Thursday, June 25, 2020

The Powers of Prayers...!

நண்பர்களே,

வணக்கம். பூமிக்கே நேரம் சரியில்லை எனும் போது சாமான்யர்கள் நமக்கும் கடின நாட்கள் தொடர்கதையாகிடுவதில் வியப்பில்லை தான் போலும் ! ஒவ்வொரு திக்கிலிருந்தும் சமீப காலங்களில் வந்திடும் செய்திகளின் பெரும்பான்மை  சங்கடமூட்டுபவைகளாகவே இருந்து வர - இதோ அதற்கொரு புது வரவு ! 

நமது நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமார் சில மாதங்களுக்கு முன்பாய் சுகவீனப்பட்டிருந்ததும், அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் ஒரு முக்கிய அறுவை சிகிச்சைக்கு ஆளாகியதும், ஆண்டவன் அருளோடு நலம் பெற்றதையும் நாம் மறந்திருக்க மாட்டோம் ! ஆனால் இந்த 2020 கொணர்ந்து வரும் இன்னல்களின் இன்னொரு பரிமாணமாய், நண்பருக்கு மேற்கொண்டும் ஒரு அறுவை சிகிச்சை அவசியப்படுகிறதாம் ! எங்கோ - யாருக்கோ நேர்ந்திடும் சுகவீனங்கள் வெறும் செய்திகளாய் ; தகவல்களாய், காதில் விழும் சமயம் ஒரு நிமிடப் பரிதாபத்தை மட்டுமே வழங்கி விட்டு நமது உலகினுள் மீண்டும் மூழ்கிடுவதே பொதுவான வாடிக்கை ! ஆனால் இது யாருக்கோ இல்லை ; நம்மோடு காலமாய்த் தோள் உரசி நின்ற நண்பருக்கே எனும் போது இயன்ற ஒத்தாசைகளைச் செய்திடுவது நம் கடமையாகிறது ! இந்தச் சிரம நாட்களில் அவரவரது பாடுகளே சொல்லிக்கொள்ளும் விதமாய் இல்லை எனும் போது, இந்நேரத்தில் உதவிக் கரம் நீட்டக் கோருவது உங்களை தர்மசங்கடங்களில் ஆழ்த்திடக்கூடுமென்பது புரிகிறது தான் ! ஆனால் நோயோடு போராடிக் கொண்டிருப்பவரையும், அவரது வலிகளையும் ஒரு கணம் பரிவோடு பார்த்திட்டோமெனில், நமது சிரமங்கள் அத்தனை பெரிதில்லை என்று கருதத் தோன்றிடலாம் ! இதோ அவரது சகோதரர் கரூர் குணாவின் வங்கி கணக்கு விபரம்   : 

Gunasekaran M
Karur Vysya Bank
Account No - 1152155000135404 
Branch Name - KARUR - LNS (WEST), 
IFSC - KVBL0001152 

கொஞ்சமோ, கணிசமோ - நமக்கு இயன்ற தொகைகளை நேரடியாய் இந்தக் கணக்குக்கு அனுப்பி வைத்து நண்பரின் நலம் காக்க உதவிடுவோமே - ப்ளீஸ் ? And நிதியாய் ஒத்தாசை செய்திடும் நிலையில் இல்லாத நண்பர்கள் பிரார்த்தனைகளை தம் பங்களிப்பாய்த் தந்திடவும் கோருகிறேன் !

And நம் பிரார்த்தனைகளுக்கு மேற்கொண்டும் ஒரு அவசியம் எழுந்துள்ளது folks ! கடந்த 19 ஆண்டுகளாய் நமக்கு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராய், குன்றா ஆர்வத்தோடு செயல்பட்டு வரும் குடும்பத் தலைவியிடமிருந்தது போன வாரம் கிட்டிய வாட்சப் தகவல்கள் நெஞ்சைப் பிசைந்தன ! வெகு சமீபமாய் அவருக்கு இருதயத்தில் 2 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம் ! தவிர, நுரையீரலும் தளர்ந்திருப்பதாய் டாக்டர் சொல்லியிருக்க, ரொம்பவே மனமுடைந்து போயிருந்தார் ! 'எதற்கும் புதுசாய் இனொரு மொழிபெயர்ப்பாளரைத் தேடி வைத்துக் கொள்ளுங்கள் ; திடீரென நான் காணாது போய் விட்டால் நீங்கள் திண்டாடக்கூடாதே !!' என்று அவர் பகடியாய்ச் சொல்ல முயன்றாலும், அவரது உள்ளத்து பயங்களை, குழப்பங்களை புரிந்து கொள்ள முடிந்தது ! அடைப்புகளை நீக்கி, stent பொருத்திட அவரது இருதயவியல் டாக்டர் அறிவுறுத்தியுள்ள போதிலும், இப்போதைக்கு அது வேண்டாம் ; மருந்து, மாத்திரைகளிலும், உடற்பயிற்சியிலும் சரி செய்திடப் பார்க்கலாமென்று தீர்மானித்திருப்பதாய்ச் சொன்னார் ! ஆண்டவன் புண்ணியத்தில் வசதிகளுக்கோ ,வாய்ப்புகளுக்கோ துளி கூடக்  குறையில்லாதவரே ; ஆனால் 65+ அகவையில் நேர்ந்திடக்கூடிய நியாயமான பயங்கள் அவரை அலைக்கழிப்பதை உணர முடிந்தது ! இயன்றமட்டுக்கு தைரியமூட்டும் விதமாய்ப் பேசிய கையோடு, டாக்டரின் பரிந்துரையை இன்னுமொரு முறை பரிசீலிக்கவும் கோரிக்கை வைத்தேன் ! And நானும், நம் வாசகக் குடும்பமும் நிச்சயமாய் அவரை நமது பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்வோமென்றும் வாக்குத் தந்திருக்கிறேன் ! இன்னல்களும், இடர்களும் எத்தனை வந்தாலும் எழுந்து நின்று சாதித்துக் காட்டும் டைகருக்கும், XIII-க்கும், 'தல' டெக்ஸுக்கும் (yes..there have been Tex works in French too !)  பேனா பிடித்தவருக்கு அந்த காமிக்ஸ் நாயகர்களின் ஆற்றலும், திடமும் கிட்டிட வேண்டிக் கொள்வோமே folks !! பிரார்த்தனைகளின் ஆற்றலை இந்தப் பிரபஞ்சமே அறியும் தானே ? 

