Thursday, August 27, 2020

RIP ஆண்ட்ரே பால் டூஷாடோ...

 நண்பர்களே,

வணக்கம். காமிக்ஸ் கதாசிரியர் ; திரைக்கதை எழுத்தாளர் ; நாவல் எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட திரு ஆண்ட்ரே பால் டூஷாடோ நேற்றைக்கு, தனது 95-வது வயதில் காலமாகியுள்ளார் ! நமக்கு 1986 முதலே அறிமுகமான ரிப்போர்ட்டர் ஜானி தொடரினில் பணியாற்றிய ஆற்றலாளர் இவர் ! Tintin என்ற பெயரில் பிரெஞ்சில் வெளிவந்து கொண்டிருந்த காமிக்ஸ் இதழினில் எடிட்டராகவும் ; ஆர்ட் டைரெக்டராகவும் பணியாற்றியுள்ளவர் எனும் போது - ஏராளமான புது படைப்பாளிகளை இத்துறைக்கு கொணர்ந்திட இவரது ஊக்கம் நிறையவே உதவியுள்ளது !

1925-ல் பெல்ஜியத்தில் பிறந்தவர், டீனேஜியிலேயே சித்திரங்கள்   போட்டுப் பார்க்க ; கதை எழுதிப் பார்க்க என்று முயற்சித்துக் கொண்டேயிருக்க  - 16 வயதில் முதல் நாவல் பிரசுரமாகியுள்ளது ! சிறுகச் சிறுக காமிக்ஸ் துறைக்குள்ளும் கால்பதிக்க - ஆரம்பித்தவர் 1955-ல் ஜாம்பவான் திபெத்துடன் கரம்கோர்த்து ரிப்போர்ட்டர் ஜானி (RIC HOCHET) தொடரை துவக்கினார் ! தொடர்ந்த 60 ஆண்டுகளுக்கு இந்தக்கூட்டணி அழகாய்த் தொடர்ந்துள்ளது ! And நமது ஆதர்ஷ டாக் புல் & கிட ஆர்டின் கதைகளும் இந்தக்கூட்டணியின் அற்புதப் படைப்பே ! அப்புறம் அமரர் வில்லியம் வான்சோடு இணைந்து ப்ரூஸ் ஹாக்கர் என்ற கப்பற்படை தொடர் ; ரிங்கோ தொடரில் 1 ஆல்பம்  , (தோர்கல் புகழ்) ரோசின்ஸ்கியுடன் HANS என்ற தொடர் ; ஆலன் செவாலியே என்றதொரு கார் ரேஸ் தொடர் ; etc etc என்று கிட்டத்தட்ட 27 தொடர்களில் அசத்தியுள்ள  ஆற்றலாளர் இவர் ! பல நூறு ஆல்பங்கள் இவரது பெயரைத் தாங்கி வந்துள்ளன ! 

நாவலாசிரியராகவும் அவ்வப்போது அற்புதங்களை உருவாக்கியவர் "139-வது பலி" என்ற நாவலுக்கு விருது பெற்றிருக்கிறார் ! 

நல்ல மனிதர் ; நிஜமான ஜென்டில்மேன் ; கருணையுள்ளம் கொண்டவர் - இனி விண்ணுலகில் தனது திறமைகளைக் காட்டக் கிளம்பி விட்டுள்ளார் ! We salute you Sir....!! RIP  !! 


79 comments:

  1. RIP Andre Paul ... let your soul rest in peace!!!

    ReplyDelete
  2. Bruce J. Hawker ஒரு அற்புதமான சித்திர விருந்து... அவர் மேலும் Tiger Joe, scifi தொடரான Hans, இன்னும் பல விதமான genreக்கும் எழுதியுள்ளார்... அவரது மறைவு சித்திரக்கதை உலகின் ஈடு செய்ய இயலா இழப்பே ஆகும்...

    ReplyDelete
  3. விஜயன் சார், இவருடைய நினைவாக எப்போதாவது Bruce j. Hawker ஐ வெளியிட முடியுமா ?

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல்!
    Our favorite artist ஆண்ட்ரே பால் டூஷாடோ

    ReplyDelete
  5. சிக்பில் குரூப்பும் இவரது படைப்புகள் தானா? மேலுலகிலும் தொடரட்டும் அன்னாரது பணி!?!

    ஆழ்ந்த இரங்கல்கள்!!

    ReplyDelete
  6. ஆழ்ந்த இரங்கல்கள்.:-(

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்!

