Sunday, March 22, 2020

ஒரு கைதட்டிய ஞாயிறு !!

நண்பர்களே,

வணக்கம். தெருவே கைதட்டி சந்தோஷத்தையும், நன்றியையும் வெளிப்படுத்திய அழகை உடனிருந்து, பங்கேற்று, ரசித்த பிற்பாடு இந்த உ.ப.வினை டைப்ப முனைகிறேன் ! அங்கும் சரி, இங்கும் சரி, ஆஜராகிடும் போது உள்ளுக்குள் ஒரு பலம் தெரிவது போலொரு உணர்வு  - "நாம் தனித்தில்லை" என்று !! இந்த வைரஸ் அசுரன் எதற்கு பயன்பட்டுள்ளதோ - இல்லையோ ; ஒரு தேசத்தையே ஐந்து நிமிடங்களுக்கேனும் ஒன்றென உணரச் செய்த புண்ணியத்தைச் சம்பாதித்துள்ளது ! வேறேதேனும் ஒரு ஆளில்லா கிரகத்துக்குப் போய் இந்தப் புண்ணியத்தின்  பலன்களை கொண்டாடிக்கோ கொரோனா !

இதோ ஏப்ரலுக்கென தயாரித்துள்ள இதழ் # 2-ன் முன்னோட்டம் ! And in fact இது ஜம்போவின் சீசன் # 3-ன் முதல் இதழும் கூட ! 
எண்பதுகளில் துவங்கியதொரு திரைப்பட trend எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது ! ஒரு படத்துக்கு பாடல்கள் செமையாய் அமைந்துவிட்டாலே, மித ஹீரோவாக இருந்தால் கூட ஹிட்டடித்துவிடுவார் !! அதே போல ஒரு காமிக்ஸ் ஆல்பத்துக்கு சித்திரங்கள் அற்புதமாய் அமைந்து போனால் கதை எவ்விதமிருப்பினுமே தேறி விடுமென்பது யதார்த்தம் ! இதோ இம்மாதத்து "நில்..கவனி..வேட்டையாடு.." அதற்கொரு prime example தானே ! இதனை ஆங்கிலத்தில் படித்த போது கதையின் தாக்கம் மீதம் ; சித்திர ஜாலம் அசாத்தியம் என்பதே எனது notes ஆக இருந்தது ! ஆனால் நொடி கூடத் தயங்காது இக்கதைக்கு இசைவு சொன்னேன் - simply becos அந்த அமேசானின் பின்னணியையும், மெர்சலாக்கும் சித்திரங்களையும் நாம் தவறாது ரசித்திட வேண்டுமென்ற ஆசையில் ! அந்த பாணியிலேயே நான் தேர்வு செய்த இன்னொரு ஆல்பம் தான் "பிரிவோம்..சிந்திப்போம்..!

பானைச் சோற்றுக்கு ஒரு சோறே பதம் எனும் விதமாய் முன் + பின் அட்டைகள் போதுமென்பேன் இந்தப் படைப்பின் தரத்தைப் பறைசாற்ற !! ரொம்பவே சமீபமாய் ; நான்கே  மாதங்களுக்கு  முன்னே பிரெஞ்சில் வெளியான படைப்பு இது ! வெளியான மறு வாரமே அதிர்ஷ்டவசமாக என் கண்ணில் பட்டிட, நமக்குப் புதியவர்களான இந்தப் படைப்பாளிகளின் கதவைத் தட்டினேன் ! நம் நல்ல நேரமோ, என்னவோ இவர்களை முன்னமே சந்தித்திருந்தேன் ஏதோவொரு புத்தக விழாவினில் ! ஆனால் அந்நேரம் நமக்கு சுவாரஸ்யமூட்டக்கூடிய கதைகளாய் எதையும் அவர்களது கேட்லாக்கிலிருந்து தேடிப் பிடிக்க எனக்கு முடிந்திருக்கவில்லை ! ஆனால் அந்தப் பரிச்சயத்தை நினைவில் அவர்கள் கொண்டிருக்க, சீக்கிரமே "பிரிவோம்...சிந்திப்போம்" தமிழுக்கு ஆஜராகிடும் ஏற்பாடுகள் நடந்தேறின !! 

கதையைப் பொறுத்தவரை yet another cowboy one shot ! ஒன்-இதுவரையிலுமான எல்லா கௌபாய் ஒன்-ஷாட்களுமே நம்மிடையே அழகான வரவேற்பையே பெற்றுள்ளன எனும் போது, இதுவும் அதே template-ல் பயணிக்குமென்று நம்புவோம் !! இது போன்ற கதைகளில் ஹீரோ என தூக்கி வைத்து சிலாகிக்கும் அவசியங்கள் கதாசிரியருக்குக் கிடையாதென்பதால், யதார்த்த மனிதர்களை, அவர்களது நிறை-குறைகளோடே சித்தரிக்கும் வாய்ப்பு அமைந்து விடுகிறது ! இங்கும் அதுவே பாணி ! சிம்பிளான கதைக்களம் ; ஆனால் அதைச் சொல்லியுள்ள விதமும், அதற்கென வரைந்துள்ள சித்திரங்களும் simply awesome !! கைவசம் இதன் டிஜிட்டல் கோப்புகள் தற்சமயமாய் இல்லை என்பதால், வீட்டில் கிடைக்கும் அச்சான தாளிலிருந்து எடுத்த போட்டோவை இங்கே upload செய்துள்ளேன் ; காலையில் இதனிடத்தில் டிஜிட்டல் பக்கமிருக்கும் !! கரடு முரடான மக்களின் பின்புலத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை என்பதால், இதற்கான நமது கருணையானந்தம் அவர்களின் கிளாசிக் மொழிபெயர்ப்பினை நிறையவே மாற்றியமைக்க வேண்டியிருந்தது ! "ஐயோ...தெய்வமே..லேட் ஆகுதே !!" என்ற பீதியோடே அந்தத் திருத்தங்களைப் போட்டவன், இன்றைக்கு அடித்துப் பிடித்து புக்கை அச்சிட்டு விட்டு இப்போது காலாட்டிக் கொண்டிருக்க நேர்ந்திருப்பதே கொடுமை ! 
நாளின் பெரும்பகுதிக்கு வேறு வேலை என்று ஏதுமிருக்கா இந்நாளில் -  "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" அத்தியாயம் 2-ல் பேய் போலப் பணியாற்ற முடிந்துள்ளது ! முதல் அத்தியாயம் தான் tough ஆக இருக்கும் ; தொடர்வன சற்றே இலகுவாய் இருக்குமென்று எந்த மதிகெட்ட வேளையில் எழுதினேனோ , தெரியவில்லை - இந்த அத்தியாயம் 2-ன் துவக்கமே நாக்குத் தொங்க வைத்து விட்டது ! நாயகனோ டிபார்ட்மெண்ட்டையே  தெறிக்க விடும் ஒரு மத யானை ! சட்ட திட்டங்களுக்கோ ; சம்பிரதாயங்களுக்கோ தலைமுடிக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட தராத அதிரடிப் பார்ட்டி ! அவரும் சான் பிரான்சிஸ்கோ போலீஸ்துறையின் தலைவரும் பேசிக் கொள்ளும் (மோதிக் கொள்ளும்) sequence-களை எழுவதற்குள் ஒரு வழியாகிப் போனேன் ! ஆனால் படிக்கும் போது நன்றாகவே இருப்பதாய்ப்பட்டது ! And இங்கோர் முக்கிய குறிப்பு guys : ஸ்கிரிப்டில் ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்களைக் கதாசிரியர் சொல்லியிருப்பதால், அவற்றுள் எதையும் விழுங்கிடக்கூடாதே என அந்தப் பின்னணிகளையெல்லாம் நிறைய கூகுள் செய்து தமிழாக்கம் செய்து வருகிறேன் ! So  புலனாய்வின் பின்னணிகளை கதைக்குள் விதைத்திடும் வரையிலும் நிறையவே வசனங்கள் உண்டு ஒரிஜினலிலும் ! அதனால்  தமிழிலும் அந்தப் பகுதிகளில் வசனங்கள் மிகுந்தேயிருக்கும் ! இந்த ஒற்றை ஆல்பத்தைப் படிக்கும் போது சோம்பலைக் கடாசிவிடுங்கள் folks - ஏனெனில் காத்திருப்பது ஒரு கதாசிரியரின் masterpiece ! ஆகையால் "வசனம் ஓவர் ; இவ்ளோ தேவையில்லை !" என்று பொத்தாம்பொதுவாக comments வேண்டாமே ப்ளீஸ் என்பதை இப்போதே பதிவிட்டு விடுகிறேன் ! ஆக்ஷன் blocks ஆரம்பிக்கும் போது, கபாலத்தில் எஞ்சியிருக்கும் கேசம் நட்டுக்க நிற்காத குறை தான் !! Phew .....!! 

இன்றைக்கு கொஞ்சமே கொஞ்சமாய் ராக்கூத்தடிப்பின் 54 பக்கங்கள் கொண்ட பாகம் 2-ஐ முடித்திருப்பேன் !! இந்த முனைப்பு மட்டும் தொடர்ந்திடும் பட்சத்தில் - ஆகஸ்டா...? Oh yes ....அதற்கு ரொம்ப முன்னமே கூடத் தயாராகிடுவோம் !! தெய்வமே...இந்த தற்காலிக இடர்களை மட்டும் களைந்திடுங்கள் !! Bye folks...see you around !! And STAY SAFE !!

P.S : ஜம்போவின் இரண்டாம் சுற்று நிறைவுற்று விட்டது guys ; மூன்றாம் சீசனுக்கு சந்தாக்களைப் புதிப்பித்திருக்கா பட்சத்தில், இந்த இதழ் ஏப்ரலின்  கூரியரில் இடம்பிடிக்காது என்பதை நினைவூட்டி விடுகிறேனே !! போனில் அப்புறமாய் நம்மவர்கள்  உங்களிடம் டோஸ் வாங்க வேண்டாமே என்ற ஆர்வத்தில்  தான் இந்த நினைவூட்டல் !  