இருண்ட தினங்கள் சீக்கிரமே விலகி, நம் காமிக்ஸ் குடும்பத்தின் இரு அங்கங்களுமே சீக்கிரம் நலமாய்த் திரும்பிய சேதியை அறிவிக்கும் வரத்தை ஆண்டவன் எனக்குத் தருவாராக !

Bye all ! See you around ! 

143 comments:

  1. Replies
    1. நண்பர் JSK அவருக்கு உதவ எண்ணுபவர்களுக்கு,
      நண்பர் கரூர் குணா அவர்களின் கூகுள் பே / G PAY Number : 9786822001.

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  2. Replies
    1. அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

      Delete
  3. இருவரும் விரைவாக நலமாக வேண்டிக்கிறேன்..

    ReplyDelete
  4. நிச்சயமாக பங்களிப்பும், பிரார்த்தனைகளும் உண்டு. எல்லாம் நலம் பெற வேண்டும்

    ReplyDelete
  5. இருவரும் கூடிய விரைவில் நலமாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  6. அனைவரும் நலம் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை ... _/\_

    ReplyDelete
  7. பிரார்த்தனைகளினாலே
    பிழைத்திருப்பவன் நான்!
    தன்னலமில்லா பிரார்த்தனைகள்
    தகுந்த நல்வினை ஆற்றிவிடும்!
    🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. இருவரும் கூடிய விரைவில் நலமாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ... _/\_

    ReplyDelete
  9. Replies
    1. இருவரும் கூடிய விரைவில் நலமாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .. _/|\_

      Delete
  10. இரு தோழமைகளும் விரைவில் பூரண நலமடைந்து மீண்டு வர எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...!

    ReplyDelete
    Replies
    1. இரு தோழமைகளும் விரைவில் பூரண நலமடைந்து மீண்டு வர எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...!

      Delete
    2. இரு தோழமைகளும் விரைவில் பூரண நலமடைந்து மீண்டு வர எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...!

      Delete
    3. இரு தோழமைகளும் விரைவில் பூரண நலமடைந்து மீண்டு வர எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...!

      Delete
    4. இரு தோழமைகளும் விரைவில் பூரண நலமடைந்து மீண்டு வர எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...!

      Delete
  11. இருவரும் கூடிய விரைவில் பூரண
    நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .. _/|\_

    ReplyDelete
  12. JSK-வுடன் பேசிய கையோடு, இப்படியொரு பதிவை போட்டு, வாசகர்களை பங்கேற்க உற்சாகப்படுத்திய எடிட்டருக்கு நன்றி...

    ReplyDelete
  13. இரு தோழமைகளும் விரைவில் பூரண நலமடைந்து மீண்டு வர எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...!

    ReplyDelete
  14. நமது காமிக்ஸ் நண்பர்கள் இருவரும், உடல்நலம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.

    ReplyDelete
  15. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இருவரும் விரைவில் பூரண நலம் பெற்றார்கள் என்ற சேதி காதுகளுக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆசிரியர் அடிக்கடி தெரிவிக்கும் பிரார்த்னைக்குன்டான பலனை நம்பி இஸ்லாமிய சகோதரர் ஒருவரிடமும், கிறிஸ்துவ பெந்தகொஸ்தே நண்பர் ஒருவரிடமும் அவரவர் முறைகளில் பிரார்த்தனை செய்வதற்குண்டான ஏற்பாட்டை செய்துள்ளேன். மருத்துவம் ஒரு கையும் பிரார்த்தனை ஒரு கையும் கொடுத்து இருவரையும் வழிநடத்த உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  16. நண்பர் ஜேஎஸ்கே முழுமையாகக் குணமடைய பண உதவியும் பிரார்த்தனையும் நமது அன்பான ஆறுதலையும் நல்குவோம் சார் அண்ட் தோழர்களே....

