Saturday, June 27, 2020

ஒரு குக்கரும், ஒரு விசிலும் !

நண்பர்களே,

உஷார் : ஒரு LIC கட்டிடம் காத்துள்ளது !! 

வணக்கம். பெருசாய் யோசனைகளோ, திட்டமிடல்களோ ஒருபோதும் இருந்ததில்லை ; சனிக்கிழமை மாலையானால் பேப்பரும், பேனாவையுமோ – லாப்டாப்பையோ எடுத்துக் கொண்டு சப்பணமிடும் போது தான் என்ன எழுதுவதென்ற யோசனையே துவங்கிடும் ! And ‘இந்த வாரம் இதைப் பற்றித் தான் மொக்கை போடப் போகிறோம்‘ என்பதைத் தீர்மானித்த பின்னே, மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்தாக்கி ‘லொஜக்‘ என Publish பட்டனை அமுக்கி விடுவேன் ! ஆனால் – முதன் முறையாக... இல்லே, இல்லே... கடந்த நாலைந்து ஆண்டுகளில் முதன் முறையாக இந்தப் பதிவை செவ்வாய் காலையே எழுதத் தொடங்கினேன் – தொடர்ந்த 4 நாட்களாய் இதனை மனதில் அசைபோட்டபடிக்கே இருந்த பிற்பாடு இன்றைக்கு இதனைப் பகிர்ந்திடல் ஓ.கே. தான் என்று தோன்றிய பின்னே பதிந்துள்ளேன் ! ”பில்டப்பெல்லாம் பலமாய் உள்ளதே – புதுசாய் இன்னொரு நாலாயிரத்துக்கு என்ன குண்டைப் போடப் போகிறானோ?” என்ற பயம் மெதுவாய் துளிர் விடுகிறதா? No worries folks – இது நமது தற்போதைய நிலவரம் + காத்திருக்கும் அடுத்த சில மாதங்கள் சார்ந்ததொரு மனம் திறப்பு மாத்திரமே ! So உங்கள் பர்ஸ்களுக்குப் பாதகமில்லை – இப்போதைக்காவது!

இதோ இந்தப் பதிவை எழுதத் தொடங்கும் முந்தைய மாலையில் தான் மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது & maybe எங்கள் மாவட்டம் உள்பட மேலும் சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் இது தொடரும் என்ற வதந்திகளும் சரளமாய்ச் சுற்றி வருகின்றன ! இந்தப் பதிவை நீங்கள் படிக்கும் வேளைக்கு அவை வெறும் வதந்திகள் தானா ? என்ற தெளிவு பிறந்திருக்கலாம் தான்!எது எப்படியோ, கொரோனா எனும் சுனாமி தனது தடத்தில் தமிழகத்தைக் காலுக்குள் போட்டு மிதித்து வரும் கொடுமை அத்தனை சீக்கிரத்துக்கு முடிவுக்கு வராது என்பது மட்டும் தெளிவாய்த் தெரிகிறது ! And மதயானையின் காலடியில் சிக்கிய தோங்காய் போல ஆங்காங்கே பிழைப்புகளும் தெறித்துப் போய் வரும் சூழலில் நாம் எங்கே நிற்கிறோம் ? என்ற கேள்வியை என்னை நானே விடாப்பிடியாய்க் கேட்டு வருகிறேன் – கடந்த 90+ நாட்களாய் ! பொதுவாய் அவரவருக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் – சற்றே ரிலாக்ஸ் செய்திட நீங்கள் இங்கு எட்டிப் பார்ப்பதில் no secrets ! ஏதேனும் காரணங்களால் நான் டல்லடித்துப் போய்க் கிடந்தாலுமே, அதனை எனது எழுத்துக்களில் பெரிதாய்ப் பிரதிபலிக்காது பார்த்துக் கொள்ள விழைவதுண்டு ! So ஒருவிதமான ‘all is well’ என்ற சோப்புக் குமிழிக்குள்ளேயே இங்கே நாம் ஒட்டுமொத்தமாய் பயணிக்கும் போது, என் மனசுமே அதனை நிஜமென நம்பி, தேறிக் கொள்ளும் கூத்துக்களும் அரங்கேறியுள்ளன என்பதால் the power of positivity மீது எனக்கொரு அசைக்க இயலா நம்பிக்கை என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

வரலாறு கண்டிரா இன்றைய பேரழிவின் முன்னே நமது சோப்புக் குமிழிகளின் வலு தான் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க வல்லது ? என்ற சீரிய ஆராய்ச்சியை மல்லாக்கப் படுத்து ; குப்புறப் படுத்து என நம்ம பஞ்சுமுட்டாய்த் தாடி லியனார்டோ தாத்தாவின் பாணியில் சமீபமாய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன் ! மண்டைக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள் குறுக்கும், நெடுக்குமாய் சுழன்றடித்துக் கொண்டிருக்க, எங்கிருந்து ஆரம்பிக்க என்று தடுமாறுகிறது ! So ‘“கேள்வியும் - நானே; பதிலும் – நானே” பாணிக்கு சித்தே மாறிக் கொள்கிறேனே?!

1. இந்த நொடியில் நாம் எங்கிருக்கிறோம்? நிலவரம் தான் என்ன ?

- புளுகாமல் இதற்குப் பதில் சொல்வதாயின் – ஆர்ச்சியின் ‘கோட்டையைக் கடன் வாங்காமலே ; நம்ம சட்டித் தலையனின் கோணங்கித்தனங்கள் இல்லாமலேயுமே காலத்தில் ஏறக்குறைய 8 வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம் என்பேன் ! 2012-ல் நமது “கம்பேக் ஸ்பெஷல்” வெளியான நாட்களில் வெளியே ‘ஹி...ஹி....ஹி‘ என்று பல்லைக் காட்டிக் கொண்டு உலா வந்தாலுமே ‘தெய்வமே... இந்தத் துவக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா ?‘ என்ற கேள்வி உள்ளே ஊற்றடித்துக் கொண்டிருந்தது ! தொடர்ந்திட்ட நாட்களில், வாரங்களில், மாதங்களில், நமது பயணம் டாப் கியரைத் தொட்ட கதையெல்லாம் நமக்குத் தெரியும் ! ஆனால் அந்த  100 மாதங்களின் உழைப்பு – கொரோனாவின் (இது வரையிலான) 100 நாள் தாண்டவத்தின் புண்ணியத்தில் சரிந்திடும் சீட்டுக்கட்டுக் கோபுரம் போல போயிண்டே... its gone ! என்றாகிப் போன உணர்வு இன்றைக்கு !

Of course – அசாத்தியமானதொரு அரணாய் நமது சந்தா நண்பர்கள் இந்த நொடியில் நம்மைக் காத்து வருகிறார்கள் ! அவர்களது சந்தாக்களின் பாதுகாப்பானது மட்டும் நம்மை இன்று அரவணைக்காதிருப்பின் – ”கோவணத்தோடு அலாஸ்காவில் சுற்றித் திரிவது எப்படி?” என்ற புக் போட மட்டுமே நமக்குச் சாத்தியமாகியிருக்கும் ! எட்டுத் திக்குகளிலும் நீங்கள் பரவிக் கிடக்கிறீர்கள் என்பது தெரியும் folks ; அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையிலும் உங்கள் சந்தாக் கால்தடங்கள் பதிந்திருப்பது கடந்த 8+ ஆண்டுகளின் பரிச்சயமே ! ஒரேயொருவாட்டி நீங்கள் ஒட்டுமொத்தமாய் கிழக்கை நோக்கி நிற்கும் பட்சத்தில் – விழுந்து நமஸ்காரம் செய்து கொள்ள வசதியாக இருந்திடும் ! சத்தியமாய் இதுவொரு over the top ரியாக்ஷன் அல்ல ! மே துவக்கம் முதலாய் அலுவலகமும், நமது வெளியீட்டுப் படலமும், மறுதுவக்கம் கண்ட நாளிலிருந்து ஒவ்வொரு பத்து ரூபாய் நோட்டுகளிலுமே புது அர்த்தம் காண்பது போலுள்ளது ! பாதிக்கு மேலான நமது ஏஜெண்ட்கள் ‘தொடர்ந்து எல்லைக்கு அப்பால்‘ தொடர்ச்சியாய் இருந்து வர – அவர்களிடமிருந்து ஆர்டர்களும் நஹி ; வசூல்களும் zilch ! மீதமிருக்கும் முகவர்கள் கண்ணியமாய் நமக்குத் தோள் தந்து வருவதால் பேப்பர் கொள்முதல்கள்; பைண்டிங் கூலிகள் ; etc. என்ற செலவுகளை ஒன்றுக்குப் பாதியாகவாவது சரிக்கட்ட முடிகிறது ! இங்கே அவர்களுக்கும் ஒரு உளமார்ந்த கைகூப்பல் அவசியமாகிடுகிறது என்பேன் ! இந்தச் சிரம நாட்களிலுமே இயன்றமட்டிற்குப் பம்பரமாய்ச் சுழன்று வரும் அவர்கள் நம்மளவிற்கு வரங்களே ! ஆனால் “அலுவலக நிர்வாகச் செலவினங்கள்” என்றதொரு தலைப்பில் – மாதாமாதம் தலைதூக்கிடும் சம்பளம் ; ஓவர்டைம் ; மின்கட்டணம் ; கூரியர் செலவுகள் இத்யாதி...இத்யாதியென்ற செலவுகளைச் சமாளிக்க – சத்தியமாய் நாக்குத் தொங்கிப் போய் விடுகிறது - கடந்த 2 மாதங்களாய் ! And அதற்கான காரணம் - மாயமாகிப் போயுள்ள ஆன்லைன் சேல்ஸ் தான் ! 

I've probably said this before - but worth a repeat again !! நமது வண்டி ஓடுவது நாலு கால்களின் தாக்கான்களோடு guys! 
  • கால் # 1 : உங்களின் சந்தாக்கள் ! 
  • கால் # 2 : நமது முகவர்கள் வாயிலான விற்பனைகள் ! 
  • கால் # 3 : நமது புத்தக விழா விற்பனைகள் !
  • கால் # 4 : ஆன்லைன் sales ! 
இவற்றுள் கால் # 1 ஷங்கர் சிமெண்டின் உறுதியோடும், செட்டிநாடு சிமெண்டின் ஸ்திரத்தன்மையோடும் இருப்பதால் no worries - at least for now ! இரண்டாம் காலில் ஒரு பாதியினை கொரோனா அரித்திருப்பதால் அங்கே பழைய நியூஸ்பேப்பர்களைச் சுருட்டி வைத்து முட்டுக் கொடுத்திருக்கிறோம் ! புத்தக விழாக் காலான # 3 ஒட்டுமொத்தமாய் பணாலாகிப் போய்க் கிடப்பதில் இரகசியங்கள் ஏது ? நெய்வேலி – கோவை – ஈரோடு – மதுரை & திண்டுக்கல் என்ற circuit ஜுலை முதலாய்த் துவக்கம் கண்டு அக்டோபர் வரையிலும் ஓடி, குறைந்தபட்சமாய் ஒரு கௌரவமான தொகையினைக் கண்ணில் காட்டிடுவது வழக்கம் ! And இந்தத் தொகையே உங்களின் சந்தா வசூல்களை எதிர்பார்த்திடாது – மறு வருடத்துக் கதைகள் கொள்முதல்களுக்கு – துவக்கம் தர உதவி வந்த சங்கதிகள் ! போன வருடம் இந்நேரத்துக்கெல்லாம் போனெல்லியின் கதைப் பட்டியல் இறுதியாகி, ஆகஸ்ட்வாக்கில் அட்வான்ஸ் தொகைளை ஓரளவுக்கு அனுப்பி, டிஜிட்டல் கோப்புகளின் ஒரு பாதியைத் தருவித்திருந்தோம்! ஆனால் இந்த தபா கால் # 3 is gone எனும் போது, கதைத் தேடல்களுக்குள் புகுந்திடவே மனம் சண்டித்தனம் செய்து வருகிறது! And equally distressing – ஆன்லைன் விற்பனைகள் எனும் கால் # 4 கூட கிட்டத்தட்ட காணாது போய் விட்டதென்பதே!

மார்ச் இறுதி முதலாகவே நமது ஆன்லைன் ஆர்டர் தளங்கள் கஞ்சன் வீட்டுப் பந்தி போல காற்றாடவே செய்கின்றன ! தினப்படி நடந்து வந்த இந்த விற்பனைகளே நமது பணியாட்களின் சம்பளங்களுக்கு ; கூரியர் செலவுகளுக்கு ; ஆர்ட்டிஸ்ட் சம்பளங்களுக்கு ; மொழிபெயர்ப்புச் சன்மானங்களுக்கு ; நிர்வாகச் செலவுகளுக்குச் சமாளிக்கும் திறன் தந்து வந்தவை ! ஆனால் “லாக் டவுண் ; கூரியர்கள் ரத்து“ என்ற சூழலில் சுணக்கம் கண்ட ஆன்லைன் விற்பனைகள், இன்று ஒரேயடியாய்ப் படுத்த படுக்கையாகி விட்டிருப்பது விழி பிதுங்கச் செய்யும் சிக்கலாய் உருவெடுத்துள்ளது ! இதன் பொருட்டு யாரையும் நோவதில் பலனில்லை என்பது புத்திக்குத் தெரிகிறது ! இன்றைய சூழலில் ‘பொம்மை புக்குகள்‘ முக்கியத்துவப் படிகளில் உசரமானதொரு இடத்தைத் தக்க வைத்திடும் ஆற்றல் வாய்ந்தவையல்ல என்பதை ஏற்றுக் கொள்ளும் முதல் ஆள் நானே ! So கொஞ்சமே கொஞ்சமாய் சகஜ நிலைகள் திரும்பும் வரையிலாவது இந்தக் கால் # 4 தள்ளாட்டத்தோடே தொடர்ந்திடும் என்பது யதார்த்தம் !

ஆக ஒரேயொரு கால் மட்டும் திருமலை நாயக்கர் மஹாலின் தூணாட்டம் கம்பீரமாய் நின்றிட; இன்னொரு அரைவாசிக் காலைக் கொண்டு சரிக்கட்டியபடியே, ஒண்ணரைக் கால்களோடு  ‘டிங்கடி... டிங்கடி‘ என்று நொண்டியடித்து வருகிறோம் ! வார்னிஷ் பூசா நிஜ நிலவரமிது !

2. சரி... எப்படிச் சமாளித்து வருகிறாயோ அம்பி ?

வருஷா வருஷம் கதைக் கொள்முதல்கள் நவம்பர் to பிப்ரவரி என்ற phase-ல் முற்றுப்புள்ளி கண்டிட வேண்டியவைகள் ! இந்நேரத்துக்குள் ரெகுலர் சந்தாக்கள் மாத்திரமன்றி, ஜம்போவின் சந்தாக்களுக்குமான கதைகளை இறுதி செய்திருப்பேன் ! So realistically speaking – ஆண்டின் பாக்கி 8 மாதங்களுக்குக் கதைகளுக்கோசரம் பணம் புரட்டும் அவசியங்கள் இருக்கக் கூடாது ! அதாவது – குரங்கு வேலைகளில் நாட்டமில்லாவொரு நார்மலான ஆசாமி எடிட்டராக இருக்கும் பட்சத்தில்! ஆனால் இங்கே தான் “நார்மல்” என்றால் வீசம்படி என்னவெனக் கேட்கும் ஆந்தை விழியன் அல்லவா எடிட்டர் குல்லாயை மாட்டிக் கிடக்கின்றான் ? கண்ணில் தென்படும் புதுப் படைப்புகளே; சமீபமாய்ச் சாதித்து வரும் புதுப் பதிப்பகங்களை பார்த்த நொடியே தலைக்குள் ஒரு வேதாளம் கொட்டகை போட்டு அமர்ந்து விடுவதால் – எப்போது வெளியிடலாம்?‘ என்ற புரிதல் இல்லாமலே கூட கதைகளை வாங்கி அடுக்கிடும் “கதையோமேனியா” தலைவிரித்தாடுவது சமீப ஆண்டுகளின் வாடிக்கை! இந்த நொடியில் என் கைவசமுள்ள பல ஜானர் one-shot-களை ; மினி தொடர்களைக் கொண்டு ஜம்போ சீஸன் 6 வரைக்கும் வண்டியினை ‘ஜிலோ‘வென்று ஓட்ட முடியும் தான் ! அட, இந்த லாக்டவுணின் ஏப்ரலில் கூட ஒரு அட்டகாச கௌபாய் ஒன்-ஷாட்டிற்குக் கான்டிராக்ட் போட்டு வாங்கி வைத்திருக்கும் ஒரே பக்கி இந்த சிவகாசி பேமானியாகத் தானிருக்க முடியும் ! So நள்ளிரவில் வயிறு பிறாண்டும் போது பிரிட்ஜைத் திறந்து உருட்டும் பாணியில் – ஆண்டின் நடுவாக்குகளிலும் தொடரும் எனது ஷாப்பிங் குடாக்குத்தனங்களுக்குப் பயன்படுமே என்ற நோக்கில் ஜம்போவின் சந்தாத் தொகைகளை மட்டும் வைப்பு நிதியாக்கிப் பத்திரப்படுத்தி வைப்பேன் ! அந்த டெப்பசிட் தொகையே தற்போது மானம் காத்து வருகிறது ! ஆனால் நம் நேரமோ என்னவோ – ஜம்போவின் சீஸன் 3-க்கு 330+ சந்தாக்களே தேறியுள்ளன ! ரெகுலர் சந்தாதாரர்கள் அனைவருமே ஜம்போவின் ஜோதியில் ஐக்கியமாகியிருக்கும் பட்சங்களில் இன்னும் கொஞ்சம் இலகுவாகியிருக்கும் நம் பாடு ! ஆனால் இந்தமட்டிற்குத் தேறியதே இப்போதைய சூழலில் பெரிய சமாச்சாரமாய்த் தென்படுவதால் no complaints!