206 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  2. அட்டகாசமான மனதை தொடும் பதிவு சார். உங்களால் மட்டுமே இப்படி இயல்பாக எழுத முடியும். டாப் கிளாஸ். பிரிவோம் சந்திப்போம் preview சும்மா அடிச்சி கிளப்புகிறது.

    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா பற்றி நீங்கள் எழுத எழுத எனக்கு இப்போதே புஜம் துடிக்கிறதே. அது மட்டும் இல்லாமல் நீங்கள் தேவை இல்லாமல் நிறைய வசனங்கள் எழுதுவது இல்லை என்று எங்களுக்கு தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. ///அது மட்டும் இல்லாமல் நீங்கள் தேவை இல்லாமல் நிறைய வசனங்கள் எழுதுவது இல்லை என்று எங்களுக்கு தெரியும்///

      வசனமெல்லாம் சரியாத்தான் எழுதுவாரு.. ஆனா இந்த 'கவிதை'னு வந்துட்டாத்தான்... :D

      Delete
    2. EV கொஞ்சம் சீரியஸ் ஆக பேச விடுங்களேன். :-))))))

      Delete
    3. ரொம்ப நேரம் தேடிப்பார்த்தேனுங்க KS.. நீங்க எழுதுனதுல சீரியஸான விசயம் எதுவுமே காணலையே..!!

      Delete
    4. ,வசன பலூன் நிரம்பி வெடிச்சாதான் நமக்கு பிடிக்கும்

      Delete
    5. குமார் சீரியஸாக பேசிட்டாலும் நாங்க சிரிப்பை அடக்கிக் கொள்வோம். :-)

      நீங்கள் சீரியஸாக பேசுங்க குமார்... சிரிச்சு நாளாச்சு :-)

      Delete
    6. // எனக்கு இப்போதே புஜம் துடிக்கிறதே //
      துடிப்பது புஜம்,ஜெயிப்பது நிஜம்........

      Delete
  3. அந்த அட்டைப்படம் மின்னும் மரணம் அட்டைப்பட சாயலில் இருப்பது போல் தோன்றுகிறது.‌

    ReplyDelete
    Replies
    1. ///அந்த அட்டைப்படம் மின்னும் மரணம் அட்டைப்பட சாயலில் இருப்பது போல் தோன்றுகிறது.‌///

      சரியான கணிப்பு!!

      ரெண்டு பேரும் ஒரே ஆளா இருக்கக்கூட வாய்ப்பிருக்கு! அந்த மி.ம அட்டைப்படம் ஆதார் கார்டுக்காக வரைஞ்சதோ என்னமோ?!!

      Delete
    2. அவுங்க ஃபீல்டுலயே இல்லியே இப்போ.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஏலே யாருல அது... இது சரியில்லை மக்கா :-)

      Delete
    5. ஒருவேளை இந்த கதையின் நாயகர் தளபதி டைகர் ரசிகரா இருப்பாரோ ? :-)

      Delete
  4. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே....

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்.!

    ReplyDelete
  6. எடி சார் சும்மா ராக்கெட் வேகத்தில் மொழி பெயர்த்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த சமயத்தில் நாம் செய்வது நேர்மறை எண்ணங்கள் கொள்வது மட்டுமே. எப்போதும் அதுவே நல்லது. மே ஜூன் மாதங்களில் வேலையை முடித்து விட்டு நன்றாக ஓய்வு எடுங்கள் சார்.

    ReplyDelete
  7. அட்டைப்படம் தகதகவென நெருப்பு வெளிச்சத்தில் மின்னுகிறது.

    ReplyDelete
  8. 'பிரிவோம் சந்திப்போம்' - முன் பின் அட்டைப்படங்கள் - மிரட்டல் ரகம்!! முன்னட்டையில் அந்தக் கண்களில் தெறிக்கும் கோபக் கனல் - ஆத்தாடியோவ்!!!! 'நில் கவனி வேட்டையாடு' என்ற சித்திர விருந்துக்குப் பிறகு இவ்வளவு சீக்கிரமே மீண்டும் ஒரு விருந்து கிடைக்கவிருப்பது கோரோனாவையும் மறக்கவைத்து குதூகலத்தை அதிகரிக்கிறது!! கதையும் நிச்சயம் சூப்பர் ஹிட்டடிக்கப்போவதாக உள்ளுணர்வு உரக்கச் சொல்கிறது!! ஆவலுடன் வெயிட்டிங்கு!

    ReplyDelete
    Replies
    1. // 'நில் கவனி வேட்டையாடு' என்ற சித்திர விருந்துக்குப் பிறகு //
      அதே,அதே.....
      நி.க.வே கண்களுக்கு வேற மாதிரியான காட்சி விருந்தை கொடுத்தது,நமது காமிக்ஸின் அடுத்த கட்ட பாய்ச்சல்........

      Delete
  9. பிரிவோம் சந்திப்போம் அட்டைப்படம் நன்றாக உள்ளது.‌ அட்டைபடத்திற்கு தேர்ந்தெடுத்த படமும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. /// அட்டைப்படம் நன்றாக உள்ளது.‌ அட்டைபடத்திற்கு தேர்ந்தெடுத்த படமும் நன்றாக உள்ளது.///
      ஏம்ப்பா..நான் சரியாத்தானே பேசிக்கிட்டிருக்கேன்..

      Reply

      Delete
    2. நீங்கள் சரியாக புரிஞ்சுக்கவில்லை.

      போங்க போய் LKGல இருந்து படிச்சுட்டு வாங்க:-)

      Delete
    3. வேணாம் சாமி.. நீ மொழிபெயர்த்து அவருக்கு முழிபெயர்ந்து பழையபடி நான் நீ எழுதுனதுக்கு மொழிபெயர்க்கும் நிலமை வேண்டாம்ல :-)

      பாவம் நம்ப பத்மநாபனை விட்டுவிடு :-)

      Delete
  10. வாவ்...

    பிரிவோம் சந்திப்போம்..

    அட்டைப்படமே கலக்கி எடுக்கிறதே...முன்பின் இரு அட்டைப்படமும் செம சார்..

    ReplyDelete
  11. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவின் மொழிபெயர்ப்பு தோட்டா வேகத்தில் சென்று கொண்டிருப்பது சந்தோஷம்.

    கொரோனா என்ற அரக்கனும் புயல் வேகத்தில் விரைவில் அழிந்து போகட்டும் எல்லாம் வல்ல இறைவனின் அருளால்.

    ReplyDelete
  12. சார் இது வர வந்த அட்டைவள்லயும்....இனி வரப்போவும் அட்டைவள்லயும் இதுவே டாப்...

    ReplyDelete
    Replies
    1. இந்த வரிகளை ஒவ்வொரு மாதமும் சொன்னால் ஆசிரியர் தான் என்ன பண்ணுவார் ஸ்டீல்..:-)

      Delete
    2. இனி சொல்ல முடியாதோ

      Delete
  13. அந்த லயனப் போல மனம் படைச்ச மன்னவனே
    பனி முத்தப் போல குணம் படைச்ச தென்னவனே

    கதைவளிலே ..ஒரு நூலெடுத்து..

    கென்யாக்கும் இந்தியாக்கும்
    சம்பந்தம் உண்டுன்னு
    சொன்னது யாரு
    அது விசயனோட பேரு

    அந்த லயனப் போல மனம் படைச்ச மன்னவனே
    பனி முத்தப் போல குணம் படைச்ச தென்னவனே



    Pdf ஆன போதும்
    இது லயனு போகும் வீதி...
    மாறி மாறி விற்றும்
    இனி இதுவே நமக்க்கு நாதி

    அறிவிப்பு விட்டதாலே
    நீ கதய காத்த காளி
    கதய காத்த போதும்
    Ars பழியை சுமந்த நீதி

    சாமி வந்து கேட்டிடுமா...
    Ars கதய தந்திடுமா...

    கென்யாக்கும் இந்தியாக்கும்
    சம்பந்தம் உண்டுன்னு
    சொன்னது யாரு
    அது விசயனோட பேரு

    அந்த லயன போல மனம் படைச்ச மன்னவனே
    பனி முத்து போல குணம் படைச்ச தென்னவனே



    வாசகர் என்னும் கூடு
    அதில் pdf விட்டதாரு
    புக்கா வந்த போதும்
    அதை துடைப்பதிங்கு யாரு..

    கலங்கும்போது திருட்டு
    அது தெளியும் போது விரட்டு
    திருடன் போட்ட கோடு
    அதை திருத்த போவதாரு

    Pdf புண்ணும் ஆறிடுமா..
    கென்யாவுந் தான் தேறிடுமா..

    கென்யாக்கும் இந்தியாக்கும்
    சம்பந்தம் உண்டுன்னு
    சொன்னது யாரு
    அது விசயனோட பேரு

    அந்த லயன போல மனம் படைச்ச மன்னவனே
    பனி முத்த போல குணம் படைச்ச தென்னவனே

    கதைவளிலே ..ஒரு நூலெடுத்து..

    கென்யாக்கும் இந்தியாக்கும்
    சம்பந்தம் உண்டுன்னு
    சொன்னது யாரு
    அது விசயனோட பேரு

    அந்த லயனப் போல மனம் படைச்ச மன்னவனே
    பனி முத்தப் போல குணம் படைச்ச தென்னவனே

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஆளவிடுங்க... காலையில் மொழிபெயர்ப்பு செய்து கை வலிதான் மிச்சம். இவன் டைப்புர வேகத்திற்கு இனி இவன் பையன் தான் வந்து மொழிபெயர்ப்பு செய்யனும் :-)

      Delete
    2. ஸ்டீல்!!! :)))))))) ஹா ஹா ஹா.. பின்றீங்க!! செம்ம செம்ம!! என்னவொரு வார்த்தைப் பிரயோகம்!!