    ReplyDelete
  17. மொழிபெயர்ப்பில் உதவிவரும் அம்மாவின் நலனுக்கு பிரார்த்தனைகளை செய்து கொள்கிறேன்.. நண்பர்களும் பிரார்த்தித்து உதவுக..

    ReplyDelete
  18. இருவரும் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  19. ம் காமிக்ஸ்க் குடும்பத்தின் இரு அங்கங்களுமே விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  20. காமிக்ஸ் நண்பர்கள் (இரு ஜாம்பவான்களும்) விரைவில் (விரைந்து) குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  21. இன்னல்களும், இடர்களும் எத்தனை வந்தாலும் எழுந்து நின்று சாதித்துக் காட்டும் டைகருக்கும், XIII-க்கும், 'தல' டெக்ஸுக்கும் (yes..there have been Tex works in French too !) பேனா பிடித்தவருக்கு அந்த காமிக்ஸ் நாயகர்களின் ஆற்றலும், திடமும் கிட்டிட வேண்டிக் கொள்வோமே folks //

    நிச்சயமா சார் எங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் இறைவனிடம் வைக்கிறோம்...

    ReplyDelete
  22. Nanbargal iruvarum poorana nalam pera chenthooranai vendugiren

    ReplyDelete
  23. ///'எதற்கும் புதுசாய் இனொரு மொழிபெயர்ப்பாளரைத் தேடி வைத்துக் கொள்ளுங்கள் ; திடீரென நான் காணாது போய் விட்டால் நீங்கள் திண்டாடக்கூடாதே !!'///

    யாரோ முகம் தெரியாதவர் என்ற போதிலும் அவரது துணையால் தான் நாம் இத்தகைய அருமையான வாசிப்பனுவத்தை
    இவ்வளவு காலமும் பெற்றோம் என்னும் போது உண்டாகும் மன வருத்தம் கவலையளிக்கிறது! அவர் உடல் நலம் பெற்று இன்னும் பல காலம் நமது இந்த காமிக்ஸ் காதலை வழிநடத்த இயற்கை துணைபுரியட்டும்!!

    ///நோயோடு போராடிக் கொண்டிருப்பவரையும், அவரது வலிகளையும் ஒரு கணம் பரிவோடு பார்த்திட்டோமெனில், நமது சிரமங்கள் அத்தனை பெரிதில்லை என்று கருதத் தோன்றிடலாம் !///

    நண்பரது உடல்நலம் சரியாக என்னாலான சிறு பங்களிப்பையும், வேண்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

    ReplyDelete
  24. இரண்டு தோழமைகளும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  25. இருவரும் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  26. J. S. K. காமிக்ஸே மூச்சாகக் கொண்ட ஒரு வாசகர். காமிக்ஸ் பற்றிஅவரிடம் பேசிக்கொண்டிருந்தால் நொடிக்கு நொடிகாமிக்ஸ் பற்றிய புதுப்புத்தகவல்களாத்தெரிந்து கொண்டே இருக்கலாம் ஸாரி பழையபழைய தகவல்களை நாம் புதியதாகத் தெரிந்து கொள்ளலாம். அபார ஞாபக சக்தியும்காமிக்ஸ் ஞானமும் உடையவர். முத்து,லயன் காமிக்ஸ் மீது ஆத்மார்த்ம மான ஈடுபாடு உடையவர். அவர் விரைவில் குணமடைந்துநம்முடன் கரம்கோர்த்து காமிக்ஸ் பயணத்தில்ஈடுபட இறைவனைபிரார்த்திக்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  27. காமிக்ஸ் நண்பரும் மொழிபெயர்ப்பாளரும் நலமாக மீண்டுவரக் கடவுளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  28. காமிக்ஸ் நண்பர்கள் இருவரும் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  29. இரத்தப்படலம் புக்கிங் படலம் இன்றைய நிலவரம் என்னங்க சார்?

    ReplyDelete
    Replies
    1. Dr.Selvam Abirami - 2 books

      Total : 29

      Delete
    2. நன்றி எடிட்டர் சார்.

      Delete
    3. நிலவரம் - கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கும்போலிருக்கே!!

      பார்த்துக்குவோம்!!

      Delete
    4. ///கலவரமாத்தான் இருக்கும்போலிருக்கே!!///

      ஒ... கொரானாவ சொல்றீங்களா?
      நான் கூட...?!

      Delete
    5. எதுக்கும் ஒருவாட்டி தலீவர் கிட்டே விசாரிச்சுப் பாருங்க, அவரோட பதுங்கு குழிக்குள்ளாற சமீபமா யாரேனும் குடியேறி உள்ளனரா என்று ? ஏன் சொல்றேன்னா - வேணாம் ; வேணாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டவங்கள்லாம் புக்கிங் பண்ணிப்புட்டாங்க ! வேணும் வேணும்னு கொடி பிடிச்சவங்கோ தொடர்பு எல்லைக்கு அப்பாலே ஜாகை மாத்திட்டா மாதிரித் தோணுது ! தவணைகளில் பதிவு செய்திடும் வாய்ப்பை யாரும் கிட்டே போய்ப் பார்த்தா மேரி கூடத் தெரியக் காணோமே !