3. ஆக இரத்தப் படலம் மறுபதிப்பு தரைதட்டிப் போன கல்லாவைத் தேற்றுவதற்கோசரம் தானாக்கும் ?

For sure not ! இந்த ப்ராஜெக்டின் எதிர்காலம் செப்டம்பர் 15-க்கு முன்பாய்த் தெளிவாகாது எனும் போது இதன் பொருட்டு நண்பர்கள் இன்று அனுப்பி வரும் தொகைகளை ஒவ்வொரு லட்சமாய்ச் சேர்ந்த நொடியில் fixed deposit ஆகப் போட்டு வைப்பதில் முதல் நாளிலிருந்தே தெளிவாக உள்ளேன் ! ‘இன்னிக்கு பத்தாயிரம் தேறுச்சா – கூரியருக்கு குடுத்திடு ; இருபதாயிரம் வசூலா – சம்பளத்தைப் போட்டுப்புடு !‘ என்று இந்தச் சிரம நாட்களைச் சுலபமாக்கிக் கொள்ளும் சபலமெல்லாம் நிச்சயமாய் என்னை ஆட்டிப் பார்க்கவில்லை – simply becos வைரஸின் தாண்டவம் மேற்கொண்டும் மோசமாகி இந்த 'இ.ப' முயற்சியைக் கைவிடும் மாதிரியானதொரு சூழல் ஒருக்கால் எழும் பட்சத்தில் – அவரவரது பணங்களை அந்த நொடியே வாபஸ் செய்திட வேண்டியது நம் தலையாய கடமையல்லவா ? அரும்பாடுபட்டு வளர்த்திருக்கும் நம்பிக்கையை நாசம் செய்வது முறையாகாது என்பதால், இன்றைக்குத் தின்று ஏப்பம் விட்டுவிட்டு, அன்றைக்கு திருட்டு முழி முழிக்க சத்தியமாய்த் திராணியில்லை !  So முழுசாய் 300 என்ற இலக்கு எட்டப்படும் வரையிலும் இந்தப் பணங்களில் தம்புடி கூட நம் இன்றைய செலவுகளின் பொருட்டு ‘கோவிந்தா‘ போடப்படாது என்று தைரியமாக நம்பலாம்‘ ! So இந்த நொடியின் இக்கட்டுகளுக்கு "இ.ப' ஒரு மருந்தென்ற டுபுக்கு நினைப்பெல்லாம் நஹி & இந்த நொடியில் இது வரைக்குமான முன்பதிவுத் தொகைகள் ஒற்றை ரூபாய் கூடக் குறையாது pretty much safe in the Bank ! And in any case, இது வரையிலான முன்பதிவு வேகங்கள் உசைன் போல்ட்டுக்கு சவால் விடுபவைகளாய் இல்லை எனும் போது, எனக்குள் சபலங்கள் துளிர்க்கவும் வாய்ப்புகள் close to zero ! 

4. சரி... குறுகிய எதிர்காலத்துக்குத் திட்டங்கள் என்ன ?

இதோ- ஜுலை முதலான ரெகுலர் இதழ்கள் + ஜம்போ சீஸன் 3-ன் மீத இதழ்களைக் கணக்கிட்டால் இன்னமும் காத்திருப்பவை 32 இதழ்கள் ! மே மாதத்திலும் சரி, ஜுனிலும் சரி, சந்தாப் பிரதிகள் தவிர்த்து ஏஜெண்டுகளிடமும், மிகக் குறைச்சலான ஆன்லைன் வாசகர்களிடமும் விற்றிடச் சாத்தியமாகியுள்ளது - வெளியே சொல்லிக்கொள்ள இயலா ஒரு சிறு எண்ணிக்கையே ! So இந்த 2 மாதங்களில் மட்டுமே கிட்டங்கிக் கையிருப்பு ‘டமக்‘ கென்று எகிறியுள்ளதால் ஜுலை முதலாகவே நாம் அச்சிடப் போகும் பிரதிகளின் எண்ணிக்கையையும் அதே ‘டமக்‘ ரேஞ்சில் குறைப்பதாக உள்ளோம் ! குறைக்கப்படும் இந்த பிரிண்ட் ரன்னில் – புதுசாய் ஒரு costing போட்டுப் பார்த்தால் ட்ரௌசர் கழன்று போகும் என்பது புரிகிறது தான் ; ஆனால் அசாதாரணமானதொரு சூழலில் பற்களை இறுகக் கடித்துக் கொள்வதைத் தவிர்த்து வேறு வழிகளில்லை என்பதால் - To Beelzebub with numbers ; we plan to just ride this phase through ! பிரிண்ட்-ரன்னைக் குறைப்பது மட்டுமன்றி, ரெகுலர் தடத்து இதழ்களை இந்த டிசம்பருக்குள் பூர்த்தி செய்ய விழையாது – சந்தா நண்பர்களின் சம்மதங்களோடு, இவற்றை மார்ச் 2021 வரையிலும் நீட்டிக்கவும் எண்ணியுள்ளேன் ! அள்ளி அடித்து மாதந்தோறும் 4 புக் ; 5 புக் என மந்தம் விரவிய மார்க்கெட்டில் வெளியிட்டு, எஞ்சியிருக்கும் நமது முகவர்களையும் சிரமத்துக்குள்ளாக்கிய புண்ணியம் வேண்டாமே என்று தோன்றுவதால் இந்த எண்ணம் ! So ரெகுலர் சந்தா மார்ச் 2021-ல் நிறைவு கண்டிடும் ! Sorry guys – இந்த downscaling தவிர்க்க இயலாக் கட்டாயமாகி நிற்கின்றது ; மூலையில் சிக்கிய பெருச்சாளி நான் இப்போதைக்கு ! 

But இந்த யுக்திகளால் சிக்கல்கள் மட்டுப்பட்டு விட்டன என்றாகாது, becos இந்தத் தீர்மானத்திற்கு இன்னொரு சிரமப் பரிமாணமும் இல்லாதில்லை ! ப்ரிண்ட் ரன்னைக் குறைத்துக் கொள்ளலாம் தான் ; வெளியீடுகளை மேற்கொண்டு 3 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் தான் ; நம்மளவிற்கு ஈரத் துணிகளை போஜனச் செரிமானப் பகுதிகளைச் சுற்றிக் கட்டிக் கொள்ளவும் செய்யலாம் தான் ; ஆனால் டிசம்பரில் முற்றுப் பெற வேண்டிய இதழ்களை மேற்கொண்டு 3 மாதங்களுக்கு நீட்டிக்கும் போது – 3 கூடுதல் கூரியர் பில்களும் 'திடும் திடுமென்று' போட்டுத் தாக்கும் தானே !? ஏற்கனவே போன மாதம் முதலாய்க் கட்டணங்களைக் கூரியர் நிறுவனங்கள் ஏற்றியுள்ள சூழலில், an additional 3 months கூரியர் கட்டணம் + ரிஜிஸ்டர் பார்சல் + ஏர்மெயில் கட்டணம் + அட்டைப் பெட்டிகள் எனில் – தோராயமாய் ரூ.85,000 பழுத்து விடும் ! தொடரும் மாதங்களில், நிலவரங்கள் சகஜத்தை நோக்கித் திரும்பிடும் பட்சங்களில், இந்தக் கூடுதல் தொகையினை யாசகம் கோராது சமாளித்து விட முடியும் தான் ! ஆனால் ஒரு துரதிர்ஷ்டச் சூழலில் நோயின் தாக்கங்கள் மட்டுப் பெறாது போயின் – tough ! So “மேற்கொண்டு நூறு ரூபாய் அனுப்புங்களேன்; நூற்றைம்பது அனுப்புங்களேன் ப்ளீஸ்” என்று உங்களை நச்சரிப்பதற்குப் பதிலாய் கலர் இதழில் ஒன்றான ரிங்கோ + b&w இதழான "தோட்டா தேசம்"  மட்டும் இம்முறை கழற்றி விடலாமா ? என்பதே எனது கோரிக்கை ! பெருசாய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிரா இந்த இரு இதழ்களையும் பின்னர் பார்த்துக்கொள்ள நீ்ங்கள் இசைவு சொல்லும் பட்சத்தில், இந்தக் கூடுதல் கூரியர் பளுவினைச் சமாளித்து விட முடியும் ! What say folks ? (Today's question # 1இதனில் சம்மதமோ, சங்கடமோ - தயங்காது இங்கேயே பதிவிடக் கோருகிறேன் ! இங்கொரு விதமாகவும், அப்பாலிக்கா FB-ல் அல்லது க்ரூப்களில் வேறொரு விதமாகவோ எழுதுவதால் பலன் இராதே ? 

5. புதுச் சந்தா பற்றிய thoughts ?

ஒற்றை வரியில் சொல்வதாயின் – அட்டவணையே ரெடி !

For sure – தற்போதைய ஆடம்பரங்களோ, ஜிகினா வேலைகளோ அடுத்த சந்தாவினில் இருந்திடாது ! And விற்பனையில் தள்ளாட்டம் காணா தாட்டியவான்கள் மட்டுமே 2021-ல் வலம் வருவர் ! விளிம்பில் நின்று வரும் நாயக / நாயகியரோ ; சென்டிமென்டின் காரணமாய்த் துண்டு போட்டு வரும் ஹீரோ / ஹீரோயின்களோ ; கிட்டங்கி காதலர்களோ - காத்திருக்கும் 2021-ன் ஒன்பது மாதச் சந்தாவினில் இடம் காண மாட்டர் ! God willing, அடுத்தாண்டிற்குள் நோயின் தீவிரம் கட்டுக்குள் வந்திருந்தாலுமே, நிறைய ஜீவனங்கள் back to normal திரும்பிடுவது அத்தனை சுலபமல்ல என்பதில் ஏது சந்தேகம் ? So தரைதட்டிக் கிடக்கக் கூடிய பிழைப்புகள் திரும்பவும் உரம் பெறும் வரைக்கும், உங்கள் சிரமங்களுக்கு நமது சந்தாக்கள் ஒரு கூடுதல் காரணமாகிடாது ! 

அதே சமயம் - புத்தக விழாக்கள் ; கடைகளில் விற்பனைகள் போன்ற சமாச்சாரங்கள் ஓரளவுக்கேனும் சகஜத்துக்குத் திரும்பிட வேண்டியிருக்கும், நமது விலைகள் அபத்தமாகிப் போகாதிருக்க !! "சந்தா 550 & பாக்கி விற்பனை மார்க்கங்கள் எல்லாம் சேர்த்தே இன்னுமொரு  சன்ன எண்ணிக்கையே மொத்த விற்பனையும்" என்பதான சூழல் அடுத்த ஆண்டிலும் spill over ஆகின, கையெழுத்துப் பத்திரிகை ரேஞ்சுக்குத் தள்ளப்பட்டிருப்போம் & அத்தகையதொரு சூழலில் வேறு வழியே இன்றி நடைமுறைக்கு வந்தாக வேண்டிய விலைகளை நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது ! Would be a nightmare for sure !!

கடந்த 8 ஆண்டுகளாய் கதைகளைத் திட்டமிட்டு ; விலைகளைத் திட்டமிட்டு, பக்காவாய் ஒரு சந்தாத் தொகையை அறிவிப்பதெல்லாமே – குறைந்தபட்சமாய் 500 to 550 சந்தாக்களாவது தேறிடும் என்ற திட நம்பிக்கையில் ! In fact நமது ஒட்டுமொத்தக் கட்டிடமும் நிற்பதே இந்த நம்பிக்கை எனும் column-களின் மீதே!

ஆனால் -

Post Pandemic (!!!) 2021-ல் “550” என்ற நம்பர் சாத்தியமாகாது போயின் – அது நமது அஸ்திவாரங்களையே அசைத்துப் பார்த்து விடும் என்பது தான் bottom line ! So முன்னெப்போதையும் விட, காத்திருக்கும் 2021-ல் உங்கள் சந்தாக்களின் மதிப்பு,  எகிறிடும்  தங்கத்துக்கு இணையானதாக இருந்திடவுள்ளது ! And இது நாள் வரைக்கும் ஓராண்டின் முழுமைக்கும் நீங்கள் வாசிக்கவிருப்பது எதை ? என்ன விலைக்கு ? என்பதை focus லைட் போட்டு வெளிச்சமிட்டுக் காட்டி ; அப்புறமாய்ச் சந்தா சேகரித்து வந்துள்ளோம் ! ஆனால் இம்முறையோ சந்தாச் சேகரிப்பின் வெற்றியைப் பொறுத்தே இதழ்களின் விலைகள் அமைந்திட இயலும் என்பது மாதிரியானதொரு குடாக்குத்தனமான, கையைப் பிசையும் சூழல் ! So here is what I have in mind :

- "550 to 600 சந்தாக்கள்" எப்படியும் தேறிடும் என்ற நம்பிக்கையில் ரூ.3000 to 3300 சுமாருக்கு ஒரு தொகையினை அறிவித்திடலாம் ! இது ஏப்ரல் 2021 to டிசம்பர் 2021-க்கான திட்டமிடலாக இருந்திடும் ! 

- வழக்கம் போல ”கிச்சடிச் சந்தா” ; ”பச்சடிச் சந்தா” என்றெல்லாம் இந்த ஒருமுறை குழப்பிக்கொள்ளாது  – ஒரு All-in சந்தா & ஒரு அதிகாரியிலாச் சந்தா என்று மட்டுமே திட்டமிட ஆசை ! Maybe just once - கார்ட்டூன்கள் அனைவரது இல்லங்களுக்குள்ளுமே நுழைந்திட அனுமதித்துத் தான் பார்க்கலாமா folks ? (Today's Question  # 2) ..அல்லது கார்ட்டூன்கள் இல்லாத சந்தாவுமே திட்டமிடல் அவசியம் என்பீர்களா ? 

- And வழக்கம் போல அக்டோபர் இறுதியில் அட்டவணையினை வெளிட்டு – மார்ச் 2021 வரையிலும் கால அவகாசம் தந்திட இயலும் – 3 தவணைகளில் சந்தாக்களைச் செலுத்திட! Of course – இதழ்களின் விலைகள் மட்டும் சந்தா சேகரிப்பு நிறைவுறும் வரையிலும் குறிப்பிடப்பட்டிராது !

- So if all goes well – அறிவித்தபடியே இதழ்கள், தாக்குப் பிடிக்கக்கூடிய விலைகளில் வெளியாகும் ! ஆனால்........ஆனால்.......துரதிர்ஷ்டங்கள் ஒரு தொடர்கதையாகிப் போய், சுணக்கங்கள் சந்தாக்களிலும் தொற்றிக் கொள்ளும் பட்சத்தில் – தேறிடும் சந்தா எண்ணிக்கையினை அடிப்படையாகக் கொண்டே இதழ்களின் விலைகளை மறுநிர்ணயம் செய்ய வேண்டி வரும் ! 