      Delete
    3. முடியும்... இதை விட வேற முக்கியமான வேலையிருக்குலே :-)

      Delete
    4. பரணி ஸ்டீல் ஹா ஹா ஹா ஹா

      Delete
    5. பரணி ,ஸ்டீல்...:-))))))

      Delete
    6. கவிஞரே.....டயப்பர் மாற்றும் வேலைலாம் இன்னும் இல்லியோ ?

      Delete
    7. ஸ்டீல்..மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      Delete
  14. வணக்கம் சார்,
    பதிவுகளை படித்து உள்வாங்கி என்ன எழுதலாம் என்று யோசிப்பதிலேயே - காலம் கடந்து செல்கிறது.(இப்படியே கொரானாவையும் கடந்து சென்று விட வேண்டும். என்பது தான் ஆசை)
    ஏப்ரல் இதழ்களை அனுப்புவது பற்றி எனது ஆலோசனை.
    பொதுவா யோசிச்சா என்னைப் போல் சிலர் மாதச் சம்பளம் வாங்குவது - லீவ் எடுத்தாலும் பண இழப்பின்மை என்ற பாதுகாப்பில் இருபதால் பிரச்சனை இல்லைதான்.
    ஆனால் தினக்கூலி என்ற சூழலில் உள்ளவர்களின் நிலமையை யோசிக்கும் போது மிகவும் மனதிற்கு சங்கடமாக உள்ளது.
    எனவே, பாதுகாப்பு என்ற பெயரில் ரொம்பவே நம்மை வட்டம் போட்டு இருந்து கொள்வது சரிதானா என்று தெரியவில்லை.
    ஆதலினால், நீங்கள் உங்கள் ஆபிஸில் பணிபுரிபவர்களை சரியானபடி கண்காணித்துத் கொண்டு புத்தங்களை பிளாஸ்டிக் கவர்களில் சீல் வைத்து பெட்டியில் அடைத்து, தாங்கள் பதிப்பு துறையில் உள்ளதால் தேர்ந்தெடுத்து சில வாசகங்களை அட்டையில் ஒட்டி டேப் சுற்றி அனுப்பினால் நாங்களும் வீட்டில் கொண்டு வந்து தண்ணீரில் கழுவி விட்டு பின் காய வைத்து பிரித்து படித்துக் கொள்வோம்.
    இது நிச்சயாக காமிக்ஸ் படித்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் சொல்லும் எனது கருத்து அல்ல சார்.

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் தினக்கூலி என்ற சூழலில் உள்ளவர்களின் நிலமையை யோசிக்கும் போது மிகவும் மனதிற்கு சங்கடமாக உள்ளது.
      எனவே, பாதுகாப்பு என்ற பெயரில் ரொம்பவே நம்மை வட்டம் போட்டு இருந்து கொள்வது சரிதானா என்று தெரியவில்லை.///

      அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்து மத்திய அரசும்,கொள்கை சார் முடிவுகளை எடுத்து வருகின்றன...

      தமிழகத்திலும் இதுகுறித்த விவாதங்கள் ,கொள்கை முடிவு குறித்த ஆலோசனைகள் துவங்கி விட்டன...

      (சென்னை,காஞ்சி ,ஈரோடு மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும் போல தெரிகிறது)

      இது குறித்த உங்கள் அச்சம் நியாயமே எனினும் உங்கள் ஆலோசனை ஏற்க கூடியதன்று...

      Delete
    2. அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்து மத்திய அரசும், சில மாநிலங்களும் கொள்கை சார் முடிவுகளை எடுத்து வருகின்றன...

      Delete
    3. ///சில மாநிலங்களும் கொள்கை சார் முடிவுகளை எடுத்து வருகின்றன...///

      கொள்கையைக் கூட மரியாதையா 'சார்' போட்டு சொல்றீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க செனாஅனா!!

      Delete
    4. இங்குமே பெரும் நிறுவனங்களை மூடச் சொல்லி நகர நிர்வாகத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் சார் ! அநேகமாய் வரும் வாரத்தில் சிவகாசியின் இயக்கம் எவ்விதமிருக்குமோ என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது !!

      Delete
    5. Chennai, Erode, Kanchi, Bangalore in lock down mode. Even if books are sent (provided couriers accept), they would not be delivered. Though they say it is upto 31st March - the incidence would be much higher then and they would tighten the noose more !

      Delete
    6. // இங்குமே பெரும் நிறுவனங்களை மூடச் சொல்லி நகர நிர்வாகத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் சார் ! அநேகமாய் வரும் வாரத்தில் சிவகாசியின் இயக்கம் எவ்விதமிருக்குமோ என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது !! //
      கண்டிப்பாக இது ஒரு அசாதாரணமான சூழல்தான் சார்,இச்சூழல் சில விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது,பல பாடங்களை சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறது....

      மேல்நிலைத் தேர்வுகள் இன்னும் 3 மீதம் இருக்கும் நிலையில் அதையும் வெற்றிகரமாக முடித்து மீண்டு வருவதே எங்களுக்கும் ஒரு சவாலாகவே உள்ளது.....
      விரைவில் மீண்டு வருவோமாக..........
      இதுவும் கடந்து போகும்........

      Delete
    7. // கொள்கை முடிவு குறித்த ஆலோசனைகள் துவங்கி விட்டன... //
      கொள்கை முடிவுகள்,ஆலோசனைகள் சீக்கிரமே நடைமுறைக்கான தீர்வுகளை கொடுக்கட்டும்,தாமதிக்கப்பட்ட முடிவுகள் உரிய பலன்களை அளிப்பதில்லை.......

      Delete
  15. மழையின் அழகு புத்தகம் முழுதும் நிரம்பி வழிந்தாலும் சலிக்காது...முன்னட்டையில் சொட்டும் மழையும் பின்னட்டயில் வெள்ளமாய் கொட்டுமழையும் கவிதைய்ன்னா...ரோஜாப்படுக்கையல்ல அழகு கவிதை....ஓவியமோ மிரட்டலாய் ஒரு படி மேல

    ReplyDelete
    Replies
    1. வரிகளோ அடுத்த வாரமே வரணுமேன்னு செந்தூர் திசைக்கோர் கும்பிட போடச் சொல்லுது

      Delete
    2. இதுல என்ன சொல்றார் என்றால் பிரிவோம் சந்திப்போம் அட்டைப்படத்தை வர்ணிக்கிறார்.

      புத்தகம் முழுவதும் படத்தில் மழை நிரம்பி வழிந்தாலும் சலிக்காது என சொல்றார் :-)

      முன் அட்டையில் மழைத்துளி உள்ளது பின் அட்டையில் வெள்ளமாக கொட்டும் மழை கவிதை என்கிறார்.

      Delete
    3. PFB பாவம் நீங்க.

      Delete
    4. ஸ்டீல் க்ளா வாய்ஸ்: நண்பேன்டா!..

      Delete
    5. PfB..

      ஹா ஹா ஹா!! செம்ம!! :))))

      Delete
  16. Sir, கதை தலைப்பு 'பிரிவோம் சநதிப்போம்' or 'பிரிவோம் சிந்திப்போம் ???நீங்க 2 இடத்தில் பிரிவோம் சிந்திப்போம் என்று சொல்லி இருக்கிறீர்கள்...,🤔😊

    ReplyDelete
    Replies
    1. அது தமிழில் டைப்பும் செயலியின் உபயம் சார் !! "santhippom " என்று அடித்தால் முதலில் அது தருவது "சிந்திப்போம்" என்பதே !! அதை கவனிக்காது விட்டு விட்டேன் போலும் !

      Delete
    2. சார் ப்ரூஃப் ரீடிங் வேலைக்கு ஒரு ஆள் சிக்கியிருப்பதை கவனிக்கலையா நீங்க? :)

      Delete
    3. ஆனா நான் தப்பா இருந்த வார்த்தையவே சரியா படிச்சு இருக்கேன் செயலரே..இதுக்கு என்ன சொல்றீங்க...:-)

      Delete
    4. விக்ரம் blueberry # நம்ப ஜூனியர் எடிட்டர் பெயர் மாதிரி தெரியுது :-)

      Delete
    5. இது விக்ரம் from பெரம்பலூர் sir. Thank u🤝

      Delete
  17. ####So புலனாய்வின் பின்னணிகளை கதைக்குள் விதைத்திடும் வரையிலும் நிறையவே வசனங்கள் உண்டு ஒரிஜினலிலும்#####

    அப்படியானால் இதுக்கும் ஒரு புலனாய்வு போட்டுடுங்க சார்..

    ReplyDelete
  18. பிரிவோம் ...சந்திப்போம் !!!


    டைட்டிலை எடிட்டர் வச்ச நேரம் அது நம்ம காமிக்ஸ் புக்ஸ்களுக்கு பொருத்தமான போச்சு..


    பிரிவோம் ..சிந்திப்போம் - ங்கறதும் ஒருவகையில் சரிதான்..

    பிரியதறதுக்கான காரணத்தை பத்தி சிந்திப்போம்...பொறுமை காப்போம்..

    ReplyDelete
  19. We are waiting sir. Take your time to reach us.

    ReplyDelete
  20. பிரிவோம் சந்திப்போம் முன்,பின் அட்டைகள் அசத்தல் ரகம்.......
    முன் அட்டையில் அந்த துப்பாக்கியை ஏந்தி ஏற்கும் ஸ்டில்லை பார்த்தால் இந்தி நடிகர் அமீர்கான் மாறுவேஷத்தில் நிற்பது போலவே தெரிகிறது........

    ReplyDelete
  21. பி்ரிவோம் சந்திப்போம்--- அட்டைகள் 2ம் அருமை! ஓவியங்கள் டாப்பான கதை படிக்க எப்போதும் ஆவல் ஒரு மிடறு கூடுதலாக இருக்கும்! லுக்கிங் பார் இட்!