      Delete
    6. சார்.. நிறையப் பேர் ஃபேஸ்புக்குல சூடா சண்டைப் போட்டுக்கிட்டிருக்காங்க. சண்டை முடிஞ்சதுமே இங்கே ஓடிவந்து புக்கிங் பண்ணிடுவாங்க பாருங்க! :P

      Delete
    7. I was wrong when I said 250 current readers will book the books. Looks like 300 of them will :-D

      Delete
    8. ஹிஹி! எப்படியோ நல்லது நடந்தாச் சரிதான்!

      Delete
    9. இந்த விபரமெல்லாம் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகும் ! முப்பதையே இன்னும் தொடாதப்போ, முன்னூறைப் பத்திப் பேசுறது howwwww ???

      Delete
    10. சார்.. ரத்தப்படலத்துக்கு ஏன் அப்படியொரு பேர் வச்சீங்கன்னு தெரியலை - அதைப்பத்திப் பேசும் இடமெல்லாம் ரத்த ஆறா ஓடிக்கிட்டிருக்கு! :)

      பேசாம 'புஷ்ப படலம்'னு வச்சிருக்கலாம் நீங்க! :)

      Delete
    11. சார் தொன்னூறு நாள் இருக்கே... அதான்..... வாங்கவுள்ளோர் எண்ணிக்கை விரைவில் கூடும்... வெற்றி நிச்சயம்.... முப்பது என்பதும்....இவ்வளுவு பெரிய தொகைக்கு ... ஒரே வாரத்தில் என்பதும்... மறுமறுபதிப்புக்காய் என்பதையும் கவனத்தில் கொண்டால்.... மாபெரும் வெற்றியே....
      இங்கும் எங்௧னமும் பாசிட்டிவ் தேடுவோர் ச௩்கம்

      Delete
    12. சார் தொன்னூறு நாள் இருக்கே... அதான்..... வாங்கவுள்ளோர் எண்ணிக்கை விரைவில் கூடும்... வெற்றி நிச்சயம்.... முப்பது என்பதும்....இவ்வளுவு பெரிய தொகைக்கு ... ஒரே வாரத்தில் என்பதும்... மறுமறுபதிப்புக்காய் என்பதையும் கவனத்தில் கொண்டால்.... மாபெரும் வெற்றியே....
      இங்கனம்ம் எங்௧னமும் பாசிட்டிவ் தேடுவோர் ச௩்கம்

      Reply

      Delete
    13. ஆத்தாடியோவ் ; நான்பாட்டுக்கு 'கொலைப் படலம்'னு பேர் வைச்சிருந்தா என்னத்துக்கு ஆவுறது ?

      Delete
    14. கொலைப்படைன்னும் வைக்கலாம் சார்

      Delete
    15. ஏன்...'ரத்தப்படலம்'..முதலெழுத்தை எடுத்துவிட்டு 'மு' வை போட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே!

      Delete
    16. ஐய்யய்யோ!! ATR sir.. கொரோனா டைம்ல அதுமாரில்லாம் வேணாம்! :D

      Delete
    17. அப்புறம் வீட்டுல ' மொத்து' படலம்தான்.

      Delete
    18. ஈ.வி.ஹி...ஹி....!
      ச்ச்சும்மா...ஒரு கிளுகிளுப்புக்காகத்தான்!

      Delete
    19. பத்து சார்!
      என்னை யாருன்னு நெனச்சீங்க?
      வீட்ல மொத்து வாங்கி வாங்கி 'மொத்து என் சொத்து' என்று பெருமையாக வாழ்ந்து வருகிறேனாக்கும்.

      Delete
  30. எக்காரணத்தை கொண்டும் இந்த புத்தகத்தை வாங்குவதாக இல்லை..

    ReplyDelete
    Replies
    1. ஆனா, இரத்தப் படலத்துல கூட 'அதிகாரி' சாகஸம் பண்ணாத்தான் வாங்குவேன்னு நீங்க அடம்புடிக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லே! :P

      Delete
    2. வருகிறது வெளம்பரத்ல அதிகாரிய காட்டச் சொல்வோம் ஆசிரியர... இல்லாங்காட்டி இலவச இணைப்பா குட்டி அதிகாரிய சேத்தா... முன்பதிவு ஒன்னு கூடுமோ

      Delete
    3. நண்பர் ஸ்டீல் க்ளா பொன்ராஜ் தானே இது?

      Delete
  31. Amount transferred to Karur Gunas account now. prays JSKs speedy recovery.

    ReplyDelete
  32. Edi sir, one suggestion, can we send a digitally signed get well card to the lady? Even if she is not doing any projects for us, it will boost her morale and confidence.