- Simply put – '9 மாதங்களுக்கு ஒரு 30 புக்' அறிவிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ; ஆனால் 5 மாத அவகாசத்தினில் சந்தாக்கள் 300 தான் தேறுது ; 350 தான் தேறுது' எனில் – அறிவிக்கப்பட்ட சந்தாத் தொகையில் மாற்றமிராது ; ஆனால் இதழ்களின் individual விலைகளை மேற்கொண்டும் அதிகம் செய்து ; 26 புக்கோ ; 27 புக்கோ மட்டுமே வெளியிடுவது போலிருக்கும் !

- So சிரம நாட்களில் சன்னமாகிப் போகும் லட்டுக்களின் பருமனைப் போல ; சுருங்கிப் போகும் தோசைகளின் விசாலங்களைப் போல – இம்முறை நமது சந்தா நம்பரைப் பொறுத்தே அட்டவணையின் அளவும் அமைந்திடும் ! So இலட்சியம் 600 !! அவகாசம் 5 மாதங்கள் ! சாதித்து விட்டோமெனில் – மாமூலான விலைவாசி உயர்வுகளை ஈடு செய்திடும் அத்தியாவசிய விலையேற்றங்களைத் தாண்டிப் பெரிதாய் யார் கைகளையும் கடிக்காது தான் ! So நம்பிக்கை கொள்வோம் – இத்தனை காலம் நம்மைக் கரை சேர்த்து வந்துள்ள ஆண்டவனும், நீங்களும் இந்தப் புதுப் பயணத்திலும் துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு!

- A NOTE HERE PLEASE : நான் முறையாய்த் தொகையினை அறிவிக்கும் வரையிலும், பணம் அனுப்பிட வேண்டாமே - ப்ளீஸ் ! இந்த இரத்தப் படலம் Project சார்ந்த திட்டமிடலும் செப்டம்பரில் இப்படியோ-அப்படியோ தீர்மானமான பின்பாய் – சற்றே தெளிந்த நிலையில் சகலத்தையும் தீர்மானித்துக் கொள்வோமே ? எதுவுமே ஸ்திரமாய்த் தென்படா இந்த நொடியில்  எவ்வித knee jerk ரியாக்ஷன்களையும் செய்திட வேண்டாமென்று நினைக்கிறேன் ! So நாட்களின் நகர்வுக்கேற்ப நமது தீர்மானங்களும் அமைந்திடட்டுமே ? 

6. சரி, ”இரத்தப் படலம்” பின்னொரு சந்தர்ப்பத்துக்கென தள்ளிச் செல்லும் கட்டாயம் உருவானால் அதனை எவ்விதம் கையாள உத்தேசம்  ?

இங்கொரு விளக்கம் அத்தியாவசியமென்று நினைக்கிறேன் ! இத்தனை காலம் விடாப்பிடியாய் மறுத்து வந்தவன் இந்த நொடியில் அடித்திருக்கும் U-டர்ன் குறித்து சில நண்பர்களுக்கு வருத்தமிருக்கலாம் தான் ; வியப்புமிருக்கலாம் தான் ! In fact அது நிறைய அலசல்களுக்கும், விவாதங்களுக்கும் உட்பட்டதொரு தலைப்பாக இருந்திருப்பின், நிச்சயமாய் ஆச்சர்யமில்லை எனக்கு ! Truth to tell -  அரைத்த மாவையே அரைக்காட்டி ஜென்ம சாபல்யம் காண முடியாதென்று ஒற்றைக் காலில் நின்று வந்த "இ.ப" ஆர்வலர்களின் stand குறித்து எனக்கு உள்ளுக்குள் துளியும் மகிழ்விருக்கவில்லை  ! இவ்வளவு பணமும், உழைப்பும் புதுக் கதைகள் பக்கமாய்த் திரும்பிட சாத்தியமானால் ஏகப்பட்ட மாயாஜாலங்கள் நிகழ்த்திட முடியுமே ; அதைப் புரிந்து கொள்ளாமல் அதே புளிச்ச மாவில் ; அதே புளிச்ச ஊத்தப்பங்களை ஊற்றுவதில் என்ன சுவாரஸ்யம் தான் இருக்க முடியும் ? என்று தான் ஒவ்வொரு முறையுமே எனக்குள் எண்ணங்கள் ஓடும் ! Was no different this time as well ! இந்தப் பொறுப்பினில் 36 ஆண்டுகளைச் செலவிட்ட பின்னே, மாமூலாய் மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடும் வேஷங்களைக் கட்டுவதில் இக்ளியூண்டு த்ரில் கூட எழுவதில்லை இப்போதெல்லாம் ! Of course ரெகுலர் இதழ்களில் உள்ள கமர்ஷியல் கதைகளையும் இதே காரணம் சொல்லி நான் உதறிடும் பட்சத்தில் பிழைப்பு நாறிடும் தான் ! நான் சொல்ல வருவது ஸ்பெஷல் இதழ்கள் பற்றி ! புதுசாய் ; சவாலாய்ச் செய்திட கிட்டும் சந்தர்ப்பங்கள் மட்டுமே உள்ளுக்குள் ஒரு adrenaline rush கொணர்வதை உணர்கிறேன் ! இது தான் எனது நிலைப்பாடாக இருந்தது 10 நாட்களுக்கு முன்பாய் - "இ.ப' ...மறுக்கா போடுப்பா !!" என்ற கச்சேரி துவங்கிய தருணத்திலும் ! எப்போதும் போலவே எனது அசுவாரஸ்யத்தைப் பதிவிட்டு அடுத்த பணிகளுக்குள் புகுந்திட முயன்ற போது தான் சில விஷயங்கள் முகத்தில் அறைந்தார் போல புரிந்தன : நாளொன்றுக்கு சுமார் 30 மின்னஞ்சல்கள் வந்து கிடக்கும் நமது Inbox-ல் இன்றைக்கு நூலான்படைக்கு இடையே மூன்றோ-நாலோ இருந்தாலே பெரும் பாடாய் இருப்பது மனதை அரிப்பது போலொரு உணர்வு ! ஓயாது அலறும் நமது அலுவலக போன்கள் இப்போதெல்லாம் மௌன விரதத்தைக் கடைப்பிடித்து வரத் துவங்கியிருக்க, நம்மவர்களும் அமைதியாய் கம்பியூட்டர் ஸ்க்ரீன்களை வெறித்தபடிக்கே அமர்ந்திருக்க, இந்தியா தோல்வியைத் தழுவக்காத்துள்ள மேட்ச் நடக்கும் ஸ்டேடியம் போல ஆபீஸ் முழுக்க நிசப்தம் ! லாக் டௌன் முடிந்த முதல் மாதத்தில் (மே) கூட இத்தனை மோசமில்லை ; ஆனால் ஜூனின் இந்த 3 வாரங்கள், சாத்தான்குளத்து விசாரணை அதிகாரிகளின் பாணியிலேயே இருந்து வந்துள்ளன ! நான் கேபினுக்குளிருந்து மணியடித்தால் கூட எழுந்து வந்து என்னவெனக் கேட்க நாலைந்து நிமிடங்கள் ஆகிடுமெனும் அளவுக்கு பிசியாக இருந்த நம்மவர்கள் , வேலையின்றி மாலை நாலுக்கும், ஐந்துக்கும் வீடு திரும்புவது ரொம்பவே வயிற்றைக் கலக்கியது ! And சமீப நாட்களாய் ஒவ்வொரு சம்பள தினத்தன்றும் மெலிந்த கவர்களைக் கையில் வாங்கப் பணியாட்கள் தடுமாறுவதைப் பார்த்திடும் போது ஒருவித ஆற்றமாட்டாமை உள்ளுக்குள் வியாபித்து நிற்பதைத் தவிர்க்க இயலவில்லை ! வெகு சமீபத்தில் ஒரு ஆளில்லா நிசப்த மாலையில், ஆபீசில் நான் மட்டுமே இருந்ததொரு தருணத்தில், யதார்த்தத்தை ஒரு பேப்பரில் எழுதி பார்க்க முனைந்தேன் ! அந்த நேரத்தில் நான் பதிவு செய்த விஷயங்கள் இவையே :
  • For sure இம்முறை புதுச் சந்தாக்களை ஜனவரியில் துவக்கிட வாய்ப்பேயில்லை !! 
  • சென்னையில் 2021 ஜனவரிப் புத்தக விழா பற்றிய ஆரூடங்கள் தற்சமயத்துக்கு Nostradamus-க்கே சாத்தியப்படாது !
  • நமது அச்சகத்தில் பெரும்பாலும் அச்சாவது பள்ளி புக்ஸ் ; கைடு ; நோட்புக் ; வினாத் தாள்கள் போன்றவைகளே ! கொரோனாவின் புண்ணியத்தில் பள்ளிகளோ, கல்லூரிகளோ என்றைக்குத் திறக்குமென்பதெல்லாம் யாரது யூகத்திலும் சாத்தியமில்லை என்பதால் அந்த ஆர்டர் ஒட்டு மொத்தமாய்க் காலி ! So காமிக்ஸ் சார்ந்த பணியாட்கள் மட்டுமன்றி, அச்சகப் பிரிவின் பணியாட்களுமே - கொஞ்ச காலத்துக்காவது இந்த சுணக்கங்களின் தாக்கங்களை, மெலிந்த கவர்களோடு உணர்வது தவிர்க்க இயலாத சங்கதி !  
  • இவை எல்லாவற்றிற்கும் சிகரமாய் - அந்த 5 வயதுச் சிறுமியின் புற்று நோய் இன்னல் ! வழக்கமாய் இது போன்ற தருணங்களில் இயன்றதொரு தொகைக்கு  சத்தமின்றி ஒரு செக் எழுதி அனுப்பி விடுவேன் ! ஆனால் அந்த நொடியில் அதன் பொருட்டும் ஒரு நூறு சிந்தனைகள் அவசியமாகிய சூழல் ! 

ஒரே சமயத்தில் – ஒரே நேர்கோட்டில், இந்த நான்குமே சந்தித்திட, இவற்றிற்கு நிவாரணம் கிட்டுமாயின் "இ.ப' விஷயத்தினில் U-டர்ன் மட்டுமல்ல ; இங்கிலீஷில் உள்ள சகல எழுத்துக்களுக்குமே தலா ஒரு டர்ன் அடித்தாலும் தப்பேயில்லை என்றே தோன்றியது ! காற்று வாங்கும் அலுவலகத்தில் ; ஈயோட்டும் அச்சகத்தினில் ; பல்லிளிக்கும் வங்கியிருப்பினில் ; அல்லல்படும் சிறுமிக்கு உதவுவதில் - பவர் ஸ்டார் பெயரை ஜெபித்தால் மாற்றங்கள் உண்டாகுமென்று யாரேனும் சொல்லியிருந்தால்கூட அந்த நொடியில் சம்மதம் சொல்லியிருப்பேன் ! So ‘வேண்டாமே இ.ப.!‘ என்று பிடிவாதம் காட்டியவன் குட்டிக்கரணம் – முட்டிக்கரணம் என சகலத்துக்கும் சிறுகச் சிறுகத் தயாராகி விட்டேன் ! ஆனால் அறிவித்து விட்ட போதிலும் உள்ளுக்குள் ஒருவிதக் குற்ற உணர்வு தோன்றாதில்லை தான் ; and அவை தலைதூக்கும் பொழுதுகளில்  எல்லாமே எனது பின்னூட்டங்களில் ஒருவித அவநம்பிக்கை தொனிப்பதை எனக்கே தவிர்க்க இயலவில்லை தான் ! ரெமோவும், அம்பியும் மாதிரி - என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! ஆனால் சிறுகச் சிறுக பார்வைக்கோணங்கள் மாறிடும் போது, பயணங்களுக்குமே ஒரு புதுப் பரிமாணம் தென்படுவதாய்த் தோன்றியது ! So Project "இ.ப" துவக்கம் கண்டிட, எனது மறுப்புகள் மெதுவாய் விலகியது இந்தப் பின்னணியில் தான் ! 

நண்பர்களின் ஆதங்கங்களுக்கும், ஆர்வங்களுக்கும், இணையாய் ஆர்டர்களும் கிட்டிடும் பட்சத்தில் – great !  ஆனால் இறைவனின் சித்தம் வேறாக இருந்து, இந்த முயற்சியை ஒத்திப் போட அவசியமாயின் நிச்சயமாய் வருத்தமும் கொள்ள மாட்டேன் ! பெருசாய் வேலையில்லாதவொரு தருணத்தினில் at least I gave it my best shot என்ற திருப்தியோடு, நண்பர்களின் பணங்களை வாபஸ் பண்ணிய கையோடு – ‘த்ரிஷா இல்லாங்காட்டி நயன்தாரா‘ என்று 2021 சந்தா அறிவிப்பினில் பிஸியாகிடுவேன் ! So இ.ப. 2020 ஒரு சந்தர்ப்பத்தின் / சந்தர்ப்பவாதத்தின் பிள்ளையே !! Not for a minute am I going to refute it !! உள்ளுக்குள் இதன் பொருட்டு நெருடல்கள் எனக்கிருந்தாலும், அவற்றை விழுங்கிக் கொள்ள அவசியமாக்குகின்றன இன்றைய சிரமச் சூழல்கள் ! எடிட்டராய் எனது அவா வேறாக இருந்தாலும், ஒரு பப்ளிஷராய் எனது தீர்மானம் இன்னொன்றாய் அமைந்திடுவதை இந்த நொடியினில் தவிர்க்க இயலவில்லை ! Moreso because, பெரும் பத்திரிகைக் குழுமங்களில் நூற்றுக்கணக்கான பணியாட்களைக் கழற்றி விடும் நிகழ்வுகளைப் பார்க்கிறேன் தான் ; ஆனால் அத்தகையதொரு துரதிர்ஷ்டம் நமது சிறு குருவிக்கூட்டுக்கு நிகழாதிருக்க ஏதேனுமொரு முயற்சி உதவிடின் - எனது வைராக்கியங்களைக் கடாசிடத் தயக்கம் பறந்து விடுகிறது ! தொலைவிலிருந்தபடியே 'அந்தர் பல்டி' என்ற ரேஞ்சில் கணை வீசும் நண்பர்களுக்கு passion + business என்ற இரண்டுக்கும் மத்தியிலொரு மெல்லிய கோட்டினில் பயணிக்க முனைந்திடுபவனின்,பாடுகள் புரிபடாது போவதில் no surprises ! ஆனால் இந்த ஒற்றைத் தருணத்தில், அந்தக் கணைகளின் பொருட்டு எனது தூக்கங்கள் கெட்டிடப் போவதில்லை - simply becos அதற்கோசரம் ஏற்கனவே வேறு காரணிகள் கணிசமாகவே உள்ளனவே ! So good luck with the barbs guys !!


7. “சரிப்பா… இதுக்குப் பதிலா புது புக்குகளை ; ஸ்பெஷல்களை அறிவிச்சு, அதுக்கு முன்பதிவு பண்ணினா அந்தப் பணத்தில் பணியாட்கள் வூட்டிலே அடுப்புகள் எரியாதா ? அந்தப் பாப்பாவின் வைத்தியச் செலவுக்கும் அந்தப் பணம் பிரயோசனப்படாதா ?