    ReplyDelete
  22. எதிர்காலம் எனதே ஒரு மீள் பார்வை ...

    இக்கதைக்கு விமர்சனம் எழுதுகையில்

    ராமனை போல் ஒரு ராஜா இருப்பின் அனுமன் போல் அவனுக்கு சேவகன் கிடைப்பான் என்ற முதுமொழியையும்


    Its the way one treats his inferiors more than the way he treats his equals which reveals one’s real character - என சார்லஸ் மிலிகன் என்ற மெதடிஸ்ட் 1910-ல் சொன்னதை சார்லி சாப்ளின் வேறு வரிகளில் சொன்னதையும் அடிப்படையாக கொண்ட கதை என சொல்லி விட்டு விட்டேன் ..


    இதே வரிகளை ஜே கே ரோலிங் தனது நான்காவது புத்தகமான harry potter and goblet of fire புத்தகத்தில் சிரியஸ் பிளாக் ஹெர்மயானி –யின் கூற்றை ஆமோதிக்கும் வண்ணம் ரானிடம் கூறுவதாக பயன்படுத்தி இருப்பார்
    If you want to see the true measure of a man watch how he treats his inferiors not his equals ..


    கதையில் வேலைக்காரர்களாக விளங்கும் house elves எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றிய விளக்கம் இது ..


    நமது கதையில் -எதிர்காலம் எனதே-வில்



    அலெக்ஸ் காண்ட் தனது கீழே அர்ப்பணிப்புடன் பணிபுரியும் மைசியை நடத்தும் விதமே கதை நடக்க ஆரம்ப புள்ளி


    மைசியின் வாயாலேயே முதலில் பக்கம் எட்டு ‘’ காண்ட் என்னை அறிமுகப்படுத்த மறந்துவிடுவார் ‘’என ஜான் டாலிடம் கூறுவதை வைத்து அறியலாம்


    மறுபடியும் மாடஸ்டி ,வில்லி காண்ட்-ன் எஸ்டேட்டை அடையும்போது ஜான் டால் ‘’ இது மைசி பிரெண்ட் ! மறுபடியும் அறிமுகப்படுத்த மறந்து விட்டீர்கள் ‘’ என காண்ட் –டிடம் கூற அதற்கு மைசி டாலிடம் நன்றி கூறுவதை பக்கம் 15-ல் காணலாம் ..

    இதனை மாடஸ்டி வாயிலாக கதையின் 26- ம் பக்கத்தில் வில்லியுடன் பேசும்போதும் அறிகிறோம்


    பின்னர் மாடஸ்டியுடன் மைசி இறுதியில் பக்கம் 33 -ல் நடத்தும் சம்பாஷணைகள் மூலம் தெளிவாக அறிகிறோம்


    மைசி ஒரு பணியாளாக எதிர்பார்த்தது தனது உழைப்புக்கான அங்கீகாரத்தைத்தான் ...


    பணிக்கான சம்பளத்தை முறையாக பெற்று கொள்ளும் மைசி அந்த அங்கீகாரத்துக்கான எதிர்பார்ப்பை வளர்த்து கொண்டு காண்ட் –ஐ வஞ்சிக்க நினைப்பது தவறே
    ஆயினும் மனித இயல்புகளின் வரைமுறை நியதிகளுக்கு மைசி விதிவிலக்காய் இருக்க முடியாது



    நமக்கு சமமானவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை விட நமக்கு கீழே உள்ளவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதே நாம் யார் என்பதை உலகுக்கு தெரிவிக்கும் ...

    நிர்வாக மேலாண்மையை பற்றி வலியுறுத்தும் இக்கருத்து என் மனதில் அழுத்தமாக பதிந்தபடியால் அதனை ராமன் ,அனுமன் என்றும்
    சார்லி சாப்ளின் மேற்கோளை காட்டியும் இங்கே பிரஸ்தாபித்தேன் ..


    மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு மேற்கோள்களையும் இவ்வண்ணம் விளக்கி எழுதியிருக்கலாம்தான் ...

    நேரம் மட்டுமே சிலசமயம் தடையாய் இருப்பினும் ஒரு காமிக்ஸ் –ன் பின்புலம் பற்றிய தகவல்களை எழுத கஷ்டப்படுவதில்லை .


    கழுகு மலைக்கோட்டை –யின் மாடஸ்டி –வில்லியின் நட்பு பிணைப்பு பற்றிய உளவியல்ரீதியான கதாசிரியரின் அணுகுமுறையும் இதைப்போலவே மிகவும் கவர்ந்த ஒன்று ...


    மேலை நாடுகளில் appreciative criticism என ஒரு படைப்பின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து அதன் உயர்வு தன்மை குறித்து எழுதுவார்கள் ..

    இது முழு விமர்சனமாய் இருக்காது ..


    அவ்வகையில் நிர்வாக மேலாண்மை குறித்து எதிர்காலம் எனதே சொல்வதை வைத்து ஒரு புத்தகமே போடலாம்


    ReplyDelete
    Replies
    1. // நமக்கு சமமானவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை விட நமக்கு கீழே உள்ளவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதே நாம் யார் என்பதை உலகுக்கு தெரிவிக்கும் .. //


      +1

      Delete
  23. "வன்மேற்கு- வாழ்க்கை இங்கே ரோஜாப் படுக்கை அல்ல!!"--- டைட்டில் வசனமே உள்ளே என்ன காத்திருக்கு என்பதற்கு கட்டியம் கூறுகிறது! இந்த நேரம் பார்த்து...ச்ஏசே...சரி! காத்திருந்து படிப்பதும் ஒரு சுகமே!

    ReplyDelete
  24. ஜம்போ சீசன்:1 & சீசன் 2 என தொடர்ந்து ஹிட்!

    ஹாட்ரிக் ஹிட் அடிக்க வாழ்த்துகள் சார்.💐💐💐

    இந்த சீசன்3ல் என்னை பொறுத்து இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம் இருக்கு! காரணம்.....

    ReplyDelete
  25. 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

    காமிக்ஸ் எனும் கனவுலகம்- வாட்ஸ்அப் குரூப் சார்பில் 2019ம் ஆண்டின் ஓப்பன் புக் போட்டிகள் சென்ற அக்டோபரில் நடந்தது!

    போட்டிக்கான பரிசுகள்:-
    டாப்10ல் முதல் 6இடங்கள்...!!!

    2020ன் லயன் காமிக்ஸ் ஜம்போ சீசன் 3ன் சந்தா!

    டாப் 10ல் கடேசி 4இடங்களுக்கு பழைய காமிக்ஸ்கள்!

    போட்டி நடந்த முறை:- ஒரு மாதம் முன்னரே எந்த புத்தகங்கள் என அறிவிக்கப்பட்டு விட்டது.
    அவைகள்:-பராகுடா 1&2 மற்றும் பிஸ்டலுக்குப் பிரியா விடை!

    ஒவ்வொரு ஞாயிறும் ஒரு புத்தகத்தில் இருந்து 10கேள்விகள் கேட்கப்பட்டது!
    2மணி நேரங்களில் புக்கை பார்த்து பதில் தேடி கண்டுபிடித்து நண்பர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பனும்.
    மொத்தம் 30கேள்விகள்; 60மதிப்பெண்கள்!

    கடுமையான போட்டிக்கு இடையே நான் 2வது இடம் பிடித்து இருந்தேன். 3ஞாயிறு உழைப்புக்கு உரிய பலனாக 2020 ஜம்போ சீசன்3-ன் சந்தா பரிசாக கிட்டியது.

    முதல் முறையாக போட்டியில் பரிசாக வென்ற புத்தகங்களை படிக்க போகிறேன்(றோம்). இதன் காரணமாக ஜம்போ சீசன் 3வரும் செய்தி கூடுதலாக எக்ஸைட்மெண்ட் தருகிறது!

    என்னோடு இணந்து வென்ற மற்ற நண்பர்கள்,

    1.பல்லடம் சரவணக்குமார்
    2.சேலம் டெக்ஸ் விஜயராகவன்
    3.சுரேஷ் திருவண்ணாமலை
    4.J ji
    5.சங்கர் திருச்சி
    6.ஓவியர் அப்பு சிவா,

    வெற்றி பெற்று வெற்றிக்கனியை ருசிக்க போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐

    போட்டியை சுவாரசியமான முறையில் நடத்திய கிட் அங்கிள் & பேபி அங்கிள் & காமிக்ஸ் எனும் கனவுலகம் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பர்களே

      Delete
    2. முதல் ஐவருக்கு போட்டியில் வென்றதற்கும் நண்பர் அப்பு சிவாவிற்கு அவருடைய திறமையை யாராட்டி சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.! 😍

      Delete
  26. மேற்கண்ட போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுள் சில...!!!

    பராகுடா 1ல் இருந்து....

    கேள்வி 1
    கேப்டன் ப்ளினும் மோர்க்கமும் கதைப்படி மூன்று முறைகள் மூன்று இடங்களில் மோதிக்கொள்கிறார்கள்.!
    அவர்கள் மோதிக்கொள்ளும் மூன்று இடங்கள் எவையெவை என்று கதையில் குறிப்பிடப்படுகிறது?

    கேள்வி 2
    "தவிர்க்க வேண்டியவற்றிற்கு வாழ்வில் இடம் தருவானேன்?"

    மேற்கண்ட வரிகள் எதில் இடம்பெறுகிறது.? அதை எழுதியவர் யார்.?

    கேள்வி 4
    டான் ச்லிர்போஸ் டிலா லோயாவிடம் என்னென்ன கொடுத்தார்???

    கேள்வி 6
    இரண்டாம் பாகத்தில் (வடுக்கள்) இடம்பெறும்..

    " அவள் என்னை மட்டுமே நேசிக்கிறாள்.!"

    என்ற வசனத்தை யார் யாரிடம் கூறுகிறார்கள்.?