    ReplyDelete
    Replies
    1. And believe it or not, she's still working on our translations ! A Western is going on...😁

      Delete
    2. சார்.. அப்படீன்னா அவங்களை டிஜிட்டலில் sign பண்ணி இங்கே நமக்கு அனுப்பி வைக்கச் சொல்லுங்க! இரத்தப்படலத்தால ஏகத்துக்கும் பாதிக்கப்பட்டுக் கிடக்கிற நமக்குத்தான் இப்போ அது தேவைப்படுது! :D

      Delete
    3. I found this free one for digital card with multiple signatures https://www.openme.com/group-cards

      Delete
  33. Enter your comment... உறவுகள் இருவரும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  34. அடுத்த லாக்டவுனை நினைச்சா தான் பயமா
    இருக்கு. கடைசி நொடி ரன்‌அவுட்டை தவிர்க்க இரட்சகர்கள் இல்லாமலும் இல்லை. ஏன்னா வியாபாரம் பயங்கரமாக டல்லடிக்கிறது. இர.ப 300 ஒரு ஓப்பன் சேலன்ஞ்ஜே.

    ReplyDelete
  35. நண்பர் JSK அவருக்கு உதவ எண்ணுபவர்களுக்கு,
    நண்பர் கரூர் குணா அவர்களின் கூகுள் பே / G PAY Number : 9786822001.

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  36. ஜாம்பாவான்கள் இருவரும் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  37. வேணும் வேணும்னு கொடி பிடிச்சவங்கோ தொடர்பு எல்லைக்கு அப்பாலே ஜாகை மாத்திட்டா மாதிரித் தோணுது !//

    இங்க எனக்கு பணம் புரட்டும் படலம் ஓடுது சார்.. கவலை வேண்டாம் 5 நிச்சயம் சார்..எனக்கு...

    ReplyDelete
    Replies
    1. ///5 நிச்சயம் சார்..எனக்கு...///

      சூப்பர்!! ஒன்னு ரெண்டு குறைஞ்சாக்கூட பரவாயில்லை.. சிரமப்படாம பார்த்துக்கோங்க பழனி!

      Delete
    2. XIII என்றுமே சுகமான சுமைகள் ஈவி அவர்களே...

      Delete
  38. அடடா... என்ன ஒரு பாசம் ? என்ன ஒரு நேசம் ? நோயுற்ற நண்பருக்கு பணவுதவி செய்யும் இதயங்கள், எங்கோவொரு தேசத்திலிருக்கும் மற்றொரு நோயுற்ற மொழிபெயர்ப்பாளரை ஆற்றுப்படுத்த விரும்பும் மனங்கள் என்று விஜயன் சார் உருவாக்கியுள்ள காமிக்ஸ் வட்டத்தையெண்ணி மகிழ்கிறது எண்ணம். நமது காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாகச் சுவாசித்து இன்புறவும், அருமையான நண்பர்களைச் சந்திக்கவும் என்ற இரு காரணிகளுக்காகவேனும் தமிழ் நாட்டில் பிறக்கவில்லையே என்று எண்ணும் போது, சோகம் இதயத்தை அடைக்கும். காமிக்ஸ் நேசம் என்றும் வாழ்க... !

    ReplyDelete
    Replies
    1. மனதில் தோன்றிடுவதை அழகான வார்த்தைகளாய் வடிப்பது ஒரு கலை! அது உங்களுக்கு நன்றாகவே வருகிறது, தண்ணிலவன்!

      வாய்ப்புக்கிட்டும்போது ஒருமுறை EBF கொண்டாட்டத்தில் பங்குகொள்ள முயற்சியுங்கள்!!

      Delete
    2. அன்பான வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே

      Delete
    3. ///வாய்ப்புக்கிட்டும்போது ஒருமுறை EBF கொண்டாட்டத்தில் பங்குகொள்ள முயற்சியுங்கள்!!///

      இன்னும் சில பல ஆண்டுகளுக்கு "வாய்ப்பில்ல ராஜா" தான்!!

      Delete
    4. அதிகபட்சமாக இன்னும் ஒருவருடத்தில் உலகம் மீண்டுவிடும்! இழப்புகள் அதிகமிருந்தாலும் கூட, எப்பேர்ப்பட்ட இன்னலையும் எதிர்த்து நின்று, வெற்றிவாகை சூடிடும் ஆற்றல் மனிதனுக்குள்ளது!!

      இதுவும் கடந்து போகும்!!

      Delete
    5. இது கடந்து போகறதுக்குள்ள எத்தனை பேரை தூக்கிப் போட்டு மிதிக்கப் போறதுன்னு தெரியலையே ஈவி. லாக்டவுன் நீடிக்க நீடிக்க மிடில் க்ளாஸ் மற்றும் அதற்கு கீழே உள்ளவர்களின் நிலை வெகு சிரமம். ☹️

      Delete
    6. //லாக்டவுன் நீடிக்க நீடிக்க மிடில் க்ளாஸ் மற்றும் அதற்கு கீழே உள்ளவர்களின் நிலை வெகு சிரமம்//

      😭😭😭

      Delete
    7. ///இது கடந்து போகறதுக்குள்ள எத்தனை பேரை தூக்கிப் போட்டு மிதிக்கப் போறதுன்னு தெரியலையே///

      நிஜம்! மாத வருமானத்தை நம்பியிருந்த பலரும் ஆல்ரெடி வேலையிழந்தாச்சு! சிறுதொழில் நிலைமை ரொம்ப கவலைக்கிடம்!

      நோய் பரவலுக்கு முன்னதாகவே பொருளாதாரம் வாழ்வாதாரத்தை காலி பண்ணி விடும் என்பது தான் மிகக் கொடுமை!

