
    3. ///கதை சொன்ன விதமும் , முழுக்கவே காதிலே புய்ப்பமான நிகழ்வுகளையும் நெருடலாகிட அனுமதிக்காத லாவகமுமே இங்கே standout performers for me !///

      Yes sir! அதேதான்! அதேதான்!

      Delete
    4. // இது எதனால் இவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஆராய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது மிதுன் //

      Delete
    5. // கதை சொன்ன விதமும் , முழுக்கவே காதிலே புய்ப்பமான நிகழ்வுகளையும் நெருடலாகிட அனுமதிக்காத லாவகமுமே இங்கே standout performers for me ! //

      உண்மையோ உண்மை.

      ஜேசன் பிரைஸின் (?) முதல் இரண்டு பாகங்கள் நன்றாக இருந்தது. ஆனால் கடைசி பாகம் காதில் காலிஃப்ளவர் வைத்தது அப்பட்டமாக தெரிந்தது. இந்த கதையில் மிக லாவகமாக கதாசிரியர் கதையை சொல்லி நகர்த்தியது சிறப்பு.

      Delete
  53. நில் கவனி கொல் அசத்தலான ஓவியங்கள் வேகமான கதை!

    ReplyDelete

  54. 2132 மீட்டர்....

    திகைக்க வைக்கும் கதையோட்டம்..

    மலைக்க வைக்கும் சித்திரங்கள்...

    பிரமிக்க வைக்கும் கதை முடிச்சு ...

    சிலிர்க்க வைக்கும் கதை வேகம்..

    9.5/10

    ReplyDelete
    Replies


    1. வருடம் - நவம்பர் 2009

      ஸ்நைப்பர் பெயர் - க்ரெய்க் ஹாரிஸன்

      பதவி- கார்ப்பொரல்

      நாடு - பிரிட்டன்


      உபயோகித்த ரைபிள்- AI L115A3

      ரைபிள் ரேஞ்ச்- 1400 மீட்டர்

      ரைபிள் விலை - 34000 usd

      குண்டு அளவு : 8.59 mm

      நாடு: ஆப்கானிஸ்தான்

      இடம் : ஹெலமண்ட் பிராந்தியம்

      நிஜத்தில் சுடப்பட்ட தூரம் 2439 மீட்டர்


      மொத்த குண்டுகள் : 5

      சுடப்பட்ட குண்டுகள்: 3

      சுடப்பட்ட இலக்குகள்: தொடர்ந்து 3

      முதல் இலக்கு : தலிபான் தீவிரவாதி

      2-ம் இலக்கு: தலிபான் தீவிரவாதி

      3-ம் இலக்கு -PKM மெஷின் கன்..

      ரவை இலக்கை அடைய எடுத்து கொண்ட நேரம்- 2.5 வினாடிகள்

      கிரெய்க்- ன் சுடும் வல்லமை: மனித சக்தியின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

      மேலே குறிப்பிடப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வ அதிக பட்ச ரைபிள் இலக்கு தூரம்..

      மெக்லேனின் கதைக்கு 2132 மீட்டர் என பெயர் சூட்டப்பட்டு இருப்பதில் ஆச்சர்யமில்லை..

      இத்தொலைவு இலக்கினை உலகில் மிகச் சிலர் மட்டுமே அடைய இயலும்..




      Delete
  55. பனியில் ஒரு குருதிப்புனல் இதுபோன்ற கதையை தேடி பிடித்து கேள்விகள் நிறைய தோன்றும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பான மொழிபெயர்ப்பை கொடுத்த உங்கள் காமிக்ஸ் காதலுக்கு மீண்டும் ஒரு சலாம் விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. நானும் ஆசிரியர்க்கு ஜே போடுகிறேன்.

      Delete
    2. நானும் சலாம் போடுகிறேன்!

      Delete
    3. இதை வெளியிடுவதா ? ஓரம் கட்டிவிடுவோமா ? என்ற ஊசலாட்டம் ஓரிரவுக்கு நீடித்ததைப் பற்றி எழுதியிருந்தேன் ! அந்த இரவின் அரைத்தூக்கத்தில் தலைக்குள் உதித்தது தான் இங்கே கதாசிரியர் போட்டு வைத்திருக்கும் முடிச்சுகளுக்கான என் பாணி விளக்கங்கள் !

      அவை தப்பாக இருந்து நான் பல்பு வாங்கவும் நேரிடலாம் என்பதுமே புரிந்தது தான் ! ஆனால் அந்த நொடியில் தான் கதையில் எனது பிரதிபலிப்பும் இருப்பதை உணர்ந்தேன் ! இந்த ஆல்பத்தை சாத்து வாங்கினாலுமே வெளியிட நான் தீர்மானித்த நொடி அதுவே சார் !