வெரி சிம்பிள் சாரே ! புது இதழ்களின் Special அறிவிப்பெனில் முன்பதிவில் ஒரு 450 பிரதிகள் + ஏஜெண்ட்கள் & ஆன்லைன் மூலமாக ஒரு மரியாதைப்பட்ட நம்பர் & ஈரோடு + சென்னைப் புத்தக விழாக்களின் புண்ணியத்தில் இன்னொரு ஓ.கே.வான நம்பர்  என்று கரைத்து விடலாம் ! So நான் costing போடும் போதே “பிரிண்ட்ரன் : பூசணிக்காய்" என்றில்லாவிடினும், ஒரு தண்ணீர்ப்பழமாகவாவது திட்டமிட்டு ஆரம்பிக்க இயல்வதுண்டு ! ஆனால் இன்றைக்கோ முன்பதிவில் 450 தேறுமா ? என்ற கேள்வி ஒரு பக்கமிருக்க, மீதத்தைப் பற்றிக் கேட்கவே வேணாம் – சுத்தமாய் washout தான் ! ஏற்கனவே  நடப்புச் சந்தாவின் விலை கூடுதலான இதழ்களையே பின்னே..பின்னே என நகற்றி வரும் சூழலில், புதுசாய் ஒரு ஸ்பெஷல் என்று இந்நேரம் அறிவித்தால் - என்னைப் பார்த்து எனக்கே சிரிக்கத் தோன்றிடும் ! Moreover புது ஆல்பங்களுக்குமே இன்றைய யதார்த்த சூழலில் “பிரிண்ட் ரன் 400-450 தான்” என்ற பிள்ளையார் சுழியோடு ஆரம்பிக்கும் பட்சங்களில், விலைகள் குடலை வாய்க்குள் கொணரும் உயரங்களைத் தொட்டு நிற்கும் ! And ஏற்கனவே “ஒற்றை நொடி.. ஒன்பது தோட்டா” ; ARS MAGNA ; “கென்யா” போன்ற முரட்டுக் கைகள் சகலத்துக்கும் நார்மலான நமது விலைகளைத் தெரிவித்து, அவற்றிற்கான கான்டிராக்டுகளும் போடப்பட்டு, ராயல்டிகளும் அனுப்பியாச்சு ! இந்தச் சூழலில் நான் பாட்டுக்கு – ‘கோட்டை அழிங்க… அழிங்க… மறுக்கா பொர்டா சாப்பிடப் போறேன், முதல்லேர்ந்து !!‘ என்று ஆரம்பித்து, ஆயிரம், ரெண்டாயிரம் என்றெல்லாம் விலைகளைச் சொன்னால் நம் படைப்பாளிகள் பேந்தப் பேந்த முழிக்க ஆரம்பித்து விடுவார்கள் ! புதுசாய் ஒரு பேச்சு வார்த்தை ; புதுசாய் சில ஒப்பந்தங்கள் ; புதுசாய் சில ராயல்டி தொகைகள் - என எல்லாமே புதிதாகிட வேண்டிப் போகும் ! And in any case - சிக்கின, சிக்கின புக்கையெல்லாம் "முன்பதிவுக்கு மட்டும்" என்ற ரேஞ்சுக்குக் கொண்டு செல்லும் பட்சத்தில், வரும் காலங்களில் நானே கதை எழுதிட, ஜூனியர் எடிட்டர் படம் போட்டிட - அதை நாங்களே படித்தும் கொள்வது என்ற பொழுது புலர்ந்திருக்கும் ! So ஓ.நொ,ஓ.தோ ; கென்யா ; Ars Magna  இதழ்கள் எல்லாமே ஒரு சகஜ சமயத்தின் நார்மலான விலைகளுடனான, நார்மலான விற்பனைகளுக்கே ! Maybe 2021 ஈரோட்டின் வேளையில், உலகம் நார்மலுக்குத் திரும்பியிருக்கும் பட்சத்தில், அந்தப் பட்டாசுகளை அங்கே போட்டுத் தெறிக்க விடுவோம் என்று நினைத்தேன்! ஆக இன்றைக்குப் பெரியதொரு பிரின்டரன்னுக்கு இயல்பாகவே அவசியமில்லா "இ.ப."மறுபதிப்பு மட்டுமே சாத்தியமாகிறது ! 

So இது தான் இன்றைய நிலவரம் ; எனது நிலைப்பாடு ; இத்யாதி..இத்யாதி எல்லாமே ! 

‘இதெல்லாம் யாருப்பா கேட்டா ?‘ என்ற கேள்வி சிலருக்கும்; ‘மண்டையன் சென்டிமெண்டைப் பிழி பிழின்னு பிழியறான்டோய் !‘ என்ற பகடி சிலருக்கும் இந்தப் பதிவுப் பிரவாகத்தைப் படித்த நொடியினில் தோன்றலாம் தான் !

Again இது ஏன் என்பதற்கான பதில் ரொம்பவே சிம்பிள் ! சூடத்தை அணைத்துச் சத்தியம் செய்தாலுமே, நையாண்டி செய்திடவே விழையும் அன்பர்களின் தரப்பைத் திருப்திப்படுத்த முனைவதென்பது காளை மாட்டின் காம்பைத் தேடுவதற்குச் சமானம் என்ற புரிதல்கள் என்றைக்கோ புலர்ந்து விட்டதென்பதால் இந்தப் பிரசங்கம் பகடிகளுக்குச் சமாதானமாயல்ல !

And நம் சிரமங்களில் தோள் தர நிபந்தனைகளின்றித் தயாராகயிருக்கும் நண்பர் அணிக்கு இத்தனை விளக்கங்கள் அவசியமே லேது தான் என்பதுமே புரிகிறது ! So அவர்கட்குமே இது அத்தியாவசியமாகிடாது போகலாம் தான் !

On the other hand, இந்தப் பத்தி பத்தியான பொழிப்புரைகளெல்லாமே பிரதானமாய் எனக்கு நானே தலையைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு ; 90 + நாட்களாய் குக்கருக்குள் திரண்டு நின்ற பிரஷரை லைட்டாக வெளியேற்றும் நோக்கில் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! "ஏன்யா....நான் சரியா தானே பேசிட்டிருக்கேன் ?" என்று ஊர்ஜிதம் தேடும் பஞ்சாயத்து சங்கிலி முருகனைப் போல a reality check of sorts என்று எடுத்துக் கொள்ளுங்களேன் !

அதே போல நிபந்தனைகளின்றி அன்பையும், பணத்தையும் நீங்கள் என்னிடம் ஒப்படைத்திருந்தாலும், அவற்றிற்கு நான் செய்திட உத்தேசித்துள்ள நியாயங்களை பகிர்ந்திடுவது தானே பொருத்தம் ?! So தலைக்குள் அடைசலாய் நின்ற சகலத்தையும் பதிவாக்கிப் பகிர்ந்த திருப்தியோடு, சற்றே ஜாலியான சில updates தந்த கையோடு நடையைக் கட்டுகிறேன் folks ! எது எப்படியோ - ஆண்டவனின் கருணை தொடரும் மட்டிலும் எந்தவொரு குட்டிக்கரணம் அடித்தேனும் நம் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் ! வேகம் மட்டுப்பட்டிருக்கலாம் - சாலையின் கரடுமுரட்டுத்தன்மையின் பொருட்டு ; ஆனால் வண்டி ஒரு போதும் நின்றிடாது ! Maybe இந்தக் கொடுங்கோல வைரஸின் வெறியாட்டம் இன்னும் உக்கிரமடைந்து, ஜீவனங்களும் மேலும் மேலும் பெரும் தடுமாற்றம் கண்டு போயின் - மூவாயிரம்  எனும் சந்தாக்கள் கூட ஆண்டின் இறுதியினில் ஒரு மன்னரின் பணயத்தொகையாய்த் தென்படவும் செய்யலாம் தான் ! அப்படியொரு நாளும் புலர்ந்திடும் துரதிர்ஷ்டம் ஒரு வேலை நிகழ்ந்தால் -  மறுக்கா நியூஸ்பிரிண்ட் ; சன்ன விலைகள் ; அடக்கி வாசித்தல் என்ற திட்டமிடல்களையும்   ஆராயாது விட மாட்டோம் - தலை தண்ணீருக்கு வெளியே இருந்திட வேண்டுமெனும் முயற்சிதனில் ! That will of course be a last option !! But we will stay extremely flexible !!

1.விற்பனையில் இந்தச் சிரம நாட்களிலும் ரகளை பண்ணிக் கொண்டிருப்பவர் யாரென்று யூகிப்பவர்களுக்கு நயமான சேமியாப் பாயசம் நம் பரிசாய் ! Oh yes – அதிகாரி தான் மே மாதத்திலும் சரி, ஜுனிலும் சரி, இதர இதழ்களின் விற்பனையை விட சுமார் 25% உசந்து நிற்கிறார் ! வர வர பாயசங்கள் விற்பனைகளைத் தூக்கி விடும் magic potions ஆகி விட்டனவோ என்னவோ ?! அல்லது பாயாச மாஸ்டருக்கு வயசாகிடுத்தோ ?

2. முழுக்கவே பெண்களாய் கதைநெடுகிலும் ரவுசு செய்யும் one-shot ஆல்பமொன்றின் rights வாங்கியுள்ளோம்!

3. நெடுநாள் விளம்பரமாய் மட்டுமே தொடர்ந்திடும் ஒரு ஜாம்பவானின் படைப்பும் கூட வெளிச்சத்தைப் பார்த்திடும் வேளை புலர்ந்திடக்கூடும் !

4. அதே போல இன்னொரு தாய்க்குலம் நமது அணிவகுப்பில் இடம் பிடிக்க ரெடி – ரொம்பச் சீக்கிரமே !

5. And பிடரியோடு அறையும் சித்திரத் தரத்தில் இன்னொரு கௌபாய் one-shot தற்சமயம் நமது கையிருப்பில் !

 Bye all! See you around! Stay Safe!

P.S.: ”வோட்டுப் போடச் சொன்னதுலாம் வெட்டி வேலையா கோப்பால்ல்ல்ல் ??” என்ற கண்சிவத்தல் வேணாமே ப்ளீஸ் – நடப்பாண்டின் சந்தாக்களை மார்ச் வரைக்கும் நீட்டிக்கும் எண்ணத்தின் பொருட்டு ! மறுபடியுமொரு ஊரடங்கு என்ற மாதிரியான இறுக்கம் + எங்களது மாவட்டத்தில் இவ்வாரத்தினில் எகிறி வரும் வைரஸ் தாக்கங்கள்  என் தீர்மானத்தை influence செய்துள்ளன ! Sorry guys !!

411 comments:

  1. "மீ த பர்ஸ்டு" என்று சொல்லிக்கொள்வதில்..
    மிக்க பெருமையடைகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் பெருமைபடுகிறேன் என சொல்லுங்கள் விஜய்!

      Delete
  2. கொஞ்சம் பெரிய சட்டி போல தா..

    ReplyDelete
  3. 10 க்குள்ள வாரதும் சந்தோசம் தான்

    ReplyDelete
  4. Editor sir have a confident intha nilai maarum

    ReplyDelete
  5. பெரிய கட்டிடம் தான்

    ReplyDelete
    Replies
    1. இதனில் சம்மதமோ, சங்கடமோ - தயங்காது இங்கேயே பதிவிடக் கோருகிறேன்//எவ்வித சங்கடமும் இல்லை சார். இப்போது நிலவி வரும் வரும் அசாதாரண சூழலில் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் துணை நிற்பது உண்மையான காமிக்ஸ் இரசிகர்கள் தம் கடமை என்று எண்ணுகிறேன்.....நாம் எல்லாம் விரைவில் மீண்டு வர ஒருவருக்கு ஒருவர் துணை நிற்போம்

      Delete
    2. தென் மாவட்டங்கள் எல்லாமே இப்போது சிகப்பை நோக்கிப் பயணிக்கின்றன சார் ! இன்னொரு லாக் டௌன் இந்தப் பகுதிகளுக்கு அத்தியாவசியம் போல் தோன்றுகிறது !

      Delete
    3. தனியார் கூரியர் நிறுவனங்கள் பணியில் இல்லாத சூழலில் நமது நண்பர்கள் கருத்தை கேட்டுக் கொண்டு,அவர்கள் விரும்பினால் தற்காலிகமாக, இந்தியா முழுமையாக இயங்கி வரும் அஞ்சல் சேவைகளை புத்தகம் அனுப்ப பயன்படுத்தி கொள்ளுங்கள் சார். இரயில் மற்றும் விமான சேவை இரத்து என்பதால் சற்று தாமதமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் உறுதியான சேவை..

      Delete
    4. // தனியார் கூரியர் நிறுவனங்கள் பணியில் இல்லாத சூழலில் நமது நண்பர்கள் கருத்தை கேட்டுக் கொண்டு,அவர்கள் விரும்பினால் தற்காலிகமாக, இந்தியா முழுமையாக இயங்கி வரும் அஞ்சல் சேவைகளை புத்தகம் அனுப்ப பயன்படுத்தி கொள்ளுங்கள் சார். இரயில் மற்றும் விமான சேவை இரத்து என்பதால் சற்று தாமதமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் உறுதியான சேவை.. //

      Excellent Raja. கொரியர்கள் தற்போது இரண்டு மூன்று மடங்கு என தங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டன. எனவே please go with register post.

      Delete
  6. புயல் வீசும் காமிக்ஸ் கடலில் நமது பயணத்தை தொடர எடிட்டரின் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம். எடிட்டரின் எழுத்துகளை படித்தால் அவரின் வயது தெரியவில்லை; ஆனால் எனது வயது தெரிகிறது. முன்பு போல நீண்ட பதிவுகளை படிக்க முடிவதில்லை. தயவு செய்து பதிவுகளின் நீளத்தை குறைத்தால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முன்னர் சொன்னதே தான் இம்முறையும் நண்பரே ; நிச்சயமாய் பூமியை மீட்டெடுக்கும் நற்செய்திகள் எதுவும் எனது பதிவுகளில் லேது எனும் போது குத்து மதிப்பாய் நாலாம் பத்தியில் மூணு வரி ; ஏழாம் பத்தியில் நாலு வரி என்று வாசித்து வைத்தாலும் மதி ! மற்றபடிக்கு இந்த நீளத்தில் எழுதுவது ; அந்த நீளத்தில் எழுதுவதென்பற்கான precis writing வயதெல்லாம் தாண்டியாச்சே !

      Delete
  7. நையாண்டி செய்திடவே விழையும் //

    இதைப் படிக்கும் போது Harry Potter கதையில் வரும் கீழ்க்கண்ட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

    Ron said, "One person can't feel all that at once, they'd explode."

    "Just because you've got the emotional range of a teaspoon doesn't mean we all have," said Hermione nastily//

    ReplyDelete
  8. உங்கள் பதிவில் கேள்விகள் இருந்தாலும் என்னுடைய பதில் ஒன்றே.

    என்னுடைய சிரமமான இளமையில் நம்பிக்கையும், நிம்மதியும், ஆறுதலாகவும் இருந்தது இரண்டு விசயங்கள். ஒன்று இசைஞானியின் இசை. இரண்டு நமது காமிக்ஸ். அதனால் நீங்கள் எந்தவிதமான முடிவெடுத்தாலும் அதற்கு ஆதரவு அளிப்பது மட்டுமே என் கடமை.

    ReplyDelete
    Replies
    1. ///ஒன்று இசைஞானியின் இசை///

      no worries!! கிட்கண்ணன்ட்ட சொல்லி இன்னிக்கே சிலபல இளையராஜா பாடல்களை பாடி உங்களுக்கு அனுப்பிவைக்கச் சொல்றேன்!

      Delete
    2. அனுப்புங்க செயலரே. அதை அப்படியே நம்ம தலீவருக்கு கேக்காமயே தீபாவளிப் பரிசா அனுப்பிடறேன்.

      Delete
    3. ///என்னுடைய சிரமமான இளமையில் நம்பிக்கையும், நிம்மதியும், ஆறுதலாகவும் இருந்தது இரண்டு விசயங்கள். ஒன்று இசைஞானியின் இசை. இரண்டு நமது காமிக்ஸ். ///

      எனக்கு
      இத்தோடு சேர்த்து மூன்றாவதாக நகைச்சுவையும்..!

      Delete
  9. நான் எங்கிருக்கேன், இப்போ என்ன பண்ணிட்டிருக்கேன்.... 🤔😋

    ReplyDelete
    Replies
    1. தெளிஞ்ச உடனே மறுக்கா மண்டகப்படி பண்ணுவோமில்லே !

      Delete
  10. Oh shappa, what a tedious post. I'm personally fine with any book except cartoons. The usual library where I donate is closed. So, can't buy cartoons or humour genre like smurfs, bluecoats etc. Other than that whatever editor decides gets my vote.

    ReplyDelete
    Replies
    1. Lucky Luke கூட ரிஜிட் தானா ?

      Delete
    2. Unfortunately யெஸ். லக்கிய இங்கிலீஷ்ல நிறைய படிச்சாச்சு, அதனால rejected.

      Delete
    3. என்னடா இது லக்கிக்கு வந்த சோதனை??

      Delete
    4. அனுவுக்கு உப்புமாவை தயார் செய்து விட வேண்டியது தான்! அப்படியே கொஞ்சம் பாயாசத்தையும் கலந்து விட வேண்டியதுதான்!

      Delete
    5. என்ன ஒரு கொடூரக் குரங்கு கலவை பரணி சார்!!! நான் என்ன பாவம் செய்தேன்??? My point is I donate off all cartoons as I don't prefer them much. ஒரு கோச் வண்டியின் கதை வந்த காலம் வேறு, இப்பொழுது ரசனை வேறு. தற்போது உள்ள காலகட்டத்தில் நான் அவற்றை எல்லாம் வீணாக வீட்டில் அடுக்க வேண்டும். It will not serve the purpose. So, i don't prefer to buy them. நூலகம் திறந்தால் கண்டிப்பா சந்தா எடுத்து கொள்வேன். On the other side, எனக்கு குழந்தை பாக்கியம் இதுவரை ஏற்படவில்லை. If it had happened, this problem would not be there. But I have kept all fat collections for my future baby whenever they come. This is not to gain anyone's sympathy, as I never feel bad for myself, I'm just clarifying.