      இதுவும் கடந்து போகும்ங்கிற வசனம் எல்லாம் அடிப்படை வசதிகளையே நிறைவு செய்ய முடியாத, 70%க்கும் மேலான மக்களை கொண்ட தேசத்தில் எடுபடுமா??!!

      டைட்டானிக் படத்தில் கப்பலில் இருந்து சிறுபடகில் தப்பிய சிலர் கண்ணெதிரே பிரம்மாண்ட கப்பல் முழ்குவதை விரக்தியோடு பார்ப்பதைத் போல, பொருளாதார கப்பல் மெல்ல மெல்ல சரியத் துவங்கிவிட்டதை கண்முன்னே காண முடிகிறது! இதில் வருத்தம் என்னவென்றால் நாம் போகும் படகும் ஓட்டை என்பது பலருக்கும் தெரிவதில்லை!

      1929 - Great Depression காலத்தைவிட கொடுமையான காலம் கண்ணெதிரே உள்ளதால் மனதை அதற்குத் தயார்படுத்திக் கொள்வதுதான் நல்லது!!

      Delete
    8. ///இதில் வருத்தம் என்னவென்றால் நாம் போகும் படகும் ஓட்டை என்பது பலருக்கும் தெரிவதில்லை!///

      நானும் ஓட்டை படகில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்! எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்குமோ பிடிக்கட்டும்!

      இத்தனை காலமும் நாம் படித்த Wild West அனுபவம் நிச்சயம் நமக்கு துணைபிரியும்!!

      Delete
    9. பல கடினமான சூழ்நிலைகளிலும் அதிலிருந்து மீண்டு வரும் ஆற்றலை டெக்ஸ்ம், டைகரும் வழங்கியிருக்கிறார்கள்! அது எதிர்காலத்தில் மிகவும் பயன்படும்!

      மனதளவில் நாம் உறுதியாக இருக்க காமிக்ஸ் ஒரு தவிர்க்க முடியாத காரணம்!

      Delete
    10. ////பல கடினமான சூழ்நிலைகளிலும் அதிலிருந்து மீண்டு வரும் ஆற்றலை டெக்ஸ்ம், டைகரும் வழங்கியிருக்கிறார்கள்! அது எதிர்காலத்தில் மிகவும் பயன்படும்!

      மனதளவில் நாம் உறுதியாக இருக்க காமிக்ஸ் ஒரு தவிர்க்க முடியாத காரணம்!///

      சூப்பர்!!

      Delete
    11. //அதிகபட்சமாக இன்னும் ஒருவருடத்தில் உலகம் மீண்டுவிடும்! இழப்புகள் அதிகமிருந்தாலும் கூட, எப்பேர்ப்பட்ட இன்னலையும் எதிர்த்து நின்று, வெற்றிவாகை சூடிடும் ஆற்றல் மனிதனுக்குள்ளது!!

      இதுவும் கடந்து போகும்!!//
      சூப்பர். ..
      ////பல கடினமான சூழ்நிலைகளிலும் அதிலிருந்து மீண்டு வரும் ஆற்றலை டெக்ஸ்ம், டைகரும் வழங்கியிருக்கிறார்கள்! அது எதிர்காலத்தில் மிகவும் பயன்படும்!

      மனதளவில் நாம் உறுதியாக இருக்க காமிக்ஸ் ஒரு தவிர்க்க முடியாத காரணம்!///

      சூப்பரோ சூப்பர்!!

      Delete
    12. //நானும் ஓட்டை படகில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்! எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்குமோ பிடிக்கட்டும்!//

      +1

      Delete
    13. ////பல கடினமான சூழ்நிலைகளிலும் அதிலிருந்து மீண்டு வரும் ஆற்றலை டெக்ஸ்ம், டைகரும் வழங்கியிருக்கிறார்கள்! அது எதிர்காலத்தில் மிகவும் பயன்படும்!

      மனதளவில் நாம் உறுதியாக இருக்க காமிக்ஸ் ஒரு தவிர்க்க முடியாத காரணம்!///

      சூப்பர்..! சூப்பர்!!

      Delete
    14. //நானும் ஓட்டை படகில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்! எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்குமோ பிடிக்கட்டும்!//
      ஓட்டைப்படகா...!
      எனக்கு படகுகூட வேண்டாம். பிடித்துக்கொண்டு மிதக்க ஒரு கட்டையாவது கிடைக்குமா என்று தத்தளிக்கும் காலமே வந்தாச்சு. இதற்கு மேலும் அடிவிழுந்தால் பரலோக பயணத்துக்கு கட்டணம் இல்லாமலே போகிற வாய்ப்பு வந்துவிடும் போல. காமிக்ஸ் கொடுத்த தெம்பில் காலத்தை ஓட்டியாச்சு. இப்படியே போனால் காமிக்ஸூம் எட்டாக் கனியாகிவிடும். காமிக்ஸூக்கு பதிலாக நம் தளத்தை பார்வையிட்டு காலத்தை ஓட்டவேண்டிய
      சூழலுக்கு காலம் வெகு சீக்கிரமே கொண்டுபோய் விடும் போலிருக்கிறது. இந்த நிலை சீக்கிரமே மாறவேண்டும்.
      காமிக்ஸ் இல்லாத வாழ்க்கையை நினைத்தால் பீதியளிக்கிறது.