      Delete
  56. இரத்த படலம் - VI - அருமை.
    ஓவியமும் , கலரிங் கும் பார்க்க ,பார்க்க கண்ணைப் பறிக்கின்றன. ஆனால், அதுவும் ஒரு குறை தான். ஒரு ஆங்கிலப் படத்தின் ஸ்டில்-களைக் கொண்டு கதை அமைத்தது போல் இருந்தது. படங்களில் ஒரு தொடர்ச்சி இல்லையே..
    அதற்கு வான்ஸ் - தான். ஈடு இணையில்லாதவர்.
    முதல் பாகத்தில் - கடற்கரையிலிருந்து திரும்பி வந்து, இரு கொலையாளிகளிடம் - X 111- திறமையை வெளிப்படுத்தும் இடம். கத்தியை வீசி ஒருவனைக் கொல்வது - அந்த இடம்Step - by - Step ஆக வரையப்பட்டிருக்கும்.
    அதே போல் ஈஸ்ட் டவுண் - யில் ஹோட்டல் மேல் கூரையில் நடக்கும் சம்பவங்கள்...
    வான்ஸ்... வான்ஸ் தான்...

    ReplyDelete
  57. கதை - அடுத்த பாகமும் வெளிவந்த பிறகு சேர்த்தே வெளியிட்டிற்கலாம். அநியாயம். கடைசி பேனல்-யில் மூச்சே நின்று விட்டது.
    அடுத்த பாகம் எத்தனை ஆண்டுகள் கழித்தோ..? iii

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் நமது காமிக்ஸில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே கவலை கொள்ள தேவையில்லை இளங்கோ.

      Delete
    2. அடுத்த பாகத்தின் இறுதியிலும் புதுசாய் ஒரு கொக்கியைப் போட்டு வைத்தால் - அதற்கு அடுத்த பாகம் வெளிவரும் வரைக் காத்திருப்பதா சார் ? நம்மாள் ஜேசனுக்கு வயசு ஏறுதோ - இல்லியோ ; நம்மளுக்கு ஏறுதில்லியா ? இப்போவே அது ஜேஸனா ? ஜேசுதாஸான்னு குழப்புது !

      Delete
  58. எடிட்டர் சார்..

    'ப.ஒ.கு.பு' கி.நா'வை நீங்கள் புரிந்துகொண்ட ஆற்றலுக்காக ஒரு முறை தாராளமாக எழுந்துநின்று கைதட்டலாம் சார்!!

    நீங்கள் சூசகமாகச் சொன்ன 'வாசகர்கள்' சமாச்சாரத்தை மிக அருமையாகப் புரிந்துகொண்டு, நேர்த்தியான விளக்கமளித்த கணேஷ்குமாருக்காகவும் ஒருமுறை எழுந்துநின்று கைதட்டலாம்!!

    கணேஷ்குமார் விளக்கிடும்வரை இப்படியொரு கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லைதான்!

    ஆனாலும், நாளை மாலைப் பொழுதில் மீண்டும் ஒருமுறை மறுவாசிப்புச் செய்து, நீங்கள் விளக்கிய கோணத்தில் எல்லாமே சரியாகப் பொருந்திப் போகிறதா என்பதைச் சரிபார்த்துவிட எண்ணியிருக்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. பொருந்தாது போயின் சொல்லுங்கள் சார் ; நானுமே இன்னொருக்கா படிக்க முயற்சிக்கிறேன் !

      Delete
  59. // உங்களுக்கும் அந்த ஆல்பத்தில் முக்கிய பங்குள்ளதை உணர முடிந்ததா ? //

    உண்டு என்பதை கடைசி இரண்டு பக்கங்களை படித்து அசை போடும் போது அதனை உணர்ந்தேன்.

    ReplyDelete
  60. "பனியில் ஒரு குருதிப்புனல்" - இதெல்லாம் " நித்திரை மறந்த நியூயார்க் " -யிலேயே பார்த்தாச்சு..
    அப்றம் கதையில - என்னோட பங்கு என்னன்னு கேட்கிறீங்களா?
    படையை வழிநடத்தின கேப்டனும் செத்துப் போயாச்சு.
    நடந்த சம்பவங்களை பார்த்த எழுத்தாளர் ( கம்) சார்ஜெண்ட்-டும் செத்துப் போயாச்சு.
    கதையை கேட்டுக் கிட்டிருந்த மேஜரும் செத்துப் போனவருன்னா - இப்ப இந்த சம்பவங்களை தெரிந்து கொண்ட நான் யாருகிட்டயாவது ரிப்போரட்டிங் - செய்யணும் மே--
    இருங்க .எதுக்கும் நான் என்னை ஒரு முறை நல்லா கிள்ளிப் பாத்துக்கிறேன்.
    ஒரு வேளை நானும் ....?i

    ReplyDelete
    Replies
    1. நாங்கல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னேயே கிள்ளிட்டு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங் சார் !

      Delete
    2. இப்போ பின்னாடியே ஒரு ஆள் வந்து - 'யாரை கிள்ளிட்டு ?' ன்னு கேப்பார் பாருங்களேன் !

      Delete
    3. சார்.. கிள்ளியது யாரை? கிள்ளப்பட்ட இடம் எது?