      Delete
  11. // ரிங்கோ + b&w இதழான "தோட்டா தேசம்" மட்டும் இம்முறை கழற்றி விடலாமா ? // கழட்டி விடுங்க சார்.

    ReplyDelete
  12. முதலில் சற்று கடுப்பாக இருந்தாலும் தற்ப்போது இரத்தப்படல ஆர்வலர்களைக் கொண்டாடத்தோன்றுகிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  13. நமது காமிக்ஸ் முன்பை விட முழுவீச்சில் வேகம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை ஆசிரியரே கவலை வேண்டாம் நீங்கள் எடுக்கும் எந்த தீர்மானங்களுக்கும் எனதுஆதரவு உண்டு நன்றி - சர்மா

    ReplyDelete
  14. எடிட்டர் சார்..

    பதிவு முழுவதையும் படித்து முடித்தபோது என் முகத்தில் ஈயாடவில்லை என்பதே நிஜம்!!
    மற்ற எல்லோரையும் போலவே உங்களுக்கும் சிரமமான நாட்களே இவை - என்பதில் சந்தேகம் இருந்ததில்லைதான்!! ஆனாலும் இவ்வளவு சிரமங்களை தற்போதும்/இனிவரும் நாட்களிலும் நீங்கள் எதிர்கொள்ளயிருப்பதின் நிதர்சனத்தை இப்பதிவின் வாயிலாக உணர்ந்தபோது, அதிகாரியின் கையால் நடுமூக்கில் குத்து வாங்கியதைப் போல கிண்'னென்றிருந்தது!

    பதிவின் இறுதியில் 'எது எப்படியாயினும் நம் பயணம் தொடரும்' என்று நீங்கள் அளித்த வாக்குறுதி மட்டுமே உயிரை மீட்டுத்தந்தது என்பதே உண்மை!!

    ஆனாலும் பத்து கி.நா'க்களுக்கு இணையான இப்பதிவின் தாக்கத்திலிருந்து மீண்டுவர எனக்கு சில நாட்கள் ஆகிடும்போலிருக்கிறது!!

    வெளியூர் சாமியான புனித மனிடோவும், உள்ளூர் சாமியான எனதருமை ஆத்தாவும் நம்மை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. ///அதிகாரியின் கையால் நடுமூக்கில் குத்து வாங்கியதைப் போல கிண்'னென்றிருந்தது!///
      ஹாஹாஹா!

      Delete
    2. வடக்குபட்டிக்காரரை மறந்துப்புட்டீங்களே ?

      Delete
  15. நடப்பாண்டு இதழ்களை மார்ச் 2021 வரை நீட்டித்திருப்பது வரவேற்க்ககூடிய முடிவே. இதற்கு என் முழு ஆதரவு உண்டு. மேலும், அடுத்த ஆண்டு சந்தா பற்றிய தங்கள் சிந்தனைகளும் அருமை. நடப்பு நிலவரங்களை கடவுள் கையில் ஒப்படைத்துவிட்டு, நல்லதே நடக்கும் என நம்புவோம்.

    //கலர் இதழில் ஒன்றான ரிங்கோ + b&w இதழான "தோட்டா தேசம்" மட்டும் இம்முறை கழற்றி விடலாமா//

    ஆமா, பர்மிஷனே கேட்காம இங்கிட்டு என்னன்னமோ கழண்டுட்டு போகுதாம்.... ரிங்கோ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் அடுத்த வருஷத்துக்கு கழட்டி விடுங்க சார். 😊

    ReplyDelete
  16. We understand your current situation.

    We agree for your final decisions.

    ReplyDelete
  17. எடிட்டர் சார்...ரியாலிட்டியை இதை விட விளக்க முடியாது சார்.. இந்த நிலையில் காமிக்ஸ் வட்டத்தை நோக்கி உள்ள சிந்தனைகள் என்றும் வீண்போகாது.

    மனதார நம்புவோம் இடர்கள் அனைத்தும் பகலவனை கண்ட பனிபோல் விலகும்.. மீண்டும் உற்சாகம் களைகட்டும்..

    நமது வட்டம் யானையை போன்று பெரிய வட்டமல்ல ஆனால் குதிரையை போன்றது.. தற்போது வேகம் குறைந்தாலும் மீண்டும் வேகமெடுக்க அதிக பிரயர்த்தனம் தேவையிறாது.


    எண்ணங்களே செயல்.. இந்நிலை மாறும் பொற்காலம் திரும்பும் என நம்பிக்கையுடன் இருப்போம்...

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. //
      நமது வட்டம் யானையை போன்று பெரிய வட்டமல்ல ஆனால் குதிரையை போன்றது.. தற்போது வேகம் குறைந்தாலும் மீண்டும் வேகமெடுக்க அதிக பிரயர்த்தனம் தேவையிறாது. // செம்ம செம்ம

      Delete
    2. // நமது வட்டம் யானையை போன்று பெரிய வட்டமல்ல ஆனால் குதிரையை போன்றது.. தற்போது வேகம் குறைந்தாலும் மீண்டும் வேகமெடுக்க அதிக பிரயர்த்தனம் தேவையிறாது. //

      சரியாக சொன்னீங்க சரவணன்.

      Delete
  18. சார் இ ப 3 புக் வேண்டும் பணம் அனுப்பும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் அனுப்பமுடியவில்லை விரைவில் அனுப்பிவிடுகிறேன் - சர்மா

    ReplyDelete
  19. காமிக்ஸ் வளர்ச்சியடைய என்ன செய்யனுமோ அதை செய்யுங்கள்

    தோட்டா தேசத்தை கழட்டி விடுங்க
    No problem

    அப்புறம் அங்கு வேலை செய்பவர்களின் சம்பளத்தை மட்டும் தயவு செய்து குறைக்கவேண்டாம்

    ReplyDelete
  20. 1. இந்த நொடியில் நாம் எங்கிருக்கிறோம்? நிலவரம் தான் என்ன ?
    2. சரி... எப்படிச் சமாளித்து வருகிறாயோ அம்பி ?"

    அனைவரின் மனதிலும் ஓடி கொண்டிருக்கும் இரு கேள்விகள் இதுவே!

    உங்களின் இந்த கேள்விகளுக்கு உங்கள் தரப்பு பதில்களை தெரிந்து கொண்டது மன நிறைவை தந்தது!

    "
    4. சரி... குறுகிய எதிர்காலத்துக்குத் திட்டங்கள் என்ன ?

    So ரெகுலர் சந்தா மார்ச் 2021-ல் நிறைவு கண்டிடும் ! Sorry guys! "

    இந்த முடிவு சரி தான், என்னை பொறுத்த வரையில்!

    "உங்களை நச்சரிப்பதற்குப் பதிலாய் கலர் இதழில் ஒன்றான ரிங்கோ + b&w இதழான "தோட்டா தேசம்"  மட்டும் இம்முறை கழற்றி விடலாமா ? என்பதே எனது கோரிக்கை"

    ஆம்! ஒரு இதழ் குறைக்கபடுவதால் இப்பிரச்சினை தவிர்க்கப்படும் எனில்!

    "5. புதுச் சந்தா பற்றிய thoughts ?


    ஒற்றை வரியில் சொல்வதாயின் – அட்டவணையே ரெடி !"

    கொரானா (கொடுமை) காலத்தில் நான் எதிர்பார்க்கும் இனிய கனவு!

    "550 to 600 சந்தாக்கள்" எப்படியும் தேறிடும் என்ற நம்பிக்கையில் ரூ.3000 to 3300 சுமாருக்கு ஒரு தொகையினை அறிவித்திடலாம் ! இது ஏப்ரல் 2021 to டிசம்பர் 2021-க்கான திட்டமிடலாக இருந்திடும் !"

    நிச்சயமாக 550 to 600 சந்தாக்கள் கிடைத்திடும்! ( இறைவா! கிடைத்திட வேண்டும்)

    "And வழக்கம் போல அக்டோபர் இறுதியில் அட்டவணையினை வெளிட்டு – மார்ச் 2021 வரையிலும் கால அவகாசம் தந்திட இயலும் – 3 தவணைகளில் சந்தாக்களைச் செலுத்திட! Of course – இதழ்களின் விலைகள் மட்டும் சந்தா சேகரிப்பு நிறைவுறும் வரையிலும் குறிப்பிடப்பட்டிராது !"

    "மார்ச் 2021 வரையிலும் கால அவகாசம் தந்திட இயலும் – 3 தவணைகளில் சந்தாக்களைச் செலுத்திட! "

    ஒரே வார்த்தை,விஜயன் சார்! நன்றி!

    "அப்படியொரு நாளும் புலர்ந்திடும் துரதிர்ஷ்டம் ஒரு வேலை நிகழ்ந்தால் -  மறுக்கா நியூஸ்பிரிண்ட் ; சன்ன விலைகள் ; அடக்கி வாசித்தல் என்ற திட்டமிடல்களையும்   ஆராயாது விட மாட்டோம் - தலை தண்ணீருக்கு வெளியே இருந்திட வேண்டுமெனும் முயற்சிதனில் ! That will of course be a last option !! But we will stay extremely flexible !!"

    எந்த ஒரு சூழ்நிலையிலும் காமிக்ஸ் வரும் என்று நீங்கள் சொல்வதே எனக்கு போதும் சார்!

    கலர் + கருப்பு வெள்ளை எதுவானாலும் நமது காமிக்ஸ் வந்தா போதும்!

    எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன் / நாங்கள் இருப்போம்!


    "On the other hand, இந்தப் பத்தி பத்தியான பொழிப்புரைகளெல்லாமே பிரதானமாய் எனக்கு நானே தலையைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு ; 90 + நாட்களாய் குக்கருக்குள் திரண்டு நின்ற பிரஷரை லைட்டாக வெளியேற்றும் நோக்கில் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! "ஏன்யா....நான் சரியா தானே பேசிட்டிருக்கேன் ?" என்று ஊர்ஜிதம் தேடும் பஞ்சாயத்து சங்கிலி முருகனைப் போல a reality check of sorts என்று எடுத்துக் கொள்ளுங்களேன் !"

    உங்கள் எண்ணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்வது - நீங்கள் என்னோடு / எங்களோடு ஒரு நண்பர் பகிர்ந்து பேசுவது போல!

    பத்தி பத்தியாக அல்லது சுருக்கமாக எப்படி இருந்தாலும் அது உங்களின் மனதிலிருந்து அப்படியே என்னுடன் பேசுவதாக தான் எடுத்து கொள்கிறேன்!

    இப்போது இருக்கும் சூழ்நிலையில் அனைவருமே "ஏன்யா....நான் சரியா தானே பேசிட்டிருக்கேன் ?" என்று" கேட்டுக்கொள்ள வேண்டியதாக தான் இருக்கிறது!

    எல் ஐ சி - உயர பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  21. மீ எத்தனையாவதாக இருந்தாலும் இங்கே வந்ததற்காகவே பெருமைப்படுகிறேன் .

    ReplyDelete
  22. மாடஸ்டி வாழ்க!
    மாடஸ்டி வாழ்க!

    ReplyDelete
  23. மாடஸ்டி வாழ்க!
    மாடஸ்டி வாழ்க!

    ReplyDelete
  24. கனமான பதிவு.. முட்டையை முடிஞ்ச வரைக்கும் உடைக்காமலேயே ஆம்லெட் போடும்/கிடைக்கும் ஆசை தான்.. ஆனால் நிஜம் எட்டி உதைக்கிறது.்

    ReplyDelete
  25. // ரிங்கோ + b&w இதழான "தோட்டா தேசம்" மட்டும் இம்முறை கழற்றி விடலாமா ? என்பதே எனது கோரிக்கை !//

    எனக்கு இது ஓகே.

    ReplyDelete
  26. மனதை கணமாக்கிய பதிவு சார்.

    ரியாலிட்டி யை நடு மண்டையில் நச் என்று அடித்து புரிய வைத்த பதிவு.

    மார்ச் 21 வரை இந்த வருட சந்தா வை நீடித்தது நல்ல முடிவே...

    அடுத்த வருட சந்தா வை october மாதம் அறிவித்து 5 மாத டைம் குடுப்பது நல்ல ஐடியா.....


    விலைக்கு தகுந்த மாதிரி இதழ்கள் எண்ணிக்கை திட்டம் இடுவது வேறு வழி இல்லாமல் தான் என்பது புரிகிறது.

    அடுத்த ஆகஸ்ட் மாதம் புத்தக விழாவில் ஸ்பெஷல் இதழ்கள் வெளியிடுவது தான் சரி.

    பயணம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி சார் அது உங்களுடன் தொடர்வது தான் எங்களுக்கு மகிழ்ச்சி......


    அப்படியே அந்த புதிதாக உரிமம் பெற போகும் ஜாம்பவான் யார் என்று கூறினால் மிகவும் மகிழ்வேன்..


    ReplyDelete
  27. // Maybe just once - கார்ட்டூன்கள் அனைவரது இல்லங்களுக்குள்ளுமே நுழைந்திட அனுமதித்துத் தான் பார்க்கலாமா folks ? //

    தற்போதைய சூழ்நிலையில் இவர்கள் அவசியம் சார். மிகவும் இறுக்கமான இந்த சூழ்நிலையில் கொஞ்சம் மனதை இலகுவாக வைத்து கொள்ள இவர்கள் தான். இவர்களை ஒவ்வொரு மாதம் தர
    முடியவில்லை என்றாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக வேண்டும். வழக்கம் போல் ஜுலை மாதம் லக்கியின் இரண்டு கதைகள் ஆண்டு மலரில் வேண்டும்.

    ReplyDelete
  28. உங்கள் முடிவுகளுக்கும், விளக்கங்களுக்கும் நன்றி சார். இந்த வருட சந்தாவை மார்ச் வரை நீட்டிக்கும் தங்கள் முடிவைத்தான் நான் முதலில் எதிர்பார்த்தேன். இதனால் மாதாமாதம் இதழ்களின் விலை சற்று குறையும் என்றாலும் நீங்கள் சொன்னதுபோலவே கூரியர் கட்டணங்கள் உள்ளிட்டவற்றால் தொகை அதிகமாகும் பட்சத்தில் இதழ்களை குறைப்பது நல்ல முடிவே..

    அடுத்த வருட சந்தாவில் இதழ்களை குறைத்து தொகையையும் குறைப்பது நல்ல முயற்சியே.. இதனால் வழக்கமான சந்தாக்களை விட கொஞ்சம் கூடுதலாக கிடைக்கலாம். எல்லாரும் மிக இக்கட்டான சூழலில் இருக்கிறோம். விரைவில் சகஜ நிலை திரும்ப வேண்டும்.

    ReplyDelete
  29. மாற்றம் தெரிகிறது.

    ReplyDelete
  30. // இலட்சியம் 600 !! அவகாசம் 5 மாதங்கள் ! //

    கண்டிப்பாக முடியும். சாதிக்கலாம். நாங்கள் துணை இருப்போம்.

    வழக்கமான மாதத்தில் அடுத்த வருட சந்தாவை அறிவிப்பு செய்யுங்கள். பல நண்பர்களுக்கு இது தேவைப்படும் அவகாசத்தை கொடுக்கும். எனவே தயங்காமல் 2021 9 மாத சந்தாவை அறிவியுங்கள்.

    ReplyDelete
  31. உங்களுடைய நிலமையை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் எல்லாமே விரைவில் சீராகுமென நம்புகிறேன் சார்!

    ரிங்கோ வை கழட்டி விடுவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை

    இந்த வருட சந்தாவை அடுத்த வருட மார்ச் வரை நீட்டித்திருப்பதே நல்ல முடிவே (நான் ஓட்டுப் போட்டதும் இந்த முடிவுக்குத்தான்)

    ReplyDelete
  32. இதுவரை எப்படியோ, இனி புதிய சந்தாக்களை கொண்டு வருவதில் நானு(ங்களு)ம் துணை நிற்போம்!