    கேள்வி 5
    மரியாவின் அடிமையின் பெயர் என்ன? அவனுக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

    கேள்வி 7
    மரியாவின் தாயார் கடைசியாக பேசும் வசனம் என்ன?
    அவளுடைய கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் என்ன.?

    கேள்வி 10
    கஷார் வைரத்தின் உரிமையாளர் யார்? அவர் ஆண்டு வந்த ராஜ்ஜியம் எது.? அது எங்குள்ளது?

    பராகுடா 2ல் இருந்து....

    கேள்வி 1
    எஸ்பார் முனையின் உபயோகம் என்ன.?
    அதைப்பற்றி யார் யாரிடம் கூறுகிறார்கள்?

    கேள்வி 2
    "ஆண்டவனே! டாருக்கா இந்த கதி?"

    இந்த வசனத்தை பேசுபவர் யார்? கேட்டுக்கொண்டிருப்பது யார்?

    கேள்வி 3
    "கருணை காட்டும் கடமை கர்த்தருக்கு உண்டு"
    இந்த வசனத்தை சொல்பவர் யார்..?
    இந்த வசனத்திற்கு முன்னதாக இவர் யாருடைய கேள்விக்கு பதில் அளிக்கிறார்.?

    கேள்வி 5
    ரெட் ஹாக்கை அடக்க வந்தது யார்? அவருடைய கப்பல் ஒன்றின் பெயரைக் குறிப்பிடுக.?

    கேள்வி 6
    ரானலா தீவின் உரிமையாளரின் முழுப்பெயர் என்ன? அவர் யாரைக் கொலை செய்கிறார்?

    கேள்வி 7
    தன்னைச் சுடும் நபரை ஏற்கனவே சுட்ட நபர் யார்.?
    அவருடைய பிறப்புக்கும் இறப்புக்கும் உள்ள ஒற்றுமை யாது?

    கேள்வி 9
    மாலியோ பன்டா தவிர மூரிக்கள் உச்சரிக்கும் மற்ற வார்த்தைகள் என்னென்ன.?

    கேள்வி 10
    ஆழ்கடல் சுகவீனம் மேடம் யெஸ்நோவை எங்கே பீடித்தது? அதை அவர் யாரிடம் சொல்கிறார்.?

    பொழுது போகாத ஒரு நாளில் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க ஃப்ரெண்ட்ஸ்
    சரியான விடை காண எத்தனை நேரம் ஆகிறது என????

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விகளை எடுக்க எனக்கு எத்தனை நேரம் ஆகியிருக்கும் என நினைக்கிறீர்கள்..!? 😉

      Delete
    2. ஒவ்வொரு கேள்வியும் சுவாரசியமான ஒன்று தான் ஃப்ரெண்ட்ஸ்!

      குறிப்பாக பராகுடா2ல் 7வது கேள்வி பாருங்க. வேற லெவல்! பதில் கண்டுபிடிப்பவர்கள் காலரை கெத்தாக தூக்கி விட்டுக் கொள்ளலாம்!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. அதெல்லாஞ்சரி...

      பிரிச்சி மேஞ்சதப் பத்தி ..நாமளே.கேட்டு பதில் போட்டமே...அந்தப் பத்தி...

      ஒண்ணயுங்காணோம்...

      Delete
    5. அதெல்லாம் அந்த கதாசிரியருக்கே தெரியாத விசயங்கள்..:-)

      Delete
    6. ஒவ்வொரு புக்கிலும் இருக்கும் ஒவ்வொரு பேஜ்ல இருந்தும் பல கேள்விகள் கேட்டு பதில் தந்து டிஸ்கஸன் செய்த்தை மறக்க முடியுமா ஜி!!!! ஆனாக்கா அதற்கு பிறகும் கூட, கிட் அங்கிள் இத்தனை சுவாரஸ்யமான கேள்விகள் தேர்வு செய்தது ஆச்சர்யமானது!

      குரூப் டிஸ்கஸன்ல பேஸ்து அடிச்ச மாதிரி பாரத்துட்டு இருந்தவங்கள நினைச்சாத்தான்....!!!

      Delete
    7. ///குரூப் டிஸ்கஸன்ல பேஸ்து அடிச்ச மாதிரி பாரத்துட்டு இருந்தவங்கள நினைச்சாத்தான்....!!!////

      ???? Now i understand why you were forced to keep silence for 3 months STV!!

      Many who didn't participate in the discussion or the contest might have had their own reason...

      Unknowingly you are hurting their pride ..

      To be humble is a virtue..

      Discussions/ contests are healthy to any group.

      But to comment upon the silent ones like this is certainty not healthy..

      Just a point to ponder over..

      Delete
    8. //But to comment upon the silent ones like/// வெரி வெரி சாரி பொருளர் ஜி! this is certainty not healthy..// வெரி வெரி சாரி பொருளர் ஜி! அறியாம என் வார்த்தைகள் சங்கடப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!

      Delete
  27. பிரிவோம் சந்திப்போம். அட்டைப்படமே கதை சொல்கிறது.

    ReplyDelete
  28. Sir,
    ஜம்போவின் புதிய வெளியீடு எண் 14 என்று இருக்கிறது. இதுவரை 12 தானே வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஜம்போ சீசன்2ல் 7வது இதழ் "கால வேட்டையர்கள்"--- பிரிண்டிங் பண்ணிட்ட பிறகு, ஒத்தி வைக்கப்பட்டது நண்பரே! என்னிக்காவது அது சஸ்பென்ஸ் ஆக வரும். எனவே எண்ணிக்கை சீசன் 2ல் 8ல் இருந்து ஆரம்பித்து 13ல் முடிந்தது. சீசன்3, தானாகவே இப்ப 14ல் இருந்து ஆரம்பிக்கிறது.

      Delete
  29. Nil... Gavani.... Vettaiyadu.... Motion Video https://www.youtube.com/watch?v=joB2mMd9rg4

    ReplyDelete
  30. Lock out may be extended to other parts of Tamilnadu soon.

    ReplyDelete
  31. 144 போட்டாச்சு.. பத்திரமாக வீட்டில் இருங்க நண்பர்களே..

    ReplyDelete
    Replies
    1. ஒரு 144 ஸ்பெஷல் ஆர்டர்!!

      Delete
  32. பிரிவோம் சந்திப்போம் அட்டைப்படம் அருமை. கதையை பற்றிய ஆர்வம் அதிகரிக்கிறது.

    ஜம்போ உங்களை வெகுவாகவே கட்டைவிரலை வாய்க்குள் விடவைக்கிறது அது எங்களுக்கும் சாதகமாக முடிகிறது சார். எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நீங்க தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்துமே அருமை.

    வருங்காலத்தில் சந்தா முழுவதுமே ஜம்போவாக இருக்க வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்துங்கள் .

    ReplyDelete
    Replies
    1. இதைத்தானே நான் எதிர் பார்க்கிறேன். // எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நீங்க தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்துமே அருமை. // சிறிதும் சந்தேகமின்றி

      Delete
    2. //எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நீங்க தேர்ந்தெடுக்கும் கதைகள்//

      நிஜம் தான் நண்பரே....ஹீரோவை ஆராயத் தேவையில்லை ; ஜானர்கள் குறித்த வேலிகளும் கிடையாதெனும் போது - கண்ணில்படும் சுவாரஸ்யக் களங்கள் எல்லாவற்றையுமே பரிசீலிக்க முடிகிறது ! பார்ப்போமே - எனது அதிர்ஷ்டம் சீசன் த்ரீயிலும் தொடர்கிறதாவென்று !

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. கதைக்களத்தை தேர்வு செய்திட உங்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரமே 'ஜம்போ' என்ற உருவில் - சொல்லி அடிக்கிறது எடிட்டர் சார்!!

      வீ லவ் ஜம்போ!!

      Delete
  33. வணக்கம்,

    நான் கடைசியாக படித்தது சென்ற ஆகஸ்ட்டுக்கு வந்த "பிஸ்டலுக்கு பரியாவிடை". அந்த மாதத்தில் வந்த இதர இதழ்களையும் சேர்த்து இன்று வரை புத்தகங்களை வாங்குதோடு சரி, வீடு கட்டுமான பணி இருந்ததால் படிக்க mood set ஆகவில்லை, அப்படியே வைத்து விடுவேன். ஆனால் இப்பொழுது போதிய நேரம் கிடைப்பதால் தினமும் காமிக்ஸ் தான். இம்மாத கதைகள் நான் வழக்கமாக வாங்கும் stall க்கு வராததால் Feb to august என மாத வாரியாக reverse ல் படிக்க ஆரம்பித்தேன்.

    பதிவுகளை தவறாது படித்து வந்தாலும், இடைப்பட்ட இக்காலத்தில் எத்தனை வகையான புத்தகங்கள். மே மாதத்தில் தனி ஒருவன், ஜூன் & ஜூலை மாதம், ஆகஸ்டில் பி.பி.வி தவிர அனைத்தும், sep to Feb மாத புத்தகங்கள் என தேங்கி நின்றது 37. எண்ணிப்பாருங்கள் இத்தனை புத்தகங்களையும் ஒரு சேர படிக்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று.
    எத்தனை வெரைட்டி, அதில் எதை முதலில் படிப்பது என்கிற அவா என இதுவும் ஒரு தனி த்ரில் தான்.

    ஆட்டத்தை துவக்கி வைக்க தலயை விட சிறந்தவர் உண்டா என எண்ணி, டெக்ஸ், கார்சனோடு வறுத்த கறியும் நினைவுக்கு வர, சரி வன்மேற்கில் ஜாலியாக ஒரு ரவுண்டு வரலாம் என முடிவெடுத்தேன். டெக்ஸின் all time favorite classic என்று ஆசிரியரும் விளம்பரப்படுத்தியிருக்க, நண்பர்களும் ஒரு சிலர் தவிர்த்து பலரும் thumps up கொடுத்திருக்க, ஆஹா "மரண முள்", "வல்லவர்கள் வீழ்வதில்லை" போன்று ஒரு different ஆன அனுபவம் காத்திருக்கிறது என்று எக்கச்சக்க எதிர்பார்ப்போடு எடுத்த கதை தான் "ஒரு துளி துரோகம்".