      Delete
  39. எடிட்டர் சார்.. இன்றைய ஸ்கோர் ப்ளீஸ்?!!

    ReplyDelete
    Replies
    1. Rajkumar Sivanandi, Madurai 1

      Sathya Balaji, Bangalore 1

      (1st instalment - both)

      Grand Total : 31

      Delete
    2. ஜெய் பெட்டி பார்னோவ்ஸ்கி!!

      Delete
    3. ///ஜெய் பெட்டி பார்னோவ்ஸ்கி!!///

      அலோ.. காப்பிரைட்டு என்ரகிட்ட இருக்குதாத்கும்.!

      Delete
    4. ஒரு புத்தகமாயினும் கூட, குருவானவர் படித்து முடித்து அதிலுள்ள சூட்சுமங்களை அறிந்த பின்புதானே சிஷ்யப்பிள்ளைகளுக்குக் கொடுப்பது வழக்கம்?!!

      Delete
    5. பெட்டி புள்ள விசயத்துல குரு சிஷ்யன்னு யாரையும் பாக்கமாட்டேன்... ரெம்ப உக்கிரமா இருப்பேன்.!

      Delete
    6. பெட்டி "புஸ்ஸ்"னோவ்ஸ்கியா.... ரொம்பவே ஏமாந்த ஒன்று.

      Delete
    7. அதைவேற ஏஞ்சாமி ஞாபகப்படுத்துறே..!

      நான் மெயின் கதையிலயே பாத்துக்கிறேன்.!

      Delete
  40. தேசங்களால் வேறுபட்டாலும் காமிக்ஸ் நேசங்களால் ஒன்று பட்டநம் பிரார்த்தனைகள் மிகச்சிறந்தநற்பலனை நம் அன்புக்குரியவர்களுக்கு தந்து அவர்கள் நலம்பெற்று மீண்டுவரும் நற்செய்தி விரைவில் கிடைக்கும்🙏
    இலங்கையிலிருந்து சர்மா

    ReplyDelete
  41. பதிவு பார்த்ததும் என்னால் இயன்ற தொகை அனுப்பிவிட்டேன் நண்பா!
    ஆசிரியர் பதிவில் குறிப்பிட்ட வங்கி கணக்கில்.

    ReplyDelete
  42. மறுபடியும் "என் பெயர் டைகர்"
    கடேசி பாகம் மட்டும் படிக்க போறேன்!!!
    ஹேப்பி வீக் எண்ட்!!!

    ReplyDelete
    Replies

    1. ஜெரோனீமோ லைஃப்,
      ஓகே கார்ல் சூட் அவுட்,
      இது 2லும் டைகரின் பங்கீடு,
      என ஏகப்பட்ட இணைப்புகள் இன்ட்ரஸ்ட் ஆக யாரும் க்ளைமாக்ஸ்ல.... என்சாய் மிதுனரே!

      எனக்கு டூம்ஸ்டோன்ல ஆரம்ப பக்கங்கள் தான் பேவரைட்! பலமுறை திருப்பி திருப்பி பார்த்து இருக்கேன்....!!!

      Delete
    2. ///எனக்கு டூம்ஸ்டோன்ல ஆரம்ப பக்கங்கள் தான் பேவரைட்! பலமுறை திருப்பி திருப்பி பார்த்து இருக்கேன்....!!!///

      யெஸ் நானும் பலமுறை முதல் 2 பாகங்களை மட்டும் படித்திருக்கிறேன்!

      Delete
    3. மொத்தத் அட்டகாச கதை. .. .. சிலரை திருப்தி படுத்தாதது ஆச்சரியமே... .
      வலுவான நாயகர படுக்கப் போட்டு வலுவாக ரவுண்டு வரும் கதை

      Delete






    4. எ.பெ.டைகர் அட்டகாசமான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கதை.
      என்னிடமிருப்பது B/W என்பதால் சித்திரங்களை எண்ணி, எண்ணி வியந்த கதை.டைகருக்கு சம்திங் ஸ்பெஷலான கதை.

      Delete
  43. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இருவரும் விரைவில் பூரண நலமடைந்து மீண்டு வர எனது மனமார்ந்த வேண்டுதல்களும்...!

    ReplyDelete
  44. Surprise of surprises, தரம் தாழ்ந்து போனால், வாசகர்களை இழந்த, மூடும் நிலையில் உள்ள பல தமிழ் பத்திரிகைகள் பற்றிய பேஸ்புக் விவாதத்தில், நான் கண்ட சிறப்பு பதிவு.

    /// கோகுலம், அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் மூடினால் தான் வருத்தம். இவர்களுக்கு அல்ல!
    Thiruchendurai Ramamoorthy Sankar///
    படித்தவுடன் எனக்கு பெருமை இவ்வளவு, அவ்வளவு இல்லை, அதனை சகோக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியொரு சமாச்சாரத்தையெல்லாம் இங்கே நினைச்சுக்கூட பார்க்கமுடியாது சகோ!