    ReplyDelete
  33. 1) ரிங்கோ & தோட்டா தேசம் - தவிர்க்கலாம். M.G.-க்கு உத்தரவாதமில்லாத பரிசோதனை முயற்சிகளையும் தாராளமாகத் தவிர்க்கலாம். 
    2) இன்றைய சூழ்நிலைக்கு, சந்தாக்களில் பிரிவே வேண்டாம் என்பேன் - ஒரே தமிழ் காமிக்ஸ் பதிப்பகம், ஒரே சந்தா!

    இ.ப. - ம.ப. செயலாக்கம் பெறாவிட்டால், அத்தொகையை இனி வரவிருக்கும் வெளியீடுகளுக்கான (2021 சந்தாதான் என்றில்லை) முன்தொகையாக வைத்துக் கொள்ளுங்கள். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும். தற்போதைக்கு, உங்கள் தொழில் மற்றும் சார்ந்திருக்கும் பணியாளர்கள் நலமே பெரிதென்பதால், நான்கு திசைகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொணரும் விளக்கங்களையும், கருத்துக் கணிப்புகளையும் தவிர்த்து, எது தேவையோ அதைச் செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. // இ.ப. - ம.ப. செயலாக்கம் பெறாவிட்டால், அத்தொகையை இனி வரவிருக்கும் வெளியீடுகளுக்கான (2021 சந்தாதான் என்றில்லை) முன்தொகையாக வைத்துக் கொள்ளுங்கள். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும். தற்போதைக்கு, உங்கள் தொழில் மற்றும் சார்ந்திருக்கும் பணியாளர்கள் நலமே பெரிதென்பதால், நான்கு திசைகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொணரும் விளக்கங்களையும், கருத்துக் கணிப்புகளையும் தவிர்த்து, எது தேவையோ அதைச் செய்யுங்கள் //


      Well said. I agree with this.

      Delete
    2. // இ.ப. - ம.ப. செயலாக்கம் பெறாவிட்டால், அத்தொகையை இனி வரவிருக்கும் வெளியீடுகளுக்கான (2021 சந்தாதான் என்றில்லை) முன்தொகையாக வைத்துக் கொள்ளுங்கள் // அப்படி செய்ய முடியாதே கார்த்திக் எடிட்டர் முன்பே நண்பர்களிடம் முயற்சி வெற்றி பெற வில்லை என்றால் பணத்தை திருப்பி அனுப்பி விடுவேன் என்று தானே சொன்னார்.

      Delete
    3. இப்படி வேண்டுமானால் செய்யலாம். எந்த நண்பர்கள் அந்த தொகையை முன் எடுத்து செல்ல அனுமதிக்கிறார் கள் என்றால் அடுத்த வருட புத்தகங்களுக்கு எடுத்து செல்லலாம்

      Delete
    4. ஆசிரியர் இப்படியும் சொல்லியிருந்தார் குமார்!

      http://lion-muthucomics.blogspot.com/2020/06/here-we-go.html
      ஒருக்கால் முன்பதிவு இலக்கை எட்ட இயலாது போயின் வசூலித்த தொகைகள் திரும்ப அனுப்பப்படும் ; அல்லது பணம் செலுத்தியவர் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களது பெயரில் 2021-ன் சந்தாவில் வரவு செய்யப்படும் ! முன்பதிவு செய்திடும் நேரமே இந்த option குறித்து தெரிவித்திடல் அவசியம் !

      Delete
    5. எனக்கும் ஞாபகம் இருக்கிறது கார்த்திக். நான் எதற்காக சொன்னேன் என்றால் நண்பர்களே மனமுவந்து சொல்லவேண்டும் என்று தான்..

      Delete
  34. விஜயன் சார்,
    நீண்ட பதிவு. உண்மை நிலைமையை வழக்கம் போல் காமிக்ஸ் குடும்ப நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட உங்களை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். புரிந்து கொண்டேன்.

    அனைத்து கோணங்களில் சிந்தித்து plan A, B என நமது கப்பல் தொடர்ந்து பயணிக்க நீங்கள் முன்வைத்து உள்ள யோசனைகள் அட்டகாசம்.

    காமிக்ஸ் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நிபந்தனை அற்ற எனது ஆதரவு உண்டு.

    அடுத்த வருட சந்தாவில் ஒருவேளை மாதம் இரண்டு புத்தகங்கள் மட்டும் கொடுக்க முடியும் என்றாலும் எனக்கு ஓகே. காமிக்ஸ் தொடர்ந்து வரவேண்டும். அது போன்ற சூழ்நிலை என்றால் கொரியர் செலவை கட்டுபடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அனுப்பினாலும் ஓகே.

    இந்த மாற்றங்கள் எல்லாம் நாம் தொடர்ந்து கீழே விழாமல் பயணிக்க நீங்கள் செய்யும் மாற்றங்கள். இவை தற்காலிகமானது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. என்னைக் கேட்டா மாத மாதம் அனுப்பாமல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பினால் கூட குரியர் செலவு குறைய வாய்ப்புண்டு. ஆனால் இதை எத்தனை பேர் ஒத்துக்குவாங்க என்பது தான் தெரியவில்லை.

      Delete
    2. தற்போதைய சூழ்நிலையில் காமிக்ஸ் காதலர்கள் இதனை ஏற்றுகொள்வார்கள்! ஏற்று கொள்ள வேண்டும் நண்பர்களே!

      Delete
    3. செலவை கட்டுக்குள் கொண்டு வரும் எந்த வழியாக இருந்தாலும் எனக்கு சம்மதமே....

      Delete
    4. இருமாதத்திற்கு ஒருமுறை Ok!!

      Delete
  35. நிலமையை படிக்கும்பொழுது
    கொஞ்சம் வருத்தமாகத்தானிருக்கிறது

    இருந்தாலும்இவ்வளோ சொல்லனுமின்னு அவசியமே இல்லீங்க சாரே

    இதுவும் / எதுவும் கடந்து போகும்


    எனவே

    உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் கண்டிப்பாக ஆதரவு சார் 🙏🏼🙏🏼🙏🏼

    நீங்கள் எப்படி முடிவு பண்ணினாலும் சரியே 🙏🏼🙏🏼🙏🏼


    .

    ReplyDelete
  36. எங்கள் தேனி மாவட்டம் மீண்டும் கடந்த மூன்று நாட்களாக முழு ஊரடங்கில் தான் உள்ளது.வாழ்வாதாரத்தை இழந்து எதிர்காலம் என்ற இருட்டு எங்களை அச்சத்திலாழ்த்தி உள்ளது.வேலை இல்லை;வருமானமும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வருத்தமாக உள்ளது நண்பரே!

      Delete
    2. சரவணன் @ உங்களுக்கான 2021 சந்தாவை செலுத்த என்னை அனுமதிக்க வேண்டுகிறேன்!

      Delete
    3. பரணி சார் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
      நன்றிகள் சார்.

      Delete
    4. சரி என்று சொல்லுங்க சார்.

      Delete
    5. வாழ்த்துகள் சரவணன் சார். பரணி சூப்பர். 👌

      Delete
    6. பரணி சூப்பர் மா.

      Delete
    7. பல் போனதொரு ஓய்வின் நாளில் நம் பயணத்தை சாவகாசமாய் அசை போடும் போது இந்த நட்புச் சங்கிலிகளின் உன்னதத்தை வாஞ்சையாய் நினைவுகூர்ந்திடுவேன் !

      Delete
    8. வாழ்த்துகள் சரவணன்!
      வணக்கங்கள் பரணி!

      Delete
  37. நம்பிக்கை என்ற அச்சாணி தான் எங்களை சுவாசிக்க வைத்து வருகிறது.

    ReplyDelete
  38. தற்போது இருக்கும் சூழ்நிலையில் தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அவற்றை செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ! மனதில் இருந்த எண்ணங்களைப் பகிர்ந்த திருப்தியோடு திட்டமிடல்களில் ஆழ்ந்திடுகிறேன் !

      Delete
  39. எடிட்டர் சார்.
    இந்த ஆண்டு சந்தாவை அடுத்த ஆண்டு மார்ச் வரைக்கும் கொண்டுபோகலாம் என்றுதான் ஓட்டு போட்டேன். அதன்படியே நடந்துவிட்டது.
    அப்புறம் அடுத்த ஆண்டு சந்தாவில் நான் இருப்பேனா என்பதே தெரியாத நிலையில் அது சம்மந்தமாய் என்னால் யோசிக்ககூட முடியவில்லை. இரத்தப்படலம் வேறு கண்ணாமூச்சி ஆடுகிறது. 1972 முதல் நமது காமிக்ஸ் குடும்பத்தில் நானும் ஒருவனாய் இருந்து வந்துள்ளேன். இனியும் அப்படி இருக்க முடியுமா தெரியவில்லை. கடைசி ஆசையாக முடிந்தால் இரத்தப்படல புத்தகத்தை வாங்கிவிட்டு அப்படியே விடைபெறலாம் என்று ஒரு எண்ணம். முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏற்கனவே கையிருப்பில் உள்ள மற்ற புத்தகங்களை மறுவாசிப்பு செய்தே மீதியிருக்கும் நாட்களை ஓட்டிவிடுவேன். இன்று மாலை நடந்த நிகழ்வொன்று இருந்த கொஞ்ச நம்பிக்கையையும் துடைத்துப்போட்டு விட்டது.
    மற்றபடி இந்த ஆண்டு சந்தாவில் புத்தகங்களை குறைப்பதெல்லாம் என்னை பொருத்தவரை பெரிய விஷயமே இல்லை. காமிக்ஸ் மழை கொடுக்கிற வருண பகவான் நீங்கள். ஒன்றிரண்டு துளி குறைவதால் ஒன்றும் பாதிப்பில்லை. எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதமே.

    ReplyDelete
    Replies
    1. // அடுத்த ஆண்டு சந்தாவில் நான் இருப்பேனா என்பதே தெரியாத நிலையில் // இருப்பீர்கள்.

      Delete
    2. உங்களுக்கான சந்தாவை செலுத்த என்னை அனுமதிக்க வேண்டுகிறேன் சார். For 2021

      Delete
    3. அருமை குமார். 👏👏👏👏👏.

      Delete
    4. ATR சார் தைரியமாக இருங்கள்!

      ///உங்களுக்கான சந்தாவை செலுத்த என்னை அனுமதிக்க வேண்டுகிறேன் சார். For 2021///

      சூப்பர் நண்பரே!!
      +111

      Delete

    5. ///உங்களுக்கான சந்தாவை செலுத்த என்னை அனுமதிக்க வேண்டுகிறேன் சார். For 2021///
      குமார் உங்கள் அன்புக்கு நன்றி.
      என்னுடைய சுமையை உங்கள் தோள்களில் இறக்கிவைப்பது தவறு. ஏறக்குறைய நாற்பத்தெட்டாண்டுகள் நம் காமிக்ஸூடன் பயணித்திருக்கிறேன். அது போதும். இப்போது நான் இறங்க வேண்டிய நேரம். அதனால் என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம். நீங்கள் ஜாலியாக பயணத்தை தொடருங்கள்.

      Delete
    6. காய்ச்சல் சரியாகி விட்டதா ATRசார் ? ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் - மிச்சத்தை நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் !

      Delete
    7. Rajendran.A.T @

      // அதனால் என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம். //

      அப்படியெல்லாம் உங்களை விட முடியாது! நீங்கள் தொடர்ந்து எங்களுடன் வரவேண்டும்!

      Delete
    8. கண்டிப்பாக முடியாது சார். பயணம் ஜாலியாக தொடர வேண்டும் என்றால் உங்களைப்போல ஒரு மூத்த நண்பரின் துணை வேண்டும். பிளீஸ் சார்.

      Delete
    9. // என்னுடைய சுமையை உங்கள் தோள்களில் இறக்கிவைப்பது தவறு. // சுமை அல்ல சார் சுகமே

      Delete
    10. உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி எடிட்டர் சார்.
      காய்ச்சல் சரியாகிவிட்டது சார். இன்று மதியம் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு அரிசி மற்றும் மளிகை பொருளை கொடுக்க வேண்டி தூரம் அதிகமென்பதால் நண்பர் ஒருவர் என்னையும் துணைக்கழைக்க அவருடன் டூ வீலரில் போய் கொடுத்துவிட்டு திரும்பும்போது ஒரு விபத்து. எனக்கு காலில் எலும்பு முறிவு. உடம்பை அசைக்க முடியாமல் முதுகெலும்பில் சரியான வலி. நண்பருக்கு கையில் எலும்பு முறிவு. ஏற்கனவே கொரோனா கொடுத்த தொல்லையில் இதுவேறு இலவச இணைப்பாக வந்து சேர்ந்துவிட்டது.

      Delete
    11. நண்பர்களின் அன்புக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

      Delete
    12. அச்சச்சோ சார். மிகவும் வருத்தமாக இருக்கிறது. மீண்டும் நலம் பெற்று வாருங்கள் சார். இந்த நிலையிலும் தளத்தில் பதிவு இடுவது உங்கள் ஈடுபாட்டை காட்டுகிறது சார். உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார்.

      Delete
    13. குமார் அருமை 👏👏👏👏👏 இன்று நமது காமிக்ஸ் நண்பர்களின் அன்பு தொண்டை கனக்க செய்கிறது இதுபோல் நண்பர்களை பெற என்ன தவம் செய்யதோமோ காமிக்ஸ் படிக்கிறோம் என்பதே கர்வமடையும் நிகழ்வுகளில் முதன்மையாகி விட்டது

      Delete
    14. அட டா! டேக்கேர் ATR sir!

      இந்த நிலையிலும் தங்களது ஈடுபாடு மெய்சிலிர்க்க வைக்கிறது!

      டெக்ஸ் 75 சிறப்பிதழை கொண்டாடும் நாளிலும் தாங்களும் எங்களோடு இருப்பீர்கள், இதே உத்வேகத்தோடு...!!!!

      Delete
    15. ATR sir, மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது! சீக்கிரமே உங்கள் கால் சரியாக என்னுடைய பிரார்த்தனைகளும்! _/\_

      ///நாற்பத்தெட்டாண்டுகள் நம் காமிக்ஸூடன் பயணித்திருக்கிறேன். அது போதும். இப்போது நான் இறங்க வேண்டிய நேரம். அதனால் என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம். நீங்கள் ஜாலியாக பயணத்தை தொடருங்கள்.///

      ATR sir!! நீங்க இறங்க வேண்டிய இடம் இன்னும் வரலை!! இடம் வரும்போது நாங்களே சொல்றோம்.. அதுவரைக்கும் அப்படி ஜன்னலோரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகிட்டிருங்க!

      Delete
    16. @ KS

      உங்கள் நல்ல மனம் வாழ்க!! நெகிழ வைக்கிறது உங்கள் நேசமும், பாசமும்!! _/\_

      Delete
    17. ATR சார், கொஞ்சம் உடம்பை பார்த்து கொள்ள வேண்டும். இன்னும் நீங்கள் உதவ வேண்டிய எத்தனையோ பேர் பூமியில் இருக்கிறார்கள். You are making a difference in others lives. But do tc of your self. உடம்பு சரியானதும் சிங்கம் மீண்டும் எழலாம்.

      Delete
  40. அன்பு விஜயன் சார் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது ஆதரவு என்றும் எப்போதும் உண்டு.ஒன்றிணைந்திருப்போம் நாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களில் யாரையுமே விலக அனுமதிப்பதாய் நானோ இதர நண்பர்களோ இல்லை சார் !

      Delete
    2. // உங்களில் யாரையுமே விலக அனுமதிப்பதாய் நானோ இதர நண்பர்களோ இல்லை சார் ! //

      Super!
      +1

      Delete
    3. ///உங்களில் யாரையுமே விலக அனுமதிப்பதாய் நானோ இதர நண்பர்களோ இல்லை சார் !///

      நெகிழ்ச்சியான வார்த்தைகள்!!

      Delete
  41. அனைத்து விதமான கேள்விகளும் பதில் அளித்துவிட்டீர்கள் சார்.

    கண்டிப்பாக மிக மோசமான நிலையில் தான் நாடு உள்ளது சார். தினமும் புது ஏற்றம் கண்டுவரும் புது நோயாளிகளை பார்க்கும் பொழுது முடிவு கண்ணிற்கு தெரியவில்லை.

    நம்பிக்கையை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதனையும் கடந்து மீளுவோம்.

    உங்களது அனைத்து முடிவுகளுக்கும் சம்மதமே. கருப்புவெள்ளை வரை செல்ல தேவை இருக்காது என்று நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. //நம்பிக்கையை தவிர வேறு ஒன்றும் இல்லை. //

      Very true !!