    ReplyDelete
  34. ரயில் பயணத்தில் டெக்ஸ் கார்சனுக்கு உரைக்கும் flash back உடன் துவங்குகிறது கதை. சரி நிகழ் காலத்திற்கு வருவார்கள் என்று பார்த்தால் கதை flash back கிலேயே தொடர்கிறது. அங்காவது ஏதாவது புதிதாக இருக்கும் என்று பார்த்தால், இளம் டைகர் கதைகளில் பல தடவை கண்ட தெற்கு-வடக்கு யுத்தம், அடிமைத்தனம், எல்லைகளை கடக்க போலி ஆவணம் என்று நீழ்கிறது.

    "அன்பே வா" முழுக்க முழுக்க ஒரு காதல் படம். இருந்தாலும் MGR ரசிகர்களை திருப்தி படுத்த இடையில்
    ஒரு சண்டை காட்சியை வைத்திருப்பார்கள். அதுபோல் இங்கு எனக்கு தென்பட்டது, டெக்ஸ் எல்லைகளில் உள்ள check post களில், இவன் எனது அடிமை என்று ஆவணங்களை காண்பித்து விட்டு, பின்பு விருப்பமில்லாதவனை சலூனுக்கு கட்டாயபடுத்தி அழைத்து சென்று சம உரிமை பேசி தேவையில்லாத கலவரத்தை உண்டு பண்ணுவானேன். அங்கே சண்டை தேவை தானா. அச்சூழ்நிலையில் சத்தமில்லாமல் இடத்தை காலி பண்ணுவது தானே முறை.

    கடைசிவரை flash back வருவதால் கார்ஸனுக்கு வேலையில்லை. Climaxல் டெக்ஸ் ரூமை விட்டு வருவதும், அடுத்த நொடியே தற்கொலை நடப்பதும் பலமுறை கண்டாயிற்று. மேற்கூரிய சங்கதிகள் ஓரு all time favorite க்கு இக்கதையை கொண்டு செல்ல என்னைப்பொருத்த வரை இடமளிக்கவில்லை. Over buildup டன் படித்த காரணமா என்று புரியவில்லை. மற்றபடி வதைகூடத்தில் தப்ப வைக்கும் யுக்தி பலே. மேலும் பக்கங்கள் எங்கும் நிற்காமல் பறந்தது நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. @Thirunavukkarasu Vazzukkupparai

      விமர்சனம் பட்டையைக் கிளப்புகிறது நண்பரே!! மிகைப்படுத்தாத, தெளிவான எழுத்து நடை!!

      Delete
  35. ஆகட்டும் இருக்கிறது மற்ற இரண்டு கதைகள், அவையும் ஏகப்பட்ட பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பெற்றிருக்கிறது என்று இரண்டில் முதலில் எடுத்தது "தனியே தன்னந்தனியே".

    பலரது suggestions க்கேற்ப கூடுதல் effect க்காக படித்தது இரவு நேரத்தில். வாய் பிளக்கும் ஓவியங்கள், அதுவும் ஒரு வித grey கலரில் அட்டகாசம். அடுத்து என்ன நடக்குமோ என்று ஒரு விறுவிறுப்பு தொற்றிக்கொண்டு பக்கங்களை வேகமாக climax ஐ நோக்கி புரட்ட வைத்தது. அனைத்துக்கும் விடை இ றுதியில் கிடைக்கும் என்று பார்த்தால், ஒரு சிலவற்றுக்கு சொல்லிவிட்டு, பலவற்றை தொங்களில் விட்டு விட்டார்கள். நானும் சில நண்பர்களிடம் கேட்டேன், ஒரு சிலவற்றை கதாசிரியர் நமது யூகத்துக்கே விட்டு விட்டார் என பதில் கிடைத்தது. கமெண்ட்ஸிலும் தேடிப்பார்த்து விட்டேன் ஏறக்குறைய அதே பதில்தான்.

    ஆவியாக வரும் சிறுமியின் தந்தை ஏன் சிலந்தி கடித்து இறக்கிறார்? கதைக்கும் அவர் இறப்பதுக்கும் என்ன தொடர்பு?

    சிறுமியும், குடும்ப்த்தினரும் விபத்தில் மரணமடைகிறார்கள். அதற்கு காரணமாக சிலந்தியை காண்பிப்பது ஏன்?

    சிறுவனின் உடைகளை யார் மடித்து வைத்தது?

    பேய்க்கதை என்றாலும் லாஜிக் வேண்டாமா. இப்புதிர்களை படைப்பாளிகள் விளக்கியிருக்க வேண்டும். அல்லது இக்குழப்ப காட்சிகளை வைக்காமல் இருந்திருக்க வேண்டும். படித்துவிட்டு திருதிருவென முழிப்பது அழகல்லவே.
    தாங்கள் தங்களானா விளக்கத்தை கதை முடிந்தவுடன் ஒரு பக்கத்திற்கு reverse ல் அச்சிட்டால் வேண்டியவர்கள் படித்துக் கொள்ளட்டும். விருப்பமில்லாதவர்கள் கடந்து செல்லட்டும். ஒரு புதிய வாசகன் புத்தகவிழாக்களிளோ, ஆன்லைனிலோ இது மாதிரி புத்தகத்தை வாங்க நேரிட்டால் அவன் பாடு என்னவாக இருக்கும். மேற்கொண்டு இத்தகைய புத்தகங்களை வாங்க தவிர்ப்பார்கள்.

    இதுவும் நல்ல கதைதான். ஆனால்
    நிஜங்கள்களின் நிசப்தம், இரவே இருளே கொல்லாதே, முடியா இரவு, கனவுகளின் கதையிது போன்றவற்றிற்கு ஒரு மிடர் குறைவுதான்.



    ReplyDelete
    Replies
    1. முதலில் எடிட்டர் சொன்னதை அறிந்து கொள்ளுங்கள்

      ****கதையின் அனைத்து சம்பவங்களும் ,எல்லா உரையாடல்களும் கதையோடு தொடர்புடையவை அல்ல..


      கதாசிரியர் ஒரு இயல்பான மேற்கத்திய சிறுநகரத்தை சித்தரித்துள்ளார்..*****

      Delete
    2. ///ஆவியாக வரும் சிறுமியின் தந்தை ஏன் சிலந்தி கடித்து இறக்கிறார்? கதைக்கும் அவர் இறப்பதுக்கும் என்ன தொடர்பு?///

      பிப்ரவரி நான்காம் தேதி " திருப்பூரில் மாயாஜாலம்"

      என்ற எடிட்டர் பதிவில் வாசகர்கள் மற்றும் எடிட்டர் அவர்களின் பார்வைகள் பதியப்பட்டுள்ளன

      கதை கிராபிக் நாவல்....கிராபிக் நாவல்களில் பொதுவாக வாசகர்களின் கதை குறித்த கோணங்கள் பலவிதமாகவே இருக்கும்..

      இதில் எது சரி / சரியல்ல என்பது முக்கியமல்ல..

      எதுவாக இருப்பினும் வாசகர்களின் அணுகுமுறையே சுவாரஸ்யமானது...


      உங்களது இக்கேள்வியில் இரு கேள்விகள் உள்ளன.

      சிறுமியின் தந்தை இறப்பதற்கும் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..

      சிறுமியின் தந்தை ஏன் சிலந்தி கடித்து இறக்கிறார் என்பதற்கு பல பார்வைகள் பதியப்பட்டுள்ளன..

      என்னுடைய ஏற்கனவே பதிவிடப்பட்ட பார்வையை

      இங்கு பதிகிறேன்..

      சரி / சரியல்ல என்றில்லாது வெறும் பார்வையாக எடுத்து கொள்ளவும்...
      ##################################₹####

      Delete
    3. ஹோல்ஸ்மேன் சிலந்திகளை வதைக்கும் மனிதரல்ல..

      அவை அவரின் வளர்ப்பு பிராணிகள்..

      சிலந்திகள் மிக அற்புதமான தப்பும் கலை நிபுணர்கள்.. ( ESCAPE ARTISTS)

      ஆரம்ப காலத்தில் இது பற்றிய ஹோல்ஸ்மேனின் அறியாமை காரணமாக ஒன்றிரண்டு சிலந்திகள் தப்பி காரை அடைந்து அவர் குடும்ப உறுப்பினர்கள் மரணத்துக்கு மறைமுக காரணமாய் இருந்திருக்க கூடும்..

      இது பற்றி நமக்கு கதையில் சொல்லப்பட்டாலும் ஹோல்ஸ்மேன் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு..

      அப்படியே அறிந்திருப்பினும் சிலந்திகள் மீதான அவரது காதல் குறைந்திருக்காது..தப்பி செல்வது சிலந்திகளின் இயல்பான சுபாவம் என்பதால்...

      ஹோல்ஸ்மேனின் மரணம் அவரது முதுமையால் நடந்திருக்கலாம்..

      கதையில் காட்டப்படுவது சிலந்தி வளர்ப்பிற்கான முறையான டேங்குகள்..

      மற்றும் இடைவெளியற்ற டென்ட் ஹவுஸ்..

      முதுமை காரணமாக மயக்கம் வந்து சரிந்து டேங்குகள் மீது சரிந்து விழ வெளிப்பட இயலாத அவர் உடல் அழுத்தம் காரணமாக சில சிலந்திகள் அவரை கடித்து வைத்து இருக்கலாம்..

      பொதுவாக சிலந்தியின் விஷம் கடுமையானதல்ல...

      வெறும் மயக்கம் மட்டுமே ஹோல்ஸ்மேனுக்கு சிலந்தி கடியானால் ஏற்பட்டு இருப்பினும் வெட்டுக்கிளி போன்ற உணவு அளிக்கப் படாமையால் ஏனைய தப்பித்த சிலந்திகளும் அவரை கடித்திருக்க கூடும்..