    😪😪😪

    ReplyDelete
  8. சிக்பில்ஓவியரும்ரிப்போர்ட்டர் ஜானிஓவியரும்ஒருவர்தான் ஒன்றுக்கொன்றுஎள்ளளவேணும் ஒற்றுமைஇல்லை. வியத்தகுஆற்றலாளர் rip sir கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. Chikbil hair style slightly resemblance to reporter Johnny but that only. RIP

      Delete
  9. அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  10. RIP ஆண்ட்ரே பால் டூஷாடோ

    ReplyDelete
  11. ஜேசன் ப்ரைஸ்கதாசிரியர்ஓவியர்கூட்டணியின்ஏதாவது ஒரு படைப்பை வெளியிடுங்கள்ஸார்என்ற கோரிக்கையைபலமாதங்கள் மனதிலேநினைத்திருந்தும்விவரம் தெரியாமல்Ars மேக்னாவுக்கஅஓட்டுப்போடாமல்டெக்ஸ்வில்லருக்குஓட்டுப்போட்டுட்டேனே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  12. திரு ஆண்ட்ரே பால் டூஷாடோ நினைவாக ரிப்போர்டர் ஜானியின் ரத்தக்காட்டேரி மர்மம் ரீபிரிண்ட் ப்ளீஸ் சார்!

    ReplyDelete
  13. ஆழ்ந்த இரங்கல்!ஆந்த்ரே போல் துய்ஷத்தோ!

    ReplyDelete
  14. மந்திர தந்திரவாதி மெபிஸ்டோ கூட இறந்து போயிட்டாரு எப்பவோ‌ . அன்னாரின் நினைவாக ஒரு ஸ்பெஷல் புக் போட்டு தாக்குங்களேன்.

    ReplyDelete
  15. ஆழ்ந்த இரங்கல்கள்.....
    சார் இவர் நினைவை போற்றும் வகையில் ஹான்ஸ்....அந்த கடல் கொள்ளையர் ...கார் ரேஸ் கதய விடலாமே

    ReplyDelete
  16. ரிப்போர்டர்.ஜானியும் - அந்த ஓவிய பாணியும் என்றென்றும் நேசத்துக்குரியவைகளே.ஒவ்வொரு Frame-யையும் தன் ஓவியத்திறமையால் அடர்த்தியாக (அதாவது ஒரு இடம் கூட வெறுமையாக விட்டு இருக்க மாட்டார்) வரைந்து இருப்பார்.
    அதே போல் சிக் பில் தொடரும் கார்டூன் பாணி என்றாலும் _ அனைவரின் முக பாவனைகளும் இயல்பாக இருக்கும்.
    ஓவியரின் மறைவு காமிக்ஸ் உலகின் ஈடு இல்லா இழப்பாகவே கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. +12345

      இவரது படைப்பில் உருவான ரிப்போர்ட்டர் ஜானியின் சித்திரங்களே என்னளவில் ஈர்ப்பானவை!! ரொம்ப டீசன்ட்டாகவும் வரைந்திருப்பார்! குறிப்பாக ஜானி மற்றும் நாடீனின் காதல் மிக மென்மையாக - பட்டும் படாமலும் - சொல்லப்பட்டிருக்கும்!! எனக்கு அது ரொம்பவே பிடிக்கும்!!

      ஒருசிலவருடங்களுக்கு முன்பு, ஏதோவொரு கேப்ஷன் போட்டியில் வென்றதுக்காண்டி ஜானி2.0வின் பிரெஞ்சு புத்தகம் ஒன்றை நமது எடிட்டர் சமூகம் பரிசாய் அனுப்பியிருந்தது!! எதேட்சையாய் பக்கத்தைப் புரட்டிய எனக்கு பலத்த அதிர்ச்சி!! அதில் ஜானியும், நாடீனும் பப்பி ஷேமாய்.. கடவுளே கடவுளே!!!

      சுமார் ஒருமணிநேரம் அதிர்ச்சியில் உறைந்தவனாய்.. திறந்தவாய் மூடாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?!!

      Delete
    2. //சுமார் ஒருமணிநேரம் அதிர்ச்சியில் உறைந்தவனாய்..//

      சும்மா பொய் சொல்லாதீங்க! அதிர்ச்சி -ங்கறதுதான் சரியான வினை உரிச்சொல் லா ? ;-)

      Delete
    3. இன்னமும் நீங்க சொல்றது மேல நம்பிக்கை வரல!!