      Delete
    4. 'யாரை கிள்ளிட்டு ? என்று கேட்டு அவங்க பின்னாடியே ஒழிந்து கொள்வார் பாருங்களேன் :-)

      Delete
  61. // இந்தக் கி.நா'வை இந்த அளவுக்கு மண்டையை உருட்டிப் புகுந்து பார்க்குமளவுக்கு கருத்தாழம் மிக்க கதையம்சம் கொண்டதெல்லாம் ஒன்றுமில்லை! சாதாரணமாகப் படித்தாலே போதும்! //

    உண்மை விஜய்.

    ReplyDelete
  62. நில்....! கவனி.....! கொல்.....!
    (அதிரடி,...! அமர்க்களம்,....! அட்டகாசம்....!)

    ஆரம்பமே ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. 3 பிரிட்டிஷ் உளவாளியைக் கொன்ற ஒரு கொலையாளியைப் போட்டுத் தாக்க 007 காத்திருக்க எதிர்ப்பாரா விதமான, ஒரு யுவதி அவனை காலி செய்துவிட்டு ஜேம்ஸ்க்கு டேக்கா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். பின்பு 007 பிரிட்டன் திரும்புகிறார், இப்பொழுது ஒரு முக்கியமானப் பணி. ஜப்பான்: டோக்கியோ: கம்யூட்டரை ஹேக் பண்ணி பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளின் அந்தரங்க முக்கிய தகவல்களைத் களவாடி அதை "Black Box"எனும் சேமிப்பு பேழையில் வைத்திருக்கும் சாப்ட்வேர் மேதை சாகா கென்ஜி என்னும் தில்லாலங்கடியைக் கண்டுப் பிடித்து அவனையும், அந்த "Black Box"-சையும் நிர் மூலமாக்க வேண்டும். சாகா கென்ஜி யார்? டேட்டாவைத் திருடுவதின் காரணமென்ன...? 007 அவனையும், "Black Box"- சையும் கண்டுப் பிடித்தாரா...? ஜேம்ஸ் பாண்டுடன Voluntary யாக சில பல இடங்கள் கைகோர்க்கும் அந்த யுவதி யார்...? 007 வுடன் இணைய என்ன காரணம்..... ? என்று ஒரு பரபர ஆக்ஷன் த்ரில்லரில் சொல்லுகிறது.

    ✓ ஜேம்ஸ் க்கு வழக்கமான Bentley காருக்குப் பதில் Astin Martin vantage கார்.

    ✓ஆனால், அவரை பணிக்கு அழைத்து வர பஸ்ஸை அனுப்பி கூட்டிட்டு வருகிறார்கள்! ஹா....ஹா...! (இங்கலாந்தின் நிதி நிலைமை அப்படி ....!?)

    ✓ஜேம்ஸ்க்கு MI - 6 பூத்ராய் மூலம் ஸ்பெஷல் Gadget like Smart Phone with Some unique feature... கைக்கடிகாரம் etc..,

    ✓ அத்தியாசம் 3: டோக்கியோவில் அறிமுகம் ஆகும் அந்த மாஸ்க் வில்லன் மற்றும் அந்த பலதரப்பட்ட அந்த மூகமூடி கலெக்க்ஷன்ஸ் சுவாரஸ்யமாகப் படைக்கப்பட்டுள்ளது.

    ✓டோக்கியோவின் கேஸினோ அரங்கில் அக்வாரியம் அருகில் அந்த ஆக்ஷன் சீன்ஸ் பட்டாசு. இங்கேயும் அந்த யுவதி ஜேம்ஸுடன் மீண்டும் இணைகிறார் (செலா சாக்ஸ் , பிரிட்டிஷ் ராணுவத்தில் ரகசிய பிரிவில் முன்னால் பணியாற்றியவர், தற்போது M13 எனும் அயல் தேச விவகாரங்களைக் கவனிக்கும் ரகசியப் பிரிவின் ஒரு அங்கம்)

    ✓செலா சாக்ஸ் பாத்திரம் இக்கதையில் ஜேம்ஸ் பாண்டுடன் சரி சமமாக வழங்கப் பட்டுள்ளது.

    ✓இத்தொடரில் 2 - 3 Spinoff கதையும் உண்டு.
    (FELIX LEITER, MONEYPENNY etc.)

    ✓.இந்த ஹை-டெக் கதை சும்மா ஜெட் வேகத்தில் ஹை-ஸ்பீடில் பயணிக்கிறது!

    P. S. 1. ஒரு நவீன யுக கதையைப் படைத்திருக்கும் கதாசிரியர் Benjamin Percy (DC-ல் முன்னால் பணியாற்றிவர்), ஒரு ஹை-டெக் கதைக்கு அதற்கு சற்றும் குறைவில்லாத பிரம்மாண்டமான சித்திரத்தை வழங்கியிருக்கும் ஒவியர்: Rapha Lobosco & அட்டகாசமான கலரிங் Artist: Chris O'Halloran's பற்றி இதழில் Credit கொடுக்காதது ஏனோ.....?

    2. வில்லன் சாகா கென்ஜி பெயரை ஒரு சில இடத்தில் கென்ஜி சாகா என வருவது ஒரு சிறு நெருடல்.

    ReplyDelete