      Delete
  42. When God closes one door ,he opens another. கவிஞர்
    வாலியின் வரிகளில்," ஒரு வாசல் மூடி, மறு வாசல் வைப்பான் இறைவன்". நம்பிக்கையுடன் இருப்போம். இதுவும் கடந்துபோகும்.
    நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே. காமிக்ஸ் என்னும் வேர் துளிர்க்க, நீங்கள் செய்யும் முயற்சிகள் வீண் போகாது. Be brave.

    ReplyDelete
    Replies
    1. குட்டிக்கர்ணங்களை ஒரு கலை வடிவத்துக்கு எடுத்துச் சென்றிருக்கும் நமக்கு எப்படியேனும் தாக்குப் பிடித்துக் கொள்ள இயலுமென்ற நம்பிக்கை ஏகமாய் உள்ளது சார் ! துணையாய் நீங்கள் அனைவரும் இருக்கும் போது நிச்சயமாய் பயங்கள் கிடையாது !

      Delete
  43. Blizybabu @ உங்களுக்கான 2021 சந்தாவை செலுத்த என்னை அனுமதிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பரணி சகோதரரே மீண்டும் மீண்டும் அசத்தலோ அசத்தல் 👏👏👏👏👏👏👏👏

      Delete
    2. நண்பர்களுக்கு உதவிடும் உங்கள் நல்லெண்ணம் வாழ்க, PfB!!

      Delete
    3. மறுபடியும் அசத்தி விட்டீர்களே பரணி...

      Delete
  44. Replies
    1. அதனில் எனக்குத் துளியும் சந்தேகம் இருந்ததில்லை நண்பரே ! நெஞ்சார்ந்த நன்றிகள் !

      Delete
  45. பதிவை படித்து முடிக்கும் போது கைவிரல்கள் நடுங்குது சார்.

    எப்போதும் போல காமிக்ஸ் காதல் இம்முறையும் இந்த எல்லா இக்கட்டையும் கடந்து செல்ல வைக்கும்!

    இந்த பதிவுல பரணியும், KSம் நண்பர்களுக்கு அளிக்க முன்வந்தது சந்தாக்கள் அல்ல-மனிதம்!

    எப்போதும் போல தங்களது எல்லா முடிவுக்கும் துணை நிற்போம்.

    எதை வேணும்னாலும் கழட்டுங்க!
    யாரை வேணும்னாலும் சேருங்க!

    வாழ்க்கையில் இப்போது இருக்கும் ஒரே ஊன்றுகோள் காமிக்ஸ் மட்டுமே! அதைபற்றிய கைகள் இறுதிமூச்சி இருக்கும் வரை விடா....!!!

    ReplyDelete
    Replies
    1. // அதைபற்றிய கைகள் இறுதிமூச்சி இருக்கும் வரை விடா....!!! //

      Excellent!
      +1

      Delete
    2. செம்ம டெக்ஸ். நீங்கள் சொல்வது இதயத்தில் இருந்து....

      Delete
    3. //எப்போதும் போல காமிக்ஸ் காதல் இம்முறையும் இந்த எல்லா இக்கட்டையும் கடந்து செல்ல வைக்கும்!//

      Fingers crossed sir !

      Delete
  46. டியர் விஜயன் சார் ,

    இ.ப புக்கிங் படலம் எக்ஸ்டன் ஆக வழியே இல்லையா அந்த 90 நாட்கள்தான் இறுதி முடிவா ??

    வாசகர்களின் இவ்வளவு கொரோணா கஷ்டங்களை புரிந்து கொண்ட நீங்கள் ஏன் அடுத்த வருடம் மார்ச் வரை நீநீநீநீட்டிக்கூடாது ??

    இது என் மனம் சார்ந்த கேள்வி மட்டுமே

    விருப்பமிருந்தால் பதில் சொல்லுங்க .. இல்லைன்னா கடந்து போய்டுங்க

    நன்றிகள் .. 🙏

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மார்ச் என்ன ; அடுத்த ஜூன் வரைக்கும் முன்பதிவுக்கு அவகாசம் தரலாம் தான் - 'ஓராண்டு 'என்ற வசதியுடன் ! ஆனால் விலைவாசிகள் அந்நேரத்தில் எப்படி இருக்குமென்றோ ; நம்மூர்களின் நிலவரங்கள் எவ்விதம் இருக்குமென்பதோ துளி கூடக் கணிக்க இயலாதே நண்பரே ! தவிர ரெகுலர் சந்தாக்களின் சேகரிப்பில் முனைப்பு காட்ட வேண்டிய வேளையில் 'இ.ப' கடையையும் திறந்து வைத்துக் கொண்டு - இதுவா ? அதுவா ? என்ற குழப்பங்களுக்கு இடம் தருவது நிச்சயமாய் சரிப்படாது ! செப்டம்பர் 15 என்பதை அக்டோபர் 15 வரை நீட்டிக்கலாம் தான் - அது உதவுமெனில் !

      Delete
    2. பேங்க் ல் வாங்கிய கடனுக்கான மாத டியூவைக்கூட சென்ரல் கவர்மன்ட் மார்ச் முதல் ஆறு மாதங்கள் எக்ஸ்டன்ட் செய்துள்ளது ஆகஸ்ட்டில் மறுபடியும் இன்னும் மூன்று மாதங்கள் எக்ஸ்டண்ட் செய்ய வுள்ளதாக பேங்க் தரப்பிலிருந்து தகவல்கள் வருகிறது டியர் விஜயன் சார் ..

      நீங்கள் ஒருமாதம் அதிகப்படுத்துவதில் என்னவாகிவிடப்போகிறது

      மற்றபடி உங்களுடைய எண்ணங்கள்தான்

      (வாசகர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்களேன் .. அக்டோபர் என்பதிலிருந்து பிப்ரவரி 2021 வரையாவது எக்ஸ்டண் செய்யலாம் .. வாய்பிருந்தால்)

      Delete
    3. (நீங்களே தெளிவாக கூறி விட்டீர்கள். இது தனித்தடம் என்று. விருப்பப் பட்டவர்கள் புக் செய்ய போகிறார்கள். தேவையுள்ளவர்கள் வாங்கி கொள்ளளப்போகிறார்கள். இது தனித்தடம் என்று நீங்களே ஆல்ரெடி கூறி விட்டீர்கள் .. அப்புறமும் நீங்களே ஏன் இரண்டையும் சேர்த்து குழப்பி கொள்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை)

      Delete
    4. வட்டியில்லாமல் கடன் வசூலிப்பை தள்ளி வைப்பதாக ஏதேனும் ஒரு பேங்க் சொல்லுகிறதா சம்பத் ? நீட்டிக்கும் அவகாசத்துக்கும் மாமூலான வட்டியைச் சாத்தித்தானே வசூல் பண்ணப் போகிறார்கள் ? So அதனை நம் முயற்சியோடு முடிச்சிட்டுப் பார்க்க நினைப்பதில் பிரயோஜனம் தான் ஏது ? தவிர இ. ப. முயற்சியை இந்தக் காலகட்டத்தில் கையில் எடுத்திடப் பின்னணிக் காரணங்களை தம் கட்டி எழுதியிருந்தேனே - படிக்கலியா ?

      எந்தவொரு சூழலிலும் புதுச் சந்தாக்களின் பணித்துவக்கத்தின் மத்தியில் இதையும் கட்டி இழுக்க நான் தயாரில்லை !

      வேண்டுமானால் மொத்தமாய் ஒத்தி வைத்து விட்டு அடுத்த மே அல்லது ஜூனில் தூசி தட்டிடலாம் ! Definitely not in the November 2020 to March 2021 time slots at all ! அவை ரெகுலர் சந்தாக்களின் தடம் சார்ந்த பணிகளின் வேளை !

      Delete
    5. குழப்பிக் கொள்வது நானில்லை சம்பத் !

      Delete
    6. மாங்கு மாங்கென்று 'இ.ப' திட்டமிடலின் பின்னணியைத் தெளிவு செய்து விட்டேன் சம்பத் ! திரும்பவும் முதல்லேர்ந்து ஆரம்பிக்க திராணியில்லை !
      இது சுவர் விரிசல் விழுந்து போகாதுமே பாதுகாக்க வேண்டிய தருணம் ; மாமூலான நமது பஞ்சாயத்துக்களை தாட்டியமாக இருக்கக்கூடிய வேளையினில் பார்த்துக் கொள்வோமே !

      Delete
    7. /// வேண்டுமானால் மொத்தமாய் ஒத்தி வைத்து விட்டு அடுத்த மே அல்லது ஜூனில் தூசி தட்டிடலாம் ///

      இது கூட நல்ல அறிவிப்பு தான்ங்க சார் .. அடுத்த வருடம் மார்ச்சில் அறிவித்தாலும் நல்லதே .. ஆகஸ்டில் வழக்கம்போல் ஈரோட்டில் வெளியிட்டு விடலாமே ங்க சார் ..

      இப்போ இருக்கிற சூழலில் 4100/- என்பது மிகப்பெரூம் தொகையே ..

      Delete
    8. நண்பர் சம்பத் அவர்களே ..ஆசிரியர் இவ்வளவு தெளிவாய் தனது நிலைமயை விளக்கிய பிறகும் மீண்டும் ,மீண்டும் ஏன் நண்பரே..விடுங்கள்..

      ( இதை நட்பின் அடிப்படையில் தங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன்.வருத்தமாக அல்ல..)

      Delete
  47. அதிமாகக் குழப்படிக்காமல் நேர்கோட்டில் கதைகளை தொடர்ந்து வெளியிட்டு நல்லதொரு வெற்றியை தொடர்ந்து அனுபவிக்க உங்களின் வழக்கமான பார்முலாவான தெளிவான திட்டமிடலோடு எங்கள் அனைவரது ஒத்துழைப்போடு வெற்றிக்கனியை பறித்திட வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  48. விஜயன் சார் நாங்கள் என்றும் உங்களுக்கு துணை நிற்போம் .
    பரணி &குமார் சேலம் உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்.
    நண்பர்கள் என்றும் தங்கள் நண்பர்களை
    கைவிடுவதில்லை.

    ReplyDelete
  49. இந்த வருட சந்தாதவணை இன்னும் மீதி கட்ட வேண்டி உள்ளது முதலில் அதை கட்டிவிட எண்ணியுள்ளேன்.. சம்பளம் வந்த உடனே நிச்சயமாக...

    ReplyDelete
  50. ஆசிரியரே நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் உங்களின் பின்னே அணிவகுத்து காத்துக்கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க செந்தில் சத்யா!!

      Delete
  51. செப்டம்பர் 15 என்பதை அக்டோபர் 15 வரை நீட்டிக்கலாம் தான் - அது உதவுமெனில் !//

    எங்களின் நிலமையை அறிந்துகொண்ட உங்கள் நிலமையையும் நாங்கள் அறிவோம் சார் நிச்சயமா துணைநிற்ப்போம்...பரணி சேலம் குமார் நல்ல நண்பர்களை நாங்கள் பெற்றுள்ளோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...நன்றிகள்...

    ReplyDelete
  52. எந்தவொரு சூழலிலும் புதுச் சந்தாக்களின் பணித்துவக்கத்தின் மத்தியில் இதையும் கட்டி இழுக்க நான் தயாரில்லை !//

    உண்மை சார்...இரண்டும் ஆளுக்கொரு பக்கம் இழுக்கும்.

    ReplyDelete
  53. Well made decisions Sir !

    Given the times - 2021 சந்தாவினை ஒரே தடத்தினில் உள்ளடக்குங்கள் சார். விற்பனை சார்ந்த நிலையாமை இருப்பதால் அதிகாரி கதைகள் சற்றே அதிகம் உள்ளடக்குங்கள். மொத்தம் 9 மாதங்களுக்கெனில் 18 புத்தகங்கள் 2021க்கு மட்டும் போதும் சார். தனியாக இரு லக்கி லூக் புத்தகங்கள் அறிவியுங்கள் (சந்தா செலுத்துவோருக்கு கார்ட்டூன் வேண்டாமெனும் பட்சத்தில்). இப்போது சுருங்கியுள்ள நமது சாப்பாட்டின் அளவினைப் போலவே ஒல்லியான புத்தகங்களாய்ப் போடுங்கள்.

    We are with you!

    When we come out of this we will celebrate with a bumper 'SUPER FAT SPECIAL' in 2022 !!

    ReplyDelete
    Replies
    1. இங்கே எடிட்டர் கூறியுள்ள காரணங்களின் பொருட்டு XIII முயற்சி வெற்றி பெற வேண்டியது மிக்க அவசியம். வெற்றி பெரும் என்று நம்பிக்கையும் உள்ளது. 

      Delete
    2. ///இங்கே எடிட்டர் கூறியுள்ள காரணங்களின் பொருட்டு XIII முயற்சி வெற்றி பெற வேண்டியது மிக்க அவசியம். வெற்றி பெரும் என்று நம்பிக்கையும் உள்ளது. ///

      well said, Ragh ji!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. // மொத்தம் 9 மாதங்களுக்கெனில் 18 புத்தகங்கள் 2021க்கு மட்டும் போதும் சார். // இந்த ஐடியா பக்கா.

      Super fat special for 2022 kku +1000000000000000

      Delete
  54. மார்ச் வரை தள்ளிப்போகும் ரெகுலர் சந்தா, 2 இதழுக்கு கல்தா, ஸ்பெஷல் இதழுக்கு டாட்டா,. இன்னும் எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ..? ஏதாவதுன்னா ரிலாக்ஸ் பண்ண காமிக்ஸை எடுப்போம், இப்ப அந்த காமிக்ஸே ஓவென்று கதறச்சே ....நேக்கு பண்றதுன்ன தெரியலே..?
    MH MOHIDEEN

    ReplyDelete
    Replies
    1. செலவு .. சாப்பாடு .. இதர ஆடம்பரங்கள் அனைத்தையும் இப்போது மட்டுமல்ல எப்போதும் குறைத்து எதையும் அளவாய்க் கொள்ள வேண்டும் என்பதே இயற்கை இப்போது நமக்கு இலவசமாய் எடுக்கும் பாடம் பாய் ! 
      அளவு குறைவே இனி புதிய நிதர்சனம் / நிரந்தரம் !

      Delete
    2. // செலவு .. சாப்பாடு .. இதர ஆடம்பரங்கள் அனைத்தையும் இப்போது மட்டுமல்ல எப்போதும் குறைத்து எதையும் அளவாய்க் கொள்ள வேண்டும் என்பதே இயற்கை இப்போது நமக்கு இலவசமாய் எடுக்கும் பாடம் //

      +1

      Delete
    3. ///செலவு .. சாப்பாடு .. இதர ஆடம்பரங்கள் அனைத்தையும் இப்போது மட்டுமல்ல எப்போதும் குறைத்து எதையும் அளவாய்க் கொள்ள வேண்டும் என்பதே இயற்கை இப்போது நமக்கு இலவசமாய் எடுக்கும் பாடம் பாய் ! //

      உண்மை உண்மை!

      Delete
  55. The leaner salary covers are the most disturbing ever sir - but it is still better than no salary covers indeed !

    ReplyDelete
  56. // எது எப்படியோ - ஆண்டவனின் கருணை தொடரும் மட்டிலும் எந்தவொரு குட்டிக்கரணம் அடித்தேனும் நம் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் ! வேகம் மட்டுப்பட்டிருக்கலாம் - சாலையின் கரடுமுரட்டுத்தன்மையின் பொருட்டு ; ஆனால் வண்டி ஒரு போதும் நின்றிடாது //

    +1

    இத இதைத்தான் எதிர் பார்த்தேன்!! super!!

    ReplyDelete
  57. நண்பர்களின் பரிசளிப்பால் 2021 சந்தா மூன்று உறுதியாகிவிட்டது இதுவே வெற்றியின் துவக்கம் கண்டிப்பாக நல் இதயங்களின் மூலமாக 600 சந்தாவை எட்டிப்பிடிப்போம் ஆசிரியரே

    ReplyDelete
  58. ஆஹா பெரிய்ய்ய பதிவு அதற்குள் 150 ற்குள் கமெண்ட்களா ..?!


    படித்து விட்டு....

    ReplyDelete
  59. நண்பர்களுக்கு இப்படியெல்லாம் நடக்குமென்று முன்பே கணித்துத்தான் நமது செனாஅனாவும் - நண்பர்களுக்காக அடுத்த வருட சந்தாவை செலுத்திடும் பொருட்டு எடிட்டரிடம் ஏற்கனவே ஒரு ரகசிய உடன்படிக்கையை வலுக்கட்டாயமாக ( கிட்டத்தட்ட 'மிரட்டி') ஏற்படுத்திக் கொண்டு, அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார்!!