      எங்க அந்த பக்கத்தை ஸ்கேன் பண்ணி அனுப்புங்க பாப்போம்!!!

      :-))))

      Delete
    4. ////எங்க அந்த பக்கத்தை ஸ்கேன் பண்ணி அனுப்புங்க பாப்போம்!!!
      ////

      ஹிஹி.. வேணாம்!! உங்க பிஞ்சி நெஞ்சி தாங்காதில்லையா?!!
      தவிர, ஜானியும் நாடீனும் உடுக்க உடை கூட இல்லாம பட்ட கஷ்டத்தைப் பார்த்து நான் கண்ணீர் விட்டு அழுததுல அந்த பக்கமே உருக்குலைஞ்சி போச்சி!! ;)

      Delete
  17. மாவீரன்சார் மறைந்த மெபிஸ்டோஞாபகமாக புத்தகம். சும்மா கலக்கரீங்க சார். ஹாஹாஹா. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  18. டயாலிக் புக்கில் வந்த ரிப்கெர்பியின் விளம்பரம் *ஒரு சின்ட்ரெல்லாவை தேடி* முன்னர் முத்து காமிக்ஸ் இல் வந்த *வாரிசு யார்* கதைதானா சார்?

    ReplyDelete
  19. இருந்தாலும் செயலருக்குரெம்ப இளகின மனசுஜானியும் நாடீனும்பட்டகஷ்ட்டத்தைப்பார்த்தப பார்த்து விக்கி விக்கி அழுது அழுது. புத்தகத்தையே நனைச்சுட்டாரே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ராஜசேகர் ஜி! ஈரோட்டு பக்கம் வந்து யார்கிட்டயாவது "இந்த வூர்ல இளகிய மனம் படைத்த..."ன்னு ஆரம்பிச்சீங்கன்னாலே "ஆங்! ஈவி தானே? அதோ அங்ஙனக்குள்ள நின்னு உடுப்பில்லாதவங்களை நினைச்சு அழுதுகிட்டிருக்காரே.. அவர்தான்!"ன்னு காட்டுவாங்க!! அப்படியொரு இளகிய மனசு நமக்கு!! ஹிஹி!!

      Delete
    2. அந்த வானத்தைப் போல மனம் படைச்ச செயலரே...
      பனித்துளியைப் போல குணம் படைச்ச பூனையாரே

      Delete
    3. நன்றிங்க MP! _/\_

      இந்தமாச ஜேம்ஸுபாண்டு கதையில கூட 88ம் பக்கத்துல நம்ம 007ம் அந்த பெண் உளவாளியும் உடுக்க உடுப்பில்லாம நின்னுக்கிட்டிருந்த பரிதாபத்தை நினைச்சு நான் அழாத நாளே கிடையாது!

      என்னதான் உயிரைப் பணயம் வச்சு பலப்பல சாகஸங்கள் பண்ணினாலும் ஒருகட்டத்துல ஒட்டுத்துணிக்கு கூட வழியில்லாத பரிதாப ஜீவன்களாத்தானே இருக்கவேண்டியிருக்கு இந்த உலகத்துல?!!

      ஆங்! நீங்க கன்டினியூ பண்ணுங்க - 'மஞ்சளிலே ஒரு நூலெடுத்து..?'

      Delete
    4. //ஆங்! நீங்க கன்டினியூ பண்ணுங்க - 'மஞ்சளிலே ஒரு நூலெடுத்து..?'//

      ROFL....

      Delete
    5. அந்த ஜானிக்கும் நாடீனுக்கும் கோவணந்தச்சி தந்துது யாரூ?...

      Delete
  20. ஈ ரோடு வந்து கேட்டாஅவக சேலம் போயிட்டாக அப்படீங்கராங்க ஜி

    ReplyDelete
  21. ****** நித்தம் ஒரு யுத்தம் *****

    கடந்த வருடத்தின் பிஸியான தருணங்களில் படிக்கமுடியாமல் போன சொற்ப இதழ்களில் இந்த டெமக்லீஸ் குழுவினரின் சாகஸமும் ஒன்று!

    இந்தவாரத்தில் கிடைத்த ஓய்வுப் பொழுதில் இதை படித்தபோது பிரம்மிப்பான வாசிப்பு அனுபவம் கிட்டியதை உணர்ந்தேன்! ரொம்பவே யதார்த்தமான கதை நகர்வும், அதற்கான இயல்பான வசனங்களும் இதன் பலமென்பேன்!