      கலிபோர்னியா மாநிலத்தில் ப்ளாக் விடோ, ப்ரௌன் ரெக்ளுஸ் போன்ற மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சிலந்தி வகைகள் உண்டு என்பதால் வளர்ப்பு லிஸ்ட்டில் இவையும் இடம் பெற்று ஹோல்ஸ்மேனை கடித்திருக்க வாய்ப்புண்டு..

      ஹாரர் எலமெண்டை கதைப்போக்கில் இவை கூட்ட உதவுகின்றன.. அம்மட்டே!!!

      #################################################

      Delete
    4. ///சிறுமியும், குடும்ப்த்தினரும் விபத்தில் மரணமடைகிறார்கள். அதற்கு காரணமாக சிலந்தியை காண்பிப்பது ஏன்?///

      ஹோல்ஸ்மேன் தனது இளம் வயதில் சிலந்திகளை வளர்க்க துவங்கி இருக்க வேண்டும்

      அனுபவமின்மை,சிலந்திகளின் சுபாவங்கள் குறித்த ஞானக்குறைவு போன்றவற்றால் அவரது வளர்ப்பு சிலந்திகள் சில தப்பி அவற்றில் ஒன்று ஹோல்ஸ்மேனின் மனைவி ,குழந்தை பயணம் செய்யவிருந்த காரின் உட்புறத்தை அடைந்திருக்க வேண்டும்..

      பயணத்தின் போது அச்சிலந்தி மறைவிடம் விட்டு வெளிப்பட சிலந்தியின் பெரிய உருவம் மற்றும் திடீர் வெளிப்பாடு காரணமாய் ஏற்பட்ட திகில் காரணமாய் மிஸஸ் ஹோல்ஸ்மேன் ஸ்டீயரிங் மீதான கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கவேண்டும்( WWF -ல் பங்கேற்கும் கணவன்மார்களை தங்கள் சுட்டுவிரலால் புரட்டி போடும் மனைவிகள் கூட கரப்பான் பூச்சி ,எலி,பல்லி போன்றவற்றை டீல் செய்ய தயங்குவார்கள் என்பது உலக உண்மை!!!)

      ஒரு விஷயம்!!!

      இது வாசகர்களான நமக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.


      ஹோல்ஸ்மேன் - க்கு கூட இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை....

      Delete
    5. சிறுவனின் உடைகளை யார் மடித்து வைத்தது?


      ஆவிச்சிறுமிதான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க போவதில்லை...

      ஏன்? என்பதில்தான் பார்வைகள் மாறுபடுகின்றன


      வழக்கம்போல் எனது பார்வை இங்கே..

      பாலின் உடைகள் ஆவிச்சிறுமியால் அகற்றப்படுகின்றன..

      காரணம்????

      விபத்து நிகழுமிடம். ....கலிபோர்னியா மாகாணம்...ஸான் டியாகோ பகுதி..


      விபத்து நிகழும் காலம்... கெர்ரி தன் தந்தையிடம் குறிப்பிடுவது போல் இலையுதிர் காலத்து துவக்கத்தில்..

      வட அமெரிக்காவில் இலையுதிர் காலம் என்பது( ஃபால்) செப்டம்பர் துவங்கி நவம்பர் வரை ..

      செப்டம்பரில் வேனிற்கால முடிவு என்பதால் சுற்றுப்புறம் வெம்மையாக இருக்கும் ..காற்றில் ஈரப்பதம் குறைவு..

      வனப்பகுதி என்பதால் வெம்மை கூடுதலாகவே இருக்கும்.

      விபத்து காரணமாக கார் கண்ணாடிகள் உடைந்துவிட்டபடியால் வெம்மை காரணமாக மற்றும் நீர் அருந்தாதபடியால் பாலின் நீர்ச்சத்து குறைய துவங்குகிறது..
      .
      பாலின் நீர்ச்சத்து அதிகப்படுத்த அவன் உடலின் வெப்பத்தை சமச்சீர் நிலையில் வைக்க அவன் ஆடைகள் ஆவிச்சிறுமியால் அகற்றப்பட்டு அவனுக்கு நீர் அளிக்கப்படுகிறது..

      பால் உயிர் பிழைக்க இதுவே மூல காரணமாய் இருக்க கூடும்..

      //////////////////////////////////////////////.///////


      இதுகுறித்த ஏனைய வாசக பார்வைக்கோணங்களை மேற்குறிப்பிட்ட பிப்ரவரி நான்கு திருப்பூரில் மாயாஜாலம் எடிட்டர் பதிவின் மூலம் அறியலாம்.

      Delete
  36. ரைட்டு, புதியவர் சைக்ஸ் ஆவது எதிர்பார்பை பூர்த்தி செய்வார் என்று பார்த்தால், இங்கும் என் ஞானத்திற்கு எட்டியவரை ஒரு நல்ல படைப்பே தவிர, வன்மேற்கையே கண்முன் நிறுத்தும் காவியமாக தோன்றவில்லை. ஏற்கனவே இதை விட நிறைய இதுபோல் பவுன்சரில் பார்த்து விட்டோம். அருமையான சித்திரங்கள் மற்றும் கலரிங் ப்ளஸ். கதையை பொருத்தவரை குறை ஒன்றும் இல்லை. ஆனால் முடிந்த கதையை மறுபடியும் தொடங்கி அதில் ஒரு டிவிஸ்ட் வைப்பானேன்.

    ஆக, மூன்று கதைகளுமே மிகுந்த எதிர்பார்ப்பு காரணமாக நான் வைத்திருந்த உயரத்தை எட்டவில்லை. ஒருவேளை நார்மலாக படித்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

    ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த color TeX தொகுப்பு அசத்தி விட்டது. அனைத்து கதைகளும் அருமை.

    ஆனால் பலத்த சோதனை நமது ஆர்ச்சி அண்ணன் தான். 25 வருடதித்ற்கு முன்பு வந்த "ஆர்ச்சியோடு மோதாதே" வை கொண்டாடி தீர்த்தவன் நான். One of my favorite hero. ஆனால் இப்பொழுது முடியவில்லை. சந்தா D யை நினைதால் சற்று பேஜாராகத்தான் இருக்கிறது.

    எனது personal marks

    1. தனியே தன்னந்தனியே - 9/10
    2. ஒரு துளி துரோகம் - 8.75/10
    3. மார்சல் சைக்ஸ் - 8.5/10
    4. Color TeX தொகுப்பு - 9/10
    5. ஆர்ச்சி இருக்க பயமேன் - ? (போட மனசு வரல)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கொடுக்கும் மார்க் நன்றாகவே இருக்கிறது நண்பரே.

      Delete
    2. மனதில் பட்டதை எழுதும் உங்கள் விமர்சனமும் அருமை.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. விமர்சனங்கள் அருமை திருநாவுக்கரசு. தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள்.

      Delete
    5. //ஆனால் பலத்த சோதனை நமது ஆர்ச்சி அண்ணன் தான். 25 வருடதித்ற்கு முன்பு வந்த "ஆர்ச்சியோடு மோதாதே" வை கொண்டாடி தீர்த்தவன் நான். One of my favorite hero. ஆனால் இப்பொழுது முடியவில்லை. சந்தா D யை நினைதால் சற்று பேஜாராகத்தான் இருக்கிறது.//

      சில பேரை பொறுத்தமட்டிலாவது கீழ்வரும் வரிகள் பொறுந்தத்தான் செய்கின்றன..

      கடலுக்கு நீரே பகையானால் அங்கு

      கதை சொல்லும் அலைகளுக்கிடமேது?

      :-)

      Delete
    6. // ஆர்ச்சி இருக்க பயமேன் - ? (போட மனசு வரல) // எப்படி வரும் பழசு எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?

      Delete
    7. குமார், பரணி, ஈரோடு விஜய் & செல்வம் அபிராமி சார்ஸ் மற்றும் இத்தளத்தை கலக்கும் இதர நண்பர்களையும் ஆண்டாண்டு காலமாக கவனித்து வருகிறேன். அதன் தாக்கம் தான் நேரம் கிடைக்கும் போது வெளிப்பட்டிருக்கிறது.

      Delete
    8. ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தது உள்ள விமர்சனங்கள் ஆர்ப்பரிக்கிறது நண்பரே! அர்ப்பணிக்கப்போடு செயல் படும் எதுவும் சிறக்கும். உங்கள் விமர்சனங்கள் அந்த வகை! தொடர்ந்து கலக்குங்கள்!

      Delete
    9. ///செல்வம் அபிராமி சார்ஸ் மற்றும் இத்தளத்தை கலக்கும் இதர நண்பர்களையும்///

      செனாஅனா.. எனக்கென்னமோ இவர் உங்களை 'சார்ஸ்'னு சொல்றதுலயும் ஒரு அர்த்தம் இருக்குமோன்னு தோனறது! ஹீஹீ!!

      Delete
    10. நண்பர் திருநாவுக்கரசு அவர்களின் விமர்சனங்கள்
      சில குறையை சொல்லும் விமர்சனமாக இருப்பினும் எழுத்தின் பாங்கு நிறைவான விமர்சனங்களாக உள்ளது .