    வாழ்த்த வயதோ, அறிவோ, பக்குவமோ, பண்போ கிடையாது செனாஅனா - நெகிழ்ச்சியுடன் வணங்குகிறேன் உங்களின் நல்ல உள்ளம் கண்டு! _/\_

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வாழ்த்த வயதோ, அறிவோ, பக்குவமோ, பண்போ கிடையாது செனாஅனா - நெகிழ்ச்சியுடன் வணங்குகிறேன் உங்களின் நல்ல உள்ளம் கண்டு!
      🙏🙏🙏

      Delete
    3. வாழ்த்த வயதோ, அறிவோ, பக்குவமோ, பண்போ கிடையாது செனாஅனா - நெகிழ்ச்சியுடன் வணங்குகிறேன் உங்களின் நல்ல உள்ளம் கண்டு!
      🙏🙏🙏

      Delete
    4. // நமது செனாஅனாவும் - நண்பர்களுக்காக அடுத்த வருட சந்தாவை செலுத்திடும் பொருட்டு எடிட்டரிடம் ஏற்கனவே ஒரு ரகசிய உடன்படிக்கையை // உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

      Delete
  60. ஆசிரியரின் முடிவு எதுவாயினும் o.k. எப்படியாவது தம் கட்டி இழுத்து விடலாம் சார்.

    ReplyDelete
  61. சார், இதுவரையிலும் கிட்டத்தட்ட 1000 பேராவது சந்தாவில் இருப்பார்கள் என நினைத்தேன். 600க்கே தம் கட்ட வேண்டும் என்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருக்கிறது. சந்தாவில் இனி வரும் வருடங்களிலும் தொடரருவேன் சார். 1980 முதல் 1990 வரையிலும் 20000 பிரதிகள் வரை விற்றதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றைய நிலையோ 1000ஐ எட்டவே படாதபாடு... ஐயகோ

    ரிங்கோ & தோட்டாவை கழட்டி விடலாம் அல்லது 2 மாத கொரியரை ஒன்றாக அனுப்பலாம். எதுவும் ஓகே சார்

    ReplyDelete
    Replies
    1. //1980 முதல் 1990 வரையிலும் 20000 பிரதிகள் வரை விற்றதாக கேள்விப்பட்டிருக்கிறேன். //

      நிஜம் தான் சார் ; அதை விடவும் ஜாஸ்தியுமே விற்பனை கண்டுள்ளது ! புரட்சித் தலைவன் ஆர்ச்சி - 31000 பிரதிகள் !!

      Delete
  62. உண்மையை சொல்ல போனால் நேற்று பதிவை பார்க்க முடியவில்லை..ஆனால் வாட்ஸ்அப்பில் சந்தா மார்ச் வரை தள்ளி போகிறது என்ற செய்தியை மட்டும் அறிந்தேன்..அதனிள் வருத்தமும் நேர்ந்தது .. பிறகு ஏன் கருத்து கணிப்பு என..?!

    ஆனால் இப்பொழுது உங்கள் பதிவை படித்தவுடன் புரிந்து கொண்டது மனம்...

    இந்த வருடமே சந்தா முடிய வேண்டுமே என்று நான் தேர்ந்தெடுத்து ஓட்டு போட்டு அது வெற்றி அடைந்து இருந்தாலும் இப்பொழுது இந்த மாற்றத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் சார்...

    ReplyDelete
  63. உங்களை நச்சரிப்பதற்குப் பதிலாய் கலர் இதழில் ஒன்றான ரிங்கோ + b&w இதழான "தோட்டா தேசம்" மட்டும் இம்முறை கழற்றி விடலாமா ? என்பதே எனது கோரிக்கை..

    #####

    முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் சார்..தாராளமாக கழற்றி விடுங்கள்...

    ReplyDelete
  64. - வழக்கம் போல ”கிச்சடிச் சந்தா” ; ”பச்சடிச் சந்தா” என்றெல்லாம் இந்த ஒருமுறை குழப்பிக்கொள்ளாது – ஒரு All-in சந்தா & ஒரு அதிகாரியிலாச் சந்தா என்று மட்டுமே திட்டமிட ஆசை ! Maybe just once - கார்ட்டூன்கள் அனைவரது இல்லங்களுக்குள்ளுமே நுழைந்திட அனுமதித்துத் தான் பார்க்கலாமா folks


    ######

    என்னை கேட்டால் இம்முறை சந்தா பிரிவே தேவையில்லை எனபேன்..சார்..

    ஒரே நாடு ஒரே ரேஷன் என நாடு விருப்பப்பட்டாலும் ,விருப்ப படாவிட்டாலும் போய் கொண்டு இருக்கும் பொழுது ஒரே காமிக்ஸ் ,ஒரே சந்தா என அறிவித்து விடலாம் சார்..நமது காமிக்ஸ் தடையில்லா வளர்ச்சிக்கு காமிக்ஸ் தோழமைகள் அனைவரும் இதற்கு உடன்பட வரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுதல்கள்..

    ReplyDelete
    Replies
    1. // என்னை கேட்டால் இம்முறை சந்தா பிரிவே தேவையில்லை எனபேன்..சார்.. // எனது கருத்தும் இதுவே

      Delete
  65. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    எடிட்டரின் இந்த விளக்கமான பதிவு கடந்த இரண்டு வாரங்களாக வாட்ஸ்அப் குரூப் புகழ் மற்றும் முகநூல் குறிப்புகளில் கடந்த இரண்டு வாரங்களாக ஏற்பட்ட விவாதங்களின் காரணமாக இருந்திருக்கலாம். அவரை பல பேர் குறை சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்றும் நமது காமிக்ஸ் காதலை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நபர் அவர் ஒருவர் மட்டும்தான். எனக்கு பல சமயங்களில் நான் கேட்கும் சில புத்தகங்களை அவர் போடுவது இல்லை என்று வருத்தப் படுகிறேன். ஆனால் அதை எல்லாம் மீறி நமக்கு காமிக்ஸ் கிடைக்கும் போது மற்ற எல்லாம் மறந்துவிட்டது. இந்த சமயத்தில் சில கோரிக்கைகளை ஆசிரியருக்கு வைக்கலாம் என்று நினைக்கிறேன். இது எந்தளவுக்கு சாத்தியமோ இல்லை அசாத்தியம் என்று தெரியவில்லை.
    1.புதிதாக எந்த கதைக்கும் உரிமை வாங்காமல் அந்தப் பணத்தை மிச்சப்படுத்த படி கேட்டுக்கொள்கிறேன்.
    2. ஏற்கனவே உரிமம் வாங்கி வைத்திருந்து போடாமல் வைத்திருக்கும் பல பிளாக் அண்ட் வொயிட் கதைகளை அடுத்த ஓராண்டுக்கு வெளியிடலாம்.
    3. ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் மாண்ட்ரேக் காரிகன் ரிப் கிர்பி ஜார்ஜ் கதைகளை மாதம் இரண்டு புத்தகங்களாக வெளியிடலாம்.
    4. இதற்கு பல நண்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் புதிய கதைகள் வேண்டும் வண்ணங்களில் வேண்டும் என்று.
    5.ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் எடிட்டருக்கு செலவு அதிகம் வைக்காமல் அவருக்கு லாபம் மட்டுமே கிடைக்குமாறு இருந்தால்தான் நமக்கு எதிர்காலத்தில் பல காமிக்ஸ்கள் கிடைக்கும்.
    6.அதேபோன்று இதுவரை வெளிவராத மறுபதிப்பு களையும் பிளாக் அண்ட் வொயிட் லேயே வெளியிடலாம்.
    7.வண்ணங்கள் வேண்டுமென்று விரும்புவதற்கு 4 மாதத்திற்கு ஒரு புத்தகம் என்ற விதத்தில் 4 புத்தகம் மட்டும் வெளியிடலாம்.
    8.அதெல்லாம் முடியாது நாங்க எக்ஸ்பிரஸ் ட்ரெயின் ல போயிட்டு இருக்கோம் திரும்ப எங்கள பழைய நீராவி என்ஜின் ஏற சொல்லாதீங்க அப்படின்னு சொல்லும் நண்பர்கள் மன்னிச்சு.
    9.கம்மி விலையில் புத்தகங்கள் இருந்தால் அதிக புத்தகங்கள் விக்கலாம். ஏஜெண்டுகளும் வாங்குவார்கள்.
    10.இந்தக் கருத்துக்களையெல்லாம் மற்றவர்களால் நகைச்சுவையாக பார்க்கப் படலாம்.
    எது எப்படியோ நமக்கு மாச மாசம் காமிக்ஸ் வந்தா மட்டும் போதும்.

    ReplyDelete
    Replies
    1. சார்...Facebook பக்கமாய் நான் தலை வைத்துப் படுப்பதே நாம் ஏதேனும் விளம்பரங்களை அங்கு செய்யும் நாட்களில் எதேனும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளனவா என்பதை பார்க்கும் பொருட்டு மட்டுமே ! மற்றபடிக்கு அங்கு நடக்கக்கூடிய பஞ்சாயத்துக்கள் பற்றிய ஞானமும் கிடையாது ; ஆர்வமும் கிடையாது ! யார் என்ன நினைக்கிறார்கள் ? என்ற பதைபதைப்பினில் தூக்கங்களைத் தொலைக்கும் பழக்கங்கள் காலாவதியாகி ஏக காலமாகி விட்டது ! என் மனசுக்குச் சரி என்று படுவதை இயன்றமட்டுக்குத் திருப்தியாய்ச் செய்து விட்டு அடுத்த மாதங்களினுள்ளே புகுந்து விடுவதே எனது routine ! So இந்த LIC கட்டிடத்துக்கும் , புது 'கையைப் பிடிச்சு இழுத்தியா ?' க்களுக்கும் துளியும் தொடர்பு லேது !
      அப்புறம் சிக்கனம் என்ற பெயரில் கடந்த எட்டரை ஆண்டுகளாய் வாசகர்களை இட்டுச் சென்றுள்ள பாதையிலிருந்து ஒட்டுமொத்தமாய் மாற்றிப் பயணிக்கச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை சார் ! அது இந்தப் பயணத்தின் மீதே ஒரு அயர்வைக் கொணர்ந்துவிட்டால் சிக்கல் வேறு மாதிரியாகிப் போகும் ! சுவாரஸ்யம் தொடரும் விதமாகவே ஒரு திட்டமிடலை அக்டோபர் இறுதியில் கண்ணில் காட்டுகிறேன் - பாருங்களேன் !

      Delete
    2. சுவாரஸ்யம் தொடரும் விதமாகவே ஒரு திட்டமிடலை அக்டோபர் இறுதியில் கண்ணில் காட்டுகிறேன் - பாருங்களேன் !//

      காத்துக் கொண்டிருக்கிறோம்.

      Delete
  66. அனைத்து கேள்விகளுக்கும் /வாசகர்களுக்கும் தெளிவான / உறுதியான பதிலினினை தந்திட்டீர்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல்- டிசம்பர் இதழ்கள் விலை நிலவரம் கொரோனா தாக்கத்தின் பாதிப்பினை பொறுத்தே அமையும் என்பதால் நமது இதழ்களின் தயாரிப்பு மற்றும் தரத்தில் குறை ஏதும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் சார்... Light Reading - Cartoon must. முடிந்தவரையில் தொடராக உள்ள கதைகளைத் தவிர்த்துவிட்டு one shot அல்லது 2, 3, 4 பாக கதைகளைச் சேர்த்து ஒரே இதழாக கொடுங்கள் சார்...

    ReplyDelete
  67. ! சூடத்தை அணைத்துச் சத்தியம் செய்தாலுமே, நையாண்டி செய்திடவே விழையும் அன்பர்களின் தரப்பைத் திருப்திப்படுத்த முனைவதென்பது காளை மாட்டின் காம்பைத் தேடுவதற்குச் சமானம் என்ற புரிதல்கள் என்றைக்கோ புலர்ந்து விட்டதென்பதால் இந்தப் பிரசங்கம் பகடிகளுக்குச் சமாதானமாயல்ல !

    ######


    சார் இவ்வளவு விளக்கங்கள் கொடுத்த பிறகும் இதில் மீண்டும் கேலி செய்வோர் ,பகடி செய்வோர் ,நையாண்டி செய்வோர்..இங்கே ஒன்று அங்கே ஒன்று என வேஷம் கட்டுவோர் எவரும் கண்டிப்பாக காமிக்ஸ் நேசர்களாக இருக்க முடியாது என்பது 100% உண்மை..


    எனக்கு உங்கள் நீண்ட பதிவை படித்தவுடன் தான் காமிக்ஸ் ன் இருண்ட எதிர் காலத்தின் ஆபத்தை உணர முடிகிறது எனவே இந்த நீண்ட பதிவு கண்டிப்பாக தேவையான ஒன்று.என்ன நீண்ட பதிவுகள் இதுவரை மகிழ்ச்சியை மட்டும் விதைத்து வந்தது. இம்முறை சிறிது கலவரத்தை ஏற்படுத்துகிறது..எப்படி இருந்தாலும் உங்களுடன் நாங்கள் இறுதிவரை தோள் கொடுத்து வருவோம் சார். சிறுவயதில் நமது காமிக்ஸ் இதழ்களின் துணை இல்லாது போயின் இன்று நான் முழு மனிதனாக பரிமத்து இருப்பேனா என்பதே சந்தேகம் தான்..அந்த சிறுவயதில் இருந்து எந்த மனித உறவுகளும் ஏன் நட்புகளும் கூட என் உடன் வரவில்லை..நமது காமிக்ஸ் இதழ்களும் அதன் மூலமாக தாங்களும் தான் என்னை வளர்த்தி எடுத்து வந்த்து ..இந்த காமிக்ஸ் பயணம் இறுதி வரை தொடர்ந்து வர எங்களது கரங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருந்து கொண்டே இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. எத்தனை கவனமாய் வண்டியை இழுத்தாலுமே குதிரைக்குச் சவுக்கடி உண்டு தானே தலீவரே ? So விமர்சனங்களைக் கண்டு நாம் விசனப்பட்டால் வேலைக்கு ஆகுமா ? ஆற்றல் குன்றும் ஒருதூரத்து நாளில், நான் புறப்பட்டிருப்பேன் - ஆனால் நான் பணியாற்றிய புக்ஸ் இங்கு நிலைத்திருக்கும் தானே ?! அந்த ஒற்றைத் திருப்தி போதும் இந்தக் குதிரை ஓடிக்கொண்டிருக்க !

      Delete
    2. உங்களின் புத்தகம் மட்டுமல்ல உங்களின் மேல் நேசமும் எங்களைவிட்டு என்றுமே பிரியாது ஆசிரியரே

      Delete
  68. நண்பர்கள் செனாஅனாஜீ..பெங்களூர் பரணி ,குமார் உங்கள் நல்ல மனம் என்றென்றும் வாழ்க...

    ReplyDelete
  69. தியாக உள்ளங்களை வாசகர்களாக கொண்ட லயன் காமிக்ஸ் சோதனைகளையும் தாண்டி சாதனை படைக்கும் நம்பிக்கை கொள்வோம் நண்பர்களே! ✊ சர்மா

    ReplyDelete
  70. // எது எப்படியோ - ஆண்டவனின் கருணை தொடரும் மட்டிலும் எந்தவொரு குட்டிக்கரணம் அடித்தேனும் நம் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் ! வேகம் மட்டுப்பட்டிருக்கலாம் - சாலையின் கரடுமுரட்டுத்தன்மையின் பொருட்டு ; ஆனால் வண்டி ஒரு போதும் நின்றிடாது //

    இது ஒன்று போதும் சார்..

    ReplyDelete
  71. Better you can come out with reprints of rare old titles with artworks redone.

    ReplyDelete
    Replies
    1. Sorry, will neither be practical nor possible sir !

      Delete
  72. 1. No santha variants next year- i agree
    - i came out of santha last year just to avoid tex and this yr am on tex illa santha..
    - however considering current situation will subscribe for 2021 including tex
    2. Extending this yr books to marc 2021 is practical
    3. X!!! I have black and white
    - makes sense only if u reach trgt count in trgt time
    4. 45 days once u can send 1 courier so till march its only 6 couriers and no xtra mobey to be spent on pking courier etc
    Just my thoughts

    ReplyDelete