      Delete
    2. எஸ். நாளுக்கு நாள் நம் தரம் உயர்ந்தே உள்ளது. நல்ல தரத்திற்கான விவாதத்தில் அந்த நபர் நம் காமிக்ஸை மேற்கோள் காட்டி இருந்தார்.

      Delete
    3. தரமான மொழி பெயர்ப்பும்... அச்சடிப்பும் அசரடிக்குதே

      Delete
    4. // நாளுக்கு நாள் நம் தரம் உயர்ந்தே உள்ளது. // உண்மை உண்மை

      Delete
    5. ஆனாலும்சோத்துல கிடக்கும் கல்லூரி செங்கல்லால் பாக்கும் நபர்களும் அசந்தா அடிக்கப் பாப்பதும் அதிசயமே

      Delete
  45. //கல்லூரி//கல்ல

    ReplyDelete
  46. வரும் ஒன்றாம் தேதி முதல் முழு ஊரங்கு அமுல்படுத்த நேரிடலாம் என்ற வதந்தி பரவலாக பரவி கொண்டு இருந்தாலும் அது உண்மையாகவே இருக்கும் வாய்ப்பு பாதி சதவீதத்திற்கும் அதிகமாகவே இருப்பதால் அச்சமயம் காமிக்ஸ் காதலர்கள் அனைவரும் சிறிதளவாது மனச்சோர்வின்றி நாட்களை கடத்த அடுத்த மாத இதழ்கள் தயாராக இருப்பின் ஒன்றாம் தேதிற்கு முன் விரைவில் அனுப்ப ஆசிரியர் முன்வந்தால் புனித தேவன் மானிடோ நம்மை அனைவரையும் ஆசிர்வதிப்பார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா..!

    ReplyDelete
    Replies
    1. இது வர வர பழகிவிட்டது பரணி சார். Only consolation is, instead of COVID devouring us, we are devouring lovely comic books.

      Delete
    2. வாவ்...முற்றுப்புள்ளியே வைக்காமல் எவ்ளோ பெரிய வாக்கியம்..!

      சூப்பரப்பு.!

      Delete
    3. அடுத்த மாதம் எதிர்பார்ப்பதிகம்

      Delete
  47. இன்றைய புக்கிங் க /நி லவரம் :

    அஹ்ஹாங்...அது வந்து...நான் சொல்ல வர்றது என்னன்னா ...ஐ மீன் ...அதாச்சும்.....இன்னும் நேற்றைய நம்பரே தான் !

    ReplyDelete
    Replies
    1. ஜெய் வடக்குப்பட்டி ராமசாமி!!

      Delete
    2. ஆஹா....ராமசாமியின் மகிமையே மஹிமை :

      MA Senthil, கோவை - 2 புக்ஸ்

      Total : 33

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஆஹா!! வரலாற்றிலேயே முதன்முறையாக வடக்குபட்டி ராமசாமி ராசியான ஆளாகியிருப்பதை அறிந்தால் நம்ம கவுண்டர் கூட 'அடங்கொன்னியா'னு சந்தோசப்படுவார்! :D

      அப்புறம் நண்பர் MA Senthilன் பெயரைப் பார்த்தால் எனக்கு Ma Daltonன் நினைவு வருகிறது!!

      சீக்கிரமே அந்தக் கதையை மறுப்பதிப்பு போடுங்க சார்! செம ரணகளமான கதை அது!!

      Delete
    5. 90 ல் 300 கணக்குபடி சராசரியா 3 நாட்களில் 10 புத்தகங்கள் புக்கிங் செய்யப்பட வேண்டும்.

      ஜூன் 18 ல் தொடங்கிய பயணம்.. இன்றோடு 9 நாட்கள், எனவே புக்கிங் எண்ணிக்கை நம்பிக்கை அளிக்கிறது..

      நன்றி..

      Delete
    6. The more, the merrier... நீர் மோர் ஆகாமல் இருந்தால் சரி.

      Delete
    7. இப்படி தோற்க்கின் எப்படை வெல்லும்

      Delete
  48. நமது காமிக்ஸ் _மொழி பெயர்ப்பாளரும்,
    நமது அருமை காமிக்ஸ் நண்பரும் - பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்...

    ReplyDelete
  49. அப்புறம்.. வடக்குப்பட்டி ராமசாமியின் மகிமையால் மதிமயங்கிப்போய் இன்னிக்கு பதிவுக்கிழமை'ன்றதை மறந்துடாதீங்க எடிட்டர் சார்! :D

    நாங்கள் இரவு உணவை கபளீகரம் பண்ணி முடிச்சவுடனே டான்னு பதிவு வந்து நிக்கணும் - பார்த்துக்கோங்க!

    ReplyDelete
    Replies
    1. ராமசாமியின் மகிமையை குறைத்து எடை போட்டு விட்ட பூனையாரே - ஐந்து நிமிடங்களில் பாரீர் !

      Delete
  50. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  51. நண்பரும், மொழிபெயர்ப்பாளரும் பூரண குணமடைய இறைவனை இறைஞ்சுகின்றேன்.

    ReplyDelete