      தொடருங்கள் நண்பரே.:-)

      Delete
  37. சிறப்பான விமர்சனங்கள்... அருமை.. 👌

    ReplyDelete
  38. சென்ற பதிவின் போது, இத்தாலியில் உள்ள நமது பதிப்பக நண்பர்களும் நலம் என்ற செய்தியை தெரிவித்திருந்தீர்கள். அவர்கள் மேலும் நலம் பெற்று, மீண்டு வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. RIP Uderzo the Genius !!

    https://www.freepressjournal.in/world/legendary-asterix-illustrator-albert-uderzo-passes-away

    ReplyDelete
  40. அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு! எனவே ஏப்ரல் மாத புத்தகங்கள் 21 நாட்களுக்கு பிறகே நமக்கு இனி கிடைக்கும் என நினைக்கிறேன்! எல்லாம் நன்மைக்கே! விரைவில் சூழ்நிலை சரியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

    நண்பர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளிவராமல் குடும்பத்துடன் பத்திரமாக, ஆரோக்கியமாக சந்தோசமாக இருங்கள்! நமது பழைய காமிக்ஸ் புத்தகங்களை மறுவாசிப்பு செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம்! நண்பர்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் மறுவாசிப்பு செய்த கதைகளுக்கு விமர்சனம் எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துக்கும் லீவு! எங்களுக்கு மட்டும் லீவு இல்லாம போச்சே!!

      Delete
    2. பங்குச் சந்தை தொடர்ந்து நடக்கும்னு சொல்லி புட்டாங்களே!!

      Delete
    3. ///// நமது பழைய காமிக்ஸ் புத்தகங்களை மறுவாசிப்பு செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் /////---நல்ல ஐடியா. டெக்ஸ் கதைகளை இன்னொரு ரவுண்ட் தட்ட வேண்டியது தான். இல்லை, இம்முறை எல்லா ஸ்பெசல்களையும் ஒரு ரவுண்ட் வரலாம்...!!!

      வேணா வேணா டியூராங்கோ 4புக்கையும் மேயலாம்.

      ம்...லார்கோ 10புக்கும் செட்டா படிச்சா தெறிக்குமே!

      இரத்தப்படலம்-வண்ண மறுபதிப்பு இன்னொரு தடவை படிக்கலாம்.

      கி.நா.க்கள்லாம் எல்லாத்தையும் எடுத்தா திகட்டாத விருந்தா இருக்குமே!

      அட...இதுவரை புரட்டி மட்டுமே பார்த்த மும்மூர்த்திகள் மறுபதிப்புகள் கூட இருக்கே!

      லக்கி ஸ்பெசல்கள், ரின்டின்கென்,உட்சிடி கோமாளிகள் கதைகள் கூட இன்னொரு ரவுண்ட் வரலாமே!

      டைகரின் மின்னும் மரணம், இரத்த்தக்கோட்டை,தங்க்கல்லறை கூட புரட்டி ரொம்ப நாள் ஆவுதே!

      இத்தனை இருக்கா 21நாள் பஞ்சா பறந்துடுமே!

      இங்கி பிங்கி பாங்கி போட்டு நாளகை்கு ஆரம்பித்து விடலாம்.

      கூடவே 2012ல இருந்து வந்த வண்ண புக்குகளை அடிக்கி வெச்சி அழகு பார்த்தாவே 2நாள் ஓடிடுமே!!!


      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. எனக்கும் வங்கி இருக்கிறது.

      Delete
    6. குமார் @ கவனமாக பணியாற்றுங்கள்.

      Delete
    7. மிதுன் @ நீங்கள் வீட்டில் இருந்து பங்கு சந்தை வேலையை பார்க்க முடிந்தால் செய்யலாமே?

      Delete
    8. எனக்கு கடந்த 10 நாட்களாக WFH only. வழக்கமான ஆபீஸ் வேலையை வீட்டில் இருந்து செய்ய வேண்டும். சனி ஞாயிறு விடுமுறை. இன்று யுகாதி விடுமுறை.

      Delete
  41. // நமது பழைய காமிக்ஸ் புத்தகங்களை மறுவாசிப்பு செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் //
    அதே,அதே......

    ReplyDelete
  42. இதுவும் கடந்து போகும். காமிக்ஸ் வாசிப்பு நிச்சயம் உற்சாகமளிக்கும். 21 நாள் வீட்டில் குழந்தைகளுக்கும் காமிக்ஸ் வாசிப்பு பயிற்சி தொடங்க வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. ////21 நாள் வீட்டில் குழந்தைகளுக்கும் காமிக்ஸ் வாசிப்பு பயிற்சி தொடங்க வேண்டியதுதான்///

      நல்ல ஐடியா!!

      ஒன்று..
      21 நாட்களுக்குப் பிறகு குழந்தைகள் காமிக்ஸ் ரசிகர்களாகியிருப்பார்கள்...
      அல்லது..
      நாம் சோட்டாபீமின் ரசிகர்களாகியிருப்போம்!

      நம்மாலானதை முயற்சிப்போம்!!

      Delete
    2. நன்றி நண்பர்களே...

      Delete
  43. வாட்ஸ் அப், முகநூல் நெட் கனெக்க்ஷன் பூயுஸா புடுங்காம இருந்த 21 நாட்களும் நலமே. 10 வருட புத்தகங்களை மறுபடியும் படித்து நன்றாக பேக் செய்து அடுக்கி ஷெல்பில் வைத்து விடலாம்.

    ReplyDelete
  44. Replies
    1. சில நல்ல தொடர்கள் இங்கு விற்பனையில் சாதிக்கவில்லை என ஆசிரியர் சொன்ன மற்றும் தற்போது வெளிவராத கார்ட்டூன் கதைகளை நண்பர்கள் மறுவாசிப்பு செய்து தங்கள் விமர்சனங்களை பதிவிட்டால் நமக்கும் பொழுது போகும் அதேபோல் நமது விமர்சனங்கள் சில நேரம் அந்த கதைகளை குடோனில் இருந்து வெளியேற்ற உதவும்.

      முடிந்தால் ரின் டின் கேனின் "பிரியமுடன் ஒரு பிணைய கைதி" கதையை ஆரம்பிக்கலாமா நண்பர்களே?

      Delete
  45. @ ALL : சாலைகளைப் போலவே நமது வலைப்பக்கமும் அமைதியாய்க் கிடப்பது போராடிக்கிறதால், நாளைக்கு புதுப் பதிவொன்றைப் போட்டு விடுவோமா guys ? வெளியில் தான் உலாற்றக் கூடாது, இங்கே இஷ்டத்துக்கு லூட்டி அடிக்கலாம் தானே ?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆஹா எடிட்டர் சார் நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள். பட் பட் னு போட்டு விடுங்க சார்.

      Delete
    2. போடுங்க சார்!
      இதுவரை சந்தித்திராத ஒரு புதிய சூழ்நிலையின் பிடியில் கிடப்பதாலோ என்னவோ மனசும் இறுக்கமாய் கிடக்கிறது! உங்களுடைய பதிவு உதவக்கூடும்!!

      வீ ஆர் வெயிட்டிங்....

      Delete
    3. ஆகா!!

      மீன் வேண்டாம் என்னும் பூனைகள் ஏது?

      தேன் வேண்டாம் என்னும் தும்பி ஏது?

      கோன் வேண்டாம் என்னும் குடிகள் ஏது?

      ஆண் வேண்டாம் என்னும் அரிவையர் ஏது?

      தூண் வேண்டாம் என்னும் மாளிகை ஏது?

      வான் வேண்டாம் என்னும் வெண்மதி ஏது?

      ஊன் வேண்டாம் என்னும் இரைப்பை ஏது?

      மான் வேண்டாம் என்னும் மகிஷம் ஏது?

      போடுங்க பதிவை...கொஞ்சம் பெரிசா இருக்கட்டும்!!

      Delete
    4. எடிட்டர் சார்..

      மேலே செனாஅனாவின் கமெண்டைப் படிச்சுட்டு குஷியாகி, நீங்களும் கவிதை கிவிதைன்னு எதையாவது புதுப் பதிவுல போட்றாதீங்க சார்..! ஏற்கனவே கிர்ர்ர்ரடிச்சுப்போய் கிடக்கிறாங்க எல்லாரும்! :P

      Delete
  46. நானும் பொழுது போகவில்லை என்ன நமது பழைய பதிவுகளை படித்து கொண்டு இருந்தேன் 2011 மற்றும் 2012 ஆம் வருட பதிவுகள். அதுவும் 2012 ஆம் வருட பதிவுகளை படித்த போது தெரிந்த விசயம் என்னவென்றால் ஒரே நாளில் 3 பதிவுகள் இட்டு இருக்கிறார் எடிட்டர். What a time what a time.

    ReplyDelete
    Replies
    1. ///பழைய பதிவுகளை படித்து கொண்டு இருந்தேன் 2011 மற்றும் 2012 ஆம் வருட பதிவுகள்.///

      அப்போல்லாம் நான் ரொம்பச் சின்னபையன்..

      Delete
    2. நான் பிறக்கவில்லை. அதனால் தான் இப்போது படிக்கிறேன்

      Delete

    3. /// நான் பிறக்கவில்லை. அதனால் தான் இப்போது படிக்கிறேன் ///
      பிறக்காதவங்க கூட படிக்கிற அதிசயம் நம்ம ப்ளாக்குலதான் நடக்கும். சூப்பரப்பு.

      Delete
  47. முதல் நாள் வெற்றிகரமாக.. இன்னமும் 20 நாட்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும் :-)

    ஆபீஸ் பக்கம் வர கூடாது என சொல்லிட்டாங்க :-)

    ReplyDelete
    Replies
    1. ///இன்னமும் 20 நாட்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும் :-)

      ஆபீஸ் பக்கம் வர கூடாது என சொல்லிட்டாங்க :///

      இன்னும் 20 நாட்களுக்குப் பிறகு "வீட்டுப் பக்கமே வரக்கூடாது"ன்னு வீட்டம்மாவும் சொல்ல வாய்ப்பிருக்கு! :D

      Delete
  48. ஆஹா...ஆஹா...


    ஆவலுடன் பதிவிற்கு காத்திருக்கிறோம் சார்...:-)


    200

    ReplyDelete
  49. /// இன்னும் 20 நாட்களுக்குப் பிறகு "வீட்டுப் பக்கமே வரக்கூடாது"ன்னு வீட்டம்மாவும் சொல்ல வாய்ப்பிருக்கு! ///
    WFH extend பண்ணச் சொல்லி கேட்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்

    ReplyDelete