    முடிவு - ஒரு அழகான ஹைக்கூ!!

    எனது ரேட்டிங் : 9.75/10

    ReplyDelete
  22. 2132

    1066 லேயே நைட்டு தூங்கிட்டேன்!

    இப்போ கன்டின்யூ பண்றேன்!

    நமக்கிந்த வான் ஹாம், சங்கர், பிரம்மாண்டம் ரகக் கதைகளெல்லாம் அவ்வளவா சுகப்படரதில்லைங்க;

    பார்ப்போம்!

    THE ROAD HOME படத்தை மீண்டும் ஒருவாட்டி பார்த்தேன்! கனவு முழுக்க மஞ்சள் நதி பாயும் சீனாவின் இயற்கை அழகு கொஞ்சும் காட்சிகள் தான் வந்தது! கூடவே கதாநாயகியின் முகமும் தான்!
    நிகழ்காலத்தை கருப்பு வெள்ளையிலும், கடந்த காலத்தை வண்ணமயமாக காட்டிய விதம் அருமையே அருமை!

    இத ஏன் சொல்ல வர்றேன்னா இதுமாதிரி அழகான படங்களை பார்த்த பிறகு XII போன்ற தடாலடி கதைகளை படிக்கும் போது மனதில் ஒட்டுவதே இல்லை!

    (யப்பா! எப்படியோ காமிக்ஸை தொடர்பு படுத்தி முடிச்சாச்சு!)

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்!

      எந்தவொரு கதையையும் சாவகாசமானதொரு வேளையில் படித்தால் தான் சுகப்படும் என்பதற்கு நானே சாட்சி!

      வான் ஹாமை விடவும் அமர்களப்படுத்தியிருக்கிறார்கள் படைப்பாளிகள்!

      2132

      9/10 சூப்பர்!

      Delete
    2. 40 நிமிடத்தில் ஒரே தம்மில் முழுவதுமாகப் படிக்கும் போது கதை சூப்பர் என்டர்டெய்னர் தான்!

      Delete
    3. வித்தியாசமான ஆனால் யதார்த்தமான விமர்சனம்! குட்!!

      Delete
  23. சார் இன்று பதிவு கிழமை

    ReplyDelete
  24. ஓவியருக்கு இரங்கல்கள்.

    ReplyDelete
  25. அப்புறம் ஒரு சந்தேகம். நான் ஆல் இன் ஆல் அழகுராஜா சந்தா கட்டியுள்ளேன். அர்ரசுக்கு தனியாக சந்தா கட்ட வேண்டுமா

    ReplyDelete
  26. இன்றைய பதிவின் சிறப்பம்சம் என்ன?!
    மில்லியன் டாலர் கேள்வி.....

    ReplyDelete
  27. ///சுமார் ஒருமணிநேரம் அதிர்ச்சியில் உறைந்தவனாய்.. திறந்தவாய் மூடாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?!! ///
    அப்படின்னா நீங்க ஈ.வி இல்லே.ஈ.வா. (ஈ புகுந்த வாயர்)

    ReplyDelete
    Replies
    1. ஈ என்னங்க பத்து சார்.. அந்த நேரத்துல எருமைமாடே உள்ளே போயிருந்தாலும் எனக்குத் தெரிஞ்சிருக்காது! அப்படியொரு அதிர்ச்சி!! :D

      Delete
  28. ///சுமார் ஒருமணிநேரம் அதிர்ச்சியில் உறைந்தவனாய்.. திறந்தவாய் மூடாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?!! ///
    ஈவி..நீங்க அந்த திறந்த வாய்மூடாத அனுபவத்தை பத்தி ஒரு பதிவே போடலாமே.
    தலைப்பு: ஜொள்ள மறந்த கதை.
    உபயம் : பத்மநாபன்.கரூர்.

    ReplyDelete
  29. Replies
    1. முகூர்த்த சீசன் இது! பந்தியில உட்கார்ந்து தொந்தியை ரொப்பிக்கிட்டு வீட்ல வந்து இறங்கினால்.. கபடி விளையாடிட்டு வந்த மாதிரி ஒரு அலுப்பு ஏற்படும்; லேசா கண்ணைக் கட்டும்!

      பதிவு நாளைக்குத்தான்னு தோனுது!!

      Delete
  30. For any types of tamil english or hindi comics magazine like rani lion muthu tamil indrajaal Dc marval ack ambulimama tulsi manoj diamond or any types of comics magazine once contact whatsapp 7870475981

    ReplyDelete